Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BK NOVEL காத்திருந்தேன்! உனையே எதிர்பார்த்திருந்தேன்! - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited:

தமிழ் வெண்பா

New member
Vannangal Writer
Messages
18
Reaction score
19
Points
3
காத்திருந்தேன்..! உனையே எதிர்பார்த்திருந்தேன்..!

அத்தியாயம் 1:


ஒருபுறமோ மங்கை அவள் கார்கூந்தலில் முல்லை அரும்புகளை அள்ளி தெளித்ததைப் போல், வானமெங்கும் விரவிக் கிடந்தது நட்சத்திர கூட்டம். மற்றொரு புறமோ அதற்கு நேர்எதிர் திசையில், செங்காந்தள் மலர்களை அரைத்துப் பூசியதைப் போல செக்கசிவந்து கிடக்கிறது வானம். கருமையும் செம்மையும் சேருமிடத்தை பிரித்தரிய முடியா வண்ணம், செம்மையில் தொடங்கி கருமையில் முடிந்திருந்தது வானம்.

தன்னை சுற்றிலும் சகாரா பாலைவனமாய் வரிவரியாய் கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீண்டு விரவிக் கிடக்கிறது வெண்மணல் பாதை. அப்படி இருந்தும் மண்ணும் விண்ணும் தொடும் அந்த ஒற்றை புள்ளி, அவன் கைக்கெட்டிய தொலைவில்.

மலரின் மகரந்தம் மண்ணில் விழுந்தாலும் பேரிகையாய் அதிரக்கூடும். அப்படியொரு அசாத்திய அமைதி. ஆள் அரவமற்ற கொடிய தனிமை. அந்த தனிமைக்கு இனிமை சேர்க்கும் வண்ணம் மெல்லிய ஊதல் காற்று அவனின் உடலெங்கும் உல்லாச பயணம் செல்ல, உடன் வந்த மெல்லிசையோ செவி வழி புகுந்து சிந்தையை மொத்தமாய் ஆலிங்கனம் செய்கிறது. இன்னிசை தான் என்றாலும் மென்சோகம் ஒன்று இழைந்தோடுகிறது அந்த இசையில். அந்த சோகம் அவன் உயிரையும் ஒரு உலுக்கு, உலுக்க தவறவில்லை.

சுற்றும் முற்றும் கண்களால் துழவுகிறான் அவன். அவனையன்றி கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாருமேயில்லை. 'பிறகெப்படி இந்த இசை மட்டும் சாத்தியம்?' வண்டாய் மனதைக் குடைகிறது கேள்வி. மூளை கட்டளையிடும் முன்னே கால்கள் அனிச்சை செயலாய் இசையின் திசை நோக்கி பயணப்படுகிறது. சில நொடிகளா? சில மணி நேரங்களா? இல்லை சில யுகங்கள் தான் கடந்துவிட்டன அவன் அறியவில்லை. அந்த பாதையும் முடியவதாயில்லை. அந்த இசையும் நின்றபாடில்லை. கால்கள் சற்றே இளைப்பாற இறைஞ்சுகிறது. இளைப்பாறவும் இடமின்றி வெறித்து கிடக்கிறது அந்த வெண்மணல் பாதை. நின்ற இடத்தில் அப்படியே சோர்ந்து அமர, பார்வை விழும் தூரம் வரை கண்களால் வலை வீசுகிறான் அவன்.

அதோ, அங்கே தூரமாய் ஒரு புள்ளிப் போல ஏதோ ஒன்று கண்ணுக்கு புலனாகிறது. இன்னதென்று வரையறுக்க முடியவில்லை அவனாலும். 'பாலைவன கானல் நீராய் இருக்குமோ? ஆனால் இசை அந்த புள்ளியில் இருந்து தானே புறபடுகிறது.' தனக்குள் எண்ணமிட்டவன், சோர்ந்த மனதை தெம்புட்டி அந்த புள்ளி நோக்கி பயணித்தை தொடர்கிறான். இந்த பாதைக்கொரு முடிவேயில்லையா என்னும் விதமாய் நெருங்க நெருங்க விலகிக் கொண்டே போகிறது அந்த புள்ளி.

நடந்து நடந்து அலுத்துப் போனவன் இனி நடக்கவே முடியாதென்று எண்ணுகின்ற வேளையில் கைக்கெட்டும் தொலைவில் பிரமாண்டமாய் உயர்ந்து நிற்கிறது அரண்மணை ஒன்று. இது வரை புள்ளியாய் தோன்றிய காட்சி இப்போது எப்படி கைக்கருகில். சந்தேக கேள்விகளுக்கு தடைவிதித்து அவனின் சிந்தனையை மொத்தமாய் சிரையெடுக்கிறது அந்த அரண்மனையினீ அழகியலும் நுண்வேலைபாடுகளும்.

வானில் ஜொலிக்கும் ஒற்றை நிலாவாய் அரண்மனை மாடத்தில் அவள். தாமரையாய் சிவந்திருந்த முகமோ, மோப்ப குழையும் அனிச்சயாய் வாடிக் கிடக்கிறது. மைதீட்டிய கூர் விழிகளோ கலங்கி சிவந்து எந்நேரமும் கண்ணீர் முத்துக்களை உகுக்க தயாராய் இருக்கிறது. காற்றோடு கதைப் பேசிய கார்கூந்தல் ஆதவனின் செங்கதிரின் உபயோகத்தால் பளபளத்துக் கொண்டிருக்கிறது. அவளின் வெண்பிஞ்சு விரள்கள் பற்றியிருந்த மகரயாழோ நீண்ட காலமாய் முகாரி மட்டுமே பாடி பழக்கப்பட்டதைப் போல சோககீதம் வாசித்துக் கொண்டிருக்கிறது.

அவளின் இந்நிலை அவனை ஏதோ செய்கிறது. ஏதோ என்ன உயிரை வேறோடு அறுத்துச் செல்கிறது. இமைக்க மறந்து(த்து) அவளின் வதன முகம் தான் பார்த்திருக்கிறான் அவன். ஏனிந்த சோகம்? ஏனிந்த கலக்கம்? கேட்க துடிக்கிறது நாவு. அவனின் எண்ணம் உணர்ந்தவளாய், சற்றே பார்வையை தாழ்த்தி, அவனை நோக்குகிறாள். என்ன செய்கிறாள் அவள். விழி வழி அவள் சோகத்தை அவனிடத்தில் கடத்த முயல்கிறாளா? ஒற்றை முத்து உருண்டு திரண்டு அவள் கன்னம் தான்டி, அவன் கரங்களில் வந்து அடைக்கலம் சேர்கிறது. அதே நேரம் வரவரிவாய் இருந்த வெண்பஞ்சு மணல் ஆழிப் பேரலையாய் மாறி அவனை தன்னுள் சுருட்டிக் கொள்ளப் பார்க்கிறது.

சர்வமும் அடங்கி அதிர்ந்து தான் போகிறது ஒரு நொடி. வரிவரியான வெண்பஞ்சு மணல் பாதை, துள்ளி குதிக்கும் அலைகளாகவும், அதன் வெண்மை நிறம் அலை அமர்ந்த வெண்பஞ்சு நுரையாகவும் தெரிகறது. அப்போது தான் புரிகிறது இதுகாறும் அவன் நடந்தது, நின்றது அத்தனையும் கடலின் மேற்பரப்பிலென்று. அத்தனையும் அவன் உணரும் நொடிக்குள்ளேயே அந்த பேரலை அவனைத் தன்னோடு சேர்த்து வாறி சுருட்டிக் கொள்கிறது.

பெரும் போராட்டத்திற்கிடையே அவளின் நிலை அறிய முற்படுகிறான் அவன். அவளுமே அந்த அரண்மனையோடு சேர்த்து நீருக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் மூழ்கிக் கொண்டிருக்கிறாள். அப்போதும் இவனைத்தான் இமைக்காது பார்த்தபடி அசையாமல் யாழ் மீட்டிக் கொண்டிருக்கிறாள். 'என்னை காக்க மாட்டாயா?' என்ற வினாவோடு சோகமும் விரவிக் கிடகிறது அவளின் விழிப்படலத்தில். அவளை எப்படியும் காத்துவிட கரங்கள் துடிக்கிறது. இருந்தும் அந்த பேரலையில் இருந்தும் மீள முடியவில்லை அவனால்.

இவனைப் பார்த்தபடியே கொஞ்சம் கொஞ்சமாய் நீருக்குள் மூழ்கி மொத்தமாய் மறைந்துப் போகிறாள் அவள். இவனையும் அப்பேரலை தன்னுள் இழுத்துக் கொள்கிறது. கொஞ்சம் கொஞ்சமாய் உடலில் உட்புகுந்த உவர்நீர் மொத்தமாய் நுரையீரலை ஆட்சிச் செய்கிறது. மூச்சு முட்டிகிறது. எக்கி எக்கி தலையை வெளியே நீட்டி சுவாசத்தை தன்னுள் கடத்த முயல்கிறான். முழுதாய் நீரை நிரப்பிக் கொண்ட நுரையீரலும் பாங்காய் வேலைநிறுத்தம் செய்ய, மத்த உறுப்புகளும் அதனுடன் சேர்ந்துக் கொண்டு ஒத்துழையாமை இயக்கம் நடத்துகிறது. இறுதி கட்ட போராட்டமாய் அந்த பேரலையிலிருந்து மீண்டிட தவித்து துடிக்கிறது அவன் உயிர். ஆனால் அதற்கு கொஞ்சம் பலனின்றி உயிரை தனியே தவிக்கவிட்டு உடல் மட்டும் மொத்தமாய் அந்த பேரலைக்குள் மூழ்கி மறைந்தேப் போகிறது.

"அடி யாத்தே... எடிபட்ட பய... என் இடுப்ப உடைச்சுபுட்டானே..." அலறிய படியே கட்டிலில் இருந்து உருண்டு கீழே விழுந்திருந்தான் ஜெகன். அவனின் இந்நிலைக்கு காரணமானவனோ இன்னும் கனவுலகில் சஞ்சரித்தபடி உயிரை காக்கும் இறுதிக்கட்ட போராட்டத்தில் ஈடுபட்டிருந்தான்.

ஜெகனின் அலறல் சத்ததில் அதே அறையில் மற்றொரு கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த டேவிட்டும் சுமனும் என்னவோ ஏதொவென்று அடித்துப் பிடித்து எழுந்து அமர, ஜெகனோ இன்னும் எழ முடியாமல் இடுப்பை பிடித்தபடி புலம்பிக் கொண்டிருந்தான்.

"ஐய்யோ ஜெகா... என்னடா ஆச்சு உனக்கு... ஏன் இடுப்ப புடிச்சுட்டு கீழ கிடக்க..?" என்றான் டேவிட். அவனின் பரிதாப குரலுக்கும் இதழ் சிந்திய குறும்பு புன்னகைக்கும் கொஞ்சமும் சம்மந்தம் இருப்பதாய் தெரியவில்லை.

"நான் ஏன் கீழ கிடக்கனேனு உனக்கு தெரியாவே தெரியாது... அப்படிதானே... நல்லா நடிக்கறடா யப்பா... படிச்சு படிச்சு சொன்னேனடா... பொத்துனாப்புல செவுத்த ஒட்டி ஒரு ஓரமா படுத்துக்கறேனு... கேட்டீங்களா... சிரிக்காதடா செம கடுப்பாகுது எனக்கு..." என்றவன் அதற்கு காரணமானவனை பார்க்க பற்றிக் கொண்டு வந்தது. 'உதைக்கறதையும் உதைச்சு தள்ளிட்டு தொர இன்னும் தண்ணீல தத்தளிக்கறத பாரு...' என்றவன் மெல்ல முனகியபடியே தட்டு தடுமாறி அருகிலிருந்த மேஜையின் கால்களை பற்றிக் கொண்டு எழ, மற்ற இருவரும் அவனின் வினோத முனகல் சத்தத்தில் வாய்விட்டு சிரித்துக் கொண்டிருந்தனர்.

"ஏன்டா தடுமாட்டு பயலுவளா... ஒருத்தன் ஏந்திரிக்க முடியாம தடுமாறிட்டு இருக்கானே... கைய குடுத்து தூக்கி விடுவோனு இல்லாம என்னாடா இழிப்பு வேண்டி கடக்கு இழிப்பு..." என்க, சிரித்தபடியே தான் வந்து தூக்கிவிட்டனர் அவர்கள்.

"இல்லடா மச்சான்... எப்ப பாரு உன் குறுக்கையே உடைக்கறேனே... என்னைக்காவது ஒரு நாள் தப்பி தவறி ஒரு ஜான் இறக்கி உதைச்சா என்னாகுமுனு நினைச்சேன்... சிரிச்சேன்..." என டேவிட் சொல்ல, "வேற என்னாகும் மச்சானுக்கு பத்து பைசா செலவில்லா குடும கட்டுபாடு ஆப்ரேஷன் நடக்கும்..." என்றபடி சுமனும் அவனோடு சேர்ந்து சிரிக்க, இவற்றிற்கெல்லாம் காரணமானவனோ இன்னும் கட்டிலிலேயே நீச்சல் பழகிக் கொண்டிருந்தான்.

"எல்லாம் இந்த எடுபட்ட பயலால வரது..." என்றபடியே அருகில் இருந்த குளிர்ந்த நீரை எடுத்து அவன் தலைமுதல் பாதம் வரை ஊற்ற,

"தண்ணீ... தண்ணீ... காப்பாத்துங்க... யாராவது என்ன காப்பாத்துங்க..." என்றபடியே இன்னும் கட்டிலில் தான் கவிழ்ந்து படுத்து நீச்சல் பழகிக் கொண்டிருந்தான் அவன்.

இதில் இன்னும் அதிக எரிச்சலுன்ற ஜெகன், "நேமி... டேய்... நேமி... இன்னும் நீ சாகல... என்ன தான் தினம் தினம் சாவடிச்சுட்டு இருக்க... ஏந்திரி முதல..." என தோளைப்பற்றி வேகமாக உலுக்கவும் தான் கண்ணை கசக்கிக் கொண்டு மெல்ல எழுந்தமர்ந்தான் நேமியோன். 'இப்ப நான் எங்க இருக்கேன்..?' என்ற ஒற்றை வினாவை தவிர, சித்தம் பிறதழ்கான மற்ற அத்தனை அறிகுறிகளும் அம்சமாய் பொருந்தி இருந்தது அவனுக்கு.

"எரும மாடே... மாசத்துல நாலு நாள் இதே பொழப்பா போச்சு உனக்கு... உன்ன நம்பி நிம்மதியா பக்கத்துல படுக்க முடியுதாடா... நீயெல்லாம் ஒரு மனுஷ ஜென்மமாடா..?" என்றபடியே நேமியை முறைத்துக் கொண்டிருந்தான் ஜெகன்.

அவனோ அசடு வழிந்தபடியே, "சாரிடா ஜெகா... பயங்கரமான ஒரு கனவுடா..." என விவரிக்க தொடங்க, அவனை இடையிட்டு தடுத்தனர் மற்ற மூவரும்.

"தெய்வமே... இத்தோட நிறுத்திக்க... இதேயே இதுவரைக்கும் நாலாயிரத்து நானூத்தி நாலு தடவ சொல்லிட்ட..." என ஜெகன் கையெடுத்துக் குடும்பிட, அதைக் கவனியாதவன் போல, மீண்டும் தொடங்கியவனை தடுத்து நிறுத்தி சுமனே தொடர்ந்தான்.

"யாருமே இல்லாத அத்துவான காட்டுல நீ மட்டும் தன்னந்தனியா நின்னுட்டுருக்க... அதானடா..." என சுமன் வடிவேலு பாணியில் கேட்க,

"அதே தான்..." என்றனர் மற்ற இருவரும் கோரஸாக.

"ஒரு பக்கம் பாத்தா இருட்டு... இன்னொரு பக்கம் பாத்தா வெளிச்சம்... சுத்தி வெறும் மண்ணு அதானேடா..."

"அதே தான்..."

"அப்ப தீடிருனு ஒரு பாட்டு சத்தம்... அதனாடா..."

"அதே தான்..." மற்ற இருவர்.

"அதான் இல்ல... அது பாட்டுல்ல... ஏதோ மியூசிக்..." என்றான் நேமி இடைபுகுந்து.

"ரொம்ப முக்கியம்... நீ அத கேட்டு மயங்கி பேக்கு மாதிரி மியூசிக் வந்த திசையில போய்ட்டு இருக்க... அதானேடா..."

"அதேதான்..."

"அப்படி போகும் போது திடீருனு ஒரு அரண்மனை... அங்க ஒரு பொண்ணு உக்காந்து..."

"சிறு திருத்தம் நின்னுட்டு..." என இடைபுகுந்த நேமியை முறைத்தவாறே தொடர்ந்தான் சுமன்.

"நின்னுட்டு சோகமா என்னத்தையோ வாசிச்சுட்டு இருக்கு... நீ அவள பாக்குற... அவ உன்ன பாக்குறா... இப்படி நீ பாக்க... அவ பாக்க... இப்படி பாத்துட்டே இருக்கும் போது பெரிய அலை ஒன்னு வந்து இரண்டு பேரையும் மூழ்கடிச்சு சாவடிச்சுடுது... அதானேடா..."

"அதேதான்..."

"நீ சாவப் போறதா நினைச்சுட்டு பக்கத்துல படுத்திருக்கவன ஒவ்வொரு தடவையும் சாவடிச்சுட்டு இருக்க... அதானேடா..." என புதிதாய் ஒரு குரல் கேட்க, குரல் வந்த திசையில் நால்வரும் திரும்பி பார்க்க அவர்களை முறைத்தபடி இடுப்பில் கைவைத்து நின்றுக் கொண்டிருந்தாள் சாரா.

"இப்படியே உக்காந்து கதாகாலட்சேபம் பண்ணிட்டு இருந்தா எப்ப கிளம்பி வேலைக்கு போறதாம்... இப்பவே மணி எட்டரையாகுது... இனிமே எப்ப நீங்க கிளம்பி வந்து... கேப்டன் வந்து உங்க எல்லாரையும் கிழிச்சு நார்நாரா தொங்க விட்டா தான்டா அடங்குவீங்க... இதுல தொர சீப் ஆபிஸர் வேற... சீக்கரம் வந்து தொலைங்க..." படபடவென பொறிந்தவள் தனது சீருடையை சரி செய்தபடியே வெளியே செல்ல,

"பூட்டுன கதவு பூட்டுன மாதிரியே தானடா இருக்கு... இந்த குட்டி சாத்தான் எப்படிடா உள்ள வந்துச்சு..." என்ற டேவிட்டுக்கு பால்கனி பக்கம் கையைக் காட்டிவிட்டு கதவை ஓங்கி அறைந்து சாற்றிவிட்டு வெளியேறிவிட்டாள் அவள்.

அவள் சென்றதுமே அடித்துப் பிடித்துக் கொண்டு மற்ற மூவரும் அவரவர் அறைக்கு எழுந்து ஓட, உண்மைக்கும் ஒரு பேரலை அடித்து ஓய்ந்தது போல தான் இருந்தது அந்த அறையில். அதே அவசரம் நேமியையும் தொற்றிக் கொள்ள வேகமாக எழுந்து குளியலறைக்குள் புகுந்துக் கொண்டான்.

சரியாக அடுத்த கால்மணி நேரத்தில் தனது வெண் சீருடை சகிதம் தயாராகி வந்திருந்தான் நேமியோன். திறந்திருந்த பால்கனியின் வழியே சில்லென்ற காற்று அவன் உடலை தழுவ அங்கே சென்று இரு கரங்களினாலும் கம்பிகளை பற்றியபடி நின்றான் அவன்.

இன்னும் இரவு முழுதாய் முழுதாய் முடிந்திருக்கவில்லை. முழுநிலவுக்கு முந்தைய நாள் என்பதால் நிலவு சற்றே பிரகாசமாய் ஒளிர்ந்துக் கொண்டிருந்து. கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடல் விரிந்து கிடந்தது. அந்த ஆழ்கடலின் அமைதியோடு அந்த சொகுசு கப்பலும் சிறு சலனமும் இன்றி மெல்ல அக்கடலின் மேல்பரப்பில் ஊர்ந்துக் கொண்டிருந்தது. தூரத்தில் ஒரு புள்ளியில் சங்கமிக்கும் கடலலையும் நிலவையுமே இமைக்காது பார்த்திருந்தான் அவன். அழகான குறுநகை ஒன்று தானாய் வந்து ஒட்டிக் கொண்டது அந்த இதழ்களில்.

இந்த பரந்து விரிந்த பெரும் கடலுக்கு அவன் தான் அரசனாமே. இந்த பெயருக்கு கூட அர்த்தம் அதுதான். ஆயிரம் முறை அவன் அன்னை சொல்ல கேட்டிருக்கிறான். ஒவ்வொரு முறை சொல்லும் போது அப்படியொரு பெருமிதம் மின்னி மறையும் அவர் கண்களில். மீண்டும் ஒரே ஒரு முறை அவர் அதை சொல்ல கேட்க மாட்டோமா என்றிருத்தது.

நான்கு மணி ஆகிவிட்டதை கடிகாரத்தில் இருந்த செயற்கை குயில் நான்கு முறை கூவி உறுதிப்படுத்த, சுயம் மீண்டவனாய் அவசர அவசரமாக பால்கனி கதவை இழுத்து மூடிவிட்டு வெளியே வந்தான் அவன். அவனுக்கு முன்பே வந்துவிட்ட மற்றவர்கள் தங்கள் பணிகளை துவங்கியிருக்க, இவனும் தன் படியை துவங்கினான். அவசர அவசரமாக கையில் ஒரு காபி கோப்பையோடு வந்த சாரா, அதை அவன் கைகளில் திணித்துவிட்டு, ஒரு வார்த்தை பேசாமல் விறுவிறுவென தன் வேலையை கவனிக்க சென்றுவிட்டாள். அவள் செயலால் அழகாய் மலர்ந்த முறுவலை மறைக்க அவன் முற்படவில்லை.

நேமியோன், ஜெகன், சுமன், டேவிட், சாரா ஐவரும் பள்ளி காலம் தொட்டு இன்று வரை நட்பு வட்டத்திற்குள் இருப்பவர்கள். இந்த நெருங்கிய பிணைப்பிற்கு அவர்கள் அனைவரும் இந்திய வம்சாவளியை அதிலும் குறிப்பாக அனைவருமே தமிழ் வம்சாவளியை சேர்ந்தவர்களாக இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். பள்ளி, கல்லூரி முடித்து இதோ இந்த சொகுசு கப்பலில் பயிற்சியில் சேர்ந்து படிபடியாக உயர்ந்து அனைவருமே தலைமை அதிகாரி (chief officer - grade 1) என்ற நிலையில் இருக்கின்றனர். அவர்களின் பணி நேரம் காலை நான்கு முதல் எட்டு வரை. மீண்டும் மாலை நான்கு முதல் இரவு எட்டு வரை. அன்றைய நிகழ்வுகளை சரிபார்த்து கப்பலின் கேப்டனிடம் அறிக்கை சமர்பிக்க வேண்டும்.

8 தளங்களைக் கொண்ட அவர்களின் சொகுசு கப்பல் 1320 பயணிகளையும் 350 ஊழியர்களையும் சுமந்துக் கொண்டு நியூயார்கில் இருந்து கிளம்பி இன்றோடு பத்து நாட்கள் ஆகிறது. இன்னும் 140 நாட்கள் பயணம் பாக்கி இருக்கிறது. நியூயார்கில் இருந்து கிளம்பி மீண்டும் நியூயார்கையே வந்தடைகறது. இடையில் 57 துறைமுகங்களில் தங்க திட்டமிடப்பட்டுள்ளது. விரும்பும் பயணிகள் அருகிலிருக்கும் புகழ்மிக்க சுற்றுலா தளங்களுக்கு சென்று வர நிர்வாகத்தின் சார்பாக ஏற்பாடு செய்யபடும்.

காலை எட்டு மணிக்கு தங்கள் பணியை முடித்துக் கொண்டு இரண்டாம் தளத்திலிருந்த உணவு கூடத்தில் அவர்களுக்கான உணவுடன் குழுமி இருந்தனர் ஐவரும்.

"சுமன்... நாளைக்கு கப்பல் மியாமி துறைமுகம் போய்டும்... இரண்டு நாள் அங்க தான்... எங்க போகலானு பிளான் பண்ணிட்டீங்களா..." என்றாள் சாரா.

"எங்க போறது எல்லாமே பாத்த இடம் தானே... சாப்பிட்டு இங்கேயே தூங்கி ரெஸ்டாவது எடுக்கலாம்..." என்றான் ஜெகன் தன் கை மறைவில் நீண்ட கொட்டாவியை வெளியேற்றியபடியே.

"ஆமான்... ஆமான்... நடுகடல நின்னுட்டு இருந்த கப்பல தள்ளி தள்ளி தொர ரொம்ப களைச்சுப் போய்ட்டீங்கல... ரெஸ்ட் அவசியம் தான்..." என்றான் டேவிட் தன்னிடமிருந்த பழச்சாற்றை எடுத்து உறிஞ்சியபடி படு நக்கலாக.

"அப்ப எங்க போகலாம் நீயே சொல்லு..." என்றான் சுமன்.

"மியாமில பாக்கவா இடம் இல்ல... அந்த நீலமும் பச்சையும் கலந்த கடலோட வெள்ளை மணலும்னு... எத்தன தடவ பாத்தாலும் அழுத்து போகுமா என்ன... இந்த தடவையும் நாம மியாமி பீச்சுக்கே போகலாம்..." என்றான் டேவிட்.

"நீ எதுக்கு அடிப் போடறனு நல்லா தெரியுது மகனே... எத்தன தடவ பீச்சுக்கு போறது... இந்த ஒரு தடவ சாப்பிங் போகலாம்ப்பா..." என்றான் சுமன்.

"எப்ப பாரு சாப்பிங் சாப்பிங்... சம்பாதிக்கற மொத்த பணமும் இப்படி தான் காலியாகுது உனக்கு... அப்படி என்னதான் இருக்கோ இந்த சாப்பிங்ல..." சாரா அலுத்துக் கொள்ள,

"அதெல்லாம் ரசிச்சு அனுபவிச்சு பாத்தா தான்டி தெரியும் எரும மாடே..." என்றான் சுமன். அவனுக்கு பழங்கால பொருட்களை சேகரிப்பதில் அப்படி ஒரு ஆர்வம். தேடி அலைந்து எத்தனை விலை என்றாலும் கொடுத்து வாங்கி விடுவான்.

"நாம ஏன் அக்வரியம் போக கூடாது... செமையா இருக்கும்... வெரைட்டி வெரைட்டியா கண்ண பறிக்கற மாதிரி கலர் கலர் மீனுங்க..." சிலிர்ந்து சொல்லிக் கொண்டிருந்தாள் சாரா.

"ஏன்... வெரைட்டி வெரைட்டியா இருந்தா எண்ண சட்டில போட்டு வறுத்தா தீங்க போற... ஒழுங்கா பீச்சுக்கே போகலாம்..." என்றான் டேவிட்.

"நீங்க எங்க வேணாலும் போங்க... ஆனா இவனையும் கூட்டி போய் தொலைங்க... நான் ரெண்டு நாள் இவன் தொல்ல இல்லாம நிம்மதியா தூங்குவேன்..." நேமியை கைக்காட்டி ஜெகன் சொல்ல, "சரியான கும்பகர்ணன்டா நீ..." என்றாள் சாரா.

இப்போது தான் மற்ற நால்வருமே நேமியை கவனித்தனர். அத்தனை அமைதியாய் ஏதோ தீவிர சிந்தனையில் இருந்தான் அவன்.

"டேய் நேமி... நீ என்னடா யோசிக்கற..." என சாரா அவனை லேசாக உலுக்கி கேட்க,

"நாம ஏன் ஒரு லாங் ட்ரைவ் போக கூடாது..." என்றான் அவன் யோசனையாய்.

"யா...ஹூ... சூப்பர் ஐடியா..." நால்வரும் ஒரு சேர ஆமோதிக்க, கடலிலேயே சுற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு தரையில் சுற்றவும் ஆசை இருக்கும் தானே.

"ஆனா நமக்கு கார் வேணுமே... ரெண்ட்க்கு எடுக்கலாம்னா கூட உடனே எப்படி கிடைக்கும் கிடைக்கும்... முன்னாடியே ஏற்பாடு பண்ணி இருக்கனும் இல்ல..."

"ஏ... மேன் கடல லாங் ட்ரை போறதுக்கு கார் எதுக்கு மேன்... சிப்ல இருக்க ஒரு போட் போதாது..." என்றான் அவன் யோசனையாய்.

"நீயெல்லாம் உண்மைக்குமே மனுஷன் தானா... எத்தன நாள் இந்த கடல சுத்தனாலும் இந்த கடல் பைத்தியம் உன்னவிட்டு போகாதா..?" ஜெகன் வெளிப்படையாய் தலையில் அடிந்துக் கொள்ள, மற்ற மூவரும் முறைத்துக் கொண்டிருந்தனர் அவனை.

"இரண்டு நாளுக்கப்பறம் கப்பலையும் அதே கடலுக்குள்ள தான போக போற... அதுக்குள்ள என்ன அவசரம் உனக்கு..."

"இரண்டு நாளைக்கு அப்பறமும் போவோம் தான்... ஆனா பெர்முடா போக மாட்டேமே..." என்றவனை அதிர்ந்துப் பார்த்தனர் மற்றவர்கள்.

"நீ விளையால தான நேமி..." சாரா அச்சமாய் அவனை வினவ,

"இதுல விளையாட என்ன இருக்கு சாரா... நான் முடிவு பண்ணிட்டேன்... பெர்முடா இந்த தடவ போயே ஆகனும்... யார் வருவீங்க... வர மாட்டீங்க... அதெல்லாம் உங்க விருப்பம்... நான் போக தான் போறேன்..." என உறுதியாக மொழிந்தவனை உடலில் உதறல் எடுக்க அச்சத்துடன் பார்த்திருந்தனர் மற்ற நால்வரும்.

- காத்திருப்பு தொடரும்...

வாசித்த அன்பு உள்ளங்களுக்கு நன்றி. கருத்துக்கள் பெரும் ஆவலோடு எதிர்ப் பார்க்கப்படுகிறது.
 
Last edited:

தமிழ் வெண்பா

New member
Vannangal Writer
Messages
18
Reaction score
19
Points
3
காத்திருந்தேன்..! உனையே எதிர்பார்த்திருந்தேன்..!

அத்தியாயம் 2:


நேமி பெர்முடா செல்வோம் என சொல்லவுமே அத்தனை பேரின் முகமுமே அதிர்ச்சியை தத்தெடுத்தது என்னவோ ஒரு சில நிமிடங்கள் தான்.

"வாங்க... வாங்க... எல்லான் ஒன்னா போகலாம்... போய் செத்து செத்து விளையாடலாம்..." என்றான் சுமன்.

"சாவுறதா இருந்தா நீ போய் சாவு மேன்... ஒய் அஸ்..." என்றான் ஜெகன்.

"நைஸ் ஜோக் மேன்... அப்படியே இன்னொரு ஜோக் சொல்லேன்..." என டேவிட் சொல்ல,

நேமியோனின் முகத்தில் தெரிந்த தீவிரத்தை அவதானித்தபடி எப்படி தடுக்கலாம் என யோசனையில் ஆழ்ந்திருந்தாள் சாரா.

"உங்கள எவன்டா இங்க வெத்தல பாக்கு வச்சு கூப்பிட்டா... நான் தனியாவே போறேன்... சாவறேன்... யாரும் என் கூட வந்து சாவுங்கனு நான் கூப்பிடலையே..." என எழுந்து செல்ல முயன்றவனின் கையைப் பற்றி அமர வைத்தாள் சாரா.

"இது விளையாட்டு இல்ல நேமி... மியாமில இருந்து பெர்முடா போகனுமுனா பெர்முடா முக்கோணத்து வழியா தான் போகனும்... அது அவ்வளவு பாதுகாப்பு இல்ல... அதனால தான் நாமே கடல சுத்தி ஊர்கோலம் போய்ட்டு இருக்கோம்... தெரியும் தான உனக்கு... அப்பறமும் என்னடா..?" என்றாள் சாரா அவனை சாமாதானப் படுத்தும் வகையில்.

"ஆமான்... ஆமான்... பெர்முடா முக்கோணம் வழியா எல்லாம் போகமுடியாது... ஏதோ அங்க ஏலியன்ஸ் இருக்குன்றாங்க... அது நம்ம கடத்திட்டு போய்டுமுனு சொல்லறாங்க..." என்றான் சுமன் சந்திரமுகி வடிவேலு பாணியில்.

அவனை தொடர்ந்து அதேப் போலவே, "ஏதோ அட்லாண்டாங்கற பெரிய இடம் கடலுக்குள்ள முழ்கிட்டதாவும், அதுல பையர் கிரிஸ்டல் இருக்கதாவும், அதுல இருந்து வர லைட் வேவ்ஸ் கப்பலையே கவுந்துடுனும் சொல்லறாங்க..." என்றான் ஜெகன்.

