அத்தியாயம் 2
"
ஆத்விக்....உங்க பேர் என்ன "
"ஆதித்யா ....
ஆதித்யதேவ் கபூர் "
"என்னது ...ஆதித்யதேவ்வா ..நீங்க தான் கார்டியோலோஜிஸ்ட் ஸ்பெசிலிஸ்ட் ஆதித்யதேவ் டாக்டர்ரா ..."
"ம்ம்ம்..ஆமா "
"ஹுரைய் ...."அவன் சந்தோஷத்துல அங்க இருக்க யாரையும் கண்டுக்காம குதிச்சு கத்த. அங்க கேன்டீன்ல சாப்பிட்டுட்டு இருந்த எல்லாரும் இவங்கள திரும்பி பாக்க ஆரம்பிச்சிடுங்கா ..அத பாத்த ஆதி , ஆத்விய இழுத்துட்டு கொஞ்சம் தூரம் தள்ளி கூட்டிட்டு வந்தான் .
"ஹேய் ..ஆத்வி என்ன ஆச்சு ..ஏன் இப்டி கத்துற ..பாரு அங்க இருக்கவங்களாம் நம்மள தான் பாக்குறாங்க "
"ஐயோ ..சாரி சாரி அண்ணா ..எக்சைட்மென்ட்ல கத்திட்டேன்..நானும் என் பிரண்டும் உங்கள பாக்கணும்னு ரொம்ப நாளா வெயிட் பண்ணிட்டு இருந்தோமா .இன்னிக்கு கூட உங்கள பாத்துட்டு தான் இந்த ஹாஸ்பிடல விட்டு போகணும்னு இருந்தோம் .அதான் நீங்களே திடிர்னு வரவும் கொஞ்சம் எக்சைட்மென்ட் ஆகிட்டேன். அதும் இல்லாம நீங்க எனக்கு அண்ணனா வேற ஆகிட்டீங்களா அதான் ..அண்ணனு கூப்பிடுலாம்ல "
"ஹ்ம்ம் ..நீ தாராளமா கூப்டு ..நான் தான் முதலே சொன்னனே எனக்கும் உன்ன பாத்தா ஒரு பீல் அப்டி இருக்குனு ..சரி என்ன எதுக்கு நீங்க பாக்கணும் ?"
"அப்போ ..சரி ..இனி நான் உங்கள
ஆத்திண்ணா அப்டினு கூப்பிடுறேன் ..அப்றம் ஒரு 5 மினிட்ஸ் வெயிட் பண்றிங்களா ..என் பிரண்ட கூப்பிடுறேன் ..அவனும் உங்கள பாக்கணும்னு சொல்லிட்டு இருந்தான் ..ப்ளிஸ் ப்ளிஸ் அண்ணா "
"ஹ்ம்ம் ..சரி கூப்டு ..இதுக்கு எதுக்கு ப்ளிஸ்லாம் ...அதான் அண்ணன்னு கூப்டுறல .உங்க அண்ணாகிட்ட இப்படித்தான் பெர்மிஸ்ஸின் கேட்டுட்டு இருப்பியா.."
"ஹீஹீஹீ ..சரி இனி கேக்கேல ..இருங்க அவனுக்கு கால் பண்ணறேன் " என சொல்லிட்டு அவன் பிரண்ட்க்கு கால் பண்றான்.
போனில் ....
"டேய் ..எங்க டா இருக்க ..ஒரு போன் வாங்க இவளோ நேரமா ..சீக்கிரம் வா டா ..இங்க வேற ஆதி சார கேட்ட ஒழுங்கவே பதில் சொல்ல மாட்டிக்கிறாங்க .இதுல வேற ஒருத்தன் என்ன ரொம்ப கடுப்பேத்திட்டான் .."
"டேய்..ஹரிஷ் ..சீக்கிரம் இங்க கேன்டீன்க்கு பின்னாடி வா டா ..உனக்கு ஒரு சர்பரைஸ் இருக்கு...நான் போன் வைக்கிறேன் .நீ இங்க வா ..அப்றம் பேசிக்கலாம் எதுவா இருந்தாலும் "
"டேய் ..டேய் ..என்னனு சொல்லுடா ......லூசுபய என்னனு சொல்லாம கட் பண்ணிட்டான் .." அவனை திட்டிட்டே அவன் சொன்ன இடத்துக்கு போறான் ..
