Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


GY NOVEL இருளில் தொலைந்த ஒளி அவள் - Tamil Novel

Status
Not open for further replies.
அவள் 13


காவ்யா சோர்வினால் மயங்கியவள் ஊசியின் வீரியத்தால் அயர்ந்து தூங்கியதால் காலை விடிந்து தாமதமாகவே கண்விழித்தாள். மெல்ல படுக்கையைவிட்டு எழுந்தாள். கடிகாரத்தைப் பார்த்தவள் மணியைப் பார்த்து அதிர்ந்தாள்.


'என்ன!! விடிஞ்சிருஞ்சா??!! அப்ப நைட்டு வந்த மயக்கம் இப்பதான் தெளியுதா?! ஆனா, எப்பவுமே இப்டி நடந்தது இல்லையே!!' என்று தனக்குள் சந்தேகித்து எண்ணிக்கொண்டே எழுந்து குளியறை சென்றாள். குளித்து முடித்துவிட்டபின் தான் அவளுக்கு நியாபகம் வந்தது, தன்னுடைய உடைகள் எதுவும் இல்லையென்று. என்ன செய்வதென்று அறியாமல் நின்றவள், பூந்துவாலையை எடுத்து கட்டிக்கொண்டு வெளியே வந்தாள்.


அறையின் அலமாரிகளில் ஏதேனும் இருக்கிறதா என்று தேடியவள் எந்த உடையும் இல்லாமல் வெறுமையாக இருந்ததைப் பார்த்து சலித்தவள் அப்படியே சோர்வாகி படுக்கையில் அமர்ந்திட, அறையின் கதவு திறக்கும் சத்தம் கேட்டு அதிர்ந்து வேகமாக குளியலறைக்குள் சென்று சாத்திக்கொண்டாள். அறையை முழுமையாகத் திறந்து உள்ளே யாரோ வரும் ஓசையைக் கேட்டவள், யாரது?? என்று வினவிட, எதிர்த்திசையில், "நான்தான்மா! கமலா!" என்று கூறியதைக் கேட்டதும்தான் சற்று நிம்மதி எழுந்தது.


அவரிடம் எதற்காக வந்ததாய் வினவிட, அவரும் ராணா உடையைக் கொடுத்தனுப்பியதாய்க் கூறிவிட்டு அதை மெத்தையில் வைத்துவிட்டுச் சென்றுவிட்டார். அவர் வெளியே சென்றதும் இவள் உள்ளே வந்து அந்த உடையை எடுத்துப் பார்த்தாள். அது ஒரு ஆடம்பரமில்லாத எளிமையான மற்றும் அணிவதற்கு இலகுவான காட்டன் புடவையாக இருந்தபோதிலும் அதன் தரமே அதன் அதிக விலையை எடுத்துக்கூறியது. அதனுடன் இதர உடைகளும் இருந்திட, அதை அணிந்து தயாரானாள்.


ஏற்கனவே, நேற்று முழுவதும் சாப்பிடாமல் இருந்ததால் பசி வயிற்றைக் கிள்ள, என்ன செய்வதென்று எண்ணியபடியே அமர்ந்திருந்தாள். அவளது தோழிகளுடன் இருக்கையில் பசியே இல்லாமல் இருந்தாலும் சாப்பிட தோன்றாமல் இருந்தாலும் உணவு ஊட்டிவிட்டுக் கவனித்துக் கொண்டதை நினைத்து வருந்தினாள். அந்நேரம், கதவைத் தட்டிவிட்டு திறந்துகொண்டு உள்ளே வந்தார், கமலாம்மா.


கையில் சாப்பாட்டுத் தட்டுடன் வந்தவர் இவளருகில் வைத்துவிட்டு, தண்ணீர் ஜாடியையும் வைத்துவிட்டு சாப்பிடுமாறு சொல்லிச் சென்றார். இவளுக்கு என்ன சொல்வது? என்ன நடக்கிறது? என்றே புரியவில்லை. எனினும், பசியின் பிடியில் இருந்தவள், தட்டில் இருந்த நான்கு இட்லி மற்றும் வடையையும் நன்றாக சாப்பிட்டு முடித்தாள். பல நாட்களுக்குப்பின் அவளாக பசித்து உண்ணும் உணவு இதுதான் என்பதை இந்நிலையில் இவள் நினைத்திருக்க வாய்ப்பில்லை.


உணவருந்தி முடித்தவள் தட்டைக் கழுவி வைத்துவிட்டு நகர, அந்நேரம் அறைக்குள் நுழைந்தான், ராணா. அவன் திடீரென்று வந்ததும் பதறியவள் இவனைக் கண்டதும் பயந்து தலை கவிழ்ந்துகொண்டாள். அதை எதையும் கவனிக்காது அவன் அவளருகில் வந்து,


"நீ ப்ரக்ணன்டா இருக்க!! தெரியுமா??" என்று நேராகக் கேட்டிட, அதைக் கேட்டவள் ஒருநொடி இவனுக்கு எப்படி தெரியவந்தது? என்று அதிர்ந்தாலும் அவள் குனிந்திருந்ததால் அவனுக்கு அது தெரியவில்லை. அவள் அமைதியாகவே நின்றிட, கோபம் கொண்டவன் அவள் தாடையைப் பிடித்து நிமிர்த்தி,


"உன்னத்தான் கேக்குறேன்!! நீ ப்ரக்ணன்டா இருக்கிறது உனக்குத் தெரியுமா? தெரியாதா?" என்று கேட்டிட, அவளும் வலி தாளாமல் திணறியவள், "தெரியும்!" என்று திக்கித் திணறி கூறிட, அவன் லேசாக அதிர்ந்தான்.


"அப்போ! உண்மைய சொல்லு!! இது யாரோட குழந்த??" என்று இவன் சந்தேகமாய் கேட்டதைக் கேட்டு அவள் அதிர்ந்து இவனைப் பார்த்தவள், மறுநொடி தலைகவிழ்ந்து கொண்டாள். அவள் கண்களில் இருந்து கண்ணீர்த்துளிகள் வடிந்ததைப் பார்த்த ராணா,


"இங்க செண்டிமெண்ட் சீன பாக்க
ஒண்ணும் நான் வரல! நான் கேட்டதுக்கு பதில்!! இது யாரோட குழந்த?? உனக்கு லவ்வர்னு யாரும் கிடையாதுன்னு எனக்குத் தெரியும்! அப்போ...இது என்னோட குழந்தையா?? சொல்லு!!" என்று அழுத்தமாகக் கேட்டிட, அதைக் கேட்டவள் அவனது திமிர்ப் பேச்சையும் சந்தேகப் பார்வையையும் தாளமுடியாமல் நின்றவள்,


"ஆமா...!! ஆமா!! ஆமா!! இது உன்னோட குழந்ததான்!" என்று கத்தியவள் மடிந்து கீழே அமர்ந்துவிட்டாள். ஆனால், காவ்யா
கூறியதைக் கேட்ட ராணா மனதில் தோன்றிய வெற்றிக் களிப்பு சிரிப்பாய் மலர்ந்திட, உதட்டில் பூத்த ஏளனப் புன்னகையுடன் அவளைப் பார்த்தான்.


"நான் நினச்சது சரிதான். இது என்னோட குழந்ததான். நீ இப்டி ப்ரக்ணன்டா இருக்கிறது எனக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா உன்னய கல்யாணமே பண்ணியிருக்க மாட்டேனே!!" என்று இவன் ஏளனமாகக் கூறிட, அதில் அவனை சந்தேகமாக நிமிர்ந்து பார்த்தாள். அவனும் அவளைப் பார்த்தவாறே,


"நான் கல்யாணம் பண்ணாம இருந்திருந்தாலே நான் நினச்சதவிட உன்னய சூப்பரா பழி வாங்கிருக்கலாம்போல!! நீ கல்யாணம் ஆகாம வயித்துல குழந்தையோட இருந்திருந்தா இந்த சொசைட்டில உனக்கு நிறைய அவமானங்கள் பரிசா கிடச்சிருக்கும். நான் நினச்சதும் நடந்திருக்கும். ஆனா, நான்தான் உன்னய கல்யாணம் பண்ணி கூடவே வச்சு பழி வாங்க நினச்சு இப்டி பண்ணிட்டேனே!!" என்று பொய்யாக வருந்துவதைப் போல நடித்தவன், அடுத்தநொடி சிந்தித்து,


"இப்ப அதனால என்ன ஆயிடுச்சு?? இப்பவும் ஒரு பிரச்சினையும் இல்ல! உன்னய இடிச்சதுக்கே அடிச்சவ நீ! இப்ப என்னோட குழந்தயே உன் வயித்துல வளருது!! இதுவே உனக்கு பெரிய தண்டனைதான்! இப்ப உன்னோட பொறுப்பு என்னன்னா இந்த குழந்தைய பத்திரமா பாதுகாப்பா பாத்துக்க வேண்டியது!! இது நம்ம குழந்தையில்லயா!!" என்று நக்கலாகப் பேசி அவளை சீண்டிட, அவளோ இவன் பேசுவதைக் கேட்டு இவனது கீழ்த்தரமான எண்ணத்தை நினைத்து முகம்சுழித்துத் தலைகவிழ்ந்தாள்.


அவளின் நிலையைப் பார்த்து மனதில் சிரித்தவன் அறையைவிட்டு அகன்றான். அவன் பேசியதையெல்லாம் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு திடீரென குமட்டல் ஏற்பட, வேகமாகச் சென்று வாந்தியெடுத்தாள். வெளியே வந்து மெத்தையில் சரிந்தவள் அப்படியே கிடந்தாள். மதியம், அறைக்கு வந்து கமலாம்மா உணவை வைத்துவிட்டு, காலை உணவு கொண்டுவந்த தட்டை எடுத்துச் சென்றுவிட, இவளோ அதைக் கவனிக்கவும் தோன்றாமல் அப்படியே இருந்தாள்.


காவ்யா போனில் பேசியபிறகு அவளை நினைத்துக் கதறி அழுதவர்கள் அப்படியே நிலைகுலைந்தனர். எவ்வளவு நேரம் அழுதிருப்பார்கள் என்று அவர்களும் அறியார்! அவர்கள் கண்ணில் இனி சிந்த ஒருதுளி கண்ணீரும் இல்லை என்று வற்றும் அளவிற்கு அழுதார்கள்.


எந்த சூழ்நிலையிலும் ஒருத்தருக்கொருத்தர் ஆறுதலாக இருந்தவர்களால் இப்போது எதுவும் பேசக்கூட தோன்றாமல் கண்ணீர் சிந்தினர். தங்கள் தோழியைப் பிரிந்த சோகம் ஒருபக்கம் இதயத்தை தைக்க, இவர்களுக்காகவும் எடுத்த முடிவுதான் அது என்ற எண்ணம் மறுபக்கம் அவர்களை முள்ளாய் குத்தியது. அந்த வேதனையைத் தாளமுடியாமல் அந்நேரத்தில் அவர்களால் முடிந்தது கண்ணீர் சிந்துவது மட்டுமே! என்பதை அறிந்த அவர்கள் இதயமும் கண்களும் ஆறுதலாய் கைகோர்த்துக் கொண்டு கண்ணீர் சிந்தின.


விடியும்வரை அழுதவர்கள், எப்போது தூங்கினார்களோ?!... சரண்யா, அழுது வீங்கி கண்களுடன் இணைந்திருந்த இமைகளை மெதுவாகப் பிரித்து விழித்தாள். சூரிய ஒளி கண்களில் பட்டு கூசச் செய்திட, கண்களை மூடித் திறந்தவள் தன்னைச் சுற்றி ஒருவர் மடியில் ஒருவராய் தூங்கிக் கிடந்த தன் தோழிகளைப் பார்த்தாள்.


காவ்யாவின் பிரிவு வேதனையைத் தந்திட, முகம் வாடியவள், மெல்ல எழுந்துசென்று முகம் கழுவினாள். காலைநேரம் கடந்து வெகுநேரம் ஆகியிருந்தது. அதனால், சமையல் செய்வதற்காகச் சென்றாள். அவளுக்கென பசி எடுக்காதபோதிலும் தோழிகளுக்காய் சமைக்கச் சென்றாள்.


அவள் எழுந்துசென்ற அதிர்விலே அனுயாவும் கண்விழித்திட, அவளும் முகம் கழுவிவிட்டுச் சென்று சரண்யாவுக்கு உதவி செய்தாள். இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. பேசவும் எதுவும் தோன்றாமல் வெறுமையான சிந்தனையுடன் சமையல் மட்டுமே செய்துகொண்டிருந்தனர்.


தன்யா கண்விழித்திட, இருவரையும் காணாமல் எழுந்து செல்லப்போகும் முன் தன்மடியில் தலைசாய்த்துப் படுத்திருந்த ரம்யாவின் தலையை மெதுவாக நகர்த்தி தலையணையில் வைத்துவிட்டு எழ, ரம்யாவும் கண்விழித்துக் கொண்டாள். இருவரும் ஒருவரையொருவர் பார்த்தபடி இருக்க, முகத்தில் சோகம் மட்டுமே உரையாடியது.


பின்பு, இருவரும் எழுந்துசென்று மற்ற இருவரும் சமையலறையில் இருப்பதைப் பார்த்துவிட்டு முகம் கழுவிவிட்டு வந்து அவர்களுடன் இணைந்தனர், மௌன உரையாடலில். எவரும் எதுவும் பேசிக்கொள்ளாமல் உணவு தயாரித்து முடித்தனர்.


உணவருந்தும் மேசையில் வைத்துவிட்டு அமர்ந்தவர்கள் அமைதியாய் இருந்தனர். ஒருவர் மற்றவர்க்குப் பரிமாறிட, அதை மற்றவர் மறுத்திட, என்று நால்வரும் உண்ணாமலே இருந்தனர். எவரும் இப்போது உணவருந்தும் நிலையில் என்பதை அறிந்த சரண்யா,


"இப்போ! சாப்ட வரப்போறீங்களா? இல்லையா??" என்று கேட்டதற்கும் மௌனமே பதிலாய் வந்திட,


"எனக்கு பசிக்குது! இப்போ, நீங்க சாப்ட வந்தாதான் நானும் சாப்பிடுவேன்! இல்லன்னா இப்டியே பட்டினியாவே இருக்கேன்! உங்களுக்கு சந்தோசமா??" என்று சற்று கோபமாகக் கூறிட, மற்றவர்கள் அவளை வேதனையோடு பார்த்தனர்.


அவளுக்குள்ளும் இதே வேதனை இருப்பதை அவர்களும் அறிவர். அவள் பசிப்பதுபோல் நடிப்பதையும், எதற்காக இப்படி நடிக்கிறாள் என்பதையும் அறிந்தவரகள், அதே காரணத்திற்காக அவர்களும் சாப்பிடத் தொடங்கினர். அவர்களைப் பார்த்து சரண்யாவும் சாப்பிட்டாள். எப்போதும் கலகலவெனப் போகும் சாப்பாட்டுநேரம் இன்று மௌனத்தின் பிடியில் சிக்கித் தவித்தது.


மகிழ்ச்சி, கஷ்டம், விருப்பு, வெறுப்பு என அனைத்தையும் பகிர்ந்தவர்களால் தங்கள் சோகத்தையும் வேதனையையும் பகிர்ந்துகொள்ள முடியவில்லை. அதன் காரணமும் அவர்களிடத்தில் உள்ள அதீத அன்புதான். அந்த அன்பும் பிணைப்பும்தான் காவ்யாவை இவர்களிடம் அப்படி பேசச் செய்தது! அவளை எண்ணி இவர்களையும் இப்படி சோகத்தில் ஆழ்த்தியது!


மாலைநேரம், காவ்யாவின் அறையைத் திறந்து உள்ளே வந்தவன், அவள் கிடந்த நிலையைப் பார்த்து அருகில் வந்திட, சாப்பாடு அப்படியே இருந்ததைக் கண்டான். அதில் அவனுக்குக் கோபம் எழ,


"காவ்யா!!!" என்று கர்ஜித்திட, அதைக் கேட்டவள் சுயநிலைக்கு வந்து அதிர்ந்து எழுந்தமர்ந்தாள். இவன் நிற்பதைப் பார்த்திட, அவனோ எரிமலையாய் நின்றான். இவள் கண்களில் பயத்தை ஏந்தி மிரட்சியுடன் அவனைப் பார்க்க,


"எதுக்காக இன்னும் சாப்டல?? நீ மட்டும் சாப்டலன்னா எனக்கு ஒரு பிரச்சினையும் இல்ல! ஆனா, வயித்துல வளருரது என்னோட குழந்த! அது உனக்கு பிடிக்காட்டியும் ஏத்துகிட்டுதான் ஆகணும்! நீ சாப்டாம கவனிக்காம அந்தக் குழந்தைக்கு ஏதாவது ஆச்சுனா..அப்றம் உனக்குத்தான் இன்னும் கஷ்டம்!! அதுக்குப்றம் நான் உன்னய பழி வாங்குற விதம் இன்னும் கொடுமையா இருக்கும்! ஜாக்கிரத!!" என்று கர்ஜித்தவன், கமலாம்மாவை அழைத்து உணவு கொண்டுவரச் சொல்ல, அவரும் கொண்டு வந்தார்.


அதை வாங்கியவன் இவளிடம் கொடுக்க, அவள் அதை வாங்க மறுத்து அப்படியே நின்றாள். அது இவன் கோபத்தை இன்னும் அதிகரிக்க, தட்டை தூக்கி ஏறிந்திட, அது கீழே விழும் சத்தமும் அவனது கோப முகமும் பழைய நினைவுகளை அவள் கண்முன் காட்டிட, பயந்தவள் அப்படியே மயங்கி படுக்கையிலே சரிந்தாள்.


ராணாவின் கோபத்தில் பயந்துபோன கமலாம்மாவும் காவ்யா மயங்கியதைக் கண்டு அவளருகில் வந்து அவளைச் சரியாகப் படுக்கவைத்து அவள் முகத்தில் தண்ணீரைத் தெளித்தார். இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு நின்றிருந்தவன்,
"அவள பாத்துக்கோங்க! நைட்டு சாப்பாடு கொடுத்து பக்கத்துலயே இருந்து சாப்ட வையுங்க!" என்று கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டான்.


நேற்று இரவு இவன் பேசியதற்கும் இன்று இவன் பேசியதற்கும் உள்ள வித்தியாசத்தை நன்கு உணர முடிந்த அவரால், அதன் காரணத்தை யூகிக்க முடியவில்லை. காவ்யா கற்பாமனதால் வந்த அக்கறை என்று அவர் நினைத்துக்கொண்டார். ஆனால், அந்த அக்கறைகூட அவளை பழி வாங்குவதன் முதலீடுதான் என்பதை அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.


சிறிதுநேரம் கழித்து மயக்கம் தெளிந்தவளுக்கு கமலாம்மா சாப்பாடு கொண்டு வந்து கொடுத்து சாப்பிடச் சொன்னார். அவளும் மறுத்திட, "இந்தமாறி நேரத்துல இப்படி பட்டினியா இருக்கக்கூடாதும்மா! அது உங்களையும் பாதிக்கும், குழந்தையையும் பாதிக்கும்மா! சாப்டுங்கம்மா!!" என்று அக்கறையாகக் கூறியதைக் கேட்டவளுக்கு அவளது தோழிகளின் நினைவே வந்துசென்றது.


அவர்களின் அக்கறையை இவரின் முகத்தில் பார்த்தவள், என்ன நினைத்தாளோ?? அவர் கொடுத்த உணவை அமைதியாக உண்டாள். பாதிக்குமேல் உண்ணமுடியாமல் சென்று வாந்தியெடுத்துவிட்டாள். அவளுக்குப் பின்னே சென்று அவளின் தலையைப் பிடித்துவிட, முழுவதும் வாந்தியெடுத்தவள், முகம் கழுவி வந்து அப்படியே சோர்வாக அமர்ந்தாள். அவளுக்கு பருக நீரைக் கொடுத்தவர், சாப்பாட்டுத் தட்டைக் கீழே எடுத்துச் சென்றுவிட்டார்.


இரவின் அமைதியும் அறையின் தனிமையும் அவளை அச்சுறுத்திட, மெத்தையில் மடங்கி அமர்ந்தவள் கால்களைக் கட்டிக்கொண்டு அதில் தலையை வைத்தவாறே அமைதியாக அமர்ந்திருந்தாள். சிறிதுநேரத்தில் அறையைத் தட்டும் சத்தம்கேட்டு திடுக்கிட்டவள் நிமிர்ந்து பார்க்க, கமலாம்மா கையில் பழரத்துடன் வருவதைப் பார்த்தாள். இவளருகில் வந்தவர் அதை இவள் கையில் கொடுத்து,


"இதை குடிங்கம்மா!! சாப்பாடு முழுக்க வாந்தி பண்ணிட்டீங்க! இத குடிங்க! அப்பதான் கொஞ்சமாச்சும் தெம்பு வரும்மா" என்று கூறி கொடுத்திட, காவ்யாவின் கண்கள் கண்ணீரைச் சுரந்தது, அவள் தோழிகளின் நினைவில். அமைதியாக அதைப் பருகி முடித்தவள், அந்தக் கண்ணாடி குவளையை அவரிடம் கொடுத்துவிட்டு,


"ரொம்ப தேங்க்ஸ்ம்மா!!" என்று கூறிட, அவரும், "எதுக்கும்மா தாங்க்ஸெல்லாம்!! இது என்னோட வேலம்மா!! பண்ண வேண்டியது என்னோட கடம!" என்று பதில் கூறியதைக் கேட்டவள்,


"சாப்பாடு கொடுக்குறது கடம! ஆனா வாந்தி எடுக்கும்போது அக்கறையா தலையப் பிடிச்சீங்களே! அது என் சொந்தத்த நியாபக படுத்துச்சு! இப்பக்கூட ஜூஸ் கொடுத்தீங்களே! அதுல உங்க கடமைய தாண்டின அக்கற தெரிஞ்சது! நீங்க என்ன நினச்சு செஞ்சீங்களோ? எனக்கு தெரியாது! ஆனா, நீங்க பண்ணதுக்காக தேங்க்ஸ்!" என்று பொறுமையாக விளக்கிக் கூறியதைக் கேட்டவர், இவள் இந்தளவுக்கு தன்னை கவனித்து அதற்காக நன்றி கூறுமளவு உயர்ந்த உள்ளம் கொண்டவள் என்பதை எண்ணி வியந்தார்.


அவளை வாஞ்சையோடு பார்த்தவர், "படுத்துக்கோங்கம்மா! நல்லா ரெஸ்ட் எடுங்க!" என்று கூறிட, "நான் உங்க பொண்ணு வயசுதான இருப்பேன்! என்னய எதுக்கு வாங்க போங்கனு சொல்றீங்க? வா போனு சாதாரணமாவே பேசுங்கம்மா!" என்று காவ்யா கூறிட, அதை அவர் மறுத்தார்.


"இல்லம்மா!! நீங்க என்னோட முதலாளியம்மா!! உங்களப்போய்...நான் அப்டிலாம் கூப்டக்கூடாதுங்கம்மா!!" என்று பதறியபடி கூறினார்.


ஆனால், அது அவள் மனதை சற்று வேதனையடையச் செய்தது. அவள் தோழிகளுடன் இருந்தவரை கொடுமையிலும் ஆறுதல்போல! இருளில் தெரிந்த விளக்கொளி போல! இந்த ரணமான நினைவுகளின் இடையில் அவர்களின் அன்பும் அக்கறையும் இவளுக்குச் சிறிய ஆறுதலாக இருந்தது!


ஆனால், அப்போது அதை அறிந்திடாமல் கவலையில் மூழ்கிக் கிடந்தவள், இங்கே கொடுமை என்னும் இருள் மட்டுமே சூழ்ந்திருக்க, ஆறுதலுக்கு வழியில்லாமல் திணறினாள். அதற்கிடையில் கிடைத்த சிறு மின்மினி பூச்சியின் ஒளியாய் கமலாம்மாவின் அக்கறை இவளுக்குத் தெரிந்ததால் அவரிடம் ஆறுதல் தேடினாள்.


அவரோ மரியாதையை முன்வைத்திட இவளுக்கு கவலையாக இருந்தது. "எனக்கு அம்மா கிடையாது. உங்கள என் அம்மா மாதிரி நினச்சுதான் அப்டி சொன்னேன்! நீங்க என்னய வா போன்னு கூப்டுறதால மரியாதை இல்லனு ஆகிடாது இல்லயா! ஆனா, ஒரு நெருக்கம் வரும்னுதான் அப்டி சொன்னேன்!" என்று கவலையாகக் கூறியதைக் கேட்டவரும் மனமுருகி நெகிழ்ந்தார்.


அவள் கட்டளையிட்டாலே அதை மறுக்க இவரால் இயலாது! அப்படியிருக்க, அவள் தன்மையாய் கேட்டது இவருக்கு அவள்மேல் உள்ள மரியாதையை இன்னும் அதிகமாக்கியதோடு, அவளின் ஏக்கம் இவரின் மனதையும் உருகச்செய்தது.


"சரிம்மா! உனக்கு அதுதான் பிடிச்சிருக்குன்னா! நான் அப்டியே கூப்டுறேன். சரியாம்மா! இனிமேல் அம்மா இல்லன்னு சொல்லாத! என்னய அம்மா மாதிரின்னு சொன்னேல்ல..அம்மாவாவே நினச்சுக்கோ. கவலப்படாதம்மா!" என்று அவள் தலைவருடி கூறிட, காவ்யாவின் கண்கள் குளமாகின. ஆதரவாய் அவள் தலையை வருடிகொடுத்தவர் அவளைப் படுக்கவைத்து போர்வையைப் போர்த்திவிட்டுச் செல்ல எத்தனிக்க,
அவர் கையைப் பிடித்துத் தடுத்தவள்,


"எனக்கு தனியா தூங்க பயமா இருக்கு! என்கூட இங்கயே படுத்துக்கிறீங்களா?" என்று சிறுகுழந்தைபோல் கேட்டவளைப் பார்த்து சிரிப்பதா? பரிதாபப்படுவதா? என்றே தெரியவில்லை அவருக்கு.


"இல்லம்மா! ஐயாகிட்ட கேட்காம என்னால எதுவும் பண்ணமுடியாதுமா! அவரு பாத்தாருனா கோபப்படுவாரு! நீ தூங்குறவர வேணா நான் பக்கத்துலயே இருக்கேன்! சரியா!!" என்று கூறிட, அவளும் அரைமனதாய் சம்மதித்தாள். அவளைப் படுக்கவைத்து அருகில் அமர்ந்தவர் அவள் தலையை மெல்ல வருடிக் கொடுத்திட, சோர்வினாலும் கமலாம்மாவால் மனபாரம் சற்று குறைந்திருந்த காரணத்தாலும் மெதுவாகக் கண்ணயர்ந்தாள். சிறிதுநேரம் கழித்து அவள் தூங்கிவிட்டாள் என்பதை உறுதி செய்துகொண்டு அறையைவிட்டு வெளியேறினார்.


ராணா வெளியே சென்றிருந்தவன் வீட்டிற்கு வந்ததும் கீழிறங்கி வரும் கமலாம்மாவைப் பார்த்தவன் காவ்யாவைப் பற்றி விசாரிக்க, அவரும் அவள் சாப்பிட்டதையும் அதை முழுவதும் வாந்தி எடுத்ததால் பழரசம் குடித்து தூங்கிவிட்டதை மட்டும் கூறிச் சென்றார். இவனும் வேறெதுவும் பேசாமல் உணவருந்திவிட்டு சென்று அவனறையில் நுழைந்துகொண்டான்.


ராணாவின் அலுவல் சம்பந்தமாக பார்த்துக்கொண்டிருந்ததால் நடுஇரவு வரை முழுத்திருந்தான். இது அவனது தினசரி வழக்கம். அப்போது யாரோ அலறும் குரல் கேட்டு எழுந்து வெளியே வந்தவன், அந்தக் குரல் பக்கத்தில் இருக்கும் காவ்யாவின் அறையிலிருந்து வருவதைக் கேட்டு அங்கே ஓடினான். அறையைத் திறந்து உள்ளே சென்றவன், இருட்டாக இருந்திட, அறையின் விளக்குகளைப் போட்டான்.


விளக்குகளைப் போட்டுவிட்டு படுக்கையைப் பார்க்க, காவ்யா அங்கில்லாததால் கண்களால் அவளைத் தேட,
அறையின் மூலையில் அமர்ந்து கால்களைக் கட்டியபடி முகத்தைப் பொத்திக்கொண்டு கத்திக்கொண்டிருந்த காவ்யாவைப் பார்த்தான். அவளை அந்நிலையில் கண்டவன் முகம் குழப்பத்தில் சுருங்கிட, அவளருகில் வேகமாகச் சென்று அவள் தோள்தொட்டு எழுப்ப முயற்சிக்க அவள் பதறி இன்னும் அலறினாள்.


இவனும் அதை அலட்சியம் செய்து அவளை மெல்ல எழுப்பி நிற்கவைத்திட, சுற்றியும் பார்த்தவள் கொஞ்சம் பயம் தெளிந்து அமைதியானாள். அவளை எரிச்சலோடு பார்த்தவன், அவள் தோளைப் பற்றியபடி, "ஏய்!! எதுக்கு கத்திகிட்டு இருக்க?? உனக்கு என்ன பைத்தியமா?? இனி இப்டி எதாச்சும் பண்ணுன...அப்றம் நான் மோசமானவனா ஆயிடுவேன். ஒழுங்கா போய் படு!" என்று கோபமாக கத்திட, ஏற்கனவே பயத்தில் இருந்தவள் இவனின் கத்தலில் அதிர்ந்து மயங்கிச் சரிந்தாள்.


கீழே விழப்போனவளை கைகளால் பிடித்தவன், எரிச்சலோடு தூக்கிச் சென்று படுக்கையில் படுக்கவைத்துவிட்டு அறையின் விளக்குகளை அணைக்காமலே கதவை சாத்திவிட்டுச் சென்றான். ராணா உள்ளே செல்லும்போது கதவை திறந்து வைத்ததால் இவளது அலறல் சத்தம் கீழே உள்ள அறையில் படுத்திருந்த கமலாம்மாவிற்கும் லேசாகக் கேட்டிட, என்னவென்று மேலே வந்து இங்கு நடந்ததைப் பார்த்தவர், இவன் காட்டுவது வெறுப்பா?? அக்கறையா?? என்று புரியாமல் யோசித்தவர், சத்தமின்றி கீழே சென்றுவிட்டார்.





காவ்யாவின் நிலை மாறுவது எப்போது?? ராணாவின் பழி தீர்க்கும் எண்ணம் மாறுவது எப்போது?? வஞ்சம் மறைந்து வெறுப்பு மாறிடுமா??







❤வருவாள்❤...





கீழே இருக்கும் லிங்க் கிளிக் செய்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்

Thread 'இருளில் தொலைந்த ஒளி அவள் - Comments' https://www.sahaptham.com/community/threads/இருளில்-தொலைந்த-ஒளி-அவள்-comments.500/
 
அவள் 14


காலையில் கண்விழித்தவள் எதுவும் யோசித்துக்கொள்ளாமல் எழுந்து முகம் கழுவிவிட்டு கீழே சென்றாள். அங்கே சமையலறையில் கமலாம்மா சமையல் வேலைகளைச் செய்து கொண்டிருப்பதைப் பார்த்து அருகில் சென்றாள். இவள் வந்ததைக் கவனித்தவர் இவளிடம் திரும்பி,


"என்னம்மா?! இங்க வந்துருக்க? எதுவும் வேணும்னா வெளிய வந்து சத்தம் கொடுத்திருந்தா நானே வந்துருப்பேன்ல! இல்லன்னா இண்டர்காம் வழியா கூப்டுருக்கலாம்லமா?!" என்று வினவிட, அவளும் மெலிதாகப் புன்னகைத்தவள்,


"எதுவும் வேணாம்மா! சும்மாதான் வந்தேன். ரூம்குள்ளயே இருக்குறது ஒருமாதிரி இருந்துச்சு. அதான்!!" என்று கூறிட, அவரும் ஆமோதித்து அவளுக்கு தேனீர் கலந்து கொடுத்தார்.


"நேத்து நைட்டு நீ அலறுன சத்தம் கேட்டுச்சேமா! என்னாச்சுமா? எதுவும் பாத்து பயந்துட்டியா?" என்று அக்கறையாய் கேட்டிட, அதைக் கேட்டவள் ஒருநொடி மௌனம் காத்தாள். அதைப் பார்த்தவரும்,


"சத்தம் கேட்டுச்சுன்னு மேல வந்து பாத்தப்ப ஐயாதான் உன்னய தூக்கிட்டுபோய் படுக்க வச்சிட்டு இருந்தார். நான் அப்படியே கீழ வந்துட்டேன். நீ ரொம்ப சத்தம்போட்டு அலறுனயா! அதான்மா என்னனு கேட்டேன்" என்று தன் விளக்கத்தை மெதுவாகக் கூறிட, அமைதியாக இருந்த காவ்யா,


"தூக்கத்துல இருந்து கண்முழிச்சப்ப ரூம் முழுக்க ஒரே இருட்டா இருந்துச்சா..! அதான்மா ரொம்ப பயந்துட்டேன்! அதனாலதான் கத்திட்டேன்மா!" என்று பொறுமையாகக் கூறுவதைக் கேட்டவர் மெல்ல சிரித்தார். அதைப் பார்த்தவள் என்னவென்று கேட்க,


"என்னம்மா பொண்ணு நீ? இன்னும் சின்னக் குழந்தையா இருக்கியேமா! தனியா தூங்க பயப்படுற, இருட்ட பாத்தா பயப்படுறியேமா! உன்னய பாத்தா எனக்கு வளர்ந்த குழந்த மாறிதான் இருக்கு" என்று புன்னகையுடன் கூறியதைக் கேட்ட காவ்யா தன் மாற்றத்தை நினைத்து வலியில் மெலிதாக விரக்தி புன்னகையை சிந்தினாள்.


காலை எழுந்தவன் தன் கடமைகளை முடித்து, கிளம்பி அறையைவிட்டு வெளியே வந்தவன் காவ்யாவின் அறைக்குச் சென்று பார்த்தான். அவளை அங்கு காணாமல் போகவே கமலாம்மாவை அழைத்தப்படி கீழே வந்தான். அவன் சத்தம் கேட்டு கமலாம்மாவும் வெளியே வர, கீழே வந்தவன் கமலாம்மாவிடம் அவளைப் பற்றி கேட்கும் முன் உள்ளே நின்ற காவ்யாவைப் பார்த்துவிட்டான்.


அவனைப் பார்த்திருந்த கமலாம்மாவை கண்டவன், "எதுக்காக இங்க வந்து நிக்கிறா? நைட்டானா கத்தி இருக்க ஆளுங்கள தூங்கவிடாம பண்ணுறது, பகல்ல அவ இஷ்டத்துக்கு ஆடுறது. எதுக்காக இப்ப அவ ரூமவிட்டு இங்க வந்தா? என்ன பேச்சு இங்க? என்ன நினச்சுட்டு இருக்கா அவ மனசுல?" என்று எரிச்சலுடன் கத்திட, காவ்யா உள்ளேயே அமைதியாக நின்றுகொண்டாள். ராணாவின் கோபத்தைக் கண்டு சற்று பதற்றமானாலும், தன்னை சமாளித்துக்கொண்டு,


"ஐயா!! அவங்க ராத்திரி இருட்ட பாத்து பயந்துபோய்ட்டாங்க போல! அதான் அலறிட்டதா சொன்னாங்கய்யா! இப்ப டீ கேட்டுதான் கீழ வந்தாங்கய்யா! வேற ஒன்னும் இல்லங்கய்யா!" என்று பணிந்து, பொறுமையாகக் கூறியதைக் கேட்டவன் சிறிது அமைதியடைந்தான்.


"சரி! சரி!! சீக்கிரம் கிளம்பி இருக்கச் சொல்லுங்க அவள! அவளுக்கான ட்ரெஸ்ஸெல்லாம் அவ கப்போர்டுல வைக்க சொல்லிட்டேன்!" என்று கூறிவிட்டு கிளம்பி வெளியே சென்றுவிட்டான். இவன் கிளம்பி இருக்கச் சொன்னதைக் கேட்ட காவ்யா அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் இருக்க, அவளின் முகத்தை பார்த்தவர், "என்னம்மா? எதுவும் வேணுமா? எதாவது பண்ணுதா?" என்று விசாரித்தார்.


"ஒன்னும் இல்லம்மா!" என்று மட்டும் சொல்லிவிட்டு மேலே செல்ல எத்தனிக்க, அவளை அழைத்தவர்,
"உன்னய ஐயா கிளம்பி இருக்கச் சொன்னாரும்மா! உன்னோட ட்ரெஸ்ஸெல்லாம் உன் கப்போர்டுல வைக்க சொல்லிட்டாராம். இப்ப வச்சிட்டுருப்பாங்க, நீ போய் கிளம்பும்மா!" என்று சொல்லி அனுப்பினார். அவளும் பதில் பேசாமல் மேலே சென்றுவிட்டாள்.


காவ்யா அறைக்குள் நுழையவும் இரண்டு பெண்கள் அலமாரியில் துணிகளை அடுக்கி முடித்திருந்தனர். இவளை பார்த்ததும் கூறிவிட்டு கிளம்பிவிட்டனர். அறைக்குள் வந்தவள் குழப்பத்தோடு அமர்ந்தபடி, 'எதுக்காக என்னய கிளம்ப சொல்றான்? எங்கயா இருக்கும்? அவன எதிர்த்து நடந்தா இன்னும் கோபப்படுவான். இப்ப நான் அவன எதிர்த்துப் போராடுற நிலமையில இல்ல. எதுக்காக இப்டி டார்ச்சர் பண்றான்?' என்று எண்ணியவாறே அமர்ந்திருந்தவளுக்கு குமட்டல் ஏற்பட, சென்று வாந்தி எடுத்தாள். சிறிதுநேரத்தில் குளித்து தயாராகி வெளியே வந்தவள், கீழிறங்கப்போக, கீழே ராணா அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் அறைக்குள்ளேயே சென்றுவிட்டாள்.


சிறிதுநேரத்தில், அவளை சாப்பிட அழைத்துச் சென்று சாப்பிட வைத்தார், கமலாம்மா. அவன் அங்கிருந்து நகர்ந்த பிறகே இவளை அழைத்திருந்தார். இவளும் சாப்பிட்டு முடித்திட, கீழே வந்த ராணா அவளை அழைத்துவிட்டு முன்னே சென்றான். ஒன்றும் புரியாமல் நின்றவள், எங்கே செல்கிறோம்? என்றுகூட தெரியாமல் அவனைப் பின்தொடர்ந்து சென்று வண்டியில் பின் இருக்கையில் ஏறிக்கொண்டாள்.


ராணா ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தவன், பின்னே அவள் இருப்பதைப் பார்த்து எரிச்சலடைந்தவன், "நீ பெரிய மகாராணினு நினப்பா? உனக்கு
ஒன்னும் நான் ட்ரைவர் இல்ல. முன்னாடி வந்து உட்காரு" என்று கோபத்தில் பற்களுக்கிடையில் பேசிட, காவ்யா எந்த உணர்ச்சியையும் காட்டிக்கொள்ளாமல் முன்னே வந்து அமைதியாக அமர்ந்தாள்.


ஒற்றைப் புருவம் தூக்கி அவளை எரிச்சலோடு பார்த்தவன், பின் ஏளனச் சிரிப்பொன்றை வீசியபடி,


"உன் வாழ்க்கைல இப்டிலாம்
நடக்கும்னு உன் கனவுலகூட நினச்சிருக்க மாட்டல்ல! இந்தமாறி எதுவும் பேசமுடியாம, கோபப்பட முடியாம இருப்பனு நீ நினச்சிருக்கியா? இப்ப உன்னோட முழு திமிரும் அடங்கிப்போய் அமைதியா இருக்கிறமாறி அன்னைக்கே இருந்திருந்தா உனக்கு இந்த நிலமை வந்துருக்காது" என்று ஏளனமாகக் கூறியவன், நிறுத்தி யோசித்தவன் அடுத்தநொடி,


"ஆனா! இப்பக்கூட உன் நிலம மோசம்லாம் இல்லயே! இப்ப நீ என்னோட பொண்டாட்டியா ஆயிருக்க! அது எவ்ளோ பெரிய அதிர்ஷ்டம் தெரியுமா! மிஸஸ். ராணா தேவ்னு பேரு கிடைக்கிறது சாதாரணமான விஷயம் கிடையாது. ஆனா, உனக்கு கிடச்சுருக்கு. பட், வாழ்க்கை முழுக்க அந்த பேரு மட்டும்தான் இருக்கும். சந்தோசம் இருக்காது" என்று சொற்களில் வெறுப்பைக் காட்டியவன், காரை உயிர்ப்பித்துக் கிளம்பினான்.


அவன் கூறிய அனைத்தையும் கேட்டவளால் பதிலேதும் பேசமுடியாமல், கவலை தொண்டையை அடைக்க, கண்கள் குளமாக, காரின் சன்னல்புறம் வெளியே திரும்பிக்கொண்டாள். கண்ணீர் கண்ணங்களில் வழிந்தோட, சன்னல் வழியே வெறித்தபடி அமர்ந்து வந்தாள். சிறிதுநேர பயணத்திற்குப் பின், ராணா வண்டியை நிறுத்திவிட்டு அவளைப் பார்த்திட, அவளோ மயங்கி காரின் கண்ணாடியில் சாய்ந்திருந்தாள்.


காரின் கண்ணாடியில் சாய்ந்து கண்மூடியிருந்தவளைப் பார்த்தவன், அவள் தூங்கிவிட்டாளென எண்ணி பல்லைக் கடித்தபடி எரிச்சலுடன் அவளைத் தட்டியெழுப்பினான். அவளிடம் எந்த அசைவும் இல்லாததால் குழப்பமடைந்து இறங்கியவன், மறுபக்கம் வந்து கதவைத் திறக்க, அவன்மீதே சரிந்தாள். அவளை அப்படியே தாங்கியவன், தூக்கிக் கொண்டு அவன் காரை நிறுத்திய இடமான மருத்துவமனைக்குள் சென்றான்.


ஸ்ட்ரெச்சரில் படுக்கவைத்து அழைத்துச் சென்ற மருத்துவமனை ஊழியர்கள் மருத்துவரின் அறையில் படுக்கவைத்தனர். பின்னே இவனும் வந்தவன் மருத்துவரிடம் விசயத்தைக் கூறிட, காவ்யாவைப் பரிசோதித்துப்
பார்த்தார், அந்தப் பெண் மருத்துவர்.


அவள் இன்னும் மயக்கநிலையிலே படுத்திருக்க, அவளைப் பரிசோதித்த மருத்துவர் அவர் இருக்கையில் அமர்ந்து ராணாவிடம் அவள் சம்பந்தமாகப் பேசினார்.


"நீங்க அவங்க ஹஸ்பண்ட் தான?" என்று அவர் வினவிட, அவன் சற்று
எரிச்சலோடு,


"ஷீ இஸ் மை வஃய்ப்! மிஸஸ். காவ்யா ராணாதேவ்!" என்று அழுத்தமாகக் கூறிட, அவரும் அவன் அப்படி சொல்லியதன் அர்த்தம் புரியாவிடினும் பதில் கிடைத்துவிட்டதில் தலையசைத்து ஆமோதித்திவிட்டுப் பேசத் தொடங்கினார்.


"உங்க வஃய்ப் ப்ரக்ணன்டாதான் இருக்காங்க. பட், ரொம்ப வீக்கா இருக்காங்க. அண்ட் ரொம்ப டிப்ரெஸ்டாவும் இருக்காங்க. அதனாலதான் நீங்க சொன்னமாறி அடிக்கடி மயங்கிருக்காங்க. எப்போலாம் அவங்க ஸ்ட்ரெஸ் அதிகமாகுதோ அப்போ அவங்களால மெண்டல் ப்ரஷர் தாங்கமுடியாம மயங்கிடுறாங்க" என்று விளக்கமாகக் கூறியதைக் கேட்டவனுக்கு எல்லாம் தெளிவாகப் புரிந்தது. அதனால், மேலும் எதுவும் அதைப்பற்றி அவன் கேட்டுக்கொள்ளவில்லை.


"டாக்டர்! அவள செக் பண்ணிட்டிங்களா? அப்போ, கூப்ட்டு போகலாமா?" என்று அவன் வினவிட,


"நார்மல் செக்கப் தான் பண்ணிருக்கு. இன்னும் ஸ்கேன் பண்ணல. ஸ்கேன் பண்ணி குழந்த எப்டி இருக்குன்னு பாத்துட்டு, அப்றம் கூட்டிட்டு போகலாம் சார்" என்று கூறியவர், அவளை ஸ்கேன் எடுக்கும் இடத்திற்கு கொண்டு செல்ல உத்தரவிட்டு அங்கே சென்றார். மருத்துவர் ஸ்கேன் செய்திட, அதை அவளருகில் நின்றிருந்த ராணாவையும் அழைத்து பார்க்கச் சொன்னார்.


ராணாவும் ஸ்கேன் செய்யும்போது திரையில் தெரியும் கருவை பார்த்தான். மூன்று மாதக் கருவென்பதால் மிகவும் சிறியதாக இருந்தது. அதன் அசைவை பார்த்தவனுக்கு உள்ளுக்குள் சொல்லமுடியாத உணர்வொன்று தோன்றி மறைந்தது. அந்தக் கருவையே கண்ணசைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.


