Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Regular-Update கர்வம் அழிந்ததடி - (NN - பாகம் 2)

அத்தியாயம் – 5

"தேங்க் யூ... மித்ரா..." - மித்ராவின் கவனத்தை தன் பக்கம் திருப்பி, அவளுடைய வேலை இங்கு முடிந்துவிட்டது என்பதை அவளுக்கு சுட்டிக்காட்ட முயன்றான் நரேன்.


ஆனால் அவளுடைய பார்வை அபிமன்யுவின் முகத்திலிருந்து இம்மி கூட நகரவில்லை. "இட்ஸ் ஓகே சார்... நோ ப்ராப்லம்..." என்று அவன் ஏதோ அவளுக்கு பாராட்டு பத்திரம் வாசிப்பது போல் பெருந்தன்மையுடன் கூற, அதுவரை மிருதுளாவின் பெயரை ஃபைலில் மும்மரமாக தேடி கொண்டிருந்த அபிமன்யு நிமிர்ந்து அவளை பார்த்தான்.


அவள் பார்வை தன்னை ஆராய்ந்துக் கொண்டிருப்பதை உணர்ந்து எரிச்சலடைந்தவன், 'கெட் அவுட்' என்று கத்தினான்.


திடுக்கிட்டுப் போனாள் மித்ரா. கொஞ்சம் மூளையை பயன்படுத்தியிருந்தாலும் நரேன் குறிப்பாக சொன்ன போதே அந்த அறையைவிட்டு சென்றிருக்கலாம். இப்படி திட்டு வாங்க நேர்ந்திருக்காது. முகத்தை ஏழு முழத்திற்கு தொங்கவிட்டுக் கொண்டு அங்கிருந்து வெளியேறினாள்.


அவள் அப்படி சென்றது நரேனுக்கு பிடிக்கவில்லை. "ஏண்டா இப்படி ரூடா பேசற? ஷி ஸ் அவர் எம்ப்லாயி மேன். நாட் எனிமி" என்று அண்ணனை கண்டித்தான்.


"அப்போ உன் எம்ப்லாயிகிட்ட சொல்லி வை. ஐ ஆம் நாட் எ ஷோ பீஸ். சும்மா 'ஆஆஆ'ன்னு வாயை பிளந்து பார்த்துகிட்டு " - கடுப்படித்தான்.


நரேனுக்கு சுருக்கென்று உள்ளே குத்தியது. 'கவனித்திருக்கிறானே! அவனை பார்த்ததை மட்டும் கவனிதானா இல்லை நம்மை பார்க்காததையும் கவனித்தானா!' - தேவையில்லாத ஆணி தான். ஆனால் மனதிற்குள் இறங்குவதை தவிர்க்க முடியவில்லை.


"நீ பெரிய ஆணழகன். உன்னை பார்க்கறா! நெனப்புதாண்டா... முதல்ல முடியை ஒழுங்கா வெட்டு" என்று நரேன் அபிமன்யுவை அலட்சியப்படுத்த முயல, அவன் முயற்சியை ஒரு நக்கல் சிரிப்பில் ஒதுக்கிவிட்டு தன் வேலையில் மூழ்கினான் மூத்தவன்.


அவனுடைய முதல் தேவை மிருதுளாவை பற்றி தெரிந்துகொள்வது தான். திரும்ப திரும்ப அந்த லிஸ்டை மூன்று முறை சளித்துப் பார்த்தும் அவள் பெயரை கண்டுபிடிக்க முடியவில்லை.


"முழு லிஸ்டும் கேட்டா என்னடா கொடுக்கறீங்க?" என்று கையிலிருந்த கோப்பை தூக்கி நரேனிடம் வீசினான்.


அதை எடுத்து எண்ணிக்கையை சரி பார்த்துவிட்டு "சரியா இருக்க மாதிரி தானே இருக்கு!" என்றான் நரேன்.


"இல்ல... நேம்ஸ் மிஸ் ஆகற மாதிரி இருக்கே!"


"நோ அபி, மிஸ் ஆக வாய்ப்பு இல்ல. நீ ஏன் அப்படி நினைக்கிற? ஸ்பெஸிஃபிக்கா ஏதாவது பெயரை தேடுறியா என்ன?" - அவன் நாடியை சரியாக பிடித்தான்.


ஒரு நொடி அபிமன்யு திகைத்தான். தன்னை பற்றி வெளிப்படுத்துவதில் அவனுக்கு எப்பொழுதுமே விருப்பம் இருந்ததில்லை. அதிலும் மிருதுளாவை பற்றிய விஷயம் என்றால் இன்னும் கூடுதல் சென்சிட்டிவாக இருப்பான். எனவே இல்லை என்பது போல் தலையை அசைத்ததோடு வேறு எதுவும் பேசவில்லை அவன்.


'அவளை பற்றி எப்படி தெரிந்துகொள்வது? எப்படி தெரிந்துகொள்வது?' அது மட்டும் தான் அவன் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. எழுந்து ஸ்மோக்கிங் ஏரியா பக்கம் சென்றான். டென்சன் சற்று குறைந்ததும் கேஃப்டீரியா பக்கம் சென்றான். அங்கே மிருதுளா கண்ணில் படுவாளா என்று அவன் பார்வையால் அலச மித்ரா எதிரில் வந்து நின்றாள்.


"ஹலோ... என்னை நியாபகம் இல்லையா? நொய்டா... பப்... ஃபைட்... நான் தான்... மித்ரா..." என்று அவனுக்கு தன்னை நியாபகப்படுத்த முயன்றாள். அவளுடைய முயற்சி வீணாகவில்லை. தெரிந்துகொண்டதன் அடையாளமாக அபிமன்யுவின் புருவம் மேல் ஏறி கீழிறங்கியது.


"வாட் யு வாண்ட் நௌ?" - அதட்டினான்.


"நத்திங், ஜஸ்ட் ஒரு ஹாய் சொல்லலாம்னு வந்தேன். இங்க என்ன பண்றீங்க? நொய்டா டு அந்தமான்... லாங் டிராவலாச்சே!" - பேச்சை வளர்க்க அவள் விருப்பம் காட்ட அவன் முகம் கடுத்தது.


