Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


RD NOVEL போகாதடி என் பெண்ணே! - Tamil Novel

Status
Not open for further replies.
விமலனும் தஷினாவும் ஹாஸ்பிடலில் இருந்து வெளியில் வர சரியாக ஆராதனா வந்த பஸ்சும் அங்கு நின்றது. மூவரும் ஒருவரை ஒருவர் பார்க்க விமலன் தக்ஷினாவோடு பஸ்சில் ஏறினான். காலை கூட்டம் கொஞ்சமாக தான் இருந்தது. விமலன் ஆராதனாவிடம் பேச ஆர்வம் காட்டினான்.

"மார்னிங் சார்"

"மார்னிங்… என்னஆஃபிஸா?"

"ஆமா சார்" என புன்னகை சிந்த தக்ஷினாவை ஒரு பார்வை பார்த்தான் விமலன்.

அதில் "நான் சொன்னேன்ல நீயே பார்த்துக்கோ" என செய்தி இருக்க ஆராதனாவை உற்றுப் பார்த்தாள் தக்ஷினா. அந்த பார்வையில் ஏதோ இருப்பதாக தான் தோன்றியது ஆராதனாவிற்க்கு.

"உனக்கு சென்னைதான் சொந்த ஊரா?" விமலன்

"இல்ல சார் நான் பிறக்குறதுக்கு முன்னாடி தான் சென்னைல செட்டில் ஆகிட்டாங்க"

"ஓஓ... சரி சரி சாப்டாச்சா?"

"ம்ம் நீங்க சார்?"

"சார் சொல்லாத… அண்ணானே சொல்லு" எனவும் சந்தோஷமாக "சரி அண்ணா சாப்டாச்சா" என்றாள்.

"அட அதெல்லாம் விமி சாப்டாச்சு. விமி உனக்கு ஒன்னு தெரியுமா இவ உனக்கு பெரிய ரசிகையாம்" என "எனக்கா?" ஆச்சரியமாக விமலன் கேட்க தலையை ஆட்டினாள் ஆராதனா.

"அதிசயம் தான்… இத உங்க ஆபிஸ்க்கு வருவான்ல புவி அவன்கிட்ட சொல்லிடு" என மிரண்டு விழித்தாள் அவள்.

"ஏன்? ஏன் இப்படி பயம்? " விமலன்.

"அவரா…? நான் எப்படி? அவங்கள பாத்தாலே பயமாருக்கும்" என

"குழந்தை பயன் மா அவன்… வெளில தான் விரப்பா திரிவான். பாசகார பயபுள்ள" என மீசையை முறுக்கி விட்டான் அவன்.

"ஆர் நீ புவி கூட பேசுனதே இல்லையா?" தீ

"ம்ம்... என்ன இண்டர்வியூ பண்ணதே அவர் தான் தீ"

"அப்புறம் ஏன் பயப்படுற?"

"அது அவர் போலீஸ்" எனவும் இருவரும் அவளை முறைத்தனர்.

"நாங்களும் போலீஸ் தான்" என திருதிருவென முழித்தாள் அவள்.

விமலன் கண்ணை காட்ட ஒற்றை கண்ணடித்த தக்ஷினா "ஆமா ஆர் நீ எப்போ ஃப்ரீ? ஒரு நாள் நீ எங்க வீட்டுக்கு வரனும்" பேசிக் கொண்டே அவள் வாட்டர் பாட்டிலை எடுத்து விமலனிடம் கொடுக்க அதை மறைத்துக் வைத்துக் கொண்டான் அவன்.

"சரி" என தலையசைத்தாள் ஆராதனா.

கூட்டம் ஏற விமலன் பின்னால் சென்றுவிட்டான். இருவரும் அப்போது தான் கவனித்தனர் பக்கத்து இருக்கையில் ஒரு நடுத்தர வயது ஆண் தன் பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்ணிடம் சில்மிசங்கள் செய்துக் கொண்டு இருக்க நெளிந்துக் கொண்டு இருந்தாள் அவள். தக்ஷினா அவனை அடிக்க எழ தடுத்து அமர சொன்ன ஆராதனாவை கேள்வியாக பார்த்தாள்.

"இது அந்த பொண்ணு தான் தண்டனை கொடுக்கனும். இன்னைக்கு நீங்க ஹெல்ப் பண்ணுவிங்க ஆனா நாளைக்கு.. அடுத்து அடுத்து நீங்களா உதவி பண்ண முடியும்" என அவளை முறைத்தாள் தக்ஷினா.

"அதுக்குனு பார்த்துட்டு இருக்க சொல்றியா" என "உதவி தேவை படுற இடத்துல தான் செய்யனும்" அதில் அத்தனை ஆளுமை ஏனோ அவளால் மீற தோனவில்லை.

"இது என் கடமை" விடாமல் அவள் சொல்ல "இருக்கலாம் தன்னை தானே காப்பாத்திக்கிறது தான் நமக்கான முதல் கடமை. அத தடுக்காதிங்க" என்றவள் அவர்களை வெறித்து பார்க்க "நிச்சயமா இவளுக்கு ஏதோ நடந்திருக்கு" என மனதில் நினைத்தாள் தக்ஷினா.

அவன் மிகவும் அத்துமீற அப்பெண் எழுந்து நகர்ந்து நின்றுக் கொண்டாள். அவ்விடத்தில் ஒரு பள்ளி செல்லும் சிறுமி அமர அவன் அவளையும் உரசிக் கொண்டு இருந்தான். தொடகூடாது இடத்தை எல்லாம் மறைமுகமாக தொடவும் தீ கோபமாக ஆராதனாவை "பார் அவனை" என பார்க்க அவள் முகமோ தீயாக ஜொலித்தது.

"பொறுக்கி நாயே கைய எடுடா" அவன் கன்னத்தில் அறைந்து இருந்தாள் ஆராதனா. பின் சிறுமியை பிடித்து இழுத்தவள் அவன் சட்டையை கொத்தாக பிடித்து மேலே எழுப்பினாள்.

அனைவரும் வேடுக்கை பார்க்க "செய்வியா செய்வியா" என வெறிபிடித்து அறைய திகைத்து பார்த்தாள் தக்ஷினா.

விமலன் கூட்டத்தை நகர்த்திவிட்டு வர "அண்ணா உங்க பெல்ட்டை தாங்க" என அவனோ தக்ஷினாவை பார்க்க "கொடு" என்றாள். அவனும் கழட்டி கொடுக்க கையில் சுற்றிக் கொண்டு அவனை சீட்டை விட்டு வெளியே தள்ளியவள் வெளுத்து வாங்கினாள்.

"எம்மா எம்மா ஏன் அடிக்கிற?" என நடத்துனர் வர "பொறுக்கி தனம் பண்றான்… சின்ன பொண்ண.. ஸ்கூல் போற பிள்ளைய என்ன பண்ணான் தெரியுமா சார்.. இவன" என மதம்பிடித்து பெல்டை வீச அவரே சற்று நடுங்கி போனார்.

"இரும்மா... சார் வண்டிய ஸ்டேஷன் விடுங்க" என கத்திவிட்டு "நீயா அடிக்காத… வந்துட்டாங்க ஜான்சிராணி" என முனுமுனுக்க உக்கிரமாக பார்த்தாள் அவள்.

பயணசீட்டு கொடுக்கும் சாக்கில் பெண்களை உரசுவதே வேலையாக வைத்துக் கொண்டு இருந்தவனுக்கு ஆராதனாவை கண்டு கடுப்பாக தான் இருந்தது.

"யோவ்.. என்ன சொன்ன?" விமலன் கோபமாக வர உயிரே போய்விட்டது அவனுக்கு.

"சார் நீங்கள… ஒன்னும் சொல்லல சார்" என பின்னடித்தவன் பிறகு பேசவேயில்லை. அவளை விமலனும் தக்ஷினாவும் பிடித்து இழுத்து அமைதி படுத்தினர். அதற்குள் அந்த பெண்ணும் குடையை எடுத்து அவனை ரெண்டு அடி அடித்துவிட்டு அவளிடம் நன்றி சொன்னாள். அவனை அங்கு இருந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்ரிடம் ஒப்படைத்து தான் வந்தனர்.

"ஆர் அவன நீ தான் அடிக்க வேண்டாம்னு சொன்ன. இப்போ நீ தான் வெளுத்து வாங்கின. எனக்கு புரியலையே" என்றாள் தக்ஷினா.

"அதுவா தீ.. அவ சின்ன பொண்ணு இன்னைக்கு நான் செஞ்சது அவளுக்கு நல்லாவே பதிஞ்சிருக்கும். இப்படி தப்பு பண்ணா இந்த மாதிரி தண்டனை தரனும்னு மட்டும் தான் சொல்லிக் கொடுத்தேன். இனிமே யாராச்சும் அவகிட்ட வம்பு பண்ணா அந்த பொண்ணு மாதிரி விலகி போகம எதிரித்து நிப்பா. அவள பார்த்து நாலுபேர் எதிர்பாங்க. அமைதியா போறநால தானே கட்டுப்பாடு இல்லமா இப்படி நடந்துக்குறாங்க. ஒரு ஒருத்தனுக்கும் பயம் வேனும் தப்பு பண்ணா அடிச்சிருவாங்கனு நடுங்கனும். இப்போ இருக்க சமூகத்தை என்னால மாத்த முடியமா இருக்கலாம் பட் இந்த குழந்தைங்க தான் வருங்காலம். நாம நினைச்சா அத நல்லதா மாத்தலாம் அதுக்கான என்னோட சின்ன விதை" என்றவளை இருவரும் பரவசமாக பார்த்தனர்.

"வன்முறை மட்டுமே எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வாகாது ஆராதனா" விமலன்.

"நிஜம் தான் அண்ணா. ஆனா இந்த மாதிரி கொடுமைகளுக்கு இத விட சிறந்த வேற தண்டனை எனக்கு தெரியல"

விமலனுக்கு தீயும் ஆருவும் வேறாக தெரியவில்லை. சிந்தனையிலும் நடத்தையிலும் ஒற்றுமை அதிகம் தான் இருந்தது. ஆராதனாவை முதலில் பயந்த சுபாவம் என்று தான் நினைத்தான். இப்போது புரிந்தது அவள் இயற்கையாக வே தைரியமானவள் என்று. சந்தர்ப்ப சூழ்நிலை தான் அவளுடய பயமும் அமைதியும் என உணர்ந்தான்.

"ஆராதனாவும் தங்களோடு வளர்ந்திருந்தால்..." என ஒரு தொடர் அவன் மனதில் ஓடியது. அவள் கிளம்பி சென்றதும் கலக்கமாக விமலனை பார்தாள் தக்ஷினா.

"நீ சொன்னது நிஜம் தான் விமி… நானும் கவனிச்சேன்" என "இத சும்மா விட முடியாது நான் என்னனு பார்கிறேன்" என அவள் கையை தட்டிக் கொடுத்தான்.

