Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


பண்ணையார் தோட்டம்

Karthikeyan Jayaraman

Saha Writer
Messages
111
Reaction score
52
Points
28
பண்ணையாரின் மகன்களின் பேச்சைக் கேட்டதும் ரேகாவுக்கு இடி விழுந்தது போல் இருந்தது அவளால் நிற்க முடியவில்லை பயத்தில் கை கால் உதறல் எடுத்தது ரேகாவுக்கு..

பார்ப்பதற்கு நல்லவர்கள் போல இருக்கிறார்களே ......
பண்ணையாருக்கு அடுத்தபடியாக இந்த ஊரு . இந்த மூன்று பேரை தானே தெய்வமாக பார்க்கிறார்கள் ஆனால் இவர்கள் இப்படிப்பட்ட அயோக்கியனாக இருக்கிறார்களே இவ்வளவு காலம்மாக இந்த ஊரையே ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள் .... எப்படியோ இன்னும் கொஞ்சநேரம் ரூமுக்குள்ள இருக்க வேண்டியதுதான் . அதுக்கப்புறம் பண்ணையார் மகன்கள் தோட்டத்தைச் சுற்றிப் பார்க்க கிளம்பிவிடுவார்கள் அந்த சமயத்தில் நாம் உடனே ஊருக்குள்ளே போய்விடலாம் . நம் கணவன் வந்ததும் நடந்ததை கூறி இவர்களுக்கு சரியான தண்டனை வாங்கித் தரவேண்டும் பண்ணையாரிடம் .... என்று மனதில் நினைத்துக் கொண்டு ரேகா பயத்தில் நடுங்கினாள்.


அண்ணா .....எப்படியாவது இந்த முறை தப்பிக்கவேணும் இல்லன்னா . அண்ணன் திருமணம் நின்று போய்விடும் அண்ணனின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி விடும் . அதனால இந்த முறை நம்ம எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்று தீனா பரந்தாமனிடம் கூறினான்..

எப்படித் தப்பிக்க முடியும் தம்பி இன்னும் கொஞ்ச நேரத்துல சங்கர் காணாமல் போனவர்களை கண்டுபிடித்துவிட்டேன் என்று கூட வந்து சொல்லுவான். ஏனென்றால் இன்னைக்கு அவன் அதிகாலையிலே கிளம்பிவிட்டான் காணாமல் போனவர்களை தேடுவதற்கு அந்த அளவுக்கு சங்கருக்கு கண்டு பிடித்து விட வேண்டும் என்று துடியாய் துடிக்கிறான் ... நம்ம எப்படி தப்பிக்க முடியும் என்று பரந்தாமன் எரிச்சலாய் சொன்னான்.


நாளையிலிருந்து அப்பா கல்யாண வேலையை பார்க்கச் சொல்லி இருக்காரு . நீங்க என்ன முடிவு செஞ்சிருக்கீங்க கல்யாணத்தைப் பத்தி அண்ணா ...என்று சந்திரன் கேட்டான்.


அப்பாவுக்கு உண்மை தெரியாது அதனால் அவர் திருமணத்தை நடத்தி விட வேண்டுமென்று துடியாய் துடிக்கிறார் .. ஆனால் நமக்குத்தான் எல்லாம் தெரியுமே ஒருவேளை திருமணம் நடப்பதற்கு ஒரு நாள் இரண்டு நாள் முன்பாகவே சங்கர் காணாமல்போனவர்களை கண்டுபிடித்து அப்பாவிடம் நிறுத்தி விட்டால் என்ன செய்வது தம்பி அதனால் முடிந்தவரை திருமண வேலையை தள்ளிக்கொண்டே போகலாம் .. தப்பிப்பதற்கு ஏதாவது ஒரு வழி கிடைக்கிறதா என்று பார்க்கலாம் என்று பரந்தாமன் சொன்னான்.


