Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


காதலா! காதலா!- கதைத்திரி

Status
Not open for further replies.

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,011
Reaction score
1,132
Points
113
இவ்வளவு நேரம் மெல்லிய இரவு உடையில் தெரிந்த அவளின் தேகத்தங்க தரிசனத்தில் சொக்கி நின்றவன், அவள் உள்ளே சென்றதும் ஏமாற்றமடைந்தான்.


உள்ளே சென்றவளோ, "ஹேய் சோனா! இன்னைக்கு உனக்கு பெர்த்டேவாடி? ம்? போன மாசம் தானே கொண்டாடின? உனக்கு மட்டும் மாசா மாசம் பிறந்த நாள் வருதாக்கும்? நீ பெர்த்டேனு சொன்னனு அவன் கையில பொக்கேவோட வந்து நிற்கிறான்டி. ஒழுங்கு மரியாதையா அவனை வெளிய அனுப்பு. இல்லைனா நீயும் உன் வீக்கு கூடவே சேர்ந்து வெளிய போயிரு. என்னடி சொல்ற?" என அனுஷா தன் ஏமாற்றத்தை கோபமாய வெளிக்காட்ட,


"ஹேய்! அவரு‌ வீக்கு இல்லடி, ஸ்ட்ராங். உன் ஃப்ரெண்ட் லவ்வுக்கு இந்த ஒரு சின்ன ஹெல்ப் கூட நீ பண்ணமாட்டியாடி அனுஷா?" என சீறினாள் சோனா.


"என்னது லவ்வா?" என அதிர்ந்தவள்,


"லவ் பண்றதுக்காடி நீ இங்க லண்டனுக்கு வந்த? அதுவும் இவனைப்போய் லவ் பண்றியேடி? அவன் ஆளும் மூஞ்சும்" என தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக அவள் கேட்க,


"ஹே! அவருக்கென்னடி குறை? அவரோட கலரு பார்க்க அப்படியே ஃபெர்ரரோ ரோச்சர் சாக்லேட் மாதிரி இருக்குடி? என்னை விட்டா அவரை அப்படியே கடிச்சி தின்றுவேன்டி" எனத் தன் கற்பனை உலகில் மிதந்துகொண்டே கூறியவளிடம்,


"ஹே! ச்சீ! ச்சீ! நிப்பாட்டு. நீ எக்கேடோ கெட்டுப்போ. இன்னைக்கு மட்டும் தான் நான் அவனை நம்ம போற இடத்துக்கெல்லாம் கூட்டிட்டு போக அலோவ் பண்றேன். பட் அவன் அடிக்கடி இங்க வரக்கூடாது ஓகேவா?" எனக் கறாராய் கூறினாள்.


"ம், ஓகேடி. அப்பறம் தான்க்ஸ்டி செல்லம். இப்பவே போய் நான் என் ஃபெர்ரரோ ரோச்சரை பார்க்கறேன்" என சிட்டாகப் பறந்தாள் சோனா.


அவனை கண்டதும், "அடடே! வாங்க வீ.கே சார். வந்து ரொம்ப நேரம் ஆகுதா? சாரி உங்களை ரொம்ப நேரம் காக்க வச்சதுக்கு" என்று சந்தோஷ உற்சாகத்தில் பொரிய,


"ச்சே, ச்சே, நான் இப்போ தான் வந்தேன் சோனா. மெனி மோர் ஹாப்பி ரிட்டர்ன்ஸ் ஆஃப் த டே" என அவளருகில் வந்தவன், பூச்செண்டை அவள்புறம் நீட்டி வாழ்த்தினான்.


"தான்க் யூ வீ.கே சார்" என்றவள் அவனை மரியாதைக்காய் கட்டியணைத்தாள்.


பின், அனுஷாவின் கைவண்ணத்தால் நொறுங்கிய கண்ணாடி பூச்சாடியின் கதறலில் அவனை விட்டு பிரிந்தாள்.


"ம்! உங்கக்கிட்ட சொல்ல மறந்துட்டேனே? இவ அனுஷா. நாங்க எல்லாரும் இங்க ஒன்னா தான் தங்கியிருக்கோம். அப்பறம் இப்ப நம்ம கூட இவளும் வருவா" என சோனா கூடுதல் தகவலாய் கூற,


"ஓ அப்படியா? வரட்டுமே" என்று தன் நாக்கை கன்னக்குழியில் பதுக்கி குறும்பாக அவளைப் பார்த்து சிரித்தான் வீ.கே.


அதில் அனுஷாவின் காதுகளிரண்டும் இட்லி குக்கராகின.


அன்றைய நாளை ஒன்றாகவே கழித்தவர்கள் இறுதியில் பேரங்காடி ஒன்றிற்கு செல்ல, அனுஷா முதல் ஆளாய் தனக்கு பிடித்த மாடர்ன் உடைகளை தேர்வு செய்து ட்ரையல் ரூமிற்கு சென்றாள்.


விஜய்குமாரோ தங்கள் உடைகளை தேர்வு செய்து வந்தவர்களிடம், சோனாவின் பிறந்தநாளிற்கு தான் ட்ரீட் கொடுப்பதாகச் சொல்லி, அனைவரின் பில்லையும் தானே மனமுவந்து கட்டினான்.


"வீ.கே சார் இதுல எனக்கு எந்த ட்ரெஸ் நல்லாயிருக்கும்?" என சோனா திடீரென கேட்க,


"ம்? இதெல்லாம் எனக்கு பிடிக்காது சோனா. சோ செலக்ட் பண்ணவும் தெரியாது" என்று அவளிடமிருந்து நைசாக நழுவிக்கொண்டான்.


அவனின் பதிலில் வேறு வழியில்லாமல் தனக்கு பிடித்த உடையை தேர்ந்தெடுத்துவிட்டு வெளியே வந்தாள் சோனா.


ரயிலில் தங்களின் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த போதோ, "வீ.கே சார், இந்த ட்ரெஸெஸ் எல்லாம் உங்களுக்கு பிடிக்காதுனா, அப்போ வேற எந்த மாதிரி ட்ரெஸெஸ் எல்லாம் உங்களுக்கு பிடிக்கும்?" என சோனா ஆர்வமாய் வினவினாள்.


அவன் கனவில் மிதந்தபடி பதிலளித்தான்.


"ம்? எனக்கு பொண்ணுங்க சேலை கட்டினா ரொம்பப் பிடிக்கும் சோனா. அதுவும் நெத்தியில பொட்டு வச்சு, தலை நிறைய பிச்சிப்பூ வச்சா ரொம்பப் பிடிக்கும். என் அம்மா அப்படி தான் இருப்பாங்க" என்று ரசனையுடன் கூறினான்.


"அதாவது நீ அருக்கானி கெட்டப்ல, என் புருஷன் தான்; எனக்கு மட்டும் தான்னு பாட்டு பாடிக்கிட்டு திரிஞ்சன்னா, உன்னைய உன் வீ.கே சாருக்கு ரொம்ப பிடிக்குமாம் சோனா.” என அனுஷா வம்பிழுக்க,


இடையில் புகுந்த சோனா, "சாரீஸ்லாம் எனக்கு செட்டாகாது வீ.கே சார். இருந்தாலும் உங்களுக்காக ஒரு நாள் ட்ரை பண்றேன்" என்று கூறி, நேரம் போகவென அவனுடன் பலவற்றை கதைத்துக்கொண்டே வந்தாள்.


அனுஷாவிற்கு அவர்களின் வாய் ஓயாதா என்றிருந்தது.


ஒவ்வொரு வார இறுதியிலும் லண்டனில் உள்ள சுற்றுலா தளங்களையெல்லாம் கூடுமானவரை சுற்றிப் பார்த்தவர்கள், இறுதியாக லண்டன் மாநகரத்தின் மத்தியில் உள்ள ரீஜன்ட் பார்க்கிற்கு வந்தனர்.


கிட்டத்தட்ட பனிரெண்டாயிரம் ரோஜாக்களை கொண்ட குயின் மேரிஸ் கார்டன், நூறு வகை விலங்குகளை கொண்ட வனவிலங்கு காப்பகம், உலகின் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய விளையாட்டு திடல், சர்வ வசதிகளும் கொண்ட காபி கஃபே, குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்கா மற்றும் வானவெளியில் ஒரு திரையரங்கம் என அனைத்தையும் காணக் காண வியப்பில் அவர்கள் அனைவரது கண்களும் விரிந்துகொண்டே சென்றன.


வீட்டிற்கு கிளம்பும் வேளையில் அனைவரும் ரீஜண்ட் பார்க்கிற்கு சற்றே வடக்குத் திசையில் உள்ள லண்டன் மாநகரத்தின் மொத்த அழகையும் இரு நூற்றி பதின்மூன்று அடி உயரத்தில் நின்று காண ஏதுவாய் அமைந்திருக்கும் ப்ரிம்ரோஸ் ஹில்லிற்குச் சென்றனர்.


அங்கு ஜோடி ஜோடியாக நெருங்கி அமர்ந்து தங்கள் இணையின் உடல் வெப்பத்தை தங்கள் உடலிற்கு மாற்ற முயற்சி செய்து கொண்டிருப்பவர்களை கண்டதும் சோனாவிற்கு என்ன தோன்றியதோ, ஒரு ரோஜாப்பூவை கையில் ஏந்திக்கொண்டு வீ.கேவின் முன் முட்டிபோட்டமர்ந்து அவனை நோக்கி, "ஐ லவ் யூ வீ.கே சார்" என்று தன் காதலை தெரிவித்தாள்.


இவன் அனுஷாவைப் பார்த்தான். எழில் பொங்கும் இயற்கை காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்தாள் அவள்.


அவளைப் பார்த்து, ‘ச்சே! இங்க ஒருத்தி ப்ரோபோஸ் பண்ணிக்கிட்டு இருக்கா. லூசு எங்க வேடிக்கைப் பார்த்துக்கிட்டு இருக்கு பாரு? அடியே குஸ்கா, இந்தா வரேன்டி’ என்று வீறு கொண்டவன்,


சோனாவின் புறம் திரும்பி, "நீ ஏன் என்னை லவ் பண்றனு நான் தெரிஞ்சிக்கலாமா சோனா?" என்றான்.


"அதுவந்து ஃபர்ஸ்ட் உங்க அப்பியரன்ஸ் பார்த்து தான் நான் அட்ராக்ட் ஆனேன் வீ.கே‌ சார். ஆனா நீங்க இப்ப எங்க எல்லோரையும் ரொம்ப கேரிங்கா பார்த்துகறதைப் பார்த்து இது மாதிரி லைப் ஃபுல்லா என்னை நீங்க நல்லா பார்த்துப்பீங்கன்ற நம்பிக்கையில தான் லவ் ப்ரொபோஸ் பண்ணினேன்" என அவன் முகத்தை பார்த்து சொல்ல,


"சாரி சோனா, நான் வேற ஒரு பொண்ணை லவ் பண்றேன்." என நிஜமாகவே வருத்தப்பட்டான் விஜய்குமார்.


அவனின் பதிலில் மனம் உடைந்து போனாலும், அவன் விரும்பும் அந்த அதிர்ஷ்டசாலிப்பெண் யாரென்று அறியும் நோக்கில், "அவங்க எந்த மூவி ஹீரோயின் வீ.கே சார்? அவங்க யாருனு நான் தெரிஞ்சுக்கலாமா?" என்றாள் சோனா.


"இந்தா காட்டுறேன்" என்றவன் நடுவிலிருந்த புல் குன்றை எகிறி குதித்து தாவி, தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்த ஒரு மோதிரத்தை கையில் பிடித்துக்கொண்டு,


அனுஷாவின் முன் முட்டிபோட்டமர்ந்து, "ஐ லவ் யூ அனுஷா" என்று சொல்ல, அவனிடமிருந்து இப்படியொரு செய்கையை எதிர்பாராதவள், அதிர்ச்சியில் மொழியற்று நின்றாள்.


தொடரும்...
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,011
Reaction score
1,132
Points
113
அத்தியாயம் 7



லண்டன் மாநகரத்தின் வடமேற்கு திசையில் அமைந்துள்ள கேம்டன் டவுனில், ஸ்காட் ஏட்டோன் எனும் கலைஞனால் வெண்கலத்தில் உருவாக்கப்பட்ட, ஏமி வைன்ஹவுஸ் சிலையின் எழிலை மிஞ்சுமளவிற்கு பல வகையான உணர்வுகள் ஒரு சேர தாக்க அசைவற்று நின்றிருந்தாள் அனுஷா.


மறுபுறம் பொறாமையின் உச்சத்திலிருந்த சோனாவோ சிம்ரனின் கையைப் பிடித்து வீட்டிற்கு இழுத்துச் சென்றாள்.


சிம்ரன், "ஹே சோனா! என்னாச்சுடி? என்னை விடுடி. அனுஷாவும் வரட்டும்டி. ஊப்ஸ்! ஐஸ்கிரீம்ஸ் எல்லாம் கீழ கொட்டுது பாரு. எனக்கு கை வலிக்குதுடி. ஹே சோனா" என்று தன் கையை விடுவிக்க போராடிக் கொண்டிருந்தாள்.


அவளின் கீச்சு கீச்சு குரலில் உயிர்பெற்ற அனுஷா மத்தாப்பாய் வார்த்தைகளை‌ சிதறவிட்டாள்.


"நோ ஐ காண்ட். இதுக்கு தான் நீ எங்க பின்னாடி சுத்துனியா வீ.கே? சோனாவோட இன்ஃபாக்சுவேஷனை உன் சுயநலத்துக்கு நல்லா யூஸ் பண்ணிக்கிட்டல்ல? ச்சீ! உன்னை பார்த்தாலே கடுப்பாகுது. இனி என் மூஞ்சிலயே முழிக்காத" என்றவள் நேராக தன் வீட்டிற்கு செல்லும் டாக்சியைப் பிடித்து சென்றுவிட்டாள்.


ஒரு வாரம் கழித்து அனுஷாவின் உடைகளை சந்தையில் அறிமுகப்படுத்த சரியான மாடல் கிடைக்காமல் போக, வேறு வழியில்லாமல் தன் பேராசிரியர்களின் வற்புறுத்தலால் விஜய்குமாரை சந்திக்க, அவன் தங்கியிருக்கும் மூன்று நட்சத்திர விடுதிக்குச் சென்றாள்.


வீ.கேவின் கெட்ட நேரமோ என்னவோ அவள் தன்னை சந்திக்க வரும் நேரம் பார்த்து, முழங்கால் வரையுள்ள பூப்போட்ட சார்ட்ஸ் ஒன்றை அணிந்து கொண்டு, விடுதியின் நீச்சல்குளத்திற்கு அருகில் நின்று ஓவியம் தீட்டிக் கொண்டிருந்தான்.


அவன் பின்னே சென்று நின்றவள் மிருதுவாக, “வீ.கே” என்றழைக்க,


“யெஸ்” என்று திரும்பினான்.


அவன் திரும்பியதும் தான் அவன் வரைந்துக் கொண்டிருந்த ஓவியம் அவள் கண்களில் பட்டது.


அதில் சிம்ரன் அழகாக கன்னத்தில் கை வைத்து சிரித்துக் கொண்டிருந்தாள்.


ஓவியத்தின் அடியில், வித் லவ் வீ.கே என்று எழுதப்பட்டிருந்தது.


அதனைப் பார்த்து அனுஷாவிற்கு கோபவெறி உச்சிக்கு சென்றது.


வந்த கடுப்பில் அருகில் கண்ணாடி டம்ளரிலிருந்த திரவத்தை எடுத்து அவன் முகத்தில் ஊற்றினாள்.


"யூ ப்ளடி ச்சீட்! நான் மடியலைன்னதும் எங்க ஃப்ரெண்ட் சிம்ரனை மடக்க பிளான் பண்ணிட்டல்ல? முதல்ல சோனா, அடுத்து நான், இப்ப சிம்ரனா? இன்னும் உன் லிஸ்ட்ல எவ்வளவு பேருடா இருக்காங்க? ச்சீ! எவ்ளோ கேவலமான புத்திடா உனக்கு?" என்று வேகமாக தான் வந்த விடயம் மறந்து, அவ்விடம் விட்டு வெளியேறினாள்.


இரண்டு நாட்கள் கழித்து தன் பிறந்த நாள் அன்று கையில் பெரிய பார்சலுடன் சோகமாக வந்த சிம்ரனிடம், ஒருவருக்கொருவர் சமாதானமாகிவிட்ட சோனாவும் அனுஷாவும், "என்னடி?" என்று வினவ,


"இல்லடி இன்னைக்கு மார்னிங் வீ.கே கிட்டயிருந்து எனக்கு போன் கால் வந்தது. நானும் உங்கப் பேச்சையெல்லாம் கேட்டு அவரை கெட்டவருனு நெனச்சு நல்லா திட்டிவிட்டுட்டேன். ஆனா அவரு வீடியோ கால்ல வந்தாருடி. அவரை ஸ்க்ரீ‌ன்ல பார்த்ததுக்கப்பறம் தான் தெரிஞ்சது அவருக்கு கண் பார்வை பறிபோன விஷயமே. யாரோ தண்ணினு நெனச்சு அவரு கண்ணுல ட்ராயிங் பண்ண வச்சிருந்த கெமிக்கலை எடுத்து ஊத்திட்டாங்களாம்டி. கேட்கும் போதே கஷ்டமா இருந்துச்சு. என்னோட பெர்த்டே கிஃப்டா இந்த ட்ராயிங்கை எனக்கு அனுப்பியிருக்காருடி. இங்கப் பாரேன் சூப்பரா இருக்குல்ல? எனக்கு ரக்‌ஷா பந்தன் விஷ்ஷும் பண்ணியிருக்காரு." என்று சொல்ல, அவள் கூறிய அனைத்தையும் கேட்டு ஸ்தம்பித்துப்போனாள் அனுஷா.


இது அவள் எதிர்பார்க்காத ஒன்று. தன் தோழியின் கையிலிருந்த அந்த ஓவியத்தை எட்டிப் பார்த்தாள்.


"ச்சே! என்னையும் ஒரு ரசிகையா மதிச்சு வீ.கே எனக்கு எப்படியொரு பெர்த்டே கிஃப்ட் ப்ரெசன்ட் பண்ணிருக்காரு பாருடி? இதோ இந்த க்ரீட்டிங் கார்ட்ல கூட என்ன எழுதியிருக்கு பாரு. நான் எப்பவுமே அவருக்கு ஒரு ஃபேனா, ஃப்ரெண்டா, நல்ல சிஸ்டரா இருக்கணும்னு எழுதியிருக்கு. ச்சே! அவருக்குப் போய் இப்படி ஆகிடுச்சே. கண்ணு போனதுலயிருந்து அவரோட ரூமை விட்டுக் கூட வெளிய வர்றதில்லையாம்டி. பாவம்டி அவரு" என்று சிம்ரன் வருத்தம் கொள்ள,


"ம், எனக்கும் நீ சொல்றதை கேட்கும் போது கஷ்டமா தான் இருக்கு" என்றாள் சோனா.


அவர்களின் உரையாடல்களைக் கேட்ட அனுஷாவிற்கோ தலை சுற்றியது.


தன்னால் தான் அவனுக்கு பார்வை பறிபோனதா? என நினைத்தவளால் இரவில் சரியாக உறங்க முடியவில்லை.


ஏன் பகலில் கூட சரியாக சாப்பிட முடியவில்லை.


அடுத்த இரண்டு நாட்களும் அவன் நினைவிலேயே உழன்று கொண்டிருந்தவள் தன் அண்ணன்களிடம் கூட அலைபேசியில் சரியாக பதிலளிக்காமல் இருக்க, "என்னாச்சுடா?" என்று சந்தேகமாய் கேட்டனர்‌ அவர்கள்.


"ஒன்னுமில்லைணா லேசா காய்ச்சல்" என்று பொய் கூறி சமாளித்து வைத்தவளால், ஒரு வேலையையும் சரி வர செய்ய முடியவில்லை.


ஆடை வடிவமைக்க கணினியில் ஓவியம் தீட்டும் போது கவனக்குறைவால் அவள் தப்பான வண்ணத்தை கொடுக்கப் போக அவளின் தோழி சிம்ரன், "ஹே! கண்ணை என்ன பொடனிலயா வச்சிருக்க? இந்த கலரைப் போய் சூஸ் பண்ணப்போற?" எனத் திட்ட,


இது மாதிரி அவன் யார் யாரிடமெல்லாம் திட்டு வாங்கப் போகிறானோ என்று அவனைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தவளின் கண்களில் நீர் பெருகியது.


ஒவ்வொரு கணமும் அவனைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தவள், இறுதியில் மனதில் எடுத்த ஒரு முடிவுடன் அந்த வார சனிக்கிழமையன்று காலையில், கறுப்பு மற்றும் தங்க நிற நூலால் நெய்யப்பட்ட கையில்லாத பிளவுஸும், கறுப்பு நிற நெட் ஸாரியும் அணிந்து கொண்டு அவனைக் காணப் புறப்பட்டாள்.


முந்தானையை ஃப்லோட்டிங்கில் விட்டு, நடுமுதுகில் நின்ற ஃபெதர் கட் செய்யப்பட்ட முடியை ஃப்ரீ ஹேர் ஸ்டைலில் பறக்கவிட்டு, நெற்றியில் கருப்புக்கல் பொட்டிட்டு, கையில் பூச்செண்டுடன் அவன் தங்கியிருக்கும் ஆலோப்ட் லண்டன் எக்ஸெல் ஹோட்டலிற்கு சென்றாள்.


அவன் அறைக்கதவை தட்டியவள் உள்ளிருந்து எந்தவொரு பதிலும் கிடைக்காமல் போகவும், வேறு வழியின்றி கதவைத் தள்ளினாள். கதவு தானாக வாயைப் பிளந்தது.


உள்ளே சென்றவள் காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு சோபாவில் கால் நீட்டி படுத்துக் கொண்டிருந்தவனின் கையைத் தொட்டு எழுப்பினாள்.


உறங்கிக் கொண்டிருந்தவன் எழுந்தவுடன் தூக்கக் கலக்கத்தில் கண்ணைக் கசக்கும் நேரத்தில் அவனின் வெற்று மார்பை பார்க்கத் தயங்கி, திரும்பி நின்று தன் மனதிலிருப்பதை கொட்டத் தொடங்கினாள்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,011
Reaction score
1,132
Points
113
"சாரிங்க. உங்கக் கண்ணு போக நான் காரணமாகிட்டேன். ரொம்ப சாரி. நான் என்ன கொடுத்தாலும் உங்க இழப்புக்கு ஈடாகாது. அதான் என்னையே உங்களுக்கு கொடுக்கலாம்னு வந்துட்டேன். யெஸ், ஐ லவ் யூ நவ். இது கருணையினால வந்த காதலாக்கூட இருக்கலாம். ஆனா, அதுவும் ஒருவித காதல் தானே? உங்களை காரணமே இல்லாம வெறுத்தேன். நீங்க மத்தப் பொண்ணுங்க கிட்ட நெருங்கினா பத்ரகாளியா மாறினேன். அதுக்கெல்லாம் அர்த்தம் எனக்கு அப்ப புரியல. இப்ப லேட்டா தான் புரியுது. நான் என் வாழ்க்கையோட மிச்ச நாட்களை உங்களுக்கு சேவை பண்ணியே கழிக்கலாங்கற முடிவோட தாங்க இங்க வந்திருக்கேன்." என்று தயக்கமாக நிறுத்தினாள்.


ஆனால், வெகு நேரமாகியும் அவனிடமிருந்து எந்தவொரு பதிலும் கிடைக்காமல் போகவும், அவன்புறம் திரும்பினாள்.


அவள் திரும்புவாள் என்று எதிர்பாராதவன் நிலை தடுமாறி நின்றான்.


சற்றுமுன் தன் கண்களை கசக்கி எழுந்தவன் அவள் திரும்பி நின்று பேச ஆரம்பித்ததும், மெல்லிய கயிறுகளால் மட்டுமே மறைக்கப்பட்ட அவள் ஷியா பட்டர் முதுகை, வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.


பின், அவள் தன் காதலை கூறிய அடுத்தகணம் அவளை நெருங்கி நின்றான்.


இவ்வாறு அவன் தன்னை நெருங்கி நிற்பான் என்று எதிர்பாராதவள் பயத்தில் பின்னோக்கி நகர்ந்தாள்.


அவளின் பயத்தை கண்டு, ‘டேய் வீ.கே இப்படியே விட்டா இவ சரிபட்டு வர மாட்டா. நீ உன் வழியிலேயே போடா’ எனத்தன் கருவிழிகளை மட்டும் மேலேற்றி, "அனுஷா.. அனுஷா.." என்றழைத்துக்கொண்டே கைகளால் காற்றை தடவிக் கொண்டிருந்தான்.


அவனின் கைகளைப் பற்றியவள், "நான் இங்கயிருக்கேன்?" என்றாள்.


"தான்க் யூ அனுஷா, தான்க் யூ. நீ கண்டிப்பா கருணையோட மறு உருவி தான். நான் இப்படியிருக்கற நிலைமைலயும் என்கிட்ட லவ் ப்ரொபோஸ் பண்றனா, உன் நல்ல மனசு யாருக்கு வரும்? ரியல்லி ஐ காண்ட் பிலீவ் திஸ். நான் இப்ப எவ்ளோ ஹாப்பியா இருக்கேன் தெரியுமா? இப்ப நீ செத்துப்போனு சொன்னாக் கூட நான் சாகத் தயார். டெல் மீ" என்று அவளின் கையைத் தொட்டு தொட்டு முன்னேறி, திடீரென அவளை இறுக்கியணைத்துக் கொண்டான்.


அவனின் இரும்புக் கரங்களுக்குள் சிக்குண்டிருந்தவள் அவனை தன்னிலிருந்து பிரிப்பதிலேயே மும்முரமாயிருந்தாள்.


"என்ன அனுஷா? நான் உன்னை தொடுறது உனக்குப் பிடிக்கலையா?” என்றவன் முகம் வாடியதும்,


"அய்யோ! அப்படியில்லங்க. நீங்க என்னை ரொம்ப இறுக்குறீங்க. அதான்" என்று தயக்கமாய் சொன்னாள்.


"ஓ! சாரி, சாரி. அப்ப மெதுவா அணைச்சுக்கவா?" என்று அவளைக் கட்டிப்பிடித்து, தன் விரல்களை மயிலிறகாக்கி, ஆரஞ்சு மனம் வீசும் அவளின் கூந்தலை மெதுவாக வருடிவிட்டான்.


"ஏன் அனுஷா? நீ இனி நான் தான் உனக்குனு உண்மையாவே ஃபிக்ஸ் பண்ணிட்டியா?" என்று யோசனையாக அவளின் காதருகில் குனிந்து கேட்டான்.


"ஆமாங்க, என் அண்ணனுங்க மேல சத்தியமா இனி எனக்கு நீங்க தான்னு நான் ஃபிக்ஸ் பண்ணிட்டேன்." என்று வெள்ளந்தியாக பதில் கூறினாள் அந்தப் பதினெட்டு வயது பெதும்பை.


"என் படிப்பு முடிஞ்சதும் எங்க வீட்டுல சொல்லி நம்ம மேரேஜ் பண்ணிக்கலாம். அது உங்களுக்கு ஓகே தானே?" என்று அவனின் முதுகை தன் தளிர் விரல்களால் தடவி விட்டுக்கொண்டே கேட்டாள்.


"ம், எல்லாம் ஓகே தான் அனுஷா. ஆனா லவ் ப்ரொபோஸ் பண்ண வந்திருக்க நீ மங்களகரமா மஞ்சள் கலர்ல புடவை கட்டிட்டு வராம, ஏன் அபசகுனமா கறுப்பு கலருல புடவை கட்டிட்டு வந்திருக்க?” என்று கேட்டதும்,


அவன் தோளில் வாகாக சாய்ந்துகொண்டே, "அதுவா? உங்களுக்கு கண்ணு தெரியாதுல? அதான் சென்டிமென்டா இருக்கட்டும்னு ப்ளாக் கலருல சாரி கட்டிட்டு…" என நிறுத்தியவள், வேகமாய் அவனிலிருந்து பிரிந்து நின்று, ருத்ரகாளியாய் உருமாறினாள்.



தொடரும்...
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,011
Reaction score
1,132
Points
113
நாவல் பிடிச்சிருந்தா லைக் பண்ணவும், கமெண்ட் பண்ணவும் மறக்காதீங்க தேன்மிட்டாய்ஸ்🙂
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,011
Reaction score
1,132
Points
113
அத்தியாயம் 8



அவள் விலகிய பின்பே நுணலும் தன் வாயால் கெடும் என்பதைப் போல் தான் தன் வாயாலேயே மாட்டிக் கொண்டதை உணர்ந்தவன், "சாரி அனுஷா. சாரி அனுஷா" எனத் தன் இரு கைகளையும் மேலே உயர்த்திக்கொண்டே, அவளருகில் சென்றான்.


"யூ ச்சீட், ப்ராடு, பொய் சொல்லி என்னை ஏமாத்தியிருக்கல்ல?" என அங்கிருந்த தன் கையில் சிக்கிய பொருட்களையெல்லாம் அவன் மீது தூக்கியெறிந்தாள்.


"ஏய்! சாரிடி, சாரிடி" என அவளின் அனைத்து ஆயுதங்களிலிருந்தும் தப்பித்து, இறுதியாக அவளை நெருங்கி, அவளின் இரண்டு கைகளையும் அவள் முதுகுக்கு பின்னால் மடித்துப் பிடித்துக்கொண்டான்.


திமிறினாள் அனுஷா.


"ஏய் குஸ்கா! அதான் சாரி சொல்றேன்லடி? ரொம்ப ஓவரா துள்ளுற? நீ அடிக்கற அடி ஒவ்வொன்னும் இடி மாதிரி விழுகுதுடி. ஏய்! என்னை பாருடி" என்று மிரட்ட,


"போடா" என்றவள் அவன் பிடியிலிருந்து வெளியேற முயன்றாள்.


ஆனால், தோல்வியே மிஞ்சியது.


"ஹே! அனுஷா, ஐ லவ் யூ டி. ஏய்! அனுஷா, இங்கப் பாருடி. ஐ லவ் யூ சொல்றேன்ல? என்னைப்பாரு" என கண்களில் காதல் பொங்கக் கூறியவனின் உரமேறிய நெஞ்சினையே பார்த்துக் கொண்டிருந்தவள், அமைதியாக அவன் கைகளில் அடங்கி நின்றாள்.


அவன் அவள் கைகளை விடுவித்தது தான் தாமதம், தன்னிரு கைகளையும் மடக்கிக்கொண்டு அவன் நெஞ்சில் பலமுறை குத்தினாள்.


பின், நிமிர்ந்து பார்த்தபோது அவன் இதழில் சிரிப்புடன் நின்றிருப்பது கண்டு, கண்களில் நீர் பொங்க தானும் சிரித்துக்கொண்டே, அவன் நெஞ்சில் அடைக்கலமானாள்.


சிறிது நேரம் அவர்கள் இருவருக்குள்ளும் அமைதி மட்டுமே மொழியாகியது.


திடீரென அவளுக்கு அவன் தன்னை ‘குஸ்கா’ என்றழைத்தது நினைவு வர, அவன் காலின் மேல் ஏறி நின்று, எக்கி அவன் கன்னத்தில் தன் பல் பதியக் கடித்து வைத்தாள்.


அவன், “ஏன்டி?” என்று அலற,


"நான் உங்களுக்கு குஸ்காவா?" என்று மல்லுக்கு நின்றாள்.


"ஏய் வேணாம்டி. என் பாடி இதுக்கு மேல தாங்காது. இன்னைக்கு உனக்கு கொடுத்த கோட்டா முடிஞ்சு போச்சு" என்றவன் அழாக்குறையாக சொல்லவும், காரியத்தில் கண்ணாய் நின்றாள்.


"ம்ஹூம், அதெல்லாம் உங்க பாடி தாங்கும். என்‌ ஃபேவரைட் முசாகோ ஜானையே அடிச்சீங்கல்ல? நீங்க ஏன் குஸ்கா கூப்பிட்டீங்க சொல்லுங்க?" என்று பிடிவாதம் செய்தாள்.


"அதுவா? நான் வந்து எனக்கு பொண்டாட்டியா அனுஷ்கா மாதிரி ஒரு பொண்ணு தான் வரணும்னு நெனச்சேன். ஆனா ஆக்கி வச்ச குஸ்கா மாதிரியிருக்க நீ தான் எனக்கு கிடைக்கணும்னு விதி. அதான் உன்னை குஸ்கானு வாய் தவறி உண்மையை சொல்லிட்டேன்" என்று தன் கைவிரல் நகங்களை பார்த்துக்கொண்டே கூறியவனை, அந்த அறை முழுவதும் ஓடி துரத்தி துரத்தி அடித்தவள்,


"உங்களுக்கு நான் கிடைச்சதே பெருசு. இதுல துரைக்கு அனுஷ்கா மாதிரி பொண்ணு கேட்குதோ? இப்ப அவங்களுக்கு நாப்பத்தியஞ்சு வயசு. அவங்ககிட்ட போய் இப்படி பேசிப்பாருங்க. போலீஸ்ல பிடிச்சிக் கொடுப்பாங்க." என்று ஆத்திரத்தில் கத்தித் தீர்த்தாள்.


பின் சோர்ந்து சோபாவில் விழுந்தாள்.


பலத்த மூச்சு வாங்கலுக்கு இடையே, "ஆமா சிம்ரனும் நீங்களும் கூட்டு களவாணிகளா?" என்று முறைக்க, அவன் உடனடியாய் மறுத்தான்.


"ஹேய் ச்சீ! அவக்கிட்டயும் இது மாதிரி தான் ஃபுல் ஆக்டிங். லூசு அப்படியே நம்பிடுச்சு. ஆனா அவளுக்கு பாசமா கிஃப்ட் கொடுத்ததெல்லாம் உண்மை தான். அன்னைக்கு நான் ட்ராயிங் பண்றதுக்காக வச்சிருந்த கெமிக்கலை தான் நீ தண்ணினு நெனச்சு என் மூஞ்சில ஊத்தின. நல்லவேளை அதுல நீ வர்றதுக்கு கொஞ்ச நேரம் முன்னாடி தான் தாயே தண்ணி ஊத்தி டைல்யூட் பண்ணி வச்சிருந்தேன். இல்லைனா கான்சன்ட்ரேடட் சொலுசன் பட்டு உண்மையாவே எனக்கு கண்ணு போயிருக்கும். எந்த சாமி புண்ணியமோ டைல்யூட் சொல்யூஷன் பட்டு என் கண்ணுக்கு ஒன்னும் ஆகல. ஹாஸ்பிடல் போனப்போ டாக்டர் டூ டேஸுக்கு கண்ணை திறக்கக்கூடாதுனு மட்டும் சொன்னாரு. அப்ப தான் உன் ஃப்ரெண்ட் சிம்ரனுக்கு பெர்த்டேவும் வந்துச்சு. அவ மூலமா தான் உன்னை சுலபமா நெருங்கினேன். நீயும் பிளான் ஒர்க்கவுட் ஆகி எனக்கு லவ் ப்ரொபோஸ் பண்ணிட்ட. ஹாஹா! எப்படி ஐயாவோட மூளை?" என்று இல்லாத காலரை தூக்கிவிட்டு கொண்டான்.


"அப்போ அது உண்மையாவே கெமிக்கல் தானா?" -மிரண்டாள் அனுஷா.


"ஆமா கெமிக்கல் தான். அதான் ஒன்னும் ஆகலைல? ஃப்ரீயா விடு" என்று சோபாவில் அவளருகில் அமர்ந்து, அவள் தோள் மீது கை போட்டுக்கொண்டான்.


"ஆமா எனக்கு தான் உங்களை பார்த்தாலே பிடிக்காதே? அப்பறம் எப்படி உங்களுக்கு என்னை பார்த்தவுடனேயே பிடிச்சது?”


"அடேங்கப்பா! உனக்கு மனசுல பெரிய உலக அழகினு நெனப்பு தான். உன்னை பார்த்தவுடனே எல்லாம் எனக்கு பிடிக்கல மேடம். இது வந்து ஒரு பதினெட்டு வருஷத்து காதல் கதை. இப்ப சொன்னா உனக்கு போரடிக்கும். ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்." என்று கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தவனிடம்,


"பரவாயில்ல. ஓவரா பண்ணாம இப்பவே சொல்லுங்க" என்றவள் நச்சரிக்க, சிறுவயதில் தானும் அக்னிமித்ரனும் போட்ட ஒப்பந்தத்தை பற்றி விலாவாரியாக எடுத்துரைத்தான்.


தன் வாயைப் பிளந்தவள், "அப்போ நான் பிறக்கறதுக்கு முன்னாடியே நமக்கு எங்கேஜ்மென்ட் ஆகிடுச்சா?" என்று ஆர்வத்துடன் கேட்டாள்.


ஆமாம் என்று தலையசைத்தான் விஜய்குமார்.


உணர்ச்சிவசப்பட்டவளோ, "அப்போ நான் அக்னி அண்ணாகிட்டயும், அசோகா அண்ணாகிட்டயும் இப்பவே நம்ம லவ் மேட்டரை சொல்லவா?" என்று அலைபேசியை கையிலெடுத்து உயிர்ப்பித்தாள்.


அதனைத் தாவி பறித்தவன், "இப்ப வேண்டாம் அனுஷா. நான் இந்தியா போன உடனே உங்க அண்ணனுகளை நேர்ல பார்த்து, பதமா இந்த விஷயத்தை எடுத்து சொல்றேன். அதான் மரியாதையா இருக்கும்" என்றதும், பேதைப்பெண்ணும் சம்மதித்தாள்.


ஆனாலும், அவளின் அண்ணன்மார்களை நினைத்து அவளுக்கு பயமாகத் தான் இருந்தது.


அதை அவனிடம் சொல்ல, "அதான் நான் பார்த்துக்கறேனு சொல்றேன்ல? ஃப்ரீயா விடு" என்று கூறியவனின் நம்பிக்கை மொழியை அனுஷா நம்பியிருக்கக்கூடாதோ?


காதல் கண்களை மறைக்க, தன் அண்ணன்களிடம் தன் காதலைப் பற்றி சொல்லாமல் விட்டுவிட்டாள்.
 
Status
Not open for further replies.

Latest posts

New Threads

Top Bottom