vani sri
Saha Writer
- Messages
- 17
- Reaction score
- 1
- Points
- 1
மலர் 16:
தன்னுள் இருந்து கொண்டே அவளை நினைத்து துடிக்கும் இதயத்தின் வஞ்சகத்தை நினைத்து சிரித்து கொண்டே அர்ஜுன் நிச்சயதார்த்த வேலையில் முனைப்புடன் செயல்பட்டு வந்தான்.
"என்ன தேனு! ஒரு மாதிரி குழப்பமா இருக்கியே?" என்று கார்த்திகேயன் கேட்க,
"நம்ம யாழினிக்கு வாங்கின பட்டு புடவை மாறிடுச்சு!" என்று கவலையுடன் தேன்மொழி சொல்லவும்,
"அது எப்படி நடந்திருக்கும்? அர்ஜுன் தானே பில் கட்டி வாங்கினான்!" என்று கேள்விக் குறியாக கார்த்திகேயன் பதிலளிக்க,
"அதுதான் எனக்கும் ஒன்னும் புரியல! நான் அர்ஜுன் கிட்ட போன் பண்ணி கேட்கிறேன்!" என்று தேன்மொழி அர்ஜுனுக்கு தொடர்பு கொண்டு அவனிடம் நடந்த குழப்பத்தை கூறியதும்,
"ஆன்ட்டி! நான் வாங்கும் போது பாக்ஸ பிரிச்சி பார்க்கல! கடைக்காரன் கொடுத்ததை அப்படியே வாங்கிட்டு வந்துட்டேன்! நான் மறுபடியும் கடைக்கு போய் விசாரிச்சி பார்க்கேன்! நீங்க மனசு உளைய வேண்டாம்!" என்று ஆறுதல் கூறி போனை வைத்து விட, மற்ற ஏற்பாடுகளை கவனிக்க ஆரம்பித்தாள் தேன்மொழி.
யாழினியின் மனதிற்கு பிடித்தமான புடவையை எப்படியாவது வாங்கி வர வேண்டும் என்று அர்ஜுன் நேரம் கடத்தாமல் உடனே கடைக்குப் புறப்பட்டான். கடையில் சென்று நடந்ததைக் கூறிய அர்ஜுனிடம்,
"சாரி மன்னிச்சுக்கோங்க சார்! இவன் வேலைக்கு புதுசு! நேத்து இவன் தான் மாற்றி பேக் பண்ணி கொடுத்துட்டான்!" என்று பக்கத்தில் இருக்கும் பையனை கைகாட்டினார் பணி ஆள்.
"பரவாயில்லை விடுங்க! அந்த புடவையை எடுத்து வச்சிருக்கீங்களா?" என்று சந்தேகமாக அர்ஜுன் கேட்க,
"இதோ உங்க புடவை!" என்று சிரித்தவாறு அந்த பையன் அர்ஜுனிடம் எடுத்துக் கொடுக்கவும்,
"அப்பாடா...! எனக்கு இப்பதான் சந்தோஷமா இருக்கு! நான் கட்டிக்கப் போற பொண்ணுக்கு ஆசையா எடுத்தது! மிஸ் ஆகி இருந்தா என்னால கண்டிப்பா அந்த வேதனையை தாங்கிருக்க முடியாது!" என்று அர்ஜுன் உருக்கமாக கூறியதைக் கேட்டு,
"உங்க வருத்தத்துக்கு நான் தான் காரணம்! மன்னிச்சுக்கோங்க!" என்று மறுபடியும் அந்தப் பையன் கூறியதைக் கேட்டு,
"அட..! இட்ஸ் ஓகே பா!" என்று அர்ஜுன் கூறிவிட்டு, புடவை கிடைத்த விஷயத்தை தேன்மொழியிடம் சொல்லவும் சந்தோஷத்தில் உற்சாகமாக வேலைகளை தொடர்ந்து கவனித்தாள்.
காலையில் ஆதவன் தோன்றியதும் என்றும் போல் இன்றும் பரபரப்பாக விடிந்தது யாழினியின் பொழுது. அவசர அவசரமாக கான்ஃபரன்ஸ் அட்டென்ட் செய்ய தன் அலுவலகம் நோக்கி ஸ்கூட்டியில் விரைந்து சென்றுக் கொண்டிருக்க, 'மழையின் சாரலில் மழையின் சாரலில்..' என மொபைல் ரிங் அடிக்கவும், போக்குவரத்து நெருக்கடியில் வண்டி ஓட்டிய காரணத்தால் போனை கண்டு கொள்ளாமல் தன் கவனத்தை வண்டி ஓட்டுவதில் மட்டுமே செலுத்தினாள்.
மறுபடியும் போன் வந்தபோதும் நெருக்கடியான ரோட்டை கடந்து பின் பார்த்துக்கொள்ளலாம் என்று பொருட்படுத்தாமல் விட்டு விட மீண்டும் போன் வரவும்,
"இப்ப யாரு மறுபடி மறுபடி கால் பண்றது?" என்று யாழினி நினைத்துக்கொண்டே வண்டியை ஓரமாக நிறுத்துவதற்காக கவனமின்றி இடப்புறம் விரைந்து ஒதுங்க முயற்சித்தாள்.
காலை நேரம் என்பதால் மிகவும் நெருக்கடியாக சாலை இருந்தது. மக்கள் சாலை ஓரங்களிலும் கூட்டம் கூட்டமாக தென்பட்டனர். வண்டியை ஓரம் கட்டும் அவசரத்தில் பின்னால் வரும் வாகனங்களை கவனித்துக் கொண்டே விரைந்து இடபுறம் வண்டியை திருப்ப முயல, தன் முன்னால் வந்த வேகத்தடையை அறியாமல் வண்டியை வளைத்து திருப்பவும் வேகத்தடையில் வண்டி தறிகெட்டு ஏறி, என்ன நடக்கிறது என்று எண்ணி உணர்வதற்குள் வண்டியிலிருந்து கீழே விழுந்தாள் யாழினி.
அவளது வண்டி கீழே இழுத்துக் கொண்டே சிறிது தூரம் போய் நிற்க, இதை சற்றும் எதிர்பாராத பின் வந்த கார் டிரைவர் சுதாரிப்பதற்குள் கீழே கிடந்த யாழினி மீது காரை ஏற்றினார்.
யாழினியின் உடலில் இருந்து ரத்தம் வெள்ளமாக பெருகியது. மக்கள் கூட்டம் கூட, ஆம்புலன்சுக்கு கால் செய்து வர செய்தனர் சுற்றியுள்ளவர்கள்.
அந்தக் கூட்டத்தில் இருந்த ஒருவர் ஆம்புலன்சுக்கு காத்திருக்காமல் யாழினியை சிலர் உதவியுடன் தூக்கி தன் காரில் போட்டு ஹாஸ்பிடலுக்கு எடுத்துச் சென்றார். அவளின் உடலை தூக்கி காரில் ஏற்றிய போது அவளது கண்கள் மட்டும் திறந்திருந்தன. முகம் கொஞ்சம் சிதைவுற்று உடல் முழுவதும் பலமான காயம் இருந்ததால் ஹாஸ்பிடலுக்கு காரை விரைந்து ஓட்டி அருகில் இருந்த ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டதோடு இல்லாமல் சிகிச்சையை உடனே ஆரம்பிக்க முன் பணமும் கட்டினார். யாழினியின் பையிலிருந்த ஐடி கார்டு மூலம்
அவளது ஆபீசுக்கு தொடர்பு கொண்டு அவளது பெற்றோர் பற்றி தகவலை அறிந்துக் கொண்டார்.
நாளை நிச்சயதார்த்தம் நடக்க இருக்கும் நிலையில் எல்லோரும் ஆனந்தமாக இருக்க, அர்ஜுனும் தேன்மொழியும் வீட்டை மலரால் அலங்கரித்துக் கொண்டிருக்க அவளது போன் ரிங் அடித்தது.
"ஹலோ!" என்று தேன்மொழி பேச,
"யாழினி வீடா?" என்று பதட்டமான குரலில் ஒருவர் பேசுவதைக் கேட்டதும்,
"ஆமா சார்! யாழினி அம்மா தான் பேசுறேன்.. சொல்லுங்க!" என்றாள் தேன்மொழி.
"யாழினிக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சி! பயப்படாதீங்க மா.. அவங்கள சிவா ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணி இருக்கோம். ட்ரீட்மெண்ட் நடக்குது. நீங்க சீக்கிரம் வாங்க!" என்று அவர் சொல்ல,
கதறி அழுதபடி கீழே தேன்மொழி உட்கார்ந்தாள். என்னவென்று புரியாமல் அருகிலிருந்த வேலைக்காரர்கள் ஓடிவர ஒன்றும் பேசமுடியாமல் ஏங்கி அழுதாள் தேன்மொழி.
அர்ஜுன் உடனே போனை எடுத்து மறுபடியும் விஷயத்தை அறிந்து கொள்ள, ஒரு நொடி அதிர்ச்சியில் நின்றான், பின் தன் மனதை சமாதானம் செய்துகொண்டு தேன்மொழி கார்த்திகேயனுடன் தன் காரில் சென்னையிலிருந்து பெங்களூருக்கு புறப்பட்டான்.
காரில் பயணித்த ஒவ்வொரு நொடியும் தன் மகளை நினைத்து இருவரும் நரக வேதனையில் இருக்க, யாழினியோ சுவாசத்தை இழந்து கொண்டே இருந்தாள். "யாதுமாகி போன இவனின் காதலில் யாவும் மாயமாகி போகுமோ" என அர்ஜுன் உடைந்த மனதுடன் வண்டியை ஓட்டிச் சென்றான்.
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையிலும் அவரது உயிருக்கு எந்தவித உத்தரவாதத்தையும் தரமுடியாது என கை விரித்த மருத்துவர்கள் தங்களால் முடிந்த முயற்சியை செய்துக் கொண்டிருக்க,
யாழினியை தூக்கி வந்து காரில் ஏற்றிய தருணத்தில் அவளது விழிகள் வெளிப்படுத்திய ஏக்கமும், வாழ விரும்பும் ஆசையையும் அவரால் உணர முடிந்தது. அவளது விழிகள் தன் கண்முன்னே மறுபடி மறுபடி வருவது போல் எண்ணம் தோன்ற,
"யாரோ ஒரு பெண்! மரணத்தின் பிடியிலிருந்து காப்பாற்றி என்னால் முடிந்ததை செய்து விட்டேன்! இனி அவளுக்கு ஏதும் சங்கடம் என்றால் அதை என்னால் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு தைரியமான மனநிலை இல்லை. அதனால் இங்கிருந்து செல்வதுதான் சரியான முடிவு" என்று ஹாஸ்பிடல்ல விட்டு கிளம்பினார் அந்த நபர்.
சில மணி நேரங்களில் யாழினியின் பெற்றோர் மற்றும் அர்ஜுன் ஹாஸ்பிடலுக்கு வந்து சேர்ந்தனர். தன் மகள் அனுமதிக்கப்பட்டுள்ள அவசர சிகிச்சைப் பிரிவின் முன் காத்துக் கொண்டிருக்க, சிறிது நேரத்தில் டாக்டர் வெளியே வந்தார்.
"நீங்கதான் இந்த பொண்ணோட சொந்தக்காரங்களா?" என்று டாக்டர் கேட்டதும்,
" அவளோட அப்பா அம்மா நாங்க! என் பொண்ணு எப்படி இருக்கா? அவளை எப்படியாவது காப்பாற்றிக் கொடுங்க!" என்று தேன்மொழி அழுது கெஞ்சினாள்.
"நல்ல வேளை தலையில ரொம்ப அடி இல்ல. உடம்புல பலத்த காயம்! அது மட்டும் இல்லாம..." என்று டாக்டர் தயங்க,
"மறைக்காம விஷயத்தை சொல்லுங்க ப்ளீஸ் பாக்டர்!" என்று பதட்டமாக அர்ஜுன் கேட்க,
"உங்க பொன்னோட முகம் ரொம்ப சிதஞ்சிருக்கு! நாங்க முடிஞ்ச முயற்சியை எடுக்குறோம்! 5 மணி நேரம் கழிச்சி தான் உறுதியா சொல்ல முடியும்!" என்றார்.
"ஐயோ! ஐயோ! கடவுளே..! என் பொண்ண கல்யாண கோலத்துல பார்க்க ஆசைப்பட்டேனே! ஆனா இப்படி ஒரு நிலைமை வரும்னு நினைச்சு கூட பார்க்கல!" என்று கதறி தன் மனபாரத்தை கொட்டித் தீர்த்தாள் தேன்மொழி.
"ஆன்ட்டி ரிலாக்சா இருங்க!" என்று தேன்மொழியை ஓரமாக அர்ஜுன் கூட்டிச் சென்று ஆறுதல் கூறினான்.
"டாக்டர் பெஸ்ட் ட்ரீட்மெண்ட் கொடுங்க! எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை! எங்க பொன்னு திருப்பி கிடைச்சா போதும்!" என்றார் கார்த்திகேயன்.
"ட்ரீட்மென்ட் அப்பவே ஸ்டார்ட் பண்ணிட்டோம். உங்க பொண்ண ஒருத்தர் வந்து அட்மிட் பண்ணீட்டு அவரே அட்வான்ஸா 5 லட்சம் கட்டிட்டாரு!" என்றதும்,
"என்ன சொல்றீங்க டாக்டர்? என் பொண்ண காப்பாத்தி கொண்டு வந்தது யாரு?" என்று கார்த்திகேயன் கேட்க,
" இங்கே தான் இருந்தாரு! வெளியே எங்கேயும் நிற்பார்!" என்று கூறி விட்டு மீண்டும் டாக்டர் சிகிச்சையை தொடர உள்ளே சென்றார்.
வாழ்க்கையை ஆரம்பிக்க நினைத்த கனமே இந்த காலம் முற்றுப் புள்ளி வைக்க எண்ணி விட்டதா என்று கவலையில் ஒரு ஓரம் அர்ஜுன் தவிப்புடன் இருக்க....
மலரும்....