Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


எங்கிருந்தாய் எனதுயிரே???

Messages
1
Reaction score
0
Points
1
அம்மா இவ்வளவு நேரம் ஆச்சு இன்னமும் சமைச்சு முடிக்காமல் என்ன செய்றிங்க???
என்று கேட்டவாரே‌ வந்தாள் யாழ்இசை ..

யாழ் ஏர்போர்ட்க்கு யார் போறது என்று வினவியப்படி வந்தாள் அவள் அண்ணி
செந்தமிழ்.

அவர் யாரும் வர வேண்டாம் நான் வரேன் சொல்லிடார் அண்ணி.

தனியா வந்துடுவார்ல ???.
ம்ம்ம் வந்துடுவார் அண்ணி .

நான் இங்க ஒருத்தி தனியா சமையல்கட்டுல கஷ்டபட்றேன் ஆனா நீங்க இரண்டு பேரும் இங்க கதை பேசிட்டு இருக்கிங்க என்று கோபமாக வந்தார் யாழின் அன்னை அகிலாண்டேஷ்வரி.

அத்த சும்மா தான் பேசிட்டு இருந்தோம் இதோ வந்துடேன் என்று பம்மிய வாறே அடுப்பறைக்குள் நுழைந்தாள் அவள் அண்ணி.

எப்படித்தான் இப்படி எஸ்கேப் ஆகுறாங்களோ எங்க அண்ணி.

எங்கள திட்றத விட்டுவிட்டு போய் சமையல் பண்ணுங்க இன்னும் ஒரு மணி நேரத்தில அவர் வந்துடுவார் என்று அவள் அம்மா வை அஃப் செய்து அனுப்பினாள் யாழ்.

போறேன் போறேன் இது எல்லாத்துக்கும் சேர்த்து அவன் வந்த உடனே வச்சிக்கிறேன்.

அத்த நீங்க என்ன சொன்னாலும் அவர் யாழுக்கு தான் சபோர்ட் பண்ணுவார்.

கரக்ட் அண்ணி இப்போ தான் நீங்க அறிவாளி மாதிரி பேசறீங்க என்று சொல்லிவிட்டு வேகமாக ஓடிவிட்டாள். தன் அறைக்கு.

அதை கேட்டு கோபம் வர வேண்டிய அண்ணி யோ சந்தோசமாக பார்தாள்.

நம்ம யாழ் இப்போ கொஞ்சமா மாறிட்டு வர மாதிரி இல்ல அத்த.....

ஆமா தமிழ் எனக்கும் அப்படி தான் தோனுது என்றார் மனதில் சிறு வருத்ததுடன் தன் மகள் மாற மாட்டாளா என்ற கவலையுடன்.

சரி பேசிட்டு இருந்தது போதும் சிக்கரம் எல்லாம் ரெடி பண்ணுங்க அவன் வந்துடப் போறான் அப்பறம் யாழ சமாளிக்கிறது கஷ்டம் ஆகிடும் என்று தன் கவலையை மறைத்து சொன்னார் சிதம்பரநாதன்.

ஆமா அத்த நான் போய் வேலையை பார்கிறேன் .

யார் அப்படி வருகிறது .
🤔
இந்த குடும்பமே இவ்வளவு அலப்பற பண்ணுதேணு உங்க மைன்ட் வாய்ஸ் எனக்கு கேட்கிறது.
வருவது வேற யாரும் இல்லங்க நம்ப யாழோட இரண்டாவது அண்ணண் தாங்க.

அவர் வருவதற்குள் யாழ் குடும்பத்தைப் பற்றி ஒரு அறிமுகம்.

சிதம்பரநாதன் திருச்சி யில் ஓரு பெரிய தொழில் அதிபராக இருந்தவர். தன் தந்தை பார்த்து வந்த தொழிலை பல மடங்காக பெருக்கி உச்சத்தில் இருந்தார்.

அவருக்கு முன்று பிள்ளைகள்.
பெரியவன் இளமாறன்,இரண்டாவது இப்போது வரப்போகிற அருண்மொழி வர்மன், முன்றாவது நம்ப கதாநாயகி யாழ்இசை.

சிதம்பரநாதனின் அன்னை மதுரையில் தன் தாய் வழி உறவினர்கள் இருப்பதால் அவரின் தந்தையையும் மதுரைக்கு இடம் மாற்றினார்

சிதம்பரநாதன் திருச்சி யில் தொழிலை வெகுவாக உயர்த்தினார்.

யாழ்இசை கருவாக உருவாகியபோது சிதம்பரநாதனின் நண்பர்கள் சூழ்ச்சி செய்து அவரின் சொத்துக்களை கைப்பற்றினர்.

தொழிலில் பெரும் நஷ்டம் அடைந்தார்.
அவர் அறியாமலே பல இடத்தில் கடன் வாங்கினார்.
பல இன்னல்களுக்கு பிறகு மதுரைக்கு இடம் பெயர்ந்தனர்.

இது அனைத்தும் நடக்கும் போது யாழ்இசை ஐந்து மாத கரு.

யாழ்இசை உருவாகிய நேரத்தில் தான் சொத்துக்கள் அனைத்தும் பறிப் போனதால் அவளின் பாட்டிக்கு அவளை பிடிக்காது.

மற்றப்படி யாழ் அவ்வீட்டின் இளவரசி ஆகவே நடத்தப்பட்டாள்.
தான் வந்ததால் தான் சொத்துக்கள் அனைத்தும் பறிப் போனது என்று நினைக்காமல் தன்னை
தேவதையாய் வளர்க்கும் தன் பெற்றோர் மீது அதித அன்பும் மரியாதையும் உன்டு.

இளமாறன் ஐதராபாதில் ஒரு சிறிய அளவில் கம்பனி தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிரார். அவரின் அழகான மனைவி செந்தமிழ். மாறன் கம்பனி விசயமாக அவப்பொது வெளியூர் செல்வதால் தமிழ் மதுரைக்கு வந்நுவிடுவாள்.

அருண்மொழி வர்மன் யாழின் இரண்டாவது அண்ணண் . யாழின் செல்ல அண்ணணும் கூட . இந்த குடும்பத்தைப் கஷ்டத்தில் இருந்து , தன் தந்தை வாங்கிய கடன்களில் இருந்தும் காப்பாற்றியவன். கனடாவில் நல்ல வேலையில் இருக்கிறான். யாழ்இசைக்கு 20 வயதாக இருந்தபோது போனவன்,முன்று வருடங்கள் கழித்து இப்போது தான் வருகிறான்.

யாழ்இசை 23 வயதான இளம் யுவதி. அழகு என்பதை விட ஆளுமை நிறைந்த முகம். தங்களை ஏளனம் செய்த சொந்தங்கள் முன்பு சாதித்து காட்ட வேண்டும் என்பது அவளது கனவு, லட்சியம். அதில் முன்னேறியும் வருகிறாள். சிறிய அளவில் ஒரு ஈவன்ட் மேனஜ்மன்ட் கம்பனி நடத்தி அதில் ஓரளவு வெற்றியும் கண்டுவிட்டாள். ஆனால் அவள் முகத்தில் எப்போதும் ஒரு வெறுமை குடிக்கொண்டிருக்கும்.அதுவும் கடந்த முன்று வருடங்களாக தான்.

அதன் காரணம் என்னவென்று தெரிந்தும் அவள் பெற்றோர் எதுவும் கேட்டதில்லை. அவளும் எதுவும் சொன்னதில்லை. அவளே சொல்வாள் என்று முன்று வருடங்களாக காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
அவள் அண்ணண் வரும் நேரமாவது அனைத்தும் மாறும் என்று நம்பினர்.
தொடரும்..........
 

New Threads

Top Bottom