Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

Status
Not open for further replies.

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
906
Reaction score
1,132
Points
93
எனது புத்தகங்கள் வாங்க விரும்புவோருக்கு:

1.காதலா காதலா -Rs.280

2.நிஜமது நேசம் கொண்டேன் -Rs.220

3.நின் உச்சிதனை முகர்ந்தால் -Rs.250

சகாப்தம் பதிப்பக வாட்ஸப் எண்கள்:
9500986195
9500861971
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
906
Reaction score
1,132
Points
93
இந்தக்கதை உங்களுக்கு பிடிச்சிருந்தா பேஸ்புக்கில் ரிவியூ எழுதி நாலு பேருக்கு லிங் ஷேர் செய்து நற்தொண்டு புரியலாம் குண்டுமல்லீஸ். தவறில்லை😂
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
906
Reaction score
1,132
Points
93
அத்தியாயம் 8



ஏழாம் மாதம்
அதிதி ஞாபகம் வந்தவளாக, "ப்ளவுஸெல்லாம் சின்னதாகிடுச்சு மாமூ" என சிரமப்பட்டு சிணுங்கிக் கொண்டிருந்தாள்.


விக்ரமன், "ப்ளவுஸ் சின்னதாகல அம்முக்குட்டி. நீ தான் பெருசாகிட்டே" என்று கிண்டலடித்தான்.


அவன் வயிற்றில் குத்தியவள், "ரெண்டும் ஒன்னு தான். எனக்கு இப்போ மெட்டர்னிட்டி கவுன் வேணும் மாமூ. வாங்கித் தாங்க" என அடம்பிடிக்கவும், அவளை ஏங்கவிடாமல் மறுநாளே அவள் வேண்டாம், வேண்டாம் என்று சொல்லுமளவிற்கு டிரெஸ் வாங்கி குவித்தான் விக்ரமன்.


சாயங்காலம் அந்த கவுனை அணிந்து நடைபயிற்சி கிளம்பியவளைக் கண்ட நாச்சியம்மை, "ஹே குட்டி, என்ன டிரெஸ் இது? அழகா சுங்குடி சேலை கட்டினா உடம்புக்கு நல்லாயிருக்குமில்ல?" என கடிந்தார்.


அதிதி பதில் கூற முடியாமல் விழித்தாள்.


உட்புகுந்த விக்ரமன், "டாக்டர் தான் நாச்சூம்மா இந்த ட்ரெஸ் போடச் சொன்னாங்க" என்று அவளைக் காப்பாற்றி ரகசியமாய் அழவம் காட்டினான்.


நாச்சியம்மை அவளிடம் பால் நிறைந்த டம்ளரை கொடுத்து, "இத குடிச்சிட்டுப் போ. வெறும் வயித்தோட நடந்தா புள்ள என்னாகுறது?" என்றதும் அவரின் கவனிப்பில் மனம் நிறைந்தவள், பாலை அருந்திவிட்டு தன் கணவனுடன் புறப்பட்டாள்.


பாவம் அவளுக்குத் தெரியவில்லை. அந்த கவனிப்பு தனக்கானது அல்ல, தன் குழந்தைக்கானது மட்டுமேயென்று.


நடைபயிற்சி செய்யும் வழியில் அதிதி பஞ்சுமிட்டாய் கேட்க சுகாதாரமானது அல்ல என வாங்கித்தர மறுத்தான் விக்ரமன். அவனிடம், இப்படிச் சொன்னால் கேட்க மாட்டான் என அவன் பலவீனத்தில் கை வைத்தாள் அதிதி.


"மாமூ பாருங்க, இப்போ நீங்க வாங்கித் தரலைனா நான் அம்முலுக்கிட்ட நீங்க இல்லாதப்போ உங்களை பேட் டாடினு சொல்லி, அவ மனசுல உங்களை ஒரு வில்லனா பதிய வச்சுருவேன். ஜாக்கிரதை!" என மிரட்டவும், அரக்கப் பரக்க ஓடியவன் பஞ்சுமிட்டாயை வாங்கி வந்து அவள் வாயில் திணித்தான்.


அவனைக் கண்டு அசட்டுச் சிரிப்பு சிரித்தவள் சாப்பிட்டுக்கொண்டே மீண்டும் தன் நடைபயிற்சியைத் தொடர்ந்தாள்.


ஆனால், மார்பும் வயிறும் பெருத்திருந்ததால் சிறிது தூரத்திற்கு மேல் அவளால் நடக்க முடியவில்லை. கால்வலியில் தன் வயிற்றை பிடித்துக்கொண்டே ஓரிடத்தில் உட்கார்ந்து விட்டாள்.


தன்னை தாண்டிச் செல்லும் தன் கணவனை அழைக்கும் நோக்கில் வேகமாக அவள், "ஆம்புலன்ஸ் நூத்தியெட்டு" என அவனுக்கு தான் வைத்த செல்லப் பெயரை தன்னையும் அறியாமல் கத்த, அதனைக் கேட்டு விக்ரமன் வருவதற்குள் அங்கு நடைபயிற்சி மேற்கொண்டிருந்த கூட்டம் வந்துவிட்டது.


அவளைச் சுற்றி நின்றுகொண்டு, "என்ன செய்யுதுமா? ஆம்புலன்ஸ் கூப்பிடனுமா?" என்றும் பதறியது.


'அய்யோ!' என்று நின்றிருந்தவள் தன் கணவன் அருகில் வரவும் ஆசுவாசமடைந்து அவனை அணைத்துக் கொண்டாள்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
906
Reaction score
1,132
Points
93
விக்ரமனைக் கண்டதும் வந்த கூட்டம் கலைந்து சென்றது.


"ஹே லூசு, பொது இடத்துல இப்படித் தான் கூப்பிடுவியா?" என்றவனை தள்ளி விட்டவள்,


"ஏன் என்னை தனியா விட்டுட்டுப் போயிட்டீங்க?" என்று இடுப்பில் கை வைத்துக்கொண்டு மிரட்டினாள்.


அதற்கு அவளின் மூக்கைப் பிடித்து ஆட்டியவன், "சாரிடி. இப்ப போலாமா?" என கைத்தாங்கலாக அவளை அழைத்துச் சென்றான்.


வரும் காலத்தில் அவன் மொத்தமாக அவளை உதறிச்செல்லும் நிலை வந்தால் என்ன செய்வாள் அதிதி?


எட்டாம் மாதத்தில் அடிக்கடி தன் வயிற்றில் மிகுந்த வலியை உணர்ந்த அதிதி சில நேரங்களில் தூக்கம் வராமல் புரண்டாள்.


நன்கு குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருக்கும் தன் கணவனையும் எழுப்பி, "நான் இங்க வலியில தூங்காம இருக்கேன். நீங்க மட்டும் நல்லா சொகுசாத் தூங்குறீங்களா? எனக்கு இப்போ குப்புறப் படுத்து தூங்கனும் போல இருக்கு" எனத் தேம்பி தேம்பி அழுது அவனையும் தூங்கவிடாமல் செய்தாள்.


அப்போதெல்லாம் ஹார்மோன் மாற்றத்தினால் உண்டாகும் அவளின் குண மாற்றத்தில் விழி பிதுங்கி நின்றான் விக்ரமன்.


பின், அவளுக்குக்காகவே வயிற்றை மெதுவாக தடவிக் கொடுத்து கால்களுக்கிடையில் தலையணையை வைத்து, அவளை தன் மேல் சாய்த்துக்கொண்டு தூங்க வைக்கும் அணுகுமுறையையும் கற்றுக் கொண்டான்.


ஆம், அவனே சில சமயம் அவளின் வலி நிவாரணியும் ஆகிப்போனான்.


ஒரு நாள் மதியம் அலைபேசியில் மெல்லிசைப் பாடல்களை ஓடவிட்டு அதனை தன் ஹெட்போனுடன் இணைத்து தூங்கிக் கொண்டிருந்தாள் அதிதி. அம்முலுவும் அமைதியாக பாட்டை ரசித்துக் கொண்டிருந்தது.


இதனை சோபாவில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த விக்ரமன் தன் போனில் குத்துப் பாடல்களை ஓடவிட்டு அவள் ஹெட்போனுடன் இணைத்தான்.


'கருத்தவன்லாம் கலிஜாம் கிளப்பி விட்டாங்க' எனத் தொடங்கும் அப்பாட்டின் 'போடு தக்காளி' என்ற பீட்டிற்கு விக்ரமனின் தவப்புதல்வியும் சேர்ந்து ஆட ஆரம்பித்தாள்.


வயிற்றில் குழந்தையின் அசைவை உணர்ந்து விழித்தவள் வயிற்றைத் தடவிக் கொடுத்து, "என் புஜ்ஜிமாக்கு என்னாச்சு?" என்று விசாரிக்க, அப்போது தான் ஓடிக் கொண்டிருக்கும் பாடல் அவள் கருத்தில் பதிந்தது.


இது தன் கணவனின் வேலை என்பது புரிய அவனை முறைத்துப் பார்த்தாள்.


அவனோ, "இது என் ரௌடி பேபிடி. இப்படி பாட்டு கேட்டா தான் மேடம் சுறுசுறுப்பா இருப்பாங்க. இல்லைனா உன்னை மாதிரி தயிர்சாதம் ஆகிருவா என் பொண்ணு" எனவும், ஹெட்போனை கழற்றி அவன் மேல் தூக்கியெறிந்தாள் அதிதி.


தன்னை எதிர்பார்த்து பறந்து வந்ததை சரியாக கேட்ச் பிடித்தவனைக் கண்டு உதட்டை சுளித்தவள், மீண்டும் தன் உறக்கத்தைத் தொடர்ந்தாள்.


இப்படியாக ஒவ்வொரு நாளும் கூத்தும் கும்மாளமுமாக கடக்க ஒன்பதாம் மாதத் தொடக்கத்தில் அவளுக்கு வளைகாப்பு நடத்த வேண்டும் என்கிற பேச்சும் எழுந்தது.


அதன்படி சிறிய விழாவாக நடத்த ஏற்பாடு செய்தார் நாச்சியம்மை.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
906
Reaction score
1,132
Points
93
தன் மனைவிக்கு பழுத்த தக்காளி நிறத்தில் உடல் முழுவதும் தங்க நிற நூலால் இழைக்கப்பட்ட பட்டுப் புடவையை தேர்ந்தெடுத்தவன், அதே நிறத்தில் தனக்கு சட்டை ஒன்றையும் ஆன்லைனில் ஆர்டர் செய்தான்.


விழா நாளில் கீர்த்தியின் உதவியுடன் புடவை கட்டி முடித்த அதிதி நாச்சியம்மை கொடுத்த தன் மாமியாரின் நகைகளை கையிலெடுத்துப் பார்த்தாள்.


அப்பொழுது தான் அவளுக்கொரு சந்தேகம் எழுந்தது. இவ்வளவு நாள் ஏன் இவர் இதை என்னிடம் தரவில்லை? என்று.


அலங்காரம் முடிந்தவுடன் கீர்த்தி அதிதியை ஊஞ்சலை நோக்கி அழைத்துச் சென்றாள்.


தாய்மையின் பொலிவுடன் தங்க பதுமையென நடந்து வருபவளைக் கண்டு கண் இமைக்க மறந்தான் விக்ரமன்.


அவனைக் கண்ட பெரிய அண்ணன் கண்ணன், "டேய் ரொம்ப வழியுதுடா. தொடச்சுக்கோ." எனக்கேலி செய்ய,


அதனை சட்டை செய்யாதவன், "கீர்த்தி அண்ணி அந்தப் பக்கம் இருக்காங்க. நீங்க அங்க ஃபோகஸ் பண்ணுங்கண்ணா. என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க." என்று தன் வேலையிலேயே கண்ணாயிருந்தான்.


தன் மனைவி அணிந்திருந்த ஒட்டியாணம் சிசு சுமந்த வயிற்றின் மேல் பதிந்து, குழந்தையின் தலையில் கிரீடம் வைத்தாற் போல் இருக்க ஆச்சரியமாய் பார்த்தான்.


தன்னைக் காணும் மனைவிக்கு பறக்கும் முத்தம் ஒன்றையும் இடையே அனுப்பி வைத்தான்.


கீர்த்தியின் மூத்த மகள் நிஹாரிகாவை அதிதியின் மடியில் அமர வைத்து வளையலை முதலில் குழந்தைக்கு அணிவித்தனர் பெரியவர்கள்.


பின், விக்ரமனை அழைத்து அதிதியின் அருகில் அமர வைத்து அவர்களுக்கு ஆரத்திச் சுற்றினர். அடுத்து ஒவ்வொருவராக வந்து அதிதியின் கைகளில் வளையலையும் அணிவித்தனர்.


ஓரமாக நின்றிருந்த நாச்சியம்மை அதிதியின் மகிழ்ச்சியைக் கண்டு, 'உன்னால எவ்வளவு முடியுமோ சந்தோஷப் பட்டுக்கோ குட்டி. ஏன்னா பின்னாடி உன்னால சிரிக்க முடியுமோ என்னவோ தெரியல?' என வன்மமாக நினைத்துக் கொண்டார்.



*


மருத்துவர் குறித்துக் கொடுத்த பேறுகால நாளிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே அதிதிக்கு வலியெடுக்க, அனைவரும் அவளை மருத்துவமனையில் சேர்த்தனர்.


முதலில் லேசாக ஆரம்பித்த வலியானது நேரம் ஆக ஆக அவளை இம்சித்தது.


கடைசி நிமிடத்தில், உடலின் எலும்புகள் எல்லாம் நொறுங்கும் அளவிற்கு ஏற்பட்ட வலியில் கதறித் துடித்தவள், தன் இறுதி மூச்சை பிடித்துக்கொண்டு தங்கள் பெண்ணரசியை ஈன்றெடுத்தாள்.


வெளியேறிய குழந்தையின் அழுகுரல் வெளியே பதட்டத்துடன் நின்றிருந்தவர்களின் செவியைத் தொட்டு, நிம்மதி பெருமூச்சை வெளியிடச் செய்தது.


குழந்தைக்கு கதகதப்பைக் கொடுக்க தாயின் வெற்று மார்பில் படுக்க வைத்த மருத்துவர், குழந்தை இப்புவியில் நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ தொப்புள் கொடியை ரிப்பன் போல் வெட்டி வரவேற்றார்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
906
Reaction score
1,132
Points
93
அனைத்து சோதனைகளையும் முடித்த மருத்துவர் குழந்தையை செவிலித்தாயிடம் கொடுக்க அவர் அவளை சுத்தம் செய்து, வெளியே ஆர்வத்துடன் நின்றிருந்தவர்களிடம் நீட்டி, "பெண் குழந்தை பிறந்திருக்கு" என்றார்.


குழந்தையை முதலில் தான் ஏந்திய நாச்சியம்மை, "அலமு" என தழுதழுத்த குரலில் அழைக்க, அவரின் அழைப்பில் கண்களை திறந்து பின், ஒளியால் இமை மூடிக்கொண்டது அந்த பிங்க் நிற பூச்செண்டு.


தன் வாழ்வே நிறைவு பெற்ற மகிழ்ச்சியில் இருந்தான் விக்ரமன்.


நாச்சியம்மையிடமிருந்து குழந்தையை தன் கைகளில் ஏந்தியவன், வெங்காய நிறத்தில் முழங்கை அளவில் இருந்த அந்த சிறிய ரோஜாமொட்டை கண் கொட்டாமல் பார்த்தான்.


பின், கலங்கிய கண்களுடன் தன் அம்முலுவின் நெற்றியில் முத்தம் பதித்தான். தன் தந்தையின் மீசைக் குத்தியதில் வலி தாங்காமல் வீறிட்டழுதாள் அம்முலு.


அனைவரும் குழந்தையைக் கைகளில் ஏந்திக் கொஞ்சியவுடன் குழந்தையை அதிதியிடம் தூக்கிச்சென்று அவளுக்கு பால் கொடுக்குமாறு அறிவுறுத்தினார் நாச்சியம்மை.


பால் கொடுக்கத் தெரியாமல் தடுமாறியவளுக்கு ராதா தாயாயிருந்து பல அறிவுரைகளை வழங்கினார்.


அனைத்து சோதனைகளையும் முடித்து இரண்டே நாளில் வீட்டிற்கு திரும்பினர் தாயும் சேயும். வீட்டிற்கு வந்தவளை தங்கத் தட்டில் வைத்து தாங்கினான் விக்ரமன்.


ஒரு நாளின் பத்தொன்பது மணி நேரமும் தூங்கிக் கொண்டிருந்த அம்முலுவை பார்த்துக் கொள்வதற்காகவே தன் வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு அதிதியுடனேயே காவல் கிடந்தார் நாச்சியம்மை.


பால் கொடுக்க மட்டும் குழந்தையை அவளிடம் தருபவர் மற்ற நேரங்களில் எல்லாம் தன்னுடனே வைத்துக் கொண்டார்.


இப்படி இரண்டு மாத காலமும் கோழியானது குஞ்சை எப்படி அடை காக்குமோ அதுபோலவே அதிதியையும் அலமுவையும் பார்த்துக் கொண்டார்.


அது தன்னை ஆம்லெட் போடத்தான் என தெரியாத அதிதியும், இந்தக் குடும்பத்தில் தான் வாக்கப்பட்டது தன் பூர்வ ஜென்ம புண்ணியம் என எண்ணிக் கொண்டாள்.


குழந்தை பிறந்து இரண்டரை மாதம் ஓடிய நிலையில் அதிதியும் விக்ரமனும் இணைந்து குழந்தைக்கு 'ஆராதியா' என்றப் பெயரை தேர்ந்தெடுத்தனர்.


வீட்டில் இருந்தவர்களும் அதனை நல்ல பெயர் என ஆமோதிக்க, ஒருநாள் பெரிய விழாவாக எடுத்து குழந்தைக்கு பெயர் சூட்ட வேண்டுமென விரும்பினார் நாச்சியம்மை.


அதன்படி ஏற்பாடு செய்யப்பட்ட விழாவிற்கு இரண்டு வாரங்களே இருந்த நிலையில் விக்ரமனை தன்னறைக்கு அழைத்தவர், கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாக அவனுடன் ஏதோ பேசினார்.


அவருடன் பேசி முடித்து வெளியே வந்தவன் நேராக தன்னறையின் பால்கனியை வந்தடைந்து, தலையை பிடித்துக்கொண்டு தொய்ந்தமர்ந்தான்.


பின், தீர யோசித்து தன் மனதில் எடுத்த முடிவுடன் அதிதியிடமிருந்து விலக ஆரம்பித்தான்.


அதன் தொடக்கமாய் பெரும்பாலும் தன் அலுவலகத்திலேயே முடங்கிக் கொண்டான். வீட்டிற்கு வந்தாலும் குழந்தையை மட்டும் கொஞ்சிவிட்டு, சுருண்டுப் படுத்துக் கொண்டான். அதிதிக்கு ஒன்றும் விளங்கவில்லை.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
906
Reaction score
1,132
Points
93
அவனுக்கு தொழிலில் ஏதோ பிரச்சனை போல என நினைத்துக் கொண்டவள், அவனை தொந்தரவு செய்ய விரும்பாமல் விலகியே இருந்தாள். அது தான் தான் செய்த மிகப் பெரிய தவறு என்றும் பின்னால் உணர்ந்தாள்.


ஒருவேளை இப்போதே அவன் சட்டையைப் பிடித்து, தொழிலில் என்ன பிரச்சனை இருந்தால் என்ன? அதை வீட்டிற்கு வெளியே விட்டுவிட்டு வரவேண்டும். இங்கு என்னையும் அம்முலுவையும் பற்றி தான் யோசிக்கவேண்டும் என அவன் கண்ணை பார்த்து பேசியிருந்தாலோ, இல்லை தொழிலில் உங்களுக்கு என்ன தான் பிரச்சனை? என்று அவனை தன் மடியில் படுக்க வைத்து தலை கோதியிருந்தாலோ, உண்மையின் சிறு துரும்பையாவது கண்டுபிடித்திருக்கலாம்.


பின்னாளில் தனக்கு கிடைக்கவிருக்கும் பெரிய ஏமாற்றத்தையும் தடுத்திருக்கலாம். ஆனால், அதைச் செய்யாமல் ஏமாறத் தயாரானாள் அதிதி.


விக்ரமனைப் போலவே மற்றவர்களும் அவளைவிட்டு நைசாக விலக ஆரம்பித்தனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தைச் சொல்லி அவளிடமிருந்து குழந்தையையும் தூக்கிச் சென்றனர்.


குழந்தையை குளிக்க வைக்க வேண்டும் என்று தன்னுடன் எடுத்துச் செல்லும் ராதா குழந்தை பசியால் அழுதால் மட்டுமே அதிதியிடம் தந்தார். அடிக்கடி குழந்தையைக் கேட்டு சங்கடப்படுத்த விரும்பாத அதிதியும் பொறுமையாக இருந்தாள்.


சிறிது நேரம் குழந்தையை வைத்திருக்கிறேன் என்று கீர்த்தியும், கிஷோர் பாப்பா கேட்டு அழுகிறான் என ஸ்ருதியும் நாச்சியம்மையின் ஆணைக்கேற்ப அம்முலுவை மாற்றி மாற்றி எடுத்துச் சென்றனர்.


முதலில் அனைத்தையும் சாதாரணமாக எடுத்துக் கொண்ட அதிதி, பிறகு தான் தன் தனிமையை உணர ஆரம்பித்தாள்.


தன் கணவன் தற்போது தன்னிடம் இயல்பாகக் கூட பேசுவதில்லை என்பதை உணர்ந்தவளுக்கு அழுகை பிரவாகமாய் ஊற்றெடுத்தது.


அருகில் நெருங்கலாம் என்றாலும் அவன் பார்க்கும், என்னை விட்டு எட்டி நில்! என்ற அன்னிய பார்வையிலேயே நொந்து திரும்பினாள்.


இவ்வாறான நிலையில் விழாவிற்கு நான்கு நாட்கள் முன்பு குழந்தையைத் தேடி நாச்சியம்மையின் அறைக்குச் சென்றாள் அதிதி.


அங்கு அவள் பால் கொடுக்க அம்முலுவைக் கேட்க, "நான் ஏற்கனவே அவளுக்கு புட்டி பால் கொடுத்துட்டேன். நீ கொடுக்க தேவையில்ல." என்றார் நாச்சியம்மை.


பால்கட்டி நின்ற அதிதி அணைகட்டிய கண்ணீரை எவ்வளவு முயன்றும் அடக்க முடியவில்லை.


தொடரும்...
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
906
Reaction score
1,132
Points
93
இந்தக்கதை பிடிச்சிருந்தா பேஸ்புக்கிலும் இங்கேயும் கமெண்ட் செய்ய மறக்க வேண்டும் லட்டூஸ்❤️
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
906
Reaction score
1,132
Points
93
ஒரு சிறிய நினைவூட்டல்*

இந்தக்கதையின் தலைப்பு: நிஜமது நேசம் கொண்டேன்

எழுதியவர்: ஷிவானி செல்வம்🙂
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
906
Reaction score
1,132
Points
93
அத்தியாயம் 9


அதிதிக்கு எங்கிருந்து தான் அவ்வளவு தைரியமும் ஆவேசமும் வந்ததோ தெரியாது.


"நான் இருக்கும் போது ஏன் அத்த இதைப் போய் அவளுக்கு கொடுத்தீங்க? ஒரு வயசு வரை தாய்ப்பால் தான் கொடுக்கணும்னு டாக்டர் சொல்லியிருக்காங்கல்ல? அது தான் உடம்புக்கு நல்லதும் கூட. தயவு செஞ்சு இதையெல்லாம் இனிமே என் பொண்ணுக்கு கொடுக்காதீங்க." என வந்த கோபத்தில் கத்தியவள் அம்முலுவை தூக்கிக்கொண்டு தன்னறைக்குச் சென்று விட்டாள்.


‘இன்னும் நாலு நாள் தான் இருக்கு குட்டி. நீ போனதுக்கப்புறம் என் அலமு என்ன பண்ணுவா பாவம்? அதான் முன்னாடியிருந்தே அவளுக்கு இதைப் பழக்கினேன். அவளும் இதைக் குடிக்க ஆரம்பிச்சிட்டா. இனி உன் தலைவிதியை யாராலும் மாத்த முடியாது குட்டி.’ என குரூரமாக நினைத்தவர் அடுத்தக் காயை நகர்த்துவதற்கான திட்டத்தைத் தீட்டினார்.


மாலையில் விக்ரமனின் அறைக்கு வந்தவர் விக்ரமனின் கையில் இருந்த அம்முலுவைக் கண்டு, "அலமுமா" என அழைக்க, அவளும் அவரின் சத்தத்தில் தலையைத் திருப்பி திருப்பிப் பார்த்தாள்.


ஓரத்திலிருந்த அதிதியை சொடுக்கிட்டு அழைத்தவர், "ஹேய் குட்டி! உன் பிறந்த வீட்டுல இருக்கறவங்களை இந்த விழாவுக்கு கூப்பிடலாம்னு இருக்கேன்" என அறிவிப்பாகக் கூற,


ஏதோ கெட்டது நடக்கப் போகிறதோ? என கலங்கிப் போயிருந்தவளுக்கு தன் பிறந்த வீட்டினர் என்றதும் மனதிற்கு கொஞ்சம் லகுவாயிருந்தது.


இந்த விழா மூலம் இரு குடும்பமும் சேர்ந்துவிடும் என்று சந்தோசப்பட்டாள். தனக்கும் தன் கணவனுக்கும் இடையேயான இடைவெளி கூட குறைந்து விடும் என்று நம்பினாள்.


பொங்கி வந்த சந்தோஷத்துடன் அவரைப் பார்த்தவள், "உங்க விருப்பம் அத்த" என்று கலங்கிய கண்களுடன் கூற,


"இதுக்குப் போய் ஏன் குட்டி கண் கலங்குற? நாளைக்கே நாங்க போய் விழாவுக்கு அவங்களை அழைச்சிட்டு வர்றோம், சரியா?" என்று கூறி, மறுநாளே சங்கரப்பாண்டியனின் இல்லம் நோக்கிப் புறப்பட்டார்.


அன்று போல் இன்றும் தன் ஆடிக் காரில் போய், சங்கரப்பாண்டியனின் வீட்டின் முன்பு இறங்கினார்.


அறையில் தனது இதர வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்த சங்கரப்பாண்டியன், நாச்சியம்மையின் வருகையை அறிந்ததும், தட புடவென்று வெளியே கிளம்பி வந்தார்.


நாச்சியம்மையை நோக்கி தன் கைகளையும் கூப்பினார். அவரைக் கண்டு உதட்டோர சிரிப்புடன் பதிலுக்கு கை கூப்பினார் நாச்சியம்மை.


"நல்ல விஷயமாத் தான் பேச வந்திருக்கோம்" எனவும் அவரை உள்ளே அழைத்துச் சென்றார் சங்கரப்பாண்டியன்.


வீட்டினுள் நுழையாமல் நிலைக்கதவின் அருகிலேயே நின்று கொண்டான் விக்ரமன்.
 
Status
Not open for further replies.

Latest posts

New Threads

Top Bottom