Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


RD NOVEL போகாதடி என் பெண்ணே! - Tamil Novel

Status
Not open for further replies.

Writer X

Well-known member
Messages
462
Reaction score
616
Points
93
பெண்ணே 3


தக்ஷினாவை பார்த்துக்கொண்டு இருந்தார் முரளி.. தன் முன் இருந்த கேஸ் பையிலை புரட்டி கொண்டு இருந்தாள் அவள்.

அவள் கேட்ட அனைத்து கேஸ்களை பற்றிய விவரத்தை செல்லிக் கொண்டு இருந்தனர். சிலவற்றை பார்தவள் அதனை மூடிவைத்துவிட்டு யோசனையில் இருந்தாள்.

அனைவரும் அவளைதான் பார்தனர். கண்ணை அழுத்தமாக மூடி ஆள்காட்டி விரலை அசைத்து அனைவரையும் வெளியே போக சொன்னவள் இன்னும் யாரிடமும் பேசவில்லை கேஸ் பற்றி மட்டும் தான்கேட்டு இருந்தாள்.

சட்டென்று கண்களை திறந்தவள் "முரளி எனக்கு சத்யா கேஸ் டிடெயில்ஸ் வேனும் எனக்கு மெயில் பன்னுங்க… இன்னைக்கே" என

"ஒகே மேடம்"

"அப்புறம் அந்த மிர்ச்சி நைட் பைட்ஸ் பப் பத்தி எனக்கு தெரியனும் என்னனு பாருங்க" என்றவள் எழுத்துக் கொண்டாள்.

"ஒகே மேடம்" என அவரும் எழுந்துக் கொண்டார்.

வெளியில் வந்தவள் அங்கு பெஞ்சில் அமர்ந்திருந்த கைதி ஒருவனிடம் வந்தாள். பின்னால் முரளியும் வந்து நின்றார். அவனை அழைத்து வந்த இன்ஸ்பெக்ட்ரை "என்ன?" என்பது போல பார்த்தாள் அவள்.

"பக்கத்து ஏரியால போன வாரம் ஒரு 6த்து பொண்ண ஸ்கூல் வெளியே வச்சி கடத்திட்டாங்க. அதுமட்டும் இல்லாம ஸ்கூல் பசங்க பேதை மருந்து பயன்படுத்துரதா ஒரு டீச்சர் ரகசியமா தகவல் கொடுத்தாங்க அதனால அங்க கண்காணிக்க ஆள் போட்டு இருந்தோம் மேம்.. இவன் ரெண்டு நாளா ஸ்கூல் வாசல்ல நோட்டம் விட்டுட்டு இருந்தான்… பிடிச்சி விசாரிச்சா ஒழுங்கா பதில் சொல்லமாட்றான் மேம். அவன் பேக்ல 20 ஸ்டாம்ப் 2 லட்சம் பணம் இருந்தது மேம்" வேகமாக ஒப்பித்தான் அந்த இன்ஸ்பெக்டர்.

"முரளி இவன இங்க விசாரிக்கும் இடத்துக்கு கூட்டிட்டு போங்க" என்றவள் இன்ஸ்பெக்டரரிடம் திரும்பி "நீங்க எப்போ அரஸ்ட் பண்ணிங்க" என்று கேட்டாள்.

"நேத்து மேம்"

"அந்த பேக்ல உள்ள எல்லாத்தையும் நான் பாக்கனும் எடுத்துட்டு வாங்க" என்றவள் திருப்பி உள்ளே சென்றாள்.

ஒரு சேரில் உட்கார வைக்க பட்டு இருந்தான் அவன். அவனுக்கு முன் இருந்த டேபிளில் அவன் பை பணம் ஸ்டாம்ப் என அனைத்தும் வரிசையாக இருந்தது.. அங்கு தான் முரளியும் இன்ஸ்பெக்டரும் நின்று இருந்தனர்.. கதவை திறந்து கொண்டு வந்தாள் தக்க்ஷினா. வொயிட் ஷர்ட் காக்கி பேண்ட் என்று மாறி இருந்தாள் முடியை தூக்கி கொண்டை போட்டு இருந்தாள் ரப்பர் கையுறை அணிந்து கொண்டே உள்ளே வந்தவள் ஒரு ஸ்டாம்ப்பை எடுத்து பார்த்தாள் பார்க்க சாதாரணமாக தான் இருந்தது.. அவனிடம் போய் நின்றவள் அவனை பார்த்து கொண்டு நின்றாள்.

"மேம் இத பாத்தா சாதா ஸ்டாம்ப் மாதிரி தான் இருக்கு…" முரளி

"அத அவன் சொல்லட்டும் முரளி" என்றவள் அவனிடம் ஆரம்பித்தாள்

"உன் பெரு என்ன? "

"சண்முகம்"

"எந்த ஊர்? "

"மதுரை"

"மதுரைல எங்க?"

"உசிலம்பட்டி"

"அப்பா அம்மா பேரு என்ன? "

"காசிநாதன் மஞ்சுளா"

"என்ன படிச்சுருக்க?"

"படிக்கல"

"எதுக்கு சென்னை வந்த?"

"வேலை தேடி வந்தேன்"

"கிடச்சதா?"

"இல்ல"

"ஸ்டாம்ப் எதுக்கு?"

"வீட்டுக்கு லெட்டர் போட"

"எங்க தங்கிருக்க?"

"ட்ரிப்ளிக்கேன்"

"மேம் நான் நேத்து விசாரிச்சப்போவே இத தான் சொன்னான்" இடை புகுந்தான் இன்ஸ்பெக்டர்.

"இருங்க இன்ஸ் சார்" என்றவள்

"எதுக்கு ஸ்கூல்க்கு போண?"

"சும்மா தான்"

"வேலை தேடி வந்துட்டு அத பண்ணாம சும்மா எதுக்கு அங்க போண?"

"தோணுச்சி போணன்" மிக அழுத்தமாக வந்தது பதில்.

"இதுதான் மேடம் சொல்றான்..." ஆதங்கமாக சொன்னான் இன்ஸ்பெக்டர் சரத்.

"உண்மை போலதான் இருக்கு சரத்" அவனை பார்த்துக் கொண்டே தான் சொன்னாள் அவன் ஆசுவாச மூச்சி விட்டதனைத்தையும் .

"அப்போ இவனை விட்றலமா மேடம்?" முரளி

"என்ன உன்ன விட்றலமா சண்முகம்?" அவனிடம் கேட்டவள்

"என்ன ஜெய் சண்முகம் தானே?" காதில் கைவைத்து தலையை சாய்த்து ஏர்பேடை அழுத்தி கொண்டே "என்ன இல்லையா? ஊப்ஸ்" என நிமிர்ந்தவள் அவன் அருகில் சென்று ஆரம்பித்தாள்.

யாரு அந்த ஜெய் என்று முரளியும் சரத்தும் ஒருவரை ஒருவர் புரியாமல் பார்த்துக் கொண்டனர்…

"உன் பேர் என்ன?"

"சண்முகம்" அவன் வாயை மூடுவதற்க்குள் மின்னல் வேகத்தில் ஒரு அறை விழுந்து.

"உன் பேரு என்ன?" "சண்முகம்" மீண்டும் ஒரு அறை உதடு கிழிந்து ரத்தம் வடிந்தது.. இதுவே பத்து முறையும் தொடர்ந்தது…

"மீ பேரு எமிதி?" அவள் தெலுங்கில் கேட்கவும் எச்சில் விழுங்கினான் அவன்

"ஆ..ஆருஜ்" பயத்தில் அவனுக்கு கண்ணை கட்டியது

"ஆருஜ் மாஜா" என்று சொல்லி மீண்டும் ஒரு அறை விட்டாள் சேரோடு கீழே விழுந்தான் அவன்.

"ஒரு லெமன் ஜூஸ் இவனுக்கு கொண்டு வர சொல்லுங்க" என்றவள் அங்கு இருந்த நாற்காலியில் உட்கார்ந்து மொபைலில் ஆழ்ந்தாள்…

"மேம்" மெதுவாக அழைத்தான் சரத்

"ம்ம்" என்று விழி உயர்த்தி பார்த்தாள் அவள்…

தடுமாறிதான் போனான் அவன் "செம்மையா இருக்காங்கல" ஜொல்லு விட்டது அவன் மனது. "நீ கொஞ்சம் ஓரமா போ" என அதை தள்ளியவன் "நான் அவன விசாரிக்கட்டுமா மேம்?" என்றான்

"ஏன்?" என்பது போல ஒரு பார்வைதான் கழுத்தை இடது புறம் சாய்த்து ஒரு கொஸ்டின் மார்க் பார்வை. அவனுக்கு கைகள் பரபரத்தது விட்டால் கேமராவை ஆன் பண்ணி போட்டோவே எடுத்துருப்பான்

"இந்த போச ஸ்கிரீன்சேவரா வச்சா சூப்பரா இருக்கும்" மீண்டும் கதவை திறந்து கூவிய மனதை ஒரு கொட்டு வைத்து அடக்கியவன்

"இல்ல மேம் கை வலிக்கும்மேனு"

"அடப்பாவி எஸ்.பி கிட்டே வழியிறான்" வாயில் கை வைத்து மூடிக் கொண்டார் முரளி.

"சரத் இவன தூக்கி சேர்ல உட்கார வைங்க முத" என்றவள் திரும்பவும் விட்ட வேலையை தெடங்கினாள்.
__________

"சார் இது நேத்து இன்டர்வியூல செலக்ட் ஆனவங்க லிஸ்ட்" அந்த பையிலை அதியனிடம் நீட்டினான் விஷ்ணு.

எல்லாவற்றையும் பார்வையிட்டவன்
அதில் ஆராதனா பேரை எடுத்து பார்த்து கொண்டு இருந்தான்.

அதில் தெரிந்த அவள் முகத்தை தன் கட்டை விரலால் தடவியவன் "மிஸ்.ஆராதனா ராகவன்க்கு கிண்டி பிரான்ஞ் வேண்டாம்" என்றான்.

ஒரு நிமிடம் விஷ்ணுவிற்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை "அவசர பட்டு ஆராதனா கிட்ட சொல்லிட்டோமே" என்று பதறியது அவன் மனது. நம்பிக்கையாக சொல்லிவிட்டு ஏமாற்றியது போல உணர்ந்தான் முகம் கருத்து சுருங்கிவிட்டது.

"விஷ்ணுராம்" அதியனின் அதட்டலில் நினைவுக்குவந்தான் அவன்

"சார்??"

"எவ்வளவு நேரம் கூப்பிடுரது பகல்கணவா…? கொஞ்சமாச்சும் ஜெனரல் மேனேஜர் மாதிரி நட்ந்துக்கோங்க. நான் சொன்னத நோட் பண்ணிங்களா?"

"சாரி சார்"

"எல்லாத்துக்கும் சாரி சொல்லிட்டே நிக்காதிங்க… போங்க போய் இந்த முகமத்த கிண்டிக்கு மாத்திட்டு ஆராதனாவ இங்க மேனேஜரா அப்பாயின்ட்மென்ட் ஆடர் டைப் பண்ணிட்டு வாங்க" அந்த பையிலை தூக்கி மேசை மீது எறிந்தவன் சலித்துக் கொண்டான்.

"சார்" ஆச்சரியத்தில் கத்தியேவிட்டான் விஷ்ணு.

"என்ன?" ஒற்றை புருவத்தை உயர்த்தினான் அதியன்.

விஷ்ணுவிற்க்கு அவனை கட்டிபிடித்து முத்தம் குடுக்க ஆசை கிளர்ந்தது எங்கே "அவனா நீ?" என்று சொல்லி வேலைவிட்டு துரத்தி விட்டால் என்ற பயத்தில் அடக்கி கொண்டான்.

"நத்திங் சார் " என்றவனின் முகம்
பளிர் என்று மின்னியது. வேகமாக ஆடரை டைப் செய்ய ஓடினான் விஷ்ணு.

"பயபுள்ள எதுக்கு இப்படி மூஞ்சில லைட்டு விடுறான்?" என்று யோசித்த அதியன் பல்லை கடித்தான். "இவன பத்தி யோசிக்காம விட்டுடனே…" என்று ஒற்றை விரலால் தலையில் அறைந்துக் கொண்டான் அவன்.

விஷ்ணுவுக்கோ தலை கால் புரியாத சந்தோஷம் "மைலி எனக்கு கீழே வொர்க் பண்ணபோறா.. இனி டெய்லி பாக்கலாம்" அவன் மனம் குத்தாட்டம் தான் போட்டது. அவனே ஆடர் டைப் செய்தான்.

ஆடரை டைப் செய்து கொண்டு வந்தவன் அதியனிடம் நீட்டினான். அவன் சையின் பண்ணியவுடன் எடுத்துக் கொண்டும் சென்றான். எல்லாமே மின்னல் வேகத்தில் நடந்தது.

அவனை முறைத்துக் கொண்டே சையின் முதல் அனைத்து வேலையும் செய்த்துக் கொண்டு இருந்தான் அதியன். விஷ்ணு வெளியில் சென்றவுடன் ஆராதனாவின் ரெஸ்யூமை எடுத்தவன் மடித்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டான்.


ஆதி அந்தமும் மறந்து உன் அருகில் கரைந்து நான் போனேன்
ஆண்கள் வெக்கபடும் தருணம் உன்னை பார்த்த பின்பு நான் கண்டு கொண்டேன்

சாய்ந்து அமர்ந்து பாடிகொண்டான் அதியன். சுகமான வழி நெஞ்சை அடைத்தது.


jveukjaBM_tudFxNRth0e6s99nj0pCUXFDrthW4SKSZtRU2eU-Xa9NjscEmwHvKdwqyv8j9J6dFJPRVJtpmmwXjKwUHwirs5-mM31dC5ss_0k9MXu0PHcSziLULuwe5z5DVfyB6A=s0

________

"மேம் ஜூஸ்" டேபிளில் கொண்டு வந்து வைத்தான் சரத். எழுத்து ஷர்ட்டை இழுத்து விட்டவள் டேபிளில் இருந்த ஒரு ஸ்டாம்ப்பை எடுத்து ஜூஸ்ல் போட்டாள்.

"இவன் மூஞ்ச தூக்கி பிடிங்க" அங்கு இருந்த பிசியை பணித்தவள் ஜூஸ் கப்பை கையில் எடுத்துக் கொண்டாள்.

"மீரு ஏமி சதுவுக்குன்னாரு?" தன் காலால் அவன் கால் விரலை மிதித்துக்கொண்டே கேட்டாள் அவள்.

"ஆ.. ஆ எம்.எஸ்.சி மேக்ஸ் சதுவுதானு" அலறினான் அவன்.

"என்ன சார் சொல்றாங்க?" முரளியின் காதை கடித்தான் சரத்.

"என்ன படிச்சனு? தெலுங்குல கேட்குறாங்க"

"மீமு ஜொகர்லு ஆனி மிம்ரு அனுக்குன்த்துனாரா?"

"லேது லேது"

"இப்போ என்ன சார்?"

"எங்கள பார்த்தா உனக்கு காமெடியா இருக்கானு திட்னாங்க"

"தீசுக்கோ" ஜூஸ் கப்பை நீட்டினாள் அவனிடம். வாயை இறுக்கமாக மூடி கொண்டு தலை மறுப்பாக அசைத்தான் அவன்.

"தமிழம் தெலுசா?" அவன் விரலை மேலும் அழுத்தினாள்.

"ஆஆஆஆஆ" "பா...க பாக தெலுசு" கலை பிடித்துக் கொண்டு கதறினான் அவன்.

"இந்த ஜூஸை குடி"

"நோ வேண்டாம்"

"ஏன் ஜூஸ் தானே?"

"அதுல ஸ்டாம்ப் "

"சோ வாட்? டேக் திஸ்" என வாயை மூடிக் கொண்டு மறுத்தான்.

"சரத்"

"மேம்" விரைந்து வந்தான் அவன்

"இவன் வாயை அழுத்தி திறக்க வைங்க" என்றவள் இன்னொரு ஸ்டாம்ப்பயும் அதில் போட்டாள். சரத் அவனின் கன்னத்தை அழுத்த பிடிக்க அவன் கையை தட்டி விட்டவன் முகத்தை திருப்பிக் கொண்டு கத்தினான்.

"வேண்டாம் அது ஸ்டாம்ப் இல்ல drug"

"இல்லையே நான் டெஸ்ட் பண்ணிட்டேன்… டரக் இல்லை குடி" அவள் கப்பை அவன் பக்கத்தில் எடுத்துவரவும் திமிறினான்.

"டெஸ்ட்லலாம் தெரியாது அதுக்கு அவங்க கிட்ட இருக்க கெமிகல்ல தான் தெரியும்… எனக்கு வேற எதும் தெரியாது ப்ளீஸ் விட்டுடுங்க"

"இத சாப்பிட்டா என்ன ஆகும்?"

"எனக்கு தெரியாது"

"நீ இத குடி நான் உன்ன பாத்து தெரிஞ்சிக்கிறேன்"

"நீக்கு செப்த்தானு ப்ளீஸ்" வலியில் கத்தினான் அவன்

"சொல்லு?"

"இத ஒன்னு சாப்பிட்டா ரெண்டு நாள் வரைக்கும் இருக்கும்… ரெண்டையும் ஒன்னா சாப்பிட்டா கைகால் இழுத்துக்கும்…"

"இது பேரு என்ன?"

"ப்ளாட்டர் பேபர்"

"அது எனக்கு தெரியும் நீங்க யூஸ் பண்ற டரக் பேரு என்ன? "

"பர்புல் டிராகன்"

"இத ஸ்கூல் பிள்ளைங்களுக்கும் விப்பிங்களா? " அவன் விரல்கள் அவள் பூட்ஸ்க்கு அடியில் நசுங்கி வழுன்டது.

"இல்ல இல்ல ஒருத்தன் வாங்க வர சொன்னான் ஆனா வரல..நேத்தும் வரேனு சொன்னாள் அதான் நான் அங்க போனேன் பட் அதுக்குள்ள இவங்ககிட்ட நான் மாட்டிக்கிட்டேன்"

"எதுக்கு மதுரைனு சொன்ன?" காலை அவன் விரலை விட்டு நகர்த்தினாள் தக்ஷினா.

"அது ஏற்கனவே நான் அங்க போலீஸ்ல மாட்டிருக்கேன்"

"உன் மூஞ்ச பாத்தாலே தமிழ் நாட்டுகாரன் இல்லனு தெரியுது… நீ சொல்ல ஆரம்பிக்கும் பொதே உன் மூஞ்ச வச்சி உன் டிடெயல்ஸ் எல்லாம் என்கிட்ட வந்துட்டு…"

"முரளி" என அழைத்தவள் கையில் இருத்த கப்பை சரத்திடம் கொடுத்துவிட்டு சைகையால் அந்த பிசியிடம் அவனை வெளியேற்ற சொன்னாள்.

"மேடம்"

"இவனுங்க பெரிய கேங் போல" "சரத் நீங்க FIR பயில் பண்ணிடுங்க … முரளி இவன என்சிபில ஹான்ட் ஓவர் பண்ணிடுங்க"

"ஒகே மேம் "

"என்சிபிக்கு ஜே.சி தான முரளி?"

"ஆமா மேம்" முத்திக் கொண்டது சரத்.

"ஒகே முரளி யூகேரி ஆன்" அவர் நகரவும் சரத்திடம் திரும்பினாள். "சரத் உங்களுக்கு ஒரு ஒர்க்" என ஆரம்பித்து சிலவற்றை சொல்லியவள் "இந்த வீக்கே எனக்கு வேணும்" தீர்கமான குரலில் அவள் சொல்வதை பய பக்தியுடன் கேட்டுக்கொண்டான் அவன்.

"மேம்"

"எஸ்"

"உங்களுக்கு தெலுங்கு தெரியுமா மேம்?"

"இட்ஸ் ஆல் இன் கூகுள் பையா" என்றவள் நகர்ந்துவிட்டாள்

🧛‍♀🧛‍♀🧛‍♀🧛‍♀🧛‍♀
போகாதடி என் பெண்ணே!💕💕

Comment here💓💓💓💓💓💓💓

https://www.sahaptham.com/community/threads/போகாதடி-என்-பெண்ணே-comments.779/#post-4739
 
Last edited:

Writer X

Well-known member
Messages
462
Reaction score
616
Points
93




பெண்ணே 4

கண்மூடி கை வளைவில்
புறா ஒன்றை சிறை வைத்திருந்தேன்
கணவென்று தெரிந்தும் கலைக்க வில்லை
இன்னும் இறுக்கமாக
என்னுடன் தலையணை.


"பாப்பா கிளம்பியாச்சா? டைம் ஆகுது" ஹாலில் இருந்து குரல்கொடுத்தார் துர்கா.

"ஆச்சு மா இந்த நாட் மட்டும் கட்டி விடுங்க மா" என அறையில் இருந்து வெளியே வந்தவள் லெமன் கலர் டாப்ஸ் வையிட் லெகின் ஹைபோணி என்று கலக்கலாக இருந்தாள் ஆராதனா.

துர்காவிற்ககு மகள் அழகை நினைத்து பெறுமையுடன் பயமும் சேர்ந்துக் கொண்டது.

"என்ன இல்லை? நடுத்தர வர்கமாய் இருந்தாலும் தேவைக்கு அதிகமாகவே வருமானம் இருக்கிறதே. இரண்டு ஆண்கள் சம்பாத்தியம் சொகுசாகவே வாழலாம் நல்ல உடை மூணுவேலை சாப்பாடு ஆனால் இது மட்டும் போதுமா? சுயமரியாதை ?

"சம்பாரிக்கிறவங்களுக்கு தான் தெரியும் வீட்டுல உட்காந்து வெட்டி செலவு செய்றவளுக்கு என்ன? எப்போதும் காசு காசு என அலையுறா" இது மாச செலவுக்கு கணவன் கையை பார்க்கும் மனைவியரின் கவுரவமான அவமான வாழ்க்கை இதுதானே அவர்களின் நிலையாய் இருந்தது.

காலையில் பாத்திரத்தில் பால் ஊற்றி காஃபி கலப்பதில் ஆரம்பித்து இரவு பால் டம்ளரை கழுவி வைப்பதுவரை அனைத்தையும் செய்பவர்களுக்கு
கிடைத்த அவார்ட்

"வெட்டியாதானே இருக்க…" அந்த வார்த்தையில் மனம் கசந்துதான் போனது தன் ஆவி பொருள் அனைத்தையும் யாருக்காக கொடுத்தமோ அவர்களே சக மனுஷியாய் நினையாதது வேதனைதானே தானாக பெருமூச்சு ஒன்று வெளியேறியது துர்காவிற்க்கு.

"இவள் வேலைக்கு செல்லும் வரை வார்த்தையால் மட்டுமே அறிந்த சுயமரியாதை எனக்கும் உருவானதே. எதற்காகவும் என்னை யாரிடமும் கையேந்த விடவில்லையே என்ன வரம் பெற்றேன் இவளை பெற?" என பெறுமை பொங்க நினைத்தவரரின் வேண்டுதல்

"என் மக எப்போதும் சந்தோஷமாக நல்லா இருக்கணும் கடவுளே" என்பதுதான். எதிர்காலத்தை அறியும் சக்தி வாய்த்து இருந்தால் கடவுளிடம் வேண்டி இருப்பாரா? இல்லை கடவுளைதான் நினைத்து இருப்பாரா?. இந்த அபலை தாயின் வேண்டுதலை கேட்டு வேதனையுடன் விழி மூடிக் கொண்டது விதி.

"என்னமா கணவா? நான் கிளம்பறேன்" என்றவள் தாயின் கண்ணத்தில் முத்தம் வைத்துவிட்டு சாமியறைக்கு சென்றாள்.

வளைவில் அந்த பிங் பெப் திரும்பும் வரை பார்த்துக் கொண்டு இருந்தார் துர்கா.

அதை செகண்ட் ஹேண்டில் ஆராதனா காலேஜ் போவதற்காக அவள் அம்மா வழி தாத்தா வாங்கி தந்தது. இத்தனை நாள் ஓடாமல் தூசி படிந்து கிடந்ததை இப்போதுதான் சரிசெய்து எடுத்துக் கொண்டு போனாள். காலேஜில் டிராப் செய்ய முன்வந்த ராகவனுக்கு வண்டி ஒன்றை வாங்கி தர மனமில்லை. ஆராதனாவுக்கோ யாராவது பையன்களை பார்கிறாளா? என்று கண்ணாடி வழியாக தன் மேல் ஒற்றை கண் வைத்திருக்கும் நம்பிக்கையற்ற தந்தையுடன் செல்ல விருப்பம் இல்லை.

பஸ்சில் நசுங்கி பிதுங்கி சென்றவளுக்கு தங்கரதமாகத் தான் தெரிந்தது அந்த பிங் பெப்… தன் சேவிங்க்ஸ்சை போட்டு புது வண்டி வாங்கித் தரும் தீர்மானத்தோடு உள்ளே சென்றார் துர்கா.

அதை தான் ஆராதனாவும் தன் ஸ்கூட்டியிடம் செல்லிக் கொண்டு இருந்தாள் "டேய் ரொனால்டோ ஒரு ரெண்டு மாசம் ஓடிரு அக்கா உனக்கு ரெஸ்ட் குடுத்துட்டு வேற வாங்கிடுறேன்"

நினைத்ததை விட முன்னதாகவே ஹில்ஸ் செவன் சென்றுவிட்டாள். ஹெல்மெட்டுடன் வண்டியை பார்க்கிங் உள் ஓட்டி சென்றவளின் எதிரே கார் சாவியை சுற்றிக் கொண்டு வந்தான் விஷ்ணு. அவனை பார்த்ததும் வண்டியை அவனருகில் நிறுத்தினாள்.

"யாருட இந்த நசுங்கின டப்பா?" என்று வண்டியை பார்த்தவன் அதில் இருந்த ஏவி ஸ்டிக்கரை பார்த்துவிட்டான்.

"ஹேய் ரொனால்டோ அண்ட் மைலி" வண்டியின் தலையில் தட்டினான் விஷ்ணு.

"இன்னும் நியாபகம் இருக்கா சீனியர்" செல்லிக் கொண்டே ஹெல்மெட்டை கழட்டினாள் ஆராதனா.

"இந்த டப்பாவ மறக்க முடியுமா இல்ல இத எடுத்துட்டு நான் ஒரு ரவுண்டு போனதுக்கு கிரவுண்ட மூனு ரவுண்ட் ஓட விட்டு அடிச்சியே அத மறக்க முடியுமா? எத மறக்க? ஜூனியர்" அவன் வசனம் பேச அவனை முறைத்து பார்த்தாள் ஆராதனா.

"என்னது என் வண்டி டப்பாவா?" அவள் இரண்டு காலையும் கீழே ஊன்றினாள்.

"இல்லையே யாரு சொன்னா? மைலி நீ கவலைபடதே நான் பார்த்துக்குறேன் எவண்டா அது? ரொனால்டோவ டப்பானு சொன்னது?" எப்போதும் போல அவன் வாட்ச்சை மேலே ஏத்திக் கொண்டு அக்கம் பக்கம் பார்த்து சவுண்ட் குடுக்கவும் அவனை கண்டு குலுங்கி சிரித்தாள் அவள்.

அவள் தன்னை மறந்து சலங்கை சிரிப்பை சிந்த விஷ்ணு ரசித்துப் பார்த்தான் என்றால் ஒருவன் கனழோடு பார்த்தான்

"பபபபபம்******* பப***ம்" ஹாரன் சத்தம் காதை கிழிக்க திரும்பி பார்த்தாள் அவள். ஒரு பிளாக் பென்ஸ் கார் உறுமி கொண்டு நின்றது உள்ளே யார் இருக்கின்றனர் என்று எல்லாம் அவளுக்கும் தெரியவில்லை விஷ்ணுவிற்கும் தெரியவில்லை.

"இது எம்.டி சார் கார் மைலி சீக்கிரம் பார்க் பண்ணிட்டு வா சார் இன்நேரத்துக்கு ரூம்க்கு போயிருப்பாரு. நீ என் கேபினுக்கு வந்துரு அன்னைக்கு வந்தியே" அவசரமாக சொல்லி சென்றான் விஷ்ணு.

அவன் நகர்ந்ததும் அதுவரை இருந்த இளக்கம் மாறி முகத்தில் ஒரு அழுத்தம் ஒட்டிக் கொண்டது. வண்டியை பார்க் செய்தவள் லிப்ட் காக நின்றாள். லிப்ட் ஓப்பன் ஆகவும் அவள் மட்டும் தான் இருந்தாள் 4 ஐ அழுத்திவிட்டு வாட்டர் பாட்டிலை அன்னார்த்தினாள்.

நீரை வாயினில் அடக்கி கண்மூடி ஆசுவாச பட்டுக்கொண்டே கண்திறந்தவள் வாயில் இருந்த நீரை அனைத்தையும் தனக்கு எதிரே நெருக்கமாக நின்றிருந்த நெடுமரதின் மேல் அதிர்ச்சியில் துப்பிவிட்டாள்.

