Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


எவனோ என் அகம் தொட்டுவிட்டான்

Nirmala Krishnan

Saha Writer
Messages
76
Reaction score
13
Points
6
அத்தியாயம் 29 :



"ஹே....!நித்தி....!வா.....வா.....!",வார விடுமுறையை தன் வீட்டில் கழிப்பதற்காக வந்த தங்கையை ஆரவாரத்துடன் வரவேற்றாள் தீபிகா.



"ஹாய் அக்கா.....!",பாசத்துடன் தனது அக்காவை அணைத்துக் கொண்டாள் நித்திலா.



சத்தம் கேட்டு வெளியே வந்த தீபிகாவின் மாமியாரும் மாமனாரும் நித்திலாவைப் பார்த்தவுடன்.....தங்கள் பங்கிற்கு அவளை வரவேற்றனர்.



"அடடே.....!நித்தி.....!வாடா ம்மா.....!ஒருவழியா உன் அக்கா வீட்டுக்கு வர்றதுக்கு உனக்கு நேரம் கிடைச்சிருச்சா......?",வாஞ்சையுடன் அவள் கன்னத்தை தடவியபடி ராஜாத்தி கேட்க,



"எங்கேங்க அத்தை......லீவ் கிடைச்சா வந்திட மாட்டேனா.....?ஒரு வாரம் விட்டு ஒரு வாரம்தான் லீவே கிடைக்குது.....!அதுவும் இரண்டு நாள்தான் கிடைக்குது.....!அதிலேயும் வந்துட்டு திரும்பி போறதுலேயே ஒரு நாள் ஓடிப் போயிருது.....!இதுல நான் எங்கே வந்து....அக்கா வீட்டை எட்டிப் பார்க்கட்டும்.....?",அவள் சமாதானம் கூறிக் கொண்டிருக்க,



இடையில் புகுந்த ராஜாத்தியின் கணவர்,"சரி....!சரி....!வீட்டுக்கு வந்த புள்ளையை உள்ளே கூட்டிட்டுப் போய் உட்கார வையுங்க.....!இப்படியா வாசலிலேயே நிற்க வைச்சு பேசிட்டு இருப்பீங்க....?நித்தி உள்ளே வாம்மா......!",அவர் ஒரு அதட்டல் போடவும்.....அவளை அழைத்துக் கொண்டு அனைவரும் உள்ளே சென்றனர்.



அவள் உள்ளே நுழைந்ததும்.....பெட் ரூமில் இருந்து வேகமாக ஓடி வந்த அதிதி குட்டி,"த்தி....!",என்றபடி அவள் காலை கட்டிக் கொண்டது.



"அடா.....!என் செல்லக் குட்டி....!வாடி.....உன்னைப் பார்க்கத்தான் சித்தி ஓடி வந்திருக்கேன்.....!",என்றபடியே குழந்தையை வாரி அணைத்துக் கொஞ்ச ஆரம்பித்தாள் நித்திலா.



தன் தங்கை தன் மகளைக் கொஞ்சுவதைக் கனிவுடன் பார்த்துக் கொண்டிருந்த தீபிகா,"நீ வந்துட்டியா.....?இனி இவளை கையில பிடிக்க முடியாது......!'த்தி....!த்தி.....!'ன்னு உன் பின்னாடியே சுத்தப் போகுது......!",செல்லமாக குழந்தையின் தலை முடியை கலைத்து விட்டபடி கூற,



"ம்மா.....!முதிய கதக்காத.....!",'முடியைக் கலைக்காதே....' என்பதைத்தான் தன் மழலை மொழியில் கூறியது.....அவளின் செல்லப் பிள்ளை.



"அது சரிங்க மேடம்.....!நான் கதக்கல.....நீங்க இப்ப சித்தியை விட்டு இறங்கி வாங்க.....!சித்தி போய் ஃபிரெஷ் ஆகிட்டு வரட்டும்.....!",என்றபடி தீபிகா கையை நீட்ட,



அந்தப் பிஞ்சோ இன்னும் இறுக்கமாக தன் சித்தியின் கழுத்தைக் கட்டிக் கொண்டு,"நோ.....!நா வத மாத்தேன்.....!",என்று அடம்பிடித்தது.



குழந்தையின் கிள்ளை மொழியில் மனம் மயங்கிய நித்திலா....சிரித்துக் கொண்டே,"விடுக்கா.....!அவ என்கூடவே இருக்கட்டும்.....!நீ என் பையை மட்டும் பெட் ரூம்ல வைச்சிடு.....!",குழந்தையைக் கொஞ்சிக் கொண்டே அங்கிருந்த விருந்தினர் அறைக்குள் சென்று விட்டாள் நித்திலா.அவள் எப்பொழுது அங்கே வந்தாலும்.....அந்த அறையில்தான் தங்குவாள்.



குழந்தையுடன் விளையாடியபடியே.....அவள் ஃபிரெஷ்ஷாகி வெளிவரும் போது.....அவள் கையில் சில்லென்று ஆப்பிள் ஜுஸ் திணிக்கப்பட்டது.



"அக்கான்னா அக்காதான்.....!வெயில்ல அலைஞ்சு தொண்டை வறண்டு போய் வந்தேன்.....!கொடு.....!கொடு.....!",ஆவலுடன் அதை வாங்கிக் கொண்டாள்.



அதன் பிறகு.....குழந்தைக்காக வாங்கி வந்த விளையாட்டு சாமான்களை கடை பரப்பி.....குழந்தைக்கு விளையாட்டு காட்ட ஆரம்பிக்க.....தங்கை வந்திருக்கிறாள் என்று மதிய உணவை தடபுடலாக சமைத்துக் கொண்டிருந்தாள் தீபிகா.வெகு நாட்களுக்குப் பிறகு வீட்டுச் சாப்பாட்டை ரசித்து ருசித்து உண்டாள் நித்திலா.



மதிய உணவிற்கு பிறகு......அறையில் ஓய்வாக படுத்தபடி சகோதிரிகள் இருவரும் கதை பேசிக் கொண்டிருந்தனர்.அதிதி குட்டி அருகிலிருந்த தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தது.



நித்திலாவிடம் பேசிக் கொண்டிருந்தாலும்.....தீபிகாவின் கவனம் முழுவதும் கடிகாரத்தின் மீதே இருந்தது.மாலை ஐந்து ஆகவும்.....பரபரப்பாக எழுந்தவள்,"ஒகே நித்தி......!நீ ரெஸ்ட் எடு.....!நான் போய் முகம் கழுவணும்.....!உன் மாமா வந்திடுவார்....!",கூறியபடியே வெளியே செல்லப் போனாள்.



அவளை இழுத்துப் பிடித்தவள்,"மாமா வர்றதுக்கு.....நீ முகம் கழுவுவதற்கும் என்ன சம்பந்தம்.....?",என்றாள் புரியாமல்.



அவளது கேள்வியில் முகம் சிவக்கத் தடுமாறியவள்,"அடியே.....!உன் மாமா வரும் போது முகம் கழுவி ஃபிரெஷ்ஷா வரவேற்க வேண்டாமா......?இப்படியா தூங்கி வழியற முகத்தோட போய் நிற்பாங்க.....?",என்று மெல்லிய குரலில் உரைக்க,



அப்பொழுதும் அவள் புரியாமல் விழித்தபடி,"ஏன்.....?போய் நின்னா என்ன....?",என்று கேட்டு வைக்க,



அவளை கொலைவெறியோடு பார்த்த தீபிகா,"அடியே மக்கு.....!நாளைக்கு உனக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்புறம்.....உன் புருஷன் ஆபிஸ்ல இருந்து வரும் போது.....இப்படி தூங்கி வழிஞ்ச முகத்தோட போய் நில்லு.....!ஏன் அப்படி நிற்க கூடாதுங்கற காரணத்தை உன் புருஷன் அப்போ சொல்லுவாரு......!",என்றபடி அவள் வெளியேறி விட்டாள்.



தீபிகா கூறிச் சென்றதும் நித்திலாவின் மனதில் ஒரு கனவு எழுந்தது.அந்தக் கனவில் அவள் கல்யாணத்திற்குப் பிறகு.....ஒரு மாலை நேரம்.....தலைவாரி பூ வைத்து அழகாக அலங்கரித்துக் கொண்டு இருக்கிறாள்.அப்பொழுது அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய அவளுடைய கணவன் வீட்டு காலிங் பெல் அடிக்கிறான்.முக மலர்ச்சியுடன் இவள் சென்று கதவைத் திறக்கிறாள்.என்ன அதிசயம்.....!கதவுக்கு அந்தப் பக்கம் அவளுடைய கணவனாக ஆதித்யன் நிற்கிறான்....!இவளைக் கண்டதும்....காதல் கணவனாக கட்டி அணைத்து முத்தமிடவும் செய்கிறான்.....!



சட்டென்று தன் கனவு கலைந்து நனவுலகிற்கு வந்தவள்....ஓங்கித் தன் தலையில் கொட்டிக் கொண்டாள்.



'நித்தி.....!எருமை மாடே.....!வர வர உன் யோசனையே சரியில்ல.....!புருஷன்னு சொன்னவுடனே உனக்கு எதுக்கு ஆதித்யன் முகம் ஞாபகம் வரணும்.....?நீயே ரெண்டு நாள் லீவை அக்கா வீட்ல ஸ்பெண்ட் பண்ணலாம்ன்னு வந்திருக்கே.....!அதிதி குட்டியோட விளையாண்டோமா.....?அக்கா கூட கதையளந்தோமான்னு ஜாலியா இல்லாம....அவனைப் பத்தி எதுக்கு யோசிச்சிக்கிட்டு இருக்க....?அவன் நினைப்பை முதல்ல மூட்டை கட்டி வை.....!",தன்னைத் தானே திட்டிக் கொண்டாள் அவள்.



'அவ்வளவு ஈஸியா அவனுடைய நினைவை மூட்டை கட்டி வைச்சிருவியா.....?அவ்வளவு எளிதாக மறக்கக் கூடிய முகமா....ஆதித்யனுடைய முகம்.....?',என்று அவளுடைய மனசாட்சி வரிந்து கட்டிக் கொண்டு வர.....'நீ முதல்ல மூடிட்டு போ.....!',என்று அவளுடைய மனசாட்சியை ஓங்கித் தட்டி அடக்கியவள்.....அவனுடைய நினைவிலிருந்து அப்போதைக்கு தற்காலிகமாக மீண்டு வந்தாள்.



ஆனால்....அந்த விடுதலைக்கு ஆயுள் சிறிது நேரமே என்பதை அவள் அறியவில்லை.அந்த வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் அவனை ஏதாவது ஒரு விதத்தில் அவளுக்கு ஞாபகப்படுத்தினர்.போதாக்குறைக்கு.....அவளுடைய அக்கா மற்றும் மாமாவின் அன்பு பிணைப்பைக் காணும் போதெல்லாம்.....அவளின் அனுமதி இல்லாமலேயே.....ஆதித்யன் அவளுடைய மனதில் வந்து உட்கார்ந்து கொண்டு....குறும்பாக கண் சிமிட்டினான்.



மாலை....கல்லூரியில் இருந்து வீடு திரும்பிய கேசவனை....முகம் முழுவதும் புன்னகையுடனும்.....கண்களில் வழிந்த காதலுடனும் எதிர் கொண்டாள் அவனுடைய மனையாள் தீபிகா.அவனும் அவளுக்கு சளைக்காத காதல் பார்வையைப் பார்த்துக் கொண்டேதான் உள்ளே நுழைந்தான்.



நித்திலாவைப் பார்த்ததும்,"வா நித்தி.....!எப்படி இருக்க....?",என்று அக்கறையுடன் விசாரித்தான்.



"ம்.....நல்லாயிருக்கேன் மாமா.....!",



"பஸ் ஸ்டாண்ட்ல வந்து இறங்கினதுக்கு அப்புறம் போன் பண்ணியிருக்கலாமே.....?நான் வந்து கூட்டிட்டு வந்திருப்பேன்.....!",



"இல்ல மாமா.....!ஆட்டோவில வந்துட்டேன்.....!அவ்வளவு ஒண்ணும் சிரமம் இல்ல.....!",



"ஒகே ம்மா.....!நான் போய் ஃபிரெஷ் ஆகிட்டு வந்திடறேன்.....!",என்றபடி அவன் அறைக்குள் சென்று விட....தீபிகாவும் அவளைப் பின் தொடர்ந்தாள்.



மாலை டிஃபனாக சுடச் சுட போண்டாவும் காபியும் தயாராகி இருந்தது.அனைவரும் கலகலப்பாக பேசியபடி சாப்பிட்டுக் கொண்டிருக்க.....ராஜாத்தி நித்திலாவைப் பார்த்து,"ஆபிஸ் எல்லாம் எப்படி போகுது ம்மா.....?ஆதித்யன் எப்படி.....உன்கூட நல்லா பழகுறான்னா.....?",தன் விசாரணையை ஆரம்பிக்க.....'ஆதித்யன்' என்ற பெயரைக் கேட்டவுடன்....சாப்பிட்டுக் கொண்டிருந்த போண்டா புரையேறியது நித்திலாவிற்கு.



"ம்....பார்த்து டி.....!",இருமிக் கொண்டிருந்தவளின் தலையைத் தட்டியபடி குடிப்பதற்கு தண்ணீர் கொடுத்தாள் தீபிகா.



அவள் தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும் போதே,"என்ன நித்தி......!ஆதி பெயர் சொன்ன உடனே...உனக்கு இப்படி புரையேறுது.....?அந்த அளவுக்கு உன்னை மிரட்டி வைச்சிருக்கானா......?",விளையாட்டாய் கேசவன் கேட்டு வைக்க.....அவளுக்கு மேலும் புரையேறியது.



"அவன் பண்ணினாலும் பண்ணுவான்......!சரியான கோபக்காரன்......!",ராஜாத்தி செல்லமாக ஆதித்யனைக் கடிந்து பேச,



"ஆமாம் ம்மா.....!பிடிவாதம் கொஞ்சம் அதிகம்தான்.....!",கேசவனும் அதை ஆமோதிக்க,



'கொஞ்சமென்ன....கொஞ்சம்....ரொம்பவுமே பிடிவாதம் அதிகம்தான்.....!',வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டாள் நித்திலா.



"ஏன் நித்தி.....எதுவுமே பேச மாட்டேங்கிற.....?வேலையெல்லாம் எப்படி.....?அண்ட்....உன் ஹாஸ்டல் லைஃ ப் எப்படி போகுது......?",கேசவன் மீண்டும் ஆரம்பிக்க,



"ம்....அதெல்லாம் நல்லாத்தான் இருக்குது மாமா.....!ஹாஸ்டல் லைஃ ப் பத்தி சொல்லவே வேண்டாம்......!பிரெண்ட்ஸ் கூட ஜாலியா போகுது.....!",



"ஹ்ம்ம்....குட்.....!",



அதற்குள் ராஜாத்தி,"அந்த ஊர்ல போய் தனியா இருக்கற.....பார்த்து பத்திரமா இருக்கணும்.....!ஏதாவது பிரச்சனைன்னா உடனே ஆதித்யன் கிட்ட சொல்லிடு......!எந்தப் பிரச்சனையா இருந்தாலும் அவன் பார்த்துக்குவான்.....!",பெரியவராய் அவர் அறிவுரை கூற,



'ம்க்கும்.....!பிரச்சனைக்கு முழுக்காரணமே அவன்தான்.....!இதுல....அவன்கிட்ட போய் சொல்லிட்டாலும்.....',மனதிற்குள் நொடித்துக் கொண்டவள்.....வெளியே,"ம்.....சரிங்க அத்தை.....!",என்று பதவிசாக தலையாட்டி வைத்தாள்.



இரவு உணவின் போதும்.....பேச்சு அங்கு சுற்றி....இங்கு சுற்றி கடைசியில் நித்திலாவின் திருமணப் பேச்சில் வந்து நின்றது.



"இனி நம்ம குடும்பத்துல நடக்கப் போகிற அடுத்த கல்யாணமா.....நித்தியுடைய கல்யாணம்தான் இருக்கப் போகுது.....!",ராஜாத்தி ஆரம்பிக்க,



"ஆமா நித்தி.....!அதனால இப்பவே நல்லா என்ஜாய் பண்ணிக்க......!கல்யாணத்துக்குப் பிறகு குழந்தை.....குடும்பம்ன்னு ஒரு வலைக்குள்ள மாட்டிக்குவ.....!",விளையாட்டாய் தீபிகா சொல்ல,



அவளை நிமிர்ந்து பார்த்த கேசவனின் பார்வையில்,'நீ அப்படிப்பட்ட வலைக்குள்ள மாட்டிக்கிட்டாத நினைக்கிறயா.....',என்ற கேள்வி இருந்தது.



அதை கவனித்தவள் நித்திலாவிடம்,"ஆனாலும்.....அது ஒரு சுகமான வலை நித்தி.....!அதுல விரும்பி மாட்டிக்கணும்னுதான் நாம நினைப்போம்.....!அதுல இருந்து வெளிவரவே உனக்கு மனசு வராது.....!",இதைச் சொல்லும் போதே.....அவளுடைய கண்கள்....அவளுடைய கணவனைக் காதலாகப் பார்த்திருந்தன....!



அங்கு வீடியோ....கேமரா என்று ஒன்றும் இல்லாமலேயே ஒரு ரொமான்ஸ் சீன் ஓடிக் கொண்டிருக்க.....நமட்டுச் சிரிப்புடன் அவர்கள் இருவரையும் பார்த்த நித்திலா,"ம்க்கும்.....!நாங்க எல்லோரும் இங்கேதான் இருக்கோம்.....!அக்கா....என் தட்டுல ஒரு இட்லியைப் போட்டுட்டு....நீ அங்க கன்டினியூ பண்ணு.....!",என்று கிண்டலடிக்க,



"ஏய்.....வாலு.....!",என்றபடி தீபிகா அவள் காதைத் திருக,



கேசவனோ,"நித்தி......!உனக்கும் கல்யாணமாகி புருஷன்னு ஒருத்தன் வருவான்......!அவன் கூட நீ இந்த ரொமான்ஸ் சீன் எல்லாம் நடத்துவியல்ல......அப்ப வைச்சிக்கிறேன் உன்னை.....!",போலியாக மிரட்டினான் அவன்.



"அதெல்லாம் புருஷன்னு ஒருத்தன் வர்றப்ப பார்க்கலாம் மாமா.....!",அசால்ட்டாகக் கூறியவளின் மனத்தில்.....என்னதான் தடுக்க முயன்றாலும்.....கல்யாணம்....வருங்காலக் கணவன் என்று பேச்சு வரும் போதெல்லாம்......மனதில் ஆதித்யனின் முகம் மின்னி மறைவதை அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை.



இரவு உணவை முடித்து விட்டு.....ராஜாத்தியும் அவர் கணவரும் படுக்கச் சென்று விட.....தீபிகா டைனிங் டேபிளில் இருந்த சாமான்களை ஒதுக்கி வைத்துக் கொண்டிருந்தாள்.அவளுக்கு உதவி செய்து கொண்டிருந்த நித்திலாவிடம்,"நித்தி.....!இதையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.....!நீ போய் பாப்பாவை தூங்க வை....!அதுவே எனக்கு ஒரு பெரிய ஹெல்ப் தான்.....!",என்று கூறியபடியே அவள் கையிலிருந்த பாத்திரத்தைப் பிடுங்கினாள்.



"அவ என்கிட்ட தூங்குவாளா.....?",



"அதெல்லாம் தூங்குவா.....!கதை சொல்லி தட்டிக் கொடு......!தூங்கிடுவா.....!",என்று கூற....'சரி...' என்றபடி அதிதி குட்டியிடம் சென்றாள் நித்திலா.



அதுவோ.....தரையில் குவிந்து கிடந்த விளையாட்டுப் பொருட்களின் நடுவில் அமர்ந்தபடி......ஒவ்வொரு பொருளாகத் தூக்கிப் போட்டு கிளுக்கிச் சிரித்துக் கொண்டிருந்தது.



"என் தங்கக் கட்டி.....!இன்னைக்கு பாப்பாவை சித்தி தூங்க வைப்பேனாம்......!சமர்த்துக் குட்டியா பாப்பா தூங்குவாங்களாம்.....!",கொஞ்சியபடியே அவள் தங்கியிருக்கும் அறைக்கு எடுத்துச் சென்றாள்.



"தைனோசர் கத வேணும் த்தி.....!",தன் குட்டிக் கண்களை விரித்துக் கூறிய மகளை தன் மார்போடு அணைத்துக் கொண்டவள்.....குழந்தையின் காதோரமாக கதை சொல்லியபடி தட்டிக் கொடுத்து தூங்க வைத்தாள்.



அரைமணி நேரமாகியும் தீபிகா வராததால்.....'என்னவென்று பார்க்கலாம்.....!',என்று எண்ணி சமையறைக்குச் சென்றாள்.



அங்கு....அவள் பாத்திரங்களை துலக்கிக் கொண்டிருக்க.....அவள் கணவனோ....அவள் பின்னாலிருந்து அணைத்தபடி.....அவள் தோள் பட்டையில் முகம் புதைத்து.....அவள் காதோரமாக ஏதோ பேசிக் கொண்டிருந்தான்.



"ஹே.....என்னடி....?இன்னும் வேலை செய்திட்டு இருக்க.....?சீக்கிரம் ரூமுக்கு வா.....!",என்று கிசுகிசுக்க,



"ஹலோ பாஸ்.....!வேலை முடிஞ்சாலும் இன்னைக்கு நான் நம்ம ரூமுக்கு வர மாட்டேன்.....!நித்தி கூடத்தான் படுத்துக்கப் போறேன்.....!",என்று பதிலுக்கு கிசுகிசுத்தாள்.



"அடிப்பாவி.....!உன் தங்கச்சி வந்த உடனே.....உன் புருஷனை கழட்டி விட்டுட்டியா.....?",



"கழட்டியெல்லாம் விடலை......!ரெண்டு நாளைக்கு மட்டும் டீல்ல விட்டுட்டேன்.....!என் தங்கச்சியே எப்பவாவது ஒரு நாள்தான் வந்து தங்கறா....ஸோ....நான் அவ கூடத்தான் படுக்கப் போறேன்......!",



"என்னடி இப்படி சொல்ற.....?",



"அதனால இப்ப சமர்த்துப் பிள்ளையா போய் படுத்து தூங்குவீங்களாம்.....!",



"நோ.....முடியாது.....!நீயும் வா.....!",அவன் செல்லம் கொஞ்ச,



"என் செல்லக் குட்டில்ல.....!இன்னைக்கு ஒரு நாள் மட்டும் தனியா படுத்து தூங்குவீங்களாம்......!நாளைக்கு உங்க பொண்டாட்டி உங்களைத் தேடி ஓடி வந்திருவாளாம்.....!",குழந்தையை சமாதானப்படுத்துவது போல் பேசினாள்.



"ஹ்ம்ம்....!நீ இவ்ளோ கெஞ்சறதால ஒகே சொல்றேன்.....!பட்.....இப்போ ரெண்டு நாளைக்கு தாங்கற மாதிரி ஏதாவது கொடுத்தனுப்பு.....!",கணவனாய் அவன் பேரம் பேச ஆரம்பிக்க,



"அதெல்லாம் நாளைக்குத் தர்றேன்.....!இப்ப நீங்க இடத்தைக் காலி பண்ணுங்க.....!யாராவது வந்திடப் போறாங்க....!",துலக்கிக் கொண்டிருந்த பாத்திரங்களைப் போட்டு விட்டு அவனைப் பிடித்து தள்ள,



"அதெல்லாம் யாரும் வர மாட்டாங்க டி.....!",அவளை சமாதானப்படுத்தியவன்....காதல் கணவனாக அவள் முகம் நோக்கி குனிந்தான்.



அதுவரை அவர்களின் உரையாடலை வாஞ்சையுடன் ரசித்துக் கொண்டிருந்த நித்திலா.....அவன் அவளை நெருங்கவும்.....சிரித்தபடி அங்கிருந்து அகன்று விட்டாள்.



படுக்கையில் வந்து விழுந்தவளின் மனம் முழுவதும் ஆதித்யனே வியாபித்திருந்தான்.



'நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் நீயும் இப்படித்தான் என்கிட்ட நடந்துக்குவியா.....?என்னை விட்டுட்டு தனியா தூங்க மாட்டேன்னு அடம் பிடிப்பயா.....?நான் வேலை செய்யும் போது.....பின்னாடி வந்து என்னைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டு குறும்பு பண்ணுவியா.....?',தன் மனதில் தோன்றிய ஆதித்யனைப் பார்த்துக் காதலாக கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாள் நித்திலா.



கண்களை மூடிப் படுத்திருந்தவளின் முன் ஆதித்யன்....ஆதித்யன் மட்டுமே தோன்றினான்.அவளும் மற்ற பெண்களைப் போல்.....கல்யாணம்....வருங்காலக் கணவன்....அதன் பின் வரும் வாழ்க்கை என்று பல கனவுகளைக் கண்டிருக்கிறாள்.என்ன....?இதுநாள் வரை.....கணவன் என்ற இடத்தில் முகம் தெரியாத ஒரு ஆணின் உருவம் இருக்கும்.....!இன்றோ.....கணவன் என்ற அந்த இடத்தில் ஆதித்யன் வந்து கம்பீரமாக நின்று அவளைப் பார்த்து சிரித்தான்.



என்னவோ அவன் நேரில் நின்று அவளைப் பார்த்து சிரிப்பதைப் போல் எண்ணிக் கொண்டு.....மெலிதான புன்னகையை தன் இதழ்களில் தேக்கியபடி,'வசீகரன் டா நீ.....!உன் சிரிப்பிலேயே என்னை வசியம் பண்ணிட்ட......!உன்னைப் பார்க்கும் போதெல்லாம் நான்....நானா இருக்கிறது இல்ல.....!என்ன சொக்குப்பொடி போட்டு என்னை மயக்கினாயோ தெரியல.....!மாயக்கண்ணா.....!',என்று கொஞ்சிக் கொண்டிருந்தாள்.



திடீரென்று அவள் தந்தையின் முகம் அவள் மனதில் தோன்றியது.அதுவரை.....காதலுடன் ஆதித்யன் அமர்ந்திருந்த இடத்தில்......பாசப் பார்வை பார்த்தபடி அவள் தந்தை வந்து அமர்ந்து கொண்டார்.பெற்றவர்களின் மீது பாசம் கொண்ட மனது.....காதல் கொண்ட மனதை தள்ளி விட்டு விட்டு முன்னே வந்தது.



'இது என்ன நித்தி......!இப்படி ஒரு நினைப்பு.....?இது தப்பில்லையா.....?உன்னைப் பெத்தவங்களுக்குத் துரோகம் பண்ணப் போறயா.....?உன் அப்பா உன் மேல வைச்சிருக்க நம்பிக்கையை தூக்கி எறியப் போறயா....?இது நாள் வரைக்கும்.....நீ உன் அப்பா அம்மாகிட்ட எதையுமே மறைச்சதில்ல.....!ஆனால்.....முதல்முதலா ஆதித்யன் விஷயத்தை அவங்ககிட்ட மறைச்சிருக்க......!காதல்ங்கிற பேர்ல உன் அம்மா அப்பாவை உயிரோட கொல்லப் போறயா.....?'



அவள் மனசாட்சி அவள் முன் நின்று கேள்வி கேட்டது.



'இல்ல.....நான் அவங்களுக்குத் துரோகம் பண்ண மாட்டேன்.....!நான் ஊருக்குக் கிளம்பும் போது.....என் பெரியம்மா சொன்ன வார்த்தை இன்னும் என் காதுல ஒலிச்சிட்டேதான் இருக்கு.....!என் அப்பா அம்மாவுக்கு நான் நிச்சயமா அவமானத்தைத் தேடித் தர மாட்டேன்......!ஏதோ வயசுக் கோளாறுல என்னென்னமோ லூசு மாதிரி யோசிச்சிக்கிட்டு இருக்கேன்.....!இது காதலே இல்ல.....!ஜஸ்ட் அட்ராக்ஷன்......!அவ்வளவுதான்.....!இது காதல் இல்ல......!',தனக்குத் தானே திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டாள்.



அவளுடைய இந்த பேத்தலில்......ஆதித்யன் மீது காதல் கொண்ட அவளுடைய மனது உயிர் பெற்று எழுந்தது.அனைத்து தடைகளையும் தகர்த்து எறிந்து விட்டு.....அவள் முன் நின்று கம்பீரமாக கேள்வி கேட்க ஆரம்பித்தது.....!



'எது நித்தி......?ஆதித்யன் மேல நீ வைச்சிருக்கிறதுக்கு பேர் காதல் இல்லையா......?வெறும் ஈர்ப்பு மட்டும்தானா......?',அமைதியாக அவளைப் பார்த்து கேள்வி கேட்டது.



கண்களில் நீர் வழிய.....தடுமாற்றத்துடன் நின்றவளைப் பார்த்து,'நான் கேட்கிற கேள்விக்கு உன் மனசைத் தொட்டு பதில் சொல்லு பார்க்கலாம்......?ஆதித்யனை நீ காதலிக்கவே இல்லையா.....?ஆதித்யன் இல்லாம உன்னால வாழ்ந்திட முடியுமா......?ஆதித்யன் இல்லாம வேறு ஒரு ஆணை உன்னால கல்யாணம் பண்ணிக்க முடியுமா......?கல்யாணம்.....கணவன்னு சொல்லும் போதெல்லாம்.....உன் மனசில ஆதித்யன் முகம் வர்றதுக்கான காரணம் என்ன.....?



இது வெறும் ஈர்ப்பு மட்டும் தான்னு சொல்ற.....?அன்னைக்கு அவன் சாப்பிடாம இருக்கும் போது.....உன் பிடிவாதத்தை விட்டுட்டு அவனை சாப்பிட வைச்சியே......அது எதனால.....?நந்துவுக்கு ஆக்சிடெண்ட் நடந்தப்ப.....அத்தனை பேருக்கும் முன்னாடி.....எதைப் பத்தியும் கவலைப்படாம.....அவன் நெஞ்சில போய் விழுந்தாயே......அதுக்கு என்ன அர்த்தம்......?',ஆதித்யன் மேல் அவள் கொண்ட காதல்.....அவளுக்காக அவளிடமே வாதாடியது.



அப்பொழுதும் அவள்,'ஆனால்.....என் அப்பா.....அவரோட நம்பிக்கை......',என்றபடி முகத்தை மூடிக் கொண்டு கதறி அழ ஆரம்பித்தாள்.



'இன்னும் எவ்வளவு நாள்தான் உன்னை நீயே ஏமாத்திக்க போற.....?நல்லா யோசி நித்திலா......!',அவள் காதல் மனது அறிவுரை வழங்க,



அவளது பாசம் கொண்ட மனதோ.....'இதுல யோசிக்க என்ன இருக்கு நித்தி......!உன் அம்மா அப்பாவை கொஞ்சம் நினைச்சுப் பாரு.....!இதுல இருந்து வெளியே வா....!',என்று அறிவுரை வழங்க.....அவள் இரண்டு மனதிற்கும் இடையில் சிக்கிக் கொண்டு தவிக்க ஆரம்பித்தாள்.



இரண்டு மனதும் மாறி மாறி அவளிடம் வாதாடிக் கொண்டிருக்க.....ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல்.....அவள் கத்தி விட்டாள்.



'அய்யோ.....!கடவுளே.....!என்னை ஏன் இப்படி கொல்ற......?என் ஆது இல்லாம என்னால வாழ முடியாததுதான்......!என் ஆது இல்லாம இன்னொருத்தரை என் கணவனா என்னால நினைச்சு கூடப் பார்க்க முடியாது.....!இது காதல் தான்....!நூறு சதவீதம் இது காதல் தான்.....!என் ஆது மேல நான் வைச்சிருக்கிற காதல் எவ்வளவு உண்மையோ.....அந்தளவுக்கு நான் என் அப்பா அம்மா மேல வைச்சிருக்கிற பாசமும் உண்மையானது.....!இதுல நான் என்ன பண்ணுவேன்.....?என் ஆதுக்காக....என் பெத்தவங்களையோ.....இல்ல அவங்களுக்காக என் ஆதுவையோ என்னால விட முடியாது......!',அவள் கத்த,



'உன்னை யார் விடச் சொன்னது......?',வெகு அமைதியாக கேள்வி கேட்டது அவளுடைய காதல் மனது.



'சொல்லு நித்தி......?உன்னை யார் விடச் சொன்னது......?உன் அம்மா அப்பா சம்மதத்தோட உன் ஆதித்யனை கல்யாணம் பண்ணிக்கோ......!நீ அவன்கிட்ட உன் காதலை மட்டும் சொல்லு போதும்.....!மத்ததெல்லாம் அவனே பார்த்துக்குவான்.....!',



அவள் காதல் மனது எடுத்துக் கூற கூற.....அவள் முகம் யோசனைக்குத் தாவியது.அதற்குள் அவள் அக்கா கதவைத் திறந்து கொண்டு உள்ளே வர.....அவசர அவசரமாகத் தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.



அழுகையில் சிவந்திருந்த நித்திலாவின் முகத்தைப் பார்த்தவள்,"ஏண்டி முகம் ஒரு மாதிரி இருக்கு......?",என்று விசாரிக்க,



"அது.....தூக்கம் வருது.....!அதனாலேயா இருக்கும்.....!",என்று சமாளித்தாள்.



"அப்படின்னா.....படுத்து தூங்க வேண்டியதுதானே......?ஏன் இன்னும் கொட்ட கொட்ட முழிச்சிட்டு இருக்க......?",



"ம்....உனக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.....!",ஏதோ கூற வேண்டும் என்பதற்காக கூறினாள் நித்திலா.



அதன் பிறகு.....தீபிகா ஏதேதோ கதை பேசிக் கொண்டிருக்க.....அவளிடம் 'ம்' கொட்டினாலும்.....அவள் மனம் முழுவதும் ஆதித்யனிடம் தான் இருந்தது.நித்திலாவின் முகத்தைப் பார்த்து.....அவள் தமக்கை என்ன நினைத்தாலோ..."சரி நித்தி.....!நீ படுத்து தூங்கு.....!ரொம்ப டயர்டா தெரியற.....",என்றபடி குழந்தையைத் தூக்கித் தொட்டிலில் போட்டு விட்டு படுத்துக் கொண்டாள் தீபிகா.



கண்கள் மூடியிருந்தாலும் அன்று இரவு ஒரு பொட்டுக் கூட நித்திலா உறங்கவில்லை.ஆதித்யன் மீதான காதலுக்கும்.....பெற்றவர்களின் மீதான பாசத்திற்கும் இடையில் போராடிக் கொண்டு அழுகையில் கரைந்து கொண்டிருந்தாள்.



அவளுடைய மனதில் போராட்டம் ஆரம்பமாகி விட்டது.காதலுக்கும்.....பெற்றவர்களின் பாசத்துக்கும் இடையேயான போராட்டம் அது.....!நிச்சலனமாய் இருந்த அவளுடைய மனதில்.....காதல் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்தி விட்டது....!பாசம் என்னும் மழையில் நனைந்து கொண்டிருப்பவள்.....காதல் என்னும் குடையின் கீழ் ஒதுங்குவாளா.....?பார்ப்போம்.....!





அகம் தொட வருவான்....!!!
 

Nirmala Krishnan

Saha Writer
Messages
76
Reaction score
13
Points
6
அத்தியாயம் 30 :

ஞாயிற்றுக்கிழமை -


ஆதித்யனின் வீட்டுத் தோட்டத்தில் அவனுடைய குடும்பம் மொத்தமும் குழுமியிருந்தது.வழக்கம் போல் ஜாகிங் போய்விட்டுத் திரும்பிய ஆதித்யன்.....அனைவரும் தோட்டத்தில் அமர்ந்திருப்பதைப் பார்த்தபடி அவர்களிடம் சென்றான்.



"என்ன எல்லோரும் இங்க ஆஜர் ஆகியிருக்கீங்க.....?என்ன விஷயம்.....?",கேட்டபடியே அங்கிருந்த கூடை நாற்காலியில் அமர்ந்தவன் பார்ப்பதற்கு வெகு கம்பீரமாக இருந்தான்.அப்பொழுதுதான் ஜாகிங் போய்விட்டு வந்ததால்....அவன் முகத்தில் வியர்வை வழிந்து கொண்டிருந்தது.அதுவும் அவனுக்கு ஒரு கம்பீரத்தையே கொடுத்திருந்தது.



ட்ராக் பேண்ட்....டீ ஷர்ட்டில் வெகு இயல்பாக இருந்தவனைப் பார்த்த அவனுடைய தந்தை,"உனக்காகத்தான் எல்லோரும் வெயிட் பண்ணிட்டு இருக்கோம்.....!காபி எடுத்துக்கோ......!",என்றபடி ஃபிளாஸ்க்கில் இருந்த காபியை டம்ளரில் ஊற்றி அவனிடம் நீட்டினார்.



காபியை வாங்கியபடியே,"எனக்காகவா.....?என்ன விஷயம்......?",அவன் கேட்ட கேள்விக்கு....அனைவரும் அமைதியையே பதிலாகத் தந்தனர்.



அனைவரின் அமைதியைப் பார்த்தவன்.....அவனுடைய தாத்தாவிடம்,'என்னாச்சு.....?' என்று சைகையாலேயே கேட்க.....அவரோ......'ஒரு பெரிய விஷயம்.....!' என்று கண்களை உருட்டிக் காண்பித்தார்.அவனுடைய அம்மாவோ.....முகத்தைத் தூக்கி வைத்தபடி 'உம்'மென்று அமர்ந்திருந்தார்.



