Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


காதலா! காதலா!- கதைத்திரி

Status
Not open for further replies.

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
998
Reaction score
1,132
Points
93
அவன் திடீரென எதுவோ ஞாபகம் வந்தவன் போல் உள்ளே சென்று பூர்ணிமாவின் கன்னத்தில் முத்தம் பதித்தான்.


நண்பர்கள் காரணம் கேட்டதற்கு, "பாவம்லேய் எங்கம்மை. என் தங்கச்சி அந்த எத்து எத்துதா. அவியளுக்கு அது வலிக்கும்லா? அதான் முத்தம் கொடுத்தேன்" என்றதும், நண்பர்கள் சரி தான் என ஒப்புக்கொண்டனர்.


ஆனால், அவர்கள் இருவரும் அறியாத இன்னொரு உண்மை பூர்ணிமா தூக்கத்திலிருக்கும் போது மட்டுமே அக்னியால் அவளை நெருங்கி முத்தமிட முடியும் என்பது. அவள் சுயநினைவில் இருந்தால் தான் ராட்சசியாய் மாறிவிடுவாளே.


நண்பர்கள் வீட்டிற்கு வெளியே வந்ததும், "ஏலேய் அக்னி…" என விஜய்குமார் இழுக்க,


"என்னலேய்? எம்பாட்டிக்கும் முத்தம் கொடுக்கணுமா?" என்றான் அவன்.


அலறி மறுத்தவன், “உன் தங்கச்சிய நானே கட்டிகிடவாலேய்? நான் நீ கேட்கறதெல்லாம் வாங்கித் தரேன்" என்றான்.


விஜய்குமாரின் வேண்டுகோளை கேட்டு லாபக்கணக்கை போட்ட அக்னிமித்ரன், தனக்கு வேண்டியதையெல்லாம் கேட்டு விஜய்குமாருடன் உடன்படிக்கை ஒன்றை போட்டான்.


அதன்படி விஜய்குமாரும் தன்னிடமிருக்கும் பொம்மைகளனைத்தையும் அவனுக்கு தருவதாக ஒப்புக் கொண்டான்.


ஆனால், இந்த ஒப்பந்தம் வருங்காலத்தில் தன்னை எரிமலையாய் பொங்கச்செய்யும் என்பதை அறிந்திருந்தால் பொம்மைகளுக்கு ஆசைப்பட்டிருக்க மாட்டானோ அக்னிமித்ரன்?


விஜய்குமார் அவனிடம், "உங்கப் பாப்பாவை எனக்கு தான் கட்டிக் கொடுப்பேனு பகவதியம்மன் கோவில்ல வச்சு எனக்கு சத்தியம் பண்ணி கொடுலேய்" என விவரமாய் கேட்கவும், பின் விளைவுகளை அறியாத அக்னிமித்ரனும் சத்தியம் செய்து கொடுத்தான்.


அன்று ஒரு பந்தம் முடிவானது. கருவிலிருக்கும் போதே தன் அண்ணனால் தாரை வார்க்கப்பட்டாள் அவ்வீட்டின் இளவரசி.


பின் ஒரு நாள் பலரும் எதிர்பார்த்தது போல் மாலை நேரத்தில் ஸ்ட்ராவ்பெர்ரி சிற்பமாய் இவ்வுலகில் அவதரித்தாள் அந்த கால்பந்தாட்டக்காரி.



தொடரும்...
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
998
Reaction score
1,132
Points
93
நம்ம விஜய்குமார் தான் அந்த மூணாவது ஹீரோ பானிபூரீஸ்🙂
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
998
Reaction score
1,132
Points
93
எனது நாவல்களை புத்தகமாக பெற விரும்புவோருக்கு,

1.காதலா காதலா -Rs.280

2.நிஜமது நேசம் கொண்டேன் -Rs.220

3.நின் உச்சிதனை முகர்ந்தால் -Rs.250

சகாப்தம் பதிப்பக வாட்ஸப் எண்கள்:
9500986195
9500861971
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
998
Reaction score
1,132
Points
93
அத்தியாயம் 4



தன் தங்கை பிறந்த மறுநாள் அவளின் தோற்றத்தைப் பற்றி பள்ளி முடிந்தவுடன் மரத்தடியில் வைத்து, தன் நண்பர்களிடம் தம்பட்டமடித்தான் அக்னிமித்ரன்.


அதனை ஆர்வமுடன் அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.


"ஏலேய் விஜி, பிறந்தவுடனே எங்கப் பாப்பா எப்படியிருந்தா தெரியுமாலேய்? அவ கலரு எப்படி இருந்துச்சு தெரியுமாலேய்? நம்ம பாட்டிக்கடை பாக்குமிட்டாய் இருக்குலா? அந்தக் கலர்ல அவா இருந்தாலேய். அன்னைக்கு நம்ம குட்டியா பல்லி பிடிச்சோம்லா? அது விரல் மாதிரியே குட்டியா இருந்துச்சு எங்க பாப்பாவோட கைகால் விரலு. அவளோட தலைல முடியே இல்லலேய்" என்றதும்,


"ஏலேய்! அப்போ எப்படி என் கல்யாணத்தன்னைக்கு பெருசா ஜடை போட்டு அவளுக்கு பூ வைக்கிறது?" எனத்தன் முக்கிய சந்தேகத்தை கேட்டான் விஜய்குமார்.


அண்ணனானவனோ, "விஜி கவலப்படாதலேய். எங்க மரகதம் பாட்டிக்கிட்டயிருந்து சவுரிமுடி வாங்கி வச்சு உன் கல்யாணத்தை முடிச்சிரலாம்" என்றதும், சமாதானமானான்.


"சரி, சரி, அக்னி நீ சொல்லுலேய் வேற எப்படியெல்லாம் இருந்தா உன் தங்கச்சி?" என மொக்கைமோகன் கேட்கவும்,


"அவா கண்ணு மூடியே இருந்துச்சுலேய். வாயில பல்லேயில்ல" என்றான்.


"ஐயையோ! விஜி உன் பொண்டாட்டிக்கு வாய் பொக்கை வாயாலேய்?" என மோகன் கத்தி சிரித்து கேலி செய்யவும்,


"ஐயோ! இல்லலேய். அவா பெருசா வளர்ந்தப்பறம் பல்லு வரும்னு எங்க பாட்டி சொன்னாவ" என விஜய்குமாரின் முகம் போகும் போக்கை பார்த்துக் கூறினான் அக்னி.


பின்னே உன் தங்கச்சி வேண்டாமென்று அவன் தான் கொடுத்த பொம்மைகளையெல்லாம் திருப்பி வாங்கிக்கொண்டால்? அதுதான் பதறிப்போய் அவனுக்கு சமாதானம் சொன்னான்.


விஜய்குமாரின் தந்தை வெளிநாட்டில் தங்கி வேலை பார்ப்பவர். வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே களக்காடு வருவார். அப்போது தன் மகனுக்கு வெளிநாட்டுப் பொருட்களையெல்லாம் வாங்கி வந்து குவிப்பார். அக்னிமித்ரனுக்கும் மோகனுக்கும் எப்போதுமே அவைகள் மீது ஒரு கண் உண்டு.


விஜய்குமாரின் அன்னை நீலாவதியும், தந்தை ராஜசேகரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். அதற்கு பெற்றோர் ஆதரவு கிட்டாததால், ஊராராலும் ஒதுக்கப்பட்டனர்.


திருமணமான புதிதில் அவர்கள் வருமானத்திற்கே வழியில்லாமல் தவித்துக் கொண்டிருந்த போது, தெரிந்தவர் ஒருவரின் உதவியால் வெளிநாடு அனுப்பப்பட்டார் ராஜசேகர்.


வெளிநாடு சென்றவருக்கு அங்கேயே நிரந்தர வேலை ஒன்று கிடைக்கப்பெற, விஜியின் குடும்பமும் ஊரில் பண பலம் பெற்ற குடும்பங்களில் ஒன்றாகியது.


ஆனாலும், திருநீலகண்டன் குடும்பம் முதற்கொண்டு அவர்களை மதிக்காமல் தான் இருந்தனர்.


ஒரு மாதம் கழித்து தன் தங்கைக்கு பெயர் சூட்டும் விழாவிற்கு தன் நண்பர்களை வீட்டிற்கு அழைத்திருந்தான் அக்னிமித்ரன்.
அனைவரும் அவளுக்கு என்ன பெயர் வைக்கலாமென யோசித்துக் கொண்டிருக்க, விஜய்குமார் தன் நண்பனின் காதைக் கடித்தான்.


"ஏலேய் அக்னி, அனுஷ்கானு வைக்கச் சொல்லுலேய்" என்றான்.


அவன் அதையே தனது தந்தையிடம் சென்று கூற, நீதிதாசன் மெச்சும் பார்வை பார்த்தான்.


ஆனால் மறுபுறம் அசோகமித்ரனும் தன் தங்கைக்காக ஒரு‌ பெயர் பட்டியலே தயாரித்து வந்திருந்தான். அவன் தன் தந்தையிடம் தனுஷா என்ற பெயரை தான் வைக்க வேண்டும் என்று பிடிவாதம் செய்தான்.


இரண்டு பெயர்களையும் கேட்டுக்கொண்ட நீதிதாசனோ தன் செல்லமகளுக்கு ‘அனுஷா’ எனப் பெயர் சூட்ட முடிவு செய்தான்.


சிறியவர்கள் இருவரும் உர்ரென்று முகத்தை தூக்கிவைத்துக்கொண்டு நின்றனர்.


பெயர் வைத்தவுடன் ஒவ்வொருவராக சென்று அனுஷாவை தூக்கிக் கொஞ்சிக் கொண்டிருக்க, அக்னியானவன் அசோகாவிடமிருந்து அவளை தூக்கிக்கொண்டுபோய், "அனுமா அண்ணனைப் பாரு! அண்ணனைப் பாரு!" என தலையாட்டிக்கொண்டே முத்தமிட்டான்.


அனுஷாவை தன் கையில் ஏந்த ஆசைப்பட்ட விஜய்குமார் அக்னியிடமிருந்து அனுஷாவை தன் கைக்கு மாற்றிக் கொண்டான். அவன் கைக்கு போன மறு நிமிடமே தனது கால்களால் அவனை உதைத்துக்கொண்டு கண்களை சுருக்கி வாயைப் பிளந்து அழ ஆரம்பித்தாள் அந்த இரட்டையரின் சகோதரி.


அவளிடம் உதை வாங்கிய விஜய்குமார், "ஏட்டி ஏம்ட்டி எப்போ பார்த்தாலும் என்னையே உதைக்குதா? உன்னை சமாளிக்கவே நான் கராத்தே, குஸ்தி எல்லாம் கத்துக்கணும் போலயேட்டி? ஏய்! வாயை மூடுட்டி" என சொல்லி மிரட்டிக் கொண்டிருக்க,


அவளின் அழுகுரலில் ஓடி வந்த பூர்ணிமா விஜய்குமாரின் கையிலிருந்து தன் மகவை வாங்கிக்கொண்டு அவனைப் பார்த்து முறைத்தாள்.


அவளைப் பார்த்து பயந்து பின்னால் நகர்ந்தவன் அசோகமித்ரன் மீது மோதி நின்றான்.


"நான் ஒன்னுமே பண்ணல. அவளா தான் அழுதா" என கைகளை விரித்தான். பயந்து அக்னிமித்ரன் பின் சென்று ஒளிந்து கொண்டான்.


"இனிமே இவன் அனுஷாவை தொடக்கூடாது" என அசோகமித்ரன் அக்னிமித்ரனிடம் கோபமாகச் சொல்ல,


தன் நெஞ்சை நிமிர்த்திய அக்னிமித்ரன், "அவன் தொட்டா என்னலேய் பண்ணுவா?" என்று அவனின் சட்டை காலரை பிடித்தான்.


இருவருக்குள்ளும் கலகம் வெடித்தது. சண்டையிட்டு கட்டிப்புரண்டவர்களை பெரியவர்கள் வந்தே சமாதானப்படுத்தும்படி ஆனது.


விஜய்குமார் தன் நண்பனை பெருமிதமாகப் பார்த்தான். ஆனால், இதே அக்னியே அவனுக்கு எதிராய் திரும்பும்போது, பெருமிதங்களின் பரிமாணங்கள் என்னவோ?
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
998
Reaction score
1,132
Points
93
பெயர்சூட்டும்விழா முடிந்து இரண்டு மாதங்கள் தினமும் மாலையில் மரகதம் தன் பேரனுடன் பேத்தியையும் தூக்கிக்கொண்டு தங்கள் வீட்டிற்கு எதிரேயிருக்கும் கோவிலுக்குச் செல்ல, விஜியும் அங்கு வந்து அனுஷாவை தன் கைகளில் தூக்கிக்கொண்டு அக்னியுடன் விளையாடினான்.


கண்களைச் சுருக்கி விஜியைப் பார்த்த அனுஷா, தன் அண்ணனைப் பார்த்து மட்டும் நன்றாக சிரித்தாள்.


அனுஷாவிற்கு மூன்று மாதங்கள் நிறைவடைந்த நிலையில் அக்னிமித்ரனையும் தன்னுடன் சென்னைக்கு அழைத்துச் செல்வதாக நீதிதாசன் கூற, வேறு வழி இல்லாமல் மரகதமும் திருநீலகண்டனும் அக்னியை அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.


அவர்கள் மட்டும் தற்போது அக்னிமித்ரனை சென்னைக்கு அனுப்பாமல் தங்களுடனே வைத்து வளர்த்திருந்தால் அக்னியின் தலை விதி நல்விதமாய் மாறியிருக்குமோ என்னவோ? அவன் பல துன்பங்களுக்கு ஆளாகவும் நேர்ந்திருக்காது.


வரமாட்டேன் என அடம் பிடித்தவனிடம், "பாப்பா வேணும்னா வா” என்று பேசி மடக்கியே தன்னுடன் அழைத்து சென்றான் நீதிதாசன்.


மனம் மாற்றுவதில் அவன் தான் கில்லாடியாகிற்றே.


ஒரே வீட்டிலிருந்த அசோகாவும் அக்னியும் எப்போதும் வெவ்வேறு திசைகளில் முகத்தை திருப்பிக்கொண்டு சென்றனர்.


இதனை கவனித்த நீதிதாசன், சிறு குழந்தைகள் தானே வளர வளர சரியாகிவிடுவார்கள் என கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டான்.


தன் வேலைப்பளுவால் கவனம் மாறியவனின் தொழில் வளர்ச்சி எதிரிகளை அவனுக்கு அதிகம் சம்பாதித்துக் கொடுத்தது. அவற்றை சமாளிக்கவே அவனுக்கு நேரம் சரியாக இருந்தது.


நீதிதாசன் இவ்வாறு நிற்க நேரமில்லாமல் அலைய, பூர்ணிமாவோ ஆடம்பர பொருட்களை வாங்குவதிலும், தன் மேனியழகை மேலும் மேலும் கூட்டுவதிலுமே தனது பொன்னான நேரத்தை செலவிட்டாள்.


அனுஷாவை ஆயா ஒருவரை நியமித்து வளர்த்தவள், தன் மகன்கள் இருவரையும் கையெடுக்கவேயில்லை.


லேடீஸ் கிளப்பில் குழந்தை வளர்ப்பை பற்றி ஒரு கட்டுரையே எழுதும் அளவிற்கு பேசுகின்றவளின் லட்சணம், அவளின் வீட்டிற்கு வந்து பார்த்திருந்தால் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.


பெற்றோர் இருவரும் பணக்காரர்களின் வாரிசுகள் மட்டுமே படிக்கும் ஆடம்பர பள்ளியில், தங்கள் புதல்வர்களை சேர்த்துவிட்ட கையோடு, தங்களின் கடமை முடிந்துவிட்டது என இருந்துவிட்டனர்.


அசோகமித்ரனின் படபட பேச்சிலும், அழகிலும் கவரப்பட்ட மாணவர்கள் சிலர், அவனது ரசிகர்களாகவே மாறிவிட்டனர். ஆனால், அக்னிமித்ரனோ யாருடனும் சேராமல் தனித்து விடப்பட்டான்.


அவனது திருநெல்வேலி வட்டார வழக்கைக் கண்ட மாணவர்கள் சிலர், அதை வைத்து அவனைக் கேலி செய்தனர். அவனின் நிறத்தைக் கண்டும் பரிகாசித்தனர்.


மிகவும் அவமானமாக உணர்ந்த அக்னிமித்ரன் பள்ளிக்குச் செல்ல மாட்டேன் என அடம்பிடித்தான். அதையே காரணமாகக் கொண்ட பூர்ணிமா, அவனை நல்வழிப் படுத்துகிறேன் என்ற பெயரில் அடி வெளுத்தெடுத்து விட்டாள்.


வலி தாங்காமல் மறுபடியும் பள்ளிக்குச் சென்றவன் யாருடனும் பேசாமல் தனியாக அமர்ந்தான்.


பள்ளியில் அழுது கொண்டேயிருந்தவனிடம் தானாகவே நெருங்கி நட்பு பாராட்டினான் விசாகன். அவன் ஒரு மாற்றுத்திறனாளி. தனது இரண்டு வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டவனால் சரியாக நடக்க இயலாது. விசாகன் அக்னியை நெருங்கி ஆறுதல் கூறி அவனுக்கு நல்ல நண்பனாக விளங்கினான்.


இவ்வாறு அனைத்தும் நல்முறையில் அமையப்பெற்று காலம் நகரும் வேளையில், தன்னிரு மகன்களின் பதினைந்தாவது பிறந்த நாளை கொண்டாட, பெரிய விழாவை ஏற்பாடு செய்திருந்தார் நீதிதாசன்.


கடைசி நேரத்தில் திருநீலகண்டனுக்கு உடம்பு சரியில்லாமல் போக, களக்காட்டு தம்பதியரால் அவ்விழாவில் கலந்து கொள்ள இயலவில்லை.


அவர்கள் இருந்திருந்தால் தங்கள் பேரனுக்கு வரவிருந்த மிகப்பெரும் துன்பத்தை தடுத்திருப்பார்களோ?


ஏற்கனவே தன் அன்னை தன்னை இரண்டாம் பட்சமாகவே நடத்துகிறார் என்பதை உணர்ந்திருந்தவன், அந்த பிறந்தநாள் விழாவில் தான் தன் அன்னையின் கோர முகத்தைக் கண்டான்.


பல தொழிலதிபர்களும், அரசியல்வாதிகளும் அந்த பிறந்தநாள் விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர். அதில் ஆர்.எம் குரூப் ஆஃப் கம்பெனியின் பங்குதாரர்கள் பிரகாஷும், சந்தானமும் அடக்கம்.


சந்தானம் தற்போது எம்.எல்.ஏவாக இருக்கிறார். தனது முதல் மனைவியை ஒரு விபத்தில் இழந்தவர் இரண்டாவதாக சினிமா நடிகை கல்பனாவைத் திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர்களுக்கு ரதி தேவி என்ற ஆறு வயது மகளும் உண்டு.


ஆம், பூர்ணிமாவின் தோழி கல்பனாவைத் தான் அவர் திருமணம் செய்திருந்தார். பூர்ணிமாவிற்குப் பின் முதன் முதலில் அக்னியைக் கண்டு முகத்தை சுளித்தவளும் அவளே.


சந்தானம் தன் குடும்பத்துடன் வந்திருக்க, பிரகாஷ் தனது பத்து வயது மகள் மித்ரவர்ஷினி பூப்படைந்திருந்ததால் தன் மனைவியை அவளுக்கு துணையாக விட்டுவிட்டு தனித்து வந்திருந்தார்.


சந்தானம் மற்றும் பிரகாஷ் ஆகிய அண்ணன் தம்பி இருவருக்கும் நீதிதாசனின் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி முன்னுக்கு வருவதே குறிக்கோள்.


தாசன் அண்ட் கோவும், ஆர்.எம் குரூப் ஆஃப் கம்பெனியும் வெளியே நல்ல நண்பர்களாகக் காண்பித்து கொண்டாலும், உள்ளுக்குள் ஒருவரையொருவர் முந்த வேண்டும் என்ற எண்ணத்திலேயே இயங்கிக் கொண்டிருப்பவர்கள்.


பிரகாஷிற்கும் சரி, சந்தானத்திற்கும் சரி, தனது மகள் என்றால் உயிர். இப்போது நடைபெறும் இந்த பனிப்போர் பின்னாளிலும் தொடரும் போது பாதிக்கப்படப்போவது யாரோ?


விழா கோலாகலமாக ஆரம்பமாக, ஒரே நிறம் மற்றும் வடிவமைப்பில் உடையணிந்திருந்த அக்னிமித்ரனும், அசோகமித்ரனும் ஒருவரையொருவர் முறைத்துக்கொண்டே அந்த பதினைந்து கிலோ கேக்கை வெட்டினர்.


வெட்டிய கேக்கை அக்னிமித்ரன் முதலில் நீதிதாசனுக்கு ஊட்ட, அசோகமித்ரன் பூர்ணிமாவிற்கு ஊட்டினான். இக்காட்சியை அழகாக உள்வாங்கிக் கொண்டது புகைப்படக் கருவி.


கேக் வெட்டும் படலம் முடிந்த பின் அவ்விடம் முழுவதும் பிசினஸ் பற்றிய பேச்சுக்களே.


புகைப்படக்கருவியிலிருந்து தன் மேல் தெளிக்கப்பட்ட பல ஒளித்தூறல்களுக்கு பின், தன் முகத்தில் பட்ட கேக் கறையை துடைக்க, அசோகமித்ரன் தன்னறைக்குச் சென்றான்.


மேடையில் தனித்து விடப்பட்ட அக்னிமித்ரனோ அயற்சியாக தானும் தனது அறைக்குச் செல்ல விரைந்தான்.


வேகமாய் சென்று கொண்டிருந்தவனின் பாதையில் வந்து நின்றாள் குட்டி ரதிதேவி. அவன் தான் அவளின் மன்மதனா?



தொடரும்...
 
Status
Not open for further replies.

Latest posts

New Threads

Top Bottom