வேறு வழி இல்லையா அண்ணா..

ஒரு வழி இருக்கு அது நம்மால் செய்ய முடியாது தம்பி என்றான் பரந்தாமன்.

அது என்ன வழியை சொல்லுங்கள் அண்ணா.

சங்கரை கொன்றுவிட்டால் நமக்கு எல்லா பிரச்சனையும் . ஒரு அளவுக்கு சரிசெய்துவிடலாம் அவன் தான் பிரச்சனையை உண்டாக்குகிறான். அவன் இல்லையென்றால் நமக்கு பெரிய எதிரி ஒன்றும் இல்லை . இவ்வளவு காலம் அப்பாவை எப்படி ஏமாற்றி இருந்தோமோ அதே போலவே ஏமாற்றிக்கொண்டு இருக்கலாம் . என்றான் பரந்தாமன்.


சந்திரனும் .தீனாவும் .மௌனமாக நின்றார்கள் . ஏனென்றால் .சங்கர் நம்மால் எப்படி கொலை செய்ய முடியும் என்று நினைத்து.


என்ன இரண்டு பேரும் வாய மூடிகிட்டிங்க . தப்பிக்கிறதுக்கு ஏதாவது வழி இருந்தால் சொல்லு அண்ணனே என்று கேட்டீர்களே

இது நம்மாள் முடியாதுன்னு எனக்கும் தெரியும் தம்பி... அதனாலதான் நானும் கம்முனு இருந்தேன். காணாமல்போனவர்களை நாம் வாரத்தில் இரண்டு முறை தேடுவதற்காக சென்றோம். ஆனால் நம்ம அவங்கள தேடவே இல்லை. எங்கேயாவது ஒரு இடத்தில் சும்மா நின்னுகிட்டு வந்திடுவோம் . வந்து அப்பாவிடம் கிடைக்கவில்லை என்று சொல்லி ஏமாற்றுவோம் . ஆனால் அதுவே இப்போது நமக்கு எதிராக திரும்பி விட்டது. உண்மையாகவே காணாமல்போனவர்களை எங்கு இருக்கிறார்கள் என்று நாம் கண்டுபிடித்து வைத்துருந்தோம் ஆனால் . இன்னைக்கு அவர்களை பார்த்து மிரட்டி உண்மையை சொல்லக்கூடாது என்று மிரட்டி இருக்கலாம் . இல்லை என்றால் இன்னும் வெகு தூரத்தில் துரத்திவிட்டு இருக்கலாம் . அன்று அவர்களை கண்டுபிடிக்காமல் அப்பாவை ஏமாற்றிநோம் .. இன்று நாமே ஏமாந்து விட்டோம் என்று பரந்தாமன் வருத்தத்தோடு தம்பிகளிடம் சொன்னான்.


ரேகாவுக்கு பயம் மேலும் அதிகரித்து கொண்டு இருந்தது ....
நமது வீட்டுக்காரனை கொன்றுவிட்டால் எல்லா பிரச்சனையும் முடிந்துவிடும் என்று பரந்தாமன் சொன்னது ரேகாவுக்கு மேலும் பயத்தால் நடுங்கினாள் இப்படிப்பட்ட கொடிய மிருகங்களை எப்படி எதிர்த்து இனி வாழப் போறோமோ என்று நினைத்து நடுங்கினாள்...

பரந்தாமன் .சந்திரன் .தீனா .மூவரும் மாறி மாறி செய்த தவறை எப்படி மறைக்கலாம்.. எப்படி தப்பிக்கலாம் என்று திட்டம் போட்டுக் கொண்டே இருந்தார்கள் ஆனால் எல்லா விஷயத்தையும் பம்புசெட் உள்ளே இருக்கும் ரேகா கவனித்து கொண்டு இருந்தாள்.


