Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


பண்ணையார் தோட்டம்

Karthikeyan Jayaraman

Saha Writer
Messages
111
Reaction score
52
Points
28
பரந்தாமன் சந்திரன் தீனா மூவரும் சங்கர் வருவதை பார்த்து அவர்களின் கண்களில் .
அவர்களின் மரணம் பயம் தெரிந்தது .... ரேகாவை கொன்று விட்டோம் என்று சங்கர் கண்டுபிடித்துவிட்டால் . மூவரையும் உயிரோடு விட மாட்டான் என்று நினைத்து . பீதியில் நடுங்கினார்கள் என்ன செய்வது என்று குழம்பினார்கள் உடனே ரேகாவை தோளில் சுமந்தபடி தீனா பம்பு செட்டுக்கு திரும்பி வந்துவிட்டான் பரந்தாமனும் சந்திரனும் சங்கர் வேகமாக வருவதைப் பார்த்து என்ன செய்யலாம் என்று யோசித்தார்கள் ..
உடனே பரந்தாமனுக்கு ஒரு யோசனை வந்தது.

தொளில் சுமந்திருந்த ரேகாவை கிணற்றில் போட்டு விடு என்று தீணாவிடம் பரந்தாமன் சொன்னான்..

சிறிதும் தயங்காமல் தீனா ரேகாவை கிணற்றில் போட்டுவிட்டான் கிணற்றில் எப்போதுமே தண்ணீர் இருந்ததால் ரேகாவின் பிணம் தண்ணீரில் மிதந்தபடி இருந்தது உடனே மூவரும் தள்ளி தள்ளி நின்றார்கள் பம்பு செட்டின் அருகில்.


ஒரு கையில் பூவும் இன்னொரு கையில் ஒரு பாத்திரத்தில் தேனும் எடுத்துக்கொண்டு சங்கர் சந்தோஷமாக பம்பு செட்டின் அருகே வந்தான்.

சந்தோசமாக இருந்த சங்கரின் முகம் பண்ணையாரின் மகன்களை பார்த்ததும் சற்று சந்தேகப் பார்வையோடு பார்த்தான்.

தீனாவின் சட்டையில் ரத்தக் கறைகள் பதிந்திருந்ததை பார்த்தவுடன் சங்கருக்கு சற்று பயம் ஏற்பட்டது .. சந்திரனும் பரந்தாமனும் திருதிருவென முழித்துக்கொண்டு தரையைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் இவர்கள் மூவரும் இன்று ஏதோ பெரிய தவறு செய்ததை போல முழுப்பதை சங்கர் கண்டுபிடித்துவிட்டான்.


சின்னையா சட்டையில் ரத்தக்கரை தெரிகிறதே என்ன நடந்தது ஐயா என்று பரந்தாமனிடம் சங்கர் மெதுவாக கேட்டான் சந்தேகத்தோடு.

என்ன சொல்வது என்று தெரியாமல் மூவரும் தலையை குனிந்தபடி பதட்டமாக காணப்பட்டார்கள்.

மூவரும் சங்கரின் கேள்விக்கு பதில் சொல்லாததால் சங்கருக்கு சந்தேகம் உறுதியானது .
ஏதோ பெரிய தவறு நடந்து விட்டது என்று உணர்ந்து சற்று வேகமாக பம்பு செட்டுக்குள் நுழைந்து ரேகாவை பார்த்தான்.

சங்கர் நினைத்தபடியே அதிர்ந்து போனான். கையிலிருந்த தேன் பாத்திரத்தையும் .பூவையும் கீழே விட்டுவிட்டான் அதிர்ச்சியில் ...
தேன் பாத்திரம் கீழே விழுந்ததில் தேன் கீழே கொட்டி மண்ணில் கலந்தது...

கீழே நிறைய ரத்தம் கொட்டி இருப்பதைப் பார்த்த சங்கர் .
நம் மனைவியை ஏதோ செய்து விட்டார்கள் இந்த மூன்று பேரும் என்று முடிவு செய்தான் பாத்திரத்தில் இருந்த நண்டு குழம்பும் கீழே கொட்டி இருந்ததை பார்த்தான் சங்கர் .
பிறகு அவனுக்கு மெல்ல மெல்ல கோபம் தலைக்கேறியது எவ்வளவு துணிச்சல் இருந்தால் நம் மனைவியை ஏதோ செய்து இருக்கானுங்க இந்த மூன்று பேரும் என்று முடிவு செய்து கோபத்தோடு பம்புசெட் அறையிலிருந்து வெளியே வந்தான் மூவரையும் முறைத்தபடி...