'என்ன விஷயம்ன்னு தெரியலையே.....?',யோசித்தவன் அமைதியாக காபியை பருக ஆரம்பித்தான்.



"ம்க்கும்.....!",தொண்டையை கனைத்தபடி ஆதித்யனுடைய தந்தை மாணிக்கம் பேச ஆரம்பித்தார்.



"கொஞ்ச நாளைக்கு முன்னாடி நம்ம ஹாஸ்பிட்டல் பக்கம் போயிருந்தாயாப்பா......?",அவர் அமைதியாக ஆரம்பிக்க,



"தினமும்தான் நான் நம்ம ஹாஸ்பிட்டல்க்கு போய்ட்டு இருக்கேன்......!ஹாஸ்பிட்டல் மட்டும் இல்ல.....ஸ்கூல்....காலேஜ்ன்னு நம்ம இன்ஸ்டிடூயூஷன்ஸ் எல்லாத்துக்கும் போயிட்டுத்தான் இருக்கேன்......!",நிதானமாக காபியை பருகியபடி அவன் சொல்ல,



அவனுடைய நிதானத்தில் அவர் சற்றுத் தயங்கினார்.



"நம்ம ஹாஸ்பிட்டல் டீன் ஒரு விஷயம் சொன்னாருப்பா.....!",அவர் தடுமாறிக் கொண்டிருக்க,



காலியான காபி கோப்பையை முன்னால் இருந்த டீபாயின் மேல் வைத்தவன்.....நிமிர்ந்து அமர்ந்தான்.அவன் முகத்தில் ஒரு உறுதி தெரிந்தது.'ஹாஸ்பிட்டல்' என்ற வார்த்தையை எடுத்த உடனேயே.....'தன்னுடைய காதலைப் பற்றித்தான் பேசுகிறார்கள்.....!' என்பது அவனுக்குத் தெரிந்து விட்டது.



தீர்க்கமான பார்வையுடன் தன் தந்தையை நிமிர்ந்து பார்த்தவன்,"அவ பெயர் நித்திலா.....!என் ஆபிஸ்ல என் செக்ரெட்டரியா வொர்க் பண்ணிக்கிட்டு இருக்கா.....!அண்ட்....அவதான் உங்க மருமகள்.....!",தெளிவான....அழுத்தமான குரலில் உரைத்தான்.



இதுதான் ஆதித்யன்......!ஒன்றை முடிவெடுத்து விட்டான் என்றால் எக்காரணம் கொண்டும் அதிலிருந்து பின் வாங்க மாட்டான்.....!உறுதியாக.....தெளிவாக.....கம்பீரமாக தனது முடிவை எடுத்துச் சொல்லுவான்.



அவன் முகத்தில் தெரிந்த உறுதியையும்.....பிடிவாதத்தையும் கவனித்த மாணிக்கம்,"இப்படி உடனே முடிவு பண்ணினா எப்படிப்பா.....?அந்தப் பொண்ணோட ஃபேமிலி எப்படி......?",பொறுப்பான தந்தையாக அவர் விசாரிக்க,



"உடனே முடிவு பண்ணிட்டேனா.....?இந்த ஆதித்யன் ஒரு முடிவை எடுத்தா.....அது எப்படி இருக்கும்ன்னு உங்களுக்கே நல்லாத் தெரியும்.....!அண்ட்.....அவளுடைய ஃபேமிலியும் ஒரு வகையில நம்ம சொந்தக்காரங்கதான்.....!நம்ம ராஜாத்தி பெரியம்மாவுடைய மருமகளுடைய தங்கச்சிதான் உங்க மருமகள்......!",



அவன் நித்திலாவை பெயர் சொல்லிக் குறிப்பிடாமல்.....'உங்கள் மருமகள்' என்று குறிப்பிட்டதிலேயே அவருக்குத் தெளிவாகத் தெரிந்து போனது.....அவனுடைய முடிவில் அவன் மிக மிக உறுதியாக இருக்கிறான் என்று.....!அதோடு.....அந்தப் பெண் தன்னுடைய சொந்தம்தான் என்பதில் அவருக்கு சற்று நிம்மதியாய் இருந்தது.



அவர் ஒன்றும் சாதி....மதம் பார்ப்பவர் இல்லை.எங்கே மகன் தவறான பெண்ணை தேர்ந்தெடுத்து விடுவானோ.....?அதனால்....அவனுடைய வாழ்க்கை ஏதேனும் பாதிக்கப்படுமோ......?என்ற பயத்தில்தான் அவனிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்.



இப்பொழுது அந்தப் பெண் ராஜாத்தி அம்மாளின் உறவு முறைதான் என்று தெரிய வரவும்.....அவர் பயம் நீங்கியது.



"இது எல்லாம் ஒகே தான் ஆதி.....!நான் உன் முடிவை குறை சொல்றேன்னு நினைச்சுக்காதே......!ஒரு அப்பாவா உன்கிட்ட சில விஷயங்களைக் கேட்டு க்ளியர் பண்ணிக்க வேண்டி இருக்கு.....!",



"யா.....!ஷ்யூர் டாட்......!என்ன சந்தேகமோ கேளுங்க......!",



"ஃபர்ஸ்ட் ஒன்திங்.....பிஸினெஸ் வேற.....வாழ்க்கை வேற.....!பிஸினஸ்ல நீ அதிரடியா முடிவு எடுக்கற மாதிரி.....உன் லைஃப் நீ எடுக்க முடியாது.....!எடுக்கவும் கூடாது......!உன் வாழ்க்கையில கடைசி வரைக்கும்.....நீ அந்தப் பொண்ணு கூடத்தான் வாழ வேண்டி இருக்கும்.....!உனக்கு எல்லா விதத்திலேயும் ஒத்து வர்ற மாதிரி அந்தப் பொண்ணு இருக்கணும்.....!



அதுமட்டும் இல்லாம.....உனக்கு கோபமும் பிடிவாதமும் ரொம்பவுமே அதிகம்......!ஸோ.....உன்னை சமாளிச்சு.....உன் கூட அனுசரிச்சு போற பொண்ணா அவ இருக்கணும்.....!இது எல்லாத்தையும் நீ யோசிச்சுப் பார்க்கணும்.....!",



"கமான் டாட்......!நீங்க கவலைப்பட வேண்டிய அவசியமே இல்ல.....!அவ எல்லா விதத்திலேயும் எனக்குப் பொருத்தமானவளாகத்தான் இருப்பா.....!நீங்க வேணும்ன்னா ஒரு முறை அவளை நேர்ல பார்த்து பேசிப் பாருங்க.....!அவ எப்பேர்பட்டவ.....அவ குணம் எப்படின்னு உங்களுக்குத் தெரியும்.....!இது எல்லாத்துக்கும் மேல....நான் அவளைக் காதலிக்கிறேன்......!",தீர்மானமாகப் பேசிய மகனைக் கண்டவருக்கு.....அவர் மனதில் ஒட்டிக் கொண்டிருந்த கொஞ்ச நஞ்ச சஞ்சலமும் ஓடிப் போனது போல் இருந்தது.



கனிவுடன் மகனைப் பார்த்தவர்,"நீ இவ்வளவு உறுதியா இருக்கும் போது.....எனக்கு என்னப்பா கவலை.....?உன் மனசுக்கு பிடிச்சிருந்ததுன்னா.....எங்க எல்லோருக்கும் சம்மதம் தான்.....!அப்புறம்.....எங்க மருமகளை எப்போ எங்க கண்ணில காட்டலாம்ன்னு இருக்க.....?",சந்தோஷமாக அவர் வினவ,



"ரொம்ப தேங்க்ஸ் ப்பா.....!உங்க மருமகளை கூடிய சீக்கிரமே உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன்.....!",தன் காதலுக்கு தன்னுடைய பெற்றவர்களின் சம்மதம் கிடைத்து விட்டதில் மகிழ்ச்சியுடன் கூறினான்.



"ம்.....ஒகே கண்ணா.....!நீங்க எல்லோரும் பேசிட்டு இருங்க.....!நான் குளிக்கப் போகிறேன்.....!",என்றபடி அவர் வீட்டை நோக்கி நடந்தார்.



அவர் சென்ற பிறகு.....பேரனிடம் திரும்பிய சுந்தரம்,"எப்படியோ பேராண்டி.....!உன் காதலுக்கு நம்ம குடும்பத்துல இருந்து க்ரீன் சிக்னல் கிடைச்சிருச்சு......!என் பேத்தி எப்படி.....சம்மதம் சொல்லிட்டாளா.....?இல்ல.....இன்னும் முறைச்சிட்டுத்தான் இருக்காளா.....?",உற்சாகமாய் அவர் வினவ,



குறுக்கே புகுந்த கமலா பாட்டி,"என் பேரனுக்கு என்ன குறைச்சல்.....?அதெல்லாம்.....அவ சம்மதம் சொல்லியிருப்பா......!",வாஞ்சையுடன் பேரனின் கன்னத்தை தடவியபடி கூற,



அவரை முறைத்துப் பார்த்த சுந்தரம்,"உன் பேரன் உனக்கு வேணா உசத்தியா இருக்கலாம்.....!அந்தப் பொண்ணுக்கும் அவன் உசத்திதான்னு நீ சொல்லக் கூடாது.....!",என்க,



"ஏன்....?என் பேரனுக்கென்ன.....?இவனை வேண்டாம்ன்னு அவ சொல்லிடுவாளா.......?",என்று வரிந்து கட்டிக் கொண்டு கமலா பாட்டி சண்டைக்கு கிளம்ப, (இப்போ உங்களுக்குத் தெரிஞ்சிருக்குமே.....ஆதித்யனுடைய பிடிவாதமும்.....கர்வமும் எங்கே இருந்து வந்திருக்கும்ன்னு....?)



"ஏன்.....சொல்ல மாட்டாளா.....?உன் பேரனென்ன.....பெரிய மன்மதனா.....?",சுந்தரம் தாத்தாவும் எதிர் சண்டைக்குக் கிளம்ப,



இந்த எந்த அலப்பறையிலும் கலந்து கொள்ளாமல்.....'யாருக்கு வந்த விருந்தோ....?', என்று 'உம்'மென்று முகத்தை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார்......ஆதித்யனுடைய தாய் லட்சுமி.



அவரைக் கவனித்த ஆதித்யன்,"அய்யோ.....!ரெண்டு பேரும் கொஞ்சம் உங்க சண்டையை நிறுத்தறீங்களா.....?அம்மா ஏதோ டல்லா இருக்காங்க.....!என்னன்னு கேட்போம்......!",என்றபடி அவனுடைய அம்மாவிற்கு பக்கத்தில் இருந்த நாற்காலியில் சென்று அமர்ந்தான்.



"உங்களுக்கு நான் லவ் பண்றது பிடிக்கலையாம்மா.....?",அவனுடைய முகம் கடினத்தை தத்தெடுத்திருந்தது.



"நான் அப்படி சொன்னேனா.....?",என்றார் அவர் பட்டென்று.



"அப்புறம் ஏன் இப்படி 'உம்'முன்னு இருக்கீங்க......?ஒருவேளை....பணக்கார மருமகள்தான் வேணும்ன்னு நினைக்கறீங்களா.......?ஆனால்.....ஒண்ணு மட்டும் ஞாபகம் வைச்சுக்கோங்க......!இனி என் வாழ்க்கையில பொண்டாட்டின்னு ஒருத்தி வந்தால்.....அது நித்திலாவாக மட்டும்தான் இருக்க முடியும்.....!அண்ட்.....இந்த வீட்டுக்குள்ள மருமகள்ன்னு அவ மட்டும்தான் காலடி எடுத்து வைக்க முடியும்......!",சற்று முன் குதூகலமாய் இருந்த மனதை தற்போது வெறுமை ஆக்ரமித்துக் கொண்டது.



"சேச்சே.....!என்ன பேச்சுன்னு இப்படி பேசற......?என்னைப் பார்த்தால்.....பணத்தை பெரிசா மதிக்கறவ மாதிரியா இருக்கு......!எனக்கு குணம் தான் டா முக்கியம்......!அதிலேயும்.....உன் மேல எனக்கு மிகப் பெரிய நம்பிக்கை இருக்கு.....!என் மகன் ஒரு முடிவெடுத்தால்.....அது சோடை போகாதுன்னு எனக்கு நல்லாவே தெரியும்.....!என்னுடைய மருமகள் நித்திலாதான் அப்படிங்கறதுல எந்த சந்தேகமும் இல்ல.....!",படபடவென பொரிந்தார் லட்சுமி.



"அப்புறம் ஏன் மம்மி கோபமா இருக்கீங்க......?",



"படவா......!ஏன் கேட்க மாட்ட......?நீ என் மருமகளைப் பார்த்து எவ்வளவு நாளாச்சு......?",அவன் காதைப் பிடித்து திருகியபடி அவர் கேட்க,



"ஆ......ம்மா....!வலிக்குது.....!காதை விடுங்க......!என்ன....உங்க மருமகளைப் பார்த்து ஒரு ஆறு மாசம் இருக்கும்.....!",போலியாக அலறியபடி கூறினான் ஆதித்யன்.



"ம்.....ஆறு மாசமாச்சு.....!ஆனால்.....ஒரு தடவையாவது அவளை என்கிட்ட கூட்டிட்டு வந்து....'அம்மா....!இவதான் உங்க மருமகள்'ன்னு அறிமுகப்படுத்தினாயா.....?அட்லீஸ்ட்.....அவ ஃபோட்டோவையாவது என் கண்ணில காண்பிச்சியா.....?எதுவும் இல்ல......!நம்ம ஹாஸ்பிட்டல் டீன் சொல்லித்தான்.....எங்களுக்கு தெரிய வருது.....!



எங்களுக்கு உன் சம்மதம்தான் டா முக்கியம்.....!இதுவரைக்கும்......நானோ.....இல்ல உன் டாடியோ.....உன் விருப்பத்துல தலையிட்டதே இல்ல......!என்ன படிக்கணும்ங்கிறதுல ஆரம்பிச்சு.....எங்க படிக்கணும்.....?என்ன டிரெஸ் போடணும்....?என்ன பிஸினெஸ் பண்ணனும்.....?கடைசில.....எந்தப் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கணும்.....?அப்படிங்கற வரைக்கும் எல்லாமே உன் இஷ்டப்படிதான் நடந்திருக்கு......!இதை நான் தப்புன்னு சொல்லலை.....!ஆனால்.....நீ லவ் பண்ற விஷயத்தை எங்ககிட்ட சொல்லி இருக்கணுமா....?இல்லையா......?",ஒரு தாயின் உரிமையும்.....கோபமும் அவர் பேச்சில் தெரிந்தது.



"ஹ்ம்ம்.....உங்க கோபம் நியாயமானதுதான்......!பட்.....என் பக்கமும் நீங்க யோசிச்சுப் பார்க்கணும்ல.....?",அவன் அமைதியாக வினவினான்.



"அப்படி என்ன டா உன் பக்கம்......?",



"ஹ்ம்ம்.....மலையைக் கூட புரட்டி போட்டரலாம் போல.....!ஆனால்.....உங்க மருமகளை என்கிட்ட காதல் சொல்ல வைக்கறது கஷ்டம்......!",சலிப்பாய் அவன் கூற,



"என்னடா சொல்ற......?அப்படின்னா.....அவ உன்னை காதலிக்கலையா.......?",ஆச்சரியத்துடன் கேட்டார் லட்சுமி.



"ப்ச்.....!அவளுக்கு என்மேல காதல் இருக்கு மாம்......!இருந்தாலும்.....அதை வெளிக்காட்ட மாட்டேன்னு அழிச்சாட்டியம் பண்ணிக்கிட்டு இருக்கா......!",சிறு சலிப்போடு சொன்ன மகனைப் பார்த்த லட்சுமி,



"ஹா....ஹா.....!தி கிரேட் பிஸினஸ் மேன் ஆதித்யனுக்கே ஒரு பொண்ணு தண்ணி காட்டறாளா......?அவதான் டா உனக்கு சரியான ஜோடி.....!ஹா....ஹா.....!",வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பிக்க,



"என் நிலைமையைப் பார்த்தா....உங்களுக்கு சிரிப்பா வருதா.....?நானே நொந்து போய் இருக்கேன்.....!",சற்று எரிச்சலுடன் கூறினான் ஆதித்யன்.



"எனக்கென்னமோ பேராண்டி.....!உனக்கு சரியா லவ் பண்ணத் தெரியலையோன்னு தோணுது......!பேசாம.....என்கிட்ட டியூஷனுக்கு வா.....!நான் கத்துக் கொடுக்கிறேன்.....!சரிதானே கமலு......?",தன் மனைவியைப் பார்த்து கண் சிமிட்டியபடி சுந்தரம் கூற.....கமலா பாட்டி தன் தலையிலேயே அடித்துக் கொண்டார்.



"யாரு....?எனக்கு லவ் பண்ணத் தெரியலையா......?அது சரி....அவளைப் பத்தி உங்களுக்கு சரியா தெரியல தாத்தா.....!அன்னைக்கு அவ பக்கத்துல போய் நின்னதுக்கே.....'எங்க அப்பாக்கிட்ட சொல்லிடுவேன்னு' சொல்லி....அழுது ஊரைக் கூட்டிட்டா......!இதுல நான் எப்படி அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்கறதுன்னே தெரியல......!",சோகமாகக் கூறியவனைப் பார்த்த மற்ற மூவருக்கும் என்ன முயன்றும் சிரிப்பை அடக்க முடியவில்லை.



மூவரும் வயிற்றைப் பிடித்துக் கொண்டு வெடித்துச் சிரிக்க.....அதிலும் அவன் தாத்தாவோ,"ஹா...ஹா....!என்னது.....?அப்பாக்கிட்ட சொல்லி வைச்சிடுவேன்னு மிரட்டினாளா....?ஹா...ஹா....!பேராண்டி.....!உன் நிலைமை கொஞ்சம் கஷ்டம்தான் டா....!",என்று கூறி விட்டுச் சிரிக்க.....ஆதித்யனுக்கு கடுப்பாக இருந்தது.



'உர்'ரென்று முகத்தை வைத்துக் கொண்டு.....மூவரும் சிரிப்பதை பார்த்தவன்,"இப்போ சிரிப்பை நிறுத்தப் போறீங்களா.....?இல்லையா.....?",என்று கத்தவும்தான்....மத்த மூவரும் சிரமப்பட்டு சிரிப்பை அடக்கினர்.



"ஆதி.....!என் மருமகளைப் பார்க்கணும்ன்னு எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு டா....!ஒருநாள்....ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வா டா.....!",ஆசையாக லட்சுமி கேட்க....அவன் முகம் கனிந்தது.



"ம்....ஒருநாள் கூட்டிட்டு வர்றேன் ம்மா.....!",என்றான் கண்களில் காதலுடன்.



...........................................................................................



வாரத்தின் முதல் நாள்.....எப்பொழுதுமே பரபரப்பாகத்தான் இருக்கும்.ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை.....சோம்பலாக கொண்டாடி விட்டு....மக்கள் அனைவரும் தேனீக்களின் சுறுசுறுப்போடு.....அடுத்த நாள் தத்தம் வேலைகளுக்கு கிளம்பி விடுவர்.



ரெட் சிக்னல் விழுந்து விட.....அந்த டிராஃபிக் சிக்னலில் தனது பென்ஸ் காரை நிறுத்தினான் ஆதித்யன்.அவனுக்கு எதிரில் நிறைய பள்ளிக் குழந்தைகள் சாலையைக் கடக்க.....அவன் இதழ்களில் ரசனையுடன் கூடிய ஒரு புன்னகை வந்தமர்ந்தது.



முதலில் இருந்த ஆதித்யனுக்கு இதையெல்லாம் ரசிக்கத் தெரியாது.ரசிக்க நேரமும் இருக்காது.ஆனால்....இப்பொழுது இருக்கும் ஆதித்யன் பூக்களை ரசிப்பவன்....!அந்தி மயங்கும் வேளையில் வீசும் தென்றலை ரசிப்பவன்.....!இந்த ரசனைகளை அவனுக்கு கற்றுக் கொடுத்தது அவனுடைய உயிர்க் காதலிதான்.....!



நித்திலாவைக் காதலிக்க ஆரம்பித்த பிறகுதான்....அவன் உலகத்தைத் திரும்பிப் பார்க்க ஆரம்பித்தான்....!ஒவ்வொன்றையும் ரசிக்க ஆரம்பித்தான்....!அதுவரை பிஸினெஸ்....பிஸினெஸ் என்று ஓடிக் கொண்டிருந்தவன்.....அவளின் கடைவிழிப் பார்வையில் கட்டுண்ட பிறகுதான்.....வாழ்க்கையை வாழ்க்கையாக வாழ ஆரம்பித்தான்.



தன்னவளின் நினைவில் முகம் மென்மையை தத்தெடுத்துக் கொண்டிருக்க.....அவன் இதழ்களில் மெல்லிய புன்முறுவல் ஒன்று தவழ்ந்தது.



தன்னை மறந்து அமர்ந்திருந்தவனின் பார்வை வட்டத்தில் வந்து விழுந்தாள் அவனுடைய நினைவுகளின் நாயகி....!



அவன் காருக்கு அருகில் சற்றுத் தள்ளி நின்றிருந்த அந்தப் பேருந்தில் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.படிக்கட்டில் பலர் தொற்றியிருக்க.....அந்தப் பேருந்தின் நடுவில்.....கூட்ட நெரிசலுக்கு மத்தியில் நின்று கொண்டிருந்தாள் நித்திலா.



'இவ்வளவு கூட்டத்தில்தான்....இவ தினமும் ட்ராவல் பண்றாளா....?',அவன் நினைத்துக் கொண்டிருக்கும் போதே.....அவள் அருகில் நின்றிருந்த ஒரு ஆள்.....அவள் மேல் வேண்டுமென்றே இடிக்க.....அவள் முறைத்த முறைப்பில் அவன் தள்ளி நின்று கொண்டான்.



பார்த்துக் கொண்டிருந்த ஆதித்யனுக்கு இரத்தம் கொதித்தது.பக்கத்தில் நின்றிருந்த கார் மட்டும் தடுக்கவில்லையென்றால்.....அப்பொழுதே இறங்கிச் சென்று அந்த ஆளை துவைத்து எடுத்திருப்பான்.



அது முடியாததால்,"இடியட்......!பொறுக்கி.....!என்ன தைரியம்.....?என் கண்ணு முன்னாலேயே அவளை இடிக்கிறான்.....!ஸ்கவுண்ட்ரல்.....!",இன்னும் பல ஆங்கில கெட்ட வார்த்தைகள் அவன் வாயிலிருந்து வந்து விழுந்தன.



பல்லைக் கடித்துக் கொண்டு.....ஸ்டியரிங்கை அழுந்தப் பிடித்தபடி அமர்ந்திருந்தான்.அதற்குள் க்ரீன் சிக்னல் விழுந்து விட அந்தப் பேருந்து கிளம்பியது.நிலைமையை உணர்ந்து தானும் கோபத்துடன் காரைக் கிளப்பினான்.அலுவலகத்தில் இருந்தவர்கள்.....அவனிடம் 'குட் மார்னிங்.....!', சொல்லவே பயந்தார்கள்.அந்த அளவிற்கு அவன் முகம் கடுமையாக இருந்தது.



கோபத்துடன் அறைக்குள் நுழைந்தவன்.....நாற்காலியில் அமராமல்.....கூண்டுப் புலியாய் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான்.சில மணி நேரங்களுக்குப் பிறகு உள்ளே நுழைந்த நித்திலாவிற்கு.....அவனைப் பார்த்ததுமே புரிந்தது....அவன் கோபமாக இருக்கிறான் என்று....!



அவள் சொன்ன குட்மார்னிங்கிற்கு பதில் சொல்லாமல்,"தினமும் பஸ்லதான் வருவியா.....?",என்று கேள்வி எழுப்ப,



"பின்னே.....!ஆடி காரிலேயா வர முடியும்......?",தன் இயல்பான குணம் தலைதூக்க.....சற்று நக்கலாக கூறினாள்.



சில நிமிடம் அமைதியாக எதையோ யோசித்தவன்.....பிறகு நிதானமாக.....,"ஒகே பேபி.....!நீ இனி ஆடி காரிலேயே வரலாம்.....!",என்றவன் மொபைலை எடுத்து யாருக்கோ அழைத்தான்.



மறு முனையில் எடுக்கப்பட்டதும்,"யா.....!ஆதித்யன் ஹியர்.....!எனக்கு உடனடியா ஒரு புது ஆடி கார் தேவைப்படுது......!இப்பவே ஷோ ரூம்ல புக் பண்ணிடுங்க.....!எல்லா ஃபார்மாலிட்டிசும் முடிஞ்சு இன்னைக்கு மதியம் அந்தக் கார்.....என் ஆபிஸ் வாசல்ல நிற்கணும்.....!",சரமாரியாக உத்தரவுகளைப் பிறப்பித்தான்.



"...........",



"கலரா.....?வெயிட்.....!கேட்டுச் சொல்றேன்......!",மொபைலில் ம்யூட் ஆப்ஷனை அழுத்தியவன்.....நித்திலாவிடம் திரும்பி,



"பேபி.....!உனக்கு எந்த கலர் கார் வேணும்.....?",என்னவோ குழந்தைக்கு பொம்மைக் காரை வாங்கித் தருவது போல்.....அவளிடம் கலர் கேட்டான்.



அதுவரை அவன் பேசுவதை வாயைப் பிளந்தபடி பார்த்துக் கொண்டிருந்தவள்.....அவன் தன்னிடம் திரும்பி 'என்ன கலர்.....?' என்று கேட்கவும்.....இன்னும் அதிகமாக விழிகளை விரித்தாள்.



'இவன் என்ன நம்மகிட்ட விளையாடறானா.....?ஏதோ குழந்தைக்கு விளையாட்டு பொம்மை வாங்கித் தர்ற மாதிரி.....என்ன கலர் கார் வேணும்ன்னு கேட்கிறான்.....!',மனதில் யோசித்தபடி அமைதியாக நின்றிருந்தவளைப் பார்த்தவன்,



"உன்கிட்டேதான் கேட்கிறேன் பேபி.....!உனக்கு என்ன கலர் கார் வேணும்.....?",என்று மீண்டும் கேட்க.....தன் நிலைக்கு வந்தவள்,



"ஆங்.....என்ன விளையாடறீங்களா......?",என்றாள் சீரியஸாக.



"ப்ச்.....விளையாடலை......!சீரியஸாகத்தான் கேட்கிறேன்.....!என்ன கலர் பிடிக்கும்ன்னு சொல்லு......!",சிறு அதட்டலுடன் அவன் வினவ,



அவள் அப்பொழுதும் அமைதியாக இருக்கவும்.....அவளைக் கோபத்துடன் உறுத்து விழித்தவனின் பார்வையில்.....அவள் அணிந்திருந்த வெள்ளை நிற சுடிதார் கண்ணின் பட்டு உறுத்தியது.முழு வெள்ளை நிற சல்வாரில் ஒரு தேவதையைப் போல் நின்றிருந்தவளின் தோற்றம்......அவன் மனதை மயக்கியது.



மனதில் இருந்த கோபம் அகன்று.....ரசனையுடன் அவளை அளவிட்டவன்.....ஒரு மயக்கும் புன்னகையை அவளை நோக்கி வீசியபடி போனை எடுத்து.....,"வெள்ளை கலர்.....!வெள்ளை கலர் கார் புக் பண்ணிடுங்க.....!அண்ட்....லேட்டஸ்ட் மாடலா இருக்கணும்.....!",என்று கூறி விட்டு போனை வைத்து விட்டான்.



விழியகல தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவளின் அருகில் வந்தவன்,"பேபி.....!இனி நீ பஸ்ல ட்ராவல் பண்ண வேண்டாம்.....!நம்ம டிரைவர் செல்வம்....உன்னை தினமும் மார்னிங் 8.30 க்கு பிக்கப் பண்ணிட்டு.....ஈவ்னிங் உன் வேலை முடிஞ்சதுக்கு அப்புறம் ஹாஸ்டல்ல ட்ராப் பண்ணிடுவாரு......!இனி நீ உன் விருப்பபடி ஆடி கார்லயே போயிட்டு வரலாம்.....!",என்றான் சிறு புன்னகையுடன்.



அவனை எரிப்பது போல் பார்த்தவள்,"என்ன......?என் விருப்பப்படியா.....?நான் எப்ப விருப்பப்பட்டேன்.....?",எரிச்சலாக அவள் வினவ,



"இப்பத்தானே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி....'என்னால ஆடி காரிலேயே வர முடியும்.....?'ன்னு கேட்டல்ல.....?என் பேபி ஆசைப்பட்டா....நான் அதை நிறைவேத்திடுவேன்......!",ஒற்றைக் கண்ணைச் சிமிட்டியபடி கூறினான் ஆதித்யன்.



"நான்....அது ஏதோ விளையாட்டுக்குச் சொன்னேன்......!அதுக்குன்னு இப்படியா பண்ணுவீங்க.....?",இன்னும் எரிச்சல் விலகாமல் அவள் முணுமுணுக்க,



சட்டென்று அவன் முகம் சீரியஸாக மாறியது."பட்.....நான் விளையாட்டுக்குச் சொல்லலை பேபி.....!இனி நீ பஸ்ல போக வேண்டாம்......!மத்த விஷயம் மாதிரி இதுலேயும் பிடிவாதம் பிடிக்கலாம்ன்னு நினைக்காதே.....!எப்பவும் போல நீதான் தோற்றுப் போவ.....!",



அவன் கூறியது அவளது கோபத்தை தூண்டி விட்டது.நேற்று நடந்த மனப் போராட்டத்தில் மிகவும் சோர்ந்திருந்தாள் நித்திலா.ஆதித்யனின் காதலை ஏற்க விடாமல்.....அவளுடைய பெற்றவர்களின் பாசம் தடுத்துக் கொண்டிருந்தது.அந்த உணர்ச்சிகளின் போராட்டத்தில் ஓய்ந்து போய் அலுவலகத்திற்கு வந்தவளை.....ஆதித்யனின் பேச்சு எரிச்சலடைய செய்தது.



"இதுவரைக்கும் உங்க பிடிவாதம் ஜெயிச்சிருக்கலாம்......!ஆனால்....இந்த விஷயத்தில் என் பிடிவாதம்தான் ஜெயிக்கும்.....!என்ன நடந்தாலும் நான் விட்டுத் தர மாட்டேன்.....!",



"நான் ஏற்கனவே செம கோபத்துல இருக்கேன் பேபி.....!இன்னும் என் கோபத்தைக் கிளறாதே......!இனி நீ பஸ்ல வரக்கூடாதுன்னா.....வரக்கூடாதுதான்.....!சில விஷயங்கள்ல நான் சொல்றதை கேட்டுப் பழகு.....!இப்படி எல்லாத்துக்கும் எதிர்த்துப் பேசி பழகாதே.....!",சுள்ளென்று எரிந்து விழுந்தான் அவன்.



'இவன் என்ன தனக்கு ஆர்டர் போடுவது.....?',என்று மேலும் கோபம் பெருக,"நீங்க சொன்னா நான் கேட்டுக்கணுமா......?நான் ஏன் அந்த பஸ்ல வரக்கூடாது......?",அவளும் சற்றுக் குரலை உயர்த்திக் கேட்டாள்.



"நீ அந்த பஸ்ல வந்த லட்சணத்தைத்தான் பார்த்தேனே......?நான் பார்த்துக்கிட்டு இருக்கும் போதே.....என் கண்ணு முன்னாலேயே உன்னை ஒருத்தன் இடிக்கிறான்.....!பொறுக்கி.....!அவன் மட்டும் என் கையில மாட்டினான்.....அவ்வளவுதான்.....!",என்று பல்லைக் கடித்தவன் பிறகு,"இவ்வளவு கூட்டத்துலேதான் தினமும் ட்ராவல் பண்றேன்னு எனக்கு முதலிலேயே தெரியாம போயிடுச்சு.....!என்னால இனிமேலேயும் கூட்டமான பஸ்ல உன்னை அனுப்ப முடியாது.....!",என்றான் உறுதியாக.



"அப்படின்னா.....நீங்க சொல்றதுக்கு என்ன அர்த்தம்.....?என்னை சந்தேகப்படறீங்களா......?அந்த நாய் வந்து என்மேல இடிச்சும்.....நான் எதுவும் பண்ணாம அமைதியா இருந்தேன்னு சொல்ல வர்றீங்களா.....?இல்ல.....நான் வேணும்னே அவனை வலிய போய் இடிச்சேன்னு சொல்ல வர்றீங்களா.....?",மூக்கு விடைக்க கோபமாக கேள்வி கேட்டவளை.....அருகில் சென்று அணைத்துக் கொண்டவன்,



"ப்ச்.....!என்னடி இப்படியெல்லாம் பேசற.....?நான் உன்னை சந்தேகப்படுவேனா......?நான் எந்த அர்த்தத்துல சொல்ல வந்தேன்னா.....நாம பஸ்ல போனாத்தானே அவன் வந்து இடிக்கிறான்.....!ஸோ.....இனிமேல் நாம பஸ்ஸை அவாய்ட் பண்ணிடலாம்ன்னுதான் சொல்ல வர்றேன்.....!",அவள் தலையை நீவி விட்டபடி இதமான குரலில் கூறினான்.



அவன் அணைப்பில் இருப்பதை மறந்து....அவன் மார்பில் இன்னும் சுகமாக ஒன்றியபடி,"என்னை மாதிரி எத்தனை பொண்ணுங்க ஒவ்வொரு பஸ்லேயும் ட்ராவல் பண்ணுவாங்க.....?அவங்களும் இந்த மாதிரி.....சில பிரச்சனைகளை பார்க்க வேண்டி இருக்கும்ல.....?அப்போ அவங்க நிலைமை.....?",பெண்களுக்காக வருத்தப்பட்டபடி கூறியவளைப் பார்த்தவனின் முகம் மென்மையாக மாறியது.



அவள் நெற்றியில் வந்து விழுந்த முடிக்கற்றையை ஒதுக்கி விட்டபடி,"ஒவ்வொரு பொண்ணுங்களுக்கும் தங்களை எப்படி பாதுகாத்துக்கணும்ன்னு அவங்கவங்களுக்கு தெரியும்.....!ஒண்ணு.....இந்த மாதிரி ஆளுங்க தானாத் திருந்தணும்.....!அப்படி இல்லையா....கடுமையான தண்டனை மூலமா திருந்த வைக்கணும்......!சரி.....!அதை விட்டுட்டு நம்ம மேட்டருக்கு வா....அவ்வளவு கூட்டத்துல நீ கஷ்டப்பட்டு ட்ராவல் பண்றதை பார்த்தா எனக்கு கஷ்டமா இருக்குது டி.....!இனி நீ பஸ்ல போக வேண்டாம்.....!",மென்மையான குரலில் அழுத்தமாகக் கூறினான்.



அதன் பிறகுதான்.....தான் நிற்கும் நிலையை உணர்ந்தவள்.....அவனை விட்டு விலகியபடி,"என்னை எப்படி பார்த்துக்கணும்ன்னு எனக்குத் தெரியும்.....!இதுல நீங்க தலையிட வேண்டாம்.....!",என்றாள் கறாராக.



அவள் மீண்டும் பழைய பல்லவியையே ஆரம்பிக்கவும்.....அவனுக்கு சற்று எரிச்சல் எட்டிப் பார்த்தது.



"பேபி.....!இவ்வளவு தூரம் பொறுமையா எடுத்துச் சொல்லிக்கிட்டு இருக்கேன்.....!நீ கேட்க மாட்டேன்னு அடம் பிடிச்சா எப்படி......?என் பொறுமையை ரொம்பவும் சோதிக்காதே.....!இனிமேல் நீ பஸ்ல வரப் போறது இல்ல.....!இன்னைக்கு ஈவ்னிங்ல இருந்தே.....உன்னை நம்ம டிரைவர்தான் ட்ராப் பண்ணப் போறார்.....!எதிர்த்து எதுவும் பேசாதே.....!போ....!போய் வேலையை பார்க்க ஆரம்பி......!",என்றவன் விடுவிடுவென்று தனது இருக்கைக்குச் சென்று வேலையில் ஆழ்ந்தான்.



அவனை சிறிது நேரம் முறைத்துப் பார்த்தவள்,"இந்த முறை என் பிடிவாதத்துக்கு முன்னாடி நீங்க தோற்கத்தான் போறீங்க.....!",கோபத்துடன் கூற,



அவளை நிதானமாக நிமிர்ந்து பார்த்தவன்,"ஆல் தி பெஸ்ட்......நீ ஜெயிக்கறதுக்கு.....!",என்றவன் மீண்டும் தன் சிஸ்டமின் புறம் திரும்பிக் கொண்டான்.



'பார்க்கலாம்......!இந்த முறை நான் விட்டுத் தர்றதா இல்லை.....!',என்று மனதிற்குள் கறுவ....அவளது மனசாட்சியோ,'நீ ஒவ்வொரு முறையும் இப்படித்தான் சொல்ற.....!அவனுடைய பிடிவாதத்திற்கும்.....கோபத்துக்கும் முன்னாடி உன்னால நிற்க முடியாது......!',என்று கேலி பேச.....'ச்சீ.....!நீ முதல்ல உள்ளே போ.....!இந்த முறை அவனை விட நான் பிடிவாதம் பிடிக்கப் போறேன்....!',என்று திட்டி அதை அடக்கி வைத்தாள்.



