உறவின் தேடல் -04
சமையலறைக்குள் சென்றவள் மளமளவென்று சமையல் வேலையை ஆரம்பித்தாள். சாதம், சாம்பார், ரசம், பொரியல், கூட்டு அப்பளம், வடை, போண்டா, பஜ்ஜி கூடவே கொழுக்கட்டை என அனைத்தையும் செய்து முடித்து விட்டு அவள் அப்பாடா என்று கீழே அமரும் போது மணி எட்டை கடந்திருந்தது.
அவ்வளவு நேரமும் சமையல் அறையை விட்டு வெளியே வரவில்லை. சமைத்து முடித்து வெளியே வரும் போதும் கூட அந்த வீட்டில் வசிப்பவர்கள் யாரும் கீழே வரவும் இல்லை. ஒற்றை ஆளாக அனைத்தையும் சமைத்து முடித்தவளுக்கு எப்போதும் போல் களைப்பாக இருந்தாலும், அதையும் மீறி இவ்வீட்டினர் தன்னிடம் நாலு வார்த்தை பாசமாக பேசி விட மாட்டார்களா? என்ற எண்ணமே அவளை ஏங்க வைத்தது. சமைத்த அனைத்தையும் கொண்டு வந்து ஹாலின் ஒரு ஓரத்தில் இருந்த உணவு மேஜையில் பரப்பி வைத்தாள்..
அந்த வீடு சின்ன வீடு என்று சொல்ல முடியாது. அதே சமயம் மிகப் பெரிய கோட்டை என்றும் சொல்லிட முடியாது. வெளியில் அந்த வீட்டைச் சுற்றி காம்பவுண்ட் சுவர் இருந்தது. அலங்காரமான பெரிய இரும்பு கேட் ஒன்று கார் உள்ளே நுழைவதற்காக பொருத்தப்பட்டிருந்தது. சற்று தள்ளி சிறிய கேட் ஒன்றும் இருந்தது.அந்த கேட்டைத் திறந்தால் சிறிய அளவிலான நடைபாதை வீட்டின் நுழைவாயில் வரை செல்லும்.
அந்நடை பாதையின் இரு புறமும் அழகழகான பூக்கள் தாங்கியிருக்கும் பூச்செடிகளை வைத்திருந்தனர்.அவற்றில் மலர்ந்திருந்த அழகான பூக்கள் அழகோடு வாசனையையும் பரப்பிக் கொண்டிருந்தன. அடுத்து வீட்டின் முகப்பில் பனிரெண்டு தூண்கள் அமைக்கப்பட்டு அதன் மேல் மேற்கூரை போடப்பட்டிருந்தது. அதோடு வீட்டினுள் நுழைவதற்கான நுழைவாயிலின் இருபுறமும்
வருவோர் அமர்வதற்காக திண்ணை அமைக்கப்பட்டிருந்தது.
வீட்டில் நுழைவாயில் தேக்கு மரத்தால் இழைக்கப்பட்டு, கடவுளின் உருவ சிலைகள் அற்புதமாக செதுக்கப்பட்டிருந்தது. மிகப்பெரிய வேலைப்பாடுகளைக் கொண்ட கதவுகளை உடைய வாசல்.. அதுவும் இரண்டு கதவுகளைக் கொண்டதாக இருந்தது..
அடுத்து நூறு பேர் ஒன்றாக அமரும் அளவிற்கு பெரிய ஹால். ஹாலின் ஒரு மூலையில் டைனிங் டேபிளும் அதனருகில் கை கழுவுவதற்கான வாஸ்பேஷன் வைக்கப்பட்டிருந்தது. ஹாலின் வலது மூலையில் சமையலறையும் இடது மூலையில் பூஜை அறையும் இருக்க, இடது மூலையை ஒட்டி மேலே செல்லும் படியும், வலது மூலையில் சமையல் அறையை விட்டு சற்று தள்ளி ஒரு பெரிய அறையும் இருந்தது.
மேலே வலது புறம் மூன்று அறையும் இடதுபுறம் மூன்று அறையும் இருக்க. அதே இடது புறத்தில் மொட்டை மாடிக்கு செல்லும் படிக்கட்டுகளும் இருந்தன..
வலது பக்கம் இருந்த அந்த ஒற்றை அறையை ஒட்டி சிறிய சந்தொன்று பின்வாசலுக்கு செல்வதற்காக விடப்பட்டிருக்க அதில் சென்றால் பின்னால் கிணறும் அதையொட்டி துணி துவைப்பதற்கான கல்லும் போடப்பட்டிருந்தன. யாராவது விருந்தினர் வந்தால் உபயோகப் படுத்திக் கொள்வதற்காக பின்னே ஒரு கழிவறையும். குளியலறையும் கட்டப்பட்டிருந்தது. அந்த கழிவறைக்கு சிறிது தூரத்தில் அந்த வீட்டை ஒட்டி வலது ஓரத்திலேயே சிறிய அறை ஒன்றும் இருந்தது. அது உபயோகமில்லாத பழைய சாமான்கள் போட்டு வைக்கும் இடமாக இருந்தது. என்று மதுரவாணி இங்கு வந்து சேர்ந்தாளோ அன்றிலிருந்து அதுதான் அவளது அறை..
சமைத்த உணப் பதார்த்தங்கள் அனைத்தையும் உணவு மேஜையில் எடுத்து வைத்து விட்டு அவள் பரிமாறுவதற்காக அங்கேயே நின்று இருந்த வேளையில் அந்த வீட்டின் நபர்கள் ஒவ்வொருத்தராக தங்களது அறையில் இருந்து கீழே இறங்கி வந்தார்கள்.
முதலில் வந்தது அந்த வீட்டின் பெரிய மனிதரும் அந்த ஊரின் முன்னாள் தலைவருமான ஆதிவிநாயகம். அவரை அடுத்து இறங்கி வந்தது அவரது தர்மபத்தினி பூங்கோதை நாச்சியார்.
அதற்கடுத்து தம்பதி சமேதராக இறங்கி வருவது இவர்களது மூத்த மகன் சுந்தரேசன், அவரது மனைவி மீனாட்சி.
அதற்கடுத்து ஆதிவிநாயகம்
பூங்கோதை நாச்சியாரின் இரண்டாவது மகன் கதிரேசன் அவரது மனைவி ஆனந்தவள்ளி.
ஆறு பேரும் நேராக பூஜை அறையின் முன்பு வந்து நிற்க கடைசி மருமகளான ஆனந்தவள்ளி பூஜையை முடித்து அனைவருக்கும் ஆரத்தி காட்டும் வேளையில் தான் அவர்களது வாரிசுகள் கீழே இறங்கி வந்தனர்.
சுந்தரேசன் - மீனாட்சி தம்பதியரின் மூத்த புதல்வன் அகில் பிரசாத்..
இரண்டாவது பெண் பிள்ளை
ஆஷ்விதா.
கதிரேசன் - ஆனந்தவள்ளி தம்பதியருக்கு இரண்டும் ஆண் பிள்ளைகள் தான்.
மூத்தவன் - புகழேந்தி
இளையவன் - ஆதவ்..
அகில் தந்தை செய்யும் எக்ஸ்போர்ட் பிசினஸ்ஸைக் கையிலெடுத்து திறம்பட செயலாற்றி கொண்டிருக்கும் ஒரு வளர்ந்துவரும் பிசினஸ்மேன். ஆஷ்விதா லண்டனில் புகழ்பெற்ற கல்லூரியில் தனக்குப் பிடித்த பிஸ்னஸ் மேனேஜ்மென்ட்டை முதலாம் வருடம் படித்துக் கொண்டிருக்கிறாள்.
புகழேந்தி- அவனும் தன் அண்ணன் அகிலின் வழிகாட்டுதலின் படி தன் தந்தையோடு சேர்ந்து தங்களது எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக் நிறுவனத்தை கவனித்துக் கொண்டே, கற்றுக் கொண்டிருக்கிறான்.
ஆதவ் தற்போது தான் கல்லூரி படிப்பை முடிக்க உள்ளான். அந்த வீட்டின் கடைக்குட்டி ஆஷ்விதா தான்.
ஆஷ்விதா லண்டனில் இருப்பதால் மற்ற அனைவரும் பூஜையறையின் முன்பு கூடி இருந்தார்கள். அன்று மீனாட்சியின் பிறந்தநாள் இதற்காகத்தான் வாணி தேவைக்கு அதிகமாகவே சமைத்து வைத்திருந்தாள். அனைவரும் பூஜையை முடித்துக் கொண்டு நேராக உணவு மேஜையில் வந்து அமர்ந்தார்கள்.
அவர்கள் வருவதைக் கண்டவள் வேகவேகமாக அனைவருக்கும் அவரவர் இருக்கையின் முன்பு தட்டை நகர்த்தி அதன் மீது வாழை இலையைப் பரப்பி வைத்தவள் சமைத்த உணவுகளை பரிமாற ஆரம்பித்தாள்.
அவர்கள் அனைவரும் டேபிளை நெருங்குவதற்குளாகவே பரிமாறி முடித்தவள் சமையல் அறைக்குள் சென்று மறைய முயன்ற வேளையில், “நில்லுடி..” என்ற மீனாட்சியின் குரல் கேட்டு அப்படியே நின்றாள்.
“இங்கே வாடி” என்று மீண்டும் அதிகாரமாய் ஒலித்தது மீனாட்சியின் குரல்.. மதுரையை ஆட்சி செய்யும் மீனாட்சி சாந்த சொரூபி என்றால், இந்த மீனாட்சி அடிக்கடி கோபத்தில் பத்திரகாளி அவதாரம் எடுப்பவர்.
அவரது குரல் கேட்டு பொங்கி வந்த பயத்தை தனக்குள் அடக்கிக் கொண்டவள் தலை நிமிராது இரண்டு அடி எடுத்து வைத்து அவர் அருகில் வந்து நின்றாள்.
“யாரைக் கேட்டுடி நீ இவ்வளவு சமைச்ச?” என்றாள் மீனாட்சி அதிகாரமாய்..
அதற்கு அவளோ மெலிதான குரலில், ”இன்னைக்கு உங்க பிறந்த நாள் அம்மா அதனாலதான்” என்ற வார்த்தைகளை முழுதாக முடிக்கும் முன்பே அவளது கன்னத்தில் அறை விழுந்திருந்தது. அதை அங்கிருந்த யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை.
அப்போதும் அடியை வாங்கிக் கொண்டு நிமிர்ந்து பார்க்காமல் தான் நின்று கொண்டிருந்தாள் வாணி. கண்களில் கண்ணீர் துளிர் விட்டிருந்தது.
“இதெல்லாம் யாரு உங்க அப்பன் சம்பாதிச்சுக் குடுத்ததுன்னு நெனச்சிட்டு இருக்கியா? உன் இஸ்டத்துக்கு கண்டதையும் சமைக்கிறதுக்கு. எப்பவும் யார் என்ன சாப்பிடுவாங்களோ, அதையே நீ சமைக்க வேண்டியது தானே. நீ ஒரு வேலைக்காரி, வேலைக்காரியா தான் இருக்கணுமே தவிர இந்த வீட்டுக்கு எஜமானியாக நினைச்சா இப்படி தான் அவமானப்பட வேண்டி வரும்.. ” என்று சொன்னவள் அகிலின்,
“மாம் எனக்கு லேட் ஆகுது” என்ற குரலில்..
“இதோ வந்துட்டேன் கண்ணா..” என்று அன்பொழுக பேசியவாறு தன் இருக்கையில் சென்று அமர்ந்து அவள் பரிமாறி வைத்த உணவை உண்ண ஆரம்பித்தார். அவர் ஒருப்பிடி உணவை எடுத்து வாயில் வைத்து மறுகணம் மற்றவர்களும் உண்ண ஆரம்பித்தார்கள்.
அழுது கொண்டே சமையலறைக்குள் நுழைந்த வாணிக்கு எப்போதும் கிடைக்கும் அதே ஏமாற்றம்..
மனம் முழுமையாக ஏமாந்த வேதனையில் வலித்தது. தன்னைத் தவிக்க விட்டு விட்டு சென்ற பெற்றோர்களை எண்ணி மனம் ஊமையாய் அழுதது. அவர்களோடவே தன்னையும் கூட்டிக் கொண்டு சென்றிருந்தால் தனக்கு இத்தனை இன்னல்களும், வேதனைகளும், வலிகளும் வந்திருக்காதே என்றவள் தினமும் நினைக்காத நிமிடங்கள் கிடையாது.
இப்பவும் அதையே நினைத்தவளுக்கு கண்ணைக் கரித்துக்கொண்டு வந்தது.. ஆனால் அவளுக்கு அந்த குடுப்பினைக் கூட இல்லை. சுதந்திரமாக அழக்கூட முடியவில்லை. அடுத்து அதிகாரமாய் அழைத்தான் அகில்,“ஏய் இதை வந்து எடுத்துட்டு போ” என்று சொல்லி சாப்பிட்ட தட்டிலேயே கையைக் கழுவி விட்டு, அவன் கையை துடைத்தவாறு எழுந்து சென்று விட. இவளோ எதுவும் பேசாமல் இலையை டஸ்ட்பின்னில் போட்டு விட்டு தட்டைக் கொண்டு வந்து பாத்திரம் சுத்தம் செய்யும் இடத்தில் வைத்து விட்டு மதிய சமையலுக்கான வேலையை ஆரம்பித்தாள்.
அனைவரும் உணவருந்தி முடித்து விட்டு ஹாலில் அமர்ந்திருக்க தயக்கத்துடன் ஆரம்பித்தார் பூங்கோதை..
“அம்மா மீனாட்சி இந்த வாணி பனிரெண்டாவது முடிச்சிட்டா ஏதாவது காலேஜ்ல சேர்த்து விடலாமா?” என்று கேட்க.
சட்டென்று நிமிர்ந்து தன் மாமியாரை முறைத்தவள்,
“என்ன அத்தை மறந்துட்டீங்களா? அவ அப்பன் யாரு, இவ யாரு எதுக்கு இங்க வந்துருக்கான்னு தெரிஞ்சும் அவளை காலேஜ் படிக்க வைக்கணும்னு சொல்றீங்க. போதும் போதும் ஒரு வீட்டுக்கு வேலைக்காரியா போறதுக்கு அவளுக்கு இந்தப் படிப்பு போதும்” என்றார் சுள்ளென்று.
அதைக் கேட்டு ஒரு நிமிடம் ஒரே ஒரு நிமிடம் முகம் சுருக்கிய சுந்தரேசன் மெதுவாக வாயை திறந்தார். “என்னமா இது ஆயிரம் இருந்தாலும் அவ உன்னோட அண்ணன் பொண்ணு இல்லையா? அவகிட்ட ஏன் இப்படி நடந்துக்குற. அவங்க அப்பா செஞ்ச தப்புக்கு இவ என்ன பண்ணுவா? பாவம் மா சின்ன பொண்ணு” என்றார்.
“அவங்கப்பா செஞ்சதை நான் ஆயுசுக்கும் மறக்க மாட்டேன் மாமா.எதுவும் இவளோட தப்பு கிடையாது தான். ஆனா அவருக்கு பொண்ணா பொறந்துட்டாளே அதான் அவ செஞ்ச தப்பு. அன்னைக்கு உங்களுக்கு உடம்பு சரியில்லன்னு உதவி கேட்க போனதுக்கு, அவர் சொன்ன வார்த்தைகளை என்னால எப்பவுமே மறக்கவே முடியாது மாமா. அவரை மட்டுமில்ல அவரைச் சேர்ந்த யாரையுமே நான் மன்னிக்க மாட்டேன். அப்ப என்ன காரணத்துக்காக இவளை இங்க கூட்டிட்டு வந்தேன்னு நினைக்கிறீங்களா, கண்டிப்பா அவளை நல்லபடியா பாத்துக்கணும்னு மட்டும் நினைச்சு கூட்டிட்டு வரக் கிடையாது.சம்பளம் இல்லாத வேலைக்காரியா இருக்குறதுக்கு மட்டும் தான் அவளை இங்க கூட்டிட்டு வந்தேன்..
சாகும்போது கூட அவர் செஞ்ச தப்பை உணரலை. என்ன சொல்லிட்டு இறந்து போனாரு தெரியுமா?எனக்கு கடன் நிறைய இருக்கு, சொத்தை வித்து கடனையெல்லாம் கட்டிடு. ஆனா கடைசி வரைக்கும் என் பொண்ண மட்டும் கைவிட்டுடாதமா. உனக்கு நான் செஞ்சதுக்கெல்லாம் நன்றிக்கடனா இதை மட்டும் செய்யின்னு சொல்லிட்டு அவர் செத்துப் போனார். அவர் செஞ்சது நல்லது கிடையாது எனக்கு கெட்டது தான் செஞ்சிருக்காரு. அதான் அதோட பலனை மகளுக்குக் குடுக்குறேன். அவரை பழிவாங்க முடியாது அதான் இவளை கொடுமை பண்றேன். அப்பா செஞ்ச தப்புக்கு மக தண்டனை அனுபவிக்கட்டும். இதைப்பத்தி இனிமே யாரும் பேசாதீங்க. இந்த வீட்டுல நான் யாரையும் மரியாதை குறைவாக நடத்துனது கிடையாது.இந்த விஷயத்துல மட்டும் நீங்க என்னை எதுவும் சொல்லக்கூடாதுன்னு இவளைக் கூட்டிட்டு வந்த அன்னைக்கே சொல்லியிருந்தேன். அதை விட்டுட்டு மறுபடியும் எதுக்கு இந்த பேச்சை எடுக்குறீங்க? அன்னைக்கு சொன்னதை தான் இப்பவும் சொல்றேன் புருஞ்சுக்கங்க” என்றவர் அங்கிருந்து நகர்ந்து உள்ளே சென்றவர் அலுவலகம் செல்ல தயாராகி வந்தார்..
ஆம் சுந்தரேசன். மீனாட்சி இருவரும் அலுவலகத்திற்கும் செல்வார்கள். தற்போது அலுவலத்தில் இருப்பவர்களுக்கு எல்லாம் தன் பிறந்தநாளை முன்னிட்டு புது உடையும், ஒரு மாத சம்பளத்தை போனசாகவும் வழங்க ஏற்பாடு செய்து இருந்ததால் தற்போது கணவரோடு கிளம்புகிறார்.
தங்கள் தொழிற்சாலையில் வேலை செய்பவர்களுக்கு உடையும், பணமும் வழங்க நினைக்கும் மீனாட்சியின் மனதிற்கு சொந்த அண்ணன் மகளுக்கு ஒரு உடை வாங்கி கொடுக்க வேண்டும் என்று தோன்றவில்லை. கிழிந்து போன பழைய உடைகள் தான் அவளுக்கு எப்போதுமே புது ஆடைகள். இதோ இப்போது கூட நைந்து, வெளுத்துப்போன சுடிதார் ஒன்றைத் தான் போட்டிருக்கிறாள்.
மீனாட்சி வேறு எந்த விஷயத்திலும் இந்த அளவுக்கு பிடிவாதம் பிடிப்பது கிடையாது. 'அவள் தன் அண்ணன் மகள். தான் பட்ட கஷ்டத்திற்கும், அவமானத்திற்கும் அவளை எப்படி நடத்த வேண்டுமென்று விரும்புகிறேனோ அப்படித்தான் நடத்துவேன். நீங்கள் யாரும் என்னைக் கேள்வி கேட்க கூடாது. மீறி கேட்டால் நான் உயிருடன் இருக்க மாட்டேன்’ என்று மூன்று மாதங்களுக்கு முன்பு வாணியை இங்கு அழைத்து வரும்போது சொல்லி இருந்த காரணத்தினால் இதுவரை யாரும் மீனாட்சியை இந்த விஷியத்தில் எதிர்த்து பேசியது கிடையாது.
ஏனோ, இப்போது இவர்கள் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள். அதற்கு முன்பு இவர்களும் மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்தவர்களாகத் தான் இருந்தார்கள். அகில், புகழேந்தி இருவரும் கல்லூரி படிக்கும் போது மிகவும் வறுமையான சூழல் தான். அப்போதெல்லாம் உதவி செய்யாத மாமன் மீது அகிலுக்குமே கோபம் இருந்தது. அதனால் தான் அந்த கோபம் அப்படியே அவர்களின் மகள் மீதும் பிரதிபலிக்கிறது.
பெரிதாக அவளிடம் மற்றவர்கள் யாரும் பேசமாட்டார்கள். பெரியவர்கள் கூட ஓரிரு வார்த்தைகளில் முடித்துக் கொள்வார்கள். ஆதவ் மட்டும் தான் அவளிடம் சற்று கலகலப்பாக பேசுவான்.
அனைவரும் அங்கிருந்து நகர்ந்து சென்றதும் மதிய உணவினை சமைத்து முடித்து விட்டு பின்புறம் இருக்கும் தன் அறைக்கு செல்லலாம் என்று அவள் நகர முயன்ற வேளையில் அவள் முன்னால் வந்து நின்றான் ஆதவ்.
என்ன என்று புருவம் உயர்த்தி கேட்டவளிடம், ”இந்தா..” என்று ஒரு கவரை நீட்டினான் ஆதவ்.
“என்னது இது?“ என்று அவள் கேட்டதும், சுற்றியும் முற்றியும் யாராவது இருக்கிறார்களா என்று விழியால் அலசி ஆராய்ந்து பார்த்தவன் யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு, “உனக்காக ஒரு சுடிதார் கொண்டு வந்துருக்கேன் போட்டுக்கோ” என்றான்.
“எனக்கா? ஏது? முதலாளியம்மா குடுத்தாங்களா?”என்று ஆர்வம் மின்ன ஒருவித எதிர்பார்ப்போடு அவள் கேட்க.
அவனோ இல்லை என்று தலையை அசைத்தவாறு,
“என்னோட பாக்கெட் மணியில இருந்து மிச்சம் புடிச்சு சேர்த்து வச்சு உனக்காக வாங்கிட்டு வந்தேன். நானும் நீ எங்க வீட்டுக்கு வந்த மூனு மாசமா பார்க்குறேன். நீட்டாவே டிரஸ் பண்ண மாட்டேங்குற. ஏன்னு தெரியாம தலையை பிச்சுக்கிட்டேன்.கொஞ்ச நாள் முன்னாடி தான் தெரியும், பெரியம்மா தான் உன்னை வேற டிரஸ் போட விடமாட்டேங்குறாங்கன்னு. அவங்க உன்னை இப்படி நடத்துறது எனக்கு பிடிக்கல வாணி.. உனக்கும் ஆஷ்விக்கும் ஒரே ஏஜ் தான். அவ லண்டன் போய் காலேஜ் படிக்கிறா, ஆனா நீ இப்படி இருக்க. அதைப் பார்த்தா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. நீ இதைப் போட்டுக்க, ப்ளீஸ் எனக்காக போட்டுக்க வேண்டாம்னு மட்டும் சொல்லிடாத” என்றான் கெஞ்சலாய்.
வேண்டாம் என்று சொல்ல வாய் எடுத்தவள் அவன் பாவனையில்,
“சரி வாங்கிக்கிறேன்.. தேங்க்ஸ்" என்று சொல்லி விட்டு அதைக் வாங்கிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்து சென்றாள். மீண்டும் தன் அறைக்குச் சென்றவள் உடையை வைத்து விட்டு கிணற்றடிக்கு வந்தாள். பின்புறத்திற்கு யாரும் அவ்வளவாக வருவது கிடையாது என்பதால் அவள் விருப்பம் போல் மலர் செடிகளை வளர்க்கிறாள். வளர்க்கிறாளே ஒழிய அவள் பூ வைப்பதற்கு அனுமதி கிடையாது. கிணற்றில் இருந்து நீரை இறைத்து அங்கு இருந்த குளியலறையில் குளித்து முடித்து தன்னறைக்கு வந்து அந்த புது உடையை வெகு மாதங்களுக்கு அணிந்து கொண்டாள். ஈரக்கூந்தலை துவட்டி தளர்வாகப் பின்னியவள் வாங்கி வைத்திருந்த ரவையை வைத்து உப்புமா செய்தாள்.அதை ஒரு டிபன் பாக்ஸில் அடைத்துக் கொண்டு கோவிலுக்கு செல்ல தயாரானாள்.
மற்றவர்கள் அனைவருக்கும் அவரவர் அறையிலேயே குளியலறை, கழிவறை உள்ளது. ஆனால் இவள் இங்கிருந்த கிணற்றில் தண்ணீர் இறைத்து தான் பயன்படுத்த வேண்டும். பின்புறமிருக்கும் கழிவறையைத் தான் பயன்படுத்த வேண்டும், அங்கிருக்கும் குளியலறையைத் தான் பயன்படுத்த வேண்டும். ஏன் உணவு கூட அவளே தனியாகத் தான் சமைத்து உண்ண வேண்டும். அந்த வீட்டுக்குள் சமைக்கும் உணவை சாப்பிட மட்டுமல்ல, உப்பு, காரம் கூட பார்க்கக் கூடாது என்பது மீனாட்சியின் கட்டளை. ஏனோ வாணி இதுவரை அங்கிருக்கும் யாரையும் எதற்காகவும் எதுர்த்து பேசியதில்லை. மீனாட்சி எது சொன்னாலும் கேட்டுக்கொள்வாள். காரணம் என்ன என்பதை அவள் மட்டுமே அறிவாள்..
தனக்கு இருக்கும் ஒரே சொந்தம் தன் அத்தையும்,அத்தை குடும்பமும் தான் அவர்கள் நன்றாக இருக்கவேண்டும் என்று வேண்டுவதற்காகத் தான் இப்போது கோவிலுக்கு செல்கிறாள். அங்கு தன் வாழ்வை புரட்டிப் போடப் போகும் சம்பவம் நிகழப் போவதை அறியாமல் வீட்டில் இருந்து பறித்த மலர்களை எடுத்துக் கொண்டு நடந்தே கோவிலுக்கு சென்றாள் மதுர வாணி.
மணம் பரப்பும் மலர்களை சூடிடக்கூட மங்கையவளுக்கு அனுமதியில்லையாம்..
ஆனால் விதி செய்த சதியினால்
சிகையை அலங்கரிக்க வேண்டிய மலர்கள் அவள்
குறுங்கழுத்தை அலங்கரிக்க....
மாலை சூட்டிய கரங்களே
பேதையிவளின் மார்பில் உயிருள்ள வரை தவழும் உன்னதப் பொருளையும் உரிமையுடன் சூட்டிடுதே..!
- தேடல் தொடரும்....
கருத்துத்திரி
www.sahaptham.com

உயிரான உறவை தேடி - Comments
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏, வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை...