Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


RD NOVEL போகாதடி என் பெண்ணே! - Tamil Novel

Status
Not open for further replies.
பெண்ணே 28

8i391iwEhtWk8SEyINqVsN_EPs_phStqurl7WmZS3QwSfTlcvhEiquvw4GClW28pkh9e_6dyy3BooDjjqZ1p3Le0Z-sdgxTuEeEN7o0dDmRHz0sA4HXNxwSmmGoC61ovgMYZafVF=s0


சபரிக்கு பலமாக அடிபட்டிருக்க சரியான நேரத்தில் மருந்துவமனையில் சேர்த்து காபாற்றிவிட்டனர். வி.ஐ.பி அறையில் கையில் கட்டுடன் அமர்ந்திருந்த புவி ஒருவித பதட்டத்தில் தக்ஷினாக்கா காத்திருந்தான். குண்டு பயங்கர சத்தமாக வெடிக்க ஒரு கனமான பொருள் அவள் தலையில் பட்டு தையல் போடும் அளவிற்கு காயமாகிருந்தது அதிலிருந்து லேசான வயிற்று வலி ஆராம்பிக்க அவளே சற்று பயந்துவிட்டாள். அவள் அடிக்கடி வயிற்றை பிடிக்க அதை பார்த்த புவி என்னவென்று விசாரித்தவன் அவளை கடிந்துக்கொண்டு ஹாஸ்பிடல் அழைத்து வந்தான். அவளுக்கு லேசாக ப்ளீடாகி இருக்க டாக்டரை படுத்தியெடுத்தவன் மூன்று பேரும் நலமாக இருக்கின்றனர் என அறிந்துக்கொண்ட பின் தான் மூச்சே விட்டான். இருந்தும் புவிக்கு பயம் போகவில்லை. கழிப்பறையில் இருந்து வந்தவள் கலைப்பாக அமர அவள் தலையில் இருந்த கட்டை வருடிவிட்டான். புவிக்கும் கையில் புள்ளட் உரசிசெல்ல காயம் பட்டுருந்தது. நல்லவேளையாக மற்றவர்கள் யாருக்கும் எதுவும் ஆகாமல் தப்பித்துவிட்டனர்.

"வலிக்குதா தீ… வேற எங்கயாச்சும் அடி பட்டிருக்கா?" என அவளை ஆயிரமாவது முறையாக புவி ஆராய தலையை சாய்த்து சிரித்தாள் அவள்.

"போதும்டா புவி… எத்தன டைம் கேட்ப அதுதான் பேபிஸ்ச ஸ்கேன் பண்ணி பாத்தாச்சுல" என காதை பிடித்து திருக அவள் வயிற்றில் உதைத்தது குழந்தை.

"பாரேன் மாமு அவங்க அப்பாவ அடிச்சா இதுங்களுக்கு கோபம் வருது" என தக்ஷினா ஆச்சரியமாக சொல்லி சிரித்தாள்.

"நான் உன்ன தான் கேட்டேன் தீ. நீ நல்லா இருக்கியா…? பஸ்ட் எனக்கு நீ தான் முக்கியம்" என அவள் வயிற்றில் மென்மையாக வருடிவிட்டான்.

"ம்ம்… ஐயம் பிரிட்டி பைன்… பேபிஸ்சும் பிரிட்டி பிரிட்டி பைன்… ஆனா… என் ஸ்டொமக் தான் கத்துது... "

"ஏன் என்னாச்சு?"

"பசிக்குதுடா லூசே… போ போய் ஏதாச்சும் வாங்கிட்டு வா… மாமு உனக்கு பதில் செல்றதுக்கே நிறைய சாப்பிடனும் போல…" என அவன் மண்டையில் தட்டினாள் தக்ஷினா.

புவி அவளை இறுக்கமாக அனைத்துக்கொள்ள "ஹேய் விடு விடு… பாப்பாக்கு வலிக்க போகுது" என தள்ளி விட்டவளை முறைத்தான் அவன்.

பின்னே பலரை அடித்து தூக்கி வீசுபவள் கடினமான பயிற்சிகளை முடித்து பல கலைகளில் சிறந்து விளங்குபவள் தன் குழந்தைகளை மயிலிறகால் வருடினாள் கூட வலிக்குமோ என்று பயந்தால் அவனும் என்ன தான் சொய்வான். இன்னும் ஒருவாரம் மட்டும் முப்பையில் தங்கி பார்மாலிடீஸ் முடிக்க வேண்டி இருக்க அங்கேயே ஒரு ரூம் புக் செய்தான் புவி.

சென்னையில் உள்ள ஆர்.ஆர் கல்லூரியின் பின்புறம் இருந்த காட்டில் ஒரே நாளில் நூறு பிணங்களுக்கும் மேல் கண்டெடுக்கப்பட்டது. அதில் பெண் பிணங்களே அதிகம்.

அப்பெண்கள் அநேகமானவர்கள் அக்கல்லூரியில் பயின்ற மாணவர்களாக தான் இருக்க வேண்டும் என்று பேசபட்டது. அக்கல்லூரி பிரின்சிபல் முதல் பேராசிரியர்கள் வரை பலர் கைது செய்யபட்டு விசாரணையில் இருந்தனர்.

அன்றே ஆர்.ஆர்காக வேலை பார்த்த ரவுடிகள் ஆங்காங்கே என்கவுண்டரில் சுட்டிக் கொல்லப்பட்டனர்.

அன்று அந்த பிளக் அமேரிக்கனை அடித்து அவனிடம் வாங்கிய உண்மைகளை வைத்து வெளிநாட்டுக்கு கடத்த பட இருந்த ஐம்பது பெண்களை பத்திரமாக மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். மேலும் வெளி நாடுகளுக்கு கடத்திச் சென்று விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண்களை மீட்க ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது.

அவன் தான் ஆயுஷ்க்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதை சொன்னான். அவனையும் முக்கிய ஆதாரமாக கோர்டில் ஒப்படைத்து விட்டனர்.

இந்தியாவில் ஆர்.ஆர் மருத்துவமனைகள் சீல் வைக்கப்பட்டு உடல் உறுப்பு திருட்டுக்கு துணையாக இருந்த மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர். பல இடங்களில் ஆர்.ஆர்க்கு சொந்தமான இடங்கள் பொதுமக்களால் அடித்து நொருக்கப்பட்டது. அவர்கள் செய்த முறைகேடுக்கு அனுமதி வழங்கிய அரசியல்வாதிகள் கேள்விகளால் துளைக்க பட்டனர்.

அனைவரும் அவர்களை அழைத்து பாராட்டினர் பேசினர். பிரஸ் மீடியா இன்ஸ்டாகிராம் என அனைத்தும் அவர்களை புகழ்ந்து தள்ளியது. ஒரு கர்பிணி பெண் தலைமையில் இத்தனை பெரிய ஆப்ரேசன் நடந்தது மக்களிடையே பெரிதாக் பேசப்பட்டது. பிரஸ் மீட்டில் இதையை கேள்வியாக கேட்க "தாய்மை என்றுமே பெண்களை பலவீனம் ஆக்குவதில்லை. முன்ன விட இன்னும் நான் உறுதியா இருக்கேன்" என அவள் பேசியது சிறந்த உந்துசக்தியாக பல கர்பிணிகளை எழுந்து நிற்கவைத்தது.. பெண்களுக்கு பெரும் எடுத்துக்காட்டானாள்.

புவி காரை தஷினா வீட்டில் நிறுத்த அவளோ விமலனை காணபோகும் சந்தோஷத்தில் பரபரப்பாக இருந்தாள். அவனை பார்த்தே பலமாதங்கள் ஆகிருந்தது… எப்போதாவது போனில் பேசுவான். அவன் கோபம் அவளுக்கு தெரியாததா… குழந்தையை பற்றி மறைத்ததனால் முன்பைவிட இன்னும் கோபம் கூடி இருக்குமோ? எப்படி சமாளிப்பது? என யோசித்துக் கொண்டே வர பக்கத்தில் புவி விமலனை எண்ணி வருத்தத்துடன் வந்தான். அவனுடன் பேசி எட்டு மாதங்கள் ஆகிவிட்டதல்லவா.

