Bindu sarah
Member
- Messages
- 59
- Reaction score
- 54
- Points
- 18
மாய நிலா 32
ஆகாஷ்… சைலு தமது அடங்காத ரிஷியை ஒரு வழியாக அறைக்கு அழைத்துக்கொண்டு வருவதற்க்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.
ஒருவழியாக அடித்துபிடித்து மனோயிருக்கும் இடத்துக்கு வந்து சேர, சைலுவை வைத்துசெய்ய ஒரு கூட்டமே காத்துக்கொண்டிருந்தது.
"ஏன் கா… குழந்தை பிறந்ததை கூட என்ட சொல்லல உனக்கு தெரியாதா" என பாச மிரட்டலிட்டு சைலுவை நெருங்கினார்கள் அந்த கல்லூரி மாணவர்கள், சைலுவின் சேட்டையால் கிடைத்த நண்பர்கள்.
"குழந்தை பிறந்திருக்கு அதுக்கூட சொல்லல" என கோபத்தில் அனைவரும் முறைத்திருக்க.
சைலுதான் முதலில் இவர்கள் பாசத்தில் திக்கு முக்காடி போனாள், தன்னை சமநிலை படுத்திக்கொண்டு.
"சரி சரி ஈசியா விடுங்க, பிடிங்க நீங்களே வச்சிக்கோங்க, இந்த குட்டி பிசாசு நிம்மதியா என் லவ்வர்கூட கூட பேசவிடுரதில்லை. இன்னும் ஒரு மாசத்துக்கு இவனை வச்சி பாத்துக்கோங்க. இவனுக்கு பசித்தால் மட்டும் கூப்பிடுங்க சும்மா சும்மா எங்களை டிஸ்டர்ப் செய்யக்கூடாது" என அந்த பாச கூட்டத்திடம் குழந்தையை கொடுத்துவிட்டு செல்ல.
ஆகாஷ்தான் கூச்சத்தில் நெழிந்து கொண்டிருந்தான்.
"என்ன டீ… சின்ன பசங்க முன்னாடி இப்படி பேசிட்டிருக்க".
"இதுக்கே இப்படி சொன்னா என்ன அர்த்தம் ஆகாஷ் நீ செய்த அனைத்தும் ஒரு மெகா சீரியல் எடுக்கும் அளவுக்கு சொல்லி வைத்திருக்கேன்" என ஆகாஷை இன்னும் அதிரவைத்தாள்.
"எது… அந்த ஒன்னியர் மேட்டரா?" என அவன் கேட்க.
"கிஸ் தொடங்கி… நீ செய்தது அனைத்தும் சொல்லிவிட்டேன்" என ஆகாஷை அதிரவைத்தவள்.
"அதைவிடு ஆகாஷ் எனக்கு கால் கை எல்லாம் ஒரே வலி பையனை தூக்கிட்டு வந்ததில், கால கொஞ்சம் அமுக்கிவிட்டா நல்லாயிருக்கும்".
"அடிப்பாவி…! இதுக்கு தான் தனியா கூட்டிட்டு வந்தியா? நான் கூட என்மேலயிருந்த ஆசையில கூட்டிவந்தன்னு நினைச்சேன்" என்று அவன் காற்றுப்போன பலுனாக சொல்ல.
"டேய்… நீ செய்ததுக்கு வட்டி முதலும் கொடுக்க வேண்டாமா? இன்னும் ஒரு மூணுவருசத்துக்கு டச் மீ நாட் காண்ட்ராக்ட்" என சைலு அசால்ட்டாக சொல்ல.
"என்னாது... மூணு... மூணு வருசமா" என வாயில் வார்த்தை வராமல் ஆகாஷ் திக்கித் தினறிப் பேச.
"அதே தான் ஒரு திருத்தம் இரண்டு மூணு இல்ல… ஒரே மூணு தான்" என சொல்லிவிட்டவள் சோபாவில் சாய்ந்துகொண்டு. ஆகாஷ் மடிமீது கால் வைத்து படுத்துக்கொண்டாள்.
ஆகாஷ் நீ செய்த அனைத்துக்கும் மீட்டர் வட்டி ஸ்பீடு வட்டி என எக்கச்சக்க வட்டி போட்டு கலக்ட் செய்வா போல, என அவன் மனதில் புலம்புவதாக நினைத்து வாய்விட்டு புலம்ப.
"ஆகாஷ்..." என்று அழைத்தாள் சின்ன குரலில்...
"என்ன சைலு" என்றான் அவளது கால்களை அழுத்தியவாறு.
"நெக்ஸ்ட் டைம்… மைன்ட் வாய்ஷ் மனசுல பேசு, வெளியே இருக்கவங்களுக்கு கூட கேட்டிருக்கும். அவ்வளவு சத்தம்" என சொல்லி மணியாக சிரித்தாள்.
"வேணா சைலு சிரிக்காத…" ஆகாஷ் முகத்தில் கோபம் எட்டிப்பார்க்க.
"சைலு எஸ்கேப் ஆகிடுடி தங்கம்" என மனதில் நினைத்தவள் எழுந்து ஓட எந்திரிக்கும் போது அவளை வளைத்துபிடித்திருந்தான் ஆகாஷ். "எங்க ஓடுர நானும் போனா போவுதுன்னு விட்டா மேடம் ரொம்ப துள்ளுரிங்க" என அவன் குரல் கணிரென மிரட்டினாலும் அவனது செயலில் காதல் பொங்கி வழிந்தது.
சைலுவை பூங்கொத்தை கையாலுவது போல தாங்கினான் சைலுவை.
"சார் பேச்சிக்கும், செயலுக்கும் சம்பந்தமேயில்லையே..." என சைலு தனது குறும்புக்குரலில் சொல்ல.
"கோபமாதானடி இருக்கேன்... உன்னை அப்படியே ராச்சனா மாறி, மொத்தமா எனக்கூட வைத்துக்க" என அவன் காதல் பொங்க பேச.
"அது எல்லாம் முடியாது... மூணு வருசம் டச் மி நாட் டீல் ஐயா மறந்துட்டிங்களா" என மீதி வந்த வார்த்தை அவனின் இதழுக்குள் சத்தமில்லாமல்தான் சொல்லி முடித்திருந்தால் சைலு.
விட்டகாதலை இன்று தொடங்கியது இந்த காதல் பைங்கிளிகள்.
எப்போதும் அமைதியாக வந்துகொண்டிருக்கும் ஆதிரா அர்ஜுனிடம் வாய் வலிக்கும் அளவிற்க்கு அர்ஜுனின் காது கிளியும் அளவிற்க்கு பேசினாள் பேசினாள் பேசிக்கொண்டேயிருந்தாள். இன்று தான் பல வருடத்திற்குபின் பேச்சிவந்தவள் போல காதல் வசனமாக பேச.. 'ஐயோ என் வாழ்க்கை இப்படி ஆகிடுச்சே.. இப்படி மேடையில் பேசுவது போல என்றுமில்லாமல் பேசிக்கொண்டே போனால், முதல்ராத்திரி கொண்டாடி குழந்தை பெத்து.. அதை வளர்த்து என் வாழ்க்கைக்கு விடிவேயில்லையா?' என கடவுளிடம் மன்றாடிக்கொண்டே கட்டிலில் சாய்ந்த வாக்கில் "ம்ம்... ம்ம்" என பாதித்தூக்கத்தில் படுத்தவன் ம்ம் கொட்டுவதை விட்டுவிட்டு தூங்கிப்போனான், அர்ஜுன்.
'என்ன மாமா சத்தத்தை காணேம்' என ஆதிரா திரும்பிப் பார்க்க அர்ஜுன் நிஜத்தில் கொண்டாடாத முதலிரவை கனவில் கொண்டாடிக் கொண்டிருந்தான்.
அதுவும் பொறுக்காமல் இந்த ஆதரா ஆத்திரத்தில் "டேய் மாமா இவ்வளவு கலவரத்தில் பேசாதது எல்லாம் பேசி முடிச்சிடனும்னு இங்க நான் உயிரை கொடுத்து பேசிட்டிருக்கேன். உனக்கு என்ன தூக்கம் வேண்டியிருக்கு" என தன் வலிய கரத்தால் அவனை புரட்டி எடுக்க.
அர்ஜுன் கனவில்
"மாம் எதுக்கு இப்படி பார்க்கர.. ஏதோ ஆகுது" என ஆதிரா சிணுங்க.
அவளின் சிணுங்கள் அர்ஜுனுக்கு அடுத்த கட்ட அடிக்கு அடிப்போட. ஆதிரா இன்னும் சிணுங்க பொறுமையில்லாதவன் ஆதிரா இதழ்களை சிறைப்பிடிக்க ஒரு இன்ச் இடைவெளியில் ஆதிரா அடி பொறுக்காமல் கண் திறந்தவனுக்கு ஆத்திரம் மட்டும் தான் மிஞ்சியிருந்தது.
"ஆடியேய் பிசாசே.. கனவுல கூட டூயட் பாடக்கூடாது அவ்வளவு தானே உனக்கு" என கோபமாக எந்திரித்து மொட்டை மாடிக்கு போய்விட்டான்.
"ஊமை மாதிரி சுத்திட்டு பாவி மகள் பேசியே என் முத ராத்திரியை கெடுத்துட்டா… கடங்காரி" என சுவற்றில் சாய்ந்து நின்றுக்கொண்டிருந்தான்.
"ஐய்யோ… அர்ஜுனையே இப்படி கோபப்பட வச்சிட்டியே ஆதிரா கோபம் வந்தா ஐயாவை மலையிறக்குவது வேறு ரொம்ப கஷ்டமாச்சே" என பூனைகுட்டி நடைபோட்டு மாடிக்கு வர. அவள் வருவதை பார்த்த அர்ஜுன் திரும்பி நின்றுகொண்டு "இங்கயும் அவளது சொற்ப்பொழிவு அரங்கேற்ற வந்துட்டா" என அவனது கோபத்தை சுவற்றை பிடிப்பதில் காட்டிக்கொண்டிருந்தான் அர்ஜுன்.
நைசாக வந்தவள் அர்ஜுனை பின்னிருந்து அணைத்தவள்.
"சாரி ஏதோ உணர்ச்சிவசத்துல கொஞ்சம் பக்கம் பக்கமா பேசிட்டேன்".
"எது கொஞ்சமாவா.. மணி என்னன்னு தெரியுமா ஒரு மணி பேசுற நேரமாடி இது" என அவள் அணைப்பின் கதகதப்பை ரசித்துக்கொண்டே மென்மையாக பேச.
'ஆதிரா சாமி மலையிறங்க போது எதாவது பேசி சாந்தமா பேசி நார்மல் ஆக்கிடனும்' என நினைத்தவள்.
'இனி பேசவே மாட்டேன் போதுமா' என்றால் அர்ஜுனை பின்னிருந்து அணைத்துக்கொண்டே.
அவளை ஒரு சுழற்று சுழற்றி முன் வரவைத்தவன் ஆதிராவை தன் உயரத்துக்கு தூக்கி அணைத்துக்கொண்டவன்.
"நீ பேசரது எல்லாம் எனக்கு பிரச்சனையில்ல கேட்க நான் உன் கூட எப்பவுமிருக்கும், அதுக்குன்னு முதராத்திரியில மேடம் மேடையில் மைக் பிடிச்சி பேசனது தான் கொஞ்சம் காண்டாகிடுச்சி" என அர்ஜுன் இனக்கமாக பேச ஆதிராவுக்கு சிறு வயது சில நினைவுகள் வந்து முகம் மாறியது.
அவளது முக மாற்றத்தை குறித்துக்கொண்டவன். "எதுக்கு இதுக்கு இப்படி போகுது முகம்" என கேட்க.
ஆதிரா கோபமாக அவனிடமிருந்து விளகியவள்.
"உங்களுக்கு நான் எது செய்தாலும் தப்பு தான் உங்களுக்கு தான் என்னை பிடிக்கவே பிடிக்காதே நான் தான் உங்க பின்னாடி அழைந்துகொண்டு காதல் வசனம் பேசிக்கொண்டிருந்து இருக்கேன்" என அவளது பவளக்கண்களில் ஒரு துளிக்கண்ணீர் வெளிவந்தது.
"என்னாச்சி எதுக்கு இவ்வளவு எமோசன், நீ தான் ஸ்ட்ராங்கா இருக்க பெண்ணாச்சே" என அர்ஜுன் ஆதிராவை ஆராய்ச்சா பார்வை பார்க்க.
"எப்பவும் உனக்கு, அக்னி தான் முக்கியம் இது போராமையில சொல்லலை. அவள் கிறுக்கி தந்தா கூட ரவி வர்மன் பெயின்டிங் போல தூக்கி வச்சி கொண்டாடுவிங்க. நான் அழகா எதாவது வரைஞ்சி வச்சா அதை கண்டுக்கக்கூட மாட்டிங்க தானே. அதுமட்டுமா அவளுக்கு பாசமா ஊட்டிவிடுவிங்க, என்னை பார்த்தா எப்போதும் எறிஞ்சி விழுவது. தனியா படுக்க பயமாயிருக்குன்னு உங்க ரூம்க்கு வந்து படுத்தா அடிச்சி துரத்தாத குறையா துரத்துவிங்க. அதுவே அந்த இடத்துல அக்னியிருந்தா.. கொஞ்சி கதை சொல்லி தூங்கவைப்பிங்க" என சிறுவயதிலிருந்த ஆதிராவின் மனதில் அடைத்துவைத்திருந்ததை மூச்சிவாங்க சொல்லிமுடித்தவளை. அர்ஜுன் அலேக்காக தூக்கிவந்து கிட்சனில் உட்கார வைத்தவன் முதலில் தண்ணீர் கொடுத்து அவளை ஆசுவாசப்படுத்தினான்.
'நான் எலவ்வளவு பீல் செஞ்சிட்டிருக்கேன் கல்லு மாதிரி நிக்கறான் பாரு ராட்சசன்' என மனதில் திட்டிக்கொண்டிருக்க.
"மேடம் திட்டி முடிச்சாச்சா…"
"ஆச்சி ஆச்சி" என ஆதிரா எங்கோ பார்த்து சொல்ல.
"இங்க பாரு" என அர்ஜுன் அவளது முகத்தை தன்னை நோக்கி பார்க்க வைத்தவன்.
"நீ சூப்பரா வரைவ ஆனால் ஒரு டைம் சூப்பர் சொல்லிட்டா அதுக்கு அப்பறம் உன்னிடம் ஒரு அடுத்த கட்டத்துக்கு கத்துக்கறதையே மறந்து அதே இடத்துல நீ நிறைய முறை நின்றிருந்ததை பார்த்து தான், உனக்கு நெகட்டிவ் மோட்டிவேசன் தான் உனக்கு சரி வரும்ன்னு சொன்னேன். அக்னி சும்மா நீ வரையரன்னு எதாவது கிறுக்கிட்டு வந்து கொடுப்பா அது குழந்தை எது செஞ்சாலும் ஒரு அண்ணனா நான் தான் பாத்துக்கனும்" என அர்ஜுன் நிறுத்தி ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்துவிட்டவன்.
"நான் உன்ன சின்னதுல இருந்து காதலிச்சிட்டிருந்தேன். திடீரென ரூம்க்கு வந்து என் பக்கத்துல நீ படுத்தா என்னால எப்படி அமைதியாயிருக்க முடியும் அதான் ரூம் விட்டு துரத்திவிட்டேன். அவ என் தங்கச்சி ஆனா உன்னை அப்படி நினைக்கலை அதுமில்லாம நீ ஒரு புலோவில் என்னை அண்ணா கூப்பிட்டுடுவ அது எரிச்சலை கிளப்பி நான் எதாவது திட்டிவிட்டுடுவேன்" என அர்ஜுன் பொறுமையாக விளக்கம் கொடுத்தவன். பிரிஜ்ஜையை திறந்து ரு ஐஸ் கீரிம் டப்பாவை திறந்து அவளிடம் கொடுத்து. "சாப்பிட்டு பொறுமையா வா" என படுக்க போய்விட்டான்.
'ஆதிரா இப்படி சொதப்பி வச்சிருக்கியே ராட்சசி' என அந்த ஜஸ்கிரீம் டப்பாவை மூடிவைத்தவள் அர்ஜுனை நோக்கி நடந்து சென்றாள்.
அவனே தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான்.
அவனின் தலைக்கு அருகில் அமர்ந்தவள்.
அர்ஜுனின் தலையை எடுத்து தன் மடிமீது வத்துக்கொண்டவள்.
"சாரி" என்றாள்.
"அது எல்லாம் ஒன்னுமில்லை... நீயும் வந்து படு" என அவள் மடியிலிருந்த தலையை எடுக்க பார்க்க.
ஆதிரா இல்லை என்பது போல தலையாட்டி அவனது முகத்தை பிடித்து கண்களில் காதல் பொங்க லவ் யூ சொன்னால் முதல் முறையாக
அதை ஏற்றுக்கொள்ளாதவன்.
"தமிழ்ல சொல்லு" என்று அவளை பார்த்தவாறு அமர்ந்துகொண்டான்.
சொல்லமாட்டேன் என்பது போல தலை அசைக்க… ஆதிராவின் முகத்தில் இளம் சூரியக் கதிர்கள் பட்டது போல முகம் சிவந்திருந்தது ஆதிராவின் சிவக்க சிவப்பை ரசித்தவன் அவளை நெருங்கி இருவருக்கான தனி உலகில் பயணிக்கத் துவங்கினார்கள்.