Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கிரைம் ஸ்பாட் - Comments

Messages
149
Reaction score
134
Points
43
குற்ற வேட்டை பல ட்விஸ்ட்களோடு குற்றம் நடந்தது என்ன என்பதை தேடலுடனும் ஆர்வமுடனும் படிக்க தூண்டியது. நிறைய நிறைய ட்விஸ்ட். நாம் ஒன்று நினைக்க ரைட்டர் ஒன்று எழுத மண்டை பிச்சிக்க அடேய் யார்ரா அது அக்யூஸ்ட்னு புலம்ப வச்சிடாங்க. கடைசி ஒரு எபி ரொம்ப உணர்வு பூர்வமாக இருந்தது.


ஒரு பிரபலமான நடிகை தற்கொலை பண்ணிகிறாங்க. அது உண்மையில் தற்கொலை தானா அல்லது கொலையா என்பதை விசாரணை செய்யும் போது கொலை என்பது தெரிய வர குற்ற வேட்டை ஆரம்பம் ஆகிறது.


அந்த குற்ற வேட்டையில் சிக்கும் நான்கு கேங்குகள் திட்டம் இட்டு நடிகையை கொல்ல திட்டம் போட ஆனால் அதற்கு முன்பே கொலை செய்ய படுகிறாள். யாரால் எதற்காக எப்படி என்பதை பல சுவாரஸ்யங்களுடன் பல ட்விஸ்ட் பல திருப்பங்களுடன் தந்திருக்கிறார். நேர்மை மட்டுமே வெல்லும்.


கதையில் ரொம்ப பிடித்தவை::: சக மனிதனாய் இருந்தும் நடிகன்\நடிகை என்ற ஒரே காரணத்திற்காக கடவுளுக்கு இணையா நினைச்சு மதிக்கிறதும் பாலாபிஷேகம் பண்றதும் சண்டை போடுரதும் இளைஞர்களுக்கு கிடைத்த சாபம் என்ற வார்த்தை 100% உண்மை. நிதர்சனம்.


இன்னொரு பிடித்த லைன் அம்மா மேல அதிக அன்பு வச்சிருக்கவன் கூட தப்பு பண்ண சான்ஸ் இருக்கு ஆனால் ரத்த சம்மந்தமே இல்லாத வெளியே இருந்து வந்த தன் மனைவியை எவன் உயிருக்கு உயிரா நேசிக்கிறானோ அவன் பெண்கள் மேல மரியாதையும் அன்பும் வைத்திருப்பவனாகதான் இருப்பான் என்ற வார்த்தைகள் ரொம்ப அழகா இருக்கு.


காதலிக்க விருப்பம் இல்லைனு சொன்னா காதலித்தவன் கொல்றான் காதலிச்சா வீட்டில் கொல்றாங்க பெண்களின் நிலை பரிதாபம். :::


பயணித்த பிரம்மா மார்க்ஸ் இரண்டு பேரும் சூப்பர்ஸ் ஒவ்வொரு விஷயங்களை அலசி ஆராய்ந்து அதுவும் மார்க்ஸ் ஸ்கோர் பண்றது செம 🥰🥰🥰 கைலாசம் தான் லாஸ்ட்ல ஸ்கோர் பண்ணாரு கரெக்டா லாஸ்ட் சிக்ஸர் அடிச்சு காலி பண்ணிட்டாரு. ஜெயமணி சோ ஸ்வீட். ஸ்ருதி சோ சோ ஸ்வீட் சுத்தி நிறைய நல்லது பண்ண நினைச்சா விதி எடுத்துகிச்சி. கூடவே சின்ன ஸ்ருதியும் வாவ் கேரக்டர். சகாப்தம் தள போட்டி கதை வெற்றி பெற வாழ்த்துக்கள் சிஸ்.
 

Subavijay

New member
Messages
5
Reaction score
0
Points
1
கிரைம் ஸ்பாட் - கார்த்திகா
madam nan ungaloda kadhaigala wattpad-la kooda padippan. endha kadhai sema. nuni sheet-la ukkandukittu nagam kadichchukittu padam partha enna feel varumo appidi erundhudu. super.
 

New Threads

Top Bottom