"ஏய் ஏய் ஒ மை கோஷ்" அவன் பின்னே துள்ளி குதித்து நகர "ஸ்ஸ் சாரி சாரி" பதறி பாட்டிலை மூடி கொண்டே அன்னார்ந்து பார்த்தவளின் இதயம் எகிறி குதித்தது பின்னே முதல் நாளே எம்.டி மீது அல்லவா துப்பிவைத்திருக்கிறாள்.

என்றாவது ஒருநாள் டிரைவரை தவிர்த்து அவனே காரை ஓட்டி வருவான் இன்று அவன் மனம் நல்ல மூடில் இருக்க அவனே கடற்கரை சாலை வழியாக டிரைவ் செய்து வந்திருந்தான். ஆராதனாவை பின்னால் இருந்து பார்ததும் நன்கு தெரிந்தது. அவன் பார்க்கும் பொது பக்கவாட்டில் விஷ்ணுவின் புறம் திருப்பி சிரிக்க அதியனுக்கு ஏனோ பற்றிக் கொண்டு வந்தது.

பின் விஷ்ணு சென்றுவிட அவள் பார்க் செய்து வரும் வரை அவளுக்காக தன் காரிலே காத்திருந்தான். அவளை போக விட்டு பின்னால்தான் அவன் வந்தான். லிப்ட் உள்ளே வந்தவன் அவள் எதிரில் போய் நிற்க அவன் மேலேயே துப்பிவிட்டாள் ஆராதனா.

அவளை உருத்து விழித்தான் அதியன். பதற்றத்தில் வேகமாக கைகுட்டையை எடுத்தவள் சிறிதும் யோசிக்காமல் அவன் ஷர்டின் மீதும் கோட்டின் மீதும் இருத்த நீரை வேகமாக துடைத்து கொண்டு இருந்தாள்.

"அய்யோ" என்று இருந்தது அவளுக்கு.

அதியன் ஷாக் அடித்தது போல் நின்றுவிட்டான் பெண்மையின் அன்மை அவனை இம்சிக்க அவள் விரல்களின் மென்மை ஆடையும் தாண்டி அவனை தீண்டி என்னவோ செய்தது இதை உணராமல் அவளோ கருத்தாக டிவியை துடைப்பது போல் அதியனை துடைத்து கொண்டு இருந்தாள். அவளின் இதமான மூச்சிகாற்று அவன் கழுத்து வளைவில் உரசிச்செல்ல அவன் மூச்சிகாற்றோ கொதி நிலைக்கே சென்றிருந்து.

இதற்கு மேல் தாங்காது என்ற நிலையில் தன் உள்ளங்கையால் துடைத்து கொண்டு இருந்த அவளது கையினை தன் நெஞ்சோடு அழுத்தி பிடித்துக் கொண்டான் அதியன். அவன் அவ்வாறு செய்யவும் நெஞ்சு குழியின் மேல் கைகள் சிக்கிக் கொள்ள அவன் இதய துடிப்பை அவள் கைகள் உணர்ந்தன.

அப்போதுதான் அவள் செய்து கொண்டு இருக்கும் காரியமே உரைக்க இருவருக்குமே இதயம் வெளியே வந்து விழும் அளவிற்க்கு துடித்தது. அதியனுக்கோ ஒரு வித மயக்கம்.

அவளுக்கோ ஒரு அன்னிய ஆண்மகனின் அருகில் நிற்பது மட்டுமல்லாமல் அவனை தொட்டு அதற்கு சான்றாக அவன் கைகுள் சிறை கெண்டு இருக்கும் தன் கரத்தினை பார்த்தவளுக்கு மேனிசிலிர்த்து மொத்த ரத்தமும் முகதிற்க்கு ஏற செங்கொழுந்தாய் மாறிவிட்டது முகம். அதியன் அவள் முகசிவப்பை சுவாரசியமாக பார்க்க வெடுக்கென்று கைகளை உருவிக் கொண்டவள் லிப்ட் 4த் ப்ளோரில் திறக்கவும் "சாரி" என்று வாய்க்குள் முனகிவிட்டு விரைந்து வெளியில் சென்று விட்டாள்.

அவள் தலையில் குட்டிக்கொண்டு செல்வதை பார்த்து இதழ்கடையில் ஒரு கள்ளச்சிரிப்போடு அவள் பின்னால் சென்றான் அங்குதானே அவனுடைய கேபினும்.

மழையின் சாரல் என்னைத்
தாக்க விடைகள்
இல்லா கேள்வி கேட்க
எங்கேயோ பார்த்த மயக்கம்
எப்போதோ வாழ்ந்த நெருக்கம்
தேவதை இந்த சாலை ஓரம்
வருவது என்ன மாயம் மாயம்
கண் திறந்து இவள் பார்க்கும் போது

கடவுளை இன்று நம்பும் மனது

எதிர்பட்ட அனைவரும் காலை வணக்கம் வைக்க சிறு தலை அசைப்புடன் அவர்களை கடந்து வந்துக்கொண்டு இருந்தான் விமலன்.

"ஜே.சி சார் இருக்காங்களா?" அங்கு இருந்த ஸ்டெனோவிடம் கேட்டான்.

"இருக்காங்க சார்" என திரும்பி நடந்தவன் போய்நின்றது ஜாயின்ட் கமிஷனர் ஆஃப் போலீஸ் என நீல நிற ஸ்டிக்கரில் வெள்ளை எழுத்துக்கள் பொரிக்க பட்டு ஒட்டி இருந்த கண்ணாடி கதவின் முன்தான்.

கதவை தட்டி பர்மிஷன் வாங்கினான் விமலன்.

"ஏஸ் கம் இன்" உள்ளிருந்து அழுத்தமான குரல் வரவும் புன்னகையுடன் கதவை திறந்துக் கொண்டு சென்றான். எதிரில் இருந்தவன் பையிலை புரட்டி கொண்டு இருக்க நாற்காலியை சத்தம் வருவதைப் போல் இழுத்துப் போட்டு அமர்ந்தான் விமலன். பையிலில் இருந்து தலையை நிமிர்த்தியவன் ஒரு சின்ன சிரிப்போடு அதை முடிவைத்துவிட்டு எழுந்து நின்றான்.

விமலன் அவனை கேள்வியாக பார்க்க தன் வலதுகையை அவன் முகத்திற்க்கு நேர நீட்டி "கங்ராட்ஸ் மிஸ்டர்.விமலன் முத்துவேல்" என

விமலனும் எழுத்து "தேங்ஸ் மிஸ்டர்.புவி வேந்தன்" என இருவரும் கைகளை அழுத்தி பிடித்துக் குலுக்கி கொண்டனர்.

9KsD3eJS7Ysd3b9xipHKY5JoQ4QyBVkqEGaTkJI7GbCkXB1AmGKCGuCbW-EUE_uLiFDw4mSsoO2mDZJbKFrl2IUz4tO3Q3JX3e4QLx38KRIJDB9W0gtuu2uk9_y5nbwnDXqx_rNG=s0


"என்ன புவி நேர்த்து வொர்க்கா? நீ வந்தா என் தங்கச்சிய உனக்கு இன்ட்ரோ பண்ணலாம் என நினைச்சேன்"

"டரிப்பிளிக்கேன் தானே? எனக்கு அங்க கொஞ்சம் வேலை இருக்கு நானே பார்த்துக்கிறேன். அப்பறம் புது எஸ்.பி மேடம் வந்த அன்னைகே ஒரு அக்கியூஸ்ட் விரலை உடச்சி என்கிட்ட அனுப்பிருந்தாங்க" சிரிப்புடன் சொன்னாள் புவி.

"இது பரவால்ல டா புவி மும்பைல ஒரு கேங் லீடர்... அவன் அடியாள் மண்டைய ஒடச்சிட்டேன் ஹாஸ்பிட்டல் போகலைனா செத்துருவான்னு எனக்கு போன் பண்ணினா நானும் அந்த ரவுடிக்கு தெரியுரதுக்கு முன்ன போய்டனும்னு அடிச்சி பிடிச்சி போய் பார்த்தா… அடிபட்டு கிடந்ததே அந்த கேங் லீடர் தான்" அவன் சலித்துக்கொள்ள புவி சத்தமாகவே சிரித்தான்.

"அதுக்கு தானே தீ ஃபாரின்லாம் போய் வர்மகலை தற்காப்பு கலைனு கத்துட்டு வந்தாங்க. விமல் உன் தங்கச்சி ஒரு பேட்வுமன் டா"

"என்னது பேட்வுமனா? யூ மீன் வௌவால்?" தாடையை ஒற்றை விரலால் தேய்த்துக்கொண்டே கேட்டான் விமலன்.

"எஸ் ஐரமீன். உன் தங்கச்சி கதைய கேட்கும் போதெல்லாம் பேட்மேன் படத்த பார்த்த பீல்தான்"

"ஹாஹா எனக்கு நேருல பாக்கும் போதெல்லாம் பேய் படம் பார்க்குற மாதிரியே இருக்கும்"

"நீ சொன்னதை மட்டும் தீ கேட்டா?" கண்ணை சுருக்கி கொண்டு சிரித்தான் அவன்.

"என்ன கேட்டா? என்னை இங்கேயே தீ வச்சி கொழுத்திருவா"

இருவரும் சேர்ந்து சிரிக்க இவர்களின் பேச்சுடை தலைவியோ ஒருத்தியை அடித்து விளாசிக் கொண்டு இருந்தாள்.

"ஏய் உண்மைய சொல்லு... கடைக்கு வர சின்ன பொண்ணுங்ககிட்ட என்ன சொன்ன?"

"நான் எதுவும் சொல்லலை மேடம்" கன்னத்ததை பிடித்துக் கொண்டு அழுதாள் அவள்.

"என் கிட்டயே பொய் சொல்றியா?" என்றவள் அவள் முடியை பிடித்து உலுக்கி இன்னும் இரண்டு அறைவைக்க அதை பயம் கலந்த திருப்தியோடு பார்தனர் அந்த கல்லூரி மாணவிகள்.

"இல்ல மேடம் நான் எதுவுமே செய்யலை அய்யோ என்ன விட்டுடுங்க" அவள் கதற தக்ஷினாவின் ஒற்றை பார்வையில் அந்த போன் ரெக்கார்ட்டை ஒடவிட்டனர். அதை கேட்ககேட்க அந்த பெண்ணிற்க்கு முகம் வெளுத்துவிட்டது. தக்ஷினாவுக்கோ கோபம் தலைக்கு ஏற தன் பிஸ்டலை எடுத்து அந்த பெண்ணின் குரல்வலையில் வைத்து அழுத்தி "சொல்லுடி" என கத்தினாள். அப்படி ஒரு சத்தம் சுற்றி நின்ற காவலர்கள் அனைவரும் ஒர் அடி பின்னே நகர்ந்தனர்.

"ஆஆஆஆஆஆஆ" பயத்தில் கண்ணை மூடிக்கொண்டு அந்த பெண் அலற பிஸ்டலை நகர்த்தி "ம்ம்" என்று தக்ஷினா முறைக்க வாயை திறந்தாள் அவள்.

"என் கடைக்கு வர ஸ்கூல் பொண்ணுங்க கி...கிட்ட நல்லா பேசி கம்மி விலையில் திங்ஸ் தந்து அடி...க்கடி வர வைப்பேன் மேடம். எ...ல்லாரும் கவர்மென்ட் ஸ்கூல்ல படிக்கிற ஏழை பொ...ண்ணுங்க" என்று தடுமாறி அவள் நிறுத்த.

"சொல்லு" அதட்டினாள் தக்ஷினா.

"அவ...அவங்க வீட்ட பத்தி பேச்சிகொடுத்து தெரிஞ்சிக்கிட்டு பேசி.. பேசி வேலை தரன் காசு கிடைக்கும் என சொல்லி… பிரைன்வாஷ் பண்ணி விபச்சாரத்தில சே...ர்த்து விடுவோம்…" அவள் சொல்லி முடித்ததும் லத்தியால் கையில் சுள் என்று விழுந்தது.

"இது வரைக்கும் எத்தன பேரை சேர்த்துவிட்டுருக்க?" ஒற்றை கையால் ஸ்லீவை ஏற்றி கொண்டே கேட்க வியர்த்து வழிந்தது அந்த பெண்ணிற்க்கு.

"20 க்கும் மேலே இ...இருக்கும்"

"ஒத்துக்காத பிள்ளைகள என்ன பண்ணுவ? "

"ஒத்துக்கிற வரைக்கும் பேசுவோம் அப்படியும் ஒத்துக்கலைனா வெளியே சொன்னா காசு திருடிட்டு பேய்ட்டனு போலீஸ்ல பிடிச்சிக்கொடுத்துருவேனு மிரட்டி… மிரட்டி" என அவள் தேமீ இழுக்க இன்னொரு அடியும் விழுந்தது.

"கழுத்துல காதுலனு போட்டு இருக்க கொஞ்ச நகையும் பிடுங்கிட்டு தான் விடுவோம்"

"யாரு கூட்டு உனக்கு?"

"என் மாமா மேம் போலீஸ் பார்தோன ஓடிட்டான்" என அழுக துவைத்து பிழிந்து விட்டுதான் வெளியே வந்தாள் அவள். அந்த சிறுமிகளை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அங்கு மாணவிகளிடம் மொபைலை குடுக்கும் சாக்கில் சைட் அடித்துக் கொண்டு இருந்த சரத்தை பார்தவள் அவனை முறைத்து பார்க்க அதை அறியாதவன் காரியத்தில் கண்ணாக இருந்தான் அது தான் சைட் அடிப்பதில்.

தக்ஷினாதான் அவள் விசாரிப்பதை அவர்களும் பார்க்கவேண்டும் என்று மற்றொரு அரையில் இருந்து மிரர் வழியாக பார்க்க வைத்திருந்தாள் அதனை வீடியோ எடுத்துவிடாமல் இருக்க மொபைலை வாங்கி வைத்திருந்தனர். அதைதான் வாலண்டியராக டிஸ்ட்ரிபூட் செய்துக் கொண்டு இருந்தான் சரத்..

"சரத்" தக்ஷினாவின் குரலில் மொத்தமாக கொடுத்துவிட்டு விரைத்துவந்து சலூட் வைத்தான் அவன்.

"ஸ்டேஷன்ல இல்லாம இங்க என்ன பண்றிங்க சரத்?"

"புது கேஸ் நீங்க விசா...ரிக்கிறதா…. முரளி சார் தான் வர சொன்னாங்க மேம்" அவள் முறைக்கவும் முரளியையும் மாட்டிவிட்டான்.

அவள் அவரை திரும்பி பார்க்க முரளி சரத்தை முறைத்தார்.

"மேம்... எப்படி மேம் இரத்தமே வராம இந்த அடி அடிக்கிறிங்க?"

"சரத் நீ ஆசப்பட்டா உன்ன வச்சி மேடம்கிட்ட செல்லி ஒரு சின்ன டெமோ காட்ட சொல்லவா?" முரளி சீரியஸா பேசவும் அரண்டு போன சரத் "நோ தேங்க்ஸ் சார்" என சலூட் வைத்தான்.

அந்த மாணவிகளை அருகே அழைத்த தக்ஷினா அதில் இருந்த ஒரு மாணவியை மட்டும் முன்னே அழைத்து தன் கையில் இருந்த மொபைலை அவள் கையில் வைத்து தொழில் தட்டி கொடுத்தாள்.

"பிராவோ கேர்ள் கீப் இட் அப்"

"தேங்ஸ் மேம்"

"உனக்கு எப்படிம்மா இந்த விசயம் தெரிஞ்சது?" முரளி.

"நாங்க சில திங்ஸ் வாங்க மார்னிங் அந்த கடைக்கு போவோம் சார். ஆனால் காலேஜ் வெர்க்காக ஒரு நாள் ஈவ்னிங் போனோம் அப்போ அங்க இருந்த ஒருத்தன் எங்க பக்கத்து வீட்டு பாப்பாவ உள்ள அழைச்சிட்டு போனான். அவன நான் போலீஸ் பிடிச்சிட்டு போகும் போது பார்த்த நியாபகம் இருந்தது. அந்த பாப்பாகிட்ட என்னனு கேட்டா எதுவும் சொல்லமாட்டேன்னு அழுதுச்சி. அதான் நாங்க மாத்தி மாத்தி தினைக்கும் போய் என்ன நடக்குதுன்னு பார்த்தோம். நிறைய தப்பா இருந்தது அதன் அவங்களுக்கு தெரியாம வீடியோ எடுத்தோம் சார். தக்ஷினா மேம் பத்தி நியுஸ்ல பார்த்தேன் அதான் இவங்ககிட்ட சொன்னோம்" அவள் நீண்ட உறையை முடிக்கவும்.

"நல்ல விசயம் தான் ஆனா ரிஸ்க் எடுக்காதிங்க. எதாச்சும் பிக்யூலியரா இருந்தா எங்களுக்கு இன்பார்ம் பண்ணுங்க" முரளி.

தன் விசிட்டிங் கார்டை எடுத்தவள் அப்பெண்ணினிடம் நீட்டி
"எமர்ஜென்சினா எந்தடைமா இருந்தாலும் கால் பண்ணு ஆஷா" என்றாள்.

"என் நம்பரும் வேனும்னா சொல்லுங்க.. தரேன்" அவசரமாக வந்தான் சரத்.

"சரத்… "

"இவங்க போரத்துக்கு ஆட்டோ தானே மேம்?"

"யோவ் கான்ஸ்டபிள் ஒரு ஆட்டோவ கூட்டிட்டு வாயா" என செல்லிக் கொண்டு வாயிலுக்கு நழுவ

"சரத்... " தக்ஷினாவின் அதட்டலில்

"மேம் இதோ நானே போய்ட்டேன்" என்றவன்
"கான்ஸ்டபிள் சார் நீங்க இருங்க நானே போறேன்" என்று ஆட்டோ பிடிக்க ஓடினான்.

ஆட்டோ பிடித்து அவர்களை அதில் ஏற்றி கடமை தவறாமல் ஆட்டோகரனையும் மிரட்டி
"பயப்படாம போங்க" என உள்ளே பார்த்து அவன் சொல்லவும் குபீர் என்ற ஒரு சிரிப்பலை. ஆட்டோவில் இருந்து தலையை நீட்டிய ஆஷா "சரத் சார்" எனவும் ஆவலாக அவனும் சொல்லுங்க என்பது போல பார்க்க

"நீங்க சீரியஸ் போலீஸா இல்ல சிரிப்பு போலீஸா" அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள் அவள்.

"அடிங்க என்ன லந்தா? பொய் கேஸ்ல பிடிச்சி உள்ள போட்டுவேன்" அவன் முறைக்கவும் நன்றாக சிரித்தவள்.

"லா ஸ்டுடென்டையே மிரட்டுறீங்களா" என்றவள்.

"தக்ஷினா மேம்" என்று அதிர்ச்சியாக கூவ பதறி திரும்பினான் சரத்.

மீண்டும் சிரிப்பு சத்தம் கேட்க்க அதோடு ஆட்டோவும் ஸ்டார்ட்ஆகி நகர

"பாய் இன்ஸ்பெக்டர் சார்" என மாணவிகள் அனைவரும் கோரசாக கையாட்டிவிட்டு சென்றனர்.
________

"நீ இருக்க போஸ்ட்கு ஜெனரல் மேனேஜன் தான் சொன்னாங்க மைலி பட் திடீர்னு ஆயில் கம்பெனிக்கும் என்னையே ஜி.எம்ஆ அப்பாயின்ட் பண்ணிட்டு எனக்கு கீழ உன்ன மேனேஜரா போட்ருக்காங்க. நீ போய் எம்.டிய பார்த்துட்டு வந்து உன் வொர்க்க ஸ்டார்ட் பண்ணு"

"சரி விஷ்ணு"

"மைலி ஆல் தீ பெஸ்ட்" அவன் தம்ஸ்அப் காட்ட இடது புறம் தலையை சாய்த்தவள் இதழை வளைத்து மென் புன்னகை சிந்தி சென்றாள்.

அந்த கண்ணாடி கதவிற்கு முன் தயக்கத்துடன் வந்து நின்றாள் ஆராதனா.

"மே ஜ கம் இன் சார்?"

"ஏஸ்" உள்ளிருந்து வந்த குரலில் ஹாட்பீட் படபடவென அடித்துக் கொண்டது அவளுக்கே கேட்டது.

கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்தவளின் பார்வை முதலில் சென்ற இடம் அவன் டிரஸ்சில் தான். முதலில் இருந்த கருநீல நிற ஷர்ட் மெஜந்தா கலராய் மாறி இருந்தது.

"நல்லா மேக்கப் பண்ணுவான் போலையே. சும்மா சொல்லக்கூடாது அதை விட இந்த ஷர்ட்ல நல்லாதான் இருக்கான்" அவள் கண்கள் அதியனை ஸ்கேன் எடுக்க "ஆமா ஆரா அந்த ஹேர் ஸ்டைலும்" என ஒடிவந்தது மனது. அவள் பார்வை அவன் வழது கையில் நிற்க அந்த கை ஆப்பிள் லோகோ போட்டிருந்த லேப்டாப்பை மூடி பக்கத்தில் தட்டவும் நினைவுக்கு வந்தவள் இமையுயர்த்தி அவனை பார்த்தாள்.

"பார்த்தாச்சா?" ஒற்றை புருவத்தை ஏற்றி அவன் கேட்க "ஏ..என்ன ச..சார்?" அவள் தடுமாற இதழ்கடையில் சிரிப்பை அடக்கியவன் "ஜாயினிங் ப்ரோசிஜர்ஸ் பார்த்தாச்சானு கேட்டேன்" எனவும் தான் ஆசுவாசம் அடைந்தாள்.

"உங்ககிட்ட சையின் வாங்கிட்டா பார்மாலிடிஸ் ஓவர் என ஜி.எம் சொன்னாங்க சார்" என அவள் சொல்ல விஷ்ணுவுக்கு அழைத்து வர சொன்னவன் குஷன்சீட்டில் சாய்ந்து அமர்ந்துக் கொண்டான்.

"இங்க சீனியர் மேனேஜர் ராமநாதன் அவர் உங்களுக்கு என்ன வொர்க் என்ன செய்யனும் எல்லாம் சொல்லுவார்"

"ஒகே சார்"

அப்போது விஷ்ணுவும் சில பேப்பர்ஸை எடுத்துக் கொண்டு உள்ளே வந்தான். அதில் சையின் செய்தவன்

"விஷ்ணு மீட்டிங் முடிஞ்சதும் நீங்க கிண்டி ப்ரான்ச் போய் ஒன்ஸ் பார்த்துட்டு எனக்கு மெயில் பண்ணிட்டு கிளம்புங்க" என்றவன் ஆராதனாவை பார்த்தான்.

"நீங்க மீட்டிங் முடிஞ்சதும் கிளம்பிராதிங்க ரேவன் கம்பெனி மீட்டிங் இருக்கு"

"சார் அது.. " இடையில் விஷ்ணு இழுக்க "விஷ்ணுராம் இனி ஆராதனா எனக்கு பிஏ வொர்க் பண்ணுவாங்க உங்களுக்கு வேற வொர்க் அதிகமா இருக்கு. நீங்க உங்ககிட்ட இருக்க பையில்ஸ்லாம் அந்த ரூம்க்கு ஷிப்ட் பண்ணிடுங்க" என்றவன் அவனுக்கு எதிரே இருந்த கண்ணாடி அறையை காண்பித்தான்.

அவன் ரூமில் இருந்து அந்த கேபினிற்க்கு ஒரு கண்ணாடி கதவும் இருந்தது.

அது அவன் பிஏ விற்காக உருவாக்கபட்டது. கோண்பிடென்சியல் மேட்டர் அனைத்தையும் அதியனே பார்த்துக்கொள்வான் அதனால் அவனிற்க்கு பி.ஏ தேவை படவே இல்லை. ஆனாலும் சிலவற்றை விஷ்ணுவின் பொருப்பில் விட்டிருக்க அதை தான் அவளிடம் மாற்றி இருந்தான்.

"எனக்கு உங்க டைப்பிங் பார்க்கனும்" என்றவன் நான்ங்கு பேப்பர்ஸை விஷ்ணுவிடம் நீட்டினான். ஆராதனாவிடம் அங்கு இருந்த சிஸ்டத்தை காட்டி "விஷ்ணு அவங்களுக்கு டிக்டேட் பண்ணுங்க" என்றவன் நாற்காலியில் சுழன்று அவளை பார்த்தவாறு அமர்ந்துக் கொண்டான்.

அந்த பால்கலந்த மஞ்சள் நிற டாப்ஸ் அவளுக்கு நன்றாக இருந்தது. தோளில் புதிதாக துப்பட்டா குடிவந்திருந்தது. கீ போர்டில் முன்னும் பின்னுமாக ஆடி விளையாடும் விரல்களை பார்த்தான். சற்றுநேரம் முன் தன் கையினில் சிக்கி இருந்த அந்த வெண்டை பிஞ்சு விரலின் மென்மை அவன் உள்ளங்கையில் குருகுருத்தது. அவள் விரலினை நீவி சொடக்கு எடுத்துவிட்டு முத்தம் வைக்க ஆசை ஆசையாக வந்தது அவனுக்கு.

"நீயாடா அதியா?" அவன் மனதின் கேள்வியில் சட்டென்று வெட்க்த்தில் காதுமடல்கள் சிவந்துவிட்டது அவனுக்கு.

பார்வையை உயர்த்தியவனின் கண்ணில் பட்டது காதோரம் சுருண்டு கம்மலோடு பிண்ணிகிடந்த முடி. அதனை பிரித்துவிட்டு காதின் பின் ஒடிக்கிவிட்டு கம்மலை சுண்டி விட்டால் என்ன? என்று இருந்தது.

அவன் நினைத்தது அவளை சென்றடைந்தது போல் அவளே விரலாள் ஒடிக்கிவிட்டு கையை எடுக்க அவள் விரல் பட்டு கம்மல் ஆடியது.

ஸ்கிரீனில் ஓடிய வார்த்தைகளை விரட்டி நடனமாடிய விழியும் அதன் மேல் குடையாய் கவிழ்திருந்த இமையும் சுருங்கி வளைந்து ஏறி இறங்கி கொண்டு இருந்த புருவத்தையும் வருடி விடச்சொல்லி கட்டளையிட்டது மனது. புசூபுசூவென இருந்த கன்னத்ததை கிள்ள தோன்றியது அவனுக்கு.

"நல்லா பொம்மேரியன் குட்டி மாதிரி புசூ புசூனு இருக்க பப்பி மா ஹய்யோ" அவன் மனதின் புலம்பல் அவனுக்கே நன்றாகதான் இருந்தது.

அவள் இதழ் என்னும் அமுத சுரப்பியில் அவன் பார்வை போகும் நேரம் விஷ்ணுவின் கையில் இருந்த காகிதம் பறக்க அதை எடுக்க குனிந்துவிட்டாள் ஆராதனா.

"கரடிபயளே" பல்லை நறநற வென கடித்தான் அதியன்.

போகாதடி என் பெண்ணே!!
💝💝💝💝💝

Comment here:
 
Last edited:

Writer X

Well-known member
Messages
462
Reaction score
616
Points
93
பெண்ணே 5

AF9JohVEUtVFYEmcncEHEGqK9qSY5a2MX1HjSv-7k98ngy5GK0U8FWM9FLsusJKrHtMofoulbJVtagVDLpDzN6kJdu2XvHgUMOdlshyDi871nMn4Fnx__qRrHAivWE_73T_935Tc=s0


"சார்" அதியனின் முகம் சீரியஸ் மோடில் இருந்தது. ஸ்க்ரீனில் இருந்து பார்வையை அகற்றாமலே இருந்தான் அதியன்.

"வாட்?"

"பிரின்ட் அவுட்" அவள் பேப்பரை அவனிடம் நீட்டிக் கொண்டு இருக்க அவள் முகத்தை தவிர்த்து பேப்பரை வாங்கியவன் அதனை தலைகீழாக திருப்பி அலட்சியமாக ஒரு பார்வையை ஓட்டிவிட்டு

"டைபிங் தெரியுமா?" என்றான்.

"இவன் என்ன லூசா இவன் கண்ணுமுன்னாடி தானே அடிச்சேன்" ஆராதனா மனதில் நினைத்தாலும் அவன் எம்.டி என்பதனால் கவனமாக பேசினாள்.

"தெரியும் சார்"

"செகண்ட் கிளாஸ்ல பாஸ் ஆனிங்களா?" ஏகத்திற்க்கும் அவன் முகத்தில் அலட்சியம்.

"டிஸ்டிங்ஷன் சார்" அவசரமாக இடையே வந்த விஷ்ணுவை கண்டிக்கும் பார்வை பார்த்தான் அதியன்.

"ரெசியூம்ல போட்டு இருந்தாங்க" அவன் உள்ளே சென்ற குரலில் இழுக்கவும் "விஷ்ணு நீங்க உங்க சீட்க்கு போகலாம்" அதில் வெளியே போ என்ற கட்டளை இருந்தது. அவன் சென்றவுடன் ஸ்க்ரீனில் பார்வையைவிட்டவன் கையை நீட்டி எதிரே இருந்த சேரை காட்டவும் அது ஆராதனாவிற்கு புரியவில்லை.

அங்கு இருந்த கம்பாட்டிலை தான் கேட்கிறான் என்று நினைத்தவள் அதை தூக்கி அவன் கையில் வைக்கவும் நிமிர்ந்து பார்தவனுக்கு சிரிப்பை அடக்க படாதபாடாக இருந்தது. முயன்று அவளுக்கு காட்டாமல் மறைத்தவன். அதை அவளிடமே கொடுத்து "உட்காரச் சொன்னேன்" என்றான்.

அவள் அமரவும் கண்களை ஸ்க்ரீனில் பதித்தவன் "உங்கள பார்த்தா அப்படி தெரியலை" எனவும் அந்த கம்பாட்டிலை அவன் தலையில் கவிழ்க தோன்றியது ஆராதனாவுக்கு.

"எங்கயாச்சும் புரியும்படி பேசுறானா. இவனுக்கு பெரிய அட்டிடுயூடு கிங்னு நினைப்பு" பொறுமை பறந்துக்கொண்டு இருந்தது அவளுக்கு.

"எப்படி புரியல சார்?" அவள் அவனை உற்றுபார்த்து கேட்கவும் கண்ணை அகற்றாமலே பிரின்ட்அவுட் பேப்பரை தட்டி "டிஸ்டிங்ஷன்னு" எனவும் அவளுக்கு சூள் என்று கோபம் ஏறியது.

"என்னை பார்த்தா தெரியாது சார் நான் டைப் பண்ண டாக்குமெண்டை பார்த்தாதான் தெரியும்" சூடாக வந்தன பதில்.

"இதையா?" என்று அந்த பேப்பரை எடுத்துக் கொண்டு நிமர்ந்தவனின் பார்வை அவள் கோவை பழ இதழ்களிலே தேங்கி நின்றுவிட்டது. அவள் ஏதோ பேச உதடுகள் ஒன்றோடு ஒன்று முட்டி மோதி குவிந்து வளைத்து ஏறி இறங்க அவன் இதயமும் சருக்கி விழுந்து உருண்டு புரண்டு கொண்டு இருந்தது.

❤❤உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்
என் ஜென்மம் வீணென்று போவேனோ?
உன் வண்ண திருமேனி சேராமால்
என் வயது பாழ் என்று ஆவேனோ?
உன் அழகு ராஜாங்கம் ஆளாமல்

என் ஆவி சிறிதாகிப் போவேனோ?❤❤

"சார்…. சார்" ஆராதனாவின் அதட்டலில் நினைவிற்கு வந்தவன் அவள் கவனித்துவிட்டாளோ என்ற பதற்றத்தில் எழுந்து நின்றேவிட்டான் அதியன். அவன் எழுந்ததை பார்த்து அவளும் எழுந்து நின்று அவனையே பார்த்தாள்.

அவன் பார்வை மீண்டும் மீண்டும் அவள் இதழை தீண்டி விலகியது. "அவள் பக்கத்தில் போ" என மனது தூண்ட ஏசி காற்றிலும் வியர்த்துவிட்டது. அருகில் இருந்த நீரை வேக வேகமாக குடித்தான் அதியன்.

"ஆர் யூ ஆல்ரைட் சார்?" அவன் பதற்றத்துடன் இருப்பதை பார்த்து அருகே வர விழைந்தாள் ஆராதனா.

அவனுக்கு தண்ணீர் தலைக்கே ஏறிவிட்டது இரண்டடி பின்னால் நகர்ந்து நின்றவன் "ஐம் ஓகே ஐம் ஓகே" என்று பதற அவனை கேவலமாக ஒரு பார்வை பார்த்தாள்.

"இதுக்கு தான் இவ முகத்த பாக்காம இருந்தேன்" தலையில் கைவைத்தவன் அவள் அவனையே பார்கவும் "என்ன?" என அவள் பேப்பரை காட்டவும் அதை தூக்கி டஸ்ட்பின் உள் போட்டுவிட்டான் அதியன். அவள் முறைத்து பார்க்கவும் தான் அவனுக்கே அது புரிந்தது.

"ஹையைய்யோ" என குப்பைதொட்டிக்கு ஓடிய கையை இழுத்துபிடித்து "கெட் அவுட் நவ்" என வேகமா சொல்ல அவளுக்கு அவன் திட்டியது போல் இருக்கவும் முகம் கன்றி விட்டது.

அவள் நன்றி என்ற சொல்லோடு திரும்பி வேகமாக நடக்க தலையில் தட்டிக் கொண்டவன் கதவில் கைவைக்கும் முன் அவளை அழைத்திருந்தான்.

"ஆராதானா"

"திமிரு பிடிச்சவன் எதுக்கு கூப்பிடுறான்?" வாய்க்குள் முனுமுனுத்தவள்

"சார்?" என

"ஒரு ஒன் ஹவர் கழிச்சு திரும்ப வாங்க"

"ஓகே சார்" ஒரு முறைப்போடு சொல்லிச் சென்றாள்.

"அம்மாடி எம்.டியையே எப்படி முறைக்கிறா" இருக்கையில் விழுந்து ஷர்டில் இரண்டு பட்டனை கழட்டிவிட்டு டையை தளர்த்தி சரிந்து அமர்ந்தவன் "யப்பா இவள பக்கத்தில பார்த்தா இவ்வளவு இம்சையா இருக்கு. டேய் அதியா… இவ பக்கத்தில இருக்கும் போது ஜாக்கிரதை... கொஞ்சம் சிலிப் ஆச்சு உன் பேருக்கு பின்னாடி இருக்க எம்.டிய தூக்கிட்டு பொறுக்கினு மாத்திருவா" வேகமாக தலையை உழுக்கிகொண்டான் அதியன்.
——————

தக்ஷினாவின் முன் இருந்த இரண்டு இருக்கையில் ஒன்றில் விமலனும் மற்றோன்றில் முரளியும் அமர்ந்திருந்தனர்.

"சொல்லு தீ என்ன விசயம்?" என விமலன் குரலில் யோசனையில் இருந்து வெளியே வந்தவள் அவனையும் முரளியையும் பார்த்தாள்.

"விமி எனக்கு சத்யா கேஸ் பத்தி நல்லா தெரியனும். இது வரைக்கும் நீ என்ன அனலைஸ் பண்ணிருக்க எல்லாத்தையும் சொல்லு" அவன் முரளியை திரும்பி பார்க்க அவர் நானில்லை என்பது போல தலையசைத்தார்.

"முரளி சொல்லல இந்த கேஸ் பத்தி விசாரிக்கதான் நான் இங்க வந்தேன்"

"அந்த கேஸ்சதான் குளோஸ் பண்ணியாச்சே எதுக்கு திரும்ப?" சலித்துக்கொண்டான் விமலன்.

"ஆமா மேடம் இத திரும்ப ஓப்பன் பண்ணாலும் வேஸ்ட்தான்" அவர்கள் இருவரையும் முறைத்தவள்

"நீங்க குளோஸ் பண்ண லட்சனம் தான் தெரியுமே"

"தீ ஒழுங்கா பேசு" அதட்டினான் அவன்.

"நீ என்ன பண்ணி வச்சிருக்க விமி?"

"என்ன பண்ண சொல்ற? இதுக்கு மேல கேஸ் மூவ் ஆகவே இல்ல ரெண்டு வருசமா சின்ன ஆதாரம்கூட கிடைக்கல"

"அதுக்குனு குடிச்சிட்டு சூசைட்னு அந்த பொண்ண அசிங்க படுத்திட்டிங்க. அப்படித்தானே?" அவள் வார்தையை கடித்து துப்ப விமலனுக்கும் கோபம் வந்தது.

அங்கு இருந்த பெரிய ஸ்க்ரீனை அவள் ஆன் செய்ய சில நிமிடங்களில் ஒரு புகைப்படம் தோன்றியது. அத்தனை கோரமாக இருந்தது அப்படம். ஒரு வாரம் தண்ணீர்ல் ஊரி அழுகி ஆடை இல்லாமல் ஒரு பெண்ணின் சடலம். வரிசையாக பத்து படங்கள் ஒவ்வென்றும் மிகவும் காயம் ஏற்பட்ட இடத்தை ஜூம்மில் காட்டின.

கடைசியாக அந்த சத்யா எனப்படும் அந்த பெண்ணின் அழகான படம் ஒன்றும் இருந்தது.

பத்து முறையாவது திரும்பி பார்க்க வைக்கும் அழகு. மானிரத்தில் மீன் விழிகளோடு தேவதையாய் வசீகரிக்கும் புன்னகையோடு இருந்தாள். ஆயுள் தான் இல்லை. முரளி இதை ஆயிரம் முறையாவது நினைத்திருப்பார்.

மீண்டும் ஒரு படத்தை எடுத்து ஜூம் செய்தவள் "இத பாரு விமி சூசைட் பண்ணிக்கிட்ட பொண்ணு உடம்பில எப்படி பல்தடம் வந்தது? அந்த காயத்தை பார்த்தல? சாதரணமா அந்த பொண்ணு சாகல ரொம்ப மோசமா கொடுமை படுத்திருக்காங்க. லெப்ட் சைட் டீத்லாம் நொருங்கிருக்கு தாடை நகர்ந்திருக்கு அந்த அளவுக்கு பலமா அடிச்சிருக்காங்க. ரைட் ஹான்ட் ரிஸ்ட் ஒடஞ்சிருக்கு இன்னும் 50 இருக்கு சொல்ல. இத எப்படி சூசைட்னு சொன்னிங்க" சீறினாள் அவள். அந்த படத்தை பார்த்தவனுக்கு கோபம் இருந்த இடம் தெரியாமல் போனது.

"இந்த விசயம் எல்லாம் எனக்கு தெரியாதுனு நினைச்சியா? அந்த பொண்ண மோசமா ரேப் பண்ணி உயிரோட டார்ச்சர் பண்ணிருக்காங்க. அந்த சத்யா சேலம் பஸ் ஸ்டாண்ட்ல கடைசியா நடந்து போன சிசிடிவி வீடியோ கிடைச்சது. அததோட அந்த கேஸ் எங்கையும் மூவ் அகல. எப்படி சென்னை வந்தா? யாரு பண்ணாங்க? ஒரு டி.என்.ஏவும் கிடைக்கல. அந்த எரிய தவிர எங்க தேடுவதுனும் தெரியல. பிரஸ் மீடியானு வேற வேற நீயூஸ்காக டார்ச்சர். எத்தன க்ரைம்!! இடையே ஜாதிசங்க தலைவர் கொலை அதுக்கு ஹெவி பிரஷர். இந்த கேஸ்ச குளோஸ் பண்ணிட்டு அத பாருங்கனு ஐ.ஜி ஆர்டர். இதுல ரெண்டு வருசம் நான் எவ்வளவு டிரை பண்ணியும் ஒரு லூப்பையும் பிடிக்கமுடியலலை" அவன் முடிக்கவும் தண்ணீர் கிளாஸ்சை அவனிடம் நகர்த்தினாள் தக்ஷினா.

"அப்பா பேர யூஸ் பண்ணிருக்கலாம்"

"தீ" அவன் முறைக்கவும் அவளும் அவனை முறைத்தாள்.

"தக்ஷினா மேடம் அந்த கேஸ்ச விமலன் சார் டி.எஸ்.பி ரத்னம் கிட்ட மாத்திவிட்டாரு. அவர்தான் இதுக்கு மேல மூவ் பண்ண முடியலனு சூசைட்கேஸ்னு முடிச்சிட்டார். அவருக்கும் இப்படி முடிக்க இஷ்டம் இல்லதான் பட் இது மாதிரி பல ரேப் கேஸ் நிறைய பிரஷர்"

"ஐ அண்டர்ஸ்டாண்ட் முரளி. சரி நீங்க போங்க. அப்பறம் ரத்னம் கிட்ட நான் வர சொன்னதா சொல்லுங்க "

"ஒகே மேடம்" என்றவர் விடைபெற்று கிளம்பி வெளியே வந்தவர் தன் மனைவிக்கு அழைத்தார்.

"ஹலோ என்னமா பண்ற? பாப்பா ஸ்கூல்கு போய்ட்டாலா?. நீ உள்ள விட்டுட்டு தானே வந்த?"

"ஒன்னும் இல்ல சும்மாதான். மதியம் போய் பார்த்துட்டு வா. ஈவ்னிங் நான் வந்து அழைச்சிட்டு வரேன்னு சொல்லிடுமா"

"சரிமா" போனை வைத்தவர் மனதில் தோன்றியதெல்லாம் இன்னும் கவனமாய் இருக்கவேண்டும் என்பதே. பெண்ணை பெற்றவருக்கு பயமாக தான் இருந்தது.

"தீ மா ஆர் யூ ஓகே நவ்?"

"நாட் ஓகே விமி. இத நான் திரும்ப ஓப்பன் பண்ண போறேன்"

"கண்டிப்பா பண்ணலாம் பட் நீ டென்ஷன் ஆகாத. கோவபட்டா நிறைய விசயம் கண்லபடாம பொய்டும்"

"ஹார்டு வொர்க் விட ஸ்மார்ட்டா மூவ் பண்ணனும்" சின்ன சிரிப்போடு அவனோடு அவளும் சோர்ந்து சொன்னாள்.

"நீ சின்ன பொண்ணு தீ" அவனை முறைத்ததாள் தக்ஷினா

"நான் ஒரு ஸ்பி"

"23 ஒரு அரை தான் ஆகுது உனக்கு. நீ அம்மா உள்ள இருக்கும் போதே அம்மா சொல்லுவாங்க நான் தான் உங்கள பாத்துக்கனும் ஸ்கூல்கு அழச்சிட்டு போகனும். நீ மட்டும் தான் எப்பவுமே எனக்கு மோஸ்ட் இம்பார்டன்ட் தீ "

"இப்ப என்ன உன்ன நான் அண்ணானு கூப்பிடனுமா?" அவள் இடது புறம் தலையை சாய்த்து சிரிக்க.

நிஜத்தில் அவள் விமலனிற்கு மட்டுமே அடங்குவாள் அடுத்துதான் அவள் தந்தையே. அவனின் செல்லம் அவள். மற்றவர்களிடம் விரைப்பாக இருப்பவள் அவனிடம்தான் எல்லா கொஞ்சலும் சலுகையும். இன்றும் தூக்கம் வரவில்லை என்றால் அவனை உதைத்து கீழே தள்ளிவிட்டு அவன் பெட்டில் தூங்குவாள். உடம்புக்கு முடியவில்லை என்றாலும் சாந்தினியையே அருகில் விடாதவள் அவனின் கையனைபில் தான் தூங்குவாள்.

"நீ தானே? உன் பிரண்ட்ஸ் கூட என்ன அண்ணானு கூப்பிடுவாங்க. அந்த பிங்கி அப்பறம் தனு" ஆரம்பித்தவனே சோகமாக நிறுத்தி விட்டான்.

தக்ஷினாவிற்க்கும் முகம் மாறிவிட்டது எழுந்து வந்து அவன் கையை பிடித்துக் கொண்டவள் அவன் தோளில் சாய்ந்துக் கொண்டாள்.

"தனு உன்ன அண்ணானு சொல்ல முடியாதுனு சொல்லி என் கிட்ட அத்தனை அடி வாங்குவா. நீனா அவளுக்கு ரோம்ப பிடிக்கும் விமி" அவளை தட்டிக் கொடுத்தான் அவன்.

"என்ன விட அவ தான் எல்லாரையும் மிரட்டி உன்ன அண்ணானு சொல்ல வைப்பா. சின்னதுலேந்து உன் மேல பைத்தியமா இருந்தா."

"அவளுக்கு தான் அப்படி எனக்கு அவ முகம் கூட நியாபகம் இல்ல"

"பொய் சொல்லாத விமி. நான் அவளுக்கு நீ கெடுக்க வாங்கி வச்ச கார்டை பாத்தேன்"

"ப்ச் தீ"

"ஆக்சிடன்ட் ஆனா அன்னைக்கு கடைசியா அவ உன்ன பாக்கனும் என என்கிட்ட அழுதா விமி. ஒருதடவ ஹக் பண்ணனும் ஒருதடவ உன் கூட பைக்ரைடு போகனும் நிறைய சொல்லிட்டு முடியாதுலனு அழுதா. நீ வந்ததும் உன்ன பாத்த ஹேப்பில சிரிச்சிட்டே போய்ட்டா" முகமெல்லாம் சிவந்துவிட்டது தக்ஷினாவிற்க்கு விமலனிற்கும் அதே நிலைதான். உயிர் தோழியையும் முதல் காதலையும் மறக்க முடியாமல் தவித்தனர் இருவரும்.

"தீ முடிஞ்சுபோனத பேசாத. ஆஃபீஸ்ல பர்சனல் பேசக்கூடாது" கண்டிப்போடு சொன்னான் அவன்.

"சரி பேசல" என்றவள் "அந்த சத்யாக்கு நடந்த மாதிரி உன் தங்கச்சிக்கு நடந்ததா இப்படிதான் விட்ருவியா விமி?" என

"தீ" கண்ணை மூடி கத்தியவன் எழுத்துக் கொண்டான்.

"வாய மூடு. உனக்கு ரொம்ப திமிர் ஆயிடுச்சு. இனிமே இப்படி பேசின என்ன செய்வேன்னு தெரியாது" அவள் கைகளை தட்டிவிட்டான் அவன்.

"சும்மா பேச்சிக்கு சொன்னா அதெல்லாம் ஒன்னும் ஆகாது. பத்து பேரு வந்தாலும் என்னால அடிக்க முடியும்" என்ன நேரத்தில் சொன்னாளோ அது பலிக்கப்போவது தெரியாமல் அவனை சமாதானம் படுத்திக்கொண்டு இருந்தாள் தக்ஷினா.

அவளை முறைத்ததான் விமலன்.

"எப்போதும் நேரம் நமக்கே சாதகமா இருக்காது தீ. நீ எவ்வளவு பலமா இருந்தாலும் ஜாக்கிரதையா தான் இருக்கனும்"

"என் பலமே என் அண்ணன் தான். நான் ஏன் பயப்படனும்"

"என்கிட்ட இனி பேசாத தீ" என வேகமாய் வெளியேற போனவன் திருப்பி வந்து நின்றான். அவள் கண்ணாளே கெஞ்சவும் அவளை அனைத்துக் கொண்டான் விமலன்.

"தீ பீஸிஸ் இனிமே இப்படி சொல்லாத என்னவோ பண்ணுதுமா" என்றவன் அவளை விலக்கி நிறுத்தி நெற்றியில் முத்தம் வைத்தான். அவளும் அவனை அணைத்துக் கொண்டு ழோளில் தட்டி கொடுத்தாள்.

"சரி வா"

"எங்க?"

"வீட்டுக்கு தான். நீ இன்னைக்கு எங்கையும் போக வேண்டாம்"

"எனக்கு வேலை இருக்கு விமி"

"பரவால்ல தீ நீ முத கிளம்பு. உன்ன விட்டுட்டு என்னால எங்கையும் போக முடியாது இன்னைக்கு" முடிவாக நின்றான்.

"விமி நீயும் நானும் போலீஸ். இதெல்லாம் பாக்க முடியாது"

"ப்ச் ஐ டோன்ட் கேர். இப்போ நீ வரலைன்னா உனக்கு சஸ்பென்ஷன் தான் கிடைக்கும்"

"யூ யூ வீட்டுக்கு வா. புது ஸ்டண்ட் செஞ்சி காட்ரேன்"

"வீட்டுல வந்து என்ன வேணாலும் பண்ணிக்கோ" என்று கையோடு கூட்டி சென்றான். விமலன் பின்னால் கெஞ்சி கொண்டும் கொஞ்சிக் கொண்டும் காரில் ஏறிய தக்ஷினாவை வாய்பிளந்து பார்த்தான் சரத்.

"நம்ம எஸ்.பியா இவங்க ஹைய்யோ யாருகிட்ட சொல்றது. ஹான் முரளி சாரு" என்று பரபரத்தவன் முரளியிடம் சொல்ல வேகமாக உள்ளே விரைந்தான்.


போகாதடி என் பெண்ணே!💖💖💖

Comment here 👇

 
Last edited:

Writer X

Well-known member
Messages
462
Reaction score
616
Points
93



பெண்ணே 6

agSFsTQPwmxh2Xo7cWLElI3FfJZYg99hXsWJnE2Y4EPYQvTqSTrdLpY_lI1EtkM4ExpImTktw9wYYyZ9d9hHWzWsbbUhWXVuDOIgy2EuTRQcmKek9hj2qISGKokzW-2Vc5EVFOOW=s0


"மைலி நீ வீட்டுக்கு போனதும் எனக்கு கால் பண்ணு"

"சரி விஷ்ணு"

"லேட் ஆச்சுனா கால் பண்ணிடு நான் வந்துருவேன். தனியா போகாத மைலி"

"என்ன விஷ்ணு? எப்போதும் போரதுதானே? நான் போர ரூட் சேப்தான் அடிக்கடி போலீஸ் பட்ரோல் போவாங்க. நான் பாத்துக்குறேன் நீங்க லேட் பண்ணாமா கிளம்புங்க" சிறிய மென்னகையுடன் அவனை விரட்டிக்கொண்டு இருந்தாள் ஆராதனா.

"அதுக்கு இல்ல மைலி நைட் ஆகிரும் உன்ன தனியா அனுப்ப முடியாதுல. நம்ம கம்பெனில லேடீஸ் ஸ்டாப் அதிகமா இல்ல. இருக்குறவங்களையும் அதியன் சார் செவன்க்கு மேல இருக்க கூடாதுனு சொல்லி இருக்காங்க. அதனால கேப் பேசிலிட்டிஸ் இல்ல"
இருவரும் பேசிக்கொண்டே ரிசப்ஷனில் வந்து நின்றனர்.

"சரி சரி லேட் ஆனா பாத்துக்கலாம்"

"ஆமா… மைலி உன் பேக்ல எதாச்சும் டிசைன் இங்க இருந்துச்சா?" அவன் பேக்கை தூக்கி பார்க்கவும் அவளும் கழட்டி தூக்கி பாத்தாள்.

"அச்சசோ கிட்டி டாலர் விழுந்துட்டு பச் அது இல்லாம அழகாவே இல்ல" அவள் பேக்கை தடவ அவள் கையில் இருந்த பேக்கை பறித்தான் விஷ்ணு.

"இந்தோ இன்னோன்னு இருக்கே" அதில் இருந்த இரண்டு கிட்டியை காட்ட

"அதையும் பிச்சிடாதிங்க" அவள் பேக்கை பிடுங்க வர அவளுக்கு எட்டாத அளவுக்கு பேக்கை தூக்கி அந்த இரண்டு பூனை கீசெயினையும் கழட்டி கையோடு எடுத்துக்கொண்டான்.

"குடுங்க சீனியர் நம்ம காலேஜ் முடிச்சி ரொம்பநாள் ஆச்சி இன்னும் ரகிங் பண்ணுறிங்களா?" கிட்டிகாக கெஞ்சிக் கொண்டு இருந்தாள்.

"இன்னைக்கு உன்ன வீட்டில் டிராப் பண்ணிட்டு தரேன்"

"நானே போய்டுவேன். நீங்க இப்போ தரபோறீங்களா இல்லையா. ஹைய்யோ ஏன் இப்படி பண்றிங்க?"

"எனக்கு நீ பத்திரமா போகனும்" அவன் ஆராதனாவிடம் வம்பு இழுக்க அவனை முறைத்தாள்.

"நீங்க இன்னும் கிளம்பலையா விஷ்ணுராம்?" கேட்டுக்கொண்டு அவள் பின்னால் வந்து நின்றான் அதியன். இவ்வளவு நேரம் அவர்கள் இருவரையும் பொறாமையாக பார்த்துக் கொண்டு இருந்த ரிசப்ஷனிஸ்ட் சந்தோஷமாக எழுந்து நின்றான். ஆராதனாவும் அமைதியாக விஷ்ணுவிற்கு பின் நகர்ந்து நின்றுக்கொண்டாள்.

விஷ்ணுவின் அருகில் வந்தவன் "என் ஸ்டாப்ப பத்தரமா வீட்டுக்கு அனுப்ப எனக்கு தெரியும். நீங்க பஸ்ட் கிளம்புங்க" அவனுக்கு மட்டும் கேட்க்குமாறு சொன்னவன் அவன் முன் கையை நீட்டினான்.

"சார்?" அவன் புரியாமல் பார்க்க.

"கீசெயின்"

"அ… து சார்.. மைலி ஆரா" அவன் உளற

"எனக்கும் கிட்டினா பிடிக்கும்" அதியன் கையை நீட்டவே வேறு வழியின்றி அவன் கையில் வைத்தவன் ஆராதனாவை திருப்பி பார்க்க அவனை எரித்துவிடுவது போல் முறைத்ததாள் அவள்.

"ஆத்தாடி பேயி" மனதில் அரண்டவன் விடைபெற்றுக் கொண்டு ஒடி விட்டான். போகும்போது அவளை திரும்பி திரும்பி ஒரு இறைஞ்சல் பார்வை பார்த்துக் கொண்டே தான் சென்றான்.

சாலையில் பாதி கண்ணையும் பக்கத்தில் பாதி கண்ணையும் வைத்துக் கொண்டே காரை ஓட்டினான் அதியன். ஆராதனாவுக்கோ அந்த சொகுசு காரில் தூக்க தூக்கமாக வந்தது. கப்பல் போல இருந்தது அவனுடைய கார்.

இரவு சுழந்துக் கொண்டு இருக்க தெரு விளக்குகளும் கடை விளக்குகளும் ஜொலித்து கொண்டு இருந்தது. இந்த அனுபவம் ஆராதனாவிற்க்கு புதிது. கார் கண்ணாடியை இறக்கி விட்டிருந்தான் அதியன். அதில் குளிர் காற்று வீச நடுக்கியது அவளுக்கு அதை எப்படி மூடுவது என்றும் தெரிய வில்லை. துப்பட்டாவால் கைகயை மறைத்துக்கொண்டாள். அவனிடம் கேட்கவும் தயக்கம்.

"மிஸ். ஆராதனா"

"சார்"

"கம்பர்டபிலா இருங்க" அவள் ஒடுங்கி இருப்பது பார்த்து அவன் சொல்ல

"அது சார் கொஞ்சம் குளிருது" அவள் தயக்கமாக சொல்லவும் சிரித்தான் அவன்.

"இதுக்கு ஏன் யோசிக்கிறீங்க. வீ ஆர் ஹியூமன்ஸ். நீங்களே க்ளோஸ் பண்ணிருக்கலாமே?" என்றவன் கார் கண்ணாடியை ஏற்றி விட்டான்.

"அதுதான்டா என் பிரச்சினையே லூசு. எனக்கு தெரிஞ்சா நான் ஏன் யோசிக்க போறேன். பெரிய இவன் மாதிரி சிரிக்கிறான்"

"என்ன என்னையே பாக்குறிங்க. நான் அவ்வளவு அழகா இருக்கனா?"

"உனக்கு நினைப்புதான் போடாங்க..."

"ஆராதனா என்ன பேசமாட்றிங்க?" எனவும் தான் அவனை முறைத்து பார்த்தாள் அவள்.

"அது எம்.டிகிட்ட எப்படி கேட்கிறதுனு திங் பண்ணேன் சார்"

"பி ப்ரீ. நீ சாதாரணமாவே என்கிட்ட பேசலாம். பாரின்லாம் நேம் சொல்லி தான் பாஸ்ச கூப்பிடுவாங்க. நீயும் அப்படியே கூப்பிடலாம் ஆராதனா. "

"பட் இது இந்தியா சார்ர். இங்க அவங்க அவங்க லிமிட்ஸ் என்னனு பார்த்துதான் பேசனும்" அவனை முறைத்துக் கொண்டே லிமிட்ஸ்சை அவள் அழுத்தி சொல்லிய விதமே சொன்னது "உனக்கு நீ வா போ என சொல்ல உரிமை இல்லை" என்பதை.

இப்போது அவளை முறைத்தான் அதியன்.

"இடியட்"

"என்ன சொன்னிங்க?" அவள் கோவமாக கேட்க

"அட உன்ன இல்லமா" என சலித்தவன் "ஒழுங்க கார் ஓட்ட தெரியாம கார எடுத்துட்டு வந்திருரானுங்க" ஹாரனை அலற விட்டான். அந்த இடியட் அவளை தான் சொன்னான் என்று ஆராதனாவிற்கு நன்றாக தெரிந்தது. நறநற என பல்லை கடித்துக்கொண்டு அவனை பார்த்தாள் அவள். அதைபார்தவன் "வாட் டு யு வாண்ட்?" என எரிந்துவிழுந்தான்.

"நத்திங் சார்" என்றவள் திரும்பிக் கொண்டாள்.
_________

"ஹேய் அத தொடாத துருவ்"

"பச் ரோகன் எனக்கு இப்போ பவர் வேனும்"

"இன்னைக்கு நம்ம டார்கெட் பிக்ஸ் பண்ண போகனும். இந்த சந்திப் எப்போ வரானாம்?" பேசிக்கொண்டே டெஸ்ட் டியுப்பை பர்னரில் இருந்து எடுத்தவன் கிளாஸ்ராடால் அதில் சில கெமிக்கல்லை கலந்ததும் புகையாக கிளம்பியது.

அதை அங்கு இருந்த ஹியுமன் டிசியுவில் இரண்டு செட்டு விட்டு மைக்ரோ ஸ்கோப்பில் பார்த்தவன் பின்னால் திரும்பி கையை காட்டினான்.

"என்ன பார்ட்னர் ஒர்க் ஆகுதா?"

"ம்ம் நினச்சதவிட பவர்புல்லா வந்திருக்கு பார்ட்னர். ஹேவ் எ லுக்" இருவரும் ஹைபை கெடுத்துக் கொண்டனர்.

"இட்ஸ் எ கில்லர்" என மைக்ரா ஸ்கோப்பில் இருந்து கண்ணை எடுத்தான் துருவ்.

"ஆமா லிமிட்ட தான்டினால் பிஷ்ஷ்ஷ்" இரண்டு கைகயையும் ஆட்டி டேஞ்சர் சிம்பல் காட்டினான் ரோகன்.

"டெஸ்ட் ரேட் யாரு? "

"நீ தான் துருவ்"

"ஹோய் என்ன மேன்?" அவன் அலற சத்தமாக சிரித்தான் ரோகன்.

"அஸ்யூஸ்வல் டார்கெட் தான். சந்திப்தான் லொகேஷன் பாத்துருக்கான்" அவன் சொல்லும்போதே சந்திப் என்பவனும் உள்ளே வந்தான்.

"என்ன சந்திப் லேட்?"

"சின்ன ஒர்க் துருவ்"

"சரி ஸ்பாட் டார்கெட்லாம் எங்க?" கையை கட்டிக் கொண்டு மேஜையில் சாய்ந்து நின்று கேட்டான் ரோகன்.

"சென்னை தான் ஸ்பாட் பட் ப்ளே திருவாரூர் டிஸ்ட்ரிக்ட்"

"ரொம்ப தூரம் இருக்குமே சேப் இல்ல ஸ்பாட்டையும் அங்கே பக்கத்துல பிக்ஸ் பண்ணிக்கலாம்" ரோகன்.

"ரோகன் ரிஸ்க் எதுவும் இல்ல. நான் பக்காவா பிளான் போட்டுட்டேன். யோசிக்காம வா கிளம்பலாம்"

"ஆமா ரோகன் என்ன பத்தி தெரியும்தானே? ஐ வில் ஹண்டில் இட். கம் ஆன் மேன்" அவன் தோளை தட்டிச் சென்றான் துருவ். லேப்கோட் பாக்கெட்டில் கையை விட்டுக் கொண்டு அந்த டெஸ்ட் டியூப்பை வெரித்துப் பார்த்தான்.

"பெயின்… கடைசில மிச்சம் பெயின் மட்டும்தான்" அவன் கண்களில் அத்தனை வெறி.
________

ஒரு வழியாக மீட்டிங் முடிந்து சின்ன பார்டி ஒன்றும் நடந்தது. ஆராதனாவிற்க்கு அவன் கோட்டை பாத்திரமாக வைத்திருப்பதை தவிர வேலை என்று பெரிதாக ஒன்றும் இல்லை சிலவற்றை அவன் சொல்ல சொல்ல சரி பார்த்தவள் இப்போது ஒரு ஓரமாக உட்காந்துக் கொண்டாள். அவள் போன் வேறு அடிக்கடி சினுங்கிக் கொண்டே இருந்தது.

அவள் போனை எடுத்துக் கொண்டு தனியாக போவதை பார்த்தான் அதியன். இதோடு பத்து முறையாவது சென்றிருப்பாள். விஷ்ணுவோ என்று நினைத்தவன் கையில் இருந்ததை வைத்துவிட்டு அவளை தேடிச் சென்றான்.

"வந்துடுவேன் முடிஞ்சோனே கிளம்பிருவேன் சந்தோஷ்" கெஞ்சிக் கொண்டு இருந்தாள் ஆராதனா.

"இவன் யாரு? இந்த சந்தோஸ்" தலைவலியாக இருந்தது அவனுக்கு. போனை பார்த்துக்கொண்டே திரும்பியவள் அவள் அருகில் இருந்த பூசாடியில் முட்டிக்கொண்டாள்.

"பார்த்து வர மாட்ட?" அவள் அருகில் வந்த அதியன் அவள் நெற்றியில் கைவைத்து தெய்த்துவிட விழி விரித்து பார்த்தாள் அவள்.

பட் என்று அவன் கையை தட்டிவிட
"சாரி சாரி ஆராதனா" என்று விழகினான்.

"கிளம்பலாமா சார்?"

"ஓ சுயூர்" என அதியன் வாயிலை நோக்கி நடக்க அவன் பின்னால் நடந்தாள். நின்று அவளை திரும்பி பார்த்தவன் "உனக்கு யாரு கால் பண்றது?" என

"அது என் பர்சனல் சார்"

"வாட் எவர்.. இப்படி தனியா போககூடாது. இப்போதைக்கு நீ என்னோட ரெஸ்பான்சிபிலிட்டி." பேச்சுக் கொடுத்துக் கொண்டு சேர்ந்து நடந்தான். காரில் ஏறி உட்கார்ந்துக் கொண்டதும் அவன் தீடீர் என்று அவள் அருகில் வர "என்ன? என்ன சார்?" சட்டென்று விலகினாள்.

"சீட் பெல்ட்"

"எனக்கு போட்டுக்க தெரியும்" என்றவள் ஹாண்ட் பேக்கை நெஞ்சோடு இருக்கி பிடித்துக் கொள்ள சிரித்துக்கொண்டே விலகி நேராக உட்கார்ந்தவன் காரை காற்றில் பறக்க விட்டான். அவன் மனதில் ஓடியது ஒன்றுதான்.

"நீ ரொம்ப பாஸ்ட்டா இருக்க அதியா எதுல அடி வாங்க போரியோ"

அவளை ஒரு முறை திரும்பி பார்த்தான் அவள் மும்மரமாக கூகுள் மேப்பை வைத்துக் கொண்டு கார் எந்த வழியில் செல்கிறது என்பதை ஆராய்ந்துக் கொண்டு இருந்தாள்.

"இவளுக்கு என்ன பாத்தா பொறுக்கி மாதிரி தெரியுதா?" அவளை வெரித்தவன் திரும்பிக் கொண்டான். அதன் பிறகு அவளை மறந்தும் திரும்பி பார்க்காமல் வந்தான்.

கார் நடு சாலையில் ஓரம்கட்டி நிற்க அவனை திரும்பி பார்த்தாள் ஆராதனா அவனோ இறங்கி கதவை மூடிவிட்டு அங்கு நின்றிருந்த போலீஸ்சை நோக்கி சென்றான்.

"ஹேய் அதி ப்ரோ நீங்க என்ன இங்க?"

"சும்மா தான் விமலன் உன்ன பாத்தோனே அப்படியே போக முடியல"

"நம்ப தோனல சார்" அவன் சிரிக்கவும் சேர்ந்து சிரித்தான் அவன்.

"புவி சொன்னான் விமலன் கிட்ட எதையும் மறைக்க முடியாதுனு"

"அப்போ என்ன மறைக்கிறிங்க?"

"கண்டிப்பா என்ன பிடிச்சி உள்ள தள்ளுர அளவுக்கு இல்ல"

"எனக்கும் இப்போதைக்கு அந்த ஆசை இல்ல ஆனா என் ஃபிரெண்ட் புவிக்கு அந்த ஆசை இருக்கிறதா சொன்னான்"

"ஆள விடுப்பா இதுக்குதான் இந்த போலீஸ்காரன்களோடு பழக்கம் வச்சிருக்க கூடாது "

"என்ன பண்றது? இட்ஸ் ஆல் விதி" சிரித்தவன் "வாங்க அதி ப்ரோ காஃபி குடிக்கலாம் இங்க நல்லாருக்கும்"

"இல்ல விமலன் கார்ல என்னோட மேனஜர் வெயிட் பண்றாங்க" அவன் மறுக்க எட்டி பார்த்தான் யாரோ பெண் அமர்ந்திருக்க அவள் முகம் தெளிவாக தெரியவில்லை. அதியனை பார்த்து தலையை ஆட்டி சிரித்தான்.

"உங்களோட மேனஜரா? இல்ல உங்க கம்பெனி மேனஜரா?"

"இப்போதைக்கு என் கம்பெனி மேனேஜர்"

"பியுச்சர்ல?"

"அதை அப்போ சொல்றேன்"

"சரி லேட் ஆச்சி லேடி ஸ்டாப் வேற நீங்க கிளம்புங்க. இடையே நின்னா அவங்க பயந்திர போராங்க"

"அதுக்குதானே விமலன் உங்கிட்ட வந்து நின்னு பேசிட்டு இருக்கேன்…. மேடம் கூகுள் மேப் வச்சி பாத்துட்டே வந்தாங்க" அவன் சலித்துக்கொள்ள விமலன் மெச்சிக் கொண்டான்.

"நல்லதுதானே கான்சியஸ்சா இருக்காங்க"

"சரி விமலன் நான் கிளம்பறேன்" விடைப்பெற்றவனின் போன் அழைப்பு வர பாக்கெட்டில் இருந்து எடுக்கவும் கையோடு கிட்டியும் வந்தது. அதை ஆட்டிக் கொண்டு போன் பேசியவாறு காரில் ஏறினான்.

அவன் கையில் இருந்ததை பார்த்தவள் கையை நீட்டி "இது எப்படி மூனு வந்தது?" எனவும் "அதுவா? காலைல உன் பேக்லேந்து கீழ விழுந்தது அத கொடுக்க தான் லிப்ட்ல உன் பக்கத்துல வந்தேன் பட் நீ பண்ண வேலைல கொடுக்க மறந்திட்டேன்"

"சரி தாங்க…" என கையை நீட்ட "நோ" என்றான்.

"அது என்னோடது சார்"

"ஹீம்ஹிம் இனிமே என்னோடது" என்றவன் பேன்ட் பாக்கெட்டில் திணித்து கொள்ள சிறுபிள்ளை போல் சண்டையா போடமுடியும். திரும்பிக் கொண்டாள்.

கார் நேராக ஹில்ஸ் செலவனில் நின்றது "நீ உன் திங்க்ஸ் எடுத்துட்டு வா நானே டிராப் பண்றேன் ஆராதான"

"நோ தேங்ஸ் சார்" அவன் பதிலை கூட எதிர்பார்காமல் கதவை திறந்து இறங்கி விட்டாள். அவள் பின்னே ஆதியும் இறங்க

"ஆராதனா" குரல் வந்த திசையை பார்த்தான் அதியன். அழகான ஒரு ஆடவன் வந்துக்கொண்டு இருந்தான். அவன் நடையே அவன் கோபத்தை காட்டியது. ஆராதனாவும் வேகமாக அவனிடம் சென்றாள்.

அவன் அவள் கையை பற்றி மணிக்கட்டை முறுக்கிக் கொண்டு கோபமாக பேச அதியனுக்கு பொங்கிவிட்டது.

"ஏய்…" வேகமாக அவர்களை நோக்கி சென்றான்.

Comment here 🐙🐙
 
Last edited:

Writer X

Well-known member
Messages
462
Reaction score
616
Points
93
பெண்ணே 7

eGpXvAugg2oWj1mmVBcDCEbK9ZGdFNf1SZrENtkckPpL4JMNYPXbv6O87wW2ZNvKak-RhOarTxmGKqXyxsOTB4BM-PNTGhnkqWWsMH6yHnhiVxALN6eRzkyt8zc9vS4PK7btf3Zp=s1600



அந்த சாலை ஆள் அரவமற்று இருந்தது. இருட்டை விரட்டி தெருவிளக்கு நான் இருக்கிறேன் என்று அபாயம் அளித்தும் தனிமை மிரட்டியது.

தினமும் இது பழக்கமாக இருந்தாலும் காதோரம் வியர்த்து வழிந்தது. அந்த இடம் நகரத்திற்க்கு வெளியில் ஒதுக்கு புறமாக இருந்தது. அவள் ஊருக்கு செல்லும் கடைசி பேருந்துக்காக நின்றிருந்தாள். மணி ஒன்பதை தாண்டியிருக்கும் அவள் வீட்டிற்க்கு செல்ல இன்னும் ஒரு மணி நேரம் பயணம்.

பக்கத்தில் சிறு குளிர்பான கடையை வயோதிகர் ஒருவர் திறந்து வைத்து படுத்திருந்தார். அவளை கடந்து ஒரு கார் சென்று சற்று தூரத்தில் நிற்க அதில் இருந்து இறங்கிய இருவர் பேருந்து நிறுத்தம் நோக்கி வந்தனர்.

முதலில் கவனிக்காதவள் அவர்கள் பக்கத்தில் நெருங்கி நிற்கவும் ஹாண்ட் பேக்கை இருக்கி பிடித்துக் கொண்டு. பெப்பர் ஸ்பிரேயை துப்பாட்டாவில் மறைத்துக் கொண்டாள்.

அதில் ஒருவன் அவளை உரசிக் கொண்டு நிற்கவும் சுவரோடு ஒட்டிக்கொண்டு பேருந்துவருகிறதா என்று எட்டிப்பார்க்க அதற்கான அறிகுறி இன்றி நிசப்த்தமாக இருந்தது சாலை. வயிற்றில் பய பந்து உருண்டு தொண்டையை அடைத்து கண்கள்கலங்கி கால்கள் வெடவெட என்று நடுங்கியது.

அதில் இன்னோருவன் அவள் ஜடையை பிடித்து இழுக்க அவனை தள்ளிவிட்டவள் கடையை நோக்கி செல்ல முயல வழியை மறைத்தது போன்று எஃப்இசட் பைக் ஒன்று வந்து நின்றது. அவள் மிரண்டு விழிக்க வேகமாக இறங்கியவன் அவள் கையில் ஹெல்மெட்டை கொடுத்துவிட்டு அவர்களை நோக்கி சென்றான். அவனை கண்டதும் பின்னடித்தார்கள் இருவரும்.

"அசிங்கமா இல்ல தனியா இருக்க பொண்ணுகிட்ட வம்பு பண்ண?" ஒருவனது சட்டை காலரை பிடித்து அவன் இழுக்க பக்கத்தில் இருந்தவன் இவனை அடிக்க பாய்ந்தான். அவனை ஒரு உதை விட்டவன் கையில் இருந்தவனை அறைந்தான்.

இருவரும் சேர்ந்து அவனை அடிக்க வர பாக்கெட்டில் இருந்த சர்ஜிக்கல் நைப்பை எடுத்தவன் அவர்கள் முன் நீட்ட இருவரும் காரை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டனர்.

"தேங்க்ஸ் அண்ணா"

"இப்படியா தனியா போவிங்க? நியூஸ் பாக்கிற பழக்கம் இல்லையா? உலகத்தில என்ன என்னவோ நடக்குது"

"சாரிணா அது நைட் ஷிப்ட் வரவங்க இன்னைக்கு வரலை அதான் வேலை முடிஞ்சதும் இப்போதான் கடையை பூட்டிட்டு வரனும் இல்ல ஓனர் சம்பளம் பிடிச்சிருவாங்க அண்ணா"

"எனக்கு எதுக்கு சாரி? வேற வேலை தேடிக்கலாமே. இந்த டைம் இங்க நிக்கிறது பாதுகாப்பு இல்ல."

"நான் வேலைக்கு போனாதான் எங்க வீட்டுல மூனுவேலை சாப்பாடே. அவ்வளவு சீக்கிரம் வேற வேலையும் கிடைக்காதேணா. பயந்தா வாழ முடியுமா? "

"பச் பஸ் எப்போ வரும்?"

"இப்போ வந்திரும் அண்ணா" அவள் கையில் இருந்து ஹெல்மெட்டை வாங்கியவன் அங்கு இருந்த கட்டையில் அமர்ந்துக் கொண்டான்.

சிறிது நேரம் செல்ல

"அண்ணா"

"ம்ம் சொல்லுங்க"

"பஸ் வந்துட்டு... நீங்க பண்ண ஹெல்புக்கு ரொம்ப தேங்க்ஸ்…"

"பத்திரமா போங்க" என்றவன் அவள் கையில் அந்த கத்தியை வைத்துவிட்டு வண்டியில் ஏறி ஹெல்மெட்டை மாட்டிக் கொண்டான். அவள் பேருந்தில் ஏறி அது நகரவும் அதை பின்தொடர்ந்தது அந்த பைக்.
______________

ஆராதனாவின் கையை அழுத்தி பிடித்து திருகினான் சந்தோஷ் "டைம் என்ன ஆகுது? சொல்லு" அவன் சீற அவள் வலியில் கெஞ்சினாள்.

"இல்ல சந்தோஷ் மீட்டிங் அதான் லேட்"

"என்ன பெரிய வேலை. பர்மிசன் கேட்டுட்டு வரதெரியாதா"

"பஸ்ட் டேவே எப்படி பெர்மிஷன் வாங்குறது..? ஸஸ்ஸ் ப்ளீஸ் கைய விடு வலிக்குது"

"ஏய் மிஸ்டர் கையை எடு முத" வேகமாக ஆராதனாவின் கையை பிடித்து இழுத்து கோபமாக அவன் கையை தட்டி விட்டான் அதியன்.

இப்போது அவளை பிடித்து இருந்த அதியனின் கையை பார்த்த சந்தோஷின் கண்கள் சிவந்துவிட்டது.

"சார் அவ கையவிடுங்க" அதட்டியவன் "இங்க வா" என அவளை பிடித்து இழுத்து பின்னால் நிறுத்திக்கொண்டான். அவளுக்கு பயத்தில் வார்த்தையே வரவில்லை. அவன் வெடுக்கென்று இழுத்ததை பார்த்து அதியனுக்கோ கோபம் தலைக்கு ஏறியது.

"ஏய் யாரு இது? நீ எதுக்கு இவன் கார்ல பக்கத்தில உட்காந்துக் வர?" சந்தோஷின் பிடி கைஎழும்பு நொருங்கும் அளவுக்கு வலித்தது.

"இவர் எங்க எம்.டி ஆதிஅதியன் சார் அண்ணா"

"யாரு மேன் நீ? ஏன் காம்பவுண்ட் குள்ள வந்து என் ஸ்டாப் கிட்ட ரஃப் பெஹவியர் பண்ற? ஆராதனா இங்க வா பஸ்ட்" மீண்டும் அதியன் அவளை இழுக்க வர

"உங்க ஸ்டாப்பா இருந்தா? டைம் 10 ஆக போகுது வீட்டுக்கு கூட்டிட்டு போக வந்தா விடமாட்றிங்க" இருவரும் முட்டிக் கொண்டனர்.

"ஏய் என்ன வேடிக்கை? போ போய் வண்டிய எடுத்துட்டு வா" பிடித்து தள்ளி அவளை விரட்டியடித்தான் சந்தோஷ். அவளுக்கு அவமானத்தில் கண்கள் தழும்பிவிட்டது.

"டேய் எதுக்கு அவங்கள தள்ளிவிடுர?"

"என்னோட தங்கச்சி நான் தள்ளுவன் அடிப்பேன் திட்டுவேன். அத நீங்க யாரு சார் கேட்க?" அதியனை நோக்கி கோபமாக முன்னே செல்ல சந்தோஷின் கையை பிடித்துக் கொண்டாள் ஆராதனா.

"என்னது தங்கச்சியா?" அதியன் ஆசுவாசம் அடைந்தாலும் கோபம் மட்டும் குறையவில்லை "எப்படி திட்டுறான் ... " பல்லை கடித்துக் கொண்டு நின்றான்.

"அய்யோ சந்தோஷ் ப்ளீஸ். பிரச்சினை பண்ணாத" எனவும் அவள் கையை உதறியவன் "உன்ன போனு சொன்னேன்.. உயிர வாங்காம போ" என்றவன் வண்டியில் சென்று அமர்ந்துக் கொண்டான்.

ஆஃபிசை நோக்கி அவள் விரைய சந்தோஷை முறைத்த அதியன் அவள் பின்னால் விரைந்தான்.

"ஆராதனா" அவள் முன்னே வந்து நின்றான் அதியன்.

"சாரி சார் அண்ணா லேட் அச்சினு கோபத்துல பேசிட்டாங்க"

"என்னவா இருந்தாலும் உங்க வீட்டுல வச்சி பேசிக்கோங்க… இது என்னோட கம்பெனி இங்க அநாகரிகமாக நடந்துக்கிட்டா போலீஸ்க்கு கால் பண்ண வேண்டியதா இருக்கும் மைண்ட் இட். உங்களுக்கு வேலை கொடுத்ததுக்கு எனக்கு இதெல்லாம் தேவையா? மத்த ஸ்டாப் பார்த்தா என்ன தப்பா நினைக்க மாட்டாங்க?. உங்க சேப்டியை பார்த்தா என்கிட்ட கத்துறான் உங்க பிரதர். இனி இதுமாதிரி நடந்தது நீங்க வீட்டுக்கு போக வேண்டியதுதான்" முகத்தை சுளித்துக்கொண்டு கத்தினான் அதியன்.

"சாரி சார்…" அவமானத்தில் அவள் முகமெல்லாம் கசங்கி நிற்க "பச்" என்றவன் அவளுக்கு முன்னே சென்றுவிட்டான்.

அவனுக்கும் இறங்கி வந்து சண்டையிடவும் சமாதான படுத்தவும் இஷ்டம் இல்லை. அவன் ஹில்ஸ் செவனின் எம்டி அதற்கான மரியாதை ஒன்று உள்ளதே… அவன் கார் சாலையில் சீறிபாய்ந்து கலந்தது.

தளர்வாக நடந்து வந்தவளை பார்த்து அதற்கும் அதட்டினான் சந்தோஷ்.

வீட்டு வாசலில் அமர்ந்திருந்த துர்கா அவர்கள் இருவர் வண்டியும் வாசலில் நிற்க வேகமாக போய் கிரில் கதவை திறந்து விட்டார்.

"ஏன் பாப்பா லேட்…? முதல் நாளே நிறைய வேலையா?" மகளின் வாடிய முகத்தை கண்டு பேக்கை வாங்கிக்கொண்டார் துர்கா.

"ஏன்? பாப்பா வா இடுப்பில தூக்கி வச்சி கொஞ்சேன்மா" நிலையில் ஏறியவன் திரும்பி கத்த.

"ரோட்டுல நின்னு என்ன சண்டை? உள்ள வாடா சந்தோஷ்" அவனை அதட்டினார் ஹாலில் உட்காந்திருந்த ராகவன். உள்ளே வந்தவன் சாவியை தூக்கி வீசினான்

"என்னடா சந்தோஷ்?"

"என்ன என்னடா சந்தோஷ்? இவ யவன்கூடையோ கார்ல பக்கத்தில உட்காந்துக் வரா அவள என்னு கேளுங்க" என கத்த அவனை முறைத்து பார்த்தாள் ஆராதனா

"என்ன முறைக்கிற…? தேவைதான் எனக்கு உன்ன அழைக்க வந்தேன் பார்"

"எனக்கு வீட்டுக்கு வர வழி தெரியும் சந்தோஷ். நீ எதுக்கு வந்த? நான் கூப்பிட்டனா?"

"ஏய் வாய மூடு. பாத்தீங்களா அப்பா? ராத்திரி தனியா வருவியா நீ. உனக்கு எதாச்சும் ஆனது நம்ம குடும்ப மானம் தான் காத்துல பறக்கும்"

"என்னை நான் பார்த்துப்பேன். நீ உன் குடும்ப மானத்தை மட்டும் பார்"

"ஆம்பள புள்ளைய எதுத்து எதுத்து பேசாதா தனா" ராகவன்.

"அவன் என்னை கேவலமா பேசுறான் நீங்க பாத்துட்டு தானே இருக்கிங்க."

"உண்மையா தானே சொல்றேன். நைட் யாரோ ஓரு ஆம்பளை கூட தனியா போர அவன பத்தி உனக்கு என்ன தெரியும்?"

"வேலைக்கு போரப்ப இதெல்லாம் பார்க்க முடியாது எனக்கு தேவையானதை சேப்ட்டிக்கு வச்சிருக்கேன். அப்பறம் நான் கண்டவன் கூடலாம் போகல அதியன் சார் என் எம்டி. ஆஃபீஸ்ல மீட்டிங்னா பி.ஏ போய்தான் ஆகனும்"

"உன்ன எல்லாம் படிக்கவே வச்சிருகக் கூடாது. தைரியமா அப்பன் கிட்டயையே திரும்பவும் போவேன்னு சொல்ற" என துர்காவின் அருகில் சென்றவர்

"இது தான் நீ பொண்ண வளத்த லட்சணமா?" என ராகவன் ஓங்கி அறைந்ததில் கிழே விழுந்தார் துர்கா.

"பச் அப்பா" ராகவனை பின்னால் இழுத்தான் சந்தோஷ்.

"அடிக்கனும்னா என்னை அடிங்க. எதுக்கு என் அம்மாவ அடிக்கிறிங்க? உங்க வீரத்த அவங்க கிட்டதானே காட்டுவிங்க. உங்களுக்கு வடிச்சி கொட்றதுக்கு நல்லா கவணிக்கிறிங்க" துர்காவை அனைத்துக் கொண்டு சீற அவள் முடியை பிடித்து தூக்கினான் சந்தோஷ்.

"ஆஆஆஆஆஆஆ" அவள் வலியில் கத்த "பட்பட்" என்று இரு கன்னத்திலையும் அறைந்து விட்டான்.

"என்ன? அப்பாகிட்ட என்ன பேசுர? பொண்ணா அடங்கி வீட்டுல இரு. இனி நீ வேலைக்கு போக வேண்டாம் போன... காலை ஒடச்சி மூலையில் உட்கார வச்சிருவேன்" முடியை உலுக்க வலியில் அவன் கையை இருக்கி பிடித்துக் கொண்டாள்.

"நான் போவேன் உன்னால என்ன பண்ண முடியும்? ஆஆஆஆ" கலங்கிய கண்ணிலும் அத்தனை தீர்க்கம்.

"இங்க பாரு தானா நைட் வரைக்கும் செய்ற வேலை நமக்கு ஒத்து வராது. ஒழுங்க சொன்னத கேளு" மிரட்டினார் ராகவன்.

"டேய் சந்தோஷ் சின்ன பிள்ள டா அவ. அடிக்காத விட்டருப்பா என் பொண்ணு பாவம்" அந்த தாயின் அழுகை யாருக்குமே கேட்கவில்லை.

"அய்யோ... லேட் நைட் ஒர்க்லாம் இல்ல. எப்பயாச்சும் தான் லேட் ஆகும். உங்களுக்கு பிடிக்கலனா நான் ஹாஸ்டல் போய்க்கிறேன். நீங்க உங்க கவுரவத்த லாக்கர்ல பூட்டி வச்சிக்கோங்க அம்மாமா ஆஆஆஆ" மீண்டும் சந்தோஷ் அறைந்தது அவள் மூக்கில் பட்டு பொலபொல வென்று ரத்தம் கொட்டியது.

"ஏன் நடந்ததை மறந்திட்டியா? அன்னைக்கு நீ அடம்பிடிச்சி போனதுக்கு என்ன நிலமைல நின்ன…? எங்களுக்கு தான் போன் பண்ணி அழுத" அவளை காயபடுத்த நினைத்து ரணத்தை கிளறிவிட்டான்.

"உங்கள கூப்பிட்டேன் தான் . ஆனா வந்து என்ன கிழிச்ச? என்ன எல்லாருக்கும் முன்ன அடிச்சி அவமான படுத்தினிங்க. நீலாம் ஒரு அண்ணன். அவனுங்க யார்னு கூட உன்னால கண்டு பிடிக்க முடியல. பெருசா ஆம்பளைனு அலட்டிப்ப. விஷ்ணு மட்டும் இல்லனா என்ன உயிரோட விட்டுருப்பாங்களானே தெரியலை" ரத்தத்தை புறங்கையால் துடைத்துக் கொண்டு கத்தினாள் அவள்.

கண்ணீர் அவள் கன்னத்தில் இறங்கி ரத்தத்தோடு கிழே விழுந்து தெரித்தது. கோபம் ஆற்றாமை வெறி சோகம் என அவள் கண்ணில் மாறிமாறி தோன்றியது. அவள் தலையில் இருந்து கையை எடுத்தவன் அடிக்க கையை ஓங்க அவன் காலை கட்டிக் கொண்டு அழுதார் துர்கா

"என்னடி அதிகமா பேசுற நீ. அந்த விஷ்ணுவாலதான் அத்தனையும். அந்த நாயிதான உன்ன அலச்சிட்டு போனது" அவள் கையை பிடித்து வளைக்க அவனை தள்ளிவிட்டவள் "விஷ்ணுவ திட்டாத சந்தோஷ். அவளோ பேருக்கு முன்ன அவன் ஷர்ட்ட கழட்டி எனக்கு கொடுத்துட்டு நின்னான். ஆனா நீ என்ன பண்ண? "

"ஷர்ட்டை கழட்டி தரது ஒன்னும் பெரிய விசயம் இல்ல" சொல்லும் போதே அபத்தமாகதான் தோன்றியது.

"ஒஒ… உனக்கு அன்னைக்கு என்ன அடிக்க மட்டும்தான தெரிஞ்சது" அவள் வெறுப்பாக பார்த்தாள்.

"அம்மா இவள உள்ள போக சொல்லுங்க." திரும்பி நின்னு துர்காவிடம் கத்தினான் அவன்.

"பாப்பா? என்னடா? அய்யோ பாப்பா என்னமா பண்ணுது?" தலையை பிடித்துக்கொண்டு ஆராதனா தள்ளாட துர்காவின் பதட்டத்தில் திரும்பி பார்தத் சந்தோஷ் வேகமாக சென்று அவளை பிடித்ததும் அவன் கையிலே சரிந்தாள் தலை தொங்கியது.

"அய்யோ பாவி என் பெண்ண கொன்னுட்டியா?" துர்கா கதற ராகவனும் பதறியடித்துக் கொண்டு வந்தார்.

"தனா தனா ஆரா எழுந்திரு" சந்தோஷ் பதட்டமாக கன்னத்தை தட்ட அவளிடம் ஒரு அசைவும் இல்லை.

நாசியிலிருந்தும் உதட்டில் இருந்தும் வடிந்த ரத்தம் நெஞ்சு பகுதியில் கறையாகி இருக்க. ரத்தம் நிற்காமல் விழிந்து ஓடி காதை நனைத்தது.

நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறினார் துர்கா.

நமக்கு இருப்பதனால் எல்லோருக்கும் சுதந்திரம் கிடைப்பதாக நாம் நினைக்க கூடாது. அன்று விறகு அடுப்பில் வெந்த பெண்ணினம் எத்தனை மாற்றம் வந்தாலும் சுடு சொற்களில் வெந்துக் கொண்டு தானே இருக்கிறார்கள்.

ஒரு குடும்பத்தின் கவுரவத்தை அக்குடும்ப பெண்ணின் தவறை கொண்டு எடை போடும் சமூதாயம் அவள் வெற்றியை மட்டும் உதாசீனம் படுத்துவதேன்.

ஒரு செடியில் பூத்த பூக்கள் அனைத்துமே மாலையில் சேர்வதில்லை. கண்கள் காண தவறியதில் யாருமே அறியாமல் மண்ணோடு மடிந்துவிடுகிறது சில மலர்கள்.

வருவாள்...

❣️❣️❣️❣️❣️comment here


 
Last edited:

Writer X

Well-known member
Messages
462
Reaction score
616
Points
93
பெண்ணே 8

cRFwmMlLFJGh-H2mHXYGw_wC5PrNscQTzdeT0lZkY_eh4vCE7g1VDlG76jep_CvJ1vyEPlW52moo1WrG4UpDtvGdnKZlHjAPcrO5DS9WaPfmfDPV9KcBI4fZuxx3o9z088inMLR0=s1600


இரத்தம் நிற்காமல் வடிந்தது அவனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை சட்டென்று நினைப்பு எங்கோ சென்றது. இருக்காது என மனதைக் அரட்டினான். துர்கா அழுவதை பார்த்து பயத்தில் அவனுக்கும் கண்கள் கலங்கி விட்டது.

"பாப்பா….. எழுத்துருடி ஆரா" அவன் குரல் நடுங்க ஆரம்பித்தது சற்று நேரம் சென்றிருந்தால் வாய்விட்டே அழுதிருப்பான் அதற்குள் அவள் கருவிழி மேலே சொருக இமையை மூடிமூடி திறந்தாள் ஆராதனா.

"தனா கண்ண திற இங்க பார்மா என்ன பாரு" அவள் கன்னத்தை அழுத்தி பிடித்துக் அட்டினான்.

"அம்மா தண்ணீ கொண்டு வா" அதை அவர் காதில் வாங்காமல் அழுதுக்கொண்டே இருக்க

"அழுது தொலையாதமா தண்ணீ கொண்டுவா போ" எரிந்துவிழுந்தான். அவர் எழுந்து உள்ளே ஓடினார்.

"டேய் எதுக்குடா உனக்கு இவ்வளவு கோபம்" கடிந்து கொண்ட தந்தையை முறைத்தான் அவன்.

"அவ எவ்வளவு திமிரா பேசுறா பாத்திங்கல அதான் இப்போவே கண்டிச்சி வச்சேன்"

"அதுக்கு இப்படி இரத்தம் வர மாதிரியா?"

"பக்கத்தில பார்த்துட்டு தானே நின்னிங்க?"

"வீட்டுக்கு ஆம்பளையா நீ கண்டிக்கும் போது நான் என்ன பண்ண?"

"அப்போ வாய மூடிட்டு நில்லுங்க" ராகவனிடமும் பாய்ந்தான் சந்தோஷ். மகனை எதிர்க்க துணிவின்றி "துர்கா" உள்ளே திரும்பி கத்தினார் அவர். தண்ணீரையும் சக்கரை டப்பாவையும் எடுத்துக் கொண்டு ஒடி வந்தார் துர்கா.

ஒருவழியாக அவள் கண்முழித்ததும் சந்தோஷின் கையை தட்டிவிட்டு எழுத்துக் கொள்ள முயன்றாள் முடியவில்லை.
துர்கா பிடித்துக்கொள்ள சோபாவில் அமர்தவள் கண்ணை மூடிக்கொள்ள வேகமாக மாடி ஏறிய சந்தோஷ் கதவை அறைந்து சாத்தினான்
_________
வீட்டில் தனியாக ஜிம் இருந்தாலும் இரண்டு தெரு தள்ளியிருக்கும் ஜிம்மிற்கு செல்வது புவியின் வழக்கம். இன்றும் ஜாக் பண்ணிக்கொண்டு வந்தனை ஜிம்மில் இருந்து வெளியே வந்த கண்ணாடி அணிந்த பெண் இடித்துவிட புவி சாரி சொல்லிவிட்டு செல்ல "ஸ்டுப்பிட்" என அவள் திட்டுவது காதில் விழுந்ததும் கோபமாக திரும்பினான்.

சொடிக்கிட்டு அவளை கூப்பிட தலையில் மாட்டியிருந்த கேப்பில் கைவைத்துக் கொண்டே திரும்பினாள் அவள். அவள் முகத்தை அந்த பெரிய கூலர்ஸ் மறைத்து இருக்க அவள் வாய் மட்டும்தான் தெரிந்தது.

"இடிச்சது நீங்க"

"அப்படியா?" நக்கலாக சொன்னவள் திரும்பி நடக்க அவள் முன்னே சென்று வழியை மறைத்தான் புவி. கையை கட்டிக் கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள் அவள்.

"என்ன ஹீரோயிசம் காட்டுறியா?" தாடையில் விரலால் தேய்த்துக்கொண்டே அமைதியாக கேட்டான் புவி.

"இல்ல ஹீரோயினிசம்" அந்த குரல் எங்கேயோ கேட்டது போல இருந்தது. அவள் சொல்லிக் கொண்டே முன்னால் நடக்க புவி பின்னே பின்னே நகர்ந்தான்.

"என்ன திமிரா? தப்ப நீ பண்ணிட்டு என்னை ஸ்டுபிட்னு திட்டுவியா?"

"ஆமா"

"வாட்? என்ன ஓவரா பேசுற. முதல்ல நீ கூலர்ஸ்ச கழட்டு" அவளை அதட்டினான் அவன். அவனுக்கு அவள் யார் என்று பார்க்கவேண்டும் என மனம் உந்தியது.

"பச் ஏய் தள்ளிப்போடா…." அவள் ஆள் காட்டி விரலை ஆட்ட அதை பிடித்து உடைக்க தோன்றியது புவிக்கு.

"மரியாதையா பேசு" வார்த்தையை கடித்து துப்பினான் அவன்.

"நீ மட்டும் என்னை மரியாதையா வாங்க போங்க சொன்னியா என்ன?"

"பப்ளிக்குனு பாக்கிறேன் நான் ஒரு ஐ.பி.எஸ் ஆஃபிசர். எனக்குனு ஒரு ரெப்புட்டேஷன் இருக்கு"

"இருந்துக்கோ அதுக்கு நான் என்ன பண்ணட்டும்…?"

"ஹலோ என்ன?"

"போன் பேசுறதுனா அங்க ஓரமா போய் நின்னு பேசு.. போ" அவனை தாண்டி சென்றவள் அங்கே வந்து நின்ற கார்கதவை திறக்க அவளை மனதில் பொறுமிக் கொண்டு இருந்தவன் "என்னை தெரியாம பேசுற" என புவி வேந்தன் கத்த

"ஏன் தெரியாமல்? எனக்கு கண்ணு நல்லாவே தெரியும். பாரு நீ மலை மாதிரி இவ்வளவு பெருசா வளர்ந்து இருக்கனு" என்றவாறே அவள் கார் கதவை சாத்தினாள்.

"ஏய் என்ன?" "தைரியம் இருந்தா இங்க வந்து நின்னு பேசு எதுக்கு பயந்து ஓடுற? இதுக்கு என்ன அர்த்தம்?" நக்கலாக கேட்டுக் கொண்டு கார் அருகில் புவி கோபமாக வர "நான் பேசுற அளவுக்கு நீ ஒர்த் இல்லனு அர்த்தம்" சொன்னவள் கார் கண்ணாடியை ஏற்றிவிட காரை வேகமாக குத்தினான் அவன். கார் நகர்ந்துவிட்டதும் "ஷிட்" என மணலை அவன் எத்திவிட புழுதிக்கு நடுவில் அவள் காரை பின்தொடர்ந்து கொண்டு ஒரு கார் சென்றதை பார்த்தான் புவி வேந்தன்.

"மாஃபியா தலைவியா இருப்பாளோ? நீ யாரா இருந்தலும் என் கையில ஒரு நாள் மாட்டுவடி" என்று கருவியவன் வீட்டிற்க்கு திரும்பி நடந்தான்.

கார்கதவை திறந்து இறங்கியவள் தோட்டத்தில் நின்று பூ பறித்துக் கொண்டு இருந்த சாந்தினி அருகில் சென்று அவர் கூடையில் பறித்து வைத்திருந்த பூக்களை ஒரே கையில் மொத்தமாக அள்ளி வானை நோக்கி வீச பூக்கள் மாரியாக இருவர் மீதும் பொழிந்தது.

அவளை செல்லமாக முறைத்தார் சாந்தினி. சத்தமாக சிரித்தவள் கூலர்ஸ்சையும் தொப்பியையும் கழட்டி பக்கதில் இருந்த ஸ்டோன் பென்ஞ்சில் போட்டு விட்டு கையை தூக்கி நெட்டி முறித்தாள் தக்ஷினா.

"என்ன அம்மு இது? இப்போ சாமிக்கு நான் என்ன பண்ணுவேன்"

"இவ்வளவு பூ இருக்குல திரும்ப பறிச்சிக்கோ சாந்"

"அடி.. என் பேரையும் கொலை பண்ணாதனு எத்தனை தடவை சொல்லுறது"

அவரை கட்டி கொண்டவள் "ம்மா உனக்கு வச்சப்போவே அது செத்துப்போச்சி… இதுல நான் எங்க புதுசா கொலைபண்ண. ஆஆஆஆஆஆஆ வலிக்குது விமி விடு" என அலற அவள் குரலில் தோட்டமே அதிர்ந்தது. அவள் காதை விட்ட விமலன் வலது கையை அவள் கழுத்தை சுற்றி போட்டு இழுத்து பிடித்தவன்

"அம்மா இப்போ அவ தலைல கொட்டு… கிடைச்ச சான்ஸ்ச மிஸ் பண்ணகூடாது. தீ சிக்கிட்டா" அவன் சிரிக்க "அம்மாஆஆ" குட்டு விழுந்தது அவன் தலையில். சாந்தினி சிரிக்க அவளையும் சேர்ந்துகொண்டு திரும்பினான் முத்துவேல்தான் நின்று இருந்தார்.

"தந்தையே" அவன் கெடுத்த அதிர்ச்சி ரியக்ஷனில் தக்ஷினா முத்துவேலுக்கு ஹைஃபை கொடுத்தாள்.

"என்னடா?"

"நீங்களா என்ன அடிச்சது?" அவன் நெஞ்சில் கைவைக்க.

"நீ எதுக்குடா என் பொண்ணு காதை திருகின?"

"டாடி..." அவளை இருக்கி கொண்டு அழுக அவன் கையை கடித்தவள் விடுபட்டு முத்துவேலிடம் ஓடிவிட்டாள்.

"அம்மாஆஆஆ அய்யோ ஏய் சாந்து இவளுக்கு நைட் சோறு வைக்கலயா நீ? கால்கிலோ சதையை உறுவிட்டா. புள்ளைய பெத்துவிட சொன்ன என்னத்தையோ பெத்துவிட்ருகாங்க பாரு" அவன் கையை தேய்த்துக் கொண்டு புலம்ப. அவன் முதுகில் இரண்டடி வைத்தார் சாந்தினி.

அவனை முறைத்துக் கொண்டு தக்ஷினா செடியில் குச்சியை ஒன்றை உடைக்க அவனை பிடித்து கொண்டனர் சாந்தினியும் முத்துவேலும்.

"ஆகா ஒன்னு கூடிட்டாங்கய்யா ஒன்னு கூடிட்டாங்க… மீ எஸ்கேப்" என நழுவி ஓடியவன் திரும்பி பார்க்க தக்ஷினாவும் குறி பார்த்து குச்சை வீச அதை பிடித்தவன்

"புவி உனக்கு கரெக்ட்டாதான் பேரு வச்சிருக்கான் வௌவால் மனுஷினு"

"புவி ராஸ்கல்" பல்லை கடித்தவள் பக்கத்தில் இருந்த கல்லை எடுக்கபோக தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிவிட்டான் விமலன்.

எப்போதும் போல வாயை திறந்து பார்த்துக் கொண்டு இருந்தனர் வேலை செய்பவர்கள்.

"என்ன வேடிக்கை சீக்கிரம் வேலைய பாருங்க" அதட்டியவள் குளிக்க உள்ளே சென்றுவிட்டாள்.
_____________

இதோடு நூறாவது தடவையாக எண்ட்ரன்ஸில் இருக்கும் சர்வேல்லன்ஸ் கேமராவில் ஆராதனாவை தேடிக் கொண்டு இருந்தான் அதியன் அவள் வந்தபாடகாதான் இல்லை. பையிலை மூடி வைத்துவிட்டு ஜன்னல் அருகே சென்றவன் அதை திறந்து விட சட்டென்று இளவெயிலோடு காற்று அவன் முகத்தில் மோதியது.

நேற்று அவளை திட்டியதை நினைத்து வருத்தமாக இருந்தது. அவன் டாலர் கேமராவின் வழி பதிவாகி இருந்த அவளின் கலங்கிய முகத்தை பார்த்தவனுக்கு தன்னை நினைத்தே கோபமாக வந்தது.

இரவு தூங்காதது தலை பாரமாக கணத்தது. கண்ணை மூடி நின்றிருந்தான்.

"மே ஐ கம் இன் சார்?"

"எஸ்" விஷ்ணுதான் உள்ளே வந்தான்.

"என்ன விஷ்ணு?"

"ஏலக்காய் லோடு எப்போதும் போல லேட் பண்றாங்க சார். போனதடவையே வார்ன் பண்ணிட்டோம். நெக்ஸ்ட் வீக் எக்ஸ்போர்ட் பண்ணனும்"

"யாரு அந்த காண்ட்ரக்டர்?"

"சந்திரன் சார்"

"நெக்ஸ்ட் லோடு எப்போ தேவபடும்னு கேட்டிங்களா?"

"நெக்ஸ்ட் வீக்கே வேனும் சார்"

"புதுசா சாம்பிள்ஸ் கலக்ட் பண்ணுங்க."

"ஓகே சார்"

"இந்த லோடு வந்தோனே சந்திரனை என்ன வந்து பார்க்க சொல்லுங்க"

"சுயர் சார்" அவனுக்கு சில வேலைகளை கொடுத்து அனுப்பி வைத்தான்.

அவனுக்கு எதிர் இருந்த கேபின் அந்த பக்கமாக திறக்கப்பட நிமிர்ந்து பார்த்தான் ஆராதனா வந்துக் கொண்டு இருந்தாள். கண்ணில் ரீடிங் கிளாஸ் போட்டு இருந்தாள் முகத்தை வையிட் மாஸ்க் மறைத்து இருந்தது. புல் ஸ்லீவ் காலர் வைத்த டாப்பில் இருந்தாள். முடி விரிந்து இருந்தது.

உள்ளே வந்தவள் டேபிளில் அமரந்து தன்னை ஆசுவாசம் படுத்திக் கொண்டாள். முகமெல்லாம் வலித்தது.

கொரோனா வைரஸ் நம் நாட்டை விட்டு மொத்தமாக சென்று வாழ்க்கை இயல்புக்கு திரும்பினாலும் மாஸ்க் நம்மாட்டிலும் சகஜமானதாக மாறி விட்டது அதனால் அதியன் அதை பெரிதாக நினைக்கவில்லை. உடனே அவளை அழைத்தான்.

உள்ளிருந்த கதவு வழியால் வந்தாள் அவள்.

"மார்னிங் சார்"

"மார்னிங்"

"ஆராதனா இந்த பையில்ஸ் எல்லாத்தையும் நீங்க அப்டேட் பண்ணிட்டு எனக்கு மெயில் பண்ணுங்க" என்று பத்து பையில்களை நீட்டினான் அவன்.

"ஒகே சார்" அவள் வாங்கி கொண்டு திரும்ப எத்தனிக்க

"ஆராதனா"

"சார்"

"எதுக்கு மாஸ்க்?"

"அது எனக்கு டஸ்ட் அலர்ஜி"

"ஓகே ஓகே யு கேரி ஆன்" சோர்வாக அவள் நடந்து செல்வதை பார்த்தவன் அலர்ஜியினால் என்று நினைத்துக் கொண்டான். அவள் சென்றவுடன் செக்யூரிட்டிக்கு அழைத்தவன் இன்று இரவே அந்த கேபினை சுத்தபடுத்த சொன்னான்.
_____________________________

"வணக்கம் மேடம் " தன் முன்னே வந்து நின்ற மனிதரை பார்வையில் அளந்தாள் தக்ஷினா. வெள்ளை வேஷ்ட்டியில் பெரிய மனுஷன் தோரணையில் முகத்தை கெத்தாக வைத்துக் கொண்டு நின்று இருந்தார் அவர்.

அவரை ஆராய்ந்து முடித்தவள் வேலை முடிந்து என்பது போல ரீடிங் கிளாசை ஒற்றை விரலால் அழுத்திக் கொண்டு கேஸ்பைலை புரட்டிக் கொண்டு இருந்தாள்.

"மேடம்" அழுத்தி கூப்பிட்டார் அவர்.திரும்பவும் அவரை நிமிர்ந்து பார்த்தாள் தக்ஷினா.

"உட்காரலாமா?" அவர் கேட்க இடது புறம் தலையை சாய்த்து மேலிருந்து கீழ் ஒரு பார்வை பார்த்தவள் மும்முரமாக பைலில் ஆழ்ந்தாள்.

"என்னடா?" என்று இருந்தது அவருக்கு.

"ஒரு வேளை விமலன் இந்த பொண்ண பத்தி சொன்னது நிஜமா இருக்குமோ?" லேசாக பாலாவின் மூலையில் மணியடித்து.

"திரும்பி போய்டவா? இல்ல நிக்கவா? இல்ல கூப்பிட்டு பார்க்லாமா?" அவர் மனதில் கணக்கு போட்டு கொண்டு நின்றிருந்தார். இப்படியே அரைமணி நேரம் செல்ல தன்னிலையை என்னி அவமானமாக இருந்தது அவருக்கு.

கோபத்தில் வேகமாக சென்று சத்தம் வருவது போல கதவை திறந்து திருப்பி தக்ஷினாவை பார்த்தார். அவள் நிமிரவே இல்லை. வேகமாக வெளியேறினார்.

கேஸ் விசயமாக வெளியில் சென்று அப்போதுதான் உள்ளே வந்துக் கொண்டு இருந்தார் முரளி.

"முரளி சார்"

"அட பாலாவா என்ன சார் இங்க?"

"அது புது எஸ்பிய பாத்துட்டு போகலாமேனு வந்தேன்"

"என்ன பாலாசார் கோபமா இருக்கிங்க போல" நமட்டு சிரிப்புடன் கேட்டார் முரளி.

"என்ன முரளிசார் நக்கல் பண்றிங்களா ?"

"உங்களையா ச்சச்ச நீங்க எவ்வளவு பெரிய ஆள்" அவர் கலாய்க்க

"உங்களுக்கு தெரியுது புதுசா வந்தவங்க கிட்டையும் என்ன பத்தி சொல்லுங்க. திமிரா நடந்துக்குது" பாலா சட்டை காலரை தூக்கிவிட கடுப்பாக இருந்தது முரளிக்கு.

"யார எஸ்பி மேடமையா?"

"ஆமா பாக்க சின்ன பொண்ணு மாதிரி இருக்கு என் வயசுக்கு மரியாதை குடுத்து உட்காரகூட சொல்ல மாட்டேன்குது"

"ஓஓ…. மேடம் பர்ஃபாமன்ஸ்சா" மனதிற்க்குள் சிரித்துக் கொண்டார் அவர். அவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் பொதே முரளி போனதுக்கு அழைப்பு வர "நீங்க இருங்க" என்றவர் கொஞ்சம் தூரம் தள்ளி வந்து நின்று பேசினார்.

"சொல்லுங்க மேடம்… "

"நீங்க ஒருத்தன் கூட நின்னு பேசிட்டு இருக்கிங்களே அந்த ஆள் பத்தி எனக்கு தெரியனும் "

"பாலாவா மேடம்?"

"ஓ அவன் பேரு பாலாவா… ம்ம்"

"அந்த ஆளு அப்பா பெரிய பணக்காரர் மேடம். அவரு செத்ததுக்கு அப்பறம் இவன் ப்பேம்காக அரசியல் கட்சினு பாதி அழிச்சிட்டான். விமலன் சார்கிட்ட வெட்டி பந்தா பண்ணி வாங்கி கட்டிப்பான். இந்த ஆளோட மச்சான் ஒருத்தன் எம்.எல்.ஏ வா இருக்கார் இவன் கிட்ட இருக்க காசுகாக இவன பக்கத்துல வச்சிருக்கார்"

"ஓ… விமிகிட்ட பந்தா பண்ணிருக்கானா? அப்ப அந்த ஆள உள்ள அழைச்சிட்டு வாங்க"

"சரி முரளி" என போனை வைக்க திரும்பி பாலாவை பார்த்தார். அவர் இன்னொரு போலீஸிடம் வம்புவளர்த்துக் கொண்டு இருந்தார்.

"அய்யோ பாவும் வாலன்டியரா வந்து சிக்கிட்டான். இனி இந்த பக்கம் வரமாட்டான்" சிரித்துக் கொண்டே பாலாவை நோக்கி சென்றார்.
____________________

அதியனின் மெயிலுக்கு நோட்டிபிகேஷன் வரவும் அதை திறந்து சரி பார்த்தவன் ஆராதனாவை அழைத்து கரக்ஷன்ஸ் சிலவற்றை சொன்னான். அவள் அதையும் முடித்து அனுப்பி வைத்தாள். அவளுக்கு சோர்வாக இருந்தது வாயை அசைக்கவே முடியவில்லை நாசி வேறு வின்வின் என்று தெரித்தது மீண்டும் அவளை அழைத்தான் அதியன்.

கதவை திறந்து கொண்டு அவள் உள்ளே செல்ல விஷ்ணு கையில் இருபது பையில்களை வைத்துக் கொண்டு நின்றிருந்தான்.

"ஆராதனா இது எல்லாமே ஆயில் கம்பெனியோடது. விஷ்ணு நீங்க ஏன் நிக்கிறிங்க? இந்த பையில்ஸ்லாம் பார்த்து முடிக்க மினிமம் 3 ஆர் 4 ஹவர்ஸ் ஆகும் டேக் யுவர் சீட்"

"தேங்கியூ சார்"

"ஆராதனா நீங்க நோட்ஸ் எடுத்து டாக்குமென்ட்டை டைப் பண்ணா போதும். கேர்புல்லா நோட் பண்ணுங்க. அங்க லேப்டாப் இருக்கு எடுத்து லொக்இன் பண்ணிவச்சிக்கோங்க. பக்கத்தில நோட்பேட் இருக்கு" அவன் கை காட்ட அதை எடுத்துக் கொண்டாள்.

அவன் "உட்காருங்க" எனவும் விஷ்ணுவின் பக்கத்தில் உட்கார போக "இருங்க ஆராதனா எனக்கு தெரியுர மாதிரி உட்காருங்க…"

"ஒகே சார்" அங்கு இருந்த சேரை இழுத்து இருவருக்கும் நடுவில் போட்டுக் கொண்டு அமர்ந்தாள். அவள் குரல் ஏதோபோல இருப்பதை இருவருமே கவணித்தனர்.

அவர்கள் சொல்ல சொல்ல நோட் பேடில் எழுதிக் கொண்டவள். மும்முரமாக டைப் செய்துக் கொண்டு இருந்தாள். இருவரும் பிரேக் எடுத்துக் கொள்ள. அவள் மட்டும் வேலை செய்துக் கொண்டு இருந்தாள். முககவசம் போட்டு இருந்ததால் அவள் சோர்வு இருவருக்கும் தெரியவில்லை.

மூவருக்கும் காஃபி சொல்லிய அதியன் ஜன்னலை திறந்து சிறிது நேரம் நின்றிருந்தான். கேன்டீனில் இருந்து காஃபி கொடுத்துவிட்டு சென்றனர். விஷ்ணு அதியனிடம் ஒரு கப்பை கொடுத்துவிட்டு ஆராதனாவையும் அழைத்தான்.

"ஆராதனா coffee?" அதியனின் முன்னால் மட்டும் ஆராதனா என்று தான் அழைப்பான்.

"வேண்டாம்" ஒற்றை வார்தையில் முடித்துக்கொள்ள அவளை சந்தேகமாக பார்த்தான் விஷ்ணு. "என்னாச்சு ஆராதனா?" அவள் அருகில் விஷ்ணு செல்ல காஃபி அருந்தி கொண்டே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த அதியனும் திரும்பி பார்த்தான்.

"ஒன்னும் இல்ல விஷ்ணு… நீங்க குடிங்க"

"ஏன் உன் குரல் ஒரு மாதிரி இருக்கு?" அவளை உற்று பார்த்தான் விஷ்ணு.

"அது அவங்களுக்கு டஸ்ட் அலர்ஜியாம்" இடைபுகுந்தான் அதியன்.

"டஸ்ட் அலர்ஜியா?"

"அப்படிதான் சொன்னாங்க… நீங்க அவங்கள கம்பல் பண்ணாதிங்க" திரும்பி ஜன்னல் அருகே சென்று விட்டான் அதியன். விஷ்ணு ஆராதனாவிடம் காட்டும் அக்கறையை கண்டு எரிச்சலாக இருந்தது அவனுக்கு .

குழப்பமாக திரும்பி அவளை பார்த்தான் விஷ்ணு."மைலிக்கு அதெல்லாம் இல்லையே. எதுக்கு பொய் சொல்றா.. மாஸ்க் வேற போட்டுருக்கா" மனதில் புலம்பியவன் அவளை பார்க்க அவளும் அவனை தான் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

"என்ன இதெல்லாம்" அவன் கண்களால் கேட்க ஒன்றும் இல்லை என்பதாக தலையை அசைத்தாள்.

டைப் செய்ததை பிரிண்டர்க்கு அனுப்பிவிட்டு அதை எடுக்க எழுந்து சென்றாள். பிரண்டர் அதியன் நின்றிருந்த ஐன்னல் பக்கத்தில் தான் இருந்தது. அவள் பேப்பர்ஸை எடுத்துக் கொண்டு இருக்க திறந்திருந்த ஜன்னல் வழி காற்று வேகமாக வீச அதில் அவள் முடி பறந்து விலக கழுத்தில் பெயின் ரிலீப் பிளாஸ்டர்ஸ் ஒட்டி இருந்தது தெரிந்தது. விஷ்ணு இருப்பதனால் பார்வையை திருப்பிக்கொண்டான். அப்போதும் அவன் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை.

சிறிது நேரத்தில் மீண்டும் வேலை தொடங்கி விட மூவரும் அதில் ஆழ்ந்தனர். அதியனின் பார்வை மட்டும் அடிக்கடி அவளை தீண்டி விலகியது.

அவள் கையை எடுத்து கழுத்தை தடவிக் கொண்டது. விரலை மடக்கி நெட்டி முறித்துக்கொண்டது. பேப்பர்ஸ்காக அவள் கையை நீட்டிய போது அவள் உள்ளங்கையை பார்த்தான் டைப் அடித்ததால் சிவந்து பேய் இருந்தது.

"ரொம்ப சாப்ட் போலையே… பூ மாதிரி இவள ஹாண்டில் பண்ணும்" மனதில் நினைத்துக் கொண்டவன் வேலையை பார்க்லானான்.

விஷ்ணு சொல்ல சொல்ல டாக்குமென்ட்டை அடித்துக் கொண்டு இருந்தாள் ஆராதனா. அதியன் அவள் டைப் செய்யும் ஸ்பீடை பார்த்துக் கொண்டு இருந்தான். ஸ்லீவ் லேசாக விலக அப்போதுதான் கவனித்தான் மணிக்கட்டில் நகங்கள் அழுத்தி புண்ணாகி இருப்பதை.

"என்ன இது காயம்?" அவன் மனதில் நினைத்து கொண்டு இருக்க அவன் பார்வையை கண்டு ஸ்லீவை இழுத்துவிட்டாள் அவள்.

"ஏதோ இருக்கு" அவன் ஆராய்ச்சி பார்வை பார்க்க அவள் பதற்றத்தில் நோட் பேடை தட்டி விட்டதும் பேனா கிழே விழுந்து உருண்டது.

அதை எடுத்தவள் அவசர கதியில் நிமிர மேஜை மூக்கில் இடித்து வின் என்று ஒரு வலி கிளம்பியது. அவளை தான் பார்த்துக் கொண்டு இருந்தான் அதியன்.

"ஹேய் ஆராதனா மாஸ்க்" அதியனின் குரலில் நிமிர்த்து பார்த்த விஷ்ணு

"அய்யோ மைலி என்ன பிளட்?" என பதறி அவள் பக்கத்தில் ஓடினான்.

"ஒன்னும் இல்ல"

"முத மாஸ்க எடு" அதட்டினான் அதியன். இரத்தம் தாடை வரை விழிந்தது.

"பரவால்ல சார்" என்றவள் எழுந்து வெளியில் ஓட அவள் பின்னாலே ஓடிய விஷ்ணு அவளை இழுத்துக் கொண்டு அவன் கேபினுக்குள் சென்றான். வலுக்கட்டாயமாக அவள் மாஸ்கை கழட்டிய விஷ்ணு அதிர்ந்து விட்டான்.

இரண்டு கன்னங்களும் கீழ் உதடும் வீங்கி இருக்க கைதடங்கள் பதிந்து கண்ணி இருந்தது முகம். இதழ் ஒரத்திலும் நாசி துவாரத்திலும் ரத்தம் உறைந்து இருக்க. புதிதாக வந்த ரத்தம் கன்னம் தாடை உதடு என்று பரவி இருந்தது.

"மைலி என்னமா இது?"

"பச் ஒன்னும் இல்ல"

"யாரு உன்ன அடிச்சது?"

"ப்ளீஸ் என்னால பேச முடியல விட்டுங்க"

"சொல்ல போறியா இல்லையா?" அவன் அதட்ட அமைதியாகவே இருந்தாள்.

"உன் அப்பாவா?" மறுத்து தலையாட்டினாள் அவள்.

"சந்தோஷா?" அவள் அமைதியாக இருக்க அவனுக்கு புரிந்தது.

"எதுக்கு உன்ன காட்டுமிராண்டி மாதிரி அடிச்சான்? மென்டாலா அவன்? அவனை எல்லாம் மென்டல் ஹாஸ்பிட்டல தான் சேக்கணும். சைக்கோ" கோபத்தில் கத்த

"விஷ்ணு" அதட்டினாள்.

"ஆமா உன் அண்ணன சொன்னா உடனே உனக்கு கோபம் வருமே. நீதான் அவன அண்ணனு நினைக்கிற அவன் எப்படி உன்ன அடிச்சி வச்சிருக்கான் பார்" சோர்வாக நாற்காலியில் அமர்ந்தாள் அவள்.

"அவன நான் சும்மா விட போறது இல்லை. எதுக்கு அடிச்சான் அவன் உன்ன?"

"விஷ்ணு ப்ளீஸ் சந்தோஷ் கிட்ட நீங்க பேச கூடாது என் மேல பிராமிஸ்"

"ச்ச ஏன் அடிச்சானு முத சொல்லு?"

"விஷ்ணு லீவ்மி" கண்ணை மூடிக் கொண்டாள் அவள்.

"என் கூட நைட் வந்ததுக்கா?" கதவருகில் இருந்து சந்தம் வர இருவரும் திரும்பி பார்த்தனர் அதியன் தான் நின்றிருந்தான்.

அவள் அருகில் வந்தவன் அவள் முகத்தை ஆராய்ந்தான். பின் பார்வை கழுத்தில் பதிந்து கைக்கு தாவியது. அவனை கண்டதும் எழுந்து நின்றாள் ஆராதனா.

அவன் அவள் கையை பிடித்து மேலே தூக்க "சார்" முன்னே வந்த விஷ்ணுவை ஒரு பார்வை மட்டுமே.

ஆராதனா அவள் கையை இழுத்துக் கொள்ளமுயல அவன் பிடி இரும்பு பிடியாக இருந்தது. அவன் ஸ்லீவை மேலே ஏற்றிவிட அங்கேயும் பெயின் ரிலீப் பிளாஸ்டர்ஸ் ஒட்டபட்டு மணிக்கட்டு கண்றி சிவந்து அழுந்த படிந்த நக காயங்களும் இருந்தது.

"அதுக்கு தானே?"

"இப்ப நீ வாய திறக்கல போலீஸ்க்கு கால் பண்ணுவேன்"

"வேண்டாம்" என்றவள் தலையைமட்டும் ஆமாம் என்பதாக ஆட்டினாள்.


கோகாதடி என் பெண்ணே! ❤❤

Comment here 👇👇👇👇👇👇👇

 
Last edited:

Writer X

Well-known member
Messages
462
Reaction score
616
Points
93
பெண்ணே 9.1

SKfCZvhgfrw0UNkjU2A0fcBRQT69du1vI-cE4Uv-_HEVRlMUYFpNcpq01vd0J4kRpQAw9AFZumT7fmnpBG7yyrRmQOYv4IvIL0qwfSPrzOp3wfr4NHbUu97Hp_Ng0Y7hpA31rHq8=s1600


ஸ்கைப்ளூ ஷர்ட் வையிட் பேண்ட் என கடற்கரை மணலில் காற்றில் சீகை பறக்க நடந்து வந்தான் அவன். சூரியனின் மொத்த ஒளியையும் குத்தகைக்கு எடுத்தது போல் பிரகாசமாய் இருந்தான்…

ஒரு மெல்லிய பாடல் சத்தமும் காற்றில் வந்தது….

ஓஹோ..

நெஞ்சை பூபோல் கொய்தவளே
என்னை ஏதோ செய்தவளே

நெஞ்சை பூபோல் கொய்தவளே
என்னை ஏதோ செய்தவளே

வையிட் கலர் சேலையில் தலையை விரித்துவிட்டு மணலில் படுத்திருந்தாள் அவள்.

அவள் முகத்திற்க்கு நேர் கைநீட்ட அவன் முகம் அவளுக்கு தெரியவில்லை.

அவளை தூக்கி விட்டவன் நெருங்கி வர கண்ணை மூடிக் கொண்டாள்.

அவள் நெற்றியில் முத்தம் வைத்து தன் மார்பில் சாய்த்துக் கொண்டு தலையை வருடிவிட்டான் அவன்.

அவன் நெஞ்சத்தை மஞ்சமாக்கி சுகமாக கண்மூடி சாய்திருந்தாள்.

ஓஹோ..

நெஞ்சை பூபோல் கொய்தவளே
என்னை ஏதோ செய்தவளே

நெஞ்சை பூபோல் கொய்தவளே
என்னை ஏதோ செய்தவளே

ஓஹோ..

அலை காலை நனைக்க பாடல் காதை நனைக்க… சட்டென்று குழிகுள் விழுவது போன்று தோன்ற படக்கென்று எழுத்தாள் ஆராதனா.

அவள் மொபைலில் இருந்துதான் பாட்டு சத்தம் வந்தது…

எழுந்து அலாரத்தை ஆஃப் பண்ணிவிட்டு கண்ணை கசக்கினாள். மணி ஆறு என்று காட்டியது.

கணவின் தாக்கம் அவள் முகத்தில் சிவப்பேற்றி வெட்க்க முறுவல் நிலைத்திருந்தது. தலையணையில் முகம் புதைத்துக் கொண்டாள்.

"யாரு மேன் நீ? ஏன் கணவுல வந்து தொல்லை பண்ற…?" தனக்குள் சிரித்துக் கொண்டவளுக்கு அப்போது தான் நியாபகம் வந்தது ஒரு வாரம்கழித்து இன்று தான் வேலைக்கு செல்லும் நாள் என்று.

அதியன்தான் ஒருவாரம் கம்பெனி பக்கம் வரக்கூடாது என்று லீவ் கொடுத்து அனுப்பி வைத்திருந்தான். அன்று நடந்ததை நினைத்துப் பார்த்தாள் அவள்.

பால்கனியில் காஃபி கப்புடன் நின்றிருந்த அதியனும் அதை தான் நினைத்துக் கொண்டு இருந்தான்.

அவள் காயத்தை பார்த்தவன் அவள்கையை இறுக்கி பிடித்துக்கொண்டு கேட்ட அத்தனை கேள்விக்கும் அமைதியாகவே நின்றிருந்தாள் ஆராதனா.

"இப்போ நீ வாய திறக்கலனா நான் போலீஸ்க்கு கால் பண்ணுவேன்"

"வேண்டாம் சார்" அவள் பதறினாள்

"அப்போ ஏன்?"

"வேலைக்கு வர கூடாது சொன்னான். நான் முடியாதுனு சொன்னேன். அதுக்குதான்" தயங்கி தயங்கி சொன்னாள்.

"அவனெல்லாம் முட்டிக்கு முட்டி தட்டி உள்ள தள்ளனும். அப்படியே விட்டா நல்லது இல்ல. நான் புவிகிட்ட சொல்றேன்" கோபத்தில் கத்தி கொண்டு இருந்தவனை இடை மறித்தாள் அவள்.

"அது என் பர்சனல் சார். நீங்க அதுல தலையிடாதிங்க"

"எது பர்சனல் ஆராதனா?. இப்படி காட்டுமிராண்டி தனமா அடிச்சதா? உங்களுக்கு இது பர்சனலா இருக்கலாம் பட் அது பாத்துட்டு என்னால சும்மா இருக்க முடியாது"
…………………….

"படிச்சவன் தானே அவன்? அவன் உங்கள உட்கார வச்சி ஆரத்தி எடுத்து அத நாங்க கேட்டா நீங்க பர்சன்ல்னு செல்லலாம். உங்கள அடிச்சது ஒரு அபென்ஸ்… தெரியுமா உங்களுக்கு?"
………………………
"என்ன பாக்குறிங்க? ஒரு பொண்ணுனு பாக்கமா இப்படி ரத்தம் வர மாதிரி அடிச்சிருக்கான். அத வாங்கிட்டு நீங்களும் அமைதியா இருக்கிங்க. நீங்களாம் படிச்சதே வீண்தான்"

"வேற என்ன சார் பண்ணனும்?. ரோட்டல உட்காந்து தர்ணாவா பண்ண முடியும்? இது எனக்கு புதுசு இல்ல."

"நீங்க எதிர்கனும். அடிச்வுடன் வாங்கிட்டு ஏன் நிக்கிறிங்க?"

"நாங்க திரும்ப அடிக்கலாம் எதிர்த்து நடக்கலாம் சார் ஆனா அதுக்கபறம் அது வீடாவே இருக்காது. இந்த அடி வலி காயம் இததெல்லாம் எனக்கு மட்டும் இல்ல நிறைய பேருக்கு ஒன்னுமே கிடையாது. நீங்க இத பத்தி இனி பேசாதீங்க சார். உங்களுக்கு இஷ்டம் இல்லனா நான் வேற ஜாப் தேடிக்கிறேன்"

"உனக்கு அறிவு இருக்கா? அமைதியா இருந்தா நீ அடிமையாதான் கிடப்ப. மத்த பெண்ணுக்குனா மட்டும் டிவி, வாட்ஸ்அப்,யூடியூப்,ட்விட்டர்னு போர் கொடி பிடிப்பிங்க. உங்க வீடுனு வந்தோன பர்சனல்னு பின்னடிக்கிறிங்க"

"சார் ப்ளீஸ்…. நான் பாதுகாப்பா இருக்கனும் தானே சொல்றாங்க விட்டுங்க சார்"

"நீ பத்திரமா இருக்கனும்னு நினைச்சா… தினமும் எவ்வளவு நேரம் ஆனாலும் நின்னு கூட்டு போயிருக்கனும்…. அதுக்கு பேருதான் பாதுகாப்பா பாத்துக்கிறது… இப்படி அடிச்சி வீட்டுல அடைச்சி வைக்கிறது domestic violence. குறைந்தபட்சம் ஒருவருசம் ஜெயில் "
………………….
"கொஞ்ச நாள் உள்ள இருந்தாதான் அவனுக்கு புத்தி வரும்" என்றவன் புவிக்கு அழைக்கலானான்.

"சார் சார்" அவன் போனை பறித்துக் கொண்டாள் அவள்.

"பச் போனை தாங்க"

"புரிஞ்சுக்க மாட்டிங்களா சார்? ஏன் எல்லாரும் இப்படி செய்யுரிங்க" அவள் ஆற்றாமையிலும் வலியிலும் கதறி அழ விஷ்ணு ஆதரவாக பிடித்துக் கொண்டான்.

அவள் அழுவதை பார்த்ததும் அதியனுக்கு இதயத்தை ஏதோ செய்தது. "ஆராதனா ப்ளீஸ் அழாதிங்க.. நா நான் சொல்லல"

ஒருவழியாக அவளை சமாதானபடுத்தி முகம்கழுவி வர வைத்தான்.

"ஆராதனா நீங்க வீட்டுக்கு கிளம்புங்க" எனவும் அதிர்ச்சியாக பார்த்தாள் அவள்.

"சார் ப்ளீஸ் கொஞ்சம் டைம் கொடுங்க நான் வேற வேலை தேடிக்கிற வரைக்கும்"

"உங்கள நான் வேலைய விட்டு போக சொல்லவே இல்ல. ஒன் வீக் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க" விஷ்ணு அவனை ஆச்சரியமாக பார்த்தான் ஓரளவுக்கு அவன் அதியனை கண்டுக் கொண்டான்.

"தேங்க்ஸ் சார் பட் லீவ் வேண்டாம்"

"உங்ககிட்ட நான் கேட்கல…"

"சார்…"

"சொன்னதை மட்டும் செய்ங்க ஆராதனா…. விஷ்ணு இவங்கள ஹாஸ்பிட்டல் கூட்டுபோய்ட்டு வீட்டுல விட்டுங்க" என்றவன் கதவை திறந்துக் கொண்டு சென்றுவிட்டான்.

"பூ மாதிரி இருக்கிற உன்ன இனிமேலும் அவங்ககிட்ட விட மாட்டேன் ஆரு… என் கண்ணுக்குள்ள உன்ன வச்சி பாத்துக்க தோனுது…எனக்கே தெரியாம எனக்குள்ள வந்துட்ட ஆரு" நெஞ்சை தொட்டு பார்த்துக்கொண்டான் அதியன்.
__________________

"ராதிகா ராதிகா" சமையல் அறையில் இருந்து அபிராமி கத்திக்கொண்டு இருக்க தன் கையில் இருந்த சர்ஜிக்கல் நைப்பை ஒரு சிரிய பிளாஸ்டிக் பையில் போட்டு ஹாண்ட் பேக்கில் உள் இருந்த குட்டி ஜிப்பில் போட்டுவிட்டு ஹாண்ட் பேக்கை மாட்டிக் கொண்டாள் ராதிகா.

"ராதிகா கிளம்பிட்டியா?" எதிரே வந்தாள் அவள் தங்கை அபிராமி.

"ம்ம். என்ன அபி கூப்பிட்டியே?"

"இந்தா ராதிகா டிஃபன் பாக்ஸ்… இன்னைக்கு உனக்கு பிடிச்ச தக்காளி சாதம் நானே செஞ்சேன்"

"நீயா? உனக்கு படிக்கிற வேலையில்லயா… ?"

"இன்னைக்கு ஒரு நாள் தானே… அம்மா வேலை செய்ற வீட்டுல ஏதோ விசேசமாம் அதான் காலையிலே வர சொல்லிட்டாங்கனு புலம்புனுச்சி… அதுமட்டும் இல்லாம நான் செய்யிறது உனக்கு பிடிக்கும்ல"

அவளை முறைத்தாள் ராதிகா.

"உனக்கு காலேஜ் பீஸ் கட்டறதுக்கு எவ்வளவு கஸ்டபடுறோம் தெரியுமா? எனக்கு தான் படிக்க முடியல நீயாச்சும் படிச்சி முன்றேனுதான் எல்லாத்தையும் என் தலைல தூக்கிபேட்டுகிட்டன். அத வீண் ஆக்கிராத அபி"

"முறைக்காத அக்கா நான் சீக்கிரமா எழுந்து படிச்சிட்டு தான் வேலை செஞ்சேன்"

"சரி சரி. அப்பறம் அபி நீ வீணை நரம்பு அறுந்துட்டுனு சொன்னல வளையல் டப்பால காசு வச்சிருக்கேன் எடுத்துகோ. நான் கிளம்புறேன்" கதவை நோக்கி நடந்தாள்.

"ராதிகா" திரும்பி பார்த்தாள் அவள்.

"என்னடி? "

"நில்லு வரேன்" உள்ளே ஒடியவள் திரும்பி ஒரு கவரோடு வந்தாள்.

"என்ன அபி இது" கலர் பேப்பர் சுற்றியிருந்ததை பார்தாள் ராதிகா.

"இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் செல்ல அக்காக்கு" அவளை பார்த்து சிரித்த ராதிகா அதை வாங்கி பிரித்து பார்த்தாள்.
"என்ன அபி ஹாண்ட் பேக்? என்கிட்ட தான் ஒன்னு இருக்கே"

"இந்த ஓட்ட பேக்கா? அன்னைக்கு பத்துருபா காயின போட்டுட்டு திரும்ப தேடினா ஓட்ட வழியா உள்ள போய்ட்டு…. வாங்கி எவ்வளவு நாள் ஆச்சி" சிரித்தாள் அவள்.

அவள் தலையில் குட்டினாள் ராதிகா.

"ஏதுடி உனக்கு காசு? எவ்வளவு கொடுத்த? இந்த சேலை வேற நேந்து தந்த" தன் முந்தானையை தூக்கி காண்பித்தாள்.

அவள் மஞ்சள் மேனிக்கு வெளிர் பச்சையும் அடர் பச்சையும் கலந்த சேலையில் தேவதையாக தெரிந்தாள்.

"கிஃப்ட் தந்தா சந்தோஷம் படனும் சந்தேகம் படகூடாது. இந்த பேக் 200 தான். அதுவும் நான் வீணை கிளாஸ் எடுக்கிறேன்ல என் புக்ஸ் நோட்க்கு போக மீதம் இருந்தது அதுல உனக்கு பேக்கும் சேலையும் வாங்கினேன்"

ராதிகாவிற்கு கண்கள் கலங்கியது... அபிராமியை பார்த்து பளிர் என்று சிரித்தாள்.

"சரி சரி அந்த பேக்க கொடு" என்று பிடுங்கி தரையில் கவிழ்த்து குழுக்க உள்ளிருந்தது அனைத்தும் சிதறியது. இருவரும் பேசிக்கொண்டே புதிய பேக்கில் எடுத்து வைத்தனர்.

"சரி அபி காலேஜ் முச்சோனே வீட்டுக்கு வத்திறனும் சரியா?" என்றவள் திரும்ப

"அக்காவ்"

"என்ன அபி?" அவர்களின் தந்தை படத்தின் முன் இருந்த விபுதியை எடுத்து வைத்துவிட்டாள் அபிராமி. சிரித்தவள் கதவை திறந்துக் கொண்டு வெளியில் வந்தாள்.

"ராதிகா"

"இப்ப என்னடி? "

"சும்மா தான்… டாட்டா சொல்ல"
ராதிகாவிற்க்கு என்வோ போல் இருந்தது.. மனதில் ஏதோ நெருடல்.

"அபி"

"என்னக்கா?"

"இன்னைக்கு நீ காலேஜ் போக வேண்டாம். வீட்டுல இரு… நான் முடிஞ்சா சீக்கிரம் வர பாக்கிறேன்… சரியா? வீட்ட பூட்டிட்டு படி. என்னோட வீணைய எடுத்துக்கோ உன்னோடத நாளைக்கு பாத்துக்கலாம்" தலையை ஆட்டி சிரித்தவளா அக்கவிறக்கு இனையாக அழகாக இருந்தாள்.

ராதிகா கிளம்பியதும் கதவை தாள் வைத்துவிட்டு உள்ளே வந்தவள். காலில் ஏதோ அழுந்த எடுத்து பார்த்தாள் வெள்ளி மாதிரியும் இல்லாமல் வித்தியாசமாக இருந்த மோதிரத்தில் நடுவில் சதுரமாக பெரிய கரும்பச்சை கல் இருந்தது. அதை அந்த பழைய பேக் உள்ளே போட்டவள் அந்த பையை பழைய சாமான் போடும் பரனில் போட்டுவிட்டு வந்தாள்.

"முரளி சார் மேம் எங்க?" அவசரமாக வந்தான் சரத்.

"என்ன சரத்? மேடம் உள்ளதானே இருந்தாங்க"

"உள்ள இல்ல சார் ஒரு சூஸ்சைட் கேஸ் மேம் கிட்ட சொல்லனும்"

"எல்லாத்துக்கும் எஸ்.பியா வர முடியும்… நீ அங்க போகமா இங்க ஏன்யா வந்த" முறைத்தார் அவர்.

"சார் நான் அங்க போய் ஸ்பாட்ட பாத்துட்டு தான் வந்தேன். எல்லாமே பக்காவா சூஸ்சைட் மாதிரி செட்டப் பண்ணிருக்காங்க சார்"

"என்ன சரத் சொல்ற?"

"ஆமா சார் இத பாருங்க" தன் மொபைலில் இருந்த படத்தை காட்டினான் அவன்.

அதில் ஒரு பென் சடலம் தரையில் முட்டிபோட்ட நிலையில் கழுத்தில் சேலையால் சுருக்கு போடபட்டு இருந்தது.

"வீட்டுல யாரு யாரு இருந்தாங்க?"

"யாரும் இல்ல சார் எல்லாரும் வேலைக்கு போயிருக்காங்க.... பக்கத்து வீட்டுல இருக்க லேடி கதவ தட்டிருக்காங்க திறக்கலனு ஜன்னல் வழியா திறந்து பாத்துட்டு இன்பார்ம் பண்ணாங்க"

"வாட் ஹேப்பன் சரத்?" இருவரும் திரும்பி பார்த்தனர் தஷ்னிதான் நின்றிருந்தாள்.

போகாதடி என் பெண்ணே!
💕💕💕💕💕💕💕


Comment here.... 👇👇👇

 
Last edited:

Writer X

Well-known member
Messages
462
Reaction score
616
Points
93
பெண்ணே -9.2


அந்த குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டை மட்டும் சூழ்திருந்த கூட்டத்தை விலக்கி வந்துநின்ற போலீஸ் காரில் இருந்து இறங்கினாள் தக்ஷினா.

அவளருகே வேகமாக வந்த சரத் சலூட் வைத்து அவளுடன் சேர்ந்து நடந்தான்.

"யாரு பஸ்ட் பார்த்தது?"

"பக்கத்துவீட்டு லேடி மேம்"

"எத்தன மணிக்கு உங்களுக்கு நியூஸ் வந்தது?"

"ரெண்டு மணி இருக்கும் மேம்" கதவிற்க்கு முன் இருந்த பாரிகோட் டேப்பை சரத் தூக்கி பிடிக்க குனிந்து உள்ளே சென்றாள்.

அவர்கள் கொடுத்த கிளவுஸ் மாஸ்கையும் போட்டுக் கொண்டவள். கட்டிலில் இருந்த பெண் சடலத்தை பார்த்தாள். சுற்றியும் தடயவியல் துறையினர் தடையங்களை சேமித்துக் கொண்டு இருந்தனர். கட்டிலின் அருகே பேர்னஸ் பவுடர் டப்பா உருண்டு கிடக்க பவுடரும் சிந்தியிருந்தது.

சடலத்தின் முகம் உடல் கருத்து வாயில் இருந்து இரத்தம் கசிந்து உறைந்து இருந்தது. கழுத்தில் நகம்கீரி அங்கேயும் இரத்த காயம். ஒரு கருப்பு சுடிதார் போட்டுஇருந்தாள் அந்த பெண்.

தக்ஷினாவின் அருகில் வந்தார் தடயவியல் தலைமை ஷீபா நாயர்.

"மேம் இட்ஸ் எ கிளியர் மர்டர். இறந்து ஒரு 3 ஹவர்ஸ் இருக்கலாம்" அவள் அவரை கேள்வியாக பார்க்க

"நிறைய டி.என்.ஏ சாம்பிள்ஸ், பிங்கர் பிரிண்ட் கிடைச்சிருக்கு மேம். நாலு இடத்தில இரத்த கறை மார்க் பண்ணிருக்கோம்"

சிறிது நேரம் எல்லாவற்றையும் பார்வையிட்டவள் அவர்களிடம் திரும்பி பின்னால் வர சொல்லி கதவு பக்கம் சென்றாள்.

"எப்படி உள்ள வந்திங்க?"

"கதவ நாங்க தான் மேம் உடைஞ்சுட்டு வந்தோம்"

"சோ தெரிஞ்சவன் தான் உள்ள வந்திருக்கான்"

"வந்திருக்காங்க மேம். இரண்டு பேரு. பிளட் ஸ்டயின்ல இரண்டு பேரோட பிங்கர்பிரிண்ட் கிடைச்சிருக்கு"

"சரத் நீங்க பக்கதில இருக்க சிசிடிவி புட்டேஜ் எல்லாத்தையும் கலட் பண்ணிட்டிங்களா? "

"இந்த ஏரியால சிசிடிவி எதுவும் இல்ல மேம். அதனால மெயின் ரோட்லேந்து பக்கத்து ஏரியால இருக்க எல்லாத்தையும் கலக்ட் பண்ணி கண்ட்ரோல் ரூம்ல கொடுக்க சொல்லி எஸ்.ஐ கிட்ட சொல்லிருக்கேன் மேம்"

"குட்"

"மிஸஸ் நாயர் வீடு முழுக்க இருக்க எல்லா பிங்கர்பிரிண்டையும் நோட் பண்ணிட்டிங்களா?"

"இல்ல மேம் ஆன் தி வே. பட் கிரைம் இந்த ரூம்ல தான் நடந்திருக்கு. இங்கேயே சில டெஸ்ட் பண்ணோம்"

"ம்ம் இரண்டு பேரு உள்ள வந்திருக்காங்க அப்பறம்?" அவளை பின்தொடர்ந்து அந்த ரூமிர்க்குள் சென்றார்கள் இருவரும்.

"பலமா அறைஞ்சிருக்கான்" என்றவள் ஒரு ஸ்டிக் எடுத்து சடலத்தின் முகத்தை திருப்பினாள். கையச்சி படிந்து இருந்தது.

"சண்டையில் ஒருத்தன் தலை முடியை பிச்சிருக்கா. கிழே தள்ளி ரைட் ஹாண்ட காலால் நசுக்கிருக்கான். அவன் முடிய பிச்சதுக்கா இருக்கலாம் கையில் சிராய்ப்பு இருக்கு. ம்ம் கால வச்சி உதைச்சிருக்கான் அதுக்கு அடையாலமா அந்த பவுடர் அச்சி டிரஸ் புல்லா கால் தடம் பதிஞ்சிருக்கு" ஒவ்வொரு தடையத்தையும் அசியும் பண்ணிக்கொண்டு இருந்தாள் தக்ஷினா.

அவள் செல்வது 80 சதவிதம் ஒத்துபோணது.

"ஒருத்தன் காலால கழுத்துல அழுத்தவும் இரண்டு கையால் தடுக்கும் பொது அவ நகம் கீறிதான் அந்த பொண்ணு கழுத்துல காயம் ஆகிருக்கு மேம்" ஷீபா

"பிளட் ஸ்டயின் எப்படி வந்தது?"

"அந்த பொண்ணு கழுத்த மிதிக்கும் போது அவன் காலை நகத்தால பராண்டி இருக்குகாங்க. நகத்தில எடுத்த ப்ளட் சாம்பிளும் அந்த பீரோல் கதவு அடில எடுத்ததும் அக்கியுஸ்டோட ப்ளட் மேம்… ஒழுங்கா நாட் போடதுநால் பாடி இறங்கிட்டு மத்ததெல்லாம் அட்டாப்ஸி ரிப்போர்ட் வந்தாதான் தெரியும் மேம்"

"இவ்வளவு பக்கத்தில பக்கதில வீடு இருக்கு சத்தம் கேட்காகம இருக்க வாய்ப்பில்லை மேம்" சரத்

"கத்தி இருந்தா கண்டிப்பா கேட்டுருக்கும் சரத்" என்றவள் ஷீபாவைதான் பார்த்தாள்.

"ஷி ஹாவ் ஹைப்பிரிமெசிஸ் கார்டியம். சோ அவங்க அரை மயக்கத்திக்கு போயிருக்கனும்"

"வாட்? " அதிர்ந்தான் சரத்.

"சோ பிரக்னண்ட்டா இருந்துருக்காங்க…. ஷீபா எனக்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பீட்டஸ் டி.என்.ஏ இந்த இரண்டுல எந்த டி.என்.ஏ கூட மேட்ச் ஆகுதானு டெஸ்ட் பண்ணிட்டு சொல்லுங்க"

"நாளைக்கு தான் மேம் முடியும்"

"சரத் நீங்க இந்த பொண்ணோட லவ்வர்,பிரண்ட்ஸ் எல்லாரையும் விசாரிங்க. முக்கியமா இந்த பொண்ண பத்தி எல்லாம் என் டேபிலுக்கு வரணும்" என்றவள் ஷீபாவிடம் கைகொடுத்து விட்டு வெளியே வந்தாள்… ஆம்புலனஸ் நிற்க ஸ்டக்ச்சரில் போர்வையால் மூடி சடலத்தை கொண்டு வந்தனர். ஒரு பக்கம் குடும்பத்தினரின் கதறல்.

"மேம் அந்த பொண்ண பத்தி பக்கத்தில விசாரிச்ப்போ ரொம்ப அமைதினு சொன்னாங்க. சின்ன வயசுலேந்து இங்க தான் இருக்காங்கலாம். எல்லாரும் அந்த பொண்ண பத்தி நல்லவிதமாதான் மேம் சொல்றாங்க"

"இருக்கலாம் சரத் விசாரணை பண்ணா எல்லாம் வெளில வந்துரும்… நீங்க பாரன்சிக் ஆளுங்க கிளிப்பினதுக்கு அப்பறம் வீட்ட சீல் பண்ணிட்டு வாங்க. ஏ2வ இங்க காவலுக்கு போடுங்க"

"ஓகே மேம்"

"சரத் அந்த பொண்ணோட போணுக்கு கடைசியா யாரு கால் பண்ணாங்கனும் பாருங்க. மீடியாவ அலோவ் பண்ணாதிங்க… மத்த பார்மாலிடிஸ் எல்லாம் முடிச்சிட்டு என்ன வந்து பாருங்க"

"ஓகே மேம்" என சலூட் வைக்க காரில் ஏறி கதவை சாத்தியவள் கிளாசை இறக்கி அவனை அருகே அழைத்தாள்.

"அட்டாப்ஸி ரிப்போர்ட் வர வரைக்கும் அவங்க பேம்லிகிட்ட எதும் சொல்லாதிங்க… முக்கியமா மீடியாவ இரண்டு நாளைக்கு அவங்க பக்கத்தில விடாதிங்க.... "

"எஸ் மேம்" அவள் கார் நகர்ந்தது.

"யோவ் ஏ2 இங்க வாயா… இன்னிக்கு நைட் இங்க காவலுக்கு நீ தான். சொந்தகரனு சொல்லிட்டு வந்தா உள்ள விட்டுராத துனைக்கு பீ.சிய கூப்பிட்டுக்கோ. அப்பறம் அந்த அம்மாக்கு குடிக்க ஏதாச்சும் தர சொல்லு ஆழுதுட்டே இருக்காங்க"

"சரிங்க சார்"

"பத்திரம் யாராவது சந்தேக படுறமாதிரி வந்தா பிடிச்சிவச்சிட்டு எனக்கு கால் பண்ணு. நான் ஜி.ஹெச் போகனும்"

"ஓகே சார்" என்றதும் தன் புல்லட்டை கிளப்பிக் கொண்டு சென்றான் சரத்.
____________

"ராதிகா என்ன இன்னைக்கு இவ்வளவு அழகாக வந்திருக்கிங்க?" அந்த சிறிய சூப்பர் மார்க்கெட் கடையை திறந்துக்கொண்டு வந்தான் செல்வம்.

அவனை முறைத்து பார்தவள்…
"உங்ககிட்ட நேத்து போகும் போது சொல்லிட்டுதானே போனேன். இப்படி லேட் பண்ண நான் எப்படி வீட்டுக்கு சீக்கிரம் போரது?"

"சாரி ராதிகா… அம்மாக்கு வேற ஒடம்பு சரியில்ல... அதான் லேட்… நாளைக்கு சீக்கிரம் வந்துருவேன்"

"இப்போ பரவால்லையா?"

"பக்கத்துவீட்டுல சொல்லிட்டு வத்திருக்கேன்"

"சரி சரி பாத்துக்கோங்க நான் கிளம்பறேன்" பேக்கை மாட்டிக் கொண்டு கேஷ் கவுண்டரில் இருந்து வெளியே வந்தாள் அவள்.

அவளை கண்டு வாயை பிளந்தான் அவன். "ராதிகா சேரி சூப்பர்… அத விட நீங்க ரொம்ப சூப்பர்" ஒற்றை கண்ணடிக்க

"அய்யைய வழியுது துடச்சிகோங்க" சிரித்தாள் அவள்.

"அத விடுங்க என்ன விசியம்? ஏதோ சம்திங்போல?"

"ம்ம் என்ன பொண்ணு பாக்க வந்தாங்க" வாயில் விரலை வைத்துக் கொண்டு அவள் சொல்ல அதிர்ந்துவிட்டான் செல்வம்.

"ஏய் என்னடி சொல்ற? எவன்டி அது? எவனச்சும் வந்தா இப்படி மேக்கப் பண்ணிட்டு கிளம்பிடுவியா?" கோபமாக அருகில் வந்தனை கண்டு சிரித்தாள் அவள்.

"யாரோ வாங்க போங்கனு சொன்னாங்களே?"

"விளையாடத ராதிகா…. எனக்கு கடுப்பா இருக்கு"

"அப்படிதான் இருக்கனும் இன்னைக்கு என் பிறந்தநாளையே மறந்திட்டிங்கள" அவள் சோகமாகிவிட தலையில் அடித்துக் கொண்டான் அவன்.

"சாரி மா அம்மாக்கு உடம்பு முடியலையா அந்த டென்ஷ்சன்லே இருந்துட்டன்" காதை பிடித்துக் கொண்டு கெஞ்சினான் செல்வம்.

திரும்பி நின்றுக் கொண்டு "உங்க சாரிய நீங்களே வச்சிக்கோங்க இப்ப கூட ஒரு விஷ் பண்ண மாட்டுறிங்கள" என

"விஷ் என்ன விஷ் கிஃப்ட்டே தரேன்" அவளை நெருங்கி நின்றான் அவன்.

காதருகில் அவன் குரல் கேட்க வேகமாக திரும்பினாள் அருகில் அவனை பார்த்ததும் முகம் குப்பென்று சிவந்தது. ஒற்றை கையால் அவள் முகத்தை தாங்கி பிடித்தவன் கட்டை விரலால் சிவந்த கன்னத்தை வருடி விட்டான்.

"எ… என்ன? என் ன கிஃப்ட்?"

"தந்தா உனக்கு பிடிக்குமா?" அவள் பின்னால் நகர மேஜை இடித்தது. மற்றொரு கையை மேஜையில் வைத்து அவளை கைது செய்தான் அவன். அவன் முகம் அருகில் வர தலையை குனிந்துக் கொண்டாள் ராதிகா.

"வேண்டாமா?"

"ப்ளீஸ்"
அவள் முகத்தை ஒற்றை கையால் நிமிர்தினான்.

"எனக்கும் ப்ளீஸ்" என்றவன் அவள் இதழில் கதை எழுத தொடங்கினான். சிறிது நேரத்திலே அவனை தள்ளிவிட்டவள் கதவை திறந்துக் கொண்டு வெளியில் ஓடினாள். அவள் பின்னால் ஓடிய செல்வம் கதவு பக்கத்தில் நின்று கொண்டு கத்தினான் .

"ராதிகா ஐ லவ் யூ… கிஃப்ட் பிடிச்சிருக்கா?" அவன் கத்த அவனுக்கு பத்திரம் காட்டியவள் அந்த சிறிய கிழை சாலையில் திரும்பினாள். கடைக்குள் சென்ற செல்வம் தலையை அழுந்த கோதிக் கொண்டான்.

செல்வத்தை நினைத்துக் கொண்டு பாட்டு பாடிக்கொண்டே சென்றாள் ராதிகா. அன்று பயம்காட்டிய சாலை இன்று ரம்மியமாக இருந்தது புதுஆடையுடன் வெட்கமும் ஆடையாக சேர்ந்துக்கொள்ள காதலனின் முத்த கவிதை ஒரு மாயையில் அவளை தள்ளி இருந்தது… பேருந்து நிறுத்ததில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாள்… தூரத்தில் ஒரு வெளிச்சம் அவளுக்கு அது யார் என்று தெரியும் அதே எஃப்இசட். இந்த ஒருவார காலமாக அவள் பஸ் ஏறும் வரை நின்றுவிட்டுதான் செல்வான். அவள் பக்கத்தில் நிற்காமல் சிறிது தூரம் சென்று தான் நிற்பான். ராதிகாவும் அவனை பார்த்துக் கொண்டு தான் நின்றிருப்பாள். அவன் அவளுக்கு பாதுக்காப்பாக நிற்க பேருந்து வரும் வரைக்கும் பயப்படாமல் நிற்ப்பாள்.

இன்றும் அவளை தாண்டி செல்லும் போது ஓருமுறை ஹாரண் அடித்துவிட்டு சென்றான். அவள் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே புதருக்குள் இருந்து வந்த இரண்டு பேர் அவன் எதிரே கம்பை நீட்ட வண்டி சரிந்து கிழேவிழுந்தது. அவனும் இரண்டு முறை உருண்டு விழந்தவன் எழுந்திருக்கவே இல்லை.

"அய்யோ அண்ணா" கத்திக்கொண்டே அவனை நோக்கி ஓடினாள் ராதிகா.


"அம்மா அக்கா சீக்கிரம் வந்துருவேன் தான் சொன்னா" பதட்டமாக நின்றிருந்தாள் அபிராமி. நடுகூடத்தில் உணவு பாத்திரங்கள் மூடிவைக்க பட்டு இருக்க வாசலில் நின்று ரோட்டை பார்த்துக் கொண்டு இருந்தார் அவள் தாயார்.

யாரிடம் கேட்பது என்றும் தெரியவில்லை அவர்களுக்கு. மணி பத்தாகி கடிகாரத்தின் பெரிய முள் இரண்டு வட்டம் அடித்து பன்னிரென்டு ஆகியும் ராதிகா வீட்டிற்கு வரவில்லை. ஒரு பக்கம் கதவருகில் அபிராமி அழுக ரோட்டில் நின்றுக் கொண்டு கண்ணை துடைத்துக் கொண்டு மகள் வந்துவிட்டாளா என்று மூச்சை பிடித்து நின்று இருந்தாள் அந்த அம்மா.

"அம்மா எனக்கு பயமா இருக்கு…. யாரையாவது கூப்பிட்டு என்னனு பார்க்க சொல்லுமா"

"யாரடா கோட்க்குறது…? அபி எனக்கும் பயமாருக்குடி. என் பெண்ணுக்கு என்னவோ ஆச்சுடி இல்லனா வந்துருப்பா….. கடவுளே" தாழமாட்டாமல் அவர் அழுக அவளும் சேர்த்துக் கொண்டாள். இருவரும் தேற்றுவார் இன்றி அழுதுக்கொண்டு இருந்தனர
________________

அந்த இரவு நேரத்திலும் பரபரப்பாக இருந்தது எஸ்பி ஆஃபிஸ். நிமிடத்துக்கு நிமிடம் மாற்றி மாற்றி போன்கள் அனைத்தும் ஒலித்துக் கொண்டே இருக்க விமலனும் அங்குதான் நின்றிருந்தான் தக்ஷினாவிற்காக இரவு உணவு எடுத்து வந்தவன் அவள் விசாரிப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தான். இறந்த பெண்ணின் தோழிகளை மாலையே விசாரித்துவிட்டு அனுப்பிவிட்டாள். சிறியது முதல் பெண்கள் பள்ளி பெண்கள் கல்லூரி என படித்ததில் பெண் தோழிகள் மட்டுமே இருந்தனர். அவர்களும் அவள் யாரையும் காதலிக்வில்லை என்றனர்.

"மேம் நீங்க கேட்ட டிடெயல்ஸ். அந்த பொண்ணோட மொபைல் மேம். எல்லா பாஸ்வேர்டையும் பிரேக் பண்ணிட்டாங்க மேம்" எல்லாவற்றையும் அவள் கையில் வைத்தான் சரத்.

"மேம் இந்த பொண்ணு செகியூர்டு பையில்ல நிறைய போட்டோஸ் இருந்தது. எல்லாமே ஒரு பையணோட ரொம்ப க்ளோஸ்சா எடுத்துருக்காங்க"

புகைபடம் அனைத்தையும் பார்த்தாள்.

"அவன் யாருனு விசாரிச்சிங்களா?"

"கண்டுபிச்சாச்சி மேம். லாஸ்ட்டா இரண்டு கால் பேசிருக்காங்க. 8 மணிக்கு ஒரு அவுட்கோயிங். 10 க்கு அதே நம்பர்ல ஒரு இன்கம்மிங். நம்பர் சிவான்ற பேருல இருக்கு.10 மணிக்கு வந்த கால் அந்த பொண்ணு வீட்டுக்கு பக்கத்தில இருந்து தான் பேசிருக்கான் மேம். அந்த டிடெயல்ஸ் அதிலே இருக்கு மேம்"

அவனை அதிசயமாக பார்த்தான் விமலன். "என்னடா அதிசயம்? பயபுள்ள எப்போ இப்படி மாருனுச்சி? சரத் தானா?" ஒருமுறை அவன் பேரை பார்த்தான் சரத் என்றுதான் இருந்தது.

"எஸ்.ஐ கிட்ட சொல்லி அவனபத்தி விசாரிக்க சொல்லிருக்கேன் மேம்"

"அவன இப்போவே தூக்க சொல்லுங்க. மணி இப்போ 12.30 ஒரு மணிக்கு அவன் இங்க என் கண்முன்னாடி இருக்கனும்"

"ஒகே மேம்"

"தீ இப்போவே லேட் ஆச்சி எப்போ சப்பிடுவ? சரத் நீங்க சாப்பிடிங்களா?" ஏதையோ யோசித்துக்கொண்டு இருந்தாள் அவள் விமலன் சென்னாது அவளுக்கு கேட்கவேயில்லை.

"இனிமே தான் சார்" இருவருமே சோர்வாகதான் இருந்தனர். சரத்தான் அதிகமாக அலைந்து திரிந்து வந்திருந்தான்.

"ஜாயின் வித் அஸ் சரத். போயி பிரஷ் ஆகிட்டு வாங்க"

"பரவால்ல சார். நான் ஹொட்டல்ல பாத்துக்கிறேன்"

"பச் இது எங்க வீட்டு ஹோம்மினிஸ்டர் சமைச்சது கம்ஆன்" மதியம் சாப்பிடாதது சரத்துக்கும் பசி வயிற்றைக் கிள்ளியது.

"ஓகே சார்" என்றவன் பிரஷ்ஆக சென்றான்.

"கட்டபொம்மனுக்கு நியூ வர்ஷ்சனையும் பீமேல் வர்ஷனையும் பக்கத்தில வச்சிக்கிட்டு இன்னைக்கு சாப்பிட்ட மாதிரிதான்… கட்டதுறை உனக்கு கட்டம்சரியில்ல" ஆள் காட்டி விரலை அவனுக்கு நேரே திரும்பி புலம்பிக் கொண்டே சென்றான் சரத்.

"தீ என்ன யோசனை? சாப்பிட வா"

"என்ன விமி கேட்ட?" சோம்பல் முறித்துக் கொண்டே நிமிர்ந்து அமர்ந்தாள் அவள்.

"ஏதோ பலமா யோசிட்டு இருந்தியே அதான் கேட்டேன்"

"அதுவா… இந்த பொண்ணு இருக்கால விசாரிச்சதை வச்சி பார்த்தா ரொம்ப சாஃப்ட் கேரக்டர்னு தான் தோனுது. லவ் பண்றதே வெளில தெரியாமா சீக்ரெட்டா மெயிடேயின் பண்ணிருக்கா. எனக்கு என்னவோ லிவிங்டுகெதர் சான்சே இல்லனுதான் தோனுது"

"சில பேர் ரொம்ப அழுத்தமா இருப்பாங்க தீ. பாக்கதான் ஜாலியான கேரக்டர் மாதிரி தெரியும் அவங்களுக்குள்ள தான் நிறைய சீக்ரேட் இருக்கும். காமெடியா பேசுற மாதிரி வெளியே சிலத சொன்னாலும் நம்ம அத கவணிச்சிருக்க மாட்டோம்"

"பாக்கலாம் அந்த சிவா அவன விசரிச்சா தெரிஞ்சிரும்"

"சரி வா சாப்பிடலாம்" இருவரும் கைகழுவி வந்தனர். சரத்தும் வர மூவருக்கும் விமலனே எடுத்து வைத்தான்.

"சுட சட சிக்கன் பிரியாணி தோசை இடியாப்பம் மட்டன் பாயா…. வாவ் சார் அசந்திபுட்டிங்க" கண்ணை விரித்தான் சரத்

"நான் சமைக்கல சரத் எங்க அம்மாதான்"

"அதனால தான் சார் நான் தைரியமா சாப்பிட வந்தேன். ஹீஹீ சார் முறைக்காதிங்க சாப்பாடு சிக்கிக்கும் எனக்கு. இன்னேரத்துக்கு வெளியே சாப்பிட காஞ்ச ரொட்டிதானு இருந்தேன் கண்ணுல பிரியாணிய காட்டின நீங்க தெய்வம் சார் "

சரத் பேச்சில் விமலன் சிரித்துக் கொண்டு இருக்க அவனுக்கு தெரியாமல் அவன் தட்டில் இருந்த சிக்கனை கலவாடிக் கொண்டு இருந்தாள் தக்ஷினா. அதனை பார்த்த சரத் "சார்" ரகசியமாக விமலனை கூப்பிட "சரத்" என்ற சத்தம் தக்ஷினிவிடம் வந்தது.

"அய்யோ மேம் சத்தியமா நீங்க சிக்கன் எடுத்ததை சொல்ல கூப்பிடல மேம்" அவன் சத்தமாக கத்திவிட்டான்.

"அந்த சால்ட் பாட்டில எடுங்க" அவனை முறைத்துக் கொண்டு அவள் கேட்க "நம்ம தான் உளறிட்டமோ?" அவளை பார்த்து சரத் அசடு வழிந்தான்.

இருவரையும் பார்த்து விமலன் கண்களிலிருந்து கண்ணீர் வரும் வரை சிரித்தான்.

"சார் சிரிச்சு என்ன மாட்டி விட்டுராதிங்க நீங்க போனதுக்கு அப்பறம் மேம் என்ன கொத்து பரோட்டா போட்டுருவாங்க" அழமாட்டாத குறையாக கெஞ்சினான்.

"ஹே சரத் ஆல்ரெடி நீங்க சிக்கிதான் இருக்கிங்க. ஆமா எப்போலேந்து இப்படி? தீ கேட்காமலே எல்லாத்தையும் தேடி கொண்டு வந்திருக்கிங்க"

"அது சார் நான் தக்ஷினா மேம் பேன் சார். இன்ஸ்டால மேம்க்கு ஒரு பேன் பேஜ் இருக்குல அதோட அட்மின் நான் தான்" பெருமையாக சொல்லிக் கொண்டு இருந்த சரத்தை பார்த்து விமலனுக்கு புரை ஏறிவிட்டது.

"நீ தானா அது." மனதில் நினைத்தாலும் சரத்காக இரக்கப்பட்டான்.

தக்ஷினா ஏதோ சொல்லவரும்போது சரத்தின் போணுக்கு அழைப்புவர எடுத்துபேசினான்.

"ஹலோ"

……

"வாட்… ? உண்மையானு விசாரிச்சிங்களா. வேற ஜென்ஸ் இருந்தா உடனே அல்லிட்டு வாங்க"
கோபமாக எழுந்து நின்றிருந்தான் அவன்.



போகாதடி என் பெண்ணே!

Comment here…

 
Last edited:

Writer X

Well-known member
Messages
462
Reaction score
616
Points
93
பெண்ணே 10.1

l-7nnnRUjqc0yiV3X6wW9vkJcCU-TO-cVXzsY-_NSYH6R39ZCJsSWO7ejY-Y3_DDhe_rhCrLZwFFoTYgSD0FudLS_fNd4-keqC22Wip0Aaq5p1NweKhbDV-P_nyISJlHLu7cNRUy=s1600



வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டியில் ஒன்றை புவி காலால் எத்திவிட அது மண்ணை கக்கிகொண்டே உருண்டு சென்றது.

"ஷிட் உன்னை முதல் கண்டுபிடிக்கிறேன் டி" தொடையில் அடித்துக் கொண்டு மீண்டும் ஒரு தொட்டியை எத்திவிட்டு வீட்டிற்கு உள்ளே வேகமாக வந்த புவிவேந்தன் "தொப்" என்று சோபாவில் விழ எதிரில் அமர்ந்து நாளிதழ் படித்துக் கொண்டிருந்த அதியன் ஒற்றை கையை மடக்கி எட்டி பார்த்தான்.

முகத்தை சுளித்துக்கொண்டு கண்ணை மூடி சாய்ந்திருந்தான் புவிவேந்தன். அவனை பார்க்கும்போதே அவன் கோபத்தின் அளவு நன்ங்கு தெரிந்தது.

"என்னடா புவி… ஜிம் போயிட்டு சீக்கிரம் வந்துட்ட? "

"ப்ச்"

"என்ன புவி இன்னைக்கும் அந்த பொண்ணு வம்பு பண்ணுச்சா?" அதியன் கிண்டல் செய்ய அவனை முறைத்தான் புவி.

"டேய் போலீஸ் என்னையே முறைக்கிறியா? இரு ரூபா கிட்ட சொல்றேன்"

"ஏன் அதி நீ வேற நானே டென்ஷன்ல இருக்கேன். நீ அம்மா கிட்ட எதுவும் சொல்லிடாத" தலையை பிடித்துக்கொண்டுடான் அவன்.

"என்னடா புவி ?"

"எல்லாம் அந்த சூனியக்காரி தான்"

"இன்னைக்கு என்ன பஞ்சாயத்து?"

"ப்ச் இன்னைக்கு அந்த சூனியக்காரி வரவேயில்ல… ஜிம் போகவும் பிடிக்கல அதான் வந்துட்டேன்"

"நீ ஏன் அவள தேடுற? "

"அப்பறம் அவள சும்மா விட சொல்லுறியா அதி…? அவ மட்டும் யார்னு தெரியட்டும்… இந்த புவி வேந்தன் ஐ.பி.எஸ் பத்தி புரியவைக்கிறேன்" பல்லை கடித்துக் கொண்டு கத்தினான் புவி.

"டேய் புவி சின்ன பொண்ணு எதாச்சும் விளையாட்டா பேசிருக்கும்… விடு"

"இல்ல அதி அவ விளையாட்டா பேசல.. அப்படி ஒரு திமிரு… எதுனால வந்த திமிருனு தெரியலை பட் சாதராணமான ஆள் இல்ல.. அவ எதிர்ல இருக்கவன யோசிக்க விடாம கோப படுத்தி கத்த விட்டுட்டு கூலா இருக்குறதுல பி.ஹச்டி வாங்கிருப்பா போல.... எந்த வார்த்தைக்கு எங்க அழுத்தம் கொடுக்கணும்னு தெரிஞ்சிருக்கு. எப்படி நடந்தா தெரியுமா அப்படியே அதுல ஆளுமை சிதறிச்சி. குரல் இருக்கே என்ன ஒரு அழுத்தம்…"

"இவன் செல்லுறத பார்த்தா திட்டுற மாதிரி இல்லையே… புகழ்ந்துட்டு இருக்கான்… நிஜமாவே இவன் கோபமாதான் இருக்கானா?" அவனை விசித்திரமாக பார்த்தான் அதியன்.

"ஆனா அந்த குரல் தான் என் காதுக்குள்ளே சுத்திட்டு இருக்கு… அந்த சூனியக்காரிய சாரி கேட்க வைக்கனும்னு வெறியா வருது" திடீரென்று கர்ஜித்தான் அவன்.

"ஏன் புவி ஒரு பத்து நிமிஷம் தான் சண்டைபோட்டுருக்கிங்க. நீ அவ முகத்தையும் ஒழுங்க பார்கல. ஆனா பல வருஷமா பழகிய மாதிரி சொல்லுற"

"நான் ஒரு ஐ.பி.எஸ் ஆஃபிசர் மறந்திட்டியா?" கெத்தாக தோள்பட்டையை ஏற்றிஇறக்கி புவி பந்தாகாட்ட பேப்பரை அவன் மேல் தூக்கி வீசிவிட்டு டிவியை ஆன் செய்தான் அதியன்.

"அதி நியூஸ் 7 வை" புவி சொன்தை வைத்தவன் டிவியை பார்த்து அமர்ந்தான்.

"வனிதா என்ற இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை. சாவில் மர்மம் இருப்பாதாக சொல்லி குடும்பத்தினர் போராட்டம். குற்றவாளியை கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்கினாள்தான் சடலத்தை வாங்குவோம் பெற்றோர் கதறல். சந்தேக மரணம் என்றும் உடற்கூறாய்வு முடிவு வந்ததுபின் தான் எதையும் உறுதி படுத்தமுடியும் என்கிறார் ட்ரிப்ளிகேன் காவல் ஆய்வாளர்" இன்றைய பரபரப்பு செய்தியாக வாசித்துக் கொண்டு இருந்தனர்.
__________________

ஒரே சத்தமாக இருந்தது அந்த அரசு மருத்துவமனை. காவலர்கள் சமாதானம் படுத்த முயன்றும் உறவினர்கள் வாக்குவாதம் செய்துக்கொண்டு இருக்க மண்தரையில் படுத்து கதறிக் கொண்டு இருந்தனர் பெற்றவர்கள். ஊடகங்களும் அவர்களை சுழந்துக் கொண்டனர்.

சற்று நேரத்திற்க்கு முன்தான் போலீஸ்சாரல் ஒரு புகைபடம் வெளியிட பட்டது அதில் இறந்த பெண் வனிதாவும் ஒரு ஆணும் மிக நெருக்கமாக இருந்தனர். பெண்ணின் முகத்தை மறைத்துக் காட்டி இருந்தனர். வனிதாவின் காதலன் மீதுதான் முழு சந்தேகம் இருப்பதாகவும் அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும் தற்போது தலைமறைவானதையும் குறிப்பிட்டடு இருந்தனர். அதுதான் இந்த சலசலப்புக்கு காரணம்.

"வனிதா ஒரு திருமணமான ஆணை காதலித்ததாக சொல்றாங்க உண்மையா? தெரிஞ்சுதான் செஞ்சாங்களா?" வனிதாவின் தாய் முன் மைக்கை நீட்டி கேள்வி கேட்டுக் கொண்டு இருந்தனர்.

"அய்யோ… சார் என் பொண்ணு அப்படிபட்ட பொண்ணு இல்ல. அவளுக்கு ஒரு பசங்ககூடையும் பழக்கம் இல்ல. என் பொண்ணு சின்ன வயசுலேந்து பொண்ணுங்க படிக்கிறதுலதான் படிச்சா"

அவர் அழுது கதற பாவமாக இருந்தாலும் வேலையின் பொருட்டு கேள்வி கேட்டு வதைத்துக் கொண்டு இருந்தனர்.

"ப்ளீஸ் என் ஓரே பிள்ளையும் அள்ளி கொடுத்துட்டு நிற்கிறேன். எங்கள விட்டுங்க அவ அந்த மாதிரி இல்ல. என்ன தவிர வேற ஆப்பளைங்கிட்ட பேசகூட மாட்டா. செத்ததுக்கு அப்பறம் என் மகள அசிங்க படுத்தாதிங்க" தலையில் அடித்துக் கொண்டு வனிதாவின் தந்தை அழ பலருக்கும் கண்கள் கலங்கியது.

