revathy ramu
Member
- Messages
- 50
- Reaction score
- 56
- Points
- 18
அத்தியாயம் 36
பிறகு சுஹேல் பரந்தாமனிடமும், வாசுதேவனிடம் பேசினான். உங்கள் பெண்ணை நான் மணக்க விரும்புகிறேன். நாங்கள் இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக காதலிக்கிறோம். துர்கா உங்களின் மீது உள்ள பாசத்தால் என் காதலை முதலில் ஏற்க மறுத்துவிட்டாள். பின்பு நான் தான் அவளை சம்மதிக்க வைத்தேன், நான் துர்காவை நன்றாக பார்த்துக் கொள்வேன். உங்கள் பெண்ணை எனக்கு மணம் முடித்து தர சம்மதமா? என்று கேட்க, வாசுதேவனும் பார்வதியும் தான் ஒரு வாரமாக சுஹேல் படும் பாட்டை பார்த்துக் கொண்டிருக்கிறார்களே! அவர்களுக்கு சுஹேலை பிடித்து விட்டது தான் ஆனால் வாசுதேவன் சுஹேலின் பெற்றோர் என்ன சொல்லுவார்களோ என்று நினைத்தார். தம்பி எங்களுக்கு சம்மதம் தான். உங்கள் பெற்றோர்கள் இந்த திருமணத்தை ஏற்பார்களா? எனக் கேட்க, அதை நான் பார்த்துக் கொள்கிறேன் அங்கிள், நீங்கள் கவலைப்படாதீர்கள் என்று சொல்ல, அவரும் தலையசைத்தார்.
ஒரு மாதம் கடந்து விட்டது. துர்காவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. இப்போது அவளால் கையை மெதுவாக அசைக்க முடிகிறது. யாரையாவது பிடித்துக் கொண்டு மெதுவாக நடக்கவும் செய்கிறாள். சுஹேல் இந்த ஒரு மாதமும் கண்ணின் கருவிழி போல் அவளை பத்திரமாக பார்த்துக் கொண்டான். இந்த அளவுக்கு அவள் உடல் நிலை தேறியதே அவனின் கண் துஞ்சா கவனிப்பில் தான்.
அன்று காலை சுஹேல் துர்காவிடம் வந்து அவள் அருகில் அமர்ந்தான். துர்கா நாளை நமக்கு பதிவு திருமணம் நடக்க போகிறது. நீ நாளை காலை உன்னை தயார் படுத்திக் கொள் என்றதும், முதலில் துர்காவிற்கு ஒன்றுமே விளங்கவில்லை, பின்னர் தான் அவன் சொல்லுவதே புரிந்தது. அவளுக்கு சந்தோஷமும் ஆச்சரியமுமாக இருந்தது. நாளைக்கே திருமணமா? நம் இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து விட்டார்களா? எங்கு திருமணம்? என்று அவள் கேள்வி மேல் கேள்வி கேட்க, உன்னுடைய வீட்டில் சம்மதம் தெரிவித்துவிட்டார்கள் துர்கா, என்னுடைய பெற்றோருக்கும் நேற்றே தகவல் சொல்லி அவர்களை சமாதானம் செய்துவிட்டேன். அவர்கள் இங்கு வர ஒரு ,மாதத்திற்கு முன்பே பயண சீட்டை முன்பதிவு செய்து விட்டேன் என்று கூற, எல்லாமே முன்பே திட்டம் போட்டு செய்து இருக்கிறீர்கள் போல, என்னிடத்தில் ஏன் எதுவுமே சொல்லவில்லை? என்று துர்கா கேட்டதும், சஸ்பென்ஸ்சாக வைத்திருந்து திடீரென்று சொல்லி உன் முகத்தில் ஏற்படும் முக பாவங்களை காண தான் என்று அவன் புன்னைகையுடன் கூற, எங்கள் வீட்டில் கூட இது பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே என்று அவள் அங்கலாய்க்க, நான் தான் உன்னிடத்தில் கூற வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் என்று கூறவும், அவள் மென்னகை புரிந்தாள். சரி எங்கு திருமணம் வைத்துள்ளீர்கள்? என்று துர்கா கேட்டதும், இங்கு தான் என கூறவும், என்னது மருத்துவமனையில் திருமணமா? இவன் என்ன பேசுகிறான் என தெரியாமல் விழிக்க, ஆமாம் துர்கா, உன்னை எனக்கு மறுபடியும் உயிரோடு கொடுத்த இந்த மருத்துவமனையில் தான் நான் நம் திருமணம் நடை பெற வேண்டும் என ஆசைப்படுகிறேன். நான் மருத்துவமனையின் உரிமையாளரிடம் அனுமதி பெற்று விட்டேன். அவரே முன்னின்று நம் திருமணத்தை நடத்தி தருவதாக கூறி இருக்கிறார். இதை கேட்ட துர்கா ஆச்சரியத்தில் கண் விரிய அவனை பார்க்க, இப்படி நீ பார்த்தால் நாளை நடைபெறும் நம் திருமணத்தை இன்றே வைத்தால் என்ன என்று தோன்றுகிறது என்று கூற துர்காவின் முகம் வெட்கத்தால் சிவந்தது. இதனால் இங்கு இருக்கும் நோயாளிகளுக்கு எந்த வித தொந்தரவும் வராதே? என்று துர்கா கேட்கவும், நாம் ஏன் அவர்களை தொந்தரவு செய்ய போகிறோம்? அமைதியாகத்தான் நம் திருமணம் நடை பெற போகிறது, முடிந்தால் அவர்களும் நம்மை ஆசிர்வதிக்கட்டும் என்று சுஹேல் கூற துர்காவும் சந்தோஷமாக தலை அசைத்தாள்.
மறுநாள் செவிலியர்கள் அங்கும் இங்குமாக அலைந்துக் கொண்டிருந்தார்கள். ஆம். அவர்கள் தான் இந்த திருமணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளை மகிழ்ச்சியோடு செய்துக் கொண்டிருந்தனர். சுஹேல், துர்கா திருமணத்திற்கு என்று சிறிய அறை ஒதுக்கப்பட்டது. சிறிய அலங்காரத்தில் அந்த அறை அழகாக இருந்தது. அங்கு பதிவு சார்பாளரும் ரவியின் துணைகொண்டு வரவழைக்கப்பட்டார். துர்காவின் குடும்பம், பாத்திமாவின் குடும்பம், சுஹேலின் வாப்பாவும் உம்மாவும் மற்றும் சந்தோஷ் , இவர்கள் மட்டுமே அங்கு இருந்தனர். திருமணத்தை எளிமையாக நடத்த வேண்டும் என்று சுஹேல் கூறியபடியால் நெருங்கிய உறவினர் மட்டுமே இருந்தனர். சுஹேல் தன் பெற்றோர்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே விஷயத்தை கூறி அவர்களை ஓரளவு சமாதானம் படுத்திவைத்திருந்தான். அவர்களும் தன் ஒரே பிள்ளையின் ஆசைக்கு குறுக்கே வர மனமில்லாமல் வேறு வழியின்றி ஒத்துக் கொண்டனர். ஒரு சில எழுந்து நடக்கும் நிலையில் உள்ள நோயாளிகளும் அதிசயமாக மருத்துவமனையில் நடக்கும் திருமணத்தை காண வந்திருந்தனர். துர்காவிற்கு உட்கார சிரமமாக இருந்தபடியால் இருவருமே நாற்காலியில் அமர்த்தப்பட்டனர். பதிவு சார்பாளர் இருவரிடத்திலும் கையெழுத்து வாங்கினார். பின்னர் சாட்சி கையெழுத்தாக துர்காவின் சார்பில் வாசுதேவனும் சந்தோஷும் கையெழுத்திட , சுஹேலின் சார்பில் ரவியும் உசைனும் கையெழுத்திட்டனர். பின்னர் இருவரும் மாலை மாற்றி கொண்டனர். அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஒரு தங்க சங்கிலியை சுஹேலிடம் கொடுக்க, அதை அவன் துர்காவிற்கு அணிவித்தான். அனைவரும் அவர்களை வாழ்த்திய பின்னர் தம்பதியினர் அவரவர்களின் பெற்றோர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர். புது மண தம்பதியருக்கு பரிசுகள் கொடுக்கப்பட்டது. சுஹேல் அந்த மருத்துவமனையில் இருக்கும் அனைவருக்கும் தன் செலவில் விருந்து வைத்தான். வித்தியாசமாக மருத்துவமனையில் அமைதியாக நடந்த இந்த திருமணம் அனைவருக்கும் சந்தோஷத்தையும் மகிழ்ச்சியும் தந்தது.