"அது எல்லாத்துக்கும் மேல அங்க எப்ப வேணா என்ன வேணா நடக்கலாம்னு சொல்லறாங்க முருகேசு..." என்றான் டேவிட் படு தீவிரமாக.

"என்ன நக்கலா... இதுக்கெல்லாம் ஆதாரம் இருக்கா என்ன... அந்த கட்டு கதையெல்லாம் நம்ப நான் தாயாரா இல்ல... இந்த தடவ நான் போயே ஆகனும்..." என்றான் நேமி.

"ஒவ்வொரு தடவ மியாமி வரப்பவும் உனக்கு இதே பொழப்பா போச்சுடா... இவங்க எல்லாரும் சொல்லறதுக்கு வேணா ஆதரம் இல்லாம இருக்கலாம்... ஆனா அங்க நிலவுற அசாதாரண காலநிலை பத்தி உனக்கே தெரியும் தானே...அப்பறமும் ஏன்டா ஒவ்வொரு தடவ மியாமி வரப்பையும் அடம் பிடிக்கற... எந்நேரம் வேணாலும் கடல் சூறாவளி வரலாம்... அங்க இருக்க அரியவகை கடல்பாசிங்க அதிகபடியா வெளியிடற மீத்தேன் வாயுவோட அழுத்தத்தால குண்டி வெடிப்பு மாதிரியும் நிகழலாம்... இன்னும் அந்த இடத்துக்கு நாம போக வேண்டானு சொல்லறதுக்கு எத்தனையோ காரணங்கள் இருக்கு... புரிஞ்சுக்கோ நேமி..." என்றாள் இறைஞ்சுதலாக சாரா.

"நீங்க எல்லாம் போக வேண்டானு சொல்ல ஆயிரம் காரணம் இருக்கலாம்... ஆனா நான் போகனுமுனு சொல்லறதுக்கு ஒரே ஒரு காரணம் தான்... உங்க யாருக்கும் தான் என்னோட மனசு புரியல... அது தவிக்கற தவிப்பு புரியல... என்னோட குற்ற உணர்ச்சி புரியல... இந்த தடவ யார் என்ன சொன்னாலும் நான் கேட்க போறதில்ல... எத்தனையோ கப்பல் விமானங்கள் அந்த வழியா போய்கிட்டு தான இருக்கு... யாரும் ஒன்னும் கடலுக்குள்ள விழுந்து செத்துடல... ஆனா நம்பிக்கையில்லாம யாரும் என்கூட வந்து சாக வேண்டாம்... என்ன எப்படி பாத்துக்கறதுனு எனக்கே தெரியும்..." என்றான் நேமி கண்களில் வலியோடு. ஒருசில கண்ணீர் முத்துக்களும் உருண்டு திரண்டு நின்றிருந்தது அவனின் இமையோரம்.

"பச்... இதென்ன சின்னபுள்ள மாதிரி அடம்பிடிக்கற நேமி... உன்ன புரியாதா எங்களுக்கு..." என்றாள் சாரா ஆறுதலாக அவன் கையைப் பற்றிக் கொண்டு.

"இல்ல சாரா உங்க யாருக்குமே என்னோட வலிப் புரியல... புரிஞ்சு இருந்தா இத்தன வருஷமா என்ன தடுத்து இருப்பீங்களா..." என்றான் வேதனை சுமந்த குரலில் நேமி.

"ஹாலோ தம்பி... நீங்களே நினைச்சாலும் அந்த பாதையில போக முடியாது... ஏன்னா அது அரசாங்கம் தடை செஞ்ச கடல் பகுதி..." என்றான் சுமன்.

"அப்படியே யாருக்கும் தெரியாம போகனும்னாலும் போய் இருக்க முடியாது... ஏன்னா இந்த வருஷம் தான் நமக்கு சீஃப்பா ப்ரோமோஷன் கிடைக்குச்சு இருக்கு... அதுக்கு முன்னாடி நீங்களே நினைச்சாலும் சீஃப் கிட்டையும் கேப்டன் கிட்டையும் ரிப்போர்ட் பண்ணாம போட்ல கைய வைக்க முடியாது தெரியும்ல..." என்றான் டேவிட்.

"அதே தான் ராசா... தலையால நீ நின்னு தண்ணீ குடிச்சாலும் இதுக்கு முன்னாடி பெர்முடா போய் இருக்க முடியாது... இனிமேலும் போக முடியாது..." என்றான் ஜெகன்.

"கண்டிப்பா முடியும்... நீங்க உதவி பண்ணிருந்தா போய் இருக்கலாம்... ஆனா உங்க யாருக்கும் தான் என்னோட உணர்வுகளே புரியலையே... அப்பறம் எப்படி உதவி பண்ணுவீங்க... ஆனா இந்த தடவ அப்படி இல்ல... நானுமே சீஃப் தான்... என்னால என்ன முடியுமோ அத நானே பாத்துக்கறேன்..." என்றவன் பற்றியிருந்த சாராவின் கைகளை உதறித் தள்ளிவிட்டு அவர்கள் கத்தி கத்தி அழைப்பதையும் காதில் வாங்கிக் கொள்ளாது கிளம்பி விட்டான்.

"பச்... இந்த தடவையும் பொறுமையா என்னத்தையாவது சொல்லி அவன போக விடாம தடுத்து இருக்கலாம்... நீங்க மூணுப் பேரும் தேவையில்லாம பேசிப் பேசி தான் இப்ப அவன் கோவிச்சுட்டு போறான்..." என்றாள் சாரா கடுப்பாக.

"விடு சாரா... அவன் நினைக்கற மாதிரி எல்லாம் அவ்வளவு ஈஸியா கிளம்பிட முடியாது... உலகத்துக்காக இந்த இடத்துல எந்த மர்மமும் இல்லனு அரசாங்கம் சொன்னாலும் இன்னும் இதை தடை செய்யப்பட்ட பகுதியா தான் வச்சிருக்காங்க..." என்றான் டேவிட் ஆறுதலாக.

"போகனுமுனு முடிவு பண்ணிட்டா முறைப்படி அனுமதி வாங்கிட்டா போவானு நினைக்கறீங்க... அவனுக்கு இங்க இருந்து யாருக்கும் தெரியாம கிளம்பறது அவ்வளவு ஒன்னும் பெரிய விசயமும் இல்ல... சார் இப்போ சீஃப் வேற... சும்மா இருந்தவன சொறிஞ்சு விட்ட விட்ட கணக்கா இந்த லூசு குரங்கு வேற கிளப்பிவிட்டுட்டு..." என ஜெகனுக்கு நங்கென்று ஒரு கொட்டு வைத்தவள், "இப்போ அவன் யார் சொன்னாலும் கேட்க மாட்டான்... அவன் பதவிய யூஸ் பண்ணி எப்படியும் போக தான் பாப்பான்..." என்றாள் சாரா.

"பாத்துக்கலாம் விடும்மா... இதெல்லாம் ஒரு பிரச்சனையினு..." என்றான் சுமன்.

"அதானே... அவன் போறேனு சொன்னா நாம தான் விட்டுடுவோமா என்ன..." என்றான் ஜெகன்.

"இருந்தாலும், எனக்கு என்னமோ பயமாவே இருக்கு... இந்த தடவ அவன் குரல அப்படியொரு உறுதி தெரியுது..." என்றாள் சாரா உள்ளுக்குள் விரவிய பயத்தோடு. ஏனோ இம்முறை யார் பேச்சையும் நேமி கேட்பானென்று அவளுக்குத் தோன்றவில்லை.

அவர்களிடம் கோபித்துக் கொண்டு அறைக்குள் வந்தவனோ தனது உடையை மாற்றிக் கொண்டு, மீண்டும் கடலை வெளித்தபடி, அந்த பால்கனி பக்கமே வந்து நின்று விட்டான். இந்த கடலுக்கும் அவனுக்குமான பந்தம் இன்றோ நேற்றோ ஏற்பட்டதா என்ன? நினைக்க நினைக்க இனம்புரியாத உணர்வொன்று உள்ளுக்குள் அழுத்தியது. கடலின் உவர் காற்றின் ஓலத்தோடு அவன் அன்னையின் 'நேமி கண்ணா...' என்ற பிரத்தியேக அழைப்பும் காதில் மீண்டும் மீண்டும் ஒலிப்பதைப் போன்றதொரு மாயத் தோற்றம். பத்து வயது வரையான அவனின் வாழ்வு தான் அன்னை தந்தையென எத்தனை எத்தனை இன்பமானது. ஆனால் இன்றோ? நினைக்க நினைக்க ஆறவில்லை அவனுக்கு. அவனுக்கு அத்தனை இன்பங்களையும் வாறி வழங்கியதும் இந்த கடல் தான். அதேப் போல அதை திரும்ப தன்னுள்ளே பறித்துக் கொண்டதும் இதேக் கடல் தான்.

அவனின் தந்தை சார்லஸ். அமெரிக்க குடிமகன். ஒரு சொகுசு கப்பலின் கேப்டன். ஒரு கடல் பயணத்தின் போது அவரின் கப்பலில் பயணியாக வந்தவர் தான் கார்குழலி. தமிழகத்தின் காஞ்சிபுரத்தை பூர்விகமாக கொண்டவர். கண்டதும் காதல் என்று சொல்லும் அளவிற்கு இல்லையென்றாலும் எதோ ஒரு இனம் புரியாத ஈர்ப்பு இருவருக்குள்ளும் உண்டானது உண்மை. அந்த ஆறுமாத பயணத்திற்குள் காதலில் மூழ்கி அந்த கப்பலிலேயே கல்யாணத்தையும் முடிந்துக் கொண்டு தான் தரையில் கால் பதித்தனர் அந்த ஜோடி.

நேமியோன் பிறந்தது கூட இந்த கடல் அன்னையின் மடியில் தான். அவனின் அன்னைக்கு இந்த கடலின் மீது அப்படி ஒரு ஈர்ப்பு. அந்த ஈர்ப்பு தான் தேடி பிடித்து இந்த பெயரைக் கூட அவனுக்கு சூட்ட வைத்தது. ஒவ்வொரு முறை 'நேமி' என அவனை அழைக்கும் போதும், என்னவோ உண்மையில் மகன் இந்த கடலைக் கட்டியாண்டுக் கொண்டிருப்பதைப் போல அப்படி ஒரு பெருமிதம் தெரிக்கும் அவர் குரலில். எப்போது எல்லாம் சார்லஸ் கடல்பயணம் செல்கிறாரோ அப்போது எல்லாம் மறவாது தவிர்காது கார்குழலியும் உடன் கிளம்பி விடுவார். நேமி பள்ளி படிப்பை தொடங்கும் முன்பு வரை அவனையும் உடன் அழைத்துச் செல்வர். எத்தனை எத்தனை இன்பமான நாட்கள் அவை.

அப்படி தான் நேமிக்கு பத்து வயதிருக்கும் போது அவனை விடுதியில் விட்டுவிட்டு நியூயார்கில் இருந்து கிளம்பியது சார்லஸின் கப்பல் அடன் கார்குழலியையும் அழைத்துக் கொண்டுதான். அன்று தான் அவன் அன்னையும் தந்தையையும் இறுதியாய் பார்த்தது. அதற்கடுத்து அவனை அடைந்தது அவர் தந்தை சென்ற கப்பல் மொத்தம் 57 ஊழியர்களோடும் 412 பயணிகளோடும் சேர்த்து கடலில் தொலைந்துப் போனது என்ற செய்தியை தான். அது தொலைந்த இடம் பெர்முடா முக்கோணம். அன்றைய நாட்களில் இது பெரும் செய்தியாய் கூட பேசப்பட்டது. ஆனால் அடுத்தடுத்த முக்கிய செய்திகளில் இந்த செய்தி பின்னுக்கு சென்றுவிட, இழந்தவர்களுக்கு தான் இன்றளவும் அது ஒரு பெரும் வலியாக இருக்கும். அடிக்கடி இந்தோனேசியாவில் ஏற்படும் சுனாமி ஒரு செய்தி. ஆனால் இந்தியாவில் ஏற்பட்ட சுனாமி வலி.

அதன்பிறகு நேமி ஒரு அரசாங்கத்தின் பொறுப்பில் ஏற்கப்பட்ட ஒரு குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டான். குடும்பத்தை இழந்து தனிமையில் தவித்தவனை தங்களோடு இணைத்துக் கொண்டனர் சுமன், டேவிட், ஜெகன், சாரா குழுவினர். அன்று தொடங்கிய நட்பு. இன்றுவரை தொடர்கிறது.

தன் தாய் தந்தைக்கு என்ன நேர்ந்தது என்று தெரிந்துக் கொள்ள தான் அவன் கப்பலில் வேலைக்கு சேர்ந்ததே. அவனை பிரிய முடியாது என்ற காரணத்துக்காகவே மற்ற நால்வரும் இந்த வேலையில் சேர்ந்துவிட்டனர். ஆனால் என்ன அவனின் எண்ணம் தான் இத்தனை தான் நாட்களாக ஈடேறவில்லை.

எப்படி இருந்தாலும் தன் நண்பர்களை பிரச்சனையில் சிக்கவைக்க அவன் விரும்பவில்லை. தாய் தந்தைக்கு நேர்ந்ததை போல தனக்கும் என்ன வேண்டுமென்றாலும் நடக்கலாம். அவர்களின் உயிருக்கு உத்தரவாதமென்று எதுவும் தரவும் இயலாது. அன்றி உயிரோடு திரும்பினாலும் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் அனுமதியின்றி சென்றதற்காக வேலை போகும் வாய்ப்பு தான் அதிகம். அவன் பொருட்டு அவர்கள் துன்புறுவதை அவன் விரும்பவில்லை. அதனால் தான் இத்தனை காலமாக அந்த பயணத்தை தள்ளிப் போட முடியாது. ஆனால் இம்முறையும் வாய்ப்பை தவறவிட விரும்பவில்லை அவன். இத்தனை ஆண்டு காலமாக அவர்களின் இறப்பிற்கான காரணத்தை அறிந்துக்கொள்ள வழியிருந்தும் முயற்சிக்காதது பெரும் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது அவனுள்ளே.

சிந்தைனையில் ஆழ்ந்திருந்தனை பற்றி இழுத்துக் கொண்டு வந்து கட்டிலில் அமர்ந்தினர் மற்ற நால்வரும். எப்படி எப்படியோ பேசி அவனை மூளை சலவை செய்ய அவர்கள் முயற்சித்துக் கொண்டிருக்க, அவனுமே நல்ல பிள்ளைப் போல அத்தனையும் கேட்டுக் கொண்டான்.

"எனக்குமே அதுதான் சரியா தோனுது... பதினெட்டு வருஷத்துக்கு முன்னாடி கடல காணாப் போனவங்கள கண்டுபிடிக்கறதும் கஷ்டம் தான்... நாம வழக்கம் போல பீச்சுக்கே போகலாம்..." என்றான் அவன்.

"இவ்வளவு நல்லவனாடா நீ... சொன்னதும் பொசுக்குனு ஒத்துக்கிட்ட..."

"இப்படியெல்லாம் ஒத்துக்கற ஆள் இல்லையே நீ..."

"ஏன்டா கடப்பாரைய விழுங்கன காண்டாமிருகம் மாதிரி பேந்த பேந்த முழிக்கற... வேற ஏதாவது பிளான் வச்சுருக்கீயா..."

"யாருக்கும் தெரியாம தனியா போகலானு நினைக்கறீயா... அப்படி எல்லாம் எதுவும் இல்ல தான..." சந்தேகமாய் சாரா அவனைப் பார்க்க,

"அதான் கேக்கறா இல்ல... ஏன்டா ஆட்ட களவாண்ட பய கணக்கா இந்த முழி முழிக்கற..."

"நேமி... உன்னதான் கேக்கறோம்... வாய தொறந்துப் பேசுடா..."

நால்வரும் அவனை சுத்தி நின்று கேள்விகளால் வண்டாய் துளைக்கவும் சமாளிக்க முடியவில்லை அவனால். இத்தனை நாளாய் அவனின் ஒவ்வொரு அசைவுக்கும் அர்த்தம் அறிந்து வைத்திருப்பவர்களிடம் சட்டென்று பொய் சொல்லவும் வரவில்லை அவனுக்கு.

"பச்... இப்போ எதுக்கு ஐ.எஸ்.ஐ தீவிரவாதியை விசாரிக்கற மாதிரி சுத்தி நின்னு உசுர வாங்கறீங்க... எப்படியும் என்ன தனியா அனுப்ப மாட்டீங்க... சரி ஒன்னா போகலானாலும் திரும்பி வருவோனு உத்திரவாதம் இல்ல... அப்படியே வந்தாலும் வேலைக்கு உத்திரவாதம் இல்ல... அதான் போக வேண்டானு முடிவு பண்ணிட்டேன்..." என்றான் நேமி பாதி உண்மையும் பாதி பொய்யுமாக.

"உன்ன நம்பலாமா..?" நால்வரும் ஒரே நேரத்தில் சந்தேகமாக அவனை வினவ,

"நம்பறதும் நம்பாததும் உங்க விருப்பம்... நான் போகல... அவ்வளவு தான்... ஒரே டையரட்... நைட் வேற சரியாவே தூங்கல..." என கோட்டாவி விட்டபடியே தூங்க போனவனை இழுத்துப் பிடித்தே அமர வைத்தனர் அவர்கள்.

"இப்ப என்ன..."

"பகல நீ தூங்க மாட்டீயே..." என்றான் டேவிட் அவனை ஆழ்ந்துப் பார்த்தபடியே.

"என்ன தூங்க விடாம பண்ணிட்டு உனக்கென்ன தூக்கம் வேண்டி கிடக்கு தூக்கம்..." என்றது ஜெகன்.

"டேய் யப்பா சாமிங்களா... நம்புக்கடா ப்ளீஸ்... நைட்டெல்லாம் ஏதேதோ கனவு... நிம்மதியா தூங்கவே முடியல... இந்த மூதேவி வேற பேய் படம் பாக்கறேனு பன்னெண்டு மணி வரைக்கும் உசுர வாங்கிட்டு... கண்ணொல்லாம் எரியுதுடா... தூங்க விடுங்கடா... ப்ளீஸ்..." என்றவன் தலைவரை இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்துவிட்டான். இன்னும் அவர்கள் துளைத்து துளைத்துக் கேள்விக் கேட்டால் மாட்டிக் கொள்வானே.

யாரும் அறியாமல் எப்படி தனது திட்டத்தை செயல்படுத்தலாம் என யோசித்தபடியே படுத்திருந்தவன் அவனை அறியாமலேயே கொஞ்ச நேரத்தில் உறங்கியும் போனான். நேற்றிரவு கண்ட பேய்படம், கனவு, போதாகுறைக்கு எழுந்ததிலிருந்து அவன் மனதை ஆக்கிரமித்திருத்த தாய்தந்தையரின் நினைவு என மனம் உடலும் ஒரு சேர மொத்தமாய் சோர்ந்திருந்தது.

'இவன நம்பலாமா... எந்த ஆர்கியூமெண்டும் இல்லாம உடனே ஒத்துக்கிட்டேனே...' என்ற ரீதியில் அவனையேப் பார்த்திருந்தவர்கள், அவனின் சுவாசம் சீராக ஏறி இறங்கவும் தான் உறங்குவதை உறுதிப் படுத்திக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தனர்.

"டேய்... அவ்வளவு சீக்கிரம் எல்லாம் இவன நம்ப முடியாது... எதுக்கும் யாராவது ஒருத்தன் அவன் கூடவே இருங்க..." என அறிவுறுத்தி விட்டு தான் நகர்ந்தாள் சாரா.

இரவு ஒன்றரை மணி.

முகத்தை மூடியிருந்த போர்வையை மெல்ல விலக்கிவிட்டு தலையை மட்டும் வெளியே நீட்டி எட்டிப் பார்த்தான் நேமி. விடிவிளக்கின் உபயத்தால் மெல்லிய நீல நிற ஒளி அறையெங்கும் கசிந்துக் கொண்டிருந்தது. தனக்கு அருகில் உறங்கிக் கொண்டிருந்த ஜெகனை உற்றுப் பார்த்தான் நேமி. மெல்லிய குறட்டை சத்தத்தோடு ஆழ்ந்த நித்திரையில் இருந்தான் அவன். மொத்தமாய் போர்வையை விலக்கிவிட்டு சத்தம் வராது எழுந்தவன், மெல்ல அவனை உலுக்க, ஒரு சிணுங்களோடு புரண்டு படுத்தானே அன்றி எழவில்லை. அவனைப் போல மற்ற இருவரையும் பரிசோத்துப் பார்த்தவன் அவர்களும் ஆழ்ந்த நித்திரையில் தான் இருக்கிறார்கள் என்பதை உறுதிப் படுத்திக் கொண்டான்.

மெல்ல அடிமேல் அடியெடுத்து வைத்து தனது தோள் பையில் இரண்டு செட் உடைகளை எடுத்து வைத்துக் கொண்டவன், மெல்ல தண்ணீர் குழாயை திறந்து முகத்தைக் கழுவிக் கொண்டு தானும் உடைமாற்றி வந்தான். குளித்தால் எங்கே தண்ணீர் சத்தம் கேட்டு மற்றவர்கள் எழுந்து விடுவார்களோ என்று தான் முகத்தை மட்டும் கழுவிக் கொண்டு கிளம்பிவிட்டான் அவன். மீண்டும் மற்ற மூவரையும் பார்க்க இன்னுமே உறக்கத்தில் தான் இருந்தனர். ஒசைப்படாமல் கதவைத் திறந்துக் கொண்டு வெளியே வந்தான். இதுவரை இழுத்துப் பிடித்து வைத்திருந்த மூச்சை இப்போது தான் கொஞ்சம் நிம்மதியாக வெளியிட முடிந்தது அவனால்.

ஆழ்ந்து நீண்ட மூச்சுகளை உள்ளிழுத்துக் கொண்டவன், கப்பலின் தரைதளத்தை நோக்கி நகர்ந்தான். அங்கு தான் ஆபத்துக் காலங்களில் அவசரத்திற்கு பயன்படுத்தபடும் சிறுசிறு கப்பல்கள் நிறுத்தப் பட்டிருந்தன. இரவு நேர காவலுக்கு இருப்பவர்களை தவிர மொத்த கப்பலுமே நித்திரையில் ஆழ்ந்திருந்தது. அங்கு சூழ்ந்திருந்த அமானுஷ்ய அமைதியே உள்ளுக்குள் ஒரு திகிலை பரப்ப, நேரங்கெட்ட நேரத்தில் நேற்றிரவு பார்த்த பேய் படத்தின் காட்சிகள் வேறு கண்முன் விரிந்தது.

அவனின் மூச்சு சத்தமே பெரும் இரைச்சலாய் கேட்க, அவனின் காலடி சத்தம் வேறு அதற்கு ஸ்ருதி சேர்ப்பதைப் போல அச்சத்தைக் கூட்டியது. முகமெங்கும் முத்து முத்தாய் பூத்துவிட்ட வியர்வை துளிகளைப் புறங்கையால் துடைத்து விட்டபடியே, படபடக்கும் இதயத்தை விரல் கொண்டு நீவியபடியே வேக வேகமாய் தரைதளத்தை நோக்கி நடந்துக் கொண்டிருந்தான் அவன்.

சரியாக காலை மூன்று மணியளவில் கப்பல் மியாமியை அடைந்துவிடும். அதற்குப்பின் அங்கிருந்து யாருமறியாமல் செல்வது கடினம். முக்கியமாக அந்த நால்வர். அதுவும் இந்த இடத்திலிருந்து பெர்முடா தீவுக்கு செல்வது சற்றே சுலபம். ஐந்தே மணி நேரத்தில் பெர்முடாவை அடைந்துவிடலாம் என்றுதான் இப்போது அவன் கிளம்பியது.

தரைத்தளத்தில் காவலுக்கென இருந்த ஒருசில ஊழியர்களும் கூட இப்போது அரைகுறை உறக்கத்தில் தான் இருந்தனர். இவனை அந்த நேரத்தில் அங்கேக் கண்டதும் அவர்கள் எழ முயல, கண் அசைவிலையே அதை வேண்டாமென்று மறுத்து, படகுகள் நிறுத்தி வைத்திருக்கும் இடத்திற்கு விரைந்தான் அவன். அவன் தலையை அதிகாரி என்பதால் தடுத்தி நிறுத்தி கேள்விகள் கேட்க அவர்கள் யாரும் முன்வரவில்லை.

இரண்டு பேர் மட்டும் செல்லகூடிய சிறிய அளவிளான ஏந்திரப் படகினை இறக்கி கடலில் நிறுத்திவிட்டு, சுற்றும் முற்றும் தன்னை யாரும் கவனிக்கிறார்களா எனப் பார்த்தான் நேமி. யாரும் அவனைக் கவனிக்கவில்லை எனவும் நிம்மதி அடைந்தவனாக அந்த கப்பலில் ஏற முயன்றவனை ஒரு கரம் தடுத்து நிறுத்த, அதிர்ந்துப் போனான் அவன்.

உள்ளம் தடதடக்க, உடலெங்கும் வியர்வைப் பெருக, மெல்ல திரும்பிப் பார்த்தவனை, கைக்கட்டி முறைத்துக் கொண்டு நின்றிருந்தனர் மற்ற நால்வரும்.

- காத்திருப்பு தொடரும்.
 
Last edited:

தமிழ் வெண்பா

New member
Vannangal Writer
Messages
18
Reaction score
19
Points
3
காத்திருப்பு 3:

தீடிரென அவர்கள் நால்வரையும் அங்கே கண்டவன்,செய்வதறியாது பேந்த பேந்த விழித்தபடி நின்றிருக்க, கையை கட்டிக் கொண்டு அவனையே முறைத்துப் பார்த்தபடி நின்றிருந்தனர் மற்ற நால்வரும்.

"என்ன தொர... அர்த்த ராத்திரில எங்கையோ கிளம்பிட்ட மாதிரி இருக்கு..." நேமியின் கழுத்தில் கைப்போட்டு தன்னோடு இறுக்கியப்படியே கேட்டான் டேவிட்.

"பாத்தா தெரியல டேவி... மூன் லைட்ல லாங் ட்ரைவ் போனா மூளைக்கு நல்லதாம்... அதான் சார் கிளம்பிட்டாரு..." என்றாள் சாரா குரலை ஏற்றி இறக்கி எள்ளலாக.

நேமியின் டீசர்டின் காலரை பிடித்து இழுத்து தன் அருகே நிறுத்திய சுமன், "அதெல்லாம் சரிதான்... ஆனா அது மூளை இருக்கவன் இல்ல போகனும்... இந்த முட்டாபய எதுக்கு கிளம்பி நிக்கறனாமான்..." என்றான் நேமியை ஒரு மாதிரிப் பார்த்துக் கொண்டே.

"அதகூட விடுடா... இதென்ன மிட் நைட்ல கருப்பு கலர்ல சொக்கா... என்ன பாரு என் அழக பாருனு வந்து நிக்கற..." என்றான் புருவத்தை ஏற்றி டேவிட் இறக்கி மேலும் கீழும் நேமியை நோட்டம் விட்டபடியே.

"இது தெரியல பாரேன் உனக்கு... சாரு நமக்கெல்லாம் தெரியாமா இருட்டோட இருட்டா காத்தோட காத்தா கிளம்பி போக வேண்டாமா... இதுக்கு தான் இந்த கெட்டப்பு செட்டப்பு எல்லாம்..." சாரா இன்னும் நேமியை முறைத்துக் கொண்டே சொல்ல, அவனோ விழிப் பிதுங்கி நின்றான்.

விழி பிதுங்காமல் வேறு என்ன செய்யும். டேவிட் தான் அவனின் கழுத்தை இறுக்கி தன்னோடு சேர்த்து இழுத்து பிடித்திருக்கிறான் என்றால், இன்னொரு பக்கம் சுமன், அவனின் சட்டை காலரை பிடித்து தன் பக்கம் இழுத்துக் கொண்டிருந்தான்.

"அடே... அர்த்த ராத்திரில இந்த கருமம் புடிச்ச பஞ்சாயத்து எல்லாம் இப்ப தேவையா..? இதுல நல்லா தூங்கிட்டு இருந்தவன வேற தலையிலேயே தட்டி சட்டைய மாட்டி இழுத்துட்டு வந்து நிக்க வச்சுருக்கீங்க... முடியலடா என்னால... பஞ்சாயத்த முடிச்சு கிளம்பறோமா இல்லையானு ஒரு முடிவ சொல்லுங்க... அது வரைக்கும் அப்படிக்கா போய் நான் இந்த கட்டைய கொஞ்ச நேரம் சாய்க்கறேன்..." என்றான் ஜெகன் தன் கையிடுக்கில் கொட்டாவியை வெளியேற்றிய படியே. இன்னும் அரை தூக்கத்தில் தள்ளாடியபடியே தான் நின்றிருந்தான் அவன்.

"அட... தூங்கு மூஞ்சு கழுத..." என்ற ரீதியில் இம்முறை மற்ற மூவரும் ஜெகனை முறைக்க, அவனோ அதை எல்லாம் கண்டுக் கொள்ளதவனாக அருகிலிருந்த நாற்காலி ஒன்றை இழுத்துப் போட்டு விட்ட தூக்கத்தை தொடர முன்றவனை தலையிலேயே தட்டி மீண்டும் எழுப்பி நிற்க வைத்தனர் அவர்கள்.

"இப்படியே தூங்கி வழிஞ்சா எப்ப நாம கிளம்பறது... வந்து தொல சீக்கரம்... போட்ட இறக்கி கீழ நிறுத்துவோம்..." என்றான் டேவிட்.

"அதான் அவன் இறக்கிட்டானே..." என சுமன் வினவ,

"அதுல நீயும் அவனும் மட்டும் தான் போகனும்... என்ன போறீங்களா..." சாரா புருவத்தை ஏற்றி இறக்கி நக்கல் குரலில் கேட்க,

"ஐய்யோ... சாமி ஆள விடுங்க... எங்க போனாலும் ஒன்னாவே போய் சேருவோம்..." என்றான் சுகன் கையெடுத்துக் கும்பிட்டு.

"அப்ப நீங்களும் என்கூட வறீங்களா..?" டேவிட் விட்ட கழுத்தை நீவிவிட்டபடியே நேமி அதிர்ச்சியாய் வினவ,

"ம்ம்ம்... பேய்க்கு வாக்கபட்டா நாய்க்கு பயந்து தானே ஆகனும்..."

"இது என்னடா ரொம்ப கேவலமான பழமொழியா இருக்கு..." என்றான் சந்தேகமாய் ஜெகன்.

"இது பழமொழி இல்ல இந்த டேவிட்டோட புதுமொழி..." டேவிட் சட்டை காலரை உயர்த்தி விட்டு பெருமையாக சொல்ல,

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே சுமனும் சாராவும் பத்துப் பேர் அமரக்கூடிய தானியங்கி படகை கடலுக்குள் இறக்கி நிறுத்தி இருந்தனர்.

"அட... அறிவு கெட்ட எரும மாடே... குரங்குக்கு வாக்கப்பட்டா மரத்துக்கு மரம் தவ்விதான் ஆகனுங்கறத தான் இந்த மூதேவி அப்படி சொல்லிட்டு திரியுது... இதுக்கெல்லாம் விளக்கம் ஒரு கேடு உனக்கு... வந்து போட்ல ஏறுங்க முதல... எவனாவது வந்து தொலைக்க போறான்..." சாரா கடுகடுக்க, ஜெகன் டேவிட் இருவருமே அவனை முறைத்துப் பார்த்தனர்.

"ஏன் தொரைக்கு தனியா வெத்தல பாக்கு வச்சு அழைக்கனுமோ..." என்றான் சுமன் நேமியை முறைத்துக் கொண்டே,

"யாருக்கும் தெரியாம ஊருக்கு முன்ன கிளம்பி வர தெரியுது... ஆனா போட்டுல ஏற தெரியாதா..? பண்ணுறதெல்லாம் பண்ணிட்டு முழிக்கறத பாரு... திருவிழாவுல காணப் போன திருட்டு கருங்கொரங்கு மாதிரி..."

"இல்ல... நான் மட்டும் கிளம்பறேன்... நீங்க இங்கயே இருங்க..." மேலே என்ன சொல்லி இருப்பானோ, நால்வரும் சேர்ந்து ஒன்றாக முறைத்த முறைப்பில் கப்பென்று வாயை மூடிக் கொண்டான்.

"அதான் மொத்தமா கூட்டிட்டுப் போய் சுறாக்கு இரையாக்குறதுனு முடிவு பண்ணிட்டீயே... வந்து ஏறி தொல சீக்கரம்... இன்னும் தேவையில்லாம வெட்டி வியாக்கியானம் ஏதாவது பேசிட்டு இருந்த சுறாவுக்கு வேலையே வைக்காம நானே உன் சங்க கடிச்சு துப்பிடுவேன்..." என்றான் டேவிட் கண்களில் கொவைவெறி மின்ன.

