- Messages
- 1,039
- Reaction score
- 1,132
- Points
- 113
பைத்தியம் பிடித்தது போல், "இல்ல, இல்ல, இதை நான் நம்பமாட்டேன் அண்ணி" என அலறிக்கொண்டே, ஹரி கிருஷ்ணனிடம் விரைந்தார்.
"என்னங்க என்னயிது? உங்களைப் பத்தி என்னென்னவோ சொல்றாங்க? இதெல்லாம் உண்மையில்லைனு சொல்லுங்க." என அவரின் தோள்களைப் பிடித்து உலுக்கினார்.
ராதாவின் கைகளை விலக்கிய ஹரி, தன் படிந்து வாரிய தலைமுடியை கலைத்து, தன் நெற்றியில் இருந்த திருநீறையும் அழித்து, "அப்பாடா! எல்லாருக்கும் எல்லா உண்மையும் தெரிஞ்சிருச்சா? அப்போ இனியும் நான் நல்லவனா வேஷம் போட்டு நடிக்கத் தேவையில்ல. நல்லவனாக நடிக்கிறது, அதுவும் இவ்வளவு வருஷமா, அப்பப்பா! ரொம்பவே கஷ்டம்" என வில்லன் தோரணையில் பேசவும்,
என் கணவர் தானா இது? பேசுவது அவர் தானா? என கண்களை அகல விரித்துப் பார்த்தார் ராதா.
அவரை நெருங்கிய நாச்சியம்மை அவரின் சட்டைக்காலரைப் பிடித்து, "ஏன்டா அப்படி பண்ணின? அலமு நம்மக் கூட பிறந்தவடா. அவளைக் கொல்ல உனக்கு எப்படிடா மனசு வந்துச்சு?" என அவரின் இரு கன்னத்திலும் மாறி மாறி அறைந்தார்.
பதிலுக்கு அவரை ஒரே தள்ளில் நிலத்தில் விழச்செய்தார் ஹரி.
"பொய் சொல்லாதக்கா. அவ நம்மக்கூடவா பிறந்தா? நம்ம அம்மா வயித்துலயா பிறந்தா? அனாதை கழுதைக்கா அவ. நம்மப் பாப்பா நம்ம அம்மா சாகும் போதே செத்துப்போச்சுக்கா. அது எனக்கு தெரியாதுனு நெனச்சியா? சின்ன வயசுலயே அப்பாவும் நீயும் அவ பிறப்பைப் பத்தி பேசிக்கிட்டதை நான் ஒட்டுக் கேட்டுட்டேன்கா. நம்ம சொத்துல அந்த அனாதைக் கழுதைக்கு பங்கா? அதான் அவ வாயில விஷத்தை வச்சேன். ஹான்! உன் புருஷனை எதுக்கு கொன்னேன் தெரியுமா? அலமேலு கல்யாணத்துக்கு வந்தப்போ, எப்படியோ நான் மும்பையில ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டதை தெரிஞ்சிக்கிட்டு, ஒழுங்கா ராதாக்கூட வாழப்பாரு, இல்லைனா மச்சானு கூட பார்க்க மாட்டேன், கைகாலை உடைச்சு முடமாக்கி வீட்டில போட்ருவேனு மிரட்டினாரு. கூடவே இங்கயிருந்தே அங்கயிருக்க பிசினஸை எல்லாம் பாருனு அட்வைஸ் பண்ணாரு. அதான் அவர் சாப்ட்டரையும் க்ளோஸ் பண்ண வேண்டியதா போச்சு. அதுவும் மாமாவுக்கு இந்த சத்துமாவை கொடுக்கானு அந்த ஸ்லோவ் பாய்ஸனை, உன் கையாலயே கொடுக்க வச்சேன். நான் எதிர்பார்த்த மாதிரியே காஷ்மீருக்கு போன கொஞ்ச நாள்லயே, சரியா போருக்கு போற நேரத்துல விஷம் வேலை செஞ்சு, எதிரி கையால செத்த மாதிரியே மேல போயிட்டாரு உன் புருஷன். எவ்வளவு நல்ல சாவு பாரு. ஹாஹாஹா" என சாத்தன் போல சிரித்தவனை கண்ணனும் ஜெயகிருஷ்ணனும் அடிக்கப் பாய, தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்த பிஸ்டலை வெளியே எடுத்து காண்பித்தான் அந்த வில்லன்.
அடிக்கச் சென்ற இருவரும் பிஸ்டலைப் பார்த்ததும் சுவிட்ச் போட்டாற் போல் நின்றுவிட்டனர்.
"எவனாவது என்னை நெருங்கி வந்தீங்க? சுட்ருவேன். உங்களுக்கு உண்மை தெரிஞ்சி தான் என்னை இங்க கூப்பிட்டு இருக்கீங்கனு எனக்கு முன்னாடியே தெரியும்டா. என்னை என்ன சொம்பைனு நெனச்சீங்களா? ஏன்டா விக்ரமா, நீ முருகேசனைத் தேடி துபாய் வரைக்கும் போய் அவன் வாக்குமூலத்தை பதிவு செஞ்சிட்டு வந்தியாமே? அவன் இப்ப உயிரோட இல்ல தெரியுமா? ஹாஹாஹா. எனக்கு உன் செல்போன் சிக்னல் கூட காட்டிடக்கூடாதுனு தெளிவா போனை உன் ரூமுக்குள்ளேயே போட்டுட்டு போன. ஆனா, நீ டெல்லிக்கும் துபாய்க்கும் பிளைட் டிக்கெட் புக் பண்ணின மறுநிமிஷமே எனக்கு தகவல் வந்திருச்சி. எனக்கு உலக அளவுல செல்வாக்கு இருக்குனு உனக்கு தெரியாம போனதை விதினு தான் சொல்லணும். காஷ்மீர் போய் மறுபடியும் உன் பெரியப்பாவோட பி.எம் ரிப்போர்ட் வாங்கியிருக்கனு தகவல் வந்துச்சி. வாங்கிட்டியா? நான் என் டேபிள்ல வச்சிருந்த காப்பியை வேற உன் டிடெக்டிவ் திருடிட்டு போயிட்டான். ஆமா ரெண்டு காபி வச்சிக்கிட்டு நீ என்ன செய்யப்போற? அதை என்கிட்ட கொடுத்திருப்பா. ப்ளீஸ்." என்று மிரட்டவும்,
“உன் சாவு என் கையில தான்டா" என ஆக்ரோசத்துடன் வந்தவனைப் பார்த்து பயந்து, வேகமாக ஓடி பிஸ்டலை அதிதியின் நெற்றியில் வைத்து வாயைப் பிளந்து சிரித்தான் அந்த நம்பிக்கைத் துரோகி.
"அவசரப்பட்டுட்டியே விக்ரமா. அங்கேயே நில்லு. ஒரு அடி எடுத்து வச்சாலும் உன் பொண்டாட்டி சொர்க்கத்துக்கு போயிருவா" என மிரட்டவும்,
"வேண்டாம் வேண்டாம்" என பின்னோக்கி நகர்ந்தான் விக்ரமன்.