Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

Status
Not open for further replies.

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
பைத்தியம் பிடித்தது போல், "இல்ல, இல்ல, இதை நான் நம்பமாட்டேன் அண்ணி" என அலறிக்கொண்டே, ஹரி கிருஷ்ணனிடம் விரைந்தார்.


"என்னங்க என்னயிது? உங்களைப் பத்தி என்னென்னவோ சொல்றாங்க? இதெல்லாம் உண்மையில்லைனு சொல்லுங்க." என அவரின் தோள்களைப் பிடித்து உலுக்கினார்.


ராதாவின் கைகளை விலக்கிய ஹரி, தன் படிந்து வாரிய தலைமுடியை கலைத்து, தன் நெற்றியில் இருந்த திருநீறையும் அழித்து, "அப்பாடா! எல்லாருக்கும் எல்லா உண்மையும் தெரிஞ்சிருச்சா? அப்போ இனியும் நான் நல்லவனா வேஷம் போட்டு நடிக்கத் தேவையில்ல. நல்லவனாக நடிக்கிறது, அதுவும் இவ்வளவு வருஷமா, அப்பப்பா! ரொம்பவே கஷ்டம்" என வில்லன் தோரணையில் பேசவும்,


என் கணவர் தானா இது? பேசுவது அவர் தானா? என கண்களை அகல விரித்துப் பார்த்தார் ராதா.


அவரை நெருங்கிய நாச்சியம்மை அவரின் சட்டைக்காலரைப் பிடித்து, "ஏன்டா அப்படி பண்ணின? அலமு நம்மக் கூட பிறந்தவடா. அவளைக் கொல்ல உனக்கு எப்படிடா மனசு வந்துச்சு?" என அவரின் இரு கன்னத்திலும் மாறி மாறி அறைந்தார்.


பதிலுக்கு அவரை ஒரே தள்ளில் நிலத்தில் விழச்செய்தார் ஹரி.


"பொய் சொல்லாதக்கா. அவ நம்மக்கூடவா பிறந்தா? நம்ம அம்மா வயித்துலயா பிறந்தா? அனாதை கழுதைக்கா அவ. நம்மப் பாப்பா நம்ம அம்மா சாகும் போதே செத்துப்போச்சுக்கா. அது எனக்கு தெரியாதுனு நெனச்சியா? சின்ன வயசுலயே அப்பாவும் நீயும் அவ பிறப்பைப் பத்தி பேசிக்கிட்டதை நான் ஒட்டுக் கேட்டுட்டேன்கா. நம்ம சொத்துல அந்த அனாதைக் கழுதைக்கு பங்கா?‌‌ அதான் அவ வாயில விஷத்தை வச்சேன். ஹான்! உன் புருஷனை எதுக்கு கொன்னேன் தெரியுமா? அலமேலு கல்யாணத்துக்கு வந்தப்போ, எப்படியோ நான் மும்பையில ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டதை தெரிஞ்சிக்கிட்டு, ஒழுங்கா ராதாக்கூட வாழப்பாரு, இல்லைனா மச்சானு கூட பார்க்க மாட்டேன், கைகாலை உடைச்சு முடமாக்கி வீட்டில போட்ருவேனு மிரட்டினாரு. கூடவே இங்கயிருந்தே அங்கயிருக்க பிசினஸை எல்லாம் பாருனு அட்வைஸ் பண்ணாரு. அதான் அவர் சாப்ட்டரையும் க்ளோஸ் பண்ண வேண்டியதா போச்சு. அதுவும் மாமாவுக்கு இந்த சத்துமாவை கொடுக்கானு அந்த ஸ்லோவ் பாய்ஸனை, உன் கையாலயே கொடுக்க வச்சேன். நான் எதிர்பார்த்த மாதிரியே காஷ்மீருக்கு போன கொஞ்ச நாள்லயே, சரியா போருக்கு போற நேரத்துல விஷம் வேலை செஞ்சு, எதிரி கையால செத்த மாதிரியே மேல போயிட்டாரு உன் புருஷன். எவ்வளவு நல்ல சாவு பாரு. ஹாஹாஹா" என சாத்தன் போல சிரித்தவனை கண்ணனும் ஜெயகிருஷ்ணனும் அடிக்கப் பாய, தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்த பிஸ்டலை வெளியே எடுத்து காண்பித்தான் அந்த வில்லன்.


அடிக்கச் சென்ற இருவரும் பிஸ்டலைப் பார்த்ததும் சுவிட்ச் போட்டாற் போல் நின்றுவிட்டனர்.


"எவனாவது என்னை நெருங்கி வந்தீங்க? சுட்ருவேன்.‌ உங்களுக்கு உண்மை தெரிஞ்சி தான் என்னை இங்க கூப்பிட்டு இருக்கீங்கனு எனக்கு முன்னாடியே தெரியும்டா. என்னை என்ன சொம்பைனு நெனச்சீங்களா? ஏன்டா விக்ரமா, நீ முருகேசனைத் தேடி துபாய் வரைக்கும் போய் அவன் வாக்குமூலத்தை பதிவு செஞ்சிட்டு வந்தியாமே? அவன் இப்ப உயிரோட இல்ல தெரியுமா? ஹாஹாஹா. எனக்கு உன் செல்போன் சிக்னல் கூட காட்டிடக்கூடாதுனு தெளிவா போனை உன் ரூமுக்குள்ளேயே போட்டுட்டு போன. ஆனா, நீ டெல்லிக்கும் துபாய்க்கும் பிளைட் டிக்கெட் புக் பண்ணின மறுநிமிஷமே எனக்கு தகவல் வந்திருச்சி. எனக்கு உலக அளவுல செல்வாக்கு இருக்குனு உனக்கு தெரியாம போனதை விதினு தான் சொல்லணும். காஷ்மீர் போய் மறுபடியும் உன் பெரியப்பாவோட பி.எம் ரிப்போர்ட் வாங்கியிருக்கனு தகவல் வந்துச்சி. வாங்கிட்டியா? நான் என் டேபிள்ல வச்சிருந்த காப்பியை வேற உன் டிடெக்டிவ் திருடிட்டு போயிட்டான். ஆமா ரெண்டு காபி வச்சிக்கிட்டு நீ என்ன செய்யப்போற? அதை என்கிட்ட கொடுத்திருப்பா. ப்ளீஸ்." என்று மிரட்டவும்,


“உன் சாவு என் கையில தான்டா" என ஆக்ரோசத்துடன் வந்தவனைப் பார்த்து பயந்து, வேகமாக ஓடி பிஸ்டலை அதிதியின் நெற்றியில் வைத்து வாயைப் பிளந்து சிரித்தான் அந்த நம்பிக்கைத் துரோகி.


"அவசரப்பட்டுட்டியே விக்ரமா. அங்கேயே நில்லு. ஒரு அடி எடுத்து வச்சாலும் உன் பொண்டாட்டி சொர்க்கத்துக்கு போயிருவா" என மிரட்டவும்,


"வேண்டாம் வேண்டாம்" என பின்னோக்கி நகர்ந்தான் விக்ரமன்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
"உங்க அப்பனை எதுக்கு கொன்னேன்னு தெரிஞ்சுக்காமயே என்னை கொல்லப்போறியா விக்ரமா? உன் அப்பனை மாதிரியே ரொம்ப அவசரக்காரனா இருக்கியே நீ. உங்கப்பன் கண்டுபிடிச்ச பயிர் வகைக்கு உனக்கு அரசாங்கம் பணம் கொடுக்கிறதா சொல்லி, மாசா மாசம் உன் பேங்க் அக்கவுண்ட்ல பணம் போட்டுட்டு வர்றேன். ஆனா, நீ என்னடான்னா கொஞ்சம் கூட நன்றியுணர்வே இல்லாம என்னையே கொல்லப் பார்க்கற. நீ என் சின்னப் பொண்ணு ராகினிய ஷாப்பிங் மால்ல வச்சி பார்த்துட்டதை, அவ எடுத்திருந்த செல்பியை வச்சே நானும் பார்த்துட்டேன். அப்பவே உன்னை போடலாம்னு தான் நெனச்சேன். ஆனா நீ எவ்வளவு தூரம் போறன்னு பார்க்கலாம்னு தான் இவ்வளவு நாள் விட்டு வச்சேன். மொத அலமேலுவை மட்டும் கொல்றது தான் என் பிளான். ஆனா வெளிநாட்டுக்காரனுக கோடிக்கணக்குல பணம் தரேனு சொன்னானுகளா? அதான் கொலை பண்றோம்னு முடிவாகிடுச்சு அது ஒன்னாயிருந்தா என்ன? ரெண்டாயிருந்தா என்னன்னு உங்கப்பனையும் சேர்த்து முடிச்சிட்டேன். அவனோட ஆராய்ச்சிக் குறிப்பை எடுக்கப்போனா அலமேலுங்கிற அந்த மனித குல மாணிக்கம், அண்ணா அண்ணா இதெல்லாம் தப்புண்ணா. நீங்க திருந்த உங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கிறேண்ணானு என்கிட்டயே சொல்றா. கூடவே நீங்க இன்னொரு தடவை இப்படி பண்ணினா நான் எல்லார்கிட்டயும் சொல்லிருவேனும் மிரட்டுறா. எவ்வளவு தைரியம்? அதான் அடுத்த தடவை நீயே இருக்கமாட்டேனு ரெண்டு பேரையும் ஜோடியா சொர்க்கத்துக்கு அனுப்பி வச்சிட்டேன். எவ்ளோ பெரிய கொடுப்பினை இல்ல? உங்கப்பன் செத்ததுக்கப்புறம் அந்தக் குறிப்பை வெளிநாட்டுக்காரனுகக்கிட்டயும் வித்துட்டேன். செத்தும் கொடுத்தான் சீதக்காதிங்கற மாதிரி அதை வச்சி செம துட்டு. அதுல வந்த பணத்துல பத்து சதவீதத்தை தான், உனக்கு இப்போ வரைக்கும் அரசாங்கம் அனுப்புறதா சொல்லி அனுப்பிக்கிட்டு இருக்கேன். ஹாஹாஹா! நல்லா ஏமாந்துட்டல்ல?” என்று கொக்கரித்தவன், அதிதியிடம் திரும்பி வம்பிழுத்தான்.


“யம்மா அதிதி, இதுல உங்கப்பன் எப்படி மாட்டினானு தெரியாதில்ல? சொல்றேன் கேளு. இதுங்க நான் கொடுத்த விஷத்தை சாப்பிட்டு செத்துப்போய் லாரியில போய் மோதிருச்சிங்க. பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டும் அப்படி தான் சொல்லுது. ஆனா, அந்தக் கேஸை விசாரிச்ச போலீசுக்கும், டாக்டருக்கும் வலுவா ரெண்டு நோட்டுக் கட்டைத் தூக்கிப்போட்டேனா, அதை கவ்விக்கிட்டு நூல்ல மாட்டின பொம்மை மாதிரி என் இஷ்டத்துக்கு ஆடினானுங்க. உங்கப்பனும் என் வேலையை சுலபமாக்க தண்டனையை ஏத்துக்கிட்டான். ஹாஹாஹா" என்று வன்மத்தை கக்கினான்.


பிறகு, மறுபக்கம் திரும்பி, "ஏம்மா ஸ்ருதி, உன் தங்கச்சி மோனிகா அன்னைக்கு, எது நடந்தாலும் என்கிட்ட சொல்லு. அப்பறம் பாரு நான் வைக்கிற கச்சேரியனு உன்கிட்ட பந்தாவா சொன்னா. நானும் கௌதமன் அதிதி பின்னாடி அலையுறானு லட்டு மாதிரி ஒரு விஷயத்தை அவக்கிட்ட சொன்னேன். ஆனா அவ இப்படி எல்லாத்தையும் கோட்டை விட்டுட்டு கனடா ஓடிப்போய்ட்டாளேம்மா?" என்று இகழ்ச்சியாய் உதட்டை வளைக்கவும்,


இவ்வளவு நேரம் அனைவருடனும் சேர்ந்து அதிர்ச்சியுடன் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஸ்ருதி, ஹரி கடைசியில் தன்னிடம் கேட்ட கேள்வியில், 'அடப்பாவி! என் வாழ்க்கையில ஏன்டா மண்ணள்ளி போடுற? அய்யோ! என் புருஷனோட பார்வையே சரியில்லையே’ என மனதுக்குள் புலம்பிக் கொண்டிருந்தாள்.


"சரி மோனிகாக்கிட்ட சொன்னது தான் வேலைக்காகல. எங்க அக்கா போட்ட பிளான்லயாவது இந்த அதிதி வீட்டை விட்டு போயிடுவா, அந்த சோகத்துல விக்ரமன் செத்துட்டானு சொல்லிடலாம்னு இவனுக்கு விஷத்தை வைக்க காத்திருந்தா, இந்த மகராசி பெவிகால் போட்டு ஒட்டின மாதிரி வீட்டைவிட்டு அசையவே மாட்டேங்கறா. ம்ஹீம் ஒண்ணும் சரியா அமையல. என்ன ராதாம்மா, எல்லாம் பார்த்து அதிர்ச்சியா இருக்கா? நீ ஏன் பணக்காரியா இல்லாமப் போன? அதான் பணம் கிடைக்குமேனு நம்ம மும்பை போன ரெண்டாவது மாசத்துலயே இன்னொரு பொண்ணை கல்யாணம் கட்டிக்கிட்டேன். ஆனா, அவளுக்கு பத்து வருஷம் கழிச்சி தான் குழந்தைப் பிறந்துச்சி. அதுலயும் ரெண்டாவது பொண்ணு நம்ம மாயா மாதிரியே. சூப்பர்ல? ம்! என்ன எல்லாருக்கும் எல்லா டவுட்டும் கிளியர் ஆகிடுச்சா? என்ன எல்லாம் இப்படி பேயறைஞ்ச மாதிரி நிற்கறீங்க? என்ன என்னை போலீஸ்ல மாட்டிவிடப் போறீங்களா? போங்க, இப்பவேப் போய் போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணுங்க. ஆனா, நான் உள்ள போன மறு நிமிஷமே என்னை வெளில எடுக்க ஆள் இருக்கு. உங்கக்கிட்ட என்ன ஆதாரம் இருந்தாலும் என்னை ஒண்ணும் செய்ய முடியாது. ஹாஹாஹா" என அவ்விடமே அதிர சிரித்த அரக்கன், திடீரென தொண்டையைப் பிடித்துக்கொண்டு வாயில் ரத்தம் வடிய முட்டிப்போட்டான்.


அதைப் பார்த்து இப்போது சிரிப்பது நாச்சியம்மையின் முறையானது.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
"என்னென்னவோ பேசுனியேடா? இப்போ பேசுடா? எல்லாருக்கும் நீ விஷம் வச்ச. ஆனா, உனக்கு நான் விஷம் வச்சிட்டேன் பார்த்தியா?. கடவுள் இருக்கான்டா. எல்லாம் தெரிஞ்சும் இங்க ஓடி வந்த நீ, நான் கொடுத்த காப்பியை குடிச்சிருக்கக்கூடாது. ஏன் அதை குடிச்ச? என் மேல நீ வச்ச நம்பிக்கையில தானே? ஒருத்தர் நமக்கு நம்பிக்கை துரோகம் செஞ்சா எப்படியிருக்கும்னு இப்போ தெரியுதா ஹரி? அக்கா உன்னை இப்படி வளர்க்கலையேடா. எப்படிடா பணத்துக்காக மனுச உசுரையே குடிக்கற அளவுக்குப் பணப்பேய் ஆன? பணத்துக்காகத் தான் எல்லாம் பண்ணினேனு சொன்னியேடா? இப்போ எந்தப் பணம் வந்து உன்னை காப்பாத்துதுனு நானும் பார்க்கறேன்டா." என்று சவால்விடவும்,


ரத்த வாந்தி எடுத்தபடியே, "அக்.. அக்.. கா.." என்றான் ஹரி.


அவன் பார்வையில் என்னைக் காப்பாற்று என்ற கெஞ்சல் இருந்தது.


அவர் அசையவில்லை.


"தெய்வப் பிறவிடா நம்ம அலமு. அவ நம்ம வீட்டுக்கு வந்த குட்டி தேவதைடா. சின்ன வயசுல அண்ணா அண்ணானு உன் காலையே தானடா சுத்தி வருவா. அவளை எப்படிடா உனக்குக் கொல்ல மனசு வந்தது? எல்லாரையும் கொன்னுட்டேனு சத்தம் போட்டு சிரிச்சியேடா. எங்க இப்போ சிரிடா பார்ப்போம்?" என்ற நாச்சியம்மையின் கண்களில் கண்ணீர் பெருகியது.


தன் துப்பாக்கியை நாச்சியம்மையை நோக்கி நீட்டியவன், அவரை சுடப் பார்க்க, காவல்துறையினரின் துப்பாக்கியிலிருந்து வெளிவந்த தோட்டாக்கள் அவன் உடலை துளைத்தன.


தன் குழந்தையின் முகத்தை திருப்பி, கண்களை இறுக மூடிக்கொண்டாள் அதிதி.


ஹரியின் உடல் கீழே சரிந்ததும் அந்த வீட்டிலிருந்த அனைவரையும் வெளியேறச் சொன்ன காவல்துறையினர், "யாரும்மா இவன் ஒரு கொலையாளினு எங்களுக்கு போன் பண்ணினது?" என்று தங்கள் விசாரணையை துவங்கினர்.


"நான் தான் சார்" என்று முன் வந்தார் நாச்சியம்மை.


காவல்துறையினரிடம் ஹரி செய்த அனைத்துக் குற்றங்களையும் கூறிய நாச்சியம்மை, "அவன் ஒரு சைக்கோ சார். தானே விஷத்தை எடுத்து குடிச்சிட்டு, எங்களையும் மிரட்டி சுட வந்தான். அப்போ தான் நீங்க கரெக்டா வந்து எங்களை காப்பாத்துனீங்க சார்" எனவும்,


அவரைத் தொடர்ந்து கௌதமனும், தன் போனில் ஹரி பேசியதை மட்டும், தான் ரெகார்ட் செய்து வைத்திருந்ததை இயக்கிக் காட்டினான்.


விக்ரமனும் தன்னிடமிருந்த சாட்சியங்களை அவர்களிடம் ஒப்படைத்தான்.


ஹரியை குற்றவாளி என முடிவு செய்த காவல் துறையினர், அனைத்து தகவல்களையும் சேகரித்துக் கொண்டு, அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகினர்.


ஹரியின் இறப்பு செய்தி மும்பையிலிருக்கும் அவனின் இன்னொரு குடும்பத்துக்கும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் அவனின் உடலை வாங்க மறுத்துவிட்டனர்.


ஜெயகிருஷ்ணன் ஸ்ருதியை அடித்து அவளின் வீட்டிற்கு அனுப்ப முற்பட, "இனி எதுவும் இப்படி தப்பா செய்ய மாட்டேங்க. என்னை மன்னிச்சிடுங்க. என்னை மன்னிச்சிடு அதிதி. என்னை மன்னிச்சிடு விக்ரமா." என அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டாள் ஸ்ருதி.


ஆம், அவள் மறுபடியும் அந்த ஆனந்தக்கூட்டில் இணைய ஆசைப்பட்டாள்.



தொடரும்...
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
இறுதி அத்தியாயம்



அனைத்தையும் முறைப்படி முடித்துவிட்டு, தேவையான உடைகளை மட்டும் எடுத்துக் கொண்டவர்கள், பண்ணைபுரத்தை நோக்கி பயணமாகினர்.


விக்ரமன் காரினை ஓட்ட பின்சீட்டில் நாச்சியம்மையும், பேயடித்தது போல் அரண்ட முகத்துடன் அம்முலுவை மடியில் போட்டுத் தட்டிக்கொண்டு அதிதியும் அமர்ந்திருந்தாள்.


வெகு நேரத்திற்கு காரில் அமைதி மட்டுமே நிலவியது.


முதலில் பேசிய நாச்சியம்மை, "விக்ரமா என்னை மன்னிச்சிடுப்பா. அதிதி நீயும் என்னை மன்னிச்சிடும்மா. உங்க ரெண்டு பேருக்குள்ளேயும் நடந்த எல்லா பிரச்சனைக்கும் நான் தான் காரணம். என் அலமு மேல நான் வச்ச கண்மூடித்தனமான பாசம் தான் என் கண்ணை மறைச்சிடுச்சி. அதான் புத்திக்கெட்டு ஏதேதோ செஞ்சிட்டேன். உன்னால முடிஞ்சா என்னை மன்னிச்சிடும்மா அதிதி. இனி உனக்கு நம்ம வீட்டுல எந்த குறையும் இருக்காதும்மா. உன்னை என் பொண்ணு மாதிரி நான் பார்த்துக்கறேன்" என்று அவளின் கையை அழுத்தி விடுவித்தார்.


"என்னங்கத்த? பெரியவங்க நீங்க போய் எங்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிட்டு. இந்த உலகத்துல இருக்கற எல்லாருமே நல்லவங்க தான். ஆனா, சந்தர்ப்ப சூழ்நிலையால தப்பானவங்களாகிடுறாங்க. நீங்களும் அப்படி தான். விடுங்கத்த, நடந்ததை மறந்திடலாம்" என்று அதிதியின் வாய் சொன்னாலும், அவளிடம் ஒரு ஒதுக்கம் காணப்பட்டது.


இவ்வளவு நாட்கள் தன்னை விரோதியாய் நடத்தியவரிடம் அவளால் இயல்பாக பழக முடியவில்லை.


முன்னால் அமர்ந்திருந்த விக்ரமன் அவளின் அந்த ஒட்டாத தன்மையை கவனித்துவிட்டு, நாச்சியம்மையை திசை திருப்பும் விதமாய், "உங்களுக்கு எப்படி நாச்சூம்மா எல்லா விஷயமும் தெரிஞ்சது?" என்று கேட்டான்.


"நீ சொல்லாம கொல்லாம வெளிநாடு போனதும் நான் உன் ஆபீஸுக்குப் போனேன் விக்ரமா. அப்போ தான் ஜெயில்லயிருந்து அதிதியோட அப்பா உனக்கு எழுதியிருந்த கடிதத்தைப் பார்த்தேன். அதுல முருகேசன் ஓட்டின லாரி மோதி அலமு சாகலைனும், வேற யாரோ செஞ்ச சதியால தான் அவளும் முத்துவும் செத்துட்டாங்கனும் அவர் எழுதியிருந்ததைப் பார்த்ததும் எனக்கு திக்குன்னுச்சி. கூடவே உன் டேபிளை சோதிச்சுப் பார்த்ததுல, நம்ம மாயா மாதிரியே இருக்கிற ஒரு சின்னப் பொண்ணோட போட்டோவும், அந்தத் துரோகியோட ரெண்டாம் கல்யாணப் போட்டோவும் கிடைச்சது. அதிதி, அந்த லெட்டர்ல இன்னும் உன் அப்பா என்ன எழுதியிருந்தாரு தெரியுமா? என்னை கஷ்டப்படுத்த என் மகளை தண்டிச்சிடாதீங்க, அவளுக்கு எதுவுமே தெரியாது. நான் ஜெயிலுக்குப் போறதுக்கு முன்னாடி என் அப்பாக்கிட்ட உங்க வாயால என்னைப் பத்தின உண்மைகள் எதையும் என் பொண்ணுக்கிட்ட சொல்லக்கூடாதுனு சத்தியம் வாங்கிட்டு தான் போனேன். நான் சொல்றதெல்லாம் நிஜம்னு உன் அம்மா கீதா மேல சத்தியம் பண்ணியிருந்தாரு. அப்பறம் விக்ரமா உன் டைரியை புரட்டிப் பார்த்தப்போ தான் எனக்கு முழு உண்மையும் புரிஞ்சது. அப்படியே உன் டிடெக்டிவுக்கும் போன் போட்டு கேட்டேன். அவர் கொடுத்த தகவல்ல தான் எல்லா சந்தேகமும் எனக்கு தெளிவாச்சி. உடனே கௌதமனுக்கு போன் போட்டு ஹரி பத்தின விஷயத்தை விசாரிக்கச் சொன்னேன். அவனும் அங்க மும்பைல விசாரிச்சிப் பார்த்து எல்லாம் உண்மை தானு சொன்னான். உன் செகரெட்டரி அந்த குள்ளவாத்து இருக்காளே? அவ நீ ஒரு வாரத்துல திரும்பி வந்திடுறது மாதிரி தான் டிக்கெட் போட்டிருக்கனு சொன்னா. அதான் அந்தத் துரோகியை இன்னைக்கு வரச்சொல்லி போன் பண்ணினேன். கௌதமன் நேத்தே இங்க வந்துட்டான். அவன் கொடுத்த ஐடியாவுல தான் காப்பியில விஷத்தை கலந்தேன்." என்றவரின் கண்களிலிருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்தது.


அடிக்கடி துடைத்துக்கொண்டார்.


"சரி சரி விடுங்க நாச்சூம்மா" என்று விக்ரமன் கூறியதும் இயல்பு நிலைக்கு திரும்பியவர், அவனது காலை வாரினார்.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
"நீ உள்ள வந்ததைப் பார்த்ததும் நாங்க போட்டத் திட்டத்தைப் பத்தி உன்கிட்ட சொல்லத்தான் உன்னைக் கூப்பிட்டேன். ஆனா, நீ என்னவோ உன் பொண்டாட்டிய பார்க்கற அவசரத்துல என்னை கவனிக்கவேயில்ல" என்று குறைப்பட்டுக்கொள்ள, அசடு வழிந்தவன் நாச்சியம்மையுடன் இணைந்து வழிசலாக சிரித்தான்.


ஒரு வழியாக அனைவரும் பண்ணைபுரத்தை வந்தடைந்தனர்.


தான் பிறந்து வளர்ந்த வீட்டில் தன் காலடியை எடுத்து வைத்த நாச்சியம்மைக்கு பழைய ஞாபகங்கள் அனைத்தும் அலை அலையாக மோதியது.


ஆளாளுக்கு ஒவ்வொரு அறைகளில் தஞ்சம் புகுந்து கொள்ள, நாச்சியம்மை ராதாவுக்கு ஆறுதல் கூறும் விதமாய் அவரை தன்னறைக்கு அழைத்துச் சென்றுவிட்டார்.


சிறுவயதில் தன் அன்னை தந்தையுடன் தங்கியிருந்த அறைக்குள் தன் மனைவி மகளுடன் புகுந்தான் விக்ரமன்.


தூங்கிய மகளை கட்டிலில் கிடத்திய அதிதி, அருகில் குத்துக்காலிட்டு அமர்ந்து, முழங்காலில் முகத்தை புதைத்துக்கொள்ள, அவளின் காலருகில் அமர்ந்த விக்ரமன் சாரிடி என அவளின் காலைத் தொட்டான்.


அவள் தன் கால்களை உள்ளே இழுத்துக்கொள்ள மீண்டும் அவள் காலைப் பிடித்தான்.


கோபத்தில் அவனை தன் காலால் உதைத்தாள் அதிதி.


அதில் சிரித்துக்கொண்டே மறுபடியும் அசராமல் காலை பிடிக்க வந்தவனின் நெஞ்சில் உதைத்து தள்ளிவிட, "ஹேய்! என்னடி உன்னை நீயே உதைச்சுக்கற?" எனத் தன் இதயத்தை சுட்டிக் காட்டினான் விக்ரமன்.


அதற்கு விடையளிக்கும் விதமாய் முறைத்தவள், மறுபுறம் திரும்பிக் கொண்டாள்.


முகம் திருப்பியவளை நெருங்கி, "சாரிடி அம்முக்குட்டி" என்றவன் மீண்டும் கெஞ்ச ஆரம்பிக்கவும், அதற்கு மேலும் முடியாமல் அவன் கன்னத்திலும் நெஞ்சிலும் அறைந்து பின், அவன் மார்பிலேயே தஞ்சம் புகுந்தாள் அதிதி.


அவளை அணைத்துக் கொண்டவனும், "சாரிடி அம்முக்குட்டி. எப்போப் பார்த்தாலும் உன்னை தண்டிக்கறதே எனக்கு வேலையாகிடுச்சி. சாரிடி. நீ என் காதலை சந்தேகப்பட்டதை என்னால தாங்க முடியலடி. நாச்சூம்மா சொல்லி உன்னை கொல்ற அளவுக்கு என்னை என்ன சுயபுத்தி இல்லாதவனு நெனச்சிட்டியா? தாலி கட்டும் போது இனி நான் தான் உனக்கு எல்லாம்னு நீ எப்படி முடிவு பண்ணுனியோ, அதே மாதிரி தான்டி நானும் இனி என் வாழ்க்கை முழுமைக்கும் நீ தான் எனக்குனு மனசுல பதிய வச்சுக்கிட்டேன். நொடிக்கொரு முறை உன்னை 'டி' போட்டு கூப்பிடுறேன்னா, அது உன் மேல உள்ள உரிமையில தான்டி. ப்ளீஸ் புரிஞ்சிக்கோ. யார் யாரையோ தண்டிக்க உனக்கு தண்டனை கொடுத்துட்டேன்ல? என்னை நெனச்சா எனக்கே கேவலமா இருக்கு. இன்னைக்கு நாச்சூம்மா மட்டும் வரலைனா, இந்நேரம் என்னால நெனச்சுக்கூட பார்க்க முடியலடி. சாரிடி." என அவளை தன் கைக்குள் இறுக்கிக் கொண்டே போக, அவளுக்கும் அந்த இறுகிய அணைப்பு தேவைப்பட்டதோ அமைதியாய் அவன் அணைப்புக்குள் கட்டுண்டிருந்தாள்.


பின், தன் தோளில் உணர்ந்த அவனின் கண்ணீரைக் கண்டு பதறி அவனிலிருந்து விலகினாள்.


"விடுங்க மாமூ. எல்லாம் நம்ம நேரம்னு நெனச்சிக்க வேண்டியது தான். கௌதமன் வந்து உண்மைய சொல்லலைனா இன்னும் நான் உங்களை தப்பாத்தான் நெனச்சிட்டு இருந்திருப்பேன். என்னால உங்களை புரிஞ்சிக்க முடியுது மாமூ. உங்க இடத்துல நான் இருந்தாலும் இப்படித்தான் அத்தையோட திட்டத்துக்கு ஒத்துழைச்சிருப்பேன். நாமெல்லாம் சூழ்நிலை கைதிகள் தானே? நான் கூட என் தாத்தா பாட்டி மேல வச்ச பாசத்துல லூசு மாதிரி யோசிக்காம கொள்ளாம உங்களை கல்யாணம் பண்ணிக்கலையா?" என்றவளின் கடைசி வாக்கியத்தில்,


“ஏய்!” என்று அதட்டியவனின் நெஞ்சிலேயே நாணமாய் மீண்டும் அடைக்கலாமானாள் அதிதி.
 
Status
Not open for further replies.

Latest posts

New Threads

Top Bottom