Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


RD NOVEL போகாதடி என் பெண்ணே! - Tamil Novel

Status
Not open for further replies.
பெண்ணே 14

O2rjZ2Y8vNDEQvypSxpa_JLb2EDULVd3v0E7RcOluF9UBbEiN6Ua-mc-_xG6ZG8711sl9vAM6Ad_CxkXaMnJfeWxjmzko13JP9JEsYai1GlQs0LAlVUipySVsZ9AP1c5VAElKM_I=s1600


"ஹலோ" எதிர்முனையில் நடுத்தர வயது பெண்ணின் குரல்கேட்க "ஹலோ மேம் என் பேரு சந்தோஷ்" தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான் அவன்.

"எந்த சந்தோஷ்? எனக்கு அப்படி யாரும் தெரியாதே"

"நான் உங்க ஆஃபிஸ்ல ஓர்க் பண்ற மிஸ்டர் ராகவனோட சன் மேடம்"

"ஓஓ…. ராகவன் சார் பையனா" அவர் பேச்சில் இருந்த இளக்காரத்தில் பல்லைகடித்துக் கொண்டு அமைதியாக பேசினான் அவன்.

"ஆமா மேடம்"

"என்ன விசியம்?"

"அது ஆஃபிஸ்ல பணம் கானாபோனது பத்தி கொஞ்சம் பேசனும் மேடம்"

"ஆபீஸ் விஷயத்தெல்லாம் வெளி ஆளுங்ககிட்ட பேச முடியாதுங்க" அவர் கண்டிப்புடன் பேச வேறு வழியின்றி கெஞ்சினான்.

"ப்ளீஸ் மேடம் கொஞ்சம் நான் பேசுறத கேளுங்க"

"நீங்க எதா இருந்தாலும் போலீஸ் ஸ்டேஷன்ல போய் பேசிக்கோங்க"

"ஏன் மேடம் கோப படுறிங்க இத ஸ்மூத்தா முடிச்சிகலாமே. அந்த பணத்தை எங்க அப்பா எடுக்கலனு எல்லாருக்குமே தெரியும்" சமாதன வார்த்தை பேசினான்.

"அப்படி எல்லாரையும் நம்ப முடியாதுங்க. பணம் மிஸ்டர் ராகவன் பொருப்பில இருந்தது. அது காணா போனா அவர்தான் பதில் சொல்லணும்" கராராக இருந்தார் அவர்.

"என்ன மேடம் உங்ககூட எவ்வளவு வர்ஷமா ஓர்க் பண்றாங்க நீங்களே இப்படி பேசினா எப்படி? உதவி பண்ண கூடாதா மேடம்"

"பின்ன எப்படி பேசனும்? இதே ஆஃபிஸ்ல தான் ராகவன் கூட நானும் வொர்க் பண்ணேன். மேனேஜர் போஸ்டிங்க போய் ஒரு பொம்பளைக்கு தந்திருக்காங்க இவங்களுக்கு எல்லாம் என்ன தெரியும் இளிச்சி இளிச்சி பேசதான் தெரியும்னு என் காது படவே பேசிருக்காரு. லேடி ஸ்டாப்னு மரியாதையாகூட பேசமாட்டாரு. மட்டம் தட்டி பேசிட்டே இருப்பாரு இப்போ பிரச்சனைனா மட்டும் எப்படி நான் உதவி பண்ணனும்னு எதிர்பாக்குறிங்க" அந்த பக்கம்வந்த கோப வார்த்தைகளில் பேச்சற்று போனான் சந்தோஷ். ராகவன் மேல் அவனுக்கு கோபமாக வந்தது.

"அதெல்லாம் மனசுல வச்சிகாதிங்க மேடம். ஏதோ வயசானதுல என்னனு தெரியாம பேசிருப்பாங்க. அது மட்டுமில்ல அஞ்சு லட்சம் பணம் ஏதாச்சும் ஹேல்ப் பண்ணுங்க. அவர் பேசினதுக்கு நான் சாரி கேட்டுக்கிறேன்" பல சாரிகளை வாரியிறைத்து அவரை மலையிறக்கினான் சந்தோஷ்.

"ராகவன் பையன் நீங்க வயசுல சின்னவங்களா இருந்தாலும் நீங்க எப்படி தன்மையா பேசுறிங்க. அன்னைக்கு மிஸ்டர் ராகவன் பணத்த காணா அடிச்சதும் இல்லாம அவருக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி பேசுறாரு சொல்லி வைங்க இனிமேலாச்சும் லேடிஸ்னு கேவலமா நினைக்காம இருக்க சொல்லுங்க" அவன் காது தீயும் அளவிற்கு பேசினார் அவர். அத்தனையும் அவர்மேல் உள்ள பல நாள் காண்டு என்பது நன்றாக தெரிந்தது.

"தன்மையா? நானு? ஐஞ்சு லட்சமாச்சே வேற என்ன பண்ண முடியும். இதுதான் சாக்குனு இந்தம்மா ஓவரா கெத்து காட்டுதே. எல்லாம் இந்த அப்பாவால" அவரை மனதில் வஞ்சிக்கொண்டே ராகவனை முறைத்தான்.

"விடுங்க மேடம் அந்த காலத்து மனுஷன் இன்னும் பழசுலே இருக்காரு. உங்கள மாதிரி என்ன மாதிரி யூத்தா இந்த காலத்துல உள்ளவங்க சொல்றது அவருக்கு புரியுமா?" ஒரே போடாக போட்டு உச்சி குளிர வைத்துவிட்டான் அவன்.

"என்னது யூத்தா அட பாவி அந்தம்மாக்கு என்ன விட 4 வயசு தாண்டா கம்மி. நான் மட்டும் அந்த காலத்து மனுஷனா" ராகவனின் பாவனையில் அவர் மனதை படித்தவன் "செய்யிரதெல்லாம் செஞ்சுட்டு இது தான் கொறச்சல். மூஞ்ச அப்படியே பாவமா வச்சிகிட்டு" என மனதில் புகைந்து "ஏதாச்சும் பார்த்து செயிங்க மேடம்" என்றான்.

"உங்களுக்காக ராகவன் மேல கம்ப்ளைன்ட் தரல பட் பணம் நீங்க தான் கட்டனும். எப்படியும் பணம் கானாபோனதுக்கு கம்ப்ளைன்ட் பண்ணா அவர் மேலதான் சந்தேக படுவாங்க சோ நீங்க கட்டுங்க பணம் திரும்பி கிடைச்சா உங்களுக்கே வந்துரும். சீனியர் கிட்ட சொல்லி யார்னு விசாரிக்க சொல்லுறேன்"

"என்ன மேடம் வேற வழியே இல்லையா? "

"பணத்த கட்டிட்டா பிரச்சனை இல்ல ராகவன் சார் மேலயும் தப்பு இருக்கு. சாவிய தொலைசிருக்காங்க. முடிஞ்சா நாளைக்கே கட்டிருங்க"

"சரிங்க மேடம் ரொம்ப தேங்ஸ்"

"சரிங்க" என அவர் போனை வைத்து விட்டார்.

"வேலைபாக்கிற இடத்துல வாய வச்சிக்கிட்டு சும்மா இருக்கனும். அறிவே இல்லப்பா உங்களுக்கு. உங்களால அந்த அம்மா கிட்ட நான் கெஞ்ச வேண்டியதா போச்சு. காதுல ரத்தம் வராதது தான் மிச்சம். பணத்த கட்டிட்டா பிசரச்சனை கிடையாதாம்" போனை வைத்ததும் ராகவனிடம் எகிறினான் சந்தோஷ்.

"அந்த லேடிக்கு என் மேல பொறாமைடா" என்றவரை முறைத்த சந்தோஷ் "இப்போ பணத்துக்கு என்ன பண்றதுனு பாருங்க" என கத்தவும் கோபித்துக் கொண்டார் ராகவன்.

"நானே பார்த்துக்கிறேன்"

"ப்ச் நீங்க சம்பாதிச்சு எங்களுக்குதானே செலவு பண்ணிங்க . இப்போ உங்களுக்கு பிரச்சனைனா நான்தான் செய்யனும். என்கிட்ட இப்போ ரெண்டு தான் இருக்கு கார்க்கு பணம் வேற கட்டிருக்கேன் அத கேன்சல் பண்ணா மூணு வரும் இன்ஸ்டால்மெண்ட்ல இந்த வருஷம் வாங்கலாம்னு இருந்தேன்"

"வேண்டாம் சந்தோஷ் வெளில பார்த்துக்கலாம் நீ ரொம்ப நாள் ஆசை பட்டு இப்பதான் கார்க்கு பணம் கட்டிருக்க" தயங்கினார் ராகவன்.

"விடுங்கப்பா பார்துக்கலாம் கார் எப்ப வேணாலும் வாங்கிக்கலாம்" அவன் சொல்லிக்கொண்டு இருக்க தயங்கி கொண்டு முன் வந்து நின்றாள் ஆராதனா. இருவரும் அவளை என்ன என்பது போல் பார்க்க "என்கிட்ட கொஞ்சம் பணம் இருக்கு அதையும் சேர்த்துக்கலாம் அண்ணா" என இருவரும் அவளை முறைத்தனர்.

"என்ன பழக்கம்? உன்கிட்ட வந்து நான் கேட்டனா? போய் வேலைய பாரு" சந்தோஷ்.

"இல்ல என்கிட்ட சும்மாதான் இருக்கபோகுது. அப்பறமா வேணாலும் திரும்பி கொடு"

"ஒரு இருபதாயிரம் இருக்குமா. உன்கிட்ட இருந்து அத வாங்குறதுக்கு நான் வெளிலே பார்த்துப்பேன்" ராகவனின் ஏளனமான பேச்சில் கோபமாக வந்தாலும் இத்தனை வருடம் அவர் உழைப்பில் தானே வாழ்ந்தோம் என்று சமாதானம் செய்த்துக் கொண்டாள்.

"இல்லப்பா ஓரளவு இருக்கு"

"ப்ச் நீ வாங்குற பத்தாயிரம் பதினஞ்சாயிரம் சம்பளத்தில என்ன பெருசா சேர்த்து வச்சிருக்க போர. நீ வேலைக்கே போக தேவயில்லனு சொல்லிட்டு இருக்கேன். போ போய் வீட்டு வேலைய பாரு. இந்த பிரச்சினைய நாங்க பார்த்துப்போம்"

"என்கிட்ட ரெண்டு லட்சம் இருக்கு அண்ணா. வெளில வாங்கினா வட்டி கட்டனும். அதுக்கு இத போட்டு கட்டலாமே"

"உனக்கு ஏது இவ்வளவு பணம்"

"ரெண்டு வருசமா அம்மா கிட்ட கெடுத்தது போக என் சம்பளத்தில சேர்த்தது ஒரு லட்சம் இருந்தது இன்னைக்கு மார்னிங் எனக்கு சேலரி கிரிட் ஆகிடுச்சி அண்ணா"

"நீ மாசம் எவ்வளவு வாங்குற?"

"பழைய கம்பேனில 50 வாங்கினேன். இப்ப வேலை பாக்கிற இடத்தில 70 தராங்க" அவள் சாதாரனமாக சொல்வதை இருவரும் அதிர்ச்சியாக பார்தனர்.

"பி.ஏக்கு எப்படி இவ்வளவு தராங்க? உன் பே சிலிப் எடுத்துட்டு வா" சந்தோஷ் சந்தேகமாக பார்க்க அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு "நான் பி.ஏ மட்டும் இல்ல ரெண்டு கம்பேனிலையும் மேனேஜர்" என தன் போனில் இருந்த சாப்ட் காப்பியை காட்டினாள். சந்தோஷ் முகம் ஒரு மாதிரியாக மாறியது அவனை விட அவள் சம்பளம் அதிகம் என்பதே அதற்க்கு காரணம்.

"உன் பணம் எங்களுக்கு தேவயில்ல எடுத்துட்டு போ அப்பா பிரச்சினைய நான் பார்த்துப்பேன்" முகத்தில் அடிப்பது போல் பேசினான் அவன்.


"ஏன் சந்தோஷ் நான் தரகூடாதா? அப்பாக்கு பிரச்சனைனா எனக்கும் தான் கஷ்டமா இருக்கும் நானும் தரேன்"

"என்ன அதிகமா சம்பாதிரிக்கிற திமிரா? சந்தம் ஓவரா இருக்கு" அவளை கணல் பார்வை பார்த்தான் சந்தோஷ்.

"ஏன் இப்படி பேசற அண்ணா? எனக்கு நகைக்கு நீயும் அப்பாவும் சீட்டுலாம் போட்டு வச்சிருக்கிங்க. எதோ என்கிட்ட சும்மா இருக்கிறத தான தரேன்" அவள் எவ்வளவு சொல்லியும் வேண்டாம் என்று திட்டியவனை ஓரு வழியாக ஒத்துக்க வைத்துவிட்டு சமயல்கட்டிற்கு வந்தவளை கோபமாக பார்த்தார் துர்கா.