ஆத்வி கிட்ட பேசிட்டு இருந்த ஆதி ,ஒரு போன் கால் வந்ததுன்னு கொஞ்சம் தள்ளி நின்னு பேசிட்டு
இருந்தான்.பேசி முடிச்சிட்டு அவன் திரும்பி நடக்கவும் ஹரிஷ் வரவும் சரியா இருந்தது .அப்போ போன் பாத்துட்டே வந்த ஹரிஷ் அங்க வந்த ஆதி மேல
மோதிடுறான்.அதுனால அவன் மொபைல் கீழ விழுந்து உடைஞ்சுடுது . ஏற்கனவே கடுப்பா இருந்த ஹரிஷ் மொபைல் உடையவும் ,கோவமாகி ஆதியை திட்டுறான் .
"ஐயோ ..சாரி சார் ..தெரியாம நடந்துடுச்சு ..நீங்க வரது தெரியாம திரும்பிட்டேன் .சாரி "ஆதி
"ஹலோ ..என்ன சாரி ..உங்களுக்கு கண்ணு எங்க இருக்கு .ஒழுங்கா பாத்து வர மாட்டிங்களா ..உங்களால இப்போ என் போன் உடைஞ்சு போய்டுச்சு ..நீங்க சாரி சொன்ன சரியா போய்டுமா .." ஹரிஷ்
"ஐயோ ..சாரிங்க..தெரியாம நடந்துடுச்சு ..நான் வேணா புது மொபைல் வாங்கி தந்துடுறேன்..பிரச்சனை எதும் வேண்டாம் " ஆதி
ஆல்ரெடி ஹரிஷ்வரத பாத்துட்டு இருந்த ஆத்வி , இவங்க பக்கத்துல வரதுக்குள்ள .அவங்க மோதி ,போன் உடைஞ்சு ,இவன் ஆதியை திட்டவும் சரியாய் இருந்தது .இவன் ஆதியை திட்டுறத கேட்டுடே வந்தான் .ஆத்வி வரத பாத்த ஹரிஷ் அவன்கிட்ட "டேய் ...மச்சான் ..இங்க பாருடா ..இந்த ஆளு என் மொபைல உடைச்சுட்டான் "
ஆத்வி அவனை முறைச்சிட்டே " ஹரிஷ் ..பர்ஸ்ட் நீ அண்ணா கிட்ட சாரி கேளு "
"வாட் ??? என்ன டா பேசுற நீ ...நான் எதுக்கு இந்த ஆளுகிட்ட சாரி கேக்கணும்..அதுலாம் கேக்க முடியாது ..அதும் இல்லாம இவன் உனக்கு எப்போ அண்ணா ஆனான் ."
"ஆளு ..கீழுனு பேசுனா அவளோ தான் மரியாதையா பேசு ..அப்றம் நீ தான் சாரி கேக்கணும் .ஏன்னா நீதான் போன்ன பாத்துட்டா நடந்து வந்து அண்ணா மேல இடிச்ச..நா பாத்துட்டு தான் இருந்தேன் ..நீ இடிச்சது மட்டும் இல்லாம மரியாதை இல்லாம வேற பேசுற ..அவரு யாருனு தெரியுமா ..நீ முதல சாரி கேளு "
"இவன் யாரா இருந்தா எனக்கு என்ன ..என்னால சாரிலாம் கேக்க முடியாது .முதல நீ அவனை அண்ணானு சொல்றத நிருத்து ..எனக்கு தெரியாம எங்க இருந்த வந்தான் உன் நொண்ணன் " ஹரிஷ் நக்கலா கேட்கவும் ...ஆத்வி கோவ பாட்டு "ஹரிஷ் ...."அப்டினு கத்துறான் .
இவங்க இருந்த பக்கம் யாரும் அவளோ இல்லாதால இவங்க சண்டை போடுறது யாருக்கும் தெரியல . இவளோ நேரம் இவங்கள பாத்திட்டு இருந்த ஆதி " ஹே ..கைஸ் ..கூல் ...என்னால நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுக்க வேண்டாம் ..கூல் ...நீ சாரிலாம் கேக்க வேண்டாம் .அப்றம் நானே உனக்கு ஒரு புது மொபைல் வாங்கி தரேன் .சரியா ?"
"ஹலோ ..நீங்க நிருத்தங்க ..உங்களால தான் எல்லாமே ..யாருங்க நீங்க ..இதுவரைக்கும் என்ன ஆனாலும் ,நான் என்ன பண்ணாலும் எனக்கு சப்போர்ட் பண்ணவன் ..இப்போ கொஞ்ச நேரத்துல என்ன பண்ணிங்களோ ..உங்களுக்காக என்கிட்டையே சண்டை போடுறான் ..இதுல நீங்க சமாதானம் பண்ணறேன்னு நடுவுலலாம் வர வேண்டாம் ..அமைதியா போய்டுங்க..இதுக்கு மேல இங்க இருந்திங்க நடக்கறதே வேற "ஹரிஷ்
"டேய் ...உன்ன வாய மூடுனு சொன்னேன் ..இன்னொரு வார்த்தை பேசுனா கொன்னுடுவேன் ..." என்று ஹரிஷ பாத்து சொல்லிட்டு ஆதி பக்கம் திரும்பி "அண்ணா .இவன் பேசுனதுலாம் மனசுல வைச்சுக்காதீங்க ...இப்போ பேசுனா சரியா இருக்காது ..இவன் ஏதோ மூட்அவுட்ல இருக்கானு நினைக்கிறேன் .நம்ப இன்னொரு நாள் மீட் பண்ணி பேசலாம் .இப்போ நாங்க கிளம்புறோம் அண்ணா "
"சரி ஆத்வி ...ஓகே .நான் என் பிரண்ட் கூட வெளிய டின்னர் போரேன் ..உங்களையும் கூப்பிடலாம்னு பாத்தேன் ..பட் நீ இன்னிக்கு வர மாதிரி இல்ல ...சரி நீ இன்னொரு நாள் பிரீயா இருக்கும் போது சொல்லு அப்போ மீட் பண்ணுவோம் ..நீங்க கிளம்புங்க இப்போ " ஆதி
"அண்ணா ..இன்னிக்கு நைட்னா ஓகே தான் அண்ணா ..நாங்க வரோம் பிரீ தான் ..ஒன்னும் ப்ரோப்லம் இல்ல .." ஆத்வி
"டேய் ..யார கேட்டு நானும் வருவேன்னு சொல்ற ..இந்த ஆள் இருக்க'இடத்துக்கலாம் என்னால வர முடியாது ..ஹலோ இங்க பாருங்க நானும் வரமாட்டேன் , இவனும் வர மாட்டேன் ..நீங்க உங்க பிரண்ட் கூட மட்டும் போய்ட்டு வாங்க " ஹரிஷ்
" டேய்...நீ அடங்கவே மாட்டியா ...நீ வராட்டி போ ..நான் போவான் ...அதும் இல்லமா அங்க அந்த டின்னர்க்கு வரது ஆதித்யதேவ் டாக்டர் ..சோ நான் கண்டிப்பா போவேன் ...நீ வந்தா வா ..இல்லின்னா போ ..நான் மட்டும் போயிடு வந்துகிறேன்...ஆன என்ன அதுக்கு அப்றம் உனக்கு அவர மீட் பண்ண சான்ஸ் கிடைக்கறது கஷ்டம் ..
