- Messages
- 1,039
- Reaction score
- 1,132
- Points
- 113
அத்தியாயம் 13
தான் அந்த வீட்டினுள் காலடி எடுத்து வைத்த முதல் நாளே தன்னை அந்நியமாய் நினைக்காமல் தனக்கு அந்த வீட்டை சுற்றிக் காண்பித்தவர் ஜானகியம்மாள்.
அவரா இன்று இப்படி தன்னிடம் குரலை உயர்த்தி பேசுவது? என்று அதிர்ந்து பார்த்தவளிடம், "என்ன வார்த்தைம்மா பேசுறீங்க? நான் இங்க வேலைக்கு சேர்ந்து பதினஞ்சு வருஷம் ஆகப்போகுது. நீங்க வர்றதுக்கு முன்னாடி என்னோட மூணு பொண்ணுங்களும் இங்க தான் வேலைப் பார்த்தாங்க. அதுங்க எல்லாத்தையும் தன் கூடப் பிறவாத தங்கச்சியா பார்த்தவரு விக்ரமன் தம்பி. அவரைப் போய் பொறுக்கி அது இதுன்னுட்டு. தப்புமா. அன்னைக்கு கௌதமன் தம்பி உங்கக்கிட்ட தப்பாப் பேசினதை பார்த்தப்போ எனக்கு மனசு பக்குன்னுச்சி. நான் தான் விக்ரமன் தம்பியைப் பார்த்து நடந்ததை சொன்னேன்." என அந்நிகழ்வையும் அந்நாளையும் நினைவு கூறத் தொடங்கினார் ஜானகியம்மாள்.
*
தன் காரை எடுக்க சாவியை நுழைத்து திருகிக் கொண்டிருந்த விக்ரமனை நெருங்கி, “தம்பி” என்றழைத்து அருகில் போய் நின்றார் ஜானகியம்மாள்.
"சொல்லுங்க ஜானும்மா? ஏன் தயங்கி நிற்கறீங்க?" என்றவன் கேட்க,
"தம்பி அதிதி பாப்பா ஒரு பிரச்சனையில இருக்காங்க." என்றார் அவர்.
திகைத்தான் விக்ரமன்.
"அதிதியா? என்ன சொல்றீங்க ஜானும்மா?" என்றான்.
"ஆமா தம்பி, கௌதமன் தம்பி அதிதி பாப்பாக்கிட்ட தப்பாப் பேசிக்கிட்டிருந்ததை நான் பார்த்தேன். செடிக்கு தண்ணி ஊத்திக்கிட்டிருக்கும் போது அவங்க பேசினது என் காதுல விழுந்தது. அதுக்கு அதிதி பாப்பா கௌதமன் தம்பியை நல்லாத் திட்டி விட்டுட்டாங்க. ஆனாலும் ஏதோ தப்புன்னு தோணுச்சு. எனக்கு மனசு கேட்கல. அதான் உங்கக்கிட்ட சொன்னேன். அதிதி பாப்பாவை கொஞ்சம் பார்த்துக்கோங்க தம்பி." என்றதும் அவன் முகம் இறுகியது.
"கவலைப்படாதீங்க ஜானும்மா. நான் என்னனு பார்க்கறேன். இதை வேற யார்கிட்டயும் சொல்லலையே?" என்றதும்,
"இல்ல தம்பி யாருக்கிட்டயும் சொல்லல." என்றார்.
குழப்பத்துடனே காரைக் கிளப்பினான் விக்ரமன்.
*
அதிதிக்கு ஜானகியம்மாள் கூறியதனைத்தும் அதிர்ச்சியாக இருந்தது. இருப்பினும் குறுக்கிடாமல் அவர் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்தாள். ஜானகியம்மாள் தொடர்ந்தார்.
"அதுக்கப்புறம் என்னாச்சுன்னு எனக்குத் தெரியாதும்மா. ஆனா ஒரு வாரம் கழிச்சு விக்ரமன் தம்பி என்கிட்ட வந்து, நீங்க சொன்ன நாள்லயிருந்து கௌதமனை கண்காணிக்க ஆரம்பிச்சேன் ஜானும்மா. கௌதமன் அடிக்கடி ஸ்ருதி அண்ணி தங்கச்சி மோனிகாவை சந்திக்கிறதை கேள்விப்பட்டு, அவளை என் கஸ்டடிக்கும் கொண்டு வந்து விசாரிச்சேன். அப்படி விசாரிச்சதுல ரெண்டு பேரும் சேர்ந்து அதிதியோட நடத்தையை தப்பா காமிக்க திட்டம் போட்டுக்கிட்டு இருக்கறது எனக்கு தெரிய வந்துச்சி. மோனிகாவை மிரட்டி வெளிநாடு போக வச்சிட்டேன். கௌதமனையும் எச்சரிச்சி மும்பை அனுப்பிட்டேன். நீங்க மட்டும் சொல்லலைனா இது எனக்குத் தெரியாமலேயே போயிருக்கும். பெரிய பிரச்சினை உண்டாகி குடும்பமே ரெண்டாகியிருக்கும். ரொம்ப நன்றி ஜானும்மா. இப்ப தான் அதிதி முகத்துல உண்மையான சந்தோஷத்தை என்னால பார்க்க முடியுது. கொஞ்ச நாளாவே பித்துப் பிடிச்ச மாதிரி திரிஞ்சானு சொல்லி என் கையைப் பிடிச்சி குலுக்கினாரு. ஆனா, விக்ரமன் தம்பி இன்னொன்னும் சொன்னாரு. கௌதமன் அதிதியை தொந்தரவு செய்யுறான்னு மோனிகாவுக்கு யார் சொன்னானு தெரியல? அந்த நேரத்துல வேற யாராவது அங்க இருந்தாங்களா ஜானும்மானு கேட்டாரு. நான் இல்லைனு சொன்னேன். அப்புறம் சரி நானே கண்டுபிடிச்சிக்கறேன் ஜானும்மானு போயிட்டாரு" எனத் தனக்குத் தெரிந்த அனைத்தையும் ஒன்று விடாமல் மடை திறந்த வெள்ளமாய் அதிதியிடம் கொட்டினார்.

Last edited: