Erode Karthik
Active member
- Messages
- 315
- Reaction score
- 71
- Points
- 28
அத்தியாயம் 23
மறுநாள் காலை நடக்கப் போகும் விபரீதம் எதையும் அறியாமல் சூரியன் கிழக்கே உதித்து கொண்டிருந்தது. பார்த்திபன் தான் முன்பே திட்டமிட்டபடி கோபுர மாடம் ஒன்றில் இரவே வந்து ஒளிந்து கொண்டு விட்டான். அவனது கைவசம் ஜெய் சிம்மனின் உயிரைக் குடிக்க இரண்டு அம்புகளும் ஒரு வில்லும் இருந்தன. அவன் மாடத்தில் இருந்து பார்த்ததால் கீழே மக்கள் நடமாட்டம் மிக தெளிவாக தெரிந்தது. அங்கிருந்து குறி வைத்தால் ஜெயசிம்மன் உயிர் தப்புவது மிகக் கடினம் என்பதையும் அவன் உணர்ந்தே இருந்தான். தன் வாழ்நாள் இலட்சியத்தை இன்னும் சிறிது நேரத்தில் அடையப் போவதை நினைத்து அவன் நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தான்.ஜெயசிம்மன் எப்போது வரப்போகிறான் என்று அவன் மனம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.
அதே நேரம் கோவிலில் திரளான மக்கள் கூட்டம் கூடத் தொடங்கியிருந்தது. வாண வேடிக்கைகளுடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகத் தொடங்கின. ஜெயசிம்மனின் வருகைக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்படத் தொடங்கின.
விஜயபாகு தன்னுடைய மாளிகையில் நிலை கொள்ளாது உலாவிக் கொண்டிருந்தான். அவனுக்கு ஏனோ ஜெயசிம்மனை கொல்ல பார்த்திபன் முயற்சி செய்வதும் அதை மர்மயோகியிடம் மறைத்து விட்டு தனியனாக செயல்படுவதும் கொஞ்சமும் பிடிக்கவில்லை. இந்த விசயத்தில் பார்த்திபன் அகப்பட்டு கொண்டு விட்டால் அவனை மீட்க இவர்களைத் தவிர வேறு யாராலும் முடியாது என்பதால் இந்த விசயத்தை எப்படியாவது மர்மயோகியின் காதுகளுக்கு கொண்டு போக விரும்பினான். அதே நேரம் அவன் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளவும் விரும்பவில்லை. அதனால் நடக்கப் போகும் கொலை முயற்சியை பற்றி விவரமாக எழுதி ஒரு ஓலையை தயார் செய்தான்.
அதை மடியில் வைத்துக் கொண்டவன் மாளிகையின் வாசலில் நின்றபடி இதை யாரிடம் கொடுத்து மர்மயோகியிடம் சேர்ப்பிப்பது என்று யோசித்தபடி நின்று கொண்டிருந்தான். அவனது நல்ல நேரமோ என்னவோ ஒரு சிறுவன் அழுதபடி தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தான். அவனைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்த விஜயபாகு அவனை அருகே அழைத்தான்.
"சிறுவனே ! மகிழ்ச்சியான பண்டிகை காலத்தை கொண்டாடாமல் எதற்காக இப்படி அழுது கொண்டிருக்கிறாய்?" என்றான்.
தன்னைப் பார்த்து அன்புடன் பேசிய விஜயபாகு வை சிறுவனுக்கு ரொம்பவே பிடித்து போய்விட்டது. தன் அழுகையை ஒருவாறு நிறுத்தியவன்" என் தந்தையிடம் கருப்பட்டி மிட்டாய் கேட்டேன். அதிகமாக தின்றால் தடுமன் பிடித்துக் கொண்டு விடும் என்று எனக்கு வாங்கி தர மறுக்கிறார். என் நண்பர்கள் பண்டிகையை கொண்டாட விதவிதமான இனிப்பு பல காரங்களை தின்று கொண்டிருக்கிறார்கள். நான் வெறும் வாயுடன் அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன்"
"அவ்வளவுதானா விசயம்?அழாதே.! உனக்கு தேவையான தின்பண்டங்களை வாங்க நான் காசு தருகிறேன்."
"எவ்வளவு தருவீர்கள்?"
"ஒரு பொற்காசு தருகிறேன். உனக்கு அதில் திருப்தி தானே?"
சிறுவன் மகிழ்ச்சியுடன் தலையை அசைத்தான். "ஆனால் அதற்கு முன்னால் நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்"
"நான் உங்களுக்கு உதவ வேண்டுமா? என்னால் உங்களுக்கு என்ன உதவி செய்ய முடியும்?"
"சின்ன உதவி தான்.சுந்தரேஸ்வரர் கோவில் மண்டபத்தில் தங்கியுள்ள மர்மயோகியை தெரியுமல்லவா ? அவரிடம் நான் கொடுக்கும் ஓலையை கொடுத்து விட வேண்டும். அந்த ஓலையை நான் தான் கொடுத்தேன் என்று நீ சொல்லி விடக் கூடாது."
"அதனாலென்ன? அப்படியே செய்து விடுகிறேன்." என்றான் சிறுவன் மகிழ்ச்சியுடன் .
தான் மறைத்து வைத்திருந்த ஓலையை எடுத்த விஜயபாகு அதை சிறுவனிடம் கொடுத்தான். அதை வாங்கி கொண்டு விட்ட சிறுவன் "அந்த பொற்காசு?" என்று தலையை சொரிந்தான்.
"ஓ! அதை நான் மறந்து விட்டேன்." என்ற விஜயபாகு தன் மடியிலிருந்த ஒரு பொற்காசை சிறுவனிடம் கொடுத்தான்.
அதை வாங்கி கொண்ட சிறுவன் மகிழ்ச்சியுடன் கோவிலை நோக்கி ஓடினான். அவன் ஓடுவதை பார்த்து கொண்டிருந்த விஜயபாகு திருப்திக்கு அடையாளமாக தன் தலையை ஆட்டி கொண்டான். எப்படியோ துறவியிடம் தகவலை சொல்லி விட்டோம் என்ற திருப்தியில் அவன் மனம் மகிழ்ந்தது. இனி துறவியாயிற்று, பார்த்திபனாயிற்று, ஜெயசிம்மனாயிற்று. இனி தனக்கும் எதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று நினைத்தவன் அதன் அடையாளமாக நீண்ட பெருமூச்சு ஓன்றை வெளியேற்றினான்.
தனக்கு முன்பாக வந்து நின்ற சிறுவனை கேள்விக்குறியோடு பார்த்தான் ஆதித்தன்" என்ன தம்பி? உனக்கு என்ன வேண்டும்?" என்று அன்புடன் கேட்டான் ஆதித்தன்.
"நான் மர்மயோகியை உடனே பார்க்க வேண்டும். அவர் எங்கே?" என்றான் பெரிய மனித தோரணையுடன்.
அவனது தோற்றமும், பேசும் முறையும், பெரிய மனித தோரணையும் ஆதித்தனுக்கு சிரிப்பை வரவழைத்தன.
"அவர் கிணற்றடிக்கு குளிக்கப் போயிருக்கிறார். ஏன் தம்பி என்ன விசயம்? எதற்காக நீ அவரைப் பார்க்க நினைக்கிறாய்?" என்றான் ஆதித்தன் தன் சிரிப்பை அடக்கி கொண்டு.
"நான் அவருக்கு ஒரு ஓலை கொண்டு வந்திருக்கிறேன். அதை அவரிடம் தான் தர வேண்டும்" என்றான் சிறுவன்
அதுவரை சிறுவனை பார்த்து சிரித்துக் கொண்டிருந்த ஆதித்தனின் சிரிப்பு அவன் ஓலை என்று சொன்னதும் சட்டென்று நின்றது. இது ஏதோ விவகாரமான விசயம் போலிருக்கிறதே என்று நினைத்தவன்" அதை அவரிடம் தான் கொடுக்க வேண்டுமா? ஏன் என்னிடம் கொடுக்க கூடாதா?" என்றான்.
"என்னிடம் ஓலையை கொடுத்தவர் அதை மர்மயோகியிடம் மட்டும் தான் கொடுக்க வேண்டும் என்று கண்டிப்பாக சொல்லியிருக்கிறார். அதை நான் மீற முடியாது" என்றான் குழப்பத்துடன் சிறுவன் அவனுக்கு இப்போது ஓலையை யாரிடம் கொடுப்பது என்ற குழப்பம் பிறந்திருந்தது.
"யார் அவர்?" என்றான் ஆதித்தன்
"அதை நான் உங்களிடம் கண்டிப்பாக சொல்ல மாட்டேன்."
"பரவாயில்லை. சொல்வதும் சொல்லாததும் உன்னுடைய இஷ்டம். நீ என்னிடம் ஓலையை கொடுத்தால் நான் அதைப் பிரித்துக் கூட பார்க்காமல் அப்படியே மர்ம யோகியின் கைகளில் ஓப் படைப்பேன் என்று உனக்கு உறுதி தருகிறேன். என்னை நம்பினால் நீ என்னிடம் ஓலையை தரலாம்" என்றான் ஆதித்தன் விநயமாக.
"உங்களை பார்த்தால் சற்று நல்லவன் போலத்தான் தெரிகிறது. அதனால் உங்களை நம்பி ஓலையை ஓப்படைக்கிறேன். அதைப் பிரித்துப் பார்க்காமல் யோகியிடம் ஒப்படைத்து விடுங்கள்" என்றான் சிறுவன்.
"என்னை நம்பியதற்கு நன்றி தம்பி! இந்த ஓலையை பிரிக்காமல் அப்படியே அவரிடம் ஒப்படைத்து விடுகிறேன்"
"நன்றி" என்ற சிறுவன் பலகார கடையை நோக்கி ஓட்டம் பிடித்தான்.
ஆதித்தன் ஓலையை பிரிக்க முயன்ற போது குளித்து விட்டு வந்த அரிஞ்சயன்" அது என்ன?" என்றான்.
"ஓலை அண்ணா. அடையாளம் தெரியாத ஒரு நபர் ஒரு சிறுவனிடம் இதை கொடுத்து அனுப்பியிருக்கிறார். "
" அடையாளம் தெரியாத நபரா? அது யாராக இருக்க கூடும்?"
"அவரைப் பற்றி சிறுவன் மூச்சுக் கூட விட மறுத்து விட்டான்."
"சரி. நீ ஓலையைபடி " என்றான் அரிஞ்சயன் .
ஓலையைப் படிக்க ஆரம்பித்த ஆதித்தனின் முகம் மாறியது. அவனது முகம் இருள்வதை கண்ட அரிஞ்சயன் அவனது கையில் இருந்த ஓலையைப் பிடுங்கி படித்தான். அதைப் படித்து முடித்த அரிஞ்சயனின் முகம் உருகிய உலோகத்தின் கொதிநிலையை அடைந்தது.
"இதென்ன பைத்தியக்காரத்தனம்? ஏன் இந்த பார்த்திபன் இவ்வளவு அவசரப்படுகிறான்? நம்மை அவன் நம்பவில்லை போலிருக்கிறதே?" என்றான் ஆவேசத்துடன் .
"நமக்கு தெரியாமல் அவன் ஜெயசிம்மனை கொல்ல முயற்சி செய்கிறேன். அவனது கூட்டாளிகளில் யாருக்கோ அவனது நோக்கம் பிடிக்கவில்லை. அதனால் தனது முகத்தை வெளிகாட்டாமல் நம்முடைய உதவியை நாடி இந்த ஓலையை அனுப்பியிருக்கிறான்."
" நீ சொல்வது சரிதான். இந்த காரியத்தை நமக்கு தெரியப்படுத்த அவன் முயற்சி செய்திருக்கிறான். அதில் வெற்றியும் பெற்று விட்டான். சுமை இப்போது இடம் மாறி நம் தலையில் ஏறி விட்டது."
"நாம் வேறு ஜெயசிம்மனுக்கு நம்மால் எந்த உயிரபாயமும் ஏற்படாது என்று நித்ரா தேவிக்கு உறுதியளித்து அவளை சகோதரியாக ஏற்று கொண்டு விட்டோம். அவளது தாலியை இறக்கத் துணிந்து விட்டான் பார்த்திபன். நாம் இதை எப்படியாவது தடுத்து நிறுத்தி அவளது வாழ்வை காப்பாற்ற வேண்டும்"
" ஆனால் இந்த ஓலையில் ஜெயசிம்மனை பார்த்திபன் கொல்ல போகிறான் என்று தான் எழுதியிருக்கிறது. அதை எப்படி எங்கேயிருந்து செயல்படுத்த போகிறான் என்று எந்த விவரமும் இதில் இல்லை."
"அது நமக்கு தேவையில்லை. ஜெயசிம்மனை கொலை செய்ய போகும் கொலையாளி நீ என்று நினைத்து கொள். அவன் இடத்தில் நீ இருந்தால் எந்த இடத்தை தேர்ந்தெடுப்பாய் என்று யோசித்து பார். பார்த்திபன் எங்கே பதுங்கி ஜெயசிம்மனை கொல்லகாத்துக் கிடக்கிறான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிந்துவிடும்."
ஆதித்தன் யோசிக்க ஆரம்பித்தான். கோவிலின் அத்துணை இடங்களும் அவனுக்கு அத்துப்படியாக மனதில் இருந்தன. ஆதித்தன் ஜெய சிம்மனை கொல்ல நினைத்தால் அவன் தேரை வடம் பிடித்து இழுக்கும் போது தான் கொல்ல முயற்சி செய்வான். அது கண்டிப்பாக தரை மார்க்கமாக மக்களின் இடையூறுக்கு நடுவே முடியாது என்பதால் கோவில் கோபுரமாடத்தில் இருந்துதான் கொலை முயற்சியை செய்வான்.
யோசித்து முடித்த ஆதித்தன் "அண்ணா.! அவன் கண்டிப்பாக கோவில் மாடத்தில் தான் மறைந்திருக்க வேண்டும். ெஜயசிம்மனை வீழ்த்த அதை விட நல்ல இடம் அமையாது " என்றான்.
அதே நேரம் தூரத்தில் எழுந்த இசை சத்தமும், வாண வேடிக்கைகளும் ஜெயசிம்மன் வந்து விட்டான் என்பதை அனைவருக்கும் அறிவித்தன.
மாடத்தில் பதுங்கி இருந்த பார்த்திபன் தன் வில்லையும் அம்பையும் எடுத்து கொண்டு தயாரானான். "வா எதிரியே " என்று அவனது உதடுகள் முணுமுணுத்தன.
சகோதரர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.
ஜெயசிம்மன் தேரடியை நெருங்கி கொண்டிருந்தான். பார்த்திபனின் அம்பின் நுனிஜெயசிம்மனின் மார்பை குறிவைக்க தொடங்கியது.