Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


உள்ளம் உருகுதடி கண்ணம்மா ❤

Messages
4
Reaction score
0
Points
1
கசங்கிய காகிதமாய் வாடிய மலராய் வேரறுந்த கொடிபோல் துவண்டு கடக்கிறாள் அவள்.. கண்ணிலிருந்து கோடாய் கண்ணீர் என்ன செய்து நிறுத்துவது எங்கிருந்து இத்துணை நீர் வருகிறது இப்படியே வற்றிவிடாதா என்ற எண்ணம் மட்டும் தான் இப்போது அவளிடம் ... அவனிடம் கண்ணீரை மறைத்து அப்படியே கடத்தியவளுக்கு அவன் உறங்கிய பின் மடை திறந்த வெள்ளம் போல் வழிகிறதே.. என்ன பாவம் செய்தேன் நான் இப்படி ஒரு வாழ்க்கை என்று மனம் நொடியில் நினைக்க வைத்து விட்டதே.. இதோ அவன் தேவையை முடித்து கொண்டு அணைத்து கொண்டு படுத்திருக்கிறான் என்னை சுத்தபடுத்திக்கொள்ள கூட விடாது அணைத்து கொண்டு உறங்கும் இவனிடம் காதல் இருக்கிறதா இல்லையே காமத்தை கொண்டு அணைத்து கிடப்பவனிடம் என்னத்தை நான் எதிர்பார்க்க..

திருமணம் முடிந்த மறுநாளே வாழ்க்கையே வெறுத்து போனதே என்னத்தை சொல்லி ஆற்ற.. ஆசையோடு கூட வேண்டிய கூடல் ஐயோ உடலெல்லாம் கூசி போயிற்றே இதற்கு தான் திருமணமா இருமனம் புரிதலோடு கூடுவது தானே திருமணம்.. இதற்கு பெயரே வேறுதானே தெரியாத இவனுக்கு.. ஏதேதோ எண்ணத்தின் சுழற்சியில் மாட்டிக்கொண்டு தவிக்கும் மங்கையின் தேகத்தில் ஊர்கிறது அவனின் தடித்த விரல்கள் இதோ மீண்டுமாய் ஒரு கூடல் அவனது ஆசையில் ஆசை தீர கூடுகிறான் அவனுக்கு தீராத ஆசைதானே மீண்டுமாய் அவனுக்கு இசைந்து போகிறேன்..

மங்கையின் செவிகளில் விழுகிறது மூச்சு வாங்கும் சத்தம் எல்லாம் முடித்து கொண்டு பக்கத்தில் படுத்து காது மடலை உரசி கொண்டு சொல்கிறான் அவன் ஹே கொடி உன்மேல தனி வாசம் வருது டி இதுவரை யார்கிட்டயும் இப்படி உணர்ந்ததே இல்லையே.. ஒருவேளை இந்த பூ அலங்காரம் புதுசா வர வாசம் எல்லாம் சேர்ந்து உன் மேல வீசுதோ. இதை கேட்டு அவள் வெடித்து தான் சிதற வேண்டும் ஆனால் இல்லையே அதிர்ச்சியாய் ஒரு பார்வை அவனிடம் அதையும் நொடியில் மீட்டுக்கொண்டவள் பார்வையை விடாமல் சுத்தும் அந்த காத்தாடி மேல் பதித்து கொண்டு அவன் முகத்தை பாராமல் சொல்கிறாள்.. எனக்கு பாத்ரூம் போகணும் ப்ளீஸ் கைய கொஞ்சம் எடுக்குறீங்களா..

தான் கூறியதற்கு அவளிடம் பெரிதாய் கோபத்தை எதிர்பார்த்த கரிகாலன் அவள் கேட்ட விதத்தில் தானாய் கைகளை விலக்கி கொண்டு கொடியை கையில் அள்ளி கொண்டு குளியலறை நோக்கி சென்றான்..

தான் தூக்கி கொண்டால் வேண்டாமென்று மறுப்பாள் என்று எதிர்பார்த்தவனுக்கு மீண்டும் ஏமாற்றமே அவனிடம் குழந்தையாய் ஒட்டிக்கொண்டாள் அன்னக்கொடி.. குளியலறையில் விட்டவன் அங்கே நிற்க ஒரு நொடி கொடியவள் தடுமாறி போக அதே நொடி பொழுது தான் தன்னை மீட்டு கொண்டவள் சுத்தம் செய்ய தொடங்கிவிட்டாள்..

சத்தியமாய் இதை சுத்தமாக எதிர்பார்க்காதவன் தலை சுற்றி தான் போனான்.. வெற்றுடம்போடு நின்று கொண்டு தன் முன் அவள் சுத்தம்படுத்திக்கொள்ள கூச்சம் கொண்டு வெளிய போ என்றாவது சொல்வாள் என்று எதிர்பார்த்த கரிகாலனுக்கு இப்போதும் ஏமாற்றமே.. இரவில் இருந்து அவனும் பார்க்கிறான் தானே ஆசையோடு ஒரு பார்வை இல்லை தாபத்தோடு ஒரு ஏக்கமில்லை என்னவேனாலும் செய்துக்கோடா என்பது போல் இருப்பவளிடம் என்ன சொல்வது வேண்டாமென்று மறுத்தாலாவது சண்டை பிடிக்கலாம் என்னவேனாலும் செய் நான் எதுவும் கேக்க போறதில்லைனு இருப்பவளிடம் என்ன சொல்வது.. இப்போது அவன் தான் கதவை சாத்தி கொண்டு வெளியில் சென்றான்..

தன்னை சுத்தப்படுத்தியவள் அப்படியே நீருக்கடியில் நின்றுவிட்டாள் அவன் போனதை உணர்ந்து... தண்ணீரோடு கண்ணீரும் கலந்து போக கல்லாய் தன்னை மாற்றி கொண்டு தன் மனதை மரத்து போக வைக்கும் எண்ணம் போல..

இரண்டு மாதம் முன்பு வரை எத்துணை மகிழ்ச்சி அம்மா அப்பா இல்லை தான் ஆனா எல்லா சொந்தமும் இருக்கிறது போல நினைத்து வளர்ந்தோமே... படிக்காமே இருந்திருக்கலாம் இப்படி வேளைக்கு போகாம இருந்திருக்கலாம் இவன் கண்ணுல சிக்காமா இருந்துருக்கலாம் இப்போ இவனுக்கு பொண்டாட்டியா ஆகாமே இருந்துருக்கலாம் எத்துணை லாம் போட்டாலும் நடந்ததை மாத்த முடியாதே..

உள்ளே சென்றவள் நேரம் கடந்தும் வெளியில் வரவில்லையே என்று தாழ் போடாத கதவை திறந்து கொண்டு உள்ளே சென்ற கரிகாலன் கண்டது நீருக்கடியில் மடிந்து அமர்ந்திருந்தவளை தான் அவளை கொடுமை படுத்தவென மணந்து கொண்டவன் அனைத்தையும் மறந்து பைப்பை அடைத்துவிட்டு துவாலை எடுத்து அவளுக்கு சுத்தி மீண்டும் அள்ளிக்கொண்டான் கைகளில்...

அவன் தூக்கி கொண்ட உணர்விருக்கிறது தான் ஆனால் புது பெண்ணுக்குரிய கூச்சமில்லையே அவனுக்கான பொருளை அவன் அள்ளி கொள்கிறான் என்கிற எண்ணம் மட்டும் தானே இவளுள்..

இதோ கட்டிலில் கிடத்தி அவள் உடலெல்லாம் மீண்டும் முத்தத்தால் குளிப்பாட்டி கொண்டு நிற்கிறான்.. ஹே கொடி பசிக்கிது சாப்பிடலாமா.. இதுவரை எல்லாம் என்னை கேட்டு தான் செய்தியாடா என்ற கேள்வி அவள் கண்களில் தெரிய அதை படித்தவன் போல் எல்லாம் உன்னை கேட்டுட்டு செய்ய முடியாது டிரஸ் எதுவும் மாத்த வேண்டாம் இந்த என் ஷர்ட் இதை போட்டுக்கோ நான் போன் பண்ணி சாப்பாடு கொடுத்தனுப்பா சொல்றேன்.. அப்பறம் சாப்டுட்டு தெம்பா உன்னை கவனிக்கிறேன்.. கண்ணடித்து இவன் கூற இப்போதும் ஒரு வெற்று பார்வை மட்டும் தான் அவளிடம்..

அவள் அன்னக்கொடி நேற்றுவரை அவள் அன்னக்கொடி சக்திவேல் இன்றிலிருந்து அன்னக்கொடி கரிகாலன்..

கரிகாலன் கால் போன போக்கில் இல்லை இல்லை கார் போகும் போக்கில் போகும் மனிதன்.. பாட்டன் சேர்த்த சொத்தே பத்து தலைமுறைக்கு இருக்க சொத்தை சேர்ப்பது நீங்களாய் இருங்கள் அதை அழிப்பது நானாய் இருக்கிறேன் என்ற சிறந்த கொள்கையோடு வாழ்பவன்.. ஒற்றை மகனை பெற்றதால் அவனை தடுப்பார் யாருமில்லை.. அம்மா சுகந்தி அவர்களின் பகட்டான வாழ்க்கைக்கு எப்போதும் அவர்கள் இருக்குமிடம் லேடீஸ் கிளப்பில் தான்.. அப்பா சுந்தரமூர்த்தி இன்று விரல் விட்டு என்ன கூடிய முக்கிய தொழிலதிபர்களில் இவரும் ஒருவர்..

ஹே கொடி வாவா சாப்பாடு வந்துட்டு என்று வேலையாள் கொண்டு வந்து கொடுத்த டிரேயை அவள் முன் நீட்ட மீண்டும் ஒரு அதிர்ச்சி அதுவும் ஒரே நொடி தான்.. அவள் அமர்ந்திருந்த இடத்தில் அவளுக்கு தேவையான பால் மற்றும் சில காலை உணவுகளை வைத்தவன் அவனுக்கு தேவையான மதுபானத்தை கையில் எடுத்து கொண்டு அவள் அருகில் அமர்ந்தபடி அப்படியே பாட்டிலோடு உள்ளுக்குள் சரிக்க.. பெண்ணவள் மனது உடைந்தே போனது.. எதுவும் பேசாமல் சில நொடி மௌனம் மீண்டும் இரவெல்லாம் இவன் படுத்திய கொடுமைக்கு சாப்பிடாமல் இருக்க முடியாதே உடல் அசதி போக்க உண்டுதானே ஆக வேண்டும் என்று மனதால் இவள் நினைத்து உணவை பார்த்த படி இருக்க..

