- Messages
- 845
- Reaction score
- 1,132
- Points
- 93
உதய்கிருஷ்ணாவிடம் வேறு விசயங்களைப் பேசி அவனை இலகுவாக்கி, மெதுவாக அனன்யா விசயத்தைப் பேசலாம் என்றிருந்த உத்ராவின் திட்டத்திலோ ஒரு வியாழன் கோளையே தூக்கிப்போட்டாள் அனன்யா.
கவிலயா தன்னருகில் வந்த விக்கியிடம், “அவங்க தான் அனன்யாவா?” என்று கோபமாய் வினவினாள்.
“அவ யாரா இருந்தா உனக்கென்ன?” என்றான் படக்கென்று.
தன் மேல் முதன்முறையாய் அவன்பட்ட எரிச்சலை அவள் பொருட்படுத்தவில்லை.
“அப்போ அவ தான் அனன்யா இல்ல? இதுவரைக்கும் எப்படியோ, இனிமே நீங்க அவக்கூடல்லாம் பேசக்கூடாது. ஏன்னா ஏன்னா அது எனக்குப் பிடிக்கல.” என்றவளை அவன் அதிர்ச்சியாகப் பார்க்க, உதய்கிருஷ்ணாவும் உத்ராவும் அவ்விடம் சேர்ந்தார்கள்.
அப்போது தான் ட்ரெம்ப்லிங்கிலிருந்து இறங்கிய அமிகா, “நீ ஏன் விக்கிய கல்யாணம் பண்ணிக்கல உதி? இந்த அன்க்கிள் நமக்கு வேணாம்.” என்று உதய்கிருஷ்ணாவைக் காட்டி முகம் கோணினாள்.
அனைவரின் முகமும் விளக்கெண்ணெய் குடித்தது போலானது. ஏற்கனவே அனைவரின் மனநிலையையும் அனன்யா எனும் ஒருத்தி வெவ்வேறு அளவில் சிதைத்திருக்க, இவள் வேறென்று அமிகாவின் கன்னத்தைக் கிள்ளினாள் உத்ரா.
“அதிகப் பிரசங்கி! உன்ன அந்த ராட்டினத்துல ஏற அலோவ் பண்ணாருன்னா, நீ அந்த தாத்தாவக் கூட என்ன கல்யாணம் பண்ணிக்கச் சொல்லுவ” என்று சூழ்நிலையின் கனத்தை குறைத்தாள்.
உதய்கிருஷ்ணாவிடம் விடைபெற்று அனைவரும் வீட்டிற்கு செல்லும்போது பக்கத்தில் அம்மன் ரெஸ்டாரண்டில் காரை நிறுத்தி பானுமதிக்காக நெய் பனியாரம் வாங்கினான் விக்கி. இது ஏன் தனக்கோ உதய்க்கோ தோன்றவில்லை என்று உள்ளூர வருந்தினாள் உத்ரா.
காரில் வீட்டை அடைந்ததும் பனியாரப்பையுடன் இருவரையும் மேலேப் போகச் சொல்லியவள், “விக்கி நீ கொஞ்சம் இரு. உன்கிட்ட கொஞ்சம் பேச வேண்டியிருக்கு” என்றாள்.
அவர்கள் சென்றதும், “உதய்கிருஷ்ணாகூட என்ன பேசின?” என்று ஆர்வமாகக் கேட்டான் விக்கி.
தன் ஹேண்ட்பேக்கில் இருந்த மைக்ரோ மைக்கை அவன் முகத்தில் தூக்கியெறிந்தவள் கண்களில் கனலைக் கக்கினாள்.
தன் காதில் இருந்த ப்ளூடூத் ஸ்பீக்கரை வழிசலாக கழற்றியவன், “சாரி உதி. சும்மா ஒரு க்யூரியாசிட்டி. இந்த மாதிரி அறிமுகமில்லாத கபுள் என்ன பேசிக்குவாங்கன்னு. அதான்…” என்று இழுத்தான்.
“ஏன்டா திமிங்கிலத்துக்கே தூண்டில் போடுற அறிவாளியா நீ?” என்றவள் அவனை மொத்தி எடுக்க,
“சாரி.. சாரி..” என்று அலறினான்.
சற்று தணிந்தவள், “அத விடு, நான் கேட்கறதுக்கு பதில் சொல்லு! அந்த அனன்யா எதுக்கு இப்ப தெப்பக்குளம் வந்தா?” என்றாள்.
“ம்? தற்கொல பண்ணி சாக.” கடுப்பாக பதிலளித்தான்.
“ஏய் வெளையாடாதடா!”
“பின்ன? என்கிட்ட கேக்குற?”
“அந்த அனன்யாவும் நீயும் தெப்பக்குளத்துல என்னடா பேசிக்கிட்டீங்க? லயா என்கிட்ட எல்லாத்தையும் வாட்சப் சாட்ல சொல்லிட்டா. பொய் சொல்லி தப்பிக்கப் பாக்காத.” என்று கிடுக்குப்பிடி போட்டாள்.
இறங்கி வந்தவன், “அவ என்ன லவ் பண்றதா சொன்னா” என்றான்.
உத்ரா அவனை அற்பமாகப் பார்த்தவள், “ஸோ, நீ என்ன நடக்கனும்னு ஆசப்பட்டியோ கடைசில அதுவே நடந்துருச்சி.” என்றாள்.
“ஆமா, ஒரு கோடி. நீ பாத்த?”
“நடிக்காதடா. ஹிம்! உங்கூட வேல பாக்கறதுக்கு கன்னி வெடிய டி-ஆக்டிவேட் பண்ற வேலையே பெட்டர்டா. ஒவ்வொரு நிமிசமும் என்ன பக்கு பக்குன்னே வச்சிருக்க. உனக்கொன்னு தெரியுமா விக்கி? அவ என்னையும் உதயையும் இன்னைக்கு ஒன்னா பாத்துட்டா.”
“அதுக்கென்ன?” அசுவாரசியமாய் கேட்டான்.
“டேய்! உனக்கு மூளையிருக்கா இல்லையா?”
“உன்ன உருவாக்கும்போது தான் கடவுள் ஞாபக மறதில உள்ள வைக்க மறந்துட்டாராம்.”
“உன்ன” என்று கைகளை அவன் கழுத்தை நெறிப்பது போல் கொண்டு வந்தவள், “உன்னால நான் எவ்ளோ பெரிய பிரச்சனைல மாட்டியிருக்கேன் தெரியுமா?” என்று எரிச்சலாகச் சொன்னாள்.
அவன், “அவளால எல்லாம் உன் கல்யாணம் நிக்காது” என்று உறுதி கூறினான்.
சோர்ந்து, “எப்படி சொல்ற?” என்று சந்தேகப்பட்டாள்.
“அவளத் தான் உதய்கிருஷ்ணா மொத்தமா வெறுக்குறானே. அவ பக்கத்துல வந்தாலும் இவன் வெலகிப் போயிருவான். ஸோ பிராப்ளம் எதுவும் வராது.” என்றான்.
சற்று யோசித்தவள், “ஆனாலும், எனக்கு ரொம்ப பயமா இருக்கு விக்கி. வேற யாராவது உதய்கிட்ட போய் உண்மைய சொல்றதுக்குள்ள நாமளே சொல்லிடுறது நல்லதுடா. அதுவுமில்லாம அனன்யா பெரியப்பாக்கு வேற இந்த விசயம் தெரிஞ்சா… எனக்கு நெனைக்கவே பயமா இருக்கு. பேசாம நானே நந்தகோபன்கிட்டயும் போய் உண்மைய சொல்லி மன்னிப்பு கேட்டுரவா?” எனவும்,
ஸ்டியரிங்கை ஓங்கி அறைந்த விக்கி, “முட்டாள்தனமா செஞ்சு உன் வாழ்க்கைய நீயே கெடுத்துக்காத.” என்று அறிவுறுத்தினான்.
ஆனால், அவன் பேச்சைக் கேட்கக்கூடாதென்ற முடிவுடன் கார்க்கதவை திறந்து வெளியேறினாள்.
கலைடாஸ்கோப் திரும்பும்…