Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


GY NOVEL இருளில் தொலைந்த ஒளி அவள் - Tamil Novel

Status
Not open for further replies.
அவள் 9


காவ்யா வேலைக்கு வந்து ஒருமாதம் ஆகியிருக்க, அவர்களின் ப்ராஜெக்டும் முடிவடையும் தருவாயில் இருந்தது. அனைத்தையும் பார்த்துப் பார்த்து கவனத்துடன் செய்திருந்தனர், காவ்யா மற்றும் குழுவினர். நாளை ப்ராஜெக்டை ஒப்படைக்கும் நாள் என்பதால் அதைப்பற்றி ஒருமுறை மீட்டிங் வைத்து ப்ரசென்டேஷன் கொடுக்க ஏற்பாடு செய்திருந்தனர். காவ்யாவையே அதைத் தரச் சொல்லி அவள் குழுவினர்கள் மொழிய, அவளுக்கு மேல் பொறுப்பில் இருப்பவரும் அவளையே செய்யச் சொல்லி வழிமொழிந்தார்.


"யூ டிசெர்வ் இட், மிஸ். காவ்யா. உங்களாலதான் இந்த ப்ராஜெக்ட் இவ்ளோ சீக்கிரத்துல இவ்ளோ பர்ஃபெக்டா முடிஞ்சிருக்கு. சோ, நீங்கதான் இந்த ப்ரசென்டேஷனையும் பண்ணணும். நீங்க நல்லபடியா பண்ணுவீங்கனு நான் நம்புறேன். ஆல் த பெஸ்ட்! சீ யு இன் தி மார்னிங்!" என்று அவர் அவ்வளவு சொல்லியதால் இவளால் மறுக்கமுடியவில்லை.


இவளால் நன்றாக செய்து முடிக்க முடியுமா? என்ற பயமும் பதட்டமும் அவளுக்குள் தோன்றியது. எதற்கும் அஞ்சாதவளாக இருந்தபோது இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொண்டதே இல்லை. ஆனால், இன்று நிலைமை வேறு. அதுவும் நீண்ட நாட்களுக்குப் பிறகு வேலையில் கவனம் செலுத்தவே பல நாட்கள் எடுத்துக்கொண்டிருக்க, இதற்கு எப்படி ஒரே நாளில் தயாராவது என்ற பல எண்ணங்களில் சிக்கித் தவித்தப்படியே வீட்டை அடைந்தாள்.


வீட்டிற்குள் இவள் நுழையும்போது மற்றவர்களும் வந்திருக்க, இவளின் முகத்தில் தெரிந்த குழப்ப ரேகைகளைக் கவனித்தத் தோழிகள் என்னவென்று விசாரித்தனர். இவளும் அதைப்பற்றிக் கூறிட,


"அட! இவளோதானாக்கும்!! இதுக்குத்தான் நீ இப்படி மூஞ்ச தொங்கபோட்டுகிட்டு வந்தியா?" என்று சரண்யா எப்போதும்போல அவளை சீண்ட,


"ஒரே நைட்ல எப்டி ப்ரிப்பேர் பண்றதுனு தான் கொஞ்சம் பதட்டமா இருக்கு. நாளைக்கு சொதப்பிடக் கூடாதுல.." என்று தயங்கி கூறியதைக் கேட்டவர்கள், ஏதோ தன்முன் நிற்பது காவ்யா அல்ல! அவளது மாறுவேடம்! என்பதைப் போல் பார்த்தனர்.


"நீயாடி இப்டி பேசுறது?!! எங்க கண்ணையே நம்பமுடியல!" என்று தன்யா வியந்து கூறிட, காவ்யா அப்பாவியாகப் பார்த்தாள்.


"பின்ன என்னடி!! நீயெல்லாம் என்னைக்கு ப்ரசென்டேஷனுக்கு ப்ரிப்பேர் பண்ணியிருக்க?! ஓவர் நைட்ல ரெடி பண்ணி சாதாரணமா பேசி கலக்கிட்டு வருவ!" என்று ரம்யாவும் கூறிட,


"ஆமா! ப்ராஜெக்ட்ல நீ பண்ணதுதான் மேஜரா இருக்கும். அப்போ மொத்த ப்ரசென்டேஷனும் உனக்குத்தான் ஃபிங்கர் டிப்ல இருக்குமேடி. இப்பவும் அப்படித்தான? நீ செஞ்சததான அங்க சொல்லப்போற!?" என்று சரண்யா கேட்டிட, காவ்யா ஆம்! என்று தலையாட்டினாள்.


"அப்றம் என்ன? நீ தைரியமா பண்ணு. நல்லாதான் பண்ணுவ. ஓகேவா! நாங்களும் உன்கூடயே இருந்து தேவைனா ஹெல்ப் பண்றோம்" என்று அனுயா சமாதானமாகக் கூறிட, அவளை தன்யா இடைமறித்தாள்.


"அனு! ஒண்ண மறந்துட்ட! அவளுக்கு யாரும் ஹெல்ப் பண்றது பிடிக்காது. முக்கியமா வர்க்ல. அவளே பண்ணணும்னு நினப்பா. மறந்துட்டியா?" என்று கேட்டிட, தன் தவறை உணர்ந்து நாக்கைக் கடித்து, தலையில் தட்டிக்கொண்டாள், அனுயா. அதைப் பார்த்த காவ்யா அவள் கைகளை எடுத்துவிட்டு அவளை அணைத்துக் கொண்டாள். மறுபடியும் ஐவரும் அணைத்துக்கொள்ள அங்கே சிறிய சந்தோசம் எட்டிப் பார்த்தது.


இரவு உணவை உண்ணும்போது வழக்கம்போல் அலுவலகத்தைப் பற்றி பேசிக்கொண்டே அருந்தினர்.


"அப்றம்! ரம்மி!! உன் ஆபிஸ்ல புதுசா யாராச்சும் ஜாய்ன் பண்ணாங்களா? வர்க் எப்டி போகுதுடி?" என்று சரண்யா அவளிடம் கேட்க,


"ஆனா, உன்னயமாறி யாரும் கேட்கமாட்டாங்கடி! வர்க்க பத்தி முதல்ல கேட்காம புது ஜாய்னி பத்தி கேட்கிறா!!" என்று அவளை ரம்யா வாற, அசடு வழிந்தவள்,


"பின்ன! எனக்கு எது தேவையோ! அதத்தானடி முதல்ல கேக்க முடியும்! அவ வர்க்க பத்தி கேட்டு நான் என்னடி செய்யப்போறேன்?!" என்று பதிலடைக்க, மற்றவர்கள் சிரித்தனர்.


"அடியே!! அதுசரி!! அப்ப! புதுசா யாரு ஜாய்ன் பண்ணாங்கிறதுதான் உனக்கு தேவையானதா?" என்று தன்யா கேட்டிட,


"அஃப்கோர்ஸ்டி!! இதுல என்ன சந்தேகம்? பின்ன எப்ப பாத்தாலும் வேல வேலன்னு பேசுனா பைத்தியம் புடிச்சிடும். அப்பப்ப இப்டியும் பேசிக்கணும்டி" என்று சரண்யா கூற,


"நீ அப்பப்பயா கேக்க? எப்பவுமே இதத்தானடி கேக்குற! உன் ஆபிஸ்ல யாரும் வரலயாடி?" என்று தன்யா அவளை வாறிவிட்டு கேட்க,


"அது என்னமோடி! நம்ம சமைக்கிற சாப்பாடு நமக்கு எப்டி பிடிக்கிறதில்லயோ! அதுமாதிரி நம்ம ஆபீஸ் பசங்களையும் எனக்கு பிடிக்கிறதில்லடி" என்று சரண்யா சலித்துக்கொள்வதைப் பார்த்து அனைவரும் சிரித்துவிட,


"லூசு பக்கி! எக்ஸாம்பிளா எதுக்கு எத கம்பேர் பண்றா பாரு!!" என்று அனுயா கூறி சிரித்திட,


"நமக்கு சோறுதான் முக்கியம்! கண்ண மூடுனாலே கனவுலயும் நீதான! மாதிரி, சோறுதான் எப்பவும் எங்களுக்கு! என்னடி சரு!" என்று ரம்யாவும் ஆதரவாகப் பேசி சரண்யாவைப் பார்க்க, இருவரும் ஹைஃபை அடித்துக் கொண்டனர்.


"இதுங்கள திருத்தவே முடியாது!" என்று தன்யா சலித்துக்கொள்ள,


"இப்ப திருந்தி என்னாகப்போறோமா?!! வாழ்க்கைய என்ஜாய் பண்ணுடி! எப்ப பாத்தாலும் உர்ருன்னே இருக்காத! இப்படி இருக்க உன்னய பாக்க வர்ற குழந்தைங்கல்லாம் என்னாகுமோ! பாவம்டி அதுங்க!!" என்று சரண்யா தன்யாவைக் கிண்டல் செய்ய, அவளோ பொய்யாக முறைத்தாள்.


"சரி! கூல்...தனு! உன் ஹாஸ்பிட்டல்லலாம் யாரும் பாக்கிற மாறி இருப்பாங்களாடி?!" என்று ரம்யா வினவ,


"அட்போடி! நான் என்ன டாக்டரா இருக்கேன்! ஐம் அ பீடியாட்ரிஷியன். என்கிட்ட குழந்தைங்க தாண்டி வருவாங்க. அவங்ககூட அவங்க அப்பா அம்மா வருவாங்க. இவங்கள பாக்கவே எனக்கு டைம் சரியா இருக்கும். இதுல எங்க நான் மத்த டிபார்ட்மென்ட்கு போறது! பாக்குறது!" என்று சொல்வதைக் கேட்ட ரம்யா,


"அச்சோ! ரொம்ப பாவம்தான்டி நீ! இவ்ளோ சின்ன வயசுல உனக்கு இவ்ளோ பெரிய பிரச்சினையா?" என்று அப்பாவியாகக் கூறி உச்சுக்கொட்டினாள். அவள் கிண்டல் செய்வதை அறிந்த தன்யாவோ,


"அடியே!! என்னடி! கிண்டலா?? எனக்கு ஒண்ணும் அது பெரிய விஷயமாலாம் தெரியல. எனக்கு அதனால எந்த ப்ராப்ளமும் இல்ல. சோ, நீ என்னயபத்தி கவலப்படத் தேவையில்லை செல்லம்!" என்று பதில் கூறி அவள் வாயடைக்க,


"சரி விடு! நீ அதுக்கு சரிபட்டு வரமாட்ட! அனு! உன் ஆபீஸ்ல...நிறைய பேரு இருப்பாங்களே..நீ எப்படியும் யாரையும் பாத்துருக்கமாட்ட! உன்னோட வேலை அப்டி. ஆனா, உன்னய யாராச்சும் பாத்துருப்பாங்களே..!! அது யாருனு சொல்லு! கேப்போம்" என்று ரம்யா கேட்டிட, அனுயாவுக்குப் புரையேறியது. தலையைத் தட்டிவிட்டு சரண்யா தண்ணீர் கொடுக்க, அமைதியாக அதை வாங்கிக் குடித்தாள்.



"கேட்டதும் புரயேறுது!! அப்ப கண்பாஃர்மா யாரோ இருக்காங்க! சீக்கிரம் சொல்லுடி யாருன்னு!" என்று ரம்யா அவளை வாட்டி எடுக்க, மற்றவர்களும் காவ்யா உள்பட அனைவரும் ஆர்வமாகப் பார்த்தனர்.
அனுயா அவர்கள் பார்ப்பதைப் பார்த்து தயங்கி கீழே குனிந்துகொண்டே,


"ஒருத்தர் இருக்காரு! ஆனா...அவரு என்மேல இன்ட்ரஸ்ட்டா இருக்கரானு தெரியல...ஆனா என்னய பாக்குறமாறிதான் இருக்கு...அவரும் இதுவரைக்கும் எதுவும் டைரக்டா எதையும் காட்டிக்கல...நானும் கேட்டுக்கல...ஆனா, எனக்கு தெரிஞ்சு என்னய பாக்குற ஆளுனா அது அவரு.. ஒருத்தர்தான்" என்று தயங்கி வெட்கிக்கொண்டே கூறுவதைப் பார்த்த நால்வருக்கும் தலை சுற்றாத குறையாகிப் போனது.


"ஹே..நல்லாப் பாருங்கடி! இது நம்ம அனுதானாடி?!" என்று தன்யா அதிர்ச்சியில் கூறிட,


"ஆமாடி! அனு மாறிதான் இருக்கு. ஒருவேள..கனவா இருக்குமோ..!!?"என்று சரண்யா கேட்டிட, அவள் கையில் ரம்யா நறுக்கென்று கிள்ளிவைக்க, சரண்யா ஆஆஆஆஆ என்று கத்தினாள்.


"கனவில்லடி இது. நிஜந்தான்!" என்று ரம்யா அப்பாவியாகக் கூறிட, அவளைக் குனிய வைத்து முதுகிலே அடிபோட்ட சரண்யா,


"அத உன்னய கிள்ளி செக் பண்ணவேண்டிதானடி? பன்னி!!", என்றிட, "வலிக்குமே.." என்று கூறி, அடி தாங்காமல் முதுகைத் தேய்த்துக் கொண்டாள். "இப்ப மட்டும் இனிக்குதா நல்லா!?" என்று கூறி பழிப்புக் காட்டினாள், சரண்யா.


இவர்களின் கூத்தைப் பார்த்துச் சிரித்த அனுயாவிடம் திரும்பியவர்கள்,


"பாத்தியாடி இவள!! இத்தன நாளும் நம்மகிட்ட சொல்லாம மறச்சிருக்கா!!" என்று சரண்யா பொய்யாகக் கோபித்துக்கொள்ள,


"அப்டிலாம் இல்லடி! எனக்கே ஆபிஸ் போனதுக்கப்றம், இப்ப கொஞ்ச நாளாதான் தெரியும். அதுவும் வெறும் சைட் அடிக்கிறத எப்டிடி சொல்ல சொல்ற?! ஒருவேள லவ்னா உங்ககிட்ட சொல்லாம எங்க போகப்போறேன்!?" என்று கூறி சமாதானம் செய்திட,


"சரி! சரி!! மன்னிச்சிட்டோம்! அப்றம்! இந்த விஷயம் உனக்கு எப்டி தெரிஞ்சது??" என்று ஆர்வமாகக் கேட்டிட,


"எனக்கு என்னோட கொலீக்! நம்ம வீட்டோட ஓனர் இருக்காளே..அன்னைக்குக்கூட வந்தாளே கீதா!...அவ சொல்லித்தான் டவுட் வந்துச்சு. அன்னைக்கு வந்தப்பவே 'உனக்கும் சாருக்கும் இடையில எதுவுமா?' னு கேட்டா, நான் இல்லனுதான் சொன்னேன். அப்றம், ஜாய்ன் பண்ணப்றம் நான் வந்தது தெரிஞ்சு என்னய கூப்டு விசாரிச்சாரு. நானும் எப்பவும் மாதிரினு நினச்சுட்டு விட்டுட்டேன். ஆனா, கொஞ்ச நாள் போகப்போக சார் அடிக்கடி ஆபீஸ் வர ஆரம்பிச்சாரு.." என்று சொல்லிக்கொண்டிருக்க, அவளை இடைமறித்தாள் சரண்யா.


"அப்போ உன்னய சைட் அடிக்கிறது உன்னோட பாஸா!!??" என்று கேட்டிட, அவளும் ஆம்! என்று தலையை ஆட்டினாள். அதைக் கண்ட தோழிகள் இன்னும் அதிர்ச்சியடைய,


"பார்றா!! அதான் அம்மணிக்கு வெட்கம்லாம் வந்துச்சோ..!!" என்று கேலி செய்திட,"அப்டிலாம் இல்லடி! பாஸ்ங்கிறதால ஒண்ணும் இல்ல. அவரு ரொம்ப நல்ல டைப்டி. அதான்! அவர தப்பா நினைக்கத் தோணல!" என்று உண்மையாய் கூறினாள்.