இரண்டு நாள் கழித்து துர்கா அந்த மருத்துவமனையில் இருந்து அனைவரின் வாழ்த்துகளையும் பெற்றுக் கொண்டு அங்கிருந்து கிளம்பி சுஹேலின் மனைவியாக தன் அண்ணன் வீட்டிற்கு வந்தாள். சுஹேலின் பெற்றோர் திருமணம் முடிந்த அன்றே வாரணாசிக்கு சென்று விட்டனர். சுஹேலும் துர்காவும் இரண்டு நாள் தன் அண்ணன் வீட்டிலே தங்கி விருந்துண்டு மகிழ்ச்சியில் கழித்த பின் வாரணாசிக்கு திரும்பினர்.
ஜரீனா அவர்கள் வழக்கப்படி அவர்களை வரவேற்று வீட்டிற்குள் அழைத்தார். ஜரீனாவுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லையென்றாலும் மகனின் ஆசைக்காகவும், துர்காவின் நிலைமையை கருத்தில் கொண்டும் எதுவும் பேசவில்லை. உசைனுக்கும் அதே நிலை தான். துர்கா அந்த வீட்டை பார்த்தவுடன் பிரம்மிப்பில் ஆழ்ந்து போனாள். இவ்வளவு பெரிய வீடா! என அதிசயித்து நிற்க, சுஹேல் அவளை தன் அறைக்கு அழைத்து போனான். அவள் அண்ணன் வீட்டின் மொத்த இடமுமே அவனுடைய அறையாக இருந்தது. அந்த அறையின் ஓரமாக கட்டில் போடப்பட்டு அதில் மெல்லிய திரை சீலைகள் கட்டிலை சுற்றி தொங்கவிடப்பட்டிருந்தன. உயர் ரக மெத்தையும் தலையணையும் அந்த கட்டிலை அலங்கரித்தது. அறையின் நடுவில் சோபாவும் டீபாய் மேஜையும் இருந்தன. அறையை சுற்றி கதவு வைத்த அலமாரிகள் இருந்தன. சில கண்ணாடி அலமாரிகளில் கலைநயம் மிக்க பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. துர்கா அறையில் நுழைந்ததும்சுஹேல் அவளை அருகே அமர வைத்துக் கொண்டான். துர்கா இனிமேல் இந்த வீட்டிற்கு நீதான் ராணி. வாப்பாவும் உம்மாவும் நல்லவங்கதான். நான் அவங்க விருப்பப்படி நிஹ்ஹா பண்ணலேனு கொஞ்சம் என் மேல் கோவமாய் இருக்காங்க.
