Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

Status
Not open for further replies.

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
அத்தியாயம் 10



தன் இறுதி மூச்சைப் பிடித்துக்கொண்டு மேலே அறைக்கு ஓடி வந்தவள் தன் கணவனைத் தேடினாள்.


பால்கனியில் நின்று வெளியே பார்த்துக் கொண்டிருந்தவனைக் கண்டு, "மாமூஊ" என உயிரே போகுமளவிற்கு கத்தி, வேகமாக ஓடிச்சென்று அவனை பின்னிருந்து இறுக்கி அணைத்துக் கொண்டாள்.


யாரும் பிரித்து விடுவார்களோ என்ற பயத்தில் அவனுள் புக முயன்றாள்.


"அத்த என்ன சொல்றாங்கனு பாருங்க. நான் இந்த வீட்டை விட்டு போகணுமாம். நம்ம குழ.. குழந்தையையும் உங்களையும் விட்டுட்டு போகணுமாம். அதுக்கு.. அதுக்குத் தான் தாத்தா, பாட்டி, சித்தப்பா, சித்தி எல்லாம் வர வச்சிருக்காங்களாம். ஏதோ? ஏதோ? மெஷினாம் நான். இல்ல, இல்ல, நான் போகமாட்டேன். போகமாட்டேன்" என எங்கே நாச்சியம்மை பின்னேயே வந்துவிடுவாரோ? என்ற பயத்தில் திக்கித்திணறி படபடவென்று தான் சொல்ல வந்ததை சொல்லி முடித்தவள், ஆணாகிய அவனுக்கே வலிக்கும் அளவிற்கு அவனை மேலும் மேலும் இறுக்கி அணைத்தாள்.


அனைத்தையும் கேட்டவன் நெஞ்சில் பதிந்து இதயத்தை உருவப் பார்க்கும் அவளின் கைகளை பிரிக்க முயன்றான்.


எங்கே? முடியவில்லை. காந்தத் துண்டிலிருந்து தென்துருவத்தையும் வட துருவத்தையும் கூட பிரித்து விடலாம் போல. ஆனால், அவள் கைகளைப் பிரிக்க முடியவில்லை.


பெருமுயற்சியெடுத்து தன் இடக்கையால் அவள் கையை தன் மீதிலிருந்து பிரித்தெடுத்து அவளை தன் முன் கொண்டு வந்தவன், அவளை ஸ்தம்பிக்கச் செய்தான்.


அவனின் வலக்கையில் இருந்த சிகரெட்டை கண்டு அதிர்ந்தவளை சிறிதும் பொருட்படுத்தாமல் புகைத்துக் கொண்டே, "ப்ச் என்னாச்சு?" என கடுகடுக்க, அதிதிக்கே சந்தேகம் வந்தது இது என்னுயிரா என்று.


உறுதி செய்ய தன் ஆதார் விழிகளை அதிகம் விரித்தாள்.


பின், தைரியமெடுத்து நெருங்கி நின்று, "மாமூ, எனக்கு நீங்க வேணும். நம்ம அம்முலு வேணும். என்ன பிரச்சனையிருந்தாலும் அதைப் பேசி தீர்த்துக்குவோம். பழைய பகையை மனசுல வச்சி என்னை வெளிய அனுப்பிடாதீங்க மாமூ" எனக்கெஞ்சி நெஞ்சில் சாய, கல்லாய் இறுகியவனிடம் எந்தவொரு பிரதிபலிப்பும் இல்லை.


அவளுடைய கண்ணீர் அவனது நெஞ்சை நனைத்தது கல்லில் ஈரம் உண்டாக்கும் பொருட்டு.


"என்னங்க? நான் இவ்ளோ சொல்றேன். நீங்க எதுவுமே பேசாம இருக்கீங்க?" என நேராய் அவன் முகம் பார்த்துக் கேட்டவளிடம்,


"ஆமா உன்னை ஒரு கேள்வி கேட்கறேன். அதுக்கு மட்டும் பதில் சொல்லு?" என அவளை உயிருடன் கொன்று புதைக்கும் அவ்வம்பை எய்தான் விக்ரமன்.


"அன்னைக்கு நமக்கு ஃபர்ஸ்ட் நைட் நடந்தப்போ, நான் இல்லாம வேற யார் உன் கழுத்துல தாலி கட்டியிருந்தாலும் நீ அவன் கூடவும் அப்படி இருந்திருப்ப தானே?" என சிகரெட்டை தூக்கியெறிந்தான். அவன் சிகரத்தையும் தான்.


அவன் கேட்ட கேள்வியில் நெருப்பை மிதித்தது போல் துடிதுடித்து போனவள், தன்னிரு செவிகளையும் மூடிக்கொண்டு பின்னோக்கி நகர்ந்தாள்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
இவ்வளவு நாள் நேரங்காலம் அறியாமல் தன்னை காதலில் குளிப்பாட்டி கைகளில் தாங்கிய கணவன் இவன் அல்ல என்பதையும் மிகத் தாமதமாய் உணர்ந்து கொண்டாள்.


"இந்த ஒரு வருசமா நான் உங்கக்கூட வாழ்ந்த வாழ்க்கைய ஒரே கேள்வியில ஒண்ணுமில்லாமப் பண்ணிட்டீங்களேங்க? நம்ம நாட்டுல பெரும்பாலான கல்யாணங்க யாருன்னே தெரியாத ஒருத்தர் கூட தான் பெத்தவங்க வற்புறுத்தலால நடக்குது. அப்போ அந்தப் பொண்ணுங்கல்லாம் தப்பானவங்கனு அர்த்தமா? தாலி கட்டினவனை நம்பாம வேற யாரைங்க ஒரு பொண்ணு நம்புவா?"


அவன் அணைப்பில் மட்டுமே வலித்த நெஞ்சானது இன்று அவன் வார்த்தைகளில் வலித்தது.


உண்மையில் அவனுக்கு சகிக்கவில்லை அவள் படும் அல்லல். திரும்பி நின்று கொண்டான்.


"திரும்புங்க. என் முகத்தைப் பாருங்க. தாலி கட்டுறதுக்கு முன்னாடி ஏன் நான் உங்களை பார்க்கணும்னு நினைச்சீங்க? மெட்டி போடும் போது என் கண்ணீரைப் பார்த்ததும் இனி உன்னை கைவிடவே மாட்டேங்கிற மாதிரி ஏன் என் கையை இறுக்கிப் பிடிச்சிக்கிட்டீங்க? அப்போ தாங்க முதல் முதலா உங்க மேல நான் ஈர்க்கப்பட்டேன். ஜானகியம்மா தொடங்கி ராதாம்மா வரை எல்லாரும் உங்களைப் பத்தியே பேசவும் என்னை அறியாமலேயே உங்க மேல ஒரு நம்பிக்கை வந்திடுச்சு. நம்ப முடியலையா? ஒரு பொண்ணு காதல்ல விழ ஒரு யுகம் தேவையில்ல. ஒரு கணம் போதும். நான் இப்ப உங்களை மனசார காதலிக்கிறேங்க. நீங்க இல்லைனா சத்தியமா என்னால வாழ முடியாது. முதலிரவுல வேணும்னா ஒரு வித பயத்தோட நான் உங்களுக்கு மனைவியா நடந்திருக்கலாம். ஆனா அடுத்து வந்த நாட்கள்ல என் காதலை கொஞ்சம் கூட நீங்க உணரலையாங்க?" என கோபமாக தன் பேச்சை ஆரம்பித்தவள் இறுதியில் என்னை புரிந்து கொள்ளேன் என தன்னை முழுவதுமாய் கொட்டித்தீர்த்தாள்.


இது நாள் வரை அவள் தன் மீது கொண்டுள்ள காதலை செயலில் மட்டுமே வெளிப்படுத்துவதை அறிந்திருந்தவன், இன்று அவள் தன் வாய் மொழியால் கூறக்கேட்டு மனம் குளிர்ந்தான்.


எந்தப் பொய்யன் சொன்னான் ஆண்மகன் அழமாட்டானென்று? இதோ ஒரு காதலன் அவளின் ஒவ்வொரு மூச்சுக் காற்றுக்கும் கண்ணீர் சிந்துகிறானே!


"அம்மா அப்பா உங்களுக்கு இல்லைனு சொன்னாங்க. ராதாம்மா சொன்ன மாதிரி உங்களுக்கு ஒரு அம்மாவாவும் நான் இருக்கணும்னு ஆசைப்பட்டேன். அது தப்பாங்க? ஒரு கணத்துல கூட என் காதல் உங்களுக்கு புரியலையாங்க? வெறும் சதை பிண்டமாத் தான் என்னை நினைச்சீங்களா?" என்று ஆற்றாமையாகக் கேட்டாள்.


‘அய்யோ இல்லடி! என் ஆதியும் அந்தமும் நீ தான்’ என அவளை கட்டியணைத்து சொல்ல நினைத்தவன் தன் கையறு நிலையை உணர்ந்து, கண்ணீர் தடத்தை தடயமில்லாமல் துடைத்துத் திரும்பினான்.


"சரி, சரி, தப்பெல்லாம் என் மேல தாங்க. நான் தான் என் காதலை உங்களுக்கு சரியா புரிய வைக்காமப் போயிட்டேன். புரிய வைக்க எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கங்க. தயவுசெஞ்சு என்னை உங்களைவிட்டு மட்டும் போக சொல்லாதீங்க. எந்தவொரு பிடிமானமும் இல்லாத என் வாழ்க்கையில ஆண்தேவதையா வந்தவரு நீங்க. இந்த ஒரு வருஷமா செத்த பிறகு எனக்கு சொர்க்கம் வேண்டாம், நான் வாழ்வதே சொர்க்கம் தான்னு நினைக்க வச்சிட்டு, இப்போ போன்னு சொன்னா உங்களைப் பிரிஞ்சு எங்கங்க போவேன்? எப்படிங்க வாழ்வேன்?" என அவன் சட்டைகாலரைப் பிடித்து கேட்டவள் கொழுகொம்பில்லாதக் கொடியாய் அவன் மீதே சரிந்தாள்.


அவளைத் தாங்கிப் பிடித்து நிறுத்தியவன் மிச்ச சொச்ச உயிரையும் குடிக்கும் விதமாய் அடுத்த அஸ்திரத்தைப் பிரயோகித்தான்.


"நேத்து நீ துணி காயப்போடும் போது மாடியில உன்னை பார்க்கணும்னு வேகமா வந்தேன். அப்ப கௌதம்.." என ஆரம்பிக்கவும் அவனின் சட்டைக் காலரை அவளது கைகள் தானாக விடுவித்தன.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
"அப்போ கௌதம் உன் கையை பிடிச்சிக்கிட்டு இருந்தான். ஆனா அந்த நிமிஷத்துல நான் வர்றதைப் பார்த்ததும், சாதாரணமா இருக்கற மாதிரி பேசிட்டு போயிட்டான். நீ அப்போ என்ன நடந்தது, என்ன விஷயம்னு என்கிட்ட சொல்லவே இல்ல. ஏன் அவன் உன் கையை பிடிச்சானு கூட நீ சொல்லவே இல்ல. அப்போ உனக்கு அது பிடிச்சிருக்குனு தானே அர்த்தம்? என்கிட்ட அதை மறைக்கிறன்னா உன்கிட்ட ஏதோ தப்பு இருக்குதுனு தானே அர்த்தம்? எனக்கு நீ வேணாம். போய்டு. இனி அம்முலு முகத்துலயும் முழிக்காத" என இயந்திரமாய் கூற, தலையை பிடித்துக்கொண்டு நடப்பை புரிந்து கொள்ள முயன்றாள் அதிதி.


"இவ்வளவு நேரம் உங்களை காதல், அன்பு, பாசம்னு எதையும் புரிஞ்சிக்க தெரியாத ஜடம்னு தான் நெனச்சேன். ஆனா நீங்க ஒரு சந்தேகப்பேய்னு இப்ப தான் புரியுது." என அவனை அருவருப்பாய் பார்த்தவள்,


"எப்படி இப்படி ஒரு கேள்வியை உங்களால கேட்க முடிஞ்சது? என்னை கொன்னுட்டீங்க, அதுவும் உயிரோட. சுற்றம் சூழ இந்த மஞ்சள் கயித்தை என் கழுத்துல நீங்க கட்டும் போது அதை நான் தலைகுனிஞ்சு ஏத்துக்கிட்டதால தான் உங்களால கூட என்னைத் தொட முடிஞ்சது. இல்ல மேலோகம் போயிருப்பீங்க இந்நேரம். என்ன சொன்னீங்க? கௌதமனா? ஹாஹாஹா." என பைத்தியம் போல் சிந்தை கலங்கி சம்பந்தமில்லாமல் வாய்விட்டு சிரித்தவள்,


"அவன் என்ன? அவனோட தவத்தை கலைச்சி அவன் பொண்டாட்டி அகலிகைக்கு சாப விமோசனம் கொடுத்த அந்த ராமனே மறுஅவதாரம் எடுத்து வந்து என்னை நெருங்கினாலும் சாம்பலாவான். உண்மை என்னனு தெரியுமா? என்ன நடந்ததுனு தெரியுமா? ஆரம்பத்துல அவர் என்கிட்ட தப்பா நடந்துக்க ட்ரை பண்ணினாரு. அன்னைக்கு நீங்க வந்து பார்த்தப்போ திருந்திட்டேனு என் கையைப் பிடிச்சு மன்னிப்பு தான் கேட்டுக்கிட்டிருந்தாரு. அப்போ நான் இனிமே எங்கிட்ட பேசாதீங்க, உங்கக்கூட பேச எனக்கு விருப்பம் இல்லைனு தான் சொல்லிக்கிட்டு இருந்தேன். அதைத் தான் நீங்கப் பார்த்தீங்க" என வெளியே வெறித்துக்கொண்டே தன்போக்கில் பேசிக் கொண்டிருந்தாள்.


"நீ சொல்றதை நம்புறதுக்கு நான் ஆள் இல்ல."


இந்த ஒரே வரி தான் விக்ரமனின் வாயிலிருந்து வந்தது.


"இதை நீங்க நம்பனும்னோ, என்னை உங்களுக்குப் புரிய வச்சி உங்கக்கூட சேரணும்னோ, இதை நான் சொல்லல. நீங்க கேட்டீங்களே கேள்வி? அப்போ என்ன நடந்தது, என்ன விஷயம்னு என்கிட்ட நீ சொல்லவே இல்லனு? அதுக்கு பதில் கொடுக்கத்தான் சொன்னேன். இவ்வளவு நாள் உங்கக்கூட வாழ்ந்ததை நினைச்சா அருவருப்பா இருக்கு" என்றவள் முகம் சுளித்து கூறிக் கொண்டிருக்கும்போதே நாச்சியம்மை குழந்தையுடனும், சங்கரப்பாண்டியன் தன் மனைவியுடனும் அவ்வறைக்குள் நுழைந்தனர்.


நேரே தன் தாத்தாவிடம் ஓடினாள் அதிதி.


"தாத்தா நீங்க நினைக்கற மாதிரி இவர் நல்லவர் இல்ல தாத்தா. இந்த சந்தேகப்பேய் எனக்கு வேணாம். என் வாழ்க்கையில நீங்க தப்பான முடிவெடுத்துட்டீங்க தாத்தா. இந்த குடும்பத்துக்கும் நமக்கும் ஏதோ பகை இருக்குனு உங்களுக்கு முன்னாடியே தெரியுமில்ல? அப்புறம் ஏன் தாத்தா என்னை இங்க அனுப்பி வச்சீங்க?" என அவரை நோக்கிப் பாய, வாயடைத்துப் போனார் சங்கரப்பாண்டியன்.


"என்னை இப்படி நட்டாத்துல கொண்டு வந்து நிறுத்திட்டீங்களே. பாவம் செஞ்ச நீங்க எல்லாம் நல்லா இருக்கீங்க. ஒண்ணுமே செய்யாத நான் மட்டும் செத்துக்கிட்டு இருக்கேன்." என்றவள் புலம்பிக் கொண்டிருக்கும் பொழுது, கேலியாக கேட்டார் நாச்சியம்மை.


"என் பையன் சொன்னதை கேட்டுட்டியா? இப்பயாவது எல்லாரும் வெளியப் போறீங்களா?"


நாச்சியம்மையின் கையிலிருந்த தன் குழந்தையைப் பார்த்தவள் அருகில் சென்று, "உனக்கு பேசத் தெரிஞ்சிருந்தா நீயும் இவங்கக் கூட சேர்ந்துக்கிட்டு அம்மாவை வெறுத்திருப்பியா அம்முலு?" எனக்கேட்க, அதற்கு என்ன புரிந்ததோ? தன் பொக்கை வாய் திறந்து அவளைப் பார்த்து சிரித்து வைத்தது.


அவளின் சிரிப்பில் கவரப்பட்டவள் விக்ரமனிடம் திரும்பி, "நல்ல வேளை இந்தக் குழந்தை எனக்கு தான் பொறந்துச்சான்னு கேட்காமப் போனீங்களே" என விரக்தியாக கூறவும், அவள் சொன்ன வார்த்தையில் வெகுண்டெழுந்தவன் தன் வலு மொத்தத்தையும் வலக்கையில் திரட்டி, பளாரென அவள் கன்னத்தில் ஒரு அறை விட்டான்.


இது நாள்வரை அவன் இதழ்பட்டு மட்டுமே சிவந்த கன்னங்கள், இன்று அவன் கை பட்டு சிவந்தது.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
எனது நாவலை புத்தகமாக பெற விரும்புவோருக்கு:

1.காதலா காதலா -Rs.280

2.நிஜமது நேசம் கொண்டேன் -Rs.220

3.நின் உச்சிதனை முகர்ந்தால் -Rs.250

சகாப்தம் பதிப்பக வாட்ஸப் எண்கள்:
9500986195
9500861971
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
"அம்மாஆஆ" என ஓலமிட்டு தரையில் தொய்ந்து விழுந்தவளை கைத்தாங்கினார் சங்கரப்பாண்டியன்.


"தம்பி என்ன காரியம் பண்ணிட்டீங்க? வேண்டாம்பா நாங்க எங்க பேத்தியை கூட்டிட்டு போயிடுறோம். நீங்கல்லாம் நல்லவங்க. நல்லவங்களாவே இருங்க." என விக்ரமனை பார்த்து கைக்கூப்பியவர்,


"எங்க விதியால புத்திக் கெட்டு நாங்க செஞ்ச பாவத்துக்கு பாவிக உன்னை பழி வாங்குறாங்கம்மா. வாம்மா நம்ம வீட்டுக்கே போயிடலாம்" என அவளை கீழே கைத்தாங்கலாக அழைத்துச் சென்றார்.


"தாத்தா என் அம்முலு எனக்கு வேணும்" என்று புலம்பியபடியே வந்தாள் அதிதி.


குழந்தையை தூக்கிக்கொண்டு நாச்சியம்மையும் விக்ரமனும் அவர்கள் பின்னேயே கீழே இறங்கி வந்தனர்.


சுற்றி நின்றவர்கள் அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவள், 'ஒரு குடும்பமே என்கிட்ட நடிச்சிருக்கா? அதைக் கூட கண்டுபிடிக்க முடியாத முட்டாளாவா இவ்வளவு நாள் நான் இருந்திருக்கேன்? குடும்பங்களோட வாழ்ந்திருந்தா கை விரிச்சி வந்தவங்க பொய் விரிச்சதையும் கண்டுபிடிச்சிருக்கலாமோ? பாசத்துக்கு ஏங்கி போயிருந்ததால என்னால எதையும் கண்டுபிடிக்க முடியலையோ?’ என தனக்குள்ளேயே அவள் பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்க,


"வாம்மா நம்ம வீட்டுக்கு போகலாம்." என அவளை வலுக்கட்டாயமாக தன்னுடன் அழைத்துச் செல்ல முயன்றார் சங்கரப்பாண்டியன்.


"ம்! சீக்கிரம் போங்க. இனி உங்க நிழல் கூட இந்த வீட்டுப் பக்கம் படக்கூடாது" என எச்சரித்தார் நாச்சியம்மை.


பொங்கி வந்த அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டே, கண்களில் தன் குழந்தையையும் நிரப்பிக்கொண்டு அந்த வீட்டைவிட்டு தன் தாத்தா பாட்டியுடன் செல்ல முற்பட்டாள் அதிதி.
 
Status
Not open for further replies.

Latest posts

New Threads

Top Bottom