Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


பண்ணையார் தோட்டம்

Karthikeyan Jayaraman

Saha Writer
Messages
111
Reaction score
52
Points
28
ரத்தமும் ..சேரும். வேட்டி சட்டையிலும் கரையாக பதிந்து இருப்பதை பார்த்து சந்திரனும் பரந்தாமனும் பயந்து போனார்கள்

தம்பிக்கு எப்படி இதுபோல நிலைமை ஆனது என்று குழம்பினார்கள் ..
அப்போது சாந்தி... தம்பி என்ன ஆச்சு என்று தீனாவின் கையை பிடித்து குலுக்கியபடி அழுதாள்

உடனே பரந்தாமன் சந்திரனும் தீனாவை தூக்கிக்கொண்டு உள்ளே பாத்ரூமில் உட்கார வைத்து ஒரு பக்கெட் தண்ணியை எடுத்து அவன் தலையில் ஊற்றி உடம்பெல்லாம் சேராக இருப்பதை இருவரும் கழுவினார்கள்.. அப்போது அவன் லேசாக கண்விழித்து பரந்தாமனையும் சந்திரனையும் பார்த்து அழுதான் ..அண்ணே அண்ணே என்று சொல்லிக்கொண்டே .
தீனாவின் சட்டையை கழட்டி பார்த்த போது உடம்பெல்லாம் ரத்தக் காயங்கள் . அப்போது சந்திரனுக்கு மனம் கலங்கியது . தம்பி உயிர்ப்பிப்பான என்ற சந்தேகம் அவனுக்கு ஏற்பட்டது அவன் பாத்ரூமில் அழுவதை கேட்டு வெளியே நின்றிருந்த சாந்திக்கு மேலும் பயம் அதிகமானது ..

தம்பி தம்பி என்று புலம்பிக்கொண்டே அழுதாள் அருகில் அவளுடைய மகனும் அப்பா சித்தப்பா என்று சொல்லிக்கொண்டே அவன் அம்மாவின் கையைப் பிடித்தபடி அழுது கொண்டிருந்தான்

மறுபடியும் தீனா மயங்கி விட்டான்

பரந்தாமனுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் கை கால்கள் நடுங்கியது . அப்போது அவன் மேலும் ஒரு பக்கெட் தண்ணி எடுத்து தீணாவின் தலையில் ஊற்றி உடலை சுத்தம் செய்தான் பிறகு வேட்டி சட்டையை கழட்டி போட்டுவிட்டு அவனை நன்றாக சுத்தம் செய்து . வேறு உடை மாற்றி அவனது அறையில் களத்தினார்கள்

அப்போது தீனா கண்விழித்து பார்த்தபோது அவனை சுற்றி சாந்தி பரந்தாமன் சந்திரன் மற்றும் பரந்தாமனின் மகன் . அழுதபடி நின்று கொண்டிருந்தார்கள்.

சாந்தியை பார்த்தவுடன் தீனா சற்று சுதாரித்துக் கொண்டான் அண்ணியிடம் நடந்ததை சொல்லக்கூடாது என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு தனது உடல் வலியை தாங்கிக்கொண்டு
வலி இல்லாதவன் போல சற்று பொறுமையாக சொன்னான் ....

அண்ணி அழுவாதிங்க. குழந்தையும் அழுகிறான் பாருங்க என்று பொறுமையாக சொன்னான்

சாந்தி கண்களை துடைத்துக்கொண்டு கேடாள்..
என்ன ஆச்சு தம்பி ஏன் இப்படி உனக்கு அடிபட்டு இருக்கு உடம்பெல்லாம் சேறாக இருந்ததே என்னாச்சு தம்பி என்று அழுத்தமான குரலில் பரிதாபமாக கேட்டாள் சாந்தி.

நான் என்ன சொல்றதுன்னே எனக்கு தெரியல அண்ணி என்னால நம்ம குடும்பத்துக்கு பெரிய நஷ்டம் வந்துடுச்சு அண்ணி என்று சொல்லியபடி தீனா லேசாக கண் கலங்கினான்.

பரந்தாமனுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது .
நம் குடும்பத்திற்கு பெரிய நஷ்டம் வந்து விட்டது என்று தம்பி சொல்கிறானே அப்படி என்றால் என்ன நடந்திருக்கும் என்று புரியாமல் பரந்தாமன் தீனாவின் தலையை தடவி விட்டபடி பொறுமையாக கேட்டான்.

என்னப்பா சொல்ற... நீ எப்படி நம்ம குடும்பத்துக்கு நஷ்டத்தை ஏற்படுத்த முடியும் . எனக்கு புரியலடா என்று சோகத்தோடு கேட்டான் பரந்தாமன்.

அண்ணே ...எல்லோரும் என்னை மன்னிச்சிடுங்க அண்ணா ..
நான் ராத்திரி பம்பு செட்டுக்கு போயிட்டு தண்ணி மோட்டாரை ஆன் செய்தேன் ..
அது தவறுதலாக வேறு ஒரு பட்டனை ஆன் செய்து விட்டேன் போல் தெரிகிறது .. அப்போது எலக்ட்ரிக்கல் போர்டு பற்றிக்கொண்டது வயர்கள் எரிந்து
உடனே பம்புசெட்டு ஆரை தீப்பிடித்து கொண்டது. அதில் மெல்ல மெல்ல கரும்புத் தோட்டம் பற்றிக்கொண்டது தீயில் . பிறகு ஒவ்வொரு தோட்டமாக பற்றி எரிந்து விட்டது அண்ணே .நம்ம தோட்டம் எல்லாம் மொத்தம் வீணாக பொச்சி அண்ணே.

அங்கிருந்து தீயில் மாட்டிக்கொள்ளாமல் விழுந்து எழுந்து ஓடி வந்துவிட்டேன் அண்ணே . என்று கதறி அழுதான் தீனா .

உடனே சாந்தி தலையில் அடித்துக்கொண்டு அழுதாள் .
என் குடும்பத்திற்கு நல்லதே நடக்காதா . நாங்கள் என்ன பாவம் செஞ்சோம் இப்படி எங்களுக்கு அடிமேல் அடி கொடுக்கிறாய் கடவுளே . என்று அழுதால் சாந்தி

உடனே சந்திரன் சாந்தியை சமாதானம் செய்து
அந்த அறையிலிருந்து வெளியே அழைத்து வந்து விட்டான் .

