- Messages
- 583
- Reaction score
- 588
- Points
- 93
அத்தியாயம் - 12
காலம் - காயத்தை ஆற்றும் அருமருந்தாம்! கேள்விப்பட்டிருக்கிறாள். நேற்று வரை அதை நம்பிக் கொண்டும் இருந்தாள். ஆனால் இன்று எல்லாம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது. ஐந்து ஆண்டுகால கடும் பயணம் அவளை கொஞ்சம் கூட மாற்றவில்லை. வெளியே என்ன வேஷமிட்டு ஊரை ஏமாற்றினாலும் உள்ளுக்குள் இன்னும் அவள் அதே பழைய மிருதுளா தான்.
அவளை பெற்றவர்கள் தலை சிதறி மண்ணில் சாய்ந்த காட்சி இன்னும் அவள் கண்ணைவிட்டு விலகவில்லை. அதற்கு காரணமானவனை மறக்கவும் இல்லை... மன்னிக்கவும் இல்லை.
அவள் நெஞ்சுக்குள் இருப்பதெல்லாம் வலி... வேதனை... ஏமாற்றம்... துரோகம்... வேறு ஒன்றுமே இல்லை. எப்படி தங்குவாள் அந்த சின்ன பெண்! அவளை ஆற்றவோ தேற்றவோ இந்த பறந்து விரிந்த உலகத்தில் அவளுக்கென்று யார் இருக்கிறார்கள்? அவளும் தான் யாருக்காக வாழ வேண்டும்! யாருக்காக இந்த துயரத்தை எல்லாம் தாங்க வேண்டும்! எத்தனையோ முறை வாழ்க்கையின் விளிம்புவரை சென்று மீண்டிருக்கிறாள்.
இந்த துன்பத்தை எல்லாம் அவளுக்கு கொடுக்க அவன் கொஞ்சம் கூட தயங்கவில்லை. அவளால் மீள முடியாது என்று தெரிந்தும் அவளை உடைத்து நொறுக்கியவன், இன்று அவள் கண் எதிரில் வந்து நிற்கிறான்! காயம்பட்டு புரையோடி போன அவள் இதயத்தை மீண்டும் கீறிவிட்டு அவள் துடிப்பதை ரசிக்க வந்திருக்கிறான்! அவளால் தாங்க முடியவில்லை. நெஞ்சு வெடித்துவிடும் போல் இருந்தது. காரை ஓரம்கட்டி நிறுத்திவிட்டு விம்மி வெடித்து அழுதாள். நெஞ்சுக்குள் பாறை போல் இறுகி போயிருக்கும் துக்கத்தை கரைத்து கண்ணீராக வெளியேற்றி விடும் தவிப்பில் அழுது தீர்த்தாள். நேரம் தான் கரைந்தது. மனபாரம் அப்படியேதான் இருந்தது. அவள் தான் அந்த பாரத்தோடு வாழ பழகியிருந்தாளே! கண்களை துடைத்துக் கொண்டு காரை எடுத்தாள்.
இத்தனை ஆண்டுகள் கழித்து இப்போது ஏன் அவளை தேடி வந்தான்! அவள் இருப்பிடத்தை எப்படி கண்டுபிடித்தான்! முன்பு போல அவளிடம் ஏதேனும் டிராக்கிங் டிவைஸ் வைத்திருப்பானோ! மீண்டும் அவளை பிணையாக வைத்து ஏதேனும் சாதிக்க நினைக்கிறானோ! - பதில் இல்லா கேள்விகள் மண்டையை குடைந்தன.
அப்போதுதான் இன்னொரு விஷயமும் அவள் சிந்தனையில் மின்னல் வெட்டியது போல் உரைத்தது. ஆமாம்... மித்ராவோடு என்ன செய்து கொண்டிருந்தான்! கழுத்தை பிடித்து நெரித்து... அவளை... கொல்ல பார்த்தானா! யோசிக்கும் போதே தன்னையும் ஒருமுறை இதே போல் கழுத்தை பிடித்து நெரித்து மூச்சுமுட்ட வைத்தது நினைவிற்கு வந்தது. நின்றிருந்த கண்ணீர் மீண்டும் பெறுக துவங்கியது.
அன்று அவளை எப்படி நம்பவைத்து ஏமாற்றி துரோகம் செய்தானோ... அதே போல் இன்று மித்ராவிடம் நடந்துகொள்கிறானோ! - இந்த சிந்தனை வந்ததும் அவள் மனம் நூறு மடங்கு அதிகமாக வலித்தது. அவன் மாறவில்லை! இன்னும் மாறவில்லை!
நெஞ்சுக்குள் ஈட்டி பாய்வது போல் இருந்தது. அவன் மாறி இருப்பான் என்று நினைத்தாளா! எப்போது அந்த எண்ணம் அவளுக்குள் வந்தது! ஏன் இந்த ஏமாற்றம்! ஏன் இந்த புது வலி! மீண்டும் காரை ஓரமாக நிறுத்திவிட்டு காரிலிருந்து இறங்கினாள். மூச்சு முட்டியது. வீடு போய் சேர முடியும் என்று தோன்றவில்லை.
மேல் மூச்சு வாங்கியபடி கார் கதவை அடித்து சாத்திவிட்டு அதன் மீதே சரிந்து தரையில் அமர்ந்தாள். உள்ளே அலைபேசி அழைக்கும் ஒளி கேட்டது. அவளால் எடுக்க முடியாது. பேச முடியாது.
"என்னம்மா ஆச்சு?" - யாரோ உதவிக்கு வந்தார்கள்.
அவளால் பதில் சொல்ல முடியவில்லை. அதை புரிந்து கொண்டு, "இட்ஸ் ஓகே... ரிலாக்ஸ்... ப்ரீத்... எஸ்... ப்ரீத் வித் மீ" என்று அவளுடைய மூச்சு சீராக உதவினார்கள்.
'அன்று அவனும் இப்படித்தானே செய்தான்!' - மீண்டும் அவன் நியாபகம் வந்தது. மேலும் இருவர் உதவிக்கு வந்தார்கள். அவளுக்கு தண்ணீர் கொடுத்தார்கள். அவளை கை கொடுத்து தூக்கி, கார் சீட்டில் வசதியாக அமர வைத்தார்கள். உதவிக்கு யாரையாவது அழைக்கட்டுமா என்று கேட்டார்கள்.
'யார் இருக்கிறார்கள்!' - அவள் விரக்தியாக உதட்டை பிதுங்கும் போது மீண்டும் அலைபேசி ஒலித்தது. உதவிக்கு இருந்தவர்கள் எடுத்து பேசினார்கள். ரகோத்தமன் தான் அழைத்தார். விஷயம் அவரிடம் சென்று சேர்ந்தது. அடுத்த ஐந்து நிமிடத்தில் நஸீம் அவளை தேடி வந்தான்.

***************
அன்று நஸீம் அலுவலகத்தில் பிஸியாக இருந்தான். கடற்கரையோர ரெஸ்டாரண்டில் டேபிள் புக் செய்யும்படி அபிமன்யு கூற அதை நரேனும் ஒப்புக் கொண்டிருந்தான். டூரிஸ்ட் அதிகம் வரும் ஏரியாக்களில் பாதுகாப்பு பணி சற்று சிரமம் என்பதால் அவன் வெகு கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை. எனவே தன்னுடைய உதவியாளன் கொண்டு வந்து கொடுத்திருந்த உணவகங்களின் பட்டியலையும் அதன் கட்டமைப்பு வசதிகளையும் ஆராய்ந்து கொண்டிருந்தான். அவன் வடிகட்டி அனுப்பும் பட்டியல் அபிமன்யுவின் டேபிளுக்கு செல்லும். அவனோ ஒரு நொடியில் பத்து பிழைகளை கண்டுபிடிக்கக் கூடியவன். எனவே வெகு கவனமாக வேலை செய்து கொண்டிருந்தான். அப்போதுதான் அவனுக்கு ரகோத்தமனிடமிருந்து அழைப்பு வந்தது.
அவருடைய அழைப்பை அவன் ஒருபோதும் அலட்சிய படுத்துவதில்லை. எனவே உடனே அழைப்பை ஏற்று காதுக்கு கொடுத்தான். அந்த பக்கத்திலிருந்து வந்த செய்தியில், செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே போட்டுவிட்டு எழுந்தான். அடுத்த சில நிமிடங்களில் அவனுடைய கார் சீறி பாய்ந்து வந்து மிருதுளாவிடம் நின்றது.
அவன் அங்கே வந்து சேர்ந்த போது, சுற்றியிருந்த பொதுமக்களின் கரிசனத்தாலும் உதவியாலும் மிருதுளா வெகுவாக தன்னிலைக்கு மீண்டிருந்தாள். நஸீமை பார்த்ததும், அவள் முகத்தில் கடுமை ஏறியது.
"வை ஆர் யு ஹியர்?" - எரிச்சலுடன் கேட்டாள்.
அவளுடைய கோபமும் எரிச்சலும் அவனை சங்கடப்படுத்தியது. ஆனாலும் அவன் காட்டிக்கொள்ளவில்லை. "ரகோத்தமன் சார் கால் பண்ணி இருந்தார்" என்றான் தன்னை இயல்பாக காட்டிக்கொள்ள முயன்றபடி.
அவள் முகம் உடனே கடுமையை தொலைத்து கனிந்தது. பிடிவாதத்துடன் இறுக்கி பிடித்திருந்த அவளுடைய கடுமை கரைந்து கண்களில் கண்ணீர் திரையிட்டது. எத்தனை முயன்றும் இந்த மனம் இளகுவதை தவிர்க்க முடியவில்லையே என்கிற ஆதங்கத்துடன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
அவளுடைய அந்த போராட்டம் அவனுக்கு வலித்ததோ என்னவோ... நஸீமின் முகத்தில் மாற்றம் தெரிந்தது.
"ஐ திங்க் ஷி காட் பேனிக் அட்டாக்" - "நீங்க அவங்களோட ஃபேமிலியா?" - "கொஞ்ச நேரத்துல சீரியலா ஆயிட்டாங்க. பத்திரமா பார்த்திக்கோங்க" என்று பல கேள்விகளையும் ஆலோசனைகளையும் நஸீமிடம் வீசி, கிடைத்த பதிலில் திருப்தியடைந்த பிறகு அவளை அவனிடம் ஒப்படைத்துவிட்டு சுற்றிநின்ற கூட்டம் விலக, அவன் அவளிடம் நெருங்கி, "வா?" என்று கை நீட்டினான்.
நீட்டிய அவன் கையை பிடிக்காமல் எழுந்து தன்னுடைய காரில் ஏறி ட்ரைவர் சீட்டில் அமர்ந்தாள் மிருதுளா.
அவளை இயலாமையுடன் பார்த்த நஸீம் "யு ஆர் நாட் வெல் மிருதுளா. இப்போ இந்த பிடிவாதம் வேண்டாமே ப்ளீஸ்" என்றான்.
" நான் உங்கள கூப்பிடல. நீங்க என்னை கேர் பண்ணணும்ங்கற அவசியம் இல்ல. என்னை பார்த்துக்க எனக்கு தெரியும்" என்று கடுப்படித்துவிட்டு ஸ்டியரிங்கை பிடித்தவள் தன் கை கட்டுப்பாடில்லாமல் நடுங்குவதை கண்டு திகைத்தாள். அவனும் அப்போதுதான் அவளுடைய நிலை எத்தனை தீவிரமாக உள்ளது என்பதை கவனித்தான்.
"ஓ நோ..." - சட்டென்று காரை சுற்றிக் கொண்டு வந்து, ட்ரைவர் சீட் பக்கம் கதவை திறந்தவன், அவள் கையை பிடித்து, "இறங்கு மிருதுளா" என்று பிடிவாதமாக அவளை வெளியே இறங்க செய்தான்.
அதற்கு மேல் பிடிவாதம் செய்ய அவளுக்கும் விருப்பம் இல்லை. தான் ‘ட்ரைவ்’ செய்யும் நிலையில் இல்லை என்பது தெளிவான பிறகு வறட்டு பிடிவாதம் எதற்கு உதவும்! அமைதியாக அவனுடைய காரில் ஏறி அமர்ந்தாள்.
**************
மித்ரா முழுதாக நினைவிழக்க வில்லை. ஆனால் செயல்பட முடியாமல் தளர்ந்து துவண்டு போனாள். மிருதுளா கத்தியது. நஸீம் அவளை தூக்கிச் சென்றது... எல்லாம் மங்கலாக... தேய்ந்து போன பழைய டிவிடியில் படம் பார்ப்பது போல் தெரிந்தது. அவளை எங்கே கொண்டு செல்கிறார்கள் என்று தெரியவில்லை. வழியில் நரேன் நின்றான். அவளை தொட்டான்... கன்னத்தில்... பிறகு மங்கலாக தெரிந்த காட்சிகளெல்லாம் இன்னும் மங்கியது... மேலும் மேலும் மங்கி இருள் சூழ்ந்தது... அவ்வளவுதான்... மீண்டும் அவள் கண்விழித்த போது... அதற்கு முன் அவள் பார்த்திடாத... அறிமுகமற்ற ஒரு அறையில்... வசதியான படுக்கையில் இருந்தாள்.
'எங்க இருக்கோம்!' - தனக்குள் கேட்டபடி அறையை விழிகளால் அலைந்தாள்.
"எப்படி இருக்க?" - தலைக்கு பின்னால் இருந்து ஒலித்தது அந்த குரல்.
'யார்ரா அது?' – சட்டென்று எழுந்து அமர்ந்தாள்.
"ரிலாக்ஸ்... ரிலாக்ஸ்..." - முன்பக்கம் வந்தான் நரேன். முகம் களையிழந்து போயிருந்தது.
'செத்து பொழச்சது நாம. இவன் எதுக்கு எங்கேயோ செமத்தியா வாங்கின மாதிரி மூஞ்ச வச்சிருக்கான்!' - மனதிற்குள் கமெண்ட் அடித்தவள், மீண்டும் அந்த அறையை சுற்றும் முற்றும் பார்த்தாள். ஜன்னலை தவிர, படுக்கை அறையில் இருக்க வேண்டிய அனைத்து வசதிகளும் இருந்தன. மற்றபடி அங்கே அவர்களை தவிர வேறு யாரும் இல்லை.
'அட கடவுளே!' - பதட்டத்துடன் எழுந்தாள். 'சுரீர்' என்று கழுத்துப் பகுதியில் ஒரு வலி. தடுமாறி மீண்டும் கட்டிலில் அமர்ந்தாள்.
" யு ஓகே? ரொம்ப வலிக்குதா?" - பதறி அவளிடம் நெருங்கினான் நரேன்.
மித்ராவுக்கு முணுக்கென்று கோபம் வந்தது. " ஹி அல்மோஸ்ட் கில்ட் மீ" என்றாள் ஆத்திரத்துடன். ஆனால் குரல் தான் எழும்பவில்லை. தொண்டை கட்டிக்கொண்டது போல் கீச்கீச் என்றது.
'அச்சோ...' - கலவரத்துடன் அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள். என்னவோ அவன் தான் அவளுடைய சேவியர் போல. அந்த பார்வை அவனுக்குள் ஓர் அழகிய உணர்வை ஏற்படுத்தியது.
"ஐ ஆம் சாரி..." என்றான் முகம் கனிந்து.. குரல் குழைந்தது.
“மை வாய்ஸ்!” - பயத்துடன் கேட்டாள்.
"யு ஆர் ஆல்ரைட். டாக்டர் வந்து பார்த்தாங்க. மெடிசன் கொடுத்திருக்காங்க. ரெண்டு மூணு நாள்ல சரியாயிடும்" என்றான்.
அவள் முகம் சுருங்கியது. அவனுக்கு சங்கடமாக இருந்தது. மீண்டும் "சாரி மித்ரா... இப்படி நடந்திருக்க கூடாது. ஐ ஆம் ரியலி சாரி" என்றான்.
"அம்மா... ரொம்ப ஸ்ட்ரிக்ட்... மாட்டிக்க போறேன்" - கவலையோடு சொன்னாள். என்னவோ அவளுடைய முக பாவத்தில் அவன் முகத்தில் புன்னகை தோன்றியது.
"நா பேசுறேன். உன் மேல தப்பு இல்லன்னு எக்ஸ்ப்லைன் பண்ணறேன்" என்றான்.
என்னது!' - பதறியவள், 'இவன் நம்மை கோர்த்துவிடாம விடமாட்டான் போலருக்கே!' என்று எண்ணினாள்.
அவள் சட்டென்று தன்னை அப்படி திரும்பி பார்த்ததும், "என்ன ஆச்சு?" என்றான் அவன்.
அவள் தலையை குறுக்காக அசைத்துவிட்டு, "பேச முடியல... நா கிளம்புறேன்" என்று எழுந்தாள்.
"நா டிராப் பண்ணறேன்" என்று அவனும் கூட வர தயாராக, 'ஐயோ... சாமி.. ஆள விடுங்கடா...' என்று நொந்து போய் நினைத்தவள், அதை வெளியே சொல்ல முடியாமல், "வண்டி இருக்கு. நான் போயிக்குவேன்" என்றாள் பட்டென்று.
"நீ மெடிசன் எஃபட்ல இருக்க. தனியா போக முடியாது" - விடாக்கண்டன் என்று நிரூபித்தான் அவன்.
வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்லி அவனை கன்னாபின்னாவென்று திட்ட வேண்டும் போல் இருந்தது. ‘அவன் என்னடாவென்றால் கழுத்தை நெரித்து கொல்ல பார்க்கிறான். இவன் என்னடாவென்றால் டயலாக் பேசியே டார்ச்சர் பண்றான்! என்னடா நெனச்சுக்கிட்டு இருக்கீங்க என்னைய?’ - மேல்மூச்சு வாங்க... நுனிநாசி சிவக்க அவனை முறைத்தாள். யாருக்கு வந்த விருந்தோ என்று அவன் அப்படியே நின்றான்.
‘'எனக்குன்னே வருவீங்களாடா!' - உள்ளுக்குள் குமுறினாள்.
அந்த நிலையிலும் அவள் கோபத்தை அவன் மனம் ரசிக்க, "போலாமா?" என்றான் மின்னும் கண்களோடு.
'வேற வழி? வந்து தொலையுறேன்' வாதம் செய்யும் நிலையிலா இருக்கிறாள். ஒன்றும் சொல்ல முடியாமல் அவனோடு கூட நடந்தாள்.
அந்த அறையில் அவள் கண்டது இரண்டு கதவுகள் ஒன்று ரெஸ்ட்ரூம் கதவு. மற்றொன்று வெளியே செல்லும் கதவு. இப்படித்தான் அவள் நினைத்திருந்தாள். ஆனால் அந்த மற்றொரு கதவை திறக்கும் போது அங்கே ஒரு மின்தூக்கியை தான் காண முடிந்தது.
'இது என்னடா கொடுமை! கரண்ட் இல்லன்னா எப்படி வெளியே போறது!' என்கிற யோசனையோடு மின்தூக்கிக்குள் நுழைந்தாள். அது நேராக அவர்களை கராஜுக்கு கொண்டு சேர்ந்தது. அங்கே நான்கைந்து கார்கள் மட்டுமே இருக்க, பிரைவேட் கராஜ் போல் தெரிந்தது.
' இது என்ன ஒரு மார்க்கமான இடமா இருக்கு! இந்த பில்டிங்ல இப்படி ஒரு ரூம்... அதுக்கு இப்படி ஒரு என்ட்ரன்ஸ்!' - அவளுடைய கியூரியாசிட்டி தலைதூக்க, 'இவனோடு வந்தது கூட நல்லதாகிவிட்டது. இல்லையென்றால் இந்த இடத்தையெல்லாம் பார்த்திருக்கவே முடியாதே!' என்கிற எண்ணம் எழுந்தது.
எதிர்பார்த்தது போலவே வீட்டுக்கு வந்ததும் அம்மா அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார்.
"என்ன சீக்கிரம் வந்துட்ட? வண்டி எங்க? யார் கார் அது? இன்னிக்கு என்ன பிரச்னையை இழுத்துட்டு வந்த?"
"அது கால் டாக்சி ம்மா. வண்டி ரிப்பேர் ஆயிடிச்சு. சர்வீஸ்க்கு விட்டுருக்கேன்" - தன்னுடைய வழக்கமான சாமர்த்தியத்தை அவரிடம் காட்டினாள். உடனே அவர் மகளின் குரல் மாற்றத்தை கவனித்துவிட்டு என்ன ஆச்சு என்று விசாரித்தார். அதற்கும், "உடம்பு சரியில்லம்மா... அதான் சீக்கிரம் வந்துட்டேன்" என்று சொல்லி சமாளித்துவிட்டு அறைக்குள் அடைந்து கொண்டாள்.