ஸ்கேன் செய்து முடித்தபின், காவ்யா மயக்கத்தில் இருந்து இன்னும் தெளியாததால் அவளை தனியறையின் படுக்கையில் கிடத்தினர். ராணாவிடம் வந்த மருத்துவர் ஸ்கேன் ரிப்போர்டை அவனிடம் கொடுத்தவர், மருந்துச் சீட்டையும் எழுதிக்கொடுத்து,


"அவங்கள நல்லா கேர் பண்ணிங்கோங்க. டைம்கு ஹெல்தியா சாப்ட கொடுங்க. அப்றம், மெடிசின்ஸ் டைம்கு எடுத்துக்கச் சொல்லுங்க. முக்கியமா, அதிகமா கவலப்படவோ அதிர்ச்சியடையவோ கூடாது. அவங்க டிப்ரெஸ்டா இருக்கிறதால அது அவங்கள பாதிக்கும், அதனால குழந்தையும் பாதிக்கப்படும். பீ கேர்ஃபுல்!" என்று கூறி செல்லப்போக, அனைத்தையும் பல்லைக் கடித்தபடி அமைதியாகக் கேட்டவன், இறுதி வாக்கியத்தில் அதிர்ந்தான்.


அவரைத் தடுத்து, "டாக்டர்! எதுக்காக
இவ்வளவு நேரம் மயக்கத்துல இருக்குறா? சாதாரண மயக்கம்னா கொஞ்சநேரத்துலயே சரியாகிடும்தான! இதனால குழந்தைக்கு எந்த ப்ராப்ளமும் வருமா?" என்று தன் சந்தேகத்தைக் கேட்டிட,


"நார்மலா ப்ரக்னன்ஸி டைம்ல வர மயக்கம்தான் இதுவும். ஆனா, இவங்க டிப்ரஷன்ல இருக்கிறதாலயும் ஸ்ட்ரெஸ்னால மயங்கிறதாலயும்தான் அதிக நேரம் மயக்கத்துலயே இருக்காங்க. மயக்கம் குழந்தைய அஃபக்ட் பண்ணாது. ஆனா, அவங்க இப்டியே டிப்ரஷன்ல இருந்தா, இட் மே அஃபக்ட் எ பேபி! நோ நீட் டு வர்ரி! அவங்க டிப்ரஷன்கும் சேத்துதான் மெடிசின்ஸ் எழுதிருக்கேன். கண்டினியூஸா போடச் சொல்லுங்க. நீங்களும் கேர் பண்ணி பாத்துக்கங்க. அதுதான் அவங்கள நல்லா குணப்படுத்தும்" என்று கூறிச் சென்றார்.


மருத்தவர் சென்ற சில நிமிடங்களில் காவ்யாவும் கண்விழித்தாள். மருத்துவரை அழைத்துப் பரிசோதித்துவிட்டு இருவரும் வீட்டிற்குக் கிளம்பினர். காரில் ஏறியவள் அமைதியாக சாய்ந்துகொள்ள, அப்படியே கண்களை மூடினாள். இவளைப் பார்த்தவன், மறுபடியும் மயங்கிவிட்டாளா? என்றெண்ணி தட்டி எழுப்பிட, பதறியடித்து கண்விழித்தாள். பதட்டத்தில் மூச்சுவாங்கியதைப் பார்த்தவன், தண்ணீர் பாட்டிலை எடுத்துக் குடிக்கக் கொடுத்தான்.


தண்ணீரைக் குடித்தவள் சிறிது ஆசுவாசப்படுத்திக்கொண்டு
கண்களை மூடித்திறந்தவள், சன்னல் வழியே வெளியே வெறித்தபடி அமர்ந்துகொண்டாள். அவனும் காரை உயிர்ப்பித்துக் கிளம்பிட, சிறிதுநேர பயணத்தின்பின் வீடு வந்து சேர்ந்தனர்.


காரிலிருந்து இறங்கியவள் அமைதியாக வீட்டிற்குள் செல்வதைக் கண்டு எரிச்சலடைந்தவன், காரை நிறுத்திவிட்டு வேகமாக உள்ளே வந்தான். படியேறப்போகும் காவ்யாவைப் பார்த்தவன்,


"நில்லு!" என்று கத்திட, அவளும் நகராமல் நின்றாள். இவன் சத்தம் கேட்டு வெளியே வந்த கமலாம்மாவை பார்த்தவன், அவரை உள்ளே போகும்படி சொல்லிவிட்டு, இன்னும் இவனுக்கு முதுகு காட்டியபடியே நின்ற காவ்யாவின் அருகில் வந்தவன், அவள் தோள்தொட அவள் திரும்பினாள்.


"உன்னோட திமிரு குறைஞ்சிட்டோன்னு நான்கூட நினச்சுட்டேன். ஆனா, அது இன்னும் குறையலல!" என்று கோபமாகக்
கூறியதைக் கேட்டுக் குழம்பிப்போய் அவனைப் பார்த்தவள் தலைகவிழ்ந்து கொண்டாள்.


"என்னடி? பாத்துட்டு குனியுற, இத பயம்னு எடுத்துக்கவா? இல்ல, எகத்தாளம்னு எடுத்துக்கவா? உனக்கு நான் ஒன்னும் சர்வண்ட் இல்ல. உன்னய பிக் பண்ணி ட்ராப் பண்ணுறதுதான் என் வேலனு நினச்சுட்டியோ?" என்று அவன்பாட்டிற்கு கோபத்தில் பேசிக்கொண்டே போக, காவ்யாவுக்குத்தான் எதுவும் புரியவில்லை. அவள் குழப்பத்திலும் ஆற்றாமையிலும் இவன் பேசுவதைக் கேட்டுக்கொண்டு நின்றாள்.


"நான் எனக்கு இருந்த அத்தன வேலையையும் விட்டுட்டு வந்து உன்னய கூப்டு போனது செக்கப்காக தான். எதுக்கெடுத்தாலும் மயங்கி மயங்கி விழுந்தா என்ன நடக்குன்னு எப்டி தெரியும்? உனக்காக டாக்டர்கிட்ட நீதான் பேசணும். நான் கிடையாது! இன்னைக்கு மாதிரி எப்பவும் நான் பொறுமையாவே
போவேன்னு நினைக்காத. இந்தா! பிடி! மெடிசின்ஸ். இதக்கூட வாங்காம, எதுக்காக ஹாஸ்பிடல் போனோம்னு கூட தெரியாம அப்டியே வந்தாச்சு. இதுல திமிரா வேற போறது!" என்று எரிச்சலைக் கொட்டித் தீர்த்தவன், பின் ஏதோ தோன்ற அமைதியானான்.


மூச்சை இழுத்துவிட்டவன், கமலாம்மாவை அழைத்து மருத்துவர் சொன்ன அறிவுரைகளை எல்லாம் காவ்யாவுக்கும் கேட்கும்படி கூறினான். அவரிடம் சொல்லிமுடித்தவன்,


"கமலாம்மா! இனி தினமும் டைம்கு சாப்பாடு, மெடிசின்ஸ், ஜூஸ் எல்லாம் கரெக்டா கொடுத்துருங்க! சாப்டமாட்டேனு வம்பு பண்ணிட்டு இருந்தான்னா அப்றம் என் கோபம் இன்னும் மோசமா இருக்கும். பாத்துக்கங்கமா! இது இனிமேல் உங்க பொறுப்பு" என்று கூறியவன் வெளியே கிளம்பிவிட்டான்.


அவன் சொன்ன அனைத்தையும் கேட்டுக்கொண்ட கமலாம்மா, அவன் சென்றதும் காவ்யாவின் அருகில் வந்தார். இன்னும் சிலைபோல அப்படியே நின்றவளின் தோளைத் தொட, அவளும் தன் நிலையில் இருந்து வெளிவந்து அவரைப் பார்த்தார். ஆனால், அவள் முகத்தில் எந்த உணர்ச்சியும் தெரியாததால் அவளின் மனநிலையை அறிவது அவருக்கு கடினமாக இருந்தது.


"என்னமா? ஐயா இப்டி சொல்லிட்டுப் போறாரு? நீ இவ்ளோ வீக்கா இருக்கியா அப்ப? இதுவர எப்டியோ! ஆனா, இனிமேல் நீ என்னோட பொறுப்புனு ஐயாவே சொல்லிட்டாரு. அதனால, நீ இனி எதையும் வேணானு சொல்லாம நல்லா சாப்டணும். புரியுதா? இன்னும் ஒரே மாசத்துல
உன்னய தெம்பா ஆரோக்கியமா
நான் ஆக்கி காட்டுறேன். சரியா!" என்று ஆர்வமாகக் கூறியவரைப் பார்த்ததும் அவள் உதட்டில் சிறு புன்னகை அரும்பியது.


"அப்ப! உங்க ஐயா சொல்லாட்டி நீங்க இப்படி கவனிக்கமாட்டிங்க, அப்டித்தான??" என்று கேலியாகக் கேட்டு அவரை சீண்டிட,


"அவரு சொல்லாட்டியும் நான் இதத்தான் செஞ்சிருப்பேன். நீ நோஞ்சானா இருக்கன்னு பாத்தாலே தெரியுது. ஆனா, நீ இம்புட்டு சோந்துபோய் கிடக்கன்னு அவரு சொன்னதாலதான தெரியுது. நல்லவேள! எங்கிட்ட சொன்னாரு. உன்கிட்ட சொல்லிருந்தா அதயும் சொல்லிருக்கக்கூட மாட்ட" என்று இவரும் கேலி செய்து சீண்ட, அவள் வாயடைத்துப்போனாள்.


"இனி உன்னோட உடம்ப தேத்த வேண்டியது என்னோட பொறுப்பு. உன் மனச நல்லா வச்சுக்கிறது மட்டும் உன்னோட கைலதான் இருக்குமா. அதனால, எதபத்தியும் யோசிக்காம, கவலப்படாம, நடக்குறத ஏத்துகிட்டு சந்தோசமா வாழ பழகும்மா. எல்லாம் நல்லபடியா மாறும்னு நம்புவோம்!" என்று ஆறுதல் கூறிட, அவளுக்கு பதில்கூற முடியாமல் கண்கலங்கினாள். அவள் கண்ணீரைக் கண்டதும் பதறியவர்,


"என்னாச்சும்மா?? எதுக்காக அழற? நான் தப்பா பேசிருந்தா மன்னிச்சுக்கம்மா! நீ கவலப்பட்டு
உன்னோட உடம்ப கெடுத்துக்கக்
கூடாதுனுதான் அப்டி சொன்னேன். உன்னய அது காயப்படுத்திருந்தா மன்னிச்சிடும்மா!" என்று கவலையாகக் கூறுவதைக் கேட்டவள், அவரை அணைத்துக் கொண்டாள். அவரும் முதலில் அதிர்ந்தவர், பின், அவள் முதுகை ஆதரவாக வருடிவிட்டார்.


சிறிதுநேரம் கழித்து அணைப்பிலிருந்து வெளிவந்தவள்,
"நீங்க எதுவும் தப்பா சொல்லலம்மா. மன்னிப்புலாம் கேக்காதீங்க. எனக்கு கொஞ்சம் டயர்டா இருக்கும்மா. நான் ரூம்கு போகட்டா?" என்று கேட்டுவிட்டுச் செல்வதைப் பார்த்தவரால் அவளுக்குள் இருக்கும் கவலையை ஓரளவு புரிந்துகொள்ள முடிந்தது. இனி இதைப்பற்றி பேசி அவளை காயப்படுத்திவிடக்கூடாது என்று எண்ணிக் கொண்டார்.


காவ்யா பிரிந்து சென்று இருதினங்கள் ஆகியிருக்க, தோழிகள் நால்வரிடமும் எந்த மாற்றமும் இல்லை. இரண்டு நாட்களும் வேலைக்கும் செல்லாமல் வீட்டிலும் நிம்மதியாக இருந்திட முடியாமல் தவித்துக் கொண்டிருந்தனர்.


அவள் எங்கே இருக்கிறாள்? எப்படி இருக்கிறாள்? வயிற்றில் குழந்தையை சுமக்கும் இந்நேரத்தில் என்ன செய்வாள்? அவளை எப்படி பார்த்துக்கொள்வாள்? அவள் தற்போது இருக்கும் நிலை இன்னும் மோசமாகிவிட்டால்..? அவளை யார் கவனித்துக் கொள்வது? என்று எண்ணிலடங்கா கேள்விகளைத்
தங்களுக்குள் சுமந்துகொண்டு அதற்கு விடை தெரியாமல் வருந்தினர்.


என்னதான் காவ்யா தான் நன்றாக இருப்பதாகக் கூறினாலும் தங்கள் கண்ணால் பார்க்காமல், தங்களுடன் வைத்துக்கொள்ள முடியாமல் அவள் பிரிந்து சென்றதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை அவர்களால். அந்தக் கவலையில் அவர்கள் வாடிக் கொண்டிருந்தனர்.


ஒருவரின் வாட்டத்தை இன்னொருவரால் பார்க்கமுடியாமல் வேதனையில் கரைந்திட, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணி தன்யா அவர்களிடம் பேச முடிவுசெய்தாள். நால்வரும் வீட்டுக்குள்ளேயே வெவ்வேறு இடத்தில் இருந்தனர். தன்யா நடுகூடத்திற்கு வந்தவள், மற்ற மூவரையும் பேர் சொல்லி அழைத்தாள்.


அவள் அழைத்ததைக் கேட்டு அவர்களும் கூடத்திற்கு வந்து இவளை நோக்கிட, மூவரையும் கண்களால் அருகே வரும்படி அழைத்தாள். அவர்களும் அருகில் சென்று அமர்ந்தனர். அவர்களின் வாடிய முகத்தை கண்டு இவள் இன்னும் வருத்தமடைய, மனதை திடப்படுத்திக் கொண்டு பேசத் தொடங்கினாள்.


"இப்ப என்னடி உங்களுக்கு பிரச்சினை? காவ்யா நம்மள விட்டு எங்கயோ போயிட்டா. அதான? அது கஷ்டமான விஷயம்தான். ஆனா, அதுக்காக இப்டியே முடங்கி கிடக்கணும்னு இல்லடி. அவ கண்டிப்பா சேஃபா இருக்கிறதாதான சொன்னா. கண்டிப்பா அவ நல்லாதான் இருப்பாடி. அத நினச்சு இப்டியே வருத்தப்பட்டுட்டு இருந்தா..எப்டி? அவளே நம்ம சந்தோசமா இருக்கணும்னு சொல்லிருக்கா! இப்டி வருத்தப்படுறத அவளும் ஒத்துக்கமாட்டாடி...அதனால இனியாச்சும் கொஞ்சம் அதுல இருந்து வெளிய வாங்கடி! ப்லீஸ்!!" என்று இவள் கூறியதைக் கேட்ட தோழிகள் இவளை ஏறிட்டுப் பார்த்திட,


"அப்ப உனக்கு எந்த கஷ்டமும் இல்லனு சொல்றியா? இல்ல கஷ்டப்படுறது தப்புனு சொல்றியாடி?" என்று அனுயா சற்று காட்டமாகவே வினவிட, அதைக் கேட்டவள் மனதால் நொந்துபோனாள். அனுயா இப்படி பேசியதை மற்ற இருவரும் அதிர்ந்து நோக்கிட,


"என்னடி அனு! இப்படி கேட்குற?? அவளுக்கும் காவ்யா போனதுல எவ்ளோ கஷ்டம்னு உனக்குத் தெரியாதா?" என்று ரம்யா வருத்தமாகக் கூறிட,



"பின்ன என்னடி? அவளுக்கும் கஷ்டமாத்தான் இருக்குன்னு எனக்கும் தெரியும். அத மறைச்சிகிட்டு நம்மள தேத்தணும்னு எதுக்கு நினைக்கணும்? யாரும் யாரையும் தேத்தணும், ஆறுதல்படுத்தணும்னுலாம் நினைக்க வேணாம். அவங்கவங்க சந்தோசத்த மட்டும் பாருங்க. ஏற்கனவே ஒருத்தி நம்மள கவலப்பட வைக்கக்கூடாதுனு நினச்சுதான் மொத்தமா விட்டுட்டு போயிட்டா. நீங்களும் அப்டி போறதா இருந்தாலும் தயவு செஞ்சு இப்பவே சொல்லிடுங்கடி. முன்னாடியே மனச கல்லாக்கிக்கிறேன்" என்று கோபத்தில் பேசினாலும் அவள் கண்களில் வடிந்த கண்ணீர் கூறியது அவளது மனவேதனையை.


அவள் கூறியதைக் கேட்டவர்கள் உடைந்துபோய் அவளைப் பார்த்திட, அவள் கண்ணீரைக் கண்டவர்கள் கலங்கிப்போயினர். அவளிடம் சென்று அவளை சமாதானம் செய்ய சரண்யாவும் ரம்யாவும் முற்பட, தன்யா அவள் பேசியதில் சிலையாகி நின்றாள்.


அனுயாவால் மேலும் எதுவும் பேசமுடியாமல் அறைக்குள் ஓடிச் சென்று கதவை சாத்திக் கொண்டாள். அவள் செல்வதை தடுக்க முயன்றும் முடியாமல் நின்றவர்கள், திரும்பி தன்யாவை பார்த்திட, அவள் சிலையாக நின்றுகொண்டிருப்பதை கண்டு வருந்தினர். அவளிடம் சென்று அவள் தோள்தொட்டு அழைத்திட, நிமிர்ந்து இவர்களை பார்த்தவள்,


"நான் எதுவும் தப்பா பேசிட்டேனாடி?? நம்ம எல்லாரும் எந்த கஷ்டம் வந்தாலும் ஒன்னா நின்னு சமாளிச்சிருக்கோம். ஆனா, முதல் தடவையா இப்டி அஞ்சுபேரும் தனித்தனியா பிரிஞ்சு நின்னு கஷ்டப்படுறது நல்லா இல்லடி. அதான், வந்து அப்டி பேசுனேன்" என்று கலங்கியபடி கூறிட, இருவரும் அமைதியாய் இருந்தனர்.


"இதுவர காவ்யா பண்ணது தப்புனு நினைச்சுட்டு இருந்தேன்டி. இப்டி நமக்காகன்னு யோசிச்சே அவ அவளையே இத்தனை நாளும் ஏமாத்திகிட்டு இருந்தத பாத்து எனக்கு கோபம்கூட வந்துச்சு. ஆனா, இப்ப தோணுது, அவ செஞ்சது கரெக்ட்தான்னு" என்று தன்யா கூறுவதை மற்ற இருவரும் புரியாமல் பார்த்தனர்.


"ஆமாடி! நம்ம கஷ்டத்த யாரும் பங்கு போட்டுக்கக்கூடாதுனு நினச்சுத்தான நாமளும் பேசிக்காம அழுதிட்டு இருந்தோம். இப்பக்கூட, அனு எதுக்காக அழுதுட்டு போறா? நான் என்னுடைய கஷ்டத்த மறச்சு உங்கள சமாதானப்படுத்த வந்தேன்னுதான? அப்டி இருக்கும்போது காவ்யாவும் அதயே நினச்சு நம்மள விட்டுப்போனதுல எந்த தப்புமே இல்லயேடி!" என்று தன்யா கூறிட,


"அவமேல தப்பு இருக்கிறதா யாருமே சொல்லலடி தனு! ஆனா, அவ போனத தாங்கிக்க முடியாமதான் நாம இப்டி கஷ்டப்படுறோம். நீயும் எவ்ளோ கஷ்டப்படுவனு தெரியும்டி. அத நீ வந்து சொல்லி அழுதிருந்தாக்கூட அனு ஒன்னும் சொல்லிருக்கமாட்டா. இப்டி உனக்குள்ள மறைச்சிகிட்டு பேசவும்தான் அவளுக்கு கோபம் வந்துடுச்சுடி" என்று சரண்யா அனு பக்கத்து நியாயத்தை எடுத்துக்கூறிட, தன்யாவும் அதை யோசித்தாள்.


"ஆமாடி! நான் அப்டி மறைச்சு பேசுனது தப்புதான். அப்ப நீங்களும் உங்க கஷ்டத்த நம்ம நாலுபேருகூடவும் ஷேர் பண்ணிருக்கலாம்ல? எதுக்காகடி தனித்தனியா போய் அழுதீங்க? அதனாலதான் இதுக்கு ஒரு முடிவு எடுக்க இப்டி பேசவேண்டியதா போச்சு. எனக்கு மட்டும் கவலை இல்லயாடி? அவ இல்லாம இந்த வீடே வெறுமையா தெரியுது. ஆனா, அதுக்காக உங்களையும் இப்டியே கவலப்பட விட எனக்கு மனசு கேக்கலடி. நானே பண்ணாட்டியும் நீங்களே இத பண்ணுவீங்க" என்று ஆவேசத்தில் பேசியவள், கீழே மடிந்து அமர்ந்து அழுதாள்.


அதைக் கண்டவர்களும் கண்கலங்கி அவளுடன் அமர்ந்து அவளை அணைத்துக்கொண்டு அழுதனர். இதையெல்லாம் அறைக்குள் இருந்து கேட்டுக்கொண்டிருந்த அனுயா, கதவைத் திறந்து இவர்களிடம் ஓடிவந்தாள். ஓடிவந்தவள் இவர்களுடன் அமர்ந்து கட்டிக்கொண்டு அழ, இவளை பார்த்தவர்கள் பிரிந்து அமர்ந்தனர்.
தன்யாவின் முன் அனுயா அமர்ந்து குனிந்திருந்த அவளின் கண்ணத்தைத் தாங்கி முகத்தை நிமிர்த்திட, கண்களில் வலியோடு தன்யா இவளை ஏறிட்டாள்.


அதைப் பொறுக்கமுடியாமல் கண்கலங்கிய அனுயா, "சாரிடி தனு! என்னய மன்னிச்சிடுமா! காவ்யா போனதும் மொத்தமா ஒடஞ்சிட்டேன். அவ இல்லாத வெறுமை, அவள பத்தின கவலை, அவ என்ன ஆனானு பயம், நமக்காக அவ போனதுனு எல்லாமே சேர்ந்து எனக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு. நீயும் உன் கஷ்டத்த மறைச்சு பேசுனியா, அதான் மறுபடியும் பயம் வந்துடுச்சு. அதான் கோபத்துல அப்டி பேசிட்டேன்மா. ரொம்ப சாரிடி!" என்று வருத்தத்துடன் கூறிட, அவளை கோபமாக முறைத்தாள் தன்யா.





ராணா காவ்யாமீது கொண்ட வெறுப்பு மாறுகிறதா?? இல்லை, கூடுகிறதா?? காவ்யாவின் தோழிகளுக்கு இவளின் உண்மைநிலை தெரிய வருமா?? கமலாம்மாவுக்கு ராணாவின் சுயரூபம் எப்போது தெரியவரும்?? தன்யா எதற்காக கோபமாக முறைத்தாள்??






❤வருவாள்❤...