"மேடம் ஒரு முக்கியமான விசயம்" வேகமாக வந்து நின்றார் முரளி.

"சொல்லுங்க" என்றவள் சாய்ந்து அமர விரலி நினைவகத்தில் உள்ளதை ஓட விட்டார். அதில் ஒரு படம் சத்தியா இருக்க மற்றொன்று ராதிகாவின் சடலம். சில இடங்கள் ஒவ்வொரு படத்திலும் சிகப்பு கலர் வட்டம் போடபட்டு இருக்க அதை பார்தவளின் கண்கள் கோபமாக மின்னின.

"மேடம் இத பாருங்க அந்த காயம் எல்லாம் பாதி ஒரே மாதிரி தான் இருக்கு. இந்த ரெண்டு பாடிலையும் சில வித்தியாசம் தான் இருக்கு. இந்த ராதிகாவையும் கம்பியால் அடிச்சி தாடையை நகத்திருக்காங்க. அட்டாப்ஸீ ரிப்போட்ல தெரிஞ்சிரும்"

"பாடி எப்போ இங்க வருது?"

"இன்னைக்கு மதியம் வந்திரும் மேடம்"

"ம்ம் அந்த பாடிய நான் சொல்ற டாக்டர்கிட்ட ஒப்படைசிட்டு வேற அனாதை பாடிய டிஸ்போஸ் பண்ணுங்க" என்றவளை பார்த்தார் முரளி.

"இது சட்டத்துக்கு புறம்பான விசியம் மேடம்"

"நம்ம நாட்டுல சட்டம் பல விசியத்துல ஓழுங்கில்லாம தான் இருக்கு முரளி. மன்னிப்பு மன்னிக்க வேண்டிய தப்புக்குதான் தரனும். சட்டம் கடுமையா மாற வரைக்கும் என்னால காத்திருக்க முடியாது. மக்களுக்கு தான் நம்ம வேலை செய்யனும் ஆரசாங்கமே மக்களோட வேலைகாரங்கதான். நான் சொன்னத செய்ங்க. இனிமேல் ஒரு பொண்ணும் இவனுங்களால செத்தா அது நாம கொண்ண மாதிரிதான்" என முடித்துவிட்டாள்.

நம் நாட்டு சட்டங்கள் அனைத்தும் திருந்தி வாழ வாய்ப்பு கொடுப்பவைதான். ஆனால் செய்த தவறுக்கு ஏற்ற தண்டனை வேண்டும் அல்லவா. மனிதமே இல்லாமல் கொடூரங்கள் செய்பவர்களிடம் ஏன் மனித தன்மையோடு நடந்துக் கொள்ள வேண்டும்? இறந்த உயிருக்கு என்ன தான் பதில்? வாழவே தகுதியற்றவர்களுக்கு திருந்தி வாழ எதற்கு இந்த வாய்பு? என் கேள்விக்கு என்ன பதில்? சட்டம் கடுமையாக மாறாதவரை 1000 நிர்பயாக்கள் 1000 ஆசிபா 1000 பிரியங்கா தினமும் உயிர் விட்டுக்கொண்டு தான் இருப்பார்கள்.

சட்டம் கடமையை மறக்கும் போது நாங்கள் அதை கையில் எடுக்கும் நாள் மிக அருகில். பாவிகளை கொன்று எங்கள் விலங்கை திறக்கும் நாள் அருகில். கரண்டியை பிடித்த கை கத்தி ஏந்தும் நாள் அருகில். தூளி கட்டி ஆட்டிய கை துப்பாக்கி ஏந்தும் நாள் அருகில்.

மிளகாய் தூள் நெடியில் என் கைபைக்கு கண்கள் எரிகிறதாம்.

தன் முன் அமர்ந்திருந்தவனை பார்த்தார் முத்து வேல்.

"நீங்க குணமுதிதன்… சரியா? கண்டுபிடிக்க எவ்வளவு நாள் ஆகும்" என்றவரை பார்த்து சிரித்தான் அவன்.

"நீங்க கேட்டது இதுல இருக்கு சார்" என ஒரு பைலை நீட்ட அவசரமாக புரட்டியவர் கண்களில் கண்ணீர் தேங்கியது. அவனை நன்றியோடு பார்த்தார்.

"நன்றிப்பா… அத தவற என்கிட்ட சொல்ல ஒன்னும்மே இல்ல… நீ எனக்கு என் உயிர மீட்டு கொடுத்திருக்க" என அவன் கையை பிடித்து கண்கலங்கினார் அவர்.

"நான் இத உங்களுக்காக செய்யல சார். தக்ஷினாக்காக செஞ்சேன்… அவங்க மாதிரி ஒரு பொண்ண இந்த நாட்டுக்கு கொடுத்த உங்களுக்கு என் சார்பா ஒரு பரிசு இது. எத்தன பேர் இன்னைக்கு அவங்களால சந்தோஷமா நிம்மதியா இருங்காங்க. ஷீ இஸ் ஏ ஜெம் சார்" என எழுந்துக் கொண்டான் அவன்.

"குணமுதிதன் எதாச்சும் ஹெல்ப் வேனும்னா சொல்லுங்க… உங்களுக்கு உதவ நான் காத்துட்டு இருக்கேன்" என்றவரை ஒரு நிமிடம் பார்தவன் சிறு புன்னகையோடு ஒன்றுமே சொல்லாமல் சென்றுவிட்டான் அந்த டிடக்டிவ்.

அதில் "தேவைபட்டா சொல்றேன்" என்ற அர்த்தம் இருப்பதை உணர்ந்தவர் "கண்டிப்பா" என மனதில் சொல்லிக் கொண்டார்.

வருவாள்…

 
Last edited:
பெண்ணே 22
tuqEFxt1efK1e_eq8O10Lk9zwPCKZNYkZwZ2XYI7VrH9Yb0Js2rdXF6LtyfkT5sFzbuKyC76gB2p2E2R65U6qcMddhr-8ep9Arg_Sj4YDqTYcKMLgnE_oUBYSaPp1tMZKa5CTveF=s0


"மேம் ரிப்போர்ட் பாசிட்டிவ்" என அவள் கையில் தரப்பட்ட பைலை தக்ஷினா வேகமாக புரட்ட விமலன் கண்கலங்க அவளை பார்த்தான். (டிஎன்ஏ மேட்ச் 100 பர்சண்ட். ஐடன்டிகல் ட்வின்ஸ்) இவை தான் அவர்களின் நிலைக்கு காரணம். ஆராதனாவிடம் இருந்து எடுத்த வாட்டர் பாட்டிலை டெஸ்ட்டிற்கு அனுப்பி அவள் சலைவாவில் இருந்து எடுத்த டி.என்.ஏ வை தக்ஷினாவோடு மேட்ச் செய்ததில் அவர்கள் கணித்தது தான் வந்திருந்தது.

அங்கு முத்துவேலும் மனைவியை தேடி ஓடினார். பெரிய ஹாலில் தம்புரா வைத்துக் கொண்டு இசை மீட்டிக் கொண்டு இருந்தவர் அருகில் வந்து அமர்ந்தார் முத்து வேல். சிறு சிரிப்போடு கண்ணை திறந்த சாந்தினி அவரை பார்க்க கண்ணீர் வடிய பைலை சாந்தினியிடம் தந்தார். உள்ளே பார்த்தவருக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை "ஏன் தக்ஷினாவை ஆராதனா என்று எழுதியிருக்கிறார்கள்" என படிக்க படிக்க உணர்வு பிழம்பாக மாறியவர் அருவியாய் கண்கள் பொழிய ஆதரவாக முத்துவேலிடம் தஞ்சம் புகுந்தார்.

"என் மக… நம்ம அம்முலு… சாகல கடவுள் கண்திறந்திட்டார்" சாமியறை நோக்கி ஓட முத்து வேலும் கடவுளை கையெடுத்து வணங்கினார். தக்ஷினாவும் விமலனும் வீட்டிற்கு ஓடிவந்தனர்.

"அம்மா அப்பா…" கத்திக் கொண்டே வந்த விமலன் அம்மாவை பார்த்ததும் ஓடி சென்று தூக்கி சுற்றினான்.

"அம்மா நம்ம அம்முலு கிடச்சாச்சி… அவ சாகல மா… " எனவும் தெரியும் என தலையாட்டியவர் நடந்ததை சொல்ல விமலனும் எல்லாவற்றையும் சொல்ல குடும்பமே ஆனந்த கூத்தாடியது.

தக்ஷினாவுக்கு முதலில் தாங்கள் இரட்டை பிறவி என்பதே வினோதமாக உணர்ந்தாள். பல முறை சொல்லி பார்த்தாள் ஆனந்தமாக இருந்தது. தன்னை போல தன்னுடன் ஒட்டிக் கொண்டு ஒரு உயிர் நானும் அவளும் வேறு இல்லை.

அதுதான் அவள்பால் அவளை ஈர்த்ததா. எல்லாரிடமும் கறாராக நடப்பவள் ஆராவை பார்த்ததும் ஓடி சென்று பேசியது என்ன சிரித்தது என்ன. என் சகோதரி என் உடன்பிறப்பு.

"டேய்… நான் அம்முலுவ பாக்கனும் விமலா… இப்போவே" சாந்தினி அடம்பிடிக்க மறுத்தார் முத்துவேல் காரணம் அந்த பைலில் குணமுதிதன் குறிப்பாக அவள் மனநிலையை பற்றி எழுதியிருந்தான். அவளுக்கு சட்டென்று ஏற்றுக்கொள்ள கடினமாக இருக்கும் என்பதால் "கொஞ்ச கொஞ்சமா அப்ரோச் பண்ணலாம்" என்றார்.

"நோ... என் குழந்தைய நான் பாத்தே ஆகனும்" என சாந்தினி துடிக்க முத்துவேலை தவிர்த்து அனைவரும் கிளம்பினர். அவர்க்கு இன்னும் பல வேலைகள் இருந்தது.

தன் முன் அமர்ந்திருந்த தக்ஷினாவை தான் பார்தான் அதியன். ஆராதனா சாந்தினியுடன் திக்கி திணறி பேசிக் கொண்டு இருந்தாள். திடீரென்று வந்த சாந்தினி அன்பு ரசத்தை பொழிய என்ன பேசுவது என்று முழித்தாள். புவி வழியாக விமலனுக்கு அவர்கள் காதல் விஷியம் தெரியும் என்பதால் நேராக இங்கேயே அழைத்து வந்திருந்தான்.

தீயின் தாய் அவர் மகள் போலவே இருப்பவளிடம் பேச நினைத்தார் இது தான் ஆராதனா என்னியது. ஒருவாறு பேசி முடித்து மல்லுகட்டி சாந்தினியை அழைத்து சென்றான் விமலன். அதியன் புருவ உயர்வுக்கு அது ஒரு காரணம் என்றால் தக்ஷினாவும் ஆராதனாவும் உருவ ஒற்றுமை மட்டுமின்றி பழக்கவழக்கங்கள், குரல், செய்கை அனைத்தும் ஒரு ஒற்றுமையை காட்டியது. இருவரும் இடது பக்க தலையை சாய்த்து பார்பது உள்பட வலதுபக்க செயல்பாடு இருவருக்கும் அதிகமாக இருந்தது. தக்ஷினா இடது கையால் மேஜையில் விளையாடிக் கொண்டு இருக்க ஆராதனா இதேபோல் அடிக்கடி யோசிக்கும் போது செய்வதை பார்த்திருக்கிறான். காபி கப்பை தூக்கும் பாங்கு அவள் வலது கையில் எடுத்தாள் எல்லாமே ஒற்றுமையாய் இருக்க வேற்றுமையும் தெரிந்தது. அது அவன் உணர்வு தக்ஷினாவை பார்க்க அவனுக்கு எதுவும் தோன்றவில்லை ஆனால் தூரத்தில் நின்ற அவன் பப்பியை பார்த்தாலே ஒரு உணர்வு.

"பப்பி விஷ்ணுகிட்ட நியூ ஆடர்கான எஸ்டிமேட் இருக்கு அத சரிபாத்து எடுத்துட்டு வா" என அவளை அனுப்பிவிட்டு அவளிடமே கேட்டான்.

"நீயும் ஆருவும் டிவின்ஸா?"

"ஆமா… ஷி இஸ் மை டிவின்" என்றவள் எழுந்து சென்றுவிட்டாள். அதியனுக்கு சங்கடமாக இருந்தது "இது தெரியவந்தால் ஆரு மனநிலை என்ன?" என்று கவலையாக இருந்தது.

ஆண் ஆதிக்கம் காட்டி மட்டம்தட்டும் தந்தையும் சாகோதரனையுமே அவளுக்கு மிகவும் பிடித்தம். அதுவும் சந்தோஷ் என்றாலே பயத்தை மீறி அதில் இருக்கும் பாசம், அவனுக்கான அக்கறை தலையை வலித்தது அவனுக்கு. "அவள் உடைந்து போய்விடக்கூடாதே" என்று கவலை கொண்டவன் அவளை மனதலவில் தையார் படுத்தும் பொறுப்பை எடுத்துக் கொண்டான். உண்மை இனிப்போ கசப்போ கண்டிபாக சுவைத்துதான் ஆகவேண்டும்.

அதன் பொருட்டு ராகவன் குடும்பம் ஆதிஅந்தம் வரை அதியனாலும் முத்துவேலாலும் அலச பட்டது. தஞ்சையை நோக்கி அதியனும் முத்துவேலும் படைஎடுத்தனர். ஆராதனாவின் தாய்வழி தந்தையை பிடித்துவிட்டான் அதியன். தன் அதிகாரத்தை பயன்படுத்தி தூர்காவுக்கு இறந்த பெண்குழந்தை பிறந்ததை அறிந்துக் கொண்டார் முத்துவேல். இருவரும் நமசிவாயம் எனும் முதியவர் முன் அமர்ந்திருந்தனர் அவர் தான் துர்காவின் தந்தை.

"என்ன மன்னிச்சிக்கோங்க" என கைகூப்பினார் அவர்.

"எனக்கு ஒத்த பொண்ணு ஆசையா இருந்த நகபணத்தெல்லாம் போட்டு அரசாங்க உத்தியோக காரன்னு எம்மருமவனுக்கு கட்டி குடுத்தேன். அவ தலை எழுத்து மாமியாகாரி எம்பொண்ண பிச்சி பிடிங்கி தான் எடுத்தா… முத பிரசவம் ஆம்பள புள்ள இல்லனா வீட்டிக்கு வராதனு சொல்லி அனுப்பிவிட்டாய்ங்க… எம்மவ ஏறாத கோவில் இல்ல கண்யாகுமாரி மாதா வரைக்கும் வேண்டி நேந்துகிட்டுதான் சந்தோசு பய பொறந்தான். இரண்டாவது தடைவை உண்டானப்போ எம்மருவபிள்ளைக்கு வேலை போறமாதிரி இருந்துச்சுனு அவ்வோ வீட்டுல ஜோசியகாரன தேடி போனாங்க. படுவாவி அவரு நேரத்துக்கு பொட்ட புள்ள பொறந்தாதான் நல்லதுனு சொல்லிட்டாய்ங்க திருப்பவும் எம்மக கோவில் கோவிலா ஏறி இறங்கினா. இல்லனா அவருக்கு வேற கல்யாணம் பண்றதா அவ மாமியா மிரட்டிட்டு போச்சி… ஆண்ணோ பொண்ணோ நம்ம கையிலையா சாமி இருக்கு. இவிங்க படுத்துன பாட்டுல எம்பொண்ணு உடம்ப விட்டுறுச்சி புள்ள செத்துதான் ப்பா பொறந்தது. எம்பொண்ணு சாவ கிடந்தா யாரும் வந்து எட்டிக்கூட பாக்கல புள்ள செத்துபோச்சினா மனச விட்டுருவாளோனு நான் தான்" என நிறுத்தியவர் கண்ணை துடைத்துக் கொண்டார்.

"பக்கத்துல இரும்பு அடிக்க வந்த வடமாநிலகாரங்ககிட்ட இருந்து காசு கொடுத்து ஒரு பொம்பள புள்ளைய வாங்கினேன். பொறந்து ஒரு வாரம் தான் இருக்கும் ரோசா பூ மாதிரி இருப்பா எம்பேத்தி. குழந்தை செத்தது எனக்கும் என் வீட்டுக்காரிக்கு மட்டும் தான் தெரியும். பதினாறு பண்ணி அனுப்பிவச்சோம் அப்டியும் எம்பேத்திய கீழ்முழி காரி பொறந்த நேரம் ராகு காலம்னு எம் புள்ளைய அலகலிச்சாங்க. ஏதோ தனா தலையெடுத்து தான் எம் பொண்ணு நிம்மதியா வாழுது" கடந்த காலத்தை அறிந்துக் கொண்டவர்கள் யாருக்கும் தெரிய வேண்டாம் என்று சொல்லி கிளம்பினர்.

"அங்கிள் ஒரு நிமிஷம்" முத்துவேலை அழைத்தான் அதியன்.

"மாமானு கூப்பிடுங்க மாப்பிள" என்றவரை பார்த்து சந்தோஷமாக தலையாட்டினான்.

"உங்களுக்கு சம்மதமா மாமா?"

"என் பொண்ணுக்காக இவ்வளவு செய்றிங்க உங்கள மாதிரி மாப்பிள கிடைக்க கொடுத்து வச்சிருக்கனும்" என்றவர் அவனை அனைத்துக் கொண்டார்.

"மாமா அது… ஆரு எப்படி உங்ககிட்ட இருந்து மிஸ் ஆனா?" ஒரு நிமிடம் கண்ணை மூடியவர் வேதனையை விழுங்கினார்.

"அப்போலாம் எங்கிட்ட வசதி இல்லப்பா. நாங்க லவ் மேரேஜ் எங்க ரெண்டு பேரு வீட்டுலையும் ஏத்துக்கல ஆனாலும் சந்தோஷமாதான் இருந்தோம். உங்க அத்தைக்கு பிரசவலி வந்தப்போ பிரைவேட் ஆஹ்பிடல்ல பாக்க என்க்கிட்ட காசு இல்ல அதனால கவர்மெண்ட்க்கு தான் போனோம். குழந்தைங்க பிறந்ததும் இங்குபெட்டர்ல வைக்க எடுத்து போனாங்க ப்பா. அவங்க அலட்சியம் ஒரு மூனு மணி நேரத்தில அங்க ஹாக்சிஜன் சிலிண்டர் வெடிச்சி தீ பிடிச்சதுல பாதி குழந்தைங்கள தான் காப்பாத்தினாங்க. தக்ஷினாவ என் கைல கொடுந்தவங்க அம்முலு இருந்த பெட் எரிஞ்சு போச்சுனு சொன்னாங்க நானும் விதிய நொந்துகிட்டு சாந்தினிய எப்படி சமாளிக்கிறதுனு அதிலே இருந்தேன்"

"அப்பறம் எப்படி மாமா அவள தேட ஆரம்பிச்சிங்க?"

"அங்க சாந்தினிக்கு பிரசவம் பாத்த நர்ஸ் ஒருத்தவங்க தீ காயம் பட்டு இருந்தாங்க. மருந்து வாங்க போகும் போது அவங்கள பாத்துட்டு நலம் விசாரிக்க போனப்பதான் சொன்னாங்க அவங்க தான் அம்முவையும் அம்முலுவையும் ஒன்னா வெளில தூக்கிட்டு வந்து காப்பாதினாங்கனு. யாரோ குழந்தையை மாத்தி எடுத்து போயிட்டாங்க ப்பா. எனக்கு பெரிய அதிர்ச்சி நான் இருக்கும் போதே என் பொண்ணு காணப்போயிட்டாளேனு. பசில வாடடுனாளா? பத்தரமா இருக்காளா? எதுவும் தெரியால அதே நினைப்பில ரோடு கிரஸ் பண்ணதுல அக்சிடண்ட் ஆகி ரெண்டு வருஷம் நடக்கமுடியாம போச்சி மாப்பிள. எனக்கு சரியானதுலேந்து நானும் தேடிகிட்டேதான் இருந்தேன். இத்தன வருசம் கழிச்சி தான் எப்பொண்ணு எனக்கு கிடைச்சிருக்கா" என கண்கலங்கினார் அவர்.

அவரை தேற்றியவன் மெதுவாக விமலன் குடும்பத்திடம் அவளுக்கு நெருக்கம் இருப்பதுபோல் பார்த்துக் கொண்டான். அடிக்கடி எதிர்ச்சையாக அவளை பார்த்த விமலன் மணிகனக்கில் பேசினான். தீயும் ஆராவும் தினமும் மாலை ஒன்றாக பஸ்சில் சந்தித்தனர். ஆரு செல்லும் கோவிலில் சாந்தினி அன்னதானம் இட்டார் அர்ச்சனை செய்தார்.

அதியன் அவளை காரில் அள்ளிபோட்டுக் கொண்டு ஆஃபிஸ் நேரத்தில் விமலன் வீட்டு பார்டிக்கு விருந்துக்கு என சென்றுவந்தான். அனைத்தும் அவளுக்கு சந்தேகம் வாராதது போல் பார்த்துக் கொண்டனர். அவளுக்கே தெரியாமல் அவர்களிடம் ஒரு பிணைப்பு உருவானது. விமலன் காதலுக்கு ஐடியா கொடுப்பதில் ஆரம்பித்து தக்ஷினா கேசில் அவளுடன் கலந்துரையாடல் வரை. மூன்றே மாதங்களில் இயல்பான உரிமை உணர்வு தோன்றியிருந்தது.
 
*********************************
"என்னமா பாட்டு மிஸ் வீட்டுக்கு கிளம்பிட்டிங்களா?" என கதவை அடைத்துக் கொண்டு நின்றான் அவன்.

அந்த பள்ளி உரிமையாளரின் மகன். கடைந்தெடுத்த பொறுக்கி அயோக்கியன். அவள் இந்த பள்ளியில் சேர்ந்து ஆறு மாதங்கள் ஓடிவிட்டது. முதலில் சாதாரனமாக பேசியவன் அவளுக்கென்று யாருமில்லை என்பதை தெரிந்துக் கொண்ட பின் சுயரூபத்தை காட்ட தொடங்கியிருந்தான். பாட்டு வகுப்பு விடுமுறை தினத்திலும் பள்ளி நாட்களிலும் மாலை வறை இருப்பதனால் அபிராமி வீட்டுக்கு கிளம்பும் நேரம் அனைவரும் சென்றிருப்பர். தனியாக இருப்பவளிடம் தூண்டில் போடுபவனை கண்டு அவளுக்கு அநேக பயம் தான்.

அவன் அத்துமீறல்கள் அதிகரிக்க "வேலையை விட்டுவிடலாமா?" என்றுகூட நினைத்தது உண்டு ஆனால் படிப்புக்கும் பசிக்கும் வயிறுக்கும் படுக்கையில் விழுந்த தாய்க்கும் என்ன செய்வது? என்ற யோசனை அவன் உரசல்களும் இரட்டை அர்த்த பேச்சுகளும் பல்லை கடித்துக் கொண்டு பொறுத்து போனாள்.

பல மாலை வேளைகளில் ஆட்கள் அற்ற நேரத்தில் அவன் பார்வை அபியின் வயிற்றில் கிளியை மூட்ட தன் மாணவர்களுடனும் அவர்கள் பெற்றோருடனும் பேச்சுக் கொடுத்துக் கொண்டே தப்பித்து ஓடிவிடுவாள்.

தகுந்த நேரம் எதிர்பார்த்து அந்த ஓநாயும் வசந்த காலம் எங்கே என்று அபியும் எதிர்பார்க்க ஓநாயக்குதான் காலம் கனிந்தது போல் அன்று யாரும் இல்லாம் பள்ளி அமைதியாக இருந்தது. அலுவலகம் பூட்டபட்டு இருக்க பார்வை சட்டென்று வாயிலை நோக்கியது. அங்கு வாட்ச்மேனை காணவில்லை "அய்யோ" என்று அலறியது மனம்.

"ஆமா சார் கிளம்பிட்டேன்" இதை சொல்வதற்குள் இத்தனையும் அவள் பார்வை சுற்றி வந்தது.

அவன் கதவை மூடி தாழ்பாளை போட அவள் பயம் உறுதியானதில் உரைந்து நின்றாள் அது அவன் பார்வைக்கு மட்டுமே. கத்த கூட தோன்றவில்லை அது முட்டாள் தனமும்கூட யாருமே இல்லாத இடத்தில் கத்தினால் மட்டும் என்ன நடக்கும். அவனுடன் போறாட சக்தி வேண்டுமே.. அடுத்து "எப்படி தப்பிப்பது" என்று மூலை பல வழிகளை வகுத்தது. எல்லாமே அவன் அருகில் நெருங்க எடுத்துக் கொண்ட நேரத்தில். கைகளை பின்னால் மறைத்து அறுந்துகிடந்த வீணை நரம்பை உள்ளங்கையில் சுற்றிக் கொண்டாள்.

"என்ன அபிராமி எப்படி தப்பிக்கிறதுனு யோசனையா? எவ்வளவு நாள் என்கிட்ட இருந்து தப்பிக்க முடியும். இங்க பாரு சாவி மெயின் கேட் பூட்டியாச்சு வாட்ச் மேனும் வரமாட்டான். அடம்பிடிக்கலனா உனக்கு தான் நல்லது" என்றவன் சாவியை தூக்கி ஆட்ட அசையாமல் நின்றாள்.

"சார் வழிய விடுங்க… வெளில சொன்னேன் உங்களுக்கு தான் அசிங்கம்"

"ஹான் ஹாஹாஹா சொல்லிதான் பாரேன் ஒருத்தனும் கேட்க மாட்டான். நீ மட்டும் ஒத்துக்கிட்டா இங்கேயே உனக்கு பர்மணட் பண்ணி தரேன் அபி மாசம் நாற்பதாயிரம் சப்பளம் என்னமட்டும் அடிக்கடி கவணிச்சிகிட்டா போதும்" என இளித்தவன் அவள் தோளை பற்ற மூஞ்சை திருப்பிக் கொண்டாள் அவள்.

"தள்ளி போறிங்களா இல்லையா?"

"ஹீம்ம் போலாம் போலாம்" அவன் கிறங்கி போய் நிற்க அவன் கைகள் அவள் மேனியில் வலம் வந்தது அவனை தள்ள முயன்றாள் அழுத்தமாக நின்றான் அவன். அவள் கழுத்தில் முகம் புதைத்தவனை வலுவை திரட்டி தள்ளியவள் வயோலினை தூக்கி செவிலில் அடிக்க ரத்தம் உடைப்பெடுத்து மண்டியிட்டான் அவன். கையில் இருந்த கம்பியை அவன் கழுத்தில் போட்டு அவள் இறுக்க கைகளால் துலாவியவன் தலை தொங்கி விட பயத்தில் அவன் சட்டை பையில் இருந்த சாவியை எடுத்தவள் அவனை அப்படியே விட்டுவிட்டு பையை எடுத்துக் கொண்டு சைட் கேட்டை திறந்து வெளியில் ஓடிவந்தாள்.

படபடவென்று அடிக்கும் இதயத்துடன் அவள் விழிகள் சழன்று அவனை தேடியது. அவன் அங்கு இல்லை "எங்க போனிங்க" என மனதில் அழுதவள் வழியில் சென்ற ஆட்டோவை நிறுத்தி ஏறி அமர்ந்தாள்.

"எங்கமா போகனும் ஹாஸ்பிடலா?" அவள் கையில் இருந்த ரத்தத்தை பார்த்துவிட்டு ஆட்டோகாரண் கேட்க "பக்கத்துல இருக்க போலீஸ் ஸ்டேஷன் போங்க" என்றவள் கண்ணை மூடிக் கொண்டாள்.

அவளுக்கு கண்முன்னால் தோன்றியது விமலன் முகம் தான். அவனை பார்க்க வேண்டும் போல் இருந்தது. இத்தனை நாட்கள் அவள் பின்தான் அலைந்தான் காலை அவள் கல்லூரி வரும்போது சில சமயம் நிற்பான் இல்லை மாலை பள்ளி பக்கத்தில் இருக்கும் பேருந்து நிலையத்தில் நிற்பான். ஒரு முறை அவளிடம் அவன் பேச முயறச்சிக்க பயத்தில் திரும்பி பாரக்காமல் ஓடியவள் தான் கொஞ்சம் கொஞ்சமாக அவனை விரும்ப ஆராம்பித்து இருந்தாள்.

அவனிடம் சொல்லதான் பயம் மூன்று நாட்களுக்கு முன் காதலர் தினத்தன்று அவளுக்காக மதியமே பள்ளி வாயிலில் நின்றிருந்தவன் அவள் பயத்தில் தெரித்து ஓடிவிட மாலை வரை அங்கேயே நின்று அவள் வந்ததும் ஒரு கிப்ட் பாக்ஸை அவள் பக்கத்தில் வைத்துவிட்டு சென்றுவிட்டான். அவன் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு அந்த பாக்ஸை திறந்து பார்க்க மை லவ் என்ற ஒரு வாழ்த்து அட்டையும் ஹாரிபாட்டர் தீம் மியூசிக் பாக்ஸ்சும் இருந்தது. அவளுக்கு ஹாரிபாட்டர் என்றாள் கொள்ளை பிரியம் அதை தெரிந்துக் கொண்டவன் அவளுக்காக வாங்கி பரிசளித்திருந்தான். அதை ஆசையாக வருடிக் கொண்டே நிமிர்ந்தவள் சாலைக்கு அந்த பக்கம் அவளை பார்த்து சிரித்துக் கொண்டு இருந்த விமலனை பார்த்து வெட்கப்பட்டு அந்த பக்கம் திரும்பி நின்றுக் கொண்டாள் காதலை மீறிய பயம். காதலிக்க நினைக்கவில்லை ஆனால் வந்துவிட்டதே பட்ட காயம் எல்லாவற்றிலையும் துணிந்து செயல்பட விடாமல் தடுத்தது.

விமலன் மென்மையாக அவளை கையாண்டான். காலேஜ் பீஸ் முழுவதும் அவளுக்கே தெரியாமல் டரஸ்ட் என்று பொய் சொல்லி அவனே ஏற்றுக் கொண்டான். அவள் பட்ட காயம் அறிந்தவன் அவளுக்கு தொல்லை கொடுக்ககூடாது என்று என்னி தள்ளி நின்றாலும் தன் காதலை அவளுக்கு புரியவைப்பதில் பிடிவாதம் தான்.

காவல் நிலையம் வந்துவிட தயங்கி தயங்கி உள்ளே சென்றாள் அபிராமி. பழைய நியாபகம் தோன்றினாலும் முன்னேற வேண்டுமே. ரத்த கரையுடன் அவளை பார்த்தவர்கள் புருவம் உயர்த்த அவன் பேரில் கம்பிளைட் எழுதி கொடுத்தாள் அவள்.


"உட்காருமா" என்ற எஸ்.ஐ எழுந்து சென்றுவிட்டார். மிரட்சியோடு நகத்தை கடித்துக் கொண்டு நடுங்கும் கையுடன் இருந்தவளை அதட்டியது எஸ்.ஐயின் கர்ண கொடுரமான குரல்.

"ஏய் எழுந்திரி" என பக்கத்தில் வந்து கத்த சட்டென்று பையை கீழே போட்டுவிட்டு எழுந்து நின்றாள் அவள்.

"ஏ..என்ன சார்? "

"காச திருடிட்டு அதை கையும்காலுமா பிடிச்சோனே சிதார்த் சார அடிச்சி போட்டுட்டு இங்க வந்து உன்கிட்ட தப்பா நடந்தாங்கனு டிராமா பண்றியா" என அவளிடம் கை ஓங்க பயத்தில் சேரிலே விழுந்தாள்.

"இல்ல சார் நான் எந்த பணத்தையும் எடுக்கல… அவன் தப்பா நடந்துக்க பாத்தான் பயத்துல தான் நான் அடிச்சேன்" என அழுதவளை கண்டுக் கொள்ளாது "பார்வதி இவள உண்மைய சொல்ல வை" என கான்ஸ்டபிளிடம் ஆடர்போட கெஞ்சினாள் அவள்.

பல அறைகளும் அடிகளும் வாங்கி சோர்ந்து போய் அந்த பெஞ்சில் சாய்ந்து அமர்ந்திருந்தாள். அவமானமாக இருந்தது தக்ஷினா மேமிடம் சொல்லலாம் என்று பார்தாலும் அவள் பையை பிடிங்கி வைத்துக் கொண்டனர்.

"இந்த தண்ணிய குடி" என ஸ்டேனோ கொடுத்ததை குடித்தாள்.

அவர் மெதுவாக அவளிடம் பேசினார் "இங்க பாரு பாப்பா இந்த சிதார்த்து சரியான கேடி நீ வந்ததும் சாரு போன எடுத்துட்டு போனாரே எதுக்கு? அவனுக்கு போன் பண்ணதான். பேரம் பேசி ரெண்டு லட்சம் வாங்கிட்டாரு. ஒதுங்கி பேயிருக்கலாம் நீ. இனி உன்ன என்ன பண்ண போறானோ. யாராச்சும் தெரிஞ்சவங்க நம்பர் இருந்தா தா நான் போன் பண்றேன்" என்றார் ஆதரவாக.

"கடவுளே எவ்வளவு தான் சோதிப்பாய்?" மனதில் நொந்தவள்
"அவன் செத்துட்டான்னு பயந்து தான் வந்தேன்" என ஒரு நம்பரை எழுதி கொடுத்துவிட்டு கண்மூடிக் கொண்டாள்.

"ஏய் என்ன தூக்கமா? எழுந்திரு.." அவள் காலில் ஓங்கி மதித்தவனை பார்த்து பயந்து எழுந்தாள் அவள்.

"அவரு அங்க சீரியஸா இருக்காராம். ஒழுங்கா பணம் எங்கனு சொல்லிடு இல்ல அடிவாங்கி செத்துருவ"

"நான் எடுக்கல சார். நான் நேரா ஸ்கூல்லேந்து இங்க தான் வரேன்" என அழுக மெல்ல பக்கத்தில் வந்தவன்

"நீ என்ன பெரிய பத்தினியா. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணா கரஞ்சு போயிடுவியா… வேனா என்னையும் அட்ஜஸ்ட் பண்ணு உன்ன இதுலேந்து காப்பாத்தி விடுறேன். இப்பிடி கும்னு இருந்தா எல்லாருக்கும் கைவைக்கதான் தோனும். என்ன ஓகேவா?" என மேலும் கீழும் பார்த்தவனை "ச்சீ பொறுக்கி உங்க வீட்டு பொண்ணுன வைக்க தோனுமா" என தள்ள "யார பாத்து பொறுக்கினு சொன்ன திருட்டு நாயே" என்றவன் பலம் கொண்டு அறைய தூர போய் விழுந்தாள் அவள்.

"சார்…. லேடிஸ் சார் நீங்க அடிக்கிறது தப்பு" இடையில் வந்த கான்ஸ்டபிளை முறைத்துவிட்டு அவள் கையை பூட்ஸால் நசுக்கினான் அவன்.

"அம்மாஆஆஆஆ" அவளிடம் இருந்து பெரிய சத்தம் வர "ஆஆஆ" என்ற சத்தத்துடன் கீழே வழுந்தான் அவன். கோபமாக தக்ஷினா நிற்க பரிதவிப்போடு ஆராதனாவும் விமலனும் பின்னே ஓடிவந்தனர்.

"அபி அபி" என அவளை இழுத்து விமலன் நெஞ்ஜோடு அனைத்துக் கொள்ள அழுதவளை தட்டிக் கொடுத்தாள் ஆராதனா.

விமலன் அனைப்பில் இருந்தவளை பார்த்து விதிர்விதிர்த்து போனான் எஸ்.ஐ.

"பெரிய இடத்து பொண்ணு போலயே" என பயத்துடன் எழுந்தவனை கணல் பார்வை பார்த்தான் விமலன்.

"ராஸ்கல் எவ்வளவு தையிரம் இருந்தா அடிப்ப நீ" என அனைவரும் பார்க்க அவனை விளாசிய தக்ஷினாவை தள்ளிக் கொண்டு அவனை அறைந்தான் விமலன்.

அடுத்து ஐந்து நிமிடத்தில் சஸ்பென்ஸன் ஆடரை அவனிடம் நிட்டியவள் பார்த்த பார்வையிலே பிழைத்தால் போதும் என்று ஓடிவிட்டான்.

மூவரும் ஆராதனா நிச்சயத்திறக்கு டிரெஸ் எடுத்துக் கொண்டு இருக்கும் போது தக்ஷினாவிற்கு போன் வர அதில் கேட்ட செய்தியில் மூவரும் பாதியிலே ஓடி வந்திருந்தனர்.

"விமி அவள அழச்சிட்டு வா" என்றவள் ஹாஸ்பிடல் நோக்கி காரை விட்டாள். அடுத்த நாள் காலை பரபரப்பு செய்தியாக ரெட்லைட் ஏரியாவில் சிக்கிய பிரபல ****பள்ளி நிறுவனரின் மகன். போனில் இருத்து சிக்கிய ஆபாச வீடியோ மற்றும் படங்களால் சர்ச்சை. பெண்களுடன் நிர்வாணமாக நடனமாடும் ஆபாச வீடியோ நெட்டில் பகிரபட்டதால் அவமானத்தில் தற்கொலை முயற்சி" என ஓட திருப்தியாக பார்த்தது அவனால் பாதிக்க பட்ட ஆசிரியர்கள் மட்டுமல்ல பல மாணவிகளும் தான்.

அவன் ஆடவில்லை ஆடவைக்க பட்டான். தற்கொலை முயற்சி செய்யவில்லை செய்ய சொல்லி துண்புருத்த பட்டான். எல்லாமே தீ என்னும் பெண் சிங்கத்தின் விரலசைவில் நடந்தது.

இதை தவிர்த்து மறைமுகமாக இனி மற்ற பெண்களை என்ன கட்டிய மனைவியை தொடகூட அவனுக்கு தைரியம் வராத அளவில் தண்டனை தரபட்டது. ஹிட்லரின் ரசிகைக்கு தண்டனைக்கா பஞ்சம்.

பெண் என்பவள் தீ தான் ஒரு நாள் சுடும்.

வருவாள்…
 
பெண்ணே 23

மெல்ல கதவை திறந்துக் கொண்டு வந்தான் விமலன். பிங் கலர் நயிட்டி அணிந்து உடலை குறுக்கி படுத்திருந்த அபிராமியிடம் சென்றவன் அவள் முடியை ஒதுக்கிவிட்டு நெற்றியில் சின்ன முத்தம் வைத்தான். பின் கன்றி சிவந்திருந்த இடத்தில் ஊதிவிட்டவன் டிராயரை திறக்க பதறி எழுந்தாள் அவள்.

"ஹேய் ஒன்னும் இல்ல நான் தான் பயப்படாத"

மூச்சை இழுத்து விட்டவள் தயக்கமாக அவனை பார்த்தாள். பின்னே இத்தனை நாள் அவனை பார்த்து பயந்து ஓடிவிட்டு நேற்று முழுக்க அவன் மார்பில் சாய்ந்து அழுது அரற்றி பிதற்றி தாளமாட்டாமல் விமலன் அவள் இதழை வன்மையாக சிறைசெய்ய சிறு விசும்பலுடன் அவனிடம் அடங்கியவள் தூக்க மருந்து உபாயத்தில் அப்படியே உறங்கிவிட்டாள்.

கையில் பெயின்கில்லரை எடுத்தவன் அவள் உதடை விரால் தொட்டு பார்பதை கண்டு சிரித்தான். "நியாபகம் இருக்கா உனக்கு?" என அவள் அருகில் அமர நகர்ந்தவளை இடுப்போடு இழுத்து தோளில் சாய்த்துக் கொண்டான்.

"தள்ளி போகாத அபி இனிமே உன்ன நான் தனியா விடமாட்டேன். நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம்" என்றவன் அவளிடம் பதில்லாமல் போக விலக்கி பார்த்தான். அவனுக்கு மிகவும் பிடித்த கண்கள் கண்ணீர் வடித்துக் கொண்டு இருந்தது.

"ஏன்டா அபி உனக்கு என்ன பிடிக்கலையா?"

"இல்ல… பிடிச்சிருக்கு ரொம்ப" அவசரமாக மறுத்தாள். "ஆனா எனக்கு அதுக்கான தகுதி இல்லையே"

"என்ன தகுதி? பைத்தியமா டி நீ. வேலிட் ரீசன் சொல்லு" அதட்டினான் விமலன்.

"நான் இன்னும் காலேஜ் முடிக்கல… அம்மாவ நான் தான் பாத்துக்கனும். எனக்கு நிறைய பொறுப்பு இருக்கு" தீர்க்கமாக சொன்னவளை கர்வமாக பார்த்தான்.

"பண்ணலாம் எல்லாத்தையும் கல்யாணம் பண்ணிட்டு கூட பண்ணலாம். உன்ன யாரும் தடுக்க மாட்டாங்க. நீ வேலைக்கு போகலாம் படிக்கலாம். உன் சொந்த கால்ல நிக்கலாம் அதுக்கு நான் தடையா இருக்கவே மாட்டேன்" என்றவன் அவள் கையையை எடுத்து முத்தம் வைத்தான்.

"நிஜமாவா? என் கிட்ட நகை பணம் எதுவும் கிடையாது பரவாலையா?"

"நிஜம்தான் கிருக்கி உன்கிட்ட நகை பணம் இருந்தாலும் எனக்கு வேண்டாம். எனக்கு இந்த 50 கேஜி தாஜ்மகாலே போதும்" என்றவன் அவள் கையை கன்னதில் வைத்துக் கொண்டான்.

"நீங்க மினிஸ்டர் பையன். நான் சாதாரன வீட்டு வேலை செய்றவங்க பெத்த பொண்ணு. ஒரு பாட்டு டீச்சர்"

"நான் விமலன் நீ அபிராமி எனக்கும் உனக்கும் பிடிச்சிருக்கு அவ்வளவு தான் குழம்பாத" பொறுமையாக எடுத்துச் சொல்ல அழுதவளை மென்மையாக அனைத்தவன் "நீ இனி அழ கூடாது பேபி… உனக்கு நான் இருக்கேன். உங்க அம்மாவ ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கோம் அவங்க ட்ரீட்மென்ட் முடிஞ்சி இங்கயே அழச்சிட்டு வந்துக்கலாம்" என்றவனை அவளும் அனைத்துக் கொண்டாள்.

"உங்ககிட்ட இருக்க காசு பதவி அந்தஸ்து எல்லாமே எனக்கு பயமா இருக்கு சார். எனக்கு சாதாரன வாழ்கையே போதும் உங்களுக்கு ஏத்த மாதிரி என்ன மாற சொல்ல மாட்டிங்கள?"

"இந்த பாட்டு டீச்சர் அபிராமிய தான் நான் லவ் பண்ணேன்… என்ன நம்பலாம் நீ" என்றவன் அவளை விடுவித்தான்.

"உனக்கு ட்ரெஸ் கபோர்ட்ல இருக்கு. வேற எதாச்சும் வேனும்னா தயங்காத தீ கிட்ட கேளு. ஆராவும் மேல தான் இருக்கா அவகிட்ட பேசிட்டு இரு நான் வெளிய போயிட்டு வரேன்"

"ம்ம் சரி" என்றவள் இதழில் மென்மையாக வருடியவன் ஒரு சிறு முத்தம் ஒன்று தந்து விழிகளை இதழால் துடைத்து மறக்காமல் அவளுக்கு மருந்தை போட்டு விட்டவன் முத்தம் ஒன்றையும் தந்துவிட்டு வெளியில் வர முத்துவேலிடம் பேசிக் கொண்டு இருந்தான் அதியன்.

"வாங்க அத்தான்… ஆராவ பார்க்க வந்திங்களா?" என்றவாறே அவனருகில் அமர்ந்தான் விமலன்.
உறவுமுறை சொல்லி அழைக்க வேண்டும் என்பது சாந்தினியின் ஸ்ரிக்ட் ஆடர்

"இல்ல விமல் மாமாகிட்ட இன்விடேஷன் பத்தி பேச வந்தேன். யாரெல்லாம் இன்வைட் பண்றதுனு அப்பா கேட்க சொன்னாங்க" என விமலனும் முத்து வேலும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

"அவருகிட்ட கேட்டுடிங்களா மாப்பிள?" என்று தயங்கினார் முத்துவேல். சட்டென்று அவன் முகத்தில் வெறுப்பு "அவ எங்க?" என விமலனிடம் கேட்டவன் மேல என கண்காட்டியதும் உடல் இறுக அவரை பார்த்தான்.

"அந்த ஆளுகிட்ட கேட்கனும்னு அவசியம் இல்ல மாமா. அத்தைகிட்ட கேட்டுட்டேன் அவங்க சைடு யாரும் இல்லனு சொல்லிட்டாங்க"

"துர்கா அம்மா கிட்ட கேட்டா போதுமா? உங்க மச்சான்னு அங்கயும் ஒருத்தவன் இருக்கானே அவன்கிட்டயும் கேட்டுக்கோங்க அத்தான். இல்லனா தாம்தூம்னு குதிப்பான்" வெறுப்புடன் விமலன் சொல்ல சிரித்தான் அதியன்.

"என்ன விமல் ரொம்ப கோபமா இருக்க? எப்போதும் போல சண்டையா?"

"ம்ம் நேத்து ட்ரஸ் எடுக்க ஆராவ அழைச்சிட்டு வர அங்கபோனா அவள வீட்டுல வச்சிக்கிட்டே இல்லனு சொல்றான் அத்தான். துர்காமா தான் கண்ணகாட்டி சொன்னாங்க. திருமிரு பிடிச்சவன் எனக்கு முன்னாடியே என் தங்கச்சிய முறைக்கிறான்" என கருவினான் விமலன்.

சந்தோஷ்க்கும் விமலனுக்கும் ஒரு போரே நடந்து கொண்டு இருக்க அதியனுக்கும் ராகவனுக்கும் நடந்த போரில் அதி வெற்றி பெற்று காரிகையை கைபற்றிவிட்டான். ஆனாலும் போர்தான் முடிந்த பாடில்லை.

"விமி உன் டார்லிங் வாசல்ல நிக்கிறான்" சிரித்துக்கொண்டே வந்து அமர்ந்தாள் தக்ஷினா.

"யாரு?" என திருப்பி பார்க்க சந்தோஷ் தான் நின்றிருந்தான். அவளை விமலன் முறைக்க பக்கென்று சிரித்துவிட்டான் அதியன்.

"வாப்பா சந்தோஷ்…. உள்ள வா.." முத்துவேல் எழுத்து சென்று வரவேற்பு தர "இல்ல சார்… பரவாயில்ல நான் தனாவ கூட்டிட்டு போக வந்தேன்" என சுவற்றை பார்த்து பேசினான். மறந்தும் அவன் பார்வை அவர்களிடம் செல்லவில்லை.

அவசரமாக எழுந்த விமலன் ஆராதனாவை கீழே வர விடமால் செய்ய மாடியை நோக்கி ஓடினான் "அதி மாம்ஸ் விமிக்கு புசிகேட்(பொசசிவ்) உள்ள பறாண்ட ஆராம்பிச்சிட்டு" என அதியனிடம் சொல்லி சத்தமாக சிரித்தாள் தக்ஷினா. அச்சத்ததில் அவர்களை பார்த்த சந்தோஷ் அதியனை உறுத்து விழித்தான்.

"அந்த பொண்ணுகிட்ட உனக்கு என்ன பேச்சு" பார்வையிலே பொசுக்கினான். எதற்கு வம்பு என அதியனே அவனை பார்த்து சிரித்து வைத்தான். பின்னே சந்தோஷ் மனம் நொந்தால் அதியை ஆரு பக்கத்திலே விடமாட்டாளே.

"சரி இரு நான் அம்முலுவ வர சொல்றேன்" என்றவர் அவளுக்கு அழைக்க தடதட என ஓடிவந்தாள் அவள். பின்னே மூஞ்சை தூக்கி வைத்துக் கொண்டு விமலனும் வர நமட்டு சிரிப்புடன் இருவரும் அவனை பார்த்தனர்.

முத்துவேல் வெளியில் சென்றுவிட

"சந்தோஷ்… வா…. ண்ணா உள்ள வா…" என அவன் கையை பிடித்து இழுத்து வந்தவள் அதியன் பக்கத்தில் அமர வைத்துவிட்டு கிட்சனுக்கு ஓடி ப்ளாக் டி அவனக்கு பிடித்த பதத்தில் ஸ்நாக்ஸ் உடன் எடுத்து வந்தாள். விமலனையும் அதியனையும் மிதப்பாக பார்த்து கொண்டே அவன் எடுத்துக் கொள்ள இருவரும் ஆராதனாவை பார்த்து பல்லை கடித்தனர்.

"வாங்க அத்தான் எப்போ வந்திங்க…? காஃபி எடுத்துட்டு வரட்டுமா?" என அப்போதுதான் அதியனை கவனித்தவள் அவனை உபசரிக்க கிலுங்கி சிரித்தான் விமலன்.

"பார்த்திங்களா அத்தான் உங்கள அவ இப்போதான் பாக்குறா... இதுல எதோ அலேபதியோ டெலிபதியோ என்னமோ பீளா விட்டிங்க"

"அடபாவி மச்சான் கட்சி எதுவும் மாறிடாத…" என கிசுகிசுக்க இருவருக்கும் காஃபியை நீட்டினாள் அவள்.

"பார்த்தல என் பொண்டாட்டிய" என்றவன் அவளை பார்த்து சிரித்துக் கொண்டே வாங்கினான்.

ஆராதனா அதியனிடம் கண்ணை காட்ட விதியை நொந்தவன் "நல்லா இருக்கீங்களா சந்தோஷ்.." என "ம்ம்…" என்றவன் திமிர் காட்ட "தேவையாடி எனக்கு?" அவளை முறைத்தான் அதியன்.

இதை எதையும் கண்டுக் கொள்ளாத சந்தோஷ் அவளை அழைத்து செல்வதில் குறியாக இருந்தான்.

"தனா சீக்கிரம் கிளம்பு வீட்டுக்கு போகனும் எனக்கு ஆபிஸ் இருக்கு"
என்றதும் தலையாட்ட போனவளை விமலன் மறுத்தான்.

"அது ண்ணா நான் மதியம் வரவா?"

"உன்ன நான் கிளம்ப சொன்னேன்" என்றவன் கண்ணை உருட்ட தலையாட்டிவிட்டு மாடி ஏறிவிட்டாள்.

"ஹலோ என் தங்கச்சிய மிரட்டுற வேலை வேண்டாம்" விமலன் எகிற தக்ஷினா தலையில் கைவைத்துக் கொண்டாள். அதியன் அப்போவே எஸ்கேப் ஆகிவிட்டான் முடியம் சண்டையா அது.

"என் தங்கச்சிய நான் மிரட்டுவேன் உனக்கு என்ன? "

"அவ என்கூட பொறந்த தங்கச்சி. நீ மிரட்டுனா பாத்துட்டு இருக்க மாட்டேன்"

"என்ன பண்ணுவ… ஜெயில்ல பிடிச்சி போட்ருவியா… போலீஸ்ச பாத்து பயப்புட நான் ஒன்னும் சின்ன பையன் இல்ல ஹான். அவ பொறந்ததுலேந்து என்கூட தான் இருக்கா… எனக்கு அப்பறம் தான் நீ. இந்தோ பக்கத்துல இருக்காங்ல இவங்க தான் உன் தங்கச்சி… தனா இல்ல… என்னோட உரிமைய நான் விட்டு கொடுக்க மாட்டான். உன்னால முடிஞ்சத பாத்துக்கோ. பாப்பா எங்க வீட்டு பொண்ணு" என சவால் விட்டவன் கீழே இறங்கிய ஆராதனாவை தர தர வென்று இழுத்துக் சென்றான்.

"விடு விமி அவனுக்கும் கஷ்டமாதான இருக்கும். யாராச்சும் திடிர்னு வந்து என்ன அவங்க தங்கச்சினு சொல்லி உனக்கு இல்லனா கோபம்தான வரும்" என சமாதானமாக கையை பிடிக்க அதை உதறியவன் கோபம் அவளுக்கு திகைப்பாகாதான் இருந்தது.

***************************

அந்த மேடயில் வரிசையாக பலர் அமர்ந்திருக்க வெளிநாட்டுப் பெண் சரளமாக ஆங்கிலத்தில் வரவேற்புரை வாசித்தாள். கடைசியாக "வெல் கம் மிஸ்டர் ஆர். அர். ஆயுஷ் ரத்தோர் அண்ட் டாக்டர் ரோகன் பக்டே" என கரகோஷம் காதை கிழித்தது.




Continue in next 👉👉
 
Last edited:
6JnCmx5fdNvDVH945eCNncdor10yJ5cY_S7ImOLDcyq9qXXoPEODkpGzISQUCFKFXs_lqetS_NDmXTnFRD-ep9wJ-X_XMZVQOPVB26KSd091rHnIBr6LLXsmkltQquHgusQ7Qzc7=s0


ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் மாஸ்கோ ஓப்பரேட்டா ஸ்டேட் அக்கடமிக் தேட்டரில் தான் அந்த விழா நடந்துக் கொண்டு இருந்தது. மருத்துவர்கள், விஞ்ஞானிகள் மருத்துவ மாணவர்கள். வேதியியல் துறை நிபுணர்கள் பெரும் ஆய்வங்கள் நடத்தும் உரிமையாளர்கள் அந்நாட்டு அதிகாரிகள் பிஸ்னஸ் மேன்ஸ் அவர்களுடன் பாதுகாவலர்கள் என உலகிலேயே மிக முக்கியமானவர்களால் நிரம்பி வழிந்தது அவ்விடம்.


ஆர் ஆர் குழுமத்தின் கீழ் உள்ள ஆய்வகத்தின் தலைமையிடம் ரஷ்சியாவில் இருந்தாலும் அதன் கிளைகள் உலகம் முழுவதும் இந்தியா போல் வளர்ந்து வரும் பல நாடுகளில் இருந்தது. அதுவும் இந்தியாவில் தான் புது மருந்துகள் அனைத்தும் முதிலில் விநியோகம் ஆகும். அதுதான் தரமற்ற மருந்தாக இருந்தாலும் அதன் பக்க விளைவுகள் பற்றி கவலை கொள்ளாது கார்ப்பரேட் முதலாளிகள் கட்டும் கப்பத்திற்கு ஆப்பை அசைக்கும் குரங்கை போல் அனுமதி கொடுக்கிறார்களே நம் நாட்டு அரசியல் வியாதிகள்.

உலகில் தடை செய்யப்பட்ட குப்பைகள் விஷங்கள் அனைத்தும் நம் நாட்டில் உணவுப் பொருட்களாக சமையல் பொருட்களாக மருந்துகளாக அலங்கரித்துக் கொண்டுதானே இருக்கின்றன. பாதிக்கபடுவது மக்கள் தானே என்ற அலட்சியமா? காசுக்கு ஓட்டை மற்றும் நாம் விற்கவில்லை நம் உடல் உயிரையும் சேர்த்துதான் விற்றுக்கொண்டு இருக்கிறோம்.

எந்த நாட்டில் எந்த மருந்தை விநியோகிப்பது என்பதை மட்டும் போரட் ஆப் டிரக்டர்ஸ் ஆனா ரத்தோர் குடும்பம் முடிவு செய்ய ஆர் ஆர் ஆய்வகத்தின் மொத்தமும் வெறும் முப்பது வயதே ஆனா ரோகன் பக்டே பொறுப்பில் தான் இயங்கியது. இதை தவிர்த்து அயுஷின் தம்பி சிவகேஷ் ரத்தோரின் பொறுப்பில் உள்ள மருத்துவமனைகள் எண்ணில் அடங்கா. அயுஷின் மகன் துருவும் சிவகேஷ் மகன் சந்திபும் தான் இத்தனை சொத்திற்கும் ஒரே வாரிசுகள். ரோகன் பணபலம் உள்ளவானக இருந்தாலும் அவர்களிடம் இருப்பதில் கால்பங்கு கூட தேராது ஆனால் அவன் அறிவு அபரிவிதமானது. மூவரும் பள்ளி தோழர்கள் ரோகட் துருவின் தந்தையிடம் இருக்கும் லேப்பை பற்றி அறிந்து கொண்ட பின் தான் அவனுடனான நட்பை வளர்த்தான். ஏன் என்றால் அதிநவீன கருவிகள் அனைத்துமே அவர்களிடம் இருந்தது. துருவ் தன் நண்பனுக்காக தந்தையிடம் பேசி அவனுக்கு லேப்பை பயண்படுத்திக்க அனுமதி பெற்று தர உண்ண உறங்க மட்டும் தான் அவன் அவனுக்காக நேரம் செலவிட்டான். அவன் பதினைந்து வயதிலே ஒரு மருந்தை கண்டுபிடிக்க அதை கண்டு வியந்த ஆயுஷ் அதை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தினார். விளைவு ஆர் ஆர் நிறுவனும் அதன் இளம் சைன்டிஸ்ட் ரோகன் பக்டேவும் பல அவார்டை குவித்தனர்.


அதில் இருந்து ரோகனையும் ஆர் ஆர்ரையும் பிரித்து பார்க்கும் தையிரியம் யாரிடழும் இல்லை. ஆயுஷ்க்கு ஒரு வளர்பு மகனாகவே மாறினான். அவனுக்கு ஒரு தங்கையை தவிர உறவுகள் என்று யாரும் இல்லை. சிறு வயதிலே தந்தையும் தாயும் இறந்துவிட அவன் பாசத்துக்கான ஏக்கத்தை போக்கியவள் மோகி என்ற மோகினி பக்டே. அவன் அம்மாவும் அவள்தான் அவன் மகளும் அவள் தான்.

"தி இயர் ஆப் மெடிட்சினா" என்ற அவார்டை உயர தூக்கி பிடித்தான் ரோகன் பலர் அவன் கழுத்திலும் ஆயுஷ் கழுத்திலும் மெடல் அணிவிக்க அவர்கள் குழுமத்தின் சார்பாக பங்குபெற்று பெரும்பாலான மருந்துகள் பல அப்பாவி உயிர்களை குடித்து சிறந்தது என வெற்றி வாகை சூடியது. ஆனால் அதற்கான சந்தோஷம் சிறிதும் இல்லாமல் இருந்தான் அவன். அவன் பார்வை முழுக்க முதல் முறை மேடை ஏறிய போது முதல் இருக்கையில் அமர்ந்து பறக்கும் முத்தம் கொடுத்த தங்கையை சுற்றிவந்தது. அவள் இப்போதும் காற்றில் கலந்து அவனுடன் இருப்பது போல் "ரோகட்டி" என அவன் காதில் எதிரொலிக்கவும் உடல் சிலிர்த்து போனான்.

"மோகி மை பேமிலி… என்கூட நீ இங்க தான் இருக்கியா மோக்?" அவன் சற்றி தேடினான். கழுத்து செயினில் கோர்த்திருந்த மோதிரத்தை பிடித்துக் கொண்டான். அனைவரும் வந்து வாழ்த்து சொல்ல அவர்களிடம் உடல்நிலை சரியில்லை என விடை பெற்றவன் காரை எடுத்துக் கொண்டு சென்றான்.

ஹோட்டல் ரூம்க்கு வந்தவன் ஆவேசமாக மெடல்சை தூக்கி அடித்தான் ஆடையை உடலில் இருந்து பிய்த்து எடுத்தான். பெட்டியை திறந்து மோகினி படத்தை எடுக்க சிவந்தகன்னமும் கொழுக்மொழுக் தேவதையாக இருந்தாள். அவன் தலை வலித்தால் தலைசாய்த்து தூங்கும் மடியும் புருவத்தை வருடிய விரலும் "ரோகட்டிக்கு வலி போயிடுச்சா?" என சிரிக்கும் குரலும் நினைவில் தோன்ற படத்தை அனைத்துக்கொண்டு அழுதான்.

"மோக் எனக்கு ரொம்ப தலைவலிக்குது… என்கிட்ட வாயேன்… வா கூப்பிடுறேன்ல வரமாட்ட… அய்யோ மோக் என் கையால உன்ன கொல்ல வச்சிட்டானே… ஆஆஆஆஆ வலிக்குது மோகி வலிக்குது விடமாட்டேன் அவனுக்கும் வலிக்கனும் நான் அனுப்பவிக்கிறத விட ஒவ்வொரு அணுவும் துடிக்கனும்" என கண்ணீர் வடிய கத்தியவன் லிக்கர் பாட்டிலை எடுத்துக் கொண்டு பாத்திங் டப் தண்ணீரில் படுத்துக் கொண்டே காலி செய்தான் வெப்பம் மட்டும் அடங்கவேயில்லை.

ஏழு வருடங்களுக்கு முன்பு…

அன்று இரவு லேப்பில் இருந்து வந்தவனுக்கு மருந்து நெடியில் தலையை தெரித்தது. பத்துநாள் கழித்து இன்று தான் வந்திருந்தான். முக்கியமான ஒரு மருந்து பரிசோதனையில் இருந்ததால் அதிலேயே கவனமாக இருந்தவன் இப்போது தான் தங்கையை தேடினான்.

"மோகி… மோக்… எங்க இருக்க? ஒரே தலைவலி… மோக்" என கத்திக் கொண்டே வீடு முழுக்க தேட அவள் அங்கு இருந்தால் தானே. காவலாளியிடம் கேட்க அவள் நேற்று காலையில் சென்றவள் வீடு திரும்பவே இல்லை என்றான். அவளுடன் பாதுகாப்புக்கு ஒருவனை வைத்திருந்தான் ரோகன். உடனே அவனுக்கு அழைக்க அதுவும் உயிரற்று இருந்தது. அவன் தெரிந்த இடத்தில் எல்லாம் தேடிவிட்டான் இருவரும் கிடைக்கவேயில்லை.

இரவு சென்று பகலும் வர அந்த பாதுகாவலன் ஒரு முட்புதரில் பிணமாக எடுக்க பட்டான். ரோகன் பயத்தில் தனக்கு தெரிந்த போலீஸிடம் சொல்லி தேட சொன்னான். வெளிப்படையாக தேடமுடியாதே பணம் இருந்தால் பல பிரச்னைகள் கூடவே இருக்கும். ஆயுஷிடமும் அவன் நண்பர்களிடழும் சொல்லி அழுதவனை தேற்றியவர்கள் அவர்களும் சேர்ந்து தேடினர் பலன் தான் ஒன்றுமேயில்லை. ஒரு வாரம் பித்தன் போல் அவளை தேடி சோர்ந்துவிட்டான். அப்போது தான் அவன் போலீஸ் நண்பன் மூலம் ஒரு காட்டு பகுதியில் அவள் நம்பர் லொகேஷன் கடைசியாக காட்டியதாக சொன்னான். விழுந்தடித்துக் கொண்டு அங்கே சென்று தேடியவன் அங்கு இருந்த பங்களாவை கண்டு புருவம் சுருக்கினான். அது துருவ் ஒருநாள் போனில் காட்டிய பங்களா. எதையும் யோசிக்காமல் சுவர் ஏறிகுதித்து உள்ளே சென்றவன் அவளை தேட அவள் கல்லூரி பையை கண்டவன் பாய்ந்து போய் எடுத்தான். போக போக அவள் உடைகள் சிதறி கிடக்க கண்கள் ரத்தம் கொட்ட திகிலுடன் முனகல் சத்தம் வந்த அறையை நோக்கி நடந்தான்.

"கடவுளே என் மோகியா இருக்க கூடாது" என வேண்டியவன் கதவை திறக்க பார்க்க கூடாததை பார்த்தான். எந்த அண்ணனும் தன் தங்கையை இந்த நிலமையில் பார்த்தால் துடித்துதான் போவான். ரோகன் அங்கேயே உயிரை விடுத்து ஜடமாக நின்றான். கதவு திறந்த சத்ததில்

"நோ… வராத வலிக்குது… கில் மீ துருவ்.. வலிக்குது கொன்னுடு… ப்ளீஸ் கில் மி" என முனகியவள் அவனை நினைவுக்கு மீட்டாள். தலையில் அடித்துக் கொண்டு அவளிடம் ஓடினான் மெத்தை முழுக்க ரத்தமாக இருக்க ஆடையில்லாமல் நைந்து மிருகம் கொதரியது போல் காயங்களுடன் அரற்றிக் கொண்டு இருந்தாள் அவன் பெறாத மகள் அவனை பெறாத தாய்.

"மோகி… அண்ணாடா" என அலறிக் கொண்டு போர்வையால் அவளை முடியவன் அவளை தூக்க "வலிக்குது விடு ஆஆஆ… விடு ரோகட்டி" என முனகினான். அவனுக்கு தெரிந்தது அவளை காபாற்ற முடியது என்று இன்றோ நாளையோ மருந்தவம் பார்தால் இன்னொரு நாள் கூடுதலாக. அதற்கு மேல் அவள் பூ உடல் தாங்காது. அந்தளவிற்கு வேட்டையாட பட்டிருந்தாள்.

"மோக் மோக்… பொறுத்துக்கமா அண்ணன் இருக்கேன். உன்ன காபாத்திடுவேன்… " சுற்றியும் தேட போதை ஊசிகளும் காண்டம் கவர்ஸ்சும் போதை மருந்து பாட்டில்களும் கிடக்க. அதிர்ச்சியாக எடுத்து பார்த்தான் அது அவன் கையால் உருவாக்கிய வீரியமான போதை வஸ்த்து மிருகங்களுக்கு செய்தது. மனிதனை மிருகமாக்கும் கொடிய மருந்து இச்சை உணர்வை தூண்ட கூடியது. அவனிடம் கெஞ்சி தான் இந்த மருந்தை சந்திப் வாங்கினான். அவன் மருந்துவன் என்று நம்பி கொடுத்ததற்க்கு தன் தங்கையை பலியாக்கி விட்டார்களே ரத்தம் கொதித்தது.

பஸ்ட் எய்ட் பாக்ஸை தேடி எடுத்தவன் அவள் காயத்துக்கு மருந்து போட அது பத்தவேயில்லை அத்தனை காயங்கள். கோர பற்கலால் மேனி சிதைந்து ரத்தம் கசிந்தது. மிகவும் மோசமாக துண்புருத்த பட்டிருந்தாள் மங்கை.


"ரோகட்டி வலிக்குது…. ரொம்ப வலிக்குது என்ன கொன்னுடு நான் அம்மா கிட்ட போறேன்" தமயனை பார்த்து சிரமப்பட்டு கைகூப்பினாள்.

"உன்ன விட்டா எனக்கு யாரு மோகி இருக்கா? என்ன விட்டு போயிடாதடா… எனக்கு நீ வேனும். பாரு அண்ணன் நிறைய பேர காப்பாத்திருக்கேன் உன்னையும் காப்பாத்திடுவேன்…" என மருந்திட்டவன் மனதை திட படுத்திகொண்டு தன்னை மருந்துவனாக நினைத்து அவள் பொன்னுறுப்பை பாத்தவன் கதறினான்.

"எப்படி காப்பாற்றுவேன் அவளை… அய்யோ எதும் வழியில்லையா…? கடவுளே நீ இல்லையா…? எப்படி தாங்கினாள் என் மகள்… விட்டேனே பாவி… சுயநணலமா இருந்துட்டேனே" தலையில் அடித்துக் கொண்டு சுத்தம்செய்ய முயன்றான் அதில் இருந்து வந்த துர்நாற்றம் எல்லாம் முடித்தது என்ற செய்திதான் சொன்னது. உள்ளே பாகங்கள் சீல் பிடித்து அழுக ஆரம்பித்துவிட்டன.

"ரோக… ட்டி… கில் மீ… தொடாத… ஒவ்வொரு இடத்தையும் வலிக்குது… ஐ நீட் ரெஸ்ட்… பர்மணட் ரெஸ்ட்… ப்ளீஸ்..." என கதறினாள்.

"அய்யோஓஓஓ அம்மா… மோக்… என்னால முடியாது… முடியாது…. அம்மா நெஞ்ச வலிக்குது மோகி… ம்மா" என தரையில் விழுத்து துள்ளினான். அவனுக்கு என இருக்கும் ஒற்றை உயிரையும் எப்படி கொல்லுவான்.

தன்னை சமாளித்துக் கொண்டவள் அவனை பார்தாள் "ரோகட்டி… கம் டு மி" எனவும் அவளிடம் வந்தவன் எங்கே அவளை தொட என்று பதறினான். ரத்ததுடன் இருந்த விரலை எடுத்தவள் அவன் தலையை கோதிவிட்டு அவன் புருவத்தை நீவினாள் "ரோகட்டி சீ...சீக்கிரம் எல்லாம் சரியாகிடும். சரி இப்போ வலி போயிடுச்சா?" என சிரிக்க அழுதுக் கொண்டே இல்லை என தலையாட்டினான்.

"நான் எப்பையும் உன்கூட தான் இருப்பேன் ரோ….க ட்டி" என்றவள் ரத்த கையடன் அவன் இதயத்தில் மோக் என எழுதினாள். கையில் இருந்த மோதிரத்தை காட்டியவள்

"இத எப்பவும் உன்கூடவே வச்சிக்கோ… உன்ன விட்டு போக முடியல ரோ… க்க.. இந்த வலி ரொம்ப மோசம் ரெண்டு நாளா பேட் ஸ்மெல் என்னால தாங்க முடியல… எனக்கு இந்த பாடிலேந்து ரீலிப் குடு… ஐ ம் சாரி பட் கில் மி…. என்னால முடியல வலிக்குது" என அழுதவள் "கிஸ் மீ" என நெற்றியை காட்டினாள். எழுத்து முத்தம் வைத்தவன் "ஓஓஓஓஓ" என அழுதான்.

"யூ சீட்டர் நீயும் என்ன தனியா விட்டு போறியா…? கோ… ஐ வில்… ஆஆஆஆஆ மோக்… ஐ வில்… இனிமே உனக்கு வலிக்காது வலிக்க விடமாட்டேன்" என்றவன் தேடி ஒரு கத்தியை எடுத்து வந்தான்.

அவனை பார்த்து சிரித்தவள் "நீ ஹேப்பியா ஒரு லைப் வாழனும்… அது தான் என்னோட லாஸ்ட் விஷ் திரும்ப உனக்கு பொண்ணா நானே வருவேன்…." என நிறுத்தியவள் "ரோகட்டி…. கிவ் மீ எ ரிலிப்" என்றாள். அவள் நெற்றியில் அழுதுக்கொண்டே முட்டியவன் "கம் டு மீ பேபி... ஐம் வெயிட்டிங்" என்றவன் அவளை திருப்பி போட்டான். "ஆஆஆஆஆஅ" என அவள் கத்த "ஒன்னும் இல்லமா தூங்கலாம் வலிக்காது வலிக்காது" கதறியவன் கையை ஓங்கி கத்தியை 45°ஆங்கிலில் அவள் பின்னதலையில் குத்த அடுத்த நொடி அவள் உயிர் அடங்கியது. சாகும் நொடி வலியில்லாமல் செத்தாள்.

"மோக்… இஇஇஇஇ… எழுத்திரி எனக்கு பயமாருக்கு" என கட்டிக் கொண்டு கதறியவன் அவளை எழுப்ப எழுப்ப சுகமான மீளா துயிலில் விழுந்தாள்.

"போகாதடி என் பெண்ணே" அவன் கதறல் ஓலம்… மோகினி என்ற பெண்ணின் மரணம் எத்தனையோ அபலைகளின் சாபமாக மாறி பெரும் அழிவு சக்தியாக ரோகட் என்ற பெயரில் அக்கயவர்களின் அத்தியாயத்தின் முடிவுரை ஆரம்பம் ஆனது. அவன் அழுகை ஆர் ஆர் ரத்தோர்க்கு ஊத பட்ட சங்கு.

"விடமாட்டேன் அவனுங்கள விடமாட்டேன் அண்ணன் உனக்கு ப்ராமிஸ் பண்றேன் டா நீ அனுபவிச்சத விட பலமடங்கு அவங்களுக்கு வலிக்கும்" என சூள்உரைத்தான்.

சிறிது நேரத்தில் ஆட்கள் வரும் சத்தம் கேட்க ஒழிந்து நின்று பார்தான். துருவும் சந்திப்பும் வர அவர்கள் பின்னே ஆயுஷும் வந்தார்.

"எங்கடா அவ?" கோபமாக அதட்டியவர் துருவ் மேலே கை காட்ட அவனை ஓங்கி அறைந்தார்.

"ச்சை அறிவில்ல அவள ஏன்டா?"

"சாரி பெரியப்பா" என கையை பிசைந்தான் சந்திப்

"என்கிட்ட பேசாதிங்க.. இப்போ ரோகன்கு என்ன பதில் சொல்றது…? " என அதட்டியவர் தலையை பிடித்துக் கொள்ள "அப்பா… டூ சம்திங்" என்று அவரிடம் அமர்ந்தான் துருவ்.

"ஏன்டா… ஏன் ச்ச சின்ன பிள்ளைய போய்… உனக்கு வேற பொண்ணே கிடைக்கலையா… இது மட்டும் அவ அண்ணனுக்கு தெரிஞ்சது உங்கள கொண்ணு புதைச்சிருவான்"

"அவனையும் போட்டுரலாம் டாட். பிரப்ளம் சால். நம்மகிட்ட இல்லாத பணமா" என்றவனை மீண்டும் ஒரு அறை விட்டார்.

"முட்டால் அவன் ஆர் ஆர் ஓட பண மூட்ட. உன்ன மாதிரி அவனையும் நினைச்சியா… ஹீ இஸ் ஏ ஜித்… சைன்ஸ்ல டேவில் அவன். அவன கொன்னுட்டு உன்ன மாதிரி முட்டாள்கிட்ட ஒப்படைக்க சொல்றியா. நம்ம லேப்போட ஒன் ஆப்தி பாட்ணர் அவன் " என்றவர். "பினிஷ் ஹர் அவ பாடி கூட அவனுக்கு கிடைக்க கூடாது" என்று சென்றுவிட்டார்.

அப்போது ஆராம்பித்தது அவன் பலிவெறி. முழுக்க ஆர் ஆர் கோட்டையை சல்லியாக நொருக்கும் நேரத்திற்கு காத்திருந்தான்.

தண்ணீரில் இருந்து வெளியில் வந்தவன் தக்ஷினா என்ற பெயரை சுழற்றினான்.

"ஷி இஸ் ஏ சைக் பட் நாட் மச். ஐ வாண்ட் மோர் தக்ஷினா" என சிரித்துக் கொண்டே பெரிய வேலை ஒன்றை முடித்தான்.

ஆர் ஆர் மொத்த வரலாறும் அதில் இது யார் கைக்கு சென்றாலும் பேராபத்து வருவது நிச்சயம். ஆனால் அது தக்ஷினாவிடம் தான் செல்ல வேண்டும் என்பது விதி போல்.

வருவாள்...


 
Last edited:
Status
Not open for further replies.

New Threads

Top Bottom