Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


காதல் நீ.. காயம் நீ..

Dinesh J

New member
Messages
9
Reaction score
0
Points
1
ஹாய்… என் பேர் குரு.,குமர குரு .என்னை யாரு குரு -னு எல்லா கூப்பிட மாட்டாங்க. அப்பா அம்மா குமரா-னு சொல்லுவாங்க. நா ஒரே பையன்.ரிமோட் கேம்காக என்கூட சண்டை போட எனக்கு ஒரு செல்ல தம்பி இல்ல, அட்வைஸ் பண்ண அண்ணனும் இல்ல,பாசமா காதை புடிச்சு திருக அக்காவும் இல்ல,பொய் சொல்லி அப்பாகிட்ட மாட்டி விட்டு என்னை அடிவாங்க வைக்க ஒரு குட்டி தங்கச்சியும் இல்லை.இதை நினைத்து நா பீல் பண்ணாத நாளே கிடையாது.



எங்க வீடு ஒரு தோட்டத்து வீடு. வசதிக்கு ஒண்ணு குறைச்சல் இல்ல.



ஆனாலும்,



எங்க வீட்டை சுத்தி நெறைய மாமரம் இருக்கு.எனக்குனு ஒரு தம்பி இருந்தா அவன் கூட போய் அங்க மாங்காய் அடிச்சு சாப்பிடலாம்-னு feel பண்ணி இருக்கேன்.



அப்புறம் எங்க வீட்ல நிறைய பூ செடி இருக்கு.ஆனா அதை பறித்து வைக்க எனக்கு தா ஒரு அக்காவோ தங்கச்சியோ இல்லையே…



எங்க அப்பா அம்மா லவ் மேரேஜ்.

அதுவும் ஓடி போய். இத்தனைக்கும் ரெண்டு பேரும் சொந்தகாரங்க.ஆனாலும் வீட்டுல ஏத்துக்கல்லை.ஏனா?..லவ்னா அந்த காலத்துல பெரிய தப்பா பார்த்தர்கள்.



ஸோ, என்னோட சின்ன வயதில் பெரியம்மா பையன்,சித்தப்பா பையன்,முறைபொண்ணு அம்முச்சி வீடு,ஐயன் வீடுனு சொல்லி எந்த சந்தோஷமும் கிடைக்கவில்லை.



கொஞ்ச வருசம் கழிச்சு எல்லாரும் எங்க அப்பா அம்மாவை ஏத்து கிட்டாங்க.

ஆனாலும் யாரும் பெருசா மதிக்க மாட்டாங்க.எப்பவும் கொஞ்சம் தள்ளியே வச்சு இருந்தாங்க.



எனக்கு நிறைய நண்பர்கள் கிடையாது.சொல்ல போன சுத்தமா இல்லை.நா சின்ன வயசுல இருந்து தனியாவே வளர்ந்ததுனால் எனக்கு கூச்ச சுபாவம் அதிகம்.யாரு கிட்டயும் நானே போய் பேசமாட்டேன். யாராவது ஏதாவது கேட்டா பதில் சொல்லுவேன்.



எங்க வீடும் தனியா இருக்கும்.

அப்பா அம்மா தோட்டத்துல வேலை செய்ய போயிருவாங்க.

நா எப்பவும் வீட்டுல தனியா டீவி பாத்துட்டு புக்ஸ் படிச்சுட்டு இருப்பேன்.எனக்கு புக்ஸ் படிக்க ரொம்ப புடிக்கும். அதுக்குனு சப்ஜெக்ட் புக்ஸ் இல்லை.



உண்மையை சொல்லவா நா சுமாரா தாங்க படிப்பேன்.கேம்ஸ், சிங்கிங்,டான்ஸ் இதுல எனக்கு இன்டெர்ஸ்ட் இல்லை.சரி, உண்மை சொல்லுறேன்.எனக்கு அது சுத்தமா வரலை. ஆனா கவிதை ரொம்ப நல்லா எழுத வரும்.

அதுக்குனு, கவிதை எழுதி எவ்வளவு பொண்ணை இம்ப்ரெஸ் பண்ணி இருக்கேன்னு கேக்காதீங்க.

நா கொஞ்சம் மாநிறத்தை விட கலர் கம்மி.அதுனால எனக்கு தாழ்வு மனப்பான்மை.



நா பெரிசா எந்த பொண்ணுங்க கிட்டயும் பேசினது இல்ல.நா கொஞ்சம் அழகு கம்மி,பெரிய திறமைசாலியும் இல்ல.ஸோ, எந்த பெண்ணும் அதுவா வந்து என்கிட்ட பேசுனது இல்ல.நா,இதுவரைக்கு எந்த பொண்ணுக்கு கவிதை எழுதல்லை.



எனக்கு,ஒரு 12வயசு இருக்கும்.

நா ரொம்ப தனிமையா இருந்த மாறி தோணுச்சு.ரொம்ப அழுதேன்.

என் அம்மா என்கிட்ட சொன்னாங்க"எனக்கு கூட ரொம்ப தனிமையா இருக்க மாறி இருக்கு.உங்க அப்பா என்னை ரொம்ப நல்லா தா பாத்துக்குராரு.

ஆனா என் சொந்தக்காரங்க எல்லாரும் என்னை ஒதுக்கி வைத்துடாங்க. என்னால தா உனக்கு இந்த நிலமை இதை நினச்சு நா வருத்த படாதா நாளே இல்ல.நானும் உங்க அப்பாவும் பண்ணுனது தப்பு.நாங்க எங்க காதலுக்காக எங்க வீட்டுல இன்னும் கொஞ்சம் போராடி இருக்கணும்.ஆனா நாங்க அவசரபட்டு இப்படி பண்ணிட்டோம்"-னு ரொம்ப வருத்தபட்டாங்க.



அவங்க பேசுனது எனக்கு கொஞ்சம் புரியலனாலும் நா அப்ப ஒரு முடிவு எடுத்தேன்.

இனிமே அம்மாகிட்ட இதுக்காக அழகூடாது.என்ன ஆனாலும் அப்பா அம்மாவை விட்டு போக கூடாது.



பல வருடங்கள் இப்படியே தனிமையா போச்சு.ஆனா காலேஜ் டைம்-ல எனக்கு சத்யா-னு ஒரு ப்ரெண்ட் கிடச்சான். ரொம்ப நல்லவன்,என்கிட்ட ரொம்ப உண்மையா இருப்பான்.



அப்புறம் லவ் கூட வந்துச்சு.

திவ்யா. என்னவோ ரொம்ப பிடிக்கும் அவள.என்னோட கிளாஸ் தா.கொஞ்சம் கொஞ்சமா அவகிட்ட பேச ஆரம்பிச்சேன்.

அவளுக்கும் என்னை ரொம்ப பிடிக்கும்னு சொன்னா. நிறையா பேசுனோம்.



அவ ஸ்கூல் லவ்,அது தோல்வி ஆனது பத்தி,அவங்க வீட்டை பத்தி,அவளபத்தி,நைட் ரொம்ப நேரம் சாட் பண்ணுவோம். என்னை அடிக்கடி டார்லிங் பேபி-னு தா சொல்லுவா.



நமக்கு ரொம்ப புடிச்சவங்க அப்படி கூப்பிடும் போது எப்படி இருக்கும்..எனக்கு லைப் ரொம்ப சந்தோசமா போச்சு…



அப்டியே ரெண்டு வருஷம் ஓடி போச்சு.காலேஜ்ல கேம்பஸ் இன்டெர்வியூவும் வந்துச்சு.



நா கொஞ்சம் சுமார்ரகம் ஆச்சே. நா செலக்ட் ஆகலை. நல்லவேளை சத்யாவிக்கும் கிடைக்கல்லை.ஆனா, திவ்யா செலக்ட். எனக்கு ரொம்ப சந்தோசம்.



காலேஜ் முடிய இன்னும் 3 மாசம் தா இருந்துச்சு.முன்ன மாறி அவ என்கிட்ட பேசலை. சரி, நானும் அவ ரொம்ப பிஸி-னு சொல்லி விட்டுட்டேன்.



இன்னும் அவ கிட்ட ப்ரொபோஸ் பண்ணலை -னு சொல்லி,ஒரு நாள் அவகிட்ட சாட்ல நா சொன்னேன்.ஆனா… அவ சொல்லிட்டா "நா உன்கிட்ட ப்ரெண்ட்-ஆ தா பேசுனேன்".



நா,இத அவகிட்ட துளியும் எதிர்பார்க்கவில்லை.ஏனா ஒரு லவ்வர் கிட்ட எப்படி பேசுவர்களோ அப்படி தா அவ என்கிட்ட பேசுனா.



நா,திரும்ப அவகிட்ட பேசலை. ஏனா எனக்கு புரிந்தது. எனக்கு வேலை இல்லை, அவ என்னை அவளுக்கு தகுதி இல்லாதவன் நினைக்குற. ஆனா அதை நேரா என்கிட்ட சொல்லி இருக்கலாம். ஆனா, அவ லவ்வே இல்லன்னு சொல்லிட்டா.



3வருஷம் போயிருச்சு. காலேஜ் முடிச்சதும் எனக்கு அப்பாவோட ப்ரெண்ட் கம்பெனில ஒரு பெரிய பதவியில் நல்ல வேலை கிடைச்சுது.நானும் வேலைக்காக என்னோட தகுதியை இம்ப்ரூவ் பண்ணுறதுன்னு அவள கொஞ்சம் கொஞ்சமாக மறந்துட்டு வந்தேன்.



சத்யா என்னோட ஆபீஸ் பக்கத்தில் இருக்குற வேற ஆபீஸ்ல வேலை பார்க்கிறான்.

எனக்கு அவன்தான் பெரிய சப்போர்ட்.



எனக்கு கோவில் போறதுனா ரொம்பவும் பிடிக்கும். ஒருநாள்

கோவிலுக்கு போய்ட்டு ஆபீஸ் போனேன்.நல்ல மழை.

நா ஆபீஸ் போனதுக்கு அப்புறம் தான் மழை வந்துச்சு. அப்பாடா..நல்லவேளை.. நனையாமல் வந்தாச்சு அப்படினு நினைச்சு என் டேபிள்-ல உக்காந்து இருந்தேன்.



அவ வந்தா… ஒரு லேசான நீலம், அடர் கருப்பு கலர் கலந்த புடவையில்,கொஞ்சம் மழையில் நனைந்து இருத்தாள்.புடவையில் அவ்வளவு அழகாக இருந்தாள்.

விட்டா நா ஒரு நாள் முழுக்க அவளை பார்த்து கொண்டு இருப்பேன்.



இதுதா அவளுக்கு வேலைக்கு முதல் நாள். என்னோட பக்கத்து டேபிள்ல உட்கார்ந்து கொண்டாள்.

எனக்கு அப்படியே பறக்கிற மாறி இருந்துச்சு.



நா விடுவேனா.. ஒர கண்ணாலே அவள பார்த்தேன்.அவ மழையை ரொம்ப ரசிச்சு பார்த்துட்டு இருந்தாள்.என்னவோ பார்த்ததும் பிடிச்சு போச்சு..



ரொம்ப கலர்ரும் இல்ல,ரொம்ப அழகும் இல்ல.அளவான அழகு.

ஆனா அவள ரோடுல போறப்ப பார்த்த கண்டிப்பா ஒரு முறை திருப்பி பார்ப்போம்.அதுமாறி அழகு.ஆனா நா ஒரு நூறு தடவையாவது இனைக்கு பார்த்து இருப்பேன்.ஒர கண்ணால.



அவ பேரு கேக்கணும்-னு தோணுச்சு.நா இங்க வந்து 3வருஷம் ஆச்சு.ஆனா யாருடனும் அவ்வளவு பேசுனது இல்ல.ஆனா இவகிட்ட பேச பயமே வரலை. போய் பேசுனேன்.



"உங்க நேம் என்ன?"



"ரோஜா".



அவ்வளவுதாங்க.அவ வேலை பாக்க ஆரம்பித்துவிட்டாள்.

என் பேர கூட கேட்கவில்லை.

நானும் பெருசா எடுத்துக்கல்ல.

நா அவளை சைட் அடிச்சேன் அவ்வளவுதா.பீல் எல்லாம் அவ மேல வரல.



இப்படியே நாள்கள் போச்சு..

அவ வருவா,பெருசா யாருகிட்டயும் பேசமாட்டா, என்னை மாறி.அப்புறம் அவ புடவை கட்டவே இல்ல.சுடிதார்-ல வருவா..அதுலயும் நல்லாதா இருந்தா.



டெய்லி-யும் பார்ப்பேன்.சைட் அடிப்பேன். நா போய் பேசுனா அவளும் பேசுவா..எனக்கும் அவளை பார்த்துட்டே இருக்க பிடிச்சுது.



திடீரென ஒருநாள் அவ வரல.

அவளை பார்க்காம அந்த ஒரு நாள் நா பட்டபாடு இருக்கே.

அப்பதாங்க எனக்கே புரிந்தது நா அவ மேல வச்சு இருக்க லவ்.



அந்த நாள் முழுக்க ஆபீஸ்ல காதுல ஹியர் போனை மாட்டிகிட்டு இந்த பாட்டுதா கேட்டு கிட்டு இருத்தேன்.



காதல் ரோஜாவே

எங்கே நீ எங்கே

கண்ணீர் வழியுதடி கண்ணே

காதல் ரோஜாவே

எங்கே நீ எங்கே

கண்ணீர் வழியுதடி கண்ணே

கண்ணுக்குள் நீ தான்

கண்ணீரில் நீ தான்

கண் மூடி பார்த்தால்

நெஞ்சுக்குள் நீதான்

என்னானதோ ஏதானதோ

சொல் சொல்

காதல் ரோஜாவே

எங்கே நீ எங்கே

கண்ணீர் வழியுதடி கண்ணே

தென்றல் என்னை தீண்டினால்

சேலை தீண்டும் ஞாபகம்

சின்ன பூக்கள் பார்க்கையில்

தேகம் பார்த்த ஞாபகம்

வெள்ளி ஓடை பேசினால்

சொன்ன வார்த்தை ஞாபகம்

மேகம் ரெண்டு சேர்கையில்

மோகம் கொண்ட ஞாபகம்

வாயில்லாமல் போனால்

வார்த்தையில்லை பெண்ணே

நீயில்லாமல் போனால்

வாழ்க்கையில்லை கண்ணே

முள்ளோடு தான் முத்தங்களா

சொல் சொல்

காதல் ரோஜாவே

எங்கே நீ எங்கே

கண்ணீர் வழியுதடி கண்ணே

கண்ணுக்குள் நீ தான் கண்ணீரில் நீ தான்

கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்

என்னானதோ ஏதானதோ

சொல் சொல்

வீசுகின்ற தென்றலே

வேலையில்லை நின்று போ

பேசுகின்ற வெண்ணிலா

பெண்மையில்லை ஓய்ந்து போ…




அடுத்த நாள் அவ வந்தா. அப்பதா எனக்கு உயிரே வந்தமாறி இருந்துச்சு..அவ புடவைல வந்து இருந்தா.சொல்லவே வேண்டாம் தேவதை மாறி இருந்தாள்.



அதுவும் எனக்கு லவ் பீல் வந்துருச்சா..என் கண்ணுக்கு வேற லெவல் அழகியாக தெரிஞ்சா.. என் அழகி அவ..



முதலே..100தடவை பார்ப்பேன். இப்ப எல்லா அவ சுடிதார்-ல வந்தாலும் 1000தடவை பாக்குறேன்.



ஆனா இது எதுவும் அவளுக்கு தெரியாது.நா இன்னும் அவகிட்ட அதிகமா பேச ஆரம்பிச்சேன்.

அவகிட்ட போய் ஏதாவது பேசிட்டு இருப்பேன்.அப்படி இருந்தும் அவளுக்கு எதுவும் புரியல.



அவளுக்கு அந்த அளவுக்கு அறிவு இல்லாமல் இல்லை. எனக்கு தெரிஞ்சு இதை பத்தி அவ யோசிக்கவே இல்லனு தோணுச்சு.அவளுக்கு என்னவோ பிரச்சினை இருக்குனு புரிந்தது.



அது என்னனு தெரிந்து கொள்ள அவளிடம் சாட் செய்ய ஆரம்பித்தேன்.ஏதோ ஒரு அளவுக்கு பேசினாள். ஆனால் பிரச்சனை என்ன என்று தெரிந்து கொள்ளும் அளவுக்கு நெருக்கம் காட்டவில்லை.



அவள் இவ்வளவு பேசியது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.



நாள்கள் செல்ல செல்ல அவள் என்னிடம் நெருங்கி பேசினாள். நான் அவளிடம் காதல் பற்ற உன் அபிப்பிராயம் என்ன என்று கேட்டேன்.



"காதல் ஒரு நல்ல பொழுது போக்கு"



என்னால் ஒன்று புரிந்து கொள்ள முடிந்தது அவளுக்கு காதல் தோல்வி.



"சரி உனக்கு புடிச்ச கலர் என்ன?"



"ரெட்"



"ஹீரோ?"



"அப்படி யாரும் இல்லை. ஹீரோ,ஹீரோயின்,பாட்டு அப்படி எல்லாம் ஒண்ணு இல்ல.எனக்கு படம் பார்க்க பிடிக்கும்.எல்லா படம் பார்ப்பேன். எல்லா பாட்டும் கேட்பேன்."



"சரி,வேற என்ன எல்லாம் புடிக்கும்?".



"தனிமை.தனிமையில் ரகுமான் சார் பாட்டு கேட்பேன், ராஜா சார் பாட்டு.அப்புறம் படிக்க பிடிக்கும். கோவிலில் போய் போய் அமைதியா உட்கார்ந்து கடவுளிடம் பேச பிடிக்கும்.அப்புறம் மழை ரொம்ப ரொம்ப பிடிக்கும்".



அவள் உங்களுக்கு என்ன புடிக்கும் என்று கேட்கவில்லை. கேட்டவும் மாட்டாள். இதுதான் அவள் என்று எனக்கு நன்றாக புரிந்தது.



கொஞ்சம் தலைக்கனம் அதிகம்தான்.ஆனால் அவளின் காதல் மேல் காட்டும் அளவிற்கு இல்லை என்று தோன்றியது.



நானே பேச ஆரம்பித்தேன்.



"எனக்கு படிக்க,கோவிலுக்கு போக ரொம்ப பிடிக்கும். ஆனா எனக்கு தனிமை-னா பிடிக்காது."



என் சிறுவயது தனிமை எல்லாம் அவளிடம் கூறினேன்.



அவள் தனிமையை விரும்பும் காரணத்தை மிக எளிமையாக ஆனால் வலியுடன் கூறினாள்.



"நீ வீட்டுல ஒரே பையன். அதுனால் உனக்கு இது தெரியாது.வீட்டில் ரெண்டு பேரு இருந்தா ஒரு கண்ணுல சுண்ணாம்பு இன்னொரு கண்ணுல வெண்ணையும் ஒரு சில வீட்டுல காட்டுவாங்க."



அவள் முதல் முறையாக என்னிடம் ஒரு கேள்வி கேட்டாள்.



"உங்களுக்கு வாழ்க்கையில் ஏதாவது ஒன்றை சிறப்பாக செய்யணும் -னு ஆசை இருக்கா?"



"புரியவில்லை ரோஜா!"



"உங்களுக்கு ஏதாவது ஏய்ம் இருக்கா".



"பெரிசா ஒண்ணு இல்ல"



"ஆனா எனக்கு இருந்துச்சு. ஏதாவது சாதிகனும்.டான்ஸ் ஆடி காட்டினேன்.அப்பா அம்மா முன்னாடி. அவங்க சொன்னாங்க உனக்கு வரல.உன்னோட அக்கா -க்கு தா இது வரும்.ஒவ்வொரு சின்ன விஷயதிலும் இப்படித்தான்.இப்பவரைக்கும் என்னால சின்ன வெற்றி அடைய முடியல.என்னால் எதுவும் ஒழுங்கா செய்ய முடியலை.

அதுனால் யாருக்கும் என்னை பிடிக்காது."



"அப்படி இல்லை ரோஜா. எல்லாருக்கும் உன்னை புடிக்கும். எனக்கு உன்னை பிடிக்கும்."



இப்பதான் எனக்கு இன்னும் அவ மேல காதல் அதிகம் ஆச்சு.



மாலை என் வேதனை கூட்டுதடி

காதல் தன் வேலையை காட்டுதடி

என்னை வாட்டும் வேலை ஏனடி

நீ சொல்வாய் கண்மணி

முகம் காட்டு எந்தன் பௌர்ணமி

என் காதல் வீணை நீ

வேதனை சொல்லிடும் ராகத்திலே

வேகுதே என் மனம் மோகத்திலே




மாலை என் வேதனை கூட்டுதடி

காதல் தன் வேலையை காட்டுதடி




அவ என்னை ஒரு நல்ல நண்பனாக பாக்க ஆரம்பித்தாள். நா எங்களோட இந்த உறவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக நினைத்தேன்.இதுதான் சரியான நேரம்-னு சொல்லி மகிழ்ச்சியாக இருந்தேன்.



ஒருநாள் எதார்த்தமாக அவகிட்ட, உனக்கும் காதல் தோல்வி இருக்குனு தெரியும் அதை பத்தி கொஞ்சம் சொல்லு.



"சொல்லுற அளவிற்கு ஒண்ணு இல்ல".



இதை கேட்டு எனக்கு ரொம்பவும் கஷ்டமா இருந்துச்சு. இவ்வளவு நாள் அவகிட்ட பேசுறோம். ஆனால் நம்ம கிட்ட இத கூட ஷேர் பண்ண தோன்றவில்லை அவளுக்கு.அவ என்ன எந்த எடத்துல வச்சு இருக்கானு புரிந்தது.



ஆனாலும் நா இதுக்காக அவகிட்ட பேசாமல் இல்ல. என்னால் அப்படி இருக்கவும் முடியாது.



அது ஒரு சண்டே. அதிகமா வெளியே போகமாட்டேன்.வீட்டுல இருக்க தா எனக்கு ரொம்பவும் புடிக்கும். ஆனா எப்பவாவது நானும் சத்யாவும் வெளியே போவோம்.



இன்று.சும்மா ஒரு ஷாப்பிங்மாலில் படம் பார்க்கப்போனம். ஒரு ரெண்டு நாளைக்கு முன்னாடி ரோஜா அந்த படத்தை பற்றி புகழ்ந்தாள். அதனால் எப்படி இருக்குனு பார்க்கபோனேன்.



ஹ்ம்ம்...நல்லதா இருந்துச்சு. அவ ரசனையை பத்தி கொஞ்சம் புரிந்து கொள்ள முடிந்தது.



நாங்க எப்பவும் வர மால் இது.ஸோ, சுத்தி எல்லாம் பார்க்கவில்லை. வெளியே வந்துடோம்.சத்யா வீட்டுக்கு போய்ட்டு இருந்தோம். அப்பத்தான் அவளை பார்த்தேன்.



கையில் ரெண்டு புக்கை வைச்சுட்டு நடந்து போய்ட்டு இருந்தாள். பைக்கை நிறுத்தி ரெண்டு பெரும் அவகிட்ட பேசினோம்.



"ஹாய்!,ரோஜா! இங்க எங்க?"



"நா லைப்ரரி-க்கு புக் ரிட்டர்ன் பண்ண போறேன் நீங்க?'



"நா ப்ரெண்ட் வீட்டிற்கு வந்தேன். இது சத்யா."



"ஹ்ம்ம்..ஹாய் அண்ணா!".



"ஹாய்.. சிஸ்!".



ஒரு அரைமணி நேரம் இருக்கும். ரெண்டு பேரும் பேசுறாங்க.. பேசுறாங்க...பேசிட்டே இருக்காங்க.

இவ இவ்வளவு பேசுவனு அப்ப தா தெரிந்தது.



அண்ணா,தங்கச்சியும் பாச மழை பொழிய ஆரம்பிச்சுட்டாங்க. எப்படித்தான் பார்த்தவுடன் இப்படியே.ஆனா இப்படி ஒருநாளவது எங்கிட்ட பேசி இருப்பாளா…திருட்டு கழுதை.



சத்யா வீட்டுக்கு போயிட்டான். நானும் அவளும் லைப்ரரி போனோம்.ரெண்டு புக்ஸ் ரிட்டர்ன் பண்ணிட்டு திலகவதி நாவல் புக் ஒண்ணு எடுத்தா.ரெண்டு பேரும் சேர்ந்து நடந்து வந்தோம்.



மதியம் இரண்டு மணி இருக்கும்.

வெயில் இல்ல.பாவம் சூரியன்-க்கு ஓய்வு தேவைப்பட்டதோ..இல்ல அந்த கடவுள் என் மேல் இரக்கபட்டு இப்படி ஒரு கிளைமேட் கொடுத்தரோ தெரியலை..



வானத்தில் துளி கூட நீலம் இல்ல. கார்மேகங்கள்.மென்மையான குளிர் காற்று.லேசான மண்வாசனை.



அவளும் நானும்.. அமுதும் தமிழும்..

அவளும் நானும்.. அலையும் கடலும்..

அவளும் நானும்.. தவமும் அருளும்..

அவளும் நானும்.. வேரும் மரமும்..




"ஏன்?ரோஜா வீட்டுல இருந்து பைக்ல வந்து இருக்கலாம்-ல? எப்பவும் இப்படிதா வருவியா?".



"ம்ம்..ஆமா..எனக்கு நடந்து வரதுதான் ரொம்ப புடிக்கும்."



"நீ மட்டும் தான் வந்து இருக்க ப்ரெண்ட்ஸ் கூட வரலையா?.."



"இல்ல எனக்கு நெறைய ப்ரெண்ட்ஸ் இல்ல.ஒருத்தி இருக்கா.அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சு."



"ஓஹோ..எனக்கு சத்யா மட்டும்தான் இருக்கான்."



"ஹ்ம்ம்..".



பிறகு இருவரிடமும் மெளனம்.



மழை மேகங்கள் தூறல் போட தொடங்கின.அவள் முகத்தில் அப்படி ஒரு ஆனந்தம்.சாலையோரம் ஒதுங்கி கொண்டோம்.



"குரு,ஒரு கப் காப்பி குடிக்கலாமா..?"



என் மைண்ட் வொய்ஸ்:"கண்ணா லட்டு தின்ன ஆசையா?"..அதுவும் ரெண்டு லட்டு".



குரு.என்னை இவ இப்படி நிக்நேம்ல கூப்பிடும் போது எப்படி இருக்கும். அதுவும் காப்பி சாப்பிட…



அப்படியே நெய் மணக்க மணக்க ரெண்டு திருப்பதி லட்டு சாப்பிட மாறி இருந்துச்சு.



ரொம்ப பெரிய காபிஷாப் இல்ல. எளிமையா ஆனா ரொம்ப அழகாக இருந்தது. அதுவும் என் அழகி கூட உக்காந்து இருக்கும்போது சொல்லவே வேண்டாம்…பேச ஆராம்பித்தேன்.



"நீ ஏன் உன் பாஸ்ட் லவ் பத்தி என்கிட்ட ஷேர் பண்ணலை.உனக்கு என் மேல அவ்வளவு தான் நம்பிக்கையா?.."



"நோ..நோ.. அப்படி இல்லை.உங்க மேல நம்பிக்கை இல்லாமல் இல்லை. உண்மையா அதை பத்தி சொல்ல ஒண்ணு இல்ல."



"அவன் உன்னை ரொம்ப கஷ்டபடுத்தி விட்டானா?"



"அப்படி இல்ல.அவன் ரொம்பவும் நல்லவன்.லவ் பண்ணோம்.வீட்டுல சொன்னோம்.ஒத்துக்கல. அவங்களை மீறி கல்யாணம் பண்ண தோணலை.சேர்ந்து வாழ்ந்தா மட்டும் தான் உண்மையான காதலா?.எங்க ரெண்டு பேருக்கும் தெரியும் எங்க லவ் பத்தி."



"சரி,நீ பீல் பண்ணாத"



"இல்ல.நா சந்தோசமா இருக்கேன். அவனுக்கு மேரேஜ் ஆகிருச்சு. யூ.எஸ் -ல இருக்கான்."



அவ மேல இருந்த மதிப்பு இன்னும் அதிகம் ஆச்சு.லவ்வும் தான்.



அப்புறம் அவ கேட்க ஆரம்பித்தாள்.

நீங்க உங்க லவ் பத்தி சொல்லவில்லை.



சொன்னேன்.திவ்யா-வை பத்தி. அவள் என் கண்களை கூர்ந்து கவனித்தாள்.அவள் சொன்னாள்.



"சரி,விடுங்க. இங்க சில பேருக்கு தெரியல காதல் அழகு திறமை பணம் வசதி தாண்டிய ஒண்ணுன்னு."



வெளியே மழை நின்றுவிட்டது.

கிளம்பினோம்.என் வாழ்வில் வசந்தம் தொடங்கி விட்டது.



தினமும் போனில் சேட் செய்ய ஆரம்பித்தோம்.நிறைய பேசினோம்.



நேற்று நான் உன்னை பார்த்த பார்வை வேறு

நீங்காத எண்ணம் ஆக ஆனாய் இன்று

உன்னோடு நானும் போன தூரம்

யாவும் நெஞ்சிலே

ரீங்கார நினைவுகளாக அலையை

இங்கே மிஞ்சுதே

நூலறுந்த பட்டம் போலே

உன்னை சுற்றி நானும் ஆட

கைகள் நீட்டி நீயும் பிடிக்க காத்திருக்கிறேன்




இதற்கெல்லாம் அர்த்தங்கள் என்ன

கேக்க வேண்டும் உன்னை

காலம் கை கூடினால்




கதைப்போமா கதைப்போமா

கதைப்போமா

ஒன்றாக நீயும் நானும்தான்

கதைப்போமா கதைப்போமா

கதைப்போமா

நீ பேச பேச காயம் ஆறுமே




எல்லாமே ரொம்ப நல்லா போய்ட்டு இருந்துச்சு.ஆனா பருவநிலை ஒரே மாதிரி இருப்பதில்லை.



வசந்தம் புயலாக மாறியது.



திவ்யா என்னோட ஆபீஸ்ல வேலைக்கு வந்து சேர்த்தாள். அவ என பத்தி என்ன நினைக்கிறனு எனக்கு தெரியலை.திவ்யாவும் நானும் பெரிசா பேசவில்லை.என் மனசுல இருக்குறது ரோஜா மட்டும் தான்.



அந்த நம்பிக்கையில் நா ரோஜா கிட்ட சொன்னேன்.வந்து இருக்குறது திவ்யா-னு.



அவ என்னை சந்தேகபட்டாள்-னு தெரில. ஆனா முன்னமாறி அவ என்கிட்ட பேசலை.விலக ஆரம்பித்தாள்.என் முகத்தை கூட பார்த்து பேசமாட்டாள்.



ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. திடீரென வேலை விட்டு நின்றுவிட்டாள். எனக்கு எதுவும் புரியவில்லை.ஆனா அவ இல்லாமல் என்னால் வாழ முடியவில்லை.



திவ்யாவை கூட ஈஸியாக மறக்க முடிந்தது. ஆனா இவளை…



ஆபீஸ்ல இருக்கும் போது, பாட்டு கேக்கும் போது,படம் பார்க்கும் போது அவ நியாபகம். நா வேற ஆபீஸ் போக ஆரம்பித்துவிட்டேன்.

அங்க இருந்த அவ நியாபகமா இருந்துச்சு…



கண்ணிலே கண்ணீரிலே

பிரிந்தே நான் போகின்றேன்

விண்ணிலே வெண் மேகமாய்

கலைந்தே நான் மெல்ல மெல்ல கரைந்தேன்

அழுகை என்னும் அருவியில்

தினம் தினம் நானும் விழுந்தேனே

நிலவே உன் நிழலினை

தொடர்ந்திட நானும் விளைந்தேனே

ஏன் என்னை பிரிந்தாய்

உயிரே உயிரே

காதலை எரித்தாய் என் அழகே




3 வருஷம் நரகத்தை விட மோசமா போச்சு.அவ இல்லாதபோது அவ மேல நா வைச்சு இருக்கும் காதல் எனக்கு நல்லா புரிந்தது.



நா அவளுக்கு என்னோட காதலை சரியா புரிய வைக்கலனு தோணுச்சு.

அது தான் உண்மை. நா என் காதலை அவகிட்ட சொல்லவே இல்லை. அவ மேல எந்த தப்பும் இல்லை. எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் நல்லா இருக்கும்னு தோணுச்சு.



அது அவ்வளவு சீக்கிரம் நடக்கவில்லை.அவளை பார்த்து 4 வருசம் ஆச்சு. கண்டிப்பா அவளுக்கு குழந்தை இருக்கும்.



நாங்க போன காபிஷாப்-க்கு அடிக்கடி போவேன். இந்த படத்தில் வரமாறி நானும் அவளும் திரும்ப இங்க மீட் பண்ணமாட்டமானு ஒரு நம்பிக்கையில்.



ஆனா இது வரைக்கும் அப்படி நடக்கவில்லை.ஆனா கோவிலில் பார்த்தேன்.இன்னும் அவ அப்படியே இருக்கா.



கழுத்தில் ஒரே செயின் போட்டு இருந்தா.என் நல்லநேரம் தாலி இல்ல.வெறும் நெற்றி தான்.



பார்த்தேன். அவளும் பார்த்தாள். மௌனம்.சில நிமிடங்கள் கரைந்தது.அவளே பேசினாள்.



"எப்படி இருக்கீங்க.?.."



"நல்லா இருக்கேன்.. நீ..?"



"இருக்கேன்.உங்க மனைவி?"



"எனக்கு கல்யாணம் ஆகலை."



"ஏன்?திவ்யா!"



"நா ஒண்ணும் அவளை லவ் பண்ணலை"



"நீங்கதானே சொன்னேங்க அனைக்கு..!"



"அவ என்னை விட்டு போனதும் நானும் அவளை மறந்துட்டேன்.நா உன்னை தான் லவ் பண்ணுறேன்."



அவள் கண்ணில் ஒரு ஆச்சரியம், சந்தோசம் தோன்றியது.என்னால அவள் கண்ணில் காதலை பார்க்க முடிந்தது.



சிறிய மௌனம். அவள் தொடர்ந்தாள்.



"உனக்கு என் மேல் லவ் இருக்குறது எனக்கு தெரியாது.ஆனா எனக்கு உங்க மேல லவ் வந்துருச்சு..நம்ம காபிஷாப்ல பேசுனது அப்புறம் மா..

நானே உங்ககிட்ட என் லவ்வை சொல்லணும்னு இருத்தேன்.

ஆனா அதுக்குள்ள திவ்யா வந்தா.

நீங்க திரும்ப லவ் பண்ணுவிங்கண்ணு நினைச்சேன்.அத பாக்குற சக்தி எனக்கு இல்ல.அதன் இவ்வளவு தூரம் விலகி வந்தேன்."



"ரோஜா ரியாலி ஐ லவ் யூ..திரும்பி என்னை விட்டு போகாத.."



அவள் வெட்கத்துடன் தலை அசைத்தாள்.



உனக்குள் நான் வாழும் விவரம்

நான் கண்டு வியக்கிறேன் வியர்க்கிறேன்

எனக்கு நான் அல்ல, உனக்கு தான் என்று உணர்கிறேன்




ஒருவருசம் எவ்வளவு லவ் பண்ண முடியுமோ அவ்வளவு லவ் பண்ணோம்.



எங்க வீட்டில் சொன்னோம்.எங்க வீட்டுல ஓக்கே..ஆனா அவ வீட்டில் கொஞ்சம் முரண்டு பிடித்தார்கள்.

நான் விடவில்லை.



ஒருவழியாக சம்மதம் தெரிவித்தார்கள்.வரும் முகூர்த்தத்தில் திருமணம்.நீங்களும் மறக்காம வந்துருங்க.



நா என் ரோஜா கூட கனவுல டூயட் பாட போறேன்.



வேறதுவும் தேவை இல்லை

நீ மட்டும் போதும்

கண்ணில் வைத்து காத்திருப்பேன்

என்னவானாலும்



உன் எதிரில் நான் இருக்கும்

ஒவ்வொரு நாளும்

உச்சி முதல் பாதம் வரை

வீசுது வாசம்



தினமும் ஆயிரம் முறை

பார்த்து முடித்தாலும்

இன்னும் பார்த்திட சொல்லி

பாழும் மனம் ஏங்கும்



தாரமே தாரமே வா

வாழ்வின் வாசமே வாசமே

நீ தானே தாரமே தாரமே வா

எந்தன் சுவாசமே சுவாசமே

நீ உயிரே வா




மேலும் கீழும் ஆடும் உந்தன்

மாய கண்ணாலே

மாறுவேடம் போடுது என் நாட்கள்

தன்னாலே




ஆயுள் ரேகை முழுவதுமாய்

தேயும் முன்னாலே

ஆளும் வரை வாழ்ந்திடலாம்

காதலின் உள்ளே




இந்த உலகம் தூளாய்

உடைந்து போனாலும்

அதன் ஒரு துகளில்

உன்னை கரை சேர்ப்பேன்



தாரமே தாரமே வா

வாழ்வின் வாசமே வாசமே

நீ தானே தாரமே தாரமே வா

எந்தன் சுவாசமே சுவாசமே

நீ உயிரே வா




நீ நீங்கிடும் நேரம்

காற்றும் பெரும் பாரம்

உன் கைத்தொடும் நேரம்

தீ மீதிலும் ஈரம்




நீ நடக்கும் பொழுது

நிழல் தரையில் படாது

உன் நிழலை எனது உடல்

நழுவ விடாது




பேரழகின் மேலே ஒரு

துரும்பும் தொடாது

பிஞ்சு முகம் ஒரு நொடியும்

வாடக்கூடாது




உன்னை பார்த்திருப்பேன்

விழிகள் மூடாது

உன்னை தாண்டி

எதுவும் தெரியகூடாது




தாரமே தாரமே வா

வாழ்வின் வாசமே வாசமே

நீ தானே தாரமே தாரமே வா

எந்தன் சுவாசமே சுவாசமே

நீ உயிரே வா



..சுபம்..
 

New Threads

Top Bottom