கீழே இருக்கும் லிங்க் கிளிக் செய்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்

Thread 'இருளில் தொலைந்த ஒளி அவள் - Comments' https://www.sahaptham.com/community/threads/இருளில்-தொலைந்த-ஒளி-அவள்-comments.500/
 
அவள் 15


"சாரி சொன்ன கொன்னுருவேன். என்னடி நினச்சுட்டுருக்க? உனக்கு மட்டும்தான் அந்தக் கவலை, பயம்
எல்லாமேவா? எங்களுக்கு இல்லயா? இது உனக்கு மட்டும் கவல மாதிரி நீ மட்டும் உனக்குள்ளயே வச்சிட்டு இருப்பியாம்... அத நாங்க செஞ்சா கோபம் வருதா உனக்கு?" என்று சற்று கோபமாகக் கூறிட, அனுயா தவறை உணர்ந்து தலைகுனிந்தாள்.


"எப்பவும் சந்தோசத்த ஷேர் பண்ணிக்கிற நம்மால கஷ்டத்த ஷேர் பண்ணிக்க முடியலடி. நீங்க கஷ்டப்படுறத பாக்குற சக்தி இல்லடி. அதனாலதான் காவ்யாவும் போனா. நாமளும் இப்டி சொல்லாம வருத்தப்படுறோம். இதுல யாரையும் தப்பு சொல்லமுடியாது. நமக்குள்ள இருக்க அன்புதான்டி காரணம்" என்று சரண்யா வருத்தத்துடன் கூறுவதை மற்றவர்களும் ஆமோதித்தனர்.


"இனிமேல் எந்த கஷ்டமானாலும் எவ்ளோ பெரிய விஷயமானாலும் ஃப்ரண்ட்ஸ் கவலப்படுவாங்கன்னு மறைக்காதீங்கடி. உங்களுக்கு சொல்ல கஷ்டமா இருந்தாக்கூட பராவால்ல. ஆனா, எங்களுக்காக மறைச்சு வைக்காதீங்க. நானும் பண்ணமாட்டேன். எதுவா இருந்தாலும் உங்ககிட்டதான் முதல்ல சொல்லுவேன். ஓகேவா?" என்று அனுயா கூறுவதை கேட்டு மற்றவர்களும் தலையசைத்து ஒப்புக்கொண்டனர்.


"ஆமா. நம்ம எப்பவுமே தனித்தனி கிடையாது. அப்போ எதுக்காக மறைக்கணும்? நம்ம அஞ்சுபேருமே ஒன்னுதான். சோ, இதுவரையும் பிரிவு இருந்ததில்ல. இனிமேலும் இருக்கப்போறதில்ல. நம்ம எவ்ளோ தூரத்துல இருந்தாலும் நம்ம மனசளவுல ஒன்னாதான் இருப்போம். எங்க இருந்தாலும் காவ்யா!! உன்னய நாங்க தினமும் நினச்சுட்டுதான் இருப்போம்டி. நீ சீக்கிரமே திரும்பி வந்துடுடி எங்ககிட்ட.." என்று முதலில் உறுக்கமாகப் பேசிய சரண்யா இறுதியில் காவ்யாவை எண்ணி கலங்கிட, மற்றவர்களும் சேர்ந்து கலங்கினர்.


நால்வரும் கலங்கியபடி இருக்க,
"கண்டிப்பா காவ்யா வந்திடுவால்ல?" என்று அழுதுகொண்டே குழந்தையைப்போல் கேட்ட ரம்யாவைப் பார்த்தவர்கள், அவளை அணைத்துக்கொண்டு,


"கண்டிப்பா வந்திடுவா. அவளாலயும் நம்மளவிட்டு பிரிஞ்சு இருக்கமுடியாது. ஒரு சேஞ்ச்காகதான் போயிருக்கா. கண்டிப்பா நம்மகிட்ட பழைய காவ்யாவா திரும்பி வருவா" என்று தன்யா கூறிட,


"எங்க இருந்தாலும் நல்லபடியா சந்தோஷமா இருக்கணும். அத ஒன்னதான் இப்போதைக்கு வேண்டிக்கிறேன்" என்று அனுயாவும் வருத்தப்பட்டுக் கூறிட,


"ப்ரக்ணண்டா வேற இருக்கா. அபார்ட் பண்ணிட்டாளா? இல்ல என்ன பண்ணானுகூட தெரியல. தனியா இருக்காளா? யாரு பாத்துப்பாங்கன்னும் தெரியல. அதுதான் இன்னமும் கஷ்டமா இருக்கு. எங்கயோ இருந்தாலும் நல்லா இருக்கான்னு பாத்தாச்சுனா கொஞ்சம் நிம்மதியா இருக்கும்" என்று சரண்யாவும் வருந்தினாள்.


"கவலப்படாதீங்க. கண்டிப்பா என் காவிக்கு எந்த ப்ரச்சினையும் வராது. அவள நல்லபடியா பாத்துக்க அங்கயும் நம்மளப்போல யாராச்சும் கண்டிப்பா இருப்பாங்கன்னு எனக்கும் தோணுது. சீக்கிரமே நம்மகிட்ட திரும்பி வந்துடுவானு எனக்கும் நம்பிக்கை வந்திடுச்சு" என்று ரம்யா நம்பிக்கையாகக் கூறுவதை கேட்டு ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.


எப்போதும் காவ்யாமீது தனிப்பாசம் கொண்ட ரம்யா எதற்காகவும் அவளை விட்டுக்கொடுத்ததும் இல்லை, அவளுக்கு சின்னதாக ஏதாவது ஒன்றென்றாலும் மிகவும் வருந்திடுவாள். இன்று இவ்வளவு நம்பிக்கையோடு பேசுவது ஆச்சரியமாகவும், அதேசமயம், இவர்களுக்கும் நம்பிக்கையூட்டுவதாக இருந்தது. அவளை மூவரும் கட்டிக்கொண்டனர். காவ்யா சென்றபின் இவர்களுக்குள் இருந்த கவலையும் வேதனையும் சற்று குறைந்து மீண்டும் ஒன்றாகினர்.


காவ்யா இவர்களை பிரிந்து இரண்டு மூன்று நாட்களே ஆகியிருந்தாலும் அது இவர்களுக்கு
பல நாட்கள்போல காட்சியளித்தன. அவளின் பிரிவும் இவர்களினுடைய ஒதுக்கமும் சேர்ந்து மிகவும் ஒவ்வொருவரையும் பாதித்திருந்தது. இப்போது, நால்வரும் ஒன்றாகிட, சேர்ந்து அமர்ந்து தங்கள் சோகத்தையும் பாரத்தையும் ஒன்றாகவே பகிர்ந்து ஆறுதல் கூறியதால் பாதியாகக் குறைந்ததுபோல் தோன்றியது அவர்களுக்கு. காவ்யாவின் பிரிவை நால்வரும் இணைந்தே அனுபவிக்கத் தயாராயினர்.


இரவு, நால்வரும் ஒன்றாக அமர்ந்து ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டு சாப்பிடும்போதுகூட காவ்யாவின் நினைவுகளில் வருந்தினர். அவள் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கவேண்டும் என்று எண்ணியபடியே ஒருவருக்கொருவர் ஆறுதல்கூறி கண்ணயர முயன்றனர்.


தனது அறைக்குள் சென்று முடங்கி கொண்ட காவ்யா, இரவானதும் சாப்பாடு கொண்டுவந்த கமலாம்மாவை கண்டதும்தான் எழுந்து அமர்ந்தாள். அவளிடம் மேலும் எதுவும் கேட்டு நோகடிக்க விரும்பாதவர் அமைதியாக உணவையும் மருந்தையும் வைத்துவிட்டுச் செல்லப்போனார். அவரை காவ்யா அழைத்திட, திரும்பியவர், "என்னம்மா? ஏதாச்சும் வேணுமா?" என்று அக்கறையாய் கேட்டிட,


"ஆமா. எனக்கு ஊட்டிவிடுறீங்களாம்மா?" என்று காவ்யா கேட்டதை பார்த்துக் கண்கலங்கிவிட்டார்.


கமலாம்மாவுக்கு பிள்ளைகளென யாரும் கிடையாது. கணவரும் பலவருடங்கள் முன்பே இறந்துவிட்டதால் அவர் சொந்த ஊரில் இருக்கப் பிடிக்காமல் வெளியூருக்கு வந்தவர், தெரிந்தவர் மூலமாக ராணாவின் வீட்டிலே வேலையில் சேர்ந்தார். அன்றுமுதல் அவரும் இங்கேயே தங்கிவிட்டார். எப்போதாவது தன் சொந்தங்களை பார்க்க தன் சொந்த ஊருக்குச் சென்று வருவார். இவரிடம் ராணாவும் மற்றவரிடம் காட்டுமளவு கோபத்தை காட்டமாட்டான். இவரும் அவன் கோபம்கொள்ளும் வகையில் என்றும் நடந்துகொண்டதில்லை.


இப்படிபட்ட நிலையில், காவ்யா தன்னிடம் எடுத்துக்கொள்ளும் உரிமையும் எதிர்பார்க்கும் அன்பும் இவரை வியக்கவும் செய்தது, மனதை குளிரவும் செய்தது. இவளை தன் மகள் போலவே கருதினாலும் அவளிடம் எவ்வகை உரிமையும் எடுத்துக்கொள்ளத் தோன்றவில்லை அவருக்கு. உரிமை எடுத்துக்கொள்ளும் அதிகாரமும் அவருக்கு இல்லை என்பதையும் அறிவார். அவள் ஒருவனின் மனைவி என்பதையும் அறிவார். அதை அவரால் மாற்றிட இயலாது. ஆனால், அவள் எதிர்பார்க்கும் அன்பை கொடுத்தாகவேண்டும் என்று மட்டும் அவருக்குள் தோன்றியது.


அவள் கேட்டபடியே தட்டை கையில் எடுத்தவர், அவளுக்கு ஊட்டிவிட ஆரம்பித்தார். அவளும் அமைதியாகச் சாப்பிட்டு முடித்தாள். சாப்பிட்டு முடித்ததும் மருந்தையும் கொடுத்தவர், அவள் உண்டதும், சிறிதுநேரம் கழித்துப் படுத்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு கீழே சென்றுவிட்டார்.


இவளும் அவர் சொன்னபடி சிறிதுநேரம் படுக்காமல் அறைக்குள்ளயே மெதுவாக நடந்தவள், அறையின் ஓரத்தில் இருந்த பால்கனிக்குச் சென்று இருள் சூழ்ந்த வானத்தை வெறித்தாள். நிலவும் இன்றி விண்மீன்கள் மட்டும் காட்சியளித்திட, தென்றல் காற்றும் இதமாய் வீசியது. அந்த அழகான இயற்கைக் காற்றை சிறிதுநேரம் சுவாசித்தவள், பின் தூக்கம் வருவதுபோல் இருந்திட, அறைக்குள் வந்தாள்.


படுக்கையில் சென்று படுத்திட, மருந்தின் வீரியத்தால் கண்கள் சொருகி நித்திரைக்குச் சென்றாள். சிறிதுநேரம் கழித்து, கமலாம்மா இவளறைக்கு இவள் தூங்கிவிட்டாளா? என்று பார்த்திட வந்தவர், காவ்யா அசந்து தூங்குவதை பார்த்துவிட்டு திரும்பிச் செல்லப்போக, ராணா அறைக்குள் நுழைந்தான்.


இவரைப் பார்த்தவன் என்னவென்று விசாரித்திட, அவரும் காரணத்தைக் கூறிவிட்டுச் செல்லலாமா? இல்லை இருக்கலாமா? என்று யோசித்துக் கொண்டு நிற்க, இவர் நிற்பதை பார்த்தவன்,


"கமலாம்மா! நீங்க போங்க. நான் இங்கதான் இருப்பேன். நான் பாத்துக்குறேன்" என்று அவர் தயங்கி நிற்பதன் காரணம் புரிந்து கூறியவன், தன் கையில் கொண்டுவந்த மடிக்கணினியுடன் சென்று படுக்கையில் அமர்ந்துகொண்டான். அவரும் பார்த்தபடியே ஏதோ ஒரு நிம்மதியில் சென்றுவிட்டார்.


முந்தைய தினம் இரவு அவள் அலறியதற்கு தனியாக இருந்ததுதான் காரணமென கமலாம்மா சொல்லியதால் தெரிந்துகொண்டவன், இந்நேரத்தில் அதிகமாக பாதிப்படையக்கூடாது என்று மருத்துவர் கூறியதற்காகவே இங்கே வந்திருந்தான். அவள் இருட்டை பார்த்துப் பயப்படக்கூடாது என்பதற்காக அறையின் விளக்குகளை ஒளிரவிட்டபடியே அமர்ந்து அவன் கொண்டுவந்த மடிக்கணினியை திறந்து வேலையை பார்க்கத் தொடங்கினான்.


இரவில் சீக்கிரம் தூங்கி இவனுக்கு என்றுமே பழக்கமில்லை. நேரம்போவது தெரியாமல் வேலையில் மூழ்கியிருந்தவனை களைத்தது காவ்யாவின் கதறல் சத்தம். என்னவென்று அதிர்ந்து திரும்பி அவளை பார்த்திட, அவளோ தூக்கத்தில் படுத்தவாறே புலம்பிக் கொண்டிருந்தாள்.


"என்ன விட்டுடு...ப்லீஸ்...என்ன ஒண்ணும் பண்ணிடாத...என்ன விட்டுடு...ப்லீஸ்...நான் போயிடுறேன்...ப்லீஸ்...என்னய விட்டுடு..." என்று பதறியபடி பிதற்றிக் கொண்டிருந்ததை பார்த்தவனுக்கு மறுகணமே அவள் இவனை நினைத்துதான் பயந்து புலம்புகிறாள் என்பது புரிந்தது.


சிந்தனையைவிட்டு வெளிவந்தவன், குழந்தையை நினைத்து, உடனே அவளை தட்டி எழுப்ப முயற்சித்தான். ஆனால், அவள் இன்னும் எழாமல் இருக்கவே, அவளைத் தூக்கி இருக்கச்செய்து, தோள்களை பற்றியபடி அவளை உலுக்கினான்.


"காவ்யா! காவ்யா!! எழுந்திரு!!" என்று கூறியபடியே உலுக்கிட, சிறிதுநேர முயற்சிக்குப்பின் பிதற்றலை நிறுத்தியவள் கண்விழித்தாள். கண்களை திறந்தவள், ராணாவை எதிரில் பார்த்ததும் பயந்தபோய் படுக்கையைவிட்டு எழந்துவிட, இவனும் எதுவும் பேசாமல் தண்ணீர் ஜாடியை எடுத்து அவளருகில் வந்தான். அவள் பழைய நினைவுகளில் பயந்தபடி கண்களை மூடி முகத்தை பொத்திக்கொண்டு, "வேணா....!!" என்று கத்திட, குழம்பிய ராணா,


"என்ன வேணா? ஒழுங்கா தண்ணிய குடி! இந்தா!" என்று கண்ணாடிக் குவளையில் ஊற்றிக் கொடுத்தான். அவன் பேசுவதை கேட்டு கண்களை திறந்து பார்த்தவள், கையில் குவளையுடன் நிற்பவனை கண்டு, "இல்ல...வேணா! எனக்கு.. இப்போ..தண்ணி வேணா..!" என்று தயங்கியவாறே கூறுவதை கேட்டவன், சற்று எரிச்சலடைந்திட,


"குடின்னா குடி! இப்ப யாரும் வேணுமான்னு கேக்கல. புரியுதா? இந்தா! நீ ரொம்ப பயந்துபோய் இருக்க. அதான் தண்ணி குடின்னு சொல்றேன். குடி!" என்று கொடுத்திட, அதற்குமேல் அவளும் மறுக்காமல் வாங்கி பயத்தில் மடக்கென்று குடித்துவிட்டு அந்தக்
குவளையை அருகிலிருக்கும் மேசையில் வைத்துவிட்டாள். அவனிடம் இதை கொடுத்தால் அவன் கோபப்படுவானோ என்று அவள் எண்ணியே அப்படிச் செய்தாள்.


ஆனால், அவனோ, "நான்தான தண்ணி கொடுத்தேன். அப்ப க்ளாஸ என்கிட்டதான் கொடுக்கணும். புரியுதா?" என்று கூறிவிட்டு அந்தக் குவளையை எடுத்துச் செல்லும் ராணாவை அதிர்ச்சியுடன் நோக்கினாள்.


காவ்யா இன்னும் நின்றுகொண்டே இருப்பதை பார்த்தவன், அவளை வந்து படுத்துக்கொள்ளும்படி கூறிட, முதலில் தயங்கி அப்படியே நின்றாள். அதை பார்த்தவன் கடுப்பாகி, "உன்னய நான் ஒன்னும் பண்ணிடமாட்டேன். பயப்படாம வந்து தூங்கு. வா!" என்று சற்று அதட்டலாகக் கூறிட, அவளும் தன்னையறியாமல் படுக்கையில் வந்தமர்ந்து படுத்துக்கொண்டாள்.


அவள் முழித்திருப்பதை பார்த்து, "டாக்டர் நல்லா ரெஸ்ட் எடுக்க சொல்லிருக்காங்க உன்னய. நீ தினமும் பயந்து பயந்து அலறிட்டு இருந்தன்னா எப்டி ரெஸ்ட் கிடைக்கும்? இது குழந்தையத்தான் பாதிக்கும். அதனாலதான் இங்க வந்திருக்கேன். நீ இதுக்கும் பயந்து தூங்காம இருக்காத. நிம்மதியா தூங்கு" என்று அக்கறை நிறைந்த வார்த்தைகள்போல் தோன்றினாலும் பேச்சில் சற்று கடுமைகாட்டியே கூறினான்.


காவ்யாவும், 'ஏதோ குழந்தமேல அக்கறை இருக்கிறமாறியே பேசுறான்! இந்தக் குழந்தையவே என்னய பழிவாங்குறதுக்கான ஆயுதம் மாறிதான சொன்னான்?! அதுக்காகதான் இப்படிலாம் பண்றான்போல! இவனால ஏற்பட்ட பயத்துக்கு இவனே காவலா? இவன பக்கத்துல வச்சுட்டு நான் எப்டி நிம்மதியா தூங்கமுடியும்? இன்னும் எத்தன நாளைக்கு இப்டி டார்ச்சர் பண்ணுவானோ?' என்று மனதில் நினைத்து வாடியவள், அப்படியே கண்மூடி தூங்க முயற்சித்தாள். ஆனாலும், அவளுக்கு தூக்கம் வரவில்லை. கண்களை திறந்துகொண்டு அவனுக்கு முதுகு காட்டியபடியே படுத்திருந்தாள்.


தனது வேலைகள் அனைத்தையும் முடித்தவன் மடிக்கணினியை மூடி வைத்துவிட்டு எழுந்தவன், காவ்யாவின்புறம் திரும்ப, அவள் தூங்கவில்லை என்பது அவனுக்கும் தெரிந்துவிட்டது. நேரமும் நடுநிசியை தாண்டியிருக்க, இன்னும் அவள் தூங்காமல் இருப்பது இவன்மேல் உள்ள பயத்தினாலும் தாக்கத்தினாலும்தான் என்பது அவனுக்கும் புரிந்திட, இதழில் ஒருவிதமான புன்னகை தோன்றி மறைந்தது.


வேகமாக அறையைவிட்டு வெளியேறினான். கதவு சாத்தும் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தவள்? அறையை சுற்றிப் பார்த்திட, அவனை காணாததால் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டாள். அப்படியே சிலநிமிடம் இருந்தவள், அறைக்கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டதும் படுத்து கண்களை மூடிக்கொண்டாள். உள்ளே வந்த ராணா, "இனி நீங்க இங்கயே படுத்துக்கோங்க. எதுவும்னா என்னய கூப்டுங்க" என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டான்.


இவன் பேசியதை கேட்டவள், யாரிடம்? என யோசித்துக்கொண்டிருக்க, அவன் சென்றுவிட்டான் என்பதை உறுதிசெய்தவள், கண்களை திறந்து எழுந்து பார்த்தாள். அங்கே கமலாம்மா நிற்பதை பார்த்தவளுக்கு மனதில் சற்று நிம்மதி பரவிட, எழுந்துசென்று அவரை அணைத்துக் கொண்டாள். அவரும் ஆதரவாய் வருடிவிட்டு,


"என்னம்மா? மறுபடியும் பயந்துட்டியா?" என்று அக்கறையாய் கேட்டிட, அவளும் அணைப்பிலிருந்து விலகியவள், "ஆமாம்மா! கண்ண தொறந்ததும் திடீர்னு இவர் இருந்ததும் பயந்து அலறிட்டேன்மா" என்று பொய்கூறி சமாளித்தாள்.


"அதுக்கு எதுக்கும்மா பயப்படுற? எத பாத்தும் இனி பயப்படக்கூடாது. சரியா?" என்று கூறியவர், சிறிய பொட்டலத்தை பிரித்து திருநீரை எடுத்தவர், அதை அவள் நெற்றியில் பூசிவிட்டு,


"இது எங்க ஊரு காவல்தெய்வம் மாசாணபோத்தி கோவில் திருநூரும்மா. இத பூசிக்கோ. எந்த காத்துக் கருப்பும் உன்னய அண்டாது. எத நினைச்சும் பயப்படாம படுத்து நிம்மதியா தூங்கும்மா. அப்பதான் உனக்கும் குழந்தைக்கும் நல்லது" என்று ஆறுதலாய் கூறிட, அவரை பார்த்து ஒரு விரக்தி புன்னகை சிந்தியவள், அப்படியே படுத்துக்கொண்டாள். அவரையும் அருகிலேயே வற்புறுத்தி படுக்கச் செய்தவள், சிறிது நேரத்தில் கண்ணயர்ந்து தூங்கிவிட்டாள். அவரும் அதன்பின் படுத்துக்கொண்டார்.


மறுநாள், ராணா காலை உணவு உண்ண அமர்ந்திருக்கும்போது அவனது நண்பர்களும் வீட்டுக்குள் நுழைந்தனர். இவனை பார்த்ததும் இவனிடம் வந்தவர்கள், இவன் தனியாக அமர்ந்திருப்பதை பார்த்து,


"டேய் ராணா! என்னடா? தனியா உக்காந்து சாப்டுற? எங்கடா எங்க அண்ணி? அவங்கள விட்டுட்டு நீ மட்டும் நல்லா கொட்டிக்க வந்துட்டியா?" என்று விஜய் அவனை கேலி செய்ய,


"இல்லன்னா..! அண்ணிய சண்டபோட்டு அனுப்பி வச்சுட்டியாடா? உன்னபத்திதான் எங்களுக்கு நல்லா தெரியுமே.. கோபம் வந்தா என்ன பண்றனே தெரியாது. எங்கடா அண்ணிய அனுப்பின?" என்று நாகவ் பொய்யாக பதறியபடி கூறிக்கொண்டிருக்க,


"டேய்! கேக்குறாங்கல்ல? சொல்லேன்டா. காவ்யாவ எங்க?" என்று பிரபவ்வும் கேட்டுவிட, கடுப்பான ராணா,


"நீங்க எங்கடா சொல்ல விட்டீங்க? பேசிட்டேதான இருந்தீங்க. அதான், பேசுங்கனு விட்டுட்டேன். பேசி முடிச்சாச்சா இப்ப? அவ ரூம்ல இருக்கா" என்று கூறியதை கேட்டவர்கள் ஈஈஈ என இழித்திட,


"எங்களுக்கு எப்டிடா தெரியும்? கல்யாணம் ஆகி நாளுநாள் கூட முழுசா ஆகலடா. அதுக்குள்ள இப்டி பொண்டாட்டிய விட்டுட்டு உக்காந்து சாப்டுறீயேடா? உனக்கே இது நியாயமா இருக்கா? கல்யாணம் ஆனாவாச்சும் நீ திருந்துவன்னு நினச்சோம்டா. ஆனா, நீ மாறவே மாட்டடா" என்று ராமும் தன் பங்கிற்கு குறைகூறி அவனை நன்றாக வாறினான்.


"சரி! விடுங்கடா! அது அவன் விசயம். நம்ம என்ன சொல்றது? அவனே பாத்துப்பான். என்னடா?" என்று பிரபவ் சமாதானமாய் கூறி அவனை பார்த்திட,


"அவன் எப்படியும் பாக்கட்டும். ஆனா, அண்ணிய கண்கலங்காம பாத்துக்கடா. இல்லன்னா நாங்க நாலுபேரும் சேந்து உன்னய உதைப்போம். பாத்துக்க!" என்று நாகவ் உண்மையாய் கூறிட, அதை மற்றவர்களும் ஆமோதித்துத் தலையசைத்தனர். அதை கேட்ட ராணாவுக்குக் கடுப்பானாலும் பொறுத்துக்கொண்டு அமைதியாக இருந்தான்.


"உங்க அண்ணிய ஒன்னும் பண்ணலடா. அவ மேலதான் இருக்கா. லேட்டாதான் எந்திரிச்சிருப்பா போல! அப்றமா வருவா" என்று சமாளிக்கும் விதமாய் கூறிட, அதை கேட்டவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு நமட்டுச் சிரிப்பு சிரித்தனர். அதை பார்த்தவன்,


"என்னடா ஆச்சு உங்களுக்கு? எதுக்கு இப்டி சிரிக்கிறீங்க?" என்று கேட்டுவிட, அவர்களும் சிரிப்பை சமாளித்து,


"ஒண்ணுமில்லடா! நாங்ககூட உன்னய தப்பா நினச்சுட்டோம். அண்ணிய கொடுமை பண்றியோனு...! ஆனா, நீ அண்ணிய இவ்ளோ நேரம் தூங்கவிடுறியேடா. யூ ஆர் க்ரேட் டா!" என்று விஜய் கிண்டலாகக் கூறிட,


"பொதுவா டாட்ஸ் லிட்டில் ப்ரின்சஸ்தான் இப்டி தூங்குவாங்க. ஆனா, இங்கதான் ஹஸ்பென்ட்ஸ் லிட்டில் க்வீன் தூங்குறத பாக்குறோம்டா! எங்களுக்கு நம்பிக்கை வந்துருச்சு" என்று நாகவ் கூறிட,


"என்னதுடா நம்பிக்கை வந்துச்சு?" என்று ராணாவும் குழப்பத்துடன் கேட்டிட,


"நீ கூடிய சீக்கிரமே பொண்டாட்டி தாசன் ஆயிடுவன்னுதான்" என்று ராமும் சேர்ந்து காலை வாற, அவன் சொன்னதை கேட்டு வியப்பாய் அவனை பார்த்த நாகவ்வும் விஜயும்,


"டேய்!! ராம்! உனக்கு இதுலாம் புரியுதாடா? நாங்க சொல்ல வர்ரத கரெக்டா கேட்ச் பண்ணிட்டியேடா! போலீஸ் மூளைல க்ரீன் சிக்னல் எரிய ஆரம்பிச்சுட்டுடா" என்று நாகவ் கூறிட, இருவரும் ஹைபை செய்துகொண்டனர். ராமும் ஈஈஈ என இளித்தான். இதை பார்த்து பிரபவ் சிரித்திட, ராணா இவற்றில் கலந்துகொள்ளாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.


நால்வரும் சிரித்து முடித்தபின் ராணாவிடம் திரும்பியவர்கள், "சரிடா! அண்ணிய கூப்டு"


"நீயும் எந்திரிடா"


"உங்களுக்கு நம்ம வீட்லதான் இன்னைக்கு ப்ரேக்ஃபாஸ்ட்"


"லஞ்ச், டின்னர் எல்லாமே" என்று நால்வரும் வரிசையாகக் கூறுவதை கேட்டவன் ஒருநொடி அதிர்ந்தான்.


"எதுக்குடா? என்னடா? எதுவும் ஃபங்ஷனா என்ன?" என்று குழப்பமாகக் கேட்டிட, அவனை மூக்குமுட்ட முறைத்தனர், நண்பர்கள் நால்வரும். அதை புரியாமல் பார்த்திட,


"ஏன்டா சொல்லமாட்ட? உனக்கும் கல்யாணம் இப்பதான் ஆச்சுனு மறந்ததுட்டியா? அதுவும் ஃபங்ஷன் தான? அதுக்குள்ள இன்னொரு ஃபங்ஷன் கேக்குதா உனக்கு?" என்று ராம் கடுப்பாகக் கூறிட,


"அப்றம் எதுக்குடா இந்த ஏற்பாடு?" என்று மீண்டும் கேட்டிட, தலையில் அடித்துக்கொண்டனர் நால்வரும்.


"டேய்! உனக்கு நிஜமாவே நாங்க சொல்றது புரியலயா? இல்ல புரியாதமாறி நடிக்கிறியாடா?" என்று நாகவ் அலுத்துக்கொள்ள,


"டேய்! ராணா! உன்னயும் காவ்யாவையும் நம்ம வீட்டுக்கு கூப்டுருக்காங்கடா நம்ம பேரண்ட்ஸ். புதுசா கல்யாணம் ஆனவங்கள கூப்டு விருந்து கொடுக்கணும்னு நினைக்கிறாங்க. சோ, நீங்க இரண்டுபேரும் கிளம்புங்க" என்று பிரபவ் விளக்கமாகக் கூறுவதை கேட்டவன், ஒருநொடி அமைதியானான்.


"வேணாடா! இதெல்லாம் என்ன ஃபார்மாலிட்டீஸ் நமக்குள்ள? அதோட இப்ப அவ இருக்க நிலைமையில இதெல்லாம் செட்டாகாதுடா?" என்று யோசனையுடன் கூறிட, மற்றவர்கள் கோபம் கொண்டனர்.

"என்னடா நினச்சுட்டு இருக்க? எல்லாமே உன் இஷ்டத்துக்குத்தான் பண்ணுவியா? இப்டிதான் மேரேஜையும் நீயா டிசைட் பண்ணிட்டு வந்து சொன்ன, அதுக்கும் ஓகே சொன்னோம். ஆனா, உன் கல்யாணத்த எவ்ளோ க்ராண்டா ஃபெஸ்டிவல் மாறி செலிப்ரேட் பண்ணணும்ங்க்றது எங்களோட கனவு தெரியுமா? அதயும் நீ வேணான்னு சொல்லி உன் இஷ்டப்படி பண்ண, உனக்காக அதையும் ஏத்துகிட்டோம்..." என்று விஜய் கோபத்தில் பேசிட, மேலும் பேசமுடியாமல் நிறுத்தினான். அவனை சமாதானம் செய்ய மற்றவர்கள் முயல, அதை தடுத்த ராம்,


"அவன எதுக்கு தடுக்கிறீங்கடா? அவன் உண்மையத்தான சொல்றான்" என்று கூறியவன் ராணாவிடம் திரும்பி,


"கல்யாணம் சிம்பிளா பண்ண. அந்த நியூஸக்கூட வெளிய சொல்ல வேணான்னு சொல்லிட்ட. கேட்டா.. நேரம் வரும்போது சொல்லிக்கலாம்னு சொல்ற..ரிசப்ஷன் வேணா, பார்ட்டி வேணா, இப்டி எதுவுமே வேணா! வேணா!! னு தான் சொல்ற..கேட்டா, எல்லாத்துக்கும் அவங்களோட ப்ராபளத்த சொன்ன..சரின்னு ஒத்துகிட்டோம். இப்ப நம்ம வீட்டுக்கு கூட்டி வரதுல உனக்கு என்னடா பிரச்சினை? ம்ம்.." என்று ஆதங்கப்பட்டுப் பேசிட, ராணா ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.


இதுவரை எவருமே இவனிடம் இவ்வளவு ஆதங்கப்பட்டு பேசியதில்லை. இவன் கூறுவதற்கு மேல் எதையும் கேட்டு தொல்லை செய்திடவும் மாட்டார்கள். அவன் கோபப்படுவான் என்று அறிந்தாலே அந்த விசயத்தை இவனிடம் பேசமாட்டார்கள். பயத்தினால் அல்ல! இதன்மீது கொண்ட அக்கறையினால் என்பதை இவனும் நன்கு அறிவான். ஆனால், என்றும் எதற்கும் கோபம் கொள்ளாதவர்கள் இன்று இவ்வளவு கோபம் கொண்டு பேசுவது அவனுக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. ஆனால், அது அவன் கோபத்தை தூண்டாமல் சிரிப்பையே வரவைத்தது.


இவ்வளவு பேசியும் ராணா எதுவும் பேசாமல் அமைதியாகவே இருப்பதை பார்த்தவர்கள் சலித்துக்கொள்ள, அவனிடம் வந்த பிரபவ்,


"டேய்! ராணா! இப்ப என்னடா பிரச்சனை உனக்கு நம்ம வீட்டுக்கு வரதுல? நம்ம வீடுதான! எல்லாரும் காவ்யாவ பாக்கணும்னு ஆசப்படுறாங்க. மேரேஜ் அப்ப வந்துட்டு போயிட்டாங்க. அதான் இப்ப கூப்டுறாங்க. இதனால காவ்யாவுக்கும் ஒரு சேஞ்ச் கிடைக்கும்ல. வீட்டுக்குள்ளயே இருந்தா இன்னும் அதிகமாதான் கவலப்படுவாங்க. சொல்றத சொல்லிட்டோம், இனிமேல் உன்னோட விருப்பம். நீ ஒரு முடிவெடுத்துட்டா மாறமாட்டன்னு தெரியும்" என்று எடுத்துக்கூறிட, சிறிது யோசித்த ராணா, அவர்களுக்காகவும், காவ்யாவுக்கும் புது இடம் சென்றால் கொஞ்சம் மாறுதல் ஏற்படும் என்பதற்காகவும் சம்மதம் தெரிவித்தான்.


"சரிடா! வரோம்" என்று கூறிட, அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.


"ஒருவழியா சம்மதிச்சியேடா. இல்லன்னா...இன்னையோட உன் ஃப்ரண்ட்ஷிப்ப கட் பண்ணிருப்பேன்டா" என்று நாகவ் கூறி முகத்தை திருப்பிக்கொள்ள, அதைக்கேட்ட ராணா,


"ஃப்ரண்ட்ஷிப்ப கட் பண்ற மூஞ்ச பாரு. நீ கட் பண்ணா போதுமா? உன்னைத்தான் அப்டி போக விட்ருவேனா?" என்று கூறி கிண்டல் செய்திட, அதுதான் உண்மையும்கூட என்பதை அறிந்த நாகவ் பாவமாக முகத்தை தொங்கபோட்டுக்கொண்டு,


"உன்னயவிட்டு நான் எங்கடா போகப்போறேன்? நீயே சொன்னாலும் நான் போகமாட்டனே.." என்று கூறி சிரித்திட, மற்றவர்கள் இவனை பார்த்து த்தூ...என துப்பியவர்கள்,


"அப்றம் எதுக்கு இந்த வெட்டி சீனு..? தேவையா?" என்று கூறி கலாய்த்தார்கள்.


"சரி! சரி!! விடுங்கடா! நட்புல இதெல்லாம் சகஜம். டேய் ராம்! விஜய்! அப்றம் நீங்க இன்னும் அவன்மேல கோபமா இருக்கீங்கனு நினச்சேன்..! நீங்க என்னடான்னா என்னய ஓட்டிட்டு இருக்கீங்க..?" என்று நைசாக இருவருக்கும் நியாபகப்படுத்தி ஏத்திவிட்டு அமைதியானான்.


அவன் கூறியதை கேட்டவர்களும் அதற்கேற்றாற்போல் முகத்தை தூக்கி வைத்துக்கொள்ள, அதை பார்த்த ராணா நாகவ்வை முறைத்தான். அதை பார்த்த நாகவ் இதற்கும் தனக்கும் சம்பந்தமில்லாததுபோல் வேறுபுறம் திரும்பிக்கொண்டான். இருவரின் அருகில் வந்த ராணா எதுவும் பேசிடாமல் இருவரையும் அணைத்துக்கொள்ள, விஜயும் ராமும் மொத்தக் கோபமும் தணிந்து அவனை கட்டிக்கொண்டனர்.


அதை பார்த்த நாகவ், "டேய்!! என்னய விட்டுட்டு ஹக்கா? விடமாட்டேன்! இதோ வரேன்டா.." என்று கூறிக்கொண்டே அருகில் வந்து அவர்களை கட்டிக்கொள்ள, அவனையும் அணைப்புக்குள் இழுத்திட, பிரபவ்வையும் ராணா அழைத்து ஐவரும் ஒன்றாகக் கட்டிக்கொண்டனர்.


கமலாம்மாவும் உணவு பரிமாற வந்தவர், இவ்வளவு நேரம் இங்கிருந்து இவர்கள் செய்கையை பார்த்துக் கொண்டிருந்தவர், இது ஒன்றும் புதிதல்ல என்றவாறு அவர் வேலையை கவனிக்கச் சென்றுவிட்டார். காவ்யா எப்போதும்போல கிளம்பி கீழே இறங்கிவர, இவர்கள் அணைப்பில் நின்றதை பார்த்தாள். அது அவள் தோழிகளுடன் இருந்த நினைவை கண்முன் கொண்டுவந்திட, கண்கலங்கி நின்றாள்.




ராணாவிடம் தோன்றும் மாற்றம் எதனால்?? பிறக்கப்போகும் குழந்தையை வைத்து திட்டம் ஏதும் தீட்டுகிறானா?? காவ்யா நண்பர்கள் வீட்டிற்கு செல்ல சம்மதிப்பாளா??






❤வருவாள்❤...




கீழே இருக்கும் லிங்க் கிளிக் செய்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்

Thread 'இருளில் தொலைந்த ஒளி அவள் - Comments' https://www.sahaptham.com/community/threads/இருளில்-தொலைந்த-ஒளி-அவள்-comments.500/
 
அவள் 16



நண்பர்கள் ஐவரும் அணைப்பில் இருந்து வெளிவந்து நிற்க, படியில் நின்ற காவ்யாவை பார்த்தனர். அவளை பார்த்ததும், "வாங்க அண்ணி!! ஏன் அங்கயே நின்னுட்டிங்க?? நாங்க இப்படித்தான் ஏதாச்சும் பண்ணிட்டு இருப்போம். நீங்க வாங்க" என்று விஜய் கூறி அழைத்திட, மறுக்கமுடியாமல் அவளும் கீழிறங்கி வந்தாள்.


காவ்யா வந்ததும் அவளிடம் நலன் விசாரித்தவர்கள், "அண்ணி! நீங்களும் ராணாவும் நம்ம வீட்டுக்கு வரணும். அங்கதான் இன்னைக்கு உங்களுக்கு விருந்து. எங்க அம்மா அப்பா எல்லாரும் கூப்டு வரச் சொல்லி ஆடர். இன்னைக்கு மட்டும் இல்ல, இன்னும் ஒன் வீக்குக்கு.." என்று நாகவ் மகிழ்ச்சியுடன் கூறிட, அதைக் கேட்டவள் அதிர்ந்தாள்.


அவளின் அதிர்ச்சியை பார்த்தவர்கள், "நீங்களும் தயவுசெஞ்சு வரமுடியாதுனு மட்டும் சொல்லிடாதீங்க. ப்லீஸ்...!!" என்று பிரபவ் கூறிட,


"ஆமா! இவ்வளவு நேரம் இவன்கிட்ட போராடிருக்கோம். கடைசியா உங்களுக்கு ஒரு சேஞ்சா இருக்கும்னு சொன்னப்றம்தான் ஒத்துக்கவே செஞ்சான்" என்று ராமும் கூறி சலித்துக்கொண்டான்.


ஏற்கனவே இவன் செய்த பாவத்திற்கு அவர்களும் துணைபோவதாய் நினைத்திருந்தவள், இதையும் கேட்டு முடிவே செய்து தவறாகப் புரிந்துகொண்டாள். அவன்மீது உள்ள வெறுப்பு அவர்கள்மீதும் படர்ந்தது.


ராம் கூறுவதை கேட்டவளுக்கு அவர்கள்மீது வெறுப்பு படர ஆரம்பித்திருந்தது. அவர்களை நிமிர்ந்து பார்க்கவும் தோன்றிடாமல் தலைகவிழ்ந்தபடியே நின்றாள். ராம் கூறியதற்கும் எதுவும் பதில் கூறாமல் அமைதியாகவே நின்றாள். அதை பார்த்தவர்கள் ஏனென்று முகம் சுருங்கினாலும், அவளது கவலையும் புதியவர்கள் என்ற அச்சமும் காரணமாக இருக்கலாம் என்று அவர்களே ஒரு முடிவுக்கு வந்து சகஜமாயினர்.


இவளை ஒப்புக்கொள்ளச் செய்வது எப்படி? என்று நால்வரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு நின்றனர். நண்பர்கள் பேசி முடிக்கும்வரை காத்திருந்தவர், காவ்யா வந்தததை கவனித்ததும் உள்ளே இருந்த கமலாம்மா ஆறு பேருக்குமாய் சேர்த்து தேநீர் கலந்து கொண்டுவந்து அனைவருக்கும் கொடுத்தார். நண்பர்கள் ஐவரும் அதை வாங்கிக்கொண்டு சோபாவில் சென்று அமர்ந்தனர்.


காவ்யாவையும் அருகில் இருக்கும் வேறு சோபாவில் அமரச் சொல்லிட, அவள் அவர்களருகில் கூடச் செல்லாமல் உணவருந்தும் மேசையின் அருகில் கிடந்த நாற்காலியை இழுத்துப்போட்டு அமர்ந்துகொண்டாள். அதை கண்டவர்களும் அவள் பழகிட நேரம் கொடுத்து விட்டுவிட்டனர். இவையனைத்தையும் பார்வையாளராகப் பார்த்துக் கொண்டிருந்தான், ராணா.


தேநீர் பருகும் நேரம் மௌனமாய் கழிந்ததை பொறுக்காத நாகவ், "அண்ணி! நீங்க எப்பவுமே இப்டித்தான் சைலண்ட் டைப்பா? ஏன் கேக்குறன்னா..! ராணாகூட எதுவும் அதிகமா பேசமாட்டான். நீங்களும் அமைதியா இருந்தா அப்றம் உங்களுக்கே ரொம்ப போர் அடிக்கும்ல..?!" என்று சிரித்துக்கொண்டே கூறிட, காவ்யாவின் முகத்தில் எந்த உணர்ச்சியும் தென்படவில்லை. அவள்பாட்டுக்கு தேநீரை பருகியபடி அமைதியாகவே இருந்ததை பார்த்தவர்கள், நாகவ்வை திரும்பி முறைத்தனர்,


"ஏன்டா இப்டி? காமெடி பண்றேன்னு பேருல அவங்கள இன்னும் கடுப்பேத்தாதடா. நல்லா... இருப்ப" என்று விஜய் கூறிட, நாகவ் அமைதியானான். மறுபடியும் மௌனம் சூழ்ந்திட, பிரபவ் தன் அலைபேசியை எடுத்து அழைப்பு விடுத்தவன், பேசியபடி எழுந்துவந்து காவ்யாவிடம் அலைபேசியை நீட்டினான்.


அவனை நிமிர்ந்து பார்த்தவள் கேள்வியாய் நோக்கிட, அதைக் கண்டவன், "என் அம்மா. உங்ககிட்ட பேசணுமாம். இந்தாங்க, பேசுங்க" என்று கூறிட, அவளும் சிறிது தயங்கியபடி வாங்கி காதில் வைத்து ஹலோ!! என்றாள்.


"அம்மாடி..காவ்யா..! எப்டிம்மா இருக்க? சாரிடாம்மா! கல்யாணத்தப்பவே உங்கிட்ட வந்து பேசிருக்கணும். ஆனா, சின்ன மனவருத்தம். நினச்சமாறி ராணா கல்யாணத்த பெருசா நடத்தமுடியலனுதான். அதான் உன்னயயும் எதுவும் கஷ்டப்படுத்திரக் கூடாதுனு வந்துட்டோம்மா. தப்பா நினச்சுக்காதம்மா" என்று பொறுமையாகப் பேசி மன்னிப்புக் கேட்டவரை பேசாமல் நிராகரிக்கப் பிடிக்காமல்,


"அதெல்லாம் ஒண்ணும் தப்பா நினைக்கலைங்க. சாரிலாம் வேணாம்" என்று காவ்யா கூறியதைக் கேட்டவரும் நிம்மதியடைந்து,


"என்னம்மா யாரையோ கூப்டுற மாறி கூப்டுற? அம்மான்னு கூப்டுமா. நம்ம குடும்பத்தோட மொத மருமக நீ. நீயும் எனக்கு மகதான்மா. இனி அப்டித்தான் கூப்டணும். சரியா?" என்று அன்புடன் உரிமையாய் கூறிட, அவர்முகம் பாராமலே அவர்மீது மரியாதையும் நல்மதிப்பும் வந்தது காவ்யாவுக்கு.


"சரிங்க..ம்மா..!" என்று அவளும் கூறிட, மகிழ்ச்சியடைந்தவர், "ரொம்ப சந்தோசம்மா! உன்னய கூட்டிவரச் சொல்லித்தான்மா பசங்கள அனுப்பிச்சிருக்கேன். அவங்க கூடவே நீயும் உன் புருசனும் வந்துடுங்கம்மா. இங்க நான் காத்திட்டுருக்கேன். சீக்கிரம் வந்துடு கண்ணு!" என்று அன்பாய் கூறி கெஞ்சலாய் கேட்டிட, அவளால் மறுத்துப்பேச முடியவில்லை.


சிறிது தயங்கியவள் பின், "ம்ம்..சரிங்கம்மா! வரோம்" என்று கூறிவிட்டு அலைபேசியை பிரபவ்விடம் கொடுத்தாள். அவனும் இவள் பேசியதை வைத்தே அவள் ஒப்பக்கொண்டதை அறிந்தவன், மகிழ்ச்சியோடு வாங்கிக்கொண்டான். இதை பார்த்த நண்பர்களும் மகிழ்ந்தனர். காவ்யா அவளாகவே வர ஒப்புக்கொள்வாள் என்று ராணாவும் எதிர்பார்க்காததால், இது சற்று வியப்பாகத்தான் இருந்தது. பெரியவர் பேச்சிற்கு மதிப்புக் கொடுத்து ஒப்புக்கொள்ளும் அளவுக்கு நல்லவளா? என்ற கேள்வியும் எழுந்தது. அதை பெரிது படுத்தாமல் அப்படியே விட்டுவிட்டான்.


காவ்யா ஒப்புக்கொண்டதும் அவளை கிளம்பி வரச் சொல்லிட, அவள் மேலே செல்லப்போகும் முன் அவளிடம் பிரபவ்வின் தாயார் கொடுக்கச் சொன்னதாய் கொடுத்து அனுப்பியிருந்த புடவை, நகையுடன் பூவும் குங்குமமும் சேர்ந்திருந்த பார்சலை நீட்டினான், பிரபவ். காவ்யா அதை வாங்க மறுத்து நின்றிட,


"ப்லீஸ்..! வாங்கிக்கோங்க. அம்மாதான் கொடுத்துவிட்டாங்க. இதுல இருக்க ட்ரெஸ் அண்ட் ஜுவெல்ஸ போட்டுகிட்டுத்தான் நீங்க வீட்டுக்கு வரணும்னு ரொம்ப ஆசையாய் கொடுத்து அனுப்பினாங்க" என்று பிரபவ் கூறிட, இவளும் மறுக்கமுடியாமல் வாங்கிச் சென்றாள்.


அதை திருப்தியுடன் பார்த்தவர்கள், ராணாவின்புறம் திரும்பிட, அவன் சாதாரணமாக அமர்ந்திருப்பதைப் பார்த்து, "டேய்! நீயும் போய் ட்ரெஸ் மாத்திட்டு வாடா. டைம் ஆகுது" என்று ராம் கூறிட,


"டேய்! எனக்கும் எதாச்சும் ட்ரெஸ் வாங்கிட்டு வந்திருக்கீங்களா என்ன?" என்று ராணா கேட்டிட, அதைக் கேட்டவர்கள் அவனை ஒருமாதிரியாகப் பார்த்திட,


"உனக்கு எதுக்குடா வாங்கிட்டு வரணும்? அண்ணிதான் நம்ம ஃபேமிலிக்கு நியூ கம்மர். அதனால அவங்களுக்கு அம்மா ஆசையா எடுத்துக் கொடுக்குறாங்க. உனக்கு எதுக்கு? ஏழு கழுதை வருசமா எங்ககூடதான குப்ப கொட்டுற.." என்று விஜய் கூறி அவனைக் கலாய்த்திட, அவனை ராணா முறைத்தான். அதைப் பார்த்தவன்,


"சரி! சிரி!! சீக்கிரம் போய் கிளம்பிட்டு வா" என்று கூறி சமாளித்திட,


"நான் கிளம்பிதான்டா இருக்கேன். ஏன்டா உயிர வாங்குற?" என்று கூறியதைக் கேட்டு அவனை பார்த்திட, அவனோ! நிறுவனத்திற்குச் செல்லும்போது அணியும் கோட்சூட், டையுடன் அணிந்திருந்ததைப் பார்த்து நால்வரும் முகம் சுளித்தனர்.


"அடேய்!! நீ பிசினஸ் மீட்டிங்க்கு கிளம்புற மாறி கிளம்பி நிக்கிறடா.." என்று நாகவ் கூறி சலித்துக்கொள்ள,


"ஆமாடா. நான் ஆபீஸ் போகத்தான கிளம்பியிருந்தேன். நீங்கதானடா சடனா வந்து வீட்டுக்கு கூப்டீங்க? இப்ப அதனால என்ன? இந்த ட்ரெஸ்கு என்ன? ஐம் கம்ஃபர்டபிள் வித் திஸ்டா" என்று கூறியதைக் கேட்டவர்கள் நொந்தனர்.


"ஐயா! ராசா!! இது உனக்கு கம்ஃபர்டபிளா இருக்கலாம். ஆனா, போகப்போறது நம்ம வீட்டுக்குத்தான்"


"ஆமா. ஆபிஸ்கு இல்ல..!"


"சோ, சேஞ்ச் தி காஸ்ட்யூம் லைக் அஸ் அண்ட் கம்"


"ப்லீஸ்டா... டேய்! போடா" என்று நால்வரும் கூறி அனுப்பிட, அவனும் சிறிதுநேரத்தில் அவர்களைப் போலவே ஃபார்மல் பேண்ட் அண்ட் சர்ட்டில் வெளியே வந்தான். அதைப் பார்த்து பெருமூச்சு விட்டவர்கள்,


"இவன ஒவ்வொன்னுத்துக்கும் ஒத்துக்க வைக்கிறதுக்குள்ள மூச்சு வாங்குதுடா..." என்று விஜய் கூறிட,


"ஆமா. சொல்பேச்சு கேக்காமயே வளந்து பழகிட்டான் அவன். ஆனா, கஷ்டப்படுறது நாமடா.." என்று நாகவ்வும் அலுத்துக்கொள்ள,


"போகப்போக மாறிடுவான்டா. அதான் காவ்யா வந்துட்டாங்கள்ல. மாத்திடுவாங்க" என்று பிரபவ் கூறிட,


"அதான்டா எனக்கும் சந்தேகமா இருக்கு. இவனே சரியான மொரட்டு பீசு..! இவன் எப்டி அவங்கள லவ் பண்ணி ஒத்துக்க வச்சான்?" என்று ராம் கேலியாய் கேட்டிட,


"பின்ன! உன்னயமாறி எல்லாரும் எப்பவும் சாமியாரா இருப்பாங்கன்னு நினச்சியாடா? உனக்குத்தான் லவ்வும் வராது, செட்டும் ஆகாது. அவனாச்சும் லவ் பண்ணி சந்தோசமா இருக்கட்டும். கண்ணு வைக்காத" என்று நாகவ் கூறி கலாய்த்திட, மற்றவர்கள் சிரித்தனர்.


இவர்கள் சிரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த ராணாவும் இவர்களிடம் வந்து என்னவென்று விசாரிக்க, ஏதோ கூறி சமாளித்தனர். காவ்யாவும் கிளம்பி கீழே வந்துசேர்ந்தாள். அவள் வந்ததும் அனைவரும் எழுந்து கிளம்பத் தயாராக, ராணாவும் அதைப் பார்த்துத் திரும்பியவன், காவ்யாவின் அழகில் ஒருநொடி கரைந்தான்.


மயில்கழுத்து நீலவண்ணத்தில் பட்டுப்புடவையும் கழுத்தில் தங்க ஆரமும் காதில் ஜிமிக்கியும் கைகளில் இரு தங்க வளையலும் அணிந்து, கூந்தலை எப்போதும்போல் முடியெடுத்து, கீழே விரித்துப்போட்டு இடைவரை பரந்து கிடந்த கூந்தலில் பூச்சூடி, நெற்றியில் சிறிதாக பொட்டும் சந்தனமும் வைத்து, என்றுமில்லாமல் இன்று புதிதாய் வகிட்டில் குங்குமமிட்டு ஓவியமாய் வந்தவளை கண்ணிமைக்காமல் பார்த்தவன், மறுநொடி சுதாரித்துக்கொண்டான்.


பெண்களையே அறவே வெறுத்திடும் தான் இப்படி பார்த்துக் கொண்டிருந்ததை, அதுவும் இந்த திமிரு பிடித்தவளைப் பார்த்துக்கொண்டிருப்பதை எண்ணி தன்னைத்தானே மனதில் திட்டிக்கொண்டான். அதன்பின், நண்பர்களும் முன்னே செல்ல, இவனும் பின்னே செல்ல, காவ்யாவும் கமலாம்மாவிடம் சொல்லிவிட்டு சென்று வண்டியில் ஏறிக்கொண்டாள். நண்பர்கள் நால்வரும் ஒரு காரிலும் இவர்கள் இருவர் ஒரு காரிலும் ஏறிட கிளப்பியவர்கள், நேராக பிரபவ்வின் இல்லத்திற்குச் சென்றனர்.


முதல் நாள் பிரபவ் இல்லத்திற்குச் சென்றவர்கள், வரிசையாக ஒவ்வொருநாளும் ராம், நாகவ், விஜய் இல்லத்திற்குச் சென்றுவந்தனர். அனைவரும் காவ்யாவை அன்போடு வரவேற்று உபசரித்தனர். காவ்யாவை அவர்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்துவிட்டது. ராணாவிற்கு ஏற்ற ஜோடியாக எண்ணி ஆனந்தம் கொண்டனர்.


ஆண்பிள்ளைகளைக் கொண்ட குடும்பம் என்பதால் இவளை தங்கள் மகளாகவே அனைவரின் பெற்றோர்களும் கருதி அன்பை பொழிந்தனர். குடும்பத்தின் முதல் மருமகள் என்பதாலும் ராணாவின் தாய் தந்தை இல்லாததாலும் அவர்கள் சார்பிலும் சேர்த்து இவளை நன்றாகக் கவனித்துக்கொண்டனர்.


முதலில் அவர்கள் காட்டும் அன்பையும் அரவணைப்பையும் காவ்யா நம்ப மறுத்து, ஏற்காமல் விலகியிருந்தாலும் அவர்களுடன் நேரம் போகப்போக அவர்களின் தூய்மையான அன்பை புரிந்துகொண்டாள். அவர்கள் அனைவரும் இவளை தன் மகளாய் எண்ணியது அவர்கள் கவனித்துக்கொள்ளும் விதத்திலேயே தெரிந்தது. இவளாலும் அவர்கள் அன்பை மறுக்கமுடியாமல் ஏற்றுக்கொண்டாள்.


இப்படியே ஒவ்வொருவர் வீட்டிலும் ஒரு நாளென, நான்கு நாட்கள் சுற்றி வந்து அனைவரின் அன்பிலும் கவனிப்பிலும் பரிசிலும் காவ்யாவை கிறங்கடிக்கச் செய்தனர். ஆனால், அவளால் எதிலும் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொள்ள முடியாவிடினும் அவர்கள் அன்பை முழு மனதாய் ஏற்றுக்கொண்டாள்.


ஆனால், ராணாவின் பாடுதான் இந்த நான்கு நாட்களும் திண்டாட்டம் ஆகிப்போனது. விருந்தென பலவகை உணவுகளை சமைத்திருக்க, காவ்யா சிலதை உண்டும் பலதை உண்ண மறுத்தாள். அவள் மறுத்தும் அவளுக்கு அன்புத் தொல்லை செய்து பெற்றோர்கள் ஊட்டிவிட, அவள் இருக்கும் நிலையில் அவளுக்கு ஒத்துக்கொள்ளாமல் வாந்தி எடுத்தாள்.


அவர்கள் பதறிப்போய் விசாரித்திட, உணவு ஒத்துக்கொள்ளவில்லை என்று கூறி ராணாவே அவர்களை சமாளித்துக்கொண்டான். ஒவ்வொரு தடவையும் இவ்வாறே நடந்திட, அனைவரிடமும் நம்பும் வகையில் கூறி சமாளிப்பது ராணாவிற்கே கடுப்பாகியது.


என்றுமே சரியோ! தவறோ! யாரிடமும் நேராக உண்மையை கூறிச் செல்பவன், இன்று இவளால் தன் குடும்பத்திடமே பொய் கூறும் நிலை ஏற்பட்டதை எண்ணியவனுக்கு காவ்யாவின் மீதே கோபம் அதிகரித்தது. ஆனால், இப்போது அவளிடம் காட்டும் நிலையில் அவள் இல்லாததால், இதற்கும் சேர்த்து மொத்தமாக ஒருநாள் அனுபவிப்பாள் என்று மனதிலே கடிந்துகொண்டான்.




நான்கு நாட்கள், நாள் முழுவதும் நண்பர்கள் வீட்டில் இருந்தாலும் இரவு தங்கிட அவர்கள் எவ்வளவு வற்புறுத்தியும் மறுத்து தன் வீட்டிற்கு அழைத்து வந்துவிடுவான். அதற்கு முக்கிய காரணம், அவள் தூக்கத்தில் அலறுவதும் இவனைப் பார்த்து பயப்படுவதும் தான்.


ஒருவழியாக, அனைவரின் வீட்டிற்கும் சென்று வந்துவிட்டனர். காவ்யாவுக்கு இப்படி சென்றுவந்தது மனதிற்கு சிறிய மாறுதலாக இருப்பினும் அவளை அது மாற்றிடவில்லை. அவனால் இவள் பாதிக்கப்பட்ட நிகழ்வுகள், அவள் மனதைவிட்டு இன்னும் அகலவில்லை. அதனாலே அவனை கண்டு பயந்தாள்.


அலைச்சலால் காவ்யாவுக்கு வாந்தி மயக்கம் அதிகமானது. வீட்டிற்கு வந்ததும் சோர்ந்துபோய் படுத்தே கிடந்தாள். எதுவும் சாப்பிடவும் தோன்றாமல், சாப்பிட்டாலும் எதுவும் தங்காமல் வெளியே வந்தது. இதைக் கண்ட ராணாவும் மறுநாள் மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதித்துவிட்டு அதற்கேற்ற மருந்துகளையும் இருவரும் வாங்கி வந்தார்கள். அதன்பிறகுதான் சற்று தேறினாள்.


இப்படியே, ஒருவாரம் கழிந்தது. கமலாம்மா காவ்யாவை அக்கறையோடு கவனித்துக்கொண்டார். உணவு, மருந்து ஆகியவற்றை நேரம் தவறாமல் சரியாகக் கொடுத்து வந்ததால் அவள் உடல்நிலையும்
நன்றாக தேற ஆரம்பித்திருந்தது. இப்போதெல்லாம் ராணாவும் அவள்பக்கம் அதிகம் செல்லாமல் தள்ளியே இருந்தான்.


காவ்யாவின் தோழிகள், கடந்த ஒருவாரமாக வீட்டிற்குள்ளேயே இருந்தார்கள். நால்வரும் பேசி, கவலையை பங்குபோட்டுக் கொண்டாலும், எவரும் வெளியே செல்லும் மனநிலையில் இல்லை. ஆதலால், விடுப்பு எடுத்துவிட்டு வீட்டில் இருந்தபடியே தங்களது வேலைகளை கவனித்துக் கொண்டனர்.


இத்தனை நாட்களும் காவ்யா இல்லாத வெறுமை நீங்கிடாமல் அப்படியேதான் இருந்தது. அதை அவர்களாலும் தாங்கிக்கொள்ள முடியாமல் போனாலும் மனதில் நம்பிக்கையுடன் இருந்தனர்.


இன்று! ஏனோ..வீட்டின் வெறுமை மிகவும் மனதை பாதிக்க, பாரம் கூடியதாய் உணர்ந்தனர். ஆகையால், வெளியே சென்றுவரலாம் என்று முடிவெடுத்து வெளியே கிளம்பினர், நால்வரும். வீட்டைவிட்டு வெளியே வந்தவர்கள், கால்போன போக்கில்
நடந்துகொண்டிருக்க, செல்லும் வழியில் ஒரு பூங்கா இருந்ததைப் பார்த்து அங்கே சென்றனர்.


அந்தப் பூங்கா மிகவும் அழகாக அமைக்கப்பட்டிருந்தது. கிளைகள் விரித்து நிழல் தரும் மரங்களும், பலப்பல வண்ணங்கள் கொண்ட அழகியச் செடிகளும் நிறைந்திருந்தன. மரத்தைச் சுற்றி அமரும் திண்டு போன்ற அமைப்புடன் கட்டப்பட்டிருந்தது. பூங்காவின் பாதைகளின் இருபுறத்திலும் அமரும் நாற்காலிகள் போடப்பட்டிருக்க, தோழிகள் நால்வரும் சென்று அமர்ந்தனர்.


பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் அந்தப் பூங்காவை அலங்கரித்திருந்தனர். பெரியவர்கள் நடந்துகொண்டிருக்க, குழந்தைகள் ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தனர். அதை வேடிக்கை பார்த்தவர்களின் மனதிற்கு அது சற்று மகிழ்வைத் தந்தது. சிறிதுநேரம் ரசித்துப் பார்த்தவர்கள், முகம்வாடிய அனுயாவைப் பார்த்து என்னவென்று விசாரித்தனர்.


"காவ்யா நம்மகூட இருக்கும்போது இந்தமாறி ஒருநாள்கூட அவளை வெளிய கூட்டி வந்தது இல்லைல. நமக்கு தோணாமலே போச்சுல்ல..! அவளும் வீட்டுக்குள்ளயே அடஞ்சு
கிடந்து மேலும்மேலும் கஷ்டப்பட்டுருப்பால்ல... அதனாலதான், அவ வேலைக்கு போகக்கூட செஞ்சா. இப்ப நம்மள விட்டும் போயிட்டா.." என்று அனுயா கூறி கண்கலங்கினாள்.


அதைக் கேட்டவர்களும் கண்கலங்கிட, "காவ்யா ஒன்னும் அவளுக்காக மட்டும் வேலைக்கு போகலடி" என்று தன்யா கூறிட, அவளை அதிர்ச்சியுடன் நிமிர்ந்து பார்த்தனர், தோழிகள். தன்யாவும் தலையசைத்து,


"ஆமாடி! அவ வேலைக்கு போக நாமளும்தான் காரணம். நமக்காகவும்தான் அவ வேலைக்குப் போகவே ஒத்துகிட்டா" என்று தன்யா கூறிட,


"ஆனா.., எதுக்குடி? எதுக்காக நமக்காக போகணும்? நம்ம அவள என்னைக்குமே அப்டி போகச் சொன்னதே இல்லையே..!" என்று சரண்யா கேட்டிட,


"அதுக்காக இல்லடி. அவளாலயே வீட்டுக்குள்ளயே அடஞ்சு கிடக்குறத தாங்கிக்க முடியாதபோது நம்மளால எப்டி இப்டி அடஞ்சே கிடக்கமுடியும்னு நினச்சுருக்கா. அதான், மெயில் வந்த அடுத்த நாளே வேலைக்குப் போக ரெடியாயிட்டா. அப்பதானே நாமளும் வேலைக்கு போவோம். அதுக்காகவே நாம போட்ட கண்டிஷன்ஸ் எல்லாத்துக்கும் ஓகே சொல்லி, அவ ஹெல்த்தையும் பாத்துகிட்டு போனா" என்று தன்யா கூறிமுடிக்க, மற்ற மூவரும் கண்கலங்கினர்.


"அவ எதுக்காகடி இப்டி இருந்திருக்கா? அவளோட மோசமான நிலமையிலகூட நமக்காக யோசிச்சிருக்கா.. ஆனா, நாம அவளுக்காக என்ன யோசிச்சோம்? அவகூட இருக்கணும்னு நினச்சோமே தவிர, அவள இந்த நிலமையவிட்டு வெளிய கொண்டுவர எந்த முயற்சியுமே பண்ணலயே...! அவளாவேதான் முடிவெடுத்து பண்ணிருக்கா" என்று சரண்யா கண்கலங்கிக் கூறிட,


"நம்மலாம் ஃபிரண்ட்ஸ்னு இருந்து வேஸ்ட்தான! அவளே அவளுக்காகவும் யோசிச்சு நமக்காகவும் யோசிச்சிருக்கா. ஆனா...நாமதான் எதயும் யோசிக்காம இருந்துருக்கோம். அவள இந்தமாறி வெளிய கூட்டி வரணும்னுகூட
நமக்கு இத்தனநாளா தோணாம போயிடுச்சே..!" என்று என்று கூறி ரம்யா கண்கலங்கினாள்.


"அப்டிலாம் யோசிக்காதீங்கடி. காவ்யாவுக்கு தெரிஞ்சா கஷ்டப்படுவா. இந்த விஷயம்கூட உங்களுக்கு தெரியக்கூடாதுனு தான் சொல்லிருந்தா. நீங்க கஷ்டப்படுவீங்கனு...நான்தான் தெரியாம கவலைல சொல்லிட்டேன்டி.." என்று தன்யா கூறியதைக் கேட்டவர்கள், யோசனையுடன்,


"இது எப்போ டி உனக்கு தெரியும்?" என்று அனுயா கேட்டிட, தன்யா அன்று நடந்தவற்றைக் கூறிமுடித்தாள். அதைக் கேட்டவர்களின் மனம் வருந்தியது. தோழிகளே உறவாய் இத்தனைபேர் இருந்தும் அவள் தனக்குள்ளேயே கவலையை வைத்து வருந்தி இருக்கிறாளே... என்ற எண்ணம் அவர்களை வதைத்தது.


"இங்க பாருங்கடி. ஃபீல் பண்ணாதீங்கடி. நாம அவமேல வச்சுருக்குற அன்பவிட அவ நம்மமேல அதிகமாவே வச்சுருக்கா. சோ! அவளால நம்மள ரொம்ப நாள் பிரிஞ்சு இருக்க முடியாதுடி. நம்மள கஷ்டப்படவும் விடமாட்டா. சீக்கிரமே நம்மகிட்ட வந்துடுவா. எனக்கும் அந்த நம்பிக்கை இருக்குடி" என்று தன்யா கூறி சமாதானம் செய்ய,


"அதுதான் எனக்கும் பயமா இருக்குடி. நம்மள கஷ்டப்படுத்தக்கூடாதுனு தான பிரிஞ்சும் போயிருக்கா...!" என்று சிந்தித்தபடியே அனுயா கூறிட, மற்றவர்கள் அமைதியாகினர்.


"ஆனா, அவளே சொல்லிருக்கால்ல..! வந்துடுவேன்னு. அத நம்புவோம்டி. அவள தேடவும் கூடாதுனு சத்தியம் பண்ணிருக்கா. இப்ப நம்மால முடிஞ்சது அவ நல்லா இருக்கா! திரும்ப வந்திடுவானு நம்புறது மட்டும்தான். வெயிட் பண்ணி பாப்போம்டி" என்று சரண்யா ஆறுதல் கூறினாலும் அனுயாவின் மனம் ஏற்க மறுத்தது.


"வெயிட் பண்ணி பாப்போம்னு ஒரு தடவ அலட்சியமா இருந்ததாலதான் நம்ம காவ்யா இந்த நிலமைக்கு வந்துருக்கா. இதுக்கப்றமும் அத யோசிக்கக்கூட முடியலடி.." என்று தரையை வெறித்தபடியே கூறினாள், அனுயா. அதைக் கேட்டவர்களும் உண்மையை உணர்ந்தவர்கள் கலங்கினர். அதற்குமேலும் அங்கு இருந்திடப் பிடிக்காமல் வீட்டிற்குக் கிளம்பினர்.


எத்தனைமுறை ஏதேதோ சொல்லி தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டாலும் காவ்யாவை எண்ணி கவலைகொள்ளும் மனதை சமாதானம் செய்யும் வழி தெரியவில்லை. அவளை காண்பது ஒன்றே இதற்கு வழியென மட்டும் அவர்கள் மூளை சொல்லியது. ஆனால், அதற்கான வழிகள் ஏதும் அறியாமல் தவித்தனர்.


இரவுநேரம், பால்கனியில் வானத்தை வெறித்துக்கொண்டு நின்ற காவ்யாவின் மனதில் அவளது தோழிகளே நிறைந்திருந்தனர். அவர்களைப் பார்க்காமல் இவளும் கவலையில் வாடினாலும், இவளின் த‌ற்போதைய நிலைபற்றி அறிந்தால் இன்னும் அவர்கள் உடைந்துபோக நேரிடும் என்பதலாயே கடினப்பட்டு பேசாமல் இருந்தாள். ஆனால், இப்போது அவர்களை மிகவும் தேடிட, அவளுக்கும் ஒரு உண்மை உரைத்தது.


'நம்மளால அவங்கள பிரிஞ்சு இருக்க முடியாத மாறிதான அவங்களும் என்னய தேடுவாங்க? என்னயபத்தி நான் என்னதான் நான் நல்லா இருக்கேனு சொல்லிருந்தாலும்...அவங்க முழுசா நம்பிருக்க மாட்டாங்க. அதனால இன்னும் கவலப்பட்டுட்டுதான் இருப்பாங்க. அவங்க சந்தோசமா இருக்கணும்னுதான அப்டி சொன்னேன். அதுவே கவலைய ஆகிடக்கூடாதே..இப்ப என்ன பண்றது...?' என்று சிறிதுநேரம் சிந்தித்தவள், ஒரு முடிவெடுத்தவளாய், மணியைப் பார்த்துவிட்டு, அறையை சாத்திவிட்டு வந்தாள்.


தனது அலைபேசியை எடுத்தவள், அதில் தான் வாங்கி வைத்திருந்த புதிய சிம் கார்டை போட்டு அனுயாவிற்கு அழைப்புவிடுத்தாள். இங்கே, சோகத்தில் அமர்ந்திருந்த தோழிகள் அலைபேசி அலறும் சத்தம் கேட்கவும் சென்று அதை எடுத்துப் பார்த்திட, "ப்ரைவேட் நம்பர்" என்று வருவதைப் பார்த்த அனுயா குழப்பத்துடன் அதை எடுத்துப் பேசினாள்.


"ஹலோ..!" என்று அனுயா குரல்கொடுக்க, மறுமுனையில் அமைதி நிலவியது. காவ்யா இவளின் குரலை கேட்டதும் கண்கலங்கிவிட, பேச்சு வராமல் மௌனமானாள்.


நீண்டநேரம் மௌனமாய் இருந்ததை பார்த்து சந்தேகித்தவள், "கா..வ்யா..!!" என்று அனுயா கண்கலங்கிக் கூறிட, மற்ற தோழிகளும் இவளை திரும்பிப் பார்த்தனர்.


"அனு..!! எப்ப..டி..டி இருக்..க..?" என்று தேம்பியவாறே கூறிட,


"நீ எங்களவிட்டு போனதுக்கப்றம் நாங்க எப்டி இருப்போம்னு உனக்குத் தெரியாதா?" என்று கூறியவளின் வார்த்தையில் தெரிந்த சோகமும் விரக்தியும் காவ்யாவை வாட்டியது.


இவர்கள் பேசியதைக் கேட்டு மற்ற மூவரும் அருகில் வந்து அனுயாவை கேள்வியாய் நோக்கிட, அவளும் கண்களால் ஆம்! என்று சொல்லியதைக் கண்டு முகம் மலர்ந்தனர். அலைபேசியை லௌட் ஸ்பீக்கரில் போட்டுவிட்டாள், அனுயா.


"ஏன்டி இப்டி சொல்ற..? நீங்க சந்தோசமா இருக்கணும்னுதான நான் சொன்னேன். எதுக்காக என்னய நினச்சு கஷ்டப்படுறீங்கடி? நான்தான் நல்லா இருக்கேன்னு சொன்னேன்ல..!" என்று வருந்திக் கூறிட,


"நீ சந்தோசமா இருக்கனு சொன்னா நாங்க நம்பணுமா? எங்க சந்தோசத்துக்காக எங்களவிட்டு போன நீ..நல்லா இருக்கேனு பொய் சொல்லமாட்டியா?" என்று சரண்யா கூறியதை கேட்ட காவ்யா ஒருநொடி விக்கித்துப்போனாள். மறுநொடி, தன்னை சமன்செய்தவள்,


"நான்தான் சொன்னேன்ல...! உங்க சந்தோசத்துக்காக ஒன்னும் நான் வரலனு.. நான் எனக்காகத்தான் இந்த முடிவ எடுத்துருக்கேன்டி. இது ஒரு மாற்றத்துக்காகதான்..நிரந்தரம் இல்ல! அப்றம் எதுக்காக கஷ்டப்படுறீங்க?" என்று முதலில் சற்று கோபமாகத் தொடங்கியவள், வருத்தத்துடன் முடித்தாள்.


"சரி!! நீ உனக்காகதான் இந்த முடிவு எடுத்துருக்க. எங்களுக்காக இல்ல. அப்றம், எதுக்கு எங்களுக்கு ஃபோன் பண்ணி இப்டி பேசிட்டு இருக்க? நாங்க என்ன ஆனா என்னனு நீ உன் லைஃப பாக்க வேண்டியதான? எதுக்கு ஃபோன் பண்ணி சமாதானம் செய்ற?" என்று அனுயா கேட்டிட, அதிர்ந்த காவ்யா,


"அது எப்டிடி? நீங்க இப்டி கவலப்படும்போது என்னால நிம்மதியா இருக்கமுடியும்? அதுவும் என்னய நினச்சு கஷ்டப்படுவீங்கன்னு நினைக்கும்போதெல்லாம் எனக்கு வலிக்குதுடி...உங்களுக்கு நான் கஷ்டத்த மட்டும்தான் கொடுக்குறேனோனு தோணுது.. அதுதான் உண்மையும்கூட..!" என்று காவ்யா வருந்திக் கூறுவதைக் கேட்டு,


"இன்னொரு தடவ அப்டி சொன்ன...தேடிவந்து அடிப்பேன்டி காவி! நீ என்ன நினச்சுட்டு இருக்க? எங்களபத்தி நீ கவலப்படலாம். நாங்க உன்னய நினச்சு கவலப்படக்கூடாதா? இன்னும் ஏன்டி நீ இப்டியே நினைக்குற..? லூசு!" என்று ரம்யா கோபமாய்க் கூறிட,


"நம்மலாம் ஃபிரண்ட்ஸ்னு தாண்டி ஒரு ஃபேமிலியா இருக்கோம்டி. நீ எதுக்கு பிரிச்சு பாக்குற? கவலைய மறைக்கிற? அதோட உன்னால எங்களுக்கு எப்பவுமே கஷ்டம் கிடையாது. நீ எங்களவிட்டு போனதுதான் கஷ்டமா இருக்கு. நீ இல்லாம நம்ம வீடே வெறுமையா தெரியுதுடி. தெரியுமா?" என்று தன்யா கூறிட, காவ்யா வருந்தினாள்.


"சாரிடி! இது வேணும்னே பண்ணதில்ல. நம்ம எவ்ளோ தூரத்துல இருந்தாலும் நம்ம மனசளவுல பக்கத்துலதான்டி இருப்போம். அதுல எந்தப் பிரிவுமே இருக்காதுடி" என்று காவ்யா கூறியதைக் கேட்டவர்கள், இவர்கள் அன்று கூறிய அதே வார்த்தைகளை இவளும் கூறுவதைக் கேட்டு வியப்பில் கண்ணீர் சிந்தினர்.


"சீக்கிரம் நம்ம கஷ்டகாலம் நீங்கி நாம சந்திப்போம்னு நம்புறேன். நீங்களும் அதே நம்பிக்கையோட இருங்கடி. ஆனா, கொஞ்சம் சந்தோசமா இருங்கடி" என்று பேசிக் கொண்டிருக்கும்போதே அறைக்கதவு திறக்கும் சத்தம் கேட்டுத் திரும்பினாள்.





ராணாவின் நண்பர்களை காவ்யா தவறாக நினைப்பதை எப்போது அறிவாள்?? கதவை திறந்தது யார்??





❤வருவாள்❤...
 
அவள் 17


"சீக்கிரம் நம்ம கஷ்டகாலம் நீங்கி நாம சந்திப்போம்னு நம்புறேன். நீங்களும் அதே நம்பிக்கையோட இருங்கடி. ஆனா, கொஞ்சம் சந்தோசமா இருங்கடி.." என்று பேசிக் கொண்டிருக்கும்போதே அறைக் கதவை திறந்துகொண்டு கமலாம்மா வந்திட, அவரை பார்த்தவள்,


"இப்ப என்ன? நான் பத்திரமா இருக்கேனா? நல்லா இருக்கேனானு தான உங்களுக்குத் தெரியணும்? என்கூட கமலாம்மானு ஒரு அம்மா இருக்காங்கடி. அவங்க என்னய அவங்க பொண்ணுமாறி பாத்துக்குறாங்க. எனக்கும் அவங்க என்னய பாத்துக்குறத பாக்கும்போதெல்லாம் நீங்கதான் தெரிவீங்கடி" என்று கூறிட, அதை கேட்டவர்கள் வியந்தனர்.


"நீங்க நம்பலைனா அவங்ககிட்டயே கொடுக்குறேன். பேசுங்க" என்று கூறியவள், அருகில் நின்று பார்த்திருந்த கமலாம்மாவை அழைத்து, "அம்மா! என் ஃப்ரண்ட்ஸ்மா. நான் நல்லா இருக்கேனான்னு அவங்களுக்கு சந்தேகம். அதான், நீங்க என்னய எப்டி பாத்துக்கிறீங்கனு சொல்லுங்கம்மா" என்று கூறியவள், அலைபேசியை மூடியபடி,


"அம்மா! எனக்கு கல்யாணம் ஆனது, இங்க இருக்கிறேங்கிறதுலாம் சொல்லாதீங்கம்மா" என்று கூறிவிட்டு அலைபேசியை கொடுத்தாள். அவரும் குழம்பியபடியே வாங்கியவர், காதில் வைத்து, "ஹலோ!" என்றார்.
அவர் குரலை கேட்டவர்களுக்கு ஏதோ ஒரு நிம்மதி பரவியது. அவள் தனியாக இல்லை என்ற எண்ணத்தினால்.


"ஹலோ! அம்மா..! காவ்யா உண்மையத்தான் சொல்றாளாம்மா? அவ எங்களுக்காக எந்த பொய் வேணாலும் சொல்வாம்மா. நீங்களாச்சும் உண்மைய சொல்லுங்கம்மா. ப்லீஸ்...! அவ நல்லா இருக்காளா?" என்று சரண்யா கெஞ்சி கேட்டதை பார்த்து வருந்தியவர், காவ்யாவை பார்த்திட, அவள் கண்கலங்கியபடி இவருக்கு வேணாம்... என்று தலையசைத்தாள்.


அதை கண்டவர், "ஆமாம்மா! அவ இங்க ரொம்ப நல்லா இருக்கா. முதல்ல ஏதோ பறிகொடுத்தமாறி தான் இருந்தாமா. ஆனா, போகப்போக கொஞ்ச கொஞ்சமா மாறிட்டு வர்றா. சாப்பிட வைக்கிறதுலாம் நான் பாத்துப்பேன்மா. நான் எதுக்கு இருக்கேன். மனசும் சீக்கிரம் சரியாயிடும். கவலப்படாதீங்கம்மா..." என்று சமாளித்துக் கூறிட, அவர்களுக்கும் அது நிம்மதியளித்தது.


"அம்மா! நீங்க எப்டிமா அவளுக்கு பழக்கம்? எங்க இருக்கீங்க?" என்று அனுயா நாசுக்காகக் கேள்வி கேட்டிட, சுதாரித்துக்கொண்ட காவ்யா, அலைபேசியை வாங்கி,


"எதுக்கு? என்னய தேடி வர்ரதுக்கா? நான் நல்லாதான் இருக்கேன்னு சொன்னேன். நம்பமாட்றீங்க. அதான், இவங்ககிட்ட கொடுத்து பேச சொன்னேன். நீங்க போட்டு வாங்கிறீங்களாடி? ஃப்ராடுகளா!" என்று கூறி கேலி செய்ய,


"அதான் கண்டுபிடிச்சுட்டியேடி! உன்னய யாரும் ஏமாத்தமுடியுமா? நீதான் எங்களுக்குமேல ஃப்ராடாச்சே..!" என்று சரண்யா பதிலுக்கு கிண்டல் செய்து சிரிக்க, நீண்டநாட்களுக்குப் பிறகு, சிறிய சிரிப்பலை பரவியது. ஆனால், அவள் கூறயதை கேட்ட காவ்யா, உண்மை உரைக்க, 'அதான் ஏமாந்துட்டேனே...! என் வாழ்க்கையவே இழந்துட்டு நிக்கிறேனே..எவனோ ஒருத்தன்கிட்ட!' என்று எண்ணியவாறு மௌனமாய் நின்றாள்.


காவ்யா மௌனமாய் இருப்பதை உணர்ந்தவர்கள், "என்னடி ஆச்சு? எதுக்கு சைலண்ட் ஆயிட்ட? நான் கிண்டல் பண்ணதுக்காடி? சாரிடி! சும்மா விளையாட்டுக்கு பண்ணேன்டி..தௌசண்ட் டைம்ஸ் சாரிடி...!" என்று சரண்யா கெஞ்சிட, அப்போதும் மௌனமே பதிலாய் வர,


"காவிம்மா! சாரிடி! நான் வேணா தோப்புக்கரணம் போடுறேன்டி. நூறு தடவ" என்று கூறி, தோப்புக்கரணம் போடுவதை பார்த்து தோழிகள் மூவரும் புன்னகைக்க, காவ்யாவும் அவள் நிஜமாகவே செய்கிறாள் என்பதை அறிந்ததும் சிரித்துவிட்டாள். அவள் சிரிப்பு சத்தத்தை கேட்டு நிம்மதி அடைந்திட,


"அடியே! சரு..! நிஜமாவே போடுறியா? ஹாஹா...நல்லா போடு..ரம்மி! அவ நூறு தடவ போட்டு முடிக்கிறாளான்னு பாருடி" என்று கேலியாகக் கூறிட,


"சரிடி செல்லக்குட்டி! நூறு முடிக்காம இவள விடப்போறதில்ல" என்று ரம்யாவும் உற்சாகமாகக் கூறிட, சரண்யா பாவமாக அவளை பார்த்தாள். அதைப் பார்த்து அனைவரும் சிரித்திட, அதைக் கேட்ட காவ்யாவுக்கும் நிம்மதியாய் இருந்தது.


"உனக்காக நான் போடுறேன் காவிமா! நூறு என்ன ஆயிரம் தடவகூட போடுவேன்" என்று வீரவசனம் பேசுவதை கேட்டவள்,


"அடியே...சரு! உன் பாசம் எனக்கு புல்லரிக்குதுடி! ஆனா, நீ பாட்டுக்கு போட்டுத் தொலைக்காத. அப்றம், பெண்டு கலண்டுரும். ஆனா, இனி இந்த காவ்யாவ கலாய்க்கிறதுக்கு முன்னாடி இந்த பயம் வரணும். புரியுதா?" என்று கெத்தாகக் கூறிட,


"சரிங்க மகாராணி! இனிமே இப்டி ஒரு பிழை நேராமல் பார்த்துக்கொள்கிறேன்.." என்று பணிவாக சரண்யா கூறியதை கேட்டு காவ்யா சிரித்துவிட்டாள். நீண்ட நாட்களுக்குப் பின், காவ்யா சிரிப்பதை கேட்ட தோழிகளுக்கு மிகவும் நிம்மதியாக இருந்தது. அதைவிட, அவள் பழையபடி பேசியதுதான் அவர்களுக்கு ஆனந்தமாக இருந்தது. அது பொய்யல்ல என்பதையும் அவர்களால் உணர முடிந்தது. அவர்களுடன் இருந்ததைவிட இப்போது தெரியும் மாற்றம் அவர்களுக்கு நம்பிக்கையை அளித்தது.


காவ்யாவிற்குமே தனது மாற்றம் ஆச்சரியமாகத்தான் இருந்தது. கமலாம்மாவும் இவள் வாய்விட்டு சிரிப்பதை இன்றுதான் பார்க்கிறார். 'சிரிக்கும்போது இன்னும் எவ்வளவு அழகாக இருக்கிறாள்! இவளை அழவைக்க தோன்றுமா யாருக்கும்? அந்தக் கடவுளும் இதை நினைக்கமாட்டாரா? இனியாவது சந்தோசத்தை தரவேண்டும் இவள் வாழ்வில்..! எந்த கவலையாக இருந்தாலும் சீக்கிரமே அது நீங்கிடவேண்டும்..' என்று மனதார வேண்டிக்கொண்டார், கமலாம்மா.


தோழிகள் ஐவரும் பேசியபின், காவ்யா அவர்களிடம், "நான் முன்னாடியே சொன்னதுதான்டி. இப்ப என்னால உங்ககிட்ட வரமுடியாது. நீங்களும் வரவேணாம். என்னயபத்தி எதையும் தெரிஞ்சுக்க நினைக்காதீங்க. இது என்மேல சத்தியமா சொல்றேன்டி. அப்றம், என்னால உங்க லைஃப் எந்த வகையிலயும் தடைபடக்கூடாதுடி. நீங்க என்னயபத்தி கவலப்படாம உங்க லைஃப பாருங்க. நானும் இங்க நல்லாதான் இருக்கேன். அப்றம், ஒருநாள் நான் வரும்போது எனக்காக நீங்க எதயும் தவறவிட்டீங்கனு இருந்தது தெரிஞ்சா...நான் செத்ததுக்கு சமம்" என்று கூறிக்கொண்டிருக்க, மற்றவர்கள் பதறினர்.


"ஏன்டி இப்டிலாம் பேசுற?" என்று கவலைப்பட்டுக்கொள்ள, அதை உதாசீனம் செய்தவள்,


"அப்டி நான் நினைக்கிறதும் நினைக்காததும் உங்க கைலதான்டி இருக்குது. என்னய பிரிஞ்சு இருக்கீங்கனுலாம் கவலப்படாதீங்கடி. வேல விசயமா வெளிய போய்ட்டமாறி நினச்சுக்கங்க. என்ன! இது கொஞ்சம் லாங் கேப்பா இருக்கும். எனக்கும் அது எவ்ளோ கஷ்டம்னு உங்களுக்கும் தெரியும்ல. ஆனா, இது எனக்கு இப்ப தேவையான ஒன்னுதான். சோ! புரிஞ்சுகிட்டு நல்லபடியா இருங்கடி.." என்று ஏதேதோ கூறி அவர்களுக்கு சமாதானம் கூறி அவர்களை சம்மதிக்கவும் வைத்தாள்.


"சரிடி! உனக்காக..உன்னோட சந்தோசத்துக்காக இதுக்கு நாங்க சம்மதிக்கிறோம்டி. எங்களுக்கும் உனக்கும் கஷ்டமான இந்த காலத்தை கடந்துட்டா நீ எங்ககிட்ட பழையமாறி கிடைப்பனு இப்ப நம்பிக்கை வந்துருச்சு. அந்த நம்பிக்கையோடயே நாங்க காத்துட்டு இருப்போம்டி" என்று அனுயா கூறிமுடிக்க,


"ஆமாடி! கண்டிப்பா உன்னய கஷ்டப்படுத்தற மாறி எதுவும் ஆகிடாது. நாங்களும் அப்டி பண்ணமாட்டோம்டி. வி வில் பி வெய்ட்டிங் ஃபார் யூ டி.." என்று தன்யாவும் கூறிட,


"நாங்க உனக்காகவாச்சும் சந்தோசமா இருக்க ட்ரை பண்ணுவோம்டி. நீயும் அங்க எங்களுக்காக சந்தோசமா இருக்கணும்டி. உன்னய நீ மாத்திக்க முயற்சி பண்ணணும். ஓகேவா? லவ் யூ டி!" என்று சரண்யா கூறிட,


"காவி! ஐ வில் மிஸ் யூ பேட்லி டி.. நீ வர வரைக்கும் காத்துட்டு இருப்போம். போன்ல ஹக் பண்ணமுடியலடி. அதனால இந்தா! உம்மாஆஆ..!!" என்று ரம்யா கூறி முத்தமிட, காவ்யாவின் கண்களில் கண்ணீர் ஊற்றாகியது. அவளும் பதிலுக்கு,


"ரம்மி! தனு! சரு! அனு! நானும் உங்கள ரொம்ப மிஸ் பண்ணுவேன்டி! லவ் யூ டு தி கோர்! உம்மாஆஆஆ..!!" என்று கூறி முத்தமிட, ஐவரின் கண்களும் குளமாகின. "சரிங்கடி! பாய்!" என்று கூறி அலைபேசியை அணைத்தவள், அமர்ந்து அழுது தீர்த்தாள். அவளருகில் வந்த கமலாம்மா ஆறுதலாக அவளை அணைத்திட, இவளும் அவரை அணைத்தபடி சிறிதுநேரம் அழுதாள்.


அடுத்து அணைப்பிலிருந்து விலகிய கமலாம்மா கண்களை துடைத்துவிட்டு அவளுக்கு உணவு ஊட்ட வர அவள் அதை மறுத்தாள். அதைக் கண்டவர்,


"கவலையோ! கோபமோ! எதயும் சாப்பாட்டுல காட்டக்கூடாதும்மா. அதுவும் இந்தமாறி சமயத்துல.. இப்பதான் நல்லா சாப்டணும். உன் ஃப்ரண்ட்ஸ்கூட இதத்தான சொன்னாங்க? அதோட, அவங்ககிட்ட நான் உன்னய நல்லா பாத்துக்கறேனு சொல்லிருக்கேன். அத காப்பாத்த வேணாமா? அதுக்காகவாச்சும் நீ சாப்டுதான் ஆகணும் பாத்துக்க. ஆமா..!" என்று அக்கறையாய் ஆரம்பித்தவர், விளையாட்டாகக் கூறி முடித்திட, காவ்யாவின் இதழும் சிறிது விரிந்தது. அப்படியே அவளை சமாதானப்படுத்தி ஊட்டிவிட்டு மருந்து கொடுத்தார்.


கமலாம்மா கீழே சென்றுவிட, சாப்பிட்டு முடித்தவள் எழுந்து சிறிதுநேரம் பால்கனியில் நின்றுவிட்டு வந்தவள், கமலாம்மாவும் வந்துவிட அவர் மடியில் தலைவைத்து படுத்துக்கொண்டாள். அவரும் ஆதரவாக தலைகோத அப்படியே கண்ணயர்ந்தாள்.


இரவு எப்போதும்போல உணவருந்திவிட்டு தன்னறைக்குச் செல்லுமுன் காவ்யாவின் அறைக்கு வந்து உறங்கும் அவளை பார்த்து கமலாம்மாவிடம் விசாரித்துவிட்டுச் செல்வது ராணாவின் வழக்கமாகிப் போனது. அதைப்போல் இன்றும் வந்தவன், கமலாம்மாவின் மடியில் அவள் தூங்குவதை பார்த்துவிட்டு
நிற்க, இவனை பார்த்து அவரும் எழமுடியாமல் அவள் தலையை நகர்த்தி வைக்கப்போக, அதை கையசைத்துத் தடுத்தவன்,


"எழவேணாம் கமலாம்மா! உக்காருங்க. சாப்ட்டாளா?" என்று கூறி விசாரித்திட, "சாப்டாங்கய்யா" என்று அவரும் பதிலளித்தார். அதைக் கேட்டவனும்,


"பரவால்ல கமலாம்மா! நீங்க எப்போதும் அவள கூப்டுற மாறியே பேசுங்க. எனக்கு எல்லாம் தெரியும். நான் எதுவும் சொல்லமாட்டேன்" என்று அமைதியாகக் கூறிட, அவர் லேசாக அதிர்ந்தார்.


"அது..வந்து..ஐயா..! நான் எவ்ளவோ சொன்னேங்கய்யா.. அவங்க..தான் அப்டி... கூப்ட... சொன்..னாங்க..ய்யா!" என்று தயங்கியபடி கூறிட, ராணாவும் சிறிதாகப் புன்னகைத்தவன்,


"இப்ப நான் எதுவுமே சொல்லலயே கமலாம்மா! நீங்க எனக்காக ஒன்னும் மாத்திக்க வேணாம்னுதான் சொன்னேன். வேற ஒன்னும் இல்ல. என்னயவே நீங்க ஐயான்னு கூப்டுறது பிடிக்கலதான். ரொம்ப ஓல்ட் பேஷன் டா இருக்கு. இருந்தாலும் அத இதுவர கண்டுக்கல. ஆனா, இனிமே என்னயும் அப்டிலாம் கூப்ட வேணாம். ஓகேவா?" என்று சொல்லியதை
கேட்டவரால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை.


"அது..சரி வராதுங்கய்யா..இப்டியே கூப்டு..றேன்.." என்று கூறியதை கேட்டவன்,


"நான் சொன்னத நீங்க கேக்கணுமா? இல்ல நீங்க சொன்னத நான் கேக்கணுமா?" என்று சற்று கடுமையாகக் கேட்டிட, பயந்துபோனவர்,


"நீங்க சொன்னததான் நான் கேக்கணும்ங்க ஐயா!" என்று தலைகவிழ்ந்து கூறிட, அதைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்தவன்,


"அப்போ! இனி ஐயானு கூப்டாதீங்க. ஓகேவா?" என்று கூறிட, தலையசைத்தவர்,


"அப்போ...தம்பினு... கூப்டலாமாங்க.. ஐயா..?" என்று தயங்கியபடியே கேட்டு அவன் முகத்தை பார்த்திட, அவனும் முதலில் புருவம் சுருக்கியவன், பின் முகம் மலர்ந்து,


"இது நல்லாருக்கே! அப்ப இப்டியே கூப்டுங்க. ஓகே கமலாம்மா! படுத்துக்கோங்க. குட்நைட்" என்று கூறி அவன் சென்றுவிட, அவன் போனபின்னும் அவர் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.


இத்தனை வருடங்கள் இல்லாத ஏதோ ஒரு மாற்றம் அவனுள் இன்று தெரிந்ததை கண்டு ஒருபக்கம் அதிர்ச்சியிலும் மறுபக்கம் குழப்பத்திலும் இருந்தார். ஆனால், அவன் பேச்சில் தெரிந்த மாற்றம் பெரிய சந்தோசத்தையும் அவருக்கு அளித்தது. அவரும் அதை நினைத்தவாறு தூங்கிவிட்டார்.


சில தினங்கள் கழிந்தது...


ஒருநாள் ராணா வீட்டிற்குள் வந்ததும் காவ்யாவை அழைத்தான். அவளும் வரவே, ராணா அவளருகில் நெருங்கி வருவதை பார்த்து உள்ளுக்குள் பயம் எழ, பின்னே நகர்ந்தாள். அவள் பயப்படுவதை பார்த்தவன்,


"இப்ப எதுக்கு பயப்படுற? உன்னய நான் ஒன்னும் செஞ்சிட மாட்டேன். அப்டியே செஞ்சாலும் நான் உன் ஷஸ்பண்ட் தான? அதுல என்ன உனக்கு பயம்?" என்று கடுப்பாகிப் பேசியவன், அடுத்தநொடி அவள் பயந்த முகத்தை பார்த்தவன், தன்னை சமன்செய்துகொண்டு,


"ரிலாக்ஸ்..! உன் கண்ண கட்டுறதுக்குத்தான் பக்கத்துல வந்தேன். பயப்படாத! ஒன்னும் இல்ல. ஒரு சர்ப்ரைஸ்!" என்று பொறுமையாகக் கூறி கண்களை துணியால் கட்ட வர, முதலில் மிரண்டவள், பின் அவன் சொன்னதில் எந்த தவறான எண்ணமும் இல்லை என்பதை உணர்ந்தும் பாதி பயத்தினாலும் கண்கட்ட ஒப்புக்கொண்டாள்.


காவ்யாவின் கண்களை கட்டியவன் அவளை மெல்லமெல்ல நடத்திச் சென்று மெதுவாக படிகளில் இறங்கினான். அவளும் ஒன்றும் புரியாமல் நடந்துசென்றாள்.


'இந்த வீட்ல மாடிபடிக்கு ஏறுவோம்... ஆனா, நாம ஏற்கனவே ஹால்லதான இருந்தோம்! இப்ப எங்க படி இறங்கிப் போறோம்...? இந்த வீட்ல அப்ப க்ரவுண்ட் ஃப்ளோர் வேற இருக்கா?இந்த வீடும் இவன மாறியே மர்மமாவும் பயமாவும்தான் இருக்கு. எங்க கூட்டிட்டு போறான்னே தெரியலயே..!' என்று தனக்குள் எண்ணியபடியே அவனுடன் நடந்து சென்றாள்.


இறங்கிச் சென்றவன் நடந்து ஓர் அறைக்குள் நுழைந்தான். அந்த அறை அவன் வீட்டின் அடிதளத்தில் இருந்தது. வீடு மேடாக அமைக்கப்பட்டிருந்ததால் இந்த அறை தரைத்தளமாக இருப்பதுபோல அமைக்கப்பட்டிருந்தது.


அந்த அறையில் நுழைந்ததும் இவள் கண்கட்டை அவிழ்த்துவிட்டான். கண்களை திறந்தவள்முன் அவள் டிசைனிங் வேலைக்காகத் தேவைப்படும் அனைத்து ஏற்பாடுகளும் அந்த அறையை நிறைத்திருந்தது.


அறையின் ஒரு ஓரத்தில் பெரிய மேசையும் நாற்காலியும் அமைந்திருக்க, அதனருகில் ஒரு பொம்மை அழகிய ஆடையுடன் நிறுத்தப்பட்டிருந்தது. அறையின் சுவர்களில் வண்ண வண்ண ஓவியங்கள் மாட்டப்பட்டிருந்தது. இன்னொரு ஓரத்தில் நிறையவகைத் துணிகள் மாட்டப்பட்டிருந்த கபோர்ட் இருந்தது. அந்த அறை இன்னும் பலவற்றால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதைக் கண்டவளின் மனம் தன்னிலை மறந்து குதித்தது.


தனது பேசன் டிசைனிங் கலையை தன் மூச்சைப் போல சுவாசிப்பவள், காவ்யா. அதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள் என்றால் தன்னையே மறந்துவிடுவாள். இந்தக் காரணத்தாலேயே அவள் வேலைக்குச் சென்ற சில தினங்கள் நிம்மதியாக இருந்தாள். இப்போதும் அவள் மனமாற்றம் இதில் ஏற்படலாம் என்றெண்ணியே ராணாவும் இந்த ஏற்பாட்டை செய்திருந்தான். அவள் முகத்தில் தெரிந்த சந்தோசம் அவன் எண்ணம் சரியென உறுதிபடுத்தியது.


காவ்யா அறை முழுவதும் மெதுவாகப் பார்த்துக்கொண்டிருக்க, "இந்த ரூம் உனக்காகத்தான். இனி இங்கயே கூட தங்கிக்க. உன்னோட டிசைனிங்க கண்டினியூ பண்ணிக்க இந்த ரூம் யூஸ் ஆகும்" என்று ராணா சொல்லிக்கொண்டிருப்பதை கேட்டவளுக்கும் சிறு நிம்மதி ஏற்பட்டது.


அவ்வாறே அறையை பார்க்க, அப்போதே அந்த அறையில் ஒரு படுக்கை இருப்பதை பார்த்தாள். அதைப் பார்த்தவளுக்கு ஏதோ தோன்றிட, சுற்றிப் பார்த்தவள் அந்த அறையின் கண்ணாடிச் சுவரை பார்த்தாள். அதன்பின்தான் உணர்ந்தாள், அந்த அறை அவள் ஏற்கனவே கடத்தப்பட்டு வைத்திருந்த அறை என்பதை.


உண்மையை அறிந்தவள் அறையை சுற்றிப் பார்த்திட, இப்போது அந்த அறை முழுவதும் அவளுக்கு சூனியமாய் காட்சியளித்தது. இந்த அறையில் அவளுக்கு ஏற்பட்ட துன்பங்களும் நரகவேதனையும் அவள் அங்கிருந்து தப்பிச்செல்ல பட்ட பாடுமே அவள் கண்முன் படமாய் ஓடிட, அவளால் தாங்கிட இயலாமல், "இல்ல.....!!!!" என்று கண்களையும் காதுகளையும் மூடிக்கொண்டு கத்தினாள்.


காவ்யா திடீரென கத்துவதை பார்த்து அதிர்ந்தவன், அவளருகில் வந்து தோள்தொட்டுத் திருப்பி, "என்னாச்சு?" என்று சற்று குழப்பத்துடனே மெல்ல கேட்டிட, அவனை நிமிர்ந்து பார்த்தவள், இன்னும் பயந்துபோய் பின்னே சென்றாள்.


தான் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல், பயத்தின்பிடியில் சிக்கியவள் கத்திக்கொண்டே பின்னே சென்று கண்ணாடிச் சுவரில் மோதி நிற்க, அதை குழப்பத்துடனும் அவள் கற்பத்தை எண்ணி பயத்திலும் ராணா பார்த்துக்கொண்டிருந்தான். அவனிடம் வந்தவள்,


"ப்ளீஸ்..!! என்னய ஒன்னும் பண்ணிடாத. விட்டுடு...உன்னய கெஞ்சி கேட்டுக்குறேன். என்னய ஒன்னும் பண்ணிடாத...ப்..ளீ...ஸ்..!!" என்று பிதற்றியவள், அப்படியே மயங்கி கீழே விழப்போக, அவளை கைகளால் தாங்கினான். அவளை தாங்கியவன் அப்படியே தூக்கிச் சென்று அங்கிருந்த படுக்கையில் படுக்கவைத்தான்.


காவ்யாவின் பிதற்றலையும் அவள் பதற்றத்தையும் பார்த்த ராணாவுக்கு அதன் காரணம் நன்றாகப் புரிந்தது. அவளின் பயமும் தெளிவாகத் தெரிந்தது. அவள் இவனால் எந்தளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்பதை நன்கு அறிந்துகொண்டான். காவ்யாவை முதலில் பார்க்கும்போது அவளிடம் இருந்த துணிச்சல், கம்பீரம், கோபம் என எதுவும் இப்போது அவளிடம் இல்லாததை இப்போதுதான் சிந்தித்துப் பார்த்தான்.


ராணா நினைத்ததை போலவே காவ்யாவின் திமிரை அடக்கிவிட்டதாக அவன் மூளை கூறினாலும் அவளின் இந்த மாற்றம் இவன் மனதை பிசைந்தது. தான் தவறு செய்துவிட்டதாய் முதன்முதலாக அவனுக்கு உறுத்தியது. இதுவரை அவன் செய்த எந்த காரியமும் இப்படி தோன்றச் செய்ததில்லை. காரணம், அவன் இதுவரை நல்ல மனிதர்களை தண்டித்ததில்லை. திமிரு பிடித்தவர்களையும் ஆனவத்தில் ஆடுபவர்களையுமே அடக்கியிருக்கிறான்.


இவன் வாழ்க்கையில் செய்த முதல் பெரிய அநியாயம் என்றால் அது காவ்யாவுக்கு இளைத்ததே ஆகும். அதையும் இன்றுவரை அவன் தவறாக நினைத்ததில்லை. அதற்குக் காரணமும் அவன் கோபக் குணம் தான். ஆனால், இன்று காவ்யா இந்தளவுக்கு பயந்துபோய் பாதிக்கப்பட்டிருப்பதை பார்க்கும்போதுதான் அவன் மனதிற்கு சற்று நெருடலாக இருந்தது.


ஏற்கனவே, அன்று இருட்டை பார்த்து அவள் அலறியது, தூக்கத்தில் புலம்பியது, இவனை பார்த்துப் பதறியது, மன அழுத்தத்தால் மயங்கியது, மருத்துவர் கூறியது என அனைத்தையும் ஒன்றாக எண்ணிப் பார்த்தவனுக்கு எல்லாம் புரிந்துவிட, ஒரு முடிவுக்கு வந்தான்.



ராணா அறையில் உள்ள இண்டர்காம் வழியாக கமலாம்மாவை அழைத்திட, அவரும் இவன் சொன்னதையெல்லாம் எடுத்துக்கொண்டு வந்தார். அறையை தட்டிவிட்டு உள்ளே வர, ராணா காவ்யாவின் அருகில் அமர்ந்திருந்தான். அவனருகில் வந்தவர், அவனை அழைத்திட, அவன் சொன்ன இடத்தில் எடுத்து வந்த மருந்துகளையும் தண்ணீரையும் வைத்தார்.


ராணாவுக்கு அலைப்பேசியில் அழைப்பு வர, படுக்கையில் இருந்து எழுந்தவன், "கமலாம்மா! இவள பாத்துக்கங்க. இப்ப வந்துடுறேன். அதுக்குள்ள மயக்கம் தெளிஞ்சிடுச்சுன்னா கொண்டுவந்த மருந்த கொடுங்க" என்று சொல்லிவிட்டு வெளியேறினான். கமலாம்மாவும் அமைதியாக காவ்யாவின் அருகில் அமர்ந்தவர் மெல்ல அவள் தலையை வருடிக் கொடுத்தார்.


சிறிதுநேரம் கழித்து, காவ்யா மெல்லமெல்ல மயக்கம் தெளிந்து கண்களை திறந்தாள். கண்திறந்து பார்த்தவள் தான் இருக்கும் இடத்தை கண்களால் ஆராய்ந்தவள் பயம் தொற்ற எழுந்தமர்ந்தாள். அவளை ஆசுவாசப்படுத்த கமலாம்மா அருகில் வர, அவரை கண்ட பின்னே சற்று அமைதியானாள். அவளுக்கு தண்ணீர் கொடுத்து பருக வைத்து மருந்தையும் கொடுத்தார். அதை மறுக்காமல் வாங்கி உண்டவள், அந்த அறையின் நினைவுகள் இவளை பதற செய்திட, மூச்சை நன்கு இழுத்துவிட்டவள் கமலாம்மாவின் மடியில் சாய்ந்துகொண்டாள்.


காவ்யா மயங்கியதுமே மருத்துவரை அலைபேசியில் அழைத்து விசயத்தை கூறியவன் அவர் கொடுத்த மருந்துகளை கொடுக்கச் சொல்லிவிட்டு அவசர சிகிச்சைக்காக சென்றுவிட்டதால் வைத்துவிட்டான். மருந்தை கொடுக்கச் சொல்லிவிட்டு மறுபடியும் அவர் அழைத்திருக்க வெளியே வந்தான். மருத்துவரிடம் இப்போது நடந்த விசயத்தை மட்டும் தெளிவாகக் கூறிட, மருத்தவரும்,


"அது அங்க அவங்களுக்கு மறக்க நினைக்கிற ஏதோ ஒன்ன நியாபகப் படுத்துற மாதிரி பாத்துருப்பாங்க. அதனால அப்டி ஓவர் ரியாக்ட் ஆகிருக்காங்க. நோ நீட் டு வர்ரி. இப்போதைக்கு எந்த ப்ராப்ளமும் இல்ல. ஆனா, இதுக்கான சொல்யூஷன் அவங்ககிட்டதான் இருக்கு. அவங்க மாறணும்னு நினைச்சா மட்டும்தான் அவங்களால அதவிட்டு வெளிய வரமுடியும். ப்ளஸ் உங்களோட சப்போர்ட்டும் இருக்கணும். கேர் பண்ணி பாத்துக்கங்க" என்று அறிவுரை கூறிட, இவனும் அதை ஆமோதித்து பதிலளித்து அழைப்பை துண்டித்தான்.


மருத்துவர் கூறியதை யோசித்தபடியே காவ்யா இருக்கும் அறைக்கு வந்தான். அவன் உள்ளே நுழையவும் அங்கே காவ்யா கமலாம்மாவின் மடியில் படுத்திருப்பதை பார்த்தவன் செரும, அதில் சத்தம் கேட்டு இருவரும் நிமிர்ந்து பார்த்தனர். ராணா நிற்பதை கண்டதும் காவ்யா எழுந்து அமர்ந்தாள். கமலாம்மாவும் எழுந்து
நின்றிட, இவன் அருகில் வந்து,


"எப்ப கண்ணு முழிச்சா?" என்று வினவிட,


"இப்பதான் கொஞ்சநேரம் முன்னாடிதான் கண்ணு முழிச்சா, தம்பி!" என்று கமலாம்மா பதிலளித்தார்.


"மருந்து சாப்டாளா?" என்று கேட்டிட, அவரும் ஆம் என்று பதலளிக்க, காவ்யா இதை காதில் வாங்கியும் வாங்காததுபோல் அமர்ந்து கொண்டிருந்தாள். அவளிடம் திரும்பியவன்,


"நீ உன்னோட ரூமுக்கே போ. அங்க இந்த திங்க்ஸ் எல்லாத்தையும் செட் பண்ண சொல்றேன்" என்று கூறிட, அதைக் கேட்டவள் அவனை நிமிர்ந்து பார்த்து,


"எதுக்கு?" என்று கேட்டிட, அவனும் அவளை வினோதமாகப் பார்த்தவன்,
"எதுக்குனு உனக்குத் தெரியாதா? அப்ப உனக்கு இங்க இருக்கிறதுல எந்த ப்ராபளமும் இல்லயா?" என்று சற்று எரிச்சல் கலந்த தோணியிலேயே கேட்டிட, அவளும்,


"இல்ல! எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்ல. நான் இங்கயே தங்கிக்கிறேன்" என்று அவனை பாராமலே கூறிமுடித்தாள். இதை கேட்ட ராணா குழம்பிப் போனான். 'இவள் எப்போது எப்படி மாறுவாள் என்றே கணிக்க முடியவில்லையே!' என்று தனக்குள் எண்ணி குழம்பினான். இருந்தாலும் அதை வெளியில் காட்டாமல்,


"சரி! கமலாம்மா! நீங்களும் இனி இங்கயே இவகூட தங்கிக்கோங்க. இங்க இருக்க பிடிக்கலைனாலும் எப்ப வேணாலும் உன் ரூமுக்கு போயிக்கலாம். உன்னோட திங்க்ஸ இங்க அரேஞ்ச் பண்ண சொல்றேன்" என்று கூறிவிட்டு வெளியேறினான்.



ராணா வெளியே சென்றதும் காவ்யாவின் அருகில் வந்த கமலாம்மா, "காவ்யாமா! கேக்குறேன்னு தப்பா நினைக்காத. எதுக்காக நீ இந்தளவுக்கு அவர பாத்து பயப்படுற? உங்களுக்குள்ள எதுவும் பிரச்சினையா? ஆரம்பத்துல உன்னய கூட்டி வந்தப்பக்கூட ராணா தம்பி ரொம்ப கோவமாத்தான் நடந்துகிட்டாரு. இப்பவரைக்கும் அப்டித்தான் இருக்காரு. ஆனாலும் சின்னசின்ன மாற்றம் நல்லாவே தெரியுதுமா. உங்களுக்குள்ள என்ன நடந்தாலும் அது எனக்கு அவசியம் இல்லாதது. ஆனா, நீ மனசளவுல ரொம்ப பாதிக்கப்பட்டுருக்கனு உன்னய இத்தன நாளா பாத்ததுல இருந்தே நல்லா தெரியுதுமா. அதுக்கு அவருதான் காரணம்னும் தெரியுது. ஆனா, என்னனு சொன்னா என்னால முடிஞ்சளவு ஆறுதல் சொல்வேன்ல. உனக்கும் பாரம் குறைஞ்சமாறி இருக்கும்" என்று அவர் பொறுமையாகக் கூறினார்.


காவ்யாவும் அவரை நிமிர்ந்து பார்த்தவள், இத்தனை நாளாக தனக்குள் மறைத்து வைத்திருந்த அவள் வாழ்வில் அவனால் நிகழ்த்தப்பட்ட அந்த கொடூர சம்பவத்தை முழுவதுமாகக் கூறி முடித்தாள். அவரிடம் கூறும்போதே அவள் கண்கள் குளமாக, தொண்டை அடைத்தது. அதன்பின் அவள் தோழிகளிடம் இருந்து வந்ததுவரை அனைத்தும் கூறிமுடித்தாள். அவளின் வலி கண்களில் கண்ணீராய் வெளிவந்தது. அவள் கூறியதை கேட்ட கமலாம்மாவுக்கும் அதிர்ச்சி, கவலை, துக்கம், வலி என அனைத்தும் மனதை நிறைத்திட, கண்கலங்கி அழுதுவிட்டார்.


காவ்யா அப்படியே கண்ணீருடன் சிலையென அமர்ந்திருக்க, அவளை அரவணைத்து ஆதரவாக தலை வருடினார். அவர் அணைப்பில் தஞ்சம் புகுந்தவள் சிறிதுநேரம் அப்படியே இருந்தாள்.


"உனக்கு நடந்தது சாதாரண விசயம் இல்லம்மா. ரொம்ப பெரிய கொடுமை. இத ராணா தம்பி பண்ணிருக்காருனு என்னால நம்பவே முடியல. அவரு கோவக்காரருனு நல்லா தெரியும். ஆனா, ஆத்திரத்துல இந்தளவுக்கு கீழ்த்தரமா நடந்துப்பாருன்னு கனவுலகூட நினச்சு பாத்தது இல்லமா" என்று அவர் கூறிட,


"அவர மட்டும் தப்பு சொல்லிட முடியாதும்மா. இதுல என்னோட தப்பும் இருக்கு" என்று காவ்யா கூறுவதை கேட்ட கமலாம்மா அதிர்ந்தார்.






❤வருவாள்❤...




கீழே இருக்கும் லிங்க் கிளிக் செய்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்

Thread 'இருளில் தொலைந்த ஒளி அவள் - Comments' https://www.sahaptham.com/community/threads/இருளில்-தொலைந்த-ஒளி-அவள்-comments.500/
 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom