இந்த உலகத்துலயே மிக சுருக்கமான காதல் கதை இவங்களுடையது தான்.... கதை படித்த பிறகு இதை உணர்ந்தேன்....
என்ன கதை...! என்ன விறுவிறுப்பு...! ப்பா முதல் பத்து அத்தியாயங்கள் விறுவிறுப்போட உச்சம். பன்னிரண்டு மணிக்கு ஆரம்பிச்சேன். முடிக்கும் வரைக்கும் நான் கீழ வைக்கவே இல்லை.
முதலில் இந்த படத்துல இருந்தவங்க வேற ஒரு ஜோடினு நினைச்சேன். அப்புறம் தான் புருஞ்சுது இவங்க யாருனு?❤️❤️❤️❤️
நட்புக்கு இலக்கணம் அவ தான். அவ மட்டும் தான். இப்படியும் ஒரு பொண்ணா??? நினைக்கும் அளவுக்கு இருந்தது அவளது பாசம். முதலில் படிக்கும் போது ரொம்ப உரிமை எடுக்குறாளோனு நினைச்சேன். பிற்பகுதி தெரிந்த பின்பு தான் தெரிஞ்சுது... இந்த பொண்ணு வைரம்னு. அந்த பொண்ணு யாருனு கதையில தெரிஞ்சுக்கோங்க...❤️❤️❤️
அசமஞ்சன் இந்த தலைப்பின் நாயகனும் சரி, கதையின் நாயகனும் சரி இவன் மட்டும் தான். எனக்கு இவனை தான் பிடிச்சிருக்கு... வாவ் அவனோட லவ் ❤️❤️❤️❤️❤️
மித்ரன் கதாபாத்திரம் அடுத்து எனக்கு மிகவும் பிடித்தவன் இவன் தான். எல்லார்த்துக்குமே இவன் உண்மையாக இருந்தான்...❤️❤️❤️
சுயநலமிக்க மனிதர்களின் செயல்கள் எத்தகைய விளைவுகளை உருவாக்கும்னு ரொம்ப நேர்த்தியாக சொல்லியிருக்காங்க..
இந்த கதை தொடக்கம் தொடங்கி இறுதி அத்தியாயம் வரை ஆர்வமா படிச்சுட்டே இருந்தான். ஆனால் இறுதி அத்தியாயம் ஒவ்வொரு வரிகளையும் படிக்கும் போது கண்ணு கலங்கிடுச்சு.
அவங்க இருவரது காதல் என் கண்களை கலங்க வெச்சிடுச்சு... படித்து முடித்ததும் ரிவ்யூ பண்ணனும்னு அந்த நிமிசமே பண்ணிட்டேன். அந்த அளவு கடைசி அத்தியாயம் என் மனதில் நீங்க இடம் பெற்றிருக்கு....
ஒரு சிறந்த கதை படித்தவுடன் மனதில் தாக்குத்தை ஏற்படுத்த வேண்டும்னு பொதுவா சொல்வாங்க. அப்படி பார்க்கும் போது இந்த கதை என் மனதில் நீங்க இடத்தை பிடித்துவிட்டது சிஸ்❤️
விறுவிறுப்பான திரில்லர் கதை எழுதிய ஆசிரியருக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்....❤️❤️❤️❤️
யாஷ் கொடுத்த தண்டனை சரியானது... ஷர்மி அவன் சொல்றதை கேட்ருந்திருக்கலாம்... அவ அன்புக்கு தகுதியே இல்லாத நண்பர்கள்... முக்கியமா தேவ். இந்த ஆத்விகா இவங்க வாழ்க்கைக்குள்ள வரமா இருந்திருக்கலாம்.
ஷர்மி ❤️ யாஷ் இவங்க காதல் மெய் சிலிர்க்குது.....