தமிழுக்கினியாள்
Active member
- Messages
- 89
- Reaction score
- 180
- Points
- 33
அவள் 23
ராணாவும் ஆமோதித்து அவளை வீட்டிற்குள் அழைத்திட, உள்ளே செல்ல மறுத்துவிட்டாள்.
"இங்கயே நின்னு பேசலாம். நீ என்ன சொல்லணுமோ அத இங்கயே சொல்லு" என்று எரிச்சலை முகத்தில் காட்டி கடுப்புடன் பேசியதை பார்த்து அமைதியாகப் புன்னகைத்தவன் பொறுமையாக,
"நான் உனக்குப் பண்ண கொடுமைக்கு சாதாரணமா மன்னிப்பு கேட்டு முடிக்க விரும்பல. அப்டி கேட்டாலும் அது போதாது. உன்கூட வாழணும். உன்னய சந்தோசமா பாத்துக்கணும். உனக்கு என்னோட காதல புரியவச்சு என்னோட தப்புக்கானப் பிராயிச்சத்தத்தை பண்ணலாம்னு நினைக்கிறேன். ப்ளீஸ்...! எனக்கு ஒரு சான்ஸ் கொடு காவி.." என்று வார்த்தைகள் தளர்ந்து, தலை தாழ்த்தி, கண்களில் ஏக்கத்துடன் கேட்கும் ராணாவை பார்க்க காவ்யாவிற்குப் புதுமையாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. ஆனாலும், தான் பட்ட துன்பங்களும் கஷ்டங்களும் கண்முன் விரிந்திட, இதெல்லாம் அதற்குமுன் சாதாரணமாகத் தெரிந்தது.
அவனை கோபமாகப் பார்த்து," என்ன? நீ என்ன வேணாலும் பண்ணுவ...அப்றம் வந்து மன்னிப்பு கேட்டா மன்னிச்சு எல்லாத்தையும் மறந்து உன்கூட வந்து வாழணுமா? என்னய என்ன நினச்சுட்டு இருக்க?..என்னய பாத்தா உனக்கு அவ்ளோ இளக்காரமா தோனுதுல? எப்போ கூப்டாலும் வந்துருவானு நினைக்கிற.." என்று பல்லிடுக்கில் கோபமாகப் பேசிட, அதில் மனம் ரணமாக,
"அப்டி இல்ல அம்மு. நான்தான் உன்னய புரிஞ்சுக்காம பெரிய தப்பு பண்ணிட்டேன். ஆனா, நீயும் அதே தப்ப பண்ணாத. ப்ளீஸ்...! நடந்தத நினைச்சுட்டே இருந்தா வாழுற வாழ்க்கையும் நரகமாயிடும். இனியாச்சும் உன்கூட சந்தோசமா வாழ ஆசைப்படுறேன். உனக்கு என்னோட காதல கொடுத்துட்டே இருக்கணும்னு நினைக்கிறேன். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து என்கூட வந்துடு காவி..." என்று உடைந்த குரலில் கேட்டிட,
"இப்பக்கூட நீ உனக்காகத்தான் யோசிக்கிறல்ல...என்னைபத்தி யோசிச்சியா? நீ எனக்குப் பண்ணதக்கூட நான் பொறுத்துகிட்டேன். ஆனா, என் குழந்தைய சாவடிச்சத எப்டி மறக்கமுடியும்? உன்னய எப்டி அதுக்காக மன்னிப்பேன்னு நினச்ச? இந்நேரம் அந்தக் குழந்தை இருந்திருந்தா அதுக்கு ஒரு வயசு இருந்திருக்கும்..." என்று கூறியவள் அதற்குமேல் பேசமுடியாமல் தொண்டை அடைக்க அமைதியானாள். அதை கேட்டவனுக்கு முள்ளென தைக்க, இதயம் ரணமாகக் கண்கலங்கியவன்,
"நான்தான் கொன்னுட்டேன். என் கோபத்தாலதான் நம்ம குழந்தைய கொன்னுட்டேன். நான் அன்பு வைக்கிற யாருமே என்கூட இருக்க மாட்டிக்கிறாங்க. என்னயவிட்டுப் போயிடுறாங்க. முதல்ல என் அம்மா அப்பா. அப்றம் நம்ம குழந்தை. என் அம்மாவோ அப்பாவோ நமக்கு குழந்தையா வரப்போறாங்கனு நினச்சு எவ்ளோ சந்தோசப்பட்டேன் தெரியுமா? நான் நீ நம்ம குழந்தைனு அழகான குடும்பமா வாழணும்னு எவ்ளோ கனவு கண்டேன் தெரியுமா..? எல்லாமே கனவாவே போயிடுச்சு..." என்று கலங்கிக் கூறியவன் கீழே மண்டியிட்டு அழுதான்.