மடித்திருந்த கால்களில் கோலம் போட்ட படியே அவள் காதை உரசி உறைய வைக்கிறான் சாப்பாடா பாத்துட்டே இருந்தா பசி தீராது இப்போ அப்படித்தான் இருக்கு எனக்கு அதனால சாப்பிட்டு உடம்புல தெம்பு ஏத்து உங்கிட்ட என் பசி தீரவே தீராது போல என்ற கூறி அவன் எழுந்து செல்ல.. அன்னக்கொடி தன்னிலை எண்ணி வெட்கிப்போனாள்..

கைகள் உணவை அள்ளி பருகினாலும் நினைவெல்லாம் நேற்று நடந்த திருமணத்தில் தான் இருந்தது...

இரவு ஏழு மணி அலுவலகம் சென்று விட்டு வீடு திரும்பிய அன்னக்கொடி கண்டது அவள் வீட்டில் அமர்ந்திருந்த கரிகாலனை தான் அவனை கண்டதும் தானாய் உதடு சுளித்து அவள் உள்ளே செல்ல நினைக்க அவளை கண்டவன் ஒரே எட்டில் அவள் கைகளை பற்றிக்கொண்டு.. என்ன டி நீ பாட்டுக்கும் போற ஏன் உன் முன்னாடி ஆறடி ஆம்பளை உக்காந்திருக்கது தெரியலையா என்று கைகளை அழுத்த அந்த அழுத்தத்தில் வலி பிறக்க டேய் கைவிடுடா பொறுக்கி யார்வீட்ல வந்து யார் கைய பிடிக்கிற என்ற வேகத்தில் அவள் கைகள் தானாய் அவன் கன்னத்தை பதம் பார்க்க.. அவளை அடித்து கொல்லும் வெறி அவனுக்குள் ஆனாலும் அதை மறைத்து கொண்டு .. எனக்கு சொந்தமான பொருள் மேல நான் கை வைக்கிறேன் என்று அவள் அசால்ட்டாக குண்டை தூக்கி போட.. மீண்டுமாய் அவள் இதழ்கள் வளைகிறது..

அவனிடம் கையை உறுவிக்கொண்டவள்.. அத்தை மாமா என்று சத்தமிட அவர்கள் அப்போது தான் உள்ளிருந்து வெளியில் வந்தார்கள் அவர்கள் முகத்தை கண்டே இவளுக்கு புரிந்து போனது இவன் வந்திருப்பது இவர்களுக்கு தெரியுமென... அத்தை இவனை வெளில போக சொல்லுங்க என்று நகர்ந்தவள் அவள் அத்தை சொன்ன வார்த்தைகளில் உறைந்து நின்றாள்..

அன்னம் எத்துணை வருஷம் நாங்க உனக்கு சோறு போடுறது இனி நீ இங்க இருக்க வேண்டாம் போய்டு என்று துளியும் இரக்கமற்று கூற அவரை ஒரு வெற்றுப்பார்வை பார்த்தவள் தன் மாமனை பார்க்க அவரோ என் மனைவி சொல்வதே வேதவாக்கு என்று மௌனம் காக்க.. அமைதியாக உள்ளே சென்றவள் சில துணிப்பை அவள் தாய் தந்தை புகைப்படம் அதை எடுத்தவளின் கண்கள் குளமாயின அதை உள்ளே இழுத்து கொண்டவள் இதர சில பொருட்களை எடுத்து கொண்டு வெளியில் வந்தவள் கிளம்ப எத்தனிக்க..

அன்னம் நில்லு என்ற அத்தையின் குரலில் அவர் இங்கே இருக்க சொல்ல போகிறார் என்ன சொன்னாலும் இருக்க கூடாது போய்டணும் என்று நினைத்து கொண்டு திரும்பாமல் நிற்க நீ இவர் கூட போ என்று கரிகாலனை நோக்கி கை நீட்ட அவரை அடித்து கொல்லும் வெறி பிறக்க திரும்பியவள் வெளில போக சொல்றிங்க போறேன் ஆனால் நான் யார்கூட போகணும்னு நீங்க சொல்ல கூடாது என்று மீண்டுமாய் நடக்க. அவள் கரங்களை வலிய கரங்கள் முரட்டு தனமாய் பிடிக்க அவனை அடிக்க முடியாமல் கைகளில் இருந்த பைகள் தடுக்க அவன் விழிகளை நேருக்கு neraai பார்த்து என்னவென்று புருவம் உயர்த்த..

அந்த பார்வையில் சிறிது தடுமாறிய கரிகாலன் ரசனையோடு அவளை பார்த்து கொண்டு இனி நீ எங்க போனாலும் எனக்கு மட்டும் தான் சொந்தம் உன் வீட்டு ஆளுங்களுக்கு அம்பதாயிரம் ஒருலட்சமில்லா முழுசா ஒரு கோடி கொடுத்திருக்கேன் இந்த கொடிய எனக்கு சொந்தமாக்கிக்க என்று அவன் இகழ்ச்சியோடு கூற.. முழுதாய் செத்தே போனாள் அன்னக்கொடி.. தானாய் வலுக்கட்டாயமாய் குனிந்த தலையை உயர்த்தி யார்கிட்ட பணம் கொடுத்தாயோ அவங்களே உனக்கு சொந்தமாகிகோ என்ற வார்த்தையோடு தன் அத்தையை இவள் முறைக்க....

வாய்மூடுடி எடுப்பட்ட சிறுக்கி உன்னை இதுவரை படுச்சு ஆளாக்கி வளத்து விட்டோம்ல அதுக்கு தான் இந்த பணம் தம்பி இனி அவளாச்சும் நீங்களாச்சும் என்று அன்னக்கொடி அத்தையான வானதி கூறிட மனைவியின் வார்த்தையை கேட்டு அவளது கணவர் கோபாலன் கூட ஒன்றும் கூறாமல் நிற்க.. தன் எந்த நிலைக்கு தள்ளப்பட்டுளோம் என்பது இப்போது தான் அன்னக்கொடிக்கு புரிந்தது..

இப்படியும் மனிதர்களா என்ற ஆற்றாமையோடு கரிகாலனை உற்று பார்த்தவள் உன்னோடு நான் வரேன் என்னை பணம் கொடுத்து வங்கிட்ட இப்போ எனக்கு பேர் என்ன தெரியுமா அதை வார்த்தையால என்னால சொல்ல கூட முடியாது ஆனாலும் நீ அவங்களுக்கு கொடுத்த பணத்தோடு சேர்த்து எனக்கும் இன்னொன்னு கொடு என்று கூறியவள் அவன் முகத்தை பார்க்க.. கரிகாலனோ நீ சொல்லு என்பது போல் அவள் கைகளை விடாமல் பிடித்து கொண்டு பார்க்க ஒரு நிமிஷம் கையை விடு என்று கூற அவள் குரலில் என்ன உணர்ந்தானோ சட்டென அவள் கரங்களை விடுவித்தவன் அவளையே பார்க்க..

அங்கிருந்த சிறிய டேபிள் மீது தனது.. தந்தை புகைப்படத்தை எடுத்து வைத்தவள்.. தனது கைப்பைக்குள் இருந்த தனது தாயியின் திருமாங்கல்யத்தை எடுத்து பார்த்தவள் கண்களின் விடாத கண்ணீர் தான் அது ஒரு எழுப்பவுன் தாலி சரடு அதை கைகள் வைத்து பார்த்தவள் கரிகாலனை திரும்பிப்பார்க்க அவள் என்ன செய்கிறாள் என்று விடாது பார்த்தவன் அவள் தன்னை பார்க்கவும் தானாய் அவள் முன்பு போய் நிற்க அவன் கைகளில் அந்த பொன் தாலியை கொடுக்க.. அவனோ இதெல்லாம் எதுக்கு என்பது போல் ஒரு பார்வை பார்க்க.. அவனை கண்டு வெட்கி போனவள் தன் வெட்கம் விட்டு உதிர்த்துவிட்டால் இதை என் கழுத்துல போட்டுட்டு எங்க வேணாலும் கூப்பிட்டு போ என்று..

அவளை மேலும் கீழுமாய் பார்த்தவன் என்ன தாலி மேஜிக்கா என்று உதடு வளைத்து நகைக்க.. உன்னை எப்போவோ தூக்க வேண்டியது டி உன்னை ஒரே நாள்ல விட கூடாதுனு தான் இப்போ விடாம காலம்பூரா என்கூட இருக்கணும்னு தன் உனக்காக இவளோ செலவு.. அதை தாண்டி ஒன்னுபோறதா இந்த சங்கிலிய போட்டாலும் போடலானாலும் உன்னை விடமாட்டேன் என்னை அவமான படுத்துனதுக்கு காலம்புர உன்னை கொடுமைப்படுத்துவேண்டி என்று அவளுக்கு மட்டும் கேட்கும் படி இவன் உறும.. அவனை உற்றுப்பார்த்தவள் இனி உயிருள்ள ஜடம் மட்டும் தான் நான் ஆனால் இதை மட்டும் என் கழுத்துல போட்டுட்டேன் என்ற கெஞ்சலோடு அவனை பார்க்க.. அவள் கண்களில் என்ன கண்டனோ அந்த எட்டு மணி இரவு நேரத்தில் இருவருக்கும் திருமணமா என்று அறியமுடியாத உறவுக்குள் நுழைந்தனர்..