அதற்கு மேலும் பேச அவன் என்ன முட்டாளா? அமைதியாக படகில் ஏறி அமர்ந்துக் கொள்ள, அவனும் ஏறிக் கொண்டதும் மெல்ல ஆடி அசைந்தபடி நகரத் துவங்கி இருந்தது படகு.

ஜெகன் ஒரு ஓரமாய் அமர்ந்த படியே தூங்கிவிட, மற்ற மூவரும் தங்களுக்குள்ளேயே பேசியபடி வந்தவனரே தவிர மறந்தும் நேமியிடம் பேச்சுக் கொடுக்கவில்லை. அவனே பேச முன்றாலும் அவர்கள் மூவரும் சேர்ந்து ஒன்றாக முறைத்த முறைப்பில் சட்டென்று வாயை மூடிக் கொண்டான். என்னதான் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டாலும் ஒருக்கு ஒருமுறை அவர்களைப் ஏக்கமாக பார்த்தாலும் அவர்கள் யாரும் மலையிறங்கி வருவதைப் போல தெரியவில்லை.

"இந்நேரம் நம்ம கிளம்பிட்டோனு தெரிஞ்சு இருக்கும் இல்ல..." மீண்டும் மெல்ல பேச்சுக் கொடுக்க முயன்றான் நேமி.

"பேசன அவ்வளவு தான் சொல்லிட்டேன்... பண்ணறதெல்லாம் பண்ணிட்டு ஓடிப் போன கல்யாணப் பொண்ணு மாதிரி கேக்கறான் பாரு கேள்வி..." என்றான் சுமன் கடுப்பாக.

"இல்லடா சுமன்... நான் என்ன நினைச்சேனா..."

"பேசாம வாய மூடிட்டு இருந்துடு சொல்லிட்டேன்... நாங்க யாராவது ஏன் கிளம்பி வந்தனு கேட்டோமா..?" என்றது டேவிட்.

"அதானே... நீயா ஒரு முடிவு எடுத்து கிளம்பிட்ட இல்ல... அப்பறம் அதுக்கு என்ன விளக்கம் வேண்டியிருக்கு..." என்றது சுமன்.

"அவ்வளவு தான் நீ எங்கள நம்புனது இல்ல... நீ எங்க போனா என்ன..? செத்தா எங்களுக்கு என்னனு அப்படியே விட்டுடுவோனு நினைச்சுட்ட இல்ல... நாங்க எல்லாம் அவ்வளவு சுயநலவாதினு நினைச்சுட்ட இல்ல... அப்போ நம்ம எல்லாம் ஒரே குடும்பம் இல்ல... அப்படி இல்லனா நீ எங்கள உன் குடும்பமா நினைக்கல... அப்படி தானே... எதுக்காக உன்ன போக வேண்டானு சொன்னோம்னு உனக்கே தெரியும்... அப்படியே நீ பிடிவாதமா போகனுமுனு சொல்லி இருந்தா உன்ன யாரு தடுத்து இருக்க போறா... இது நாள் வரைக்கும் ஒன்னா தானே இருந்தோம்... சாவுனு ஒன்னு வந்தா அதுவும் ஒன்னாவே வரட்டும்... அதுவும் உன்னோட அப்பாம்மா இறந்த காரணத்த கண்டு புடிக்கனா தாராளமா சாவு வரட்டும்... அதுக்கென்ன இப்போ... ஆனா நீ அப்படி நினைக்கல இல்ல..." குரலில் வருத்தம் தொனிக்க சொல்லி முடித்தவள் வேகமாக அங்கிருந்து வெளியே வந்துவிட்டாள். சுமனும் டேவிட்டும் கூட அவள் பின்னோடே சென்றுவிட, அதிர்ந்து செயலிலந்து நின்றது என்னவோ நேமி தான்.

அப்படி அவன் நின்றதென்றவோ ஒரு சில வினாடிகள் தான். வேகமாக சாராவின் பின்னோடு ஓடிச் சென்றவன், அவளின் கரம் பற்றி நிறுத்தினான்.

"என்ன பத்தி உங்களுக்கு தெரியாதா என்ன..? இல்ல நான் தனியா ஏன் கிளம்பி வந்தேனு தான் உங்களுக்கு தெரியாதா..? இதோ இதே கடல தான் பதினெட்டு வருஷத்துக்கு முன்ன என்னோட ஒரு குடும்பத்த தொலைச்சேன்... மறுபடியும் இதே இடத்துல என்னோட இன்னொரு குடும்பத்தையும் தொலைக்க விரும்பல..." அத்தனை சோகம் வலிந்தது அவனின் குரலில்.

"நீ ஓரமா உக்காந்து ஒரே மணி நேரம் சென்டிமென்ட் சீன் ஓட்டுனாலும் உன்னையெல்லாம் நம்பவே முடியாது..."

"அடேய்... கொலவெறி ஆக்காதீங்கடா என்னய... ஆமான் தனியா கிளம்பி வந்தேன்... இப்போ என்ன அதுக்கு... பேச மாட்டீங்களா... சரி... வேண்டாம்... போங்க... அப்படியே வந்து உங்க பின்னாடி கெஞ்சுகிட்டு அலைவேனு யாரும் நினைக்க வேண்டாம்..."

"இப்ப யார் உன்ன கெஞ்ச சொன்னா... அப்பாலே போ சாத்தானே..." என அவன் முகத்தில் கை வைத்து ஓரமாய் ஒதுக்கி தள்ளிவிட்டு படகின் விளிம்பை நோக்கி நடந்து வந்தனர் மூவரும்.

"டேய்... டேய்... தெரியா தனமா சொல்லிட்டேன்டா... உங்களோட பேசாம எப்படி இருப்பேன்டா... சாரா... என் தங்ககுட்டி... பட்டு செல்லம் இல்ல நீ... நீயாவது சொல்லும்மா..." நேமி அவர்களின் பின்னோடே கெஞ்சிக் கொண்டுச் செல்ல,

"அவன்களாவது வாயால சொன்னானுங்க... என்கிட்ட வந்த மண்டைய இரண்டா பொழந்துடுவேன் பாத்துக்கோ... அவ்வளவு கடுப்புல இருக்கேன் உன் மேல..." என்றவள் இன்னும் வேகமாக முன்னோக்கி சென்று அப்படியே அந்த சிறு படகை சுற்றிக் கொண்டு நடக்க ஆரம்பித்துவிட,

"அடேய் பாவிங்களா... வேணுமுனா கால கூட விழறேன்டா... ஆனா இப்படி சுத்தல விடாதீங்கடா... முடியலடா என்னால..." அவன் கெஞ்சிக் கொண்டே அவர்களின் பின்னோடு சுற்றி வர, விறுட்டென்று படகின் குடிலுக்குள் ஓடி மறைந்தது ஒரு உருவம்.

முதல் முறை சரியாக கவனிக்காதவன் அடுத்தடுத்த முறைகள் அந்த படகை சுற்றி வரும்போது குறிப்பிட்ட அந்த இடத்தில் மட்டும் ஏதோ ஒரு உருவம் சட்டென்று படகின் குடிலுக்குள் சென்று மறைவதை பார்த்தவனுக்கு யோசனையில் புருவம் சுருங்கியது.

"பக்கிங்களா... கொஞ்சம் பொறுமையா தான் வந்து தொலைங்களேன்... ஓடி ஓடி மூச்சு வாங்குது எனக்கு..." அ
மூச்சிரைத்தபடியே அவர்களின் முன்னே நின்றிருந்தான் ஜெகன்.

"மூதேவி... இப்ப நீ எதுக்கு உள்ள வெளிய விளையாடிட்டு திரியற..." என்ற நேமியை சூழ்ந்து நின்றனர் நால்வரும்.

"சர்ப்ரைஸ்... ஹாப்பி பொறந்த டே நேமி..." என அவன் காதுக்கு மிக அருகில் நால்வரும் ஒன்றாக கத்த, இரண்டு காதுகளையும் இறுக மூடிக் கொண்டான் அவன்.

"அட பக்கி மாடுங்களா... இதுக்கா இத்தன பாடு படுத்துனீங்க என்ன..." அவன் புன்னகை முகமாய் வினவ,

"வேற எதுக்காம்... கோபம்... உன் மேல... அப்படியே எங்களுக்கு வந்துட்டாலும்... போவீயா... எப்படியும் நீ இப்படி ராத்திரியோட ராத்திரியா ஓடி வருவனு எங்களுக்கு தெரியாதா... அதான் இந்த ஏற்பாட்டை எல்லாம் நேத்தே இந்த போட்ல பண்ணி வச்சுட்டோம்..." என்றபடியே அவர்கள் விலக,

சிறு மேசை ஒன்றின் நான்கு கால்களிலும் கலர் கலரான பலூன்கள் கட்டபட்டு, அதன் நடுவே அழகான வட்ட வடிவில் ரெட் வெல்வெட் கேக் ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

நேமியின் பிறந்த நாள் மட்டும் தான் அவர்கள் கொண்டாடுவது. அறிந்ததும் அவன் பிறந்த நாளை மட்டும்தான். மற்ற நால்வருமே நினைவு தெரியும் முன்பே அங்கு வந்து சேர்ந்திருந்தனர். ஆசிரமத்திற்கு வந்த முதல் வருடம் தன் பிறந்த நாள் அன்று அன்னையையும் தந்தையையும் நினைத்து நேமி தேம்பி தேம்பி அழ, ப்ரட் துண்டுகள் நான்கை ஒன்றாக வைத்து அதன் மேல் மெழுகுவர்த்தியை ஏற்றி அப்போது தான் முதன்முதலில் அவனுக்காய் பிறந்தநாள் கொண்டாடினர் மற்ற நால்வரும். அன்றிலிருந்து இன்றுவரைக் கூட அவன் பிறந்த நாள் மட்டும் தான் அங்கே கொண்டாடப்படுகிறது.

நன்றாக நினைவு தெரிந்த பின் மற்றவர்களுக்கும் செய்ய அவன் எவ்வளவோ முயன்றிருக்கிறான். ஏன் அவன் பிறந்த நாளையே ஐவரின் பிறந்த நாளாக நினைத்து ஒன்றாக கொண்டாடலாம் என்றிருக்கிறான். ஆனால், அவர்கள் அதை விரும்பவில்லை. அவர்களுக்கு அவனின் பிறந்த நாளைக் கொண்டாடுவதில் தான் அத்தனை இன்பம்.

"நிஜமாவே மறந்துட்டேன்டா..." என்றபடி கேக் முன் வந்து நின்றான் நேமி.

"எப்படிடா ஓடிப் போகலாங்கற நினைப்புலையே இருந்தா பர்த்டே எல்லாம் எப்படி நியாபகம் இருக்கும்... சரிசரி முறைக்காத... கேக்க வெட்டு முதல..." என சுமன் பிளாஸ்டிக் கத்தி ஒன்றை எடுத்து நீட்ட,

மெழுகுவர்த்தியை ஊதி அணைத்துவிட்டு ஒரு சிறுசிறு துண்டை வெட்டி எடுத்தவன், நால்வரையும் மாறிமாறி பார்த்தபடி அப்படியே நின்றான். 'யாருக்கு முதலில் ஊட்டினாலும் மற்ற மூவரும் இந்த வருடம் முழுவதும் அதையே சொல்லி காட்டி ஒரு வழி செய்துவிடுவர். பேசாமல் தானே உண்டுவிட்டால் என்ன?' என அவன் சிந்தனை ஓட,

"பக்கி... யோசிக்குது பாரு எப்படி... நீ ஒன்னும் எங்களுக்கு தர வேண்டாம்... நாங்களே எடுத்துக்கறோம்..." என்றவர்கள் அவனின் கையில் வைத்திருந்த சிறுதுண்டை அப்படியே ஆளுக்கு ஒரு பக்கம் கடிக்க, அதில் டேவிட் அவன் கையையும் சேர்த்து கடித்துவிட,

"ஸ்ஸ்ஸ்ஸ்... ஆ... அம்மா... விரல்டா... எரும..." அவன் வேகமாய் கையை இழுத்து உதற, பெரிய கேக் துண்டு ஒன்றை வெட்டி அவனின் வாயில் வைத்து திணித்தான் சுமன்.

அவர்கள் ஒருவருக்கு ஒருவர் ஊட்டி விட்டபடியே அந்த கேட்டை உண்டு முடிக்கவும் கிழக்கே செந்தனலாக ஆதவனின் கதிர்கள் கடல் பரப்பலிருந்து கொஞ்சமாய் மெல்ல மேலே எழும்பவும் சரியாய் இருந்தது.

மணி அதிகாலை ஐந்து. கிழக்கே சூரியன் வராத வானில் செந்நிறம் நீரெங்கும் பட்டு வானமெங்கும் எதிரொளிக்க அப்படி ஒரு ரம்மியமான காட்சி அது.

"ஏய்... சன்ரைஸ் நேமி... உனக்கு ரொம்ப பிடிக்கும் இல்ல... அங்க பாரு..." என சாரா அவனை இழுத்து வந்து படகின் விளிம்பில் நிற்க வைக்கவும், ஆசை ஆசையாய் அதைப் பார்த்திருந்தான் நேமி. மற்றவர்களும் ரசனையுடன் அதைப் பார்த்திருக்க, குளிர்பானம் எடுக்க உள்ளே சென்ற சுமனோ அதிர்ச்சியும் ஆச்சரியமுமாய் உள்ளிருந்தபடியே குரல் கொடுத்தான்.

மற்ற மூவரும் உள்ளே ஓட, நேமியோ அசையாது அதே இடத்தில் தான் நின்றிருந்தான். ஏனோ எழும் சூரியனிலிருந்து கண்களை அப்பறபடுத்தவே அத்தனை பயமாய் இருத்தது. திரும்பிப் பார்த்தாலே ஆபத்தென்று அடித்து கூறியது உள்ளம். படபடவென வேகமாக இதயம் அடித்துக் கொண்டதின் விளைவாக உடலெங்கும் கடலின் ஊதக்காற்றையும் மீறி வியர்வைப் பெருக தொடங்கி இருந்தது.


இதோ இதே இடத்தில் தான் தந்தையும் அவருடன் வந்தவர்களும் தொலைந்துப் போனதாய் சொல்கிறது முந்தைய ஆவணங்கள். நினைக்க நினைக்க மூச்சு முட்டியது. கால்கள் அதே இடத்தில் வேரோடி விட்டத்தைப் போல இம்மியுடம் அசைக்க முடியவில்லை அவனால்.

அதே நேரம் உள்ளிருந்த மற்ற நால்வரின் குரலிலும் பதட்டத்தையும் கூச்சலையும் சுமந்தபடி வெளியேவரை கேட்க, சட்டென்று வந்து ஒட்டிக் கொண்ட பதற்றத்தோடு உள்ளே ஓடினான் அவன்.

"நேமி... காம்பஸ் நார்த் காட்டலடா..."

"எந்த எலக்ரானிக் டிவைஸ்யூம் ஓர்க் ஆக மாட்டேங்குது..."

"ரோடார் கூட வேலை செய்யல... திடீருனு என்ன ஆச்சுனே புரியல..."

ஆளாளுக்கு ஒரு பக்கம் கத்தியபடியே அடுத்து அவர்களால் என்ன செய்ய முடியும் என்று பார்த்துக் கொண்டிருந்தனர்.

அங்கே கீழே கிடந்த திசைக்காட்டியை மெல்ல நடுங்கும் கரம் கொண்டு இறுக பற்றிக் கொண்டவன், அதில் தன் கண்களை நிலைப் பெற செய்தான். திசைக்காட்டியில் இருந்த முள் 360°யிலும் எந்த ஒழுங்குமின்றி சுற்றி சுற்றி வந்ததுக் கொண்டிருந்து. எந்த நொடி எந்த பக்கம் திரும்பும் என்று கணிக்கவே முடியாதபடி அசுர வேகத்தில் சுற்றி சுற்றி வந்துக் கொண்டிருந்தது அது.

அவன் அதைப் பார்த்துக் கொண்டிருந்த அதே நொடி கண்களை கூசச் செய்யும் அளவுக்கு ஒரு வெளிச்சம். ஒரு சில நொடிகள் அவர்கள் அத்தனை பேரின் விழிகளும் செயலிழந்துப் போனது உண்மை. அதுமட்டும் மின்னலென்றால் இன்னும் சில நொடிகளில் பெரும் இடி ஒன்று விழக்கூடும். அவன் எண்ணி முடிப்பதற்குள்ளேயே அந்த இடி அவர்கள் படகின் மீது விழுந்திருந்தது.

படகின் ஒரு பக்கம் மொத்தமும் சேதமடைந்து கொஞ்சம் கொஞ்சமாய் கடல்நீர் உட்புக தொடங்கி இருந்தது. அடுத்து என்ன..? யாருக்கும் எதுவும் தெரியவில்லை. இறுக ஒருவர் கையை மற்றவர்கள் பற்றிக் கொள்ள, பதற்றத்துடன் சுற்றி சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இப்போது தான் கவனித்தான் நேமி. ஒரு பக்க வானம் சூரிய உதயத்தால் செக்க சிவந்திருந்தது. அதே மற்றொரு பக்கம் கருமேகங்கள் சூழ்ந்து இருண்டு கிடந்தது. அந்த இருளில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் மின்னல் வெட்டி தெரிக்க, நட்சத்திரங்கள் கொட்டிக் கிடந்தது.

"அப்படி... அப்படியென்றால்... இப்போது நீர் சுழல் வருமா..." அவன் எண்ணம் முற்றுப் பெறும் முன்பே வேகமாக காற்று சுழன்றடிக்க தொடங்கியது.

நிற்க முடியாத அளவிற்கு வேகமாக காற்று சுழன்று சுழன்று வீச, அது கொஞ்சமாய் நீரையும் வாறி அவர்களின் மீதிறைத்தது.

"எல்லாம் அங்க பாருங்க..." சுமன் கைக்காட்டி கத்த, அவன் கைகாட்டிய திசையில் பார்த்தவர்களுக்கு அத்தனை அதிர்ச்சி. பேரலை ஒன்று அவர்களை நோக்கி வந்துக் கொண்டிருக்கிறது.

இனி என்ன முயன்றாலும் படகின் திசையையும் மாற்ற முடியாது; அந்த பேரலையிலிருந்தும் தப்ப முடியாது. உறுதியாய் தெரிந்த பின் ஐவரும் ஒருவர் கையை ஒருவர் பற்றியபடியே இறுக கண்களை மூடிக் கொள்கின்றனர்.

பெரும் இரைச்சலோடு நீரை வாறி அவர்களின் மீது ஊற்றியபடி, கொஞ்சம் கொஞ்சமாய் அவர்களை நெருங்குகிறது அந்த பேரலை. மனதில் இறைவனை நினைத்தபடியே ஐவரும் ஒன்றாய் கண்டிக் கொள்கின்றனர்.

இனி இந்த பூமியில் வாழப் போவதில்லை... வாழும் கடைசி நொடி வரை ஐவரும் பிரியவோ ஒருவர் கையை ஒருவர் விலக்கவோ கூடாது என்ற எண்ணம் உறுதிப்பட்டு கிடக்கிறது அவர்களின் உள்ளத்தில்.

மெல்ல அப்பேரலை அவர்களை வாறி இழுத்து தன்னுள் சுருட்டிக் கொள்கிறது. அந்த நீரில் படகு மூழ்கிப் போகும் என்ற எண்ணத்தை பொய்யாக்கும்படி வேகமாக அந்த அலைக்குள்ளேயே சுழன்றுக் கொண்டிருந்தது படகு.

அது சுழன்ற வேகத்தில் மூச்சு திணறி, வாந்தி வரும் போலிருந்தது. தலையும் கிறுகிறுத்து மயக்கம் வேறு வந்தது.

மெல்ல கண்களை திறந்து பார்கிறான் அவன். மற்ற நால்வரும் ஏற்கனவே மயங்கி விட்டிருந்தனர். எழுப்ப முயன்றாலும் முடியவில்லை. அத்தனை வேகமாய் சுழன்றுக் கொண்டிருந்தது படகு.

'தன்னால் தானோ இத்தனையும்... தான் இங்கு வர நினைத்திருக்கவோ கூடாதோ..? இனி என்ன செய்தாலும் தன்னால் இவர்களை காப்பாற்ற முடியுமா..? எத்தனை சொன்னார்கள்..? இப்படி அவர்களையும் இழுத்துக் கொண்டு வந்து மரணத்தின் வாசலில் தள்ளிவிட்டேனே..?' நினைக்க நினைக்க நேமியின் கண்களில் கண்ணீர் ஆறாய் பெருகுகிறது.

இனி அவன் செய்ய ஒன்றுமில்லை. இதுவே அவன் வாழ்வின் கடைசி நொடிகள் என்று தெரிந்ததும் மனமெங்கும் நீங்காமல் வந்து நிறைகிறது அவனின் அன்னை முகமும், 'நேமி கண்ணா...' என்ற பிரத்தியேக அழைப்பும். 'அம்மா... நீங்க தான் இவங்கள காப்பாதனும்... நான் கூட உங்க கூடவே வந்துடறேன்... ஆனா எனக்காக வந்த இவங்களோட உயிர நீங்க தான் காப்பாத்தனும்... ப்ளீஸ் ம்மா...' மனமுருகி மன்றாடியவனின் சுயமும் கொஞ்சம் கொஞ்சமாய் தப்பிப் போக, சுயத்தை இழக்கும் கடைசி நிமிடத்திருக்கு முன்பு உடைந்திருந்த படகின் வழியே தான் கண்டான் அந்த காட்சி.

அந்த பேரலைக்குள் சுழன்ற படகானது மெல்வ மெல்ல ஆழ்கடலின் விளிம்பை நோக்கி சுழன்றபடியே சென்றுக் கொண்டிருந்தது. கிட்டதட்ட ஒரு கிலோமீட்டர் விட்டம் கொண்ட சுழல் அது. அதன் முடிவு தெரியவில்லை என்றாலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீண்டு கிடந்தது. அதில் தான் சுழன்றபடியே கொஞ்சம் கொஞ்சமாக கீழிறங்கிக் கொண்டிருந்தது அவர்களின் படகு.
- தொடரும்
 

தமிழ் வெண்பா

New member
Vannangal Writer
Messages
18
Reaction score
19
Points
3
காத்திருப்பு 4:

இறுக மூடிய விழிகளின் உள்ளே ஓயாத அலைகள் அடங்காது ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. மீண்டும் மீண்டும் அதே சோகம் நிறைந்த இசை, அவனின் செவிப்பறைகளை வந்து வந்து மோதி இம்சையைக் கூட்டிக் கொண்டிருந்தது. அழுந்த தலையை பற்றியபடியே மெல்ல எழுந்து அமர்ந்தவனுக்கு, இன்னும் தலையை சுற்றுவதைப் போலவே ஒரு பிரமை. இன்னும் முழுதாக விழிகளைத் திறக்க கூட முடியவில்லை. இரண்டு கைகளாலும் இறுக தலையைப் பற்றிக் கொண்டவன், மெல்ல இமைகளைப் பிரிக்க முயன்றான்.

எத்தனை முயன்றும் அத்தனை சுலபமாய் இமைகளைத் திறக்க முடியவில்லை அவனால். ஏதோ பெரும் பாறை ஒன்றை இடம் பெயர்த்து இமைகளின் மீது ஒட்டி வைத்ததை போல பாரம் ஏறிக் கிடந்தது.

மெல்ல இரண்டு இமைகளையும் நீவி விட்டபடியே இருந்தவனுக்கு, இறுதியாக நீண்ட நேரத்திற்கு பின்பு இமைகளை கொஞ்சமாய் அதனிடத்தில் இருந்து பிரிக்க முடிந்தது. ஆனால், எரிச்சலென்றால் அப்படி ஒரு எரிச்சல். மிளகாய் சாந்தை அரைத்து இமைகளின் மீது பூசி அதைப்போல் பெரும் எரிச்சல். அந்த எரிச்சலை உணர்ந்த நொடியில் சட்டென்று மீண்டும் இமைகளை இறுக மூடிக் கொண்டான். இப்படியாக அவனின் நீண்ட நேர முயற்சியன் பயனாக ஒரு வழியாக இமைகள் பிரிந்து விழிகளுக்கு வழிவிட்டது.

விரிந்த விழிகளின் வழியே, தன்னை சுற்றிப் பார்வையை ஓட்டினான் நேமி. கைக்கெட்டும் தூரத்திலேயே மற்ற நால்வரும் விழுந்து கிடந்தனர். அதேபோல அவர்கள் வந்த படகின் ஒரு சில பகுதிகளும் ஆங்காங்கே விழுந்து கிடந்தது. ஆனால் அவை படகின் ஒரு பகுதிதான் என்று கண்டுபிடிக்கவே நீண்ட நேரம் எடுக்கும். அப்படி சிறுசிறு துண்டங்களாக சிதிலமடைந்து கிடந்தது.
தான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறோம் என்பதை உணரவே நீண்ட நேரம் பிடித்தது அவனுக்கு. அதை உணர்ந்த அடுத்த நொடி அவன் சிந்தையை ஆக்கிரமித்தது நண்பர்கள் நால்வரின் நினைவு தான். விழிகளைத் திறந்த அடுத்த நொடி அவர்களை கண்டதும், வேகமாக அவர்களை நோக்கி ஓட விழைந்தது கால்கள். ஆனால் அவனின் மூளை இட்ட கட்டளையை ஏற்க மறுத்த கால்களோ தரையோடு ஒட்டி கொண்டதைப் போல இருந்த இடம் விட்டு நகர மறுத்தன.

கண்களின் எரிச்சலையும் பொருட்படுத்தாது, மாறி மாறி அவர்கள் நால்வரையும் தான் பார்த்துக் கொண்டிருந்தான் நேமி. சீராக ஏறி இறங்கும் நெஞ்சுக்கூடே அவர்களின் உயிருக்கு எதுவும் இல்லை என்பதை பறைசாற்ற, இப்போது தான் சீராக அவனாலும் மூச்சுவிட முடிந்தது.

மனதில் ஒரு நிம்மதி பரவியதும் தான் தன்னைச் சுற்றிலும் கவனிக்கத் தோன்றியது அவனுக்கு. இது வரையிலுமே அந்தப் பெரும் அலைக்குள் சிக்கி ஏதோ ஒரு தீவின் பக்கம் கரை ஒதுங்கி இருக்கிறோம் என்றுதான் எண்ணியிருந்தான் நேமி. ஆனால், அவனின் எண்ணத்தை உறுதிப்படுத்தும் விதமாக எந்த ஒரு காட்சியும் அவன் கண்ணுக்கு தென்படவில்லை.

எந்தப் பக்கமும் கடலின் கரை இருப்பதைப் போல தெரியவில்லை. ஏன் கடலே அங்கு இருப்பதற்கான எந்த ஒரு சிறு அறிகுறியும் இல்லை. வெள்ளியை உருக்கி பூந்துகள்களாக தூவி விட்டதைப் போல எங்கும் வெண்மணல் பாதை காணக் கிடைக்கிறது. வானை மறைக்கும் அளவிற்கு நெடிதுயர்ந்த மரக்கூட்டங்கள் சுற்றி எங்கும் விரவிக் கிடக்கிறது. அந்த மர கூட்டங்களை தாண்டி வானை காண இயலவில்லை. மென்மையான கண்ணை உறுத்தாத நீலமும் சிவப்பும் கலந்த இளம் ஒளி ஒன்று தங்களை சூழ்ந்திருப்பதை போன்று தோன்றியது.

அதே நேரம் தான் சொறுமியபடியே தலையை பற்றிக் கொண்டு தள்ளாடியபடியே எழுந்து அமர்ந்தான் சுமன். நேமியைப் போல தான் அவனும் உணர்ந்திருக்க வேண்டும். அதனாலேயே இந்த தள்ளாட்டம். அடுதற்கு அடுத்து கொஞ்ச நேரத்திலேயே ஒருவர் பின் ஒருவராக அம்முறையிலேமே எழுந்து அமர்ந்தனர். அவர்கள் எல்லாம் தங்களை நிலைப்படுத்திக் கொண்டு, விழிகளை திறக்க அரைமணி நேரத்திற்கும் மேல் பிடித்தது.

தன்னை சுற்றி சுற்றி பார்த்தபடியே, "ஆமா நேமி... எங்க இருக்கோம் இப்ப நாம..." தலையை உலுக்கிக் கொண்டு சுமன் வினவ, மற்றவர்களின் முகமும் அதேக் கேள்வியை தான் தாங்கி நின்றது.

"எனக்கு மட்டும் என்ன தெரியும்... நானும் உங்கள மாதிரி தான ஏந்திரிச்சு உக்காந்து இருக்கேன்..." என்றான் நேமி தலையை அழுந்தப் பற்றிக் கொண்டு. இன்னும் முழுதாய் அவனின் தலைபாரம் நீங்கி இருக்கவில்லை.

"ஆமான்... நாம எல்லாம் கடல தானே வந்தோம்... உன் பர்த்டே கூட கொண்டாடுனோமே... இப்ப என்னடா சுத்தி எங்கையும் கடலே இருக்க மாதிரி தெரியல..." என்றான் டேவிட் சுற்றி சுற்றிப் பார்த்து.

"அதான்டா எனக்கும் ஒன்னும் புரியல..." என நேமி யோசனையாக சொல்ல,

"ஏய்... வழக்கம் போல இதுவும் உன் கனவு தான... நாங்க எல்லாம் உன் கனவுல தான இருக்கோம்... ஆமானு மட்டும் சொல்லிடு நேமி... உனக்கு புன்னியமா போகும்..." என்ற ஜெகனின் மீது சிறு கல் ஒன்று விழ, அது ஏற்படுத்திய வலியில் "ஸ்ஸ்ஸ்... ஆஆஆஆ..." என கத்தினான் அவன்.

'ஏன் பக்கி...' என்ற ரீதியில் அவன் நேமியைப் பார்த்து வைக்க, "வலிக்குதுல்ல... அப்போ இது கனவில்ல..." என்றான் அவன் கடுப்பாய்.

"ஆமான் இதென்ன ப்ளுவையும் ரெட்டையும் மிக்ஸ் பண்ண மாதிரி ஒரு லைட்..." என டேவிட் மீண்டும் சந்தேகமாய் நேமியைப் பார்க்க,

"அடேய்... கொலகாரனா மாத்தாதீங்கடா என்னைய... நானும் உங்கள மாதிரி தானே தேமேனு உக்காந்து இருக்கேன்... என்ன நோண்டி நோண்டி கேள்விக் கேட்டா எனக்கு மட்டும் என்ன தெரியும்..." கடுப்புடன் தான் மொழிந்தான் அவன்.

"நீ தான எங்க எல்லாரையும் இங்க கூட்டிட்டு வந்து தள்ளுன... அதுவும் இல்லாம எங்களுக்கு முன்ன எழுந்து தெம்பா வேற உக்காந்து இருக்க... அப்ப உன்ன தானே கேட்க முடியும்..."

"ஏந்திரிச்சு வந்தேன் எட்டி மிதிச்ஞு இடுப்ப உடைச்சுப் புடுவேன்... நானே தலைவலி தாங்க முடியலனு உக்காந்து இருக்கேன்... உனக்கு தெம்பா உக்காந்து இருக்க மாதிரி இருக்கோ..?"

"யாருடா இவன்... நீ வேற தனியா என் இடுப்ப உடைக்க போறீயாக்கும்... அது ஏற்கனவே பார்ட் பார்ட்டா டேமேஜ் ஆகிதான் இருக்கு... போவீயா அங்குட்டு..."

இதுவரை தாங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தவர்கள் அப்போது தான் கவனித்தனர் சாராவை. எழுந்ததிலிருந்து ஏதோ யோசனையாய் தலையைப் பற்றியபடி அமைதியாக அமர்ந்திருந்தாள் அவள்.

"சாரா... இங்க பாரு... உனக்கு ஒன்னுமில்ல தானே... நாங்க பேசறது கேக்குது தானே உனக்கு... சாரா... சாரா..." என்றபடியே அவர்களுக்கு அருகில் இருந்த ஜெகன் அவளை நெருங்கி உலுக்கவும், வேகமாக அவனை உதறி தள்ளினாள் அவள்.

"ப்பா... தோள்பட்டையே கழன்டுடும் போல... என்னா உலுக்கு உலுக்குற... அஞ்சலி பட கிளைமாக்ஸ் மாதிரி... முடியலடா சாமி உன்னோட..." என அவள் சிலிர்த்து கொள்ளவும்,

"அப்பாடி என்ற சாராவுக்கு பேச்சு வந்துடுச்சு..." என்றபடியே அவளை தாவி அணைக்க முயன்ற ஜெகனை தனது வெட்டும் பார்வையாலேயே தள்ளி நிறுத்தினாள் அவள்.

"ஏன் இத்தன நாள் நான் ஊமையாவா இருந்தேன்... எனக்கு பேச்சு வர... இதான் சாக்குனு பக்கத்துல வந்தா கழுத்த நெறுச்சி கொன்னுடுவேன் பாத்துக்கோ..."

