Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

BL NOVEL தர்காவில் ஒரு துர்கா - Tamil Novel

அத்தியாயம் 36

பிறகு சுஹேல் பரந்தாமனிடமும், வாசுதேவனிடம் பேசினான். உங்கள் பெண்ணை நான் மணக்க விரும்புகிறேன். நாங்கள் இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக காதலிக்கிறோம். துர்கா உங்களின் மீது உள்ள பாசத்தால் என் காதலை முதலில் ஏற்க மறுத்துவிட்டாள். பின்பு நான் தான் அவளை சம்மதிக்க வைத்தேன், நான் துர்காவை நன்றாக பார்த்துக் கொள்வேன். உங்கள் பெண்ணை எனக்கு மணம் முடித்து தர சம்மதமா? என்று கேட்க, வாசுதேவனும் பார்வதியும் தான் ஒரு வாரமாக சுஹேல் படும் பாட்டை பார்த்துக் கொண்டிருக்கிறார்களே! அவர்களுக்கு சுஹேலை பிடித்து விட்டது தான் ஆனால் வாசுதேவன் சுஹேலின் பெற்றோர் என்ன சொல்லுவார்களோ என்று நினைத்தார். தம்பி எங்களுக்கு சம்மதம் தான். உங்கள் பெற்றோர்கள் இந்த திருமணத்தை ஏற்பார்களா? எனக் கேட்க, அதை நான் பார்த்துக் கொள்கிறேன் அங்கிள், நீங்கள் கவலைப்படாதீர்கள் என்று சொல்ல, அவரும் தலையசைத்தார்.

ஒரு மாதம் கடந்து விட்டது. துர்காவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. இப்போது அவளால் கையை மெதுவாக அசைக்க முடிகிறது. யாரையாவது பிடித்துக் கொண்டு மெதுவாக நடக்கவும் செய்கிறாள். சுஹேல் இந்த ஒரு மாதமும் கண்ணின் கருவிழி போல் அவளை பத்திரமாக பார்த்துக் கொண்டான். இந்த அளவுக்கு அவள் உடல் நிலை தேறியதே அவனின் கண் துஞ்சா கவனிப்பில் தான்.

அன்று காலை சுஹேல் துர்காவிடம் வந்து அவள் அருகில் அமர்ந்தான். துர்கா நாளை நமக்கு பதிவு திருமணம் நடக்க போகிறது. நீ நாளை காலை உன்னை தயார் படுத்திக் கொள் என்றதும், முதலில் துர்காவிற்கு ஒன்றுமே விளங்கவில்லை, பின்னர் தான் அவன் சொல்லுவதே புரிந்தது. அவளுக்கு சந்தோஷமும் ஆச்சரியமுமாக இருந்தது. நாளைக்கே திருமணமா? நம் இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து விட்டார்களா? எங்கு திருமணம்? என்று அவள் கேள்வி மேல் கேள்வி கேட்க, உன்னுடைய வீட்டில் சம்மதம் தெரிவித்துவிட்டார்கள் துர்கா, என்னுடைய பெற்றோருக்கும் நேற்றே தகவல் சொல்லி அவர்களை சமாதானம் செய்துவிட்டேன். அவர்கள் இங்கு வர ஒரு ,மாதத்திற்கு முன்பே பயண சீட்டை முன்பதிவு செய்து விட்டேன் என்று கூற, எல்லாமே முன்பே திட்டம் போட்டு செய்து இருக்கிறீர்கள் போல, என்னிடத்தில் ஏன் எதுவுமே சொல்லவில்லை? என்று துர்கா கேட்டதும், சஸ்பென்ஸ்சாக வைத்திருந்து திடீரென்று சொல்லி உன் முகத்தில் ஏற்படும் முக பாவங்களை காண தான் என்று அவன் புன்னைகையுடன் கூற, எங்கள் வீட்டில் கூட இது பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே என்று அவள் அங்கலாய்க்க, நான் தான் உன்னிடத்தில் கூற வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் என்று கூறவும், அவள் மென்னகை புரிந்தாள். சரி எங்கு திருமணம் வைத்துள்ளீர்கள்? என்று துர்கா கேட்டதும், இங்கு தான் என கூறவும், என்னது மருத்துவமனையில் திருமணமா? இவன் என்ன பேசுகிறான் என தெரியாமல் விழிக்க, ஆமாம் துர்கா, உன்னை எனக்கு மறுபடியும் உயிரோடு கொடுத்த இந்த மருத்துவமனையில் தான் நான் நம் திருமணம் நடை பெற வேண்டும் என ஆசைப்படுகிறேன். நான் மருத்துவமனையின் உரிமையாளரிடம் அனுமதி பெற்று விட்டேன். அவரே முன்னின்று நம் திருமணத்தை நடத்தி தருவதாக கூறி இருக்கிறார். இதை கேட்ட துர்கா ஆச்சரியத்தில் கண் விரிய அவனை பார்க்க, இப்படி நீ பார்த்தால் நாளை நடைபெறும் நம் திருமணத்தை இன்றே வைத்தால் என்ன என்று தோன்றுகிறது என்று கூற துர்காவின் முகம் வெட்கத்தால் சிவந்தது. இதனால் இங்கு இருக்கும் நோயாளிகளுக்கு எந்த வித தொந்தரவும் வராதே? என்று துர்கா கேட்கவும், நாம் ஏன் அவர்களை தொந்தரவு செய்ய போகிறோம்? அமைதியாகத்தான் நம் திருமணம் நடை பெற போகிறது, முடிந்தால் அவர்களும் நம்மை ஆசிர்வதிக்கட்டும் என்று சுஹேல் கூற துர்காவும் சந்தோஷமாக தலை அசைத்தாள்.

மறுநாள் செவிலியர்கள் அங்கும் இங்குமாக அலைந்துக் கொண்டிருந்தார்கள். ஆம். அவர்கள் தான் இந்த திருமணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளை மகிழ்ச்சியோடு செய்துக் கொண்டிருந்தனர். சுஹேல், துர்கா திருமணத்திற்கு என்று சிறிய அறை ஒதுக்கப்பட்டது. சிறிய அலங்காரத்தில் அந்த அறை அழகாக இருந்தது. அங்கு பதிவு சார்பாளரும் ரவியின் துணைகொண்டு வரவழைக்கப்பட்டார். துர்காவின் குடும்பம், பாத்திமாவின் குடும்பம், சுஹேலின் வாப்பாவும் உம்மாவும் மற்றும் சந்தோஷ் , இவர்கள் மட்டுமே அங்கு இருந்தனர். திருமணத்தை எளிமையாக நடத்த வேண்டும் என்று சுஹேல் கூறியபடியால் நெருங்கிய உறவினர் மட்டுமே இருந்தனர். சுஹேல் தன் பெற்றோர்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே விஷயத்தை கூறி அவர்களை ஓரளவு சமாதானம் படுத்திவைத்திருந்தான். அவர்களும் தன் ஒரே பிள்ளையின் ஆசைக்கு குறுக்கே வர மனமில்லாமல் வேறு வழியின்றி ஒத்துக் கொண்டனர். ஒரு சில எழுந்து நடக்கும் நிலையில் உள்ள நோயாளிகளும் அதிசயமாக மருத்துவமனையில் நடக்கும் திருமணத்தை காண வந்திருந்தனர். துர்காவிற்கு உட்கார சிரமமாக இருந்தபடியால் இருவருமே நாற்காலியில் அமர்த்தப்பட்டனர். பதிவு சார்பாளர் இருவரிடத்திலும் கையெழுத்து வாங்கினார். பின்னர் சாட்சி கையெழுத்தாக துர்காவின் சார்பில் வாசுதேவனும் சந்தோஷும் கையெழுத்திட , சுஹேலின் சார்பில் ரவியும் உசைனும் கையெழுத்திட்டனர். பின்னர் இருவரும் மாலை மாற்றி கொண்டனர். அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஒரு தங்க சங்கிலியை சுஹேலிடம் கொடுக்க, அதை அவன் துர்காவிற்கு அணிவித்தான். அனைவரும் அவர்களை வாழ்த்திய பின்னர் தம்பதியினர் அவரவர்களின் பெற்றோர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர். புது மண தம்பதியருக்கு பரிசுகள் கொடுக்கப்பட்டது. சுஹேல் அந்த மருத்துவமனையில் இருக்கும் அனைவருக்கும் தன் செலவில் விருந்து வைத்தான். வித்தியாசமாக மருத்துவமனையில் அமைதியாக நடந்த இந்த திருமணம் அனைவருக்கும் சந்தோஷத்தையும் மகிழ்ச்சியும் தந்தது.