அவளை அழைத்து கொண்டு அவன் முன்னே நடக்க ஒரு வார்த்தை யாரும் சொல்வார்களா என்ற நப்பாசையோடு ஒருமுறை திரும்பி பார்க்க விட்டது தொல்லை என்பது போல் மாமன் அத்தை முகத்தை திருப்பி கொள்ள அவனோடு சேர்ந்து நடந்தால் இவள்.. டிரைவர் வைத்து கொள்வது இவனுக்கு பிடிக்காது என்பதால் தானே அவளது பொருட்களை எல்லாம் உள்ளே எடுத்து வைத்தவன் அவளுக்கு கதவை திறந்துவிட்டு அவர செய்து நேராய் அழைத்து கொண்டு தனது வீட்டுக்கு பயணமானான்....

ஓய் கொடி வெறும் தட்ட எவளோ நேரம் வெறிச்சு பார்ப்ப என்று குளறியபடி அவள் முன் இருந்த தட்டை எடுத்து கீழே போட்டவன் அவள் அணிந்திருந்த தனது சட்டையை இழுத்து கிழித்தவன் அவளிடம் மீண்டும் மூழ்க தொடங்க.. தனக்குள் சுற்றும் நினைவலைகளை ஒதுக்கி வைத்தவள் அவனுக்கு சொந்தமான பொருளாய் அவனுக்கு இசைந்து போனாள்.. மது நெடி இவளுக்கு ஏறி உண்டஉணவு குமட்டி கொண்டு வர அவனை உதறி தள்ளி பாத்ரூம் சென்றுவிட.. தனது தீராத ஆசையை தட்டிவிட்டு போன அன்னக்கொடியின் மேல் கொலைவெறியானான் கரிகாலன்.. போதையின் உச்சத்தில் இருந்தவன் மீண்டுமாய் சில பாட்டில்களை உள்ளுக்குள் சரித்து படி அங்குமிங்கும் அலைந்தபடி இருந்தவன் அறையில் இருந்த சோபாவில் அமர்ந்திருக்க.. துவண்டு போய் வந்த அன்னக்கொடி நேராய் கட்டிலில் சென்று படுக்க இவனுக்குள் அவளின் மீது வெறியேற அவளை முறைத்தபடியே அமர்ந்திருந்தான்.. இதை அறியாத கொடி உறங்கியே போனாள்..​
 
Messages
4
Reaction score
0
Points
1
UUK-2



உறக்கம் கலைந்து கண்ணை திறந்தவள் கண்டது எங்கோ செல்ல தயாராகிக்கொண்டிருந்த கரிகாலனை தான்.. நேற்று இரவு இந்த வீட்டுக்குள் வந்தது... அவளுக்கு அது மட்டும் தான் தெரிகிறது இன்று மணி என்ன என்று கூட தெரியவில்லை கண்களை சுழற்றி அறையை நோட்டமிட அறைக்குள் கடிகாரம் இருப்பது போல் தெரியவில்லை.. சுற்றி வந்தவள் மீண்டும் கண்டது சிவப்புநிற ட்ஷிர்ட் அணிந்து இருந்த கரிகாலனை தான்.. அவனை முதல் முறை கண்டதும் இதுபோன்ற சிவப்பு நிற ஷர்ட் தானே..

இரண்டு மாதத்திற்கு முன்பு அன்னக்கொடி தனது அத்தை மகன் ரஞ்சித் உடன் அங்கு மால் ஒன்றிற்கு சென்றிருக்க அங்கே தான் முதலில் கரிகாலனை சந்தித்தால்.. மாதம் ஒருமுறை இப்படி அன்னக்கொடியை வெளியில் அழைத்து செல்வது ரஞ்சித்திற்கு பிடித்தமான ஒன்று சிறு வயதிலிருந்து உடன் வளர்ந்தவள் மீது அவனுக்கு அன்பையும் தாண்டி ஒரு உன்னதமான ஒரு உணர்வு உண்டு.....

இருவரும் புட் கோர்டில் அமர்ந்து உணவருந்தி கொண்டிருக்க ரஞ்சித் போன் வந்திருப்பதாக கூறி எழுந்து சற்று தள்ளி செல்ல அன்னக்கொடி அவனை எதிர்பார்த்து வெளியில் பார்த்தபடி அமர்ந்திருக்க அவளுக்கு முன் இருக்கையில் வந்து அமர்ந்தான் அவன்...

ஹே மேன் இது ரீசெர்வ்ட் சீட் எழுந்து வேறெடத்துல உக்காரு என்று அன்னக்கொடி கூறிட அவளை மேலும் கீழும் பார்த்தவன் நன்றாக சாய்ந்து அமர்ந்தபடி அவளையே பார்க்க அவனது பார்வையை சந்திக்க விரும்பாதவள் முகத்தை திருப்பி கொண்டு ரஞ்சித்திற்காக காத்திருக்க... அவளை மீண்டும் பார்த்தவன் திஸ் ஐஸ் மை கார்டு காண்டாக்ட் மீ குவிக்லி.. உன் ஸ்ட்ரக்சர்க்கு கண்டிப்பா டபுள் பேமெண்ட் தான் என்று இவன் கூற கொதித்தெழுந்தால் அன்னக்கொடி...

சொல்லிவிட்டு அவன் தனது கருப்பு கண்ணாடியை மாட்டிக்கொண்டு எழுந்துக்கொள்ள டேய் என்று கத்திவிட்டாள் அவள்.. என்னடா உன் மனசுல என்ன நினைக்கிற யாருன்னே தெரியாத பொண்ணுகிட்ட இப்படிதான் பேசுவியா என்று கேட்க அவனது கருப்பு கண்ணாடியை சற்று இறக்கி அவளை சற்று உதடு வளைத்து பார்த்தவன் இவளது சத்தத்தில் மற்றவர்கள் பார்வை தங்களை மொய்ப்பதை உணர்ந்து அதை விரும்பாதவன் அவளை சற்று நீங்கி யாருனு தெருஞ்சுகிறதுக்கு தான் கூப்பிடுறேன் வந்துட்டு போடி என்று பல்லை கடித்து கொண்டு பேச நொடியில் அன்னக்கொடி கை அவனது கன்னத்தை பதம் பார்த்திருந்தது..

செல்ல செல்வமாய் வளர்ந்தவன் இதுவரை யார் முன்பும் தலை குனிந்து நிற்காதவன் ஒரு பெண் தன்னை அடித்து அவமானபடுத்த பாம்பென சீறிக்கொண்டு அவளை பார்க்க அதற்குள் ரஞ்சித் வந்துவிட அன்னக்கொடியை அடிக்க ஓங்கிய அவனது கையை பிடித்திருந்தான்.. ஹே மிஸ்டர் கைய ஓங்குராரத்துக்கு முன்ன யோசிச்சு செய்யணும் எதுக்கு இப்போ என் அன்னத்தை நீ அடிக்க போற என்று இவனும் குறையாத வேகத்தில் கேட்டிட.. நான் யாருனு தெரியுமாடா கேகே (KK) டா என்மேல கை வச்சுட்டீங்களா இனி உங்க நிம்மதி பறிபோயிடும்டா என்று கூறியவன் சற்றும் நிற்காமல் சென்றுவிட்டான்..

என்ன மலரும் நினைவுகளா கொடி என்று கேட்டுக்கொண்டு கரிகாலன் அவள் சுற்றியிருந்த போர்வையை விளக்க நொடியில் நிகழ்ந்தது புரியாமல் தான் எங்கிருக்கிறோம் என்பது புரியாமல் குழம்பிய அன்னக்கொடி அவனது செயலில் அனிச்சையாக இவள் விலகி செல்ல ஏனோ இப்போது அவனுக்கு கோபம் வரவில்லை மாறாக ஒரு வெற்றி புன்னகை தான்.. என்ன கொடி எதோ இப்போதான் உன்னை நான் முதல் தடவை பாக்குறது போல பதறுற என்று கேட்டு சாவகாசமாய் கட்டிலில் அமர்ந்தவன்.. மறுமுனையில் அமர்ந்திருந்தவளை கை நீட்டி அழைக்க இரவில் அவனுக்கு இசைந்தவளால் ஏனோ இம்முறை ஒன்ற முடியவில்லை..

நேற்று நடந்த தாக்கம் அவனது பொருள் அவன் உடமை அவன் தொடுகிறான் என்ற உணர்வில் ஏதேதோ தனக்கு தானே சொல்லிக்கொண்டவளால் இப்போதும் அப்படியே கூறி தனது மனதை சமன் செய்து கொண்டு அவன் அருகில் செல்ல இயலவில்லை.. அவள் அருகில் வராதது சற்று கோபத்தை தூண்ட கட்டிலில் அமர்ந்தபடியே அவளை நெருங்கியவன் பெயரில் மட்டும் கொடி இல்லாமல் அவளே கொடி போல் இருக்கவும் அள்ளி மடியில் அமர்த்திக்கொண்டான்.. அவனை விட்டு விலக நினைக்க அமிலமென விழுந்தது அவனது வார்த்தை டபுள் பேமெண்ட் கொடுப்பேன்னு சொன்ன அப்போ அப்படி அறஞ்ச என்று கூறியவன் இன்று வாங்கிய அறையென எண்ணி கன்னத்தை தடவியபடி ஒரு கையால் அவள் இடையை இறுக்கி கொண்டு கோபத்தோடு பேச அவனது கோபத்தில் நொடிபொழுது கொடியின் மனம் தூக்கி போட எப்படி இவனை விலகுவது என்று அமர்ந்திருக்க மீண்டும் தொடர்ந்தான் கரிகாலன்.. அன்னைக்கு வந்திருந்தா ஒரே நைட்ல அனுப்பிருப்பேன் ஆனால் இப்போ உனக்காக முழுசா ஒரு கோடி செலவு செய்திருக்கேன் அதுனால இரவு பகல் பார்க்க உன்னோடு இருக்கலாம் என்று கூறிட.. அன்னக்கொடி உடல் கூசி போனது..

அவளது கழுத்து வளைவில் அழுந்த முத்தமிட்டவன் வந்து உன்னை கவனிக்கிறேன் இப்போ லீனா வைட்டிங் என்று கூறி அவளை விலகிட தீயை தலையில் கொட்டியது போல் உடல் எரிய அமர்ந்திருந்தாள் அன்னக்கொடி.. அவன் ஏதேதோ எண்ணத்தில் தன்னை அழைத்து வந்தவன் தான் ஆனால் அதற்கு முன் தனது தாயின் தாலியை அணிவித்து தானே அழைத்து வந்தான் வந்தவன் அதற்கு பின் கூட இப்படி செல்ல வேண்டுமா அப்போ நைட் என்கிட்ட நடந்துக்கிட்டது மனைவின்ற உரிமைல இல்லையா என்று இவள் மனம் நினைக்க.. அவள் மனமோ எள்ளி நகையாடியது அவன் அழைத்து வந்ததே அவளோடு கூடல் கொள்ள தானே என்று..ஏனோ இதை புரியாதவள் மூளை மறந்து போனது போல.. இல்லை வேண்டாமென்று அவளே ஒதுக்கி கொண்டாலோ.. . அவனுக்கு அது வெறும் தங்கச்சங்கிலி மட்டும் தான் இவளும் அவனை கணவனாக ஏற்றுக்கொண்டு வரவில்லை அவனோடு வரவேண்டிய சூழ்நிலையில் தன் வாழ்க்கை தள்ளப்பட்டது என்பதை தற்காலிகமாக மறந்து போனாள் பெண்ணவள்...

எத்துணை நேரம் அங்கே இருந்தாலோ மெதுவாய் தன்னை மீட்டு கொண்டு எழுந்தவள் தனது கைப்பையில் இருந்த அலைபேசியை எடுத்து சார்ஜில் போட்டுவிட்டு குளிக்க சென்றாள்.. பட்டதெல்லாம் கரையென்றால் தண்ணீரோடு கரைந்து போக கூடும் அவனோடு கூடிய உடலை என்ன செய்தால் தகும் என்ற வேதனையோடு தண்ணீரில் நின்றவள் குளித்து முடித்து வெளியில் வர அவளது கைபேசி அலறியபடி இருந்தது..

அந்த பிரத்தியேகமான அலைபேசி ஓசையிலே புரிந்து போனது அழைப்பது யாரென்று.. அவள் உடை மாற்றி கொண்டு அலைபேசியை சென்று கையில் எடுக்கும் வரை அது அலறிக்கொண்டு தான் இருந்தது.. கையில் எடுத்தவள் மீண்டும் சில பல அழைப்புகளுக்கு பின் தான் அழைப்பை ஏற்றால்.. அதற்குள் அவன் முன் அழுதுவிட கூடாது என்பதற்காக வந்த அழுகையை உள் வாங்கி கொண்டு அவனிடம் பேச.. அன்னம் எங்க இருக்க சொல்லு நான் வரேன் எதுவா இருந்தாலும் வீட்ல வச்சு பேசிக்கலாம் நீயா எதுவும் பண்ணிருக்க மாட்டான்னு எனக்கு தெரியும் என்று ரஞ்சித் இவளை பேச விடாது அவனே பேச மீண்டும் அழுகை இவளிடம் முட்டிக்கொண்டு வர சிறிது நேர அமைதிக்கு பின்...

எங்க வர சொல்லுற ரஞ்சி என்று உள்ளுக்குள் சென்ற குரலை வரவழைக்கப்பட்ட உறுதியோடு கேட்டிட.. என்ன அன்னம் எங்கன என்ன கேள்வி இது நம்ம வீட்டுக்கு தான் நைட் ல இருந்து விடாம உன் நம்பர்க்கு கால் பண்ணிட்டு இருக்கேன்.. நீ எங்கன்னு அம்மா அப்பா கிட்ட கேட்டா எதுவுமே சொல்லமாற்றங்க யாரோ ஒருத்தன் வந்து கூப்பிட்டான் அவன் கூட நீ போய்ட்டானு அம்மா சொல்ராங்க அதெல்லாம் நான் நம்பள என் அன்னம் என்னை விட்டு என்கிட்ட சொல்லாம எங்கயும் போகமாட்டா வந்துடுவான்னு சொல்லிட்டு உனக்காக நைட் ல இருந்து காத்திருக்கிறேன் அன்னம் நீ எங்க இருக்கன்னு சொல்லு நான் வரேன்.. ரஞ்சி உங்க அம்மா சொன்னது உண்மை எனக்கு எனக்கு கல்யாணம் ஆகிட்டு இனி நான் அங்க வரமாட்டேன் இனி எனக்கு கால் பண்ணாதே என்று கூறியவள் மொபைலை அணைத்துவிட்டு முட்டி கொண்டு வந்த அழுகையை மீண்டும் தொடர அவளை தேற்றுவோர் யாருமில்லை..

சிறிது நேரத்துக்கு பின் கதவு தட்டும் ஓசை கேட்க தன் சஞ்சலங்களை ஒதுக்கிவிட்டு கதவை திறக்க அவ்வீட்டு வேலையாள் செல்வி நின்றிருந்தார்.. அம்மா ஐயா உங்களுக்கு சாப்பாடு கொடுக்க சொன்னாங்க என்று ஒரு டிரேயை நீட்ட அதை மறுக்காமல் வாங்கி கொண்டவள்.. அம்மா மணி என்ன ஆகுது என்று கேட்டிட அவளை கனிவோடு பார்த்தவர் மணி அஞ்சாகுது கண்ணு போய் சாப்டு என்று கூறி நகர்ந்தவர் மனதில் இம்புட்டு அழகான பொண்ணு இவன் கிட்ட வந்து மாட்டிக்கிச்சே என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை..

நேற்று இப்பெண்ணை அவன் அழைத்து வரும் போது தான் அவள் முகத்தில் எத்துணை துயரம் அனுபவமிக்க அவருக்கு பார்த்ததும் புரிந்ததே இவன் வழக்கமாக அழைத்து வரும் பெண்களை போல் இப்பெண்ணை அழைத்து வரவில்லையென்று..

ஆமாம் கரிகாலன் குணமே அதுதானே குடித்தால் பெண்கள் தேவை, மகிழ்ச்சியாக இருந்தால் பெண்கள் தேவை, கோபமாக இருந்தால் பெண்கள் தேவை மொத்தத்தில் அவனுக்கு பெண்கள் அவனின் தேவைக்கான வடிகால்.. எத்துணை குடி போதையில் இருந்தாலும் மற்ற பெண்களிடம் உறவு கொள்ளும்போது உறை அணியாமல் யாருடனும் கூடாதவன் அன்னக்கொடியிடம் தான் தன் சுயத்தை மறந்து அவளிடம் மயங்கி போனான்..

அது தனக்கு அவள் சொந்தமான பொருள் என்பதால இல்லை தன் மனைவி என்பதால என்பது அவனறிந்த உண்மை மட்டுமே..

எப்போதும் பெண்களை அழைத்து வந்தால் கீழே உள்ள அறைக்கு செல்பவன் இன்று நின்று சமையல் அம்மாவை அழைத்து அறையில் பால் பழம் வச்சுட்டு புல்லா நல்லா நறுமணமான ரூம் ஸ்ப்ரேயை அடிக்க சொல்லுங்க இன்னும் பத்தே நிமிசத்துல நடக்கணும் அவனின் பேச்சை கேட்டு கொண்டிருந்த அப்பெண்மணி தம்பி எந்த ரூம்ல என்று மெதுவாய் கேட்க அவரை நிதானமாய் பார்த்தவன் என் ரூம்ல என்று அழுத்தமாய் கூறியவன் அன்னக்கொடியை அழைத்து கொண்டு தனது அறைக்கு சென்றவன் அறையோடு இருந்த மற்றொரு அறைக்குள் அவளை அழைத்து சென்றவன் அங்கிருந்த சோபாவில் அமர அன்னக்கொடிக்கு தான் உடம்பெல்லாம் தகித்தது..

என்ன இவன் இப்படி பேசுறான் ஏன் ஏன் அப்போ உண்மையிலே அவன் நெனச்சதை சாதிச்சுக்க தான் என்னை அழைத்து வந்தானா என்ற யோசனையில் நிற்க சோபாவில் அமர்ந்து அவளையே பார்த்திருந்தவனால் ஏனோ இவளின் மனதை அத்துணை துல்லியமாக படிக்க முடிந்தது.. வேலை செய்றவங்கள்ட்ட பயந்து பயந்து பேசணும்னு இல்லை அண்ட் நீ கொடுத்த தங்கச்சங்கிலி உனக்கு போட்டுவிட்டுடேன் எப்படியும் உனக்கு எதிர்பார்ப்பு இருக்கும்ல அதான் intha பால் பழமெல்லாம் மத்தபடி எனக்கு எப்படி இருந்தாலும் ஓகே தான் என்றவன்.. அவளை பார்த்து கண்ணடிக்க இவனின் பேச்சுக்கு எவ்விதமாக எதிர்வினை காட்டுவது என்பது புரியாமல் விழித்தவள் அப்படியே நிற்க... ..

அலைபேசி எடுத்து அழைத்தவன் சொன்ன வேலையை முடித்துவிட்டார்களா என்பதை கேட்டு தெளிவு படுத்திக்கொண்டு வெளியில் சென்றவன் நிதானமாய் ஒரு குளியல் போட்டு வெறும் துவலையோடு வந்தவன் அறைக்குள் அவளை தேட அவளோ இவன் செல்லும்போது எந்த இடத்தில் நின்றானோ அங்கேதான் இப்போதும் நின்றிருந்தாள்.. அவளை பார்த்தவனுக்கு என்ன தோன்றியதோ அவளை பின்னோடு அணைக்க மின்சாரம் பயந்தது போல் துள்ளி விலகினால் அன்னக்கொடி.. இவனது கிறக்கம் நொடியில் கோபத்தை உண்டாக்க.. ஹே நீ எனக்கு எனக்கு மட்டும் சொந்தமானவ டி மறந்துடாத இந்த இந்த விலகல் என்னை மூர்க்கனா மாத்திடும் என்னை கோபப்படுத்தி பார்க்காத அது உனக்கு நல்லதில்லை என்று கூறிட அவனது கோபத்தில் உடல் நடுங்கி போனால் அன்னக்கொடி..