"சரிதான் போடி... ஏதோ புள்ள ஏந்திரிச்சதுல இருந்து சித்தம் கலங்கின மாதிரி ஒரே இடத்த வெறிச்சுட்டு உக்காந்து இருக்கே கேட்டா... ரொம்ப தான் பண்ணுற... சாரா இல்லனா ஒரு தாரா... சிம்பிள்..."

"ஆமான்டா சிம்பிள் தான்... சிம்பிளே தான்... ஒரு கத்திய எடுத்து உன்ன குத்தறது கூட எனக்கு ரொம்ப சிம்பிள் தான்... என்ன பண்ணட்டுமா..?" என்றாள் அவள் புருவத்தை ஏற்றி இறக்கி அவனை முறைத்துக் கொண்டே.

"தாயே பரதேவத... உனக்கு தான் என்ன புடிக்கலனு சொல்லிட்ட இல்ல... அப்ப ந் தாரா பின்னாடி போனா என்ன..? மீரா பின்னாடி போனா என்ன..? வந்துட்டா பெருசா கேள்விக் கேட்க..." ஜெகனும் அவளுடன் மல்லுக்கு நிற்க,

"அடச்சே... பக்கிங்களா... ஆரம்பிச்சிட்டீங்களா உங்க பஞ்சாயத்த... இதுக்கெல்லாம் ஒரு நேரங்காலமே இருக்காதே... எங்க இருக்கோம்... அடுத்து என்ன பண்ண போறோம் தெரியல... இப்ப இது ரொம்ப முக்கியம்..." இரண்டு பேருக்கும் இடையில் இருந்த டேவிட் காதை குடைந்துக் கொண்டே கத்த, சட்டென்று வாயை மூடிக் கொண்டனர் மற்ற இருவரும். வாயை மூடிக் கொண்டனரே ஒழிய ஒருவரை ஒருவர் முறைப்பதை நிறுத்தவில்லை.

"விடு டேவிட்... இது என்ன புதுசா நமக்கு... முதல இது என்ன இடம்னு கண்டுபிடிக்கனும்... அப்ப தான் இங்கயிருந்து நம்பளால போக முடியும்..." என்றான் நேமி யோசனையாக.

"ஆமான்டா... இந்த இடமே ரொம்ப வித்தியாசமா இருக்கு... எவ்வளவு மரம் இருக்கு... ஆனா, காத்து அடிக்கற சத்தமா... பறவைங்க சத்தமோ கேக்கவே இல்ல பாரேன்... காத்தே அடிக்கலைனாலும் வேர்க்கவே இல்ல... ஏசி போட்ட மாதிரி குளுகுளுனு இருக்கு..." என்றான் சுமன் யோசனையாக.

"ஆமான்டா... எனக்குமே இந்த இடம் ரொம்ப வித்தியாசமா தான் இருக்கு... எவ்வளவு சீக்கிரம் இங்க இருந்து போக முடியுதோ அவ்வளவு சீக்கிரமே போய்டனும்..." கண்களில் ஒரு மிரட்சியுடன் சொல்லிக் கொண்டிருந்தான் ஜெகன்.

"எனக்கு என்னமோ அப்படி தோனல..." என்றாள் சாரா யோசனையை சுமந்த முகபாவனையுடன்.

"ஏன் வேற எப்படி தோனுதாம்..." என்றான் ஜெகன் கடுப்புடன்.

திரும்பி அவனை முறைத்துப் பார்த்தவள், "நாம தேடி வந்ததுக்கு இங்க தான் விடைக் கிடைக்குமுனு தோனுது... ஏன் நேமி உங்க அப்பாம்மா வந்த கப்பல் காணப் போனது கூட நம்ம கப்பல் அந்த அலையில மாட்டுன இடத்துக்கு பக்கத்துல தான" என்றாள் சாரா.

"ஆமான் சாரா... கடைசியா அப்பவோட கப்பல இருந்து அந்த இடத்துலருந்து தான் ஹெல்ம் கேட்டு ரேடார் சிக்னல் வந்ததா ரெக்கார்ட் இருக்கு..."

"அப்போ ஏன் அவங்களும் நம்மள மாதிரியே அந்த அலைக்குள்ள மாட்டிகிட்டு இந்த இடத்துக்கு வந்துருக்க கூடாது... உங்க அப்பாம்மாவுக்கும் அவங்க கூட வந்தவங்களுக்கும் என்ன ஆச்சுனு கண்டுபிடிக்கனும் நேமி... எனக்கு என்னமோ அவங்க எல்லாம் உயிரோட தான் இருப்பாங்கனு தோனுது... மே பீ இங்கையே மாட்டிகிட்டு வெளி உலகத்துக்கு அவங்களால வர முடியாம போய் இருக்கலாம்... இல்ல வர வழிய அவங்களால கண்டுபிடிக்க முடியாம போய் இருக்கலாம்..." என யோசனையாய் சொல்லிக் கொண்டே போனவளை தாவி அணைத்திருந்தான் நேமி.

"யூ ஆர் கிரேட் சாரா... நான் கூட உயிர் பயம் வந்ததும் எதுக்கு வந்தோம்னே மறந்துட்டேன்... பட் யூ ஆர் ரியலி கிரேட்... கண்டிப்பா என்னோட அப்பாம்மா இங்க தான் எங்கையாவது இருக்கனும்... நிச்சயம் நம்ம அவங்கள தேடிக் கண்டு பிடிச்சுடலாம்..." என்றான் ஆனந்த மிகுதியில் துள்ளிக் கொண்டே.

"கண்டிப்பா கண்டு பிடிச்சுட்டலாம்... யூ டோன்ட் வொர்ரி நேமி..." என்றாள் சாராவும் அவனைக் கட்டிக் கொண்டு.

"நானும் ஒன்னு கண்டு பிடிச்சுட்டேன்..." என கத்திய ஜெகனை மற்ற அனைவரும் "என்னனு சொல்லி தொல நாயே..." என்ற ரீதில் நோக்க,

"எல்லாருக்கும் தல சுத்தற மாதிரி கிறுகிறுனு இருக்கா..." என ஜெகன் கேட்க,

"ஆமான்... இருக்கு..." என்றனர் மற்றவர்கள் கோரஸாய்.

"காதெல்லாம் அடைச்ச மாதிரி மந்தமா இருக்கா..."

"ஆமான்... இருக்கு..." என்றனர் இம்முறை கொஞ்சம் கடுப்புடன்.

"கண்ணு ரெண்டும் இருட்டிட்டு மங்கலா தெரியுதா..."

"ஆமான்... தெரியுது..." என்றனர் ஒன்றுப் போல் அதித கடுப்புடன்

"ஏன் அப்படி தெரியுது தெரியுமா..?"

"என்னனு தான் சொல்லி தொலேயேன் மூதேவி..?" என்றனர் பெரும் கொலைவெறியுடன்.

"ஏன்னா... ஏன்னா..." என அவன் இழுத்து நிறுத்தி ஒவ்வொருவரையும் நிம
தானமாக நோட்டமிட,

"ஏதாவது மொக்கயா சொல்லு... இங்கையே உனக்கு சமாதிக் கட்டிட்டு தான் மறுவேலை..." என்றான் டேவிட்.

"ஏன்னா நமக்கெல்லாம் உசுர போற அளவுக்கு பசிக்குதுடா... அதான் காதடைக்குது... கண்ணு தெரியல... தல வேற கிறுகிறுனு சுத்தி மயக்கமா வருது... முதல சாப்பிட ஏதாவது கிடைக்குதானு தேடிக் கண்டு பிடிப்போம்... இல்ல இங்கையே செத்து தொலைச்சுடுவோம்... அப்பறம் நம்மள கண்டுபிடிக்க வேற ஒரு க்ரூப் தான் வரனும்..." என பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு சொன்னவனை 'அட அல்பமே...' என்ற ரீதியில் பார்த்தவர்களுக்கும் அப்போது தான் பசி என்ற உணர்வே எழுந்தது.

"ஆமான்டா எனக்கும் இப்ப தான் பசியே தெரியுது... முதல ஏதாவது சாப்பிடுவோம்..." என்றான் சுமன் வயிற்றை இறுக பிடித்துக் கொண்டே.

"ஆனா இங்க கண்ணுக்கெட்டுன தூரம் வரைக்குமே ஆள் நடமாட்டமே இல்லையே... சாப்பிட எதுவும் கிடைக்குமுனு நினைக்கற..." டேவிட் யோசனையாய் சொல்ல,

"விளங்காத பயலே... கிளம்ப முன்ன வாய வச்சுட்டீயா... இனிமே சாப்பாடு கிடைச்ச மாதிரி தான்..." என்றான் சுமன் அவனின் முதுகில் ஒன்று வைத்து.

"மரமெல்லாம் இருக்கு... அப்போ கண்டிப்பா மனுஷங்களும் இருப்பாங்க... சாப்பாடும் இருக்கும்... முதல தேடிப் பாப்போம் வாங்க..." என நேமி எழுந்துக் கொள்ள,

"ஆமான் ஆளுக்கு ஒரு பக்கமா தேடிப் போவோம்... யாருக்கு முதல சாப்பாடு கிடைக்குதோ அவங்க மத்த எல்லாரையும் திரும்ப இதே இடத்துக்கு வர சொல்லிடலாம்..." என அதிபுத்திசாலியாய் ஜெகன் ஒரு ஐடியாவை சொல்ல,

"எப்படி சார் சாப்பாடு கண்டுபிடிச்ச உடனே மத்தவங்களுக்கு தகவல் சொல்லுவீங்க... போனெல்லாம் கிடையாது பாத்துக்கோ... அதுவும் இல்லாம இது புது இடம்... இங்க தனியாப் போறது அவ்வளவு சேஃப் இல்ல நமக்கு..." என்றாள் சாரா.

"ஆமான்... ஒரு வேள இங்க இருக்கவங்க நர மாமிசம் சாப்பிடறவங்களா இருந்தா... அத்தோட முடிஞ்சுது உன் ஜோலி..." டேவிட் கிண்டலாக சொல்ல, அரண்டுப் போய் பார்த்தான் ஜெகன்.

"முடிஞ்ச அளவுக்கு யாரும் தனியா போக வேண்டாம்... புதுசா யாரப் பாத்தாலும் பேச்சுக் குடுக்க வேண்டாம்... முதல இந்த இடத்த பாத்தியும் இங்க உள்ளவங்கள பாத்தியும் கொஞ்சமாவது தெரிஞ்சுப்போம்... அதுக்கு பிறகு அவங்ககிட்ட போய் பேசலாம்... சரிதானே..." என்றான் நேமி...

"சரிதான் முதல சோத்த தேடுவோம்... வாங்கடா..." என்றபடியே ஜெகன் முன்னே செல்ல, 'இவன எல்லாம் திருத்தவே முடியாது..." என்ற எண்ணத்துடனும் எழுந்துவிட்ட முறுவலுடன் அவனைப் பின்தொடர்ந்தனர் அவர்கள்.

அவர்கள் எத்தனை நேரம் நடந்திருப்பார்களோ தெரியவில்லை. நடந்து நடந்து கால்கள் சேர்ந்துப் போய் இருந்தது. எத்தனை நடந்தாலும் அந்த காடும் முடிவதைப் போல இல்லை. அவர்களுக்கு உணவும் கிடைப்பதைப் போல தெரியவில்லை.

"இன்னும் எவ்வளவு நேரம்டா... இதுக்கு மேல என்னால நடக்க முடியல... இப்படியே நடந்துப் போய்ட்டே இருந்தா இங்கையே ஜீவ சாமாதி ஆகிடுவோம் போல..." ஜெகன் புலம்பிக் கொண்டே வர,

"உன் வாயிலேயிருந்து நல்ல வார்த்தையே வராதா நாயே... பேசாமா முடிட்டு வா... நாங்களும் உன்ன மாதிரி தானே வருவோம்..."

"நீங்க வருவீங்க... என்னால முடியாதுடா யப்பா..."

"அதுக்கு உன்ன இடுப்புல தூக்கி வச்சுக்கிட்டா வர முடியும்..."

"ஏன் தூக்கி வச்சுகிட்டா என்ன குறைஞ்சா போய்டுவ... அதான் ஜிம்முக்கு போய் சிக்ஸ் பேக்கெல்லாம் வச்சு தடிமாடு மாதிரி உடம்பெல்லாம் வளத்து வச்சு இருக்கில... பேசாம என்ன தூக்கிட்டு போ..." என டேவிட்டின் முதுகில் ஜெகன் தொற்றிக் கொள்ள,

அவனின் கழுத்தை சுற்றி பிடித்து இழுத்து கீழே போட்டவன், "நீயெல்லாம் அடங்கவே மாட்ட இல்ல... இந்தா வாங்கிக்க..." என்றபடி அவனை எட்டி உதைத்து உருட்டி தள்ளிவிட்டு தன் நடையை தொடர,

"அடே எடுபட்ட பாவிப் பயலே... நீயெல்லாம் நல்லா இருப்பீயா.. ஆளாலுக்கு என் இடுப்பையே உடைக்கறானுவளே... அப்படி என்ன தப்புடா பண்ணுச்சு இந்த இடுப்பு... ஒரே ஒரு நாள் 'ஒல்லி பெல்லி இடுப்பு... ஒட்டியாணம் எதுக்குனு...' உங்க முன்னாடியெல்லாம் ஆட்டி ஆட்டி காட்டுனதுக்காடா இப்படி எட்டி எட்டி மிதிக்கறீங்க... உங்களுக்கு இவ்வளவு அழகான இடுப்பு இல்லைனா... என் இடுப்ப உடைக்க பாப்பீங்களா... நல்லா இருக்கே நியாயம்..." கீழே உருண்டுக் கொண்டே இடுப்பைப் பிடித்தபடி கத்திக் கொண்டிருந்தான் ஜெகன்.

வேகமாக அவனிடம் திரும்பி வந்த டேவிட், ஒற்றை விரலை அவனின் முன்பு நீட்டி, "பேசாம வாய மூடிட்டு வந்துடு... இல்ல ப்ரண்டுனு கூட பாக்காம இங்கையே குழி தோன்டி புதைச்சுட்டு போய்டுவேன்..." என மிரட்ட,

"டேய்... உயிர் நண்பன ஒருத்தன் கொல்லுவேனு சொல்லிட்டு இருக்கான்... உங்களுக்கு அங்க என்னடா கெக்கபிக்கனு சிரிப்பு... வந்து ஒருத்தவனாவது நியாத்த கேளுங்கடா டே..." என மீண்டும் ஜெகன் கத்த தொடங்க, அவன் கழுத்தையே நெறிக்க தொடங்கி இருந்தான் டேவிட்.

இன்னுமே மற்ற மூவரும் நின்று சிரித்துக் கொண்டிருக்க, ஜெகனோ விழிப் பிதுங்கிப் போய் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

"சரி சரி விடுடா... என்ன இருந்தாலும் நம்ம பய... செத்து கித்து தொலைச்சுட்டானா புதைக்க வேற டைம் எடுக்கும்... விடு அப்பறம் பாத்துக்கலாம்..." என சுமன் டேவிட்டை சாமாதனப் படுத்த பார்க்க,

"துரோகி..." எனதான் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தான் ஜெகன்.

"நானு செம பசியில இருக்கேன்... இதுல நீ வேற லூசுபயலாட்டம் பினாத்திட்டே வந்த அவ்வளவு தான் சொல்லிட்டேன்..." என மீண்டும் எச்சரிக்க,

"இனிமேலும் பேச எனக்கு என்ன பைத்தியமா... நண்பனு நம்பி கூட வந்ததுக்கு உயிர் பயத்த காட்டிட்ட இல்ல... பாத்துக்கறேன்டா உன்ன..." என ஜெகன் வாயிக்குள்ளேயே முணுமுணுக்க,

"ஸ்ஸ்ஸ்... ஸ்ஸ்ஸ்ஸ்..." என வாயில் விரலை வைத்து அனைவரையும் அமைதியாக இருக்கும்படி சொன்னாள் சாரா.

"ஏதோ சவுண்ட் கேக்குது..." சாரா மெல்லமாக சொல்ல மற்றவர்களும் கூர்ந்து கவனிக்க தொடங்கினர்.

மெல்ல மெல்ல அந்த சத்தம் அருகில் வரவும் தான் தெரிந்தது அது ஒரு குதிரையின் குழம்படி சத்தமென்று. அத்தனை ஆச்சரியம் அவர்களுக்கு. இதுவரை அவர்கள் வந்த பாதையில் பெயருக்கென்று கூட ஒரு விலங்கை பார்க்கவில்லை அவர்கள். அப்படியிருக்க குதிரை மட்டும் இங்கே எப்படி சாத்தியம்.

கொஞ்சம் கொஞ்சமாக அந்த குதிரையின் குளம்படி சத்தம் தங்களை நெருங்கவும் தான் தெரிந்தது அந்த குதிரையின் மீது யாரோ அமர்ந்திருப்பது. ஒரு நொடி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டவர்கள் வேகமாக ஆளுக்கு ஒரு மரத்தின் பின்னல் சென்று ஒளிந்துக் கொண்டனர்.

அந்த குதிரையின் காலடி சத்தம் அவர்களை நெருங்க நெருங்க இதயம் தாறுமாறாக துடிக்க தொடங்கி இருந்தது. வியர்வை வெள்ளம் பெருகி அவர்களின் உடல் முழுவதையும் தெப்பமாய் நனைத்திருந்தது. அந்த குதிரை அருகில் வரவும் தான் கண்டனர் அந்த குதிரையில் அமர்ந்திருப்பவன் ஒரு வீரனென்று. உடல் முழுவதும் மறைத்தபடி பழங்கால கவச உடை அணிந்து இருந்தவனின் கண்கள் மட்டுமே அவர்களுக்கு காண கிடைத்தது. கையில் நீண்ட ஈட்டி ஒன்றை பிடித்திருந்தான் அவன். மெல்ல அந்த ஈட்டியை தரையுல் ஊன்றி எம்பி குதித்தவன் நோக்கிய இடம் கண்டு சர்வமும் அடங்கிப் போனது மற்றவர்களுக்கு. ஏனெனில் அது ஜெகன் ஒளிந்திருந்த இடம். மெல்ல மெல்ல அவன் அடியெடுத்து வைத்து ஜெகனை நெருங்க, அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தபடி சம்பித்து நின்றிருந்தனர் மற்றவர்கள்.

-காத்திருப்பு தொடரும்...
 

தமிழ் வெண்பா

New member
Vannangal Writer
Messages
18
Reaction score
19
Points
3
காத்திருப்பு 5:

குதிரையை விட்டு இறங்கிய அவ்வீரன், ஜெகன் இருந்த திசையையே கூர்ந்து நோக்கியபடியே, முன்னெச்சரிக்கையாய் ஈட்டியை முன்னே நீட்டி பிடித்தபடி, மிகவும் கவனமாய் மெல்ல ஒவ்வொரு எட்டுகளாக எடுத்து வைத்து ஜெகனை நெருங்கிக் கொண்டிருந்தான்.

இன்னும் சில அடி தூரங்களே மீதமிருக்கிறது ஜெகனை நெருங்க. ஒருவேளை அவனின் பாதுகாப்புக்காக ஈட்டியைக் கொண்டு தாக்கிவிட்டால், நினைக்கவே உள்ளம் நடுங்கியது மற்ற நால்வருக்கும். இவர்களுக்கே இப்படி என்றால் ஜெகனின் நிலையை சொல்லவும் வேண்டுமா? அவனின் சொல் கேளாமல் வெடவெடவென நடுங்கும் கால்கள் ஒன்றே போதுமானது அவனை காட்டிக் கொடுக்க. 'பேசாமல் கையைத் தூக்கிட்டு சரண்டர் ஆகிடலாமா..? இப்போது அப்படி செய்யறது தான் நல்லது... இல்லனா அவன் பாட்டுக்கு ஏதாவது விலங்குனு நினைச்சு ஈட்டிய ஒரே சொறுவா சொறுகிட்டானா..?' என எண்ணியவன், கைகள் இரண்டையும் மேலே தூக்கியபடி மறைந்திருந்த இடத்தை விட்டு மெல்ல வெளியே வந்தான்.

அவன் நிராயுதபாணியாக வெளியே வருவதைக் கண்ட அவ்வீரனும் நீட்டிய ஈட்டியை சற்றே தளர்த்திப் பிடிக்க, அதுவரை நல்லதொரு சந்தர்ப்பம் வாய்க்காதா என்று காத்திருந்த நம்மவர்கள் நால்வரும் கண பொழுதில் கண்களாலேயே தங்களுக்குள் சமிக்ஞையை பரிமாறிக் கொண்டு நொடியும் தாமதிக்காமல் அவ்வீரனின் மீது பாய்ந்திருந்தனர்.

நால்வரும் ஒரே நேரத்தில் பாய, அத்தாக்குதலை எதிர்பாராத அவ்வீரனோ, நிலை தடுமாறி அவர்களுடன் சேர்ந்து தரையில் உருண்டி விழ, அவன் பற்றியிருந்த ஈட்டியோ அதே வேகத்தில் சற்றே தூர சென்று விழுந்தது. இதை சற்றும் எதிர்பாராத ஜெகனோ அதிர்ச்சி நீங்காமல் அவர்களையே பார்த்திருக்க, "அடேய்... தீவிட்டி தடியா... அந்த ஈட்டிய எடுடா முதல..." என கத்திக் கொண்டிருந்தான் டேவிட்.

அவன் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே அவர்கள் நால்வரும் தங்களின் காலைப் பற்றிக் கொண்டு, ஆளுக்கு ஒரு பக்கம் வலிப் பொறுக்க முடியாமல் கத்தியபடியே உருண்டுக் கொண்டிருக்க, கிண்கிணி நாதமாய் எழுந்தது நகைப்பொலி ஒன்று. அவள் தான் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் தன்னிடமிருந்த குறுவாள் கொண்டு அனைவரின் காலிலும் காயத்தை ஏற்படுத்தி இருந்தாள்.

"அச்சச்சோ... பாவம்... நால்வர் சேர்ந்துமா என் ஒருத்தியை வீழ்த்த முடியவில்லை... நால்வருமே மாவீரர்கள் தான் போங்கள்..!" என்றவளின் குரலில் எள்ளலும் துள்ளலும் நக்கலும் சரிவிகித சமமாய் கலந்திருக்க, அப்போது தான் கண்டுக் கொண்டனர் அவள் ஒரு பெண் என்பதையே.

"டேய்... பொண்ணுடா..." காலைப் பற்றிக் கொண்டே டேவிட் சொல்ல,

அவன் சொல்லிய விதத்திலேயே வேகமாய் தலையிலிருந்த கவசத்தை கழட்டியவள், அதே வேகத்தில் அவன் இதயத்தின் அருகே அந்த குறுவாளை அழுத்திப் பிடித்திருந்தாள்.

"பெண் என்றால் அத்தனை இளப்பாமா தாங்களுக்கு..?" கண்களில் மின்னல் வெட்டியதோ? தீப்பிழம்பு சொட்டியதோ? அப்படிதான் நினைத்தான் அருகே அவளைக் கண்ட டேவிட்.

"ஐய்யையோ... அவன் அப்படி சொல்லல... நாங்க நீங்க ஒரு பையனு நினைச்சோம்... அதனால அப்படி சொல்லிட்டான்... ப்ளீஸ் அவன எதுவும் பண்ணிடாதீங்க..." என்றாள் சாரா வேகமாக அவளை நெருங்கி சமாதானப் படுத்தும் எண்ணத்துடன்.

" தாங்களும் என்னை பொருத்தருள வேண்டுகிறேன்... என்னை தாக்க வருகிறீர்கள் என்றெண்ணி தான் பதில் தாக்குதல் நடத்திவிட்டேன்..." என சாரவிடம் தன்மையாக மொழிந்தவள்,

"சக்தியை பயன்படுத்தும் முன்பு கொஞ்சமே கொஞ்சம் புத்தியை பயன்படுத்த வேண்டும் நண்பர்களே..! அதோ நின்கிறாரே அவரைப் போன்று..." என இறுதியாக ஜெகனை தொட்டு மீண்ட அவளின் வேள்விழிகள் டேவிட்டைத் தான் துளைத்துக் கொண்டிருந்தது.

"டேய் அந்த பொண்ண இன்னும் நாலு தடவ வேணுமுனாலும் கத்தியல குத்த சொல்லுடா... ஆனா அந்த பக்கி பயல மட்டும் அறிவாளினு சொல்ல சொல்லத... செம கடுப்பாகுது எனக்கு..." என்றான் டேவிட்

"என்னமோ நான் சொல்லிதான் அந்த புள்ள உன்ன குத்த போற மாதிரி சொல்லற... நீ பேசற பேச்சுக்கு இன்னும் கொஞ்ச நேரத்துல கட வாய்க்குள்ளேயே கத்திய விட்டு ஆட்ட போகுது பாரு..." என்றான் நேமி.

"அதுகூட பரவயில்லடா... அவன பாரேன்... அவனால தான் நாம எல்லாம் கத்தி குத்து வாங்கிட்டு ரத்தம் சொட்ட சொட்ட கிடக்கோம்... அத கொஞ்சம் கூட கண்டுக்காம, என்னமோ காணத கண்ட மாதிரி அந்த புள்ளயவே பாத்து ஈனு முத்திரெண்டு பல்லையும் காட்டிட்டி இருக்கான்..." என்றான் டேவிட்.

"டேய் கொஞ்சம் சும்மா இருங்கடா அந்த பொண்ணு நம்ம இரண்டு பேரையும் தான்டா முறைச்சு பாத்துட்டு இருக்கு..." என்றான் சுமன்.

"நீங்கள் ஐவரும் யார்..? எத்தேசத்தை சேர்ந்தவர்கள்..? எதற்காக இங்கே வந்திருக்கிறீர்கள்..? இங்கிருப்பவர்கள் யாரையாவது அறிவீர்களா..? இப்பகுதி மானுடர்கள் நடமாட தடை விதிக்கப்பட்ட பகுதிகளாயிற்றே... பலமான பாதுகாப்பு வேறு இருக்கிறது... இப்படி இருக்க அத்தனை காவலை மீறி எப்படி உள்ளே நுழைந்தீர்கள்..?" வரிசையாய் அவள் கேள்விகளை அடுக்க அவர்கள் ஐவரும் மலைத்துப் போய் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

"அம்மா தாயே... ஒவ்வொரு கேள்வியா கேளுமா... நீ பாட்டுக்கு மூச்சுவிடாம கேட்டுட்டே இருந்தீனா நாங்க எப்ப பதில் சொல்லறது..." என்றான் சுமன்.

"டேய் சும்மா இருடா... நீ பாட்டுக்கு ஏதாவது பேசப் போய் கத்தி எடுத்து அந்த பொண்ணு கழுத்துலையே சொறுகிட போகுது..." என்றான் நேமி மெல்ல எழுந்து நின்றபடியே.

ஆண்கள் நால்வரும் அமைதியாக இருக்க சாராதான் பதிலளிக்க வேண்டி இருந்தது. "நான் சாரா..." என்றவள் மற்ற நால்வரையும் அறிமுகப் படுத்த, டேவிட்டை மட்டும் இன்னும் முறைத்துப் பார்த்தாள் அவள்.

"அந்த புள்ள ஏன்டா உன்னைய இவ்வளவு அன்பா பாக்குது..." சுமன் டேவிடின் காதுகளில் கிசுகிசுக்க,

"அது எப்படிதான் எந்த பொண்ணா இருந்தாலும் அத்தான் மேல டக்குனு அட்டாச்மெண்ட் வந்துடும்..." என்றான் அவனும் சுமனைப் போலவே கிசுகிசுப்பாக.

"ஆமான்... ஆமான்... அந்த அட்டாச்மெண்ட்ல தான் உன் கழுத்துல கத்தி வச்சுச்சா... எனக்கு என்னமோ அந்த பொண்ணுக்கு உன் மொசரகட்டையே புடிக்கலனு நினைக்கறேன்... எப்படா உன்ன கத்தியால குத்தலாங்கற மாதிரியே பாத்திட்டு இருக்கு... எதுக்கும் ஜாக்கிரதையாவே இருக்கு... அசந்த நேரம் பாத்து சங்குல ஒரே சொறுகா சொறுகிட போகுது..." என்றான் நேமியும் அதே கிசுகிசுப்பு குரலில் நக்கலுடன்.

"யாருடா இவன்... உன் வாயில நல்லா வார்த்தையே வராதா... கூட்டிட்டு வந்து கொல்லறதுலேயே இருக்க..." என டேவிட்டும் அம்முறையிலேயே பதிலளிக்க,

தங்களுக்குள்ளேயே சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்தவர்கள் அப்போது தான் அனைவரையும் அறிமுகபடுத்திவிட்டு அவர்களின் பதிலுக்காக காத்திருந்த சாராவையும் புதியவளையும் கவனித்தனர். இருவரும் தங்களை முறைப்பதை கவனித்துவிட்டு கடைவாய் பல் தெரியும் அளவிற்கு இளித்து வைத்தனர்.

"கொல்ல வேண்டுமென முடிவெடுத்துவிட்டால் அசந்த நேரம் முதுகில் குத்துபவள் அல்ல நான்... நேர் நின்று போர் புரிந்து நெஞ்சில் வாள் பாய்ச்சுபவள்..." கோவம் தெரிக்க அவள் சொன்ன விதத்திலேயே, அவள் அவர்களின் விளையாட்டு பேச்சை எத்தனை தீவிரமாக எடுத்துக் கொண்டிருக்கிறாள் என புரிந்துப் போனது.

"சரியான பாம்பு காதுடா..." மீண்டும் டேவிட் கிசுகிசுக்க,

"பாம்புகளுக்கு கேட்கும் திறன் இல்லை... மீண்டும் இதுப் போன்று தாங்கள் மூவரும் புறம் பேசினால் பேசும் திறத்தை இழக்க நேரிடலாம்..." என்றாள் அவள் அவர்களை முறைத்துக் கொண்டே.

"என்னடா சொல்லுது அந்த புள்ள... அதுசரி அது ஏன் அப்போ இருந்து பராசக்தி சிவாஜி மாதிரியே பேசிட்டு இருக்கு..." என கேள்வியாய் மற்ற இருவரையும் டேவிட் பார்க்க,

"ம்ம்ம்... அதுவும் உன்ன மாதிரி நட்டு கழன்ட கேஸா இருக்கும்..." என்றான் சுமன்.

"அது என்ன சொல்லுதுனா இப்படியே நமக்குள்ள பேசிட்டு இருந்தா பேசற நாக்க இழுத்து வச்சு அறுத்துடுவேனு சொல்லது..." என்றான் நேமி.

நேமியை தவிர மற்ற நால்வருமே தமிழ் திரைபடங்களின் வழியே தான் தமிழைப் பயின்றிருந்தனர். நேமி ஒருவன் மட்டுமே அவன் அன்னையிடம் பயின்ற தமிழின் ஈடுபாடால் முயன்று சங்க தமிழ் இலங்கியங்களை படித்து உணர்ந்துக் கொள்ளும் அளவிற்கு தமிழைக் கற்று தேர்ந்திருந்தான்.

"தயசெஞ்சு மன்னிசுடுங்க... நாங்க நண்பர்களுக்குள்ள ஏதோ விளையாட்டுக்கு பேசிட்டு இருந்தோமே தவிர... உங்கள கஷ்டப் படுத்தனுமுனு நினைக்கல.. நீங்க யாருனு நாங்க தெரிஞ்சுக்கலாமா..? இது எந்த இடம்..?" என்றான் நேமியோன் மிகவும் பணிவுடன். ஏனோ அவளின் உடை நடை பாவனைகள் அத்தனையும் அதிகாரவர்கமென்று பறைசாற்றியது.

"தங்களில் ஒருவருக்காவது மரியாதை என்றால் என்னவென்று தெரிந்திருக்கிறதே... மிக்க மகிழ்ச்சி... நான் இளவெயினி... ஆம், நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள்..?" என்றாள் அவளும் கேள்வியாய்.

"நாங்க மியாமில இருந்து ஒரு படகுல கிளம்பினோம்... வர வழியில பெரிய நீர் சுழல மாட்டிக்கிட்டோம்... படகும் சேதமாகிட்டு... அப்படியே மயங்கியும் போய்ட்டோம்... திரும்ப கண்ணு முழிச்சப்ப இங்க இருக்கோம்..." என்றான் நேமி.

"மியாமியா..? அப்படி ஒரு தேசம் இருக்கிறாதா என்ன... இதுவரை நான் கேள்வியுற்றதே இல்லையே..?" என்றாள் இளவெயினி யோசனையாய்.

"ஏன்ம்மா... நீயென்ன அமெரிக்க அதிபரா..? உனக்கு சொல்லிட்டு தான் எல்லா ஊருக்கும் பேரு வைக்கனுமா... இல்ல உனக்கு தெரியாம அமெரிக்காவுல ஒரு ஊரும் இருக்க கூடாதா..?" என்றது டேவிட்.

"நான் தாங்களிடம் மொழியாடவில்லை... நீங்கள் என்னிடம் நவிழாதிருப்பதே நலம்..." அவள் பார்வையிலேயே அனலைக் கக்க, கப்பென்று வாயை மூடிக் கொண்டான் டேவிட்.

"படகென்றால்... நீங்கள் கடலிலா பயணம் செய்தீர்கள்... ஆனால் கடலில் பயணம் செய்யதான் தடை விதிக்கப்பட்டிருக்கிறதே..."

"ஏம்மா... என்ன உன் பேரு... ஹான்... இளநீ... இன்னும் இந்த நாட்டுல எது எதுக்கெல்லாம் தடை போட்டு இருக்கீங்கனு ஒரு லிஸ்ட் குடுத்தா உனக்கு கோடி புன்னியமா போகும்..." வாயை அடக்க முடியாது டேவிட் மீண்டும் பேச, இம்முறை குறுவாளை அவன் கழுத்தில் பதித்திருந்தாள் அவள்.

"இத்தேசத்தின் இளவரசியின் பெயரை உரக்க உச்சரிக்க கூட தடை விதிக்கப்பட்டுள்ளது தான்... ஆனால் தாங்களோ கேலியே செய்கிறீர்கள்... அதற்கு தண்டனை என்ன தெரியுமா..? சிரசேதம்... ம்ம்ம்... என்ன செய்யட்டும் நான்... தண்டனையை நிறைவேற்றி விடட்டும்மா..?" அவனையே ஆழ்ந்து பார்த்தபடி அவள் வினவ,

"ஐய்யையோ... அப்படி எல்லாம் பண்ணிடாதீங்க... அவன் ஏதோ தெரியாம பேசிட்டான்... விட்டுடுங்க..." என்றான் நேமியோன் அவசரமாக,

"ஏன்டா வாய வச்சுட்டு சும்மாவே இருக்க மாட்டீயா நீ... பேசாம தான் இருந்து தொலையேன்..." என முதுகில் நான்கு வைத்து, சற்றே தள்ளி சாரா அவனை இழுத்து வரவும் தான் சுயநினைவே திரும்பியது அவனுக்கு. கழுத்தில் கத்தியை வைத்தப்பின் சர்வமும் ஒரு நிமிடம் அடங்கிதான் போனது அவனுக்கு.

"ஆமான்... இப்ப என்னத்துக்குடா அந்த புள்ள கத்திய வச்சு என் கழுத்துல அமுக்குது..." என்றான் இன்னும் குறையாத படபடப்புடன்.

"அது நீ அவங்க பேர சத்தமா சொன்னதும் இல்லாம கிண்டல் பண்ணிட்டீயாம்..." என்றான் நேமி நக்கலாக.

"அப்ப மெதுவா சொல்லலாமா..?" என்றான் டேவிட் பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டு.

"அட விளங்காத பயலே... அவங்க பேர சொன்னாலே சங்கறுத்து போட்டுட்டு போய்டே இருப்பேனு சொல்லுது அந்த புள்ள... நீ தான் கொஞ்சம் வாய வச்சுட்டு சும்மா இரேன்டா... உன்ன பாத்தாலே அந்த பொண்ணு தான் கடுப்பாகுதுல... அப்படிதானே மேடம்..." என சுமன் இம்முறை வெயினியிடமே வினவ, அவள் பதிலொன்றும் சொல்லவில்லை.

"குறுதி பெருகிக் கொண்டே இருக்கிறது... இதற்கு விரைந்து மருந்திட வேண்டும்... அதற்கான மருந்து என்னிடமில்லை... இப்போதே இங்கிருந்து சென்றால் தான் அதிக பாதிப்பிலிருந்து தப்பலாம்..." என்றாள் அவர்களின் நால்வரின் கால்களிலும் இன்னும் நிற்காமல் வழிந்தோடும் இரத்தத்தைப் பார்த்தபடியே.

"ஆனா... இது என்ன இடம்னு நீங்க இன்னும் சொல்லலையே..." என்றது சாரா. காயம் ஏற்படுத்தியவளே அதற்கு மருந்தும் ஈடுகிறேன் என்றால், இன்னும் முழுதாக அவளை நம்ப முடியவில்லை சாராவால். அன்றி நொடிக்கு நொடி கோபத்தில் கத்தியை தூக்கியபவளின் குணத்தையும் அத்தனை எளிதில் வரையறுக்க முடியவில்லை. அப்படி இருக்க எப்படி அவளுடன் கிளம்பி செல்வதாம்.

சொல் கொண்டு விவரிக்கவில்லை என்றாலும், தயக்கமும் தடுமாறும் பார்வையுமே அவளின் நம்பிக்கை இன்மையை வெயினிக்கு உணர்த்திவிட்டது. "இது சங்கம் வளர்த்த தென் மதுரை... இதன் தற்போதைய வேந்தர் கொற்கை நெடுமாற பாண்டியர்... நான் அவரது புத்திரி இளவெயினி... எம்மை நம்பி தாங்கள் தாராளமாய் உடன் வரலாம்... தாங்கள் ஐவரும் இனி எம் விருந்தினர்... உமக்கு சிறு ஊரும் ஏற்படாது காப்பது என் கடமை..." என்றாள் அவள் பணிவாக.

"மதுரைனா அது இந்தியா தானே... ஆனா இந்தியா இன்டிபெண்ட் கன்ட்ரீ தானே... இவ என்னடானா இவங்க அப்பாதான் அதுக்கு ராஜானு சொல்லறா..." டேவிட் சந்தேகமாக சுமனை வினவ, அவனோ, "எனக்கு என்னமோ இன்னைக்கு உன் உயிர் அந்த பொண்ணு கையால தான் போக போகுதுனு தோணுது..." என்றான் எள்ளலாக.

"இன்னும் இங்கிருப்பது உசிதமல்ல... செல்லலாம் தானே..." அவள் ஐவருக்கும் பொதுவாக வினா தொடுக்க, டேவிட்டை தவிர மற்ற நால்வருமே ஒப்புதலாக தலையசைத்தனர்.

"குதிரையில போனாலும் இரண்டு பேரு தான போக முடியும்... மத்தவங்க..." சாரா சந்தேகமாக வினா எழுப்ப,

மெல்ல நகைத்தவள், தன் குதிரையின் அருகில் சென்று அதன் பிடறி முடியை நீவி விட்டபடியே அதன் காதில் ஏதோ உரைக்க, சட்டென்று தன் பலம் மொத்தத்தையும் ஒருங்கிணைத்து முன்னங்கால்களை மேலே தூக்கி கணைத்தது அது.

அதன் கணைப்பே சிங்கத்தின் கர்ஜனையை ஒத்திருக்க, அதன் உடலே நீல நிறத்தில் ஒளிரத் துவங்கியது. மெல்ல கொஞ்சம் கொஞ்சமாய் அதன் இருபுறமும் இறக்கைகள் விரிய துவங்க, இங்கே நம்பவர்கள் கண்களோ ஆச்சரியத்தில் விரிய துவங்கியது.

அதே நேரம் வானில் தங்க நிறத்தில் ஒளிப் பிளம்பொன்று தோன்றி, சட்டென்று தரையிரங்க, அதேப் போன்றே மற்றொரு குதிரை சிறகுகளை விரித்துக் கொண்டு தங்க நிறத்தில் ஜொலித்தது.

"இவன் நீலன்... என்னுடைய இணைப்பிரியா தோழன்... நினைத்த இடத்திற்கு நினைத்த மாத்திரத்தில் அழைத்துச் செல்லும் வல்லமை உண்டு... இவள் அவன் இணை நீலா... இப்போது நாம் செல்லலாம் தானே..." என்றாள் வெயினி.

"ஆனா... ஆனா... எப்படி இது சாத்தியம்... குதிரைகளுக்கு இறக்கை எப்படி..." வியந்து கேட்டது நேமியோன்.

"இதிலென்ன ஆச்சரியம்... பரிகள் பறக்குமென்பதை தாங்கள் அறிகிலரா... அன்றி பறக்க வேண்டுமென்றால் சிறகுகள் அவசியம் தானே..." என்றாள் வெயினி.

"என்ன பறக்குமா..?" என்றான் டேவிட் கண்களை விரித்து அந்த குதிரையை நடுங்கும் விரல்களால் தடவிப் பார்த்தபடி.

"ஆம்... நிச்சயமாக... இப்போது நீங்களும் அதைக் காணத் தானேப் போகிறீர்கள்..." என்றாள் வெயினி புன்முறுவலுடன்.

"ஆனா... இது எப்படி இத்தனை சீக்கரமா இங்க வந்தது..."

"பரிகளின் நுண் உணர் திறன் மிக அதிகம்... தன் இணையின் ஒற்றை கணைப்பொலியை எத்தனை தூரத்தில் இருந்தாலும் உணர்ந்து நொடிப் பொழுதில் அங்கே வந்துவிடும் வல்லமை கொண்டவை..." என்றாள் இன்னும் புன்னகை மாறாமல்.

"சரி செல்வோமா..." என அவள் வினவ, மற்ற ஐவரும் தலையும் தானாய் ஆடியது. வெயினி, சாரா, ஜெகன் மூவரும் நீலனில் ஏறிக் கொள்ள, நேமியோன், டேவிட், சுமன் மூவரும் நீலாவில் ஏறிக் கொண்டனர். அவர்கள் அறுவரும் ஏறிய அடுத்த நொடி, வானில் தோன்றி மறையும் வாள் நச்சத்திரம் போல நீல நிறத்திலும் தங்க நிறத்திலும் இரண்டு ஒளிக்கற்றைகள் மண்ணில் தோன்றி விண்ணில் மறைந்தது.

- காத்திருப்பு தொடரும்...
 

தமிழ் வெண்பா

New member
Vannangal Writer
Messages
18
Reaction score
19
Points
3
அத்தியாயம் 6:



கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டில் ஒரு பங்கிருக்குமா? இல்லை அதற்கும் குறைவா? சரியாக கணிக்க முடியவில்லை அவர்களால். கண்ணை மூடி திறக்கும் முன் மாபெரும் அரண்மணை ஒன்றின் மாடத்தில் மீது நின்றிருந்தனர் அவர்கள் அறுவரும். வெயினியுடன் அந்த பறக்கும் குதிரையில் ஏறி அமர்ந்தது மட்டுமே இப்போதும் அவர்களுக்கு நினைவிருக்கிறது. ஆனால், அது பறந்தததையோ மீண்டும் தரை இறங்கியதையோ அவர்கள் உணரவேயில்லை. அதை அவர்கள் உணர்வதற்கான நேரம் வழங்கபடவில்லை என்பதே சால பொருத்தும்.



"ம்ம்ம்... இன்னும் எத்தனை நேரம் தான் அனைவரும் இப்படியே அமர்ந்திருப்பதாய் உசிதம்... விரைந்து வாருங்கள்... விழுப்புண்ணிற்கு மருந்திட வேண்டாமா..?" என்றாள் வெயினி சற்றே உரத்த குரலில்.



அக்குரலில் தன்னிலை அடைந்தவர்களாய் அவர்கள் அவளைப் பார்க்க, அவளோ இடையில் ஒரு கரம் பதித்து இதழில் குறுநகை சுமந்து அவர்களை பார்த்துக் கொண்டிருந்தாள்.



"என்ன அதுக்குள்ள வந்துட்டோமா..?" என நேமி வியந்து வினவ,



"நீங்கள் புதியவர்கள் என்பதால் தான் இத்தனை நிதானமாக வந்திருக்கிறார்கள் நீலனும் நீலாவும்... இல்லையென்றால் இதற்கும் பாதி நேரத்திலுயே இங்கே அழைத்து வந்திருப்பார்கள்..." வெயினி நீலனை பிடறி முடியை நீவிவிட்டபடியே முறுவலுடன் மொழிய, அதுவும் தலையை சிலுப்பி அவள் முகத்தோடு உரசியது.



"அம்மாடியோவ்... இத விட வேகமாகவா..?" சுமன் நெஞ்சில் கை வைத்துக் கொள்ள,



"பறக்கும் பரிகளின் வேகத்தை உங்களால் கனவிலும் வரையறுக்க இயலாது... அவை நினைத்தால் பஃருளியையும் குமரியையும் கூட கணிச நேரத்தில் கடந்துவிடும் ஆற்றல் கொண்டவை..." என்றவளிடன் முறுவல் இப்போது புன்னகையாக விரிந்திருந்தது.



"என்னது பல்லுவலியா..." என்ற டேவிட், உண்மையிலேயே சந்தேகம் கொண்டு அவளை நோக்க, அவளோ அவனை கொன்றுவிடும் நோக்குடன் முறைத்துக் கொண்டிருந்தாள்.



"தங்களின் செவிகள் சற்று மந்தமோ..? என்ன உரைத்தாலும் தவறாக புரிந்துக் கொண்டு என்னுடன் வீண் மொழியாடுவதையே வாடிக்கையாக கொண்டிருக்கிறீர்களே ஏன்..?" என்றவளை இடையிட்டு,



"இந்தாம்மா இளநீ... நீ சொன்னது புரியலையேனு தெரியா தனமா ஒரு கேள்வி கேட்டடது ஒரு குத்தமா..? அதுக்குனு இவ்வளவு பேசனுமுனு ஒன்னும் இல்ல... புடிக்கலனா பதில் சொல்லமாலேயே கூட இருக்கலாம்... எந்த குதிரைக்கு கபல்லுவலி வந்தா எனக்கு என்ன... தலவலிய வந்தா எனக்கு என்ன... எனக்கே கால் வலி உசுர் போகுது... பத்தாததுக்கு நீ வேற பேசி பேசியே என் உசுர மொத்தமா வாங்கிடுவ போல..." பேசிக் கொண்டே போனவனின் வார்த்தைகள் சட்டென்று நின்றுப் போயின. இல்லை இல்லை நிறுத்தி இருந்தாள் வெயினி. பின்னே கழுத்தில் கத்தியை வைத்து அழுத்தி பிடித்திருக்கும் போது யாருக்கு தான் பேச வரும்.



"யார்..? நானா தேவையற்று வார்த்தையாடி உங்களை வதைத்துக் கொண்டிருக்கிறேன்..." என்றவள் விழிகளை விரித்து, அவனின் முகத்திற்கு நேர் நெருங்கி, உற்று நோக்கி, உக்கிரமாய் அவனை முறைத்துப் பார்க்க, அவனின் அனுமதியின்றியே விரித்திருந்த விழிகளின் வழியே கொஞ்சமாய் இடறி விழுந்தது அவனின் இதயம்.



மொழிகளற்று அவன் அவளையை ஆழ்ந்து நோக்குவதைக் கண்டவள் என்ன நினைத்தாளோ, சட்டென்று அவனிடமிருந்து விலகிக் கொண்டாள்.



"இதோ பாருங்கள்... இதுவே உங்களுக்கு நான் உறுதியுடன் இறுதியாய் மொழிவது... தங்கள் குறுபுத்தியில் அதை நன்கு புகுத்திக் கொண்டீர்களானால், உங்கள் உடலுக்கும் உயிருக்கும் நலம்... அன்றி என் பெயர் இளநீ அல்ல... வெயினி... இளவெயினி... இத்தேசத்தின் இளவரசி... என் பெயரை தாங்கள் பரிகாசம் செய்வதை எம் நேசத்தில் வேறு எவரேனும் கேட்டிருந்தால் இந்நேரம் உங்கள் சிரம் மண்ணில் புரண்டிருக்கும்... பின்பு நான் உங்களை வார்த்தையாடி வதைக்க வேண்டிய அவசியமே இல்லாது போய்விடும்... என்ன புரிந்ததா..?" என்றவளின் குரலில் முன்பிருந்த வன்மை கொஞ்சம் குறைந்திருந்தது என்னவோ உண்மை.



"ஏன்... புரியலைனா தனியா எதுவும் கோச்சிங் கிளாஸ் எடுப்பீங்களா... இளநீ..." இறுதியாய் வேண்டுமென்றே அவளின் பெயரை இழுத்து அழுத்தி உச்சரித்தவனின் கழுத்தில் கைப் போட்டு இறுக்கி பிடித்து வாயை அழுந்த மூடி தலையிலேயே இரண்டு கொட்டு வைத்தான் சுமன்.



"அட எடுபட்ட பாவி பயலே... இது வாயா இல்ல காவாயாடா... நீ சாகறதும் இல்லாம எங்க உயிருக்கும் உலை வச்சுடுவ போல... கொஞ்ச நேரம் பேசமா தான் இருந்து தொலையேன்.. நீ பேசற பேச்சுக்கு அந்த புள்ள பாட்டுக்கு ஐஞ்சு பேர் தலையையும் ஒரே சீவா இளநீ சீவற மாதிரி சீவிட்டு போய் கிட்டே இருக்க போவுது..." என சுமன் டேவிட்டின் காதில் வார்த்தைகளை கடித்துத் துப்பிக் கொண்டிருக்க, வெயினி அவர்கள் இருவரைருயும் ஒருசேர முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்க, சுமன் மட்டும் கடை வாய் பல் தெரியும் அளவிற்கு அசட்டு தனமாய் சிரித்து வைக்க, டேவிட்டே இன்னும் ஊடுறுவி அவளை ஆழமாய் பார்த்துக் கொண்டிருக்க,



"வலி அதிகமாகிட்டே இருக்கு... நிக்க முடியல... மருந்துப் போடலாமே... ப்ளீஸ்..." என கடைசியில் சாரா தான் வெயினியின் கவனத்தை தன் பக்கம் திருப்ப வேண்டி இருந்தது.



"நானும் அதைத் தான் இத்தனை நேரமாய் தாங்கள் நண்பருக்கு விளக்க முயன்றுக் கொண்டிருக்கிறேன்... ஆனால் அவர் தான் அதை விடுத்து வீணே இங்கே நின்று என்னுடன் விதண்டாவாதம் செய்துக் கொண்டிருக்கிறார்..." ஒரு நொடிக்கும் குறைவான நேரம் அவளின் பார்வை அவனை குற்றம சாற்றும் விதமாக அவன் மீது பட்டு மீண்டது.



அதற்குள் அவர்கள் அறுவரின் கவனத்தையும் ஒருங்கே சிதைக்கும் வண்ணம் மெல்லிசையாய் எழுந்து வன்மையாய் அவர்களின் செவியை நிறைத்தது நூபுர (சலங்கை) நாதம் ஒன்று.



"அப்பப்பா... அடேயேப்பா... ஒரு வழியாக இன்று நீ சீக்கிரமே வந்து விட்டாய் போல... இனி நீயாயிற்று... உன் அன்பு தந்தையாயிற்று... இனிமேல் எப்போது நீ எங்கு செல்வதாய் இருந்தாலும் உன் அன்பு தந்தையிடமே சொல்லிவிட்டு செல்லம்மா... இனிமேல் அவருக்கு பதில் சொல்லி என்னால் ஆகாது... அப்பப்பா... அடேயப்பா... 'எங்கே என் மகள்..? எங்கே என் மகள்..?' என்ற ஓரே கேள்வியை ஓயாது கேட்டு வண்டாய் தான் என்னை குடைகிறார் போ... அப்பப்பா..! அடேயேப்பா..! மூத்த மகள் ஒருத்தி தங்க சிலைப் போல், மரகத பேழைப் போல், மாணிக்க ரதம் போல் கண்ணெதிரே நிற்பதுக்கூட தெரியவில்லை... அப்படி என்னதான் இளைய மகள் மீது மட்டும் தீராத பேரன்போ... நானும் சலிக்காமல், 'உறங்குகிறாள், உண்கிறாள்... நீராடுகிறாள்...' என சொல்லி சொல்லி அலுத்து சலித்து களைத்து தான் போய் விட்டேனடி... இனி உன் பொருட்டு ஒரு நொடி கூட நான் அவரை சாமளிக்க மாட்டேன்... ஆமான் இப்பொழுதே சொல்லிவிட்டேன்... உங்கள் இருவருக்கும் இடையில் மாட்டிக்கொண்டு மத்தளம் போல் இடிபட நான் ஆளில்லை... அப்பப்பா... அடேயப்பா... ஆனாலும் சரியான கள்ளி தானடி நீ.. உன்னில் மூத்தவள், இத்தனை புலம்புகிறேனே என்று கொஞ்சமேனும் என்னில் இரக்கம் கொண்டு வாயை திறக்கிறாயா பார்... அதுசரி என்ன இன்று இத்தனை விரைவாய் வந்துவிட்டாய்..? சென்ற இடத்தில் யாராவது உன்னை அடையாளம் கண்டுக் கொண்டார்களா..? அப்படி எதுவும் இல்லை தானே..? அடியே... என்னவென்று சொல்லி தான் தொலையேன்டி... நீ மௌனம் சாதிக்கும் ஒவ்வொரு நொடியும் என் இதயம் தான் மாறி மாறி மத்தளம் வாசிக்கிறது... ஏன் அமைதியாய் இருக்கிறாய்... யாராவது உன்னை அடையாளம் கண்டுக் கொண்டார்களா..? அப்படி மட்டும் என்றால், அதை நம் தந்தையிடமும் சொல்லி விட்டால், அவ்வளவு தான்... என் தோலை உரித்து மத்தளம் கட்டி விடுவார் தந்தை... அடியே இவளே...! இது யாரடி இவர்கள் புதிதாய் இருக்கிறார்கள்... இங்கெதற்கு அழைத்து வந்திருக்கிறாய்... பார்த்தால் நம் தேசத்தவர்கள் போல் தெரியவில்லையே... அதுவும் நேரே அந்தபுர மாடத்திற்கு அழைத்து வந்திருக்கிறார்... ஐய்யோ..! யாரும் அறியாமலா அழைத்து வந்திருக்கிறாய்... இது மட்டும் நம் தந்தைக்கு தெரிந்தால் என்னாகும் தெரியுமா..? ஆமான் இவர்கள் ஆடை ஏன் இத்தனை விசித்திரமாய் இருக்கிறது..? இப்படி ஒரு ஆடையை இதுவரை நான் நாவலன் தீவு எங்கிலும் கண்டதில்லையே..? ஆனாலும் நன்றாக தான் இருக்கிறது... ஆமான் இதென்ன இவர்களின் கால்களிலிருந்து குறுதி பெருக்கெடுக்கிறது... நீதான் காயப்படுத்தினாயா..? கேட்கிறேன் அல்லவா..? ஏதாவது ஒன்றிற்காவது பதில் சொல்லடி..." அவள் வெயினியின் தோளில் தொங்கியபடியே மூச்சு விடவும் மறந்து கேள்விகளை அடுக்கிக் கொண்டே இருக்க, அவளின் அந்த பேச்சை கேட்டு நம்வர்கள் ஐவருக்கும் மயக்கம் வராத குறைதான். அவள் வெயினியின் தமக்கை இளவேனில்.



படபடவென பொறிந்தவளை தனக்கு முன்னால் பிடித்து இழுத்து நிறுத்தினாள் வெயினி. "அப்பப்பா... அடேயேப்பா... ஒரே மூச்சில் எத்தனை கேள்விகள் கேட்பாய் நீ... பேசும் போது மட்டும் சோர்வெனும் பிணி உன்னை அண்டவே அண்டாதோ..? முதலில் எனக்கு பதிலளிக்கவும் கொஞ்சம் அவகாசம் தந்தால் தானே நான் உனக்கு விளக்க... இதையெல்லாம் விடு... முதலில் நம் தந்தை எங்கிருக்கிறார்..? அதை சொல்..." என்றாள் வெயினி.



"அவர் எல்லை பாதுகாப்பை கண்காணிக்க சென்றிருக்கிறார்..." பதிலை வெயினிக்கு சொன்னாலும் வேனிலின் பார்வை ஐவரின் மீது தான் படிந்திருந்தது.



"மிகவும் நல்லாதாய் போயிற்று... இவர்கள் எம்மால் தான் காயப்பட்டார்கள்... அதற்கு மருந்திடவே இவர்களை இங்கை அழைத்து வந்திருக்கிறேன்... முதலில் இவர்களின் காயங்களுக்கு மருந்துட்டு விட்டு பின்பு உன் கேள்விகளுக்கு நீண்டதொரு பெரும் விளக்கம் தருகிறேன் நான்... போதுமா... இப்போது செல்லலாம் தானே..." என்றவள் அவளை தள்ளிக் கொண்டு விறுவிறுவென முன்னேற, நம்மவர்கள் ஐவரும் அவளை பின்தொடர, இளாவும் தன் கேள்விகளை தொடர்ந்தபடியே அவளை தொடர்ந்தாள்.



"அப்படியா... ஏன் இவர்களை காயப்படுத்தினாய்... பார்க்க அனைவரும் நல்வவர்கள் போல் அல்லவா தெரிகிறார்கள்... அன்றி அவர்களிடம் ஆயுதங்கள் எதுவும் இருப்பதை போன்றும் தெரியவில்லை... அப்படியென்றால் நிராயுதபாணிகளையா நீ தாக்கினாய்... இது எத்தனை பெரும் தவறு என்று நீ அறிவாய் தானே... ஐய்யையோ... தந்தை மட்டும் இதை அறிந்தால்...."



"உன் தோலை உறித்து மத்தளம் கட்டி விடுவார்... அதானே... தள்ளி நில்லடி முதலில்... அடிக்கடி முன்னே முன்னே வந்து முகத்தை முகத்தை காட்டிக் கொண்டு..."



அவளை விலக்கிக் கொண்டு முன்னே சென்றவளை, இழுத்து பிடித்து நிறுத்தி, பேசத் தொடங்கி இருந்தாள் இளா. "தமக்கை என்ற மரியாதை உன்னிடம் கொஞ்சமாவது இருக்கிறதா..? உனக்கும் ஆறு நிமிடங்களுக்கு முன்னால் பிறந்தவள் நான்... அதற்காக மதிக்கவில்லை என்றாலும் நீ உரைக்கும் பொய்களுக்கெல்லாம் இட்டுகட்டி தந்தையிடமிருந்து உன்னை காப்பாற்றுகிறேனே... அதற்காகவாவது மதித்து பதிலளிக்கலாம் அல்லவா... அடியே... உன்னை தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்... நீ காதில் விழாததுப் போல் முன்னேறிக் கொண்டிருந்தாள் என்ன அர்த்தம்..." அத்தனை எளிதில் அவள் வெயினியை விடுவதாய் இல்லை போலும்.



"ம்ம்ம்ம்... இவர்கள் காயங்களுக்கு மருந்திடுவது அவசியமென்று அர்த்தம்... இதோ பார் இளா! அவர்கள் ஐவரும் நம் விருந்தினர்கள்... விழுப்புண்ணாலும் பசி பிணியாலும் அவதியுறுகிறாய்கள்... முதலில் அவர்களை உபசரித்துவிட்டு பின்பு உன் விசாரணையை வைத்துக் கொள்ளலாம்... சரிதானே..!" அவளை வழியில் இருந்து விலக்கிக் கொண்டு வெயினி மீண்டும் நடக்க, மற்றவர்கள் அவளை அமைதியாய் பின் தொடர்ந்தனர்.



"எல்லாம் சரிதான்... ஆனால்..." என்ற இளா ஐவரையும் சந்தேகமாய் நோக்கிவிட்டு மீண்டும் தன் தங்கையிடம் பார்வையை பதித்தாள்.



"அடியே... இன்னொரு முறை ஆனால் என்று மட்டும் சொல்லிக் கொண்டு என் முன்னால் நின்றாயால், நீ தான் தினம் தினம் என்னை வழி அனுப்பி வைத்தாய் என்று தந்தையிடம் சொல்லிவிடுவேன் பார்த்துக் கொள்... பிறகென்ன தந்தை உன் தோலை உறித்து மத்தளம் கட்டி விடுவார்..." என்றாள் தீவிர முக பாவத்துடன்.



"எது நான் உன்னை வழி அனுப்பி வைத்தேனா..? அது எப்போது..?" விழிகள் விரித்து வினவியவளைக் கண்டு உள்ளுக்குள் எழுந்த சிரிப்பை அடக்கியபடி,



"ம்ம்ம்... எப்போதா..? இதுவும் கேட்பாய்..? இன்னமும் கேட்பாய்..? நமக்கு ஒன்பது அகவை இருக்கும் போது அல்லி மலர் வேண்டுமென்று அழுது அழுது கரைந்தாயே... அத்தனையும் மறந்து விட்டதா உனக்கு... ஏதோ உடன் பிறந்த தமைக்கையாயிற்றே... கேவலம் அல்லி மலருக்காக அழுதழுதே இறந்துப் போனாய் என சரித்திரம் இகழ்ந்துரைக்குமே என்று உன்மீது இரக்கம் கொண்டு நான் கூட தந்தை அறியாமல் சென்று பறித்து வந்தேனே... கொஞ்சமும் நினைவில்லையா உனக்கு..."



"அப்பப்பா... அடேயேப்பா... இதென்னடி இது... பெரும் கூத்தாய் அல்லவா இருக்கிறது... அது நடந்து முழுதாய் பன்னிரண்டு வருடங்கள் உருண்டோடி விட்டதடி... அதற்கும் இப்பொது நீ செல்வதற்கும் என்ன சம்பந்தம்டி..." என்றாள் இளா அல்லியாய் விரிந்திருந்த தனது விழிகளை தாமரையாய் விரித்து அதில் இன்னும் கொஞ்சமும் ஆச்சரியத்தை கூட்டி.



"அப்பப்பா.... அடேயப்பா... நன்றாக கேட்டாய் போ... முதல் ஆரம்ப புள்ளி வைத்து என்னை வழியனுப்பி வைத்தவழ் நீயல்லவா... அதை தொடர் புள்ளியாக்கி நானின்று தொடர்ந்துக் கொண்டிருக்கிறான்... இது ஒரு குற்றமா... அடிப்படையில் இதற்கு காரணகர்த்தாவே நீ தானே... அப்படி பார்த்தால் இன்று வரை என்னை வழியனுப்பி வைப்பதும் நீதானே..." என வெயினி புருவத்தை ஏற்றி இறக்கி வேனிலைப் போலவே பாவனையாக சொல்லவும்,



"அப்பாப்பா... அடேயப்பா... இதென்ன பெரும் பித்தலாட்டமாக அல்லவா இருக்கிறது..." என நெஞ்சில் கை வைத்தபடியே பெத்தென்று அங்கிருந்த பஞ்சனையில் அமர, பேசியபடியே அவர்களின் தனி அறைக்கு வந்திருந்தனர் அனைவரும்.



மற்றவர்களை எதிரில் இருக்கும் நீள் சாய்விருக்கையில் அமரும்படி சமிக்ஞை செய்தவள், "இளா, விரைந்து சென்று வீராவிடம் இவர்கள் ஐவருக்கும் தேவையான உணவுகளை கொண்டு வரச் சொல்... அப்படியே நாமாய் அழைக்கும் வரை யாரும் இந்த அறைக்குள் எக்காரணம் கொண்டும் நுழைய கூடாது என்றும் வலியுறுத்தி சொல்லி வா... என்ன சொல்வது புரிகிறது தானே..." பேசியபடியே வெட்டு காயங்களை குணப்படுத்தும் மூலிகைகளை தேடிக் கொண்டிருந்தாள் வெயினி.



"புரியவில்லை என்றால் விடவா போகிறாய்... ஆனாலும் எனக்கு இந்த வீராவின் மீது கொஞ்சம் சந்தேகமாய் தான் இருக்கிறது... நம் தந்தைக்கு உன்னைப் பற்றிய தகவல்களை தருவது அவனாக தான் இருக்குமென்று நான் எண்ணுகிறேன்... நீ என்ன எண்ணுகிறாய்..?" என்றாள் யோசனையாய் வேனில்.



நிமிர்ந்தே பாராமல், பதபடுத்தபட்ட மூலிகைகளை கருங்கல் குழவியில் வைத்துக் இடித்துக் கொண்டிருந்தவள், "எனக்கென்னவோ... இந்த விடயத்தில் உன் மீதுதான் பெரும் ஐயப்பாடெழுகிறது..." என உரைத்திட,



"அப்பப்பா... அடேயப்பா... இது தான் வரம் கொடுத்தவன் சிரத்தையே சோதனைக்கு உள்ளாக்குவதா..? இதைப் போய் உன்னிடம் சொன்னேன் பார்... இனி நீ ஆயிற்று... அந்த வீராவாயிற்று... எனக்கென்ன வந்தது... இருவரும் எக்கேடோ கெட்டு ஒழிந்துப் போங்கள்..."



"நாங்கள் இருவரும் ஒழிந்துப் போவது இருக்கட்டும்... இப்போது முதலில் நீ இங்கிருந்து புறப்படம்மா..." என்றவள் உண்மைக்குமே அவளை அனுப்பி வைப்பதற்குள் ஒரு வழியாகிதான் போனாள்.



