BK32 மாயாஜாலக்கதை
அத்தியாயம் 5
ஜீவா கொடுத்த முகமூடியை பார்த்தோம். இன்று காலையிலேயே வந்துவிட்டான். பிரகதியும் எங்களுடன் சேர்ந்துகொண்டாள். நேற்று நாங்கள் பேசியது எல்லாம் ஏதோ டெலிபதிபோல அவளுக்கும் தெரிந்திருந்தது. இன்று காலை எட்டு மணிக்கெல்லாம் கூடிவிட்டோம். ஒன்பது மணிக்குதான் பள்ளி ஆரம்பம். இன்று ஸ்பெஷல் க்ளாஸ் இருப்பதாக சொல்லி சீக்கிரம் வந்துவிட்டோம். அவன் ஏதோ வேலை செய்துதர வேண்டும் என்று சொல்லியிருக்கிறன். அது என்னவாக இருக்கும் என்று நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது ஜீவா வந்தான்.
இன்று அவன் வந்தது பிரகதியின் பென்சில்பாக்ஸில் இருந்து. பேசிக்கொண்டிருக்கும்போது பிரகதி தான் வாங்கிய புது ரப்பர் அட்டாச் பென்சிலை காட்ட அந்த பென்சில் பாக்ஸை திறக்க அதில் சின்ன மனிதன் போல தோன்றும் ஒரு எரேஸர் இருந்தது. அவளே அதை கவனிக்கவில்லை. ஜோசப்தான் பார்த்தான். ஆச்சரியமாய் அதை வெளியே எடுக்க, அது சின்னபையன் ஏதோ யோசித்து உட்கார்ந்திருப்பது போல இருந்தது. இதுபோல ஒரு பிரபலமான கிரேக்க சிற்பத்தை நான் எங்கேயோ பார்த்த ஞாபகம் வந்தது. அதை நாங்கள் ஆச்சரியமாக பார்க்க, திடீரென்று அது எழுந்து நிற்க எங்களுக்கு முதலில் படபடவென்று வந்து விட்டது. ஆனால் இந்த சில நாட்களில் ஏராளமான மாயவித்தைகளை ஜீவா செய்து காட்டியிருந்ததால், உடனடியாக இயல்பு நிலைக்கு வந்துவிட்டோம்.
“என்ன ஜீவா இது… இது எப்படி சாத்தியம்…? “ என்றேன் நான்.
“மனம் நினைத்தால் எல்லாமே சாத்தியம்தான் ரகு…” என்ற ஜீவா என் கைவிரல்களை பற்றி ஏறி என் உள்ளங்கையில் அமர்ந்துகொண்டான். அது மிக வேடிக்கையாக இருந்தது. அவன் சில பொருட்களை எங்களிடம் கொடுக்க, அதை வாங்கிய ஷகீல் தன் கையில் வைத்து கண்களை இடுக்கிக்கொண்டு அது என்னவென்று பார்க்க, அந்த பொருள்கள் கொஞ்சம்கொஞ்சமாக வளர்ந்து முழு உருவத்தை காட்டியது. அது சூப்பர் ஹீரோக்கள் போடும் முகமூடிகள். நேற்றைய தினம் நாங்கள் படித்த, எங்களுக்கு விருப்பமான ஹீரோக்களின் முகமூடிகளை போன்று தோற்றமளித்தது அது. வெறும் முன்புறம் மட்டும்.
“ஹை… பேட்மேன்கூட இருக்கு…. இது எதுக்கு ஜீவா…” என்றாள் ரம்யா.
“முதலில் நான் கொஞ்சம் பெரிதாகிவிடுகிறேன் “ என்ற ஜீவாவை நான் கீழே வைக்க, அவன் உருவம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி.. இயல்பு நிலைக்கு வந்து ஒரு ஒளிபோல் வெளிச்சம் ஒரு தடவை தோன்றி மின்னி மறைந்தது.
“நேத்து சில தகவல்கள் காதில் விழுந்தது. அதை சரி செய்ய உங்கள் உதவி வேண்டும்” என்றான் ஜீவா.
“ சொல்லுபா… எல்லாமே நீயே செய்யற… எங்களால் முடிஞ்சதை நாங்க செய்யறோம்.” என்றான் ஜோசப்.
“ சிட்டியில ஒரு பாங்க் கொள்ளை நடக்கபோகுது. அதை நீங்க தடுக்கப்போறீங்க. அதில்லாமல் ஒரு பெரியவரையும் காப்பாத்த போறீங்க… ஆனா நீங்க சின்னபசங்கன்றதால இந்த முகமூடிகள் உங்களுக்கு. பிடிச்சதை செலக்ட் பன்ணுங்க. விபரம் சொறேன் “ என்றான் ஜீவா.
“அய்யோ …. பாங்க் கொள்ளையா… பேசாம போலீஸ்ல சொல்லிடலாம். அதான் சரி” என்றான் ஜோசப்.
“அது சரியா வராது. அவங்க நம்ப மாட்டாங்க. ஏன்னா அவங்க மூளைல வேற விஷயங்கள்தான் கால சூழ்நிலைகளால நிறஞ்சிருக்கு. இது சொன்னா அவங்களுக்கு வேடிக்கையா இருக்கும். “
“இன்னொரு விஷயம் என்ன… அந்த பெரியவரும் இந்த பாங்கில இருக்காரா…?” என்றான் ஜோசப்.
“அது தொடர்ந்து சொல்றேன்… முதலில் இதை செலக்ட் பண்ணுங்க.”
“எனக்கு பேட்மேன்” என்று முந்திக்கொண்டாள் ரம்யா. நான் ஸ்பைடர் எடுத்தேன். இதான் முகத்தை முழுசாக மூடிக்கொள்ளும். எதுக்கு வம்பு, என்று தோன்றியது. அதில்லாமல் கொஞ்சம் கூச்சம் வேறு எனக்கு. வேதாளர் போன்று இருந்ததை ஜோசப் எடுத்தான். அயர்ன் மேன் மாஸ்க் ஷகீலுக்கு போயிற்று. இன்னொன்று சிரிப்பது போல் இருந்தது. சிறு முறுக்குமீசை. வெண்டேடா என்று ஜீவா சொன்னான். அதை பிரகதி எடுத்துக்கொண்டாள். அதை நாங்கள் முகத்தின் அருகில் கொண்டுசெல்ல அது சட்டென்று எங்கள் முகத்தில் காந்தம்போல ஒட்டிக்கொண்டது.
ஜீவா தன் கையை அசைக்க ஒரு சிறு பொம்மை தோன்றியது. முதலில் பார்க்க, அது அழகான விமானம் போல தோன்றியது. கொஞ்சம் உற்றுபார்த்தால், பழைய சினிமாக்களில் திறந்த அமைப்பில் கார் இருக்குமே, அது போல நான்கைந்து சீட்கள் கொண்ட ஒரு அமைப்பாய் இருந்தது அது. அதே சமயம் விமானம் போல இரு சின்ன இறக்கைகளும் பின்புறம் ஒரு வால் போன்றும் இருந்தது. ஜீவா திரும்ப கைகாட்டினான். இப்போது ஒரு மோட்டார் சைக்கிள் போல ஒரு பொம்மை தோன்றியது. அதன் சக்கரங்கள் மிகப்பெரிதாக, கிட்டத்தட்ட பேட்மேன் படத்தில் வருமே, அதுபோல இருந்தது. நாங்கள் ஜீவாவை பார்க்க, அவன் “ இது ஓகேவா…” என்றான்.
நாங்கள் தலையாட்ட, அவனின் கையசைப்பில் அந்த பொம்மைகள் அழகாக பெரிதாக ஆனது. ஒரு இரண்டடி உயரமும், ஆறடி நீளமும் ஆக அது பார்க்க இப்போதும் பொம்மை போலத்தான் இருந்தது.
“இது எங்களுக்கு ஓட்டத்தெரியாதே… எப்படி ஓட்ட…?” என்றான் ஜோசப்.
“நீங்கள் நினைச்ச இடத்துக்கு இது உங்களை இது அழைத்துபோகும். பூமியின் ஈர்ப்பு விசையோடு இது தொடர்புகொண்டிருக்கும். அதே சமயம் ஒரு எதிர்ப்பு விசை இதற்குள் உண்டு. அதனால் ஸ்டார்ட் செய்தவுடன், பூமியின் பரப்பில் இருந்து ஒரு நான்கடி உயரத்தில் இது எப்போதும் நிலையாக இருக்கும். ஏதாவது ஸ்பீட் பிரேக், அல்லது உயரமான கட்டிடங்களில் கூட இது அதன் பரப்பில் இருந்து இதே உயரத்தை மெய்ன்டெய்ன் பண்ணும். அதிக உயரம் போக போக அதன் எதிர்ப்பு விசை அதற்கேற்ப தகவமைத்துக்கொள்ளும். முன்புறம் ஒரு சென்ஸார் உண்டு. அது எதிரில் வரும் பொருளுக்கேற்ப விலகிச்செல்லும்.”
“செம கண்டுபிடிப்பா இருக்கே…. இது நீ கண்டுபிடிச்சதா ஜீவா…. ?” என்றேன் நான்.
“இது என் மனம் கண்டுபிடிச்சது… அதாவது உங்க மனம்” என்று சிரித்தான் ஜீவா. எங்களுக்கு கொஞ்சம் புரியவில்லை. சிலசமயம் இப்படித்தான் புரியாத வகையில் பேசுகிறான் இவன்.
“அது ஓகே… கொள்ளை எங்க நடக்கப்போகுது…. உனக்கெப்படி தெரியும்… நாங்க சின்னபசங்க… என்ன பண்ணமுடியும்…?” என்றான் ஜோசப்.
“ மனசுதான் சின்னபசங்க….. உங்க அறிவு நல்லா தெளிவா பெரியவங்க அளவுக்கு சிந்திக்குது. அதனால இதை சமாளிக்கறது அங்க சூழ்நிலை பொறுத்து நீங்களே முடிவெடுப்பீங்க. அதில்லாம நானும் கூட இருப்பேன்” என்று அவன் சொல்ல, எங்களுக்கு கொஞ்சம் தைரியம் வந்தது. அவன் மேலும் தொடர்ந்தான், “ எப்படி தெரியும்னு கேட்டீங்க இல்ல, என் மூளை சில நெகட்டிவ் எண்ணங்களை, பேச்சுகளை ஒலி அலைகளா மாறி கொஞ்சம் ஃபில்டர் செய்து எனக்கு தெரியவைக்கும். நேத்து அவர்கள் பேசிக்கொண்டிருந்தது, இப்படி காற்றில் பரவி என்னை வந்து சேர்ந்துச்சு…” என்றான் ஜீவா.
“ சுத்தமா புரியல…” என்றேன் நான். நண்பர்களும் விழித்தார்கள்.
“ அது வந்து… நீ போன வருஷம் உங்க டீச்சர்கிட்ட பாராட்டு வாங்கினயே ஞாபகம் இருக்கா….?”
“இருக்கு…”
“அதெப்படினு யோசிச்சயா… அவங்க சொல்லி ஒரு வருஷம் ஆச்சு. அதே பேச்சு, குரல், பின்ணணியில் வந்த சத்தம் முதற்கொண்டு உன் மூளை பதிச்சு வச்சிருக்கு. உண்மையில் ஒரு மனிதர் பேசிமுடித்தவுடன், அந்த பேச்சு காற்றில் பரவி அடுத்தவரை அடையுது. அது கேட்பவருடன் முடிஞ்சுடுதுன்னு நினைக்கிறோம். ஆனா அது எல்லோரும் கேட்க வேண்டி இந்த பூமியில் சுத்திட்டுதான் இருக்கும். என்ன ஒரே கஷ்டம்னா, அது பரவ பரவ புகை பரவுவது போல பல்வேறு திசைகளில் விலகி எங்கேங்கோ இருக்கும். அதை அதன் பேச்சு நடந்த காலத்தில் மையமா வச்சு ஆழ்ந்து யோசிக்க, அது காந்தம் போல திரும்ப வந்து ஒண்ணு சேர்ந்து நமக்கு மறுபடி தெரிய வைக்கும். நீங்க எப்பயும் உங்களை பாதிச்ச, அதாவது சந்தோஷமோ, துன்பமோ, சிலதை மட்டும் திரும்ப திரும்ப யோசிச்சு, கேட்கறீங்க. எனக்கு பொதுவா எல்லாமே தேவை. தேவைப்படும் நேரத்தில் அந்த இடத்தில் இருந்து அந்த சத்தங்களை மறுபடி வரவச்சு கேட்கறேன். அதுபோல, நேத்து அவங்க பேசினது உள் உணர்வில் அலாரம் கொடுக்க, கண்மூடி யோசிக்க, அவங்க பேசினது எனக்கு வந்து சேர்ந்துடுச்சு…” என்றான் ஜீவா.
“அப்ப, உலகில் நடக்கும் எல்லா பேச்சுக்களையும் இதுபோல கேட்கமுடியுமா….”
“முடியும்… ஆனா உங்களுக்கு பைத்தியம்னு சொல்லிடுவாங்க. ஏன்னா, எல்லாம் சேர்ந்து குழப்பி, உங்களை சிந்திக்கவிடாம செய்திடும். அதனாலதான் குறிப்பிட்ட விஷயங்கள் மட்டும் உங்களை வந்தடையறமாதிரி இயல்பா இருக்கு. இதை மனசால உணர்வதும் கஷ்டம். மிகப்பெரிய ஞானிகள் நாம் எதுவும் சொல்லாமலே நாம் பேசினதை, நடந்ததை சொல்றது இப்படிதான்.
நீங்க இதெல்லாம் முயற்சிக்க வேண்டியதில்லை. உங்களுக்கு உதவதான் இயற்கை, டிவி, இண்டர்நெட் னு படைச்சு வச்சிருக்கு. அதுமூலமா உங்களுக்கு தேவையான செய்திகள், முக்கிய சம்பவங்கள்னு நீங்க ஈசியா, கஷ்டப்படாம தெரிஞ்சுக்கலாம். அதுக்கு உங்களுக்கு தேவை தெரிஞ்சுக்கணும்னு ஆர்வம்தான்.”
“ஆமா… அன்னிக்கு எங்க வீட்டுக்கு வந்த ஒரு ஜோஸியர்கூட… எங்களுக்கு என்ன நடக்கப்போகுது… என்னென்ன செய்யணும்னு அழகா சொன்னார். தலையில ஏதோ கட்டு போட்டு வந்திருந்தார். ஏதோ அடிபட்டதுபோல.. ஆனாலும் அது பெரிசா நினைக்காம வந்து எங்களுக்கு உதவிசெய்ய எல்லாம் சொன்னார். செம அறிவுதான் இல்ல…” என்றாள் பிரகதி. அதைக்கேட்ட ஜீவா மெல்ல சிரித்தபடி எங்களை கண்களை மூடச்சொன்னான்.
நாங்கள் கண்களை மூட, ஒரு இருள் போல ஏற்பட்டது. அதன்பின் ஏதோ சுருள்சுருளாக ஒரு வளையத்தில் புகுந்து போவதுபோல் இருந்தது. சட்டென்று வெளிச்சம் பரவ ஏதோ ஒரு வீட்டுக்குள் இருந்ததை போல் இருந்தது. சுவர்களில் நிறைய சாமி படங்கள். சில பூஜை பொருட்கள். ஒரு நபர் உட்கார்ந்து யாரிடமோ செல்ஃபோனில் பேசிக்கொண்டிருந்தார்.
“இதுதான் அந்த ஜோசியக்காரர். செம அறிவு தெரியுமா… எங்க வீட்ல எத்தனை பேர், எத்தனை ஆண் பெண் முதகொண்டு சொன்னார்..” என்றாள் பிரகதி.
எப்போதும் போல நாங்கள் அவர் கண்ணில் படவில்லை. எப்போதும் போல ஜோசப் அவரை சுற்றி ஏதாவது விளையாட முடியுமாவென ஆராய்ந்துகொண்டிருக்கு, அவனை இழுத்து என்னருகில் உட்கார வைத்தேன்.
“ ஆமாப்பா… அந்த லைன்மேன் வீடுதான். ஆமா…. என்னது ஒரு பொண்ணு மட்டுமா… அதோட லைன்மேன், அவங்க சம்சாரமா… சரிசரி… கூப்ட்டாங்க… போய் ஏதாவது சொல்லிவரேன். பணம் தேறுமில்ல… ஓ… கொஞ்சம் வசதிதானா… சரி சரி… கவனிச்சுக்கறேன் விடு… ஆமாயா… கொஞ்சம் டல்தான்… அதான் ஒரு பட்டன் தட்டினா… தேதி மட்டும் குடுத்தா ஜாதகமே பிரிண்ட் ஆகி வந்திடுது… இதுபோல ஏதாவது தேத்தினாதானே… வேற வேலை ஏதாவது தேடணும்பா… கொஞ்ச நாள் ஆகட்டும்னு இருக்கேன்…. நல்ல நேரமா… அட போய்யா…. பணம் வந்திட்டா எல்லாம் நல்ல நேரம்தான்… சரி சரி …வச்சிடுறேன்…..”
பிரகதி…. என்னை பார்க்க… நான் அவளிடம் அங்கே இருந்த காலண்டரை காட்டினேன். அது அந்த ஜோஸியர் அவர்கள் வீட்டுக்கு வந்த முதல் நாளை காட்டியது. பிரகதி அந்த ஜோஸியரை முறைக்க, ஜோசப் அந்த ஜோஸியரின் உச்சந்தலையில் நங்கென்று ஒரு கொட்டு கொட்டினான். சரியான அடி. அவர் தலையை பிடித்துக்கொண்டு அலற, ஜீவா எங்களை இழுத்துக்கொண்டு இன்றைய தினத்தில் வந்து சேர்ந்தான்.
மாயாஜாலம் தொடரும்…