ravishankarq
New member
- Messages
- 2
- Reaction score
- 0
- Points
- 1
' சென்னையிலிருந்து டெல்லிவரைக்கும் ஃப்ளைட். அங்கேயே நம்மை ட்ராவல்ஸ்காரன் ரிசீவ் பன்னிடுவான். அங்கிருந்து நேரா ஹரித்வார். அங்க ஒரு நாள்.. அப்பறம் ரிஷிகேஷ்ல எண்டிரி கார்ட் வாங்கிட்டு நேரா குப்தகாசி'..
' விஷயத்தை சொல்லாம, காலேஜ்ல லெக்சர் அடிக்கறமாதிரி பேசிட்டு...' பானுமதி அங்கலாய்த்துக்கொண்டார்.
' நீ கோர்ட்ல குறுக்கு கேள்வி கேக்கறமாதிரி கேக்காதே' கடுப்புடன் சொன்னார் மோகன்.
உங்களோட கேதார்நாத் போலாம்னு சொன்னதே தப்பாபோச்சு'
என்ன தப்பாயிடுத்து''
' எனக்கு கோர்ட்ல வரிசையா கேஸ் இருக்கு. இந்த வெள்ளிகிழமை சாயந்தரம் கிளம்பினா, வர்ர சனிக்கிழமை கண்டிப்பா திரும்பி வந்தாகனும்' முனுமுனுத்தார் பானுமதி.
' சரிம்மா சரி, அதனாலதான் வெறும் கேதார்நாத் டிரிப் மட்டும் ஃபிக்ஸ் பன்னிருக்கு. பக்கத்திலயே கங்கோதிரி, பத்ரிநாத் எல்லாம் இருந்துகூட நாம்ப எதிலயும் கமிட் பன்னிக்கலயே. கவலைபடாம கிளம்பு. சனிக்கிழமை கண்டிப்பா சென்னை திரும்பிடலாம்' மீண்டும் அழுத்தமாகச் சொன்னார் மோகன்
*
'என்னப்பா ஆச்சு, ரிஷிகேஷ்லேர்ந்து 8 மணிகெல்லாம் கிளம்பிடலாம்னு சொன்னே, 81/2 மணியாச்சு' மோகன் கைடிடம் விசாரித்தார்.
டேராடூன்லேர்ந்து, ஃப்ளைட்ல வர்ரவங்க, 2 பேர் வரனும் சார். இன்னும் 10 நிமிஷத்தல வந்திடுவாங்க. வந்தவுடனே கிளம்பிடவேண்டியதுதான்'
''இதோ அவங்களே வந்துட்டாங்களே. வெல்கம் சார், வாங்க மேடம்'
ரிஷிகேஷ்லேர்ந்து அவர்கள் கேதார்நாத் செல்ல டெம்போ டிராவலர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
வந்தவர்கள் புதிதாக திருமணம் ஆனவர்கள் போலிருந்ததது. அந்தபெண் பானுமதியிடம் பார்வையாலேயே அனுமதி கேட்டு அவர் அருகில் அமர்ந்துகொண்டாள். அவளது கணவன், பின் சீட்டில் அமர்ந்திருந்த மோகன் அருகில் உட்கார்ந்து கொண்டான்.
' எங்கிருந்துபா வரே ' மோகன் இளைஞனை வினவினார்.
'நாங்க கோயமுத்தூர்லேர்ந்து வரோம் சார். நான் ரகு. அது என் வைஃப் அமுதா'
'உங்க வயசுல எல்லாரும் ஹனிமூன் போவாங்க. நீங்க கேதார்நாத் வந்திருக்கீங்க, வெரிகுட்'
'என்ன அமுதா சீட் வசதியா இருக்கா. ஏன் ஒரு மாதிரி இருக்கே' பானுமதி கேட்டதில் அக்கறை தெரிந்தது.
'ஒன்னுமில்லே ஆண்ட்டி,. நேத்திக்குநைட் கோயமுத்தூர்ல ஃப்ளைட். டெல்லிக்கு அன் டைம்ல வந்தது, அங்க வெயிட் பன்னி மார்னிங்க் ஃப்ளைட் பிடிச்சு இங்க டேராடூன் வந்து, நேத்து நைட் பூராவும் தூக்கமேயில்லே'
'இப்பவாவது கொஞ்சம் கண் அசரலாம்னு பார்த்தா இந்த பக்கமும் அந்த பக்கமும் வளைஞ்சு வளைஞ்சு போறதில ஓரே டயர்டா இருக்கு' அமுதா அரைதூக்கத்திலேயே இருந்தாள்.
மதியம் உணவிற்காக வண்டி நிறுத்திபட்ட போது,
' நம்ப ஊர் சாப்பாடு சுட சுட இங்க கிடைக்குது பார்த்தியா. இதுதான் இந்த டிராவல்ஸ்காரனோட ஸ்பெஷாலிட்டி. நல்ல வேளை சப்பாத்தி கொடுமையிலிருந்து தப்பிச்சோம்' மோகன் தன்னையே பாராட்டிக்கொண்டார்.
ஆனால் பானுமதியின் பார்வை அமுதவின் மேலேயே இருந்தது.
' ஏம்மா சரியா சாப்பிடலையா'
தலை சுத்தற மாதிரி இருக்கு, வாமிட் வரமாதிரியும் இருக்கு. நைட் தூக்கமில்லை, ஹில்ஸ் ட்ராவல் வேற அதான்' அமுதா சமாளித்தை பானுமதி பொருட்படுத்தவில்லை
***
அன்று மாலை 7 மணியளவில் அவர்கள் குப்தகாசியை அடைந்தனர்.
' என்னப்பா இது, டபுள்ஸ்ரூம் தர்றேனுட்டு நாலுபேர் இருக்கற ரூமை தர்றே' மோகன் சற்று கோபத்துடனேயே கைடிடம்கேட்டார்.
' ரொம்பசாரி சார். எல்லாருக்கும் டபுள்ஸ் ரூம்தான் புக் பண்ணியிருந்தது. திடீர்னு யாரோ மினிஸ்ட்டர் வந்ததினால, நம்ப எல்லாருக்குமே நாலுபேர் தங்கர மாதிரி ரூம்ஸ் கொடுத்துட்டாங்க. கோயமுத்தூர்லர்ந்து வந்துவங்களையும் உங்களோடசேர்த்துக்குங்க' பின் அவன் ரகுவைப்பார்த்து
' சார் நீங்களும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணீக்குங்க.. நாளைக்கு காலலே சீக்கரமா நாலு மணிக்கு ரெடியாயிடுங்க. ஹெலிபேட் ஃபாட்டாங்கற இடத்தில் இருக்கு. அங்கபோய் சேர்ரதுக்கே ஒன் ஹவர் ஆயிடும். முதல் பேட்ச்ல போறவங்க லிஸ்ட் .. மோகன்,ரகு... இரண்டாவது பேட்ச் பானுமதி, அமுதா.. '
' என்னப்பா இது, ஜோடிகளை பிரிச்சு தனித்தனியா அனுப்பறே '
'சார் இது கம்ப்யூட்டர் லாட் பிரகாரம் வர்றது. அடுத்தடுத்த பேட்ச் தானே. மேல வெயிட் பன்னி மேடத்தையும் கூட்டிட்டு போய்டுங்க. 12 பேரும் காலம்பற 4 மணிக்கு ரெடியாய்ருங்க. அஞ்சரை மணிக்கு ஹெலிபேட்ல ரிபோர்ட்டிங்' மேல ஆக்ஸிஜன் கம்மியா இருக்கும். யாருக்கவது வீசிங்க், ப்ரீத்திங் ப்ராப்ளம் இருந்தாக்க எதுத்த கடைலே ஆக்ஸிஜன் சிலிண்டர் கிடைக்கும் வாங்கிகங்க. விண்டர் க்ளாத், ரெயின் கோட், எமர்ஜென்சி மெடிசன் கைல வைச்சுக்கங்க. வேறு எதுவும் லக்கேஜ் வேண்டாம்.
' சார் அப்புறம் ஒருத்தரோட வெய்ட் 80 கிலோவரைக்கும்தான் இருக்கனும். யாரவது அதுக்குமேல இருந்தா ஒருகிலோவிற்கு 150 ரூபா கட்டனும்.
' யோவ் என்னய்யா இது' கூட்டத்திலிருந்து ஒருவர் கூவினார்.
' ஏவியேஷன் ரூல்ஸ் சார் '
' அதுக்குதான் உடம்பை கரெக்டா வைச்சுக்கனும்' மோகனைபார்த்துகொண்டே பானுமதி சொன்னார்.
' நீ ரொம்ப அண்டர்வெயிட்னு ஆடாதே, ஒல்லி பிச்சை'
' என்ன கூட ஒரு 800 ,900 ரூபா கட்டனும்" சொன்ன பானுமதிக்கு சிரிப்பு தாங்கவில்லை
**************
மறுநாள் காலை 6 மணிக்கு முதல் ஹெலிகாப்டரில் மோகன், ரகுவுடன் வேறு நான்கு பேர்கள் சென்றனர்.. அமுதா பானுமதி அருகில் அமர்ந்துகொண்டிருந்தாள்.
அமுதாவின் கண்கள் கல்ங்கியிருப்பதை கண்டு, 'ஏம்மா ஒருமாதிரி இருக்கே, நேத்து நைட்கூட நீ சரியா தூங்கலையாட்டம் இருந்தது. என்ன உடம்பு முடியலயா ? '
'அதெல்லாம் ஒன்னுமில்லே ஆன்ட்டி ' சொன்ன அமுதா பானுமதியின் பார்வையை தவிர்க்கும் வகையில் தன் முகத்தை திருப்பிகொண்டாள்.
அதற்குள் ஹெலிகாப்டர் வந்து விடவே அனைவரும் ஏறி அமர்ந்துகொண்டனர். அமுதா பின் வரிசையில் பானுமதிக்கருகில் அமர்ந்துகொண்டாள். பானுமதி கதவோரம் அமர்ந்திருந்தார். சட்டென்று ஹெலிகாப்டர், தும்பி மாதிரி, உயரே எழும்பி பறக்க ஆரம்பித்தது. மேலே செல்ல செல்ல மலையின் பிரம்மாண்டம் அருகில் தெரிந்தது. மரங்கள் பார்பதற்கு சிறு ஊசிகள் போல் காட்சியளித்தன.. பானுமதிக்கும் சற்று பயம்தான். இருந்தாலும் காணக்கிடைக்காத அரிய காட்சிகளை ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டு வந்தார். அங்கங்கே நதிவரும் பாதையும், சிறு சிறு ஓடைகளும் பனியில் உறைந்து வெள்ளி நூல் போல் காட்சியளித்தது. பனி படர்ந்த சிகரங்கள் தெய்வீக அழகுடன் மனதை கவர்ந்தது. நடந்து செல்லும் பாதையும் படிக்கட்டுகளும் போன்சாயாக தெரிந்தன. சிறிது நேரத்தில் பானுமதியின் தோளில் அமுதாவின் தலைபதிந்தது.
' அமுதா, பயமாயிருந்தா கண்ணைதிறக்காதே.. தோள்ல நல்லா சாஞ்சுக்க'
திடீரென்று பானுமதியின் தோள்களில் ஈரம். பக்கவாட்டில் பார்த்தால், அமுதாவின் கண்களிலிருந்து கண்ணீர் அவரது தோளை நனைத்திருந்தது.
' என்ன ' என்று யோசித்துக்கொண்டிருந்தபோதே மேலே கேதார்நாத்தின் ஹெலிபேட் வந்துவிட்டது. மொத்த பயண நேரமே 7 லிருந்து 8 நிமிடங்கள்தான்..
'மேடம் எல்லாரும் சீக்கிரம் இறங்குங்க' கதவை திறந்தவுடனே, தலையை குனிந்துகொண்டே, அங்கிருந்த ஊழியர்பின்னாலேயே ஓடி, ஹெலிபேடின் ஓரத்திற்கு வந்தனர். அங்கு மோகனும் ரகுவும் காத்துக்கொண்டிருப்பதைகண்டு அவர்களருகில் வந்தனர்.
' இப்போ ரிடர்ன் போகறதுக்கு குறிச்சுதரமாட்டானாம். கோவிலுக்கு போய்ட்டுவந்தாவுட்டுதான் அதற்கு ஏற்பாடு பண்ணனும்' மோகன் பானுவிடம் சொன்னார்.
'அமுதா நீ ரகுவோட முன்னால போம்மா. ' சொல்லிய பானு மோகனிடம்
'கொஞ்சம் மெதுவா நடங்க. அவங்க முன்னால் போகட்டும். கூட்டம் எப்படி இருக்கு. ஸ்பெஷல் டிக்கட்வாங்கனுமா?'
'அதெல்லாம் ஒன்னும் வேணாம். ஒரு அரைகிலொமீட்டர் நடக்கனும். உன்னால நடக்கமுடியுமில்லே'
'ஹூம் நடக்கலாம்'
மந்தாகினி நதி சுழித்துக்கொண்டு ஒடுவதை பார்த்தனர். குளிரிலிருந்து பாதுகாப்பாக கம்பளி உடைகளை அணிந்துக்கொண்டிருந்தனர். அந்த குளிரிலும் சிலர் மந்தாகினியில் குளித்துக்கொண்டிருப்பதை பார்த்து வியந்தனர்.
'அப்பாடா இந்த மண்ணை மிதிச்சது எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா. சே, இன்னொரு செட் டிரஸ் கொண்டுவந்திருந்தா மந்தாகினியிலே குளிச்சிருக்கலாம்' மோகன் சிறிய பையன் போல பேசிக்கொண்டுவந்தார்.
' டெம்பரேச்சர் என்ன தெரியுமா! 4 டிகிரி காலை தன்னிலே வைச்சால விறைச்சுபோய்டும். அங்க பாருங்க பனி மழையா பெய்யுது. காலலே 9 மணிமாதிரியா இருக்கு'
அவ்வப்போது 'ஹர ஹர் மஹாதேவ்' கோஷம் .
பேசிக்கொண்டே கோவிலுக்குஅருகில் வந்துவிட்டனர்.
'என்ன இவ்வளவு போலிஸ் கெடுபிடி'
'ஆர்மியும் இருக்கும்மா. நம்ப பி.எம் இப்பதான் ரெண்டு நாளைக்கு முன்னால் இங்க வந்து த்யானம் பன்னிட்டு போயிருக்காரு. அவர் இருந்த குகைக்கு இன்னும் நடந்து போகனும் போலிருக்கு'
' அங்கே சின்னதா கோவில் மாதிரி இருக்கே'
'ஆமா, அது பைரவர் கோவில் இங்கிருந்து இன்னும் 2 கி.மி நடக்கனும்
அவர்கள் கோவிலுகுள்ளே நுழைந்தனர். சிறிய பிரகாரம் சுவற்றில் அங்கங்கே சிலைகள் இருந்தன. வந்திருந்த பலர் தங்கள் கையிலிருந்த உறைந்த கெட்டியான நெய்யை அங்கிருந்த சிலைகளின்மேல் பூசியபடி சென்றனர். .
மோகனும் பானுமதியும் கருவறைக்குள் நுழைந்தனர். அங்கே கேதாரகௌரீஸ்வரர் சிறிய மலைஉருவத்தில் காட்சியளித்தார்.. இயற்கையாக அமைந்த சுயம்பீஸ்வரர். கர்ப்பகிரஹத்தின் மறுபுறத்தில் ஒரு பண்டா பூஜை செய்த பிரஸாத்தை அமுதவிடமும் ரகுவிடமும் கொடுப்பதை பானுமதி கவனித்தார்..மோகன் கேதாரலிங்கத்தை கையில் தொட்டுகும்பிட்டுகொண்டே வந்தார்.. வெளியில் வரும் அனைவருக்கும் அங்கிருந்த பண்டா கிண்னத்திலிருந்த பிரஸாதத்தை பூவில் ஒத்தி எடுத்து ஒவ்வொருவர் நெற்றியில் வைத்து அனுப்பிக்கொண்டிருந்தார். தரிசனம்முடித்துவிட்டு வெளியில் வந்துனர்.
இங்கதான் ஆதிசங்கரர் சமாதி இருக்கறதா சொல்றாங்க' கோவிலுக்கு பின்புறமிருந்த படிகட்டுகளை பார்த்து மோகன் சொன்னார்.
கோவிலின் முன்புறம் வந்து நமஸ்காரம் செய்துவிட்டு அங்கயே இருவரும் ஜோடியாக நின்று போட்டோ எடுத்துக்கொண்டனர்.
'நீங்க போட்டோ எடுத்தின்டீங்களா'
அமுதாவிடமிருந்து பதில் வராததிலிருந்து என்ன என்று ஊகித்து அமுதவையும் ரகுவையும் அதே பிண்ணனியில் போட்டோ எடுக்கவைத்து படத்தை வாங்கிகொடுத்தார். ஹெலிபேடை நோக்கி முன்னால் சென்றுகொண்டிருந்த அமுதா ரகுவைபார்த்து,
'. இவங்க உறவு நார்மலா இல்லீங்க ரெண்டுபேரும் வேண்டாவெறுப்பா பக்கத்த பக்கத்துலே நடந்து போயிட்டருக்கற மாதிரி இருக்கு. அந்த பொண்ணு ரொம்ப டிப்ரஸ்டா இருக்கற மாதிரி தோனுது. நாம்ப ஏதாவது செஞ்சி சரிபண்ணனும் போலிருக்கே' பானுமதி மோகனிடம் சொன்னார்.
'அப்படியா''
கீழே செல்வதற்கு வரிசை எண் 11 ல் மோகன், ரகு 12ல் பானுமதி அமுதா விற்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இவர்கள் முறை வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகும்போலிருந்தது
'நான் ரகுவை கூட்டிகிட்டு சூடா டீ சாப்பிட்டுட்டு உங்களுக்கும் வாங்கிண்டு வர்றேன்'
' போய்ட்டு மெதுவா வாங்க நான் இவளை விசாரிக்கறேன்'
உங்களுக்கு கல்யானமாயி எவ்வளவு நாள் ஆச்சு ? குழந்தை இருக்கா ?' பானுமதி வேண்டுமென்றேதான் இந்த கேள்வியை கேட்டார்
'தெரியலை'
' தெரியலையா என்னத்தை தெரியலை'
'குழந்தை இருக்கா இல்லையான்னு தெரியலை'
'என்ன சொல்ற நீ?' கேட்ட பானுமதியின் பார்வை அமுதாவின் வயிற்றில் நிலைத்தது. அதை கவனித்த அமுதாவின் தலை கவிழ்ந்தது.
கொஞ்சமாவது மூளை இருக்கா, உங்களுக்கு. இந்த ஸ்டேஜ்ல இந்த டிராவல் அவசியம்தானா'
' என்னமோ ஆகட்டும். அபார்ஷன் பன்னிக்கிற செலவு மிச்சந்தானே'
'முட்டாள், கோவில்ல வந்துட்டு என்ன பேச்சு இது ' சற்று கடுமையுடன் சொன்னபானுமதி ,அமுதாவின் உடல் நடுங்கி கொண்டிருப்பதை கவனித்து அவளை தாங்கிபிடித்துக்கொண்டு, அவள் கண்களை ஊடுருவி பார்த்தார்..
'நீ என்னோட பொண்ணு மாதிரி இருக்கே. என்னை உன் அம்மாவா நினைச்சு சொல்லு'
அந்த பார்வையில், ஸ்பரிசத்தில் அமுதாவின் மனக்கதவு திறந்துகொண்டது.
'சந்தேகம்தான் ஆன்ட்டி, சந்தேகம்தான்!!. எதெடுத்தாலும் சந்தேகம். கல்யாணம் நடந்து நாலு மாசம்கூட ஆகலை. நாங்க ஹனிமூன் டிரிப்பைகூட கேன்சல் பன்னிட்டோம். இந்த டூரை ஃபாமிலிடிரிப்பா புக் பன்னியிருந்தோம். மத்தவங்க கான்சல் பண்ணிட்டாங்க. எங்க பிரச்சனைலே, நாங்க கான்சல் பண்ண மறந்திட்டோம். அப்புறம், கேதார்நாத் போறத எதுக்கு கான்சல் பண்ணறீங்க'ன்னு வீட்ல பெரியவர் சொன்னதுனால நாங்க கிளம்பிவந்தோம்'
'சரிம்மா, நீ கன்சீவ் ஆகியிருக்கறதை வீட்ல சொல்லி ட்ரிப்பை கேன்சல் பன்னியிருக்கலாமில்லே. நீ இப்படி இருக்கறது தெரிஞ்சுமா உன்னை அனுப்பிச்சிருக்காங்க'
' அவங்க யார்கிட்டயும் நான் சொல்லலை'
'உன் ஹஸ்பண்டுக்காவது தெரியுமா'
'என்னத்தை சொல்றது எதைசொன்னாலும் அவருக்கு சந்தேகம்தான் வரும். நான் என்ன பன்றது. எல்லாம் என் தலையெழுத்து' அமுதா தடுமாறினாள்.
' கவலைபடாதே, எல்லாம் சரியாய்டும்' பானுமதி ஆதரவாக சொன்னார்.
*******************
' இந்தாடி டீ '
' என்னது !'
' இந்தா டீ'
' முதல்ல ரெண்டு தடவை டி போட்டீங்க'
' நான் எங்க ரெண்டு டீ போட்டேன், கடைக்காரன்தான் டீ போட்டான். இந்தா சாப்..புடு'
மோகனும் பானுமதியும் பேசுவதைக் கேட்டு அமுதாவிற்கே புன்னகை வந்தது.
' ஏங்க, நாலுபேரும் ஒரே ஃப்ளைட்ல போகமுடியுமான்னு பாருங்க'
மோகன் ஆஃபிஸிற்கு சென்று விசாரித்து, சிறிது முயற்சிகுபின் 12 வது வரிசையில் போகவிருக்கும் இருவரை அணுகி அவர்களை 11ல் போக வைத்தார்.
இடையில் பானுமதி அமுதாவை பற்றிய விவரத்தை மோகனிடம் சொன்னார்.
' அடுத்தது நம்ப ஃப்ளைட்தான் ரெடியாயிருங்க"
மோகன், பானுமதி, ரகு, அமுதா நான்கு பேரும் ஒரே ஃப்ளைட்டில் ஃபாடா வந்து அங்கிருந்து குப்தகாசியில் அவர்கள் அறைக்கு வந்தனர். ரூமிற்கு வரும் வரை பானுமதியும் சரி மற்றவர்களும் சரி எதுவும் பேசவில்லை
***********************
'என்னப்பா, கேதார்நாத சாமியெல்லம் நல்லா தரிசனம் செஞ்சீங்களா'
'செஞ்சோம் அங்கிள், பிரஸாதம் கூட கிடைச்சுது'
'ம்.. வெரிகுட். அதுசரி ரகு நீங்க ரெண்டு பேரும் ஐ டி கம்பேனிலே வேலை பாக்கறீங்கறீங்களே, என்ன லவ் மேராஜா'
' அதெல்லம் இல்லீங்க. எங்க ரெண்டு ஃபேமிலிக்கும் தெரிஞ்ச பெரியவர் ஒருத்தர் மூலமா எங்கப்பாம்மா அவங்க வீட்டுக்கு போய் பார்த்துபேசி, அப்புறம் இவ அப்பாம்மா எங்க வீட்டுக்கு வந்தாங்க. எல்லாம் அரேஞ்சட் மேரேஜ்தான்.
'அப்புறம் என்னப்பா சந்தேகம், உன்னோட பேருக்கேத்தமாதிரியே, பொண்டாட்டி மேலேயே! மோகன் ரகுவை ஆழமாகப்பார்த்தார்.
' சந்தேகம் வர்றதுங்கறது வாழ்க்கையிலே இருக்கறதுதான். அதே சமயத்தில சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட உறவுகள்மேலே நம்பிக்கை வைச்சுதான் ஆகனும். அப்பா, அம்மா, மனைவி, குழந்தைங்க மேலேயா சந்தேகப்படறது. நம்ப வாழ்க்கைக்கு அச்சானியே இவங்கதானே. இப்போ.., நீ அமுதவைமட்டும் சந்தேகப்படலை, உங்க அம்மா, அப்பா, அவங்களோட அப்பா அம்மா, உங்க ரெண்டுபேருக்கும் நல்லது செஞ்ச அந்த பெரியவர் எல்லாரையும் சேர்த்துதான் தான் நீ சந்தேகப்படறே. உங்கம்மா அப்பா மேலே உனக்கு நம்பிக்கையிருக்குல்லே. அவங்க உனக்கு நல்ல இடமா பார்த்து கல்யாணம் பண்ணீயிருப்பாங்கங்கற எண்னம் உங்கிட்ட இருக்குதானே
' சார் வந்து..' திணறினான் ரகு.
இந்த காலத்தில வேலைக்கு போறதினால பலவிதமான ஆளுங்ககிட்ட வேலை செய்ய வேண்டியிருக்கு, வேலை வாங்கவேண்டியிருக்கு. ஜாப்நேச்சர் அந்த மாதிரி, இதுக்கெல்லாமா சந்தேகம்' நேரடியாகவே விஷயத்திற்கு வந்தார் மோகன்.
யூ ஆர் ஹவிங்க் எவரி ரைட் டு டௌப்ட் அபவுட் எனிதிங்க் அண்ட் எவரிதிங்க். ஆனா அதுக்கப்பறம் எப்போ ஒரு விஷயம் தெள்ளத் தெளிவாயிடித்தோ அப்பறமும் அதே விஷயத்தைப் நோண்டி நோண்டி சந்தேகபட்டுண்டே இருக்கறது, நீயும் கஷ்ட்டபட்டு உங்கூட இருக்கறவங்களையும் கஷ்ட்டபடுத்தி, இதுக்கு ஒரு முடிவே! கிடையாதுப்பா. உன்னை என் பையன் இடத்திலேவைச்சு, என் அனுபவத்துல உறுதியா சொல்றேன், சந்தேகத்தினால சாதிச்சதுன்னு ஒன்னும் கிடையாது, ஆனா இழந்துதான் ரொம்ப அதிகமா இருக்கும் உனக்காகவே வள்ளுவர் தெளிவா,
தேரான் தெளிவுந் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும் (510)
என்று சொல்லியிருக்கற மாதிரி இருக்கு'
' இப்போ அமுதாவோட நிலைமை தெரியுமா. குழந்தை வரங்கறது சாதரண விஷயமா ? இந்த நிலைலே எப்படி இந்த ட்ரிப் வந்தீங்க? நீங்க நல்ல படியா ஊருக்கு போய் சேரனுமேன்னு எங்களுக்கு ரொம்ப...' பானுமதியின் குரலில் கவலைமேலோங்கியிருந்தது.
நாற்காலியில் அமர்ந்து கேட்டுகொண்டிருந்த ரகு, கட்டிலில் அமர்ந்துகொண்டிருந்த அமுதாவின் அருகில்வந்து அவளது தோளில் அணைத்துக்கொண்டான். அவனது அணைத்த கையை அமுதா அவளது கையால் இறுக்கப்பற்றிக்கொண்டு அவற்றின் மேல் சாய்ந்துகொண்டாள். அவளது கண்ணீர் அவர்கள் கையை நனைத்தது. தலைகுனிந்து அமர்ந்து கொண்டிருந்த ரகுவின் கன்னங்களிலும் உருண்ட கண்ணீர் அவன் மேல் பட்டு சிதறியது.
அந்த கண்ணீர் அவர்களக்கிடையிலிருந்த சந்தேகச்சுவரை, பெர்லின் சுவர் மாதிரி, தகர்த்து எறிந்தது. இணைந்த கைகளின் நெருக்கத்தில் அவர்களது பரஸ்பர நம்பிக்கை புலப்பட்டது.
மோகனும் பானுமதியும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர்.
அந்த அறையில் முதுமையெனும் , அனுபவத்தில் எழுந்த, பூங்காற்று அந்த இளந்தளிர்களுக்கு ஆனந்த தாலாட்டாக அமைந்தது.
******************************************************************************************
----சௌந்த்ரா ரவி