"பேரென்ன?"


"மித்ரா"


"ஹும்.. லுக் மித்ரா... நா பிஸியா இருக்கேன். லீவ் மீ அலோன்" - பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு சொன்னான்.


"ஸுர்... ஸுர்... ஐ'ல் டேக் எ லீவ். அதுக்கு முன்னாடி... தேங்க் யு. அன்னைக்கு நீங்க ஹெல்ப் பண்ணினதுனாலதான் நான் இன்னிக்கு இங்க இருக்கேன்"- கொஞ்சம் வழிசல் தான்..


'என்னவோ இந்த வேலையை ரசித்து ருசித்து செய்வது போல் ஸீன்… ம்ம்ம்? மானங்கெட்டவளே!’ - மனசாட்சி மனசாட்சியே இல்லாமல் கழுவி ஊற்றியது.


அதை துடைத்துக் கொண்டு அபிமன்யுவை பார்த்து அவள் பல்லை காட்ட, "தப்புதான்... அன்னைக்கு உனக்கு ஹெல்ப் பண்ணியிருக்க கூடாது. எப்படியோ அடிபட்டு சாக்குன்னு விட்டுருக்கணும்." என்று அவன் மூக்கை விடைத்துக் கொண்டு கண்களை உருட்ட, மிரண்டு போனாள் மித்ரா.


'ஏதே! சாகுறதா!' - ஜெர்க்காகி ஓர் அடி பின்னால் வைத்தாள்.


'தடி தாண்டவராயா! உன் காதலி செத்து போயிட்டான்னா... ஊர்ல உள்ள பொண்ணுங்க எல்லாம் அடிபட்டு சாகணுமா! லூசு பயலே! உன்கிட்ட பேச வந்தேன் பாரு! சைக்கோ.. சைக்கோ..!' என்று வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டே அங்கிருந்து சென்றவள் எதிரில் வந்த நரேனை கவனிக்கவில்லை. அதற்கான பலனை விரைவிலேயே அனுபவித்தாள் மித்ரா.


அந்த அலுவலகத்தில் அபிமன்யுவிற்கு ஒரு தனி அறை அவன் கேட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டிருந்தது. அதன்படி அந்த அறையில் அமர்ந்தபடியே அவனால் கிட்டத்தட்ட முழு அலுவலகத்தையும் கண்காணிக்க முடியும். சிசிடிவி கண்ட்ரோல் ரூம் பாதுகாப்பாக மூன்றாம் தளத்தில் இருந்தாலும், அபிமன்யுவின் அறையில் உள்ள கணினி திரையில், மீட்டிங் ஹால், வரவேற்பு பகுதி, கேஃப்டீரியா போன்ற பொது இடங்களுக்கான லைவ் வீடியோவை பார்க்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


இருபத்தி நான்கு மணிநேரமும் அவன் அந்த வீடியோவில் தான் மூழ்கி இருந்தான். அப்படி அவன் அப்சஸ்ட்டாக மிருதுளாவை காணும் நோக்கில் வீடியோவில் மூழ்கி இருக்கும் நேரம் யாராவது அவனுடைய அறைக்குள் எட்டிப் பார்த்தல் கூட போதும்... தொலைந்தார்கள். மித்ராதான் அடிக்கடி மாட்டுவாள். காரணம் சாக்ஷத் நரேனே தான்.


நரேனுக்கு ஒரு பழக்கம். மாதத்திற்கு ஓரிரு முறை கம்பெனியை முழுவதுமாக சுற்றி வருவான். இன்ஸ்பெக்ஷன் செய்வது போல்... அப்படி அவன் அன்று கேஃபிடீரியா பக்கம் வந்த போது அபிமன்யுவை அங்கே பார்த்தான். உடன் மித்ரா... அத்தனை ஆனந்தம் அவள் முகத்தில். எப்படியாவது அவனோடு பழக வேண்டும் என்று அவள் பிரயத்தனப்படுவது வெட்ட வெளிச்சமாக தெரிந்தது. அவனோ கரடி போல் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு அவளை பார்த்தான். அப்போதும் அவளுக்கு புத்தி வரவில்லை. சுற்றம் சூழ்நிலையெல்லாம் மறந்து அவனிடம் ஏதோ இளித்துக் கொண்டே பேசி வாங்கி கட்டிக் கொண்டாள்.


அப்போது நரேனுக்கே கூட பாவமாக தான் இருந்தது. இதெல்லாம் இவளுக்கு தேவையா என்று. ஆனால் அடுத்து நடந்ததைத்தான் அவனால் மன்னிக்கவே முடியவில்லை.


அபிமன்யுவிடம் வலிய வலிய பேசி வாங்கி கட்டிக் கொண்டு அவள் திரும்பி நடந்த போது, நரேன் வழியில் தான் நின்றான். இவள் அவனை கடந்து தான் சென்றாள். விட்டால், 'ந்தாப்பா... கொஞ்சம் தள்ளி நில்லு' என்று சொல்லிவிட்டுக் கூட போயிருப்பாள். அப்படிதான் தோன்றியது அவனுக்கு.


அப்படி என்ன அவன் குறைந்துவிட்டான்! அவள் கண்ணில்... கருத்தில் எதிலுமே பதியாத அளவுக்கு! கோபமாக வந்தது. அவனை பார்க்க ஆயிரம் பெண்கள்... ஆனால் இவள் ஏன் பார்க்கவில்லை! அதுதான் அவனை குடைந்தது. அது எப்படி என்னை கவனிக்காமல் நீ போவாய் என்கிற கேள்வி அவனை உறங்கவிடவில்லை.


'பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா! இருடி... பக்கத்துலேயே தூக்கி போடறேன். அப்பறம் தெரியும், அவன் பெட்ரோமாக்ஸ் லைட்டா இல்ல பெட்ரோல் பாமான்னு' என்று எண்ணினான். எண்ணியபடியே அவளை ஹெச்ஆர் டிப்பார்ட்மென்டிலிருந்து தூக்கி அபிமன்யுவின் செகரட்ரியாக போட்டான். பொறி வைத்த பொந்துக்குள் சிக்கிய எலி போல் முன்னேயும் போக முடியாமல் பின்னேயும் வர முடியாமல் அவனிடம் வசமாக சிக்கிக் கொண்டாள் மித்ரா.
 
அத்தியாயம் - 6

மித்ரா, அபிமன்யுவின் செகரட்ரியாக பதவியேற்ற முதல் நாள். மிகுந்த சந்தோஷத்துடன் துள்ளிக் கொண்டு சென்று அபிமன்யுவின் அறைக்கு வெளியே இருந்த குட்டி ரிஷப்ஷனில் அமைக்கப்பட்டிருந்த கேபினெட்டில் தன்னுடைய பொருட்களையெல்லாம் அடுக்கிக் கொண்டிருந்தாள். இண்டர்காமில் அழைப்பு வந்தது. முதல் அழைப்பு... அபிமன்யுவாகத்தான் இருக்கும் என்று ஆவலுடன் எடுத்தாள். ஆனால் அழைத்தது நரேன். தன்னை வந்து சந்திக்கும்படி கூறினான்.


சின்ன ஏமாற்றத்துடன் பெருமூச்சு விட்டவள் எழுது அவனுடைய அறைக்கு சென்றாள். இருவருடைய அறையும் ரொம்ப தூரமெல்லாம் இல்லை. பக்கத்து அறைதான். படி ஏறி இறங்க வேண்டிய அவசியம் இல்லை. உடனே வந்துவிடலாம் என்றெல்லாம் யோசித்தபடி நரேனை பார்க்க சென்றாள்.


"எக்ஸ்க்யூஸ் மீ சார்" என்று உள்ளே நுழைந்தவளை ஏறிட்ட நரேனின் கண்கள் ரசனையுடன் மலர்ந்தது.


அழகாக டிரஸ் பண்ணி இருந்தாள். கலையான முகம். குண்டு கன்னம்... கொஞ்சம் பூசினார் போல் உடல்வாகு. ஆசையாக பார்த்தான். அந்த பார்வைக்கான பிரதிபலிப்பு அவளிடம் சிறிதும் இல்லை. அவளுக்கு தன் மீது கொஞ்சமும் இன்ட்ரெஸ்ட் இல்லை என்பதை அவள் உடல் மொழியிலிருந்து அறிந்து கொண்டவனுக்கு பெரிய ஏமாற்றம் தான்.


"மித்ரா, கீப்லாக் செக்யூரிட்டி சர்வீசஸ்லேருந்து மீட்டிங் அப்பாயின்மென்ட் கேட்டுட்டே இருக்காங்க. அபிதான் அட்டென்ட் பண்ணனும். தள்ளி போட்டுட்டே இருக்கான். என்னன்னு பார்த்து டேட் ஃபிக்ஸ் பண்ணிடுங்க" என்று சொல்லிவிட்டு பார்வையை லேப்டாப் பக்கம் திருப்பிக் கொண்டான்.


'போடி போ... போயி அவன்கிட்ட நல்ல வாங்கு' என்று சபித்தது கோபம் கொண்ட அவன் மனது.


அவன் பேச்சில் இருந்த உள்குத்து தெரியாமல், உடனே "ஓகே சார்" என்று ஆர்வமாக தலையாட்டிவிட்டு துள்ளலாக அபிமன்யுவின் அறைக்கு சென்றாள்.


அவன் வெகு தீவிரமாக கணினி திரையில் மூழ்கி இருந்தான். இவள் உள்ளே நுழைந்ததை கூட அவன் பொருட்படுத்தவில்லை.


'அப்படி என்னத்த இவன் சின்சியரா பார்க்கறான்!'என்று எண்ணியபடி சற்று நேரம் அமைதியாக நின்றவள் பிறகு, லேசாக இருமி தன்னுடைய இருப்பை அவனுக்கு வெளிப்படுத்தினாள்.


அதில் கவனம் களைந்து ஆத்திரத்துடன் நிமிர்ந்தவன், "அறிவு இல்ல? உள்ள வரும் போது கதவை தட்டிட்டு வரணும்னு தெரியாது?" என்று அமர்ந்திருந்த சேரை பின்னல் தள்ளிவிட்டு வீறுகொண்டு எழுந்தான்.


'அரே சைத்தான் கி பச்சா! இப்படி நீ கொலகாண்டா ஆகற அளவுக்கு அப்படி என்னடா நா பண்ணிட்டேன் இப்ப… கரடி மூஞ்சா!!’ - கன்னாபின்னாவென்று வாயில் வந்தது அவளுக்கு. பேசிவிட்டு உயிர் பிழைக்க முடியும் என்று தோன்றவில்லை. எனவே வாயில் வந்ததை வாய்க்குள்ளேயே போட்டு மென்று விழுங்கிவிட்டு, "கீப்லாக் செக்யூரிட்டி சர்வீசஸ் கூட உங்களுக்கு மீட்டிங் அரேஞ் பண்ணனும் சார். டைம் சொன்னிங்கன்னா ஸ்கெட்யூல் பண்ணிடுவேன்" என்றாள்.


"நீ இப்போ இங்கேருந்து போகலேன்னா உன்னோட கடைசி நாளை நா ஸ்கெட்யூல் பண்ணிடுவேன். ‘ஃபியூ…' "என்று விசிலடித்து கட்டை விரலால் கழுத்தை அறுப்பது போல் சைகை காட்ட அவள் கண்களில் மரண பீதி.


"சாரி பாஸ்... கீப்லாக்கை நா வெளியவே லாக் பண்ணி வைக்கிறேன். யு ப்ளீஸ் கேரிஆன்... ஐ'ல் காட் யு ஃபிரம் அவுட்சைட்" என்று நல்ல பிள்ளை போல் பேசிவிட்டு நைசாக நழுவினாள்.


'ஆள் பார்க்க ஹேண்ட்ஸமா இருக்கானேன்னு நெனச்சது தப்பா போச்சு. இவன் ஹேண்ட்ஸம் சைக்கோ... பி எக்ஸ்டரா கேர்ஃபுல் மித்து...' என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டு வெளிப்புறம் நோக்கி நடந்தவளை இடையிட்டது அவன் குரல்.


"ஹேய், வா இங்க"


'வாட்!' - வெடுக்கென்று திரும்பினாள். கோலி கண்கள் இரண்டும் இமைகள் விரிந்து உருண்டன. அந்த குண்டு முகத்தில் நிறைய கோபம்.


"என் பேரு மித்ரா... கொஞ்சம் ரெஸ்பெக்ட் கொடுத்தா நல்லா இருக்கும்" - கண்டிப்புடன் கூறினாள்.


"கொடுக்க முடியாது. என்ன செய்வ?" - நெற்றி நரம்பு புடைக்க பற்களை நறநறத்தான்.


மித்ரா, அவனை ஏறிட்டாள். அஃப்கோர்ஸ், அவன் இருக்கும் உயரத்திற்கு கழுத்து வலிக்க அண்ணார்ந்து தான் பார்க்க முடிந்தது. பார்த்த மாத்திரத்திலேயே அவளுக்கு தோன்றியது ஒன்று தான்...


'இதுக்கு மேல இவன் கோபத்தை தூண்டுற மாதிரி ஒரு வார்த்தை விட்டாலும் சேதாரம் நமக்குத்தான்' - வாயை இறுக்கமாக மூடிக் கொண்டாள். பிறகு வெகுநேரம் அண்ணார்ந்து பார்த்துக் கொண்டே இருக்க முடியவில்லை என்று தலையையும் குனிந்து கொண்டாள்.


அதை அடக்கம் என்று புரிந்துகொண்ட அபிமன்யு மெல்ல மலையிறங்கினான். ஆழ மூச்செடுத்து தன்னை சமன்படுத்திக் கொண்டு, தன் கையிலிருந்த அலைபேசியை அவளிடம் நீட்டினான்.


"இந்த வீடியோல இருக்கது யாரு?" – நான்கைந்து வீடியோ கிளிப்பிங்கை வெட்டி ஒட்டி ஒரே வீடியோவாக மாற்றி அவளிடம் காட்டினான். எல்லாம் அவர்கள் கம்பெனி வளாகத்திற்குள் எடுக்கப்பட்ட சிசிடிவி வீடியோஸ் தான்.


மிருதுளாவை பற்றி தனியாக விசாரிக்க மனமில்லாமல் பலரோடு ஒருவராக அவளை பற்றியும் விசாரித்து தெரிந்துகொள்ள முயன்றான். அந்த முயற்சி துல்லியமாக பலனளித்தது.


வீடியோவில் இருந்த ஒவ்வொருவரை பற்றியும் விளக்கமாக விபரம் கொடுத்தவள், மிருதுளாவை பார்த்ததும், "இவங்க மிருதுளா. 'கீப்லாக்' கம்பெனி எம்ப்லாயி. இவங்க தான் உங்க அப்பாயின்மென்ட்காக ஒன் வீக்கா வெயிட் பண்ணிட்டு இருக்காங்க" என்றாள்.


"வாட்!" - ஐஸ் பாறையை நெஞ்சுக்குள் வைத்து போல் சிலீரென்ற உணர்வு உள்ளே பாய குரலே எழும்பவில்லை அவனுக்கு.


மித்ரா அவனை புரியாமல் பார்த்தாள். ஒரே நொடியில் அவனிடம் தோன்றிய மாற்றம் அப்படி...


தாக்கத்தை சமாளித்து தன்னிலைக்கு மீள சில கணங்கள் பிடித்தது அபிமன்யுவிற்கு.


"என்னோட அப்பாயின்மென்ட்காகவா வெய்ட் பண்றா...ங்க?? ஐ மீன்... கிப்லாக் சர்வீஸஸ்..??" - உளறலை சமாளித்து பூசி மொழுகினான்.


"எஸ், அவங்க உங்க அப்பாயின்மென்ட்காக தான் வெய்ட் பண்ணறாங்க. அதைத்தான் நான் சொல்ல வந்தேன்"


" அப்போ சொல்ல வேண்டியது தானே?"


"நீங்க விட்டாதானே!!" - அவன் முடிப்பதற்குள் இவள் பதில் சொல்லி முடித்துவிட அவன் கொலை வெறியோடு அவளை முறைத்தான்.


'மாட்டிக்கினாரு ஒத்தரு... அவரை காப்பாத்தணும் கத்தரு!' - மனசாட்சி மைண்ட் வாய்ஸில் அவளையே கலாய்த்து மஜா பண்ண, 'மேடம்.. !! மைண்ட் வாய்ஸ் மேடம்..! ப்ளீஸ் கீப் கொயட் மேடம்...' என்று தனக்குள் கெஞ்சியவள், "சாரி சார்... சொல்ல தான் வந்தேன்" என்று தொடங்க, "கிழிச்ச...” என்று சீறினான் அவன்.


“இது எவ்வளவு முக்கியமான மீட்டிங் தெரியுமா?” - மித்ராவின் பார்வையில் சந்தேகம் ஏறியது. உடனே அவன் பேச்சின் போக்கு மாறியது.


“இங்க செக்யூரிட்டி பிரச்னை இருக்கு... அதை ஹேண்டில் பண்ணத்தான் நான் வந்திருக்கேன். உன்ன மாதிரி ஒரு யூஸ்லெஸ் செகரட்ரியை வச்சுக்கிட்டு நான் என்ன பண்ணறது!" என்று கத்தினான்.


அவன் பேசிய விதத்தில் தன் மீதுதான் தவறோ என்று அவளுக்கே ஒரு கணம் தோன்றிவிட்டது. 'அடேய்... நல்லா கழுவுறடா மண்டைய...’ - மனதிற்குள் திட்டிக் கொண்டாள்.


" சரி.. கால் பண்ணு"


"இப்பவேவா!"


"வேற எப்ப? நல்ல நாள் பார்க்கலாமா?" - கடுப்படித்தான்.

"நோ நோ நோ... அப்படிலாம் உடனே மீட்டிங் ஏற்பாடு பண்ண முடியாது. அவங்களோட மற்ற அப்பாய்ன்மெண்ட்ஸ் எல்லாம் செக் பண்ணிட்டு அவங்க சொல்லணும். அதுக்கு அப்புறம் தான்..." என்று சொல்லிக் கொண்டிருந்தவளை, பொறுமை இழந்து இடைவெட்டினான் அபிமன்யு.


"இடியட்... முதல்ல கால் பண்ணு. நா ஃபிரீன்னு சொல்லு. அதுக்கப்புறம் அவங்க பதிலை கேட்டு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அப்பாயின்மென்ட் ஃபிக்ஸ் பண்ணு"


அவன் பேசும் விதம் அவளுக்கு சிறிதும் பிடிக்கவில்லை. 'திமிர் பிடிச்சவன்' என்று திட்டிக் கொண்டே போனை எடுத்தாள்.


"வெயிட் வெயிட்..." - அவளை தடுத்தவன், எதையோ யோசித்துவிட்டு, "என்னோட நேம் சொல்லாத. நா இங்க ஷேடோ பார்ட்னர்தான். நரேன் பேரையே யூஸ் பண்ணிக்கோ" என்றான்.


இப்போது மித்ரா முழுவதும் குழம்பி போனாள்.


"மீட்டிங் உங்க கூட தானே?" என்றாள்.


"கேள்வி கேட்காத. சொன்னதை செய்" – வார்த்தைகளை துப்பினான்.


அவனுடைய விசித்திர நடவடிக்கையை எண்ணிப் பார்த்தபடியே, 'கிப்லாக்' செக்யூரிட்டி கம்பெனியின் அலைபேசி எண்ணுக்கு அழைத்தாள்.


"நீங்க கூப்பிட்ட உடனே 'எஸ் மேடம்' னு சொல்லி அங்க வந்து நிக்கிறதுக்கு நா ஒன்னும் உங்களுக்கோ இல்ல உங்க கம்பெனிக்கோ அடிமை இல்ல. மூணு தரம் மீட்டிங் ஸ்கெடியுல் பண்ணி நான் அங்க வந்திருக்கேன். ஆனா மிஸ்டர் நரேனை பார்க்க முடியல. இனி எதுவா இருந்தாலும் ஈமெயில் பண்ணுங்க. நா ரிப்ளை பண்றேன். உங்க கம்பெனிக்கு என்னால வர முடியாது" - படபடவென்று பொரிந்து கொட்டியது அந்த பக்கத்திலிருந்து ஒரு பெண் குரல். கோபம்.. கடுமை.. கண்டிப்பு.. இதை தவிர வேறு எதுவும் இல்லை அந்த குரலில். வேறு யார் அப்படி பேசி இருக்கக் கூடும்! மிருதுளாவே தான்.


மித்ரா நொந்து போனாள். இரண்டு பக்கமும் இடி வாங்கும் மத்தளம் போலானது அவள் நிலை. பேசி... கெஞ்சி... சமாதானம் செய்து ஒரு வழியாக அடுத்த மூன்றாவது நாள் காலை பத்து மணிக்கு சந்திப்பை உறுதி செய்தாள்.


'அப்பாடா' என்று சாதித்துவிட்ட நிம்மதியோடு அவள் அபிமன்யுவை நிமிர்ந்து பார்க்க அவன் பெரிதாக அவளை பாராட்டவில்லை. பாராட்டவில்லை என்றாலும் பரவாயில்லை. முறைத்து வேறு பார்த்தான். மிருதுளாவை பார்க்க இன்னும் இரண்டு நாள் காத்திருக்க வேண்டுமே என்பது அவன் கவலை.
 
ஹாய் மக்களே 😍😍😍,
சொன்னபடியே அடுத்த அத்தியாயம் பதிவேற்றம் செஞ்சுட்டேன். படிச்சு பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க. முடிஞ்ச அளவுக்கு இங்கேயே கமெண்ட் கொடுத்துட்டு போனீங்கன்னா, நான் முகநூல் பக்கம் போகாம தவிர்ப்பேன். அப்போ டைம் சேவ் ஆகும்... என்னால அடுத்த எபிஸோடு ஈஸியா எழுத முடியும். டீல் ஓகேன்னா இங்கேயே கமெண்ட்ஸ் பண்ணிட்டு போங்க ப்ளீஸ்... 🤓🤓🤓

உங்களோட வசதிக்காக, கதை திரியை ஓபன் செய்து வச்சிருக்கேன். இங்கேயே கமெண்ட் பண்ணலாம்... ஓகே???

நன்றி
நித்யா.
 
அத்தியாயம் – 7

வாக்கு கொடுத்தபடியே அன்று சரியான நேரத்திற்கு பி-ஆர்-என் வளாகத்திற்குள் நுழைந்தாள் மிருதுளா. அவளிடம் எந்த கேள்வியும் கேட்காமல், நேரடியாக இரண்டாம் தளத்திற்கு அனுப்பி வைத்தாள் ரிஷப்ஷனிஸ்ட்.


மீட்டிங் நேரம் என்ன, யாருடனான சந்திப்பு என்று எதையும் சோதிக்காமல் தன்னை இப்படி விருந்தினர் போல் நடத்தும் ரிஷப்ஷனிஸ்ட்டின் புதிய போக்கை எண்ணி சிந்தனையுடன் மேல் தளத்திற்கு வந்தவளை விரிந்த புன்னகையுடன் எதிர்கொண்டாள் மித்ரா. அவளுடைய அந்த பளீர் புன்னகைக்கு மிருதுளாவிடம் எந்த எதிர்வினையும் இல்லை. மாறாக, 'இவளுக்கு பல்லை காட்ட தெரியிற அளவுக்கு வேலை செய்ய தெரிஞ்சிருந்தா நல்லா இருந்திருக்கும்' என்று எண்ணியபடி, "பத்து மணிக்கு மீட்டிங். மிஸ்டர் நரேன் ரெடியா?" என்றாள் கண்டிப்பான தொனியில்.


'இவளுக்கு யாருடா மிருதுளான்னு பேர் வச்சது! பேசாம பூலான் தேவின்னு வச்சிருக்கலாம். கைல துப்பாக்கி இல்லாத குறைதான்!’ - மனதிற்குள் முணுமுணுத்தவள், 'ஹி.. ஹி..' என்று மீண்டும் ஒரு ரெடிமேட் சிரிப்பை உதிர்த்துவிட்டு, முன்னவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், "என் கூட வாங்க" என்று அவளை கான்ஃபிரன்ஸ் அறைக்கு அழைத்துச் சென்று அமர வைத்து, ஸ்நாக் மற்றும் காஃபி கொடுத்து உபசரித்தாள்.


"கொஞ்சம் வெயிட் பண்ணுங்க மேம். சார் வந்து பார்ப்பாங்க. பை த வே... டாகுமெண்ட்ஸ் ப்ளீஸ்" என்றாள்.


தங்களுடைய ஒர்க் பிளான் மற்றும் கொட்டேஷன் என்ன என்பதை, ட்ராஃப்ட் போட்டு கொண்டு வந்திருந்த கோப்பு மிருதுளாவிடம் இருந்தது. அதை எதற்கு இவளிடம் கொடுக்க வேண்டும்! நரேனை சந்திக்கும் போது அவனிடம் நேரடியாக கொடுத்து விவாதிக்கலாமே என்று எண்ணினாள். ஆனாலும் மித்ரா கேட்டுவிட்டதால் அதை அவளிடம் கொடுத்தாள்.


பதிலுக்கு மித்ராவும் அவளிடம் ஒரு ஃபைலை நீட்டினாள். அவர்கள் கம்பெனியை பற்றிய விபரங்கள் மற்றும் டேர்ம்ஸ் அடங்கிய பேப்பர்ஸ் அதில் இருந்தது.


ஒரு முறைக்கு பத்து முறை அந்த கோப்பை வாசித்துவிட்டாள் மிருதுளா. மனப்பாடமே ஆகிவிட்டது. ஆனால் நரேனை சந்தித்த பாடில்லை. மிருதுளாவின் பொறுமை கரைய துவங்கிய நேரம் மித்ரா உள்ளே வந்தாள்.


"ஒரு மணி நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்கேன். மிஸ்டர் நரேன் எப்போ வருவார்?" - எரிச்சலுடன் கேட்டாள்.


"சாரி மேம், நரேன் சார் அவசரமா வெளியே போய்ட்டாங்க. உங்ககிட்ட இந்த டாக்குமெண்ட் கொடுக்க சொன்னாங்க. இதுல எங்களோட ரிக்கொயர்மெண்ட்ஸ் இருக்கு. இதுக்கு தகுந்த மாதிரி உங்களோட பிளான்ஸை மாத்தி டாக்குமென்ட் பண்ணி கொடுங்க. ஒன்மோர் திங்... இந்த ஒர்க்கை நீங்க எங்க ஆபீஸ்ல தான் செய்யணும். இந்த டாகுமெண்ட்ஸ் எதுவும் எங்க காம்பஸ் விட்டு வெளியே போகக் கூடாதுன்னு சார் ஸ்ட்ரிக்ட்டா சொல்லி இருக்கார்" என்றாள்.


மிருதுளாவின் முகம் கோபத்தில் இறுகியது. "இது என்ன புது கண்டிஷன்? இது வரைக்கும் நாங்க எங்களோட ஆபிஸ்ல தானே ஒர்க் பண்ணி இருக்கோம்? மிஸ்டர் நரேன் இதை பற்றி எங்ககிட்ட பேசினதே இல்லையே!"


"இப்போ இந்த ப்ராஜெக்ட் அடுத்த கட்டத்துக்கு மூவ் ஆகுது மேம். இப்போ நான் உங்ககிட்ட கொடுத்திருக்க ஃபைல்ல எங்க கம்பெனியோட மொத்த உள்கட்டமைப்பு, அப்புறம் அதுல செய்ய வேண்டிய சேஞ்சஸ் எல்லாம் இருக்கு. இந்த ஃபைல் வெளியே போறதை சார் விரும்பல" என்றாள் விபரமாக.


அவள் சொல்வதில் நியாயம் இருப்பதை புரிந்துகொண்டாள் மிருதுளா. ஆனாலும் அவளால் இந்த அறையில் அமர்ந்து வேலை செய்ய முடியும் என்று தோன்றவில்லை.


யாரும் இல்லாத தனிமை அவளுக்கு பிடித்ததுதான். ஆனால் அந்த அறையில் அவள் தனித்திருப்பது போல் தோன்றவில்லை. ஒவ்வொரு நொடியும் அவளை யாரோ பார்த்துக் கொண்டிருப்பது போல்… அவளுடைய ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டிருப்பது போல் தோன்றியது.


அறையை சுற்றிமுற்றி பார்த்தாள். கான்பிரன்ஸ் அறையில் கேமிராக்கள் இருப்பது சகஜம் தான். ஆனால் அந்த அறையில் அவள் எந்த பக்கம் சென்றாலும், அவள் முகத்தை தெளிவாக படம் பிடிக்கும் வகையில் கேமிராக்கள் சற்று அதிகப்படியாகவே நான்கு சுவர்களிலும் தொங்கியபடி கண்களை உருட்டிக் கொண்டிருந்தன.


அந்த அறையில் மட்டும் அல்ல, அந்த கம்பெனி வளாகத்திற்குள் அவள் எங்கு சென்றாலும் அவளை யாரோ தொடர்வது போலவே ஒரு உணர்வு அவளை சில்லிட செய்தது.


'இந்த ப்ராஜெக்ட்டே வேண்டாம்' என்று உதறிவிட்டு ஓடிவிடத் தோன்றியது. ஆனால் அது முடியாது. இதை பற்றி ரகோத்தமன் அங்கிளிடம் அவள் ஏற்கனவே பேசியிருந்தாள்.


"நரேன் கூட என்னால ஒர்க் பண்ண முடியும்னு தோணல அங்கிள். நாம வேற ஏதாவது ப்ராஜெக்ட் எடுக்க ட்ரை பண்ணலாமா?" என்றாள் முதன் முறை நரேனை சந்தித்துவிட்டு சென்ற பிறகு.


"என்ன ஆச்சு மிருதுமா? என்ன பிரச்னை? உன்கிட்ட அவன் ஏதாவது..." என்று இழுத்தவரின் முகம் மிகவும் சீரியஸாக மாறிவிட்டது. அது அவள் மீது அவர் கொண்டுள்ள அக்கறை. அவள் மனம் கனிந்தது. இப்போதெல்லாம் அவள் மனம் நெகிழ்வது இந்த ஒரு மனிதரிடம் மட்டும் தான்.


"அதெல்லாம் ஒன்னும் இல்ல அங்கிள். ஹி இஸ் எ ஜென்டில்மேன். என்னோட பிரச்னை வேற" என்று தன் மன கலக்கத்தை சொல்ல முடியாமல் விழுங்கினாள்.


"டோன்ட் ஒர்ரி தங்கம். நரேன் ரொம்ப நல்ல மனுஷன்னு தெரிஞ்சு தான் நான் உன்ன இந்த ப்ராஜெக்ட்ல இன்வால்வ் பண்ணினேன். இந்த ப்ராஜெக்ட் நம்மளோட லைஃபை மாத்தும் மிருதுமா. கொஞ்ச நாள் கஷ்ட்டப்பட்டா போதும். நம்ம கம்பெனி இந்த பண நெருக்கடியிலிருந்து தப்பிச்சுக்கும். அதுக்கப்புறம் நாம நமக்கு பிடிச்ச வேலையை மட்டும் செஞ்சா போதும். இப்போ நீயா எதையும் யோசிச்சு மனச குழப்பிக்காத" என்று அவளை சமாதானம் செய்தார்.


அவருடைய கம்பெனியில் அவளை தவிர ஐம்பதுக்கும் மேலானோர் வேலை செய்கிறார்கள். ஆனால் அவர் அவளைத்தான் நம்புகிறார். அவளிடம் மட்டும் தான் தன்னுடைய பிரச்சனைகளை கூறுகிறார். அவளை ஒரு மகளாக பார்க்கிறார்.


அது மட்டுமா! புயல் காற்றில் அடித்து வீசப்பட்டது போல் அவள் திக்குத் தெரியாமல் தெருவில் நின்ற சமயத்தில் கலங்கரை விளக்கமாக நின்று அவள் வாழ வழிகாட்டிய மனிதராயிற்றே! அந்த நன்றி கடனுக்காகவே மிருதுளா அந்த ப்ராஜெக்டில் இறங்கினாள்.


இப்போதும் அதை மனதில் கொண்டே மித்ரா கொடுத்த ஃபைலை கையில் வாங்கினாள்.


அந்த கம்பெனியின் அலுவலகம் மூன்று பிளாக்குகளில் இயங்கி கொண்டிருந்தது. அந்த கட்டிடங்களின் மொத்த அமைப்பும் நகல் எடுக்கப்பட்டு மிருதுளாவின் கையில் இருந்த கோப்பில் இருந்தது.


அதில் பாதுகாப்பு அம்சம் குறைவாக இருக்கும் பகுதிகளை ரிஸ்க்கி ஏரியாஸ் என்று சிகப்பு இங்கில் கிராஸ் மார்க் செய்து வைத்தாள். கூடவே அங்கு என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதை குறிப்பாக எழுதி அதே கோப்பில் அட்டாச் செய்து வைத்தாள். ஐந்து மணிநேரம் தலை நிமிர முடியாத வேலை. இடையில் லஞ்ச் ஸ்நாஸ்க்ஸ் எல்லாம் அவள் இருந்த அறைக்கே வந்து சேர்ந்தது.


மாலை ஆறு மணிக்கு அவள் வேலையை முடித்துவிட்டு எழுந்த போது, அதுவரை வேலை நினைவில் மட்டுப்பட்டிருந்த அந்த உணர்வு மேலெழுந்தது. தன்னையே நோட்டமிட்டுக் கொண்டிருக்கும் கேமிராவை திரும்பிப் பார்த்தாள்.. பார்த்துக் கொண்டே அருகில் சென்று உற்றுப் பார்த்தாள்.. நுனி காலால் எக்கி இன்னும் கூர்ந்து பார்த்தள்... பிறகு,


"எவ்வளவு நேரம் இப்படி என்னையே பார்த்துட்டு இருப்ப! ம்ம்ம்?" என்று எரிச்சலுடன் முணுமுணுத்துவிட்டு, உதட்டை மடித்து கடித்துக் கொண்டு, ஒற்றை விரலை நீட்டி அதன் கண்ணை குத்துவது போல் லென்ஸை ஒரு குத்து குத்தினாள்.


இதயம் ஒரு நொடி நின்று பின் துடித்தது அபிமன்யுவிற்கு. வேலையில் கவனமாக இருந்த மிருதுளா திடீரென்று எழுந்து கேமிராவை பார்த்ததும் பக்கென்றிருந்தது அவனுக்கு. என்னவோ அவள் தன்னையே பார்ப்பது போன்ற உணர்வு. பார்த்ததோடு இல்லாமல், கேமராவுக்கு அருகில் வந்து முகத்தை வெகு நெருக்கமாக கொண்டு வந்து உற்று பார்த்தாள். அவள் கண்களை நேருக்கு நேர் பார்த்த அபிமன்யுவின் இதயம் தாறுமாறாக துடித்தது.


அவள் அதோடு நிற்கவில்லை. 'செர்ரி ஆன் டாப்' என்று சொல்வார்களே, அது போல, "எவ்வளவு நேரம் இப்படி என்னையே பார்த்துட்டு இருப்ப! ம்ம்ம்?" என்று கேட்டுவிட்டு கேமிராவின் கண்ணை ஒரு குத்து குத்தினாள்.


விலுக்கென்று மானிட்டரிலிருந்து விலகி சேரில் சாய்ந்தான் அபிமன்யு. அவன் சாய்ந்த வேகத்தில் ரோலிங் சேர் ஒரு அடி பின்னால் நகர்ந்தது. மேல் மூச்சு வாங்க இருண்டு கிடந்த மானிட்டரையே பார்த்தான். அவள் விரல் இன்னும் லென்ஸை அடைத்துக் கொண்டிருப்பது புரிந்தது.


'எவ்வளவு நேரம் இப்படி என்னையே பார்த்துட்டு இருப்ப?' என்று அவள் கேமிராவிடம் கேட்டதை லிப் ரீடிங்கில் புரிந்துக் கொண்டவன் அவள் அதை தன்னிடம் கேட்டதாகவே உணர்ந்தான். ஒலிக்காத அவள் குரல் அவன் செவிகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்க அபிமன்யு அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தான்.


மானிட்டரில் மெல்ல வெளிச்சம் வர துவங்கியது. மிருதுளா மெல்ல கேமிராவில் இருந்து கையை விலக்கினாள். உர்ரென்றிருந்த அவள் முகம் கோபத்தில் சிவந்திருந்தது. அபிமன்யு பயந்தான். அவளை எப்படி எதிர்கொள்வது என்கிற யோசனையில் அவன் மனம் கலங்கியது என்றால் மிகையில்லை.


சற்று நேரத்தில் மிருதுளா இருந்த அறைக்குள் வந்தாள் மித்ரா. இருவரும் ஏதோ பேசிக் கொண்டார்கள். பிறகு மிருதுளா, தான் அதுவரை வேலை செய்த கோப்பை எடுத்து மித்ராவிடம் கொடுத்துவிட்டு மீண்டும் கேமிராவை பார்த்தாள். தீர்க்கமான பார்வை... பிறகு அந்த அறையிலிருந்து வெளியேறினாள்.


காந்தம் போல் அவள் மேல் ஒட்டிக் கொண்ட பார்வையை பிரிக்க முடியவில்லை அபிமன்யுவிற்கு. கேமிராவை மாற்றி மாற்றி அவள் செல்லுமிடமெல்லாம் பார்வையால் பின் தொடர்ந்தான். இறுதியாக பார்கிங் சென்று அவள் காரில் ஏறி கார் வெளியேறும் வரை அவன் பார்வையும் கவனமும் இம்மியும் வேறு பக்கம் விலகவில்லை. அதன் பிறகு பெருமூச்சுடன் சேரில் சாய்ந்து அமர்ந்தவன் அப்போதுதான் கதவருகே நின்றுக் கொண்டிருந்த மித்ராவை கவனித்தான்.


கதவை தட்டினாலும் பதில் இல்ல! உள்ள வந்ததையும் கவனிக்கல! அப்படி என்ன அந்த மானிட்டர்ல பார்த்துட்டு இருக்கான்! என்று சந்தேகக் கண்ணுடன் அவனை பார்த்தவள், "மே ஐ கம் இன் சார்?" என்றாள் அடக்கமாக.


முகத்திலிருந்து அவள் எண்ணப் போக்கை கணித்தவன், "என்ன வேணும்?" என்றான் சிடுசிடுப்பாக.


அவள் உள்ளே வந்து ஒரு ஃபைலை அவனிடம் நீட்டினாள். மிருதுளாவின் ஒர்க்ஸ் அதில் இருந்தது. மித்ராவை வெளியே அனுப்பிவிட்டு அந்த ஃபைலை கவனமாக பார்த்தான்.


வியப்பில் அவன் புருவம் மேலேறியது. அவ்வளவு கவனமாகவும் நேர்த்தியாகவும் ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் கவனித்து குறிப்பெடுத்திருந்தாள். எப்போது இதையெல்லாம் கற்றுக் கொண்டாள் என்று ஆச்சரியப்பட்டான். உடனே, 'பகவானுடைய ரெத்தம்! ஷோபாவின் வாரிசு! இந்த அளவுக்கு கூட இல்லைன்னா எப்படி!' என்று எண்ணிக் கொண்டான்.


பழைய நினைவுகளெல்லாம் மேலெழுந்தன. ஒவ்வொரு சம்பவத்தையும் எண்ணி எண்ணி அசை போட்டான். அவனுடைய சுகம்.. துக்கம்.. இன்பம்.. துன்பம்.. நல்லது.. கெட்டது எல்லாவற்றிலும் மிருதுளா நிறைந்திருந்தாள். அவனுடைய எண்ணங்கள் நினைவுகள் உணர்வுகள் எல்லாவற்றிலும் இரண்டற கலந்திருந்தாள். பெருமூச்சுடன் பழைய நினைவுகளிலிருந்து விடுபட்டவன், மீண்டும் மிருதுளாவின் ஃபைலை திறந்து அவள் செய்திருந்த வேலையில் குற்றம் குறைகளை ஆராய்ந்து குறிப்பெடுக்க துவங்கினான்.
 
ஹாய் டியர்ஸ்,
அடுத்த அத்தியாயம் பதிவேற்றம் செய்துட்டேன்... 😍 படிச்சு பாருங்க... பிடிச்சிருந்தா கீழ கமெண்ட் பாக்ஸ் சும்மா தான் இருக்கு. ஒரு என்ட்ரி போட்டுட்டு போங்க... அப்படியே லைக் பட்டனையும் கவனிச்சிட்டு போங்க... 😀

அப்புறம் நம்ம மேகி நேத்து ஒரு எபிஸோட் போட்ருக்காங்க மதுரதுளசி,
அதற்கு முதல் நாள் இனிதா ஒரு எபிசோட் கொடுத்திருக்காங்க.

தர்ஷினி எழுதிய தீயாய் சுடும் என் நிலவு கம்ப்ளீட் பண்ணிட்டாங்க.

லிங்க் கீழ தரேன். அதையும் ட்ரை பண்ணி பாருங்க.

நன்றி,
நித்யா
 

New Threads

Top Bottom