Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


RD NOVEL மர்மயோகி - Tamil Novel

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 28

தனக்கு முன்னால் அழகோவியமாக வந்து நின்ற நித்ராதேவியை வைத்த கண் எடுக்காமல் பார்த்தான் ஜெயசிம்மன் .தனக்கு முன்னால் மேடிட்ட வயிற்றோடு நின்றவளை தலை முதல் கால் வரை பார்த்தான் ஜெயசிம்மன் .என்றும் இல்லாத வழக்கமாக தன் கணவன் தன்னை இப்படி உற்றுப் பார்த்ததில் நித்ராதேவி கூச்சத்தில் நெளிந்தாள். ஏதோ ஒரு வெட்கம் எங்கிருந்தோ வந்து அவளை தழுவியது.

அவனது பார்வையை எதிர்கொள்ள முடியாத அவளது கண்கள் நிலத்தை நோக்கி தாழ்ந்தன. " ஏன் என்னை கடித்து தின்பது போல் பார்க்கிறீர்கள்?" என்று சத்தமில்லாத குரலில் வினவினாள் அவள்.

"ஏனோ மற்ற நாட்களை விட இன்று நீ வெகு அழகாக இருப்பது போல் என் கண்களுக்கு தெரிகிறது!" என்றான் ஜெயசிம்மன்

"ஒரு பெண்ணின் பூரண அழகு தாய்மையில் தான் தெரியுமாம். என் வயிற்றில் வளரும் நம் குழந்தை தான் என்னுடைய இந்த அழகிற்கு காரணம் " என்று புன்னகைத்தாள் நித்ராதேவி.

அவளது புன்னகையை ரசித்த ஜெயசிம்மன்" மர்மயோகி நடத்தும் இந்த யாகத்திற்கு நீஅவசியம் வந்தாக வேண்டும் என்று சொல்கிறார் - அதனால் தான் வேண்டா வெறுப்பாக உன்னை அனுப்பி வைக்கிறேன். பத்திரமாக போய் வா நித்ராதேவி" என்றான்.

மர்மயோகியும் அவரது பிரதான சீடனும் கள்வர் கூட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதை நன்றாக அறிந்திருந்தும் அதை வெளியே சொல்ல விரும்பாமல் மவுனமாக நின்றிருந்தாள் நித்ராதேவி. மர்மயோகி திடிரென ஏற்பாடு செய்திருக்கும் இந்த யாகத்தின் பிண்ணனியில் வேறு ஏதோ ஒரு காரணம் மறைந்திருக்க வேண்டும் என்று அவளது உள் மனம் நினைத்தது. ஆனால் அந்த திட்டம் என்னவென்பதை அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஜெயசிம்மன் வேறு அந்த யாகத்தில் அவள் கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியதால் அவள் வேறு வழியின்றி அதில் கலந்து கொள்ள சம்மதித்திருந்தாள்.

"எனக்கும் அந்த யாகத்தில் கலந்து கொள்ள பூரண விருப்பமில்லை. உங்கள் எதிரிகளை ஒழிக்க நடக்கும் யாகம் என்பதால் உங்களுக்காக இதில் கலந்து கொள்கிறேன். போய் வருகிறேன்" நித்ராதேவி அவனிடம் விடை பெற்று நடந்தாள்.

ஜெயசிம்மன் அவளுடன் அரண்மனையின் முகப்பிற்கு வந்தான். அங்கே சிறு படை ஓன்று பல்லக்குடன் காத்திருந்தது. உப தளபதிகளில் ஒருவன் அந்த படைக்கு தலைமை ஏற்றிருந்தான். அவனை தனியாக அழைத்த ஜெயசிம்மன் " கவனமாக அவளை அழைத்து செல். அவளுக்கு ஏதாவது தீங்கு நேர்ந்தால் உன் தலை உடலில் இருக்காது" என்று கடுமையாக எச்சரித்தான்.

"கவலைப்படாதீர்கள். அரசியாரை என் கண்ணின் இமை காப்பது போல் காப்பேன்" என்று தன் உயிரை பணயமாக வைத்து உறுதி கூறினான் அவன்.

"கவனமாக இரு." என்று அவனை எச்சரித்து அனுப்பினான் ஜெயசிம்மன் .

நித்ராதேவியை சுமந்து கொண்டு பல்லக்கு ஒன்று அங்கிருந்து கிளம்புவதை பார்த்தபடி நின்றிருந்தான் ஜெயசிம்மன்.

அதே நேரம் கோவில் மண்டபத்தில் வேள்விக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டு நிலை கொள்ளாமல் நடந்து கொண்டிருந்தான்மர் மயோகி. அவனது மனம்தான் நினைத்தபடியே எல்லா காரியங்களும் நடந்தேற வேண்டுமே என்று தவியாக தவித்து கொண்டிருந்தது.

மண்டபத்தின் பின்புறம் ஆதித்தன் விஜயபாகு வோடும் அவன் அழைத்து வந்திருந்த பார்த்திபனின் நண்பர்களுடனும் தீவிர ஆலோசனையில் இருந்தான்.

"இன்னும் சற்று நேரத்தில் நித்ராதேவி இங்கே வந்து விடுவாள். அவள் பார்வையில் நாங்கள் இருவரும் இருப்பதையே அவள் விரும்புவாள். அதனால் இந்த திட்டத்தின் சூத்ரதாரியான நானோ என் சகோதரனோ இந்த திட்டத்தில் பங்கேற்க முடியாது. நீங்கள் மட்டும் தான் இதில் பங்கேற்க முடியும். அதனால் இந்த திட்டத்தில் எந்த இடையூறும் வராமல் பார்த்து கொள்ளுங்கள். அப்படி ஏதாவது எதிர்பாராத இடையூறுகள் ஏற்பட்டால் அதை நீங்கள் தான் மதியூகத்துடன் சமாளிக்க வேண்டும். உங்கள் உதவிக்கு நாங்கள் வர இயலாது. இதன் பின்னால் நாங்கள் இருப்பதை ஜெயசிம்மன் தெரிந்துகொள்ளவே கூடாது. இந்த திட்டம் எதிர்பாராமல் தோல்வியடைந்து நம் நண்பர்கள் யாராவது அவனிடம் அகப்பட்டு கொண்டு விட்டாலும் கூட எங்களின் பெயரை வெளியே சொல்லி விடக் கூடாது. இதை மட்டும் நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் " என்றான் ஆதித்தன்.

"பார்த்திபனை மீட்க எங்கள் உயிரை கூட கொடுக்க தயார். ஆனால் எங்கள் கழுத்தில் கத்தியை வைத்து கேட்டாலும் உங்கள் பெயரை கூற மாட்டோம். தயவு செய்து எங்களை நம்புங்கள்" என்றான் விஜயபாகு .

"நம்புகிறேன் விஜயபாகு .என்னுடைய நிலைமை தான் உன்னுடையதும். நீயும் வெளிப்படையாக உன்னுடைய நண்பர்களுக்கு உதவி செய்ய முடியாது. யாகத்திற்கு வருபவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யும் தனவந்தன் நீ, அதற்கு தகுந்தது போல் நடந்து கொள். இதில் அதிகமான இடர்பாடுகளை சந்திக்க போகிறவன் நீதான். கடும் துன்பங்களை எதிர்கொள்ளும் திறமை உனக்கு இருக்கிறதா?" என்ற ஆதித்தனின் ஆட்காட்டி விரல் பளியர் குல தலைவனின் மேல் நிலைத்தது.

"இடர்பாடுகளையும் துன்பங்களையும் தினமும் சந்திக்கும் வாழ்க்கை என்னுடையது. ஜெயசிம்மனின் ஆட்சியை அகற்ற எத்தகைய துன்பத்தையும் என் பொருட்டு என் இன மக்கள் ஏற்க தயாராக இருக்கிறார்கள். அடைக்கலமாக வந்தவனை கைவிட்டு விடுவது எங்களின் அறமல்ல" என்றான் பளியர் குல தலைவன்.

"ஜெயசிம்மனை காட்டிற்குள் அழைத்து வருவது தான் எங்களின் நோக்கம். அதற்கான தூண்டில் புழுதான் நீ. உன்னை வைத்து தான் ஜெயசிம்மன் என்னும் பெரிய திமிங்கிலத்தை பிடிக்க போகிறோம். உன் தைரியம் தான் பார்த்திபனை வெளியே கொண்டு வரப்போகிறது. நம் திட்டப் படி பல்லக்கு தயாராக இருக்கிறதா?"

" எல்லாம் தயாராக இருக்கிறது. நித்ராதேவியின் வருகைக்காக காத்திருக்கிறோம்."

"அவள் இங்கே இருக்கும் போது நீங்கள் யாரும் இங்கே இருக்க கூடாது" என்று உத்தரவிட்டான் ஆதித்தன்.

அவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்தனர்.

பல்லக்கில் வந்து கொண்டிருந்த நித்ராதேவியின் மனம் அலை பாய்ந்து கொண்டிருந்தது. இந்த வேள்வி விசயம் அவளது மனதை அரித்து கொண்டிருந்தது. இந்த விசயத்தை சகோதரி என்று உரிமை கொண்டாடிய இருவரும் தன்னிடம் சொல்லாமல் தன் கணவனிடம் சொன்னதில் அவளுக்கு இருவர் மீதும் லேசான சந்தேகம் எழுந்தது. தன்னை வைத்து வேறு ஏதோ ஒரு விளையாட்டை விளையாட சகோதரர்கள் இருவரும் திட்டமிட்டிருப்பதாக அவளுக்கு தோன்றியது. அதனால் இருவரையும் தன் கண் பார்வையிலேயே வைத்திருக்க முடிவு செய்திருந்தாள்.

யாகசாலைக்கு பல்லக்கில் வந்து இறங்கிய நித்ராதேவியை சகோதரர்கள் இருவரும் வாசலுக்கு வந்து வரவேற்றனர்.நித்ரா தேவி பல்லக்கை விட்டு இறங்கினாள்.

அதே நேரம் அரண்மனை உபரிகையில் காவல் பணியில் இருந்த வீரன் ஒருவன் " விஸ்" என்ற சத்தத்தை கேட்டு திடுக்கிட்டான். அது வில்லிலிருந்து அம்பு பாயும் போது வரும் சத்தம் என்பதை அவனது அனுபவத்தின் மூலமாக அவன் அறிவான். அவனது பார்வை அரண்மனை தூண் மேல் நிலைத்தது. அதில் குத்திட்டு நின்ற அம்பில் ஒரு ஓலை தொங்கியது. அதை தான் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் யாரோ எய்திருக்கிறார்கள் என்று நினைத்தவன் அந்த அம்பை பிடுங்கி பார்த்தான். அதில் இருந்த ஓலையின் மேல் "ஜெயசிம்மனின் கண்களுக்கு மட்டும் " என்று எழுதப்பட்டிருந்தது.

அதை உடனடியாக ஜெயசிம்மனிடம் எடுத்து சென்றான் அவன். காவலன் கொடுத்த ஓலையை பார்த்த ஜெயசிம்மன்" இது எங்கிருந்து வந்தது?" என்றான் முகத்தில் கேள்விகுறியோடு.

"தெரியவில்லை மன்னா! நம் அரண்மனை தூண் ஓன்றை குறிபார்த்து இந்த அம்பு எய்யப்பட்டிருக்கிறது. அதை பார்த்த நான் இங்கே அதை கொண்டு வந்தேன்."

"சரி. நீ போகலாம்" என்ற ஜெயசிம்மன் அந்த ஓலையை பிரிந்தான்.

அதில் "நித்ராதேவி எங்களின் வசம் இருக்கிறாள். பார்த்திபனை உயிரோடு விடுவித்தால் மட்டுமே அவள் உயிரோடு உனக்கு கிடைப்பாள். எங்கள் பிரதிநிதி விரைவில் உன்னை சந்திப்பான். விபரீதத்தை முழுதாக உணர விரும்பினால் அரண்மனை உபரிகைக்கு வரவும் " என்றது ஓலை.

ஜெயசிம்மனின் மனம் திடுக்கிட்டது. இப்படி ஒரு விபரீதத்தை அவன் எதிர்பார்க்கவேயில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் நின்றவன் அரண்மனை உபரிகையை நோக்கி நடந்தான். உபரிகையிலிருந்து அவன் பார்த்த போது சற்று தொலைவில் இருந்த காட்டு பகுதியில் நித்ராதேவி பயணம் செய்த பல்லக்கும் அவளுக்கு துணையாக சென்ற காவல் வீரர்களும் பார்த்திபனின் தோழர்களால் வாள்முனையில் சிறைபிடிக்கப்பட்டிருப்பதை பார்த்தான். பார்த்திபனை மீட்க அவனது நண்பர்கள் முயற்சி செய்வார்கள் என்று அவனுக்கு தெரியும்.

ஆனால் பூரண கர்ப்பிணியான தன்னுடைய மனைவியை இப்படி பணயக் கைதியாக பிடித்து வைப்பார்கள் என்று அவன் கனவில் கூட நினைக்கவில்லை. இப்போது தன் மனைவியை உயிரோடு மீட்க வேண்டுமென்றால் பார்த்திபனை அவன் விடுவித்தேயாக வேண்டும். இப்படி ஒரு இக்கட்டான நிலையில் தான் சிக்கி தவிப்போம் என்று அவன் எதிர்பார்க்கவேயில்லை. ஜெயசிம்மன் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்று கொண்டிருக்கும் போதே அந்த கும்பலில் இருந்த ஒரு குதிரை வீரன் தன்னுடைய குதிரையின் தாவி ஏறி அரண்மணையை நோக்கி கிளம்பினான். அவனது முகத்தை ஒரு துணியால் மறைத்து முகமூடி போல் மறைத்திருந்தான்.

ஜெயசிம்மன் அவனை சந்திக்க கீழே வந்தான். குதிரையில் வந்தவனை வாயில் காவலர்கள் தடுக்க முனைந்த போது அவனை உள்ளே விடுங்கள்" என்று இடையிட்டு தடுத்தது ஜெயசிம்மனின் குரல்.வெகு அலட்சியமாக காவலர்களை பார்த்த அவன் தன் குதிரையை நடத்தி கொண்டு ஜெயசிம்மனுக்கு முன்பாக வந்தான். குதிரையிலிருந்து குதித்து இறங்கியவன் ஜெயசிம்மனை நேருக்கு நேர் பார்த்தான்.

"யார் நீ?" என்றான் ஜெயசிம்மன்

அவன் தன்னுடைய முகமூடியை அகற்றினான். அங்கே பளியர் குலத் தலைவன் புன்னகையுடன் நின்று கொண்டிருந்தான்.

"நீயா?" என்றான் ஜெயசிம்மன் அதிர்ச்சியுடன்
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 29

தனக்கு முன்னால் நின்ற பளியர் குலத் தலைவனை அதிர்ச்சியுடன் பார்த்தான் ஜெயசிம்மன் தன்னுடைய ஆளுகைக்கு பயந்து இத்தனை நாட்களாக காட்டில் தன்னுடைய கூட்டத்தோடு மறைந்து வாழ்ந்து கொண்டிருந்த மலைவாசி ஓருவன் இப்போது தன் முன்பாக தைரியமாக வந்து நிற்பதை நம்ப முடியாமல் பார்த்தான் அவன்.

பார்த்திபனுக்கு அடைக்கலம் கொடுத்து ஆதரிப்பவன் பளியர் இனத் தலைவன் என்பதை ஏற்கனவே அறிந்திருந்தான் ெஜயசிம்மன் .அவனையும் அவனது கூட்டத்தையும் காட்டுக்குள் நுழைந்து பிடிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்லவென்று அவனுக்கு நன்றாகத் தெரியும். வைக்கோல் போரில் விழுந்த ஊசியை தேடுவதும் பளியர் குலத் தலைவனை காட்டில் தேடிப் பிடிப்பதும் ஒன்று தான் என்று அவனுக்கு நன்றாக தெரியும். அதனாலேயே அவன் மீது கவனம் செலுத்தாமல் இத்தனை நாட்களாக விட்டு வைத்திருந்தான். ஆனால் அவன் பார்த்திபனை மீட்பதற்காக தன்னுடைய மனைவியான நித்ரா தேவியை பணயக் கைதியாக பிடித்து வைப்பான் என்பதை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

"நீயா" என்று அதிர்ச்சியோடு கேட்ட ஜெயசிம்மனை புன்னகையுடன் பார்த்த பளியர் தலைவன் "ஆம் நானே தான் " என்று பதில் மொழி கொடுத்தான்.

"உன்னை இத்தனை நாட்களாக உயிரோடு விட்டு வைத்தது என்னுடைய தவறுதான்." என்றான் ஜெயசிம்மன் மனதிற்குள் பொருமியபடி.

"துஷ்டனை கண்டால் தூர விலகு என்றொரு தமிழ் பழமொழி உண்டு. அதற்கு இணங்கவே இத்தனை நாட்களாக உன் வழியில் குறுக்கிடாமல் ஒதுங்கி இருந்தேன். எப்போது என்னிடம் அடைக்கலமாக வந்த பார்த்திபனை நீ கைது செய்து சிறையில் தள்ளினாயோ அப்போதே உன் வழியில் குறுக்கிட நான் முடிவு செய்து விட்டேன்."

" ஆனால் அவனை மீட்க நீ தேர்வு செய்த முறை நேர்மையற்றது. ஒரு பெண்ணை பிடித்து வைத்துக் கொண்டு என்னை மிரட்டுகிறாய்"

"நீ மட்டும் என்ன செய்தாய் ஜெயசிம்மா? ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடித்தானே இப்படி ஒரு அரச பதவியில் நீ இப்போது அமர்ந்திருக்கிறாய்? நீ இதை பற்றி பேசலாமா?" என்றான் இழிவான புன்னகை ஒன்றை சிந்திய படிபளி யர் குலத் தலைவன்.

எதிர்பாராத இந்த அவமானத்தால் ஜெயசிம்மனின் முகம் கன்றி சிவந்தது. அரசனாக பதவி ஏற்றதிலிருந்து தான் சொல்லிற்கு எதிரி சொல் கேட்டறியாத ஜெயசிம்மன் இப்போது முதல் முறையாக தன்னை ஒருவன் எதிர்த்து பேசி ஏளனம் செய்வதை முதன்முதலாக கேட்கிறான். அதுவும் ஒரு மலைவாசி தன்னை எதிர்த்து பேசியதை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

" என் மனைவியை விட்டுவிடு"

"நீ பார்த்திபன் என்னும் ஒரு உயிரை விடுதலை செய்தால் நான் இரண்டு உயிர்களை விடுவிப்பேன்"

"இரண்டு உயிர்களா ?"

"ஆமாம். நித்ராதேவியும் அவள் வயிற்றில் வளரும் குழந்தையும் இரண்டு உயிர்கள் தானே? அதுவும் நாட்டை ஆளப்போகும் எதிர்கால மன்னன் வேறு "

"பார்த்திபன் சிறைசாலையில் இருக்கிறான்"

"பொய். அவனை அரண்மனையில் இருக்கும் சிறைச்சாலையில் தான் நீ அடைத்து வைத்திருக்கிறாய். எங்களுக்கு எல்லா இடங்களிலும் தகவல் சொல்ல ஆட்கள் உண்டு என்பதை உனக்கு நினைவு படுத்துகிறேன். இன்னொரு முறை உன் வாயில் பொய் வந்தால் உன் மனைவி உனக்கு உயிரோடு கிடைக்க மாட்டாள். அதைநினைவு வைத்து கொண்டு இனிமேல் என்னிடம் பேசு" என்றான் பளியர் குலத் தலைவன் கறாராக .

"அப்படியானால் அரண்மனை வரை உன் ஆட்கள் ஊடுருவி இருக்கிறார்கள். அவர்கள் நினைத்தால் என்னை எப்போது வேண்டுமானாலும் கொன்று விடுவார்கள் என்று நீ என்னை எச்சரிப்பதாக நான் நினைக்கிறேன்"

"நீ அவர்களை கண்டுபிடிக்கவே முடியாது. மேலும் நீ என்ன நினைக்கிறாய் என்பதை பற்றி எனக்கு துளிக் கூட அக்கரையில்லை. எனக்கு தேவை பார்த்திபன் அவனை உடனே விடுவித்து என்னுடன் அனுப்பு"

"நாடாளும் அரசன் நான். என்னுடைய நிலமையை பார்த்தாயா? ஒரு மலைவாசி கட்டளையிடுவதையெல்லாம் கேட்க வேண்டியதாயிருக்கிறது"

"அந்த வேதனையை பிறகு படலாம். முதலில் பார்த்திபனை விடுவி"

ஜெயசிம்மன் தன் கைகளை தட்டினான். "யாரங்கே ?அந்த தேசவிரோதியை சிறையிலிருந்து விடுவித்து இங்கே கொண்டு வாருங்கள்"

அவனது உத்தரவை நிறைவேற்ற ஆட்கள் விரைந்தார்கள். பளியர் குல தலைவனுக்கு மனதில் ஏராளமான பயம் இருந்தது. எங்கே ஜெயசிம்மன் யாராவது ஒரு வரை கோவில் மண்டபத்திற்கு அனுப்பி வைத்து விசாரித்தால் தங்களின் மொத்த நாடகமும் அம்பலப்பட்டு விடுமே என்று அவன் மனதிற்குள் நடுங்கி கொண்டிருந்தான். ஆனால் அந்த பயத்தை அவன் துளிக் கூட வெளியே காட்டி கொள்ளவில்லை..

சற்று நேரத்தில் அலங்கோலமான நிலையில் கை கால்களில் சங்கிலி பூட்டப்பட்டு அழைத்து வரப்பட்டான் பார்த்திபன். எதிரிகள் அவனை அடித்து துன்புறுத்தியதன் அடையாளமாக அவனது மேனியிலும் முகத்திலும் ஆங்காங்கே ரத்த காயங்கள் காணப்பட்டது.பளியர் குல தலைவனை பார்த்ததும் பார்த்திபனின் முகம் மலர்ந்தது.

பார்த்திபனை பார்த்ததும் அவனை ஓடிச் சென்று கட்டியணைத்த தலைவன்" பார்த்தி பா" என்றான்.

அவனை ஆரத் தழுவி கொண்ட பார்த்திபன்" எனக்கு ஓன்றும் இல்லை. நான் நலமாகத்தான் இருக்கிறேன்" என்றான்.

"என் நண்பன் பயணக்க நல்லதாக ஒரு குதிரை வேண்டும். உடனே ஏற்பாடு செய்" என்றான் பளியர் குல தலைவன் ஜெயசிம்மனை பார்த்து.

"முட்டாள்களே. இங்கே என்ன வேடிக்கை?இங்கேயிருந்து போகும் வரை இவர்தான் உங்கள் மன்னர் என்று நினைத்து கொள்ளுங்கள். அவன் கேட்பதை உடனே கொண்டு வாருங்கள்" என்று தன் ஆட்களை நோக்கி இரைந்தான் ஜெயசிம்மன்.

சில நிமிடங்களில் அவனது உத்தரவுக்கு இணங்க ஒரு குதிரை கொண்டு வரப்பட்டது. "பார்த்திபா' உன்னால் இந்த குதிரையில் பயணம் செய்ய முடியுமா?" என்றான் பளியர் குல தலைவன்.

"கொஞ்சம் களைப்பாக இருக்கிறேன். ஆனால் பயணம் செய்ய தகுந்த நிலையில் தான் என் உடல் நிலை இருக்கிறது" என்றான் பலவீனமான குரலில் பார்த்திபன்.

"குதிரையில் ஏறுகிறாயா? இல்லை என்னுடைய உதவி தேவையா?" என்றவனை புன்னகையுடன் பார்த்தவன்" இல்லை. என்னால் குதிரையில் ஏற முடியும் " என்றான்.

பார்த்திபன் குதிரையில் ஏறியதும் அதன்பிடறி மயிரை பிடித்தான் ஜெயசிம்மன்

கேள்வி குறியோடு அவனைப் பார்த்தான் பளியர் குல தலைவன்.

"நான் சொன்னபடி இவனை விடுவித்து விட்டேன். என் மனைவியை என்னிடம் ஒப்படைத்துவிடு" என்றான் ஜெயசிம்மன்

"கவலைப்படாதே. நாங்கள் பாதுகாப்பான தொலைவிற்கு சென்ற பிறகு என் ஆட்கள் அவளை விடுதலை செய்வார்கள்" என்ற பளியர் குல தலைவன் குதிரையை தட்டினான். இருவரும் குதிரையில் அங்கிருந்து கிளம்பினர்.

" என் கண் முன்பாகவே என் விரோதியை மீட்டு செல்கிறாய். அதற்கான விலையை விரைவிலேயே கொடுப்பாய்" என்று உறுமினான் ஜெயசிம்மன்

அவனுக்கு பதில் எதையும் சொல்லாமல் இருவரும் குதிரைகளை விரட்டினர். பல்லக் கை சுற்றி இருந்த பார்த்திபனின் நண்பர்கள் அவன் ஜெயசிம்மனின் பிடியிலிருந்து தப்பி செல்வதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன் " நல்ல வேளை ஜெயசிம்மன் பல்லக்கில் இருக்கும் தன் மனைவி நித்ராதேவியை பார்த்தே தீர வேண்டும் என்று அடம் பிடிக்கவில்லை" என்றான்.

"ஆமாம்!நம் நண்பர்கள் பாதுகாப்பான தொலைவிற்கு சென்றதும் நாமும் இங்கிருந்து நழுவி விட வேண்டும். ஜெயசிம்மனின் ஆட்கள் நம்மைத் தான் முதலில் பிடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். நம் குதிரைகள் தயாராக இருக்கின்றனவா?"

"குதிரைகளை மறைவில் கட்டி வைத்திருக்கிறோம். நாம் இங்கிருந்து கிளம்பலாம். இங்கே வந்து சேரும் ஜெயசிம்மன் காலியான பல்லக்கை பார்க்கும் காட்சியை கற்பனை செய்து பார்க்கிறேன். அவனது முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பதை எண்ணி பார்த்தாலே என் மனதில் சிரிப்பு கொப்பளிக்கிறது"

"ஓரே ஒரு காலி பல்லக்கை வைத்து தான் நினைத்ததை சாதித்து விட்டான் அந்த மர்மயோகி. அவர்கள் இருவரையும் நாம் சாதாரண ஆட்கள் என்று நினைத்து விட்டோம். நம் கணக்கு தப்பு கணக்காகி விட்டது.இனியாவது பார்த்திபன் அவர்களின் பேச்சை ஆலோசனையை கேட்டு நடக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை. அப்படி நடந்தால் இவனது ஆட்சி முற்றுபெறும். நமக்கும் நல்லதொரு விடியல் பிறக்கும் "

அரசாங்க உடையணிந்த வீரர்கள் தங்களின் உடைகளை களைந்து விட்டு மறைவில் இருந்த குதிரைகளை எடுத்துக் கொண்டு சிட்டாகப் பறந்தனர். தன் அரண்மனை வீரர்களுடன் ஜெயசிம்மன் அவர்களை பிடிக்க விரைந்து வந்து கொண்டிருந்தான். அவன் அந்த இடத்தை நெருங்கிய போது அங்கே ஒரே ஒரு பல்லக்கு மட்டும் காலியாக கிடப்பதை பார்த்தான். அதில் நித்ராதேவி இல்லாததை கண்ட ஜெயசிம்மன் மிகுந்த குழப்பமடைத்தான். எதிரிகள் குதிரைகளில் தப்பி ஓடுவதை பார்த்தவன் தன் கர்ப்பிணி மனைவியை மீட்டு போகத்தான் விரைந்தோடி வந்தான்.

இங்கோ பல்லக்கு காலியாக கிடக்கிறது. கடத்தப்பட்ட மனைவியையும் காணவில்லை. என்ன நடந்ததென்று புரியாமல் கலங்கி நின்றான் ஜெயசிம்மன் அதே நேரம் யாகத்தில் பங்கேற்று விட்டு ஆரவாரத்தோடு அரண்மனைக்குள் நுழைந்தது நித்ர தேவியின் பல்லக்கு படை.

ஜெயசிம்மனுக்கு தெள்ள தெளிவாக எல்லாம் புரிந்து விட்டது. யாரோ வெகு தந்திரமாக திட்டமிட்டு தன்னை முட்டாளாக்கிவிட்டு பார்த்திபனை மீட்டு கொண்டு சென்று விட்டதை அவன் அப்போது தான் உணர்ந்தான். இந்த திட்டத்தின் சூத்ரதாரி சாதாரண ஆசாமியாக இருக்க முடியாது என்ற து அவனது மனம். வாழ்க்கையில் முதல்முறையாக தன்னை விட திறமைசாலியான ஒருவனுடன் தான் மோதிக் கொண்டிருப்பதை உணர்ந்தான் ஜெயசிம்மன்
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 30

நித்ராதேவி யாகத்தில் பங்கெடுத்து கொள்வதை தெரிந்து வைத்திருந்த எதிரிகள் அதை பயன்படுத்திக் கொண்டு தன்னிடம் கைதியாக இருந்த பார்த்திபனை மீட்டு சென்று விட்டதை மதியுகம் மிகுந்த ஜெயசிம்மன் சட்டென்று புரிந்து கொண்டு விட்டான். பளியர் குல தலைவன் தன்னுடன் பார்த்திபனை மீட்பதை பற்றி பேசிக் கொண்டிக்கும் போது நித்ராதேவி கடத்தப்பட்டதை தான் ஆட்களை அனுப்பி உறுதி செய்து கொள்ளாததை நினைத்து தன்னையே நொந்து கொண்டான் ஜெயசிம்மன் .

தான் இப்படி முட்டாள் தனமாக நடந்து கொண்டு பார்த்திபனை இழந்துவிட்டதை தன் மனைவி தெரிந்து கொள்ள கூடாது என்று அவன் நினைத்தான் ஏற்கனவே கர்ப்பவதியான தன் மனைவி இந்த விசயத்தால் மேலும் மன சலனம் அடைவதை அவன் விரும்பவேயில்லை. அவளுடைய மனகிலேசம் அவளுடைய வயிற்றில் வளரும் தன் குழந்தையின் உடல்நிலையை பாதித்து விடக் கூடாது என்று அவன் நினைத்தான் அதனால் அவன் பார்த்திபன் தன்னிடமிருந்து மீட்டு செல்லப்பட்டதைப் பற்றி வீரர்கள் யாரும் மூச்சு விடக் கூடாது என்று கட்டளையிட்டான்.முக்கியமாக நித்ராதேவியின் காதுகளுக்கு இது சம்மந்தமான ஒரு விசயம் கூட போய் சேர்ந்து விடக் கூடாது என்று உத்தரவிட்டான்.பார்த்திபனையும் பளியர் குலத் தலைவனையும் அவர்களால் பிடிக்க முடியவில்லை. அதே நேரம் பார்த்திபனின் நண்பர்களும் ஜெயசிம்மனின் கைகளுக்கு அகப்படாமல் அங்கிருந்து காற்றில் கரைந்தது போல் மாயமாகி விட்டிருந்தனர்.பெருத்த ஏமாற்றத்தை சந்தித்தாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் தன் படையை அரண்மனைக்கு திரும்பி செல்ல உத்தரவிட்டான் ஜெயசிம்மன்

அதே நேரம் அரண்மனைக்கு பல்லக்கில் திரும்பி வந்து கொண்டிருந்த நித்ராதேவியின் மனதில் குழப்பம் தலைதூக்கி கொண்டிருந்தது. கள்வர்களான இரண்டு சகோதரர்களும் தன்னை வைத்து ஏதோ ஒரு விசயத்தை சாதிக்க நினைக்கிறார்கள் என்ற சந்தேகம் அவள் மனதில் தோன்றியதால் அவள் யாகம் முடியும் வரை அவள் சகோதரர்களை தன் கண் பார்வையிலேயே வைத்திருந்தாள். அவள் சந்தேகித்தபடி எதுவும் நடக்காதது அவளுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. சகோதரர்கள் இருவரும் அவள் கண் முன்பாக இருந்ததுடன் அவளது சந்தேகத்திற்கு இடமளிக்காமலும் நடந்து கொண்டனர். அவர்கள் அப்படி சாதாரணமாக இருக்க கூடிய ஆட்கள் இல்லை என்று அவளுக்கு மிக நன்றாக தெரியும். ஒரு வேளை மனதில் எந்த திட்டமும் இல்லாமல் உண்மையான அக்கறையோடுதான் இந்த யாகத்தை அவர்கள் நடத்தியிருந்து தான் கான் வீணாக அவர்களை சந்தேகித்து விட்டோமோ என்ற எண்ணம் கூட அவள் மனதில் உதித்தது.

கணவனும் மனைவியும் அவரவருக்கு தெரிந்த உண்மையை ஒருவரோடு ஒருவர் பகிர்ந்து கொள்ளாமல் மறைத்து கொண்டிருந்தனர்.

அதே நேரம் பார்த்திபனும் பளியர் தலைவனும் தங்கள் குதிரைகளை புயல் வேகத்தில் செலுத்தி கொண்டிருந்தனர். பார்த்திபன் எதுவும் பேசாமல் அமைதியாக வருவது பளியர் தலைவனுக்கு வினோதமாக இருந்தது. எப்போதும் எதையாவது பேசிக் கொண்டிருப்பது அவனது வழக்கம். அதில் பெரும்பாலும் நாட்டின் எதிர்காலம் பற்றிய கனவுகளும் திட்டங்களும் இடம் பெற்றிருக்கும். சதா சர்வகாலமும் நாட்டை பற்றி சிந்தனை செய்யும் பார்த்திபன் இப்போது அமைதியாக இருப்பது என்னவோ போலிருந்தது. அந்த ஆழ்ந்த அமைதியை கலைக்க விரும்பினான் பளியர் குல தலைவன். தன் தொண்டையை செருமிக்கொண்டு பேச்சை ஆரம்பித்தான் அவன்.

" என்ன பார்த்தி பா ? ரொம்பவும் அமைதியாக இருக்கிறாய்? சிறைவாசம் உன் உற்சாகத்தை குலைத்து விட்டது போல் தெரிகிறதே?"

"அப்படி எதுவும் இல்லை. நான் நன்றாகத்தான் இருக்கிறேன். ஆமாம் நாம் இப்போது எங்கே போகிறோம்?"

" என்னுடைய வாழ்விடத்திற்கு "

"ஆமாம். என்னை மீட்பதற்காக ஏன் ஜெயசிம்மனின் மனைவியை கடத்தினீர்கள்?"

"அது என்னுடைய திட்டமல்ல. மர்மயோகியின் திட்டம்."

"நினைத்தேன். இவ்வளவு குயுக்தியாக திட்டம் திட்ட உனக்கு தெரியாது என்று நான் யூகித்தேன். அந்த யோகி தான் என் கொலை திட்டத்தை இடையூறு செய்து குலைத்தவன். இப்போது நேர் விரோதமாக என்னை மீட்க உதவி செய்திருக்கிறான்"

"பார்த்தி பா. நான் சொல்வதை சற்று பொறுமையாக கேள். உன் வயதிற்கேற்ற துடிப்போடு நீ செயல்பட நினைக்கிறாய். இங்கே ஜெயசிம்மனை எதிர்க்க இருக்கும் ஒரே ஆள் நீதான். நீயும் அவனிடம் அகப்பட்டு கொண்டு விட்டால் நம் விடுதலை போராட்டத்தை தலைமையேற்று நடத்த வேறு ஆட்கள் இல்லை என்பதையும் நீ கவனத்தில் கொள் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதையும் செய்து விட்டு பிறகு விழிக்காதே. எதற்கும் சற்று பொறுமையாக செயல்படு."

'உன் அறிவுரைக்கு நன்றி நண்பா. நான் ஜெயசிம்மனை கொல்வதில் சற்று அவசரப்பட்டு விட்டேன். அதற்காக வருந்துகிறேன். என் தவறை நான் உணர்ந்து விட்டேன்."

அவனை ஆதுரத்தோடு பார்த்தான் பளியர் இன தலைவன்.

"என்னை மீட்கும் முயற்சியில் உன்னை ஈடுபடுத்தியதன் மூலம் உனக்கு அபாயத்தை தேடி தந்து விட்டார்கள் சகோதரர்கள் இருவரும் .என்னால் உனக்கு வீண் தொல்லை.." என்றான் கவலையுடன் பார்த்திபன்.

"என்னிடம் அடைக்கலம் தேடி வந்த நண்பனுக்காக நான் எந்த அபாயத்தையும் ஏற்றுக்கொள்ள தயாராகவே இருக்கிறேன். ஆபத்தில் உதவி செய்பவன் தான் உண்மையான நண்பன். நான் உன்னுடைய உண்மையான நண்பன். இனி வரும் எந்த இடையூறுகளையும் உன் பொருட்டு சந்திக்கவும் ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருக்கிறேன். என்னைப் பற்றி நீ கவலைப்படாதே" என்றான் பளியர் குல தலைவன்.

அவனது வார்த்தைகளை கேட்ட பார்த்திபனின் இதயம் பனித்தது.
"உன்னை நண்பனாக அடைந்தது நான் செய்த பேறு " என்று கலங்கினான் அவன்.

அதே நேரம் அரண்மனையில் இருந்த நித்ராதேவியை சந்தித்த ஜெயசிம்மன் " வந்து விட்டாயா? யாகம் எப்படி நடந்தது?" என்று விசாரிக்க ஆரம்பித்தான்.

"இப்போது தான் அரண்மனைக்கு வந்து சேர்ந்தேன். யாகம் நல்லபடியாக நடந்து முடிந்தது. ஆமாம் உங்கள் முகம் ஏன் இப்படி கறுத்திருக்கிறது?" என்றாள் அவள்.

"ஓன்றும் இல்லை. " என்ற ஜெயசிம்மன் அவள் கண்களை நேருக்கு நேர் பார்ப்பதை பார்ப்பதை தவிர்த்துவிட்டு வேறு பக்கம் பார்க்க தொடங்கினான். அவனது இலக்கற்ற பார்வையை வைத்து அவன் தன்னிடம் எதையோ மறைக்க முயல்கிறான் என்பதை அறிந்து கொண்டவள் "நீங்கள் என்னிடம் எதையோ மறைக்க முயல்கிறீர்கள்?" என்று தன் மனதில் தோன்றும் கேள்வியை வாய் விட்டு கேட்டு விட்டாள். தன்னுடைய உடல் மொழியை வைத்தே தன்னுடைய உணர்வுகளை புரிந்து கொண்டு விட்ட அவளது பெண்மையின் ஆற்றலை வியந்தவன் உண்மையை சொல்ல முடிவெடுத்தான்.

"அந்த பார்த்திபன் சிறையிலிருந்து தப்பி விட்டான்"

அதை கேட்ட நித்ரா தேவிக்கு தலை சுற்ற ஆரம்பித்தது. தன்னை திடப்படுத்தி கொண்டவள் பலவீனமான குரலில்" எப்படி?" என்றாள்.

உன்னை வைத்து தான் அவன் என்னிடமிருந்து தப்பி சென்றான் என்று சொல்ல விரும்பாத ஜெயசிம்மன் "அரண்மனை சிறையிலிருந்து தப்பியிருக்கிறான். எப்படி தப்பித்தான் என்பதைத் தான் நான் விசாரித்து கொண்டிருக்கிறேன். அவன் தப்பிக்க பளியர் குல தலைவன் பிண்ணனியில் இருந்திருக்கிறான். இப்போது இருவரும் காட்டில் பதுங்கியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவர்களை போனால் போகிறதென்று அப்படியே விட்டு விட முடியாது. ஒரு மரண தண்டனை கைதியை மீட்ட தன் மூலமாக என் ஆளுகைக்கு பளியர் இன தலைவன் சவால் விடுத்திருக்கிறான். அவனை நான் தண்டித்தேயாக வேண்டும். இல்லையென்றால் மக்கள் என்னை ஏளனமாக நினைப்பார்கள். அவர்களால் துணிவு பெற்று என் ஆட்சியை எதிர்க்கவும் அவர்கள் துணிந்து விடலாம். அதனால் அவர்களை தேடிப் பிடித்து கொன்றாக வேண்டும். இல்லையென்றால் என் மீதான பயம் மக்களுக்கு போய் விடும்"

"நான் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் நீங்கள் என் அரு இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். அது நடக்காது போலிருக்கிருதே?" என்றாள் வருத்தத்துடன் நித்ராதேவி.

"கலங்காதே கண்ணே! அவர்களை முட்டை பூச்சி நசுக்குவது போல் நசுக்கி விட்டு விரைவிலேயே உன்னை காண ஓடோடி வந்து விடுவேன் கவலைப்படாதே!" என்றான் ஜெயசிம்மன்

" நீங்கள் இப்போது போகப் போவது போர் களமல்ல. அடர்வனம். அந்த பளியர் குல தலைவனின் பிறப்பிடம் அது. உள்ளங்கை ரேகை போல் அதன் வழித்தடங்கள் அத்தனையும் அறிந்தவன் அவன். அவனை அங்கே தேடி கண்டுபிடிப்பது வெகு கடினம். அவனால் உங்கள் உயிருக்கு ஏதும் ஊறு வந்து விடுமோ என்று அஞ்சுகிறது என் மனம்"

"எனக்கு எதுவும் நேராது. நம் படைகளை தயாராக சொல்லி உத்தரவு கொடுத்து விட்டேன். நாளை காலை நம் படை இங்கிருந்து கிளம்பும். அப்போது சிரித்த முகத்தோடு வெற்றி திலகமிட்டு என்னை வழியனுப்பி வைப்பது உன் கடமை." என்று அவளின் கைகளை பற்றி கொண்டு சிரித்தான் ஜெயசிம்மன் .

அதே நேரம் வனத்திற்குள் பத்திரமாக வந்து சேர்ந்த பார்த்திபனையும் பளியர் குல தலைவனையும் வெற்றி திலகமிட்டு வரவேற்றனர் மலைவாழ் மக்களும் பார்த்திபனின் தோழர்களும்.

அதை ஏற்று கொண்ட பார்த்திபனின் முகம் சுரத்தற்று காணப்பட்டது.

தன் நண்பர்களை தனியே அழைத்தவன் பேச ஆரம்பித்தான்.

"நண்பர்களே! நான் ஜெயசிம்மனை கொல்ல திட்டமிட்டதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அந்த திட்டத்தை மர்மயோகியிடம் சொல்லி என் திட்டத்தை குலைத்திருக்கிறான் ஒரு துரோகி. அவன் யார் என்று எனக்கு உடனடியாக தெரிய வேண்டும். ஒரு துரோகியை நம்முடன் வைத்துக் கொண்டு நாம் நம் இலக்கை அடைய முடியாது. யார் அந்த துரோகி?"பார்த்திபனின் குரல் கணீரென்று ஒலித்தது.

அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 31

தங்களை தனியாக அழைத்து வந்த பார்த்திபன் தன் கூட்டத்தில் ஒரு துரோகி இருப்பதாக குற்றம் சாட்டியதும் அவனது நண்பர்கள் திடுக்கிட்டு போய் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

" நீ வீணாக எங்களின் விசுவாசத்தை சந்தேகிக்கிறாய் பார்த்தி பா!அந்த மர்மயோகி ஜெயசிம்மன் மீதான உன் கொலை முயற்சியை தடுத்து நிறுத்தியது ஏன் தற்செயலாக நடந்திருக்க கூடாது? மர்மயோகிக்கு உன்னுடைய கொலை முயற்சி தெரியும் என்று நீ கூறுவதற்கு ஆதாரம் ஏதாவது இருக்கிறதா?" என்றான் அவன் தோழர்களில் ஒருவன்.

" அவன் மிக சரியான கேள்வியைத்தான் கேட்டிருக்கிறான். நீ வீணாக எங்களை சந்தேகிக்கிறாயோ என்று எனக்கு தோன்றுகிறது. உன் சந்தேகத்திற்கு சரியான ஆதாரம் இருந்தால் அதை இங்கே சமர்பித்து விட்டு நீ எங்களை தாராளமாக சந்தேகிக்கலாம். நாங்கள் அந்த துரோகி யாராக இருந்தாலும் அவனை பிடிக்க உனக்கு உறுதுணையாக இருப்போம்" என்றான் மற்றொருவன்

பார்த்திபனிடம் வெறும் சந்தேகம் மட்டும் தான் இருந்தது. அந்த சந்தேகத்திற்கு அடிப்படையான ஆதாரம் எதுவும் அவனிடம் இல்லை. அதனால் தன் தோழர்களுக்கு பதில் கூறாமல் மவுனமாக இருந்தான். இதற்கு மேலும் தான் மவுனமாக இருந்தால் பார்த்திபன் தன் தோழர்களை சந்தேகிப்பான் என்பதால் எழுந்து நின்ற விஜயபாகு "நான் தான் அந்த கொலை முயற்சியை பற்றி மர்மயோகிக்கு தகவல் தெரிவித்தவன்.. பார்த்திபனின் பார்வையில் மிகப் பெரிய தவறை செய்த அந்த துரோகி நான் தான் " என்றான்.

கூட்டத்தில் சிறு சலசலப்பு எழுந்தது. நீயா என்ற குரல் நாலா திசைகளிலும் எழுந்தது. பார்த்திபனின் முகத்தில் சிறு கேள்வி குறி ஒன்று எழுந்தது.

"நீ என்ன கேட்க போகிறாய் என்று எனக்கு தெரியும். எதற்காக அந்த துரோகத்தை செய்தாய் என்று கேட்க நினைக்கிறாய். சொல்கிறேன். நீ மிகுந்த தன்னம்பிக்கையோடு ஜெயசிம்மனை கொலை செய்து விடலாம் என்று நினைத்தாய். மிகுந்த தன்னம்பிக்கையோடு அதற்காக முயற்சி செய்தாய். அதனால் தான் அந்த முயற்சியை கூட நீ மர்மயோகியிடமும் அவனது சகோதரனிடமும் சொல்லாமல் மறைத்தாய். நான் ஒரு வியாபாரி. ஒரு தொழிலில் நஷ்டத்தையும் எதிர்பார்ப்பவன் உன் முயற்சி துரதிர்ஷ்டவசமாக தோல்வியடைந்து விட்டால் உன்னை காப்பாற்ற எங்களால் நிச்சயமாக முடியாது. இப்போது கூட உன்னை வெற்றிகரமாக மீட்டது மர்மயோகியின் திட்டம் தான். நாங்கள் அந்த திட்டத்தில் வெறும் கருவிகள் தான். அப்படி ஒரு நிலைமை வரும் என்று எதிர்பார்த்து தான் மர்மயோகியிடம் அந்த கொலை முயற்சியை பற்றி தகவல் கூறினேன். இந்த நிமிடம் வரை அந்த தகவலை நான் தான் கூறினேன் என்று மர்மயோகிக்கு தெரியாது. நான் செய்தது தவறு என்று நீ நினைத்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். என்னை மன்னித்து விடு பார்த்தி பா" என்றான் விஜயபாகு .

"நல்ல வேளை.. இப்போதாவது உண்மையை ஒப்புக் கொண்டு விட்டாயே? இல்லையென்றால் நாம் ஒருவரை ஒருவர் துரோகி என்று நினைத்து சந்தேகித்து கொண்டிருப்போம். உன் நல்ல எண்ணத்தை நான் தவறாக புரிந்து கொள்ளாமல் துரோகி என்ற கடுமையான வார்த்தைகளை பயன்படுத்திவிட்டேன். அது உன் மனதை காயப்படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடு நண்பா " என்றபடி விஜயபாகு வை கட்டி தழுவிக் கொண்டான் பார்த்திபன்.

அதே நேரம் அங்கே வந்து சேர்ந்தான் பளியர் குல தலைவன். "நண்பர்களே! அரண்மனையில் இருக்கும் நம் ஆட்களில் ஒருவன் ஜெயசிம்மன் நம்மை பிடிக்க படைகளை திரட்டி கொண்டிருப்பதாக தகவல் அனுப்பியிருக்கிறான். நாளை காலை படை கிளம்பும் என்று நான் நினைக்கிறேன். அதற்குள் நாம் இந்த இடத்தை விட்டு போய் விட வேண்டும். காலியான கிராமம்தான் அவனை வரவேற்க வேண்டும்."

"ஆமாம். நாம் இனியும் தாமதம் செய்யக் கூடாது. இங்கிருந்து நாம் எங்கே செல்ல போகிறோம்?"

"அதைப் பற்றித்தான் நான் யோசித்து கொண்டிருக்கிறேன். நாம் மூட்டை முடிச்சுகளை கட்டிக் கொண்டு கிளம்ப தயாராக இருப்போம். இன்று இரவு நான் இங்கு இரண்டு விருந்தாளிகளை எதிர்பார்க்கிறேன். அவர்கள் தான் இனி நாம் எங்கே போக வேண்டும் என்பதை கூற வேண்டும்"

"யார் அந்த இருவர்?"

"ஆதித்தனும், அரிஞ்சயனும். அவர்கள் தான் பார்த்திபனை மீட்டு வர என்னை தேர்வு செய்தனர். அவர்கள் எதற்காக என்னை தேர்ந்தெடுத்தார்கள் என்று எனக்கு குழப்பமாக இருக்கிறது. அவர்கள் மனதில் வேறு ஏதோ திட்டம் இருப்பதால்தான் என்னை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். பார்த்திபனை மீட்டுவனத்திற்குள் கொண்டு சென்றதும் நாங்கள் அங்கே வருகிறோம் என்று இருவரும் ஒரே குரலில் கூறினார்கள். அவர்கள் சொன்னது தான் இந்த மலை கிராமத்தை காலி செய்வதும்."

"அவர்கள் காரணம் இல்லாமல் எதையும் சொல்ல மாட்டார்கள். நாமும் கிளம்ப தயாராவோம்"

அவர்கள் கிராமத்திற்கு வந்து சேர்ந்த போது அங்கே இருந்தவர்கள் தங்களிடம் இருந்த பொருட்களை முட்டை கட்டி கிளம்ப தயாராக இருந்தனர். அந்த கூட்டத்தில் ஐந்து பேர் மட்டும் கிளம்புவதற்கான எந்த ஆயத்தமும் செய்யாமல் இருப்பதை பார்த்த பளியர் குல தலைவனின் புருவங்கள் உயர்ந்தன. கேள்விக்குறியோடு அவர்களை விழித்துப் பார்த்தவன் அவர்களின் தலைவனை போல் காட்சியளித்தவனை பார்த்து " பிங்களா!கிளம்புவதற்கு தேவையான எதையும் செய்யாமல் ஏன் மரம் போல் நின்று கொண்டிருக்கிறாய்? நமக்கு இங்கிருந்து கிளம்ப நேரம் மிகக் குறைவாகவே இருக்கிறது என்பது உனக்கு தெரியாதா?" என்று சத்தமாக இரைந்தான்.

எப்போதுமே தலைவனின் பேச்சுக்கு எதிர் பேச்சு பேசாத பிங்களன் தன் தலையை தாழ்த்தி கொண்டு அவனை நேரில் பார்ப்பதை தவிர்த்தவனாக "நாங்கள் உங்களோடு வரத் தயாராக இல்லை" என்று சத்தமில்லாமல் முணுமுணுத்தான். பளியர் இனத் தலைவன் பதவி தனக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தவன் தான் பிங்களன். இப்போது வாழ்விடத்தை இழந்து ஓடி ஒளிவதில் ஏகப்பட்ட எரிச்சல் அவனுக்கு.

அவனது வார்த்தைகள் காதில் விழுந்ததும் அவற்றை நம்ப முடியாமல் நின்ற பளியர் குலத் தலைவன் "நீ கூறியது என் காதில் சரியாக விழவில்லை. இன்னொரு முறை கூறு" என்றான் குரலை சற்று உயர்த்தி .

அவனது குரல் உயர்த்தலை கண்டுகொள்ளாத பிங்களன் "இங்கே இருந்து கிளம்ப நாங்கள் தயாராக இல்லை" என்றான் தன் மனதில் ஒருவாறாக தைரியத்தை வரவழைத்து கொண்டவனாக.

"ஜெயசிம்மன் நாளை காலை நம்மை தேடி இங்கே வந்து விடுவான். அவனது கையில் அகப்பட்டு மடிய நினைக்கிறாயா?"

" இல்லை. நான் அப்படி நினைக்கவில்லை. இது நாம் பிறந்து வளர்ந்தவனம். இதை எவனோ ஒரு நகரவாசிக்காக காலி செய்து விட்டு ஓடி ஒளிவதில் எனக்கு விருப்பமில்லை. என் தோழர்களுக்கும் இதே கருத்து தான் "

"பிங்களா!உனக்கு என்ன மூளை குழம்பி விட்டதா? ஏன் இப்படியெல்லாம் சிந்திக்கிறாய்? பார்த்திபன் நம்மிடம் அடைக்கலம் தேடி வந்தவன். அவனை காப்பாற்றுவது நம்முடைய கடமை. அதை நீ மறந்து விட்டாயா?"

"எவனோ ஒருவனுக்காக என்னுடைய இனத்து மக்களை பலி கொடுக்க நான் விரும்பவில்லை.பார்த்திபன் அரசனாக மாறினால் நமக்கு என்ன நன்மை கிடைக்குமோ அதே நன்மையை நாம் ஜெயசிம்மனை ஆதரிப்பதன் மூலமாகவும் அடைய முடியும். பிறகு எதற்காக நாம் ஓடி ஒளிய வேண்டும்?"

" என்ன உளறுகிறாய் பிங்களா? பார்த்திபன் நம் அதி தி. அவனை பாதுகாப்பது நம்முடைய கடமை"

"ஒருவனுக்காக நம் எல்லோருடைய உயிரையும் பணயம் வைக்க துணிந்ததன் மூலம் நீர் ஒரு நல்ல தலைவர் இல்லையென்று வெளிக்காட்டி விட்டீர்கள். ஒரு தலைவன் தன் மக்களை காப்பாற்ற தன்னையும் இழக்கத் தயாராக இருக்க வேண்டும். எவனோ ஒருவனுக்காக நம் எல்லோருடைய வாழ்வையும் நீர் பணயம் வைக்கிறீர்கள். அது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. நான் சொல்வதை கேளுங்கள். பேசாமல் நீங்கள் பார்த்திபனை ஜெயசிம்மனிடம் ஒப்படைத்து விடுங்கள். அவன் உங்களை மன்னித்து விடுவதுடன் உங்களுக்கு தேவையான சலுகைகளையும் தருவான். அது பார்த்திபன் அரசனாக மாறிய பின் கிடைக்கும் சலுகைகளை விட அதிகமாகவே இருக்கும். ஜெய சிம்மனை நேரில் எதிர்கொள்ள உமக்கு தைரியம் இல்லாவிட்டால் உமது சார்பாக நான் பேசுகிறேன்." என்றான் இடக்காக பிங்களன்.

"கேடு கெட்ட யோசனை. இப்படி துரோக எண்ணம் கொண்ட நீ எப்படித் தான் இங்கே எங்கள் நடுவே வந்து பிறந்தாயோ? உன்னை பார்க்கவே எனக்கு பிடிக்கவில்லை. உடனடியாக உன் ஆட்களை அழைத்துக் கொண்டு இங்கிருந்து ஓடி விடு. இதற்கு மேலும் இங்கே நின்று நீ வாயாடினால் என் வாள் உறையில் உறங்காது" என்றான் கடும் கோபத்துடன் பளியர் குல தலைவன்.

"உமது வீம்புக்காகவும் பார்த்திபனுக்காகவும் முட்டாள் தனமாக இனத்தை பலியாடாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள். இனி உம்மிடம் பேசி பயனில்லை நான் இங்கிருந்து என் சகாக்களுடன் கிளம்புகிறேன். போவதற்கு முன்பாக ஒன்றை சொல்கிறேன்.நன்றாக நினைவு வைத்து கொள்ளுங்கள். இந்த முடிவிற்காகவும் என்னை பகைத்து கொண்டதற்காகவும் நீர் நிரம்பவே வருத்தப்பட போகிறீர்" என்ற பிங்களக் தன் ஆட்களுக்கு கண்களை காட்டினான். அவர்கள் ஆளுக்கொரு குதிரையில் ஏறி அங்கிருந்து கிளம்பினர்.
அவர்கள் போவதையே வைத்த கண் எடுக்காமல் பார்த்து கொண்டிருந்த பளியர் குல தலைவனின் உதடுகள் "துரோகிகள்" என்று உச்சரித்தன.

குதிரையை விரட்டி கொண்டிருந்த பிங்களனின் மனதில் ஒரு திட்டம் உருவாகி கொண்டிருந்தது. அவன் ஜெயசிம்மனுடன் இணைந்து கொள்ள தீர்மானித்திருந்தான்.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 32

மலையமான் தன் கையிலிருந்த ஓலையை திரும்ப திரும்ப படித்துக் கொண்டிருந்தான். அது ஜெயசிம்மன் தன்னுடைய மாமனாரும் நித்ராதேவியின் தந்தையுமான மலையமானுக்கு எழுதிய கடிதம். தான் தன்னுடைய அரசியல் எதிரியான பார்த்திபனை தேடி அடர்ந்த வனத்திற்குள் செல்வதாலும் நிறைமாத கர்ப்பிணியான நித்ராதேவி தனியாக இருப்பதாலும் பாதுகாப்பு வேண்டி ஜெயசிம்மன் எழுதி அனுப்பிய ஓலை அது. தன்னுடைய படைகளில் ஒரு பகுதியை யோ அல்லது மலையமானோ நேரில் வர வேண்டும் என்று ஜெயசிம்மன் அதில் கேட்டிருந்தான்.

வயது முதிர்ந்து வயோதிகத்தால் பாதிக்கப்பட்டிருந்த மலையமான் ரத்னபுரிக்கு பயணம் செய்வது சாத்தியம் இல்லை என்பதால் அவன் தன் தளபதிகளில் ஒருவனது தலைமையில் சிறு படை ஓன்றை தன்னுடைய மருமகனின் உதவிக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தான். அதற்கான உத்தரவை பிறப்பித்தவன் அந்த சிறு படையை தன்னுடைய நாட்டின் வழியாக அனுமதிக்கும் படி ரணதீரனுக்கு ஓலை ஒன்றை அனுப்பி வைத்தான்.

அதே நேரம் ரணதீரன் தன்னுடைய கையில் இருந்த ஓலையை படித்துக் கொண்டிருந்தான். அந்த ஓலையை எழுதி அனுப்பியவன் ஆதித்தன். தன் மருமகனுக்கு உதவியாக மலையமான் எப்படியும் படையை அனுப்புவான் என்பதை எதிர்பார்த்திருந்த சகோதரர்கள் இருவரும் அப்படி படையை மலையமான் அனுப்பி வைத்தால் அதை எக்காரணம் கொண்டும் நாட்டை கடந்து செல்ல அனுமதிக்க வேண்டாம் என்று அந்த ஓலையில் ஆதித்தன் எழுதி இருந்தான். அதைப் படித்து முடித்த ரணதீரன் தீவிர யோசனையில் ஆழ்ந்தான்.

அவனது முகச் சுருக்கத்தையும் ஆழ்ந்த யோசிப்பையும் பார்த்த அவனது மந்திரியான ராயர் "அரசே! அப்படி எதைப் பற்றி நீங்கள் தீவிரமாக யோசிக்கிறீர்கள்?" என்றார்.

"ஒன்றுமில்லை ராயரே! நம்முடைய நண்பர்கள் இப்படி ஒரு வேண்டுகோளோடு ஒரு ஓலையை அனுப்பி வைத்திருக்கிறார்கள். எக்காரணம் கொண்டும் மலையமானின் படைகள் நம் நாட்டை கடந்து ரத்னபுரிக்கு செல்ல கூடாது என்று வலியுறுத்தி சொல்லியிருக்கிறார்கள். இன்றோ நாளையோ மலையமான் தன் படைகளை நம் நாட்டின் வழியே அனுமதிக்க சொல்லி ஓலையை அனுப்பி வைப்பான். அவனை நாம் என்ன காரணம் சொல்லி தடுத்து நிறுத்துவது?முகத்தில் அடித்தது போல் உன் படைகளை என் நாட்டின் வழியே அனுமதிக்க முடியாது என்று விநாடி நேரத்தில் கூறி விடலாம். அப்படி கூறுவதன் மூலமாக நாம் வீணாக அவனுடைய விரோதத்தை சம்பாதித்து கொள்வோம். பாம்புக்கும் வலிக்காமல், தடியும் உடையாமல் நடந்து கொள்ள வேண்டிய அவசியம் இப்போது நமக்கு நேர்ந்திருக்கிறது. மதியுக மந்திரியான நீர் தான் இதற்கு ஒரு நல்ல உபாயத்தை கூற வேண்டும்"

தன் மனதில் இருந்த பெருஞ் சுமையை ராயரின் மீது ஏற்றிவைத்து விட்டு நிம்மதி பெருமூச்சு விட்டான் ரணதீரன்.

ரணதீரன் தனது மதியுகத்திற்கு வைத்த சவாலை எண்ணி அயர்ந்து போய் நின்றார் ராயர். திடிரென எழுந்து விட்ட இந்த சிக்கலை எப்படி தீர்ப்பது என்று அவருக்கு புரியவில்லை. தன்னுடைய கைத்தடியை தரையில் தட்டிய படி நடை பயில ஆரம்பித்தார். அரண்மனையின் பளிங்கு தரையில் அவரது கைக்கடி மோதி சீரான இசையை எழுப்பியது.

சட்டென்று அந்த சத்தம் நின்றது.ராயரின் மனதில் ஏதோ ஒரு உபாயம் தோன்றிவிட்டதை அறைக்குள் நிலவிய அமைதி உணர்த்தியது. தன்னை நிமிர்ந்து பார்த்த ரணதீரனை பார்த்து புன்னகைத்த ராயர் "நமக்கு நேரம் மிக நன்றாக இருக்கிறது மன்னா" என்றார் சற்றும் சம்மந்தம் இல்லாமல் .

"சம்மந்தம் இல்லாமல் பேசுகிறீர்களே ராயரே ! சற்று புரியும்படியாக சொல்லுங்கள்" என்றான் குழப்பத்துடன் .

"நம் நாட்டில் இருக்கும் மங்களேஸ்வரி திருக்கோவிலில் திருவிழா தொடங்கி விட்டது. அதை காரணமாக வைத்து நாம் மலையமானை தடுத்து நிறுத்தி விடலாம்."

" என்ன சொல்கிறீர்கள் ராய ரே?"

"ஆமாம் மன்னா. அதை விட்டால் வேறு வழியில்லை. மங்களேஸ்வரியின் திருவிழாவில் கங்கணம் கட்டி விட்டால் யாரும் நாட்டை விட்டு வெளியேறவும் கூடாது. உள்ளே நுழையவும் கூடாது. இது எழுதப்படாத ஒரு சட்டம். இந்த ஒரு காரணம் போதும். மலையமானை தடுத்து நிறுத்த .இதில் கடவுள் சம்மந்தப்பட்டிருப்பதால் மலையமான் நம் மீது பகை கொள்ள மாட்டான். அனுமதிக்காததை தவறாகவும் நினைக்க மாட்டான் "

ரணதீரனின் முகம் மலர்ந்தது. மிகப் பெரிய சிக்கல் ஒன்றை ராயர் வெகு எளிதாக தீர்த்து வைத்துவிட்டதை எண்ணி அவனது மனம் பூரித்தது. "சபாஷ்ராயரே! அற்புதமான யோசனை.உமக்கு உடல் முழுவதும் மூளை. மலையமான் தன் படைகளை அனுமதிக்க அனுமதி கேட்டு ஓலை அனுப்பியதும் இதே காரணத்தை சொல்லி நாம் பதில் ஓலையை அனுப்புவோம்." என்றான் மகிழ்ச்சியோடு ரணதீரன்.

அதே நேரம் ரத்னபுரியின் அரண்மனையில் உலாவிக் கொண்டிருந்தான் ஜெயசிம்மன் அவனுக்கு அருகே நின்ற தளபதி ஒருவன் "மன்னா, படைகள் ஆயத்தமாகிவிட்டன. நாளை காலை சூரிய உதயத்தின் போது படைகள் கிளம்பி விடும்." என்றான்.

அவனை கூர்ந்து பார்த்த ஜெயசிம்மன் "நாம் நம்மை போன்ற சைன்யத்துடன் மோதக் கிளம்பவில்லை. ஒரு காட்டுவாசிக்கும்பலை பிடிக்க கிளம்புகிறோம். உள்ளங்கை ரேகை போல அந்த காடு அவர்களுக்கு வெகு பரிச்சயமானது. நமக்கோ அது திக்கு தெரியாத காடு.அந்த காட்டின் சாதக பாதகங்கள், மேடு பள்ளங்கள், அபாயங்கள் நிலவியல் அமைப்பு இதெல்லாம் அவர்களுக்கு அத்துபடி. நமக்கு எல்லாமே புதியவை. அதனால் நாம் நம்மை காத்து கொள்வதிலேயே அதிக கவனத்தை செலுத்த வேண்டியதிருக்கும். நம்முடைய முயற்சி விழலுக்கு இறைத்த நீர்போல் தோல்வியை கூட தழுவலாம். அந்த காட்டை பற்றி நன்கு அறிந்த ஒருவன் நம்முடன் இருப்பது நமக்கு நல்லது "

"பதகன் ? "

"ஆம். உள்ளூர் வழிகாட்டி ஒருவன் இப்போது தேவை."

"கடைசி நேரத்தில் நாம் பதகனை எங்கே தேடிப் பிடிப்பது?"

"பதகன் இல்லாமல் நாம் அந்த காட்டுக்குள் நுழைவது பாழும் கிணற்றுக்குள் விழுவதற்கு சமம்"

"புரிகிறது. போகும் வழியில் நிறைய பொருள் கொடுத்தால் நமக்கு வழிகாட்ட யாராவது கிடைப்பார்கள்."

"சீக்கிரமாக ஒரு பதகனை பிடியுங்கள்" என்ற ஜெயசிம்மன் அங்கிருந்து நகர்ந்தான். நேராக அரண்மனையின் அந்தப்புரத்திற்குள் நுழைந்தவன் அங்கே இருந்த நித்ராதேவியை பார்த்தான்.

"நீங்கள் அந்த வனத்திற்கு போய்த்தான் தீர வேண்டுமா?" என்றாள் நித்ராதேவி.

"அந்த பார்த்திபன் என் ஆட்சிக்கு தொல்லை. அந்த தொல்லையை அடியோடு தொலைத்து கட்ட விரும்புகிறேன் கண்ணே! தனியாக இருக்கிறோம் என்று கலங்காதே! விரைவில் உன் தந்தையோ அவர் அனுப்பிய படைகளோ உன் உதவிக்கு இங்கே வந்து சேரும்.அதுவரை உன்னுடைய பாதுகாப்பிற்காக இந்த குறு வாளை வைத்து கொள்" என்ற ஜெயசிம்மன் தன் இடுப்பிலிருந்த குறு வாளை அவளிடம் கொடுத்தான்.

"இந்த அரண்மனையில் எனது உயிருக்கு அபாயம் நேரும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?" என்றாள் நித்ராதேவி.

அவளது கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தத்தளித்த ஜெயசிம்மன் வலுக்கட்டாயமாக ஒரு புன்னகையை தனது உதடுகளில் படரவிட்டான்.