"உனக்கு என்னம்மா? "

"எதுக்கு பாப்பா உன்கிட்ட இருந்த மொத்த பணத்தையும் கொடுத்த. இப்போ வண்டி வாங்க என்ன பண்ணுவ"

"நம்ம அப்பாதானமா விடுங்க வண்டி கொஞ்ச நாள் போகட்டும் இப்போதைக்கு ரொனல்டோ இருக்கான்"

"ஆமா அந்த ஓட்ட வண்டியா. அதுதான் அண்ணன் பணம் வச்சிருக்கனு சொன்னால்ல"

"அது சந்தோஷ் கார்க்கு கட்டிருந்தது. கார் வாங்க போறேனு எவ்வளவு ஹேப்பியா இருந்தான். பிரண்ட்ஸ் கிட்ட வேற சொல்லிட்டு இருந்தான். அத எப்படி கேன்சல் பண்ணறது. நம்மலாம் நினைச்சோன எதையும் சட்டுனு வாங்க முடியாதுமா"

"என்னவோ பாப்பா அவன் கிட்டயாச்சும் பைக் இருக்கு நீ தான் சிரமபடுற" கலங்கிய கண்ணை துடைத்துக்கொள்ள இருவரும் சமைக்க ஆரம்பித்தனர். இதையனைத்தும் தண்ணீர் குடிக்க வந்த சந்தோஷ் காதில் நன்றாக விழ போசனையுடன் திரும்பி சென்றுவிட்டான்.
__________

"உன் பேரு தான் அமிராமியா மா?"

"ஆமா சார்"

"சரிமா நீ திங்க கிழமைலிருந்து வா. உனக்கு ஸ்கூல் முடிஞ்சி ஒரு மணிநேரம் கிளாஸ் இருக்கும் வாலண்டியர் ஸ்டுடன்ஸ்க்கு ஸ்பெஷல் கிளாஸ் எடுக்கனும். சனி ஞாயிறும் ஹாப்டே கிளாஸ் இருக்கும் "

"சரிங்க சார்"

"அப்பறம் வேலைக்கு லீவ் போடாம வரனும் லேட்டா வரதெல்லம் இருக்க கூடாது. நான் ரொம்ப கண்டிப்பான ஆளு வேலைய விட்டு நிறுத்திருவேன்"

"அய்யோ இல்ல சார் காலேஜ் விட்டோன லேட் பண்ணாம வந்திருவேன்"

"நல்லா படிக்கனும். டிசி சார் சொன்னனால தான் உனக்கு பர்மிசன் தந்தேன் மதியம் காலேஜ் முடிஞ்சதும் ரெண்டு மணிக்களாம் வந்திருக்கனும்"

"நன்றி சார் கண்டிப்பா என் வேலைய நல்லா பண்ணுவேன்" மனதார சொல்லிவிட்டு வெளியில் வந்தாள் அபிராமி. விடுமுறை என்பதனால் மதிய உணவு நேரம் பத்து பனிரெண்டு வகுப்பு பள்ளி பிள்ளைகள் அங்கும் இங்குமாக நடந்துக்கொண்டு இருந்தனர்.

அன்று அந்த காவல் அதிகாரி சொன்னதுபோல் இந்த பள்ளியில் அபிராமிக்கு பாட்டு டீச்சர் வேலை வாங்கி தந்து படிப்பிற்க்கும் பிரச்சனை இல்லாமல் ஒரு வழி செய்து கொடுத்து விட்டுதான் சென்றார். அந்த பள்ளியும் அவள் கல்லூரிக்கு அருகிலே இருப்பதனால் நிம்மதியாக இருந்தது.


வியர்த்த முகத்தை துடைத்துக்கொண்டு ஆட்டோ வருகிறதா என்று பார்த்தாள் உச்சி வெயில் மண்டையைப் பிளக்க கண்ணுக்கு எட்டியது கானல் நீர் மட்டும் தான். இந்த ஒரு மாதமாக அலைந்து திரிந்து உடம்பு சோர்வாக இருந்தது. சற்று தொலைவில் இருந்த பேருந்து நிறுத்ததை நோக்கி நடந்தாள். ஏழ்மை பழகியதாக இருந்தாலும் ராதிகாவை தாண்டி அவளுக்கு ஏதுவும் பெரிதாக அணுகியதில்லை. இன்று வயிற்று பாட்டுக்கும் படிப்பிற்கும் தனியே போராடுவதுடன் ஆறுயிர் தமக்கையை தேடி ஒடிக்கொண்டு இருக்கிறாள்.

"ராதிகா எங்க இருக்க? என்னால முடியல திரும்ப வந்திருக்கா" கத்தி அழவேண்டும் போல இருந்தது நடக்ககூட திராணியற்று தொண்டை அடைத்தது நகராமல் கால்கள் மெல்ல நகர்ந்தது. உலக்தின் மருமுகம் தன் கோரத்தை காட்டி மிரட்டியது பதினைந்து வயதில் ராதிக தாங்கிய சுமைதான் பத்தொன்பது வயதிலும் பெரும் பாரமாக அழுந்தியது அபிராமிக்கு. நாளை என்ற வார்த்தைதான் எண்ணெயில் ஊறிய திரியாக அவளை இயங்க வைத்தது. பேருந்து நிறுத்தத்தில் இருந்த கட்டையில் அமர்ந்து பையை அனைத்து கொண்டு கானல் நீரை வெறித்தாள்.

"பசிக்குது" என கத்திய வயிற்றை தண்ணீர் ஊற்றி அடக்கியவளை எதர்ச்சையாக பார்த்த விமலனுக்கு கண்களை எடுக்க விடமால் அனைபோட்டது போல் இருந்தது. அதற்கு காதலோ வயதுகோளாறோ சத்தியமாக காரணம் கிடையாது அவள் கண்கள் மட்டுமே, அந்த கண்ணில் வழிந்த சோகமே, தூசி படிந்த ஓவியமாக இருந்த அந்த ரவிவர்மனின் வர்ண தீண்டலே அவனை பார்க்கவைத்தது. பட்டாபூச்சியாய் சிறக்கடிக்கும் வயதில் அப்படி என்ன சோகம் என்ற ஆராய்ச்சி பார்வை அவனுள்.

கருவலையங்கள் குள் சிக்கி ஜிவனற்று ஆடிய நயனத்தில் பல கண்ணீர் கவிதைகள் ஆழி பேரலையாய் அவனை சுருட்டி இழுத்தது. பக்கத்தில் சென்ற வண்டியின் தீடிர் ஹாரண் சத்தத்தில் அவள் உடல் தூக்கிபோட நடுங்கிய கைகள் நான் பயத்தின் கைதி என்று சொல்வது போல் இருந்தது விமலனுக்கு. சிறைமீட்க நகர்ந்த அவன் கால்கள் அவளை நெருக்கும் முன்னே இடையில் வந்த பேருந்து அவளை அவனிடம் இருந்து தூரமாக்கி செல்ல அவள் முகத்தை விட அந்த கண்ணகள் மட்டுமே அவனுள் பதிந்துபோணது. அவள் துயர்தீர்க்க விளைந்த அவன் மனதை இன்று மனிதம் என்றாலும் காதாலாக மாறுமா என்பதை காலம் தான் அறியும்.
_____________________

மிச்சமான உணவு வகைகளை ஹோட்டல் ஹோட்டலாக சென்று வாங்கி வந்து சாலையோரம் பிச்சை எடுப்பவர்கள் ஊனமுற்றவர்கள் வயதானவர்கள் என கொடுக்கும் குழுவினர் உணவு வழங்கி கொண்டு இருந்தனர்.

"பாட்டிமா இந்தாங்க நீங்க அன்னைக்கு கேட்ட பிரியாணி" தன் கையில் இருந்த ஒரு பொட்டலத்தை கொடுத்தாள் ஆஷா.

"என்ன கண்ணு நான் சும்மா தான் கேட்டேன். உன் கைகாசு போட்டு வாங்கினியா?" என்றவாறே அவர் அதை வாங்கிக்கொள்ள இரு கண்ணையும் சுருக்கி சிரித்தாள் அவள். அவர் தன் இடுப்பில் வைத்திருந்த பத்துரூபாய் நோட்டுகள் மூன்றை எடுத்து அவளிடம் நீட்ட அவரை முறைத்தவள் "எனக்கு புளிப்பு மிட்டாய்னா பிடிக்கும் நாளைக்கு எனக்கு வாங்கிதாங்க எங்கேயும் கிடைக்க மாட்டேங்குது இப்போ இத பத்திரமா வச்சிக்கோங்க. அப்பறம் பிரியாணி எங்க அம்மா செஞ்சது நான் எந்த செலவும் பண்ணல பாட்டிமா" கலகலவென சிரிந்தவள் வேறு ஒருவருக்கு கொடுக்க சென்றாள்.

"நல்லா இருப்பிங்க பிள்ளைங்களா" என காற்றில் வாழ்த்தி சென்றார் மூதாட்டி.

எல்லோருக்கும் உண்ன கொடுத்துவிட்டு மானிடகுழு இளைப்பாற கைகளை கழுவிவிட்டு தண்ணீர் குடித்தவளை அழைத்தான் அவன்.

"என்ன வக்கீல் மேடம் சோசியல் சர்வீஸ் சா?" அவள் திருப்பி பார்க்க ஒற்றை கண்ணடித்துவிட்டு இதழ் விரிந்த புன்னகையோடு சரத்தான் நின்றுக்கொண்டு இருந்தான்.

அவனை பார்த்து நக்கலாக புருவத்தை நெரித்தாள் ஆஷா. "ஏன் ஆமானு சொன்னா நீங்களும் வந்து பண்ண போறிங்களா?"

"நல்லா போச்சிபோங்க மேடம் என் வேலையே சொசைட்டிக்கு சர்வீஸ் பண்றதுதான்"

"ஏது நீங்க சப்பளம் வாங்கிட்டு செய்யுறதா?" என்று சிரித்தவளோடு சேர்ந்து சிரித்தான் அவன்.

"நீங்க ஈசியா சொல்லிட்டிங்க. சம்பளத்துக்கு மட்டும் வேலை பார்த்தா நாங்க செய்யுரதுக்கு பாதிகூட வராது. எந்த டைம் க்ரைம் நடக்கும் எதுவும் தெரியாது போன் வந்தா ஸ்பாட்டுக்கு போகனும் நடுராத்திரியா இருந்தாலும் சரி. ஏதோ கோபத்தில கத்தினா கூட உடணே போன மூஞ்சுக்கு நேரா தூக்கி பிடிக்கிறாங்க. இப்பலாம் மரியாதையாகூட பாக்க மாட்றானுங்க"

"அப்பறம் போலீஸ்ல இருந்துகிட்டே பெரிய தாதா மாதிரி ரவுடிசம் பண்ணா அப்படிதான் நடக்கும்" ஆஷாவின் போச்சில் சரத்திற்கே கோபம் துளிர்த்தது.

"ஏன் லாயர்னா போலீச குறை சொல்லிட்டே தான் இருக்கனுமா?"

"வக்கீல்கும் போலீஸ்க்கும் ஆகாதுனு ஒரு கான்சப்ட் இருக்கே. அதுமட்டுமில்ல குறை இருக்க நாலதான் சொல்றோம். இப்பகூட நீயுஸ்ல வந்ததே ஒரு போலீஸ் ஒரு சின்ன பொண்ண பலாத்காரம் பண்ணி மாட்டிகிட்டான். சரி அதவிடுங்க உங்க டிபாட்மண்டில ஒரு லேடி ஐ.பி.எஸ் ஆபிசருக்கு செக்ஸ் டார்ச்சர் தந்ததா சொல்லி டிஸ்மிஸ் பண்ணாங்களே… இன்னும்" அவளை முழுதாக சொல்லவிடாமல் இடைபுகுந்தான் சரத்.


"எனக்குலாம் வக்கீல்னா ஆகும்ங்க… அதுவும் லேடி வக்கீல்னா முக்கியமா ஆஷானு பேரு வச்ச வக்கீல்னா ரொம்ப பிடிங்கும் பெண்கள் என் கண்ங்கள்…" அவசரமாக அவள் கோபத்தில் தண்ணீர் அடித்தான் சரத்.

"வழியுது துடச்சிகோங்க இன்ஸ்பெக்டர்" அவள் சிரிக்க "அப்பாடி கோப படல சரத்து கத்து வச்சிருக்க கலையெல்லாம் யூஸ் பண்ணி நம்பர கரட் பண்ணிடுடா ம்ம்" மனதுக்குள் சந்தோஷபட்டவன் அவள் கிளம்ப நினைக்க அவள் முன் போனை நீட்டினான்.

"என்ன சார்?" அவள் புரியாமல் பார்க்க நம்பர் எனவும் தான் போன் டிஸ்பிளேவில் இருந்த நம்பர் சேமிக்கும் கீபோர்டை பார்தாள்.

"பெரிய ஹீரோனு நினைப்பு. புதுசு புதுசா நம்பர் உஷார் பண்ற டெக்னிக் கத்து வச்சிருக்கானுங்களே. இருடா என்கிட்டேவா" என புருவம் உயர்த்தியவள் நம்பரை டைப் செய்து ஆஷா என சேமித்துவிட்டு கொடுத்தாள். வாயெல்லாம் பல்லாக அவளை பார்து சரத் சிரிக்க இரு கண்ணை சுருக்கி சிரித்தவள் திரும்பி செல்ல அவசரமாக அவள் பதிந்த எண்ணிற்க்கு அழைத்தான் சரத்.

"தாங்கள் அழைத்த எண் தற்போது பிசியாக உள்ளது" என வரவும்

"ஏங்க வக்கீல் மேடம் பிசினு வருது" இங்கிருந்து அவன் கத்தினான்.

"நீங்க உங்க போன்லிருந்து எப்ப பண்ணாலும் அப்படி தான் வரும்" எனவும் தான் நம்பரை பார்த்தான் அது அவனுடய நம்பர். அவன் உதட்டை பிதுக்க சிரித்தவள் திரும்பி நடக்க "என்னங்க ஆஷா என் நம்பர் எப்படி உங்களுக்கு தெரியும்?" சரிப்பினுடே அவன் குரலில் "ஹான் டிடக்டிவ் வச்சி கண்டுபிடிச்சேன். நீங்கதான கடமை தவறாம எல்லா பொண்ணுங்கிட்டையும் உங்க நம்பர கொடுத்து வச்சிருக்கிங்களே. போஸ்டர் அடிக்காதது தான் பாக்கி" அவனுக்கு பழிப்பு காட்டி எட்டி நடைபோட்டாள்

"அது தான் உங்களுக்கு மட்டும் எப்படி மனப்பாடமாய் தெரியும்?" அவன் திரும்ப கத்தவும் ஒரு வெட்க் புன்னகை முகத்தில் பரவியது. "லூசு நீ மனப்பாடம் பண்ணத கண்டுபிடிச்சிட்டான்டி" தலையில் தட்டிக்கொண்டவள் திரும்பியும் பார்க்காமல் வேகமாக நடை போட்டு மறைந்தாள். அவள் ஓடுவதை பார்த்தவன் கண்ணில் மின்னலடிக்க பின்னதலையில் தட்டிக்கொண்டான்.

காதல் ஒரு தீப்பொறி என்று சும்மாவா சொன்னார்கள் அது விழும் இடத்தை பொருத்து மெல்ல அரித்து சிறுக புகைந்து கொழுந்து விட்டு எரிந்து சிக்கி கொண்டவர்களை ஜீவாலையாக பற்றி தகிக்க வைக்கும் மாய மந்திரம். சிலபேர்கிடையில் தோன்றிய காதல் சமூகத்தில் அழகிய பாடலாக தெரியும் போது சிலர்கிடையில் வரும் காதல் கள்ளத்தை அடைமொழியாக கொண்டு அவபெயரால் அசிங்க படுகிறது. காதலில் கள்ளம் இருப்பது ஆழகு காதலே கள்ளதனமாக இருப்பதுதான் காதல் என்ற வார்தை சமூகத்தில் கசப்பாக தெரிகிறது போல. ஜாதி என்ற பேதத்தில் பல காதல் மலர்கள் கருக அருவாலுக்கும் விசத்திற்கும் காவியம் படக்கின்றனர் சிலர்.

குப்பிட்டிற்கு தடை சட்டம் போட்டால் மட்டும் காதல் அழிந்துவிடுமா? காதல் புயலில் சிக்கியவருக்குதான் ஜாதி மதம் இனம் பணம் பேதம் தெரியுமா? உன்மையான நேசம் ஏதையுமே எதிர்பார்காது. காசுக்காக வந்த காதல்கூட உயிரைய கொடுக்க துனியும் விந்தை காதலின் மந்திர மொழிகளே தவிர வேறு என்ன.
_____________________

"என்ன சார் யாருனு தெரிஞ்சதா?" டி.எஸ்.பி கோபமாக கேட்க இல்லை என தலையாட்டினார் இன்ஸ்பெக்டர்.

"பக்கதுல இருக்க எல்லா ஏரியாலையும் விசாரிச்சிட்டேன் சார். மிஸ்ஸிங் கேஸ்னு கேஸ் கொடுத்தவங்க எல்லாரையும் வந்து அடையாளம் பாக்க சொல்லிட்டேன். யார்னு தெரியல" அவர் சொல்ல தலையை பிடித்துக்கொண்டார்.

"ரொம்ப நாள்லாம் வச்சிருக்க முடியாது… இப்பவே ரொம்ப மோசமா அழுகிடுச்சு பாடி. தலை வலி ஒரு எவிடன்ஸ்சும் கிடைக்கல அடையாலம் தெரியாத பிணத்த வச்சிக்கிட்டு நம்ம உயிர எடுப்பானுங்க"

"பிரஸ்க்கு சொல்லியச்சு சார். யாராச்சும் கான்டக்ட் பண்ணா அந்த ஏரியா போலீஸ்கிட்ட கேஸ்ச கொடுத்துட்டு ஒதுங்கிடலாம் சார். வில்லேஜ் ஏரியானால சுத்தி 30து கிலோ மீட்டருக்கு சிசிடிவியும் எதுவும் இல்ல" இருவரும் கழன்று கொள்ள வழி தேடினர்.

"ஆமா இல்லனா கேஸ் சால்வ் பண்றதுக்குள்ள மீடியாகாரனுங்க படித்துவாங்க அதுக்கு மேல இந்த மீம்ஸ்ச போட்டு உசிர வாங்குறானுங்க" பெருமூச்சி விட்டவருக்கு இந்த கேஸ்விசியத்தில் நன்றாக தெரிந்த ஒன்று என்னவென்றால் இறந்த பெண் கொடுமையாக கற்பழிக்க பட்டு சித்திரவாதை செய்து மிக மோசமாக சாகடிக்க பட்டடுறிக்கிறாள் என்பதே. இரக்க படவேண்டும் என்று மனசாட்சி சொல்ல வேலையின் அழுத்தமோ மனித தன்மையை தள்ளி நிறுத்தியது. எந்தனையோ குற்றங்களை பார்த்து பழகியவருக்கு இதில் ஆதாரம் திரட்டுவது சிரமம் என்பதை ஓரே நாளில் கண்டுக்கொண்டார்

வருவாள்…

போகாதடி என் பெண்ணே! ❤❤


 
Last edited:
பெண்ணே 15

vHpica8jNsob2I2knA0RvpF-RepGGakIcP5iwA3MQAVLrfntVT4MD-qk5C5P749Bogi4M8t3sixvkcsDMj3fVKWHEq1Hg8ngDcXjKUlnclX83qXtUapm8aMvhgaPSILLlWeOku53=s1600


இரண்டு நாள் விடுமுறை முடிந்து இன்று ஆராதனாவை பார்பதற்காக உற்சாகமாக இருந்தான் அதியன். கண்ணை மூடினாலும் அவளே கண்ணை திறந்தாலும் அவளே ஒவ்வொரு நொடியும் அவனை சுகமாக வதைத்தாள் அவள். "தனக்கு எந்த பெண்ணின் மேலும் காதலே வராதா?" என்று அவனே நினைத்த நாட்கள் உண்டு ஆனால் இன்றோ ஆராதனாவின் மேல் பித்தாகி தன்னை மறந்து பிதற்றும் அளவிற்கு அவளில் தொலைத்திருந்தான். அவளின் மெல்லிய இடையை தீண்டிய கையும் ஈரம்காயாத இதழ் ஒற்றலும் நினைவில் தோன்றி அவன் உணர்வுகளை தட்டி எழுப்ப மனதும் உடலும் அவள் அன்மைக்கு பேயாட்டம் போட்டது.

கண்ணுக்குள் கண் வைத்து
கண் இமையால் கண் தடவி
சின்ன தொரு சிங்காரம்
செய்யாமல் போவேனோ?
பேச்சிழந்த வேளையிலே
பெண் அழகு என் மார்பில்
மூச்சு விடும் ரசனையை
நுகராமால் போவேனோ
உன் கட்டு கூந்தல் காட்டில்
நுழையாமல் போவேனோ?
அதில் கள்ளத் தேனைக் கொஞ்சம்

பருகாமல் போவேனோ?

காரை பார்க் செய்துவிட்டு துள்ளிகொண்டு வந்தவனின் கண்ணில் பட்டது விஷ்ணுவுடன் பைக்கில் வந்திறங்கிய ஆராதனா தான். அவளும் அவனை பார்க்க கண்கள் தெரித்துவிடும் அளவிற்கு முறைத்தவன் முகத்தை திரும்பிக்கொண்டு மேலே சென்றுவிட்டான்.

"இவன் பண்றதெல்லாம் இவனுக்கே ஓவரா இல்ல? என்னவோ அவன் பொன்டாட்டி மாதிரி விஷ்ணுகூட பேசினாலே முறைக்கிறான்"

"இந்த சாக்குல நீயே அப்படி நினைச்சி சந்தோஷ பட்டுக்கிறியா தனா?" சரியாக மனசாட்சி போட்டு தாக்க "ச்சீ எட்டிபோடி எவ்வளவு திமிர் இருந்தா முறைச்சிட்டு முஞ்ச திருப்பிப்பான். நான் சந்தேக படுறவனலாம் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்" பல்லைகடித்துக்கொண்டு கோபமா மனசாட்சியை அடக்கியவள் உணராதது அவனது கோபமே அவளுக்கு இந்த பிதற்றல். காதல் கொண்ட அவன் பார்வை அவளை சுற்றி வளைத்து மெல்ல அவனிடம் இழுத்து கொண்டு இருந்தது.

உள்ளே வந்தவளை தன் அறையில் இருந்து அதியன் முறைத்து பார்த்துக்கொண்டு இருக்க ஆராதனாவோ அவன் அறையை எட்டி பார்பதும் மானிட்டரை பார்பதுமாக கண்ணாமூச்சி அட எப்போதும் போல கரடியாய் உள்ளே வந்தான் விஷ்ணு. அவள் அதியனை திரும்பி பார்க்க அவனோ தலையை திருப்பாமல் இவர்களையே அழுத்தமாக பார்க்கவும் விஷ்ணுவிடம் பேச தடுமாறினாள் ஆராதனா. அவன் பேச்சில் கவணம் இல்லாமல் அதியனையே அவன் கோபமாக இருப்பானோ என்று பார்த்துக் கொண்டு இருக்க அவளிடம் கேட்டதற்கான பதில் வராமல் ஆராதனாவை நிமிர்ந்து பார்த்தான் விஷ்ணு. அலைபாயும் அவள் பார்வையில் "யார இப்படி பார்கிறா?" என்று அவனும் பார்க்க அதியனும் அவளை பார்த்துகொண்டு இப்பதை பார்த்து விஷ்ணுவிற்கு கோபம் வந்தது.

"மைலி" பல்லைகடித்துக் கொண்டு அவளை கோபமாக கூப்பிட அவள் காதில் விழுந்தால் தானே. அவள் பக்கத்தில் வந்து அவளை உலுக்க கணவு கண்டவள் போல் முலிக்கவும் முறைத்தான் விஷ்ணு. அவனிடம் ஒரு சாரி சொல்லிவிட்டு வேலையை கவணிக்கலானாள்.

விஷ்ணு பக்கத்தில் வந்து கூப்பிட்டு அதை கவணிக்காமல் தன்னையே பார்த்துக்கொண்டு இருந்த ஆராதனாவை நினைக்க இருந்த கோபம் மறைந்து சிரிப்பு வந்தது அதியனுக்கு.
——————

"என்ன புவி போன் புதுசா இருக்கு?" தீ சொன்னதை நினைத்து பயந்துக்கொண்டே விமலன் கேட்க புவியின் முகம் மாறியது.

"கோபத்தில் தூக்கி போட்டு உடைச்சிட்டேன்" அவன் சலித்துக்கொள்ள "தீ மா கரக்ட்டா இவன தெரிஞ்சு வச்சிருக்கா. தீ யாரு என் தங்கச்சி ஆச்சே" மார்தட்டி கொண்டவனை புவி மட்டும் அறித்தால் தூக்கி போட்டு மிதித்திருப்பான்.

"என்னாச்சிடா?" எதுவுமே தெரியாதது போல் கேட்க கோபமாக முகத்தை வைத்துக்கொண்டான் புவி

"யாருனு தெரியல விமல் என்கிட்டயே விளையாடுறாங்க. நேத்து ஒரு மெயில் வந்தது அத ஓப்பன் பண்ணதிலேந்து ஒரே கால் வந்துட்டே இருந்தது. அட்டன் பண்ணா கட் ஆகிடுச்சி நம்பரும் வித்தியாசமா நாலு அஞ்சினு கம்பெனி கால் மாதிரியே விடாம தொடர்ந்து வந்துகிட்டே இருந்தது ஆஃப் பண்ணிட்டு ஆன் பண்ணாலும் வந்துகிட்டே இருந்ததும் கோபதுல தூக்கி வீசிட்டேன்"

"அச்சச்சோ யாருடா அது உன்கிட்டையே வம்புபண்றது?"

"அதான் சைபர் க்ரைம்ல போன கொடுத்துருக்கேன். யாருனு தெரியட்டும் பிழிஞ்சுடேறேன்" காற்றில் கை விரலை முறுக்கி பிழிந்து காட்ட புவியை பார்த்து சிரித்த விமலன் அங்கிருந்து ஓடிவிட்டான்.

"டேய் விமல் நானும் வரேன் நில்லுடா" என அவனுடன் பைக்கில் ஏறிக் கொண்டான் புவி.

பைக்கை கிளப்பிய விமலன் "புவி எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும்டா" என அவனை தாஜா பண்ணி பாசமாக சொல்ல

"ச்சை நான் அந்த மாதிரி பையன் இல்லடா" எனவும் அவன் தொடையில் அடித்தான் விமலன்.

"அய்யே கண்ட இடத்துலையும் கைய வைக்காதடா. உன்னலாம் சும்மாவே என்னால பார்க்க முடியாது. உனக்கு ஏத்த மாதிரி குட்டையா பையனையோ பொண்ணையோ பார்த்து சைட் அடி என்ன விட்டுறு" என பின்னால் தள்ளி உட்காந்துக்கொள்ள "கருமாந்திரம் இறங்குடா கீழ" வண்டியை நிறுத்திவிட்டு திரும்பி முறைத்தான் விமலன்.

"சாரிடா போலீஸ்" அவன் கன்னத்தை புவி கிள்ளி முத்தம் வைக்க இருவரையும் நிழலுக்காக கடை வாசலில் நின்றிருந்த அபிராமி ஒரு மாதிரியாக பார்த்தாள். வீணை சரிபார்க்க கொடுத்ததை வாங்க வந்தவள் இவர்களை பார்த்து லெஸ்பியன் என்று தான் நினைத்தாள்.

இன்று பல நட்டில் ஓரினச்சேர்க்கை உறவை சட்டரீதியாக அனுமதித்து உள்ளனர். இன்று இந்தியாவிலும் இது அனுமதிக்க பட்டிருந்தாலும் ஓரு காலத்தில் இது குற்றம் என்றும் பத்துவருடங்கள் வரை சிறை என்ற சட்டமும் இருந்தது. வெளி நாடுகளில்லே பல இடங்களில் இந்த உறவை ஏற்றுக்கொள்ள சிரமபடும்போது ஆண்னுடன் பெண் காதல் கொள்பதையே விரும்பாது கலாசாரத்திற்கு அடிபணிந்து இருக்கும் இந்தியாவில் பலர் இதை அருவருக்க தக்க உறவாக தான் பார்கின்றனர். சமூகத்தில் வெளிபடுத்த விரும்பாத பலர் ரகசியமாக வாழ சிலர் தைரியமாக சொல்லி வாழ்பவர்களும் இதே சமூகத்தில் தான் உள்ளனர். ஹோமோ செக்சுவல் என்பது தனிநபர்களின் சொந்த விருப்பம் வேதங்களிலும் இது அனுமதிக்க வேண்டியது என்று இருப்பதை கருத்தில் கொண்டு தான் பாரத நாட்டில் ஓரினச் சேர்கையை குற்றமற்றது என்று அறிவித்தனர். இதை தவறு என்று எதிர்த்து போரடுபவர்களும் இங்கு இருக்கின்றனர். இதை பற்றி பேசுவதே தவறாக நினைக்கும் மக்கள் இருக்கும் இடத்தில் என்னுடைய கருத்து அவர்களை குற்றம் சொல்பதறக்கு எந்த உரிமையும் இல்லை என்பதே. பெண்களை வன்முறை செய்து கற்பழித்து கொள்ளும் மிருகங்களே சாதி மதத்திற்கு பின் ஒழிந்து கொண்டு தைரியமாக வாழும்போது இவர்கள் செய்வது குற்றமேயில்லை என்பதே.

விமலன் கண்ணில் அபிராமி பட அவள் பார்த்த பார்வையிலே அதன் அர்த்தம் உணர்ந்துக் கொண்டவன் அவசரமாக புவியை பிடித்து தள்ளினான்.

"ஏன்டா மானத்த வாங்குற நீயும் நானும் ஒரு ஐ.பி.எஸ் போலீஸ் அஃபிசர்ஸ்டா" புவியை கடிந்து கொள்ள அவனோ திரும்பி சுற்றும் முற்றும் யாரையோ தேடினான்.

"என்னடா தேடுற?"

"இல்ல ஒருத்தன் குடிச்சிட்டு நைட் நடு ரோட்ல வச்சி என்ன கட்டிபிடிச்சி மூஞ்சி புல்ல எச்சி பண்ணிட்டு மட்டையாகிட்டான். நான் தான் அவன தள்ளிட்டு போனேன். அவன் இங்க தான் இருந்தான்" புவி அவன் ஸ்பீக்கர் தொண்டையில் சொல்ல அபிராமி காதில் நன்றாக விழுந்தது. விமலன் அவசரமாக அவளை பார்க்க அவன் பார்த்ததும் துப்பட்டாவை இறக்கி விட்டுவிட்டு திரும்பி நின்றுக்கொண்டாள் ஒரு ஓர பார்வை அவர்கள் மேல். அதில் அவன் முகம் கண்ற புவியை திரும்பி பார்த்து

"ஏன்டா அசிங்கமா தள்ளிட்டு பேனேன்னு சொல்ற?" மெது குரலில் சொல்லி அவன் காலை மிதிக்க

"நான் உன்ன சொல்லல டா. நம்புங்க தோழரே" புவி நமட்டு சிரிப்பு சிரிக்கவும் குரல்வளையை கனைத்து கொண்டு சத்தமாக அவளுக்கு கேட்கும்படி "டேய் புவி அன்னைக்கு எவனோ ஜூஸ்ல ஏதையோ கலந்து தந்துட்டான். இல்லன உன் பக்கத்தில நான் வந்திருக்கவே மாட்டேன் ச்ச எனக்கு அவ்வளவு மட்டமான டேஸ்ட் இல்லடா" எனவும் கோனலாக சிரித்தவன்

"நடிக்காதடா நீ நல்லா தெளிவா இருக்கும்போதே பக்கத்துல இருக்க ஓரு பொண்ணையும் விட மாட்ட ஏன் அழகான பையனையும் கூட. ச்ச மனசாட்சி இல்லாம எத்தன பொண்ணுங்க லைப்ப நாசம் பண்ணிட்ட" என்று புவி சத்தமாக சொல்ல அதிர்ந்து அபிராமியை விமலன் பார்க்க அவள் அங்கு இருந்தால் தானே புவி சொன்னதை கேட்டு பயத்தில் விழுந்தடித்து ஓடிவிட்டாள்.

புவிவேந்தன் புல்லட் மீது சாய்ந்து வயிற்றை பிடித்துக்கொண்டு சிரிக்க அவனை வெட்டவா குத்தவா என்று பார்த்து வைத்தான் விமலன்.

"என்னடா அந்த பொண்ணு ஓடிட்டா?" என "எந்த பொண்ணு? யாரு?" சமாலித்த விமலனை பார்த்து கண்ணடித்தான் புவி

"நடிக்காத விமல் அந்த பச்ச சுடிதார் பொண்ண பார்த்து நீ ஜர்கானத நான் பார்த்துட்டேன்"

"உலராத அவ யாருனே எனக்கு தெரியாது. இப்போ உன்னால அவ என்ன பத்தி என்ன நினைப்பா" அவள் தவறாக நினைத்த கோபத்தில் இவன் கத்த

"யாருனே தெரியாதவங்கள பத்தி உனக்கு என்ன கவலை. உன்மைய ஒத்துக்கோ விமல்" என்றதும் அவனை தூர தள்ளிய விமலன் வண்டியை ஸ்டார்ட் செய்து

"நடந்து வாடா " என

"டேய் பெட்ரேல் நான் தான்டா போட்டேன்" புவி கத்த கத்த அவனை விட்டுவிட்டு சென்றுவிட்டான் விமலன்.

————————————
அனுமதி கேட்டுக்கொண்டு உள்ளே வந்தார் மூரளி. "என்ன முரளி நான் சொன்னத விசாரிச்சிட்டிங்களா?" நிமிர்ந்து அமர்ந்தாள் தஷினா.

"விசாரிச்சிட்டேன் மேடம் உங்ககிட்ட ஒரு முக்கியமான விசியம் சொல்லனும்"

"நல்லதா? கெட்டதா?"

"ரெண்டுமே இருக்கு மேடம்"

"அப்போ கெட்டத முதல சொல்லுங்க முரளி"

"அந்த மிர்ச்சி பப் இந்தியாலே பெரிய பணக்காரர் ஆயூஸ் கிட்ட ஓர்க் பண்ற பி.ஏக்கு சொந்தமானது மேடம். அவன் பி.ஏ மட்டும் இல்ல ஆயூஸ்க்கு ரொம்ப நெருங்கிய நண்பன். அதனால அவன் மேல கைவச்சா இதுல அந்த திமிங்களமும் இறங்கும். ரிஸ்க் அதிகம் மேடம்"

தலையை இடதுபுறம் சாய்த்து வினோதமாக சிரித்தவள் "ஒன்னு தெரியுமா முரளி ரெண்டுமே மாட்டவேண்டியது தான் வலைய பெருசா போட்டா போதும். அடுத்து என்ன? " என

"நீங்க சொன்ன மாதிரி தான் மேடம் மிர்ச்சி கிளப்க்கு பார்ட்டிகு வர பணகார பொண்ணுங்கள மயங்க வச்சி அசிங்கமா போடோஸ் எடுத்து பணம் பறிக்கிறாங்க மேடம். இது டிவண்டி பர்சன்ட் பேஸிக் வேலை பார்குறவனுங்கும் 30 பர்சன்ட் மேனேஜர்கும் 50 பர்சன்ட் அந்த ஓனர்கும் போகுது. பணம் செட்டில் பண்ணதுக்கான எவிடன்ஸ் இருக்கு மேடம். பட் அது பத்தாது இன்னும் ஸ்டாரங்க வேணும் மேடம் அதுக்கு அங்க நடக்கிறதபத்தி வீடியோ எவிடன்ஸ் கிடைச்சா நம்பி உள்ள இறங்களாம்"

"அப்பறம் ஏன் வெயிட் பண்ணனும்?"

"அவ்வளவு சுலபமா உள்ள போக முடியாது மேடம். எவிடன்ஸ் கலக்ட் பண்ண போண இன்ஸ்பெக்டரையே வெளியே விடாம அடிச்சி கூவத்துல பேட்டுட்டாங்க மேடம்" எனவும் ஒற்றை புவருத்தை உயர்தியவள் என்ன முடிவு எடுப்பாள் என்பது நாம் அறிந்ததே.

"ஓவ்வ் அப்போ எனக்கு அங்க போறத்துக்கான பார்மாலீடிஸ் எல்லாம் என்னனு பார்தது ரெடி பண்ணுங்க . ஒரு சின்ன பார்ட்டி தீங்குற பேருல இருக்கனும் நம்ம ஆளுங்களையும் ஒரு நாலு பேரு மப்ட்டில அந்த பப் இருக்க ஹோடல்லே இன்னைக்கு ரூம் புக் பண்ண சொல்லுங்க. அப்பறம் முரளி சரத்த பேஸ்ச டிரிம் பண்ணிட்டு ஹைடெக் லுக்குல மாத்தி எனக்கு பாட்னரா புக் பண்ணுங்க அவன் இன்ஸ்பெக்டர்னு தெரியவே கூடாது. யாரும் கன்னும் வெப்பன்ஸும் எடுத்துட்டு வரவேண்டாம் சொல்லிடுங்க. அவன தவிர எல்லாரும் லேடிஸ்சா பாருங்க அவங்க மட்டும் பிஸ்டல் வச்சிருக்கட்டும். நாளைக்கே நடக்கனும். ரெய்டு கண்பார்ம் பட் நம்பிக்கையானவங்களா பாருங்க"

"மேடம் இது ஆபத்தானது உள்ள நடக்கிறத வெளில தெரியாமலே பண்ணிடுவாங்க. எதுக்கும் விமலன் சார் கிட்ட" அவரை முறைத்தவள்

"நான் சொன்னத செய்ங்க" அவள் அழுத்தமாக சொல்ல வேறு வழியின்றி வேலைகளை ஆரம்பித்தார்.

தக்ஷினா ஆடிய தாண்டவத்தை விட தீயாக அவள் ஆடுவது ருத்ர தாண்டவம் என்பதை உணரும் நாள் அருகில். அவள் சகலகலா வித்தைகளையும் கற்றவள் என்பதும் தற்காப்பு கலை பயிற்சி தரும் மாஸ்டர் என்பதும் அவனைவரும் சாமுறாய் என்று மரியாதையாக அழைக்கபடும் தஷினாவின் சிறப்புகளை அவருக்கு தெரியவில்லை. தெரிந்தவன் விமலனும் அவளுக்கே தெரியாத அவளின் தீவிர ரசிகன் குணமுதிதன் இருவர் மட்டுமே.

வருவாள்…

போகாதடி என் பெண்ணே! ❤❤

 
Last edited:
பெண்ணே 16

wkHp5rZatqI5ujngNS7aKU6rtGv2YWPBeMoxBjKz9JG33bPOzkFweOnehMfIdEpVT1T-dLTGqkQyL8laXeTkAdlL_JhbC-CtzGl_n4Hl2kEHifZ-Z3uAgZ8fr5UCi4rzbSyYCLgg=s1600


யே… பெண்களின் உள்ளம் படு குழி என்பேன்
விழுந்து எழுந்தவன் யார்
ஆழம் அளந்தவன் யார்
ஒ… கரையை கடந்தவன் யார்
காதல் இருக்கும் பயத்தினில் தான்
கடவுள் பூமிக்கு வருவதில்லை
மீறி அவன் பூமி வந்தால்
தாடியுடன் தான் அலைவான் வீதியிலே….
சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்

கண்ணோரம் மின்னும் அவள் காதல்

ஆராதனா மேல் கோபமாக இருந்தான் அதியன் இத்தனை நாளில் ஒரு நொடி கூட அவளுக்கு தன்னை புரியவில்லையா? என்பதை நினைத்து ஆயசமாக இருந்தது. விஷ்ணுவும் அதற்கு தூபம் போடுவது போல் ஆராதனா கூடவே சுத்திக்கொண்டு இருந்தான். இப்போதெல்லாம் அவள் தன்னை அலட்சியம் செய்வது போல இருந்தது அவனுக்கு. என்றுமே அவள் அவனை லட்சியம் செய்தது இல்லை என்பதை நினைக்கும் அளவு பொறுமை இன்றி கொதித்துக்கொண்டு இருந்தவன் இப்பொழுது கூட தன் முகத்தை பார்க்காது தரையை பார்த்து நின்றிருந்தவளை கண்டு ஆற்றாமையாக இருக்க கண்மண் தெரியமால் வந்த கோபத்தை அடக்க தெரியாமல் கையில் இருந்த கோப்பை தூக்கி தரையில் அடிக்கவும் தான் திடுக்கிட்டு நிமிர்ந்து அவனை பார்ததாள் ஆராதனா.