யோசிச்சுக்கோ.நம்ப இதுக்காக எவ்ளோ கஷ்ட பட்டோம்னு நினைச்சு பாரு " ஆத்வி
ஆதி நடுவில் பேச வந்தத பாத்துட்டு அவன் என்ன பேச போறான்னு தெரிஞ்சு ..கண்ணாலையே அமைதியா இருக்க சொல்லிட்டான்..ஏன்னா இவன் நான் தான் ஆதினு சொல்லிட்டா அவன் வர மாட்டான்னு தெரிஞ்சு தான் ஆத்வி இப்டி சொன்னான் ..அவன் சொன்னத கேட்ட ஹரிஷ்
"பரவால ...நான் அவர அப்புறமா பாத்துக்கிறேன் ..இந்த ஆளு கூட போயி தான் அவர மீட் பண்ணனும்னு இல்ல ..நீ மட்டும் போய்க்கோ ..எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்ல ..நம்ப இப்போ போலாம் வா " ஹரிஷ்
"ஒஹ்ஹ் ...அப்படியா ..சரி உனக்கு ஒண்ணும் இல்லைனா எனக்கும் ஒண்ணும் இல்ல ..சரி அண்ணா ..இதான் என் நம்பர் **********...நீங்க அட்ரஸ் அண்ட் டைம் எனக்கு மெசேஜ் பண்ணிடுங்க ..நான் வந்துடுறேன் ...இப்போ கிளம்புறேன் அண்ணா ..பை ..நைட் மீட் பண்ணலாம் .." ஆத்வி
" இல்ல ஆத்வி ..ஹரிஷ் ..அப்டினு தயக்கமா ஆதி பாக்க ..அத புரிஞ்சுட்ட ஆத்வி அவனை கண்ணலையே அவனும் வருவான்னு சொல்ற மாதிரி கண்ணா மூடி திறந்தான் .ஆனா ஆதிட "அண்ணா ...அவன் வரலைனா போறான் .விடுங்க .நான் மட்டும் வரேன் ..நீங்க வேற ஆதி சார் ..இன்னும் கொஞ்ச நாள்ல பாரின் போறாங்கன்னு சொல்றிங்க ..சோ நான் கண்டிப்பா பாத்தே ஆகணும் ..நான் வரேன் நீங்க இவனலாம் கண்டுக்காதீங்க " அப்டினு ஆதியை பாத்து கண்ணடிச்சுட்டே சொல்றான் .
அத புரிஞ்சுட்ட ஆதி "ஓகே ..ஆத்வி ..நைட் மீட் பண்ணலாம் ...பை...பை ஹரிஷ் ..நீயும் நைட் கண்டிப்பா வா ..நான் உனக்காக வெயிட் பண்ணுவான் .."ஆதி
"அதுலாம் ...நான் வர மாட்டேன் ..நீங்க எனக்காகலாம் பாக்காதீங்க ....டேய் ..வாடா போலாம் " அப்டினு முறிக்கிகிட்டே போறான்
சரி .அவங்க போகட்டும் அதுக்கு முன்னாடி இன்னும் நம்ப ஹீரோவ அறிமுகபடுத்தலை இல்லியா ..சோ வாங்க நம்ப ஹீரோஸ்ஸ பாத்துடலாம் ஆமாங்க நம்ப கதைக்கு ரெண்டு ஹீரோ ...ஒன்னு நம்ப டாக்டர் ஆதித்யதேவ் கபூர் ..ஆதி 26
வயசு.தினமும் உடற்பயிற்சி செய்யறதின் விளைவா நல்ல கட்டுக்கோப்பான
உடல்.எனக்கும் ,புகை ,மதுவுக்கும் சம்பந்தம் இல்லனு சொல்ற மாதிரி சிவந்த அதரங்கள் .ஆனா அந்த உதட்டுல சிரிப்புனு ஒண்ணு இருக்காது .கூர்மையான நாசி .எப்போவும் எதிர்ல இருக்கவங்கள எடை போடுற
கண்ணு.இறுக்கமான முகம் .ஆனா தன்னோட பேஷன்ட கவனிக்கும் போது மட்டும் அவனோட முகம் அப்டியே கனிவா
இருக்கும்.எவ்வளவு சந்தேகம் கேட்டாலும் கொஞ்சமும் சலிப்பு தட்டமா அவங்களுக்கு விளக்கம் குடுப்பான் .ஆனா இந்த கனிவுலாம் மத்தவங்க கிட்ட
