Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


என்னுள் நிறைந்தவளே

vani sri

Saha Writer
Messages
17
Reaction score
1
Points
1
மலர் 6:

"ஹலோ! சொல்லுங்க ஆன்ட்டி! ஏன் அழுறீங்க? என்ன ஆச்சு சொல்லுங்க?" என்று அஷ்வின் பதட்டத்துடன் கேட்க,

" சித்துவை ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கு. நீ கொஞ்சம் வந்தால் நல்லா இருக்கும் பா" என்று ஜெயா மறுமுனையில் குமுறினாள்.

"ஐயோ! சித்து விற்கு என்ன? எந்த ஹாஸ்பிடல்னு சொல்லுங்க ஆன்ட்டி! உடனே வரேன்" என்று அஷ்வின் தவிப்புடன் சொல்லவும்,

"பிரபா ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணிருக்கு" என்றாள் ஜெயா.

"நான் இப்பவே வரேன் ஆன்ட்டி" என்று ஹாஸ்பிடளுக்கு செல்லும் பாதையில் காரைத் திருப்பினான் அஷ்வின்.

"நீ டென்ஷன் ஆகாம வண்டி ஓட்டு அஷ்வின்", என்று அனு அஷ்வினை நிதானப்படுத்தி ஆறுதலாக உடன் இருக்க, கவனமாகவே காரை ஓட்டிச் சென்றான்.

சில மணி நேரத்தில் அஷ்வினும் அனுவும் மருத்துவமனையை வந்து அடைந்தனர்.

நுழைவாயிலில் இருந்த ரிசப்ஷன் கவுண்டரில்,
"சித்தார்த் அட்மிட் பண்ணிருக்க ரூம் நம்பர் கொஞ்சம் வேண்டும்" என்று அஷ்வின் தகவல் கேட்க,
" ஒன் மினிட் ப்ளீஸ்! செக் பண்ணி சொல்றேன்.." என்று ரிசப்ஷனிஸ்ட் சொல்லவும்,
இருவரும் காத்திருக்க...

"ரூம் நம்பர் 56. டேக் லெஃப்ட் சைடு லிஃப்ட்!" என ரிசப்ஷனிஸ்ட் கூறியதும்,

"ஓகே! தேங்க்ஸ்! என்று லிஃப்ட்-ஐ நோக்கி அஷ்வின் விரைந்து செல்ல, அனு அவனைப் பின் தொடர்ந்தாள்.

மூன்றாவது மாடியில் லிஃப்ட் மூலம் வர, இடப்பக்கம் இரு அறைகள் தாண்டி 56 என்ற எண் கதவில் போட்டிருப்பதை கண்டு இடப்புறம் சென்று சித்து இருக்கும் அறைக் கதவை திறக்க, தலையில் கட்டுடன் படுத்துக் கிடந்தான் சித்தார்த்.

" உள்ள வாங்க!" என்றாள் ஜெயா.
"காலையில கூட என் கிட்ட பேசினானே! அதுக்குள்ள எப்படி இப்படி!" என்று மிகவும் பதட்டத்துடன் ஜெயாவிடம் கேட்டான் அஷ்வின்.

"வீட்டிலிருந்து பைக் எடுத்துட்டு வெளியே போறதுக்காக பைக்கை ரிவர்ஸ் எடுக்கும் போது எதிர்பாராமல் ஒரு கார் வேகமாக வந்து இடிச்சதுல பைக்கிலிருந்து கீழே விழுந்துட்டான். தலையிலிருந்து இரத்தம் வடியவும் உடனே ஆம்புலன்ஸில் கொண்டு வந்து இங்க சேர்த்தோம்" என்று ஜெயா அழுதுக்கொண்டே கூறியதைக் கேட்டு அஷ்வின் மனம் வருந்தினான்.

"இவ்வளவு அஜாக்கிரதையா ஏன் வண்டி எடுக்குறான்? கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாம..." என்று தன் நண்பன் மீது இருந்த அக்கரை கோபமாக வெளிப்பட,
"அண்ணா!" என்று அஷ்வின் கையை இறுக்கி பிடித்து அவனை கட்டுப்படுத்தினாள் அனு.

"நான் எதுவும் தப்பா நினைக்கலை மா..." என்று ஜெயா கண்ணில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே கூறினாள்.

"அழாதீங்க ஆன்ட்டி! நீங்க கொஞ்சம் ரிலாக்சா இருங்க.. வாங்க என்கூட.." என்று வெளியே ஜெயாவை கூட்டிச்சென்றாள் அனு .

"இது எதிர்பாராமல் நடந்த விஷயம் என்று தான் நானும் நினைச்சேன். அப்புறம்தான் தெரிஞ்சது இது வேணும்னு திட்டம் போட்டு நடந்த விபத்து" என்று அனுவிடம் ஜெயா தவிப்போடு கூறினாள்.

"என்ன ஆன்ட்டி சொல்றீங்க? எனக்கு ஒன்னும் புரியலையே! என்று அனு குழப்பத்துடன் கேட்க,

ஹாஸ்பிடல்ல சேர்த்து கொஞ்ச நேரத்தில தனக்கு ஒருத்தர் போன் பண்ணி, "என் விஷயத்துல தலையிட்டால் இனி உன் பையன் உயிர்கூட மிஞ்சாதுனு", சொல்லிட்டு போனை வச்சுட்டதாக ஜெயா சொல்லவும்,
என்ன சொல்வது? என்று தெரியாமல் சில நிமடங்கள் தவித்து போய் மெளனமாய் நின்றாள் அனு.

"என் அண்ணனிடம் சொல்லி இதை பற்றி சித்தார்த்திடமே கேட்க சொல்லலாம் ஆன்ட்டி" என அனு யோசனை சொன்னாள்.

ஜெயாவிற்கும் அதுவே சரி என தோன்றியது.

"சரி மா! அப்படியே செய்யலாம்" என்று ஜெயா தன்னை சமாதானம் செய்துக்கொண்டாள்.

"ஒருவேளை சித்தார்த் எந்த பொண்ணையும் விரும்புகிறானா...? அதனால அந்த பொண்ணு வீட்டில இருந்து மிரட்டினாங்களா? என்ன விஷயம்னு எனக்கு சரியா புரியல... ஆனா உங்க அண்ணனுக்கு கண்டிப்பா எல்லா விஷயமும் தெரிஞ்சுருக்கும்னு தான் அவனை வரச் சொன்னேன்" என்று ஜெயா சொல்லவும்,

"நீங்க அண்ணா கிட்ட இதை பற்றி கேட்டுப் பாருங்க. தெரிஞ்சு இருந்தா கண்டிப்பா சொல்லுவாங்க" என்றாள் அனு.

சிறிது நேரத்தில் அஷ்வின் வெளியே வர, நடந்த விஷயத்தை எல்லாம் ஜெயா அஷ்னிடம் கூறினாள்.

"என்கிட்ட இதுவரை காதல் விஷயம் எதுவும் சொன்னதே இல்லையே ஆன்ட்டி!! என்கிட்ட சொல்லாம அதிகம் வெளியே போகவும் மாட்டான். என் கூட தான் வெளியே சுத்துவான். அப்படி இருக்கும்போது யாரையும் லவ் பண்ணி இருந்தா என்கிட்ட மறைச்சிருக்க மாட்டானே!" என்று குழப்பத்துடன் அஷ்வின் கூறினான்.

"நீங்க எதுவும் நினைத்து வருத்தப்படாமல் இருங்க ஆன்ட்டி. நான் பிறகு சித்து கிட்ட பொறுமையாக விசாரிச்சு சொல்றேன்" என்று அஷ்வின் நம்பிக்கை ஊட்டினான்.

"ஆன்ட்டி! நீங்க உள்ளே போய் சித்து கூட இருங்க. நான் அவசரத்துல அம்மா கிட்ட கூட விஷயத்தை சொல்லாமல் வந்துட்டேன். இன்னும் எங்க ரெண்டு பேரையும் காணும்னு தேடிட்டு இருப்பாங்க. நான் போன் பண்ணி சொல்லிட்டு வரேன்" என்று அஷ்வின் தன் போனை எடுத்து தள்ளி செல்ல, ஜெயாவும் அறை உள்ளே சென்றாள்.

அம்மாவிற்கு போன் பண்ணி நடந்தவற்றையெல்லாம் அஷ்வின் விளக்கமாக கூற,
" சித்துவை கூட இருந்து பார்த்துக்கோ" என்று கூறினாள் ரேகா.
"சரி அம்மா! நான் வீட்டுக்கு வர எப்படியும் லேட் ஆகிடும், அனுவை மட்டும் இப்ப கொஞ்ச நேரத்தில் அனுப்பி வைக்கிறேன்" என்று கூறிவிட்டு போனை வைத்தான் அஷ்வின்.

மறுபடியும் சித்துவை பார்க்க அவன் அனுமதிக்கப்பட்ட அறைக்குள் நுழைந்து, சுவற்றில் சாய்ந்து நின்று கொண்டிருந்தான் அஷ்வின்.

"அனு! நீ கார் எடுத்துட்டு வீட்டுக்கு கிளம்பு" என்று அஷ்வின் சொல்ல,

"இல்லை அண்ணா! நானும் இங்கயே இருக்கேன்னே ஆன்ட்டிக்கு துணையாக?" என்று அஷ்விடம் அனு அனுமதி கேட்க, அஷ்வினும் சம்மதித்தான்.

கொஞ்ச நேரம் கழிய, சித்தார்த் மயக்கம் தெளிந்து கண் விழித்த பார்க்கவும், அருகில் அம்மாவும் எதிரில் அஷ்வின் மற்றும் அனு நிற்பதையும் கண்டான்.

ஜெயா கண்களில் நீர் வழிய தன் மகனின் தலையை தடவிக் கொடுத்து கையை பிடித்துக் கொண்டு மௌனமாய் இருந்தாள். அம்மாவின் மௌனத்தில் இருக்கும் கவலை சித்துவிற்கு நன்றாகவே புரிந்தது.

