Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

Status
Not open for further replies.

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
"அட! இதுக்கெல்லாம் அசருற ஆள் நானில்ல" என உணவில் கவனமானாள் அதிதி.


அலுவலகம் சென்று மாலை வீடு திரும்பியவன் கண்டது கட்டிலில் தனியே மல்லாக்கப் படுத்து கை கால்களை ஆட்டிக் கொண்டு, “ஆ ஊ” வென சத்தம் போட்டு விளையாடி கொண்டிருக்கும் தன் மகள் அம்முலுவை தான்.


அவளை நெருங்கி சிறிது நேரம் விளையாட்டு காட்டியவன், திடீரென அவள் பசி கொண்டு அழவும் சண்டையையும் மறந்து அதிதியென சத்தமாக கத்தினான்.


தன் கணவனின் அழைப்பிலும் குழந்தையின் அழுகை சத்தத்திலும் பால்கனியிலிருந்து அறைக்கு ஓடி வந்தாள் அதிதி.


வந்தவள் தன் கணவனை முறைத்துப் பார்த்துவிட்டு நேரே சோபாவில் சென்று அமர்ந்து கொண்டாள்.


குழந்தையைத் தூக்குவாள் என எதிர்பார்த்திருந்தவனுக்கு அவள் சோபாவில் சென்று அமரவும் கோபம் எல்லையைக் கடந்தது.


குழந்தையைக் கைகளில் ஏந்தி நெஞ்சோடு அணைத்துக்கொண்டே, சோபாவில் அவளுக்கருகில் போய் அமர்ந்தான்.


தன்னருகில் அமர்ந்தவனிடம், "இதுக்கெல்லாம் ஆள் ரெடி பண்ணியாச்சா?" என்றாள் அதிதி.


குழந்தையை சமாதானப்படுத்திக் கொண்டே, "எதுக்கு?" என்று கேட்டான் விக்ரமன்.


"அதான் குழந்தைக்கு பால் கொடுக்கவும், பார்த்துக்கிறதுக்கும் ஆள் ஏற்பாடு பண்ணியாச்சா?" என்றாள்.


பதில் சொல்லவில்லை விக்ரமன்.


"இவ்வளவு பிளான் பண்ணியிருக்கீங்க. ஆனா மெயின் மேட்டரை இன்னும் ஏற்பாடு பண்ணலையா? ஒரு அஞ்சு நிமிஷம் என் பொண்ணோட அழுகையை உங்களால நிப்பாட்ட முடியுமா? இந்த லட்சணத்துல மொத்தக் குடும்பமும் என் தாத்தாவை பழி வாங்கப் போகுதாம்?"


குழந்தையின் அழுகை அதிகமானதும் அதன் பசியறிந்து பால் கொடுக்க தொடங்கியவள், "உங்களுக்கும் எங்க குடும்பத்துக்கும் என்ன பகை? எதுக்காக இப்படி எல்லாம் பண்றீங்க? எங்கப்பா யாரையோ கொலை பண்ண மூலக்காரணமா இருந்ததால ஜெயில்ல இருக்காருனு மட்டும் தான் எனக்கு தெரியும். ஆனா யாரை எதுக்கு கொன்னாருனு எனக்கு சத்தியமா தெரியாது. என்ன நடந்தது சொல்லுங்க?" என நிதானமாக கேட்க, அவளிடம் எதையுமே கூற விரும்பாதவன் வாயை இறுக மூடிக் கொண்டான்.


"அப்போ எதையுமே சொல்ல மாட்டீங்க? அப்படி தானே?" என அவள் கோபம் கொள்ள, பசியாறிய குழந்தை தன் பெற்றோர் இருவருக்குமிடையே நடக்கும் வாக்குவாதத்தை அறியாமல் தன் தாயின் மார்பில் வாய் வைப்பதும் எடுப்பதுமாக விளையாடிக் கொண்டிருந்தது.


இவ்வளவு கேட்டும் பதில் கூறாமல் அமைதியாக இருப்பவனை கண்டு பொறுமை இழந்தவள் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பினாள்.


பின், தலையாட்டிக் கொண்டே குழந்தை பால் அருந்தியதை உணர்ந்து ரவிக்கையின் கொக்கிகளை பொருத்த, தன் கைப்பொருள் பறிக்கப்பட்ட ஏமாற்றத்தில் கைகால்களை ஆட்டி சிணுங்கியது அம்முலு.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
அவன் மீது கொண்ட கோபத்தையெல்லாம் திரட்டி குழந்தையின் தொடையில் சுளீரென ஒரு அடியைப் போட்டாள் அதிதி. வலி தாங்காமல் வீறீட்டு அழுதாள் அம்முலு.