"அரச குடும்பத்தாருக்கு உயிரபாயம் இருப்பது இயற்கைதானே? நாம் தான் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்" என்று சமாதானம் கூறி அவளை தேற்றினான்.

" நாளை காலை நான் கிளம்பி விடுவேன். வெகு சீக்கிரத்திலேயே உன்னை காண வந்து சேர்வேன்.அதுவரை என் ராஜ்ஜியத்தையும் குழந்தையையும் பத்திரமாக பாதுகாப்பது உன்னுடைய பொறுப்பு." என்றான்.

"இரண்டுமே உங்களின் சொத்து தானே?"

"அப்படியென்றால் நீ?"

"நானும் உங்களின் உடமைதான் " என்றாள் நித்ராதேவி நாணத்துடன் .

அதை ரசித்த ஜெயசிம்மன் " கவனமாக இரு நித்ரா. கூடிய விரைவில் பார்த்திபனை பிடித்து விட்டு உன்னை சந்திக்க வந்து சேருவேன்" என்ற ஜெயசிம்மன் அங்கிருந்து விடைபெற்று கிளம்பினான்.

தன் அரண்மனையின் உபரிகையிலிருந்து வெளியே நடைபெறும் நிகழ்ச்சிகளை சற்று நேரம் வேடிக்கை பார்த்தான். அவனது வீரர்கள் இரவு உணவிற்கு தயாராகிக் கொண்டிருந்தனர். தான் அது வரை ஒன்று மே சாப்பிடாமல் இருப்பது அவனுக்கு அப்போதுதான் நினைவுக் கு வந்தது.

பார்த்திபனை பிடிக்கும் வரை தன்னால் நிம்மதியாக உறங்கவோ உணவு உண்ணவோ முடியாது என்பதை அவன் நன்றாகவே உணர்ந்திருந்தான். தான் காட்டை முற்றுகையிடப் போவதை அறிந்தும் கூட பளியர் இன தலைவன் பார்த்திபனை மீட்க தைரியமாக எப்படி முன் வந்தான் என்று அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.பளியர் குலத் தலைவனைபலியாடாக மாற்றி தன்னை வீழ்த்த விரிக்கப்பட்ட வலையாக இந்த தந்திரம் இருக்குமோ என்று கூட அவன் நினைத்தான்.

இல்லையென்றால் தலை நகரத்தில் நிலைகொண்டிருக்கும் தன்னை திசை மாற்றி காட்டிற்குள் அலைய வைத்து கவனத்தை திசை திருப்புகிறார்களோ என்ற சந்தேகமும் கூட அவனுக்கு வந்தது. என்ன இருந்தாலும் மனதிற்குள் பளியர் குல தலைவனின் துணிச்சலை எண்ணி வியந்தவன் தன் தலைக்கு தானே தீங்கினை தேடிக் கொண்டு விட்டான் என்று அவன் மீது பரிதாபப்படவும் செய்தான்.

அவனது சிந்தனையை கலைக்கும் படியாக அவனுக்கு முன்பாக வந்து முகமன் கூறி நின்றான் அரண்மனை காவலன் ஒருவன்.

தலையசைத்து அவனது மரியாதையை ஏற்றுக் கொண்ட ஜெயசிம்மன் " என்ன?" என்று கண்களாலேயே வினவினான்.

"தங்களை காண காட்டிலிருந்து சிலர் வந்திருக்கிறார்கள். உங்களை சந்திக்க காத்திருக்கிறார்கள்"

"அவர்களில் யாராவது ஒரு வரை மட்டும் இங்கே அழைத்து வா"

சற்று நேரத்தில் தனக்கு முன்பாக மரியாதை செலுத்தி நின்றவனை கூர்ந்து பார்த்த ஜெயசிம்மன்" யார் நீ? உன் பெயர் என்ன?" என்றான்.

"நான் ஒரு மலைவாசி.என் பெயர் பிங்களன். உங்களுக்கு பதகனாக உதவி செய்ய வந்திருக்கிறேன்" என்றான் பிங்களன்.

ஜெயசிம்மனின் முகம் மலர்ந்தது. கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது என்பது போல் அவனது மனம் மகிழ்ச்சியில் துடித்தது.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 33

கோவில் மண்டபத்தில் இருந்த ஆதித்தனும், அரிஞ்சயனும் தங்களின் இருப்பிடத்தை காலி செய்து விட்டு காட்டுக்குள் கிளம்பி விட்டனர். இருவரும் அடிக்கடி அரண்மனைக்கு போய் வந்ததால் அவர்களை பற்றி யாரும் சந்தேகிக்கவேயில்லை. தன் அண்ணனுக்காக உயர்தர மான ஒரு குதிரையை விலைக்கு வாங்கியிருந்தால் ஆதித்தன். இருவருமே குதிரையில் ஏறிகாட்டை நோக்கி பயணமானார்கள். காட்டின் எல்லையில் அவர்களை வரவேற்க காத்திருந்தான் பளியன் ஒருவன்.

" என்ன நண்பா ? நீ தான் எங்களை அழைத்து செல்ல வந்தவனா?" என்றான் ஆதித்தன்.

"ஆமாம். உங்களை பத்திரமாக அழைத்து வரச் சொல்லி தலைவரின் உத்தரவு. வாருங்கள் போகலாம்" என்றான் அவன்.

மூன்று குதிரைகளும் காட்டு பகுதிக்குள் நடை போட ஆரம்பித்தன. தன் சுற்றுபுறத்தை பார்வையிட்ட அரிஞ்சயன் " இவ்வளவு கடினமான நில பகுதியில் படை நடத்தி வருவது வெகு சிரமம், ஜெயசிம்மன் ஆழம் தெரியாமல் காலை விட்டு விட்டான் என்று நினைக்கிறேன்" என்றான் ஆதித்தன்.

வழிகாட்டி அதை கேட்டு புன்னகைத்தான். "சரியாகத் தான் சூழலை புரிந்து வைத்திருக்கிறீர்கள். நாம் செல்லும் பாதையில் கூட பாதி வழியில் குதிரையிலிருந்து இறங்கி கால்நடையாகத் தான் பயணிக்க வேண்டும். ஆனால் மிகப் பெரும் சைன்யம் இதன் வழியாக வரும் போது அத்தனை இயற்கை வளங்களும் சர்வநாசமாகி விடும் என்று நினைக்கும் போது தான் மனம் வருத்தமடைகிறது."

"இங்கேயிருந்து படைகளின் வருகையை நடமாட்டத்தை கண்காணிக்க ஏதாவது ஏற்பாடு செய்து வைத்திருக்கிறீர்களா?" என்றான் அரிஞ்சயன்

"இல்லை. அதற்கான எந்த ஏற்பாட்டையும் நாங்கள் செய்யவில்லை. அவ்வளவு பெரிய சைன்யம் இந்த காட்டுக்குள் நுழைவதை இயற்கையே காட்டி கொடுத்து விடும். இங்கே காட்டில் சிறு சலனம் ஏற்பட்டாலும் பறவைகள் பறந்து காட்டி கொடுத்து விடும். அந்நியர்களின் வருகையை கண்டால் கத்தும் ஆட்காட்டி குருவி ஓன்று போதும். ஆட்களில் நடமாட்டத்தை கண்டு கொள்ள "

"இவ்வளவு பெரிய சைன்யம் தனக்கான பெரும் உணவு பொருளோடு தான் இங்கே வரும். அவர்களால் இங்கே கொண்டு வர முடியாத ஒரே பொருள் தண்ணீர் தான். இவ்வளவு தூரம் பயணிப்பவர்கள் கண்டிப்பாக தாகத்தால் தவிப்பார்கள். சுட்டெரிக்கும் சூரிய வெளிச்சம் அவர்களின் உடலில் உள்ள நீரை உறிஞ்சி விடும். அதனால் அவர்கள் நீர் நிலைகளை தேடி ஓடியாக வேண்டும்"

"நீங்கள் சொல்வது சரிதான். இதை எங்கள் தலைவரும் யோசித்தார்.அதற்காகத்தான் வழியில் உள்ள நீர் நிலைகளில் ?"

"விசத்தை கலந்து விட்டீர்களா? அது மிகப் பெரிய பாவமாயிற்றே?"

"இல்லை. அதுவெல்லாம் குரூர மனம் படைத்த நகரவாசிகளின் வழக்கம். நாங்கள் வேட்டையாடும் விலங்குகளுக்கே கண்டிப்பான விதிமுறைகள் வைத்திருக்கிறோம். கர்ப்பமான விலங்குகளை 'குட்டி ஈன்ற தாய் விலங்குகளை நாங்கள் கொல்ல மாட்டோம். ஐந்தறிவு, நான்கறிவு பெற்ற விலங்குகளிடமே கருணை காட்டும் நாங்கள் நீர் நிலைகளில் விசம் கலக்கும் கேவலமான செயலை செய்ய மாட்டோம். இறந்து போன விலங்குகளின் உடல் பாகத்தை அந்த நீர் நிலைகளில் போட்டு வைத்திருக்கிறோம். அழுகிய மாமிசங்களின் நாற்றமடிக்கும் அந்த தண்ணீரை யாராலும் குடிக்க முடியாது"

"பரவாயில்லை. பளியர் இன தலைவனும் வியூகம் வகுப்பதில் வல்லவனாகத்தான் இருக்கிறான். சரியான காரியத்தைத் தான் செய்து வைத்திருக்கிறான். அவனது இந்த செயலை நான் மனதார பாராட்டுகிறேன்." என்றான் அரிஞ்சயன்.

"அந்த பாராட்டை அவரை சந்திக்கும் போது நேரிலேயே சொல்லிவிடுங்கள். இனி குதிரைகள் இந்த வழியில் பயணிக்க முடியாது. நாம் கால்நடையாகத் தான் பயணிக்க வேண்டும்" என்றான் வழிகாட்டி.

மூவரும் குதிரையிலிருந்து இறங்கி கரடு முரடான வழியற்ற புதர்களின் வழியாகப் பயணிக்க ஆரம்பித்தனர்.

நீண்ட நேர நடை பயணத்திற்கு பிறகு காலியான ஒரு கிராமத்தை வந்தடைந்தனர். சற்று நேரத்திற்கு முன்புதான் அங்கிருந்தவர்கள் அந்த இடத்தை காலி காலி செய்திருக்க வேண்டும் என்பதை அங்கிருந்த சூழ்நிலைகளின் மூலமாக எளிதாக புரிந்து கொண்டனர் சகோதரர்கள் இருவரும் .

"இப்போது தான் இடத்தை காலி செய்திருப்பார்கள் போல் தெரிகிறது" என்றான் அரிஞ்சயன்

"ஆமாம். சூரியன் மறைவதற்குள் பாதுகாப்பான இடத்தை நோக்கி நகர்ந்து விட வேண்டும் என்பது தலைவரின் திட்டம். அதோ மேற்கு திசையில் ஆதவன் மறையத் துவங்கி விட்டான். நாம் இனி பிசாசுக்குகையை நோக்கித்தான் பயணிக்க வேண்டும். அங்கே தான் என்னை வரச் சொல்லி உத்தரவு கொடுத்திருக்கிறார். "

"அந்த இடம் அதிக தொலைவோ? இருள் வேறு சூழ ஆரம்பித்து விட்டது.இனி கொடிய விலங்குகளின் நடமாட்டம் வேறு துவங்கி விடும். இனி கவனமாக நாம் பயணம் செய்தாக வேண்டும்"

"கவலைப்படாதீர்கள். பிசாசுக்குகை மிக அண்மையில் தான் இருக்கிறது. அது சமவெளியை ஓட்டியே இருப்பதால் நாம் குதிரைகளில் பயணம் செய்து வெகு எளிதாக அங்கே சென்று சேர்ந்து விடலாம்" என்றான் வழிகாட்டி.

அவன் சொன்னதை போலவே சற்று நேர குதிரை பயணத்தில் பிசாசுக்குகையை வந்தடைந்தனர் மூவரும்.

புற்கள் அடர்ந்த சமவெளியின் ஓரத்தில் பாறைகளின் நடுவே யாரும் எளிதில் காணமுடியாத இடத்தில் இருந்தது அந்த குகை.குகைக்கு மேலிருந்த பாறையில் காவல் பணியில் இருந்தவர்கள் மூவரையும் அடையாளம் கண்டுகொண்டனர். மர்மயோகியும் அவனது சீடனும் பிசாசு குகைக்கு வந்து சேர்ந்து விட்ட செய்தி பளியர் குலத் தலைவனின் காதுகளுக்கு கொண்டு செல்லப் பட்டது.

அவர்களை வரவேற்க பார்த்திபனும், பளியர் குல தலைவனும் குகைவாசலுக்கு விரைந்தனர்.

குதிரையிலிருந்து இறங்கிய இருவரையும் பார்த்திபனும் பளியர் தலைவனும் கட்டியணைத்து வரவேற்றனர்.

"மறைந்து கொள்ள சரியான இடத்தைத் தான் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறீர்கள்" என்றான் ஆதித்தன்.

" நாளை காலை வரை தான் இது நம்முடைய தங்குமிடம் .நாளை காலை நாம் வேறிடத்திற்கு சென்றாக வேண்டும்" என்றான் பளியர் தலைவன்.

" ஏன்?"

"ஏனென்றால் அந்த காரணத்தை சொல்ல எனக்கு வெட்கமாக இருக்கிறது. என் ஆட்களில் சிலர் துரோகிகளாக மாறி ஜெயசிம்மனின் பக்கம் சாய்ந்து விட்டனர்" என்ற பளியர் இன தலைவன் பிங்களனுக்கும் தனக்கும் இடையே நடந்த கருத்து மோதல்களை விவரித்தான்.

அதை முகத்தில் எந்த சலனமும் இன்றி கேட்டு கொண்டிருந்தான் ஆதித்தன்.

" அவன் குலம் கெடுக்கும் கோடாரிகாம்பாக மாறி விட்டான். நாளை ஜெயசிம்மனை அவன் தான் இங்கே அழைத்து வரப்போகிறான். இந்த காட்டின் அத்துணை வழிகளும் அவனுக்கு அத்துபடி. நாம் எங்கே சென்று மறைந்தாலும் அவனால் கண்டுபிடித்து விட முடியும்."

"ஜெயசிம்மனுக்கு பயந்து நாம் பின் வாங்கி ஓடப்போவதில்லை. அவனை எதிர்த்து நாம் யுத்தம் செய்ய போகிறோம். அந்த யுத்தத்தின் முக்கிய பகடைகாய் பிங்களன் தான் "

" என்ன சொல்கிறாய் ஆதித்தா? அவனொரு இனத் துரோகி"

அதை நான் மறுக்கவேயில்லை. ஜெயசிம்மன்பிங்களன் இருக்கும் தைரியத்தில் தான் தன்னுடைய சேனைகளை வழி நடத்தி வருகிறான். அவன் காட்டின் உள்ளே வந்ததும் நாம் யுத்தத்தை தொடங்குவோம்.அதை அவன் எதிர்பார்த்தி ருக்க மாட்டான். நாம் ஓடி ஒளிவோம் என்றே அவன் நினைத்திருப்பான். அந்த சண்டையின் நடுவே பிங்களனை நாம் கொன்று விட்டாலோ இல்லை கடத்தி வந்து விட்டாலோ ஜெயசிம்மன் நிர்கதியாகி விடுவான். வழிகாட்ட ஆள் இல்லாத நிலையில் அவன் திரும்பி நாட்டிற்கு செல்லவே முயற்சிப்பான்."

"எனக்கு இன்னமும் ஒரு விசயம் புரியவில்லை. ஜெயசிம்மன் இப்படி காட்டிற்குள் நுழைந்து பார்த்திபனை தேடுவதை விட ஏதேனும் தந்திரம் செய்து பார்த்திபனை நகரத்திற்கு வரவழைத்து கைது செய்து விடலாமே?"

" அவன் பார்த்திபன் தப்பி சென்ற பதட்டத்தில் இருப்பதால் இப்படியான ஒரு சிந்தனை அவன் மனதில் தோன்றாமல் போயிருக்கலாம்"

"இப்போது மட்டும் பார்த்திபன் நாட்டிற்குள் இருந்தால் மக்களை ஜெயசிம்மனுக்கு எதிராக திருப்பி விடலாம்.அதை தடுத்து நிறுத்த ஜெயசிம்மனும் நாட்டினுள் இல்லை. அதிகாரத்தை வைத்திருக்கும் பெண்ணோ பூரண கற்பவதியாக இருக்கிறாள். "

"நல்ல யோசனைதான். இங்கேயிருந்து நாட்டிற்குள் செல்ல குறுக்குவழி ஏதாவது உண்டா?" என்றான் ஆதித்தன்.

"ஒரு வழி இருக்கிறது. ஆனால் அதில் அபாயம் அதிகம் உண்டு. அந்த வழியில் பலா மரங்கள் நிறைய இருப்பதால் அவற்றை தின்ன வரும் கரடிகள் நடமாட்டம் அதிகம் உண்டு. இந்த இரவு நேரத்தில் அந்த பாதையில் பயணிப்பது உயிருக்கு உத்தரவாதம் இல்லாத செயல்"

"ஒரு நாட்டின் அரசனாக ஆசைப்படுகிறவன் அபாயங்களை சந்தித்துத் தானாகவேண்டும். நீ என்ன சொல்கிறாய் பார்த்திபா? அபாயங்களை சந்திக்க ஆசைப்படுகிறாயா?" என்றான் அரிஞ்சயன்

" என் நண்பர்களை அபாயத்தில் விட்டு விட்டு செல்ல என் மனம் ஒப்பவில்லை. மற்ற படி அந்த கரடிப் பாதையில் பயணிக்க எனக்கு எந்த பயமுமில்லை."

"எங்களைப்பற்றி கவலைப்படாதே பார்த்திபா! இந்த நாட்டு நலனுக்காக எங்கள் இனத்தையே பலி கொடுக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். இதோ அரிஞ்சயனும் ஆதித்தனும் எங்களுக்கு பக்கத் துணையாக இருக்கிறார்கள். அவர்களை மீறி எந்த அபாயமும் எங்களை நெருங்கி விடாது. நீ தைரியமாக இங்கிருந்து புறப்படு" என்றான் பளியர் குல தலைவன் -

"எனக்காக பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள் என்று எல்லோருடைய உயிரையும் பணயம் வைக்கிறீர்கள் .என் உயிர் உள்ளவரை இந்த நிகழ்வை நான் மறக்க மாட்டேன். வருகிறேன் நண்பர்களே " என்ற பார்த்திபன் தன்னுடைய சில நண்பர்களை அழைத்து கொண்டு உள்ளூர் வழிகாட்டி ஒருவனுடன் அங்கிருந்து கிளம்பினான். இருள் நடுவே சிறு தீப்பந்த ஒளி ஒன்று பிசாசு குகையிலிருந்து வெளியேறியது.

அதை கண்ணிமைக்காமல் பார்த்து கொண்டிருந்தனர் அனைவரும்
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 34

பார்த்திபன் வழிகாட்டி ஒருவனை அழைத்துக் கொண்டு தனக்கு நம்பகமான சில நண்பர்களையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான். அவன் போவதை பார்த்து கொண்டிருந்த ஆதித்தன் அரிஞ்சயனின் பக்கமாக திரும்பினான்." அண்ணா! இப்போது ஜெயசிம்மன் நாட்டிற்குள் இல்லை. அவன் பார்த்திபனையும் பளி இன தலைவனையும் கொல்வதற்காக வனத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறான். இப்போது இங்கிருந்து செல்லும் பார்த்திபனால் நாட்டு மக்களை தன் பக்கம் திருப்பி ஒரு புரட்சியை ஏற்படுத்திவிட முடியுமா? அங்கே அவனை எதிர்கொள்ள காத்திருப்பது நித்ராதேவி" என்றான்.

"உனது கேள்வியின் நோக்கம் புரிகிறது.ஜெயசிம்மனின் சிறையிலிருந்து தப்பி வந்த பார்த்திபன்ன வீரகாவியத்தின் கதாநாயகனைப் போலத்தான் மக்கள் நினைக்கிறார்கள். அதனால் அவனுக்கு நாட்டுக்குள் ஆதரவு அதிகரித்திருக்கும். அதனால் பார்த்திபன் பின்னால் நிற்க அனைவரும் முன்வருவார்கள். ஒரு பெண் இப்போது அதிகாரத்தில் இருப்பதால் அவளை வீழ்த்துவது எளிது என்ற எண்ணமும் கூட அவனுக்கு ஆதரவாக திரும்பும் "

"இனி புரட்சியை ஏற்படுத்தி வெல்வதும் வீழ்வதும் பார்த்திபனின் சாமர்த்தியத்தில் தான் உள்ளது. நாம் அனுப்பிய ஓலை ரணதீரனின் கைகளுக்கு கிடைத்திகுந்தால் அவன் இந்நேரத்திற்கு மலையமானை தன்னாட்டு வழியே அனுமதித்திருக்க மாட்டான்."

"இன்று இரவு நாம் அனைவரும் நிம்மதியாக உறங்குவோம். நாளை காலை நாம் என்ன செய்வதென்று திட்டமிடுவோம்" என்றான் அரிஞ்சயன்

சகோதரர்களை பின்பற்றி அனைவரும் குகைக்குள் சென்றனர். .

அதே நேரம் காட்டுக்குள் முகாமிட்டு தங்க துவங்கியிருந்தனர் ஜெயசிம்மனின் ஆட்கள் .தன்னுடைய படை வீட்டில் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான் ஜெயசிம்மன் அவனுக்கு எதிரே பணிவாக நின்றிருந்தான் பிங்களன்.

அவனை ஒரு முறை ஏற இறங்க பார்த்தவன் "பிங்களா!உன்னை நம்பித்தான் நான் இந்த காட்டில் அடி எடுத்து வைத்திருக்கிறேன். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற பழமொழிக்கு ஏற்ப பளியர் இன தலைவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டாலும், பதவி மோகத்தாலும் நீ என்னுடன் இணைந்திருக்கிறாய். நீ எனக்கு உதவி செய்தால் உன் ஆசைகள் அனைத்தையும் நான் நிறைவேற்றி வைப்பேன். நீ என்னை வஞ்சிக்க நினைத்தாலோ, இல்லை துரோகம் செய்யலாம் என்று நினைத்தாலோ உன் உயிர் பறவை உடலை விட்டு பறந்து விடும். ஜாக்கிரதை" என்று எச்சரிக்கை செய்தான்.

" மன்னா! நான் உங்களுக்கு துரோகம் செய்ய நினைப்பேனா? என்னை நீங்கள் பரிபூர்ணமாக நம்பலாம்"

"நம்புகிறேன்.நம்மை அவர்கள் நினைத்தது போல் காட்டிற்குள் வரவழைத்து விட்டார்கள். அடுத்தது அவர்களின் வியூகம் என்னவென்று உனக்கு தெரியுமா?"

"இல்னை அரசே! எனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது. அவர்கள் கடைசி நேரத்தில் கிராமத்தை காலி செய்து விட்டு காட்டிற்குள் பின் வாங்கி ஓடுவதில் தான் அவசரம் காட்டினார்கள்."

" என்படையை எதிர்க்க அவர்களால் முடியாது என்று அவர்களுக்கே மிக நன்றாக தெரியும் "

"அது உண்மைதான். ஆனால் அவ்வளவு அவசரம் காட்டினாலும் யாரோ இருவரின் வருகைக்காக பளியர் இனத் தலைவன் காத்திருந்தான்."

"யார் அவர்கள் ?"

" சொன்னால் நம்ப மாட்டிர்கள்"

"பரவாயில்லை. சொல் "

"அவர்கள் மர்மயோகிக்கும் அவரது பிரதான சீடனுக்காகவும்தான் காத்திருந்ததாக என் ஆட்கள் கூறினார்கள்"
அதை கேட்டதும் ஜெயசிம்மனின் முகம் மாறியது.

"மர்மயோகியா?" என்ற ஜெயசிம்மனின் புருவங்கள் முடிச்சிட்டன. அவர்களுக்காக பளியர் குல தலைவன் ஏன் காத்துக் கொண்டிருந்தான் என்ற கேள்வி அவனது மனதில் உதயமானது. தன்னுடைய நலம் விரும்பியான மர்மயோகி தன்னுடைய எதிரிக்கும் நண்பனாக இருப்பதை அவனால் நம்பவே முடியவில்லை.

"ஆம். அவரேதான். அவரும் அவரது சீடனும் இணைந்து தான் பார்த்திபனை மீட்க உதவி செய்தார்கள். பார்த்திபனை மீட்கும் முயற்சியில் பின்னால் இருந்து உதவியவர்கள் அவர்கள் தான். அந்த யாகம் கூட அவர்களின் நாடகம் தான் "

"எனக்கு புரிந்து விட்டது. அந்த பல்லக்கு, பரிவார நாடகமெல்லாம் ஒரு காட்டுவாசியின் மூளையில் உதிக்கக் கூடிய திட்டமாக இருக்காது என்று நான் நினைத்தேன் அது இன்று உண்மையாகிவிட்டது. ஆனால் மர்மயோகி பார்த்திபனும் பளியர் குல தலைவனுக்கும் எதற்காக உதவி செய்கிறான் என்று தான் எனக்கு ெதரியவில்லை. அது எனக்கு தெரியக்கூடாது என்று வேறு நினைத்திருக்கிறான். எல்லாமே மர்மமாக இருக்கிறது." என்றான் ஜெயசிம்மன் .

"அவர்கள் பார்த்திபனை மன்னனாக்க நினைக்கிறார்கள். அதற்கு தடையாக இருக்கும் உங்களை அகற்ற வேண்டும் என்பது தான் அவர்களின் நோக்கம் என்று நினைக்கிறேன்" என்றான் பிங்களன்.

"அவர்களின் பூர்வாசிரம வரலாற்றை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அவற்றை தெரிந்து கொள்ளவும் இப்போது நேரமில்லை. அவர்கள் இப்போது எங்கே இருப்பார்கள் என்று நினைக்கிறாய்?"

"சர்வ நிச்சயமாக சொல்வேன். அவர்கள் இப்போது நாட்டில் இல்லை. காட்டில் தான் இருக்கிறார்கள் என்று "

"அப்படியானால் நல்லது. அவர்கள் நாட்டிற்குள் இருந்தால் நித்ரா தேவிக்கு ஏதேனும் தொல்லைகளை கொடுக்க நேரலாம். ஏற்கனவே இல்லாத ஆளைக் காட்டி பார்த்திபனை மீட்டு சென்ற திறமைசாலிகள் அவர்கள். அவர்கள் இப்போது காட்டிற்குள் இருப்பது கூட நமக்கு அனுகூலம் தான். எல்லா மாங்காய்களையும் ஓரே கல்லில் வீழ்த்தி விடுவதைப் போல் எல்லா எதிரிகளுக்கும் ஓரே இடத்தில் சமாதி கட்டி விடலாம்" என்றான் ஜெயசிம்மன் .

"அனைவரையும் ஒரே இடத்தில் மடக்கி பிடிக்க வேண்டியதில்லை. யாராவது ஒருவர் நம்மிடம் அகப்பட்டாலும் போதும். அவனை பணயமாக்கி மற்றவர்களை பிடித்து விடலாம். நண்பர்களுக்காக உயிரையே கொடுப்பார்கள் அவர்கள் " என்றான் பிங்களன்..

"அதீதமான அன்பும், பாசமும் பலவீனமான குணங்கள்" என்று புன்னகைத்தான் ஜெயசிம்மன்

அதே நேரம் காட்டு வழிப் பாதையில் பார்த்திபன் பயணமாகி கொண்டிருந்தான். அவனும் அவனது குழுவும் வழி காட்டியின் துணையோடு காட்டு பகுதியில் மெல்ல மெல்ல முன்னேறி கொண்டிருந்தனர்.

"பார்த்திபா' எனக்கு இந்த புரட்சி செய்யும் யோசனையே பிடிக்கவில்லை. அதுவும் ஒரு பெண்ணை எதிர்த்து " என்றான் சகாக்களில் ஒருவன்.

" என்ன செய்வது நண்பா ? எனக்கும் இந்த யோசனையில் பிடித்தம் இல்லைதான். ஆனால் சகோதரர்கள் இருவரும் இதை கண்டிப்பாக சொல்லும்போது என்னால் தட்டி கழிக்க முடியவில்லை. ஏற்கனவே ஒரு முறை அவர்களுக்கு தெரியாமல் நான் செய்த காரியம் சித்தி பெறவில்லை. அத்துடன் எனக்கு சிறைவாசத்தையும் பெற்று தந்து விட்டது. அதனால் தான் மறு பேச்சு பேசாமல் அவர்களின் பேச்சுக்கு கீழ்படிந்தேன்." என்றான் பார்த்திபன்.

"அவர்களின் பேச்சை கேட்டு நடப்பதை தவிர வேறு மார்க்கமும் நமக்கு இல்லை என்பது தானே உண்மை?"

"இப்போதைக்கு அவர்கள் சொல்வதை கேட்டு நடப்பதுதான் உசிதமான காரியம் "

வழிகாட்டி" பாதையில் பார்த்து பயணம் செய்யுங்கள். ஏராளமான அட்டை பூச்சிகள் உங்கள் ரத்தத்தை உறிஞ்ச தயாராக இருக்கின்றன. அப்படி அவை உங்களை கடித்து விட்டால் பயந்து விடாதீர்கள். என்னிடம் நிறைய புகையிலை இருக்கிறது. அதை வாயில் போட்டு குதப்பி பூச்சியின் மீது துப்பி விடுங்கள். அவை புகையிலையின் எரிச்சல் தாளாமல் உங்கள் உடவை விட்டு விலகி விடும்" என்று காத்திருக்கும் அபாயத்தை எடுத்து கூறி எச்சரிக்கை செய்தான்.

அந்த சிறு குழு இருட்டின் நடுவே தீப்பந்தத்தின் துணையோடு மெல்ல மெல்ல முன்னேறி கொண்டிகுந்தது. தீப்பந்த வெளிச்சத்தை பார்த்த மான்களும், முயல்களும் கண்களை இமைக்க மறந்து சற்று நேரம் நின்று விட்டு பிறகு குதித்தோடி மறைந்தன.

எல்லோருக்கும் முன்பாக வழிகாட்டியபடி சென்று கொண்டிருந்த வழிகாட்டி திடிரென நின்றான். அவனுக்கு பின்னால் சென்றவர்கள் அவன் மீது முட்டி கொண்டு நின்றனர். "என்னாயிற்று? ஏன் இப்படி நிற்கிறீர்கள்?" என்றான் பார்த்திபன்

"ஓன்றுமில்லை. சற்று நேரத்திற்கு முன்பாக சிறுத்தை ஓன்று இந்த வழியாகப் பயணம் செய்திருக்கிறது. அதன் காலடிதடம் தான் இது "

"அதனால் அபாயம் ஓன்றும் நேராதே?"

"இந்த இருளில் அந்த விலங்கு எங்கே ஓளிந்து கொண்டிருக்கிறதென்று யார் கண்டார்கள்? எதற்கும் தற்காப்பிற்காக ஆயுதங்களை தயாராக கையில் எடுத்து கொள்ளுங்கள். பேசுவதை நிறுத்தி விடுங்கள். எந்த சிறு சலசலப்பு எழுந்தாலும் மிகுந்த எச்சரிக்கையாக இருங்கள். முக்கியமாக தனியாக இருக்காதீர்கள், "என்றான் வழிகாட்டி.

அவர்களின் வேகம் வெகுவாக குறைந்தது .அனைவரும் கையில் ஆயுதங்களுடன் கவனமாக முன்னேறிைனர்.வழியில் எதையோ மிதித்த வழி காட்டியின் முகம் மலர்ந்தது. "அது என்ன?" என்றான் சகாக்களில் ஒருவன்.

"அது புலியின் மலம் "

" என்ன புலியின் மலமா?" என்று மூக்கை பொத்தினான் அவன்.

"அருவெறுக்காதே நண்பா. இந்த பொருள் இப்போது மிகவும் தேவை " என்ற பதகன் ஒரு துணியில் அதை எடுத்து முடிந்து கொண்டான்.

"இது அந்த புலியின் மலமாகத் தான் இருக்க வேண்டும். அதைப் பார்க்கும் போது எனக்கே வயிற்றை கலக்குகிறது"

"எதற்கும் நான் உன்னை விட்டு இரண்டடி தள்ளியே வருகிறேன். நாற்றம் குடலைப் பிடுங்குகிறது"

நண்பர்கள் தங்களுக்குள் கேலியாக பேசிக் கொண்டிருந்தனர். பதகன் திடிரென தன் உதடுகளில் கையை வைத்து பேச வேண்டாம் என்று சைகை செய்தான். அவனுக்கு முன்னால் இருந்த புதரிலிருந்து சிறு சலசலப்பு எழுந்தது. நண்பர்கள் பேச்சை மறந்து மவுனமானார்கள்.

புதரிலிருந்து வெளிவந்த நான்கைந்து கரடிகள் அவர்கள் வழியை மறித்தபடி நின்று கொண்டிருந்தன. தீவட்டி வெளிச்சத்தை பார்த்த கரடிகள் பலத்த குரலில் உறு மத்தொடங்கின.

அந்த சிறு குழு மூச்சு விடவும் மறந்து போய் திகைத்து நின்றது.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 35

கதிரவன் அதிகாலையில் கிழக்கில் உதிக்க ஆரம்பித்தான். விடிய விடிய ஆலோசனைகளில் ஈடுபட்டுகளைத்திருந்த ஆதித்தனும், அரிஞ்சயனும், பளியர் இனத் தலைவனும் எழுந்து கொண்டனர். அவர்கள் மிகவும் சொற்ப நேரமே உறங்கியிருந்தனர்.

குகை மெல்ல மெல்ல பரபரப்படைய ஆரம்பித்தது. மலை வாசிகளிடம் காலையில் உணவு உண்ணும் பழக்கம் இல்லாததால் அடுத்தது என்ன செய்வது என்று தெரியாமல் நின்று தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர். மலைவாழ் மக்களின் தலைவனான பளியர் தலைவன் தன்னுடைய ஆட்களை சிறு சிறு குழுவாக பிரித்து நிறுத்தினான். அவர்களுக்கு தலைவனாக ஒருவனை நியமித்தவன் அவர்களை காட்டில் உள்ள தேன்கூடுகளை ராணி தேனீக்களுடன் எடுத்து வர உத்தரவிட்டான். பிசாசு குகைக்கு வரும் சமவெளி பகுதிகளில் இரண்டடி நீளமுள்ள குழிகள் தோண்டப்பட்டு அவற்றின் உள்ளே சேகரித்து கொண்டு வரப்பட்ட தேன்கூடுகளை வைத்து அவற்றின் மேல் காய்ந்த புற்களை பரப்பி மண்ணை கொண்டு மூடினார்கள்.

வெறும் கண்களில் பார்க்கும் போது குழிகளோ மூடப்பட்ட புது தடயங்களோ தெரியாமல் அந்த சமவெளி பகுதி பழைய தோற்றத்திலேயே இருப்பது போல் காணப்பட்டது. சமவெளி பகுதியில் நடந்து வரும் ஜெயசிம்மனின் படை வீரர்கள் மூடி வைக்கப்பட்ட அந்த குழிகளில் தங்கள் கால்களை விட்டு இடறி விழுந்தால் போதும் உள்ளே இருக்கும் தேனீக்கள் ஆக்ரோசத்துடன் வெளியேறி அவர்களை கொட்டத் துவங்கி விடும். அப்படி அவர்கள் சிதறி ஓட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இப்படி ஒரு ஏற்பாட்டை செய்து வைத்திருந்தனர்.

தங்களின் தற்காப்பு நடவடிக்கைகளில் ஒன்றை செய்து முடித்தவர்கள் கனமான மரத்துண்டுகளை கயிற்றில் கட்டி அவற்றின் மறு முனையை மரத்தின் வேரில் பொருத்தி வைத்திருந்தனர். ஓடி வரும் வீரர்களின் கால் அந்த கயிறு கட்டிய முளைகுச்சிகளில் பட்டு அவற்றை விடுவிக்கும் போது அவை விசையுடன் வீரர்கள் மீது விழும்படி செய்து வைத்தனர். குதிரைகளை வீழ்த்த இரண்டு மரங்களுக்கு இடையே வலுவான வேரை கட்டி வைத்திருந்தனர். எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்துவிட்டு அவர்கள் ஓய்வெடுத்து கொண்டிருந்த போது தூரத்தில் ஜெயசிம்மனின் படைகள் வருவதை சத்தத்தின் மூலமாக உணர முடிந்தது.

பளியர் தலைவன் சுறுசுறுப்படைந்தான். " பெண்கள், வயோதிகர்கள் , குழந்தைகள் மூவரும் இங்கிருந்து கிளம்புங்கள். உங்களை என்னுடைய சில வீரர்கள் பாதுகாப்பான பசுபதி மலைக்கு கூட்டி செல்வார்கள். கிளம்புங்கள்" என்று உத்தரவிட்டான். ஒரு சிறு குழு அவர்களிடமிருந்து பிரியாவிடை பெற்று கிளம்பியது.

அவர்களை அனுப்பி வைத்த பளியர் இன தலைவன் தன் வீரர்களை பார்த்து "தயாராகுங்கள்" என்றான்.

அடுத்த நிமிடம் வில்லிலிருந்து அம்பு மழை பொழியத் கொடங்கியது. திடிரென நிர்மலமான வானம் கருக்கத் தொடங்கியதை கவனித்த பிங்களன்" விரர்களே! அவர்கள் அம்பு மழை பொழியத் துவங்கி விட்டார்கள். கேடயத்தால் உங்கள் உடலை காத்து கொள்ளுங்கள்" என்றபடி தன் உடலை கையிலிருந்த கேடயத்தால் மறைத்து கொண்டான். சற்று நேரத்தில் அந்த பகுதி முழுக்க அம்பு மழை பொழிய ஆரம்பித்தது. தரையெங்கும் அம்புகள் மண்ணில் குத்தி நின்றன.

அதைப் பார்த்து கொண்டிருந்த ஜெயசிம்மன் தன்னுடைய குதிரை படை வீரர்களை முன்னோக்கி செல்ல ஆணையிட்டான். நாற்காற் பாய்ச்சலில் பாய்ந்த புரவிகள் மரங்களிடையே கட்டப்பட்டிருந்த காட்டு கொடிகளில் கால்கள் இடறி நிலை தடுமாறி குப்புற விழுந்தன. மரங்களின் நடுவே இருந்து திடிர் திடிரென கனமான மரத்துண்டுகள் பாய்ந்து வந்து சில வீரர்களை பலி கொண்டன.

அவற்றை ஒரு வாறு சமாளித்தபடி முன்னேறியவர்கள் சமவெளி பகுதிக்கு வந்து சேர்ந்தனர்.

இனி எந்த தடையும் இருக்காது என்று நினைத்த ஜெயசிம்மன் "முன்னேறுங்கள்" என்று உத் தரவிட்டான்.

கையில் ஆயுதங்களுடன் வெகு வேகமாக ஓடி வந்த வீரர்கள் மூடி வைக்கப்பட்ட குழிகளில் காலை விட்டு இடறி விழுந்தனர். அந்த குழிகளில் ஏற்கனவே இருந்த தேனீக்கள் சீற்றத்துடன் வெளியே கிளம்பி கொட்ட ஆரம்பித்தன.

எதிர்பாராத இந்த தாக்குதலால் ஜெயசிம்மனின் படைகள் நிலை குலைந்தன.

அவன் தன்னுடைய படைகளை பின் வாங்க ஆணையிட்டான்.பிங்களனுடன் அவன் ஆலோசிக்க துவங்கினான்.

"நாம் மொத்தமாக கூட்டமாக இருப்பது அவர்களுக்கு தாக்குதல் நடத்த மிகவும் வசதியாக உள்ளது. நாம் சிறு சிறு குழவாக பிரிந்து கொள்வது நமக்கு நல்லது " என்றான் பிங்களன்.

"ஒரு காட்டுவாசி கூட்டம் என்னுடைய சைன்யத்திற்கு தண்ணீர் காட்டுகிறது. இத்தனைக்கும் அவர்கள் சொற்ப கூட்டம். நம்மை விட எண்ணிக்கையிலும் குறைவு ." என்று பொறுமினான்ெஜயசிம்மன் .

"எண்ணிக்கைக்கும் வீரத்திற்கும் சம்மந்தம் இல்லை மன்னரே! இந்த யுத்தத்தில் நாம் வெற்றி பெறுவது கடினம்தான். ஆனால் முயற்சி செய்வதில் தவறில்லை."

"முடிந்த வரை மோதிப் பார்ப்போம். இல்லையென்றால் தலைநகர் திரும்புவோம். அந்த பார்த்திபனை நம் இடத்திற்கு வரவழைத்து பொறி வைத்து பிடிப்போம். ஆழம் தெரியாமல் காலை விட்டு விட்டோமோ என்று எனக்கு தோன்றுகிறது "

"நான் அவர்களின் இனம் தான். அவர்கள் படையெடுப்பை பார்த்து பதறி சிதறி ஓடி பதுங்குவார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் இப்படி முழு அளவிலான ஒரு யுத்தத்திற்கு தயாராக இருப்பார்கள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை."

"நீ சொன்னது போல் வீரர்களை பத்து பேர் கொண்ட தனித்தனி குழுவாக பிரித்து கவனமாக முன்னேறச் சொல் " என்றான் ஜெயசிம்மன்

பிங்களன் அவனது ஆணைப்படி வீரர்களை சிறு சிறு குழுவாகப் பிரித்தான். அவர்களின் குழுவை பார்வையிட்ட ஜெயசிம்மன்" இப்போது வெகு கவனமாக முன்னேறுங்கள் "என்று உத்தரவிட்டான்.

அவர்கள் முன்னேறுவதை தன்னுடைய குதிரையில் உட்கார்ந்தபடி ஜெயசிம்மன் பார்வையிட்டு கொண்டிருந்தான்.

அவனை சுற்றி நின்ற வீரர்களில் பிங்களனின் ஆட்களும் கலந்து நின்றிருந்தார்கள். அவர்களில் ஒருவனைப் பார்த்து பிங்களன் கண்ணை காட்டினான். அதைப் பார்த்து தலையசைத்தவன் தன் இடுப்பில் இருந்த தோல் பையை எடுத்து பிரித்தான். அதிலிருந்த நாகப் பாம்பை குதிரையின் முன் கால்களுக்கிடையே வீசினான்.

கீழே வீசப்பட்ட பாம்பு கோபத்துடன் சீறியது. அதன் சீறல் சத்தத்தை கேட்ட குதிரை தன் காலருகே பாம்பு இருப்பதை தெரிந்து கொண்டது.உடனே மிரண்ட குதிரை அங்கிருந்து தலை தெறிக்க ஓட ஆரம்பித்தது. குதிரை சரிவில் இறங்கி ஓட ஆரம்பித்தபோது தாழ்வாக இருந்த ஒரு மரக்கிளை ஜெயசிம்மனின் தலையில் மோதி அவனை வீழ்த்தியது. தலையில் அடிபட்ட ஜெயசிம்மன் தரையில் மயங்கி சரிந்தான்.

"அய்யோ! அரசர் காயம் பட்டு விட்டார்" என்றபடி ஓடிச் சென்ற பிங்களன் ெஜயசிம்மனின் தலையை தூக்கினான். அனைவரும் அவனை நெருங்கிய போது அதிர்ந்தனர்.ஜெயசிம்மனின் கழுத்தில் குறுவாள் ஓன்றை அழுத்தி பிடித்திருந்தான் பிங்களன்.

"ஆயுதங்களை கீழே போடுங்கள். இல்லையென்றால் இவனது உயிர் தப்பாது" என்றான் பிங்களன் கண்டிப்பான குரலில்.

எதிர்பாராத இந்த நிகழ்வால் அனைவரும் திகைத்து நின்றனர்.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 36

கரடிகள் கூட்டம் ஒன்று தங்களை சுற்றி சூழ்ந்ததும் பார்த்திபனின் நண்பர்கள் திகைத்து போனார்கள். ஆனால் அவர்களை அழைத்து வந்த வழிகாட்டியோ எந்த பயமும் இன்றி இதெல்லாம் வழக்கமான செயல்தானே என்பது போல் இயல்பாக காணப்பட்டான்.

'என்ன நண்பா ?நாம் இப்போது இறந்த பிணங்களை போல் நடிக்க வேண்டுமா?" என்றான் பார்த்திபன்

"அது நல்ல உத்திதான். ஆனால் அது இங்கே பயன்படாது. இதற்கு வேறு ஒரு உபாயம் உள்ளது"

" என்ன அது?"

"என்னிடம் உள்ள புலி மலத்தை பகிர்ந்து நாம் அனைவரும் பூசிக்கொள்வது தான் இப்போது இருக்கும் ஒரே வழி "

" என்ன சொல்கிறாய் நீ?"

"புலி தான் நேரில் வர வேண்டும் என்பதில்லை. புலி நடமாட்டம் இருந்தாலே போதும்.கரடிகள் அந்த வழியிலிருந்து விலகி விடும். இப்போது நம் மீது வீசும் புலி மலத்தின் வாசம் அவற்றை விலக செய்யும் "

"வாசமல்ல நண்பா. நாற்றம் என்று கூறு"

"உலகின் விலை மதிப்பு மிக்க வாசனை திரவியம் உயிர் தான் அதை காப்பாற்ற இப்போது இந்த நாற்றம் தான் உதவ போகிறது "

இப்போது அவர்களுக்கு அவன் பேச்சை கேட்பதை தவிர வேறு வழியில்லை. அனைவரும் அவனிடம் இருந்த புலி மலத்தை பகிர்ந்து உடலில் பூசிக் கொண்டனர். அவன் சொன்னது போலவே அதன் வாசனையை நுகர்ந்த கரடிகள் வழியிலிருந்து விலகி மறைந்தன.

இருந்த ஒரே இடையூறும் விலகிய பிறகு அந்த குழுவின் வேகம் அதிகரித்தது.கிழக்கே சூரியன் உதிக்கும் போது அவர்கள் விஜயபாகுவின் மாளிகைக்கு வந்து சேர்ந்தனர்.அதிகாலையில் கதவு தட்டப்படும் சத்தத்தை கேட்டு கதவை திறந்த விஜயபாகு பார்த்திபனை பார்த்ததும் அன்புடன் தழுவிக் கொண்டான்.

பார்த்திபன் நகரத்திற்குள் வந்து விட்ட சேதி மின்னலை போல் பரவத் ெதாடங்கியது. ஜெயசிம்மனின் படையெடுப்பிற்கு ஏமாற்றத்தை கொடுத்து விட்டு நகரத்திற்குள் நுழைந்த பார்த்திபனின் செயல் மிக பெரிய சாகசமாக பார்க்கப்பட்டது.

அவனுக்கான ஆதரவு மக்களிடம் அதிகரிக்க ஆரம்பித்தது. ஜெயசிம்மனின் பிடியிலிருந்து விடுபட இதை விட நல்ல நேரம் இனிவாய்க்காது என்பதை அனைவருமே உணர்ந்திருந்தனர்.ஜெயசிம்மன் காட்டில் அகப்பட்ட நிலையில் நாட்டை ஒரு பெண் ஆளும் சூழலில் ஆட்சி மாற்றத்தை எளிதில் ஏற்படுத்திவிட முடியும் என்று அனைவரும் நினைக்க ஆரம்பித்தனர்.

இதற்காகவே காத்திருந்தது போல் மக்கள் எழுச்சி தன்னால் எழஆரம்பித்தது. இப்படி ஒரு சந்தர்ப்பத்தை முன்பாக எதிர்பார்த்து கொண்டிருந்த விஜயபாகு ஏராளமான ஆயுதங்களை வாங்கி மறைத்து வைத்திருந்தான். இப்போது அவற்றை தாராளமாகவே மக்களுக்கு வினியோகம் செய்தான்.

ஜெயசிம்மன் இல்லாத நிலையில் நித்ராதேவியை நம்பி களமிறங்க விரும்பாத அரசாங்க தரப்பு ஆட்கள் அனைவரும் அணி மாற ஆரம்பித்தனர். ஒவ்வொரு இடமும் பார்த்திபனிடம் எளிதாக வீழ்ந்துகொண்டிருந்தன.

பார்த்திபன் வெகு தயக்கத்தோடு தான் தன் ஆட்களுடன் அரண்மனைக்குள் நுழைந்தான். அங்கே அவனை எதிர்க்க யாருமே இல்லை. எல்லோரும் நித்ராதேவியை அனாதரவாக கைவிட்டு ஓடிப் போயிருப்பதை அப்போதுதான் அவன் உணர்ந்தான்.

அவன் அந்தப்புரத்திற்குள் நுழைந்த போது மஞ்சத்தில் நித்ராதேவி பிரசவ வலியால் துடித்து கொண்டிருப்பதை பார்த்தான். அவன் கையிலிருந்த வாள் தானாகவே கீழே விழுந்தது.

ஓடிச் சென்று அவளை தாங்கியவன்" பயப்படாதே பெண்ணே! நான் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன். வயிற்று பிள்ளையோடு என் சகோதரியை கொன்ற உன் கணவனை போல் நான் கொடியவனல்ல. யார் அங்கே ?அரண்மனை வைத்தியரை உடனே அழைத்து வாருங்கள்"

" என் கணவருக்கு என்னாயிற்று? " என்றாள் நித்ராதேவி.

உயிர்போகும் வலியிலும் தன் கணவனை பற்றி விசாரிக்கும் அவளது அன்பில் மனம் நெகிழ்ந்து போனான் பார்த்திபன். மனைவி விசயத்தில் ஜெயசிம்மன் நிறைய புண்ணியம் செய்திருக்கிறான் என்று நினைத்த பார்த்திபன் "கவலைப்படாதே சகோதரி. அவனது உயிருக்கு எந்த ஆபத்தும் நேராது" என்றான்.

அரண்மனை வைத்தியர் வந்து சேர்ந்ததும் சில சேடிப் பெண்களை வரவழைத்து துணைக்கு இருக்கச் செய்தவன் அங்கிருந்து வெளியேறினான்.

" இவ்வளவு எளிதில் அதிகார பறிப்பு நடக்கும் என்று நான் நினைத்து கூடப் பார்க்கவில்லை." என்றான் விஜயபாகு.

"இன்னும் ஆபத்து முழுதாக நம்மை விட்டு விலக வில்லை. ஜெயசிம்மன் முதல் ஆபத்து. இரண்டாம் ஆபத்து மலையமான்.இந்த இரண்டு ஆபத்துகளையும் நாம் எதிர்கொள்ள வேண்டும்"

"ஜெயசிம்மனை பற்றி நமக்கு கவலையில்லை. அவனுக்கு நகரத்தில் இருந்துதான் உணவு காட்டுக்குள் போகிறது. அந்த உணவு சங்கிலியை நம் ஆட்கள் துண்டித்து விட்டார்கள். காட்டில் வாழும் கலையை அவன் அறிந்ததில்லை. பளியர்களுக்கும் நமக்கும் இடையில் வகையாக மாட்டிகொண்டான் அவன். அடுத்தது மலையமான் அவனை ரணதீரன் தடுத்து நிறுத்தியிருக்கிறான். ஆனால் வெகு நாட்கள் அதை செய்ய முடியாது"

"ஜெயசிம்மன் இப்படி அகப்பட்டு தவிப்பதை மலையமான் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பான் என்றா நினைக்கிறாய்?"

" சொந்த மருமகன் வேறு. தன் மகளை காப்பாற்றவாவது அவ இங்கே வந்து சேருவான்."

"அவனை எப்படி சமாளிப்பது என்று தான் நான் யோசித்து கொண்டிருக்கிறேன்"

அதே நேரம் காட்டில்

பிங்களன் பணயக் கைதியாக ஜெய சிம்மனை பிடித்து வைத்து கொண்டு அனைவரையும் மிரட்டி கொண்டிருந்தான். அவனது தோழர்களில் ஒருவன் தகவல் சொல்லபளியர் இனத் தலைவனிடம் வந்து சேர்ந்தான்.

"இந்த துரோகி எதற்காக இங்கே வருகிறான்!?" என்றான் பனி இன தலைவன்.

" அவன் துரோகி யல்ல .நம்முடைய நண்பன் தான்" என்றான் ஆதித்தன்.

" என்ன சொல்கிறாய் நீ?"

"பிங்க ளனை உனக்கு எதிராக திருப்பி விட்டது நான் தான். அவன் தான் இப்போது ஜெயசிம்மனை கத்தி முனையில் சிறை பிடித்திருக்கிறான்." என்று புன்னகைத்தான் ஆதித்தன்.

"அவர்கள் உனக்கு எதிராக துரோகிகள் போல நடித்தார்கள். அவர்களை ஜெயசிம்மன் முழுதாக நம்பினான்.விளைவு நம் கை ஓங்கி விட்டது. அவன் வீழ்ந்து விட்டான்"

"நீங்கள் சொல்வதை என்னால் நம்பவே முடியவில்லை."

"பிங்களன் தலைவனுக்கான தகுதியை உடையவன். தன் மக்களை காப்பாற்ற அவனுக்கு இதை தவிர வேறு வழி இருக்கவில்லை"
"நினைத்து பார். பெரும் சைன்யத்துடன் நம்மை தேடி வனத்திற்குள் வரும் அவனை நம்மால் அலைகழிக்க முடியுமே தவிர தவிர்த்து கொள்ள முடியாது. நாம் அவன் கைக்கு அகப்படவில்லை என்ற கோபத்தில் அவன் இந்த வனத்தையே தீ வைத்து அழிக்கவும் நினைக்கலாம். உங்களை மட்டுமல்ல இயற்கையையும், வன விலங்குகளையும் காப்பாற்ற எனக்கு வேறு வழி ெதரியவில்லை. ஜெயசிம்மன் வனத்திற்குள் நுழைய சரியான ஆளைத் தேடுவான் என்று யூகித்தேன். அதனால் தான் பிங்க ளனை உனக்கு எதிராக பேச வைத்து துரோகியாக நடிக்க வைத்தேன். என்னுடைய யுக்தி பலித்து விட்டது. எதிரிக்கு எதிரி நண்பன் என்று நினைத்து பிங்க ளனை ெஜயசிம்மன் தன்னுடன் சேர்த்து கொண்டான் "

" இதை நீங்கள் என்னிடம் சொல்லி விட்டே செய்திருக்கலாம்"

"அரசின் ஒற்றர்கள் எங்கெங்கே ஊடுருவி இருப்பார்கள் என்று யாருக்கு தெரியும் "

"பேசிக் கொண்டிருந்தது போதும். வாருங்கள்.பிங் களனின் உதவிக்கு போகலாம்"

ஆதித்தனின் சிறு படை தைரியமாக ஜெயசிம்மனை நோக்கி நடை போட்டது.

பளியர் இனத் தலைவனை பார்த்த பிங்களனின் முகம் மலர்ந்தது.

"என்னை மன்னித்துவிடுங்கள் தலைவரே! நம் மக்களை காப்பாற்ற எனக்கு இதை தவிர வேறு வழி தெரியவில்லை."

"உன்னை தவறாக நினைத்ததற்கு நீ தான் என்னை மன்னிக்க வேண்டும் பிங்களா. எனக்கு பிறகு தலைவர் பதவிக்கு தகுதியானவன் நீதான். என்னை விடவும் மக்களை நீ அதிகம் நேசிக்கிறாய். நீயும் உன் நண்பர்களும்ேசர்ந்து நம் இனத்தையும் வனத்தையும் காப்பாற்றி விட்டீர்கள் "

பளியர்கள் ஜெயசிம்மனின் ஆட்களிடம் இருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்து நிராயுதபாணியாக்கினார்கள்.

ஜெயசிம்மன் கண் விழிக்கும் தருணத்திற்காக அனைவரும் காத்திருந்தனர்.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 37

ரணதீரன் கோவில் விசேசத்தை காரணம் காட்டி தன் படைகளை நாட்டை கடக்க அனுமதிக்காததால் மலையமான் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்தான். காப்பு கட்டிய பிறகு நாட்டை விட்டு யாரும் வெளியேறவும் கூடாது. உள்ளே வரவும் கூடாது என்ற பழக்கம் தொன்று தொட்டு இருந்து வருவதை அவனும் அறிவான். நிறை மாத கர்ப்பிணியான தன் மகளை தனியாக விட்டு விட்டு தன்னுடைய மருமகன் எதிரியை தேடி வனத்திற்குள் சென்றதை மலையமான் சற்றும் ரசிக்கவில்லை. அவளின் உதவிக்கு தன்னால் போக முடியாத மன உளைச்சல் அவனை மயங்கி விழவைத்தது.

மயங்கி விழுந்த அவனை காண அரண்மனை வைத்தியர் அமுதவாணர் விரைந்து வந்தார். அவனது நாடியை பிடித்து பார்த்து உடல்நிலையை சோதித்து பார்த்தவர்" எதையும் நினைத்து உங்களை குழப்பி கொள்ளாதீர்கள். மனதை அமைதியாக வைத்து கொள்ளுங்கள், "

'அது எப்படி முடியும்? என் மகள் பூரண கர்ப்பவதியாக தனியாக இருக்கிறாள். அவளுக்கு பிறந்த இரண்டு குழந்தைகளும் அற்ப ஆயுளில் மடிந்து விட்டன. அந்த குழந்தையை நான் பார்த்தே யாக வேண்டும்"

"பதட்டம் வேண்டாம். தவறாக எதுவும் நடந்து விடாது. எல்லாம் நல்லபடியாகவே நடக்கும் "

"அப்படித்தான் நானும் நினைத்தேன்.என் பேரப்பிள்ளைகளை பார்த்து விட்டு தலைக்கு மேல் போட்டு பிடித்து அவர்களின் பொக்கை வாய் சிரிப்பை ரசித்து விட்டு வந்த சில நாட்களில் அவர்கள் இறந்த செய்தி வந்து சேர்கிறது .பிறகு எப்படி நான் நல்லவற்றை எதிர்பார்ப்பது?"

" என்ன சொல்கிறீர்கள் அரசே ? உங்களின் பேரப்பிள்ளைகளை தலைக்கு மேல் தூக்கி போட்டு பிடித்தீர்களா?"

"ஆம்"

"நான் சொல்வதை நினைத்து கோபப்படாதீர்கள். உங்கள் பேரப்பிள்ளைகளின் சாவுக்கு நீங்கள் தான் காரணம்"

மலையமான் திகைத்து நின்றான். அவனது உடலும் குரலும் நடுங்கியது. "வைத்தியரே! நீர் என்ன சொல்கிறீர்கள்?"

"நான் சொல்வதை கவனமாக கேளுங்கள் மன்னா. பிறந்த குழந்தையின் மண்டையோடு மிருதுவானது. நீங்கள் குழந்தையை உயரமாக தூக்கி போட்டு பிடிக்கும் போது மூளையில் இருக்கும் மெல்லிய ரத்த குழாய்கள் பாதிப்படையும்.அது மரணத்தில் கொண்டு போய்விடும். எனக்கென்னவோ நீங்கள் தூக்கி போட்டு குழந்தையை கொஞ்சியதால் தான் மரணம் சம்பவித்து இருக்குமோ என்று எனக்கு தோன்றுகிறது."

"வைத்தியரே! நீர் சொல்வதை என்னால் நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. என் பேரப்பிள்ளைகளின் மரணத்திற்கு நானே காரணமாக இருந்து விட்டேன் போலிருக்கிறதே? நான் ஒரு கொலைகாரன் இரண்டு அப்பாவி குழந்தைகளை கொன்றவன். இந்த விசயம் என் மகளுக்கு தெரிந்தால் அவள் என்னைப் பற்றி என்ன நினைப்பாள்.? நான் எப்படி அவள் முகத்தில் விழிப்பேன்? எனக்கு மன்னிப்பே கிடையாது. நான் ஒரு பாவி" என்று அழுது புலம்பிய மலையமான் படுக்கையில் சரிந்து விழுந்தான்.

அதை கண்டு அதிர்ச்சியடைந்த அமுதவாணர் "என்னை மன்னித்து விடுங்கள் மன்னா, என் வைத்திய சாஸ்திர அறிவை உடல் நிலை பலவீனமான உங்களிடம் காட்டியது மிகப் பெரிய தவறு. தயவு செய்து மன அமைதி கொள்ளுங்கள்." என்ற அமுதவாணர் மலையமானின் கையை பிடித்தார். மலையமானின் நாடி நின்று போயிருந்தது.

"அய்யோ மன்னா! உங்கள் சாவுக்கு நானே காரணமாகி விட்டேனே? "என்று கதற ஆரம்பித்தார் அமுதவாணர்.

அதே நேரம் அரண்மனையில் கண் விழித்தாள் நித்ராதேவி அவள் கண் விழிப்பதற்காக காத்திருந்த பார்த்திபன் அவளைப் பார்த்து புன்னகைத்தான்.

"கவலை வேண்டாம் சகோதரி. உன் கவலையை போக்க ஒரு வாரிசு பிறந்து விட்டது. மகாலட்சுமியின் அம்சமாக ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. உன்னோடும் உன் கணவனோடும் எனக்கு எந்த பகையும் கிடையாது. அவன் ஆட்சி செய்யும் முறை தான் தவறு. அதை மாற்றத்தான் நான் முயன்றேன்."

"அண்ணா" என்றாள் நித்ராதேவி கண்ணீருடன் .

"இந்தபிஞ்சின் முகத்தை பார்த்தாவது ஜெயசிம்மனின் மனம் மாறட்டும்"

அதே நேரம் உள்ளே வந்து வணங்கிய வீரன் ஒருவன் "ஒரு துயரமான செய்தி. மன்னர் மலையமான் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் மரணித்துவிட்டார். ஜெயசிம்மன் புரட்சி காரர்களால் கைது செய்யப்பட்டு விட்டார்." என்றான்.

"மனதை திடப்படுத்தி கொள் பெண்ணே.! அடுத்தடுத்து இரண்டு துயரங்கள் உன்னை தாக்கியிருக்கின்றன. அவற்றிலிருந்து மீள உன் குழந்தை தான் உனக்கு உதவ வேண்டும். என்னுடைய நாடு எனக்கு திரும்ப கிடைத்து விட்டது. நீ ஜெயசிம்மனுடன் உன் நாட்டிற்கு திரும்பி செல்லலாம். மலையமானின் நாட்டை ஆள உன் வழியாக அவனுக்கு உரிமை கிடைத்து விட்டது."

அதே நேரம் காட்டில் தலை குனிந்து நின்றிருந்தான் ஜெயசிம்மன். அவனது பார்வை மர்மயோகியின் மீது நிலைத்திருந்தது.

"கடைசியில் நீங்களும் எனக்கு துரோகம் செய்து விட்டீர்கள்" என்றான் அவன் ஆற்றாமையுடன் .

"நாங்கள் உன் நாட்டிற்குள் நுழைந்ததே உன்னை வீழ்த்தத் தான்.அதற்காக இந்த காவி உடையை பயன்படுத்தி கொண்டோம். மக்களை துன்புறுத்தும் உன் ஆட்சியை வீழ்த்த எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை." என்றான் அரிஞ்சயன் .

" இவர்கள் யார் என்று தெரியாமல் பேசுகிறாய். இவர்கள் தான் ஆதித்தனும், அரிஞ்சயனும். அவர்கள் இறங்கிய காரியத்தில் தோல்வியடைந்ததேயில்லை." என்றான் பிங்களன்.

"பிங்களா! என்னை நம்ப வைத்து கழுத்தை அறுத்து விட்டாய்"

"இல்லை. கத்தியை மட்டும் தான் கழுத்தில் வைத்தேன். பெரும் படையுடன் வரும் உன்னை சமாளிக்க எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை."

"' ஜெயசிம்மா உனக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல் வந்திருக்கிறது. உன் மாமனாரும் மறைந்து விட்டாராம்." என்றான் பளியர் இன தலைவன்.

"உனக்கென்று ஒரு நாடு கிடைத்து விட்டது. இந்த நாட்டில் உனக்குபிறந்த இரண்டு குழந்தைகளும் இறந்து விட்டன. இப்போது இருக்கும் இந்த குழந்தையை காப்பாற்றி கொள்ள வேண்டுமென்றால் நீ இந்த நாட்டை விட்டு வெளியேறிந்தான் ஆக வேண்டும்"
என்றான் ஆதித்தன்.

ஜெயசிம்மனுக்கு ஆதித்தன் சொல்வது சரியென்றே தோன்றியது. முகம் தெரியாத அந்த எதிரியை தான் இன்னும் கண்டுபிடிக்க வேயில்லை. அவன் குழந்தையை கொல்ல அரண்மனையில் காத்திருக்கலாம். தன் வாரிசை காப்பாற்ற இந்த நாட்டை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழியேயில்லை என்று அவனுக்கு தோன்றியது. பேசாமல் இந்த நாட்டை விட்டு வெளியேறி விடலாம் என்று அவன் நினைத்தான்.

இரண்டு நாட்களுக்கு பிறகு ஜெயசிம்மன் தனது மனைவியுடனும் குழந்தையுடனும் மாமனாரின் நாட்டை நோக்கி கிளம்பினான். அவனை வழியனுப்பி வைத்த பார்த்திபனிடம் "அண்ணா! என் குழந்தையின் காதணி விழா உங்கள் மடியில் தான் நடைபெற வேண்டும்" என்று வேண்டுகோள் வைத்தாள்.

பார்த்திபன் அதை புன்னகையுடன் ஏற்று கொண்டான். தேர் கிளம்பி செல்வதை பார்த்து கொண்டிருந்த பார்த்திபன் "எங்கே நமது சகோதரர்கள்?" என்றான்.

"அவர்கள் சற்று முன் தான்கள் வர் புரத்தை நோக்கி கிளம்பியிருக்கிறார்கள்," என்றான் விஜயபாகு .

"வந்த வேலை முடிந்தவுடன் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி விடுகிறார்கள்."

"நல்லவருக்கு அடையாளம் சொல்லாமல் கிளம்புவதுதானே?"

கள்வர் புரத்திற்கான பாதையில் குதிரையை விரட்டி கொண்டிருந்த ஆதித்தன் "அந்த குழந்தைகள் எப்படி இறந்தன என்று நமக்கு தெரியவே இல்லையே?" என்றான்.

"நாம் அதை பைராகியிடம் கேட்டு தெரிந்து கொள்வோம். ஜெயசிம்மன் நல்ல தகப்பன். தன் குழந்தையை காப்பாற்றி கொள்ள நாட்டையே விட்டு கொடுத்து விட்டான்"

" எதிர்காலம் சூனியமாகும் போது நிகழ்காலத்தை விட்டு கொடுப்பது தவறில்லை.அது புத்திசாலித்தனமான முடிவு தான். பார்த்திபன் அந்த குழந்தைக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்"

"சரியான நேரத்தில் மலையமான் மறைந்தது தான் விதி "

" எல்லாமே நமக்கு சாதகமாக நடந்து முடிந்து விட்டது"

கள்வர் புரத்தின் பாதையில் இரண்டு குதிரைகள் விரைய ஆரம்பித்தன!
 

New Threads

Top Bottom