அதனால் அவங்க உன்னை புரிந்து கொள்ள கொஞ்சம் நாளாகும். அதுவரை அவங்க என்ன சொன்னாலும் நீதான் கொஞ்சம் பொறுத்து போகவேண்டும் துர்கா, இந்த உதவியை நீ எனக்காக செய்வாயா? என சுஹேல் கேட்டதும், என்ன சுஹி உதவி என்று பெரிய வார்த்தையெல்லாம் கூறுகிறீர்கள். உங்களுடைய பெற்றோர் எனக்கும் தாய் தந்தை போலத்தான். நான் கண்டிப்பாக அவர்கள் மனம் நோகாமல் நடந்துக் கொள்ளுவேன். அவர்களை என்னால் முடிந்தவரை நன்றாக பார்த்துக்கொள்ளுவேன். இந்த குணம் தான் என் ஸ்வீட் டார்லிங் கிட்ட என்னை கட்டி போட்டிருக்கு என்று புன்னகையுடன் கூற, துர்கா வெட்கத்தில் தலை குனிந்தாள்.
நாட்கள் நகர்ந்தது. சுஹேலுக்கும் துர்காவிற்கும் திருமணமாகி மூன்று மாதங்கள் கடந்து விட்டிருந்தது. இருவரும் தங்கள் இல்லற வாழ்வில் இனிதே வாழ தொடங்கி இருந்தனர். ஜரீனாவுக்கு துர்காவின் குணம் கொஞ்ச கொஞ்சமாக பிடிக்க தொடங்கி இருந்தது. துர்கா ஜரீனாவுடனே சுற்றிக் கொண்டிருந்தாள். ஜரீனா எங்கு சென்றாலும் துர்காவும் அங்கே சென்று அவளுக்கு உதவியாக இருந்தாள். ஜரீனா துர்காவிடம் முகம் கொடுத்து பேசவில்லை என்றாலும் அவள் செய்யும் உதவிகளை ஜரீனா மறுக்கவில்லை.
ஜரீனா அவ்வப்போது ஏதாவது ஜாடை மாடையாக பேசினாலும் துர்கா அதை கண்டு கொள்ளாமல் எப்போதும் போல் தன்னால் முடிந்த உதவிகளை தன் மாமியாருக்கு செய்தாள். அதேபோல் தன் கணவனையும் நன்கு கவனித்துக் கொண்டாள். அவனுக்கு தேவையானதை எடுத்து வைப்பது, அவனை இன்முகத்துடன் வழி அனுப்புவது என அவன் சந்தோஷம் படும்படி நடந்துக் கொண்டாள். இரவில் அவனின் தொழில் காரணமாக வீடு வர வெகு நேரமானாலும் அவனுக்காக காத்திருந்து உணவு பரிமாறி விட்டு தான் தூங்க செல்வாள். இதற்காக அவள் ஒருநாளும் சலித்து கொண்டதே இல்லை. தன் அன்பு கணவருக்காக தன்னால் இந்த செயலையாவது செய்ய முடிகிறதே என்று மகிழ்ச்சியே அடைவாள். ஜரீனாவுக்கு துர்காவின் அமைதியும், சுறுசுறுப்பாக வேலை செய்யும் தன்மையும் அவளை ஈர்க்கவே செய்தன. தாம் தேடினாலும் இப்பேர் பட்ட பெண் நமக்கு கிடைத்திருப்பாளா என்ற எண்ணம் நாளடைவில் அவளுக்கு தோன்ற ஆரம்பித்தது.
உமர் அலி தன்னுடைய பண பலத்தால் சீக்கிரமாகவே தண்டனையில் இருந்து விடுபட்டு விடுதலை ஆகியிருந்தார். அவருக்கு சுஹேலால் ஏற்பட்ட இந்த அவமானத்தை தாங்கி கொள்ளவே முடியவில்லை. நான் இந்த ஊரில் எவ்வளவு கம்பீரமாக சுற்றி திரிந்தேன். என்னை சிறையில் அடைத்து அவமானப்படுத்தி விட்டானே, கண்டிப்பாக இதற்கு பதிலடி கொடுத்தே தீருவேன் என்று கருவிக் கொண்டிருந்தார்.