இவ்வளவு நேரம் அமைதியாக அனைத்தையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் குழந்தையை அடித்ததும், "ராட்சசியாடி நீ? ஏன்டி குழந்தையை அடிக்கிற? இனிமே குழந்தையை அடிக்க கை நீட்டிப்பாரு" என அவள் மடியில் இருந்த குழந்தையை தன் கையில் ஏந்தினான்.


"ஏன்டா அம்முலு? வேண்டாண்டா. வேண்டாண்டா. அம்மாவை நம்ம திருப்பி அடிச்சிருவோம்டா" என குழந்தையை சமாதானப்படுத்தி, அவள் அடித்த இடத்தில் மெதுவாக தடவிக் கொண்டிருந்தான்.


"நேத்து சாயங்காலம் நீங்க கூடத்தான் என்னை அறைஞ்சீங்க. எனக்கும் இப்படி தான் வலிச்சது. உங்கப் பொண்ணை அடிச்சா மட்டும் உங்களுக்கு எவ்வளவு கோபம் வருது? எங்க வீட்ல இருக்கறவங்களுக்கும் நேத்து அப்படித்தானே இருந்திருக்கும்? ஆனா உங்க மேல வச்ச மரியாதைல உங்களை எதிர்த்து ஒரு வார்த்தை கேட்டாங்களா? அவங்க மனசு எவ்வளவு துடிதுடிச்சிருக்கும்? அம்முலுக்கு வந்தா ரத்தம். அம்முக்குட்டிக்கு வந்தா தக்காளி சட்னியா?"


அவளின் பேச்சைக் கண்டு கொள்ளாதவன் குழந்தையை சமாதானப்படுத்துவதிலேயே குறியாயிருந்தான்.


தன் தந்தையின் முயற்சியில் கொஞ்சம் சமாதானமடைந்த அம்முலு சிணுங்கிக்கொண்டே அவன் மார்பில் தன் வாயையும் கைகளையும் கொண்டு தடவி எதையோ தேடியது.


பின், தான் தேடியது கிடைக்காத ஏமாற்றத்தில் மறுபடியும் அழத்தொடங்கியது.


இவ்வளவு நேரமும் அவன் முயற்சியை வெறுப்புடன் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு குழந்தையின் செயலில் சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. அதனை அவனிடமிருந்து மறைக்கும் விதமாக முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டாள்.


குழந்தையின் தேடலை உணர்ந்தவன் அவளிடம் குழந்தையை நீட்டி, "பால் கொடுடி" என்றான்.


அவள் சிலுப்பிக் கொண்டாள்.


"இப்போ தானே கொடுத்தேன். அவளுக்கு பசியெல்லாம் இல்ல" என்றாள்.


அவன் முகம் தூக்கினான்.


"ப்ச் பரவாயில்லை. சும்மானாலும் கொடு"


"நான் இல்லைனா இந்நேரம் என்ன பண்ணிருப்பீங்க? அதைப் பண்ணுங்க நான் தான் ராட்சசியாச்சே. என்கிட்ட எதுக்கு உங்கப் பொண்ணை தூக்கிட்டு வர்றீங்க? உங்கப் பொண்ணு கேட்கறது உங்கக்கிட்ட இருந்தா நீங்களே கொடுங்க" என வீம்பு பண்ணியவள் கட்டிலில் சென்று சொகுசாய் படுத்துக் கொண்டாள்.


தொடரும்...
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
நாவல் பற்றிய கருத்துகளை‌ இங்கும், பேஸ்புக்கிலும் பதிவிடலாம் குண்டுமல்லீஸ்🙂
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
அத்தியாயம் 12



விக்ரமனின் பொறுமையை ரொம்பவே சோதித்தாள் அதிதி.


"ஏய் அதிதி என்னை இப்போ என்ன தான்டி பண்ண சொல்லுற? நீ கேட்கற எதுக்கும் என்னால பதில் சொல்ல முடியாது. ஆமா, நான் ஜடம் தான். சந்தேகப் பேய் தான். அதுக்கு இப்ப என்னங்கற? என் குழந்தைக்காகத் தான்டி உன்னை இங்க தங்க அனுமதிச்சிருக்கேன். ஒரு ஆறு மாசம் கழிச்சி நீ என்னாகறனு மட்டும் பாருடி. உன்னை குண்டு கட்டா தூக்கிட்டு போய் கட்டில்ல விடுறவனுக்கு வீட்டுக்கு வெளில தூக்கிட்டு போய் விட்டு கதவை சாத்துறதா கஷ்டம்? பெரிய இவளாட்டம் பேசுற?" என்றதும் அவளுக்கு கோபம் தலைக்கேறியது.


"ஆமா நான் அப்படி தான் பேசுவேன். எங்க உங்கப் பொண்ணு அழுகையை நிப்பாட்டி காட்டுங்க பார்க்கலாம். பெருசா பேச வந்துட்டாரு" என அவனுக்கு முதுகு காட்டிப் படுத்துக் கொண்டாள்.


"ஏன் என் பொண்ணு அழுகையை என்னால நிப்பாட்ட முடியாதாக்கும்? ரொம்பத் தான் பண்ற." என்று குழந்தையை தொட்டிலில் கிடத்தி ஆட்டிக்கொண்டே மெதுவாக உயிரை உருக்கும் குரலில் பாடத் தொடங்கினான் விக்ரமன்.


'ஒரு தெய்வம் தந்த பூவே!
கண்ணில் தேடல் என்ன தாயே?
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!
வானம் முடியும் இடம் நீதானே!
காற்றை போல நீ வந்தாயே!
மார்பில் ஊறும் உயிரே!'


என்ற அவனின் தேன் சிந்தும் குரலில் அம்முலு தூங்கினாளோ என்னவோ? அம்முக்குட்டி குறட்டை விடும் அளவிற்கு தூங்கிவிட்டாள்.


அரைமணி நேரம் தொட்டிலை ஆட்டியவன் குழந்தையின் அழுகை நின்று, அல்லி விழிகளை மூடியதும் அவள் தூங்கியதாக நினைத்து மெதுவாக தொட்டிலை ஆட்டுவதை நிறுத்திவிட்டு நகர, மறுபடியும் தன் அழுகையைத் தொடர்ந்தாள் அவனின் செல்ல அம்முலு.


வேறு வழியின்றி தூங்கியவளின் கைதொட்டு எழுப்ப கண்களை மூடிக்கொண்டே, "என்ன தூங்க வைக்க முடியலையா?" என்றாள் அதிதி.


"ஆமாடி" என சரணடைந்தான் விக்ரமன்.


"இதுக்குத் தான் பொண்டாட்டிக்கிட்ட ஓவரா வசனம் பேசக்கூடாதுனு சொல்றது. பெரிய சின்னத்தம்பி பிரபு கணக்கா பாட்டெல்லாம் பாடுனீங்க? பாப்பாவோட திங்ஸ் இருக்கற டப்பால பேசிஃபையர் இருக்கும். அதையெடுத்து அவ வாயில வச்சி ஒரு பத்து நிமிஷம் தொட்டிலை ஆட்டுங்க. அவ தன்னால தூங்கிடுவா. என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க" என தூக்கக் கலக்கத்தில் சொன்னாள் அதிதி.


அவள் கூறியது போலயே விக்ரமனும் செய்ய குழந்தையும் தான் தேடியது கிடைத்துவிட்டது என்ற நம்பிக்கையில் கண் அயர்ந்தது. காலையில் விரைவில் அலுவலகம் செல்ல வேண்டும் என நினைத்தவனும் படுத்தவுடன் ஆழ்ந்த நித்திரையைத் தழுவினான்.


மறுநாள் காலை பூஜையறையில் சாமி கும்பிட்டு திரும்பியவளை ராதா மற்றும் கீர்த்தி எதிர்கொண்டனர்.


"என்னை மன்னிச்சிடுடா" என்று கைப்பிடித்த ராதாவின் கைகளை உதறியவள்,


"என்னை உங்க பொண்ணு மாதிரினு சொன்னீங்க. லண்டன்ல இருக்கற உங்க சொந்தப் பொண்ணு மாயாக்கிட்டயும் இப்படித்தான் நடிப்பீங்களா? நீங்கல்லாம் ஒரு அம்மாவா?" என வார்த்தையை விட,

"அதிதி என்ன வார்த்தை பேசுற நீ? அவங்க வயசுக்காவது மரியாதை கொடுத்துப் பேசு. நாங்க செஞ்சது தப்பு தான். அதுக்கு உன் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுவியா?" என்று இடை மறித்தாள் கீர்த்தி.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
"மரியாதையா?" என்று முகத்தை சுளித்தவள்,


"ஸ்ருதி அவங்களாவது ஆமாடி உன்னை எனக்குப் பிடிக்காதுனு மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லி விலகி போயிட்டாங்க. ஆனா நீங்கல்லாம் என்கிட்ட நடிச்சீங்களே ஒரு நடிப்பு. அடடடடா! என்ன ஒரு நடிப்பு! நீங்கல்லாம் இங்க இருக்க வேண்டிய ஆட்களே இல்ல. என் மூஞ்சில கரியைப் பூசி என்னை வெளிய அனுப்பத்தான் அம்மா அக்கானு உறவு கொண்டாடிருக்கீங்க? எந்த நம்பிக்கையில மறுபடியும் நீங்க பேசுறதை நான் கேட்பேனு என்கிட்ட இப்ப பேச வந்துருக்கீங்க? உங்க மூஞ்சில முழிக்கக் கூட எனக்கு விருப்பமில்ல. நகருங்க" என்றவள் சமையலறைக்கு பால் காய்ச்ச சென்று விட்டாள்.


இரண்டு நாட்களாக குழந்தையை வெளியே கொண்டு வராமல் அதிதி அறைக்குள்ளேயே வைத்திருந்ததால் குழந்தையைப் பார்க்க முடியாமல் ஏங்கிய நாச்சியம்மை, நேரடியாகவே அவள் அறைக்குள் நுழைந்து விட்டார்.


குழந்தையைத் தூக்க வந்தவரிடம், குழந்தையை தொடக்கூடாது எனக்கூறி தன் கைகளில் தூக்கி வைத்துக்கொண்டாள் அதிதி.


ஜிம்மிலிருந்து வியர்வை சொட்ட வெளியே வந்தவனிடம், "விக்ரமா பாருப்பா, அலமுவை நான் தொடக் கூடாதாம். இவ அலமுவை என்கிட்ட தர மாட்டிக்கிறா. வாங்கிக் கொடுப்பா" என்று நாச்சியம்மை அலமு மேல் வைத்த கண் மண் தெரியாத பாசத்தில் கெஞ்ச,


"ஏய்! குழந்தையை கொஞ்ச நேரம் அவங்கக்கிட்ட கொடுடி" என்று அதட்டினான் விக்ரமன்.


"ஹான்! நீங்க சொன்னதையெல்லாம் குட்டி கொசு மாதிரி ஓடியாடி செஞ்ச அதிதி செத்துப் போயி ரெண்டு நாளாகுது சார். யாருக்கிட்ட நீங்க இப்ப அதிகாரம் பண்றீங்க? நீங்க சொல்றதையெல்லாம் என்னால கேட்க முடியாது. என்ன நான் முடியாதுனு சொன்னா என்னை அடிப்பீங்களா? உங்கக் கை வலிக்கற வரை எவ்வளவு முடியுமோ அடிச்சுக்கோங்க. ஆனா இந்த மாதிரி ஒருத்தங்கக்கிட்ட என் பொண்ணைத் தர மாட்டேன். பணம் வாங்கினவன் திருப்பித் தரலைனா ஜாமீன் கையெழுத்து போட்டவனை தூக்குற மாதிரி, யாரோ செஞ்ச தப்புக்கு யாருக்கோ தண்டனை கொடுப்பாங்க இந்த புண்ணியவதி. என் வீட்ல இருக்கறவங்க செஞ்ச தப்புக்கு என்னைய பழி வாங்குனவங்க, என் பொண்ணு என் மேல பாசமா இருக்கறதை பார்த்து என்னை கஷ்டப்பட வைக்க அவளை ஏதாவது செஞ்சாலும் ஆச்சரியப் படுறதுக்கில்ல" என அவள் கூறி முடிக்கும் முன்,


"போதும்மா பேசறதை நிறுத்து. இதுக்கு மேல நீ பேசுறதை கேட்கற சக்தி எனக்கில்ல." எனத் தன் கைகளை உயர்த்தி தடுத்த நாச்சியம்மை சோர்ந்த நடையுடன் வெளியே சென்றார்.


"ஓஹோ! இவ்வளவு நாள் ஏய் குட்டி, இந்தாக் குட்டி, இப்போ மட்டும் என்ன அம்மாவா? இந்த நடிப்புக்கெல்லாம் நான் மயங்கின காலம் மலையேறிப்போச்சு. வேற ஏதாவது புதுசா ட்ரை பண்ணுங்க மாமியாரே"


காற்றில் மிதந்து வந்த அதிதியின் வார்த்தைகள் நாச்சியம்மையை வேதனைக் குள்ளாக்கியது.


"ஏய் வாய மூடுடி! விஷம், உன் வாயில இருந்து வர வார்த்தை அம்புட்டும் ஆலகால விஷம்டி" என்று கத்தியவன் கையை ஓங்க, அடியென அசராமல் கன்னத்தை காட்டிக்கொண்டு நின்றாள் அதிதி.


வெறுத்து ஓங்கிய கையை கீழே போட்டவன், “ச்சே!” என்று சிகரெட் புகைக்க பால்கனி சென்று விட்டான்.


அவனை கேலிப் பார்வைப் பார்த்தவள் அன்று முழுவதும் குழந்தையை தன் கைகளை விட்டு கீழே இறக்கவில்லை.
 
Status
Not open for further replies.

Latest posts

New Threads

Top Bottom