சங்கர் சந்தோசமாக வீடு திரும்பிக் கொண்டிருந்தான் . அப்பொழுது அவன் மனம் சந்தோசததின் உச்சத்திற்கே சென்று விட்டது.
தேன் வியாபாரி அந்தப் பெரியவர் உன் தங்கச்சி பெயர் என்ன என்று கேட்டதும். கனகா என்று சொன்னதும் . உடனே அந்த பெரியவர் புன்னகையோடு சிரித்துக் கொண்டே உன் தங்கச்சி கணவன் ஊமைதானே என்று சொன்னதை நினைத்துப் பார்த்து சங்கர் மகிழ்ச்சியாக வந்துகொண்டிருந்தான்.

காணாமல் போனவர்களை கண்டுபிடித்து விட்டோம் என்ற செய்தியை யாரிடம் சொல்லலாம் என்று சங்கர் யோசித்துக் கொண்டே வந்தான் .... முதலில் பண்ணையார் வீட்டுக்கு சென்று நடந்ததை சொல்லலாமா . இல்லை நம் மனைவியிடம் சொல்லலாமா என்று யோசித்தான். பிறகு ஒரு முடிவுக்கு வந்தான். எதுவாக இருந்தாலும் முதலில் நம் மனைவியிடம் சொல்லலாம் பிறகு பண்ணையாரிடம் சொல்லலாம் என்று முடிவு செய்தான் சங்கர்.


பரந்தாமனுக்கு நடந்ததையெல்லாம் நினைத்துப்பார்த்து மேலும் அவன் மனம் குமுறியது...

சரி சரி இன்னும் கொஞ்ச நேரத்துல சங்கர் வந்து விடுவான் ..அதனால தோட்டத்தை சுத்தி பார்க்க போலாமா . இல்ல வீட்டுக்கு போலாமா என்றான் பரந்தாமன்.

வீட்டுக்கு போலாம் அண்ணே .... மனசு சரியில்லை என்றால் சந்திரன்..

பம்பு செட்டுக்கு உள்ளே இருக்கும் ரேகாவுக்கு சற்று பயம் குறைய ஆரம்பித்தது . சந்திரன் வீட்டுக்கு போலாம் என்று சொல்லைக் கேட்டதும்.

அப்பா .....பண்ணையார் பசங்க வீட்டுக்கு போக போறாங்க .
நம்ம வீட்டுக்காரர் வந்ததும் நடந்ததை எல்லாம் சொல்லி விட வேண்டியதுதான் .
இனிமே பம்புசெட் பக்கமே வரக்கூடாது இனி பண்ணையார் பசங்கள நம்பக்கூடாது என்று முடிவு செய்தாள் ரேகா..

மூவரும் வீட்டுக்கு கிளம்பினார்கள்..
அப்பொழுது தீணவின் கண்ணுக்கு தண்ணீர் தொட்டி மேல் . சோப்பும் மஞ்சளும் இருப்பதை கவனித்தான் தீனா.

நீங்க போய்கிட்டே இருங்க அண்ண இதோ வருகிறேன் ..என்று தீனா அண்ணன்களை போக சொல்லிவிட்டு . தொட்டி மேலிருக்கும் சோப்பு மஞ்சளின் அருகில் சென்று கவனித்தான்.

ரேகா குளித்திருக்க .....சோப்பு மஞ்சளை தொட்டி மேலே விட்டுவிட்டு ஊருக்குள்ளே சென்று விட்டாள. என்ற சந்தேகத்தோடு பார்க்கும்போது தொட்டியின் கீழே ரேகா கழட்டிவிட்ட பாவாடையும் இருந்ததை பார்த்து சற்று அதிர்ச்சியான தீனா.

பாவாடையும் அப்படியே விட்டுவிட்டு சென்று விட்டாளா . இல்லை இங்கு எங்கேயாவது இருக்கிறாளா என்று பார்த்துக்கொண்டே பம்புசெட்டில் கதவை பார்த்தான். கதவு சாத்தி இருந்ததே தவிர பூட்டு போடவில்லை .. தீணாவுக்கு மேலும் அதிர்ச்சியாக இருந்தது.