இருக்காது.இவன் கிட்ட நல்லா பேசணும்னா பேஷண்டா போன மட்டும் தான் உண்டு .அப்போவும் தேவைக்கு மீறி ஒரு வார்த்தை இருக்காது .எப்போவும் எல்லாரையும் தன்னைவிட்டு தூரத்துலையே நிறுத்தி வைப்பான் .அதும் குறிப்பா பொண்ணுங்கள .இவனுக்கு இவன் தொழிலும் ,குடும்பமும் மட்டும் தான் உலகம் .இவனோட ஒரே லட்சியம் முடிஞ்ச அளவுக்கு எல்லாருக்கும் தரமான மருத்துவத்தை குறைஞ்ச பணத்துல தரது தான் .இலவசமா தந்தா எதுக்கும் மதிப்பு இருக்காதுன்னு
நினைக்கிறவன்.மருத்துவத்தை தன்னோட கடமையாவோ இல்ல தொழிலாவோ பாக்காம தன்னோட உயிர்க்கு'சமமா மதிப்பான் .அதுனால தான் என்னமோ இந்த 26 வயசுலையே கார்டிலோஜிஸ்ட் டிபார்ட்மென்ட் சீப் ஹெட் பதவி இவனுக்கு கிடைச்சு
இருக்கு.இந்தியாவோட டாப் கார்டிலோஜிஸ்ட்ல இவனும் ஒருத்தன் .இதுவரை இவன் எடுத்த கேஸ் ஒண்ணு கூட தோத்தது இல்ல .எவ்ளோ கஸ்டமான சர்ஜ்ரியா இருந்தாலும் இவனுக்கு அதுலாம் ஒரு தூசி மாதிரி
தான்.இவனை விட அனுபவம் இருக்க டாக்டர்ஸ் முடிக்க முடியாதது கூட இவன் ஈஸியா
முடிப்பான்.ஆனா அந்த கர்வம் துளி கூட இருக்காது .இவனோட சொந்த ஊர் மும்பை ..ஆன இவன் ஸ்கூல் படிக்கும் போதே சென்னைல செட்டில் ஆகிட்டாங்க. அப்பா ரன்தீர் ராய் கபூர் .
பிசினெஸ்மேன்.இந்தியாவோட டாப் கன்ஸ்ட்ரக்ஸன் கம்பெனியானா AD Constuction கம்பெனி இவங்களோடது
தான்.தன் மகன் பேரானஆதித்யதேவ் தான் AD Constuction வைச்சு இருக்காரு. ஆதிக்கு அவங்க அப்பா தான் பெஸ்ட் பிரண்ட் .அம்மா மிருதுளா ராணி ..பேருக்கு தகுந்த மாதிரி ராணி மாதிரி கம்பீரமா
இருப்பாங்க.அதே முகத்துல கனிவும் ஒரு சாந்தியும் இருக்கும் .முதல தன்னோட குடும்பம் தான் முக்கியம்னு நினைக்கிறவங்க. தன்னோட குடும்பத்தை தான் தான் கவனிக்கணும்னு இருப்பாங்க .அதுனாலவே வீட்டோட இருந்துட்டே இவங்க கம்பெனி பொறுப்பையம் பாத்துக்கிறங்கா .இவங்களுக்கு ஆதினா
உயிர்.ஆதியோட தங்கை ஷான்வி. வீட்ல எல்லாருக்கும் ஷானு. இவளுக்கு இவன் அண்ணா தான் எல்லாம் .அப்பா அம்மா இல்லாம கூட இருப்பா ஆனா அண்ணா இல்லாம ஒரு நாளும் இருக்க
மாட்ட.எப்போவும் குறும்புத்தனனும் ,துறுதுறுனு இருக்க பொண்ணு . வெளிய எப்போவும் இறுக்கமா இருக்க ஆதி வீட்ல மட்டும் அப்டியே நேர்மாறா இருப்பான். இவனும் இவன் தங்கச்சியும் இருந்தாங்கனா அந்த இடத்துல கலகப்புக்கு பஞ்சமே இருக்காது .(இப்போ நீங்க என்ன நினைக்கிறிங்கனு பிரியுது ..ஆதி எப்படி பட்டவனு தான ..அதான் எனக்கும் தெரியல அவனை இன்னதுனு சொல்லி ஒரு வரையறைல நிறுத்த முடியாது .அவன் ஒரு புரியாத புதிர் )
அடுத்து நம்ப அடுத்த நாயகன் ஆத்விக் .இவனோட அப்பா ,அம்மா ,தங்கச்சி ,அக்கா ,தம்பி ,நண்பன் ,சொந்தம் பந்தம் எல்லாமே அவனோட பிரண்ட் ஹரிஷ் தான் .ஹரிஸ்கும் கும் அப்டித்தான் .(இதுல அண்ணா வரலன்னு நீங்க சொல்றது புரியுது .அவன் இதுவரை யாரையும் அண்ணானு சும்மா பேருக்கு கூட கூப்பிட்டது கிடையாது .காலேஜ் சீனியர்ஸ் கூட சீனியர்னு மட்டும் தான்
கூப்டுவான்.அது ஏன்னு நான் அப்புறம் சொல்றேன் )இவங்க ரெண்டு பேரும் வளந்தது எல்லாம் ஆசிரமத்துல தான். ஹரிஷ்க்கு அவனோட அம்மா அப்பா யாருனே தெரியாது .அவன் பொறந்த கொஞ்ச நேரத்துலையே அவனை ஆசிரம வாசல்ல போட்டுட்டு போய்ட்டாங்க .ஆனா ஆத்விக் அப்படி இல்ல ..அவன் தன்னோட 6 வயசு வரைக்கும் குடும்பத்தோட
இருந்தவன்.அவனோட குடும்பத்துல இருக்க எல்லாரும் இறந்ததுக்கு அப்றம் அவனோட சொந்தங்கள் யாரும் இவனை
கண்டுக்கல.நடுரோடுல அனாதையா யாரும் இல்லாம இருந்தவனை ஒரு டாக்டர் தான் பாத்துட்டு அவனை இந்த ஆசிரத்துல சேத்தாங்க. அங்க சேந்த புதுசுல யாரோடும் பேசாம .எப்போவும் ஒரு இறுக்கத்தோடியும் , பயத்தோடும் யார்கூடவும் ஓட்டமா தனியா ,விடிய விடிய தூங்காம எங்கியோ எப்போவும் வெறிச்சு பாத்துட்டு இருந்தவன, தன்னோட கூட்ல இருந்து வெளிய கொண்டு வந்தது ஹரிஷ் தான் . ஏற்கனேவே இவன் கலகலப்பானவன் தான் ..ஆனா ஆத்விக்காக இன்னும்மாறி அவனையும் மாத்துனான் .இவன் என்ன தான் பேசாம அவனை விட்டு ஒதுங்கியே போனாலும் அவன் பின்னாடியே சுத்தி கொஞ்சம் கொஞ்சமா சகஜநிலைக்கு நிலைக்கு கொண்டு வந்தான் .அப்போல இருந்து அவனுக்கு இவனும் இவனுக்கு அவனும் வளந்தாங்க. ஹரிஷ தத்து எடுக்க ஒரு பணக்கார குடும்பம் வந்த போதும் அவங்களோட போகாம ஆதி தான் முக்கியம்னு வந்துட்டான். அதுக்கு முன்னாடி எதோ எனோ தானோனு பேசிட்டு இருந்த ஆத்விக் இந்த சம்பத்துக்கு அப்றம் தான் அவனோடஉரிமையா பழக ஆரம்பிச்சான். ஸ்கூல்லையும் சரி ,காலேஜ்லையும் சரி இவங்களுக்கு எத்தனை பிரண்ட்ஸ் இருந்தாலும் இவங்க ரெண்டு பேருக்கு நடுவுல யாரும் வர விட மாட்டாங்க. ஸ்கூல் படிக்கும் போதிலேஇருந்தே ஆத்வி ஜர்னலிஸ்ட் ஆகணும்னு ஆசை. அவனுக்காக ஹரிஷும் ஜர்னலிசம் படிச்சான் .படிச்சு முடிச்சுட்டு இப்போ ஒரு வருசமா ஒரு சேனல ரெண்டு பேரும் ஒர்க் பண்ணறாங்க .இவங்களோட லட்சியம் மக்கள்நீதி டிவில வேலை பாக்கணும்னு
தான்.இது தமிழ்நாட்டுலியே இருக்க டாப் டிவில ஒண்ணு ..இதுவும் ஆத்விக் ஆசை தான்.
இது தாங்க நம்ப ஹீரோஸ் ...
இது என்னோட முதல்
கதை.என்னோட முதல் முயற்சி .சோ ,குறைகள் ஏதோனு இருந்தா அத சுட்டி காட்டுங்க. உங்களோட கருத்துக்கள் தான் என்ன இன்னும் எழுத ஊக்குவிக்கும் .அதுனால எதுவா இருந்தாலும் சொல்லுங்க ..both positive and negative comments.