"நான் போய் டாக்டரை வர சொல்றேன்" என்று சொல்லிவிட்டு ஜெயா அறையை விட்டு வெளியேறினாள்.

"எப்படி இருக்கும் உடம்பு"? என்று சித்துவின் அருகில் அமர்ந்து அஷ்வின் கேட்க,
" கொஞ்சம் தலையில் மட்டும் வழி இருக்கு மற்றபடி எல்லாம் நல்லா இருக்கேன்" என்று குரலில் சிரத்தை இல்லாமல் கூறினான் சித்து.

இருவரும் பேசிக் கொண்டிருக்க, டாக்டர் உள்ளே வந்தார்.

"நான் வெளிய வெயிட் பண்றேன்" என்று அனு வெளியே நகர்ந்தாள்.

சித்தார்த்தின் தலையிலிருந்த காயத்தை எல்லாம் செக் பண்ணிவிட்டு சில மருந்து மாத்திரைகளை வாங்கி வரும்படி ப்ரிஸ்கிருப்ஷனை அஷ்வினிடம் கொடுத்தார்.

"இன்றைக்கு இரவே டிஸ்சார்ஜ் பண்ணிடலாம். ஹீ இஸ் பெர்ஃபெக்ட்லி ஆல்ரைட்" என்று டாக்டர் கூறினார்.
"நன்றி டாக்டர்!" என்று ஜெயா டாக்டரிடம் பணிவாக கூறிவிட்டு,
"தலையில வலி சீக்கிரம் குணமாகிடும் தானே டாக்டர்?" என்று மறுபடியும் கவலையுடன் ஜெயா கேட்க,

தாய்ப்பாசம் அவளின் மனதை உருக்குளைப்பதை உணர்ந்து,
"உங்க பையனுக்கு ஒன்னும் இல்லை. சீக்கிரம் குணமாகிடுவான் நீங்க தைரியமாக பையனுக்கு ஆறுதலாக இருங்கள்" என்று அறிவுரை கூறிவிட்டு டாக்டர் சென்றார்.

மருந்து வாங்குவதற்காக அஷ்வின் வெளியே வர, அனுவிடம் யாரோ பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு அவளை நோக்கி நெருங்கி சென்றுக்கொண்டிருக்க, பின்பு அனுவிடம் பேசிக்கொண்டிருப்பது அவனது காதல் தேவதை என்பதை அறிந்தான். அவளது எதிர்பாராத சந்திப்பு மிகவும் சந்தோஷத்தை அஷ்வினுக்கு அளித்தது. இருந்த போதிலும் அனுவிடம் பேசுவதைக் கண்டு அவன் மனதில் பல கேள்விகள் எழுந்தன. அனு அருகில் செல்லாமல் ஒரு ஓரமாக நின்று அவர்கள் இருவரின் உரையாடலை மட்டும் கவனித்துக் கொண்டிருந்தான். ஒரு சில நிமிடங்களில் காதல் தேவதையிடம் இருந்து விடைப்பெற்று அனு திரும்பி வரவும்,

"யார் அந்த பொண்ணு? உனக்கு எப்படி தெரியும்? என்ற ஆர்வத்துடன் படப்படவென வழி மறித்து அனுவிடம் அஷ்வின் கேள்விக் கனைகளை தொடுக்க,

அஷ்வினை உற்று உதாசீனமாக பார்த்தாள் அனு.
"அந்த பொண்ணு பற்றி ஏன் விசாரிக்க?" என்று புருவத்தை உயர்த்தி ஏளனமாக அனு கேட்கவும்,

"ப்ளீஸ் சொல்லு அனு.. என்று அவளிடம் அஷ்வின் கெஞ்சினான்.

"எனக்கு அந்த பொண்ணு யாருன்னு தெரியாது. நான் இங்கே நிக்கிறதைப் பார்த்து, "பார்மசி எங்க இருக்குன்னு?" கேட்க வந்தாங்க. வழி சொல்லி அனுப்பிவிட்டேன். கொஞ்ச நேரத்துல கூட்டமா இருக்குன்னு சொல்லி என்கிட்ட வந்து பேசிட்டு இருந்தாங்க" என்றாள் அனு.

"என்ன பேசினாள் உன்கிட்ட? அவளுடைய பெயர் ஏதாவது சொன்னாளா?" என்று அஷ்வின் ஆவலோடு கேட்க,

"அது.... ஏதோ ஒரு பெயர் சொன்னாங்களே!!!" என்று மறந்து போனது போல் முக பாவனை காட்டி அஷ்வினை அனு பரீட்சித்து பார்க்க முயல,

"தயவுசெய்து சொல்லு.. ப்ளீஸ்.. உனக்கு எல்லா விஷயத்தையும் பிறகு விவரமா சொல்றேன்" என்று அஷ்வின் கெஞ்சி கேட்கவும்,

"அந்த பொண்ணு பெயர் 'யாழினி'! இங்க அவங்களுக்கு தெரிஞ்ச யாரையோ பார்க்க வந்ததாக சொன்னாங்க. வேறு எதுவும் அவங்கள பற்றி சொல்லிக்கொள்ளவில்லை" என்று அனு சொன்னாள்.

"யாழினி யா!! அழகான பெயர்" என்று தனக்குள் சொல்லிக் கொண்டான் அஷ்வின்.

மறுபடியும் அவளை பார்க்க முயற்சித்து, அவள் சென்ற வழியில் விரைவாக அஷ்வின் தன்னவளைத் தேடிச் செல்ல,

"டேய்! அண்ணா எங்க போற?" என்று அனு கத்தினாள்.
அதெல்லாம் அவன் காதுகளில் விழவில்லை. காதல் தேவதையை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவனை ஆட்கொண்டிருந்தது.
"என்ன தான் இவனுக்கு ஆயிற்றோ?" என்று புலம்பிக்கொண்டு அனு நின்றாள்.

ஆனால கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தேடியும் தேவதையை காண முடியாமல் ஏமாற்றம் அடைந்ததை எண்ணி வருந்தினான்.
"இன்றும் என் கண்ணில் தோன்றி, அவளை மறுபடியும் காண்பதற்குள் மாயமாய் மறைந்து விட்டாள்!" என்று அஷ்வின் தனக்குள் புலம்பினான்.

"கண்டிப்பாக அவள் இங்கேதான் எங்கேயோ இருக்கணும், அவளை சீக்கிரம் கண்டுபிடிப்பேன்" என்று மனதில் நம்பிக்கை கொண்டு, மருந்து மாத்திரைகளை வாங்க சென்றான் அஷ்வின்.

ஜன்னல் வழியாக காற்றில் மரங்கள் அசைவதையெல்லாம் பார்த்துக் கொண்டே யோசனையில் நின்ற தேன்மொழி, தன் பார்வையை ஜன்னல் ஒரம் திருப்ப, ஒரத்தில் படிந்து இருந்த இரத்தக் கறையைப் பார்த்து மூச்சுத் திணற, "என்ன நடக்குது இந்த வீட்டில? எல்லாமே மாயாஜாலம் போல இருக்குதே!" என்று நினைத்துக்கொண்டு அமுதாவை பார்க்கத் தன் அறையை நோக்கி பயத்தில் ஓடினாள்.
"இந்த வீட்டில அப்படி என்ன ரகசியம் இருக்கிறது? தயவுசெய்து சொல்லு அமுதா!" என்று தேன்மொழி பயத்தில் நடுங்கியவாரு கேட்க,
"எனக்கும் முழுசா எதுவும் தெரியாது அம்மா. ஸ்டோர் ரூமில் ஏதோ ஒரு விஷயம் இருக்குன்னு மட்டும் தெரியும் அதனாலதான் உங்க கிட்ட சொன்னேன்" என்று அமுதா சொல்ல,
அவள் பேச்சில் கள்ளமில்லாததை உணர்ந்தால் தேன்மொழி. சாவி மாறியதையும் அதைத்தேடி யாழினியின் அறையில் சோதனை இட்டபொழுது அவள் பார்த்ததையும் அமுதாவிடம் தேன்மொழி சொல்ல,
"என்னம்மா சொல்றீங்க? நீங்க சொல்றதைப் பார்த்தா எனக்கு ரொம்ப பயமா இருக்கு. நீங்க எதுக்கும் யாழினி மேல ஒரு கண்ணு வச்சுக்கோங்க! சின்ன பொன்னு அதனால தான் சொல்றேன்" என்று அமுதா கூறிய வார்த்தைகளை கேட்டு மனம் பதைபதைக்க அவளருகில் உட்கார்ந்திருந்தால் தேன்மொழி.
"சரி நான் போய் சாவியைத் தேடி எடுக்கிறேன். கிடைக்காமல் போனால் பூட்டை உடைத்து விட வேண்டியதுதான்" என்று தேன்மொழி சொல்லிக் கொண்டே வெளியே செல்ல எழுந்திருக்க, அமுதாவின் சேலை நுனியில் ஸ்டோர் ரூம் சாவி முடிப் போட்டு மறைத்து வைத்திருப்பதை பார்த்துவிட,
" அமுதா! என்று ஆத்திரத்தில் தேன்மொழி சீர,

ஒன்றும் புரியாமல் அமுதா விழித்துப் பார்க்க...

மலரும்....
 

vani sri

Saha Writer
Messages
17
Reaction score
1
Points
1
மலர் 7:

திடீரென்று தேன்மொழியின் ஆவேசத்திற்கு காரணம் புரியாமல் அமுதா ஒரு நிமிடம் திகைக்க,

உண்மை அறியாமல் வார்த்தையைக் கொட்டிவிட்டால் அமுதாவின் மனம் புண்பட்டுவிடும், அவளது விஸ்வாசத்தை என்றும் அவமதிக்கக் கூடாது என்று தேன்மொழி தன் மனதில் எண்ணிக் கொண்டு கோபத்தை கட்டுப்படுத்தினாள்.

"சாவி உன்கிட்ட எப்படி வந்துச்சு அமுதா?" என்று நிதானமாக தேன்மொழி கேட்டவுடன் தான், சேலையில் முடிந்திருக்கும் சாவி அமுதாவிற்கு ஞாபகமே வந்தது.

"அட! இந்த சாவிக்கு தான் இவ்வளவு ஆர்ப்பாட்டமா? இந்தச் சாவி வைத்து திறக்க முடிஞ்சிருந்தா ஸ்டோர் ரூமில் இருக்கிற விஷயத்தை தெரிஞ்சுக்காம இப்படி இந்த அறையில் அடைஞ்சுக் கிடப்பேனா?" என்று ஏளனமாக அமுதா சொன்னதைக் கேட்டு,

"நீ என்ன சொல்ல வர அமுதா? இந்த சாவிக்குள்ள பூட்டு தானே கீழே போட்டுருக்கு?" என்று குழப்பத்துடன் தேன்மொழி கேட்டதற்கு,

"நானும் அப்படித்தான் திறந்து பார்த்து ஏமாந்துட்டேன் மா!" என்று பதிலளித்தாள் அமுதா.

அமுதாவின் பிதற்றலானப் பேச்சைக் கேட்டு,
"எதுவுமே நீ தெளிவா சொல்ல மாட்டியா அமுதா? என்று தேன்மொழி கோபித்துக் கொள்ள,

"அந்த பூட்டின் உண்மையான சாவி இது இல்லை மா! நம்ம வீட்டுல இருக்க பூட்டு மாதிரியே வாங்கி போட்டு இருக்காங்க, நமக்கு சந்தேகம் வரக்கூடாதுணு. அதனாலதான் இந்தச் சாவி வைத்து அந்தப் பூட்டைத் திறக்க முடியலை. நம்ம வீட்டுப் பூட்டை எங்கயாவது தூக்கி வீசிறுப்பாங்க!" என்றாள் அமுதா.

"இதெல்லாம் மட்டும் கூட இருந்து பார்த்த மாதிரியே சொல்லு" என்று சலித்துக் கொண்டாள் தேன்மொழி.

" இதுக்கு ஒரே வழி புதுசா சாவி செய்யுறது மட்டும் தான். பூட்டை உடைச்சு, அது யாழினிக்கோ அவருக்கோ தெரிஞ்துனா விஷயம் வேற மாதிரிப் போயிடும். இந்த விஷயம் நமக்குள்ள இருக்கட்டும் என்று தேன்மொழி அமுதாவிடம் கூறினாள்.

"சரி மா! நீங்க கொல்லனை வீட்டுக்கு வரச் சொல்லி, சாவி செய்து தர சொல்லுங்க" என்று அமுதா யோசனை சொல்லவும்,

"இப்பவே நான் ஃபோன் பண்ணி வர சொல்றேன்" என்று தேன்மொழி கைப்பேசி மூலம் கொல்லனை தொடர்புகொண்டு வரச் சொன்னாள்.

சிறிது நேரத்தில் கொல்லன் வீட்டுக்கு வரவும், பூட்டின் சாவி தொலைந்து விட்டதாக அவனிடம் தேன்மொழி கூறி, புது சாவி அடித்துத் தரும்படி கேட்க, நாளைக்கு புது சாவி வந்து தருவதாகச் சொல்லிவிட்டு பூட்டின் அச்சை எடுத்துக் கொண்டான் கொல்லன்.

" ஒருவேளை அவசரமாக இப்பவே இந்தப் பூட்டைத் திறக்கனும்னா நான் திறந்து தரேன்" என்று கொல்லன் கேட்க,
தேன்மொழியும் உடனே திறந்து தரும்படி கேட்டவுடன், கொல்லனும் அவன் வைத்திருந்த ஆயுதத்தைப் பயன்படுத்திப் பூட்டைத் திறந்து கொடுத்தான்.

தேன்மொழியும் அமுதாவும் ஸ்டோரூமிற்குச் சென்று தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். பழைய புத்தகங்கள், பாத்திரங்கள் மற்றும் சில மரச் சாமான்கள் அடங்கியுள்ள அந்த அறை மிகவும் சுத்தமாக வைக்கப்பட்டிருந்தது. தூசி ஒட்டடை என எதுவும் இல்லாமல் பராமரித்து வந்ததால் தேடுவதற்கு கொஞ்சம் எளிதாக இருந்தது. தேன்மொழிக்கு எந்த ஒரு விடயமும் தெரியாததால் எதைத் தேடுவது? என்ன மர்மம்? என்று புரியாமல் சுற்றி சுற்றி அறையை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கவும், அமுதா மட்டும் விறுவிறுவென்று அறையின் ஓரத்தில் உள்ள புத்தகங்கள் நிறைந்த அலமாரியை அலசி ஆராய்ந்துக் கொண்டிருந்தாள். அமுதாவின் அவசரத்தையும் ஆர்வமான தேடலையும் பார்த்து வியப்படைந்தாள் தேன்மொழி. ஆனால் அமைதியாக நின்று அமுதாவின் செயலை வேடிக்கைப் பார்த்தவாறு நின்றுக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு புத்தகமாக புரட்டிப் புரட்டிப் பார்த்துத் தேடிக் கொண்டிருந்தாள் அமுதா.

"புத்தகத்தில் என்ன தேடிட்டு இருக்க அமுதா? சொன்னா நானும் தேடுவேனே!" என்று தேன்மொழி கேட்க,

எதுவுமே பதில் சொல்லாமல் விறுவிறுவென்று புரட்டிக் கொண்டிருந்தாள் அமுதா.

"என்ன தேடுறனு சொல்லு! எனக்கு தலையே வெடிச்சிடும் போல இருக்கு!" என்று தேன்மொழி சொல்வதைக் கேட்டு ,

"கொஞ்ச நேரத்துல தெரிஞ்சிடும்! கொஞ்சம் அமைதியா இருங்க மா!" என்று தேன்மொழியின் வாயை அடைத்தாள் அமுதா.

அலமாரியில் உள்ள அனைத்து அடுக்குகளிலும் இருந்த புத்தகத்தைப் பார்த்து விட்டு, மேல் அடுக்கில் உள்ள புத்தகத்தை எடுக்க முயல, உயரமாக இருந்ததால் உதவிக்கு பலகை எதுவும் இருக்கிறதா என்று அமுதா தேடிப் பார்க்க,
"நான் எடுத்து தரேன்!" என்று கூறி தேன்மொழி சில புத்தகங்களைச் சேர்த்து மொத்தமாக எடுக்க, கை நழுவிப் புத்தகங்கள் கீழே விழுந்தன.

புத்தகத்தின் உள் வைக்கப்பட்டு இருந்த சில தாள்கள் சிதறி விழுந்தன. விழுந்த தாள்களை எல்லாம் அவசரமாக எடுத்தாள் அமுதா. எடுத்த தாள்களை ஒன்றொன்றாக எடுத்து தேட,

"இது.. இல்லை! இல்லை!.. எங்க போச்சு..?" என்று சொல்லிக்கொண்டே எல்லாத் தாள்களையும் பார்க்க,

" கண்டுப்பிடிச்சுட்டேன்!" என்று சந்தோஷத்தில் தன்னை அறியாமல் அமுதா கத்த,

"சத்தம் போடாதே அமுதா! என்று தேன்மொழி கூறியதோடு இல்லாமல்,
"இந்த பேப்பர்ல என்ன? இதுக்கும் வீட்டுல நடக்க பிரச்சனைக்கும் என்ன சம்பந்தம்?" என்று ஒன்றும் விளங்காமல் தேன்மொழி கேட்க,

"இது யாழினிக்கு சொந்தமானது மா! அவளுக்கு மட்டுமே சொந்தமானது! இவ்வளவு நாள் நடந்தது எல்லாம் ஒரு விஷயமே இல்லை! இனி தான் பிரச்சனையே ஆரம்பிக்க போகுது!" என்று அமுதா கூறியதைக் கேட்டு தேன்மொழி தன் மகளை நினைத்து வேதனையில் வாடினாள்.

" இந்த பேப்பரை யாழினி அறையில் போய் வைக்கணும் மா!" என்று அமுதா சொல்லவும்,
" ஏன் இப்படி புதிர் போடுற அமுதா?" என்று தேன்மொழி கோபப்பட,

"இந்த விஷயம் நம்ம ரெண்டு பேருக்குள்ளே இருக்கட்டும். இந்த விஷயத்தை பற்றி நேரம் வரும் போது யாழினி மூலமாக நீங்க தெரிஞ்சுப்பீங்க மா!" என்றாள் அமுதா.
"நான் இன்றைக்கே இதை பற்றி யாழினியிடம் கேட்கிறேன்" என்று தேன்மொழி சொல்ல
"தயவுசெய்து சொல்றதைக் கேளுங்க மா! யாழினியின் உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும்! புரிஞ்சுக்கோங்க! எல்லா விஷயத்தையும் உங்ககிட்ட விளக்கமா சொல்ல முடியாது!" என்று அமுதா கெஞ்சினாள்.

அந்த பேப்பரையே உற்று தேன்மொழி பார்த்துக் கொண்டிருந்தாள்.

மருந்து மாத்திரைகளை வாங்கிக் கொண்டு அஷ்வின் அறைக்குள் நுழைந்ததும்,
"நான் போய் பில் கட்டிட்டு வந்துடுறேன்" என்று ஜெயா சென்றாள்.

"நான் உன்கிட்ட ஒரு விஷயம் கேட்கணும் சித்து! தப்பா எடுத்துக்கலனா...! என்று தயங்கியபடி அஷ்வின் கேட்க,

"என்கிட்டே எதுக்கு இவ்வளவு தயக்கம்? என்ன வேண்டுமானாலும் கேளு அஷ்வின்! என்று சித்து சொன்னவுடன்,

"நீ யாரையாவது விரும்புறியா சித்து? சொல்லனும்னு விருப்பம் இருந்தா சொல்லு! நான் எதுவும் தப்பா கேட்கலையே..? என்று அஷ்வின் திக்கித் திக்கி கேட்க,

சித்துவின் முகம் சிறிது வாடியது. சில நிமிட மௌனத்திற்குப் பின்,
" நான் காதலிக்கிற விஷயம் உனக்கு எப்படி தெரியவந்தது?" என்று குழப்பத்துடன் சித்து கேட்கவும்,

"இல்ல! ஏதோ மனசுல தோணுச்சு அதான் உன்கிட்டயே கேட்கலாம்னு கேட்டேன்! என்று அஷ்வின் சொல்லவும்,

"அது... வந்து.... நான்...!"என்று சித்து தயங்கித் தயங்கி,
"நான்..... ஆமா! என் கூட காலேஜ்ல படிச்சப் பொண்ணு! படிக்கும் போதிலிருந்தே லவ் பண்ணினோம்!" என்றான் சித்து.

"இந்த விஷயம் ஆன்ட்டிக்கு இன்னும் ஏன் சொல்லாம இருக்க?" என்று அஸ்வின் கேட்க,

"அம்மா இந்த விஷயத்தை எப்படி எடுத்துப்பாங்கனு தெரியல....!
அவங்க முன்னாடி இருந்தே அத்தை பொண்ணு ராகினியை எனக்கு திருமணம் செய்து வைக்கனும்னு சொல்லிட்டே இருக்காங்க! அத்தைக்கும் தன் பொண்ண எனக்கு கட்டிக்கொடுக்க ரொம்ப இஷ்டம். அதனால தான் இதுவரை இந்த விஷயத்தை சொல்ல முடியாம கஷ்டப்படுறேன்! என்று சித்து கூறியதைக் கேட்டு,

"எவ்வளவு நாள் இப்படி மறைச்சு வைக்க முடியும்னு நினைக்கிற சித்து? இப்பவே ரொம்ப தாமதம் ஆகிவிட்டது இனியும் நீ மறைக்கிறதுல அர்த்தம் இல்லை! என்று அஷ்வின் தன் நண்பனுக்கு புரிய வைக்க முயல,

"நீ சொல்றது சரிதான்! ஆனா... இந்த விஷயம் நீ நினைக்கிற அளவுக்கு சாதாரனமாக சொல்ல முடியாது..!"
என்று சித்து யோசித்தவாறு மெளனமாக இருக்க,

"நீ லவ் பண்ற விஷயத்தை சொல்றதுல உனக்கு என்ன பிரச்சனை? இது நீ மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம் இல்ல. மூன்று குடும்பம் சம்பந்தப்பட்டிருக்கு! உன் அத்தை பொண்ணு வாழ்க்கையைக் கொஞ்சம் யோசிச்சுப் பாரு! அந்தப் பொண்ணுக்கு வேற மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிப்பாங்க விஷயம் தெரிஞ்சா!" என்று புலம்பினான் அஷ்வின்.

"எனக்கு அம்மா கிட்ட சொல்லி பொண்ணு கேட்டு நர்மதா வீட்டுக்கு போகப் பயமா இருக்கு அஷ்வின்! நர்மதா அப்பா ஊருக்குள்ள கட்டப்பஞ்சாயத்து பண்றவர். அவர்கிட்ட பொண்ணு கேட்டுப் போனா என்ன நடக்கும்னு நினச்சாலே படபடப்பா இருக்கு! என்று சித்து பயப்படுவதைப் பார்த்து,

"அப்போ இதுக்கு என்னதான் முடிவு?அவர் கல்யாணம் பண்ணிக் கொடுக்க மாட்டார்னு சொல்ற! பொண்ண கேட்டுப்போகவும் தயக்கம்! நீயே இப்படி பயந்தால் நர்மதா என்ன செய்வா? என்று அஷ்வின் கேட்டான்.

"நான் உன்கிட்ட ஒரு உண்மையை சொல்லனும் அஷ்வின்!" என்று சித்து தயங்குவதைக் கண்டு அஷ்வின் புரியாமல் விழிக்க,

" நீதான் எனக்கு உதவி பண்ணனும் அஷ்வின் ப்ளீஸ்!" என்று கையைப் பிடித்துக் கொண்டு சித்து கெஞ்ச,

ஒன்றுமே புரியாமல் அஷ்வின் திருதிருவென அஷ்வின் விழிக்க,

" நானும் நர்மதாவும் ஏற்கனவே திருமணம் செய்துகிட்டோம்! அதை சட்டப்படி பதிவும் பண்ணிட்டோம்!" என்று சித்து கூறியதைக் கேட்டு அதிர்ந்து போன அஷ்வின் தன் தலையில் கை வைத்து ஒன்றும் பேச முடியாமல் அமர,

"என்கிட்ட சொல்லாம கல்யாணம் பண்ணிட்டியா சித்து?" என்று கவலை நிறைந்த குரலில் கண்ணீரைக் கட்டுப்படுத்திக்கொண்டு வாசலில் நின்றபடி ஜெயா கேட்க,

அம்மாவின் குரல் கேட்டு, சித்து குற்ற உணர்ச்சியுடன் தன் தாயை பார்க்க......

மலரும்...
 

vani sri

Saha Writer
Messages
17
Reaction score
1
Points
1
மலர் 8:

அம்மாவிடம் இருந்து மறைத்து வைத்த உண்மை தன் வாயாலே வெளி வர, என்ன சொல்வதென்றுப் புரியாமல் சித்து மனம் தடுமாறிப் போக,

"அம்மா! என்னை மன்னிச்சுருங்க! நான் நர்மதாவை இழந்து விடுவேனோனு பயத்துல தான் யாருக்கும் தெரியாமல் கல்யாணம் செஞ்சுக்கிட்டேன்! நர்மதா என்கூட இருந்தால் நான் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருப்பேன்! அவள் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷமா நினைக்கிறேன்!" என்று தன் காதலின் ஆழத்தை தாயிடம் உணர்ச்சிப் பொங்க வெளிப்படுத்தினான் சித்தார்த்.

ஜெயா தன் மகன் அருகில் வந்து "கண் கலங்காத சித்தார்த்! நீ கல்யாணம் செஞ்சுகிட்டதுல உன் மேல எனக்கு கோபம் இல்லை, கொஞ்சம் வருத்தம் மட்டும் தான்! நான் உன் மனசப் புரிஞ்சுக்காம, உன் ஆசைக்குக் குறுக்கே இருப்பேன்னு அம்மாவை நீ தப்பா நினைச்சுட்டியா சித்தார்த்?" என்று ஜெயா அழுவதைப் பார்த்து சித்துவின் மனம் ரணமானது.

"நான் உங்களை எப்பவும் அப்படி நினைச்சதே இல்ல மா! அழாதீங்க ப்ளீஸ்! நான் சொல்ல வருவதை கொஞ்சம் முழுசா கேளுங்க மா!" என்று கெஞ்சிக் கேட்க,

கண்களில் இருந்து வழியும் நீரைத் துடைத்துக் கொண்டால் ஜெயா.

"நர்மதாக்கு அவளோட அப்பாவை நினைச்சு பயம் அதிகமாக இருந்துச்சு! எந்த சூழ்நிலையிலும் யாருக்காகவும் அவளை கைவிடமாட்டேன்னு அவளுக்கு வாக்குக் கொடுத்திருந்தேன்! கொஞ்ச நாள் முன்னாடி அத்தை வந்து நம்ம வீட்டுல கல்யாணத்தைப் பற்றிப் பேச்சு எடுக்க ஆரம்பிச்சிட்டாங்க! நர்மதாவுக்கும் அவங்க வீட்டுல மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்கனு தெரிஞ்சதுமே உங்ககிட்ட சொல்லிப் பொண்ணு கேட்டுப் போகலாம்னு நினைச்சேன். ஆனா நர்மதாக்கு அவளோட வீட்டுல கல்யாணத்துக்கு சம்மதிப்பாங்கன்னு துளி அளவு கூட நம்பிக்கை இல்லை! எந்த சூழ்நிலையிலும் நாங்கப் பிரிஞ்சிடக் கூடாதுனு தான் திருமணம் செய்துகிட்டோம் மா!" என்று தன் பக்கம் உள்ள நியாயத்தை விளக்கினான் சித்தார்த்.

"நீ தப்பு பண்ணல சித்தார்த்! உன்னை நம்பி இருந்தப் பொண்ண கைவிடாம அவளைத் திருமணம் செய்தது மட்டுமில்லாமல் சட்டப்படி பதிவும் பண்ணிகிட்ட! ஒரு விதத்துல உன்னை நினைச்சா எனக்குப் பெருமையா இருக்கு! ஆனால் இன்னொருபுறம் நீங்க ரெண்டு பேரும் பெத்தவங்களுக்குத் துரோகம் பண்ணிட்டீங்களே!" என்று கவலையுற்றாள் ஜெயா.

" உன் அத்தை பொண்ணு ராகினியை கல்யாணம் செய்ய விருப்பம் இல்லைணு முன்னாடியே சொல்லியிருந்தா அவளும் தன் மனசுல ஆசையை வளர்த்திருக்க மாட்டாளே!" என்று வருந்தினாள் ஜெயா.

"நீங்க அதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை மா! ராகினிக்கு நான் லவ் பண்ற விஷயம் முன்னாடியே தெரியும். நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்ட விஷயம் கூட தெரியும்! அவளுக்கு என் மேல எந்த விருப்பமும் கோபமும் கிடையாது மா. அத்தையை தான் சமாளிக்கணும்!" என்று சித்தார்த் சொல்வதைக் கேட்டு,

" எல்லா விஷயமும் ராகினிக்கு தெரியுமா?" என்று அதிர்ச்சியுடன் ஜெயா கேட்க,

"ஆமா மா! நான் காலேஜ் படிக்கும் போதே ராகினியிடம் என் காதலைப் பற்றி சொல்லிருக்கேன்! இதைப் பற்றி அத்தைக்கு தெரியப்படுத்த வேண்டாம்னு சொன்னதுனால இந்த விஷயத்தை யாருக்கும் ராகினி தெரியப்படுத்தாமல் எதுவும் தெரியாத மாதிரி இருக்கிறாள்!" என்று சித்து சொன்னதற்கு,

"நல்லவேளை ராகினியிடம் எல்லா விஷயமும் சொன்னியே! இல்லைனா ஒரு பொண்ணு மனசுல ஆசையை வளர்த்து ஏமாற்றுறது பெரிய பாவம்" என்று வருந்தினாள் ஜெயா.

நடந்தது எதிர்ப்பாராத விபத்து இல்லை என்பதைச் சொல்லி தன் மகனை இன்னும் கஷ்டத்தில் ஆழ்த்த ஜெயாவிற்கு மனமில்லாமல்,
"நான் போய் நர்மதா வீட்டுல பேசுறேன். நீ ஒன்னும் கவலைப்படாதே சித்தார்த்! உன் சந்தோசம் தான் எனக்கு முக்கியம்" என்று ஆதரவாகப் பேசினாள் ஜெயா.

இருவருடைய உரையாடலையும் உடனிருந்து கவனித்த அஷ்வின் "ஆன்ட்டி! எனக்கு ஒரு யோசனை..! ஆனா ஒர்க் அவுட் ஆகுமானு தெரியல" என்று அஷ்வின் யோசிக்க,

"சொல்லு பா! உனக்கென்ன தோனுது?" என்று கேட்டாள் ஜெயா.

" நீங்க மட்டும் தனியா நர்மதா வீட்டுக்குப் போனா சரியா வராது. அவளோட வீட்டுல நிறைய அடியாட்கள் இருப்பாங்க! என் அப்பா அம்மாவையும் கூட அழைத்துக் கொண்டு நாம சேர்ந்து போகலாம்! என் அப்பா ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி அதனால நம்ம கிட்ட வம்பு பண்ண மாட்டாங்க!" என்று அஷ்வினின் யோசனையைக் கேட்டதும்,
அஷ்வின் சொல்வது சரிதான் என ஜெயா மனதிற்கு தோன்றினாலும், இதற்கு அஷ்வினின் பெற்றோர் சம்மதிப்பார்களா? என்று ஜெயா சிந்திக்க,

"உங்களுக்கு சம்மதம்னா சொல்லுங்க ஆன்ட்டி! எல்லா விஷயத்தையும் நான் பார்த்துக்கிறேன்! என் ப்ரண்டுக்காக இது கூட செய்ய முடியலன்னா எப்படி?" என்று அஷ்வின் சொல்வதைக் கேட்டு, இருவரின் நட்பை நினைத்து பெருமிதம் கொண்டாள் ஜெயா.

"சரி அஷ்வின்! ஆனா உங்க அப்பா அம்மாவை வற்புறுத்த வேண்டாம்" என்று ஜெயா சொன்னாள்.

மெளனமாக நடந்ததை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அனு,
"டேய் அண்ணா! நீ வீட்டில செம்ம அடி வாங்க போற போ! உனக்கு கல்யாணம் செய்ய அம்மா பொண்ணு பார்த்தா, பிடிக்கலனு எஸ்கேப் ஆகிட்டு, இப்ப உன் ஃப்ரண்டு க்கு பொண்ணு கேட்க கூப்பிடப் போறியே! உனக்கு தைரியம் தான்" என விளையாட்டாக அஷ்வின் காதருகில் முனுமுனுத்தற்கு,

"நீ அதையெல்லாம் நினைச்சு வருத்தப்படாத அனு. உனக்கு அண்ணி சீக்கரம் வந்துடுவாங்க!" என்று சொல்லிச் சிரித்தான் அஷ்வின்.

"நீயும் ஏற்கனவே கல்யாணம் பண்ணிட்டியா?" என்று நக்கலாக அனு சிரிக்க,

"அட..! நீ வேற அனு.....! பொண்ணு பெயரே இப்ப தான் தெரிஞ்சிருக்கு, அதுக்குள்ள எப்படி கல்யாணம்...?" என்று நொந்துக் கொண்டான் அஷ்வின்.

"ஓகோ!! டேய்! அப்போ நீ சொல்ற பொண்ணு யாழினியா? என்கிட்ட பேசிட்டு இருந்தாலே அவளா?" என்று ஆச்சர்யமாக அனு கேட்க,

"அமா! அவளே தான்! நான் வீட்டுக்குப் போயிட்டு விவரமா சொல்றேன் அனு"
என்றான் அஷ்வின்.

தான் இத்தனை நாள் மறைத்த விஷயத்தை தன் அம்மாவிடம் சொல்லி, சம்மதமும் கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் சித்தார்த் இருக்க, தன் அண்ணனுக்கு என்ன பதில் சொல்வது என்ற குற்ற உணர்ச்சியில் உருக்குலைந்து அமர்ந்திருந்தாள் ஜெயா.

ரூம் ஐ விட்டு வெளியே வந்து அர்ஜுன் க்கு போன் செய்தான் அஷ்வின்.

"ஹலோ! சொல்லு அஷ்வின்! எப்படி இருக்க? வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க? சனிக்கிழமை உன்னை பாக்குறதுக்கு ரொம்ப ஆவலோட காத்திருக்கேன்!" என்று அர்ஜுன் ஆர்ப்பரிக்கும் சந்தோஷத்தில் சொல்ல,

"சாரி அர்ஜுன்! என் ஃப்ரெண்டு சித்தார்த் க்கு ஆக்சிடென்ட் ஆகிடுச்சு! அவனைப் பார்த்துக்க ஹாஸ்பிட்டல்ல இருக்கேன்..." என்ற செய்தியை அஷ்வின் தெரிவிக்க,

"உன் ஃப்ரண்ட் இப்ப எப்படி இருக்கான்? என்ன உதவி தேவைப்பட்டாலும் தயங்காமல் உடனே கேளு அஷ்வின்" என்றான் அர்ஜுன்.

"இப்ப நல்லா இருக்கான்! சின்னதா தலையில் அடி. பயப்படுற மாதிரி எதுவும் இல்லை! இப்போ கொஞ்ச நேரத்துல டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டுப் போயிடுவோம்! ஆனால் சனிக்கிழமை எனக்கு கொஞ்சம் பெர்ஸ்னல் கமிட்மெண்ட் இருக்கு. நான் இன்னொரு நாள் உன்னை பார்க்க வரேன்! தப்பா எடுத்துக்காத அர்ஜுன்!" என்று தன் நிலைமையைப் புரிய வைக்க அஷ்வின் முயற்சிக்க,

"டேய்! என்னடா பேசுற? உன் ஃப்ரண்டு சித்தார்த் கூட இருந்து பார்த்துக்கோ! இப்ப அது தான் முக்கியம். நீ இன்னொரு நாள் ஃப்ரீயா வீட்டுக்கு வா!" என்று அர்ஜுன் கூறிய வார்த்தைகளைக் கேட்டு அஷ்வின் மன நிறைவுப் பெற,

"அர்ஜுன்! தேங்ஸ் ஃபார் அன்டர்ஸ்டேன்டிங் டா!" என அஷ்வின் கூற,
"டேக் கேர்! சீ யூ சம்டைம்ஸ் லேட்டர்!" என்று கூறி போனை கட் பண்ணினான் அர்ஜுன்.

சிறிது நேரத்தில்,
"எக்ஸ்க்யூஸ் மீ!" என்ற சத்தம் கேட்க,
"உள்ள வாங்க டாக்டர்!" என்றான் அஷ்வின்.

"சித்தார்த்! எப்படி இருக்கீங்க? தலைவலி இன்னும் இருக்குதா?" என்று டாக்டர் கேட்டதற்கு,

"ஐ எம் ஃபைன் டாக்டர்! இப்ப வலி எதுவும் இல்லை. கொஞ்சம் உடம்பு அசதியா இருக்கு அவ்வளவுதான்!" என சித்து சொல்ல,

"வலி இல்லைன்னாலும் மறக்காம இரண்டு நாள் பெயின் கில்லர் எடுத்துக்கணும் சித்தார்த். இல்லைன்னா மறுபடியும் வலி வர்றதுக்கு வாய்ப்பிருக்கு!" என்றார் டாக்டர்.

"கண்டிப்பா மாத்திரை எடுத்துக்கிறேன் டாக்டர்!" என்றான் சித்தார்த்.

"ஹீ இஸ் ஆல் ரைட் நவ்! கொஞ்ச நேரத்துல டிஸ்சார்ஜ் ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் முடிச்சுட்டு வீட்டுக்கு கூட்டிட்டு போயிடலாம்!" என்று கூறி டாக்டர் கிளம்பினார்.

கையில் வைத்திருந்த பேப்பர்-ஐ யாழினியின் அறைக்குச் சென்று தேன்மொழி வைத்து விட்டு வரும் வரை, ஸ்டோர் ரூம்-க்கு பூட்டுப் போட்டு விட்டு அதன் சாவியை தேன்மொழியிடம் கொடுக்கக் காத்திருந்தாள் அமுதா.

யாழினியின் அறையில் இருந்து திரும்பி வந்துக் கொண்டிருந்த தேன்மொழிக்குத் திடீரென்று அன்று அமுதாவின் தலையில் எப்படி அடிப்பட்டது என்ற கேள்வி எழ, அதற்கான விஷயத்தை அறிந்துக் கொள்ள முனைப்பாக இருந்தாள்.

சாவியைத் தேன்மொழியிடம் ஒப்படைத்துவிட்டு, "அம்மா! எனக்கு உடம்பு நல்ல குணம் ஆயிடுச்சு. இதுக்கு மேல சும்மா படுத்து இருக்க முடியல! நான் இனி வேலை எல்லாம் செய்ய ஆரம்பிக்கிறேன்" என்று அமுதா கூற,

"அதெல்லாம் இல்லை! நீ நல்லா ஓய்வெடு. அப்புறம் வேலை செய்யலாம்" என்று தேன்மொழி கட்டளையிட்டதற்கு கொஞ்சம் கூட பிடிக் கொடுக்காமல்,

"ஐயோ! சத்தியமா என்னால இப்படி படுத்து இருக்க முடியாது மா! நான் வேலை செய்ய ஆரம்பிக்கிறேன்!" என்று சமையலறை நோக்கி நடையைக் கட்டினாள் அமுதா.

"என்ன சொன்னாலும் கேட்கவே மாட்டாளே! சரி.. அவளோட போக்கில் விட்டு தான் உண்மையைக் கண்டுப் பிடிக்கனும்!" என்று தேன்மொழி நினைத்துக் கொண்டே மாடிப்படி ஏற, காலிங்பெல் அடிக்கும் சத்தம் கேட்டுத் திரும்பி வந்து கதவைத் திறந்தவள்,

"நீங்க மட்டும் வந்திருக்கீங்க! யாழினி எங்கே?" என்று கார்த்திகேயனை வாசலிலே மடக்கி கேள்வி கேட்டாள் தேன்மொழி.

"யாழினி ஹாஸ்பிடல் க்கு யாரையோ பார்க்கணும்னு சொல்லிட்டு அப்பவே ஸ்கூட்டி எடுத்துட்டு போயிட்டா. கொஞ்ச நேரத்துல வந்துருவா" என்று கார்த்திகேயன் சொல்லவும்,

ஹாஸ்பிட்டலுக்கு எதுக்கு போயிருக்கா? அதுவும் தனியா ஏன் போகனும்???? என்ற கேள்வியுடன் தேன்மொழி....

மலரும்...
 

vani sri

Saha Writer
Messages
17
Reaction score
1
Points
1
மலர் 9:

"இதோ கார் சாவி வாங்கிக்கோ சித்து! நீ அம்மா கூட பொறுமையாக நடந்து கீழே போயிட்டு இரு, நான் லக்கேஜ் எல்லாம் எடுத்துகிட்டு வரேன்" என்று அஷ்வின் சொல்ல,

"சரிடா!" என்று புறப்பட்டான் சித்து.

சித்துவை வீட்டில் இறக்கி விட்டுட்டு, அஷ்வின் வீடு திரும்ப இரவு மணி 11 மணிக்கு மேல் ஆகிவிட்டது. அஷ்வினும் அனுவும் வீட்டுக்குள் நுழைந்ததும், அம்மா அப்பா ஹாலில் உள்ள சோபாவில் உட்கார்ந்து இருவரையும் எதிர்ப்பார்த்துக் காத்திருந்ததைப் பார்த்த அனு,

"நீங்க இன்னுமா தூங்காம இருக்கீங்க" என்று கேட்க,

" நீங்க வராமல் எப்படி எங்களுக்கு தூக்கம் வரும். அதான் நீங்க வர வரைக்கும் வெயிட் பண்ணிட்டு இருந்தோம்" என்றார் குமாரசாமி.

"சின்ன புள்ளையா நாங்க? இப்படி பயப்படுறீங்க?" என்று அஷ்வின் சொன்னான்.

"சித்தார்த் எப்படி இருக்கான்? டாக்டர் என்ன சொன்னாங்க?" என்று நலம் விசாரித்தார் குமாரசாமி.

"நல்லா இருக்கான் அப்பா! டிஸ்சார்ஜ் பண்ணி வீட்டுல விட்டுட்டு தான் வரேன் அதான் லேட் ஆகிட்டு" என்றான் அஷ்வின்.

"நீ போயி தூங்கு அனு. நான் அப்பா அம்மா கிட்ட பேசிட்டு வரேன்" என்று அஷ்வின் கூறியதற்கு,

" ஹ்ம்ம்... குட்நைட்! நான் கிளம்புறேன். உங்க எல்லாருக்கும் சிவராத்திரி தான் இன்னிக்கி!" என்று கேலிச் செய்துவிட்டு தன் அறைக்குச் சென்றாள் அனு.

வழக்கம்போல் தூங்காமல் கைப்பேசியை நோண்டியபடி, தன்னை மறந்து தூக்கத்தில் ஆழ்ந்தாள் அனு.

"உங்ககிட்ட இருந்து சித்து குடும்பத்திற்கு ஒரு பெரிய உதவி வேண்டும்" என்று மெல்ல சொல்லத் தொடங்கினான் அஷ்வின்.

"விஷயத்தை சொல்லு! பண்ண முடிஞ்சா கண்டிப்பா செய்வோம்!" என்றார் குமாரசாமி.

"உங்களுக்கே சித்து வை நல்ல தெரியும்! ரொம்ப நல்ல பையன். அமைதியான குணம், அதோட பயந்த சுபாவமும் கூட! அது மட்டும் இல்லாம அவன் என்னோட பெஸ்ட் ஃப்ரண்ட். எனக்கு ரொம்ப வருஷமா பழக்கம்" என்று சித்தார்த் ஐ பெருமையாக அஷ்வின் சித்தரிக்க,

பின்பு, அவன் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்த விஷயத்தையும், பெண் வீட்டார் மூலமாக இந்த விபத்து நேர்ந்ததையும் கூறினான் அஷ்வின்.

இதைக் கேட்ட ரேகா உடனே ஆத்திரம் அடைந்தாள்.

"நல்ல பையன்! அப்படி இப்படி ன்னு சொல்லிட்டு இவ்வளவு பெரிய விஷயத்தை செஞ்சிருக்கான், இவனுக்கு ஆதரவா பேசிட்டு இருக்க?" என்று அஷ்வின் மேல் நெருப்பாக வார்த்தைகளை வீசி,

"யாரைப் பற்றியும் யோசிக்காமல் சுயநலமா இப்படி முடிவு எடுத்துட்டு எல்லோரையும் தர்மசங்கடத்தில் ஆழ்த்திட்டானே!" என்று தன் ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தாள் ரேகா.

"அம்மா! இப்ப கோபப்படுறதுனால எதுவுமே மாறப்போறது இல்லை! அடுத்து என்ன பண்ணலாம்னு தான் யோசிக்கனும்! நீங்களும் மற்றவர்களைப் போல உணர்ச்சிவசப்படாம, கொஞ்சம் யோசிச்சு பிரச்சினையை சரி பண்ணப் பாருங்க அம்மா!" என்று நிதானமாக ரேகாவை சமாதானம் செய்தான் அஷ்வின்.

"அஷ்வின்! இப்ப நாங்க என்ன செய்யணும்னு நீ நினைக்கிற? அதை சொல்லு!" என்று கேட்டார் குமாரசாமி.

"அப்பா! பொண்ணு பெயர் நர்மதா. அவள் பெரிய பண்ணையார் குடும்பத்தை சேர்ந்தவள். அவங்க வீட்டில அடிதடி அப்புறம் கட்டப்பஞ்சாயத்து பண்றதுன்னு கொஞ்சம் அடாவடியான ஆட்கள். இப்ப கல்யாண விஷயம் தெரிஞ்சா நர்மதாவை என்ன செய்வாங்கன்னு யோசிச்சுக் கூட பார்க்க முடியல! நர்மதா காதல் விஷயம் ஏதோ அலசல் புரசலாக தெரிஞ்சிருக்கும் போல! அதுக்கே சித்து வை கார் வச்சு இடிச்சுட்டு, ஆன்ட்டிக்கு போன் பண்ணி மிரட்டிருக்காங்க!" என்று அஷ்வின் கூறியதைக் கேட்டு,

"அடப்பாவமே! இப்படியெல்லாம் கூட செய்வாங்களா? பெரிய ரவுடியா இருப்பாரு போலயே!" என்று திகைத்தாள் ரேகா.

"அதான் நம்ம எல்லோரும் சித்து அம்மா கூட சேர்ந்து போயி பொண்ணு கேட்கலாம்னு யோசிச்சேன்"! என்றான் அஷ்வின்.

"உனக்கு பைத்தியம் பிடிச்சிருக்கா அஷ்வின்? லவ் பண்றது உறுதியா தெரியாம இருக்கும் போதே, கொலை மிரட்டல் கொடுத்துருக்காரு!இதுல நாம எல்லாரும் போயி பொண்ணு கேட்டு, கல்யாணம் ஆகிட்டுன்னு வேற சொன்னா, எல்லாருக்கும் ஒரே வெட்டு தான்!!" என்றாள் ரேகா.

"அப்படியெல்லாம் நடக்காது அம்மா! அப்பா கூட இருக்கும் போது ஏன் பயப்படுறீங்க? ஒரு போலீஸ் அதிகாரி முன்னாடி வாலாட்ட முடியுமா?" என்ற அஷ்வினின் வார்த்தைகள் ரேகா வை சிறிது ஆலோசிக்க வைத்தது.

"சரி... நாம சேர்ந்து போய் பேசலாம்!" என்றார் குமாரசாமி.

"நீங்க இவ்ளோ சீக்கிரம் ஒத்துப்பீங்கனு நான் நினைச்சு கூட பார்க்கல பா! ரொம்ப தேங்க்ஸ்!" என்றான் அஷ்வின்.

"அப்படினா.... நாளைக்கு ஈவினிங் நர்மதா வீட்டுக்கு போகலாம் அப்பா! நான் சித்து கிட்ட சொல்லிடுறேன். அம்மா நிம்மதியா தூங்குங்க! குட்நைட்!" என்று கிளம்பினான் அஷ்வின்.

"உனக்கு ஒரு கல்யாணம் பண்ணனும்னு ஆசைப்பட்டா, நீ உன் ஃப்ரண்ட் கல்யாணத்தைச் சொல்லி எங்க உயிரை ஊசலாட வைச்சுருக்கதும் இல்லாம நிம்மதியா தூங்குங்கன்னு வேற சொல்லிட்டு போறியா?" என்று ரேகா புலம்பிக் கொண்டிருக்க,

"யாரும் வேணும்னு தப்பான முடிவோ, சுயநலமான முடிவோ எடுக்க மாட்டாங்க. அவங்களோட சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அப்படி அமையும்போது என்ன செய்ய முடியும்? எல்லாத்துக்கும் மேல ஆண்டவன் எழுதின விதிப்படிதான் எல்லாம் நடக்கும்! நம்மளால முடிஞ்ச உதவியை செய்வோம்! அவ்வளவுதான்.. ரொம்ப யோசிக்காம தூங்கு.. வா போகலாம்" என்று குமாரசாமி அவளை அறைக்கு அழைத்துச் செல்ல,
கணவன் கூறிய வார்த்தைகள் ரேகாவின் மனசுக்கு நிம்மதியைத் தந்தது.

நாளைக்கு சாயங்காலம் நர்மதா வீட்டுக்கு போகலாம் என்ற செய்தியை ஜெயாவிடம் போன் மூலம் தெரிவித்து விட்டு படுத்தான் அஷ்வின். அம்மாவிற்கு தைரியம் சொல்லும் போது இருந்த தைரியம் ஏனோ இப்போது அவனுக்கே இல்லை! மனசுக்குள் ஒருவிதப் போராட்டமாக இருந்தது. நாளைக்கு நர்மதா வீட்டில் என்ன நடக்குமோ என்ற பயம், அடியாட்கள் வைத்து மறுபடியும் விபத்து ஏற்படுமா? என்ற குழப்பத்திற்கு மத்தியில் உருண்டு புரண்டுக் கொண்டிருந்தான் அஷ்வின்.

"ஏய் அஷ்வின்! நேரம் ஆகுது... எழுந்து வா!" என்று அம்மாவின் குரல் காதில் கேட்க,

"அட! அதுக்குள்ள மணி 12 ஆகிட்டா? எப்ப தூங்கினனு கூட தெரியல!" என்று தனக்குள் பேசிக் கொண்டே,

" நான் பிரஷ் பண்ணிட்டு ஃப்ரஷ் ஆகிட்டு வர்றேன் மா" என்று கட்டிலில் படுத்துக் கொண்டே குரல் கொடுத்தான் அஷ்வின்.

சிறிது நேரத்தில் சாப்பிடுவதற்காக வந்து தன் இருக்கையில் அமர,
"நீ எப்ப போய் சித்தார்த்-ஐ கூட்டிட்டு வரப் போற? என்று கேட்டார் குமாரசாமி.

"இப்ப கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவேன் அப்பா! நீங்க ரெடியா இருங்க, நான் வந்ததும் நர்மதா வீட்டுக்கு போகலாம்" என்றான் அஷ்வின்.

சில மணி வினாடிகளில் வீட்டில் இருந்து அஷ்வின் புறப்பட்டான். என் காதல் விஷயத்தை சொல்லும்போது கூட பாவிப்பயல் வாயைத் திறக்கவே இல்லையே!! இருக்கட்டும்! அப்புறம் மொத்தமாகச் சேர்த்து அவனை கவனிச்சுக்கலாம்..."என்று புலம்பிக் கொண்டே காரை ஓட்டினான் அஷ்வின்.

தன் காதல் தேவதையின் நினைவில் நனைந்துக் கொண்டே காரை ஓட்ட, சீக்கிரமா அவளது முகவரி அறிந்து அவளிடம் தன் காதலை தெரிவிக்க வேண்டும் என்றும், பின்பு அப்பா அம்மா சம்மதத்துடன் திருமணம் செய்ய வேண்டும் என்ற
எண்ணோட்டத்துடனே இருந்தான் அஷ்வின். ஒரே ஒரு தடவை பார்த்தாலும் ஏதோ பல ஜென்ம பந்தம் போல் அவளது முகம் அவனை வாட்டி வதைத்துக் கொண்டு இருக்க, எங்கே சென்று அவளை மீண்டும் பார்ப்பது? என்று குழப்பத்துடன் சித்துவின் வீட்டை அடைந்தான்...

யாழினியின் வருகைக்காக பதட்டத்துடன் காத்திருந்த தேன்மொழி, வண்டி வரும் சத்தம் கேட்டு எழுந்து வாசலுக்கு சென்றுப் பார்த்தாள்.
" யாழினி! என்னமா திடீர்ன்னு ஹாஸ்பிடல் போயிட்ட? என்ன விஷயம்னு கூட சொல்லாம? என்று கனிவுடன் தேன்மொழி கேட்க,

"என் ஃப்ரண்டுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு மா! அதான் பார்க்கப் போயிருந்தேன்! அப்பா கிட்ட சொல்லிட்டுத்தானே போனேன்!" என்று யாழினி சொல்லவும்,

"ஆமா தேனு! என்கிட்ட சொன்னா.. நான் தான் வேலை டென்ஷன்ல சரியா கவனிக்கல" என்றார் கார்த்திகேயன்.

தன் கணவனை முறைத்தப்படியே
"நீ ஃப்ரஷ் ஆகிட்டு சாப்பிட வா யாழினி!" என்று தேன்மொழி கூறினாள்.

யாழினி தன் அறைக்குச் செல்ல மாடிப்படி ஏறிக் கொண்டிருக்க,
"எந்த ஃப்ரண்டுக்கு குழந்தை பிறந்திருக்கு யாழினி?" என்று தேன்மொழி கேட்க,

"அது... என் ஃப்ரண்டு ரம்யா க்கு மா!" என்று யாழினி சொன்னதைக் கேட்டு,

"என்கிட்ட அஞ்சனா க்கு குழந்தை பிறந்திருக்குனு தானே சொன்ன? இப்ப ரம்யா ன்னு சொல்ற? என்று கார்த்திகேயன் புரியாமல் விசாரிக்க,

"அது ...அப்பா....!" என்று திருதிருவென யாழினி விழிக்க.....….

மலரும்...
 

vani sri

Saha Writer
Messages
17
Reaction score
1
Points
1
மலர் 10:

"ரம்யா ன்னு தான் சொன்னேன் அப்பா! நீங்க சரியா கவனிச்சிருக்க மாட்டீங்க!" என்று சமாளித்து விட்டு தன் அறைக்கு வேகமாகச் சென்றாள் யாழினி.

கொஞ்சம் நேரம் கழித்து யாழினியின் அறைக்கு தேன்மொழி சென்று கதவைத் திறக்க, யாழினியோ கவலையுடன் அமர்ந்திருந்து கையில் அந்தப் பேப்பரைப் பார்த்தவாறு கண் கலங்கி இருப்பதைக் கண்டு வேதனையுற்றாள் தேன்மொழி.

"யாழினி!" என்று அழைத்த அம்மாவின் குரல் கேட்டு,
அவளைத் திரும்பிப் பார்த்தும் யாழினி மெளனமாகவே இருப்பதைக் கண்டு,
"உனக்கு எதுவும் பிரச்சினை இருந்தால் சொல்லு மா! நானும் உன்ன கொஞ்ச நாளா கவனிச்சிட்டுத் தான் இருக்கேன்! எதையோ பறிக்கொடுத்த மாதிரியே இருக்கியே!" என்று உருக்கமாக தன் தாய் பாசத்தை வெளிப்படுத்தினாள் தேன்மொழி.

"அப்படி ஏதும் இல்ல மா! நீங்க எதையும் யோசிச்சு மனச குழப்பிக்காதிங்க!" என்று யாழினி கூறிய வார்த்தைகளில் கூட சோகம் குடிக் கொண்டிருப்பதை உணர்ந்த தேன்மொழி, நேரம் வரும்போது யாழினி மூலம் விஷயத்தைத் தெரிஞ்சுப்பீங்க என்ற அமுதாவின் கூற்றை நினைவுபடுத்திக் கொண்டு, தன் மகளைத் தொந்தரவுச் செய்யாமல்,

"நாளைக்கு அர்ஜுன் வீட்டுக்கு வர்றியா யாழினி மா?" என்று தேன்மொழி கேட்டதற்கு,
"ஆமா! வருவேன் அம்மா!" என்று யாழினி சொல்ல,
"சரி! நீ ரெஸ்ட் எடு!" என்று கிளம்பினாள் தேன்மொழி.

"நல்லவேளை கையில இருந்த பேப்பரை அம்மா கவனிக்கல போல! பார்த்து இருந்தா கண்டிப்பா கேட்டிருப்பாங்க!" என்று யூகித்துக் கொண்டு பேப்பரைப் பார்த்துக்கொண்டே கட்டிலில் படுத்தாள் யாழினி.

சித்தார்த், ஜெயா இருவரும் நர்மதா வீட்டிற்கு செல்ல ஆயத்தமாக இருக்க,
வீட்டு வாசலில் நின்றபடியே அஷ்வின் சித்துவிற்குப் ஃபோன் செய்து வெளியில் வரச் சொல்ல, சித்து தன் அம்மாவுடன் தயாராகி வெளியே வந்தான்.

"நீ பண்ணின வேலையால எல்லாரும் இப்போ உயிரை பணையம் வச்சு அங்கே போறோம்! உன் கல்யாண விஷயம் தெரிஞ்சதும் அவ அப்பா என்ன செய்யப் போறாரோ? உன்ன பெத்ததுக்கு நான் போறேன் ஆனா பாவம் உன் கூட சகவாசம் வச்சதுனால தன் குடும்பத்தையும் இந்த பிரச்சினையில் உள்ளே இழுத்துருக்கான் அஷ்வின்!" என்று வேதனையில் பேசிக்கொண்டே காரில் ஏறினாள் ஜெயா.

"ஆன்ட்டி சித்து லவ் பண்ணின பொண்ண கல்யாணம் கட்டிகிட்டான்! இது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை! அவளோட அப்பா கண்டிப்பா சம்மதிச்சு ஏத்துப்பாங்க!" என்ற ஆறுதல் நிறைந்த வார்த்தைகளால் ஜெயாவின் மனதை சமாதானப் படுத்தினான் அஷ்வின்.

சிறிது நேரத்தில் மூவரும் அஷ்வினின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். அனைவரும் கலந்து நர்மதா வீட்டில் என்ன பேசுவது? எப்படி அவர் அப்பாவை சமாளிப்பது? என்று ஆலோசித்துக் கொண்டிருக்க நேரம் உருண்டோடி அதற்குள் சாயங்காலம் மணி 5 ஆகிவிட,
"சரி நம்ம எல்லாரும் நர்மதா வீட்டுக்கு கிளம்பலாம்" என்று குமாரசாமி சொல்லவும், யாரும் எதிர்பாராதவிதமாக

" நர்மதா வீட்டுக்கு நாளைக்கு போலாமா? எனக்கு என்னவோ மனசு சரியில்லை!" என்று ஜெயா கூறியதும்,
எல்லோரும் சற்று புரியாமல் விழித்தனர்.
"ஏன் இவ்வளவு நேரம் கழிச்சு திடீர்னு இப்படி சொல்றீங்க?" என்று ரேகா கேட்க,
"என்னன்னு தெரியல! என் மனசு சரியில்ல... அதனால தான்...!" ஜெயா தடுமாற்றத்துடன் கூற,

"சரி! அப்போ நாளைக்கே நம்ம போகலாம்! இன்னைக்கு இங்கயே தங்கிட்டு காலையில் போகலாம்" என குமாரசாமி சொன்னதற்கு,

"அதுவும் சரிதான்! இதுக்குமேல வீட்டுக்குப் போய்விட்டு மறுபடியும் நாளைக்கு வர்றதுக்கு பதிலா இங்கேயே தங்கிட்டு நாளைக்கு போகலாம்!" என்றாள் ரேகா.

"மறுநாள் பொழுது விடிய, அர்ஜுன் வீட்டிற்கு செல்ல பரபரப்பாக கார்த்திகேயனும் தேன்மொழியும் கிளம்பிக் கொண்டிருக்க, யாழினி ஒருபுறம் தயாராகிக் கொண்டிருந்தாள். சற்று நேரத்தில் வீட்டில் இருந்து புறப்பட்டு அர்ஜுன் வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருக்கையில் திடீரென்று எதிர்பாராத விதமாக பள்ளம் இருப்பதை பார்த்து காரின் பிரேக்கை கார்த்திகேயன் அழுத்தியதும், முன்னிருந்த இருக்கையில் யாழினி முட்டிக்கொண்டு,
"ஆ!.......அம்மா!!!" என்று வலியில் கத்தினாள்.
"ஐயோ! ரொம்ப அடிபட்டுட்டா யாழினி?" என்று அப்பா கேட்டதும், "கொஞ்சம் வலிக்குது!" என்று யாழினி சொன்னாள்.

யாழினியின் தலையை நன்கு தேய்த்துவிட்டு, தண்ணீர் குடிக்க கொடுத்து தன் மடியில் படுக்க வைத்துக் கொண்டாள் தேன்மொழி. சில மணித்துளிகளில் அர்ஜுன் வீட்டிற்குள் பிரவேசிக்க,

"ஹே யாழினி! வா! வா! உன்ன தான் எதிர்பார்த்திட்டு இருந்தேன்! உள்ள வாங்க அங்கிள்! வாங்க ஆன்ட்டி வாங்க!" என்று வரவேற்றான் அர்ஜுன்.

"சரியான நேரத்துக்கு வந்துட்டோம் போதுமா?" என்றார் கார்த்திகேயன்.

"அம்மா அப்பா எங்க இருக்காங்க அர்ஜுன்? அவங்களைப் பார்த்து ரொம்ப நாள் ஆயிடுச்சு!" என்று யாழினி கேட்க,
"உள்ளே தான் இருக்காங்க போய் பாரு யாழினி! நான் மற்ற ஃப்ரண்ட்ஸ் எல்லாரையும் கவனிக்கிறேன்" என்று நகர்ந்தான் அர்ஜுன்.

பின்பு யாழினியைத் தன் மற்ற நண்பர்களுக்கும் அறிமுகம் செய்து வைத்துக் கொண்டிருந்தான் அர்ஜுன்.

"ஓகே! இட்ஸ் டைம் ஃபார் கேக் கட்டிங்!!" என்று அர்ஜுனின் அப்பா கணேஷ் விடுத்த அறிவிப்பைக் கேட்ட அனைவரும் தன் கைகளைத் தட்டி கரகோஷம் போடுவதும், விசில் அடிப்பதுமாக வீடே கலகலப்பாக மாறியது.

"ஹேப்பி பர்த்டே டூ யூ!!!" என்ற நண்பர்கள், உறவினர்கள் பாடல் பாட, வெட்கம் கலந்த சிரிப்புடன் அர்ஜுன் கத்தியை எடுத்து கேக் வெட்டப் போக,

"கொஞ்சம் வெயிட் பண்ணு டா!" என்று அர்ஜுன் அப்பா கணேஷ் சொல்லவும்,

ஒரு நிமிடம் வீடே நிசப்தமானது.

"யாழினி! நீயும் கூட போய் நில்லு மா!" என்றார் கணேஷ்.

இதைக் கேட்டவுடன் ஒன்றும் புரியாமல்,
"ஏன் அங்கிள்? நான் எதுக்கு?" என்று குழப்பத்துடன் கேட்டாள் யாழினி.

"அதெல்லாம் பிறகு சொல்றேன் மா! நீ போ! டைம் ஆகுது! சீக்கிரம் போ!" என்று கணேஷ் அவசரப்படுத்தினார்.

யாழினியின் அப்பா கார்த்திகேயனும்
"போ மா அர்ஜுன் பக்கத்துல!" என்று சொல்ல,
குழப்பத்துடன் யாழினி மெல்ல அடி வைத்து அர்ஜுன் அருகில் செல்ல, "என்ன நடக்குது ஒண்ணுமே புரியலையே?" என்று அர்ஜூன் மனதில் நினைத்துக் கொண்டிருந்தான்.

ஏதோ சர்ப்ரைஸ் இருக்கு போலயே! அதான் திடீர்னு இவ்வளவு பிரம்மாண்டமாகப் பிறந்தநாள் கொண்டாட்டமா? என்று நண்பர்கள் ஒரு பக்கம் கேலி கிண்டல் செய்தனர். நண்பர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு நடுவில் அர்ஜுன் கேக் வெட்டி முதலில் அம்மாவிற்கு ஊட்டி விட,
"நீ யாழினிக்குக் கொடு! அப்புறம் எனக்கு கொடு" என்றாள் லட்சுமி.

"அம்மா! என்ன இதெல்லாம்?" என்று அர்ஜுன் தயங்கியபடி வேறு வழியின்றி யாழினிக்குக் கேக்கை கையில் கொடுக்க,

யாழினியோ முகத்தை கூடப் பார்க்காமல் கீழே குனிந்தபடி கோபத்துடன் வாங்கிக்கொண்டாள்.
பின்பு நண்பர்களுடன் சேர்ந்து ஆரவாரத்துடன் பிறந்தநாள் கலைக் கட்டியது.

சில நிமிடங்கள் கழித்து,
"நான் கிளம்புறேன் அர்ஜுன்! எனக்கு முக்கியமான வேலை இருக்கு!" என்று கூறி யாழினி அவ்விடமிருந்து கிளம்ப முயல,

"அப்படியா! ஓகே கிளம்பு யாழினி!" என்று அர்ஜுன் சொல்ல,

"அதுக்குள்ள எங்க யாழினி கிளம்புற? உனக்கு இனி தான் ஒரு பெரிய சர்ப்ரைஸ் இருக்கு!" என்று அப்பா கூறியதைக் கேட்டு மீண்டும் குழப்பம் அடைந்தாள் யாழினி.

"ரொம்ப யோசிக்க வேண்டாம் யாழினி விஷயத்தை நானே சொல்லிடுறேன்!" என்று கார்த்திகேயன் புன்னகையுடன் அனைவரின் முகத்தையும் சுற்றிச் சுற்றிப் பார்க்க, எல்லோரும் ஆவலாக விஷயத்தை எதிர்ப்பார்த்துக் கூச்சலிட்டனர்.

"கணேஷ்! நீயே விஷயத்தைச் சொல்லிடேன்!" என்றார் கார்த்திகேயன்.

அர்ஜுன் நடப்பது புரியாமல் தவிக்க, யாழினிக்கோ தலையே பிச்சுக்கும் போலிருந்தது!

"இதுவரை நண்பர்களாக இருந்த அர்ஜுன் யாழினியை திருமணப் பந்தத்தில் இணைத்துக் கணவன் மனைவியாக வாழ்க்கையைத் தொடர ஆசைப்படுறோம். அதற்கான நிச்சயதார்த்தம் தான் இப்ப நடக்க போகுது!" என்று கணேஷ் சொல்லி முடிக்க, ஒரே கூச்சலும் கைத்தட்டலுமாக இருந்தது!

"டேய் நீ பார்ட்டி வைக்கும்போதே சந்தேகம் இருந்துச்சு!" என்று நண்பர்கள் கூட்டம் கிண்டல் செய்ய, அர்ஜுன் சற்றும் எதிர்ப்பார்க்காததால் திக்குமுக்காடிப் போய் நின்றுக் கொண்டிருந்தான்.

"கல்யாணமா? என்ன நடக்குது அப்பா இங்க? என் சம்மதம் இல்லாமல் எப்படி நீங்க முடிவு பண்ணலாம்?" என்று ஆக்ரோஷமாக யாழினி கேட்க,

கோபத்தில் சிவந்த அவளது முகமும், ஆத்திரத்தில் துடித்த அவளது கண்களும் அனைவரையும் பதற்றத்தில் ஆழ்த்தியது.

அவளது கோபம் நிறைந்த குரல் மற்றும் அவளுக்குள்ளிருந்த தவிப்பையும் பார்த்து கார்த்திகேயனும் தேன்மொழியும் திடுக்கிட்டனர்.

“ஏன்மா இப்படி பேசுற? உனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் இல்லையா?" என்று தேன்மொழி அவளது கன்னத்தில் கைவைத்து அன்பாக கேட்க,

யாழினியின் இருதய ஓசையை வருடி, தேயாத நிலவாய் தன்னவன் நிலைத்திருக்க, வாடாத பூவாய் அவன் மீது தினம் காதல் மலருகையில்,

இப்படி ஒரு இக்கட்டில் மாட்டித் தவித்த யாழினி,

"இல்ல! இல்ல! இல்ல! அர்ஜுனை கல்யாணம் பண்ண எனக்கு விருப்பம் இல்ல!" என்று கத்தி விட்டு, மனம் செந்நீர் சிந்தியபடி வீட்டை விட்டு யாழினி வெளியே கிளம்பினாள்.....

மலரும்....
 

Latest posts

New Threads

Top Bottom