இரண்டு நாள் கழித்து துர்கா அந்த மருத்துவமனையில் இருந்து அனைவரின் வாழ்த்துகளையும் பெற்றுக் கொண்டு அங்கிருந்து கிளம்பி சுஹேலின் மனைவியாக தன் அண்ணன் வீட்டிற்கு வந்தாள். சுஹேலின் பெற்றோர் திருமணம் முடிந்த அன்றே வாரணாசிக்கு சென்று விட்டனர். சுஹேலும் துர்காவும் இரண்டு நாள் தன் அண்ணன் வீட்டிலே தங்கி விருந்துண்டு மகிழ்ச்சியில் கழித்த பின் வாரணாசிக்கு திரும்பினர்.

ஜரீனா அவர்கள் வழக்கப்படி அவர்களை வரவேற்று வீட்டிற்குள் அழைத்தார். ஜரீனாவுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லையென்றாலும் மகனின் ஆசைக்காகவும், துர்காவின் நிலைமையை கருத்தில் கொண்டும் எதுவும் பேசவில்லை. உசைனுக்கும் அதே நிலை தான். துர்கா அந்த வீட்டை பார்த்தவுடன் பிரம்மிப்பில் ஆழ்ந்து போனாள். இவ்வளவு பெரிய வீடா! என அதிசயித்து நிற்க, சுஹேல் அவளை தன் அறைக்கு அழைத்து போனான். அவள் அண்ணன் வீட்டின் மொத்த இடமுமே அவனுடைய அறையாக இருந்தது. அந்த அறையின் ஓரமாக கட்டில் போடப்பட்டு அதில் மெல்லிய திரை சீலைகள் கட்டிலை சுற்றி தொங்கவிடப்பட்டிருந்தன. உயர் ரக மெத்தையும் தலையணையும் அந்த கட்டிலை அலங்கரித்தது. அறையின் நடுவில் சோபாவும் டீபாய் மேஜையும் இருந்தன. அறையை சுற்றி கதவு வைத்த அலமாரிகள் இருந்தன. சில கண்ணாடி அலமாரிகளில் கலைநயம் மிக்க பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. துர்கா அறையில் நுழைந்ததும்சுஹேல் அவளை அருகே அமர வைத்துக் கொண்டான். துர்கா இனிமேல் இந்த வீட்டிற்கு நீதான் ராணி. வாப்பாவும் உம்மாவும் நல்லவங்கதான். நான் அவங்க விருப்பப்படி நிஹ்ஹா பண்ணலேனு கொஞ்சம் என் மேல் கோவமாய் இருக்காங்க.

அதனால் அவங்க உன்னை புரிந்து கொள்ள கொஞ்சம் நாளாகும். அதுவரை அவங்க என்ன சொன்னாலும் நீதான் கொஞ்சம் பொறுத்து போகவேண்டும் துர்கா, இந்த உதவியை நீ எனக்காக செய்வாயா? என சுஹேல் கேட்டதும், என்ன சுஹி உதவி என்று பெரிய வார்த்தையெல்லாம் கூறுகிறீர்கள். உங்களுடைய பெற்றோர் எனக்கும் தாய் தந்தை போலத்தான். நான் கண்டிப்பாக அவர்கள் மனம் நோகாமல் நடந்துக் கொள்ளுவேன். அவர்களை என்னால் முடிந்தவரை நன்றாக பார்த்துக்கொள்ளுவேன். இந்த குணம் தான் என் ஸ்வீட் டார்லிங் கிட்ட என்னை கட்டி போட்டிருக்கு என்று புன்னகையுடன் கூற, துர்கா வெட்கத்தில் தலை குனிந்தாள்.

நாட்கள் நகர்ந்தது. சுஹேலுக்கும் துர்காவிற்கும் திருமணமாகி மூன்று மாதங்கள் கடந்து விட்டிருந்தது. இருவரும் தங்கள் இல்லற வாழ்வில் இனிதே வாழ தொடங்கி இருந்தனர். ஜரீனாவுக்கு துர்காவின் குணம் கொஞ்ச கொஞ்சமாக பிடிக்க தொடங்கி இருந்தது. துர்கா ஜரீனாவுடனே சுற்றிக் கொண்டிருந்தாள். ஜரீனா எங்கு சென்றாலும் துர்காவும் அங்கே சென்று அவளுக்கு உதவியாக இருந்தாள். ஜரீனா துர்காவிடம் முகம் கொடுத்து பேசவில்லை என்றாலும் அவள் செய்யும் உதவிகளை ஜரீனா மறுக்கவில்லை.

ஜரீனா அவ்வப்போது ஏதாவது ஜாடை மாடையாக பேசினாலும் துர்கா அதை கண்டு கொள்ளாமல் எப்போதும் போல் தன்னால் முடிந்த உதவிகளை தன் மாமியாருக்கு செய்தாள். அதேபோல் தன் கணவனையும் நன்கு கவனித்துக் கொண்டாள். அவனுக்கு தேவையானதை எடுத்து வைப்பது, அவனை இன்முகத்துடன் வழி அனுப்புவது என அவன் சந்தோஷம் படும்படி நடந்துக் கொண்டாள். இரவில் அவனின் தொழில் காரணமாக வீடு வர வெகு நேரமானாலும் அவனுக்காக காத்திருந்து உணவு பரிமாறி விட்டு தான் தூங்க செல்வாள். இதற்காக அவள் ஒருநாளும் சலித்து கொண்டதே இல்லை. தன் அன்பு கணவருக்காக தன்னால் இந்த செயலையாவது செய்ய முடிகிறதே என்று மகிழ்ச்சியே அடைவாள். ஜரீனாவுக்கு துர்காவின் அமைதியும், சுறுசுறுப்பாக வேலை செய்யும் தன்மையும் அவளை ஈர்க்கவே செய்தன. தாம் தேடினாலும் இப்பேர் பட்ட பெண் நமக்கு கிடைத்திருப்பாளா என்ற எண்ணம் நாளடைவில் அவளுக்கு தோன்ற ஆரம்பித்தது.

உமர் அலி தன்னுடைய பண பலத்தால் சீக்கிரமாகவே தண்டனையில் இருந்து விடுபட்டு விடுதலை ஆகியிருந்தார். அவருக்கு சுஹேலால் ஏற்பட்ட இந்த அவமானத்தை தாங்கி கொள்ளவே முடியவில்லை. நான் இந்த ஊரில் எவ்வளவு கம்பீரமாக சுற்றி திரிந்தேன். என்னை சிறையில் அடைத்து அவமானப்படுத்தி விட்டானே, கண்டிப்பாக இதற்கு பதிலடி கொடுத்தே தீருவேன் என்று கருவிக் கொண்டிருந்தார்.
 
அத்தியாயம் 37

நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. துர்காவிற்கு CA தேர்வுக்கான முடிவுகள் வந்திருந்தன. அப்போதெல்லாம் கணினி தொழில் நுட்பம் இக்காலம் போல் இல்லை ஆதலால் நேரில் சென்று தான் பார்க்க வேண்டும். எனவே வாசுதேவன் சென்று பார்த்த போது துர்கா தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து தேர்வாகியிருந்தாள். அவருக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. வீட்டிற்கு வந்தவுடனே துர்காவுக்கு போன் செய்தார். துர்கா போனை எடுத்தவுடன், "துர்கா நீ தேர்வில் தேர்ச்சி பெற்று விட்டாய். எனக்கு எவ்வளவு சந்தோஷமாய் இருக்கிறது தெரியுமா! என் தங்கை இனிமேல் ஒரு தணிக்கையாளர் என்று சொல்லும்போதே கர்வமாக இருக்கிறது, நீ இங்கு இருந்தால் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டு உனக்கு பிடித்ததை வாங்கி கொடுத்து இருப்பேன் என்று சொல்லவும், நீங்க இப்படி சொன்னதே சந்தோஷமாய் இருக்கிறது அண்ணா, நீங்களும் அண்ணியும் எனக்காக வேண்டிய வேண்டுதலும் , சுஹேலின் தூண்டுதலுமே என்னை வெற்றி அடையச் செய்திருக்கிறது. எனக்கு உங்கள் ஆசிர்வாதமே போதும். அதைவிடவா சிறந்தது இருக்க போகிறது என்று துர்கா சொன்னதை கேட்ட வாசுதேவன், எங்களுடைய ஆசிர்வாதம் உனக்கு எப்பவுமே உண்டு துர்கா என குரல் கம்ம கூறி, சரிம்மா! நான் போனை வைக்கிறேன் என்று வைத்து விட்டார். துர்காவிற்கு ஒரே சந்தோஷமாக இருந்தது. அவளுடைய கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி என அவள் மனம் பூரித்தது. இந்த விஷயத்தை சுஹேலிடம் தான் முதலில் சொல்ல வேண்டும் என்று அவனுக்கு பிடித்த ரசமலாய் செய்து அவன் வரவுக்காக காத்திருந்தாள். வழக்கத்திற்கு மாறாக அவன் வீட்டிற்கு சீக்கிரமாகவே வந்திருந்தான். துர்கா அவனிடத்தில் விஷயத்தை சொன்னதும், சந்தோஷம் அவன் முகத்திலும் தாண்டவமாடியது. மகிழ்ச்சியில் துர்காவை தன் இருகைகளாலும் ஏந்தி மேலே தூக்கி சுற்றினான். போதும்! போதும் ! சுஹேல், கீழே இறக்கி விடுங்க, வீட்டில் அத்தை, மாமா இருக்கிறாங்க! என்று அவள் கெஞ்சியதும் தான் அவளை விட்டான். துர்கா, இப்போது நீ ஆடிட்டர் ஆகிவிட்டாய். அதனால் இனிமேல் நீ வீட்டில் சும்மா இருக்கக்கூடாது. நீ யாரிடமும் சென்று வேலை செய்ய எனக்கு பிடிக்கவில்லை. அதனால் நானே உனக்கு ஒரு நிறுவனம் வைத்து தருகிறேன். இங்கு என்னுடைய நண்பர்கள் சில பேர் வியாபாரம் தான் செய்கிறார்கள். அவர்களுக்கு சரியான தணிக்கையாளர் இல்லாத காரணத்தால் தங்களுடைய வியாபார கணக்கை அவர்களால் ஒழுங்காக வைத்துக் கொள்ள முடியவில்லை. நான் அவர்களுக்கு உன்னை அறிமுகம் செய்து வைக்கிறேன். நீ ஒரு தணிக்கையாளராக அவர்களுக்கு உதவி செய் என்று கூறவும், சரி என்று துர்கா தலையசைத்தாள். தன் மருமகள் தணிக்கையாளர் ஆகிவிட்டதை அறிந்து உசைனும் ரொம்ப சந்தோஷப்பட்டார். அவருக்கு மிகவும் பெருமையாக இருந்தது. இதுவரை தன் மருமகளிடம் ஒரு வார்த்தை கூட பேசாத உசைன், அன்றைக்கு அவளிடம் சென்று, சுஹேல் சொன்னாம்மா! நீ தணிக்கையாளர் ஆகிவிட்டாய் என்று. என் வியாபார கணக்கையும் நீயே பார்த்துக் கொள் துர்கா. இப்போது இருக்கும் தணிகையாளர் வயது மூப்பின் காரணமாக அவரால் ஒழுங்காக கவனம் செலுத்த முடியவில்லை. எனவே நீ அவருக்கு உதவி செய்தால் அவருக்கும் கொஞ்சம் சிரமம் குறையும். நானும் எந்த வித பதற்றமும் இல்லாமல் வியாபாரம் செய்வேன் என்று கூறவும், துர்காவிற்கு இவ்வளவு நாள் தன்னிடம் பேசாமல் இருந்த தன் மாமா இன்று பேசியது அவளுக்கு ஆச்சரியமும் சந்தோஷமாகவும் கொடுத்தது. கண்கள் பனிக்க, சரி மாமா! நான் கண்டிப்பாக உதவி செய்கிறேன் என்று அவருக்கு உறுதி கூறினாள்.

சாம்சன் இந்த இரண்டரை வருடங்களாக தன் தொழிலை நன்றாகவே அபிவிருத்தி செய்து விட்டான். தமிழ்நாட்டில் ஐந்து இடத்தில் அவனுடைய நிறுவனத்தின் கிளைகள் இருந்தன. அது மட்டுமன்றி தன் வீட்டையும் மாற்றி பெரிய பங்களா போன்ற வீட்டிற்கு குடி போனார்கள். கயலுக்கு சிறியதாக மருத்துவமனை ஒன்றையும் கட்டி கொடுத்தான். இப்போதெல்லாம் அவன் தினமும் தன் மாமனாரின் வீட்டிற்கு செல்லாமல் இருந்ததில்லை. ஆம். இவன் கமலநாதனுக்கு மிகவும் நெருக்கமாகி விட்டான். கமலநாதனுக்கு வேண்டியதை பார்த்து பார்த்து சாம்சனே செய்தான். கமலநாதனோ சாம்சனை கேட்காமல் எதுவுமே செய்வதில்லை. வாஸந்தியோ அல்லது ராகேஷோ ஏதாவது ஆலோசனை கேட்டாலோ அல்லது ஏதாவது புதியதாக வீட்டில் பொருள் வாங்க வேண்டும் என்றாலோ, கமலநாதன், மாப்பிளையை கேட்டீங்களா? அவரை ஒரு வார்த்தை கேட்டு விட்டு செய்யுங்கள் என்று மாப்பிள்ளை புகழ் பாடி கொண்டே இருந்தார். சாம்சன் அந்த குடும்பத்துடன் அவ்வளவு ஐக்கியமாகிவிட்டான். கயலுக்கு தான் தனக்கு ஒரு குழந்தை இல்லையே என்று வருத்தமாக இருந்தது. அவளும் மருத்துவர் ஆனபடியால் தன்னையும் சாம்சனையும் மருத்துவ சோதனைக்குட்படுத்தி இருவரிடத்திலும் எந்த வித குறையும் இல்லை என்று தெரிந்த போதும் அவளுக்கு தனக்கு குழந்தை பிறக்காமலே போய்விடுமோ என்று ஒரே கவலையாக இருந்தது. இவ்வளவு வசதி வந்த பிறகும் தம்மால் குழந்தை பெற்று கொள்ள முடியவில்லையே என்று ஏங்கினாள். ரெபேக்காவும் அவளுக்கு அவ்வப்போது ஆறுதல் கூறி வந்தாள்.

நாட்கள் விரைவாக நகர்ந்தன. துர்கா கருவுற்றிருந்தாள். ஆம். இப்போது அவளுக்கு மூன்று மாதம். துர்கா கருவுற்றிருந்ததை அறிந்து ஜரீனாவும் உசைனும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். ஜரீனா இப்போது மருமகளிடம் பேச தொடங்கி இருந்தார். அவர் துர்காவை வேலை செய்யவே அனுமதிக்கவில்லை. அவளை அன்போடும் அரவணைப்போடும் நடத்தினார். துர்காவிற்கு அம்மா இல்லாத குறையை ஜரீனா பூர்த்தி செய்தாள். அவளுக்கு தேவையானதை பார்த்து பார்த்து செய்தாள். சுஹேல் இரவு வர தாமதமானால் முன்பு போல் காத்திருக்க விடாமல் அவளை தூங்குமாறு ஜரீனா அவளை வற்புறுத்தி தூங்க வைத்தாள். துர்காவிற்கு இரட்டை குழந்தை என்று மருத்துவர் சொல்லி இருந்ததனால் அந்த குடும்பமே இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருந்தது. பார்வதியும் வாசுதேவனும் அவள் தாய்மை அடைந்ததை கேட்டு மிகவும் சந்தோஷப்பட்டனர். வாசுதேவன் துர்காவிற்கு போன் செய்து நலம் விசாரித்தார்.

அன்று ஸுஹேலுக்கு வெளிநாட்டில் இருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. அவன் முன்பு வேலை செய்த மருத்துவமனையில் இருந்து அவனை அழைத்திருந்தார்கள். அவன் அந்த வேலையை முன்பு துர்காவிற்காக பாதியிலேயே விட்டு வந்ததால் இப்போது வந்து கண்டிப்பாக ஆறு மாதம் வேலை செய்ய வேண்டும் என்றும் தவறினால் ஒப்பந்தம் முடியும் முன்பே சென்று விட்டதால் அவன் அபராத தொகை செலுத்தவேண்டும் என்றும் அதில் இருந்தது. அதை அவன் சொல்ல, ஜரீனாவும் உசைனும், பரவாயில்லை சுஹேல்"'நீ அபராத தொகையை கட்டிவிடு". நம்மிடம் பணமா இல்லை, இந்த நேரத்தில் துர்காவை விட்டு செல்லாதே என்று அறிவுரை கூறினர்.

துர்காவோ இங்கு தான் அத்தை, மாமா எல்லோரும் இருக்கிறார்களே! எனக்கு எந்த வித சிரமமும் இல்லை. நான் என்னை பார்த்துக் கொள்வேன். இரண்டு காரணங்களுக்காக நீங்கள் செல்ல வேண்டும் சுஹேல். ஒன்று நீங்கள் அபராத தொகையை செலுத்தினால் உங்கள் மீது தவறு என்று பறை சாற்றப்படும். நீங்கள் எந்த தவறும் செய்யவில்லையே! நீங்கள் எனக்காகத்தானே உங்கள் வேலையை பாதியிலே விட்டு விட்டு வந்தீர்கள். ஆதலால் நீங்கள் எனக்காக அபராத தொகை கட்ட நேர்ந்ததே என்று காலம் முழுதும் அந்த குற்றவுணர்வுடன் வாழ வேண்டி வரும். இன்னொரு காரணம், நீங்கள் அங்கு படித்து வேலை செய்ய சென்றதே அங்குள்ள தொழில் நுட்பங்களை கற்றுக் கொண்டு இங்கு வந்து நடைமுறைப்படுத்தி அதன் மூலம் இங்குள்ள ஏழை எளியவருக்கு உதவலாம் என்ற நல்ல எண்ணத்தில் தானே! இதற்கு நான் தடையாக இருக்க விரும்பவில்லை. எனவே நீங்கள் என்னைப்பற்றி கவலைப்படாமல் செல்லுங்கள் என்று கூறவும் சுஹேலுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. என்னை முழுதும் புரிந்துக் கொண்டவளாக எப்படி உன்னால் இருக்க முடிகிறது துர்கா என்று சுஹேல் கேட்கவும், உங்களை பார்த்துதான் என்று துர்கா கூற இருவரும் நகைத்தனர்.

சுஹேல் வெளிநாடு செல்லும் நாளும் வந்தது. அவனுக்கு இந்த நேரத்தில் துர்காவை விட்டு பிரிய மனமே இல்லை, ஆயினும் தன்னை தேற்றிக் கொண்டு துர்காவுக்கு பல முறை அறிவுரை கூறினான். "உடம்பை பத்திரமாக பார்த்துக்கொள். ஏதாவது சிறு சங்கடம் ஏற்பட்டால் கூட எனக்கு போன் பண்ணு. நான் உடனே வந்து விடுகிறேன் என்று கூறினான். துர்காவிற்கும் அவனை விட்டு பிரிவது மனதுக்கு கஷ்டமாக இருந்தாலும், அவன் ஒரு நல்ல விஷயத்திற்காக வெளிநாடு செல்கிறான் அதற்கு நாம் தடையாக இருக்க கூடாது என்று தன்னை தேற்றிக்கொண்டு கண்களில் இருந்து வெளி வர தயராக காத்திருக்கும் கண்ணீரை அடக்கிக் கொண்டு அவனுக்கு புன்னகையுடனே விடை கொடுத்தாள். அந்த பேதை அப்போது அறியவில்லை, சுஹேல் அருகில் இருந்தால் வரவிருக்கும் ஆபத்தில் இருந்து தப்பித்து இருக்கலாமே என்று !

உமர் அலிக்கு அன்று இருப்பு கொள்ளவில்லை. அன்று தான் அவர் தன் வரிக் கணக்கை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க கடைசி நாள். அவர் சிறிது நாட்கள் சிறையில் இருந்ததால் வரவு கணக்கு செலவுகளை சரியாக வைத்துக் கொள்ள முடியவில்லை. அவருடைய கணக்காளர் அவர் இல்லாததால் ஒழுங்காக வேலைக்கே வருவதில்லை, இதனால் அவருடைய வரியை எப்படி செலுத்துவது என்று எண்ணிக் கொண்டு தன்னுடைய சக வியாபாரிகளிடம் விசாரித்தார். அவர்கள் யாவரும் தங்களுடைய வியாபார வரியை முன்பே கட்டி விட்டதாக கூறினார்கள். உமருக்கு ஒரே ஆச்சரியம். எப்போதும் அவர்கள் கடைசி நாள் வரை வைத்திருந்து, பின் அடித்து பிடித்து போய் வரியை கட்டுவார்கள். இந்த வருடம் ஏன் முன்பே கட்டி விட்டதாக சொல்கிறார்கள் என்று வியந்து அவர்களை கேட்ட போது, அவர்களுடைய வரவு செலவுகளை துர்கா என்ற புதிய தணிக்கையாளர் கவனித்து கொள்கிறார் என்றும் அந்த பெண்ணே அவர்களுடைய வரவு செலவுகளை கண்டறிந்து, கணக்குகளை சரிபார்த்து, அனைத்து வரிகளையும் அவளே கட்டிவிடுவதாகவும் இதனால் அவர்கள் எந்த கவலை இல்லாமல் வியாபாரம் செய்வதாக கூறினார்கள். இதை கேட்ட உமர் அலிக்கு எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் இருந்தது. சும்மாவே அந்த சுஹேல் பையனை கையில் பிடிக்க முடியவில்லை. இதில் இவளுடைய மனைவி பெரிய தணிக்கையாளர் ஆகிவிட்டாளா? இருடா! சுஹேல்! இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டாமல் நான் ஓயமாட்டேன் என்று மனதிற்குள் கருவிக் கொண்டார்.
 
அத்தியாயம் 38​

நாட்கள் இறக்கை கட்டிக் கொண்டு பறந்தன. இப்போது துர்காவிற்கு ஆறு மாதம் ஆகிவிட்டது. அவள் எப்போதும் தன் குழந்தைகளுடன் பேசிக் கொண்டே இருப்பாள். சுஹேல் பற்றியும் அவன் தன்னை கவனித்துக் கொள்வதை பற்றியும் அந்த வெளிவராத மலர்களிடம் பேசுவாள். சுஹேல் போன் பண்ணும்போது குழந்தைகள் வயிறுக்குள் என்னவெல்லாம் செய்கின்றன என்பதை பற்றி அவனிடம் சொல்லி மகிழ்வாள். சுஹேலும் ஆர்வத்துடன் கேட்பான். அவனுக்கு இந்த சமயத்தில் மனைவி அருகில் இல்லையே என்று ஒரே வருத்தமாகவும் ஏக்கமாகவும் இருந்தது. இன்னும் மூன்று மாதங்கள் தானே, அதன் பிறகு துர்காவுடனும் குழந்தைகளுடனும் இருக்கலாம் என்று தன்னையே தேற்றிக் கொள்வான். ஆறாம் மாதத்தில் துர்காவிற்கு பூ முடித்து அழகு பார்க்கவேண்டும் என்று பார்வதியும் வாசுதேவனும் சுஹேல் வீட்டிற்கு போன் செய்தார்கள். அப்போது அனீஸ் திருமணமும் நிச்சயம் ஆனபடியால் அனைவரும் வருவதாக கூறி சென்னைக்கு கிளம்பினார்கள்.

சென்னை வந்ததும் துர்காவை பார்த்த பார்வதிக்கு சந்தோஷமும் ஆச்சரியமாகவும் இருந்தது. என்ன துர்கா உன் வயிறு இவ்வளவு பெரிசா இருக்கு? நீ ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கணும் துர்கா. வெளியில் யார் துணையும் இல்லாமல் செல்லாதே! எந்த வேலையையும் செய்யக்கூடாது! நான் தரும் சத்துள்ள பழங்களையும் கீரை வகைகளையும் தவறாமல் சாப்பிட வேண்டும். என்று பலவாறு அறிவுரை கூறினாள். அனீசும் துர்காவை பார்த்து மிகவும் ஆனந்தம் அடைந்தாள். துர்கா அவளிடம் வருங்கால கணவரை பற்றி கேட்க, அனீஸ், அவர் காவல் துறை அதிகாரி என்றும், தற்போது நாகர்கோவிலில் உள்ளதாகவும் சீக்கிரமாக மாற்றல் வாங்கிக் கொண்டு சென்னை வந்துவிடுவார் என்றும், அவரும் அவர் வீட்டுக்கு ஒரே பிள்ளை என்றும் வெட்கத்துடன் கூறி முடிக்கவும், துர்கா அடே! அடே! என்ன அதிசயம்! அனீசுக்கு கூட வெட்கப்பட தெரிகிறதே என்று கலாய்க்க, அனீஸ் உடனே, இருடி, உன் பாப்பாக்கள் வந்ததும் அவர்களிடம் சொல்லி உன்னை அடிக்க சொல்றேன்! என்று பொய் கோபம் காட்ட, என் பிள்ளைகள் சமர்த்து குட்டிகள், அவர்கள் அவ்வாறு செய்ய மாட்டார்கள் என்று துர்கா சொல்ல, நான் பார்க்கத்தானே போறேன், அவர்கள் சமர்த்தா இல்லை வால் குட்டிகளா என்று அனீஸ் கூற இருவருமே நகைத்துக் கொண்டனர்.

துர்காவின் பூ முடிப்பை வாசுதேவன் தன் வீட்டிலேயே வைத்துக் கொண்டார். நெருங்கிய சில உறவினர்களை மட்டும் அழைத்திருந்தார். அன்று துர்கா அரக்கு நிற பட்டு புடவையும் அதற்கேற்றவாறு அணிகலன்களும் அணிந்திருந்தாள். தலையில் அழகாக பூ வைத்து ஜடை தைத்திருந்தனர். தாய்மையின் பூரிப்பில் பார்க்க மிக அழகாக இருந்தாள். அவளை நாற்காலியில் அமர வைத்து ஒவ்வொருத்தராக வந்து நலங்கு வைத்து கையில் வளையல் போட்டனர். அவளின் உள் மனம் சுஹேல் அருகில் இல்லையே என்று வருந்தினாலும் அதை வெளிக் காட்டிக்கொள்ளவில்லை.

கயலையும் அழைத்திருந்தபடியால் அவளும் வந்திருந்தாள். அவள் துர்காவிடம் கல்யாணத்திற்கு என்னை அழைக்கவில்லை என்றாலும் இதற்காவது என்னை அழைக்க தோன்றியதே என கூற, துர்கா கயலிடம் சாரி கயல், எனக்கே திருமணம் நடைபெறுவதற்கு முன்னாள் தான் தெரியும். எங்கள் திருமணம் அவசரமாக நடந்து விட்டதால் உன்னை அழைக்க முடியவில்லை என்று வருத்தத்துடன் சொல்ல, துர்கா நான் சும்மா உன்னிடம் விளையாட்டாய் கேட்டேன், இதற்கெல்லாம் நீ வருத்தப்படலாமா? என புன்னகைக்க, துர்கா அவளை பார்த்து மென்னகை புரிந்தாள். எதற்காக அவ்வளவு அவசரமாக திருமணம் நடந்தது என்று என கயல் வினவ, துர்கா நடந்ததை விவரித்தாள். இவ்வளவு நடந்திருக்கிறதா? சுஹேல் என்னிடம் எதுவுமே சொல்லவில்லை. "உனக்கு அப்போதுதான் திருமணம் ஆகி இருந்தது. இதை எல்லாம் சொல்லி உன் மனதை ஏன் கஷ்டப்படுத்தவேண்டும் என்று தான் சொல்லவில்லை" துர்கா எதற்கும் நீ மிக ஜாக்கிரதையாக இரு. தனியாக வெளியில் செல்லாதே என கயல் அறிவுரை கூற, சரி என்பது துர்கா தலையசைத்தாள். அன்று இரவு சுஹேல் போன் செய்ய, துர்கா அவனிடம் அன்று நடந்த விஷயங்களை எல்லாம் சொன்னாள். அவனும் அனைத்தையும் ஆவலுடன் கேட்டு கொண்டான்.

திடீரென்று துர்காவின் குரல் கரகரக்க, என்ன துர்கா என்னாச்சு? என்று சுஹேல் பதறி கேட்க, நீங்கள் என் கூட இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என கண்ணீருடன் கூற, இந்த நேரத்தில் நீ அழலாமா? இன்னும் மூன்று மாதங்கள் தானே துர்கா. அதுவரைக்கும் கொஞ்சம் பொறுத்துக் கொள் என கூற, துர்காவும் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு, சரி எப்ப வருவீங்க? என ஏக்கத்துடன் கேட்க, நான் பயணச்சீட்டு கூட பதிவு செய்து விட்டேன் என் குட்டி டார்லிங், சீக்கிரமாக உன் சுஹேல் உன்னருகில் இருப்பேன் என்று கூற, துர்காவும் சற்று சமாதானம் ஆனாள்.

நாட்கள் வேகமாக நகர்ந்தன. அன்று துர்காவிற்கு எழுந்ததில் இருந்தே உடம்பு என்னவோ போல் இருந்தது. வயிறு இறுக்கி பிடித்தது போல் ஒரு உணர்வு ஏற்பட்டது. அவளால் ஒழுங்காக உட்கார கூட முடியவில்லை. மெல்ல எழுந்து குளியலறைக்கு சென்று தன் வேலைகளை முடித்து கொண்டு மீண்டும் படுக்கையில் வந்து அமர்ந்துக் கொண்டாள். சிறிது நேரத்தில் பார்வதி அவளை காண வந்தாள். என்னம்மா டிபன் சாப்பிடலையா? உடம்புக்கு ஏதாவது அசௌகரியமாக உள்ளதா? என கேட்க, ஆமாம் அண்ணி! காலையிலிருந்தே வயிறு பிடித்து இழுப்பது போல் தோன்றுகிறது என்று கூற, இன்னும் டெலிவெரிக்கு இருபது நாள் இருக்கிறது என்று மருத்துவர் கூறி இருக்கிறார்களே? சரி நான் உனக்கு டிபன் கொண்டு வந்து தருகிறேன், சாப்பிட்டு விட்டு நன்றாக ஓய்வெடு, என்று கூறி விட்டு சமையலறை நோக்கி சென்றாள். சிறிது நேரத்தில் டிபன் வந்தவுடன் பேருக்கு சாப்பிட்டுவிட்டு படுக்கையில் படுத்துக் கொண்டாள். நேரம் ஆக ஆக அந்த வலி அதிகமாகி கொண்டு வரவே, அவள் மெதுவாக எழுந்து தட்டு தடுமாறி வந்தாள். அவளைக் கண்ட பார்வதி, என்னம்மா என்று கேட்க, அண்ணி என்னால் வலியை தாங்கி கொள்ள முடியவில்லை என்று கூற, சரி நாம் மருத்துவமனைக்கு செல்லலாம், சற்று நேரம் இங்கே உட்கார் என்று சோபாவில் அமர வைத்து விட்டு வாசுதேவனுக்கு போன் செய்தாள். உசைனிடமும் ஜரீனாவிடமும் விவரத்தை கூறி தாங்கள் முன்னே செல்வதாகவும் அவர்களை பின்னால் டாக்ஸியில் வருமாறும் கூறினாள். சிறிது நேரத்தில் வாசுதேவனும் வரவே, இருவரும் அவளை டாக்ஸியில் அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர்.

மருத்துவமனை வந்தடைந்ததும் மருத்துவர் அவளை அழைத்துக் கொண்டு லேபர் வார்டுக்கு சென்றார். மற்ற அனைவரும் வெளியில் அமர்ந்திருந்தனர், அப்போது செவிலியர் வந்து அந்த மருத்துவருக்கு போன் வந்ததாக சொல்லி அவரை அழைத்து சென்றார். போனை எடுத்த மருத்துவர் ஹலோ! என்றதும் மறுமுனையில் இப்போது உங்கள் மருத்துவமனையில் துர்கா என்கிற பெண் வந்திருக்கிறாளா? அவளுக்கு எப்போது குழந்தை பிறக்க போகிறது? என்று கேட்க, யார் நீ? எதற்காக இதை எல்லாம் கேட்கிறீர்கள்? என்று வினவ, உனக்கு கேள்வி கேட்பதெற்கெல்லாம் உரிமை இல்லை. நான் கேட்டத்துக்கு பதில் சொல் என்றதும், நீங்கள் யார் என்று தெரியாமல் நான் பதில் சொல்ல முடியாது என்று அந்த மருத்துவர் உரைக்க, அப்படியா! உன்னுடைய பெண் பள்ளிக்கு சென்றாளா, இல்லையா என்று விசாரித்து சொல். நான் ஐந்து நிமிடம் கழித்து போன் செய்கிறேன் என்று சொல்லி போனை வைத்து விட்டான் அந்த மர்ம நபர். அந்த மருத்துவருக்கோ ஒன்றுமே விளங்கவில்லை. யார் இவன்? ஏன் என் பெண்ணை பற்றியும் துர்காவை பற்றியும் கேட்கிறான் என்று குழம்பியவளாக தன் வீட்டிற்கு போன் செய்தாள். போனை எடுத்த அவளின் பணியாள் பாப்பாவை அப்போதே பள்ளிக்கு கொண்டு போய் விட்டு வந்துட்டேம்மா என்று பதிலுரைத்தான். பின்னர் தன் மகள் படிக்கும் பள்ளிக்கு போன் செய்தாள். போனை எடுத்த அந்த பள்ளி தலைமை ஆசிரியை லைனிலே இருங்க விசாரித்து சொல்கிறேன் என்று அவள் படிக்கும் வகுப்பு ஆசிரியரை அழைத்து வினவ, அவள் அன்றைக்கு பள்ளிக்கு வரவில்லை என்று கூறவே, தலைமை ஆசிரியர் அந்த தகவலை அந்த மருத்துவரிடம் கூறினார், அதைக் கேட்ட அந்த மருத்துவர் ஆடி போய்விட்டார். என்னது குழந்தை பள்ளிக்கு வரலையா? என்று அதிர்ச்சியுடன் கேட்க, என்னம்மா என்ன ஆச்சு? ஏதாவது பிரச்சனையா? என்று தலைமை ஆசிரியர் வருத்தத்துடன் கேட்க, ஒண்ணுமில்லை மேடம், நான் பிறகு உங்களிடம் பேசுகிறேன் என்று கூறி போனை வைத்தார் அந்த மருத்துவர்.
அந்த மருத்துவருக்கு பயத்தில் உடம்பு முழுவதும் வேர்த்துக் கொட்டியது. சரியாக ஐந்து நிமிடம் கழித்து மீண்டும் போன் வரவே அவசரமாக போனை எடுத்தார். என்ன உன் பொண்ணை காணலையா? அவள் எங்களிடம் தான் பத்திரமாக இருக்கிறாள். நாங்கள் சொல்வதை நீ சரியாக செய்தால் உன் பொண்ணை பத்திரமாக திருப்பி அனுப்பி வைப்பேன், இல்லையென்றால் நடக்கும் விபரீதத்திற்கு நாங்கள் பொறுப்பு இல்லை என்று அந்த குரல் மிரட்டலாக ஒலித்தது. என் பெண்ணை ஒன்றும் செய்து விடாதீர்கள். நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் என்று அந்த மருத்துவர் பதற, துர்கா என்ற பெண் உன் மருத்துவமனைக்கு குழந்தை பெற வந்திருக்கிறாள் இல்லையா, அவளுக்கு இரட்டை குழந்தைகள் தானே பிறக்க போகிறது என்று கேட்க, ஆமாம் என்று அந்த மருத்துவர் பதில் அளித்தார். அவளுக்கு குழந்தைகள் பிறந்தவுடன் அந்த இரண்டு குழந்தைகளையும் உன் மருத்துவமனையில் பின்னாடி இருக்கும் ஒரு சிவப்பு நிற மாருதி காரின் பின் சீட்டில் வைத்து விட வேண்டும், பின்னர் அந்த பெண்ணிடமும் அவர்கள் உறவினர்களிடமும் குழந்தைகள் இறந்து விட்டதாக கூறவேண்டும். இதை செய்தால் உன் பெண் உனக்கு உயிருடன் கிடைப்பாள். என் ஆட்களும் உன்னோடுதான் இருப்பார்கள். நீ என்னை ஏதாவது ஏமாற்றினால் உன் பிள்ளை உனக்கு கிடைக்காது என்று கூற அதை கேட்ட அந்த மருத்துவர் அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டார், மீண்டும் அவன் குரல் கேட்கவே, அந்த மருத்துவர் இது பாவம் இல்லையா? என் தொழிலுக்கு எப்படி துரோகம் செய்ய முடியும் என்று கேட்க, அப்ப உன் பொண்ணு உனக்கு உயிருடன் வேண்டாமா? தொழிலா ? உன் பொண்ணா? நீயே முடிவு செய்துக் கொள் என்று கூறி போனை வைத்து விட்டான்.
 
அத்தியாயம் 39​

துர்காவிற்கு வலி வந்து வந்து போனது. அவளால் தாங்கி கொள்ளவே முடியவில்லை. இந்த நேரத்தில் சுஹேல் அருகில் இருந்தால் சற்று ஆறுதலாக இருக்கும் என்று நினைக்கையிலேயே அவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. வெளியில் வாசுதேவன் தம்பதியரும் மற்றும் உசைன், ஜரீனாவும் பதட்டதுடன் அமர்ந்திருந்தனர். இந்த பெண்ணை காலையிலேயே கொண்டு வந்து சேர்த்தோம், இன்னும் டெலிவரி ஆகவில்லையே என்று அவர்களுக்கு துர்கா படும் வேதனையை பார்த்து ஒரே வருத்தமாய் இருந்தது, சுஹேலுக்கு போன் பண்ணி பார்த்தனர். அவன் அப்போது விமானத்தில் சென்னைக்கு வந்து கொண்டிருந்ததால் அவனை அவர்களால் தொடர்ப்பு கொள்ள முடியவில்லை.

சுஹேலுக்கு அன்று தான் அந்த மருத்துவமனையில் ஒப்பந்தம் முடியும் கடைசி நாள். அங்கிருக்கும் அனைவரிடமும் விடை பெற்று கொண்டு தன்னுடைய இருப்பிடத்திற்கு வந்தான். அவனுக்கு ஒரே சந்தோஷம். அவன் முன்பே பயணசீட்டு பதிவு செய்து இருந்தபடியால் அதற்கேற்றவாறு தன் உடைமைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு விமான நிலையம் நோக்கி பயணித்தான். மறுநாள் அவன் இந்தியாவை அடைந்துவிடுவான் என்ற நினைப்பே அவனுக்கு மகிழ்ச்சியை தந்தது. துர்கா அருகிலேயே இருக்க வேண்டும். அவளை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அவன் மனது துடித்தது. நடக்கும் விபரீதம் தெரியாமல் அவன் மனம் சந்தோஷத்தில் திளைத்தது.

துர்காவால் வலியை தாங்கி கொள்ள முடியவில்லை. ஒரே அழகையும் அலறலுமாக தவித்துக் கொண்டிருந்தாள். அந்த மருத்துவரும் உடன் இருக்கும் செவிலியரும் அவளுக்கு ஆறுதல் கூறி மூச்சை நன்றாக இழுத்து விட சொன்னார்கள். பின் சிறிது நேரத்தில் அவள் பெரிய அலறலுடன் கத்த ஒவ்வொரு குழந்தையாக வெளியில் வந்ததும் துர்கா மூர்ச்சையானாள். ஒன்று ஆண் மற்றொன்று பெண் என இரு குழந்தைகளும் தன் பூ போன்ற பாதங்களால் அவளை உதைத்து வெளியில் வந்தன. அந்த மருத்துவருக்கு குழந்தைகளை பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது. பிறந்த இந்த பிஞ்சு மலர்களை ஏன் இந்த படுபாவி கடத்துகிறான்? இந்த குழந்தைகளை என்ன செய்ய போகிறான்? என்னால் எதுவும் செய்ய முடியாதபடி என் பெண்ணைக் கொண்டு என் கைகளை கட்டி போட்டு விட்டானே! என அவளுக்கு அழுகையே வந்து விட்டது. காவல் துறைக்கு தெரிவித்தால் என்ன! என்று ஒரு மனது சொல்ல, காவல் நிலையம் செல்வதை அவன் அறிந்து என் பெண்ணை ஏதாவது செய்துவிட்டால் பிறகு நான் உயிரோடு இருந்து என்ன பயன் என்று ஒன்றும் புரியாமல் சிறிது நேரம் நின்றாள். பின் தன் மனதை கல்லாகி கொண்டு தன்னுடன் ஒரு செவிலியரை அழைத்து அவள் கையில் ஒரு குழந்தையை கொடுத்து தான் ஒரு குழந்தையை ஏந்திக் கொண்டு பின் பக்க வழியாக சென்று மருத்துவமனையில் இருக்கும் பின் கேட்டை திறந்து கொண்டு அந்த காரை நோக்கி சென்றாள். அவள் காரை அடைந்தவுடன் காரின் பின் இருக்கையில் தான் கொண்டு வந்த குழந்தையை வைக்க தன்னோடு வந்த செவிலியரை திரும்பி பார்த்தாள், அவளை காணவில்லை. அவள் குழந்தையை எடுத்துக் கொண்டு வேறு புறமாக ஓடுவதை கண்டு அவளுக்கு குரல் கொடுக்க, அவள் அந்த இருட்டில் ஓடி மறைந்தாள். அந்த மருத்துவருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அதற்குள் அந்த காரும் கிளம்பவே வேறு வழியின்றி அதே வழியாக தான் இருக்கும் இடம் வந்தாள்.

கார் அந்த பிஞ்சு மலர் போன்ற குழந்தையுடன் புறப்பட, காரில் இருந்த ஒருவன் மற்றவனிடம் என்னடா இரண்டு குழந்தைகளுக்கு பதில் ஒரு குழந்தையை மட்டும் கொண்டு போனா ஐயா திட்ட மாட்டாரா? என்று கேட்க, என்ன செய்யறது? அந்த நர்ஸ் ஒரு குழந்தையை எடுத்து கொண்டு ஓடிடிச்சி. நாம வெளியே வந்தா அந்த டாக்டரம்மா நம்மள பார்த்த ஆபத்து ஆயிடும்னு நாம காருக்குள் பதுங்கி இருந்தோம். இப்படியே மறைவான இடத்தில காரை நிறுத்து. நாம போய் அந்த நர்ஸை தேடி பார்க்கலாம் என்று அடுத்தவன் சொல்ல டேய்! குழந்தையை தனியா விட்டுவிட்டு எப்படி இரண்டு பேரும் போறது? நீ போய் தேடு, நான் இந்த குழந்தைக்கு காவலாய் இங்கேயே இருக்கேன், இந்த குழந்தையாவது எடுத்து போய் ஐயா கிட்ட சேர்த்தாதான் நாம கொஞ்சமாவது அவருடைய கோபத்தில் இருந்து தப்பிக்கலாம் என்று கூற, மற்றவனும் சம்மதித்து அந்த செவிலியரை தேடி சென்றான்.

கையில் குழந்தையுடன் ஓடிக் கொண்டிருந்த அந்த பெண் ஓர் இடத்தில் மூச்சு வாங்க நின்றாள், இதற்கு மேல் நம் கையில் இந்த குழந்தை இருந்தால் ஆபத்தாகி விடும், என்ன செய்வது என்று யோசித்த அவள் எதிரே ஒரு டெலிபோன் பூத் கண்ணில் பட அதை நோக்கி சென்றாள், அங்கு இருக்கும் பெண்ணிடம் ஒரு போன் பண்ணிக் கொள்கிறேன் என்று கூறி எண்களை டயல் செய்ய, மறுமுனையில் ரிங் போனது. சிறிது நேரத்தில் ஹலோ என்று குரல் கேட்டது. உடனே அவள் டாக்டர் கயல் இருக்காங்களா? என்று வினவ, நான் கயல் தான் பேசுறேன்! நீங்க யாரு என்று வினவ, டாக்டர் நான் ரேச்சல் பேசுறேன், உங்ககிட்ட செவிலியரா ஆறு மாதம் முன்னாடி வேலை பண்ணினேனே டாக்டர், ஞாபகம் இருக்கா? என்று கேட்க, ஓ ரேச்சலா! நல்லா ஞாபகம் இருக்கே! எப்படி இருக்கே ரேச்சல்?
இப்போ எங்கே வேலை செய்யறே? என்று கேட்க, எனக்கு பேச எல்லாம் நேரம் இல்லை டாக்டர், இது எந்த இடம்மா என்று அந்த டெலிபோன் பூத் பெண்ணிடம் முகவரியை எழுதி வாங்கி அதை அப்படியே கயலிடம் கூறி, தயவு செய்து இந்த இடத்திற்கு வர முடியுமா? ரொம்ப அவசரம்மா ! நீங்க இப்ப வந்தா என்னையும் இன்னொரு உசிரையும் காப்பாத்தலாம் என்று கூறி முகவரி சொல்லி போனை வைத்தாள். கயலுக்கு ஒன்றுமே புரியவில்லை . இந்த பெண் என்ன சொல்லுகிறாள்? என்னவாயிற்று அவளுக்கு? என்று யோசித்துக் கொண்டே தன் கார் சாவியை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

ஒரு மணி நேரத்தில் கயல் அந்த முகவரியை அடைந்து விட்டாள். காரை ஓரமாக நிறுத்தி சுற்றும் முற்றும் தேடினாள். ஒருவரையும் காணவில்லை. அப்போது எதிரே இருந்த டெலிபோன் பூத்தில் இருந்து குரல் அவளை அழைக்க அவள் அதன் அருகில் சென்றாள். அங்கு ரேச்சல் கையில் பிறந்த குழந்தையுடன் நின்று கொண்டிருந்தாள். என்ன ரேச்சல்? இந்த நேரத்தில் இங்கு நிற்கிறாய் அதுவும் கையில் குழந்தையுடன்! anything serious? என்று கேட்க,ம் ரேச்சல் நடந்ததை விவரித்தாள். கயல் அவள் கூறுவதை கேட்டு அதிர்ந்து போனாள். என்ன நீ வேலை செய்யும் மருத்துவமனையில் குழந்தைகளை கடத்துகிறார்களா? உடனே நாம் காவல் நிலையத்திற்கு செல்லவேண்டும், இதை பற்றி புகார் கொடுக்க வேண்டும் அப்போதுதான் அந்த இன்னொரு குழந்தையை காப்பாற்ற முடியும். சீக்கிரமாக வா என்று அவளை கயல் அழைக்க, இருவரும் காவல் நிலையத்திற்கு விரைந்தனர். போகிற வழியில் ரேச்சல், டாக்டர் எனக்கு மிகவும் பயமாய் இருக்கிறது. நான் இங்கு வேலைக்கு சேர்ந்து ஒரு மாதம் தான் ஆகிறது. நான் பார்த்தவரை இது போல் நடந்ததில்லை அந்த மருத்துவரும் நல்லவர் தான். ஏன் இப்படி செய்தார் என்று தெரியவில்லை. அந்த பெண்ணை பார்த்தால் மிகவும் பாவமாக இருந்தது என்று கூறவும், கயல் சரி அந்த பெண்ணின் பெயர் தெரியுமா? எனக் கேட்க, எனக்கு இன்று நைட் டூட்டி டாக்டர், நான் அப்போது தான் வந்தேன் வந்த உடனே என்னை லேபர் வார்ட்க்கு அழைத்துச் சென்று விட்டனர். அதனால் அந்த பெண்ணின் பெயர் தெரியவில்லை என்று கூறினாள்.

அந்த மருத்துவர் தன் இடத்திற்கு வந்ததும் அங்கு இரு அடியாட்கள் அவளுக்காக காத்திருந்தனர், அவர்கள் அந்த மருத்துவரிடம் இரு குழந்தைகளின் சடலத்தை கொடுத்து அதை துர்காவின் அருகில் வைக்குமாறும் அவள் கண் விழித்தவுடன் குழந்தைகள் இறந்துவிட்டதாக கூறவேண்டும் என்றும் அவர்களின் உறவினர்களிடமும் இதையே சொல்லவேண்டும் என்றும் கூறினர். அந்த மருத்துவர் இதை செய்ய தவறினால் அவளுடைய பெண் அவளுக்கு உயிரோடு கிடைக்க மாட்டாள் என்றும் மிரட்டினர். அந்த மருத்துவருக்கு என்ன செய்யவெதென்றே விளங்கவில்லை. பதட்டத்தில் அவள் உடம்பு முழுவதும் வியர்வையில் நனைந்தது. அந்த அடியாட்கள் அங்கேயே நின்றுக் கொண்டு அவளை வெளியே அனுப்பி விஷயத்தை துர்காவின் உறவினர்களிடம் சொல்லுமாறு மிரட்டவே, அவளும் வெளியே வந்து அவ்வாறே சொன்னாள். அதை கேட்டு பார்வதியும் வாசுதேவனும் துடி துடித்து போயினர்.பார்வதி இந்த பெண்ணுக்கு மட்டும் ஏன் இத்தனை துன்பங்கள் தருகிறாய் இறைவா! என்று கடவுளை நொந்துக் கொண்டாள். ஜரீனாவும் உசைனும் கூட கண்ணீர் சிந்தினர். பிறகு அவர்களிடம் அந்த அடியாட்கள் சொன்னது போல் அந்த இறந்த குழந்தைகளை காட்டினார் அந்த மருத்துவர். அவர்கள் இருந்த நிலையில் யாரும் அந்த குழந்தைகளை சரியாக கூட பார்க்கவில்லை. ஜரீனா அந்த மருத்துவரிடம் இந்த குழந்தைகளை துர்காவிடம் காட்ட வேண்டாம். அதை பார்த்தால் அவளால் தாங்கி கொள்ள முடியாது. அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து விடுங்கள் என்று கூறியதும் அந்த மருத்துவருக்கு அப்பாடா! என்றிருந்தது. அவர்கள் உசைனிடம் கையழுத்து வாங்கி கொண்டு அந்த குழந்தைகளை எடுத்துக் கொண்டு சென்றனர்,
 
New Threads

Top Bottom