Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


RD NOVEL போகாதடி என் பெண்ணே! - Tamil Novel

Status
Not open for further replies.

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
பெண்ணே 24

atuqIv9Mq4B9SjSPQZTvjkCgbhxpyWd1hCq4nquUa7RiyI3um8kNZhXYFRH1x4lHf1g8lmZDAtB8obYiprLDwrByBH6XcrHCoRQALjwACXrl96oKrKpRgND6c3uJCZ2I4mh92vIj=s0


"டிடாங் டிட்டிட்" என மெயில் வந்த நோட்டிபிகேஷன் காட்ட அது "மோகி" என்ற பெயரில் வந்திருந்தது. திறந்து பார்த்தவளுக்கு ஆச்சரியம் தான். இந்த ஆறு மாத காலமாக ஆர்.ஆர் காலேஜ் சம்பந்தப்பட்ட ஆதாரங்களை தேடி அலைந்தவளுக்கு வெண்ணை வழுக்கி வாய்க்குள் சென்றது போல் இருந்தது. இருந்தும் அதன் உண்மை தன்மையை ஆராய ஊல்ப்பை நாடினாள்.

"தீ வாட்ட தேர்ட் ரேட் கிரிமினல் அவன்… மை காட் இவ்வளவு மோசமானவனா அந்த ரத்தோர்?" என பொங்கிய ஜெய் "இதில் 90 பர்சண்ட் நம்பலாம்" என்றான்.

"அந்த 10" "ஐ திங்க நம்ம இந்த 90 பர்சண்ட் வொர்க முடிச்சா நமக்கே தெரிஞ்சுடும்னு தோனுது" ஜெய் பாய்ன்டை பிடித்தான்.

"ஐ ம் வெரி கியூரியஸ். எத்தன பேரு செத்தாலும் பரவால்ல ஐம் ரெடி டு வாஷ் ஆட் தட் ஷிட்ஸ்" என வைத்தவள் காரை எடுத்துக் கொண்டு சென்னை அவட்டரில் அவர்களுக்கு சொந்தமான பழைய குடோனை வந்தடைந்தாள்.

சத்தியா கேஸ்சுடன் ராதிகா கோஸ்சும் கிடப்பில் தான் விழுந்தது. என்ன தேடியும் எதுவும் கிடைக்கவில்லை இடையில் யாரோ அவர்களை பாதுகாப்பது போல அவளுக்கு தோன்ற சற்று ஓரம் கட்டுவது போல் மற்ற வேலைகளை செய்துக் கொண்டு இருந்தாள்.

இத்துடன் சத்தியா ராதிகா கேஸ்சுடன் பத்து கேஸ்கள் ஒத்துபோக தலையை பிடித்துக் கொள்ளாத குறைதான். அது அவள் ஈகோவை தொட்டுபார்த்தது. அப்பெண்கள் துண்புருத்த பட்டதுக்கும் கொல்லபட்டதுக்கும் உள்ள வித்தியாசம் பெரும் கேள்வி குறியாக இருந்தது. அந்த மோதிரத்தை பற்றி முழுதாக தெரிந்தாலும் அதை வைத்து அடுத்த கட்டத்தை நகர்த்தலாம்.

அவள் தேடிய ஆதாரமோ பூட்ட பட்ட ராதிகா வீட்டினில் பத்திரமாக இருந்தது.

சத்தியா வசிகரமானவள் ஒரு முறை பார்த்தாலே மனதில் பதியும் முகம். அவளிடம் போன் இல்லாததால் அவள் காதலன் தான் ப்ளைட் ஏறுவதற்கு முன் அவளுடன் சென்னையில் சுற்றியவன் அவளுக்கு மொபைல் ஒன்றை வாங்கி கொடுத்து பத்திரமாக இருக்க சொன்னவன் தான் திரும்ப வந்ததும் திருமணம் செய்துக்கொள்வதாக தேற்றி தன் நண்பனை பஸ் ஏற்றிவிடுமாறு அவளுடன் அனுப்பி வைத்துவிட்டு தான் விமானம் ஏறினான்.

அவளுடன் போனில் கடைசியாக பேசிய அன்று ஒரு நாள் பைக்கில் வந்த ஒருவன் இடித்துவிட்டு செல்ல அவள் பின்னால் நடந்து வந்தவன் தான் உதவியதாகவும். அவனை இதற்கு முன் ஏர்போர்ட்ல் பார்த்திருந்ததாக சொன்னவள் அடிக்கடி அவனை இப்போதெல்லாம் அவள் பார்ப்பதாகவும் மிகவும் நல்லவன் என அவனுக்கு நற்சான்றிதழ் வழங்கியவள். மருநாளே ஒரு புகைபடத்தை அனுப்பி இருந்தாள். அதில் அவள் சிரித்து கொண்டு இருக்க சிறிது தள்ளி வேறு எங்கையோ பார்த்த வண்ணம் கைகளால் முகத்தை மறைத்தவாறு ஒருவன். அதுவும் ப்ழர்றாக தான் இருந்தது.

"இந்த அண்ணா தான் எனக்கு ஹெல்ப் பண்ணாங்க" என்று இனைத்து அனுப்பி இருந்தாள். அதற்கு மருநாள் தான் அவள் கடத்தபட்டது. பிறகு இரண்டு வாரங்கள் சென்று அழுகிய நிலையில் கண்டெடுத்தனர்.

இத்தனை கலவரங்கள் நடந்தும் சத்தியா இறந்த செய்தி அவன் காதலனை எட்டவேயில்லை. "தூர தேசத்தில் இருப்பவன் தற்கொலை செய்துக் கொள்வானோ" என்ற பயத்தில் அனைவரும் மறைத்துவிட்டனர். ஆனால் காவல் துறை விசாரணையில் உண்மை தெரியவே துடித்துவிட்டான் அவர்கள் கேட்ட கேள்விக்கு கூட பதில் சொல்ல முடியவில்லை அவனால். உடனே வர முடியாத நிலையில் துக்கத்திலே திரிந்தவன் அவள் படங்களையே பார்த்து நாட்களை நகர்த்தினான். அப்போது தான் அவனுக்கு அந்த சந்தேகம் வந்தது. கடைசியாக அவள் அனுப்பிய படத்தில் இருந்தவன் மேல் சந்தேகம் வர தன் நண்பனை விட்டு லாயர் வழியாக அந்த போனை பற்றி விசாரித்தான். ஆனால் போன் அவன் பேரில் பதிவாகி இருந்ததால் அவளிடம் போன் இருந்ததை யாரும் அறியவில்லை.

இந்தநிலையில் தான் டில்லி செல்லும் விமானத்தில் டிக்கெட் கிடைக்க வந்து இறங்கியவன் சென்னைக்கான விமானம் இரவு என்பதால் அங்கையே காத்திருக்க அங்கு வைத்து முதன்முறையாக தக்ஷினாவை பார்த்தான். அவள் சிலருடன் ஒருவனை கைது செய்து இழுத்து சென்றுக் கொண்டு இருந்தாள்.

என்ன என்று விசாரித்ததில் ஒரு மேல்சாதி இனத்தை சேர்ந்தவர்களுக்கு இணையாக கீழ்சாதியை சேர்ந்த ஒருவர் மாடிவீடு கட்டிவிட்டதற்காக அவனும் அவன் கூட்டாளிகளும் சேர்ந்து அவரை குடும்பத்தோடு ஏரித்து கொன்றுவிட்டதாகவும் அதற்கு ஆதரவாக பெரிய தலைகள் தலையிட்டு பிரச்சினையை மூடிமறைக்க பார்க்க புது எஸ்பி விடவில்லையாம். விமானம் மூலம் தப்பிக்க முயன்றவனை தான் இப்போது கைதுசெய்தாளாம் என்று ஆராம்பித்தவர்கள் அவள் இதுவரை அங்கு செய்த சாகசங்களை சொல்ல அவனுக்குள் அந்த எண்ணம் தோன்றியது.

மருநாள் காலை "லாட்ஜில் தமிழகத்தை சேர்ந்த வாலிபன் தூக்கிட்டு தற்கொலை" என செய்தியும் அது தக்ஷினாவின் டேபிலுக்கும் வந்தது. அவனுடை உபகரணங்களை ஆய்ந்தபோது தான் அவளுக்காக ஒரு லெட்டரில் எல்லாவற்றையும் எழுதியவன் எற்கனவே அவளுக்கு அதை மெயிலும் செய்திருந்தான். ஒரு வேலை அவள் மட்டும் அந்த மெயிலை இரவே பார்த்திருந்தால் அவன் பிழைத்திருப்பானோ என்ற எண்ணம் தான் அவளை தமிழ்நாட்டிற்கு வர வைத்தது.

நினைவுக்கு மீண்டவள் இப்போதைக்கு ஆர்.ஆர் ஒழிக்கப்பட வேண்டிய விஷ கிருமி என்பதால் விரைவாக செயல்பட வேண்டும் என்று தனக்குள் சொல்லிக் கொண்டே தன் கைரேகை கொண்டு அந்த ஷெட்ரை திறந்து விளக்கை ஒளிர செய்ய அங்கு சேரில் கட்டிவைக்கபட்டு இருந்த அனைவரும் அவளை பார்த்து அலறினர்.

ஆர்.ஆர்காக அடிமட்ட வேலை செய்யும் லோக்கல் ரவுடிகளை கடத்திவிட்டு இவர்களுக்கு பதிலாக தக்ஷினாவின் ஆட்கள் ஆர்.ஆர்குள் ஊடுருவிவிட்டனர். இன்னும் ஒரு மாதத்தில் ஆர்.ஆர் மொத்த கட்டுப்பாடும் மறைமுகமாக தக்ஷினா கைக்குள். பெரிய திட்டம் சில உண்மையான நேர்மையான நாட்டுகாக உயிரையும் கொடுக்க தயாராக இருப்பவர்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து இந்த ஆப்ரேஷனை தொடங்கினர் இதனை தக்ஷினா தான் முதலில் ஆரம்பித்ததால் தலைமையாக அவளையும் போதை பொருள்தடுப்பு பிரிவின் சார்பில் புவி வேந்தனையும் நியமித்தனர்.

மிக மிக ரகசியமாக இது நடந்துக் கொண்டு இருந்தது அதற்கு காரணம் நம் நாட்டில் தீவிரவாதிகள் ஊடுருவலுக்கு ரத்தோர் பாலமாகவும் அவர்களுக்கு ஆயுதங்கள் தயாரித்து கொடுப்பதாகவும் மிக முக்கியமான ஆதாரம் சிக்கி இருந்தது. அதுமட்டுமல்லாமல் பெண்களை கடத்தி வெளிநாடுகளில் விற்பது, உடல் உறுப்புகள் திருடுவது, அரசாங்க டெண்டர்களை எடுத்து தரமற்ற பொருட்களை தயாரிப்பது. போதை பொருட்களை விளைவித்து பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது, புதுவிதமான மிகவும் ஆபத்தான போதை வஸ்துக்கலை சமூகத்தில் உலாவவிட்டு ஆதாயம் காண்பது போன்ற என்னில் அடங்கா குற்றங்களை பல கைகைளை தாராலமாக விரித்து மறைமுகமாக ஆர்.ஆர் ரத்தோர்ஸ் செய்துக் கொண்டு இருந்தனர். மொத்த ரவுடிகளும் பெரிய பெரிய அரசியல்வாதிகளும் ஆர்.ஆர்காக ஏதோ ஒரு வகையில் வேலை செய்ய பாதி குற்றங்கள் அவர்கள் ஆதாயத்துக்காக நடக்கபட்டன. நாட்டை சுரண்டி விற்றுக் கொண்டு இருந்தனர் மருந்து என்ற பெயரில் அப்பாவி மக்களை சோதனை எலிகளாக உபயோகித்தனர். வெளி உலகில் ஆர்.ஆர் குழுமம் கவுரவமான வேலைகளையும் நாட்டுக்கு சேவை செய்வதை போலவும் நாடகமாடிக் கொண்டே மறைவினில் தவறுகள் செய்தனர்.

அன்று விமலன் அழைத்து வந்திருந்த கல்லூரி மாணவி தான் பயிலும் கல்லூரி பிரின்சிபல் தன்னை ஒரு அரசியல் வாதியுடன் இரவு தங்க சொல்லி கட்டாயம் படுத்தியதாகவும் அவள் மறுத்தால் கொன்றுவிடுவதாகவும் மிரட்டவே அவள் அண்ணன் அவனை கொலை செய்ய துப்பாகி வாங்கி புவியிடமும் மாட்டி பின்பு அவளிடம் வந்தாகவும் சொல்லி அழுக இது போல் பல கல்லூரிகள் சர்ச்சையில் சிக்கியிருந்ததால் அதன் தீவிரத்தை உணர்ந்து அதிரடியாக விசாரித்ததில் பல மர்மங்களும் அதிர்ச்சியான செய்திகளும் அவளுக்கு தெரியவந்தது. ஊல்பின் வாயிலாக அவர்களை கண்கானித்ததில் பலவற்றை அவள் தெரிந்துக் கொண்டாலும் வலுவான ஆதாரங்கள் இல்லாமல் தான் அமைதியாக இருந்தனர். ரோகன் பொறுட்டு அதுவும் கைக்கு வந்துவிட தகுந்த நேரத்தில் உள்ளே புக கண்ணி விரித்துவிட்டனர் இந்தியன் போலீஸ் சர்விஸ் (ஐ.பி எஸ்). முத்து வேல் ஹோம் மினஸ்டர் என்பதால் அவர்களுக்கு ரகசியமாக பலவற்றிருக்கு அனுமதியும் கிடைத்தது. மிகவும் ஆபத்தான பயணம் சிறிது சந்தேகம் வந்தாலோ திட்டத்தில் ஓட்டை இருந்தாலோ ஒருவரும் உயிருடன் திரும்ப முடியாது முத்துவேலையும் சேர்த்து தான். ஒரு நாட்டின் ஆரசாங்கத்தைவிட கார்ப்ரேட் மிக பெரிது கடைசி விநாடி வரை கட்சிதமாக செய்வேண்டும் போர் தந்திரமும் நரி தந்திரமும் அறிந்து போரிட வேண்டும்.

"வாணி" தக்ஷினாவின் குரலுக்கு அவள் விரைந்து விர பின்னே தடியாக நான்ங்கு பேர் அவளுடன் வந்தனர். ஐவரும் நீல நிர சீருடை அணிந்திருந்த மருத்துவர்கள். வாணி என்பவள் திருமணம் முடித்து சிறிது நாட்களிலேயே நகை பணமெல்லாம் கணவனால் பிடிங்க பட்டு வயிற்றில் குழந்தையோடு கைவிடபட்ட பெண். சாந்தினி நடத்தும் டிரஸ்ட் மூழியமாக மருத்துவம் பயிண்றவள் தக்ஷினாவோடு ஊல்பில் இனைத்துக் கொண்டாள். ஆனைத்து கொடூரமாண தண்டனைகளும் வாணி தலைமையில் தான் நடத்தபடும். அந்த நான்ங்கு ஆண்களும் அவளை போலவே மருத்துவர்கள் தான். மனோ தைரியம் தான் எல்லாம் அது அவளிடம் நிறையவே கொட்டி கிடந்தது நாடுக்கு நன்மை செய்ய இதை தவிர்த்து இல்லீகல் வேலையும் மறைமுகமாக தக்ஷினாக்காக செய்வாள்.

"வாணி எங்க அவன்?"

"இப்போதான் தீ முழிச்சான். இப்போ நீங்க விசாரிக்கலாம்" என அவளை அழைத்து சென்றாள்.

பல வொயர்கள் ஒட்டபட்டு கட்டிவைக்க பட்டுருந்தான் அந்த மாமிசமலை ஆயிஷின் நெருங்கிய நண்பன் பிஏ மிர்ச்சியின் உரிமையாளன். நேற்று இரவு மரடைப்பு வந்ததால் (வர வைக்க பட்டதால்) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்தான் (பின் வழியாக இங்கே கொண்டு வர பட்டு அவர்களின் சிகிச்சையில் இருந்தான்). அங்கே மருத்துவமனையில் அவனை பார்க்க முயன்ற யாரையும் நெருங்க விடாமல் போலீஸ் ஆட்கள் பாதுக்காத்தனர்.

ஐஸ் வாட்டரை எடுத்து வேகமாக மூஞ்சில் அடிக்க துடித்து எழுந்தான் அவன். அதன் பிறகு அவர்கள் படுத்திய பாட்டில் அவனுக்கு தெரிந்த ரகசியம் அனைத்தும் ஆதாரமாக மாறியது.

"தீ கடவுளால கூட இங்க நடக்குற தப்பை நிறுத்த முடியாது அவ்வளவு மோசமான குற்றம். எப்படி நம்ம நாட்ட காப்பாத்த போறோம்?" வாணியின் கவலையில் சிரித்தாள் அவள்.

"சிம்பில் எரியுறத பிடிங்கிட்டா கொதிக்கிறது அடங்கிடும்.... புரியலையா? ஆர்.ஆர் தான் எல்லாத்துக்கும் தூண்டு கோள் அத உரு தெரியாமல் அழிச்சிட்டா பாதிக்குபாதி குற்றம் குறைஞ்சிரும்"

"ஆனாலும் திரும்ப வேற ஒருத்தன் வருவானே"

"திரும்பவும் அழிப்போம்… இல்ல அழிக்க வைப்போம்" என்றவள் சாவகாசமாக அமர்ந்து "ப்ளே" என்றாள். கொடூரமாக தக்ஷினா சிரிக்க வாணியின் கை வண்ணத்தில் பலரின் ரத்ததில் புரண்டவன் அலறி துடித்து கடைசி மூச்சை விட்டான்.

அவன் இருந்தால் ஆயிஷ்வை அவர்களால் நெருங்க முடியாது என்பதால் தான் முதல் பலியாக இவனை கொடுத்தனர்.

"வாணி… பாடிய போலீஸ்கிட்ட கொடுத்திரு அவங்க பாத்துப்பாங்க" என்றவள் வெளியில் வந்தாள்.

******************************

"ரோகட் எனக்கு நையிட்லேந்து ரொம்ப வயிற விலிக்குதுடா" என வயிற்றை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான் துருவ் ரத்தோர்.

"வலிக்குதா…. எப்படி ரொம்பவா? இல்ல அத விட ரொம்பவா?" முதுகை காட்டிக் கொண்டு பேசியதில் துருவால் ரோகனின் முகத்தை பார்க்க முடியவில்லை. அதில் அப்படி ஒரு சந்தோஷம் வெறி.

"ஆமாடா ரோகட் எதாச்சும் பண்ணேன்"

"பண்ணிடுரேன்" என்றவன் வலிதெரியாமல் இருக்கமட்டும் போதை ஊசியை போட்டான்.

"கொஞ்சம் தூங்கி ரெஸ்ட் எடு சரி ஆகிடும்" என அவனை அனுப்பிவிட்டு தன்வேலையில் கவணமானான் ரோகன். அவன் முன்பைவிட இன்னும் கோபமாக இருந்தான் காரணம் அவனை வைத்தே அவனுக்கே தெரியாமல் தன் சுயலாபத்துக்காக பல உயிர்களை பலிவாங்கிருந்தான் ஆயுஷ். இத்தனை நாள் ரோகட்க்கு கீழ்தான் எல்லாம் நடந்துக் கொண்டு இருக்கிறது என்று அவனை நம்பவைக்கபட்டு பல ஆராய்ச்சிகளை இல்லீகலாக செய்துக் கொண்டு இருந்தனர்.

************************
அந்த இடம் பல கடைகள் இருக்கும் காம்ப்ளக்ஸ். திருமணநாள் நெருங்குவதால் தன் உடைகளை தைக்கொடுக்க வந்திருந்தாள் ஆராதனா. விடுமுறை தினம் என்பதால் பாதி கடைகள் பூட்டிதான் இருந்தன. சந்து சந்துகளாக பிரிக்கபட்டு நிறைய கடைகள் இருக்க வெளியில் ஒரு மெடிக்கல் போர்ட் இருந்ததை பார்த்தவள் தற்காலிமாக மாதவிடாய் வராமால் தடுபதற்காக மருத்துவர் பரிந்துரைத்த மருந்தை வாங்க சென்றாள். கல்யாணம் கோவிலில் நடக்கவிருப்பதால் எதுவும் நடந்துவிட கூடாது என டாக்டரிம் சென்று அவர் ஆலோசனையின் பெயரிலே இந்த மருந்து. ஆனால் அவள் தேடிவந்த கடை மூடியிருக்க வந்த வழியே திரும்பியவள் ஆஷாவை அங்கு பார்த்ததும் கையசைத்தாள். சரத் வழியாக ஆஷாவும் அவளுக்கு பழக்கமாகி இருந்தாள்.

"ஆக்கா நீங்க எங்க இங்க?"

"டிரஸ் தைக்க வந்தேன்… நீ?"

"அப்பா ஒரு கேஸ் விஷயமா ஒரு சைன் வாங்கிட்டு வர சொன்னாங்க அதான் இங்க வந்தேன்"

"வாங்கிட்டியா?"

"ம்ம் இப்போதான் வாங்கிட்டு வந்தேன்" இருவரும் பேசிக் கொண்டு இருக்கும்போது தான் அந்த சத்தம் வந்தது.

"ஆஷா இப்போ உனக்கு எதாச்சும் சத்தம் கேட்டுச்சா?"

"ஆமா க்கா எதோ முனுகல் சத்தம் மாதிரி இருக்கு" இருவரும் பேசிக் கொண்டு இருக்கும் போதே மீண்டும் சத்தம் வர இருவரும் உற்று கவணித்தனர். அது அந்த மருந்துக் கடையில் இருந்து தான் வந்தது.

"அக்கா என்வோ வித்தியாசமா இருக்கு… ஏதோ சரி இல்ல" அஷா சொல்ல அதை ஆமோதித்தாள் ஆராதனா. அந்த கடையில் ஷெட்டர் பூட்டு போடாமல் கீழே இழுத்து விடபட்டுருந்தது அடியில் இருந்த சிறு இடைவெளியில் இருவரும் காதை வைத்து கேட்டனர்.

"அண்ணா அண்ணா பிலீஸ் என்ன விடுங்க எனக்கு வலிக்குது பயமா இருக்கு ..அம்மா கிட்ட போகணும் அம்ம்மாஆஆ அம்மாஆ" ஈனஸ்சுரத்தில் ஒரு சிறுமி முனகுவது அறைகுறையாக கேட்க இருவரும் அதிர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

ஆராதனாவை இறக்கிவிட்ட சந்தோஷ் தன் வேலையை முடித்துக் கொண்டு அவளை தேடி மேலேவர அவள் ஆஷாவுடன் பேசிக் கொண்டு இருப்பதை பார்த்துவிட்டு அவளிடம் சென்றான். ஆனால் அதற்குள் இருவரும் ஓடி சென்று தரையில் படுக்க அவளிடம் ஓடிவந்தவன் ஆராதனாவனை தொட அவனை பார்த்ததும் "சந்தோஷ் உள்ள… உள்ள ஷெட்டர தூக்கு" அவனை அவசரபடுத்தினாள்.

"ஹேய் என்னனு சொல்லு? கடைகராங்க சண்டைக்கு வந்துருவாங்க" என பொறுமையிழந்த ஆஷா ஷெட்டரை இழுக்க அவளால் பாதிதான் தூக்க முடிந்தது. ஆனால் அதுவே உள்ளே நடந்தவையை காட்டிவிட மூவரும் ஷாக்கடித்தது போல் நின்றுவிட்டனர். இரு காமமிருகங்கள் பத்து வயது இருக்கும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துக் கொண்டு இருந்தனர்.

உணர்வு வந்த சந்தோஷ் மீதி ஷெட்டரை தூக்கிவிட்டு ஏறி உள்ளே குதித்தவன் அவனை பிடித்து சரமாரியாக அடிக்க தப்பித்து ஓட முயன்ற ஒருவனை பெண்கள் பிடித்து செருப்பால் அடிக்க அரம்பித்துவிட்டனர். சத்தம் கேட்டு அனைவரும் கூடிவிட யார் அடித்தது யார் துவைத்தது என்றே தெரியாமல் அடித்து உதைத்து இருவரையும் கட்டிபோட்டு விட்டனர்.

அதில் ஒருவன் மெடிக்கலில் வேலை பார்பவன் மற்றவன் அந்த காம்ப்ளக்ஸ் ஓனரின் தம்பி. எப்போதும் போல் மெடிக்கலுக்கு வாடகை வாங்க வந்தவன் அவ்வழியில் ஸ்போர்ட்ஸ் வியர்ஸ் கடையை தேடி அலைந்த சிறுமியை யாரும் இல்லாத நேரத்தில் இழுத்து உள்ளே போட அங்கு வேலை செய்பவனும் அவனுடைய கூட்டு களவாணி என்பதால் யாரும் பார்கிறார்களா என்று பார்த்துவிட்டு ஷெட்டரை கீழே இழுத்துவிட்டான். காமவெறி அவளை பெண் என்று தான் பார்க்க வைத்தது பின்னே உள்ள குழந்தை என்ற பெயரை அறிந்தும் உணராத அரக்கர்களாக அச்சிறு பெண்னை பாலியல் ரீதியாக துண்புருத்த வலியில் துவண்டாள் சிறியவள். அவள் அணிந்திருந்த மஞ்சள் நிற கெவூன் ரத்தமாக மாற கத்த விடமால் வாயை அழுத்தி பிடித்திருந்தான் ஒருவன். தனக்கு என்ன கொடுமை நடக்கிறது என்றே அறியாமல் வலியில் துள்ள துடிக்க அவர்கள் வெறியை அச்சிறு பெண்ணிடம் காட்ட உணர்வு மங்கும் நேரத்தில் "சடசட" வென சத்தத்துடன் வெளிச்சம் உள்ளே வர தன் மேல் அழுந்திய சுமை சட்டென்று மறைந்ததும் பிழைத்துவிட்டோமா? செத்துவிட்டோமா? என்ற குழபத்திலே மயங்கினாள் அவள்.
ஆம்புலன்ஸும் மீடியாவும் போட்டி போட்டு கொண்டு வர சிறுமியை தூக்கிய சந்தோஷ் ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பிவைத்தான். கையெல்லாம் ரத்தமாக இருந்தது ஒரு நிமிடம் உடலே சிலிர்த்து விட்டது. அதன் பிறகு மெதுவாக வந்த காவல் துறை ஆடியசைந்து விசாரணை ஆரம்பிக்க அவர்களை தனியாக அழைத்த காம்ப்ளக்ஸ் ஓனர் ஏதோ பேசி பிரச்சனையை மறைக்க பார்த்தார்.

"நீங்க தான சம்பவத்த பாத்தது கொஞ்சம் அப்படி போய் பேசலாமா?" தங்க நகையை மாட்டிக் கொண்டு வெள்ளை சட்டையும் பேண்டுமாக ரவுடி போல் இருந்தவன் அழைக்க அவனுடன் சென்றான் சந்தோஷ்.

"இங்க பாருங்க என் தம்பி ஏதோ தெரியாமா பண்ணிட்டான் நேருல பாத்தது நீங்களும் உன் தங்கச்சியும் மட்டும்தான்ங்கறனால உங்களுக்கு வேண்டிய பணத்தை தரேன் வாங்கிட்டு போய்ட்டே இருங்க அத விட்டு சாட்ச்சி சொல்றேனு கிளம்பாதிங்க… நான் ரொம்ப மோசமான ஆளு" எடுத்ததும் சந்தோஷை மிரட்ட அதை வேடிக்கை பார்த்த போலீஸ்சை கண்டு பல்லைகடித்தவன் சிறிதும் யோசிக்காமல் விமலனக்கு அழைத்தான். இவர்கள் நடந்துக் கொண்டதை பார்த்து ஆஷா சரத்தையும் அழைந்திருந்தாள். அரைமணி நேரத்தில் இருவரும் வந்துவிட இனி யார் பேசி என்ன மிரட்டி என்ன. ஏ.ஐ.ஜியை பார்த்ததும் காவலர்கள் உஷாராகிவிட இருவர் மீதும் F.I.R போட பட்டு ஜெயிலில் அடைக்கபட்டணர். மெடிக்கலில் வேலை பார்தவன் அவமானத்தில் தூக்கு போட்டுக் செத்துவிட மற்றவனுக்கோ ஒரு மாதிற்க்கு முன்தான் திருமணம் செய்துக்கொண்ட புது மனைவி தாலியை அறுத்து அவன் மூஞ்சிலே வீட்டெறிருந்துவிட்டு விவாகரத்து பத்திரம் அனுப்புவதாக சொல்லி சென்றுவிட்டாள்.

ஆராதனா ஆஷா சந்தோஷ் மூவரும் முக்கிய சாட்ச்சியாக இருந்தனர்.

வாரத்திற்கு இரண்டுசேர்ந்து முறை இதுபோல் பிரேக்கிங் நீயூஸாகவோ தலைப்பு செய்தியாகவோ வந்தாலும் ஒவ்வொரு முறையும் மனதை உலக்கிக் கொண்டு தான் இருக்கின்றன கற்பழிப்பு சம்பவங்கள். அந்த வகையில் சிறுமி பாலியல்வண்கொடுமை செய்யபட்டது தமிழ்நாட்டில் ஆக்ரோசமாக பேசபட்டது.

மீடியா கேமராவையும் மைக்கையும் கேள்விகளையும் சுமந்துக் கொண்டு காவலர்களை தூரத்திக் கொண்டு இருந்தனர்.

"சார் இந்த ஆறு மாசத்துல மட்டுமே பல கற்பழிப்பு நடந்திருக்கு. அதில் வேலைக்கு செல்லும் பெண்கள் தான் அதிகம். கடந்த நாட்களாக அதிகரிக்கும் இந்த குற்றங்களுக்கு என்ன காரணம். சென்னையில் மீண்டும் ஒரு சிறுமி பட்டபகலில் பலாத்காரம் பண்ணபட்டுதற்க்கு என்ன தண்டனை? கேஸ் எந்தளவில் இருக்கிறது?" என முரளி முன் மைக்கை நீட்ட என்ன செய்வார் அவர்.

"சிறுமி கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்ட இருவருரில் ஒருவருன் தற்கொலை செய்துக் கொண்டான். இந்த வார இறுதியில் கேஸ் விசாரணைக்கு வருகிறது என்ன தண்டனை என்பதை கோர்ட் தான் முடிவெடுக்கும். நாங்களும் முடிந்த அளவுக்கு குற்றங்கள் நடக்க விடாமல் தடுக்கிறோம் அதையும் மீறி நடப்பனவற்றுக்கும் குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டை வாங்கி தான் தருகிறோம். நைட் பாட்ரோல்க்கு அதிகமான காவலர்களை நியமித்து இருக்கிறோம் எங்களால் முடிந்த பாதுகாப்பை பெண்களுக்கு வழங்கிவந்தாலும் பெண்கள் இரவில் தனியாக செல்வதை தவிர்க்க வேண்டும்" என்றவரை இடைமறித்தாள் ஒரு பெண்.

"சார் ஆறு மாதங்களுக்கு முன்ன ராதிகா கற்பழிப்பு சம்பவத்தில் குற்றவாளிகளுன் யாரையும் காவல் துறை பிடிக்கவில்லையே. அதற்கு உங்க பதில் என்ன? " என

"நாங்க விசாரிச்சிட்டுதாங்க இருக்கோம் குற்றவாளிய சீக்கிரம் கண்டு பிடிச்சி நீதிமன்றத்துல ஒப்படைப்போம்" என எல்லா கேள்விகளுக்கும் தன் முன் நீட்டப்பட்ட மைகளில் பொறுமையாக சொல்லிக் கொண்டு இருந்தார் முரளி.

வருவாள்…
 

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
பெண்ணே 25

Rp174pmeHm0rUA05hZXbciaqUaeEDgQsYHE4bmcIQ8LmhmlY5KQs3JtZUSsq74RIGHs2r-Q0fWf8MI2QfV_lade6IsDZcGFpV1Fw8VI4IaHkzZKcRLAnqsgNeYCgk0SkAdjdffSj=s0


****************************
அந்த முருகன் கோயில் பலமாக அலங்கரிக்கப்பட்டு இருக்க ப்ளோரல் ஆர்க் மணமேடையில் நடுவே ஓமகுண்டத்தில் அக்கினி பகவான் வாசம் செய்ய புகையிலும் கருத்தாக ஐயர் சொல்லும் மந்திரங்களை செய்துக் கொண்டு இருந்தான் அதியன். சற்று நேரத்தில் கரும்பச்சை நிறத்திலான தங்கநிற பார்டர் வைத்த முகூர்த்த புடவையில் கழுத்தில் மாலையோடு அழைத்துவரபட்டாள் ஆராதனா. சம்பிரதாயங்கள் அனைத்தும் முடிந்து அனைவர் கையிலும் மஞ்சளும் மலர்களும் கலந்த பச்சரிசி கொடுக்கபட்டது.

"கெட்டி மேளம் கெட்டி மேளம்" ஐயர் குரல் ஓங்கி ஒலிக்க பொன் மாங்கலியம் கோர்த்த மஞ்சள் கயிறை ஆராதனாவின் சங்கு கழுத்தில் கட்டி தன் பாதியாக்கி கொண்டான் ஆதி அதியன். அனைவர் ஆசியும் அச்சதையோடு அவரகள் தலையில் விழ இருவரும் கரம் குவித்து வணங்கினர்.

பட்டுவேட்டி சட்டையில் இருந்த புவியின் கண்கள் பட்டுபுடவையில் இருந்த தக்ஷினாவை சுற்றியது. திடீரென அவன் கழுத்தில் கையை போட்டு இறுக்கிய விமலன் "என்னடா மச்சான் தீக்கு வாக்கபட ஆசைபடுறியா?" என வம்பிழுக்க அவனை முறைத்தான் புவி.

"ஏய்ய் மாப்பிள்ளை வீட்டுக் கரனையே வம்பிழுக்கிறியா?" அவன் காலரை தூக்கிவிட "ஓய்ய் உங்க அண்ணியோட அண்ணனையே சண்டைக்கு இழுக்கிறியா" விமலன் வேட்டியை மடித்துக் கட்டினான்.

"எப்பா கல்யாண வீட்டுல சண்டை போடாதிங்க போலீஸ்ல பிடிச்சி கொடுத்துருவாங்க மினிஸ்டர் வீட்டுக் கல்யாணம்" என கோயிழுக்கு வந்த பெரியவர் ஒருவர் அவர்கள் போலிஸ் என்று தெரியாமலே மிரட்டி சென்றார். அதை கண்டு அருகில் இருந்த இளம்பெண்கள் சிரித்துவிட விமலனும் புவியும் ஒருவர் தோளில ஒருவர் கைபோட்டு அனைத்தபடி "ஒய் பிளட் சேம் பிளட்" என அசடுவழிய தலையில் அடித்துக்கொண்டான் சந்தோஷ்.

மாலை வரவேற்புக்கு அணிய வேண்டிய லெகன்ங்கா அணிந்து கண்ணாடி முன் நின்றாள் ஆராதனா. இளஞ்சிவப்பு நிறத்தில் பலபலக்கும் சிறு கற்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டு மிக கனமாக இருந்தது. அதற்கு ஏற்ற நகை அணிந்து தேவதை போல் இருந்தவளுக்கு ஈரம்காயாத மஞ்சள் தாலி கூடுதல் அழகை கொடுக்க மன்னவன் எண்ணி முகபூச்சை மீறி சிவந்திருந்தது முகம்.

கதவை திறந்துக்கொண்டு அவசரமாக உள்ளே வந்த அதியன் கோட்சூட்டில் என்றையும் விட இன்று கம்பீரமாக இருக்க மெய் மறந்து அவனை பார்த்தாள் ஆராதனா.

"பப்பி… ரெடியா?" அவளருகில் வந்தவன் நிதானமாக தலையில் இருந்து கால் வரை பார்த்தான். அவன் விழியில் ஒரு போதை குடிக்கொண்டதோ…? அவன் பார்வை சொன்ன செய்தி அவளை மேலும் சிவக்க வைத்தது. மெல்ல நெருங்கியவன் அவள் முகத்தை கையில் ஏந்தியதும் தானாக கண்ணை மூடிக்கொண்டாள் அவள்.

அவன் ஈர உதடும் முள் என குத்தும் மீசையும் முகம் முழுக்க பட்டும் படாமலும் உரச அவளுக்கு தான் மூச்சடைத்தது கால்கள் நிற்க திறனற்று நடுங்கியது… இன்பமான அவஸ்த்தையில் மூச்சை இழுத்து… அழுத்தி வெளியிட்டாள். அவன் விரல்கள் இப்போது தாராளமாக அவள் வெற்று இடையில் கோலம்வரைய சட்டென்று அதை நகரவிடாமல் தடைசட்டம் போட்டன அவள் விரல்கள்.

"ப்ச் ஆரு" கிறங்கிய குரலில் தடையை எடுக்க சொல்லி நிபந்தனை விட்டவன் அதற்கான தண்டனையாக அவள் கழுத்து வளைவில் அழுத்தமாக முகம் பதித்து வாசம் பிடித்தான்.

"அத்தான் போதும்…" தாளமாட்டாமல் அவனை தள்ளிவிட்டு திரும்பி நின்றாள் ஆராதனா. தன்னை சமன் படுத்திக்கொண்ட அதியன் அவள் தோளைபற்றி மெத்தையில் அமர வைத்தவன் அவளுக்கு முன் வந்து மண்டியிட்டு பாக்கெட்டில் இருந்த தங்ககொலுசை எடுக்க அவனை பார்த்து வெட்க புன்னகை சிந்தினாள் அவள். அதியன் அழகாக கையை நீட்டி மெல்ல பின் நகர்ந்த அவள் பாதத்தை எடுத்து தன் மடியில் வைத்தவன் கொலுசை போட்டுவிட்டு மெட்டியில் அழுத்தமாக இதழ் பதித்தான்.

"பிடிச்சிருக்கா பப்பி?" காதல் வழியும் குரல் "ம்ம் ரொம்ப பிடிச்சிருக்கு" என அவனுக்கு இணையாக அவள் குரலில் காதல் வழிய எழுத்து அனைத்துக் கொண்டவன் "நான் கொலுச கேட்டேன்" என "நான் உங்கள மட்டும் தான் சொன்னேன்" என்றவளை தன் கைகுள் இருந்து பிரித்தவன் அவள் கன்னத்தில் அழுத்தமாக ஒரு முத்தம் வைத்துவிட்டு அவள் கையோடு தன் கையை சேர்த்துக் கொண்டான்.

"எல்லாரும் நமக்காக வெயிட் பண்ணுவாங்க... போகலாமா?"

"ம்ம்" என்றவள் அவனுடன் வெளியில் வந்தாள். பின் அனைவரும் வாழ்த்தி பரிசுகளை தந்து போட்டோ எடுத்ததும் பெரியவர்கள் இளையவர்களுக்கு விட்டுதர காதை கிழிக்கும் டிஜே பாட்டுக்கு நடனம் ஆடவும் விளையாட்டு கச்சேரி என கலைகட்டியது. அப்படி ஒரு கொண்டாட்டம் அதியனின் கைக்குள் இருந்து நடனம் ஆடியது ஆராவுக்கு ஒரு மயக்கத்தை தந்தது. இருவரும் தனிமையை தேட உலகையே மறந்து அதியும் ஆராவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

விமலனும் தக்ஷினாவும் ஆடிய ஆட்டத்தை கொசு உள்ளே போகும் அளவிற்கு வாயை திறந்து பார்த்துக்கொண்டு இருந்தான் புவி. கிரீன் கலரில் பலபலக்கும் லெகன்ங்கா அணிந்து குதித்துகொண்டு இருக்க அவளுடன் நெற்றி சுட்டியும் குதித்து குலுங்கியது. தக்ஷினாவுடன் சேர்ந்து ஆட புவிக்கு ஏக்கம்வர அது விமலன் மீது எரிச்சலாக மாறியது. "எப்படி அவளுடன் சேர்ந்தாடுவது" என்று யோசித்தவன் அபிராமி ஒரு ஓரமாக அமர்ந்திருக்க அவளை வழுக்கட்டாயமாக இழுத்து வந்தான் தானாக விமலன் அபியை கண்டு அவளோடு இனைத்துக்கொள்ள தக்ஷினாவுக்கு கம்பெனி கொடுப்பது போல் வந்தவன் அவளுடன் மிக நெருக்கமாக ஆட ஆரம்பித்தான். உலகில் இல்லாத அதிசயமாக தக்ஷினாவும் இசைந்து ஆடினாள். ஸ்லீவ்லெஸ் ஹாண்டில் இருந்தவள் தாவனியை துப்பட்டாவாக கழுத்தை சுற்றி போட்டிருக்க எலுமிச்சை நிறத்தில் இருந்த அவள் சிற்றிடையில் கைகெடுத்தவன் அவளை தூக்கி ஒரு சுத்து சுத்தி தள்ளி நிறுத்தி கையை விரலோடு தூக்கி பிடித்தவன் அவளை சுழற்றி தன்னை நோக்கி இழுத்தான். அவள் பெரிய பாவாடை காற்றில் பெரிதாக விரிந்து அவனையும் அவளுடன் சேர்த்து இனைக்க ஒற்றை கையை அவன் கழுத்தில் போட்டு இழுத்தவள் இடையை வளைத்து சாய தாங்கி நின்றவன் முகம் மட்டும் அவள் முகத்திற்கு அருகில் நின்றது… மெய் மறந்து நின்றவன் அனைவரும் கைதட்ட அவளை நிற்க வைத்துவிட்டு விரைந்து சென்றுவிட்டான்.

அதன் பிறகு ஓரமாக அமர்ந்திருந்தவன் மேல் தக்ஷினாவின் பார்வை அதிகமாக பதிந்து விலகியது. உணர்வுபிடியில் சிக்கியிருந்த புவிக்கு தான் அது தெரியவில்லை. விமலனும் புவியும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் பின்பு ஐபிஎஸ்லும் ஒரே போட்ச். இருவரும் நெருக்கிய நண்பர்கள் அதனால் அடிக்கடி தக்ஷினாவிடம் புவியை பற்றி விமலன் பேச பேச ஏன் என்றே தெரியாமல் அவளுக்கும் அவனை பிடித்தது. புவிக்கு தான் தீ யார் என்று தெரியாது ஆனால் பத்து வருடமாக புவிவேந்தனை அவளுக்கு நன்றாக தெரியும். காதல் என்று சொல்வதைவிட காதல் வந்தால் அவன் மேல் தான் வரும் என்ற நிலை… ஆனால் இந்த ஆறு மாத காலமாக விமலன் ஆராதனா காதல், அதியன் ஆராவை தாங்குவது அபிராமி கண்ணிலே விமலனிடம் பேசும் அழகு இதை பார்க்க பார்க்க அவளுக்கும் ஏதோ மாற்றம் உருவாகியது. அதுவும் புவியின் பார்வை அவளையே சுற்றிவர தக்ஷினாக்கும் உள்ளே ஒரு மலர் மலர்ந்தது. இன்றைய நிகழ்வு அவளிடம் புவி இன்னும் நெருங்கிவிட்டான் என்ற உண்மையை அவளுக்கு மட்டுமல்ல புவிக்கும் உணர்த்தியது.

"நான் அருகில் சென்றதும் அவள் கண்கள் ஏன் மூடியது" என்ற யோசனையில் இருந்தவனுக்கு தலையை வலிக்க சத்ததில் இருந்து எழுந்து மொட்டை மாடிக்கு சென்றான். அவன் பின்னே ஜரிகை சத்தம் கேட்க தக்ஷினாதான் நின்றிருந்தாள்.

"தீ உன்கிட்ட ஒன்னு சொல்லனும்" என்றவன் அவள் முகத்தை பார்க்காமல் வானத்தை பார்த்தான். அவள் அமைதியாகவே இருக்க ஒரு முறை திரும்பி பார்த்தவன் "ஜ லவ் யு" என்றுவிட்டு திரும்பிக் கொண்டான்.

அவன் பின்மண்டையில் தட்டியவள் "என்ன லூசாகிட்டியா" என சிரித்துக் கொண்டு கட்டையில் சாய்ந்து நிற்க அவளை சட்டென்று இழுத்தவன் இருபுறமும் கையால் சிறை வைத்தான்.

தலையை இடதுபுறம் சாய்த்து "நான் பயப்பிட மாட்டேன்" என்பது போல் நக்கலாக சிரித்த தக்ஷினாவை தாபமாக பார்த்த புவி "ஏன்? ஏன் என்ன கொல்லற…? நீ என்ன லவ் பண்ண வேண்டாம். நான் மட்டுமே உன்ன லவ் பண்ணிக்கிறேன். ப்ளீஸ் இப்படி பாக்காத தீ" என்றவன் முத்தம் கொடுக்க வர விலகவும் இல்லாமல் இமை முடிவும் இல்லாமல் தீர்க்கமான அவள் பார்வையில் முன்னேறாமல் நின்றான் அவன்.

"இது இது தான்… உனக்கு பிடிக்கலைனா என்ன பிடிச்சி தள்ளு… மூஞ்ச திருப்பிக்கோ... விலகிபோக பாரு.... என்ன அடி... ஏன் இங்கிருந்து கீழ தள்ளிக்கூட விடு ஆனா இப்படி அசையாம நிக்காத. உன் மூஞ்சு என்ன காந்தமா இழுக்குது டி. என்னால கண்ட்ரோல் பண்ண முடியல தீ… இந்த ஆறு மாசமா நாய்குட்டி மாதிரி உன்ன சுத்தி வரேன். உன்னோட கண்ல இந்த திமிரு இருக்கே.. அதுக்கூட எனக்கு ரொம்ப பிடிக்கும் தீ. ஆனால் இதோ இந்த அலட்சியம் இருக்கே அது எனக்கு எரிச்சலா இருக்கு. அதுல எனக்கான லவ் வேனும்னு மனசு அடம்பிடிக்குது. உன்னோட கோவம் கூட முழுசா எனக்கே வேனும்" என உலுக்கியவனை சலிப்பாக பார்த்தாள் அவள்.

"புதுசா ஏதாச்சும் படம் பார்த்தியா? டயலாக் சூப்பர்" வேண்டும் என்றே வெறுப்பேற்றினாள்.

"என்னடி கெஞ்சுறனால சீப்பா நினைக்கிறியா…? எனக்கு நீ வேனும்… அவ்வளவு தான்" கோபமாக பொங்க அவள் அவனை நெருங்கி வந்து கையால் அவன் ஷர்டை பற்றியிருக்க அதை கவனிக்கவில்லை புவி வேந்தன்.

"வில் யு மேரி மீ…. எனக்கு உன்கூட வாழனும்… இப்போவே…" என பிதற்றியவன் அவளை அள்ளி எடுத்து இதழை சிறை செய்ய நீண்ட நேரம் அந்த மோனநிலை தொடர்ந்தது. இருவரும் ரசித்தனர் என்று தான் சொல்ல வேண்டும் ஒருவன் ஆரம்பித்த யுத்தத்தை அவளும் கையில் எடுக்க பெரும் போரே ஆரம்பித்தது. புவியின் கைகள் அவள் கூந்தலில் நுழைந்து வேட்கையோடு விளையாட க்ரிஸ்டல் கிளிப் கழண்டு தலை கலைந்தது. புவி அவளை இழுத்து தன்னுள் புதைத்துக்கொள்ள முயல அவன் உயரத்திற்கு ஈடு கொடுத்து அவன் காலில் ஏறி நின்றாள் தக்ஷினா. கழுத்தில் இருந்த தாவனி நழுவி விழுந்தது. அவன் முகமெல்லாம் உதட்டுசாயம் இதழ்விரிக்க அவன் கைகள் அவள் மேனியை அணுஅணுவாக ஆராய்ந்தது. சந்தனநிற ஷர்ட் அவள் கையில் கசங்க அவளை தூக்கி கொண்டவன் அவளுடன் சுவற்றில் சாய்ந்து பின் சரிந்து பின் அமர்ந்து விரிந்து பரவியிருந்த பாவாடையில் அவளுடன் சாய்ந்தான். அவளை விலக விடாமல் அவன் இழுக்க அவனை விலக விடாமல் அவளும் இழுக்க காதலாக தாபமாக ஒரு மல்யுத்தம் இரு இதழ்கள் மோதலில் விரும்பி காயம்கொண்டன. அவள் நெஞ்சில் முகம்புதைத்தவன் முடியை தக்ஷினா அழுத்தமா பிடிக்க அவன் கீழே உருண்டு அவளை இடையோடு இழுத்து தன் மேல் போர்தினான் புவி. வானத்தில் கலர் கலர் வெடிகள் வெடிக்க அந்த சத்தத்தில் சட்டென்று விலகி அமர்ந்தனர் இருவரும். மூச்சு வாங்க நலுங்கிய தோற்றத்தில் அலங்கோலமாக இருந்தவளை பார்த்து புவியின் முகமும் சிவந்தது. எழுந்து சென்று உதிரிக்கிடந்த அவள் ஆபரணங்களையும் தாவனியையும் எடுத்து வந்தவன் அவளிடம் நீட்ட வாயை அழுந்த துடைத்தவள் அறுந்து சிதறிக் கிடந்த முத்துகளை பார்த்து "யு பொறுக்கி..." என புவியின் வயிற்றில் குத்திவிட்டு பிடிங்கிக் கொண்டாள் தக்ஷினா.

"தேங்ஸ் கண்மணி" என நிறைவாக சிரித்த புவி அவள் கழுத்தை சற்றி தாவனியை போட அவன் உச்சு முடியை பிடித்து ஆட்டியவள் "எனக்கு கல்யாணம் குடும்பம்னு இப்போதைக்கு விருப்பம் இல்ல" என்றவாறு திரும்பி நடக்க "அப்போ அதுவரைக்கும் நம்ம லிவ்விங்ல இருக்கலாம்" என்றவனை முறைத்தவள் "கடைசிவரைக்கும் ஆசை வரலைனா?" என "எப்படி இருந்தாலும் பரவால்ல எனக்கு நீ தான் வேனும்" என்றான்.

"சரி அப்படினா கன்சிடர் பண்றேன்" என தக்ஷினா சிரிக்க "கல்யாணத்துக்கா" புவியின் வியப்பில் "இல்ல லிவ்விங் டு கெதர் பத்தி" என மண்ணை அள்ளி போட்டவள் "இப்படியே கீழ போய்டாத" என சென்று விட்டாள்.

அழுதுக்கொண்டு இருந்த துர்காவை அனைத்துக் கொண்டு ஆராதனாவும் அழுக அவள் தலையை வருடிவிட்டான் சந்தோஷ். வீல்சேரில் அமர்ந்திருந்த ராகவன் இதனை கடுப்புடன் பார்க்க அவரை முறைத்துக்கொண்டு இருந்தான் அதியன்.

"ஆரு ப்ளைட்கு டைம் ஆச்சி மா" அதியன் அழைக்க அவனிடம் வந்த சந்தோஷ் கைகூப்பினான்.

"நடந்த சண்டை எல்லாம் மனசில வச்சிக்காதிங்க மச்சான். என் தங்கச்சிய பத்திரமா பாத்துக்கோங்க. நிறைய கசப்பான சம்பவம்லாம் நடந்திருச்சி அதனால பாப்பாகிட்ட எதும் கோவபட்றாதிங்க. அப்பறம் இது என் தங்கச்சிக்கு நான் ஆசையா வாங்கி சேர்த்தது ப்ளீஸ் வாங்கிக்கோங்க" என்றவன் கார் சாவியையும் நகை பெட்டியையும் கொடுக்க அதனை மறுத்து சந்தோஷை அனைத்துக் கொண்டான் அதியன்.

"உன் தங்கச்சியே எனக்கு பெரிய பொக்கிசம் தான். வரதட்சணை வாங்ககூடாதுனு நான் உறுதி மொழி எடுத்திருக்கேன் சந்தோஷ் அதனால இத நீ வச்சிக்கோ. இப்போ இந்த கார்ல எங்கள ஏர்போர்ட்ல டிராப் பண்ணு அதுவே போதும்" என அதை ஆமோதித்தாள் ஆராதனா.

"பாப்பா… பத்திரமா இருக்கனும்… புது இடம் தனியா எங்கேயும் போககூடாது சரியா? டைம் கிடைச்சா கால் பண்ணு. எதாச்சும்னா உனக்கு நான் இருக்கேன் சரியா..." சந்தோஷ் கண்கலங்க ஆராதனாவும் அவனை அனைத்துக் கொண்டு அழுதாள். இத்தனை வருடம் ஒன்றாகவே இருந்தவர்கள் பிரிவை எண்ணி அழுதனர். பின் அந்த பாக்ஸை திறந்தவன் ஒரு ப்ரேஸ்லைட்டை எடுத்து அவள் கையில் கட்டிவிட்டான். அது ஆராதனா ஒருநாள் நியுஸ் பேப்பரில் வந்த விளம்பரத்தை ஆசையாக திருப்பி திருப்பி பார்த்தாள் என்று வாங்கி லாக்கரில் வைத்திருந்து அதை தான் இப்போது கொடுத்தான்.

"ரெண்டு மாசம் தான் சந்தோஷ் விமல் கல்யாணத்துக்கு திரும்ப இங்க வந்திருவோம்" என இருவரையும் தேற்றிய அதியன் முத்துவேல் சாந்தினியிடமும் ஆசிர்வாதம் வாங்கினான்.

தக்ஷினாவும் விமலனும் அவளை அனைத்து தங்கள் அன்பை காட்ட அழகான லெதர்கோட் ஒன்றை அவளுக்கு மாட்டிவிட்டான் விமலன்.

அனைவரும் ஏர்போர்ட் வர இருவருரையும் லண்டனுக்கு வழியனுப்பிவிட்டு புவியும் தக்ஷினாவும் மும்பை ப்ளைட் ஏறினர்.

அதியனின் தந்தைக்கு மாரடைப்பு எற்பட்டுவிட லண்டனில் புதிதாக தொடங்கி இருந்த அவள்கள் பவுன் கன்ஸ்ரக்சனை தற்காலிகமாக பார்த்துக்கொள்ள அதியன் சென்றாக வேண்டிய கட்டாயம். புவி ஆர்.ஆர் ஆப்ரேசனில் இருப்பதால் அவனாலும் முடியாத நிலை. அவனும் தக்ஷினாவும் மும்பை கிளம்புகின்றனர். நெருக்கடியான நிலையிலும் கல்யாணத்தை நிறுத்த மனமில்லாமல் வரவேற்பு முடிந்து கையோடு ஆராதனாவையும் லண்டன் கூட்டிச் சென்றான் அதியன்.

"அபி இங்க வாம்மா… சாமி ரூமில் விளக்கு ஏத்தி வச்சிட்டு அனையவிடாம பாத்துக்கோ. அம்முலு காலை போன் பண்ணதும் பொங்கள் வச்சி சாமி கும்பிடனும். ஆப்பிஸ்ல முக்கியமா ஒரு கால் வந்திருக்கு நான் போகனும். நீ தான் இந்த வீட்டு மருமகள் கவணம்டா…. தூங்கிடாத…" என்ற சாந்தினி அவசராமாக செல்ல தலையாட்டிவிட்டு விளக்கில் எண்ணெய் ஊற்றி வந்தாள் அவள்.

"ஓய்ய் பொண்டாட்டி ட்ரெஸ் மாத்தலையா இங்க உட்காந்திருக்க" தலையை துவடிக்கொண்டே அவளை ஒட்டி அமர்ந்தான் விமலன்.

"இல்ல அத்தை விளக்க பாத்துக்க சொன்னாங்க" என முகத்தை திருப்பிக் கொண்டாள் அபிராமி. கருநீலநிற பேன்ஸி புடவையில் நீண்ட முடியை பின்னி மல்லிபூவை தலைநிறைய வைத்திருந்தாள் அவள். அவள் கூந்தலில் மலர் வாசனையை பிடித்தவன் ஒரு மாதிரி குரலில் "என்னடி மூஞ்ச திருப்பிக்கிற" என்றான்.

"அது... அது... நாளைக்கு என்னோட வீட்டுக்கு வரேன்னு காலையில சொல்லிட்டு மாமா எதாச்சும் வேலை இருக்கானு கேட்டப்போ இல்லனு சொல்லிட்டிங்க" என மூஞ்சை தூக்கி வைத்திருந்தவளை பார்த்தவன் சிரித்தான்.

"அச்சச்சோ செல்லத்துக்கு கோவமா…? காலையில தான் வேலையில்லனு சொன்னேன் நம்ம சாய்ங்காலம் போகலாம். இப்போ என்ன கொஞ்சம் லைட்டா கவனியேன்" என நெருக்கியவனை தள்ளியவள் சோபாவில் இருந்து எழுத்து கொண்டாள். "கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டு மாசம் இருக்கு பக்கத்துல வராதிங்க..." எனவும் வடபோச்சே என்று பார்த்தவன் சோகமாக முகத்தை வைத்துக்கொள்ள இறக்கபட்ட அபிராமி மெதுவாக பக்கத்தில் வந்து அவன் கன்னத்தில் முத்தம் வைக்க அவளை இழுத்து மடியில் போட்டவன் இதழில் கவிவரைய அவனுடன் ஆழ்ந்து போனாள் அவள்.

*************
அதிகாலையில் மும்பையில் நின்றனர் தக்ஷினாவும் புவியும். போனில் ஆழ்ந்து இருந்தவளை பாத்தவன் லேசாக குளிரவும் காஃபி வாங்கி வந்து அவளிடம் நீட்ட அழகாக சிரித்துக்கொண்டே வாங்கிக் கொண்டாள்.

"தேங்கஸ்… "

"எதுக்கு?"

"காஃபிக்கு…." என ராகம் போட்டவளை செல்லமாக முறைத்தவன் குடித்து முடித்ததும் அவள் கையில் இருந்த காஃபி கப்பை வாங்கி குப்பை தொட்டியில் போட்டுவிட்டு அவள் கையை பிடித்துக் கொண்டான்.

"உண்மை தானா தீ... நீ என் கையில இருக்கிறது? பொய்யா மட்டும் இருக்க கூடாது" என அவள் கையை எடுத்து முத்தம் வைத்தவனை கண்ணை சுருக்கி பார்த்தவள் "டேய் போதும்டா உளர்னது. எனக்கு குளுரிது போ போய் அவன் கார் எடுத்துட்டு வந்துட்டானானு கேட்டு சொல்லு போ…" என அவனை விரட்ட ஒரு பெருமூச்சோடு போனை எடுத்து தள்ளி சென்றான்.

கார் அந்த சிறிய வீட்டு முன் அவர்களை தள்ளிவிட்டுவிட்டு பறந்தது. சின்ன திடல் போல் இருந்ததை திறந்துக் கொண்டு உள்ளே வந்தவர்களுக்கு பிங்கர் பிரிட்ண் வைத்த அந்த கதவை திறந்துவிட்டான் சபரி.

"தக்ஷினா… உங்க ரெண்டு பேரு பிங்கர் மார்க்கையும் இதுல சேர்க்க சொல்லிட்டேன். இப்போதைக்கு கரக்ட் டைம்வரட்டும் அது வரைக்கும் நீங்க இங்க தான் தங்கனும். அதிகமா வெளில போகாதிங்க. அப்பறம் நீங்க சொன்னவங்க ஒன்வீக் முன்னாடியே வந்துட்டாங்க" என சொல்ல வேண்டியதை மட்டும் சென்னான் அவர்கள் ஆப்ரேஷனில் இருந்த மற்றொரு ஐபிஎஸ்.

"தேங்கியூ சபரி" என புவி கையை குளுக்க அவனுக்கு சலூட் வைத்தவன் ஜாக்கிங் போவது போல் கிளம்பிவிட்டான். உள்ளே சென்றவர்கள் பக்கவாட்டில் இருந்த ரூம்குள் செல்ல அதி நவீனமான பெரிய ஹாலில் நான்ங்கு பேர் அமர்ந்து வரிசையாக தெரிந்த மாணிட்டரில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தனர்.

"மார்னிங் தீ" அவளை பார்த்ததும் அவசரமாக எழுந்து வந்த ஜெய் அவள் கையில் ஒரு பைலை கொடுத்தான். "இது அந்த அயுஷ் ஓட இன்னைக்கான அப்பாயின்ட் மெண்ட்"

"செக்கியூரிட்டி என்னாச்சி?"

"அததான் தீ பிரேக் பண்ணிட்டு இருக்கோம்… ரோம்ப ஸ்டாரங்கா இருக்கு எப்படியும் இன்னைகே முடிஞ்சிரும்" என்றவன் வேலையில் ஆழ்ந்துவிட்டான். ஆயுஷின் பங்களா இருக்கும் இடத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் தள்ளிதான் இவர்கள் இருக்கும் இடம் இருந்தது. இங்கிருந்தே அவர்களை கண்கானித்தனர். அவர்களுக்கு கிடைத்த தகவல் படி மிக முக்கியமான தீவிரவாத இயக்தின் தூதுவன் ஆயுஷை சந்திக்க வருகிறான். அவர்களின் நோக்கம் என்ன வென்று அரிய கொக்கை போல் காத்திருந்தனர். அதற்காக தான் இந்த அவசர ஏற்பாடு.

லண்டன் வந்திறங்கிய ஆராவும் அதியனும் அங்கு இருந்த அவர்கள் சொந்த வீட்டிற்கே சென்றவர்கள் கலைப்பில் உறங்கிவிட்டனர். முதலில் எழுந்த அதியன் குளித்துவிட்டு வந்தவன் ஒரு காஃபி கப்போடு பால்கனியில் வந்து அமர்ந்தான். ஆராதனா இன்னும் தூங்கிக் கொண்டுதான் இருந்தாள். ஒரு நிமடம் அவளை ஆழ்ந்து பார்த்தவன் நிறைவாக கண்ணை மூடி திறந்தான்.

"இவளுக்காக எத்தனை போராட்டம்… இனி என்னிடம் இருந்து என் ஆருவை யாராலும் பிரிக்க முடியாது" மனதில் சொல்லிக் கொண்டவன் ஒரு முறை நடந்தவற்றை நினைத்து பார்த்தான்.

ஒரு நாள் அவளை கடற்கறை அழைத்துச் சென்றவன் மெல்ல அவள் யார் என்ற உண்மையை சொல்லிவிட்டான். முதலில் நம்பாதவள் பின்பு அழுது கரைந்தாள். அவளை தேற்றி பக்கத்தில் உள்ள காஃபி ஷாப் அழைத்து வந்தவன் அவள் கையை பிடித்துக் கொண்டு சமாதானா மொழிகள் பேச அப்போது தான் அங்கே வந்த சந்தோஷின் கண்களில் அது தப்பாமல் விழுந்தது. இறுகிய முகத்துடன் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து வெளியில் வந்து வண்டியை வேகமாக கிளப்பி சென்றவனை அதியனும் பார்த்துவிட்டான்.

வருவாள்…

 
Last edited:

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
பெண்ணே 26
uVi-MtLqDRefvtszkcbIKcKG-OdAuqze8jY1zxinguVYnQEJ-y-4oVJl0iydZyeFCVMY_bJ6ib8KZ5-OIonLm3o5ZhGgqu69Qm8dsJwKsvT2sSuXQa2nN9AT_oybAXpJ_WqXHhMi=s0


மாலை வீட்டுக்கு வந்த ஆராதனாவை கோபமாக இருந்த ராகவனும் சந்தோஷும் தான் வரவேற்றனர்.

"எங்க போயிட்டு வர?" அவள் முன் வந்து நின்றவன் அமைதியாக வினவ "ஆஃபிஸ் தான் அண்ணா" என மறைத்தாள்.

"பொய் சொல்லுறியா…? உங்க எம்டிகூட உனக்கு என்னடி பழக்கம்?"

"அது அது…. அவங்க" என இழுத்தவளை முறைத்தவன் "என்ன காதலா?" என உறும "ஆமா காதல் தான்" என அதியன் பதில் சொல்லவும் பல்லை கடித்தான்.

"இவனையும் பின்னடி வர சொல்லிட்டு தான் வந்தியா? உனக்கு எவ்வளவு தைரியம" அவன் கையை ஓங்க அவளை தன் பின்னால் இழுத்துக் கொண்டான் அதியன்.

"யேய் யாரு நீ… யார கேட்டு உள்ள வந்த…?" சந்தோஷ் அதியனை பிடித்து தள்ள வர அவன் கையை பிடித்துக் கொண்டாள் ஆராதனா.

"ச்சி தள்ளி போடி… ஏய் போடா வெளிய" சந்தோஷ் தள்ளியதில் பின்னால் நகர்ந்தவனை தாங்கி பிடித்தாள் ஆராதனா.

"தனா… இப்ப இங்க வரல கொன்னு புதைச்சிருவேன் உன்ன" அவள் அசையாமல் நிற்க பல்லை கடித்தவன் அவளை அடிக்கவர அதியன் சந்தோஷ் கன்னத்தில் "பளார்" என ஒன்று விட்டான்.

"என்ன? ஆனா ஊனா அவள அடிக்கிற" என்றவன் மீண்டும் ஒன்று வைத்தான். இருவரும் சட்டையை பிடித்து தள்ளிக்கொள்ள துர்கா சந்தோஷையும் ஆராதனா அதியனையும் பிரித்து இழுத்தனர்.
துர்காவை பிடித்து தள்ளியவன் ஆராதனா முடியை பிடித்து அவன் பக்கம் இழுக்க அவன் கையை முறுக்கினான் அதியன்.

"என்னடா சும்மா சும்மா கையை நீட்டுற… ஹான் அன்னைக்கும் அப்படி தான் அடிச்சி வச்சிருந்த… இனிமே இவ மேல கையவச்ச கைய வெட்டிருவேன்" என திமிறியவனை இறுக்கமாக பிடித்துக் கொண்டு அழுதாள் அவள்.

"அய்யோ… அதி.. ப்ளீஸ்"

"அப்படி தான்டா அடிப்பேன்… உங்கள பத்தி தெரியாதா… எங்க வீட்டு பொண்ண காதலிச்சி ஏமாத்துவ நாங்க பார்த்துட்டு இருக்கனுமா. எங்க பொண்ண கண்டிக்க நீ என்னடா கேக்குற"

"அத கேட்க நீ யாரு அண்ணன்னா அடிப்பியா… " அப்போதும் அதியன் ஆராக்காக எதுவும் சொல்லாமல் இருந்தான்.

"ஓஓ அப்போ பெத்த அப்பன் கேட்கலாம்ல?" என முன்னே வந்த ராகவன் ஆராதனாவை தீ பார்வை பார்க்க அவன் கையை விட்டு தள்ளி நின்றாள்.

"தனா இங்க வா… "

அவரின் முன் சென்றவளை உற்றுப் பார்த்தவர் "நீங்க என்ன ஆளுங்க?" என்று முதல் கேள்வியை அதியனிடம் கேட்க அவரை முறைத்தான் அவன்.

"அப்பா…" ஆட்சேபித்தவளை "நீ பேசாத… அவர இங்கிருந்து போக சொல்லு சாதி விட்டு சாதிலாம் நம்மல்ல ஒத்துக்க மாட்டாங்க" என

"ப்பா… ப்ளீஸ் பா" கெஞ்சினாள்.

"என்ன அப்பா…? உனக்கு நாங்க முக்கியமா? அவன் முக்கியமா…? ஒழுங்கா இந்த காதல் கருமாந்திரம் எல்லாத்தையும் தூக்கி போடு. ஊருல உங்கத்தைக்கு போன் பண்ணிட்டேன் மதியமே ஜோசியர்ட்ட நாள் குறிசாச்சி அடுத்த மாசம் உனக்கு கல்யாணம்" என இடியை இறக்க அதியன் கடுங்கோபத்துடன் அவரை பார்த்தான்.

"எனக்கு வேண்டாம்… அவர தவிர நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்" ஆராதனா அழுத்தமாக சொல்ல கோபத்தில் எட்டி அவள் வயிற்றிலே உதைத்து விட்டார் ராகவன்.

"அம்மாஆஆஆ" வயிற்றை பிடித்துக் கொண்டு தூரமாக விழுந்தவளை துர்காவும் அதியனும் ஓடி சென்று தூக்க வலியில் ஒரு மூச்சு அழுதாள் ஆராதனா.

"ச்ச மனுஷனா நீ வயசுக்கு வந்த பொண்ண வயித்துல எட்டி உதைக்கிற..." துர்கா சீற அவருக்கும் ஒரு அறை விழுந்தது.

"இந்த நாய பெத்ததுக்கே உன்ன கொல்லனும்" அவளை மீண்டும் காலை தூக்கி உதைக்க வந்தவரை தூர தள்ளிவிட்ட அதியன் சட்டையை கொத்தாக பற்றி அடிக்க கை ஓங்கிவிட்டான். ஆனால் அவனை முன்னேற விடாமல் அவன் காலை கட்டிக் கொண்டு அழுத ஆராவை தூக்கியவன் கண்ணை துடைத்துவிட்டான். ராகவன் திமிர் அடங்காமல் கெட்ட வார்த்தையில் கேவலமாக அவளை திட்ட தொடங்க "நீங்க பெத்த பொண்ணா இருந்தா இப்படி பேசுவிங்களா?" என அதியன் உண்மையை போட்டு உடைத்துவிட்டான்.

அவர்கள் என்ன என்று யோசிக்கும் முன்னே அவளை இழுத்துக் கொண்டு வெளியில் வந்தவன் காரை திறந்து அவளை அமரவைத்துவிட்டு முத்துவேலுக்கு அழைக்க அரைமணிநேரத்தில் அனைவரும் வந்துவிட்டனர்.

விமலன் மிகுந்த கோபமாக இருந்தான். முத்துவேலும் சாந்தினியும் மட்டும் பொறுமையாக பேசினர். உண்மை தெரியவர மூவருக்கும் அதிர்ச்சிதான். ஆனால் அதற்காக ஆராதனாவை யாரும் விட்டு கொடுக்க நினைக்கவில்லை. ராகவனை பொருத்தவரை ஆராதனா என்பவள் அவர் மகளாகதான் தன் சொந்தங்களுக்கு அடையாளம் காணப்படுவாள். அதனால் யாரையோ மணந்துக்கொள்ளட்டும் என விடமுடியாது என்ற எண்ணம் தான். சந்தோஷும் துர்காவும் தான் மிகுந்த அதிர்ச்சியானார்கள்.

அதன் பிறகு தக்ஷினாவும் விமலனும் அவளை அடிக்கடி வெளியில் அழைத்துச் சென்றனர். ஆராதனா விமலனுடன் நன்றாக ஒட்டிக்கொள்ள சந்தோஷ்க்கு தான் பொறாமையாக இருந்தது. சிறு வயதில் ஆராதனா எப்படி சந்தோஷை தேடுவாளோ அதை போல் எல்லாவற்றுக்கும் விமலனை தேடினாள்.

ஒரு அண்ணன் என்றால் விமலனை போல் தான் நடந்துக்கொள்ள வேண்டுமோ? என்ற கோள்வி உதிக்க "நான் விலகி இருந்ததனால் தான் அவளும் தன்னை விட்டு விலகிச் சென்றாலோ?" என சுயஅலசலில் விழுந்தவன் செய்த தவறை எல்லாம் எண்ணி வருந்தினான். அவளிடம் மிகுவும் மோசமாக நடந்துக் கொண்டோமே என்று வெட்கினான். ஆண் பெண்ணை விட உயர்ந்தவன் என்ற எண்ணம் மெல்லமெல்ல மறைய பல விஷயத்தில் தான் மிகவும் பின்தங்கி இருப்பதை அறிந்துக்கொண்டான்.

அது அவன் செயல்களிலும் வெளிபட அலுவலகத்தில் இருக்கும் சக பெண்களை மரியாதையாக நடத்தினான். அதனால் மற்றவர்களுக்கும் அவன் மீது மரியாதை உருவானது. சிலர் அவனுடன் நட்பு பாராட்டினர். ஒரு காலத்தில் அவர்கள் உடையை வைத்து தவறாக நினைத்தவனுக்கு இன்று பழகி பார்த்தபின்தான் அவர்கள் திறமையும் நல்ல குணங்களும் புரிந்தது.

தனக்கு ஆண் ஆதிக்க மனப்பான்மையை ஊட்டி வளர்ந்த தந்தை மேல் கோபமாக வந்தது. அவனை போல் இருந்த அவன் நண்பர்களையும் அவன் செயலும் எண்ணமும் சிறிது மாற்றியது.

விமலன் என்ற ஒரு ஆணின் சரியான வளர்பு இன்று சந்தோஷ் என்றவனை நல்வழிப்படுத்தி அவனையும் உயர்த்தி காட்டியது. ஆனால் மாறாமல் சுற்றிய ராகவனால் பல பிரச்னைகள் வரிசைகட்டி நின்றன. அதி ஆரு காதலுக்கு சந்தோஷ் வெள்ளை கொடி காட்டிவிட்டான். அவன் விசாரித்தவரை அதியனை பற்றி நல்ல விதமாகவும் விஷ்ணு கொடுத்த சர்டிபிகேட்டும் ஒரு காரணமாக இருந்தாலும் அன்று ஆராதனாவை துன்புறுத்திய கயவர்களை கண்டுபிடித்து அவள் கையாலே தண்டனையை கொடுக்க வைத்தவன் சட்டரீதியாகவும் தண்டனை வாங்கிக் கொடுத்தான். ஆராவும் இத்தனை நாள் இருந்த இறுக்கம் தளர்ந்து பழைய ஆராதனாவாக மாற அதியனைவிட அவளுக்கு சரியான வாழ்க்கை துணை யாரும் இல்லை என்று தான் அவனுக்கு தோன்றியது. சந்தோஷ் அதியன் பக்கம் சாய்ந்ததில் ராகவனுக்கு தான் ஏகபட்ட கோபம். ஆராதனாவுக்கு அதியனை பார்க்க பேச தடை போடப்பட்டது.

ஒரு நாள் அதியனை தேடி வந்திருந்தார் ராகவன்.

"என்ன விஷியம்?" மிதப்பாக கேட்டவனை அலட்ச்சியமாக பார்த்தவர் பத்திரிக்கை ஒன்றை கொடுக்க சட்டென்று அதை பறித்தவன் உள்ளே பார்க்க ஆராதனாவுக்கு யாரோ ஒருவனுக்கும் திருமணம் என இருக்கவும் கிழித்து வீசினான்.

"யோவ் நீ என்ன பண்ணாலும் என் ஆரு அதுக்கு ஒத்துக்க மாட்டா" என அவன் உறுதியில் பல்லை கடித்தவர்.

"இந்தோ பாத்தியா விஷம்… இத நான் குடிச்சிட்டு அவகிட்ட மிரட்டுனா போதும் அவ ஒத்துக்க. அடுத்த முகூர்தத்தில கல்யாணம் என் தங்கச்சி பையன் தான் மாப்பிள்ளை. எல்லா விஷயத்தையும் சொல்லி தான் நடக்குது. நீங்க கல்யாணத்துக்கு வந்து இருந்து சாப்பிட்டுட்டு தான் போகனும்" என எழுந்து கொண்டவரை பார்வையால் போசுக்கினான்.

"போயா…. நீ உயிரோட வீட்டுக்கு போறியானு முத பாரு" என மிரட்டல்விட்டவன் டேபிள் வெயிட்டை எடுத்து அவருக்கு பின்னால் இருந்த கண்ணாடி சுவரில் அடிக்க அது நொருங்கியது. சாதாராண மிரட்டல் என்று நினைத்தவர் தன் வண்டியில் செல்ல பின்னால் வந்த லாரி அவரை அடித்து தூக்கியது. கீழே விழுந்தவர் காலில் ஒரு கார் ஏறி இறங்க ரத்த வெள்ளத்தில் மயங்கினார் ராகவன்.

பின் மருந்துவமனையில் அனுமதிக்கபட்டவருக்கு ஒற்றை காலை எடுத்துவிட சொன்னதை போல் பலிவாங்கிய அதியன் மேல் இருந்த கோபம் வெறுப்பாக மாறியது.

"யாரோ யாரையோ கல்யாணம் பண்ணிட்டு போகட்டும்" உயிர் பயத்தில் வாயை மூடிக் கொண்டவர் அதன் பிறகு ஆராதனாவிடம் பேசுவதேயில்லை.

ஆனால் கல்யாணம் முடிந்து மாலை வரவேற்புக்கு கிளம்பியவனை பார்க்க வந்த சந்தோஷ் உடன் வீல்சேரில் வந்தவர் சந்தோஷ் வெளியில் சென்றதும் "என்ன கல்யாணம் முடிஞ்சிட்டுனு சந்தோஷமா இருக்கிங்களா? நீதான் என்ன கொல்ல பாத்தனு தனாக்கு தெரிஞ்சா உன்ன தூக்கிபோட்டு போயிட்டே இருப்பா" என குரூரமாக சிரித்தவரை கொலை வெறியாக பார்த்தான் அவன்.

"நல்லா சந்தோஷமா இருங்க… வளத்த பாவத்துக்கு தான் வாய மூடிட்டு இருக்கேன்" என்றவர் சந்தோஷ் வரவும் வாயை மூடிக் கொண்டார். அதன் பிறகு அதியனுக்கும் சிறிதாக பயம் பிடித்துக் கொண்டது ஆனால் ஆராவை பாத்ததும் உலகமே மறந்து போறவன் இதையா நினைவில் வைத்திருப்பான்.

நீர்துளிகள் அவன் மேல் பட நினைவுக்கு வந்தவன் திருப்பி பார்த்தான் ஆராதனா தான் நின்றிருந்தாள். தலைக்கு குளித்திருப்பாள் போல் நீர் சொட்டியது.

"டவல்வேனும்… என்னோடது பெட்டிக்குள்ள இருக்கு" என அவன் கழுத்தில் இருந்ததை கேட்க சிரித்தவன் எழுத்து சென்று அவனே துவட்டிவிட்டான். வெளிர் நீல நிறத்தில் டிஷர்ட்டும் வெள்ளை டவுசரும்மாக இருந்தவனை முதல்முதலாக இந்த கோலத்தில் பார்த்ததும் கண்ணை மூடிக் கொண்டாள் ஆராதானா. அவன் அன்மையில் தன்னையே மறந்து நின்றாள்.

"எய் என்னடி நின்னுகிட்டே தூங்குற?" கையில் ஹார் ட்ரையரை வைத்துக் கொண்டு சிரித்தான் அதியன்.

"எப்போ இவரு தள்ளி போனாரு?" என்று யோசித்தவள் விழிக்க அவளை அமரவைத்தவன் தலையை உலர்தினான். பின் இருவரும் சமைத்து சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு கால் பண்ண அந்த நாள் மாலை வரை நீண்டது. அதியன் அங்கிருக்கும் மேனேஜருடன் பேச லேப்டாப்பை தூக்கி கொண்டு அமர்ந்திருக்க துணிகளை எல்லாம் எடுத்து அடுக்கினாள் ஆராதனா. அதில் அதியன் வாங்கிக் கொடுத்த ஒரு புடவையை எடுத்து வருடியவள் பால்கனி கதவை மூடிவிட்டு அதை கட்ட ஆரம்பித்தாள். மிக அழகாக அவளுக்காகவே புடவை நெய்யும் இடத்தில் பார்த்து பார்த்து டிசைன் செலக்ட்செய்து நெய்ய சொல்லி வாங்கி வந்திருந்தான்.

உச்சிவகிட்டில் குங்குமம் வைத்துவிட்டு அழகு பார்த்தவள் அதியன் பால்கனி கதவைதட்ட விரைவாக சென்று திறந்தாள். அவளை மேலிருந்து கீழ்வரை பார்த்துக் கொண்டே உள்ளே வந்தவன் நேராக பாத்துரும்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டான்.

அவன் எதையாவது சொல்லுவான் என அவன் முகத்தையே பார்தவள் அவன் கதவை அடைத்துக் கொள்ள முகம் வாடியது. "ஒருவேல எனக்கு இந்த புடவை நல்லாயில்லையோ" என நினைத்து ஊக்கை அவிழ்க்க போக பின்னால் இருந்து அனைத்தான் அதியன்.

"பப்பி…. வாசமா இருக்கடி" என்று இறுக்கி பிடித்து முகர உடல் சிலிர்த்தது அவளுக்கு. "உங்களுக்கு இந்த புடவை பிடிக்கலையா" என "ஆமா சுத்தமா பிடிக்கல" என்றவன் கழுத்தில் முகம் புதைக்க "நான் வேற கட்டட்டா?" அப்பாவியாக கேட்வளை சிறு சிரிப்போடு சூடான முத்தங்கள் வைத்துக் கொண்டே "ம்ம் இத மாதிட்டு என்ன கட்டிக்கோ" எனவும் முகம் சூடேற கையால் முகத்தை மூடிக் கொண்டாள் அவள். தடை போட இன்று அவள் கைகள் இல்லாமல் அவன் விரல்கள் இடையில் அழுந்தி அவளுக்குள் தீ மூட்டியது.

"பப்பி ஒரு பாட்டு பாடேன்" அவள் காதில் மீசைஉராய ரகசியம் போல அதியன் பேச துவண்டு போனாள் அவள். தேனை உண்ட வண்டாக மதிமயங்கி இருந்தனர் இருவரும்.

"என்ன பாட?" கூச்சத்தில் நெளிந்துக் கொண்டே கேட்டாள் அவள்.

"ஏதாவுது" என அவன் ஒற்றை கை அவள் கழுத்தில் ஊர பாட ஆராம்பித்தாள் ஆராதனா.


அடி நீ… இங்கே
அடி நீயிங்கே…
நீ இங்கே…
நீ இங்கே…
பூ சூடும் ஆள் எங்கே


பாதி காற்றுதான் வந்தது .

தாலி கட்ட
கழுத்து அரிக்குதே
இந்த சிறுக்கி மக உசிர
உருக்கி குடிக்க
அந்த முரட்டு பயலும்
வருவானே
இந்த சேலை வாங்கிக்கொண்டு
சேலை வாங்கி தான்
சொந்தச்சேலை தருவானே
இந்த சேலை வாங்கிக்கொண்டு
சேலை வாங்கி தான்
சொந்தச்சேலை தருவானே


வாங்கி கொடுத்தவன் கைகளிலேயே கசங்கியது அந்த சேலை. மூச்சடைக்க நிறுத்தியவளை "ம்ம் பாடு" என்றான்.

சொட்ட சொட்ட நனையுது
தாஜ் மஹாலு
குடையேதும் வேணாம் வா மாயா
இருவரும் ஆளுக்கொரு குடையாவோம்
மேளந்தட்டி மேளங்கொட்டி வா மாயா

அடி நீ… இங்கே
அடி நீயிங்கே…
நீ இங்கே…
நீ இங்கே…


அவளை பின் நின்று தூக்கியவன் சோபாவில் அமர்ந்து அவளை மடிதாங்க

உனக்காக உயிர் பூத்து
நின்றேன்
உனக்காக கன்னி காத்து
நின்றேன்
இன்னும் நானும் சிறுமிதான்
எப்போதென்னை பெண் செய்குவாய்


அவள் முகத்தை கையில் ஏந்தியவன் நெற்றியில் இதழ் பதித்தான்.

உனக்காக உயிர் பூத்து
நின்றேன்
உனக்காக காத்து காத்து
நின்றேன்
இன்னும் நானும் சிறுமிதான்
எப்போதென்னை பெண் செய்குவாய்


அவளை கையில் குழந்தை போல் தூக்கி சுற்றியவன் ஆவலாக இதழ் நோக்கி குணிய தன் கையை அவன் கழுத்தில் மாலையாக்கியவள் அவன் உதடோடு உதடு உரச பாட்டை தொடர்ந்தாள்.

வந்து மூன்று முடிச்சு போடு
பின்பு முத்த முடிச்சு போடு
என்னை மொத்தமாக மூடு மூடு
நீ எனக்குள் புதையல் எடுக்க
நானும் உனக்குள் புதையல் எடுக்க
உயிரின் ஆழம் சென்று தேடு தேடு


அவளை மெத்தையில் விட்டவன் கண்களோ அவள் உயிரின் ஆழம் சென்று புதையல் தேட அனுமதி கேட்டு இறைஞ்சியது. அவனை இழுத்து பிடித்தவள் தன் செக்க சிவந்த முகத்தை திருப்பிக் கொண்டு அவனுக்கு அனுமதி தந்தாள்.

இளமையின் தேவை
எது எது என்று
அறிந்தவன் நீயல்லவா
இதுவரை வாழ்ந்த
வாழ்க்கைக்கு அர்த்தம்
அன்பே நீ சொல்லவா


அனுமதி கிடைத்ததில் காதல் தாபம் மோகம் என போட்டிபோட அவள்மேல் சரிந்தவன் அவள் காதோரம் "ஜ லவ் யூ பப்பி" என காது மடல்களை கடிக்க அவள் கைகள் தானாக அவனை இறுக அனைத்தது.

சொட்ட சொட்ட நனையுது
தாஜ் மஹாலு
குடையேதும் வேணாம் வா மாயா
இருவரும் ஆளுக்கொரு குடையாவோம்
மேளந்தட்டி மேளங்கொட்டி வா மாயா


பாதியில் பாட்டு நிற்க அவள் இதழை சிறையெடுத்தவன் அவளிடம் தன் உரிமையை தேட அவர்கள் மூச்சின் காய்சலும் செல்ல சினுங்களும் அர்த்தமற்ற பிதற்றலும் அவ்வறையில் நிறைந்தது. இருவரும் மஞ்சத்தில் தஞ்சம் கொள்ள காதலோடு கூடிய அவர்கள் கூடலில் நிலவே வெட்கி மேகத்திடம் ஒளிந்துக் கொண்டது. (ஈஈஈஈஈ போதும் வாங்க நம்மளும் போயிடுவோம்)

****************************
அபிராமி தனக்கு வேண்டிய பாட்டு புத்தகமும் சில குறிப்புகளையும் எடுத்து பையில் வைத்துக் கெண்டு இருக்க அந்த சிறிய வீட்டை சுற்றி வந்தான் விமலன். அபிராமியின் தந்தை பாட்டு கச்சேரிசெய்துக் கொண்டு இருந்தவர். அவருடைய வையோலீனை பெட்டியில் வைத்து பரணில் தான் வைத்திருந்தனர் அதை எடுக்க நினைத்தவள் ஸ்டூலை பிடித்துக்கொள்ள விமலனை அழைத்தாள். ஆனால் அவளை பிடிக்க சொல்லி அவனே ஏறி முதலில் கிடந்த ஒரு பழைய ஹாண்ட்பேக்கை தூக்கி போட்டவன் பெட்டியை தேடி எடுக்க பேக்கின்வார் பெட்டியோடு மாட்டிக் கொண்டு கீழே விழுந்தது. பெட்டியை வாங்கி கீழேவைத்தவள் ஓடிச் சென்று பேக்கை எடுத்தாள்.

"ப்ச் ஏய் அது ஒரே அழுக்கா இருக்குடி ட்ரெஸ் அழுக்காகிட போகுது" என்றவாறு இறங்கினான் விமலன்.

"இல்லங்க இது என் ராதியோட பேக். கடைசியா நான்தான் அவளுக்கு வேற பேக் வாங்கி கொடுத்தேன்" வாடிய முகமாக இருந்தவளை தோளோடு அனைத்து தட்டிக் கொடுத்தான்.

அந்த பேக்கில் இருந்து சில்லரை காசுகள் இருப்பதுபோல் சத்தம் வர ஜிப்பை திறந்தவள் உலுக்க ஒரு ரூபாய் காசோடு மோதிரம் ஒன்று உருண்டுவந்து விமலனிடம் விழுந்தது.

"என்ன இது?" புருவம் சுருக்கி அவன் கேட்க "தெரியல ஏதோ விக்கிர மோதிரம் மாதிரி இருந்துச்சு. அன்னைக்கு அக்கா பேக்மாத்தும் போது அதுலேந்து விழுந்து கிடந்தது நான்தான் உள்ளபோட்டு மேல வச்சேன்" என்றவள் ஒரு ரூபாய் காயினை வருடினாள். அவள் ராதிகா தொட்டதல்லவா!!

அவளுக்கு தான் அதன் மதிப்பு தெரியவில்லை ஆனால் விமலனுக்கு நன்றாக தெரிந்தது அது மரகதகள்பதித்த பிளாட்டினத்திலான மோதிரம். அது மட்டுமல்லாமல் சத்தியா கேஸ்க்கும் ராதிகா கேஸ்க்கும் ஒரே குற்றவாளிகள் என்பதால் சத்தியா கேஸ்சில் ஆராதனா தேடி அலையும் ஆதாரமான மோதிரத்தை ஒத்து ராதிகாவிடம் ஒன்று இருக்க சுதாரித்துக் கொண்டான் விமலன். பின் கையைவிட்டு வேறு ஏதாவது இருக்குமா என்று தேடினாள் அபிராமி. ஒரு சிறு கவர் தட்டுப்பட வெளியில் எடுத்தாள் வித்தியாசமாக ஒரு கத்தி "ஸ்ஸ்ஸ்" கவரை மீறி அவள் கையை கீற ரத்தம் வந்தது. அவளை கடிந்தவன் தன் கர்ச்சிபால் அவள்கையை கட்டினான்.

"கிறுக்கி அறிவில்லையா டி…? பாத்து எடுக்க மாட்ட?" என திட்ட "நான் பாத்து தான் எடுத்தேன் அது ரொம்ப ஷார்ப்பா இருக்கு" என்றாள்.

"லூசு துருபிடிச்ச கத்தியா இருந்தா என்ன பண்ணவ? எங்க அது?" என அதை காட்டியவள் கையை ஆராய அந்த கத்தியை பார்த்ததும் அவன் ஐ.பி.எஸ் மூலைக்குள் மணியடித்தது. "சாதாரண பெண்ணிடம் எப்படி சர்ஜிக்கல் கத்தி?" என யோசித்தவன்
கத்தியை பார்த்தான் கவர்குள் தான் இருந்தது லேசாக கிழிந்திருந்த இடத்தில் இருந்து தான் அவள் கையை கிழித்திருந்தது. இரண்டையும் பத்திரபடுத்தியவன் அபிராமியை வீட்டில் விட்டுவிட்டு தக்ஷினாவுக்கு அழைத்தான்.

அவன் சொல்லியதை கேட்டவள் சிறிது யோசனைக்கு பின் "லேப்ல கொடுத்து பிங்கர் பிரிண்ட் கலட்பண்ண சொல்லு விமி. அது என்ன மாதிரியான மோதிரம்னு விசாரி. முரளிகிட்ட ஒரு பைல்ல சத்தியா சென்னை வந்த அன்னைக்கு யாரெல்லாம் ஏர்போர்ட் வந்தவங்கள நான் மார்க் பண்ண ஒரு லிஸ்ட் இருக்கு அவங்களுக்கும் இந்த எவிடன்ஸ்க்கும் ஏதாச்சும் சம்பந்தமானு பாரு. சரத்கிட்ட ராதிகா வீட கம்பீளிட் சேர்ச் பண்ண சொன்னனு சொல்லிடு. ஜ வாண்ட் எவ்ரி அப்டேட்ஸ். டிலே பண்ணாத" என அவசர படுத்தினாள். மூலை பரபரப்பாக வேலை பார்க்க அபிராமியையும் விசாரிக்க சொன்னாள்.

"அவள எதுக்கு தீ? "

"ராதிகாகிட்ட இந்த திங்ஸ்லாம் எப்படி வந்துச்சினு தெரியனும். ராதிகாக்கு க்ளோஸ்னா அது அபி மட்டும்தான் அவளுக்கு எதாச்சும் தெரிய வாய்ப்பு இருக்கு. அப்பறம் ராதிகா வோட லவ்வர் அவன்கிட்டையும் நான் பேசனும். நீ விசாரிச்சிட்டு என்கிட்ட பேசவை விமி" என்றவள் போனை வைக்க தன் தங்கையை மெச்சிக் கொண்டே அவள் சொன்னதை செய்ய சென்றான் விமலன்.

யோசனையில் இருந்த தக்ஷினாவை பின்னால் இருந்து அனைத்த புவி "என்னோட மேடம்க்கு என்ன யோசனை?" என

"ஒன்னும் இல்ல ராதிகா கேஸ்ல ஒரு எவிடன்ஸ் சிக்கிருக்கு" என்றவள் அவன் தோளில் சாய அவள் கன்னத்தில் ஒரு முத்தம் வைத்தவன் "சாப்பிட்டுட்டு யோசி டைம் ஆச்சி" என்றான். அனைப்பில் இருந்தவாறே திரும்பி சிரித்தவள் அவளும் அவன் தாடையில் முத்தம் வைக்க அவள் நெற்றியில் முட்டினான் புவி.

அவர் அவர் வாழ்க்கை பரபரப்பாக ஆராம்பிக்க அடுத்த நொடி என்ன? என்று நிற்க நேரமில்லாமல் ஓடினர் அனைவரும்.

வருவாள்…

 

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
பெண்ணே 27

auUx-2720jbS44McagRswW9UPSAq5uVzS6CDXFKhMXN-xe3L5gXrxW4j49LMVL4MXN9MXrv7IJxFWhcDEmpbPHZCItYVgsZYfOAUA_Q7u_LeQ8u1qQX_9hPdLaOLk7aIu26HxraZ=s0


ஒரு நாள் ஆயுஷ் வீட்டில் கோபமாக போன் பேசிக்கொண்டு இருக்க அவன் கீழே ஊற்றிய சூப்பை துணியை வைத்துக் துடைத்துக் கொண்டு இருந்தாள் தக்ஷினா. பழைய புடவையும் கழுத்தில் மஞ்சள் கயிறுமாக மேக்கப் ஆர்டிஸ்ட் கையில் ஏழை வீட்டு பெண்ணாக முற்றிலும் வேறு மாதிரியாக இருந்தாள். தற்போது அவன் வீட்டில் அவளும் ஒரு வேலைகாரி. அவன் என்ன பேசுகிறான் என்பதை ஒட்டுக் கேட்டுக் கொண்டே வேலை செய்ய புது சூப்பை கொண்டுவந்தான் ஒருவன். மழிக்கப்பட்ட மீசையும் கழுத்தில் தாயத்தும் அவ்விடத்தின் அசிஸ்டென்ட் சமையல் காரனாக புவி வேந்தன்.

ஆயுஷ்க்கு பின் கையை கட்டிக் கொண்டு அவனின் பி.ஏ ராணா எனப்படும் டேனியல் ஐ.பி.எஸ் என்.எஸ்.ஜீயின்(national security guard) அதிகாரி நிற்க ஒவ்வொரு இடமும் அயுஷின் ஆட்களோடு போலீசும் ஊடுருவி விட்டார்கள்.

புவியும் தக்ஷினாவும் கணவன் மனைவி என்ற பெயரில் அங்கே வேலை பார்த்தனர். மாலை இருவரும் நடந்தே அந்த சிறு வீடு போல் இருக்கும் அவர்கள் இடத்திற்கு வந்துவிடுவார்கள். அவர்களுக்கு ஏற்ற வசதியோடு நன்றாக இருக்கும் அவ்விடம்.

துடைத்து முடித்தவள் படியில் இறங்க அப்போது அவ்வழியே சென்ற சந்திப் தக்ஷினாவை ஒரு மாதிரியாக பார்க்கவும் புவிக்கு கோபமாக வந்தது.

"ஏய் என் ரூம்க்கு சிக்கன் ப்ரையும் க்ளாஸ்சும் எடுத்துட்டு வா" என அவளை ஏவியவனை கண்டு புவிக்கு கழுத்து நரம்புகள் புடைக்க சட்டென்று அவ்விடம் வந்த சபரி கண்ணால் அமைதியாக இருக்க சொன்னவன் ஆயுஷிடம் சென்றான்.

"சார் உங்கள பாக்க சிவகேஷ் சார் கார்டன்ல வெயிட் பண்றாரு" எனவும் அவனுடனே எழுந்து சென்றுவிட்டான் ஆயுஷ்.

புவி கோபம்கொள்ள காரணம் சந்திப்புக்கும் துருவ்க்கும் தக்ஷினா மேல் ஒரு கண் என்பதே. அவளை எதையாவது எடுத்து வர சொல்லி கண்ட இடத்திலும் தொடுவது. அவர்கள் ஆசைக்கு ஒத்துக்க சொல்லி கட்டாயப்படுத்துவது என தொல்லை கொடுத்தனர். ஆனால் அதற்கு மேல் அவர்களால் என்றுமே முடித்தது இல்லை யாராவது வந்து காப்பாத்தி விடுவர் இல்லை என்றால் அவளிடம் சிக்கி உயிரையல்லவா விட்டிருப்பர். இன்றும் அவளை அழைக்க உடையவனுக்கு தான் ரத்தம் கொதித்தது. இறுகிய முகத்துடன் தக்ஷினா கிளாசை எடுக்க சிக்கன் பக்கோடாவை பிளேட்டில் வைத்து அவளிடம் கொடுத்தவன் "அவன் சாவு என் கையில தாண்டி" என்று சீறினான். "ஸ்ஸ் மாமு" சமயல்காரனை கண் காட்டியவள் பிளேட்டை எடுத்துக் கொண்டு சென்றாள்.

அவர்கள் இருவருக்கும் குடிக்க குடிக்க கிளாஸை நிரப்பியவள் அவர்கள் பேச்சையும் கவணித்தாள். அவளுக்கு இவர்கள் மேல் ஒரு சந்தேகம் இருந்தது. இருவரையும் பார்த்தாலே ஏதோ தவறு செய்பவர்கள் என்று நன்றாக தெரியும் போதும் எல்லாவற்றையும் அனுப்பியிருந்த X இவர்களை பற்றி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. இவ்வளவு பெரிய கிரிமினல் பேமிலியில் இவர்கள் மட்டும் யோகியனாகவா இருப்பார்கள்.

"டேய் ரோகன் எப்போடா வருவான்?" என துருவ் போதையில் உளற "இப்போ வரமாட்டான் அந்த மோகினிக்கு இன்னைக்கு பார்த்துடேல அதான் அந்த தோடத்தில தண்ணியடிச்சிட்டு படுத்திருப்பான்" என சிரித்தனர்.

"ஏய் இங்க வா… எதுக்கு இந்த அசிங்கமான புடவயை கட்டிருக்க?" என அவள் இடுப்பில் சொருகியிருந்த முந்தானையை இழுத்து விட்டு "நல்லா மார்டன் ட்ரெஸ் போடு. நான் வேனா வாங்கி தரேன்" என அவள் கழுத்தில் கைபோட்டு இருக்கிய துருவ் பச்சை பச்சையாக பேச அவனை அடித்துக் கொல்லும் வெறிதான் அவளுக்கு.

"நீ நல்லா ஸ்டக்ச்சரா இருக்க " என கையை எடுத்துக் கொண்டு சந்திப்பும் எழுந்து வர சரியாக கதவை திறந்துக் கொண்டு ட்ரெயோடு உள்ளே வந்தான் புவி.

"ஏய் எதுக்குடா உள்ள வந்த?" கடுப்புடன் துருவ் கத்த அமைதியாக நின்றவன்.

"இல்ல சார் சைட்டிஸ் கொடுக்க வந்தேன். இவங்கள சார் டீ எடுத்துட்டு கார்டன் வர சொன்னாங்க" என அவன் கைகுள் இருந்த தீயை பார்த்துக் கொண்டே அவன் சொல்ல சலித்துக் கொண்டே விடுவித்தவன் மீண்டும் கிளாஸ்சோடு அமர்ந்துவிட்டான்.

"இவள எப்போலாம் கூப்பிடுறோமோ… அவ புருசன் ஒடனே பதறிகிட்டு வரான்" என்று திட்டினான் சந்திப்.

காலை ஒன்பது மணிக்கு சென்னை பிளைட் என்பதால் ட்ராப்பிக்கில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க மாலையே தக்ஷினாவும் புவியும் மும்பை சிட்டிக்குள் வந்துவிட்டனர். விமலனுக்கு கல்யாணம் என்பதால் இரண்டு நாள் மட்டும் சென்று வந்துவிடலாம் என இருந்தனர்.

இன்னும் புவிக்கு கோபம் குறையாமல் இருந்தது. சாப்பாட்டை ரூம்கே வரவைத்த தக்ஷினா குளிக்க சென்றுவிட புவிதான் உணவை வாங்கி வைத்தான். மஞ்சள் ஸ்ஸீவ்லெஸ் நைட் ட்ரெசுடன் வந்தவள் இறுக்கமாக அமர்ந்திருந்த புவி முன் சென்று நின்றாள்.

"டேய் மாமு… இன்னும் கோபமா தான் இருக்கியா?"

"ச்சு தள்ளி போடி" என முகத்தை திரும்ப அவளு2க்கு மனதை வலித்தது.

"மாமு… ஹேய் நான் வேண்டாமா உனக்கு…? தள்ளி போறேன்... தள்ளி போறேன்" அவனை திசை திருப்ப முயன்றவளை வலியோடு நிமிர்ந்து பார்க்க

"ஹேய் ச்ச இதுக்கெல்லாம் பீல் பண்ணுவாங்களா…? படத்தில நடிக்கிறதா நினைச்சிக்க வேண்டியது தான்" என்றவாறே அவன் மடியில் அமர்ந்தாள் அவள்.

"முடியல டி எவன் எவனோ என் கண்ணுமுன்னால என் பொண்டாட்டிய தொடரது… அப்படியே அடிச்சி கொல்லனும் போல இருக்கு. உன்ன அவனுங்க பிசிக்கலா ஹராஸ் பண்றப்போ எனக்கு உடம்பெல்லாம் ஏரியுதுடி அம்மு" புவி அவளை இறுக அனைத்துக் கொள்ள அவளுக்கும் அது தேவையாக இருந்தது. அவர்கள் அமைதி காக்க வேண்டிய கட்டாயம்.

இதற்கு முன்னால் எப்படியோ ஆனால் இனி தன்னவன் தொட்ட உடலை மற்றவன் தெட நினைக்க அவர்கள் தொடுகை ஒரு அருவெறுப்பை தந்தது அவளுக்கு. இரண்டு மாதங்களாக இருவரும் லிவ்விங்ல் தான் இருந்தனர். புவி தன் காதலை திகட்டதிகட்ட அவளுக்கு காட்டினான். தக்ஷினாவும் தன் இத்தனை வருட பிடித்தத்தையும் அவனிடம் காட்டினாள். சிறு பிள்ளையாக சினிங்கினாள். அவனை படுத்தி எடுக்க காதலோடு அவளுக்கு சேவை செய்தான் புவி. இருவருக்கும் அப்படியோரு அன்யோனியம் உருவாகி இருந்தது அதன் வெளிபாடே அவள் "மாமு".


"சரி ஆகிடும்… இன்னும் ஒரு வருஷம் தான் எப்படியாச்சும் முடிஞ்சிரும்…" என அவன் கன்னத்தை பிடித்து கிள்ளினாள்.

அவர்கள் எதிர்பாத்திருந்த உளவாளி அந்த தீவிரவாத கூட்டத்தின் தலைவன் இந்தியா வர உள்ளதாகவும். ஆயுஷின் இல்லத்தில் வைத்து முக்கிய கூட்டம் நடத்த போவதாகவும் அதற்கான ஏற்பாட்டை செய்ய. அதை தெரிந்துக் கொண்ட போலீஸ் தங்கள் டார்க்கெட்டை விசால படுத்தியது.

இரவு விளக்கு மட்டும் ஏரிய அவனை அனைத்துக் கொண்டு அவன் நெஞ்சில் முகம் புதைத்திருந்தவள் முடியை கோதி விட்டவன் "அம்மு விமலன் கோச்சிப்பானா …? திட்டுவானா?" எப்போதும் போல புவி புலம்ப அவன் வாயிலே ஒன்று போட்டாள் தக்ஷினா.

"விமி என்ன எதுவும் சொல்ல மாட்டான். அவனுக்கு தெரியும் நான் மேரேஜ் லைஃப் குள்ள போக மாட்டேனு. ஆனா உன் பிரண்ட் விமலன் பத்தி தெரியல… சாந்தினியும் ஆராவும் தான் கோச்சிப்பாங்க அப்பா கூட நம்மள அக்செப்ட் பண்ணிப்பாங்க" என்றவளை இறுக்கிக் கொண்டவன்

"யாரு என்ன சொன்னாலும் சரி அம்மு நீ என்கூட இருக்கிறதே போதும் எனக்கு" என்றான்

"ஏன் மாமு உங்க வீட்டுல ஒத்துப்பாங்களா மாட்டாங்களா?"

"லிவ்விங் டு கெதர்னா கண்டிப்பா மாட்டாங்க… ஐ திங் என்ன வீட்ட விட்டு தொரத்தினாலும் தொரத்திடுவாங்க" என சிரித்தவனை காதல் பொங்க பார்த்தாள். "உனக்காகவாச்சும் கல்யாணம் குடும்பம்னு எனக்கு ஆசை வருனும் டா மாமு" என அவன் இதழில் இதழ் பதிக்க அவளை இழுத்து தனக்குள் புதைத்து முழுதாக ஆட்கொண்டான் புவி.

அதியும் அராவும் ஒரு வாரம் முன்பே வந்துவிட்டனர். நாளை விமலன் அபி திருமணம் தக்ஷினாவும் இல்லை என்பதால் அவளுக்கு செய்ய நிறைய வேலைகள் இருந்தது. அதுவும் இரவு அதியன் அவளை தூங்கவிடாமல் படுத்த காலையில் கண்விழிக்கவே சிரமமாக இருந்தது. அதியனின் டிஷர்ட் அவளுக்கு தொல தொலவென இருக்க அதை மாட்டிக் கொண்டு பாத்துரும் சென்றவளுக்கு இரண்டு நாட்களாக அசதியாகவே இருந்தது அதுவும் தலையை வலித்துக் கொண்டே இருக்க தலைக்கு ஊற்றியவள் பட்டுபுடவை கட்டி நகையெல்லாம் போட்டுக் கொண்டு அழகு பாவையாக கீழே இறங்கினாள். அவளுக்கு காஃபி கொடுத்த சாந்தினி அவளையே உற்று பார்த்தார்

"என்னமா?"

"இல்ல ரொம்ப டயர்டா இருக்கியே அதான்"

"ம்ம் தெரிலமா தலை எல்லாம் வலிக்குது தூக்கமாவே வருது…"

"மாத்திரை எதுவம் சாப்பிடலையே" என

"இல்லமா… ஏன்? "

"அம்முலு எதுக்கும் கிட்வச்சி டெஸ்ட் பண்ணி பாரு. விமல் வயித்துல இருந்தப்போ எனக்கும் இப்படி தான் இருந்தது" என அவர் முத்தம் வைத்துவிட்டு செல்ல "இருக்குமோ?" என சந்தோஷமாக அதியனை திரும்பி பார்த்தாள். அவன் மும்முரமாக பேசிக் கொண்டு இருக்க டெஸ்ட் பார்த்துவிட்டு செல்லலாம் என விட்டுவிட்டாள்.

அதன் பிறகு தக்ஷினாவும் வர கால்யாண ஆரவாரங்கள் தெடங்கியது. அடுத்த நாள் காலை ஐந்து மணிக்கெல்லாம் முகூர்த்தம் இருக்க எல்லோரும் கிளம்பி விட்டனர். அபிராமி சார்பாக பெரிதாய் யாரும் இல்லாததால் சிம்பிலாக நடந்தது திருமணம். அவர்கள் வீட்டு தோட்டமே பெரிதாக இருக்க முக்கியமான ஆட்களுக்கு மட்டும் மதியம் பார்ட்டி ஒன்று ஏற்பாடாகி இருந்தது. அதியன் ஆராதனா பின்னால் சற்றிக் கொண்டு இருக்க புவி தக்ஷினா எப்போது தனியாக சிக்குவாள் என்று காத்துக் கொண்டிருந்து கிடைக்கும் வாய்ப்பில் அவளை தொல்லை செய்துக்கொண்டு இருந்தான்.

விமலன் அபிராமியை சீன்டிக் கொண்டிருக்க அவனிடம் இருந்து தப்பித்து ஓடுவதிலயே இருந்தாள் அபிராமி. காலையில் இருந்து அவனை பார்க்கவே அவளுக்கு வெட்கம் வந்து தடுத்தது. அதுவும் பட்டுவேட்டி சட்டையில் அடிக்டி மீசையை முறுக்கிக் கொண்டும் காப்பை ஏற்றிக் கொண்டும் மிரட்டலாக இருந்தான் விமலன்.

மாலை சாமி கும்பிட்டுவிட்டு விமலனுக்கு என சொந்தமாக இருந்த கடற்கரை வீட்டில் மணமக்கள் இருவரையும் விட்டுவிட்டு அதியனும் ஆராதனாவும் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அவளுக்கு தலையை "வின் வின்" என தெரித்தது சாப்பிட்டது வெளியில் வருதுபோல் இருக்க பக்கத்தில் இருந்த தன் வீட்டுக்கே போக சொன்னாள். அதியனுக்கு விருப்பம் இல்லைதான் இருந்தாலும் அவள் கேட்கவும் மறுக்காமல் அழைத்து சென்றான்.

அப்போதுதான் வீட்டிற்கு வந்த துர்கா ஆராதனா வரவும் எழுந்து சென்று இருவரையும் உள்ளே அழைத்தார். சந்தோஷம் வந்து உபசரிக்க வெண்ணீர் வைத்துக் குடித்தவள் ராகவனை கான சென்றாள்.

கதவு திறக்கும் சத்தம் கேட்டு ராகவன் கண்ணை திறந்து பார்க்க ஆராதனாவை பார்த்ததும் முகத்தை திருப்பிக் கொண்டார்.

"அப்பா…" அவர் அருகில் அமர்ந்தவள் ராகவன் துண்டான காலை வருடிவிட கையை தட்டிவிட்டார்.

"ஏன் ப்பா என்கிட்ட பேச மாட்றிங்க?"

"அப்பா ப்ளீஸ் பேசுங்களேன்... "

"அதான் உனக்கு யாரு வேனும்னு நீயே முடிவெடுத்துட்டு போயிட்டியே… அப்பறம் என்ன அப்பா…?"

"ஏன் ப்பா இப்படி சொல்லிறிங்க? எனக்கு அவர ரொம்ப பிடிச்சிருந்தது… அதுக்காக நான் உங்கள மீறி போகனும்னு நினைக்கல… நீக்க மனசு மாறவரைக்கும் வெயிட் பண்ணிட்டு தான் இருந்திருப்பேன். ஆனா நீங்க வேற கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டிங்க… ப்ளீஸ் ப்பா எனக்கு நீங்களும் வேனும் பழைய மாதிரி என்கிட்ட பேசுங்க"

"நான் பெத்த பொண்ணா இருந்தா என்ன மதிக்காம போயிருப்பியா?. உன் புருசன் பேச்ச கேட்டுட்டு உன்ன பெத்தவங்க தான் பெருசுனு தானே இருக்க"

"அய்யோ ஏன் ப்பா? அப்படிலாம் சொல்லாதிங்க… எனக்கு அப்பானா நீங்க தான் நியாபகம் வருவிங்க. இப்பையும் என் பேரு ஆராதனா ராகவன் தான்ப்பா. இப்ப கூட அவர்தான் என்ன இங்க அழைச்சிட்டு வந்தாங்க… அதிகிட்ட பேசி பாருங்க உங்களுக்கும் அவர பிடிக்கும்பா"

"என்ன கொலை பண்ண பாத்தவன எனக்கு எப்பையும் பிடிக்காது. இன்னைக்கு நான் சக்கர நாற்காலில இருக்க உன் அரும புருசன் தான் காரணம். தயவு செஞ்சு போயிடு" என அவள் தலையில் இடியை இறக்க முழுதாக கேட்டு அறிந்தவள் ஹாலில் அமர்ந்திருந்த அதியனுக்கு முன் கண்ணீரோடு வந்து நின்றாள்.

"என்னாச்சு மா? ஏன் அழுகுற?" அதியன் அவசரமாக எழ

"அப்பாக்கு ஆக்சிடன்ட் ஆன அன்னைக்கு உங்கள பார்த்துட்டு தான் வந்தாங்களா?"

"இப்ப எதுக்கு அது…?" என அவள் பக்கத்தில் வர தள்ளி நின்றவள் தீர்கமாக பார்தாள்.

"பதில் சொல்லுங்கத்தான்"

சட்டென்று அவன் முகம் இறுக "ஆமா… வந்தார். அதுக்கு இப்போ என்ன?" அவன் அதட்ட கண்ணில் இருந்து அருவியாக வழிந்தது.

"ச்ச நீங்க இப்படி பண்ணுவிங்கனு நினைக்கல… போங்க இனிமே என் மூஞ்சிலே முழிக்காதிங்க. நீங்க எனக்கு வேனாம்" என பின்னால் நகர்ந்தவளை அதிர்ச்சியாக பார்தவன் தோளை பற்ற முகத்தை திருப்பிக் கொண்டாள்.

"ஆராதனா நான் பண்ணது தப்பு தான் அதுக்காக என்ன விட்டு போய்டுவியா டி ஆரு. பப்பி ப்ளீஸ் என்ன பாருமா" ஆதியன் அவள் முகத்தை பற்றி கெஞ்ச அவன் கையை தட்டிவிட்டாள். இடையில் பேச வந்த சந்தோஷையும் பேச விடாமல் தடுத்தவள்

"இல்ல நீங்க என் அப்பாவ கொல்ல பாத்திருக்கிங்க அதியன். உங்கள விட்டு தள்ளி போறதுதான் எனக்கு நல்லது இல்ல நாளைக்கு என்னையும் கூட கொன்னுட்டு ..." அவள் முடிப்பதற்குள் அவள் கன்னங்களில் தன் கைகளை பதித்திருந்தான் அதியன்.

"ச்ச வாய மூடு யாரு உங்கப்பன கொல்ல பாத்தா… நானா? உன் அண்ணன்ட கேளுடி அன்னைக்கு எண்ண நடந்துச்சினு. நீ என் கூட வாழ்ந்தது இது தானா? என்ன பாத்தா உனக்கும் உங்க அப்பாக்கும் கொலகாரன் மாதிரியா தெரியுரேன்" என அதியன் கத்த

"தனா… அப்பா ஆக்சிடன்ட்க்கும் மச்சனாக்கும் எந்த சம்பந்தமும் இல்லமா. அப்பா பேசிட்டு போனவுடனே எனக்கு கால் பண்ணி நடந்ததை சொல்லி அப்பாகிட்ட என்ன பேசி சமாதானம் பண்ண தான் சொன்னார். அதுமட்டுமில்ல அப்பாக்கு ட்ரீட்மென்ட் பண்ண பெரிய டாக்டர்ஸ்கிட்ட அவரே செலவு பண்ணி அப்பாயின்ட்மென்ட்லாம் வாங்கி கொடுத்தார். நீயும் அப்பா சொன்னத கேட்டுட்டு அவருகிட்ட சண்டை போடுறியே? உண்மையாவே அப்பாக்கு நடந்தது ஆக்சிடன்ட் தான். அவர விட்டு நீ இருந்துடுவியா?" என சந்தோஷ் வருத்தபட தலை குணிந்து நின்றாள் அவள்.

ஆராதனாவே தன்னை தப்பாக நினைத்ததை எண்ணி அதியனுக்கு வருத்தமாக இருந்தது. அன்று அவரை மிரட்டியவன் சந்தோஷிடம் பேசிவிட்டு மீட்டிங் ஒன்று இருக்க அதில் ஆழ்ந்துவிட்டான். ராகவன் தவாறாக புரித்துக் கொண்டதையே திருமணம் அன்று தான் அவனுக்கு தெரியும்.

"அது அப்பா சொன்னதும்… கோபத்துல… போறேனு சொல்லிட்டேன்" என தயங்கி அதியனை பார்க்க

அவன் கண்கள் சிவப்பேறி பார்வையால் அவளை சுட்டேறித்தன .அவள் முழங்கையை பற்றி இழுத்தவன் "ஏய் இப்ப போடி போ அதுக்கு முன்ன என்ன கொன்னுட்டு போ உன்ன காதலிச்ச பாவத்துக்கு செத்து தொலையுறேன்" உச்சஸ்துதியில் கர்ஜித்தான் ஆதி அதியன்.

ஏற்கனவே உடல் ஒத்துழைப்பு தராமல் தடுமாற அவன் வார்த்தை அவளை குத்தி கிழிக்கவும் "அத்தான்" என அவன் மேலே மயங்கி சரிந்தாள்.

"பப்பி… ஏய் என்னாச்சி… சந்தோஷ் கார ஸ்டார்ட் பண்ணு" என கத்தியவன் அவளை தூக்கி கொண்டான்.

"மிஸஸ். ஆராதனா நீங்க கன்சீவா இருக்கிங்க" என டாக்டர் இருவருக்கும் வாழ்த்து சொல்ல எல்லாவற்றையும் மறந்து சந்தோஷத்தில் அவளை அனைத்துக்கொண்டான் அதியன். மனதில் ஒரத்தில் வருத்தம் இருந்தாலும் கால போக்கில் கண்டிப்பாக அது சரியாகிவிடும் என்று நம்பினான்.

சந்தோஷ் எல்லாருக்கும் ஸ்வீட் வாங்கிக்கொள்ள ஆராதனா கருவுற்றிருப்பதை கேட்டு அனைவருக்கும் ஆனந்தம் தான். அதுக்கு மருநாளே தக்ஷினாவும் புவியும் தங்கள் உறவை பற்றி சொல்லிவிட்டனர். புவி சொன்னதை போல் அவன் வீட்டில் யாருமே ஏற்றுக்கொள்ளவில்லை "தக்ஷினாவை கல்யாணம் பண்ணிக் கொண்டால் வீட்டிக்கு வா இல்லை என்றால் உன் இஷ்டம்" என்று விட்டார் அவன் தந்தை. அதியனுக்கும் இதில் உடன்பாடு இல்லாது இருந்தாலும் புவியின் தனிப்பட்ட வாழ்க்கையில் அவன் தலையிடவில்லை. ஆராதானவும் அவனையே பின்பற்ற விமலன் தான் புவியுடன் பேசுவதையே தவிர்த்தான். சாந்தினி அவளை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டவர் அவள் மறுத்துவிட்டதும் அமைதியாக சென்றுவிட்டார். முத்துவேல் மட்டும் தான் இவர்கள் உறவை எதுவும் சொல்லாமல் ஏற்றுக் கொண்டார். அவரை பொறுத்தவரை அவள் முழுமையாக வளர்ந்துவிட்டாள். அவள் வாழ்கைக்கு என்ன தேவை என்பதை அளால் தேர்ந்தெடுக்க முடியும் என்று நம்பினார்.

காலம் கண்ணை கட்டிக்கொண்டு பறக்க ஆர்.ஆர் கேஸ்சை முடித்து வைக்கும் நாளும் நெருங்கியது. எட்டு மாதங்களாக அவர்கள் பொறுமையாக இருக்க கொஞ்ச நாட்களாக துருவ் சந்திப் தொல்லையின்றி தக்ஷினா நிம்மதியாக தன் வேலையை கவனித்தாள்… சபரி தான் மேனேஜர் என்பதால் இந்த ஒரு மாத காலமாக அவர்கள் வசிப்பிடம் ஆயுஷின் காம்பவுண்டுக்குள் மாறியது…. காரணமாக தக்ஷினா தன் நான்ங்கு மாத மேடிட்ட வயிற்றுடன் அவளால் ரொம்ப தூரம் நடக்கமுடியவில்லை என்று சொல்ல பட்டது.
 

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
இரண்டு வாரங்களுக்கு முன்வந்த அதே தூதுவன் அந்த தீவிரவாத கூட்டத்தின் தலைவனின் வருகைக்கான ஏற்பாடுகளை செய்ய போலீசும் தயாராகிவிட்டனர். அவர்கள் எதிர்பார்பின் படி இந்த வாரத்தில் அவன் இங்கு வருவான் இல்லை ஆயுஷ் அவனை தேடி போவான்.

இரவு தூங்காதது அவள் கண்ணை எரிந்தது ஆயுஷின் அழைப்புகளை கேட்டிக் கொண்டு இருந்தாள். சபரி டேனியலும் முக்கியமான இடத்தில் இருந்ததால் அவர்களுக்கு தேவையான காருவிகள் ரகசியமாக அவர்கள் அறையில் குடிவந்தது. மணியை பார்த்தாள் நான்ங்கு என காட்ட தன்னை சுத்தபடுத்திக் கொண்டு வந்தவளுக்கு மிதமான சூட்டில் பாலை கொடுத்தான் புவி.

"மாமு நீ எனக்கு என்னவோ ஒரிஜினல் சமயல்காரன் மாதிரி தான் தெரியுற " என சிரிக்க அவள் மூக்கை பிடித்து ஆட்டியவன் "உங்க மூணு பேருக்கும் எப்பையும் நான் வேலகாரன் தான்" என சொல்லிக் கொண்டு இருக்கும்போதே பாதி பாலை அவனிடம் கொடுத்தவள் திரும்பவும் பாத்துரும்குள் ஓடிவிட்டாள்.

ஆம் தக்ஷினா நிஜமாகவே குழந்தை உண்டாகியிருந்தாள். அவன் பிரிகாஷன்ஸ் நிறைய எடுத்துக்கொண்ட போதும் அவள் கருத்தரித்துவிட அவள் லட்சியம் அறிந்தவனுக்கு தான் கவலையாக இருந்தது. அது மட்டுமல்லாமல் இரட்டை குழந்தைகள் வேறு… எதிர்பாராமல் நடந்த ஒன்றாக இருந்தாலும் தன்னையே கடிந்துக் கொண்டான். இந்த நேரத்தில் குழந்தையை சுமந்துக்கொண்டு எப்படி இங்கே இருப்பது என்று பயந்தான். குழந்தை உண்டானது தெரிந்ததிலிருந்தே அவனை விட்டு கொஞ்ச நாள் தள்ளி தள்ளி தான் இருந்தாள் தக்ஷினா. பலமான யோசனையில் பாதிநேரம் என்றால் உடல் உபாதைகள் ஒரு பக்கம் அவளை ஆட்டிபடைத்தது.

ஆராதனாக்கும் ஆறு மாதங்கள் மிகுந்த சிரமமாக கழிய இப்போதுதான் வளைகாப்பு முடிந்து துர்கா வீட்டிற்கு சென்றிருந்தாள். இப்போது அவளுக்கு ஒன்பதாவது மாதம் நடந்துக்கொண்டு இருந்தது. தக்ஷினா கருவுற்றிருக்கும் விஷியம் அதி ஆராவை தவிர யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டனர் நால்வரும்.

அவள் யோசனை எல்லாம் ஒன்றுதான் "இந்த குழந்தைகளுக்கு தன்னால் நல்ல அம்மாவாக இருக்க முடியுமா? எங்கள் உறவு இவர்களை பாதிக்குமா? தன்னால் ஒரு குடும்பத்திற்குள் போக முடியமா…? என் லட்சியம் தடைபடுமா?" பல கேள்விகளுக்கு பிறகு "என்னால் முடியும்" என்று தன்னை நம்பியவள் தன் வியிற்றை தடவி பார்தாள்.

ஆராதனா அடிக்கடி குழந்தை உதைப்பதை வீடியோவாக தக்ஷினாவுக்கு அனுப்பியிருந்தாள். அவளுக்கும் இப்போது அந்த ஆசை வந்தது. அதன் பிறகு பகலை வேலை2க்கு அற்பனித்தவள் இரவை குழந்தைகளுக்கும் அவர்களின் தந்தைக்கும் ஒதுக்கினாள். அவள் முடிவை கேட்டு புவிக்கு சந்தோஷம் என்றாலும் தங்கள் பார்த்துக் கொண்டு இருக்கும் வேலையை நினைத்து சிறுபயம் இருக்கதான் செய்தது. எப்போதும் அவள் மேல் ஒரு கண்ணை வைத்துக் கொள்வான்.

வாந்தி எடுத்திருப்பாள் போலும் வயிற்றை பிடித்துக் கொண்டு சோர்வாக வந்தவளை தூக்கி பாயில் படுக்கவைத்தான். வேலையாட்கள் தங்கும் இடம் என்பதால் இவ்வளவு தான் இங்கே வசதி இருந்தது.

"தூங்கு அம்மு நைட்லாம் வேலை பாக்காதனா கேட்கமாட்ற. ஒருமணி நேரமாச்சும் ரெஸ்ட் எடு" என்றவன் தட்டி கொடுக்க அவன் கையை எடுத்தவள் அவள் வயிற்றின்மேல் வைக்க குழந்தைகள் லேசாக உதைப்பது தெரிந்தது. இன்றுதான் முதல்முறையாக உணர்கிறான். உடல் சிலிர்த்தது குணிந்து அவள் புடவவையை விலக்கியன் முத்தம் வைக்க "எனக்கு இல்லயா?" என்றாள் தக்ஷினா. "இருக்கே… ஆனா இப்போ தூங்கு" என்றவன் நெற்றியில் முத்தம் வைத்தான்.

"மாமு நீயும் கொஞ்சநேரம் படுத்துக்கோ" என அவனை இழுத்து படுக்கவைத்தவள் முகத்தை அவன் நெஞ்சில் புதைத்துக்கொண்டு உறங்கினாள்.

எத்தனை பயம் இருந்தாலும் அவள் வேலையில் மட்டும் புவி தலையிடவேயில்லை. அவளை பாதுக்காத்தான் அவளுக்கு தன்னால் முடிந்த சப்போர்ட்டை கொடுத்தான் அது அவளுக்கு இன்னும் பலம் தந்தது.

காலையில் இருந்தே ஆயுஷும் சிவகேஷும் மிக மிக அமைதியாக இருந்தனர். எப்போதும் பிஸியாகவே இருப்பவர்கள் யாருக்கோ காத்திருப்பது போல இருந்தனர். முக்கியமான வேலையாட்களை தவிர மற்றவர்களுக்கு தோட்ட வேலை தரப்பட்டது. சபரி கூட வெளியில் தான் நின்றான். டேனியல் அயுஷின் நெருக்கிய வேலைகளை செய்வதால் அவன் மட்டும் உள்ளே சென்றுக் வந்துக் கொண்டிருந்தான்.

மூன்று மணியளவில் திடீரென வெளியில் சென்ற ஆயுஷின் கார் ஐந்து மணிக்கு திரும்ப வந்தது. கூடவே மூன்று பேரையும் சுமந்து வர அதில் இருந்து நெடு நெடுவென க்கீளின் சேவ் செய்து ஹாண்ட்சமாக ஒருவன் இறங்க அவன் கூடவே பார்மலில் இரண்டு பேர் இறங்கினர். அவன் கையில் இருந்த சூட்கேஸ் மிக அழுத்தமாக மூடியிருந்தது. உள்ளே சென்றவர்கள் இரவாகியும் வெளியில் வரவேயில்லை. கழுகு பார்வையை தீட்டிக் கொண்டு எந்த நேரமும் அலர்ட்டாக சுத்தினர் அனைவரும். அவர்களுக்கு அந்த புதியவன் மேல்தான் சந்தேகம் ஆனாலும் ஆயுஷும் அவனும் பேசிக்கொள்ளாத வரை இவர்களால் எந்த முடிவுக்கும் வர முடியாது. அவர்கள் திட்டத்தை அறியவேண்டி அமைதி காத்தனர்.

மணி ஒன்றாகியது அவ்விடமே அமைதியாக இருக்க ஆயுஷ் கதவை திறந்துக்கொண்டு வெளியில் வருவதை ஜெய் சிசிடிவி வழியாக பார்த்து சொன்னான். போலீஸ் ஆட்களை தவிர அனைவரும் மயக்க மருந்து அடிக்கபட்டு மயங்கிகிடந்தனர். செக்கியூரிட்டிவரை போலீஸ் என்பதால் அவர்கள் வசமாக சிக்க கன்னை லோட் பண்ணிக்கொண்டு காத்திருந்தனர். முக்கியமாக அவர்கள் ஆதாரமே அந்த தீவிரவாதிகள் தான். இவர்களை ஆதாரமாக மாற்றுவதற்காக தான் இத்தனை நாள் காத்திருந்தனர். இன்று வசமாக சிக்கினர் எளிது இல்லைதான் ஆனால் யாரும் யாரை விடவும் ஸ்மார்ட் இல்லையே. தக்ஷினாவின் ஸ்மாட்னஸ் அவர்கள் இருக்கும் அந்த ரகசிய அறையை அவள் எப்போதோ கண்டுபிடித்துவிட்டாள்.

அந்த அழுத்தமாண சூட்கேஸ் திறக்கபட அதில் வருசையாக இருந்த திரவங்கள் மிக வீரியமான வெடிக்கூடியவை. பல நாடுகளில் இதை உற்பத்தி செய்யவே தடை உள்ளது. அத்தனை சுலபமாக அதை செய்துவிடவும் முடியாது உற்பத்தி செய்பவர்கள் உயிருக்கே எமனாககூடியது. அத்தகைய மருந்தை தான் பாம்செய்ய சொல்லி அயுஷிடம் கொடுத்தான். நேரடியாக அவர்களால் அதை செய்ய முடியாது. காரியம் முடியும் வரை வெளியில் தெரியாமல் இருக்கவே இவர்களிடம் ஒப்படைக்க பட்டது.

அடுத்த வாரம் மும்பையில் நடக்க உள்ள அகில இந்திய இளம் விஞ்ஞானிகள் என்ற போட்டிக்கு இந்தியா முழுவதும் உள்ள மாணவர்கள் கலந்துக்கொண்டு தங்கள் திறமையை காண்பிப்பார்கள். அதில் எட்டு முதல் பத்தொன்பது வயது வரை உள்ள மாணவர்கள் தங்கள் பள்ளி மூலமாகவோ அகாடமி வாயிலாகவோ கலந்துக்கொள்வர். இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகள் இதற்கு வருகை தருவது ஐந்தாண்டுக்கு ஒரு முறை நடப்பவை தான். போட்டி நடக்கும் அரங்கத்தில் தான் பாம்வைக்க வேண்டும் என்ற திட்டத்தை ஓட்டையே இல்லாமல் போட்டனர். இதை வெற்றிகரமாக செய்துமுடித்தால் அவர்கள் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் ஒரு நாட்டில் உள்ள இயற்கை வலங்களை எடுத்துக்கொள்ள அனுமதிப்பதாக அவன் சொல்ல அந்த சூட்கேஸ்சை கையில் வாங்கினான் ஆயுஷ்.

பின் அனைவரும் கைகுலுக்கி விட்டு வெளியேற சட்டென்று கீழே விழுந்தான் சிவகேஷ். புள்ளட் நெற்றியில் இறங்கிய நொடி மரணம் தானே. சட்டென்று எல்லோரும் துப்பாக்கி எடுக்க டாமல் டமால் என்ற சந்தத்துடன் இடைவிடாமல் குண்டு மழையாய் பொழிந்தது. தக்ஷினாவின் துப்பாக்கிக்கு இரண்டு பேர் உயிரைவிட அவர்களும் சுட ஆரம்பித்தனர். அந்த நெடு மரம் ஒரு இடத்தில் பதுங்கிக்கொண்டு குண்டு ஒன்றை வீச சபரியின் அலறல் நன்றாக கேட்டது… அடுத்து அவன் தக்ஷினா பதுங்கி இருக்கும் இடத்தை நோக்கி வீசபோக நைட்விஷன் கிளாஸ்சில் அதனை கண்ட புவி யோசிக்காமல் முன்னேறி அவனை சுட ஆராம்பிக்க கடைசியாக இருந்த தீவிரவாத தலைவனும் செத்து விழுந்தான். இதில் தப்பித்து ஓடிய ஆயுஷை டேனியல் பின் தலையிலே சுட்டுக் கொன்றார். முன்கூட்டியே மற்றவர்களுக்கு மயக்க மருந்து கொடுத்ததால் அவர்கள் எழும்முன்னே விசாரணைக்காக கைது செய்யப்பட்டணர்.

வருவாள்
 

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
பெண்ணே 28

8i391iwEhtWk8SEyINqVsN_EPs_phStqurl7WmZS3QwSfTlcvhEiquvw4GClW28pkh9e_6dyy3BooDjjqZ1p3Le0Z-sdgxTuEeEN7o0dDmRHz0sA4HXNxwSmmGoC61ovgMYZafVF=s0


சபரிக்கு பலமாக அடிபட்டிருக்க சரியான நேரத்தில் மருந்துவமனையில் சேர்த்து காபாற்றிவிட்டனர். வி.ஐ.பி அறையில் கையில் கட்டுடன் அமர்ந்திருந்த புவி ஒருவித பதட்டத்தில் தக்ஷினாக்கா காத்திருந்தான். குண்டு பயங்கர சத்தமாக வெடிக்க ஒரு கனமான பொருள் அவள் தலையில் பட்டு தையல் போடும் அளவிற்கு காயமாகிருந்தது அதிலிருந்து லேசான வயிற்று வலி ஆராம்பிக்க அவளே சற்று பயந்துவிட்டாள். அவள் அடிக்கடி வயிற்றை பிடிக்க அதை பார்த்த புவி என்னவென்று விசாரித்தவன் அவளை கடிந்துக்கொண்டு ஹாஸ்பிடல் அழைத்து வந்தான். அவளுக்கு லேசாக ப்ளீடாகி இருக்க டாக்டரை படுத்தியெடுத்தவன் மூன்று பேரும் நலமாக இருக்கின்றனர் என அறிந்துக்கொண்ட பின் தான் மூச்சே விட்டான். இருந்தும் புவிக்கு பயம் போகவில்லை. கழிப்பறையில் இருந்து வந்தவள் கலைப்பாக அமர அவள் தலையில் இருந்த கட்டை வருடிவிட்டான். புவிக்கும் கையில் புள்ளட் உரசிசெல்ல காயம் பட்டுருந்தது. நல்லவேளையாக மற்றவர்கள் யாருக்கும் எதுவும் ஆகாமல் தப்பித்துவிட்டனர்.

"வலிக்குதா தீ… வேற எங்கயாச்சும் அடி பட்டிருக்கா?" என அவளை ஆயிரமாவது முறையாக புவி ஆராய தலையை சாய்த்து சிரித்தாள் அவள்.

"போதும்டா புவி… எத்தன டைம் கேட்ப அதுதான் பேபிஸ்ச ஸ்கேன் பண்ணி பாத்தாச்சுல" என காதை பிடித்து திருக அவள் வயிற்றில் உதைத்தது குழந்தை.

"பாரேன் மாமு அவங்க அப்பாவ அடிச்சா இதுங்களுக்கு கோபம் வருது" என தக்ஷினா ஆச்சரியமாக சொல்லி சிரித்தாள்.

"நான் உன்ன தான் கேட்டேன் தீ. நீ நல்லா இருக்கியா…? பஸ்ட் எனக்கு நீ தான் முக்கியம்" என அவள் வயிற்றில் மென்மையாக வருடிவிட்டான்.

"ம்ம்… ஐயம் பிரிட்டி பைன்… பேபிஸ்சும் பிரிட்டி பிரிட்டி பைன்… ஆனா… என் ஸ்டொமக் தான் கத்துது... "

"ஏன் என்னாச்சு?"

"பசிக்குதுடா லூசே… போ போய் ஏதாச்சும் வாங்கிட்டு வா… மாமு உனக்கு பதில் செல்றதுக்கே நிறைய சாப்பிடனும் போல…" என அவன் மண்டையில் தட்டினாள் தக்ஷினா.

புவி அவளை இறுக்கமாக அனைத்துக்கொள்ள "ஹேய் விடு விடு… பாப்பாக்கு வலிக்க போகுது" என தள்ளி விட்டவளை முறைத்தான் அவன்.

பின்னே பலரை அடித்து தூக்கி வீசுபவள் கடினமான பயிற்சிகளை முடித்து பல கலைகளில் சிறந்து விளங்குபவள் தன் குழந்தைகளை மயிலிறகால் வருடினாள் கூட வலிக்குமோ என்று பயந்தால் அவனும் என்ன தான் சொய்வான். இன்னும் ஒருவாரம் மட்டும் முப்பையில் தங்கி பார்மாலிடீஸ் முடிக்க வேண்டி இருக்க அங்கேயே ஒரு ரூம் புக் செய்தான் புவி.

சென்னையில் உள்ள ஆர்.ஆர் கல்லூரியின் பின்புறம் இருந்த காட்டில் ஒரே நாளில் நூறு பிணங்களுக்கும் மேல் கண்டெடுக்கப்பட்டது. அதில் பெண் பிணங்களே அதிகம்.

அப்பெண்கள் அநேகமானவர்கள் அக்கல்லூரியில் பயின்ற மாணவர்களாக தான் இருக்க வேண்டும் என்று பேசபட்டது. அக்கல்லூரி பிரின்சிபல் முதல் பேராசிரியர்கள் வரை பலர் கைது செய்யபட்டு விசாரணையில் இருந்தனர்.

அன்றே ஆர்.ஆர்காக வேலை பார்த்த ரவுடிகள் ஆங்காங்கே என்கவுண்டரில் சுட்டிக் கொல்லப்பட்டனர்.

அன்று அந்த பிளக் அமேரிக்கனை அடித்து அவனிடம் வாங்கிய உண்மைகளை வைத்து வெளிநாட்டுக்கு கடத்த பட இருந்த ஐம்பது பெண்களை பத்திரமாக மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். மேலும் வெளி நாடுகளுக்கு கடத்திச் சென்று விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண்களை மீட்க ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது.

அவன் தான் ஆயுஷ்க்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதை சொன்னான். அவனையும் முக்கிய ஆதாரமாக கோர்டில் ஒப்படைத்து விட்டனர்.

இந்தியாவில் ஆர்.ஆர் மருத்துவமனைகள் சீல் வைக்கப்பட்டு உடல் உறுப்பு திருட்டுக்கு துணையாக இருந்த மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர். பல இடங்களில் ஆர்.ஆர்க்கு சொந்தமான இடங்கள் பொதுமக்களால் அடித்து நொருக்கப்பட்டது. அவர்கள் செய்த முறைகேடுக்கு அனுமதி வழங்கிய அரசியல்வாதிகள் கேள்விகளால் துளைக்க பட்டனர்.

அனைவரும் அவர்களை அழைத்து பாராட்டினர் பேசினர். பிரஸ் மீடியா இன்ஸ்டாகிராம் என அனைத்தும் அவர்களை புகழ்ந்து தள்ளியது. ஒரு கர்பிணி பெண் தலைமையில் இத்தனை பெரிய ஆப்ரேசன் நடந்தது மக்களிடையே பெரிதாக் பேசப்பட்டது. பிரஸ் மீட்டில் இதையை கேள்வியாக கேட்க "தாய்மை என்றுமே பெண்களை பலவீனம் ஆக்குவதில்லை. முன்ன விட இன்னும் நான் உறுதியா இருக்கேன்" என அவள் பேசியது சிறந்த உந்துசக்தியாக பல கர்பிணிகளை எழுந்து நிற்கவைத்தது.. பெண்களுக்கு பெரும் எடுத்துக்காட்டானாள்.

புவி காரை தஷினா வீட்டில் நிறுத்த அவளோ விமலனை காணபோகும் சந்தோஷத்தில் பரபரப்பாக இருந்தாள். அவனை பார்த்தே பலமாதங்கள் ஆகிருந்தது… எப்போதாவது போனில் பேசுவான். அவன் கோபம் அவளுக்கு தெரியாததா… குழந்தையை பற்றி மறைத்ததனால் முன்பைவிட இன்னும் கோபம் கூடி இருக்குமோ? எப்படி சமாளிப்பது? என யோசித்துக் கொண்டே வர பக்கத்தில் புவி விமலனை எண்ணி வருத்தத்துடன் வந்தான். அவனுடன் பேசி எட்டு மாதங்கள் ஆகிவிட்டதல்லவா.

இவளை பார்த்ததும் புவியை மட்டும் வரவேற்ற சாந்தினி முஞ்சை தூக்கி வைத்துக்கொள்ள மாடியில் இருந்து கிட்டதட்ட ஓடி வந்த விமலன் சற்று தயங்கி நின்றான். "குழந்தைகள் உண்டானதையும் மறைத்து விட்டாளே" என்ற கோபம் அவனுக்கு.

தக்ஷினாவோடு பேசுவதா? வேண்டாமா? என்று விமலன் யோசிக்க அவனை கண்டதும் வயிற்றை பிடித்துக் கொண்டு தடதடவென அவனிடம் ஒடிவந்த தக்ஷினாவை பார்த்து எல்லா யோசனையும் காற்றில் பறக்கவிட்டவன் ஒடி வந்து அனைத்துக் கொண்டான். அவள் ஓடியதை பார்த்து சாந்தினியும் விமலனும் அவளை கடிந்துக்கொள்ள அவர்களிடம் செல்லம் கொஞ்சியே சமாதானம் படுத்தினாள். தனியாக நின்ற புவியை முத்துவேல் அனைத்துக்கொள்ள நலன் விசாரிப்புக்கு பின் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர்.

புவி அவளை இங்கு விட்டுவிட்டு அவர்கள் வாழப்போகும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க சென்றுவிட்டான்.

"தீ இப்போ குழந்தைகளும் வந்துட்டாங்க இது உன்னோட பேமிலி… நீ தான் முடிவெடுக்கணும்" ஓய்வாக அமர்ந்திருந்தவளிடம் மெதுவாக ஆரம்பித்தான் விமலன்.

"ம்ம் கரெக்ட் தான் விமி நானும் அத யோசிச்சேன். பட் எனக்கு இந்த தாலி சென்டிமென்ட்லாம் கிடையாது பாக்கலாம் இப்போதைக்கு எனக்கு பேபிஸ்கூட டைம் ஸ்பென்ட் பண்ண தான் ஆசை. ராதிகா கேஸ் முடிஞ்சோன வேலைய விட போறேன்"

"அத நான் பார்த்திக்கிறேன். நீ பஸ்ட் ரெஸ்ட் எடு… அதுவும் உனக்கு டிவின்ஸ் ரொம்ப இலச்சி போயிட்ட தீ ஓழுங்க சாப்பிடுறியா? இல்லையா? இந்த புவி எருமை உன்ன நல்லா பாத்துக்கிறானா?"

"ச்ச மாமு என்னையும் பேபிசயும் எப்படி பாத்துக்கிறான் தெரியுமா விமி. எனக்கு சாப்பாடு சேராம வாமிட் வந்திரும். அப்போலாம் அவன் தான் க்ளீன் பண்ணுவான் திரும்ப எனக்கு பிடிச்ச மாதிரி சமச்சி தருவான். நான் எவ்வளவு கொடுமை படுத்தினாலும் நம்ம சாந்தினி மாதிரி எல்லாத்தையும் பொறுத்துப்பான்" என அவன் புராணம் பாட ஆரம்பிக்க "இது எப்போ?" என்று சிரித்து வைத்தான் விமலன்.

"சரி விமி ராதிகா கேஸ்ல நான் கேட்டிருந்தது என்னாச்சி?"

"ஒரு சின்ன க்ளுவ் கிடைச்சிருந்துச்சு அதை வச்சி விசாரிச்சேன். அன்னைக்கு அபி ராதிகாவோட பாட்டு நோட்ஸ்ச வீட்டுக் எடுத்துட்டு வந்து பாத்துட்டு இருந்தா. அதில ராதிகா அவளுக்கு பிடிச்சவங்கள பத்தி எழுதி வச்சிருப்பா போல அதுல தான் ஒரு எஃப் இசட் பைக் பத்தி எழுதிருந்தா" என ஆரம்பித்தவன் அனைத்தையும் சொன்னான்.

"சோ பைக்ல வந்த கொலைகாரனோட மோதிரம் தான் அவள் பேக்கல விழுந்திருக்கனும்"

"ஆமா அவன் வந்தப்போவே அவன் கையில அத ராதிகா பார்த்திருக்கா. அதையும் அந்த கத்தியையும் அவன்கிட்ட கொடுக்கலாம்னு இருந்த அன்னைக்கு தான் அவள கடத்திருக்காங்க அப்படிதான் எழுதியிருந்தது. நானும் அந்த பைக் கார் பத்தி விசாரிச்சு பாத்தேன்… தீ பட் ஒன்னுமே கிடைக்கல"

"வேற எதாச்சும் கிடைச்சதா?"

"ப்ச் விட மாட்டியே… நீ ரூம்க்கு போ நைட் பேசிக்கலாம்"

"இல்ல விமி எனக்கு ஒரு பெரிய டவுட் இருக்கு… நான் அந்த ஆயுஷ் வீட்டுல துருவ் கையில் அந்த மோதிரம் இருக்க போட்டோவ பாத்தேன்"

"ஒரே மாதிரி மோதிரம் நிறைய பேர்கிட்ட இருக்கும் தீ. பஸ்ட் இந்த மோதிரம் போட்ருந்தவன் தான் சத்தியாவ கொன்னவனு எப்படி சொல்ற? அண்ட் துருவ்க்கும் இதுக்கும் எப்படி ரிலேட் பண்ற"

"கெஸிங் தான் விமி துருவ் ஏன் செஞ்சிருக்க கூடாது. அவன் யோகியன்லாம் இல்ல பச்ச பொறுக்கி தான்"

"அப்பறம் இந்த கேஸ்ல மோதிரத்தை ஆதாரமா நான் எடுத்துகிட்டதுக்கு ஒரு காரணம் இருக்கு. நீ நோட் பண்ணியா அந்த சத்தியா அவ எங்கெல்லாம் அந்த மோதிரகாரன பார்த்து போசினேன்னு அவ லவ்வர்கிட்ட சொன்னாலோ கரெக்டா அந்த இடத்தில ரெண்டு சிசிடிவி இருந்துருக்கு ஆனா அது என்ன ஆச்சுனே தெரியல. நான் ரொம்ப நாள் கழிச்சி தான் அத கண்டுபிடிச்சேன். அந்த மோதிரத்த ஒரு சாதாரண ஆளால வாங்கிட முடியாது அதே மாதிரி சத்தியாவோட ஒர்ஜினல் அட்டாப்சி ரிப்போர்ட் படி பாத்தா கில்லர்ஸ் பெரிய பணபலம் உள்ளவங்கனு தெரிஞ்சது. நீயே யோசியேன்… அது எல்லாமே அவன் கூட மேட்ச் ஆகுது. எப்படி இருந்தாலும் மோதிரகாரன் தான் நம்ம தேடுரவன் அதுக்கு ஆதாரம் ராதிகாகிட்டயே இருக்கு"

"ஆமா தீ பட் அந்த கத்தில ராதிகாவோட பிங்கர் பிரிண்ட் மட்டும் தான் இருக்கு. அப்படி பாத்தாலும் துருவ் தான் டாக்டர் இல்லையே"

"ப்ச் சந்திப் அவன் ஒரு டாக்டர் தான ஆனா அவன் சரியான முட்டாள் விமி. இந்த கேஸ்ல ஒரு இன்டலிஜன்ட் இன்வால் ஆகிருகான். எனக்கு ரோகன் பக்டே மேல தான் டவுட். ஒரு வருஷத்துக்கு முன்னடி வரைக்கும் அவன் ஆர்.ஆர்ல தான் இருந்துருக்கான். அவனும் அவனுங்க பிரண்ட் தான்"

"இப்போ என்ன பண்ணலாம். இத ப்ரூவ் பண்ற அளவுக்கு நம்ம கிட்ட ஆதாரமே இல்லயே? பப்ளிக்கே நம்மளால கேஸ்ச முடிக்க முடியாம ஆர்.ஆர்ற சாக்கா வச்சி அவங்கள பிளேம் பண்றோம்னு சொல்லிடுவாங்க. பஸ்ட் நமக்கு அவனுங்க எங்க இருங்காங்கனே தெரியாது. ஆர்.ஆர் அழிஞ்சாலும் அவனுங்கிட்ட இன்னும் நிறையவே பணம் இருக்கும். கண்டிப்பா வேற எதாவுது கண்ட்ரில இருந்துகிட்டு இதே தப்பதான் பண்ணுவானுங்க"

"அதுக்கு அவனுங்க உயிரோட இருக்கனும். நாளைக்கு என்கூட ஏர்போர்ட் வா விமி முக்கியமான வேலை இருக்கு" என்றவள் எழுந்து சென்று விட விமலனுக்கு தான் எதுவுமே புரியவில்லை.

அதியன் ஆராதனாவை கையில் தாங்கினான் தினமும் அவளை பார்க்க வருபவன் இரவு தூங்க மட்டும் தான் வீட்டிற்கு செல்வான். டெலிவரி டைம் நெருங்க நெருங்க அவனுக்கு பயமாக இருந்தது. அவள் மூச்சுவிட சிரமபடும் போதெல்லாம் அதியனுக்கும் மூச்சை அடைக்கும். இப்போது கூட வெண்ணீரை ஒரு பக்கெட்டில் ஊத்தி பதமாக நீர் கலந்தவன் வீங்கியிருந்த அவள் காலை மசாஜ் செய்துக்கொண்டு இருந்தான்.

"அத்தான் போதும் எழுந்திரிங்க"

"இப்போ எப்படி இருக்கு… பப்பி?"

"ம்ம்… அதெல்லாம் பரவால்ல உங்க பொண்ணு தான் என்ன உதைக்கிறா"

"எங்க இரு நான் என்னனு கேட்கிறேன்" என்றவன் அவள் உப்பிய வயிற்றிடம் கதை பேச குழந்தையின் அசைவு அதிகமாக இருந்தது.


"சரி டா செல்லம்… இனி அம்மாவ டிஸ்ரப் பண்ண கூடாது.. சொல்லிட்டேன்டி ஆரு போதுமா?"

"க்கும் நீங்க சொன்ன உடனே கேட்டிருவாளா? ஸ்ஸ்ஸ் பாருங்க நல்லா உதைக்கிறா" என அவள் சினுங்க "உன்ன மாதிரி அடம் பண்றாளோ?" அவன் சீரியசாக சொல்ல அவன் காதை திருகினாள் ஆரா.

"அத நீங்க சொல்லிறிங்களா… ப்பா அடம்பிடிக்கிறதுல யாராலையும் உங்கள மிஞ்ச முடியாது"

"அப்படி என்னடி நான் அடம் பிடிச்சேன்? ம்ம் ஒரு உம்மா கேட்டா கூட தரமுடியாதுனு நீ தான் அடம் பிடிப்ப"

"ரொம்ப தான் தரலனாலும் விடுற ஆளுதான் அத்தான் நீங்க. இருங்க ஒரு நாள் வந்து அடம் பிடிக்கிற அன்னைக்கு கடிச்சி வைக்கிறேன்"

"ஈஈஈஈ… செல்ல குட்டி அப்படிலாம் சொல்லாதடா? பாரு நான் எவ்வளவு குட் பாய்னு" என்றவன் அவள் இதழை கடித்து வைக்க அவனை முறைக்க முயன்று தோற்றாள் ஆராதனா.

அன்று இரவே அவளுக்கு பிரசவ வலி வந்துவிட அதியனை போலவே ஒரு பெண் குழந்தை பிறந்தது. நர்ஸ் குழந்தையை கையில் கொடுக்க அதனை வாங்காமல் ஆரா கண்விழித்த பின் தான் நடுங்கும் கையால் குழந்தையை வாங்கினான். ஆராதனா குழந்தையை வாங்கியவுடன் இருவருக்கும் கண்கள் கலங்கியது.

அவளை அமர வைத்தவன் குழந்தையை தூக்கி கொடுக்க அழகான செப்பு வாயை திறந்து பால் குடித்தாள் அவர்களின் செல்ல மகள். குழந்தையை பார்த்தாலே ஆராவுக்கு பால் ஊரி உடையை நனைத்தது. நல்ல ஆரோக்கியமான குழந்தை என்பதால் குழந்தையும் நன்றாக குடித்தாள். எல்லோரும் மிகுந்த சந்தோஷமாக இருந்தனர். அண்ணன் மகளை கண்டு புவிக்கும் எப்போது தன் மக்களை பார்ப்போம் என்று ஆசையாக இருந்தது. தக்ஷினா குழந்தையை பார்க்க வர மருந்துவமனை வாசனை அவளுக்கு ஒத்துக்கவில்லை அதனால் சற்று நேரத்திலே அவளை அனுப்பிவிட்டனர்.

வருவாள்…



 

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
பெண்ணே 29
mJz7AZw2vszr9Pzf_Ph-wwKs4afoG2oVM7OvDMlbTaceW8mjLjYfWZ28giWmh9s4W4WTGZhEeasLZ1AkcSFhnxirI21ocua0J0WscX-smzAmOiFLkYHD7RKx2S-xzJ8SOXDO5Mo5=s0


மதியம் நேரம் தக்ஷினாவும் விமலனும் ஏர்போர்ட்ல் அமர்ந்திருக்க ஒரு ட்ராலியை உருட்டிக் கொண்டு வந்தான் ரோகன். அவனை பார்த்ததும் விமலனுக்கு புரிந்துவிட எழுந்து அவனிடம் சென்றான்.

"ஹலோ மிஸ்டர் ரோகன்" என வந்தவனை புரியாமல் பார்த்தவன் "நீங்க?" என தன் ஐடியை காட்டிய விமலன் அவனை அழைத்துக் கொண்டு தக்ஷினாவிடம் வந்தான். இருவரும் முதல்முறை பார்த்துக் கொண்டனர் ஆனால் அந்த பார்வை "உன்னை நான் அறிவேன்" என்று தான் இருந்தது.

சென்னை அவுட்டரில் அதே குடோன்க்கு தான் அழைத்து வந்திருந்தாள்.

"சொல்லு ரோகன்... எதுக்கு இதெல்லாம் பண்ற?" அமைதியாக கேட்டாள் அவள்.

"என்ன பண்றேன்?"

"எய் நான் முட்டாள் இல்ல எனக்கு ஒருத்தன் அவ்வளவு பெரிய ஆதாரத்த அனுப்பின உடனே அத நம்பிகிட்டு இருக்க. நான் முத விசாரிச்சதே எனக்கு இத அனுப்பினவன் யாருனு தான். கமான் ரோகன்" என அவள் கத்த

"காம் டவுன் பேபிக்கு நல்லது இல்ல… ஆமா நான் தான் அனுப்பினேன்… அதுக்கு என்ன?"

"ஆர்.ஆர்ற அழிக்கிறது மட்டும் தான் உன் நோக்கமா…? இல்ல நீங்க பண்ண தப்பெல்லாம் தெரியமா இருக்க இந்த பிளானா?"

"வெரி கரெக்ட் தக்ஷினா ஆர்.ஆர் நான் நினைச்ச மாதிரி அழிஞ்சிடுச்சி… இனிமே அவங்களால அப்பாவியா யாரும் சாகமாட்டாங்க" என சிரித்தவன் வாயில் துப்பாக்கியை வைத்தாள் தக்ஷினா.

"என்னடா நல்லவன் மாதிரி நடிக்கிற… அந்த ரெண்டு பெறுக்கிங்களும் எங்க? நீங்க ரேப் பண்ணி பொண்ணுங்கள கொல்றது எனக்கு தெரியாதுனு நினைச்சியா?" என ஒரு நொடி அதிர்ந்தவன் பின் அவளை மெச்சும் பார்வை பார்த்தான்.

"எப்படியும் நீங்க அவனுங்கள கண்டு பிடிச்சிருவிங்கனு தெரியும் பட் என்னையும் சேர்த்து பிடிச்சிட்டிங்க . நான் நினைச்சதை விட ரொம்ப ஷார்ப் தான். ஆனா ஒரு விஷியம் அந்த பொண்ங்க யாரையும் நான் ரேப் பண்ணல"

"ஒஒவ்வ்" நக்கலாக பார்த்தவள் "ஆனா எல்லாரையும் உன் கையால கொன்னுட்ட அதான…? சொல்லு? அவங்கள அவ்வளவு கொடுமை படுத்திட்டு எதுக்கு சாகும் போது மட்டும் வலி தெரியாம கொல்ற?"

"ஆமா ஆமா நான் தான் கொன்னேன்… என்னால அவங்கள காப்பாத்ததான் முடியாது அட்லீஸ்ட் சாகும் போதாச்சும் எந்த வலியும் தெரியாம சாகட்டும்னு தான். விமல் சார் உங்களுக்கு தங்கச்சினா பிடிக்குமா?" என அவன் தலையாட்டியதும்

"எனக்கும் ஒருத்தி இருந்தா… இவ்வளவு பெரிய உலகத்துல நமக்காகவே ஒரு உயிர் இருந்தா எப்படி இருக்கும். என் மோக் இருந்தா என் பொண்ணு மாதிரி வளர்த்தேன். கோழி குஞ்சு மாதிரி என்னையே சுத்திவருவா…. என் அம்மா அப்பா எனக்காக விட்டுட்டு போன என் தேவதை சார்" அவனை மீறி கண்ணீர் வடிந்தது.


"இதோ இந்த கையால தான் கொன்னேன்… அவ துடிக்கிறத பாக்கமுடியம… ரொம்ப நாறுதுனா தாங்க முடியல என்ன கொண்ணுடுனு வலில கதறுனா… எவ்வளவு பெரிய டாக்டரா இருந்து என்ன பிரயோஜனம் அவள மட்டும்மில்ல நீங்க கண்டு பிடிச்சிங்களே பத்து அதோட இன்னும் ஐஞ்சு பொண்ணுங்களயும் காப்பாத்த முடியாம அவங்க கதறத கேட்க முடியாம நான் தான் கொண்ணேன்" என

"என்னடா கதை சொல்ற…?" அவள் அதட்ட

"அவனுங்க போன் என்கிட்ட தான் இருக்கு" என தன் பெட்டியை திறந்து ஒரு போனில் இருந்த மெமரி கார்டை கழட்டி தன் போனில் போட்டவன் அந்த வீடியோவை காட்டினான்.

அது ராதிகா தான் அவள் வலியில் அலற அலற மிக மிக மோசமாக அவளை சந்திப் கொதரி கொண்டிருக்க துருவ் ரசித்து சிரித்தவாறே வீடியோ எடுத்திருந்தான். ராதிகாவும் அபியும் கிட்டதட்ட ஒரேமாதிரி ஜாடையில் இருப்பார்கள். விமலனாள் அதற்கு மேல் பார்க்க முடியவில்லை அபிராமியே துடிப்பது போல் இருக்க காதை இருக்கி மூடிக் கொண்டான். அவ்வளவு தைரியமான தக்ஷினாவே கலங்கி தான் போனாள் தலையே சுற்றியது. அவன் காட்டினான் அத்தனை வீடியேக்கள் விதவிதமான கொடுமைகள் அவர்கள் வலியில் அலறுவதை கேட்டு படபடவென்று வந்தது அவளுக்கு. அதற்கு மேல் வேண்டாம் என தடுத்துவிட்டாள்.

அவள் கை அழுத்தமாக வயிற்றை தடவிப்பார்த்தது. அவளுக்கு குடிக்க ஜூஸ் கொடுத்த விமலன் அவளை அமர வைக்க அமைதியாக குடித்தவள் அவனை பார்த்தாள்.

"நீ ஏன் அவங்கள காப்பாத்தல?"

"காப்பாத்திருக்கலாம் ஐஞ்சு வருஷத்துக்கு முன்ன முதமுறை ஒரு பொண்ண வெறி அதிகமாகி துடிக்க துடிக்க நாசம் பண்ணும் போதே நான் காப்பாத்தி இருக்கலாம். ஆனா அவனுங்களுக்கு ஒன்னும் ஆகாது ஆர்.ஆர் ரத்தோர்ஸ் அவனுங்க. நான் எல்லாம் அவங்களுக்கு ஒன்னுமேயில்ல… என்னையும் கொண்ணுருப்பாங்க அந்த பொண்ணையும் கொண்ணுருப்பாங்க"

"ச்ச உன் ஒருத்தவன் உயிருக்காக செல்பிஷா வா இருந்திருக்க?" விமலன்.

"சுயநலம் தான் சுயநலவாதிதான் நான் செத்துட்டா அவனுங்க திருந்திடுவானுங்களா….? கிடையாது அவனுங்க அழியனும் அதுக்கு ஆர்.ஆர் அழியனும். இவனுங்களுக்கு எப்படி இந்த பழக்கம் ஆரம்பிச்சது தெரியுமா தக்ஷினா?. என் மோக்… அவ கதற கதற அவனுங்களுக்கு போதை அதிகமாச்சாம்… நல்லவன் னு நினைச்சவனே இப்படி பண்ணும் போது அவங்க பாக்குற அந்த பார்வைக்காகவே பலநாள் காத்திருந்து அந்த பொண்ணுங்கள கடத்துவானுங்க. என் மோகி சின்ன வயசுலேந்து அவனுங்கள அண்ணானு கூப்பிடுவா… தக்ஷினா. ச்ச அந்த வீடியோல நான் பார்த்தேன் ரெண்டு நாள் வரைக்கும் என் மோக் அவனுங்க மனசு வந்து விட்ருவாங்கனு கெஞ்சிருக்கா…. மனுஷனா இருந்தா இரக்கம் வந்திருக்கும்"

"ராதிகாவ எப்படி கடத்தினிங்க? அந்த பைக்ல வந்தவன் யாரு? "

"அது நான் தான். அவ அடுத்த நாள் வர கூடாதுனு நினைச்சேன். என் மேல துருவ்க்கு கொஞ்சமா சந்தேகம் வேற இருந்தது. நான் அவனுங்க கூடவே இருந்து எல்லா உதவியும் பண்ணாலும் எந்த பொண்ணையும் தொட மாட்டேன். அவன் என்ன சீன்டிவிட்டு உண்மைய தெரிஞ்சுக்க நினைச்சான். அது மட்டும்மில்லாம என்னால அவனுங்க வலையில் இருந்து நிறைய பொண்ணுங்க தப்பிச்சி போறத நோட் பண்ணிட்டான். சந்திப் ஒரு முட்டாள் அவனுக்கு தான் அது தெரியல. எப்போதும் அவனுங்க தான் பொண்ணுங்க கிட்ட நல்லவன் வேஷம் போடுவானுங்க பட் இந்த டைம் என்ன பண்ண சொல்லி துருவ் கட்டாய படுத்தினான். அன்னைக்கு அவள கடத்தினப்போ என்ன அவ பாத்த பார்வை உள்ளயே செத்துட்டேன். இதுக்குமேல அவனுங்கள விட கூடாதுனு தான் அந்த பைலை உங்களுக்கு அனுப்பினேன். நான் நினைச்ச மாதிரி ரத்தோர்ஸ்க்கு இருந்த எல்லா பவரும் போயிடுச்சி இனிமே அவனுங்கனால என்கிட்டேருந்து தப்பிக்க முடியாது..." என அரக்கதனமாக சிரித்தான்.

"அப்போ அந்த மோதிரம்?"

"அத நான் தான் அவளுக்கே தொரியாம அவ பேக்ல போட்டேன். அந்த சர்ஜிக்கல் நைஃப்பையும் வேனும்னு தான் விட்டுவந்தேன். கொஞ்சமா போலீஸ்க்கு க்ளுவ் தரத்துக்காக ஏன்னா? ஒரு சாதாரண பொண்ணுகிட்ட இதை பாத்தா போலீஸ் ஸ்மெல் பண்ணும்னு நினைச்சேன். எப்படியும் அவனுங்க ஹாண்ட் பேக்க அங்கேயே போட்டு வந்துருவானுங்க. பட் அத பத்தி ஒரு நியூசும் வரல"

"இவ்வளவு நல்லவன் மாதிரி பேசுனா உண்ண விட்ருவோம்னு நீ நினைக்கிறியா? நீ அந்த பொண்ணுங்க மேல ஹார்ம்புல் மருந்துவச்சி டெஸ்ட் பண்ணல?"

"பண்ணல… நான் எந்த டெஸ்டையும் பண்ணல தக்ஷினா… நான் டெஸ்ட் பண்ணிக்கிற மாதிரி நடிச்சேன். நான் அவங்க மேல தலியம் தடவுனது ஆயுஷ்க்கு தெரிஞ்சிர கூடாதுனு தான் அவங்க பாடில டெஸ்ட் பண்ண மாதிரி அவங்கள்ட நடிச்சேன். எப்படியும் அட்டாப்சி ரிப்போர்ட்ல தெரிய வந்தா அவங்க சுதாரிச்சிருவாங்க. அதனால அயுஷ்கிட்ட ஒரு முக்கியமான மருந்துக்காக அவங்கள யூஸ் பண்ணிக்கிறேன் எப்படியும் வீனா போற பாடிதான நம்ம லாபம் பாக்கலாம். இதுக்கு பொண்ணுங்க பாடி தான் வேனும். நீங்க போஸ்மார்டம் ரிப்போர்ட் ஒரிஜினல் போலீஸ்க்கு போகாம பாத்துக்கோங்கனு சொன்னேன். அவனும் ஆசைல நான் சொன்னதெல்லாம் செஞ்சான். அந்த அளவுக்கு என் மேல நம்பிக்கை"

"எதுக்கு நீ தலியம் தடவின?" விமலன்.

"ஹாஹாஹா… தலியம் மாதிரி ஒரு பெயின்புல் பாய்சன் தான் சார் அவனுங்களுக்கு வேனும். அது தோல்வழியா கூட ரத்தத்தோட கலந்திரும். ஒரு லிமிட்க்கு மேல சேர ஆராம்பிச்சதும் ஸ்லோ பாய்சன் மாதிரி அவங்கள அரிக்கும். அவங்ள ஒரு ஸ்டேஜிக்கு மேல காபாத்த முடியாது. எந்த வெறிக்காக எல்லா பொண்ணையும் துடிக்க துடிக்க கொதிரி எடுத்து ரேப் பண்ணானுங்களோ அதே வெறிதான் அவனுங்களுக்கான தண்டனையா மாறனும். ஒவ்வொரு முறையும் அவனுங்க சாவ தேடி தேடி போனானுங்க. இனிமே கடவுள் நினைச்சாலும் அவனுங்கள காபாத்த முடியாது. அவனுங்க இருக்க போற ரெண்டு வருஷமும் வலில துடிச்சி துடிச்சி தற்கொலை பண்ணிக்ககூட முடியாம தோல் சதை எல்லாம் அழுகி புழு பிடிச்சி வெந்து செத்திருவானுங்க"

"மைகாட் இது அந்த பொண்ணுங்களுக்கு தெரியுமா?"

"தெரியும் சார் கடைசியா இந்த உண்மைய நான் சொல்லும் போது எல்லா பொண்ணுங்களும் என்ன சொன்னாங்க தெரியுமா? இந்த ராட்சசன்களுக்கு சாவ எங்களாலயே கொடுத்ததுக்கு நன்றினு சொல்லிட்டு உயிர விடுவாங்க"

அரக்கர்களை தேவர்கள் வெல்வதற்ககாக தன்னை வருந்தி நோம்பு இருந்து தன் உயிறை கெடுத்தார் தசீதி முனிவர். அவர் முதுகெலும்பில் இருந்து வந்த வஜ்ராயுதம் பல அரக்கர்களை கொண்று நீதி வழங்கியது.

இன்றும் நம் சமூகத்தில் பலர் எங்கோ ஒரு மூலையில் தங்கள் உயிர்களை தியாகம் செய்வதனால் தான் ஏதேனும் ஒரு இடத்தில் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம். ஜேம்ஜ் தன் உயிறை விட்டதால் இன்று பேனர்கள் வைக்க தடைபோடப்பட்டது. மோகினி என்ற பெண்ணின் மரணம் பெரும் நாசகார கூட்டத்தையே அடியோடு அழித்தது. இதோ இந்த பொண்களின் மரணம் கொடூரமான இரு சைக்கோகளை அழிக்கும் சக்தியாக இருந்தது. வணிதாவின் மரணம் பல பெண்களை கனவில் இருந்து விழித்துக்கெள்ள வைத்தது… இன்னும் எத்தனையோ…


போலீஸ்க்கு தக்க நேரத்தில் ஆர்.ஆர். ரத்தோர்ஸ் பற்றி சொல்லி ஆதாரங்களையும் சேகரித்து அனுப்பியதற்காக இந்திய அரசால் கவுரவிக்க பட்டாண் ரோகன் பக்டே. அந்த வீடியோ முக்கிய ஆதாரமாக சமர்பிக்கப்பட்டு தூக்கு தண்டனை கைதியாக அடைபட்டனர் துருவும் ரோகனும். ஆனால் அவர்களுக்கு ரோகன் வழங்கிய தண்டனை அவர்கள் வாழ்வில் நரகத்தை காட்டும்.ரோகன் பழையபடி தன் ஆராய்ச்சி செய்ய அனுமதி கிடைத்தது.

*********************

தக்ஷினாவுக்கு வளைகாப்பு என்பதால் ஒரு நாள் அதியன் தன் மூன்று மாத மகள் மகிவர்த்தினியை தன் தாயிடம் தந்து விட்டு ஆராதனாவை ஒரு துணி கடைக்கு அழைத்து வந்திருந்தான். இருவரும் துணி எடுத்துக் கொண்டு வெளியில் வர அவர்கள் முன் அருவாளோடு நின்றிருந்தான் ஒருவன். அவன் ஆராதனா சாட்ச்சி சொல்லியதால் சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் உள்ளே சென்றவன். அவன் சட்டையில் ரத்தகறை வேறு.

அதியன் சட்டென்று அவளை பின்னால் மறைக்க

"ஏய்ய் உன்ன தாண்டி தேடிட்டு வந்தேன். இப்போ தான் என் பொண்டாட்டிய வெட்டிட்டு வந்தேன். இப்போ உன்ன போட்டுட்டு உங்க அண்ணன் அவனையும் போட போறேன்" என்றவன் அருவாளை வீச அவன் நெஞ்சில் எட்டி உதைத்த அதியன் அவளை இழுத்துக் கொண்டு ஓடினான்.

பிரசவம் கண்ட பச்சை உடம்பு காரியாள் ஓட முடியவில்லை
"ஆஆஆஆஆ" ஆராதனா அலற அவள் தோளில் வெட்டிவிட்டான் அவன். ரத்த வெள்ளத்தில் சாய்ந்தவளை அதியன் துடித்து போய் தூக்க மீண்டும் வெட்ட வந்தவனை தடுத்த அதியனுக்கும் வெட்டு விழுந்தது.

அனைவரும் ஸ்தம்பித்து நிற்க அதியன் அவனை ஆராதனா பக்கத்தில் வர விடாமல் தடுக்க தடுக்க மீண்டும் இரண்டு முறை அவளை வெட்டிவிட்டான். ஆராதனாக்கு வெட்டி வெட்டி இழுக்க ஆராம்பித்தது. அதியனுக்கும் இரு வெட்டு விழுந்ததில் தளர்ந்து போனவன் ஆராதனா மேல் விழுந்து அனைத்துக் பிடித்துக் கொண்டான்.

அதற்கு மேல் மக்கள் தாமதிக்காமல் கையில் கிடைத்தை எடுத்து அடிக்க கூறான கற்கள் தலையில் பட்டு அங்கேயே செத்து விழுந்தான் அவன்.

பின் இருவரையும் மருத்துவமனையில் சேர்க்க ஆராதனாக்கு வலிப்பு நின்றபாடில்லை "தண்ணி தண்ணி" அவள் கெஞ்ச சுயநினைவில் இருந்த ஆதியன் கதறினான்.

"அய்யோ… பப்பி பப்பி… ஒன்னும் இல்லடா…பப்பி… பப்பி… என்ன பாரு… மா… பப்பி…" என அழுதவனை பிடித்து இழுத்தனர் மற்றவர்கள்.

"அய்யோ தண்ணி குடுத்துராதிங்க உயிர் அடங்கிடும்" என பக்கத்தில் யாரோ சொல்ல

அவனை அடக்குவதே பெரும் பாடாக இருக்க அவளுக்கோ மெல்ல வெட்டி இழுப்பது அடங்க "தண்...ணி... " என்றவள் கண்ணை மூடிவிட்டாள்.

அதை கண்டு எழுந்து ஒடிவந்தவன் அவளை எழுப்ப அவளிடம் அசைவேயில்லை.

"ஆராதனாஆஆஆஆஆ" அடிவயிற்றில் இருந்து அலறினான் அவன். அந்த இடமே ரத்தமாக இருக்க அவன் அலறலில் ஒடிவந்தனர் அனைவரும்.

"ஆரு… கண்ண திறடி… எய்யய பாருடி… . பப்பி… பாப்பா ஆழுவாடா எழுத்திரிமா… அய்யோ யாராவது சொல்லுங்களேன்…. அய்யோ அய்யோ பப்பி… பேசுடி… டாக்டர்… ஆராதனாஆஆஆ... " அவள் மேல் விழுத்து கத்தியவனை பரித்து இழுத்தனர் மற்றவர்கள். அவர்களை தள்ளிவிடட்வன்

"போகாதடி…. ஆரு… எனக்கு நீ வேனும் பப்பி எழுந்திரிடி எனக்கு பயமா இருக்கு ஆரூ பப்பிமா அத்தானு சொல்லுடா ஆராதனா….." அவள் தோள்களை பற்றி உலுக்கினாள் ஆதி

போகாதடி என் பெண்ணே
நீ போன நான் எங்க போவன்டி
பெண்ணே, ஓ பெண்ணே நீ போகாத பெண்ணே
கனவே, அது நீயே நீ கலையதே கண்ணே
இரவில், இந்த இரவில் நீ போகாதே நிலவே
நீ போன அட நானும் இங்கே தொலைவேனே இருளில்


வருவாள்...


 

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
பெண்ணே 30

(இறுதி)
GR0zNjDwUePkL1Oj50tbK53GpP7b9XhuETHbMYL_CSwwcn-Jz6cRmfWnLUVLpHFdkxKuQxoWqxVQ6LfXa3SEktcDbwnOjeIEZj25bYn7F4o3EL7789M3ZbZYl15UHI1AdbmGz6aO=s0


அவசரமாக டாக்டர் ஓடிவர அவனை பிரித்து இழுத்து அடக்கினார்கள். மருத்துவர் அவள் கண்ணை பார்க்க உயிர் இருந்தது.

"நர்ஸ் உயிர் இருக்கு… பாஸ்ட்" என ஸ்ட்ரெச்சரை இழுக்க அவரிடம் "அவள எப்படியாச்சும் காப்பாத்துங்க" என்றவன் மயங்கி விழுந்தான்.

ஒரே அழுகை சத்தமாக இருந்தது அந்த மருத்துவமனையின் வரான்டா…. ஒரு பக்கம் மகி வீறிட்டு அழுக தக்ஷினாக்கு எதுவும் செய்ய முடியவில்லை கண்கள் தானாக பொங்கி வழிந்தது. சந்தோஷ் தரையில் அமர்ந்துவிட்டான். முத்துவேல் அழுதுக் கொண்டிருந்த சாந்தினியை அனைத்துக் கொண்டார். புவியும் விஷ்ணுவும் தான் அழைந்துக் கொண்டு இருந்தனர். துர்கா பத்து முறையேனும் மயங்கி விழுந்திருப்பார் அவரை தோளில் போட்டுக் கொண்டு ராகவன் வரிசையாக தெய்வத்தை அழைத்தார். விமலன் தக்ஷினா கையை இறுக்கமாக பற்றிக் கொண்டான். அபிராமி தான் குழந்தையை தூக்கி ஆப்பாட்டிக் கொண்டு இருந்தாள்.

முழுதாக ஒரு நாள் ஆகிவிட்டது டாக்டர் எதுவும் நம்பிக்கையான பதில் சொல்லவேயில்லை. அதியனும் மயக்கத்தில் இருந்தான்.

திடிரென்று அதியன் ஓடிவர பின்னே புவியும் விஷ்ணுவும் அவனை அழைத்துக் கொண்டே வந்தனர்.

"பப்பி பப்பி… எங்கடா என் ஆரு…?" என ஐசியு கதவை திறக்க முயன்றவனை அடக்கி அமர வைக்க முடியாமல் அல்லாடினர். சட்டென்று அபிராமி அழுதுக் கொண்டிருந்த மகியை கொடுக்க அழுதுக் கொண்டே வாங்கியவன் ஓரமாக சரிந்து அமர்ந்தான். அடிப்படாத தோளில் அவளை போட்டுக் கொண்டு அப்படி ஒரு அழுகை அழுதான் அதியன்.

"அதி அழுகாத அண்ணிக்கு ஒன்னும் இல்ல… பாரு நீ அழறத பாத்து பாப்பா அழறா" புவி சமாதனம் பேச கதவை திறந்துக் கொண்டு டாக்டர் வந்தார்.

"சாரி சார்… இனிமே ஒன்னும் பண்ண முடியாது. பாக்குறவங்க பாத்துட்டு வாங்க" என விஷ்ணு அங்கிருந்து தூரமாக ஒடிவிட்டான். அதியன் குழந்தையை இறுக்கமாக அனைத்துக் கொண்டு கதறினான்.

"நான் என்ன பண்ண போறேன்…? அய்யோ… பாப்பா அம்மா நம்மள விட்டு போரனு சொல்றாளே…. ஆரு நீ இல்லனா நான் இல்லடி என்கிட்ட வந்துரு… இல்ல நான் உன்கிட்ட வந்துருவேன். புவி புவி… எங்க பாப்பா பாத்துக்கோடா நானும் என் பப்பிகூடவே போறேன்" என குழந்தையோடு தரையில் சரிந்தவனை தூக்கினர் அனைவரும்.

ஒரு புது மருந்துகள் பற்றி பேச அங்கே வந்த ரோகன் இவர்களை பார்த்ததும் அருகில் வர எழுத்து ஓடிய தக்ஷினா அவன் கையை பிடித்துக் கொண்டாள்.

"ரோகன்… என் தங்கச்சி உயிர காப்பாத்தி தா… உன்ன கடவுளா நினைச்சி கேட்கிறேன்" என அழுதவள் கண்ணை துடித்துவிட்டவன் "என்னோட கடமை" என ஆராதனாவை பார்க்க உள்ளே சென்றான்.

ஐந்து வருடங்களுக்கு பிறகு…

"அம்மா நாங்க புது கார்ல தாத்தா கூட வரோம். நீங்க அப்பா கூட அழுக்கு கார்ல போங்க" என அவள் இரு கன்னத்திலும் முத்தம் வைத்த பிள்ளைகளுக்கு தக்ஷினா மாறி மாறி முத்தம் கொடுக்க புவிக்கும் முத்தம் கெடுத்துவிட்டு இறங்கி ஓடினர்.

அவளை அழைத்து வந்து விழா நடக்கும் இடத்தில் காரை நிறுத்தினான் புவி வேந்தன்.

"மாமு அவனுங்கள ஏன் விட்டு வந்த… கேடி உண்மைய சொல்லு?" என அவனை அடித்தாள் தக்ஷினா.

"இதோ இதுக்குதான்" என்றவன் வலிக்க வலிக்க அவள் இதழில் முத்தம் வைத்தான்.

"பொறுக்கி… ப்ச் மிதுவும் விதுவும் இன்னும் சாப்பிடவேயில்ல" என கவலையாக சொன்னவளை இழுத்து அனைப்பில் வைத்த புவி "அம்மா தான் பாத்திக்கிறேன்னு சொன்னாங்கள… விடு தீ. இன்னைக்கு உன் லைப்ல முக்கியமான நாள் அதனால இன்னைக்கு உனக்கு லீவ். பசங்கள நான் பாத்துக்கிறேன்"

"சரி சரி மாமு… டைம் ஆச்சி. எல்லாரையும் கரெக்டா வர சொல்லு. நான் கிளம்புறேன்"

"ஏய் இருடி இந்தா தாலி" என எடுத்து கொடுக்க "இத தான் ரொம்ப நாளா தேடுறேன்" என்றவள் வாங்கி போட்டுக் கொண்டாள்.

"பப்பி… இந்த புடவைல அப்படியே கடிச்சி திங்கனும் போல இருக்கடி" என அவளுடன் இழைந்தான் அதியன்.

"தள்ளி போங்க வேலை இருக்கு. முத பால் டப்பால தண்ணி எடுத்து வைங்க அப்பறம் வந்து திங்கலாம். அப்படியே டயப்பர் எடுத்து என் ஹாண்ட் பேக்ல வச்சிருங்க" என விரட்டினாள் ஆராதனா.

"எய் மூடே போச்சிடி… அட்லீஸ்ட் ஒரு உம்மா வாச்சும் சும்மா தாயேன்?" என அவள் கன்னத்தை பிடித்து கெஞ்ச அவனை முறைத்துக் கொண்டே கன்னத்தில் கொடுக்க வர சட்டென்று அவள் இதழை சிறையிட்டான் அதியன். அவளும் அவனுடன் ஒன்ற கதவு திறக்கும் சத்தத்தில் பிரிந்து நின்றனர்.

அவர்கள் மகள் தான்.

"அம்மா தூக்கு மா…" என தாவினாள் மகிவர்த்தினி. அவளை தூக்கிக் கொண்ட அதியன் "அம்மா தம்பிய வச்சிருக்கால … நீ அப்பா கிட்ட இரு" என முத்தம் வைத்துவிட்டு திரும்பி ஆராதனாவை பார்த்தான்.

"போலாமாடா பப்பி…. தம்பிய வேனா நான் தூக்கிக்கவா?" என "இருக்கட்டும் அத்தான்… பாப்பா அழுவா... " என்றாள் ஆராதனா.

"ஆரா மா" என கத்திக் கொண்டே இரண்டு வானாரங்கள் வர குதித்து இறங்கினாள் மகி.

"எங்கடா உங்க அப்பா?"

"அப்பா அம்மா கூட அப்போவே கிளம்பிட்டாங்க பெரியப்பா. நாங்க தான் தாத்தாகூட வரோம்னு சொல்லிட்டோம்" என்றான் விதுன்.

"பெரியப்பா… நாம புது கார்ல போகலாமா?" என அவன் கையை பிடித்தான் மிதுன். .

"சரிடா போகலாம்" என அவனைவரையும் அழைத்துக் கொண்டு அந்த விழா நடக்கும் இடத்திற்கு வந்தான் அதியன். அவர்கள் குடும்பம் அமரவே பெரிய வரிசை காலியாக இருக்க அவன் எதிரில் ரோகன் கைகுழந்தையை தோளில் போட்டுக் கொண்டு ஒரு எட்டு வயது சிறுவனை கையோடு பிடித்துக் கொண்டு நின்றான்.

"எங்கடா உன் மம்மி… ?"

"அதோ… வந்துட்டாங்க டாடி" என விரைந்து வந்த வாணியை காட்டினான். ஆம் வாணியும் ரோகனும் காதலித்து மணந்துக் கொண்டனர். வாணியின் மகனை தன் மகனாக மனதார ஏற்று கொண்ட ரோகன் ஷியம் பக்டே என்று அவன் பெயரை மாற்றிவிட்டான்.

"என்னாச்சு கோபாமா இருக்கிங்களா?" வாணி நாக்கை கடிக்க

"இல்லமா… இந்தா மோகிய பிடி உன்ன தேடி ஒரே அழுகை" என அவளிடம் நீட்ட "என்னமா… அம்மாட்ட வாங்க" என்றவாறே வாங்கிக் கொண்டாள் அவள்.

"டாடி அதி அங்கிள்…" ஷியம் அவனை பிடித்து இழுக்க அவனிடம் வந்து நின்றனர் அதியன் குடும்பம்.

"நல்லாருக்கிங்களா டாக்டர்? பாப்பா எப்படி இருக்கா?" என நலன் விசாரிப்புக்கு பின் அவர்கள் இடத்தில் சென்று அமர்ந்தனர்.

வாயிலில் சந்தோஷுடன் நின்றிருந்த மகி சிரித்துக் கொண்டு இருந்தாள். அங்கு சேரில் அமர்ந்திருந்த ஒருவன் வலியில் துள்ளி குதிக்க அவனை பீதியுடன் பார்தனர் ஆண்கள். அவர்கள் பின் இருந்த போஸ்டரில் "பீரியட்ஸ் சிமிலேட்டர்" என்று இருந்தது. அதாவது அந்த கருவியில் இருக்கும் வொயர்சை வயிற்றில் ஒட்டிக் கொண்டு அந்த சின்ன மிஷினை ஆன் செய்தால். பெண்கள் மாதவிடாய் காலத்தில் அனுபவிக்கும் வலியினை அது அவர்களுக்கும் ஏற்படுத்தும். நாலாவது லெவல்கே ஆண்கள் அலற… பதிநான்ங்கு வரை பெண்கள் அசராமல் நின்றனர். சில ஆண்கள் தனாக வந்து அனுபவம் பெற்றவர்கள் தங்கள் மனைவிமார்களை பார்த்து வருந்தினர்.

ஆஷாவும் சரத்தும் உள்ளே வர அவர்களிடம் ஓடினாள் மகி. நிறைமாத கர்ப்பிணியான ஆஷா மகியை தூக்க முயல அவளை தடுத்து சரத் தூக்கிக்கொண்டான்.

"வாங்க அண்ணா… ஆஷா… வா வா. பேபி என்ன சொல்லுது" என அவளிடம் வந்தாள் சந்தோஷின் கண்மணி.

"அட ஏன் கண்மணி… நீ. ரொம்ப படுத்துறான்" என இருவரும் போசிக்கொள்ள சரத்தும் சந்தோஷிம் பாவமாக பார்த்துக் கொண்டனர். லாயர் ஆஷாவும் லாயர் கண்மணியும் தோழிகள் பேச ஆரம்பித்தாள் பேசிக் கொண்டே தான் இருப்பார்கள்.

"கண்மணி… அம்மா மகிய தேடுனாங்க போய் குடுத்துட்டு வா" என அவர்களை பிரித்துவிட்ட சந்தோஷ் சரத்தை பார்த்து கண்ணடித்தான்.

"தேரிட்ட மேன் நீ" ரகசியமாக அவன் வயிற்றில் குத்திய சரத் ஆஷாவை அழைத்துக் கொண்டு சென்றான்.

"யோவ் ஹஸ்பண்ட் அங்க பாருங்க உங்க முறை பையன்ன" என அமிரா விஷ்ணுவை இடிக்க அவளை முறைத்தான் அவன்.

"அவன் எனக்கு முறபையனா?" என்றவாரே தன் இரண்டு வயது மகனை வாங்கிக் கொண்டவன் சந்தோஷை பார்த்து சிரிக்க அவனை முறைத்தான் சந்தோஷ்.

"பாத்தீங்களா… எப்படி முறைக்கிறர்னு அதான் முறபையனு சொன்னேன்" என்றவள் சாக்லேட்டை தின்றுக் கொண்டே வர…

"அமி அதை கீழ போடு…அப்பறம் சாகிரும் சாக்லேட் கேட்டு அழுவான்" என அதட்ட அவனுக்கு பழிப்பு காட்டியவள் அதை தூக்கிபோட்டு விட்டு வந்தாள்.

"நல்லாருக்கியா சந்தோஷ்.?"

"ம்ம் நல்லாருக்கேன்… இதான் நீ வர நேரமா? மகி உன்ன எங்கனு கேட்டு தொல்ல பண்றா போய் பாரு" என விஷ்ணுவை விரட்ட சிரித்துக் கொண்டே உள்ளே சென்றான் அவன்.

"என்ன சந்தோஷ் எல்லாம் முடிச்சிட்டுனா வா உள்ள போவோம் பங்ஷன் ஸ்டார்ட் பண்ண போறாங்க" என ஒரு வயது அணுவதனாவை தூக்கி கொண்டு வந்தான் விமலன். சந்தோஷை பார்த்ததும் தாவிய வதனாவை தூக்கி கொண்டவன் "ம்ம் போகலாம் அவ்வளவு தான்" என அவனுடன் உள்ளே வர மகளை வாங்கிக் கொண்ட அபிராமி சாந்தினியுடன் சென்று அமர்ந்தாள். அவள் தான் சாந்தினி நடத்தும் ட்ரெஸ்டை பார்த்துக்கெள்கிறாள் கூடவே சினிமாவில் பின்னனி பாடகியாக தன் சொந்த முயற்சியால் முன்னேறி கொண்டு இருக்கிறாள்.

அதி தன் மகளை மடியில் வைத்துக்கொண்டு இருக்க சினுங்கிய மகனை தட்டிக் கொடுத்தாள் ஆராதனா. ஆராதனா ஹில்ஸின் எம்டியாக இருக்க அதியன் பவுனின் எம்டியாக பொறுப்பேற்றுக் கொண்டான். பக்கத்தில் தக்ஷினாவின் மகன்கள் இருக்க ஒரு குட்டி தேவதையை தூக்கி கொண்டு வந்த புவி அவர்களுடன் அமர வாண்டுகள் இரண்டும் தன் தங்கையோடு விளையாடியது. அவள் தக்ஷினாவின் புதல்வி சிவானி.

மேடையில் வரவேற்ப்பு உறை முடித்து சிறப்பு விருந்தினராக சீப் மினிஸ்டர் பேசிக் கொண்டு இருந்தார். ரௌத்திரம் பள்ளியின் வெற்றி விழா அது. தன் வேலையை ராஜினாமா செய்த தக்ஷினா ரௌத்திரம் பள்ளியை திறந்தாள். அதில் பெண்களுக்கான தற்காப்பு கலைகளிலிருந்து பல நாட்டுகளில் உள்ள கலைகளும் அவர்கள் கற்று தந்தனர். பீஸ் என்று பெரிதாக ஒன்றும் வாங்கவில்லை முடிந்தவர்கள் கொடுத்தார்கள். அனைத்து விதமான கலைகளையும் அவர்கள் சொல்லிதர எல்கேஜி செல்லும் குழந்தையில் இருந்து ஐம்பது வயது உள்ள பெண்களும் தற்காப்பு கலைகள் கற்றனர். தமிழ்நாடு முழுவதும் ரௌத்திரம் திறக்க பட்டு நாளுக்கு நாள் அதில் சேர்பவர்கள் அதிகமாகினர். இதை தவிர்த்து நம் நாட்டின் கலைகளை கற்று தருவதற்காக ஆயிரம் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க பட அவர்களுக்கு இது நல்ல வேலை வாய்பாக இருந்தது. அவர்கள் குடும்பமும் அவளை வாழ்த்தினர். அதற்காக தான் இந்த வெற்றி விழா.

அவள் முயற்சியின் வெற்றி விதையாக பல செய்திகள் அவளை வந்து சேர்ந்தது.

தன்னிடம தவறாக நடுந்துக்க முயன்ற ஆசிரியரை ஒற்றையாளாக அடித்து கட்டிவைத்த மாணவி. ரௌத்திரத்தில் கற்றுக் கொண்ட கலைகள் தனக்கு தன்னம்பிக்கையும் தைரியத்தையும் தருவதாக பேட்டி கொடுத்தாள்.

காதலிக்கவில்லை என்றால் கத்தியால் குத்திவிடுவேன் என மிரட்டிய வாலிபனை துரத்தி துரத்தி அடித்த கல்லூரி மாணவிகள். நடந்து செல்லும் போது கழுத்தில் இருந்த செயினை அறுக்க முயன்ற இருவரை லாவகமாக கீழே தள்ளி கிடுக்கு பிடி போட்ட பாக்ஸிங் மாமி. வித வித விதமான செய்திகள். பெண்கள் தங்களை காத்துக்கொள்ளும் வித்தைகளை கற்றுக் கொண்டு நிமிர்ந்து நின்றனர். ஆணக்கு இணையாக உடலளவிலும் பலம் வாய்ந்தவர்களாக தாங்கள் மாற காரணம் ரௌத்திரம் என்று வானம் முழங்க கர்ஜித்தனர் பெண் சிங்கங்கள். கற்பழிப்பு சம்பவங்கள் குறைந்தன பெண்ணை கற்பழிக்க முயன்றவனுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்ட கூட ஆள்இல்லை. பெண்கள் தற்காப்புகாக கொலை செய்தால் குற்றம் இல்லை என்னும் போது துணிந்து கையை முறுக்கிக் கொண்டு நின்றனர்.

இது தானே அவள் கணவு… லட்சியம்… இந்தியா முழுவதும் ரௌத்திரம் வாகை சூடும் என்று அவள் லட்சியம் கண்டிபாக நிறைவேரும்… அந்த நம்பிக்கையும் அவளுக்கு இருக்கிறது

முதல்வர் அணிவித்த மெடலை வாங்கிக்கொண்டவள் கீழே அமர்ந்திருந்த சகோதரன் கணவன் குழந்தைகள் குடும்பம் அனைத்தையும் பாத்தவிட்டு மைக்கில் சென்று நின்றாள்.

"இந்த பேரு இந்த பாராட்டு எல்லாமே உங்க வளர்ச்சிக்கு கிடைத்த பரிசு… பெண்களின் முன்னேறத்துக்கான வெற்றி" என்றவள்

"நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்னி உரைப்பது கேட்டீரோ"


என அவள் ஆரம்பிக்க அவளுடன் சேர்ந்து அந்த அரங்கத்தில் இருந்தவர்கள் மட்டுமல்ல அதை உலகின் முலைமுடுக்கில் இருத்து பார்த்த அனைவரும் உரக்க சொல்லிக் கொண்டனர்.


போகாதடி என் பெண்ணே ….
துணிந்து நின்று பார்…
போர்க்களமும் உன் காலடியில்
பூவனம் ஆகும்…


பெண்ணே வருவாய்!!​
❤​

நன்றி

 
Last edited:
Status
Not open for further replies.
Top Bottom