Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed மழையோடு நம் காதல் - கதை

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43

10. திருமண ஏற்பாடு!​

'என்ன திடிர்னு என் பொண்ணு ஓகே சொல்லிட்டா? ஒரு வேலை நாம தான் அவளை தப்பா நினைச்சிட்டோமோ? எதுக்கும் கொஞ்சம் உஷாரா தான் இருக்கணும்' என்று அவளின் பதிலில் முதலில் சற்று குழப்பமடைந்தாலும் இப்பொழுது இதை பற்றி எதுவும் யோசிக்க வேண்டாம் என்று நிம்மதியடைந்தார் பாஸ்கர்.

"அப்புறம் என்ன மோகன் என் பொண்ணு ஓகே சொல்லிட்டா?" என்று பாஸ்கர் கண்ஜாடை காட்ட அவரும் சரி என்னும் விதமாக தலையாட்டி தன் பேச்சை தொடர்ந்தார்.

"அப்போ பாஸ்கர் இப்பயே தட்டு மாத்திக்கலாம்" என்று தன் மனைவியை பார்க்க, அவர் தன் அருகில் இருந்த தாம்புல தட்டை எடுத்து தன் கணவன் கையில் தந்து சிரித்தார்.

"இந்தாடா. நம்ம பசங்க ரெண்டு பேருக்குமே பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டாங்க அதனால டைம் வேஸ்ட் பண்ணாம இந்த தட்ட வாங்கிக்க அடுத்த முகுர்த்ததுலயே கல்யாணதேதிய முடிவு பண்ணிறலாம்" என்று தட்டை தன் நண்பனிடம் நீட்டினார்.

சிரித்தபடி அவரிடம் இருந்து தட்டை வாங்கிகொண்டு,”ரொம்ப சந்தோஷம்டா! நீ சொல்ற மாதிரியே பண்ணிடுவோம்" என்றார்.

'அடப்பாவிங்களா! என்ன இவங்க ஜெட்டு வேகத்துல என்னைய தூக்கிட்டு போறதுக்கு துடிக்கறாங்க, எங்கப்பா அதுக்குமேல என்னை எப்போ இந்த வீட்டவிட்டு துரத்தலாம்னு ரொம்ப வேகமா ஓகே சொல்லிட்டார். இதுங்க முகரைய பார்த்தா அவ்ளோ நல்லவங்க மாதிரி தெரியலையே? எனக்கென்னவோ இது இயல்பா நடக்கற மாதிரியும் தெரியலை? இதுங்க ரெண்டும் ஏற்கனவே பொறுமையா உட்கார்ந்து பேசி முடிவெடுத்து ப்ளான் பண்ணா மாதிரி தெரியுதே? நடந்துங்கடா எதுவா இருந்தாலும் ஒரு கை நானா நீங்களா பார்த்துடுறேன்' என்று நினைத்து கொண்டிருந்தாள்.

எதையும் வெளிகாட்டி கொள்ளாமல் புன்னகை முகத்துடன் தன் மகள் நிற்பதை பார்த்து அவளுக்கும் இதில் விருப்பம் என்று நினைத்து சந்தோஷமாக இருந்தார் பாஸ்கர்.

வந்தவர்கள் எல்லோரும் உரையாடிவிட்டு கிளம்பினர்.

தங்கள் அறையில் அவளின்பெற்றோர் பேசியதை கேட்ட செல்வி அதன்பின் தீர்க்கமான ஒரு முடிவு எடுத்துவிட்டாள்.

பாஸ்கர் தனக்கு வேலை இருப்பதாக கூறி வெளியே சென்றிருந்தார். அவர்கள் செல்வதற்காக காத்திருந்த தாமரைசெல்வி தன் அறைக்கு வந்து கதவை தாழிட்டு கொண்டு கட்டிலில் தொப்பென விழுந்தாள்.

"ஒரே நாளில் என்னவெல்லாம் நடந்துவிட்டது" என்று தன் மனம் ஒருபுறம் கவலைகொண்டாலும் தன்னவனை சேரும் காலமும் நெருங்கி கொண்டு வருகிறது என்ற நினைப்பே அவளுக்குள் இனிமையாக இருந்தது.

'இதெல்லாம் எதுவும் தெரியாம இந்த மண்டு என்ன பண்ணுதுன்னு தெரியலையே?' என்று தன் மொபைல் எடுத்து சரவணத்தமிழனுக்கு போன் செய்தாள்.

தன் வீட்டில் தாமரைசெல்வியின் புகைப்படம் ஒன்றை கையில் வைத்து பார்த்துக்கொண்டிருந்த சரவணத்தமிழன், தன் மொபைலில் செல்வியின் முகம் கொண்டு அவள் பெயர் வருவதால் அவள் அழைப்பதை பார்த்து அவன் கண்களால் அவனையே நம்ப முடியாமல் திரும்பவும் அடிக்கும் போனையே பார்த்துக்கொண்டிருந்தான்.

'செல்வி தான் எனக்கு போன் பண்றாளா? இந்த நேரத்துல எதுக்கு போன் பண்றா?' என்று பதற்றம் தொற்றிக்கொள்ள வேகமாக போனை எடுத்து”ஹலோ!” என்றான்.

"ஹலோ!" என்று செல்வியின் குரல் மெதுவாய் ஒலித்தது.

"செல்வி. இந்த நேரத்துல என்ன போன் பண்ணிருக்க ஏதாவது அவசரமா?" என்று பதட்டமான குரலில் கேட்டான்.

"அதெல்லாம் ஒண்ணுமில்லை. உங்கள ரெண்டுநாளா பார்க்கவே முடியல. அதான் போன் பண்ணேன்" என்று கூறினாள் உடனே.

"அப்படியா? என்னவோ ஏதோன்னு நான் பயந்துட்டேன்" என்றான் .

'போடா! இங்க என்ன நடக்குதுன்னு கூட தெரியாம சும்மாவே பயப்படுது. கடவுளே சேவ் மீ இந்த மக்குகிட்ட நான் மாட்டிகிட்டு... என்ன பண்ண போறனோ தெரியலை' என்று மேலே பார்த்து கடவுளை வேண்டினாள்.

"போன் பண்ணிட்டு அமைதியா இருக்க? என்ன விஷயம் செல்வி ?" என்று பொறுமையாக கேட்டான் .

"நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கணும்" என்றாள் தயக்கத்துடன்.

'என்ன கேளு?' என்று சொல்லிவிட்டாலும் 'என்ன கேட்பாளோ?' என்ற பதட்டம் அவனுக்குள் இருந்தது.

"அது... நீங்க உண்மையாவே என்னை விரும்பலையா?" என்று தட்டு தடுமாறி தான் கேட்க நினைத்ததை கேட்டுவிட்டாள் செல்வி.

மனதிற்குள் மலை அளவு ஆசை இருந்தாலும் வெளிகாட்டாமல்,”அதான் அன்னைக்கே சொல்லிட்டேனே? அப்புறம் எதுக்கு திரும்பி இந்த நேரத்துக்கு போன் பண்ணி கேக்குற?" என்றான் உள்ளே சென்ற குரலில்.

'இவன் திருந்த மாட்டான். எப்படியும் இந்த பக்கிய தான் நான் காதலிச்சி தொலைச்சிடேன். என்ன பண்றது? நானே தான் ஏதாவது பண்ணனும்' என்று தனக்குள் நினைத்து கொண்டவள்.

"ஒண்ணுமில்லை! இன்னைக்கு என்னை பெண் பார்க்க வந்திருந்தார்கள். எல்லோருக்கும் பிடித்து போய்விட்டது. தட்டும் மாற்றி விட்டார்கள். வரும் நல்ல முகுர்த்தத்திலேயே கல்யாணத்தேதியும் முடிவு செய்திருக்கிறார்கள்" என்றாள்.

தன் தலையில் யாரோ பெரிய பாறாங்கல்லை தூக்கிப்போட்டால் ஏற்படும் பிளவுப்போல் பெரிய வலியை தனக்குள் உணர்ந்தான் சரவணத்தமிழன்.

'நான் இது எதிர்பார்த்தது தான்' என்று தனக்குள் மருகினாலும்,”அப்படியா? வாழ்த்துக்கள் செல்வி" என்று வாழ்த்த மனமில்லாமல் வாழ்த்தினான்.

'என்னடா நீ? காதலிக்கற பொண்ணு எனக்கு வேற பையன் கூட கல்யாணம்னு சொல்றேன். நீ என்னடான்னா புடிச்சி வச்ச புள்ளையார் மாதிரி அப்படியான்ற? உன்னையெல்லாம் எப்படி கல்யாணம் பண்ணி குப்பக்கொட்ட போறேனோ? இரு, எப்படியும் நான் முடிவு பண்ணிட்டேன். உன்ன அழ வைக்காம விடமாட்டேன்' என்று நினைத்துக்கொண்டு”சரி! நாளைக்கு அவர்கூட நான் வெளிய போகபோறேன். அவர பத்தி பேசிட்டு இருக்கும் போதே அவர் செகண்ட் லைன்ல வரார் பாருங்க, சரி நான் அப்புறம் பேசுறேன். பை" என்று போனை கட் செய்தாள்.

'என்ன நாளைக்கு அவன் கூட வெளிய போகப்போறாளா? இத என்னால தாங்கிக்க முடியுமான்னு தெரியல பேசாம வேலையவிட்டு நின்றலாமா? இல்ல அது தப்பாகிடும், அதுவுமில்லாம என்னோட ட்ரைனிங் பாதிலையே விடமுடியாது அது என் கரியர பாதிக்கும். என்ன தான் நடக்கும் பார்த்துடலாம். நானா விரும்பி ஏத்துகிட்டதுதானே எவ்வளவோ கஷ்டப்பட்டுருக்கேன் இது என்ன புதுசா? எல்லார்த்தையும் பார்த்துடலாம்' என்று தனக்குள் சமாதானம் சொல்லிக்கொண்டு நடுநிசி வரை உறக்கம் வராமல் புரண்டவன் வெள்ளி முளைக்கும் நேரத்தில் உறங்கிப்போனான்.

அடுத்து வந்த நாட்களில் இருவரின் விழிகளும் பார்வைகளை மட்டும் பரிமாறிக்கொண்டன.

அவளும் அவன் என்ன தான் செய்கிறான் என்று பொறுத்திருந்து பொறுமையாக பார்த்துக்கொண்டிருந்தாள். உள்ளுக்குள்ளேயே அவள் தனக்கில்லை என்று புழுங்கி கொண்டிருந்த சரவணத்தமிழன் அவளை பார்ப்பதைக்கூட தவிர்த்துவிட்டான் வலுக்கட்டாயமாக வெளியே செல்லும் வேலையாய் தேர்ந்தெடுத்து, அந்த வேலையையும் வெளியிலேயே முடித்து விட்டு அப்படியே தன் வீட்டுக்கு செல்லும்படி பார்த்துக்கொண்டான்.

இவை எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த செல்வி, 'டேய் நீயெல்லாம் ஒரு மனுசனா? நானும் பார்த்துகிட்டு இருக்கேன். இங்க உன்ன ஒருத்தி உயிரா நினைக்குறான்னு தெரிஞ்சும் இப்படி தவிக்கவிடறியே? உன்னை நான் என்ன செய்யறது? எல்லார்த்துக்கும் சேர்த்து வச்சு உனக்கு ஒரு வாரத்துக்கு சாப்பாடு போடாம பட்னி போடறேன். நீயா என் கழுத்துல தாலி கட்டற மாதிரி நான் தான் செய்யணும், செய்யறேன். என் செல்லகுட்டிகாக இதுகூட செய்யமாடேனா? இது எல்லாத்தையும் நான் அன்னைக்கு நீ என்னை விரும்புறேன்னு சொன்னியே அதுக்கப்புறம் தான் முடிவெடுத்து இருக்கேன். எங்க அப்பா பார்க்கின்ற மாபிள்ளையவிட என்னை மட்டும் இல்லாம என் கொடும்பத்தையும் சேர்த்து நல்லா இருக்கணும்னு நினைக்கிற உன்னை கல்யாணம் பண்ணிகிட்டா நான் நிச்சயம் நல்லா இருப்பேன்' என்று தனக்குள் பேசிக்கொண்டாள்.

வேகமாக அடுத்த இருபதாவது நாள் முகுர்த்த நாளாக திருமணத்தேதியை முடிவு செய்து விட்டனர் பெரியவர்கள்.

"என்ன செய்யனும்னு நினைக்கிறிங்களோ செய்ங்கடா. நான் எல்லார்த்தையும் பார்த்துகிறேன்" என்று அவர்கள் செய்யும் எல்லாவற்றையும் சந்தோஷமாக ஏற்றுகொள்வது போல் அமைதியாக இருந்தாள் நம் செல்வி.

திருமணத்திற்கு திருமண அழைப்பிதழ், பட்டுபுடவை, நகைகள் முதற்கொண்டு சீர் செய்ய தேவையான எல்லா பொருட்களையும் வாங்கி குவித்தார்கள்.

இவை எல்லாவற்றையும் தூரத்தில் இருந்து சரவணத்தமிழன் பார்த்துக்கொண்டிருந்தான் செல்வி தனக்கில்லை என்ற வேதனை அவனுக்கு ஒருபுறம் இருந்தாலும் அவளை இவ்வளவு ஆழமாய் நேசிக்கும் பெற்றோரின் அன்பில் அவள் திளைத்திருக்கிறாள் என்று சிறிது சந்தோஷபட்டான்.

இன்னும் இரண்டு நாளில் திருமணம், செல்வி சரவணத்தமிழனுக்கு போன் செய்தாள்.”ஹலோ! தமிழ் நான் உங்களை உடனே பார்க்கணும்' என்றாள்.

"என்ன செல்வி ? இன்னும் இரண்டு நாளில் திருமணத்தை வைத்துகொண்டு என்னை எதற்கு பார்க்கவேண்டும் என்கிறாய்? என்னால் எங்கேயும் வரமுடியாது” என்றான் சற்று பதட்டமான குரலில்.

"இப்ப நீங்க வரல.. நான் என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியாது. நான் இப்பயே உங்களை பார்க்கணும், வரமுடியுமா முடியாதா?" என்று கோபமாய் கேட்க.”சரி நான் வரேன் , எங்க வரணும்?" என்று கேட்டான்.

"பார்க்குக்கு வாங்க" என்று போனை கட் செய்தாள்.

அரைமணி நேரம் கடந்தபின் சரவணத்தமிழன் அங்குவந்து சேர்ந்தான்.

அவளை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் வேறெங்கோ பார்த்தபடி நிற்க,”என்னை பார்க்க வந்துட்டு, எதுக்கு வேற எங்கயோ பார்த்துட்டு இருக்கீங்க? என்னை நேருக்குநேரா பாருங்க தமிழ்" என்று அவள் கூறுவதை கேட்டதும் அவள் விழிகளோடு தன் விழயை ஒரு நொடி சந்திக்க செய்தான்.

மறுநொடி தன் விழியை நகர்த்திக்கொண்டு”அதெல்லாம் இருக்கட்டும்! இப்ப எதுக்கு என்னை வர சொன்ன அதுக்கு முதல்ல பதில் சொல்லு? இன்னும் ரெண்டு நாள்ல கல்யாணம். இப்படி என்னோட நின்னு பேசறத யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க? நீ முதல்ல கிளம்பு" என்றவனை நிறுத்தினாள்.

"ஒரு நிமிஷம் நான் உங்ககிட்ட பேசணும்னு வரச்சொன்னேன். நான் பேசவந்ததை பேசிடறேன்" என்று அவனை நோக்கினாள்.
 

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43

11. வரவேற்ப்பு!​

"இப்ப என்ன பேசணும் உனக்கு என்கிட்ட?' என்று கோபமாக தாமரைசெல்வியை பார்க்காமல் சரவணத்தமிழன் கேட்க.

"இங்க என் முகத்தை பார்த்து தெளிவா பதில் சொல்லுங்க. கடைசி முறையா கேட்குறேன், நீங்க என்னை விரும்பல?" என்று தாமரைச்செல்வி கேட்கவும் தன் உயிர் அந்த இடத்திலேயே போய்விடக்கூடாதா? என்று நினைக்கும் அளவிற்கு அவன் மனம் மிகவும் ரணபட்டது. 'நான் விட்டாலும் இவள் விடுவதாக இல்லை போல் தெரிகிறதே?' என்று கண்களைமூடி வரும் கண்ணீரை அவள் பார்க்காதவாறு உள்ளே அடக்கினான்.

'இந்த பெண்ணிற்கு நான் எப்படி சொல்லி புரிய வைப்பேன்?' என்று அவளிடம் திரும்பி”நீ எத்தனை தடவை கேட்டாலும் என் பதில் இது தான். இந்த நேரத்துல நம்மளை யாராவது இங்க பார்த்தா என்ன நினைப்பாங்க? ஒழுங்கா வீடு போய் சேர்கின்ற வழியை பாரு." என்று கூறிவிட்டு நகர்ந்தவனை அவளின் சொற்கள் நிறுத்தியது.

"இப்ப சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க. நீங்க என்னை விரும்பலைன்னாலும் பரவாயில்லை, நான் உங்களை தான் விரும்புறேன். இதை சொல்லத்தான் கூப்பிட்டேன். நீங்க கட்டாம என் கழுத்துல யார் தாலி கட்டினாலும் அது தங்காது. ஒன்னு நான் இருக்கமாட்டேன், இல்ல அந்த தாலி என் கழுத்துல இருக்காது. அப்படியே இருந்தாலும் உங்களை மட்டும் தான் என் மனசுல நினைச்சிகிட்டு இருப்பேன். இப்ப நீங்க போலாம் உங்களை கூப்பிட்டு உங்க டைம வேஸ்ட் பண்ணதுக்கு சாரி" என்றாள்.

அவள் தன்னை விரும்பவதாய் தன் வாயால் சொன்னது அவனின் செவிகளில் தேனாய் வந்து பாய்ந்தது, இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல்,”இங்க பாரு. எதையாவது உளறிட்டு இருக்காத. முதல்ல வீட்டுக்கு போ. உன்னை காணோம்ன்னு தேடிட்டு இருக்க போறாங்க" என்றவனிடம் மிக அருகில் வந்து,”நீங்க என்னை விரும்பலைன்னு சொல்லிட்டிங்க இல்ல... அப்போ நீங்க என் கல்யாணத்துக்கு கண்டிப்பா வரணும். வந்தா தான் என் கழுத்துல தாலி ஏறும். இல்லைன்னா, கல்யாணம் நடக்காது நிறுத்திருவேன்" என்று அவனிடம் இருந்து விலகி முன்னே நடக்க இருந்தவளை,”இப்ப என்ன? நான் உன் கல்யாணத்துக்கு வரணும். அவ்ளோ தான? வரேன்"என்று வேகமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டான்.

'அப்படி வாடா! என் செல்லகுட்டி, நான் பாட்டுக்கு எல்லா ஏற்பாட்டையும் பண்ணிட்டு கல்யாணமும் நின்னப்புறம், நீ அங்க வரலைன்னா நான் என்ன பண்றது? அதான் உன்னை வரவைக்கறதுக்காக நான் போட்ட சின்ன டிராமா. அழுத்தக்காரன்டா நீ! சரி இப்பயாவது சொல்லுவன்னு பார்த்தா, வாயே திறக்கமாட்றியே? ஒருவேளை நீ வராம எங்க அப்பா என் பொண்ணு வாழ்க்கை இப்படி ஆகிடுச்சேன்னு வேற எவனையாவது புடிச்சி இன்ஸ்டன்ட்டா கல்யாணம் பண்ணி வச்சிட்டாருன்னா? நான் என்ன பண்றது? அதுக்குத்தான், இப்ப நீயே கண்டிப்பா வருவேன்னு உன் வாயால சொல்லிடல்ல' என்று தனக்குள் சிரித்தபடி அங்கிருந்து சென்றாள்.

திருமணதிற்கு முதல்நாள் மணமகனும் மணமகளும் ஒரே மேடையில் நின்றிருந்தனர். அதை காண சகியாமல் அங்கிருந்து நகர முயன்றவனை விழிகளை உருட்டி அங்கேயே அமரும்படி சைகை செய்தாள் செல்வி.

'எங்கயாவது போய்ட்டன்னா நான் என்ன பண்றது? முடிவு பண்ணிட்டேன் நீ தான் என் கழுத்துல தாலி கட்ட போற, அதுல எந்த மாற்றமும் இல்ல.' என்று நினைத்தவள் சட்டென மணமகனிடம் திரும்பி,”எல்லாவற்றையும் தயார் செய்துவிட்டீர்கள் அல்லவா?" என்று சிரித்தபடி கேட்டாள்.

"நீங்க கவலையேப்படாதிங்க. எல்லாம் நாம ப்ளான் பண்ண மாதிரி தான் நடக்குது. இவரும் இங்க தான உட்கார்ந்துருக்காரு அப்புறம் என்ன? எல்லாம் நல்லபடியா நடக்கும் நானும் உங்களுடன் இருக்கிறேன்" என்று ஆறுதலாய் பேசி சிரித்தான்.

"மிகவும் நன்றி உங்களுக்கு. நீங்கள் எனக்கு உதவவில்லை என்றால் நான் இவரை மணக்க முடிந்திருக்காது. இவரும் இப்படியே தன் காதலை சொல்லாமல் என்னை தான் ஒரு வழி செய்திருப்பார்." என்று சரவணத்தமிழனை பார்த்தபடி கூறினாள்.

அவள் தன்னை பற்றி தான் ஏதோ பேசுகிறாள் என்று புரிந்து, என்ன என்று தெரியாமல் தவித்தான் சரவணத்தமிழன். 'இவள் எதற்காக என்னை பார்த்து பேசுகிறாள். ஒருவேளை அவள் என்னை விரும்புவதாக சொன்னதை அவரிடம் கூறியிருப்பாளோ? இல்லை நீ வேண்டாம் என்றால் என்ன? உன்னைவிட நல்ல மணமகன் எனக்கு கிடைத்திருக்கிறான் என்று சிரிக்கிறாளா? ஒன்றுமே புரியவில்லையே? என்னையும் எங்கேயும் போகவேண்டாம் என்று கூறுகிறாள். ஒருவேளை எழுந்துசென்றால் ஏதாவது செய்து கல்யாணத்தை நிறுத்தி விட்டால்? பாவம் இவ்வளவு ஏற்பாடுகளையும் எவ்வளவு கஷ்டப்பட்டு செய்திருப்பார்கள் அவர்களுக்கு எவ்வளவு மனகஷ்டம் பணகஷ்டம். அதற்கு பேசாமல் இங்கேயே இருந்துவிடலாம். என்ன நான் விரும்பியவள் இன்னொருவன் மனைவியாவதை பார்க்கும் துர்பாக்ய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டேன். இதை சகிக்க முடியவில்லை என்னால்...' என்று எதை எதையோ யோசனை செய்துகொண்டு இருந்தவனின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது யாரும் அறியாவண்ணம் அதை துடைதெறிந்து வேறுபுறம் தன் பார்வையை செலுத்தினான்.

வரவேற்ப்பு முடிந்து எல்லோரும் உறங்க சென்றனர். சரவணத்தமிழனும் தாமரைசெல்வியும் தனி தனியே உறங்காமல் தவித்து கொண்டிருந்தனர்.

இங்கிருந்து செல்லவும் முடியாமல் இங்கேயே இருக்கவும்முடியாமல் மிகவும் தவித்து போனான் சரவணத்தமிழன். முழுஇரவையும் உறங்காமல் கழித்தான்.

ஒருபுறம் தாமரைச்செல்வி தான் போட்ட திட்டப்படியே எல்லாம் நடக்கவேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொண்டிருந்தாள். மறுபுறம் தன் தாய் தந்தையை பற்றி நினைத்து கல்ங்கியவள் இறுதியாக அவளின் தந்தை அன்று பேசியதை நினைவுகூர்ந்தாள்.

அன்று பெண்பார்க்க வந்த எல்லோரும் சென்ற பின்னர், தன் தாய் தந்தையிடம் எதையோ கூற வந்தவள், அவர்கள் பேசுவதை கேட்கும் படியாகிவிட்டது.

உள்ளே இருவரும்,

"என்னங்க என்ன திடிர்னு புதுசா மாப்ள அது இதுன்னு? என்கிட்டே முன்னாடியே ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம்ல?" என்று கணவனிடம்கேட்டு கொண்டிருந்தார் அமுதா.

"ஏய் மெதுவா பேசு. இங்க பாரு நான் ஒன்னும் வேணும்னே பண்ணலை. நீ வளர்த்து வச்சிருக்கியே ஒரு பொண்ணு? எல்லாம் அவளால தான்” என்று கூற, ஒன்றும் புரியாமல்”என்ன சொல்றிங்க ஒன்னும் புரியல?" என்று கேட்டார்.

"ஆமா! உன்கிட்ட நான் சொல்லவே இல்லை . அதாவது உன் பொண்ணும் அந்த சரவணத்தமிழனும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறாங்க. இது தெரிஞ்சதுக்குபுறம் என்னை எப்படி அமைதியா இருக்க சொல்ற?"என்று கூறினார் செல்வியின் தந்தை.

"சும்மா எதையாவது உளறாதிங்க நீங்க, நம்ம பொண்ணு அவனை விரும்புறேன்னு உங்ககிட்ட சொன்னாளா ?" என்று தன் கணவனை அமுதா முறைக்க.

"அறிவு இருக்காடி உனக்கு? அவளே வந்து, அப்பா நான் அவனை விரும்புறேன்னு சொல்வாளா? கொஞ்சநாளா நான் அவங்களோட நடவடிக்கைய கவனிச்சிட்டு வரேன். ரெண்டுபேரும் அவ்வளவு க்ளோசா பேசிக்கறதில்லை, ஆனா அவங்களோட பார்வையே சொல்லி கொடுக்குது அவங்களுக்குள்ள ஏதோ ஒன்னு இருக்குன்னு. இங்க பாரு நான் எனக்கு எதிர்ல பேசறவங்களுக்கு கூட எனக்கு சரிசமமா தகுதி இருக்கணும்னு நினைக்கிறவன், ஆனா, அவன் ஒரு அனாதை அவனுக்குன்னு யாருமில்லை... அவனை வேலைக்கு சேர்த்துகிட்டதுகூட உன் அக்கா பையன பிரபுவால தான் அவன் ரொம்ப கெஞ்சி கேட்டதால தான் அவனை இங்க விட்டேன். எனக்கென்னவோ அவன் ஒதுங்கி இருக்க மாதிரி தான் இருக்கு. உன் பொண்ணு தான் அவன்மேல ஓவரா ஆசைப்படர மாதிரி தெரியுது. அதான் உன் பொண்ணுக்கு உடனே என் நண்பன் பையன பேசி முடிட்சிட்டேன் அதுக்கப்புறம் அவ அங்க போய் படிச்சிக்கிட்டும். என் நண்பனுக்கு இதுபத்தி எல்லாம் தெரியும் எல்லாம் தெரிஞ்சு தான் அவன் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சிருக்கான். அதனால், உனக்கு எதுவும் தெரியாம நடுவுல புகுந்து கெடுத்துடாத புரியுதா? உன் வேலை என்னவோ அதைமட்டும் பார். மத்தத்தை எல்லாம் நான் பார்த்துகிறேன்". என்று தன் மனைவிக்கு எச்சரிக்கை செய்துவிட்டு போய்விட்டார்.

வெளியே இருந்து இதை கேட்டு கொண்டிருந்த செல்விக்கு ஆத்திரம் தலைக்கு மேல் ஏறியது.”நான் நினைச்சமாதிரி இதுங்க எல்லாம் சரியான கேடிங்க. பிராடு பசங்க... என்ன ஒரு வில்லத்தனம்? நடக்கட்டும் நடக்கட்டும் நான் எதுவா இருந்தாலும் பார்த்துக்குறேன். உங்களுக்கு சரியான நேரத்துல பதிலடி கொடுக்காம விடமாட்டேன்." என்று தனக்குள் பேசிக்கொண்டு போய்விட்டாள்.

பொழுதும் விடிந்தது மணமகளுக்கும் மணமகனுக்கும் தனித்தனியே நலுங்கு வைத்தனர். பின் இருவரும் நீராடி தங்களின் திருமண உடையை அணிந்துகொண்டனர்.

முதலில் மணமகன் மேடையேறி மந்திரம் சொல்ல...

திருமணத்திற்கு ஏகப்பட்ட கூட்டம் வந்து கொண்டிருந்தது. இரு பக்க சொந்தங்களும் மண்டபத்தில் நிரம்பி வழிந்தனர்.

மணமகளை அழைத்து வரும்படி ஐயர் கூறினார்.”பொண்ணை கூட்டிட்டு வாங்கோ" என்றவுடன் எல்லோரின் கவனமும் மணமகளின் அறைபக்கம் திரும்பியது.
 

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43

12. செல்வியின் திருமணம்!​

"டேய் நில்லுடா! என்னடா பண்ற? நில்லுடா!" என்று கூறிக்கொண்டு ஓடிவரும் தன் பெற்றோரை பார்த்த மாப்பிள்ளை, தன் அருகில் வந்து நின்ற மணப்பெண்ணை இழுத்து தன் அருகில் அமர்த்தி ஒருநொடி தாமதிக்காமல் ஐயர் கையில் இருந்த தாலியை வெடுக்கென பிடுங்கி,”சாரி ஐயரே! நீங்க இவ்ளோநேரம் சொன்ன மந்திரமே போதும். இதுக்கப்புறம் லேட் பண்ணா என் வாழ்கை போய்டும். சோ.." என்று அருகில் அமர்ந்திருந்தவளின் கழுத்தில் மங்களநாநானை பூட்டினான்.

சற்றுமுன்,”பொண்ணை கூட்டிட்டு வாங்கோ!" என்று ஐயர் கூறியது தான் தாமதம் மாபிள்ளையின் முகம் சற்று பரபரப்பானது.

மணமகள் அறையில் இருந்து முழு அலங்காரத்தில் வந்த பெண்ணை பலருக்கு அடையாளம் தெரியவில்லை. பெண்ணை பார்த்தவுடன் அனைவரிடத்திலும் ஒரே சலசலப்பு...

"என்னவாயிற்று?" என்று மாபிள்ளையின் பெற்றோர் மணவறையை பார்த்தபொழுது தாங்கள் பார்த்த பெண்ணான செல்வி இல்லாமல் வேறு ஒரு பெண் வந்து நிற்பதை பார்த்துவிட்டு பதட்டமாகி அவசரமாக மணவறையை நெருங்கும் நேரத்தில், தன் மகன் தாலி கட்டிவிட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்து நின்றனர்.

"யாருடா இந்த பொண்ணு? செல்வி எங்க? ஏன்டா இப்படி பண்ண?" என்று மணமகனின் பெற்றோர் ஆத்திரத்தில் கத்த...

மெதுவாக மேடையில் இருந்து இறங்கி வந்தவன்,”நான் இவளை தான் விரும்புறேன். சொன்னால் நீங்கள் திருமணம் செய்துவைக்க மாட்டீர்கள். அதனால் தான் இந்த முடிவு" என்று சொல்ல.

"அப்போ செல்வி எங்கடா? அவளோட வாழ்க்கை என்ன ஆகறது?" என்று கேட்க.

"நான் இங்கதான் இருக்கேன்" என்று ஒரு குரல் கணீரென்று வர, எல்லோரின் பார்வையும் குரல் வந்த திசையை நோக்கி திரும்பியது.

அங்கே செல்வி, மணக்கோலத்தில் நின்று கொண்டிருந்தாள்.

யாரிடமும் ஒரு வார்த்தைக்கூட பேசாமல் நேராக சரவணத்தமிழனிடம் வந்து நின்றாள்.

அவளின் அந்த கூரான பார்வைக்கான அர்த்தம் இப்பொழுது புரிந்தது அவனுக்கு. உடலில் ஒரு நடுக்கத்துடன் கூடிய சிலிர்ப்பு தோன்ற விழிமூடாது அவளை பார்த்து கொண்டிருந்தான்.

"இப்பயாவது என்னை கல்யாணம் பண்ணிப்பிங்களா இல்லையா?" என்று அவள் கேட்க, அமைதிகாக்கும் அவனின் கரத்தை பற்றி வலுக்கட்டாயமாக மேடைக்கு அழைத்து சென்றாள்.

"எல்லார்கிட்டயும் நான் கொஞ்சம் பேசணும் . இவர் பெயர் சரவணத்தமிழன். நான் இவரைத்தான் காதலிக்கறேன். இவரும் என்னை விரும்புறார். ஆனால், இப்பவரைக்கும் நான் எத்தனையோ தடவை கேட்டும் என்கிட்டே சொல்ல." என்று பேசுவதை நிறுத்தி சரவணனின் முகத்தை நோக்க, அவன் முகத்தில் அதிர்ச்சி அப்பட்டமாய் தெரிந்தது.

"இதுக்குமேல நீங்க என்னை விரும்பிறேன்னு உண்மைய ஒத்துகிட்டு என்னை கல்யாணம் பண்ணி ஏத்துகிட்டிங்கன்னா உங்ககூட உங்க மனைவியா உங்க வீட்ல இருப்பேன். இல்லைன்னா இதோ நான் யு.ஸ் போறதுக்கான டிக்கெட். இன்னும் ஒருமணி நேரத்துல கிளம்பிடுவேன். அதுக்கப்புறம் எங்க அப்பாவுக்கும் தொல்லையா இருக்கமாட்டேன் உங்களுக்கும் தொல்லையா இருக்கமாட்டேன். பறந்து போயிருவேன். யாரு நினைச்சாலும் தடுக்கமுடியாது. ஏன் எங்கப்பாவே நினைச்சாலும் தடுக்கமுடியாது. இதோ இப்பகூட இங்க மப்டில போலீஸ் இருக்காங்க. ஏன்னா நான் ஏற்கனவே கம்ப்ளைன்ட் கொடுத்துட்டு தான் மணமேடைல மணப்பெண்ணா ஏறினேன். நான் மேஜர், எனக்கு நான் விரும்புனவரோட கல்யாணம் நடக்கபோகுது. யாரும் எங்க கல்யாணதை தடுத்து நிறுத்தக்கூடாது அதுக்கு நீங்க தான் பாதுகாப்பு கொடுக்கனும்னு லெட்டர் கொடுத்துட்டேன்." என்று சிரித்தபடியே கண்சிமிட்டினாள்.

பின்னர் வந்திருந்தவர்களை பார்த்தபடி திரும்பி பேச ஆரம்பித்தாள்.

"அதாவது இவர் யாரு? என்ன? எதுன்னு உங்க மனசுல கேள்வி இருக்கும் இப்போ எல்லாத்துக்கும் பதில் சொல்றேன். அதுக்கு முன்னாடி இன்னொன்னும் சொல்லிடறேன். எங்க அப்பாவுக்கு நான் இவரை காதலிக்கற விஷயம் தெரியும்.. இவர் என்னை எதுக்காம இருக்காருன்றதும் தெரியும்.. தெரிஞ்சுதான் அவசர அவசரமா இந்த கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிருக்காரு. அவருக்கு இது எல்லாம் எனக்கு தெரியுன்றது அவருக்கு தெரியாமபோச்சு.

எதுக்காக எங்க அப்பா இவரை ஏத்துக்கவே இல்லைனா?... இவர் எங்கள மாதிரி பணக்காரங்களா இல்லைன்னும் இவருக்கு சொந்தம்னு சொல்லிக்க யாருமே இல்லன்னும் தான். ஆனா இப்ப இந்த நிமிஷதுலர்ந்து இவருக்கு இனி எல்லாமே நான் மட்டும் தான். எங்கப்பாவோட ஒரு பைசாக்கூட எனக்கு தேவை இல்ல. இவரு கையால ஒரு பிடி பழைய சோறுன்னாலும் சாப்பிட நான் ரெடி" என்று அதிர்ச்சியில் இருந்து மீளாத அவன் கரத்தை பற்றி மேடையில் அமரவைத்தாள்.

ஐயரிடம் திரும்பி,”ஐயரே! நீங்க என்ன சொல்ல போறிங்கன்னு எனக்கு தெரியும். இருந்தது ஒரு தாலி அதுல அவங்க கல்யாணம் நடந்துச்சு, இப்ப என்ன முடியும் என்று தானே?" என்று தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த புதிய தாலியை வெளியே எடுத்து கொடுத்தாள்.

அதிர்ச்சியும் ஆச்சர்யமுமாக பார்த்துகொண்டிருக்கும் சரவணத்தமிழனை பார்த்து கண் சிமிட்டியபடி”எப்போடி தாலி எல்லாம் வாங்குன? அதானே யோசிக்கிறிங்க? ஏற்கனவே வாங்கிட்டேன். ஆனால், நான் மட்டும் இதை வாங்கல. உங்களுக்கு தெரிஞ்சவங்களும் சேர்ந்து தான் வாங்குனாங்க. இன்பாக்ட் இதுக்கு பில்லும் அவங்க தான் பே பண்ணாங்க, எங்க பையனுக்கு நாங்க தான் வாங்கனும்ன்னு கண்டிப்பா சொல்லிட்டாங்க. என்ன அப்படி பார்க்கறிங்க? யாருடா அதுன்னு தானே? அங்க பாருங்க" என்று முன்னால் கை காட்ட, வந்திருந்த விருந்தினர்களின் கூட்டத்தில் பின்னால் இருந்து கிட்டதட்ட இருபது பேர் எழுந்து வந்தனர்.

அவர்களை கண்டதும் சரவணத்தமிழனின் கண்களில் இருந்து கண்ணீர் ஆராய் பெருகி ஓடியது.

ஆம்! அவன் காப்பகத்தில் அவனை தூக்கி வளர்த்தவர்கள். அனைவரும் சிரித்த முகத்துடன் அவன் முன் வந்து நின்றனர்.

"தம்பி இந்த உலகத்துல எந்த மூலைல போய் வலைவிரிச்சி தேடினாலும் உனக்கு உன் மேல இவ்வளவு அன்பு வச்சிருக்குற பொண்ணு கிடைக்கமாட்டாப்பா. நீ ரொம்ப கொடுத்து வச்சவன். எதைபத்தியும் யோசிக்காத, தைரியமா அவ கழுத்துல தாலி கட்டு. நீங்க ரெண்டுபேரும் நூறு வருஷம் நல்லா இருப்பிங்க" என்று கூறினர்.

"இன்னும் என்ன யோசிக்கிறிங்க? எங்க அப்பா அம்மாவை பத்தி நினைச்சா? நீங்க வருத்தபடுற அளவுக்கு அவங்க வர்த் இல்ல... நான் சொல்றதுக்கு இதுமட்டும் காரணம் இல்ல... இன்னொன்னும் இருக்கு. ஆனா, என்னால இப்ப அதை சொல்லமுடியாது. நான் இன்னொரு சமையம் வரும்பொழுது அதை சொல்றேன்." அவனை அன்புடனும் பரிவுடனும் பார்க்கும் விழிகளை காண, 'தான் இவளின் இந்த அளவில்லா அன்புக்கு தகுதியானவா?' என்று அவனுக்கே சந்தேகம் வந்தது.

"சரி! நான் இவ்ளோ தூரம் சொல்லியும் நீங்க என்னை திருமணம் பண்ண விரும்பலைன்னா? இதுக்குமேல நான் உங்களை வற்புத்தமாட்டேன்" என்று தன் மொபைலில்”ஹலோ! கால் டாக்ஸி! நான் சொன்னபடியே என்னோட லகேஜோட மண்டபத்துக்கு முன்னாடி வந்துடுங்க" என்று முடிக்கும் முன்னரே அவள் கழுத்தில் அவனின் கரத்தால் தாலி ஏறி இருந்தது.

இவை எல்லாவற்றையும் எரியும் கொள்ளியாய் பார்த்துகொண்டிருந்தனர் அவளின் பெற்றோர்.

"உன் மேல அளவு கடந்த பாசம் வச்சு இருந்ததுக்கு நீ காட்ற வெகுமானமா இது? யாரோ ஒரு பரதேசி பிச்சைகாரனுக்காக ஒரு வேலை சோத்துக்குகூட கெதி இல்லாதவனுக்காக... உன்னை பெத்து இத்தனை வருஷம் தூக்கி வளர்த்த எங்களை அசிங்கபடுத்திட்ட இல்ல?" என்று அவளின் தந்தை ஆத்திரமாய் கேட்க..

"நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்ட.. என் வயிறு எரிஞ்சு சொல்றேன். அடுத்தவேளை சாப்பாட்டுக்கு கூட வழி இல்லாம என் வீட்டு வாசல்ல தான் வந்து நிக்க போற பாரு... சத்தியமா சொல்றேன் இவனால உனக்குன்னு ஒரு வாரிசு வராது... கடைசி வரைக்கும் நீ மலடியா தான் சாகப்போற... என்னோட வயித்தெரிச்சல் உன்ன சும்மா விடாது...” என்று அவளின் தாய் ஆங்காரமாய் கத்த, அதுக்கு மேல் பொறுமையாய் இருக்கமுடியாமல் அவன் கரத்தை பற்றி எழுந்து அவர்களின் முன் தைரியமாய் வந்து நின்றாள்.
 

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43

13. சரவணனின் கொடும்பம்​

மேடையில் இருந்து சரவணத்தமிழனின் கரத்தை தன் கரத்தினில் புகுத்தி கிழே இழுத்து கொண்டு வந்த தாமரைச்செல்வி தன் தந்தை தாயின் எதிரே வந்து நின்றாள்.

"நீங்க என்ன சொன்னீங்க இவர் யாரும் இல்லாத அனாதையா? அப்புறம் ஒண்ணுமில்லாத பரதேசியா? உங்க மனச்சாட்சிய தொட்டு சொல்லுங்க . இவரை பத்தி நீங்க சொல்லுறது எல்லாம் உண்மையா?" என்று கேட்டாள்.

அவளின் கேள்வியில் பாஸ்கர் அமுதா மட்டும் இல்லாமல் சரவணத்தமிழனும் ஒரு நொடி அதிர்ந்துப்போனான்.

"நீ என்ன சொல்ற செல்வி? எனக்கு ஒன்னும் புரியல?" என்று தமிழ் அவளை பார்த்து கேக்க.

"உன்னை கல்யாணம் பண்ணாள் இல்ல, அதான் புத்திகெட்டு போச்சு" என்று செல்வியின் அப்பா கத்தினார்.

"இன்னொரு வார்த்தை என் புருஷனை பத்தி ஏதாவது தப்பா பேசனிங்க? அப்புறம் என்ன நடக்கும்னு தெரியாது" என்று தன் விரல் நீட்டி எச்சரிக்க.

"ஏய் யாருகிட்ட பேசற? நான் உன்னை பெத்தவன்டி" என்று செல்வியை அடிக்க கை ஓங்க, அதை தடுத்து அவரின் கையை பிடித்து தள்ளினான்.

"இதுக்கு முன்னாடி எனக்கும் இவளுக்கும் எந்த உறவும் இல்ல. அதனால அமைதியா இருந்தேன். ஆனா இப்ப இவ என் மனைவி. என்னில பாதி. அவளை ஹர்ட் பண்ணனும்னு நினைச்சிங்க அப்புறம் அவ்ளோதான் சொல்லிட்டேன்" என்று கர்ஜித்தான்.

செல்வியின் சொந்தங்கள் கூடிட”ஏய் என்னடா இப்ப வந்த நீ எங்க பாஸ்கர மிரட்டுற ?" என்று கை ஓங்க.

"மாமா எங்க அவர ஒரு அடி அடிச்சிடுங்க பார்க்கலாம்? நான் சொன்னத மறந்துட்டிங்க இங்க மப்டில போலீஸ் இருங்காங்க. யாராவது எங்க ரெண்டு பேர் மேலையும் கை வச்சிங்க? உங்க எல்லாரையும் தூக்கி கொண்டு போய் உள்ள வச்சிடுவாங்க. போறிங்களா? நான் கூப்பிடிறதுக்காக தான் வெயிட் பண்றாங்க கூபிடட்டா?" என்ற அவள் கேள்வியில் அனைவரும் பின்னே சென்றனர்.

"நீங்க இன்னைக்கு உங்க அப்பா அம்மாவ இழந்துட்டு நிக்கறதுக்கு காரணமே இவங்க தான். எனக்கு இத பத்தி இப்ப தான் தெரியவந்தது." என்றாள்.

"என்ன சொல்ற?" என்றான் ஒன்றும் புரியாமல் கோவமாக.

'ஆமா! இருபத்தி அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி, தோ நிக்கறாங்களே எங்க அம்மா கார் ஓட்ட தெரியாம ஒட்டி, உங்க அப்பா அம்மா வந்த கார இடிச்சி அது பெரிய ஆக்ஸிடென்ட் ஆகி அதுல தான் உங்க அப்பா அம்மா உயிர் போய்டுச்சு. உயிருக்கு போராடிட்டு இருந்த உங்க அப்பா அம்மாவ இவங்க ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு போனதுமில்லாம அவங்க இறந்த உடனே, இவங்க பேஷன்ட்க்கு பிறந்த இறந்த குழந்தைய உங்க அப்பா அம்மா பக்கத்துல வச்சிட்டு உங்கள தூக்கி உங்கள வளர்த்த அப்பா அம்மாகிட்ட கொடுத்துட்டாங்க. அப்போ இவங்க எதுக்கு செஞ்சாங்கன்னு தெரியாது. ஆனா ஒரு வேலை அப்படி செய்யாம இருந்திருந்தா நீங்க உங்க கொடும்பதோட இருந்திருப்பிங்க" என்றாள் கண்களில் கண்ணீரோடு .

"என்ன? நீ சொல்றதெல்லாம் உண்மையா?"அவனால் நம்பமுடியாமல் கேட்டான்.

"ஆமா! நான் சொல்றது அத்தனையும் உண்மை தான். அதோட உங்களுக்கு வேண்டியவங்களையும் உங்களுக்காக கூட்டிட்டு வந்துருக்கேன்." என்று தன் அறைக்கு சென்று ஒரு சிறிய கூட்டத்தோடு வந்தாள். அதில் ஐந்து பேர் இருந்தனர். அனைவரின் முகத்திலும் ஆனந்தகண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.”இவங்கல்லாம் யாரு செல்வி" என்றான் உள்ளே போன தடுமாறிய குரலில்.

'இவங்கதான் உங்க தாத்தா பாட்டி உங்க அப்பவோட அப்பா அம்மா, இதோ இவங்க தான் உங்க அத்தை மாமா, உங்க அப்பாவோட தங்கை, உங்க அத்தை பையன் இவர். அப்புறம் இன்னொரு ஆளும் இருக்காங்க உங்களுக்கு அறிமுகபடுத்த வேண்டிய முக்கியமான ஆள்" என்று அவர்களுக்கு பின்னால் பார்க்க. அங்கே 35 வயது நிரம்பிய ஒரு பெண் நின்றிருந்தாள். உங்க அக்கா உஷா." என்று முடித்தாள்.

"செல்வி.. நீ சொல்வதெலாம் உண்மையா இவர்கள் எல்லாம் என் சொந்தங்களா? நான் அனாதை இல்லையா? எனக்கு அக்கா இருக்காங்களா?" என்று அவளை கட்டிபிடித்து ஆனந்தத்தில் அழ..

அவனின் முதுகை தடவியவாறு சமாதானம் செய்த அவள்,” உங்க அப்பா அம்மாக்கு நடந்த ஆக்சிடென்ட் பத்தி அன்னைக்கு எங்க அப்பா பேசிட்டு இருந்தத நான் கேட்டுட்டேன். அதுக்கபுறம் பிரபு அண்ணா உதவியோட இது எல்லாத்தையும் கண்டுபிடிக்க எனக்கு இருபதுநாள் தேவைபட்டது. இதுக்கு முழுக்க நம்ம புதுமாப்பிள்ளை உதவினார்" என்று கூறினாள்.

தமிழ் அவனை கட்டி தழுவி நன்றி கூறி ஆனந்த கண்ணீரோடு தன் சொந்தங்களை நோக்கினான்.
தூர நின்றிருந்த அவனின் சகோதரி ஓடிவந்து அவனை கட்டிக்கொண்டு அழ,”எவ்ளோ நாள் நான் தனியா அழுதுருக்கேன். ஆனா இன்னைக்கு என் தம்பி கிடைச்சிட்டான். எனக்கு தம்பி இருக்கான்." என்று அவன் நெற்றியில் அன்னையாய் மாறி முத்தமிட்டாள்.

"அக்கா" என்று அவளை கட்டிக்கொண்டு ஆண்பிள்ளை என்பதையும் மறந்து தன் கவலை தீர கதறினான்.

தன் தாத்தா பாட்டி அத்தை மாமா என எல்லோரையும் கட்டிபிடித்து அன்பு பாராட்டி மகிழ்ந்து செல்வியின் பெற்றோரிடம் திரும்பினான்.

"என் செல்வியோட அப்பா அம்மான்னு தான் உங்களை சும்மாவிடறேன் இல்லை உங்களை இங்கயே கொன்னு புதைச்சிருப்பேன். உங்க பொண்ணை உங்ககிட்ட இருந்து பிரிக்க கூடாதுன்னு நினைச்சவன் நான். ஆனா, நீங்க என் அப்பா அம்மாவை மட்டும் இல்லாம என் மொத்த கொடும்பத்தையும் என்கிட்டே இருந்து பிரிச்சிட்டிங்க இல்ல. இப்ப என்னை பார்த்து அனாதைன்னு சொல்லுங்க சொல்ற நாக்கை இழுத்துவச்சு அறுத்துடுவேன்.

என்ன சொன்னிங்க? பெ த்த பொண்ணுன்னு கொஞ்சங்கூட பாசம் இல்லாம சாபம் கொடுக்கறிங்க. வெக்கமா இல்ல உங்களுக்கு. அவதான் இனி எனக்கு அம்மா அப்பா எல்லாமே அவளுக்கு என் உயிரை நான் தர தான் போறேன். உங்க முன்னாடி நான் என் குழந்தையோட வளம் வரல." என்று வீரல் நீட்டி எச்சரிக்க.

"நீங்க இருங்க... என்ன சொன்னிங்க அம்மா... ஒன்னும் இல்லாத பிச்சைகாரனா? இதோ இங்க நிக்கற அவங்க சொந்தகாரங்க சேரதுக்கு முன்னாடியே அவர் என்ன என்ன செய்துருக்கார்னு சொல்லட்டுமா?

படிப்ப முடிச்சி நல்ல வேலைல சேர்ந்த பின்னர் தனக்கு கிடைச்ச அறுபதாயிரம் சம்பளத்துல இவங்க காப்பகத்துக்கு மாசாமாசம் அம்பதாயிரம் கொடுத்துருக்காரு அவங்க வேணாம்னு எவ்ளோ சொல்லியும் கேக்காம இவரே மாசா மாசம் அந்த பணத்துல அந்த காப்பகத்துக்கு தேவையான எல்லா அதியாவசியமான் பொருட்கள வாங்கி போட்ருக்கார். அங்க இருக்க ஒவ்வொரு ரூம்லையும் இவரோட படத்த மாட்டி வச்சிருக்காங்க. எல்லா ரூம்லயும் ஏ.சி மெத்தை நாற்காலின்னு வாங்கி அங்க இருக்க பெரியவங்களுக்கு அவ்ளோ உதவியிருக்காரு இன்னைக்கு அந்த காப்பகத்துல நம்ம வீட்ல இருக்கற வசதி எல்லாமே இருக்கு. கரெக்டா ஒருவருஷம் கழிச்சி தான் சொன்னபடி தான் எடுத்து கொண்டிருந்த பத்தாயிரத்தை அவர்களுக்கு கொடுத்துவிட்டு தனக்கு அம்பதாயிரத்தை எதுத்து கொண்டிருக்கிறார். அவர்களின் கட்டாயத்தின் பேரில். அப்போகூட சும்மா இல்லாம, மாதா மாதம் தேவையான காய்கறி முதற்கொண்டு எல்லாவற்றையும் வாங்கி போடுகிறார் இன்றுவரை. அதுமட்டும் இல்லாம, அங்க இருக்க குழந்தைங்க நல்லா படிக்கணும்னு அங்க ஒரு பெரிய நூலகத்த ஏற்படுத்தி கொடுத்திருக்கார்.

தான் வளர்ந்த இடத்தையே அப்படி பார்த்துகிட்டவரு என்னை நல்லா பார்த்துக்க மாட்டாரா?

அதுமட்டும் இல்ல இப்ப இவர் இவங்க கொடும்பத்தோட சேர்ந்துட்டார். இதே இவருக்கு பெரிய சொத்துதான். ஆனா நீங்க சொன்னிங்களே பணம்.. நம்மகிட்ட இருக்க இல்லையில்லை உங்ககிட்ட இருக்க சொத்துமாதிரி பத்துமடங்கு இவருக்கு மட்டும் சேரவேண்டியது.. இது போதுமா இன்னும் சொல்லவா..?" என்று கேட்க வாய் அடைத்து போனார்கள் அங்கிருந்த அனைவரும்..

"செல்வி, இதெல்லாம் உனக்கு எப்படி..." என்று இழுக்கும் சரவணனை முறைத்துக்கொண்டு”ஆமா, நீங்கதான் வந்து சொன்னிங்க பாருங்க. எல்லாம் நானா தெரிஞ்சிகிட்டது. இப்ப சொல்றேன் இனி இவங்க முகதுலையே நான் முழிக்கமாட்டேன். உங்க அப்பா அம்மாவை அழித்த இவங்களுக்கு நான் இனி மகள் இல்லை. என் சாவுக்குக்கூட அவங்க வரக்கூடாது. வாங்க போலாம்" என்று அவன் கரத்தைப்பிடித்து இழுத்துக்கொண்டு வெளியே நடந்தாள்.

"செல்வி நில்லுமா" என்று குரல் கேட்டவுடன் திரும்பிபார்த்தாள்.

உஷா நின்று கொண்டிருக்க, அவன்”அக்கா மாமா ?" என்று கேள்வியாய் பார்த்தான்.

"அவர் மலேசியா போயிருக்கார். நாளை வந்துவிடுவார். உனக்கு ஒன்னு காட்றேன்" என்று தன் பின்னால் ஒளிந்து கொண்டிருந்த மூன்றுவயது பெண் குழந்தையை தூக்கி கொடுத்தாள்.

"என் பொண்ணு நம்ம அம்மா அப்பா பெயரையே வச்சிட்டேன் அக்க்ஷரா" என்றாள்.

அவன் சோகமாய் முழிக்க,”அம்மா பேரு அகிலா. அப்பா பேரு ராகவ்" என்று தங்களின் தாய் தந்தையரின் பெயரை கூறினாள் அவனின் சகோதரி.

தன் கைகளில் இருந்த குழந்தையை அள்ளி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டான்.

"சரி நேரமாச்சு முதல்ல நம்ம வீட்டுக்கு போகலாம் மீதியை அப்புறம் பேசலாம் வாங்க" என்று கட்டளை பிறப்பித்து முன்னே நடந்தார் அவனின் தாத்தா.
 

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43

14. புது உறவுகள்!​

எல்லோரும் காரில் மண்டபத்தில் இருந்து புறப்பட மணமக்களுக்கென்று அலங்கரித்த வாகனம் அவர்களின் முன்வந்து நின்றது.

ஒன்றும் புரியாமல் சரவணத்தமிழன் அவளை பார்க்க பின்னால் இருந்து சரவணத்தமிழனின் தாத்தா,”ஏன்டா என் பேத்திய முறைக்கிற? அவ நம்மளை சேர்க்க வந்த மகாலக்ஷ்மிடா. அவள் இல்லைன்னா, நாம் சேராமலே இருந்திருப்போம். இந்த ஏற்பாடு எல்லாம் என்னுடையது தான் ." என்றார்.

"சரி தாத்தா" என்று காரினில் அமைதியாக ஏறினான்.

மண்டபத்தில் இருந்து கொஞ்சதூர பயணம் என்பதால் தாமரைச்செல்வி தன் காதல் கைகூடிவிட்ட வெற்றிகளிப்பில், தான் நேசித்தவனே தனக்கு மணாளனாக வந்துவிட்டான் என்ற நிம்மதியிலும் எல்லாவற்றிக்கும் மேலாக தன்னவனை இனி யாரும் தேவையற்ற வார்த்தைகளால் கஷ்டபடுத்த முடியாது என்ற மகிழ்ச்சியோடு காரினில் பின்னே தலைசாய்த்து கண் அயர்ந்தாள்.

உறங்கும் குழந்தைபோல் இருக்கும் அவளை அணைத்திட ஆசை தூண்டினாலும் நடந்தது அனைத்தும் கனவா நனவா என்று அவனுக்கு மலைப்பாக இருந்தது.

தனக்காக தன்னை பெற்றெடுத்த தாய் தந்தையரை பகைத்துக்கொண்டு வந்திருக்கும் அவளை உள்ளங்கையில் வைத்து தாங்கவேண்டும் என்பதில் மட்டும் உறுதியாய் இருந்தான்.

வழிநெடுகிலும் இருவரும் ஒரு வார்த்தைகூட பேசவில்லை.

ஒரு பெரிய வீட்டின்முன் கார் நிற்க, கார் கதவை டிரைவர் திறந்துவிட”இறங்குப்பா" என்றார்கள் அவனின் அத்தை.

தலையசைத்து இறங்கியவன் அவனுக்கு பின்னால் இறங்கும் தன்னவளுக்கும் வழிவிட்டு நின்றான்.

இருவருக்கும் ஆலம் கறைத்து ஆரத்தி கழித்த பின்”உள்ள வாங்க” என்று முன்னே சென்றார் அவர்களின் அத்தை.

"வலது காலை எடுத்து வச்சி உள்ள வாம்மா" என்றவரை பார்த்து சிநேகமாய் சிரித்தபடி உள்ளே வந்தாள் தாமரைச்செல்வி.

"விளகேத்தும்மா" என்று பூஜையறைக்கு கூட்டி சென்று தீபெட்டியை கொடுக்க, சற்று தயங்கிவள் கண்களில் கண்ணீர் ஊற்றெடுக்க பதறி போனார் சரவனத்தமிழனின் அத்தை.

"என்னடா? இங்க பாரு உன் நிலைமை எனக்கு புரியுது. அவனை கல்யாணம் பண்ணனும்னு என்னவெல்லாமோ பண்ணிட்ட. ஆனா, உன்ன பெத்தவங்களை நினைச்சி வருத்தப்படற இல்ல. இனி நீயும் எனக்கு ஒரு பொண்ணு தான்" என்று அவளை அணைத்து கண்களை துடைத்தவர் அவளின் நெற்றியில் அன்பாய் முத்தமிட்டார்.

"என்னை விட்டுட்டிங்களே?" என்று பின்னால் இருந்து குரல்வர எல்லோரும் திரும்பினர்.

அங்கே சிரித்தமுகத்துடன் இருபதுவயது பெண் நின்றிருந்தாள்.

"வந்துட்டியா வாலு? நீ எப்போ காலேஜில் இருந்து வந்த?" என்று அவளின் தலைகோதினார் தமிழனின் அத்தை.

"செல்வி. இது உன்னோட தங்கை நிஷா" என்று கூறினார்.

"ஹாய்! அக்கா நீங்க ரொம்ப கியூட்டா அழகா இருக்கீங்க. நான் ரொம்ப பாவம் பண்ணிருக்கேன் இல்லன்னா நான் பையனா பொறந்திருக்கலாம். நானே உங்களை கல்யாணம் பண்ணிருப்பேன்" என்றதும் அவளின்முகம் குங்குமம நிறத்தில் சிவப்பதை பார்த்து அனைவரும் சிரிக்க, இருவிழிகள் மட்டும் அவள் முகத்திலேயே குடிகொண்டிருந்தன.

"ஹேய் வாலு! ஆரம்பிச்சிட்டியா உன் வேலையை?" என்று அவளின் முதுகில் ஒருஅடி போட்டபடி கையில் பால் தம்ளருடன் நின்றிருந்தாள் சரவணின் அக்கா.

அதற்குள் செல்வி விளக்கேற்றிவிட்டு திரும்பி நின்றிருந்தாள்.

"அத்தை நீங்க கேட்டபடி எடுத்து வந்துட்டேன்" என்று அவரிடம் க்ளாசை நீட்டினாள்.

"இந்தாப்பா இதை குடி. பாதி குடிச்சிட்டு செல்விக்கு கொடு" என்றார்.

"சரி" என்று தலையாட்டி கைகளில் வாங்கி குடித்துவிட்டு மீதியை செல்வியிடம் நீட்டினான்.

"அக்கா மாமா எந்த ஊரு?" என்று தன் சகோதரியை பார்த்துகேட்டான் தமிழன்.

"சின்னவயசுல இருந்து நானே வளர்த்துட்டதால அவளை பிரிஞ்சி என்னால இருக்கமுடியாது. அதனால என் பெரிய பையனுக்கே கல்யானம் பண்ணி இங்கயே வச்சிகிட்டேன்." என்றார் அவனின் அத்தை.

செல்வியிடம் திரும்பியவர்”செல்விம்மா! எனக்கு இதுவரைக்கும் மூன்று பிள்ளைகள். இரண்டு பையன், ஒரு பெண் இவள் கடைக்குட்டி மிகுந்த வாலு. இனி உன்னோடு சேர்த்து எனக்கு நாலு குழந்தைகள். நான் தான் இனி உனக்கு அம்மா வேற எந்த நினைப்பும் வரக்கூடாது புரியுதா?" என்றார் லேசான கண்டிப்பான குரலில்.ஆனந்தகண்ணிரோடு அவரை கட்டி தழுவிகொண்டாள்.

"சரிம்மா! அவங்களுக்கு சாப்பிட ஏதாவது கொடுத்து கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுக்க விடுங்க" என்றார் அங்கே வந்த தாத்தா.

"சரிப்பா" என்று அவர்களுக்கு உணவளித்து அவர்களுக்கு என்று ஒரு அறை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

உணவருந்திவிட்டு சற்று ஓய்வு எடுக்க சொல்லி உள்ளே அனுப்பினார்கள்.

திருமண மண்டபத்தில் இருந்தே இதுவரை இருவரும் நேருக்கு நேர் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. சரவணனுக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை. தன் வாழ்க்கையே இனி தனக்கு இல்லை என்று நினைத்தநேரத்தில் இப்படி நடக்கும் என்று கனவிலும் தெரியவில்லை.

உள்ளே வந்த செல்வி எதுவும் பேசாமல் சன்னலின் திரையை விலக்கி வெளியே தெரிந்த இயற்க்கை காட்சியை ரசித்து கொண்டிருந்தாள்.

அப்படி சொல்வதை விட சரவணத்தமிழனிடம் பேசக்கூடாது என்று முடிவெடுத்து அங்கே நின்றிருந்தாள்.

அவள் அருகில் வந்துநின்றவன், மெல்ல”செல்வி" என்றதும் அவன் முகத்தை பார்க்காமல்,”எதுவுமே பேசாதிங்க. நீங்க பேசறத எதுவுமே நான் கேக்க விரும்பலை. ப்ளீஸ் கொஞ்சநேரம் என்னை தனியா விட்ருங்க” என்று அங்கிருந்து நகர்ந்து கண்ணாடி முன் வந்துநின்று தன் அலங்காரங்களை கலைத்து கொண்டிருந்தாள்.

அவள் தன் மீது கோபமாக இருக்கிறாள் இப்போதைக்கு எதுவும் பேசாமல் சிறிது நேரம் கழித்து பேசி கொள்ளலாம் என்று அவனும் அங்கே வைக்கப்பட்டிருந்த புது பார்மல் டிரஸ் மாற்றினான்.

அவளும் எதுவும் பேசாமல் தனக்கு கொடுக்கபட்டிருந்த காட்டன் புடவையை மாற்றி வந்து கட்டிலில் கண்களை மூடி வலது கையை தன் தலைக்கு மேல் வைத்து கொண்டு படுத்துகொண்டாள்.

சிறிதுநேரத்தில் அவள் களைப்புடன் உறங்கிவிட சரவணத்தமிழன் அவளின் அருகில் ஒருக்களித்து படுத்தபடி அவளையே பார்த்துகொண்டிருந்தான்.

இதற்க்குமுன் ட்டூரின் போது, காரில் அவளை இத்தனை அருகினில் பார்த்திருக்கிறான் .

அந்த நினைவு வந்தபின் தான் அவனுக்கு உரைத்தது அன்று தான் அவள் உறங்கிவிட்டாள் என்று எண்ணி தன் மனதில் இருந்ததை கூற இவள் தூங்காமல் கேட்டுகொண்டிருந்து இவ்வளவு வேலைகளை செய்திருக்கிறாள்.

தன்னை இரண்டுநாள் முன்னே வரச்சொன்ன போதுகூட இதுபற்றி எதுவும் சொல்லாமல் அவளே இவ்வளவு வேலைகளையும் செய்து முடித்திருகிறாள்.

'அப்படியென்றால் இவள் எந்த அளவுக்கு என்னை காதலித்து இருப்பாள்.' என்று எண்ணி கொண்டவன்.

இப்பொழுது அவள் நெற்றியில் அசைந்தாடும் அந்த கற்றைமுடியை உரிமையோடு ஒதுக்கிவிட்டு அவளின் நெற்றியில் முத்தமிட்டான்.

அவனும் அசதியில் உறங்கிவிட

"செல்வி! செல்வி!” என்று குரல்கேட்டு கண்விழித்த செல்வி தன் இடது பக்கத்தில் பாரம் அதிகமாக இருப்பதை உணர்ந்து திரும்பி பார்க்க, அங்கே சிறுகுழந்தை போல் அவளின் இடக்கையை பிடித்தபடி உறங்கி கொண்டிருந்தான் அவளின் ஆசைக்கணவன் சரவணத்தமிழன்.

அவனின் நெற்றியில் முத்தமிட்டு பின் மெல்ல அவனை எழுப்பாமல் எழுந்துசென்று கதவை திறக்க, அங்கே சரவணத்தமிழனின் அக்கா நின்றிருந்தார்.

"என்னடா நல்ல தூக்கமா? அவனும் தூங்கிட்டு இருக்கானா?" என்று கேட்டாள்.

"உள்ள வாங்க அண்ணி” என்று வழிவிட்டாள்.

"இல்லடா! நீ அவனை எழுப்பி ரெண்டுபேரும் பிரெஷாகி கிழவாங்க. எல்லாரும் சாப்பிட்றதுகாக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க" என்றாள்.

'சரிங்க அண்ணி” என்று சிரிக்க, அவளும் சிரித்துவிட்டு போய்விட்டாள்.

உள்ளே திரும்பிய செல்வி”இந்த தடியன எப்படி எழுப்பறது இப்படி தூங்குறானே? கொஞ்சமாச்சும் வருத்தமிருக்கா பாரு. நான் பேசலையே சமாதானம் பண்ணனும்னு?" என்று தன்னை தானே கேள்விகேட்டு தலையில் அடித்துக்கொண்டவள்.

சிறிதுநேரம் யோசித்து தன் போன் எடுத்து அவனின் நம்பருக்கு கால் செய்தாள்.

"என்னை கொல்லாதே தள்ளி போகாதே நெஞ்சை கிள்ளாதே கண்மணி.. சொன்ன என் சொல்லில் இல்லை உண்மைகள் ஏனோ கோபங்கள் கண்மணி..."

என்ற அப்பாடல் ஒலிக்க அலறி அடித்து போனை எடுத்தவன் தூக்கத்தில் இருந்ததால் தான் எங்கிருக்கிறோம் என்பதை மறந்து 'ஹலோ செல்வி" என்றான்.

"எதிர்திசையில் எதுவும் கேட்காமல் அப்பொழுது தான் எல்லாம் நினைவு வர அவளின்புறம் திரும்பினான்.

மார்பிற்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு அவனையே பார்த்தபடி நின்றிருந்தாள்.

எதுவும் பேசாமல் தலைகவிழ்ந்தவனை பார்த்து,”கிழ கூப்பிட்றாங்க போலாம்" என்று வாஸ்ரூமிற்குள் சென்று முகம்கழுவி தயாரானாள். அவளையே பார்த்து கொண்டிருந்த சரவணத்தமிழன் அவள் திரும்பி முறைக்கவும் சென்று முகம்கழுவி வந்து தயாரானான்.

"நமக்குள்ள நடக்கறது எதுவும் யாருக்கும் தெரியவேண்டாம்” என்று அவனை பார்க்க.

"நமக்குள்ள என்ன நடக்குது?” என்றான் குறும்புடன்.

அவனை முறைத்தபடி அவன் பின்னே கிழே இறங்கினாள்.

"வாப்பா வாம்மா சாப்பிடலாம்" என்றார் தாத்தா.

அனைவரும் டைனிங் ஹாலில் ஒன்றாக தரையில் அமர்ந்து இருப்பதை ஆச்சர்யமாக பார்த்தான் சரவண்த்தமிழன்.

"என்னப்பா அப்படி பார்க்கிறாய்?" என்று தாத்தா கேட்டுவிட்டு, அவரே தொடர்ந்தார்.

"இரவுவேளை மட்டும் எல்லோரும் ஒன்றாக தரையில் அமர்ந்து கண்டிப்பாக வாழை இலையில் தான் உண்ணவேண்டும் என்பது என் கட்டளை" என்று சிரித்தார்.

இரவு உணவு முடித்துவிட்டு எல்லோரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.

'நாளைக்கு நம்ம வீட்லயே சின்னதா ஒரு வரவேற்ப்பு நிகழ்ச்சி ஏற்பாடு பண்ணி இருக்கேன் தமிழ்' என்றார்.

"எதுக்கு தாத்தா அதெல்லாம் ?" என்று கேட்டவனை பார்த்து”என் பேரன் உயிரோட இருக்கான்னு எல்லோருக்கும் சொல்லணும் அதோட தங்கம் மாதிரி எனக்கு ஒரு பேத்தி கிடைச்சிருக்கா இல்ல. அவளை எல்லோருக்கும் அறிமுகபடுதணும். நீ எதுவும் சொல்லக்கூடாது" என்றார்.

"சரி தாத்தா. உங்க விருப்படியே நடக்கட்டும்" என்றான்.

"கல்யாணம் தான் இப்படி நடந்துருச்சு. ஆனா உங்க வாழ்க்கைய ஆரம்பிக்கிறது நல்ல நேரத்துலையா இருக்கனும், அதனால நல்ல நாள்ல சடங்குக்கு எல்லாம் ரெடி பண்ண சொல்லியிக்கேன்" என்றார் அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில்.

"சரி தாத்தா" என்றான் வெட்க புன்னகையுடன்.

"சரி! ரொம்ப நேரமாகிடுச்சு எல்லோரும் போய் தூங்குங்க" என்று தானும் எழுந்து தன் அறைக்கு சென்றார்.

எல்லொருக்கும் குட்நைட் சொல்லிவிட்டு தங்களின் அறைக்கு வந்தவள், கட்டிலில் படுக்காமல் கிழே பாய்விரிக்க அதை கண்ட சரவணத்தமிழன் முகம் சுருங்கியது.