மரியாதையா சொல்லிடுங்க இங்கே என்ன நடந்ததுன்னு .
இல்லன்னா நீங்க மூணு பேரும் இன்னைக்கு வீடு திரும்ப மாட்டீங்க என்று முறைத்தபடியே சங்கர் கேட்டான்.

அப்போதும் மூன்று பேரும் என்ன சொல்வது என்று தெரியாமல் சங்கரை பார்த்து பயத்தால் நடுங்கினார்கள்.

சங்கருக்கு மேலும் கோபம் அதிகமானது . பற்களை நறநறவென்று கடித்துக் கொண்டு மூவரையும் வெலுத்து வாங்கினான் சங்கர்.

மூவரும் வாயைத் திறக்காமல் சங்கரிடம் அடி வாங்கினார்கள்.

முகம் . கை . கால் . என பல இடங்களில் மூவருக்கும் காயங்கள் ஏற்பட்டது சங்கர் அடித்த அடியில் வலியால் மூவரும் கத்தினார்கள்.

மரியாதையா சொல்லிடுங்க என் மனைவியை என்ன பண்றீங்க என்று . மீண்டும் கோபத்தோடு கேட்டான் சங்கர்.

அப்போதும் மூவரும் பதில் சொல்லவில்லை. வலியால் கத்திக்கொண்டு இருந்தார்களே தவிர சங்கரின் வார்த்தைக்கு மூவரும் பதில் சொல்லவில்லை.


கோபத்தோடு இருந்த சங்கர் தன் மனைவியை நினைத்து அழுக ஆரம்பித்து விட்டான்.

என் மனைவியை என்னடா செஞ்சீங்க சொல்லுங்கடா பாவிகளா . நாங்க என்னடா தப்பு செஞ்சோம் இப்படி என் குடும்பத்தை நாசமாக்கி விட்டீர்களே சின்ன காயம் கூட என் ரேகாவால் தாங்க முடியாது.
எங்கு பார்த்தாலும் ஒரே ரத்தமாக இருக்கிறதே ஏன் ரேகாவை என்னடா பண்ணிங்க சொல்லுங்க டா . சொல்லுங்க டா என்று தீனாவின் சட்டை பிடித்துக்கொண்டு கதறிக் கதறி அழுது கொண்டே கேட்டான் சங்கர்.

அப்போதும் மூவரும் வாயைத் திறக்கவில்லை...

சங்கர் ஒரு முடிவுக்கு வந்தான்...

கீழே கிடந்த மண்வெட்டியை எடுத்துக்கொண்டு பரந்தாமனின் கழுதை வெட்டுவதற்கு துணிந்துவிட்டான் சங்கர்.

இதைப்பார்த்ததும் சந்திரனுக்கும் தீனாவுக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

சங்கர் ....என் அண்ணனை விட்டு விடு நாங்கள் உண்மையை சொல்லி விடுகிறோம் என்று சந்திரன் சங்கரின் காலை பிடித்துக்கொண்டு அழுதான்..

சொல்லுங்கடா.. இல்லன்னா 3 பேரின் தலையை வெட்டி விடுவேன் என்று கோபத்தோடு பல்லைக் கடித்துக் கொண்டே சொன்னான் சங்கர் ஆவேசமாக..

இப்பத்தான் ரேகாவை கிணற்றில் தள்ளி விட்டோம் போய் காப்பாத்து சங்கர் என்று பரந்தாமன் பயத்தில் நடுங்கிக் கொண்டே சொன்னான்..

உடனே சங்கர் மண்வெட்டியை கீழே போட்டுவிட்டு கிணற்றை எட்டிப்பார்த்தான் .... ரேகா தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தாள் அதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தான் சங்கர் .
உடனே சிறிதும் தயங்காமல் ரேகா என்று கத்திக்கொண்டே கிணற்றில் குதித்தான் சங்கர்.

கிணற்றில் குதித்த சங்கர் நீந்திச் சென்று ரேகாவை பிடித்து முகத்தை உற்றுப் பார்த்தான்.. ரேகா இறந்து விட்டாள் என்பதை உணர்ந்த சங்கருக்கு அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட்டான் அவன் தலையில் இடி விழுந்ததை போல் உணர்ந்தான் ..
ரேகா ...........என்று சத்தமாக கத்தினான் ...அவன் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது அலங்கோலமாக இருக்கும் ரேகாவை பார்த்து அவன் மனம் சுக்குநூறாக உடைந்தது.

சங்கரிடம் அடி வாங்கியதில் நிறைய காயத்தோடு வலி தாங்க முடியாமல் ..பரந்தாமன் . சந்திரன் தீனா . மூவரும் கீழே படுத்தபடி வலியால் துடித்தார்கள் ..
கிணற்றில் சங்கர் சத்தமாக கத்தி அழுவதை மூவரும் உணர்ந்தார்கள்.

கிணற்றின் மையப்பகுதியில் இருக்கும் தண்ணீர் பைப்பை வலது கையில் பிடித்துக்கொண்டு ரேகாவை இடது கையில் பிடித்துக்கொண்டு கதறிக் கதறி அழுதான் சங்கர்


எழுந்திரு மா ......எழுந்திரு மா... மாமா வந்து விட்டேன் எழுந்திரு மா.. என்று அழுதுகொண்டே ரேகாவிடம் கெஞ்சினான் சங்கர்...

உன்னை ராணி போல பார்த்துக்குவேன் என்று சொல்லிட்டு ..இப்படி உன்னை இந்த பாவிங்ககெட்ட விட்டுட்டேனே.. என்று அழுதன் சங்கர்.

கடவுளே ....ஏன் ரேகா என்ன பாவம் செய்தாள் . அவளுக்கு ஏன் இந்த நிலைமை . என்மேல் ஆசைப்பட்டது பாவமா என்று வணத்தை பார்த்தபடி கத்தி அழுதான் சங்கர். கிணற்றில்

கதறி கதறி அழுது கொண்டிருந்த சங்கருக்கு .பரந்தாமன் .சந்திரன் தீனா .மூவரையும் நினைத்து கோபம் மீண்டும் வெறித்தனமாக ஏறியது சங்கருக்கு.

அடப்பாவிங்களா... இதுவரைக்கும் செய்த தப்புக்கு இன்னைக்கு தான் உங்களுக்கு தண்டனை கிடைக்க போகுதுடா . இதோ வரண்டா மேல உங்க மூணுபேரையும்
கொன்னாதான் ஏன் ஆத்திரம் அடங்கும் . இதோ வருகிறேன் என்று சங்கர் சத்தமாக சொன்னான்.

மேலே வலியால் துடித்துக் கொண்டிருந்த மூவருக்கும் சங்கரின் பேச்சு மேலும் பயத்தை உண்டாக்கியது..

சங்கரின் ஆவேச பீச்சில் பதறிப் போனான் பரந்தாமன்

தம்பி ...தம்பி ...சங்கர் மேலே வராண்டா வந்ததும் நம்ம மூன்று பேரையும் கொன்னுடுவன் டா ஏதாச்சும் செய்யுங்க டா என்றன் .. பரந்தாமன் ..சந்திரன் இடமும் தினாவிடமும் சொன்னான்.

உடனே மூவரும் எழுந்து கிணற்றின் தடுப்பு சுவர் அருகில் சென்று கிணற்றை எட்டிப் பார்த்தார்கள்.

சங்கர் ரேகாவை பிடித்துக்கொண்டு கிணற்றில் நீந்திக் கொண்டு வந்தான் ..படிக்கட்டு இருக்கும் பக்கமாக.

இதைப் பார்த்ததும் மூவரும் நடுங்கினார்கள் . மேலே வந்ததும் சங்கர் நம்மை கொன்று விடுவான் என்று நினைத்து தவித்தார்கள்.

பரந்தாமன் பித்துபிடித்தவன்போல ஐயையோ நான் என்ன செய்வேன் ஐயோ நான் என்ன செய்வேன் என்று உளறிக்கொண்டே அங்குமிங்குமாக ஓடிக்கொண்டே இருந்தான்.