சரத்தும் அங்குதான் நின்றிருந்தான். அவனுக்கு பெரிதாக ஒன்றும் இரக்கம் தோன்றவில்லை. அந்த பெண் கர்பமாக இருந்ததை அறிந்ததில் இருந்தே அந்த பெண்மீதும் தவறு இருப்பதாகவே தோன்றியது என்னதான் முழுவதும் தெரிந்தபிறகு முடிவு செய்யலாம் என்று நினைத்தாலும் வனிதாவை தவறான பெண்ணாகதான் நினைக்க தோன்றியது. அவன் தொலைபேசி அழைக்க எடுத்து பேசியவன் பிரஸ் பீபிள்ஸ்சை அகற்றி வனிதாவின் பெற்றோரை காவல் நிலையத்திறக்கு அழைத்துச் சென்றான்.
________________

"சார் இந்த பையில்ஸ செக் பண்ணிட்டேன் நீங்க சையின் பண்ணிட்டா அனுப்பிடலாம்" அதியனின் பக்கத்தில் நின்று ஒவ்வொன்றாக திருப்பி வைத்துக்கொண்டு இருந்தாள் ஆராதனா.

அவள் பக்கத்தில் நிற்பதை அனுபவித்துக் கொண்டு மிக மெதுவாக படித்து சையின் போட்டுக் கொண்டு இருந்தான் அதியன்.

அவள் பேப்பரை திருப்பும் போது அவள் சுண்டுவிரல் அவன் உள்ளகையை உரசி செல்ல அவனுக்குள் தீப்பிடித்தது முயன்று சமன் செய்த்துக்கொண்டு வேலையை பற்றி பேசினான்.

"ஆராதனா ஒரு காஃபி கிடைக்குமா?"

"சுயர் சார்" என்றவள் அங்கு இருந்த போனில் கேன்டீனுக்கு அழைக்க அவளை தடுத்தவன் காஃபி மேக்கரை காட்டினான்.

"சாரி சார் எனக்கு காஃபி மேக் பண்ண தெரியாது"

"ஹோ இட்ஸ் ஓகே…. நானே போட்டுக்கிறேன்" என்றவன் எழுத்து போகவும்… பையிலை எடுத்துக் கொண்டு அவள் கிளம்ப நினைக்க அவளை அருகே அழைத்தான் அதியன்.

"ஆராதனா இங்க வா" தனிமையில் அவளை ஒருமையில் தான் அழைப்பான்.

எம்.டி ஆச்சே பலமுறை ஜாடையில் செல்லி பார்த்தும் அவன் கேட்பதாக இல்லை.

"சொல்லுங்க சார்"

"சும்மா நான் எப்படி காஃபி போட்டுறேனு பார்.. என்றைக்காவது தேவைப்படும்" அதியன் அவளுக்கு சொல்லிதர அவளுக்கு அறிந்துக்கொள்ள ஆர்வம் இருக்க கவனித்துக்கொண்டு இருந்தாள்.

காஃபி பொடியை பில்டரில் நிரப்பி லாக் செய்து ஒரு கப்பை அடியில் வைக்க மெதுவாக காஃபி சாயம் கொட்டவும் ஒரு சில்வர் பாத்திரத்தை சுழற்றி கேனில் இருந்த பாலை அதில் ஊற்றியவன் ஒரு டியுப்பை எடுத்து அதில் காட்ட பால் நுறையாக பொங்கியது. 5 நிமிடத்தில் இரண்டு கப் காஃபியுடன் திரும்பின அதியன் பார்த்தது ஆ என கண்ணை விரித்து இமைக்க மறந்து அவனை பார்த்துக்கொண்டு இருந்த ஆராதனாவை தான்.

அவன் லாவகமாக சுழன்று ஒரு நடனம் போல காஃபி போட அவன் காலும் கையும் ஆடிய ஆட்டத்தை பார்த்துதான் இமைகொட்டி நின்றிருந்தாள்.

அவள் பார்வையை கண்டவனுக்கு மழை சாரல் தான்.

"என்ன ஆராதனா நான் காஃபி போட்டதை மேஜிக் பண்ணமாதிரி ரசிச்சி பாக்கிற" சிறு சிரிப்புடன் அவன் கேட்க்க

"நேரம் தான் ஒரு காஃபி கலக்க கோமாளி மாதிரி ஆடிட்டு இவங்கள ரசிக்கிறாங்களாம்" மானசீகமாக தலையில் தட்டிக் கொண்டாலும் உதடை இழுத்து வைத்து சிரித்தாள் அவள்.

ஒரு கப்பை அவளிடம் நீட்ட பயத்தில் எச்சில் விழுங்கினாள்.

"வேண்டாம் சார்"

"பயப்பிடாம குடி நல்லாதான் இருக்கம்" அவள் கையில் கப்பை தினித்தவன் அங்கு இருந்த டைனிங் டேபிளில் சாய்த்துக்கொண்டான்.

அவன் அறையில் ஒரு ஓரமாக இருக்கும் சிறு கதவு வழி சென்றால் ஒரு நீள மேடையில் மினி கிட்சனும் ஒயின் பாட்டில் வரிசையாக அடுக்கி வைத்த ஒரு ரேக்கும் சிறு டைனிங் டேபிளும் அங்கு இருக்க பக்கத்தில கதவு வைத்துக் கொஞ்சம் பெரிய ஓய்வு அறையும் இருக்கும். அவன் உள்ளே நிற்க ஆராதனா ஆஃபிஸ் அறையில் தான் நின்றிருந்தாள்.

கப்பை வாயருகே எடுத்து சென்று வாசம் பிடித்து இதழால் ஒற்றி எடுக்க அவள் உதட்டில் உறவாடிய நுறையை வெளியில் மெல்ல எட்டி பார்த்த நாக்கு உள்ளிழுத்ததும் காஃபி சுவையில் ஆராதனா முகம் மலர அனிச்சையாக அவளை உற்று பார்த்துக்கொண்டு இருந்த அதியன் திருப்த்தியோடு சிரித்தான். ஆசையாக அவளுக்காக போட்டதல்லவா.

காஃபி ஒரு மிடரு உள்ளே சொன்றதும் அதன் சுவை அருமையாக இருக்கவும் இரண்டாம் முறை வேகமாக உள்ளே சென்றது. சிறு கசப்போடு அவள் எப்போதும் குடிக்கும் பதத்தில் சூப்பராக இருந்த காஃபி சீக்கிரமே காலியானது.

"இன்னொரு கப் கிடைக்குமா?" விளம்பர பாணியில் மனதில் எழுந்த எண்ணத்தை ரப்பர் வைத்து அழித்தவள் காலி கப்பை சுற்றி பார்த்துக்கொண்டு இருந்தாள்.

"இங்க ஒரு அழகான பையன் உட்காந்திருக்கேன் என்ன விட்டுட்டு அந்த கப்பை பாக்கிறத பாரு கிராதகி" வாய்விட்டு முனுகியவன் கப்பை நக்கென்று வைக்கவும் அவனை பார்த்தவள்

"என்ன சார் கேட்டிங்க?"

"ம்ம் காஃபி எப்படி இருந்ததுனு கேட்டேன்"

"நல்லாருந்துச்சி சார் தேங்க்ஸ்" என்றவள் உள்ளே வந்து அவன் கப்பையும் கையில் எடுக்க அவள் என்ன செய்ய போகிறாள் என்பதை உணர்ந்து அவள் இடது கையை பிடித்து தடுத்தான் அதியன்.

மின்சாரம் பட்டது போல் இருந்தது அவளுக்கு கண்ணை விரித்து அவன் பிடித்திருந்த கையை பார்த்தாள் ஆராதனா. அவனும் அவசரத்தில் பிடித்திருந்தாலும் வேண்டும் என்றே பிடித்துக்கொண்டே இருந்தான்.

"என்ன பண்ண போற?"

"வா.. வாஷ்" திக்கினாள் அவள் மூச்சு முட்டியது.

"நானே பாத்துக்கிறேன்" அவன் சொல்ல கப்பை கீழே வைத்தபின்னும் அவள் கையை விடாமல் இருந்தான். அவள் கையை இழுக்க அவனுக்கு கோபம் கோபமாக வந்தது.

"டேய் அதியா நீ பண்றது ஒன் சைடுடா… இதுல உனக்கு கோபமா?" மூலை எச்சரிக்கை விட மனதுக்கு விருப்பம் இல்லாமல் மெதுவாக கையை எடுத்தான். அதிர்ச்சியில் தலையை ஆட்டியவள் அவசரமாக திரும்பி ஓடினாள்.

அவளை சிரித்துக் கொண்டே பார்த்தவன் அவள் குடித்த கப்பில் அவள் உதடு பட்ட இடத்தை விரலால் வருடினான்.

"சார் இந்த பையில்ஸ அனுப்பிடட்டுமா?" பையிலோடு எட்டி பார்த்தவளை கண்டு அவசரமாக கையை எடுத்தவன் "பண்ணிடு" என்றதும் விட்டால் போதுமென்று கதவை திறந்துக் கொண்டு சென்றுவிட்டாள் ஆராதனா.

எட்டி அவள் அறையை பார்த அதியன் மீண்டும் அந்த கப்பை எடுத்து அதில் மீதம் இருந்த ஒரு சொட்டை குடித்தவன் இன்பமாக கண்ணை மூடிக் கொண்டான். பிரசாதம் உண்ட பக்த்தனின் நிலைதான் அவனுக்கு.

ஆராதனாவிற்கும் படபடவென்று தான் இருந்தது அதியனின் அன்மை அவளுக்கு மயக்கத்தை கொடுத்தது. அவன் பிடித்த கையை பார்தாள் உடல் லேசாக சிலர்த்ததோ.

"எப்படி கேஷ்வலா கையை பிடிக்கிறான்" பதற்றம் மெல்ல கோபமாக மாறியது

"ரொம்ப திமிரு பிடிச்வன்… ராஸ்கல் எவ்வளவு தயிரியம். கையை பிடிச்சிட்டு தான் பேசுவானா?" அர்ச்சனையை ஆரம்பித்தவள் கந்தசஷ்டி கவசம் போல் தொடந்தாள்.

மண்ணவனின் தொடுகை மட்டுமே மனதில் மாயாஜாலம் செய்யும் என்பதை அறியவில்லையோ பாவை.

அதியனுக்கு பதில் அன்று வேறொருவன் இதேபோல் அவள் கையை பிடித்தற்கு அவன் கன்னம் பழுக்கும் வரை அறைத்ததை அவளுக்கு சாதகமாக மறந்துவிட்டாள் ஆராதனா. ஆராய்ந்து பார்த்தால் எதாவது புரிந்திருக்குமோ என்னவோ.



போகாதடி என் பெண்ணே!

comment here🌺🌺🌺
 
Last edited:

Writer X

Well-known member
Messages
462
Reaction score
616
Points
93
பெண்ணே 10.2

சரத் நேராக வனிதாவின் பெற்றோரை அவன் ஸ்டேஷனுக்கே அழைத்து வந்தான். அவன் சேரில் தான் அமர்ந்திருந்தாள் தக்ஷினா.

"மேம்" அவளுக்கு சலூட் வைத்தவன் அவர்களை முன் நிறுத்தினான். தக்ஷினா அமைதியாக ஒற்றை கையில் இருந்த கிளவுசை கழட்ட அதுவே சொன்னது அவள் யாரையோ சமத்தியாக கவனித்திருக்கிறாள் என்று. எழுந்து அவர்கள் அருகில் வந்தவள் நீல நிற ஜீன்ஸ் பேண்ட்டும் கருப்பு ஷர்ட்டும் போட்டுஇருந்தாள். இங்கு அவளை யாருமே இதுவரை காக்கி உடையில் பார்த்ததேயில்லை.

"நீங்கதான் வனிதா பேரன்ஸ்சா?"

"ஆமா மேடம்" அழுத மனைவியை ஆதரவாக பிடித்துக் கொண்டார் வனிதாவின் தந்தை.

"ரொண்டு பேருமே வொர்க் பண்றவங்கதானே உங்க பொண்ண கவனிக்க மாட்டிங்களா?"

"அவ அப்படிபட்ட பொண்ணு இல்ல மேடம்... யாரோ வீனா பலி போடுறாங்க. என் பொண்ண பத்தி எனக்கு நல்லா தெரியும் அவ யாரையும் காதலிக்கலை மேடம் "

"என்ன தெரிஞ்சு வச்சிருக்கிங்க பொண்ணு எங்க பேறா வறானு பாக்கிறது இல்ல. உங்க பொண்ணு கன்சீவ்வா இருந்துருக்காங்க இதுகூட தெரியாம என்ன பண்ணிங்க? ஒரு பிள்ளையும் கவணிக்க முடியலையா?" தக்ஷினா காட்டமாக கேட்க வனிதாவின் தாயார் மடங்கி அமர்ந்து கதறினார்.

இருவருக்கும் தலையில் இடிஇறங்கியது போல இருந்தது சற்று நிதானித்த அவள் தந்தைதான் தக்ஷினா சொன்னதை மறுத்து அவளிடம் எகிறினார்.

"என்ன மேடம்? யாரு காசு கொடுத்தாங்க… ? எத மறைக்க பணத்த வாங்கிட்டு என் பொண்ணு மேல பலி போடுறிங்க? நீங்களும் ஒரு பொண்ணுதானே மானசாட்ச்சி இல்லையா?"

அவள் பெருசாக ஒன்றும் அலட்டிக் கொள்ளவில்லை இதெல்லாம் சாதாரணமாக காதில் விழுபவைதான். சரத் தான் கத்திக் கொண்டு இருந்தான்.

"ஏய் மரியாதையா பேசு… யாரு பார்த்து பணம் வாங்கினாங்கனு சொல்லுற…? பெத்த பொண்ண கவனிச்சி பார்க்க முடியல…"

"சரத் லீவ் தெம்"

"சாரி மேம்" என்றவன் வேகமாக சில கோப்புகளை எடுத்தவன் அவரிடம் தூக்கி போட்டான். அதை எடுத்துப் பார்த்தவருக்கு பாதி சரியாக புரிந்தது…

"இதல உங்க பொண்ணு பிளட் டெஸ்ட் ரிப்போர்ட்… பிரக்னன்சி பாசிட்டிவ்… அடுத்து உங்க பொண்ணு போனில் இருந்த கால் லிஸ்ட்… அடுத்து இருக்கிறது நாலு மாசத்துக்கு முன்னடி காணபோன உங்க 5 சவரன் செயினை அடகு வச்ச ரிசிப்ட் அப்பறம் இந்த போட்டோஸ் எல்லாமே உங்க பொண்ணுகிட்ட இருந்து மட்டுமே கிடைச்சது" என்றவன் போனில் இருந்த படங்களை காட்ட தன் மகளை ஒரு ஆண்னுடன் அத்தனை நெருக்கத்தில் பார்க்க சகிக்காது கண்ணை மூடிக்கொண்டு கண்ணீர் விட்டார் அவர்… அவருக்கு மனதை அடைத்தது போல் இருந்தது தன் மகளா? நெஞ்சம் விம்மியது.

தக்ஷினாவை கையெடுத்து கும்பிட்டவர் பேசமுடியாமல் நடந்து சென்று பென்ஞ்சில் அமர அவருக்கு அருகில் சென்றவள் தண்ணீரை நீட்ட மறுக்காமல் வாங்கி குடித்தாவர் தலையை குனிந்துகொண்டார்.

"சார் ஒரு பக்கம் மட்டும் பார்த்து உங்க பொண்ண தப்பா நினைக்காதிங்க" என்றவள் கான்ஸ்டபிலை கூப்பிட்டு அவனை இழுத்து வர சொன்னாள். சிறிது நேரத்திலேயே முக்கால் டவுசர் போட்ட ஒருவன் இழுத்து வரபட பத்து பேர் அடித்தது போல் நாராய் கிழிந்திருந்தான் அவன். அவனை பார்க்கும்போதே சரத்திற்கு தக்ஷினாவின் கைவண்ணம் நன்றாக தெரிந்தது.

"எங்க அடிச்சா உயிர் போயிடுமோ அதைமட்டும் விட்டு புல்லா டேமேஜ் பண்ணிருக்காங்க" பக்கத்தில் இருந்த எஸ்.ஐ அவன் காதில் முனுமுனுத்தார்.

"நேத்து என்ன நடந்தது? சொல்லுங்க" அவரை பார்த்து அவள் கேட்க நிமிர்ந்து அமர்ந்தார் அவர்.

"இரண்டு நாளா ஏதோ மாதிரி இருந்தா மேடம்… தனியாவே உட்காந்திருந்தா… நான் தான் இன்னைக்கு லீவ் போட சொன்னேன். போகுபோது நான் தான் மேடம் சாப்பாடு ஊட்டிவிட்டேன். என் பொண்ண உயிரோட கடைசிய அப்பதான் பார்த்தது. சாய்ந்திரம் டாக்டர்கிட்ட அழைச்சிட்டு போரேனு சொல்லிட்டு போனோம்… மதியம் எனக்கு பக்கத்து வீட்டுக்காரங்க போன் பண்ணி சென்னதும் பதறி வந்து பார்த்தா என் பொண்ணு பிணமா கிடந்தா மேடம்" நெஞ்சில் கைவைத்துக் கொண்டு குலுங்கி அழுதார்.

"உங்க பொண்ணு தற்கொலை பண்ணிக்கலை… கொலை பண்ணி ஹேங் பண்ணிவிட்டுறுக்காங்க" என்றவள் கான்ஸ்டபிலை பார்க்க அவனை பிடித்து முன்னே தள்ளினார்.


"உங்க பொண்ணை கொலை பண்ணவன் இவன் தான். ஏய் என்ன நடந்ததுனு திரும்ப அவர்கிட்ட சொல்லு" அவனை அதட்டினார் a2. பேசவே சிரமமாக இருந்த வாயை பயத்திலே அசைத்து பேசினான் அவன்.

"பஸ்ல தான் வனிதாவ முதல்தடவை பார்த்தேன். அழகா இருந்தானு சைட்தான் அடிச்சேன்… அவ என்ன முறைச்சிட்டு திரும்பிகிட்டா" பாதியில் நிறுத்தி அனைவரையும் பார்த்தான். பின் தலையை குனிந்துக்கொண்டு தொடர்ந்தான்.

"இரண்டு நாளா முறைச்சவ அதுக்கப்பறம் கண்டுக்கவே இல்லை. அவள எப்பாடியாச்சும் என்னை திருப்பி பார்க்கவைக்க நினைச்சி இன்னும் நெருங்கி போனேன். ஒரே மாசத்திலே என்ன லவ் பண்ண ஆரம்பிச்சிட்டா…. அதுக்கப்பறம் ஆறு மாசமா நாங்க லவ் பண்ணோம்."

"நான் யாருக்கும் தெரிய வேண்டாம்னு சொன்னேன்… நான் என்ன சொன்னாலும் அப்படியே செஞ்சா… ஒரு நாள் பாண்டிச்சேரி கூப்பிட்டு பார்த்தேன் ஒன்வீக் ஸ்டே பண்ண. அவளும் வீட்டுல டூர்னு சொல்லிட்டு வந்தா. என் கூடதான் இருந்தா அவளும் சம்மதிச்சி தான் எல்லாமே நடந்தது" அவன் சொல்லிக் கொண்டு இருக்கும் பொதே ஆவேசமாக எழுந்தவர் அவனை எட்டி உதைத்தார் கீழே விழுந்துகிடந்தான் அவன்.

"பொய் சொல்லாதடா உண்மைய சொல்லு நீ தான் என் பொண்ண கட்டாய படுத்திருப்ப… மேடம் நம்பாதிங்க என் பொண்ணு டூர் பொயிட்டு திரும்பி வந்தனைக்கு என் மடில படுத்து… நான் அங்க பொயிருக்க கூடாதுன்னு அழுதா நான் என்ன அச்சினு கேட்டதுக்கு சும்மா உங்கள பார்க்கமா இருந்ததுனு பொய் சொல்லி சமாலிச்சிட்டா… அதுலேந்து என் பொண்ணு சரியாவே இல்ல… மேடம்" ஆவேசமாக கத்தினார் அந்த தந்தை.

தக்ஷினா அவனை பார்க்க அவனுக்கு சர்வமும் நடுங்கியது… சற்றுமுன் தான் அவனுக்கு பல்சிகிச்சை நடந்தது…

"இல்ல இல்ல பஸ்ட் வரமாட்டேனு சொன்னா… அவகிட்ட கோவப்படுற மாதிரி நடிச்சி ஒரு வாரம் பேசல… அவளே என்ன தேடி வந்தா… வீட்டில வந்து பேச சொன்னதும் நான் என் மேல நம்பிக்கை இலலையானு வனித்தா கூட சண்டை போட்டேன். பிரிஞ்சிடலாம்னு நான் சொல்லி பார்த்தேன் உடனே பயந்து அழுதா… அப்பறம் பேசி பேசி ஒத்துக்கவச்சிட்டேன்… ஆனா அங்க போனதுக்கு அப்பறமும் முரண்டு பிடிச்சா திரும்ப பிரிஞ்சிடலாம்னு சொன்னதும் தான் ஒத்துக்கிட்டா… அதுக்கப்பறம் அவள மிரட்டி ஏமாத்தி அடிக்கடி என் பிரண்ட் ரூம்க்கு வரவச்சேன்…" அவனை அடிக்க பாய்ந்தவரை பிடித்துக் கொண்டான் சரத். சுவரில் பல்லி போல் ஒன்டிக் கொண்டான் அவன்.

"பத்து நாளைக்கு முன்ன என் வொயிப்கூட என்ன பார்த்துட்டு என்கிட்ட சண்டை போட்டா. அன்னைக்கு தான் எனக்கு கல்யாணம் ஆனதே அவளுக்கு தெரியும். என் வொயிப்ப டிவோர்ஸ் பண்ணிட்டு அவள கல்யாணம் பண்ணிக்க சொல்லி அழுதா… நான் முடியாது சொன்னதும் இனிமே அவள விட்டுற சொல்லிட்டு அழுதட்டே போய்யிட்டா… அப்பறம் என்கிட்ட பேசவேயில்ல நானும் அவளை மறந்துட்டேன்"

"பாவி எதுக்குடா அப்பறம் என் பொண்ண கொண்ண?"

"நேத்து காலையில எனக்கு கால் பண்ணி பிரக்னன்டா இருக்கிறாதா சொன்னா. நான் ஆபாட் பண்ண சொன்னதும் போலீஸ்க்கு போரேனு அழுதா… வனித்தாகிட்ட பேசி எப்பாடியாச்சும் கலைக்க வச்சிரனும்தான் என் பிரண்ட் கூட அவ வீட்டுக்கே போனேன்"

"நான் உள்ள வந்ததும் என்ன அடிக்க ஆரம்பிச்சிட்டா. நான் கருவகலைக்க சொன்னதுக்கு மாட்டேனு அடம்பிடிச்சா எனக்கு என்ன செய்யுரதுனு தெரியம கோபத்துல அடிச்சதும் போலீஸ்ல என்ன ஏமாத்தினதுக்கு கப்பிளைன்ட் தரபோரேனு கிளம்பினா… வெளில தெரிஞ்சா அவமானமாகிடும்னு நானும் என் பிரண்டும் சேர்ந்து அடிச்சி கொண்னுட்டு சேரில தூக்குபேட்டுவிட்டோம்… அப்பறம் கதவை பூட்டி சாவியை விண்டோ வழியா உள்ள தூக்கி போட்டுட்டு ஒடிட்டோம்"


"நல்லாருப்பியா கொலகார பாவி… நீ அனுபவிச்சிட்டு கொண்ணு பேடுறதுக்கா என் பொண்ண சீராட்டி வளத்தேன்… செத்து தொலைடா…. நாயே" அவன் சொல்லி முடித்ததும் காலில் இருந்த செருப்பை கழட்டி ஆத்திரம் அடங்கும் மட்டும் அடித்தார் வனிதாவின் தாய்.

அழுதுக்கொண்டு இருந்தவரை அழைத்துக்கொண்டு திரும்பி அந்த பெண்ணின் தந்தை தக்ஷினாவின் முன் சென்றார்.

"இவனுக்கு நீங்க தண்டனை வாங்கி தந்துருவிங்கனு எனக்கு தெரியும்.. வந்தப்போ பேசினதுக்கு என்ன மண்ச்சிருங்க… எல்லாத்தையும் முடிச்சிட்டு என் பொண்ண மட்டும் என்கிட்ட கொடுத்துருங்க… ரொம்ப நன்றி மேடம் என் பெண்ணுக்கு என்ன நடந்துச்சினு தெரியாம தவிச்சிட்டு இருந்தேன். உலகம் தெரியாத பொண்ண ஏமாத்தி கொண்ணுட்டான் பாவி எங்க ஒட்டு மொத்த வாழ்க்கையும் நாசமா போச்சி. எனக்கு ஒரு உதவியா என் பெண்ணுக்கு என்ன நடந்ததுனு இந்த மக்கள்கிட்ட சொல்லிடுங்க… இன்னும் எத்தன அப்பாவி பொண்ணுங்க இருக்காங்களோ இந்த சமூகத்தில?" கைகுவித்தவர்கள் தளர்வாக நடத்து சென்றனர். அதற்க்கு பிறகு சட்டப்படி அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு இதோ பத்திரிகை நிருபர்கள் முன் நின்றிருந்தாள் தக்ஷினா அவளுக்கு பின் சரத்தும்.

முழு காக்கி உடையில் முகத்தை மாஸ்கால் மறைத்து பேசிக்கொண்டு இருந்தாள். அவர்களுக்கு தேவைபட்ட விவரங்களை சொல்லி முடித்தாள் அவள்.

"மேம் இந்த மாதிரி குற்றத்திற்கு னஎது அடிப்படை காரணம்? "

"பேரன்ஸ்தான் நான் சொல்லுவேன். கோ எடுக்கேஷன் படிச்சா கெட்டு போய்டுவாங்கனு நினைச்சி ஐசோலேட்டுல படிக்கவைக்கிறது ரொம்ப தப்பு. பெண்ணுக்கு ஆண்மேலையும் ஆணுக்கு பெண்மேலையும் ஈர்ப்பு வரது இயற்கை. ஒரு ஆண் எப்படி எப்படியெல்லாம் நடந்துப்பான்னு கண்டிப்பா பெண்கள் தெரிஞ்சுவச்சி இருக்கனும். ஆண்களோட பழகாத பொண்தான் குடும்ப பெண் இப்படிலாம் நினைக்கிறத விடுங்க. புதுசா ஆண்களோட பழகும்போதுதான் அது என்ன மாதிரியான உணர்வுனு பிரிச்சி பார்க்க தெரியாம பல பிரச்னைகள்ல மாட்டிக்கிறாங்க. இரு பாலினருக்கும் புரிதல் இருக்கனும். அட்ராக்சனை காதல்னு நம்பி வாழ்க்கைய தொலைச்சவங்க நிறையபேர் இருக்காங்க. பாதுகாப்பு நீங்க கொடுக்கிறது இல்லை சொல்லிதரதுதான். தன்னை தானே மட்டும் தான் பாதுகாத்துக்க முடியும். பேரனஸ் தான் ஆரம்பத்தில் இருந்தே சொல்லிதரனும்"

"தக்ஷினா மேம் இளம்பொண்களுக்கு நீங்க ஏதாச்சும் சொல்லுறிங்களா?"

"கண்டிப்பா… ஒருத்தன் நம்மகிட்ட எந்த எதிர்பார்ப்போடு பழகுறாங்கனு தெரிஞ்சு வைச்சிகனும். காதல் தப்பில்லை தகுதியில்லாத ஒருத்தர் மேல் வர காதல் தப்பு. உங்கள எமோஷினலா பிளாக்மெயில் பண்ணறவனை விட்டு தள்ளி இருக்கிறதுதான் நல்லது. மெண்டலி டார்ச்சர் பண்றதும் அஃபென்ஸ். தப்பானவங்கனு தெரிஞ்சும் அவங்களை நம்பக்கூடாது. எதாச்சும் பிரச்சினையில் மாட்டிக்கிட்டா பேரன்ட்ஸ் கிட்ட சொல்லிடுங்க அதுதான் சேப். பர்சனலா எனக்குகூட சொல்லாம்"

"மேம் ஏன் உங்க முகத்தை நீங்க காட்டவேயில்லை? உங்க பேஸ் இதுவரைக்கும் பேப்பர்ஸ் மீடியானு எதுலையும் வந்ததேயில்லையே"

"எனக்கு விருப்பம் இல்லாததை நான் செய்யிறது இல்ல… அதில இதுவும் ஒன்னு. ஓகே உங்க கொஸ்டின்ஸ் போதும்னு நினைக்கிறேன்" என்றவள் நகர மேம் மேம் என்ற கூச்சல் கேட்டது
வருவாள்…

போகாதடி என் பெண்ணே!💓

Comment here…………….
 
Last edited:
Status
Not open for further replies.

Latest posts

New Threads

Top Bottom