"செல்வி நீ கிழ படுக்கவேண்டாம். உனக்கு பழக்கமில்லை. நான் படுத்துக்கிறேன்” என்றான் அவளிடம் மெதுவாய்.

இதுவரை அடக்கி வைத்திருந்த கோபம் வெளியே வர அவனின் முன் முறைத்தபடி வந்துநின்றாள் செல்வி.
 

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43

15. ஊடலில் காதல்​

"இப்ப என்ன வேணும் உங்களுக்கு? எதுக்கு என்னை தொந்தரவு செய்யறிங்க? நான் உங்ககிட்ட ஏதாவது ஹெல்ப் கேட்டேனா? உங்க வேலை என்னவோ அதைமட்டும் பாருங்க" என்று மறுபடியும் உறங்க சென்றவளின் கரம் பற்றி நிறுத்தினான்.

அவனின் கைபிடியை உதற முயர்ச்சிக்க அது இன்னும் இரும்பாக இறுகியது.

"என் கைய விடுங்க முதல்ல. என்னை தொடர வேலையெல்லாம் வச்சுகாதிங்க. எந்த உரிமைல என் கைய பிடிக்கிறிங்க?" என்று கேட்டாள்.

"ஒஹ்! உனக்கு அதுக்குள்ள மறந்துபோச்சா? இன்னைக்கு காலைல தானே உன் கழுத்துல தாலி கட்டினேன்." என்று சரவணத்தமிழன் வேண்டுமென்றே அவளை சீண்டினான்.

"அப்படியா சொல்றிங்க? அது நீங்களா விரும்பி என் கழுத்துல கட்டினது இல்ல... நானா விரும்ப்பி உங்கள என் கழுத்துல கட்ட வச்சது" என்று கூறினாள்.

"அப்படியா? அப்ப ஓகே நான் எப்போ விரும்பி உன்னை கல்யாணம் பண்ணிகிட்டேன்னு நீ நினைக்கிறியோ? அதுக்கப்புறம் நாம பேசிக்கிறது நல்லதுன்னு நினைக்கிறன். நீ ரொம்ப டையர்டா இருப்ப சோ கோ அண்ட் டேக் யுவர் ஸ்லீப் வெல். குட்நைட்" என்று கூறிவிட்டு அவளை திரும்பியும்பாராமல் கட்டிலில் ஒரு பகுதியில் படுத்துக்கொண்டான்.

"எவ்ளோ நேரம் அங்கே நிப்ப இரவு முழுவதும் நிக்க உத்தேசமா? வந்து கட்டிலிலேயே படுத்துக்கோ. உனக்கு விருப்பமில்லைனா நீ கீழயே கூட படுத்துகலாம். ஐ ஹாவ் நோ அப்ஜெக்க்ஷன்" கண்களை திறவாமலே கூறிவிட்டு உறங்கி போனான்.

"அட பயபுள்ள! என்ன இவன் வந்தான் நான் கோவமா பேச ஆரம்பிச்சவுடனே என்னை சமாதானபடுத்த முயற்ச்சிக்காம போய் படுத்துகிட்டானே? நான் கோவமா இருக்கேன்னு தெரிஞ்சும் என்னை கன்வின்ஸ் பண்ணாம போய் படுத்துகிட்டான். இவன் என்ன தான் மனசுல நினைச்சுட்டு இருக்கான். இருக்கட்டும் எங்க சுத்தினாலும் என்கிட்ட தான வரணும், அப்போ பார்த்துகிறேன். அதுவரைக்கும் நானும் உன்கிட்ட வரமாட்டேன்." என்று நினைத்துக்கொண்டவள்.

"நான் ஏன் கிழ படுக்கணும்? இவன் மட்டும் என்னை பத்தி கவலைப்படாம மேல நல்லா நிம்மதியா தூங்குவான். நான் மட்டும் கிழபடுத்து தூங்கி எனக்கு உடம்பு வலிக்கனுமா? முடியாது நானும் மேல தான் படுப்பேன்" என்று கிழே போட்ட போர்வையை எடுத்துக்கொண்டு கட்டிலின் மேல் மறுபுறத்தில் திரும்பி படுத்துக்கொண்டாள். இவளின் செய்கைகளை பற்றி நன்கு தெரிந்தவன் உறங்குவது போல் பாசாங்கு செய்தாலும் உதட்டினில் தானாக புன்னகை மலரத்தான் செய்தது.

'ஒரு இரண்டு நாள் பொறுத்துக்கோ. தென் என்ன சொன்னாலும் உன்னை விடமாட்டேன் செல்லம்' என்று மனதினில் நினைத்து கொண்டு உறங்கிபோனான்.

மறுநாள் இருவரும் எழுந்து குளித்து ரெடியாகினர்.

ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வதை தவிர்த்து வீட்டினில் எல்லோரிடமும் சிரித்து பழகி வலம் வந்தனர்.

இரண்டு நாள் கழிந்தபின் அவர்களின் வாழ்கையை தொடங்க அன்றே நல்ல நாள் என்று கருதி பெரியவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

இருவரும் அலங்கரிக்கப்பட்ட ஒரே அறையில் மௌனமாய் அமர்திருந்தனர்.

"ஜஸ்ட் இன்னைக்கு மட்டும் இந்த ரூமை உன்னோட ஷேர் பண்ணிக்கிறேன். நாளைக்கு என் வீட்டுக்கு போயிருவோம். அங்கே உன் இஷ்டப்படி நீ இருக்கலாம். யாரும் உன்னை தொந்தரவு செய்யமாட்டார்கள். உனக்கு என்னுடன் தங்குவது பிடிக்கவில்லை என்றால் நிறைய அறைகள் இருக்கிறது அதில் ஏதாவதோன்றை எடுத்துக்கொள். இது எல்லாம் பெரியவங்க திருப்திக்காக ஒத்துகிட்டது. நீ எப்பவும் போல ப்ரீயா இரு. குட் நைட்" என்று உறங்கினான்.

"இவனுக்கு என்னை பிடித்திருகிறது என்று நான் தான் தப்புகணக்கு போட்டுவிட்டேனோ? என்னை சமாதனம் செய்யக்கூட தோன்றாமல் இவன் எண்ணத்திற்கு இருக்கிறானே" என்று அவள் விழிகளில் இருந்து நீர்வழிய ஆரம்பித்தது.

மறுநாள் மதியம்”தாத்தா! நாங்க வீட்டுக்கு கிளம்புறோம்" என்று சரவணத்தமிழன் கூற எல்லோரும் அதிர்ந்தனர்.

"என்னப்பா இது தான உன் வீடு. அப்புறம் நீ எங்க போகணும்?" என்றார் தாத்தா.

"கண்டிப்பா தாத்தா. இது என் வீடு அதுல எந்த சந்தேகமும் இல்ல, ஆனா என் வேலையும் இருக்கு. நான் அதையும் பார்க்கணும்" என்று கூறும் அவன் முகத்தை கூர்ந்து கவனித்தார்.

அவனின் விழிகள் அவ்வபொழுது தாமரையிடம் நகர்வதை உணர்ந்தவர். காரணம் இல்லாமல் அவன் இதை கூறவில்லை என்று புரிந்துகொண்டு” சரி சரவணா. ஆனா ஒரு கண்டிஷன்" என்று கூறி இருவரையும் பார்த்தார்.

"என்ன தாத்தா?" என்றான்

"ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள்ள உன் வேலை எல்லாத்தையும் முடித்துக்கொண்டு திரும்பி நிரந்தரமா இங்கயே வந்துருனம் சரியா? நீயே அந்த தேதியும் சொல்லிட்டு அப்புறம் போ" என்றார்.

சுற்றி இருந்த எல்லோரும் இருவரையும் ஒன்றும் புரியாமல் பார்க்க”சரி தாத்தா. அடுத்த வருஷம் இதேநாள் நான் இங்க வந்துருவேன். அதுக்கு அப்புறம் எங்கயும் போகமாட்டேன் உங்க எல்லார்கூடயும் தான் இருப்பேன். அது வரைக்கும் வாரத்துக்கு ஒருநாள் இங்க தான் இருப்பேன்" என்று சிரித்தான்.

"சரிப்பா அப்ப போயிட்டு வா. இங்க கடல் மாதிரி பரந்து விரிந்து இருக்கு நம்ம பிசினஸ் அதுக்கப்புரம் நீ வந்து பார்த்துக்கணும்” என்றார்.

"சரிங்க தாத்தா. நான் சாயந்திரம் கிளம்புறேன்" என்று செல்வியை பார்த்தான்.

அவளின்முகமோ வேறெங்கோ பார்ததுக்கொண்டிருந்தது

அவர்கள் அங்கிருந்து சென்றபின் அவரின் மனையாள்”என்னங்க இப்படி சொல்லிட்டிங்க எதுக்கு பேரன போகவிட்டிங்க. வேணாம்னு சொல்லிருக்கலாம்ல" என்றார் வருத்தமாய்.

அவரின் தலையை ஆதரவாய் கோதிவிட்டு”அவன் நம்ம பேரன் எங்க போக போறான் திரும்பிவந்துருவான். சின்னசிறுசுங்க கொஞ்சம் தனியா இருக்கட்டும்." என்று சிரித்தார்.

இருவரும் அங்கிருந்து மாலையில் அனைவரிடமும் கூறிவிட்டு விடைபெற்றனர்.

அங்கிருந்து தன் வீட்டிற்கு அவளை அழைத்து சென்றான்.

"இங்கயே இரு. நான் வரேன்" என்று உள்ளே போக அவள் அவன் சொன்னதை மதியாமல் உள்ளே கால் எடுத்து வைக்கப்பார்த்தாள்.

"ஸ்டே வேர் யூ ஆர்? இப் யூ ஹாவ் கட்ஸ் டு மீட் மை பனிஷ்மென்ட் தென் கோ ஹெட் வாட் இட் மே பி" என்று அவன் குரல் கேட்க.

"ஆமா. பெரிய இங்கிலீஷ் துறை தமிழ்ல பேசமாட்டாறோ? எதுக்கு? வாசலையே வச்சு அடிச்சிறபோறான். ரெண்டுநிமிஷம் நிக்கறதுல என்ன ஆகப்போகுது?" என்று அங்கேயே நின்றாள்

வாசலில் அவளை நிறுத்தியவன் உள்ளே சென்று ஆரத்தியை தானே கரைத்துக்கொண்டு வந்து ஆலம் சுற்றினான்.

அவனின் நடவடிக்கையில் தெரிந்த திடீர் மாற்றம் அவளுக்குள் சிறுசந்தேகத்தை உருவாக்க அவனை விநோதமாய் பார்க்க தொடங்கினாள்.

தங்களின் அறையை அவளுக்கு திறந்து காட்டியவன்”இது தான் இனி நீயும் நானும் வாழ்போற இடம்” என்று கூறி அவளை பார்த்து மெனமையாய் சிரிக்க, அவள் முகத்தை திருப்பிக்கொண்டாள்.

"சரி. அங்க கப்போர்ட் இருக்கு. உன்னோட திங்க்ஸ் அடுக்கிக்க. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு” என்று அங்கிருந்து சென்றான்.

அந்த அறையை சுற்றி நோட்டமிட்ட்வள் மிக சுத்தமாக அறையை நேர்த்தியாக வைத்திருப்பதை பார்த்து சிரித்தாள்.

தன் உடைமைகளை அடுக்கியபின் வீட்டை சுற்றி பார்த்தவள் கடைசியாக வந்த இடம் சமையல் அறை, அங்கே அவளின் கணவன் சமையலை முடித்துவிட்டு மேடையை சுத்தம் செய்து கொண்டிருந்தான்.

"என்னை கூப்டிருகலாம்ல எதுக்கு இப்படி தனியா செய்யணும்?" என்று கேட்டபடி உள்ளே வர,”இத்தனை வருஷம் தனியா தான இருந்தேன் இனிமேயும் பழகிக்கணும்" என்றான் அவளை ஓரவிழியால் பார்த்தபடி.

அவனின் சொற்களில் அவளின் விழிகளில் ஓரத்தில் நீர் கசிய வைக்கும் சக்தி உடையது என்பதை அவன் நன்கு அறிவான்.

"பசிக்குதா சாப்பிடலாமா?" என்றபடி எல்லாவற்றையும் டைனிங் டேபிளில் அடுக்கி கொண்டு கேட்டவனை முறைத்துவிட்டு”எனக்கு ஒன்னும் வேணாம். நானே சமைசிகிறேன்" என்று சமையல்மேடை முன் வேகமாக போய் நின்றவள் ஒன்றை மறந்திருந்தாள்.

அது என்னன்னு தானே யோசிக்கிறிங்க அவ்ளோலாம் மண்டைய குழப்பி யோசிக்காதிங்க! நானே சொல்லிடறேன். அதாவது மறந்தும்கூட இத்தனை வருடம் தன் வீட்டில் சமையலறை பக்கம் சென்றதில்லை என்பதை.

"அய்யய்யோ வேகமா ரோஷமா வந்து நின்னுட்டோம், ஆனா சமைக்க தெரியாதே இப்ப என்ன பண்றது. இவன்கிட்ட சொல்லிடலாமோ? ஹம்..ம்ம் வேணாம் வேணாம்.. பேசாம அமைதியா போய் பட்டினியா படுத்திடுவோம்" என்று தனக்குள் பேசிகொண்டிருந்தவள் தன் அருகில் ஒரு உருவம் வந்து நின்றதை கவனிக்க மறந்திருந்தாள்.

தன் இடையினில் வலியகரம் ஒன்று அணைப்பதை உணர்ந்து வேகமாக திரும்பினாள்.

ஆனால் அவளின் கணவன் மார்பின் குறுக்கே இரு கைகளையும் கட்டிக்கொண்டு டைனிங் டேபிளின் மீது சாய்ந்தபடி தன்னை பார்த்து சிரிப்பதை பார்த்து,”அவர் அங்க தான நிக்கறார் ஆனா எனக்கு ஏன் இப்படி தோனுச்சு?" என்று யோசித்தவள்.

"இல்ல இல்ல இவ்ளோ சீக்கரம் நாம சமாதானம் ஆகிடக்கூடாது, இந்நேரம் நம்ம ப்ளான் சொதப்பி வேற எவனாவாது என் கழுத்துல தாலி கட்டியிருந்தா என்ன ஆகறது? இவனை ஒரு வழி பண்ணாம நான் சமாதானம் ஆகப்போறதில்லை" என்று அவனை முறைத்துவிட்டு தங்கள் அறைக்கே போக நினைத்தவளை,”நில்லு நீ பசி தாங்கமாட்ட அதனால்வந்து வயிறு நிறைய சாப்பிட்டு அப்புறமா சண்ட போடு" என்றான்.

"எனக்கு ஒன்னும் வேண்டாம். அதுவும் நீ சமைச்சது சுத்தமா வேண்டாம்” என்றாள்.

"சரி. அப்புறம் உன் இஷ்டம். நான் என்ன செய்ய? எனக்கு பசிக்கிறது நான் சாப்பிட போகிறேன்" என்று அமர்ந்து உண்ண ஆரம்பித்தான்.

அவளும் உள்ளே சென்றுவிட்டாள்.

இரவு பதினொருமணி நம்ம செல்வி தூங்காம டிவி பார்த்துட்டு இருந்தா, எப்படி தூக்கம் வரும் வயித்துல ஒரே சத்தம் பயங்கரமா பசிக்குது. 'ஐயோ ரொம்ப பசிக்குதே? தூக்கமே வரமாட்டேங்குதே. ஏண்டி சாபிடற விஷயத்துல தானா உன் வீராப்ப காட்டுவ?' என்று தன்னை தானே திட்டிக்கொண்டு உள்ளே எட்டி பார்த்தாள்.

அவன் மும்முரமாக லேப்டாப்பில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தான்.

பூனை நடை போட்டு சமையலறை பக்கம் போனவள் அங்கே இருந்த பாத்திரத்தை திறந்து பார்க்க எல்லாமே காலியாக இருந்தது.

'அடப்பாவி எல்லாத்தையுமா சாப்பிட்டான்? நான் ஏதோ கோவத்துல சொல்லிட்டேன் சாப்பாடு வேணாம்னு. அதுக்காக இப்படி எல்லாத்தையுமா சாப்பிடுவாங்க? எனக்கு கொஞ்சம் வச்சிருக்கலாம்ல?' என்று தன் கணவனை திட்டிக்கொண்டிருந்தவள். மறுபடியும் தன் இடையில் ஓர் கரம் அணைத்திட”ச்சே. இதுவேற. நானே பசிலயும் அவன் மேல கோபத்துலையும் இருக்கேன் இப்ப தான் இப்படி ரொமான்ஸ் பண்ணி வழியனுமா?" என்று திட்ட.

"பசிக்குதா?" என்ற கேள்வி தன் செவிகளின் மிக அருகில் கேட்பதை உணர்ந்து, தான் கண்டது கனவு அல்ல என்று உரைக்க வேகமாக நகர முயன்றவளை அவள் கணவன் அவளின் இடையினில் கரம் வைத்து அவளை அணைத்து தன்புறம் திருப்பினான்.

பசி பறந்து போக கோபம் மூளையை அக்கிரமித்தது செல்விக்கு, வேகமாக அவன் மார்பினில் கை வைத்து தள்ளி விட்டாள்.

"என்னை தொடர வேலைல்லாம் வச்சிக்காதிங்க" என்று கோவமாக கூறினாள்.

"அப்போ நான் உன் பக்கத்துல வரக்கூடாது இல்ல, நல்லா யோசிச்சு சொல்லு அப்புறம் என் மேல எந்த குறையும் சொல்லக்கூடாது சொல்லிட்டேன்” என்று குறும்பாய் சிரிக்க.

தாமரைசெல்வி கோபம் தலைக்கு ஏற அடுத்த நொடி சரவணத்தமிழனின் கன்னத்தில் விழுந்தது ஒரு அரை.

"என்ன நினைட்சிட்டு இருக்க நீ? என்னை விரும்புறேன்னு உன் வாயால நீ அன்னைக்கு மட்டும் சொல்லலன்னு வையி, இன்னைக்கு உன் பக்கத்துல உன் மனைவியாய் இருக்க மாட்டேன். நான் தூங்கறேன்னு நினைச்சு நீ சொன்ன உண்மைதான் நம்மள இங்க கொண்டு வந்து நிக்க வச்சிருக்கு. ஒருவேளை அன்னைக்கு எனக்கு தெரியாம போயிருந்தா? என்னை வேற எவனோ ஒரு முகம் தெரியாதவனுக்கு கட்டி வெச்சிட்டு போயிருப்ப இல்ல? யூ இடியட். நீ பண்ண தப்புக்கு இனிமே தான் தண்டனை தரப்போறேன். உனக்கும் எனக்கும் மட்டுமே நடக்க போற போர்." என்று கோவமாய் திரும்ப நடந்தாள.

தன்னை விட்டு தூரமாய் போனவளின் கரத்தை ரெண்டு அடியில் நடந்து தடுத்தவன். அவளை வலுக்கட்டாயமாக தன்புறம் திருப்பினான்.

"நீ இப்டி முடிவெடுத்து என்னை திருமணம் செய்ய காரணமானவனே நான் தான் மை டியர் வைப்" என்று அவளின் நெற்றி முடியை தன் நுனி விரலால் ஒதுக்கிவிட்டவன் கூற, ஒன்றும் புரியாமல் முழித்தாள்.

"புரியலையா? இப்படி உட்கார் விளக்கமாக சொல்றேன்." என்று அவளின் தோளை மென்மையாய் பற்றி கட்டிலில் உட்கார வைத்தான்.

"என் கொடும்பத்தை என்கூட சேர்த்து வைத்தது முழுக்க என் பங்கு எதுவும் இல்லை. இன்பேக்ட் ஐ டோன்ட் ஹாவ் எனி கிளு ஆப் திஸ் ஆல்சோ. ஆனா நீ என்னை கல்யாணம் பண்ணிகிட்டதுல முழுபங்கு உன்னது இல்ல. பிப்டி பெர்சென்ட் இஸ் யூவர்ஸ் அண்ட் பிப்டி பெர்சென்ட் இஸ் மைன். யூ டோன்ட் க்நொவ் அபௌட் தட்" என்று கண்சிமிட்டி சிரிக்க. 'இவன் என்ன தான் சொல்றான்? ஒரு வேளை தான் அறைஞ்சதுல இவன் மண்டை குழம்பிட்டு இருக்குமோ?' என்று யோசித்தாள்.

"அதெல்லாம் நீ அடிச்சதாலல்லாம் நான் ஒன்னும் குழம்பலை பேபி. நான் உனக்கு தெரியாத உண்மைய தான் சொல்றேன். நீ என்னை அடிச்சதுக்கு, அப்புறமா நான் மொத்தமா உன்கிட்ட இருந்து வாங்க வேண்டியதை வாங்கிக்கிறேன்" என்று சிரித்து கண்ணடித்தான்.
 

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43

16. எண்ணங்களும் ஒன்றாகும் காதலினால்​

"என்னை சமாதானம் பண்ணனும்னு ஏதாவது சொல்லிட்டு இருக்காதிங்க. போய் ஏதாவது வேலையிருந்தா பாருங்க" என்று கிண்டலாய் சொல்லியவளை மெதுவாய் நெருங்கினான் .

"இப்போ எதுக்கு என் பக்கத்துல வரிங்க. தள்ளி போங்க” என்று பின்னேசெல்ல, அவனும் சிரித்தபடி முன்னே அவளை நோக்கி தன் நடையை நிற்காமல் செலுத்தினான்.

"அப்படியா உன்னை சமாதானம் படுத்தனும்னு நான் சொல்றேன்னு நினைக்கிறியா?" என்று தன் விரல் நகம் கூட அவளின் மீது படாமல் அவளை சுவரோடு அணை போட்டபடி”அப்போ உன்னை பார்க்க வந்த மாப்பிள்ளைகிட்ட நீ என்ன பேசினேன்னு சொல்லவா?" என்று கேட்டவனை அதிர்ச்சியாய் நோக்கினாள்.

"உங்களுக்கு என்னை பிடிச்சிருகான்னு எனக்கு தெரியாது. ஆனா, உங்களை என்னால கல்யாணம் பண்ணிக்கமுடியாது. ஏன்னா நான் வேற ஒருத்தரை விரும்பறேன். என்ன ஆனாலும் அவரை தான் கல்யாணம் பண்ணிப்பேன். ப்ளீஸ் என்னை பிடிக்லைன்னு சொல்லிடுங்க" அப்படின்ன கரெக்டா? என்றவனை பார்த்து.

'ஒரு வேளை இவன் அங்க எங்கயாவது இருந்திருப்பானோ ஒரு வார்த்தை கூட அட்சுபிசகாமல் அப்படியே சொல்றானே' என்று யோசித்துகொண்டிருக்கையில்,”சத்தியமா நான் அந்த இடத்துல இல்லை, ஆனால் அங்க நடந்தது எனக்கு எப்டி தெரியும்?" என்று கேட்டான்.

ஒன்றும் புரியாமல் செல்வி முழிக்க,”நானே சொல்றேன் தாமரைச்செல்வி" என்று அவள் கழுத்தினில் தன் முகம் புதைக்க மழையை கண்ட பாலைவனம் போல் பாவையவள் மாந்தளிர் தேகம் சிலிர்த்து நடுங்க தொடங்கியது.

அவளின் உடல் நடுங்குவதை கண்டு லேசான புன்னைகையோடு தன் முகத்தை நிமிர்த்தியவன் அவளின் நெற்றியில் தன் பூவிதழை ஒற்றி எடுத்தான்.

"உண்மையா கண்ணை மூடி தூங்கரவங்களுக்கும் சும்மா கண்ணை மட்டும் மூடி உட்கார்ந்சிருந்த உனக்கும் எனக்கு வித்யாசம் தெரியாதுன்னு நினைச்சியா? நீ கார்ல தூங்கலைன்னு எனக்கு நல்லா தெரிஞ்சு தான் உன்னை விரும்புறேன்னு சொன்னேன். நான் உன்னை விரும்பலைன்னு சொன்னப்புறம் உன் முகபாவனைகளே சொல்லியதே நீ என்னை விரும்புவதை அதற்கப்புறம் நீ அதில் உறுதியாக இருக்கிறாயா என்பதை சோதிக்கவே அதற்க்கு பிறகும் உன்னை விரும்புவதை நேரடியாக எங்குமே சொல்லாமல் இருந்தேன். தவிர உன்னை கண்காணிப்பதில் ஒரு நாளும் தவறவில்லை. அப்பொழுது தான் நீ உன் தோழியிடம் என்ன நடந்தாலும் நான் அவரை தவிர வேறு யாரையும் திருமணம் செய்யமாட்டேன் என்று பேசியதில் இருந்து நீ எந்த அளவுக்கு விரும்புகிறாய் என்பதை புரிந்து கொண்டேன். என்ன நடந்தாலும் உன்னை மனைவியாக்கிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். ஆனால் அதுவரைக்கும்கூட உன்னை உன் அப்பா அம்மாகிட்ட இருந்து பிரிக்கக்கூடாதுன்னு தான் நினைச்சேன்."

அதிர்ச்சியாக அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் செல்வி.

"நான் உன்னை கவனிக்கறதையும் நீ என்னை விரும்பறதையும் உன் அப்பா கண்டுபிடித்துவிட்டார் என்பதை அறிந்து அவரை உன்னிப்பாக கவனித்ததில் அவர் உனக்கு மாப்பிள்ளை பார்த்துவிட்டது எனக்கு தெரிந்தது. உன்னை வந்து பார்ப்பதற்கு முன்னரே மாப்பிள்ளையை சந்தித்து நம்மை பற்றி பேசியபின் தான் உன்னை பெண் பார்க்க அவர் ஒத்துகொண்டார். அதுவரைக்கும் அவரும் வேறு பெண்ணை விரும்புவதால் அவர் அப்பாவிடம் சண்டை போடப்போவதாக கூறினார்.

உன்னை வந்து பார்த்து பின் நான் என்ன கூறினேனோ அதே அச்சு பிசகாமல் நீயும்கூற அவர் என்னிடம்”சார் நீங்க ரெண்டு பேரும் ஏற்கனவே பேசிவச்சிகிட்டு ஒரே மாதிரி பேசறிங்களா?" என்றார்.

"நிச்சயமாக நாங்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை என்றாலும் எங்கள் இருவரின் எண்ணமும் ஒன்று தான். என்றேன் சரி தானே செல்வி" என்று அவளின் இதழை மென்மையாய் தன் ஒற்றை விரலால் வருட அவளின் தேகம் மீண்டும் நடுங்க செய்தது.

"அதுக்கப்புறம் உன்னோட எல்லா மூவ்மென்ட் எனக்கு தெரியும் இன்பாக்ட் மாப்பிள்ளையும் நானும் பெஸ்ட் பிரெண்ட் ஆகிடோம். எல்லாமே என் ப்ளான் படி உனக்கே தெரியாமல் நீ செய்த என் செல்லம், பைனலி நீயே என்னை கூட்டிட்டு போய் மணமேடைல உக்கார வச்ச. அங்க தான் எனக்கே தெரியாம நீ என் சொந்தங்களை கூட்டிட்டு வந்துட்ட தேங்க்ஸ் அ லாட் மை டியர்" என்று அவளின் இடையினை பற்றி தன் அருகில் இழுக்க, ஒருநிமிடம் தடுமாறி போனாள்.

ஏதோ சினிமாவில் நடந்தது போல் இருந்தது அவன் கூறிய அனைத்தும் அவளுக்கு புரியவே வெகுநேரமாகியது.

'என்னை விட கேடியா இருக்கானே? நான் தான் எல்லாம் பண்ணேன்னு நினைச்சிட்டு இருந்தா? இவன் பின்னாடி இருந்து எனக்கே தெரியாம என்னை எல்லாத்தையும் செய்ய வச்சிருக்கானே எமகாதகன்டா நீ' என்று நினைத்து கொண்டிருக்கையில்,”ரொம்ப யோசிக்காத... இதை முதல்ல சாப்பிடு" என்று சாப்பாட்டை ஊட்டிவிட்டான்.

"நீ பசி தாங்கமாட்டேன்னு தானே நான் முதல்லயே சமையல் பண்ணேன் எனக்கு வேணாம்னு போற? உனக்கு சமைக்க தெரியாதுன்னு எனக்கு தெரியாதா?" என்று திட்டிக்கொண்டே ஊட்டிவிட்டான்.

பசியில் அவன் திட்டுவது எதுவும் அவள் காதினில் விழவே இல்லை. வேகவேகமாக சாப்பிட புரைக்கேரியது. தலையில் தட்டி தண்ணீரை கொடுத்து”பொறுமையா சாப்பிடுடா. எதுக்கு அவசரம்?" என்று மீண்டும் ஊட்டிவிட அவளின் கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது.

"அப்பா அம்மாக்கு என்னை ரொம்பபிடிக்கும் ஆனால் அவங்களுக்கு அவங்க வேலையே பெருசா இருந்தது. அதனால் எனக்கு இதுவரைக்கும் ஊட்டிவிட்டதில்ல. நீ தான் முதல்முதலா ஊட்டிவிட்டுருக்க" என்று சொன்னவளின் நெற்றியோடு தன் நெற்றியை மோதி”அப்படினா விடு. இனி நான் வீட்ல இருக்கும்போது நானே ஊட்டிவிட்டுட்றேன்" என்று சிரித்தான்.

"நீங்க உண்மையாவே யாரு? வெறும் சி.ஏ படிக்க வந்தமாதிரி தெரியலையே? நிச்சயமா எனக்கு தெரியாத வேலை ஏதோ செய்யறிங்க." என்று அவனை பார்க்க”யூ ஆர் கரெக்ட் . வெளி உலகத்துக்கு சி.ஏ கனவு அதையும் தாண்டி ஒரு கனவு இருக்கு, அதை நனவாகவும் ஆக்கிட்டேன். அதைபத்தி இப்போ உன்கிட்ட சொல்லமுடியாது நேரம் வரும் போது சொல்றேன்." என்றான்.

"சரி. நேரம் ஆகிடுச்சு தூங்கலாமா?" என்று அவளை கட்டிலின் ஒருபுறம் படுக்க வைத்தவன், தானும் மறுபுறத்தில் சென்று அவளை பார்த்தபடியே படுத்துக்கொண்டான்.

"நம்ம வாழ்க்கைய எப்போ தொடங்கறதுன்னு யோசிக்காத. முதல்ல இன்னும் ரெண்டு மாசம் உன் படிப்ப நல்லபடியா முடிச்சிடு. உன் கடைசி எக்ஸாம் முடியற அன்னைக்கு நம்ம வாழ்க்கைய தொடங்கலாம். அதுவரைக்கும் உன் கவனும் முழுதும் படிப்புல மட்டும்தான் இருக்கனும். அதுக்கப்புறம் நீ என்ன படிக்கணும் நினைகிறியோ படிக்கலாம். சரியா. உனக்கு என்ன விருப்பமோ சொல்லு அடுத்தநிமிஷம் அது நடந்திடும் சரியா?" என்று அவளின் தலையை மென்மையாய் வருடிவிட.”சரி" என்று தலை ஆட்டியபடி அவனின் வருடலில் தன்னை நித்ராதேவியிடம் தொலைத்தாள் செல்வி.

பொழுது விடிந்ததும் கண் விழித்தவள், அவன் அருகினில் இல்லாததை கண்டு தேட, அவள் அருகிலேயே ஒரு சின்ன காகிதத்தில்”மை டியர் ஸ்வீட் பொண்டாட்டி! எனக்கு ஒரு முக்கிய வேலை. நான் வர லேட் ஆகும். அதனால் எனக்கு வெயிட் பண்ணாத. சாப்பாடு டேபிள் மேல இருக்கு சாப்பிட்டு ரெடி ஆகி வெளிய உனக்கு பிடிச்ச வண்டி நிக்குது அதுல பார்த்து பத்திரமா காலேஜ் போயிட்டு வா". நாம ஈவனிங் பேசலாம். பை" என்று எழுதி வைத்திருந்தான்.

அதை படித்தவள் டேபிளில் பார்க்க சாப்பாடு தயாராக இருந்தது. அவளும் குளித்து ரெடி ஆகி வெளியே வந்தாள். அங்கே அவளுக்கு பிடித்த பிங்க் கலர் நிறத்தில் புத்தம்புதிய ஸ்கூட்டி நின்று கொண்டிருந்தது.

'இதை எப்பொழுது வாங்கினான்' என்று யோசித்தபடி வண்டியை பார்க்க பார் ரெஜிஸ்த்ரேஷன் என்று போட்டிருந்தது.

'நம்மளுக்காக தான் வாங்கி இருக்கான் போல' என்று சிரித்து ₹க்கொண்டே வண்டியை காலேஜ்க்கு ஒட்டி சென்றாள்.

ஒருவழியாக காலேஜ் முடிந்தது. அவனை எப்பொழுது பார்ப்போம் என்ற எண்ணத்திலேயே இன்று பொழுது முழுவதும் போராக போனது அவளுக்கு.

மாலை அவள் வீடு வருவதற்குள் அவன் வந்து ஏதோ வேலை செய்து கொண்டிருந்தான்.

"ஹாய்! எப்போ வந்தீங்க?" என்று கேட்டபடி உள்ளே நுழைந்தாள்.

"ஒரு அறை மணி நேரம் இருக்கும். காலேஜ் எப்படி போச்சு இன்னைக்கு? சாப்டியா?" என்று அவளை பார்க்காமலே கேட்டு கொண்டிருந்தான்.

நேராக அவனிடம் வந்தவள்.”நான் வீட்ல இருக்கும் போது என்கிட்டே பேசின நேரம் போக மீதி நேரம் மட்டும் தான் உங்க வேலைய பார்க்கணும்" என்று எல்லாவற்றையும் பிடுங்கி கொண்டு மேசையில் வைத்துவிட்டு வந்து அவன் அருகில் அமர்ந்தாள்.
 

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43

17. அன்பின் வரிகள்​

"என்ன அதிகாரம்லா தூள் பறக்குது? என்னை ரொம்ப மிஸ் பன்றியா?" என்று கிறங்கும் குரலில் கேட்க அவளையும் மீறி அவள் கட்டுப்பாட்டை இழந்து கொண்டிருந்தாள்.

"நோ வே! என்னால கண்டிப்பா அப்படி இருக்க முடியாது. எனக்கு நீயும் வேணும் அதேநேரம் என் வேலையும் எனக்கு ரொம்ப முக்கியம்.” என்று கூறியவன் நேராக சென்று தன் வேலை சம்பந்தமான பைல்களை எடுத்துவந்து மீண்டும் வேலையை தொடர்ந்தான்.

அவனையே கொஞ்சநேரம் முறைத்துகொண்டிருந்தவள்”இருடி இதோ வரேன். என்கிட்டயே உன் வேலையை காட்றியா?" என்று உள்ளுக்குள் நினைத்து கொண்டு”அப்படினா சரி. நானும் ஒரு முடிவெடுத்துட்டேன்" என்று வேகமாக உள்ளே சென்றாள்.

"என்ன இவ நான் எதுக்கு சொல்றேன்னு புரியாம இப்படி பேசிட்டு போறா? என்ன பண்ண போறான்னு தெரியலையே?" என்று அவளை பின்தொடர்ந்து உள்ளே சென்றவன், அவள் ஒரு பையில் தன் துணிகளை அடுக்கிக்கொண்டு இருப்பதை பார்த்து தங்கள் அறையின் கதவை தாழிட்டான்.

"இப்ப எதுக்கு இதெல்லாம் எடுத்து வச்சிட்டு இருக்க?" என்று கேட்க”நீங்க உங்க வேலையே கட்டிக்கிட்டு அழுங்க... நான் என் பிரெண்ட்கூட ஹாஸ்டல்ல தங்கிகிறேன். உங்க வேலையெல்லாம் முடிஞ்சப்புறம் சொல்லுங்க. அதுகுள்ள நானும் என் காலேஜ் முடிச்சிட்றேன் அப்புறம் வரேன்" என்று சொல்லி கொண்டிருக்கும் போதே, அவளின் இடையில் கரம் வைத்து பின்னிலிருந்து அணைத்து அவளின் செங்கழுத்தில் தன் முகத்தை பதித்து கொண்டே”இப்ப மேடம்க்கு என்ன கோவம்? நான் உன் பக்கத்துல இருந்தா சும்மா இருக்க மாட்டேன் அதனாலதான் நான் உன்கிட்ட வந்து தொல்லை பண்ணாம இருக்க என் வேலையில் கவனம் செலுத்தலாம்னு நினைச்சா நீ விடமாட்ட போல இருக்கு. அப்போ நானும் எல்லாத்துக்கும் ரெடி. இனி உன்னை எந்த வேலையும் செய்ய விடமாட்டேன். ஆமா என்னை விட்டுட்டு உன் பிரெண்ட்கூட போய் என்ன பண்ணபோற?" என்று அவளின் செங்கழுதினில் தன் முத்தங்களை அள்ளி தெளிக்க அவனின் சீண்டலில் தன் கோபத்தை மறந்து பெண்மை கலந்த வெட்கத்தின் பிடியில் சிக்கிகொண்டாள்.

"இப்ப சொல்லு எங்க போறேன்னு? அவளோ தைரியம் இருக்கா உனக்கு. என்னை தனியா விட்டுட்டு நீ போயிடுவியா?" என்று அவளின் இடையில் அங்கும் இங்கும் தொட்டு தொட்டு விளையாட கூச்சத்தால் நெளிந்து கொண்டிருந்தாள் அவன் மனம் கவர்ந்தவள்.

"இல்ல.... நான் எங்கயும் உங்களை விட்டுட்டு போகமாட்டேன். ப்ளீஸ் சரோ விட்டுடுங்க" என்று சிரித்தபடி கெஞ்சும் அவளை ரசித்தபடி மேலும் சிரிக்க வைத்துகொண்டிருந்தான்.

"சொல்லுவியா இனி இன்னொரு தடவை அப்படி சொல்லமாட்டேன்னு சொல்லிட்டே இரு. நான் சொல்றவரைக்கும் நிறுத்தக்கூடாது, இல்ல உன்னை இன்னைக்கு முழுக்க சிரிக்க வச்சுகிட்டே இருப்பேன்" என்று அவன் வேலையை நிறுத்தாமல் சொல்ல.

"சரி .... சரி.... இனி.... எப்பவுமே அப்படி சொல்லமாட்டேன்.... ப்ளீஸ் சரோ நிறுத்துங்க” என்று சிரித்தவளை விடாமல்”என்ன சொல்லமாட்ட இனிமேல்?" என்று மேலும் சிரிக்கவைத்தான்.

"இனி எப்பவுமே உங்களை விட்டு பிரியறேன்னு சொல்லமாட்டேன்.... ப்ளீஸ்.... சரோ..... விடுங்க..... வயிறே...... வலிக்குதுடா" என்று கெஞ்ச...

"நீ இவ்ளோ கெஞ்சறதால இப்ப விட்டுடுறேன். ஆனா இனியொரு தடவை பேசறது என்ன?? உன் மனசுல நினைச்சாக்கூட என் பனிஷ்மென்ட் வேறமாதிரி இருக்கும்" என்று அவளை விடுவித்தான்.

விட்டால் போதும் என்று ஓட பார்த்தவளை விடாமல், தன் கைபிடிக்குள் கொண்டுவந்து”இப்போ என் வேலையை செய்யக்கூடாதுன்னு சொல்லிட்ட நான் என்ன செய்யணும்?" என்று அவள் காதில் மெதுவாக நிறுத்தி நிதானமாக கேட்க....

அவன் காதை லேசாக கடித்துவிட”ஆ .... வலிக்குதுடி..." என்று ஒரு நொடி அவளை விடுவித்தவுடன் இதுதான் சாக்கு என்று சிட்டாய் பறந்து மறைந்து போனாள்.

"அடிபாவி எங்க போனான்னு தெரியலையே? இன்னைக்கு மட்டும் நீ என் கைல மாட்டினே உன்னை என்ன செயவேன்னே தெரியாது செல்வி ." என்று கத்திகொண்டே வீடு முழுவதும் தேடி கடைசியில் சமையலறை கதவு மூடி இருப்பதை கண்டு”இங்க தான் இருக்கியா?" கதவின் அருகில் சென்று”செல்வி ஒழுங்கா கதவை திறந்திடு, நானா உன்கிட்ட வந்துட்டேன் கடவுளால கூட உன்னை இன்னைக்கு என்கிட்டே இருந்து காப்பாத்த முடியாது” என்று கூற.

"போடா திறக்க மாட்டேன். அப்புறம் நீ என்னை விட மாட்ட எனக்கு ஏற்கனவே சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது" என்று கூறினாள்.

அமைதியாக பூனை நடையில் பின்புற கதவை திறந்து சமையல் அறையின் இன்னொரு கதவிடம் வந்து மெதுவாக சத்தம் வராமல் கதவை திறந்து அவளுக்கே தெரியாமல் அவளை பின்னால் நெருங்கியவன் அவளை தட்டா மாலையாக தூக்கினான்.

"ஆ..." என்று பயந்து அலறியவள் இவனை கண்டதும்”எரும எரும அறிவே இல்லை இப்படியா பயமுறுத்துறது? என்னை கிழ இறக்கிவிடுடா" என்று கத்தினாள்.

"சாரி டா..... நான் திறக்க சொன்னப்பவே திறக்க வேண்டியது தான? பயந்துட்டியா?” என்று கிழே இறக்கிவிட்டான்.

"எனக்கு பசிக்குது. என்ன இருக்கு சாப்பிட?" என்று கேட்டவளை முறைத்து”நான் கேட்கவேண்டியதேல்லாம் நீ கேட்கிற இந்த புருஷன் நானா.. இல்லை நீயானே தெரியலை" என்று அவளை அப்படியே மேடையில் அமரவைத்துவிட்டு”பத்து நிமிஷம் இதோ சூடா தோசை ஊத்தி தரேன்" என்று ப்ரிட்ஜில் இருந்த மாவை எடுத்து தோசை வார்க்க ஆரம்பித்தான்.

"அவனின் ஒவ்வொரு அசைவையும் கண் கொட்டாமல் கவனித்து கொண்டிருந்தவளின் கவனத்தை கலைத்தது அவனின் குரல்”இப்படி ஸ்வீட்ட முறைச்சு பார்க்கிற மாதீரி பார்த்தா நான் இங்க வேலை செய்யறதா இல்ல இந்த வேலையெல்லாம் விட்டுட்டு உன்னை அப்படியே உள்ள தூக்கிட்டு போகட்டா?" என்றான் அவளிடம் திரும்பாமல்.

"ஐயோ சாமி நம்மளால வயிறு வலிக்க திரும்பி சிரிக்க முடியாது. பெட்டர் நாம வேற பக்கம் திரும்பிக்கலாம்" என்று ஒருநொடியில் தன் பார்வையை வேறு திசையில் திருப்பினாள்.

அம்மாவிடம் வளர்ந்த வரை வேலை எதுவும் செய்யாமல் எல்லாவற்றிற்கும் வேலை ஆட்கள் இருந்ததால் ஒரு வேலையும் தெரியாமல் வளர்ந்து விட்டாள்.

இங்கே அவள் கணவன் யாருமற்ற நிலையில் வளர்ந்ததால் தனக்கு எல்லா வேலையும்தெரிந்திருக்க வேண்டும் என்று எல்லா வேலைகளையும் வலிய கற்று கொண்டிருந்ததால் இன்று அவளுக்கு இன்னொரு அன்னையாக மாறி எல்லாவற்றையும் கற்று கொடுத்துகொண்டிருந்தான்.

அவனின் தூய்மையான அன்பிலும் அதட்டலிலும் இன்னொரு உணமையான தாய்பாசத்தை கண்டுகொண்டிருந்தாள் செல்வி. மனைவியின் எண்ணங்களை புரிந்துகொண்டு அவளுக்கு உறுதுணையாய் இருக்கும் ஒவ்வொரு கணவனும் இன்னொரு தாய்க்கு நிகரானவன் தான்.

அவ்வப்பொழுது அவன் காதலின் தீவிரத்தை அவளுக்கு ஏதாவது ஒரு வகையில் உணர்த்திக்கொண்டிருந்தான் சரவணத்தமிழன் அதோடு தன் ஆண்மையின் தீண்டலில் அவளின் வெட்கத்தையும் ரசிக்க தவறவில்லை
இப்படியே அவர்களின் வாழ்கை சக்கரம் ஒரு மாதத்தை கடந்தது. அவள் கல்லூரியில் பாதி கவனத்தையும் மீதி கவனத்தை அவளின் கணவன் மீதும் இருக்க,”எப்படியாவது இன்னும் ஒரு மாசம் இருக்கு அதை நல்ல படியா முடிச்சிறனும்." என்று படிப்பில் கவனத்தைசெல்லுத்தி நாட்களை கழித்து கொண்டிருந்தாள்.

அவனும் அவன் வேலையில் தீவிரமாய் கவனம் செலுத்தி கொண்டிருந்தான்.

அன்று சனிக்கிழமை கல்லுரி விடுமுறை இன்று தனக்கு முக்கியமான வேலை இருப்பதாகவும் மதியம் வந்து விடுவதாகவும் கூறிவிட்டு சென்றான் சரவணத்தமிழன்.

"இன்னைக்கு லீவ் தான நம்மளே சமைக்க ட்ரை பண்ணலாம்" என்று தன் மொபைலில் இருந்து ரெண்டு மூன்று குறிப்புகளை எடுத்து கவனமாக செய்து கொண்டிருந்தாள்.

சமையல் வேலைகளை முடித்துவிட்டு வீட்டை சுத்தம் செய்து அந்த வேலைகளையும் முடித்து மணி பார்த்தாள் மதியம் மூன்று மணி,”என்ன இன்னும் காணோம். சரி ஏதாவது முக்கியமான வேலையா இருக்கும் வந்திடுவார்" என்று தன் மொபைலில் பாட்டு கேட்க ஹெட்போனை தேட அது கிடைக்கவில்லை.”சரி அவரத எடுத்து யூஸ் பண்ணிக்கலாம்" என்று அவனின் கப்போர்டை திறந்து தேடியவளின் கண்களில் கிடைத்தவுடன் கதவை சாத்த உள்ளே இருந்து வந்து விழுந்தது அவனின் டைரி.

அதில் இருந்து வந்து விழுந்த காகிதத்தை பிரித்து படிக்க ஆரம்பித்தாள்.

அவளுக்காக எழுதியது போல் இருந்தது அந்த வரிகள்

"இந்த மண்ணில் யாருக்கும் பிடிக்காத பாரமாய் நான் பிறந்தேன்.

யார் இறக்குமும் என்மேல் படக்கூடாது என்று எல்லாவற்றிலும் முதல் வந்தேன்.

கடின உழைப்பால் என் எண்ண லட்சியங்களை அடைந்திட்ட வேளையில் ...

எனக்கு இறைவன் தந்த சாமரமாய் நீ வந்தாயடி என் மனம் கவர்ந்த கள்ளியடி நீ.

உன் பெற்றோரிடம் இருந்து உன்னை பிரிக்க மனம்வராமல் தனியாகவே வாழ்ந்து விடலாம் உன் நினைவில் என்றிருந்த வேளை...

உன் மனம் கவர்ந்த கள்வன் நானென்பதை அறிந்த பின்னர்....

உன் அன்பு முழுதும் எனக்கே கிடைக்க வேண்டும் என்று ஆசையடி எனக்கு ....

உன் நினைவுகளில் வாழ்வது சுகம்தான் கண்ணே...

உன் மடியில் என் தலை வைத்து உறங்குவதே என் பல நாள் கனவாகிறதே....

உன்னில் என் அன்னையை நான் காண என் மனம் ஏங்குதடி அன்பே....

நீ என் தலை ஏந்தி உன் மடி சாய்த்து நாம் உறவாடும் நாள் வருமோ?....

என் உயிர் உன்னில் சுமக்கும் நாள் வருமோ...? எனக்கென்று உன்னால் கொடும்பம் வருமோ ....?

நான் உன்னை சேரும் நாள் வருமோ இல்லை இந்த மண்ணில் வீழும் நாள் வருமோ நான் அறியேன் கண்ணே...."

உண்மையான அன்பிற்காக ஏங்கி தவிக்கும் ஊமை காதலன்.....”


கடைசி வரியில் அவனின் கண்ணீர் துளி பட்டு ஒரு சில எழுத்துக்கள் அழிந்திருக்க தன் கண்களை துடைத்தவள் ஒரு முடிவுக்கு வந்தவளாய் உள்ளே சென்றாள்.
 

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43

18. கனவா?​

உள்ளேசென்று முழங்காலை கட்டிக்கொண்டு அமர்ந்தவள் எவ்வளவு நேரம் சிலையாய் சமைந்திருந்தாளோ தெரியவில்லை.

அவளின் எண்ணங்கள் முழுவதும் அவள் கணவனின் வரி வண்ணங்களே நிறைந்திருந்தன.

அவள் கண்முன்னே தெரிவது ஆறடி உயரத்தில் வளர்ந்த ஆண்மகன் அல்ல.. அன்பிற்காக ஏங்கும் ஆறுவயது சிறுவனாய் தெரிந்தான்.

அழுது கண்கள் சிவந்திருக்க, வாசலில் விழிகள் நிலைத்திருக்க மணி எட்டை தாண்டியிருந்தது.

பெருமூச்சொன்றை வெளியிட்டவள் சென்று நீராடி தன் கணவன் முதன்முதலாக ஆசை ஆசையாய் வாங்கிக்கொடுத்து தான் இன்னும் கட்டாமல் வைத்திருந்த அடர்நீலநிற காட்டன் புடவையை உடுத்தியிருந்தாள்.

தலைவாரி நெற்றிவகிட்டில் குங்குமமிட்டு தலையில் அதிகம் இல்லாமல் சிறியதொரு மல்லிகையை சூடி சாந்தமாக தயாராகி இருந்தாள்.

இரவு பத்துமணி வீட்டின் உள்ளே நுழைந்த சரவணத்தமிழன் ஒவ்வொரு அறையாகக் தேட அவன் கண்ணில் பட்டது அந்த சிறுதுண்டு சீட்டு.

அதை எடுத்து படித்தவன்,

"என்னை தேடவேண்டாம் மனது சரி இல்லை அம்மன் கோவிலுக்கு சென்று உள்ளேன் வரும் வரை காத்திருக்காமல் சாப்பிட்டு விடு" என்று இருந்தது.

அதை படித்தவன்,”நான் வேற வீட்ல இல்லை என்ன ஆச்சுன்னு தெரியலையே? அவள் இல்லாமல் தான் எப்படி சாப்பிடுவது. போய் நம்மாலே கூட்டிட்டு வந்துடலாம்" என்று நினைத்தவன் கோவிலுக்கு கிளம்பினான்.

கோவிலில் சென்று பார்க்க அவள் இல்லாமல் சற்று கவலையாய் வீடு திரும்பியவன் அவள் வாசலிலேயே நின்றிருப்பதை பார்த்துவிட்டு”எங்க போன கோவிலுக்கு போனா அங்கயும் இல்ல. எவ்ளோநேரம் தேடிட்டு வரது" என்று அவளை பாராமலே திட்டிக்கொண்டு வந்தவன். அப்பொழுது தான் அவளை நன்கு கவனிக்க அவளின் முழுநிலவு பிரகாசிக்கும் முகத்தையும் அவளின் முழுத்தோற்றத்தையும் கண்டவன் ஒரு நிமிடம் திணறித்தான் போனான்.

"என்ன இன்னைக்கு இத்தனை நாள் இல்லாம வித்யாசமா இருக்க?" என்று அவளை பார்ப்பதை தவிர்த்து”சாப்டியா?" என்று உள்ளே போனான்.

"இல்லை நீங்க வந்தப்புறம் சாப்பிடலாம்னு தான்...." என்று இழுவையாக கூறினாள்.

"சரி வா. சாப்பிடலாம்" என்றான்.

"இல்லை இருக்கட்டும். முதல்ல போய் குளிச்சிட்டு வாங்க" என்றாள் சாப்பிட எல்லாவற்றையும் எடுத்து வைத்தபடி.

"ஹம். நான் கோவிலுக்கு உன்னை பார்க்க வரும்போதே குளிச்சிட்டேன். வா” என்று அவளின் கைபிடித்து அமரவைத்தவன்.

இருவரும் அமைதியாக சாப்பிட”என் மேல கோவமா? சாரி நானும் சீக்கிரமா வரணும்னு தான் நினைச்சேன். ஆனா முடியலை" என்றவனை”பரவால்ல விடு".

சாப்பிட்டு இருவரும் அமர்ந்திருக்க”டயர்டா இருக்கு. தூக்கம் வருது. நான் தூங்கப்போறேன்" என்று கூறினான்.

"எனக்கு தூக்கம் வரலை, நீங்க தூங்குங்க" என்று அவள் அமர்ந்து டிவி பார்த்து கொண்டிருந்தாள்.

அவன் உள்ளே செல்ல, ஒருநொடி ஸ்தம்பித்து நின்றான். உள்ளே அவர்களின் வாழ்கையை ஆரம்பிக்க வண்ணமையமான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

அவனுக்கு இது பேரதிர்ச்சியாக இருக்க அவளின் மனநிலையை உணர முயர்ச்சி செய்துகொண்டிருந்தான்.

அவன் வந்த சிறிதுநேரத்தில் அவளும் உள்ளே வர,”செல்வி என்னடா இதெல்லாம்... உனக்கு இதுல முழுசம்மதமா? என்னடா திடிர்ன்னு யாராவது ஏதாவது சொன்னாங்களா? எதுவா இருந்தாலும் என்கிட்டே சொல்லுமா. இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?" அவளிடம் நெருங்க .... அவனின் அருகாமை புதியதோர் அனுபவம்தர, அவனிடம் இருந்து சட்டென விலகி திரும்பிநின்றாள்.

பாவையவள் வெட்கத்தின் நடுக்கத்தில் நின்றிருக்க, அவளின் வெட்கத்தை விழிகளால் பருகியபடி தனக்குள் ஏற்படும் புதுஉணர்வை ரசித்தபடி அவளை நோக்கி மெல்ல அடியெடுத்து வைத்துகொண்டிருந்தான்.

"நீ இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்? எனக்கு பதில் சொல்லு. அப்போ தான நான் ஏதாவது முடிவெடுக்க முடியும்" என்று தன்புறம் திருப்ப.

அவனிடம் திரும்பியவள் அவன் முகம் பாராமல்”இதுக்கு மேல என்ன சொல்லணும்? வெளிபடையா சொல்லிட்டேன். எனக்கு பெயரளவில் இல்லாம உங்க மனைவின்ற ஸ்தானத்தகொடுங்க... இதுக்கு மேல எப்படி வெளிப்படையா சொல்றதுன்னு தெரியலை" என்று அவன் நெஞ்சினில் தஞ்சம்புகுந்தாள்.

"ஐ லவ் யூ செல்வி! நாம ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புனோம், ஆனா ஒண்ணா சேர்ந்து ரொம்ப நேரம் செலவழிக்கல. அதனால தான் நாம ரெண்டுபேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கணும்னு இவ்ளோநாள் உன்னை விட்டு பிரிஞ்சிருந்தேன். இப்போ நீயே வந்து இப்படிலாம் பேசினப்புறம் எனக்கு மட்டும் உன் மேல ஆசையில்லயாடி" என்று கேட்டவனை முறைத்து பார்த்தாள்.

"ஆமா. உன் ஆசைய தூக்கி குப்பைல போடணும்" என்று கோவமாக கூற.

"என்னடி திடிர்னு இப்படி சொல்லிட்ட?" என்று பாவமாய் கேட்டான்.

தன் கையில் வைத்திருந்த அவனின் கடிதத்தை காட்டி,”என்னடா இது ?" என்றாள்.

"அது வந்து .... உனக்கு எப்படி கிடைச்சுது?" என்று கேட்டான்.

"இவ்ளோ ஆசைய மனுசுல வச்சிக்கிட்டு என்னை நெருங்காம இருந்தல்ல? உனக்கு ஆசைப்பட தான் தெரியும். ஆனா, அதை எப்படி உன்னுடுயதாகிக்கனும்னு தெரியாதில்ல?" என்று கேட்டாள் செல்வி.

"எந்த முட்டாள் சொன்னது அப்படின்னு? உன்னை என்னுடையவளா மாத்திகலையா?" என்றான்.

"ஆமா ..." என்று அவள் பேச வாய்திறக்க,”இப்படியேவிட்டா இன்னைக்கு முழுக்க நீ பேசிட்டே இருப்பல்ல? இது வேலைக்கு ஆகாது" என்று தன் இதழின் மென்மையை அந்த பெண்மையின் இதழுக்கு சொல்லிக்கொடுத்தான்.

"நீ கேக்காமலேயே உனக்கு எல்லாம் செய்யனும்னு நினைப்பேன். நீ கேட்ட அப்புறம் நான் மறுப்பேனா? எனக்கு சொந்தங்கள் கிடைத்தாலும் என் முதல் அம்மா, அப்பா, உடன்பிறப்பு, தோழி எல்லாமே நீ தான் இனி...” என்று அவளின் இடையினில் கரம்வைத்து தன்னிடம் வெகுஅருகாமையில் இழுத்தான்.

அவனின் வெப்பமூச்சுக்காற்று தனக்குள் செல்லும் என்ற அளவிற்கு இருவரும் மிக நெருக்கத்தில் இருக்க இருவருக்குள்ளும் ஒரு இனம்புரியாத இன்பம் கலந்த பயம் உணர, அந்த இன்பத்தை தொடர்ந்து பெரும் முயசியில் ஈடுபட்டிருந்தான்.

தன் முழு அன்பையும் சொல்ல நினைக்கும்பொழுது அவனின் போன் அடித்தது.

இருவரும் அவர்களை மறந்திருந்தநேரம் மீண்டும் போன் அடிக்க,”ஸ்வீட் ஹார்ட் இரு வந்துடுறேன்" என்று போனை அவசரமாக எடுத்து,”ஹலோ!" என்று வெளியே சென்றான்.

திடிரென்று உள்ளே வந்தவன்”சாரிடா. நான் இப்பயே போயாகனும்" என்று தயக்கத்துடன் கூறினான்.

"சரி போயிட்டு வாங்க" என்றாள் தயக்கமில்லாமல்.
 

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43

19. அளவுகடந்த காதலின் சினம்​

"ஐ ஆம் சாரிடா" என்று அவளின் தலையை கோத முன்னேறியவனை தடுத்தது அவளின் குரல்.

"எங்கே இருகிங்ளோ? அங்கேயே நில்லுங்க. ஒரு அடிகூட முன்னாடி எடுத்து வக்காதிங்க. எனக்கு ஒன்னு பிடிச்சிருக்குன்னா அதுக்காக என் உயிரை கொடுக்கக்கூட தயங்கமாட்டேன். அதேநேரம் என் கோவத்தை கன்றோல் பண்றவரைக்கும் நீங்க என் பக்கத்துல வராம இருக்கறது தான் உங்களுக்கு நல்லது. இந்த இடத்தைவிட்டு முதல்ல போய்டுங்க. ப்ளீஸ் என் முன்னாடி நிக்காதிங்க" என்று கலங்கிய கண்களோடு கூறினாள்.

"செல்வி சாரிடா... ப்ளீஸ் ரொம்ப முக்கியமான வொர்க். நான் இப்ப கண்டிப்பா போயே ஆகணும்" என்றவனின் கண்களில் ஊடுருவி”உங்களை போக சொல்லிட்டேனே" என்று அவள் அந்த அறையை விட்டு வெளியேறினாள்.

என்ன சொல்வது என்று தெரியாமல் அங்கேயே நின்றவன் பெருமூட்சொன்றை வெளிவிட்டு பின் வெளியேவந்தான். அங்கே செல்வி கையில் டிவி ரிமோட்டில் சேனலை கண்டபடி மாற்றி கொண்டிருந்தாள்.

"இவளை இப்படியே விட்டுட்டு என்னால வெளிய போகமுடியாது" என்று யோசித்தவன் அவள் அருகினில் சென்று அமர, அவள் அங்கிருந்து எழுந்தாள்.

அவளை எழவிடாமல் தடுத்தது அவனின் வலியகரம்,”என் கையவிடுங்க. நானா உன்கிட்ட வந்து சொல்றவரைக்கும் என்னை தொடரவேலை எல்லாம் வேண்டாம். அப்புறம் நான் என்ன பண்ணுவேன்னே தெரியாது" என்று உள்ளேசென்று கதவை தாழிட்டு கொண்டாள்.

"இப்போதைக்கு இவளை சமாளிக்கமுடியாது காலைல தான் வந்து பேசணும்" என்று யோசிக்கையில் அவன் போன் ரிங் ஆகவே கையில் எடுத்தவன்,”யா ஐ ஆம் கமிங்” என்று போனை அணைத்துவிட்டு அறைவாசலில் சென்று”செல்வி. இப்ப நான் என்ன சொன்னாலும் உனக்கு புரியாது. நான் கிளம்புறேன். நீ பத்திரமா இரு நான் காலைல வரேன்" என்று கிளம்பிவிட்டான்.

அவன் சென்று வெகுநேரமாகியும் கோவத்தில் இருந்து மீளாத செல்வியின் மனதில், 'இவனுக்கு என்னைவிட அவன் வேலை தான் முக்கியம்னு நினைச்சா எதுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்கணும், ஹ்ம்ம் அடி முட்டாளே அவன் எங்க உன்னை கல்யாணம் பண்ணான்? நீ தான அவனை ப்ளான் எல்லாம் போட்டு கல்யாணம் பண்ண?' என்று அவளுக்குள்ளே விவாதங்கள் நடைபெற்றது.

'எது எப்படியோ? காலைல வீட்டுக்கு தான வரணும், மகனே நீ செத்தடா. என் கையால உனக்கு ஒரு சொம்பு பச்சை தண்ணிகூட கொடுக்கமாட்டேன்' என்று சிறுகுழந்தை போல் பிதற்றினாலும் பசி என்று பிள்ளையின் குரல் கேட்டால் அன்னையின் உள்ளம் கலங்கத்தானே செய்யும் என்பதை மறந்துவிட்டாள்.

மறுநாள் காலை எழுந்து எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு தன் தோழியின் வீட்டிற்கு சென்றுவிட்டாள்.

மதியம் வீடு வந்த சரவணன் அவளை காணாது செல்விக்கு போன் செய்தான் சுவிட்ச் ஆப் என்று வரவே குழம்பிப்போனான்.

'இன்னைக்கு சண்டே தானே...? என் மேல இருக்கிற கோபத்தில அவங்க அப்பா வீட்டுக்கு போயிருப்பாளோ? ச்சே என்ன நடந்தாலும் அவ அங்கே எல்லாம் போயிருக்கமாட்டா. தாத்தா வீட்டுக்கு போயிருப்பாளோ?' என்று தாத்தாவிற்கு போன் செய்தான்.

"ஹலோ சரவணா. எப்படிப்பா இருக்க? செல்வி எப்படி இருக்கா? இங்க கூட்டிட்டு வரக்கூடாதா பா?" என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே போக, அங்கே செல்வி இல்லை என்பது தெளிவானது.

"நாங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கோம் தாத்தா. நான் அப்புறம் பேசுறேன். ஆபீஸ் கால் வருது" என்று கட் செய்தான்.

தலையை பிடித்தபடி சோபாவில் அமர்ந்தவன்.'ச்சே நான் எவ்ளோ பெரிய தப்பு பண்ணிட்டேன். பாவம் அவ எவ்ளோ ஆசையா இருந்திருப்பா? நான் என் வேலை தான் முக்கியம்னு போய்ட்டேனே?' என்று தன்னையே நொந்து கொண்டவன் 'அவள் வந்தவுடன் அவளை எப்படியாவது சமாதானப்படுதிட வேண்டும்' என்று கண்களைமூடி அங்கேயே வெகுநேரம் அமர்ந்திருந்தான்.

மாலை ஐந்துமணி செல்வி வீட்டினுள் நுழையும் போது அவளை பார்த்கவன்.”செல்வி எங்க போன நீ...? எவ்ளோ நேரம் தேடறது?" என்று அருகில் வர, வரவேண்டாம் என கையமர்த்தி அவனை பார்க்காமலே,”எனக்கு நாலு நாள்ல செமஸ்டர் எக்சாம் ஸ்டார்ட் ஆகுது. அதான் பிரெண்ட்கூட படிச்சிட்டு வரேன்." என்று உள்ளே சென்றாள்.

"சாப்டியா?" என்று கேட்க”ஹம் சாப்டேன்" என்றாள் ஒற்றை வரியில்.

"எனக்கு ரொம்ப பசிக்குது நீ வருவேன்னு சாப்பிடாமலே இருந்திட்டேன்" என்று பாவமாய் கூறினான்.

"சமைச்சிதான் வச்சிருக்குல்ல. டைம்கு சாப்டா என்ன?" என்று திட்டிக்கொண்டே வேகமாக உள்ளேசென்று ஒரு தட்டில் சாதம் கூட்டு என அனைத்தையும் போட்டு பிசைந்து எடுத்து வந்து அவனிடம் நீட்டினாள்.

"இவ்ளோதூரம் பிசைந்து எடுத்துட்டு வந்துட்ட அப்படியே ஊட்டி விடலாம்ல?" என்று குறும்பாய்கேட்க .

"என்னால முடியாது. எனக்கு படிக்கிற வேலை இருக்கு. நீங்க சாப்பிடுங்க" என்று தட்டை அவனிடம் தந்துவிட்டு வேகமாக உள்ளே சென்றுவிட்டாள்.

இப்படியே இரண்டு நாள் செல்வியின் பாராமுகத்துடன் நாட்கள் கழிய சரவணத்தமிழன் மிகவும் வருந்தினான்.

மூன்றாம் நாள், அவன் வேலைக்கு சென்றுவிட காலேஜ் கிளம்பி கொண்டிருந்த செல்வியின் போன் அடித்தது.

புது நம்பராக இருக்கவே”ஹலோ சொல்லுங்க யார் வேணும்?" என்று கேட்டாள்.

"என்னம்மா செல்வி எப்படி இருக்க?" என்று எதிர்முனையில் ஒரு ஆண் குரல் கேட்டது.

"ஹலோ. நீங்க யாரு சார் எனக்கு தெரியலை?' என்று கேட்டாள்.

"என்னை உனக்கு தெரியாது. ஆனா உன் புருஷனுக்கு நல்லா தெரியும்" என்று கூறவே.”அப்படியா சார். அப்ப நீங்க அவர் நம்பற்கு கால் பண்ணுங்க" என்று வைக்க போனவளை தடுத்தது அந்த குரல்,”யாருன்னே தெரியாத உனக்கு போன் பண்ணும்போது உன் புருஷன் நம்பர் இல்லாமயா இருக்கும்? நான் உன்கிட்ட தான் மா பேசணும்" என்றார்.

"உங்களுக்கு என்ன தான் வேணும்?" என்று செல்வி கொஞ்சம் கோபமாய் கேட்க.

"இங்க பாரும்மா நான் நேரடியா விஷயத்துக்கு வரேன். உன் புருஷன் தேவையில்லாம என் விஷயத்துல தலையிட்றான். அவன்கிட்ட சொல்லிவை. இல்ல உன் நெத்தில குங்குமம் வைக்கமுடியாம போய்டும். உன் புருஷன் என்ன வேலை செய்யறான்னு தெரியுமா உனக்கு?" என்று கேட்டார்.

"என் புருஷன் எங்க வேலை செய்யறார்னு எனக்கு தெரியாது. ஆனா, உன்னை மாதிரி பக்கி எல்லாம் போன் பண்ணி மிரட்டும் போதே தெரியுது அவர் ஏதோ நல்லவேலை தான் செய்யறார்னு. என் நெத்தில இருக்க குங்குமம் நானா வெச்சிக்கிட்டது அதை உன்னை மாதிரி குரங்கெல்லாம் ஒன்னும் பண்ணமுடியாது. போய் ஆம்பளையா என் புருஷன்கிட்டே நேருக்கு நேர் நில்லுடா. என் வாய்ல அசிங்க அசிங்கமா வருது. உன்னை எல்லாம் திட்டி என் மூட நானே ஸ்பாயில் பண்ணிக்க விரும்பலை." என்று போனை கட் செய்தாள்.

'ச்சே காலைலேயே இந்த குரங்கு யாருன்னு தெரியலையே?' என்று நினைத்தவள் தன்னவனுக்கு எதுவும் ஆகி இருக்கக்கூடாது என்று கடவுளை வேண்டியபடி அவனுக்கு போன் செய்தாள்.

முதல் தடவை எடுக்காமல் போகவே மீண்டும் முயச்சித்தாள். இம்முறை”ஹலோ செல்வி" சரவணத்தமிழன் குரல் கேட்கவே அப்பொழுது தான் நிம்மதி பெருமூச்சு வந்தது அவளுக்கு.”ஹலோ! என்ன பண்றிங்க? எப்போ வருவிங்க?" என்று கேட்டாள்.

"என்னாச்சும்மா? இப்பதான நான் வீட்லர்ந்து வந்தேன். உனக்கு உடம்பு ஏதாவது சரி இல்லையா? நான் உடனே வரட்டுமா?" என்று பதட்டமாக கேட்டான்.

"சொல்லலாமா வேணாமா ? சொல்றது தான் நல்லது" என்று நினைத்தவள்.

"இல்ல இல்ல ஒன்னும் பயப்படாதிங்க. எனக்கு ஒரு போன் கால் வந்தது. அதான் ..." என்றாள் மெதுவாக.

"யார் என்ன சொன்னாங்க? எதாவது மிரட்டினாங்களா நான் வரட்டுமா?" என்று கவலையாக கேட்டான்.

"என்னையா அவன் மிரட்டறதா? நான் தான் அவனை மிரட்டி வச்சிட்டேன். நீங்க எதுக்கும் கொஞ்சம் கேர்புல்லா இருங்க. அதை சொல்ல தான் போன் பண்ணேன்." என்றாள் கவலையாக.

"ஓகே பொண்டாட்டி . ஐ லவ் யூ” என்றான் மெல்லிய புன்னைகையோடு.

"சந்தடி சாக்குல உன் லவ் கதைய ஆரம்பிக்காத. வேற வேலை இருந்தா பாரு. எனக்கு காலேசுக்கு டைம் ஆகுது” என்றாள்.

"சரி. நீ காலேஜ்க்கு போ. நான் உன்னை பார்க்க அங்க வருவேன்” என்றான் குறும்பாக.

"சும்மா விளையாடிட்டு இருக்காத. நீயாவது வரதாவது" என்று வைத்துவிட்டாள்.

கல்லூரிக்கு வந்தவுடன் செல்வியின் தோழி”ஹேய் இன்னைக்கு நம்மளுக்கு சேப்டிபத்தி சொல்லிக்கொடுக்க யாரோ பெரிய ஆபிசர் வராங்களாம்" என்றாள்.

"யார் வந்தா நமக்கென்ன? நம்ம படிக்கிற வேலையை மட்டும் பார்ப்போம்" என்று அதோடு நிறுத்திக்கொண்டாள்.
 

Latest posts

New Threads

Top Bottom