Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


GY NOVEL இருளில் தொலைந்த ஒளி அவள் - Tamil Novel

Status
Not open for further replies.
அவள் 4


தற்போது...


அவள் உறங்கிய பின் நால்வரும் ஒன்றாக அவள் பக்கத்திலேயே அமர்ந்தனர். அவளை இந்நிலைக்கு ஆளாக்கியது யார்?? என்ற கோபத்தனல் அவர்களுக்குள்ளே மூண்டது. தன் தோழியை நிலைகுழையச் செய்தவனைக் கொன்றாலும் கோபம் தீராது என்ற அளவில் அவர்கள் கொதித்துக் கொண்டிருந்தனர்.


ஆனால் அவர்கள் அது யாரென சிந்திக்கும் மனநிலையில் இல்லை. காவ்யாவிடத்தில் கேட்கவும் முடியாது என்பதால் அமைதி காத்தனர். ஊரில் பல சம்பவங்கள் இதேபோல் நிகழ்ந்திருக்கிறது. அதைப்போலவே தன் தோழியையும் இச்சைக்காக சீரழித்துவிட்டனர் என்று எண்ணிக் கொண்டனர்.


இதை மேலும் மேலும் விசாரித்தால் தங்கள் தோழியின் மனநிலை இன்னும் மோசமாகும் என்பதால் அதை அத்துடன் மறந்துவிட முடிவு செய்தனர். ஆனால் காவ்யாவை இதை மறக்கச் செய்யமுடியுமா என்று கவலை கொண்டனர்.


நாட்கள் நகரநகர காவ்யாவின் உடல்நிலை நன்றாக தேறியிருந்தது. ஆனால் அவள் மனநிலையோ சிறிதும் மாறவில்லை. யாரிடமும் பேசுவதில்லை. சரியாக சாப்பிடுவதில்லை. தூங்குவதில்லை. எதிலுமே நாட்டம் இல்லாமல் உயிருள்ள ஜடம் போலானாள்.


அவளைக் கண்டு மனதுக்குள்ளயே நால்வரும் வெதும்பினாலும் அவள் முன் அதைக் காட்டாமல் சாதாரணமாகக் காட்டிக் கொண்டனர். அவள் மேலும் கவலை கொள்ளக்கூடாது என்பதற்காக. அவள் உண்ண மறுத்தாலும் இவளுக்கு யாரேனும் ஊட்டிவிட்டு சாப்பிட வைத்து மருந்தும் கொடுத்துவிடுவார்கள். தூங்குவதற்காக சிலநேரம் மாத்திரை கொடுத்தும் சிலநேரம் வருடிக்கொடுத்தும் படுக்க வைத்தனர்.


அவளுடன் இருக்கவே நால்வரும் வேலைக்கு விடுப்பு எடுத்திருந்தார்கள். முக்கியமான மற்றும் அவசர தேவை ஏற்படும் காலகட்டத்தில் மட்டும் நிறுவனத்திற்கு சென்றுவந்தனர்.
அவளை குழந்தையைப் போல் கண்ணில் வைத்துப் பார்த்துக் கொண்டனர்.


*******************************************
காவ்யா தப்பித்த நாளன்று...


கண்கள் சிவந்திருக்க அதில் கட்டுக்கடங்காத கோபம் பிரதிபலித்தது. பல்லைக் கடித்து கை முஷ்டியை முறுக்கியவன் அருகில் இருந்த சுவற்றில் மாட்டப்பட்டிருந்தக் கண்ணாடியில் ஓங்கி குத்த அது உடைந்து நொறுங்கியது. அதை கண்ட அவன் வீட்டின் காவலாளிகள் பயந்து ஒரு அடி பின்வாங்கினர்.


அவன் முஷ்டியில் இரத்தம் வருவதையும் பொருட்படுத்தாமல் அவர்களை நோக்கி, "ஒரு பொண்ணு! அதுவும் ரூம்குள்ள வச்சு பூட்டிட்டு போயிருக்கேன். அவ இருந்த நிலமையில நாளு ஸ்டெப் கூட நடக்க முடியாது. அவ இந்த கண்ணாடிய உடச்சிட்டு தப்பிச்சு போயிருக்கா. அதுவர நீங்க என்ன பண்ணிட்டு இருந்தீங்க??" என்று தான் பார்த்த சிசிடிவி காட்சியைக் காட்டி கத்தினான்.


அவர்களும் அமைதி காக்கவே கோபம் கொண்ட அவன், "ஆல் ஆஃப் யூ கெட் அவுட் அண்ட் கெட் லாஸ்ட்" என்று மீண்டும் கத்த அனைவரும் நடுநடுங்கிப் போய் ஓடிவிட்டனர்.
அவள் இவனிடம் இருந்து தப்பித்ததை நினைக்கையில் அவனுக்கு வெறியேறியது. அந்த வெறியில் அவன் கண்ணில் பட்ட பொருட்கள் அனைத்தையும் தூக்கிப்போட்டு உடைத்தவன்,


"ஹேய்! என்னடி! என் வீட்டுல இருந்து தப்பிச்சுட்டல்ல! இருக்கட்டும். ஆனா என் வீட்டுல இருந்து தப்பிச்சுட்டா என்கிட்ட இருந்து தப்பிச்சுட்டதா நினைக்காத. இதுக்கும் சேர்த்து நீ அனுபவிக்கப்போற. கூடிய சீக்கிரமே உன்னய ரீச் பண்ணிடுவேன். நான் யார்னு தெரியாம என்கிட்ட மோதிட்ட. இனி நீ எங்க ஓடி ஒளிஞ்சாலும் தப்பிக்கவே முடியாது. உன்னய தப்பிக்க விடவும் மாட்டான் இந்த ராணாதேவ்!" என்று கர்ஜித்தான் ராணாதேவ்.


ராணாதேவ்! தேவ் க்ரூப் ஆஃப் கம்பெனீஸ்இன் நிறுவனர் மற்றும் சிஇஓ. பெயருக்கேற்றாற் போன்ற கம்பீரம் உடலிலும் நடையிலும் பேச்சிலும் இருக்கும். அவன் சாதாரணமாகப் பேசினாலே அதாட்டியமாக இருக்கும் அவனது குரல் கோபத்தில் சிங்கத்தின் கர்ஜனை தான். அவனது கூர் விழிகள் பார்ப்பவரை நடுங்கச் செய்துவிடும். ஆளைப் பார்த்ததும் எடைபோடும் பார்வையினால் அவனது வியாபார நண்பர்களும்கூட அவனிடம் பதில்கூட பேச தயங்குவர்.


வியாபாரத்தில் தோன்றும் எதிரிகளுக்கும் இவன் சிம்ம சொப்பணமே! அதிகம் யாருடனும் பழகிடாதவன். சிரிப்பு என்பது அவன் இதழ்கள் மறந்தவை போல என்று எண்ண வைக்கும் அளவுக்கு கடுமையைக் காட்டும் முகம்.


கோபமும் பிடிவாத குணமும் மிகவும் அதிகம். அதனால்தான் சிறுவயதிலே தாய் தந்தையற்று வளர்ந்த இவன் இளம் வயதிலேயே மிகப் பெரிய நிலைக்கு உயர்ந்திருக்கிறான் என்பது அவனது எண்ணம்.


ஆபத்தை தேடிப்போய் ரசிக்க ஆசை கொண்டவன். அதிகம் பேசாவிட்டாலும் பேசும் வார்த்தைகளில் உள்ள தெளிவும் புத்திசாலித்தனமும் அனைவரையும் வாயடைக்கச் செய்துவிடும்.


நீதிக்கும் நியாயத்துக்கும் கட்டுப்படுபவன் அல்ல அவன். அவனைவிட ஒருவன் திமிர் கொண்டு அவனை எதிர்த்தாலும் அராஜகம் செய்தாலும் அவனுக்குத் துளியும் பிடிக்காது. அவர்களின் திமிரை அடக்க எந்த எல்லைக்கும் செல்பவன். அவர்களின் வியாபாரக் கோட்டையைவே அழித்துவிடுவான்.


நினைத்தது நடக்கவேண்டும் என்று எண்ணுபவன் மட்டும் அல்ல. அதை நடத்தி முடிப்பவன். கோபத்தில் தான் என்ன செய்கின்றோம் என்று கூட தெரியாத அளவுக்கு எல்லையைத் தாண்டும்.


இவனைச் சமாளிக்க யாராலும் இயலாது போனாலும் இவனுடன் சமாளித்து இருக்க இவனது நான்கு தோழன்களால் மட்டுமே இயலும். இவனும் நண்பர்களிடத்தில் மட்டுமே தேவைக்கும் அதிகமாக பேசுவான். சாதாரணமாகப் பழகுவான்.


பெண்களை அறவே வெறுப்பவன். இவனின் அழகைக் கண்டு இவனை ரசித்தாலும் இவனின் கோபப் பார்வை அனைவரையும் பத்தடி தள்ளி நிற்கச் செய்துவிடும்.


இவனுக்கு நண்பர்கள் நால்வர். பள்ளி பருவத்திலேயே இவனது தாய் தந்தை விமான விபத்தில் இறந்துவிட்டனர். முதலில் உடைந்து போனாலும் அதன்பின் தானாகவே அதிலிருந்து மீண்டு வந்தான். சிரிப்பை மறந்து வளர வளர அவனது மனமும் கடினத் தன்மையாய் மாறிவிட்டது. இவன் மனதில் இருந்து சிரிப்பது அபூர்வம்.


அவனது தந்தையின் நிறுவனத்தை இவன் பன்மடங்காக்கி பெரிய உயரத்திற்கு கொண்டு சென்றான். மிகச் சிறந்த தொழிலதிபர்கள் வரிசையில் முதல் ஐந்து இடங்களில் இருப்பவன்.


*******************************************


நாட்கள் மெல்ல நகர ஆரம்பித்தது. காவ்யாவின் நிலையில் மாறுதல் இல்லை. சொல்லப்போனால் அவள் இப்போது பழைய காவ்யாவே இல்லை என்று சொல்லும் அளவிற்கு மாறிவிட்டிருந்தாள். எப்போதும் சிரித்து பேசி குறும்பு செய்பவள் இப்பொழுதெல்லாம் அமைதியை தத்தெடுத்துக் கொண்டாள்.


எந்நேரமும் எதையோ இழந்ததைப் போலவே இருந்தாள். ஒரு பொருள் விழும் சத்தம் கேட்டாலும் பதறிப் போய்விடுவாள். நடுங்கி ஒடுங்கிப் போய்விடுவாள். பின்பு அவளை சமாதானம் செய்வது மிகவும் கடினம். இவளின் நிலையைக் கண்டு இவள் தோழிகளுக்கும் சந்தோசம் என்பது மறந்துபோனது. வாழ்க்கை எந்தவித பிடிப்பும் இல்லாமல் அப்படியே போய்க்கொண்டிருந்தது.


காவ்யா அன்று உணவருந்தாமலே இருந்தாள். அவளை வற்புறுத்தி, கடினப்பட்டு சாப்பிட வைத்துக் கொண்டிருந்தனர். அவளுக்கோ வாந்தி வர வாயைப் பொத்திக் கொண்டு குளியலறைக்கு ஓடிவிட்டாள்.


அவள் பின்னே தோழி ஒருத்தியும் சென்று தலைபிடித்துவிட சாப்பிட்ட உணவு முதற்கொண்டு முழுவதையும் வாந்தி எடுத்தவள் வாயை தண்ணீர்விட்டு கழுவிக்கொண்டு வெளியே வந்தாள். முகத்தைத் தொடைத்துக்கொண்டு படுக்கையில் அமர்ந்தவள் கண்கள் சொருக அப்படியே மயங்கிச் சாய்ந்தாள்.


இவளைக் கண்டு இவள் தோழிகள் பதற, அவளை மெதுவாக சாய்த்து படுக்க வைத்தனர். பின்பு, வாந்தி எடுத்த சோர்வில் மயங்கிவிட்டாள் என எண்ணிக்கொண்டு அவளை சரண்யா பரிசோதிக்க நாடியைப் பிடித்தவள் அதிர்ந்து விழி விரித்தாள்.


இவள் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியைப் பார்த்த மற்ற தோழிகள், "என்னாச்சுடி??" என்று கேட்டனர். அவள் சொன்ன பதிலைக்
கேட்ட அவர்களும் அதிர்ச்சியடைந்தனர்.


"ஷீ இஸ் ப்ரக்னண்ட்(She is pregnant)" என்று அவள் சொல்லியதைக் கேட்ட நொடி அவர்கள் மூவரும்
ஸ்தம்பித்து போயினர். பிறகு தன்னிலை பெற்றவர்கள் காவ்யாவைப் பார்க்க, அவளோ உதிர்ந்த மலராய் வாடிக் கிடந்தாள்.


அதைக் கண்டு, "இவ யாருக்கு என்ன பாவம் பண்ணா? இந்த வயசுலயே இவளுக்கு ஏன் இவ்ளோ கஷ்டம்? இப்ப இவ இருக்க நிலமையில இந்த விசயமும் இவளுக்கு தெரிஞ்சா என்ன ஆவா? எப்டி ரியாக்ட் பண்ணுவானே நினச்சுக்கூட பாக்கமுடியல" என்று அனுயா கவலை கொண்டாள். மற்றவர்களும் அதே சோகத்தில் இருந்தனர்.


"ரிலாக்ஸ் அனு! யாருக்கு எப்ப என்ன நடக்கும்னு யாருக்குமே தெரியாது இல்லயா! இவள இந்த நிலைக்கு ஆளாக்குனவன் ஒருநாள் நிச்சயம் தண்டனைய அனுபவிப்பான். இவளதான் எப்டியாச்சும் இப்ப சமாளிக்கணும்" என்று தன்யா மனதில் வருத்தம் இருந்தாலும் இவர்களை ஆறுதல் படுத்தினாள்.


"விடுங்க பாத்துக்கலாம். அவ முதல்ல கண் விழிக்கட்டும். நாம எப்பவும் அவகூடதான் இருப்போம். அவள கஷ்டப்பட விட்றுவோமா? கவலைப்படாதீங்க. நீங்களே கவலைப்பட்டா அவளுக்கு எப்படி ஆறுதல் சொல்லுறது?" என்று ரம்யா கூற, மற்றவர்களுக்கும் அது சரியென பட மனதை தேற்றிக்கொண்டனர்.


சிறிது நேரம் கழித்து அவள் கண் விழித்து எழுந்து அமர்ந்தாள். அருகில் வந்து அமர்ந்த அனுயா, "இப்ப எப்டி இருக்கு காவிமா? பரவால்லயா? இப்ப வோமிட் எதுவும் வருதா? மயக்கமா இருக்கா?" அவள் தலையை வருடியபடியே கேட்க, அவள் மெதுவாக தலையசைத்து இல்லை என்று கூறினாள்.


அதன்பின் அவளுக்கு குடிக்க ஜூஸும் மருந்தும் எடுத்துவந்து கொடுத்தனர். அதைக் குடித்துவிட்டு மருந்தும் சாப்பிட்டுவிட்டு அமர்ந்திருந்தாள். அவளிடம் இந்த விசயத்தை எப்படி கூறுவது என்று தோழிகள் தயங்கி கொண்டு நின்றனர்.

எவருக்கும் அவளிடம் இதை சொல்ல தைரியம் வரவில்லை. அவள் இதைக்கேட்டு என்ன ஆவாளோ?! என்ற பயமே அவர்களைத் தடுத்தது.
காலம் வரும்போது அவளிடம் சொல்லிக்கொள்ளலாம் என்று எண்ணி விட்டுவிட்டனர்.


ஆனால் அந்த நாளும் சீக்கிரமே வந்தது. தினமும் வாந்தி எடுத்தாள். அதனால் எதுவும் சாப்பிட இயலாமல் போனது. இதனால் அவள் உடல்நிலையும் சற்று குறையத் தொடங்கியது. வாந்தியும் மயக்கமும் அவளை வாட்ட, மெலியத் தொடங்கினாள்.


இதைப் பார்த்த அவள் தோழிகளுக்கு கவலை மேலிட்டது. இப்படியே போனால் இன்னும் மோசமாகிவிடுவாள் என்றெண்ணி அவளை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல முடிவு செய்தனர். அவளிடம் இந்த உண்மையை இப்போது சொல்லியே ஆகவேண்டும் என்பதால் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் திகைத்தனர்.


இந்த சில நாட்களில் அவளுக்கு இது தெரியாமல் இருந்ததே அபூர்வம்தான். பழைய காவ்யாவாக இருந்திருந்தால் மற்றவரின் முகத்தை வைத்தே பிரச்சினையை கண்டுகொண்டிருப்பாள். ஆனால் இப்போது அவள் அவளாகவே இல்லையே. ஆதலால் தான் அவளுக்குள் நிகழும் மாற்றங்களைக்கூட அவள் கவனிக்கவில்லை என்பது அவர்களுக்கு நன்றாகப் புரிந்திருந்தது.


ஆனால் இப்போது இவர்களே சொல்லியாக வேண்டிய நிலையில் செய்வதறியாது நின்றனர். ஒருவழியாக மனதை திடப்படுத்திக் கொண்டு அவளிடம் சென்றனர்.
அவள் அருகில் அமர்ந்த சரண்யா அவளிடம் மெதுவாக பேச்சுக் கொடுத்தாள்.


"காவ்யா! நம்ம இப்ப ஹாஸ்பிடல் போகணும்... கிளம்புறியா..??" என்று ஆரம்பிக்க, அவளும்,"எதுக்கு?" என்று அவர்கள் எதிர்பார்த்த கேள்வியை அவளை நிமிர்ந்தும் பாராமல் கேட்டாள்.


"உனக்கு இப்பல்லாம் வாமிட், மயக்கம் ரொம்ப வருதுல்ல! அதுக்குத்தான்.. செக் பண்றதுக்காக...போலாம்னு...அதோட இப்ப நீ இருக்க நிலைமையில செக்கப் பண்ணி பாக்குறது அவசியம்" என்று கூறினாள்.


அதை காவ்யாவோ அவளின் தற்போதைய உடல்நிலை தேறியிருக்கிறதா? என்று மறுபடியும் பரிசோதிக்கத்தான் அழைக்கிறார்கள் என்று எண்ணிக் கொண்டாள்.


"அதெல்லாம் வேணாம். நான் நல்லாதான் இருக்கேன்" என்று அமைதியாகச் சொல்லிவிட்டு மௌனமானாள்.


இதைக் கேட்ட சரண்யா மற்றவர்களைப் பார்க்க அவர்களும் இவளைப் பார்த்து சோகமாயினர்.


"அது இல்ல காவிமா. இப்ப நீ ப்ரெக்னண்டா இருக்க..." என்று சரண்யா கூறிவிட்டாள். இதைக் கேட்ட காவ்யாவிற்கோ ஒரு நொடி தான் கேட்டது சரியா என்னும் சந்தேகம் எழ அவளிடம் மீண்டும் என்ன? என்று அவளைப் பார்த்துக் கேட்டாள். அதற்கு, "நீ கற்பமா இருக்க காவ்யா" என்று கடினப்பட்டு சரண்யா கூறிவிட்டு காவ்யாவின் கைகளைப் பற்றினாள்.


இதைக் கேட்டு அதிர்ச்சியில் விழி விரித்திட்ட கண்களில் கண்ணீர் பொங்கிட, தோழிகள் அனைவரையும் நிமிர்ந்து பார்த்தாள். அவள் பார்வையில் பொதிந்த அர்த்தத்தை அவர்களால் அச்சமயம் உணரமுடியவில்லை. அதில் அதிர்ச்சி, சோகம், ஏமாற்றம், வலி என அனைத்தும் கலந்திருந்தது.


அவளின் கண்ணீரைக் கண்டவர்கள் உடனே அவளிடம் சென்று அவள் தோள் பற்றி ஆறுதல் சொல்ல முனைந்தனர். ஆனால் அவளோ அனைவரின் கைகளையும் உதறிவிட்டவள் எழுந்து குளியலறைக்குள் செல்லப்போனாள்.



மற்றவர்கள் ஒன்றும் புரியாமல் அவள் செல்வதையே பார்த்துக் கொண்டு நின்றவர்கள். மறுநொடி சுதாரித்து அவள் எதுவும் விபரீத முடிவு எடுத்துவிடக் கூடாது என்றெண்ணி அவளைத் தடுத்தனர்.


"காவ்யா! நாங்க சொன்னத கேட்டுட்டு எதுவுமே சொல்லாம வாஷ்ரூமுக்கு போறியேமா. என்னாச்சு. எதுவா இருந்தாலும் எங்ககிட்ட சொல்லு. நீயே மனசுக்குள்ள போட்டு வச்சுக்காதடி" என்று தன்யா அவளைத் தடுத்து நிறுத்திக் கூறினாள்.


அதைக் கேட்ட காவ்யா, "இனி சொல்றதுக்கு என்ன இருக்கு? நான் வாழுறதே வீண்தான். இனியும் நான் வாழுறதுக்கு அர்த்தமே இல்லயே.." என்று விரக்தி நிறைந்த முகத்துடன் அவள் கூறுவதை கேட்டு தோழிகள் அதிர்ந்தனர். அவர்கள் பயந்ததைப் போலவே சம்பவங்கள் நிகழ்வதை பார்க்க மனம் கலங்கினர்.


"இப்டிலாம் ஏன்டி சொல்ற? எதுக்காக நீ வாழக்கூடாதுனு நினைக்கிற? உனக்காகதான நாங்க இருக்கோம். எங்கள விட்டுட்டு போற அளவுக்கு துணிஞ்சிட்டியா? என்னடி அர்த்தம் இல்லாம போச்சு? இதோட உன் வாழ்க்கை ஒண்ணும் முடிஞ்சிடாது. உன் வயித்துல இப்ப ஒரு குழந்தை வளருதுடி. அதபத்தியும் யோசிச்சு பாத்தியா?" என்று தன்யா கூறிக்கொண்டிருப்பதைக் கேட்டவளுக்கோ கோபத்தில் கண்கள் சிவந்து குளமாகியது.


"என்னது!! என் வயித்துல வளருற குழந்தைய பத்தி யோசிக்கணுமா?? நான் எதுக்கு யோசிக்கணும்? என் வாழ்க்கையே அழிஞ்சு போனதுக்கான ஆதாரமே இதுதான். இது என் வயித்துல இருக்க ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு நடந்த கொடூரம் தான் என் கண்ணு முன்னாடி வரும். இந்த குழந்தைய நான் எதுக்கு சுமக்கணும்?? இது என்ன என்னோட காதலுக்கு கிடச்ச பரிசா?? யாருன்னே தெரியாத எவனோ ஒருத்தன் என்னய சீரழிச்சதுக்கான அடையாளம். இத சுமக்குறதே பாவம். இது வயித்துல இருக்கிறதுகூட எனக்கு அவனதான் நியாபகப்படுத்துது. உடம்பெல்லாம் கூசுது. நான் இந்த குழந்தைய பெத்துக்க மாட்டேன்!!" என்று கோபம் பாதியும் அழுகை, வெறுப்பு பாதியும் கூறி முடித்தாள்.


அவள் கூறியதைக் கேட்ட தோழிகள் நால்வரும் பேச்சற்று நின்றனர். ஏனென்றால் குழந்தைகளை அளவிற்கு அதிகமாய் நேசிக்கும் ஒருவளால் குழந்தையை வேண்டாம் எனவும் ஒதுக்க முடியுமா?! என்று அதிசயித்துப் பார்த்தனர்.


குழந்தையை கருவிலேயே கொல்வது அவர்கள் ஐவருக்கும் அறவே பிடிக்காத செயல். ஏதோ கோபத்தில் பேசுகிறாள் என்று நினைத்து அவளின் தெளிவான முடிவை அறிவதற்காக மறுபடியும் பேசினர்.


"இங்க பாரு காவ்யா. உனக்கு குழந்தைங்கன்னா எவ்ளோ பிடிக்கும்! அபார்ஷன் பண்றது உனக்கே பிடிக்காதே! அப்டி இருக்கும்போது எவனோ ஒருத்தன்மேல உள்ள கோபத்துல குழந்தைய கொல்லணும்னு சொல்றியா?" என்று அனுயா அவளிடம் கேட்க, பதிலாக ஏமாற்றம் நிறைந்த பார்வையை பரிசாக அளித்தாள்.


" உங்களுக்கே தெரியுது. அவன் எவனோ ஒருத்தன்னு. எந்த உறவுல இந்த குழந்தைய நான் பெத்துக்க? இந்த உலகமே என்னய அசிங்கபடுத்தவா?? அதுக்கு நான் இப்பவே செத்துப் போயிடலாமே! உங்களுக்கு என் நிலமை புரியலயா?? புரியாட்டியும் பரவால்ல. எனக்கு இந்த குழந்த வேணாம்..வேணாம்..
வேணாம்...!!" என்று அமைதியாக பேச்சை ஆரம்பித்தவள் இறுதியில் ஆவேசத்துடன் கத்தினாள்.


அவள் இந்த விஷயத்துக்கு இப்படி நடந்துகொள்வாள் என்பதை இவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் அவள் நடந்து கொண்டதில் தவறேதும் இல்லை என்றே அவர்களுக்கும் தோன்றியது. அவள் கூறுவதுதான் சரியெனவும் அவர்களுக்குப் புரிந்தது.






காவ்யாவின் நிலை மாறுமா?? கடந்த கால நிகழ்வின் தாக்கத்தை கடந்து வருவாளா?? கொடூரனின் பலி உணர்வு அடங்கியதா?? இல்லை வஞ்சம் தொடருமா?? தோழிகளால் இவளை காத்திட இயலுமா?? ராணாவின் கோபத் தீயில் பலியாகும் ஈசலாய் காவ்யாவும் மாறிடுவாளா??





❤வருவாள்❤...
 
அவள் 5



கோபத்தில் கத்திக் கொண்டிருந்தவள் அப்படியே மடிந்து அமர்ந்து அழத் தொடங்கினாள். அவளின் அருகில் சென்றமர்ந்த தோழிகள் நால்வரும் அவளைச் சமாதானப் படுத்த முயன்றனர்.


"சாரி காவிமா!! உன்னோட நிலைமைல இருந்து யோசிச்சு பாக்காம தப்பா பேசி உன்னய கஷ்டப்படுத்திட்டோம்டா. சாரிடா!! நீ சொன்னதுதான் கரெக்ட். அது இப்போதான் எங்களுக்கும் புரிஞ்சது. மன்னிச்சுடு காவிமா. உன் கஷ்டத்த புரிஞ்சு உனக்கு சப்போர்ட்டா இருக்க வேண்டிய நாங்களே இப்டி உன்னய இன்னமும் காயப்படுத்திட்டோம்" என்று நால்வரும் அவளிடம் மன்னிப்புக் கேட்டு வருந்தினர்.


அதைப் பார்த்த காவ்யா, "பராவால்ல விடுங்கடி. மன்னிப்புலாம் கேட்டா கொன்றுவேன்" என்று மட்டும் சொல்லிவிட்டு மௌனம் காத்தாள்.


அவளின் பேச்சைக் கேட்டவர்கள் முதலில் அவளின் ஒதுக்கத்தைக் கண்டு வருந்தினாலும் பின்பு அவள் மன்னிப்பு கேட்டதுக்கு பதில் கூறியதைக் கேட்டு சிறிது மனம் மகிழ்ந்தனர். அதன்மூலம் அவள் பழைய நிலைக்கு மாற வாய்ப்புகள் இருப்பதை அறிந்துகொண்டனர்.


"சரிடி! மன்னிப்பு கேக்கல. நீ எங்கள நல்லா அடிக்கணும்னாலும் அடிச்சிக்க. ஆனா இத நினச்சு இனி கவலப்படக்கூடாது" என்று ரம்யா அக்கறையுடன் கூறினாள்.


"இப்பக்கூட அப்டி பேசினது உனக்காகத்தான். ஏன்னா நீ எப்பவும் ஒரு உயிர கருவிலயே அழிக்கிறது ஒரு கொலைக்கு சமம்னு எப்பவும் சொல்வ. இது உன்னோட வயித்துல வளருற குழந்த. அத எப்டி அழிக்க நினப்பனு தான் நாங்க உன்கிட்ட அப்டி சொன்னோம். ஆனா உன்ன பத்தி யோசிச்சோமே தவிர உன் நிலைமையில இருந்து யோசிக்கலடி" என்று கூறி அனுயா வருந்தினாள்.


இதைக் கேட்டுக் கொண்டிருந்த காவ்யாவிற்கு ஏதோ நாம் தவறு செய்கிறோமோ?! என்ற எண்ணம் உள்ளூற தோன்றிட கண்களை மூடினாள். ஆனால் மறுகணமே அவள் கண்கள் முன் தோன்றிய அவனது முகமும் அவனது வெறிச்செயலும் அவளின் எண்ணங்களை அழித்து கோபத்தையும் வெறுப்பையும் மட்டுமே நிரப்பியது.


இமைகளை வேகமாகத் திறந்தவள்.
"இதுக்கு மேல எதுவும் பேச வேணாம். ப்லீஸ்! எனக்கு இந்த குழந்த வேணாம். அவ்ளோதான்!" என்று கூறி அந்தப் பேச்சிற்கு முற்றுப் புள்ளி வைத்தாள்.


அவள் பேச்சிலிருந்தே அவளுக்கு ஏற்பட்ட தாக்கத்தை உணர்ந்தவர்கள். அதற்குமேல் வேறெதுவும் பேசி அவளைக் காயப்படுத்த வேண்டாம் என்றெண்ணி அமைதியாகினர். அன்றைய தினம் இக்கவலை சூழந்த நாளாகவே முடிந்தது.


மறுநாள் காலை எப்பொழுதும் போல் அனைவரும் அவர்கள் வேலையில் ஈடுபட மனமில்லாமல் செய்து கொண்டிருந்தனர். காவ்யா இன்னும் அமைதியாகவே இருந்தது அவர்கள் மனதுக்கு சங்கடத்தையும் குற்ற உணர்ச்சியையும் தந்தது. அவளை சிரிக்க வைக்க முடியாவிடினும் அவளின் மன வருத்தத்தை சற்றேனும் குறைத்திடவும் அவளுக்கு ஆறுதலாகவும் பக்க பலமாகவும் இருக்க எண்ணினர்.


அவளிடம் சென்றவர்கள், "காவ்யா! இன்னைக்கு நம்ம ஹாஸ்பிடல் போய்ட்டு வந்துடலாமா?" என்று சரண்யா கேட்டிட, அவளை நிமிர்ந்து பார்த்தாள். அவள் கண்களில் ஏன்? என்ற கேள்விக்குறி வெளிப்படையாகத் தெரிந்தது.


அதைக் கண்ட தன்யா, "இன்னைக்கே போய் செக் பண்ணிட்டு அப்றம் அபார்ஷன்.. பண்ணிட்டு வந்துடலாம் னு தான்" என்று கூறி முடித்தாள்.


அதற்கு காவ்யாவும் ஒரு நொடி தயங்கி பின் சரி! என்று சம்மதம் கூறினாள். ஐவருமே மருத்துவமனைக்குச் செல்ல தயாராயினர். சரண்யாவின் தோழியும் மகப்பேறு மருத்துவர்தான் என்பதால் உமாவின் க்ளினிக்கிற்கே சென்றிட முடிவு செய்து கிளம்பினர்.


க்ளினிக்கில்...


அவளைப் பரிசோதித்துவிட்டு வந்த உமா தோழிகளிடம் வந்து பேசினாள்.


"ஆமா. அவ கற்பமா தான் இருக்கா. நாப்பது நாள் ஆகுது. குழந்த நல்லா ஆரோக்கியமா இருக்கு" என்று சொல்லி முடித்திட நால்வரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். பின்பு அவர்கள் நடந்தவை அனைத்தையும் அவளிடம் கூறி முடித்து அவளை பார்த்தனர்.


"கருவிலேயே குழந்தைய அழிக்கிறது தப்புதான். ஆனா அவ சொல்றதும் நியாயம்தான. அவ நிலைமையில இருந்து யோசிச்சு பாத்தா அவ எடுத்த முடிவுதான் கரெக்ட். இந்த குழந்தைய பெத்துகிட்டாலும் சொசைட்டில அந்த குழந்தைக்கு என்ன அடையாளம் கிடைக்கும்? அதோட ஷீ வாஸ் ரேப்டு. அவளால இன்னும் அதயே மறந்து வெளிய வரமுடியாதபோது இந்த குழந்தையும்னா இன்னும் மெண்டலி அஃபெக்ட் ஆயிடுவா. அவளோட முடிவுக்கு நீங்க சப்போர்ட் பண்றது கரெக்டான முடிவுதான். இத நினச்சு நீங்க கவல பட தேவையில்ல. இப்ப அவகூட நீங்க நிக்கிறதுதான் அவளுக்கு ரொம்ப தேவை" என்று அவர்களுக்கும் நடைமுறை பிரச்சினையையும் சரியான முடிவையும் எடுத்துக் கூறினாள்.


இதைக் கேட்ட தோழிகள் முழுவதுமாக தெளிவடைய அங்கே பரிசோதனை முடித்து காவ்யாவும் வந்து சேர்ந்தாள். அவளையும் அருகில் அமரச் சொல்லிவிட்டு உமாவிடம் இவர்கள் மேலும் பேச்சைத் தொடர்ந்தனர்.


"எங்களுக்கும் அதான் சரினு பட்டுச்சு. அதுக்காக தான் இப்ப வந்துருக்கோம் உமா. இன்னைக்கே அபார்ஷன் பண்ணிடலாமா?" என்று சரண்யா அவளிடம் கேட்டாள்.


உமாவும் சற்று யோசித்துவிட்டு, " குழந்த ஆரோக்கியமா இருக்குது. பட் இவ வீக்கா இருக்கா. இப்ப அபார்ஷன் பண்ணா அந்த பெய்ன தாங்கிக்கிற சக்தி அவ உடம்புல இல்ல. இது ரிஸ்க். சோ, கொஞ்ச நாள் போகட்டுமே. அவ உடல்நிலை தேறுரத பொறுத்து இந்த ப்ராசஸ வச்சுக்கலாம்" என்று காவ்யாவின் உடல்நிலை கருதி அக்கறையுடனும் மருத்துவரின் பொறுப்பிலும் கூறி முடித்தாள்.


இதனைக் கேட்டவர்கள் முதலில் அதிர்ந்தனர். காவ்யாவைப் பற்றிய கவலை தோன்றினாலும் அவளின் உடல்நிலையைப் பற்றி அவர்களும் அறிந்ததால் அமைதியடைந்தனர்.


"ஓகேடி. அப்ப கொஞ்ச நாள் கழிச்சு அவ ஹெல்த் இம்ப்ரூவ் ஆனப்பறம் கூட்டிட்டு வரோம். ஒரு ஒன் மன்த் கழிச்சு வந்தா ஓகேதான?" என்று அனுயா கேட்டிட, "ஓகே! அப்ப வந்தா போதும். அப்ப அவளோட ஹெல்த் கண்டிஷன பாத்துட்டு பண்ணிடலாம். பட் அதுவரைக்கும் அவள நல்லா கேர் பண்ணி பாத்துக்கங்க. நல்லா ஹெல்தி ஃபுட்ஸ், ஜூஸ், மெடிசின்ஸ் அப்றம் நல்ல ரெஸ்ட். இது எல்லாமே மஸ்ட். நான் தனியா சொல்லத் தேவையில்ல. கூடவே இரண்டு டாக்டர்ஸ் இருக்காங்க. அவங்களே இதுலாம் பாத்துப்பாங்க. நீங்களே அவள நல்லா கேர் பண்ணிப்பீங்க. இருந்தாலும் கடமையா சொல்லிட்டேன்" என்று கூறி புன்னகைக்க அவர்களும் பதில் புன்னகை சிந்தினர்.


ஆனால், காவ்யாவின் முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் இல்லாமல் இருந்தாள். இவர்களின் பேச்சும் சிரிப்பும்கூட அவளின் காதுகளில் எட்டாமல் போனது. பேசிக் கொண்டிருந்தவர்கள் தற்செயலாக இவளைப் பார்க்க இவளின் நிலையைக் கண்டு அவளை அழைத்தனர். ஆனால் எந்தவித பதிலும் இல்லாமல் போகவே கையைப் பிடித்து உலுக்கினார்கள். அப்போதே நிகழ் உலகிற்கு வந்தாள்.


இவர்கள் பதறியபடி அவளிடம் கேள்விகளை அடுக்க அதற்கு பதிலளிக்கும் மனநிலையில் அவள் இல்லை என்பதையும் அவர்கள் புரிந்து கொண்டனர். இதன் காரணம் உமா கூறியதாகத்தான் இருக்கும்
என்பதையும் அவர்கள் புரிந்து கொண்டனர். அதற்குமேல் அவளை தொந்தரவு செய்யாமல் உமாவிடம் விடைபெற்று கிளம்பினர்.


இங்கே ராணா அவனது நிறுவனத்தின் அலுவலக அறையில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து கோப்புகளைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான். முகத்தில் இறுக்கம் மட்டுமே தென்பட்டது. கண்களில் கூர்மை. அவன் உன்னிப்பாக கோப்புகளைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்ட அவன்முன் நின்ற அலுவலருக்கு எந்தப் பிழையும் இருந்துவிடக்கூடாது! என்ற பயத்தில் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.


கோப்புகளை சரிபார்த்தவன் அந்த அலுவலரிடம் கையொப்பமிட்டு கொடுத்துவிட்டு அவனை வெளியே அனுப்பினான். அதன்பிறகு மேசையைத் திறந்து ஒரு கோப்பை எடுத்தவன் அதைப் பார்த்தபடி சிந்திக்கலானான்.



*******************************************

சில தினங்களுக்கு முன்...


கோபமாக தனது அலுவலக அறைக்கு வந்தவன் நாற்காலியில் வந்தமர்ந்து அருகில் இருந்த தொலைப்பேசியை எடுத்து எண்களை அழுத்தி அழைப்பு விடுத்தான்.


"நான் சொன்னது என்னாச்சு?


.........


இந்த வேலைக்கு இத்தன நாளா?


.........


ம். இப்ப உடனே வரணும். இல்லைனா என்ன ஆவிங்கனு தெரியாது.


.........


சரி. வை"


என்று பேசி முடித்து அழைப்பைத் துண்டித்தான்.


அவன் பேசி முடித்த சில நிமிடங்களில் அவன் அறையைத் தட்டினான் ஒருவன். அவனை உள்ளே அழைக்க, அவனும் வந்து இவனுக்கு வணக்கத்தைத் தெரிவித்துவிட்டு அவனிடம் ஒரு கோப்பை கொடுத்தான். அதனை வாங்கிய ராணா அவனை போகச் சொல்லிவிட்டு அந்தக் கோப்பை கையில் வைத்துக்கொண்டு கண்களில் எரிமலை தெறிக்க வஞ்சகப் புன்னகையுடன்,


"என்கிட்ட இருந்து தப்பிச்சுட்டதா நினச்சல்ல. ஆனா நான் உன்னய நெருங்கிட்டேன். எப்ப வேணாலும் உன்கிட்ட வந்துருவேன். ரெடியா இரு! என்னய.. இல்ல.. நரகத்த பேஸ் பண்ண" என்று பல்லைக் கடித்துக்கொண்டு கூறிமுடித்தான்.


காவ்யா இவனிடம் இருந்து தப்பித்துச் சென்றது ராணாவின் அகங்காரத்தை சீண்டியதுபோல் ஆகிவிட்டது அவனுக்கு. அதன் விளைவாக கோபம் கொந்தளிக்க அவளை எப்படியேனும் திரும்பவும் சிறைப்பிடிக்க முடிவெடுத்தான்.


அவளின் திமிரை அடக்க அவளைக் கடத்தியவன் அவன் வஞ்சத்தை தீர்த்துக் கொள்ள அவளை சித்ரவதை செய்தபோதிலும் அதில் அவனுக்கு பலி வாங்கிய திருப்தி ஏற்படவில்லை. அவளை இன்னும் ஓரிரு தினங்கள் வைத்து மொத்த திமிரையும் அடக்கும் எண்ணம் கொண்டிருந்தான் அவன்.


ஆனால், அவ்வளவு கொடுமையிலும் எதற்கும் அஞ்சாமல் அவள் அங்கிருந்து தப்பித்தது அவனை மேலும் அவமானப்படுத்தியதாய் உணர்ந்தான், ராணா. அதற்கு பதிலடி கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அவளைப் பற்றி முழு விவரத்தையும் சேகரிக்க கட்டளை விடுத்திருந்தான்.


முதலில் அவளைக் கடத்திய போது அவளைப் பற்றிய ஓரளவு தகவல் மட்டுமே தெரிந்திருந்தது. அவளின் போக்குவரத்து பாதையை மட்டுமே அவன் தெரிந்திருந்தான். அதற்குமேல் அவனுக்கு எந்தத் தகவலும் தேவைப்படவில்லை. அவளைக் கடத்துவதற்கு அதுவே போதுமானதாக இருந்ததால் விட்டுவிட்டான்.


ஆனால், இன்று அப்படி இல்லாமல் அவள் ஆணிவேர் வரை சென்று முழு விவரத்தையும் சேகரிக்கச் செய்தான். அந்தத் தகவல்கள் அடங்கிய கோப்பை கையில் வைத்திருந்தவன் அதை திறந்து பார்த்தான்.


"ஓஓ பேரு காவ்யா...படிச்சது ஃபேஷன் டெக்ஆ.." என்று வரிசையாகப் பார்த்துக் கொண்டு வந்தவன் கண்கள் ஓரிடத்தில் நிலைக்குத்தி நின்றது. அவன் கண்களில் ஒரு நொடி தோன்றி மறைந்த அதிர்ச்சி அதன்பின் ஏளனமாய் மாறியது.


"ஹா..நீ தேவ் க்ரூப் ஆஃப் கம்பெனீஸ்ல தான் வர்க் பண்றியா! அதுவும் என்னோட கம்பெனில! அது தெரியாம உன்னய இத்தன நாளா வெளிய தேடிருக்கேன். ஐம் அஷேம்டு ஆஃப் மீ. ஆனா இது ஒண்ணும் ரொம்ப லேட் இல்ல. இப்பதான் உன் ஃபுல் ஜாதகமே என் கைல இருக்கே! நீயும் என் கைலதான் இருக்க. சீக்கிரமே உன்னய சிறையில அடைக்கிற நாளும் வரும். அது இப்பவே கூட இருக்கலாம்.." என்று ஏளனமாகப் பேசிக்கொண்டு தொலைப்பேசியை எடுத்து அழைப்பு விடுத்தான்.


உடனே அவனறையில் ஒரு பெண் அனுமதி பெற்று நுழைய, அவளிடம் அந்தக் கோப்பைக் காட்டி காவ்யாவைப் பற்றி விசாரித்தான். அவளைப் பற்றி தெரிந்து கொண்டபின் அவளை அறைக்கு வரச்சொல்லுமாறு கூற, அந்தப்
பெண் அவள் வரவில்லை என்பதை தெரிவித்தாள்.


அதைக் கேட்டவன், " வாட்?! என்ன இப்டி சொல்றீங்க? அவ...அவங்கதான இங்க சீஃப் டிசைனர்னு சொன்னீங்க. எப்டி அவங்க வராம இருக்கலாம். எப்ப இருந்து லீவ்?" என்று பேச்சில் கடுமையைக் காட்டி கேட்டான்.


அந்தப் பெண்ணும், "அவங்க ஒரு பதினஞ்சு நாளாவே வரல சார். அவங்க எப்போதும் இப்படி லீவ் போட்டதே இல்ல. வெரி டிசிப்லின்ட். பட் இப்பதான் இவ்ளோ லாங் லீவ் எடுத்துருக்காங்க சார்" என்று பணிவாகவும் பொறுமையாகவும் கூறிட, அவனுக்கு அவளைப் புகழ்ந்து கூறியது சற்று கோபத்தை ஏற்படுத்தியது.


"இப்ப அவங்க காண்டாக்ட் சர்டிபிகேட் கேட்டனா?? அதான் அப்பவே சொல்லிட்டிங்களே! அவங்க டேலண்ட்ஸ் அண்ட் அச்சீவ்மண்ட் பத்தி. இப்ப கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க!" என்று கோபத்தை வார்த்தைகளில் காட்டிட அவள், " ஓகே சார்!" என்று கூறி அமைதியானாள்.


"ம்..எதுக்காக வரல? பெர்மிஷன் லெட்டர் ஆர் லீவ் லெட்டர் செண்ட் பண்ணாங்களா?" என்று கேட்டிட,


"நோ சார்! எதுக்காக வரல? அவர்களுக்கு என்னாச்சுனு எந்த இன்பமேஷனும் தெரியல. ஆனா ஒன் மன்த் முன்னாடி லீவ் லெட்டர் மெயில் பண்ணிருந்தாங்க. பட் இத்தன நாளைக்குனு மென்ஷன்லாம் பண்ணல சார்" என்று கூறியதைக் கேட்ட ராணாவுக்கு அவளின் விடுப்பின் காரணம் தெளிவாகப் புரிந்து இதழில் ஏளனப் புன்னகை விரிந்தது.


ஆனால் அவள் வேலையை விட்டுச் செல்லாமல் இன்னும் விடுப்பில் மட்டும் இருப்பதுதான் அவனைக் குழம்பச் செய்தது. எனினும் அவள் இன்னும் வேலையைவிட்டுச் செல்லாததும் ஒருவகையில் நல்லதுதான் என்று எண்ணிக்கொண்டவன் அந்தப் பெண்ணிடம் காவ்யாவின் வருகையைத் தன்னிடம் தெரிவிக்குமாறு கூறி அனுப்பிவைத்தான்.


எத்தன நாள் இப்டி ஒளிஞ்சிருக்கனு நான் பாக்குறேன். நீயாவே வர வரைக்கும் நான் எதுவும் பண்ணமாட்டேன். பட் ஒன்ஸ் நீ வந்துட்டனா அப்றம் நீயே நினச்சாலும் தப்பிக்க முடியாது. வில் வெயிட் அண்ட் சீ எப்ப வர்ரனு?" என்று கூறி பற்களுக்கிடையில் விஷமப் புன்னகை புரிந்தான்.


*******************************************


தன் சிந்தனையில் இருந்து வெளிவந்தவன், " என்ன மிஸ். காவ்யா?? உனக்காக நான் இங்க இத்தன நாளா வெயிட் பண்ணிட்டுருக்கேன். நீ என்னாடான்னா வராம இருக்கியே. அவ்ளோ பயமா? சச்ச..பயமா? உனக்கா? இருக்காதே! ஒருவேல நான்தான் உன் கம்பெனி பாஸ்னு தெரிஞ்சுகிட்டயா என்ன? அதுக்கும் வாய்ப்பில்ல. என்னய பத்தி இந்த ஆபிஸ்ல சில பேர தவிர்த்து யாருக்குமே தெரியாது. அப்றம் எதுக்கு வரல நீ? வாட்டெவர்...நீ எப்டியும் இங்க வந்துதான் ஆகணும். நீயே வராட்டியும் நா வர வைப்பேன். சோ நீயே சீக்கிரம் வந்துடு. ஐம் வெயிட்டிங்..." என்று அவளை எண்ணி கூறிக் கொண்டிருந்தான்.


க்ளினிக்கில் இருந்து விடுதி வந்தவர்கள் தங்கள் அறைக்குச் சென்று கொண்டிருக்கையில் அவர்களை விடுதி காப்பாளர் பெண்மணி அழைத்திட அவரைக் காணச் சென்றனர்.


இவர்களைப் பார்த்த அந்தப் பெண், "இது பொறுப்பாவும் டிசிப்லினாவும் இருக்குற ஹாஸ்டல். இங்க இருக்கவங்களும் அப்டித்தான் இருக்கணும். அப்டி இல்லனா வெளிய போகவேண்டியதான். உங்க இஷ்டப்படி கண்டமாறி இருக்கிறதுக்கு இது ஒண்ணும் லாட்ஜ் இல்ல.." என்று கோபமாகச் சொல்லிக் கொண்டிருக்க, இவர்களுக்கு எதற்கென்று புரியாமல் விழித்தனர்.


"மேடம்! நீங்க சொல்றதுலாம் கரெக்ட்தான். பட் இத இப்ப எங்ககிட்ட எதுக்கு சொல்றீங்க மேடம்? நாங்க என்ன தப்பு பண்ணோம்?" என்று அனுயா பொறுமையாகக் கேட்டாள்.


அதற்கு அந்தப் பெண்மணி, " என்ன தப்பா?? இதவிட பெரிய தப்பு என்ன பண்ணணும்? நான் உங்க எல்லாரயும் சொல்லல. உங்க ப்ரண்ட் காவ்யாவதான் சொல்றேன்" என்று கூறிட, அவர்கள் புரியாமல் அதிர்ச்சியாகப் பார்த்தனர்.


"காவ்யா ப்ரக்ணன்டா இருக்காளா? சொல்லுங்க!!" என்று கேட்க அவர்கள் அதிர்ந்து விழித்து மௌனம் காத்தனர்.


முந்தைய தினம் காவ்யா அறையில் கத்தியதைக் கேட்ட சக விடுதி மாணவிகளில் சிலர் அதை காப்பாளரிடம் ஒன்றுக்கு இரண்டாகப் போட்டுக் கொடுத்தனர். அதன் விளைவாகவே காப்பாளர் இவர்களை அழைத்திருந்தார்.


"எனக்கு தெரிய வந்துட்டு. நீங்க இனி மறைக்க முடியாது. இந்தமாறி பிஹேவியர் உள்ள பொண்ணலாம் இந்த ஹாஸ்டல்ல வச்சிக்க முடியாது. சோ! காவ்யா! நீ இந்த ஹாஸ்டல விட்டுக் கெளம்பு. இதுக்குமேல நான் ஒண்ணும் சொல்லமுடியாது. இது ப்ரைவேட் ஹாஸ்டல்னால. ஆனா இது காலேஜ் ஹாஸ்டலா இருந்துச்சுன்னா நீ பண்ணதுக்கு உன்னய காலேஜ விட்டே துரத்திருப்பாங்க. என்ன பொண்ணு நீ? முதல்ல பாக்க நல்லப் பொண்ணா தெரிஞ்ச. போகப்போக தான தெரியுது உண்ம லட்சனம்லாம். இங்க இருந்தா உன்னய பாத்து மத்த பொண்ணுங்களும் கெட்டுடுவாங்க. நீ இன்னைக்கே இப்பவே கிளம்பு!" என்று வார்த்தைகளைக் கொண்டு அம்புகளாய் எறிய, அதைக் கேட்ட காவ்யாவால் கண்ணீர் மட்டுமே வடிக்க முடிந்தது. சிலையென நின்றாள்.


இதைக் கேட்ட தோழிகளுக்குக் கோபம் பெருகிட, அதைக் கட்டுப்படுத்தவும் எண்ணாமல் சரமாரியாக அந்தக் காப்பாளர் பெண்மணியை வசைபாடினர்.


"உங்களுக்கு அவள பத்தி என்ன தெரியும்னு இப்டி பேசிருங்க? அவமேல தப்பு இருக்கா இல்லையானு யோசிக்கக்கூட செய்யாம நீங்க பாட்டுக்கு அவள குத்தம் சொல்றீங்க! அவள இத்தன வருசமா நீங்களும் பாத்துட்டுதான இருக்கீங்க. அப்டி இருந்தும் எப்டி தப்பா பேச முடியுது உங்களால?? இவள பாத்துதான் இங்க யாரும் கெட்டுப்போணும்னு அவசியம் இல்ல. எங்க காவ்யா அப்டிபட்டவளும் இல்ல!" என்று ஆவேசமாகப் பேசினாள் ரம்யா.


"அப்டி அவமேல தப்பு இல்லனா அவளே பேச வேண்டியதான. எதுக்கு அமைதியா இருக்கா?" என்று கேட்க,


"இப்ப அவ பேசுற நிலைமைல இல்ல. அதான் இப்டி அழுதிட்டு நிக்கிறா. பழைய காவ்யாவா இருந்திருந்தா இப்படி நீங்க அவ முன்னாடி பேசிருக்கவே முடியாதுனு உங்களுக்கும் தெரியும்" என்று கூறி தன்யா பல்லைக் கடித்தாள்.


"எது உண்மை பொய்னு நான் ஆராய்ஞ்சு தீர்ப்பு சொல்ல ஒண்ணும் உங்கள கூப்டல. அவ ப்ரக்ணன்டா இருக்கிறது உண்மைதான? அவளுக்கு இன்னும் கல்யாணம் ஆகாம இப்டிலாம் இருந்தா தப்பாதான் சொல்வாங்க. எங்க ஹாஸ்டலுக்கு இதுலாம் செட்டாகாது. அவளைப் போகச் சொல்லுங்க. அனுப்பி வைங்க. அவ்ளோதான்! இல்லைனா நீங்களும் சேந்து போகவேண்டி வரும்" என்று சொல்லி முடிக்க, சரண்யாவுக்கு சுள்ளென்று கோபம் வந்தது.


"அவள அனுப்பிச்சுட்டு நாங்க இங்க இருப்போம்னு நினச்சீங்களா? நீங்க எங்கள இன்னும் புரிஞ்சுக்கவே இல்ல. அதான் இப்டி பேசிட்டு இருக்கீங்க. அவள அனுப்பிதான் நாங்க இங்க இருக்கணும்னு எந்த அவசியமும் இல்ல. உங்க பண்பாடு மிக்க ஹாஸ்டல்ல நீங்களே இருந்து சேவை பண்ணுங்க. நாங்க கிளம்புறோம். அப்றம் இங்க இருக்கவங்களாம் கெட்டுப் போயிடுவாங்கனு சொன்னீங்களே...உங்க கண்ணுல விளக்கெண்ணய விட்டு கொஞ்சம் செக் பண்ணி பாருங்க. எத்தன பேரு லவ் பண்றாங்க. எத்தன ஓடிப்போச்சுங்க. இன்னும் எத்தன தெரியாம கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்ததுங்கனு அப்பதான் தெரியும். எங்கள சொல்ல வந்துட்டாங்க" என்று ஆவேசமாக ஆரம்பித்து ஏளனமாய் கூறி தக்க பதிலடி கொடுத்தாள், சரண்யா.


அதைக் கேட்ட காப்பாளர் பெண்மணி வாயடைத்துப் போய்விட்டார். அவரால் அவள் பேசியதற்கு பதில் பேசமுடியாமல் அப்படியே இருந்தார்.


"அது கிடக்குது சரியான கிழ போல்டு. அதுக்கு எங்க கண்ணு தெரிய போகுது. அதான் எதுமே தெரியாம சும்மா கண்டவங்க சொன்னத மட்டும் கேட்டுட்டு பேசுது. இதுகிட்ட பேசி நம்ம எதுக்கு டைம் வேஸ்ட் பண்ணணும்?! வாங்கடி!" என்று ரம்யா இன்னும் அவரை வாரிவிட்டு இவர்களை அழைத்தாள்.


செல்லுமுன் அனுயா அவரிடம், "ஒரு பொண்ண பத்தி தப்பா முடிவு பண்றதுக்கு முன்னாடி ஒரு முறைக்கு நூறு முறை யோசிச்சு பண்ணுங்க! அது ஒரு பொண்ணோட வாழ்க்க சம்பந்தபட்டதுனு நினைவு வச்சுக்கோங்க!" என்று பேசிட, அவர் தலைகுனிந்தார்.


தோழிகள் நால்வரும் காவ்யாவின் நிலையைக் கண்டு கண்கலங்கினர். அவளை எதுவும் பேசாமல் மெதுவாக அறைக்கு அழைத்துச் சென்றனர். அறைக்கு அழைத்துச் சென்று படுக்கையில் அமர வைத்தவர்கள் இன்னும் கோபம் தாளாமல் கொதித்துக் கொண்டிருந்தனர்.


அவர்களை அனுயா ஓரளவு சமாதானப்படுத்தி இப்போது வேறு தங்குமிடம் பார்க்கவேண்டும் என்ற நிதர்சனத்தை உணர்த்தி அமைதிப்படுத்தினாள். அவர்களும் காவ்யாவின் நிலை கருதி அமைதியடைந்தனர். பின் தங்களுக்குத் தெரிந்தவர்களை எல்லாம் தொடர்புகொண்டு இறுதியில் ஒரு தங்குமிடத்தின் முகவரியைப் பெற்றனர்.


அந்த இடத்திற்குச் செல்ல அனைத்து உடைமைகளையும் எடுத்துக்கொண்டு தயாராயினர். இந்தப் புது இடமாவது இனி வரப்போகும் இவர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற புது நம்பிக்கையுடன் கிளம்பினர்.







காவ்யாவின் கோபமும் முடிவும் நியாயமானதா?? ராணாவின் வஞ்சம் தீர்க்க அவனது திட்டம்தான் என்ன?? தோழிகளின் நம்பிக்கை நடக்குமா?? மாற்றம் ஏற்படுமா??







❤வருவாள்❤...
 
அவள் 6



அது ஒரு ஓர் அடுக்குமாடி கொண்ட ஓரளவு பெரிய வீடு. அந்த வீட்டின் மாடியில் முதல் தளத்தில் இருந்த வீட்டில் தோழிகள் ஐவரும் குடியேறினர். அந்த வீடு அனுயாவின் அலுவலகத் தோழியின் அப்பா அம்மா வீடு என்பதாலும் அவர்களும் வெளிநாட்டில் இருக்கும் அவர்களின் மகன் வீட்டில் தங்கியிருப்பதாலும் இங்குள்ள மேல்தளம் கீழ்தளம் இரண்டுமே பூட்டிக் கிடந்தது. இவர்கள் கேட்டதும் வேறெதுவும்கூட கேட்காமல் உடனே வீட்டில் குடியேற கூறிவிட்டாள் அந்தப் பெண்.


அவளுக்கு மனதார நன்றி கூறியவர்கள் மாத வாடகையாக ஒரு தொகையை அனுயாவின் தோழி எவ்வளவு மறுத்தும் கேட்காமல் அவளிடமே கொடுத்துவிட்டப் பிறகே வீட்டின் சாவியைக் பெற்றுக் கொண்டார்கள். மாதா மாதம் வாடகையை ஏற்குமாறும் அந்தப் பெண்ணிடம் அன்புக் கட்டளை போட்ட பின்னரே வீட்டில் குடியேறினர். அவளும் இவளின் குணம் அறிந்து ஒப்புக் கொண்டாள்.


வீட்டிற்கு வந்ததும் வீட்டை ஒழுங்குபடுத்தும் வேலைகளில் ஈடுபட்டனர். அங்குள்ள தூசியும் வாசனையும் காவ்யாவுக்கு குமட்டலை ஏற்படுத்த ஓடிச் சென்று வாந்தி எடுத்தாள். அவளைக் கண்ட தோழிகள் அவளை அந்த அறையில் நிற்க வைக்காமல் அந்த வீட்டின் பால்கனியில் அமர வைத்துவிட்டு அவர்கள் வேலையைக் கவனிக்கச் சென்றனர். ஒவ்வொரு தடவையும் இவர்கள் காட்டும் அக்கறையையும் அரவணைப்பையும் எண்ணி நெகிழ்ந்தாள்.


அந்த பால்கனியின் தனிமையில் அமர்ந்திருந்த காவ்யாவுக்கு அவளின் கடந்த காலத்தின் நினைவுகள் எல்லாம் வரிசையாக அவள் கண்முன் வந்து செல்ல, கடைசியாக அந்தக் காப்பாளர் பேசிய வார்த்தைகள் அவளின் மனதில் ஈட்டியை இறக்கியதுபோல் வலித்தது.


இவளின் மொத்த வாழ்க்கையே இப்படி கேள்விக்குறியானதை எண்ணி வருந்தினாள். இந்த வாழ்க்கையே பொய்யாகிப் போனதாய் உணர்ந்தாள். இனி இந்த உலகத்தில் இருந்து என்ன செய்யப் போகிறோம்? என்ற எண்ணமும் லேசாக அவள் மனதை அச்சமயம் சூழ்ந்திருந்தது. ஆனால் எதற்காகவும் தற்கொலை செய்வது அவளுக்கு அறவே பிடிக்காத ஒன்று. இந்நிலையில் எப்படி இவளால் இந்தக் குழந்தையைப் பெற்றுக்கொள்ள முடியும்? என்ற எண்ணம் அவள் எடுத்திருந்த முடிவை சரியென திருத்தமாகச் சொல்லியது.


எதையும் துணிவாக எதிர்கொள்பவளாக இருப்பினும் தன் உயிருக்கும் மேலான கற்பை இழந்தபின் அதுவும் அப்படி ஒரு கோரமான சம்பவத்தில் என்றதால் அதன் பாதிப்பு அவளை அதிகமாகவே தாக்கியது. அதனாலே அவள் முழுவதுமாக மாறியிருந்தாள்.


எண்ண அலைகளில் சுழண்டு கொண்டிருந்தவளை அந்தப் பால்கனியில் வீசிய குளிர் காற்று சற்று திசை திருப்பியது. அந்த மாலை நேரத்தின் வாடைக் காற்றும் சூரியனின் வெப்பமும் உடலுக்கும் மனதுக்கும் சற்று இதமளிப்பதைப் போல் உணர்ந்தாள் காவ்யா.


சிறிது நேரத்தில் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு வந்து இவளை உள்ளே அழைத்துச் சென்றனர். அந்த வீடு பெரிதாகவும் நவீன வசதிகள் நிறைந்ததாகவுமே இருந்தது. மேலே உள்ள தளம் என்பதால் முன்பிருந்தவர்கள் அதிகம் உபயோகப்படுத்தவில்லை என்பது அந்த வீட்டைப் பார்த்தாலே தெரிந்தது.


ஆனால் வீட்டிற்குத் தேவையானப் பொருட்கள் எதுவும் இவர்களிடம் இல்லாததால் வீடு வெறுமையாகக் காணப்பட்டது. மறுநாள் கடைக்குச் சென்று வாங்கிவர உத்தேசித்துவிட்டு அனைவரும் உணவகத்தில் வாங்கி வந்து உணவு உண்டனர். காவ்யா அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருக்க, அவளைப் பார்த்த மற்ற நால்வரும் கவலை கொண்டனர்.


"காவ்யா! அந்த ஹாஸ்டல் வார்டன் சொன்னத நினச்சுதான் இப்ப கவலையா இருக்கியா??" என்று அனுயா வினவிட, காவ்யா மௌனத்தை பதிலாக அளித்தாள்.


"ஹே.. அதுவே ஒரு கிழம். அதுக்கு கண்ணே ஒழுங்கா தெரியாம கண்ணாடி போட்டு சுத்துது. அதுக்கு முன்னாடி போய் நின்னா என்னய நீன்னு நினைக்கும், உன்னய நான்னு நினைக்கும். அதுக்கு உன்னயபத்தி என்ன தெரியும்? அது சொன்னத நினச்சு நீ இன்னும் ஃபீல் பண்றியா??" என்று ரம்யா காப்பாளரை வாட்டி எடுத்து இவளுக்கு ஆதரவாகப் பேசினாள்.


அதைக் கேட்ட சரண்யாவும் தன்யாவும் லேசாகச் சிரித்திட, அவர்கள் மூவரையும் அடக்கினாள் அனுயா. அவர்களை அமைதியடையச் செய்துவிட்டு காவ்யாவிடம் திரும்பியவள் அவள் கண்ணங்களைப் பற்றி,


"இங்க பாரு! ஆயிரம் பேரு ஆயிரம் பேசுவாங்க. அத எல்லாத்தையும் நம்ம கேக்க ஆரம்பிச்சா நம்மாள எதுவும் செய்யமுடியாதுனு நீயே சொல்லுவேல்ல! அதான் உண்மையும்கூட. அவங்களுக்கு உன்னய பத்தி என்ன தெரியும்?! அதான் அப்டி பேசுறாங்க. ஆனா உன்கூடவே இருக்கிற எங்களுக்கு உன்னயப்பத்தி நல்லா தெரியும். நாங்க எப்போதும் உனக்குத்தான் சப்போர்ட்டா நிப்போம். உன்கூடவே இருப்போம். எத பத்தியும் தேவையில்லாம யோசிக்காம ரிலாக்ஸா இரு. ஓகேவா!" என்று கூறி அவள் சிகையைக் கோதிவிட்டாள்.


"ஆமா காவி! அனு சொல்றது கரெக்ட். உன்கூட நாங்க இருக்கோம். உன்னோட பாஸ்ட் மோசமானதுதான். ஆனா, அதுல இருந்து மீண்டு வர நீ முயற்சி பண்ணாதான் முடியும். அதுல உன்மேல எந்த தப்பும் இல்லாதபோது நீ மட்டும் எதுக்காக கஷ்டப்படணும். தயவு செஞ்சு அதுல இருந்த வெளிய வா காவி!" என்று மனதின் வருத்தத்தைக் கூறினாள் சரண்யா.


"அந்த வார்டன்கூட என்ன சொன்னாங்கனு கேட்டியா? உன்மேல தப்பில்லன்னா எதுக்கு நீ அமைதியா நிக்குற?னு கேட்டாங்க. நீ அமைதியா இருக்கிறதே உன்ன தப்பானவளா
காட்டிடும். அந்த இடத்துல எதுக்கு
நீ அமைதியா இருக்கணும்? நீ பேசிருக்கணும் காவ்யா. நீ பழைய காவ்யாவா மாறணும். அது நீ நினச்சாதான் முடியும். ப்லீஸ்டா!! இப்படியே அதுல மூழ்கிப் போய்டாம கொஞ்சம் முயற்சியாச்சும் பண்ணுடி!!" என்று தனது ஆதங்கத்தைக் கொட்டினாள் தன்யா.


இவை அனைத்தையும் கேட்டவளால் அவர்களது மனமும் இவளால் இவளுக்காக எவ்வளவு காயப்பட்டிருக்கிறது என்பது புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், இவளால் எளிதில் மறக்கக்கூடிய கொடுமையையா அவள் அனுபவித்திருக்கிறாள்! ஒரு பெண் தன் கனவிலும் நடக்க விரும்பாத கொடிய நிகழ்வு அவளுக்கு நிகழ்ந்திருக்கிறது. அந்த சம்பவத்தை எண்ணும் போதே அவள் உடல் நடுங்கியது.


அவள் பார்த்த, கேட்ட, அனுபவித்த யாவும் அவள் மனதில் நீங்கா காயமாகிவிட்டது. அதை அவளால் இப்போதைக்கு மறக்கவும் இயலாது! கடந்து வரவும் இயலாது! என்பதை அவள் ஒருத்தியால் மட்டுமே உணரமுடியும்.


ஆனால் அவள் தோழிகள் அவளுக்காக வேதனைப்படுவது அவளால் தாங்கிக்கொள்ள முடியாது. அதனால் அவர்களின் மனத் திருப்திக்காக அவர்கள் கூறியதற்கு சம்மதம் தெரிவித்தாள்.


"என்னால நடந்தத மறந்து அதுல இருந்து மீண்டு வர முடியுமானு எனக்குத் தெரியல. ஆனா, உங்களுக்காக அத முயற்சி பண்றேன். உடனே மாறுவேனானு தெரியல!" என்று காவ்யா கூறிட அதைக் கேட்டவர்கள் முகம் மலர்ந்தனர்.


"இது போதும் காவ்யா. நீ முயற்சி பண்றேன்னு சொன்னியே! அதுவே பெரிய விஷயம்தான். சீக்கிரம் எல்லாம் மாறும். நீ பழைய காவ்யாவா மாறுவனு நம்பிக்கை வந்துருச்சுமா!" என்று அனுயா கூறி அவளைக் கட்டிக் கொண்டாள். அவளுடன் சேர்ந்து மற்றவர்களும் இவளைக் கட்டிக் கொண்டனர்.


காவ்யாவின் நினைவுகள் இதேபோல் அன்று கட்டிக்கொண்டு ஆனந்தமாய் சிரித்திருந்த நாளை நினைவுகூர்ந்தது. அவளின் கண்கள் கண்ணீரைச் சிந்தியது. அதன்பின் அனைவரும் சாப்பிட்டுவிட்டு ஒன்றாக அவ்வீட்டின் கூடத்திலேயே படுத்துக்கொண்டனர். அசதியில் அனைவரும் உறங்கிவிட காவ்யாவுக்கு அன்றும் உறக்கமில்லா இரவாகிப் போனது.


மறுநாள் காலையில் வீட்டில் முறைப்படி பால்காய்ச்சினர். அதன்பிறகு கடைக்குச் சென்று வீட்டிற்குத் தேவையான அனைத்துப் பொருட்கள், உபகரணங்கள் மற்றும் மேசை, படுக்கை முதல் நாற்காலி வரை அனைத்தையும் அவர்கள் வங்கி கணக்கில் இருந்த சேமிப்புப் பணத்தை எடுத்து வாங்கி வந்தனர். அன்றைய தினம் முழுவதும் வீட்டை அலங்கரிப்பதில் செலவழிந்தது. ஐவரும் சேர்ந்து எதை எங்கு வைத்தால் அழகாக இருக்கும்? எப்படி வைக்கலாம்? என்று ஒவ்வொரு விசயத்தையும் சிந்தித்து கலந்துரையாடி அந்த வீட்டை பொருட்கள் கொண்டு அலங்கரித்தனர்.


வேலைகள் அனைத்தும் முடிவடைந்தபின் அந்த வீட்டைப் பார்க்கவே மிகவும் அழகாகவும் ரசிக்கும் விதத்திலும் நேர்த்தியாக இருந்தது. அவ்வீட்டில் இரண்டு படுக்கை அறைகள் இருந்தன. பெரிய கூடம், அளவான சமையலறை, ஒரு மிகையான அறை மற்றும் பால்கனியுடன் கூடிய பெரிய வீடாகவே இருந்தது.


இவர்கள் அனைவரும் வேலைகளை முடித்துவிட்டு மதிய உணவை உண்டுவிட்டு அசதியில் சற்று நேரம் இழைப்பாற தூங்கினர். காவ்யாவும் சோர்வில் கண்ணயர்ந்தவள் நன்றாக உறங்கிவிட்டாள். அவளை தொந்தரவு செய்யாமல் அவள் அருகில் இவர்களும் படுத்துக்கொண்டனர்.


சிறிது நேரத்தில், " என்ன விட்டுடு... என்ன விட்டுடு...ப்லீஸ்...என்ன ஒண்ணும் பண்ணிடாத...விட்டுடு..." என்று அலறும் சத்தம் கேட்டு தோழிகள் பதறி எழுந்து அமர்ந்தனர். அவர்கள் கண்ட காட்சி அவர்களை உலுக்கியது.


காவ்யாதான் தூக்கத்தில் அலறிக் கொண்டிருந்தாள். அவளது குரலில் தெரிந்த பதற்றமும் பயமும் அவர்களையே சற்று பதறச் செய்தது. அவளை தட்டி எழுப்பியபோது அவள் இன்னும் பதறி அலற விக்கித்துப் போனவர்கள் தண்ணீரை எடுத்து முகத்தில் தெளித்தனர். அதில் அவள் விழிப்பாள் என்று எண்ணியவர்களின் எண்ணம் நிறைவேறவில்லை. நிலைமைதான் மோசமானது.


பழைய நினைவுகளின் தாக்கத்தில் இருந்தவளுக்கு தண்ணீர் தன்மேல் பட்டதும் இன்னும் நடுங்கிப்போய் உடல் உதறல் எடுத்தது. அதைக் கண்டு அதிர்ந்தவர்கள் செய்வதறியாமல் திகைத்தனர்.


தன்யாவும் சரண்யாவும் மருத்துவர்களாதலால் பதற்றத்தை ஒதுக்கி வைத்துவிட்டு வேகமாக வந்து இருவரும் அவள் இருபுறம் அமர்ந்து அவளின் இரு உள்ளங்கைகளையும் பாதங்களையும் நன்றாகத் தேய்த்துவிட்டனர். அவர்களைப் பார்த்து மற்ற இருவரும் செய்ய சில நிமிடங்களில் அவள் நடுக்கம் நின்றது. ஆனால் கண்கள் திறவாமல் சோர்வில் படுத்திருந்தாள். இவளின் நிலை கண்டு நால்வரும் கண்கலங்கினர்.


காவ்யாவின் அருகிலேயே நால்வரும் அமர்ந்திருக்க, அவள் மெதுவாக கண் விழித்தாள். கண் விழித்தவள் எழுந்து அமர முகத்தை அழுந்தத் துடைத்தவள் நிமிர்ந்து அவள்முன் நால்வரும் அமர்ந்திருப்பதைப் பார்த்ததும்,


"ஏய்! எப்ப எந்திச்சீங்க? என்னையும் எழுப்பிருக்கலாம்ல! ரொம்ப நேரம் தூங்கிட்டேனா? நல்லா டயர்டா! அதான் அசந்து தூங்கிட்டேன்போல!" என்று சாதாரணமாகக் கூறிவிட்டு எழுந்து முகம் கழுவச் சென்றுவிட்டாள்.


ஆனால், இவள் பேசியதைக் கேட்டவர்களோ அதிர்ச்சியில் இருந்தனர். அவள் தூக்கத்தில் அப்படி அலறினாள். ஆனால், எழுந்ததும் எதுவும் நினைவில்லாமல் எப்படி போகும்? அதுவும் இவ்வளவு சாதாரணமாகப் பேசிச் செல்கிறாள்! என்ற குழப்பமும் கவலையும் அவர்களைத் தொற்றிக் கொண்டது.


அப்போதே அவர்களுக்கு அவள் பட்ட கஷ்டமும் அவள் மனம் படும் பாட்டையும் அவர்கள் தெரிந்துகொண்டனர். அவளால் இதில் இருந்து மீண்டு வருவது அவ்வளவு எளிதல்ல! என்பது புரிந்தது. அவள் ஆழ்மனதில் அந்த சம்பவம் ஆறாக் காயமாக இருப்பதாலேயே அவளின் ஆழ்ந்த உறக்கத்திலும் அவளை மிரட்டுகிறது. அப்படி இருக்க அவளால் எப்படி இத்தனை நாட்களும் உறங்க இயலும்? அதனாலேயே அவளாக இதுவரை உறங்கியதில்லை என்பதையும் புரிந்துகொண்டனர்.