"உனக்கு ஒரு வேலையும் ஒழுங்கா செய்ய தெரியாதா?" எனவும் அதியனை முறைத்தவாறு அந்த பேப்பர்ஸ்சை பார்க்க அதில் தவறு எதுவும் இருப்பதாக தெரியவில்லை அவளுக்கு.

"நீங்க சொன்னதை தான் செஞ்சேன் சார்"

"எதிர்த்து பேசாத இங்க நான் தான் பாஸ்"

"நீங்க கேட்டதுக்கு பதில்தான் சொன்னேன் சார்"

"அப்போ இதுக்கும் பதில் சொல்லு என் கூட வந்ததுக்கு உன் அண்ணன் எவ்வளவு பிரச்சனை பண்ணான். இன்னைக்கு நீ விஷ்ணுகூட மட்டும் வரலாமா? அதுக்கு அவன் ஒன்னும் சொல்ல மாட்டானா?"

"இப்ப எதுக்கு அதபத்தி பேசுறிங்க? அப்பறம் இது என்னோட பர்சனல். நீங்க ஆஃபிஸ் விஷியத்த மட்டும் பேசுங்க" அவள் செய்த அலட்சியத்தில் பல்லை கடித்தான் அதியன்.

"என்ன வச்சிதானே பிரச்சனை அதனால இது எனக்கும் பர்சனல் தான். நீ நான் கேட்டதுக்கு பதில் சொல்லு"

"சார் இப்போ எங்கேருந்து அந்த பிரச்சனை வந்தது? விஷ்ணுகூட நான் வந்தா அது எங்க வீட்டுல உள்ளவங்க பிரச்சனை அது மட்டுமில்ல விஷ்ணு எனக்கு முக்கியமானவங்க. நீங்க யாரு? ஏன் அத பத்தி கேட்கிறிங்க?" கண்டிப்புடன் அவள் பேசவும் கண்கள் சிவக்க முறைத்து பார்த்தான் அதியன்.

"விஷ்ணு உனக்கு முக்கியம் ஆனா நான் மட்டும் யாரா உனக்கு?" என்றவன் முகம் ஜிவுஜிவுத்து எழுந்து அவள் அருகில் நெருக்கமாக வர "ஆமா" என கண்ணை உருட்டி திமிராக நின்றாள் ஆராதனா.

"உனக்கு நான் யாருமே இல்லையா ஆரு? ஆனா நீ தான் நீ மட்டும் தான் எனக்கு எல்லாமே" காதலாக சொல்ல வேண்டியதை கோபமாக சொன்னாலும் ஆராதனாவிற்கு இதயம் எக்குதப்பாக துடித்தது. முயன்று திமிராக நின்றாள்.

"உளறாதீங்க சார். எனக்கு இததெல்லாம் பிடிக்கல தள்ளி நில்லுங்க"

"முடியாது ஆரு" என்றவன் மீண்டும் நெருங்கி அவள் முகத்தை கைகளில் ஏந்த அவன் கையை தட்டி விட்டவள் "ப்ச்" என திரும்பி நடக்க அவள் கையை இருக்கமாக பிடித்து வேகமாக இழுக்கவும் அவன் மார்பில் மோதி நின்றாள் ஆராதனா. கைகளை சுற்றி போட்டு இடையோடு அனைத்தவன் அவள் காதில் இதழ் உரசிக் காதல் தாபம் கோபம் கலந்து தவிப்போடு "ப்ளீஸ்" எனவும் அவள் கால்கள் துவண்டு அவன் மார்பிலே சாய துடித்தது. மனதை அரட்டி அவனை தூர தள்ளிவிட்டாள் ஆராதனா.

"ஏன் இப்படி பண்றிங்க? நீங்க நினைக்கிற மாதிரி பொண்ணு நான் இல்ல. உங்க உடம்பு தேவைக்கு வேற பொண்ணுங்க கிடைப்பாங்க என்ன விட்டுடுங்க" தனக்குள் வந்த நடுக்கத்தை மறைக்க என்ன பேசுகிறோம் என்பதை அறியாமல் கண்ணை முடி கத்தியவள் குரள்வலையை பிடித்து தூக்கிவிட்டான் அதியன்.

"என்னடி சொன்ன உடம்பு தேவையா…? ச்ச பொண்ணாடி நீ இவ்வளவு கேவலமாவா என்ன பத்தி நீ நினைச்ச வலிக்குதுடி இங்க" ஒற்றை கையால் இதயத்தை வலியுடன் காட்டியவன் அடுத்த நொடி ரத்தம் முகத்தில் ஏற தீ கணலாக ஜொலித்த அவன் முகத்தை பார்த்து முதுகு தண்டு ஜில்லிட்டது ஆராதனாவிற்கு. அவளை தள்ளி விட்டவன் இரண்டு கையால் தலையை தாங்கி கண்ணை மூடி தன்னை ஆசுவாச படுத்திக்கொண்ட பின் அவளை பார்த்தான். இத்தனை நாள் அணிந்திருந்த தைரியம் என்ற அரிதாரம் களைந்து மிரண்டு விழித்தாள் ஆராதனா. அவள் கையை எடுத்து தன் கைகுள் வைத்துக்கொண்டவன் அவள் கண்களை பார்தான்.

"ஐ லவ் யு ஆராதனா இந்த உலகத்துல எனக்கு ரொம்ப பிடிச்சவனா அது நீதான். இதுவரைக்கும் என் அம்மா அளவுக்கு உன்ன மட்டும் தான் எனக்கு பிடிக்கும். உன்ன கடைசி வரைக்கும் நான் நல்லா பார்த்துப்பேன். என்ன கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதமா? இந்த உடம்பில உயிர் இருக்கிற வரைக்கும் உன்ன என் நெஞ்சில சுமக்க ஆசை படுறேன் சொல்லு பப்பி உனக்கு சம்மதமா?" அவன் கண்ணில் வழிந்த நேசத்தில் மறுக்கதான் அவளால் முடியுமா. காதல் என்று பெயரிடா விட்டாலும் அவள் உணர்வில் துளிர் விட்ட நேசத்தை அறிய முடியாத அளவுக்கு முட்டாள் இல்லையே அவள். ஆனால் மனதை கல்லாக்கி கொண்டு கையை உருவிக்கொண்டாள்.

"சா...ர் நான் நா… உங்கள அந்த மாதிரி நினைச்சது இல்ல ப்லீஸ்" என நிறுத்தியவள் "இனி இப்படி காதல் கத்திரிக்காய்னு உளறாதிங்க. எங்க வீட்டுக்கு தெரிஞ்சா வேலைக்கு அனுப்ப மாட்டாங்க" என அவன் கண்ணை பார்காமல் சொல்ல அதியனுக்கு அளவில்லாத கோபம் வந்தது

"ஆராதனா என்ன எது சொன்னாலும் அமைதியா இருப்பேன் பிகாஸ் ஐ ஃபில் ஐயம் யுவர்ஸ் பட் நாட் மை லவ் நான் என்ன வெடல பையனா ஆதி டி தி கிரேட் இன்டஸ்ரியலிஸ்ட் ஆதி அதியன் என் லவ் உனக்கு உளறலா" உச்சகட்ட கோபத்தில் சீறினான் ஆதி

"நீங்க யாரா இருந்தாலும் இது தான் என் பதில் உ..ங்கள ஏ… என்னால லவ் பண்ண முடியாது"

"என்ன லவ் பண்ண மாட்டனா வேற எவனடி லவ் பண்ணுவ? சொல்லுடி?"

"இங்க பாருங்க சார் நீங்க பணக்காரங்களா இருக்கலாம் அதுக்காக எல்லாம் உங்கள லவ் பண்ண முடியாது. உங்க கிட்ட வேலை செஞ்சா டி போட்டு பேசுவீங்களா நாட் ஃபேர்" முகத்தை சுளித்து கொண்டே அவள் பேசியது அவனுக்கு இன்னும் கோபத்தை தான் அதிக படுத்தியது .

அவள் கன்னத்தை ஆழுந்த பற்றியவன் "நல்லா யோசிச்சு பாரு பப்பி என் மேல் உனக்குள் இருக்க லவ் புரியும் புரியட்டியும் நான் புரிய வைப்பேன். நல்லா கேட்டுக்கோ எத்தன ஜென்மம் எடுத்தாலும் நான் உன்ன தேடி வருவேன் நீ மட்டும் தான் என் பொன்டாட்டி அட் த சேம் டைம் நான் மட்டும் தான் உன் புருஷன்" என்றவன் மேலும் நெருங்கி ஒற்றை கையால் அவளை இடையோடு இழுத்து அனைத்தவன் தன் இதழ் கொண்டு அவள் இதழை மூடினான். மென்மை மறைந்து வன்மையாய் மாற கண்கள் சொருகி இமை மூடி மொத்தமாக அவன் மீது படர்ந்தாள் ஆராதனா. கைகள் மெல்ல அவன் காலரை பற்றி இறுக்க நீண்ட நேரம் தொடர்ந்தது முத்த யுத்தம். திருப்தியாக விலகிய அதியன் அவள் உச்சியில் கன்னம் வைத்து மேலும் இறுக்கி கொண்டான். சிறு விசும்பல் அவளிடமிருந்து கிளம்ப அவளை பிரித்து நிறுத்தி அவள் முகம் பார்க்க உடைந்து அழ ஆரம்பித்துவிட்டாள் ஆராதனா.

"பப்பி ப்ளீஸ் அழாதடி. புரிஞ்சுக்கோமா உனக்கும் என்ன பிடிச்சிருக்கு. இதுவே வேற யாராவதா இருந்தா உன்னால அமைதிய இருக்க முடியுமா? சொல்லு? உனக்கு இது அருவருப்பா இருக்கா?" அவள் கோபத்தை திமிரை கண்டுக்கொள்ளாதவன் அவள் கண்ணீரில் பதற இல்லை என்று தலையாட்டினாள் அவள்.

"அப்பறம் ஏன்டி அழற? நான் ஏமாத்திருவேனு பயப்பிடுறியா?"

"இல்ல இல்ல எங்க வீட்டுல ஒத்துக்க மாட்டாங்க. அது நாலதான் நான் தள்ளி போனேன் என் மனசை கட்டு படுத்தி வச்சிருந்தேன். ஆனா நீங்க என் பக்கத்தில வந்ததும் என்னால முடியல. உங்க மேல இருக்கிறது காதலே இல்லனு நானே எனக்கு சொல்லி ஒதுங்கிதானே போனேன் ஏன் இப்படி பண்ணிங்க?" அவன் கையை பிடித்து அழுதவளை காதலாக பார்தான்.

"லூசாடி நீ? நான் பயந்துட்டேன். இங்க பாரு ஆரு உனக்கு என்ன பிடிச்சிருக்கு அத மட்டும் மனசில வச்சிக்கோ. எனக்கு உன் அப்பா அண்ணனலாம் பார்த்து பயம் இல்ல சரியா"

"சந்தோஷ் அப்பாலாம் ஒத்துக்க மாட்டாங்க. நீங்க எவ்வளவு பெரிய ஆள இருந்தாலும் லவ்னு சொன்னா ஏத்துக்கவே மாட்டாங்க. அவங்கள மீறி நானும் வரமாட்டேன் என்ன விட்றுங்க அதி" வெறுமையாக சொன்னவளை கோபமாக பார்த்தான் அவன்.

"உன்ன விடுரதா…போடி இனி யோசிக்க கூட மாட்டேன். உன் அப்பா அண்ணன் சம்மதத்தோட நம்ம கல்யாணம் நடக்கும் உனக்கு நான் சத்தியம் பண்ணி தரேன். நீ என்ன மட்டும் பாரு"

"இல்ல வேண்டாம் நிறைவேறாத காதல் வேதனை"

"அடிச்சனா மூஞ்சு பேந்திரும் நீ மனசால என்ன ஏத்துகிட்ட அந்த நொடியே என் காதல் நிறைவேறிட்டு பப்பி. இனிமே நீ அதியன் பொன்டாட்டி. என்ன தான்டி தான் உன்ன எந்த பிரச்சினையா இருந்தாலும் நெருங்க முடியும்" எனவும் தலையை ஆட்டினாள் அவள்.

"கடைசி வரைக்கும் என்ன விட்டுற மாட்டிங்கள அதி" அவன் மார்பில் சாய்ந்து அவனை கட்டிக் கொண்டவளை "என் உயிரே போனாலும் உன்ன விடமாட்டேன்டி" காதலாக தன்னுள் புதைத்துக்கொண்டான் ஆதி அதியன்.
—————————

அந்தி சாயும் வேலை அனைவரும் வீட்டிற்கு செல்லும் நேரம் தக்ஷினா கார் கதவை திறந்து உள்ளே ஏற அவளின் காலில் வந்து விழுந்தார் ஒரு நடுத்தர வயது பெண். சட்டென்று காலை உருவிக்கொண்டு அவரை பிடித்து தூக்க தக்ஷினாவின் மற்றோரு காலை பிடித்து ஓ என அவர் கதறி அழுதார்.

"எழுந்திரிமா… கால விட்டு எழுந்திரி"

"மேடம் நீங்க தான் எனக்கு வழி சொல்லனும்"

"எழுந்திரிமா… இப்ப எழுத்திரகல பிடிச்சி உள்ள போட்டுவேன்" தக்ஷினாவின் அதட்டலில் எழுந்து நின்று புடவை தலைப்பில் வாயை மூடி அழுதார்.

"என்ன பிரச்சனை? என்னனு சொல்லுங்க?"

"மேடம் மேடம் எ...ன் பொண்ண ஒரு மாசமா காணும். எங்கனே தெரியல"

"என்ன ஒரு மாசமா வா? கம்ப்ளைன்ட் கொடுத்திங்களா?"


"ஆமா மேடம்… காணும்னு தெரிஞ்சு அடுத்த நாளே கொடுத்துட்டேன். இன்னும் எதுவுமே விசாரிக்கவே மாட்றாங்க மேடம்" கேவி கேவி அழுக உள்ளே அழைத்து சென்று நாற்காலியில் அமர வைத்து விவரம் கேட்டாள்.

"உங்க பொண்ணு பேர் என்ன?"என

"ராதிகா மேடம்" என்றவர் அவள் படத்தை காட்ட வாங்கி கான்ஸ்டபிளிடம் கொடுத்தாள்.

"என்ன நடந்துச்சினு சொல்லுங்க? அப்போ தான் விசாரணை ஆரம்பிக்க முடியும்"

"சொல்றேன் மேடம்" என தன்னை ஆசுவாச படித்திக் கொண்டவர் தனக்கு தெரிந்த மட்டும் அன்று நடந்ததை சொல்லி அழுதார்.

"நம்பர கொடுத்துட்டு வீட்டுக்கு கிளம்புங்க விசாரிச்சிட்டு சொல்றேன்" அவரை அனுப்பி வைத்தவள் போயசித்தவாரே அமர்ந்தாள்.

தக்ஷினாவிடம் முரளி வந்து நிற்க நிமிர்நது பார்தாள் அவள்.

"மேடம் நாளை அந்த கிளப் பார்ட்டிக்கு எல்லா ஏர்பாட்டையும் பண்ணிட்டேன்"

"ம்ம்"

"என்ன மேடம் ஏதோ ஆழமான யோசனையில இருக்கிங்க?"

"அது முரளி இப்போ ஒரு அம்மா வந்துட்டு போனாங்க. ராதிகானு ஒரு பொண்ண காணும்னு அத பத்தி தான் யோசிட்டு இருந்தேன்"

"ஏதாச்சும் லவ் கேஸ்சா இருக்கும் மேடம்" அவரை விழியுர்த்தி கண்டன பார்வை பார்த்தவள்

"பேரு மட்டும் தான் உங்களுக்கு தெரியும் நீங்களே தப்பா யூகிச்சிக்க கூடாது" அழுத்தமான குரலில் அவள் சொல்ல மானசீகமாக தலையில் தட்டிக்கொண்டார் முரளி.

"நீங்க இந்த கேஸ்ச பாருங்க. அந்த பொண்ணு வேலை செஞ்ச இடத்துல விசாரிச்சிட்டு எதாச்சேம் வித்தியாசமா இருந்தா எனக்கு சொல்லுங்க. சிட்டி ஹாஸ்பிட்டல் எல்லாதையும் பாருங்க அனாதை பிணம் எதாவது ஒத்து போகுதானு" என தலையில் விரால் அழுத்தியவள் மூளைக்குள் பிளாஸ் அடிக்க "அப்பறம் முரளி நேத்து நீயுஸ்ல ஒரு அனாதை பிணம் பத்தி சொல்லிருந்தாங்க அதையும் விசாரிச்சி பாருங்க"

"மேடம் அதுவா இருக்க வாய்ப்பு இல்ல மேடம். அந்த திருவாரூர் மாவட்டம் தான மேடம்"

"ம்ம்"

"சென்னை எங்க இருக்க அந்த ஊரு எங்க இருக்கு வாய்பே இல்ல மேடம்"

"சத்தியா கேஸ்ல கூட சேலம்ல இருந்தவ செண்ணை கடைசில தான் கண்டுபிடிச்சோம்"

"அது சேலம் செண்ணைக்கு பக்கம் மேடம்"

"அந்த ஊரும் தமிழ்நாட்டுல தான் இருக்கும் எல்லாமே போர தூரம் தானே முரளி?. சந்தேகம் வந்துட்டா இறங்கி விசாரிச்சிடனும் நான் சொன்னத செய்ங்க" என்றவள் கேபமாக எழுந்து சென்றுவிட்டாள்.

அவள் சந்தியா கேஸில் மும்மரமாக ஆதாரங்கள் தேடிகொண்டு இருப்பதனால் தான் முரளியிடமும் சரத்திடமும் கேஸ்சை கொடுத்திருந்தாள். அவள் இங்கு வந்ததே சத்தியா சம்பந்தபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்க தான் அது முரளிக்கும் தெரியும் என்பதனால் திருவாரூர் எஸ்பியிடம் பேச சென்றார்.

தக்ஷினாவும் அதை தான் நினைத்துக்கொண்டு இருந்தாள். இந்த கேஸ்சை அவள் விசாரிக்க வேண்டும் என்பதன் காரணம் சத்தியாவின் காதலன் தான். இன்று அவன் உயிருடன் இல்லை என்றாலும் அவன் தந்த சிறு குறிப்பு தான் இந்த கேஸ்கான தீப்பொறி. அவள் கையில் இருந்த பேனில் சந்தியா செல்பி எடுத்துக்கொண்ட படம் இருக்க மோதிரம் அனிந்த ஒருவன் கைதெரிந்தது. அது தான் இந்த கேஸ்கான ஒரே ஆதாரம். அதை மட்டுமே வைத்து கண்டுபிடிக்க முடியுமா என்பது கேள்விக்குறி தான்.
———————————————

போருந்து சற்று கூட்டம் குறைந்து இருந்தது. காலையில் ஆராதனா வேலைக்கு வரும் வழியில் ரொனல்டோ பழுதடைந்த காரணத்தால் மெக்கானிக் கடையில் விட்டுவிட்டு பேருந்துக்கு காத்திருந்த நேரத்தில்தான் அவளை வழியில் பார்த்த விஷ்ணு அழைத்து வந்தான். அதியன் வேறு ஏற்பாடு செய்வதாக சொல்லியும் அதை மறுத்தவள் மாலையில் கூட்டமாக இருந்த பேருந்தில் ஏறினாள்.

கடந்த ஸ்டாப்பில் கூட்டம் குறையவும் மூச்சை இழுத்து விட்டவாறே சுற்றி பார்த்தாள் ஆராதனா. சில பெண்கள் நின்றிருக்க அவற்றுள் ஒரு கர்பினி பெண்ணும் சிரமபட்டு நின்றிருந்தாள். உட்கார்ந்து இருந்த அனைவரும் மொபைலில் தலையை விட்டு கொண்டு இருக்க மற்றவர்களும் இடம் தர முன் வரவில்லை. "ச்ச என்ன மனிதர்கள்" என்று தான் அவளுக்கு தோன்றியது.

அடுத்த நிறுத்ததில் ஒரு மாணவர் பட்டாளம் ஏற அவ்விடமே கலகலவென்று ஆனது பேசி கொண்டும் சிரித்துக்கொண்டும் விளையாடிக்கொண்டும் அவர்கள் வர மொபைலில் இருத்த தலையை தூக்கி பார்தவர்களுள் சிலர் மலரும் நினைவில் ரசித்தனர் சிலர் முகம் சுளித்தனர். அதனை எல்லாம் கண்டுகொள்ளாமல் வாசம் மாறாத கிராமத்து மணத்தை பரப்பி கொண்டு இருந்தார்கள். அதில் இருந்த ஒருவன் கற்பினி பெண்ணை பார்த்து விட்டு உட்கார்ந்திருந்த பெண்ணிடம் கையை காட்டி சொல்ல அந்த பெண்ணும் எழுந்து நின்று கற்பினிக்கு இடம் தந்தாள். நன்றி சொல்லிவிட்டு அவன் நண்பர்களிடம் செல்ல அனைவரும் கோரசாக "தேங்ஸ் கா" என கத்தவும் சிரித்துக்விட்டு திரும்பி கொண்டாள் அந்த பெண்.

"நம்மலும் இதை பண்ணிருக்கலாமே அத செய்யாம வீனா அவங்கள மனசுல திட்டிட்டு இருந்த நானும் அவங்களும் ஒன்றுதான். அவங்களும் இடம் தரகூடாதுனு நினைக்கல பட் இடம் தரனும்னு தோனலை இந்த காலம் எல்லாரையும் மாத்தி வச்சிட்டு என்னையும் சேர்த்து தான். கடவுளே இந்த கிராமத்தில மட்டுமாச்சும் நகரத்தோட காத்து அடிச்சிராம பார்த்துக்கோ" தன்னை திருத்திக்கொண்டவள் மானசீகமாக கடவுளிடம் நிபந்தனை வைத்தாள்.

வருவாள்…

போகாதடி என் பெண்ணே!
 
Last edited:
பெண்ணே 17.1
yswGQL1UHbl8t1jSHFisC3nZRjX5sNjy9jm4xLhJtOzIk_nMVNeYjAeoW79mrGBJ99PpLVnborkGY-T3xiPENU_6nIBg3dXkmnYbU5glb4GTF_drtNgHALvvfDxfvh74oHT20yBz=s0


ஜன்னல் ஓரம் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தாள் ஆராதனா. பேருந்து ஓரளவிற்கு காலியாக இருந்தது. பக்கத்தில் யாரோ வந்து அமரும் அரவம் கேட்டும் விரைவாக கடந்து செல்லும் கடைகளையே பார்த்துக் கொண்டு வந்தாள் அவள்.

"வேடிக்கை பார்த்து முடிச்சிட்டிங்கனா இந்த பக்கம் கொஞ்சம் திரும்புவீங்களா?" காதருகில் கேட்ட குரலில் "யவ அவ?" என விழி விரித்து ஆச்சரியமாக திரும்பி பார்த்தாள் ஆராதனா. மெருன் கலர் ஷர்ட்ல் முடியை உயர தூக்கி குதிரைவால் போட்ட பெண் அவளை பார்த்துகொண்டு இருந்தாள். மாஸ் அவள் முகத்தை மறைத்திருக்க "ஹலோ" என ஸ்டைலாக ஒற்றை புருவத்தை உயர்தினாள். அவள் குரல் ஆராதனாவினது போலவே இருந்தது.

"நமக்கு தான் அப்படி கேட்குதா?" என நினைத்தவள் காதை தேய்த்து விட சத்தமாக சிரித்த அப்பெண் மாஸ்கை அகற்ற கருவிழி இரண்டும் வெளியில் வந்துவிடும் அளவிற்கு அதிர்ச்சியாக பார்த்தாள் ஆராதனா.

அவள் பக்கத்திலே அமர்ந்து இருந்தவளோ ஆராதனாவை அச்சுஇட்டது போல் இருக்க பேச்சின்றி அவளையே பார்த்தாள் ஆராதனா.

"நீ…. நீங்க?"

"ஜ யம் தக்ஷினா அலைஸ் தீ" அவள் கணீர் குரலில் வியந்து தக்ஷினா நீட்டிய கையை பற்றி குலிக்கியவள் "ஐ யம் ஆராதனா " என தன்னை அறிமுக படுத்திக் கொண்டாள்.

"நீங்க அப்படியே என்னை மாதிரியே இருக்கிங்க. நான் எதிர்பார்க்கவே இல்ல" ஆச்சரியம் மறைந்து குதுகலித்தாள் ஆராதனா. தக்ஷினாவிடமும் உற்சாகம் ஊற்றுதான். தன்னிலை மறந்து இருவரும் சந்தோஷமாக பேசினர்.

"நானும் தான் உன்னை பார்ததும் எதுவும் யோசிக்காம என் காரை சாவியோடு அங்கையே விட்டுட்டு இந்த பஸ்ல எறிட்டேன்"

"அச்சச்சோ சாவியோடையா? யாராச்சும் திருடிட போறாங்க" பதறியவளை பார்த்து சிரித்தாள் தக்ஷினா.

"எஸ்பி வண்டிய திருடினா கம்பி தான் என்னனும்"

"நீங்க எஸ்பியா?" என்றவள் ஜன்னலோடு ஒட்டி தள்ளி அமர்ந்தாள்.

"வெளியே விழுந்துடாத. ஆமா எஸ்பி தான் அதுக்கு ஏன் இவ்வளவு பயம்?"

"பயம்லாம் இல்லையே" என சமாளித்தவள் தக்ஷினாவின் நக்கல் சிரிப்பில் "கொஞ்சம்" என அசடு வழிந்தாள்.

"என்ற பண்ற படிக்கிறயா?"

"இல்ல இல்ல ஹில்ஸ்ல மேனேஜரா ஓர்க் பண்றேன்"

"அந்த கம்பேனியா? மேடமும் பெரிய அளுதான் போல?" என இருவரும் சிரித்தனர்.

"அச்சச்சோ என் ஸ்டாபிங் வந்துட்டு" சோகமாக ஆராதனா எழ தக்ஷினாவும் எழுந்துக் கொண்டாள்.

"சரி மேடம் நான் போய்ட்டு வரேன். உங்கள பார்த்தது இன்னைக்கு எனக்கு பெரிய சர்ப்ரைஸ்"

"எனக்கும் தான்" என அவளுடன் சேர்ந்து இறங்கியவள்

"ஆராதனா ஒரு காஃபி குடிக்கலமா?" எனவும் சந்தோஷமாக தலையாட்டினாள் அவள்.

"மேடம் உங்களுக்கு என்ன வேணும்? இங்க சமோசா நல்லாருக்கும்னு சொல்லுவாங்க "

"நீ என்ன தீ னு சொல்லு அதன் இப்போ வேணும்"

"சரிங்க தீ இப்போ என்ன வேணும்?"

"இந்த கடையே வேணும் வாங்கி தருவியா?"

"எது இந்த பெட்டி கடையா?"

"ம்ம்"

"பர்ஸ் தாங்காது தீ "என சிரித்தவள் சமோசா பிளேட்டை கொடுத்தாள்.

"உன் வீடு இங்கதான் இருக்கா?"

"ஆமா தீ பக்கத்து தெரு தான். ஹான்ன் சமோசா பிடிச்சிருக்கா உங்களுக்கு"

"ம்ம் சூப்பரா இருக்கு. என் அண்ணாக்கும் வாங்கிட்டு போக போறேன்"

"உங்களுக்கும் அண்ணனா? எனக்கும் சந்தோஷ்னு ஒரு அண்ணன் இருக்கான்"

"ம்ம் என் அண்ணன் பேரு விமலன். அவனும் ஐ பி எஸ் தான் உனக்கும் தெரிஞ்சிருக்கும். அடிக்கடி நீயுஸ்ல கூட வருவான்"

"விமலன் சார் தங்கச்சியா நீங்க. எனக்கு இன்னைக்கு ஓரே சர்ப்ரைஸா இருக்கு. நான் சாரோட பெரிய ரசிகை தீ" கைகொட்டி குதுகலித்தவலை இடது பக்கம் தலை சாய்த்து பார்த்தாள் தக்ஷினா.

"அப்படியா அவன் கிட்ட சொல்லிடுறேன். விமியும் உன்ன பார்த்தா ரொம்ப சந்தோஷ படுவான்" அளுக்கு ஒரு பார்சலை வாங்கி கொண்டு இருவரும் சேர்ந்து நடந்தனர்

"தீ கொஞ்சம் பின்னடி பாருங்களேன் ஒரு கார் நம்மளையே பாலோவ் பண்ணுது" ஆராதனா அவள் காதில் ரகசியம் பேச தக்ஷினா திரும்பி பார்த்ததும் கார் அங்கையே நின்றுவிட்டது.

"நீ நிறைய படம் பார்ப்பியோ? ஹாஹா எதாச்சும் அட்ரஸ் தேடி சுத்திட்டு இருந்திருப்பாங்க" தக்ஷினா சிரிக்க கண்ணை சுருக்கி சிரித்தாள் ஆராதனா. "இதுதான் என் வீடு தீ. உள்ள வாங்க அம்மா பார்த்தா சந்தோஷ படுவாங்க"

"இருக்கட்டும் இன்னோரு நாள் வரேண். எனக்கு ஒரு அவசர வேலை இருக்கு ஆராதனா"

"ஓ சரி தீ அப்போ நீங்க கிளம்புங்க" என்றவள் சந்தோஷ் வருவதை பார்த்து உள்ளே சென்றுவிட அவர்களை தொடர்ந்து வந்த காரில் ஏறி கொண்டாள் தக்ஷினா.

"சார் பாடி ரொம்ப சேதாரம் ஆகிருக்கு. நீங்க நாளைக்கே அவங்கள அழைச்சிட்டு வந்து அடையாளம் காட்ட சொல்லுங்க"

"சரி சார் நான் ஒரு கான்ஸ்டபிளையும் அவங்க கூட அனுப்புறேன் டெஸ்ட்லாம் கண்பார்ம் பண்ணிட்டு நிதானமா சொல்லுங்க"

"ஏன் முரளி? இவ்வளவு தூரம் கடத்திட்டு வந்து போட வாய்ப்பு இல்லனு தான் எனக்கு தோனுது ஏன் உங்க எஸ்பி இப்படி அடம்பண்றங்க? "

"சார் அதெல்லாம் நாம பேச வேண்டாம் மேடம் ரொம்ப ஸ்ட்ரிக்ட். அவங்க ஹோம் மினிஸ்டர் பொண்ணு கொஞ்சம் கவணமா பாருங்க. நானே வந்திருக்கனும் பட் எனக்கு இங்க வேற வேலை இருக்கு அதனால தான் உங்ககிட்ட கேட்கிறேன்"

"நல்லவேளை சொன்னிங்களே முரளி. நீங்க இத மறந்துட்டு அவங்கள அனுப்பி மட்டும் வைங்க"

"சரி சார் அந்த பேட்டோ மட்டும் அனுப்புங்க. அவங்க சைடு ஒரு கன்பர்மெசன் பண்ணிக்கலாம்"

"இதோ அனுப்பிட்டேன் பார்துட்டு சொல்லுங்க. நான் வைக்கிறேன் முரளி"

எதிர்முனையில் அழைப்பு துண்டிக்கபட்டவுடன் தன் போனிற்க்கு வந்த மெயிலை திறக்க ஒரு கவரில் பச்சை வளையல் ஒன்று இருந்தது. அதை
பார்த்து ஒரு பெரு மூச்சோடு முடி வைத்தவர் தக்ஷினாவிற்கு அழைத்தார்.

"சொல்லுங்க முரளி"

"மேடம் அந்த ஆர் ஆர் காலேஜ் மேல நீங்க சொன்னது போல கம்பிளைனட் பைல் பண்ணிட்டேன். அந்த காலேஜ்ல படிச்சி பாரின்ல செட்டில் ஆன பொண்ணு இந்தியாக்கு திரும்ப வந்த மாதிரி பக்காவ எல்லா டாக்குமெண்ட்ஸ் என் கைக்கு வந்துடுச்சி மேடம். என்னாலேயே போலினு கண்டு பிடிக்க முடியல அவ்வளவு நீட்டா இருக்கு. வசுமதினு சொல்லிட்டு ஒரு பொண்ணு வந்து கம்பிளைன்ட் எழுதி கொடுத்துட்டு போணவுடனே ஒரு அரைமணி நேரத்துல கேஸ்ல வாங்க கூடாதுனு போன்ல மிரட்ரானுங்க மேடம்"

"குட் கரக்ட்டா என் பிளான் படி மூவ் ஆகுது. முரளி திரும்ப கால் வரும்போது கோபமா சொல்ற மாதிரி என் பேர சொல்லிடுங்க"

"மேடம் ஏற்கனவே க்ளப்ல ரைடு பிளன் இருக்கு நாளைக்கு. ரொம்ப ரிஸ்க்னு தோணுது எதுக்கும் விமலன் சார்கிட்ட சொல்லிட்டு..." அவரை பாதியில் இடைமறித்தாள் அவள்.

"நோ முரளி வேலை வேற பர்சனல் வேற. என்னோட ஒர்க்ல நான் இன்டிப்பெண்டன்ட் ஆ தான் இருப்பேன் அது ஹையர் அபிசியலா இருந்தாலும் சரி யாரா இருந்தாலும் சரி. நான் சொன்னது மட்டும் செய்ங்க"

"ஓகே மேடம்" என வைத்தவர் அழைத்தது என்னவோ விமலனுக்கு தான். அவனிடம் அவள் பேசிய கடைசி வார்த்தையையும் ஒப்பித்து அவளை பத்திரமாக பார்த்துக்க சொன்னது வரை தக்ஷினாவின் மேல் இருந்த முழுமையான அக்கறையில் தான். தக்ஷினாவை போல் சாதனை பெண்களை பொக்கிசமாக பாதுகாக்க வேண்டியது ஒரு ஆணாக தனக்கு இருக்கும் கடமை என நினைத்தார் முரளி.


"ரோகன் ஏன்டா இப்படி இருக்க? எப்போதும் இந்த கெமிக்கல் டெஸ்ட்னு அதைய நினைச்சிகிட்டே... ச்ச்ச மூலைய ப்ரஷ் பண்ணிக்கோடா. டேய்... சந்திப் சொல்லுடா அவனுக்கு" என மதுவை சுவைத்துக் கொண்டு இருந்த ரோகனை பார்த்து சொன்ன துருவ் சந்திப்பையும் துணைக்கழைத்தான்.

"ஆமா ரோகட் இந்த முறையும் நீ என்ஜாய் பண்ணவேயில்ல"

"பச் எனக்கு இதுல எல்லாம் இன்ரஸ்ட் இல்ல. என் டார்கெட்டே வேற" அவன் கண்ணில் தெரிந்த வெறியை போதை வசம் இருந்த இருவரும் கவனிக்க வாய்பில்லை.

"எனக்கு என்னவோ உன்கிட்ட ஏதோ பிரப்ளம் இருக்குனு தோனுது ரோகட்" துருவ் பேச்சில் சிறிதும் பாதிக்காதவனாக அவனை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தான் அவன்.

"துருவ் அவன ஏன் வம்பிழுக்குர. ரோகட் நீ நீயுவா கண்டுபிடிச்சதை அவளுக்கு போட்டோமே அது சம போதை நானும் ட்ரை பண்ணேன் அப்டியே சும்மா நரம்பெல்லாம் கிறுக்கலா இருந்துச்சு"

"அது ரொம்ப ஆபத்தான டரக்… இனிமே என்ன கேட்காம என் லேப்ல இருந்து எதையும் எடுக்காத. எக்ஸ்ட்ரா எடுத்த அப்பறம் கோமாதான்" அவன் எச்சரிக்கை விட இருவரும் இரு கையையும் தலைக்கு மேல் தூக்கினர்.


"சரி சரி எடுக்கல. அத விடு அங்க ஹாட் கேல்ஸ் வந்துட்டாங்க. நாங்க கிளம்புறோம் ஏய் துருவ் எழுந்திரிடா இப்போவே லேட்" என துருவை இழுத்தான் சந்திப். அரை போதையில் இருவரும் தள்ளாடி சென்றனர். அவர்கள் சென்றவுடன் அங்க இருந்த மது பாட்டிலை எடுத்தவன் துருவ் அமர்ந்திருந்த இருக்கையில் அவன் இருப்பது போல் கர்பனை செய்து அவன் தலைக்கு நேராக அதை வீச சுக்கு சுக்காக உடைத்து சிதியது கண்ணாடி துண்டுகள். பிறகு சந்திப் இருக்கையில் மதுவை ஊற்றியவன் லைட்டரால் பற்ற வைத்தவனுக்கு அந்த நெருப்பை பார்க்க பார்க்க உள்ளே ஒரு கணல் பற்றி எறிந்தது.

"பெயின்னா என்னனு நான் கத்து தரேண் உங்களுக்கு" அரக்கதனமாக சிரித்தவன் மறுகணம் "மோகி" என அவன் உதடுகள் துதிக்க கண்கள் கண்ணீர் உகுத்தது.

"அபி எனக்கு பயமா இருக்குடி ராத்திரி நேரத்துல வர சொல்லிருக்காங்கலே" தன்மகளின் கையை பற்றி கொண்டு வந்தார் கல்யாணி.

"அதன் பக்கத்து வீட்டு மாமாவும் துணைக்கு வராங்கள கவலை படாம வாம்மா" தன் தாய்க்கு ஆறுதல் சொல்லி அழைத்து வந்தாள் அபிராமி. எட்டு மணிக்கும் பரபரப்பு குறையாமல் இருந்தது அந்த காவல் நிலையம்.

"சார் இவங்கள வர சொல்லிருந்திங்கலாமே?" என அவர்களுடன் வந்தவர் கேட்க அவர்களை முரளியிடம் அழைத்து சென்றார் கான்ஸ்டபிள் ஒருவர்.

"வாம்மா எங்களுக்கு ஒரு டெட் பாடி பத்தி தகவல் வந்தது. நீங்க வந்து அடையாளம் காட்டினா அடுத்து என்ன பண்ணலாம்னு பார்கலாம்" உள்ளே வந்ததும் அவர்கள் தலையில் இடியை இறக்கினார் அவர்.

"அப்படிலாம் இருக்காதுங்க ஐயா. என் மக உசுரோடதான் இருப்பா. எப்படியாச்சும் தேடி கண்டுப்பிடிச்சி கொடுத்துருங்க உங்க பரம்பரையயே நல்லா இருக்கும் சாமி" கைகுவித்து அழுதவரை பார்த்து அபிராமிக்கும் அழுகை வந்தது.