ஒருவேளை உள்ளே இருக்கிறால என்ற சந்தேகத்தோடு மெதுவாக சென்று . தனது ஆள்காட்டி விரலால் ஒரு விரலை மட்டும் கதவின் மேல் வைத்து லேசாக அழுத்திநன் ..கதவு திறக்கவில்லை அதிர்ந்து போனான் தீனா.

ரேகா உள்ளே இருக்கிறாள் ...
இது தெரியாமல் மூன்று பேரும் ரகசியமாக பேசி இருந்தோமே இவள் எல்லாவற்றையும் கேட்டு இருப்பாளே என்ன செய்வது என்று தீனாவுக்கு பயம மேலும் அதிகமானது.


பம்புசெட் உள்ளே ரேகா மெதுவாக எழுந்து புடவையை கட்டிகொண்டாள் .
பண்ணையார் மகன்கள் இந்நேரம் பாதி தூரம் சென்று இருப்பார்கள் இன்னும் கொஞ்ச நேரம் உள்ளே இருக்கலாம் .. மோட்டார் பைக் ஸ்டார்ட் பண்ணுவாங்க அந்த சத்தம் கேட்டதும் கொஞ்ச நேரம் கழித்து வெளியே போகலாம் என்று நினைத்து ரேகா அமைதியாக உள்ளே இருந்தாள்.


தீனா மெதுவாக நடந்து சிறிது தூரம் வந்து கைத்தட்டி அண்ணன்களை கூப்பிட்டான்..

யாரு கை தட்டுவது என்று பரந்தாமனும் சந்திரனும் திரும்பிப் பார்த்தார்கள் ..தீனா வாங்கல் என்று கையை அசைத்தான் ஜாடையில்.

தீணாவின் செய்கையை பார்த்ததும் பரந்தாமனுக்கு அதிர்ச்சியாக இருந்தது .. எதற்கு தம்பி நம்மை கைத்தட்டி ஜாடையில் வா என்று சொல்கிறானே என்னவாக இருக்கும் என்று பதட்டத்தோடு பரந்தாமனும் சந்திரனும் தீணா விடம் சென்றார்கள்.

அண்ணே வகையாய் மாட்டிகிட்டோம் ..நம்ம விஷயம் யாருக்கு தெரியக்குடாதுன்னு நெனச்சோமோ அவங்களுக்கே தெரிஞ்சு போச்சு அண்ணா என்று தீனா மெதுவாக பதட்டத்தோடு சொன்னான்.

ரகசியம் தெரிஞ்சி போச்சு என்றதுமே. பரந்தாமனுக்கு பயம் வந்துவிட்டது ஆனால் ஒன்றுமே புரியவில்லை.

என்னடா சொல்ற ....யாருக்குத் தெரிஞ்சுபோச்சு என்று பரந்தாமனும் மெதுவாக தீணாவிடம் கேட்டான் பயந்து கொண்டு.

அண்ணே ....பம்புசெட்டு கதவு சாத்தி இருந்ததால ரேகா ஊருக்குள்ள போய் விட்டாள் என்று நினைத்து நம்ம எல்லா கதையும் பேசினோம் ஆனால் ரேகா பம்பு செட்டுக்கு உள்ளேதான் இருக்கிறாள் அண்ணா . என்றான் தீனா பயத்தோடு.

வரப்பில் நின்று கொண்டிருந்த பரந்தாமன் கால் நடுக்கத்தில் கீழே விழுந்தான்.

சந்திரனுக்கு படபடப்பில் மூச்சு வேகமாக வாங்கியது ..
ஐயையோ என்ன செய்வது என்று தெரியவில்லையே .இப்படி வசமாக மாட்டிக் கொண்டோமே என்று நினைத்து கீழே விழுந்த அண்ணனை தூக்கினான் சந்திரன்.


பிறகு மூவரும் மெதுவாக சென்று பம்பு செட்டின் முன்னாடி நின்றார்கள்..

என்ன செய்யலாம் என்று தவித்தார்கள் ...அப்பொழுது பரந்தாமனாள் நிற்கமுடியவில்லை கிணற்று தடுப்பு சுவரின் பக்கத்தில் சென்று கீழே உட்கார்ந்து கொண்டான் பரந்தாமன்.

ரேகாவுக்கு சந்தேகம் ....
என்ன இவ்வளவு நேரம் ஆச்சு மோட்டார் பைக் சத்தம் கேட்கவே இல்லையே என்று நினைத்து மீண்டும் பயந்தால் . இப்போது வெளியே செல்லலாமா வேண்டாமா என்று குழம்பினாள் ரேகா..

பிறகு பரந்தாமன் ஒரு முடிவுக்கு வந்தான் ...ரகசியத்தை தெரிந்து கொண்டாள் ரேகா இனி அவள் ஊருக்குள்ளே சென்று எல்லா விஷயத்தையும் சொல்லி விடுவாள் பிறகு நம்முடைய கதை முடிந்து விடும் . அதனால் அவளை மிரட்டி பார்க்கலாம் என்று முடிவு செய்தான் பரந்தாமன்.

பரந்தாமன் மனதை திடப்படுத்திக் கொண்டு . இனி பயந்தால் நம் கதை முடிந்துவிடும் . இந்த நேரத்தில்தான் தைரியமாக செயல்பட வேண்டும் என்று அவன் உள் மனச சொன்னது.

உடனே பரந்தாமன் எழுந்து வந்து கதவின் பக்கத்தில் நின்று கொண்டான்.

ரேகாவால் இன்னும் பொறுமையாக இருக்க முடியவில்லை . பண்ணையார் மகன்கள் சென்றுவிட்டு இருப்பார்களோ . பைக் சத்தம் நம் காதில் விழவில்லையே என்ற சந்தேகத்தோடு வெளியே செல்லலாம் என்று மெதுவாக நடந்து வந்து தபாலை திறப்பதற்கு கையை நீட்டினாள் . உடனே கதவை தட்டும் சத்தம் கேட்டு அதிர்ந்து போனாள் ரேகா.


ஏய் பெண்ணே கதவைத்திற நீ உள்ளே இருப்பது எனக்கு தெரியும் என்று கம்பீரமாக ஆவேசமாக பரந்தாமன் . கத்திக்கொண்டே கதவைத்தட்டினான்.


ரேகாவின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது அழுகை அவளால் நிறுத்த முடியவில்லை. இரு கைகளால் வாயை மூடிக் கொண்டால் . என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளே தவித்தாள் ரேகா.

அண்ணனின் துணிச்சலை பார்த்து சந்திரன் தினாவும். அவர்களும் தைரியமாக மனதை மாற்றிக் கொண்டு ஆவேசமாக குரல் கொடுத்தார்கள் ... ரேகா கதவைத் திறந்துவிடு இல்லையென்றால் கதவை உடைத்து விடுவோம் என்று ஆவேசமாக குரல் கொடுத்தார்கள்.

ரேகாவால் அழுகையை நிறுத்த முடியாமல். வாய்விட்டு கதறி அழுதாள் சத்தமாக.


ஐயோ என்னை விட்டு விடுங்கள் நான் கதவை திறக்க மாட்டேன்
என் கணவன் வரும்வரை நான் கதவை திறக்க மாட்டேன் என்னை விட்டுவிடுங்கள் என்று கதறி அழுதான்.

கதவை உடைங்க டா என்று ஆவேசமாக சொன்னான் பரந்தாமன்.

சந்திரன் தினாவும் இருவரும் கைகோர்த்துக்கொண்டு
ஒரே நேரத்தில் தனது கால்களால் எட்டி உதைத்தார்கள் இருவரும் கதவின் தாழ்ப்பாள் உடைந்து கதவு திறந்து கொண்டது.


உடனே சந்திரன் ரேகாவின் இடது கையை பிடித்துக்கொண்டான்
தீனா வலது கையை பிடித்துக்கொண்டான்.

என்ன துணிச்சல் இருந்தால் நாங்கள் பேசியதை நீ ஓட்டு கேட்கிறியா உனக்கு எவ்வளவு தைரியம் இரக்கும் என்று பரந்தாமன் கேட்டான்.


நீயெல்லாம் ..ம்..ம்...ம் ஒரு மனுஷனா. இரண்டு குடும்பத்தை கெடுத்துவிட்டு ....ந..ந..நல்லவன் போல வேஷம் போடுகிறிர்களா நீங்கள் மூன்று பேரும்
என் வீட்டுக்காரர் வரட்டும் உங்களுக்கு சரியான தண்டனை கொடுப்பார் ...என்று தேம்பித் தேம்பி அழுதுகொண்டே சொன்னாள் ரேகா.

அப்படின்னா எல்லாத்தையும் உன் வீட்டுக்காரன் கிட்ட சொல்ல போறியா.

உங்களுக்கு பயந்துகிட்டு சொல்லாம இருப்பேன் என்று நினைக்கிறியா.. அது மட்டும் இல்ல நீ பம்பு செட்டுல மறைத்து வச்சிருக்கிறதும் எங்களுக்குத் தெரியும் என்றாள் ரேகா.

பரந்தாமன் ...மனதை எவ்வளவு தைரியப்படுத்திக் கொண்டு மிரட்டினாலும். ரேகாவின் பேச்சு அவன் மனம் மேலும் நொந்து போனது . யாருக்கும் தெரியாமல் தனது தாய் படத்தின் பின்னால் மறைத்து வைத்திருக்கும் பணத்தை பற்றின ரகசியத்தையும் இவள் தெரிந்து கொண்டு இருக்கிறாளே இனியும் இவள் பேசினாள் பணத்தின் ரகசியம் தம்பிகளுக்கும் தெரிந்துவிடும் என்று நினைத்து ஒரு முடிவுக்கு வந்தான் பரந்தாமன்.

ரேகா கைகளை விம்பிகொண்டே இருந்தாள் . ஆனால் சந்திரனும் தீனாவும் உறுதியாக கையைப் பிடித்துக்கொண்டு விடவே இல்லை.

நம் ரகசியத்தை எல்லாத்தையும் தெரிந்து கொண்டாலே . இவளை என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே.. தம்பிகளை உற்றுப் பார்த்தபடியே ....அவளை கொன்று விடுங்கள் என்று கத்தினான் பரந்தாமன்.

அழுது கொண்டே கைகளை விம்பியபடி . இருந்த ரேகாவுக்கு பரந்தாமனே சொன்னதைக் கேட்டு அதிர்ச்சி ஆகி அப்படியே சிலை போல நின்று விட்டாள். ரேகா..


தொடரும்.........
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Messages
111
Reaction score
52
Points
28
அன்பானவர்களே வணக்கம்....

பண்ணையார் தோட்டம் கதையை தொடர்ந்து படித்து வரும் வாசகர்களுக்கு ஓர் அன்பான அறிவிப்பு..

அத்தியாயம் .30 முதல் அத்தியாயம் 36 வரை வரும் கதையின் சம்பவங்கள் உங்கள் மனதை மிகவும் வருத்தப்பட செய்யும்
அப்படி உங்கள் மனம் வருத்தப் படவில்லை என்றால் எனக்கு உங்களுடைய கருத்தை தெரிவிக்கலாம்....


நன்றி...

கார்த்திகேயன் ஜெயராமன்.
 

New Threads

Top Bottom