இதுவரையிலும் ராணாவை கண்கலங்கியும் பார்த்திராதவள் இன்று அவன் அழுவதை பார்க்கையிலேயே அவன் நண்பர்கள் கூறிய அனைத்தும் உண்மையென கண்கூடாக உணர்ந்தாள். அவன் அழுகை இவள் மனதை பிசைந்தாலும் கல்லென நின்றாள்.
"ப்ளீஸ்...! காவி. நீயும் என்னவிட்டுப் போயிடாத...என்னால தாங்கிக்க முடியாது. என்கூடயே இருந்து என்னய எவ்ளோனாலும் பழி வாங்கு. நான் தாங்கிக்கிறேன். என்னவிட்டு பிரிஞ்சு மட்டும் போயிடாத..." என்று கெஞ்சிக் கதறுபவனை பார்த்தவளின் கண்கள் தானாகக் கலங்கிட, முகத்தில் கோபம்காட்டி,
"இங்கபாரு...உனக்கும் எனக்கும் என்னைக்குமே ஒத்து வராது. நீ பழி வாங்கத்தான என்னய கல்யாணம் பண்ண? நீயும் நினச்சதவிட அதிகமாவே பழி வாங்கிட்ட. இப்ப நீ மாறியிருக்கலாம். ஆனா, நமக்குள்ள எதுவும் மாறாது. நம்ம இரண்டு பேரோட கோபத்தால நம்ம இரண்டு பேரோட வாழ்க்கையுமே நாசமாயிட்டு. இதுக்கிடையில ஒரு பச்ச மண்ணோட உயிர வேற பறிச்சிட்டோம். இதுக்குலாம் நானும் ஒருவகையில காரணம்தான். அதனாலதான் சொல்றேன். ப்ளீஸ்....! புரிஞ்சுக்கோ. நம்ம இரண்டுபேரும் சேர்ந்து வாழ்ந்தது போதும். என்னய விட்டுடு...நீ உனக்கேத்தமாறி வேற நல்ல பொண்ண கல்யாணம் பண்ணிக்கோ...இல்ல என்னவேணா பண்ணிக்கோ...ஆனா என்னய விட்டுடு. ப்ளீஸ்...!" என்று கையெடுத்துக் கும்பிட்டு கூறியவள்,
"டிவோர்ஸ் கொடுத்திடு. உன்னோடான இந்த பந்தம் எனக்கு நீ பண்ண கொடுமைகளைத்தான் நியாபகப்படுத்துது. இதுல உன்கூட சேர்ந்து எப்டி வாழமுடியும்? எல்லாத்தையும் மறந்து வாழ்க்கைய மறுபடி முதல்ல இருந்து ஆரம்பிக்கிறது ரொம்பக் கஷ்டம்" என்று கூறிவிட்டு அங்கிருந்து அழுதபடியே சென்றுவிட்டாள். ராணா அவள் செல்வதை பார்த்தவாறு கண்களில் கண்ணீர் சிந்தியபடியே இருந்தான்.
சில நாட்களுக்குப் பின்...
காவ்யாவும் ராணாவும் முழுமனதாக விவாகரத்து செய்துவிட்டு நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்தனர். அவர்களுடன் அவர்கள் நண்பர்களும் வந்தனர். வெளியே வந்ததும் காவ்யாவை பார்த்து அவளிடம் ராணா வர, அவனை பார்த்தவாறு நின்றிருந்தாள். அவளை பார்த்து மெலிதாகப் புன்னகைத்தவன்,
"உனக்கு என்னால முடிஞ்ச எல்லாத்தையும் செஞ்சு உன்னய சந்தோசமா வச்சுக்கணும்னு ஆசப்பட்டேன். முடியாததகூட செய்யணும்னு நினச்சேன். ஆனா, உனக்கு என்னய பிரியறுதுலதான் சந்தோசம் கிடைக்கும்னு தெரிஞ்சப்றமும் எப்டி நான் கொடுக்காம இருப்பேன்? இனியாச்சும் நீ எல்லாத்தையும் மறந்து ஹேப்பியா இருக்கணும். ராணானு ஒரு கேரக்டர் உன் வாழ்க்கையில இருந்ததையே மறந்துடு. உன் பாஸ்ட் லைஃப மறந்து நல்ல ஃப்யூச்சர அமைச்சிக்கோ. இனி உன்னய எந்த விதத்திலயும் டிஸ்டர்ப் பண்ணமாட்டேன். இதுவரைக்கும் பண்ண எல்லாத்துக்குமே மன்னிப்புனு ஒரு வார்த்தையில கேட்டு முடிக்க மனசு வரல. இருந்தாலும் கேட்டுக்குறேன். மன்னிச்சிடு.." என்று உள்ளே உடைந்தாலும் வெளியே மறைத்துச் சாதாரணமாகப் பேசிட, காவ்யா ஏதும் பேசாமல் அமைதியாகவே நின்றாள்.
"ஒரே ஒரு தடவ உன்னய ஹக் பண்ணிகிட்டுமா? ப்ளீஸ்....காவ்யா!" என்று கெஞ்சிக் கேட்பவனுக்கு மறுப்பு சொல்ல மனமில்லாமல் சம்மதமாகத் தலையசைத்தாள். அதைப் பார்த்ததும் மகிழ்ச்சியோடு அவளை அணைத்துக்கொண்டான், ராணா. அந்த அணைப்பில் தாயை நாடும் குழந்தையையே அவள் உணர்ந்து அப்படியே அசையாது நின்றிருக்க, அணைப்பிலிருந்து பிரிந்த ராணா அவன் காதல் அனைத்தையும் திரட்டி ஒற்றை முத்தமாக அவள் நெற்றியில் பதித்தவன் அவளை பார்த்து, "ஐ லவ் யூ அம்மு!" என்று அவளுக்கு மட்டும் கேட்குமாறு கூறினான்.
இதைப் பார்த்த தோழிகளும் நண்பர்களும் என்னவென்று கூற இயலாத மனநிலையில் சிக்கித் தவித்தனர். இருவரின் வாழ்வில் ஒருவருக்கொருவர் எதிராய் இருக்கையில் ஒருவரது மகிழ்ச்சி மற்றொருவரின் மகிழ்ச்சியை பறிக்கையில் இவர்கள் யார்பக்கம் நிற்பது? என்ற சூழ்நிலை வருகையில் நியாயத்தின் பக்கமே அனைவரும் நின்றனர். இருந்தாலும், தன் நண்பனுக்காகத் தாங்கள் எடுத்தச் சிறு முயற்சியும் தோல்வியில் முடிகையில் இதுவே விதியென விட்டுவிட்டனர். இதற்குப் பிறகாவது இருவரின் வாழ்க்கையிலும் நல்ல மாற்றம் உண்டாகட்டும் என்று எண்ணியவாறே இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அதன்பின், ராணா காவ்யாவை பார்த்துப் புன்னகைத்துவிட்டு அவள் தோழிகளிடமும் விடைபெற்றுச் சென்றுவிட்டான். ராணாவுடன் அவனது நண்பர்களும் செல்லப்போக, இவர்களை அவளுடன் இருக்குமாறு கூறிவிட்டுச் சென்றுவிட்டான். அவன் செல்லும்வரை சிலையென நின்றவள், தோழிகள் தோள்தொட தன்னிலை பெற்றாள். நண்பர்களும் அனுயா மற்றும் சரண்யாவும் அவரவர் வீட்டிற்குச் சென்றுவிட, காவ்யா, தன்யா, ரம்யா மூவரும் தங்கள் வீட்டிற்கு வந்தனர்.
வீட்டிற்குள் வந்ததும் காவ்யா வேகமாகச் சென்று அறைக்குள் நுழைந்து கதவை சாத்திக்கொண்டாள். ஒன்றும் புரியாமல் குழம்பியவர்கள் பின்னே சென்று கதவை தட்ட, கதவு பூட்டாமல் இருந்ததால் திறந்து உள்ளே சென்று பார்த்திட, அங்கே காவ்யா அமர்ந்து கண்ணீர் சிந்திக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ந்தனர்.
அவளருகில் சென்று அவளை தொட, தோழிகளை கட்டிக்கொண்டாள். சிலநிமிடம் அவளை வருடிக்கொடுத்து ஆறுதல் படுத்திட, அவள் அணைப்பிலிருந்து பிரிந்ததும், "எதுக்காகடி அழுவுற? என்னாச்சு?" என்று தன்யா அக்கறையாகக் கேட்டிட,
"ஆமா! இப்பதான் நீ கேட்ட டிவோர்ஸ்கூட கிடைச்சிருச்சேடி. இனியாச்சும் நீ நிம்மதியா சந்தோசமா இருப்பனு நினச்சா இப்டி அழுதிட்டு இருக்க?" என்று ரம்யா கவலையாகக் கேட்டிட, மௌனமாகவே இருந்தாள்.
"இப்ப என்னனு சொல்லு காவி. அந்த ராணாவ நினச்சுதான் அழுகிறியா? அவர் இப்ப உன் லைஃப்லயே இல்லடா. இனி எதுக்காகவும் வருத்தப்படாத. ஓகேவா?" என்று தன்யா ஆதரவாகக் கூறிட, அதைக் கேட்டு கண்கலங்கியவள்,
"அது எப்டி விடுவான்? என்னய பழி வாங்க நினச்சப்பவும் கோபத்தால டார்ச்சர் பண்ணான். அப்றம் அக்கறை காட்டுறேன்னு டார்ச்சர் பண்ணான். இப்ப அன்பு காட்டுறேன்னு டார்ச்சர் பண்றான். என்னய நிம்மதியாவே இருக்க விடமாட்டான்போல..." என்று ஆதங்கத்துடன் பேசியதை கேட்ட தோழிகள் அதிர்ந்து விழித்தனர்.
"அப்போ...என்ன சொல்ல வர்ற காவி? அவரோட அன்பு எதுக்கு உன்னய பாதிக்குது? அவருதான் போயிட்டாரே...இப்பவும் அவர நினச்சு எதுக்கு ஃபீல் பண்ற?" என்று தன்யா கேட்டிட,
"அப்போ...அவருமேல உனக்கு ஏதோ ஃபீலிங்க்ஸ் இருக்குதா காவி? எதுனாலும் சொல்லுடி மறைக்காம" என்று ரம்யாவும் அழுத்தமாகக் கேட்டிட, பெருமூச்சு ஒன்றை இழுத்துவிட்டவள்,
"அவன்மேல எனக்கு இருந்த ஃபீலிங்க்ஸ் எப்பவுமே வெறுப்புதான்டி. அவன் எனக்கு பண்ண கொடுமையைக்கூட ஏத்துகிட்டு வாழப் பழகிக்கிட்டேன். ஆனா, என்னோட குழந்தையை......அத மன்னிக்க முடியாது. எனக்குத் தெரியுது அதுக்காக அவனும் நிறைய கஷ்டப்பட்டான்னு..ஆனா, என்னால இந்த உறவ இதுக்குமேலயும் தொடர முடியாதுனு மட்டும் தெளிவா இருக்கேன்டி" என்று தீர்க்கமாகக் கூறிட,
"அப்ப எதுக்குடி அவர் ஹக் பண்ணும்போதும் கிஸ் பண்ணும்போதும் சிலைமாறி நின்ன?" என்று தன்யா கேட்டிட,
"இப்பக்கூட அத நினைச்சுதான அழுகுற? எதுக்காக உன்னோட ஃபீலிங்க்ஸ உனக்குள்ளயே மறைச்சிக்கிற காவி? நீ அத வெளிப்படுத்துறதுல எந்தத் தப்பும் இல்ல.." என்று ரம்யா எடுத்துக்கூறிட,
"எனக்கு அவன மன்னிச்சு ஏத்துக்க முடியாது. அதுவும் கல்யாணம் ஆகிட்டுனு கட்டாயத்துல அவன்கூட வாழமுடியாது. அவன் பண்ண தப்ப அவன் உணர்ந்து எவ்ளோ தண்டனைனாலும் அனுபவிச்சுருக்கலாம். அதுக்காக சிம்பதில லவ் வராது. அது தானா வரணும். அவன்மேல எனக்கு வெறுப்புதான் இருக்கு. அவன் ஹக் பண்ணதுக்கும் கிஸ் பண்ணதுக்கும் ஏன் அழுதேன்னு எனக்கு சொல்லத் தெரியல. அதை யோசிக்கவும் போறதில்ல. என்னோட வாழ்க்கைல இருந்து அவன முழுசா நீக்கிட்டேன். இதுக்கப்றம் அவன் பேச்சே வேணாம். அவ்ளோதான்" என்று உறுதியாகக் கூறி முடித்திட, தோழிகள் இருவரும் ஒன்றும் கூறாமல் அதை ஆமோதித்தனர்.
நீதிமன்றத்தில் இருந்து தன் வீட்டிற்கு வந்த ராணா நேராக காவ்யாவுடன் இருந்த அறைக்குச் சென்றான். அறைக்குள் வந்தவன் அலமாரியை திறந்து அவளது புடவையை எடுத்துக்கொண்டு மெத்தையில் அமர்ந்தான். அதை தன் நெஞ்சோடு சேர்த்தணைத்தவன் கண்ணீர் சிந்தினான். சிறிதுநேரம் அப்படியே இருந்தவன் அதன்பின் ஒரு முடிவெடுத்தவனாய் தன் அலைபேசியை எடுத்து யாருக்கோ அழைத்தான்.
இரண்டு நாட்கள் கழித்து...
ராணா விமான நிலையத்தில் உள்ளே செல்ல காத்திருக்க, அவனை வழியனுப்பிட அவனது நண்பர்கள், பெற்றறோர்கள், அனுயா மற்றும் சரண்யாவும் உடன் வந்திருந்தனர்.
காவ்யாவை பிரிந்து இங்கே இருந்தால் அவளை பார்க்காமல் இருந்திட இயலாமல் இவன் ஏதாவது செய்திட, அது அவள் நிம்மதியை குழைத்துவிடும் என்பதற்காகவும் இங்கேயே இருந்தால் பைத்தியம் பிடித்தாலும் பிடித்துவிடும் என்ற காரணத்திற்காகவும் வெளிநாட்டில் இருக்கும் தனது தொழிலை பார்த்துக் கொள்ள கிளம்பிவிட்டான். இவனுக்கு ஒரு மாறுதல் தேவை என்ற காரணத்திற்காகவே அவன் நண்பர்களும் பெற்றோர்களும் இதற்கு ஒப்புக்கொண்டனர்.
விமானத்திற்குள் செல்லும் நேரம் வரும்வரை அவன் விழிகள் தன்னிச்சையாக யாருக்காகவோ காத்திருந்ததை மற்றவர்களாலும் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனாலும் காவ்யா இவனிடம் மறுபடியும் வரமாட்டாள் என்பதே நிதர்சனம். அதை அவன் உணர்ந்தாலும் அவன் மனம் உணர மறுத்து அவனை படுத்தும் பாட்டை எண்ணி மற்றவர்களுக்கும் வருத்தமாகத்தான் இருந்தது. நேரம் நெருங்கிட, தன் நண்பர்களை ஆரத்தழுவியவன் பெற்றோர்களின் ஆசிகளை பெற்று விமான நிலையத்திற்குள் சென்றான், ராணா.
ஆறு மாதத்திற்குப் பிறகு...
சூரியனின் வெளிச்சம் விரிந்து கிடந்த வானத்தில் சூழ்ந்திருக்கும் வெண்மேகங்களும் அதற்குள் நுழைந்து சிறகடித்துப் பறந்திடும் பறவைக் கூட்டங்களையும் ரசித்தபடி விமானத்தில் அமர்ந்து பயணம் செய்துகொண்டிருந்தான், ராணா. தனது தாயகம் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறான்.
காவ்யாவின் நினைவுகளுடன் வெளிநாடு சென்றவன் அங்கே உள்ள அவன் தொழிலில் கால்பதித்து அவன் முத்திரையை அங்கும் பதித்தான். ஓய்வின்றிச் சென்று கொண்டிருந்த அவன் வாழ்க்கையில் அவன் இளைப்பாறும் வசந்த காற்றாய் காவ்யாவின் நினைவுகளும் அவள்மீது கொண்ட காதலுமே அவனுக்குத் துணையாய் இருந்தது.
அவளை மறக்கும் முயற்சியில் அவன் தன்னை அறியாமலும் ஈடுபடவில்லை. அவளுடன் இவன் கழித்த அந்தக் குறைந்தகால நினைவை பொக்கிஷமாய் மனதில் தேக்கிவைத்திருந்தான். அவள் வாழ்க்கை எப்படி இருக்கிறது? என்று தெரிந்துகொள்ள மனம் துடித்தாலும் அதைக் கட்டுப்படுத்திக் கொள்வானே தவிர, அறியாமலும் அவன் நண்பர்களிடத்திலும்கூட கேட்டுக்கொள்ளமாட்டான், அது அவளுக்குத் தெரிந்தால் இன்னும் சங்கடப்படவும் கோபப்படவும் நேரிடும் என்பதற்காக.
காவ்யா எங்கிருந்தாலும் நன்றாகத்தான் இருப்பாள் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்து வந்தான். இப்போது தனது நண்பனான ராமின் திருமணத்திற்காகச் சென்று கொண்டிருக்கிறான். தனது ஊரில் இருக்கும் விமான நிலையத்தில் வந்து இறங்கியவன் தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான். அவனுக்காக கார் காத்திருக்கும் என்று எண்ணியிருந்தவனுக்குத் தனது நண்பர்களே நேரில் வந்திருந்தது மிகுந்த மகிழ்ச்சியளித்தது.
உற்சாகமாக நால்வரும் வந்து இவனை கட்டிக்கொள்ள, பதிலுக்கு இவனும் அவர்களை அணைத்துக்கொண்டான். அணைப்பில் இருந்து பிரிந்தவர்கள் அவனை மேலிருந்து கீழ்வரை பார்த்தனர். ஜீன்ஸ் பேண்ட் அணிந்து டீசர்ட் மற்றும் ஓபன் ஜீன்ஸ் சர்ட் அணிந்து கூலிங் கிளாஸ் மற்றும் ட்ரென்டி ஷூஸ் அணிந்து தோளில் லக்கேஜ் பேக்கை போட்டுக்கொண்டு ஸ்டைலாக நிற்பவனை பார்த்து நால்வரும் அதிர்ச்சியில் வாயை பிழந்தனர்.
"டேய்...! ராணா...! நீதானாடா இது? செம்மயா இருக்கடா!" என்று விஜய் வியந்து கூறிட,
"எப்ப இருந்துடா இப்டி மாறுன? எங்களலாம் அடிச்சு தூக்கிட்டடா இந்த காஸ்ட்யூம்ல...நிஜமாவே கலக்குறடா!" என்று நாகவ்வும் ஆனந்தமாகக் கூறிட,
"அவன் எப்பவுமே அழகுதானடா. ஏதோ இப்ப மட்டும் புதுசா வந்து சொல்லிட்டுருக்க.." என்று ராம் கூறிட, ராணா புன்னகைத்தான். மற்றவர்களும் அதை ஆமோதித்தனர்.