"நாங்களும் கண்பார்மா சொல்லலமா. அதுக்கு தான் உங்கள கூப்பிடடேன். அங்க இறந்த பொண்ணு கைல ஒரு வளையல் இருந்ததாம் அதை போட்டோ எடுத்து அனுப்பிருக்காங்க பார்த்துட்டு சொல்லுங்க" என அவர் மொபைலை இயக்க அது ராதிகா உடைமையாக இருக்க கூடாது என்று இருவரும் வேண்டாத தெய்வம் இல்லை. ஆனால் தெய்வங்களும் சதி செய்தன போல் அவர் காட்டிய அந்த வளையல் அபிராமி ராதிகா பிறந்தநாளுக்காக அவள் புடவை கலரில் தேடி தேடி வாங்கி அன்று கடைசியாக அவளே ராதிகா கையில் போட்டு விட்டது என்று நினைவில் ஆட பிரம்மை பிடித்து அமர்ந்திருந்தாள். கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வடிந்தது.

"என்னாச்சு மா இது உன் அக்கா போட்டு இருந்ததா?" எனவும் மவுனமாக தலையை ஆட்டியவள் கதறி அழும் தாயை அனைத்துக் கொண்டாள்.

"அப்போ நீங்க இன்னைகே அங்க கிளம்புங்க இத வச்சி மட்டுமே எதையும் உறுதியா சொல்ல முடியாது. உங்க கூட ஒரு கான்ஸ்டபிள் வருவாங்க அடையாளம் காட்டினா மத்த விசியத்தெல்லாம் பார்க்கலாம்" என்றவர் ஒரு கான்ஸ்டபிளை அவர்களுடன் அனுப்பி வைத்தார்.

போகாதடி என் பெண்ணே!
 
பெண்ணே 17.2

XmNQ8Q_0onwFIPXYXkeKF13SBKPq9q5QMNyepVHThL1geRYtaBGUVlnig1PxwOJ4akcFmLHwLD5h3MRF5pTvcTTx2-rMoPM25pd_jd_ClnUe4vCdjc4az-iDVKvoibkArpV1N2q_=s0


"எதுக்கு தீ கால் பண்ண?" என்றவாறு சோபாவில் தொப் என்று விழுந்தான் விமலன்.

"வா விமி உனக்கு ரெண்டு விசியம் இருக்கு. ஒன்னு வயிற்றுக்கு இன்னோன்னு காதுக்கு எது பஸ்ட் வேணும் பிரதர்?"

"ஹம்ம் முத வயிற கவனிப்போம் மை டியர் சிஸ்டர்" அவன் கையே நீட்ட உள்ளங்கையை கிள்ளியவள் சமோசாவை பிளேட்டோடு வைத்தாள்.

"ஹே சமோசா எங்க வாங்கின? ம்ம் ரொம்ப டேஸ்டா இருக்கு" முழுசாக வாயில் அடைத்துக் கொண்டு சிறு பிள்ளை போல உண்டவனை தாய் சேயை பார்பது போல் பார்ததாள் தக்ஷினா.

"அத விடு விமி உனக்கு சமோசா பார்த்தோனே என்ன நியாபகம் வருது?"

"ம்ம் அத மறக்க முடியுமா. நீயும் நானும் ரோட்ல சமோசா கடைய பார்துட்டு அப்பா கிட்ட வாங்கி தர சொல்லி அடம் பிடிச்சோமே. ச்ச அன்னைக்கு அப்பா பாவும் சுத்தமா காசு இல்லாம நமக்கு வாங்கி தரலை. ஆனா நான் தான் அத புரிஞ்சிக்காம ரோட்லே உட்காந்து அழுதுருக்கேன்"

"ஹாஹா விமி உட்காந்து இல்ல உருண்டு புரண்டு அழுது அப்பா கிட்ட அடியும் வாங்கின" என தஷினா சிரிக்க அவளோடு சேர்ந்து சிரித்தான் விமலன்.

"அப்போ நம்ம கிட்ட இவ்வளவு பணம் பதவி பேருனு எதுவுமே இல்ல தீ ஆனா அன்னைக்கு இருந்த அளவுக்கு இன்னைக்கு சந்தோஷம் இல்ல முன்ன மாதிரி அப்பா மடில உட்காரதுக்கு சன்டைலாம் பேட முடியல"

"எனக்கும் அதுதான் நியாபகம் வந்தது. நம்ம சமோசா வாங்க கூட காசு இல்லனாலும் அம்மா சப்பாத்திய மடிச்சி சமேசானு ஏமாத்தி தருவாங்களே அத நம்பி எத்தன நாள் ஏமாந்திருக்கோம் பட் அதோட டேஸ்ட் இன்னைக்கு அதிகம்னு தோனுது விமி. அம்மா அப்பாக்கு ஏத்த பேர். அப்பா எவ்வளவு சம்பாதிச்சாலும் அட்ஜஸ்ட் பண்ணி கரக்ட்டா மேனேஜ் பண்ணுவாங்க"

"அதுக்கு காரணமே தாத்தா தான் தீ. தாத்தா அம்மாவா ரொம்ப செல்லமா வளத்தாராம். ஒரு இளவரசி மாதிரி எந்த கஷ்டமான நிலையையும் சமாளிக்கிற திறமைய கத்து கொடுத்தாராம். இன்பேக்ட் சின்ன டெய்லரிங்லேந்து அம்மாக்கு விவசாயம் பண்ணகூட தெரியும். நான் அம்மாக்கு பெரிய ரசிகன் தீ"

"நம்ம வீட்டு நந்தவணத்தை பார்த்தாலே தெரியுதே எவ்வளவு செடி வளர்குறாங்க. அதுக்கு உரம் தயாரிக்கிறது எப்படிதான் இப்படி பிஸ்னஸ் பார்த்துட்டே எல்லாத்தையும் ஹாண்டில் பண்றாங்களோ"

"நீயும் அம்மா மாதிரி தான் தீ. அம்மா தாத்துக்கு லேட்டா பிறந்த ஒரு பிள்ளை. அதனால எல்லாதையும் சின்ன வயசுலே சொல்லிக் கொடுத்திருக்காங்க"

"ஆமா தாத்தா கூட எல்லாத்தையும் என் மகளுக்கு சொல்லி கொடுத்த நான் காதல் வந்தா எப்படி தப்பிக்கிறதுனு சொல்லி தராமல் விட்டுட்டேன் ஆனா அவ உங்க அப்பாவ செலக்ட் பண்ணி என் வளர்ப்பு சோடை பேகலனு நிருப்பிச்சிட்டானு என்கிட்ட ஒரு நாள் சொல்லிருக்காரு விமி"

"பஸ்ட் அப்பானா தாத்தாக்கு சுத்தமா பிடிக்காதாம் தீ. சொத்துக்கு ஆச பட்டு தான் அம்மாவ ஏமாத்தி கல்யாணம் பண்ணிகிட்டத சொல்லி தள்ளி வச்சிட்டாராம். அதனால தான் அப்பா அம்மாவ எந்த வேலையும் பார்க்க விடலை. நம்ம நல்ல நிலைக்கு வந்ததுக்கு அப்பறம் நீ எங்களுக்காக என்ன செய்யனுமோ செய் இப்போ இது என்னோட கடமைனு சொல்லிட்டாராம். அப்பாவும் கிடைக்கிற வேலை எல்லாம் செய்வாரு பட் நீ பிறந்தப்போ அப்பாக்கு அக்சிடண்ட் ஆகி ரெண்டு வருசம் நடக்க முடியாம இருந்தாங்க. அப்போ அப்பாவையும் பாத்து க்கிட்டதால அம்மா சின்னதா சாப்பாடு கடை போட்டு சம்பாதிச்சாங்க அதை வச்சி தான் கஷ்டத்துலையும் நம்மளை கான்வென்ட்ல படிக்க வச்சாங்க. இன்னும் எனக்கு நினைவுல இருக்கு ஒரு நாள் உனக்கு மட்டும் தான் சாப்பாடு இருந்தது அன்னைக்கு அம்மா மடில படுத்து அப்பா ரொம்ப அழுதாங்க. அதுக்கு அப்பறம் தான் கொஞ்சம் நடக்க ட்ரை பண்ணாங்க. தாத்தா கம்பெனினு தெரியாம அங்க கிடைச்ச வேலைய பார்த்தாங்க. உனக்கு ஒரு ஏழு வயசு இருக்கும் பொது நம்ம தாத்தா பேக்ட்ரில ஒரு ஃபயர் அக்சிடண்ட் ஆச்சி. அப்பாகூட அங்க இருந்த லேடிஸ் குழந்தைங்கனு இருபது பேரை காப்பாத்தினாங்களே அன்னைக்கு தான் தாத்தா அப்பாவ பத்தி புரிஞ்சிக்கிட்டாங்க"

"நல்லா நியாபகம் இருக்கு. ஆனா அம்மா தான் தாத்தா மேல கோபமா இருந்தாங்க"

"அது ரொம்ப வருசம் தாத்தா பேசாம இருந்தாங்கனு கோபம். ஆனா அப்பா ஈகோ பார்காம சமாதானம் பண்ணிவச்சாரு. தாத்தா அம்மாவ சேர்த்துக்க அதுமட்டும் காரணம் இல்ல அம்மாவோட சொந்த காரவங்களாம் நம்ம தாத்தாகிட்டருந்த சொத்தை எல்லாம் அபகரிக்க பார்த்திருக்காங்க அது அவங்க பரம்பரை சொத்து அதான் எப்படியாச்சும் அம்மாகிட்ட அத ஒப்படைக்கனும்னு தாத்தா தவிச்சிருக்காரு. ஆனா அம்மாவும் அப்பாவும் டெல்லில இருந்தது தெரியல தெரிஞ்சதுக்கு அப்பறமும் பேச அவரு ஈகோ இடம் தரலயாம். பட் அப்பாவோட நல்ல மனச பார்ததும் அவரே மன்னிப்புக் கேட்டாராம். எல்லாத்தையும் தாத்தா தான் எனக்கு சொன்னார்"

"எனக்கு இன்னைக்கும் ஒரு விசியம் மட்டும் புரியல விமி. அன்னைக்கு அப்பா அவர நம்பி இருந்த அம்மாவையும் நம்மையும் பத்தி கவலை படாம எப்படி உயிர பணயம் வச்சி அவங்கள காப்பாத்த போனாங்க?"

"அத நான் சொல்லலாமா அம்முடா?" இருவரும் திரும்பி பார்க்க முத்துவேல் தான் நின்றிருந்தார்.

"அப்பா ப்பா" இருவருமே எழுந்து நிற்க சோபாவில் அமர்ந்தவர் கண்ணை மூடி திறந்து இருவரையும் பக்கத்தில் அழைத்து கையனைப்பில் வைத்துக் கொண்டு சிரித்தார்.

"என் பிள்ளைங்களுக்கு என்ன சந்தேகம் சொல்லுங்க?"

"அது அப்பா... எப்படி நீங்க எங்கள பத்தி யோசிக்காம எல்லாரையும் காப்பாத்தினிங்க?" தக்ஷினா

"யாரு சொன்னா உங்கள பத்தி யோசிக்கலனு?"

"அப்பறம் எந்த தைரியம் ப்பா உங்களுக்கு?" விமலன்.

"உங்க அம்மா தான்"

"அம்மாவா?" இருவரும் கோரஸ் பாட கனிவாக பார்த்தவர் கண்ணில் காதலும் கர்வமும் போட்டி போட்டன.

"சாந்தினி தான் டா என்னோட தைரியம். அங்க எனக்கு எதாச்சும் ஆகிருந்தா கூட கொஞ்ச உயிர காப்பாதின நிம்மதி எனக்கு பேதுமானதா இருந்துருக்கும். அதுமட்டும் இல்ல என் பெண்டாட்டி என்ன விட திறமையானவ என் செல்லங்கள நல்ல வழில வளர்திருபா அந்த தைரியம் தான். என் மேல வச்ச நேசத்துக்காக முள் தரையில நடக்க சம்மதிச்சவடா. நான் மட்டும் அவள வேலைக்கு பேககூடாதுனு சொல்லலனா கஷ்டபடாம சொகுசாவே வாழ்திருக்கலாம். ஆனா எங்க காதல அது கொச்சை படுத்திரும்மோனு நான் பயந்தேன். இன்னைக்கு நான் இவ்வளவு பெரிய மனுஷன் ஆகிருகேனா அதுக்கு என் சாந்தினி மட்டும் தான் காரணம். அவ உங்கள பார்துப்பாங்கிற தைரியம் என்ன அவங்கள காப்பாத்தவச்சது அது இன்னுக்கு பதவி பேர்னு நிறைய பரிசா தந்துருக்கு எல்லாத்துக்கும் என்னோட காதல் மனைவிமட்டும் தான் காரணம்" அவர் பேச்சில் இருவரும் வியந்து பார்த்தனர்.

முத்துவேல் புதுமையான மனிதராக இருந்தாலும் தன் தாயின் உன்னதமான காதல் அவரை உயர வைத்ததை நினைத்து ஆச்சரியமாக பார்தனர் இருவரும். எத்தனமுறை கேட்டாலும் ஒரு மனிதரின் சிந்தனைகளும் என்னங்களும் புதுமையாக இருக்கும் விந்தை என்னவோ?.

உற்ற நேரத்தில் ஒருவரது தைரியம் எத்தனையோ சாகச படிகளை தாண்ட தூண்டு கோளாக அமைகிறது. அத்தகைய துணை அமைந்தால் எத்தனை துன்பங்களையும் தூசியாக தட்டிவிடாலாம். நான் இருக்கிறேன் என்ற ஒற்றை சொல்லின் மந்திரம் பலருக்கு எனர்ஜி பூஸ்டர் தான்.

👇👇continue in next
 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom