கதையின் ஆரம்பமே அசத்தலாய் தொடங்குகிறது!!!... நமது எதிர்காலமும் இதுபோல் அமையும் காலம் வெகு தொலைவில் இல்லையோ என அச்சுறுத்தல் இருந்தாலும், அதை தவிர்க்க நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும் என்னும் எண்ணம் உதித்தது உண்மை!!!.. பூமியே வியப்பும், விரக்தியுமாய் இருந்தது அனிச்சத்தை போலவே!!!.. எத்துனை சட்டங்கள், எத்துனை திட்டங்கள்!!!.. திடீரென வரும் குழப்பங்கள்!!!.. எத்துனை முறை படித்தாலும் சிறிதளவும் யூகிக்க முடிய வில்லை!!!.. அந்த மரத்தை பற்றிய தொடக்கத்தில் கொடியை போலவே நானும் பயந்தேன்!!!... ஆதிக்கத்தை சொல்லிய விதம் உண்மையில் மிரள வைத்தது!!!.. இப்படியும் மனிதர்களா?!!.. எத்துனை கொடூரங்ள்!!!.. அரசியின் முடிவு கண்கலங்க வைத்தது!!!.. ஒவ்வொருவரின் சூழ்நிலையையும், மனநிலையையும் எடுத்துரைத்த விதம் அசத்தல்!!!.. பேசா மடந்தையாய் அனைவரும் இருக்கும் போது அமரா கதாப்பாத்திரம் அசத்தல்!!!.. கொடியும் அவளுக்கு சளைத்தவளில்லை!!!.. செழியன் அவனை அவ்வளவு பிடித்தது!!!.. அவனின் கதாப்பாத்திரப் படைப்பு அத்துனை நேர்த்தி!!!... வீரம்!!!.. எத்துனை வீரமங்கைகளை கண்முன்னே கொண்டு வந்து விட்டீர்கள்!!!.. வேலன்!!!.. ப்பா அப்படி ஒரு மனிதன் இல்லை அப்படி ஒரு ஆண் இருக்க முடியுமா!!!.. மனைவிக்காக இத்துனை யோசிக்க முடியுமா!!???... இப்போதும் அவன் எனக்கு வியப்புக்குரியவனே!!!.. மங்கை, குயிலி இருவரின் வீரமும் மெய் சிலிர்க்க வைத்தது!!!.. நாச்சியாரரும் சளைத்தவர்கள் இல்லையே!!!.. அக்காட்சிகளில் இருந்து வெளி வர இயலவில்லை!!!.. ஒவ்வொன்றையும் வேறுபடுத்தி, விளக்கிய விதம் அருமை!!!.. கதை விறுவிறுப்பாகவும், அடுத்த என்ன??!!.. என்ற சுவாரஸ்யத்தோடும் நகர்த்தி சென்ற விதம் சபாஷ்!!!.. கதையோட்டமும், காட்சியமைப்புகளும் காட்சிகளை நம் கண் முன்னே கொண்டு வரும் எழுத்துக்கள்!!... கதாப்பாத்திரங்களோடு நாமும் வாழ்ந்ததாய் ஒரு உணர்வு!!!.. ஒவ்வொரு உரையாடலும் கதையின் கூடுதல் அழகு!!.. எத்துனை அழகான வசனங்கள்!!!..
1. என் உள்ளம் கவர்ந்தவரின் நாட்குறிப்பில் நான் இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறில்லை!!!.. உன் நினைவுகளை சுமந்து அது உற்றவரால் எழுதப்பட்டிருக்க வேண்டும்!!!...
2.அமரா, தேவர் பிள்ளையின் குழந்தைகள் மீதான உரையாடலில் வரும் வசனங்கள்
3. நாச்சியார், வேலனின் உரையாடல்!!!..
4. மங்கை வேலனின் உரையாடல்!!!
இவ் வசனமும், இவ்வுரையாடல்களில் வரும் வசனங்களும் மிக மிக பிடித்தவை!!!.. ரசித்து, பிரமித்து, உணர்ந்து படித்த கதை!!!.. அனைத்து கதாப்பாத்திரங்களும் மனதில் நிலைத்து நிற்கிறது!!!.. அனி, நளன் போல் நானும் அவர்களை நட்சத்திரம் வழி காணுவேன்!!!..
உங்கள் தமிழை ரசித்திருக்கிறேன் கா!!!... உங்கள் எழுத்து நடையில் ஈர்க்கப்பட்டிருக்கிறேன்!!!.. இப்போது இந்த கதையில் உங்களின் கற்பனையும், காட்சியமைப்பும் கண்டு பிரமித்து போனேன்!!!.. இன்னும் நிறைய நிறைய எழுதுங்கள் கா!!!.. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் கா💖