சங்கரும் கிணற்றில் நீந்தி வந்து படிக்கட்டை பிடித்துக்கொண்டான்.

தம்பி ...தம்பி ....அவனை ஏதாச்சும் செய்யுங்க டா இல்லையென்றால் மேலே வந்து நம்மை கொன்று விடுவான் டா ..
அவனை ஏதாச்சும் செய்யுங்க டா என்று பயத்தோடும் பதட்டதோடும் பரந்தாமன் தம்பிகளிடம் சொன்னான்.

சங்கர் மேலே வந்ததும் அண்ணனை கொன்று விடுவான் என்று நினைத்து .
சந்திரன் தீனாவும் பம்பு செட்டுக்குள் ஓடினார்கள் .
ரேகாவை குத்திய கடப்பாரையை எடுத்துவந்து சங்கரை கொன்றுவிடலாம் என்று நினைத்து பம்புசெட்டு குள்ளே ஓடினார்கள் இருவரும்.

இரத்தக் கறையோடு இருந்த கடப்பாறையை சந்திரன் எடுத்துக்கொண்டு பம்ப் செட்டில் இருந்து வெளியே வந்தார்கள் . அப்போது அண்ணனைப் பார்த்து அதிர்ந்து போனார்கள் சந்திரனும் தீனாவும்.

பரந்தாமன் ...ஒரு பெரிய கல்லை தலைக்கு மேல் தூக்கிக்கொண்டு கிணற்றில் இருக்கும் சங்கர் மீது போடுவதற்கு குறிபார்த்து கொன்டுருந்தான் பரந்தாமன்.

அண்ணனின் துணிச்சலை பார்த்து சற்று பயந்து போனார்கள் சந்திரனும் தீனாவும்.

சங்கர் ரேகாவை தோள் மேலே போட்டுக்கொண்டு .. படிக்கட்டில் ஏற தொடங்கினான் . அப்போது சங்கர் கோபத்தோடு மேலே பார்த்தான் . அவன் பார்ப்பதற்கும் பரந்தாமன் பெரிய கல்லை சங்கர் தலையில் போடுவதற்கும் சரியாக இருந்தது.

சங்கரின் தலை உடைந்தது ...ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. ரேகாவை தோளில் சுமந்தபடியே தண்ணீரில் சாய்ந்தான் சங்கர்..

கடப்பாறையை கீழே போட்டுவிட்டு ஓடிவந்து பார்த்தார்கள் சந்திரனும் தீனாவும்.

சங்கர் தலை உடைந்து ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது . கிணறு ரத்தமானது . அப்போது சங்கரின் உயிர் துடித்தது அப்போது சங்கர் ரேகாவை பிடித்துக்கொண்டே கிணற்றின் மேலே பார்த்தான் மூவரும் சங்கரை பார்த்துக் கொண்டிருந்தார்கள் .
அப்போது சங்கர் மூவரையும் பார்த்தபடியே முறைத்தான் சங்கரின் கண்கள் பெரியதாக ஆனது . அவன் தலையிலிருந்து வழிந்த ரத்தம் கண்கள் வழியாக வந்து . அவன் பற்களில் கலந்தது அவன் முகம் சிவப்பு நிறமாக மாறியது . அப்போது சங்கர் உயிர் பிரியும் நேரத்திலும் கோபத்தோடு வெறியோடு ரத்தக்கரை பற்களை நறநறவென்று கடித்துக் கொண்டு ...பரந்தாமன் சந்திரன் ...தீனா ..மூவரையும் முறைத்தபடியே தண்ணீரில் மூழ்கினான் . அப்போது சங்கரின் கண்ணில் இருக்கும் நீல நிற வட்டத்தில் மூவரின் உருவம் பதிந்தது ...கிணற்றின் மேல் மூவரும் எட்டிப் பார்த்துக் கொண்டிருப்பது போல்

சங்கரின் முகம் அவர்களை கோபத்தோடு பற்களை கடித்துக் கொண்டிருக்கும் பொழுதே உயிர் பிரிந்தது ...கண்களில் உருவம் பதிந்தது...

சங்கர் உயிர் பிரிந்தாலும் ரேகாவை விடாமல் பிடித்துக்கொண்டே இருந்தான். இருவரும் பிணமாக தண்ணீரில் மிதந்தார்கள்.

சந்திரன் மட்டும் தலையில் அடித்துக்கொண்டு அழுதான் ...
தீனா சோகத்தோடு சங்கரையும் ரேகாவையும் கண்ணிமைக்காமல் பார்த்தான் ..
பரந்தாமன் அப்படியே தடுப்பு சுவர் கீழே உட்கார்ந்துகொண்டான் பயத்தில்..
இனி என்ன செய்வது என்று யோசித்தான் பரந்தாமன்.

சூரியன் மறையும் நேரம்...

உடனே முகத்தைத் துடைத்துக் கொண்டு பரந்தாமன் சுற்றும் முற்றும் பார்த்தான்..
அப்போது அவன் கண்களுக்கு தென்னை மரத்தின் பக்கத்தில் வேலி கம்பி நடுவதற்காக 6 அடி நீளமுள்ள வெள்ளைநிற கல் அடக்கி வைத்திருந்ததை பார்த்தான்.
உடனே அந்தக் கல்லை தம்பிகளிடம் தூக்கிவரச் சொன்னான்.

சந்திரனும் தீனாவும் கல்லை தூக்கி வந்தார்கள் ஆளுக்கொரு பக்கம் பிடித்து...

பிறகு மூவரும் கல்லைப் பிடித்து கிணற்றில் தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கும் சங்கர் ரேகாவின் பிணத்தின் மீது கல்லை நீடாக படுத்தபடி போட்டார்கள் ..
அந்தக் கல் சங்கரையும் ரேகாவையும் தண்ணீர் உள்ளே அழுத்திசென்றது ...
அதேபோல மீண்டும் ஒவ்வொரு கல்லாக மூவரும் எடுத்துவந்து கிணற்றில் நீடாக போட்டார்கள் கல்லை ...
இப்படியே நிறைய கல்லை கிணற்றிள் போட்டார்கள் .
எல்லாம் கல்லும் சங்கரையும் ரேகாவையும் கிணற்றின் ஆடியில் அழுத்திக்கொண்டு பதிந்தது..

உடனே பரந்தாமன் பம்புசெட் உள்ளே சென்று ரேகாவின் துணி சங்கரின் துணி மற்றும் அங்கு இருந்த பாத்திரங்களை எல்லாம் ஒன்றாக சேர்த்து ஒரு மூட்டையாக கட்டினான் ...
சந்திரனும் தீனாவும் ரத்தக்கரை களையும் .மற்றும் கீழே கொட்டிய நண்டு குழம்பை சுத்தம் செய்தார்கள் ...
அப்போது பரந்தாமன் மூன்று பேரின் சட்டையும் ரத்த கரையாக இருப்பதை கவனித்தான் .

சங்கர் அடித்ததில் சட்டையெல்லாம் ரத்த கரையாக இருந்தது ....
பிறகு மூவரும் சட்டையை கழட்டி சங்கரின் துணியோடு சேர்த்து கட்டிவிட்டார்கள்...
பிறகு துணிகளையும் பாத்திரங்களை எடுத்துச் சென்று கரும்புத் தோட்டத்தில் குழிதோண்டி புதைத்து விட்டார்கள்.

கடப்பாரையில் இருந்த ரத்தக் கறையை சுத்தம் செய்துவிட்டு சுற்றுமுற்றும் பார்த்தார்கள் மூவரும் ஏதாவது தடயங்கள் இருக்கிறதா என்று ...
எதுவுமே இல்லை என்ற முடிவுக்கு வந்தவுடன் மூவரும் உடனே வீட்டுக்கு கிளம்ப தயாரானார்கள்.

வீட்டுக்கு கிளம்புவதற்கு முன் மூவரும் ஒரு முறை கிணற்றை எட்டிப் பார்த்தார்கள் ..பிணம் மேலே மிதக்கிறத என்ற சந்தேகத்தில்.

பிணம் மேலே மிதக்க வில்லை என்பதை பார்த்தவுடன் அங்கிருந்து அவசரமாக கிளம்பினார்கள்
வேட்டி பனியன் அணிந்த படியே மூவரும் பைக்கில் .. வீட்டிற்கு.



தொடரும்......
 

New Threads

Top Bottom