அண்ணி அவனே நொந்து போய் இருக்கான் . அவன் எதிரே இப்படி நீங்கள் அழுதால் அவன் மனம் மேலும் வருத்தப்படாத என்று சொன்னான் சந்திரன் .

என்னால தாங்க முடியலப்பா நம்ம குடும்பத்துக்கு இப்படியெல்லாம் சோதனை வரும் என்று .
யாருக்கும் நம்ம எந்தப் பாவமும் செய்யலையே . கடவுள் நமக்கு மட்டும் இப்படி அடுக்கடுக்காய் சோதனையை கொடுக்கிறாரே என்று புலம்பினாள் சாந்தி..

நாங்கள் செய்த பாவத்திற்கு கடவுள் இப்போதுதான் தண்டனை கொடுக்க ஆரம்பித்துவிட்டார் .
ஒரு பாவமும் செய்யாமல் இருக்கும் உங்களுக்கும் கடவுள் சேர்த்து தண்டிக்கிறார்.. என்று மனதில் நினைத்துக்கொண்டான் சந்திரன்

பிறகு என்னதான் நடந்தது என்று தம்பியிடம் கேட்கலாம் என்று மனதில் நினைத்துக்கொண்டு சந்திரன் தீனாவின் அறைக்குச் சென்றான் .


சந்திரனும் பரந்தாமனும் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு.
மெதுவாக தீனாவின் அருகில் சென்று வலது புறம் பரந்தாமனும் இடதுபுறம் சந்திரனும் அமர்ந்துகொண்டு தீனாவிடம் மெதுவாக கேட்டார்கள்.
தம்பி நேற்று இரவு என்னதான் நடந்தது உண்மையை சொல் என்று பதட்டத்தோடு கேட்டான் பரந்தாமன்.


அப்போது தீனா படுத்தபடியே பரந்தாமனை கட்டி அணைத்துக் கொண்டு அழுதான் .
அண்ணே இனி நம்ம நிம்மதியா வாழ முடியாது அண்ணே என்று கதறிக் கதறி அழுதான் தீனா.

தீனாவின் பேச்சு சந்திரனுக்கும் பரந்தாமனுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது .

என்னப்பா சொல்ற எங்களுக்கு ஒன்னும் புரியல என்றான் பரந்தாமன் .

அண்ணே நான் பம்புசெட்டுக்கு சென்றதும் அங்கு சங்கரும் ரேகாவும் பேய் யாக வந்து என்னை அடிச்சாங்க .
நான் அங்கிருந்து தப்பிச்சு ஓடி வந்துட்டேன் . அப்போ பம்புசெட்டு
தீ பிடித்து நம்ம தோட்டம் எல்லாம் எரிஞ்சு போச்சு அண்ணா.
இந்த சங்கரும் ரேகாவும் இனிமே நம்மை வாழ விட மாட்டாங்க அண்ணா

சங்கர் சொன்னான் ...உனக்கு எவ்வளவு தைரியம் இங்க வரதுக்கு இனிமேல் உங்களை வாழ விடமாட்டேன் என்று கோபத்தோடு சொன்னான் சங்கர் .எனக்கு என்ன பண்றதுன்னு தெரியாம பயத்துல அங்கிருந்து ஓடி வந்துட்டேன்

அப்போது நம்ம தோட்டத்துல
பச்சை வாழைத்தோப்பு . நல்லா மளமளவென எரிஞ்சதை நான் பார்த்தேன் அண்ணா . இனிமேல் அந்த சங்கரும் ரேகாவும் நம்மை வாழ விடமாட்டாங்க அண்ணே என்று அழுதுகொண்டே தீனா சொன்னான்.


பரந்தாமனும் சந்திரனும் அதிர்ச்சியில் ஆடிப் போனார்கள் சங்கரும் ரேகாவும் பேயாக வருகிறார்களா என்று நினைத்து

அப்போது பரந்தாமன் தீனாவிடம் தயக்கத்தோடு கேட்டான் .
தம்பி பம்பு செட்டுல நம்ம அம்மா படம் இருக்கும் அறையும் எரிஞ்சு போச்சா என்று நடுக்கத்தோடு கேட்டான் .

அம்மா படம் இருக்கும் அரை எரியவில்லை அண்ணா .
பம்பு செட்டு எலக்ட்ரிக்கல் போர்டு இருக்கும் அரை மட்டும் தான் எரிந்தது என்றான் தீனா .

அப்போது பரந்தாமனுக்கு சிறிது ஆறுதலாக இருந்தது .
நாம் சேர்த்து வைத்த பணத்தை நம்ம அம்மா பாதுகாப்பாக . காவல் காத்துக் கொண்டு இருக்கிறாள் என்று நினைத்து சற்று ஆறுதல் அடைந்தான் பரந்தாமன்

இருந்தாலும் எல்லாம் தோட்டமே எரிந்துவிட்டதே என்று நினைத்து கவலையில் . கட்டில் மேல் இருந்து இறங்கி கீழே உட்கார்ந்து கொண்டு தலைமிது இரண்டு கைகளை வைத்துக்கொண்டு . சோகத்தில் சாய்ந்துவிட்டான் பரந்தாமன் .

நம்மை இனி கடவுள் சும்மா விடமாட்டான் . சங்கரின் ரூபத்தில் நமக்கு சரியான தண்டனை கிடைக்கப் போகுது என்று நினைத்துக்கொண்டான் சந்திரன்.


அப்போது சாந்தி ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள் .

உடனே சந்திரன் கட்டில் மீது இருந்து எழுந்து நின்று கொண்டான் .

சாந்தி சுடுதண்ணி ஒத்தரம் கொடுப்பதற்காக தீனாவை திரும்பி படுக்கச்சொன்னாள் .

தீனாவும் திரும்பி படுத்துக் கொண்டான் .
அப்போது அவன் முதுகில் பட்டை பட்டையாக காயங்கள் இருந்ததை பார்த்து மேலும் சாந்திக்கு மனம் நொந்து போனது .
பிறகு தீனாவுக்கு ஒத்தரம் கொடுத்தால் சாந்தி .

அப்போது மெதுவாக கேட்டாள்...தம்பி உண்மையை சொல் உனக்கு என்ன நடந்தது என்று .நீயும் என் இடம் மறைக்காதே என்றாள் சாந்தி.

பரந்தாமனுக்கு ம் சந்திரனுக்கும் தீனாவுக்கும் அதிர்ச்சியாக இருந்தது சாந்தியின் கேள்வி .

என்ன தம்பி... நான் கேட்கிறது உனக்கு புரியலையா உண்மையை சொல் நேற்று இரவு என்ன நடந்தது என்று மறுபடியும் கேட்டால் சாந்தி.

உடனே பரந்தாமன் குறுக்கிட்டு சொன்னான் ....அவனை தொந்தரவு பண்ணாதே அத்தான் புரியும்படி சொல்லிட்டனே தவறுதலா வேறொரு ஸ்விட்ச் ஆன் செய்ததால் பம்ப் செட்டும் தோட்டமும் தீப்பிடித்து எரிந்து விட்டது என்று .
மேலும் மேலும் அவனை தொந்தரவு செய்யாதே என்று பரந்தாமன் சொன்னான்.


இதையெல்லாம் நம்புவதற்கு நான் ஒன்னும் சின்ன குழந்தை இல்லை இவரு ஏதோ ஒரு பட்டனை ஆன் செய்து விட்டாராம் . அதனால பம்புசெட்டும் தோட்டமும் எரிஞ்சு போச்சாம் . சரி இதையெல்லாம் கூட நம்பலாம் இவரோட உடம்பை பாருங்க . பட்ட பட்டையாக வீங்கி இருக்கு இது எப்படி ஆச்சு . ஒன்னு மட்டும் நல்லா தெரியுது நீங்க மூணு பேருமே எதையோ மறைக்கிறீங்க. நம்ம தோட்டத்துல இதுவரைக்கும் எந்த பிரச்சனையும் வரல உங்க அப்பா பாத்துக்கிட்டு இருக்கும்போது . என்னைக்கி நீங்க மூணு பேரும் தோட்டத்தை கவனிச்சீங்களோ அன்னையிலிருந்து நம்ம தோட்டத்துல புது புது பிரச்சனையா வந்துகிட்டு இருக்கு .
ஆனா எந்த பிரச்சனையும் இதுவரைக்கும் வெளிய வரல யாருக்குமே தெரியல .
ஆனால் உங்க மூணு பேருக்கும் இந்த பிரச்சனையின் ரகசியம் தெரியும் . அதை நீங்க மறைக்கிறீங்க நம்ம தோட்டத்துல ஏதோ ஒரு மர்மம் நடக்குது அதை நீங்க மறைக்கிறீங்க இப்ப நடந்து இருக்கிற இந்த விஷயம் எனக்கு ஆணித்தரமா புரியுது அதனால தான் கேட்கிறேன் மறைக்காம நேத்து இரவு என்ன நடந்ததுன்னு சொல்லிடு என்று சாந்தி மனதுக்குள் பட்டதை பளிச்சென்று தைரியமாக கேட்டாள்.


என்ன சாந்தி... யாரு கிட்ட என்ன கேட்கணும்னு தெரிஞ்சுதான் பேசுறியா என்று பரந்தாமன் சற்று எரிச்சலாக கேட்டான்.


ஆமாங்க இனிமேலும் சும்மா இருந்தா நம்ம குடும்பத்துல நிம்மதி இருக்காது . பிரச்சனை என்னன்னு தெரிஞ்சாதன் அதுக்கு ஏத்தமதிரி முடிவு பண்ணனும் .
இல்லன்னா இப்படியே அழுதுகிட்டு தான் இருக்கணும் என்று துணிச்சலாய் சொன்னால் சாந்தி.

கட்டிலுக்கு கீழே உட்கார்ந்திருந்த பரந்தாமன் உடனே ஆவேசமாக எழுந்து நின்றான்.


வாய மூடு எல்லாம் எனக்குத் தெரியும் ...நீ ஒன்னும் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியாது . கொஞ்சம் பொறுமையாக இருந்தால் வாய்க்கு வந்தபடி பேசுவியா எங்கிருந்து வந்தது உனக்கு இவ்வளவு தைரியம் அவன் தான் சொல்றானே தவறுதலாய் ஏதோ ஒரு பட்டனை ஆன் செய்துவிட்டேன் என்று . அதோடு கம்முனு இரு எல்லாம் தெரிந்தது போல சத்தம்பொட்டு பேசுற இதுக்கு மேல ஏதாவது கேட்டா அதுக்கப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன் என்று கோபத்தோடு ஆவேசமாக சாந்தியை முறைத்தபடி சொன்னான் பரந்தாமன் .

அப்போது சாந்தி வாயடைத்துப் போனாள் ... இவ்வளவு நாளா இதுபோல முகத்தை இதுவரைக்கும் இவரிடம் பார்த்ததில்லையே இவ்வளவு கோபக்கார மனிதனாய் இருக்கிறாரே நம் கணவர் .
என்று நினைத்து அதிர்ச்சியாக நின்றால் . ஒரு பக்கம் வேதனையால் அவள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது அப்போது அவளால் அங்கு நிற்க முடியவில்லை உடனே அழுதுகொண்டு அங்கிருந்து ஓடிவிட்டாள் பூஜை அறைக்கு.


இனிமேல் நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்தோம் .
ஆனால் இப்படி இக்கட்டான நிலைமையில் மாட்டிக்கொண்டோமே .
நம் மனைவி நம்மை பார்த்து கேள்வி கேட்கும் அளவுக்கு பிரச்சனை வளர்ந்துவிட்டதே என்று நினைத்து சோகத்தில் பரந்தாமன் தலை குனிந்து கொண்டான்.


அண்ணி சந்தேகப்பட ஆரம்பித்து விட்டார் இனி ரகசியத்தை நீண்ட நாள் மறைக்க முடியாது என்று நினைத்து சந்திரனும் தினாவும் என்ன சொல்வது . இனி எப்படி அண்ணி முகத்தை பார்ப்பது என்று நினைத்து சோகத்தில் மூவரும் அமைதியாக இருந்தார்கள் .

அப்போது வீட்டு வாசலில் ஊரே கூட்டமாக சத்தம் போட்டுக்கொண்டு அழுதார்கள் . உடனே சந்திரனும் பரந்தாமனும் மெதுவாக வெளியே வந்து பார்த்தால் ஊர்மக்கள் அனைவரும் சோகத்தில் கண் கலங்கி நின்றார்கள் .

அப்போது ஒரு பெரியவர் சொன்னார் ...ஐயா நாளையிலிருந்து முழு நாள் வேலை செய்யுங்கள் என்று சொன்னீங்களே .
இப்படி எல்லாம் தோட்டமே தீயில் எரிந்து வீணாக போச்சே இப்படிப்பட்ட கஷ்டத்தை நீங்கள் எப்படி ஐயா தாங்க கொண்டிங்க எங்களாலே தாங்க முடியலையே என்று ஒரு பெரியவர் சொல்லிக் கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதார்.


யாரும் வருத்தப்படாதீங்க ஏற்கனவே நீங்க உங்க
முத்தையாவையும் .
பண்ணையாரையும் இழந்துவிட்டு வாடிக்கொண்டு இருக்கீங்க .
இந்த நேரத்துல நம்ம தோட்டமும் எரிஞ்சு போச்சு மேலும் உங்களுக்கு வருத்தமா தான் இருக்கும் .
இனி பிழப்பதற்கு என்ன செய்வது என்று நினைத்து கஷ்டப்படாதிர்கள் என் உயிர் இருக்கும் வரை உங்களுக்கு நான் வேலை கொடுத்துக் கொண்டேதான் இருப்பேன் . என் உயிர் இருக்கும் வரை விவசாயத்தை விட்டு நான் விலக மாட்டேன் . உங்களுக்காக நான் எந்த கஷ்டத்தையும் தாங்கிக் கொள்வேன் நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம் .

என் தம்பி தவறுதலாக தண்ணீர் மோட்டாரை ஆன் செய்வதற்கு பதிலாக வேறொரு பட்டனை ஆன் செய்ததில் எலக்ட்ரிக்கல் போர்டு தீப்பிடித்து எரிந்து இப்படி எல்லாம் தோட்டமும் வீணாகப் போனது. கொஞ்சநாள் யாரும் தோட்டத்துக்கு வரவேண்டாம் .
நிலைமை சரியானதும் நானே உங்களை வேலைக்கு வர வைக்கிறேன் அதுவரைக்கும் நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம் தைரியமாக செல்லுங்கள் என்று ஊர் மக்களுக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தான் பரந்தாமன்.


பிறகு ஊர் மக்கள் கலைந்து சென்றார்கள் ..பரந்தாமனும் சந்திரனும் சோகத்தோடு வீட்டுக்கு உள்ளே சென்றார்கள்.

அப்போது பரந்தாமனின் மகன் சோகத்தோடு வந்து அப்பா பசிக்குது என்று சொன்னான்.

அப்போதுதான் பரந்தாமனுக்கு நினைவுக்கு வந்தது காலையில் இருந்து யாரும் சாப்பிடவில்லை என்று.



தொடரும்......
 

Karthikeyan Jayaraman

Saha Writer
Messages
111
Reaction score
52
Points
28
........ நாட்கள் நகர்ந்தது .....

பரந்தாமனுக்கு நிம்மதியில்லாமல் சோகத்தில் யாரிடமும் பேசாமல் தனது அறையிலேயே படுத்து கொண்டு இருந்தான்..

எப்படியாவது பம்புசெட்டில் தனது தாய் படத்தின் பின்னால் இருக்கும் பணப்பெட்டியை நிரப்பி விடலாம் என்று நினைத்தோம் . ஆனால் இந்த சங்கர் ரேகாவை கொலை செய்த நாள் முதல் நமக்கு விவசாயத்தில் நஷ்டம்தான் ஏற்படுகிறது .

எப்படியாவது பணப்பெட்டியை நிரப்பி விடலாம் என்று பார்த்தால் ஏதாவது ஒரு இக்கட்டான நிலைமை நமக்கு ஏற்பட்டுவிடுகிறது.

ஆரம்பத்தில் நன்றாக வருமானம் கிடைத்தது. முதல் பிரச்சனையாக சந்திரன் இருந்தான் .
அவன் திருமணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டுமென்று பல திட்டங்களைப் போட்டும்
அதிலும் நமக்கு சாதகமாக அமைந்துவிட்டது . தம்பியின் திருமணத்தையும் நிறுத்தி விட்டோம்.

பிறகு அப்பா நமக்கு பிரச்சனையாக இருந்தார் ..... காணாமல் போன இரண்டு குடும்பங்களையும் கண்டுபிடிப்பதில் தீவிரமாக இருந்தார் . அதனால் சங்கரை அந்த வேலையில் ஈடுபடுத்தினார் எப்படியோ ஒருவழியாக சங்கரையும் ரேகாவையும் தீர்த்துக்கட்டி விட்டோம் .
இந்த பிரச்சினையில் சங்கரின் அப்பா முத்தையா இறந்துவிட்டார் அவர் இறந்ததாள் நம்முடைய அப்பாவும் இறந்துவிட்டார் .
இப்படி எல்லா பிரச்சனையும் ஓய்ந்துவிட்டது என்று நினைத்து சந்தோஷப்பட்டோம் . இனிமேல் பணப்பெட்டியை நிரப்பி விடலாம் நமக்கு எதிரிகளே கிடையாது என்று நினைத்து.

ஆனால் சங்கரும் ரேகாவும் பேயாக வந்து புது பிரச்சினையை உண்டாக்கி இருக்கிறார்கள் . இதற்கு மூன் எப்படியோ கஷ்டப்பட்டு எல்லா பிரச்சினைகளையும் சமாளித்து வந்துவிட்டோம் . நம் அம்மாவும் நமக்கு உதவியாக துணையாக இருந்தார் .

ஆனால் இப்போது பேயாக இருக்கும் சங்கர் ரேகாவை நம்மால் என்ன செய்ய முடியும் உயிருடன் இருப்பவர்களை ஏதாவது சிக்கலில் மாட்டி விட்டு நம்முடைய காரியத்தை சாதித்துக் கொள்ளலாம் .
பேயாக இருப்பவர்களை நாம் என்ன செய்ய முடியும் .

பம்பு செட்டுக்கு சென்றாலே மரண அடி அடித்து துரத்துவார்கள் எப்படியோ தம்பி அவர்களிடமிருந்து தப்பி ஓடி வந்துவிட்டான் .இனிமேல் எப்படி பம்பு செட்டுக்கு செல்வது விவசாயத்தை எப்படி நடத்துவது ஊர் மக்களிடம் கண்டிப்பாக விவசாயம் நாடக்கும் என்று சொல்லிவிட்டேன் . இரண்டு வாரம் காலம் ஆகுது இதுவரைக்கும் யாரும் பம்பு செட் பக்கம் போகவில்லை .

இது வரைக்கும் ஊருக்கும் குடும்பத்துக்கும் நல்லவனாக நடித்துவிட்டோம் .

ஆனால் இனிமேல் எப்படி இந்த சங்கருக்கும் ரேகாவுக்கும் ஒரு முடிவு கட்டுவது என்று யோசித்து யோசித்து ....பரந்தாமனுக்கு தலையே வெடித்துச் சிதறுவது போல ஆனது ...மனமும் நொந்து போனது ..இனி நமக்கு நல்ல காலம் என்று நினைத்தோம் இப்படி மோசமாக சிக்கிக் கொண்டோமே என்று நினைத்து பரந்தாமன் கவலையோடு இருந்தான் ..யாரிடமும் பேசாமல் எரிச்சலோடு இருந்தான் ...

மற்றொரு பக்கம் சாந்தி சோகமாக அவளும் யாரிடமும் பேசவில்லை தன் மகனை மட்டும் கவனித்தல் . வீட்டில் உள்ள வேலைகளை செய்துவிட்டு சிறிது சமையலும் செய்து வைப்பாள் ஒரு சில நேரங்களில் சாப்பிடுவாள் . ஒரு சில நேரங்களில் குடும்ப பிரச்சனையை நினைத்து சாப்பிடாமல் படுத்துக் கொள்வாள் .இப்படி சாந்தி மனம் நொந்து போய் காணப்பட்டாள்.

நம் கணவர் நம்மிடம் எதையோ மறைக்கிறார் . நடக்கும் பிரச்சனைகள் எல்லாம் இந்த மூன்று பேருக்கும் தொடர்பு இருக்கிறது . இந்த பிரச்சனையை இவர்கள்தான் உண்டாக்கினார்களா. இல்லை இந்த பிரச்சினை பற்றி தெரிந்து கொண்டு மறைக்கிறார்களா... எதற்காக மறைக்க வேண்டும் ஒன்றுமே தெரியவில்லையே ...

பம்புசெட்டு இரவு வேலைக்கு சென்ற தீனா உடம்பு முழுக்க காயங்களோடு திரும்பிவந்து தவறுதலாக சுவிட்ச் ஆன் செய்து விட்டேன் அதனால் தோட்டம் எறிந்து விட்டது என்று பொய் சொல்கிறான் . சம்பந்தமே இல்லாமல் இவன் உடல் முழுக்க பல காலங்கள் இருக்கிறது இப்படி மூவருமே உண்மையை மறைக்கிறார்கள் .இவர்களை நாம் நல்லவர்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம் ஆனால் நடக்கும் பிரச்சனைகளை எல்லாம் பார்த்தாள் என்ன செய்வது என்றே தெரியவில்லையே

இதுவரைக்கும் ஊரில் உள்ளவர்களும் இவர்களைப் பற்றிய எந்த ஊரு தவறான கருத்தையும் சொல்லவில்லை இவர்கள் தப்பானவர்கள் என்றால் . ஏதாவது ஒரு நாள் எந்த விஷயத்திலாவது மாட்டிக் கொண்டு இருப்பார்கள் .
ஆனால் இதுவரைக்கும் அப்படி நடக்கவில்லை . இவர்களை நம்புவதா இல்லை ஒதுக்குவதா என்ற குழப்பத்தில் சாந்தி கவலையில் இருந்தாள்..

இனி நம்முடைய குடும்பம் சந்தோஷமாக இருக்குமா என்ற எண்ணம் அவளுக்கு ஏற்பட்டுவிட்டது . எது நடந்தாலும் நடக்கட்டும் .இனி இவர்களிடம் நாம் எந்தப் பேச்சையும் பேசக்கூடாது எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு வரும் அப்போது தெரியும் இவர்கள் உண்மையிலேயே நல்லவர்கள்தானா என்று நினைத்துக்கொண்டு .
சாந்தி ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு மட்டுமே சாப்பிட்டாள். தனது மகனுக்கு வழக்கம்போல எல்லாம் வேலையும் செய்து கொடுத்தால் அவனை சிறிது சந்தோசமாக பார்த்துக்கொண்டால் சாந்தி...

பிறகு மற்றொரு பக்கம் சந்திரனும் தீனாவும் அவர்களும் சோகத்தோடு இருந்தார்கள் அண்ணி நம்ம மேல ரொம்ப கோபமா இருக்காங்களா அண்ணே என்று தீனா கேட்டான்.

அண்ணி நம்ம மேல மட்டும் இல்ல . அண்ணன் மேலயும் கோவமாதான் இருக்காங்க யாரிடமும் பேசறது இல்ல சாப்பாடும் சரியா சாப்பிடுறது இல்லை .என்றான் சந்திரன்.

நம்ம மூணு பேரும் பொய் சொல்கிறோம் என்று அண்ணி கண்டுபிடிச்சுட்டாங்க அதனாலதான் நம்மிடம் அவங்க பேசல.

ஆமாம் தம்பி ..இதையெல்லாம் நினைச்சுப் பார்த்தா மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு
இப்படி உண்மையை மறைக்கிறான் என்று சந்தேகப் பட்டத்திற்கே நம்மிடம் பேசவில்லை அண்ணி .
நடக்கும் பிரச்சனைக்கு எல்லாம் 3 பேரும்தான் காரணம் என்று தெரிந்தால் . நிச்சயம் அண்ணி உயிரோடு இருக்க மாட்டாங்க ஏனென்றால் நம்மீது அண்ணி நிறைய நம்பிக்கை வச்சிருக்காங்க . அதனால் தான் இந்தச் சின்ன ஏமாற்றத்தை கூட அவங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை .
இன்னும் இருக்கிற பிரச்சனை எல்லாம் வெளிவர தொடங்கினாள். அவ்வளவுதான் நம் குடும்பம் ..
என்று சந்திரன் சொன்னான்.

அண்ணனுக்கு விவசாயம் நடக்கவில்லை என்ற கவலையில் இருக்கிறார் . இனிமேல் எப்படி விவசாயத்தை நடத்துவது
நான் சொன்னதைப் போலவே இருக்கிற நிலத்தை இந்த ஊர் மக்களுக்கு பிரித்துக் கொடுத்து விடலாம் . இந்த ஊர் மக்கள் விவசாயம் செய்தால் சங்கர் ஒன்றும் செய்ய மாட்டான் .
ஊர் மக்களும் பிழப்பார்கள் ஆனால் நம் விவசாயம் செய்தால் நிச்சயம் சங்கர் மறுபடியும் தோட்டத்தை எரித்து விடுவான் அதோடு நம்மையும் கொன்றுவிடுவான் . அதனால் ஊர் மக்களை விவசாயம் செய்யச் சொல்வதுதான் சரி இன்று எனக்கு தெரிகிறது ஆனால் அண்ணன் ஊர் மக்களிடம் நிச்சயம் விவசாயம் நடக்கும் என்று சொல்லியிருக்கிறார் எப்படி இது நடக்கும் அண்ணா ....என்று தீனா கேட்டான்.

எனக்கும் ஒன்றும் புரியவில்லை தம்பி ..சங்கர் ரேகாவும் பேயாக பம்புசட்டில் இருக்கிறார்கள் அவர்களை மீறி நம்மால் ஒன்றும் செய்ய முடியாது .
ஆனால் அண்ணன் கண்டிப்பா விவசாயம் நடக்கும் என்று ஊர் மக்களிடம் சொல்லி இருக்கிறார் அண்ணன் என்ன திட்டம் போட்டு இருக்கிறார் என்று தெரியவில்லை . சிறிது காலம் போகட்டும் என்னதான் முடிவு செய்கிறார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம் அப்படி விவசாயம் செய்ய முடியவில்லை என்றாள் நீ சொன்னது போலவே இந்த ஊர் மக்களுக்கு நிலத்தை பிரித்துக் கொடுத்து விடலாம் அண்ணனிடம் சொல்லி என்று சந்திரன் சொன்னான்.

எனக்கு இப்போது காயங்கள் எல்லாம் ஆறிக்கொண்டே வருகிறது இன்னும் ஒரு வாரத்தில் காயங்கள் சரியாகி விடும் . அதன் பிறகு மூன்றுபேரும் பேசி ஒரு முடிவு செய்யலாம் . பாவம் ஊர் மக்கள் நம்மை நம்பி தான் இருக்கிறார்கள் அவர்களுக்கு நம் தோட்டத்தில் வேலை செய்தால்தான் வருமானம் இப்போது இரண்டு வாரம் கடந்துவிட்டது ஊர் மக்கள் வேலை செய்து பாவம் எப்படி சாப்பிடுவார்கள் அதனால் சீக்கிரமாக இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டவேண்டும் நிச்சயம் நம்மால் விவசாயம் செய்ய முடியாது . சங்கரும் நம்மை செய்ய விட மாட்டான் அதனால் நிலத்தை பிரித்துக் கொடுக்கும் வேலையை பற்றி பேசலாம் அண்ணனிடம் என்று தீனாவும் சந்திரனும் முடிவு செய்தார்கள்.

........நாட்கள் நகர்ந்தது.....

ரேகாவின் அம்மா....
லட்சுமி அம்மாள் பித்துப் பிடித்தவள் போல எதையோ யோசித்துக் கொண்டிருப்பது போல தினமும் முத்தையாவின் வாசலிலே படுத்துக் கொண்டிருப்பாள்

அக்கம்பக்கத்தினரிடம் சென்று நிச்சயம் நாளைக்கு என் மகளும் என் மருமகனும் வருவார்கள் என்று சந்தோசமாக பேசுவார் பிறகு முத்தையாவின் வாசலில் படுத்துக் கொள்வார் .

லட்சுமி அம்மாள் மனம் வருத்தப்படக் கூடாது என்பதற்காக அவர் மனம் போகும் போக்கில் அக்கம்பக்கத்தினரும் பேசுவார்கள் . ஆமாம் அக்கா நாளைக்கு முன் மகளும் மருமகனும் கண்டிப்பா வருவாங்க என்று சொல்வார்கள்அக்கம்பக்கத்தினர்
இலட்சுமி அம்மாளுக்கு தினமும் சிறிது சாதம் கொடுப்பார்கள் அதை சில நேரம் சாப்பிடுவார் சில நேரம் அங்கேயே இருக்கும்

ஒரு சில நேரத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவள் போல நடந்து கொள்வார் .. ஒரு சில நேரங்களில் எல்லோரிடம் சென்று நாளைக்கு என் மகள் வரப் போகிறாள் என் மருமகனும் வரப்போகிறான் அவர்களுக்கு நான் மீன் குழம்பு செய்ய வேண்டும் என்று அவசரமாக வீட்டுக்கு வருவாள் . பிறகு சோகத்தில் படுத்துக் கொள்வாள் இப்படியே லட்சுமி அம்மாளின் வாழ்க்கை நகர்ந்தது.

ஊர் மக்கள் எல்லாம் வேலையில்லாததை பற்றி பேசத் தொடங்கினார்கள் . பண்ணையார் நமக்காக இவ்வளவு நாளா கஷ்டமில்லாமல் நமக்கு வேலை கொடுத்து நம்மை காப்பாற்றினார் . அதன்பிறகு அவர் மகன்கள் அவர்களும் நமக்கு வேலை கொடுக்கிறார்கள் ஆனால் என்ன மர்மமோ என்று தெரியவில்லை . பம்புசெட்டில் வேலை செய்பவர்கள் எல்லாம் காணாமல் போகிறார்கள்

இந்த பிரச்சனையால் பாவம் பண்ணையார் பசங்களும் நொந்து போனார்கள் .அவர்களே ஒரு நாளைக்கு ஒருவர் பம்புசெட்டில் தங்கி வேலை செய்து விவசாயத்தை நடத்தலாம் என்று முடிவு செய்து . நமக்கு எவ்வளவோ கஷ்டப்பட்டு தோட்டத்தில் வேலை கொடுக்கிறார்கள் . அப்படி இருந்தும் இப்போது தோட்டமே தீயில் எரிந்துவிட்டது . இப்படி பண்ணையார் பசங்களுக்கும் பாவம் கஷ்டம் வந்துகொண்டே இருக்கிறது அவர்களை நாம் குறை சொல்ல முடியாது.

இனிமேல் வேலை இல்லாமல் எத்தனை நாட்கள் தான் இருக்கிறது ஊரைவிட்டு போவதற்கும் மனம் இடம் கொடுக்கவில்லை முத்தையாவின் வார்த்தைக்காக இந்த ஊரைவிட்டு செல்லமுடியாமல் இங்கேயே இருக்கிறோம் . பண்ணையார் மகன்களும் நமக்காக எவ்வளவோ கஷ்டப்பட்டு தோட்டத்தில் வேலை கொடுத்தாலும் . அவர்களுக்கு மேலும் கடவுள் கஷ்டத்தை கொடுத்துக் கொண்டே இருக்கிறார் . இந்த இக்கட்டான நிலைமையில் பாவம் பண்ணையார் மகன்களால் இனிமேல் விவசாயம் செய்ய முடியுமா என்று ஊர் மக்கள் பேசிக் கொண்டார்கள் .

அப்போது ஒரு பெரியவர் சொன்னார்... நம்ம கொஞ்ச பேர் அவர் வீட்டுக்கு சென்று இனி எப்போது விவசாய வேலை நடக்கும் என்று கேட்கலாம் அதற்கு அவர் என்ன பதில் சொல்கிறார் என்று பார்க்கலாம் ஒருவேளை அவரால் விவசாயம் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டாள் .
நம் விருப்பமுள்ளவர்கள் இந்த ஊரைவிட்டு போகலாம் மற்றவர்கள் இங்கேயே இருந்து வேறு ஏதாவது தொழில் கிடைக்கிறதா என்று பார்க்கலாம் என்று ஒரு பெரியவர் சொன்னார்

பிறகு அனைவரும் ஆமாம் இதற்கு ஒரு முடிவு
தெரிந்தால்தான் நம்மால் இங்கு இருக்க முடியும் அதனால் உடனே பெரியவங்க பண்ணையார் வீட்டுக்கு சென்று .பண்ணையார் மகன்களிடம் ஒரு யோசனையை கேட்கலாம் என்று முடிவு செய்தார்கள் ஊர் மக்கள்.


ஊர் பரியவர்கள் கூட்டமாக சென்று பண்ணையார் விட்டு வாசலில் நின்று குரல் கொடுத்தார்கள் .அப்போது சாந்தி வெளியே வந்து பார்த்தாள் கூட்டமாக நின்று இருப்பவர்களை பார்த்து கைகூப்பி கும்பிட்டால்
பிறகு அனைவரையும் உள்ளே கூப்பிட்டாள். அனைவரும் உள்ளே வந்து தரையில் உட்கார்ந்து கொண்டார்கள் அனைவருக்கும் சாந்தி தண்ணீர் கொடுத்தாள் அப்போது பரந்தாமன் சந்திரன் தீனா மூவரும் தனது அறையிலிருந்து வந்து பார்த்தார்கள்.

ஊர் மக்கள் வந்து இருப்பதை பார்த்து மூவரும் என்னவாக இருக்கும் என்று யோசித்தார்கள்

அப்போது ஒரு பெரியவர் சொன்னார் நடப்பது எல்லாம் பார்க்கும்போது எங்களுக்கு மனம் வருத்தமாக இருக்கிறது இருந்தாலும் எங்களுக்கு ஒரு சின்ன யோசனை சொல்ல வேண்டும் அதனால் தான் நாங்கள் இங்கே வந்திருக்கிறோம் என்றார் ....

என்ன விஷயம் சொல்லுங்கள் ஐயா என்று பணிவாக கேட்டான் பரந்தாமன்.

வேறொன்றும் இல்லை ஐயா எங்கள் குடும்பம் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக உங்கள் அப்பா பண்ணையார் போலவே நீங்கள் எங்கள் மீது அக்கறை காட்டுகிறீர்கள் அதனால் எவ்வளவோ இக்கட்டான நிலைமை வந்த போதும் . நீங்கள் தொடர்ந்து விவசாயம் செய்து இந்த ஊர் மக்களை காப்பாற்றிக் கொண்டு வருகிறீர்கள் . ஆனால் இப்போது ஏற்பட்டிருக்கும் இந்த நிலைமை உங்களுக்கு பெரும் கஷ்டத்தை கொடுத்திருக்கும் . அதனால் உங்கள் மனமும் ரொம்ப நொந்து போயிருக்கும் அதனால்தான் நீங்கள் ஒரு மாதம் காலம் ஆனபோதும் .நீங்கள் யாரும்
பம்பு செட்டு பக்கமே வரவில்லை அந்த அளவுக்கு உங்கள் மனம் நொந்து போய் இருக்கிறது என்று நாங்கள் புரிந்து கொண்டோம்

ஆனால் எங்கள் மனம் உங்கள் நிலைமையை புரிந்து கொண்டாலும் எங்கள் வயிறு புரிந்துகொள்ள மாட்டேங்குது ஐயா . இப்போது நாங்கள் ஒரு வேளைதான் சாப்பிடுகிறோம் வேலை இல்லாததால் எங்களிடம் பணம் இல்லை அதனால் சரியாக சாப்பிட முடியவில்லை .
இப்படியே நிலைமை நீடித்தால் நாங்கள் என்ன செய்ய முடியும் அதனால் தான் உங்களிடம் ஒரு யோசனை கேட்கலாம் என்று வந்தோம் .

இனி விவசாயம் நடக்குமா இல்லையா என்று நீங்கள்தான் ஒரு முடிவு சொல்ல வேண்டும் நீங்கள் சொல்லும் வார்த்தையில் தான் நாங்கள் இந்த ஊரில் இருப்பதால் இல்லை வேறு எங்கேயாவது போவதா என்று முடிவு செய்ய வேண்டும் நாங்களும் எவ்வளவு கஷ்டப்பட்டு பண்ணையாருக்காகவும் முத்தையாவின் வார்த்தைக்காக இந்த ஊரிலே இருக்கிறோம் ஆனால் நிலைமை ரொம்ப மோசமாகி போய்க் கொண்டே இருப்பதால் . எங்களால் அவர் வார்த்தையை இனி காப்பாற்றா முடியுமா என்ற சந்தேகம் எங்களுக்கு வந்துவிட்டது அதனால் நீங்கள் ஒரு நல்ல பதிலை எங்களுக்கு சொல்லுங்கள் என்றார் அந்தப் பெரியவர்.

பரந்தாமனுக்கு மேலும் கவலை ஏற்பட்டது . ஊர் மக்கள் எல்லாம் ஊரை விட்டு சென்றுவிட்டாள் நம் விவசாயத்தை நடத்த முடியாது முதலில் ஊர் மக்களை இங்கேயே இருங்கள் என்று சொல்லலாம் பிறகு விவசாயம் செய்ய ஏதாவது ஒரு வழி கிடைக்கிறத என்று பார்க்கலாம் .பிறகு சங்கரும் ரேகாவும் நம்மை தொடர்ந்து தொந்தரவு செய்தால் நாம் அப்போது விவசாயத்தை விட்டு விடலாம் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு பரந்தாமன் அங்கு இருந்த பெரியவர்களிடம் சொன்னான்

ஐயா நீங்கள் ஒருவேளை தான் சாப்பிடுகிறோம் என்று சொன்ன வார்த்தை என்னால் தாங்க முடியவில்லை.
இப்போது உங்களுக்கு சாப்பாடு தயார் செய்வதற்கு நேரம் ஆகும் அதனால் நான் ஊரில் உள்ள அனைவருக்கும் என்னால் முடிந்த சிறிது பணம் கொடுக்கிறேன் அந்த பணத்தை வச்சுகிட்டு நீங்கள் சிறிது நாட்கள் சாப்பிடுங்கள் .பிறகு விவசாயம் எப்படி செய்வது. எப்போது செய்வது என்று நான் சொல்கிறேன் இப்போது நீங்கள் நான் கொடுக்கும் இந்த பணத்தை வாங்கிச் செல்லுங்கள் என்று பரந்தாமன் நல்லவன் போல சொன்னான்.

பரந்தாமனின் பேச்சு ஊர் மக்களுக்கு சரியாக பட்டது
அவர் சொல்வதைப் போல இன்னும் சிறிது காலம் ஊரில் இருக்கலாம் . பிறகு ஒரு நல்ல முடிவு ஏற்படும் பண்ணையாரும் முத்தையாவும் நம்மை கைவிட மாட்டார்கள் என்று பேசிக்கொண்டு பிறகு பரந்தாமனிடம் பணத்தை வாங்கிக்கொண்டு அனைவரும் சந்தோசமாக புறப்பட்டார்கள் அப்போது எல்லோரும் கிளம்பினார்கள் அதில் ஒரு பெரியவர் மட்டும் அமர்ந்தபடி இருந்தார் ..

அவரை பார்த்து .. உங்களுக்கு வேறு ஏதாவது வேண்டுமா ஐயா என்றான் பரந்தாமன்.

எனக்கு எதுவுமே வேண்டாம் ஐயா நீங்கள் இந்த ஊருக்கே இவ்வளவு பணத்தை கொடுத்து இருக்கீங்க அதுவே எங்களுக்குப் போதும் ... நடக்கும் பிரச்சனைக்கு எல்லாம் ஒரு சரியான தீர்வு ஏற்பட வேண்டுமென்றால் எனக்கு ஒரு யோசனை பட்டது நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ள வில்லை என்றால் நான் அந்த யோசனையை சொல்கிறேன் என்றார் அந்தப் பெரியவர்.

நடந்திருக்கும் பிரச்சனை எங்களுக்கு மட்டும்தான் தெரியும் . எங்களாலே ஒன்றும் செய்ய முடியாது என்பதால்தன் நாங்கள் அமைதியாக இருக்கிறோம் இவர் என்ன யோசனை சொல்ல போகிறார் என்று நினைத்து பரந்தாமன் சற்று சலிப்போடு என்ன யோசனை சொல்லுங்கள் ஐயா என்று கேட்டான் அந்தப் பெரியவரிடம்.

எங்களுக்கெல்லாம் ஏதாவது பிரச்சனை என்றால் நாங்கள் நம்பிக்கையோடு சாட்டையடி சாமியாரிடம் செல்வோம்
அவர் எங்க பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வை ஏற்படுத்துவார்
அது நோயாக இருக்கட்டும் இல்லை கடன் தொல்லையாக இருக்கட்டும் இல்லை பேய் பிசாசு இருக்கட்டும் இப்படி எந்த பிரச்சினையாக இருந்தாலும் அவர் எங்களுக்கு நல்ல தீர்வை ஏற்படுத்தி இருக்கிறார் .
இது இந்த ஊருக்கே தெரியும் ஆனால் உங்களுக்கு அவர் மேல் நம்பிக்கை இருந்தால் நீங்கள் அவரிடம் சென்று யோசனையை கேளுங்கள் . நிச்சயம் அவர் உங்க பிரச்சனயை தீர்த்து வைப்பார் என்று அந்தப் பெரியவர் சொன்னார்.

பேய் பிசாசாக இருந்தாலும் அவர் அந்த பிரச்சனையை தீர்த்து வைப்பார் என்று அந்தப் பெரியவர் சொன்ன வார்த்தை பரந்தாமனுக்கு சற்று சந்தோசமாக இருந்தது
நல்ல யோசனையாக இருக்கிறதே.
ஒரு முறை இந்த சாட்டையடி சாமியாரை சந்திக்கலாமா என்று யோசித்தான் பரந்தாமன்.


தொடரும்.....
 

Latest posts

New Threads

Top Bottom