ஒருவகையில் அவளுக்கு எழுந்ததும் எதுவும் நினைவில் இல்லாமல் போனதுகூட நல்லதுதான் என்று எண்ணிக் கொண்டனர். ஆனால், தன்யாவுக்கு காவ்யாமீது சந்தேகம் எழுந்தது. எவ்வளவு ஆழ்ந்த உறக்கத்தில் அலறினாலும்கூட அதன் தாக்கம் எழுந்த பின்னும் இருக்கும் என்பதை அவள் அறிவாள். அப்படி இருக்க காவ்யாவுக்கு எதுவும் நினைவில்லாதது அவள் இதை மறைக்கிறாளா?? இல்லை எதுவும் மனநலப் பிரச்சினையா?? என்று சிந்திக்கலானாள்.


இங்கே குளியலறைக்கு வந்தவள் கண்ணாடியில் தன்னையே பார்த்து அழுதாள். எங்கே தான் இன்னும் அந்த தாக்கத்திலேயே இருப்பதை அறிந்தால் தோழிகள் மனம் வருந்துவார்கள் என்பதற்காகவே
அவள் எழுந்ததும் எதுவும் நினைவில்லாதது போல் காட்டிக் கொண்டாள். அது அவர்களுக்கு சற்றேனும் நிம்மதியைத் தரும் என்று எண்ணினாள்.


அவளின் கசப்பான சம்பவங்கள் அடிக்கடி உறக்கத்திலும் இம்சை செய்வதாலேயும் அதை அறிந்தால் இவர்கள் இன்னும் பதறுவார்கள் என்ற பயத்திலேயுமே பாதி இரவுகள் தூங்கா இரவாகிப்போயின. என்றேனும் ஒருநாள் தெரியவருமே! என்று அஞ்சியவளுக்கு இன்று
தெரிந்ததும் சமாளிக்க வழியறியாமல் பொய் கூறி அவர்களைச் சமாளித்துவிட்டாள்.


ஆனால், அவளின் மனதைச் சமாளிப்பது இன்னும் கடினமான விசயம். ஆதலால், மனதைத் தேற்றும் வழியில் விழிகளை மூடி அழுது தீர்த்தாள். சிறிதுநேரம் கழித்து முகம் கழுவியவள் முடிந்தவரை முகத்தைச் சாதாரணமாக வைத்துக்கொண்டு வெளியே வந்தாள்.


அவள் வந்ததும் அவளைக் கண்டவர்கள் அவள் முகம் வாடியிருப்பதைப் பார்த்தனர். அவளை அருகில் அழைத்தவர்கள், "ஏன் முகம் ரொம்ப டல்லா வீங்கின மாறி இருக்கு?" என்று கேட்டனர்.


அவளோ, "ரொம்ப நேரம் தூங்கினேன்ல! அதான் முகம் வீங்கின மாறி டல்லா இருக்கு. கொஞ்சநேரம் ஆனா அதுவே சரியாயிடும்" என்று கூறி சமாளித்தாள். அவர்களும் அதை ஏற்றுக் கொண்டு அவள் சகஜநிலையைக் கண்டு அமைதியடைந்தனர். ஆனால் தன்யாவுக்கு இன்னும் சந்தேகம் அதிகமானது. அதை இப்போதைக்கு அவளிடம் கேட்க வேண்டாம் என்று முடிவு செய்து விட்டுவிட்டாள்.


மறுநாள் அனுயாவின் தோழியான அந்தப் பெண்ணுக்கு நன்றி கூறும் வகையில் சிறிய விருந்து ஏற்பாடு செய்து அவளை அவள் குடும்பத்துடன் அழைத்திருந்தனர். அந்தப் பெண்ணும் அவள் குடும்பத்தோடு மகிழ்வுடன் வந்து இவர்களுடன் கலந்துகொண்டாள்.


அவளையும் அவள் குடும்பத்தையும் அன்போடு வரவேற்றனர். வீட்டைப் பார்த்தவர்கள் ஒரு நொடி மெய்மறந்து யோயினர். "வீட்டை ரொம்ப அழகா டெகரேட் பண்ணிருக்கீங்க! நீங்களா பண்ணீங்களா? யாரயாச்சும் டெகரேடர்ஸோட ஐடியாவா?" என்று பாராட்டிக் கேட்டாள், அனுயாவின் தோழி, கீதா.


"டெகரேடர்ஸ்லாம் வரல. நாங்கதான் ஒவ்வொருத்தரா ஒருஒரு ஐடியாவா திங்க் பண்ணி ஆர்கனைஸ் பண்ணோம். அரேஞ்ச் பண்றதுக்கு மட்டும் ஆள் வந்தாங்க. அவ்ளோதான்!" என்று அனுயா கூறிட, அதைக் கேட்ட கீதாவும் அவள் கணவர், அரவிந்தும் இவர்களை மனதாரப் பாராட்டினார்கள்.


அவர்களுடன் வந்திருந்த அவர்களது நான்கு வயது மகன், கவினும் அந்த வீடு மிகவும் பிடித்ததுபோல் சுற்றி சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தான். சுற்றிப் பார்த்தவன் ஒவ்வொன்றையும் கைகாட்டி அது என்ன? இது என்ன? என்று கேள்விகளை அடுக்க முதலில் ஆசையாய் பதில் சொல்லியவர்கள் அவனது கேள்விக் கணைகள் அதிகமாகிக் கொண்டே போக ஒவ்வொருவரும் பதில் சொல்லித் தவித்தனர். இதற்குமேல் முடியாது! என்ற நிலை வந்ததும் அனைவரும் அவர்களை உணவு உண்ணக் கூட்டிச் சென்றுவிட்டனர்.


சிரித்துப்பேசி உரையாடியபடியே உணவு அருந்தியபின் அனைவரும் பால்கனியின் முன் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தனர். அந்த குட்டிப் பையன் அங்குமிங்கும் ஓடியாடி விளையாட அவன்பின் தன்யாவும் ரம்யாவும் பாதுகாப்பாய் சுற்றி வந்து அவனுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். சரண்யா அதை வேடிக்கைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள். கீதாவின் கணவன், அரவிந்த் ஒரு ஓரத்தில் அமர்ந்து அலைப்பேசியில் வேலை சம்பந்தமாக உரையாடிக் கொண்டிருந்தான். அனுயா அவள் தோழி, கீதாவுடன் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தாள்.


நீண்ட நாட்களுக்குப் பின் அவர்கள் சிரிக்கும் சத்தம், அந்த வீட்டில் நிரம்பியிருந்தது. அதைப் பார்த்த காவ்யாவுக்குத் தன்னையறியாமல் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. அது ஆனந்த கண்ணீரா? இல்லை, குற்ற உணர்ச்சியா? என்று ஆராய்ந்து பார்க்க இயலாமல் அவள் மனம் தவித்தது. அவர்களின் மகிழ்ச்சி அவளின் மனதிற்கும் நிம்மதியைத் தந்தது.


ஆனால், இதில் எதிலும் காவ்யாவால் முழு மனதுடன் கலந்துகொள்ள முடியாமல் அமைதியாகவே இருந்தாள். இப்பொழுதும் பால்கனியில் சென்று நின்று இரவு வானில் ஒளிரும் நிலவினை வெறித்துக் கொண்டிருந்தாள். தன்னால் தன் தோழிகளும் வருந்துவதை நினைத்துக் கண்ணீர் சிந்தினாள்.


இவளின் மௌனத்தைக் கவனித்த கீதாவும் அனுயாவிடம் கேட்டுவிட்டாள். "வந்ததுல இருந்தே கவனிச்சேன். அவங்க ஏன் சைலண்டாவே இருக்காங்க?" என்று கேட்டிட, அனுயா சொல்வதறியாது விழித்தவள், பிறகு சுதாரித்துக்கொண்டு, "அவ கொஞ்சம் அப்செட்டா இருக்கா. எல்லாம் வர்க் ரிலேட்டடாதான். அத முடிக்கிறவர அவளுக்கு மனசு இங்கயே இருக்காது. அதான் யோசனையிலேயே இருக்கிறா" என்று கூறி சமாளிக்க, கீதாவும் ஆமோதித்து வேறு பேச்சை பேசத் தொடங்கினர்.


"அப்றம், ஆபிசுக்கு எப்ப வருவடி? லாங்க் லீவா போய்ட்டிருக்கே!" என்று அனுயாவிடம் கேட்டாள்.


"பாக்கலாம். காவ்யாவுக்கு ஆக்ஸிடெண்ட் ஆனதுல இருந்து அவள கவனிக்கிறதால ஆபிஸ் போக முடியல. பட், எதுவும் இம்பார்ட்டண்ட்னா வருவேன்னு சொல்லிருந்தேன்ல! இப்போதைக்கு அப்டி எதுவும் இல்லைல! அதான் அப்டியே வீட்லயே இருந்துட்டேன். இப்பதான் ரெகவர் ஆக ஆரம்பிச்சிருக்கா. அவ நல்லபடியா குணமானதும் வந்துடுவேன்" என்று கூறி முடித்தாள்.


இவர்களின் நட்பைக் கண்டு அவளுக்கும் அதிசயமாகத்தான் இருந்தது. இவர்கள் நட்பைத் தாண்டி குடும்பமாக வாழ்வது அவளுக்கும் புரிந்தது.


"நீ எப்ப வேணா வா. ஆனா, நம்ம எம்டி உன்னய இரண்டு மூணு தடவ விசாரிச்சாரு. எதுக்கு வரல? என்னாச்சு அவங்களுக்கு? எதுவும் பிராப்ளமா? அப்டி இப்டினு.. அதுக்கப்றம் உன்னோட ஈமெயில காட்டினதுக்கப்புறம் தான் அமைதியானாரு" என்று சொல்லியதைக் கேட்டு அவளைக் குழப்பத்துடன் பார்த்தாள்.


"என்னடி சொல்ற? எம்டி சாரா கேட்டாரு?" என்று அனுயா சந்தேகத்துடன் கேட்க அவளும், "ஆமாடி. சாரேதான். என்னடி? அவருக்கும் உனக்கும் இடையில எதாச்சும் நடக்குதா?" என்று கிண்டல் செய்து சிரித்தாள்.


"ஏய்! அப்டிலாம் எதுவும் இல்லடி. அவர் எல்லார்மேலயுமே கேரிங்கா தான இருப்பாரு. அதனால அப்டி கேட்டுருப்பாரு. நீயா எதயும் தப்பு தப்பா யோசிச்சுட்டு இருக்காத!" என்று அவளுக்குப் பதில் கூறினாள்.


"என்னமோ சொல்ற, நம்புற மாறி இல்லைனாலும் நம்புறேன்" என்று கேலியாகக் கூறி அவளை கிண்டல் செய்தாள், கீதா.


"ஐயோ...நிஜமாவே அப்டி ஒண்ணும் இல்ல. இருந்தா உங்க கண்ணுல இருந்துலாம் தப்பிக்க முடியுமா?" என்று இவளும் இடக்காகக் கூறிட,
"அதுவும் கரெக்ட் தான்!" என்று கீதாவும் ஆமோதித்து இருவரும் சிரித்தனர்.


பின்பு சிறிது நேரம் கழித்து கீதா அவள் குடும்பத்துடன் கிளம்ப அவர்களைத் தோழிகள் வழியனுப்பி வைத்தனர்.


இங்கே ராணா தன் நண்பர்களுடன் அமர்ந்திருக்க அவனது சிந்தனை வேறெங்கோ இருந்தது. அதைக் கவனித்த அவனது நண்பர்கள்,


"டேய்! வரவர இவன் போக்கே சரியில்லடா... இப்பலாம் முன்னாடி மாறி நம்மகூட டைம் ஸ்பெண்ட் பண்றது இல்ல. நம்மகிட்ட சொல்லாமயே எங்கயோ போறான் வாரான்.. " என்று நாகவ் ராணாவைப் பார்த்துக் கொண்டே நண்பர்களிடம் குறைகூற, அதைக் கேட்டவர்கள் ஒற்றைப் புருவம் தூக்கி இவனை ஏற இறங்க பார்த்தனர்.


அதைத் திரும்பிப் பார்த்தவன், "என்னங்கடா?? என்னைய மொறக்கிறீங்க?" என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டான்.


அதற்கு, "பின்ன? என்னமோ புதுசா நடக்குறமாறி சொல்ற! அவன் எப்போதுமே இப்படித்தான! எப்போதும் அவனுக்கு பிசினஸ்தான். அதபத்தியே நினப்பான். சுத்துவான். நம்மகிட்ட என்னக்கி சொல்லிருக்கான். நம்மளும் என்னக்கி கேட்ருக்கோம். சொல்ல வந்துட்டான்.." என்று ராம் நாகவை வாற, அவன் முகத்தைத் தொங்க போட்டான்.


"ஆனா, நாகவ் சொல்றதும் சரிதான்டா. அவன் எப்போதும் பிசினஸ்னு இருந்தாலும் நம்மகூட இருக்கும்போது வேற எந்த நினப்பும் இல்லாம இருப்பான். ஆனா, இப்ப கொஞ்சநாளா நம்மகூடயே ஜாய்ன் பண்றதுல்ல. பண்ணாலும் யோசனையாவே இருக்கான். இவன் நிஜமாவே சரியில்லடா! என்னமோ இருக்கு!" என்று விஜய் கூறியதைக் கேட்டு மற்றவர்களும் சிறிது சிந்திக்க ஆரம்பித்தனர்.


"ஆமாடா! நீ சொல்றதும் கரெக்ட் தான். இப்பதான் எனக்கும் புரியுது" என்று ராம் ஆமோதித்து பேசிட நாகவ், "இதத்தான்டா நானும் சொன்னேன் லூசுப் பயலுகளா!!" என்று பொய்க் கோபத்தில் திட்டினான்.


அதைக் கேட்டு மற்றவர்கள் சிரித்திட, "சரிடா! சரிடா! விடு" என்று அவன் தோளில் கைப்போட்டு சமாதானப்படுத்தினான் ராம். "போனாப் போது பொழச்சு போ! ஒரு போலீசா இருந்துட்டு இதக்கூட கண்டுபிடிக்க முடியல...உன்னய நம்பி இந்த ஊரையே கொடுத்துருக்காங்க பாரு! எல்லாம் நேரம்டா..!" என்று ராமை வாறினான், நாகவ்.


அதைக் கேட்டு பொய்க் கோபம் காட்டிய ராம், நாகவ் அப்போதும் பழிப்புக் காட்டி நிற்பதைக் கண்டு சிரித்துவிட்டான். "டேய்! விடுடா! ரொம்பத்தான் ஒட்டுற.." என்று ராம் சரணடைந்துவிட, நாகவும் சிரித்துவிட்டு அமைதியானான்.


இவர்களின் கூத்தைப் பார்த்து பிரபவ் மற்றும் விஜய் சிரித்துக் கொண்டிருக்க, இது எதுவுமே தெரியாமல் இன்னும் சிந்தனையில் மூழ்கியிருந்தான் ராணா. சிரித்துக்கொண்டே தற்செயலாக இவனைப் பார்த்த பிரபவ் அதிர்ந்தே விட்டான். இவ்வளவு கவனமின்றி இவன் என்றும் இருந்ததில்லை என்பதை பிரபவ் நன்கு அறிவான். சுற்றியும் பார்வையை எப்போதும் வைத்திருப்பவன் இன்று இப்படி இருப்பது அவன் சிந்தையை நெறுடியது.


அவனிடமே போய் கேட்டுவிட எண்ணி தன் இருக்கையில் இருந்து எழுந்தான். அதனைப் பார்த்த மற்றவர்களும், "டேய்! இவன் இன்னுமாடா இந்த உலகத்துக்கு வரல!! ஒருவேள லவ்ல விழுந்துட்டானோ??" என்று விஜய் சந்தேகத்தில் கூறிட, அதைக் கேட்ட மற்றவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு சிரித்தனர்.


"அடேய்! யாரப்பாத்து என்ன சொல்லணும்னு இல்லையா..இவன பாத்து...அதுவும் லவ்வு...அதுவும் இவன் விழுறானா...?" என்று சிரித்துக்கொண்டே நாகவ் கூறிட, அதைப் பார்த்து பிரபவ்வும் சிரித்துவிட்டான்.


"அவன் இருக்குற விரப்புக்கு அவன பாக்குற பொண்ணுங்களே பதறி ஓடிடும். இவன்கிட்ட வந்து ஆபிஸ் விசயமா பேசினாலே மிரட்டுற மாறிதான் பாப்பான். இதுல இவன எந்த பொண்ணுங்க லவ் பண்ணும். அதுங்களே லவ் பண்ணாதபோது இவன் அதுக்குமேல...இவனாவது லவ் பண்றதாவது..போடா!!" என்று ராம் கூறிக் கொண்டிருக்க, இந்த முறை முகத்தை தொங்க போடுவது விஜயின் முறையானது. ஆனால், இதைக் கேட்டபின் பிரபவ்வுக்கும் சிறு சந்தேகம் வந்தது.





காவ்யாவின் நிலை மாறுமா?? அவள் வாழ்வில் மாற்றம் வருமா?? ராணாவின் சிந்தனை எதை பற்றியது?? பிரபவ்வின் சந்தேகம் உண்மையாகுமா??




❤வருவாள்❤...
 
அவள் 7


ஆனால் இதைக் கேட்டபின் பிரபவ்வுக்கும் சிறு சந்தேகம் வந்தது.
"டேய்! இவன் லவ் பண்ணாம இருந்துருக்கலாம். ஆனா, எப்பவும் இருக்க முடியுமா? இதுவரை அவனுக்கான பொண்ண பாக்காம இருந்திருக்கலாம்! ஒருவேள இப்ப பாத்துருக்கலாம்ல!" என்று தன் சந்தேகத்தைக் கூறிட அவனை குழப்பத்துடன் பார்த்தார்கள்.


"என்னடா சொல்ற? ஏதோ கதைல வர மாதிரி சொல்ற! வரவர நீயும் மாறிட்டு இருக்கியே! சரியில்லயே..." என்று நாகவ் சந்தேகப் பார்வையுடன் அவனைப் பார்த்துக் கூறிட, அவனை பொய்யாக முறைத்தான், பிரபவ்.


"டேய்! ஒண்ணும் புரியலடா! நீ சொல்றது" என்று ராம் பிரபவ்விடம் கேட்க, அவனுக்கு விளக்கமளித்தான்.


"என்ன சொல்ல வரேன்னா..இவன் லவ் பண்றானா இல்லையான்னு நமக்குத் தெரியாது. ஆனா, இவன் இப்படி டிஸ்டர்ப்டா இருக்கிறதுக்கு ஏதோ ஒரு காரணம் இருக்கு. அது ஒரு பொண்ணாவும் இருக்கலாம்னு சொல்றேன்" என்று விளக்கிட, அதைக் கேட்ட ராம், "ஓஓஓ.." என்று சொன்னான்.


இதைக் கேட்ட நாகவ் ராமிடம், "இப்ப மட்டும் புரிஞ்சுதா?" என்று கேட்டிட, ராம் பல்லைக் காட்டியபடி, "ஈஈஈ இல்ல!" என்று கூறி சிரித்திட, மற்றவர்களும் சிரித்தனர்.


"அதான!! உனக்கு இதுலாம் புரிஞ்சாதான ஆச்சரியம். சரியான காக்கி போட்ட சாமியாருடா நீ! லவ்வும் வராது! லவ்வ பத்தி பேசினாலும் புரியாது உனக்கு! பின்ன எதுக்கு நீ இதுல கேள்வி கேக்குற?" என்று விஜய் ராமை கழுவி ஊத்தினான்.


"டேய்!! விடுங்கடா! எனக்கு இது புரியவே வேணாம். ஆள விடுங்க! நான் இப்டியே இருந்துக்கறேன். முதல்ல அவன பாருங்க! இங்க போரே நடக்குது! ஆனா, அவன் எதுவும் தெரியாம இருக்கான் பாரு!" என்று ராணாவைக் காட்டி திசை திருப்பி தப்பித்தான், ராம்.


அவர்களும் ராணாவைப் பார்த்து அவனிடம் சென்று, அவன்முன் கையை நீட்டி சொடுக்கிட, தன்னிலைப் பெற்றவன் அவர்களை என்ன? என்பதைப் போல் பார்த்திட, அவர்கள் இவனை முறைத்தனர்.


"என்னங்கடா? என்னய மொறச்சிட்டு இருக்கீங்க?! எதுக்கு?" என்று கேள்வி கேட்டிட, அவர்கள் நால்வரும் தலையில் அடித்துக் கொள்ளாத குறையாகப் பார்த்தனர்.


"டேய்...சத்தியமா நாங்க எதுக்கு மொறைக்கிறோம்னு கூடவா தெரியல உனக்கு??" என்று அப்பாவியாகக் கேட்டான், நாகவ்.


"அடச்சீ! தெரியாமதான கேக்குறேன். சொல்லுங்கடா!" என்று இவனும் அவர்களைக் கேள்வியாகப் பார்த்தான்.


"எப்டி தெரியும்? நீதான் இந்த உலகத்துலயே இல்லயே..! இங்க உன்னய வச்சு ஒரு பட்டி மன்றமே நடந்து முடிஞ்சாச்சு! ஆனா, இது எதுவுமே தெரியாத அளவுக்கு நீ ஏதோ உலகத்துல இருந்துட்டு, நாங்க வந்து மொறைக்கிறதுகூட எதுக்குனு தெரியாம கேட்குறியேடா!!? இதெல்லாம் ரொம்ப டூமச்டா!!" என்று ராம் பொய்யான ஆதங்கத்தில் பேசித் தீர்த்தான்.


இதைக் கேட்டதும் விசயம் புரிந்த ராணா அமைதி காத்திட, அவனைப் பார்த்து, "டேய் ராணா!! சீரியஸா எதுவும் பிரச்சினையா?? பிசினஸ்ல எதுவும் பிராப்ளம் மாறி இல்லையேடா! தென், எதுக்கு இப்டி யோசனைல இருக்க?" என்று உண்மையாகக் கேட்டான், பிரபவ்.


"அப்டிலாம் எதுவும் இல்லடா! பிரபா" என்று சுருக்கமாகக் கூறி முடிக்க, அதனை ஏற்க அவனது மனம் மறுத்தது.


"எப்பவுமே நீ இவ்ளோ சீரியஸா யோசனையில இருக்க மாட்ட! அப்டி இருந்தா அதுக்கு பின்னாடி ஏதோ பெரிய விசயம் வச்சுருப்ப. இப்டித்தான் பிசினஸ் எதிரிங்கள அழிக்கிறதுக்கும் யோசிப்ப. ப்ளான் போடுவ. ஆனா, அதெல்லாம் ஜஸ்ட் எ மினிட்ல பண்ற ஆளு நீ. இப்ப அப்டி தெரியலயே..இது ஏதோ வேற தாட் மாறி இருக்கே!" என்று அவனது செயல்பாட்டை நன்கறிந்து அவனுக்கு பொறுமையாக விளக்கிக் கூறிக் கேட்டுக் கொண்டிருக்க, விஜய் இடைமறித்தான்.


"நீ ஏன்டா இவ்ளோ சுத்தி வளச்சு கேக்குற?? நேரா கேளுடா. டேய்! ராணா, நீ லவ் பண்றியோ! அதனாலதான் இப்டி யோசனையிலேயே இருக்கியோனு பிரபாக்கு சந்தேகமாடா. நீயே என்னனு விசாரிச்சிக்கோ! நான் நாளைக்கு வரேன்டா. பாய்டா!" என்று கூறி விஜய் விலகிச் செல்ல எத்தனிக்க, அதனைப் புரிந்துகொண்ட மற்ற இருவரும் இவனை பிடித்துக் கொண்டனர்.


அவர்களை விஜய் பாவமாகப் பார்த்திட, "என்னடா! நீ மட்டும் நைஸா எஸ்கேப் ஆக பாக்குறியா! முடியாது..விடமாட்டோம்! என்ன நடந்தாலும் சேர்ந்தே தான் இருக்கணும். ஓகேவா?" என்று அவனிடம் கிண்டலாகக் கூறி சிரித்தனர், ராமும் நாகவ்வும்.


அதைப் பாவமாகப் பார்த்தவன், "டேய்! எல்லாரும் சேர்ந்து இருக்க
இங்க என்ன கல்யாணமாடா நடக்கப்போது?! அவனுக்கு கோபம் வந்தா கருமாதி பண்ணிடுவான்டா. உங்க மூணு பேருக்கு எதுவும்னா ஹாஸ்பிடல் கூட்டி போக ஆள் வேணும்ல! அதுக்குத்தான் நான் இப்ப போறேன். அவன் காண்டாகுறதுக்குள்ள விடுங்கடா!!" என்று பயந்துபடி கூறினான், விஜய்.


"அது அவன்கிட்ட லவ்வ பத்தி பேசுமுன்ன யோசிச்சிருக்கணும். பிரபாவே மெதுவா பேசி என்னன்னு கேட்ருப்பான். அவன் ஏதோ பேசி முடிக்கிறதுக்குள்ள நீயா கிளப்பி விட்டுட்டேல!! இப்ப பேசி ஒண்ணும் ஆகப்போறதில்ல. இருடா கம்முனு!!" என்று ராம் கூறி அவனைப் பிடித்து வைத்துக் கொண்டான்.


இங்கே ராணா கோபம் கொள்வான் என்று எண்ணியவர்களுக்கு அவனது அமைதி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அவர்கள் இவனையே பார்த்துக் கொண்டிருக்க, அவனோ,


"அப்டிலாம் எதுவும் இல்லடா. எனக்கு அந்த பேர கேட்டாலே பிடிக்காதுனு உங்களுக்கே தெரியும்ல! அப்றம் எதுக்கு இப்டி ஒரு கேள்வி?" என்று அமைதியாகத் தொடங்கியவன் வார்த்தையில் காட்டத்தைக் காட்டி கூறி முடித்தான்.


அதைக் கேட்டவர்கள் அமைதியாகிட, "அப்ப என்னதான்டா விசயம்? சொன்னாதான தெரியும்!" என்று பிரபவ் கேட்டான்.


"ஹே! பெருசா ஒண்ணும் இல்ல. இது ஜஸ்ட் வேற ஒரு விஷயம். அத டைம் வரும்போது நானே உங்ககிட்ட சொல்றேன். அதுவர என்னய எதுவும் கேக்காதீங்க. டென்ஷன் ஆகாம ரிலாக்ஸ்டா இருங்கடா! ச்சில் ப்ரோஸ்!!" என்று அவன் மிகச் சாதாரணமாகக் கூறி சகஜமாக பேச, அதைக் கேட்டவர்களும் அந்த விசயத்தை பெரிது படுத்தாமல் அவனுடன் சேர்ந்து அந்த தருணத்தை சந்தோசமாகக் கழித்தனர்.


****************************************


ராணாவின் தந்தையின் தொழில் பங்கீட்டாளர்களாக இருந்தவர்கள் நான்கு பேரும் இவரும் நெருங்கிய நண்பர்களாக ஆகி ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர். எந்த அளவுக்கு என்றால்? ஒரே குடும்பமாக வாழ்ந்தவர்கள் தங்களுக்குப் பிறந்த புதல்வர்கள் சசோதரர்களாகவே வளரவேண்டும் எனக் கருதி ஐவர் புதல்வர்கள் பெயரின் பின்னும் தேவ் என்ற இரண்டாம் பெயரைச் சேர்த்து வைத்தனர். ஆதலால் இளையவர்கள் ஐவரும் வளரும்போதே நண்பர்களாக இருந்தாலும் சகோதரர்களின் பிணைப்பு அவரிகளிடம் இருந்தது.


பிரபவ் தேவ், கட்டட கலை அவன் வேட்கையான போதிலும்(passion) புகழ் பெற்ற தொழிலதிபதிர்கள் வரிசையில் இவனது பெயரும் உண்டு. சிறு வயதிலேயே தாய் தந்தையின் அன்பில் திழைத்து வளர்ந்தவன். இவன் கல்லூரி படிப்பு முடியும் சமயத்தில் தந்தை விபத்தில் இறந்துவிட, மொத்தமாக இடிந்துபோன அவனுக்கு ஆறுதலாக இருந்து அவனைத் தேற்றியது அவனது தாயும் அவன் நண்பர்களும் தான். அவர்கள்தான் இவன் உயிரென நினைப்பவன்.


கம்பீரமான தோற்றமும் அழகும் கொண்டவன். புன்னகை ததும்பும் முகம். அனைவரின் மனதையும் தன் அன்பினால் வெல்பவன். அன்பான இதயமும் எதையும் பொறுமையுடன் சிந்தித்து செயல்படும் புத்திசாலித்தனமும் கொண்டவன்.


ஆனால், தாய்க்கும் நண்பர்களுக்கும் ஏதேனும் என்று வந்தால் பொறுமை காற்றில் பறந்துவிடும் வாய்ப்புகள் அதிகம். அனைவரையும் மதிக்கும் குணம். ஆனால், இவனின் கோபம் தூங்கும் எரிமலை போல்தான். எதிரிகளிடம் எப்போது வெடிக்குமென்றே தெரியாது. மொத்தத்தில் ராணாவுக்கு நேரெதிர். ஆனாலும் இவனுக்கு ராணாவைத்தான் அதிகம் பிடிக்கும்.


ராம் தேவ், உதவி காவல் ஆணையர்(ACP) பொறுப்பில் இருக்கிறான். காவல் அதிகாரிக்கேற்ற கட்டுக்கோப்பானத் தோற்றமும் ஆளை எடைபோடும் பார்வையும் கொண்டவன். கோபக்காரன். நண்பர்களிடத்தில் பாசக்காரன். தந்தையையும் நண்பர்களுமே அவனுக்கு உலகம். காதல், திருமணம் இவற்றில் ஆர்வம் இல்லாதவன்.


இவன் தாய் உடல்நலம் சரியில்லாமல் சில வருடங்கள் முன் இறந்துவிட, அவனுடைய தந்தை மன வருத்தத்தில் வியாபாரப் பொறுப்புகளை இவனிடம் ஒப்படைக்க முடிவு செய்தார். ஆனால், வியாபாரத் தொழிலில் நாட்டம் இல்லாததாலும் காவல்துறை மீது கொண்ட ஆர்வத்தாலும் அதை ஏற்க மறுத்து காவல்துறை அதிகாரி ஆனான். இவனது சார்பில் இவன் தந்தையின் தொழிலில் இவனது நண்பர்களே உதவியாக இருந்தனர்.


நாகவ் தேவ், வசீகரத் தோற்றமும் எப்போதும் புன்னகை பூக்கும் முகமும் கொண்டவன். கோபம் வருவது அரிது. எல்லாரிடமும் சகஜமாக பழகும் குணமுடையவன். படித்ததும் பிடித்ததும் மென்பொறியியல் தான். தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர். தந்தை தாயின் ஒரே செல்ல மகன். நண்பர்களுக்காக எதையும் செய்பவன். அவர்களை இவனில் பாதியாய் நினைப்பவன்.


விஜய் தேவ், ஆணழகன். வசீகரிக்கும் புன்னகையால் அனைவரின் மனதையும் எளிதில் வென்றிடுவான். எல்லாரிடமும் எளிதில் நட்பு பாராட்டும் குணம். முக்கியமாக பெண்களிடம்.


விரும்பியே மருத்துவம் படித்து இருதய நிபுணர் ஆனான். சொந்தமாக மருத்துவமனையும் நிறுவி மக்களுக்கு முடிந்தவரை சேவை செய்து வருகிறான். பல வருடங்களுக்கு முன்பே தாயை இழந்தவன் தந்தையின் செல்லத்திலே வளர்ந்ததால் எந்தக் கவலையும் பொறுப்பும் இல்லாத இளைஞனாய் மாறியிருந்தான். நண்பர்களை மட்டுமே உறவென நினைத்து வாழ்பவன்.


தேவ் க்ரூப் ஆஃப் கம்பெனீஸ் என்பது இவர்கள் ஐவரின் சொந்த பங்கீட்டிலும் தொடங்கப்பட்டது தான். இதன் காரண கர்த்தா ராணா தான். இதற்கு யோசனை தந்து நிறுவியனும் இவன்தான். இதில் அனைத்துத் துறைகளிலும் நிறுவனத்தை நிறுவி ஐவரும் பொறுப்பேற்றனர்.


ராணா ஆடைகள் சார்ந்த நிறுவனத்தையும், பிரபவ் கட்டுமான நிறுவனத்தையும், நாகவ் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தையும், விஜய் மருத்துவமனையையும், ராமின் சார்பில் விளையாட்டுக்குத் தேவையானப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனத்தையும் நிறுவி வெற்றிக்கரமாக நிர்வகித்து வருகின்றனர்.


நண்பர்களே சகோதரர்களாக ஒற்றுமையுடனும் தொழிலில் வெற்றிக்கரமாகவும் திகழ்வதைக் கண்டு அனைவரும் ஆச்சரியப்படும் அளவுக்கு வாழ்ந்து வந்தனர். இவர்கள் ஐவரும் குணத்தில் வேறுபட்டவர்களாக இருந்தபோதிலும் மனதினாலும் நட்பினாலும் அன்பினாலும் ஒன்றுபட்டிருந்தனர். ஒருவரை ஒருவர் எப்போதும் எந்நிலையிலும் விட்டுக்கொடுத்திடாதவர்கள்.


*******************************************


மறுநாள் தன் நிறுவனம் சென்ற ராணா, அலுவலர் ஒருத்தியை அழைத்து சில விஷயங்களைக் கூறி அதை முடிக்கும்படி கட்டளையிட்டு அனுப்பினான்.


புது வீட்டிற்கு வந்து ஒரு வாரம் ஆகியிருக்க அவர்களுக்கு இந்த வீடு நன்றாகவே பழகிவிட்டிருந்தது. இந்த வாரம் முழுவதும் காவ்யாவுக்கு குமட்டல் அதிகமாக இருந்தது. மருந்து சாப்பிட்டுவர சற்று குறைந்திருந்தது. ஆனால், அவளுக்கு மனபாரம் அதிகமாகியிருந்தது.


வீட்டுக்குள்ளயே அடைந்திருப்பது கூண்டுக்குள் அடைபட்டிருப்பது போல் தோன்றியது அவளுக்கு. அவளால் அவள் தோழிகளும் அதே நிலையை அனுபவிப்பதை அவளால் இதற்குமேலும் தாங்க முடியவில்லை.


காலைப்பொழுது, தோழிகள் ஐவரும் சாப்பிட்டுவிட்டு அவரவர் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது தன்னுடைய ஈமெயில்களைப் பார்த்துக் கொண்டிருந்த அனுயா, காவ்யாவின் மெயில்களையும் பார்க்க, ஒருநொடி அப்படியே நிறுத்திவிட்டாள்.


அதன்பிறகு, தன்னை சுதாரித்துக் கொண்டு காவ்யாவுக்கு வந்த மெயிலை அவர்களை அழைத்துக் காட்டிட, அவர்களும் சங்கடத்திற்கு உள்ளாகினர். என்ன? என்று காவ்யா அருகில் வந்து விசாரிக்க, அவளிடம் மெயிலைக் காட்டினர். அது அவள் பணிபுரியும் நிறுவனத்தில் இருந்து வந்த செய்தி. காவ்யாவை விரைவில் வந்து பணியைத் தொடர அழைப்பு விடப்பட்டிருந்தது. அதற்கான கால அவகாசமாக இன்னும் இரண்டு நாட்கள் கொடுக்கப்பட்டிருந்தது.


அதைப் படித்த காவ்யாவின் மனதினுள் ஒரு நிம்மதி பரவியது. ஆனால், அவள் தோழிகளோ வருத்தத்தில் இருந்தனர். அவள் என்ன முடிவெடுக்கப் போகிறாள்? என்று அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.


"என்னடி! இப்டி அனுப்பிருக்காங்க? இப்பவே வர சொல்லிருக்காங்க! அப்டி என்ன தல போற காரியமாம்?! உனக்கு உடம்பு சரியில்லனு தான் எப்பவோ மெயில் அனுப்பியாச்சுல! இப்ப இப்டி உடனே வர சொல்லிருக்காங்க!" என்று ரம்யா பொறிந்து தள்ளிக் கொண்டிருக்க, அவளை மற்றவர்கள் விநோதமாகப் பார்த்தனர்.


"அடியே!! அவ லீவ் எடுத்து கிட்டதட்ட ஒன்ற மாசம் ஆகுது. பின்ன வர்க் பண்ற கம்பெனில கேக்க மாட்டாங்களா? அவங்க கரெக்டா தான் அனுப்பிருக்காங்க. நம்மதான் மறுபடி பெர்மிஷன் கேட்டு மெயில் அனுப்ப மறந்துட்டோம். நீ விட்டா அவங்கமேல கேஸே போடுவ போலயே!" என்று சரண்யா நிதர்சனத்தைக் கூற, மற்றவர்களும் ஆமோதித்தனர்.


"எப்படியோ! இப்ப வர சொல்லிருக்காங்க. அதுக்கு என்ன பண்ணலாம்னு பாருங்க! இப்ப இவ இருக்க நிலமையில ஆபீஸ் அனுப்புறது சரியில்லனு தோணுது" என்று தன்யா கூற, அதை அனைத்தையும் கேட்டுக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்த காவ்யாவைப் பார்த்த அனுயா,


"நீங்களா எதுக்கு இவ்ளோ யோசிச்சுட்டு இருக்கீங்க? முதல்ல காவ்யா என்ன நினைக்கிறானு கேட்போம். அப்றமா எதுனாலும் பேசி முடிவு பண்ணிக்கலாம்" என்று கூறி காவ்யாவிடம் திரும்பினாள். மற்றவர்களும் அவளைக் கேள்வியாகப் பார்த்தனர்.


அமைதியாய் இருந்த காவ்யா அவர்களை நிமிர்ந்து பார்த்துப் பேசத் தொடங்கினாள். "நான் வேலைக்குப் போறேன்! நாளைக்கே!" என்று கூறுவதைக் கேட்டு அவர்களும் அதிர்ந்தனர்.


"என்னடி சொல்ற!? நாளைக்கேவா?! உன்னய வேலைக்கு அனுப்பவா வேணாமானு நாங்க பேசிட்டு இருக்கோம்! நீ இப்டி சொல்ற?! இப்ப நீ இருக்க நிலமையில எதுக்கு?" என்று அக்கறையாக ரம்யா கேட்டிட,


"எனக்கு ஒண்ணும் இல்லடி. நான் வீக்கா இருக்கேன் இருக்கேன்னு சொல்லி இப்டியே வீட்டுக்குள்ளயே அடஞ்சிருந்தா என் மனசும் சேர்ந்து வீக்காயிடும். ஏற்கனவே நான் ரொம்ப வீக்காயிட்டேன். இதுக்கு மேலயாச்சும் கொஞ்சம் வெளிலவர நினைக்கிறேன். வேலைக்குப் போறேன்டி. ப்லீஸ்!" என்று பொறுமையாகக் கூறி முடித்தாள்.


அவள் கூறியதைக் கேட்ட மற்றவர்களும் சிறிது யோசித்தனர். அதன்பிறகு, அவள் வேலைக்குச் செல்ல அவர்களும் சம்மதித்தனர். இதனால் அவள் மனநிலை சற்று மாறுபட வாய்ப்பிருக்கிறது மற்றும் இது அவளுக்கும் ஒரு மாறுதலாக
இருக்கும் என்பதற்காக மட்டுமே சம்மதித்தனர்.


"சரிடி! நீ இவ்வளவு தூரம் சொல்ற. அதுக்காக சம்மதிக்கிறோம்"


"ஆனா நிறைய கண்டிஷன்ஸ் இருக்கு! அதுக்கு ஒத்துகிட்டாதான் விடுவோம்!"


"ஆமா! உன்னய நீ அங்க நல்லா பாத்துக்கணும்! ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணி வேல பாக்கக்கூடாது!"


"இனி நீ உன் ஸ்கூட்டில போக வேணாம். கார் அரேன்ஜ் பண்ணிக்கலாம். ஓகேவா!" என்று நால்வரும் வரிசையாகக் கூறியதைக் கேட்டு ஒருநொடி வாயைப் பிளந்தேவிட்டாள், காவ்யா.


"அடிப்பாவிங்களா!! எந்த கேப்லடி இவ்வளவும் யோசிச்சீங்க!? வரிசையா இவ்ளோ ரூல்ஸா?!!" என்று அதிர்ச்சியில் கூறிட, அவளைப் பார்த்துப் புன்னகைத்த நால்வரும்,


"அதெல்லாம் அப்டித்தான்! ஸேப்டி ஃபஸ்ட் டா செல்லம்! சோ, அதுலாம் நாங்க எப்பவுமே மைண்ட்ல வச்சிருப்போம்" என்று சரண்யா இல்லாத காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டு கூறிட, அதைப் பார்த்து அனைவரும் சிரித்துவிட்டனர்.


"இதுக்கேவா..இன்னும் நிறைய இருக்கு! இதுக்கு நீ ஃபஸ்ட் ஓகே சொன்னாதான் அடுத்தடுத்து ப்ரொசீட் பண்ண முடியும்" என்று ரம்யாவும் கூறிட பெருமூச்சொன்றை விட்டாள், காவ்யா. அவர்களது அன்பில் மூச்சடைத்துதான் போனாள்.


"இங்க பாருங்க! நீங்க சொல்ற எல்லா கண்டிஷன்களையும் நான் ஃபாலோ பண்ணுவேன். ஓகேவா! ஆனா ஒண்ணு மட்டும் வேணா! கார்லாம் வேணாம்! அதுக்காக நான் ஸ்கூட்டில போகமாட்டேன். நான் பஸ்ல போயிக்கிறேன். ஓகேவா!" என்று கூறிமுடித்து அவர்களைப் பார்க்க,


"என்ன காவி இது? பஸ்லாம் செட்டாகாது இப்ப உனக்கு. ஏற்கனவே உனக்கு வாமிட் வருது. இதுல பஸ்ல போனா இன்னும் மோசமாயிடும். அதெல்லாம் வேணாம்!" என்று அனுயா உறுதியாக மறுத்திட, அவளை சமாதானம் செய்தாள், காவ்யா.


"இங்க பாரு அனு! என்னவோ நான்தான் உலகத்துலயே ப்ரெக்ணன்டா இருக்க மாறி நீங்க நடந்துக்கிறீங்க. ஏன் என்னமாறி இருக்க எத்தனையோ பேரு பஸ்ல போகலயா?? அதனால எதுவும் ஆகிடாது. அப்படியே ஆனாலும்கூட நான் பாத்துக்கறேன். இதுக்கு மேலயும் நீங்க என்னய பத்தியே எப்பவும் யோசிச்சிட்டே கவலப்பட்டுட்டு இருக்காதீங்கடி. ப்லீஸ்!!" என்று அவள் கூறியதை கேட்ட நால்வரும் அவளை முறைத்தனர்.


"ஏய்! என்னடி? முதல்ல பேசுனதுகூட ஏத்துக்கலாம். ஆனா, கடைசில என்ன சொன்ன? உன்னய நினச்சு கவலப்படக்கூடாதா!? அத சொல்றதுக்கு உனக்கு பர்மிஷன் இல்ல. புரியுதா!" என்று ரம்யா கோபமாகக் கூறிட,


"ஆமா! ஒருவேள நாங்க உன் நிலமையில இருந்தாக்கூட நீ இப்டித்தான் பேசுவியா? எங்கள கவனிக்காம இருப்பியா? சொல்லு!" என்று தன்யா கேட்டிட, தலைகுனிந்த காவ்யா,


"இல்ல!" என்று மெதுவாகத் தலையசைத்துக் கூறினாள்.


"அப்றம்!! எங்கள மட்டும் எதுக்கு அப்டி இருக்க சொல்ற? உனக்கு மட்டும் எங்கமேல பாசம் அக்கறை எல்லாம் இருக்கலாம். ஆனா, எங்களுக்கு இருக்கக்கூடாதோ?" என்று அனுயா சற்று கோபமாகப் பேசியதைக் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்பட்டனர். ஏனெனில், அனுயா சாதாரணமாக கோபம் கொள்ளும் ஆளில்லை. ஆனால், நட்பென்று வந்துவிட்டால் அவள் மாறிவிடுவாள். காவ்யாவின் வார்த்தைகள் ஏற்படுத்திய காயமே அவளை இப்படி கோபம் கொள்ளச் செய்திருக்கிறது என்பதை அனைவரும் புரிந்துகொண்டனர்.


"சாரிடி! நான் அப்டி மீண் பண்ணி சொல்லல. நீங்க ரொம்ப பயப்பட வேணாம்னு தான் அப்டி சொன்னேன். சாரிடி. ப்லீஸ்..." என்று அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்கும் அவளை அவர்களால் எப்படி மன்னிக்காமல் இருக்கமுடியும்?! அவளைக் கட்டிக்கொண்டனர்.


"நீ இப்டி பேசினதுல பழைய காவ்யா தெரிஞ்சா. ரொம்ப நாளைக்கப்றம் இப்டி நீ தைரியமா பேசி பாக்குறோம். சீக்கிரமே நீ பழையபடி மாறிடுவனு நம்பிக்கை வந்துடுச்சு. நீ நினச்ச மாறியே பஸ்லயே போ. இப்ப சந்தோசமா?!" என்று அனுயா கூறிட, காவ்யாவும் புன்னகைத்து தலையை ஆட்டினாள்.


"ஆனா..இனி இப்டி பேசக்கூடாது! பேசுன... அப்றம் என்ன பண்ணுவேன்னே தெரியாது! பாத்துக்க!" என்று ரம்யா பொய்யாக மிரட்ட,


"ஓஓ..என்ன பண்ணுவீங்களாம் மேடம்?" என்று சரண்யா ஆர்வமாக கேட்க,


"அதான் தெரியாதுனு சொன்னேன்ல! அப்றம் என்ன கேள்வி?! அவளே சும்மா இருக்கா! நீ எடுத்துக் கொடுக்கிறியா?!" என்று சரண்யாவிடம் பொய்க் கோபத்தில் பொறிந்து தள்ளினாள், ரம்யா. அதைக் கண்ட அனைவரும் சிரிக்க, நிலைமை சற்று சீரானது.


மாலை வேளையில் தோழிகள் ஐவரும் சேர்ந்து பால்கனியில் அமர்ந்து தேனீர் அருந்திக்கொண்டே பேசிக் கொண்டிருந்தனர். காவ்யா அதிகம் பேசாமல் அவர்கள் பேசுவதை கவனித்த வண்ணம் இருந்தாள். காலையில் அவளிடம் இருந்த சிறய உற்சாகம் இப்போது காணப்படவில்லை. இதை தன்யா கவனித்துக் குறித்துக் கொண்டாள்.
தோழிகள் சிறிது நேரத்திற்குப் பின் வீட்டுக்குள் செல்லப்போக, காவ்யா அங்கேயே சிறிதுநேரம் இருப்பதாகக் கூற, அவர்களும் சரி என்றுவிட்டுச் சென்றனர், தன்யாவைத் தவிர.


தன்யாவும் உடனிருப்பதாகக் கூறி அவர்களை அனுப்பி வைத்தாள். இங்கே காவ்யா அவளை சாதாரணமாகப் பார்த்துவிட்டு வானத்தையும் மரங்களையும் வேடிக்கைப் பார்க்கத் தொடங்க, தன்யா தன் பேச்சை ஆரம்பித்தாள்.
காவ்யா! என்றழைக்கத் திரும்பியவள், தன்யாவைப் பார்க்க,


"இன்னும் எத்தன நாளைக்கு எங்கள
ஏமாத்துறேனு உன்ன நீயே கஷ்டப்படுத்திக்கப் போற??" என்று அவளைப் பார்த்துக் கேள்வி கேட்க, காவ்யாவோ புரியாமல் அவளைப் புருவம் சுருக்கிக் கேள்வியாய்ப் பார்த்தாள்.


"நான் என்ன சொல்றேன்னு உனக்குப் புரியலையா?? இல்ல புரிஞ்சும் புரியாத மாறி பாக்குறியா காவி?!" என்று தன்யா கேட்க,


"ஹே! தனு, என்னடி இப்டி சொல்ற? நிஜமாவே எனக்கு நீ என்ன சொல்றனு புரியல! நான் எதுக்கு உங்கள ஏமாத்தப்போறேன்?! நீங்கதானடி எனக்கு எல்லாமே!! அப்டி இருக்கும்போது உங்கள எதுக்கு ஏமாத்தணும்?!" என்று கவலையாகக் கேட்டிட,


"அதத்தான் நானும் கேட்குறேன்! காவி. எங்கள ஏமாத்த நினைக்கலைன்னா எங்ககிட்ட இருந்து எதுவும் மறைக்கவும் கூடாதுல! அப்ப எதுக்காக உன்னோட கஷ்டத்த உனக்குள்ளயே மறச்சு வச்சுக்கற? நாங்க வருத்தப்படக்கூடாதுனா?" என்று தன்யா அவளைப் பார்த்துக் கேட்டிட , அவள் மௌனம் காத்தாள்.


"என்ன நினைச்சிட்டுருக்க நீ? நீ சொல்லாம எல்லாத்தையும் உனக்குள்ளயே வச்சுகிட்டா எங்களால கண்டுபிடிக்கவே முடியாதுன்னா? எனக்கு எல்லாம் தெரியும்!" என்று சற்று கோபமாகக் கூறிட, காவ்யா அவளை அதிர்ந்து நோக்கினாள்.


"ஆமா! நீ அன்னைக்கு தூக்கத்துல அலறுனியே! எழுந்தப்றம் உனக்கு எதுவும் நியாபகம் இல்லாதமாறி
காட்டிகிட்ட. ஆனா, உனக்கு நியாபகம் இருந்துச்சுன்னும் தெரியும்! நீ பாத்ரூம்குள்ள போய் அழுததாலதான் உன் முகம் வீங்குச்சுன்னும் தெரியும்!" என்று கூறியதைக் கேட்டவளோ அவளை அதிர்ச்சியுடன் நோக்கினாள்.







காவ்யா வேலைக்குச் செல்வதாக எடுத்த முடிவு சரியா?? அவளுக்கு அங்கே ஏதேனும் ஆபத்து காத்திருக்குமா?? ராணா திட்டம் எதுவும் தீட்டுகிறானா??




❤வருவாள்❤...
 
அவள் 8


காவ்யா தன்யாவை அதிர்ச்சியுடன் நோக்கியதைப் பார்த்த தன்யாவும்,


"அப்றம், எதுக்கு உன்கிட்ட எதுவும் கேட்கலனு நினக்கிறியா? அப்ப ஏற்கனவே கவலைல இருந்த உன்னய இன்னும் கஷ்டப்படுத்த வேணாம்னுதான் கேக்கல. அதுமட்டுமில்ல, நீ எங்ககிட்ட உன் கடந்தகாலத்த மறக்க முயற்சி பண்றமாறி நடிச்சிட்டு இருக்கிறதும் நல்லாவே புரியுது, காவி!" என்று தன்யா கூறிட, காவ்யா கலங்கிய கண்களோடு வேறுபுறம் திரும்பிக் கொண்டாள்.


தன்யா அவளைத் தன்புறம் திருப்பி,
"ஆனா, எதுக்காக இப்டிலாம் மறைக்கணும்னு உன்னய இன்னும் காயப்படுத்திக்கிற? இப்பக்கூட நீ வேலைக்குப் போகணும்னு முடிவு எடுத்ததுகூட எங்களுக்காகத்தான? நாங்க உன்னயவே நினச்சு கஷ்டப்படக்கூடாதுனுதான? சொல்லு காவி! சொல்லு!!" என்று அவளைப் பிடித்து உலுக்க, காவ்யாவோ மொத்தமாக உடைந்து அழத் தொடங்கிவிட்டாள். அவளைத் தன்னோடு சேர்த்தணைத்து தன்யா ஆறுதல்படுத்த முயன்றாள்.


"பாரு! நான் சொன்னதையே உன்னால தாங்கிக்க முடியல. அப்படி இருக்கும்போது எதுக்காக எங்ககிட்ட இருந்து மறைக்கணும்?! உனக்காக நாங்க கவலப்படுவோம்தான். ஆனா, அதுக்காக நீ இப்படி மறச்சுவச்சு வேதனைப்படுறது தெரிஞ்சா மட்டும் நிம்மதியா இருந்திருவோமா என்ன? உன்னால முடியாத விசயத்த முடியலனு சொல்லாம, எங்களுக்காக ஏத்துகிட்டு உன்னையும் மாத்திக்க முடியாம எங்ககிட்டயும் காட்டிக்க முடியாம எதுக்கு இவ்ளோ சங்கடப்படுற? காவி.." என்று அவளின் தலையை நீவியப்படியே கூறிட, காவ்யாவும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தாள்.


பின், நிமிர்ந்து தன்யாவைப் பார்த்து, "என்னால இத்தன நாளும் நீங்க எவ்ளோ வருத்தப்பட்டுட்டீங்க!! தினமும் என்னால நீங்க கஷ்டப்படுறீங்க! உங்களோட சந்தோசமே போய்டுச்சு! அத நீ என்னைக்காச்சும் யோசிச்சிருக்கியா? நீங்க மனசார சிரிச்சே பல நாள் ஆகுது! இதுலாம் யாருக்காக? எனக்காகத்தான! நான் கஷ்டப்படுறேன், வேதனைப்படுறேன்னா நான் பாதிக்கப்பட்டுருக்கேன். அது என்னோட விதின்னு ஆயிடுச்சு. ஆனா, எனக்காக நீங்களும் கஷ்டப்படும்போது நிஜமாவே இப்டி ஒரு நட்பு, உறவு கிடச்சதுக்கு எனக்கு ரொம்ப சந்தோசமாவும் பெருமையாவும் இருக்கு. ஆனா, அதுக்காக எப்பவும் நீங்க இப்டியே இருக்கிறது என்னால தாங்கிக்க முடியல! அதான் உங்கள மேலும் வருத்தப்பட வைக்கக்கூடாதுனு எனக்குள்ளயே மறச்சிகிட்டேன். ஆனா, அது மட்டும் காரணம் இல்ல. என்னால நடந்த எதையும் வெளிய சொல்லவும் முடியல. அதபத்தி பேசப்பேச அது மறக்காம இன்னும் அதிகமா நியாபகத்துலதான் வரும். அதனாலயும்தான். உங்கள நான் என்னைக்குமே நான் பிரிச்சி பாத்ததுல்லடி. புரிஞ்சிக்கோடி தனு!" என்று கூறி கலங்கிட, அவளை அணைத்துக் கொண்டாள், தன்யா.


"அப்றம், நான் வேலைக்குப் போகணும்னு நினச்சதும் பாதி உங்களுக்காகன்னா பாதி எனக்காகவும்தான்டி. இங்கயே அடஞ்சுகிடந்து எனக்கே மனசெல்லாம் பாரமாயடுச்சு. அப்படியிருக்க, உங்களுக்கு எப்டி இருக்கும்?னு யோசிச்சேன். அதுக்காகவும் சேர்த்துதான் இப்டி முடிவெடுத்தேன். எனக்கும் மாறுதலா இருக்கும்னு தான் முடிவு பண்ணேன்டி. உங்கள காயப்படுத்த இதெல்லாம் பண்ணல. எனக்கு நீங்கதான்டி எல்லாம். நீங்களும் என்கூட சேந்து உடஞ்சுபோய் நிக்கிறத என்னால பாக்க முடியாதுடி. அதான் அப்டி செஞ்சேன்" என்று கெஞ்சலாகக் கூறி அவளைப் பார்க்க, தன்யாவும் கண்கலங்கிப் போனாள்.


"நாங்க உன்னய ஆறுதல்படுத்த முயற்சி பண்றோம். ஆனா, நீ எங்கள சந்தோசமா வச்சுக்க பாக்குறியேடி! ஆனா, எங்களோட சந்தோசம் உன் சந்தோசத்துலதான் இருக்கு. அதுக்காக நீ நடிக்காத! கொன்னுடுவேன்! நீ நீயாவே இருடி! நாங்க சந்தோசமா இல்லாட்டியும் உன்கூட சேந்து உடஞ்சி போயிட மாட்டோம்டி. உன்னையும் அப்டி போக விடமாட்டோம். புரியுதா!?" என்று எடுத்துக் கூறிட, காவ்யாவின் இதழில் சிறு புன்னகை வந்து போனது.


"அப்றம்! இந்த விஷயம் நம்ம மத்த ஃப்ரண்ட்ஸ்கும் தெரியுமா?!" என்று சற்று பயத்தில் காவ்யா கேட்டிட, அவளைப் பொய்யாக முறைத்த தன்யா,


"இன்னும் இந்த புத்தி போகுதா பாரு! ஏன்? அவங்களுக்கும் தெரிஞ்சா என்ன? இப்பதான மறைக்காதனு சொன்னேன்!" என்று கூறி அவளைப் பொய்யாக முறைத்திட,


"அப்டி இல்லடி! அவங்களுக்குத் தெரியலைனா அத அப்படியே விட்டுடுடி. அவங்களுக்கும் தெரிஞ்சா இன்னும் கஷ்டப்படுவாங்க. பின்ன நான் நினச்சமாறிதான் ஆகும். அப்றம், எப்டி என்னால எல்லாத்தையும் சொல்லமுடியும்? ப்லீஸ்டி...அவங்ககிட்ட சொல்லாத!" என்று காவ்யா கெஞ்சி கேட்டிட, அவளுக்கு சம்மதம் தெரிவித்தாள், தன்யா.


"எனக்கு எல்லாமே தெரியும்டி. அட்லீஸ்ட் என்கிட்டயாவது ஷேர் பண்ணு எல்லாத்தையும். ஓகேவா!" என்று தன்யா கேட்டிட, காவ்யா அவளை அணைத்துக் கொண்டாள்.


மறுநாள் காலை தோழிகள் ஐவரும் பரப்பரப்பாகக் கிளப்பிக் கொண்டிருந்தனர். காவ்யா நீண்ட நாட்களுக்குப் பிறகு வேலைக்குச் செல்வதால் என்ன எடுக்கவேண்டும்? எது கொண்டு செல்லவேண்டும்? என்பது அனைத்தையும் மறந்திருக்க, அவள் தோழிகளே ஒவ்வொன்றாய் எடுத்துக் கொடுத்து தயார் செய்து கொண்டிருந்தனர், ஒரு பள்ளி செல்லும் குழந்தையைக் கிளப்புவதுபோல. காவ்யா தன்னையே திட்டியபடி அமைதியாக இருந்தாள்.


"வேலைக்குப் போணும்னு சொன்னா போதுமாடி! அதுக்கு என்னன்ன வேணும்னு எடுத்து வைக்க வேணாமா? அதுகூட வேணாம். என்னென்ன தேவைனுகூடவா மறந்துபோவ!" என்று சரண்யா காவ்யாவை கலாய்த்துக் கொண்டிருக்க,


"அடியே! அவ வேலைக்குப் போயே ரொம்ப நாளாகுதுல! அதான் மறந்துருப்பா. அதுக்காக என் செல்லத்த எதுக்கு கலாய்க்கிற?" என்று ரம்யா பதிலுக்குப் பேச, இவர்கள் இருவரும் சண்டை போடுகிறோம் என்ற பெயரில் விளையாடிக் கொண்டிருந்தனர்.


அவர்களைப் பார்த்து கடுப்பான தன்யா, "அடியே! ஓடிடுங்க! ஒண்ணு ஹெல்ப் பண்ணுங்க. இல்லன்னா கம்முனு உக்காருங்க. அதவிட்டுபுட்டு டைம்பாஸ் பண்ண சண்ட போட்டு விளையாடுறீங்களா? லூசுங்களா..!!" என்று இருவரையும் கழுவி ஊத்த, தங்கள் குட்டு வெளிப்பட்டதை உணர்ந்த ரம்யாவும் சரண்யாவும் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு அமைதியாக அமர்ந்துகொண்டனர்.


அவர்களைப் பார்த்து இவர்களும் சிரித்துவிட்டனர். காவ்யா வேலைக்கு இன்றே செல்வது அவள் தோழிகளையும் வேலைக்கு அனுப்புவதற்காகத்தான். ஆனால், அவர்களோ சில நாட்கள் கழித்து செல்வதாகக் கூறிவிட்டனர். காரணம் கேட்டால்,


"நீ ஃபஸ்ட்டு ஆபீஸ்கு போ. உனக்கு செட்டாக எப்படியும் கொஞ்ச நாளாகும். அதுவரைக்கும் உன்னய பாத்துக்கணும்ல. அதுக்கப்றம் நாங்க போய்க்கிறோம். உனக்கு செட்டாகலனா உடனே சொல்லிடு. வீட்டுலயே இரு. போகவேணாம். நாங்களும் கூடவே இருந்துப்போம்ல. அதுக்குத்தான்!" என்று அவர்கள் கூறியதைக் கேட்டு இவளின் எண்ணம் பொய்த்துப் போனதை நினைத்து இவளால் வருந்த மட்டுமே முடிந்தது.


ஒருவழியாக, காவ்யா அவள் தோழிகளின் அன்புக் கட்டளைகளையும் அறிவுரைகளையும் கேட்டு முடித்துக் கிளம்பி நிறுவனத்திற்கு வந்து சேர்ந்தாள். வெகு நாட்களுக்குப் பிறகு அவளின் நிறுவனத்தில் கால் வைப்பது புதுவிதமான உணர்வையும் புத்துணர்வையும் தந்தது. லிஃப்டில் நுழைந்து அவள் அலுவலகம் இருக்கும் தளத்தின் எண்ணை அழுத்தி, அவள் தளத்திற்கு வந்து அலுவலகம் சென்றாள்.


அவளைப் பார்த்த அனைவரும் அவளிடம் வந்து விசாரித்தனர். அவள் விபத்துக்கு உள்ளாகியதாகவும் அதனால்தான் இந்த நீண்டகால விடுப்பு என்றும் கூறினாள். அனைவரும் அவளிடம் நலம் விசாரித்துவிட்டுச் சென்று அவரவர் இடங்களில் அமர்ந்தனர். இவளும் சென்று இவளின் கேபினில் அமர்ந்துகொண்டாள். பல நாட்களுக்குப் பிறகு, அதுவும் அவளின் கசப்பான சம்பவத்திற்குப் பிறகு முதல்முறையாக வெளியே வருகிறாள். இப்படி பலர் முகத்தைப் பார்க்கிறாள். அவளுக்கு சற்று சங்கடமாக இருந்தாலும் மனதுக்கு சற்று மாறுதலாக இருந்தது.


அவளின் இடத்தில் அமர்ந்து சில கோப்புகளைப் பார்க்க ஆரம்பித்தாள். அவளுக்கானப் பெரிய வேலைகளோ! ப்ராஜெக்டோ! எதுவும் அன்று இல்லாததால் அவள் சாதாரண வேலைகளைப் பார்க்க அன்றைய நாள் முடிந்தது.


வேலைகள் இல்லாவிட்டாலும் அவள் தோழிகளின் அழைப்புக்குப் பதில் சொல்லும் வேலை இருந்துகொண்டே இருந்தது. காலை இடைவேளை, உணவு இடைவேளை என்று இடைவேளைகளில் எல்லாம் இவளுக்கு அழைத்து நலம் விசாரித்துக்கொண்டே இருந்தனர். இவளும் பதில் சொல்லியே களைத்துவிட்டாள். அன்றைய நாள் முடிந்து வீட்டுக்கும் வந்து சேர்ந்துவிட்டாள்.


குமட்டல் வராம இருக்க மருந்து சாப்பிட்டதால் நிறுவனத்தில் வாந்தி வராமல் இருக்க, வீட்டுக்குள் வந்ததும் சிறிதுநேரம் அசதியில் அமர்ந்தவள், உடனே ஓடிச்சென்று வாந்தியெடுத்தாள். முகம் கழுவிவிட்டு வெளியே வந்தமர்ந்தாள். இவளுக்குக் குடிக்க பழரசம் கொண்டு வந்து குடிக்கவைத்து சிறிதுநேரம் ஓய்வெடுக்க விட்டனர்.


இரவு உணவு உண்ணும்போது, "இன்னைக்கு ஒருநாள்லயே இப்டி டயர்டாகுற! எப்டிடி தினமும் போய்ட்டு வருவ?" என்று அனுயா அக்கறையாய் வினவ,


"அதெல்லாம் பழகிடும் அனுமா! ஃபர்ஸ்ட் டேல்ல, அதான் இப்டி! போகப்போக சரியாகிடும்" என்று கூறி சமாதானப்படுத்தினாள்.


"ஓகே!! அப்றம், ஃபர்ஸ்ட் டே எப்டி போச்சு? ரொம்ப நாள் கழிச்சு ஆபீஸ் போயிருக்க! எதாச்சும் மாறியிருக்கா? இல்ல அப்டியேதான் இருக்கா? புதுசா யாரும் ஜாய்ன் பண்ணிருக்காங்களா?" என்று ஆர்வமாக ரம்யா கேட்டிட,


"அப்டிலாம் பெருசா எந்த சேஞ்சும் இல்ல ரம்மி! புதுசா சிலர் ஜாயின் பண்ணிருக்காங்க. ஆனா, அதபத்திலாம் நான் ரொம்ப விசாரிக்கல" என்று காவ்யா கூறிட, ரம்யாவின் முகம் தொங்கிப்போனது.


அதைக்கண்ட சரண்யா, "என்னடி ரம்மி! புதுசா யாரும் அங்க வந்தா என்ன வரலன்னா உனக்கென்னடி?? ஆள் எப்டி இருக்கான்? நல்லா இருக்கானா? அப்டினு கேக்கத்தான நினச்ச?...பல்பா??!! ஹாஹா.." என்று கிண்டல் செய்து சிரிக்க, கடுப்பில் இருந்தவள் எழுந்து இவளைத் துரத்த ஆரம்பித்தாள். சரண்யாவும் ஓட்டம்பிடிக்க அந்த கூடத்தையே சுற்றி சுற்றி வந்தனர்.


"அடியே! நீ பெரிய நல்லவளாட்டம் பேசுற! இன்னைக்கு என்கிட்ட இதபத்தி பேசிட்டுருந்ததே நீதானடி!! இப்ப என்னய மட்டும் ஓட்டுதியா?" என்று சொல்லிக்கொண்டே துரத்த, ஈஈஈஈ என்று இளித்துக்கொண்டே சரண்யா ஓடினாள். இதைப் பார்த்து மற்றவர்கள் சிரித்தனர்.


"அடியே! போதும்டி! சாப்பிட்டுட்டு இருந்தது மறந்துபோச்சா? இதுங்க அக்கப்போறு தாங்கல!! வாங்கடி! பக்கிங்களா!" என்று தன்யா அவர்களை அழைத்திட, அமைதியாக வந்தமர்ந்து எதுவும் தெரியாதது போல் சாப்பிட ஆரம்பித்தனர். அதைப் பார்த்த அனுயாவும்,


"பண்றதெல்லாம் பண்ணிட்டு முகத்த மட்டும் அப்பாவியா வச்சுக்கிறது!" என்று கூறி சிரித்திட, அவர்களும் ஈஈஈஈ என இளிப்பதைப் பார்த்து அனைவரும் சிரித்துவிட்டனர்.


ராணாவின் கட்டளைப்படி காவ்யாவுக்கு இமெயில் அனுப்பியபின் அவளும் வேலையில் வந்து சேர்ந்துவிட்டது தெரிந்தபின் அவனின் முகத்தில் ஒரு வெற்றிப் புன்னகை அரும்பியது. அவளின் வாழ்வில் இனி நடக்கப்போகும் அனைத்திலும் இவன் இருக்கப்போவதை எண்ணிக் ஆனவத்தில் திளைத்துக் கொண்டிருந்தான். அவளுக்கு நரகத்தைக் காண்பிக்க ஆயத்தமானான்.


மறுநாள் அலுவலகத்தில் அந்நிறுவனத்தின் தலைமை அலுவலர்கள் ஒரு மீட்டிங் நடத்த, காவ்யாவையும் அழைத்து அவர்கள் செய்யப்போகும் ப்ராஜெக்டைப் பத்தி விளக்கினர். இது மிகப்பெரிய ப்ராஜெக்ட் என்றும் இதை மிக வெற்றிக்கரமாக முடிக்கவேண்டும் என்பதால் அதிகம் கவனம் செலுத்தி வேலை செய்யவேண்டும் என்றும் விளக்கிக் கூறி அதைப்பற்றி பேசிவிட்டு அனைவரும் களைந்தனர்.


இது ஒரு ஆடை சம்பந்தமான நிறுவனம் என்பதால் ஆடை வடிவமைப்பு மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்த ப்ராஜெக்டிலும் ஆடை வடிவமைப்புதான் மிக முக்கிய பங்கு வகித்ததால் காவ்யாவின் முக்கியத்துவம் அதில் அதிகமாக இருக்க நேர்ந்தது. ஆனால், முதல் இரண்டு மூன்று நாட்கள் அவளால் வேலையில் சரியாகக் கவனம் செலுத்த இயலவில்லை. சிந்தையை ஒருநிலைப்படுத்தி வேலையில் இறங்குவது சிரமமாக இருந்தது. இதனால் அவளுடன் பணிபுரிபவர்களும் இவளைக் குறைகூற ஆரம்பித்தனர்.


வீட்டிலும் யாரிடமும் இதை பகிராமல் தனியே வருந்தினாள். ஆனால், தன்யா இவளைப் பற்றி அறிந்ததால் இவளிடம் வந்து விசாரிக்க, இவளும் அவளின் நிலையைக் கூறினாள். தன்யாவும் ஆறுதல்படுத்தி நம்பிக்கை அளித்திட சற்று தேறினாள். இப்படியே நாட்கள் செல்ல, ஒருவாரம் கழித்தே அவளால் வேலையில் கவனம் செலுத்த முடிந்தது. அதை அப்படியே முன்னேற்றி தன் வேலைகளில் கவனத்தைச் செலுத்தி முழு மனதோடு செயல்பட்டாள். சொல்லப்போனால்! அவள் வேலைசெய்யும் நேரத்தில் அவள் கவலைகள் அனைத்தையும் மறந்து செயல்படத் துவங்கினாள்.


அதனால் ப்ராஜெக்டில் அவளின் பங்கை அவள் சிறப்பாகச் செய்துகொண்டிருந்தாள். அவளைக் குறைகூறியவர்கள் அனைவரும் இப்பொழுது அவளிடமே வந்து தங்கள் சந்தேகங்களையும் தீர்த்துக் கொண்டனர். இதனால் காவ்யாவுக்குள்ளும் சிறு மாற்றம் தென்பட்டது. அவள் கடந்த கால நினைவுகளை மறக்கமுடியும் என்ற நம்பிக்கை அவளுக்குள்ளும் வந்தது.


ஆனால், நாம் நினைப்பது அனைத்தும் நடந்துவிடுவது இல்லையே!! அவள் எதை மறக்கமுடியும் என்று நம்புகிறாளோ! அந்த கெட்ட சொப்பணத்துக்குள்தான் இப்பவும் இருக்கிறாள்! என்பது அவள் இன்னும் அறியாத உண்மை. அவளின் வருகையை அறிந்ததில் இருந்து அவளைத் தினமும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்துக் கொண்டும் விசாரித்துக் கொண்டும் இருந்தான், ராணா.


அன்று அவ்வளவு காயப்படுத்திய பின்னும் ஒரு பெண்ணால் அந்தக் கொடிய நிகழ்வைக் கடந்து இவ்வளவு சிறிய காலத்தில் மறுபடியும் வேலையில் இவ்வளவு ஈடுபாடு காட்டமுடியுமா?!! என்று சற்று வியந்தே போனான். ஆனால், அவள் அன்றே அவனிடம் இருந்து தப்பியவள் ஆயிற்றே! என்ற எண்ணம் அவன் சிந்தையில் தோன்ற பல்லைக் கடித்தவன்,


"நீ அப்பவே தப்பிச்சிருக்கனா.. நீ ரொம்ப தைரியசாலிதான்! இருந்தாலும் நான் பண்ண டார்ச்சர உன்னால அவ்ளோ சீக்கிரத்துல மறக்கமுடியாதுனு தப்புக் கணக்கு போட்டுட்டேன். பரவால்ல..நீ அந்த டார்ச்சர மறந்தாலும் என்னய அவ்ளோ சுலபமா மறந்திருக்கமாட்ட! மறக்கவும் விடமாட்டேன்!! நீ ரொம்ப ஸ்ட்ராங்க்ல்ல!! அதனால உன்னோட ப்ளஸ் எல்லாத்தையும் மைனஸ் ஆக்கி, உன்னய ஒன்னுமில்லாம ஆக்குனதுக்கு அப்றம் வீக்காக்குறேன்" என்று மனதில் நினைத்துச் சூளுரைத்தான், ராணா.


இது எதுவும் தெரியாமல் காவ்யா அவள் வேலையில் மும்முரமாக இருந்தாள். இவளின் இந்த மாற்றத்தை அவளின் தோழிகளும் கவனித்தனர். அவளும் தினமும் அங்கே அவள் புரியும் வேலைகளையும் ப்ராஜெக்ட் பற்றியும் சிறு மகிழ்வுடன் கூறுவதைக் கேட்டு நிம்மதி அடைந்தனர்.


இவளுக்கும் இவள் வேலையும் போக்குவரத்தும் நன்றாகப் பழகிவிட்டதால், அவள் தோழிகளையும் அவர்கள் நிறுவனத்திற்குச் செல்ல அன்பு கட்டளையிட்டாள். அவர்களும் இவளின் உடல்நலமும் சற்று தேறியிருக்க, செல்ல ஒப்புக்கொண்டனர். தோழிகள் ஐவருமே பணியில் சேர்ந்து நிறுவனம் செல்வதனால் அவர்களுக்குள்ளும் ஒரு மாறுதல் தெரிந்தது. ஒரு புத்துணர்ச்சி கிடைத்தது.










காவ்யாவைப் பழிவாங்க ராணா போடும் திட்டம் என்ன?? தோழிகளின் புதிய மாற்றம் நிலைத்திடுமா??







❤வருவாள்❤...
 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom