Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


GN NOVEL இடைவெளியிலில் இடறிடுமோ என் நேசம் - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
664
Reaction score
819
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited by a moderator:
Messages
31
Reaction score
26
Points
18
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

நன்றி 😍😍😍
 
Messages
31
Reaction score
26
Points
18
வணக்கம் நட்பூக்களே🌷🌷🌷🌷

நான் ஆதி சக்தி

இதோ நானும் இத்தளத்தில் என் எண்ணங்களை

'இடறிடுமோ இடைவெளியில் என் நேசம்'

என்னும் தலைப்பில் எழுத்துகளாய் மாற்றி உங்களுடன் தனியானதொரு உலகில் பயணிக்கும் விருப்பங்கொண்டு வந்திருக்கிறேன். என்னோடு பயணிக்க உங்களை அன்போடு அழைக்கிறேன். உங்களை இந்த உலகம் எவ்வளவு கவர்ந்தது என்னோடு பகிருங்கள் அன்பூக்களே 😍😍😍😍
 
Last edited:
Messages
31
Reaction score
26
Points
18
அத்தியாயம் 1

ஏண்டா விடிகிறது என சூரியனையே தன் சொற்களால் வறுத்து கொண்டிருக்க ,இவனோ சூரியனை எழுப்பும் வேலையை செவ்வனே செய்து கொண்டிருந்தான்.


தன் அலரத்தின் சத்தத்தில் அதன் தலையில் வலிக்காமல் அழுத்திவிட்டு ,அதற்கொரு நன்றி உரைத்தவன், மணியை பார்க்க அதுவே 4.30 என காட்டியது. என்னடா இவன் அலர சத்தத்துக்கு அலறவங்க மத்தியில் அதற்கு விட்டா அபிஷேகம் ஆராதனை செய்யாறானேனு பார்க்கறீங்களா. நீங்க வேற அவன கோயில் கட்டி கும்பாபிஷேகம் பண்ண சொன்னக்கூட பண்ணுவாங்க.

இந்த அளவுக்கு அவன் அதை கொஞ்சற மாதிரி என்ன பண்ணுச்சுனு யோசிக்கறீங்களா,நம்மள மாதிரி இருக்கறவங்க கிட்ட சொன்னகூட மறந்துட்டு தூங்கிட்டு அசால்ட்டா கடந்திடுவோம்,ஆனா தினமும் நிமிடம் கூட அதிமாகம அவன எழுப்பிவிடற வேலையை அதை செய்யறப்ப,கொஞ்சமாவது கொஞ்சனும்ல, அச்சோ எழுப்பி விடறதுக்கு தான் இத்தனை அலப்பறையா முறைக்கறது தெரியுதுங்க, ஆனாலும் நமக்கு சாதராணம்னு கடந்து போற விஷயமெல்லாம் ,மத்தவங்களுக்கு சாதரணமான விஷயமா இருக்கனும்னு இல்லயில்ல,சரி அப்படி என்ன தான் பெரிய விஷயம் அவன் பின்னாடியே போய் நாமும் தெரிஞ்சுப்போம்.



கண் விழித்தவன் எழுந்து தன் தலையணை அடியில் வைத்திருந்த படத்தை எடுத்து பார்த்தவன் கை விரல்கள், மெதுவாக அந்த முகத்தை வருடி கொடுத்து அன்பு பரிசாய் அச்சாரம் ஒன்று இட்டான். இன்னும் கொஞ்சம் காலம் தான் என் கண்ணம்மா என அந்த நிழற்படத்தின் நிஜமாய் நினைத்து அவளிடம் உறையாடியவன்,
இருந்த இடத்தினிலே அதனை வைத்துவிட்டு ,அவசரமாக எழுந்து தனது காலை கடன்களை முடித்து குளித்து தனது தலையை துவட்டியவாறு அவசர அவசரமாக வெளியே வந்தவன், நிலைகண்ணாடி முன் நின்று தலையை வாரி, நிலைக்காண்ணாடியில் தெரிந்த உருவத்திடம் எப்படி இருக்கேன் என கேட்டவன், சூப்பர்ல்ல,அச்சோ,அதெப்படி கண்ணம்மா உங்கண்ணுக்கு மட்டும் நான் எதை போட்டாலும் அழகா தெரியறேன் என்று தானே சபாஷ் போட்டுக்கொண்டு, தனக்கு தானே கிள்ளி முத்தா வைத்தவன், நேரத்தை பார்த்துக்கொண்டே உடையணிந்து தனக்கான காபியை போட்டுக்கொண்டு வரவும், அவனது போனின் இசை எழுப்பவும் சரியாக இருந்தது.


தனது நேரந்தவறாமைக்கு தனக்கு தானே மெச்சி கொண்டவன், அப்பாட என்று ஆசுவாசம் கொள்ள செய்தான். எப்படியே தப்பித்தோம்...இல்லாவிட்டால் இந்த குல்ஃபிகிட்ட யாரல வாங்கி கட்டிகொள்ள முடியும்.


அப்பப்பா கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுவா...ஆரம்பிச்சா இடையில் நிறுத்துவும் மாட்டா...என்னை பேசவும் விடமாட்டா...என இதமாய் சலித்தவன் சலிப்பில் எத்தனை எத்தனை அழகன் உணர்வுகள்,ஒரு போலியான சலிப்பில் தன் உணர்வுகள் மொத்தத்தையும் இவ்வளவு அழகாக காட்டிட முடியுமா,அந்த முகத்தில் தோன்றிய பாவனைகளை இன்னதென உரைக்க இயலுமா என்ன...சலிப்பான ஒருவன் முகத்தை பார்த்து சலிப்பு தட்டாமல் இத்தனை இரசிக்க இயலுமா,நிச்சயம் முடியுமென்றது அந்த முகம். நாம் அவன் உணர்வுகளை அவதானிக்க,அவனோ அந்த உணர்வுகளுக்கு சொந்தமானவர்களுடன் தனது இதயத்தை ஆக்கிரமித்தவர்களிடம் எண்ணத்திற்கு வடிவம் கொடுத்து அந்த உலகத்தில் நுழைவாயிலை நெருங்கி விட்டிருந்தான் .


போனில் பச்சை பொத்தானை நிரண்டி தன் காதினில் வைக்க ...அந்த பக்கமிருந்த வந்த "ப்பா….ப்பா ச்ச்ச்...ச்ச்ச்", என்ற முத்தமழையில் …மெதுமெதுவாக அதன் தாக்கத்தினை அந்த உணர்வினை மனதினுள் கண்களை முடி மெல்ல மெல்ல வாங்கி,அதனுள் மூழ்கி...சுகமாய் நனைந்தவனது உள்ளம் இப்பொழுதே அந்த பிஞ்சு கன்னத்தை ஈரமுத்தத்தால் அர்ச்சித்து அந்த கற்கண்டின் எச்சில் அமிழ்த்தத்தில் நனைய உள்ளம் ஏங்கி தவித்தது. இது எந்த மாதிரி வாழ்க்கை….யாருக்காக ஊரு விட்டு ஊரு வந்தேனோ...யாருக்காக சம்பாதிக்கின்றேனோ….யாரை கண நேரமும் பிரிய கூடாது என எண்ணி ஏங்குகிறேனோ...அவர்களை பிரிந்து, அவர்களின் அன்புக்காக ஏங்கி,அவர்கள் அண்மைக்காக தவித்து..என மனதின் வலியை முகத்தினில் பிரதிபலித்தாலும் ,வார்த்தையினில் காட்டிடாமல் ...உள்ளத்தின் ஏக்கத்தையெல்லாம் திரட்டி தன் இதழினால் பரிசளித்தான். வாட்போரும் சற்று ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்குமளவுக்கு இருந்தது அவர்களது முத்தயுத்தம்.




அந்த சத்தத்தின் இடையில் அதன் எச்சில் அமிர்த்தத்தை இதயத்தால் உணர்ந்தவன் தன் கண்ணீரோடு சேர்த்து அந்த பரிசத்தையும் மெல்ல தன் கைவிரல்களால் தடவி அழுந்த முத்தவிட்டவன்…." ஏ! புஜ்ஜிமா எழுந்தீட்டீங்களா", எனறான் தன் கரகரத்தை குரலை மறைத்து பாசத்தினை குரலில் தேக்கி…

அந்த சில்வண்டும் ரீங்கிரமிட்டது தனது மழைலையில்….அப்பா….பா….பா...என மிழற்றி...அந்த குரலில் தன் உள்ளம் கரைய உதிரத்தின் ஒலி மண்டையை வண்டாய் குடைய….இந்த நிமிடமே அனைத்தையும் உதறி அப்பிஞ்சு மழலையை சந்திக்க நெஞ்சம் ஏங்க ….இயலாமை தன் இதயத்தை அறுக்க...தவிக்கும் அந்த நிமிடம் கடக்க பெரும்பாடு பட்டு போனான்…


தினமும் தான் கேட்கிறான் இந்ந குரலை, ஆனாலும் போதவில்லை...தந்தை பாசத்தை ஒரு அலைபேசியின் அலையில் கடத்திவிடு முடியுமா...ஆண்டாண்டு காலமாக குடும்பமே அனைத்துமாக வாழும் மனிதர்களால் மட்டுமே உணர முடியகூடிய தவிப்பு.ஒருவரின் தவிப்பை ஒருவர் அறியலாம் ,அனுசரணையாக இருக்கலாம், தோல் கொடுக்கலாம்,அதன் வலியை உணரக்கூட செய்யலாம்,ஆனால் அதன் ஆழம் அறியகூடியவரும் உண்டோ? …

இதுவரை எதிர்ப்பார்ப்பை விதைத்து சந்தோஷத்தை வரவேற்க தயாராக இருந்த மனது,மகளின் மதுரமான குரலில் அமிழ்ந்து கிடந்த பொங்கி எழ ஏக்கத்தையும் தாக்கத்தையும் ஒருங்கே விதைத்தது மட்டும் தான் மிச்சம். அந்த நிமிடத்தை கடப்பது என்பதென்பது அத்தனை எளிதா என்ன?...தாய்,தந்தை உடன்பிறப்புகள் ,ஓடி விளையாடிய இடம்,ஆடி திரிந்து கூடி களித்த நட்பு , ,பிறந்த மண்,அதன் மண்வாசம், அதன் மீது வைத்த நேசம் ,அதன் மடியில் ஓடி திரிந்த பொழுது கிடைத்த சுதந்திரம் ...நெஞ்சத்தில் கிளர்ந்தெழ தன்னை நிலைப்படுத்த பெரும்பாடாகி போனது.

ஆனால் அந்த நிமிடம் தன் மனையாள் முகம் கண்முன் நிற்க ….அதனை தொடர்ந்த நிகழ்வுகள் பம்பரமாய் மனதில் சுழல….கடந்த காலம் வரிசையாய் விழியினில் படமாய் ஓட...இந்த துயரத்தையும் தாங்குவேன்..இதற்கும் மேலும் தாங்குவேன். இதனை கடப்பேன் அவளின் அன்பிற்காக….அவளின் நம்பிக்கையை காப்பாற்ற….அவள் குரலையும் கேட்க உள்ளம் குதியாய் குதிக்க...கொடுத்து வாக்கு மதிற்சுவறாய் எதிரில் நிற்க….மாசற்ற அவளின் நேசத்திற்காய் இதோஅனைத்தையும் தாங்கி...நாடுவிட்டு நாடுகடந்து ….மொழி புரியா ஊரில் வாழ வழிதேடி வந்தான் குடியாய் ஆகிபோனான்…வாழ்க்கை நடத்தும் பாடத்தில் பரிட்சையில் வெற்றிபெற அயராது உழைப்பையே தனது தாரக மந்திரமாக கொண்டு...முகம் தெரியா மனிதர்களிடையே ...முகவரி துளைத்து...அதை அடைய துடிக்கும் சராசரி மனிதர்களில் அடையளம் தேடுபவர்களில் ஒருவருள் அவனும் ஒருவனாய் இருந்தான்.

நினைவலைகள் மூளையில் சுழல மகளின் குரல் அலைபேசி வழியே...நினைவுலகத்திற்கு கொண்டு வர …"அம்மு பால் குடிச்சீட்டீங்களாடா கண்ணா…"

"ம்ம்ம்…குடிச்சிட்டேன்'.

அவளை பற்றி பேச தான் கூடாது.விசாரிக்கவும் கூடாதா என்ன,மனம் கேள்வியெழுப்ப,

"அம்மா குடிச்சாங்களா…"

'ம்கூம்...இல்ல...ஆயா திட்டுச்சு…"

"அம்மா என்ன செய்ஞ்சாங்க...."


அவர் எதற்கு திட்டினார் என்று குழந்தைக்கு புரிந்தால் தானே சரியான பதில் தர, அந்த நிமிடம் அவள் என்ன செய்தாளே அதனை கடத்தியது

"பார்த்துட்டே நின்னாங்க…."என்று


அந்த வாண்டின் பதிலில் ,என்ன பார்த்துட்டே நின்னாங்களா,என்னத்த பார்த்துட்டே நின்னாங்க ,அதையே மனதில் கேள்வியாக எழும்ப ,அதையே வார்த்தையாக மாற்றி மகளிடம் கடத்த,அது புரியாத குழந்தை தாயின் தாயின் முகத்தில் தான் படித்ததை கடத்தியது.

ஒருநிமிடம் என்ன பார்த்து என் யேசித்தவன் அந்த பிஞ்சின் வாயிலிருந்துகசிந்த வார்த்தைகளை கொண்டு கிரகித்து பொருக்கி ஒன்று சேர்த்தவன்...அவர் ஆற்றிய வினைக்கு,தன் மனைவியின் எதிரிவினை என புரிய மனம் வலிக்க ,முடிந்தவரை விரைவாக இந்த பிரச்சினைகளிலிருந்து அவளை காக்க வேண்டும் என மனம் அடித்து கொண்டது.


தெரிந்த விடயம் தான் அவளது நிலை...அதை கேட்டு குழந்தையிடம் என்னவென்று சமாதானம் கூறுவான்.

"ஹோ...அப்போ நீங்க என்ன செய்தீக…"

"நா ஆயாவை முறைச்சேன்...ஆனா பயமாயிருந்தது…" குழந்தையின் குரலில் பயம் அப்பட்டமாக உணர்ந்தவன்,தன் நிலை நினைத்து கழிவிரக்கம் கொள்வதை தவிர வேறு வழியில்லை.

கண்களை இருகமூடி திறந்தவன் சந்தோஷம் துளி அளவு ஊருவதற்கு ஊறும் முன்னே, பொங்கும் அலைகடலின் சீற்றத்துடன் வலிகள் வரிசை கட்டி நின்றால் அவனும் தான் என்ன செய்வான் .

"ஆஹா...அப்படியா கண்ணம்மா...ஆயா நல்லது தான் சொல்லுவாங்க.ஆயா திட்டினா நீ அம்மாவுக்கு முத்தம் கொடு...அம்மா சரியிகிடுவாங்க சரியா.."

"ம்ம்ம்மம்...சரி", என கிளுக்கி சிரித்தது.

தனது மகள் பேச பேச அதன் அழகில் லயித்திருந்தவள் ,பேச்சு திசை திரும்ப,அதை தடுக்கவும் வழிதெரியாது,அவனது மனம் என்ன கவலைப்படும் நினைத்தவள் ,அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பியவள் ,தான் தினமும் முடிக்கும் தருணம் கொடுக்கும் சத்தமான போனில் இரண்டு முறை கட்டுவதை வழமையை இன்று செயல்படுத்தியிருந்தாள்.










இப்ப என்ன செய்ய செய்யறீங்க, எப்ப எழுந்தீங்க,என் செய்ய போறீங்கென்று ஆரம்பித்து….அவனது கேள்விகளின் வழியே மகளின் மழைலையில் நனைந்துகொண்டிருந்த அந்த அன்பு தந்தை வைப்பதற்கான சைகை ஒலி காதில் விழ மனமேயில்லாமல் அதை வைத்தவன் இன்னும் கொஞ்சம் நேரம் அந்த மழலை சாரலில் நனைய ஆசைப்பட்ட உள்ளத்தை அரும்பாடுபட்டு அடக்கினான். தன் குடும்ப சுமையின் காரணமாக தவறே செய்யாமல் தவறி தான் போனான் அந்த காதல் கணவன்…

பொறுப்புள்ள பிள்ளையாய் குடும்ப பாரம் சுமந்தது தான் அவன் செய்த பிழையா...அக்காகளுக்கு நல்ல தம்பியா….அண்ணன்களுக்கு தோள்கொடுக்கும் தோழனாய்….பெற்றவர்களுக்கு பெருமை சேர்க்கும் பிள்ளையாய் வாழ்ந்தது தவறென்றால்...அவன் வாழ்க்கை யில் மிக மிக பெரிய தவறு இழைத்தவனாய் தான் கருத வேண்டும்…


எத்தனை சந்தோஷமாய் நிம்மதியாய் உன்னதமான உறவுகள் சூழ,உண்மையான நட்புகளுடன் இனிப்பாய் நாட்கள் நகர,உயிரானவள் உள்ளத்தில் அஸ்த்திரவாரமிட்டு வாழ்க்கையை அழகாய் மாற்றியிருக்க,அப்படியே விட்டுவிடுமா விதி,தன் சதி வேலையை செய்தது.
உழைப்பை நம்பியிருப்பவர்களுக்கு வேறு வழி,அயல் தேசத்தில் வேலைத்தேடி அகம் சுமந்தவர்களுக்காக முகம் காண முடியாமல் மூச்சு முட்டும் வாழ்க்கை. ஆனால் இதுவும் இனிப்பாய் .நெல்லிக்காயை சுவைக்கையில் கடைசியில் நாவுடன் மனமும் இரசிக்குமே ,ஆழ மூச்சை உள்ளிழுத்து ,அதுபோல அவர்களுக்காக என மனம் கூப்பாடு இட இன்னும் இன்னும் வேகமாக உந்து சக்தியாக மாறிவிடுகிறது.

இல்லை,நான் சோர்ந்து போக மாட்டேன் விருட்சத்தின் கிளையும் நானே,வேருமா நானே...அவளது அன்பே தன் ஆதாரமாய ஆதுரமாய் கொண்டான்.


அவன் அலைபேசியை வைத்தவுடன் அலைகடல் என ஆர்பறித்த உள்ளம் அடங்க மறுக்க...கண்ணீர் ஆறு கரைபுரண்டோட அலைபேசியை வெறித்தவள்...அப்படியே அமர்ந்துவிட்டாள்... என்ன தவறு செய்தோம்,இப்படியொரு வாழ்க்கைக்கா அப்படி போராடி கரம் பிடித்தோம்,எவ்வளவு எதிர்ப்பு, எவ்வளவு வசவுகள்,நீ எப்படி வாழப்போகிறாய் பார்க்கிறேன் என கோப பார்வைகள்,ஏளன பார்வைகள்..அத்தனையும் தாங்கியது நெஞ்சில் சுமந்த அன்பு மட்டுமே,

ஆனால் இன்று? மனம் ஓவென பேரிரைச்சலிட்டது, அத்தனையையும் தகர்த்து இவர்கள் முன் வாழ்ந்துகாட்ட வேண்டுமென வைராக்கியம், முன்பை காட்டிலும் இப்பொழுது நெஞ்சில் அதிகமாய் வேருன்றி வளர்ந்தாலும்,பிரிவின் ஏக்கம் ,அன்பின் தாக்கம் இல்லாமல் இருக்குமா,பிரிவாற்றமை என்பது எல்லோருக்கும் பொதுவானது தானே.
அதுவும் இவள் வாழ்க்கை ,அதன் தாக்கம் அதிகம் தானே...பார்க்கலாம் வெல்ல போவது இவர்கள் காதலா…,இதயம் இல்லாதர்களின் காழ்ப்புணர்ச்சியா?


படித்துவிட்டு உங்களை கருத்துக்களை பகிருங்கள் தோழமைகளே 🥰🥰🥰
 
Messages
31
Reaction score
26
Points
18
அத்தியாயம் 2:

"ஏ மதி! எழில்நிறைமதி பேருக்கொன்னும் குறையில்லை,அறிவும் அழகும் நிறைவாயிருக்கனும்னு பார்த்து பார்த்து பேரு வச்சோம். எங்க அந்த மூஞ்ச கண்ணாடியில பாரு, எழிலையும் காணாம், சரி புத்தியாவவது பொழச்சிப்பனு பார்த்தா அதுவும் இல்ல…."



"வீடான வீட்டில விடிஞ்சும் விடியாம கண்ண கசக்கிட்டு நின்னா வீடு எப்படி விளங்கும்...அதான் பேச மாட்டேன் என வீராப்பா சவடால் விட்டுட்டு இப்ப புள்ளைய வச்சி அவன் குரல்ல கேட்டாச்சுல்ல...போ போ ஆக வேண்டிய வேலைய பாரு ….இந்த குடும்பத்துக்கு நீ மடடும் வாரிசு இல்ல….உனக்கு பின்னாடி ரெண்டு இருக்குங்க….அதுங்க வாழ்க்கை விளங்கனும்னு நினைச்சினா..இனிமே இப்படி காலங்காத்தல அழுது வடியாம இரு…சகிக்கல….காலையிலே புலம்பனும்னு என் தலையில எழுத்து...உன்னை பெத்து வளர்த்ததுக்கு அது தான் மிச்சம்.அங்கங்க புள்ளைய பெத்தோமா வளர்த்தோமா...அவங்களுக்கு கல்யாணம் காட்சினு பண்ணிணோமா...அவங்க வாழ்றத கண்ணாற பாத்தோமா...பேரன் பேத்திகளை கொஞ்சினோமா….கடைசி காலத்துல நிம்மதியா கண்ண மூடினோமாயிருக்காங்க...எனக்கு ஏது அந்த கொடுப்பனையெல்லாம்…", என்றவர் தன் புலம்பலை நிறுத்தவதாக இல்லை...ஆனால் இடத்தை விட்டு அசைந்தாலும் அதற்கும் அடுத்து ஒரு பாடு வாங்கி கட்ட வேண்டும் .



"இங்க ஒருத்தி பேசிக்கிட்டு இருக்காலேனு ஒரு மட்டு மரியாதையாவது இருக்கா...இருந்திருந்தா அந்த உருப்பாடதவன் கூட சேர்ந்துகிட்டு நீயும் உருப்படாம போனதுமில்லாம இங்க வந்து எங்க உயிரை ஏன் எடுக்க போற…" என்று பேசுவதை கேட்டுகொண்டு அங்கையே நின்றாள்.


அப்பொழுது தான் அவரது இரண்டாவது மகள் புவனேஸ்வரி, அவளை பார்த்தவர் ஆத்திரம் கூட, "இதுக்கும் ஒரு பேரு வச்சேன் ….புவனத்துக்கே இது தான் ஈஸ்வரினு நெனப்புலேயே காலத்த ஓட்டுது"…. "தூங்கி எழுந்து வர நேரத்த பாரு, ஒன்னாவது ஒழுங்கா வந்து பொறந்திருக்கா, எல்லாம் என் தலையெழுத்து ,திங்கறது ,தூங்கறது இங்கையும் அங்கையுமா உலாத்தறது ,நேத்து தான் பொறந்து விழுந்த மாதிரி ,நடைபழகறத்துக்கு,அது இல்லைனா ,திரும்பவும் இழுத்து போர்த்திக்கிட்டு படுத்துக்கறது", என அவளையும் வாங்கு வாங்கென வாங்கிவிட்டு மீண்டும் பெரிய பெண்ணிடம் தாவினார்.


"ம்கும்...உன்னை என்ன இங்க புகழ்ந்து பேசி மாலை மரியாதையா செய்யறாங்க...நீ பாட்டுக்கு சிலையாட்டம் நிக்கற", என்று அதற்கும் முறைத்து வைத்தார்.




இப்போழுது என்ன செய்வது என முழித்தவளை ,
"இந்தா இப்ப போய் தோட்டத்துல வேலைக்கு ஆள் வராங்கனு சொன்னாங்க...எத்தனை பேர் வராங்கனு நடேசன்கிட்ட கேட்டுட்டு வா... சமைக்கனும்….அப்படியே கத்திரிக்காய் வெண்டைக்காய் இருந்ததுனா...பரிச்சுட்டு வந்துடு...எனக்கு வீட்டுல வேலை ஏகப்பட்டது இருக்கு...உம்மவளையும் கையோட கூட்டிட்டு போய்ட்டு வா"….என்றவர் அடுப்படிக்கு சென்றுவிட்டார் தன் வேலையை பார்க்க…பெற்ற மகள் தான் ...ஆனால் வேண்டாத மகளாகி விட்டாள்….எத்தனை பாசத்தை கொட்டி வளர்த்தனரோ...அத்தனையும் இன்று தலைகீழாய் மாறி வார்த்தைகளை கொண்டு தன் தாய் இப்படியும் வதைப்பாளா என எண்ணுமளவிற்கு அவளை வாட்டி வதைத்து கொண்டிருந்தார்…

அவளை உயிரில் வைத்து தாங்க ...உள்ளங்கையில் வைத்து தாலாட்டும் நேசம் காலத்தின் கட்டாயத்தால் அயல்நாட்டில் வாசம் புரிய….காயம் பட்ட உள்ளத்திற்கு வைராக்கியத்தையே மருந்தாய் இட்டு ஆற்றி கொண்டிருந்தாள்…


அதன் அந்த நிகழ்வுகள் நமக்கென்ன புதுசா என எண்ணம் எழுந்தாலும் எத்தனை தடவை இடித்துக்கொண்டாலும் வலிக்காமல் இருக்குமா என்ன... மனதில் எழுந்து வலியையெழுப்ப...அது கண்களின் வழியே காட்டி கொடுக்க...அவள் பெற்ற மழைலைக்கு பொறுக்குமா என்ன…

இவ்வளவு நேரம் தன் ஆயாவை முறைத்துக்கொண்டும் பயந்துகொண்டும் தன் தாயின் இடுப்பில் அமர்ந்து பார்த்துக்கொண்டு இருவர் முகத்தையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்த குழந்தை தன் தாயின் கண்ணீரின் ஈரத்தை முத்த அச்சாரங்களால் அந்த காயத்துக்கு மருந்திட்டு போக்கியது.


இதற்குமேல் அங்கே நின்றால் இன்னும் எல்லோரின் பார்வைக்கும் ஆளாக நேரிடும் சூழல் இருப்பதால், அங்கிருந்து அகன்று தோட்டத்தல நோக்கி தன் நடையை போட்டாள்.

தன் தாயின் குரலில் எழுந்து வெளியே வந்த விஜயவிக்ரமன்
தன் அக்காவை பார்த்துக்கொண்டே வந்தவன் வாய் வம்பளந்தது என்னவோ தன் தங்கையிடம் தான்.

தம்பி மற்றும் தங்கையிடம் பெரிதாக வாக்கு வாதம் கூட ஏற்பட்டியிறாத நிலையில், இவளது திருமணம் அவர்களிடையேயும் பெரியதொரு இடைவெளியை ஏற்படுத்தி இருந்தது. அவர்களும் நெருங்கவில்லை,இவளும் நெருங்கவும் இல்லை இன்னதென கூற இயலாத மெல்லிய விரிசல் விட்டு இருந்தது.முதலில் வார்த்தையாடியிருந்தால் அதை அடைத்திருக்கலாமோ என்னமோ...ஆனாலும் இரண்டு புறமிருந்தும் யாரும் முயற்சிக்காமல் இருக்க அந்த விரிசல் அப்படியே தன் ஆட்சியை நடத்திக்கொண்டிருந்தது.



"என்ன காலையிலேயே பூஜையெல்லாம் பலமாயிருக்கு.
என்னடி அம்மா ஏன் இப்படி கஷ்படுத்தற ...காலையிலே எழுந்து ஏதோ உன்னால முடிஞ்சதா...நாலு நல்ல வேலைய செய்ஞ்சா என்ன …" என்று சத்தமாக கேட்டவன் நமட்டு சிரிப்பை ஒன்றை அவளை உதிர்த்து விட்டு சோபாவில் சுகமாக அமர்ந்தான்.

'நாலு நல்ல வேலையா!…"எது இப்ப பார்த்தியே அதமாதிரியா ,உனக்கு மனசாட்சினு ஒன்னுயிருந்தா சோஃபா சேஃபாயிருக்கனும்னு நினைச்சா நாளையிலிருந்து அது மேல நீ உட்காரம இரு.அந்த வாயில்லா ஜீவன போட்டு இந்த வாட்டு வாட்டற,நீ உட்கார்ந்தா வலிக்குதுனு அதால சொல்ல முடியுமா...இல்ல வலிச்சா உன்ன பிடிச்சி கீழ தான் தள்ளி விட முடியுமா ", நீயெல்லாம் வாய வச்சிட்டு வக்கனை பேசற", ...என்றவள் அதோடு நிறுத்தாமல் சோஃபாவிடம் சென்று "உனக்கு நான் இருக்கேன்,கவலப்படாத என்று மெதுவாக தடவி ஆறுதல் சொன்னவள் அவனை பார்த்து பத்திரமா பார்த்துக்கோ , இல்ல கொன்னுடுவேன்", என்றவள் நின்றால் தானே அடுத்த உரண்டைக்கு அடி போட...அடுத்த நிமிடம் இடத்தை காலி செய்திருந்தாள்.




உன்னை என வேகமாக ஆரம்பித்தவன்,அவள் வேகத்துக்கு இவனால் வார்த்தை இயலாத காணத்தால் கோபமாக முறைத்தாலும், இதழ் கடையோரம் அழகான புன்னகை ஒன்று அலங்கரித்ததோ.



என்னது அது! அவனால் திரும்பவும் வாங்கி கட்டிகொள்ள வேண்டுமோ என ...என வாய் வாயடித்தாலும் ,இந்த அகராதி புடிஞ்சவன் எதுக்கு இப்படியொரு இவனுக்கு சம்மந்தமே இல்லாத வேலையெல்லா ம் எறங்கி செய்றான்...நானே இப்ப தான் விட்டாபோதும்னு தப்பி பிழைச்சேன்.,சிணுங்கலும் முனங்கலுமாக தன் அரையை நோக்கி நடந்தாள்.



"என்னம்மா! ,இப்போ எல்லாம் கோழி கூவி விடியறத விட, தினமும் உங்க சத்தத்தில் தான் விடியுது", என அவனது தாயை தேடி சென்றான்.


ம்ம்ம்மம், என்ன சொல்ல வர,

"அச்சோ ம்மா திரும்பவும் ஆரம்பிக்காதீங்க, காபிமா", என கெஞ்ச

"தோ வரேன்டா என அடுக்களையில்", நோக்கி நகர்ந்தார்.


அவர் பின்னாடியே சென்றவன் ,"ம்மா எங்க நம்ம வீட்டு சவுண்ட் ஆப்ரேட்டர்", என்றவன் அங்கிருந்த தண்ணீர் குடம் வைக்கும் திண்டில் அமர்ந்தான்.

"டேய்ய்ய்ய்!...நிஜமா சொல்றேன் ...இதுக்கு மேல ஏதாவது பேசின காலை காப்பி மட்டுமில்ல….இன்னைக்கு முழுக்க விரதம் இருக்க வச்சிடுவேன்"..


உனக்கு எத்தனை தடவை சொல்றது .
நானும் தினமும் சொல்லிட்டு தான் இருக்கேன். நீ ஒன்னும் கேட்கற மாதியே தெரியலை..இன்னைக்கு கண்டிப்ப நான் சொல்லறத செய்யலைனா பார்த்துக்கோ", என மிரட்டிக்கொண்டிருக்க…

"என்னம்மா! ,என்ன பண்ணான்...இந்த வீட்டில தான் பெத்தவங்க இருக்காங்கனு ஒன்னுத்துக்கு கூட நியாபகத்துல இருக்காதே", என்று குரல் கொடுக்க ..

அச்சோ இந்த மனஷன் வந்தத கவனிக்கலையே, இவனுட்ட வேற சத்தமா பேசி தொலைச்சிட்டேன்...கேட்டு தொலைஞ்சிடுச்சோ என்னவோ...அதெப்படி தான் இவருக்கு பிள்ளைகளை பற்றி குறை சொன்னா மட்டும் லண்டன்ல இருந்தாலும் காதுல விழுமோ..மத்த நேரமெல்லாம் ,மண் சட்டிய மண்டையில கவுத்த மாதிரி அவர் பாட்டுக்கு சொல்லறது எதையும் காதுல வாங்காம போவாரு..…இப்ப இவருக்க என்ன பதிலை சொல்லுறது...எப்படி சமாளிக்கறது என கையை பிசைந்தவர் ,அவருக்கான காபியுடன் …"நீ வாய திறக்க கூடாது", என மகனிடம் எச்சரிக்கை விடுத்தவர் ,செல்ல
திண்டிலிருந்த குதித்தவன் அந்த மேடையிலே சாய்ந்தவண்ணம்
அவர் கையிலிருந்த காபியை மெதுவாக பிடிங்கியவன், "நான் சொன்னது கரக்ட் தானே", இரண்டு புருவம் தூக்கி சிரிக்க..போடா ...இவன் ஒருத்தன் நேரம் காலம் தெரியாம இவன் பேசினதை நிருப்பிக்க வந்துட்டான், எல்லாம் இவனால,இதுங்க செய்றதுக்கெல்லாம் சந்து மாட்டின எலி மாதிரி நான் இல்ல தவிக்க வேண்டியதா இருக்கு, என்று மனதில் வசைபாடி கொண்டே முறைப்பை பரிசாக்கியவர் ,இன்னொரு காபியோடு வெளியே வந்தார்.

"என்னம்மா நான் கேட்டுடே இருக்கேன் ,அம்மாவும் புள்ளையும் ,வாயவே திறக்க மாட்டறீங்ங…." என்ன விஷயம் சொல்லி தொலைங்க என வெடுவெடுத்தார்.

அவரும் பாவம் ஏதாவது விஷயம் இருந்தாலாவது சொல்லலாம்…


மகன் இவருக்கு பாசமாக வைத்த பட்ட பெயரையா சொல்ல முடியும்...இது என்னடா இம்சை ...என நொந்துகொண்டு நிலமையை சமாளிக்க …

"அது வந்துங்க…'என ஆரம்பிக்க

'ஐயா, வண்டி ரெடியாகிடுச்சுங்க", என்று வந்து நின்றார் வாகன ஓட்டி.

இருவரையும் ஒரு முறை ஏற.இறங்க பார்த்தவர்,ரெண்டு பேரு முழியுமே சரியில்லை..ஏத வது வில்லங்கத தை விதைச்சு வளர்த்து வச்சீங்க அதோடு சேர்த்து உங்களுக்கும் சேர்த்து புதைச்சிடுவேன், என்றவர் கிளம்ப தனது அறையை நோக்கி நடந்தார்..


"ம்ம்மா, என வயிற்றை பிடித்துக்கொண்டு", சிரித்தவன், "ம்ம்மா ஒன்னுமில்லாத விஷயத்துக்கே நம்பியரு மாதிரி கைய பிசைஞ்சு, வீராப்பா மாதிரி உடம்பு வச்சிட்டு இப்படி அப்படியும் நடந்து இரகுவரன் மாதிரி தொண்டை அடைச்சு குரல் கொடுத்துகிட்டே இப்ப இருக்கற வில்லன் மாதிரி ஆழமா கூர்மையா ஒரு பார்வை பார்த்தா ….இவரு மூனு தலைமுறையா வில்லனா இருந்தவருனு பயப்படனுமா…,அதிலையும் இவருக்கு நீ கொடுக்கற ஃபக்கிரவுண்ட் எஃபெக்ட் இருக்கே, அதை தான் என்னால சுத்தமா தாங்க தாங்க முடியலை... "என அவரை வேண்டும் மட்டும் வார ...அசால்ட்டா ஒரு பார்வை பார்த்தவர், "நீ விதை போட்ரக்கூடாதுனு தான் எச்சரிக்கையா வேலியவையே போட்டுட்டு போறாரு...இங்க என்ன நடந்திருக்கும்னு அவருக்கு புரியலைனு நீ நினைக்கிற...அவர தான் உனக்கு புரியலைனு நான் நினைக்கிறேன்.. அவருக்கு மட்டும் ஏதாவது வில்லங்கம்னு மனசுல தோணுச்சு னு வச்சிக்கையும்..நம்ம கையும் காலையும் காட்டாமலேயே அதே இடத்தில ஆணியடிச்ச மாதிரி நிற்க வச்சிருப்பாரு விஷயத்த வாங்கன பிறகு தான் இடத்தை விட்டே அசைய விட்டிருப்பார..அவரையெல்லாம் புரிஞ்சிக்கற அளவுக்கு நீ இன்னும் வளரடா.சீக்கிரம் வளரு", என்றவர் கணவருக்கான உணவினை மேசையின் மீது எடுத்து வைத்துக்கொண்டிருந்தார்.


"ம்ம்மா அப்பா அவ்வளவு டெரர்ரா எல்லாம் தெரியலையேமா…"

"பார்த்தா தெரியாதுடா ...பார்க்க பார்க்க பார்க்க தான் தெரியும்…"

"என்னதுஊஊஊஊஊ பார்க்க தான் தெரியுமா…"


"அமான்டா...உங்களையெல்லாம் அவருடைய கோபத்திலிருந்து கோழி குஞ்சிய பாத்துகாக்கிற மாதிரி பாதுகாக்க றேன்டா….அதனால உங்களுக்கு பார்க்கவும் முடியலை ,தெரிஞ்சிக்கவும் முடியலை".



"ம்ம்மா ,ஆனாலும் அப்பா ஒரு பங்கு இருந்தாலும் நீ பண்ணற ஃபர்பாமன்ஸ் ல தான் அவர இன்னும் தூக்கி நிறுத்தறமா.."என்று அவரை பார்ட்டியவன் ஃபர்பாமன்ஸ்க்கான ஊக்க போனாஸ் மா முத்தம் பதித்தான்.

கன்னத்தை துடைத்தவர், சொரட்டு கழி மாதிரி(சொரட்டு கழி எனபது மரங்களில் காய் கனிகளை பறிப்பதற்காக பயன்படுத்துவது) வளர்ந்து நிக்கறான்,இன்னும் இந்த சின்ன முத்தம் கொடுக்கற பழக்கம் மட்டும் மாறவே மாட்டுது என்றவர்,தன் கணவர் வருகிறார் என அந்த பக்கமும் ஒரு பார்வை பார்த்துக்கொண்டிருந்தார்.
இதுக்கும் "ஏன் தூக்கி இடுப்புல வச்சிக்கலையா" எனகேட்டு முறைக்கும் கணவனுக்கு யார் பதில் சொல்வது.

எங்களை பாதுகாக்ற நீ ,அக்காவ மட்டும் நீயே கொத்தி கொதற என்றவன் ,தந்தையின் காலடி தட சத்தத்தில் அந்த இடத்தை விட்டு அகன்றான்.

ஒரு நிமிடம் விக்கித்து நின்றவர்...சட்டென்று தன்னை சமாளித்து கொண்டவர் தட்டு வைத்து உணவினை பரிமாற ஆரம்பித்தார்.

கை கழுவிய வண்ணம் வந்தவர் துரைக்கு "என்னவாம்!...ரொம்ப வெரப்பா போறாரு …"என்றவர் உணவில் கவனமானார்.

"ஒன்னுமில்லைங்க சும்மா அவனுக்கென்ன", என்றவர் இன்னொரு இட்லியை வைக்க போக ,"சீக்கிரமா சாப்பிடறாதால பசிக்கலை போதும்,
மதியம் எதிர்பார்க்காத வெளில வேலை இருக்குது", எனறவர்…"என்ன புரிஞ்சிக்க மட்டும் வளரனும்னுமில்ல…
உன்னை புரிஞ்சிக்கவும் அவன் இன்னும் வளரனும் என்றவர், சீக்கிரம்
சரி யாகிடும் கிளம்பறேன் என்று கிளம்பிவிட்டார்.

ம்ம்ம் என்று தலையசைத்து வழியனுப்பியவர்,
இவர் சொல்வதை போல் சரியானால் ,எவ்வளவு நல்லாயிருக்கும் ,அந்த நாளுக்காக கண்களில் ஏக்கத தை சுமந்தவர் ,வழக்கம் போல அதையும் மறைத்தவர் "புவனா புவனா", என்று
அழைத்தவர், இவள திட்டறதுக்கே நான் தனியா சாப்பிடனும் போல என்று கத்திகொண்டே உள்ளறையை நோக்கி சென்றார்.


இதோ அத்தியாயம் இரண்டு பதிந்துவிட்டேன் அன்பூக்களே. உங்கள் அழகான விமர்சனத்தை கீழே உள்ள திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள்❣️❣️❣️❣️



 
Messages
31
Reaction score
26
Points
18
அங்கிருந்து மகளுடன் அகன்றவள் தம்பியையும் தங்கையும் கடந்திடும் போது இவள் தலை குனிந்திருந்தாலும், அவள் பார்வை தம்பியையும் தங்கையையும் தழுவ, அவர்கள் பார்வைகளும் இவளை தான் தழுவி விழியின் மீது
தாவியது. ஆனால் குழந்தையின் பார்வையோ தாயின் முகத்தை ஆராய்வதிலேயே ஆர்வமாக இருக்க,திரும்பி பார்க்குதா பாரு ,ரொம்ப தான் உதட்டை சுழித்து தோளில் இடித்துக்கொண்டவள், ', மதுரமொழிவிழியாள்' பேரு மாதிரி அவ கண்ணு பேசற மொழி அவ்வளவு அழகு. ஆனா அந்த கண்ணு நம்ம கிட்ட மட்டும் ஏண்ணே! அதிர்ந்த மொழி பேசுது.இத்தூணுண்டு இருந்துகிட்டு அதுக்கிருக்க ஏத்தத பாருடா. அவ அம்மா மடிய விட்டு இறங்குதா பாரு,என முறைப்பாக வார்த்தைகள் வெளி வந்தாலும் அதன் பின் நிறைந்த ஏக்கமும் தன் அக்காவின் மகளிடம் கொஞ்சி வம்பிழுத்து விளையாட முடியவில்லையே என்ற ஏக்கமுமே பெருமளவில் எதிரொலிக்க, அந்த
ஏக்கமும் அவனுள்ளும் எதிரொலிக்க,பெருமூச்சு ஒன்றை வெளிவிட்டவன்,தானும் அதையே பிரதிபலித்தாலும், இதை எப்படி மாற்றுவது என்று அவர்களுக்கு புரியவில்லை.ஏனென்றால் நடந்துபோன நிகழ்வுகளின் கணம் அப்படி...அதிலிருந்து மீள்வது என்பது அவ்வளவு சுலபமாமென்ன, தன் தாய் அருகில் வருவதை கவனித்தவர்கள் சூழ்நிலையின் கனத்தை மாற்ற பேச்சை மாற்றி, தங்கையை வம்பிழுத்து , தாயை வம்பிழுத்து அவரது கவனத்தை திசை திருப்பியிருந்தான்.



வெளியே வந்தவள் மனம் கனத்தது தான் போனது அந்த கணம். உடன்பிறப்புகள் உடனிருந்தும் உள்ளத்தில் ஒருவரிடம் ஒருவர் ஒட்டி உறவாட ஆசை அவ்வளவிருந்தும், அந்த சூழலை கடக்க தன் மகளிடம் தன் கவனத்தை திருப்பினாள்.


அம்மாவும் மகளும் தங்கள் உலகத்தில் சஞ்சரித்தவாறு, காலை காற்று மென்மையாய் உடலை வருட பனி தாங்கிய பசுமை மனதை கொள்ளையடிக்க,அதில் இருவரும் சுண்டி விளையாடிவாரு தோட்டத்தை நோக்கி நடந்தனர்.

வழியில் இருந்த வேப்பமரத்தில் இளங்கொழுந்தை பறித்து ஆளுக்கு இரண்டு இலையை வாயில் வைக்க முகத்தை அஷ்டகோணலாக மாற்றினாலும் ,அதை சாப்பிடாமல் விடமாட்டாள் என அம்மாவை பற்றி அறிந்ததால் உதட்டை சுளித்து நெளித்தும்,அந்த வயதிற்குரிய பிடித்தமின்மை சேட்டைகள் அனைத்தையும் காட்ட, அதை இரசித்தவள், அவ்விளந் கொழுந்திடம் காட்டினாள் உடனே அது தன் சுட்டி தனத்தை தன்னிடம் காட்டி விடாதா.அதனால் "ம்ம்ம் மென்னுட்டீயா வாயா திற பார்க்கலாம்,இதை சீக்கிரம் சாப்பிடலைனா இன்னும் இரண்டு இத விட பெரிசா பறிச்சு திங்க சொல்வேன்", என பறிப்பதை போல் பாசாங்கு காட்ட, தன் வண்டு கண்களை உருட்டி ,தலையை அப்படியும் இப்படியும் சுழற்றி வேகமாக தன்னிடம் இருக்கும் பால் பற்களை கொண்டு பசுந்தளிரை , உள்ளே தள்ளிய இளந்தளிர் ஒவ்வாமையை ஓரமாகவும் தன் வாயை அகலமாக திறந்து நாக்கை சுழற்றி காண்பித்து கிளுக்கி சிரிக்க,என் சமத்து சக்கரை கட்டி என்று கொஞ்சினாள்.




அந்த சிந்தனையை மாற்றும் பொருட்டு தன் சின்ன வயது கதைகளை கூறிய வண்ணம் தன் வாழ்க்கையின் வண்ணமயமான நாட்களை குழந்தைக்கு சொல்வதை பழக்கமாக்கி வைத்திருந்தாள். தனக்கு சேர்த்து சொல்லி ஞாபகபடுத்தி ,தன்னை நெருக்கும் பிரச்சனைகளையும் கவலைகளையும் கலைந்தெடுத்தாள் அந்த பயணத்தை தன் இனிமையான கலங்களோடு அந்த நடை பாதையி தன் நடையை தொடர்ந்தனர்..

"என்ன தாயி அம்மாவும் மகளும் ,தோட்டத்துக்கா,இந்த தாயி ரோஜா பூவு ...இப்ப தான் எடுத்து கடைக்கு அனுப்பிட்டு வரேன்…"என்றவர் தன் முந்தியில் வீட்டுக்கு எடுத்து போக வைத்திருந்ததில் இரண்டு ரோஜா எடுத்து அவர்களிடம் கொடுத்தார் சுமதி.


அதை வாங்கியவளின் பார்வையென்னவோ சுமதியின் முகத்தில் தான் நிலைத்திருந்தது.அந்த சில்வண்டு சிண்டுல வச்சுட்டு நீயும் வச்சுக்கமா என்றவரை, "என்னக்கா இப்படி உழைச்சு என்னத்தை கண்டீங்க,,விடியறதுக்கு முன்னமே ,இன்னும் சரியா சொல்லனும்னா இரண்டு அல்லது மூனு மணிக்கு எழுந்திருக்கீங்க. விளக்க வச்சிக்கிட்டு பூவெடுக்கறீங்க...அது கூட பராவாயில்லை...கையெல்லாம் பாருங்க அங்கங்க முள்ளு கிழிச்சு வச்சிருக்கு.இதோடு போய் இன்னுமும் மீதி வேலை செய்ஞ்சு நீங்க எப்ப ஓய்வெடுக்கறது..இப்படியெல்லாம் உழைச்சீங்கனா உங்க உடம்பு என்னத்துகாகறது" அவரது மெலிந்த உடம்பும், குழி விழுந்த கண்களும்,பார்க்கவே கவலையாக இருந்தது. மிச்சமாயிருக்கற நீயாவது பசங்களுக்கு மிஞ்சனுமில்ல...உன்னவிட்டா அதுங்களுக்கு யாருயிருக்கா...கொஞ்சம் உடம்பையும் பார்த்துக்கோங்க என்றவளை தன்னை விட்டு அவளை ஆராய்ந்தார்.

அதுக்கு கென்னாடா கேடு வந்துட போவுது.எம்புள்ளைகள ஓரளவு கரையேத்திடனும்.அதுவரைக்கும் எனக்கு கல்லால அடிச்சாலும் சாவு வராது. அப்படியே வந்தாலும் உக்காந்து ஓய்வெடுக்கும் வரத்தை வாங்கி வரலை...அதை விடுற,எங்க பொழப்பு என்ன இன்னைக்கு நேத்தா ஆரம்பிச்சது...வருமைக்கு பிறந்துட்டு உழைக்கறது அஞ்சனா முடியுமா...உரலா பிறந்துட்டு உலக்கை இடிக்கு அஞ்சினா எப்படிடா, அதுவில்லாம பொறந்ததிலிருந்து உழைச்சே பழக்கபட்ட ரேகம்(தேகம்) சும்மாகிடனு மனசு சொன்னாலும் உழைச்சி பழகன உடம்பு கெடக்காது", என்றவரின் வார்த்தைகளில் எத்தனை எத்தனை எதார்த்தமான உண்மை.அதற்கான தீர்வு தான், கேள்விகுறியின் உள்ளேயே தன் பதிலை அடக்கி விடுகிறது.

"அடுத்த வேலை சோத்துக்கு அவ்வளவு ஆயசமா இருக்கற எங்கள மாதிரி இருக்கறவங்களே தைரியமா இருக்கறப்ப,உனக்கு என்னத்தாயி ,இராசாத்தி கணக்கா புள்ளை...மகராசன் கணக்கா, நீ தான் உசுருனு வாழற மகராசன் உம்புருஷன் இருக்காரு.ஏதோ போறாத காலம் ,இப்ப பிரிஞ்சு கிடக்கறீங்க. இப்படியேவா காலம் போயிடும். ரெண்டு பேரும் இந்த ஊரே உசந்து பார்க்கற அளவுக்கு சந்தோஷமா வாழ தான் பேறீங்க…"

"இப்படிய உடம்ப வருத்தி வத்தல் கணக்கா இருந்தீயனா...உம்புருசன் வரப்ப, உன்ன பார்க்கறப்ப மடிஞ்சி போய்ட மாட்டாற தாயி..உன்ன இப்படி பார்க்காவ தேசம் விட்டு விட்டு இராபகலா உழைக்கறாங்க...உன் .கவலையெல்லாம் ஒதுக்கி வச்சிட்டு அந்த மகராசன் துடிப்ப நெனச்சாச்சும் உடம்பு கவனிச்சக்காத்தா…"

"நானும் தினமும் சொல்லனும் நினைப்பேன்..எனக்கிருக்க வேலைக்கு மூச்சு விடக்கூட நேரமில்லை. ஆனா உன்ன பார்த்தா மனசு அடிச்சிக்குது ...உடம்ப பாரு தாயி...உனக்காக இல்லையினாலும் அந்த ரெண்டு உசுருக்காகவேனும்...நீரடிச்சு நீர் விலகனதா கிடையாது".எல்லாம் சரியாயிடும்.

"உனக்கு தெரியாததா,ஏதோ சொல்லனும் தோணுச்சி ...சொல்லிப்புட்டேன் .."
என்றவர் வரேன் தாயி, "இனிமே போய் தான் வீட்டு வேலை பார்க்கனும்", என்றவர் அவர்களிடமிருந்து விடைபெற்றார்.




தன்னை குனிந்து பார்த்தவள் ,இனிமே இப்படியிருந்து அடுத்தவர் கவனத்தை கவர கூடாது என நினைத்து கொண்டே
தாயும் மகளுமாக தோட்டத்தை வந்தடைந்தனர்.



"ம்மா...தூக்கு...தூக்கு", என கைகயை தூக்கி அவள் சேலையை இழுக்க...மகளின் சேட்டையில் வாரியணைத்து செல்ல கடியொன்று கன்னத்தில் கடித்து …"வாலு... வாலு...எத்தனை தடவை சொல்றது…..அம்மா சேலையை இழுக்க கூடாதுனு…" என்றவள் மகளை தூக்கியவாரே அந்த வரப்பில் நடந்தாள்..


"ம்மா...ம்மா…"என குழந்தை தாயின் முகத்தை திருப்ப …

"இப்ப என்னடா", எனறாள்….

தன் பிஞ்சு விரல்களை நீட்டி ஓரிடத்தில் காண்பிக்க அங்கு வெண்பஞ்சு மேகமாய் பறந்து கொண்டிருந்தது…


ஓ தாத்தாவா(தாத்தா என்றால் மிக மிக மிருதுவான ஒரு வகை தாவரத்தில் தனியே சிதறி வெண்மையாக இருக்கும்… இதனை குழந்தைகள் கையில் பிடித்து ஊதி விளையாடி குதுகளிப்பர்).அதனை கண்டே குழந்தை குதுகளிக்க அங்கே சென்று ஒன்று இரண்டை பிடித்தே விளையாடிவள்….நேரமாவதை உணர்ந்து நாளைக்கு வந்து விளையாடலாம் என சமாதனம் படுத்தி அழைத்து செல்வதற்குள் ஒருவழியாகி விட்டாள்.இப்படி தான் அவளை குழந்தையாய் பார்த்தவன்..அவள் அடத்தையெல்லாம் அழகாக தாங்குபவன்...அவள் முகசுருங்களை பொருக்காதவன்...அவன் பிரிந்த நாளாய் பெரியவாளாகி போனாள்..பொருப்பாய் மாற கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானாள் .இன்றும் வழக்கம் போல் அவன் நினைவலைகள் நெஞ்சில் அலை அலையாய் பொங்க...ஆரம்பத்தில் கண்ணீர் கோடாய் வரும் நினைவுகள்... இப்பொழுதோ பொக்கிஷமாய் தாங்க ...மனம் முழுதும் ஒருவித பரவசம் பரவியது.மெல்லிய மென்னகை ஒன்று சட்டென அவள் இதழில் இடம் பிடிக்க தன் மகளின் மென் கன்னத்தில் பரிசு தடமாய் அது இறங்கியது. அமைதி, ஆழ்ந்த அமைதியிலும் ஒரு குழந்தைத்தனம், அழககுக்கு அழகு சேர்க்கும் அவள் முகத்தில் இப்பொழுதெல்லாம் அதில் ஒரு அழுத்தம்,உறுதி,தெளிவு அவளது சோபையான முகத்திற்கு அதுவும் தனியான அழகை கொடுத்திருந்தது.

தோட்டத்தில் காய்கறி செடிகளின் நடுவில் நின்றிருந்த நடேசனை பார்த்த குழந்தை,"ஹை! தாத்தா தாத்தா", என இடுப்பிலிருந்தப்படியே குதிக்க,குழந்தையின் குரல் கேட்ட பெரியவர் ,அச்சோ,என்ன பெத்த ஆத்தா ,இந்த தாத்தன பார்த்ததும் எம்பூட்டு சந்தோஷம், உம்ம அம்மாவே சொரட்டுக்கோலுக்கு புடவ சுத்தனது போல புடவைய சுத்திக்கிட்டு அலையுது, அது இடுப்புல உட்கார்ந்து குதிச்சினா உடைச்சிக்கினு விழுந்துடும்", உதட்டில் சிரிப்பையும் உள்ளத்தின் வலியையும் ஒருங்கே உதித்தார் அந்த அன்புள்ளம் கொண்ட பாசக்காரர்.

அவரிடமே எத்தனை பேர் வருகிறார்கள் என தெரிந்து கொண்டு ….கையோடு கொண்டு வந்திருந்த பையில் இருவரும் காய்களை பறிக்க அதை பார்த்துக்கொண்டு சும்மாயிருந்து குழந்தையினத்திற்கே அவமானத்தை தேடி தந்துவிடுவோமா என்ன?


தன் பிஞ்சு கரங்களை கொண்டு கத்திரிக்காயை பறிக்க,எங்கே அது செடியை பிரிய மனம் வரவில்லையா,இல்லை இவளுடன் விளையாட ஆசைகொண்டதோ,செடியை விட்டு வருவேனா என அடம்பிடித்தது. அதன் மல்லுகட்டிவிட்டு முடியாமல், மிரட்ட ஆரம்பித்து அதுவும் முடிந்தால் தானே..


தன் பிஞ்சு கரங்களை ஊதியவாரே "ம்மா,ம்மா" என கத்த…கண்ணீர் தத்தளிக்க நின் மகளை கண்டவள் என்னவோ என பயந்து...

"என்னடா ஏண்டாம்மா அழற, கையில என்ன என கைய விரித்து பார்க்க ,மென்னமையான அந்த கரங்கள் அங்காங்கே திட்டுதிட்டாக சிவந்திருந்தது.

அதை பார்த்தவள், 'அச்சோ காய் பறிச்சதால கை வலிச்சிடுச்சா…" என்று மென்கரங்களில்,ஃபாபூ,ஃப்பூ என ஊத, இங்க ,இங்க என கையை விரித்து காட்டிய அழகில் நாம் மனமும் சொக்கி போகாமல் இருந்தால் அதிசயம். விட்டாள்.

"ம்ம்ம் …!"என்ற குழந்தை கத்திரி செடியையே பார்த்திருக்க…"என்னடா,நீ பறிச்ச காய் எங்க?" என வினவினாள்.

உதட்டை பிதுக்கி,இல்லையென கையை விரித்தது. அந்த பிதுக்கலில் அழகில் நம்ம கை கட்டி வைப்பது என்னவோ அவ்வளவு கஷ்டமாக இருந்தது.பின்ன அதை கிள்ளி வைக்கும் ஆசை ,கண்களில் மிதக்க,ஆள்காட்டி விரலும்,கட்டை விரலும் அடக்க முடியாமல் இழைய,அதை அடக்கியது என்னவோ ,கட்டை மீசையும் அவர் வேலை செய்ய வச்சிருந்த கத்தியும் சொன்னா நம்பனும்.ஆனாலும் அந்த பலாசுலையை ஒருநாளில்ல ஒருநாள் பிச்சு பார்த்துடனும்.அச்சோ போட்டு கொடுத்திடாதீங்க. நாம இங்க வாண்டு மேல கண்ண வச்சா சுத்தி நடக்கறதே தெரிய மாட்டுது.வாங்க அந்த வண்டின் ரீங்காரத்தை விட்டுடப்போறோம்.


தன் கரங்களோடு அதன் கரங்களை சேர்த்து பிடித்தாள்,காயை எவ்வாறு பறிக்க வேண்டும் என அந்த இலாவகத்தை சொல்லி காயை பறிக்க,அந்த இலாவகம் புரிந்ததோ,இல்லையோ அந்த அழகு சிரிப்பில் எதையோ கற்றுகொண்ட உணர்வும், சாதித்துவிட்ட பெருமையும் அந்த கண்களில் மின்னியது. அதனை இரசித்தவள், என் செல்ல பட்டு என நெட்டு சுற்றியவள்,குழந்தையை தூக்கி இடுப்பில் வைத்து முத்தம் பதித்தாள்.

கைகளில் காயை எடுத்துக்கொண்டவள் ,நடசேனிடம் வரேன் தாத்தா என விடைப்பெற்று
வழியில் தென்னைமரத்தில் ஓலைகளில் இரண்டு ஈர்க்கை பிய்த்து தனது மகளுக்கு அழகானதொரு கைகடிகாரத்தை செய்தவள் அதனை அந்த மென்பஞ்சு கரங்களில் போட்டு அவளை குதுகளிக்க செய்து பின்பே வீடு திரும்பினர் தாயும் மகளும்.அவன் இல்லாத தனிமையை அவளுக்காக அவன் என்னவெல்லாம் செய்வானோ ...அதை அவள் மகளுக்கு செய்து தன்னில் தன்னவனையும்...தன் மகளில் அவனையும் கண்டாள். அவளோடு சேர்த்து தன் மகளையும் உணர வைக்க முயற்சித்தாள், அவனது இருப்பை தனது ஒவ்வொரு செயல்களிலும் .


அங்கு வேலைக்கு வந்தவர்கள் இவளையும் குழந்தையும் பார்த்து வாஞ்சையாக சிரித்து," நல்லாயிருக்கியா கண்ணு….உம்மனசுக்கு ஒரு குறையும் வராது..உன் சோதனை காலம் எல்லாம் முடிஞ்சு ...நீயும் உன்ன கட்டன மவராசனும் சேர்ந்து இந்த ஊரே மெச்ச வாயில விரலை வைக்கற மாதிரி வாழறத பார்க்க போறோம்.இன்னைக்கு உன்ன பேசற வாயெல்லாம் ,நாளைக்கு வாயடைச்சி போய் பார்க்க தான் போகுது,என்று மனதார வாழ்த்தி தாயிக்கும் மகளுக்கும் சேர்த்தே திருஷ்டி சுத்தியவர்,எம்பூட்டு கண்ணு உங்க மேல" என மீண்டும் ஒரு முறை திருஷ்டி எடுத்தார்.

பார்க்கும்பொழுதெல்லாம் இவர்கள் வாழ்த்த தவறியதில்லை...என்னவொன்று காலம் தான் நீண்டுகொண்டே சென்றது. இவர்கள் வாக்கு இப்பொழுதாவது பலிக்குமா...என ஏக்கம் நெஞ்சம் நிறைய பெருமூச்சும் நிறைவேறிவிடாதா என்ற ஏக்கமும் தவிற என்று நினைப்பதை தவிற அவளுக்கு வேறு வழியில்லை.


ஆனால் அதன் தாக்கம்,அதனால் உண்டான எண்ணங்கள் கோடைமழையாக நெஞ்சை நிறைக்க, இறைவனிடம் ஒரு மன்றாடல் வேண்டுதலை வைத்துவிட்டு தன் மகளுடன் வீடு திரும்பினாள்.அது தவிற அவளுக்கு வேறு வழியுமில்லை.


வீட்டினுள் நுழைந்தவள் தம்பி மற்றும் தங்கை உணவருந்துவதை கண்டவள் ,அப்பா சாப்படலையே,வெளியே கிளம்பிட்டாரா,அங்கேயே தனது பார்வையை நிலைக்க விட்டவள்,பார்வையை உணர்ந்தார்களோ என்னவோ, தன் அரட்டை கச்சேரிக்கு முற்று புள்ளி வைத்தவர்கள்,தனது உணவினை அதோடு முடித்து கொண்டு எழுந்துக்கொள்ள தயாராக, அதற்கு மேல் அங்கு நிற்க மனமில்லாமல் தனக்குள் கேள்வியை எழுந்த கேள்வியை, தன்னுள்ளேயே அழுத்திக்கொண்டு ,வழக்கம் போல் அந்த கேள்விக்கான பதிலே தேடாமல் ,அவ்விடம் விட்டு அகன்றாள்.


நம் மனதை கேள்வியை தான் கேட்காமல் தவிர்க்க முடியாது, ஆனால் விடை கிடைக்காது என்று தெரிந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் தேடும் ஆர்வமிருந்தாமலும் ,பதில் கிடைக்க வழியில்லையென்றால் அதை அடக்கவும் கற்றிருப்போம்...அவளது நிலையும் அதுவே .அவளது கேள்விகளெல்லாம் அவள் உள்ளத்தினுள்ளே பதிலில்லாமல் ஆவியாக பெருமூச்சொன்று தான் விட முடிந்தது…


காய்கறிகளை கொண்டு சென்று சமையலைறயில் வைத்தவள், தன் தாயை தேடி எத்தனை ஆட்கள் வருகின்றனர் என்ற கணக்கை சொன்னவள், தனது மகளை கவனிக்க சென்றாள்.




அந்நியரின் வீட்டிற்குள் அத்துமீறி அடைக்கலம் தேடி நுழையும் உணர்வு நெஞ்சை அடைத்தது, பிறந்தது முதல் இந்த வீட்டின் தனது ஒவ்வொரு நிகழ்வுகளையும் அசைபோட்டவள் கண் முன்னே காட்சிகளாய் ஓட,இப்பொழுதும் அடிப்பட்ட நாட்கள்,அதற்காக அம்மா கூறிய சமாதனங்கள்,அதனை காட்டி தம்பி தங்கைகளிடம் கூட நைசாக தனது காரியங்களை சாதித்துக்கொண்டது, விழாக்களின் செய்யும் அட்டகாச கலவரங்கள்,,என சொற்களை வரையறுத்து வடிக்க முடியாத பொக்கிஷ தருணங்கள் ஒவ்வொரு இடத்திலும் அவளுக்கு ஒரு கதையிருக்கும். பிறந்த வீட்டில் வீட்டின் மீதான பெண்களுக்கு பிணைப்பையும் பாசத்தையும் சொல்லிட முடியுமா....ஆனால் இன்று இவையனைத்தும் ஒரு திருமணத்தில் மாறிவிடுமா, இல்லை எனக்கு மட்டும் தான் இப்படி தோன்றுகிறதா, இல்லை நடந்தவிட்ட நிகழ்வுகளாலா, என்றாவது ஒரு நாள் இந்த நிலைமை மாறி,என் மனதின் தோன்றும் இந்த நினைவுகள் மாறி ,இந்த வீட்டு பெண்ணாக மாறி இங்கு பழைய சந்தோஷத்துடன் இந்த வீட்டில் எல்லோருடனும் பழக முடியுமா, ஆயிரம் ஆயிரம் கேள்விகள் வண்டாய் குடைய அந்நிய தன்மையுடன் இன்று அந்த வீட்டில், கடப்பாறையை உள்ளே வைத்து விழுங்கும் உணர்வு, அதை அப்படியே விழுங்கினாள்.


காய்கறிகளை கொண்டு சென்று சமையலைறயில் வைத்தவள், தன் தாயை தேடி எத்தனை ஆட்கள் வருகின்றனர் என்ற கணக்கை சொன்னவள், தனது மகளை கவனிக்க சென்றாள்.



குழந்தையை குளிக்க வைத்து அவளுக்கு உணவு கொடுத்து, இவ்வளவு நேரம் வயல் ,வரப்பு என அலைந்தது,உண்டதது குழந்தையே தாலாட்ட அது சுகமாக தூக்கத்தை தழுவியது.

குழந்தையை உறங்க வைத்தவள், காலையில் சுமதி சொன்னது மனதில் ஓட, தன்னை சார்ந்தவர்களுக்காகவாவது உணவை விழுங்கியாவது வைக்க வேண்டும் என முடிவெடுத்து அதை செவ்வனே முடித்தவள்,
அன்றாட வேலைகள் அடுக்கு அடுக்காக அடுத்தடுத்து விழுங்க காத்திருக்ங அதனை பார்க்க சென்றாள்.


இதோ அன்பூக்களே அடுத்த அத்தியாயத்துடன் வந்துவிட்டேன்...படிச்சுட்டு மறக்காம எப்படியிருக்க சொல்லிட்டு போங்க...போன பதிவு கருத்து தெரிவிச்சா என் அன்பு மக்கா நன்றி நன்றி ❣️❣️❣️🌹🌹🌹

 
Messages
31
Reaction score
26
Points
18
அத்தியாயம் 4

அந்த அலுவலகவலாகத்தினுள்ளே தன் வாகனத்தை அதன் தரிப்பிடத்தில் நிறுத்தியவனது கண்கள் அந்த கட்டித்தின் உள்ளே இருப்பவர்களை நினைத்து நெகிழ,அவர்களின் தன்னலமில்லா அன்பில் இதயம் பாகாய் வழக்கம் போல் உருகியது. இவர்களிடம் தனக்கு ஏதோரு ஜென்மாந்திர பிணைப்பு இருந்திருக்க வேண்டும் .இல்லையென்றால் தன் அப்பொழுதைய நிலை நினைத்தவன், அதுவும் வேற்று நாட்டில்,தான் என்னவாகி போயிருப்போமோ... என்றவனின் மனம் நினைவுகளை அசைப்போட தலையை உலுக்கி தன்னை தாக்கும் கடும் நினைவுகளிலிருந்து தன்னை தற்காத்து கொள்ள முயன்றவன் வாகனத்தை சாவியை பத்திரப்படுத்தி விட்டு , உள்ளே சென்றான்.ஆங்காங்கே வேலை செய்தவர்கள் வணக்கம் கூற பதில் வணக்கம் வைத்தவாறு அவர்களை கடந்து வந்தவன் கண்களில் பட்டதென்னவோ தன் வேலையில் கவனமாக இருந்த சாருவை தான்.


"ஹாய் சாரு ...ஹாப்பி மார்னிங் என்றவன்….' கண்களை சுழற்றியவனது பார்வையில் அவன் தேடியது கிடைக்காமல் போக, "எங்க? உன்னுடைய இன்னொரு பாகத்தை காணவில்லை", என்றவனது கேள்விக்கு பதிலளிக்காமல் தனது வேலைகளுக்கான ஆயத்தங்களை மேற்கொண்டவாரே….கண்கள் அங்கிங்கும் அலையவிட்டவாரு தன் வேலையில் கவனமாக இருப்பதும், அங்கிருந்தவைகளை புரட்டுவதும்,பின்னர் மேலும் கீழுமாக தேடுவதும் என அங்கொருவன் இருப்பதையே அறிந்திடாதவள் போல வேலை செய்ய , அவள் காதை நான்றாக திருகி தலையை பிடித்து ஆட்டினான்.

"ஹேய்! தலையை கலைக்காதனு எத்தனை தடவை சொல்றது பார்த்தி", என்று அவன் முடியை எட்டி பிடித்து உலுக்கியவாரு அவன் தலையை திருப்பி கண்களால் காண்பித்து

"உம்பின்னடி தான் என்னுடைய இன்னொரு பாகம் தொங்கிட்டு இருக்கு...கொஞ்சம் பிடிச்சு ஒட்டி விடு" என்றாள்.…

"ஹாய் ..ஹாய்...ஹப்பி மார்னிங்...என்ன புதுசா என்னையெல்லாம் தேடற...வழக்கமா நான் தான் நண்பா ….பார்த்தி...பார்த்தினு தேடுவேன்....இன்னைக்கென்ன அதிசயமெல்லாம் நடக்குது…ஆனாலும் இந்த மாற்றமும் நல்லாதான் இருக்கு. இந்த உலகத்தில் நம்மள தேடவும் ஆளிருக்கே , என வந்து அணைத்த ப்ரியனை
ஒருத்தவங்களுக்கு ஒரு தடவை தான் விஷ் பண்ண முடியும் ...சோ…"என தோளை குலுக்கி கண்களை சுருக்கி உதட்டை பிதுக்கிவிட்டு,அசதியாக அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தான்.

"அப்படினா? …என்னடா! என்னைக்குமில்லா திருநாளா நம்மையெல்லாம் இவன் தேடியிருக்கானேனு கொஞ்சம் நேரம் குழம்பிட்டேன்...இப்ப தான் தெரியுது இவன் மண்ட காஞ்சுபோய், கோளாறு பாலாற ஓடி,அதுல ஒரு துளி நம்ம பக்கமும் அடிச்சிருச்சி போல….
அட ஆண்டவா …ஏன்?...ஏன்?...
ஒரு ஹாப்பி மார்னிங் சொன்னதுக்கே என்ன இப்படி இவங்கிட்ட கோர்த்துவிட்டு காலையிலே வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சிட்டீயே…"என்று கடவுளிடம் மனசீகமாக மல்லுக்கு நின்றவன் மனதில்



"அப்படி என்னத்த கேட்டேன் ...இவரு இவ்வளவு பிள்டப்பூ கொடுக்கறதுக்கு என யேசித்தவன் சிந்தனையில் உதயமானது அந்த தாரளபிரபுவின் தாராளம் தான்....இவன் கையில எதையாவது கொஞ்ச நேரம் பார்த்துக்க கொடுத்துட்டு மறுநிமிஷம் வாங்கினாலே...அதுக்கு நொடி வட்டி, நிமிஷ வட்டி, கமிஷன்னு ,வரி நிமிஷத்துல குட்டிப் போட வச்சு பாதிய வெட்டிக்கிட்டு மீதிய கொடுக்கலாமா ...அதையும் ஆட்டைய போடலாமானு யேசிக்கற அளவுக்கு நல்லவன்.


இவன்கிட்ட நானெல்லாம் கனவுல கூட மறந்து போய் கடனா கூட எதையும் கேட்டு இருக்க மாட்டேனே….அப்படி எதை மனசில வச்சிட்டு இப்படி பேசறான்,என மண்டை காய்ந்தவன் என்னவென்று அங்கிருந்தவளிடம் கண்களால் கேள்வி தொடுக்க…



"பார்த்தி கொடுத்த போஸ்ஸ விட ,அவன் கொடுக்கற போஸ் இன்னும் கேவலமாயிருக்கு...ரெண்டையும் கட்டி மேய்க்கனும்னு என் தலையில எழுதி ஒட்டியிருக்கு...ஆண்டவா…."என அவள் பங்குக்கு ஆண்ஞவனை சபைக்கு அழைத்து உள்ளுக்குள் குமுறியவள்தலையில் மானசீகமாக அடித்துக்கொள்ள மட்டுமே முடிந்தது.

"ஏற்கனவே சார் எனக்கு ஹப்பீஈஈஈஈஈ மார்னிங் சொல்லிட்டாரம் ,அதனால உனக்கு தனியா சொல்ல மாட்டாராம்,பேரு பாரு 'பார்த்தா பார்த்திபன்'...பாக்கலனா, வெறும் டீபன்னா என று வாரியவள், ஏதோ இவங்க அப்பா அம்மா வச்சதால இவ்வளவு நீளபேரு…இவன் மட்டும் இவனையே பேரு வச்சிக்கனு விட்டுயிருந்தா வெறும் பன் மட்டும் வச்சிருப்பான்…." .கருமிபய என தோளில் முகத்தை இடித்து பழிப்பு காண்பித்தவள்,பார்த்தியை விட்டுவிட்டு ப்ரியனை முறைத்தாள்.

"அடியேய்! என் கார்ரரரரரமிளகாய்!...எந்த படுபாவி எங்க என்ன செய்ஞ்சாலும்,மறக்காம என்ன வந்து முறைச்சிட்டு போ"...என மனதுக்குள் வருத்தவன்…'அய்யோ அய்யோ ….நீ முறைக்கறதும் ,நான் பம்மறதும்...ம்கும் பம்மற மாதிரி நடிக்கிறதும் ...அது தெரிஞ்சும் கண்டுக்காத போறதும் 'மூச்சும் பேச்சும்' போல ஆச்சு" ...என் பார்வை பார்த்தவன் பார்த்தியை ப்ரியமாக பார்க்க ஆரம்பித்திருந்தான் ப்ரியன்.

"அட, இதுக்கு கூடவாடா கணக்கு வச்சிருப்ப படுபாவி..ஶ்ரீ..சீக்கிரம் நாடு திரும்ப ஆசைப்படறது எல்லாம் சரிதான்.அதுக்காக காலை வணக்கத்தை கட் பண்ணியெல்லாம் காசக்க முடியாது...என விளையாட்டுக்கு அவனை வார, நாடு திரும்பும் ஆசை, அந்த சொற்களால் ஏற்பட்ட தாக்கம் மனத்தை தாக்க அவன் முகம் சோர்வை காட்டியது....

அதை பார்த்த சாரு…"ப்ரியாஆஆஆ",, என முறைத்து அவன் தலையில் அவள் பாசமாக தன் கைக்கொண்டு நங்கூரம் பாய்ச்சிருந்தாள்.


அப்பொழுது விளையாட்டு போக்கில் தான் பேசியதின் வீரியம் உணர்ந்தவன்,என்னடா பேசி வச்சிருக்க என்று தன்னை தானே முறைத்தவன்....ஆனாலும் இவளுக்கு நம்ம நிஜமா பாசம் இருக்கா, இல்ல போர் அடிக்கக்குள்ள டைம் பாஸ் பண்ண பாசத்த நம்ம வாலையண்டரா வளர்த்திருக்காளா...இவ கொட்டன கொட்டுக்கு உள்ள இருக்கறதெல்லாம் உருப்பெல்லாம் யாருடாதுனு வரிசையா வந்து பார்த்துட்டு போனாலும் ஒன்னும் சொல்றதுகில்ல….அவன் ஏதாவது பேசினாலும் என்ன தான் முறைக்கிறா...நான் ஏதாவது வது பேசினாலும் என்ன தான் முறைக்கிறா...இதுங்க பாசமரத்தை வளர்க்க என்னை ஏண்டா உரமாக்கிறீங்க….என்று புசுபுசுவென மூச்சு விட்டவாறு தலையை நன்றாக தேய்த்தவன்... அச்சோ! என மண்டை வலியை அவள் மண்டகபடிக்கு பயந்து கையை வைத்து மறைத்தவன், பார்த்தியை திசை திருப்பும் வேலையில் இறங்கினான்.

"டேய் !காலையில ஓட்டின படத்துக்கு இப்ப கனவா...என்ன சொன்னா 'மதுர விழியாள்...அழகு மொழியாள்'
"என் செல்ல குட்டி என்ன பண்ணாலாம்….இந்த மாமாவ மிஸ் பண்ணத சொன்னால….எப்பொழுதும் போல உங்க படத்தை மட்டும் ஓட்டிட்டு விட்டுடாளா…என்று சோகமாக முகத்தை வைத்துகொண்டு குற்ற பத்திரிகை வாசிக்க ஆரம்பித்தவன் பார்த்தியை" மேலும் கீழுமாக பார்த்து வைத்தான்..



"டேய் அவளுக்கு தான் நீ தனியா ரூட் போட்டு ட்ராக் ஓட்டரியே….அப்புரம் ஏன்டா அப்பாவுக்கும் பொண்ணுக்கு இடையில வர..".என அவனை முறைத்தான்…தன் மண்டையில் வண்டாய் குடையும் ஏக்கத்தை அப்படியே அந்தரத்தில் விட்டு விட்டு மகளின் புராணத்தில் பாசபோருக்கு தாயாராகிவிட்டான்.

நிம்மதி பெருமூச்சு விட்ட ப்ரியன் இளநகை ஒன்றை படரவிட்டவாரு சாருவை பார்த்து எப்படி என புருவஙகளை ஏற்றி இறக்கியவன் தான் நின்றிருந்த இடத்திலிருந்து அகன்று சாரு வேலை பார்த்த மேசையின் ஓரத்தில் சாய்ந்தவாரு வசதியாக வம்பிழுத்தான். ,பார்த்தியை பற்றி அறியாதவனா என்ன ...அவன் பலவீனமும் அறிவான் பலமும் அறிவான்...

"ம்ம்ம்...அது அப்படி தான்… அவ எப்ப உங்கிட்ட பேசனாலும் இந்த மாமனையும் ...இதோ இருக்கால்ல என் இன்னொரு பாதி அவளையும் விசாரிக்கனும்…"என ஏக்கம் இழையோடியதோ! குரலில் .

"உன்னை கேட்காமால….உன்னை பத்தி பேசைலைனா அவளுக்கு பொழுதே போகாதுப்பா.₹, வாய தெறந்தா மாமாவ எப்ப கூட்டிட்டு வருவீங்கனு ஒரே நச்சரிப்பு தான்டா.."

"இரு இரு நிறுத்து நிறுத்து.."என அவசரமாக இடையிட்டான் ப்ரியன்.

"இப்ப என்னடா?" என கண்களை சுறுக்கியவன் வார்த்தையில் கோபம் எப்பொழுது வரலாம் என வாசலில் வழி அடைத்து கொண்டு நின்றிருந்தது.பின்னே மகளை பற்றி பேசும் பொழுது குறுக்கே வந்தால்…. "நீ தான்டா கேட்ட..சொல்லி முடிக்கறதுக்குள்ள அம்பூட்டு அவசரமா எதுக்கு கேட்ட சொல்ல வந்தா இழுத்து சீல் வைக்கற", என வார்த்தைகளை மென்று துப்ப அது தப்பித்தோம் பிழைத்தோம் என தெரித்து சிதறி ஓடியது.

"அடேய் ...அல்வா நாங்க கடையிலையே வாங்கி சாப்பிட்டுட்டோம்".

"அதை என்கிட்ட ஏன்டா என்கிட்ட சொல்லற என ப்ரியனை பார்த்தவன், சரி சொல்றதால கேட்கிறேன், எனக்கு"
என்றான்.


என்னது? உனக்கா!..இது உலகமகா நடிப்புடா சாமி,.கிண்டனவனுக்கே அல்வாவா...
அதுக்காக எங்ககிட்ட கூடவாடா …
நா என்ன சொல்றோம்னு உனக்கு புரியலை இல்ல…"


"இல்லையே.. "என்றுபார்த்தி அப்பாவி தோற்றத்தை அவசரமாக அணிய

"நல்ல்ஆஆஆஆ வருது".....பற்களை நறநறத்தான்.

"ஆனா உம்பொண்ணுக்காக அவ பெத்த அப்பன்ற ஒரே காரணத்துக்காக ஒன்னும் பண்ணாம மன்னிச்சு விடேறேன்".

"உம் பொண்ண பத்தி பேச ஆரம்பிச்சா ,இன்னைக்கு நீ நிறுத்துவ என அவனை பார்த்து கண்களை உருட்ட…"


"ஈஈஈஈஈஈஈ….கண்கள் பனித்தோ..ப்ரியா! நீ கேட்டதால தானே சொல்ல வந்தேன்,இல்லைனா…."

இல்லைனா!..., நீ அவள பத்தி வாய திறந்திருக்க மாட்டல்ல..?என உதடு சுழிக்க...

"ஆமாம்,நானா எப்ப ஆரம்பிச்சிருக்கேன்… நீங்க கேட்டா, கேட்டதுக்காக ஒன்னு ரெண்டு வார்த்தை சொல்ல தான் செய்வாங்க…"

"எத…!.நீங்க ஆம்பிச்சா, ஒன்னு ரெண்டோடு வார்த்தையேடு
நீறுத்திடுவீங்களோ ...அப்ப இவ்வளவு நாள் நீங்க அவள பத்தி ஒன்னு ரெண்டு வார்த்தை தான் சொல்லியிருக்கங்களா...அப்ப எனக்கு அவள பத்தி ஆசை தீர சொல்லனும்னு நினைக்கறன்னைக்கு சொல்லி அனுப்பூங்க,நல்ல காது ஸ்பெலிஸ்ட்டா கூட்டிட்டு வந்து பக்கத்திலேயே வச்சிக்கிறேன்" என்று கலாய்க்க....

பார்த்திபனா கொக்கா...அசந்தால் தானே….ஆதுவும் பேச்சு பெணாணை பற்றி என்பதில் விட்டுகொடுதாதிடுவானா? எனான? என் பொண்ணு பத்தி பேசினா,அதை கேட்டா உனக்கு காது டாக்டர பார்க்கறளவுக்கு கஷ்டமா இருக்கா..இனிமே வருவல்ல மாமா மச்சி, விழி மொழினுட்டு... ஆவள பத்தி கேட்டுட்டு ,அன்னைக்கியிருக்கு உனக்கு விடுவேணா என பேச ,இடையில் பேச வந்த பாரியனை விட்டால் தானே…

"என்னடா செய்வ?" ,அழமாட்டாமல் கேட்க…

"டாக்டருக்கு வைத்தியம் பார்க்க நல்லா டாக்டரா விசாரிச்சு வைக்கனும் என தன்பாட்டில் பேச ",


"அவருக்கு ஏண்டா வைத்தியம் பார்க்கனும்,அவர என்ன செய்ய போற".

"நான் அவள பத்தி பேச ஆரம்பிச்சாலே நீவாய பிளந்துட்டு கேட்க ஆரம்பிச்சுடுவ...அந்த ஆளு தான் கொஞ்ச நேரத்தில மொழி புரியாம முழிக்க ஆரம்பிச்சு , முழிக்க ஆரம்பிச்சு ,அப்புறம் மெது மெதுவா பிச்சுக்க ஆரம்பிச்சுடுவார்".

"அவர் ஏண்டா அப்படி பண்ண போறாரு…"

"ஆங்...சூப்பர்...குட்..நைஸ்...ஷார்ப்…
என்ன கேட்கறத விட்டுட்டு நீயே ட்ரை கொடேன், கண்டுப்பிடி பார்ப்பேம் என மேலும் சீண்ட"

"டேய் அவர் வந்தவுடனே கோபத்துல அவர் மேல கைய கியை வைக்கப்போறீயா..நீ பேசறதே ஒரு மார்க்கமா இருக்கு…"

"ச்ச்ச..ச்ச்ச்சச...அப்படியெல்லாம் இல்லடா...அப்படியே அந்த நேரம் தோணினாலும் நீ இருக்கும் பொழுது அவர் மேல ஏன் கைய வைகக போறேன்…"

ஆங் ,அந்த பயம் இருக்கட்டும்…

"ம்கும்...விழிகளை மட்டும் திருப்பி அவனை பார்த்ததவன்,ஏம்மா சாரு உனக்கு அண்ணா நல்ல மாப்பிள்ளையா பார்க்கிறேன்...இத்து போன கீத்து மட்டை உனக்கு சரியா வரமாட்டான்",என்று கிடைத்த கேப்பில் அவன் காலை வாரினான்..

எத, இத்து போன கீத்து மட்டையா!….முகத்தை அஷ்ட கோணாலாக்கியவன்….மலேசியா வந்தாலும் மண்வாசனை மாற மைந்தனா வாழ்ற மச்சான்…!என்றவன்

சாருவை பார்த்து ஏய்! சார்ர்ர்ரு….பே...இங்க என்ன வேடிக்கை… கூப்படறத்துக்குள்ள அத்தனை வேலையும் அம்போனு விட்டுட்டு வந்துட வேண்டியது..மாமனுக்கு மச்சானுக்கு ஒரு ஃப்ரைவசி இருக்கா…என்று
அவளை துரத்த பார்க்க…


"சாரும்மா ...உங்கிட்ட என்னத்த கேட்டு என்னத்த முடிவெடுக்க….அண்ணா சொன்னா வேண்டாம்னா சொல்ல போற …
இப்பவே இந்த விரட்டு விரட்றான்….

சரிவராது...சரிவராது….

இவனை ஒத்தையில விட்டுட்டு நான் நம்மமூரு பக்கம் மாப்பிள்ளை பாக்கறேன்…"என்றான் பிர்த்தி அவர்கள் பேச்சு சுவாரஸ்யத்தில் பேச்சு போகும் திசையறியாமல்.

"நட்பு துரோகி, ஊருக்கு போய் இருக்குடா", உனக்கு என மனதில் மட்டுமே கருவ முடிந்தது ப்ரியனால்.

பார்த்திபனுக்கு கையயெடுத்து கும்பிட்டு ...ஏண்டா என ஒரு பார்வை பார்த்தவன் …அவள் பக்கத்தில் சென்று கையை பிடித்து அழைத்து வந்து இருக்கையில் அமர்த்தியவனது வாய் வார்த்தைகளை சத்தமில்லாமல் அரைத்து கொண்டிருக்க, மனமோ சாருவை பக்கத்தில் அமர வைத்த பிறகே மனம் சற்று அமைதி அடைந்நது,ஆனாலும் இன்னொரு மனமோ ,அவள் மீதான கோபத்தில் அந்த நாற்காலி தள்ளிவிட உத்தேசத்தில் கால்களை தயார் செய்தது..

சட்டென விழித்துக்கொண்ட புத்தியோ…"அடமுட்டாள்பயலே….உன்னையே மாப்பிள்ளை பார்க்க வைக்கற வரைக்கும் அடங்க மாட்ட போல என புத்தி சொல்லி மண்டையில் தட்ட…"

மண்டையிலிருக்கும் கொண்டையை மறத்திட பார்த்தோம் என முகத்தை சரியாக வைத்துக்கொண்டு பார்த்தியை பார்க்க ...அவனும் இவனை சந்தேகமாக தான் பார்த்து கொண்டிருந்தான்.

"டேய்…!எத பேச ஆரம்பிச்சு எங்க வந்து நிற்கற...ம்ம்ம்….
படுத்தாத சொல்லி தொலை…"என்றான் இதற்கு மேல் இவனிடம் முடியாது என்ற்.

"ம்க்கும் சரி சொல் சொல்றேன்.."



டேய்…! நான் சும்மா ஊஊஊலுலாய்க்கு தான் பேசினேன்….நீ விடாம நோண்டன…
அததேன் ஒரு டைம்பாசுக்கு போற வரைக்கு போகட்டும் னு விட்டுட்டேன்.
ஈன்னது….ச்சும்மாவா….
என்னை வச்சு டைம்பாச பண்ணீங்காளா...கொலைகார பாவிகளா...உங்களுக்கு பாவ தோஷமே கிடையாது….போங்கடா ...என முருக்கி கொண்டு செல்ல ...இவர்கள் இருவரும் அவனை தொங்கி கொண்டு சென்றனர்.

விளையாட்டாக எல்லோரும் கூறுவது தான்...ஆனால் அவ்வார்த்தை ப்ரியனின்.உள்ளத்தை எவ்வளவு வீரியமாக தைக்கும் என பார்த்தி அறிந்தே வைத்திருந்தான். ஆனால் பேச்சு சுவாரஸ்யத்தில் வந்து வீழ்ந்துவிட்டது...அல்லவா முடியும்..அதை உடனே முகத்தில் காண்பித்தால் அவனை இன்னும் தைக்கும். ஒருவரும் உள்ளத்திலும் அவன் வலி அவனை விட அதிகமாக வலிக்க, ப்ரியனை சமாதான படுத்த சென்றனர்.

இதற்கு மேல் தான் அங்கிருப்பது அதிகம் என.நினைத்த பார்த்திபன் தனக்கு வேலையிருப்பதாக கூறி அங்கிருந்து அகன்று சென்றுவிட்டான்.

"டேய் …!டேய்ய்ய்…"சாரு கத்திகொண்டே பின்னால் செல்ல நின்றால் தானே.

"எங்கிட்ட பேசமாட்ட…" அவள் கேட்கும் முன்னே அந்த வார்ததைகள் கமிறி இடறியது ,அழுகை அடைத்ததனால்.

"சாரி என்ன பாருடா…!"என கூறுவதற்குள் சாருவின் கண்களில் கோடாக வழிய ,இதற்கு மேல் கோபத்தை எங்கே இழுத்து பிடித்து வைக்க..

"இதுகொன்னும் குறைச்சலில்லை..!".என்றவன் சட்டென திரும்பி அவள் கண்களை துடைத்துவிட்டான்.

'அவர் சொன்னதும் ஈஈஈஈ எல்லா பல்லையும் இளிச்சிகாட்டிடு நிற்கற ம்ம்ம்..புசுபுசுவென மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது.." சாருவின் ப்ரியனுக்கு


அவனுக்கு தெரியும் பார்த்திபன் ,சொன்னதும் இவள் முகத்தை தானே பார்த்தான்...ஒரு நிமிடம் சுருங்கி விரிந்ததும் ,சர் என ஏறிய கோபத்தையே அதனால் தானே கட்டுப்படுத்த முடிந்தது. ஆனாலும் ஆசை கொண்ட மனம் அவளது சமாதானங்களை வாய்மொழியாக எதிர்பார்த்தது காதல் கொண்ட இதயம்.

"நான் தான் ஒன்னுமே பேசலையே...
அப்புறம ஏன் இவ்வளவு கோபம் .."

"நீ வேணும்னா இதயத்திடம் கேட்டு பாருங்க அது ப்ரியா,ப்ரியானு தான் மூச்சு விடுதே...."


"அடிப்பாவி இது எப்போ...நான் கூட ப்ரியன் ப்ரியன் மூச்சு விடும்னு இல்ல நினைச்சேன்….யாருடி அந்த ப்ரியா…"என முகத்தில் ஒவ்வாமையை டன் கணக்காக வழிய விட்டு மேலும் கீழுமாக பார்த்து வைத்தான்.

"அடேய்…!வீணாப்போனவனே...உன்ன போய் சமாதானம் படுத்த வந்தேன் பாரு" என்று சராமாரியாக கவனிக்க…
அவளை வாகாக வளைத்தவன்….இனிமே ஃப்ரியா...ஃரியானு இந்த வாயில வந்தது...என ஆரம்பித்தவனின் செயலில்...என்னங்க இது நான் கூட இந்த பயலை இந்த சமாதானபடுத்தக்குள்ள ஒருவழியாடும் பார்த்தா...இப்பாடியாயிடுச்சு...சரிவிடுங்க….அவனுக்கு தெரிச்ச வழியில அவள கவனிச்சு ஒருவழியா ஆக்கிட்டான்.

"அடேய் …!.இப்பதானங்க சமாதானம் ஆச்சு ...அதுக்குள்ள என்னங்க ...ஆச்சு ...உருட்டுகட்டையோடு துரத்தது…

அதானே இந்த பய வசாம சிக்கினால...வஞ்சனை இல்லாம கொடுக்கல் வாங்கல கச்சிதமா பண்ணினோமா இல்லாம ,,ஏழரைய இல்ல கூட்டி வச்சிருக்கான்.அப்படி என்னத்த பண்ணிட்டான் கேட்கீறீங்களா….என்ன கேட்ட மாதிரி உங்கிட்ட வந்து எனக்கு வேற பொண்ணு பார்க்கலாம்னு சொன்னா என்ன பண்ணுவ கேட்டுவச்சிருக்கான் பிக்காலி...அதான் ,உடம்பு உருளை உருளையா இல்லாம இருந்தா சரிதான்.
பின்ன இவன் தான் இப்படினா அந்த பார்த்தியும் யேசிக்காம எதையாவது பேசிட்டு முகத்தை தூக்கிண்டு திரியறது...இவங்க ரெண்டு பேர் நடுவுல யாருங்க மல்லுக்கட்டியே மூச்சு முட்டி போகுதுங்க அவளுக்கு….நீங்க உருட்டு கட்டையெல்லாம் பத்தாது ...வேற ஆயுதமிருந்தாலும் சிபாரிசு செய்தீகனா பரீசீலிக்கப்படும்...ஏதோ நம்மால முடிஞ்ச உதவி...

அடிதடி இரகளையென இருவர் உலகமும் பார்ப்பவர்களுக்கு ,இதுங்களுக்கு வேற வேலையே இல்லையா என்று தோன்றினாலும்,வார்த்தையில் கூட பிரிதலை விரும்பாதவர்கள்.

அடேய் பார்த்தி பார்த்து இருந்துக்கோ...மலேசியா டாக்டர் மண்டைய பிச்சுக்க வைக்க ...முதல்ல உம்மண்ட பத்திரமா இருக்கனும்ல...பார்த்து இருந்துக்கோட தம்பி…..


ஆம் அவர்கள் இருவரும் பணம் ,படிப்பு,சொந்தம் பந்தமிருந்தும் பெற்றவர்கள் இல்லாது உண்மையான பாசத்திற்காக ஏங்கும் அனாதைகள்….திருநெல்வேலியை பூர்வீகமாக கொண்டவர்கள்...

அதனால் என்னவோ ...பார்த்திபனின் அவனின் குடும்பத்தினின் மீதான பாசமும்...மனைவி மீதான காதலும்...மகள் மீது அவன் காட்டும் கொள்ளை பிரியமும் ...அவர்களை வசிகரித்து வசியம் செய்து கட்டி போட்டு வைத்திருந்தது …

இதோ பார்த்திபன் மலேசியா வந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது...ஒரு தடவை கூட தாய் நாடு திரும்பவில்லை..
இவர்களின் இருகிய நட்புக்கோ வயது ஒன்றை….

நாடு விட்டு நாடு வேலை செய்ய வந்த புதிதில்...கண் முன்னே நடந்த தவறுக்கு காட்சி பொருளாக இருக்காமல் சாட்சியாக இருந்ததால்….வேலையை விட்டு வெளியே வந்துவிட்டான்...புது இடத்தில் அதற்கு மேல் அவனால் எதுவும் செய்ய முடியவில்லை...வேலையையும் தக்க வைத்து கொள்ள இயலவில்லை…

ஆம் அவன் அயல்நாட்டில் வாசம் புரிகிறோம்...அத்தனையும் இழந்து அதனை மீட்டெடுக்கவே இந்த போராட்டம் என்பதனை மறந்து ….தன் மேலதிகாரியிடமே தன் பலத்தை பரிட்சித்து பார்த்துவிட்டான்.

அப்படி என்னதாங்க ஊர் ஊர்விட்டு வந்து இந்த பார்த்தி செய்திருப்பான்...அடுத்த அத்தியத்தில்

மக்களே இதோ அடுத்த அத்தியத்துடன் வந்துவிட்டேன்….உங்க விமர்சனங்களுக்காக ஆவலுடன்.கீழே பகிரவும்.

 
Last edited:
Messages
31
Reaction score
26
Points
18
அத்தியாயம் 5


வழக்கம்போல காலையில் தன் கடமை முடித்து ,அவனது செல்வமகளின் இனிய சாரல் மழையில் நனைந்து ,வேலைத்தளத்தை நெருங்கியவனை வீம்பும், ஆத்திரமும் கலந்த குரலே வரவேற்றது.


"என்னதிது காலையிலே யார் குரலிது,, அதுவும் இந்த ஒதுக்கபுறமுமான இடத்தில்", என யோசனையேட தன் நடையை நிறுத்தி குரல் எங்கிருந்து வருகிறது என தன் செவிகளை கூர்மையாக்கினான்.



கண்களை சுழல விட்டவனின் கண்களில், அவனது போறாத
நேரம் அப்பொழுதென்று அங்கு அவனை தவிற அங்கு வேறு யாருமில்லை, துணைக்கு அழைக்ககூட ஆட்கள் நடமாட்டமில்லாத இடத்தில் சத்தம் கேட்க.,யாராயிருககும் இந்த இடத்தில்….இந்த நேரத்தில் யோசனை செய்தவாறே, சத்தம் வந்த திசையை நோக்கி நகர்ந்தான் ..

பரிட்சயமான குரல் மெதுவாக ஒலிப்பது கேட்க...அந்த குரலில் இருந்தது அழுத்தமா...அல்லது குருரமா என்று பிரித்தறிய முடியாத ஒன்று அவனை அங்கேய தேக்கியது…

"என்ன திவாகர் சொல்றீங்க, எவ்வளவு நாள் வேணா நல்லா யோசிங்க" , ஆனா நான் சொல்ற முடிவுக்கு தான் நீங்க வந்தாகனும்.


"வரணும்...வரவழைப்பேன்…,வராமல் எங்க போக போறீங்க,,இல்லைனாலும் வரவழைக்க என்னால முடியும்", என்றது அந்த குரல் அழுத்தமாக…."அந்த குரல் அந்த அதீத அழுத்தம், நான் சொன்னதை செய்து தான் ஆகவேண்டும் என்று பறைசாற்றியது.

"கலக்கமும் கோபமுமாக,என்ன சார் நீங்க சொன்னதுக்கு ஒத்து வரைலைனா மிரட்டுவீங்களா. நீங்க என்ன மிரட்டினாலும் என்னால முடியாது …உங்க மிரட்டலுக்கெல்லாம் பயப்படுற வேண்டிய அவசியம் எனக்கில்லை...பயப்படற ஆளும் நான் கிடையாது".


மேலும் தொடர்ந்தவன்,"நான் சொல்லறத நல்லா கேட்டுக்கோங்க ,நான் இங்க நாடு விட்டு நாடு பிழைக்க தான் வந்திருக்கேன்.ஆனா அந்த பிழைப்புக்கு என் உழைப்பு மட்டுமே மூலதனமா இருக்குமே தவிற நீங்க சொல்ற ஈனதனம் எல்லாம் காரணமா இருக்க முடியாது என அழுத்தமாக மறுத்து கொண்டிருந்தான் அந்த இருபதிலிருந்து இருபத்தி ஐந்து மதிக்க தக்க இளைஞன்.

அவன் குரலில் இருந்த சலிப்பும் ஒவ்வாமையும், இந்த வாக்குவாதம், நீண்ட நேரமாக நடப்பதை காட்டியது.

அவர்கள் குரல் தெளிவாக கேட்கும் இடத்தில் சென்று நின்று கவனித்தவன் எதற்கும் இருக்கட்டுமென, தன் அலைபேசியில் இருவரது உரையாடலையும் பதிவு செய்ய ஆரம்பித்தான் பார்த்திபன்.

"நீ இதை செய்யலைனா, பணத்தை விட்டெரிஞ்சா இந்த வேலைய செய்ய ஆளாயில்லை. நீயாயிருந்தா யாருக்கும் எந்த சந்தேகமும் வராது.நீங்க ரெண்டும் பேருமே ஒரே நாட்டை சார்ந்தவங்க அதனால உன் மேல சந்தேகம் அவனுக்கு அதிகம் கிளம்பாது ,என்னுடைய வேலை சுலபமா முடியும், அதனால தான் உன்னை செய்ய சொல்றேன்…அவன சுலபமா இங்கிருந்து என்னால துரத்த முடியும். ஆனா அவ்வளவு சுலபமா அவன துரத்திவிட்டுட்டா , அவனால் நான் பட்டத என்னால மறக்க முடியாது. அதை நான் மறக்கனும்னா, அவன் வாழ்நாள் முழுவதும் அவனால மறக்கமுடியாத அளவுக்கு அவனுக்கு பாடம் கத்துக்கொடுக்கனும்".

"நீ வேறயெதுவும் செய்யவேணாம்...மெதுவா அவன்கிட்ட பேச்சுகொடுத்து நான் கொடுக்கறபொருளை அவன்கிட்ட மாத்திடு".

"நாங்க எல்லோரிடமும் தேடற மாதிரி தேடி அவனை கையும் களவுமா பிடிச்சு அசிங்கபடுத்தி...இந்த இடத்திலிருந்து துரத்தி அடிக்கனும்.உன்ன செய்ய சொல்றது ரொம்ப சாதராணமான விஷயம்,அவன் ஏண்டா இங்க வந்தோம்...இவனுடைய வழியில குறுக்க வந்தோம்னு நினைச்சு நினைச்சு கதறணும்... ஊரு விட்டு ஊரு வந்தோமா..வந்த இடத்தில் ஒழுங்கா நம்ம வேலைய மட்டும் பார்த்தோமா இல்லாமா,அவன் என்ன பண்றான் ,இவன் என்ன பண்றான்,கண்காணிக்கறது ...மிரட்டறதுனு... வேலைக்கு வந்த இடத்துல அத மட்டும் பார்க்காம,கண்டதையும் நோண்டறது…"


என அவன் ஸ்ருதி மெல்ல மெல்ல ஏற...பார்த்திபனின் இரத்தகொதிப்பும் மெல்ல ஏறியது.

உள்ளே நடந்த சம்பாஷணைக்கான காரணம் மெல்ல இப்பொழுது தான் புரிய ஆரம்பித்தது.

இவனது தகிடுதத்தங்களையெல்லாம் கண்டுபிடித்து ,அதையெல்லாம் விட்டுவிடு என்று சரவணன் கூப்பிட்டு எச்சரிக்க அலெக்ஸ்ஸின் மேலதிகாரியாக இருந்தாலும் தன்னைவிட வயதில் சிறியவன் ,அதுவும் தற்பொழுது தான் வேலையில் சேர்ந்த அந்நிய தேசத்தை சேர்ந்த ஒருவன் தன்னை மிரட்டுவதா என காழ்ப்புணர்ச்சியும் மேலோங்க அவனை பழிவாங்கவே இந்த திட்டம்,அதை நிறைவேற்றவே இப்பொழுது நடக்கும் இந்த மிரட்டலுக்கான காரணமும் என புரிந்தது.

மனம் அதுதான் எத்தனை விசித்திரமானது….வீட்டிற்குள்ளே உடன்பிறந்தவர்கள் தொடங்கி….அது வழி வழியாக பயணித்து நாடு மதம் மொழி இனம் கடந்து காற்றைவிட வேகமாக,ஒலியையே மிஞ்சும் வண்ணம் ஊடுருவி இத்தனை அசுர வேகத்தில் பரவும் இந்த மனித மனங்களை ஆக்கிரமிக்கும் காழ்ப்புணர்ச்சியும்,பொறாமையையும் என்னவென்று சொல்ல...அன்பும் பாசமும் அடித்தளமாக கொண்டு வாழ வேண்டிய வாழ்க்கையில் அலைப்புறுதலும் பாதுகாப்பின்மையும் மட்டுமே மனம் முழுக்க ஆக்கிரமிக்க யாரை குறை சொல்ல..என சிந்தனை வேறுபக்கம் தாவ,உள்ளிருந்து வந்த அறையும் சத்தம் பார்த்திபனை நிகழ்உலகிற்கு கொண்டுவர,ஒரே நிமிடம் என்ன நடந்ததுவென மனம் அதிர்ச்சியாக, அந்த நிமிடம் அந்த இளைஞன் மட்டுமே மனதில் நிற்க,செய்ய நினைப்பதே மோசமான வேலை ,இதுல கையை வேற நீட்டுவானா ...கோபம் சர்ரென மண்டையை ஆக்கிரமிக்க அடுத்த நிமிடம் உள்ளே நுழைந்தவனின் கரம் அலெக்ஸின் முகம் திரும்பியிருந்தது.


கையை உதறிக்கொண்டு மறுகையால் திவாகரை அணைவாக பிடித்தபடி, அலெக்ஸை உறுத்து விழித்தவாறு நின்றிருந்தான் பார்த்திபன்.

சுள்ளென விழுந்த அடியின், "இந்த புள்ள பூச்சிக்கு இவ்வளவு திமிரா", என கோபத்துடன் நிமர்ந்து திவாகரை பார்க்க, அங்கே அவன் பார்த்தது என்னவோ திவாகரை தாங்கியபடி நின்ற வண்ணம் தலையை கோதி தன் கோபத்தை அடக்க முற்பட்ட பார்த்தியை தான்.

இவன் எப்ப உள்ளே வந்தான்,நாம பேசறத கேட்டிருப்பானோ...அதுக்காக எம்மேலேயே கைய வைப்பானா...
பார்த்திபனின் வரவையும், அவனது அடியையும் எதிர்பார்க்காத அலெக்ஸ் 'பார்த்திபன்', என அதிர்ச்சியையும் வலியை ஒருங்கே பிரதிபலிக்க ,கைகளால் கன்னத்தை தாங்கிய வண்ணம் கத்தினான்.

"ஷீ! வாய திறக்காதீங்க,டேய் திவாகர்,

அண்ணே! நீங்க இங்க எப்படி?இது ரொம்ப நாளா நடக்குது...இவர் சொல்றதுக்கு நான் உடன்படலைனா,வேலைய வச்சு மிரட்டறாரு...நான் முடியாதுனு எவ்வளவோ சொல்லி பார்த்துட்டேன்.ஆனா, இவர் என்னை செய்ய சொல்லி ரொம்ப கட்டாயப்படுத்தறாரு.



டேய்! ,அந்தாள் கட்டாயப்டுத்தனா கைகட்டி தலையாட்டனும்னு சட்டம் ஏதும் இருக்கா என்ன? என்றவனின் மனதை பார்த்திக்கு எப்படி சமநிலைக்கு கொண்டு வருவதே என்று தெரியவில்லை, அயல்நாட்டில் குடும்பத்திற்காக தன் இயல்பை தொலைத்து நட்பை மறந்து, குடும்பத்திற்காக அவர்களின் அவர்களின் நலனுக்காக, அவர்களின் அன்றாட வாழ்க்கை போராட்டத்தை போக்க,தன் இளமை காலத்தின் இயல்பை வாழ்க்கையென்னும் போராட்டத்தில் எதிர் நீச்சவ் போட்டே வாழ்க்கையின் மிக அழகான இளமை நினைவுகளை, எதிர்காலத்தில் தன் சந்தியினரிடம் பகிர்ந்து கொள் இனிமையான நினைவுகளை விட,வாழ்க்கை சக்கரத்தை இயந்திர பிடியில் பிடிமானத்திற்காக பற்றிக்கொண்டு சுற்றிய சுவடுகளே,அதிகம் வைத்திருக்கும் அடிதட்டு மக்களின் வாழ்வியல் போராட்டத்தை,அப்போராட்டத்தில் துவளும் தோல் கொடுக்க அனைத்து சொந்தம் காத்திருந்தும்,தேள் கொடுக்காய் கொட்டுபவர்களின் வார்த்தைகளை பகிர்ந்து கொள்ள மனமின்றி போலி புன்னகையை முகத்தில் சுமக்க வேண்டிய கட்டாயம், தம்மவர்களின் அகபொலிவிற்காக...வார்த்தைக்கொண்டு வரிகளாய் சமைத்திட இயலுமா என்ன...ஒன்றா, இரண்டா ஓராயிரம் கதைகள் அவர்கள் வலிகளை வரைந்திட இயலுமா...ஆனாலும் அக்கம் பக்கத்தினர்...அவனுக்கென்ன அயல்நாட்டு வாசம் ...அப்புறமென்ன என அவர்கள் விடும் பெருமூச்சுக்கு , எங்கே தெரிய போகிறது… அவர்கள் மூச்சு விடக்கூட பேச்சு வாங்கிய கணங்கள் எவ்வளவு கனமாய் நகர்ந்ததென்று இன்று காசாய் மாறி நிற்கிறதென்று..அக்கம்பக்கமே இப்படியென்றால் சுற்றத்திற்கு சொல்லவும் வேண்டுமா என்ன????



அவனுக்கு தெரியாத வலியா?....உயிரோடு உதிரத்தையும் பிரிந்து,விரும்பமின்றி விரும்பி வேலை செய்யவேண்டிய கட்டாயத்தை…



இவைகளை நினைத்தவன்,
உங்கம்மா, கஞ்சிய ஊத்தினாலும் உப்பு போட்டு தான ஊத்தினாங்க...நாடு விட்டு நாடு வந்து கண்டவங்கிட்டயெல்லாம் அடி வாங்கவாடா உடம்பு வளர்த்து வச்சிருக்க", என்றவன் திவாகரை முறைத்தான்.

அலெக்ஸ்ஸை அடித்து நொருக்கி சாறு பிழியும் ஆசை கழுத்தளவீ கரைபுரண்டு ஓடினாலும்,அந்த ஆசை கண்களின் வழியே கட்டுபாடின்றி வழிந்தாலும் கட்டுபட்த்த வேண்டிய சூழலில் தள்ளப்பட்ட கையாளாகா தனத்தில் தள்ளபட்டவன்….கைக்கு கடிவாளமிட்டவன்அதையெல்லாம் குரலில் தேக்கி, "ஏன் உங்களுக்கு தான் கத்த தெரியுமா.,உங்க கை தான் அடிக்க தெரியுமா, ஏதோ உங்க அளவுக்கு எங்க ஃபர்பாமன்ஸ் இல்லைனாலும்,தேறாவாவது செய்யுமா, எப்படியிருந்தது என்னுடைய பதில் .ஏன் கேட்கறேனா...இல்லைனா கூடா, இனிமேலாவது உங்ககிட்டையே பயிற்சிக்கு வரலாம் தான் கேட்டேன்", என்றவனை வெட்டவா குத்தவா என பார்ததுகொண்டே கன்னத்தில் பொதிந்த கைகளை எடுக்காமல் கண்களால் எரித்தான் அலெக்ஸ்.

"என்ன மிஸ்டர். அலெக்ஸ் எப்படியிருந்தது ,இப்படி சர்ப்ரைஸ்ஸ எதிர்பார்க்கலயில்லை...பிடிச்சிருந்ததூ, கன்னத்தை பற்றியிருந்ந அவனது முகத்தை அளவிட்டவாரே கேட்க ..பார்த்திபனை முறைத்தவன் ,திவாகரை முறைத்துவிட்டு ,"ஆள் தெரியாம மோதிட்டீங்க, வேலைக்கேட்டு பிழைக்க வந்தவங்க உங்களுக்கெல்லாம் என்னடா மானம் ,அவமானம்...இதுல தன்மானம் வேற...அவன் குரலில் நகையாடல் ஏகத்துக்கும் வழிந்தோடியது…

அவன் வார்த்தைகள் மனதை கூறாக அறுத்தாலும், அவனை பார்த்து ,அலெக்ஸ்ஸை விட அதிக நக்கல் கண்களிலே வழியவிட்டவன்...இங்க ஒன்னுத்துக்கும் உதவாத உதாவக்கரையும், மேல்மாடி காலியான வெத்துவேட்டுக்களும்,எங்க ஊர் சோளகாட்டு பொம்மைக்கு போடற சொக்காவ மாட்டிக்கிட்டு டம்மி பீஸ்ஸெல்லாம், மாஸ் பீஸ்ஸா ஷோ காண்பிக்கறத தகவல் ..அதான் உண்மையானு பார்த்துட்டு போகலாம்னு வந்தோம் என்றவன் அதோடு விட்டால் பராவாயில்லையே...நம்பிக்கையில்லைனா திவாவ உண்மை யானு கேட்டு தெரிஞ்சுக்கோ…..என்ன திவா நீ சொல்லு...நீ கேள்விபட்டது உண்மையா,பொய்யானு ...சரி அதை அப்புறம் பேசலாம் அந்த விஷயந்ந ஆள் தெரியாம மோதிட்டானா...


ஹோ அப்படியா…இருக்கலாம்,ஆனா, திவாகர் உனக்கு நல்லா தெரிஞ்ச ஆள் தான் போல...நீ வேணா மோதி பாரேன் …நான் இருக்கிறேன் பயப்படாதே என்ற நம்பிக்கையை கண்களில் விதைத்தது, அவனது வெறிச்சோடிய கண்களை கண்டவன் ,அவனை இழுத்து முன்னால் விட்டு, "இப்ப அடி அடி பார்க்கலாம்" என்பதை போல் நின்றான்..


"யூ ….யூவ்….."


"மீ...மீ…." என்ற பார்த்தபனின் பார்வையோ 'போடா' என்ற வாசகமே அப்பட்டமாக பிரதிபலித்தது.

"உங்களை அப்புறம் கவனிஞ்சிக்கிறேன்", என அந்த இடத்தைவிட்டு அகன்றான்.

போயா...போ….நீ எப்படி கவனிப்பையோ ,அதைவிட நல்லா கவனிக்கற விதம் எங்களுக்கும் தெரியும்...இவனெல்லாம் ஒரு மனுசன்,எப்படிடா இப்படி இருக்கானுங்க என அவன் உள்ளம் கொதித்தது.

"என்னணே!...இப்படி பொட்டுனு கையை நீட்டீட்டீங்க...ரொம்ப மோசமானவன், இவன் பேச்ச கேட்கலைனா,ஏதாவது பழி போடறது, வேலைக்கு நடுவுல நம்ம கொழப்பி வேலை செய்ய விடாம மேனேஜ்மென்ட் கிட்ட போட்டு கொடுக்கறதுனு கீழ்த்தரமா இறங்கிடுவான்.இவனால வேலைய விட்டு போனவங்க பல பேர் இருக்காங்க..சொந்த ஊரா இருந்தா கூட பராவயில்லை.நாமே நம்ம நாட்டவிட்டு சொந்தபந்தத்த விட்டு வயித்து பொழப்புக்கு வந்திருக்கிறோம்.இப்ப பெரிய பிரச்சனை ஆச்சுனா என்ன பண்ணறதுனே தெரியலைணா! ...என்று அழமாட்டாமல் தவிக்க…"விடுறா அதுக்காக அவன்கிட்டயெல்லாம் அடிவாங்கிட்டு பேசாம இருக்க முடியுமா…"

"நாம இங்க வேலைக்கு தான் வந்திருக்கோம்.இவன மாதிரி வேலை தெரியாதவனுங்க தான், இந்த கீழ்த்தரமான வேலை செய்ஞ்சு இந்த கம்பெனியில இவன் காலத்த ஓட்டனும்.நாடு நாடு விட்டு வேலை தேடி வந்தவங்க நமக்கு பயம் எதுக்கு...வேலை தெரிஞ்சவனுக்கு உலகமே அவனுக்கானது. இன்னும் கொஞ்சம் நாளைக்கு நமக்கானதா இருந்திட்டு போகட்டுமே".

"இதமட்டும் உன்ன பெத்தவ பார்த்திருந்தா யேசிச்சு பாரு, அவ அடிவயிறு கலங்கி தவிச்சி கஞ்சி குடிக்க மனசில்லாம செத்தே போய் இருப்பா...நம்ம மாதிரி ஆளுங்கிட்ட பண வேணா பஞ்சமா இருக்கலாம் .பாசம் அதுக்கு என்னைக்குமே பஞ்சம் வந்ததில்லை".



"எப்படியும் அவன் சொன்னத செய்ய சொல்லி .உன்ன தொந்தரவு பண்ண தான் போறான் ...அதனால வரது வரட்டும்… பார்த்துக்கலாம்.யாருக்கிட்டையும் எதுவும் சொல்லிக்க வேணாம் ...நீ போய் உன் வேலையை பாரு", என அவனை ஒருவாரு தேற்றி அனுப்பிவிட்டு ..இப்ப என்ன.செய்றது ,இந்த பிரச்சகனையிலிருந்து குழப்பத்திலிருந்து எப்படி தப்பிக்கறதுனு
கலக்கம் மூளையை ஆக்கிரமிக்க….அவனுக்குள் இருந்த விருமாண்டி ஆகறது ஆகட்டும் னு இன்னும் ரெண்டு வைக்காம போய்ட்டுமே ,அடப்பாவி என அவன் மனசாட்சி கூவ, அதை அப்படியே அமுக்கி உள்ளே தள்ளிவிட்டு தன் வேலையை பார்க்க சென்றான்.


பார்த்திணா, உங்களை எம்.டி கூப்பிட்டார். என்னணா இப்ப தான் வந்தீங்க அதுக்குள்ள எம்.டி அளவுக்கு பரிச்சயமா.

வந்தவனை பார்த்து முறைத்தவன், "ஏன் நான் எம்.டி கிட்டயெல்லாம் பரிச்சயம் வச்சிக்க கூடாதா…"என்று வந்தவனிடம் வார்த்தையாடலை தொடர்ந்து கொண்டே, அவரது மனதில் தன்னை பற்றி எந்தளவுக்கு இவருக்கு தெரியும்,அலெக்ஸ் என்ன கூறியிருப்பான்...அலெக்ஸ்ஸீன் வார்த்தையின் மீது இவருக்கு எந்தளவு நம்பிக்கை வைத்திருப்பார் என உள்ளத்தின் ஒரு ஓரம் ஓடியவாரு எம்.டி.விஜயபூபதியின் கேபினை அடைந்தவனை,அந்த பெயுரும் மின்னி வரவேற்பதை போல் ஜொலிக்க,முதன் மமுதலில் சந்திக்க போகும் பொழுது, இந்த மாதிரி ஒரு சூழலிலா சந்திக்க வேண்டும் அலைபுறுதலும் உள்ளே சுழல அதை ஒதுக்கியவன் அனுமதி கேட்டு கதவை தட்டினான்.

கதவை தட்டி அனுமதி வாங்கி கொண்டு உள்ளே வந்தவன்…

"உட்காருங்க பார்த்தி...என்ன பிரச்சனை...உங்களை மேல அலெக்ஸ் ஏகப்பட்ட புகார் சொல்றாரு …"

இப்பதான் சேர்ந்திருக்கீங்க, கொஞ்சம் பொறுப்போடு நடந்துக்கனும் உங்களுக்கு சொல்லி தெரியனுமில்லைனு நினைச்சேன்". ஆனா உங்க வேலை மேல அலெக்ஸ் பயங்கர அதிருப்தியில இருக்காரு …"அவர் சொல்றத பார்த்தா எடுத்து சொல்றதெல்லாமா வீண்போல சொல்றாரு".

கேள்விகள் பல ,பதிலிருந்து கேள்விகளுக்கான விடையளிக்க மனமில்லாமில்லாமல், மனவலிக்க நிகழ்வுகளின் தாக்கம் தாங்காமவ்
அவ்வலகத்திலிருந்து வெளியேறியிருந்தான் பார்த்திபன்.

அன்பூக்களே... இதோ அடுத்த அத்தியாயம் பதிந்துவிட்டேன் ...உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன்🌹🌹🌹❤️❤️❤️
 
Last edited:
Messages
31
Reaction score
26
Points
18
அத்தியாயம் 6

ஒருவழியாக திவாகரை தேற்றி, அந்த இடத்தில் இருந்து அழைத்து கொண்டு தங்கள் இருக்கைக்கு வரவும், அந்த மாலே மக்கள் வெள்ளத்தாலும் வேலை செய்பவர்களாலும் நிறைந்திருந்தது.

கேண்டீன் சென்று டீ குடித்தவர்கள் சற்று நேரம் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொண்டு, பிரச்சினை அதுவாக வந்து வழிமறிக்கும் பொழுது பார்த்துக்கொள்ளலாம்,அதுவரை யாரின் கவனத்தை கவராமல் இருக்குமாறு எச்சரித்த பார்த்தி, அவரவர் இருக்கைக்கு சென்று தன் வேலைகளை பார்க்க ஆரம்பித்தனர்.

கைகள் வேலையை செய்தாலும், மனம் அடுத்து என்ன நடக்க போகிறது….எப்படி எதிர்கொள்வது என சிந்தனையில் ஓடிக்கொண்டு தான் இருந்தது. என்ன
யோசித்தும் புதிதாக சேர்ந்த தன்னை பற்றிய பெரிதான எண்ணங்கள் இருப்பதற்கான சாத்திய கூறுகள் அறிதான நிலையில்,தன்னை பற்றி என்னவென்று எடுத்து கூறி,தன் செயலுக்கான நியாயங்களை வாதாடுவது.

அந்த சூழ்நிலையில், சூழ்நிலை கைதியாக நின்று தவித்தவன் மட்டுமே கண்ணுக்குள் விழுந்து ...மூளையில் தெரிய...மற்றவைகள் பின்னுக்கு சென்றுவிட்டது.ஆனால், இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருந்திருக்கலாமோ...தன்னை மட்டும் பாதித்தால் பராவாயில்லை...வாழ்க்கை கனவுகளையும்,குடும்பத்தாரின் கனவுகளையும் சேர்ந்து தன் தோளில் சுமக்கும், வளரும் வரும் குறுத்தையும் தன் அவசரத்தால் பாதித்துவிட்டால்.


தன் பாக்கெட்டில் கைவைத்து பார்த்தவன் அதில் அலைபேசி பத்திரமாக நின்றுக்கொண்டிருந்தது. ஆனாலும் ஒரு சஞ்சலம், எந்த பிரச்சினையும் இல்லாமல் சுமுகமாக முடிய வேண்டும்.

சரி இதனை பற்றி சரவணனிடம் பேசி ஒரு முடிவுக்கு வரலாம்.சரவணனை எச்சரிக்கை செய்ய வேண்டிய கட்டாய்த்தை உணய்ந்த பார்த்தி... இப்பொழுது சிக்கலில் நாங்கள் இருவரும் நேரடியாக இருந்தாலும், இலக்கு சரவணன் தானே..


மணியை பார்த்தவன் இடைவெளி எடுத்து கொண்டால் நல்லாயிருக்கும், அதோடு சரவணனையையும் சந்தித்து பேசுவது நல்லது என்ற எண்ணம் எழுந்தது. அதோடு அலேக்ஸ்,என்ன நினைத்துக்கொண்டிருக்கிறான்...எப்படி காய் நகர்த்துவான்...யாரின் மீது பழியை எப்படி சுமத்துவான் என்றே தெரியாது...அதோடு இப்பொழுது அவன் இன்னும் மோசமான மனநிலையில் அடிபட்ட நரியாய் யோசித்து கொண்டிருப்பான்.


இதைப்பற்றி சரவணனிடம் பேசினால் ஏதாவது வழி கிடைக்கும் என சரவணனை சந்திக்க சென்றான். இதுவரை அதிகமாக பேசி பழக்கமில்லை...இதை எப்படி ஆரம்பிப்பது, என யோசித்தவாறு நடக்க, கும்பிட போன தெய்வம் குறுக்க வருமாம்...அச்சோ இங்க எதிர்ல இல்ல வருது...அப்பாடா...என அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் மனம் ஒரு குதி குதிக்க தான் செய்தது.


நிஜம் தானே பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையிலான நமது வாழ்க்கை ஒவ்வொரு வருக்கும் ஏதோ ஒரு விதத்தில் போராட்டமானதாக தான் அமைகிறது.

அதுனுள்ளே தேங்கி தோய்ந்து போயிருந்தால், இந்த வாழ்க்கை அடுத்தடுத்த கட்டத்திற்கு எவ்வாறு நகர்ந்திருக்கும். சின்ன சின்ன நிகழ்வுகளை கூட பெரிய பெரிய சந்தோஷங்களாக கருதி கொண்டாடும் மனித இயல்பினால் அல்லவா …? இன்றும் இந்த வாழ்க்கை சுவாரஸ்யத்துடன் தானே பயணிக்கிறது.
நிமிட சந்தோஷங்களை கூட கொண்டாடடி மகிழும் மனம் படைத்ததால் தான் இன்றும், நடந்தவைகளை கடந்தும், நடக்க போவதை எதிர்கொள்ளும் திறனோடும் இந்த வாழ்க்கையை வாழமுடிகிறது.

பார்த்திபனின் மனநிலையும் தற்சமயம்
அப்படி தான் இருந்தது.

"ஹலோ சரவணன் சார்...நான் பார்த்திபன் …"

"புதுசா சேர்ந்திருக்கீங்க தானே...நீங்க சேர்ந்து ஆறு மாசம் இருக்குமா...அதிகமா சந்திக்க வாய்ப்பில்லை.... எப்படியிருக்கீங்க...இங்கெல்லாம் செட்டாகியிட்டதா...வேலை எப்படி போகுது...ஊர் எப்படியிருக்கு…"


"கிட்டதட்ட பழகிடுச்சி...நம்ம ஊர்காரர் ..அதான் பார்த்து பேசி பழகலாம் வந்தேன்.."

"அதுக்கென்ன பார்த்திபன்... இவ்வளவு தயங்க வேண்டிய அவசியமேயில்லை...ஏதாவது உதவி வேணும்னா...தயங்கமா கேளுங்க...வாங்களேன் அப்படியே கேண்டீன் பக்கம் போகலாம்..கொஞ்சம் ரிலாக்ஸா உட்கார்ந்து பேசலாம்...ம்ம்ம்" என தலையாட்டிய பார்த்திபன் சரவணனுடன் அதனை நோக்கி நடந்தனர்.

அவர்களுக்கான காபியுடன் வந்தமர்ந்தவர்கள்…"அப்புறமென்ன என்று…
பார்த்திபனின் முகத்தை பார்க்க… குழப்ப ரேகைகளும் சஞ்சலமும்...எதையோ சொல்ல துடிக்கும் முகபாவனையும் அவனது முகத்தில் பலமாக ஓட….நட்பான புன்னகையை முகத்தில் தவழவிட்டு..என்னால் முடிஞ்சா கண்டிப்பா செய்வேன்...முடியலைனா அதற்கான தீர்வையாவுது நாம தேடலாம்...
தயங்காம சொல்லுங்க பார்த்திபன்...என்று பார்த்திபனின் தடுமாற்றத்திற்கான காரணம் புரியாமல் சரவணன் அவனை பேசுமாறு கூறினான்.

"சரவணன் சார்,இதை எப்படி எடுத்துக்கறதுனே தெரியலை...நான் செய்ஞ்சது தப்பா சரியானு கூட புரியலை...அவசரப்பட்டுடேனு ஒரு மனம் தவிச்சாலும்...அவனையெல்லாம் நார் நாரா கிழிக்கனும்னு ஒரு மனமும் குமுறுது…"என்றவனை சரவணன் ..என்ன சொல்றீங்கனு புரியலை என்றான் புருவ சுழிப்புடன்.

"அலெக்ஸ்… "என்ற ஒற்றை வார்த்தை ஓராயிரம் பாவனைகளை சரவணன் முகத்தில் ஓடினாலும்… இறுக்கம் என்ற பாவனை மட்டுமே படிப்பதற்கு ஏதுவாக ஓடியது.


என்ன நடந்தது...உங்ககிட்ட ஏதாவது தகறாரு பண்ணினாரா...என ஆழ்ந்து பார்க்க…

பிடிக்காதவர்களை பற்றிய பேச்சென்றால் ...பெரியவர்களோ சிறியவர்களோ...கோபத்தில் மரியாதையான விளிப்பு மறைந்து ...அவன் இவன் என ஏகவசனமே யாரிடமும் ஏகத்திற்கும் எட்டி பார்க்கும்..

அலெக்ஸை பற்றி..அவனது கீழ்த்தரமான செய்கைகள் முழுதும் அறிந்தும்,தன் சக அதிகாரிக்கு அந்த சூழலிலும் மரியாதையாளிக்கும் சரவணின் பண்பு ...பார்த்திபனை மிக கவர்ந்தது.

"எப்படி சரவணன் சார் அவன பற்றி முழுசா தெரிஞ்சும் ...உங்களால அவனுக்கான மரியாதைய கொடுக்க முடியுது...ஆனாலும் அவன் அதற்கெல்லாம் தகுதியில்லாதவன் சார் என்றவன்.."

காலையிலே நடந்ததை அனைத்தையும் கூறி ….இதில் திவாகர் இடையில் அகப்பட்டு அவதிபடுவது...தான் கைநீட்டியது...அவர்கள் பேசியதை பதிவு செய்தது என ஒவ்வொன்றையும் கூறி முடித்தான்…

சுற்றி பார்த்த சரவணன் …."இதை பற்றி இப்ப பேச வேண்டாம்...சாயங்காலம் வெளில வச்சு இதை பற்றி பேசலாம்..எங்க சந்திக்கலாம்னு நான் முடிவு செய்து சொல்றேன் ...உங்க அலைபேசி எண்ணை கொடுங்க", என்று வாங்கிய சரவணன் ...திவாகரை கொஞ்சம் பார்த்துகோங்க என்றவன்….அலெக்ஸின் கைத்தடிகள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என ஆராய்ந்த வண்ணம் அவ்விடத்தை விட்டு அகன்றான்.


இந்த அலெக்ஸை என்ன செய்தால் தகும் என கோபம் கனன்று தின்று கொண்டிருந்தது. இவன் தப்பு செய்ஞ்சுட்டு...மத்தவங்க எல்லாம் அல்லல் படனுமா...என்ன பழிவாங்க ஒன்னும் தெரியாத அப்பாவிய வேற மிரட்டி உருட்டி உருவாழியாக்கி இருக்கிறான். அதுவும் கைநீட்டி அடித்திருக்கிறான் பார்த்தியின் வாய்மொழியால் கேட்ட பின்பு, இதற்குமேல் அவனை சும்மாவிட்டால் தகுமா...என்று எண்ணியவன் பார்த்தியை எங்கு சந்திக்க சிந்தித்து அதற்கான இடத்தை அவனுக்கு அனுப்பிவிட்டு … அலெக்ஸ் ஸை இதற்கு மேல் விட்டு வைத்தால் அது வில்லங்கத்தை வேண்டும் விலை கொடுத்து வாங்குவதை போல் ஆகும்.
சரியென ஒரு முடிவையெடுத்தவன் அடுத்து யாரை சந்திக்கவென முடிவு செய்து,மனதில் ஒருவாரு என்ன செய்ய வேண்டுமென தீர்மானம் செய்த பின்னரே அவனால் சற்று மூச்சு விட முடிந்தது.

திவாகரை சந்தித்து ,அலெக்ஸினால் ஏதாவது பிரச்சினையென்றால் உடனே தன்னை அணுகுமாறு, தையரிமாக இருக்குமாரு மற்றொரு முறை தான் துணையாக இருப்பேன் என்று சொல்லாமல் சொல்லி நின்றான்.

அண்ணா….எனக்கு என்ன சொல்றதுனே தெரியலை...ஆனா எம்மனசு முழுக்க ...உங்க வார்த்தையும் துணையும் எவ்வளவு பலத்தை கொடுக்குதுனு சொல்ல முடியாது.நம்ம ஊரா இருந்தா,போடா நீயுமாச்சு உன் வேலையுமாச்சு...வேற வேலை தேடிப்பேன்.அம்மா அப்பானு சுத்தி சொந்தம்னு பலம் இருக்கும். ஆனா இப்ப இங்கிருந்து வெளில போனா ...யார்கிட்ட போய் நிக்க முடியும்...ஊருல இருக்கவங்களுக்கு என்ன பதில் சொல்றது...தங்கறது,சாப்படறதுனு ஏகப்பட்டது இருக்கு...அதெல்லாம் யோசிச்சதனால தான்….அந்தாள்கிட்ட பட்டுனு பேச முடியாம தவிச்சிட்டேன்.



ஆனா, இதற்கு மேல யோசிக்க என்ன இருக்கு... பிரச்சினை வந்தா ஒரு கை பார்த்திடாலாம்...நாம சரியா இருக்கோம்.அந்த திருட்டு பையல பத்தி கவலைபடாதீங்க….பிரச்சனை னு வந்தா இங்கிருந்து போகறதுக்குள்ள ஒருகை பார்த்திடறேன்...அவன் வார்த்தைகளும்..முகத்தில் இருந்த தெளிவும்...பிரச்சினை வந்தாலும் சமாளிப்பான் என்ற முடிவுக்கு வந்தான் பார்த்திபன் …


"டேய் நம்ம ஊர் காத்து அப்பப்போ வீசுது போல...அவன் கிடக்கறான் விடு...நீ எதவும் அவன்கிட்ட வம்புள மாட்டிக்காத….வெளில வேலைக்கு போனாலும்...அங்கையும் இருக்கறவங்க எப்படிபட்டவங்களா இருப்பாங்கனு தெரியாது...வம்பு பண்றவங்கிட்டயிருந்து விலகியிருக்க...அதை சமாளிக்க கத்துக்கோ...சரி ரொம்ப நேரமாயிடுச்சு நீ வேலைய பாரு...நான் வரேன்", என்ற பார்த்திக்கு திவாவின் தைரியமான முகம் பார்த்திக்குள்ளும் சிறிது நிம்மதியை விளைவிக்க ...சற்று ஆசுவாசப்பட்டவாரு அங்கிருந்து அகன்றான்.



அலெக்ஸ்ஸோ, தன் கைத்தடியிடம் காரணமேயில்லாமல் காய்ந்து கொண்டிருந்தான்...காலையில் தீய்ந்த தன் கன்னத்தை எரிச்சலை மறைக்கவும் முடியாமல்….மறக்கவும் முடியாமல்.

'ஏதாவது செய்யனும்டா...என்ன செய்யலாம்… என்ன செய்யலாம்…"

அந்தோ பரிதாபம் கைத்தடியின் நிலைதான் பரிதாபமாக இருந்தது.

கன்னத்தில் கைத்தடம் கன்றிபோய் போய் தெரிய...யார்மீது கோபம் என று புரியாவிட்டாலும்… எதற்காக இந்த கோபம் என்று தெரிந்தும்...கோபத்திற்கு காரணமானவன் யாரென்று தெரியாமல் யாரின் மீது….என்ன கூறுவது...என்னவென்று கேட்பது ….இதையெல்லாம் விட கேட்காமல் இருந்தால் அதற்கும் காய்வான்.
கேட்கவும் முடியாது.

அலெக்ஸ்ஸின் புலம்பலையும் அசையாமல் கேட்பதை தவிற ஆகசிறந்ந அறிவாளிகளின் செயலாக இருக்க அதையே பினுபற்றுவது என முடிவு செய்தான்.

அவன் அசையாமல் இருக்க,அதற்கும் நாலு நல்ல வார்த்தைகளாக போட்டு புரட்டியெடுத்தான்.


"என்ன பண்ணணும் பாஸ்…"என்றான் கைத்தடி, வேறு வழியின்றி தன்னை தற்காத்து கொள்ளவேண்டிய தலையாய முதன்மை பிரச்சனையாக இப்பொழுது இருந்தது.


"அந்த பார்த்திபன் இன்னைக்கு காலையில சரவணன பார்த்திருக்கிறான். அவன்ட்ட என்ன சொன்னான் தெரியலை...இன்னைக்கு எம்.டி வந்திருந்தா இவன்களுக்கு இன்னைக்கே ஆப்பு அடிச்சிருப்பேன்".

"அந்த ஸ்டுப்பீட் இன்னைக்குனு வரலை…"என்றவன் கோபம் அவன் கைகள் எதிரிலிருந்த சுவரின் சத்தத்தால் உணர முடிந்தது.அவன் மலாயில் மானாவாரியாக வார்த்தைகளை விதைக்க ..

என்னது எம்.டியேவ ஸ்டூப்பீட்னு சொல்றான்....உனுக்கு வேலைகொடுத்தூரு அப்ப சொல்ல வேண்டியது தான்..நாமெல்லாம் அப்ப எந்தஸலிஸ்ட்டூஊஊஊஊ என்று தனது நிலைமையை யோசித்தவன்...காசுக்கு ஆசைப்பட்டு உயிருக்கு உத்திரவாதம் இல்லாமல் ஆகிடுச்சே என்ற தனது கவலைக்கிடமான நிலையை கூட யாரிடமும் சொல்ல முடியாமல் பொறியில் சிக்கிய எலியாக அவஸ்தையை வெளியே காட்ட முடியாமவ் உள்ளுக்குள்ளே குமைந்து கொண்டிருந்தான்.


இவன் இங்கே புலம்ப சரவணன் தன் கடத்த நடவடிக்கையை அசால்ட்டாக நகர்த்தி அலெக்ஸிக்கிற்கு தப்பிக்க வழியேயில்லாமல் அடைத்திருந்தான் பார்த்திபனின் துணைக்கொண்டு..
 
Messages
31
Reaction score
26
Points
18
அத்தியாயம் 7

அந்த பிரமாண்ட பங்களாவின் முன் தன் நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி ஹாரன் சத்தம் கொடுக்க, காவலாளி கதவை திறந்து சிரிப்புடன் முகமன் கூற, "எங்க கூட்டிட்டு வந்து இருக்கீங்க சார். இங்க எதுக்கு சார்...நாம தனியா சந்திக்கறதா தானே முடிவெடுத்திருந்தோம். வீட்டில் யார் யார் இருப்பாங்க...நாம என்ன தான் தனியா போய் பேசினாலும், என்ன பார்த்தா யாரிது...எதுக்கு வந்திருக்காங்க ,தனியா என்ன பேசப்போறாங்கன்ற சந்தேகமா பார்ப்பாங்க.... எனக்கு சங்கோஜமா இருக்கும்…" பார்த்திபன் தன் சுணங்கி கொண்டு தன் பிடித்தமின்னமையை அப்பட்டமாக முகத்தில் காட்ட,

"இது என்னுடைய வீடு தான்...இங்க பேசறதுல என்ன பிரச்சனை...இப்ப என்ன சொல்ல வறீங்கனு பார்த்திபன்…"கண்களை சுருக்கி பார்த்திபன் முகத்தை பார்த்தவரு புன்னகைக்க…

"நாம சங்கடமா இருக்குனு சொல்றோம்…"இவர் என்னனா சிரிக்கிறார்.


"அது, வீட்ல யாரு இருப்பாங்கனு தெரியல...அதான் சங்கடமா இருக்கு...முன்னாடியே சொல்லியிருந்தா ஏதாவது வாங்கி வந்திருக்கலாம்.."

முகம் மின்ன, அப்பப்ப உங்களை அறியாமலேயே ,"நான் மண்ணின் மைந்தன் நிருபிக்கிறீங்க" என்று தலையை ஆட்டி சிரித்தவன்...." இங்க சின்ன பசங்கலெல்லாம் யாருமில்ல...அப்பா அம்மா மட்டும் தான்...அவங்க வெளியே வாங்கறத அதிகம் விரும்பமாட்டாங்க…"அதோடு என்று முடிக்காமல் சிரிக்க...எதுக்கு சிரிக்கறீங்க...ரொம்ப சந்தோஷமா இருக்கறப்போல தெரியுது…எதெக்கெடுத்தாலும் சிரிக்கறீங்க...சரவணனின் புன்னகை பார்த்திபனையும் தொற்றியது.

"ஆமாம் ,ரொம்ப நாள் கழிச்சி அம்மா அப்பாவ பார்க்க போறப்ப, எந்த பிள்ளைக்கும் சந்தோஷம் இருக்க தானே செய்யும்…"

"இவ்வளவு நாள் இங்க தானே இருந்தீங்க…! ...அப்புறம் ஏன் பார்க்க வரலை?' கேள்வியை தாங்கி பார்க்க,

"வா, உன்னுடைய எல்லா கேள்விக்கும் நாளைக்கு விடை கிடைச்சிடும். இங்கே நின்னுட்டு எல்லா கேள்வியும் கேட்டுட்டே இருந்தா...உள்ளயிருக்கற என் மாதா...இன்னும் காணுமேனு வாயலேயே கோதாவுல இளங்கிடுவாங்க...அப்புறம் அவங்கள சமாளிக்கறது ரொம்ப கஷ்டம்...வா உள்ள போகலாம்", என்றவன் அழைத்துக்கொண்டு உள்ளே சென்றான்.


சோபாவில் உட்கார்ந்து, வாசலிலேயே கண்ணை வைத்திருந்த எழில்வதனி இருவரும் உள்ளே வருவதை பார்த்தவர்….அவசரமாக எழுந்து, "வாப்பா பார்த்திபா...ஏன் சரவணா ...கார் சத்தம் எப்பவோ கேட்டுது...இவ்வளவு நேரம் என்ன செய்ஞ்சீங்க….வெளியே வந்தாலும்...இவன் திட்டுவான்…"
என்று சரவணனை முறைக்க..

என்ன சொல்றாங்க என குழப்பமாக சரவணன் முகத்தை பார்த்தான் பார்த்திபன்.…

அங்கயேன் பார்க்கற...நான் சொலல்றேன் …."ஏம்மா! என்ன வெளியால வச்சி பேசி தொறத்திவிட சொன்னாரா உங்க புருஷர்னு,என்ன மட்டுமில்லாம...சும்மாயிருக்கற மனுஷனையும் சேர்த்து வம்பிழுப்பான்…" என முறைத்துக்கொண்டு பார்த்தியிடம் முறையிட்டவாரு, அதான் வாசல பார்த்த மாதிரியே உட்கார்ந்திட்டேன்.



அதற்குள் சரவணன்,"நீ வேறடா...இப்படி ஏதாவது சொன்னா தான் இவங்க இங்க உட்கார்ந்திருப்பாங்க...இல்லனா சாயங்காலம் வரேன் சொன்னதுக்கு காலையிலேயே நடைபோட….ஆரம்பிச்சுடுவாங்க...கொஞ்ச நேரம் வீட்ட அளப்பாங்க...அப்புறம் வாசலுக்கும் கேட்டுக்கும் நடப்பாங்க...அப்புறம் ரோட்டுக்கே என்ன தேடிட்டு வர ஆரம்பிச்சுடுவாங்க...அதான் இவங்களை கட்டி போட ஏதாவது ஸ்ட்ராங்கா சொல்லி மடக்க வேண்டியதா இருக்கு".


'டேய்...டேய் ...போடா ….வந்துட்டான் பெருசா நியாயம் சொல்ல...நான் என்ன அவ்வளவு வயசானவாளா தெரியறேன்...வறேன் சொன்ன காணாம்னா வாசல்ல நின்னு பார்க்க மாட்டாங்க...அதுக்கு என்ன பேச்சு பேசறான் பாரேன்…"என்றவர் முகத்தில் மகனின் தேடலுக்கான தடயம் கண்களில் அலைப்புறுதலாக இருந்து பாசமாக வழிந்ததை அவனும் தான் வரும் பொழுது கண்டானே.

"ஏன் பார்த்திபா…!நீயே சொல்லு...உனக்கே என்ன சொல்லி கூப்பிறதுனு குழப்பம் வந்துச்சா இல்லையா என …!என அழகாக விரலை நீட்டி தலையை மேலும் ஆட்டி கண்களை அகல திறக்க…

பார்த்திபனது தயக்கமெல்லாம் பனி போல விலகி ...அங்கே இயல்பான பாசம் ஒன்று தானாக தோன்றி தலையை ஆமென்று ஆட்ட…


"இதில என்னம்மா தயக்கம்...புதுசா பார்க்கறவங்கள...ஆன்ட்டி...அப்படி இல்லனா...மேடம்னு தானே கூப்பிடுவாங்க…"என பார்த்திபன் ….இதுக்கெல்லாம் குழப்பம் வருமா...சம்மந்தமில்லாம பேசி எங்களத்தான் நீ குழப்பற என்றவன் நீ தான் ரொம்ப பண்றமா என்ற ரேஞ்சில் பேசி வைக்க…

"அடேய்...அறிவுகொழுந்து…இந்த மாடம்….அப்புறம் அந்த ஆண்டியெல்லாம்...எங்க ஊரூ புள்ளைக்கு சுட்டுப்போட்டாலும் சட்டுனு வராது...அதுங்களுக்கு வாய் நெறையா...அக்கா, தங்கச்சி,அத்தை மாமானு முறையிட்டு கூப்பிட தான் வரும்....இதெல்லாம் உனக்கெங்க தெரிய போகுது...உன்ன தமிழ்ல தான் பேசனும்னு நான் தலைகீழா நின்னு கத்துகொடுத்தேன்...இல்லைனா...இந்த மலாய் காரனையும் ...அந்த இங்கீலீஷ்காரனையும் வாயில அதக்கி அதக்கி மென்னு துப்பிக்கிட்டு ...பேசறதுக்கு விளங்காதவன் மாதிரி சுத்திக்கிட்டு இருந்திருப்ப...இல்லைனா வாழைப்பழத்துல வழுக்கி விழுந்ததால கோணிகிட்டு போணப்பால இல்ல இந்த வாயால பேசி நீ வைப்ப…" என்று ஈன்றெடுத்த பிள்ளையென்றும் பாராமல் வாறு வாறென்று வார….

"ஆத்தா ….மலையிறங்கு...உனக்கு இவ்வளவு பேச தெரியுமுனே எனக்கு இன்னைக்கு தான் தெரியும்...இந்த பார்த்திபன் இன்னும் வாய தெறந்து சரியா கூட பேசல….அதுக்குள்ள அவங்கூட கூட்டணி போட்டு ...பெத்த புள்ளைய கவுக்கற, கழுவி ஊத்தற…."என்ற சிணுங்களுடன் முறைக்க...அவர்கள் வயது வந்த குழந்தைகளாக தான் தெரிந்தனர் பார்த்திபனுக்கு. புதுஇடம் புதியவர்கள் என்ற எண்ணமெல்லாம் எங்கோ கரைந்து காணமல் போய்விட்டது.

இவர்கள் இருவரது உரையாடலையும் ஒரு மென்னகையுடன் கேட்டு கொண்டிருந்தவன்….அவர்களை பார்த்தவாறு நிற்க...சரிதான்…"ம்மா...லேட்டா வந்தது தப்பு தான் ...அதுக்காக இப்படி நிக்க வச்சியே கலங்கடிக்க கூடாது...ஏதாவது செய்ஞ்சிருந்தா...மத்த ஆத்தா மாதிரி எங்க வயித்த கொஞ்சம் கவனித்தா…"என வயிற்ற தடவ...பார்த்திபனுக்கோ பல ஆயிரம் மைல் கடந்து தன் சொந்தங்களின் மத்தியில் சேர்ந்ததை போலான உணர்வை தர ,அவன் முகத்தில் காலையிலிருந்த அலைபுறுதல்களெல்லாம்,இந்த நிமிடம் காணாமல் போய் மனதில் அழகான நிம்மதியொன்று குடியேற...ஆழ்ந்து ஸ்வாசித்தவன்…"அக்கா...என்னையும் சேர்த்து கவனிங்க...கண்டிப்பா நம்ம ஊர் ஸ்பெஷலா தான் இருக்கும் ….எனக்கு இப்பவே நாக்கு சப்பு கொட்ட ஆரம்பிச்சிடுச்சு...சீக்கிரம் வாங்க…"என்றவன்…


"சரவணன் சார்... வளவளனு என்ன பேச்சு …."என்று தானே சென்று இருக்கையில் அமர்ந்து கொண்டான்.


"அட பார்த்தி, என்னப்பாயிது! இந்த பையன போய் சார் மோருனு கூப்பிட்டுகிட்டு...சும்மா பேர சொல்லியே கூப்பிடு...அக்கா பையனையெல்லாம் உங்க ஊருல சார்னா கூப்பிடுவாங்க…."

"டேய் சரவணா! ஆனாலும் நீ ரொம்ப ஆபிசரா இருக்கடா….எந்தம்பிய கூட சார்னு கூப்பிட, அதனால பெத்த ஆத்தா சித்தாத்தாவாக மாறி இன்னைக்கு உன் வயித்த காய வைக்கபோறேன் பார்!" என்றவர்…

"வா பார்த்தி கண்ணா...இவன் போன் பண்ணி உன்ன கூட்டிட்டு வரேன்னு சொன்னதும்....இவ்வளவு வருஷத்துல ஒரு சிலரை ரொம்ப வீட்டுக்கெல்லாம் யாரையும் கூட்டிட்டு வரமாட்டான்....அப்படி அவன் கூட்டிட்டு வரவங்க கண்டிப்பா நம்ம ஊரு ஆளுங்களா தான் இருப்பாங்க… நாம எங்கயிருந்தாலும் நம்ம வேர தேடி மனசு ஏங்க தானே செய்யும் ...அதான், உன்னையும் எனக்காக தான் வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கான்", என்றவர் பேசிக்கொண்டே தோட்டத்திற்கு அழைத்து வந்திருந்தார். இங்க உட்கார்ந்து பேசிட்டே சாப்பிடும் சுகமே தனிதான்….அவனுக்கு ஒரு இருக்கயை காண்பித்துவிட்டு ...தானும் ஒரு இருக்கையில் அமர்ந்தார்.


அவர் காட்டிய இருக்கையில் அமர்ந்தவன் சுற்றிலும் மா,பலா,வாழை தென்னை மற்றும் மல்லிகை மற்றும் பந்தல் அமைத்து கொடி முல்லை என நம்மூரின் சாயலை அங்கே நிர்மானித்திருக்க….அவன் வந்தபொழுது இருந்த மனநிலைக்கும்,இப்பொழுது முற்றிலும், தன் சொந்த ஊரில் கால் பதித்த மனநிலைமையை ஆழ்ந்து ஸ்வாசிக்க...எப்படியிருக்கு பார்த்தி நம்ம ஊர்...என்றவரை பார்த்திருந்தவனின் கண்கள் பணித்தது.

அவன் உணர்வுகள் வார்த்தைகளாக மாறி வாக்கியமாக மாறி உருப்பெற்று வெளிவர தவித்துக்கொண்டிருக்க...அவன் வாய் அதற்கு ஒத்துழைத்தால் தானே…அனுதினமும் மண்ணின் மனத்தை நுகர ஏங்கி தவிப்பவன் அல்லவா...அவரது சொல்லாடல்….அந்த சூழல்...அவனை திக்குமுக்காட… தனி உலகில் சஞ்சரித்தவனை…"வாடா சரவணா!" என சற்று நேரம் கழித்து அஙகே வந்த சரவணனை அழைத்த குரல் கலைத்தது ….எவ்வளவு நேரம் காத்திருக்கிறது...என்றவர் பால்பணியாரத்தையும்,கடலைவடையும் தட்டில் வைத்து,ஆளுக்கு ஒன்றாக கொடுத்துவிட்டுதானும் ஒன்றை எடுத்தவர்...அப்புரம் ஊரு, குடும்பம் என பேச்சை வளர...ஒவ்வொன்றையும் அவன் கூற கேட்டவர்கள்...அவனுடான மண்மீதான நெருக்கம் அளப்பரியாதாக...அவன் அதை விவரித்த விதம்...சரவணனின் தாய்க்கு மண்ணை மிதிக்கும் ஆவலை,, அவர் கண்கள் கொட்டிகவிழ்க்க ...ஆஹா...பிள்ளையார் பிடிக்க போனா...இங்க வேற ஏதோரு உருவம் தெரியுதே...என. சரவணின் பீதியை தேக்கியவன்...ஊர் பெருமை இருக்கட்டும் பார்த்தி...உங்க குடும்பத்தை பற்றி சொல்லுங்களேன் எனவும் ...மிக மிக இதமான அழகான புன்னைகயொன்று மனதில் தோன்றி கண்களில் தோன்றி முகத்தில் வழிய அம்மா பேரு இளவெயினி...அப்பா தனிமகனார்...அண்ணன் கேசவன்....... அக்கா ஆழினி...தம்பி...காண்டீபன்….தங்கை….அமிழ்தரசி...என்ற பொழுது பாசம் கண்களில் மிதந்து கொண்டிருந்த முகத்தில் ...சற்று நேரத்தில் வேறுஒரு உணர்வை அந்த முகம் பிரதிபலிக்க...மற்றவர் இருவர் சுவாரஸ்யமும் அந்த கண்களின் ஒளிர்வையும்...முகத்தின் பொலிவையும்…"என்ன பார்த்தி...மிதக்கறீங்க...யாருந்த அதிர்ஷ்ட தேவதை"0 என்ற சரவணனை பார்த்த பார்த்திபன்…"என் கண்ணம்மா"...'எழில்நிறைமதி…'

"அப்புறம் எங்க அம்முகுட்டி…" இடைவெட்டியவர்...
என் பெயர் தெரியுமா…'டேய் சர்ர்ரவணா ...எம்பெயரை சொன்னியாடா….ம்க்கும் நீ எங்க சொல்லிருக்க போற....அட சரவணா...ஒரு ஆச்சரியம் பாரேன்...எழில்வதனி...எம்பேரும் ...உம்பொண்டாட்டி பேரும் எழில்….'எழில்...எழில்'...அழகுகோ அழகு இல்ல…"

"ஆமாமா இல்லைதான் ...என்ன பண்ண அத நாங்க சொன்ன உங்களுக்கு கோபம்வந்து பத்திகாளியா மாறிட்டா என்னசெய்ய யேசிச்சுட்டு இருந்தேன்….ஆனா உண்மை விளம்பியான நீங்க உங்க வாயாலேயே வாந்தி எடுக்காத குறையா நல்லா இல்லனு சொல்லீட்டீங்க...நாங்க என்ன உங்க வார்த்தைய மறுத்துபேசிடவா போறோம்",பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு குறும்பை கண்களில் வழிய விட்டு இதழ்பிதுக்கியவனை ,கண்ட பார்த்திபன் ...இது நம்ம சரவணன் சார் தானா என சரவணன் தான் குழம்பி போனான்.எப்பொழுதும் கண்களில் ஆராய்ச்சி...சுற்று வட்டாரத்தை அலசும் பார்வை...கண்களாலே அனைவரையும் எச்சரித்து...எதிரிலிருப்பவரை எடைப்போடும் சரவணன்,அதற்கு சற்றும் சம்மந்தமில்லாமல் இலகுவாக...முக்கியமான விஷயத்தை பற்றி ஆராய்ந்து முடிவெடுக்க வந்துவிட்டு அதனை பற்றிய சிந்தனையே இல்லாமல் தாயும் மகனும் தன்னையும் அவர்களுடன் சேர்த்து கொண்டு தனி உலகில் சஞ்சரிக்க….இந்த சரவணன என்ன செய்யறது ...இப்படி பாசமா பேசறவங்கிட்ட….நாங்க தனியா பேசனும் நான் எப்படி சொல்றது...சரவணுக்கோ அந்த ஞாபகம் சிறிதளவு கூட இருப்பது போல் தரியாயல் இருக்க...அந்த சிற்றுண்டி முடித்தவன் மனம் இரண்டுகெட்டான் நிலையில் அலைபாய ...அதை முகத்தில் காட்டாமல் மறைக்க பெரும்பாடு பட்டான்.

பார்த்திபனின் இந்த திணறலை சரவணன் கவனித்தாலும் ...அதனை பற்றி சற்றும் கண்டுக்கொள்ளாமல்...தன் தாயிடம் வம்பளப்பதும் ...இரவு உணவுக்கு பார்த்பனை அங்கே தங்க வைப்பதிலும் குறியாக இருக்க...பிரச்சனையின் வீரியம் புரியாமல் சரவணனின் சிறுப்பிள்ளை தனமான இந்த முகம் பார்த்திபனின் உள்ளத்தில் குழப்பத்தையும்...ஏன் குழப்பம் என்பதை விட எரிச்சலை விதைத்திருக்க...தான் வந்ததன் காரணம் தெளிவுப்படாமல் இருக்க...அங்கேயிருந்து கிளம்புவதிலேயே குறியானர்...ஆனால் எழில்வதனி விட்டால் தானே...அவன் குடும்பம் குழந்தை மற்றும் அவர்களைப்பற்றி அத்தனையும் கேட்டு அறிந்து கொண்டவர்...தன் வதனத்தில் பாசம் என்னும்.ஆயுதத்தை தாங்கி அவனை அங்கேயே கட்டி வைத்து இரவு உணவுக்கு பின்னரே அவனை விடுவித்தார்.


சரவணனின் இந்த அலாட்டத தன்மையால் பார்த்திபனின் குழப்பத்திற்கும் எரிச்சலுக்கும் அடுத்த அத்தியாத்திலாவது பதில் கிடைக்கும்…

அன்பு மக்களே உங்களது அன்பான விமர்சனத்தை இங்கே பகிருங்கள்
 
Last edited:
Status
Not open for further replies.

New Threads

Top Bottom