மீண்டும் அவளை நெருங்கியவன் கைகளில் ஏந்திக்கொள்ள முதலில் போல் இப்போது அவனை அவள் விலகவில்லை.. ஆணி அடித்தது போன்ற அவனின் பேச்சில் சமைந்து போனால் பெண்ணவள் எனக்கு சொந்தமான அவன் எந்த விதத்தில் சொல்கிறான் தனக்கு அணிவித்த தாலியை வெறும் தங்கச்சங்கிலி என்று சொன்னவன் அப்போ அப்போ அந்த பணத்துக்காக தான் இப்படி.. இந்த முறைல என்கிட்ட நெருங்கினா அதுக்கு என் பேர் என்ன என்றவளின் மனம் ஊமையாக உள்ளுக்குள் கண்ணீர்வடிக்க.. அவளை அப்படியே அவள் வீட்டிலிருந்து அழைத்து வந்தவன் அவளை சுத்தப்படுத்திக்கொள்ள ஏன் உணவு கூட அளிக்காமல் அவளை நெருங்கிட பெண்ணவளின் மனம் எதையும் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு நொடியில் மனதை சமன் செய்திருந்தால்..

 
Messages
4
Reaction score
0
Points
1
UUK-3

நேற்று நடந்த அலைஅலையான நிகழ்வுகளில் சுழன்றவளின் எண்ணத்தை கலைக்கவென வந்தான் அவனின் எண்ணத்தின் நாயகனே தடாலென்ற கதவை உடைந்துவிடும் சத்தத்தோடு அவள் முன் வந்து நிற்க நேற்று நடந்ததை நினைக்கும் மனதை சற்று அமைதிப்படுத்திவிட்டு அவனை பார்க்க மெதுவாய் கதவை அடைந்தவன் அவள் அமர்ந்திருந்த சோபாவில் அவளோடு பக்கத்தில் அமர்ந்தவன் ஒன்றும் பேசவில்லை... அவன் மேலிருந்து வீசும் மனமே உணர்த்தியது அவன் மது அருந்திருக்கிறான் என்பதை.. ஒன்றும் பேசாமல் அவனை பார்த்தவள் பார்த்தபடி இருக்க.. கொடி கிஸ் மீ என்று கேட்டவன் அவள் முகத்தை நேருக்கு நேராய் நோக்க.. இவன் என்ன கேட்கிறான் என்று முதலில் புரியாதவள் புரிந்தபின் அவனை துச்சமென பார்க்க.. அவளது பார்வையில் கோபம் கொண்டவன்.. கொடி கிஸ் மீ.. என்னை கோபப்படுத்தாத.. கிஸ் மீ கிஸ் மீ என்று சத்தமிட அவனை நிதானமாய் பார்த்தவள் சோபாவில் சாய்ந்துகொள்ள.. அவளை வெறியோடு நோக்கியவன் அவன் சொன்னான்டி சொன்னான் நீ நீயா என்னை நெருங்கமாட்டா நீ அவனை தான் நெருங்குவான்னு அவன் சொன்னான் டி என்று காட்டுத்தனமாய் சத்தமிட்டவன் அவளது இதழ்களை வன்மையாக முத்தமிட அவனை துளியும் விலக்காமல் அவன் செய்வதை தாங்கியபடி அமர்ந்திருந்தவளுக்கு அந்த அவன் எவன் என்பது மட்டும் சிறிது புரிந்தும் புரியாதது போல் இருந்தது..

கொடி யூ ஆர் மைண் அன்ட் மையின் ஒன்லி.. என்று கூறியவன் அவளை கைகளில் ஏந்த இத்துணை குடி போதையிலும் அவனிடம் சிறு தள்ளாட்டமும் இல்லை.. அவளை மடியில் அமர்த்தி கொண்டு அமர்ந்தவன் அவளின் முகத்தில் முத்தமிட்டு முத்தமிட்டு சொன்ன வார்த்தையெல்லாம் கொடி யூ ஆர் மைன் என்ற வார்த்தை மட்டுமே... அவன் சொல்ல சொல்ல கொடியின் மனம் அலறியேவிட்டது அவனுக்கு மட்டுமாம் எதற்காக கேவலம் பணத்துக்காக விற்றுவிட்டார்களே அந்த பணத்துக்காக என்னை இப்படி சித்திரவதை செய்கிறானே என்றவளின் மனம் எக்காளமிட்டு உதிர்த்துவிட்டது அந்த வார்த்தையை..

ஆமாம் உனக்கு மட்டும் தான் என்று இவள் கூற.. என்னவென்று சொல்ல முடியாத சந்தோஷத்தில் இவன் இறக்கை இல்லாமல் பறந்தவன் அடுத்து இவள் சொன்ன வார்த்தையில் சிறகு வெட்டப்பட்டு பொத்தென்ன விழுந்தான்.. என் வாழ்க்கை முழுதும் உளைச்சலும் உங்கிட்ட ஒரு கோடி என்னால சம்பாரித்து கொடுக்க முடியாது தான்.. ஒரு பொண்ணுகிட்ட போன பத்தாயிரம் கொடுப்பியா அப்போ அப்போ எப்படி பாத்தாலும் ஒரு மூணு நாலு வருசத்துல அந்த ஒரு கோடிக்கு கணக்கு வந்துடும்ல.. சொல்ல முடியாது நீ செஞ்ச விஷயம் வெளில தெரிஞ்சா உன்கூட இருந்த நாட்கள் முடிஞ்சதும் உங்கிட்ட மத்தவங்க வந்து கூட விலை பேசலாமென கூறியவள் கண்களில் கண்ணீர் வழிந்தபடி இருக்க ..

சிறகு ஒடிந்தவன் அவளை என்னவென்று சொல்ல முடியாத ஒரு உணர்வோடு பார்த்தவன் உள்ளுக்குள் மருகி போனான்.. வைக்கும் முத்தத்தை நிறுத்தியவன் அவள் கண்களை ஆழமாய் பார்த்துவிட்டு நான் கேகே டி கேகே உன்னை என்கிட்ட இருந்து யாராலயும் பிரிக்க முடியாது.. என்ன வேணும் என்ன வேணும் என் சொத்து முழுசும் கூட தருவேன் ஆனால் உன்னை உன்னை யாருக்கும் தரமாட்டேன்.. பெண் மனம் உன் பொன்டாட்டின்ற உரிமை மட்டும் தான் வேணும் கொடுப்பியா என்று வாய்வரை வந்த வார்த்தையை மென்று முழுங்கியவள் அவனை வெற்றுப்பார்வை பார்க்க.. அந்த பார்வைக்கு அர்த்தம் தெரியாதவன் மனதின் சஞ்சலங்கள் தீர்க்க அவளோடு ஒன்றிப்போனான்..

அவளிடம் தேடிய தேடல் அவனுக்கு முடிவே இல்லாத ஒன்றாய் இருக்க.. அவளிடம் நெருங்கிய போதெல்லாம் அவன் கூறிய வார்த்தை யூ ஆர் மைன் என்றது மட்டுமே.. ஆனலும் அவளின் அந்த வெறுமையான பார்வை எதோ செய்ய மனதில் இத்துணை வருடம் வராத பாரம் ஒன்று அவன் மனதை அழுந்த அது என்னவென்று உணர முடியாமல் தன் தேவையை முடித்து கொண்டு அவளை விட்டவன்.. அவளை திரும்பி பார்க்க விழிகள் மூடியபடி இருக்க அவளை அள்ளி தன்மேல் போட்டுக்கொண்டவன்.. இதுவரை தன் வாழ்க்கையில் யாரிடமும் கேட்காத அந்த வார்த்தையை அவளிடம் கேட்டேவிட்டான்..

கொடி ரொம்ப வலிக்குதா சாரி சாரி டா என்றிவன் கேட்க அவளின் சூடான கண்ணீர் இவனின் மார்பை நனைக்க சத்தியமாய் இது என்னமாதிரியான உணர்வென்று அவனால் உணரவே முடியவில்லை.. அவளை எதற்காக அழைத்து வந்தோம் இப்போது என்ன செய்துகொண்டு இருக்கிறோம் என்று யோசித்தவன் அவள் முகத்தை நிமிர்த்தி பார்க்க அதுவரை கண்களை மூடி இருந்தவள் இமை விலக அவன் கண்களை காண நான்கு விழிகள் பேசி கொண்ட வார்த்தை என்னவென்று இருவருக்கும் தெரியவில்லை .. அவள் முகத்தை சில நொடி பார்த்தவன் அவளது பிறை நெற்றியில் முத்தமிட மங்கையிவள் உடைந்து போனால்.. தன்னை உருகுலைக்க நினைத்த ஒருவனிடம் தன் மனம் சாய்வதை விரும்பாதவள் கண்களை இறுக்கி மூடிக்கொள்ள அவளை இறுக்கி அனைத்தவன் இன்று நடந்ததை கூற தொடங்கினான்..

வீட்டிலிருந்து கிளம்பியவன் நேராய் சென்ற இடம் பீச் ரிசார்ட் ஒன்றிற்கு தான்.. இன்று சந்திக்கவிருந்தது ஏதோ ஒரு மாடல் அழகியை தான்.. கரிகாலன் தந்தைக்கு எத்தனையோ தொழில் இருந்தும் சினிமாவில் ஒரு சிறு ஆர்வம் இருப்பதால்.. சினிமா துறையில் தயாரிப்பாளராக இருந்து வருகிறார் ஆதலால் இதுபோல் அழகிகளின் அறிமுகம் கரிகாலனுக்கு ஏராளம்.. இரண்டு நாள் முன்னவே இவளை சந்திப்பதாக கூறியிருந்ததால் அவளை சந்திக்க சென்றான்.. மனிதனின் தரத்தை ஆடை தான் பாதி முடிவு செய்யுமாம்.. எங்கே லீனா அணிந்திருந்ததே பாதி ஆடைதானே.. கரிகாலன் மாநிறமானவன் தான் அழகு என்று கூறிட முடியாது ஆனால் கம்பீரமாய் வலம் வரும் அவனிடம் ஏதோ ஒரு அழகு கூடியே தெரியும்.. பணத்துக்கு நிறமேதுடா இப்போதுள்ள பணத்துக்கெல்லாம் நிறம்தானோ???

சிறிது குடித்திருந்தவன் லீனாவை அழைத்து கொண்டு அறைக்கு செல்ல அவளோ தள்ளாடிய படித்தான் வந்தாள்.. ஆணென்ன பெண்ணென எல்லாம் சரி சமம் தான் என்று கூறிய வார்த்தையை இன்று சில பெண்கள் குடியிலும் இணைத்து கொண்டது வருத்தமான செய்தி என்றாலும் ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும் என்பது போல்தான் இருக்கிறது சமூகம்..

லீனாவின் நினைப்பு எல்லாம் இவன் மூஞ்சிக்கு நான் கேக்குதா என்பது தான்.. ஆம் அவள் அழகி தான் நிச்சயமாக பேரழகி தான்.. அவளோட எண்ணம் இவனை பிடித்துக்கொண்டால் அவள் கதாநாயகியாக நடிக்க அதிகம் பிரச்னை வராது இவனை மயக்கி கைக்குள் வைத்துக்கொள்ளலாம் என்று நினைத்து ஒரு திட்டம் தீட்ட.. இவளுக்கு எங்கே தெரிய போகிறது ஒருமுறை தொட்ட பெண்ணை இவன் மறுமுறை திரும்பியும் பட்கமாட்டான் என்று...

அறைக்குள் வந்ததும் லீனா இவனிடம் நெருங்க இவனுக்கு வந்து போனது அன்னக்கொடியின் முகம் தான்.. இத்துணை வருடத்தில் பல பெண்களை சந்தித்திருந்தாலும் அவனே சில பெண்களை தன்னிடம் வர சொல்லியிருந்தாலும் அவனே சட்டென்ன யாரையும் நெருங்கியது இல்லையே பணத்திற்காக அவர்களே தான் நெருங்கி வருவார்கள் இதோ இந்த லீனா போன்று.. ஆனால் அன்னக்கொடி அவளை அவளை மட்டும் தானே நானே நெருங்கினேன் அதை நினைக்கும் போது இவன் முகத்தில் சிறிதாய் ஒரு முறுவல்..

ஹே கேகே டார்லிங் யூ ஆர் சோ செக்சி மேன் என்று கூறியவள் அவனை நெருங்கி முத்தமிட வர அவளை தடுத்தவன் ஐயம் நாட் இன் மூட் பேபி.. இன்னொரு நாள் மீட் பண்ணலாம்.. பட் உனக்கான பணம் உன் அக்கௌன்ட்க்கு கிரெடிட் ஆகிரும் என்று கூறியவன் அன்னக்கொடியை பார்க்க வேண்டும் என்று தோன்ற வேகமாய் வெளியில் வர எதிரில் வந்தவன் மீது மோதி நின்றான்..

லீனா மனம் உலையாக கொதித்தது எப்படி எப்படி தன்னை நெருங்கியவன் வேண்டாமென்று விலகி செல்வது.. என் அழகுக்கு நானெல்லாம் இவனுக்கு கேக்குதான்னு நெனச்சிருந்தா அவன் என்னை ஒதுக்கீட்டு போறானா என்று நினைத்தவளுக்கு அடித்த போதையெல்லாம் இறங்கி போனது..

இந்த விடயத்தை அன்னக்கொடியிடம் கூறியிருந்தால் அவள் மனம் ஏதோ ஒரு வகையில் அமைதியாகிருக்கோமோ என்னவோ.. இதை அவளிடம் கூறாமல் விட்டவன் அடுத்து நடந்ததை மட்டும் தான் கூறினான்..

வெளியில் வந்தவன் யாருடா இது என்ற எரிச்சலோடு பார்க்க அவனோ சிரிப்போடு இவனை பார்த்தான்.. ஏளன சிரிப்பாச்சே சற்று அதிகமாகவே இருக்க கரிகாலன் விலகிச்செல்ல.. வாட்டா மெடிக்கல் மிராக்கிள் மிஸ்டர் தி கிரேட் கேகே என்கிற கரிகாலன் சார் ஒதுங்கி போறாரா.. என்று சத்தமிட்டு சிரிக்க.. ஹே அஜய் உங்கிட்ட பேச எனக்கு நேரமில்லை என்று மீண்டும் கரிகாலன் நகர்ந்திட.. மீண்டும் சத்தமிட்டு சிரித்த அஜய் ஏன் கேகே.. அன்னக்கொடி அழைக்கிறாளோ என்று இவன் கேட்டிட ஒரு நொடி இவனுக்கு தூக்கி போட்டது இவனுக்கு இந்த விடயம் தெரிந்துவிடுமென இவன் அறிந்தது தான் ஆனால் இத்துணை வேகத்தில் இல்லையே..

ஒரு நொடி தான் அவனை அதிர்ச்சியோடு பார்த்தவன் தன்னை நிதானப்படுத்திகொண்டு நகர்ந்துவிட.. என்ன மிஸ்டர் கேகே ஒரே நைட்ல ஒதுங்கி போறது எப்படினு அன்னக்கொடி சொல்லி கொடுத்துட்டாளா என்று கேட்டிட இப்போது அவனது சட்டை கரிகாலனின் கைகளில் இருந்தது அதை மெதுவாக பிரித்தபடியே என்ன கேகே ஏன் இவளோ கோபம் அவள் உன்னை நெருங்கிருக்க மாட்டா நீயே நெருங்கிருந்தாலும் விலகி போயிருப்பா.. நாங்க எத்துணை தடவை முயற்சி பண்ணிருப்போம் என்று நினைத்தவன் அவனிடம் தன் தோல்வியை கூறாமல் அவ அழகுக்கு நீயெல்லாம் தூசிடா.. அவளுக்கெல்லாம் நான் தான் சரியான ஆளு என்றிட பாவம் இதோ அஜய்யின் சில்லி மூக்கு உடைந்து ரெத்தம் கொட்டியபடி இருக்க கீழே வந்தவன் அவன் பேசிய பேச்சில் தலைக்கு ஏறிய கோபத்தை தணிக்க முடியாமல் சில மது பாட்டில்களை உள்ளுக்குள் சரித்தவன் அன்னக்கொடியை காண வந்துவிட்டான்..

சில விஷத்தை சொல்லாமல் விட்டு அஜய் கூறியதை மட்டும் அவளிடம் இவன் கூற அதோ பரிதாபம் அவன் மார்பிலே தலை சாய்த்து உறங்கிருந்தால் அன்னக்கொடி.. அதை கண்டு இவனுக்கு முகத்தில் சிரிப்பு தான்.. தான் எதற்காக இவளை அழைத்து வந்தோம் என்பதை மறந்தவன் அவள் உச்சியில் முத்தமிட அவன் மார்பில் தலை வைத்திருந்தவள் அவன் மார்பில் உறக்கத்திலே முத்தமிட இந்த புது விதமான உணர்வில் சிலிர்த்து போனான் கரிகாலன்..

காலையில் எழுந்த அன்னக்கொடி அறையை சுற்றி நோட்டமிட அவன் இருப்பதற்கான சுவடே இல்லாமல் போக மெதுவாய் எழுந்து குளித்தவள் உடலெல்லாம் தண்ணி பட சிறு சிறு எரிச்சல் காட்டுப்பய எப்படி கடிச்சு வச்சிருக்கான் என்று நினைத்தவள் கண்கள் கலங்கியது ஏன் இவனை இப்படி ஒரு சூழ்நிலையில் சந்தித்தோமென்று மனம் போகும் திசை உணர்ந்தவள் அதை ஒதுக்கிவிட்டு உடை மாற்ற எண்ணி சுடிதார் எடுத்தவள் அணியப்போக இது ஆசையா ரஞ்சி வாங்கி கொடுத்தது இதையும் இவன் கிழிச்சிடுவான் போட்டா என்று நினைத்தவள் அதை போடாமல் குளியலறையை விட்டு வெளியில் வந்தவள் கைக்கு அகப்பட்டது சாரீ அதையே கட்டிக்கொள்ளலாம் என்று நினைத்தவள் சுடிதாரை வைத்துவிட்டு சாறி கட்ட தொடங்க பாதி காட்டியவள் கொசுவத்தை சொருகும் போது தான் உணர்ந்தாள் அந்த ஆளுயர கண்ணாடியில் கரிகாலன் முகம் நிழலாடுவதை.. இவள் திரும்பிப்பார்க்க அங்கே கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு இவளையே குறுகுறுவென பார்த்தவனின் மனதில் சுருக்கென தைத்தது அஜய் கூறிய வார்த்தைகள் அவள் அழகுக்கு நீயெல்லாம் தூசிடா என்பது...

ஆம் இப்போது தான் இவனுக்கு இவள் பேரழகியாக தெரிகிறாள் போல.. ஆம் அன்னக்கொடி அழகு தான் ஆளை அசரடிக்கும் அழகு.. ஐந்தடிக்கும் குறைவானவள் தான் மெல்லிய தேகம் கொண்டவள்.. தன்னை அழகுபடுத்திக்கொள்ள முற்படமாட்டாள் ஆசையில்லை என்றெல்லாம் இல்லை அதற்கெல்லாம் விட்டது இல்லை இவளது அத்தை..

அவளையே பார்த்தவன் கதவை அடைத்துவிட்டு மீண்டு கைகளை கட்டிக்கொண்டு பார்த்தபடி நிற்க என்ன நினைத்தாளோ அன்னக்கொடி அவன் பார்வையில் பெண்களுக்கே உரிய அச்சம் நாணம் அனைத்தையும் விடுத்து கட்டியிருந்த சாரியை அவிழ்த்துவிட்டு கட்டிலில் வந்து அமர கிரங்கிபோனான் கரிகாலன்.. இப்போதும் அவன் எதிர்பார்த்தது தன்னை கண்டதும் அவள் சேரியை சுற்றிக்கொண்டு மற்றொரு அறைக்கு ஓடிவிடுவாள் என்று தானே அவளோ அதற்கு நேர்மாறாய் செய்ய அஜய் கூறிய வார்த்தைகள் மறந்து சிறு மகிழ்ச்சி இவனுள்.. அதற்கான காரணம் இவள் எனக்கானவள் எனக்கு மட்டுமே சொந்தமானவள் என்று இவன் மனம் நினைத்து அவளை நெருங்காமல் சோபாவில் சென்று அமர...

சத்தியமாக அதிர்ச்சி ஆனது இப்போது கொடிதான்.. அவன்பாட்டுக்கும் அவனது அலைபேசியை எடுத்து நோண்ட தொடங்க இப்போ நான் என்ன செய்றது என்று விழி பிதுங்கி போனால் அன்னக்கொடி.. இந்த இரண்டு நாளில் எத்தனையோ முறை அவளை நெருங்கிவிட்டான் அவன்.. எப்படியும் தன்னை நெருங்கதான் வருவனென்று இவள் நினைத்திருக்க அவனோ அதற்கு நேர்மாறாய் சென்று தள்ளி அமர்ந்தாள் பாவம் அவளும் என்னதான் நினைப்பாள்.. இப்போது சிறு வெட்கம் போலும் அப்போ அவனுக்காக நான் எதிர்பார்க்கிறேனா என்று இவளுள்.. அந்த நினைப்பை கடினப்பட்டு விலக்கி வைத்தவள் மீண்டும் சேலையை கட்டிவிட்டு தலையை பின்னலிட அவளை பின்னோடு அனைத்திருந்தான் கரிகாலன்..

 
Messages
4
Reaction score
0
Points
1
UUK-4

முதல் நாள் தன்னிடம் அத்துணை ஆவேசமாய் நடந்து கொண்டவனா இவன் என்று எண்ணுமளவுக்கு இப்போது மென்மையாக அனைத்திருந்தான் கரிகாலன்.. அன்று கைகளில் ஏந்தியவன் கட்டிலில் கிடத்தி அவளை ஆராயும் முயற்சியில் இருந்தவன் அவள் மனதை அறிய முற்படவில்லை.. அவனின் எண்ணம் இரண்டுமாதமாக நான் தேடியவள் அவளுக்காக ஏங்கிய இரவுகள் இதுதான் அவன் மனதில்.. கொடியின் மனதிலோ அவனின் பொருளை அவன் எடுத்து கொள்கிறான் மனதை கல்லென்ன மாற்றிக்கொண்டு அவனோடு இணைந்து போக.. அவள் அணிந்திருந்த உடைகளை கிழித்தெறிந்தவன் அவளோடு மூழ்க தொடங்கினான்.. மென்மை என்பது சிறிதுமின்றி அவளிடம் அத்துணை முரட்டுத்தனமாய் நடந்து கொண்டவன் மனதில் இருந்ததெல்லாம் அவளை அடையவேண்டும் என்பது மட்டுமே அவளின் சிந்தனையை கலைக்கவென அவள் கழுத்தில் இதழ் பதித்தவன் இனிமே சேரியே கட்டுடி என்றிட இப்போதும் அவளிடம் வெறுமையான ஒரு பார்வை தான்..
கண்ணாடி வழியே அவள் முகத்தையே பார்த்திருந்தவனின் மனதில் இபோது சிறு நெருடல் என்னவென்று புரியாத உணர்வோடு அவளை மேலும் இறுக்கியவன் கழுத்து வளைவில் முத்தம் பதித்து கொண்டே இருக்க அன்னக்கொடியின் முகத்தில் ஒரு வித்தியாசமும் இல்லை நீ என்ன வேணாலும் செய்துகோடா என்ற பாவனை மட்டுமே. அவனோ இவளோடு கரைந்திட எண்ணி கண்களை மூடி கொண்டு முத்தங்களால் மூழ்கிட அன்னக்கொடியின் அலைபேசி அலறியது அதில் சிறிது கண் திறந்தவன் கண்டது கண்ணாடி முன் இருந்த டேபிளில் அஜய் சார் காலிங் என்ற அலைபேசியின் திரையை தான்..
இவளோ சாதாரணமாய் அந்த அழைப்பை ஏற்க இவனோ உடல் இறுகி நின்றுருந்தான்.. சொல்லுங்க அஜய் என்று அழைப்பை ஏற்றவள் கேட்டிட அவளின் இந்த மென்மையான பேச்சில் அவனது இறுக்கமான உடல் இப்போது மேலும் அவளது இடையை இறுக்க அன்னக்கொடிக்கு அவனது செயலில் இடை வலிக்க அவனை கண்ணாடி வழியே பார்த்தவள் அவன் முகத்தில் தெரிந்த இறுக்கத்தில் உடல் குளிரெடுத்தது ஆனாலும் அதை மறைத்து கொண்டு பேச அங்கு அஜையோ சிரித்தபடி எதுவும் இவன் அறியாதது போலவே பேச தொடங்கினான். என்ன அன்னக்கொடி ரெண்டுநாள் ஆபீஸ் வரல ஆனாலும் முன்னறிவிப்பு எதுவும் கொடுக்களையே எதுவும் முக்கியமான விஷயமா என்றிட.. இல்லை சார் கொஞ்சம் பர்சனல் ஒர்க் ஆனாலும் நீங்க ரொம்ப ஸ்வீட் சார் உங்க ஆபீஸ் எம்ப்லாய் லீவ் போட்டா கால் பண்ணியெல்லாம் விசாரிக்குறிங்க என்று இவள் நக்கல் தோணியில் கேட்க அவள் கூறியதை கேட்ட கரிகாலன் மனமோ அப்போ என்னைவிட அவனை தான் இவளுக்கு புடிக்குமா என்று சரியாக தப்பாய் நினைக்க அவனது முகத்தின் மாற்றங்களை பார்த்துக்கொண்டே வந்தவளின் மனம் அவனின் என்ன ஓட்டங்கள் என்னவென்று முழுவதும் படம்பிடிக்க முடியாமல் போக அழைப்பை காதில் வைத்திருந்தவள் அஜய் பேசிய ஒன்றுக்கும் பதில் பேசாமலே இருக்க பதில் பேசவில்லை என்பதோடு இவள் காதில் வாங்கவில்லை என்று சொன்னால் சரியாக இருக்கும்..
எப்போ ஆபீஸ் வருவீங்க அன்னக்கொடி என்று கேட்டு பார்த்த அஜய் கலைத்து போய் மொபைலை வைக்க என்ன அதற்கு முன் அவனது அழைப்பை கரிகாலனே துண்டித்து இருந்தான்.... அன்னக்கொடி அவனை பார்க்க அவனோ அவளது அலைபேசியை பார்த்து கொண்டிருக்க உடைத்து விடுவானோ என்று இவள் பார்க்க அவனோ அதை அவளது கைகளில் திணித்துவிட்டு இனி வேலைக்கு வரமாட்டேன்னு அவனுக்கு ஒரு மெயில் அனுப்பிடு என்று கூறியவன் மீண்டும் சோபாவில் சென்று அமர்ந்துகொள்ள.. தோளை குலுக்கி கொண்டவள் அவளது தலையை பின்னலிடும் வேளையில் இருக்க கரிகாலனோ அவளது முதுகை வெறித்த வண்ணம் அமர்ந்திருந்தான்.. அவளது மனதிலும் ஒரு எண்ணம் தான் வேலையை விட்டுவிடுவோம் என்று.. மனம் இருக்கும் நிலையில் வேலைக்கு செல்ல இயலாது என்று ஆனாலும் கரிகாலன் கூறியபின் அதை செய்வதற்கு இவள் மனம் மறுக்க சொல்லி ஆலோசனை வழங்க என்ன செய்யலாம் என்ற யோசனையில் சுழன்ற படி கிளம்பியவள் அவனை தாண்டி கொண்டு வெளியில் செல்ல.. போகும் அவளை ஒன்றும் சொல்லாமல் பார்த்திருந்தான் கரிகாலன்..
அவன் அனுப்பும்வரை இதுதான் தனக்கான வாழ்க்கை என்று முடிவெடுத்தவள் தானாய் இந்த கூண்டுக்குள் இருந்து வெளியேற வேண்டுமென்று எண்ணவில்லை..
கீழே சென்றவள் இந்த வீட்டில் வேற யாரும் இருக்கிறார்களா என்று நோட்டமிட அங்கு தாங்கள் இருவர் சில வேலையாட்களை தவிர மாற்ற யாரும் இருப்பது போல் தோன்றவில்லை.. ..
மெதுவாய் படியிறங்கியவள் சமையல் இடம் தெரிய அங்கே சென்றாள் அங்கு சமைக்கும் செல்வி அம்மா ஏதோ சமைத்து கொண்டு இருக்க அவர் அருகில் சென்றவள் காபி தூள் எங்கிருக்கு என்று கேட்டிட. அவளை வினோதமாக பார்த்த செல்வி ஏன் கண்ணு இங்க வந்த தம்பி பாத்தா பேசும் நீ போ நான் பால் எடுத்துட்டு வரேன் என்று அவர் கூறியபடி எழுந்துகொள்ள அவர் ஏதோ காய் நறுக்கி கொண்டிருந்ததால் அப்படியே எழப்போக அவரை அமர்த்தியவள் உங்க அந்த தம்பி ஒன்னும் சொல்லமாட்டார் நானே போட்டுகிறேன் உங்களுக்கும் வேணுமா என்ற கேட்க இங்க காபி தூள்லாம் இல்லமா.. தம்பி காபி குடிக்கமாட்டாங்க.. பால் மட்டும் தான் எப்போவது குடிக்கும் என்றிட சரிம்மா என்றவள் வெளியில் வர அங்கே சோபாவில் அமர்ந்து இவளையே பார்த்திருந்தவன் வெளியில் தோட்டவேலை பார்க்கும் நல்லமுத்து என்றவரை அழைத்து சமையலுக்கு தேவையான பொருட்களை அன்னக்கொடியிடம் கேட்டுக்கொண்டு வாங்கி வர சொல்ல அன்னக்கொடி மட்டுமல்ல அங்கு வேலை செய்யும் அனைவருமே அவனை ஆச்சிரியமாக பார்க்க அதையெல்லாம் கண்டுகொள்ளாதவன் ...
