Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

Status
Not open for further replies.

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
சிறைக்கு தன் மகனை காணச்சென்ற சங்கரப்பாண்டியன் வியப்புடன் அக்கேள்வியை கேட்டார்.


"என்ன சந்திரா சொல்ற? அந்த ஜெயிலர் கந்தன் உண்மையாவே உன் ப்ரெண்டா?" என்றார்.


"ஆமாப்பா, அவன் என் காலேஜ் ப்ரெண்ட். அவன் இங்க வந்த மறுநாளே என்னை கொலை செய்யச் சொல்லி அவனை நாச்சியம்மை அனுப்பினதா சொல்லி, பத்திரமா இருடான்னான். இப்போ வரை எனக்கு உறுதுணையா இருக்கறதும் அவன் தான்பா" எனவும், அவர்களின் உண்மையான நட்பில் மனம் நெகிழ்ந்து நின்றார் சங்கரப்பாண்டியன்.


தான் கடிதத்தில் படித்த அனைத்து நிகழ்வுகளுக்குமான விளக்கத்தையும் தன் தந்தையிடம் கேட்டறிந்த உதயச்சந்திரன், அந்நேரம் பார்த்து அங்கு வந்த கந்தனை தன் தந்தைக்கு அறிமுகம் செய்து வைத்தார்.


வெகுநேரம் சங்கரப்பாண்டியனுடன் பேசிய கந்தன் இடையில், "நீங்க நான் சந்திரனை கொல்ல தான் இங்க வந்திருக்கேனு அவனுக்கு எழுதியிருந்த கடிதத்தை நான் அவனுக்கு காமிக்கல. நாச்சியம்மைக்கு என் மேல நம்பிக்கையை ஏற்படுத்துறதுக்காக அவங்கக்கிட்ட அனுப்பிட்டேன்." என்று சொல்ல, புரிந்தது போல் தலையாட்டிய சங்கரப்பாண்டியன் கிளம்பும் முன் தன் மகளின் வாழ்க்கையை சீர் படுத்துவதற்காக தன் மகன் கேட்ட விக்ரமனின் அலுவலக முகவரியையும் தந்துவிட்டேப் புறப்பட்டார்.


ஒரு வாரத்திற்குப் பின் அலுவலக அறையில் தன் கையிலிருந்த கடிதத்தை ஒரு வரி விடாமல் வாசித்த விக்ரமன் அதனில் உள்ள அனைத்து தகவல்களையும் ஜீரணிக்க முயன்றான்.


உடன் தன் துப்பறிவாளரை போனில் தொடர்பு கொண்டு சில ஆலோசனைகளையும் கேட்டான்.


அன்று மதியம் தன் மகளுக்கு கடைந்த பருப்பு சாதத்தை ஊட்ட தலைகீழாக நின்றுக் கொண்டிருந்தாள் அதிதி.


தவழ்ந்து அனைத்துப் பொருட்களையும் வாயில் வைத்து ருசி பார்க்கும் தன் மகளின் கையிலிருக்கும் பொருள்களையெல்லாம் தட்டி தட்டி விட்டவள் ஒரு வாய் சாதம் கொடுக்க, அதனை மட்டும் வாங்க மறுத்து தன் உதட்டை இறுக மூடியிருந்தாள் அம்முலு.


அவளை கீழே தோட்டத்திற்கு அழைத்துச் சென்று வாக்கரில் அமர வைத்தவள், பூக்களை காண்பித்து சாதம் ஊட்ட ஆரம்பித்தாள்.


சாதத்தை வாயில் வாங்கிக் கொண்டு வாக்கரில் அமர்ந்தே எம்பி எம்பி பட்டாம் பூச்சியை பிடிக்கத் தன் பிஞ்சி விரல்களை விரிப்பதும் மடக்குவதுமாகயிருந்தாள் அம்முலு.


இந்த எழில் மிகு காட்சியை தன்னறையின் ஜன்னல் வழியே ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் நாச்சியம்மை.


திடீரென ஒரு பட்டாம்பூச்சி அம்முலுவின் கையில் அகப்பட அதனை மகிழ்ச்சியுடன் தன் வாயில் போடப்போனாள் அந்த இரட்டைச் சுழிக்காரி.


நாச்சியம்மை படபடத்த இதயத்துடன் அதனைப் பார்த்திருக்க தன் மகளின் கையிலிருந்த பூச்சியைப் பார்த்த அதிதி, உடனே அவள் விரல்களை பிரித்து பூச்சியை விடுவித்தாள்.


பின், கோபத்துடன் தன் மகளின் முகத்தருகே குனிந்து மிரட்டவும் செய்தாள்.


"ஒரு வாய் பருப்பு சாதம் சாப்பிடனும்னா வாயவே திறக்க மாட்டேங்குற. பூச்சியை மட்டும் வாயில பிடிச்சிப் போடுறியா? அது சரி, வயித்துல இருக்கும் போதே சிக்கன் வேணும்னு அடம்பிடிச்சவளாச்சே நீ. இந்த பூச்சிய விட்டு வைப்பியா? ஏய் நத்தக்குட்டி! இனி இது மாதிரி ஏதாவது வாயில வச்சிப்பாரு. அம்மா அடிப் பின்னியெடுத்துருவேன். என்ன முறைக்கிற? கண்ணு முழிய நோண்டிருவேன்" என மிரட்டினாள்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
ஏற்கனவே தான் வேட்டையாடிய பொருள் பறிபோன கோபத்திலிருந்த அம்முலு இப்போது தன் அன்னை திட்டுவதையும் கண்டு பொறுக்க முடியாமல் வெறிகொண்டு அவள் தலைமுடியை பிய்த்தெறிந்தாள். வலியில் ஆவென அலறினாள் அதிதி.


அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நாச்சியம்மைக்கு அதிதி தன் மகளிடம் படும் பாட்டைப் பார்த்து சந்தோசமாயிருந்தது.


"அலமுமா உன் மருமகளுக்கு நீ தான்டா சரி" எனவும் தனக்குள்ளேயே சபாஷ் போட்டுக் கொண்டார்.


மூன்று மாதக்குழந்தையாக அவளைத் தூக்கியது. தற்போது ஆறரை மாதக் குழந்தையாக கொழுக் மொழுக் என்றிருப்பவளை தூக்க அவரின் கைகள் பரபரத்தன.


ஆனால், அது நடக்காது என்ற வேதனையில் தன் ஜன்னல் கதவுகளை சாற்றியவர் தன் கட்டிலில் சாய்ந்துப் படுத்து தனக்கு எதிரே உள்ள போட்டோவில் முத்துக்கள் சிதற சிரித்துக் கொண்டிருக்கும் தன் அலமுவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.


கண் அயர்ந்தவரின் காதில், "அக்கா! அக்கா! இங்கப்பாரு நாச்சூக்கா" என்னும் வார்த்தைகளே கேட்டுக் கொண்டிருந்தன.


*


பாதாதி கேசம் வரை தங்க ஆபரணங்கள் சூட்டி தேவலோக மங்கையாக மணவறையில் தலைகுனிந்து அமர்ந்திருந்தாள் அலமேலுமங்கை.


ஐயர் மந்திரங்களைக் கூறி திருமாங்கல்யத்தைத் தர, அதனை வாங்கி தன்னருகில் அமர்ந்திருந்த அலமேலுமங்கையின் கழுத்தில் கட்டினான் முத்துப்பாண்டியன்.


சமூக சேவகனான முத்துப்பாண்டியன் தன் திருமணத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் மரக்கன்றுகளையும், விதைகளையும் பரிசாக வழங்கி, இயற்கைக்கு தன்னால் முடிந்த சிறு தொண்டை ஆற்றினான்.


திருமணம் முடிந்தவுடன் தன் தாய் தந்தைக்கு நிகரான தன் அண்ணன் அண்ணியின் காலில் விழுந்து ஆசிர்வாதமும் வாங்கினான்.


காலில் விழுந்தவர்களை தூக்கிய வீரப்பாண்டியன்-நாச்சியம்மை தம்பதியினர் ஆனந்தக்கண்ணீர் வழிய இருவரையும் அணைத்துக் கொண்டனர்.


"சித்தியும் சித்தப்பாவும் இருந்திருந்தா ரொம்ப சந்தோசப்பட்டிருப்பாங்கடா" எனத்தன் கண்களைத் துடைத்துக் கொண்டே வீரப்பாண்டியன் கூற,


"அவங்களுக்கு பதிலாத்தான் சந்தோசப்பட நீயிருக்கியேண்ணா" என மனமாரக் கூறினான் முத்துப்பாண்டியன்.


"நீ ரொம்ப வருஷம் நல்லாயிருக்கனும்டா" என மனமுவந்து கூறிய வீரப்பாண்டியன் தன் கூற்று பொய்த்து, தானும் மண்ணில் புதைந்து அவனும் மண்ணில் புதைந்து போகப்போவதை அப்போது அறியவில்லை.


இரவில் தன்னறைக்கு பால் செம்புடன் வந்த அலமேலுமங்கையை உச்சி முதல் பாதம் வரை அணுவணுவாக ரசித்துப் பார்த்தான் முத்துப்பாண்டியன்.


உள்ளே வந்தவள் கட்டிலின் அருகிலிருந்த மேசையின் மேல் பால் செம்பை நங்கென வைத்துவிட்டு, அசுர வேகத்தில் தன் மணாளனை நெருங்கி படபடத்தாள்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
"இங்கப் பாருங்க மாமா, இந்தக் கல்யாணத்துல உங்களுக்கு விருப்பமில்லைனு எனக்குத் தெரியும். மாமாவும் அக்காவும் உங்களை வற்புறுத்தி தான் இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சிருக்காங்கன்னும் எனக்குத் தெரியும். அப்புறம் எனக்கும் இந்தக் கல்யாணத்துல விருப்பமில்ல தான். அக்காவால தான் சம்மதிச்சேன். அதுவுமில்லாம உங்க ஊரு செங்குளம். அக்காவும் மாமாவும் இருக்கறது எங்க பண்ணைபுரத்துல. என்னால அவங்களை பிரிஞ்சு வரமுடியாது. கொஞ்ச நாள்ல மனசு ஒத்துவரலைனு சொல்லி நாம விவாகரத்து வாங்கிடலாம் மாமா" என்று கண்ணை மூடிக்கொண்டு கடகடவென்று ஒப்பித்துவிட்டு கட்டிலின் மறுபுறம் சென்று படுத்துக் கொண்டாள்.


முத்துப்பாண்டியனோ திகைத்து நின்றான்.


"யம்மா அலமேலுமங்க, ஹே! அதானே உன் பேரு? இன்னைக்கு நமக்கு முதலிரவு. நீ சொன்ன மாதிரியே நம்ம விவாகரத்து பண்ணிக்கலாம். நீ உங்க அக்கா வாலைப் பிடிச்சிக்கிட்டு இங்கயே இரு. ஏன் நீயே எனக்கு நல்லப் பொண்ணாப் பார்த்து கல்யாணம் கூட பண்ணி வை. ஆனா, தாலிகட்டி உன்னை இப்படி ஒரே ரூம்ல வச்சிக்கிட்டு என்னால தள்ளியெல்லாம் இருக்க முடியாது" என சொல்லிக்கொண்டே அவளின் மேல் புரண்டு விழுந்து கட்டியணைத்துக் கொண்டான்.


தன்னை கீழேத் தள்ளி மேலே படுத்திருப்பவனை தன் சக்தியனைத்தையும் திரட்டி புரட்டிப் போட்டவள் மூச்சு வாங்கியபடியே கடுமையாக மிரட்டினாள்.


"மாமா மறுபடியும் இப்படி ஏதாவது பண்ணுனீங்க நான் சத்தமாக் கத்தி ஊரை கூப்பிட்டிருவேன். ஜாக்கிரதை! அப்புறம் உங்களுக்குத் தான் அசிங்கமாகிடும்." என்றாள்.


"கத்துவியா? கத்துடி. எங்கக் கத்துடி பார்க்கலாம்? எங்க அண்ணே கல்யாணத்துல வச்சு என்னை வளைச்சு வளைச்சு சைட் அடிச்சிட்டு, இப்போ கத்துவாளாமே. எங்க வாயைத் திறடி பார்க்கலாம்? ஆமா யாருடி சொன்னா எனக்கிந்த கல்யாணத்துல விருப்பமில்லைனு? ம்?" என்று விசனப்படவும்,


முத்துப்பாண்டியன் தன்னை முன்பே சரியாக கணித்து வைத்திருப்பதைக் கண்டு திகைத்தவள், "ஹான்! நான் பன்னெண்டாங் கிளாஸ் தான் படிச்சிருக்கேன். நீங்க விவசாயப் படிப்புல கிச்சடியெல்லாம் வாங்கியிருக்கீங்க." என்று வருத்தமாக சொன்னாள் அலமேலுமங்கை.


"அய்யோ! ராமா! எனக்கேன் இந்த சோதன?. ஏய்! அது கிச்சடி இல்லடி. பிஹெச்.டி"


"ப்ச், ஏதோ ஒன்னு. என்னைப் பேச விடுங்க"


"சரி பேசு."


"நான் என்ன சொல்லிட்டிருந்தேன்? ஹான், நீங்க எவ்ளோ பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்கீங்க? நான் படிக்காதவ. என்னைப்போய் உங்களுக்குப் பிடிக்குமா?. அதான் கட்டாயக் கல்யாணம்னு நெனச்சேன். தப்பா?"


"ஹே அம்முலு! ஏய் அலமேலு! உன்னைத்தான்டி. என் கண்ணைப் பாருடி. உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும்டி. ஆமா முன்னாடியே. அதுலயும் குறுகுறுனு பார்க்கற இந்த கண்ணுயிருக்கே கண்ணு. ஹப்பா!" என்று அவன் மெச்சுவதைக்கேட்ட அலமேலுமங்கை தான் சாப விமோசனம் அடைந்தவள் போல் பேருவகை கொண்டாள்.


ஆனாலும், "இந்தப் பேச்சுக்கெல்லாம் நான் மயங்க மாட்டேன்" என்று அலட்டிக்கொண்டாள்.


அவளை வலுக்கட்டாயமாக தன்னை நோக்கி திருப்பியவன், "அடியேய் அம்முலு, இது உனக்கு சரி பட்டு வராதுடி. நானும் நல்லவனா இருக்கலாம்னு பார்த்தா, நீ விடமாட்ட போலயிருக்குகே. உனக்கு வன்முறை தான்டி இனி சரி" என அதிரடியாகத் தன் வேலையில் இறங்கினான்.


முதலில் திமிறியவள் பின், அவனின் அணுகுமுறையில் கள்ளுண்ட வண்டானாள்.


அவளைத் திரும்ப திரும்ப படித்தும் அலுக்கவில்லை அவனுக்கு. ஒவ்வொரு முறையும் புதுப்புது அர்த்தத்தை வழங்கியது அவளது தேகப்புத்தகம்.


ஒவ்வொரு முறை கூடும் போதும் இருவரும் சொர்க்கலோகம் சென்று வந்தனர்.


இரவு முழுவதும் அவர்கள் விண்ணுலகம் சென்று வந்த எண்ணிக்கை கணக்கில்லாமல் கூடிக்கொண்டேப் போனது.


தொடரும்...
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
இங்கயும் பேஸ்புக்லயும் லைக், கமெண்ட் செய்ய மறக்கவேண்டாம் ரசகுல்லாஸ்🙂
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
அத்தியாயம் 17



காலையில் கண் விழித்த முத்துப்பாண்டியன் அலமேலுவை அவள் கன்னத்தைத் தட்டி எழுப்பிக் கொண்டிருந்தான்.


"ச்சு போங்க மாமா. நீங்க ரொம்பப் படுத்துறீங்க. கண்டிப்பா காலைல உங்களுக்கு டைவர்ஸ் தான்" என்று திரும்பிப் படுத்துக் கொண்டாள்.


அவளின் மிரட்டலில் வாய்விட்டு சிரித்தவன், "மணி எட்டாகுது" என்று சொல்ல,


அடித்துப் பிடித்து எழுந்தவள், "என்னது மணி எட்டாச்சா? அய்யயோ! நாச்சூக்கா என்னை திட்டப்போறாங்க. எல்லாம் உங்களால தான். நீங்க ரொம்ப மோசம்" என்று மீண்டும் அவனையே குற்றம் சாட்டினாள்.


"சரி, நான் தான் காரணம். அதுக்கு எனக்கு என்ன தண்டனை வேணும்னாலும் கொடு அம்முலு. ஹான்! எனக்கு தண்டனை கொடுக்குற விதமா இன்னைக்கு நைட் ஃபுல்லா நீ என்னைத் தூங்கவிடாத சரியா?" எனவும் சரியென்று புரியாமல் தலையாட்டியவள்,


பின் புரிந்து, "ம் ஆசை தான் போங்க" என்றபடியே குளித்துக் கிளம்பி கீழே தன் தமக்கை நாச்சியம்மையை காண ஓடி விட்டாள்.


சமையலறையினுள்ளே ஆர்ப்பாட்டமாக வந்தவளைக் கண்ட நாச்சியம்மை அவளின் முக ஜொலிஜொலிப்பில் அகம் மகிழ்ந்து, "அலமுமா, இந்தா தம்பிக்கு இந்தப் பாலை கொண்டுபோய் கொடு" என பால் டம்ளரை நீட்ட அதனை வாங்காமல் சமையலறை மேடையில் ஏறி அமர்ந்தாள் அவள்.


அவளின் செயலில் திகைத்தவர், "அலமுமா இனியும் நீ சின்னப் பொண்ணு இல்ல. குடும்பப் பொறுப்பை பார்த்துக்கற கட்டத்துக்கு வந்துட்ட." என சொல்ல,


"போக்கா. கட்டம், வட்டம், முக்கோணம்னுக்கிட்டு" என சலித்தாள் தங்கை.


"செங்குளத்துக்கு போனதுக்கப்பறம் விளையாட்டுத்தனமா இருக்காம, பொறுப்பாயிருந்து நீ தான் குடும்பத்தையும் தம்பியையும் கவனிச்சிக்கணும். தம்பிக்கு ஏகப்பட்ட வசதினு மாமா சொன்னாரு. அதனால எல்லாரும் ரொம்ப ஒட்டி உறவாட வருவாங்க. சூதானமா இருக்கணும் சரியா? சண்டை போட்டாலும் உங்களை சமாதானம் பண்ணி சேர்த்து வைக்க அங்க பெரிய ஆளுக கிடையாது. அதனால பட்டணம் போய் படிச்சிட்டு வந்தவரு ஒரு வார்த்தை தவறி விட்டுட்டாலும் நீ தான் பொறுத்து அனுசரிச்சி போகணும்." என தாயாயிருந்து தன் தங்கைக்கு புத்தி சொன்னாள்.


அதையெல்லாம் கடனேயென்று கேட்டுக் கொண்டிருந்த அலமேலு பேச்சை மாற்றினாள்.


"சரி, சரி, சரி. இன்னும் ரெண்டு நாள் இங்கே தானேக்கா இருக்கப் போறேன்? இப்போ ஆளைவிடு. ஆமா நீ இங்க வந்துட்ட, இந்நேரம் கௌதம் குட்டி எந்திருச்சிருப்பானே?" எனவும்,


"அவனை உங்க மாமா பார்த்துக்கிருவாரு. அவன் பிறந்து ரெண்டு மாசம் கழிச்சி இப்போ தானே ஆர்மிலயிருந்து வந்திருக்காரு. இனி திரும்பி ஆர்மிக்குப் போனா எப்போ வருவாரோ? அதான் அவனை கையில தூக்கி வச்சி இறக்காம பார்த்துக்கிட்டிருக்காரு" என்றதும் அப்படியா என்று ஆச்சரியமாக கேட்டுக்கொண்ட அலமேலுமங்கை பால் டம்ளருடன் தனதறைக்குச் சென்றாள்.


அவள் சென்றவுடன் அடுத்த வாரம் இராணுவத்திற்குச் செல்லவிருக்கும் தன் கணவனுக்காக பால் கலக்கினாள் நாச்சியம்மை. அவன் உயிரை கொஞ்சம் கொஞ்சமாய் குடிக்கவல்ல விஷத்தை சத்து மாவென்று நினைத்து பாலில் கலந்து எடுத்துக்கொண்டு, தன் துணையானவனைத் தேடிச்சென்றாள்.
 
Status
Not open for further replies.

Latest posts

New Threads

Top Bottom