அதன் பிறகு.....வழக்கம் போல் வேலைகள் நடந்தேற.....மதியம் ஆதித்யன் சொன்னது போலவே புத்தம் புதிய ஆடி கார் வாசலில் நின்றது.எதேச்சையாக வெளியே சென்ற நித்திலாவின் பார்வையில் அந்தக் கார் பட்டது.



அந்தக் காரையே பார்த்துக் கொண்டிருந்த நித்திலாவின் அருகில் ரமணி வந்து நின்றாள்.அவளும் அந்த அலுவலகத்தில் வேலை பார்ப்பவள் தான்....!



"என்ன நித்தி......?காரைப் பார்த்துக்கிட்டு இருக்கியா......?சூப்பரா இருக்கல்ல.....?நம்ம M.D தான் புதுசா வாங்கியிருப்பார் போல.....!அதுவும் ஆடி கார்.....!",என்னவோ நித்திலாவிற்கு தெரியாதது போல் கூறினாள் அவள்.



'அவன் இந்தக் காரை வாங்கினதே எனக்காகத்தான்.....!',என்று நினைத்தவளின் மனதில் சத்தியமாக கோபம் இல்லை.....!மாறாக.....ஒரு கர்வம்....ஒரு பெருமைதான் தோன்றியது....!அது ஆதித்யனின் காதல் தந்த கர்வம்....!தனக்காக....தன்னுடைய வசதிக்காக.....தன்னுடைய பாதுகாப்புக்காக.....தன்னுடைய காதலன் எதையும் செய்வான் என்பதில் வந்த கர்வம் அது.....!



"அதுவும் வெள்ளைக் கலர்....!செம அழகா இருக்கல்ல......?",ரமணி கூற,



'அந்தக் கலரையும் என் சுடிதாரைப் பார்த்துட்டேதான் செலெக்ட் பண்ணினான்.....!',மனதிற்குள் கூறிக் கொண்டாள் நித்திலா.



"என்னடி.....?நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன்.....நீ அமைதியா நின்னுக்கிட்டு இருக்க....?",ரமணி அவள் தோளை பிடித்து உலுக்கவும்,



"ஹ.....ஒண்ணுமில்லை டி.....!ஏதோ யோசனை.....!எனக்கு வேலை இருக்கு.....!நான் போறேன்.....!",அவள் பதிலை எதிர்பார்க்காமல் உள்ளே சென்று விட்டாள் நித்திலா.



அறைக்குள் நுழைந்தவளிடம்,"என்ன பேபி.....?பிடிச்சிருக்கா.....?",ஆதித்யன் கேட்க,



"ம்.....பிடிக்கலை....!இப்படியெல்லாம் ஏதாவது வாங்கி கொடுத்தா.....நான் உங்களை லவ் பண்ண ஆரம்பிச்சிடுவேன்னு நினைப்பா.....?",என்றாள் வெடுக்கென்று.



"ஆல்ரெடி நீ என்னை லவ் பண்ணிட்டுத்தான் இருக்க பேபி.....!இதுல எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.....!",அவன் உறுதியாகக் கூற....அதில் அவள் தடுமாறிப் போனாள்.



"உங்களுக்கு வேற வேலையே இல்ல.....!",என்று முணுமுணுத்தவள் அதன் பிறகு அமைதியாகி விட்டாள்.



அன்று மாலை....அவள் கிளம்பும் நேரம் வந்தவுடன்.....டிரைவரை அழைத்தவன்,"செல்வம்......!இனிமேல் இவங்களை பிக்கப் அண்ட் ட்ராப் பண்ற வேலையை நீங்க எடுத்துகோங்க.....!தினமும் மார்னிங் 8.30 க்கு பிக்கப் பண்ணிட்டு.....ஈவ்னிங் இவங்க கிளம்பும் போது ட்ராப் பண்ணிடுங்க.....!எனக்கு என் கார் எப்போ வேணும்னாலும் தேவைப்படும்.....!ஸோ......புதுசா வாங்கியிருக்கிற காரை யூஸ் பண்ணிக்கோங்க.....!",அவருக்கு சந்தேகம் வராதபடி கூறினான்.



அதற்கு மேல் சந்தேகம் வந்தாலும் அவரால்.....அவனிடம் எந்தக் கேள்வியையும் கேட்டு விட முடியாது.



"சரிங்க சார்.....!",என்று அவனிடம் தலையாட்டியவர்....நித்திலாவிடம் திரும்பி,"நான் வெளியே கார்கிட்ட வெயிட் பண்றேன் ம்மா.....!நீங்க வந்துடுங்க.....!",என்றபடி வெளியேறினார்.



ஆதித்யனைப் பார்த்து முறைத்தவள்,"என்கிட்ட கேட்காம எதுக்கு அவர்கிட்ட அப்படி சொன்னீங்க.....?",என்று சண்டைக்கு வந்தாள்.



அவளை நிதானமாக நிமிர்ந்து பார்த்தவன்,"நான்தான் காலையிலேயே உன்கிட்ட சொல்லிட்டேனே.....?இன்னைக்கு ஈவ்னிங்ல இருந்து நம்ம டிரைவர் உன்னை ட்ராப் பண்ணுவார்ன்னு.....!போ....!போய் கிளம்பு.....!",என்றான் உறுதியாக.



"என்னால முடியாது.....!",



"ஏன் முடியாது.....?",



"இன்னைக்கு என் பிரெண்ட் வர்ஷி என்னை பிக்கப் பண்ணிக்கறேன்னு சொன்னாள்.....!",



அவன் நம்பாமல் பார்க்கவும்,"உண்மையாலும்தான் சொல்றேன்.....!எனக்கும் அவளுக்கும் வெளியில ஒரு வேலை இருக்கு.....!அதை முடிச்சிட்டு ஹாஸ்ட்டலுக்கு போகலாம்ன்னு முடிவு பண்ணியிருந்தோம்.....!",அவள் கூறிக் கொண்டிருக்கும் போதே....அவளுடைய தோழி வர்ஷினி அழைத்தாள்.



தன் மொபைலை எடுத்து அவன் முன் நீட்டியவள்,"பார்த்தீங்களா.....?அவதான் கால் பண்ணறா....நான் போகணும்.....!",என்றாள் அவசர அவசரமாக.



தன் அனுமதியை எதிர்பார்த்து நின்றவளைப் பார்த்தவனுக்கு என்ன தோன்றியதோ,"ஒகே பேபி....!இன்னைக்கு நீ உன் பிரெண்ட் கூட போ......!பட்.....நாளைக்கு மார்னிங் 8.30 க்கு உன் ஹாஸ்டல் வாசல்ல....டிரைவர் காரோட நிற்பாரு.....!வந்திடு.....!",அழுத்தமாக அவன் கூற,



"அதை நாளைக்குப் பார்க்கலாம்......!",முணுமுணுத்தபடி அவள் நகர,



"ஒரு நிமிஷம்.....!",என்றபடி அவளை நிறுத்தியவன்,



"நீ மறுபடியும் பஸ்லதான் வந்தேன்னு எனக்குத் தெரிய வந்ததுன்னா......நடக்கறதே வேறையா இருக்கும்.....!",மிகக் கடுமையான குரலில் எச்சரித்தான்.அந்தக் குரல்.....அவளுடைய மனதிற்குள் நடுக்கத்தை ஏற்படுத்தியது.இருந்தும் எதையும் காண்பிக்காமல் வெளியேறி விட்டாள்.





அகம் தொட வருவான்.....!!!
 

Nirmala Krishnan

Saha Writer
Messages
76
Reaction score
13
Points
6
அத்தியாயம் 31 :



மறுநாள் காலை....வழக்கம் போல் கிளம்பி வெளியே வந்தவளை....காரோடு டிரைவர் செல்வம் எதிர்கொண்டார்.



"கிளம்பாலாமா ம்மா.....?",என்றபடி தன் முன் வந்து நின்றவரை ஆயாசமாகப் பார்த்தவள்,



"நான் பஸ்லேயே வந்திடறேன் அண்ணா......!நீங்க கிளம்புங்க......!",கூறியவள் விடுவிடுவென்று நடக்க ஆரம்பித்தாள்.



அவள் பின்னாலேயே சென்றவர்."ஆதித்யன் சார் உங்களை கண்டிப்பா கார்லதான் அழைச்சிட்டு வரணும்ன்னு சொல்லியிருக்கார் ம்மா.....!தயவு செய்து கார்ல ஏறுங்க......!",அவர் கெஞ்ச,



"நான் கார்ல வர மாட்டேன்.....!நீங்க கிளம்புங்க......!",என்றாள் அவள் உறுதியாக.



"நீங்க வரலைன்னா.....ஆதி சார்கிட்ட எனக்குத்தான் திட்டு விழும் ம்மா.....!",அவர் பாவமாக கூற,



"உங்க ஆதி சார்கிட்ட நான் பேசிக்கிறேன்......!நீங்க பயப்படாம கிளம்புங்க......!",என்றவள் அதற்கு மேல் நிற்காமல் சென்று.....அங்கிருந்த பேருந்தில் ஏறி சென்று விட்டாள்.



ஒரு பெருமூச்சுடன் அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தவருக்கு.....ஆதித்யன் கோபத்தை நினைத்து பயம் வந்தது.இருவருக்கும் இடையில் ஏதோ கண்ணாம்மூச்சி ஆட்டம் நடக்கிறது என்பதை அவர் உணர்ந்து கொண்டுதான் இருந்தார்.புதிதாக கார் வாங்கியது கூட நித்திலாவிற்காகத்தான் இருக்கும் என்று அவர் ஊகித்திருந்தார்.



'இனி என்ன நடக்குமோ தெரியல.....?இந்தப் பொண்ணு வேற ஆதி சாருடைய கோபத்தைப் பத்தி தெரியாம கிளம்பி போய்டுச்சு......!',தனக்குத் தானே முணுமுணுத்துக் கொண்டவர்......காரை அலுவலகத்தை நோக்கி செலுத்தினார்.



ஃபைலை பார்த்துக் கொண்டிருந்த ஆதித்யனின் முன் கார் சாவியை நீட்டினார் டிரைவர் செல்வம்.



அவரை நிமிர்ந்து பார்த்தவன்,"நித்திலாவைக் கூட்டிட்டு வந்துட்டீங்களா......?"அவன் வினவ,



"இல்லை சார்......!அவங்க பஸ்லேயே வந்துக்கிறேன்னு சொல்லி......காரைத் திருப்பி அனுப்பிட்டாங்க.....!",என்றார் பாவமாக.



"அவ சொன்னா வந்துடுவீங்களா......?அவளை பஸ்ல ஏற விடக் கூடாது......எப்படியாவது கார்லதான் கூட்டிட்டு வரணும்ன்னு நான் சொன்னேனா.....இல்லையா......?",என்று இவன் கத்த.....அவர் என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தார்.



"ஷிட்......",கை முஷ்டியை மடக்கி டேபிளில் ஓங்கி குத்தியவன்.....கார் சாவியை எடுத்துக் கொண்டு விருட்டென்று வெளியேறிவிட்டான்.அவன் காரை கிளப்பிய வேகத்திலேயே அவனது கோபத்தின் அளவு தெரிந்தது.



தாறுமாறான வேகத்தில் அவன் கைகளில் கார் சீறிப் பாய்ந்தது.இங்கு நித்திலாவோ.....வழக்கம் போல் பேருந்தில் பயணம் செய்து அலுவலகத்தை வந்தடைந்தாள்.இவள் அறைக்குள் நுழையும் போது.....ஆதித்யன் அங்கு இல்லை.'இன்னும் வரல போல.....' என்று நினைத்தபடி மெயிலை செக் செய்ய ஆரம்பித்தாள்.



நேரம் சென்று கொண்டிருந்ததே தவிர.....ஆதித்யன் வந்த பாடாக இல்லை.அடிக்கடி வாசல் கதவையேப் பார்த்துக் கொண்டு வேலை செய்து கொண்டிருந்தவளுக்கு.....நேரமாக ஆக....பயம் எட்டிப் பார்க்க ஆரம்பித்தது.அது போதாது என்று.....ஆதித்யனைத் தேடி நிறைய தொலைபேசி அழைப்புகள் வர.....அவை அனைத்திற்கும் ஒருவாறாக பதில் கூறி சமாளித்தாள்.



'எங்கே இன்னும் இவரைக் காணோம்.....?நான் கார்ல வரலேங்கிற விஷயம் கண்டிப்பா தெரிஞ்சிருக்கும்.....கோபத்துல வீட்டுக்குப் போயிட்டாரா......?',யோசித்துக் கொண்டிருந்தவளின் சிந்தனையைக் கலைத்துக் கொண்டு அலறியது தொலைபேசி.ஒருவேளை.....ஆதித்யனாக இருக்குமோ.....என்ற ஆசையில் எடுத்து வேகமாக,"ஹலோ......!",என்றாள்.



"நித்தி.....!நான்தான் ம்மா....கெளதம் பேசறேன்.....!இன்னும் ஆதி வரலையா.....?",



"இன்னும் வரலை ண்ணா.....!அவருக்கு போன் பண்ணி பார்த்தீங்களா.....?",சற்று பயத்துடன் அவள் கேட்க,



"அவன் போன் காலை அட்டெண்ட் பண்ண மாட்டேங்கிறான் ம்மா.....!ஃபுல் ரிங் போய் கட் ஆகுது.....!",



"அய்யோ.....!என்ன ஆச்சுன்னு தெரியலையே......?இவ்வளவு நேரம் ஆபிஸ்க்கு வராம இருக்க மாட்டாரே.....!எனக்கு பயமாயிருக்கு ண்ணா......!",இவள் பதற,



"ஹே.....ரிலாக்ஸ் ம்மா......!அவன் எங்கேயாவது வெளியில வேலையா போயிருப்பான்......!வந்திடுவான்.....!நீ பயப்படாதே......!மதியத்துக்குள்ள வந்திடுவான்னு நினைக்கிறேன்......!ஒகே ம்மா.....!அவன் கால் பண்ணினால்.....எனக்கு கூப்பிட சொல்லு......!",என்றபடி போனை வைத்து விட்டான்.



அதன் பிறகு நித்திலாவிற்கு ஒரு வேலையும் ஓடவில்லை.மணி பன்னிரெண்டு ஆகியதே தவிர.....ஆதித்யன் வந்து சேரவில்லை.பயத்தில் நித்திலாவிற்கு அழுகையே வந்துவிட்டது.அவன் மொபைலிற்கு முயற்சி செய்தாலும் எடுக்கப்படவில்லை.



'கடவுளே.....!எங்க போனார்ன்னு தெரியலையே.....?பேசாம....காலையில அவர் அனுப்பின கார்லயே வந்திருக்கலாம்.....!எல்லாம் என்னாலதான்.....!அவருடைய பிடிவாதத்தைப் பத்தி தெரிஞ்சிருந்தும்.....நான் இப்படி பண்ணிட்டேனே......?ஹைய்யோ ஆது......!தயவு செஞ்சு வந்திடுங்க......!எனக்கு பயமா இருக்கு.....!இனிமேல்.....நீங்க சொல்ற எதையும் மறுக்க மாட்டேன்......!',காதல் கொண்ட மனம் தன்னவனுக்காய் புலம்பித் தவித்தது.சட்டென்று ஏதோ உரைக்க.....தன் தலையில் ஓங்கி அறைந்து கொண்டாள்.



'ஒருவேளை......அப்படி இருக்குமோ.....?ஓ காட்......!',என்று தன் நெற்றியில் அறைந்து கொண்டவள்.....அதன்பிறகு நொடியும் தாமதிக்கவில்லை.புயலாய் அறையை விட்டு வெளியேறினாள்.கண்களில் வழிந்த நீருடன்.....பதட்டத்துடன் வெளியேறியவளை அந்த அலுவலகமே வித்தியாசமாய் பார்த்தது.அவள் யாரைப் பற்றியும் கவலைப்படவில்லை.....அவள் கண்ணிற்கு ஆதித்யன்.....ஆதித்யன் மட்டுமே தெரிந்தான்.....!வேகமாக வெளியேறியவள்....ஒரு ஆட்டோவைப் பிடித்து.....தன் ஹாஸ்டல் முகவரியைச் சொல்லி அங்கே போகச் சொன்னாள்.



கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தபடியே வந்தவளை.....அந்த ஆட்டோ டிரைவர் பாவமாகப் பார்த்தார்.ஆட்டோ.....ஹாஸ்டல் வாசலில் வந்து நின்றது.அவள் நினைத்தது பொய்யாகவில்லை.அங்கு ஆதித்யன் நின்றிருந்தான்.



ஹாஸ்டல் வாசலில் அவனது கார் நிறுத்தப்பட்டிருக்க.....ஒற்றைக் காலை மடித்து அதில் சாய்ந்தபடி....தன் இரு கைகளையும் மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டு.....சுட்டெரிக்கும் வெயிலில் நின்று கொண்டிருந்தான் ஆதித்யன்.பிடிவாதத்துடன் உதடுகள் அழுந்த மூடியிருக்க.....பசி கொண்ட புலியின் உறுமலை கண்களில் தேக்கியபடி நின்றிருந்தான் அவன்.



இவளைக் கண்டதும் அவன் கண்கள் மின்னின.....!அவன் இதழ்களில் ஒரு வெற்றிப்புன்னகை கர்வத்துடன் வந்தமர்ந்தது.அவனைப் பார்த்த பிறகுதான்.....நித்திலாவிற்கு உயிரே வந்தது.ஆட்டோவை அனுப்பி வைத்தவள்.....அவனருகே வந்து....தீர்க்கமான பார்வை ஒன்றை அவன் விழிகளுக்குள் செலுத்தினாள்.அவளுக்கு சற்றும் குறையாத பார்வையை.....அவன்....அவளை நோக்கி வீச.....இருவருக்கும் இடையில் பார்வையிலேயே யுத்தம் நடந்து கொண்டிருந்தது.



எப்பொழுதும் போல் இப்பொழுதும்.....அவனுடைய பார்வையைத் தாக்குப் பிடிக்க முடியாமல்.....தனது பார்வையை தாழ்த்திக் கொண்டவள்.....ஒன்றும் பேசாமல் காரின் முன்பக்க கதவைத் திறந்து ஏறி அமர்ந்தாள்.வெற்றிப் புன்னகையுடன் டிரைவர் சீட்டில் அமர்ந்தவன்.....காரை உடனே கிளப்பாமல்......கண்களை மூடி சீட்டில் சாய்ந்து கொண்டான்.



நித்திலாவிற்கு அவன் மீது கோபம் இருந்தாலும்.....அதையும் மீறிக் கொண்டு அவன் மீதான அவளுடைய காதல் மனது வெளியே வந்தது.



'எவ்வளவு நேரம் வெயில்ல நின்னாருன்னு தெரியல.....?இப்போ மணி 12.30.....கிட்டத்தட்ட ஒன்பது மணியில் இருந்து இங்கேதான் நின்றிருப்பார்ன்னு நினைக்கிறேன்......!',மனதிற்குள் மறுகியவள் லேசாக அவனைத் திரும்பிப் பார்க்க.....கருத்த அவன் முகமும் அதைத்தான் சொல்லியது.



கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் வெயிலில் நின்றதால்.....முகம் கருத்து....தலைமுடி கலைந்து.....வியர்வையில் அவன் சட்டை நனைந்திருந்தது.



அவன் இருந்த கோலம்.....அவள் மனதைப் பிசைய.....கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை அவனுக்குத் தெரியாமல் சுண்டி விட்டாள்.



'எல்லாம் என்னாலதான்.....!அவர் சொன்னதைக் கேட்டு காலையிலேயே கார்ல வந்திருந்தேன்னா.....இவ்வளவு பிரச்சனை நடந்திருக்காது......!இவரை இப்படி ஒரு நிலைமைல பார்க்க வேண்டியும் இருந்திருக்காது......!எல்லாம் என்னாலதான்.....!',காதல் கொண்ட மனம் பழியைத் தூக்கி தன் மீதே போட்டுக் கொண்டது.



இதுதான் காதல்......!தன் இணைக்கு ஒன்று என்றால்.....அதனால் தாங்க முடியாது.....!தன் மனம் போன போக்கில் புலம்பிக் கொண்டிருந்தவளுக்கு.....ஆதித்யனின் பிடிவாதத்தை எண்ணி கோபம் கோபமாக வந்தது.



அவன் புறம் திரும்பி அமர்ந்தவள்,"பிடிவாதம்.....!மகா பிடிவாதம்.....!",பல்லைக் கடிக்க,



அவள் பேசியதில் கண்களைத் திறந்தவன்,"நான் அவ்வளவு சொல்லியும் நீ பஸ்ல ட்ராவல் பண்ணியிருக்க.....?",ஒவ்வொரு வார்த்தையையும் கடித்துத் துப்பினான் அவன்.



"அதுக்காக.....இப்படியா மூணு மணி நேரம் வெயில்ல நிற்பாங்க......?கொஞ்சமாவது உடம்பை பத்தி யோசிச்சுப் பார்க்க வேண்டாமா......?",என்றாள் குறையாத கோபத்தோடு.



"நான் எதுக்கு டி யோசிச்சுப் பார்க்கணும்......?என் பிடிவாதத்தைப் பத்தி உனக்கு நல்லா தெரியும் தானே.....?அப்படி இருந்தும்.....நான் சொன்னதை மீறி இருக்கறேன்னா.....என்ன அர்த்தம்.....?",என்று கத்தினான்.



அவனுடைய கோபத்தில்.....அவளுக்கு 'முணுக்'கென்று கண்ணீர் எட்டிப் பார்த்தது.



"தப்புதான் சாமி.....!உங்களைப் பத்தி தெரிஞ்சிருந்தும் நான் அப்படி பண்ணி இருக்கக் கூடாதுதான்......!மன்னிச்சிடுங்க......!ஆனால்....தயவு செஞ்சு இனி ஒரு முறை......உங்களை இப்படி வருத்திக்காதீங்க......!உங்களைக் காணோம்ன்னு.....என் மனசு பட்ட பாடு எனக்குத்தான் தெரியும்......!உங்களை இப்படி ஒரு நிலைமைல பார்க்கிற தைரியம் எனக்கில்லை.....!",கோபத்துடன் ஆரம்பித்து.....நடுக்கத்துடன் பேசி முடித்தாள்.



சரசரவென்று கண்களில் வழிந்த கண்ணீரைத் தனது புறங்கையால் துடைத்துக் கொண்டு பேசியவளைப் பார்த்தவனுக்கு.....அவளை இழுத்து அணைத்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது.



மனதில் நினைத்ததை நடத்தாமல் இருந்தால்.....அது ஆதித்யன் அல்லவே.....!கோபம் மறைந்து அந்த இடத்தை காதல் ஆக்ரமித்துக் கொள்ள......அடுத்த நொடி அவளை இழுத்து அணைத்திருந்தான்.....!கோழிக் குஞ்சு போல் அவன் நெஞ்சில் சுகமாய் ஒன்றியபடி மூக்கை உறிஞ்சிக் கொண்டிருந்தாள் அவள்.



அவள் உச்சந்தலையில் தனது தாடையை பதித்தபடி கண்ணை மூடி அமர்ந்திருந்தான் அவன்....!நொடிகள் நிமிடங்களாக......அங்கு காதல்.....மௌனம் என்னும் மொழியில் சுகமாய் ஆட்சி செய்து கொண்டிருந்தது.



"இப்பொழுதாவது என் மேல இருக்கிற காதலை ஒத்துக்கிறயா பேபி......?",ஒட்டு மொத்த காதலையும் குரலில் தேக்கி வைத்தபடி அவன் கேட்க.....அந்தக் குரல் அவளை முழுவதும் கட்டிப் போட்டது.



அவன் மார்பில் முகத்தைப் புரட்டியபடி......அவனுடைய சட்டையிலேயே தனது கண்ணீரைத் துடைத்துக் கொண்டவள்.....'இல்லை....' என்பதாய் அவன் மார்பில் புதைந்த நிலையிலேயே தலையசைக்க.....அவளுடைய செய்கையில் அவனுக்கு சிரிப்புதான் வந்தது.அன்றும் ஹாஸ்ப்பிட்டலில் இப்படித்தான் தனது சட்டையில் அவளது கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் என்ற நினைவில் அவன் மனம் கனிந்தது.



"இப்படி பூனைக் குட்டி மாதிரி என் நெஞ்சில சாஞ்சுக்கிட்டு.....'நான் உன்னை காதலிக்கலை.....!'ன்னு உன்னால மட்டும்தான் டி சொல்ல முடியும்.....!",சிரிப்புடன் அவன் கூறவும் தான்....தனது நிலையை உணர்ந்தாள் நித்திலா.



அவனது இதயத் துடிப்பைக் கேட்டபடி.....சுகமாக அவன் மார்பில் சாய்ந்திருந்தவள்.....அவனது பேச்சில்....சட்டென்று விலகினாள்.அதுவரை.....தாயின் கருவறையில் இருந்தது போன்ற கதகதப்பான.....பாதுகாப்பான உணர்வை இழந்தது போல் உணர்ந்தாள் நித்திலா.ஏமாற்றத்துடன் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்....!அதுவரை அவன் மார்பில் சுருண்டிருத்தவள்.....சட்டென்று விலக நேர்ந்ததால் ஏற்பட்ட ஏமாற்றம் அது.....!



அவள் முகத்தில் பரவிய ஏமாற்றத்தைக் கண்டு கொண்டான் அவன்.சிறு புன்னகையுடன்,"இனிமேலும் நடிக்காதே டி......!இதோ....உன்னுடைய இந்த அழகான கண்கள்......நீ என்மேல எவ்வளவு காதல் வைச்சிருக்கிறேன்னு தெளிவா சொல்லுதே......!",அவள் விழிகளை வருடியபடி அவன் கூற,



அவள் மனதில் மீண்டும் காதலுக்கும்.....பாசத்துக்கும் இடையேயான போராட்டம் ஆரம்பமாகியது.....!தன் காதலை ஒத்துக் கொள்ள முடியாத தன் நிலையை எண்ணி.....அவளுக்கு கண்ணீர் வந்தது.



கண்ணீரோடு அவன் கைகளைப் பிடித்துத் தள்ளி விட்டவள்,"இல்லை.....!நான் உங்களை காதலிக்கலை......!",தான் கூறுவது எவ்வளவு அபத்தம் என்று அவளுக்கே புரிந்தது.சற்று முன்பு வரை ஒய்யாரமாய் அவன் மார்பில் சாய்ந்திருந்த விட்டு......இப்பொழுது.....'நான் உன்னைக் காதலிக்கவில்லை.....!',என்று சொன்னால்.....நம்புவதற்கு ஆதித்யன் ஒன்றும் முட்டாள் இல்லையே......!



"அப்படின்னா.....இந்தக் கண்ணீர் எதுக்காக......?",அவள் கன்னத்தில் வழிந்த கண்ணீரை சுண்டி விட்டபடி அவன் கேட்க.....அவள் தடுமாறினாள்.



"அ....அது ஏதோ வருது......!அதுக்காக.....உங்களை லவ் ப....பண்றேன்னு ஒத்துக்க முடியுமா.....?",'மாட்டிக்கொண்டோம்......!' என்ற உணர்வில்.....அவள் படபடவென பொரிந்தாள்.அவளைப் பார்க்கும் போது.....அவனுக்கு குழந்தையின் ஞாபகம் தான் வந்தது.



'என்னைக் கட்டிப் பிடிச்சுக்குவாளாம்.....!ஆனால்.....என் மேல இருக்கிற காதலை ஒத்துக்க மாட்டாளாமா......!',என்று நினைத்துக் கொண்டவனுக்கு சிரிப்புதான் வந்தது.



"பேபி......பேபி.....!பேபி மாதிரியே ரியாக்ட் பண்ணுற......!ஏண்டி இப்படி அழிச்சாட்டியம் பண்ற......?நீ என்னை லவ் பண்றேன்னு உனக்கே நல்லா தெரியும்.....அப்படி இருந்தும் ஒத்துக்கமாட்டேன்னு.....ஏன் அடம் பிடிக்கற.....?",



"நான் உங்களை லவ் பண்றேன்னா.....இல்லையாங்கிறதை நான்தான் சொல்லணும்......!நீங்களா ஏதாவது முடிவு பண்ணிக்கிட்டா.....அதுக்கு நான் ஒண்ணும் பண்ண முடியாது.....!",என்றாள் பிடிவாதமாக.



அவளைப் பார்த்து முறைத்தவன்,"ச்சே.....!நீயெல்லாம் பொண்ணே இல்லை டி.....!பிசாசு......!ராட்சசி......!என்னை ஆட்டி வைக்கிற பேய் டி நீ......!உன் மனசில இருக்கிற காதலை ஒத்துக்க மாட்டேன்னு......ஏன் என்னை வதைக்கிற.......?",பல்லைக் கடித்துக் கொண்டு சரமாரியாய்த் திட்டினான் அவன்.



அவள் அப்பொழுதும் அசையாமல் அமைதியாக அமர்ந்திருக்கவும்,"ஒருநாள் நீயாகவே என்கிட்ட வந்து.....'ஆது....!நான் உங்களை காதலிக்கிறேன்'ன்னு சொல்றியா.....இல்லையான்னு பாரு.....!",என்று இரைந்தவன் கோபத்துடன் காரை கிளப்பினான்.அவள் மேல் இருந்த ஒட்டு மொத்த கோபத்தையும் காரின் மேல் காட்ட.....அது சாலையில் சீறிப் பாய்ந்தது.



நித்திலாவிற்கு காருக்குள் அமர்ந்திருப்பதற்கே பயமாக இருந்தது.முன்னால் சென்று கொண்டிருந்த வண்டியின் மீது இடிப்பது போல் சென்றவன்......கடைசி நிமிடத்தில் பிரேக் அடித்து விலகிச் சென்றான்.



பொறுத்துப் பொறுத்து பார்த்தவள்.....ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல்,"கொஞ்சம் மெதுவாகத்தான் போங்களேன்......!",என்று மெதுவாகக் கூற,



"நான் எப்படி டிரைவ் பண்ணினா உனக்கு என்னடி......?உன்னை பத்திரமா கொண்டு போய் ஆபிஸ்ல சேர்க்கிறேன்.......போதுமா......?",என்றான் சுள்ளென்று.



"சென்னை ட்ராஃபிக்ல இவ்வளவு ஸ்பீடா போகக் கூடாது......ப்ளீஸ்.....!",அவள் கெஞ்சவும்....சிறிது வேகத்தைக் குறைத்தான்.



அதன் பிறகு சிறிது நேரம் அமைதி நிலவ.....அவள் மெதுவாக,"சார்.....!",என்றாள்.



அவன் எதுவும் பேசவில்லை.கருமமே கண்ணாக காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.



"சார்.....!",அவள் மீண்டும் அழைக்க,



"........",அவன் திரும்பிக் கூட பார்க்கவில்லை.



ஒருவாறாக தைரியத்தை திரட்டிக் கொண்டு......அவள் மீண்டும்,"சார்......!",என்றழைக்க.



கோபத்துடன் திரும்பியவன்,"இனியொரு முறை என்னை 'சார்'ன்னு கூப்பிட்ட.....பல்லைக் கழட்டி கையில கொடுத்திடுவேன்......!",என்று உறுமினான்.



"அப்புறம் எப்படி கூப்பிடறதாம்.......?",என்று அவள் மெதுவாக வினவ,



அவளைத் திரும்பிப் பார்த்தவன்,"ஏன்.....?கூப்பிடறதுக்கு பெயரா இல்லை......?ஆது ன்னு கூப்பிடு.....!அப்படி இல்லையா.....மாமா....மச்சான்னு எதையாவது சொல்லிக் கூப்பிடு.....!",என்றான் உல்லாசமாக.



"அப்படியெல்லாம் கூப்பிட முடியாது.....!இப்போ நான் சொல்ல வர்றதை கேட்க முடியுமா......?முடியாதா....?",அவள் மிரட்டவும்,



"அதுதான்.....நீ சொல்றதுக்கு எல்லாம் தலையாட்டிக்கிட்டுத்தானே இருக்கேன்......!என்னன்னு சொல்லித் தொலை.....!",கோபம் போல் சொன்னாலும்.....அவன் மனதில் கோபம் இல்லை.



"ஏதாவது ஹோட்டல் கிட்ட வண்டியை நிறுத்துங்க.....!",



"எதுக்கு.....?",



"சாப்பிடறதுக்குத்தான்......!சின்னக் குழந்தை மாதிரி அடம் பிடிச்சுக்கிட்டு......காலையில இருந்து வெயில்ல நின்னீங்கள்ள.....?ஏதாவது சாப்பிட்டுட்டு ஆபிஸ்க்கு போகலாம்......!",



கூர்மையான பார்வையை அவளை நோக்கி வீசியவன்,"நீதான் என்னை லவ் பண்ணலையே......?அப்புறம்.....நான் எப்படி போனாத்தான் உனக்கென்ன.....?எதுக்காக என்னைப் பத்தி கவலைப்படற.....?",அழுத்தமாக வினவினான் அவன்.



சிறிது தடுமாறியவள்,"அது.....ஒரு....",என்று அவள் ஏதோ சொல்ல ஆரம்பிக்கவும்,



அவளை கை உயர்த்தி தடுத்தவன்,"ப்ளீஸ் டி.....!மனிதாபிமானத்திற்காகத்தான் பண்ணினேன்னு தயவு செய்து சொல்லிடாதே......!நீ எனக்காக துடிச்ச துடிப்பை.....நான் உன் கண்கள்ல பார்த்தேன்.....!",என்றான் மெதுவான குரலில்.



'என்ன சொல்வது.....?' என்று சிறிது நேரம் தடுமாறியவள்......பிறகு சுதாரித்துக் கொண்டு,"இப்போ வண்டியை நிறுத்த முடியுமா.....முடியாதா......?",ஒற்றை விரலை அவனை நோக்கி மிரட்டியபடி கேட்டாள்.



அவளது செய்கையை ரசித்துச் சிரித்தவன்,"அடேயப்பா......!மிரட்டல் எல்லாம் பலமா இருக்கு......!இந்த ஆதித்யனையே விரல் நீட்டி மிரட்டற தைரியம் உனக்கு மட்டும்தான் டி இருக்கு.....!",அவ்வளவு நேரம் இருந்த கோபம் அகன்றவனாய் கூறினான்.



"இருந்துட்டுப் போகுது......!இப்போ வண்டியை நிறுத்துவீங்களா.....மாட்டீங்களா.....?",பிடிவாதமாய் கேட்டவளை ரசித்தவன்,



"நிறுத்த முடியாது டி.....!என்ன செய்ய முடியுமோ.....பண்ணிக்கோ.....?",என்றான் சவாலாக.



காரின் முன்பக்க இடத்தில் இருந்த அவனுடைய மொபைலை எடுத்துக் கொண்டவள்,"இப்ப மட்டும் நீங்க வண்டியை நிறுத்தலைன்னா.....உங்க மொபைலை தூக்கி வெளியே எறிஞ்சிடுவேன்......!",கார் கண்ணாடியை திறந்து வைத்துக் கொண்டு அவள் மிரட்ட,



"அடியேய்.....!அது ஐ போன் டி.....!அதனுடைய விலையே லட்சக் கணக்கில வரும்.....!வெளியே போட்டறாதே.....!",அவன் அலறினான்.



"அப்படின்னா.....ஹோட்டல் கிட்ட காரை நிறுத்துங்க......!",என்றாள் தான் பிடித்த பிடியை விடாமல்.



"ராட்சசி.....!நிறுத்தி தொலைக்கிறேன்......!போனை உள்ளே வை.....!",உள்ளுக்குள் அவள் செய்கையை ரசித்தபடி ஒரு ஹோட்டலின் முன் காரை நிறுத்தினான்.உள்ளே சென்று ஒரு டேபிளில் அமர்ந்தவர்கள்.....பேரர் வரவும்.....அவனிடம் சரமாரியாக அசைவ உணவுகளை ஆர்டர் செய்ய ஆரம்பித்தான்.



அவன் ஆர்டர் செய்த உணவு வகைகளைக் கேட்டுத் திகைத்தவள்,"ஸ்டாப்.....!ஸ்டாப்....!இப்போ எதுக்கு இவ்வளவு ஆர்டர் பண்றீங்க.....?",என்றாள்.



"வேற எதுக்கு.....?சாப்பிடத்தான்.....!உனக்கு என்ன வேணுமோ நீ ஆர்டர் பண்ணிக்க.....!",என்றவன் பேரரிடம் திரும்பி,"கடைசியா.....பெப்பர் சிக்கன் ஒரு ப்ளேட் கொண்டு வந்துடுங்க......!",என்று முடிக்க,



'அடப்பாவி.....!இது அத்தனையும் இவனுக்கு மட்டுமா.....?இதுல....'உனக்கு என்ன வேணுமோ.....நீ ஆர்டர் பண்ணிக்கோ....'ன்னு என்னைப் பார்த்து சொல்றான்....!',என்று திகைத்தவள்.....பேரரை நிறுத்தி,



"இப்போ ஆர்டர் பண்ணின எல்லாத்தையும் கேன்சல் பண்ணிடுங்க.....!இட்லி.....தோசை....ஃப்ரூட் சாலட்.....இதுல எல்லாம் ஒரு ப்ளேட் கொண்டு வாங்க....!அண்ட்....ரெண்டு ஃபிரெஷ் ஆப்பிள் ஜுஸ்.....!",என்று ஆர்டர் செய்தாள்.



"ஹே......இதையெல்லாம் மனுஷன் தின்பானா.....?உனக்கு வேணும்ன்னா நீ ஆர்டர் பண்ணிக்க......!",என்றவன் பேரரிடம் திரும்பி,"நான் சொன்னதை எல்லாம் கொண்டு வாங்க.....!",என்றான்.



"இல்ல.....நான் சொன்னதை மட்டும் கொண்டு வாங்க.....!",என்று நித்திலா கூற,



"இல்ல.....நான் ஆர்டர் பண்ணினதைக் கொண்டு வாங்க.....!",என்று ஆதித்யன் கூற.....அந்த பேரர் திருதிருவென முழித்தார்.



"சார்......!மேடம்......!யாராவது ஒருத்தர் முடிவு பண்ணிச் சொல்லுங்க......!",அந்த பேரர் பரிதாபமாகக் கேட்க,



"நான்தான் சொல்லிட்டேனே.....!நான் ஆர்டர் பண்ணினதைக் கொண்டு வாங்க......!",நித்திலா கூறவும்.....எங்கே மீண்டும் இருவரும் சண்டையை ஆரம்பித்து விடுவார்களோ என்ற பயத்தில்.....அந்த பேரர்,"ஒகே மேடம்......!",என்றபடி ஓடிவிட்டான்.



பேரர் சென்ற பிறகு.....நித்திலாவைப் பார்த்து முறைத்தவன்,"இப்போ எதுக்கு இதை ஆர்டர் பண்ணின.....?இதையெல்லாம் சாப்பிடறதுக்கு.....சாப்பிடாமலேயே இருக்கலாம்.......!",என்று முணுமுணுத்தான்.



"ஷ்.....!சும்மா எதுக்கெடுத்தாலும் சின்னக் குழந்தை மாதிரி அடம் பிடிக்காதீங்க.....!மூணு மணி நேரம் வெயில்ல நின்னு இருக்கீங்க.....உடம்பில இருக்கிற எல்லா நீர் சத்தும் குறைஞ்சிருக்கும்.....!ஸோ.....லைட் ஃபுட்டாகத்தான் எடுத்துக்கணும்.....!நிறைய தண்ணீர் இருக்கற ஃபுரூட்ஸ்.....வெஜிடபுள்ஸ்னுதான் எடுத்துக்கணும்......!அதை விட்டுட்டு.....தண்ணீர்லேயே இருக்கற இறால்....மீன்.....நண்டுன்னு ஆர்டர் பண்ணக் கூடாது......!",என்றாள்.



"அதுசரி.....!நீ பேசாம டாக்டர்க்கே படிச்சிருக்கலாம்.....!",அவன் கூற,



"இதெல்லாம் பேசிக் சென்ஸ்.....இதையெல்லாம் சொல்றதுக்கு டாக்டர்க்குத்தான் படிச்சிருக்கணும்ன்னு அவசியம் இல்ல......!",இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே.....உணவு வகைகள் வந்து விட்டது.



"உனக்கு எதுவும் வேண்டாமா.....?",அவன் வினவ,



"எனக்கு ஜுஸ் மட்டும் போதும்.....!",என்றபடி ஜுஸ் க்ளாஸை எடுத்துக் கொண்டாள்.அனைத்தையும் சாப்பிட்டு முடித்தவன்.....ஃபுரூட் சாலடை மட்டும் தொடாமல் அப்படியே வைத்திருந்தான்.



"இதையும் சாப்பிடுங்க......!",என்றபடி ஃபுரூட் சாலடை அவன் பக்கம் நகர்த்த,



"எனக்கு வேண்டாம்.....!பிடிக்காது.....!",முகம் சுழித்தான் அவன்.



"ஃபுரூட்ஸ் உடம்புக்கு ரொம்ப நல்லது.....!அதுல நிறைய.....",அவள் ஆரம்பிக்க,



"அம்மா.....!தாயே.....!இப்போ என்ன.....நான் இதை சாப்பிடணும்.....!அவ்வளவுதானே......?சாப்பிடறேன்......!நீ உன் லெக்சரை ஆரம்பிக்காதே......!",என்று அலறியவன் ஃபுரூட் சாலடை சாப்பிட ஆரம்பித்தான்.



பாகற்காயை கடித்தது போல்.....முகத்தை அஷ்ட கோணலாக வைத்துக் கொண்டு.....சாப்பிட்டுக் கொண்டிருந்தவனைப் பார்த்தவளுக்கு சிரிப்பாக வந்தது.



'உண்மையிலேயே நீ வளர்ந்த குழந்தைதான் டா......!அந்த ஃபுரூட்ஸ் சாப்பிடறதுக்கு என்ன அழிச்சாட்டியம் பண்ற.....!',மனதுக்குள் செல்லமாக கொஞ்சிக் கொண்டாள்.அவன் சாப்பிட்டு முடிக்கவும்.....இருவரும் அலுவலகத்திற்கு கிளம்பினர்.



பாதி நேரம் அலுவலகத்தில் இல்லாததால்.....இருவருக்கும் நிறைய வேலைகள் இருந்தன.வேலையில் மூழ்கியிருந்தவர்களை.....கௌதமின் வருகை தடை செய்தது.



"டேய்.....!எங்கேடா போயிருந்த.......?".ஆதித்யனிடன் கேட்டவன்,



நித்திலாவிடம் திரும்பி,"ஏன்மா இவனைக் காணோம்ன்னு என்கிட்ட பதறிக்கிட்டு இருந்த.....இப்ப என்னடான்னா.....அவன் கூட ஜோடியா வந்து இறங்கற......?",என்று கேள்வியெழுப்ப,



"இல்லைண்ணா......!வெளியில ஏதோ வேலை இருக்குன்னு.....என்னை போன் பண்ணி அங்கே வரச் சொன்னாரு.....!அவசரத்துல உங்ககிட்ட சொல்ல முடியல.....!சாரிண்ணா.....!",என்று வாய்க்கு வந்த பொய்யைக் கூறி சமாளித்தாள்.



"என்னது.....?அண்ணா வா.....?இது எப்ப இருந்து......?",ஆதித்யன் குறுக்கே புக,



"அதெல்லாம்.....நாங்க அண்ணன்....தங்கச்சி ஆகி ரொம்ப நாளாச்சு......!நீதான் லேட் பிக்கப்.....!",கெளதம் கிண்டல் செய்ய,



"அடப்பாவிகளா.....!நடத்துங்க.....நடத்துங்க.....!",என்று அமைதியாகி விட்டான்.



அதன் பிறகு கெளதம் சிறிது நேரம் பேசி விட்டு வெளியேறி விட.....நித்திலாவைப் பார்த்தவன்,



"கெளதம் சொன்னது போல் நான் ஸ்லோ பிக்கப்பாகத்தான் இருக்கிறேன்......!இல்லையா பேபி.....?அவனை அண்ணனா ஏத்துக்க.....உனக்கு மனசு இருக்கு.....!ஆனால்.....உன் மனசில இருக்கிற என் மேலான காதலை ஒத்துக்க உனக்கு மனசு வரலை.....!அப்படித்தானே......?",நிதானமாக அவன் வினவ.....அவள் தவித்துப் போனாள்.அவன் குரலில் இருந்த வலி.....அவளை செயலிழக்கச் செய்தது.



கண்களில் வழிந்த கண்ணீரை.....அவனுக்குத் தெரியாமல் மறைக்கும் பொருட்டு.....முகத்தைத் திருப்பிக் கொண்டவள் மனதில்.....காதலின் பாரம் அதிகரித்தது.



"ப்ளீஸ் ஆது.....!தயவு செய்து என்கிட்ட இப்படி பேசாதீங்க.....!நான் ஏற்கனவே உங்களுடைய காதலுக்கும்.....எங்க அப்பாவுடைய நம்பிக்கைக்கும் இடையில மாட்டிக்கிட்டு தவிச்சிக்கிட்டு இருக்கேன்.....!உங்க குரல்ல தெரியற இந்த வலியை என்னால தாங்கிக்க முடியல.....!',மனதுக்குள் கரைந்து உருகிக் கொண்டிருந்தாள்.



எவ்வளவு காலம் தான் காதலை பொத்தி பொத்தி வைக்க முடியும்.....?மல்லிகைப் பூவை எவ்வளவுதான் மறைத்து வைத்தாலும்.....அதன் மணம் வெளியே வந்து அதைக் காட்டிக் கொடுத்துவிடும்.....!அதைப் போல்தான் காதலும்.....!ஒரு கட்டத்திற்கு மேல் அதை மறைத்து வைக்க முடியாது.....!





அகம் தொட வருவான்....!!!
 

Nirmala Krishnan

Saha Writer
Messages
76
Reaction score
13
Points
6
அத்தியாயம் 32 :



தினமும் காலையும் மாலையும்......டிரைவருடன் காரில் சென்று வருவதை வழக்கமாக்கிக் கொண்டாள் நித்திலா.அன்று நடந்த அந்த நிகழ்வுக்குப் பிறகு.....நித்திலா எதையும் மறுத்துக் கூறவில்லை.



அன்று காலையில் வரும் போதே.....கெளதம் உற்சாகமாக இருந்தான்.வந்ததும் வராததுமாக சுமித்ராவிற்கு போன் செய்தவன்,"ரூம்க்கு வா.......!",என்றான்.



"எதுக்கு.......?",



"காரணம் சொன்னாத்தான் வருவியா.....?வா டி.....!",



"ஹலோ பாஸ்.....!முதல்ல என்ன காரணம்ன்னு சொல்லுங்க.....!",



"ம்.....என் பொண்டாட்டியைக் கட்டிப் பிடிச்சு முத்தம் கொடுக்கணும் போல இருக்கு......!அதுக்குத்தான் கூப்பிடறேன்.....வா.....!",



"அதுக்கு உங்க பொண்டாட்டியை அல்ல நீங்க கூப்பிடணும்......?",அவள் விடாமல் வழக்கடிக்க,



"ஏய்.....!இப்போ மட்டும் நீ வரல....நான் வெளியே வந்து உன் கைப்பிடிச்சு தரதரன்னு இழுத்துட்டு வந்திடுவேன்.....!எப்படி வசதி.....?",அவன் கூலாக கேட்க....இவள் பதறினாள்.



"ஹைய்யோ......!அப்படி எதுவும் பண்ணிடாதீங்க......!நானே வர்றேன்.....!",என்றபடி போனை வைத்துவிட்டு கௌதமின் அறைக்குச் சென்றாள்.அவள் அறைக்குள் காலடி எடுத்து வைத்ததுதான் தெரியும்.....!அடுத்த நொடி கால்கள் தரையில் படாமல் அந்தரத்தில் தொங்க.....அவளைத் தூக்கியிருந்தான் அவன்.....!



"ஹைய்யோ.....!என்ன இது.....?கீழே இறக்கி விடுங்க.....!",தன் இரு கால்களையும் உதைத்தபடி.....அவள் செல்லமாக சிணுங்க,



"என்னடி......?ரூம்க்கு கூப்பிட்டா.....வர மாட்டியா.....?ரொம்பவும்தான் சீன் போட்டுக்கற......?",அவளைத் தூக்கியபடியே மேசையை நோக்கி நடந்தவாறு அவன் கேட்க,



கீழே விழுந்து விடாமல் இருக்க.....தன் இரு கைகளாலும் அவன் தோள்களை வளைத்துக் கொண்டவள்,"பின்ன.....கட்டின பொண்டாட்டியைக் கூப்பிடற மாதிரி.....அடிக்கடி போன் பண்ணி ரூம்க்கு வான்னா.....இப்படித்தான் பண்ணுவேன்......!",வம்பாக கூறினாள் அவள்.



"நீ என் பொண்டாட்டி தானே.....?அதனாலதான் கூப்பிடறேன்.....!",



"ஹலோ சார்.....!அதுக்கு நீங்க என் கழுத்துல மூணு முடிச்சு போடணும்.....!அதுக்கு அப்புறம்தான்.....நான் உங்க பொண்டாட்டி......!",



"மூணு முடிச்சுதானே.....?அதை அப்புறமா போடறேன்.....!இப்போ மூணு முத்தம் வேணா தரட்டுமா.....?",என்றபடி அவனுடைய மேசையின் மீது அவளை அமர வைக்க,



"இதுக்குத்தான்.....நான் உங்க ரூமுக்கே வர மாட்டேன்னு சொன்னேன்......!என்னை விடுங்க.....!",அவள் கீழே இறங்க முயற்சிக்க,



அவளை இறங்க விடாமல் தடுத்தபடி,"எதுக்குத்தான் என் ரூமுக்கு வர மாட்டேன்னு சொன்ன......?",என்று அவளைப் போலவே திருப்பிக் கேட்டான்.



"நான் உள்ளே வந்தாலே.....உங்க கை சும்மா இருக்கறது இல்ல......!",என்று அவள் முணுமுணுக்க,



"ஏண்டி.....?என் கை என்ன பண்ணுது.....?அது பாட்டுக்கு சிவனேன்னு இருக்குது.....!",என்றவனின் ஒரு கரம் அவள் இடையை வருடிக் கொண்டிருக்க......இன்னொரு கரமோ....அவள் கழுத்தை வருடி பல சில்மிஷங்களை செய்து கொண்டிருந்தது.



"இதுக்குப் பேர் என்னவாம்.....?",என்றபடி தன் இடையை வருடிக் கொண்டிருந்த அவன் கையை நறுக்கென்று கிள்ளி வைக்க,



"ஆ......வலிக்குது டி.....!அது பாட்டுக்கு அதுக்குப் பிடிச்ச இடத்துல இருக்குது......!இதுல உனக்கு என்ன பிரச்சனை......?",அவன் கத்த,



"ம்.....இருக்கும்.....!இருக்கும்.....!முதல்ல தள்ளிப் போங்க......!",அவள் அவனைப் பிடித்துத் தள்ள,



"ப்ச்.....எதுக்குடி தள்ளி விடற.....?இன்னும் நீ எனக்கு கொடுக்க வேண்டிய கோட்டா ஒண்ணு பாக்கி இருக்கு......தெரியும்ல.....?",என்றபடி அவன்....அவளை நெருங்க,



"கோட்டா வா.....?என்ன கோட்டா.....?",அவள் விழிக்க,



"ம்.....முத்தக் கோட்டாதான்......!அன்னைக்கு பைல் ரூம்ல தர்றேன்னு சொல்லி ஏமாத்திட்டியல்ல.....?",அவன் குற்றம் சாட்ட,



"அ....அது.....அதுக்கான நேரம் இது இல்ல.....!",முகம் சிவக்கத் தடுமாறினாள் அவள்.



"ஒகே ஹனி......!உனக்கு எப்போ நேரம் வருதோ....அப்போ கொடு......!நான் இப்ப கொடுக்கிறேன்......!",என்றபடி அவன்....அவள் முகம் நோக்கி குனிந்தான்.



அவன்.....அவளது இதழை நெருங்கும் போது.....சட்டென்று.....இருவரின் இதழ்களுக்கும் இடையில் தனது கையை வைத்து தடுத்து விட்டாள் அவள்.



"ஏன் டி....?",ஏமாற்றத்துடன் அவள் முகம் பார்த்து அவன் வினவ......'வேண்டாம்.....!' என்பதாய் தலையசைத்தாள் அவள்.



"ப்ச்.......எதுக்கு டி வேண்டாம்ன்னு சொல்ற.....?",முத்தமிட முடியாத எரிச்சலில் அவன் சற்றுக் கோபமாகக் கேட்க.....அவள் மீண்டும் சிறு புன்னகையுடன்......'வேண்டாம்......!' என்பதாய் தலையசைத்தாள்.



கேட்டது கிடைக்காத எரிச்சலில்.....அவன் முகம் திருப்பி நின்று கொள்ள......மேசையின் மீது அமர்ந்தபடியே அவன் சட்டைக் காலரைப் பிடித்து தன்னருகே இழுத்து.....அவன் முன்னுச்சி முடியை செல்லமாக கலைத்து விட்டவள்,"ஒண்ணு வேண்டாம்ன்னு சொல்லிடக் கூடாதே.....!உடனே......முகத்தை தூக்கி வைச்சுக்குவீங்க......!",அவன் மூக்கைப் பிடித்து செல்லமாக ஆட்ட,



"தெரியுதில்ல......விடுடி.....!",அவன் எகிறினான்.



அவன் கன்னங்களை தன் இரு கைகளாலும் தாங்கியவள்.....அவனது நெற்றியில் மிக மென்மையாக தன் இதழ்களை ஒற்றி எடுத்தாள்.



"இப்போதைக்கு இது போதும்......!சரியா.....?",தன் ஒட்டு மொத்த காதலையும்.....தன் விழிகளில் தேக்கி.....அவன் விழிகளுக்குள் பாய்ச்சியபடி கேட்க,



அவளுடைய 'காதல்' என்னும் மந்திரத்திற்கு கட்டுப்பட்டவனாய்.....அவனுடைய தலை 'சரி.....' என்பதாய் ஆடியது.



இதுதான் காதல்.....!மூச்சுக் காற்றுக்கு ஏங்கித் தவிக்க.....இரு இதழ்கள் ஒன்றோடொன்று பிண்ணிக் கொண்டால்தான்.....முத்தம் என்று அர்த்தம் அல்ல......!மனம் நிறைந்த காதலோடு.....நெற்றிப் பொட்டில் கொடுக்கப்படும் ஒற்றை முத்தத்திற்கு.....இந்த உலகத்தையே கொட்டிக் கொடுத்தாலும் ஈடாகாது.....!



நெற்றியில் காதலோடு வைக்கப்படும் ஒற்றை முத்தத்திற்கான பலம் மிக மிக அதிகமானது......!அந்த முத்தத்தால் எதையும் சாதிக்க முடியும்.....!



அவளுடைய மென்மையான இதழொற்றலில்.....கௌதமின் மனதில் இருந்த ஏமாற்றம் பறந்து போனது.காதலோடு தன்னைப் பார்த்து சிரித்தவனின் முகத்தைத் தன் கைகளில் ஏந்தியவள்,"சரி.....!இப்ப சொல்லுங்க.....!எதுக்கு என்னை கூப்பிட்டீங்க.....?",என்று வினவ,



"இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நம்ம வீட்டுக்கு வந்துடு......!பஸ் ஸ்டாப்ல வெயிட் பண்ணு.....!நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்.....!",



"வீட்டுக்கா.....?எதுக்கு......?",என்றாள் அவள் குழப்பமாக.



"என் தங்கச்சிகிட்ட நம்மள பத்தி சொல்லிட்டேன்......!அவளுடைய அண்ணியை பார்க்கிறதுக்கு அவ ரொம்ப ஆவலா இருக்கா......!",அவள் கன்னத்தைப் பிடித்து செல்லமாக கிள்ளியபடி அவன் கூற,



"ஹை.....சொல்லிட்டீங்களா......!அவங்க என்ன சொன்னாங்க......?",அவள் ஆவலாக கேட்க,



"அவளுக்கு ஒரே சந்தோஷம்.....!'அண்ணியை கூட்டிட்டு வாங்க அண்ணா.....!நான் பார்க்கணும்.....!'ன்னு ஆசையா என்கிட்ட கேட்டாள்......!அவளுடைய செல்ல அண்ணிக்கு அவ கையால விருந்து சமைச்சு போடப் போறாளாம்......!ஸோ.....சண்டே கூட்டிட்டு வரச் சொன்னா.....!",என்றான் புன்னகையுடன்.



"நைஸ் கேர்ள்.....!எனக்கும் அவங்களைப் பார்க்கணும் போல இருக்கு......!ஆனால்.....வீட்டில வேண்டாம்......!வெளியே எங்கேயாவது மீட் பண்ணலாம்......!",



"அவ உன்னை வீட்டுக்குத்தான் கூட்டிட்டு வரச் சொல்லியிருக்கா......!வெளியிலேன்னா.....யாரவது பார்த்து விடுவாங்களோன்னு....நீ பயந்துட்டே இருப்ப....!வீட்டில அந்தப் பிரச்சனை இல்லைல்ல.....!",



"இல்ல.....!வீட்டில் வேண்டாமே......!",அவள் மறுக்க.....அவனுக்கு கோபம் எட்டிப் பார்த்தது.



"ஏன்.....?என்கூட வீட்டுக்கு வர்றதுக்கு உனக்கு என்ன பிரச்சனை......?",என்றான் காட்டமாக.



"இல்ல.....உங்க வீட்டுக்கு வர்றது அவ்வளவா நல்லாயிருக்காது.....!",அவன் கோபத்தைக் கண்டு தயங்கியபடியே கூறினாள்.



"இங்கே பார் சுமித்ரா.....!அது என்னுடைய வீடல்ல......நம்மளோட வீடு.....!நம்ம வீட்டுக்கு வர்றதுக்கு.....நீ இவ்வளவு தயங்கறது எனக்கு சரியாப் படலை.....!நான் அவ்வளவுதான் சொல்லுவேன்.....!",என்றான் அழுத்தமாக.



அவனுடைய கோபத்தில் அவள் தனது பிடிவாதத்தைத் தளர்த்தினாள்.



"சரி.....!வர்றேன்......!ஆனால்.....நீங்க வந்து என்னை பிக்கப் பண்ணிக்க வேண்டாம்......!நானே வந்திடறேன்......",அவள் கூற.....அவன் முறைத்த முறைப்பில் அவள் வாயை மூடிக் கொண்டாள்.



"சரியா காலையில பத்து மணிக்கு பஸ் ஸ்டாப் வந்திடு......!",



"வந்திடறேன்.....!ஆனால்.....ரொம்ப நேரம் வீட்டில ஸ்பெண்ட் பண்ண முடியாது......!சீக்கிரமே கிளம்பிடுவேன்.....!",என்றாள்.



"அதை அப்ப முடிவு பண்ணிக்கலாம்.....!",முணுமுணுத்துக் கொண்டான் அவன்.



"நான் கிளம்பட்டுமா......?",அவள் மெதுவாகக் கேட்க,



"எப்போ பாரு ஓடறதிலேயே குறியா இரு......!போ டி.....!",அவன் சிடுசிடுக்க,



"பின்னே.....!இங்கேயே உங்களோட குடும்பமா நடத்த முடியும்....?",அவளும் படபடத்தாள்.



"ஹே..... இது கூட நல்லாத்தான் இருக்கு......!",என்றபடி அவன் அருகில் வரவும்,



"ம்.....இருக்கும்.....!இருக்கும்.....!முதல்ல போய் வேலையைப் பாருங்க பாஸ்......!நான் கிளம்பறேன்.....!",என்றபடி வெளியே ஓடி விட்டாள்.தனக்குத் தானே புன்னகைத்தபடி வேலையில் ஆழ்ந்தான் கௌதம்.



அன்று உணவு விஷயத்தில் நடந்த பிரச்சனைக்குப் பிறகு.....நித்திலா ஆதித்யனுடன்தான் மதிய உணவைச் சாப்பிட்டாள்.



மதியம் ஒரு மணி ஆகவும்.....தனது சிஸ்டமை ஆஃப் செய்தவள்,"சாப்பிடப் போகலாமா......?",ஆதித்யனிடம் வினவியபடியே எழுந்தாள்.



"ம்.....போகலாம்....!அதுக்கு முன்னாடி உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்.....!",என்றான் அவன் அவளைப் பார்த்தபடி.



"என்ன.....?",



"இனிமேல்.....மதியம் நீ உன் பிரெண்ட்ஸ் கூடவே சாப்பிடப் போ.....!",என்றான்.அவன் கூறியதில் அவள் மனம் சற்று ஏமாற்றமடைந்தது என்னவோ உண்மைதான்.....!அவனுடன் அமர்ந்து சாப்பிடுவதை அவளும் விரும்பித்தான் இருந்தாள்.சாப்பிடும் போது கூட அவன் அமைதியாக இருக்க மாட்டான்.....அவளை சீண்டி சீண்டி சிவக்க வைத்துக் கொண்டே இருப்பான்.....!அவளும் பொய் கோபத்தோடு அவனை முறைப்பதைப் போல் நடித்துக் கொண்டிருப்பாள்.....!அதிலும்....அவனுக்கு வேண்டியதை பார்த்துப் பார்த்து பரிமாறியபடி சாப்பிடுவது அவளுக்கு மிகவும் பிடிக்கும்.....!இப்பொழுது....அவன் இப்படிக் கூறவும்.....அவள் சற்று ஏமாற்றமாக உணர்ந்தாள்.



இருந்தும் அதை வெளிகாட்டிக் கொள்ளாமல்,"ஏன்.....?திடீர் ஞானோதயம்.....?",என்றாள் கிண்டலாக.



"உன் பிரெண்ட்ஸ் கூட நீ டைம் ஸ்பெண்ட் பண்றது இந்த மதியம் ப்ரேக்ல மட்டும்தான்.....!",



"அதைத்தானே நானும் அன்னைக்கு சொன்னேன்......?",குறுக்கே புகுந்தாள் அவள்.



"சொன்னாய்தான்......!அன்னைக்கு நான் உன்னை.....என்கூட சாப்பிட சொன்னப்பவே சரின்னு சொல்லியிருந்தேன்னா......நான் அமைதியா இருந்திருப்பேன்.....!அதை விட்டுட்டு.....கூட சாப்பிட மாட்டேன்னு அடம் பிடிச்சையா.....அதுதான் என்னையும் பிடிவாதம் பிடிக்க வைச்சது.....!நீ மறுக்க.....மறுக்க எனக்கு கோபம்தான் அதிகமாச்சு......!அதுதான் அப்படி நடந்துக்கிட்டேன்......!நீ இனி உன் பிரெண்ட்ஸ் கூடவே ஜாயின் பண்ணிக்க......!நோ ப்ராப்ளம்.....!",



'சரி....!' என்பதாய் தலையசைத்து விட்டு வெளியேறியவளுக்கு ஒன்று தெளிவாகப் புரிந்தது.அவனிடம் ஒன்றை மறுக்கும் போதுதான்.....அவனுடைய பிடிவாதம் அதிகமாகிறது என்பதைத் தெரிந்து கொண்டாள்.இப்பொழுதெல்லாம்.....ஆதித்யனின் ஒவ்வொரு அசைவையும் அவள் தெரிந்து வைத்திருந்தாள்.'அவன் என்ன சாப்பிடுவான்.....?'என்பதில் ஆரம்பித்து.....' அவனுக்கு எந்த விஷயத்தில் மிக அதிகமாக கோபம் வரும்.....?' என்பது வரை அவளுக்கு அத்துப்படி.



ஆனால்.....அவள் ஒன்றை மட்டும் அறிந்து வைத்திருக்கவில்லை.....!அவனிடம் ஒன்றை மறுக்கும் போது.....அவனுடைய பிடிவாதம் அதிகமாவது மட்டுமல்ல.....மிக மூர்க்கமாக மாறிவிடும் என்பதை அவள் அறிந்திருக்கவில்லை.



இவ்வளவு நாள் வேலை அதிகமாக இருந்ததால்.....அறையிலேயே சாப்பிட்டு விட்டதாக.....ஏற்கனவே நித்திலா கூறியிருந்ததால்....சுமித்ரா அதிகமாக கேள்விகள் கேட்கவில்லை.பாலா மட்டும் நித்திலாவை ஒரு மௌனப்பார்வை பார்த்தான்.சில நாட்களுக்குப் பிறகு.....மூவரும் ஒன்றாக அமர்ந்து உண்பதால்.....சுமித்ராவின் சலசலப்பில் அவள் பாலாவின் பார்வையைக் கண்டும் காணாமல் விட்டு விட்டாள்.



அவனும் வாயைத் திறந்து எதுவும் பேசவில்லை.அவன் பார்வை மட்டும் அவ்வப்போது நித்திலாவிடம் பதிந்து மீண்டது.அமைதியாக சாப்பிட்டு விட்டு எழுந்து சென்று விட்டான்.





அகம் தொட வருவான்....!!!
 

Nirmala Krishnan

Saha Writer
Messages
76
Reaction score
13
Points
6
அத்தியாயம் 32 (1) :





"ஹாய் நித்தி.....!என்னடி புடவையில வந்திருக்க.....?என்ன விசேஷம்.......?",வெங்காயக் கலரில் அழகான ஷிபான் புடவையணிந்து......தலைக்கு குளித்திருந்த கூந்தலை தளரப் பிண்ணி.....அதில் மல்லிகைச் சரம் வைத்து.....எந்த விதமான செயற்கை அலங்காரமும் இல்லாமல்.....இயற்கையான மிளிர்வோடு இருந்த நித்திலாவைப் பார்த்து சுமித்ரா கேட்டாள்.



"கோவிலுக்குப் போயிருந்தேன் டி......!மறுபடியும் டிரெஸ் சேன்ஜ் பண்ண டைம் இல்லாம புடவையிலேயே வந்துட்டேன்....!",



"ம்....ரொம்ப அழகாயிருக்க டி....!",சுமித்ரா ரசித்துக் கூற,



"போதும்.....!போதும்.....!காலையிலேயே ஐஸ் வைக்காதே.....!",என்று சிரித்தவள் உண்மையிலேயே அவ்வளவு அழகாக இருந்தாள்.



"உண்மையாலும்தான் டி.....!வேணும்ன்னா யாரையாவது கேட்டுப் பார்க்கலாமா.....?",சுமித்ரா குறும்பாக வினவ,



"ஒண்ணும் வேண்டாம்.....!நீ போய் உன் வேலையைப் பாரு.....!நான் என் வேலையைப் பார்க்க போறேன்.....!",என்றபடி ஓடி விட்டாள்.



நித்திலா.....ஆதித்யனின் காரில் வருவது அலுவலகத்தில் யாருக்குமே தெரியாது.அவள்....தினமும் அலுவலகத்தின் பின்வாசலில் இறங்கிக் கொள்வாள்.



"மத்தவங்க என்ன நினைச்சாதான் நமக்கு என்ன.....?",என்று கோபப்பட்ட ஆதித்யனிடம்,"நான்தான் உங்க கார்ல வர்றேன்ல.....!இதுக்கு மேல இந்த விஷயத்துல நீங்க தலையிடாதீங்க.....!ப்ளீஸ்.....!",என்று பிடிவாதமாக மறுத்து விட்டாள்.ஆதித்யனுக்கு இதில் உடன்பாடில்லை என்றாலும்.....அதற்கு மேல் அவளை வற்புறுத்தாமல் விட்டு விட்டான்.



தேவதை போல் அறைக்குள் நுழைந்தவளை நிமிர்ந்து பார்த்தவன்.....தன் இரு புருவங்களையும் உயர்த்தியபடி மெலிதாக விசிலடித்தான்.அவனுடைய இந்த செய்கையிலேயே.....அவளுடைய உச்சந்தலையில் இருந்து....உள்ளங்கால் வரை 'குப்'பென்று சிவந்து போனது.



"இன்னைக்கு மாமனை ஒரு வழி பண்ணலாம்ங்கிற முடிவோடுதான் வந்திருக்கியா பேபி.....?",ஒரு மாதிரிக் குரலில் அவன் கேட்க,



"எ....என்ன.....?",என்று தடுமாறினாள் அவள்.



"உன்னை சுடிதார்ல பார்த்தாலே.....நான் நானா இருக்க மாட்டேன்.....!இதுல....இவ்வளவு அழகா புடவைக் கட்டிக்கிட்டு....தேவதை மாதிரி என் முன்னாடி நடமாடினால்.....நான் அவ்வளவுதான்.....!ஹ்ம்ம்......!என் பாடு இன்னைக்கு ரொம்பவும் திண்டாட்டம்தான்.....!",அவளைக் கடித்துத் தின்பதை போல் பார்வையிட்டபடி.....சிறு பெருமூச்சுடன் கூறினான் அவன்.



அவனுடைய பார்வையால்.....தன்னுள் ஏற்பட்ட தடுமாற்றத்தை சமாளித்தபடி தனது இருக்கைக்குச் சென்றாள் நித்திலா.



அவன் அப்பொழுதும் 'விடுவேனா....?' என்று அவளைத்தான் பார்வையிட்டுக் கொண்டிருந்தான்.அவள் தன் சிஸ்டமை ஆன் செய்து மெயிலை செக் செய்ய ஆரம்பித்தாள்.இவனோ.....தன் சுழல் நாற்காலியை நன்றாக இவள் புறம் திருப்பிப் போட்டு.....லேசாக சுழன்றபடி......அவளையே அங்குலம் அங்குலமாக மேய்ந்து கொண்டிருந்தான்.



'ஐயோ.....!ஏன்டா இப்படி பார்க்கிற.....?விட்டால்....பார்வையாலேயே என்னை சாப்பிட்டுருவான் போல.....!கொஞ்சமாவது விவஸ்தை இருக்கா.....?இப்படியா....ஒரு பொண்ணை பார்வையாலேயே மேய்வான்.....?',ஒரு மனது அவனைத் திட்டினாலும்.....இன்னொரு மனது அவனது பார்வையிடலை ரசிக்கத்தான் செய்தது.



சிறிது நேரம் அமைதியாக இருந்தவள்.....அதற்கு மேல் பொறுக்க முடியாமல்,"ஏ....ஏன் இப்படி பார்க்கறீங்க....?",என்று கேட்டே விட்டாள்.



அவனோ சிறிதும் அலட்டிக் கொள்ளாமல்,"என் கண்ணு.....நான் பார்க்கிறேன்.....!",என்றான்.



"ஆனால்......உங்க கண்ணு பார்க்கிறது என்னை......?",



"ஸோ.....வாட்......?",அவன் அசால்ட்டாக தோளைக் குலுக்கினான்.



இப்படிக் கூறுபவனிடம் என்னவென்று பேச முடியும்.....!அவள் அமைதியாகத் திரும்பிக் கொண்டாள்.திரும்பிக் கொண்டாலே தவிர.....அவளால் வேலை எதுவும் செய்ய முடியவில்லை.கணினியில் டைப் செய்ததை நான்கு முறை அழித்து.....அழித்து மீண்டும்....மீண்டும் டைப் செய்து கொண்டிருந்தாள்.



அவளுடைய தடுமாற்றத்தை அவனும் கவனித்துக் கொண்டுதான் இருந்தான்.அவனுடைய பார்வையிலேயே அவள் வெட்கிச் சிவந்து கொண்டிருந்தாள்.....!அவளுடைய விரல்கள் கீபோர்டில் டைப் செய்ய முடியாமல் நடுங்கிக் கொண்டிருந்தன.....!மெல்லிய பதட்டத்தில்.....அவளுடைய நெற்றியில் முத்து முத்தாக வியர்வைத் துளிகள் அரும்பியிருந்தன....!



அவனுடைய குறுகுறுவென்ற பார்வையைத் தாங்க முடியாமல்,"இப்படி பா....பார்க்காதீங்க.....ப்ளீஸ்.....!",அவளது குரல் குழைந்து நலிந்து வந்தது.



"ஏன்.....?",என்றான் அவன் சிறு சிரிப்புடன்.



"ஏன்னா.....என்னால முடியல.....!",அவள் குரல் அவளுக்கே கேட்டிருக்குமா என்பதே சந்தேகம்தான்.தனது நடுக்கத்தை மறைப்பதற்காக.....கீழுதட்டை அழுந்தக் கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தவளைப் பார்த்தவனின் மனதில் காதல் பெருகியது.



"பேபி...... !",



"ம்.....",



"நான் ஒண்ணு கேட்கட்டுமா......?",என்றான் மென்மையாக.



"எ.....என்ன.....?",என்றாள் அவள் தடுமாற்றமாக.



"நீ தான் என்னைக் காதலிக்கவே இல்லையே......?அப்புறம் ஏன்.....என்னுடைய பார்வையை உன்னால தாங்க முடியலை.....?",



"இப்படி குறுகுறுன்னு பார்த்தா.....எந்தப் பொண்ணுக்கும் ஒரு மாதிரிதான் இருக்கும்.....!",தடுமாறியபடி சமாளித்தாள்.



அவளைப் பார்த்து ஒரு மார்க்கமாக சிரித்தவன்,"அப்படியா.....!டெஸ்ட் பண்ணி பார்க்கலாமா......?",என்று கேட்க,



"எ....எப்படி.....?",



"நீ வெளியே போய் ஒரு பொண்ணை கூட்டிட்டு வா.....!நான் அவளை குறுகுறுன்னு பார்க்கிறேன்.....!அவ எப்படி ரியாக்ட் பண்றான்னு பார்க்கலாம்.....!ஒகே வா......?",சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு அவன் கேட்க,



"ச்சே......!உங்களுக்கு வெட்கமா இல்லையா.......?என்னைப் பார்த்த அதே பார்வையை......இன்னொருத்திக்கிட்டேயும் பார்க்கறேன்னு சொல்றீங்க......?இதுதான்.....நீங்க என்னைக் காதலிக்கிற லட்சணமா.....?ஆ....ஊன்னா 'நான் உன்னைக் காதலிக்கிறேன் பேபி.....!'ன்னு உருக வேண்டியது.......!இப்ப என்னடான்னா......இன்னொருத்தியை பார்க்கறேன்னு சொல்றீங்க.....?இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி....என்னை கடிச்சு திங்கறது போல பார்த்து வைச்சீங்களே......?அதே பார்வையை.....இன்னொருத்திக்கிட்டேயும் பார்த்துடுவீங்களா......?",அவன் இன்னொரு பெண்ணை பார்ப்பேன் என்று விளையாட்டாகத்தான் கூறினான்.ஆனால்.....அவளுடைய காதல் மனது.....அவளையும் அறியாமல் வெளிப்பட்டு.....அவளுடைய பொறாமையைத் தூண்டி விட.....கோபத்தில் பொங்கி விட்டாள்.



கோபத்தில் மூச்சு வாங்க அமர்ந்திருந்தவளைப் பார்த்தவன்,"என்ன பேபி......?பொறாமையா....?",அவள் கண்களுக்குள் பார்த்தபடி வினவ,



"அ....அதெல்லாம் ஓ...ஒண்ணுமில்ல....!அவன் முகத்தைப் பார்க்க முடியாமல் திரும்பிக் கொண்டாள் அவள்.



காதலோடு ஒட்டிப் பிறந்தது பொறாமை....!காதல் வந்துவிட்டாலே.....பொறாமை என்ற ஒன்று உள்ளே தலைதூக்கி விடும்....!தன் இணை தன்னை மட்டும்தான் பார்க்க வேண்டும்.....தன்னுடன் மட்டும்தான் பேச வேண்டும்.....என்று காதல் கொண்ட மனது விரும்பும்.....!அதை மீறும் போது.....பொறாமை உள்ளுக்குள் தன் வேலையைக் காட்டத் துவங்கி விடும்.....!



அதுதான் நித்திலாவின் விஷயத்திலும் நடந்தது.....!ஆனால்....அதை ஒத்துக் கொள்ள தைரியமின்றி அமைதியாக அமர்ந்திருந்தாள்.



"தூங்கறவங்களை எழுப்பிடலாம் டி.....ஆனால்.....தூங்கற மாதிரி நடிக்கறவங்களை எழுப்ப முடியாது.....!",அவன் ஆற்றாமையோடு புலம்ப.....அவள் உதட்டைக் கடித்துக் கொண்டு அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.



"பட்.....ஒன்திங்க்....!இந்த ஆதித்யன்கிட்ட உன் பருப்பு வேகாது.....!பார்க்கலாம்.....!இன்னும் எவ்வளவு நாள் இப்படி தூங்கற மாதிரி நடிக்கறேன்னு......!",கோபமாகக் கூறியபடி பைலை பார்க்க ஆரம்பித்து விட்டான்.



சிறிது நேரம் அமைதியில் கழிய.....அவளிடம் எதையோ கேட்பதற்காக நிமிர்ந்தவனின் பார்வை அப்படியே நிலைகுத்தி நின்றது.அவள் அணிந்திருந்த உடலுடன் ஒட்டிய ஷிபான் புடவையும்.....அவள் அமர்ந்திருந்த விதமும்.....அவள் உடலின் மொத்த அழகையும் அவன் கண்களுக்கு விருந்தாக்கின.....!



ஒற்றைக் கையை உயர்த்தி மேசையின் மீது வைத்து அவள் அமர்ந்திருந்ததால்.....புடவை மறைக்காத அவளுடைய இடுப்பு பிரதேசம் பளீரென்று கண் சிமிட்டி.....தன் இருப்பை அவனுக்கு எடுத்துக் காட்டின.....!



அந்தக் கள்வனின் திருட்டுத்தனத்திற்கு காற்றும் தன் கரம் நீட்டி உதவி புரிந்தது.ஏசி யிலும்....மின்விசிறியிலும் இருந்து வீசிய மெல்லிய காற்று......அவள் சேலையை லேசாக விலக்கி.....அவள் வயிற்றிலிருந்த மச்சத்தையும் அவன் கண்களுக்கு விருந்தாக்கின.....!



எச்சிலைக் கூட்டி விழுங்கியபடி.....திருட்டுப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தவனை.....சட்டென்று திரும்பிய நித்திலா கண்டுகொண்டாள்.என்ன செய்வது என்று தெரியாமல் திருட்டு முழி முழித்தவன்.....பைலை பார்க்கும் சாக்கில் தலையைக் குனிந்து கொண்டான்.....!'எதுக்கு இப்படி முழிக்கிறார்.....?' என்று நினைத்தவள்.....அதற்கு மேல் அதை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டாள்.



'வேண்டாம்.....!அவளைப் பார்க்காதே.....!',என்ற மூளையின் எச்சரிக்கையையும் மீறி.....தனது பார்வையிடலைத் தொடர்ந்தான் அந்தக் கள்வன்.இப்பொழுது.....அவன் பார்வை உரிமையுடன் அவள் மேனியில் முன்னேற....'நோ ஆதி.....!யூ ஆர் கிராஸிங் யுவர் லிமிட்.....!',என்று மூளை குரல் கொடுக்க.....'என்னவள்தானே.....!பார்த்தால் என்ன தப்பு......?',என்று காதல் கொண்ட மனம்....மூளையை அடக்கி உட்கார வைத்தது.



காதல் கொடுத்த தைரியத்தில் அவன் தன் கண்களை சற்று மேலேற்ற.....அதற்கு மேல் முடியாமல் சடாரென்று எழுந்து விட்டான்.'இதற்கு மேல் ஒரு நொடி இங்கு இருந்தாலும்....என் கன்ட்ரோலை இழந்து விடுவேன்.....!',என்று மனம் மிரட்ட....புயல் வேகத்தில் வெளியேறி விட்டான்.



தன் அழகால்.....ஒருவனை பைத்தியமாக அடித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை அறியாமல்.....'இவர் இவ்வளவு வேகமா எங்கே போறார்.....?',என்று தனக்குத் தானே கேள்வி கேட்டபடி வேலை பார்த்துக் கொண்டிருந்தாள் நித்திலா.



வெளியில் சென்ற ஆதித்யன் வெகு நேரம் கடந்துதான் அறைக்குள் வந்தான்.'நோ ஆதி.....!அவளைப் பார்க்காதே.....!அவளைப் பார்த்தால்தானே பிரச்சனை.....அவளைப் பார்க்காதே.....!',ஒருவாறாக தனக்குள் முடிவெடுத்துக் கொண்டவன்.....மறந்தும் அவள் பக்கம் திரும்பாமல் தன் வேலைகளில் ஆழ்ந்தான்.



ஆனால்.....'இன்று உன்னை ஒரு வழி ஆக்காமல் விட மாட்டேன்.....!',என்று காதல் கங்கணம் கட்டிக் கொண்டு.....வலையை விரித்துக் கொண்டு காத்திருக்கும் போது.....பாவம்....அவனால் என்ன செய்ய முடியும்.....?அவனும் தன் வாயாலேயே சென்று அந்த வலைக்குள் விழுந்தான்.



"நிலா......!அந்த கப்போர்ட்ல R.V குரூப்ஸ் பைல் இருக்கும் பாரு.....எடுத்துக் கொடு.....!",என்று கேட்க...."ம்.....",என்றபடி பைலை எடுக்கச் சென்றாள் நித்திலா.அந்த கப்போர்ட சற்று மேலே இருந்ததால்.....கையை உயர்த்திதான் அந்த பைலை எடுக்க வேண்டி இருந்தது.



அவள் எட்டி எட்டி பைலை எடுத்துக் கொண்டிருக்க.....அவளது புடவையோ......எட்டப்பனாக மாறி.....அவளது வழவழப்பான இடையைக் காட்டிக் கொடுத்தது.



"எடுத்திட்டயா......?",என்றபடி நிமிர்ந்தவனின் கண்கள் மீண்டும் ஒரு சோதனையை சந்தித்தன.'ம்ஹீம்.....!இதுக்கு மேல முடியாது.....!',என்று முணுமுணுத்தபடி.....தனது இருக்கையில் இருந்து எழுந்தவன்.....மெதுவாக நடந்து சென்று.....அவளுக்கு பின்னால் மிக நெருக்கமாக நின்றான்.



தனது புறங்கையால் அவள் இடையை மென்மையாக வருட.....முதலில் ஏதோ பூச்சி என்று அசால்ட்டாக பைலை எடுத்துக் கொண்டு இருந்தவள்.....பிறகு தன் பின்னங்கழுத்தில் உணர்ந்த சூடான மூச்சுக்காற்றில்.....கையிலிருந்த பைலை 'தொப்'பென்று கீழே போட்டாள்.



அவனுடைய ஒரு கரம்.....அவளுடைய பின்னங்கழுத்தை வருடி.....அங்கிருந்த கூந்தலை விலக்க....அவனுடைய இதழ்கள்.....அவளுடைய வெற்று முதுகில் ஊர்ந்து சென்று....பிடரியில் 'இச்'சென்று ஒரு முத்தம் வைத்தது....!அவ்வளவுதான்.....!அதுவரை அவனிடமிருந்து விலகப் போராடியவள்.....அவனுடைய இந்த முத்தத்தில் மொத்தமும் அடங்கிப் போனாள்.



அவனுடைய இன்னொரு கரம்.....அவளுடைய இடையில் பரவிப் படர்ந்து.....அவள் மச்சம் இருந்த பகுதியில் சென்று அழுத்தமாக நின்றது.அவளோ.....அவனுடைய தீண்டலிலும்.....சூடான மூச்சுக் காற்றிலும் சிறிது சிறிதாக தன்னைத் தொலைத்துக் கொண்டிருந்தாள்.



தாளமாட்டாதவளாய் அவள்....அவன் புறம் திரும்ப.....அந்த நிலை அவனுக்கு இன்னும் வசதியாகப் போனது.....!தனது மூக்கு நுனியால்.....அவளது கழுத்துச் சரிவை குறுகுறுக்க வைத்தவன்,"கொல்றேடி.....!என்னால முடியல......!",என்று முணுமுணுத்தான்.



அவன் தன் இதழ்களால்.....அவளுடைய கழுத்து வளைவில் ஒரு அரங்கேற்றம் நடத்திக் கொண்டிருக்க.....அவன் வாயோ,"ஐ ஆம் லூஸிங் மை கன்ட்ரோல் பேபி.....!ஐ கான்ட்.....ஐ கான்ட் ரெசிஸ்ட் மை செல்ஃப்......!",என்று உணர்ச்சியில் பிதற்றியது.



நித்திலாவின் நிலையைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ......?தன்னவனின் அருகாமையில் கரைந்து காணாமல் போய்க் கொண்டிருந்தாள்.அவனுடைய இந்தக் காதல் பிதற்றலில்.....அவளுடைய கை தானாக உயர்ந்து....அவன் பின்னந்தலை முடியை இறுகப் பற்றியது.



அவளுடைய இந்த ஒத்துழைப்பில்.....அவன் தேன் குடித்த சிங்கமானான்......!அவள் கழுத்து சரிவில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த அவனுடைய உதடுகள்.....மெல்ல.....அவளுடைய செவ்விதழ்களை நோக்கி ஊர்ந்தன.....!



"ஐ வான்னா கிஸ் யூ பேபி......!ஐ வான்னா கிஸ் யூ வெரி வெரி பேட்லி......!",என்று கிசுகிசுத்தவனின் விரல்கள் அவளது மேனியில்.....எல்லைகளைக் கடந்து கொண்டிருந்தன.அவனுடைய இந்த தீண்டலும்......தாபம் நிறைந்த இந்தக் குரலும்......வேறொரு மாய உலகத்திற்கு அவளை இழுத்துச் செல்ல......விழிகளை மூடிக் கொண்டாள்.



ஆதித்யனுடைய உதடுகள்.....அவளுடைய இதழ்களை மென்மையாக வருட......அந்த தீண்டலில் படாரென்று இவ்வுலகத்திற்கு வந்தவள்.....தன் ஒட்டு மொத்த பலத்தையும் திரட்டி......அவனைப் பிடித்துத் தள்ளி விட்டாள்.அவளுடைய தள்ளலில் அவன் இரண்டடி பின்னால் சென்று நின்றான்.



உணர்ச்சிகளின் பிடியில் இருந்து மீளாதவனாய்,"வொய் பேபி.......?",என்று கேள்வியெழுப்பினான் கிறக்கத்துடன்.



"இ.....இது வேண்டாம்......!இப்படி வே....வேண்டாம்......!",என்றாள் அவள் தடுமாற்றத்துடன்.



முகம் சிவந்து போய்.....உடல் முழுவதும் நடுக்கத்துடன் நின்றிருந்தாள் அவள்.உணர்ச்சிகள் ஏற்படுத்திய தாக்கத்தை தாங்க முடியாமல்.....அவள் கீழுதடு பற்களின் பிடியில் சிக்கியிருந்தது.அவள் நின்றிருந்த கோலம்.....அவனை ரசிக்கத் தூண்டியது.



லேசாக உதட்டை மடித்துக் கடித்தபடி.....மேலிருந்து கீழ்வரை அவளை ஆராய்ந்தவனின் பார்வை.....அவளுடைய வெண்மையான இடையில் நிலைத்தது.



இவனது அத்துமீறலில்.....அவளது புடவை கசங்கி.....லேசாக விலகியிருந்தது.அவன் பார்வையை உணர்ந்தவள்....அவசர அவசரமாக தனது புடவையை சரி செய்தாள்.அவளது செய்கையை கண்டு கொண்டவனாய் அவனது இதழோரங்கள் சிரிப்பில் சுருங்கின.



"என்னடி.....?பாதுகாப்பு ஏற்பாடெல்லாம் பலமா இருக்கு......?",என்றபடி அவன்.....அவளை நோக்கி ஓரடி எடுத்து வைக்க,



"வே.....வேண்டாம்......!கிட்டே வராதீங்க.....!",ஒற்றைக் கையை உயர்த்தி தடுத்தவளைப் பார்த்தவனின் புருவம் சுருங்கியது.



"ஏன்......?",என்றான் உறுமலாக.



"இ.....இது வேண்டாம்.....!",மனதில் நடந்த போராட்டம் கண்ணீராய் அவள் கண்களில் வழிந்தது.



"ப்ச்.....இப்போ எதுக்கு அழற.....?",அவள் கண்ணீரைப் பார்த்தவன் கோபமாய் அதட்டினான்.அவன் அதட்டியதில் அவள் இன்னும் அதிகமாக அழ ஆரம்பித்தாள்.



"இப்ப எதுக்கு டி அழற.....?நான் என்ன.....உன்னை ரேப்பா பண்ணிட்டேன்......?இன்னும்.....முத்தம் கூட ஒழுங்கா கொடுக்கல.....!அதுக்குள்ள கற்பு பறிபோன மாதிரி அழற.....?",அவளுடைய இதழணைக்க முடியாத கடுப்பில் அவன் கத்தினான்.



அவனுடைய கத்தலுக்குப் பயந்து வேக வேகமாக தனது கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் நித்திலா.



கண்களில் வழிந்த கண்ணீரை அடக்க போராடியபடி நின்றவளைப் பார்த்தவனின் மனம் கனிந்தது.



"உனக்கும் பிடிச்சுதானே டி இருந்தது......?நீயும் என் நெருக்கத்தை விரும்பினதானே......?அப்புறம் ஏன் விலகின......?",அவளுடைய விலகலை ஏற்றுக் கொள்ள முடியாத ஆற்றாமையுடன் அவன் வினவ,



அவள் மறுபடியும்,"இ....இது வேண்டாம்......!",என்று பழைய பல்லவியையே ஆரம்பித்தாள்.



அவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது."ஏண்டி.....இப்படி என் உயிரை வாங்குற.....?இப்படி புடவை கட்டிக்கிட்டு அழகான பேய் மாதிரி என் முன்னாடி வந்து நின்னா.....நானும் மனுஷன்தானே டி......?என்னை உசுப்பி விட்டு வேடிக்கை பார்க்கிறது நீதான்......!",கோபத்தில் கண்டபடி கத்தியவன்.....விறுவிறுவென்று வாசலை நோக்கி நடந்தான்.



கதவைத் திறப்பதற்கு முன்பு நின்று அவளைத் திரும்பிப் பார்த்தவன்,"இனியொரு முறை புடவைக் கட்டிக்கிட்டு என் முன்னாடி வந்துடாதே.....!அதுக்கு அப்புறம் நடக்கற எதுக்கும் நான் பொறுப்பாக மாட்டேன்.....!",அவள் கண்களைப் பார்த்துக் கூறியவன் வேகமாக வெளியேறி விட்டான்.



அவன் சென்று வெகு நேரம் கழித்துதான் தன்னியல்பிற்கு வந்தாள் நித்திலா.அவன் மீசையின் குறுகுறுப்பு.....இன்னும் கழுத்தில் ஊர்வது போல் இருந்தது அவளுக்கு.பட்டும் படாமல் அவன் இதழ்கள் உரசிச் சென்ற தன் இதழ்களைத் தொட்டுப் பார்த்துக் கொண்டாள்.



அவனுடைய அருகாமையில்....ஒவ்வொரு நொடியும் தான் பலவீனமாகிக் கொண்டிருக்கிறோம் என்பதை சுகமாய் உணர்ந்தவள்......அந்த உணர்வு தந்த தாக்கத்தைத் தாங்க முடியாமல்.....மேசையின் மீது தலை கவிழ்ந்து படுத்து விட்டாள்.



அதன் பிறகு.....நித்திலா மாலை கிளம்பும் வரை....ஆதித்யன் அலுவலகத்தின் பக்கம் தலை வைத்துக் கூட படுக்கவில்லை.



அகம் தொட வருவான்.....!!!
 

Nirmala Krishnan

Saha Writer
Messages
76
Reaction score
13
Points
6
அத்தியாயம் 33 :



"கெட் இன்.....!",காரில் அமர்ந்தபடியே முன் பக்க கார் கதவை சுமித்ராவிற்காக திறந்து விட்டான் கெளதம்.



'யாராவது பார்த்து விடுவார்களோ.....?',என்று சுற்றும் முற்றும் பார்த்தபடி அவசரமாக காரில் ஏறி அமர்ந்தாள் சுமித்ரா.



"அதெல்லாம் யாரும் பார்க்க மாட்டாங்க......!மெதுவா ஏறு......!",தன்னருகில் அமர்ந்தவளைப் பார்த்துக் கூறினான் கெளதம்.



"உங்களுக்கென்ன.......?வீட்டுக்கு வாடின்னு ஈஸியா சொல்லிட்டீங்க......!எங்க அம்மா அப்பாவை சமாளிச்சு வர்றதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆகிடுச்சு......!",கார்க்கதவை சாத்தியபடி கூறினாள் அவள்.



காரை வளைத்து சாலையில் திருப்பியவன்,"காதலன்னு வந்துட்டா.....சில பல திருட்டுத்தனங்கள் பண்ணித்தான் ஆகணும்.....!",என்றான்.



"அதுசரி......!பிரெண்ட் வீட்டில பங்க்ஷன்னு சொல்லிட்டு வந்து இருக்கிறேன்.....!மதியத்துக்குள்ள கிளம்பிடணும்......!",



"ம்ம்.....அதை அப்புறம் பார்த்துக்கலாம்......!",



இருவரும் பேசிக் கொண்டே வர......கார் அந்த அப்பார்ட்மெண்ட் வாசலில் சென்று நின்றது.காரை பார்க் செய்துவிட்டு இருவரும் இறங்கி.....மூன்றாவது மாடியில் இருந்த கௌதமின் ஃபிளாட்டை நோக்கிச் சென்றனர்.



லிப்ட்டில் இருந்து வெளியேறியவுடன் இரண்டு வீடு தள்ளி கௌதமின் வீடு இருந்தது.வாசலில் நின்று காலிங்பெல்லை அழுத்தியவன்.....சுமித்ராவிடம் திரும்பி,"இந்த ஏழையின் அரண்மனைக்குள்.....என் மகாராணியை வரவேற்கிறேன்.....!",இடைவரை குனிந்து குறும்பாக வரவேற்றான்.



அதற்குள் கதவு திறக்கப்பட,"வாங்க.....!வாங்க அண்ணி.....!வெல்கம் டூ அவர் ஹோம்......!",ஆர்பாட்டமாய் வரவேற்றாள் கௌதமின் தங்கை திவ்யா.



"சுமி.....!இவதான் என் தங்கச்சி திவ்யா......!",என்று அவளுக்கு அறிமுகப்படுத்தியவன்,



திவ்யாவிடம் திரும்பி,"எப்படி......நம்ம செலெக்ஷன்......?",சட்டைக் காலரை தூக்கி விட்டபடி கேட்க,



"இப்போத்தான் ண்ணா.....வாழ்க்கையில உருப்படற மாதிரி ஒரு நல்ல காரியம் பண்ணியிருக்க......!",நீட்டி முழக்கி கேலியாக திவ்யா கூற,



"ஹே......வாலு.....!",செல்லமாக கடிந்து கொண்டபடி அவளின் காதைப் பிடித்து திருகினான் கெளதம்.



"அண்ணன் தங்கச்சி ரெண்டு பேரும்.....இப்படியே வெளியிலேயே நிற்க வைச்சுப் பேசி என்னைத் திருப்பி அனுப்பிடலாம்ங்கிற ஐடியாவில இருக்கீங்களா......?",சிரித்தபடி சுமித்ரா வினவ,



"ஹைய்யோ அண்ணி......!உள்ளே வாங்க.....!இன்னைக்கு என் கையால உங்களை சாப்பிட வைக்காம.....திருப்பி அனுப்பறதா இல்ல.....!",கலகலப்பாக பேசியபடி சுமித்ராவின் கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றாள்.



"உட்காருங்க அண்ணி.....!",என்று சோபாவைக் கை காட்டியவள்...."வீட்டுக்கு முதல் முறையா வந்து இருக்கீங்க......ஸோ....பர்ஸ்ட் ஸ்வீட் தான் சாப்பிடணும்.....!",என்றபடி சமையலறைக்குள் சென்றவள்.....ஒரு கிண்ணத்தில் குலோப் ஜாமூனை போட்டுக் கொண்டு வந்து கொடுத்தாள்.



"அடிப்பாவி தங்கச்சி......!உன் அண்ணி வந்த உடனேயே....உன் அண்ணனை கண்டுக்காம விட்டுட்டியே.....எனக்கு எங்க குலோப் ஜாமூன்.....?",என்றபடி சுமித்ராவின் அருகில் அமரப் போனவனை.....கைப்பிடித்து தள்ளி நிறுத்திய திவ்யா,



"நீ அங்கே போய் உட்காரு.....!",என்று எதிரில் போடப்பட்டிருந்த சோபாவைக் காட்டியவள்,"நானும் அண்ணியும் நிறைய பேச வேண்டி இருக்கு.....!ஸோ.....டோன்ட் டிஸ்டர்ப் அஸ்.....!",என்றபடி சுமித்ராவிடம் சென்று அமர்ந்து கொண்டாள்.



அதன் பிறகு.....கெளதம் என்ற ஒருவன் அங்கு இருப்பதையே மறந்தபடி......சுமித்ராவும் திவ்யாவும் குடும்பக் கதை.....ஊர்க்கதை......உலகக்கதை என அனைத்துக் கதைகளையும் பேச ஆரம்பித்து விட.....புசுபுசுவென்ற கோபத்துடன் இருவரையும் மாறி மாறி முறைத்தபடி அமர்ந்திருந்தான் கெளதம்.



வேண்டுமென்ற அளவிற்கு அவனைக் கடுப்பேற்றிய திவ்யா.....எழுந்து கொண்டு,"சரிங்க அண்ணி......!நான் போய் சமையல் வேலையைப் பார்க்கிறேன்.....!இதுக்கு மேலேயும் நான் இங்கே இருந்தேன்னா.....உங்க ஆளு என்னை முறைச்சு முறைச்சே சாம்பலாக்கிடுவாரு......!",என்றவள் கௌதமிடம் திரும்பி,"நான் சமையல் செஞ்சு முடிக்கற வரைக்கும்.....நீ அண்ணி கூட பேசிக்கலாம்.....!அதுவரைக்கும் தான் உனக்கு டைம்......!",என்றாள்.



"அடிங்க......!;',என்றபடி கெளதம் அவளை அடிக்க கையை ஓங்க.....கலகலவென்று சிரித்தபடி அவனிடமிருந்து தப்பி ஓடி விட்டாள் அவனுடைய செல்லத் தங்கை.



"சரியான வாலு......!அப்படியே உங்களுக்கு ஆப்போஸிட்......!நீங்க பேசவே மாட்டீங்க......!பட்.....உங்க தங்கச்சி பேச ஆரம்பிச்சா வாயை மூடறது இல்ல......!",அவள் சென்ற வழியையே பார்த்தபடி கூறிய சுமித்ராவின் முகத்தில் அவ்வளவு கனிவு தெரிந்தது.



"உண்மைதான் ஹனி.....!அம்மா அப்பா இறந்ததுக்கு அப்புறம் நான் மீண்டு வந்ததுக்கு முழுக்காரணம் இவள்தான்.....!நம்முடைய உறவு இவ மட்டும் தான் ஹனி......!இவளுக்கு ஒரு அம்மாவா நீ இருக்கணும்ன்னு.....நான் ஆசைப்படறேன்......!",பாசத்துடன் கூறினான் கெளதம்.



"கண்டிப்பா.....இதை நீங்க சொல்ல வேண்டியதே இல்ல.....!",



"ஹ்ம்ம்.....!சரி.....வா......!வீட்டை சுத்தி காண்பிக்கிறேன்......!",என்று அவன் அழைக்க,



"இல்ல.....திவி தனியா சமையல் செய்யறா.....!நான் போய் ஹெல்ப் பண்றேன்......!",என்றபடி அவள் நகர,



"ஹே.....அவளே நமக்கு கொஞ்ச நேரம்தான் டைம் கொடுத்திருக்கா....!நீ நம்ம பெட் ரூமை பார்க்க வேண்டாமா......?கம்.....கம்......!",என்றபடி அவளை இழுத்துச் சென்றான்.



பெரிய ஹால்.....இரண்டு பெட் ரூம்.....சாமி அறை.....கிச்சன்.....பால்கனி என்று வீடு அளவாக அழகாக இருந்தது.



அவனது படுக்கையறைக்கு முன்னால் அவளை அழைத்துச் சென்றவன்."இதுதான் நம்முடைய அந்தப்புரம்....!நமக்கே நமக்கான இடம்.....!உள்ளே வந்து பாரு......!",என்றபடி அவளை இழுக்க,



அவளோ...."ம்ஹீம்.....!நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் உரிமையோடுதான் நம்ம பெட் ரூமுக்கு வருவேன்......!",என்றவள் அந்த ஹாலில் இருந்த பால்கனியில் சென்று நின்று கொண்டாள்.



அவள் பின்னோடு வந்தவன்,"வீடு பிடிச்சிருக்கா......?",மென்குரலில் வினவ,



"ம்.....ரொம்ப அழகா இருக்கு......!",என்றவள் அங்கிருந்த கூடை ஊஞ்சலைப் பார்த்துவிட்டு,"ஹை....ஊஞ்சல்.....!எனக்கு ரொம்ப பிடிக்கும்.....!",ஆசையோடு சென்று அதில் அமர்ந்து கொண்டாள்.



குழந்தையைப் போல் குதூகலித்தபடி அந்த ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்தவள்,"நம்ம பெட் ரூமிலேயும் இதே மாதிரி ஒரு ஊஞ்சல் வாங்கிப் போடுங்க......!",அங்கிருந்த கம்பியில் சாய்ந்து நின்றபடி....அவளை ரசித்துக் கொண்டிருந்தவனைப் பார்த்துக் கூற,



அவனோ....."ம்ஹீம்.....!மாட்டேன்.....!",என்றான் குறும்புச் சிரிப்புடன்.



ஊஞ்சலில் இருந்து எழுந்து அவனருகில் நெருங்கி வந்தவள்,"ப்ளீஸ் மாமா.....!எனக்காக பண்ண மாட்டீங்களா......?",மயக்கும் புன்னகையுடன் கேட்க,



"என்னது......மாமாவா.....?",அவன் குரல் கிறங்கிப் போய் வந்தது.



"ம்.....மாமா தான்.....!என் செல்ல மாமா நீங்க......!",வெட்கத்துடன் கூறியவள்.....அவனுடைய முன்னுச்சி முடியை கலைத்து விட்டாள்.



"ஏய்ய்.....!நீ இப்படி என்னை மாமான்னு கூப்பிடும் போது.....கண்டபடி மூட் ஏறுது டி......!",போதையான குரலில் கூறியவன் அவளை அணைக்க வர.....அவன் சட்டைக் காலரைப் பற்றி இழுத்து.....சட்டென அவன் கன்னத்தில் ஒரு முத்தம் வைத்தவள்.....மின்னல் வேகத்தில் தள்ளி நின்றபடி,"எனக்கும் தான் மாமா.....!",என்று சிரித்தபடியே ஓடி விட்டாள்.



"ஹே.....நில்லு டி.....!",அவள் முத்தத்தில் இருந்து தன்னை சுதாரித்துக் கொண்டு.....அவளைப் பிடிப்பதற்குள் அவள் ஓடிவிட்டாள்.சமர்த்துப் பெண்ணாக திவ்யா அருகில் சென்று நின்று கொண்டாள்.



"நீங்க போங்க அண்ணி......!நான் பார்த்துக்கிறேன்........!",உதவிக்கு வந்த சுமித்ராவை திவ்யா தடுக்க,



"இல்லை திவி.....!எவ்வளவு வேலையை நீ தனியா செய்வ.....நானும் ஹெல்ப் பண்றேன்......!",என்றபடி காய்கறிகளை நறுக்க ஆரம்பித்தாள்.



அவள் பின்னாலேயே சமையலறைக்குள் வந்த கெளதம்.....அவள் வேலை செய்வதைப் பார்த்தபடி.....அங்கிருந்த சமையல் மேடையில் ஏறி அமர்ந்தான்.



"என்னண்ணா......?அண்ணி பின்னாடியே ஓடி வந்துட்ட......?",திவ்யா கேலி செய்ய,



"உங்க அண்ணி தான் என்னை ஏமாத்திட்டு ஓடி வந்துட்டா.....!",தன் கன்னத்தை தடவியபடியே அவன் கூற.....சுமித்ராவோ முகம் சிவக்கத் தலை குனிந்து கொண்டாள்.



இருவரையும் பார்த்த திவ்யா.....மெல்லிய சிரிப்புடன்.....அவர்களை கவனிக்காதது போல் சமையல் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தாள்.



ஒரு கேரட்டை எடுத்து அவளைப் பார்த்தபடியே கடித்தவன்,"வெளியே வா டி.....!",என்று வாயசைக்க,



"போடா மாமா.....!",என்று பழிப்புக் காட்டினாள் அவள்.



அவளது சுழித்த உதடுகளிலேயே தன் பார்வையை நிலைக்க விட்டவன்,"என்னை உசுப்பேத்தி விளையாடறியா டி.....?",என்று அடிக்குரலில் முணுமுணுக்க,



"அப்படித்தான் வைச்சுக்கோங்களேன் மாமா......!",கண்ணை உருட்டினாள் அவள்.



கேலியாக உதட்டை வளைத்து சிரித்தபடி அவளையே பார்த்தவன்,

"அழகே.....அழகே......
உந்தன் இதழ்கள் நான் உண்ணும் உணவே.....!",


என்று பாடியபடியே கையிலிருந்த கேரட்டை கடிக்க,



அவனுடைய செய்கையில் குப்பென்று முகம் சிவக்க.....அவசர அவசரமாகத் திரும்பி அவள் திவ்யாவைப் பார்க்க,



அவளோ கண்ணுங் கருத்துமாய் வேலை செய்து கொண்டிருந்தாள்.



நிம்மதிப் பெருமூச்சுடன் திரும்பி அவள்.....கௌதமை முறைக்க.....அவனோ ஒற்றைக் கண்ணைச் சிமிட்டி....உதடு குவித்து ஒரு முத்தத்தை காற்றில் அனுப்ப......அவள் வெலவெலத்துப் போனாள்.



மீண்டும் பதட்டமாகத் திரும்பி திவ்யாவைப் பார்க்க.....அவள் அடுப்படியில் கவனமாக எதையோ கிளறிக் கொண்டிருந்தாள்.



'ஷப்பா.....!நல்ல வேளை......திவ்யா கவனிக்கலை.....!இவரைப் பார்த்தாதானே வம்பு.....!சுமி.....!நீ பாட்டுக்கு காயை கட் பண்ணு.....!",தனக்குத்தானே சொல்லிக் கொண்டு மும்முரமாக காய்கறியை நறுக்க ஆரம்பித்தாள்.



அவனா சும்மா விடுபவன்.......?கேரட்டை எடுக்கும் சாக்கில்.....அவள் இடுப்பில் நறுக்கென்று கிள்ளி வைக்க......"ஆ...."வென்று அலறியபடி துள்ளிக் குதித்தாள் சுமித்ரா.



"என்னாச்சு அண்ணி.......?",திவ்யா பதட்டமாகக் கேட்க,



"ஹா.....ஒ....ஒண்ணுமில்ல திவி......!எறும்பு க....கடிச்சிடுச்சு......!நீ சமையலைக் கவனி......!",ஒருவாறாக சமாளித்தபடி.....கௌதமை பார்த்து முறைக்க......அவனோ ஒன்றும் அறியாதவனைப் போல் முகத்தை வைத்துக் கொண்டு,

"கண்ணே.....!
உன் சேலைக்குள்ள கட்டெறும்பு புகுந்திடுச்சா......?",


என்று பாடி வைக்க.....அவள் அவசரமாகத் திரும்பிக் கொண்டாள்.



அதன் பிறகும் அவன் அமைதியாக இருக்கவில்லை.அவளை சீண்டிக் கொண்டே அமர்ந்திருந்தான்.அவனுடைய குறும்பையும் சமாளித்தபடி......திவ்யாவிற்குத் தெரியாமல் மறைத்தபடி அவள் போராடிக் கொண்டிருக்க.....ஒருவழியாக திவ்யா சமையலை முடித்திருந்தாள்.அனைவரும் ஆளுக்கொன்றாக உணவுப் பாத்திரங்களைக் கொண்டு சென்று டைனிங் டேபிளில் வைத்தனர்.



"அண்ணா.....!அண்ணி.....!நீங்க ரெண்டு பேரும் சாப்பிட உட்காருங்க......!நான் பரிமாறுகிறேன்.....!",என்றவளைத் தடுத்த சுமித்ரா,



"நீயும் உட்கார் திவி.....!மூணு பேரும் சேர்ந்தே சாப்பிடலாம்.....!",என்றபடி அவளையும் அமர வைத்தாள்.



மூவரும் சிரித்து பேசியபடி சாப்பிட்டுக் கொண்டிருக்க......கெளதம் அங்கேயும் தன் குறும்பை ஆரம்பித்தான்.



சுமித்ராவும் திவ்யாவும் அருகருகில் அமர்ந்திருக்க.....அவர்களுக்கு எதிரில் அமர்ந்திருந்த கெளதம்.....தன் கால்களை எட்டி.....சுமித்ராவின் பாதங்களை வருட.....சாப்பிட்டுக் கொண்டிருந்தவளுக்குப் புரையேறியது.



"பார்த்து......!மெதுவா சாப்பிடுங்க அண்ணி.....!",திவ்யா தண்ணீர் டம்ளரை அவளிடம் நீட்ட.....அதை வாங்கிக் குடித்தவள் கௌதமை முறைத்துக் கொண்டே.....தன் கால்களை நகர்த்தி வைத்துக் கொண்டாள்.



'விடுவேனா.....?',என்பது போல் அவன் மீண்டும் தன் கால்களை எட்டி......அவள் பாத விரல்களை வருடினான்.இம்முறை அவள் விலக முடியாதபடி......அழுத்தமாகப் பற்றிக் கொண்டான்.



திவ்யா அருகில் இருப்பதால் எதுவும் சொல்ல வழியின்றி......திருதிருவென முழித்தபடி அமைதியாக சாப்பிட ஆரம்பித்தாள்.



"ப்ளீஸ்......!விடுங்க......!",கண்களால் அவள் கெஞ்ச,



"முடியாது.....!",சட்டமாக மறுத்தான் அவன்.



அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை.அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை....அவளுடைய கால்கள்....அவனுடைய கால்களுக்குள் சிறைபட்டுக் கிடந்தது.அவன் சாப்பிட்டு முடித்த பிறகுதான்....அவள் கால்களை விடுவித்தான் அந்தக் கள்வன். வாஷ் பேசினில் கை கழுவிக் கொண்டிருக்கும் போது....அவள் பின்னால் வந்து நின்றவன்....அவன் கைகளோடு தன் கைகளையும் சேர்த்து இருவரின் கைகளையும் ஒன்றாகவே கழுவினான்.



கை கழுவி முடிந்ததும்.....அவளது துப்பட்டாவில் தன் கையைத் துடைத்துக் கொண்டவன்.....வாயைத் துடைக்க எடுத்துச் சென்று,"ம்ஹா.....!",என்று வாசம் பிடித்தபடி...."ஹனி.....!உன்னுடைய வாசம்தான் என்னை மயக்கும்ன்னு பார்த்தா.....உன் துப்பட்டாவுடைய வாசமும் என்னை மயக்குது.....!",என்றான் கிறக்க குரலில்.



"மயக்கும்.....!மயக்கும்.....!முதல்ல விடுங்க.....!",அவன் பிடியிலிருந்து தன் துப்பட்டாவை உருவியபடி ஓடி விட்டாள்.



அதன் பிறகு.....திவ்யாவும் சுமித்ராவும் சேர்ந்து சமையலறையை ஒதுக்கி வைத்து விட்டு வர.....மூவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.நேரமாகவும்,"நான் கிளம்பறேன்.....!டைம் ஆச்சு.....!",என்றபடி சுமித்ரா எழ,



"இருங்க அண்ணி.....!மூணு மணிதானே ஆகுது.....சாயந்திரமா கிளம்பலாம்.....!",திவ்யா கூற,



"இல்ல திவி.....!மூணு மணிக்கு வீட்டுக்கு வந்திடறேன்னு சொல்லிட்டு வந்தேன்.....!இன்னொரு நாளைக்கு வர்றேன்.....!",கூறியபடியே கௌதமைப் பார்த்தாள்.



அவனோ அசையாமல் காலைத் தூக்கி டீபாயின் மேல் வைத்தபடி வசதியாக அமர்ந்து கொண்டான்.



"நான் கிளம்பறேன்.....!என்னைக் கொண்டு போய் விடுங்க......!",அவள் மெதுவாகக் கூற,



"ஐந்து மணிக்குத்தான் என் வண்டி கிளம்பும்......!",கூறியவன் தீவிரமாக மொபைலை பார்வையிட்டுக் கொண்டிருந்தான்.



"ப்ளீஸ்.....!நான் கிளம்பணும்......!இவ்வளவு நேரம் இருந்ததே பெரிசு......!",கையைப் பிசைந்தபடி அவள் கூற.....திவ்யாவும் அவள் நிலையை உணர்ந்து,



"போய்ட்டு இன்னொரு நாள் வரட்டும் அண்ணா.......!அவங்க வீட்டைப் பத்தியும் யோசிச்சுப் பார்க்கணும்ல......!",என்று மெதுவாகக் கூறினாள்.



இருவரையும் பார்த்தவன்,"எப்படியோ.....லேடீஸ் ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்துட்டீங்க......!நான் சொன்னா கேட்கவா போறீங்க......?",என்றபடி கார் சாவியை எடுத்துக் கொண்டு வெளியேறினான்.அவனுடைய கோபத்தை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.இருந்தும் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருந்தாள் சுமித்ரா.



திவ்யாவிடம் விடைபெற்றுக் கொண்டு வெளியே வந்து காரில் ஏறி அமர்ந்தாள்.அவன் அமைதியாக காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.



"இப்ப எதுக்கு இவ்ளோ கோபப்படறீங்க.....?என் நிலைமையும் புரிஞ்சுக்கோங்க......!",



"எதுடி உன் நிலைமை.....?லவ் பண்றோம்னுதான் பேரு.....ஆனால்.....எவ்வளவு டைம் வெளியே போயிருப்போம்......?நீயே சொல்லு......?",



"வெளியே போய் சுத்துனாதான் லவ் பண்றோம்ன்னு அர்த்தமா.....?",



"இல்லைதான்.....!ஆனால்.....அந்த சின்ன சின்ன சந்தோஷங்களையும் நாம இழந்துக்கிட்டு இருக்கோம்.....!உனக்குத் தெரியுதா......இல்லையா......?",அவன் கத்த.....அவள் அமைதியாகி விட்டாள்.



அவன் கூறுவதும் உண்மைதானே......!காதல் சொன்ன பிறகு இருவரும் சேர்ந்து வெளியே சென்றதில்லை.



"என்ன பண்றதுன்னு நீங்களே சொல்லுங்க......!என் அம்மா அப்பாக்கு தெரியாம நான் எப்படி வெளியே வர முடியும்.....?",அவள் அவனிடமே நியாயம் கேட்க,



"நான் உங்க அப்பாக்கிட்ட வந்து பொண்ணு கேட்கிறேன் டி......!',என்றான் அவன் அமைதியாக.



மேலும்,"அதுதான் சரி.....!நம்ம கல்யாணத்துக்கு அப்புறம்.....நீ யாருக்கும் பயப்பட வேண்டியதில்லைல்ல......?நான் கூடிய சீக்கிரமே உங்க வீட்டுக்கு வர்றேன்.....!",அவன் உறுதியாகக் கூற.....அவள் சற்று அதிர்ச்சியடைந்தாள்.



"இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்......!நானே அவங்ககிட்ட நம்ம விஷயத்தைப் பத்தி சொல்லி புரிய வைக்கிறேன்......!",அவனிடம் கூறி விட்டாளே தவிர.....அவளுக்கும் இந்த விஷயத்தை வீட்டில் சொல்வதற்கு பயமாகத்தான் இருந்தது.



"இன்னும் எவ்வளவு நான்.....?",என்றான் அவன் பட்டென்று.



"திவ்யா இருக்கால்ல......அவளுக்கு கல்யாணம் முடிச்சிட்டு....நம்மை பத்தி யோசிக்கலாம்......!",தங்கையின் பெயரைக் கேட்டதும் அவன் சற்று அமைதியானான்.



"அவகிட்ட நான் இதைப்பத்தி பேசிட்டேன்......!அவ மேல படிக்கணும்ன்னு சொல்றா.....!",



"எதுவா இருந்தாலும்.....இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் மாமா.....!ப்ளீஸ்......!என் குடும்பத்தை ஃபேஸ் பண்றதுக்கு.....எனக்கு கொஞ்சம் டைம் வேணும்......!ப்ளீஸ்....!",என்று கெஞ்ச.....அவளுடைய 'மாமா' என்ற அழைப்பில் அவன் சற்று இளகினான்.



"ஹ்ம்ம்.....!நீ மாமான்னு கூப்பிட்டதுக்கு அப்புறமும்......என்னால கோபத்தை இழுத்துப் பிடிச்சிருக்க முடியுமா......?",என்று கண்சிமிட்ட......அங்கு......கோப நிலை மாறி....காதல் அலை அடிக்கத் தொடங்கியது.



...................................................................................................



ஆற்றில் வளைந்து நெளிந்து ஓடும் நீரோட்டம் போல்.....நாட்கள் அதன் போக்கில் மிக அழகாக ஓடிக் கொண்டிருந்தது.



நாளொரு வண்ணமும்.....பொழுதொரு மேனியுமாக கெளதம்....சுமித்ராவின் காதல் வளர்ந்து கொண்டிருந்தது.மறுபுறம்....ஆதித்யன் ஒவ்வொரு நொடியும் நித்திலாவின் மேல் தன் காதலைக் கொட்டிக் கொண்டிருக்க.....அவனுடைய காதலில் அவள் மூச்சடைத்துப் போனாள்.அவனுடைய ஒவ்வொரு அசைவையும் ரசித்துத் தனக்குள் பத்திரப்படுத்திக் கொண்டாள்.ஒவ்வொரு நொடியும்....அவன் மேல் பொங்கிப் பெருகும் காதலை.....வெகு சிரமப்பட்டு....தனக்குள் மூடி மூடி வைத்துக் கொண்டிருந்தாள்.



அந்த மூடி வைக்கப்பட்டக் காதல்.....தன்னுடைய அனைத்துத் தடைகளையும் உடைத்து எறிந்து விட்டு.....உயிர் பெறும் நாளும் வந்தது.



"இல்ல.....நான் வர முடியாது......!",வழக்கம் போல் நித்திலா மறுத்துக் கொண்டிருக்க,



"நீ வந்துதான் ஆகணும்......!",வழக்கம் போல் பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்தான் ஆதித்யன்.



என்ன விஷயமென்றால்.....ஊட்டியில் ஒரு எஸ்டேட் விலைக்கு வந்திருக்கிறது....அதை வாங்குவதற்காக ஆதித்யன் அங்கு செல்ல வேண்டியிருக்கிறது.அது மட்டுமல்லாமல்.....ஊட்டியில் ஒரு ஹோட்டல் கட்ட வேண்டும் என்று ஒரு நிறுவனம் இவர்களை அணுக.....அது சம்பந்தமான வேலைகளைப் பார்ப்பதற்கும் அவன் அங்கு செல்ல வேண்டிய நிலைமை.....!



நம் ஹீரோதான்.....நம் நாயகியைப் பிரிந்து இருக்க மாட்டானே......?வார விடுமுறையான.....இரண்டு நாட்கள் அவளைப் பிரிவதற்கே மூக்கால் அழுபவன்....!இதில் ஐந்து நாட்கள் பிரிந்திருக்க வேண்டுமென்றால்......?அதனால்தான்.....அவளும் உடன் வர வேண்டும் என்று பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்தான்.



"புரிந்துதான் பேசறீங்களா......?இங்க பக்கத்துல இருக்கற சைட்டா.....?நீங்க கூப்பிட்ட உடனே வர்றதுக்கு......?ஊட்டிக்கெல்லாம் வர முடியாது......!",அவள்....அவனைத் திட்ட,



"நான் என்ன உன்னை ஹனிமூன் கொண்டாடறதுக்கா கூப்பிடறேன்.......?வேலை விஷயமாகத்தானே கூப்பிடரேன்......!",அடம் பிடித்துக் கொண்டிருந்தான் அவன்.



"என்ன......?ஹனிமூனா.....?அதுக்கு வேற கூப்பிடுவீங்களா......?ஆசைதான்.....!",



"ஹ்ம்ம்.....ஆசைதான்.....!நீதான் ஒரு முத்தம் கொடுக்க கூட விட மாட்டேங்கிறாயே......!வேணும்ன்னா இந்த ஊட்டி ட்ரிப்பை.....ப்ரீ ஹனிமூன்னா செலிபிரேட் பண்ணலாமா.....?எனக்கு ஒகே தான்.....!",குறும்பாக கண் சிமிட்டியபடி கேட்க.....அவள் முகம் செந்தாமரையாய் சிவந்து போனது.



தன் முகச் சிவப்பை மறைத்தபடி,"எப்போ பாரு இதே பேச்சுதான்.......!",அவள் போலியாய் சிடுசிடுக்க,



"ஹ்ம்ம்.....எனக்கும் ஆக்ஷன்ல இறங்கணும்ன்னு ஆசைதான் பேபி.....!நீதான் பக்கத்துல வந்தாலே அழ ஆரம்பிச்சிடறயே......!",பெருமூச்சுடன் அவன் கூற.....அவளுக்கு சிரிப்பு வந்தது.



இருந்தும் வெளிக்காட்டிக் கொள்ளாமல்,"அது.....அந்த பயம் இருக்கட்டும்.....!",மிரட்டினாள் அவள்.



அவளை ஒரு மார்க்கமாகப் பார்த்தவன்,"பயமா....?எனக்கா.....?நெவர் பேபி.....!நான் நினைச்சா இப்பவே உன்னை......",அவன் ஏதோ சொல்ல வர.....சரியாக அந்த நேரம் பார்த்து கெளதம் உள்ளே நுழைந்தான்.



"ம்ப்ச்.....!சரியான பூஜை வேளைக் கரடி.....!",ஆதித்யன் முணுமுணுக்க,



"ஹி.....ஹி.....மச்சான்.....!நீ என்னைக் கரடின்னு திட்டறது என் காதில் விழுகுது......!இருந்தாலும் நோ வே......!நீ இந்த பைல்ல சைன் பண்ணிக் கொடு......!நான் போயிடறேன்......!",என்றபடி பைலை நீட்ட.....நித்திலா வாய்க்குள் சிரித்துக் கொண்டாள்.



"நோ தங்கச்சி......!அண்ணனைப் பார்த்து சிரிக்க கூடாது......!",கெளதம் சொல்ல,



"டேய்.....!உங்க அண்ணன் தங்கச்சி பாசத்தையெல்லாம் வெளியில போய் வைச்சுக்கோங்க.....!என் முன்னாடி சீன் கிரியேட் பண்ணாதீங்க......!",என்று எரிந்து விழுந்தான்ஆதித்யன்.அவனுக்கு அவன் கோபம்.கௌதமுடன் நெருங்கிப் பழகுபவள்.....தன்னிடம் பழக மாட்டேன் என்கிறாளே என்ற வயிற்றெரிச்சலில் கத்தினான்.



அவன் எரிந்து விழவும்.....கப்பென்று வாயை மூடிக் கொண்டாள் நித்திலா.



"நீ ஃபீல் பண்ணாதே ம்மா.....!அவனுக்குப் பொறாமை......!",சிரித்தபடியே கெளதம் நித்திலாவைப் பார்த்து கூற,



"ஆமாண்டா.....பொறாமைதான்......!பைலை கொடு.....!",அவன் கையிலிருந்த பைலைப் பிடுங்கி படிக்க ஆரம்பித்தான்.



தேவையான இடங்களில் தன் கையெழுத்தைப் பதித்துக் கொண்டே,"மச்சான்.....!ஊட்டில நமக்கு ஒரு எஸ்டேட் இருக்கல்ல......அதுக்குப் பக்கத்துல இருக்கற எஸ்டேட் விலைக்கு வந்திருக்கு......!வாங்கலாம்ன்னு ஒரு ஐடியா இருக்கு......!",என்றான் ஆதித்யன்.



"ம்.....நல்ல ஐடியா தான்.....!வாங்கிப் போடு.....!",



"அப்புறம்.....ஊட்டில ஒரு ஹோட்டல் கட்ட வேண்டி.....நமக்கு ஒரு ப்ராஜெக்ட் வந்திருக்கல்ல.....அது ரிலேட்டடாவும் சில வேலைகள் இருக்கு......!ஸோ.....நாளைக்கு நானும் நித்திலாவும் ஊட்டிக்கு கிளம்பலாம்ன்னு இருக்கோம்.....!",கௌதமை பார்த்தவாறே கூறினான் ஆதித்யன்.



"அடப்பாவி.....!உண்மையாலுமே வேலை விஷயமாகத்தான் ஊட்டிக்கு போறியா டா......?",கெளதம் வம்பிழுக்க,



"டேய்.....!வேலை விஷயமாகத்தான் போறோம்......!வர்றதுக்கு நாலைந்து நாளாகும்......கம்பெனியை பார்த்துக்க......!",என்றான் அசால்ட்டாக.



"ஹ்ம்ம்.....நீ நடத்துடா......!பக்கத்தில இருக்கற பார்க்குக்கு கூட நான் இன்னும் என் ஆளைக் கூட்டிட்டி போனதில்லை.....!நீ என்னடான்னா ஊட்டி வரைக்கும் போற.....!உனக்கு எங்கேயோ மச்சம் இருக்குது டா.....!",நித்திலாவிற்கு கேட்டு விடாதபடி ஆதித்யனிடம் அவன் புலம்ப,



"போடா.....!நீ வேற.....என் கஷ்டம் எனக்குத்தான் தெரியும்.....!",என்று முணுமுணுத்தான்.



'இவர் எப்படி என்னைக் கேட்காமல் முடிவெடுக்கலாம்......?நான் வர்றேன்னு சொல்லவே இல்லையே......!எப்ப பாரு......இதே மாதிரிதான் ஆர்டர் போட வேண்டியது......!',மனதுக்குள் ஆதித்யனை தாளித்துக் கொண்டிருந்தாள் நித்திலா.



"பட் ஒன்திங்க் டா மச்சான்.....!ஐந்து நாள் ரெண்டு பேரும் தனியா இருக்கப் போறீங்க.....உன் கோபத்தை அவ மேல கொட்டிடாதே......!பாவம்....!சின்னப் பொண்ணு.....!தாங்கமாட்டா......!உனக்குப் பிடிக்காத விஷயம் நடந்தாலும்.....கொஞ்சம் பொறுமையா ஹேண்டில் பண்ணப் பாரு.....!",பொறுப்பான நண்பனாய் அறிவுரை கூறினான் கெளதம்.



"அடடா.....!உன் தங்கச்சியை பத்திரமா கொண்டு வந்து உன்கிட்ட சேர்க்கிறேன்.....போதுமா.....?",



இருவரும் மெதுவாகப் பேசிக் கொண்டிருந்ததால்.....என்ன பேசுகிறார்கள் என்று நித்திலாவிற்குத் தெரியவில்லை.



கெளதம் கிளம்பியதும்,"நான் ஊட்டிக்கு வர்றேன்னு சொல்லவே இல்லையே.......?நீங்க பாட்டுக்கு கெளதம் அண்ணாகிட்ட.....என்னென்னமோ சொல்றீங்க.....?",என்று படபடக்க,



அவளை நிதானமாக பார்த்தவன்,"ஷ்.....பேபி.....!வீணா ஆர்க்யூ பண்ணாதே.....!நீ என்ன சொன்னாலும்....நான் உன்னைக் கூட்டிட்டுப் போறது உறுதி.....!ஸோ....நோ மோர் ஆர்க்யூமெண்ட்ஸ்.....!",அவன் குரல் உறுதியாக வெளிவந்தது.



"என் நிலைமையை பத்தி யோசிக்கவே மாட்டீங்களா.....?என் வீட்டில இதுக்கு எல்லாம் ஒத்துக்க மாட்டாங்க......!",



"லுக் நிலா.....!நீ என் செக்ரெட்டரி......!வேலை விஷயமா என்கூட நீ பல இடங்களுக்கு வர வேண்டி இருக்கும்......!இதையெல்லாம் நீதான் உன் வீட்டில சொல்லிப் புரிய வைக்கணும்......!",



"நான் என்ன சொன்னாலும்.....அவங்க இதுக்கு ஒத்துக்க மாட்டாங்க.....!",



"சரி.....!போன் போட்டுக் கொடு.....!நான் பேசி சம்மதம் வாங்கறேன்.....!",அவன் தன் முடிவில் உறுதியாக இருக்க.....வழக்கம் போல் அவள்தான் பின்வாங்க வேண்டியிருந்தது.



"நீங்க பேச வேண்டாம்.....!நானே பேசிக்கிறேன்.......!",அவளும் அவனுடன் செல்லும் பயணத்தை விரும்பத்தான் செய்தாள்.அதனால்தான்.....அவ்வளவாக அவனை எதிர்க்காமல் இந்த விஷயத்திற்கு சம்மதம் சொன்னாள்.



காதல் வந்தாலே கள்ளத்தனமும் வந்து விடும் அல்லவா.....?அவள் மனதிலும் அந்தக் கள்வன்.....கள்ளத்தனத்தை புகுத்தியிருந்தான்....!அதன் விளைவு.....அன்று இரவு அவள் தன் பெற்றோரிடம்....'ஊட்டிக்கு போக வேண்டும்.....!' என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தாள் போனில்.....!



அவள் பயந்தது போலவே.....அவள் அம்மா இதற்கு சம்மதிக்கவில்லை.



"அவ்வளவு நாள் வெளியே தங்க வேண்டாம்.....!",என்று மறுத்தார்.



இவள் வேலை விஷயம் என்று எவ்வளவோ எடுத்துக் கூறியும்.....அவர் விடாப்பிடியாய் மறுத்து விட்டார்.அம்மா சம்மதிக்கவில்லை என்றதும்.....அப்பாவிடம் கெஞ்ச ஆரம்பித்தாள் அவள்.



"அப்பா.....!ப்ளீஸ் ப்பா.....!இங்கே இருக்கற ஊட்டி தானே......!ஆதித்யன் சார் கூட போய்ட்டு.....அவரு கூடவே திரும்பி வந்துடப் போறேன்......!",



"எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை ம்மா.....!உன் அம்மாதான் ஒத்துக்க மாட்டேங்கறா.....!",



"நீங்க அம்மாகிட்ட எடுத்துச் சொல்லி.....சம்மதம் வாங்குங்க ப்பா.....!ப்ளீஸ்.....!என் செல்ல அப்பால்ல.....!ப்ளீஸ்.....ப்ளீஸ்.....!",என்று செல்லம் கொஞ்ச.....மகள் இவ்வளவு 'ப்ளீஸ்' போட்டதற்கு பிறகும் அவர் அமைதியாக இருப்பாரா.....?



"சரி......!லைன்லேயே இருடா.....!உன் அம்மாகிட்ட பேசிப் பார்க்கிறேன்......!",என்றவர்.....தன் அருகில் அமர்ந்திருந்த மனைவியை,"மீனு.....!",என்றழைக்க,



"அவளுக்கு வக்காளத்து வாங்கிக்கிட்டு என்கிட்ட வராதீங்க......!இந்த விஷயத்துல யார் என்ன சொன்னாலும்.....நான் கேட்க மாட்டேன்......!",என்றார் பட்டென்று.



"வேலைன்னு வந்துட்டா நாளும் இருக்கத்தான் டி செய்யும்......!அதுவும் அவ செக்ரெட்டரி போஸ்ட்ல இருக்கிறா.....!அந்த போஸ்ட்டுக்கு உண்டான வேலையை அவ பண்ணித்தான் ஆகணும்......!",



"அப்படின்னா.....அவ அந்த வேலைக்கே போக வேண்டாம்......!வேலையை விடச் சொல்லுங்க......!",



"புரியாம பேசாதே.....!இப்போ எதுக்காக அவளை ஊட்டிக்கு அனுப்ப மாட்டேன்னு சொல்ற.....?",



"அவளால அங்க தனியா சமாளிக்க முடியாதுங்க.....!",அவர் குரலில் தாய்மையின் பரிதவிப்பு தெரிந்தது.



மனைவியைக் கனிவுடன் பார்த்தவர்,"மீனு.....!அவ இன்னும் சின்ன பொண்ணு இல்ல.....!நாளைக்கே கல்யாணம் பண்ணி.....அவளை வேற வீட்டுக்கு அனுப்பணும்.....!இன்னும் அவளை உன் முந்தானைக்குள்ளேயே பொத்தி பொத்தி வைச்சுக்கிறது நல்லதுக்கில்ல......!தனியா விட்டுப் பழக்கலாம்.....!அவளால அவளைப் பார்த்துக்க முடியும்.....!",நிதர்சனத்தை எடுத்துக் கூறினார் கிருஷ்ணன்.



அவர் கூறுவதும் உண்மைதானே......!ஒரு கட்டத்திற்கு மேல் குழந்தைகளை அவர்களுக்கான வாழ்க்கையை வாழ பழக்க வேண்டும்......!அவர்களுக்கான சுதந்திரத்தை.....அவர்கள் ஏற்படுத்திக் கொள்ள.....பெற்றவர்கள் அனுமதிக்க வேண்டும்......!



இன்னும் குழப்பம் நீங்காமல் அமர்ந்திருந்த மனைவியைப் பார்த்தவர்,"இன்னும் என்னம்மா தயக்கம்.....?",கனிவுடன் கேட்டார் அவர்.



"ம்....எப்படியோ அப்பாவும் பொண்ணும் சேர்ந்து என்னை சம்மதிக்க வைச்சுட்டீங்க.....?",புன்னகையோடு கூறியவர் கணவனிடமிருந்த போனை வாங்கி,



"ஹே வாலு......!நாங்க ரெண்டு பேரும் பேசறதை ஒட்டுக் கேட்டுட்டு இருக்கிறயாக்கும்......!சரி....ஊட்டிக்கு எப்ப கிளம்பணும்......?",அக்கறையுடன் விசாரிக்க ஆரம்பித்தார்.



"நாளைக்கு மதியம் கிளம்பற மாதிரி இருக்கும் ம்மா.....!",



"சரி.....சரி.....!அங்கே போய் கவனமா இருக்கணும்......!கண்ட நேரத்துல வெளியே சுத்தி காய்ச்சலை இழுத்து விட்டுக்காதே......!பத்திரமா போய்ட்டு வாங்க.....!",



"தேங்க் யூ ஸோ மச் மம்மி.....!நான் என்னை நல்லா பார்த்துக்கிறேன்......!போதுமா.....?நீங்க கவலைப்படாம இருங்க......!",



"ம்ம்.....நேரத்துக்கு சாப்பிட்டு விடுடா.....!கவனமாக போய்ட்டு வாங்க......!",இன்னும் சில பல அறிவுரைகளை வழங்கி விட்டுத்தான் போனை வைத்தார் மீனாட்சி.



ஆதித்யனுடன் செல்லப் போகும் பயணத்தை எண்ணி.....அவள் மனதிற்குள் பட்டாம்பூச்சி பறந்தாலும்.....இன்னொரு மனமோ.....'இது சரிதானா.....?வேலை விஷயம் என்பதைத் தாண்டி அவனுடன் செலவழிக்கப் போகும் நிமிடங்களை நீ ரசிக்கிறாய்....அதற்காகத்தான் உன் அம்மாவிடம் போராடி சம்மதம் வாங்கியிருக்கிறாய்.....! 'என்று இடித்துரைத்தது.



ஆனால்.....மூளையின் கூக்குரலை கேட்கும் நிலையில் எல்லாம் அவள் இல்லை....!அந்தக் கட்டத்தை அவள் எப்பொழுதோ தாண்டியிருந்தாள்.....!காதல் அவளைத் தாண்ட வைத்திருந்தது.....!ஓயாமல் மனதுக்குள் சப்தமிடும் காதல்.....மூளையின் ரீங்காரத்தை அடக்கி ஒடுக்கி விடும்....!



எது எப்படியானாலும் அந்த பயணத்தை அவள் ஆவலோடு எதிர்பார்த்தாள்.....!அந்தப் பயணம் அவள் வாழ்க்கைப் பாதையையே மாற்றப் போகிறது என்பதை அறியாமல் உற்சாகமாய் உறங்கிப் போனாள் நித்திலா.....!





அகம் தொட வருவான்....!!!
 

Nirmala Krishnan

Saha Writer
Messages
76
Reaction score
13
Points
6
அத்தியாயம் 34 :

"உதட்டைச் சுழித்து சிரிக்கும் போது
உயிரில் வெடி வைக்கிறாய்.....!
ஒவ்வொரு வார்த்தை முடியும் போதும்
எதற்கு பொடி வைக்கிறாய்.....?
அடிக்கடி நகம் கடிக்கிறாய்.....!
என் எதிரிலே முகம் சிவக்கிறாய்.....!"


பாடலுடன் கூட சேர்ந்து மெலிதாக விசிலடித்தபடி காரை ஓட்டிக் கொண்டிருந்த ஆதித்யன்.....தன்னருகில் அமர்ந்திருந்த நித்திலாவைத் திரும்பிப் பார்த்தான்.சரியாக அதே நேரம் அவளும் அவனைத் திரும்பிப் பார்க்க......ஆதித்யன் ஒற்றைப் புருவத்தை மட்டும் உயர்த்தி 'என்ன.....?' என்றான் கண்ணசைவிலேயே.

"எ....என்ன.....?",அவளும் திருப்பிக் கேட்டாள்.

"பாட்டு எப்படி.....?உன் நிலைமையை சொல்ற மாதிரியே இல்ல......?",அவன் கண்ணடிக்க....அவள் முகம் சிவக்க தலை குனிந்து கொண்டாள்.

அந்த நெடுஞ்சாலையில் கார் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது.இருவருக்குமான ஊட்டிப் பயணம் ஆரம்பமாகியிருந்தது.இருவரின் வாழ்க்கைப் பாதையையும் ஒன்றோடொன்று பிணைக்கப் போகும் பயணம் அது.....!

"ட்ரெயின் புக் பண்ணியிருக்கலாம்ல......?காரை ஏன் தேர்ந்தெடுத்தீங்க.....?",நித்திலா கேட்க,

"ஏன்.....?உனக்கு கார்ல ட்ராவல் பண்ண பிடிக்காதா....?",அவன் வினவினான்.

"பிடிக்காதுன்னு இல்ல......!அவ்வளவு தூரம் நீங்க ஒருத்தரே ட்ரைவ் பண்ணணும்ல......!டயர்டாகிடும்.....அதுக்குத்தான் கேட்டேன்......!",

அவளைப் பார்த்து மென்மையாக புன்னகைத்தவன்,"எனக்கு லாங் ட்ரைவ் போறதுன்னா ரொம்ப பிடிக்கும்......!அதுவும் நீ கூட இருக்கும் போது சொல்லவே வேண்டாம்......!ஐ லவ் திஸ் ட்ராவல்......!",ரசித்துச் சொல்ல அவள் அமைதியாகிவிட்டாள்.

"உடனே அமைதியாகிடுவேயே......!சரி சொல்லு......!உன் பேரண்ட்ஸை எப்படி சம்மதிக்க வைச்ச.......?",அவன் பேச்சை வளர்க்க,

"எங்க அம்மா ஒத்துக்கவே மாட்டேன்னு சொல்லிட்டாங்க......!அப்புறம் என் அப்பாதான் என் அம்மாகிட்ட பேசி சம்மதிக்க வைச்சாங்க......!",

"ஹ்ம்ம்......!அப்போ நம்ம கல்யாணத்துக்கும் உங்க அப்பாவை தாஜா பண்ணினா போதும்ன்னு சொல்ற.....உங்க அம்மாவை அவரே சமாளிச்சிக்குவாரு.......!அப்படித்தானே......?",குறும்பாக அவன் கேட்க,

"ஆனாலும் உங்களுக்கு கற்பனை சக்தி ரொம்பவும் அதிகம்தான்.....!நடக்காத.....நடக்க முடியாத விஷயத்தைப் பத்தியெல்லாம் யோசிக்கறீங்களே......?",கேலியாக அவள் உதட்டை மடிக்க.....அவளைப் பார்த்து ஒரு மாதிரியாக புன்னகைத்தவன்.....ஒன்றும் பேசாமல் சாலையில் கவனமானான்.

அவன் அமைதியாக இருக்கவும்.....அவனை நிமிர்ந்து பார்த்தவள்,"ஏன் அமைதியாகிட்டீங்க.....?",மெதுவாக வினவ,

தீர்க்கமான பார்வையொன்றை அவளை நோக்கி வீசியவன்,"உன் சம்மதம் இல்லைன்னாலும் கூட.....நம்ம கல்யாணம் நடக்கும்.....!இது உறுதி.....!",என்றான் அழுத்தமாக.

"அப்போ.....என் சம்மதம் உங்களுக்கு முக்கியமில்லையா.....?",மனத்தாங்கலுடன் அவள் கேட்க,

"நீ சம்மதிக்காம இருக்க மாட்டாய் பேபி......!ஏன்னா....நீ என்னை லவ் பண்ற.....!",அவன் குரலில் இருந்த உறுதி அவளை வியக்கச் செய்தது.

இருந்தும் அசால்ட்டாய்,"நான் உங்களை லவ் பண்றேன்னு.....இதுவரைக்கும் சொன்னதே இல்ல.....!",என்றாள் தோளைக் குலுக்கியபடி.

அவள் கண்களுக்குள் ஆழப்பார்வை பார்த்தவன்,"உன் அழகான இந்த சிப்பி இதழைத் திறந்து சொன்னால்தான்.....நீ என்னை லவ் பண்றேன்னு அர்த்தமா பேபி......?அதுதான்....நீ என்னைப் பார்க்கிற இந்தப் பார்வையே சொல்லுதே.....!உன் மனசுக்குள்ள நான் புகுந்து ரொம்ப நாளாச்சுங்கிறதை......!ம்....?",கேள்வியாய் அவன் புருவங்களை உயர்த்த.....அவன் விழிகளுக்குள் அவள் சிக்கி சின்னாபின்னமானது என்னவோ உண்மைதான்.....!

அதன் பிறகு.....அங்கு மௌனம் மட்டுமே மொழியாக.....காரில் ஒலித்த மெல்லிய இசை மட்டுமே பரிபாஷணையாய் இருந்தது....!

நேரமாக ஆக.....தூங்கித் தூங்கி விழுந்தவள்.....ஒரு கட்டத்திற்கு மேல் தூக்கத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே.....அவன் தோளில் சுகமாய் சாய்ந்து நித்திரை கொள்ளத் துவங்கினாள்.

சிறு புன்னகையுடன் அவள் உச்சந்தலையில் தன் இதழை ஒற்றி எடுத்தவன்.....அவள் அருகாமையை ரசித்தபடியே காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.

மலைகளின் அரசி.....தனது இயற்கை பட்டாடையை விரித்து....அவர்கள் இருவரையும் மிக அழகாக வரவேற்றாள்.மலையேற ஏற குளிர் அதிகரித்தது.அவன் தோளில் சாய்ந்து நன்றாக உறங்கிக் கொண்டிருந்தவள்.....குளிர் காரணமாக தூக்கத்திலேயே உடலைக் குறுக்கி.....புரண்டு புரண்டு படுத்தாள்.

'குளிரும் போல.....!' என தனக்குள் சொல்லிக் கொண்டவன்.....காரின் ஹீட்டரை ஆன் செய்து விட்டான்.இருந்தும் எலும்பை ஊடுருவும் குளிரைத் தாங்க முடியாமல் விழித்துக் கொண்டாள் நித்திலா.

திம்மென்ற எதன் மீதோ தான் சுகமாய் சாய்ந்திருப்பதை அவள் உணரும் போதே....அவளுடைய நாசி.....அவளுக்குப் பழக்கமான வாசனையை நுகர்ந்தது.

'இது.....ஆதுவுடைய வாசனையாச்சே......!', மூளை அவளுக்கு அவசர அவசரமாக செய்தி அனுப்ப.....அவள் சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள்.அவளுக்கு வெகு அருகில்....அவனுடைய ஆண்மை ததும்பும் முகம்....!

தீச்சுட்டாற் போல் அவனை விட்டு விலகியவள்,"ஸா.....ஸாரி....!",என்று தடுமாற,

"எதுக்கு பேபி ஸாரி சொல்ற.....?சொல்லப் போனால்....நான்தான் உனக்கு 'தேங்க்ஸ்' சொல்லணும்.....!என் லைஃப்ல இப்படி ஒரு ட்ராவல் நான் பண்ணினதே இல்ல.....!",அவளைப் பார்த்து கண்ணை சிமிட்டியபடி அவன் கூற.....அவள் உதட்டைக் கடித்துக் கொண்டு அமைதியாகி விட்டாள்.

எதுவும் பேசாமல்.....ஜன்னலின் புறம் தன் பார்வையைத் திருப்பியவளை......அதன் பிறகு....இயற்கை அரசி தன்வசப்படுத்திக் கொண்டாள்.அந்த மாலை வேளையில்....அந்த மலைகளின் ராணி அள்ளித் தெளித்த அழகில் தன் மனதை லயிக்க விட்டவளின் இதழ்களில் ஒரு ரசனைப் புன்னகை வந்தமர்ந்தது.

ஊட்டியை நெருங்க நெருங்க குளிர் அதிகமாக....தன் துப்பட்டாவை இழுத்துப் போர்த்திக் கொண்டவள்.....அவனைப் பார்த்து,"ரொம்ப குளிரா இருக்கல்ல.....?",என்ற கேள்வியை வேறு கேட்டு வைத்தாள்.

அவளைத் திரும்பி ஒரு மார்க்கமாகப் பார்த்தவன்,"ம்ம்......!",என்ற முணகலுடன் அமைதியாகி விட்டான்.

"வாவ்......!இந்த பங்களா அழகா இருக்கல்ல.......!",நித்திலா ரசனையுடன் கூறிக் கொண்டிருக்கும் போதே....அந்த பங்களாவின் பெரிய கேட் திறந்தது.அதன் வழி ஓடின நடைபாதையில் ஆதித்யனின் கார் வழுக்கிக் கொண்டு சென்று.....அந்த மாளிகையின் போர்ட்டிக்கோவின் முன் நின்றது.

பிரமிப்புடன் அவனைப் பார்த்தவள்,"இங்கே எதுக்கு வந்திருக்கிறோம்......?யாருடைய வீடு.....?",என்று கேள்வியெழுப்ப,

"நம்முடைய கெஸ்ட் ஹவுஸ்தான் பேபி......!இங்கேதான் நாம தங்கப் போறோம்.....!இறங்கி வா.....!",என்றபடி கார்கதவைத் திறக்க போனவனை,

"இ....இங்கேயா......?ஏதாவது ஹோட்டல்ல ரூம் புக் பண்ணியிருக்கலாமே......?",என்ற நித்திலாவின் தடுமாற்றமான குரல் தடுத்தது.

அவள் முகத்தில் தெரிந்த தடுமாற்றத்துடன் கூடிய பயத்தை அவன் கண்டு கொண்டான்.'தன்னுடன் ஒரே வீட்டில் தங்க பயப்படுகிறாள்......!',என்பதை புரிந்து கொண்டவன்.....சிறிது நேரம் அவளுடன் விளையாட எண்ணி,

"இல்ல பேபி......!நாம பண்ண போற வேலைக்கு இந்த மாதிரி தனியா இருக்கற வீடுதான் சரிப்பட்டு வரும்......!",முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு அவன் கூற,

"எ.....என்ன வேலை.....?",தடுமாறினாள் அவள்.

"என்ன பேபி......?இது கூட உனக்குத் தெரியாதா.......?எல்லாம்.....அந்த வேலைதான்.....!அதுக்காகத்தான் உன்னை இங்க கடத்திட்டு வந்திருக்கேன்......!",குறும்பாக கண் சிமிட்டியபடி கூற,

"எ....எதுக்காக......?",என்று கேட்டவளின் குரல் வெளியேவே வரவில்லை.

"என்ன பேபி......?உனக்கு ஒண்ணுமே தெரியாதா......?ஆத்திச்சூடில்ல இருந்து உனக்கு எல்லாமே சொல்லித் தரணும் போல......!அதுக்காகன்னா.....அதுக்காகத்தான்.....!உன்னை கசமுசா பண்றதுக்குத்தான்.....இங்கே கொத்திக்கிட்டு வந்திருக்கேன்.......!",அவன் கூற கூற அவள் முகம் அழுகைக்கு மாறியது.

"எப்படி.......?மாமா சூப்பரா ப்ளேஸ் சூஸ் பண்ணியிருக்கேன் ல......!பச்சைப் பசேல்ன்னு மலை.....சில்லுன்னு குளிர்.....பக்கத்துல அழகா நீ.....!இந்த அஞ்சு நாளும் செமையா என்ஜாய் பண்ணலாம்.....!வா.....வா.....!வீட்டுக்குள்ள போகலாம்.....!ஒரு நிமிஷம் கூட நான் வேஸ்ட் பண்ண விரும்பல.....!கமான்.....கமான் பேபி.....!",அவன் வேண்டுமென்றே அவள் கையைப் பிடித்து இழுத்தபடி பரபரக்க,

"எதுக்கு இப்படியெல்லாம் பேசறீங்க......?",வழக்கம் போல் அழ ஆரம்பித்து விட்டாள் நம் நாயகி.

அவள் அழுவதைப் பார்த்து அடக்க மாட்டாமல் சிரித்தவன்,"ஹைய்யோ....!பேபி.....!அழாதே......இங்கே பாரு......!நான் சும்மா சொன்னேன் டா.....!",அவன் சமாதானப்படுத்திக் கொண்டிருக்க.....அப்போது வீட்டின் உள்ளே இருந்து நடுத்தர வயது மிக்க ஒரு ஆணும் பெண்ணும் வெளியே வந்தனர்.

"நீங்க ரொம்ப கெட்ட பையனா இருக்கறீங்க......!",தேம்பியபடியே நிமிர்ந்தவள் அவ்விருவரையும் பார்த்து விட்டாள்.

'அவன் தன்னிடம் விளையாடியிருக்கிறான்.....!',என்பது புரிய வர....நிமிர்ந்து அவன் முகம் நோக்கினால்.அவன் முகத்தில் இருந்த குறும்பும் அது உண்மைதான் என்பதை பறைசாற்ற.....அவன் கையில் நறுக்கென்று கிள்ளி வைத்தாள் நித்திலா.

"ஆ.....ராட்சசி.....!எதுக்கு டி கிள்ளற.....?",

"இப்படியா விளையாடுவீங்க.......?நான் ரொம்ப பயந்துட்டேன்......!",தன் கண்களைத் துடைத்துக் கொண்டே கூறியவளைப் பார்த்தவன்.....வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்தான்.

"ஹா....ஹா.....!பேபி.....!ஆனாலும்....நீ ரொம்ப அப்பாவியா இருக்க.....!",அவன் சிரிக்க.....அவள் முறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

அதற்குள்,"வாங்கய்யா.....!வாங்கம்மா......!",என்ற குரல் கேட்டு இருவரும் திரும்பிப் பார்க்க.....காரின் அருகே அந்த ஆணும் பெண்ணும் நின்றிருந்தனர்.

"வர்றேன் கந்தன்......!",என்றபடி அவர்களைப் பார்த்து புன்னகைத்தவன்.....நித்திலாவிடம் திரும்பி,"இப்போவாவது பயப்படாம இறங்கி வா பேபி.....!",என்று கூறியபடி காரை விட்டு இறங்கினான்.

அவளும் காரை விட்டு இறங்க.....அவளைத் தன்னருகில் அழைத்தவன்,"நிலா.....!இவங்கதான் கந்தன் அண்ட் வள்ளி.....!இங்கே தோட்ட வேலை....வீட்டு வேலை....சமையல்ன்னு எல்லா பொறுப்பும் இவங்களுடையதுதான்......!நாங்க இங்க இல்லாத சமயத்துல.....இந்த வீட்டைப் பார்த்துக்கிறதும் இவங்கதான்......!",என்று அறிமுகப்படுத்த.....இருவரும் வெட்கத்துடன் நெளிந்தபடி வணக்கம் சொல்லினர்.

"வாங்கம்மா......!உங்க பெட்டியெல்லம் கொடுங்க.....!கொண்டு போய் ரூம்ல வைக்கிறேன்......!",கந்தன் கூற,

"பெட்டியெல்லாம் டிக்கில இருக்கு கந்தன்.....!எடுத்துட்டுப் போய் மாடி ரூம்ல வைச்சிடு.....!",என்று கூறிய ஆதித்யன் வள்ளியைப் பார்த்து,"சமையல் ரெடியா......?",என்று வினவ,

"அதெல்லாம் தயாரா இருக்குங்கய்யா......!உங்களுக்குப் பிடிச்ச கோழி வறுவல்.....மட்டன் சுக்கான்னு எல்லாம் ரெடி.....!",வாயெல்லாம் பல்லாக கூறினாள் வள்ளி.

"ம்.....அப்போ இன்னைக்கு ஃபுல் கட்டு கட்டலாம்ன்னு சொல்ற.....!இந்தக் குளிருக்கு நான்வெஜ்ஜை ஒரு பிடி பிடிச்சாதான் நல்லாயிருக்கும்.....!",என்றவன்....நித்திலாவிடம் திரும்பி,"கமான் நிலா....!உள்ளே போகலாம்.....!",என்றபடி அவளை அழைத்துச் சென்றான்.

வெளிப்புறத் தோட்டமே மயக்கம் தரும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது என்றால்.....உள்ளிருந்த வீட்டின் அமைப்போ கண்ணைக் கவர்ந்தது.ஹாலில் குளிர் காய்வதற்காக ஒரு பெரிய கணப்பு அமைக்கப்பட்டிருந்தது.சுவரில் மாட்டியிருந்த ஓவியங்களும்.....ஹாலில் போடப்பட்டிருந்த ஆளை விழுங்கும் சோபாக்களும்.....பணத்தின் செழுமையை பறைசாற்றின.

அவளை மாடி ஹாலிற்கு அழைத்துச் சென்றவன்.....அங்கிருந்த ஒரு அறையைக் காட்டி,"பேபி......!இந்த ரூம்ல நீ தங்கிக்கோ......!நைட் ஆகிடுச்சு.....!இனி குளிர் ரொம்ப அதிகமா இருக்கும்.....!ஸோ....குளிச்சிடாதே.....!ஜஸ்ட் ஃபிரெஷ் பண்ணிக்கிட்டு வா.....சாப்பிடப் போகலாம்.....!",என்றபடி நகர்ந்தவன் பிறகு அவளைத் திரும்பிப் பார்த்து.....எதிரில் இருந்த ஒரு அறையை சுட்டிக் காட்டியபடி,

"இந்த ரூம்லதான் நான் இருப்பேன்......!ஏதாவது வேணும்ன்னா என்னைக் கூப்பிடு......!",அவன் கூறவும்,

'சரி' என்று தலையாட்டியபடி அவளுடைய அறைக்குள் சென்றவள் பிரம்மித்துப் போனாள்.அமர்ந்தால் அரையடிக்கு உள்வாங்கிக் கொள்ளும் மெத்தை....ஆளுயரக் கண்ணாடி.....சோபா என்று சகல வசதிகளும் நிரம்பிய ஒரு குட்டி வீடு போல் இருந்தது.

உடை மாற்றும் அறையுடன் இணைந்த குளியலறை.....அங்கும் பாத்டப்....ஷவர் என்று சகல வசதிகளும் நிரம்பியிருந்தது.

அவ்வளவு தூரம் பயணம் செய்தது அலுப்பாக இருக்க.....அப்படியே சென்று மெத்தையில் விழுந்தாள்.

சிறிது நேரம் படுத்திருந்து விட்டு.....தன்னை ஃபிரெஷ் செய்து கொண்டு அவள் வெளியே வர.....சரியாக அதே நேரம் ஆதித்யனும் அவன் அறையிலிருந்து வெளியே வந்தான்.

இருவரும் சாப்பிடுவதற்காக கீழே இறங்கி வந்தனர்.வள்ளி விதவிதமான அசைவ உணவுகளை சமைத்து டைனிங் டேபிளில் பரப்பி வைத்திருந்தாள்.

"வள்ளி......!சூப்பரா சமைச்சிருக்க போல......!எல்லாமே எனக்கு பிடித்த ஐட்டம்ஸ்......!",என்றபடியே நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தான்.

"ஆமாங்கய்யா......!சாப்பிட்டுப் பாருங்க.....!",தட்டை வைத்துப் பரிமாறப் போனவள்.....நித்திலா நின்று கொண்டிருப்பதைப் பார்த்து,"நீங்களும் உட்காருங்கம்மா......!ஒரு வாரம் என் கைப்பக்குவத்துல சாப்பிட்டுப் பாருங்க.....!திரும்ப ஊருக்குப் போகும் போது......ஒரு சுத்து தேறியிருப்பீங்க.....!",வள்ளி கூற,

ஆதித்யனும்,"உண்மைதான் பேபி......!வள்ளியுடைய சமையலை சாப்பிட்டு நல்லா உடம்பை தேத்து.....!",குறும்பாகக் கூறினான் அவன்.

அப்பொழுதும் அவள் முகம் சுழித்தபடியே நின்றிருக்க,"ஏன் பேபி......?இந்த ஐட்டம்ஸ் எல்லாம் உனக்கு பிடிக்காதா.....?",அவன் கேட்கவும்....'பிடிக்காது....!' என்பதாய் தலையசைத்தாள் அவள்.

"சரி.....விடுங்கம்மா.....!உங்களுக்குப் பிடிச்சதை சொல்லுங்க.....!அரை மணி நேரத்துல ரெடி பண்ணி கொண்டு வர்றேன்......!",வள்ளி வினவ.....நித்திலா தனக்கு வேண்டியதை சொன்னாள்.அதைக் கேட்டபடி வள்ளி அதை சமைப்பதற்காக உள்ளே சென்று விட்டாள்.

"உட்கார் பேபி.....!உனக்கும் ரெடி பண்ணி கொண்டு வரட்டும்.....ரெண்டு பேரும் சேர்ந்தே சாப்பிடலாம்......!",என்று ஆதித்யன் கூறவும்.....அவனுக்கு அருகில் இருந்த நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தாள் நித்திலா.

"இந்தக் குளிருக்கு நான் வெஜ் சாப்பிடற சுகமே தனிதான்......!உனக்கு இந்த மட்டன் ஐட்டம்ஸ் பிடிக்கலைன்னா சொல்லு.....!நாளைக்கு மீன்....இறால்ன்னு ரெடி பண்ணச் சொல்லிடலாம்.....!",

"நான்.....நான் வெஜ் சாப்பிட மாட்டேன்.....!ஐ அம் அ ப்யூர் வெஜிட்டேரியன்.....!",

"எதுல.....?",அவளை ஒரு மார்க்கமாக ஆராய்ந்தபடி கேள்வியெழுப்பினான் அவன்.

"எதுலேயா.....?இது என்ன கேள்வி.....?சாப்பாட்டுலதான்....வெஜ்....நான் வெஜ்ன்னு ரெண்டு வெரைட்டி இருக்கு.....!அப்ப....சாப்பாட்டுலைன்னுதான் அர்த்தம்.....!",அவள் அப்பாவியாகக் கூற,

அவளை கீழிருந்து மேலாக ஒரு மாதிரியாக பார்வையிட்டவன்,"சாப்பாட்டுல மட்டும்ன்னா சந்தோஷம்தான்.....!",குரலும் ஒரு மாதிரியாக வெளிவந்தது.

"என்ன உளறுறீங்க......?",அவள் இன்னும் குழப்பமாகத்தான் விழித்துக் கொண்டிருந்தாள்.

உதட்டை லேசாக மடித்துக் கடித்தபடி அவளை பார்வையிட்டவன்,"பேபி.....!ஒரு பாட்டு இருக்கு.....!நீ கேள்விப்பட்டதில்லையா......?",அவன் கேட்ட விதத்திலிருந்தே.....'அந்தப் பாடல் எப்படியிருக்கும்.....' என்பதை தெரிந்து கொண்டாள் நித்திலா.

அமைதியாக அமர்ந்து விட்டவளைப் பார்த்தபடியே,
சோனியா....சோனியா.....
சொக்க வைக்கும் சோனியா....
காதலில் நீ எந்த வகை கூறு.....?
காதலிலே ரெண்டு வகை......
சைவமொன்று.......அசைவமொன்று.....
ரெண்டில் நீ எந்த வகை கூறு.....?",

டைனிங் டேபிளில் தாளம் போட்டபடி அவன் பாட.....அவனை நிமிர்ந்து கூட பார்க்க முடியாமல் நாணம் தடுக்க.....உதட்டைக் கடித்தபடி தலைகுனிந்து அமர்ந்திருந்தாள் அவள்.

"சொல்லு பேபி.....?",என்ற கிசுகிசுப்பான குரல் அவள் காதுக்கருகில் ஒலிக்க.....சட்டென்று தலையை நிமிர்த்தியவள்......தனக்கு வெகு அருகில் தெரிந்த ஆதித்யனின் முகத்தைப் பார்த்து தடுமாறியபடி,"எ....என்ன......?",வார்த்தைகளுக்கு பஞ்சமானதை போல் திக்கித் திணறினாள்.

"நீ எந்த வகைன்னு சொல்லு பேபி......?",கிறக்கமான குரலில் அவன் கேட்க,

"ச்சீ......!வாயை மூடுங்க.....!",அவள் சீறிக் கொண்டிருக்கும் போதே.....வள்ளி சமைத்த பாத்திரங்களைத் தூக்கிக் கொண்டு வந்தாள்.அவள் வருவதைப் பார்த்தவன்.....சமர்த்துப் பிள்ளையாய் நித்திலாவை விட்டுத் தள்ளி அமர்ந்து கொண்டான்.

வள்ளி பரிமாற.....இருவரும் சாப்பிட ஆரம்பித்தனர்.சாப்பிடும் போதும்.....அவன் அந்த பாடலையே ஹம் செய்து கொண்டிருக்க......நித்திலாவிற்கு அடிக்கடி புரையேறிக் கொண்டிருந்தது.

அவன் ஹம் செய்வதை வாயைப் பிளந்தபடி அதிசயமாகப் பார்த்தாள் வள்ளி.

பின்னே......!எப்பொழுது அவன் அங்கு வந்தாலும் 'வேலை....வேலை....' என்றுதான் அலைவான்.எஸ்டேட்டின் ஒட்டு மொத்த கணக்கு வழக்கையும்......இவன் இங்கு தங்கியிருக்கும் ஒரு வாரத்தில் பார்க்க வேண்டும் என்பதால்.....எப்பொழுதும் லேப்டாப் கையுமாகத்தான் இருப்பான்.

அப்படிப்பட்ட தங்கள் முதலாளி.....இன்று ஏதோ வயதுப் பையன் போல் பாடல் பாடுவது அவளுக்கு ஆச்சரியத்தை அளித்தது.

ஒருவழியாக சாப்பிட்டு முடித்த நித்திலா......அவனைப் பார்க்காமலேயே தனது அறைக்கு ஓடிவிட்டாள்.


அகம் தொட வருவான்....!!!
 

Nirmala Krishnan

Saha Writer
Messages
76
Reaction score
13
Points
6
அத்தியாயம் 35 :



அறையில் ஓடிக் கொண்டிருந்த ஹீட்டர் அளித்த வெப்பமும்.....அரையடிக்கு அமுங்கிய மெத்தையும் குளிருக்கு இதமாக இருக்க.....போர்வையை இழுத்துப் போர்த்தியபடி உறங்கிக் கொண்டிருந்தாள்.



வெளியே தோட்டத்திலிருந்து கேட்ட கந்தனின் குரலில் அடித்துப் பிடித்துக் கொண்டு எழுந்தமர்ந்த நித்திலாவிற்கு..... ஒரு நிமிடம் 'எங்கு இருக்கிறோம்.....?' என்பதே புரியவில்லை.பிறகுதான் ஆதித்யனுடன் ஊட்டிக்கு வந்திருப்பது நினைவு வர.....மணியைப் பார்த்தால்.....அது பத்தை தாண்டியிருந்தது.



'கடவுளே.....!இவ்வளவு நேரமா தூங்கினேன்......?', என்று எண்ணியபடியே பாத்ரூமிற்கு சென்று குளித்து முடித்து வந்தவள்.....அவசர அவசரமாகக் கிளம்பி வெளியே வந்தாள்.



கந்தன் தோட்டத்தில் இருக்க.....வள்ளி சமையலைறையில் இருந்தாள்.ஆதித்யனை எங்கும் காணவில்லை.இவளைக் கண்டவுடன் வள்ளி,"எழுந்திட்டீங்களா ம்மா......?டிபன் எடுத்து வைக்கட்டுமா......?",பளிச்சென்று புன்னகைத்தபடி கேட்க,



"ம்ம்.....ஆதி சார் எங்கே.....?",அவள் கண்கள் ஆதித்யனைத் தேடி சுற்றும் முற்றும் அலை பாய்ந்தன.



"அவரு வேலை விஷயமா வெளியே போயிட்டாரு ம்மா.....!நீங்களா எழுந்து வர்ற வரைக்கும்.....உங்களைத் தொல்லை பண்ண வேண்டாம்ன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு......!நீங்க வாங்க.....!வந்து சாப்பிடுங்க......!",அவளை அமர வைத்து பரிமாற ஆரம்பித்தாள் வள்ளி.



சாப்பிட்டு முடித்தவளுக்கு நேரமே போகவில்லை.தோட்டத்தில் சிறிது நேரம் உலாவியவள்......பிறகு வள்ளிக்கு சமையலில் உதவி செய்யப் போக,"நீங்க போய் ரெஸ்ட் எடுங்கம்மா.....நானே பார்த்துகிறேன்......!",என்று தடுத்து விட்டாள்.



மதிய உணவிற்கும் ஆதித்யன் வரவில்லை.போன் செய்தாலும் எடுக்கப்படவில்லை.மதிய உணவிற்குப் பிறகு நித்திலாவிற்கு தூக்கம் கண்களை சுழற்ற.....இழுத்துப் போர்த்திக் கொண்டு உறங்கி விட்டாள்.



மாலை மூன்று மணியளவில்தான் ஆதித்யன் வீட்டிற்கு வந்தான்.வந்ததும் நித்திலாவைத்தான் கேட்டான்.அவள் அறையில் இருக்கிறாள் என்று தெரிந்ததும்.....மேலே சென்று அவள் அறைக் கதவைத் தட்ட......தூக்க கலக்கத்தினுடையே வந்துக் கதவைத் திறந்தாள் நித்திலா.



"என்ன பேபி......?நல்ல தூக்கமா......?",



"ம்.....நீங்க காலையில் இருந்து எங்கே போனீங்க......?எனக்கு இங்க ஒரு வேலையும் இல்லாம சுத்திக்கிட்டு இருந்தேன்......!",தூக்கத்தில் இருந்து எழுந்து வந்ததால்.....தலை கலைந்து....உடை கசங்கிப் போய் நின்றிருந்தாள் அவள்.



'ராட்சசி.....!தூக்கத்திலேயும் கொள்ளை அழகா இருக்கா......!' மனதிற்குள் அவளை ரசித்தபடியே வெளியே,"வேலை விஷயமா போயிருந்தேன் பேபி.....!நீ கிளம்பு......!இங்க பக்கத்துலதான் மூங்கில் காடு இருக்கு......போய்ட்டு வரலாம்......!அரைமணி நேரத்துல ரெடியாகி வந்துடு......நான் கீழே வெயிட் பண்றேன்......!",என்றபடி அவள் பதிலை எதிர்பாராமல் நகர்ந்து விட்டான்.



ஆரஞ்சு வண்ணத்தில் அழகிய வேலைப்பாடமைந்த சுடிதார் அணிந்து....ஒரு தேவதையைப் போல் மாடியில் இருந்து இறங்கி வந்தவளைப் பார்த்தவனின் இதயம்.....எப்பொழுதும் போல் அன்றும் அவளிடம் ஓடிச் சென்று சரணடைந்தது.



இருவரும் காரில் கிளம்பி.....மூங்கில் காட்டை நோக்கிச் சென்றனர்.சீசன் டைம் இல்லாததால் அவ்வளவாக கூட்டம் இல்லை.காரை ஓரிடத்தில் நிறுத்தி விட்டு.....இருவரும் இறங்கி நடந்து சென்றனர்.



சுற்றிலும் பெரிய பெரிய மரங்கள் அணிவகுத்திருக்க.....அதனிடையில் நடந்து செல்வது மிக அற்புதமான அனுபவமாக இருந்தது.அருகருகில் நடந்து வந்தவர்களின் தோள்கள் அடிக்கடி உரசிக் கொண்டன.



அங்கங்கு இருந்த புதிதான திருமணமான ஜோடிகள்.....உலகை மறந்து தங்களுக்கான உலகில் சங்கமித்துக் கொண்டிருக்க.....அவர்களைப் பட்டும் படாமலும் பார்த்த ஆதித்யன்....நித்திலாவின் நிலைமைதான் பரிதாபகரமான நிலைமையில் இருந்தது.அதிலும் ஒரு ஜோடி மிக அதிகமான நெருக்கத்தைக் காட்டிக் கொண்டிருக்க.....அதைப் பார்த்த ஆதித்யனின் பார்வை சட்டென்று நித்திலாவிடம் திரும்பியது.அவளுடைய பார்வையும் ஆதித்யனின் பார்வையை கவ்வி நின்றது.



அவன்.....அவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்க.....சட்டென்று தன்னை சுதாரித்துக் கொண்டவள்.....அவனை விட்டு விலகி முன்னால் நடக்க ஆரம்பித்தாள்.ஒரு பெருமூச்சுடன் அவள் செல்வதையே பார்த்தவன்.....அவளுடன் இணைந்து நடந்தவாறே,"க்ளைமேட் நல்லாயிருக்கல்ல......?",என்ற கேள்வியை எழுப்பினான்.



"ம்.....",என்றவள் அமைதியாக தன் நடையைத் தொடர்ந்தாள்.அவனும் அதன்பிறகு அமைதியாகி விட்டான்.இருவரும் அந்த அமைதியை விரும்பியே அனுபவித்தனர்.



நேரமாக ஆக குளிர் அதிகரித்துக் கொண்டே போனது.தன் இரு கைகளையும் பரபரவென்று தேய்த்து கன்னத்தில் வைத்தபடி,"ரொம்ப குளிரா இருக்கல்ல.....?",அவனைப் பார்த்து அவள் வினவ,



அவளை ஒரு மாதிரியாக அளவிட்டவன்,"ம்.....!",என்ற முணுமுணுப்போடு நிறுத்திக் கொண்டான்.



அந்தப் பார்வைக்கு என்ன அர்த்தம் என்று சத்தியமாக நித்திலாவிற்குத் தெரியவில்லை.'நேற்றும் கார்ல....குளிருதுன்னு சொன்னப்ப இப்படித்தான் பார்த்தாரு.....!இப்பவும் அதே பார்வையைத்தான் பார்க்கறாரு.....!இதுக்கு என்ன அர்த்தம்.....?',என்று அவள் குழம்பிக் கொண்டிருந்தாள்.



அவளுடைய தோள் உரசலும்.....சுற்றியிருக்கும் ஏகாந்தமான சூழ்நிலையும் அந்த ஆண்மகனுக்குள் மோகத் தீயைப் பற்ற வைத்துக் கொண்டிருந்தது.அவனே அந்த தீயில் வெந்து சூடாகிக் கொண்டிருந்தான்.அவனிடம் போய் 'குளிரா இருக்கல்ல.....?', என்று கேட்டு வைத்தால்.....பாவம்.....!அவன் என்ன சொல்வான்.....?'ம்...' என்று முணுமுணுப்பதைத் தவிர.....!



அவள் துப்பட்டாவை இழுத்துப் போர்த்திக் கொள்வதைப் பார்த்தவன்,"ஸ்வெட்டர் போட்டுட்டு வந்திருக்கலாம் ல......?சரி....வா.....!அந்தக் கடையில போய் ஸ்வெட்டர் வாங்கிக்கலாம்......!",அவன் அழைக்க,



"இல்ல.....வேண்டாம்.....!எனக்கு ஸ்வெட்டர் போட பிடிக்காது......!",மறுத்தாள் அவள்.



"இந்தக் குளிரை உன்னால தாங்க முடியாது......!சொன்னா கேளு......!",



"ம்ஹீம்.....!ஸ்வெட்டர் போட்டா குத்தும்......!",சிறு குழந்தையைப் போல் அடம்பிடித்தாள் அவள்.



அதை ஒரு காதலனாய் ரசித்தவன்,"ஒகே......!என் ஜெர்கினை போட்டுக்க......!",என்றபடி அவன் அணிந்திருந்த ஜெர்கினை கழட்டிக் கொடுக்க.....அவள் வாங்க மறுத்தாள்.



"வேண்டாம்.....!உங்களுக்கு குளிரும்.....!நீங்களே போட்டுக்கோங்க......!",என்று அவள் மறுக்க,



முன்பு பார்த்த அதே பார்வையை அவளை நோக்கி வீசியவன்,"அடிக்கிற அனல் காத்துல.....நானே எரிஞ்சு சாம்பலாகிடுவேன் போல.....!இதுல....குளிர்றது ஒண்ணுதான் குறைச்சல்......!",விரக தாபத்தில் அவன் முணுமுணுக்க.....அவளுக்கு சரியாக காதில் விழவில்லை.



"என்ன சொன்னீங்க......?",அவள் திருப்பிக் கேட்க,



"ம்....எனக்கெல்லாம் குளிராது.....!நீயே போட்டுக்க......!",பிடிவாதமாக அவள் கையில் அவன் ஜெர்கினைத் திணிக்க.....அடிக்கும் குளிரைத் தாங்க முடியாமல்.....அவளும் அமைதியாக அதை அணிந்து கொண்டாள்.



ஏதோ அவன் மார்புச் சூட்டில் முகம் புதைத்திருப்பது போன்றதொரு கதகதப்பை அவள் உணர்ந்தாள்.அவனுடைய ஜெர்கின் அவளுக்கு சற்றுப் பெரிதாகத்தான் இருந்தது.ஆனால்.....அதிலும் அழகாகத்தான் இருந்து தொலைத்தாள் அந்த ராட்சசி..



வெகு நேரம் நடந்தவர்கள்.....இருட்டத் தொடங்கிய பிறகுதான் வீட்டிற்குத் திரும்பினர்.ஆதித்யனுக்காக அசைவ உணவுகளும்.....நித்திலாவிற்காக சைவ உணவுகளும் டைனிங் டேபிளில் அணிவகுத்திருக்க.....இருவரும் நன்றாக சாப்பிட்டு விட்டு உறங்கப் போயினர்.



அறைக்குள் செல்வதற்கு முன் நின்று.....ஆதித்யன் அறையை அவள் திரும்பிப் பார்க்க.....அவனும் கதவில் கை வைத்துக் கொண்டு அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.



'என்ன.....?',என்று அவன் கண்ணசைவிலேயே கேட்க,



'ஒண்ணுமில்ல.....!',என்பதாய் தலையாட்டியவள்.....சிறிது தயங்கி,"நாளைக்கு நானும் வர்றேன்.....!என்னையும் கூட்டிட்டு போங்க......!",என்றாள் மெல்லிய குரலில்.



ஒரு கவர்ச்சி புன்னகையை சிந்தியவன்,"இன்னைக்கு மார்னிங் நீ கதவைத் திறப்பேன்னு பார்த்தேன் பேபி......!பட்.....நீ திறக்கவே இல்லையா.....ஸோ.....நல்லா தூங்கறேன்னு நினைச்சுட்டு.....நான் கிளம்பிட்டேன்.....!",காலையில் விட்டுச் சென்றதற்காக விளக்கம் கூறினான் ஆதித்யன்.



"ம்.....டயர்ட்ல தூங்கிட்டேன்......!",என்றபடி அவள் கதவுக்கருகிலேயே நிற்க.....அவனும் அவளையே பார்த்தபடி அறை வாசலிலேயே நின்றான்.



'அவளை நெருங்கினால்.....எங்கே எல்லை மீறி விடுவோமோ.....?', என்ற பயத்தில் அவளை நெருங்காமல்.....அதே சமயம்.....அவளை விட்டு விலகி நிற்கவும் முடியாமல் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்தான் அந்த ஆறடி ஆண்மகன்.தொழிலில் பல முடிவுகளைத் எந்த விதத் தடுமாற்றமும் இன்றி.....அசால்ட்டாக எடுப்பவன்.....அந்தச் சிறு பெண்ணை நெருங்குவதற்கு பயந்து கொண்டு விலகி நின்றான்.



இது காதல் தரும் பயம்.....!காதல் தரும் தடுமாற்றம்.....!தன் அவஸ்தையை மறைப்பதற்காக தலையை அழுந்தக் கோதிக் கொண்டான்.



நித்திலாவின் நிலைமையும் பெரும் அவஸ்தையில்தான் இருந்தது.அவள் அணிந்திருந்த.....அவனுடைய ஜெர்கின்.....அவள் மேனியில்.....அவன் விரல்கள் ஊர்வதைப் போன்றதொரு சுகமான குறுகுறுப்பை ஏற்படுத்தின.



போட்டிருந்த ஜெர்கினை இழுத்துப் பிடித்தபடி நின்றிருந்தவளைப் பார்த்தவன்.....தன் தொண்டையை லேசாக செரும.....அதில் அவனை நிமிர்ந்து பார்க்க முயற்சி செய்தாள் அந்தப் பேதை.....!ம்ஹீம்.....!என்ன முயன்றும்.....அவள் பார்வை.....அவன் கழுத்துக்கு மேல் செல்லவில்லை.அவன் கண்களை சந்திக்க முயன்று தோற்றவளாய்.....அவன் கழுத்தில் பார்வையை செலுத்தியபடி,"குட் நைட்......!",என்று முணுமுணுத்துவிட்டு அறைக்குள் ஓடி.....கதவை அடைத்துக் கொண்டாள்.



சிரித்தபடியே தன் அறைக்குள் வந்து.....உடையைக் கூட மாற்றாமல் அப்படியே மெத்தையில் விழுந்தான் ஆதித்யன்.வெகு நேரம்.....கனவுகளைச் சுமந்தபடி விழித்துக் கிடந்தவர்களின் விழிகளை.....பாதி ஜாமத்திற்குப் பிறகுதான் நித்திரா தேவி வந்து தழுவிக் கொண்டாள்.

இரவு.....!காதலர்களுக்கு மட்டுமேயான ஒரு அழகான உலகம்.....!இந்த உலகில் கொட்ட கொட்ட விழித்தபடி.....கனவுகளை மட்டுமே சுமந்து கொண்டு.....காதல் என்னும் மழையில் சொட்ட சொட்ட நனைந்து கொண்டிருப்பனர் காதலர்கள்....!காதலில் மூழ்கி மூச்சுக்குத் திணறிக் கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.....இரவுகளுக்கும்.....கனவுகளுக்கும் இடையேயான பந்தம்.....!



ஒருவகையில் சொல்லப் போனால்.....காதலை உயிர் பெற்றிருக்க செய்வதே.....இந்தக் கனவுகள்தான்.....!வெறும் கனவுகள்.....நினைவல்லாத வெறும் மாய பிம்பங்கள்.....ஒரு கோடி சுகங்களை வாரி வாரி அள்ளித் தர முடியுமா.....?முடியும்.....!காதல் என்னும் மாய உலகில் அது சாத்தியம்.....!



கனவுகள்.....!அதிலும் காதல் என்னும் ஒற்றை வார்த்தை அள்ளித் தெளிக்கும் கனவுகள்.....ஒரு கோடி சுகங்களை வாரிக் கொடுக்கும்.....பல லட்சம் பூக்களை மனதிற்குள் மலரச் செய்யும்.....!அது மட்டுமா.....?இதயம் துடிப்பதற்கான அர்த்தத்தை கற்பிப்பதும் இந்தக் கனவுகள்தான்.....!



கனவுகள்.....நிஜமுமல்ல.....!கற்பனையுமல்ல.....!இரண்டையும் விட மேலானது.....!





அகம் தொட வருவான்.....
 

Nirmala Krishnan

Saha Writer
Messages
76
Reaction score
13
Points
6
அத்தியாயம் 35 (1) :



சுளீரென்று தன் மேல் பட்ட வெயிலில் நித்திரை கலைந்து எழுந்து அமர்ந்தாள் நித்திலா.அதன் பிறகுதான் நேரம் உரைக்க.....அவசர அவசரமாக கிளம்பி கீழே வந்தாள்.நேற்று போலவே ஆதித்யன் கிளம்பியிருந்தான்.



'சே.....இப்படியா தூங்குவோம்......!',தன்னைக் கடிந்து கொண்டபடியே ஆதித்யனுக்கு அழைத்தாள்.



போனை எடுத்தவன்,"பேபி.....!நீ தூங்கிட்டு இருந்தாயா.....அதுதான் விட்டுட்டு வந்துட்டேன்.....!இங்க ஒரு வேலையா இருக்கேன்.....!ஒண்ணு பண்ணலாம்......மதியம் லன்ச்சுக்கு வீட்டுக்குத்தான் வருவேன்.....!அப்போ உன்னை கூப்பிட்டுக்கிறேன்......!பை.....!",என்றபடி போனை வைத்து விட்டான்.



'ஹ்ம்ம்......இனி இவரு வர்ற வரைக்கும் சும்மாவே உட்கார்ந்திருக்க வேண்டியதுதான்.....!',என்று நினைத்தவள்,'சரி.....!வள்ளிக்கு போய் ஹெல்ப் பண்ணுவோம்....!',என்றபடி சமையலறைக்குச் சென்றாள்.



"வள்ளிக்கா......!இன்னைக்கு என்ன சமையல்......?",புன்னகையுடன் உள்ளே நுழைந்தவளைப் பார்த்த வள்ளி,



"மீன் குழம்பும்.....இறால் வறுவலும் ம்மா.....!உங்களுக்கு என்ன வேணும்ன்னு சொல்லுங்க......!சமைச்சிடலாம்.....!",வாஞ்சையுடன் வினவினாள்.



"எனக்கு வெஜிடபிள் பிரியாணி போதும்......!நான் காய்கறி கட் பண்ணிக் கொடுக்கிறேன்.....!",என்றபடி கத்தியை எடுக்க,



"அய்யோ.....!அதெல்லாம் வேண்டாம் ம்மா.....!நானே பார்த்துக்கிறேன்.....!",பதறிப் போய் தடுத்தாள் வள்ளி.



"எனக்கும் போரடிக்குது வள்ளிக்கா......!ஏதாவது வேலையிருந்தா கொடுங்க.....!",அவள் விடாப்பிடியாய் நிற்க,



"சரிம்மா......!இப்போ நான் அசைவ உணவை சமைச்சு முடிச்சிடறேன்......!உங்களுக்கு பிரியாணி அப்புறம் பண்ணிக்கலாம்.....!அப்போ உங்களைக் கூப்பிடறேன்......!நீங்க வந்து காய்கறி நறுக்கி கொடுங்க.....!",என்று யோசனை கூற,



"ஒகே.....!அதுவரைக்கும் நான் தோட்டத்துல இருக்கேன்.....!",என்றபடி தோட்டத்திற்கு சென்று விட்டாள் நித்திலா.



கந்தனிடம் பேச்சுக் கொடுத்தபடி சிறிது நேரம் தோட்டத்தில் உலாவியவள்....பிறகு அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்து ஆட ஆரம்பித்தாள்.பூத்துக் குலுங்கியிருந்த வண்ண மலர்களை ரசித்துக் கொண்டிருந்தவளின் மனதில்.....சொல்லாமல் கொள்ளாமல் ஆதித்யனின் நினைவுகள் வந்து ஆக்ரமித்துக் கொண்டன.



'எப்படி இவனுடன் வர சம்மதித்தோம்......?',ஏதேதோ எண்ணியபடி அமர்ந்திருந்தவள்.....பிறகு நேரமாவதை உணர்ந்து....சமையலறைக்கு விரைந்தாள்.



"வாங்கம்மா......!இப்போத்தான் சின்னய்யாவுக்கான சமையலை முடிச்சேன்.....!",என்று வள்ளி புன்னகைக்க,



"ம்.....அப்போ கொடுங்க.....!காய்கறி கட் பண்ணித் தர்றேன்......!",கத்தியை எடுத்தவள்....அவள் கொடுத்த காய்கறிகளை நறுக்க ஆரம்பித்தாள்.



சலசலவென்று வள்ளி வாயடித்துக் கொண்டிருக்க.....அவளுடன் பேசியபடியே காய்கறியை நறுக்கிக் கொண்டிருந்தாள் நித்திலா.வேக வேகமாக உருளைக் கிழங்கை நறுக்கிக் கொண்டிருந்தவள்.....வள்ளியுடன் பேசும் மும்முரத்தில் கவனக் குறைவாய்......தன் விரலையும் சேர்த்து நறுக்கிக் கொண்டாள்.



"ஸ்.....ஆ....!அம்மா.....!",அலறியபடியே அவள் கையை உதறுவதற்கும்.....ஆதித்யன் சமையலறைக்குள் நுழைவதற்கும் சரியாய் இருந்தது.



வேகமாய் அவளை நெருங்கியவன்,"கொஞ்சமாவது அறிவு இருக்கா......?உன்னை யாரு இந்த வேலையெல்லாம் செய்யச் சொன்னது.....?",கத்தியபடியே அவள் கையை குளிர்ந்த நீரில் கழுவினான்.



"ஆ.....எரியுது......!",அவள் கையை உருவிக் கொள்ள முயல,



"ஏரியத்தான் செய்யும்......!தேவையில்லாத வேலையெல்லாம் செய்தா.....இப்படித்தான் ஆகும்.....!",அவளைக் கடிந்து கொண்டவனின் பார்வை வள்ளியிடம் திரும்பியது.



"இந்த வேலையெல்லாம் செய்யறதுக்குத்தானே.....உனக்கு சம்பளம் கொடுக்கிறேன்.....!இவளை எதுக்கு காயை கட் பண்ண அலோவ் பண்ணின.....?என்ன.....வேலையை விட்டுப் போகணும்ன்னு ஆசையா இருக்கா......?",காட்டுக் கத்து கத்தினான் அவன்.



"அது......வந்துங்கய்யா......!",கையைப் பிசைந்து கொண்டே.....வள்ளி ஏதோ சொல்ல வாயெடுக்க,



"நீ எதுவும் பேசாதே......!நீ வேலை செஞ்சு கிழிச்ச லட்சணம் போதும்......!நாளையில இருந்து வேலைக்கு வர வேண்டாம்......!",என்று எரிந்து விழ,



"ஹைய்யோ......!இந்த சின்னக் காயத்தை எதுக்கு இவ்வளவு பெரிசுப்படுத்தறீங்க......?அதுவும் இல்லாம.....வள்ளிக்கா மேல எந்த தப்பும் இல்ல.....!நானேதான் காயை கட் பண்ண ஆரம்பிச்சேன்......!அவங்க வேண்டாம்னுதான் சொன்னாங்க......!",நித்திலா சமாதானப்படுத்த,



"பேசாம தூங்கி ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதானே.......?உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலையெல்லாம்......?",அவளிடமும் சுள்ளென்று விழுந்தவன்.....அவளை இழுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தான்.



"கந்தா.....!",அவன் கத்திய கத்தலில்.....தோட்டத்தில் செடிகளுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்த கந்தன் அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்தான்.



"போய் ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் கொண்டு வா......!",அவனை விரட்ட......அவன் ஓடிச் சென்று அதை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தான்.



"சரி......!நீ போ......!",அவனைத் துரத்தியவன்......நித்திலாவின் காயத்திற்கு கட்டுப் போட்டுக் கொண்டே......அவளை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தான்.



சிறிது நேரம் அமைதியாக இருந்தவள்......பிறகு பொறுக்க முடியாமல்,"ஹைய்யோ......!இப்ப நிறுத்தப் போறீங்களா....இல்லையா.....?ஏதோ தெரியாம கத்தியில கிழிச்சு.....இத்துனூண்டு காயம் ஆகிடுச்சு......!இதுக்கா இத்தனை ஆர்ப்பாட்டம் பண்றீங்க......?இங்கே பாருங்க......காயம் கூட கண்ணுக்குத் தெரியல......!என்னவோ......விரலையே அறுத்துக்கிட்ட மாதிரி கத்திக்கிட்டு இருக்கீங்க......?",அவள் அவனுக்கு மேல் குரலை உயர்த்தி ஒரு அதட்டல் போடவும்தான் அவன் அமைதியானான்.



உண்மையிலேயே அது மிகச் சிறிய காயம்தான்......!கண்ணிற்கு கூடத் தெரியாத காயம்....!அதற்குத்தான் அவன் 'தாம் தூம்' என்று குதித்துக் கொண்டிருந்தான்.



அப்பொழுதும் அவன் அமைதியாகாமல்,"எதுக்கும் டாக்டரை வரச் சொல்றேன்.....!செப்டிக் ஆகாம இருக்க......ஊசி போட்டுக்கலாம்.....!",கூறியபடியே அவன் மொபைலை எடுக்க.....நித்திலா முறைத்த முறைப்பில் அவன் அமைதியாக போனை வைத்து விட்டான்.



"இல்ல பேபி......!ஒரு சேஃப்டிக்கு.....",அவன் இழுக்க,



"இப்போ.....இங்கே இருந்து போகப் போறீங்களா......இல்லையா.....?",அவள் போட்ட சத்தத்தில்.....அவன் தனது அறைக்கு ஓடி விட்டான்.



அவன் போட்டு விட்ட கட்டை.....இதழில் உறைந்த புன்னகையுடன் வருடிப் பார்த்தவள்,"சரியான அராஜகக்காரன்......!ரௌடி.......!காதல் ரௌடி......!",என்று முணுமுணுத்துக் கொண்டாள்.



சிறிது நேரம் கழித்து.....கீழே இறங்கி வந்தவன்.....அவள் தன் கையைத் தடவியபடி அமர்ந்திருப்பதைப் பார்த்ததும்,"என்னாச்சு பேபி.......?வலிக்குதா.....?",என்று பரபரப்பாக கேட்க,



"இல்லல்ல.....!",அவசர அவசரமாக மறுத்தவள்....."வாங்க.....!சாப்பிடப் போகலாம்......!",என்றபடி எழுந்தாள்.



டைனிங் டேபிளில் அமர்ந்தபடி.....ஏதோ கொலைக் குற்றம் செய்த குற்றவாளியைப் பார்ப்பது போல் வள்ளியை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதித்யன்.



அவனது முறைப்பிற்கு பயந்து......அவனருகில் சென்று பரிமாறுவதற்குத் தயங்கியபடி கையைப் பிசைந்து கொண்டு நின்றிருந்தாள் வள்ளி.அவர்கள் இருவரையும் பார்த்த நித்திலாவிற்கு சிரிப்பாக வந்தது.



"வள்ளிக்கா.....!ஏன் அங்கேயே நிற்கறீங்க.....?வந்து பரிமாறுங்க.....!",நித்திலா அழைக்க....தயங்கியபடியே வந்து பரிமாற ஆரம்பித்தாள் வள்ளி.



மீன் குழம்பை ஆதித்யன் தட்டில் ஊற்றப் போனவள்.....அவன் முறைத்த முறைப்பில் கீழே ஊற்றி வைத்தாள்.



இது ஒன்று போதாதா ஆதித்யனுக்கு......?"ஷிட்.....!கண்ணு தெரியுமா.....?தெரியாதா.....?",கோபத்தோடு கத்தியபடி எழுந்தவனின் கைப்பற்றி மீண்டும் நாற்காலியில் அமர வைத்தாள் நித்திலா.



"எதுக்கு இப்ப அவங்களை இப்படி முறைக்கறீங்க.....?நீங்க முறைக்கறதிலேயே அவங்க பயந்துட்டு.....குழம்பை கீழே ஊத்திட்டாங்க.......!",ஆதித்யனைப் பார்த்து அதட்டியவள்,



வள்ளியிடம் திரும்பி,"நீங்க வந்து பரிமாறுங்க அக்கா.......!அவரு எதுவும் சொல்ல மாட்டாரு......!",என்று அழைத்தாள்.



நித்திலாவின் உரிமை கலந்த கண்டிப்பிற்கு கட்டுப்பட்டு.....தனது முறையிடலை கைவிட்டு விட்டு சாப்பிட ஆரம்பித்தான் ஆதித்யன்.



சாப்பிட்டு விட்டு வெளியே கிளம்பியவனைத் தடுத்தவள்,"என்னையும் கூட்டிட்டுப் போறேன்னு சொன்னீங்கல்ல......நானும் வர்றேன்......!",என்றபடி அவன் முன்னால் சென்று நின்றாள்.



"வேண்டாம் பேபி......!உனக்கு கையில அடிபட்டிருக்கல்ல......?படுத்து ரெஸ்ட் எடு......!",என்றானே பார்க்கலாம்......!அவன் முறைத்த முறைப்பில் சிறிது தயங்கியவன்,



"இல்ல பேபி......!உனக்கு கை வலிக்காதா......?",அவன் மென்று விழுங்க,



"இது உங்களுக்கே ஓவரா இல்லையா......?கண்ணுக்கேத் தெரியாத இத்துனூண்டு காயத்துக்கு எதுக்கு இத்தனை அலும்பு பண்றீங்க......?",நித்திலா கத்தவும்,



"சரி.....சரி.....!வா.....போகலாம்.......!",என்றபடி அவளை காருக்கு அழைத்துச் சென்றான்.



அவன் தற்போது வாங்கியிருக்கும் புது எஸ்டேட்டிற்குச் செல்லும் பாதையில் வண்டியை விட்டவன்,"நம்மளுடைய புது எஸ்டேட்டுக்கு போறோம் பேபி......!கிட்டத்தட்ட டீலிங் எல்லாம் முடிஞ்சது......!நாளைக்கு அக்ரிமெண்ட் பேப்பர்ஸ் எல்லாம் ரெடியாகி வந்திடும்......!",அவளிடம் பேசியபடியே காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.



"ஓ.....அப்போ நாளைக்கு ஊருக்கு கிளம்பிடலாமா.....?",அவள் குரலில் இருந்தது ஏமாற்றமா.....?இல்லை.....மகிழ்ச்சியா.....?என்பதை கண்டறிய முடியவில்லை.



"ஏன்......?ஊருக்குக் கிளம்பறதுல உனக்கு அப்படி என்ன அவசரம்......?",



"அவரமெல்லாம் இல்ல......!வேலை முடிஞ்சதுன்னா கிளம்ப வேண்டியதுதானே......?",



அவனுடைய அருகாமையில் தன்னை இழந்து விடுவோமோ என்ற பயத்தில்......முடிந்த அளவிற்கு சீக்கிரமாக ஊருக்குக் கிளம்பி விட எண்ணினாள் அவள்.



ஆனால்.....அவ்வளவு சீக்கிரம் அவனை விட்டு விலகி விட.....காதல் சம்மதித்து விடுமா.....என்ன.....?அது தன் வேலையைக் காட்டத் துவங்கியது.அவள் எதற்குப் பயந்து அவனிடம் இருந்து விலகி சீக்கிரமாக ஊருக்குச் செல்ல விரும்பினாளோ......அவன் எதற்கு அச்சப்பட்டுக் கொண்டு.....அவளிடம் நெருங்க மறுத்து விலகி நின்றானோ......அந்த நிகழ்ச்சி அன்று இரவு நடந்தேறப் போகிறது......!காதல்......அதை நடத்தி வைக்கப் போகிறது என்பதை அவர்கள் இருவரும் அறிந்திருக்கவில்லை.....!





அகம் தொட வருவான்....!!!
 

Nirmala Krishnan

Saha Writer
Messages
76
Reaction score
13
Points
6
அத்தியாயம் 36 :



பல ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருந்த அந்த எஸ்டேட்டில் தேயிலைப் பயிரிடப்பட்டிருந்தது.ஆங்காங்கு தேயிலைப் பறிப்பவர்கள் நின்று.....தேயிலையைப் பறித்து தங்களுக்குப் பின்னால் மாட்டியிருந்த பையில் போட்டுக் கொண்டிருந்தனர்.அந்த சூழலே மிக ரம்மியமாயிருந்தது.



சில்லென்ற காற்று வந்து முகத்தில் மோதி அவள் முடிக்கற்றைகளோடு விளையாடிக் கொண்டிருக்க.....மெலிதாக வீசிக் கொண்டிருந்த தென்றலோடு கைக்கோர்க்கும் நோக்கத்தோடு.....படபடத்துக் கொண்டிருந்த துப்பட்டாவை இழுத்துப் பிடித்தபடி நடந்து கொண்டிருந்த நித்திலாவைப் பார்த்த ஆதித்யனின் மனதில் சாரல் அடித்தது.



"உங்க பிஸினெஸ் எல்லாம் சென்னையிலதானே இருக்கு.....!அப்படி இருக்கும் போது.....இங்க எதுக்காக எஸ்டேட்டை வாங்கிப் போட்டு இருக்கீங்க......?",



"இங்க எஸ்டேட் வாங்கிப் போட்டதுனாலதானே.....உன்கூட ஜாலியா இங்கே வந்து நாலு நாள் ஸ்பெண்ட் பண்ண முடிஞ்சுது.....!இல்லைன்னா.....இப்படி ஒரு சான்ஸ் கிடைச்சிருக்குமா.....?",அவன் குறும்பாகக் கூற,



"ப்ச்.....!எப்போ பார்த்தாலும் விளையாட்டுத்தான்......!",அவள் சற்று அலுத்துக் கொள்ள,



"நான் எங்கே டி விளையாண்டேன்......?நான் பாட்டுக்கு அமைதியா நடந்து வந்துக்கிட்டு இருக்கேன்.....!",



"ம்ப்ச்.....!உங்களோட பேச ஆரம்பிச்சது என் தப்புதான்......!",தன்னைத் தானே கடிந்து கொண்டபடி அவள் அமைதியாகி விட.....சிறு சிரிப்புடன் அவன் பேச ஆரம்பித்தான்.



"இந்த மாதிரி ஹில் ஸ்டேஷன்ல எஸ்டேட் வாங்கிப் போட்டா.....அப்பப்ப பேமிலியோட வந்து தங்கிட்டுப் போகலாம்.....!எனக்கே ரொம்ப வொர்க் டென்க்ஷனா இருக்கும் போது.....இங்கே வந்து ஸ்டே பண்ணிட்டு போவேன்......!மனசுக்கு ரிலாக்ஸ்டா இருக்கும்......!",இரு கைகளையும் பேண்ட் பாக்கெட்டில் விட்டபடி பேசிக் கொண்டு வந்தவனைப் பார்த்தவளின் மனம் மயங்கியது.



எப்பொழுதும் கோட் சூட்டுடன் இருப்பவன்.....அன்று ஜீன்ஸ் பேண்டும்.....டீ ஷர்ட்டும் அணிந்திருந்தான்.ஆண்மைக்கே இலக்கணமாய்.....கம்பீரமாக இருந்தவனைப் பார்த்தவளின் உதடுகள்,'சரியான ஆள்மயக்கி......!வசீகரன்.....!",என்று மெதுவாக முணுமுணுத்துக் கொண்டன.



அதை அவன் பார்க்காமல் இருக்கும் பொருட்டு.....தன் முகத்தை தூரத்தில் தெரிந்த மலையுச்சிகளை நோக்கித் திருப்பியவள்,"இவ்வளவு பிஸினெஸ்ஸையும் நீங்க ஒருத்தரே மேனேஜ் பண்றதுன்னா கஷ்டமா இருக்கும்ல.....?எப்போ பாரு பிஸினெஸ்.....பிஸினெஸ்ன்னு ஓடற மாதிரி இருக்கும்.....!",அவள் குரலில் அவன் மேல் இருக்கும் அக்கறை வெளிப்பட்டது.



"ஹ்ம்ம்.....இந்த வயசுல ஓடாம வேற எப்ப ஓடறது பேபி......?அதுவும் இல்லாம.....நாளைக்கு நமக்கு குழந்தைகள்ன்னு வரும் போது.....அவங்களுக்கு ஒரு நல்ல ஃபியூச்சரை ஏற்படுத்திக் கொடுக்க
வேண்டாமா.....?",புருவத்தை உயர்த்தியபடி அவன் வினவ.....முகம் சிவக்க அமைதியாகிவிட்டாள் நித்திலா.



இருவரும் எஸ்டேட்டை சுற்றிப் பார்த்தபடி நடந்து கொண்டிருக்க.....மழை தூற ஆரம்பித்தது.



"மழை வருது நிலா.....!வா வீட்டுக்குப் போயிடலாம்......!",ஆதித்யன் அழைக்க,



"இருங்க.....!மெதுவாகத்தானே தூறுது.....!கொஞ்ச நேரம் கழிச்சு போகலாம்.....!",சுகமாய் மழையில் நனைந்தபடி கூறினாள் நித்திலா.



"இல்ல.....!போகப் போக மழை அதிகமாகிடும்......!",அவன் கூறிக் கொண்டிருக்கும் போதே.....லேசாக ஆரம்பித்த மழை பெரிய பெரிய துளிகளோடு வலுக்கத் தொடங்கியது.இருவரும் ஓடி வந்து காரில் ஏறுவதற்குள் முழுவதுமாக நனைந்து போயிருந்தனர்.



"சொன்னாக் கேட்டாத்தானே.....?சின்னக் குழந்தை மாதிரி மழையில விளையாண்டுட்டு இருக்க......!இந்த மழைக்கு காய்ச்சல் வந்துடும்......!",அவன் அவளைக் கடிந்து கொள்ள,



"அதெல்லாம் ஒண்ணும் வராது......!",அசால்ட்டாகக் கூறியவள்....ஜன்னல் கண்ணாடியில் பட்டுத் தெறித்து விழுந்த மழைத்துளிகளை ரசிக்க ஆரம்பித்தாள்.



ஒருவாறாக வீட்டிற்கு வந்து சேர்ந்தவர்கள்....காரில் இருந்து இறங்கி வீட்டிற்குள் வருவதற்குள் இன்னும் தெப்பலாக நனைந்து போயினர்.



தன் அறைக்குள் நுழைவதற்கு முன் நித்திலாவைத் திரும்பிப் பார்த்த ஆதித்யன்,"டிரெஸ் சேன்ஜ் பண்ணிடு பேபி.....!இந்த மழை உனக்கு ஒத்துக்காது.....!",என்று கூறிவிட்டு உள்ளே சென்று விட்டான்.



சில நிமிடங்களில் உடை மாற்றி விட்டு வெளியே வந்தவன்....நித்திலாவின் அறைக்கதவு திறந்திருப்பதைக் கண்டு.....உள்ளே எட்டிப் பார்க்க.....அறையில் அவள் இல்லை.



'எங்கே போனா.....?',எண்ணியபடியே அறைக்குள் நுழைந்தவனின் பார்வையில்.....கொட்டும் மழைத்துளியைக் கையில் ஏந்தி விளையாடியபடி பால்கனியில் நின்று கொண்டிருந்த நித்திலா விழுந்தாள்.



பால்கனியின் கம்பியில் பட்டுத் தெறித்து விழுந்த மழைத்துளிகள்.....இவள் மேல் சிதறி.....முத்து முத்தாய் ஒரு புது கோலத்தை அவள் முகத்தில் வரைந்திருக்க......மழையில் தெப்பலாய் நனைந்திருந்ததால்.....உடலுடன் ஒட்டிய ஆடை அவளுடைய மொத்த மேனியழகையும் வஞ்சணையில்லாமல் அவன் கண்களுக்கு வாரி வழங்கிக் கொண்டிருக்க.....விரித்து விடப்பட்டிருந்த கூந்தலில் இருந்து பிரிந்த கற்றை முடியொன்று அவள் கன்னத்தை முத்தமிட்டுக் கொண்டிருக்க.....தேவதை போல் நின்றிருந்தாள் நித்திலா.



மூச்சு விடவும் மறந்தவனாய் நின்று கொண்டிருந்தவனை இவ்வுலகிற்கு அழைத்து வரும் பொருட்டோ.....என்னவோ.....நித்திலா தன் தலையை சிலுப்ப அவள் கூந்தலில் இருந்து தெறித்து விழுந்த மழைத்துளி......அவன் முகத்தில் பட்டு.....அவனை இவ்வுலகத்திற்கு அழைத்து வந்தது.



அவளுடைய கோலம்.....அவனுடைய உடலிலும் மனதிலும் பல மாற்றங்களை ஏற்படுத்த.....அவனது ஹார்மோன் நதியின் வெள்ளப்பெருக்கு கரையை உடைக்க காலம் பார்த்தது.



பால்கனி கதவில் சாய்ந்தவாறு....தன் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டியபடி.....அவளையே அணு அணுவாய் ரசித்துக் கொண்டிருந்தான் அந்தக் கள்வன்.....!யாரும் இல்லை என்ற நினைவில் தன் கழுத்தில் கிடந்த துப்பட்டாவை எடுத்து கீழே எறிந்து விட்டு.....சிறு குழந்தையாய் மழையில் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தாள் அந்தக் காரிகை.....!



மழையில் நனைந்தபடி பால்கனித் தரையில் அவளது துப்பட்டா கிடக்க.....தோகை விரித்தாடும் இளம் மயிலாய்.....மழையில் விளையாடிக் கொண்டிருந்தவளின் கோலம் அவனுக்குள் மோகத் தீயை பற்ற வைத்தது.



உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்த மோகத்தீயை......பெரு நெருப்பாய் கொழுந்து விட்டெரியச் செய்தது.....அவளுடைய அடுத்த செய்கை.....!



முகத்தை நீட்டி.....கொட்டும் மழைத்துளிகளை தன் முகத்தில் ஏந்தியவாறு.....பாட ஆரம்பித்தாள் அந்தக் கட்டழகி.



"பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம்.....!
அட.....எண்ணம் மீறுது....!வண்ணம் மாறுது ....கண்ணோரம்.....!",




ஆர்பரித்துக் கீழே மண்ணில் விழும் மழைத்துளிகளுக்கு ஸ்ருதி சேர்ப்பது போல்.....இவளும் பாட ஆரம்பித்தாள்.



"மழைப் பூக்களே ஒதுங்க இடம் பார்க்குதே......!
மலர் அம்புகள் உயிர் வரைக்கும் தாக்குதே......!
மழை செய்யும் கோளாறு.....கொதிக்குதே பாலாறு.....!
இது காதல் ஆசைக்கும்....காமன் பூஜைக்கும் நேரமா.....?
இரு ஜோடி வண்டுகள் கோடு தாண்டிடுமா.....?",




தன்னுடைய பாடல் வரிகளை அம்பாக்கி.....பல லட்சம் மலர்கணைகளை அவனை நோக்கி எய்து கொண்டிருந்தாள் அந்த மலர் விழியாள்.தன்னுடைய ஒவ்வொரு செய்கையும் அவனை பலவீனமாக்கிக் கொண்டிருக்கிறது என்பதை அறியாதவளாய்.....தனது பாடலைத் தொடர்ந்தாள் அந்தப் பேரழகி...!



"தங்கத் தாமரை மலர்ந்த பின்னும் மூடுமோ.....?
பட்டுப் பூங்கொடி படர இடம் தேடுமோ.....?
மலர்க்கணை பாயாதோ.....?மதுக்குடம் சாயாதோ.....?
இந்த வெள்ளை மல்லிகை....தேவ கன்னிகை நானம்மா.....!
மழை காமன் காட்டில் பெய்யும் காலமம்மா....!",




அவளுடைய பாடல் வரிகளும்.....அதில் தெறித்து விழுந்த உணர்ச்சிகளும் அவனைப் பித்தம் கொள்ளச் செய்தது.உச்சந்தலையிலிருந்து.....உள்ளங்கால் வரை சுறுசுறுவென்று இரத்தம் சூடேற.....பித்தம் தலைக்கேறியது......!அவளால் அறிமுகப்படுத்தப்பட்ட.....அவனது உணர்வுகள் விழித்துக் கொண்டு அவனை இம்சிக்க......அவனுடைய ஒவ்வொரு செல்லும் 'அவள் இப்பொழுதே வேண்டும்......!', எனக் கூக்குரலிட ஆரம்பித்தன.



தன் முழுக்கட்டுப்பாட்டையும் இழந்தவனாய்.....அவளை நோக்கி ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்க ஆரம்பித்தான் அவன்.தன் முதுகில் எதுவோ துளைப்பது போன்ற உணர்வில் நித்திலா......சட்டென்று திரும்பிப் பார்க்க......அங்கு கண்களில் வழியும் தாபத்துடன் அவளை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தான் ஆதித்யன்.



தன்னிச்சையாக அவள் பின்னால் நகர.....அவனோ.....வேட்கையோடு அவளை நெருங்கினான்.



இவள் ஒவ்வொரு அடியாக பின்னோக்கி எடுத்து வைக்க......அவன் ஒவ்வொரு அடியாக முன்னோக்கி எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்.அவன் கண்களில்.....இன்று அவள் பார்க்கும் இந்த வேட்கை புதிது......!



இதுவரை.....அவன் கண்களில் காதலை மட்டுமே பார்த்திருந்தவள்......இன்று.....முதல்முறையாக பொங்கி வழியும் தாபத்தை பார்த்தாள்.அன்று.....அவளை.....அவன் முத்தமிட நெருங்கிய போது கூட.....அவன் கண்களில் காதலுடன் கலந்த வேட்கைதான் தென்பட்டது......!ஆனால்.....இன்றோ......காதல் கலந்த காமத்தைக் கண்டாள் அவன் விழிகளில்.....!



அவன் பார்வை உணர்த்திய செய்தி அவளை விதிர்க்கச் செய்ய......ஒவ்வொரு அடியாக பின்னோக்கி எடுத்து வைத்தவளை......அதற்கு மேல் நகர விடாமல் தடுத்தது.....பால்கனியில் இருந்த தூண்.....!அழுத்தமான காலடிகளோடு.....தூணோடு ஒன்றி நின்றிருந்தவளை நெருங்கியவன்.....அவள் கூந்தலில் முகம் புதைத்தான்.



"மயக்கறே டி......!",முணுமுணுத்தவனின் உதடுகள் அவள் காது மடல்களைக் கவ்விக் கொண்டன.....!அவனுடைய கரங்கள் அவள் இடையை வளைத்து தன்னுடன் இறுக்கின.....!அவளது காது மடலில் அழுத்தமாக ஒரு முத்தம் வைத்தவனின் உதடுகள்......அவளுடைய கழுத்து சரிவை நோக்கி முன்னேறின.....!



அவளது கழுத்து வளைவில் முகம் புதைத்து வாசம் பிடித்தவனின் இதழ்கள்.....அதற்கும் கீழே புதைய முயல.....அவ்வளவு நேரம் மயங்கிக் கிறங்கிப் போய் நின்றிருந்தவள்......சட்டென்று தன் உணர்வு மீண்டவளாய்.....அவனது தலைமுடியைப் பிடித்து இழுத்து அவன் முகத்தை விலக்கியபடி,"வே......வேண்டாம்......!",என்றாள் முணகலாக.....!



"ராட்சசி......!என்னை மயக்கற ராட்சசி டி நீ.....!உன்னுடைய அழகால என்னைப் பைத்தியக்காரனா மாத்திக்கிட்டு இருக்கற......தெரியுமா......?",காதலோடு பிதற்றியவன் தனது விரல்களால் அவளது நெற்றியிலிருந்து வருட ஆரம்பித்தான்.



நெற்றியில் அவன் விரல்கள் கோலம் போட்டுக் கொண்டிருக்க,"நான் உன்னை நெருங்கினாலே.....உன் நெற்றியில் குட்டி குட்டியா வியர்க்குதே......!அதை.....என் முத்தத்தாலேயே துடைக்கணும்......!",என்றவனின் உதடுகள் அவள் முகம் முழுவதும் ஊர்ந்து சென்று.....அவள் முகத்தில் படர்ந்திருந்த மழைத்துளிகளைத் துடைத்து விட்டன.....!



அவள் விழிகளை வருடியவன்,"இதோ....இந்தக் கண்களை வைச்சுக்கிட்டு.....முழிச்சு முழிச்சு பார்த்தே.....என்னை விழ வைச்சுட்டேடி.......!",அவன் குரலில் அப்படியொரு மயக்கம்.



அவனது மயக்கத்தில்.....நித்திலா மயக்கம் கொண்டாள்.தன்னுடையவனின் அருகாமையிலும் .....காதல் பிதற்றல்களிலும்.....கரைந்து காணாமல் போய்க் கொண்டிருந்தது அந்தப் பெண்மை.....!



அவளது கன்னத்தில் தனது விரல்களால் மென்மையாக கோலம் போட்டவன்......அவள் கன்னத்தை தொட்டுக் கொண்டிருந்த ஒற்றை முடிக் கற்றையைத் தன் சுண்டு விரலால் சுற்றியபடி,"இந்த முடிக்கு எவ்வளவு தைரியம்......?உன் கன்னத்தை உரசிக்கிட்டு......உனக்கு முத்தம் கொடுத்திட்டு இருக்கு......!அதுக்கு.....எனக்கு மட்டும்தான் உரிமையிருக்கு......!",காதல் போதை எறியவனாய் உளறியவன்......அவள் கூந்தலை காதோரத்தில் ஒதுக்கி விட்டபடி அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.



மென்மையான கன்னத்தில்.....சொரசொரப்பான அவனுடைய மீசையும்......தாடியும் ஏற்படுத்திய சுகமான காதல் அவஸ்தையை...... தாங்க முடியாதவளாய்......தனது இதழ்களை அழுந்தக் கடித்துக் கொண்டாள் நித்திலா.



இதழ்களை அவளது பற்களின் பிடியிலிருந்து விடுவித்தவன்.....அதை மென்மையாக வருடியபடி,"இது சிறையிருக்க வேண்டிய இடம் இதுவல்ல......!",அவள் விழிகளைத் தன் காதலால் கட்டி போட்டபடி கிசுகிசுத்தவன்......அவள் இதழ்களை நோக்கி குனிய....



அப்பொழுது பார்த்து எங்கோ இடித்த இடிச்சத்தத்தில்......சட்டென்று தன்னை மீட்டெடுத்தவள்......தான் இருக்கும் நிலையை உணர்ந்தவளாய்.....அவனைப் பிடித்துத் தள்ளி விட்டாள்.



உணர்ச்சிகளின் பிடியில் சிக்கியிருந்தவன்.......அவளைப் பிடித்த பிடியை நழுவ விட்டவனாய்.....இரண்டடி தள்ளிச் சென்று நின்றான்.



'அவன் தன்னை நெருங்கினால்.....தன் வசம் இழந்து.....மொத்தமாய் அவனுடன் ஒன்றி விடுவோம்.....!' என்பது நித்திலாவிற்கு புரிபட.....அவனிடமிருந்து விலகி வெளியே போகும் நோக்கத்தோடு அறையை நோக்கி ஓடினாள்.



அவள் பின்னாலேயே அறைக்குள் விரைந்தவன்......நாலே எட்டுக்களில் அவளைப் பிடித்து விட்டான்.பிடித்த வேகத்திலேயே அவளை இழுத்து.....எலும்புகள் நொறுங்கும் அளவிற்கு இறுக்கி அணைத்தவன்,



"நோ பேபி......!என்னைத் தடுக்காதே......!டோன்ட்......",காதல் பித்து தலைக்கேறியவனாய் உளறினான்.



'அவனிடம் அடைக்கலமாகி விடு......!அவனைத் தடுக்காதே......!',என்று காதல் கொண்ட மனம் உரக்க சப்தமிட......தன் உடலையும் மனதையும் அடக்கும் வழி தெரியாது விழித்தாள் அந்தப் பேதை.....!



அவளுடைய கழுத்து வளைவில்......அவன் பதித்த சூடான முத்தங்கள்.....அவளை வேறொரு உலகிற்கு அழைத்துச் சென்றன.அவளுக்குள் தூங்கிக் கொண்டிருந்த காதல் உணர்வுகள் மெல்ல மெல்ல தலைத்தூக்க ஆரம்பிக்க......தன்னவனை விலக்கித் தள்ளும் மனம் வராது.....அவனுடன் ஒன்ற ஆரம்பித்தாள் அவள்.



வெளியே மழை ஆர்ப்பரித்துக் கொட்டிக் கொண்டிருக்க......உள்ளே இருவரின் உணர்ச்சிகளோ கரையுடைக்கத் தயாராய் இருந்தது....!



"என்னை நல்லவனாவே இருக்க விட மாட்டியா டி......?என்னை ஏன் கெட்டப் பையனா மாத்தற......?",அவளது காதோரம் கிசுகிசுத்தவனின் விரல்கள் அவள் மேனியில் தன் வேலைகளைக் காட்டத் துவங்கியது.



மேனி முழுவதும் அவள் உணர்ந்த அவன் விரல்களின் ஸ்பரிசத்தில்.....அவள் கொஞ்ச கொஞ்சமாய் தன்னை இழந்து கொண்டிருந்தாள்.அவன் கரங்களின் அத்து மீறலில் அவள் விழிகள் தாமாக மூடிக் கொண்டன.....!பிடிமானம் தேடி காற்றில் அலைந்த அவளது கரங்கள்.....பிறகு அவனது முதுகையே பற்றுகோலாய் பற்றிக் கொண்டன.....!



ஒரு கட்டத்தில் பெண்மைக்கே உரிய பாதுகாப்பு உணர்வு விழித்துக் கொள்ள.....அவனிடமிருந்து விலக முயன்றாள்.அவன் பிடியோ இரும்புப் பிடியாய் இருந்தது.அவளுடைய நெருக்கம் அளித்த மயக்கத்திலிருந்து வெளிவர மனமின்றி.....அவளை விட மறுத்தான் அந்த முரட்டுக் காதலன்.....!



இவள் மறுக்க.....மறுக்க அவன் கரங்களின் அழுத்தம் அதிகமாகியது.....!அவளது திமிறலை அடக்க நினைத்தவன்.....அவளை முத்தமிடும் நோக்கத்தோடு.....அவள் இதழ்களை நெருங்க.....தன் முழு பலத்தையும் திரட்டி அவனைப் பிடித்து தள்ளி விட்டவள்,



"ச்சே.......!கடைசியில நீங்க இவ்வளவுதானா.......?",மூச்சு வாங்கத் தன்னைப் பார்த்துக் கத்தியவளைப் பார்த்தவன்,



"என்ன சொல்ல வர்ற.....?",அவன் குரலில் சற்று கோபம் எட்டிப் பார்த்தது.கேட்டது கிடைக்காத ஏமாற்றம் அவன் முகத்தில் விரவிக் கிடந்தது.



நித்திலாவின் நிலைமையோ அதற்கு மேல் இருந்தது....!தன் உயிரானவனின் நெருக்கத்திலும்.....தீண்டலிலும் மயங்கியிருந்த மனதை கட்டுப்படுத்தும் வழி தெரியாது திகைத்துக் கொண்டிருந்தாள்.அந்த திகைப்பும்.....மயக்கமும் அவள் மேலேயே அவளுக்குக் கோபத்தை வரவழைக்க......அந்தக் கோபத்தை வார்த்தைகளாக மாற்றி.....தன் உயிரானவனின் மேலேயே பிரயோகித்தாள்.....!



"ஆமா......!நீங்க விரும்பறேன்னு சொன்னதெல்லாம் என்னையல்ல......என் உடம்பைத்தான்......!உங்களுக்குத் தேவை....நான் அல்ல.....!என் உடம்புதான் உங்களுக்குத் தேவை.....!அதனாலதான்.....இப்படி ஒரு சூழ்நிலை அமைஞ்ச உடனே அதைப் பயன்படுத்திக்கப் பார்க்கறீங்க.......!கடைசியில உங்க உடல் இச்சையைத் தீர்த்துக்கறக்காக.......",அதற்கு மேல் என்ன சொல்லியிருப்பாளோ.....கலீரென்று ஏதோ உடைந்த சத்தத்தில் நிமிர்ந்து ஆதித்யனைப் பார்த்தாள்.



கோபத்தில் நெற்றி நரம்புகள் புடைக்க......இரத்தம் வழிந்த கைகளோடு ஆக்ரோஷமாய் நின்றிருந்தான் ஆதித்யன்.அவனுக்குக் கீழே உடைந்த கண்ணாடி சிலை சில்லு சில்லாய் சிதறிக் கிடந்தது.தன் கோபம் முழுவதையும் அந்த சிலையின் மேல் காட்டியிருந்தான் ஆதித்யன்.....!அவன் கோபத்தைத் தாங்க முடியாமல்.....அந்தக் கண்ணாடி சிலை நொறுங்கி.....அவன் உள்ளங்கை முழுவதும் இரத்தக்காயத்தை ஏற்படுத்தியிருந்தது.



அவன் இரத்தத்தைப் பார்த்தவளுக்கு மற்ற அனைத்தும் மறந்து போக....."அய்யோ.....!என்ன காரியம் பண்ணியிருக்கீங்க......?",பதறியபடி அவனருகே ஓடினாள்.



"கிட்ட வராதே.......!",ரௌத்திரமாய் கத்தியவனைப் பார்த்தவளின் கால்கள் தாமாக நின்றன.விழி சிவக்க.....தலைமுடி கலைந்து வெறிபிடித்தவன் போல் நின்றிருந்தவனிடம் நெருங்கவே பயப்பட்டாள் அவள்.



இருந்தும் அவன் கையிலிருந்து சொட்டிய இரத்தம்.....அவள் கால்களுக்கு பலத்தைக் கொடுக்க.....தைரியத்தை திரட்டிக் கொண்டு,"ப்ளீஸ் ஆது.....!இரத்தம் வருது......!",இதயம் வலிக்க.....அழுதபடியே அவனை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தாள்.



"கிட்டே வராதே டி......!",அடிபட்ட வேங்கையாய் உறுமியவன்......பக்கத்து மேசையின் மீதிருந்த கண்ணாடி கிளாஸை உடைக்க.....அது அவன் கைகளிலேயே சிதறி.....மேலும் அவன் காயத்தில் இருந்து இரத்தத்தை பெருக்கெடுக்கச் செய்தது.



"அய்யோ......!வேண்டாம்......!நான் கிட்ட வரல......!வேண்டாம் ஆது.....!",தன் வாயைப் பொத்திக் கொண்டு கதறினாள் அந்தப் பேதை.



ஆங்காரமாய் தன் முன் நின்றிருந்தவனை நெருங்க அவளுக்குத் தைரியம் வரவில்லை.எங்கே தான் அவனை நெருங்கினால்.....அவன் தன்னை மேலும் காயப்படுத்திக் கொள்வானோ என்ற பயத்தில்.....அவள் இருந்த இடத்தை விட்டு நகரவில்லை.



அவன் காயத்திலிருந்து வழிந்த இரத்தத்தைப் பார்த்தவளின் காதல் கொண்ட இதயமோ.....கதறித் துடித்து இரத்தம் சிந்தியது.



'ஐய்யோ......!என்னோட தடுமாற்றத்தை மறைக்கறதுக்காக......என்னென்னவோ பேசிட்டேனே......!சொல்லக் கூடாத வார்த்தையெல்லாம் சொல்லிட்டேன்......!அதுவும் என் ஆதுவைப் பார்த்து......!',காலம் தாழ்த்தி தன்னுடைய தவறைப் புரிந்து கொண்டவள் தன் நெற்றியிலேயே அறைந்து கொண்டாள்.



காலம் கடந்து அவள் தன் காதலை உணர்ந்து கொண்டிருக்கலாம்......!ஆனால்.....காலம் உணர்ந்து கொள்ளாதல்லவா......?வலிக்க.....வலிக்க அவனுடைய இதயத்தைக் குத்தி கொன்று விட்டு......அவனிடம் சென்று காதலை யாசித்தால்......அவன் என்ன சொல்லுவான்.....?





அகம் தொட வருவான்.....!!!
 

Latest posts

New Threads

Top Bottom