"அதான! இல்லைனா இவ இப்டி வெட்கப்படுற ஆளா?!!" என்று கிண்டல் செய்தனர். அனுயா கூற வர ரம்யா மீண்டும் இடைமறித்து,


"அவரோட ஆபீஸ்க்கு அவரு வர்ரதுல என்னடி பிரச்சினை? அதுல சந்தேகமா உனக்கு??" என்று கேட்க, அவளைப் பொய்யாக முறைத்த அனுயா,


"சொல்றத கேளுடி ஃபர்ஸ்ட்! அவரு அதிகமா ஆபீஸ்கு வரமாட்டாரு. ரொம்ப ரேர்தான். அவர மீட் பண்றதும் நாங்க ஒருசிலர் தான். அதான் அப்டி சொன்னேன். ஆனா, அவரு இப்ப கொஞ்ச நாளாதான் இப்டி வர்ராருனு என் கொலீக் கீதா சொன்னா. வந்தப்பலாம் என்னய கூப்டு எதாச்சும் வேல சம்பந்தமா டிஸ்கஸ் பண்ணுவாரு. ஆனா, பார்வை அடிக்கடி என்மேல வந்துட்டு போகும்...இதெல்லாம் வச்சுதான் சைட் அடிக்கிறாருனு நானும் கண்பாஃர்ம் பண்ணேன்டி.." என்று கூறி வெட்கப் புன்னைகை சிந்த,


"என்னனாலும் பண்ணுடி! ஆனா, வெக்கம் மட்டும் படாதடி! கருமத்த பாக்கமுடியல...!!" என்று சரண்யா கிண்டல்
செய்ய அவளைச் செல்லமாக அடித்தாள், அனுயா.


"அவள ஏன்டி அடிக்கிற? முன்னபின்ன இதெல்லாம் பாத்தாதான தெரியும்! இப்டி பொசுக்குன்னு பண்ணா நாங்க என்னனு ரியாக்ட் பண்றது?!" என்று ரம்யாவும் சேர்ந்து கேலி செய்ய, அனைவரும் சிரித்தனர்.


"ஆனா! அவரு பாக்குறத பாத்தா சைட் மாறி தெரியலயே! லவ்வே இருக்கும்போல!" என்றும் தன்யா கூறிட, மற்றவர்களும் ஆமோதித்தனர்.


"எதுவா இருந்தா நமக்கென்னடி! யாராச்சும் சைட் அடிப்பாங்களான்னு கேட்டீங்க! அதனால அது நியாபகம் வந்துச்சு. சொன்னேன். அவ்ளோதான்! அதுக்குமேல எந்த தாட்டும் எனக்கு இல்லடி. அதபத்தி நானும் பெருசா எதுவும் யோசிக்க விரும்பல" என்று சாதாரணமாகக்
கூறி முடித்தாள்.


"அப்ப நம்ம க்ரூப்ல ஃபர்ஸ்ட் நம்ம அனு கமிட்டாக வாய்ப்பிருக்குனு தோணுதுடி!" என்று சரண்யா கூறி மகிழ, அதைக்கேட்ட அனுயாவோ,


"அதான் அப்டிலாம் எதுவும் இல்லனு சொல்றேன்ல! அதுக்கப்றமும் என்ன அதபத்தியே பேசிகிட்டு. எனக்கு இந்த லவ் அண்ட் மேரேஜ்ல எந்த இன்ட்ரஸ்டும் இல்ல. புரியுதா?!ஒழுங்கா சாப்டுங்க!!" என்று சொல்லி அவர்களை அடக்கினாள்.


அதைக் கேட்ட காவ்யா மனம் வருந்தினாள். "அனுமா! எதுக்காக இப்டி பேசுற? லைஃப்ல லவ் அண்ட் மேரேஜ் இதுலாம் சகஜம். எல்லாருக்கும் வர்ரதுதான். உனக்கும் வந்தா அது நல்லதா இருந்தா அக்செப்ட் பண்றதுல எதுவும் தப்பில்லையே!! எதுக்காக அத அவாய்ட் பண்ண பாக்குற?" என்று கவலையாக கேட்டிட,


"அவாய்ட்லாம் பண்ணலடா. இன்ட்ரஸ்ட் இல்ல. அவ்ளோதான்!" என்று கூறி சமாளிக்க, அதை நம்பாதவள்,


"இல்ல!! நீ பொய் சொல்ற! அவரப்பத்தி பேசும்போது உன் கண்ணுல அவ்ளோ சந்தோசம் தெரிஞ்சது! ஆனா லவ், கமிட்மண்ட்னு பேசுனா திட்டுற! அவரு உன்னய லவ் பண்ண மாட்டாருனு பயப்படுறியா? தேவையில்லாம ஃபீலிங்க்ஸ வளக்க வேணாம்னு நினக்குறியா, அனு? இல்ல...என்னய நினச்சு இப்டி சொன்னியா??" என்று காவ்யா கூறி அவளைக் கூர்மையாகப் பார்த்திட, அவள் கடைசி வரியில் அதிர்ச்சியடைந்தாள்.


என்ன சொல்லி உண்மையை மறைத்து அவளை சமாளிப்பது? என்று தெரியவில்லை அனுயாவுக்கு. நால்வரும் அனுயாவைப் பதிலுக்காக பார்த்துக் கொண்டிருக்க,


"ஹே! காவிமா!! நீ நினைக்கிற மாறிலாம் ஒண்ணும் இல்ல. அவரு நல்லவர்னுதான் சைட் அடிச்சாலும் ஒண்ணும் சொல்லல. தப்பான பார்வை பாத்ததில்ல. அவர்மேல எனக்கு நிறைய மரியாதை மட்டும்தான் இருக்கு. அவருக்கும் அதேதான். ஒருவேள அவரே லவ்வ வந்து சொன்னாலும் சொல்லாட்டியும் எனக்கு அவர்மேல இருக்கிற மரியாதையைத் தாண்டி அவர்மேல எனக்கு லவ் வந்துச்சுன்னா, நானே அவர்கிட்ட போய் சொல்லிடுவேன்டி. அதுலாம் ஒரு பிரச்சினையும் இல்ல. புரியுதா! லவ் மேல இன்ட்ரஸ்ட் இல்ல. அது வந்தா நீ சொன்னமாறி அக்செப்ட் பண்ணிக்குறேன். ஓகேவா?!" என்று பாதி உண்மையும் பாதி பொய்யும் கூறி அவளைச் சமாளித்திட, அவளும் இவள் கூறியதை ஆமோதித்து அமைதியடைந்தாள்.


"அப்ப நீ இப்போதைக்கு கமிட்டாகுற மாறி தெரியல! பேசாம ரம்யா! நீதான்டி கமிட்டாகணும்!" என்று நிலைமையை சகஜமாக்க சரண்யா கேலி செய்திட,


"அடப்போடி!! எங்க ஆபிஸ்ல எல்லாமே மொக்க பீசுடி!" என்று சளித்துக்கொள்ள,


"என்னடி! இப்படி சொல்ற? நீ ஐடில தானடி வர்க் பண்ற! அங்கயா மொக்கனு சொல்ற?!" என்று தன்யா கிண்டல் செய்ய,


"அடியே!! ஐடில பொண்ணுங்க அழகா இருப்பாங்கனு சொல்லிருப்பாங்கடி. ஆனா, பசங்க அழகா இருப்பாங்கனு சொல்லிருக்காங்களா!? எதுக்கு நீங்களா கற்பனை பண்ணி என் வயித்தெரிச்சல கொட்டிங்குறீங்க..?!! அதுவும் எங்க கம்பெனில எல்லாம் மொக்க. அழகா இருந்தா அறிவு இருக்காது..அறிவா இருந்தா அழகு இருக்காது...இங்க சைட்டுக்கே வாய்ப்பில்லயாம். இதுல கமிட்மெண்ட் பத்தி பேசி கடுப்படிக்கிறாக இவளுக!!" என்று பொறிந்து தள்ளினாள்.


இதைக் கேட்டவர்கள் சிரிப்பை அடக்கமுடியாமல் சிரித்துவிட, அவர்களுடன் சேர்ந்து ரம்யாவும் சிரித்துவிட்டாள். இவர்களின் சிரிப்பைக் கண்ட காவ்யாவுக்கும் சிரிப்பு வந்து சிரித்துவிட்டாள். அதைக் கண்ட ரம்யாவும் சரண்யாவும் தங்கள் திட்டம் வென்றதை எண்ணி கட்டைவிரல் தூக்கிக் காட்டி கண்ணடித்துக் கொண்டனர்.


இறுக்கமான சூழ்நிலைகளில் இவர்கள் குறும்பு செய்து நிலைமையை சகஜமாக்குவது வழக்கம். இன்றும் அதைப்போலவே செய்ய, காவ்யாவும் சிரித்துவிட்டதை எண்ணி மனம் மகிழ்ந்தனர். ஆனால், இதுவே இவளது கடைசி சிரிப்பாக இருக்கப்போவதை அவர்கள் அறிய வாய்ப்பில்லை...! இவர்களிடம் தற்சமயம் தோன்றியிருக்கும் மகிழ்ச்சியும் பறிபோகும் நாளும் நெருங்கியது...







❤வருவாள்❤...

கதையை படிச்சு தொடர்நது ஆதரவு தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், நட்புக்களே!!
கீழே இருக்கும் லிங்க் கிளிக் செய்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் நட்புக்களே...

- தமிழுக்கினியாள்


Thread 'இருளில் தொலைந்த ஒளி அவள் - Comments' https://www.sahaptham.com/community/threads/இருளில்-தொலைந்த-ஒளி-அவள்-comments.500/
 
அவள் 10


இப்படியே அரைமணி நேரத்தில் முடியவேண்டிய சாப்பாட்டு நேரம் இரண்டு மூன்று மணி நேரமாக நீள்வது இவர்களது வழக்கம். ஐவரும் நிறுவனத்திற்குச் செல்ல ஆரம்பித்தபின் அவர்கள் ஒன்றாகச் செலவிடும் நேரம் குறைந்துபோனது. ஆதலால், இரவு உணவு உண்ணும் நேரத்தை அவர்கள் பேசி, பகிர்ந்து, களிக்கும் நேரமாக எடுத்துக்கொண்டனர்.


அனைவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு அதே குஷியுடன் வந்து காவ்யாவுடன் அமர்ந்தனர். ஏனென்று தெரியாமல் நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த சில நாட்களாக அவர்களிடத்தில் சற்று நிம்மதி பரவத் தொடங்கியது காவ்யாவின் நிம்மதியினால். இன்று சந்தோசமும் நிறைந்திருக்க, அவர்களுக்கு மனநிறைவாக இருந்தது.


இன்னும் இந்நிலை மாறி காவ்யா முழுவதுமாக பழையபடி மாறிவிட்டால் மனம் முழு நிம்மதி அடைந்துவிடும் என்ற எண்ணம் தோன்றியது நால்வருக்குள்ளும். காவ்யாவின் வயிற்றில் வளரும் கருவை கலைத்தால் தான் அவள் முழுமையாக மீண்டு வர இயலும் என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர். ஆனால், அவளின் ப்ராஜெக்ட் காரணமாக அவள் முழு கவனத்தையும் செலுத்தி வரும் இந்நேரத்தில் அவள் மனதை கலைக்கும் எண்ணமின்றி விட்டுவிட்டனர்.


காவ்யாவின் ப்ராஜெக்ட் முடிந்தபின் கூட்டிச் செல்ல முடிவுசெய்திருந்தனர். அந்நேரமும் வந்துவிட்டது. அதனால் எல்லாம் நல்லபடியாக நடக்கவேண்டும் என்று மனதில் எண்ணிக்கொண்டனர். ஆனால்..!! இவர்களின் எண்ணத்தைப் பொய்யாக்கவே ஒருவன் அங்கு திட்டம் தீட்டி தீவிரமாகக் காத்திருப்பது இவர்களுக்குத் தெரியாமல்போனது.


காவ்யாவுடன் அவர்கள் அமர்ந்திருக்க, அவளும் அவளுடையப் ப்ரசென்டேஷனை முடித்து தயார் செய்துவிட்டபின் அனைவரும் ஒருவித திருப்தியில் கண்ணயர்ந்தனர். காவ்யாவும் கொஞ்சம் நிம்மதியாகத் தூங்கினாள், நாளைய விடியலை நோக்கி எதிர்ப்பார்ப்புடன்...


காலை விடிந்ததில் இருந்து ஒருவித பரப்பரப்புடனும் மனதில் தோன்றிய சிறு உற்சாகத்துடனும் வேலைக்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள், தோழிகள். அனைவரும் தயாராகியபின் ஒன்றாகவே பேருந்து நிறுத்தம் வரை சென்றனர். காவ்யா பேருந்தில் செல்வதால் மற்ற நால்வரும் பேருந்திலே சென்றனர். வேறு வேறு பேருந்துதான் என்றாலும் நிறுத்தம்வரை துணையாக வரலாம் என்றே இப்படி முடிவு செய்திருந்தனர். காவ்யாவுக்கான பேருந்து வரவும் அவளுக்கு வாழ்த்துக்கள் கூறி வழியனுப்பி வைத்தனர். பின்பு, அவர்களும் அவரவர் பேருந்தில் ஏறிச் சென்றனர்.


நிறுவனத்தை அடைந்தவள் அவள் அலுவலக தளத்துக்கு வந்துசேர, ப்ரசென்டேஷனைப் பற்றி விசாரித்தனர். அவளும் பதில் கூறிவிட்டு தன் இடத்தில் அமர்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தாள். மீட்டிங்கிற்கான நேரமும் வந்துவிட, நன்றாக செய்து முடிக்கவேண்டும் என்ற பதட்டத்தோடு மீட்டிங் அறைக்குள் சென்றாள். சிறிதுநேரத்தில் ஒவ்வொருவராக வர ஆரம்பிக்க, இவளும் இவளது ப்ரசென்டேஷனைக் காட்ட தயாரானாள்.


அறையின் அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட ஒரு நிமிடம் மிரண்டு போனாள். ஆனால், உடனே அவளை ஆசுவாசப்படுத்திக் கொண்டு நன்றாக மூச்சை இழுத்துவிட்டவள் தன் விளக்க உரையை ஆரம்பிக்கத் தயாரானாள். அவள் ப்ரசென்டேஷனைத் திரையில் போட்டுக்காட்டி மிகவும் அழகாக விளக்கிக் கூறுவதைப் பார்த்த அனைவரும் கண்ணிமைக்காமல் பார்த்தனர்.


இவள் இங்கே விளக்கிக் கொண்டிருக்கும்போது அறையின் கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தான், ராணா தேவ். அறை முழுவதும் இருட்டாக இருப்பதாலும் காவ்யாவின் பக்கம் மட்டும் ஒளி இருப்பதாலும் அவளுக்கு வந்தது யாரெனத் தெரியாமல் தொடர்ந்து அவள் விளக்க உரையைக் கூறி முடித்தாள். அவள் திறமையைக் கண்டு ஒருநொடி அவனாலும் அவளை மனதில் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை.


அவள் முடித்தபின் அறையில் கைதட்டல்கள் ஒலித்தது. அவளை மனமாரப் பாராட்டினார்கள். அது அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியையும் பெருமையையும் அளித்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு மனதில் இருந்து புன்னகைத்தாள். அந்த பாராட்டுக்களை அவளது திறமைக்கு கிடைத்த வெற்றியாய் எண்ணி மகிழ்ந்தாள். ஆனால், அவள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியைப் பார்த்த ராணாவோ கோபத்தில் பல்லைக் கடித்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.


அதன்பின், அறையின் விளக்குகள் போடப்பட, ஒவ்வொருவராக அவர்களது சந்தேகங்களை அவளிடம் கேட்டனர். அதற்கும் அவள் நிதானமாகவும் தெளிவாகவும் விளக்கம் கூறி பதில் அளிப்பதைக் பார்த்து அனைவரும் அவளை மெச்சினர். அனைவரும் கேட்டு முடித்துவிட்டபின், ராணா,


"ஹலோ!! கேன் யூ அன்சர் மை க்வஸ்டின்??" என்று கேள்வி எழுப்பிட, கேள்வி வந்த திசையில் இவளும் பார்த்திட, அங்கே அவன் கண்களில் திமிருடன் கால்மேல் கால் போட்டுக்கொண்டு அமர்ந்து இவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். அதைப் பார்த்தவள் அதிர்ந்து விழிக்க, அவளுக்கு சுற்றியும் சூழல் மறைந்து கண்கள் சொருகி மயங்கிக் கீழே சரிந்தாள்.


அவள் விழுந்ததைப் பார்த்தவன் ஒரு நொடி அதிர்ந்தாலும் மறுநொடி குழம்பினான். 'தன்னைப் பார்த்துதான் மயங்கினாளா?! அப்படி என்றால் எதற்காக?? ஏன் என்னைப் பார்த்து மயங்கினாள்?? அப்படியென்றால் என்னைப் பார்த்துப் பயப்படுகிறாளா இவள்??! நான் கொடுத்த தண்டனையை இன்னும் மறக்கவில்லை என்று தானே அர்த்தம் இதற்கு?!" என்று எண்ணும்போதே அவன் முகத்தில் ஆனவத்தின் அடையாளமாய் கர்வப் புன்னகை பூத்தது.


இங்கே மயங்கி விழுந்தவளை அருகில் இருந்தவர்கள் தண்ணீர் தெளித்து எழுப்ப முயற்சிக்க, அவள் மெல்ல கண்களைத் திறந்தாள். அவள் மயங்கியதில் பதறி எழுந்த அனைவரும் அப்போதே சற்று அமைதியடைந்தனர். அதன்பின், மீட்டிங் முடிந்துவிட்டமையால் அனைவரும் கிளம்பிச் சென்றுவிட, இவளை மெல்ல எழுப்பினர், அவளுடன் பணிபுரியும் தோழிகள். அனைவரின் முன்னிலையிலும் அவளை அவமானப்படுத்த எண்ணியிருந்தவனின் எண்ணம் ஈடேறாமல் போய்விட்டக் கோபத்தில் அவர்களிடம் கத்தினான்.


"இது என்ன ஆபீஸா?? இல்ல ஹாஸ்பிடல்லா?? மயங்கி விழறதுக்கு என் ஆபிஸ்தான் கிடைச்சதா?? யூ இடியட்!!" என்று கோபத்தில் கத்திட, அதைக்கேட்ட காவ்யா அதிர்ந்தாள். அவனைக் கண்டு பயந்துபோய் தலைகுனிந்து நின்றவள், இது அவனது ஆபீஸ்! என்று கூறியதைக் கேட்டதும் அதிர்ந்து நிமிர்ந்து பார்த்தாள். அவன் கண்களில் தெரிந்த கோபக் கனல் அவளுக்கு பழைய நினைவுகளை மீண்டும் நினைவுபடுத்தியது.


அதைத் தாங்கமுடியாமல் கண்களை மூடியவள், மறுநொடி கண்களைத் திறந்துகொண்டு அங்கிருந்து அவனைப் பாராமல் ஓடினாள். அது அவனை இன்னும் கோபப்படுத்திட,


"இஸ் திஸ் தி வே ஷீ பிகேவ் டு ஹெர் பாஸ்??(இதுதான் அவ பாஸ்கிட்ட நடந்துக்குற முறையா??) அவள என் ரூமுக்கு வந்து என்னய பாக்க சொல்லுங்க! இம்மீடியேட்லி!" என்று கோபமாகக் கூறிச் சென்றான். இங்கு அந்தப் பெண்கள் இருவரும் என்ன ஆகுமோ?! என்ற பயத்துடன் சென்றனர்.


ஓடிவந்தவள் தன் கேபினில் அமர்ந்து மேசையில் முகத்தை மறைத்தபடி வைத்து இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீழாமல் இருந்தாள். 'தனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கவேண்டும்? தன் வாழ்க்கையில் எத்தனை விபரீதங்களை இன்னும் சந்திக்க வேண்டுமோ?!' என்று எண்ணி நொந்தவள், 'என் வாழ்வைச் சீரழித்தவனின் நிறுவனத்திலேயே நான் இத்தனை நாட்களாய் வேலைப் பார்த்திருக்கிறேனா?!' என்று எண்ணும்போதே அவளுக்கு வெறுப்பாக இருந்தது.


அவளிடம் வந்த அந்தப் பெண்கள் இருவரும் முதலில் அவள் உடல்நிலையைப் பற்றி விசாரித்தனர். "என்னாச்சு காவ்யா உனக்கு?! திடீர்னு மயங்கிட்ட! எல்லாரும் ரொம்ப பயந்திட்டோம். இப்ப பராவலயா?! இல்லனா ஹாஸ்பிடல் போய்ட்டு வருவோமா?" என்று ஒருத்தி கேட்டிட அதிர்ந்தவள்,


"அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினை இல்ல. ப்ரசென்டேஷன் ப்ரிப்பேர் பண்ணதால நேத்துல இருந்து சரியா சாப்டல, தூங்கல!! அதனாலதான் மயக்கம் வந்துடுச்சு. இப்ப நல்லா இருக்கேன்" என்று கூறிச் சமாளித்திட,


"என்ன காவ்யா? இதுக்காக சாப்டாம தூங்காம ஏன் வருத்திக்கிற? எனிவேஸ், யுவர் ப்ரசென்டேஷன் அண்ட் எக்ஸ்ப்ளனேஷன் வாஸ் சூப்பர்ப்!! ரொம்ப நல்லா பண்ண! எல்லாரும் உன்னய பாராட்டுனாங்க! எங்க சார்பாவும் கங்க்ராட்ஸ்!!" என்று வாழ்த்துக்கள் கூறி கைகுலுக்கினர், இருவரும்.


அதன்பின், "சாப்டாமத்தான மயங்கின! இரு என் லஞ்ச் கொண்டு வரேன். சாப்டு முதல்ல!" என்று அக்கறையாய் கூறிட,


"அதெல்லாம் வேணாம். காலைல சாப்டுத்தான் வந்தேன். இல்லைனா சுத்தமா பண்ணிருக்க முடியாதுல்ல!" என்று கூறி சமாளித்தாள். அதன்பின், இருவரும் சற்று தயங்கியபடி, "உன்னய பாஸ் கூப்ட்டாரு காவ்யா. உடனே வரசொல்லுனு கோபமா சொல்லிடடுப் போனாருடி!" என்று கவலையாகக் கூறிட, அவள் அதிர்ந்து இவர்களைப் பார்த்தாள்.


"எ..ன்ன..ய.. கூப்டா..ரா??!! எ..து..க்கு??" என்று வார்த்தைகள் வராமல் கேட்டுமுடிக்க, அவளின் இந்த பயம் நிறைந்த பக்கத்தை இதுவரை பார்த்திராதவர்கள் அவளை அதிர்ச்சியாகப் பார்த்தனர். அதைக் கவனித்த காவ்யாவும் தன்னை சமன்படுத்திக்கொண்டு,


"என்னய எதுக்கு கூப்டாரு? அதுவும் கோபமானு சொல்ற? என்மேல கோபப்படுற அளவுக்கு நான் என்ன பண்ணேன்? நல்லாதான ப்ரசென்டேஷன் பண்ணேன்?!" என்று முடிந்தளவு சாதாரணமாகப் பேசிச் சமாளித்திட, அவர்களும் சந்தேகம் நீங்கி தெளிவாகினர்.


"அது நீ அவர் இருக்கும்போதே ஓடி வந்துட்டேல்ல! அதுக்குத்தான் சாருக்கு கோபம்! நீ போய் பாத்துட்டு வா! இல்லன்னா இன்னும் கோபப்பட போறாரு!" என்று கூறிட,


"எனக்கு மறுபடியும் ஒருமாறி வந்ததுனு ஓடிவந்தேன். அதுக்குன்னு சொல்லிட்டு பெர்மிஷன் லெட்டர் கொடுத்துட்டா வரமுடியும்!" என்று அவர்களுக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக சாதாரணமாகப் பேசினாள். "சரி! போறேன்!" என்று கூறிட அவர்களும் சென்றுவிட்டனர். இவளும் ஒரு முடிவுக்கு வந்தவளாய் அவன் அறைக்குச் சென்றாள்.


அறையின்முன் நின்றவள் சிறிது யோசனைக்குப் பிறகு தயங்கி, கதவைத் தட்டிக்கொண்டு உள்ளே செல்ல, இவள் நுழைவதைப் பார்த்ததும் முதலில் கோபமாகக் பார்த்தவன், அதன்பின் அவளை அளவெடுக்கும் பார்வையில் மேலிருந்து கீழ்வரை கண்களை அலைபாயவிட, அதைக் கண்டவளுக்கோ உடலெல்லாம் கூசியது. உடனே, தனது துப்பட்டாவை இழுத்துவிட்டவளைப் பார்த்தவன்,


"என்னடி!! என்னமோ புதுசா பாக்குறதுமாறி இழுத்து போத்திக்குற!" என்று அவளை சீண்டிப் பார்ப்பதற்காக வேண்டுமென்றே அவன் கொச்சையாகப் பேசிட, அதைக் கேட்டு முகம் சுழித்துத் தலைகுனிந்தாள். அவளின் சங்கடத்தைப் பார்த்து ரசித்தவன், அவளை மேலும் சீண்டிப் பார்க்க ஆசைப்பட்டான். ஆனால், அவளோ அதற்குமுன்,


"மை ரிசைனேஷன் லெட்டர்!" என்று கூறி அவள் இராஜினாமா கடிதத்தை அவன் மேசையில் வைத்துவிட்டுச் சென்று அறைக் கதவைத் திறக்கும் வேளையில், வேக எட்டுக்கள் எடுத்து வைத்து அவளருகில் வந்தவன், அவள் கையைப் பற்றி நிறுத்தினான். அவள் தடுமாறியபடி நின்று அவனைப் பார்க்க, அவனோ அவளின் தோள்களைப் பற்றி அருகில் இழுத்தவன்,


"என்னடி நினச்சுட்டு இருக்க உன் மனசுல?! பெரிய மகாராணினா? நீ நினச்சபடி பண்ணிட்டு போவ! அத நான் பாத்துட்டு நிக்கணுமா!? என்னய எதிர்த்தவன் யாரும் அடுத்தமுற என்னய எதிர்க்க துணிஞ்சதில்ல! ஆனா, நீ ஒவ்வொரு முறையும் என்னய இன்சல்ட் பண்றமாறியே நடந்துக்குற! இது உனக்கு நல்லதே இல்ல!! மறுபடி மறுபடி தப்பு பண்ற!" என்று அவள் முகத்துக்கருகில் வந்து கோபத்துடன் பேசிட, அவன் பேசியது எதையும் கவனிக்காமல் அவள் பயத்தில் உள்ளுக்குள் நடுங்கியபடி நின்றாள்.


அவன் பேசி முடித்து அவள் தோள்களில் இருந்து கைகளை எடுத்து அவளைச் சுற்றி வளைத்து நிற்க, மிரண்டுபோனவள் அவனைத் தள்ளிவிட்டுவிட்டு கதவைத் திறந்து வேகமாகச் சென்றுவிட்டாள். அவள் தள்ளிவிட்ட வேகத்தில் இவன் சற்று தடுமாறி நின்றான்.


அவன் இவ்வளவு பேசியும் அவள் அதை துளியும் மதிக்காமல் மறுபடியும் இவனை அவமதித்துச் சென்றது கோபத்தை அதிகரித்தது. அவள் தன்னைப் பார்த்துப் பயந்தாலும் இன்னும் அவள் திமிர் அடங்கவில்லை! என்று எண்ணியவனுக்கு அவளைப் பழி வாங்கும் எண்ணம் இன்னும் கொளுந்துவிட்டு எரிந்தது.


அவனிடம் இருந்து தப்பி வந்தவள் கேபினில் சென்று அமர்ந்தாள். அவளுக்கு அந்நேரத்தில் உறுதுணையாக யாரும் இல்லாமல் தனித்து விடப்பட்டதைப் போல உணர்ந்தவளின் கண்களை நீர் நிறைத்தது.


சிறிதுநேரம், அப்படியே இருந்தவள் திடீரென நியாபகம் வந்தவளாய் நிமிர்ந்தவள், இதற்குமேல் இங்கிருப்பது சரியல்ல! வேலையைவிட்டுச் செல்ல அவன் இன்னும் அனுமதி தரவில்லை. தரவும் மாட்டான் என்று அவள் உள்மனம் சொல்லியது. ஆனால், அவன் அனுமதி தேவையில்லை! இங்கிருந்து முதலில் கிளம்புவதே நலம் என்று அறிந்து அவள் பொருட்களை எடுத்தவள் வேகமாகக் கிளம்பிச் சென்றாள்.


அவள் வேகமாக வெளியே செல்வதைப் பார்த்து அவளுடன் பணிபுரிபவர்கள் சிலர் கேட்டிட, உடல்நலம் சரியில்லாததால் விடுப்பு எடுத்துச் செல்கிறேன் என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டாள். அந்த நிறுவனத்தைவிட்டு வெளியே வந்த பின்னரே அவளுக்கு பயம் நீங்கி மூச்சு சீராக வந்தது. அந்த நிம்மதியில் அவள் பேருந்து ஏறும் நிறுத்ததிற்கு நடந்து சென்றாள்.


இங்கே ராணா கோபமாக, "என்னோட பெர்மிஷன் இல்லாம அவ எப்டி ரிஸைன் பண்ணுவா??" என்று கூறிக்கொண்டு ஒரு பெண்ணை அழைத்து, காவ்யாவை அழைத்து வரச்சொன்னான்.


சிறிதுநேரம் கழித்து திரும்பி வந்தவள், அவள் விடுப்பு எடுத்துச் சென்றுவிட்டதாகக் கூறிட, அதைக் கேட்டு அதிர்ந்து கோபம் கொண்டான். "வாட்?! அது எப்டி பாஸ்கிட்ட பர்மிஷன் வாங்காம போவா?!" என்று கோபமாகக் கேட்டிட,


"சார்!! அவங்க சீப் பேஷன் டிசைனர். அவங்களுக்கு இதுக்கு பர்மிஷன் இருக்கு சார். நீங்க இல்லாதபோது நாங்களும் எங்க ஹெட்கிட்டதான் பர்மிஷன் வாங்குவோம். அவங்க அதுமாறிதான் சொல்லிட்டு போயிருக்காங்க, சார்!" என்று மிகவும் பொறுமையுடனும் பயத்துடனும் தயங்கி தயங்கிக் கூறிட, அதைக் கேட்டவன் எரிமலையாய் வெடித்தான்.


"இங்க நான் இல்லாதப்ப பாத்துக்கதான் உங்க ஹெட்ஸ், மேனேஜர் எல்லாம்! நான் இருக்கும்போது இல்ல! அவ இஷ்டத்துக்கு எப்ப வேணாலும் போகலாம்னா அவ இஷ்டத்துக்கு ரிஸைன் கூட பண்ணலாமா?! ஹான்! அதுவும் நம்ம கம்பெனி ரூல்ஸ்ல இருக்கா என்ன? டெல் மீ!" என்று கோபத்தில் வெடிக்க, அதைக் கேட்டுப் பதறியவள், அவன் கேலிக்குக் கேட்டக் கேள்வியை நிஜமென நினைத்து,


"நோ..நோ..சார்!! முடியாது..சார்!! ஆனா, அவங்க எதுக்காக சார் ரிசைன் பண்ணப்போறாங்க?? அவங்க இங்க சீப் டிசைனர். அவங்களுக்கு வேற கம்பெனிஸ்ல இருந்து எத்தனையோ ஆஃபர் சேலரி அதிகமா வந்தப்பக்கூட அவங்க நம்ம கம்பெனியவிட்டு போகலயே...சார்..!!" என்று பயந்தபடியே கூறி முடித்தவள் அமைதியானாள்.


இதைக் கேட்ட ராணாவும், 'அப்போ...எனக்கு பயந்து போய்தான் ரிசைன் பண்ணிட்டு போறியா?? இங்கயே இருந்தாதான் உன்னய பழி வாங்க முடியுமா என்ன?? ஆனா, இப்ப நீ போயிட்டா திரும்ப வரமாட்ட! உன்னய திரும்ப வரவைக்கணும்னாலும் ரொம்ப நாளு ஆகும்...!! அப்படி உன்னய விட்டுட முடியாது...ம்ம்...!!' என்று பல்லைக் கடித்தபடி கோபத்துடன் யோசனையில் இருக்க,


'ஆனா..உன் திமிரு இன்னும் அடங்கலல...உன்னோட பாஸ்கிட்ட கூட எதுவும் எக்ஸ்ப்ளைன்கூட பண்ணாம போயிருக்கன்னா எவ்ளோ திமிரு இருக்கணும்..ச்ச...எப்படியாவது தப்பிச்சுட்டே இருக்கா..!!' என்று எண்ணியவன் ருத்ர மூர்த்தியாக மாறினான்.


அவள் தன் திட்டம் அனைத்திலும் இருந்து தப்பிப்பது அவளது சாதுர்யமா? இல்லை, அவளது நல்ல நேரமா? என்று யோசித்துக் கொண்டிருந்தவனுக்குக் கோபம் தலைக்கேறியது. இன்னும் அந்தப் பெண் அங்கேயே நின்றிருப்பதைப் பார்த்தவன்,


"இன்னும் எதுக்கு இங்க நிக்கிறீங்க? கெட்டவுட்!!!" என்று கத்திட, அவள் பயந்து வேகமாக வெளியே செல்லப்போக, அவளை அழைத்து,
"இனிமேல் இந்த ஸில்லி ரூல்ஸ்லாம் என் கம்பெனில இருக்கக்கூடாது! இனி எதுனாலும் என்கிட்ட கேட்காம நடக்கக்கூடாது! யாரும் எதுவும் பண்ணவும் கூடாது! கோ அண்ட் அனௌன்ஸ் திஸ்!!" என்று கட்டளையிட்டு அனுப்பினான். அடுத்த நிமிடமே, யாருக்கோ அழைப்பு விடுத்தவண்ணம் அங்கிருந்து கிளம்பினான்.


பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காகக் காத்துக் கொண்டிருந்தவளின் எண்ணங்கள் காலையில் இருந்த தன் மனநிலையையும் இப்போது இருக்கும் மனநிலையையும் எண்ணிப் பார்த்தது.


ஒரே நாளில் வாழ்க்கை மாறுவது இவளுக்கு விதியாகிப் போனதாய் உணர்ந்தாள். இதற்குமேலும் இங்கிருந்தால் அவன் தன்னை விடமாட்டான்! நிம்மதியாகவும் இருக்க விடமாட்டான்! என்பதை அறிந்து இந்த ஊரிலேயே இருக்கக் கூடாது என்று முடிவெடுத்து நிமிர, அவளது பேருந்தும் தூரத்தில் வந்தது. அதற்குப் பின்னே வந்த வேறு ஊருக்குச் செல்லும் பேருந்தைப் பார்த்தவள் முடிவெடுத்தவளாய் ஏறிடத் தயாரானாள்.


வீட்டிற்கு வந்த தோழிகள், இழைப்பார அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, காவ்யாவின் ப்ரசென்டேஷனை நினைத்து மிகவும் ஆவலாக இருந்தனர். காவ்யா காலையில் செல்லும் முன்னே இவர்களிடத்தில் இன்று எக்காரணத்தைக் கொண்டும் அவளுக்கு அழைப்பு விடுக்கக்கூடாது என்றும் தான் வீடுவந்து சேரும் வரை காத்திருக்கவும் என்று முன்கூட்டியே சொல்லிச் சென்றதால் இவர்களால் போனில் பேசி தெரிந்துகொள்ள முடியாமல் போனது.


இப்போது அவள் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தனர். எப்போதும் அவள் வரும் நேரம் தாண்டியும் வராமல் போக நால்வருக்கும் பயம் எழுந்தது. ஒருவேளை, வேலை இருக்குமோ?? என்று தோன்றினாலும், அவளிடம் பேசுவதே சரியெனப்பட அவளுக்கு அழைத்தனர். நீண்ட நேரம் அழைப்பு சென்று துண்டிக்கப்பட, இவர்களுக்கு பழைய நியாபகங்கள் கண்முன் வந்தது. அதை நினைத்துப் பதறியவர்கள், இன்றும் தாமதித்து தவறு செய்துவிடக்கூடாது என்றெண்ணி உடனே அவள் நிறுவனத்திற்குக் கிளம்பினர்.


ஏற்கனவே பொழுது சாய்ந்திருக்க, தோழிகள் மனம் வருந்தியது.
நால்வரும் கிளம்பி வீட்டிற்கு வெளியே வர எத்தனிக்க, காவ்யாவிடம் இருந்து அழைப்பு வந்தது. தன்யாவின் போனிற்கு வந்திருக்க, அதைக் கண்டவர்கள் ஒரு நிமிடம் நிம்மதியடைய, மறுநொடி, ஏதேனும் ஆபத்தோ?! என்று பதறி எடுத்தார்கள்.


தன்யா, "ஹலோ! காவ்யா!! எங்க இருக்கடி? இவ்ளோ நேரம் ஆகுது! இன்னும் வராம இருக்க?! எதுவும் பிரச்சினையா காவி?? சொல்லு! எங்க இருக்கன்னு சொல்லு! நாங்க வரோம்" என்று பதட்டத்துடன் கேட்டிட, அதைக் கேட்ட காவ்யா உள்ளுக்குள் வருந்தினாலும் தன்னைச் சமாளித்துக்கொண்டு,


"போன ஸ்பீக்கர்ல போடு, தனு!" என்று இவள் கூறியதைக் கேட்டு குழம்பியவள் போனை லௌட் ஸ்பீக்கரில் போட்டாள். இதைக் கண்ட தோழிகள், "காவி!! என்னம்மா?! எங்க இருக்கன்னு சொல்லு! பிரச்சினையில இருக்கியா?" என்று பதறியபடி விசாரிக்க, காவ்யா,


"என்னய மன்னிச்சுடுங்கடி!! இப்போ நான் சொல்லப்போறத மட்டும் அமைதியா கேளுங்க! ப்லீஸ்டி..!" என்று கேட்டிட, நால்வரும் அமைதியாகினர்.


"நான் உங்களவிட்டு தூரமான இடத்துக்கு வந்துட்டேன்! இத கேக்கும்போது உங்களுக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கும்னு என்னால புரிஞ்சுக்க முடியுது! ஆனா, தினமும் என்னால நீங்க படுற கஷ்டத்த பாக்கமுடியலடி! நான் இன்னும் உங்க கூடவே இருந்தா உங்களாலயும் சந்தோசமா வாழமுடியாது. 'அதுக்காக! நீ இப்டி போயிட்டா நாங்க சந்தோசப்படுவோமா?' ன்னு நீங்க கேப்பீங்க! ஆனா, நான் உங்ககூட இருந்தா என்னாலயும் எதையும் மறக்கமுடியாம கஷ்டப்படுவேன். அதப்பாத்து நீங்களும் வருத்தப்படுவீங்க! அதுக்காகத்தான் நான் இப்டி ஒரு முடிவெடுத்தேன்" என்று கூறிக்கொண்டிருக்க, தோழிகளின் மனம் நொறுங்கியது.


"அப்போ எங்களவிட்டு போகணும்னு உனக்கு தோணிருக்குல்ல! இதுதான் நீ எங்கள புரிஞ்சிகிட்டதா?! உன் கஷ்டம் எங்க கஷ்டம்டி! அது ஒண்ணும் சுமை கிடையாது! இதுலாம் உனக்கு இப்ப புரியாது! நேர்ல பாத்து புரிய வைக்கிறோம்! இப்போ எங்க இருக்கன்னு சொல்லு!!" என்று சரண்யா கோபமாகக் கூறிட, மௌனம் காத்தாள், காவ்யா.


"அப்போ சொல்லமாட்டியா?! காவி! ப்லீஸ்!! உனக்குத் தெரியும்ல எனக்கு உன்னயனா எவ்ளோ பிடிக்கும்னு?! நீ இப்டி எங்களவிட்டுப் போனா என்னால தாங்கிக்க முடியாது! ப்ளீஸ்... காவி!! திரும்ப வந்துடு! ப்லீஸ்டி...!!" என்று ரம்யா அழுதுகொண்டே பேசுவதைக் கேட்ட காவ்யா மௌனமாகக் கண்ணீர் சிந்தினாள்.


"இங்க பாரு ரம்மி!! நான் உங்களவிட்டு எங்கயும் போகல! இது ஒரு தற்காலிகமான பிரிவுதான். என்னால என் கடந்தகாலத்த மறக்க முடியல! விடாம துறத்துது! அது தினமும் என்னய கொல்லுது! அதுல இருந்து விடுபடணும்னு என் மனசு ஆசப்படுது! ஆனா, மூள விடமாட்டிக்குது!" என்று கூறியவளால் அடுத்த வார்த்தைப் பேசமுடியாமல் நிறுத்தினாள். அதன்பின், சற்று நிதானித்துப் பேச ஆரம்பித்தாள்.


"அதனால எனக்கு ஒரு மாற்றம் வேணும்னு தோணுச்சு! அது அங்கயே இருந்தா கிடைக்காதுன்னுதான் இங்க வந்துட்டேன். உங்ககிட்ட சொன்னா விட்ருக்கமாட்டீங்க! அதான் வந்துட்டு சொல்றேன். என்னய மன்னிச்சிடுங்கடி! ஆனா, நீங்க என்னய புரிஞ்சுப்பீங்கனு நம்பிக்கைலதான் இப்டி பண்ணேன்" என்று அழுதுகொண்டே கூறுவதைக் கேட்ட தோழிகளும் அழுதனர்.


"என்னால உங்க வாழ்க்கை வீணாகக் கூடாது. உங்க லைஃப நீங்க சந்தோசமா வாழுங்க! நான் இங்க ரொம்ப பாதுகாப்பான இடத்துலதான் இருக்கேன். என்னய பத்தி கவலப்படாதீங்க! கொஞ்சநாள் கழிச்சு உங்ககிட்ட திரும்பி வருவேன். ஆனா, அதுவர எங்கிட்ட யாரும் பேச வேணாம்! என்னய தேடவும் வேணாம்! இது என்மேல சத்தியம்!" என்று உறுதியாகக் கூறிட, தோழிகள் அதிர்ந்தனர்.


"இது உங்களுக்காக என்னய கஷ்டப்படுத்திக்க எடுத்த முடிவுனு நினச்சுடாதீங்க! உங்கள கஷ்டப்படுத்தவும் எடுத்த முடிவு இல்ல! ஒரு மாறுதலுக்காக எடுத்த முடிவு. இதுலயும் நீங்க எனக்கு சப்போர்ட் பண்ணுவீங்கனு நான் நம்புறேன்டி! நீங்க சந்தோசமா அங்க இருந்தாலே இங்க நானும் கொஞ்ச கொஞ்சமா மாறிடுவேன்டி! ப்லீஸ்...எனக்காக இது மட்டும் செய்யுங்க! பாய் டி! அனு, ரம்மி, தனு, சரு..!! லவ் யூ டி!! " என்று கூறி முடித்து அழைப்பைத் துண்டித்தாள்.


அதைக் கேட்டுக் கதறி அழுதவர்கள், அவள் திடீரென துண்டித்ததைப் பார்த்து மறுபடியும் அவளுக்கு அழைக்க, அது 'ஸ்விச்ட் ஆஃப்' என்று வந்தது. அதைப் பார்த்து தரையில் மடிந்து அமர்ந்து அழுதனர்.


போனை அணைத்துவிட்டு சிம்மைக் கலட்டியவள் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்க்க, ராணா நிற்பதைக் கண்டு அதிர்ந்தாள்.






காவ்யா எங்கே சென்றாள்?? அவள் தோழிகள் அவளைக் கண்டுபிடிப்பார்களா?? இல்லை, அவள் சத்தியத்தைக் கடைப்பிடிப்பார்களா?? ராணா எப்படி இவளிடம் வந்தான்?? சிக்கியவள் தப்பிப்பாளா??






❤வருவாள்❤...


கீழே இருக்கும் லிங்க் கிளிக் செய்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்

Thread 'இருளில் தொலைந்த ஒளி அவள் - Comments' https://www.sahaptham.com/community/threads/இருளில்-தொலைந்த-ஒளி-அவள்-comments.500/
 
அவள் 11



காவ்யா தனது தோழிகளிடம் பேசிவிட்டு, அவர்கள் திரும்ப அழைத்துவிடக் கூடாது என்பதற்காக தனது அலைப்பேசியை அணைத்துவிட்டு, அதிலிருந்த சிம் கார்டையும் கலட்டினாள். திடீரென அவள் அறையின் கதவு திறக்கப்படும் ஓசைக் கேட்டுத் திரும்பிட, அறை வாசலில் ராணா நின்றுகொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்தாள்.


அவனைப் பார்த்த அதிர்ச்சியில் கையிலிருந்த அவளது அலைப்பேசியைக் கீழே போட்டவாறு எழுந்து நின்றாள். அவன் இவளை நோக்கி நடந்துவர, அவள் மிரண்டுபோய் பின்னே நகர்ந்தாள். இவன் வேக எட்டில் இவளை நெருங்கி அவளைப் பிடித்திட, விக்கித்துப்போய் அவனைக் கண்களில் பயத்துடன் பார்த்தாள். அவள் கண்களில் தெரியும் பயத்தை ரசித்தவாறு,


"ஹே!! இன்னும் நீ என்னயப் பாத்து பயப்படுறியா?! இப்ப நான் உன்னோட புருசன், டார்லிங்!! ஹஸ்பண்ட பாத்து பயப்படலாமா?!" என்று அவளைப் பார்த்து கேலியாகப் பேசி ஏளனமாகச் சிரித்தான். அது அவளுக்கு உள்ளுக்குள் வலித்தாலும் எதுவும் செய்யமுடியாமல் அமைதியாக நின்றாள்.


"ஆனா! நீ இப்டி பயந்து நடுங்குறத பாக்கும்போது எனக்கு எவ்ளோ சந்தோசமா இருக்குனு தெரியுமா?! இப்டி தினமும் உன் கண்ணுல பயத்த நான் பாக்கணும்! இதேமாறி உன் திமிர முழுசா அடக்குறேன்!" என்று கூறி அவளை விட்டு அவன் சென்றுவிட்டான்.


அவன் விட்ட வேகத்தில் இவள் கீழே சரிந்து அமர, அவளின் நினைவுகள் நடந்ததை நினைவுபடுத்தியது.



*******************************************


காவ்யா நிறுவனத்தைவிட்டு வெளியே வந்து, பேருந்து நிறுத்தத்தில் தனது பேருந்திற்காகக் காத்திருக்கையில் வேறு எங்கயாவது சென்றுவிட வேண்டும் என்று முடிவெடுத்தாள். அவளுக்கானப் பேருந்தும் வந்துவிட, அதன்பின்னே வேறு ஊருக்குச் செல்லும் பேருந்தும் வந்துகொண்டிருந்தது.


அதில் ஏறிவடலாமா? என்று எண்ணியவள், மறுநொடி அவளது தோழிகளின் நினைவு வர, அவர்களிடம் சொல்லாமல் விட்டுச் செல்வது அவர்களுக்கு மிகுந்த வேதனையை அளிக்கும் என்பதை நினைத்து தன் முடிவை மாற்றிக்கொண்டாள். வீட்டிற்குச் சென்று அவர்களிடம் இந்த முடிவைச் சொல்லி அவர்களைச் சம்மதிக்க வைத்தபின் செல்லலாம் என்று முடிவெடுத்து இவளது பேருந்தில் ஏறுவதற்குச் சென்றாள்.


அவள் நிறுத்தத்தில் இருந்து சற்று தொலைவில் பேருந்து நின்றதால் நடந்து சென்றுகொண்டிருக்க, அதற்குமுன், ஒரு கார் அதன்முன் வந்து காவ்யாவின் அருகில் நின்றது. அதிலிருந்து முகமூடி அணிந்த இருவர் இறங்கிவந்து அவளைப் பிடித்து காருக்குள் இழுத்துப்போட்டனர். அவளை உள்ளே தள்ளியவுடன் கார் புறப்பட்டு வேகமெடுத்தது. அந்தப் பேருந்து நிறுத்தத்தில் அதிகம் கூட்டம் இல்லாததாலும், இருந்தவர்களும் இவள் ஏறவிருந்தப் பேருந்தில் ஏறிவிட்டதாலும் இவள் கடத்தப்பட்டதை யாரும் கவனிக்கவில்லை.


காருக்குள் இருந்து காவ்யா கூச்சலிட்டாள். "யார் நீங்க?? என்னய விட்டுடுங்க!! என்னய எதுக்காக கடத்திருக்கீங்க?! எங்க போறீங்க?? ப்லீஸ்...விட்ருங்க..!!" என்று கத்தியபடியே வர, இருவரும் சிறிது தூரம் சென்றதும் அவள் கண்களையும் வாயையும் துணியை வைத்துக் கட்டினர். அதனால் இன்னும் பயந்தவள் அங்கயும் இங்கயும் ஆற்பரிக்க, அவளது கைகளையும் பின்புறமாகக் கட்டினர். அவளால் எதுவும் செய்யமுடியாமல் துவண்டு அடங்கினாள்.


புறப்பட்ட கார் சவுக்கு மரத் தோப்புகளுக்கு நடுவில் சென்று, அடுத்து மரங்கள் அடர்ந்த இன்னொரு தோப்புக்கு இடையில் சென்று ஒரு பெரிய பங்களாவின் முன் நின்றது. அதிலிருந்து இறங்கிய அந்த முகமூடி அணிந்த ஆண்கள் இருவரும் காவ்யாவின் கைப்பற்றிக் கீழே இறங்கச்செய்து, அந்த வீட்டுக்குள் கூட்டிச் செல்லப்போக, அவள் மறுத்ததும் இழுத்துச் சென்றனர்.


அந்த வீட்டுக்குள் இழுத்துச் சென்றவர்கள் நடுகூடத்தில் நின்றனர். அங்கே போட்டிருந்த சோபாவில் கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்தான், ராணா. அவளைப் பார்த்தவன், அவள் கண்கட்டை அவிழ்த்துவிடும்படி சைகை செய்ய, இருவரும் அவன் சொன்னபடியே அவிழ்த்துவிட்டனர். கண்ணவிழ்த்த காவ்யா கண்களைத் திறந்து பார்க்க எதிரே ராணாவைக் கண்டவள் அதிர்ந்து விழி விரித்தாள்.


அவளின் அதிர்ச்சியைக் கண்டு லேசாகப் புன்னகைத்தவன், அவர்கள் இருவரையும் வெளியே போகும்படி உத்தரவிட அவர்களும் சென்றனர். இவன் எழுந்து அவளருகில் வருவதைக் கண்டவள் பயந்தபடி நின்றாள். இவளருகில் வந்தவன் அவள் வாய்க்கட்டை அவிழ்த்துவிட்டவன், இவள் முகம் நோக்கி குனிய, பதறியவள் உடனே பின்னோக்கிச் நகர்ந்தாள். அதைக் கண்டவன் சிரித்துக்கொண்டே,


"இன்னும் எத்தன நாளைக்கு என்கிட்ட இருந்து உன்னால தப்பிக்கயுடியும்னு நினைக்கிற?! இப்ப நீ என்னோட வீட்டுல, என் கஸ்டடியில இருக்க! இன்னுமா உன்னால தப்பிக்கயுடியும்னு தோணுது?!" என்று ஏளனமாகக் கேட்டிட,


"எதுக்காக என்னய கடத்திட்டு வந்த?? ப்லீஸ்...உன்னய கெஞ்சி கேட்டுக்குறேன்! என்னய விட்டுடு..!நான் இனிமேல் உன் கண்ணுலயே படமாட்டேன். எங்கயாச்சும் போய்டுறேன். என்னய விட்டுடு..! ப்லீஸ்..!!" என்று அவனிடம் கெஞ்சி அழுதாள். ஆனால், அது அவனைத் துளியும் கரைக்கவில்லை. அழுதிடும் அவளை ஏளனச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.


"அழுவுறியா!! நீ அழறத பாக்குறதுகூட ரொம்ப சந்தோசமா இருக்கு! ஆனா! இன்னும் உன் திமிரு அடங்கவே இல்ல பாத்தியா! அத பாக்கும்போது எனக்குள்ள பத்திட்டு எரியுற நெருப்புல பெட்ரோல ஊத்துன மாறி கொழுந்துவிட்டு எரியுது என்னோட கோபம்..!" என்று கோபமாக அவள் முகத்துக்கருகில் வந்து கூறிட, அவளோ அவனைப் பார்க்கமுடியாமல் தலைகுனிந்தாள். அவன் அவள் நாடியைப் பிடித்து முகத்தை நிமிர்த்தி,


"பாத்தியா! இப்பக்கூட உனக்கு என்னய பாத்து சாரி! மன்னிச்சிடுனு கேக்கணும்னு தோணல! இதுதான் உன்னோட திமிரு!" என்று கூறி அவளை விட, அதைக் கேட்டு அவனை விரக்தியாய் பார்த்திட, அவனும் தொடர்ந்து,


"பரவால்ல..! நீ திமிராவே இரு! அதுதான் எனக்கும் வேணும்! எல்லோரோட திமிரையும் நான் நினச்சதும் அடக்கிருக்கேன். ஆனா, உன் விஷயத்துல மட்டும்தான் அது முடியல! நான் உன்னய கஷ்டப்படுத்தணும்னு நினைக்கிறப்பல்லாம் நீ என்கிட்ட இருந்து தப்பிச்சுட்டே இருக்க! யு மேபி லக்கி அட் தட் டைம்! பட் நாட் நௌ!" என்று கூறிக் கொண்டிருக்க, அவனை வேதனை தோய்ந்த கண்களால் பார்த்தாள். ஆனால், அவள் கண்கள் காட்டும் வேதனை அவனுக்குப் புரியவில்லை.


"முன்னாடியே நீ அடங்கிருந்தனா, நான் நினச்சபடி நடந்திருச்சுன்னா, அதோட உன்னய விட்டுருந்திருப்பேன். ஆனா, இப்ப உன் வாழ்க்க முழுக்க என்கூட இருந்து கஷ்டப்படப்போற!" என்று அவன் அவளைப் பார்த்துக் கூறிட, காவ்யா அதைக் கேட்டு அதிர்ச்சியின் உச்சிக்கே போய்விட்டாள். அவள் கண்கள் அந்த அதிர்ச்சியைத் தாங்கி, தேங்கிய கண்ணீருடன் அவனைப் பார்க்க, அவனோ,


"என்ன ஷாக்கிங்கா?! இல்ல..நான் சொன்னது புரியலயா?! தெளிவா சொல்றேன். உனக்காக நான் தனியா டைம் வேஸ்ட் பண்ணி ப்ளான் போட்டு பழி வாங்குறதுக்குப் பதிலா உன்னய கல்யாணம் பண்ணிகிட்டாளே அது உனக்கு நரகம் மாறிதான். எனக்கும் பழி வாங்குனமாறிதான். அதான் உன்கூடயே இருந்து உன் திமிர அடக்க முடிவு பண்ணிட்டேன்!" என்று கூறுவதைக் கேட்டு கண்களில் நீர்வடிய, கீழே சரிந்து மண்டியிட்டு அமர்ந்தாள். கீழே குனிந்து அழுதவள், நிமிர்ந்து,


"ப்லீஸ்...!! என்னய விட்டுடு!! நா..ன்..நான்! சாரி கேக்காதது பிரச்சினைனா சாரி கேக்குறேன்! சாரி! சாரி! சா..ரி..!! நான் உன்னய கஷ்டப்படுத்துனதுக்கு மன்னிப்பு கேட்டுக்குறேன்! மன்னிச்சிடு!! ப்ளீஸ்....!! என்னய விட்டுடு..நான் எங்கயாச்சும் போய்டுறேன்!" என்று மண்டியிட்டுக் கதறி அழுதாள். அவள் அழுகையைக் கண்டு கரையும் சுண்ணாம்புக்கல் அல்லவே அவன் இதயம்! அது கொடூரனின் இதயம் என்ற பெயரில் துடிக்கும் பாறை ஆயிற்றே!!


"இங்க பாரு! இட்ஸ் டூ லேட்! என்கிட்ட நீ எப்ப சாரி கேட்டுருந்தாலும் உன்னய விட்டுருக்க மாட்டேன். நீ ஏற்கனவே தப்பு பண்ணிட்ட! அத மாத்த முடியும்னா உன்னோட வாழ்க்கையும் மாறும்! ஆனா, அதுக்குத்தான் வாய்ப்பே இல்லையே! சோ, இனி இதுதான் உன்னோட வாழ்க்க!" என்று கூறிட,


"என்னய பழி வாங்க நினைக்குற நீ எதுக்காக என்னய கல்யாணம் பண்ணிக்கணும்? அதுல உனக்கு என்ன கிடைக்கப்போகுது? இதுவர பண்ணது போதாதா?! ப்லீஸ்...என்னய விட்டுடு!!" என்று கேட்டிட, அதைக் கேட்டு சத்தமாகச் சிரித்தவன்,


"பராவல்லயே! இந்த நிலமைலயும் தெளிவாதான் இருக்க! நல்ல கேள்வி! நான் எதுக்காக உன்னய கல்யாணம் பண்ணிக்கணும்? உன்னய பழி வாங்கதான்! அத சொல்லிட்டேன். ஆனா, அத உன்னய கல்யாணம் பண்ணிக்காமயே என்னால பண்ணமுடியும். பட், டு யு நோ? ஐ ஹேட் கேள்ஸ்! இதுவர ஒரு பொண்ணக்கூட ஏறெடுத்துப் பாத்ததில்ல!" என்று கூறவும் இவனை அதிர்ச்சி நிறைந்த பார்வை பார்த்தாள், காவ்யா. அதைப் பார்த்தவன்,


"என்ன நம்பமுடியலயா?? நீயும் என்னய இம்ப்ரஸ்லாம் பண்ணிடல! யு டோன்ட் வர்த் இட்! ஆனா, நீ பண்ண தப்புனால நான் உன்கிட்ட தப்பா நடந்துகிட்டேன். நான் தொட்ட ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் பொண்ணு நீயாதான் இருப்ப!" என்று கூறிக்கொண்டிருக்க, காவ்யா அவனை பயந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.


"தட்ஸ் மை பாலிஸி! இதுவர எனக்கு கல்யாணம் பண்ணனும்னு தோணுனுது கிடையாது! பட் உன்னய பழி வாங்கவும் அண்ட் மை பாலிஸிக்காகவும் தான் உன்னய கல்யாணம் பண்ணிக்கப் போறேன். டு யு கெட் தட்? சோ, ரெடியா இரு! கல்யாணம் பண்ணிக்கவும்! நரகத்த பாக்கவும்!" என்று கூறி நிறுத்திட, கண்களில் வலியுடன் அவனைப் பார்த்தாள்.


"அப்றம்! ஒண்ணு சொல்ல மறந்துட்டேன்! நம்ம கல்யாணம் இன்னைக்குத்தான்! கல்யாணப் பொண்ணு ஃப்ரஷ்ஷா இருக்கணும்ல! சோ, போய் ரெஸ்ட் எடு!" என்று கூறியதைத் கேட்டதும் காவ்யா அதிர்ந்துவிட்டாள். அவள் அதிர்ச்சியில் இருக்க, வெளியே நின்ற ஆட்களை அழைத்து அவளைக் கூட்டிச் செல்ல உத்தரவிட்டு இவளிடம்,


"அன்னைக்கு மாதிரி இன்னைக்கும் எப்டியாச்சும் தப்பிச்சுறலாம்னு நினச்சுக்கூட பாக்காத! அது உன்னால முடியாது! அதோட, அன்னைக்கு தப்பிச்சதுக்குத்தான் இப்ப தண்டனை அனுபவிக்குற. இன்னும் தப்பிக்க நினச்சு எதாவது தப்பா முடிவெடுத்தனா அப்றம் விளைவுகள் இன்னும் மோசமா இருக்கும்! ஜாக்கிரதை!" என்று எச்சரித்து அனுப்ப, அவளை மாடிக்கு இழுத்துச் சென்று அங்குள்ள அறையில் உள்ள படுக்கையில் தள்ளிவிட்டு வெளியே வந்து கதவை சாத்தினர்.


"அவ எதாச்சும் ப்ளான் பண்ணாலும் பண்ணுவா! நீங்க இரண்டுபேரும் அந்த ரூம் வாசல்லயே நில்லுங்க! வெளியே ஆட்களெல்லாம் நிக்கிறாங்கல்ல!" என்று கட்டளையிட்டு கேட்டிட, அவர்களும் ஆம்! போட்டுவிட்டு அங்கேயே நின்றனர். அதன்பின், அவன் சில வேலையாட்களை அழைத்து சிலபல கட்டளைகளை இட்டுவிட்டு வெளியே சென்று, காரில் ஏறிக் கிளம்பிச் சென்றான்.


படுக்கையில் விழுந்தவள், கைகள் பின்னால் கட்டப்பட்டிருந்ததால் ஒருபக்கமாகக் கிடந்தாள். அந்த அறையின் தனிமை பயத்தைத் தந்தாலும் நடக்கும் ஆபத்துக்களை நினைக்கும்போது இன்னும் பயம் தந்தது. என்ன செய்வது?? இனிமேல் தன் வாழ்வு இவனிடம்தானா??!! என்று மனம் ஒருபுறம் நினைத்து வருந்த, இதற்குமேல் ஆவதற்கு ஒன்றுமில்லையே!! எல்லாக் கஷ்டத்தையும் ஏற்கெனவே தந்துவிட்டானே!! என்று புத்தி மறுபுறம் கூறியது. ஆனாலும் அவன் பழியுணர்வு இன்னும் அடங்கவில்லையே!! இவனிடம் இருக்கும் நொடிப்பொழுதும் நரகம்தான்! ஆனால், தப்பிக்க முடியாமல், தப்பிக்க தோன்றவும் செய்யாமல் சோர்ந்து கிடந்தாள்.


இனிமேல் இவனிடம் இருந்து தப்பிச் செல்வது என்பது கடினம். அப்படி தப்பித்து எங்கு சென்றாலும் இவன் விடமாட்டான் என்றே தோன்றியது அவளுக்கு. இப்படி பல கோணங்களில் சிந்தித்தவளுக்கு முடிவாக ஒன்றே தோன்றியது! அவளும் ஒரு முடிவுக்கு வந்தவள் சோர்வினால் அப்படியே கண்ணயர்ந்துவிட்டாள்.


தூக்கத்தில் இருந்த காவ்யா அறையின் கதவு தடாளென திறக்கும் சத்தம் கேட்டு அதிர்ந்து விழித்தவள், யாரென்று பார்க்க, அறைக்கு வெளியே நின்ற இருவர் நின்றிருந்தார்கள். அறை திறந்ததும் உள்ளே ஒரு ஐம்பது வயதுகளில் இருக்கும் பெண்மணி கையில் தாம்பூலத்துடன் வந்தார். அந்த தாம்பூலத்தில் புடவை, நகைகள், பூ, குங்குமம் ஆகியவை இருந்தது. அவர் வரவும் அந்த இரண்டு ஆண்களும் அவள் கைகட்டை கலட்டிவிட்டு வெளியே சென்று அறையை சாத்திவிட்டனர்.


காவ்யா நடப்பதைப் பார்த்ததும் என்னவென்று ஊகித்துவிட, அந்த அம்மாவும் இவளருகில் தயங்கி வந்து அந்த தாம்பூலத்தை அவளிடம் கொடுத்து, பொறுமையாக அவளைத் தயாராகச் சொன்னார். இவளும் அவரை ஒரு வேதனை நிறைந்த விரக்தி புன்னகையோடு பார்த்தவள், அந்த தாம்பூலத்தை வாங்கிக் கொண்டு குளியறைக்குள் நுழைந்தாள். சிறிது நேரத்தில் அவள் வெளியே புடவை மட்டும் கட்டிக்கொண்டு வருவதைப் பார்த்த அந்த அம்மா, அவளை அழைத்துச் சென்று அதிலிருந்த நகைகளை அணிவித்து, தலை சீவி பூ வைத்து, நெற்றியில் குங்குமம் இட்டு அலங்கரித்தார்.



மணக்கோலத்தில் அவள் அழகைக் கண்டு அவரே ஒருநொடி மெய்மறந்தார். ஆனால், பொன்னகைகளை அணிந்திருந்த அவளுடைய முகத்தில் புன்னகை ஒன்று இல்லாமல் இருப்பதைப் பார்த்தவர் மனம் சற்று வேதனை அடையத்தான் செய்தது. அவர் இந்த வீட்டிலேயே பல வருடங்கள் வேலை பார்ப்பவர். அவருக்கு ராணாவின் கோபம் நன்றாகத் தெரியும். ஆனால், அவன் கோபத்தில் இந்தளவுக்கு மோசமான ஒரு செயலைச் செய்வான் என்பதை அவர் நினைத்ததில்லை.


காவ்யாவை கடத்திவந்த வீடும் இதுவே! ஆனால்! அன்று வீட்டில் காவலாளிகள் இருவரைத் தவிர வேறு எவரும் அங்கிராததால் அந்த வீட்டில் வேலை செய்யும் எவரும் காவ்யாவை பார்த்திருக்கவில்லை. இங்கு நடந்ததும் அவர்களுக்குத் தெரியாது. இன்று நடக்கும் திருமணம்கூட அவர்களுக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. திடீரென ஏற்பாடு செய்யப்பட்டது மற்றவர்களுக்குச் சந்தேகத்தை எழுப்பினாலும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், அந்த அம்மாவுக்கு இது அவனது கோபத்தில் விளைந்ததுதான் என்பதை கீழே அவன் பேசுவதை ஓரளவுக்கு கேட்டதிலிருந்து அறிந்துகொண்டார்.


ஆனால், அவரால் எதுவும் செய்யவும் முடியாது! செய்யவும் மாட்டார்! என்பதை அவரும் அறிவார். அவர் அவன் சொன்ன வேலையை மட்டுமே செய்ய பணிக்கப்பட்டிருக்கிறார். ஆதலால், காவ்யாவைத் தயார் செய்து கீழே அழைத்துச் சென்றார். அவளும் மறுப்பேதும் பேசாமல் உடன் சென்றாள்.


கீழே இறங்கியவள் சுற்றியும் பார்க்க ஒரு கல்யாணத்துக்குத் தேவையான ஏற்பாடு அனைத்தும் செய்தாகியிருந்தது. சுற்றிலும் சுவரில் பூத்தோரணமிட்டு அலங்கரித்து, கூடத்தின் நடுவில் அக்னி குண்டம் வளர்க்கப்பட்டு அருகில் ஐய்யர் ஒருவர் அமர்ந்து மந்திரம் சொல்லிக் கொண்டிருந்தார்.


இவள் கீழே வரவும், நின்றிருந்த ராணா வந்து அக்னியின் முன் அமரவும் சரியாக இருந்தது. ராணா பட்டுவேட்டி சட்டை அணிந்திருக்க, அவனுடன் அவன் நண்பர்களும் அவனைக் கேலி செய்தபடி உடன் நின்றனர். அவர்களுக்கு அருகில் பெரியவர்களும் நின்றிருந்தனர். காவ்யாவை அழைத்துச் சென்று ராணாவின் அருகில் அமரவைத்தார் அந்த வேலைக்கார அம்மா, கமலாம்மா! அவள் வந்தமர்ந்ததும் அவளை ஒரு வெற்றிச் சிரிப்புடன் அவன் பார்க்க, அவள் அதைக் காணும் நிலையில் இல்லை. தலைகுனிந்தே இருந்தவள் எதிரில் எரியும் அக்னியில் நிற்பதைப் போன்று உள்ளுக்குள் வாடினாள்.


இருவரின் கழுத்திலும் மாலையிட்டனர்.
ஐய்யர் மந்திரம் ஓதி தங்கத்தினால் ஆன தாலிக்கொடியை எடுத்துக் கொடுக்க, ராணா அதை வாங்கி அவள் கழுத்தில் அணிவித்தான். அந்த சமயம் காவ்யாவின் மொத்த உலகமும் இருண்டதுபோல் தோன்றிட, கண்களில் இருந்து கண்ணீர்த் துளிகள் வழிந்தன. அதன்பிறகு, அவள் நெத்தியில் குங்குமம் இட்டு, அக்னியைச் சுற்றிவந்து முழு சடங்கையும் முடித்து சம்பிரதாய கணவன் மனைவி ஆனபின், ரிஜிஸ்டர் ஆபீஸில் இருந்து வரவழைத்த ரிஜிஸ்த்தரரின் பத்திரத்தில் கையொப்பமிட்டு சட்டப்படியும் கணவன் மனைவி ஆயினர், இருவரும்.


திருமணம் முடிவடைந்ததும் இருவரும் எழுந்தனர். ராணா அவளை அழைத்துச் சென்று நண்பர்களின் பெற்றொர்கள் அனைவரின் கால்களிலும் விழுந்து ஆசிர்வாதத்தைப் பெற்றனர். அவர்களும் இவர்களை மனதார வாழ்த்திப் பரிசையும் அளித்தனர். காவ்யா அமைதியாக நின்றிட, அவள் முகம் உணர்ச்சிகள் துடைத்தாற்போல் காணப்பட்டது. ஆனால், அதைக் கண்ட பெரியோர்களும் அவளிடம் எதுவும் கேட்டுக்கொள்ளாமல் ராணாவிடம் பரிசைத் தந்துவிட்டுச் சென்றனர்.


ராணாவின் நண்பர்கள் இருவரையும் ஒன்றாக நிற்க வைத்து ராணாவுக்கும் காவ்யாவிற்கும் வாழ்த்துக்கள் கூறி, ஒவ்வொருவரும் பரிசு தந்தனர். காவ்யா முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் நின்றாள். அவர்கள் கொடுத்தப் பரிசைப் பார்த்த ராணா,


"டேய்!! இதுலாம் எதுக்குடா?? அதான் அப்பா அம்மா கொடுத்தாங்கள்ல!" என்று வாங்க மறுத்திட,


"டேய்! நீ கல்யாணம்தான் சொல்லிக்காம இப்டி திடீர்னு பண்ணிக்கிட்ட! கிஃப்டயாச்சும் ஒழுங்கா வாங்கிக்க! அது அவங்க கொடுத்தது! இது நாங்க கொடுக்குறது!" என்று விஜய் கூறிட,


"ஆமாடா!! ஒழுங்கா வாங்கிடு! இல்லன்னா அவ்ளோதான்!" என்று ராம் மிரட்டும் தோணியில் சொல்லிட,


"ஆஹான்..அப்டியா!! நான் வாங்கமாட்டேன்! என்ன வேணா பண்ணிக்கோங்கடா!" என்று கேலியாகக் கூறி நின்றான்.


"நீ வாங்கமாட்டியா! போ! நீ வாங்காட்டி என்ன! காவ்யா அண்ணி வாங்கிப்பாங்க! என்ன அண்ணி?!" என்று நாகவ் அவனை கிண்டல் செய்து காவ்யாவிடம் கேட்டிட, அவள் அப்பொழுதுதான் நிகழ் உலகிற்கு வந்தவள்போல், "ம்ம்?" என்று முழித்தாள். அதைக் கண்டவர்கள் வருந்தி அவளிடம்,


"இங்க பாருங்க காவ்யா! உங்க கஷ்டம் எங்களுக்கும் புரியுது. ஆனா, என்ன பண்ணமுடியும்? எல்லாம் முடிஞ்சிருச்சே! நடந்து முடிஞ்சத பத்தி நினச்சு கவலப்படாம, இனி இதுதான் உங்க வாழ்க்க! ராணா இஸ் யுவர் ஹஸ்பண்ட் நௌ! எல்லாத்தையும் மறந்துட்டு புது லைஃப ஸ்டார்ட் பண்ணுங்க! பெஸ்ட் விஷ்ஷஸ்!" என்று பிரபவ் ஆறுதல் கூறி அவளிடம் பரிசைக் கொடுக்க, அவள் அவன் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியில் நின்றாள். அவளைப் பார்த்த ராணா உள்ளுக்குள் சிரித்துக்கொண்டான். பின் தன்னை சுதாரித்துக் கொண்டவள் அவர்கள் தந்த பரிசை வாங்கிக்கொண்டாள்.


காவ்யாவைப் பார்த்த ராணா, "நீ மேல ரூம்கு போ! கமலாம்மா! அவள கூட்டிட்டு போங்க!" என்று கூறிட, இருவரும் மேலே சென்றனர். அறைக்குள் சென்றவள் கமலாம்மாவைப் போகச் சொல்லிவிட்டுக் கதவை சாத்தினாள். மாலையைக் கலட்டி மெத்தையில் வீசியவள் அப்படியே கீழே அமர்ந்தாள்.


'இவன் பண்ண தப்புக்கு சப்போர்ட் பண்ணுறதுக்குகூட இங்க ஆளுங்க இருக்காங்க. அவன் ஃப்ரண்ட்ஸ்க்கும் இது சாதாரணமாதான் தெரியுது! ஒரு பொண்ணோட வாழ்க்கையவே பழி வாங்குறதுக்காக நாசமாக்கிட்டு இப்ப கல்யாணம் பண்ணிகிட்டா அவன் பண்ண தப்பு தப்பு இல்லனு ஆயிடுமா! இல்ல, இது ரொம்ப நல்ல விஷயம் ஆகிடுமா?' என்று எண்ணியவள்',


'நான் பண்ணது பெரிய தப்புதான்! அவன் தெரியாம இடிச்சதுக்கு அவன செருப்பால அடிச்சிருக்கக் கூடாதுதான்! அதுக்காக இவ்ளோ பெரிய தண்டனையா எனக்கு?! நீங்களே சொல்லுங்க கடவுளே!' என்று எண்ணி அழுதாள்.


'நான் என்னோட அளவுக்கு அதிகமான கோபத்துல அவன அடிச்சேன். அதுக்கான தண்டனையா அவனோட அதே கோபம் எனக்கு தண்டனை கொடுத்திருச்சு! என் ஃப்ரண்ட்ஸ் எப்பவும் சொல்வாங்க! கோபம் வந்து ஆத்திரத்தில பண்றது தப்பாதான் போய் முடியும்னு! அது இப்ப நிஜமாயிடுச்சு!' என்று தனக்குள்ளே நினைத்து வருந்தியவளுக்கு அவள் தோழிகளின் நியாபகம் வந்தது. அவளது கைப்பையைத் தேடி எடுத்தவள் அலைப்பேசியில் அவர்களுக்கு அழைப்புவிடுத்துப் பேசினாள்.


ராணாவும் அவனது நண்பர்களும் கீழே சோபாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். "ஆனா, பாவம்டா! அண்ணி!" என்று நாகவ் கூறிட,


"அது யாருடா அண்ணி?" என்று ராம் கேட்க, அவனைப் பொய்யாக முறைத்திட,


"வேற யாரு!? நம்ம காவ்யா அண்ணியத்தான் சொல்றான்! என்னடா!" என்று விஜய் கூறிட, நாகவ்வும் விஜயும் ஹைபை போட்டுக்கொண்டனர்.


"என்னங்கடா? அண்ணினுலாம் கூப்டுறீங்க?! புதுசா இருக்கே?" என்று ராம் சந்தேகமாய் கேட்டிட,


"டேய்! நம்மலாம் ஃப்ரண்ட்ஸா இருந்தாலும் பிரதர்ஸ் மாறிடா! சோ! ப்ரதரோட வஃய்ப் நமக்கு அண்ணிதானடா! அதான்! அப்டி கூப்டுறோம்! நீயும் அப்டித்தான் கூப்டணும்!" என்று நாகவ் தீவிரமாகக் கூறிட, சிரித்த ராம்,


"ஓஓ..அப்டி வர்றியா நீ!? கரெக்ட் தான். இனி நானும் அண்ணினே கூப்டுறேன் அப்போ! ஓகேவா!" என்று கூறி புன்னகைத்தான்.


"ஹலோ! ப்ரதர்ஸ்! நானும் அவங்கள அண்ணினுதான் கூப்டணுமா??" என்று பிரபவ் புன்னைத்துக்கொண்டே கேட்டிட,


"ம்ம்..நீ கூப்டணும்னு அவசியம் இல்லடா! நீதான் ராணாவ விட மூத்தவனாச்சே! அதனால கணக்குப்படி அண்ணிலாம் வராது! சோ! நீ அவங்கள பேர் சொல்லியே கூப்டலாம்!" என்று விஜய் கிண்டலாகக் கூறி கேலி செய்திட, பொய்யாக முறைத்த பிரபவ்,


"அடேய்!! ஏதோ பல வருசம் மூத்தவன் மாறி சொல்ற! என்னயவிட ஆறுமாசம் சின்னவன். அதுக்கு இவ்ளோ டேமேஜ் பண்ணாதடா!" என்று அப்பாவியாகக் கூறினான்.
அதைக் கேட்ட நண்பர்கள் சிரித்துவிட,


"நாங்க மட்டும் என்ன இரண்டு மூணு மாசம்தான சின்னவங்க! அதுக்கே சொல்லலயா! பெரியவன்னா ஒருநாள்னாலும் பெரியவன்தான்டா அண்ணா!!" என்று கூறி ராமும் கேலி செய்திட, மூவரும் ஹைபை போட்டுக்கொண்டு சிரித்தனர். பிரபவ் முகத்தைத் தொங்கப்போட்டது போல் பாவனை செய்தாலும் அடுத்தநொடி சிரித்துவிட்டான். இவர்களின் கூத்தை வேடிக்கைப் பார்த்தப்படி அமைதியாக அமர்ந்திருந்தான், ராணா.


அவனிடம் திரும்பியவர்கள், "இந்த கூத்துல சொல்ல வந்ததையே மறந்துட்டேன்! அண்ணி பாவம்டா! அவங்க ஏற்கனவே ரொம்ப கஷ்டப்படுட்டாங்க! இன்னும் அவங்க அதுல இருந்து மீண்டு வரலன்னு அவங்க முகத்த பாத்தாலே தெரியுதுடா! அவங்கள நல்லா பாத்துக்கோடா!" என்று நாகவ் வருத்தமாகக் கூறிட, அதைக் கேட்டவன் சரியென தலையை ஆட்டினான்.


"ஆமாடா!! ரொம்ப மனசு உடஞ்சு போயிருக்கமாறி இருக்காங்கடா...அம்மா அப்பாவும் இல்லாம நிற்கதியா நிக்கிறாங்கடா! நீதான் இனி அவங்களுக்கு எல்லாம்! பாத்துக்கோடா!" என்று பிரபவ்வும் கூறிட,


"ஆமாடா! இனியும் அவங்ககிட்ட உன் கோபத்த காட்டிடாத! புரியுதா?!" என்று ராமும் அறிவுரை கூறினான். அதையனைத்தையும் அமைதியாகக் கேட்டவனின் நினைவுகள் அன்று காலை நோக்கி பயணமானது.






காவ்யா நினைத்தபடி ராணாவின் நண்பர்களும் இவன் செய்த தப்புக்கு துணை போனவர்களா?? ராணாவின் நண்பர்கள் கூறுவது என்ன?? அன்று காலை என்ன நடந்தது??








❤வருவாள்❤...
 
மேலே உள்ள அப்டேட்டைப் படித்து மறக்காமல் கமெண்ட் செய்யவும் நட்புக்களே...!!!

- தமிழுக்கினியாள்


கீழே இருக்கும் லிங்க் கிளிக் செய்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்

Thread 'இருளில் தொலைந்த ஒளி அவள் - Comments' https://www.sahaptham.com/community/threads/இருளில்-தொலைந்த-ஒளி-அவள்-comments.500/
 
அவள் 12



அன்று காலை காவ்யாவை பழி வாங்க எண்ணிய அனைத்துக் காரியங்களும் வீணாகப்போனதைத் தாங்காமல் அவனது கோபம் தலைக்கேற ஒரு முடிவுக்கு வந்தவன், அவன் அலைப்பேசியை எடுத்து அவனது ஆட்களிடம் பேசி அவளைக் கடத்தி வரச் சொன்னான். அவனும் சொல்லிவிட்டு அவன் வீட்டிற்குச் சென்றுவிட, அவன் ஆட்களும் அவளை கொண்டு வந்துவிட்டனர். அவளிடம் திருமணத்தைப் பற்றிக் கூறி அவளை அறைக்கு அனுப்பிவிட்டு வெளியே கிளம்பியவன், அவன் நண்பர்களை அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து நேரம் செலவிடும் இடத்திற்கு வரவழைத்தான்.