"ஆமா! என்னடா இது? புது சேஞ்சோவர்! ஆளே மாறிட்டடா! இப்பதான் இப்டியா? இல்ல பிசினஸ் மீட்டிங்கும் இப்டித்தானாடா?" என்று பிரபவ் கேலியாகக் கேட்டிட, புன்னகைத்த ராணா,
"டேய்..! ரொம்ப ஓட்டாதடா. அதுக்கெல்லாம் நார்மல்தான். மத்த டைம் இப்படித்தான் இனிமே. லைஃப்னா ஒரு சேஞ்ச் வேணும்ல. எனக்கும் இந்த சேஞ்ச் தேவபட்டுச்சுடா. அதான்" என்று கூறிமுடித்திட, மற்றவர்களும் அவனை புரிந்துகொண்டு அமைதியாயினர்.
ஐவரும் பேசியபடியே காரில் ஏறி பயணித்துக் கொண்டிருக்க, "அப்றம்...கல்யாண மாப்ள...! நீ எதுக்குடா ஏர்போர்ட் வந்த?" என்று விசாரித்திட, "உன்னய ரொம்ப நாள் கழிச்சு பாக்குறேன்ல. அதான் பாசத்துல ஓடி வந்துட்டேன்டா..!" என்று உண்மையை கேலியாகக் கூறிட, "பாசக்கார நண்பேன்டா...நீ!" என்று கூறி அவனை இறுக்கி அணைத்திட,
"அடேய்...! விடுடா..! எலும்ப நொறுக்கிடாத. எனக்குக் கல்யாணம் இருக்குடா. பாவம்டா நானு..." என்று ராணா விளையாட்டாக இறுக்கி அணைத்ததில் ஏற்பட்ட வலியில் பொய்யாக அலறிட, மற்ற நால்வரும் சிரித்தபடியே பயணித்திட, அவர்களது கார் ராமின் வீட்டிற்கு வந்து சேர்ந்தது.
இன்னும் இரண்டு நாட்களில் திருமணம் என்பதால் ஏற்கனவே அரண்மனைபோல் இருக்கும் வீடு அலங்கரிக்கப்பட்டு பிரம்மாண்டமான மாளிகைபோல் காட்சியளித்தது. வீட்டின்முன் உள்ள நடக்கும் பாதைக்கு இரண்டு பக்கமும் உள்ள புதர்ச் செடிகளும்கூட விதவிதமாக அலங்கரிக்கப்பட்டிருக்க, அந்த வீடே மிகவும் அழகாகக் காட்சியளித்தது.
அதை ரசித்தவாறே ராணா நண்பர்களுடன் வீட்டிற்குள் செல்ல, அவன் உள்ளே நுழையும்முன் அவனுக்கும் மற்ற நால்வருக்கும் சேர்த்து ஆரத்தி எடுத்து உள்ளே அனுப்பினார், சீதா அம்மா. நண்பர்கள் அனைவரும் அவர்களது பெற்றோர்களும் இங்குதான் தங்கியிருக்கின்றனர் என்ற செய்தி அறிந்ததும் ராணா பலமடங்கு உற்சாகமானான். அதன் காரணம், யாவரும் அறிந்ததே..காவ்யாவும் இங்கே இருப்பாள் என்று உறுதியாக நம்பினான். ஆனால், அதை அவன் நண்பர்களிடத்தும் கேட்டுக்கொள்ளவில்லை.
ராணாவா? காவ்யாவா? என்று வந்தால் இவனது ஒட்டுமொத்தக் குடும்பமும் காவ்யாவின் பக்கமே நிற்கும் என்பதை இவனும் நன்கு அறிவான். இருப்பினும் அதில் தவறேதும் இல்லை என்றே இவனும் எண்ணுவான். இருந்தாலும் காவ்யாவை பார்ப்பதற்காக இவர்களிடத்தில் பிரச்சினை வேண்டாம் என்றே எண்ணி எதுவும் கேட்கவில்லை.
கண்களை வீடு முழுக்கச் சுழலவிட்டபடியே அவனுக்கான அறைக்குச் சென்றுகொண்டிருந்தான், அவளை ஒருமுறையேனும் பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில். ஆனால், அவள் இவன் கண்ணில் படவேயில்லை. சலிப்புடன் தனதறைக்குச் சென்றவன் களைப்பு நீங்க குளித்துவிட்டு அலுப்புத்தீர படுத்தான். அசதியில் கண்ணயர்ந்தவன் நன்றாக உறங்கிப்போனான்.
மதியநேரம், நண்பர்கள் வந்து இவனை எழுப்பி சாப்பிட அழைத்துச் சென்றனர். குடும்பம் மொத்தமும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க, இவனது விழிகள் அவனவளை தேடியது. ஆனால், அவளை தவிர மற்ற எல்லாரும் இருந்ததை கண்டு நொந்துபோனான். அப்படியே சென்று சாப்பிட அமர அனைவரும் இவனை நலம் விசாரித்திட, இவனும் அனைவரிடமும் பேசிவிட்டு அமர்ந்தான்.
அனைவரும் ஆனந்தமாகப் பேசியபடியே சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இவனது தவிப்பை உணர்ந்தாலும் இவனது நண்பர்கள் எதுவும் செய்யாமல் அமைதியாகவே இருந்தனர்.
பேசிக் கொண்டிருக்கும்போதே நாகவ்வின் தந்தை,"அப்றம்..ஃபங்ஷன்லாம் இங்கயே வச்சுக்கலாம்ல. எதுக்காக அங்க தனியா இங்க தனியானு..பொண்ணையும் இங்கயே கூப்டு வந்துருக்கலாம்" என்று கூறிட,
"அது சரிபட்டு வராது. பொண்ணு அவங்க வீட்ல இருந்துதான் இங்க வரணும். அதனால அங்கயே இருக்கிறதுதான் சரி" என்று லட்சுமி அம்மா கூறிட,
"ஆனா, அவளோட சொந்தம்தான் நாம எல்லாரும் இங்க இருக்கோமே..அப்றம் எதுக்கு அவள அங்க இருக்க சொல்லணும்?" என்று விஜய்யின் தந்தை கூறிட, இவையனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த ராணா குழம்பினான்.
"அதான் அவ ஃபிரண்ட்ஸ் நாங்க இருக்கோமே அப்பா. நாங்க அங்க கிளம்பிடுவோம். நாங்க அங்க எஞ்சாய் பண்றோம். நீங்க இங்க பண்ணுங்க. ஓகேவா?" என்று சரண்யா உற்சாகமாகக் கூறிட,
"அதான்டா பிரச்சினையே...இங்க செம்ம போரடிக்கும். பேசாம நானும் உங்ககூட அங்க வந்துடுறேன்டா" என்று சீதா அம்மா போலியான சோகத்தில் கூறிட,
"கண்டிப்பாம்மா. யூ ஆர் மோஸ்ட் வெல்கம்.."என்று அனுயாவும் கூறிட, ராணாவின் குழப்பம் மேலோங்கியது. அவனுக்குள் என்னவென்று கூறமுடியாத பதற்றம் உண்டானது. 'கல்யாணப் பொண்ணு இவங்களுக்கு ஃப்ரண்ட்னா...அப்ப அது...?' என்று சிந்தித்தவனால் அதற்குமேல் யோசிக்க முடியவில்லை. சாப்பாட்டில் இருந்து எழுந்தவன் வேகமாக அவனறைக்குச் சென்றுவிட்டான். இவன் செல்வதை அனைவரும் வருத்தமாகப் பார்த்திட, நண்பர்கள் நால்வரும் பிறகு பேசிக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டனர்.
அறைக்குள் வந்தவனின் மனம் படபடக்க, ஓரிடத்தில் நிற்க இயலாமல் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தான். தனது சந்தேகம் மட்டும் உண்மையாகிவிட்டால்....? என்று எண்ணும்போதே அவனது கண்கள் கலங்கின. இருந்தாலும் அவள் நன்றாக இருக்கவேண்டும் என்பதுதானே தனது விருப்பமும். அப்படியிருக்க, அவள் யாரை திருமணம் செய்துகொண்டால் என்ன? என்று சிந்தை கூறினாலும் மனம் வலித்தது. சிந்தனையில் உழன்று தவித்துக்கொண்டிருக்க, திடீரென கதவு திறக்கும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான்.
❤வருவாள்❤...