இவளை பார்த்ததும் புவியை மட்டும் வரவேற்ற சாந்தினி முஞ்சை தூக்கி வைத்துக்கொள்ள மாடியில் இருந்து கிட்டதட்ட ஓடி வந்த விமலன் சற்று தயங்கி நின்றான். "குழந்தைகள் உண்டானதையும் மறைத்து விட்டாளே" என்ற கோபம் அவனுக்கு.

தக்ஷினாவோடு பேசுவதா? வேண்டாமா? என்று விமலன் யோசிக்க அவனை கண்டதும் வயிற்றை பிடித்துக் கொண்டு தடதடவென அவனிடம் ஒடிவந்த தக்ஷினாவை பார்த்து எல்லா யோசனையும் காற்றில் பறக்கவிட்டவன் ஒடி வந்து அனைத்துக் கொண்டான். அவள் ஓடியதை பார்த்து சாந்தினியும் விமலனும் அவளை கடிந்துக்கொள்ள அவர்களிடம் செல்லம் கொஞ்சியே சமாதானம் படுத்தினாள். தனியாக நின்ற புவியை முத்துவேல் அனைத்துக்கொள்ள நலன் விசாரிப்புக்கு பின் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர்.

புவி அவளை இங்கு விட்டுவிட்டு அவர்கள் வாழப்போகும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க சென்றுவிட்டான்.

"தீ இப்போ குழந்தைகளும் வந்துட்டாங்க இது உன்னோட பேமிலி… நீ தான் முடிவெடுக்கணும்" ஓய்வாக அமர்ந்திருந்தவளிடம் மெதுவாக ஆரம்பித்தான் விமலன்.

"ம்ம் கரெக்ட் தான் விமி நானும் அத யோசிச்சேன். பட் எனக்கு இந்த தாலி சென்டிமென்ட்லாம் கிடையாது பாக்கலாம் இப்போதைக்கு எனக்கு பேபிஸ்கூட டைம் ஸ்பென்ட் பண்ண தான் ஆசை. ராதிகா கேஸ் முடிஞ்சோன வேலைய விட போறேன்"

"அத நான் பார்த்திக்கிறேன். நீ பஸ்ட் ரெஸ்ட் எடு… அதுவும் உனக்கு டிவின்ஸ் ரொம்ப இலச்சி போயிட்ட தீ ஓழுங்க சாப்பிடுறியா? இல்லையா? இந்த புவி எருமை உன்ன நல்லா பாத்துக்கிறானா?"

"ச்ச மாமு என்னையும் பேபிசயும் எப்படி பாத்துக்கிறான் தெரியுமா விமி. எனக்கு சாப்பாடு சேராம வாமிட் வந்திரும். அப்போலாம் அவன் தான் க்ளீன் பண்ணுவான் திரும்ப எனக்கு பிடிச்ச மாதிரி சமச்சி தருவான். நான் எவ்வளவு கொடுமை படுத்தினாலும் நம்ம சாந்தினி மாதிரி எல்லாத்தையும் பொறுத்துப்பான்" என அவன் புராணம் பாட ஆரம்பிக்க "இது எப்போ?" என்று சிரித்து வைத்தான் விமலன்.

"சரி விமி ராதிகா கேஸ்ல நான் கேட்டிருந்தது என்னாச்சி?"

"ஒரு சின்ன க்ளுவ் கிடைச்சிருந்துச்சு அதை வச்சி விசாரிச்சேன். அன்னைக்கு அபி ராதிகாவோட பாட்டு நோட்ஸ்ச வீட்டுக் எடுத்துட்டு வந்து பாத்துட்டு இருந்தா. அதில ராதிகா அவளுக்கு பிடிச்சவங்கள பத்தி எழுதி வச்சிருப்பா போல அதுல தான் ஒரு எஃப் இசட் பைக் பத்தி எழுதிருந்தா" என ஆரம்பித்தவன் அனைத்தையும் சொன்னான்.

"சோ பைக்ல வந்த கொலைகாரனோட மோதிரம் தான் அவள் பேக்கல விழுந்திருக்கனும்"

"ஆமா அவன் வந்தப்போவே அவன் கையில அத ராதிகா பார்த்திருக்கா. அதையும் அந்த கத்தியையும் அவன்கிட்ட கொடுக்கலாம்னு இருந்த அன்னைக்கு தான் அவள கடத்திருக்காங்க அப்படிதான் எழுதியிருந்தது. நானும் அந்த பைக் கார் பத்தி விசாரிச்சு பாத்தேன்… தீ பட் ஒன்னுமே கிடைக்கல"

"வேற எதாச்சும் கிடைச்சதா?"

"ப்ச் விட மாட்டியே… நீ ரூம்க்கு போ நைட் பேசிக்கலாம்"

"இல்ல விமி எனக்கு ஒரு பெரிய டவுட் இருக்கு… நான் அந்த ஆயுஷ் வீட்டுல துருவ் கையில் அந்த மோதிரம் இருக்க போட்டோவ பாத்தேன்"

"ஒரே மாதிரி மோதிரம் நிறைய பேர்கிட்ட இருக்கும் தீ. பஸ்ட் இந்த மோதிரம் போட்ருந்தவன் தான் சத்தியாவ கொன்னவனு எப்படி சொல்ற? அண்ட் துருவ்க்கும் இதுக்கும் எப்படி ரிலேட் பண்ற"

"கெஸிங் தான் விமி துருவ் ஏன் செஞ்சிருக்க கூடாது. அவன் யோகியன்லாம் இல்ல பச்ச பொறுக்கி தான்"

"அப்பறம் இந்த கேஸ்ல மோதிரத்தை ஆதாரமா நான் எடுத்துகிட்டதுக்கு ஒரு காரணம் இருக்கு. நீ நோட் பண்ணியா அந்த சத்தியா அவ எங்கெல்லாம் அந்த மோதிரகாரன பார்த்து போசினேன்னு அவ லவ்வர்கிட்ட சொன்னாலோ கரெக்டா அந்த இடத்தில ரெண்டு சிசிடிவி இருந்துருக்கு ஆனா அது என்ன ஆச்சுனே தெரியல. நான் ரொம்ப நாள் கழிச்சி தான் அத கண்டுபிடிச்சேன். அந்த மோதிரத்த ஒரு சாதாரண ஆளால வாங்கிட முடியாது அதே மாதிரி சத்தியாவோட ஒர்ஜினல் அட்டாப்சி ரிப்போர்ட் படி பாத்தா கில்லர்ஸ் பெரிய பணபலம் உள்ளவங்கனு தெரிஞ்சது. நீயே யோசியேன்… அது எல்லாமே அவன் கூட மேட்ச் ஆகுது. எப்படி இருந்தாலும் மோதிரகாரன் தான் நம்ம தேடுரவன் அதுக்கு ஆதாரம் ராதிகாகிட்டயே இருக்கு"

"ஆமா தீ பட் அந்த கத்தில ராதிகாவோட பிங்கர் பிரிண்ட் மட்டும் தான் இருக்கு. அப்படி பாத்தாலும் துருவ் தான் டாக்டர் இல்லையே"

"ப்ச் சந்திப் அவன் ஒரு டாக்டர் தான ஆனா அவன் சரியான முட்டாள் விமி. இந்த கேஸ்ல ஒரு இன்டலிஜன்ட் இன்வால் ஆகிருகான். எனக்கு ரோகன் பக்டே மேல தான் டவுட். ஒரு வருஷத்துக்கு முன்னடி வரைக்கும் அவன் ஆர்.ஆர்ல தான் இருந்துருக்கான். அவனும் அவனுங்க பிரண்ட் தான்"

"இப்போ என்ன பண்ணலாம். இத ப்ரூவ் பண்ற அளவுக்கு நம்ம கிட்ட ஆதாரமே இல்லயே? பப்ளிக்கே நம்மளால கேஸ்ச முடிக்க முடியாம ஆர்.ஆர்ற சாக்கா வச்சி அவங்கள பிளேம் பண்றோம்னு சொல்லிடுவாங்க. பஸ்ட் நமக்கு அவனுங்க எங்க இருங்காங்கனே தெரியாது. ஆர்.ஆர் அழிஞ்சாலும் அவனுங்கிட்ட இன்னும் நிறையவே பணம் இருக்கும். கண்டிப்பா வேற எதாவுது கண்ட்ரில இருந்துகிட்டு இதே தப்பதான் பண்ணுவானுங்க"

"அதுக்கு அவனுங்க உயிரோட இருக்கனும். நாளைக்கு என்கூட ஏர்போர்ட் வா விமி முக்கியமான வேலை இருக்கு" என்றவள் எழுந்து சென்று விட விமலனுக்கு தான் எதுவுமே புரியவில்லை.

அதியன் ஆராதனாவை கையில் தாங்கினான் தினமும் அவளை பார்க்க வருபவன் இரவு தூங்க மட்டும் தான் வீட்டிற்கு செல்வான். டெலிவரி டைம் நெருங்க நெருங்க அவனுக்கு பயமாக இருந்தது. அவள் மூச்சுவிட சிரமபடும் போதெல்லாம் அதியனுக்கும் மூச்சை அடைக்கும். இப்போது கூட வெண்ணீரை ஒரு பக்கெட்டில் ஊத்தி பதமாக நீர் கலந்தவன் வீங்கியிருந்த அவள் காலை மசாஜ் செய்துக்கொண்டு இருந்தான்.

"அத்தான் போதும் எழுந்திரிங்க"

"இப்போ எப்படி இருக்கு… பப்பி?"

"ம்ம்… அதெல்லாம் பரவால்ல உங்க பொண்ணு தான் என்ன உதைக்கிறா"

"எங்க இரு நான் என்னனு கேட்கிறேன்" என்றவன் அவள் உப்பிய வயிற்றிடம் கதை பேச குழந்தையின் அசைவு அதிகமாக இருந்தது.


"சரி டா செல்லம்… இனி அம்மாவ டிஸ்ரப் பண்ண கூடாது.. சொல்லிட்டேன்டி ஆரு போதுமா?"

"க்கும் நீங்க சொன்ன உடனே கேட்டிருவாளா? ஸ்ஸ்ஸ் பாருங்க நல்லா உதைக்கிறா" என அவள் சினுங்க "உன்ன மாதிரி அடம் பண்றாளோ?" அவன் சீரியசாக சொல்ல அவன் காதை திருகினாள் ஆரா.

"அத நீங்க சொல்லிறிங்களா… ப்பா அடம்பிடிக்கிறதுல யாராலையும் உங்கள மிஞ்ச முடியாது"

"அப்படி என்னடி நான் அடம் பிடிச்சேன்? ம்ம் ஒரு உம்மா கேட்டா கூட தரமுடியாதுனு நீ தான் அடம் பிடிப்ப"

"ரொம்ப தான் தரலனாலும் விடுற ஆளுதான் அத்தான் நீங்க. இருங்க ஒரு நாள் வந்து அடம் பிடிக்கிற அன்னைக்கு கடிச்சி வைக்கிறேன்"

"ஈஈஈஈ… செல்ல குட்டி அப்படிலாம் சொல்லாதடா? பாரு நான் எவ்வளவு குட் பாய்னு" என்றவன் அவள் இதழை கடித்து வைக்க அவனை முறைக்க முயன்று தோற்றாள் ஆராதனா.

அன்று இரவே அவளுக்கு பிரசவ வலி வந்துவிட அதியனை போலவே ஒரு பெண் குழந்தை பிறந்தது. நர்ஸ் குழந்தையை கையில் கொடுக்க அதனை வாங்காமல் ஆரா கண்விழித்த பின் தான் நடுங்கும் கையால் குழந்தையை வாங்கினான். ஆராதனா குழந்தையை வாங்கியவுடன் இருவருக்கும் கண்கள் கலங்கியது.

அவளை அமர வைத்தவன் குழந்தையை தூக்கி கொடுக்க அழகான செப்பு வாயை திறந்து பால் குடித்தாள் அவர்களின் செல்ல மகள். குழந்தையை பார்த்தாலே ஆராவுக்கு பால் ஊரி உடையை நனைத்தது. நல்ல ஆரோக்கியமான குழந்தை என்பதால் குழந்தையும் நன்றாக குடித்தாள். எல்லோரும் மிகுந்த சந்தோஷமாக இருந்தனர். அண்ணன் மகளை கண்டு புவிக்கும் எப்போது தன் மக்களை பார்ப்போம் என்று ஆசையாக இருந்தது. தக்ஷினா குழந்தையை பார்க்க வர மருந்துவமனை வாசனை அவளுக்கு ஒத்துக்கவில்லை அதனால் சற்று நேரத்திலே அவளை அனுப்பிவிட்டனர்.

வருவாள்…



 
பெண்ணே 29
mJz7AZw2vszr9Pzf_Ph-wwKs4afoG2oVM7OvDMlbTaceW8mjLjYfWZ28giWmh9s4W4WTGZhEeasLZ1AkcSFhnxirI21ocua0J0WscX-smzAmOiFLkYHD7RKx2S-xzJ8SOXDO5Mo5=s0


மதியம் நேரம் தக்ஷினாவும் விமலனும் ஏர்போர்ட்ல் அமர்ந்திருக்க ஒரு ட்ராலியை உருட்டிக் கொண்டு வந்தான் ரோகன். அவனை பார்த்ததும் விமலனுக்கு புரிந்துவிட எழுந்து அவனிடம் சென்றான்.

"ஹலோ மிஸ்டர் ரோகன்" என வந்தவனை புரியாமல் பார்த்தவன் "நீங்க?" என தன் ஐடியை காட்டிய விமலன் அவனை அழைத்துக் கொண்டு தக்ஷினாவிடம் வந்தான். இருவரும் முதல்முறை பார்த்துக் கொண்டனர் ஆனால் அந்த பார்வை "உன்னை நான் அறிவேன்" என்று தான் இருந்தது.

சென்னை அவுட்டரில் அதே குடோன்க்கு தான் அழைத்து வந்திருந்தாள்.

"சொல்லு ரோகன்... எதுக்கு இதெல்லாம் பண்ற?" அமைதியாக கேட்டாள் அவள்.

"என்ன பண்றேன்?"

"எய் நான் முட்டாள் இல்ல எனக்கு ஒருத்தன் அவ்வளவு பெரிய ஆதாரத்த அனுப்பின உடனே அத நம்பிகிட்டு இருக்க. நான் முத விசாரிச்சதே எனக்கு இத அனுப்பினவன் யாருனு தான். கமான் ரோகன்" என அவள் கத்த

"காம் டவுன் பேபிக்கு நல்லது இல்ல… ஆமா நான் தான் அனுப்பினேன்… அதுக்கு என்ன?"

"ஆர்.ஆர்ற அழிக்கிறது மட்டும் தான் உன் நோக்கமா…? இல்ல நீங்க பண்ண தப்பெல்லாம் தெரியமா இருக்க இந்த பிளானா?"

"வெரி கரெக்ட் தக்ஷினா ஆர்.ஆர் நான் நினைச்ச மாதிரி அழிஞ்சிடுச்சி… இனிமே அவங்களால அப்பாவியா யாரும் சாகமாட்டாங்க" என சிரித்தவன் வாயில் துப்பாக்கியை வைத்தாள் தக்ஷினா.

"என்னடா நல்லவன் மாதிரி நடிக்கிற… அந்த ரெண்டு பெறுக்கிங்களும் எங்க? நீங்க ரேப் பண்ணி பொண்ணுங்கள கொல்றது எனக்கு தெரியாதுனு நினைச்சியா?" என ஒரு நொடி அதிர்ந்தவன் பின் அவளை மெச்சும் பார்வை பார்த்தான்.

"எப்படியும் நீங்க அவனுங்கள கண்டு பிடிச்சிருவிங்கனு தெரியும் பட் என்னையும் சேர்த்து பிடிச்சிட்டிங்க . நான் நினைச்சதை விட ரொம்ப ஷார்ப் தான். ஆனா ஒரு விஷியம் அந்த பொண்ங்க யாரையும் நான் ரேப் பண்ணல"

"ஒஒவ்வ்" நக்கலாக பார்த்தவள் "ஆனா எல்லாரையும் உன் கையால கொன்னுட்ட அதான…? சொல்லு? அவங்கள அவ்வளவு கொடுமை படுத்திட்டு எதுக்கு சாகும் போது மட்டும் வலி தெரியாம கொல்ற?"

"ஆமா ஆமா நான் தான் கொன்னேன்… என்னால அவங்கள காப்பாத்ததான் முடியாது அட்லீஸ்ட் சாகும் போதாச்சும் எந்த வலியும் தெரியாம சாகட்டும்னு தான். விமல் சார் உங்களுக்கு தங்கச்சினா பிடிக்குமா?" என அவன் தலையாட்டியதும்

"எனக்கும் ஒருத்தி இருந்தா… இவ்வளவு பெரிய உலகத்துல நமக்காகவே ஒரு உயிர் இருந்தா எப்படி இருக்கும். என் மோக் இருந்தா என் பொண்ணு மாதிரி வளர்த்தேன். கோழி குஞ்சு மாதிரி என்னையே சுத்திவருவா…. என் அம்மா அப்பா எனக்காக விட்டுட்டு போன என் தேவதை சார்" அவனை மீறி கண்ணீர் வடிந்தது.


"இதோ இந்த கையால தான் கொன்னேன்… அவ துடிக்கிறத பாக்கமுடியம… ரொம்ப நாறுதுனா தாங்க முடியல என்ன கொண்ணுடுனு வலில கதறுனா… எவ்வளவு பெரிய டாக்டரா இருந்து என்ன பிரயோஜனம் அவள மட்டும்மில்ல நீங்க கண்டு பிடிச்சிங்களே பத்து அதோட இன்னும் ஐஞ்சு பொண்ணுங்களயும் காப்பாத்த முடியாம அவங்க கதறத கேட்க முடியாம நான் தான் கொண்ணேன்" என

"என்னடா கதை சொல்ற…?" அவள் அதட்ட

"அவனுங்க போன் என்கிட்ட தான் இருக்கு" என தன் பெட்டியை திறந்து ஒரு போனில் இருந்த மெமரி கார்டை கழட்டி தன் போனில் போட்டவன் அந்த வீடியோவை காட்டினான்.

அது ராதிகா தான் அவள் வலியில் அலற அலற மிக மிக மோசமாக அவளை சந்திப் கொதரி கொண்டிருக்க துருவ் ரசித்து சிரித்தவாறே வீடியோ எடுத்திருந்தான். ராதிகாவும் அபியும் கிட்டதட்ட ஒரேமாதிரி ஜாடையில் இருப்பார்கள். விமலனாள் அதற்கு மேல் பார்க்க முடியவில்லை அபிராமியே துடிப்பது போல் இருக்க காதை இருக்கி மூடிக் கொண்டான். அவ்வளவு தைரியமான தக்ஷினாவே கலங்கி தான் போனாள் தலையே சுற்றியது. அவன் காட்டினான் அத்தனை வீடியேக்கள் விதவிதமான கொடுமைகள் அவர்கள் வலியில் அலறுவதை கேட்டு படபடவென்று வந்தது அவளுக்கு. அதற்கு மேல் வேண்டாம் என தடுத்துவிட்டாள்.

அவள் கை அழுத்தமாக வயிற்றை தடவிப்பார்த்தது. அவளுக்கு குடிக்க ஜூஸ் கொடுத்த விமலன் அவளை அமர வைக்க அமைதியாக குடித்தவள் அவனை பார்த்தாள்.

"நீ ஏன் அவங்கள காப்பாத்தல?"

"காப்பாத்திருக்கலாம் ஐஞ்சு வருஷத்துக்கு முன்ன முதமுறை ஒரு பொண்ண வெறி அதிகமாகி துடிக்க துடிக்க நாசம் பண்ணும் போதே நான் காப்பாத்தி இருக்கலாம். ஆனா அவனுங்களுக்கு ஒன்னும் ஆகாது ஆர்.ஆர் ரத்தோர்ஸ் அவனுங்க. நான் எல்லாம் அவங்களுக்கு ஒன்னுமேயில்ல… என்னையும் கொண்ணுருப்பாங்க அந்த பொண்ணையும் கொண்ணுருப்பாங்க"

"ச்ச உன் ஒருத்தவன் உயிருக்காக செல்பிஷா வா இருந்திருக்க?" விமலன்.

"சுயநலம் தான் சுயநலவாதிதான் நான் செத்துட்டா அவனுங்க திருந்திடுவானுங்களா….? கிடையாது அவனுங்க அழியனும் அதுக்கு ஆர்.ஆர் அழியனும். இவனுங்களுக்கு எப்படி இந்த பழக்கம் ஆரம்பிச்சது தெரியுமா தக்ஷினா?. என் மோக்… அவ கதற கதற அவனுங்களுக்கு போதை அதிகமாச்சாம்… நல்லவன் னு நினைச்சவனே இப்படி பண்ணும் போது அவங்க பாக்குற அந்த பார்வைக்காகவே பலநாள் காத்திருந்து அந்த பொண்ணுங்கள கடத்துவானுங்க. என் மோகி சின்ன வயசுலேந்து அவனுங்கள அண்ணானு கூப்பிடுவா… தக்ஷினா. ச்ச அந்த வீடியோல நான் பார்த்தேன் ரெண்டு நாள் வரைக்கும் என் மோக் அவனுங்க மனசு வந்து விட்ருவாங்கனு கெஞ்சிருக்கா…. மனுஷனா இருந்தா இரக்கம் வந்திருக்கும்"

"ராதிகாவ எப்படி கடத்தினிங்க? அந்த பைக்ல வந்தவன் யாரு? "

"அது நான் தான். அவ அடுத்த நாள் வர கூடாதுனு நினைச்சேன். என் மேல துருவ்க்கு கொஞ்சமா சந்தேகம் வேற இருந்தது. நான் அவனுங்க கூடவே இருந்து எல்லா உதவியும் பண்ணாலும் எந்த பொண்ணையும் தொட மாட்டேன். அவன் என்ன சீன்டிவிட்டு உண்மைய தெரிஞ்சுக்க நினைச்சான். அது மட்டும்மில்லாம என்னால அவனுங்க வலையில் இருந்து நிறைய பொண்ணுங்க தப்பிச்சி போறத நோட் பண்ணிட்டான். சந்திப் ஒரு முட்டாள் அவனுக்கு தான் அது தெரியல. எப்போதும் அவனுங்க தான் பொண்ணுங்க கிட்ட நல்லவன் வேஷம் போடுவானுங்க பட் இந்த டைம் என்ன பண்ண சொல்லி துருவ் கட்டாய படுத்தினான். அன்னைக்கு அவள கடத்தினப்போ என்ன அவ பாத்த பார்வை உள்ளயே செத்துட்டேன். இதுக்குமேல அவனுங்கள விட கூடாதுனு தான் அந்த பைலை உங்களுக்கு அனுப்பினேன். நான் நினைச்ச மாதிரி ரத்தோர்ஸ்க்கு இருந்த எல்லா பவரும் போயிடுச்சி இனிமே அவனுங்கனால என்கிட்டேருந்து தப்பிக்க முடியாது..." என அரக்கதனமாக சிரித்தான்.

"அப்போ அந்த மோதிரம்?"

"அத நான் தான் அவளுக்கே தொரியாம அவ பேக்ல போட்டேன். அந்த சர்ஜிக்கல் நைஃப்பையும் வேனும்னு தான் விட்டுவந்தேன். கொஞ்சமா போலீஸ்க்கு க்ளுவ் தரத்துக்காக ஏன்னா? ஒரு சாதாரண பொண்ணுகிட்ட இதை பாத்தா போலீஸ் ஸ்மெல் பண்ணும்னு நினைச்சேன். எப்படியும் அவனுங்க ஹாண்ட் பேக்க அங்கேயே போட்டு வந்துருவானுங்க. பட் அத பத்தி ஒரு நியூசும் வரல"

"இவ்வளவு நல்லவன் மாதிரி பேசுனா உண்ண விட்ருவோம்னு நீ நினைக்கிறியா? நீ அந்த பொண்ணுங்க மேல ஹார்ம்புல் மருந்துவச்சி டெஸ்ட் பண்ணல?"

"பண்ணல… நான் எந்த டெஸ்டையும் பண்ணல தக்ஷினா… நான் டெஸ்ட் பண்ணிக்கிற மாதிரி நடிச்சேன். நான் அவங்க மேல தலியம் தடவுனது ஆயுஷ்க்கு தெரிஞ்சிர கூடாதுனு தான் அவங்க பாடில டெஸ்ட் பண்ண மாதிரி அவங்கள்ட நடிச்சேன். எப்படியும் அட்டாப்சி ரிப்போர்ட்ல தெரிய வந்தா அவங்க சுதாரிச்சிருவாங்க. அதனால அயுஷ்கிட்ட ஒரு முக்கியமான மருந்துக்காக அவங்கள யூஸ் பண்ணிக்கிறேன் எப்படியும் வீனா போற பாடிதான நம்ம லாபம் பாக்கலாம். இதுக்கு பொண்ணுங்க பாடி தான் வேனும். நீங்க போஸ்மார்டம் ரிப்போர்ட் ஒரிஜினல் போலீஸ்க்கு போகாம பாத்துக்கோங்கனு சொன்னேன். அவனும் ஆசைல நான் சொன்னதெல்லாம் செஞ்சான். அந்த அளவுக்கு என் மேல நம்பிக்கை"

"எதுக்கு நீ தலியம் தடவின?" விமலன்.

"ஹாஹாஹா… தலியம் மாதிரி ஒரு பெயின்புல் பாய்சன் தான் சார் அவனுங்களுக்கு வேனும். அது தோல்வழியா கூட ரத்தத்தோட கலந்திரும். ஒரு லிமிட்க்கு மேல சேர ஆராம்பிச்சதும் ஸ்லோ பாய்சன் மாதிரி அவங்கள அரிக்கும். அவங்ள ஒரு ஸ்டேஜிக்கு மேல காபாத்த முடியாது. எந்த வெறிக்காக எல்லா பொண்ணையும் துடிக்க துடிக்க கொதிரி எடுத்து ரேப் பண்ணானுங்களோ அதே வெறிதான் அவனுங்களுக்கான தண்டனையா மாறனும். ஒவ்வொரு முறையும் அவனுங்க சாவ தேடி தேடி போனானுங்க. இனிமே கடவுள் நினைச்சாலும் அவனுங்கள காபாத்த முடியாது. அவனுங்க இருக்க போற ரெண்டு வருஷமும் வலில துடிச்சி துடிச்சி தற்கொலை பண்ணிக்ககூட முடியாம தோல் சதை எல்லாம் அழுகி புழு பிடிச்சி வெந்து செத்திருவானுங்க"

"மைகாட் இது அந்த பொண்ணுங்களுக்கு தெரியுமா?"

"தெரியும் சார் கடைசியா இந்த உண்மைய நான் சொல்லும் போது எல்லா பொண்ணுங்களும் என்ன சொன்னாங்க தெரியுமா? இந்த ராட்சசன்களுக்கு சாவ எங்களாலயே கொடுத்ததுக்கு நன்றினு சொல்லிட்டு உயிர விடுவாங்க"

அரக்கர்களை தேவர்கள் வெல்வதற்ககாக தன்னை வருந்தி நோம்பு இருந்து தன் உயிறை கெடுத்தார் தசீதி முனிவர். அவர் முதுகெலும்பில் இருந்து வந்த வஜ்ராயுதம் பல அரக்கர்களை கொண்று நீதி வழங்கியது.

இன்றும் நம் சமூகத்தில் பலர் எங்கோ ஒரு மூலையில் தங்கள் உயிர்களை தியாகம் செய்வதனால் தான் ஏதேனும் ஒரு இடத்தில் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம். ஜேம்ஜ் தன் உயிறை விட்டதால் இன்று பேனர்கள் வைக்க தடைபோடப்பட்டது. மோகினி என்ற பெண்ணின் மரணம் பெரும் நாசகார கூட்டத்தையே அடியோடு அழித்தது. இதோ இந்த பொண்களின் மரணம் கொடூரமான இரு சைக்கோகளை அழிக்கும் சக்தியாக இருந்தது. வணிதாவின் மரணம் பல பெண்களை கனவில் இருந்து விழித்துக்கெள்ள வைத்தது… இன்னும் எத்தனையோ…


போலீஸ்க்கு தக்க நேரத்தில் ஆர்.ஆர். ரத்தோர்ஸ் பற்றி சொல்லி ஆதாரங்களையும் சேகரித்து அனுப்பியதற்காக இந்திய அரசால் கவுரவிக்க பட்டாண் ரோகன் பக்டே. அந்த வீடியோ முக்கிய ஆதாரமாக சமர்பிக்கப்பட்டு தூக்கு தண்டனை கைதியாக அடைபட்டனர் துருவும் ரோகனும். ஆனால் அவர்களுக்கு ரோகன் வழங்கிய தண்டனை அவர்கள் வாழ்வில் நரகத்தை காட்டும்.ரோகன் பழையபடி தன் ஆராய்ச்சி செய்ய அனுமதி கிடைத்தது.

*********************

தக்ஷினாவுக்கு வளைகாப்பு என்பதால் ஒரு நாள் அதியன் தன் மூன்று மாத மகள் மகிவர்த்தினியை தன் தாயிடம் தந்து விட்டு ஆராதனாவை ஒரு துணி கடைக்கு அழைத்து வந்திருந்தான். இருவரும் துணி எடுத்துக் கொண்டு வெளியில் வர அவர்கள் முன் அருவாளோடு நின்றிருந்தான் ஒருவன். அவன் ஆராதனா சாட்ச்சி சொல்லியதால் சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் உள்ளே சென்றவன். அவன் சட்டையில் ரத்தகறை வேறு.

அதியன் சட்டென்று அவளை பின்னால் மறைக்க

"ஏய்ய் உன்ன தாண்டி தேடிட்டு வந்தேன். இப்போ தான் என் பொண்டாட்டிய வெட்டிட்டு வந்தேன். இப்போ உன்ன போட்டுட்டு உங்க அண்ணன் அவனையும் போட போறேன்" என்றவன் அருவாளை வீச அவன் நெஞ்சில் எட்டி உதைத்த அதியன் அவளை இழுத்துக் கொண்டு ஓடினான்.

பிரசவம் கண்ட பச்சை உடம்பு காரியாள் ஓட முடியவில்லை
"ஆஆஆஆஆ" ஆராதனா அலற அவள் தோளில் வெட்டிவிட்டான் அவன். ரத்த வெள்ளத்தில் சாய்ந்தவளை அதியன் துடித்து போய் தூக்க மீண்டும் வெட்ட வந்தவனை தடுத்த அதியனுக்கும் வெட்டு விழுந்தது.

அனைவரும் ஸ்தம்பித்து நிற்க அதியன் அவனை ஆராதனா பக்கத்தில் வர விடாமல் தடுக்க தடுக்க மீண்டும் இரண்டு முறை அவளை வெட்டிவிட்டான். ஆராதனாக்கு வெட்டி வெட்டி இழுக்க ஆராம்பித்தது. அதியனுக்கும் இரு வெட்டு விழுந்ததில் தளர்ந்து போனவன் ஆராதனா மேல் விழுந்து அனைத்துக் பிடித்துக் கொண்டான்.

அதற்கு மேல் மக்கள் தாமதிக்காமல் கையில் கிடைத்தை எடுத்து அடிக்க கூறான கற்கள் தலையில் பட்டு அங்கேயே செத்து விழுந்தான் அவன்.

பின் இருவரையும் மருத்துவமனையில் சேர்க்க ஆராதனாக்கு வலிப்பு நின்றபாடில்லை "தண்ணி தண்ணி" அவள் கெஞ்ச சுயநினைவில் இருந்த ஆதியன் கதறினான்.

"அய்யோ… பப்பி பப்பி… ஒன்னும் இல்லடா…பப்பி… பப்பி… என்ன பாரு… மா… பப்பி…" என அழுதவனை பிடித்து இழுத்தனர் மற்றவர்கள்.

"அய்யோ தண்ணி குடுத்துராதிங்க உயிர் அடங்கிடும்" என பக்கத்தில் யாரோ சொல்ல

அவனை அடக்குவதே பெரும் பாடாக இருக்க அவளுக்கோ மெல்ல வெட்டி இழுப்பது அடங்க "தண்...ணி... " என்றவள் கண்ணை மூடிவிட்டாள்.

அதை கண்டு எழுந்து ஒடிவந்தவன் அவளை எழுப்ப அவளிடம் அசைவேயில்லை.

"ஆராதனாஆஆஆஆஆ" அடிவயிற்றில் இருந்து அலறினான் அவன். அந்த இடமே ரத்தமாக இருக்க அவன் அலறலில் ஒடிவந்தனர் அனைவரும்.

"ஆரு… கண்ண திறடி… எய்யய பாருடி… . பப்பி… பாப்பா ஆழுவாடா எழுத்திரிமா… அய்யோ யாராவது சொல்லுங்களேன்…. அய்யோ அய்யோ பப்பி… பேசுடி… டாக்டர்… ஆராதனாஆஆஆ... " அவள் மேல் விழுத்து கத்தியவனை பரித்து இழுத்தனர் மற்றவர்கள். அவர்களை தள்ளிவிடட்வன்

"போகாதடி…. ஆரு… எனக்கு நீ வேனும் பப்பி எழுந்திரிடி எனக்கு பயமா இருக்கு ஆரூ பப்பிமா அத்தானு சொல்லுடா ஆராதனா….." அவள் தோள்களை பற்றி உலுக்கினாள் ஆதி

போகாதடி என் பெண்ணே
நீ போன நான் எங்க போவன்டி
பெண்ணே, ஓ பெண்ணே நீ போகாத பெண்ணே
கனவே, அது நீயே நீ கலையதே கண்ணே
இரவில், இந்த இரவில் நீ போகாதே நிலவே
நீ போன அட நானும் இங்கே தொலைவேனே இருளில்


வருவாள்...


 
பெண்ணே 30

(இறுதி)
GR0zNjDwUePkL1Oj50tbK53GpP7b9XhuETHbMYL_CSwwcn-Jz6cRmfWnLUVLpHFdkxKuQxoWqxVQ6LfXa3SEktcDbwnOjeIEZj25bYn7F4o3EL7789M3ZbZYl15UHI1AdbmGz6aO=s0


அவசரமாக டாக்டர் ஓடிவர அவனை பிரித்து இழுத்து அடக்கினார்கள். மருத்துவர் அவள் கண்ணை பார்க்க உயிர் இருந்தது.

"நர்ஸ் உயிர் இருக்கு… பாஸ்ட்" என ஸ்ட்ரெச்சரை இழுக்க அவரிடம் "அவள எப்படியாச்சும் காப்பாத்துங்க" என்றவன் மயங்கி விழுந்தான்.

ஒரே அழுகை சத்தமாக இருந்தது அந்த மருத்துவமனையின் வரான்டா…. ஒரு பக்கம் மகி வீறிட்டு அழுக தக்ஷினாக்கு எதுவும் செய்ய முடியவில்லை கண்கள் தானாக பொங்கி வழிந்தது. சந்தோஷ் தரையில் அமர்ந்துவிட்டான். முத்துவேல் அழுதுக் கொண்டிருந்த சாந்தினியை அனைத்துக் கொண்டார். புவியும் விஷ்ணுவும் தான் அழைந்துக் கொண்டு இருந்தனர். துர்கா பத்து முறையேனும் மயங்கி விழுந்திருப்பார் அவரை தோளில் போட்டுக் கொண்டு ராகவன் வரிசையாக தெய்வத்தை அழைத்தார். விமலன் தக்ஷினா கையை இறுக்கமாக பற்றிக் கொண்டான். அபிராமி தான் குழந்தையை தூக்கி ஆப்பாட்டிக் கொண்டு இருந்தாள்.

முழுதாக ஒரு நாள் ஆகிவிட்டது டாக்டர் எதுவும் நம்பிக்கையான பதில் சொல்லவேயில்லை. அதியனும் மயக்கத்தில் இருந்தான்.

திடிரென்று அதியன் ஓடிவர பின்னே புவியும் விஷ்ணுவும் அவனை அழைத்துக் கொண்டே வந்தனர்.

"பப்பி பப்பி… எங்கடா என் ஆரு…?" என ஐசியு கதவை திறக்க முயன்றவனை அடக்கி அமர வைக்க முடியாமல் அல்லாடினர். சட்டென்று அபிராமி அழுதுக் கொண்டிருந்த மகியை கொடுக்க அழுதுக் கொண்டே வாங்கியவன் ஓரமாக சரிந்து அமர்ந்தான். அடிப்படாத தோளில் அவளை போட்டுக் கொண்டு அப்படி ஒரு அழுகை அழுதான் அதியன்.

"அதி அழுகாத அண்ணிக்கு ஒன்னும் இல்ல… பாரு நீ அழறத பாத்து பாப்பா அழறா" புவி சமாதனம் பேச கதவை திறந்துக் கொண்டு டாக்டர் வந்தார்.

"சாரி சார்… இனிமே ஒன்னும் பண்ண முடியாது. பாக்குறவங்க பாத்துட்டு வாங்க" என விஷ்ணு அங்கிருந்து தூரமாக ஒடிவிட்டான். அதியன் குழந்தையை இறுக்கமாக அனைத்துக் கொண்டு கதறினான்.

"நான் என்ன பண்ண போறேன்…? அய்யோ… பாப்பா அம்மா நம்மள விட்டு போரனு சொல்றாளே…. ஆரு நீ இல்லனா நான் இல்லடி என்கிட்ட வந்துரு… இல்ல நான் உன்கிட்ட வந்துருவேன். புவி புவி… எங்க பாப்பா பாத்துக்கோடா நானும் என் பப்பிகூடவே போறேன்" என குழந்தையோடு தரையில் சரிந்தவனை தூக்கினர் அனைவரும்.

ஒரு புது மருந்துகள் பற்றி பேச அங்கே வந்த ரோகன் இவர்களை பார்த்ததும் அருகில் வர எழுத்து ஓடிய தக்ஷினா அவன் கையை பிடித்துக் கொண்டாள்.

"ரோகன்… என் தங்கச்சி உயிர காப்பாத்தி தா… உன்ன கடவுளா நினைச்சி கேட்கிறேன்" என அழுதவள் கண்ணை துடித்துவிட்டவன் "என்னோட கடமை" என ஆராதனாவை பார்க்க உள்ளே சென்றான்.

ஐந்து வருடங்களுக்கு பிறகு…

"அம்மா நாங்க புது கார்ல தாத்தா கூட வரோம். நீங்க அப்பா கூட அழுக்கு கார்ல போங்க" என அவள் இரு கன்னத்திலும் முத்தம் வைத்த பிள்ளைகளுக்கு தக்ஷினா மாறி மாறி முத்தம் கொடுக்க புவிக்கும் முத்தம் கெடுத்துவிட்டு இறங்கி ஓடினர்.

அவளை அழைத்து வந்து விழா நடக்கும் இடத்தில் காரை நிறுத்தினான் புவி வேந்தன்.

"மாமு அவனுங்கள ஏன் விட்டு வந்த… கேடி உண்மைய சொல்லு?" என அவனை அடித்தாள் தக்ஷினா.

"இதோ இதுக்குதான்" என்றவன் வலிக்க வலிக்க அவள் இதழில் முத்தம் வைத்தான்.

"பொறுக்கி… ப்ச் மிதுவும் விதுவும் இன்னும் சாப்பிடவேயில்ல" என கவலையாக சொன்னவளை இழுத்து அனைப்பில் வைத்த புவி "அம்மா தான் பாத்திக்கிறேன்னு சொன்னாங்கள… விடு தீ. இன்னைக்கு உன் லைப்ல முக்கியமான நாள் அதனால இன்னைக்கு உனக்கு லீவ். பசங்கள நான் பாத்துக்கிறேன்"

"சரி சரி மாமு… டைம் ஆச்சி. எல்லாரையும் கரெக்டா வர சொல்லு. நான் கிளம்புறேன்"

"ஏய் இருடி இந்தா தாலி" என எடுத்து கொடுக்க "இத தான் ரொம்ப நாளா தேடுறேன்" என்றவள் வாங்கி போட்டுக் கொண்டாள்.

"பப்பி… இந்த புடவைல அப்படியே கடிச்சி திங்கனும் போல இருக்கடி" என அவளுடன் இழைந்தான் அதியன்.

"தள்ளி போங்க வேலை இருக்கு. முத பால் டப்பால தண்ணி எடுத்து வைங்க அப்பறம் வந்து திங்கலாம். அப்படியே டயப்பர் எடுத்து என் ஹாண்ட் பேக்ல வச்சிருங்க" என விரட்டினாள் ஆராதனா.

"எய் மூடே போச்சிடி… அட்லீஸ்ட் ஒரு உம்மா வாச்சும் சும்மா தாயேன்?" என அவள் கன்னத்தை பிடித்து கெஞ்ச அவனை முறைத்துக் கொண்டே கன்னத்தில் கொடுக்க வர சட்டென்று அவள் இதழை சிறையிட்டான் அதியன். அவளும் அவனுடன் ஒன்ற கதவு திறக்கும் சத்தத்தில் பிரிந்து நின்றனர்.

அவர்கள் மகள் தான்.

"அம்மா தூக்கு மா…" என தாவினாள் மகிவர்த்தினி. அவளை தூக்கிக் கொண்ட அதியன் "அம்மா தம்பிய வச்சிருக்கால … நீ அப்பா கிட்ட இரு" என முத்தம் வைத்துவிட்டு திரும்பி ஆராதனாவை பார்த்தான்.

"போலாமாடா பப்பி…. தம்பிய வேனா நான் தூக்கிக்கவா?" என "இருக்கட்டும் அத்தான்… பாப்பா அழுவா... " என்றாள் ஆராதனா.

"ஆரா மா" என கத்திக் கொண்டே இரண்டு வானாரங்கள் வர குதித்து இறங்கினாள் மகி.

"எங்கடா உங்க அப்பா?"

"அப்பா அம்மா கூட அப்போவே கிளம்பிட்டாங்க பெரியப்பா. நாங்க தான் தாத்தாகூட வரோம்னு சொல்லிட்டோம்" என்றான் விதுன்.

"பெரியப்பா… நாம புது கார்ல போகலாமா?" என அவன் கையை பிடித்தான் மிதுன். .

"சரிடா போகலாம்" என அவனைவரையும் அழைத்துக் கொண்டு அந்த விழா நடக்கும் இடத்திற்கு வந்தான் அதியன். அவர்கள் குடும்பம் அமரவே பெரிய வரிசை காலியாக இருக்க அவன் எதிரில் ரோகன் கைகுழந்தையை தோளில் போட்டுக் கொண்டு ஒரு எட்டு வயது சிறுவனை கையோடு பிடித்துக் கொண்டு நின்றான்.

"எங்கடா உன் மம்மி… ?"

"அதோ… வந்துட்டாங்க டாடி" என விரைந்து வந்த வாணியை காட்டினான். ஆம் வாணியும் ரோகனும் காதலித்து மணந்துக் கொண்டனர். வாணியின் மகனை தன் மகனாக மனதார ஏற்று கொண்ட ரோகன் ஷியம் பக்டே என்று அவன் பெயரை மாற்றிவிட்டான்.

"என்னாச்சு கோபாமா இருக்கிங்களா?" வாணி நாக்கை கடிக்க

"இல்லமா… இந்தா மோகிய பிடி உன்ன தேடி ஒரே அழுகை" என அவளிடம் நீட்ட "என்னமா… அம்மாட்ட வாங்க" என்றவாறே வாங்கிக் கொண்டாள் அவள்.

"டாடி அதி அங்கிள்…" ஷியம் அவனை பிடித்து இழுக்க அவனிடம் வந்து நின்றனர் அதியன் குடும்பம்.

"நல்லாருக்கிங்களா டாக்டர்? பாப்பா எப்படி இருக்கா?" என நலன் விசாரிப்புக்கு பின் அவர்கள் இடத்தில் சென்று அமர்ந்தனர்.

வாயிலில் சந்தோஷுடன் நின்றிருந்த மகி சிரித்துக் கொண்டு இருந்தாள். அங்கு சேரில் அமர்ந்திருந்த ஒருவன் வலியில் துள்ளி குதிக்க அவனை பீதியுடன் பார்தனர் ஆண்கள். அவர்கள் பின் இருந்த போஸ்டரில் "பீரியட்ஸ் சிமிலேட்டர்" என்று இருந்தது. அதாவது அந்த கருவியில் இருக்கும் வொயர்சை வயிற்றில் ஒட்டிக் கொண்டு அந்த சின்ன மிஷினை ஆன் செய்தால். பெண்கள் மாதவிடாய் காலத்தில் அனுபவிக்கும் வலியினை அது அவர்களுக்கும் ஏற்படுத்தும். நாலாவது லெவல்கே ஆண்கள் அலற… பதிநான்ங்கு வரை பெண்கள் அசராமல் நின்றனர். சில ஆண்கள் தனாக வந்து அனுபவம் பெற்றவர்கள் தங்கள் மனைவிமார்களை பார்த்து வருந்தினர்.

ஆஷாவும் சரத்தும் உள்ளே வர அவர்களிடம் ஓடினாள் மகி. நிறைமாத கர்ப்பிணியான ஆஷா மகியை தூக்க முயல அவளை தடுத்து சரத் தூக்கிக்கொண்டான்.

"வாங்க அண்ணா… ஆஷா… வா வா. பேபி என்ன சொல்லுது" என அவளிடம் வந்தாள் சந்தோஷின் கண்மணி.

"அட ஏன் கண்மணி… நீ. ரொம்ப படுத்துறான்" என இருவரும் போசிக்கொள்ள சரத்தும் சந்தோஷிம் பாவமாக பார்த்துக் கொண்டனர். லாயர் ஆஷாவும் லாயர் கண்மணியும் தோழிகள் பேச ஆரம்பித்தாள் பேசிக் கொண்டே தான் இருப்பார்கள்.

"கண்மணி… அம்மா மகிய தேடுனாங்க போய் குடுத்துட்டு வா" என அவர்களை பிரித்துவிட்ட சந்தோஷ் சரத்தை பார்த்து கண்ணடித்தான்.

"தேரிட்ட மேன் நீ" ரகசியமாக அவன் வயிற்றில் குத்திய சரத் ஆஷாவை அழைத்துக் கொண்டு சென்றான்.

"யோவ் ஹஸ்பண்ட் அங்க பாருங்க உங்க முறை பையன்ன" என அமிரா விஷ்ணுவை இடிக்க அவளை முறைத்தான் அவன்.

"அவன் எனக்கு முறபையனா?" என்றவாரே தன் இரண்டு வயது மகனை வாங்கிக் கொண்டவன் சந்தோஷை பார்த்து சிரிக்க அவனை முறைத்தான் சந்தோஷ்.

"பாத்தீங்களா… எப்படி முறைக்கிறர்னு அதான் முறபையனு சொன்னேன்" என்றவள் சாக்லேட்டை தின்றுக் கொண்டே வர…

"அமி அதை கீழ போடு…அப்பறம் சாகிரும் சாக்லேட் கேட்டு அழுவான்" என அதட்ட அவனுக்கு பழிப்பு காட்டியவள் அதை தூக்கிபோட்டு விட்டு வந்தாள்.

"நல்லாருக்கியா சந்தோஷ்.?"

"ம்ம் நல்லாருக்கேன்… இதான் நீ வர நேரமா? மகி உன்ன எங்கனு கேட்டு தொல்ல பண்றா போய் பாரு" என விஷ்ணுவை விரட்ட சிரித்துக் கொண்டே உள்ளே சென்றான் அவன்.

"என்ன சந்தோஷ் எல்லாம் முடிச்சிட்டுனா வா உள்ள போவோம் பங்ஷன் ஸ்டார்ட் பண்ண போறாங்க" என ஒரு வயது அணுவதனாவை தூக்கி கொண்டு வந்தான் விமலன். சந்தோஷை பார்த்ததும் தாவிய வதனாவை தூக்கி கொண்டவன் "ம்ம் போகலாம் அவ்வளவு தான்" என அவனுடன் உள்ளே வர மகளை வாங்கிக் கொண்ட அபிராமி சாந்தினியுடன் சென்று அமர்ந்தாள். அவள் தான் சாந்தினி நடத்தும் ட்ரெஸ்டை பார்த்துக்கெள்கிறாள் கூடவே சினிமாவில் பின்னனி பாடகியாக தன் சொந்த முயற்சியால் முன்னேறி கொண்டு இருக்கிறாள்.

அதி தன் மகளை மடியில் வைத்துக்கொண்டு இருக்க சினுங்கிய மகனை தட்டிக் கொடுத்தாள் ஆராதனா. ஆராதனா ஹில்ஸின் எம்டியாக இருக்க அதியன் பவுனின் எம்டியாக பொறுப்பேற்றுக் கொண்டான். பக்கத்தில் தக்ஷினாவின் மகன்கள் இருக்க ஒரு குட்டி தேவதையை தூக்கி கொண்டு வந்த புவி அவர்களுடன் அமர வாண்டுகள் இரண்டும் தன் தங்கையோடு விளையாடியது. அவள் தக்ஷினாவின் புதல்வி சிவானி.

மேடையில் வரவேற்ப்பு உறை முடித்து சிறப்பு விருந்தினராக சீப் மினிஸ்டர் பேசிக் கொண்டு இருந்தார். ரௌத்திரம் பள்ளியின் வெற்றி விழா அது. தன் வேலையை ராஜினாமா செய்த தக்ஷினா ரௌத்திரம் பள்ளியை திறந்தாள். அதில் பெண்களுக்கான தற்காப்பு கலைகளிலிருந்து பல நாட்டுகளில் உள்ள கலைகளும் அவர்கள் கற்று தந்தனர். பீஸ் என்று பெரிதாக ஒன்றும் வாங்கவில்லை முடிந்தவர்கள் கொடுத்தார்கள். அனைத்து விதமான கலைகளையும் அவர்கள் சொல்லிதர எல்கேஜி செல்லும் குழந்தையில் இருந்து ஐம்பது வயது உள்ள பெண்களும் தற்காப்பு கலைகள் கற்றனர். தமிழ்நாடு முழுவதும் ரௌத்திரம் திறக்க பட்டு நாளுக்கு நாள் அதில் சேர்பவர்கள் அதிகமாகினர். இதை தவிர்த்து நம் நாட்டின் கலைகளை கற்று தருவதற்காக ஆயிரம் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க பட அவர்களுக்கு இது நல்ல வேலை வாய்பாக இருந்தது. அவர்கள் குடும்பமும் அவளை வாழ்த்தினர். அதற்காக தான் இந்த வெற்றி விழா.

அவள் முயற்சியின் வெற்றி விதையாக பல செய்திகள் அவளை வந்து சேர்ந்தது.

தன்னிடம தவறாக நடுந்துக்க முயன்ற ஆசிரியரை ஒற்றையாளாக அடித்து கட்டிவைத்த மாணவி. ரௌத்திரத்தில் கற்றுக் கொண்ட கலைகள் தனக்கு தன்னம்பிக்கையும் தைரியத்தையும் தருவதாக பேட்டி கொடுத்தாள்.

காதலிக்கவில்லை என்றால் கத்தியால் குத்திவிடுவேன் என மிரட்டிய வாலிபனை துரத்தி துரத்தி அடித்த கல்லூரி மாணவிகள். நடந்து செல்லும் போது கழுத்தில் இருந்த செயினை அறுக்க முயன்ற இருவரை லாவகமாக கீழே தள்ளி கிடுக்கு பிடி போட்ட பாக்ஸிங் மாமி. வித வித விதமான செய்திகள். பெண்கள் தங்களை காத்துக்கொள்ளும் வித்தைகளை கற்றுக் கொண்டு நிமிர்ந்து நின்றனர். ஆணக்கு இணையாக உடலளவிலும் பலம் வாய்ந்தவர்களாக தாங்கள் மாற காரணம் ரௌத்திரம் என்று வானம் முழங்க கர்ஜித்தனர் பெண் சிங்கங்கள். கற்பழிப்பு சம்பவங்கள் குறைந்தன பெண்ணை கற்பழிக்க முயன்றவனுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்ட கூட ஆள்இல்லை. பெண்கள் தற்காப்புகாக கொலை செய்தால் குற்றம் இல்லை என்னும் போது துணிந்து கையை முறுக்கிக் கொண்டு நின்றனர்.

இது தானே அவள் கணவு… லட்சியம்… இந்தியா முழுவதும் ரௌத்திரம் வாகை சூடும் என்று அவள் லட்சியம் கண்டிபாக நிறைவேரும்… அந்த நம்பிக்கையும் அவளுக்கு இருக்கிறது

முதல்வர் அணிவித்த மெடலை வாங்கிக்கொண்டவள் கீழே அமர்ந்திருந்த சகோதரன் கணவன் குழந்தைகள் குடும்பம் அனைத்தையும் பாத்தவிட்டு மைக்கில் சென்று நின்றாள்.

"இந்த பேரு இந்த பாராட்டு எல்லாமே உங்க வளர்ச்சிக்கு கிடைத்த பரிசு… பெண்களின் முன்னேறத்துக்கான வெற்றி" என்றவள்

"நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்னி உரைப்பது கேட்டீரோ"


என அவள் ஆரம்பிக்க அவளுடன் சேர்ந்து அந்த அரங்கத்தில் இருந்தவர்கள் மட்டுமல்ல அதை உலகின் முலைமுடுக்கில் இருத்து பார்த்த அனைவரும் உரக்க சொல்லிக் கொண்டனர்.


போகாதடி என் பெண்ணே ….
துணிந்து நின்று பார்…
போர்க்களமும் உன் காலடியில்
பூவனம் ஆகும்…


பெண்ணே வருவாய்!!​
❤​

நன்றி

 
Last edited:
Status
Not open for further replies.

New Threads

Top Bottom