Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


காதலா! காதலா!- கதைத்திரி

Status
Not open for further replies.

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,011
Reaction score
1,132
Points
113
அடுத்து வந்த நாட்களில் இருவரும் காதல் பறவைகளாக லண்டன் மாநகர வீதிகளில் உலா வந்தனர்.


விஜய்குமார் இந்தியா கிளம்புவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அவனுக்கு பிறந்த நாள் வர, அதைக் கொண்டாடும் விதமாக அன்று முழுவதும் தன் பொன்னான நேரத்தை அவனுடனேயே செலவிட்டாள் அனுஷா.


அவர்கள் செல்லும் இடமெல்லாம் அவர்களெடுக்கும் செல்ஃபியும் பயணித்தது.


இறுதியில் இரவு விருந்தினை முடித்துக்கொண்ட இருவரும் அவனின் ஹோட்டல் அறைக்குச் செல்ல, சிறிது நேரம் பேசிவிட்டு தனது கைக்கடிகாரத்தை பார்த்த அனுஷா, பதறிப்போய் அங்கிருந்து தன் வீட்டிற்கு கிளம்ப எத்தனித்தாள்.


இருவரும் மிதமான போதையில் இருந்தார்கள்.


அவள் திடீரென, "நான் உங்களுக்கு பெர்த்டே கிஃப்ட் கொடுக்கவே இல்லைல?" எனக்கேட்க,


"ஆமா தரவே இல்ல. அதனால இப்ப தரப் போறியா?" என்று தன் இதழ்களை ஈரப்படுத்திக்கொண்டே நெருங்கியவனின் கைக்கு அகப்படாமல் விலகியவள்,


அழைப்புமணியின் ஓசையில் ஓடிச்சென்று கதவை திறந்தாள்.


தன் முன் நின்றிருந்தவரின் கையிலிருந்த பரிசுப்பொதி மற்றும் பூச்செண்டை வாங்கிக்கொண்டவள், “தான்க் யூ” சொல்லி அனுப்பி வைத்தாள்.


நேரே சோபாவில் அமர்ந்திருந்தவனின் அருகில் வந்து உட்கார்ந்து, "இந்தாங்க, இதான் உங்க பெர்த்டே கிஃப்ட். சீக்கிரமா பிரிச்சிப் பார்த்து எப்படியிருக்குனு சொல்லுங்க. நான் என் வீட்டுக்கு வேறப் போகணும். நேரமாகுது." என்றபடியே பூச்செண்டையும், பரிசுப்பொதியையும் அவனிடம் கொடுத்துவிட்டு பரபரத்தாள்.


வேகவேகமாய் அதனை பிரித்தான் வீ.கே.


பரிசுப்பொதியை பிரித்து அந்த பொருளை வெளியே எடுத்தவன், "வாவ் இன்ட்ரஸ்டிங்!” என அதன் ஒரு முனையை பிடித்துக்கொண்டு கீழ் நோக்கி விட்டவுடன், அவன் உயரத்திற்கு நீண்டிருந்தது அந்த‌ ஃபிலிம் ரோல்.


"உங்களுக்கும் எனக்கும் டென் இயர்ஸ் ஏஜ் கேப் இருக்கேனு யோசிச்சிட்டு இருந்தப்ப தான், நீங்க நைன்ட்டீஸ் கிட்டுங்கறதே எனக்கு ஞாபகம் வந்தது. நைன்ட்டீஸ் கிட்ஸ் ஃபேவரைட்ஸ்னு கூகுள்ல சர்ச் பண்ணி பார்க்கறப்ப இந்த ஐடியாவும் கிடைச்சது. அதுவுமில்லாம யூ லவ் யுவர் ஜாப் சோ மச் ரைட்? அதான் சினி ஃபீல்டு ரிலேட்டடா இதை ஏற்பாடு பண்ணினேன். அப்புறம் இதுல ஒரு சர்ப்பரைஸ் கூட இருக்கு" என்றபடியே அவன் கையிலிருந்த ரோலை வாங்கி, சிறிய ப்ரொஜெக்டர் அமைப்பின் மூலமாக, வெண்சுவற்றை திரையாக்கினாள்.


சுவற்றின் புறம் திரும்பியவனின் விழிகளோ ஆச்சரியத்தில் விரிந்தன. அவன் விழிகளின் முழு விட்டத்தையும் தெரிந்து கொண்டவள், அவன் முகத்தில் தோன்றும் உணர்ச்சிகளின் வண்ணங்களை, தன் மூளையை கேலரியாக்கி சேமித்துக் கொண்டிருந்தாள்.


இன்று காலையிருந்து மாலை வரை அவர்கள் எடுத்த அனைத்து செல்ஃபிக்களையும் உள்ளடக்கியதாய் இருந்தது அந்த ஃபிலிம் ரோல்.


அவள் அந்த ஃபிலிம் ரோலில் உள்ள ஒவ்வொரு ஃபிலிமாக லென்ஸின் மூலம் மிகைப்படுத்தி, திரையாகிய வெண்சுவற்றில் ஓட்டிக் காட்ட, வீ.கேவிற்கு உண்டான மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது.


"சச்ச மெமோரபிள் கிஃப்ட்" என்றான் மெச்சுதலாக.


அவர்களால் கடைசியாய் எடுக்கப்பட்ட, அவன் அவளின் நெற்றியில் முத்தமிடுவது போன்ற புகைப்படத்தோடு அந்த ஃபிலிம்ரோல் நிறைவு பெற, தன் மனம் நிறைந்தவன், வான் எட்டிய சந்தோஷத்தில் அவளின் கன்னங்களை இரு கரங்களிலும் தாங்கிக்கொண்டு, இதழோடு இதழ் பொருத்தினான்.


போதையின் தாக்கமும், ஹார்மோன்களின் ஊக்கமும் சேர, முத்தத்தின் கால அளவு கூடியது. அது ஒரு நல்ல தேநீரைப் போல அவனின் நாடிநரம்புகளை முறுக்கேற்றியது.


கூடுதலாய் அவளிலிருந்து எழும் வாசனை திரவியத்தின் மணம் வேறு அவனை சீண்டிப் பார்க்க, கழுத்தில் ஒரு செல்லக்கடி கடித்தான்.


கரங்களோ அவளின் பூவினும் மிருதுவான அங்கங்களில், ஸ்பீடு பிரேக்கரை கடக்கும் காராய் ஏறியிறங்கின. கிறங்கி நின்றாள் அனுஷா.


ஆனாலும், அவள் மூளை கல்யாணத்திற்கு முன்பு இதெல்லாம் தவறு என்க, மெதுவாக அவனை விட்டு விலகினாள்.


காமன் அனுப்பிய காதல் வைரஸால் தீவிர காய்ச்சலுக்குள்ளானவன், மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளானான்.


கோபம் தலைக்கேற, “எனக்கு சினி ஃபீல்டை விட இப்ப ரொம்ப பிடிச்சது நீதான் அனுஷா. பட் என் அளவுக்கு நீ என்னை விரும்பல.” என்று உச்சஸ்தாயில் கத்தினான்.


கண்மண் தெரியாத ஆத்திரத்தில் அங்கிருந்த பொருட்களையெல்லாம் தூக்கிப்போட்டு உடைத்தான்.


விக்கித்து நின்ற அனுஷாவோ உடனே தன்‌ காதலை நிரூபிக்க முற்பட்டாள்.


ஏற்கனவே இன்னும் இரண்டு நாட்களில் அவன் இந்தியா சென்று விடுவான், தன்னைப் பிரிந்து விடுவான் என்று உள்ளுக்குள் உழன்று கொண்டிருந்தவள், தற்போதான அவனின் சந்தேகப்பேச்சில், அவனின் சட்டைக்காலரைப் பற்றினாள்.


“இப்ப என்ன உங்களுக்கு நான் வேணும். அவ்வளவு தான? எடுத்துக்கோங்க. எவ்வளவு வேணுமோ எடுத்துக்கோங்க” என இரு கைகளையும் அவன் கழுத்தில் ஆரமாக கோர்த்தாள்.


முதலில் அவள் இதற்கு சம்மதிப்பாள் என்று எதிர்பாராதவன், அவளின் இளகிய பேச்சில் சற்றும் தாமதியாமல் அவளை நெஞ்சோடு அணைத்துக்கொண்டான்.


அவள் விடும் அனல் மூச்சு அவனின் இதயத்தை பொசுக்கும் போல் இருந்தது. அவளின் தலையிலிருந்த கிளிப்பை எடுத்தவன் முடியை கலைத்துவிட்டான்.


உடன் அவளின்‌ கையில்லாத முட்டி வரையிலான நீலநிற கவுன், தொய்ந்துவிழ தயாரானது.


பாலும் வெண்ணெயும் சாப்பிட்டே வளர்ந்த அனுஷாவின் பால்கோவாத் தேகம், அந்த சாக்லேட்காரனின் கையில் சிக்கி படாத பாடுபட்டது.


அனுஷாவின் தோழி சோனா‌‌ அவனை ஃபெர்ரரோ ரோச்சர் என்றிருக்க, அனுஷாவிற்கு அவனின் வேகம் அவனொரு ஃபெர்ராரி கார் என்றது.


அக்கணம் மஞ்சத்தில் சஞ்சரித்து கிடந்தவர்கள் ஜாதி, மதம் காணவில்லை. ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசத்தை உணரவில்லை. இரு மனங்களும் ஒன்றுபட்டு கிடக்கையில் அவைகளுக்கு இங்கே இடமேது?


அவனின் உடல் பாரத்தை தாங்க முடியாமல் அவள் அடிக்கடி “உஃப்.. உஃப்..” என்று பெருமூச்சு விட,


"அவ்வளவு தான் பேபி. அவ்வளவு தான் பேபி" என அவளின் காதோரம் ஆறுதல் மொழி கூறினானேத் தவிர, அவளை விட்டு விலகவில்லை அந்தக் காமன்.


ஒரு வழியாக எல்லாம் முடிந்தே அவளைவிட்டு விலகியவன் சோர்ந்து கிடந்தவளின் முகத்தை பார்த்து வெற்றிக் களிப்புடன், "தான்க் யூ குஸ்கா" என்றான்.


யாரையோ வென்றுவிட்ட மகிழ்ச்சியில் அந்த இரவிலும் அவனது கண்கள் பளபளத்தன.


‘நவ் த கேம் ஸ்டார்ட்ஸ் அக்னி’ என்று தன் கைகளை தலைக்கு பின்னால் வைத்துப் படுத்திருந்தவனின் கண்முன், சரியாக இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்த சம்பவங்கள் காட்சியாக விரிந்தன.



தொடரும்...
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,011
Reaction score
1,132
Points
113
அத்தியாயம் 9



இரண்டு மாதங்களுக்கு முன்பு அக்னிமித்ரனின் தொழில் வளர்ச்சியால், மற்ற நிறுவனங்களனைத்தும் திக்கு முக்காடிப்போய் நின்றிருந்த சமயம், நூற்றியெழுபது கோடி மதிப்புடைய ப்ராஜெக்ட் ஒன்று அவன் கை நழுவிப் போனது.


அதில் மிகவும் சோர்வுற்றவன் எப்படி அது தன் கையை விட்டுப்போனது எனத் தெரியாமல் தலைமுடியை பிய்த்துக்கொண்டான்.


தோல்பொருட்கள் ஏற்றுமதியில் உலகளவில் இந்தியா மூன்றாம் இடத்தில் இருக்கிறதென்றால், அது இவனைப் போன்றவர்களின் அயராத உழைப்பினால் தான்.


நீதிதாசன் செம்மறி ஆட்டுத்தோலினைக்கொண்டு கைப்பை தயாரிக்கும் குறிக்கோளிலேயே ‘தாசன் அண்ட் கோ’ நிறுவனத்தை நடத்திக் கொண்டிருக்க, இவன் வந்து தான் லெதர் ஷூ, லெதர் பெல்ட், லெதர் டைரி, லெதர் வாலெட், லெதர் லேடிஸ் பர்ஸ் என்று தொழிலை விரிவுபடுத்தினான்.


ராணிபேட்டையில் இருக்கும் இவர்கள் நிறுவனத்திலிருந்து மட்டுமே இந்திய அளவில் சுமார் பதினேழு சதவீதம் தோல்பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.


வெளிநாட்டினரும்,‌ உள்நாட்டினரும் இவர்களின் நிறுவனத்திற்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கி வருவதற்கு காரணம், அக்னிமித்ரன் ஒரு பெரிய நம்பிக்கையை அவர்களுக்கு ஏற்படுத்தியது தான்.


பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட இரண்டு வருட காலத்திற்குள்‌ அந்த தோல்பொருட்கள் தையலளவில் ஏதேனும் குறைபாடுகளுக்கு உள்ளானால், அதை எவ்வித கட்டணமுமின்றி சரி செய்து தருகிறோம் என வாக்குறுதி அளித்திருந்தான் அவன்.


நீதிதாசன் கூட அவனின் இந்த முடிவுக்கு சற்று அதிருப்தியானார். ஆனால், அது தான் அவர்களின் உள்நாட்டு வர்த்தகத்தையும், வெளிநாட்டு வர்த்தகத்தையும் பெருக்கியது.


மேலும், அவர்கள் தயாரித்து அனுப்பும் தோல்பொருட்களின் காலாவதிக்காலம் மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது நீண்ட வாழ் நாள் கொண்டதாய் இருந்தது. காரணம், அவன் கொள்முதல் செய்யும் தோல்களனைத்தும் தரம் வாய்ந்தவையாய் இருந்தன.


இதற்கென்றே தேடி அலைந்து பிரத்யேக இன செம்மறி ஆட்டுத்தோல்களை கண்டறிந்தான் அக்னி. மேற்குதொடர்ச்சி மலைகளின் அடிவாரங்களில் தான் அவை மேய்ந்து கொண்டிருந்தன. சில தோல்கள் லடாக்கிலிருந்து வாங்கி வரப்பட்டன. அதற்கு அக்னி செலவு செய்த தொகை அதிகம். மற்ற நிறுவனங்கள் நிச்சயம் அந்தத் தொகைக்கு வாங்க முன் வராது. பெரிதாக லாபம் தரும் விசயம் இது இல்லையென்றாலும், தனது நிறுவனத்தின் நீண்ட கால நன்மையை கருத்திற்கொண்டு முன்னேறினான் அக்னி.


ஆனால், தற்போது அவனது காலை இடறிவிடும் விதமாய் ஒரு சிறிய ப்ராஜெக்ட்டும், ஒரு பெரிய ப்ராஜெக்ட் பற்றிய தகவல்களும் கைமாறிப் போனதும், மூளை சூடேறினான்.


அந்தத் தொழிலில் மேடுபள்ளம் பார்த்தவரான நீதிதாசன், "சரி விடுப்பா, பிசினஸ்ல இதெல்லாம் சகஜம். ஒன்னு வரும், ஒன்னு போகும், இதுக்கெல்லாமா மனம் தளர்றது?" என்று ஆறுதல் கூறி, தோளைத்தட்ட அருகில் வர,


"ப்பா ப்ளீஸ், லீவ் மீ அலோன். நானே இதை மேனேஜ் பண்ணிக்குவேன். யாரும் இதுல தலையிட வேணாம்." எனத்தன் கழுத்து நரம்பு புடைக்க கத்தினான் அக்னி.


பிறகு தான் தன் தந்தையின் முன் குரலை உயர்த்தி பேசியதை உணர்ந்து, "சாரி ப்பா. ஐ அம் ரியலி அப்செட். நான் இப்ப நானாவே இல்ல. நான் கஷ்டப்பட்டு போட்ட பிளான் இது. இதுக்காக நான் என் மூணு மாச உழைப்பை போட்டிருக்கேன். எப்படி எங்க மிஸ் ஆச்சுன்னே தெரியல. இந்த ஒர்க்கை நான் ஃபுல் அண்ட் ஃபுல் என் ரூம்ல வச்சு தான் சீக்ரெட்டா பண்ணேன். அப்பறம் எப்படி அந்த கொட்டேஷன் அமௌண்ட் லீக் அவுட் ஆச்சினே புரியல. ஐ அம் டோட்டலி கன்ஃபியூஸ்டு ப்பா. விசயம் தெரியாம என் தலையே வெடிச்சிடும் போல இருக்கு. இப்போதைக்கு என்கிட்ட யாரும் வராதீங்க ப்ளீஸ். இதுக்கு பின்னாடி யாரு இருக்கானு கண்டுபிடிச்சிட்டு நானே உங்ககிட்ட வரேன். அதுவரைக்கும்… ஐ ஹோப் யூ அன்டர்ஸ்டாண்ட்" என்று மேசையில் கைகளை ஊன்றி தலை கவிழ்ந்து கொண்டான்.


இப்போது அவனுக்கு தேவை அமைதியே என்பதை உணர்ந்த நீதிதாசனும், அவனை தனிமையில் விட்டு விலகிவிட்டார்.


அவன் தன் வீட்டின் சிசிடீவியில் பதிவான சில காட்சிகளை வைத்தே யார் அந்த ப்ராஜெக்ட் கோப்புகளை திருடி, ஆர்.எம் குரூப்பிற்கு கொடுத்திருக்கக்கூடும் என்று எளிதில் கண்டறிந்தாலும், உடனே அவரை பழிவாங்கவில்லை.


எதிர்தரப்பு எழவே முடியாத அளவுக்கு அடிக்க காத்திருந்தான். அதற்கு அவனுக்கு உதவி புரிய நம்பிக்கையான ஆள் ஒருவர் தேவைப்பட, வேறுவழியின்றி தன் இரட்டையனை நாடினான்.


இதற்காக தங்கள் வீட்டின் நீச்சல்குளத்துடனான அந்த மொட்டை மாடியில் நின்று இருவரும் தனியாக பேசினர்.


அசோகமித்ரன் இந்த ஆணவ மலைக்கு தன்னிடம் ஆக என்ன‌ இருக்கிறது என்று புருவங்களை இடுக்கினான்.


அக்னிமித்ரன் சுற்றி வளைக்காமல் விசயத்திற்கு வந்தான். தன் சமீபத்திய ப்ராஜெக்ட் ஒன்று கைமாறிப்போனது‌ மற்றும் ஐந்நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய ப்ராஜெக்ட் பற்றிய தகவல்கள் திருடு போனது என்று அனைத்தையும் அவனிடம் தெரிவித்தான்.


அசோகமித்ரன் பொறுப்பான காவலதிகாரியாய் அனைத்தையும் கேட்டிருக்க, அக்னியோ அதனை திருடியவரை சிறப்பாக கவனிக்க வேண்டும் என்றான். சகோதரனோ அவனை புரியாமல் பார்த்தான்.


ஏனெனில், அக்னியின் அடாவடித்தனங்களைப் பற்றி தான் அவனுக்கு தெரியுமே.


ஆதலால், உதட்டை இகழ்ச்சியாக வளைத்து, “இதுக்கு உனக்கு என் உதவி தேவைப்படுதா?” என்றான்.


தயங்காமல் ஆமென்ற அக்னி, "இதுக்கு பிள்ளையார் சுழி உன் மாம் தான். ஸோ…” என்று தோள்களை குலுக்கினான்.


அசோகாவோ அதிர்ந்தான்.


"வாட் ரப்பிஷ்?" என்றான்.


"ப்ச்! அவங்க கிட்டயிருந்து நீ கேஸை ஸ்டார்ட் பண்ணு. ஒரு மணி நேரத்துல உண்மையெல்லாம் கண்டுபிடிச்சிடலாம். குறிப்பா உண்மையை சொல்லலைனா நான் உங்களை ஜெயிலுக்குள்ள தள்ளி லேடிஸ் கிளப் மெம்பர்ஷிப்பை கட் பண்ணிடுவேனு மிரட்டு. அப்பறம் ஒரு வாரத்துக்கு நல்ல புடவை, சாப்பாடு, நகை, மேக்கப் ஐட்டம்ஸ்னு எதுவும் கிடைக்காதுனு சொல்லு. அடுத்த நொடி எப்படி எல்லாத்தையும் தானாவே உளறிக் கொட்றாங்கனு மட்டும் பாரு.” என்றதும்,


"ப்ளாக்கி, ச்சே! அக்னி திஸ் இஸ் டூ மச். அவங்க மேல இருக்க கோபத்துல சும்மா சும்மா அவங்களையே டார்கெட் பண்ணாத. அவங்களுக்கு கொஞ்சமாவது மரியாதை கொடு. ஷீ இஸ் யுவர் மாம்" என்று நினைவுபடுத்தினான்.


"ஐ டோன்ட் கேர் எபவுட் தட். நீ நான் சொன்னதை முதல்ல ட்ரை பண்ணு. ஓவரா மதர் செண்டிமெண்ட்ல லாக் ஆகாத" என்றபடியே தன் பாக்கெட்டிலிருந்த சிகரெட்டை எடுத்து புகைக்க ஆரம்பித்தான்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,011
Reaction score
1,132
Points
113
"திஸ் இஸ் நாட் குட் ஃபார் அவர் ஹெல்த்" என்ற அசோகா அந்த சிகரெட்டை எட்டிப் பறிக்க,


"இது இப்போ கண்டிப்பா எனக்கு வேணும். என்னை மாத்த நீ ட்ரை பண்ணாத. டூ‌ வாட் ஐ ஸே" எனத் தன் சிகரெட்கேஸிலிருந்து இன்னொன்றை எடுத்து பற்ற வைத்தான்.


"எப்படியோ ஒழி" என்று தலையாட்டிய அசோகமித்ரன், தன்னறைக்கு செல்ல திரும்பும் வேளையில், அக்னிமித்ரன் கூறிய வார்த்தைகளை கேட்டு சுவிட்ச் போட்டாற் போல் நின்றான்.


"என் டாக்குமெண்ட்ஸ் எல்லாத்தையும் என் ரூம்லயிருந்து திருடிட்டுப்போனது மினிஸ்டர் சந்தானம் வைஃப் கல்பனா. அவங்க என் ரூமுக்கு வந்துட்டு போன சிசிடீவி எவிடென்ஸ் என்கிட்ட இருக்கு" என்றதும்,


"அப்போ நம்ம அம்மா மேல ஏன்டா பழி போட்ட?" என காரமாகக் கேட்டான் அசோகா.


"இதுக்கு மூலக்காரணம் அவங்க தானே? என் வளர்ச்சி மேல பொறாமைப்பட்டு அவங்க தான் எல்லாத்தையும் திருடிட்டு போடி கல்லுனு, அந்த கல்பனாவை என் ரூமுக்கு அனுப்பி‌ விட்டிருப்பாங்க" என்றதும்,


"அருமையான கற்பனை! நம்ம அம்மாவும், கல்பனா ஆன்ட்டியும் சின்ன வயசுலயிருந்தே திக் ஃப்ரெண்ட்ஸ். சோ மாம் அவங்களை ஃப்ரெண்டுங்கறனால தான் நம்பி வீட்டுக்குள்ள விட்டிருப்பாங்க" என்று வாதாடினான் அசோகா.


எதுவும் பேசாமல் வெகுநேரம் வானத்தையே வெறித்துக் கொண்டிருந்தான் அக்னிமித்ரன்.


"அப்போ மினிஸ்டர் வைஃப் கல்பனாவை நாளைக்கே நான் அரெஸ்ட் பண்ணிடவா?" என மௌனத்தை கலைக்கும் பொருட்டு அசோகமித்ரன் கேட்க,


அடுத்த கணம், "நோ" என்ற மறுப்பு மொழி காற்றை கிழித்துக்கொண்டு வந்தது அவனிடமிருந்து.


"இல்ல, நீ அவங்களை அரெஸ்ட் பண்ணக்கூடாது. நான் ஏற்கனவே சொன்ன மாதிரி என்னோட இன்னொரு ப்ராஜெக்ட் அவங்கக்கிட்ட மாட்டியிருக்கு. அதை நேக்கா எடுத்த பின்னாடி தான் அவங்களை மரியாதையாய் கவனிக்கணும்" என்றதும்,


"இப்போ நீ என்னை என்ன தான்டா பண்ண சொல்ற?" என்று சலித்தான் அசோகா.


பிடித்து முடித்த சிகரெட்டை தூக்கி எறிந்த அக்னிமித்ரன், "மினிஸ்டர் சந்தானத்துக்கு செக்யூரிட்டி கார்டா இருக்கது உன் ஆளுங்க தானே? என் ஆள் ஒருத்தன் அவர் வீட்டுக்குள்ள நுழையனும். சோ, வளைஞ்சிக் கொடுக்க சொல்லு. அந்தாளைப் பத்தி ஒரு வலுவான ஆதாரம் கிடைச்சா போதும். அதுல எனக்கும் லாபம். உனக்கும் லாபம். இன்னொரு விசயம், இன்னும் டூ வீக்ஸ்ல அவரோட பொண்ணுக்கு தமிழ்நாட்டோட கனவு நாயகன் ப்ரைம் ஸ்டார் ப்ரித்வி ஹாசனோட எங்கேஜ்மெண்ட் நடக்கயிருக்கு. இது ஒரு சீக்ரெட் நியூஸ். எங்கேஜ்மெண்ட் நடந்த டூ வீக்ஸ்ல மேரேஜ். மேரேஜுக்கு ப்ரைம் மினிஸ்டர் சீஃப் கெஸ்ட்டா கலந்துக்கப் போறாராம். இப்போ நான் என்ன பண்ணப் போறேன்னா லேடீஸ் விஷயத்துல வீக்கா இருக்கற நம்ம கனவு நாயகன் பிரித்விஹாசன் பண்ற லீலையெல்லாம் வீடியோ எடுத்து கல்பனாகிட்ட காட்டி, என் ப்ராஜெக்ட்டை திருப்பி வாங்கப்போறேன். அவங்க‌ வீட்டுக்குள்ள நுழையற என் ஆள் மூலமா சந்தானம் பினாமி‌ டீட்டெய்ல்ஸ் கிடைச்சதும், எல்லார் முடியையும் கொத்தாப் பிடிச்சி ஆட்டப்போறேன்" என்றதும்,


அவனின் இந்த திட்டத்தில் தனக்கொரு ஆதாயமும் உள்ளது என்பதை கண்டுகொண்ட அசோகமித்ரன், "ப்ரில்லியண்ட் ப்ளான். இதுக்கு நானும் ஹெல்ப் பண்ண சம்மதிக்கறேன்.” என்றான்.


தன் நாடியைத் தடவி அவனை சந்தேகமாக பார்த்தவன் பின், குறும்பான புன்னகையுடன் தன்னறைக்கு சென்று விட்டான்.


அவனின் இந்த மகிழ்ச்சிக்கான காரணமறியாத அசோகாவோ, தன் தோள்களை குலுக்கியபடியே டீசர்ட், ஷார்ட்ஸை கழற்றிவிட்டு நீச்சல்குளத்திற்குள் குதித்தான்.


*


எதிர்பார்த்தபடியே இரண்டாவது வாரத்தில் அமைச்சர் சந்தானத்தின் புதல்வி ரதிதேவிக்கு ஊரறிய நிச்சயதார்த்தம் நடந்தது. ஊரில் உள்ள தொழிலதிபர்கள் அனைவரும் அதற்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்.


கல்பனாவும், பூர்ணிமாவும் பால்ய கால சிநேகிதிகள் என்பதால், மிகுந்த ஆராவாரத்துடன் விழாவில் கலந்துகொண்டாள் பூர்ணிமா.


விழாவில் ஒரு ஓரத்தில் நீதிதாசனுடன் பேசிக்கொண்டு அமர்ந்திருந்தவளின் கண்ணில்பட்டாள் அந்த மாடர்ன் மங்கை மித்ரவர்ஷினி.


விலை உயர்ந்த லெஹாங்கா அணிந்துகொண்டு, இக்காலத்திற்கு ஏற்றார் போல் மெஸ்ஸி பிரைடு ஹேர் ஸ்டைலில் நெற்றிசூட்டி மாட்டி, முகத்திற்கு அழகுற ஒப்பனை செய்திருந்தவளை தூரத்திலிருந்து பார்த்தே வசதியானவள், அழகானவள் எனக்கணக்கிட்ட பூர்ணிமா, உடனே அருகில் உறவினர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த கல்பனாவை அழைத்து யார் அந்தப் பெண்ணென விசாரித்தாள்.


"அவ என் கொழுந்தன் பிரகாஷோட பொண்ணுடி. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி தான் மும்பைல ஜேர்னலிசம் படிச்சிட்டு, ஆர்.எம் டிவில நியூஸ் ரிப்போர்ட்டரா ஜாயின் பண்ணினா." எனவும்,


"ஓ! அப்படியா? ஆமா இப்ப அவளுக்கு என்ன வயசுடி ஆகுது?" எனக்கேட்டாள் பூர்ணிமா.


"ம்? எங்கப்பொண்ணு ரதியை விட நாலு வயசு பெரியவடி இவ. சோ, இப்ப அவளுக்கு இருபத்திரெண்டு வயசாகும்." என்றாள்.


"ஓ! இப்ப அவளுக்கு மேரேஜ் பண்ற ஐடியா ஏதும் இருக்காடி?"


"அட! நாங்க மேரேஜ் பண்ணலாம்னு தான்டி இருக்கோம். இந்த வர்ஷூ தான் இப்போதைக்கு மேரேஜ் எதுவும் வேணாம், என் கரியர் தான் எனக்கு முக்கியம்னு தள்ளிப்போட்டுட்டே வர்றா. பிரகாஷும் தன்னோட செல்லப்பொண்ணுங்கறதால அவ போக்குல விட்டுட்டாரு.”


"ஓஹோ. ஆமா உன் பொண்ணுக்கு ஏன்டி இப்படி அவசர அவசரமா கல்யாணம் பண்றீங்க?"


"என் கதைய கேட்டினா பெருங்கதைடி. இன்னும் ரெண்டு வாரத்துல ப்ரைம் மினிஸ்டர் இங்க நம்ம ஊருக்கு வர்றாராம்டி. அவரு இங்க வரும்போது எங்க வீட்டு கல்யாணத்துல அவரை கலந்துக்க வைக்கணும்னு தான், அவசர அவசரமா மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணி செஞ்சிட்டிருக்கோம். என் தம்பி ப்ரித்விஹாசன் இன்னும் கொஞ்ச நாள்ல சினிமாவுல ப்ரைம் ஸ்டார் இடத்துலயிருந்து சூப்பர் ஸ்டார் இடத்துக்கு போயிடுவான். அப்படி போயிட்டான்னா கண்டிப்பா அவன் தகுதிக்கு ஏத்தப்பொண்ணு தான் கேட்பான். இப்போவே அவனை வளைச்சு போட்ரலாம்னு தான் ரதியோட பி.எஸ்.சி படிப்பை பாதியிலேயே நிப்பாட்டிட்டு, உடனே என்கேஜ்மெண்ட் வச்சிட்டோம். ஆனா என் பொண்ணு ரதி இருக்காளே? நான் என்ன சொன்னாலும் செய்வாடி. ஆனா என் மாமியார் மணியம்மையோட வளர்ப்பு கொஞ்சம் கலந்திருக்கதால, சில விஷயத்துல மட்டும் கொஞ்சம் முரண்டு பிடிப்பா. இப்ப இந்த கல்யாணத்துக்கு கூட கொஞ்சம் முரண்டு பிடிச்சா. அவளோட அப்பா போய் அவளோட நாடிப்பிடிச்சு, மயிலு இந்த மேரேஜ் நடந்தா தான்டா அப்பாவோட அரசியல் அந்தஸ்த்து உயரும், அப்பாவையும் கட்சியில நாலு பேர் மதிப்பாங்கனு சொன்ன பின்னாடி தான் உர்ருனு கல்யாணத்துக்கு சம்மதிச்சா. இல்ல ஜகா வாங்கியிருப்பா. ஆமா நீ ஏன்டி இப்போ வர்ஷூவை பத்தி கேட்கற? உன் பையனுக்கு ஏதும் முடிக்கலாம்னு பார்க்கறியா?" என சரியாக பூர்ணிமாவின் நாடியைப் பிடிக்கவும்,


"ம், ஆமாண்டி. என் பையனுக்கும் இருபத்தியேழு வயசாகுதில்ல? அதான் இவளைப் பேசி முடிக்கலாமானு பார்க்கறேன். நான் இப்பவே அத்தான்கிட்ட போய் இவளைப் பத்தி சொல்றேன்" என்றவள் தன் கணவனைத் தேடி சென்றுவிட்டாள்.


முகம் கொள்ளா புன்னகையுடன் நேரே நீதிதாசனின் அருகில் சென்றமர்ந்தவள், "அத்தான் அந்த கோல்டன் கலர் லெஹாங்கா போட்டிருக்க பொண்ணைப் பாருங்களேன். லட்சணமா இருக்கால்ல? அவ நம்ம கல்பனாவோட கொழுந்தன் பிரகாஷோட பொண்ணாம். உங்களுக்குக்கூட அவரைத் தெரியுமே? அவளை நம்ம வீட்டு மருமகளா கொண்டு வரலாம்னு நான் முடிவு பண்ணிட்டேன் அத்தான். நீங்க என்ன சொல்றீங்க?" என்று கேட்க,


"ம், உன்னோட செலக்சன் சூப்பரோ சூப்பர் பூமா. இந்தப் பொண்ணு நம்ம அக்னிக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. இப்ப பிஸினஸ்ல உண்டான சின்ன சறுக்கல்ல, அவன் ஒடிஞ்சுப்போய் இருக்கான். சோ, இந்த மேரேஜ் கண்டிப்பா அவனுக்கு ஒரு பூஸ்ட்டா அமையும்" என்று முகம் முழுதும் சந்தோசத்துடன் கூறியவரை, கொலை வெறியுடன் பார்த்தாள் பூர்ணிமா.


"அத்தான் நான் அவளை நம்ம அச்சுவுக்கு மேரேஜ் பண்ணலாங்கற மோடிவ்ல தான் இவ்வளவு நேரம் பேசிட்டிருந்தேன். அவ அழகாயிருக்கற காரணத்துனால தான் அவளை நம்ம வீட்டுக்கு மருமகளா கொண்டு வரலாம்னே நான் சொன்னேன். நல்லா யோசிச்சுப் பாருங்க, அவ எப்படி கருப்பாயிருக்கற அவனைப் போய் கல்யாணம் பண்ணிக்க சம்மதிப்பா?" என்று எகிறினாள்.


"பூமா என்ன பேசற நீ? பிசினஸ்ல அவனை அடிச்சிக்க ஆளே கிடையாது. அவ்வளவு மூளை. அவ்வளவு புத்திசாலித்தனம். அவனுக்கு என்ன குறை? கொஞ்சம் கலரு கம்மி அவ்வளவு தான். லுக்! என்ன மாதிரி தானே என் புள்ளையும் இருப்பான்? ஏன் அவ அவனை மேரேஜ் பண்ணிக்க மாட்டாங்கற? ஏன் கலராயிருக்கற நீ கருப்பாயிருக்கற என்னை கல்யாணம் பண்ணிக்கலையா? இல்ல நாம தான் சந்தோசமா வாழலையா?" என அடுக்கடுக்காய் கேள்விக் கணைகளை தொடுத்தவரிடம் சரணடைந்தவள்,


"சரி, சரி, அவனுக்கே பேசிப் பார்ப்போம். ஆனா, அவ பிடிக்கலைனு சொல்லிட்டா அச்சுவுக்கு மேரேஜ் பண்ணிடலாம். என்ன சொல்றீங்க?" என இருவரும் தங்களுக்குள்ளேயே பேசி ஒரு முடிவுக்கு வந்திருந்தனர்.



தொடரும்...
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,011
Reaction score
1,132
Points
113
எனது நாவல்களை புத்தகமாக பெற விரும்புவோருக்கு,

1.காதலா காதலா -Rs.280

2.நிஜமது நேசம் கொண்டேன் -Rs.220

3.நின் உச்சிதனை முகர்ந்தால் -Rs.250

சகாப்தம் பதிப்பக வாட்ஸப் எண்கள்:
9500986195
9500861971
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,011
Reaction score
1,132
Points
113
அத்தியாயம் 10



தன் கணவருடன் பேசி ஒரு முடிவுக்கு வந்ததும், மறுபடியும் கல்பனாவை அழைத்த பூர்ணிமா தாங்கள் எடுத்த முடிவை அவளிடம் தெரிவித்தாள்.


"சரிடி, நானே வீட்டுல கலந்து பேசிட்டு சொல்றேன்" என்ற கல்பனா தங்கள் விருந்தினரை உபசரிக்கும் வேலையில் மும்முரமாகிவிட்டாள்.


வேண்டுமென்றே தாமதமாய் அந்த நிச்சயதார்த்த விழாவிற்கு வந்து சேர்ந்த அக்னிமித்ரன், தன் தொழில் நிறுவனத்தின் தோழமை நிறுவன அதிபர்களுடன் கலந்துரையாடி விட்டு, இறுதியில் மேடையைப் பார்த்தான்.


பிரபல சினிமா ஸ்டார் ப்ரித்விஹாசனுடன் இணைந்து சிரித்து பேசிக் கொண்டிருந்தாள் அந்த சின்ன மாது.


குழந்தைத்தனமான முகத்துடன் தன் உருவத்திற்கும், முகபாவனைகளுக்கும் சம்பந்தமில்லாதவளாய் இருந்தவளை கண்டு, தன் கண்களை திருப்ப முடியாமல் தவித்தான்.


அவளைக் கண்டவுடன் இதுவரை இல்லாத அற்புதமாய் ஜிவ்வென்று புது ரத்தம் பாய்ந்தது அவனுள்.


தனது பதினைந்து வயதில் பிறந்த நாள் பரிசாக கன்னத்தில் அவள் கொடுத்த முத்தம் இன்றும் ஈரமான நினைவாய் அவன் நெஞ்சில்!


ஆறடி உயரத்தில் அரவிந்த் சாமி நிறத்தில் ரெமண்ட் கோட்ஷூட் மாடலை போன்று நின்றிருந்தவனுடன், சிரித்து சிரித்து பேசிக்கொண்டிருந்தவளைக் கண்டு, ஏதோ ஒன்று தன் கை நழுவி போவது போல் உணர்ந்தவன், மனதுள் உழன்று கொண்டிருக்க, அவன் அருகில் வந்த அமைச்சர் சந்தானமும், அவர் தம்பி பிரகாஷும் சும்மாயிராமல் சிங்கத்தை சீண்டிவிட ஆரம்பித்தனர்.


"என்ன தம்பி, கியூபா ப்ராஜெக்ட் எங்க கைக்கு மாறினதுலயிருந்தே பேயடிச்ச மாதிரியே திரியுறியாமே? கேள்விப்பட்டோம். எப்படி தம்பி நல்லாயிருக்க முடியும்? நூத்தியெழுபது கோடி! நீ இன்னும் கத்துக்குட்டி தம்பி. நாங்க ஆலமரம், அசைக்க முடியாது. எங்களையே பதம் பார்க்க நெனச்சா முடியுமா? இனிமே எந்த ப்ராஜெக்ட்டை தொட நினைச்சாலும், முன்னாடியே எங்கக்கிட்ட, ஐயா நீங்க எதுவும் மனசுல வச்சிருக்கீங்களான்னு ஒரு வார்த்தை கேட்டுட்டு தொடுங்க தம்பி. அப்ப தான் சேதாரம் கம்மியா இருக்கும். இல்லைனா இப்படித்தான் அசிங்கப்பட்டு, ஏமார்ந்து நிற்கனும்" என்று வெற்றிக்களிப்புடன் கூறிய குள்ள நரிகள் எக்காளமிட்டுக்கொண்டே சென்றுவிட, கோபத்தில் தன்னைத் தாண்டி சென்ற பேரரின் தட்டிலிருந்து மது கோப்பை ஒன்றை எடுத்து அருந்தினான் அக்னி.


அவன் கோபத்தில் சிவந்த கண்களுடன் தன் காரை நோக்கிச் சென்றான். இப்படி நேரடியாகவே அவர்கள் மிரட்டலில் ஈடுபடுவார்கள் என்றவன் எதிர்பார்க்கவில்லை.


சிவப்பு நிற லம்போகினி காரின் கதவை திறக்க சாவிக்காக தன் பேண்ட் பாக்கெட்டினுள் கையைவிட்டு துழாவியவன், அது அங்கில்லை என்றதும், இன்னும் கடுப்பாகி கீழே குனிந்து தேடலானான்.


திடீரென தூரத்தில் விளக்கின் ஒளி பட்டு மின்னிக் கொண்டிருந்த சாவியைக் கண்டதும், அதை எடுக்க குனிகையில் அவனுடன் சேர்ந்து இரு வேறு கரங்களும் சாவியைத் தொட்டன.


யாரென நிமிர்ந்தவன் கண்டது தன் இரட்டையனையும், இதற்கு முன் கண்டிராத ஒரு புதியவனையும் தான்.


தன் முன் நின்றிருந்த புதியவனை அடையாளம் காண முயன்றான். ம்ஹூம் எவ்வளவு முயன்றும் முடியவில்லை.


"டேய் அக்னி என்னை தெரியலையாடா? நான் தான்டா உன் விஜி. விஜய்குமார்" என்று தன்னை அறிமுகப்படுத்திய புதியவனை, தன் நெற்றியை சுருக்கிப் பார்த்தவன் அவனைத் தன் ஞாபக அடுக்கில் தேடலானான்.


பின், இறுதியில் அவனை நினைவு கூர்ந்து, "ஓ விஜியா? உன் அம்மா இறந்ததும் நீ துபாய்ல இருக்கற உன் அப்பா வீட்டுக்கு போயிட்டதா பாட்டி சொல்லி கேள்விப்பட்டேன். நீ எப்ப சென்னைக்கு வந்த?" என எந்தவொரு ஆர்வமுமில்லாமல் கேட்டான்.


அவனுக்கு எப்போதடா அங்கிருந்து செல்வோம் என்றிருந்தது.


அது தெரியாத வீ.கேவோ சுயபுராணத்திற்கு தயாரானான்.


"நான் ஏழு வருஷத்துக்கு முன்னாடியே இந்தியா வந்துட்டேன்டா. ஆமா எங்கம்மா கேன்சர்ல இறந்தவுடனேயே எங்கப்பா என்னை‌ துபாய் கூட்டிட்டுப் போயிட்டாரு. இப்ப அப்பாவும் உயிரோட இல்ல. நானும் மும்பைல எங்க பெரியப்பா வீட்லப்போய் செட்டிலாகிட்டேன். ஆனா அங்க போனதுக்கப்பறம் ரொம்பவே கஷ்டப்பட்டேன்டா.‌ பெரியப்பாவுக்கு ஏகப்பட்ட கடன். நான்‌ தான் கூடயிருந்து உதவற மாதிரி ஆகிடுச்சி. எனக்கு கராத்தே, ஜூடோவுல கொஞ்சம் முன்னனுபவம் இருந்ததால சினிமாவுல ஸ்டண்ட் மாஸ்டருக்கு கீழ அசிஸ்டன்டா கொஞ்ச நாள் வேலைப் பார்த்தேன். அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா என் திறமையை வளர்த்துக்கிட்டு இப்ப நம்ம ப்ரித்விஹாசன் சார் படத்துலயே வில்லனா ஆக்ட் பண்ற அளவுக்கு தேறியிருக்கேன். இதுல அடிக்கடி மல்யுத்த போட்டிகள்ல வேற கலந்துக்குவேன். நிறைய ஆட் சான்ஸும் வரும். இப்ப எனக்கு ஃபேன்ஸ் மத்தியில வீ.கேனு ஒரு பட்டப்பேர் கூட இருக்கு தெரியுமா? இப்ப எனக்கு ஹீரோ சான்ஸெல்லாம் வர்றதுக்கு காரணம் நம்ம ப்ரைம்ஸ்டார் ப்ரித்விஹாசன் தான். ஹீ இஸ் அ லெஜண்ட். அவருக்கு நான் ரொம்பவே நன்றி கடன் பட்டிருக்கேன். எனக்கும் அவருக்கும் ஒரே வயசுனாலும், அவரு மேல உள்ள மரியாதை மட்டும் எனக்கு குறையலடா. ஆமா நான் உன் வீட்டை தேடிப்பிடிச்சு வந்து அனுஷாவை பொண்ணு கேட்கலாம்னு இருந்தா, நீ என்னை பார்த்ததும் யாருனே தெரியாத மாதிரி முழிக்கற? ஹாஹாஹா" எனத்தன் முழு வரலாற்றையும் கூறி முடித்தவன், இறுதியாய் விளையாட்டாக அனுஷாவை இழுத்தான்.


இவ்வளவு நேரம் அக்னிமித்ரனுடன் இணைந்து வீ.கே கூறுவதனைத்தையும் அலட்சியமாக கேட்டுக்கொண்டிருந்த அசோகமித்ரன், அவனின் அனுஷா பற்றிய பேச்சில் கிளர்ச்சியுற்று, அவன் சட்டைக்காலரை கொத்தாகப் பற்றினான்.


"யாரை யாருடா பொண்ணுக்கேட்டு வர்றது? அவ எங்க வீட்டு இளவரசிடா. அவளை உன்னை மாதிரி பிச்சைக்காரனுக்கெல்லாம் எங்களால கட்டிக்கொடுக்க முடியாதுடா. இனிமே என் கண்ணு முன்னாடி உன்னை பார்த்தேன். பொய் கேஸ் போட்டு உள்ளத் தள்ளிருவேன்" என்று அனுஷாவிற்கு ஆகச்சிறந்த அண்ணனாய் கொந்தளித்துவிட்டு, அவன் சட்டைக்காலரை விடுவித்து தள்ளிவிட்டான்.


சந்தானம் பேசிச் சென்றதை பற்றியே யோசித்துக் கொண்டிருந்த அக்னிமித்ரனுக்கு உள்ளே சென்றிருந்த ஒரு கோப்பை மதுவின் விளைவால், வீ.கேவை தரையில் புரட்டியெடுக்க வேண்டும்போல் இருந்தது. ஆனால், அசோகமித்ரன் தன்னை முந்திக்கொண்டதால் வெறுமனே வேடிக்கை பார்த்தான்.


வீ.கேவை கடுப்பேற்றும் விதமாய் தன்னை கடந்து சென்ற பேரரின் தட்டிலிருந்து மது நிரம்பிய கோப்பை ஒன்றை எடுத்து, தன் வாயில் சரிப்பதிலேயே குறியாய் இருந்தான்.


தான் விளையாட்டாய் கூறிய வார்த்தைக்காக அசோகமித்ரன் தன் சட்டைக்காலரைப் பற்றி தன்னை பிச்சைக்காரன் என்றதில், தன்மானம் அடிப்பட்டு போன வீ.கே, முகம் கன்றிப்போனான். அதிலும், அக்னி அவனை தடுக்காமல் இருந்தது இன்னும் வலித்தது.


பாதி வேட்டையில் தப்பித்த வேங்கையாக அவ்விடம் விட்டு அகன்றான்.
 
Status
Not open for further replies.

Latest posts

New Threads

Top Bottom