கொடி இங்க வா என்றழைக்க அவனை பார்த்த படியே அருகில் வர அவளை பக்கத்தில் கைபிடித்து இழுத்து நிறுத்தியவன் தனது கைகளில் இருந்த சிறு சாவிக்கொத்து ஒன்றை கொடுக்க என்ன செய்கிறான் இவன் என்று அன்னக்கொடி பார்த்திருக்க மேல நம்ம ரூம்ல இருக்க லாக்கர் சாவி இது முத்தண்ணா கிட்ட பணம் எடுத்து கொடுத்திடு நான் வெளிய போறேன் என்றவன் சென்றுவிட அன்னக்கொடிக்கு இது பேரதிர்ச்சி தான்.. தன்னை வலுக்கட்டாயமாக எதற்கோ அழைத்து வந்தவன் இப்போது லாக்கர் சாவி கொடுத்துவிட்டு போனால் பாவம் பெண்ணவள் என்ன தான் நினைப்பாள்..
அவன் கொடுத்த சாவியை எடுத்து அறையில் இருந்த டேபிளில் அவன் கண்ணில் படும்படி வைத்தவள் தன் கைப்பையில் இருந்த பணத்தை எடுத்து அவரிடம் கொடுத்து தனக்கு தேவையான பொருட்களை எழுதி கொடுத்தவள் வாங்கி வரும் படி கூறி அனுப்பி வைத்தவள் மீண்டும் வந்து அறையில் முடங்கி போனாள்..
அவனை மீண்டும் சந்தித்த நாட்கள் மனதில் வந்து போனது பெர்ராரி(ferrari) சிவப்பு வண்ண கார் தான் இவனது மறுஉயிர் என்று கூட கூறலாம் அத்துணை பிடித்தமான ஒன்று அவனுக்கு அன்று மாலில் நடந்த பிரச்னைக்கு பின் மறுநாளே மீண்டும் அவனை சந்திக்க நேர்ந்தது அன்னக்கொடிக்கு.. ஆம் அவள் வேலை செய்யும் அலுவலகத்திற்கு வந்திருந்தான் கரிகாலன்.. அவள் வேலை செய்வது interior design work அதாவது உள்துறை வடிவமைப்பு வேலை.. அது அஜய் கம்பெனி அது தான் வடிவமைப்பில் சிறந்து விளங்குவது அஜய்யின் கம்பெனி தான் தனது தந்தையின் தொழிலை இப்போது திறம்பட நடத்தி வருபவன் அதுமட்டுமின்றி சினிமா துறையில் மாடலாகவும் நடித்து வருகிறான்.
கரிகாலனின் தந்தை அஜய்யிடம் சென்று நேரடியாக பேசிவிட்டு வர சொன்னதால் சென்றிருந்தான் அன்று.. ஆம் சென்னையில் மிகப்பெரிய மால் ஒன்று கரிகாலனின் தந்தை கட்டிகொண்டு இருக்க அதன் இன்டிரியர் வேலை முழுவதும் அஜய் கம்பெனிக்கு தான் கொடுத்திருந்தார் வேலை என்று தொடங்கலாம் என்று விசாரித்து டிசைன் பார்த்து கரிகாலனின் விருப்பப்படி செய்ய கூறியிருந்தார்..
சுந்தரமூர்த்தி இப்போது ஊட்டியில் தேயிலை தோட்டம் வாங்கிருப்பதால் அங்கே தங்கி அதை கவனித்து கொண்டு வருகிறார்.. சென்னையில் கட்டுமான பணியும் செய்து கொண்டு இருக்கிறாரகள் தங்களது மகன் அத்தொழிலை செய்ய விரும்பாததால் ஏன் வேலையே செய்ய விரும்பாததால் அனைத்திற்கும் ஆட்கள் வைத்து தான் வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள்.. மால் கரிகாலனுக்காக காட்டுவதால் அது எல்லாம் அவன் விருப்பம் படி செய்ய சொல்ல அவனுக்கும் அதன் மீது சிறு ஆசையிருந்ததால் நேரிலே சென்றிருந்தான்...
அஜய் கரிகாலன் இருவரும் சிறு வயது முதலே ஒன்றாக படிப்பவர்கள்.. ஆனால் இருவருக்கும் அனைத்திலும் முட்டிக்கொள்ளும் சுந்தரமூர்த்தி சில கம்பெனி விளம்பரங்களுக்கு அஜய்யை பரிந்துரை செய்ய அதை கொண்டே கரிகாலனை மட்டம் தட்ட தொடங்கினான்.. வெள்ளை நிறம் ஆறடி உயரம் பார்ப்போரை உடனே வசீகரிக்கும் அழகு தான் அஜய்.. கரிகாலன் அப்படியில்லை கருத்த தேகம் கருப்பாய் கலையாக இருக்காவிடினும் நன்றாக இருப்பவன் தான் ஏனோ அஜய்யிடம் மட்டும் அனைத்திலும் தன் தாழ்த்தி இருப்பதாகவே இவனுக்கு சிறு வயதிலிருந்தே தாழ்வு மனப்பாண்மை உண்டு ஆனாலும் அதை வெளியில் காட்டிக்கொண்டால் அவன் கேகே இல்லையே. எப்போதும் திமிரோடு வலம் வருபவன் பணத்தை கொண்டே பெண்களை தன்னிடம் இழுத்து கொள்வான்..
கரிகாலன் வந்திருந்தது அறிந்தும் அவனை சிறுமணித்துளிகள் காத்திருக்க வைத்திருந்தான்.. பெரும்பாலும் காத்திருப்பது அவனுக்கு பிடிக்காது ஆனாலும் இன்று சுவாரசியமாக அமர்ந்திருந்தான் காரணம் அவன் அமர்ந்திருந்த தடுப்புக்கு அருகில் அமர்ந்திருந்தது அன்னக்கொடி ஏதோ வேளையில் மூழ்கிருந்தவள் இவனை கண்டுகொள்ளவில்லை ஆனால் இவன் விடாது அவளையே தான் பார்த்திருந்தான்.. காலர் வைத்த சுடிதார் அணிந்திருந்தவள் அவள் அருகில் அமர்ந்திருந்த ஒருவனை திட்டி கொண்டு இருந்தாள்.. அதை நிமிட நேரம் பார்த்தவன் அஜய் தன்னை அழைப்பதாக அவனது பிஏ வந்து கூற இப்போது பொறுமையாக அவனது கம்பெனியை சுற்றிப்பார்க்க தொடஙகினான் கரிகாலன்..
சார் அஜய் சார் கேபின் இந்த பக்கம் சார் என்று அப்பெண் கூற.. அப்பெண்ணை நின்று நிதானமாய் திரும்பி பார்த்தவன் ஓஓஓஓ அப்படியா என்பது போல் ஒரு பார்வை கொடுத்துவிட்டு மீண்டும் அவன் ரசனையோடு நடக்க தொடங்க அப்போதுதான் அன்னக்கொடி அவனை கண்டால்.. நேற்று மாலில் நொடி நேரம் அவனை ரசித்தவள் தானே ஆமாம் அவனது கண்களின் வசீகரத்தால் அவன் அமர்ந்த தோரணையிலும் சிறிது கவரப்பட்டாள் அன்னக்கொடி அந்த ரசனையை அப்படி ஒரு வார்த்தை பேசி நொடி நேரத்தில் அதனை களைத்துவிட்டேன் கரிகாலன் ஆனாலும் அந்த நிமிடத்தில் அவனை படம் பிடித்து கொண்டது இவளது மனமும் மூளையும்.
அதற்கு பின் அவன் பேசிய வார்த்தைக்கு அறைந்தவள் அதன் பின் அவனது சிந்தனையை ஒதுக்கி வைத்திருந்தாள்.. இன்று அவன் அந்த பெண்ணிடம் நின்று திரும்பி பார்க்க அந்த வசீகரத்தை மீண்டும் படம் பிடித்து கொண்டது அன்னக்கொடியின் கண்கள்.. முதலில் அவள் நினைத்தது தன்னை தேடி வந்து அடிக்க போகிறானோ என்றுதான் ஆனால் அவன் அலுவலகத்தை சுற்றிவர ஏதோ வேலையாக வந்திருக்கிறான் என்று நினைத்து கொண்டாள்..
அவனுக்காக காத்திருந்த அஜய் கொதித்து போனான்.. பிஏ வந்து கூறியதை கேட்டு.. என் அலுவலகம் வந்துட்டு என்னையே காத்திருக்க வைக்கிறான் மூர்த்தி அங்கிள்காக பார்க்க வேண்டியதா இருக்க நினைத்தவன் பொறுமையை இழுத்து பிடித்து கொண்டு அமர்ந்திருக்க அவனை மேலும் காக்க வைக்காமல் அரைமணி நேரத்தில் உள்ளுக்குள் வந்திருந்தான் கரிகாலன்..
அவனை கண்ட அஜய் உள்ள வரும் போது டோர் நாக் பண்ணிட்டு வரணும் மிஸ்டர் கேகே என்று கூற அவன் பேசியது இவன் காதிலே விழாதது போல் சொல்லுங்க மிஸ்டர் அஜய் டிசைன் ரெடியா என்று கேட்டபடி அவனுக்கு எதிரில் அமர.. என்ன மிஸ்டர் கருப்புகாலன் வந்ததும் டிசைன் தான் பார்க்கணுமா என்று நக்கலோடு அஜய் கேட்க அவன் தன் பெயரை கூறிய விதத்தில் கோபம் கொண்டவன் நொடி நேரத்தில் தன்னை சமன் செய்து கொண்டு.. பேசலாமே ச்சை ஓஓ உங்க பேர் என்ன இப்போ தான் சொன்னேன் அதுக்குள்ள மறந்து போய்ட்டேன் ச்சை யா இல்ல இல்லை என்று நெற்றியில் தட்டி யோசிப்பது போல் செய்தவன் உங்க பேர் அஜய்ல சொல்லுங்க அஜய் என்ன பேசணும் நான் வேலை விஷயமா தான் வந்தேன் உங்களுக்கு என்ன பேசணும் என்றிட.. தான் அவன் நிறத்தை கொண்டு மட்டம் தட்டினால் சற்று தாழ்த்தி போவான் என்று அஜய் நினைத்திருக்க இவனோ தன் பெயரை கொச்சை படுத்துவதை பொறுக்க முடியாதவன் அவனை முறைத்தபடியே அமர்ந்திருக்க.. அவனை ஏளனத்தோடு பார்த்து வைத்தான் கரிகாலன்..
 

New Threads

Top Bottom