வெயினி மூலிகைகளை பிழிந்து நால்வருக்கும் மருந்திட்டு, தூய வெள்ளை துணிக் கொண்டு கட்டிட்டு முடித்த போது வீராவும் இளாவும் உணவுப் பதார்த்தங்களோடு வந்து விட்டிருந்தனர். அந்த வீரா எனப்பட்டவனின் உடலை தழுவி இருந்த கவசமும் வலிமையும் இடையில் தரித்திரிந்த நீண்ட வாளின் தங்க பிடியுமே சொல்லியது அவன் ஒரு முக்கிய பணியில் இருப்பவனென்று.



தன் கைகளில் இருந்த பதார்த்தங்கள் அத்தனையும் கீழே வைத்தவள், கைகளை உதறிக் கொண்டே, "அப்பப்பா... அடேயேப்பா... நீ செய்வது உனக்கே நன்றாய் இருக்கிறதா வீரா... உன் தோழி உனக்கு வேலை ஏவினால், அதை நீ தான் செய்ய வேண்டுமே தவிர, இப்படி என் தோள்களில் தூக்கி சுமத்த கூடாது..." என்றாள் வீராவை முறைத்துக் கொண்டே.



"இல்லை வெயினி... யாரும் அனுமதியின்றி உள்ளே நுழைய வேண்டாமென உத்தரவிட்டாயாமே... அதனால் தான் பணிப்பெண்களை தவிர்த்து நாம் இருவருமே எடுத்து செல்லமாம் என்றேன்... அதுவும் அறை வாயிலில் இருந்து தான்... அதற்கே வருங்கால மகாராணியாருக்கு கைகள் நோகிறது என்கிறார்.. ம்ம்ம்... இவரெங்கே வாள் சுமந்து போர் புரிந்து தேசம் காக்க போக்கிறாரோ..? நினைக்கையில் உள்ளுக்குள் பெரும் ஐயமெழுகிறது எனக்கு..." இளாவின் குற்றச்சாட்டுக்கு வெயினியிடம் நீண்டதொரு விளக்க உரை வாசித்துக் கொண்டிருந்தான் வீரா.



"கத்திக் கொண்டு தான் தேசம் காக்க வேண்டும் என்றில்லை... புத்திக் கொண்டும் காக்கலாம்... இதை உன் நண்பனுக்கு புரியும்படி விளக்கி சொல்லிவிடு வெயினி..."



"காக்கலாம் தான்... ஆனால் அந்த புத்தி தான் நம் வருங்கால மகாராணியாருக்கு இருப்பதுப் போல் எனக்கு தெரியவில்லை வெயினி..."



"அப்பப்பா... அடேயேப்பா...இவர் புத்தியில் உயர்ந்த பெரும் சீமான் தான்... நான் தான் புத்திக் கெட்டுப் போய் ஆடையை கிழித்துக் கொண்டு விதியில் திரிகிறேன் பாருங்கள்... இத்தோடு உன் நண்பரின் கேலியை நிறுத்திக் கொள்ள சொல் வெயினி... இல்லையென்றால்..."



"இல்லை என்றால்... என்ன செய்வார்களாம் வெயினி..? உண்மை உரைத்தால் கேலி செய்வது போலிருக்கிறதா இந்நாட்டின் வருங்கால மகாராணியாருக்கு..? நல்ல கதைதான்..."



"இருவரும் கொஞ்சம் அமைதியாய் இருக்கிறீர்களா... எப்பொழும் இதே வேலைதானா உங்கள் இருவருக்கும்... புதிதாய் ஐவர் இங்கிருப்பது கூட உங்கள் கண்களுக்கு தெரியவில்லை போலும்... அதெப்படி தெரியும்? உங்களுக்கு தான் சண்டை என்று வந்துவிட்டால், தந்தை இருந்தால் கூட கண்ணுக்கு தெரியாதே..!" சற்றே அதட்டல் தோனியில் வெயினி குரல் உயர்த்தவும் ஒருவரை ஒருவர் முறைத்தபடி அமைதியாகி விட்டனர் அவர்கள்.



ஐவருக்கும் தானே உணவுகளை பரிமாறியவள்,



"என்ன ஐவரும் இங்கு வந்ததிலிருந்து இத்தனை அமைதியாய் இருக்கிறீர்கள்... இதைக் காண்கைளில் எனக்கு பெரும் ஆச்சரியமாக அல்லவா இருக்கிறது..." வினா அனைவருக்கும் பொதுவானது தான் என்றாலும் அவளின் பார்வை என்னவோ கேலியாய் ஒரே ஒருவரை தான் துளைத்துக் கொண்டிருந்தது. அது டேவிட் தானென்று விளக்கி கூறவும் அவசியமில்லை.



"அப்படி குறிப்பிட்டு கூறும் அளவிற்கு காரணம் எதுவுமில்லை இளவரசி..." என்றான் நேமி.



"ஆம்... இளவரசி... நீங்க உங்களுக்குள்ள பேசிட்டு இருந்ததால எங்களுக்கு பேச வாய்ப்பு கிடைக்கல இளவரசி..." வேண்டுமென்றே இளவரசியை அவன் அழுத்தி அழுத்தி சொல்ல, புன்முறுவலுடன் கண்டுக் கொண்டிருந்தவள் மறுத்து எதுவும் சொல்லவில்லை.
"ம்ம்ம்... தாங்கள் எங்கிருந்து வருவதாக சொன்னீர்கள்..."
"மியாமி... இளவரசி..." என்றது சாரா.
"அத்தேசம் எங்கிருக்கிறது..."
"அமெக்க கடற்கரை ஓரத்தில் இருக்கிறது இளவரசி..."
"என்ன கடற்கரை ஓரங்களில் தேசமிருக்கிறதா..." வியந்து கேட்டது இளா.
அவள் கண்களில் மின்னிய அளவுக்கதிகமான ஆச்சரியத்தில் ஐவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அது ஆச்சரியம் வீராவின் கண்களிலும் தென்பட, வெயினியின் முகம் மட்டும் யோசனையில் மூழ்கி இருந்தது.
"அத்தேசம் மட்டும் தான் அங்கிருக்கிறதா..."
"இல்லையே இன்னும் நிறைய நாடுகள் இருக்கு... ஏன் கேக்கறீங்க..."
"நீங்கள் படகில் வந்ததாக தானே கூறினீர்கள்... அப்படியென்றால் அந்த தேசங்கள் எல்லாம் கடல் மட்டத்திற்கும் மேல் இருக்கிறது..." என வெயினி வினவ, இதென்ன கேள்வி என்றபடி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டவர்கள் ஆம் என்னும் விதமாய் ஒன்றாய் தலையை ஆட்டி வைத்தார்கள்.
"பார்த்தாயா வீரா... எத்தனை முறை நான் உங்களிடம் சொல்லி இருப்பேன்... கடலுக்கு மேலும் நிலப்பரப்பும் தேசங்களும் இருக்க கூடுமென்று... ஒருவராவது என்னை நம்பினீர்களா..? இப்போது பார் அத்தேசத்திலிருந்து ஐவரை அழைத்து வந்துவிட்டேன்..." என்ற வெயினியின் குரலில் இப்போது துள்ளலென்றால், மற்ற இருவரும் இவர்களை விநோதமாய் பார்த்துக் கொண்டிருந்தனர்.
"எனக்கு என்னவோ இவர்கள் ஐவரும் சித்தம் கலங்கியவர்கள் போல் தெரிகிறது... இவர்கள் உரைப்பதில் உண்மை இருக்க எள்ளளவும் வாய்ப்பில்லை..." யோசனையாய் வீரா சொல்ல,
"உனக்கு தான் சித்தம் கலங்கிவிட்டது... நிச்சயம் இவர்கள் கடல் மட்டத்திற்கு மேல் உள்ள தேசத்தில் இருந்து தான் வந்திருக்கிறார்கள்... ஆனால் ஒன்று மட்டும் தான் என்னால் விளக்கிக் கொள்ள முடியவில்லை... இந்த இரண்டு தேசங்களுக்கும் மாறி மாறி பயணம் செய்யக்கூடிய மார்க்கம் எதுவென்று தான் எனக்கு விளங்கவில்லை..." என்றாள் வெயினி.
"நீங்க என்ன சொல்லறீங்கனு எங்களுக்கு தான் புரியல... கடலுக்கு மேல தான எல்லா நாடும் இருக்கும்... இதில அதிசயம் என்ன... என்னமோ கொலம்பஸ் அமெரிக்காவ கண்டுபிடிச்ச மாதிரி குதிக்கறீங்க..."
"அதுதான் இல்லை... இம்மாபெரும் நாவலன் தீவு எங்கிருக்கிறதென்று நினைக்கிறீர்கள்..."
"எங்க இருக்கு..." ஐவரும் ஒன்றாய் கண்களில் தோன்றிவிட்ட ஐத்துடனே வினவ,
"கடலுக்கு அடியில்... நாவலன் தீவை தவிர இந்த பரந்த உலகெங்கிலும் மனிதர்களே இல்லை என்று எண்ணி இருந்தோம்... ஏன் அந்த பூமித்தாய் முழுவதும் கடலால் தான் சூழ்ந்திருக்கிறது என்றிருந்தோம்... நிலபரப்பரப்பு என்பதே மொத்தமாய் அழிந்து கடலுக்குள் அமிழ்ந்து விட்டதாய் எண்ணியிருந்தோம்... ஆனால் அப்படி இல்லை... கடலுக்கு மேலும் தேசங்கள் இருக்கிறது... அங்கேயே மனிதர்கள் வாழ்கிறார்கள்..." என அவள் சொல்ல சொல்ல, "என்ன இப்ப நாம கடலுக்குள்ள இருக்கோமா..?" என நால்வர் மட்டுமே அதிர்ந்து வினவும் ஒலிக் கேட்டது. ஏனெனில் அவள் ஆரம்பத்த உடனேயே அதிர்ச்சி தாளாது மயக்கத்திற்கு சென்றிருந்தான் டேவிட்.

- காத்திருப்பு தொடரும்...
 

தமிழ் வெண்பா

New member
Vannangal Writer
Messages
18
Reaction score
19
Points
3
அத்தியாயம் 7:

வெயினியின் கூற்றைக் கேட்டு சுமனின் மீது மயங்கி சரிந்தவனை, அவர்கள் நால்வரும் சற்றும் கண்டுக் கொண்டதாய் தெரியவில்லை. கதைக் கேட்கும் பாவனையில் மிகுந்த ஆர்வத்துடன் வெயினியையே பார்த்திருந்தனர் அவர்கள்.

"உண்மையாவே நாம கடலுக்கு அடியில உள்ள நகரத்துல தான் இருக்கோமா..." ஜெகன் வியந்து வினவ,

"அதிலென்ன சந்தேகம் தாங்களுக்கு..."

"சந்தேகம் எல்லாம் இல்ல... ஆனா, கடலுக்கு கீழ இவ்வளவு பெரிய நாடே இருக்குனு நினைக்கறப்ப நிஜமாவே கொஞ்சம் திக்குனு தான் இருக்கு..." கண்களில் மின்னிய பயத்துடனே மொழிந்தான் சுமன்.

"இதில் ஐயமுற என்ன இருக்கிறது... நாங்களும் கூட தான் நிலபரப்பில் மனித உயிர்கள் வாழ வழியில்லை என்றுதான் எண்ணியிருந்தோம்... ஆனாலும் தாங்கள் ஐவரும் கடற்கரையில் உள்ள ஒரு நகரத்திலிருந்து வந்திருப்பதாக சொன்ன போது நான் நம்பவில்லையா..? இல்லை தங்களை கண்டு ஐயம்தான் கொண்டேனா..? ஆனால் நீங்கள் மட்டும் ஏன் என் மீது ஐயம் கொள்கிறீர்கள்..." சற்றே வருத்தமுடன் ஒலித்தது வெயினியின் குரல்.

"தங்களின் மீதோ தங்கள் கூற்றின் மீதோ ஐயமேற்படவில்லை எங்களுக்கு... ஆனால் இதுவரை கனவில் கூட இப்படி ஒரு தேசமிருக்கும் என்று எண்ணியிராத எங்களுக்கு இவ்வுண்மை சற்றே மிரட்சியை ஏற்படுத்துகிறது... அவ்வளவே..." என்றான் நேமி வெயினிக்கு விளக்கம் அளிக்கும் விதமாக.

ஏதோ சிந்தனையில் அவனுக்கு மையமாக தலையசைத்தவள், அப்போது தான் கவனித்தாள் அவர்கள் உண்ணாயல் கவலை படிந்த முகத்தோடு அவளையே பார்த்தபடி இருப்பதை.

"ஏன் உண்பதை நிறுத்தி விட்டீர்கள்... உணவு உண்ணும் போது விரும்பதாகத வினாக்களை தொடுத்துவிட்டேன் என்று எண்ணுகிறேன்... எம் கட்டுகடங்கா பெரும் அவா இவ்விதம் உங்களை வினா எழுப்ப ஊக்கிவிட்டது... தயைக்கூர்த்து எம் தவற்றை பொருத்து உண்பதை தொடர்க..." என்றாள் வெயினி.

"இதில் தவறென்று எதுவுமில்லை இளவரசி... எங்களுக்குமே நாங்கள் எங்கிருக்கிறோம் என அறிந்துக்கொள்ள பெரும் அவா இருந்தது தான்..." என்றான் மற்றவர்களுக்கு உண்ணும்படி கண்களால் சமிக்ஞை செய்துவிட்டு தானும் உண்ண தொடங்க, அப்போதுதான் சுமன் தன் கையின் மீது மயங்கி சரிந்த டேவிட்டையே கண்டான். அவன் சாப்பிடுவதற்கு இடையூறாக இல்லையென்றால் இப்போதும் அவனை கண்டிருப்பானா என்பது ஐயமே.

"டே... டேவிட் மயங்கிட்டான்டா..." என சுமன் பதறி சொல்ல, மற்றவர்களையும் பதற்றம் தொற்றிக் கொண்டது.

"டேய் என்னடா சொல்லற... எப்படா மயங்குனான் அவன்... இம்மா நேரம் மயங்கினவன மடியில படுக்க வச்சு தாலாட்டா பாடிட்டு இருந்த... அப்பவே சொல்லி தொலைக்க வேண்டியது தானே எரும கடா..." என்ற நேமி அவசர அவசரமாய் டேவிட்டை ஆராய்ந்தான்.

"இந்த எடுபட்ட பய எப்ப மயங்குனானு யாருக்குடா தெரியும்... இன்ட்ரெஸ்டா பேசிட்டே இருந்ததுல இவன கவனிக்கவே இல்லடா நானு... சரி சாப்பிடுவோனு பாத்தா... கைலையே மயங்கி கிடக்கு மூதேவி..." என சலிப்பாய் சொல்லியவன், அவனை நிமிர்த்தி அமர வைக்க, வேக வேகமாய் தண்ணீரை அள்ளி முகத்தில் தெளித்தனர் நேமியும் ஜெகனும். அனால் அதற்கெல்லாம் அவன் கொஞ்சமும் அசைந்துக் கொடுப்பதைப் போல தெரியவில்லை.

"டேய் இவன் என்னடா கண்ணே முழிக்க மாட்டறான்... என்னக்கு என்னமோ பயமா இருக்குடா... டேவிட்டு... தங்கம் டேவிட்டு... கண்ண முழிச்சு எங்கள பாருடி செல்லம்..." ஜெகன் அவன் கன்னத்தை மெல்ல தட்டி தட்டி சுயநினைவுக்கு கொண்டு வர முயல,

"ப்ளீஸ் வெயினி... ஹெல்ப் அஸ்... அவனுக்கு என்னனு பாருங்க..." என வெயினிடம் பதற்றத்துடன் கேட்டுக் கொண்டிருந்தான் நேமி.

சற்றே டேவிட்டை நெருங்கி அவனை தொடப் போனவள், சட்டென்று விவகி இரண்டடி பின்னால் நகர்ந்தாள். "அவருக்கு பெரிதாய் ஒன்றுமிருப்பதைப் போல தோன்றவில்லை..." என்றாள் அவன் முகத்தையே உற்று நோக்கியபடி.

"டேவிட்... டேய் கண்ணா டேவி... ஒழுங்கு மரியாதையா கண்ண தொரந்துடு செல்லம்..." என சுமன் அவன் இரு கன்னங்களையும் ஒரு கரத்தல் அழுத்தி பிடித்து உழுக்க, அப்போதும் அவன் எழுந்துக் கொள்வதைப் போல் தெரியவில்லை.

"இவ்வளவு சொல்லறேன்... கேக்க மாட்ட... கண்ண தொரடா எரும மாடே... என் தோள் என்ன ஆலமரமா... நீ தூலிக்கட்டி ஆட... வலி தாங்க முடியலடா டேய்... இப்ப நீ எந்திரிக்கல... மண்ட உடைஞ்சா பரவாயில்லைனு புடிச்சு கீழ தள்ளிட்டு நான் பாட்டுக்கு சாப்பிட ஆரம்பிச்சுடுவேன்... ஏந்திரிடா டேய்... நானும் கிளிப்பிள்ளைக்கு சொல்லற மாதிரி படிச்சு படிச்சு சொல்லிட்டு இருக்கேன்... நீ என்னமோ பாற்கடல பள்ளிக் கொண்ட பரமசிவன் மாதிரி எப்படி ஜம்முனு படுத்திருக்கு பாரு மூதேவி..." என கடுப்புடன் அவனை பிடித்து கீழே தள்ளியவன் வலியெடுத்த கையை வேகமாக அழுத்தி விட்டுக் கொண்டான்.

"பரம சிவனா அது... பரந்தாமன் இல்ல..." என்றான் ஜெகன் யோசனையாய்.

"ரொம்ப முக்கியம் அது இப்ப... பேசமா மூடுட்டு இருந்துடு... இல்ல அவன் மேல உள்ள கடுப்புல உன்ன ரெண்டு அப்பு அப்பிடுவேன்..." என்றவன் கீழே விழுந்த டேவிட்டையே பார்த்தபடி இருக்க,

மெல்ல கண்ணை திறந்துப் பார்த்தவன், "ஐய்யோ... அம்மா... எவன்டா அவன் என்ன கீழ தள்ளி விட்டது..." முதுகைப் நீவி விட்டபடியே டேவிட் எழுந்தமர, "டோய்... இவனுக்கு மயக்கம் தெளிய வைக்கற மருந்த கண்டு பிடிச்சுட்டேன் டோய்... இன்னும் நாலு மிதி எட்டி குறுக்குலேயே சேத்து மிதிச்சோமுனு வையி... ஆட்டோ மெட்டிக்கா போன ஜென்ம நியாபகம் கூட வந்துரும் பாருங்களேன்..." என்றவன் எட்டி ஒரு மிதி மிதிக்க, மற்றவர்கள் சிரித்து வைக்க, டேவிட்டோ பரிதாபமாக சுமனைப் பார்த்திருந்தான்.

"கண்ணே... மணியே... தங்கமே... பொண்ணேனா... மயக்கம் தெளிய மாட்டேங்குது... ஆனா உருட்டி தள்ளுனா மட்டும் தொரைக்கு மயக்கும் தெளியுதோ... இதென்னடா இது... மனங்கெட்ட மயக்கமா இருக்கு..." என டேவிட்டை பார்த்துக் கொண்டே கடுப்புடன் கேட்டான் சுமன்.

"ஹீ... ஹீ... அது வந்து மச்சி..."

"வாய தொரந்த வாயிலையே மிதிப்பேன் பாத்துக்க... முன்னாடியே உனக்கு மயக்கம் தெளிஞ்சுட்டுனு எனக்கு தெரியும்டா... அப்பறம் என்ன இதுக்குடா மயங்குன மாதிரியே படுத்திருந்த..." சுமன் அவனை முறைத்தபடியே வினவ,

அசடு வழியும் புன்னகை ஒன்றை உதிர்த்தவன், "சும்மா மச்சு... நான் மயங்கிட்டா உங்க எக்ஸ்பிரஸன் எப்படி இருக்குனு தெரிஞ்சுக்கலாமேனு தான்..." என அவன் சொல்லி முடிப்பதற்குள், "இதோ இப்படி தான் இருக்கும்... நல்லா தெரிஞ்சுக்கோ..." என சுமன் அவனை குனிய வைத்து முதுகில் மத்தளம் வாசிக்க மற்ற இருவரும் துணை சேர்ந்துக் கொண்டனர்.

"அடச்சீ... ஆரம்பிச்சுட்டீங்களா உங்க பஞ்சாயத்த... வாய மூடிட்டு வந்து தின்னு தொலைங்க... சாப்பிட்டு கிளம்புவோம்... இப்பவே கண்ண கட்டுது எனக்கு..." என சாரா தான் அவர்கள் நால்வரையும் விலக்க வேண்டி இருந்தது.

நடக்கும் அத்தனையையும் ஒரு இளமுறுவலுடன் வெயினி பார்த்திருந்தாள் என்றால், பெரும் ஆச்சரிய பாவத்துடன் பார்த்திருந்தாள் இளா.

அவர்கள் ஐவரும் உண்டு முடிக்கும் வரை அவர்களையே யோசனையாய் பார்த்திருந்தனர் மற்ற மூவரும்.

"நீங்கள் உண்மையில் கடற்கரை தேசத்தில் இருந்து தான் வருகிறீர்களா... இல்லை பசி மயக்கத்திலும் மருந்தின் விரீயத்திலும் சித்தம் கலங்கி பிதற்றுகிறீர்களா..." அவர்களை ஆழ்ந்து ஊடுறுவி நோக்கிய வண்ணம் வினவினான் வீரா.

"உனக்கு தான் சித்தம் கலங்கி பித்தம் தலைக்கேறி இருக்கிறது வீரா... அதனால் தான் நன்றாய் இருப்பவர்கள் கூட சித்தம் கலங்கியவர்கள் போல் காட்சி தருகிறார்கள்..." என்றாள் இளா வெடுக்கென்று.

"உண்மை தான் வருங்கால மகாராணியாரே... அவர்கள் ஐவரும் தங்களைப் போன்றவர்களே... பார்க்க புத்திமான்களைப் போல் தோற்றமளித்தாலும் பேச்சத்தனையும் சித்தம் பேதலித்தவரை போல் அல்லவா உள்ளது..." என்றான் எள்ளல் தோனியில்.

"என்னைப் பார்த்தால் சித்தம் கலங்கியவள் போலவா தெரிகிறது..."

"பார்த்தால் தெரிய வாய்ப்பேயில்லை மகாராணியாரே... ஆனால் சிறிது நேரம் தங்களோடு எவரேனும் மொழியாடினால் கண்டுக் கொள்வார்கள்..."

"அப்பாப்பா... அடேயப்பா... எத்தனை திண்ணக்கம் உமக்கு... முதன்மை தளபதியின் புதல்வரென்றால் பட்டத்து இளவரசியை எள்ளி நகையாடுவீரோ... அவ்வுரிமையை யார் அளித்தார் உங்களுக்கு... ஏதோ இத்தனை காலம் பழகிவிட்டோமே என்று பொறுமையாய் உங்களுடன் மொழியாடிக் கொண்டிருக்கிறேன்... இல்லை..."

"இளா... என்ன இது... எதற்காக இப்படி அவரோடு வார்த்தையாடிக் கொண்டிருக்கிறாய் நீ... அவள் தான் வீண்வாதம் செய்கிறாள் என்றால் தாங்களும் ஏன் இப்படி இவளுடன் சரிக்கு சரி மல்லுக்கட்டிக் கொண்டு நிற்கிறீர்களோ தெரியவில்லை எனக்கு..." என சலிப்பாய் மொழிந்தவள், "முதலில் வந்திருக்கும் விருந்தினரை கவனிப்போம்... எனக்கு அவர்களிடம் வினவி அறிந்துக் கொள்ள வேண்டியது நிறையவே இருக்கிறது..." என்ற வெயினி இப்போது ஐவரையும் பார்க்க, அவர்களின் முகமோ அப்பட்டமாய் சோர்வை வெளிக்காட்டியது. அதைக் கண்டவள் அடுத்த வினா தொடுக்க சற்றே தயங்கினாள்.

அதை நேமியும் உணர்ந்தவனாக, "எங்களுக்குள்ளும் பெரும் குழப்பமும் வினாக்களும் மனதிற்குள் வரிசைக்கட்டி நிற்கிறது இளவரசி... அதை உங்களிடம் கேட்டு தெளிவுப்படுத்தி கொள்ளவும் மனம் விழைகிறது... ஆனால் மனமும் உடலும் ஒருங்கே பெரும் சோர்வுற்றிருக்கும் போது எதை வினவி எதை விளக்கிக் கொள்வது... காணும் யாவும் காட்சி பிழையோ என்று எண்ணத் தோன்றுகிறது... இன்னும் நாங்களே எங்களுக்குள் தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டியது நிலையில் இருக்கும் போது, உங்களுடன் இயல்பாய் உரையாற்ற முடியவில்லை... அதற்காக எங்களை பொருத்தருள வேண்டுகிறேன்..." அவன் அறிந்தவரை பிற மொழி கலவாது திக்கி திணறி யோசித்து யோசித்து வார்த்தையை கோர்த்து பேசி முடிக்க, அதுவரை மற்ற அனைவருமே அவனைத்தான் பார்த்திருந்தனர்.

"அப்படியானல் முதலில் சென்று நன்கு ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்... நாம் மற்றவற்றை நிதானமாய் பிறகு பேசிக் கொள்ளலாம்..." என்றவள் வீராவைப் பார்க்க,

"சரி நண்பர்களே... நாம் செல்லலாம்... இங்கிருந்து என் இல்லம் செல்ல ரகசிய சுரங்க பாதை ஒன்றிருக்கிறது... அதன் வழியே சென்றால் பிறர் கண்களுக்கு அகப்பட மாட்டீர்கள்... அது தான் தற்போது தங்களுக்கு பாதுக்காப்பான வழியும் கூட..." என்றான் வீரா வெயினியின் விழியின் மொழியைப் புரிந்துக் கொண்டவனாய்.

"அப்போ நாங்க வரோம் இளவரசி... உங்க உதவிய மறக்கவே மாட்டோம்... ரொம்ப நன்றி..." என்ற சாரா மற்றவர்களுடன் செல்ல தாயாராக, மற்றவர்களும் அவளிடம் நன்றி உரைத்து கிளம்பினர்.

"என்னை இளநீ என்று தான் அழைக்க வேண்டாம் என்றேனே தவிர, மற்றபடி இளவரசி என்று அழைக்க வேண்டும் என்று நான் உரைக்கவில்லையே... வெயினி என்று கூட அழைக்கலாம்..." என அவள் ஐவருக்கும் பொதுவாக சொல்வதைப் போல சொன்னாலும் பார்வை என்னவோ டேவிட்டிடம் மட்டுமே நிலைத்திருந்தது.

"அவர்கள் நால்வரும் செல்லட்டும் சாரா... ஆண்கள் இங்கு நுழைய தான் தடை... அதனால் அவர்களை இங்கு கண்டால் தான் பிரச்சனை ஏற்படும்... நீ இங்கு தாரலமாம் தங்கலாம்..." என்றாள் வெயினி சாராவிடம்.

"இல்லை... தாங்கள் இத்தேசத்தின் இளவரசி என்னும் போது உரிய மரியாதை கொடுப்பதே உசிதம்... அன்றி அவள் எங்கள் உயிர் தோழி... இதுவரை எங்கும் எப்போதும் ஐவரும் ஒன்றாய் தான் இருந்திருக்கிறோம்... அப்படி இருக்க, தெரியாத இடத்தில் அவளை மட்டும் தனித்து விட்டுசெல்ல எங்களுக்கு மனமில்லை... ஒன்று அவளையும் எங்களுடன் அனுப்பி வையுங்கள்... இல்லை நாங்கள் ஐவரும் இங்கேயே தங்கிக் கொள்கிறோம்..." என்றான் நேமி, சட்டென்று வாடிவிட்ட சாராவின் முகம் பார்த்தே புரிந்துக் கொண்டவனாய்.

சில நொடிகள் அவர்கள் ஐவரையும் ஆழ்ந்துப் பார்த்தவள், "இவர்கள் ஐவரும் என் விருந்தினர்கள்... இவர்களுக்கு எல்லாவித குறையுமின்றி சகல வசதிகளுடனும் கவனித்துக் கொள்ள வேண்டியது உமது பொறுப்பு... சரிதானா..." என்றாள் வீராவிடம்.

அவன் சம்மதமாய் தலையசைக்கவும் சிறு முறுவலுடன் ஐவரையும் வழியனுப்பி வைத்தவள் அப்படியே கட்டிலில் அமர்ந்து ஆழ்ந்த சிந்தனைக்கு சென்றுவிட்டாள்.

"வெயினி... அடியே வெயினி... அப்படி என்னம்மா உமக்கு இப்படியொரு ஆழ்ந்த சிந்தனை..." என்றாள் தங்கையை உழுக்கி இளா.

"அவர்கள் உரைத்ததை பற்றி தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்..." என்றாள் யோசனையாய்.

"கடற்கரை தேசத்தைப் பற்றியா... அவர்கள் கூறியதிலிருந்து எனக்கு கூட அங்கு சென்று பார்க்க வேண்டுமென பெரும் ஆவலாய் இருக்கிறதடீ வெயினி... அவர்கள் வந்த மார்க்கத்தை கேட்டுக் கொண்டு யாரும் அறியாமல் நாமும் ஒருமுறை சென்றுப் பார்த்துவிட்டு வந்துவிட வேண்டும்..."

"அவர்கள் உரைத்ததை நீ நம்புகிறாயா என்ன..."

"நம்புகிறாயா என்றால்... நீ நம்பவில்லையா... நம்பியது போலல்லவா அவர்களிடம் உரையாடினாய்..." என்றாள் இளா கேள்வியாய் அவளை நோக்கி,

"நீயே இந்நாட்டின் நிலையறிவாய் இளா... எந்நேரம் வேண்டுமானாலும் போர்முரசு அறையப்படலாம்... அப்படியிருக்க புதியாய் வந்தவர்களை சந்தேக கண்கொண்டு கண்பதில் தவறென்ன இருக்கிறது... அவர்கள் ஐவரும் ஒற்றர் படையை சேர்ந்தவர்களாய் கூட இருக்கலாம் அல்லவா... நாம் அவர்களின் மீது ஐயம் கொண்டிருக்கிறோம் என அவர்கள் அறிய கூடாதடி இளா... அப்படி அறிந்தால் அவர்கள் கவனமாய் தப்பிக் கொள்ளவும் வழியிருக்கிறது..." என்றாள் யோசனையாய் வெயினி.

"இதில் ஐயம் கொள்ள என்ன இருக்கிறது வெயினி... அவர்களின் விழிகளை கண்டால் பொய்யுரைப்பதுப் போல் தெரியவில்லையே..." என்றாள் யோசனையாய் இளா.

"பொய் உரைப்பதில் அவர்கள் கற்றுத் தேர்ந்த வித்தகர்களாய் இருக்கலாம்... இல்லையாய் உண்மையை மறைப்பதில் வல்லவராய் இருக்கலாம்..." என்றாள் வெயினி.

"அது எப்படி அத்தனை உறுதியாய் மொழிகிறாய் நீ..." என்றாள் இளா அவளை ஆழ்ந்துப் பார்த்துக் கொண்டே. ஏனோ அவளுக்கு அவர்கள் ஐவரும் இம்மியும் பொய்யுரைப்பதைப் போல தெரியவில்லை.

"அவர்கள் ஐவரையும் எங்கே கண்டேனென அறிவாயா நீ... மதுராந்தக காட்டில்... அதுவும் சிறுத்தைகள் நடமாடும் மரங்கள் அடர்ந்த நடு வனத்தில்..." என்றவளின் வதனம் இன்னும் சிந்தனை வயப்பட்டிருப்பதை பறைசாற்ற,

"எது மதுராந்தக காட்டிலா... அக்காட்டில் நுழைய தான் தடை உள்ளதே... அதையும் மீறி எப்படி உள் நுழைந்தார்கள்... அப்படியே நுழைந்தாலும் எப்படியடி நடுவனம் வரை சென்றிருக்க கூடும்... அதற்குள்ளாகவே தான் சிங்கத்திற்கோ சிறுத்தைக்கோ இரையாகி இருப்பார்களே..." என்றாள் இளா அதிர்ச்சியில் விளிம்பில் நின்று. அவளின் அதிர்ச்சிக்கு காரணமில்லாமல் இல்லை. இதுவரை அந்த மதுராந்தக காட்டினுள் நுழைந்த யாரும் மீண்டு வந்ததாய் சரித்திரமில்லை. அங்கு சென்று திரும்ப கூடிய ஒரே உயிர் வெயினி மட்டுமே. அதுவும் நீலன் இல்லையென்றால் நிச்சயம் சாத்தியப்பட்டிருக்காது.

"அதுதான் எனக்கும் விளங்கவில்லையடி இளா... நான் அவர்களை கண்ட நேரம்... அவர்கள் நால்வரும் ஒன்றாய் எம்மை தாக்க வந்தார்கள்... அதனாலேயே நான் பதில் தாக்குதல் நடத்த வேண்டியதாகி விட்டது..."

"என்னடி உளறுகிறாய்... உண்மையில் உன்னை தான் தாக்க வந்தார்களா..? ஆனால் அவர்கள் உடல்மொழிகளை பார்கையில் உடலில் வலுவிருந்தாலும் போர் கலைகள் பயின்றவர்களை போல தெரியவில்லையே..." என்றவள் மீண்டும் அவர்களின் தோற்றத்தை கண் முன் கொண்டு வந்து ஆராய முற்பட்டாள்.

"எனக்கும் அப்படிதானடி தோன்றுகிறது... எனது தாக்குதலை முழுதாய் ஒரு நொடி கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை அவர்களால்... நான் அவர்களின் நண்பனை தாக்க கூடும் என்ற எண்ணத்திலேயே என்னை தாக்கி இருப்பார்கள் என்று எண்ணுகிறேன்... அன்றி அவர்கள் எம்மை இளவரசி என்றும் அறிந்திருக்கவில்லை போலும்..." என்றால் யோசனையாய்.

"அப்பப்பா... அடேயேப்பா... ஏனடி என்னை இந்தபாடு படுத்துகிறாய்... இறுதியாய் என்ன தானடி உரைக்க விழைகிறாய் நீ... ஒரு நொடி அவர்கள் ஒற்றர்களாய் இருக்க கூடும் என்கிறாய்..? மறு நொடியோ அவர்களை எதையும் அறிந்து செய்யவில்லை என்கிறாய்..?" என தலையில் கைவைத்து கட்டிலில் அமர்ந்துவிட்டாள் வெயினி.

"அவர்களை முழுதாய் எனனால் தெறிந்துக் கொள்ள முடியவில்லையடி இளா... அதனாலேயே பெரும் குழப்பம் ஏற்படுகிறது... நாடிருக்கும் சூழலில் அவர்களை முழுதாய் நம்பி அவர்களோ ஒற்றர்களாய் இருந்துவிட்டால், பெரும் இழப்பு நமக்கு தான்... ஆனால் அதே சமயம் அவர்களின் செயல்களை காணும் போது அப்படி இருக்குமென்றும் முழுதாய் சந்தேகிக்க முடியவில்லை... அதனாலேயே அவர்களில் ஒருத்தியை நம்முடன் இருத்திக் கொள்ள விழைந்தேன்... ஆனால் அவர்கள் அதற்கு ஒப்பு கொள்ளாததை காண்கையில் இன்னும் சந்தேகம் வலுக்கிறது எனக்கு..." என்றாள் இளாவை கூர்ந்துப் பார்த்தபடி.


"சரி... இப்போது என்ன செய்வதாய் உத்தேசித்திருக்கிறாய்..."

"நீ உரைப்பதும் ஏற்புடையதாக தான் இருக்கிறது... உண்மையில் அவர்கள் ஒற்றர்களாய் இருந்து விட்டால் என்னடி செய்வது... நம்பி அரண்மனையில் வேறு யாருமறியாமல் தங்க வைத்திருக்கிறாய்... இதனால் பெரும் அனர்த்தங்கள் நிகழும் என்பதை நீ அறிய மாட்டாயா..?" என்றாள் இளா கேள்வியாய் அவளை நோக்கி.

"எதிரிகளை உல்லாசமாய் வெளியில் உலவ விடுவதைக் காட்டிலும் கைக்குள் இறுக்கி வைத்துக் கொள்வதே சால உத்தமம்... அதனாலேயே அவர்களை வீராவுடன் அனுப்பி வைத்திருக்கிறேன்... அவர்களின் செயல்களில் சிறு ஐயம் தோன்றினாலும் ஐவரின் சிரமும் ஒருங்கே மண்ணில் புரளும்..." என்றவள் கண்களில் அத்தனை உறுதி.

"என்னடி சொல்கிறாய்... விருந்தினராய் வந்தவரின் சிரம் கொய்வதா..? இந்த கட்டளையை எப்போது பிரப்பித்தாய் வீராவிடம்... நானும் இங்கு தானே இருந்தேன்..."

"உடனிருந்தாள் மட்டும் போதுமா உயிர்புடன் இருக்க வேண்டுமடி இளா... அதுவும் இத்தேசத்தின் வருங்கால மகாராணியார் தாங்கள்... வாய் சண்டையில் மட்டும் கவனம் பதிக்காமல் சுற்றிலும் கவனத்தைப் பதித்தால் சால நன்று..." என்றாள் வெயினி கேலிப் புன்னகையோடு.

"அந்த வீராவோடு சேர்ந்து நீயும் அடிக்கடி என்னை கேலி செய்ய தொடங்கி விட்டாயடி..." என சலுகையாய் சலித்துக் கொண்டவளை காண சிரிப்பு பொங்கியது வெயினிக்கு.

"தந்தை மட்டும் அடிக்கொரு தரம் அத்தானை நீ பேர் சொல்லி அழைப்பதை கேட்டிருக்க வேண்டும்... பின்பு உன் தோலை உறித்து மத்தளம் கட்டிருப்பார்..."

"கட்டுவார் கட்டுவார்... அதை விடடி நீ... கேட்ட கேள்விக்கு பதில் சொல் முதலில்... எப்போது இந்த உத்தரவை பிரப்பித்தாய் நீ..."

"நீயும் அவரும் சண்டையிட்டு கொண்டிருக்கும் போது குறிப்பால் உணர்த்தினேன்... இல்லையென்றாலும் நிச்சயம் அத்தான் அவர்களின் மீது கவனம் பதித்திருப்பார் தான்... அவர்களின் ஒரே ஒரு செயல் அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தினாலும் ஐவரின் சிரமும் மண்ணில் வீழ்வது உறுதி..." என்றவளுக்கு அப்படியொரு சூழல் விரைவிலேயே ஏற்படவிருக்கிறது என்பது தெரிந்திருக்கவில்லை.

அதே சமயம் அங்கே வீராவின் மாளிகையில் ஒரே அறையில் பெரும் ஆபத்தொன்று நம்மை சூழ்ந்து சிரம் அறுக்க காத்திருக்கிறது என்பதை அறியாமலேயே நிர்மலமான முகத்தோடு ஆழ்ந்த நித்திரையில் அமிழ்ந்திருந்தனர் ஐவரும்.


- காத்திருப்பு தொடரும்...
 
Last edited:

தமிழ் வெண்பா

New member
Vannangal Writer
Messages
18
Reaction score
19
Points
3
அத்தியாயம் 8:


எங்கோ தூரத்தில் ஒலித்த பல விதமான பறவைகளின் ஒருமித்த இனிய கீதத்தில் கண் விழித்திருந்தான் நேமியோன். முன்தினம் நண்பகல் வேளையில் உறங்க ஆரம்பித்தவனுக்கு மீண்டும் இப்போது தான் விழிப்பே தட்டி இருந்தது. அவர்களின் களைப்புற முகங்களை கண்ட வீரா, இரவு உணவிற்காக கூட எழுப்ப முனையவில்லை.

இத்தனை வருடங்களில் இப்படி நிம்மதியாக உறங்கி எழுந்ததாக மூளையின் எந்த அடுக்குகளிலும் அவனுக்கு நினைவில்லை. சிறு வயதில் பெற்றோரின் இழப்பே அவனின் உறக்கத்தை பாதி எடுத்துச் சென்றதென்றால், வளர வளர அந்த கனவு முழுதாய் அவன் இரவுகளை களவாடிக் கொண்டது. கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக அந்த கனவு வந்து அவனுக்கு இம்சையை கூட்டுக் கொண்டிருக்கிறது. நான்கு நாள்களுக்கு ஒருமுறையாவது அந்த கனவு அவனுக்கு வந்துவிடும். ஆனால் அத்தனை முறைகளில் ஒருமுறை கூட அதை அவன் கனவாய் உணர்ந்ததே இல்லை.

ஒவ்வொரு முறையும் அப்பெண்ணின் சோக முகமும், அவளின் கவலை களைய முடியவில்லையே என்ற அவனின் பரிதவிப்பும், அவனின் மீது பட்டு தெரிக்கும் அவளின் இரு சொட்டு விழி நீரும், விழிகளில் அவனின் மீதான அளப்பறிய நேசத்தையும் நம்பிக்கையையும் சுமந்தபடியே நீரினுள் அமிழ்ந்துப் போகும் அவளின் மலர் முகமும், கடைசி வரை அவளை காக்கவில்லையே என்ற இவனின் குற்றவுணர்வும், உயிர் பயத்தை காட்டிய இறுதி நொடிகளுமாய் எல்லாம் அவன் உணர்வின் நாளங்களோடு ஒன்றிவிட்ட உண்மை நிகழ்வுகளாகவே தோன்றும். அதற்கு பயந்தே எத்தனை இரவுகளை உறங்காமல் கழித்திருப்பான் அவன்.

ஆனாலும் ஏதோ ஒன்று அவள் அவனின் ஊணோடு உறைந்துவிட்ட உண்மை என்றே உணர்த்திக் கொண்டிருந்தது. கனவுகளில் கண்டே காதல் கொண்டுவிட்டானா என்றால் நிச்சயம் அவனுக்கு அது தெரியவில்லை. ஆனால் கனவுகள் வரத காலையிலும் அவள் நினைவுகளுடனேயே தான் விழித்தான். இன்றும் அப்படிதான். எழுந்ததும் முதலாய் அவன் எண்ணங்களை ஆக்கிரமிப்பவள் அவளே.

அவன் நினைவுகளில் நிழலாய் நின்று விட்டவள் நிஜமாகவும் இருந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில் நீண்ட நெடிய பெருமூச்சு ஒன்று எழுந்து அடங்கிறது. இதுவரை கண்களை மூடி அவள் நினைவுகளில் லயித்திருந்தவன் கண்களை கசக்கியபடியே எழுந்தமர்ந்தான். மெல்லிய இள நீல நிறத்தில் தூங்கா விளக்கின் ஒளி அறை எங்கும் கசிந்துக் கொண்டிருந்தது. அதை காணவே சற்றே விசித்திரமாக பட எழுந்து அவ்விளக்கின் அருகில் சென்றான்.

ஒற்றை விளக்கை கையில் எடுத்து முன்னும் பின்னுமாக இருப்பிப் பார்க்க இரு பதுமைகள் ஒன்றாய் கைக்கோர்த்திருப்பதைப் போலவும் அதன் மையத்தில் கோள வடிவ தாங்கி நிற்பதைப் போலவும் காட்சியத்தன. ஒரு கிரிக்கெட் பந்தின் அளவிருக்கும் அந்த கோளம். அதிலிருந்து தான் அந்த ஒளிவெள்ளம் கசிந்துக் கொண்டிருந்தது. ஆனால் அது எண்ணொய் உற்றி தீரியிட்டு ஏற்றிய தீபம் போன்றோ மின்சாரத்தால் இயங்கும் தீபம் போன்றோ தெரியவில்லை. தன்னிச்சையாய் தானே ஒளிர்வதைப் போன்று தோற்றமளித்தது. அதில் மின்கலன்கள் எங்காவது பொருத்தப் பட்டிருக்கிறதா என்று இம்மி விடாது ஆராய்ந்து பார்த்துவிட்டான். ஆனால் எங்கும் அவை இருப்பதைப் போன்று தெரியவில்லை. ஆச்சரியத்தையும் மீறி பெரும் கேள்வி ஒன்று மனதை குடைகிறது. இந்த விளக்குகளை எங்கோ பார்த்திருக்கிறான் அவன். ஆனால் எங்கே? மூளையின் நினைவடுக்குகளில் வேக வேகமாக தேட, எங்கே பார்த்தோம் என்று சுத்தமாய் பிடிபடவில்லை. எடுத்த இடத்திலேயே அதை பொருத்தியவன் சுற்றி எங்கிலும் கண்களை சுழற்ற எனையோர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.

சாளரத்தில் அருகே வந்தவன் பொருத்தியிருத்த திரைச்சீலையை அகற்றினான். விடிந்துவிட்டதா இல்லையா என்று சரியாக வரையறுத்து கூற இயலவில்லை. இங்கு வந்த பொழுது எப்படி இருந்ததோ அப்படியே மெல்லிய கண்ணை உறுத்தாத இள நீலமும் இளஞ்சிவப்பும் கலந்த ஒளி வெள்ளம் எங்கும் விரவிக் கிடந்தது. எங்கு தேடியும் ஆதவனின் சிறு பிம்பத்தைக்கூட காண கிடைக்கவில்லை. ஒரு வேளை மேகங்கள் மறைத்திருக்குமா என்றால் அப்படி ஒன்று இருப்பதற்கான சுவடே அங்கில்லை.

"என்ன தேடிக் கொண்டிருக்கிறீர்கள் மித்திரா..." என வினவியபடியே அவனின் பின்னோடு வந்து நின்றான் வீரா.

சட்டென்று புதிதாய் முதுகுக்கு பின்னால் கேட்ட குரலில் தூக்கி வாறிப் போட, தன்னை நிலைப் படுத்திக் கொள்ள சில நொடிகள் பிடித்தது நேமியோனுக்கு.

"என்ன கேட்டுவிட்டேன் என இப்படி பயம் கொண்டு பதறிப் போகிறீர்கள்..." என அவனுக்கு அருகில் வந்த நின்றபடி வினவிய வீராவை தான் ஆழ்ந்து நோக்கினான் அவன்.

ஒரு நொடி மெல்லிய நடுக்கம் உடலில் பரவியதென்னவோ உண்மை தான். ஆனால், முதுகுக்கு பின்னால் சற்று தொலைவிலிருந்தே அதை தெரிந்துக் கொண்டான் என்றால் எத்தனை உன்னிப்பாய் தன் உடல்மொழியை கவனிக்கிறான் என ஊகிக்க முடிந்தது நேமியோனால்.

"உம்மை தான் நண்பரே... அப்படி என்ன இத்தனை ஆழ்ந்த சிந்தனை..." என்றான் வீரா.

"அப்படியெல்லாம் ஒன்றுமில்லை..." என்றவன் அவனை எப்படி விழிப்பதென்று அறியாது சற்றே தயங்கி பின் தொடர்ந்தான். "சட்டென்று பின்னால் கேட்ட குரலில் திடுக்கிட்டு விட்டேன் அவ்வளவே..." என்றான்.

"எனது நாமம் வீரமார்த்தாண்டவர்மன்... இத்தேசத்தின் முதன்மை தளபதியின் புத்திரன்... மித்திரன் என்றோ வீரா என்றோ தங்களின் விருப்பம் போல் அழைக்கலாம்..." என்றவன் சற்றே நிறுத்தி, "அப்படி என்ன மித்திரரே வானில் ஆழ்ந்து தேடிக் கொண்டிருக்கிறீர்கள்..." என்றான் மீண்டும்.

"பெரிதாய் ஒன்றுமில்லை... ஆதவனை தான் தேடிக் கொண்யிடிருக்கிறேன்... ஒரு வேளை மேகங்களுக்கு இடையே மறைந்துப் போனானா என்றால், மேகங்கள் இருப்பதைப் போன்று கூட தோன்றவில்லையே... அதனால் தான் வானையேப் பார்த்துக் கொண்டிருந்தேன்..." அவன் சொல்லி விட்டாலும் சட்டென்று பெயர் சொல்லி அழைக்கவோ மித்திரனென்று விளிக்கவோ வரவில்லை நேமிக்கு.

அவனின் கேள்விக்கு பதில் சொல்லாது சில நொடிகள் ஆழ்ந்து கூர்ந்து அவனையே பார்த்தபடி நின்று விட்டான் வீரா. அவனின் முகப் பாவத்தில் பெரும் குழப்பமும் இவன் உண்மைதான் உரைக்கிறானா என்ற ஐயமும் ஒருங்கே தென்பட்டது. இதை உணர்ந்தாலும் அவனிடம் ஏனென்றோ என்னவொன்றோ வினவவில்லை நேமியோன். மீண்டும் வானத்தை தான் பார்த்திருந்தான்.

"இங்கு ஆதவன் எழுவதே இல்லை... மேகங்களும் இல்லை... உம் தேசத்தில் ஆதவன் இருக்கிறானோ... தினம் தினம் வருவானோ..?" என்றான் வீரா.

இம்முறை குழப்பமும் ஆச்சரியமும் கலந்து அவனை நோக்குவது நேமியின் முறையாயிற்று. "உண்மை தான் உரைக்கிறாயா வீரா... எங்கள் தேசத்தில் தினம் தினம் ஆதவன் எழுந்து அடங்குவது இயல்பான ஒன்று... மேகங்கள் இல்லையென்றால் மழை எப்படி சாத்தியம்... மழை இல்லையென்றால் உயிர் நீருக்கு என் செய்கிறீர்கள்..." என்றான்.

"இத்தேசம் கடலுக்குள் உள்ளது மித்திரா... இங்கு ஆதவனோ முகிலினமோ மாரியோ எப்படி சாத்தியம்... நானோ எம் முன்னோர்களோ தங்கள் வாழ்நாளில் இதையெல்லாம் கண்டதே இல்லை... நீங்கள் கண்டிருக்கிறார்கள்... அந்த இயற்கை வளங்களோடு ஒன்றி இன்புற்று வாழ்ந்திருக்கிறீர்கள் என்றால் பெரும் பேரு பெற்றவர்கள் தான்..." என்றான் இம்முறை அவனும் வானையே விழிகளால் தழுவியபடி.

"அப்படியென்றால் இந்த ஒளிவெள்ளம்... இது எப்படி எங்கிருந்து பரவுகிறது..." என்றான் நேமி யோசனையாக.

"இனி இங்கு தானே இருக்க போகிறீர்கள் மித்திரரே... நிதனமாக அத்தனையும் தெரிந்துக் கொள்ளலாம்... இப்போது அனைவரையும் எழுப்பிக் கொண்டு கிளம்புங்கள்... அருவிக்கு சென்று நீராடி வரலாம்..." என்றபடி அவன் திரும்பி நடக்க,

"ஒரு நிமிடம்..." என நேமி அழைக்கவும் நின்று திரும்பி பார்த்தான் வீரா.

"நேற்று இளவரசி எங்களுக்கு அளித்த மருந்தில் மயக்கத்தை ஏற்படுத்தும் பண்பிருக்கிறதா..?" என்றான். உறுதியாய் இல்லை என்றாலும் சிறு ஐயம் இருந்தது அவனுள்ளே. நிச்சயம் வீராவை தவிர இதற்கு வேறு யார் பதில் சொல்லிவிட முடியும். அதனால் தான் துணிந்து அவனிடமே கேட்டு விட்டான்.

ஒரு நொடி அவனை உற்று நோக்கியவன், "ஆம்... அம்மருந்து மயக்கத்தில் வீழ்த்துபவை அல்ல ஆழ்ந்த நித்திரையை தந்து களைப்பை போக்கும் இயல்புடையவை..." என்றவன் சிறது பொருத்து, "காலை உணவை உங்களுடன் உண்ண விழைவதாய் இளவரசி தகவல் அனுப்பி இருக்கிறார்... விரைந்து நீராடி அங்கு செல்ல வேண்டும்... சீக்கிரம் அருவிக்கு செல்ல தயாராகுங்கள்... இதோ நான் வந்து விடுகிறேன்..." என்றவன் வேறெதும் கூறாமல் விறுவிறுவென வெளியேறி விட்டான்.

செல்லும் அவனின் முதுகையே துளைத்தபடி இருந்தவன், அவன் செல்லவும் மற்றவர்களை எழுப்பினான். அனைவரும் எழுந்துக் கொள்ள, ஜெகன் மட்டும் எழுவேனா என அடம் பிடித்து, தலையணையை இறுக கட்டிபிடித்து கனவுகளில் உல்லாசமாய் சஞ்சரித்துக் கொண்டிருந்தான்.

"டேய் நேமி... இவன இப்படி எழுப்பனா எல்லாம் எழுந்திருக்க மாட்டான்... வழக்கம் போல எட்டி குறுக்குலேயே மிதி எப்படி அலறியடிச்சு எந்திரிக்கறானு பாரேன்..." என்றான் சுமன்.

"அப்படியா சொல்லற..." என்றான் நேமி.

"அப்படியே தான் சொல்லறான்..." என்றது டேவிட்

"அப்போ மிதிக்கலாங்கற..." என நேமி மற்றவர்களை பார்க்க,

"இம்மான் நேரம் மிதிக்காததே தப்புங்கறேன்..." என்றாள் சாரா.

அவள் சொல்லி முடித்த அடுத்த நொடி ஜெகன் இடுப்பை பிடித்தபடி தரையில் உருண்டுக் கொண்டிருந்தான்.

"விஷம்... விஷம்... அம்புட்டும் ஆலகால விஷம்... மனுஷன வருஷத்துக்கு ஒரு நாளாவது நிம்மதியா தூங்க விடறீங்களாடா... எங்க எப்படி இருந்தவன் கனவ களைச்சி கட்டாந்தரையில உருள வச்சிட்டீங்களேடா பாவிங்களா..."

"அப்படி கனவுல யார் கூட சார் டூயட் பாடிட்டு இருந்தீங்க..."

"அதான்டா அந்த புள்ள இளா... என்ன அறிவு... என்ன அழகு... என்ன பேச்சு... அப்பப்பா... அடேயேப்பா... அந்த வார்த்தையிலேயே டோட்டல் ப்ளாட் நானு... இதுல ஹைலைட் என்ன தெரியுமா... நான் அந்த புள்ளைய கட்டிக்கிட்டு இந்த ஊருக்கே ராஜா ஆகிட்டேன்... நீங்க எல்லாம் எனக்கு எடுபிடி வேலை செய்யறீங்க... நேமி எனக்கு கை அமுக்க, டேவியும் சுமனும் போட்டி போட்டு கால் அமுக்க..." கண்களை மூடி லயித்துக் கூறியவனின் நெற்றியை பதம்பார்த்திருந்தது அழகிய வேலைபாடுகள் நிறைந்த வெங்கல டம்ளர்.

சட்டென்று விழித்து முரண்டுப் போய் சுற்றியும் அவன் பார்வையை சுழற்ற, அடுத்ததாக தண்ணீர் வைத்திருக்கும் வெங்கல குடுவையை கையில் வைத்துக்கொண்டு அவன் மீது ஏறிய குறிப் பார்த்துக் கொண்டிருந்தாள் சாரா.

"வெளக்கமாத்துக்கு பட்டுக்குஞ்சம் கேட்குதோ... எடு செறுப்ப... இன்னைக்கு இத கொண்டி உன் மண்டைய உடைச்சு நான் மாவிளக்கு போடல என் பேரு சாரா இல்லடா..."

"சாரா... பேச்சு பேச்சா இருக்கும் போது இதெல்லாம் நல்லா இல்ல... சொல்லிட்டேன்... டேய் என்னடா அவ பாட்டுக்கு மண்டைய பொழந்துட்டு இருக்கா... நீங்க எல்லாம் பாத்துட்டு இருக்கீங்க..."

"கொஞ்ச நஞ்ச பேச்சாடா பேசுன.... இப்ப நல்லா அனுபவி..." என மற்றவர்கள் வேடிக்கைப் பார்த்தனரே தவிர தடுக்க விழையவில்லை.

"அம்மாடி சாரா... அந்த ஜெக்கு சின்னதா இருக்கு பாரு... காயம் படுமோ என்னமோ... பேசமா நீ ஏன் இத யூஸ் பண்ண கூடாது..." என்றபடியே சுமன் பழங்கள் வெட்டுவதற்காக அவர்களின் கட்டிலுக்கு அருகில் வைத்திருந்த சிறிய கத்தி ஒன்றை எடுத்துக் காட்ட,

"எப்ப எப்பனு இருப்பீங்களாடா... விட்டா ஒரேயடியா சங்குதி இங்கையே என்ன பொதைச்சுட்டு போய்டுவீங்க போல... அம்மாடி தங்கம்... என் செல்லம்... அந்த ஜெக்க கீழ வைம்மா... இப்ப நான் என்ன சொல்லிட்டேனு நீ இப்படி பத்தரகாளி ஆகற... நீ தான் மீ வேண்டானு சொல்லிட்ட இல்ல... அப்பறம் நான் யார சைட் அடிச்சா உனக்கு என்ன... இல்ல யாரா கட்டுனா தான் உனக்கு என்ன..." என்றான் ஜெகன் மெல்லமாய் கட்டிலுக்கு பின்னால் பதுங்கியபடியே... நிச்சயம் இந்த கேள்விக்கு அவன் மண்டை உடையுமென அவனுக்கு தெரியாதா?

"டேய்... கட்டிலுக்கு பின்னால எங்க போற நீ... முன்னால வா... என்ன கேட்ட நீ... முன்னால வந்து கேளு... எவள சைட் அடிச்சா எனக்கென்ன... எவள கட்டுனா எனக்கென்ன... ஆனா கண்ட மேனிக்கு கனவு கண்டுட்டு காலையிலையே உளற பாத்தீயா... அதுக்கு தான் இந்த அடி... காக்கா குயில் மேல ஆசை படலாம்... ஆனா மயில் மேல ஆசப்பட கூடாதுடி ராசா... டேய்... வெளிய வாடா என் வென்று... கட்டிலுக்கு பின்னால ஒளிஞ்சுகிட்டா என்னால உன்ன அடிக்க முடியாதா... இப்ப பாருடி என் திறமைய..." என்றவள் அவள் படித்திருந்த கட்டிலின் மேல் எழுந்து நின்று அந்த குடுவையை அவன் மீதெறிய சரியாய் அது அவன் முதுகை பதம் பார்த்தது.

அவன் அலறி துடித்து வலிப் பொருக்க மாட்டது "நீங்கள ப்ரண்டாடா... அந்த குண்டு கத்திரிக்கா என்ன கொல்ல பாக்கறா... நீங்க வேடிக்க என்னடானா ஹாயா வேடிக்கையா பாக்கறீங்க..." என்றபடியே மற்ற மூவருக்கும் ஆளுக்கு ஒன்றாய் அவனின் வலியை பகிர்ந்தளித்துக் கொண்டிருக்க, பதிலுக்கு அவர்களும் அவனை மொத்த, சிறு சண்டை பெரு கலவரமாக கட்டிலிலேயே நால்வரும் உருண்டு பிரண்டு அடித்து கொள்ள, அருகிலிருந்த சிறு வெங்கல கிண்ணத்தை எடுத்துக்கொண்டு, "டேய் தீஞ்ச மூஞ்சு யாரா பாத்துடா குண்டு கத்தரிக்கானு சொன்ன..." என்றபடி ஜெகனின் மீது பாய்ந்து சாராவும் அடிக்க தொடங்கி, அவர்களுடன் ஐக்கியமாகி இருந்த வேளையில், வீரா இரு பெண்களை அழைத்துக் கொண்டு உள்ளே வந்திருந்தான்.

"மித்திரர்களே... என்ன நடக்கிறது இங்கே..." அவன் அவர்களின் நிலைக்கண்டு அதிர்ந்து வினவ,

அவனை கண்டு சட்டென்று விலகிக் கொண்டவர்கள், "ஹீ... ஹீ... ஒன்னுமில்லையே... சும்மா விளையாடிட்டு இருந்தோம்... இல்லங்கடா..." என ஐவரும் ஒன்றாய் மொழிந்து, ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து அசடீ வழிய புன்னகைத்து வைக்க, அவர்களின் புன்னகையில் வீராவுக்கும் புன்னகை அரும்பியது.

"சரி மித்தரர்களே... தாமதாமாகிறது... நீராட செல்லலாமா..?" என கேள்வியாய் அவன் அவர்களை பார்க்க, நேமியின் பார்வையோ சாராவின் மீது கேள்வியாய் படிந்து மீண்டது.

"தாங்களின் எண்ணம் புரிகிறது மித்திரரே... நம் நீராடும் அருவிக்கு கூப்பிடும் தொலைவில் ஒரு தாமரை தடாகம் உள்ளது... எம் சகோதரிகள் தமக்கையே அங்கே நீராட அழைத்துச் செல்ல தான் வந்திருக்கின்றனர்... ஆண்கள் அங்கே நடமாட தடைவிதிக்க பட்டிருப்பதால் தமக்கை எவ்வித ஐயமும் கொள்ள தேவையில்லை... மேலும் எம் சகோதரிகளும் பாதுகாப்பாய் தமக்கையின் உடனிருப்பார்... நாமும் கூப்பிடும் தொலைவில் தான் இருப்போம் என்பதால் தாங்களும் ஐயம் கொள்ள தேவையில்லை..." நேமியின் நேற்றைய கூற்றிலிருந்தே அவனின் எண்ணம் அறிந்தவனாய் தம் சகோதரிகளையும் அழைத்து வந்திருந்தான் வீரா.

'மனதின் எண்ணங்களை விழிகளை கண்டே எப்படி மொழிபெயர்கிறான் இவன் என்ற ஆச்சரியம் தோன்றினாலும் எதுவும் கேளாது ஐவரும் அவர்கள் மூவருடன் கிளம்பிச் சென்றனர். இம்முறையும் அவர்கள் ஐவரும் சுரங்கபாதை வழியாக தான் அழைத்து வரப்பட்டனர். சுரங்கத்தில் இருந்து வெளிவந்துமே பெரும் சலசலப்புடன் பாய்ந்துக் கொண்டிருக்கும் அருவியின் ஒசை கேட்டது. மேனி தழுவிய காற்றின் ஈரபதம் அந்த அருவியின் குளிமையை காதோடு சொல்லிப் போனது. அங்கிருந்து சில நூறு அடிகள் நடந்து சென்றதுமே அருவி வந்துவிட்டது. அவ்விடத்தை நெருங்கவுமே பெண்கள் மூவரும் தடாகத்தை நோக்கி சென்றுவிட்டனர்.

அவர்களின் எதிர்பார்ப்பில் பாதி அளவுக்கூட இல்லை. கண்ணுக்கு எட்டிய தூரம் பிரமாண்டமாய் ஆர்பரிக்கும் பெரும் அருவியை எதிர்பார்த்து வந்தவர்களுக்கு அறுபதடையில் மெல்லிய இரைச்சலோட பாய்ந்துக் கொண்டிருந்த அருவியைக் கண்டதும் சிறு ஏமாற்றம் தான். அவர்களின் எண்ணங்களை உணர்ந்தவனாய் வீரா, "இது இயற்கையான அருவி இல்லை... கடல் நீரை சுத்திகரித்து விசைக் கொண்டு உந்தித் தள்ளபடும் செயற்கை அருவிதான்... இதில் பாய்ந்தோடும் நீரானது வேளாண்மைக்கு பயன்படுகிறது..." என்றான்.

"இங்க எங்கையுமே இயற்கையான அருவியோ ஆறோ குளமோ இல்லையா..." என்றான் நேமி.

"முன்பு மும்மாரி பொழிந்த காலங்களில் அவயெல்லாம் செழித்திருந்ததாக வரலாறு சொல்கிறது... ஆனால் பன்னெடுங்காலமாக கடல் நீரை சுத்திகரித்து அதை விசைக் கொண்டு பாய்ந்தோட செய்து தான் நாங்கள் உபயோகித்து வருகிறோம்..." என்றவன் சற்றே சிந்தித்து, "மித்திரரே தங்கள் தேசத்தில் மாரி உண்டென்றால் ஆறு குளம் அருவிகள் எல்லாம் இன்றும் செழித்து வளம் கொழிக்கின்றவா..?" என்றவனுக்கு என்ன பதில் உரைப்பதென்றே மற்ற ஐவருக்கும் தெரியவில்லை. நிழலின் அருமை கோடையில் தெரியும் என்பதைப் போல, இல்லாதவர்களுக்கு தானே இயற்கை வளங்களின் செழுமையும் அருமையும் தெரிகிறது. தன் வாழ்நாளில் இயற்கையான அருவியையோ ஆறையோ கண்டிறாவர்களிடம் போய் அவற்றின் வளங்களையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக சுரண்டி அழிவின் விழிம்பிலா நிறுத்தி இருக்கிறோம் என்று உரைக்க முடியும்.

"அதெல்லாம் நிறையவே இருக்கு வீரா... இளவரசி பாக்கனுமுனு சொன்னாங்கனு சொன்ன இல்ல... சீக்கரம் குளிச்சுட்டு கிளம்புவோம்..." என்றபடி தண்ணீரில் இறங்கிவிட, அமைதியாய் வீராவும் இறங்கிவிட்டாலும், அவன் முகத்தில் ஒரு நொடி வந்துப் போன வலியின் சாயலைக் கண்டுதான் கொண்டான்.

ஜெகன் அருவிக்கரையிலேயே நின்று நீரை பார்ப்பதும் யோசிப்பதும் மீண்டும் நீரை பார்ப்பதும் யோசிப்பதுமாகவே இருக்க, "செல்லக்குட்டி... இங்கேயே நின்னு என்னடி தங்கம் யோசிக்கறீங்க... சட்டுபுட்டுனு சட்டைய கழட்டுட்டு தண்ணீல இறங்க வேண்டியது தான... சீக்கரம் குளிச்சுட்டு போனா தான உங்க கனவு கன்னிக்கூட நேர்ல டூயட் பாட முடியும்..." என்றான் நக்கலாக சுமன்.

"எல்லாம் சரிதான்டா... ஆனா தண்ணீ ரொம்ப ஜுல்லுனு இருக்கும் போல... நான் வேற ஹாட் வாட்டர்லையே குளிச்சு பழகிட்டனா... அதான் கொஞ்சம் யோசனையா இருக்கு... தினமும் குளிக்கனுமுனு ஏதாவது சட்டமா இருக்கு... பேசாம் நாம மூனு பேரும் நாளைக்கு குளிச்சுகிட்டா என்ன..." என தனது திட்டத்தில் அவர்கள் இருவரையும் கூட்டு சேர்த்தான் ஜெகன்.

"ஏன்டா சுமோ... நீ முத்து படம் பாத்து இருக்கீயா..." என்றான் டேவிட் ஜெகனைப் பார்த்துக் கொண்டே.

"டேய்... நான் த்ரீ டைம் பாத்து இருக்கேன்டா... அதுல தலைவர் ஒரு டைலாக் சொல்வாரு பாரு... செம மாஸா இருக்கும்... 'கிடைக்கிறது கிடைக்காம இருக்காது... கிடைக்காம இருக்கது கிடைக்காது... எச்சச்ச எச்சச்ச.... கச்சச்ச... கச்சச்ச...' " அழகாய் தலையை கோதியபடியே அழகாய் அதேப் போல் நடித்துக் காட்டியவனுக்கு அதையேன் இப்போது கேட்கிறான் என்று தான் புரியவில்லை.

"டையால் எல்லாம் செமையா தான்டி மாப்பிள சொல்லற... ஆனா நான் கேட்டது வேற... அதுல ஆத்துக்கு மேல நின்னுட்டு வடிவேல் சார் இப்படிதான் இறங்கலாமா வேண்டாமானு யோசிச்சுட்டு இருப்பாரு... அப்போ தலையவரு பின்னாடியே வந்து இப்படி தான் எட்டி மிதிச்சு தண்ணீ உள்ள தள்ளி விடுவாரு..." என்றபடியே நொடியும் தாமதிக்காது, அவன் சிந்தித்து விலகுவதற்கு நொடிப் பொழுதும் இடமளிக்காது இடுப்பிலேயே எட்டி மிதித்து நீருக்குள் தள்ளிவிட்டு டெவிட்டும் நீருக்குள் குதிக்க, அவனை தொடர்ந்து சுமனும் குதித்திருந்தான். நீருக்குள் முழ்கியவர்கள் மேலே எழுவதற்குள்ளாகவே அவர்கள் விழுந்த இடத்தில் நூலிழையாய் குறுதி கசிய தொடங்கி கொஞ்சம் கொஞ்சம் அந்த இடமெங்கும் விரவி பரவியது அந்த இடமே செம்மையை பூசிக் கொண்டது.

- காத்திருப்பு தொடரும்...
 
Last edited:

தமிழ் வெண்பா

New member
Vannangal Writer
Messages
18
Reaction score
19
Points
3
அத்தியாயம் 9:

ஒருவர் பின் ஒருவராக மூவரும் நீரில் குதித்ததும் பெரும் இரைச்சலோடு நீரும் துள்ளிக் குதித்து அந்த குறும்புக் காரர்களை தன்னுள்ளே அள்ளிக் கொண்டது. நிமிடங்கள் சில கடந்தும் மூவரும் வெளியில் வருவதைப் போல் தெரியவில்லை. அடிக்கடி நீச்சல் குளத்தில் இப்படி மூச்சடக்கி விளையாடுயது அவர்களின் வழக்கம் தான் என்பதால் நேமியும் பெரிதாய் அவர்களை கண்டுக் கொள்ளாமல் வீராவுடன் பேச்சில் ஆழ்ந்துவிட்டான். அவனுக்கு வீராவிடம் தெரிந்துக் கொள்ள வேண்டிய விடயங்கள் நிறைய இருந்தது. ஆனால் வீராவோ நேமியே அறியாத வண்ணம் அவன் கேள்விகளுக்கான முழு விளக்கங்களை தராது திசைத் திருப்பிக் கொண்டிருந்தான். புதிதாய் வந்தவனிடம் சட்டென்று அத்தனையும் பகிர்ந்து கொள்ள அவனின் மனம் முரண்டியதே அதற்கு காரணம்.

சிறிய இடைவெளியில் சுமனும் டேவிட்டும் தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக நீரின் உள்ளேயிருந்து வெளியில் வந்துவிட இன்னும் ஜெகன் மட்டும் வரவில்லை. ஜெகன் இவர்களுடன் விளையாடுவதாய் எண்ணிக் கொண்டவர்களும் நிமிடங்களை கணக்கிட்டபடி அவன் வரவுக்காய் ஆவலாய் காத்திருந்தனர். ஜெகனுக்கு உள் நீச்சல் நன்கு தெரியுமென்பதால் எத்தனை நேரம் என்றாலும் நீருக்குள் மூழ்கி மூச்சடக்குவான். அது மட்டுமன்றி ஒரு இடத்தில் மூழ்கி நீண்ட நேரம் மற்றவர்களை தேட விட்டு, வேறொரு இடத்தில் எழுவது எப்போது அவனுக்கு வாடிக்கையான ஒன்று தான். இதையெல்லாம் எண்ணி அவர்கள் அலட்சியமாய் இருக்க, அதுவோ அவர்களை மீளா துயரொன்றில் ஆழ்த்த ஆவணச் செய்துக் கொண்டிருந்தது.

"இங்கு நீராடிவதால் நீர் மாசுப்பட்டு போகாதா... இதை நேரடியாக வேளாண்மைக்கு பயன்படுத்தினால் பாதிப்பொன்றும் இருக்காதா..." வேளாண்மையை வார்த்தைகளில் மட்டுமே அறிந்திருந்தவன் இப்படி ஒரு கேள்வி கேட்பதில் தவறொன்றும் இல்லையே.

"கவலை வேண்டாம் மித்திரரே... இயற்கைக்கு மாபெரும் சக்தி இருக்கிறது... அவை தன்னை தானே சுத்தபடுத்திக் கொள்ளவும் மீள் தகவமைத்துக் கொள்ளவும் ஆற்றல் பெற்றவை... ஆகவே எப்போதும் நம்மால் முழுமையாக இயற்கையை மாசுப்படுத்திவிடவோ அழித்துவிடவோ இயலாது..." என்றான் முறுவலுடன் வீரா.

"உறுதியாகவா சொல்கிறீர்கள்... ஒரு வேளை மனிதர்களின் செயல்பாட்டல் இயற்கை சீர்குலைந்து அழிய நேரிட்டால்..?" கேள்வியாய் அவன் முகம் பார்த்து நின்றான் நேமி.

பெரும் நகை ஒன்றை சிந்தியவன், "அப்படிப்பட்ட ஆற்றல் கூட மனிதருக்கு இருக்கிறதா என்ன..? தாங்கள் மொழிவதைக் கேட்கையில் விந்தையாகவும் வேடிக்கையாகவும் அல்லவா இருக்கிறது... இந்த பரந்த உலகில் இயற்கைக்காக மனிதன் படைக்கப் பட்டிருக்காறானே அன்றி மனிதனுக்காக இயற்கை படைக்கபடவில்லை... ஒருவேளை நீவிர் உரைப்பது போல் மனித செயல்களால் இயற்கை அழிய நேரிட்டால் மொத்த மனித இனத்தையும் அழித்து தன்னை மீட்டுக் கொள்ளும் வல்லமை வாய்ந்தது இயற்கை..." என்றான் வீரா.

அவனின் கூற்றிலிருக்கும் பெரும் உண்மையை உணர துவங்கியவனுக்கு மனித இனத்தின் மடத்தனம் புரியத்தான் செய்தது. ஆனால் அவன் ஒருவனால் அகிலத்தை மாற்றிவிட முடியாதே. சிந்தனையில் ஆழ்ந்திருந்தவனை சட்டென்று தன் பக்கம் பற்றி இழுத்தான் வீரா. தன் தோள்களை நூலிலையில் ஏதோ உரசி செல்கிறது என்பதை உணர்ந்தாலும் அது என்னவென்று காண இயலவில்லை நேமியால்.

சட்டென்று அவன் இழுத்ததில் தடுமாறியவனுக்கு என்ன நடக்கிறதென்று ஒன்றும் விளங்கவில்லை. நேமி தன்னை நிலைப்படுத்திக் கொண்டான் என தெரிந்ததும் அவனை விடுத்து, வீரா நீர் வழிந்தோடும் பாறையின் குறிப்பிட்ட ஒரு இடத்தில் தம் கரத்தினால் தடவ, மெல்லிய வெங்கல அம்பு ஒன்று அந்த பாறையில் ஆழக் பதிந்திருந்தது. அது செலுத்தப்பட்ட விசையால் முன்னும் பின்னும் இன்னும் ஆடிக் கொண்டிருந்தது.

உடனடியாக அவன் சுற்றுப்புறத்தை தன் கண்களால் துழவ மரங்களின் சறுகுகளுக்கிடையே முழுவதும் தன்னை மறைத்தபடி நின்றிருந்த உருவம் ஒன்று கண்களில் பட்டது. ஆணா பெண்ணா என சரியாக வரையறுக்க முடியவில்லை. ஆனால் அந்த உருவம் எய்த அம்பு தான் நேமியை உரசி சென்றிருக்கிறது என அவனால் உணர்ந்துக் கொள்ள முடிந்தது. எப்போதும் பாதுக்காப்புக்காய் இடை கச்சையில் மறைத்து வைத்திருக்கும் குறுவாளை அந்த உருவத்தின் மீது எறிந்தான் வீரா. அக்குறுவாளும் தன் இலக்கை தப்பாது அந்த உருவத்தின் மீது பாய்ந்து காயத்தை ஏற்படுத்தி இருந்தது. இவை அத்தனையையும் ஒரு சில நொடிகளிலேயே நிகழ்ந்து முடிந்து விட்டிருந்தது.

அதே நேரம், "நேமி இங்க ஒரே ரத்தமா இருக்குடா... தண்ணீக்குள்ள விழுந்த ஜெகன வேற ரொம்ப நேரமா காணும்டா... சீக்கிரம் வாடா... எங்களுக்கு ரொம்ப பயமா இருக்கு..." என்ற சுமனின் கதறலும் அதைத்தொடர்ந்து அவனுமே வேகமாய் நீரினுள் முங்கும் சத்தமும் கேட்டது.

மெல்லிய ஒரு நூலியை போல் தோன்றிய ரத்தம் நீரோடு கரைந்துக் கொண்டிருக்க, அது அவர்கள் கண்களால் பதியவுமில்லை; கவனத்தை கவரவுமில்லை. கொஞ்சம் கொஞ்சமாய் அந்த குறுதி பெருகி பெரும் திட்டாக உருவெடுக்கவும் தான் அதை கவனித்தனர் டேவிட்டும் சுமனும்.

அதைக் கண்ட நொடி, நிச்சயம் அது ஜெகனின் குறுதி தானென்றும் நினைத்த டேவிட், அவனைத் தேடிக் கொண்டு உள்ளே பாய்ந்துவிட, நேமிக்கு கத்தி தகவல் சொல்லியபடியே சுமனும் நீரினுள் மூழ்கிப் போனான். வேகமாய் நேமி அவர்களை நோக்கி விரைய, வீராவும் தங்களை சுற்றிலும் தான் அணு அணுவாய் கவனித்தபடியே அந்த இடத்திற்கு விரைந்தான். அந்த ஒரு உருவத்தை தவிர வேறெதுவும் இருப்பதைப் போல் தெரியவில்லை. அதற்குள் ஜெகனின் தலைமுடியை பற்றி நீருக்கு வெளியே இழுத்து வந்திருந்தான் டேவிட்.

வீரா பாறையில் கண்டதுப் போலவே மெல்லிய வெங்கல அம்பொன்று ஜெகனின் கையில் இருக்க, அவனின் மார்பினில் குறுமிளகின் அளவு சிறு துளை ஒன்றிருந்தது. அதன் வழியாகவே குறுதி பெருகியிருக்க வேண்டும். அதனை சுற்றி கொஞ்சம் கொஞ்மாய் அவன் உடல் நீலம் பூக்க தொடங்கியிருந்தது. ஜெகன் மொத்தமாய் சுயநினைவை இழந்திருக்க, அவனைப் பார்த்ததுமே வீராவிற்கு நிலைமையின் தீவிரம் புரிந்துப் போனது. வேகமாக ஜெகனை கரையில் கிடத்த சொன்னவன், சட்டென்று நினைவு வந்தவனாய் நேமியின் கரத்தினை பற்றி ஆராய்ந்தான். அந்த அம்பு உரசிச் சென்றதில் சிறுக்கீறல் ஒன்று வலது தோள்பட்டையில் ஏற்பட்டிருக்க, அதனை தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாய் நீலம் பரவிக் கொண்டிருந்தது.

"மித்திரர்களே... இது நாம் விரைந்து செயல்பட வேண்டிய நேரம்... நம்மில் இருவரை கடும் நஞ்சு தோய்த்த அம்புக் கொண்டு தாக்கியுள்ளனர்... ஒரு நாழிகைக்குள் இவர்களுக்கு மருந்திட வேண்டியது மிக அவசியமாகிறது... யாராவது ஒருவர் சகோதரிகளை சென்று அழைத்து வாருங்கள்... ஏனெனில் அவர்களையும் ஆபத்து சூழ்ந்திருக்கலாம்... நாங்கள் மற்ற இருவரை அரண்மனை தலைமை வைத்தியரிடம் அழைத்துச் செல்கிறோம்..." என்றவன் நொடியும் தாமதிக்காது நேமியை தோளில் சுமந்தபடி ஓட, டேவிட் ஜெகனை தூக்கி சுமந்தபடியே, அவனின் பின்னால் ஓடத் துவங்கி இருந்தான்.

நடந்ததை புரிந்துக் கொள்ளவே சுமனுக்ஙு சில நொடிகள் பிடிக்க, சாராவின் பெயரை கத்தி அழைத்தபடியே பெண்கள் சென்ற திசையை நோக்கி அவனும் ஓடத் துவங்கி இருந்தான்.

"எமக்கொன்றும் இல்லை வீரா... எம்மை இறக்கிவிடு... நானே உன் பின்னால் வந்து விடுவேன்..." என்ற நேமியின் குரல் கொஞ்சம் கொஞ்சமாய் தோய்ந்து குழற தொடங்கி இருந்தது.

"அமைதியாக இருங்கள் மித்திரரே... உடலில் அசைவு ஏற்பட ஏற்பட நஞ்சு விரைவாக அங்கமெங்கும் பரவும்..." என அவனை கடிந்துக் கொண்ட வீரா வேகத்தை மட்டும் குறைக்கவில்லை.

"சீக்கரம் போகனுமுனா நாம ஏன் நீலன கூப்பிட கூடாது..." பின்னால் ஓடி வந்தபடியே வினவினான் டேவிட்.

"இத்தனை தொலைவில் இருந்து நம்மால் அவற்றை அழைக்க முடியாது மித்திரரே... ஏனெனில் அவை ஒன்றோடு ஒன்று தொலை நுண்ணுணர்வால் தொடர்பு கொள்ளும் ஆற்றல் பெற்றவை. ஒரு வேளை நம்மிடம் ஒன்றிருந்தால் அதன் துணைக்கொண்டு மற்றொன்றை அழைக்கமே தவிர நாமாய் அழைக்க இயலாது..." என்றவன், "தயைக்கூர்த்து முடிந்தமட்டும் விரைந்து வாருங்கள் மித்திரரே... அரமணை வாயிலை தொட்டுவிட்டால் போதும்..." என்றான் குரல் கூட மந்தமாய் தான் கேட்டது டேவிட்டுக்கு.

நீருக்குள் மூச்சையடக்கி ஜெகனை தேடியது, பின்பு கரைக்கு கொண்டு வந்ததென அதிலேயே டேவிட்டின் உடல் பெரும் சோர்வுற்றிருக்க, இன்னும் ஒரு வலுவான ஆண்மகனை தூக்கி சுமந்துக் கொண்டு ஓட வேண்டுமென்றால், சுவாசிக்கவே பெரும் சிரமமாய் இருந்தது அவனுக்கு. நின்று ஆழ்ந்து மூச்செடுத்துக் கொள்ளகூட சிறு அவகாசமில்லை. கொஞ்சம் கொஞ்சமாய் ஜெகனின் உடல் சூடு குறைவதையும், மார்பில் மட்டும் பரவியிருந்த விஷம் இடை தான்டி பரவிக் கொண்டிருப்பதையும் அவன் உடலும் உயிரும் ஒருங்கே உணர்கிறதே! அப்படி இருக்க அவன் எங்கே நிற்பது. பாதத்தில் பட்டு இடறும் சிறு கற்களையோ பாறைகளையோ அதன் பொருட்டு வழியும் ரத்தத்தையோ அவன் கருத்தில் கொள்ளவுமில்லை, கவனத்தில் பதிக்கவுமில்லை. தன் உயிரை கொடுத்தாவது நண்பனின் உயிரை காப்பாற்றி விடும் வேகத்தில் எதையும் சிந்தையில் ஏற்றாது ஓடிக் கொண்டிருந்தான்.

இப்போது அவர்கள் சுரங்க பாதையின் ஆரம்பத்தை அடைந்திருக்க, அங்கிருந்த பெரும் மணியை இசைத்துவிட்டு மீண்டும் ஒடத்துவங்கி இருந்தான் வீரா அது ஒரு அவசரகால எச்சரிக்கை மணி. அதனைக் கேட்டதும் அரண்மனையில் உள்ளவர்கள் ஏதோ ஆபத்தென்று உடனடியாக ஆயத்தமாய் இருப்பர். எங்கிருந்து அந்த ஒலி வருகிறதென்றும் அவர்களால் அறிய முடியும். அந்த இடத்தை நோக்கா சிறு வீரர்கள் குழுவும் உதவிக்கு வரும்.

இவர்கள் சுரங்கத்தின் பாதி தூரத்தை கடக்கும் முன்பே சிறு வீரர்களின் குழு இவர்களை அடைந்திருந்தது. நேமியையும் சுமனையும் தங்கள் வசம் தாங்கிக் கொண்டனர் அவர்களில் சிலர்.

"விரைந்து சென்று தலைமை மருத்துவரிடம் நஞ்சை முறிக்கும் மூலிகைகளை ஆயத்தபடுத்த சொல்லுங்கள்..." என வீரா சொல்லவும், அவர்களில் இருவர் மின்னலென இவர்களை கடந்து முன்னே ஓடிக்கொண்டிருந்தனர். மீண்டும் சிலரிடம் தங்கள் மீது அம்பெத்த உருவத்தை தேட சொல்ல, அவ்வுருவத்தை தேடி சென்றனர் சிலர்.

அடுத்த சில நிமிடங்களில் அவர்கள் அரண்மனை வைத்திய சாலையை அடைந்திருக்க, தாயாராய் இருந்த தலைமை வைத்தியரும் உடனடியாக சிகிச்சையை தொடங்கிவிட்டார். இன்னொரு பெண் டேவிட்டின் காலில் இருந்த காயங்களை தூய்மைபடுத்தி மூலிகைகளை வைத்து கட்டிட்டுக் கொண்டிருக்க, அதெல்லாம் அவனின் கருத்தில் பதியவேயில்லை. வழியும் கண்ணீரோடு, உடலெங்கும் நீலம் பாய உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தம் நண்பர்களின் மீதே இருந்தது அவனின் நிலைகுத்திய பார்வை. அவர்களின் பின்னோடே சுமனும் பெண்களை அழைத்துக் கொண்டு ஓடி வந்திருந்தான். இந்நிலையில் நண்பர்களை கண்டவர்களுக்கும் கண்களில் நீர் பெருகியதே அன்றி அதரம் ஒரு வார்த்தையும் உதிர்க்கவில்லை.

அதற்குள் தகவலறிந்து இளாவும் வெயினியும் அங்கு வந்திருந்தனர். "என்வாயிற்று அத்தான்... எப்படி இது நடந்தது... நம் எல்லைக்குள், அதுவும் அரச குடிகள் மட்டுமே பயன்படுத்தும் அருவிக்கு எதிரிகள் வந்து எப்படி அம்பெய்தனர்... உங்களின் பாதுகாப்பில் தானே இவர்களை ஒப்படைத்தேன்... இப்போது இருவரின் உயிருக்கு ஊறு விழைந்திருக்கிறது என்றால் என்ன அர்த்தம்..." பதற்றத்தில் மொழிகளும் நடுமாறி தடம்மாறி வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகளாய் அவனை தாங்கிக் கொண்டிருந்தன.

பதிலெதுவும் உரைக்க இயலாதவனாய் குற்றவுணர்வின் பிடியில் சிக்குண்டு தலை கவிழ்த்து நின்றிருந்தான் வீரா. "சற்றே பொருமையாய் இரு வெயினி... என்ன நடந்ததென்று வினாவினால் அன்றோ அவர் விடை பகற இயலும்... நீயோ அவரை குற்றம் சுமத்துவதுப் போல பேசினால், என்றவென்று அவரும் தான் மறுமொழிக் கூறுவார்..." நிலமையை தன் கட்டுக்குள் கொண்டு வர முயன்றாள் இளா.

"எப்படியடி இளா எம்மால் பொறுமையாக உரையாடி விளக்கங்களை பெற இயலும்... எம்மீது நம்பிக்கை அற்றவர்களை வருந்தி நான் தான் இங்கு அழைத்து வந்தேன்... இன்னும் கூட அவர்களுக்கு முழுதாய் என்மீது ஐயம் நீங்கவில்லை என்று புரிகிறது... அப்படியிருக்க இருவரில் யாராவது ஒருவருக்கேனும் ஏதாவது நிகழ்ந்தால் அதற்கு நான் தானே பொறுப்பாவேன்..." கண்களில் திரண்டுவிட்ட கண்ணீரோடு படபடத்துக் கொண்டிருந்தவளை இழுத்து தன் மார்போடு அணைத்துக் கொண்டவள், அங்கிருந்த நாற்காலியில் அமர வைத்து ஒரு குவளை தண்ணீரை அவள் கைகளில் திணித்தாள்.

"கவலை கொள்ளாதே வெயினி... இருவரில் ஒருவருக்கும் ஒன்றும் நேராது... எது நேர்ந்தாலும் நான் உன்னுடனிருப்பேன்..." என்றவள் தலைமை மருத்துவரைப் பார்க்க, அவர் இருவருக்குமான சிகிச்சையை ஆரம்பித்திருந்தார்.

முதலில் நஞ்சு தாக்கிய இடத்தையும் அது பரவியிருக்கும் விதத்தையும் ஆராய்ந்தவர், முகம் சட்டென்று ஒரு நொடி யோசனையில் அமிழ்ந்து மீண்டது. இப்போது எதைப்பற்றியும் சிந்திக்க நேரமில்லை என்று உணர்ந்தவர், வேகமாக செயல்பட துவங்கினார். தும்பை பூக்களின் சாற்றை பிழிந்து இருவரின் மூக்கின் வழியாக உள் செலுத்தினார். அது அவர்களை மயக்கம் தெளிவிக்க வல்லது. நஞ்சால் பாதித்த ஒருவர் கண் விழித்திருப்பது மிகவும் அவசியமாகிறது. ஒரு வேளை மயங்கினாலோ தூங்கினாலோ ரத்த ஓட்டம் அதிகரித்து நஞ்சு வேகமாக உடலெங்கும் பரவ வழி வகுத்துவிடும். அடுத்து நஞ்சை முறிக்கும் பெரியாநங்கை இலைகளை குறுமிளகோடு அரைத்து தேன் கலந்து இருவருக்கும் புகட்டினார்.

ஜெகனின் மார்பில் அம்பு தைத்த இடத்தை கீறி கொஞ்சமாய் குறுதியையும் சேகரித்துக் கொண்டார். நிலைக்குத்திய பார்வையோடு அழவும் மறந்து அடுத்து என்னவோ எண்ணும் திகிலோடு தான் நின்றிருந்தனர் மற்ற மூவரும். தம்மில் இருவரை இப்படி காண்கையில் மனம் எத்தனை பாடுபடும் என வார்த்தைகளில் விவரிக்க இயலுமா என்ன..? இந்த சில நிமிடங்களில் அவர்கள் அடைந்துவிட்ட துன்பம் தனை வாழ்வின் மொத்தத்திற்குமே அனுபவித்து இருக்க மாட்டார்கள். அவர்களை காண காண உள்ளுக்குள் பெரும் குற்றவுணர்வு ஒன்று எழுந்து, வெயினியை தவிப்பில் ஆழ்த்திக் கொண்டிருந்தது.

சிகிச்சை முடித்து இளாவை நெருங்கியவயின் முகத்தில் படர்ந்திருந்த கவலையே கண்டவள் அவரை சற்றே தள்ளி அழைத்து வந்துவிட்டாள்.

"அவர்களின் உயிருக்கு எவ்வீத தீங்கும் நேராது தானே வைத்தியரே... தங்களின் கவலை படிந்த முகம் என்னுள் இன்னும் கலக்கத்தை கூட்டுகிறது... விரைந்துப் பகர்ந்திடுங்கள்... அவர்களை காப்பாற்றி விடலாம் தானே..." என்றாள் இளா. அவளின் குரலே பெரும் கலக்கத்தை சுமந்திருக்க, அதை அதிகப்படுத்தும் விதமாக தான் அமைந்தது அவரின் பதிலும்.

"இளவரசிக்கு எமது வந்தனங்கள்... தாங்கள் சித்தம் மகிழும் பதிலொன்றை உதிர்க்கவே உன் உள்ளமும் விழைகிறது... ஆனால் அத்தகைய உத்திரவாதத்தினை இப்போது என்னால் உங்களுக்கு அளிக்க முடியாது இளவரசி... அவர்களில் ஒருவருக்கு தோள்பட்டையின் மீது சிறு கீறல் தான் ஏற்பட்டிருக்கிறது இளவரசி... இருந்துமே நஞ்சு வேகமாய் உடலெங்கும் பரவியிருக்கிறது... ஆனால் மற்றொருவருக்கோ ஆழமாய் நஞ்சு தடவிய அம்பு தைத்திருக்கிறது... அதுவும் இதயத்தின் அருகினில் என்பதால் ரத்த ஓட்டத்தின் வேகத்திற்கு ஈடுக் கொடுத்து அங்கெமெல்லாம் பரவிவிட்டது. அன்றி இது பாம்பின் ஒரு வகை நஞ்சுதான் என்றாலும் அது எப்பாம்பின் நஞ்சென எம்மால் அறிய முடியவில்லை... அதன் தனி தன்மைகளை ஆராய்ந்து மருந்திட்டால் அன்றி இருவரும் பிழைப்பது கடினம்... அது எவ்வகை நஞ்சென்பதை அறிய ஆவணங்களை நான் செய்கிறேன்... அதுவரை இவர்களுக்கு நஞ்சு முறிப்பானை ஒவ்வொரு நாழிகையும் புகட்டி வாருங்கள்... அது நஞ்சு பரவுதலை தடுக்கும்..." என்றவர் , ஜெகனிடம் சேமித்த ரத்த மாதிரிகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து வேகமாக கிளம்பிவிட்டார்.

மெல்ல திரும்பி மற்றவர்களை கண்டாள் இளா. இன்னும் வெயினியின் கண்களில் இருந்து பெருகும் கண்ணீர் நின்றபாடில்லை. வீராவோ மற்றொரு பக்கம் தலை கவிழ்ந்தபடி நின்றிருந்தான். கண்கள் நீரே சிந்தவில்லை என்றாலும் அவன் உள்ளமும் குற்றவுணர்வில் துடிப்பதை உணர முடிந்தது இளாவால். இன்னொரு புறமோ தம் இரு நண்பர்களையும் சூழ்ந்தபடி சிலையென சமைந்திருந்தனர் மற்ற மூவரும். அவர்கள் விழிகள் சுமக்கும் வலிகளை தான் வார்த்தையில் விவரித்திட முடியுமோ. நண்பர்கள் இருவரும் கண் விழித்ததில் களக்கம் கொஞ்சம் குறைந்ததிருந்தது. ஆனால் முற்றிலும் முழுவதுமாக அவர்களின் பயம் நீங்கவில்லை என்பதை அவர்களைப் பார்க்கும் போதே தெரிந்தது.

வெளித்தோற்றத்திற்கு படபட பேச்சும் மிகுந்த குறும்புதனமுமாக தெரிந்தாலும் இளாவின் முடிவுகளில் ஒரு தெளிவிருக்கும். செயல்களில் ஒரு பக்குவமிருக்கும். அதே சமயம் வெயினி வெளி தோற்றத்திற்கு பேச்சில் நிதானமாகவும் செயல்களில் பக்குவமாகவும் இருப்பதைப் போன்று தோன்றினாலும் அப்படியில்லை என்பதே உண்மை. அவசர அவசரமாய் முடிவுகளை எடுத்து அவள் இடர்களில் சிக்கி தவிக்கும் போது ஆபத்பந்தனாய் கரம் கொடுத்து உதவுபவள் இளாவே. அந்த பக்குவம் இச்சூழலையும் கையால அவளுக்கு உதவியது.

இச்சமயத்தில் மருத்துவர் உரைத்த உண்மைகளை பகர்வது நல்லதல்ல என்று உணர்ந்துக் கொண்டாள் இளா. இப்போது அவர்களுக்கு தேவைப்படுவது எல்லாம் இருவரும் மீண்டு விடுவார்கள் என்ற நம்பிக்கை மட்டுமே. அது மட்டுமே இவர்கள் ஐவரை உயிர்புடன் வைத்திருக்கும். இவர்கள் ஐவரும் உயிர்புடன் இருந்தால் மட்டுமே படுக்கையில் இருக்கும் இருவருக்கு நம்பிக்கை பிறக்கும். எனவே மற்றவர்களிடம் எதுவும் கூற வேண்டாம் என்ற முடிவுடன் அவர்களை நெருங்கினாள் இளா.

"இளா... வைத்தியர் என்னடி உரைத்தார்... உம்மை மட்டும் ஏன் தனியே அழைத்துச் சென்றார்... இத்தனை விரைந்து அவரெங்கே சென்றார்... இவர்களுக்கு ஒன்றுமில்லை தானே... பதில் சொல்லடி இளா... உன் அமைதி என் உள்ளத்தை கத்திக் கொண்டு கிழிக்கிறது..." வழியும் கண்ணீர் பார்வையை மறைக்க, நொடிக்கொரு தரம் அதை துடைத்து விட்டபடியே வினவினாள் வெயினி. அவள் மட்டுமல்ல மற்றவர்களுமே இளாவின் பதிலுக்காய் காத்திருப்பது புரிந்தது.

"அப்பப்பா... அடேயப்பா... இச்சிறு பிரச்சனைக்காக ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம் செய்கிறாயடி வெயினி... அவர்களுக்கு ஒன்றுமே இல்லையாம்... சிறு அளவு நஞ்சு உடலில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது அவ்வளவே... அதற்கும் வைத்தியர் மருந்து கொடுத்துவிட்டார்... இன்னும் ஒரு நாளைக்கு உறங்க விடாது இந்த மருந்தை ஒவ்வொரு நாழிகைக்கும் கொடுத்து வர பரிபூரண குணமடைந்து விடுவார்கள்... சரிதானே... இப்போதாவது கொஞ்சம் சிரிப்பது... சிறுப் பிள்ளைப் போல் கண்ணைக் கசக்கிக் கொண்டு நிற்பது இத்தேசத்தின் இளவரசிக்கு அழகாகவா இருக்கிறது..." என இளா கேலி இழைந்தோடும் குரலில் வினவ, வெயினியின் முகம் புன்னகையை பூசிக் கொண்டது. இளாவின்
குரலில் இருந்த இலகுத்தன்மை மற்றவர்களுக்குள் ஒரு ஆசுவாசத்தை, இருவரும் பிழைத்து விடுவார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த, அவர்கள் அனைவருக்குமான மொத்த கவலையும் இளாவின் மனதில் ஏறி சிம்மாசனமிட்டு அமர்ந்துக் கொண்டது. மற்றவர்களை நிம்மதிப் படுத்தி விட்டாலும் உண்மை அறிந்தவள் நிம்மதி கொள்வது எங்கணம். 'எப்படியாவது அவர்கள் இருவரும் பிழைத்துக் கொள்ள வேண்டும்...' என இடைவிடாது ஈசனை வேண்ட துவங்கி இருந்தாள் அவள். திக்கற்றவர்களுக்கு தெய்வமொன்றே துணை. அவளுக்கு இந்நிலையில் அவரையன்றி உதவுவார் யாருமில்லை என்பதை உணர்ந்த அவளின் மனம் ஈசனின் திருவடிகளை இறுகப் பற்றிக் கொண்டது.


- காத்திருப்பு தொடரும்...
 
Last edited:
Status
Not open for further replies.
Top Bottom