ஐவரும் வந்து சேர்ந்தபின், மௌனமாக இருந்த ராணாவிடம்,
"என்னடா? திடீர்னு ஃபோன் போட்டு இங்க உடனே வாங்கடானு வரச்சொல்லிட்டு இப்டி அமைதியா இருக்க! என்னனு சொல்லுடா!" என்று ராம் அவனைப் பார்த்துக் கேட்க,


"என்னைக்கும் இல்லாம இன்னைக்கு நீயே வரச் சொல்லிருக்கனு உடனே பதட்டத்தோட வந்தோம்டா! என்னாச்சுடா? எதாவது ப்ராப்ளமா?" என்று நாகவ் பதட்டத்துடன் கேட்டிட,


"ப்ராப்ளமா இருந்தா நம்மள ஏன் கூப்டப்போறான்?! அவனே சால்வ் பண்ணிட்டுத்தான் நம்மகிட்டயே சொல்வான்! இது வேற ஏதாச்சும் குட் நியூஸாடா?! கம்பெனி சம்பந்தமா எதுவும் இருக்கிறமாறி தெரியலயே..!" என்று பிரபவ்வும் யோசித்துக் கொண்டிருக்க,


"அடேய்!! விசயம் என்னனு சொல்லேன்டா!! இத்தன பேரும் சஸ்பென்ஸ் தாங்காம பொலம்புறோம்! நீ சைலண்டா உக்காந்து வேடிக்கை பாத்துட்டு இருக்க..!!" என்று விஜய் பொய்க் கோபத்துடன் பேச, அதைக் கேட்டுப் புன்னகைத்த ராணா,


"நான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்டா!" என்று கூற, அதைக் கேட்டவர்கள் ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தபடி அவனை வினோதப் பிறவியைப் பார்ப்பதைப் போல் பார்த்தனர். அதைக் கண்ட ராணா,


"டேய்!! என்னங்கடா?!! இப்டி பாக்குறீங்க?!! என்னாச்சு?!" என்று கேள்வி எழுப்பிட,


"இது நீதானான்னு பாக்குறோம்டா!" என்று கூறிய நாகவ் பக்கத்தில் இருந்த ராமைக் கிள்ள, ராம் கத்தியபடி அவனை முறைத்தான். நாகவ் அவனைப் பார்த்து இளித்தபடி,
"கனவு இல்லடா! அப்ப நிஜம்தானா இது?! டேய்! ராணா!! உண்மையாவே உனக்கு இப்டி ஒரு முடிவெல்லாம் எடுக்கத் தெரியுமா??!" என்று வியந்து கேட்டிட, அவனை ராணா பொய்யாக முறைத்திட,


"பின்ன என்னடா? நீதான் இத்தன வருஷமா எந்த பொண்ணையும் ஏறெடுத்தும் பாக்கமாட்டியே! கேட்டா பொண்ணுங்களையே பிடிக்கலடா!னு சொல்லுவ. இப்ப இப்டி ஒரு முடிவுக்கு வந்துருக்கன்னா ஆச்சரியமாத்தான இருக்கும்! என்னதான் நாங்க உன் ப்ரண்ட்ஸா இருந்தாலும் உன்னயமாறி வினோதப் பிறவியா எங்களால இருக்கமுடியுமா??" என்று விஜய் கேலி செய்திட, அவனையும் ராணா முறைத்தான்.


"ஆமாடா!! உன்னயமாறி இருக்க எங்களாலயும் முடியாதுடா! அவனுக்கு எந்தப் பொண்ணையும் பிடிக்காதுனா, உனக்கு எல்லாப் பொண்ணுங்களையும் பிடிக்கும்! ஒரு பொண்ணக்கூட விடாம எல்லார்கிட்டயும் பேசி ஃப்ரண்டாகிட வேண்டியது! த்தூ.!" என்று விஜயைக் கழுவி ஊற்றினான், ராம். அதைக் கேட்டவன் ஈஈஈ என இளித்து சமாளித்தான். மற்றவர்கள் சிரித்தனர்.


"டேய்! ராணா! அப்ப நிஜமாவே கல்யாணம் பண்ணிக்க முடிவு பண்ணிட்டியா?? அப்போ...பொண்ண ஏற்கனவே முடிவு பண்ணிட்ட அப்டித்தான?! என்னடா??! லவ்வா!!" என்று பிரபவ் ராணாவைப் பார்த்துத் தீவிரமாகக் கேட்டிட, ராணா சிறிது மௌனம் காத்தவன்,


"ம்..ஆமாடா!" என்று கூறியதும் அவர்கள் இன்னும் அதிர்ந்தனர். "டேய்! பிரபா!! நீ அன்னைக்கு சொன்னது உண்மதான்டா! இப்பதான்டா அது வெளிச்சத்துக்கு வந்துருக்கு!" என்று நாகவ் கூறிட,


"என்னதுடா? என்ன உலறுற?" என்று ராணா கேட்டிட,


"கொஞ்சநாள் முன்னாடி நாம இங்க வந்திருக்கும்போது நீ ஏதோ யோசனையில இருந்தியே.! அப்பவே பிரபா சொன்னான்! நீ ஏதோ பொண்ணுகிட்ட மாட்டிகிட்டியோனு! நாங்கதான் நம்பல. ஆனா, இன்னைக்கு அவன் சொன்னது தான் நிஜமாயிருக்கு. அதான் சொன்னோம்!" என்று விஜய் கூறியதைக் கேட்டு ஓ! என்று அமைதியானான், ராணா.


"அப்போ! அன்னைக்கு இந்தப் பொண்ண பத்திதான் யோசிச்சியாடா?" என்று ராம் வினவிட, "ஆமா!" என்று தலையசைத்தான்.


"அடப்பாவி! அத அன்னைக்கே சொல்லிருக்கலாம்ல?! இத்தனநாள் கழிச்சு சொல்ற?!" என்று நாகவ் கோபித்துக்கொள்ள,


"அந்த பொண்ணுகிட்டயே சொல்லிருக்கமாட்டானா இருந்திருக்கும்டா! அதான் அவங்ககிட்ட சொல்லிட்டு நம்மகிட்ட சொல்லலாம்னு நினச்சிருப்பான். அதான் அன்னைக்கே சொன்னானே நேரம் வரும்போது சொல்றேன்னு..இதுக்கு எதுக்கு கோபப்படுற? கூல்டா!" என்று பிரபவ் கூறி நாகவ்வை சமாதானப்படுத்திட, அவனும் சாதாரணமானான். ஆனால், இவன் இவ்வளவு தெளிவாகக் கவனித்திருப்பதைக் கண்ட ராணா சற்று யோசித்தான்.


"அப்றம்! சொல்லிட்டியாடா? எப்படா சொன்ன?! அப்போ! சீக்கிரம் கல்யாண ஏற்பாட பாக்கணும்போல!!" என்று ராம் கூறி கேலி செய்ய, சிறிது யோசித்த ராணா பொறுமையாக,


"கல்யாணம் இன்னைக்குத்தான்! என் வீட்ல வச்சுதான்டா கல்யாணம் நடக்கப்போகுது!" என்று இன்னொரு பெரிய குண்டை தூக்கிப் போட, நால்வரும் ஒரு நிமிடம் ஸ்தம்பித்தனர்.
அவர்களுக்கு என்னவென்று சிந்திக்கக்கூட முடியவில்லை. ராணாவும் அமைதியாக அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். சில நிமிடங்கள் மௌனத்தில் கரைய, அதன்பின் மௌனத்தைக் களைத்தான், விஜய்.


"என்னடா சொல்ற??!! இன்னைக்கு கல்யாணமா!! இது எப்ப முடிவு பண்ண?! யாரக் கேட்டுடா இப்டி ஒரு திடீர் முடிவு பண்ண?!" என்று ஆதங்கப்பட,


"அவன் யாருகிட்ட கேட்டுருக்கான்டா! யார மதிச்சுருக்கான்! இத்தன வருசம் கூடவே இருக்கிற நம்மளயே மதிக்கல! எதையுமே சொன்னது கிடையாது! இதையும் சொல்லல! அவ்ளோதான்! நம்மலாம் இவனுக்கு யாரோதான!" என்று நாகவ் வேதனையில் கோபமாகப் பேசிட, அதைக் கேட்ட ராணா முகம் சுருங்கினான்.


"டேய்! நாகா!! அப்டிலாம் இல்லடா! நீங்க எனக்கு எப்டினு உங்களுக்குத் தெரியாதாடா?! நீங்க என் ஃப்ரண்ட்ஸ்..அதுக்கும் மேல ப்ரதர்ஸ்டா!!" என்று ராணா சமாதானமாகக் கூறிட,


"அவன் சொன்னதுல என்னடா தப்பு? நீ ப்ரண்ட்ஸா நினச்சுருந்தா நீ லவ் பண்ணத சொல்லிருப்பல்ல! அட்லீஸ்ட்..! கல்யாணத்த பத்தியாச்சும் எங்ககிட்ட பேசிருப்ப! ஆனா! நீ இப்ப டிஸ்கஷன் பண்ண வரலயே! இன்ஃபர்மேஷன் கொடுக்கத்தான வந்திருக்க! வந்துருங்கனு சொல்லிட்டுப் போக வந்துருக்க! அப்டித்தான! சொல்லிட்டல்ல! போதும்! நாங்க வந்துருவோம். கிளம்பு! ஏன்னா.. நாங்க உன்னய எப்பவும் ப்ரண்டாதான்டா பாக்குறோம்!" என்று உடைந்து கூறிய ராம் கண்கலங்கிட, அதைப் பார்த்த ராணாவுக்கு உள்ளுக்குள் வலித்தது.


இவர்களிடம் என்ன சொல்வது?? உண்மையைச் சொன்னால் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்?? இன்னும் கோபம்தான் அதிகம் ஆகும். இப்போதைக்கு எதுவும் சொல்லவேண்டாம் என்று முடிவெடுத்தவன், அவர்களைச் சமாதானம் செய்ய முனைந்திட, இவனது திடீர் ஏற்பாட்டில் சந்தேகம் கொண்ட பிரபவ்,


"ராணா!! உண்மைய சொல்லு! இது லவ் மேரேஜ்தானா?! இல்ல...வேற ஏதாச்சும் டீலிங்கா? இப்டி திடீர்னு நீ கல்யாணம் பண்ணிக்க முடிவு பண்ணிருக்கன்னா ஏதோ தப்பா படுது! என்னனு சொல்லுடா!!" என்று அவனைக் கூர்மையாகப் பார்த்துக் கேட்டிட, ஒருநொடி அதிர்ந்தவன், பின் சமாளித்துக்கொண்டு,


"ஆமாடா! நீ சொல்றது உண்மதான்! இந்தக் கல்யாணம் திடீர்னு நடக்க காரணம் இருக்கு!" என்று கூறிட, அவனைக் கேள்வியாய்ப் பார்த்தனர், நால்வரும். இவனும் தொடர்ந்தான்.


"நீங்க சொன்னமாறி அன்னைக்கு அவளபத்தி தான் யோசிச்சிட்டு இருந்தேன். அடுத்து அவகிட்ட பேசவும் செஞ்சேன். அப்றம் எங்களுக்குள்ள ஒத்துப்போய் கொஞ்சநாள் நல்லா போச்சு. அவளுக்கு அம்மா கிடையாது அப்பா மட்டும்தான். அவங்களும் ரெண்டு நாள் முன்னாடி திடீர்னு ஆக்ஸிடெண்ட்ல இறந்துட்டாரு. இப்ப அவ யாரும் இல்லாம அநாதையா இருக்கா. அதான் அவள உடனே கல்யாணம் பண்ணி கூட்டி வந்துடணும்னு முடிவு பண்ணினேன். அவ அப்பா இறந்த விஷயம்கூட எனக்கு நேத்துதான் தெரியும். அவகூட இருந்ததால உங்ககிட்ட எதுவும் சொல்லமுடியல. இந்த நிலமையில அவள தனியா விட விருப்பம் இல்லடா! அதான்! இந்த திடீர் கல்யாணம்" என்று சில உண்மையும் பல பொய்களையும் கோர்த்து இவர்கள் இப்படி கேட்பார்கள் என்று முன்கூட்டியே அறிந்தவன் அவர்களிடம் கூறிமுடித்தான்.


அவர்களும் இவனை சோகமாகப் பார்த்திட, பின்பு, "அப்ப நீ எப்டி லவ் பண்ணங்கிற ஸ்டோரி என்னனு சொல்லு!" என்று நாகவ் கேட்டிட, அதைக்கேட்ட ராணா, "இப்ப அதெல்லாம் சொல்றதுக்கு நேரமில்லடா! கல்யாணம் இன்னைக்கு! இப்பவே டைம் கம்மியாதான் இருக்கு. அந்தக் கதைய வேறொரு நாள் சொல்றேன்டா! கோச்சுக்காதீங்கடா!" என்று முடிந்தளவு சமாதானமாகப் பேசிச் சமாளித்திட, அவர்களும் இவன் கூறியதை நம்பி விட்டனர்.


"சரிடா!! அப்பா அம்மா எல்லாரையும் கூப்டணும்ல! இப்பவே போகணும்! வாடா!" என்று பிரபவ் அழைத்திட, சிறிது அதிர்ந்த ராணா,


"வேணாடா!! அம்மா அப்பா யாரையும் கூப்ட வேணாம்!" என்று கூறிட, நால்வரும் அதிர்ந்தனர். "ஏன்டா? எதுக்கு அவங்கள கூப்ட வேணானு சொல்ற? பெரியவங்க அவங்க இல்லாம எப்டிடா கல்யாணம்??! " என்று பிரபவ் கேட்டிட,


"அப்டி இல்லடா!! இது திடீர்னு முடிவு பண்ண கல்யாணம்! அதுவும் அவளுக்காக பண்றது. ஆனா, இப்ப கல்யாணம் பண்ணிக்கிறதுல அவளுக்கும் முழு சந்தோசம் இல்ல! அவங்க அப்பா இறந்த இரண்டாவது நாளே கல்யாணம் பண்ணிக்கிறதால கொஞ்சம் வருத்தமா இருக்கா! இது அவள என்கூட இருக்க வைக்கிறதுக்காக பண்ற கல்யாணம். இத பெரியவங்க எப்டி ஏத்துப்பாங்களோ!" என்று பொறுமையாகக் கூறிட,


"அதபத்தி நீ ஏன்டா கவலப்படுற? உனக்கு கல்யாணம்னாலே முதல்ல சந்தோசப்படுறவங்க அவங்கதான். நீ எப்டியாச்சும் கல்யாணம் பண்ண ஒத்துக்கமாட்டியானு நினைச்சுட்டு இருக்காங்கடா அவங்க! நீ கல்யாணம்னு சொன்னாலே வேற எதபத்தியும் யோசிக்காம வந்துடுவாங்கடா! நீ வா! நாங்க பேசிக்கிறோம்!" என்று நாகவ் கூறிட, தன் எண்ணம் ஈடேறியதை நினைத்து மனதில் புன்னகைத்த ராணா அவனைப் பார்த்து,


"இப்ப என்மேல இருந்த கோபம்லாம் போயிடுச்சா சார்!" என்று கிண்டலாகக் கேட்டிட, அவனும் முகத்தைத் தூக்கிவைத்து,


"அதெல்லாம் இல்லயே! கோபம்லாம் இருக்கத்தான் செய்யுது!" என்று போலிக் கோபம் காட்டிட, அதை உணர்ந்தவன்,


"அப்டியா!!அப்ப கல்யாணத்துக்கு வரமாட்டியா?!" என்று கேட்டிட,


"யார் சொன்னது?? வருவேனே! நீயே மொத தடவையா கல்யாணம் பண்ணிக்கப்போற! அத நான் பாக்க வேணாமா?!" என்று கூறுவதைக் கேட்டு மற்றவர்கள் சிரித்துவிட்டனர்.
அதைப் பார்த்த நாகவ், தான் சொன்னதை நினைத்து நாக்கைக் கடித்துக் கொண்டான். அதையும் பார்த்துச் சிரித்திட இவனும் சிரித்தான்.


"சரி! சரி! ரொம்ப சிரிக்காதீங்க! ஒழுங்கா கோபப்படக்கூட விடமாட்டீங்களே..!! நீ மட்டும்தான் எப்பவும் கோபப்படணுமா ராசா!" என்று ராணாவைப் பார்த்துக் கேட்டு சிரிக்க, இருவரும் அணைத்துக்கொண்டனர்.


"பார்றா!! கோபப்படுற மூஞ்சிய! இவனே சொல்லிட்டு இவனே சேந்துகிட்டான்டா!" என்று ராமும் கேலி செய்து சிரித்திட, அனைவரும் சிரித்தனர்.


"அப்றம்! அவங்க பேர இன்னும் சொல்லவே இல்லயேடா!!" என்று விஜய் கேட்டிட, அப்போதே மற்றவர்களும் நியாபகம் கொண்டு கேட்டிட, அதைக் கேட்ட ராணா கண்களில் கோபம் பொங்க, அதைக் கட்டுப்படுத்திக்கொண்டு,


"காவ்யா!" என்று கூறினான்.


"காவ்யா! நைஸ் நேம்டா!" என்று பேசிமுடித்து அப்படியே அனைவரும் சமாதானமாகி, சந்தோசமாகக் கிளம்பினர்.


ஒவ்வொருவரின் வீட்டிற்கும் சென்றவர்கள் அவர்களிடம் ராணாவின் திருமணச் செய்தியைக் கூறியதும், முதலில் அதிர்ந்தவர்கள், பின்பு மிகவும் ஆனந்தம் அடைந்தனர். காவ்யாவின் நிலையை இவர்கள் எடுத்துக்கூறிட, அவர்களுக்கும் இந்த ஏற்பாடே சரியெனப்பட்டது. ஆதலால், வெளியார் யாரையும் அழைக்காமல் குடும்பமாய் கருதும் இவர்களை மட்டும் வைத்துத் திருமணத்தை நடத்த முடிவு செய்தனர்.


அதன்பிறகு, சிறிது நேரத்தில் அவனுக்கு உடை எடுக்க நண்பர்கள் ஷாப்பிங் சென்றனர். அனைத்தையும் தாங்களே செய்வோம்! என்று அவர்கள் பெற்றோரிடம் அடம்பிடித்து அவர்களையும் ஒப்புக்கொள்ள வைத்தனர். அவனுக்கு எடுத்த முடித்தபின் காவ்யாவுக்கு புடவையைத் தேர்வு செய்யச் சென்றவர்கள், குழம்பிப்போய் நின்றிட, ராணாவே ஒரு புடவையைத் தேர்வுசெய்தான். பின், நகைக் கடைக்குச் சென்று நகைகள், தங்கத்தில் தாலிக்கொடி அனைத்தையும் துரிதமாக வாங்கியவர்கள் ராணாவின் வீடு வந்து சேர்ந்தனர்.


வீட்டின் அலங்கார வேலைகளை வேலையாட்கள் பார்த்துக் கொண்டிருக்க, ராணா கமலாம்மாவை அழைத்து காவ்யாவுக்கான புடவை, நகைகள் என அனைத்தையும் கொடுத்து தயார் செய்து அழைத்துவரும்படி உத்தரவிட, அவரும் அவ்வாறே தாம்பூலத்தில் வைத்து எடுத்துச் சென்றார். அதன்பிறகு, இவர்கள் ஐவரும் வேறுவேறு அறைகளில் தயாராகச் சென்றனர்.


சிறிது நேரத்தில் வெளியே வந்த நண்பர்கள் நால்வரும் வீட்டின் அனைத்து ஏற்பாடுகளும் சரியாக முடிந்துவிட்டதா என்று சரிபார்த்துக் கொண்டிருக்க, அவர்களது பெற்றோர்களும் வந்து சேர்ந்தனர். அவர்களை வரவேற்று அமரவைத்து உபசரித்திட, அவர்களும்,


"டேய்!! இந்தக் கல்யாணத்த பாத்தா திடீர்னு ஏற்பாடு பண்ணமாறியே இல்லயேடா!! காலைல ஆரம்பிச்சு இவ்ளோ நேரத்துக்குள்ள ரொம்ப அழகா தயார் பண்ணிருக்கீங்களே!! சூப்பர்டா!!" என்று ராமின் தந்தை வியந்து கூறிட,


"இதெல்லாம் நாங்க பண்ணலப்பா! எல்லாமே ராணாவோட ஏற்பாடுதான்! அவனே ஆட்கள வச்சு எல்லாத்தையும் தயார் பண்ணிட்டான்பா" என்று பிரபவ் கூறிட,


"ஆமாப்பா!! சொன்னமாறி வேலைய முடிக்கலன்னா அப்றம் ராணாவோட கோபத்த யாரால பாக்கமுடியும்! அதுக்காகவே எல்லாரும் பறந்து பறந்து வேலை
பாத்துருப்பாங்க" என்று கூறி சிரித்தான், நாகவ். மற்றவர்களும் அதை ஆமோதித்துச் சிரித்தனர். சிறிதுநேரம் இப்படியே கழிய, ஐய்யரும் வந்தார். இன்னும் ராணா வெளியே வராததைக் கண்டு அவனைப் அழைத்துவர நண்பர்கள் சென்றனர்.


அறையைத் திறந்துகொண்டு நால்வரும் உள்ளே செல்ல, அங்கே அவர்கள் கண்ட காட்சியில் விழுந்து விழுந்து சிரித்தனர். ராணா பட்டுவேட்டி சட்டை அணிந்திருக்க, வேட்டியைச் சரியாகக் கட்டமுடியாமல் அதனோடு போராடிக் கொண்டிருந்தான். அதைப் பார்த்தவர்கள் அவன் அருகில் சென்று,


"தமிழ்நாட்டுலயே டாப் பிசினஸ்மேன்!! பட்டுவேஸ்டியைக் கட்டுறதுக்கு அதுகூட சண்ட போட்டுகிட்டு இருக்கான்.ஹா..ஹா..!" என்று ராம் கூறி கிண்டல் செய்திட, அவனை முறைத்தவன்,


"உனக்கு மட்டும் தெரியுமாடா?! என்னய சொல்ற?!" என்று பதிலுக்கு வாற,


"எனக்காடா கல்யாணம்?? இப்ப உனக்குத்தான! நீதான் கத்துக்கணும்! எனக்கு தெரிய அவசியம் இல்லையே!!" என்று இவனும் பதிலுக்குக் கூறி பழிப்பு காட்டிட, ராணா கடுப்பாகி அவனை அடிக்க வர, அதற்குள் அவன் வேட்டி நழுவியதால் அப்படியே பிடித்துக்கொண்டு நின்றுகொண்டான். அவனைப் பார்த்து மறுபடியும் அனைவரும் சிரித்திட, அவன் உண்மையிலேயே முறைக்கவும் சற்று அடங்கினர்.


"டேய்!! இது தெரியலன்னா என்னடா?! விடுங்க! யூடியூப் பாத்து கட்டிக்கலாம்ல!" என்று நாகவ் கூறிட, மற்றவருக்கும் அந்த யோசனை அப்பொழுதே தோன்றியது.


"டேய்! நாகா!! உறுப்படியான யோசனைய கொடுத்திருக்கடா!!" என்று அனைவரும் அவனிடம் ஹைபை செய்துவிட்டு பின் வேட்டியை ஒருவழியாகக் கட்டிமுடித்துவிட, அவனும் தயாராகிட, ஐவரும் வெளியே வந்தனர். காவ்யாவும் மேலிருந்து தயாராகிக் கீழே வருவதைப் பார்த்தவர்கள்,


"அடேய்!! காவ்யா ரொம்ப அழகா இருக்காங்கடா!" என்று விஜய் கூறியதைக் கேட்டு அனைவரும் ஆமோதித்தனர். "ரொம்ப அமைதியான டைப் போல! பாத்தாலே தெரியுது!" என்று நாகவ் கூறிட, அதைக் கேட்ட ராணா ஏளனப் புன்னகை ஒன்றை சிந்தினான். அதை எவரும் கவனிக்கவில்லை.


அதன்பின், காவ்யாவும் கீழிறங்கி வர, அவளின் ஆர்ப்பரிப்பில்லாத அமைதியான அழகு அவனையும் ஒருநொடி அவள்பக்கம் பார்வையை நிலைத்திடத்தான் செய்தது. அவன் நண்பர்கள் அவனைக் கேலி செய்து அழைத்துவந்து அக்னியின் முன் அமர வைத்தனர். காவ்யாவும் வந்தமர்ந்திட, திருமணம் நிறைவடைந்தது.


*******************************************


காவ்யா அவள் தந்தையை இழந்த சோகத்தில்தான் இப்படி இருக்கிறாள் என்று நினைத்த ராணாவின் நண்பர்களின் பெற்றோர்களும் அவளிடம் எதுவும் பேசி சங்கடப்படுத்தாமல் சென்றுவிட்டனர். இவன் நண்பர்களும் அவளுக்கு ஆறுதல் கூறிட, அதை அவள் இவன் செய்த பாவத்தில் அவர்களுக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று தவறாகப் புரிந்துகொண்டாள்.


ராணா மிகச் சரியாக அவன் நினைத்ததை நடத்தி முடித்த வெற்றிக் களிப்பில் இருந்தான். அவன் நண்பர்கள் இவனுக்கும் அறிவுரை கூறிட, அதற்கு மௌனம் மட்டுமே காத்தான். அதை சம்மதமாக எண்ணியவர்கள் சிறிதுநேரம் இருந்துவிட்டு பின் அவர்களுக்குத் தனிமை கொடுக்க எண்ணி விடைபெற்றுச் சென்றனர். அவர்களை வழியனுப்பிய ராணாவும் காவ்யாவைப் பார்க்க அவளிருக்கும் அறைக்குச் சென்றான்.


*******************************************


ராணா பேசிச் சென்றதும் கீழே சோர்ந்து அமர்ந்தவள், நடந்ததை நினைத்துப் பார்த்திட, அவளால் அழுதிட மட்டுமே முடிந்தது. அப்படியே அமர்ந்திருந்தவளுக்குத் திடீரென குமட்டல் ஏற்பட, எழுந்து சென்று வாந்தி எடுத்தாள். அதன்பின், குளியறைக்கு வெளியே வந்து மெத்தையில் மெதுவாக அமர்ந்தாள். நாள் முழுவதும் ஏற்பட்ட பிரச்சினையும் கவலையும் மனதை சோர்வாக்கிட, உணவு உண்ணாமல் இருந்தது உடலை சோர்வாக்கிட, இரண்டும் சேர்ந்து அவளை மயக்கத்திற்குத் தள்ளியது.


காவ்யாவின் அறையைவிட்டு வெளியே வந்தவன், அவன் அறைக்குச் சென்றான். இரவானதும் உணவு உண்ண கீழே இறங்கி வந்தவனுக்கு கமலாம்மா உணவு பரிமாறிட, அவனும் அமைதியாக உணவருந்தினான். காவ்யாவைக் காணாததால் அவளை அழைத்துவர செல்ல முற்பட்டார், கமலாம்மா. அதைப் பார்த்தவன், "எங்க போறீங்க?" என்று கேட்டிட,


"காவ்யாம்மா இன்னும் சாப்ட வரல. அதான் போய் கூப்டு வரலாம்னு...போறேங்கய்யா!!" என்று மெதுவாகக் கூறிட,


"ஏன்? அவள ஒருத்தங்க போய் கூட்டிட்டு வரணுமோ! அவ என்ன மகாராணியா?? அவளுக்குப் பசிச்சா அவளே வருவா!" என்று கோபமாகக் கூறி அந்தப் பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்திட, அவரும் அமைதியானார்.


அவன் உண்டு முடித்து வெளியே செல்ல எத்தனிக்கும் முன் சிறிது யோசித்தவன் கமலாம்மாவிடம் திரும்பி, "கமலாம்மா!! மேலே போய் அவள கூப்டு வந்து சாப்ட வைங்க!" என்று கூறிச் சென்றிட, அவரும் சிறிது நிறைவுடன் மேலே சென்றார்.
அவள் அறையைத் திறந்தவர் அதிர்ந்தார்.


காவ்யா மெத்தையில் கால்களைக் கீழே தொங்கவிட்டபடி மயங்கிய நிலையில் மெத்தையின் விழும்பில் படுத்திருந்ததைப் பார்த்துப் பதறியவர், அவளருகில் சென்று அவளைத் தள்ளி படுக்க வைத்தவர், அவளை எழுப்பினார். ஆனால், அவள் எழாமல் இருக்கவும் பதற்றமடைந்தவர் தண்ணீரை அவள் முகத்தில் தெளித்தார். ஆனால், அதற்கும் எந்த அசைவுமின்றி போகவே பயந்தவர் ராணாவிற்கு அழைப்பு விடுத்து விசயத்தைக் கூறினார். அவனும் அடுத்த சில நிமிடங்களில் வந்து சேர்ந்தான். அதற்குள் அவன் அழைத்திருந்த மருத்துவரும் வந்துசேர, அவளைப் பரிசோதித்துக் கொண்டிருந்தார்.


காவ்யாவைப் பரிசோதித்த மருத்தவர் அவளுக்கு ஊசிபோட்டுவிட்டு ராணாவிடம் வந்திட, "என்னாச்சு டாக்டர் அவளுக்கு??" என்று ராணா சாதாரணமாகவே கேட்டிட,


"இவங்க உங்களுக்கு...??" என்று மருத்துவர் கேள்வியுடன் நோக்கிட, அதைக் கேட்ட ராணா இமைமூடித் திறந்து, "ஷீ இஸ் மை வஃய்ப், டாக்டர்!" என்று கூறினான்.


அதைக் கேட்டு சிறிது ஆச்சரியபட்டவர், "உங்களுக்கு கல்யாணம் ஆன விஷயமே தெரியாதே!!" என்று கூறிட, அதைக் கேட்டவன்,


"அது..அவசரமா சிம்பிளா மேரேஜ் பண்ணினதால யாரையும் கூப்ட முடியல!!" என்று கூறிட,


அவரும் அது பெரிய இடத்து விவகாரம் என்றெண்ணியவர், புன்னகையுடன் அவனைப் பார்த்து, "ஓகே! கங்க்ராஜூலேஷன்ஸ்!! மிஸ்டர். ராணா! நீங்க அப்பாவாகப் போறீங்க! ஷீ இஸ் ப்ரக்ணண்ட்!" என்று கூறியதைக் கேட்டு அதிர்ந்தான்.


"என்ன சொல்றீங்க டாக்டர்??! உண்மையாவா?!" என்று வியப்பில் கேட்டிட, அதைக் கண்ட மருத்துவரும் மகிழ்ச்சியில் கேட்கிறான் என்றெண்ணி,


"ஆமா! மிஸ்டர். ராணா! இப்ப நார்மலாதான் செக் பண்ணிருக்கேன். நீங்க கூடிய சீக்கரம் ஹாஸ்பிடல் போய் செக்கப் பண்ணிக்கோங்க. அண்ட் அவங்க ரொம்ப வீக்கா இருக்காங்க. இன்ஜெக்ஷன் போட்ருக்கேன். மார்னிங்தான் எழுவாங்க. அவங்கள நல்லா சாப்ட சொல்லுங்க. நான் கிளம்புறேன்" என்று அறிவுரை கூறிச் செல்ல, அவரை வழியனுப்பி வைத்துவிட்டு வந்தான்.


ராணா வந்து ஆழ்ந்த மயக்கத்தில் படுத்திருக்கும் காவ்யாவைப் புரியாமல் பார்த்துக் கொண்டிருக்க, கமலாம்மாவும் மருத்துவர் சொன்ன விசயத்தைக் கேட்டு அதிர்ந்துவிட்டார்.


கோபத்தால் ஏற்பாடு செய்த திருமணம் என்று தானே நினைத்தோம்! இன்று திருமணம் முடிந்தவள் எப்படி இன்றே தாயாக முடியும்? அப்படியென்றால் இவனுக்கும் அவளுக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்ததா?? இதனால்தான் யாருக்கும் தெரியாமல் உடனடி திருமண ஏற்பாடுகள் செய்தானா? என்ற எண்ணங்கள் அவர் மூளையைக் குடைந்தன.


காலையில் அவன் பேசியதை முழுதாகக் கேட்டிராததாலும் அவன் தெளிவாகப் பேசிடாததாலும் இவருக்கு உண்மை விளங்கவில்லை. எதுவானாலும் இவனுக்கு அவள்மேல் உள்ள கோபத்தையும் வெறுப்பையும் இவரால் உணர முடிந்தது. ஆனால், அவருக்கு இதை எதுவும் கேட்டிடும் தைரியமும் அதிகாரமும் கிடையாது என்பதால் அமைதியாக நின்றார்.


கமலாம்மா நின்று கொண்டிருப்பதைப் பார்த்த ராணா அவரைப் போகச் சொல்லிவிட்டு அவனும் அவனறைக்குச் சென்றான். அவனுக்கு என்னவென்று புரியாத குழப்பநிலையில் இருந்தான். இவள் கருவுற்றிருக்கிறாளா?? ஆனால்! யாருடைய குழந்தை?? என்னுடைய குழந்தைதானா?? இல்லை...வேறொருவருடையதா?? ஆனால்! நான் அறிந்தவரையில்
அவளுக்கு காதலோ காதலனோ கிடையாதே!! என் யூகம் சரியாக இருந்தால் நான் நினைத்துதான் சரியாக இருக்கவேண்டும். எதுவோ! காலை அவளிடம் கேட்டு உண்மையை அறிந்துகொள்ளலாம் என்று தனக்குள் நினைத்துக்கொண்டவன் அவன் வேலைகளை முடித்துவிட்டு தூங்கச் சென்றான்.







ராணாவின் நண்பர்களுக்கு இவன் மறைக்கும் உண்மைகள் தெரிய வந்தால் என்ன நேரிடும்??
காவ்யாவின் கருவில் வளர்வது இவன் குழந்தை என்பதை அறிந்தால் என்ன செய்வான்??





❤வருவாள்❤...



கீழே இருக்கும் லிங்க் கிளிக் செய்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்

Thread 'இருளில் தொலைந்த ஒளி அவள் - Comments' https://www.sahaptham.com/community/threads/இருளில்-தொலைந்த-ஒளி-அவள்-comments.500/
 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom