Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


எவனோ என் அகம் தொட்டுவிட்டான்

Nirmala Krishnan

Saha Writer
Messages
76
Reaction score
13
Points
6
அத்தியாயம் 37 :



அவன் கையிலிருந்து வழிந்த இரத்தம்.....அவள் பயத்தை சுக்கு நூறாக உடைத்தெறிந்து விட,"ப்ளீஸ் ஆது......!காயத்திலிருந்து இரத்தம் வருது.....!என்னைக் கவனிக்க விடுங்க......!",கைகூப்பி கெஞ்சினாள் அவள்.



"அதுதான் உன் வார்த்தையால.....என்னை உயிரோட கொன்னுட்டியே.....?இதுக்கு அப்புறமும்....காயத்துக்கு மருந்து போட்டால் என்ன......?இல்ல.....போடாட்டிதான் என்ன.....?",ஒவ்வொரு வார்த்தையும் வேதனையில் மூழ்கி வெளிவந்தன.



அவன் கண்களில் தெரிந்த அடிபட்ட வலியில்.....அவள் பேச்சு வராமல் நின்று விட்டாள்.கண்களில் வழிந்த கண்ணீருடன் அவனைப் பார்த்திருந்தாள்.



"என் காதலை எப்போத்தான் டி புரிஞ்சுக்க போற......?ச்சே......!நான் ஒரு பைத்தியக்காரன்.......!நீ இவ்வளவு பேசினதுக்கு அப்புறமும்.....உன்கிட்ட வந்து காதல்......அது இதுன்னு பினாத்திக்கிட்டு இருக்கேன்......!உன் லாங்குவேஜ்ல சொல்லணும்ன்னா......இது காதல் இல்ல......!இதுக்கு பேர் உடல் இச்சை......!அப்படித்தானே.......?",அமைதியாகக் கேட்டவன் அருகிலிருந்த ஒற்றை சோபாவை எட்டி உதைக்க.....அது சுவற்றில் மோதி தலைகுப்புற விழுந்தது.



அவனுடைய கோபத்தில் உடல் தூக்கி வாரிப் போட.....பக்கத்திலிருந்த சுவற்றோடு ஒண்டிக் கொண்டாள்.



"என்னடி சொன்ன......?என்னுடைய உடல் பசிக்காக உன்னை நெருங்கினேனா......?எனக்குத் தேவை உன்னுடைய உடம்புதான்னு நான் நினைச்சிருந்தா.....நான் உன்னை சந்திச்ச அடுத்த நாள்.....நீ என் பெட்ரூம்ல இருந்திருப்ப......!இந்த ஆதித்யன் நினைச்சா.....எதையும் சாதிப்பான்......!",



உன்னை சந்திச்சு.....காதல்ல விழுந்து.....கோயம்புத்தூர்ல இருந்த உன்னை.....சென்னைல்ல இருக்கிற என் ஆபிஸ் வரைக்கும் வரவழைச்ச என்னால.....என் படுக்கையறைக்கா உன்னை வரவழைச்சிருக்க முடியாது......?ஒரு நிமிஷம் போதும் டி.......!சொடக்கு போடற நேரத்துல.....வேலையை முடிச்சிட்டுப் போய்ட்டே இருந்திருப்பேன்......!இதோ......இப்பக் கூட.....நீ சொன்ன என்னுடைய உடல் இச்சையைத் தீர்த்துக்கிறதுக்கு பத்து நிமிஷம் கூட ஆகாது......பார்க்கறியா......?நடத்திக் காட்டட்டுமா......?",வெறி பிடித்தவன் போல அவளருகில் நெருங்கியவன்.....அவளது மிரண்ட விழிகளில் எதைக் கண்டானோ....."ச்சே......!",என்றபடி பக்கத்திலிருந்த சுவற்றில் ஓங்கி குத்தினான்.



அவள் முகத்தைக் கூடப் பார்க்க பிடிக்காதவனாய்.....அவனை விட்டுத் தள்ளி நின்றவன்,"ஆனால்.....நான் அப்படி பண்ண மாட்டேன் டி......!ஏன்னா.....நான் உன்னைக் காதலிக்கிறேன்.....!",இதைக் கூறும் போதே அவன் முகம் மென்மையாய் மாறியது என்னவோ உண்மைதான்......!



தன் கண்களில் வழிந்த நீரைக் கூடத் துடைக்காமல்.....அவன் வார்த்தைகளில் கட்டுண்டிருந்தாள் நித்திலா.



"உன்னால எப்படி டி இப்படியெல்லாம் பேச முடிஞ்சுது......?நீ இந்தளவுக்கு என் காதலை அவமானப்படுத்தினதுக்கு அப்புறமும்.....நான் உன்னைத் தொட்டேன்னா.....அது என் காதலுக்கு அசிங்கம்......!என் காதலுக்கு நான் துரோகம் பண்ண மாட்டேன்......!"



ஆற்றாமையோடு தன் தலையைக் கோதியவன்,"அது எப்படி டி......?என் கண்கள்ல வழிஞ்ச காதலை உன்னால புரிஞ்சுக்க முடியலையா......?என்னுடைய ஒவ்வொரு செய்கையிலும் வெளிப்பட்ட காதலை உன்னால உணர முடியலையா.....?நான் உன்னைக் காதலிச்சேன் டி......!உன்னை......உன் மனசை காதலிச்சேன்......!காதலிக்கிறேன்......!என் வாழ்க்கையோட கடைசி வரைக்கும் நீ வேணும்ன்னு நினைச்சேன்.......!ஆனால்.....நீ......",என்று புலம்பியவன்,



"எனக்கு இங்க வலிக்குது டி...... !",தன் இதயம் இருந்த பகுதியைத் தொட்டுக் காட்டியவன்,



"நீ பேசின ஒவ்வொரு வார்த்தையும்.....என்னைக் கொல்லுது டி.....!இப்படிக் கொஞ்ச கொஞ்சமா என்னைக் கொல்றதுக்கு.....நீ ஒரேயடியா என்னைக் கொன்னு.....!",அந்த வார்த்தையை அவன் முடிப்பதற்கு முன்பாகவே.....ஓடிச் சென்று அவன் வாயைப் பொத்தியவள்,



"நோ ஆது......!அந்த வார்த்தையை சொல்லாதீங்க......!அதைக் கேட்கிற சக்தி எனக்கு இல்ல.....!அன்னைக்கு நீங்க என்கிட்ட சவால் வீட்டீங்களே....'உன் வாயாலேயே ஐ லவ் யூ ஆது....'ன்னு சொல்ல வைக்கிறேன்னு.....இப்போ சொல்றேன்.....ஐ லவ் யூ ஆது.....!ஐ லவ் யூ......!நீங்க இல்லாத வாழ்க்கையை நினைச்சுக் கூட பார்க்க முடியாதுங்கிற அளவுக்கு ஐ லவ் யூ......!",அவன் கண்களைப் பார்த்துக் கதறியவளின் கண்களில் அப்படியொரு காதல் தெரிந்தது.....!



அவனோ....கொஞ்சம் கூட அசையாமல் கல்லுப் பிள்ளையார் மாதிரி நின்றிருந்தான்.அவன் முகத்தில் இருந்த கடினம் சிறிது கூட இளகவில்லை.



அவன் சட்டைக் காலரைப் பற்றியவள்,"ஐ யம் ஸாரி ஆது......!உங்க அருகாமையில மயங்கற மனசையும்....உடம்பையும் கட்டுப்படுத்த தெரியாம....என் மேலேயே எனக்கு வந்த கோபத்தை உங்க மேல காட்டிட்டேன்......!எவ்வளவு கொடுமையான வார்த்தையை உங்களைப் பார்த்து சொல்லிட்டேன்......!உங்க காதலை நான் கொச்சைப்படுத்திட்டேன்......!என்னை மன்னிச்சிடுங்க ஆது......!",அவன் மார்பில் முகம் புதைத்து அவள் கதற......அவன் அப்பொழுதும் அமைதியாகத்தான் இருந்தான்.அவன் முகத்தில் வேதனை கலந்த நிம்மதி நிலவியது......!



தன் கண்களைத் துடைத்துக் கொண்டு......அவன் மார்பிலிருந்து தன் முகத்தை நிமிர்த்தியவள்.....அவன் சட்டைக் காலரை பற்றியபடி,"என்ன கேட்டீங்க......?உங்களுடைய காதல் என்னைப் பாதிக்கலையான்னுதானே கேட்டீங்க.......?பாதிச்சது.....!உங்களுடைய காதல்.....உங்க கண்கள்ல நான் பார்த்த காதல்.....என்னுடைய மனசை புயலா சுழற்றியடிச்சு உங்க காலடில கொண்டு வந்து போட்டுச்சு......!



நீங்க ஒவ்வொரு முறை என்னை நெருங்கும் போதும்.....உங்களைப் பிடிக்காத மாதிரி விலக்கித் தள்ளறதுக்கு.....என்ன பாடு பட்டேன்னு எனக்குத்தான் தெரியும்......!நீங்க என் மேல வைச்சிருக்கிற காதலுக்கும்.....என் அப்பா அம்மா என் மேலே வைச்சிருக்கிற நம்பிக்கைக்கும் இடையில மாட்டிக்கிட்டு நான் தவிக்கிற தவிப்பு எனக்கு மட்டும்தான் தெரியும்......!



இந்த பக்கமும் போக முடியாம.....அந்தப் பக்கமும் நிலைச்சு நிற்க முடியாம.....ஒவ்வொரு நிமிஷமும் அணு அணுவா செத்துக்கிட்டு இருக்கேன் ஆது......!",அவன் சட்டையைப் பிடித்து உலுக்கியவள்.....தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு பேச்சைத் தொடர்ந்தாள்.



"நான் ஒண்ணும் ஜடம் இல்ல ஆது......!நானும் மனுஷிதான்......!அதுவும் எல்லா உணர்ச்சிகளும் நிறைஞ்ச சாதாரண மனுஷி......!உங்க மேல கொள்ளை கொள்ளையா காதலை வைச்சிருக்கிற சாதாரண மனுஷி......!உங்களை இவ்வளவு நெருக்கத்துல பார்க்கும் போதும்.....நீங்க ஒவ்வொரு முறையும் என்னை முத்தமிட நெருங்கும் போதும்.....என் மனசுல ஏற்படற மாற்றத்தையும்.....என் உணர்ச்சிகளோட கொந்தளிப்பையும் என்னால மட்டுமே புரிஞ்சுக்க முடியும்......!நான் போட்டு வைச்சிருந்த அத்தனை வேலிகளையும் உடைச்சிட்டு.....நீங்க என் மனசைத் தொட்டு ரொம்ப நாளாச்சு ஆது.......!",தன் மன உணர்வுகளை மிக அழகாக அவனிடம் கொட்டிக் கொண்டிருந்தாள் அவனுடைய காதலி.....!



அவன் கண்களை தனது விழிகளால் சிறையிட்டவள்,"என்னுடைய காதல்.....உங்க மீதான என்னுடைய தேடல்.....எப்படிப்பட்டதுன்னு இப்போ புரிஞ்சுக்குவீங்க......!",உறுதியான குரலில் உரைத்தவள்.....அடுத்த நொடி.....அவன் உயரத்திற்கு தன் கால்களை எக்கி.....அவன் இதழ்களைத் தனது இதழ்களால் பிணைத்திருந்தாள்.



முதல் முத்தம்......!தன்னவனுக்காக அவனுடையவள் கொடுக்கும் முதல் இதழ் முத்தம்......!உயிர்க் காதலில்.....இரு உள்ளங்கள் மூழ்கி முத்தெடுக்கும் ஒரு சுப உற்சவம்....இந்த உயிர் முத்தம்.....!



தன் உயிரை உருக்கி.....அதை தன் உணர்வுகளோடு கலந்து.....இந்த முத்தத்தின் வாயிலாக அவனுக்குள் பாய்ச்சி விட வேண்டும் என்ற நோக்கத்தோடு.....தட்டுத் தடுமாறி இந்த முத்த யுத்தத்தில் ஈடுபட்டிருந்தாள் நித்திலா.



அவளுடன் கரம் கோர்த்து.....அந்த முத்த யுத்தத்தில் சரிசமமாய் பங்கு கொள்ள வேண்டியவனோ......'நீ என்னவோ செய்து கொள்......!', என்பது போல் அமைதியாய் நின்றிருந்தான்.



சொல்லிக் கொடுக்க வேண்டியவன்.....அமைதியாக நிற்க.....கற்றுக் கொள்ள வேண்டிய அந்தப் பாவையோ......'நீ சொல்லிக் கொடுக்கா விட்டால் என்ன......?', என்று துணிந்து அதிரடியாய் களத்தில் இறங்கியிருந்தாள்.



ஆதித்யனின் முகத்தில் அத்தனை நிம்மதி விரவியிருந்தது.....!கண்களை மூடி அவள் இஷ்டத்திற்கு.....தனது உதடுகளை கொடுத்திருந்தவனின் முகத்தில் எல்லையற்ற காதல் தெரிந்தது.....!இத்தனை நாட்களாய் அலைந்து திரிந்து கொண்டிருந்த அவனுடைய காதல்......அதனிடம் வந்து அடைந்ததைப் போல் உணர்ந்தான் ஆதித்யன்.



சற்று முன் வார்த்தைகளால் அவன் காதலை குத்திக் கிழித்து ரணமாக்கியிருந்தவள்.....அதனால் ஏற்பட்டிருந்த காயத்திற்கு தன் இதழ்களால் மருந்திட்டாள்.....!அவள் தன் இதயத்தைத் திறந்து.....'அனைத்தும் நீயே.......!', என்று சரணடைந்த அந்த நொடி......அவன் உயிர்த்தெழுந்தான்......!அவன் மனதில் இருந்த சஞ்சலமும்.....வேதனையும்.....கோபமும் மறைந்து மாயமாகியிருந்தன.....!



தன் காதலை அவமானப்படுத்தியவளே.....தன் காதலுக்கான அங்கீகாரத்தையும் அளித்து விட்டதில் அவன் மனம் ஆழ்கடலை போல் அமைதியானது....!



இருந்தாலும் அவன்.....அவள் முத்தத்திற்கான பதில் முத்தத்தை அவள் இதழ்களில் வரையவில்லை.கண்களை மூடிக் காதலுடன்......அவள் இதழ்களின் மென்மையில் கரைந்து கொண்டிருந்தான்.....!தானே காதலுடன் முன் வந்து கொடுக்கும் தன்னவளின் முதல் இதழ் முத்தம் அல்லவா.....?எனவே.....அந்த யுத்தத்தைத் தனதாக்கிக் கொள்ளாமல்.....தன் காதலியின் இஷ்டத்திற்கு விட்டிருந்தான் அந்தக் காதலன்.....!



என்னதான் அந்தக் காரிகை துணிந்து களத்தில் இறங்கி விட்டாலும்......அவளுக்கும் இது முதல் முத்தமல்லவா......!எங்கே ஆரம்பிப்பது.....எங்கே முடிப்பது.....என்று தெரியாமல் தட்டுத் தடுமாறி.....முட்டி மோதிக் கொண்டிருந்தாள் அந்தக் கட்டழகி.....!



தன்னவளின் தடுமாற்றத்தைப் மனதிற்குள் சிறு புன்னகையுடன் ரசித்துக் கொண்டிருந்தவனின் உதடுகள்.....அவள் தடுமாற்றத்தைப் போக்கி.....அந்த முத்த யுத்தத்தின் வெற்றியின் ரகசியத்தை அவளுக்குச் சொல்லித் தர வேண்டும் என்று பரபரத்தது.....!



ஆனால்.....காதல் கொண்ட மனமோ.....'வேண்டாம்.....!இப்படியே கண்ணை மூடி.....அவள் இதழ்களில் காதலோடு கரைந்து போ......!', எனக் கட்டளையிட்டது.....!அந்த ஆறடி ஆணழகனும் காதலின் முன் மண்டியிட்டு.....அது இட்ட கட்டளையை சிரமேற்கொண்டான்.....!



ஒருவழியாக மூச்சுக் காற்றுக்காக.....அவன் உதடுகளிலிருந்து தன் இதழ்களைப் பிரித்தெடுத்தவளை நாணம் வந்து கட்டிக்கொள்ள.....அவன் முகம் பார்க்க வெட்கி.....அவன் மார்பில் புதைந்து கொண்டாள்.எல்லையில்லா நிம்மதியுடன் தன்னவளை மென்மையாக அணைத்துக் கொண்டான் ஆதித்யன்.



சற்று நேரத்திற்கு முன்பு வரை.....வேட்கையோடு அவளை நாடியவன்.....இப்பொழுது.....காதலுடன் அவளை அணைத்திருந்தான்.....!



எவ்வளவு நேரம் அப்படியே நின்றிருந்தார்களோ.....தெரியவில்லை.....!திடீரென்று நித்திலாவிற்கு அவனுடைய கைக்காயம் உரைக்க.....சட்டென்று அவன் மார்பில் இருந்து தன் முகத்தை விலக்கியவள்,"உங்களுடைய காயம்......?",பதைபதைத்தபடியே அவன் உள்ளங்கையை விரித்துப் பார்த்தாள்.



சில்லு சில்லாய் சிதறியிருந்த கண்ணாடி.....அவனுடைய வலது உள்ளங்கை முழுவதையும் புண்ணாக்கி இரத்தக் காயத்தை ஏற்படுத்தியிருந்தது.அவன் காயத்தைக் கண்டவளின் கண்களில் மீண்டும் கண்ணீர் நதி பெருக்கெடுத்தது.



"எல்லாம் என்னாலதான்......!என்னை மன்னிச்சிடுங்க ஆது.....!",அவள் தேம்ப,



"ப்ச்......!பேபி......!முதல்ல அழறதை நிறுத்து......!இனி நீ எதுக்காகவும் அழக்கூடாது......!",மென்மையாக கடிந்து கொண்டான் ஆதித்யன்.



தன் கண்களைத் துடைத்துக் கொண்டவள்,"உங்க காயத்துக்கு மருந்து போடாம.....நான் பாட்டுக்கு அழுதுக்கிட்டு இருக்கேன்......!வந்து உட்காருங்க......!",தன்னைத் தானே கடிந்து கொண்டவள்.....அவனை அழைத்துச் சென்று கட்டிலில் அமர வைத்தாள்.



கண்ணீருடன் தன் காயத்திற்கு மருந்திட்டுக் கொண்டிருந்தவளைக் காதலுடன் நோக்கியவன்,"என் மேல இவ்வளவு காதலை வைச்சுக்கிட்டு.....என்கிட்ட சொல்லாம ஏண்டி மறைச்ச.......?",ஆற்றாமையோடு அவன் கேட்க,



அவனை நிமிர்ந்து பார்த்தவள்,"என்னை வேற என்னதான் பண்ணச் சொல்றீங்க ஆது......?உங்களுடைய காதலைப் பார்த்து.....நான் உங்க பக்கம் சாயும் போதெல்லாம்.....என் அப்பா என் மேல வைச்சிருக்கிற நம்பிக்கை குறுக்கே வந்து.....உங்களை நோக்கி ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாம தடுத்திருச்சு......!ஆனால்......இப்போ.....",அதற்கு மேல் பேச முடியாமல் பெற்றவர்களின் நினைவில் அவள் கண்கலங்க,



"ஆனால்.....இப்போ என்னுடைய காதல் விஸ்வரூபம் எடுத்து உன் முன்னாடி இருந்த அத்தனை தடைகளையும் தகர்த்து எறிஞ்சிட்டு.....உன்னை வந்து அடைஞ்சிருச்சு......!",என்று முடித்து வைத்தான் ஆதித்யன்.



"உண்மைதான் ஆது.......!உங்க காதலுக்கு முன்னாடி நான் பலவீனமாகிடறேன்......!ஆனால்.....என் அம்மா அப்பாவுக்குத் துரோகம் பண்ற மாதிரி ஃபீல் ஆகுது......!",என்ன முயன்றும் தன் கண்களில் வழிந்த கண்ணீரை அவளால் தடுக்க முடியவில்லை.



இடது கையால் அவள் கண்ணீரைத் துடைத்து விட்டவன்,"ப்ச்......!இங்கே பாரு பேபி.....!உன்னோட இந்த குற்ற உணர்ச்சிக்கு அவசியமே இல்ல......!உன் அம்மா அப்பா சம்மதத்தோடதான் நாம கல்யாணம் பண்ணிக்க போறோம்......!இதுல.....நீ ஃபீல் பண்ண என்ன இருக்கு.....?என்னுடைய காதல் உன்னை சரிக்கட்டின மாதிரி.....நம்மளுடைய காதல் உன் பேரண்ட்ஸை சம்மதிக்க வைச்சிடும்......!ஒகே வா......?",குறும்பாக அவள் தலை முடியை கலைத்து விட்டவன்,



பின் தீவிரமான குரலில்,"இனி நீ நம் காதலைப் பத்தி மட்டும்தான் யோசிக்கணும்.......!இந்த ஆதித்யனோட பொண்டாட்டி இனி எதுக்காகவும் அழக்கூடாது......!இந்த மாதிரி குற்ற உணர்ச்சி....நம்பிக்கைத் துரோகம்ன்னு பினாத்திக்கிட்டு இருக்கறதை விட்டுட்டு......என்னை லவ் பண்ற வேலையை மட்டும் பாரு......!மத்த எல்லா விஷயத்தையும் நான் பார்த்துக்கிறேன்......!",என்றான்.



அவனுடைய வார்த்தையில் நித்திலாவின் மனம் அமைதியடைந்தது.குறும்பாக அவனைப் பார்த்துப் புன்னகைத்தவள்,"சரிங்க சார்......!இனிமேல் என்னுடைய ஃபுல் டைம் ஜாப்.....என் ஆதுவை காதலிக்கறது மட்டும்தான்.......!",



"ஹ்ம்ம்.....தட்ஸ் மை குட் பேபி.......!இப்போ.....இந்த விஷயத்தை கொண்டாடலாமா......?",என்றபடி அவன் அவளருகில் நெருங்கி அமர,



"முதல்ல உங்க காயம் ஆறட்டும்......!அதுக்கு அப்புறம் நம்ம கொண்டாட்டத்தையெல்லாம் வைச்சுக்கலாம்......!",தள்ளி அமர்ந்தபடி அவன் கையைப் பிடித்துக் கட்டுப் போட ஆரம்பித்தாள் அவள்.



"இட்ஸ் நாட் ஃபேர் பேபி......!",அவன் சின்னக்குழந்தை போல் அடம் பிடிக்க,



அவளோ அதை கண்டுகொள்ளாமல்,"நான் போய் உங்களுக்கு டின்னர் எடுத்துட்டு வர்றேன்......!",என்றபடி நழுவி விட்டாள்.



ஆதித்யனுக்கு கையில் காயம் இருந்ததால்.....நித்திலாவே அவனுக்கு சாப்பாட்டை ஊட்டி விட.....அந்த அராஜகக்காரன் சாப்பாட்டை மட்டும் விழுங்கினானா......?இல்லை.....அவளது விரல்களையும் சேர்த்து விழுங்கினானா.....?என்பது அந்தக் காதலர்களுக்கு மட்டுமேயான ரகசியம்......!



அதன்பிறகு.....இருவரும் இரவு வெகு நேரம் வரைக்கும் பேசிக் கொண்டிருந்தனர்.அவள் சிறுவயதில் மரம் ஏறி மாங்காய் பறித்த கதையை ஏதோ ஆஸ்கார் அவார்ட் வாங்கிய வரலாறு மாதிரி கூற......அந்தக் காதல்காரனும்.....'ஓ.....அப்படியா.....!எத்தனை மாங்காய் பறிச்ச.....?',என்று கர்மசிரத்தையாய் கேட்டுக் கொண்டான்.



பதிலுக்கு அவன் ஏதோ மொக்கை ஜோக்கை சொல்ல......அவள் ஏதோ வடிவேல் காமெடியைப் பார்த்தது போல் விழுந்து விழுந்து சிரித்து வைத்தாள்....!இதுபோல.....'ஸ்வீட் நத்திங்ஸ்.....!' காதலில் சகஜமல்லவா......?





அகம் தொட வருவான்....!!!
 

Nirmala Krishnan

Saha Writer
Messages
76
Reaction score
13
Points
6
அத்தியாயம் 38 :



அலுவலகத்தில் இருந்த அனைவரும் தங்கள் வேலை நேரம் முடிந்து.....ஒருவர் பின் ஒருவராகக் கிளம்பிக் கொண்டிருக்க.....சுமித்ரா மட்டும் கணினித் திரையை உற்றுப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.



அவள் கண்கள்தான் திரையைப் பார்த்துக் கொண்டிருந்ததே தவிர....அவள் மனம் முழுவதும்....நேற்று இரவு அவள் அம்மாவும் அப்பாவும் பேசிக் கொண்டிருந்த உரையாடலில் நிலைத்திருந்தது.



அந்த உரையாடலின் சாராம்சம் இதுதான்.....!அவர்களது சாதி சனத்தில் ஒரு பெரிய இடம் சுமித்ராவைப் பெண் கேட்டிருந்தது.இதைப் பற்றி வீட்டில் பேசி விட்டு அவர்களுக்கு முடிவு சொல்வதாக சொல்லிவிட்டு சுமித்ராவின் தந்தை வந்து விட்டாராம்.அதைப் பற்றி தன் மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தவரின் உரையாடலை சுமித்ரா கேட்டு விட்டாள்.



இனியும் தாமதிக்கக் கூடாது.....கௌதமிடம் இந்த விஷயத்தை சொல்லி விட வேண்டும் என்று எண்ணி அலுவலகம் வந்தவளுக்கு.....அன்று முழுவதும் கௌதமை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.அது மட்டுமல்லாமல்.....கௌதமை நினைத்து அவளுக்கு சற்று பயமாகவும் இருந்தது.



'இந்த விஷயத்தை மட்டும் கேள்விப்பட்டா......தாம் தூம்ன்னு குதிப்பார்.....!அன்னைக்கே அப்பாக்கிட்ட பொண்ணு கேட்டு வர்றேன்னு சொன்னாரு......!இப்போ என்ன சொல்லப் போறாரோ தெரியல......?',யோசித்தபடியே கௌதமின் அறைக்கதவைத் திறந்து உள்ளே நுழைந்தாள்

.

"சார் ரொம்ப பிஸியோ......?காலையில இருந்து பார்க்கவே முடியல......?",என்றபடி தன் முன்னால் இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தவளைப் பார்த்தவனின் முகம் கனிந்தது.



"ஹே.....வாடா ஹனி......!உன்கூட சரியாவே டைம் ஸ்பெண்ட் பண்ண முடியல.......",



"ஹ்ம்ம்......!அதுதான் நீங்க ரொம்ப பிஸியா இருக்கீங்களே......என் கூட நல்லா பேசி ரெண்டு நாள் ஆச்சு.....தெரியுமா.....?",சிறு உடலுடன் கூறியவளைப் பார்த்தவன்,



"சாரி டா......!கொஞ்சம் வேலை அதிகம்.....ஆதியும் ஊர்ல இல்லையா....அதுதான்......!",தன் இரு கைகளையும் தலைக்கு மேலே தூக்கி சோம்பல் முறித்தபடியே கூறினான்.



"நேத்து நைட் உனக்கு கால் பண்ணினேனே......?நீ ஏன் எடுக்கல......?",அவன் கேட்கவும்.....அவளுக்குத் தன் பெற்றவர்கள் பேசிய விஷயம் ஞாபகத்திற்கு வந்தது.அவர்கள் பேசியதைக் கேட்டு.....அது தந்த அதிர்ச்சியில்தான் அவள் கௌதமின் போனை அட்டெண்ட் செய்யவில்லை.



'அவனிடம் எப்படி சொல்வது......?' என்று தயங்கியபடியே,"அது.....வந்து.....எங்க வீட்ல......",அவள் தடுமாறிக் கொண்டிருக்க,



அவனோ.....தன் இரு கைகளையும் மடித்து பின்னங் கழுத்தில் வைத்தபடி சொடக்கு எடுத்தான்.அவனுடைய செய்கையில்......தான் கூற வந்ததை மறந்தவளாய்....அவனைக் கவனித்தாள் அவள்.



"ஏன்......?என்னாச்சு.....?அப்போ இருந்து பார்க்கிறேன்.....கழுத்தை தடவிக்கிட்டே இருக்கீங்க......?",பதற்றத்துடன் அவள் கேட்க,



"ம்.....கழுத்து வலிக்குது டி......!சிஸ்டமிலேயே வொர்க் பண்ணிட்டு இருக்கேன்ல......அதனாலேயே இருக்கும்......!",



"ஏதாவது ஆயில்மெண்ட் போட்டிருக்கலாம்ல.......?சரி விடுங்க......!நான் மசாஜ் பண்ணி விடறேன்......!",என்றபடி எழுந்தவளிடம்,



"என்னது......மசாஜா......?உனக்கு அதெல்லாம் தெரியுமா......?அதுக்கு எண்ணெய் வேணும்ல.....?ஆபிஸ்ல எண்ணெய்க்கு எங்க போறது......?",அவன் சந்தேகமாய் கேட்டான்.



"அதெல்லாம் எதுவும் தேவையில்லை.......!நீங்க கொஞ்ச நேரம் கண்ணை மூடி ரிலாக்ஸ்டா உட்காருங்க......!",அவனுக்குப் பின்னால் வந்து நின்றவள்......அவன் சட்டையின் முதல் இரண்டு பட்டன்களைக் கழட்ட முயல,



"ஹேய்.....!என்னடி பண்ற......?ஒண்ணும் தெரியாத கன்னிப் பையனை ரேப் பண்ண பார்க்கிறயா......?",போலியாக அலறினான் அவன்.



அவன் தலையில் செல்லமாக குட்டியவள்,"ஆமா.....நீங்க அப்படியே ஒண்ணும் தெரியாத சின்னப் பாப்பா பாருங்க......!நீங்க எவ்வளவு கேடின்னு.....எனக்கு மட்டும்தான் தெரியும்.......!",ரகசியமாக அவள் கூற,



அவளை அண்ணாந்து பார்த்தபடி ஒற்றைக் கண்ணைச் சிமிட்டியவன்,"எந்தளவுக்கு கேடி......?",அவன் உதடுகளில் குறும்புப் புன்னகை தவழ்ந்தது.



"ம்.....அதெல்லாம் சொல்ல முடியாது......!முதல்ல பேசாம திரும்பி உட்காருங்க......!",அவன் தலையைப் பிடித்துத் திரும்பியவள்.....அவன் சட்டையை சிறிது தளர்த்தி.....கழுத்தை நீவி விட ஆரம்பித்தாள்.



அவளுடைய மென்மையான கரங்களின் மாயாஜாலத்தில்.....அவனது கழுத்து வலி குறைந்தது என்னவோ உண்மைதான்.....!



சிறிது நேரம் மசாஜ் செய்தவள்,"ம்....இப்போ எப்படி இருக்கு......?",என்று வினவ,



"ஹ்ம்ம்......!ஃபீலிங் பெட்டர் டி......!முன்னாடி இருந்ததுக்கு இப்போ வலி கொஞ்சம் குறைஞ்சிருக்கு......!",தன் கழுத்தை அப்படியும் இப்படியும் திருப்பியபடி கூறினான்.



"என்னது......?கொஞ்சம் தான் குறைஞ்சிருக்கா......?இப்போ பாருங்க......!முழுசா குறைஞ்சிடும்......!",என்றவள் குனிந்து அவன் கழுத்தில் பட்டென்று ஒரு முத்தம் வைக்க.....அவன் மயங்கிப் போனான்.



"ஹேய்......!உண்மையாலுமே வலி போயிருச்சு டி.....!நீ முத்தம் கொடுத்த உடனே.....வலி பறந்து போயிடுச்சு......!",என்றவன் அவள் சுதாரிக்கும் முன்பாக அவளை இழுத்துத் தன் மடியில் அமர்த்தியிருந்தான்.



"என்ன பண்றீங்க.....?விடுங்க......!",சிறு கூச்சலுடன் எழ முயன்றவளின் இடையை இழுத்து அணைத்தவன்,



"இரு ஹனி......!எங்கெங்கே வலிக்குதுன்னு சொல்றேன்.....!உன் மருந்தைக் கொடுத்துட்டு போ......!",
அவளை வாசம் பிடித்துக் கொண்டே கிசுகிசுத்தான் அவன்.



அவனுடைய அருகாமையில் உருகிக் கரைந்து கொண்டிருந்தவள்,"அந்த மருந்தெல்லாம்.....ஒரு டைம்தான் கொடுக்கப்படும்.....!",அவனைத் தள்ளி விட முயன்றபடி உரைத்தாள் அவள்.



"ஹேய்.....!உன் மாமா பாவம்ல......?ரெண்டு நாளா வேலை வேலைன்னு.....ரொம்பவும் காய்ஞ்சு போய் கிடக்கிறான்.....!கொஞ்சம் கருணை காட்டக் கூடாதா.......?",என்றவனின் விரல்கள் அவள் மேனியில் கண்டபடி அலைய ஆரம்பித்தன.



"ம்ஹீம்......!",அவள் இதழ்கள் முணுமுணுக்க.....அவள் கரங்களோ.....அவன் கைகளின் ஊர்வலத்தைத் தடுப்பதிலேயே குறியாக இருந்தன.



"எனக்கு காலையில இருந்து இங்க வலிச்சுக்கிட்டே இருக்குது டி......!",தன் உதடுகளைத் தொட்டுக் காட்டியவன்....."உன் மருந்து சூப்பரா வொர்க்அவுட் ஆகுது டி.....!இங்கே கொஞ்சம் அந்த மருந்தை கொடுக்கலாம்ல......!",என்றான் அவள் இதழ்களை ஆள்காட்டி விரலால் வருடியபடியே.



அவள் எதைக் கூறுவதற்காக கௌதமின் அறைக்குள் வந்தாள் என்பது அவளுக்கு முற்றிலுமாக மறந்து போனது.



"வே....வேண்டாம்.....!நா....நான் போகணு......!",அந்த வார்தைகளை அவள் முடிப்பதற்கு முன்பாகவே.....அவள் இதழ்கள்......அவன் இதழ்களுக்குள் சிக்கியிருந்தன.சொல்ல வந்த மீதி வார்த்தைகள்....அவன் இதழ்களுக்குள் கரைந்து காணாமல் போயின.....!



அவள் இதழ்களின் மென்மையில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருந்தவன்......வெகுநேரம் கழித்தே அவளை விடுவித்தான்.அவன் கண்களைப் பார்க்க முடியாமல் பெண்ணவளை.....வெட்கம் வந்து சூழ்ந்து கொள்ள.....தன் சிவந்த முகத்தை மறைப்பதற்காக.....அவன் மார்பில் புதைந்து கொண்டாள்.



அவன் மார்பில் புதைந்தவளுக்கு.....அடுத்த நொடியே ஏதோ வித்தியாசம் தெரிய......அந்த வித்தியாசமும் அவளுக்குப் பிடித்து விட......இன்னும் அழுத்தமாகத் தன் முகத்தை அவன் மார்பில் புதைத்துக் கொண்டாள்.



மசாஜ் செய்வதற்காக சட்டையின் முதல் இரண்டு பட்டன்களைக் கழட்டி விட்டிருந்ததால்.....உரமேறிய அவனுடைய வெற்று மார்பில் சுகமாய் புதைந்திருந்தாள் அவள்.....!



அவன் அண்மையில் மயங்கியிருந்தவளுக்குத் திடீரென்று தான் அந்த அறைக்கு வந்த காரணம் உரைக்கவும்.....அவனை விட்டு விலக முயன்றாள்.அவன் முகத்தைப் பார்த்தபடியே,"உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்......!",அவள் ஆரம்பிக்க,



"என்ன......?",என்று அவன் கேட்டுக் கொண்டிருக்கும் போத.....அவனது மொபைல் அலறியது.



அவன் அந்த அழைப்பிற்கு பதிலளித்துக் கொண்டிருக்க.....சுமித்ராவிற்கோ.....'ஆரம்பமே தடங்கலா.......?',என்று சோர்வாக இருந்தது.



மொபைலை அணைத்தவன்.....அவளிடம்,"ம்....இப்ப சொல்லு......?என்கிட்ட என்ன சொல்ல வந்த......?",அவளைத் தன் மடியில் இருத்தியபடியே அவன் வினவ,



"அது.....வந்து.....எங்க......",அவள் திக்கித் திணறி ஆரம்பிக்கும் போது.....மீண்டும் போன் அலறி இடையூறை ஏற்படுத்தியது.



"ஒரு நிமிஷம் டா......!",சுமித்ராவிடம் கூறி விட்டு.....போனை காதில் வைத்தவனைக் கடமை வந்து அழைத்துக் கொள்ள.....மும்முரமாய் பேச ஆரம்பித்தான்.லேப்டாப்பில் வேலை செய்தபடியே.....எதிர் முனையில் இருந்த நபருக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தவனைப் பார்த்தவளுக்கு பாவமாக இருந்தது.



'பாவம்......!ஏற்கனவே வொர்க் டென்க்ஷன்ல இருக்கறாரு.....இதுல இந்த பிரச்சனையையும் சொல்லி....ஏன் இவரை கஷ்டப்படுத்தனும்.......?இன்னொரு நாளைக்கு.....அவரு ஃப்ரீயா இருக்கும் போது சொல்லிக்கலாம்......!அதுதான் வீட்டிலேயும் இந்தக் கல்யாண பேச்சை.....அவ்வளவுக்கா சீரியஸா எடுத்துக்கலைல்ல......!",என்று எண்ணியவள்,



'அவனிடம் இருந்து விலகியபடி,'டைம் ஆச்சு.....!நான் கிளம்பறேன்......!இன்னொரு நாளைக்கு பேசிக்கலாம்.....!',என்று அவனிடம் சைகையிலேயே கூற.....அவனும் வேலை நெருக்கடியில்,'சரி.....!',என்று தலையசைத்து விட்டான்.



அவள் எப்படியாவது அந்த விஷயத்தைக் கௌதமின் காதில் போட்டு வைத்திருக்கலாம்.....!அதைச் செய்யாமல் விட்டதுதான் அவளுடைய தவறு.....!அந்த தவறு அவனின் கோபத்தை தூண்டி விடப் போகிறது.....என்பதை அவள் அறிந்திருக்கவில்லை.....!

.................................................................................

"கிளம்பியாச்சா.....?இல்லையா......?", என்ற நித்திலாவின் குரல் காற்றில் மிதந்து வர,



"இதோ ஆச்சு பேபி......!ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ்......!",குரல் கொடுத்தபடியே.....தன் முன்னால் இருந்த லேப்டாப்பில் எதையோ நோண்டிக் கொண்டிருந்தான் ஆதித்யன்.



"ஒரு பொண்ணு.....நான் கூட சீக்கிரம் கிளம்பிட்டேன்.......!நீங்க இன்னுமா கிளம்பறீங்க........?",கத்தியபடியே அவன் அறைக்கதவைத் திறந்தவள்.....ஆதித்யன் இருந்த நிலையைப் பார்த்து பல்லைக் கடித்தாள்.



பின்னே......!அவளை வெளியே கூட்டிப் போகிறேன் என்று சொல்லி விட்டு......காலையில் இருந்து அந்த லேப்டாப்பின் முன்னாலேயே அமர்ந்திருந்தால்......அவளுக்கு கோபம் வருமா.....?வராதா......?



"இன்னும் நீங்க இந்த லேப்டாப்பைத்தான் கட்டிக்கிட்டு அழுதுக்கிட்டு இருக்கீங்களா.......?இன்னைக்கு என்னை ரோஸ் கார்டனுக்கு கூட்டிட்டுப் போறேன்னு சொன்னீங்க......நானும் அதை நம்பி கிளம்பி வந்து நிற்கிறேன்.......!நீங்க என்னடான்னா......இன்னும் இந்த லேப்டாப்பையே கொஞ்சிக்கிட்டு இருக்கீங்க......?",இடுப்பில் கை வைத்தபடி படபடவென்று பொரிந்தவளைப் பார்த்தவனுக்கு......அவள் மேல் கோபம் வருவதற்கு பதிலாக மயக்கம்தான் வந்தது.



தன் மடிக்கணினியை அணைத்து தூர எறிந்தவன்......அதே வேகத்தில் அவளைப் பிடித்து இழுத்தான்.சோபாவில் அமர்ந்திருந்தவனின் மேல் பூங்கொத்தாய் வந்து விழுந்தாள் அவனுடைய காதலி.....!



அவள் நெற்றியிலிருந்து கோடிழுத்தபடியே,"நீ இருக்கும் போது......நான் ஏண்டி லேப்டாப்பை கட்டிக்கப் போறேன்......?நான் கொஞ்ச.....எனக்கு லேப்டாப் வேண்டாம்......!என்னுடைய பேபிதான் வேணும்.....!",கிறக்க குரலில் கூற,



"அப்படின்னா......எதுக்கு காலையில இருந்து என்னைக் கண்டுக்காம......லேப்டாப்பையே முறைச்சு முறைச்சுப் பார்த்துட்டு உட்கார்ந்திருந்தீங்க.......?",சிறு சிணுங்கலுடன் கேட்டாள் அவள்.



உண்மைதான்.......!அவனும் காலையில் இருந்து மடிக்கணினியை வைத்துக் கொண்டுதான் அமர்ந்திருந்தான்.அவனைச் சொல்லியும் குற்றமில்லை......!அந்த அளவிற்கு எஸ்டேட் வேலை அவன் கழுத்தை நெறித்தது.இருக்கப் போகும் ஐந்து நாட்களில் அனைத்து வேலைகளையும் முடிக்க வேண்டும் என்ற அவசரத்தில் வேலை செய்து கொண்டிருந்தான்.



அவளது சிணுங்களில் தன் மனதை தொலைத்தவனாய்,"சாரி டா பேபி.......!இப்போ பாரு.....ஐயாவோட கவனிப்பு எப்படி இருக்கப் போகுதுன்னு......!",அவள் கன்னங்களை வருடியபடியே.....முகம் நோக்கி குனிய,



அவன் முகத்தைப் பிடித்து தள்ளி விட்டவள்,"அதெல்லாம் ஒண்ணும் கவனிக்க வேண்டாம்......!முதல்ல என்னை ரோஸ் கார்டனுக்கு கூட்டிட்டுப் போகிற வழியைப் பாருங்க......!",அவன் சுதாரிக்கும் முன்பாகவே அவனை விட்டு விலகி ஓடி விட்டாள்.



'ராட்சசி......!',வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டவன்.....புன்னகையுடன் கிளம்பி வெளியே வந்தான்.வள்ளியிடமும்.....கந்தனிடமும் சொல்லிக் கொண்டு இருவரும் காரில் ஏறினர்.



சீசன் டைம் இல்லாததால்.....அவ்வளவாக கூட்டம் இல்லை.பல்வேறு வண்ணங்களில் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்த ரோஜா மலர்கள் மனதைக் கொள்ளை கொள்ளச் செய்வதாய் இருந்தது.



அவனது கையணைப்பில் இருந்தபடியே அந்த ரோஸ் கார்டன் முழுவதையும் சுற்றி வந்தாள் நித்திலா.அவனும்.....அவளைத் தன் கையணைவில் இருந்து விலக அனுமதிக்கவில்லை.இருவரும் காதல் பறவைகளாய் சிறகடித்துத் திரிந்தனர்.



ஒரு பெரிய மரத்தில் சாய்ந்தபடி.....நித்திலா வளவளத்துக் கொண்டிருக்க.....அவளருகில் மரத்தின் மீது ஒற்றைக் கையை ஊன்றியபடி.....அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் ஆதித்யன்.தான் பேசுவதை அவன் கேட்டுக் கொண்டிருக்கிறான் என்ற நினைவில் அவள் கதையளந்து கொண்டிருக்க......அந்த மயக்கும் கண்ணனோ......அவள் பேசும் போது குவிந்து விரிந்து அழகு காட்டிக் கொண்டிருந்த.....அவளுடைய தேனூறும் செவ்விதழ்களையே வெட்கங் கெட்ட பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.



அவள் எதையோ வெகு மும்முரமாக பேசிக் கொண்டிருக்க.....அந்த பேச்சிற்கு ஏற்ப சுழித்து.....அழகாக அபிநயம் பிடித்துக் கொண்டிருந்த இதழ்களை.....சட்டென்று தன் விரல்களால் பற்றினான் ஆதித்யன்.



அவனுடைய செய்கையில் அதிர்ச்சியும்.....வெட்கமும் ஒரு சேர ஆட்கொண்டது அந்த மங்கையை.....!



அந்த அதிர்ச்சியோடும்.....நாணிச் சிவந்த முகத்துடனும் அவனை நோக்கினாள் நித்திலா.அவளருகில் நெருங்கி நின்றவன்,"பேபி.....!உனக்கு ஒண்ணு தெரியுமா......?",என்றான் கிசுகிசுப்பான குரலில்.



தன் கீழுதடு அவனிடம் சிறைப்பட்டிருக்கும் நிலையில்.....வாயைத் திறந்து பேச முடியாமல்......கண்களாலேயே,'என்ன.....?' என்று அவள் வினவ,



அவளுடைய பார்வையில் முற்றிலும் தன்னைத் தொலைத்தவன்.....இன்னும் அவளை நெருங்கினான்......!யார் அசைந்தாலும்.....இருவரின் உடல்களும் உரசிக் கொள்ளும்.......!



அவன் மீது தன் மேனி பட்டு விடக் கூடாது என்ற படபடப்பில்.....மூச்சை இழுத்துப் பிடித்தபடி நின்றிருந்தவளின் நிலை அவனைப் பித்துக் கொள்ளச் செய்தது.



"உனக்கு.....இன்னும் ஒழுங்காவே முத்தம் கொடுக்கத் தெரியல பேபி.......!",அவனுடைய சூடான மூச்சுக் காற்றோடு போட்டி போட்டுக் கொண்டு.....தன் காது மடலை உரசிச் சென்ற அவனுடைய உதடுகளின் வெம்மையில் கிறங்கிப் போனாள் அவள்.



விழிகள் செருக......அரை மயக்க நிலையில் நின்றிருந்தவளைப் பார்த்தவனுக்கு போதை ஏறியது.அந்தப் போதையின் விளைவாக......அவனுடைய விரல்கள்.....அவள் இதழ்களை சற்று அழுத்திப் பிடித்தன.....!



கிறங்கடிக்கும் புன்னகையுடன் அவள் முகம் நோக்கி குனிந்தவன்,"நான்.....வேணும்ன்னா.....உனக்கு எப்படி முத்தம் கொடுக்கிறதுன்னு சொல்லித் தரட்டா.....?",அவன் குரல் மயக்கமாய் வந்தது.



தன் இதழ்களில் உணர்ந்த.....அவன் விரல்களின் அழுத்தத்தில்.....பட்டென்று தன் விழிகளைத் திறந்தவள்.....'வேண்டாம்......!', என்பதாய் தலையசைக்க....



"ஏன் பேபி.....?நேத்து நீ எவ்வளவு தடுமாறின தெரியுமா......?உனக்கு ஒண்ணுமே தெரியல......!லெட் மீ.....",போதையோடு உரைத்தவன்.....தன் விரல்களால் சிறைப்படுத்தப் பட்டிருக்கும் அவள் இதழ்களை.....தன் உதடுகளால் சிறைப்படுத்தும் நோக்கத்தோடு.....அவள் இதழ்களை நெருங்க....



சட்டென்று அவனைப் பிடித்துத் தள்ளி விட்டவள்.....விலகி நின்று கொண்டு,"போடா.....!",இன்றி பழிப்பு காட்ட....



"ஏய்.....!நில்லு டி.....!",அவன் பாய்ந்து சென்று அவளைப் பிடிப்பதற்குள்.....மான் குட்டியாய் துள்ளி ஓடி விட்டாள் நித்திலா.



..................................................................................................................



"முதல் முத்தம் கொடுத்தது எவ்விடம்......? - என்னில்
முதல் மொட்டு உடைந்தது எவ்விதம்......?
சரியாகச் சொல்லி விட்டால் அன்பு.....இல்லை......
தப்புத் தப்பாய் சொல்லி விட்டால் வம்பு......!",




கையில் ஒரு ஆப்பிளை வைத்துக் கடித்தபடி......ஆதித்யனைப் பார்த்து பாடிக் கொண்டிருந்தாள் நித்திலா.



ஹாலில் போடப்பட்டிருந்த நீண்ட சோபாவில் அமர்ந்தபடி டிவி பார்த்துக் கொண்டிருந்த ஆதித்யன்......அவளைத் திரும்பிப் பார்த்து ஒரு முறை முறைத்தான்.



அவள் அப்பொழுதும் அடங்காமல்.....



"கன்னிப் பூவும் உன்னைப் பின்னிக் கொள்ள வேண்டும்......!
முத்தம் போடும் போது.....எண்ணிக் கொள்ள வேண்டும்.....!",




என்று பாட,



அனல் கக்கும் பார்வையை அவளை நோக்கி வீசியவன்,"வேணாம் டி.....!",என்றான் பல்லைக் கடித்துக் கொண்டே....!



அவனே.....அவளை முத்தமிட முடியாத கடுப்பில்.....கடுகடுவென்று அமர்ந்திருந்தான்.வேண்டுமென்றே அவனருகில் வந்து அமர்ந்து கொண்டு.....அவனை சீண்டி விடுமாறு பாடல்களைப் பாடினால்......அவன் என்ன செய்வான்.....?பல்லைக் கடித்துக் கொண்டு.....அவளைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தான்.



அவனது முறைப்பை அலட்சியமாக ஒதுக்கித் தள்ளியவள்.....மயக்கும் புன்னகையுடன் அவனைப் பார்த்துக் கொண்டே....



"காதல் கவிதைகள் படித்திடும் நேரம்.....இதழோரம்.....!
இனி காமன் கணைகளில் பிறந்திடும் ராகம்.....புது மோகம்......!",




எனப் பாடி வைக்க....



அவன் கோபத்தின் உச்சியில் சென்று நின்றிருந்தான்.



"வேணாம் டி......!வீணா என்னை உசுப்பேத்தாதே......!அவ்வளவுதான் சொல்லுவேன்.....!",அவனும் முடிந்த அளவிற்கு பொறுமையாகத்தான் கூறினான்.



ஆனால்.....அமைதியாக உறங்கும் சிங்கத்தை.....சீண்டி விட்டு உசுப்பேற்றி விட்டுத்தான் மறுவேலை பார்ப்பேன்.....என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரிபவளை என்ன செய்ய முடியும்.....?



காதலும்.....'தன் வேலை முடிந்தது.....!', என்ற நினைப்பில் ஹாயாக கையைக் கட்டிக் கொண்டு.....அவர்கள் இருவரையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது.



"நான் என்ன ஆது பண்ணினேன்......?நான் பாட்டுக்கு....பாட்டு பாடிட்டு இருக்கேன்......!இதுல உங்களுக்கு என்ன தொல்லை......?",ஆப்பிளை சுவைத்துக் கொண்டே அவள் கேட்க...



அவளின் இதழ்களின் மேல் நிலைத்த பார்வையை சிரமப்பட்டு விலக்கிக் கொண்டு,"அதுதான் தொல்லையே.....!",என்று சிடுசிடுத்தவன்....



"அந்த ஆப்பிளை தள்ளிப் போய்த்தான் சாப்பிட்டுத் தொலையேன் டி......!ஏன் என் முன்னாடி சாப்பிட்டு.....என் உயிரை வாங்கற......?",எரிந்து விழுந்தான் அவன்.



பாவம்.....!அவனை மட்டும் என்னவென்று சொல்வது......?அவள்.....அந்த ஆப்பிளைக் கடிக்கும் போதெல்லாம்.....அவள் இதழைக் கடித்து சுவைக்க வேண்டும்.....என்பது போல் எழும் தாபத்தை அடக்குவதற்குள் அவனுக்குப் போதும்.....போதும் என்றாகி விடுகிறது.....!



அவன் நிலைமையை உணராமல்,"ஏன் ஆது......இவ்வளவு சூடா இருக்கீங்க......?இந்தாங்க.....ஆப்பிள் சாப்பிடுங்க.....!குளுகுளுன்னு ஆகிடுவீங்க......!",தான் கடித்துக் கொண்டிருந்த ஆப்பிளை அவனை நோக்கி நீட்டியவள்....கண்களாலேயே.....'வேண்டுமா.....?', என்று வேறு கேட்டு வைத்தாள்.



அவ்வளவுதான்.....!தன் கையிலிருந்த டிவி ரிமோட்டைத் தூக்கி எறிந்தவன்.....அடுத்த நொடி.....அவள் மீது பாய்ந்திருந்தான்.....!அவன் பாய்ந்த வேகத்தில் அவள் சோபாவில் சரிய.....அவனோ அவள் மீது சரிந்திருந்தான்.....!



தன் இரு கைகளையும் அவளுக்கு இரு புறமாக வைத்து ஊன்றியவன்,"நானும்.....அவ்வளவு பொறுமையா சொல்லிக்கிட்டே இருக்கேன்......!கேட்டுக்காம.....ரொம்பவும்தான் உசுப்பேத்தி விடற......?பாட்டாடி பாடற......பாட்டு......!இப்போ பாடு டி.....!நான் கேட்கிறேன்......!",கேலியாக உதட்டை மடித்து வளைக்க....



மருண்ட விழிகளோடு தன்னைப் பார்த்துக் கொண்டிருந்தவளைப் பார்த்தவன் கள்ளுண்ட வண்டானான்.....!



பட்டென்று அவளுக்கு இருபுறமும் ஊன்றியிருந்த தன் கைகளை விலக்க.....அவன் உடல் முழுவதும்.....அவள் மேனி மேல் சரிந்தது.அவனை.....அவள் உணர.....அவள் மென்மைகளை அவன் உணர்ந்தான்.....!



உணர்ந்த மென்மைகள்.....அவன் உடலில் பல மாற்றங்களை விளைவிக்க.....தன் பாரம் முழுவதையும் அவள் மேல் சரித்தவன்,"என்ன பாட்டு டி பாடின......?



முதல் முத்தம் கொடுத்தது எவ்விடம்.....? - என்னில்
முதல் மொட்டு உடைந்தது எவ்விதம்.....?",




இந்தப் பாட்டுத்தானே பாடின......?இப்போ.....நான் ஒரு பாட்டு பாடறேன்......!கேட்கிறியா......?",அவளிடம் கேள்வியெழுப்பிய படியே....அவள் கழுத்தில் முகம் புதைக்க,



நித்திலாவின் நிலைமைதான் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது போல் இருந்தது.அவள் உணர்ந்த.....அவனுக்கே உண்டான பிரத்யேக வாசனையும்......அவனுடைய உடலின் தீண்டலும்.....மீள முடியாத ஒரு சூழலுக்கு அவளை இழுத்துச் சென்றன.....!



அவளையும் அறியாமல்.....அவள்.....அவனுக்கு வாகாக வளைந்து கொடுத்தாள்.



அவளுடைய ஒத்துழைப்பைக் கண்டு கொண்டவன்.....அவள் கழுத்தில் புதைந்திருந்த தனது முகத்தை நிமிர்த்தி.....அவள் கையில் இருந்த ஆப்பிளைக் கடித்தபடி....



"முத்தத்திலே உண்டு பல வகை.....
இன்று சொல்லட்டுமா கணக்கு.....?",




ஒற்றைப் புருவத்தைக் கேள்வியாய் உயர்த்தியபடி.....அவளைப் பார்த்து பாட....அவள் முகம் அந்தி வானமாய் சிவந்து போனது.



"சொல்லுடி.....?சொல்லட்டுமா......?",அவன் மீண்டும் புருவத்தை உயர்த்த.....அவளுக்குள் அதி வேகமாக ரசாயன மாற்றம் நிகழ்ந்தது.உணர்ச்சிகளின் கொந்தளிப்பைத் தாங்க முடியாமல்.....அவள் தன் கீழுதட்டை அழுந்தக் கடித்துக் கொள்ள.....அவன் பார்வை.....அவள் இதழ்களின் மேல் பரவிப் படர்ந்து மேய்ந்தது.



"என்னடி சொன்ன......?'ஆப்பிள் சாப்பிட்டா.....குளுகுளுன்னு ஆகிடுவீங்க.....!' அப்படின்னுதானே சொன்ன.....?இல்லைடி......!ஆப்பிள் சாப்பிட்டா.....இந்த சூடு அடங்காது.....!அது.....உன்னுடைய இந்த அழகான......",அதற்கு மேல் சொல்ல விடாமல்.....அவனுடைய வாயைத் தன் கரம் கொண்டு மூட.....அந்தக் கள்வனோ.....தன் வாயைப் பொத்திய அவள் விரல்களை நறுக்கென்று கடித்து வைக்க....



"ச்சீ.....!நாய்க்குட்டி.......!எதுக்கு நாய்க்குட்டி கடிச்சு வைக்கிற.....?",அவன் வாயின் மேலேயே அவள் செல்லமாக ஒரு அடி போட,



"என்னது......?நாய்க்குட்டியா.......?நான் உனக்கு நாய்க்குட்டியா டி......?",அவன் போலியாக முறைக்க,



அவன் தலைமுடியை செல்லமாக கலைத்து விட்டவள்,"ம்ம்......!என் செல்ல நாய்க்குட்டி நீ.......!",என்றபடி அவனை அணைத்துக் கொள்ள.....யாருக்கும் அடங்காத அந்த வேங்கையும்.....நாய்க்குட்டியாய் மாறி.....தன்னுடைய எஜமானியின் மார்பில் சுருண்டு கொண்டது.



"நாய்க்குட்டி என்ன பண்ணும் தெரியுமா......?அப்பப்ப.....அங்கங்க கடிச்சு வைச்சிடும்.......!",என்றபடி அவள் கன்னத்தை கடித்து வைக்க,



"நாய்க்குட்டி கடிச்சு வைச்சா.....அதனுடைய எஜமானி என்ன பண்ணுவாங்க தெரியுமா......?இப்படி அடிப்பாங்க......!",அவன் முதுகில் ஒரு அடி போட்டாள் அவள்.



"எஜமானி இப்படி அடிச்சா.....நாய்க்குட்டிக்கு இன்னும் வெறியாகி......அந்த எஜமானியை கடிக்க வரும்......!",கூறியபடியே அவன் நெருங்க,



"அய்யோ.......!தள்ளிப் போடா......!மூச்சு முட்டுது......!இப்படி 80 கிலோ வெயிட்டை.....பூ மாதிரி இருக்கிற என் மேல இறக்கினா......நான் எப்படி தாங்குவேன்......?",இவ்வளவு நேரம் அவன்......அவள் மேல் படுத்திருந்ததால்.....அவளுக்கு உண்மையாகவே மூச்சு முட்டியது.



"இதுக்கே இப்படின்னா....மத்ததுக்கெல்லாம் என்ன பண்ணுவ......?",குறும்பாக கண் சிமிட்டியவன்.....அவளோடு மேலும் ஒன்றியபடி....



"இருடி.....!இன்னும் முத்தத்தில எத்தனை வகைன்னு.....உனக்கு கணக்கு சொல்லணும்ல.......?",கூறியபடியே முத்தத்தின் வகைகளை அவளுக்கு சொல்லிக் கொடுக்கும் பொருட்டு......அவள் இதழ் நோக்கி குனிய.....



முதலில் திமிறிப் பார்த்தவள்.....அவனுக்கு அடியில் வசமாக சிக்கிக் கொண்டிருக்கும் நிலையில்......'தான் ஒன்றும் செய்ய முடியாது.....!', என்பது புரிபட.....அவள் அவசர அவசரமாக அவன் முதுகிற்குப் பின்னால் பார்வையை செலுத்தியபடி,"அய்யோ.....!வள்ளிக்கா வர்றாங்க......!",என்று கத்த.....அவளை விட்டு பதட்டமாக விலகியவன்.....திரும்பிப் பார்க்க.....அந்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டு அவள் நழுவி ஓடி விட்டாள்.



அவன் சுதாரித்து அவளைப் பிடிப்பதற்குள்......அவள் மாடிப்படியில் ஏறிவிட்டாள்.



"ராட்சசி......!",கடுப்புடன் கூறியபடியே அவன்.....சோபாவில் இருந்த தலையணையை நித்திலாவை நோக்கி வீச.....அதை அழகாக 'கேட்ச்' பிடித்தவள்.....நாக்கைத் துருத்தி.....அவனுக்கு அழகு காண்பிக்க....



"ராட்சசி......!என் கையில மாட்டும் போது.....இருக்குது டி உனக்குப் பூஜை.......!",என்று கறுவினான் அவன்.



அவளோ....."ஐ ஆம் வெயிட்டிங் டா என் செல்ல நாய்க்குட்டி.....!",உதடு குவித்து ஒரு பறக்கும் முத்தத்தை.....அவனை நோக்கி அனுப்பியபடி ஓடி விட்டாள்.



"ராட்சசி......!என்னைக் கொல்ற ராட்சசி......!",அவனால் பல்லைக் கடிக்கத்தான் முடிந்தது.



அகம் தொட வருவான்....!!!
 

Nirmala Krishnan

Saha Writer
Messages
76
Reaction score
13
Points
6
அத்தியாயம் 39 :



படுக்கையில் படுத்திருந்த நித்திலாவின் இதழ்களில் ரகசியப் புன்னகை மலர்ந்திருந்தது.காதல் என்ற ஒன்று மனதிற்குள் பிறந்து விட்டாலே.....இந்த ரகசியப் புன்னகையும் இதழ்களில் வந்து ஒட்டிக் கொள்ளும்......!



தான் அவனை சீண்டி விட்டு விட்டு.....ஓடி வந்து விட்டதை நினைத்தவளுக்கு சிரிப்பாக வந்தது.



'பாவம்.....!என் செல்ல நாய்க்குட்டியை ரொம்பவும்தான் உசுப்பேத்தி விட்டுட்டேன்......!',செல்லமாக நினைத்தவளின் மனதில்.....அந்த நாய்க்குட்டி அவளிடம் விளையாடிய விளையாட்டு ஞாபகம் வர.....நாணத்துடன் தலையணையில் முகம் புதைத்துக் கொண்டாள்.



ஏகாந்தமான காதல் நினைவுகளில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருந்தவளை.....இவ்வுலகிற்கு கொண்டு வரும் பொருட்டு அவள் போன் அலறியது.திரையில் ஒளிர்ந்த "அம்மா" என்ற எழுத்தைக் கண்டதும்.....அவளுடைய காதல் உணர்வுகள் அனைத்தும் அறுந்து விழுந்தது.



மனதில் எழுந்த குற்ற உணர்வுடன்......மொபைலையே வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தவளை.....மொபைலின் அலறல் உலுக்க.....தன் நினைவுக்கு வந்தவள்.....படபடக்கும் இதயத்தோடு போனை எடுத்தாள்.



"அம்...அம்மா......!",நடுங்கும் குரலுடன் அழைக்க,



மகளின் குரலில் இருந்தே.....ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்து கொண்ட மீனாட்சி,"நித்தி ம்மா......!ஏண்டா குரல் ஒரு மாதிரி இருக்கு......?என்னாச்சு.....?உடம்பு சரியில்லையா.....?",சரமாரியாக கேள்விக் கணைகளைத் தொடுத்தார்.



"ஒண்ணுமில்லை ம்மா.....!அ...அது......",



"உடம்பு ஏதும் சரியில்லையா டா......?திடீர்ன்னு உடம்புக்கு என்ன வந்துச்சு......?மழையில நனைஞ்சியா......?",



தாயின் கரிசனத்தில் நித்திலாவிற்கு கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது.



"இல்லை ம்மா......!ஆமா.....",தடுமாறினாள் அவள்.



"நான் அவ்வளவு சொல்லியும் கேட்காம.....மழையில நனைஞ்சியா......?ஏற்கனவே ஊட்டில குளிராகத்தான் இருக்கும்.......!இதுல மழையில நனைஞ்சா.....காய்ச்சல் வராம என்ன பண்ணும்......?",



"மன்னிச்சிடுங்கம்மா......!",ஒருவேளை.....காதலில் விழுந்ததற்காக மன்னிப்பு கேட்டாளா.....?இல்லை.....அவருக்குத் தெரியாமல் மழையில் நனைந்ததற்காக மன்னிப்பு கேட்டாளோ......?அதை அவள் மட்டுமே அறிவாள்.



மகள் மன்னிப்பு கேட்ட விதம் அந்த தாயின் மனதை என்னவோ செய்ய,"நித்தி ம்மா......!உனக்கு என்னடா ஆச்சு......?மன்னிப்பெல்லாம் கேட்கற......?ரொம்பவும் உடம்புக்கு முடியலையா......?",



தாயின் அக்கறையில்......கண்களில் இருந்து கண்ணீர் கரகரவென்று வழிய.....'ஹைய்யோ......!அம்மா.....!என்னை மன்னிச்சிடுங்க.....!என் வாழ்க்கையில முதல் முறையா.....ஒரு பெரிய விஷயத்தை உங்ககிட்ட இருந்து மறைக்கிறேன்......!',அவள் மனம் ஊமையாய் அழுதது.



"நித்தி ம்மா......!லைன்ல இருக்கிறயா......?",என்ற தாயின் குரலில் தன்னை மீட்டெடுத்தவள்,



"ம்....ம்....சொல்லுங்கம்மா.......!",என்றாள் மெதுவாக.



"நேத்து நைட் ஏண்டா போன் பண்ணல......?",என்று வினவியவர் பிறகு,"ஓ.....உடம்பு சரியில்லைன்னு நேரமாவே படுத்து தூங்கிட்டயா......?",அவரே பதிலையும் சொல்லிக் கொண்டார்.



நேற்று ஏன் அவருக்கு போன் செய்யவில்லை என்பதற்கான காரணம் அவள் மனதில் வந்து போனது.



வீட்டிற்கு போன் செய்ய வேண்டும் என்ற நினைவே இல்லாமல்....விடியும் வரை ஆதித்யனிடம் காதல் மொழி பேசிவிட்டு.....விடிந்த பின் அயர்ந்து உறங்கிய நினைவில் அவள் உதட்டைக் கடித்துக் கொண்டாள்.



ஏன்.....?அதன் பிறகு கூட அவள்.....வீட்டிற்கு போன் செய்து பேசவில்லை.ஆதித்யனுடன் கரம் கோர்த்துக் கொண்டு ஊட்டியையே வலம் வந்தாள் என்ற உண்மை அவள் நெற்றியில் அறைய.....அவளுக்கு அழுகை வெடித்தது.



வெகு சிரமப்பட்டு அழுகையை அடக்கியவன்,"ஆமாம் ம்மா.....!கொஞ்சம் தலைவலின்னு.....நேரமாவே ப...படுத்து தூங்கிட்டேன்.......!",தன் மனதறிந்து பொய் கூறினாள் அவள்.இதைக் கூறி முடிப்பதற்குள்ளேயே.....வெடித்துப் பீறிட்ட அழுகையை உதட்டைக் கடித்து அடக்கினாள்.



"சரி டா......!எப்போ ஊட்டில இருந்து கிளம்பறீங்க......?",



"நாளைக்கு கிளம்பிடுவோம்......!",



"ம்.....சரிம்மா......!இந்த வாரம் லீவ்தானே......நம்ம வீட்டுக்கு வந்துடு......!ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்துட்டுப் போகலாம்......!",



"ம்......வர்றேன் ம்மா......!",



ஒற்றை வார்த்தையில் பதில் கூறிக் கொண்டிருந்த மகளின் நிலைமையை மிகச் சரியாக தவறாகப் புரிந்து கொண்டார் அந்தத் தாய்.



'பாவம்.....!ரொம்பவும் உடம்புக்கு முடியல போல......!அதுவும்....தனியா இருக்கும் போது ரொம்பவும் தவிச்சுப் போயிருப்பா......',ஒரு தாயாய் அவரின் மனம் தன் மகளுக்காக கவலை கொண்டது.



"இருடா.....!உன் அப்பா உன்கிட்ட பேசணுமாம்.......!",என்றபடி போனை அவள் தந்தையிடம் கொடுத்தார் மீனாட்சி.



"நித்தி ம்மா.....!",தந்தையின் குரல் மறுமுனையில் கேட்ட அடுத்த நொடி.....அவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த அழுகை மொத்தமும் பீறிட்டுக் கொண்டு வெளிவர......வெடித்து அழ ஆரம்பித்தாள்.



ஏதோ தவறு செய்கிறோம் என்ற நினைப்பில் எழுந்த குற்ற உணர்வை......தன் கண்ணீராலேயே கரைப்பது போல் அழுது கொண்டிருந்தாள்.



தன் செல்ல மகளின் அழுகை.....அவரின் மனதைத் கசக்கிப் பிழிய....,"கண்ணா.....!என்னாச்சுடா.....?எதுக்கு அழற.......?",என்றார் படபடப்பாக.



"அப்பா....ப்பா......!",என்று தேம்பினாலே தவிர வார்த்தை ஒன்றும் வெளிவரவில்லை.



"நித்தி ம்மா......!அழாதே டா......!ரொம்பவும் உடம்புக்கு முடியலையா......?அப்பா வேணும்ன்னா கிளம்பி அங்கே வரட்டா......?",தன் மகளின் அழுகையைத் தாங்க முடியாமல் அவர் வினவ,



தன்னுடைய அழுகை.....தனது பெற்றவர்களைப் பாதிக்கும் என்று உரைக்க.....முயன்று தன் அழுகையை அடக்கியவள்,



"இல்லைப்பா.....!நீங்க வர வேண்டாம்......!நான் சமாளிச்சுக்குவேன்.....!",முடிந்தளவிற்கு சாதாரண குரலில் கூறினாள்.



"இல்லை டா.....நீ அழுகறதைப் பார்த்தா எனக்குப் பயமா இருக்கு......!நான் நாளைக்கு காலையில கிளம்பி அங்கே வர்றேன்......!",



"வேண்டாம் ப்பா......!நான் நல்லாத்தான் இருக்கேன்......!அது....ஏதோ நினைப்புல அழுகை வந்துடுச்சு......!மாத்திரை போட்டுட்டு தூங்கி எழுந்தா சரியாகிடும்......!அதுவும் இல்லாம.....நாளைக்கு நாங்க இங்கே இருந்து கிளம்பிடுவோம் ப்பா.....!",



"அப்படியா.....சரிம்மா......!உடம்பை பார்த்துக்கோ......!இந்த வாரம் லீவ்தானே.....?நம்ம ஊருக்கு கிளம்பி வந்துடு.....!நல்லா ரெஸ்ட் எடுத்துட்டுப் போகலாம்......!",



"சரிப்பா.....!கண்டிப்பா வர்றேன்.....!இப்போ நான் போனை வைக்கட்டுமா......?",



"ம்.....ஒகே டா......!நீ ரெஸ்ட் எடு.....!அதிகமா வேலை செஞ்சு உடம்புக்கு ஏதாவது இழுத்து விட்டுக்காதேம்மா.....!நீ இந்த வேலைக்குப் போய்த்தான் ஆகணும்ன்னு எந்தக் கட்டாயமும் இல்ல.....!உன் சந்தோஷம்தான் எங்களுக்கு முக்கியம்.....!சரியா டா......?",பாசத்தில் குழைந்து வந்தது அவரது குரல்.



"ம்ம்......!",முணுமுணுத்தவள் போனை அணைத்து விட்டாள்.



அடுத்த நொடி......மெத்தையில் விழுந்தவள் கதறி அழ ஆரம்பித்தாள்.என்ன அழுதும் அவளால்.....அவள் மனதில் ஏற்பட்டிருந்த குற்றவுணர்வை போக்க முடியவில்லை.



'கடவுளே......!என் அம்மா அப்பாவோட நம்பிக்கைக்கு நான் துரோகம் பண்ணிட்டேன்.....!எனக்கு உடம்பு சரியில்லைன்னு நினைச்சுக்கிட்டு....ரெண்டு பேரும் தவிச்சிக்கிட்டு இருக்காங்க......!அவங்ககிட்ட போய் நான் எப்படி .சொல்லுவேன்.....?உங்க மகளுக்கு உடம்பு நல்லாத்தான் இருக்கு.....மனசுலதான் காதல் வந்திருச்சுன்னு.....?அதை அவங்களால தாங்க முடியுமா.....?',மனதுக்குள் மறுகியவள்.....தன்னுடைய அத்தனை துக்கத்தையும் கண்ணீராக வெளியேற்றினாள்.



ஆனால்....அத்தனை வேதனையிலும் அவள்....ஆதித்யனின் காதலை சுமையாக எண்ணவில்லை.பெற்றவர்களுக்குத் தெரியாமல் மறைக்கிறோமே.....என்ற நினைவில்தான் அழுது வடிந்தாலே தவிர.....ஏன் ஆதித்யனைக் காதலித்தோம்......?என்று கண்ணீர் விடவில்லை.....!



அந்தக் கணமே அவளுடைய காதல் ஜெயித்து விட்டது.....!எப்பொழுது.....ஆதித்யனின் மேலான காதலையும் ஒதுக்கித் தள்ளாமல்.....பெற்றவர்கள் தன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையையும் தூக்கி ஏறிய முடியாமல் போராட ஆரம்பித்தாளோ.....அந்த நொடியே.....அவள் ஜெயித்து விட்டாள்.....ஒரு காதலியாகவும்......!ஒரு மகளாகவும்......!



ஆனால்.....ஒரே உரையில் இரண்டு கத்திகளை வைக்க முடியாது அல்லவா.....?அப்படி.....ஒரு கத்தியைத்தான் வைக்க வேண்டும் என்ற நிலைமை வரும் போது.....எந்தக் கத்தி ஜெயிக்கும்.....?இரண்டுமே மிக மிகக் கூர்மையான கத்திகள்தான்.....!



காலம் வரும் பொழுது.....இரண்டும் ஒன்றையொன்று காயப்படுத்திக் கொள்ளுமோ.....?இல்லை.....ஒன்றை மற்றொன்று அரவணைத்து வழி விடுமோ......?தெரியவில்லை.....!பொறுத்திருந்து பார்ப்போம்....!



.....................................................................................................



விடிய விடிய அழுகையில் கரைந்து கொண்டிருந்தவள்.....விடிந்த பின் அவளையும் அறியாமல் உறங்கிப் போனாள்.அவள் கண்விழித்த போது.....கிட்டத்தட்ட மதியம் ஆகியிருந்தது.



இரவெல்லாம் அழுததில் கண்கள் இரண்டும் தீயாய் எரிந்தன....!பசி ஒருபுறம் வாட்ட.....தலைவலி ஒருபுறம் உயிரை எடுக்க......இவை அனைத்திற்கும் மேல்.....நேற்று மனதில் எழுந்த குற்றவுணர்வு அவளை வதைக்க.....தலையைப் பிடித்துக் கொண்டு அப்படியே கட்டிலில் அமர்ந்துவிட்டாள்.
ஒருவாறாகத் தன்னை சமாளித்துக் கொண்டு.....குளியலறைக்குச் சென்று வந்தவள்.....மீண்டும் சோர்வுடன் கட்டிலில் தலை சாய்த்தாள்.



வழக்கம் போல் காலையில் எழுந்த ஆதித்யன்....நித்திலாவின் அறைக்கதவு திறக்காததைப் பார்த்து....அவள் தூங்குகிறாள் என்ற நினைப்பில் எப்பொழுதும் போல் கிளம்பி தனது வேலைகளைப் பார்க்க சென்று விட்டான்.



காலையில் வெளியே சென்றவன் மதிய நேரத்தில்தான் வீட்டிற்கு வந்தான்.உள்ளே நுழைந்ததும் அவனுடைய கண்கள் நித்திலாவைத்தான் தேடின.....!



ஆதித்யனைக் கண்டதும் வேக வேகமாக அருகில் வந்த வள்ளி,"ஐயா....!நித்திலாம்மா இன்னும் எழுந்திருக்கலை.....!",பயத்துடன் கையைப் பிசைந்தபடியே கூற,



அவள் பயந்தது போலவே ஆதித்யன் கத்த ஆரம்பித்தான்.



"வாட்......?இன்னும் எழுந்திருக்கலையா.......?அப்போ....மார்னிங் பிரேக் ஃபாஸ்ட்.......?",



"இன்னும் சாப்பிடலைங்கய்யா.......!",



"இடியட்.....!சாப்பிடலைன்னு இவ்வளவு கூலா சொல்ற.......?இப்போ மணி என்னன்னு தெரியுமா.....?ரெண்டாச்சு.....!அவ எழுந்திருக்கலைன்னா....நீ எழுப்பி சாப்பாடு கொடுத்திருக்க வேண்டாமா.....?உன்னை நம்பித்தானே....அவளை இங்கே விட்டுட்டுப் போறேன்.....!",அவள் சாப்பிடவில்லை என்ற செய்தியே ஆதித்யனின் கோபத்தைக் கிளறுவதற்குப் போதுமானதாக இருந்தது.



"இல்லைங்கய்யா.....!நீங்கதான் அவங்களைத் தொந்தரவு பண்ண வேண்டாம்ன்னு சொல்லியிருந்தீங்க.....!",இதைக் கூறி முடிப்பதற்குள்ளேயே வள்ளிக்கு வியர்த்து வழிந்தது.



'அவள் தூங்கிக் கொண்டிருந்தால்... அவளை எழுப்ப வேண்டாம்.....!',என்று அவன்தான் கூறியிருந்தான்.அதற்காக இவ்வளவு நேரமாகியும் எழுப்பாமல் விட்ட வள்ளியின் அறிவுக்கூர்மையை என்னவென்று சொல்வது.....!



"எல்லாத்துக்கும் ஒரு எதிர்பேச்சு பேசு......!உன்னை வேலையை விட்டுத் தூக்கினா எல்லாம் சரியாகிடும்......!",அவளிடம் இரைந்தவன்.....இரண்டிரண்டு மாடிப்படிகளாகத் தாவி நித்திலாவின் அறையை அடைந்தான்.



யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டு கதவைத் திறந்தவள்.....அங்கு ஆதித்யன் நிற்பதைக் கண்டு....ஒன்றும் பேசாமல் திரும்பிச் சென்று மெத்தையில் அமர்ந்தாள்.



அவளுடைய அமைதி எதுவும் அவன் கண்ணில் படவில்லை.அவளைப் பின்தொடர்ந்து அறைக்குள் நுழைந்தவன்,"என்னாச்சு பேபி.....?காலையில இருந்து சாப்பிடலையா.....?",அக்கறையோடு விசாரிக்க,



அவளோ...."ப்ச்.....!பசிக்கலை......",என்றாள் ஒற்றை வார்த்தையாய்.



"அது எப்படி பசிக்காம இருக்கும்.....?கமான்.....!எழுந்து வா.....!சாப்பிடப் போகலாம்.....!கெட்டப்.....!",அவன் அவசரப்படுத்த,



அவளோ.....இருந்த இடத்தை விட்டு அசையாமல்,"வேண்டாம்.....!எனக்குப் பசிக்கலை.....!",என்று சொன்னதையே திருப்பிச் சொன்னாள்.



அப்பொழுதுதான் அவன்....அவளைக் கவனித்தான்.வெகு நேரம் அழுததில் முகம் வீங்கி......விழிகள் சிவந்து போய்.....தலை கலைந்து அமர்ந்திருந்தவளைப் பார்த்தவனின் இதயம் பதறியது.



"பேபி.....!என்னாச்சுடா......?ஏன் முகமெல்லாம் வீங்கிப் போய் இருக்கு......?",பதட்டமாக வினவியபடியே அவன்....அவளருகில் வர....அவளோ....அவனை விட்டு விலகி எழுந்து தள்ளிப் போய் நின்றாள்.



"அது......ஒண்ணும் இல்ல.....!தலைவலியா இருக்கு.....!",அவளுக்கு ஏனோ அந்த நிமிடம் தனிமை தேவைப்பட்டது.ஆதித்யன் அருகில் இருக்க இருக்க.....அவளது குற்றவுணர்வு அதிகமாவதைப் போல் உணர்ந்தாள்.



"தலைவலியா.....?அது எப்படி திடீர்ன்னு வரும்.....?நேத்து நைட் கூட நல்லாத்தானே இருந்த.....?காய்ச்சல் அடிக்குதோ.....என்னவோ......?",அவள் நெற்றியைத் தொட்டுப் பார்ப்பதற்காக அவன்....அவளருகில் வர.....அவள் அனிச்சை செயலாய் பின்னால் நகர்ந்தாள்.



அவளுடைய செய்கையில்.....அவனது புருவம் சுருங்கியது.விழிகளில் கூர்மையுடன் அவளை அளவிட்டவன்,"அழுதியா......?",என்றான் வெகு நிதானமாக.



'தன்னைக் கண்டு கொண்டான்.....!',என்ற நினைவில் அவள் அமைதியாக நிற்க....அவளுடைய அந்த அமைதியில் அவனுக்கு சுள்ளென்று கோபம் வந்தது.



"நிலா.....!உன்கிட்டத்தான் கேட்கிறேன்......அழுதியா......?",வார்த்தைகள் பற்களுக்கு இடையில் சிக்கி சின்னாபின்னமாகி வெளிவந்தது.



அவனுடைய கோபத்தில்.....அவளுடைய தலை தானாய்.....'ஆமாம்.....!',என்று அசைந்தது.



"காரணம்......?",வார்த்தையிலேயே அவ்வளவு கோபத்தைக் காட்ட முடியுமா.....?முடியும்.....என்று நிரூபித்துக் கொண்டிருந்தான் ஆதித்யன்.அடக்கப்பட்ட கோபத்தில் வார்த்தைகள் ஒவ்வொன்றும் வெகு அழுத்தமாக வந்து விழுந்தன.



ஏற்கனவே....'உன் காதல் எனக்கு மட்டும் தான் சொந்தம்....!',என்று உரிமை கொண்டாடுபவன்.....அவனிடம் சென்று அம்மா அப்பாவிடம் மறைப்பதால் எழுந்த குற்றவுணர்வில்தான் அழுகிறேன் என்று சொன்னால்.....அவ்வளவுதான்....!எனவே....அமைதி காத்தாள்.



அவளுடைய அமைதி.....அவனது கோபத்தை இன்னும் கிளறிவிட்டது.தன் கண்களை அழுந்த மூடித் திறந்தவன்,



"என்ன காரணம்.....?",அவன் என்னவோ வெகு அமைதியாகத்தான் கேட்டான்....ஆனால்....அந்த அமைதிக்குப் பின் ஒளிந்திருக்கும் சூறாவளியை அவள் மட்டுமே அறிவாள்.



இருந்தும்....அழுகைக்கான காரணத்தை அவனிடம் சொல்ல அவளுக்குத் தைரியமில்லை.அதனால்.....உதட்டைக் கடித்துக் கொண்டு அமைதியாக நின்றாள்.



அவளையே உறுத்து விழித்தவனின் விழிகள் கூர்மையோடு அவளை ஆராய்ந்தது.ஒரு நொடி.....எதையோ யோசிப்பதற்கு அறிகுறியாக அவனது புருவங்கள் சுருங்கின.மறு நொடி.....அவன் முகம் கடும்பாறையாய் இறுகியது.



"உன் அம்மா அப்பாகிட்ட பேசுனியா.....?",அவனுடைய கழுகுக் கண்கள்.....அந்தச் சிட்டுக் குருவியை குத்திக் கிழித்தன.



அவனுடைய பார்வையைத் தாங்க முடியாமல்.....அவள் தலை குனிந்தாள்.அப்பொழுதும் அவள் அமைதியாக இருந்தது.....அவனது கோபத்தை எகிறச் செய்ய,"நித்திலா.....!நான் கேள்வி கேட்டால்....பதில் சொல்லிப் பழகு......!இப்படி அமைதியா இருக்கிறது.....எனக்கு சுத்தமா பிடிக்காது.....!",பல்லைக் கடித்துக் கொண்டு அவன் கூற,



அவள் அரண்டு போனவளாய்....அவனை நிமிர்ந்து பார்த்தாள்.உண்மையைச் சொன்னால்.....அவன் இன்னும் கோபப்படுவானே என்ற கலக்கத்தில்....அவள் தயக்கத்தோடு நிற்க....அவனுடைய பொறுமை பறந்தது.



"நி...த்திலா.....!",அவன் கர்ஜிக்க....அவ்வளவுதான்....அடுத்த நொடி....உடல் தூக்கிப் போட நிமிர்ந்தவளின் இதழ்கள்,"ஆ....ஆமாம்.....!",என்று வார்த்தைகளுக்குத் தந்தியடித்தன.அவள் விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்து அவள் கன்னத்தை நனைத்தது.



அவள் கண்ணீரைப் பார்த்தவனின் மனதோடு உடலும் சேர்ந்து இறுகியது.



"ப்ச்.....!இப்ப எதுக்கு அழற......?அழுகையை நிறுத்து டி......!",அவன் எரிந்து விழ,



அவனுடைய கோபத்தில்....அவளுக்கு இன்னும் அதிகமாகக் கண்ணீர் வந்தது.



"அழுகையை நிறுத்துன்னு சொன்னேன்......!",அதட்டியபடி அவன்....அவளை நோக்கி ஓர் அடி எடுத்து வைக்க....அவளோ கண்களைத் துடைத்தபடி வேகமாகப் பின்னால் நகர்ந்தாள்.



அவள் என்னவோ எதேச்சையாகத்தான் பின்னால் நகர்ந்தாள்.அவ்வளவு கோபத்துடன் உறுமிக் கொண்டிருந்தவன்....திடீரென்று தன்னை நோக்கி ஓரடி எடுத்து வைக்கவும்.....தன்னியல்பாய் அவளையும் அறியாமல் ஓரடி பின்னால் எடுத்து வைத்து விட்டாள்.



ஆனால்.....ஆதித்யன் அவளது விலகலை வேறு விதமாகப் புரிந்து கொண்டான்.அவளது கண்ணீரைக் கண்டு மனம் பொறுக்காமல்.....அதைத் துடைப்பதற்காக உயர்ந்தவனின் கை.....அவளுடைய விலகலில் ஸ்தம்பித்துப் போய் அப்படியே நின்றது.



"என்னடி.....?செய்கையெல்லாம் ஒரு மாதிரி இருக்கு......?நேத்து வரைக்கும்....என் கைக்குள்ள திரிஞ்சவ.....இப்போ....என் விரல் நுனி கூடப் படக் கூடாதுன்னு விலகிப் போற.....?",துளைக்கும் பார்வையுடன் அவளைப் பார்த்து உறுமியவன்.....பிறகு......"ஓ.....!உன் பேரண்ட்ஸ்கிட்ட பேசினயல்ல.....?அப்போ....இப்படித்தான்.....உன் செய்கையெல்லாம் வித்தியாசமாகத்தான் இருக்கும்.....!ஸோ....உன் முடிவு என்ன.....?",உதட்டோரங்கள் கேலியாய் வளைந்தாலும்.....அவனுடைய வார்த்தைகள் அடக்கப்பட்ட கோபத்தில் தெறித்து விழுந்தன.



அவனுடைய கேலியில் அவள் சுதாரித்தாள்.இப்பொழுது கூர்மையான பார்வையுடன் அவனை முறைப்பது அவளது முறையாயிற்று.தீர்க்கமான பார்வையுடன்.....அவன் விழிகளுக்குள் உற்றுப் பார்த்தவள்,"என்ன முடிவு......?",என்று கேட்டாள் நிதானமாக....!அவளுக்கு ஏதோ புரிவது போல் இருந்தது.



அவள் சந்தேகத்தை உறுதி செய்வது போல்.....அவன் அடுத்த வார்த்தைகளைப் பேச ஆரம்பித்தாள்.



"ஓ.....!எதைப் பத்தின முடிவுங்கறதையே மேடம் மறந்திட்டீங்களோ.....?இட்ஸ் ஒகே.....!அதை நினைவுபடுத்தத்தான்.....இளிச்சவாயன்னு நான் ஒருத்தன் இருக்கேனே.....இப்போ....நைட் எல்லாம் கண் முழிச்சு அழுது....ஒரு முடிவு எடுத்திருப்பீங்களே......?



'ஏண்டா இவனுடைய காதலை ஒத்துக்கிட்டோம்.....?இவனைக் காதலிச்சிருக்கவே கூடாது.....!இப்ப எப்படி இவனைக் கழட்டி விடறது......அப்படி இப்படின்னு.....மூளையைக் கசக்கி பிழிஞ்சு.....புத்திசாலியா ஒரு முடிவு எடுத்திருப்பீங்களே......?அதைப் பத்தித்தான் கேட்கிறேன்.....!",தன் இரு கால்களையும் அகற்றி வைத்தபடி.....தரையில் அழுத்தமாக நின்று கொண்டிருந்தவனின் விழிகள்.....வேட்டைக்குத் தயாராகும் வேங்கையின் விழிகளைப் போல் ஜொலித்தன.



அவன் பார்வையின் தீவிரத்தைக் கண்டு.....அவள் ஒரு கணம் நடுங்கித்தான் போனாள்.அனைத்தும் ஒரு கணம்தான்.....!அடுத்த நொடி.....தன் பயத்தை உதறித் தள்ளி விட்டு.....தைரியத்தோடு நிமிர்ந்தாள்.



'என்னுடைய காதலை.....இவர் சந்தேகப்படறாரா.....?என்னுடைய காதல் மேல இவருக்கு நம்பிக்கையில்லையா......?என்னுடைய காதலரா இருந்தாலும் சரி.....என் காதல் மேல சந்தேகப்படறதுக்கு.....இவருக்கு எந்த உரிமையும் இல்லை.....!',அவளுடைய பெண்மை விழித்துக் கொண்டு.....போர்க்கொடி தூக்க அவள் தன் பயத்தை உதறித் தள்ளினாள்.



"போதும்.....நிறுத்துங்க ஆது.....!",அவன் தன்னைப் புரிந்து கொள்ளவில்லையே என்ற ஆதங்கத்திலும்.....கோபத்திலும் அவள் குரல் நடுங்கியது.



"எதை டி நிறுத்தச் சொல்ற.....?நம்மளுடைய உறவையா......?இங்கே பாரு......!நீ என்னைக் காதலிக்கறதுக்கு முன்னாடியே.....உன்னை விட மறுத்தவன் நான்......!இப்போ....என் மேலான உன் காதலை நீ ஒத்துக்கிட்டப் பிறகும்.....உன்னை விட்டுத் தர்றதுக்கு நான் ஒண்ணும் கேனையன் இல்ல......!",சீற்றம் கொண்ட சிங்கமாய் கர்ஜித்தவன்,



அவள் முகவாயைப் பற்றித் தன்னை நோக்கி முரட்டுத்தனமாக இழுத்தபடி,"நான் ஏற்கனவே சொன்னதுதான்......!மறுபடியும் சொல்றேன்....கேட்டுக்கோ.....!உன்னை.....உனக்காகக் கூட விட்டுத் தர நான் தயாரா இல்லை.....!உனக்கு இஷ்டம் இருக்குதோ.....இல்லையோ.....என் காதலை நீ ஏத்துக்கிட்டுத்தான் ஆகணும்......!",கிட்டத்தட்ட உறுமினான்.



அவனுடைய காதல் அப்படித்தான் இருந்தது.....!முரட்டுத்தனமான காதல் அது.....!அதேசமயம்.....பூவை விட மென்மையானதும் அதுதான்.....!



பெற்றவர்களின் பாசத்தில் மூழ்கி.....'எங்கே தன் காதலை தூக்கியெறிந்து விடுவாளோ.....',என்ற ஆத்திரத்தில்தான் அவன் எரிமலையாய் வெடித்தான்.அவனைப் பொறுத்தவரை.....அவள்....அவனுக்கு மட்டும்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்......!அவளது பெற்றவர்களாக இருந்தாலும் சரி.....அவளுடன் கூடப் பிறந்தவர்களாக இருந்தாலும் சரி.....!அவனுக்குப் பின்னால்தான் அவள்....அவர்களைப் பார்க்க வேண்டும் என்ற முரட்டுத்தனமானப் பிடிவாதம் அவன் காதலில் ஒளிந்திருந்தது.அந்தப் பிடிவாதத்தைத்தான் அவன்.....அவளிடம் காட்டிக் கொண்டிருந்தான்......!



காதலில் அது சகஜம்தான்.....!தன் இணைக்குத் தான் மட்டும்தான் உலகமாக இருக்க வேண்டும் என்று காதல் கொண்ட மனது நினைப்பது இயற்கைதான்......!ஆனால்.....தன்னவளின் காதலுடைய ஆழம் தெரியாமல்....அவன்.....அவளை சந்தேகப்பட்டு பேசியதுதான் தவறு.....!

அவனுடைய குற்றச்சாட்டிலும்.....கோபத்திலும் பெண் வேங்கையாய் சிலிர்த்து எழுந்தவள்,"ச்சே.....!முதல்ல என்னை விடுங்க.....!",என்றபடி அவன் கையைப் பிடித்துத் தள்ளி விட்டாள்.



"என்னடி.....?முகத்தை சுழிக்கற.....அருவருப்பா இருக்கோ......?நேத்தெல்லாம் என்னைக் கட்டிப் பிடிச்சு.....முத்தம் கொடுக்கத் தெரிஞ்சவளுக்கு.....இன்னைக்கு நான் தொட்டா.....அருவெறுப்பா இருக்கோ.....?",வார்த்தைகளாலேயே தன்னவளைக் கடித்துக் குதறினான் அந்தக் காதலன்.



"போதும்.....நிறுத்துங்க.....!",பெண் புலியாய் உறுமியவள்.....பாய்ந்து சென்று அவன் சட்டைக் காலரைப் பற்றியபடி,



"என்ன.....?சொல்லிக் காண்பிக்கறீங்களா......?மனசு முழுக்க காதலோட மட்டும்தான்.....நான் உங்களை நெருங்கினேன்.....!ஆனால்.....நீங்க இவ்வளவு கேவலமா அதை சொல்லிக் காண்பிப்பீங்கன்னு.....நான் நினைக்கவே இல்லை.....!இப்போ.....நான் கேட்கிறேன்.....!இந்த வார்த்தையை சொல்றதுக்கு.....உங்களுக்கு அருவெறுப்பா இல்லையா......?",கண்களில் வழிந்த கண்ணீருடன்.....அவன் சட்டையைப் பிடித்து உலுக்கியபடி நியாயம் கேட்டாள் அந்த நவீன கண்ணகி.....!



அவனோ ஸ்தம்பித்துப் போய் கற்சிலையாய் நின்றுவிட்டான்.அவன் என்னவோ.....கோபத்தில்தான் வார்த்தையை விட்டான்.மற்றபடி....அவன் மனதில் எந்தக் கல்மிஷமும் இல்லை.சொல்லிக் காண்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவன் பேசவில்லை.அளவு கடந்த கோபத்தில் அவனையும் அறியாமல்....வந்த வார்த்தைகள் அவை.....!



தான் பேசிய வார்த்தைகளின் வீரியம் அவனுக்கு உரைக்க.....பட்டென்று தன் நெற்றியில் அறைந்து கொண்டான்.



"அய்யோ.....!ஸாரி டி பேபி......!நான் வேணும்ன்னே எதையும் பேசல.....!உன்னை சொல்லிக் காண்பிக்கணும்ங்கிற எண்ணமே எனக்கு இல்லை டி......!நான்தான் ஏதோ பைத்தியம் மாதிரி உளறிட்டேன்......!",



"நீங்க பைத்தியம் இல்ல.....!நான்தான் பைத்தியம்.....!என் அப்பா என் மேல வைச்சிருக்கிற நம்பிக்கையைத் தூக்கி எறிஞ்சிட்டு.....நீங்கதான் வேணும்.....உங்க காதல்தான் வேணும்ன்னு.....உங்க காலடியில வந்து சரணடைஞ்சேனே......நான்தான் பைத்தியம்......!



ஆமாம்.....!நான் ஒத்துகிறேன்......!நேத்து நைட் முழுக்க நான் அழுதேன்தான்......!அதுவும்.....என் அப்பா அம்மாக்கிட்ட பேசினதுக்கு அப்புறம்......குற்ற உணர்வுல இன்னும் அதிகமா அழுதேன்தான்......!ஆனால்.....அதுல ஒரு நொடி கூட உங்க காதலை சுமையா நினைச்சு நான் அழலை.....!'ஏன் உங்களைக் காதிலிக்க ஆரம்பிச்சோம்ன்னு....' ஒரு செகண்ட் கூட நான் தவிக்கல......!



என்னுடைய அழுகை.....தவிப்பு எல்லாம்.....நம்முடைய காதலை என் அம்மா அப்பாக்கிட்ட மறைக்கிறோம்ங்கிற குற்றவுணர்வுல வந்ததுதான்......!ஒரு நொடி.....ஒரு நொடிக் கூட உங்களை விட்டு விலகணும்ன்னு நான் நினைச்சுப் பார்க்கல.....!ஆனால்....நீங்க என் காதலை சந்தேகப்பட்டிருக்கீங்க.....!



என் மேல......என் காதல் மேல.....துளி கூட உங்களுக்கு நம்பிக்கை இல்லையா ஆது.....?அந்த நம்பிக்கையை நான் உங்களுக்குக் கொடுக்கலையா......?",கண்களில் வழிந்த விழிநீரைத் துடைக்க கூட மனமின்றி.....அவன் சட்டையைப் பிடித்து உலுக்கியபடி கேள்வி கேட்டாள் அவனுடைய உயிர்க்காதலி......!



ஆதித்யனோ உறைந்து போய் நின்றிருந்தான்.தான் பேசிய வார்த்தைகள் தன் உயிரானவளை எந்தளவிற்கு வதைத்திருக்கிறது என்பதைக் கண்கூடாக கண்டான்.....!அவனும் அவள் காதலின் மேல் நம்பிக்கை இல்லாமல் எல்லாம் பேசவில்லை..ஒரு குழந்தை தன் பொம்மையை யாரேனும் பிடுங்கிக் கொள்வார்களோ என்ற பயத்தில்.....ஏதேனும் செய்தாவது அதைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்குமே.....அந்தக் குழந்தையின் நிலைமையில்தான் ஆதித்யன் இருந்தான்.



அவள் தன் பெற்றவர்களுடன் பேசியதால்தான் இரவெல்லாம் அழுதிருக்கிறாள் என்ற நினைவில்.....'எங்கே அவள் தன்னை விட்டுப் போய்விடுவாளோ......?', என்ற பயத்தில்தான்....அந்த ஆறடி ஆண்மகனும் குழந்தையாய் மாறி வார்த்தைகளை விட்டான்.



தன் விழிகளை அழுந்தத் துடைத்துக் கொண்டு அவனை நிமிர்ந்து நோக்கியவள்,"இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்னீங்களே......'நேத்து முழுக்க என்னை கட்டிப் பிடிச்சுக்கிட்டு சுத்துனவதானே டி நீ.....?',அப்படின்னு என்னைப் பார்த்து கேள்வி கேட்டீங்களே......?அந்த அணைப்பிலேயும்.....நான் கொடுத்த முத்தத்திலேயும்.....பொங்கி வழிஞ்ச காதலை ஒரு துளி கூடவா நீங்க உணரல.......?",அவனை நோக்கி கேள்விக் கணையை வீசியவள்....அவன் மார்பிலேயே சாய்ந்து கதற ஆரம்பித்தாள்.



காயப்படுத்தியவனிடமே.....அந்தக் காயத்திற்கான மருந்தையும் தேடியது அவளுடைய காதல் நெஞ்சம்.....!அவளுடைய இதயத்தை தன் வார்த்தை என்னும் சாட்டையை வீசி காயப்படுத்திய அந்தக் காதலனும்.....தன் இறுகிய அணைப்பின் மூலம்....தான் ஏற்படுத்திய காயத்திற்கான மருந்தைத் தர விழைந்தான்.



அவளை இறுக அணைத்தவன்..."ஸாரி டி.....!ஸாரி டி குட்டிம்மா......!என்னோட வார்த்தைகள் உன்னை இந்தளவுக்கு காயப்படுத்தும்ன்னு நான் நினைக்கல......!வேணும்னே நான் எதையும் செய்யலை டி......!நீ உன் பேரண்ட்ஸ்கிட்ட பேசினதுக்கு அப்புறம்தான் நைட் முழுக்க அழுத்திருக்கிறேங்கிற விஷயம் எனக்குக் கோபத்தை ஏற்படுத்துச்சு......!



உன் தவிப்புக்கான காரணத்தை நான் ரொம்ப தப்பா புரிஞ்சிக்கிட்டேன்.....!அதுக்கு ஏத்த மாதிரி....நான் உன் அழுகையைத் துடைக்கணும்ங்கிற எண்ணத்துல....உன் பக்கத்துல வரும் போது....நீ விலகிப் போனயா.....அது எல்லாத்தையும் சேர்த்து வைச்சு.....நீ என்னை விட்டு விலக நினைக்கறேன்னு தப்பா புரிஞ்சுக்கிட்டேன் டி.....!என்னை மன்னிச்சிடு டி குட்டிம்மா.....!",அவன் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவன் இதயத்திலிருந்து வெளிவந்தன.



என்னதான் நித்திலாவின் மனதில் கோபம் இருந்தாலும்.....அவளுடைய அத்தனை கோபமும்.....அவனுடைய 'குட்டிம்மா.....!', என்ற அழைப்பின் முன் சூரியனைக் கண்ட பனித்துளியைப் போல்.....மறைந்து மாயமாகிப் போனது என்னவோ உண்மைதான்.....!



அவன் சட்டையிலேயே தன் முகத்தைப் புரட்டித் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டவள்,"உன்னை விட்டு விலகணும்ன்னு நினைக்கறவதான்.....இப்படி உன்னைக் கட்டிப் பிடிச்சிட்டு இருக்கிறாளா.....?தள்ளிப் போடா......!என்னைப் பார்த்து என்னென்ன வார்த்தையெல்லாம் பேசிட்ட.......?போடா......!நீ ஒண்ணும் எனக்கு வேண்டாம்.....!",அவள் வாய்தான் அப்படிக் கூறியதே தவிர.....அவளுடைய கரங்கள் அவனது முதுகில் ஊர்ந்து சென்று அவனை இன்னும் இறுக்கமாகக் கட்டிக் கொண்டன.....!



அவளது பேச்சுக்கும்.....செயலுக்கும் சிறிதும் சம்பந்தம் இல்லாததைப் பார்த்து அவன் இதழ்களில் புன்னகை அரும்பியது.அதே சமயம்.....அவன் இதயத்தில் எழுந்த வேதனையை என்ன செய்தும் அவனால் குறைக்க முடியவில்லை.



'இப்படிப்பட்டவளை பார்த்து என்னென்ன வார்த்தைகளைப் பேசிட்டோம்.....?நான் ஏற்படுத்தின காயத்துக்கான மருந்தை.....என் கிட்டேயே தேடறா.....!என் பேபியை நானே கஷ்டப்படுத்திட்டேன்......!',மனதிற்குள் மறுகினான் அவன்.



"உன்னை விட்டுட்டு நான் எங்கே பேபி போவேன்......?உன் செல்ல நாய்க்குட்டித் தெரியாம ஒரு தப்பு பண்ணிருச்சு.....அதை மன்னிச்சு ஏத்துக்க கூடாதா.....?",அவன் குரலில் அவள் மனம் உருகித்தான் போனாள்.அவன் மார்பில் சாய்ந்த அந்த நொடியே.....அவளுடைய கோபம்....தவிப்பு....ஆற்றாமை என அனைத்தும் கரைந்து காணாமல் போனது.



தன் இரு கைகளாலும் அவள் கன்னத்தை மென்மையாகப் பற்றியவன்,"நீ எனக்கு வேணும் டி.....!நீ எனக்கே எனக்கானவளா மட்டும்தான் இருக்கணும்.....!உன்னுடைய அனைத்துமாய் நான் மட்டும்தான் இருக்கணும்.....!உன்னுடைய உலகம் என்னைச் சுற்றி மட்டும்தான் இயங்கணும்.....!உன்னைப் பெத்தவங்களா இருந்தாலும் சரி.....உன் பிரெண்ட்ஸ்....அக்கா....தங்கச்சி.....தம்பின்னு யாரா இருந்தாலும் சரி.....எனக்குப் பிறகுதான் நீ அவங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கணும்......!



உன்னுடைய மனசில.....எண்ணத்துல.....நினைவுகள்ல....இப்படி எல்லாத்திலேயும் நான்....நான் மட்டும்தான் இருக்கணும்.....!உன்னுடைய ஆது மட்டும்தான் உனக்குள்ள நிறைஞ்சு இருக்கணும்.....!அதே மாதிரிதான் நீ எனக்குள்ள நிறைஞ்சிருக்க.....!என் உயிர்....என்னுடைய இரத்தம்.....என்னுடைய இதயத்துடிப்பு.....இப்படி ஒவ்வொரு அணுவும் உன் பெயரை சொல்லித்தான் சுவாச்சுக்கிட்டு இருக்கு.....!இந்த உலகமே 'காதல்' அப்படிங்கிற சொல்லுக்கான அர்த்தத்தை என்கிட்ட வந்துதான் கத்துக்கணும்.....!அந்த அளவுக்கு நான் உன்னைக் காதலிக்கிறேன்.....!ஐ லவ் யூ டி பேபி......!",அவனது ஒவ்வொரு வார்த்தையிலும் தெறித்து விழுந்த காதலின் மழைச்சாரலில் சுகமாய் நனைந்தாள் நித்திலா.



'எப்படிப்பட்ட காதல் இது......!இவனுடைய காதல் சுனாமில மூழ்கி செத்துப் போனாலும் இன்பமாகத்தான் இருக்கும்.....!இந்த முரட்டுக் குழந்தையோட அன்பை இழக்கறதுக்கு.....நான் எப்பவுமே தயாரா இல்ல....!',மனதிற்குள் நினைத்தவளின் இதழ்கள்,"ஐ லவ் யூ ஆது.....!",என்று தாமாக முணுமுணுத்தன.



"நீங்க என்னுடைய வரம் ஆது......!தவமே செய்யாம எனக்குக் கிடைச்ச வரம் நீங்க......!",என்றவள் சுகமாய் அவனை அணைத்துக் கொண்டாள்.



அவளது உச்சந்தலையில் தன் தாடையைப் பதித்தபடி......அவளை அணைத்திருந்தவன்,"நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் பேபி.....!",என்றான்.



அவள் 'என்ன....?' என்பதாய் நிமிர்ந்து பார்த்தாள்.



"குற்ற உணர்வுல தவிக்கிறேன்னு அடிக்கடி சொன்னியே.....?நம்ம காதல்ல குற்றவுணர்வுங்கிற வார்த்தை எங்கிருந்து வந்துச்சு......?நீ ஒண்ணும் உன் அப்பா பார்த்து வைச்ச மாப்பிள்ளையை மணமேடையில் விட்டுட்டு.....உன் காதல்தான் வேணும்ன்னு ஓடி வரலையே.....?அப்படி ஏதாவது நடந்திருந்தா....நீ குற்ற உணர்ச்சில மறுகரதுக்கு ஒரு காரணம் இருக்கு......!அப்படி ஒரு சூழ்நிலைதான் உருவாகவே இல்லையே.....?



நீயும் நானும் காதலிக்கிறோம்......!அண்ட் நம்ம பெத்தவங்க சம்மதத்தோடதான் கல்யாணமும் நடக்கப் போகுது......!இதுல....நீ கில்ட்டியா ஃபீல் பண்றதுக்கு எதுவுமே இல்ல.....!",



"இல்லை.....அவங்களுக்குத் தெரியாம மறைக்கிறோமோன்னு.....",அவள் ஏதோ கூற வரவும்....அதற்கு மேல் பேச விடாமல் அவளைத் தடுத்தவன்,



"அதுதான் உன் பிரச்சனைன்னா.....இப்பவே கிளம்பு......!என் வீட்டுக்குப் போன் பண்ணி.....அவங்க எல்லாரையும் உங்க வீட்டுக்கு வரச் சொல்றேன்.....!இப்பவே என் குடும்பத்தோட வந்து உன்னைப் பெண் கேட்கிறேன்.....!வா....உங்க ஊருக்கு கிளம்பலாம்.....!",சுலபமாக அவன் வழி கூற....நித்திலாதான் வாயடைத்துப் போனாள்.



"என்னது......?பொண்ணு கேட்டு வர்றீங்களா.....?பிஸினெஸ் மாதிரியே.....இதிலேயும் வேகமா முடிவெடுக்காதீங்க.....!",



"நீதானேடி சொன்ன......?அவங்களுக்குத் தெரியாம லவ் பண்றது.....கில்ட்டி ஃபீல் கொடுக்குதுன்னு.....",



"அதுக்காக.....பொண்ணு கேட்டு எல்லாம் வர வேண்டாம்......!கொஞ்ச நாள் போகட்டும்......!நானே நேரம் பார்த்து பொறுமையா அவங்ககிட்ட எடுத்துச் சொல்றேன்......!",



"சரிங்க மகாராணி......!உத்தரவு......!",குறும்பாக இடை வரை குனிந்து பணிந்தான் அவன்.



அவன் காதைப் பிடித்து செல்லமாகத் திருகியவள்,"ஃபிராடு.....!கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரைக்கும் இந்த மகாராணி மேல விழுந்து பிராண்டிட்டு.....இப்போ வந்து போலியா பணிவை காட்டறியா......?",செல்லமாக கோபித்தபடி அவள் கேட்க,



"இல்லை டி என் செல்லக்குட்டி.....!உன் மாமா ஏதோ தெரியாம தப்பு பண்ணிட்டான்......!நான் வேணும்ன்னா.....பண்ணின தப்பை முத்தம் கொடுத்து சரி பண்ணிடறேன்......!ஒகே வா.....?",என்றபடி அவன்.....அவளை நெருங்க,



"போடா.....!உனக்கான பனிஷ்மெண்ட் என்னன்னு நானே சொல்றேன்......!இந்த மாதிரி கட்டிப் பிடிக்கறது....முத்தம் கொடுக்கறது.....இதெல்லாம் இனி நமக்குள்ள கட்......!நம்ம கல்யாணத்துக்கு பிறகுதான் அதெல்லாம்.....!இதுதான் நான் உனக்குக் கொடுக்கற தண்டனை.....!",அவனை விட்டுத் தள்ளி நின்றபடி கூறினாள் அவள்.



"ராட்சசி......!இதெல்லாம் ஓவர் டி.....!உன்னுடைய செல்ல நாய்க்குட்டி ரொம்பவும் ஏங்கிப் போயிடும்.....!பாவம்ல அது.....!ப்ளீஸ் டி.....!ப்ளீஸ் டி குட்டிம்மா.....!கொஞ்சம் கன்ஸிடர் பண்ணு......!",வெட்கமில்லாமல் அவன் கெஞ்ச,



"ம்ம்....!",என்று யோசிப்பது போல் பாவனை செய்தவள்.....அவனுடைய 'குட்டிம்மா....!' என்ற அழைப்பில் மயங்கி,"ஒகே.....!கல்யாணம் வரைக்கும் வேண்டாம்......!இன்னும் ஒரு மாசத்துக்கு மட்டும் நோ கிஸ்.....!நோ ஹக்.....!நோ டச்......!நோ எனிதிங்க்.....!",என்றபடி வெளியே ஓடிவிட்டாள்.



"கிராதகி.....!",என்றபடி அவன் பல்லைக் கடித்தாலும்.....அவனின் செல்ல பேபியின் தண்டனைக்கு கட்டுப்படத்தான் செய்தான்.



சிறிது நேரத்திற்கு முன்பு வரை.....வார்தைகளாலேயே இருவரும் ஒருவரை ஒருவர்....குத்திக் கிழித்துக் கொண்டிருந்தார்கள் என்று யார் கூறினாலும் நம்ப முடியாது....!அந்த அளவிற்கு இருவர் முகத்திலேயும் காதலும்.....மென்னகையும் பளிச்சிட்டது.



இது போன்ற சின்ன சின்ன ஊடல்கள்தான் காதலை வலுப்படுத்தும்......!பலப்படுத்தும்.....!



இதுதான் காதல்.....!வலிக்க வலிக்க இதயத்தை அறுத்து ரணமாக்கவும் செய்யும்.....!அடுத்த நொடியே.....அந்த ரணத்திற்கான மருந்தாய்.....தன்னை மொத்தமாய் அர்பணிக்கவும் செய்யும்.....!





அகம் தொட வருவான்....!!!
 

Nirmala Krishnan

Saha Writer
Messages
76
Reaction score
13
Points
6
அத்தியாயம் 40 :



ஆதித்யனும்.....நித்திலாவும் ஊட்டியிலிருந்து சென்னை திரும்பி இன்றோடு ஒருவாரம் முடிந்திருந்தது.அவள் கூறியிருந்தபடியே....அவனை....அவள் அருகில் நெருங்க விடவில்லை.



முதல் இரண்டு நாட்கள் அமைதியாய் பொறுத்துப் பார்த்தவன்.....மூன்றாம் நாள் பொங்கி எழுந்து விட்டான்.



கணினித் திரையில் கவனத்தை செலுத்தியபடி வேலை செய்து கொண்டிருந்தவளின் அருகில் வந்து நின்றவன்,"பேபி.....!",என்று மெல்ல அழைக்க,



அவளோ...."என்ன.....?",என்றாள் காட்டமாக.



"என்ன பண்ணிட்டு இருக்க......?",பேசியபடியே சற்று குனிந்து அவள் அமர்ந்திருந்த நாற்காலியின் கைப்பிடியில் கையை ஊன்ற முயல,



அவனது நோக்கத்தைப் புரிந்து கொண்டவள்.....கவனமாக நகர்ந்து அமர்ந்தபடி,"என்ன சார்.....?காத்து இந்தப் பக்கம் அடிக்குது......?உங்க சீட் அங்கே இருக்குது.....போய் அங்கே உட்காருங்க....!",என கை நீட்ட,



"கொஞ்ச நேரம் உன்கிட்ட பேசிட்டு போறேனே......!",குழைந்தான் அவன்.



"அதுதான்....நேத்து நைட் முழுக்க போன்ல பேசுனீங்களே......!அது போதாதா.....?போங்க.....போய் உட்காருங்க.....!",போலியான கண்டிப்புடன் கூறினாள் அவள்.



"ராட்சசி.....!ஏண்டி இப்படி என்னை வதைக்கிற.....?இரக்கமே இல்லாத ராட்சசி......!",அவன் கண்டபடி புலம்ப ஆரம்பித்தான்.



அவனைப் பார்த்து அவளுக்கு சிரிப்புதான் வந்தது.'கொஞ்ச நாள் அவனை சீண்டி பார்க்கலாம்.....!',அவளுடைய குறும்புத்தனம் தலை தூக்க.....அவனை அலைய விட ஆரம்பித்தாள்.



காதலில் இதுவும் ஒரு விளையாட்டுதான்.....!தன் இணையை அலைய விடுவதில்....பெண்களுக்கு என்றுமே ஒரு அலாதியான சந்தோஷம் உண்டு.....!அதில்....நித்திலா மட்டும் விதிவிலக்கா என்ன.....?



முயன்று தன் புன்னைகையை அடக்கியவள்,"ப்ச்.....!இப்போ உங்களுக்கு என்ன வேணும்......?",என்றாள்.



அந்தக் கள்வன் இதுதான் சாக்கென்று,"பேபி.....!ஒரு சின்ன கிஸ்....ஹக் கூட இல்லாம எப்படி டி......?அதுவும் ஒரு மாசம் சத்தியமா என்னால முடியாது டி.....!ப்ளீஸ் டி குட்டிம்மா.....!என் செல்ல குட்டிம்மால்ல.....!",அவள் தன் காதலை ஒத்துக் கொள்வதற்கு முன்பே....அவன் சும்மா இருக்க மாட்டான்.....!இப்போது....காதலை சொன்ன பிறகும் அவனை.....சாமியார் போல் இருக்கச் சொன்னால்....பாவம் அவன் என்ன செய்வான்.....?



அவனது செல்ல குட்டிம்மாவோ....அவனது கொஞ்சல்களையெல்லாம் அசால்ட்டாக ஒதுக்கித் தள்ளினாள்.



"ம்ஹீம்.....!பனிஷ்மெண்ட் கொடுத்தது....கொடுத்ததுதான்.....!தள்ளிப் போங்க.....!",சிறு குழந்தையாய் தலையை இடமும் வலமும் ஆட்ட.....அதில் அவன் மயங்கித்தான் போனான்.



"ஹ்ம்ம்....பேபி.....!வேணும்ன்னா இப்படி பண்ணலாமா.....?நீ கொடுத்த பனிஷ்மெண்ட்டை கொஞ்சமா ஆல்ட்டர் பண்ணிக்கலாமா.....?நீ என்ன சொன்ன......இந்த ஒரு மாசமும் நோ கிஸ்....நோ ஹக்.....அப்படித்தானே சொன்ன......?",அவன் கேட்ட விதமே....'ஏதோ குதர்க்கமாக சொல்லப் போகிறான்.....!',என்பதை உணர்த்தியது.



எனவே.....ஜாக்கிரதையானப் பார்வையை அவனிடம் செலுத்தியபடி,"ஆமா......!",என்றாள்.



அவள் அமர்ந்திருந்த சுழல் நாற்காலியை தன்னை நோக்கித் திருப்பியபடி,"ம்....ரைட்......!இப்போ நான் என்ன சொல்றேன்னா.....இந்த ஒரு மாசமும் நோ வொர்க்.....நோ தடா......நோ எனிதிங்.....ஒன்லி லவ்......!",கண்சிமிட்டியபடி கூறினான் அவன்.



அவளோ....."எ...என்ன.....?",என்று விழித்தாள்.



"என்ன பேபி.....?இது கூட புரியலையா.....?சரி.....விளக்கமா சொல்றேன்......கேட்டுக்கோ.....!இந்த ஒரு மாசமும் நீயும் நானும் லவ் மட்டும்தான் பண்ணனும்......!வேற எந்த வேலையும் பண்ணக் கூடாது......!வேற எந்த வேலையும் பண்ணக் கூடாது......!இன்க்லூடிங் ஆபிஸ் வொர்க்......!இதுதான் பனிஷ்மெண்ட்......!எப்படி......?",



"ஓ......!",சிறிது நேரம் யோசிப்பதை போல் பாவனை செய்தவள்.....பிறகு,"வேணும்ன்னா இப்படி பண்ணலாமா.......?",என உற்சாகமாகக் கேட்க,



அவளுடைய உற்சாகத்தில் குதூகலமாக அவள் புறம் நெருங்கியவன்,"எப்படி.....?",என்றான் ஆசையாக.



"நான் கொடுத்த பனிஷ்மெண்ட்டை.....ஒரு மாசம் இல்ல.....ரெண்டு மாசமா எக்ஸ்டண்ட் பண்ணிக்கலாமா.....?அதுதாங்க.....நோ கிஸ்.....நோ ஹக்.....!",இமைகளை கொட்டியபடி அவள் கூற.....அவ்வளவுதான்.....!அவன் முகம் விழுந்து விட்டது....



"போடி ராட்சசி......!இதயமே இல்லாத ராட்சசி......!",எனப் புலம்பியவன்.....குழந்தை போல் தன் காலை தரையில் உதைத்தபடி.....அவளை முறைத்துக் கொண்டே தன் இருக்கைக்குச் சென்று விட்டான்.



"அஃது.....!இனிமேல் கிட்ட வந்து பாருங்க......!பேசிக்கிறேன்......!"நமட்டு சிரிப்பு சிரித்தவளைப் பார்த்து அவனால் பல்லைக் கடிக்கத்தான் முடிந்தது.



இப்படி அவளை முறைத்துக் கொண்டும்.....பல்லைக் கடித்து கொண்டும்.....மூக்கால் அழுதபடி அந்த ஒரு வார காலத்தை கடத்தியிருந்தான் ஆதித்யன்.

.............................................................................

'இன்னைக்கு ஏன் இவ வரல.....?என்கிட்ட சொல்லாம லீவ் போட மாட்டாளே......?உடம்பு சரியில்லையா.....?",யோசித்தபடியே சுமித்ராவின் எண்ணிற்கு அழைத்தான் கெளதம்.



எப்பொழுதும் மணி ஒன்பதானால் சரி....மிகச்சரியாக அலுவலகத்தில் ஆஜர் ஆகி விடுவாள் சுமித்ரா.ஆனால்....அன்று மணி பத்தாகியும் அவள் வராது இருக்கவே.....அவன் சுமித்ராவிற்கு அழைத்தான்.



தனது அறையில்.....கட்டிலில் அமர்ந்தபடி.....போனின் திரையில் ஒளிர்ந்த கௌதமின் புகைப்படத்தை வெறித்துக் கொண்டிருந்தாள் சுமித்ரா.அவள் விழிகளில் கண்ணீர் கரைகட்டி நின்றது.



நான்கைந்து முறை அலறிய மொபைலை எடுத்து அதை சமாதானப்படுத்தும் தைரியம் அற்றவளாய்.....அதன் திரையில் ஒளிர்ந்த 'மாமா....' என்ற எழுத்தையும்.....அதனோடு சேர்ந்து ஒளிர்ந்த கௌதமின் முகத்தையும்.....இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தாள்.



சில நொடிகள் அலறிக் கொண்டிருந்த போன் தன் அலறலை நிறுத்திக் கொண்டு.....மூர்ச்சையாகி விட.....பார்த்துக் கொண்டிருந்த சுமித்ராவின் விழிகளில் அணை கட்டியிருந்த கண்ணீர்.....அணையை உடைத்துக் கொண்டு வெளியேறியது.



மறுமுனையில்.....எரிச்சலோடு தன் காதிலிருந்து போனை எடுத்த கெளதம்,"ச்சே.....!என்ன காரணம்ன்னு சொல்லிட்டு லீவ் போடத் தெரியாதா.....?இப்போ....என்னாச்சோ....ஏதாச்சோன்னு நான்தான் தவிக்க வேண்டியதா இருக்கு.....!ஒரு மனுஷனோட நிலைமையைப் புரிஞ்சுக்கவே மாட்டா.....!",வாய்விட்டு புலம்பியபடியே வேலைகளில் ஆழ்ந்தான்.



"என்னம்மா சுமி.....?இன்னும் ரெடியாகலையா.....?சீக்கிரமா புடவை கட்டிக்கிட்டு தயாராகு....!",பிரம்மை பிடித்தவள் போல் உட்கார்ந்திருந்த சுமித்ராவை உலுக்கினார் அவளுடைய அத்தை.



"ஆங்.....அத்தை.....!என்ன.....?",கனவில் இருந்து விழிப்பதைப் போல் மலங்க மலங்க விழித்தாள் அவள்.



"என்னம்மா....கல்யாணப் பொண்ணு......?இப்படி சுரத்தே இல்லாம உட்கார்ந்துட்டு இருக்க.....?இன்னும் ஒரு மணி நேரத்துல மாப்பிளை வீடு வந்து இறங்கிருவாங்க.....!போ.....போய் குளிச்சிட்டு வந்து தயாராகு.....!",என ஒரு அதட்டல் போட்டபடி வெளியேறினார்.



சுமித்ராவிற்குத் தெரியாமலேயே நிறைய விஷயங்கள் நடந்தேறியிருந்தன.அன்று.....சுமித்ராவைப் பெண் கேட்ட மாப்பிளை வீட்டினருக்கு.....சுமித்ராவின் தந்தை சம்மதம் சொல்லியிருந்தார்.தன் உறவினர்களிடம் கலந்தாலோசித்தவர்....மாப்பிள்ளை வீடு நல்ல பெரிய இடம் எனவும் 'சரி' என்று விட்டார்.



சுற்று வட்டாரத்தில் கேட்கத் தெரிந்தவருக்கு.....சொந்த மகளிடம் சம்மதம் கேட்கத் தோன்றவில்லை.நேற்று மாலை.....அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய மகளிடம்,"நாளைக்கு காலையில உன்னைப் பொண்ணு பார்க்க வர்றாங்க....!ஒருநாள் ஆபிஸ்க்கு லீவ் போட்டிரு.....!",என்று அவளைப் பெண் பார்க்க வரும் விஷயத்தையே.....ஒரு செய்தியாகத்தான் மகள் காதில் போட்டு வைத்தார்.



அவரைச் சொல்லியும் குற்றமில்லை.....!அவர் வாழ்ந்த சூழ்நிலையும்.....சுற்றியிருந்த சுற்றங்களும் அவருக்கு அதைத்தான் போதித்திருந்தன.



பணத்திற்கும்....சாதிக்கும் முக்கியத்துவம் கொடுத்தவர்.....தன் பெண்ணின் மனதில் இருக்கும் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்கத் தவறி விட்டார்.....!



துடைக்க துடைக்க வற்றாத அருவி போல்.....சுமித்ராவின் கண்களில் இருந்து கண்ணீர் அருவி பெருகிக் கொண்டே இருந்தது.அவளது விரல்களோ.....மொபைலில் இருந்த தன்னவனின் புகைப்படத்தை வருடிக் கொண்டிருக்க.....அவளது மனதோ அவனுடனான மௌன பரிபாஷணையில் ஈடுபட்டிருந்தது.



வெகு நேரம் தன்னவனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவள்.....பிறகு ஒரு முடிவெடுத்தவளாக.....தன் கண்களை அழுந்த துடைத்துக் கொண்டு நிமிர்ந்து அமர்ந்தாள்.



'என்னை மன்னிச்சிடுங்க கெளதம்.....!இன்னைக்கு என்னைப் பொண்ணு பார்க்க வர்றாங்க.....ஆனால்.....இந்த விஷயத்தை இப்போ....என்னால உங்ககிட்ட சொல்ல முடியாது.....!நான் சொன்னேனா.....அடுத்த நிமிஷம் நீங்க என் வீட்டு வாசல்ல நிற்பீங்க.....!அதுக்கு அப்புறம்....என்ன நடக்கும்ன்னு என்னால நினைச்சு கூட பார்க்க முடியல.....!



என் சொந்த பந்தம் கூடியிருக்கிற இந்த நேரத்துல.....அவங்களை எதிர்த்து உங்களால எதுவும் செய்ய முடியாது.....!உங்களுக்கு.....அவங்களால வீண் ஆபத்துதான் வரும்.....!



அதனால.....இப்போதைக்கு அவங்க முன்னாடி போய் நிற்கறதுதான் சரி.....!இப்போ நடக்கற பொண்ணு பார்க்கற நாடகத்துல.....நான் நடிச்சுத்தான் ஆகணும்......!என் நிலைமையை புரிஞ்சுக்குவீங்கன்னு நம்பறேன் கெளதம்.....!இப்போ மட்டும் நான் இவங்ககிட்ட போய் நம்ம காதலை பத்தி சொன்னா.....நடக்கறதே வேறயாகத்தான் இருக்கும்.....!



என்னை வீட்டிலேயே அடைச்சு வைச்சு.....உங்களைப் பார்க்க முடியாம.....உங்க கூட பேச முடியாம பண்ணிடுவாங்க.....!ஸோ.....நான் எடுத்த முடிவுதான் சரியானது......!



ஆனால்.....ஒண்ணை மட்டும் என்னால உறுதியா சொல்ல முடியும்......!நான் உங்களுடையவள்தான்......!இந்த மனசும்....உடம்பும் உங்களுக்கு மட்டும்தான் சொந்தம்.....!வேறொருத்தனோட நிழலைக் கூட தப்பான நோக்கத்தோடு......என்னைத் தீண்ட விட மாட்டேன்.....!இது சத்தியம் கௌதம்.....!



உங்களுக்காக.....நம்ம காதலுக்காக.....இப்போ நான்.....வரப் போறவங்க முன்னாடி போய் நின்னுதான் ஆகணும்......!ஐ லவ் யூ கெளதம்.....!',எனத் தன் மனதிற்குள் பேசியவள்....மொபைலில் சிரித்துக் கொண்டிருந்த தன்னவனின் நிழல் படத்தின் மீது....அழுத்தமாக முத்தமொன்றை வைத்தாள்.



அடுத்த அரை மணி நேரத்தில்.....புடவைக் கட்டி.....இயந்திரத்தனமாய் தயாராகி அமர்ந்திருந்தவளின் காதில்.....மாப்பிள்ளை வீட்டினர் வந்து இறங்கியதற்கான சலசலப்பு கேட்டது.



ஒரு கணம் தன் விழிகளை அழுந்த மூடித் திறந்தவள்.....பின்....தன் காதலின் துணை கொண்டு....நடக்கும் அனைத்தையும் எதிர் கொள்ளத் தயாரானாள்.



அடுத்த சில நிமிடங்களிலேயே.....அவள் அத்தை வந்து அவளை அழைத்துச் செல்ல.....எந்த ஒரு உணர்வையும் முகத்தில் காட்டாது....வெளியே சென்று மாப்பிள்ளை வீட்டினர் முன் நின்றாள்.



அதன் பிறகு.....தன் அத்தை சொன்ன அனைத்தையும் ஒரு பொம்மை போல் செய்து முடித்தவள்.....யாரையும் நிமிர்ந்து பார்க்காது தன் அறைக்குள் சென்று விட்டாள்.



அவளது விலகல் யார் கண்ணிற்கும் தெரியவில்லை.பெண்ணின் இயல்பான நாணம் என்றே அவளது ஒதுக்கத்தை அனைவரும் எண்ணினர்.



மாப்பிள்ளை வீட்டினருக்கும் பெண்ணைப் பிடித்து விட.....அடுத்த மாத இறுதியில் நிச்சயதார்த்தம் என்றும்.....அதன் பிறகு மூன்று மாதம் கழித்து வரும் முகூர்த்தத்தில் திருமணம் என்றும் முடிவு செய்யப்பட்டது.



கல் போன்று இறுகிய மனத்துடன்.....உள்ளே அறையில் அமர்ந்து அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த சுமித்ராவிற்கு.....தன்னவனின் காதல் மட்டுமே துணையாய் இருந்தது.



தன்னில் பாதியானவனின் காதலை மட்டுமே.....அடி நாதமாய்....பற்றுக்கோலாய் இறுகப் பற்றிக் கொண்டு....நடக்கும் அனைத்தையும் தைரியமாய் எதிர்கொண்டாள் அந்தப் பேதை.....!



அது.....காதல் அவளுக்கு கொடுத்த தைரியம்......!தன்னவனின் உயிர்க்காதலால்....அந்தப் பெண்மைக்குள் விளைந்த கர்வம் அது.....!காதல்.....வெறும் காதலை மட்டுமே ஊன்றுகோலாய் கொண்டு....அவள்.....தன் காதலுக்கான போராட்டத்தை ஆரம்பித்து விட்டாள்.



ஆனால்.....அவள் ஒன்றை மறந்து விட்டாள்.....!காதலுக்கான போராட்டத்தின் ஒவ்வொரு அடியையும்.....காதல் கொண்ட இரு மனங்களும் இணைந்துதான் எடுத்து வைக்க வேண்டும்......!இதை அறியாமல்.....அவள்....தன்னவனுக்காக.....தன் காதலுக்காக என்று கூறிக் கொண்டு.....தனியாளாக போராட்டத்தை ஆரம்பித்து விட்டாள்.....!



காதல் கொண்ட இன்னொரு மனது.....இதை அறிந்து கொள்ளும் போது.....தன்னவளின் காதலுக்கானப் போராட்டத்தை உணர்ந்து கொண்டு.....அவளோடு சரிபாதியாய் கரம் கோர்த்து....அவளோடு இணைந்து பயணிக்குமா.....?இல்லை.....தன்னை விட்டுவிட்டு தனியாளாய் களம் இறங்கியவளின் மீது கோபம் கொள்ளுமா.....?பார்ப்போம்......!



அகம் தொட வருவான்.....!!!
 

Nirmala Krishnan

Saha Writer
Messages
76
Reaction score
13
Points
6
அத்தியாயம் 41 :



அடுத்த நாள் காலை....அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்த சுமித்ராவின் மனம் முழுவதும்,'இன்று எப்படியாவது கௌதமிடம் விஷயத்தை தெரிவித்து விட வேண்டும்.....!' என்ற எண்ணம்தான் ஓடிக் கொண்டிருந்தது.



அவசர அவசரமாக கிளம்பி அலுவலகத்திற்கு வந்தால்....அங்கு....கௌதம் இல்லை.நேரம் ஓடிக் கொண்டிருந்ததே தவிர....அவன் வந்த பாடாக இல்லை.



நகத்தைக் கடித்துத் துப்பியபடி கௌதமின் அறை வாசலையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு....நேரமாக ஆக திக் திக் என்றிருந்தது.



'ம்ஹீம்.....!பேசாம அவருக்கு போன் பண்ணிட வேண்டியதுதான்.....!இன்னைக்கு என்ன ஆனாலும் சரி.....அவர்கிட்ட விஷயத்தை சொல்லாம....வீட்டுக்கு போகக் கூடாது.....!',என்று முடிவெடுத்தவள் கௌதமிற்கு அழைத்தாள்.



எடுத்தவுடனேயே,"சொல்லுடி.....?",என்றான் அவன்.



"எங்கே இருக்கீங்க......?ஏன் இன்னைக்கு ஆபிஸ்க்கு வரல......?",



"நீ ஏண்டி நேத்து வரல.....?போன் பண்ணி இன்ஃபார்ம் பண்ணனும்ன்னு கூடவா தெரியாது.....?நேத்து நைட்டும் உனக்கு கால் பண்ணினேன்......!ஏன் நீ அட்டெண்ட் பண்ணல.....?",சரமாரியாய் கேள்விக் கணைகளைத் தொடுத்தான்.



ஒரு கணம் தடுமாறியவள்,"அ...அது கொஞ்சம் உடம்பு சரியில்லை.....!",என்றாள் அமைதியான குரலில்.



"ஓ....என்னாச்சு......?இப்போ பரவாயில்லையா.....?",



"ம்ம்.....பரவாயில்ல.....!சரி....!அதை விடுங்க.....!இப்போ எங்கே இருக்கீங்க......?",



"ஒரு வேலை விஷயமா ஆடிட்டர் ஆபிஸ்க்கு வந்தேன் டி.....!ஏன்.....என்னைப் பார்க்காம என் ஹனியால இருக்க முடியலையா.....?",அவன் சரசத்துடன் வினவ.....அவனுடைய குறும்புப் பேச்சில்....அவள் மனதில் அழுந்தியிருந்த பாரம் முழுவதும் அகன்றதைப் போல் உணர்ந்தாள்.



"ம்....ஆமா.....!என் மாமாவை பார்க்காம இருக்க முடியல.....!",



"அடடா.....!மதியம் வரைக்கும் பொறுத்துக்கோ டா ஹனி......!வேலை முடிஞ்சதும்....நேரா ஆபிஸ்க்குத்தான் வருவேன்.....!",என்று கொஞ்ச,



தனது விளையாட்டை ஒதுக்கி வைத்தவள்,"நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்......!",என்றாள் தயக்கமாக.



"கொஞ்சமென்ன......?நிறையவே பேசலாம்.....!மதியம் வந்திடறேன்......!அது வரைக்கும் மாமாவை நினைச்சபடி ட்ரீம்ல இரு......!",



"இல்லைங்க.....!அது கொஞ்சம் முக்கியமான விஷயம்......!ஆபிஸ்ல எல்லாம் பேச முடியாது.....!வேற எங்கேயாவது மீட் பண்ணலாம்.....!",



அவளுடைய தீர்மானமான குரலில் எதை உணர்ந்தானோ.....சிறிது நேரம் யோசித்தவன்....பிறகு,"ஒகே ஹனி.....!மதியத்துக்கு மேல ஆபிஸ்க்கு லீவ் சொல்லிடு.....!நான் வந்து உன்னை பிக்கப் பண்ணிக்கிறேன்.....!சரி டா.....!எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு......!உனக்கு அப்புறம் கூப்பிடறேன்......!",என்றபடி போனை அணைத்து விட்டான்.



சொன்னது போலவே....மதியம் வந்து அவளை அழைத்துச் சென்றான்.



"எங்கே போகலாம்......?",காரை ஓட்டியபடி அவன் வினவ,



சாலையையே வெறித்து பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தவள்,"பீச்சுக்கு போகலாம்.....!",என்றாள் வெறுமையான குரலில்.



"இந்த வெயில்ல பீச்சுக்கு போனால்.....நானும் நீயும் காய்ஞ்சு கருவாடாகத்தான் ஆகணும்.....!",அவளைத் திரும்பிப் பார்த்தவன்.....அவள் எதுவும் பேசாமல் அமைதியாய் அமர்ந்திருப்பதைக் கண்டு......தனக்குள் யோசித்தபடி அமைதியானான்.



கௌதமிடம் பேச வேண்டும் என்று கூறி விட்டாளே தவிர.....அவனிடம் எப்படி இந்த விஷயத்தைப் போட்டு உடைப்பது என்று தடுமாறிக் கொண்டிருந்தாள் சுமித்ரா.



'இந்த விஷயம் தெரிய வந்தால் ரொம்பவும் கோபப்படுவாரே......?என் நிலைமையை புரிஞ்சுக்குவாரா......?கடவுளே.....!நீதான் அவருக்கு புரிய வைக்கணும்.....!',ஊரிலிருக்கும் அத்தனை தெய்வங்களையும் வேண்டியபடி அமர்ந்திருந்தாள் சுமித்ரா.



"இறங்கு......!",கௌதமின் குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தவள்....அப்பொழுதுதான் கவனித்தாள்....கார் அவனின் வீட்டின் முன் நிற்பதை.....!



"உங்க வீட்டுக்கு எதுக்கு வந்தீங்க......?இங்க வேண்டாம்......!வேற எங்கேயாவது போங்க......!",அவசரமாக மறுத்தவளைக் கண்டவனுக்கு சுள்ளென்று கோபம் வந்தது.



அவளைத் திரும்பிப் பார்த்து ஒரு முறை முறைத்தவன்.....ஒன்றும் பேசாமல் காரிலிருந்து இறங்கினான்.அவனுடைய அக்கினிப் பார்வையில் 'கப்சிப்'பென்று வாயை மூடிக் கொண்டவள்.....அவனை எதிர்த்து வாதாடாமல்.....மறுபக்க கதவைத் திறந்து கொண்டு இறங்கினாள்.



வீட்டுக் கதவை சாவி கொண்டு இவன் திறப்பதை பார்த்தவள் மனம் முரண்டியது.'திவ்யா வீட்டில இல்லையா.....?நானும் இவரும் மட்டும் எப்படி.....தனியா இருக்கறது......?',என்று மனதிற்குள் தயங்கினாலும்.....அவனிடம் பேச வேண்டி இருப்பதை கருத்தில் கொண்டு.....அமைதியாக உள்ளே நுழைந்தாள்.



வீட்டிற்குள் நுழைந்தவுடனேயே கையிலிருந்த பையை.....ஹாலிலிருந்த சோபாவில் கடாசியவன்,"காபி போட்டு வை.....!நான் போய் ட்ரெஸ் சேன்ஜ் பண்ணிட்டு வர்றேன்.....!",ஏதோ கட்டின பொண்டாட்டிக்கு உத்தரவிடுவது போல் கட்டளையிட்டுவிட்டு.....தனது அறைக்குள் நுழைந்து கொண்டான்.



அவனுடைய ஏவலில் அவளுடைய கால்கள்.....தன்னிச்சையாக சமையல்கட்டை நோக்கி நடக்க.....அவளுடைய கைகளோ.....இயல்பு போல் அவனுக்கான காபியை கலக்க ஆரம்பித்தது.ஆனால்....மனமோ....'இவரிடம் எப்படி விஷயத்தை சொல்வது.....?',என்பதிலேயே உழன்று கொண்டிருந்தது.



அவன் உடைமாற்றி விட்டு வெளியே வரவும்.....அவள் காபியை கலந்து எடுத்து வரவும் சரியாய் இருந்தது.



அவள் கையில் ஒரு காபி கோப்பை மட்டும் இருப்பதைக் கண்டவன்,"ஏன்.....?உனக்கு காபி கலந்துக்கலையா.....?",கேட்டபடியே சோபாவில் அமர்ந்தான்.



"இல்ல.....எனக்கு வேண்டாம்.....!",என்றவளின் பார்வை பூட்டப்பட்டிருந்த ஹால் கதவின் மேலேயே நிலைத்திருந்தது.



அவளுடைய பார்வையை அவன் கவனித்தாலும்.....அதைக் கண்டு கொள்ளாமல்,"சரி....வா.....!இங்கே உட்கார்.....!"என்றபடி சோபாவில் தன்னருகில் இருந்த இடத்தைக் காட்ட,



அவளோ....."ம்.....!",என்றபடி அவனுக்கு எதிரில் போடப்பட்டிருந்த சோபாவில் அமரப் போனாள்.அவள் கையைப் பிடித்து தடுத்தவன்....அவளை இழுத்து தன்னருகில் அமர வைத்தான்.



"அப்படி என்னதான் டி தயக்கம் உனக்கு.....?நானும் அப்போ இருந்து பார்க்கிறேன்......பூட்டின கதவையே உத்து உத்து பார்த்துக்கிட்டு இருக்க.....?நான் ஒண்ணும் உன்னை ரேப் பண்ணிட மாட்டேன்.....!ஸோ.....பயப்படாம உட்காரு.....!",படபடவெனப் பொரிந்தான் அவன்.



"இல்ல.....அப்படியெல்லாம் நினைக்கல......!",முகம் சிவக்கத் தடுமாற்றத்துடன் தன்னிடம் காபி கோப்பையை நீட்டியவளைப் பார்த்தவனின் கோபம் பறந்தோடியது.



உல்லாசமாக விசிலடித்தபடி அவளிடமிருந்து காபி கோப்பையை வாங்கியவன்,"எப்படி டி உனக்கு மட்டும் இப்படி முகம் சிவக்குது.....?",அவன் பார்வை அவளை மேய்ந்த விதத்தில்....அவள் முகம் இன்னும் அதிகமாக சிவந்து போனது.



அவனுடைய பார்வையின் தாக்கத்தில் உட்கார முடியாமல் நெளிந்தவள்,"ப்ளீஸ்.....!",என்று முணுமுணுக்க,



அவள் அவஸ்தையைக் கண்டு வாய்விட்டு சிரித்தவன்,"நான் உன்னை ஒண்ணுமே பண்ணலையே டி......இப்போ எதுக்கு ப்ளீஸ் போடற.....?",என்றவன் அவள் இன்னும் அவஸ்தையாய் நெளிவதைக் கண்டு,



"சரி.....சரி....!பாம்பு மாதிரி நெளியாதே.....!எந்த விஷயத்தைப் பத்தி பேசணும்ன்னு சொன்ன.....?சொல்லு.....?",காபியை உறிஞ்சியபடியே கேட்க....அவள் முகம் பேயறைந்ததைப் போல் மாறியது.



"அது....அது வந்து.....",அவள் தடுமாற,



"என்கிட்ட என்னடி தயக்கம்.....?என்னன்னு சொல்லு....?",அவன் அவளை ஊக்கினான்.



அவன் காபியைக் குடித்து முடிக்கும் வரை அமைதி காத்தவள்....குடித்த காபி கோப்பையை டீபாயின் மேல் வைத்ததும்.....ஒருவாறாக தைரியத்தை திரட்டிக் கொண்டு,"நேத்து....என்னை பொ...பொண்ணு பார்க்க வ....வந்திருந்தாங்க.....!",திக்கித் திணறி கூறி முடித்தாள்.



அவ்வளவுதான்.....!அடுத்த நொடி....வேகமாய் சோபாவில் இருந்து எழுந்தவன்....அதை விட வேகமாய் அவளுடைய கன்னத்தில் பளீரென்று அறைந்திருந்தான்.



கன்னத்தில் ஆரம்பித்த வலி....சரசரவென்று காது வரை பரவ....அவளையும் அறியாமல்.....சுமித்ராவின் கண்களில் இருந்து கண்ணீர் முத்துக்கள் சிதற ஆரம்பித்தன.



ஒரு கையால் தன் கன்னத்தை தாங்கியபடி....அதிர்ச்சியுடன் தன்னை நிமிர்ந்த பார்த்தவளைக் கண்டவனுக்கு.....அப்பொழுதுதான் உரைத்தது.....தான் அவளை அறைந்து விட்டோமென்று.....!



"சே.....!",கோபத்துடன் கையை உதறியவன்....பக்கத்திலிருந்த டீபாயை எட்டி உதைத்தான்.



அவள் அதிர்ந்து போய் நடுக்கத்துடன் சோபாவோடு ஒன்றிக் கொண்டாள்.



"எவ்வளவு தைரியம் இருந்தா....என்கிட்டேயே வந்து உன்னைப் பொண்ணு பார்த்துட்டு போன விஷயத்தை சொல்லுவ.....?",கோபத்துடன் உறுமினான் அவன்.



"இல்லைங்க.....!எனக்கு அப்போ வேற வழி தெரியல....!",



"ச்சீ.....!வாயை மூடு டி....!வேற வழி தெரியலைன்னு சொல்லிட்டு....நாளைக்கு அவனைக் கல்யாணம் பண்ணி....அவன் கூட குடும்பம் நடத்துவியா.....?வேற வழி தெரியலையாம்.....வேற வழி.....!",ஆத்திரத்தில் அவன் பொரிய,



எப்படியாவது அவனை சமாதானப்படுத்த வேண்டும் என்ற நினைவில் அவள்,"இல்லைங்க.....அடுத்த மாசம்தான் நிச்சயம்.....!இன்னும் மூணு மாசம் கழிச்சுத்தான் கல்யாணம் ஃபிக்ஸ் பண்ணியிருக்காங்க.....!",என்று அவசர அவசரமாக கூறி....அவனது முறைப்பை வாங்கிக் கொண்டாள்.



அவள்....அவனிடம் அனைத்தையும் கூறி விட வேண்டும் என்று நினைத்தது சரிதான்.....!ஆனால்....அவள் அதைக் கூறிய விதம்தான் தவறாகிப் போனது.....!எதை எப்படிக் கூற வேண்டும் என்று தெரியாமல்.....தப்புத் தப்பாகக் கூறி....அவனுடைய கோபத்திற்கு ஆளானதும் இல்லாமல்.....அவனிடமிருந்து ஒரு அறையையும் வாங்கிக் கட்டிக் கொண்டாள்.



அவனே கோபத்தில் இருக்கிறான்.....!அவனிடம் சென்று 'இன்னும் மூணு மாதம் கழித்துத்தான் திருமணம்.....!' என்று கூறினால் அவன் என்ன செய்வான்.....?முறைக்கத்தான் செய்வான்.....!



அவன் முறைத்த முறைப்பில்தான்....அவளுக்குத் தான் என்ன கூறினோம் என்பதே நினைவுக்கு வந்தது.தன் நாக்கை கடித்துக் கொண்டவள்,"இல்ல.....!நான் அந்த அர்த்தத்துல சொல்ல வரல....!நமக்கு நிறைய டைம் இருக்கு.....பொறுமையா முடிவு பண்ணலாம்ன்னு சொல்ல வந்தேன்.....!",என்றாள் தயங்கிய குரலில்.



"பொறுமை......!நான் இவ்வளவு நாள் பொறுமையா இருக்கப் போய்த்தான் நீ இன்னைக்கு.....எவனுக்கோ முன்னாடி போய் அலங்கரிச்சிட்டு நின்னுட்டு வந்திருக்கிற.....!",பல்லைக் கடித்துக் கொண்டு அவன் வார்த்தைகளை கடித்துத் துப்ப....அவள் எச்சிலை கூட்டி விழுங்கினாள்.



"என் நிலைமையைக் கொஞ்சமாவது புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க.....!அந்த சமயத்துல நான் பண்ணினதுதான்....எனக்கு சரின்னு பட்டுச்சு......!",



"என்னடி சரி......?அவன் முன்னாடி போய் நின்னதுதான் உனக்கு சரியா....?அந்த சமயத்துல நீ என்ன பண்ணியிருக்கணும்......?உடனே....எனக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லியிருக்கணும்.....!",



"நான் அப்படி விஷயத்தை சொல்லியிருந்தா....நீங்க என்ன பண்ணியிருப்பீங்க.....?உடனே....என் வீட்டைத் தேடி வந்துருப்பீங்க.....!என் சொந்த பந்தமெல்லாம் கூடியிருக்கிற சமயத்துல.....நீங்க வந்து நின்னா.....என்னாகும்ன்னு கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க.....!அவங்க எல்லாம் சேர்ந்து....உங்களை உருத் தெரியாம அழிக்கறதுக்கு கூடத் தயங்க மாட்டாங்க.....!",இதைக் கூறும் போதே அவள் குரல் நடுங்கியது.



இருந்தும் தன்னை சமாளித்துக் கொண்டு,"அது மட்டும் இல்ல....நம்ம காதல் விஷயம் தெரிஞ்ச அடுத்த நிமிஷம்....என்னை ஹவுஸ் அரெஸ்ட் பண்ணியிருப்பாங்க......!அதுக்கு அப்புறம்.....நாம சந்திக்கறதுக்கு கூட வாய்ப்பில்லாம போயிருக்கும்.....!",என்னதான் அவள் எடுத்துக் கூறினாலும்.....அவனால் அதை ஒத்துக் கொள்ள முடியவில்லை.



"உங்க வீட்டாளுங்க என்னை அடிக்கற வரைக்கும்....என் கை என்ன பூப்பறிச்சிட்டா இருக்கும்.....?நீ இந்தளவுக்கு பயப்படறதுக்கு எந்த அவசியமும் இல்ல சுமித்ரா.....!நீ என்ன சொன்னாலும் சரி.....கண்டவன் முன்னாடி போய் நீ நின்னது.....எனக்குப் பிடிக்கல.....!",முகத்தை சுளித்தபடி கூறியவனின் மனநிலையை அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது.



அவனருகில் சென்று ஆறுதலாக அவன் கையைப் பிடித்தவள்,"உங்க மனசை என்னால புரிஞ்சுக்க முடியுதுங்க.....!நான் அப்படி அவர் முன்னாடி.....",அவள் கூறிக் கொண்டிருக்கும் போதே அவளைப் பார்த்து உறுத்து விழித்தவன்,"அவன் உனக்கு அவரா.....?",எனப் பல்லைக் கடிக்க......அவனுடைய இந்த சிறுபிள்ளைத்தனமான கோபத்தில் அவளுக்கு சிரிப்புதான் வந்தது.



முயன்று தன் சிரிப்பை அடக்கியவள்,"சரி.....!நான் அப்படி அவன் முன்னாடி போய் நின்னது தப்புதான்.....!என்னை மன்னிச்சிடுங்க.....!இப்போ அதைப் பத்தி யோசிக்கறதை விட்டுட்டு.....நம்ம விஷயத்துக்கு வாங்க.....!அடுத்தது என்ன பண்ணலாம்ன்னு யோசிக்கலாம்.....!",என்று அவன் கையை நீவி விட்டபடி தன்மையாகக் கூற,



தன் கையைப் பற்றியிருந்த அவள் கையைப் பட்டென்று தள்ளி விட்டவன்.....ஹாலிலேயே குறுக்கும் நெடுக்குமாக நடக்க ஆரம்பித்தான்.அவன்.....தன் கையை விலக்கி விட்ட வேகத்திலேயே.....அவனுடைய கோபத்தை அவள் நன்கு புரிந்து கொண்டாள்.



வருத்தத்தில் முகம் சுருங்கினாலும்,'சரி....கோபம் இருக்கத்தான் செய்யும்.....!நாமதான் கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போகணும்.....!கொஞ்ச நாள் போனால்.....சரியாகிடுவாரு.....!',எனத் தன்னைத் தானே சமாதனப் படுத்திக் கொண்டாள்.



கூண்டுப் புலி போல் அங்கும் இங்கும் நடை பயின்றவன்....பிறகு என்ன நினைத்தானோ.....வேகமாக அறைக்குள் சென்று உடைமாற்றி விட்டு வந்தான்.



"கிளம்பு.....!",கார் சாவியை எடுத்தபடி அவன் கூற,



"எ....எங்கே.....?",தடுமாறினாள் அவள்.



"ம்....கல்யாணம் பண்ணிக்கறதுக்கு.....!",நக்கலாக அவன் கூற,



"எ....என்ன.....?",அவள் விழித்துக் கொண்டு நிற்க.....அவனுக்கு எரிச்சல் எரிச்சலாய் வந்தது.



"ப்ச்.....!கிளம்புன்னு சொன்னா கிளம்பு டி......!எங்கேன்னு சொன்னால்தான் மகாராணி வருவீங்களோ.....?",அவன் கத்த ஆரம்பிக்கவும்.....அவள் தன் கைப்பையை எடுத்துக் கொண்டு அவசர அவசரமாக கிளம்பினாள்.



காரில் செல்லும் போது சங்கடமான அமைதியே நிலவியது.



"எங்கே போறோம்......?",தயங்கித் தயங்கி சுமித்ரா கேட்க.....அவளைத் திரும்பிப் பார்த்து முறைத்தவன்.....ஒன்றும் பேசாமல் சாலையில் கவனமானான்.



சுமித்ராவின் வீடு இருக்கும் தெருவிற்குள் அவனுடைய கார் நுழைய.....அவளுக்குத் திக்கென்று இருந்தது.



"ஐயோ.....!இங்கே எதுக்கு வந்திருக்கீங்க.....?வண்டியைத் திருப்புங்க......!",அவள் பதற,



நிதானத்துடன் அவளை நிமிர்ந்து நோக்கியவன்,"உங்க வீடு எங்கே இருக்கு......?",என்றான்.



"ப்ளீஸ்ங்க.....!இது சரியான சூழ்நிலை கிடையாது......!நானே பொறுமையா எங்க வீட்டில எடுத்துச் சொல்றேன்.....!இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண்ணுங்க.....!ப்ளீஸ்.....!",கண்களில் கண்ணீருடன் கெஞ்சியவளைப் பார்த்து அவன் சிறிதும் இளக்கம் கொள்ளவில்லை.



"இனிமேலும் என்னால பொறுமையா இருக்க முடியாது சுமித்ரா.....!நீ வீட்டுக்கு வழியை மட்டும் சொல்லு.....!நம்ம வாழ்க்கைக்கான வழியை நான் காண்பிக்கிறேன்.....!நீ அதுல நடந்து வா.....!போதும்.....!",ஸ்டியரிங்கை இறுகப் பிடித்தபடி அவன் கூறிய விதமே.....அவனுடைய கோபத்தை பறைசாற்றியது.



"நீங்க கோபப்பட்டு.....எங்க அப்பாக்கிட்ட ஏதாவது பேசிட்டா....அவ்வளவுதான்.....!காரியமே கெட்டு விடும்.....!ப்ளீஸ்ங்க....!கொஞ்சம் பொறுமையா இருங்க.....!",தன் வீட்டினரால் அவனுக்கு ஏதாவது ஆபத்து வந்து விடுமோ என்று அவளுடைய காதல் நெஞ்சம் பதறியது.



ஆனால்....அவன் அதையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை.....!தன்னுடைய பிடிவாதத்தில் இருந்தவன்,"நான் உன்கிட்ட வீட்டுக்கான வழியைக் கேட்டேன்.....!",அமைதியாகக் கூறினாலும்.....அதில் அவ்வளவு அழுத்தம் ஒளிந்திருந்தது.



அதற்கு மேல் அவனிடம் பேசி எந்த பிரயோஜனமும் இல்லை என்பதை உணர்ந்தவளாய் .....அமைதியாக வழியைச் சொன்னாள்.



'இனி என்னாகுமோ.....?',என்று பதற்றத்துடன் அமர்ந்திருந்தவளைத் திரும்பிப் பார்த்தவனின் பார்வையில்....அவள் கன்னத்தில் பதிந்திருந்த விரல்தடம் விழுந்தது.



அதைப் பார்த்தவனுக்கு தன்மீதே கோபம் எழுந்தது.அந்தக் கோபம் ஆத்திரமாய் உருமாறி அவளை நோக்கி சீறியது.



"எல்லாம் உன்னால்தான் டி.....!முதல்லேயே என்கிட்ட இந்த விஷயத்தை சொல்லியிருந்தேன்னா.....நான் இந்தளவுக்கு அதை வளர விட்டிருக்க மாட்டேன்.....!என்கிட்ட இருந்து எல்லா விஷயத்தையும் மறைச்சு என்னத்த சாதிச்ச.....?கடைசியில என்கிட்ட அறை வாங்கினதுதான் மிச்சம்.....!



ஆனால்....அதுக்கெல்லாம் உன்கிட்ட மன்னிப்பு கேட்பேன்னு நினைக்காதே.....!உன்னை அடிச்சதுக்காக வருத்தப்படக் கூட மாட்டேன்.....!என்னைப் பொறுத்த வரைக்கும்....நீ அவன் முன்னால போய் நின்னது தப்புதான்....!நீ மட்டும் தனியா எதுக்குடி போராடணும்.....?அதுதான்....கல்லுக்குண்டாட்டம் நான் ஒருத்தன் உயிரோட இருக்கேனே.....?என்கிட்ட சொல்றதுக்கு என்ன வந்துச்சு.....?",அவளை திட்டிக் கொண்டே வந்தான்.



ஏனோ அவனால்....அவள் செய்த காரியத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.தன்னவள்....இன்னொரு அந்நிய ஆடவனின் முன் அலங்காரப் பொம்மையாய் நின்றது....அவனுடைய காதல் மனதில் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.



எந்த ஒரு ஆண் மகனுக்குமே....இந்த செயல் கோபத்தைத்தான் விளைவிக்கும்.....!அதில்....கெளதம் மட்டும் விதிவிலக்கா என்ன.....?



"க்றீச்.....",என்ற சத்தத்துடன் அந்த வீட்டின் முன் வந்து நின்றது கௌதமின் கார்.வீட்டைக் கண்டதுமே சுமித்ராவிற்கு உள்ளுக்குள் குளிரெடுத்தது.பயத்துடன் அவனை நிமிர்ந்து பார்க்க.....அவனோ.....எதைப் பற்றியும் கவலைப்படாமல் அலட்சியத்துடன் காரை விட்டு இறங்கினான்.



தன் வீட்டின் முன் கார் நிற்கும் சத்தத்தைக் கேட்டு வெளியே எட்டிப் பார்த்தார் சுமித்ராவின் தந்தை ராஜவேலு.வாசலில் யாரோ அறிமுகமில்லாத ஆடவன் நிற்பதைக் கண்டு....யோசனையுடன் வெளியே வந்தார்.



"யார் நீங்க.....?",என்றபடியே வாசலுக்கு வந்தவர்....அப்பொழுதுதான் அந்த ஆடவனின் அருகே தன் மகள் நிற்பதைக் கவனித்தார்.'ஏதோ வில்லங்கமான விஷயம்.....!',என அவருடைய அனுபவ அறிவு அவருக்கு எடுத்துக் கூற.....இருவரையும் மாறி மாறி பார்த்தபடி நின்றார்.



அவருடைய எடை போடும் பார்வையைக் கண்டு கொண்டவன்....அவருக்கு சற்றும் சளைக்காத கூர்மையான பார்வையை அவரை நோக்கி வீசியபடி,"உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.....உள்ளே போய் பேசலாமா....?",ஆழ்ந்த குரலில் வினவினான்.



மகளின் முகத்தில் தெரிந்த கலக்கத்தையும்....தடுமாற்றத்தையும் கவனித்தபடியே,"வாங்க.....!",என முணுமுணுத்துவிட்டு உள்ளே சென்றார்.



சுமித்ராவைத் திரும்பிப் பார்த்து 'உள்ளே வா....!' என்று சைகை செய்தபடியே அவரைப் பின்தொடர்ந்தான்.



ஹால் சோபாவில் அவனை அமரச் சொன்னவர்.....சமையல் அறையிலிருந்த தன் மனைவி ருக்மணியை அழைத்து தண்ணீர் கொண்டு வரச் சொன்னார்.தண்ணீர் சொம்போடு வெளியே வந்தவர்.....ஹாலில் நிலவிய சங்கடமான அமைதியை கண்டு கொண்டார்.



"வாங்க தம்பி.....!",சம்பிரதாயமாக கௌதமை வரவேற்று தண்ணீர் கொடுத்தவர்.....கையைப் பிசைந்தபடி நின்று கொண்டிருந்த மகளின் அருகில் சென்று நின்று கொண்டார்.



"என்ன விஷயமா வந்திருக்கீங்க தம்பி......?",ராஜவேலு ஆரம்பிக்க.....சரியாக அந்நேரம் பார்த்து,"அண்ணா....!",என்றழைத்தபடியே அவரின் தம்பி தங்கதுரை உள்ளே நுழைந்தார்.



"வாப்பா துரை....!சரியான நேரத்தில்தான் வந்திருக்கிற.....!இந்த தம்பி ஏதோ நம்மகிட்ட பேசணுமாம்....!வா....!வந்து உட்கார்.....!",என்றபடி தன் தம்பியை தன்னருகில் அமர வைத்துக் கொண்டார்.



சுமித்ராவோ பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தாள்.



'அய்யோ....!சித்தப்பாவும் வந்துட்டாரே.....கடவுளே....!நீதான் என் கெளதம்க்கு துணையா இருக்கணும்....!',என்று கடவுளிடம் மன்றாடிக் கொண்டிருந்தாள்.



மகளின் பயத்தை அவள் முகத்திலிருந்தே தெரிந்து கொண்ட ருக்மணி,"என்னாச்சு சுமி.....?அந்தப் பையன் யாருன்னு உனக்குத் தெரியுமா.....?ஏன் இப்படி நடுங்கற.....?",சந்தேகப்பார்வையுடன் அவளைப் பார்க்க,



அவளோ,"அ....அது அம்மா.....",என்று தடுமாறினாள்.



அவள் தடுமாறிக் கொண்டிருக்கும் போதே....ராஜவேலு பேச ஆரம்பிக்க.....ருக்மணியின் கவனம் அங்கு திரும்பியது.



"ம்க்கும்......!",தன் தொண்டையை செருமிக் கொண்ட ராஜதுரை.....கௌதமிடம் திரும்பி,"இப்போ சொல்லுப்பா.....என்ன விஷயமா பேச வந்த....?இவன் என் தம்பிதான்....!நீ தாராளமா வந்த விஷயத்தை சொல்லலாம்.....!",எனத் தன் தம்பியை அறிமுகப்படுத்தி வைத்தவர்.....அவனைப் பேசுமாறு ஊக்கினார்.



ஒரு கணம் தன் பார்வையை சுமித்ராவை நோக்கி வீசியவன்....பிறகு பெரியவர்கள் இருவரையும் பார்த்துக் கம்பீரமாக பேச ஆரம்பித்தான்.



"நான் சுத்தி வளைச்சுப் பேச விரும்பல.....!நேரடியாகவே விஷயத்துக்கு வர்றேன்.....!நான் கெளதம்....!உங்க பொண்ணு வொர்க் பண்ற ஆபிஸ்லதான் G.M ஆக வொர்க் பண்ணிக்கிட்டு இருக்கேன்.....!நானும் சுமித்ராவும் ஒருத்தரை ஒருத்தர் காதலிக்கிறோம்.....!உங்க சம்மதத்தோட கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு நினைக்கிறோம்.....!",அவன் பேசி முடிப்பதற்குள்ளேயே குறுக்கே புகுந்த தங்கதுரை,



"முதல்ல வாயை மூடுடா.....!யார் வீட்டில வந்து உட்கார்ந்துக்கிட்டு.....காதல் அது....இதுன்னு உளறிக்கிட்டு இருக்க.....?உனக்கு முதல்ல அந்த தகுதி இருக்கா.....?",என்று கர்ஜித்தார்.



கௌதமிற்கு சுறுசுறுவென்று கோபம் ஏறியது.இருந்தும்....பொறுத்துக் கொண்டவனாய்,"மரியாதை கொடுத்து மரியாதை வாங்குங்க மிஸ்டர்......!",தன் சுட்டு விரலை தங்கதுரையை நோக்கி நீட்டியபடி எச்சரித்தான்.



அவனுடைய அதிகாரத்தில்.....கோபம் கொண்டு எழுந்தவரை.....அவருடைய அண்ணன் ராஜவேலு சமாதானப்படுத்தி அமர வைத்தார்.



"அமைதியா உட்காரு துரை.....!தம்பி என்னதான் சொல்லுதுன்னு கேட்போம்.....!",என்றவர் கௌதமிடம் திரும்பி,



"இப்படித் தனியாளா வந்தெல்லாம் பொண்ணு கேட்கக் கூடாது தம்பி.....!உங்க அம்மா அப்பாவைக் கூட்டிட்டு வாங்க......!அப்புறம் பேசிக்கலாம்......!",எனப் பிடி கொடுக்காமல் நழுவ,



'அம்மா...அப்பா....' என்ற வார்த்தையில் கௌதமின் முகம் சுருங்கியது.சுமித்ராவின் மனதோ வேதனையில் மூழ்கியது.வருத்தத்துடன் தன்னவனைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.



'ஹைய்யோ.....!இவர்கிட்ட போய்.....அவருடைய அம்மா அப்பாவைப் பத்திக் கேட்கிறாரே......!என் கௌதமுடைய மனசு எவ்வளவு கஷ்டப்படும்......?',என் தன்னவனுக்காக வருந்தியது அவளுடைய காதல் நெஞ்சம்.



தன்னை சுதாரித்துக் கொண்டு,"எனக்கு அம்மா அப்பா இல்லைங்க.....!ரெண்டு பேரும் இறந்துட்டாங்க.....!ஒரே ஒரு தங்கச்சி மட்டும்தான் இருக்கா.....!",என்றான்.



அவனுடைய பேச்சைக் கேட்டு,"ஓ....",என்றபடி தனது தாடையைத் தடவிக் கொண்ட ராஜவேலு.....பிறகு கௌதமை நிமிர்ந்து பார்த்து,"ஒண்ணும் இல்லாத அநாதைப் பயலுக்கு என் பொண்ணை கட்டிக் கொடுக்க நான் விரும்பலை......!",அவருடைய குரலில் அவ்வளவு எள்ளல் நிரம்பி வழிந்தது.



"அநாதைப் பயலுக்கு காதல் ஒண்ணுதான் கேடு......!அதுவும் எங்க வீட்டுப் பொண்ணு கேட்குதோ.....?",தங்கதுரை அவனைப் பார்த்து நக்கலாக சிரிக்க,



அதற்கு மேல் அமர்ந்திருக்க முடியாமல்.....கௌதம் எழுந்து விட்டான்.'அநாதை....' என்ற வார்த்தை அவன் மனதைக் குத்திக் கிழித்து காயப்படுத்தியது.தன்னை 'அநாதை....' என்று கூறிய அனைவரையும் பிய்த்து எறிந்து விட வேண்டும் என்பது போல் ஆத்திரம் பொங்கியது.



அந்த ஆத்திரத்தோடு.....எதையோ பேசுவதற்காக நிமிர்ந்தவனின் கண்களில்....கலக்கத்துடனும்....விழிகளில் வழிந்த நீருடனும் நின்றிருந்த சுமித்ரா வந்து விழுந்தாள்.அவளுடைய கண்ணீர் அவனது ஆத்திரத்தை சிறிது மட்டுப்படச் செய்தது.'தன்னவளுக்காக.....' என்று தன் மனதிற்குள் உரக்கச் சொல்லிக் கொண்டவன்.....அழுத்தமாகத் தன் கண்களை மூடித் திறந்தான்..



கூர்மையானப் பார்வையுடன் அவர்கள் இருவரையும் நிமிர்ந்து நோக்கியவன்,"எனக்கு அம்மா அப்பா இல்லாம இருக்கலாம்.....!ஆனால்....நான் கை நிறைய சம்பாதிக்கிறேன்....!உங்கப் பொண்ணை....உங்களை விடவே என்னால நல்லா பார்த்துக்க முடியும்.....!",என்று நிமிர்வோடு கூற,



அவனது நிமிர்வை அலட்சியத்துடன் நோக்கிய ராஜவேலு,"எங்க பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கறதுக்கு.....இந்த தகுதியெல்லாம் போதாது.....!நீ அவளை நல்லா பார்த்துக்குவியோ....இல்ல பார்த்துக்க மாட்டியோ.....அதெல்லாம் ரெண்டாம் பட்சம்.....!அதைப் பத்தியெல்லாம் எங்களுக்கு கவலை இல்லை.....!எங்களுக்குத் தேவை....எங்களுடைய ஜாதிதான்.....!எங்க வீட்டுப் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கணும்ன்னா....அவன் முதல்ல எங்க ஜாதிக்காரனா இருக்கணும்.....!",வெகு அலட்சியத்துடன் கூறினார்.



அவரது தம்பி தங்கதுரையோ,"அண்ணன் சொல்ற மாதிரிதான்.....!ஒரு குடிகாரனுக்கு கூட கட்டிக் கொடுப்போமே தவிர....வேறொரு ஜாதிக்காரனுக்கு எங்க வீட்டுப் பொண்ணை கட்டிக் கொடுக்க மாட்டோம்....!அது எங்க சாதிக்கே அவமானம்.....!",என்றபடி அண்ணனுக்கு ஒத்து ஊதினார்.



'சாதிவெறி' என்னும் சாக்கடையில் மூழ்கி எழுந்த அந்த இரு பெரிய மனிதர்களும் அலட்சியத்தோடு பேசினர்.அவர்களுக்கு....அவர்கள் வீட்டுப் பெண்ணின் நலத்தை விட.....அவர்களது ஜாதி வெறிதான் அவர்களுக்குப் பெரிதாகத் தெரிந்தது.



இன்னும் பல குடும்பங்கள்.....இந்த மாதிரியான சாதி வெறியில் மூழ்கி.....தங்கள் பிள்ளைகளின் மகிழ்ச்சியைக் கொன்று புதைக்கத்தான் செய்கின்றனர்.அவர்கள் கொன்று புதைப்பது.....மகிழ்ச்சியை மட்டும்தானா......?



அவர்கள் இருவரின் பேச்சும்.....கௌதமின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.'என்ன மாதிரியான மனுஷங்க இவங்க.....?தன்னுடைய சொந்தப் பொண்ணை விட.....சாதி வெறி பெரிசாத் தெரியுமா......?இந்த மாதிரியான ஆளுங்ககிட்ட சுமியை விட்டு வைக்கிறதே தப்புதான்.....!'ஒரு முடிவோடு நிமிர்ந்தவன்.....கேவலமான பார்வையை அவர்கள் இருவர் மீதும் வீசியபடி,



"இதுதான் உங்க முடிவா.....?",என்று வினவினான் உறுதியாக.



"இன்னுமா எங்க முடிவுல உனக்கு சந்தேகம்......?கண்ட கண்ட நாய்க்கெல்லாம்.....எங்க வீட்டுப் பொண்ணை கல்யாணம் பண்ணித் தர முடியாது.....!நீயே வெளியே போறியா....?இல்ல.....",என்றபடி தங்கதுரை அவனைக் கேள்வியோடு நோக்க,



கௌதமின் முகம் கோபத்தில் இறுகியது.வில்லேற்றிய நாணாய் விரைத்து நிமிர்ந்தவன்,"இதுதான் உங்க முடிவுன்னா....சரி....எனக்கு அதுல எந்த ஆட்சேபணையும் இல்ல.....!இதை எப்படி டீல் பண்ணனும்ன்னு எனக்குத் தெரியும்.....!



என்னுடைய முடிவு என்னங்கிறதையும் கேட்டுக்கோங்க......!உங்க ரெண்டு பேருக்கும்....இன்னும் ஒரு வாரம்தான் டைம்......!அதுக்குள்ள....நீங்க பார்த்து வைச்சிருக்கீங்களே மாப்பிள்ளை.....அவனுடைய குடும்பத்துக்கு விஷயத்தைச் சொல்லி.....இந்த கல்யாணத்தை நிறுத்தியிருக்கணும்......!நீங்க குறிச்ச அதே முகூர்த்தத்துல.....எனக்கும் சுமித்ராவுக்கும் கல்யாணம் நடந்தாகணும்......!அப்படி நடக்கலைன்னா.....என்னுடைய இன்னொரு பக்கத்தை நீங்க ரெண்டு பேரும் பார்க்க வேண்டி இருக்கும்......!",தன் ஆள்காட்டி விரலை நீட்டி அவர்கள் இருவரையும் எச்சரித்தவன்....பிறகு ஏதோ யோசித்தவனாய்....ராஜவேலுவைப் பார்த்து,



"அப்புறம் மாமா....இன்னொரு விஷயம்......!",என்று ஆரம்பிக்க,



அவரோ,"யாருக்கு யாருடா மாமா.....?",என்று பல்லைக் கடித்தார்.



"என்னங்க மாமா.....இது கூடத் தெரியாதா.....?உங்கப் பொண்ணை நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்.....!அப்போ.....நீங்கதான் எனக்கு 'மாமா' முறையாகணும்.....!",என்று அவரை வெறுப்பேற்ற....அவர் எதுவும் கூற முடியாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டார்.



கேலி சிரிப்புடன் இருவரையும் நோக்கியவன்,"இப்படியெல்லாம் மாப்பிளைக்கு முன்னாடி....முகத்தைத் திருப்பிக்க கூடாது மாமா.....!அப்புறம் சின்ன மாமா.....!நீங்களும் கேட்டுக்கோங்க.....!நாளைக்கு எப்பவும் போல சுமித்ரா....ஆபிஸ்க்கு வந்தாகணும்......!அவ உடம்புல ஒரு சின்னக் கீறல் இருந்தால் கூட....அப்புறம் நடக்கறதே வேறயா இருக்கும்.....!",என்று கடுமையுடன் எச்சரித்தான்.



அவனுக்குத் தெரியும்.....!சாதி வெறி பிடித்த இந்த இரு மிருகங்களும்....தன்னவளைக் கொல்லக் கூடத் தயங்க மாட்டார்கள் என்று.....!அப்படிப்பட்ட கேவலமான ஈனச் செயலுக்கு 'கௌரவக் கொலை' என்று கௌரவமாக பெயர் வேறு சூட்டிக் கொள்வார்கள் என்றும் அவனுக்குத் தெரியும்.....!அதனால்தான்.....தன்னவளின் பாதுகாப்பை முன்னிட்டு....அவ்விருவரையும் கடுமையாக எச்சரித்தான்.....!



அவனுடைய மிரட்டல் அவர்கள் இருவரையும் பயமுறுத்தினாலும்.....வெளியே தைரியமாக,"என்னடா.....?மிரட்டிப் பார்க்கிறாயா.....?எங்க வீட்டுப் பொண்ணை....நாங்க என்ன வேணும்ன்னாலும் பண்ணுவோம்.....!நாளைக்கு அவளை ஆபிஸ்க்கு அனுப்ப முடியாது.....!உன்னால என்னடா பண்ண முடியும்.....?",தங்கதுரையும் பதிலுக்கு மிரட்டினார்.



இருவரையும் தீர்க்கமாகப் பார்த்தவன்,"என்னங்க மாமனாரே.....!இன்னும் வெளி உலகம் தெரியாம.....சின்னக் குழந்தையாகவே இருக்கீங்களே......?காவல் துறைன்னு ஒண்ணு இருக்கு....!சட்டம்ன்னு ஒண்ணு இருக்கு.....!ஜெயிலுன்னு ஒண்ணு இருக்கு.....!இதெல்லாம் உங்களுக்குத் தெரியும்தானே....?



இப்போ.....இந்த நிமிஷம்....நான் போலீஸ் ஸ்டேஷனுக்கு போனால் கூட போதும்.....!மொத்த சட்டமும்....மேஜரான எங்களுக்குத்தான் சப்போர்ட் பண்ணும்.....!நாளைக்கு உங்க மகள் ஆபிஸ்க்கு வரலைன்னா.....அடுத்த நிமிஷம்....போலீஸ் உங்களைத் தேடி வீட்டுக்கு வரும்.....!



என் பொண்டாட்டி மேல சின்னத் துரும்பு கூட படக்கூடாது.....!பத்திரமா பார்த்துக்கோங்க......!வரட்டுமா மாமாஸ்.....!",உதட்டில் உறைந்த கேலிச் சிரிப்புடன் அவர்களுக்குத் தலையசைத்தவன்,



நடக்கும் அனைத்தையும் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்த சுமித்ராவின் தாயிடம் வந்து,"வீட்டை விட்டு வெளியே போய் கல்யாணம் பண்ணிக்கறதுக்கு.....எங்களுக்கு ஒரு நிமிஷம் ஆகாது.....!ஆனால்.....பெரியவங்க அப்படிங்கற மரியாதைக்காகவும்.....உங்க எல்லாருடைய சம்மதத்துக்காகவும்.....என் காதலியுடைய சந்தோஷத்திற்காகவும் தான்.....நான் இந்த வீட்டுப் படியேறினேன்.....!ஆனால்....இவ்வளவு நடந்ததுக்கு அப்புறமும்.....இதுக்கும் மேலே...இந்த வீட்டுப் படியை மிதிச்சேனா.....அது எனக்குத்தான் அவமானம்.....!அப்படி ஒரு காரியத்தை நான் பண்ணவும் மாட்டேன்.....!



முறைப்படி கல்யாணம் முடிஞ்சு.....உங்கப் பொண்ணு.....என் மனைவியா என் வீட்டில காலடி எடுத்து வைக்கிற வரைக்கும்.....நீங்கதான் அவளைப் பத்திரமா பார்த்துக்கணும்.....!அந்தப் பொறுப்பை நான் உங்ககிட்ட ஒப்படைக்கிறேன்.....!",தன்மையான குரலில் கூறியவன்.....அவரை நோக்கி கையெடுத்து கும்பிட.....அந்தத் தாயின் மனம்....அவனது பணிவில் கரைந்தது.



"கண்டிப்பா தம்பி.....!இதை நீங்க சொல்லணுமா....?",என்று கூறித் தன் கணவரின் முறைப்பை பரிசாக வாங்கிக் கொண்டார்.



அவனுக்குத் தெரியும்......!எந்த ஒரு தாயாலும்....தன் குழந்தையின் மனதை வருத்தப்பட வைக்க முடியாது என்று.....!அந்த வீட்டில் சுமித்ராவிற்கு இருக்கும் ஒரே ஆதரவு.....அவளது தாய்தான் என்பதை அவன் சரியாகக் கணித்து வைத்திருந்தான்.....!அவன் கணிப்பு வீண் போகவில்லை.....!



"தேங்க்ஸ் அத்தை.....!",என்றபடி சுமித்ராவின் புறம் திரும்பியவன்,



"எதுக்கும் பயப்படாதே ஹனி.....!நான் இருக்கேன்.....!எப்பவும் போல நாளைக்கு ஆபிஸ்க்கு கிளம்பி வா.....!யார் என்ன சொல்றாங்கன்னு....நானும் பார்க்கிறேன்.....!",என்று கூறியவன் வேகமாக வெளியேறி விட்டான்.



அவன் வெளியேறியதுதான் தாமதம்.....!கோபத்துடன் சுமித்ராவை நோக்கி பாய்ந்த தங்கதுரை,"எல்லாம் உன்னாலதான்.....!இந்த வயசுல உனக்கு காதல் கேட்குதா....?காதல்.....!உன்னாலதான் கண்ட கண்ட அநாதை நாயெல்லாம்.....வீடு தேடி வந்து மிரட்டிட்டு போகுது.....!உன்னைக் கொன்னு போட்டாதான் என் ஆத்திரம் அடங்கும்.....!",உறுமியபடியே அவளை ஓங்கி ஒரு அறை விட்டார்.



அவர் அறைந்ததில் நிலை தடுமாறிக் கீழே விழப் போனவளைத் தாங்கிப் பிடித்த ருக்மணி,"வேண்டாம் தம்பி.....!உங்க அடியை இவ தாங்க மாட்டா.....!வேண்டாம்.....!",என்று மன்றாடினார்.



"நீங்க தள்ளுங்க அண்ணி......!இவ பண்ணின காரியத்துக்கு......",என்றபடி மீண்டும் அவளை அடிப்பதற்காக கையை ஓங்க,



அதற்குள் குறுக்கே புகுந்த ராஜவேலு,"வேண்டாம் துரை.....!அவளை அடிச்சு எந்தப் பிரயோஜனமும் இல்லை.....!அவளை விடு......!",சமாதானம் கூறியபடியே தனது தம்பியை விலக்கியவர்,



தன் மனைவியைப் பார்த்து,"அவளை உள்ளே கூட்டிட்டு போ......!",என்று கத்தினார்.



சட்டென்று தன் அப்பாவின் காலில் விழுந்த சுமித்ரா,"அப்பா.....!என்னை மன்னிச்சிடுங்கப்பா....!என்னால....என் கெளதம் இல்லாம வாழ முடியாது.....!தயவு செய்து எங்களை சேர்த்து வைச்சிடுங்கப்பா.....!",கண்ணீர் விட்டுக் கெஞ்சினாள்.



"நீ முதல்ல எழுந்திரு.....!ருக்மணி.....!புள்ளையை உள்ளே கூட்டிட்டி போ.....!",தன் காலைப் பிடித்துக் கொண்டிருந்தவளை எழுப்பியவர்....தன் மனைவியிடம் உத்தரவிட்டார்.



"இன்னும் என்னண்ணா இந்தக் கழுதையை கொஞ்சிக்கிட்டு இருக்கீங்க.....?ரூம்ல போட்டு பூட்டி வைங்க.....!நாளைக்கு என்ன ஆனாலும் சரி....இவளை அந்த ஆபிஸ்க்கு அனுப்ப கூடாது.....!அப்படி அவன் என்ன பண்ணறான்னு பார்த்திடலாம்.....!",தங்கதுரை கோபாவேசத்துடன் கத்தினார்.



தன் மீசையைத் தடவியபடி சிறிது நேரம் எதையோ யோசித்தவர்...பிறகு,"நீ கொஞ்ச நேரம் அமைதியா இரு துரை....!",என்று தம்பியை சமாதானப்படுத்தியபடி.....சுமித்ராவிடம் திரும்பி,"நீ உள்ளே போம்மா.....!ருக்மணி....!நீயும்தான்....!",என்றார்.அவர் குரலில் இருந்த அழுத்தத்தில் தாயும் மகளும் அமைதியாக அறைக்குள் சென்று விட்டனர்.



இன்னும் கோபம் குறையாமல் நின்றிருந்த தன் தம்பியைப் பார்த்தவர்,"இது கோபப்படறதுக்கான சமயம் இல்ல துரை.....!பொறுமையா....யோசிச்சு முடிவு பண்ணனும்.....!",என்ற அண்ணனை எரிச்சலுடன் முறைத்த தங்கதுரை,



"அவன் வந்து இப்படி மிரட்டிட்டு போனதுக்கு அப்புறமும்....என்ன பொறுமை வேண்டிக் கிடக்கு.....?இனிமேலும்.....நம்ம வீட்டுப் பொண்ணை வேலைக்கு அனுப்பறதுல....எனக்கு உடன்பாடில்லை.....!",என்று குமுற,



புன்னகையுடன் தன் தம்பியின் தோளில் தட்டிக் கொடுத்தவர்,"அவன் போலீஸ்....அது இதுன்னு மிரட்டறான்.....!வெளியில விஷயம் தெரிஞ்சா....நம்ம குடும்ப மானம்தான் போகும்.....!அதனால....அவன் வழியிலேயே போய்....அவனை அழிக்கறதுதான் நமக்கு நல்லது.....!",அவர் குரலில் அப்படியொரு வில்லத்தனம் தெரிந்தது.



அண்ணனின் பேச்சில் சற்று நிதானித்து தங்கதுரை,"நீங்க சொல்றதும் சரிதான் அண்ணா.....!இப்போ நாம என்ன பண்ணலாம்.....?",கேட்டபடியே தன் அண்ணனை பார்க்க,



அவரோ,"நீ இப்பவே மாப்பிள்ளை வீட்டுக்கு போன் பண்ணி.....கல்யாணத்தை இன்னும் இருபது நாள்ல வைச்சுக்கலாம்ன்னு சொல்லு.....!காரணம் கேட்டால்.....பொண்ணு ஜாதகத்துல ஏதோ தோஷம்.....இன்னும் இருபது நாள்ல கல்யாணத்தை முடிச்சாகணும்ன்னு ஜோசியர் சொல்லிட்டாருன்னு சொல்லு.....!",என்றார் வில்லன் சிரிப்பு சிரித்தபடி.



இப்படி தன் இரு தந்தைமார்களும்.....தன்னுடைய காதலைக் குழி தோண்டிப் புதைப்பதற்கான வேலையில் இறங்கியுள்ளனர் என்பதை அறியாதவளாய்.....படுக்கையில் சாய்ந்திருந்தாள் சுமித்ரா.



தங்களுடைய காதல் விஷயம்....தனது வீட்டினருக்குத் தெரிய வந்ததில் அவள் ஒருவகையில் நிம்மதியாக உணர்ந்தாள்.கௌதமின் பாதுகாப்பை எண்ணி மனதிற்குள் சிறு பயம் எழுந்தாலும்.....'இனி அனைத்தையும் அவன் பார்த்துக் கொள்வான்....!',என்ற தைரியத்தில் நிம்மதியாக கண்ணயர்ந்தாள்.



அகம் தொட வருவான்....!!!
 

Nirmala Krishnan

Saha Writer
Messages
76
Reaction score
13
Points
6
அத்தியாயம் 42 :



"ஹாய் சுமி.....!",ஆர்ப்பாட்டமாய் அழைத்தபடி வந்த நித்திலாவைக் கண்டு கொள்ளாமல்....தன் எண்ணங்களிலேயே உழன்று கொண்டிருந்தாள் சுமித்ரா.



'இவளுக்கு என்னாச்சு....?ஏன் இப்படி பேய் பிடிச்ச மாதிரி உட்கார்ந்திருக்கா.....?',என்று எண்ணியபடியே அவள் முன் வந்து நின்று.....முகத்திற்கு நேராக கைகளை ஆட்ட.....அப்பொழுதும் அவள்...அவளைக் கவனித்தாளில்லை.



"ஏய்.....எருமை......!உன் கவனம் எங்கே டி இருக்கு......?",என்றபடி நித்திலா அவள் முதுகில் ஒரு அடி போடவும்தான்....சுமித்ரா நினைவுலகிற்கு வந்தாள்.



"ஹ.....என்ன.....?என்ன நித்தி.....?நீ எப்போ வந்த.....?",மலங்க மலங்க விழித்த தன் தோழியைப் பார்த்தவளுக்கு பாவமாக இருந்தது.



"என்னாச்சு சுமி.....?நான் வந்தது கூட தெரியாம.....அப்படி என்ன யோசனையில இருக்க.....?",அவள் கேட்டதுதான் தாமதம்....அடுத்த நொடி.....சுமித்ராவின் விழிகளில் கண்ணீர் குளம் கட்டத் தொடங்கியது.



தோழியின் கண்ணீரைப் பார்த்தவள்,"ஏய்.....எதுக்கு அழற......?",பதட்டத்துடன் விசாரிக்க,



அவளோ..."ஒ....ஒண்ணுமில்ல.....!",என்றபடி தன் விழிகளில் வழிந்த கண்ணீரைத் துடைத்தாள்.



'எதுவோ சரியில்லை.....!' என்று நித்திலாவிற்கு புரிபட தன் தோழியை இழுத்துக் கொண்டு கேண்டீனிற்குச் சென்றாள்.



யாரும் கவனிக்காத வண்ணம் ஓரமாகப் போடப்பட்டிருந்த மேசைக்கு அழைத்துச் சென்றவள்.....அவளை அமர்த்தி,"இப்போ சொல்லு சுமி.....?என்ன விஷயம்.....?",அக்கறையாக விசாரிக்க....அடுத்த நொடி....மடை திறந்த வெள்ளமாய் அனைத்தையும் நித்திலாவிடம் ஒப்பித்தாள்.



தன்னைப் பெண் பார்த்து விட்டுப் போனது....அதன் பிறகு கெளதம் வந்து தன் தந்தையிடம் தங்களது காதல் விஷயத்தைக் கூறியது....இருவரும் போட்டுக் கொண்ட சண்டை.....என் அனைத்தையும் கூறியவள்....அவள் கையைப் பற்றிக் கொண்டு,



"எனக்குப் பயமாயிருக்கு நித்தி.....!என் குடும்பத்தினரால அவருக்கு ஏதாவது ஆகிடுமோன்னு என் மனசு அடிச்சிக்குது.....!ஆனால்....ஒண்ணு மட்டும் உறுதி....!எதுக்காகவும்....யாருக்காகவும்.....என் கௌதமை விட்டுத் தர நான் தயாரா இல்ல.....!",தன் மனதிலிருக்கும் அத்தனையையும் அவளிடம் கொட்டினாள்.



முதலில் இருந்த நித்திலாவாக இருந்திருந்தால்.....கோபப்பட்டிருப்பாளோ....என்னவோ.....?ஆதித்யனின் காதலில் மூழ்கி....கரை சேரும் விருப்பமில்லாமல் சுகமாய் தத்தளித்துக் கொண்டிருக்கும்.....இப்போதைய நித்திலாவினால்....சுமித்ராவின் காதல் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிந்தது.



அதுவும் இல்லாமல்....சாதியைக் காரணம் காட்டி காதலை மறுத்ததில்....சுமித்ராவின் பெற்றவர்கள் மேல் அவளுக்கு வெறுப்புதான் வந்தது.அனைத்திற்கும் மேலாக.....கௌதமை தரக்குறைவாக திட்டியதைக் கேட்டு....அவளுக்கு கோபம் வந்தது.



ஆறுதலாகத் தோழியின் கையை நீவி விட்டவள்,"கவலைப்படாதே சுமி.....!எல்லாத்தையும் கெளதம் அண்ணா பார்த்துக்குவாரு.....!நீ எப்பவும் போல ஆபிஸ்க்கு வந்துட்டு போ.....!சாதிவெறிக்காக உங்க காதலை....அவங்க மறுக்கறது தப்புதான்.....!நீ உன் முடிவுல உறுதியா இரு.....!",முதன் முதலாக காதலுக்கு ஆதரவாக பேசி....பெற்றவர்களின் தவறை சுட்டிக்காட்டினாள் நித்திலா.



"ம்....எப்போ அவரைக் காதலிக்க ஆரம்பிச்சேனோ....அப்பவே என் வாழ்க்கையை அவர் கையில ஒப்படைச்சிட்டேன்.....!இனி அவரு காட்டற வழியில....கண்ணை மூடிட்டு நடக்கப் .போறேன்....!ஆனால் ஒண்ணு.....எங்க கல்யாணம் என்னைப் பெத்தவங்க முன்னிலையில்தான் நடக்கும்.....!",உறுதியாகக் கூறியவள் அங்கிருந்து எழுந்து சென்று விட்டாள்.



சுமித்ராவின் காதலில் ஏற்பட்ட பிரச்சனை.....நித்திலாவிற்குத் தன் பெற்றவர்களை நினைவுபடுத்த....ஏதேதோ யோசனையில் மூழ்கியபடி அமர்ந்து விட்டாள்.



ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்தவள்....தன்னருகில் யாரோ வந்து அமரவும்....தன் யோசனையைக் கை விட்டவளாய் சட்டென்று திரும்பிப் பார்த்தாள்.அவளையே ஆராய்ச்சியாகப் பார்த்தபடி அமர்ந்திருந்தான் பாலா....!



பார்த்தவளின் மனதிற்குள் திக்கென்று இருந்தது.



'ஹைய்யோ.....!இவன் என்கிட்ட பேசினாலே....ஆது என்னை பிய்ச்சு எடுத்துருவாரு.....!இதுல....இப்படி பக்கத்துல வேற வந்து உட்கார்ந்திருக்கானே.....!',மனதிற்குள் புலம்பியபடியே,"ஹாய் பாலா.....!பார்த்து ரொம்ப நாளாச்சு.....?",என்று புன்னகைக்க,



அவளை வெறுமையாகப் பார்த்தவன்,"அதை நான் சொல்லணும் நித்தி.....!",என்றான் ஒரு மாதிரியான குரலில்.



அவனது பார்வையில் சிறிது தடுமாறியவள்,"அ....அதுதான் லன்ச்சுல மீட் பண்றோமே......?மறந்திட்டியா.....?",என்றபடி சமாளித்தாள்.



அவளைப் பார்த்து கேலியாக உதட்டை வளைத்தவன்,"லன்ச்சா.....?எது.....?அவசர அவசரமா வந்து....அதை விட அவசர அவசரமா சாப்பிட்டுட்டு பத்து நிமிஷத்துல ஓடிப் போவியே.....?அந்த டைம்மை சொல்றயா....?அந்த பத்து நிமிஷம்.....சாப்பிடறதுக்கே உனக்குப் போதாது....!இதுல....நாம மீட் பண்ணி பேசறதுக்கா பத்தும்.....?",என்றான் அமைதியானக் குரலில்.



குற்ற உணர்வில் தலை குனிந்தாள் நித்திலா.அவன் கூறுவதும் உண்மைதான்....!பாலாவிடம் பேசினால்.....ஆதித்யனுக்கு பிடிக்காது என்ற எண்ணத்தில்.....அவனைத் தவிர்ப்பதற்காக.....அவனிடம் முகம் கொடுத்துப் பேசவே மறுத்தாள் நித்திலா.ஆதித்யனின் முரட்டுத்தனமான ஆக்ரமிப்பில் அவள் விரும்பியே கட்டுப்பட்டாள்.



அவளுடைய இந்த விலகலில் பாலாதான் மிகவும் தவித்துப் போனான்.'ஏன்....?' என்ற காரணம் தெரியாமலேயே.....தான் மறுக்கப்படுவது அவனுக்கு வேதனையைத் தந்தது.அவளிடம் மறைமுகமாகவும்.....நேரடியாகவும் கேட்டே பார்த்து விட்டான்.ஏதாவது சொல்லி மழுப்புவாளே தவிர.....இதுவரை உண்மைக் காரணத்தைக் கூறவில்லை.



அவள் முகத்தில் விரவிய குற்ற உணர்ச்சியைக் கண்டு கொண்டவனின் மனதில் வலி எழுந்தது.அந்த குற்றவுணர்வும்.....அவள்.....அவன் மீது கொண்டிருக்கும் நட்பினால் மட்டுமே எழுந்தது என்பதில் அவனுடைய வலி இன்னும் அதிகரித்தது.



ஒவ்வொரு முறையும்....அவன்.....அவளிடம் காதலைச் சொல்ல வரும் போதெல்லாம்.....அவள் கண்களில் தெரிந்த தோழமை.....அவனை அவளிடம் காதலைச் சொல்ல முடியாமல் கட்டிப் போட்டது.அவள் விழிகளில் காதலைத் தேடித் தேடி.....அவன் ஏமாந்து போனான்....!



'ஏன் நித்தி......?என்னை இப்படி உயிரோட கொல்ற......?என் மனசு முழுக்க.....உன் மேல காதல்தான் இருக்கு......!ஆனால்.....உன் கண்கள்ல....எனக்கான நட்பு மட்டும்தான் தெரியுது......!இந்த நட்புதான் உன்கிட்ட என்னை.....என் காதலை நெருங்க விடாம தடுக்குது.....!' மனதிற்குள் உருகியவன்.....வெளியே....அவளை சகஜமாக்கும் பொருட்டு,



"சரி.....!அதை விடு.....!வொர்க் இல்லையா......?இங்கே வந்து உட்கார்ந்திருக்க.....?",அவன் கேட்கவும்தான் அவளுக்கு மணியே உரைத்தது.



"அட.....!ஆமாம்ல.....!சுமிக்கிட்ட பேசிட்டு.....அப்படியே உட்கார்ந்திட்டேன்.....!இந்நேரம் ஆதி சார் வந்திருப்பாரு.....!நான் கிளம்பறேன் பாலா.....!பை......!",என்றபடி ஓடி விட்டாள்.



அவள் செல்வதையே மனம் வலிக்க....வலிக்க பார்த்துக் கொண்டிருந்தான் பாலா.தன் முதல் காதலை....மொட்டிலேயே கருக விடுவதில் அவனுக்கு உடன்பாடில்லை.....!கூடிய விரைவில்.....அவளிடம் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.



ஒரு தலைக்காதல்.....!உலகிலேயே மிகக் கொடுமையானதும் இதுதான்.....!மிக மிக அற்புதமானதும் இதுதான்.....!இந்த ஒரு தலைக்காதல் அள்ளித் தெளிக்கும் உணர்வை.....இரு மனங்கள் இணைந்து சங்கமிக்கும் காதலால் கூடத் தர முடியாது.....!



தான் நேசிப்பவளின் ஓர விழிப் பார்வைக்காக ஏங்கித் தவிக்கும்......!அவள் இதழில் இருந்து உதிக்கும் ஒற்றைச் சொல்லுக்காக....தவமாய் தவமிருக்கும்.....!அவளின் நுனி விரல் தீண்டலுக்காக.....தன் உயிரை உருக்கிக் காத்திருக்கும்.....!



அதே சமயம்.....தன் உயிரானவளின் விலகல்.....அந்தக்காதல் இதயத்தை உருத்தெரியாமல் உருக்குலைத்து விடும்......!காதலை உச்சரிக்க வேண்டிய உதடுகள்.....மறுப்பை உச்சரிக்கும் போது.....காதல் கொண்ட நெஞ்சம்.....ஊனை உருக்கும் வலியை அனுபவிக்கும்.....!



பார்ப்போம்.....!நித்திலாவின் மறுப்பு....பாலாவின் காதல் இதயத்தை வலிக்க வலிக்க கொன்று போடுமா.....?இல்லை.....அந்தக் காதலையே அடித்தளமாக மாற்றி வலிமையாக்கி காட்டுமா......?



.........................................................................................................



நித்திலா நினைத்தது போலவே....ஆதித்யன் கோபமாகத்தான் அமர்ந்திருந்தான்.இவள் உள்ளே நுழைந்ததுமே கத்த ஆரம்பித்தான்.



"அப்படி எங்கேதான் டி போவ......?நான் ஆபிஸ்க்கு வரும் போது....நீ இந்த ரூம்ல இருக்கணும்ன்னு சொல்லியிருக்கேனா....இல்லையா....?",



"சுமிக்கிட்ட பேசிட்டு இருந்தேன் ஆது....!",என்று சமாதானப்படுத்தியபடியே அவனருகில் வர,



"அப்படி என்னதான் பேசுவியோ.....?எப்ப பாரு.....பேச்சுதான்.....!",சலித்துக் கொண்டவன்,"சரி.....வா.....!கிளம்பு....!",என்றபடியே எழுந்தான்.



"எங்கே.....?",விழி விரித்தவளின் அருகே வந்து....அவள் கன்னத்தை செல்லமாகத் தட்டியவன்,



"சர்ப்ரைஸ்.....!",என்றான் வசீகரமான புன்னகையுடன்.



அவன் சிரிப்பில் மயங்கியவள்.....மேற்கொண்டு அவனை எந்தக் கேள்வியும் கேட்காமல் பின் தொடர்ந்தாள்.



காரில் எறியமர்ந்த பிறகு பொறுக்க முடியாமல்.....அவனிடம்,"எங்கே போகிறோம்.....?",என்று நச்சரித்தவளை,



"இன்னும் கொஞ்ச நேரத்துல தெரிஞ்சிடும் பேபி......!",என்று கூறி அவள் வாயை அடைத்து விட்டான்.



சிறிது நேரம் அமைதியாக வந்தவள்.....பிறகு எதையோ நினைத்துக் கொண்டவளாக,"ஆது.....!",என்று அவனை அழைக்க,



அவனோ...."ம்....!"என்று 'உம்...' கொட்டினான்.



"உங்களுக்கு ஒண்ணு தெரியுமா.....?",மொட்டையாக அவள் வினவ...



அவளை மேலிருந்து கீழ் வரை ஒரு மார்க்கமாக பார்த்தவன்,"எனக்கு ஒண்ணு என்ன....ஒண்ணு....நிறையத் தெரியும் பேபி.....!நான் வேணும்ன்னா உனக்கு ஒவ்வொன்னா சொல்லித் தரட்டா.....?",என்று கண்ணடிக்க,



அவனைப் பார்த்து பல்லைக் கடித்தவள்,"அய்யோ.....!நான் உங்ககிட்ட கெளதம் அண்ணா...சுமி விஷயம் தெரியுமான்னு கேட்டேன்......?",என்றாள் கேள்வியாக.



"ம்ஹீம்.....!தெரியாதே பேபி.....!என்ன விஷயம்....?",அவன் கேட்கவும்.....சுமித்ரா தன்னிடம் கூறிய அனைத்து விஷயங்களையும் ஒன்று விடாமல் அவனிடம் கூறினாள்.



அவள் கூறிய அனைத்தையும் கேட்டுக் கொண்டவன்,"ஓ......!",என்றானே தவிர.....அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.அமைதியாக காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.



அவன் முகத்திலிருந்து அவளாலும்.....அவன் மனதில் ஓடும் எண்ணங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை.எனவே...."நான் எவ்வளவு பெரிய விஷயம் சொல்லியிருக்கேன்.....!நீங்க என்னடான்னா....இவ்வளவு அமைதியா இருக்கீங்க......?",என்றபடி அவனை பேச்சுக்கு இழுத்தாள்.



"இது கௌதமோட விஷயம்......!இதை எப்படி ஹேண்டில் பண்ணனும்ன்னு அவனுக்குத் தெரியும்......அண்ட்.....ஒரு நண்பனா.....நான் எப்பவுமே அவன் பின்னாடி இருப்பேன்.....!",அவன் கூறியதிலிருந்தே தெரிந்தது....அவன்....அவர்களது நட்பை எந்த அளவிற்கு மதிக்கிறான் என்று....!



"ஆது......!ஒருவேளை.....கெளதம் அண்ணா நிலைமையில நீங்க இருந்து.....சுமி நிலைமையில நான் இருந்திருந்தா....என்ன நடந்திருக்கும்.....?",காரை ஓட்டிக் கொண்டிருந்த ஆதித்யனிடம் ஆவலாக அவள் வினவ,



அவளை அமைதியாகத் திரும்பிப் பார்த்தவன்,"ம்....இந்நேரம் நீ என் பொண்டாட்டி ஆகியிருப்ப.....!அதுதான் நடந்திருக்கும்.....!",அவன் இலகுவாகக் கூறினாலும்.....அவன் குரலில் அப்படியொரு உறுதி தெரிந்தது.



அவன் கூறியதைக் கேட்டு.....அவள் வாயை மூடிக் கொண்டாள்.ஆதித்யனே மேற்கொண்டு பேச ஆரம்பித்தான்.



"உன்னை ஒருத்தன் பொண்ணு பார்த்துட்டு போயிருக்கான்னு தெரிஞ்சதுக்கு அப்புறமும்.....பொறுமையா இருக்க நான் என்ன கேனையனா.....?அடுத்த நிமிஷமே....வீடு புகுந்து உன்னைத் தூக்கிட்டு வந்து தாலி கட்டியிருப்பேன்.......!இந்த கெளதம் ஏன் இவ்வளவு பொறுமையா இருக்கிறான்னு தெரியல.....?",யோசனையுடன் தனது தாடையைத் தடவிக் கொண்டவனைத் திரும்பிப் பார்த்தவள்,



"ஒருவேளை..... எங்க அம்மா அப்பா ஒத்துக்கலைன்னா.....?",என்று கேள்வி எழுப்ப,



ஒரு கோணல் சிரிப்புடன் தன் தலையை லேசாக சாய்த்தபடி....அவளை ஏறிட்டவன்,"இதுக்கான பதில் நான் ஏற்கனவே சொன்னதுதான் பேபி....!உன்னை உனக்காகக் கூட விட்டுத் தர நான் தயாரா இல்ல.....!அப்படி இருக்கும் போது....உன் குடும்பத்தை பத்தித்தான் என்ன கவலை.....?இல்ல....என் குடும்பத்தைப் பத்தித்தான் என்ன கவலை......?",தோளைக் குலுக்கியபடி கூறியவனின் கண்கள்.....இரையைக் குறி வைத்த புலியின் கண்களைப் போல் ஜொலித்தது.



ஆதித்யனின் பிடிவாதத்தைப் பற்றி அவளுக்கு நன்கு தெரியும்.....!அவனுடைய காதல் முரட்டுத்தனமானதுதான்.....!ஆனால்....இந்தளவிற்கு தீவிரமானது என்பதை அவள் அறியவில்லை.....!



அவனுடைய இந்த முரட்டுத்தனமான காதல்....அவள் மனதின் ஓரத்தில் சிறு பயத்தை உண்டு பண்ணினாலும்....விரும்பியே அவனது முரட்டுத்தனத்தில் கட்டுண்டது அவளுடைய காதல் நெஞ்சம்.....!



இப்பொழுது.....அவனது முரட்டுப் பிடிவாதத்தில் விரும்பியே சரணடைபவள்....அவன் ஒரு காதல் தீவிரவாதியாக மாறும் போது என்ன செய்வாள் என்று தெரியவில்லை.....!



அந்தப் பழமையான கோவிலின் முன் கார் நின்றது.ஊருக்கு ஒதுக்குப் புறமாக.....போக்குவரத்து இரைச்சல் இல்லாத ஒரு அழகான இடத்தில்.....கம்பீரமாக நிமிர்ந்திருந்தது அந்தக் கோவில்.



"கோவிலா.....?கோவிலுக்கெல்லாம் நீங்க வருவீங்களா.....?",ஆச்சரியமாக நித்திலா கேட்க,



"ஏன்ம்மா.....?நானும் சாதாரண மனுஷன் தானே.....?எனக்கும் கடவுள் பக்தியெல்லாம் இருக்கு.....!",இலகுவாக கூறியபடியே காரை விட்டு இறங்கினான் ஆதித்யன்.



இருவரும் அர்ச்சனை தட்டை வாங்கிக் கொண்டு.....கோவிலுக்குள் சென்று.....அழகாய் புன்னகைத்துக் கொண்டிருந்த பெருமாளை வணங்கினர்.இருவர் மனதிலும் இனம் புரியாத நிம்மதி நிலவியது.



"இது எனக்கு ரொம்பவும் பிடிச்ச கோவில் டி.....!அடிக்கடி நான் இங்கே வருவேன்.....!",கோவில் பிரகாரத்தை சுற்றி வரும்போது ஆதித்யன் கூறினான்.இருவரும் அங்கிருந்த ஒரு மரத்தின் அடியில் இருந்த சிறு திட்டின் மீது அமர்ந்தனர்.



காலை ஆட்டியபடி சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தவளின் கழுத்தில்.....அவள் எதிர்பாராத சமயத்தில்.....திடீரென்று ஒரு செயினை அணிவித்தான் ஆதித்யன்.அவனுடைய செய்கையில் விதிர்த்துப் போனவள்.....பதட்டத்துடன் அந்தச் செயினை கையிலெடுத்துப் பார்த்தாள்.



பார்த்தவள் பிரம்மித்துப் போய் தன் விழிகளை இன்னும் அகலமாக விரித்தாள்.இரண்டு சின்னஞ் சிறிய புறாக்கள் ஒன்றையொன்று முத்தமிட்டுக் கொண்டிருப்பது போல் இணைக்கப்பட்டிருக்க.....அந்தப் புறாக்களின் விரித்தாடிய சிறகுகளில்.....பல வண்ண சின்னஞ் சிறிய வைரக் கற்கள்.....வர்ண ஜாலங்களை வாரியிறைத்துக் கொண்டிருந்தன.



அந்த டாலர்.....ஒரு மெல்லிய செயினோடு இணைக்கப்பட்டு.....அவள் நெஞ்சுக்குழியை முத்தமிட்டுக் கொண்டிருந்தது.மிகப் பெரியதாகவும் இல்லாமல்.....மிகச் சிறியதாகவும் இல்லாமல்.....வெகு கச்சிதமாக வடிவமைக்கப்பட்டிருந்தது அந்தச் சங்கிலி.



"வாவ்.....!ரொம்ப அழகாயிருக்குது ஆது.....!ஐ லவ் இட்......!",சிறு குழந்தையின் குதூகலத்தோடு.....அந்த டாலரை வருடிக் கொடுத்தவளைக் கண்ணில் வழிந்த காதலுடன் நோக்கியவன்,



"இன்னும் இதுல ஒரு சர்ப்ரைஸ் இருக்கு பேபி.....!",என்றபடி அந்த புறாக்களின் விரித்தாடிய சிறகுகளை திறக்க.....அதற்குள் ஆதித்யனின் புன்னகை முகம் விரிந்தது.அந்த டாலருக்குள் அவனின் போட்டோ புதிய முறையில் பதிக்கப்பட்டிருந்தது.



நித்திலாவிற்கு தான் எந்த மாதிரியாக உணர்கிறோம் என்றே தெரியவில்லை.தன் இதயத்தில் சுமக்கும் தன்னவனின் நிழலுருவத்தை தன் நெஞ்சுக்குழியில் சுமப்பது அவளுக்கு இனம் புரியாத ஒரு உணர்வை ஏற்படுத்தியது.



என்னவோ.....அவனையே நெஞ்சுக்குழியில் சுமப்பதைப் போல ஒரு குறுகுறுப்பை உருவாக்கியது.



"நான் எப்பவும் உன் நெஞ்சுக்குழியில இருக்கணும்.....!அதே மாதிரி....நீ எப்பவும் என் இதயத்துடிப்புல கலந்திருக்கணும்......!",மென்மையாகக் கூறியபடியே அவளின் முன்....அதே மாதிரியே வடிவமைக்கப்பட்டிருந்த இன்னொரு செயினை நீட்டினான்.அதில்.....நித்திலா அழகாகப் புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.



அடுத்தடுத்து அவன் கொடுத்த இன்ப அதிர்ச்சியில்.....வாயடைத்துப் போய் அமர்ந்திருந்தவளின் முன் சொடக்கிட்டவன்,"இதை எனக்கு போட்டு விடு டி.....!",என்றபடி தன் தலையை சற்று தாழ்த்தினான்.



இதயம் முழுக்க காதலுடனும்.....கண்களில் மிளிர்ந்த நேசத்துடனும்.....அந்தச் செயினை அவன் கழுத்தில் அணிவித்தாள் நித்திலா.ஏற்கனவே கம்பீரமாக இருப்பவன்....அந்தச் செயினை அணிந்ததும் இன்னும் கம்பீரமாகத் தெரிந்தான்.



"லவ் யூ ஆது......!",தன் உள்ளத்தின் காதல் மொத்தத்தையும் தன் குரலில் தேக்கி கூறியவளின் விழிகளை ஆழ்ந்து நோக்கியவன்,"என்னைப் பொறுத்த வரைக்கும்.....இப்போ உன் கழுத்துல போட்டு விட்டேனே.....இந்தச் செயின்....இது தாலிக்கு சமமானது.ஒரு பொண்ணோட கழுத்துல இருந்து.....அவ புருஷன் செத்ததுக்கு அப்புறம்தான் தாலியைக் கழட்டுவாங்க.....!அதே மாதிரி.....இந்தச் செயினும் நான் செத்ததுக்கு.....",அதற்கு மேல் சொல்லவிடாமல்.....அவனது வாயை இறுக பொத்தியவள்...



"கோவில்ல உட்கார்ந்துக்கிட்டு இது என்ன பேச்சு ஆது......?எனக்கு சுத்தமா பிடிக்கலை......!",குரல் கமற கூறியவளின் கண்கள் கலங்கியது.



அவள் தலையில் செல்லமாகக் குட்டியவன்,"ரொம்பவும் ஃபீல் பண்ணாதீங்க மேடம்.....!அப்படியெல்லாம்.....அவ்வளவு சீக்கிரம் உன்னை விட்டுட்டு போயிட மாட்டேன்....!அப்படி ஒரு வேளை.....உனக்கு முன்னாடி போக வேண்டிய நிலைமை வந்தாலும்.....உன்னைக் கொன்னு....என்கூட கூட்டிட்டு போயிருவேனோ தவிர.....உன்னைத் தனியா விட்டுட்டுப் போக மாட்டேன்.....!நீ இல்லாம.....ஒரு நிமிஷம் கூட நான் வாழமாட்டேன் டி.....!",தன் விழிகளைப் பார்த்தபடி கூறியவனின் காதலில் அவள் மொத்தமாய் கரைந்து போனாள்.



அவனுடைய காதல்.....அவளை சுனாமியாய் சுருட்டி தனக்குள் அடக்கிக் கொண்டது.



"நீங்க இல்லாம.....எனக்கு மட்டும் ஏது வாழ்க்கை......?",அவனது தோளில் சுகமாய் சாய்ந்து கொண்டாள் அவனுடைய காதலி.



இருவரும் காரில் திரும்பும் போது....இவள் சும்மா அமர்ந்திருக்காமல்.....ஆதித்யன் அணிவித்த செயினை தூக்கி துப்பட்டாவிற்குள் போட்டு மறைத்தபடியே வந்தாள்.



சிறிது நேரம் பொறுத்துப் பார்த்தவன்.....அவள் ஆடிக் கொண்டே அமர்ந்திருக்கவும்,"ப்ச்.....!இப்போ எதுக்கு டி அதை மறைக்கணும்ன்னு நினைக்கிற.....?அது பாட்டுக்கு இருந்துட்டுப் போகட்டும்.....விடு.....!",ஆட்சேபணைக் குரலில் கூறினான் அவன்.



"இல்ல ஆது.....!இதை யாராவது பார்த்தா.....என்ன நினைப்பாங்க.....?அம்மாக்கிட்ட இருந்து இதை எப்படி மறைக்கறதுன்னு தெரியல.....!",



"எதுக்கு மறைக்கணும்ன்னு நினைக்கற.....?யாராவது கேட்டால்.....என் புருஷன் கட்டின தாலின்னு சொல்லு.....!",என்றான் அவன் உல்லாசமாக.



"ம்ம்....சொல்லலாம்....!சொல்லலாம்.....!முதல்ல என் கழுத்துல ஊரறிய தாலி .கட்டுங்க....!அதுக்கு அப்புறம் சொல்றேன்.....!",



"அதுக்கென்ன.....?கட்டிட்டா போச்சு.....!நீ 'உம்'ன்னு ஒரு வார்த்தை சொல்லு.....!இப்பவே வண்டியை உங்க வீட்டுக்குத் திருப்பறேன்.....!",அவன் காரை வளைத்து திருப்ப,



அவன் கையைப் பிடித்து தடுத்தவள்,"ஆன்னா....ஊன்னா....எங்க வீட்டுக்கு காரைத் திருப்பறதுலேயே குறியா இருங்க.....!உங்க அம்மா அப்பாக்கிட்டேயும் பேசி சம்மதம் வாங்கணும்......!சார்க்கு அது ஞாபகம் இருக்கா.....இல்லையா.....?",கேலி குரலில் அவள் வினவ...



அவளைத் திரும்பிப் பார்த்தவன்,"இன்னும் என்னடி 'உங்க அம்மா அப்பா'ன்னு சொல்லிக்கிட்டு இருக்க......?அத்தை....மாமான்னு சொல்லு.....!",சிறு கண்டிப்புடன் கூறியவன்..



"உங்க அத்தை....மாமாக்கு எல்லாம் சம்மதம் தான்....!எப்படா அவங்க மருமகளைப் பார்ப்போம்ன்னு ஆவலா காத்துக்கிட்டு இருக்காங்க.....!",தன் குடும்பத்தினரின் சம்மதத்தை அவன் கூற,



அவளோ.....அவன் கூறிய விஷயத்தைக் கேட்டு விழி விரித்தாள்.



"என்ன.....!உங்க வீட்டில....",ஏதோ சொல்ல வந்தவள்....அவன் முறைப்பைக் கண்டு தன் தவறை உணர்ந்தவளாய்,"ஸாரி....ஸாரி.....!நம்ம வீட்டில ஒத்துக்கிட்டாங்களா....?இது எப்போ நடந்தது.....?சொல்லவே இல்ல.....?",ஆச்சரியத்துடன் வினவினாள் அவள்.



"ம்ம்....நம்ம ஹாஸ்பிட்டல் டீன் மூலமா அவங்களுக்கு விஷயம் தெரிஞ்சிடுச்சு.....!அவங்க எல்லாத்துக்கும் முழு சம்மதம்.....!உன்னை ஒரு நாள் வீட்டுக்கு கூட்டிட்டு வர சொல்லியிருக்காங்க......!இப்பவே போகலாமா....?காரை வீட்டுக்கு விடட்டுமா....?",ஆவலுடன் அவன் வினவ...



குனிந்து தன் சுடிதாரைப் பார்த்துக் கொண்டவள்,"இல்லல்ல.....!இப்போ வேண்டாம்.....!நம்ம வீட்டுக்கு முதன்முதல்ல வரும் போது.....இப்படி சுடிதார்ல வரக்கூடாது.....!புடவைக் கட்டிக்கிட்டுத்தான் வரணும்.....!இன்னொரு நாளைக்கு போகலாம்.....!",அவசர அவசரமாக மறுத்தாள்.



"ஓ.....சென்டிமெண்ட் பார்க்கறீங்களாக்கும்......!",அவளை கேலி செய்தவன் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.அந்த நாள் இருவருக்கும் இனிமையாகக் கழிந்தது.



அகம் தொட வருவான்....!!!
 

Nirmala Krishnan

Saha Writer
Messages
76
Reaction score
13
Points
6
அத்தியாயம் 43 :



"தண்ணியடிக்கலாமா.....?",என்றபடி ஆதித்யனின் முன் வந்து அமர்ந்தான் கெளதம்.முக்கியமான வேலைகள் இருந்ததால்....இரவு ஒன்பது மணியாகியும் வீட்டிற்கு கிளம்பாமல் அலுவலகத்திலேயே இருந்தான் ஆதித்யன்.



மும்முரமாகத் தன் வேலைகளில் ஆழ்ந்திருந்தவன்....நண்பனின் குரலில் நிமிர்ந்து அவனை நோக்கினான்.தலை கலைந்து....விழி சிவந்து போய் சோர்வாக அமர்ந்திருந்தவனைப் பார்த்தவனுக்கு பாவமாக இருந்தது.



எதுவும் பேசாமல் தன் லேப்டாப்பை மூடி விட்டு எழுந்த ஆதித்யன்.....கௌதமை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான்.அவன் மனமோ.....நண்பனைப் பற்றிய யோசனையில் மூழ்கியிருக்க.....அவன் கைகளோ.....அவர்கள் எப்பொழுதும் செல்லும் பாரை நோக்கி காரை செலுத்தியது.



அவர்கள் ஒன்றும் வாடிக்கையாக குடிப்பவர்கள் அல்ல....!என்றாவது ஒருநாள்...பார்ட்டியில் கலந்து கொள்ளும் போது....சம்பிரதாயமாக குடிப்பதுதான்.....!சில சமயங்களில்....வேலைப்பளு காரணமாக அதிக டென்க்ஷன் ஏற்படும் போது.....மதுவின் துணையை நாடிச் செல்வதுண்டு.....!அதுவும்....ஆதித்யனாகத்தான் கௌதமை அழைப்பான்.இதுவரை....கௌதமாக முன்வந்து அவனை அழைத்ததில்லை.



இன்று நண்பனாகவே முன்வந்து அவனை அழைக்கவும்....எதைப் பற்றியும் யோசிக்காமல் கிளம்பி விட்டான் ஆதித்யன்.நண்பனின் மனநிலையை அவனால் நன்கு புரிந்து கொள்ள முடிந்தது.இருந்தும்.....எதைப் பற்றியும் அவனிடம் கேட்காமல் அமைதியாகக் காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.



தலையைத் தன் இரு கைகளாலும் தாங்கியபடி அமர்ந்திருந்த கௌதமின் மனம் முழுவதும் ஏதேதோ எண்ணங்களே வியாபித்திருந்தன.காலையில் இருந்து அவன் சுமித்ராவை சந்திக்கவே இல்லை.அவனிடம் பேசுவதற்காக அறைக்குள் வந்தவளை,"வேலை இருக்கிறது.....!",என்று கூறி வெளியனுப்பி விட்டான்.



அவள் மீது இருந்த கோபம் அப்படியேதான் இருந்தது.அவள் அப்பா அவனைப் பார்த்து கூறிய 'அநாதை...' என்ற வார்த்தை அவன் மனதை வலிக்கச் செய்தது.அந்த வலியோடு அவன்....அவளைப் பார்க்க விரும்பவில்லை.



நேரமாக ஆக....அவன் மனதின் வலி அதிகரித்ததே தவிர குறையவில்லை.பொறுத்துப் பொறுத்து பார்த்தவன்....ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல்....நண்பனைத் தேடி வந்துவிட்டான்.



அந்த நட்சத்திர பாரின் முன் சென்று கார் நின்றது.இரவு நேரமாதலால்....கேளிக்கைகளுக்கும்....கொண்டாட்டங்களுக்கும் குறைவில்லாமல் இருந்தது.அங்கு வாடிக்கையாளர்களாக இருக்கும் அனைவருமே கோடீஸ்வர வீடுகளின் வாரிசுகள்.....!ஒருவேளை சாப்பிடுவதற்கு கூட உணவில்லாமல் பலர் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க....அங்கோ.....பணம் தண்ணீராய் செலவாகிக் கொண்டிருந்தது.



காரை விட்டு இறங்கி உள்ளே சென்ற நண்பர்கள் இருவரும்....அங்கு நடனமாடிக் கொண்டிருந்தவர்களை கவனிக்காமல்....ஓரமாகப் போடப்பட்டிருந்த மேசையில் சென்று அமர்ந்தனர்.



பாப் இசை ஒலித்துக் கொண்டிருக்க....அதற்கு ஏற்றவாறு பல ஆண்களும்....பெண்களும் இணைந்து ஆடிக் கொண்டிருந்தனர்.



தங்களுக்குப் பிடித்த மது வகைகளை ஆர்டர் செய்துவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தனர் கௌதமின் மனவேதனை புரிந்தாலும்.....அவனாகவே பேசட்டும் என்று அமைதி காத்தான் ஆதித்யன்.



அதற்குள் ஆர்டர் செய்யப்பட்டிருந்த மது வகைகள் வர....அதை எடுத்து....ஆதித்யன் நிதானமாக பருக ஆரம்பிக்க.....அவனுக்கு நேர்மாறாக.....கண்ணாடி கிளாஸை கையிலெடுத்த கௌதமோ....அதை ஒரே மூச்சில் தன் வாயில் சரித்தான்.அவனின் செய்கையை வேதனையுடன் பார்த்துக் கொண்டிருந்த ஆதித்யன்.....நண்பனைத் தடுக்க முன்வரவில்லை.



நண்பனின் மன ரணத்தை....மதுவின் போதை தோற்கடிக்கும் என்று நினைத்தானோ....என்னவோ....அவனைத் தடுக்காது அமைதியாக அமர்ந்திருந்தான் நேற்றிலிருந்து....விடாமல் தன் காதில் ஒலித்துக் கொண்டிருக்கும் 'அநாதை...' என்ற வார்த்தையை மறக்க முடியாமல்....மேலும் மேலும் குடித்துக் கொண்டிருந்தான் கெளதம்.



நண்பன் அளவு மீறிப் போகவும்....அவன் கையைப் பிடித்துத் தடுத்த ஆதித்யன்,"போதும் கெளதம்.....!ஏற்கனவே நிறைய குடிச்சுட்ட......!இத்தோட போதும்.....!",என்றான்.



"இல்லை டா....!எவ்வளவு குடிச்சாலும்....என் மனசில இருக்கிற காயம் ஆறமாட்டேங்குது.....!இன்னைக்கு....எனக்கு இது வேணும்.....!என்னைத் தடுக்காதே.....!",என்றபடி கையில் வைத்திருந்த கிளாஸை வாய்க்கு எடுத்துச் செல்ல...



சட்டென்று அவன் கிளாஸை எட்டி ப் பிடித்த ஆதித்யன்,"நோ கெளதம்....!இட்ஸ் எனஃப்.....!இதுக்கு மேல நீ குடிக்க கூடாது.....!",சிறு கண்டிப்புடன் கூறியபடி அவன் கிளாஸை பிடுங்கி வைத்தான்.



"விடுடா மச்சான்.....!என் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.....!என் கஷ்டத்தை உன்னால புரிஞ்சுக்க முடியாது....!அந்த ஆளு....என்னைப் பார்த்து அநாதைன்னு சொல்லிட்டான் டா.....!என் மனசு வலிக்குது.....!",மனம் போன போக்கில் புலம்பியவன்.....பிறகு ஆதித்யனை நிமிர்ந்து பார்த்து,



"ஆனாலும்....அந்த ஆளு சொன்னதிலும் உண்மை இருக்குதுதானே டா.....?நான் ஒரு அநாதைதானே.....?என் அம்மா அப்பா....எதுக்குடா என்னை விட்டுட்டு போனாங்க....?அவங்க இருந்திருந்தா.....இந்தப் பேச்சையெல்லாம் நான் கேட்க வேண்டி இருந்திருக்குமா.....?",கண்களில் வலியுடன் தன்னைப் பார்த்து புலம்பிய நண்பனைக் கண்டவனுக்கு வேதனையாக இருந்தது.அதே சமயம்.....அவனைப் பார்த்து....இவ்வாறு பேசியவர்களின் மீது கட்டுங்கடங்காமல் கோபம் வந்தது.



ஆறுதலாக கௌதமின் கையைப் பற்றியவன்,"லூசு மாதிரி உளறாதே டா.....!உனக்காக பிரெண்டுன்னு நான் இருக்கேன்......!உன் தங்கச்சி திவ்யா இருக்கா......!அப்புறம்....இப்போ புதுசா தங்கச்சின்னு ஒருத்தியை தத்தெடுத்திருக்கிறாயே.....நித்திலா.....அவ இருக்கா.....!எல்லாத்துக்கும் மேல.....உனக்கே உனக்குன்னு.....உன் மொத்த வாழ்க்கையிலும் உன் கை பிடிச்சு....உன் கூடவே நடந்து வர்றதுக்கு சுமித்ரா இருக்கா.....!இத்தனை பேர் இருக்கும் போது....நீ எப்படிடா அநாதையாவாய்.....?",அதட்டியபடி அவனைத் தேற்ற முயன்றான்.



அந்த மன வேதனையிலும்.....'சுமித்ரா' என்ற பெயரைக் கேட்டதும்.....கௌதமின் முகம் கனிந்தது.மெல்லப் புன்முறுவல் செய்தவன்,"சுமி......!அவளுக்காகத்தான் டா எல்லாம்.....!அவளுக்காக மட்டும்தான்.....!அந்த ஆளு பேசிய பேச்சையெல்லாம் அமைதியா கேட்டுக்கிட்டு இருந்தேன்.....!அவ மனசு கஷ்டப்படக்கூடாதுன்னுதான்....அந்த வீட்டுப் படியேறி போய் பொண்ணு கேட்டேன்.....!அவளோட அம்மா அப்பா சம்மதம் இல்லாம நம்ம கல்யாணம் நடக்காதுன்னு.....அவளுக்கு நான் சத்தியம் பண்ணிக் கொடுத்திருக்கேன் டா.....!அந்தப் பிராமிஸ்க்கு கட்டுப்பட்டுத்தான் நான் இவ்வளவு பொறுமையா இருக்கேன்.....!இல்லைன்னா....எப்பவோ அவ கழுத்துல தாலி கட்டியிருப்பேன்.....!",கனிவுடன் ஆரம்பித்தவன்....கோபத்துடன் முடித்தான்.



"ஓ......!உன் ஆளுக்கு ப்ராமிஸ் பண்ணிக் கொடுத்திருக்கறையா.....?அதனாலதான் இவ்வளவு பொறுமையா இருக்கிறயா.....?அதுதானே பார்த்தேன்.....!என் பிரெண்டா இருந்துட்டு....இப்படி இருக்கிறானே.....!எப்ப சுமித்ராவைப் பொண்ணு பார்த்துட்டு போன விஷயம் தெரிஞ்சுதோ.....அப்பவே அவ கழுத்துல தாலி கட்டியிருக்க வேண்டாமான்னு.....நிலாக்கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தேன்.....!",நண்பனிடம் உரைத்தவன்.....பிறகு அவனை சகஜமாக்கும் பொருட்டு..



"இதுக்குத்தான் டா மச்சான்.....!பொண்ணுங்களுக்கு பிராமிஸ் பண்ணிக் கொடுக்கக் கூடாதுன்னு சொல்றாங்க.....!கைகேயிக்கு சத்தியம் பண்ணிக் கொடுத்து....தசரதன் மாட்டிக்கிட்டு முழிச்ச மாதிரி....இப்போ.....நீ சுமித்ராவுக்கு சத்தியம் பண்ணிக் கொடுத்துட்டு....முழிச்சிட்டு இருக்க.....!",என்று கிண்டலடிக்க,



அவனது கேலியில் சற்று இறுக்கம் தளர்ந்தவன்,"அதுவேணா உண்மைதான் டா....!",லேசாகப் புன்னகைத்தவன்...பிறகு....எதையோ நினைத்துக் கொண்டவனாய்,



"அவளுக்கு செஞ்சு கொடுத்த சத்தியத்துக்காக மட்டும்....நான் அவளை பொண்ணு கேட்டுப் போகலை டா.....!எங்க வீட்டுப் பக்கம்....நெருங்கின சொந்தம்ன்னு சொல்லிக்கிற மாதிரி அப்படி யாரும் இல்ல.....!சுமித்ராவுடைய குடும்பம்தான்....நாளைக்கு கடைசி வரைக்கும்....சொந்தம்ன்னு எங்க கூட வரப் போகுது.....!அதனாலதான்....பெரியவங்க அப்படிங்கற மரியாதைக்காக....அவங்களை மதிச்சு எங்க காதலை சொன்னேன்.....!ஆனால்....அவங்க சாதிவெறி பிடிச்ச மிருகங்களா இருப்பாங்கன்னு.....நான் நினைச்சுப் பார்க்கவே இல்ல.....!எது எப்படியோ....அவளை விட்டுக் கொடுக்க நான் தயாரா இல்ல.....!",அவன் குரலில் தெரிந்த உறுதியில் ஆதித்யனின் முகத்தில் புன்னகை விரிந்தது.



"தட்ஸ் மை குட் பாய்.....!இப்படி முடிவெடுக்கறதை விட்டுட்டு.....சோர்ந்து போய் உட்கார்ந்திருக்கிற.....!அந்த ஆளு திட்டினாங்க அப்படிங்கறதுக்காக மனசு உடைஞ்சு போகலாமா.....?கமான்.....!சியர் அப்.....!அப்புறம்....இந்த மாதிரி எனக்கு யாருமில்லைன்னு லூசு மாதிரி புலம்பிக்கிட்டு இருக்காதே....!சுமித்ராவுக்கு அண்ணனா இருந்து....உங்க கல்யாணத்துல அனைத்து சடங்குகளையும் செய்ய வேண்டியது என்னுடைய கடமை.....!ஒகே வா.....?",நண்பனின் உற்சாகமான பேச்சில்.....மனதில் இருந்த பாரம் குறைந்து லேசானதைப் போல் உணர்ந்தான் கெளதம்.



"தேங்க்ஸ் டா மச்சான்....!உன்கிட்ட பேசினதுக்கு அப்புறம்தான்....மனசு தெளிவா இருக்கு....!",அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே.....ஆதித்யன் மது கிளாஸை எடுத்துப் பருக ஆரம்பித்தான்.



அதைக் கவனித்த கெளதம்,"டேய்.....!என்னை சொல்லிட்டு நீ குடிக்கறயா.....?கொடுடா.....!",அவன் கையிலிருந்த கிளாஸை பிடுங்க வர,



"விடுடா.....!என் கோட்டா இன்னும் முடியல.....!நீதான் அளவுக்கு மீறி குடிச்சிட்ட.....!ஸோ.....அடங்கி உட்காரு.....!நான் என் கோட்டாவை முடிச்சிட்டு வர்றேன்......!",என்றவன் அவனது பங்கை முடித்து விட்டுத்தான் எழுந்தான்.



எப்பொழுதாவது குடித்தாலும்.....இருவரும் தங்கள் எல்லையைத் தாண்ட மாட்டார்கள்.வரும் போது இருந்த மனநிலைக்கு முற்றிலும் மாறாக....குதூகலமான மனநிலையோடு திரும்பினர் நண்பர்கள் இருவரும்.



...................................................................................................



"ஆதித்யன் கன்ஸ்ட்ரக்சன்....",வழக்கம் போல் தனது பரபரப்பில் மூழ்கியிருக்க.....வெகு உற்சாகமாகத் தனது அறைக்குள் நுழைந்தான் ஆதித்யன்.



"பேபி......!எல்லாம் ரெடியா......?",முகம் முழுக்க புன்னகையுடன் கேட்டவனை நிமிர்ந்து பார்த்தவள்,



"ம்.....நீங்க சொன்ன மாதிரியே....எல்லோரையும் மீட்டிங் ஹாலுக்கு வர சொல்லிட்டேன்.....!எதுக்காக இந்த மீட்டிங்.....?",ஆர்வத்துடன் வினவியவளின் கன்னத்தை செல்லமாகத் தட்டியவன்,



"எதுக்காகன்னா......",சொல்வதைப் போல் அவளருகில் வந்தவன்....பிறகு குறும்புப் புன்னகையுடன்,"அது சர்ப்ரைஸ்.....!",குறும்பாக கூறியபடி கண்ணடித்தான்.



"ஆது.....!உங்களை......",போலியாக முறைத்தவளிடம்..



"போ பேபி.....!போய் மீட்டிங் ஹால்ல எல்லாத்தையும் அரேன்ஞ் பண்ணு.....!கௌதமை கூட்டிட்டு நான் உன் பின்னாடியே வர்றேன்.....!",அவளை அனுப்பி வைத்தான்.



அந்தப் பெரிய மீட்டிங் ஹாலில்....அனைத்துப் பணியாளர்களும் குழுமியிருக்க....அனைவரின் முகங்களிலும் 'ஏன்.....?' என்ற கேள்வியே விரவியிருந்தது.திடீரென்று அனைவருக்கும் மெயில் வந்தது.பதினோரு மணிக்கு மீட்டிங் என்றும்.....அனைவரும் தவறாமல் மீட்டிங் ஹாலில் குழும வேண்டும் என்றும் செய்தி வந்தது.அதையொட்டி அனைவரும் மீட்டிங் ஹாலில் அமர்ந்திருந்தனர்.



நித்திலா உள்ளே நுழைந்தவுடன்....'ஆதித்யனின் செக்ரெட்டரி....' என்ற முறையில் அனைவரும்....அவளிடம் கேள்விக் கணைகளைத் தொடுக்க....."எனக்கு எதுவும் தெரியாதுப்பா.....!",என்று உதட்டைப் பிதுக்கியபடி....முன் வரிசையில் அமர்ந்திருந்த சுமித்ராவின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.



சில மணி நேரங்களில்.....கெளதம் பின்தொடர....தன் வேகமான நடையுடன் மிகக் கம்பீரமாக உள்ளே நுழைந்தான் ஆதித்யன்.அவனைக் கண்டதும் அந்த ஹாலில் சட்டென்று நிசப்தம் நிலவ.....அனைவரும் மரியாதையோடு அவன் பக்கம் கவனத்தை செலுத்தினர்.



உற்சாகத்தோடு தனது உரையை ஆரம்பித்தான் ஆதித்யன்.



"ஹாய் கைஸ்.....!எல்லார் மனசிலேயும் 'எதுக்காக இந்த மீட்டிங்.....?' அப்படின்னு ஒரு கேள்வி இருக்கும்....!ஸோ....நான் டைரக்ட்டா மேட்டருக்கே வர்றேன்.....!ஒரு சந்தோஷமான விஷயத்துக்காகத்தான் இந்த மீட்டிங் அரேன்ஜ் பண்ணப்பட்டிருக்குது.....!கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி.....நம்ம நிறுவனத்துக்கு கிடைச்ச ஒரு அமெரிக்கா ப்ராஜெக்ட்டுக்காக நாம அனைவரும் இரவும் பகலுமா உழைச்சது ஞாபகம் இருக்கும்ன்னு நினைக்கிறேன்.......!நவ்....அந்த உழைப்புக்கேற்ற ஊதியம் நமக்கு கிடைச்சிருக்கு......!



யெஸ்.....!அந்தப் ப்ராஜெக்ட் மிகப் பெரிய அளவில வெற்றி பெற்றிருக்கு.....!நாம கட்டி கொடுத்த பில்டிங்ஸ் அனைத்தும்....அந்த அமெரிக்கா நிறுவனத்துக்கு ரொம்பவும் பிடிச்சு போச்சு.....!",அவன் கூற அந்த ஹாலில் இருந்த அனைவரும் பலத்த கரகோஷத்தின் மூலம் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.



அனைவரையும் புன்னகை முகத்துடன் ஏறிட்டவன்,"அண்ட்.....சந்தோஷமான விஷயம் இத்தோட முடியல.....இன்னும் இருக்கு.....!அந்த அமெரிக்கா நிறுவனத்துடைய அடுத்த அனைத்து சென்னை ப்ராஜெக்ட்டும் நமக்கே கிடைச்சிருக்கு.....!அது சம்மந்தமான ஒப்பந்தத்தில் கையெழுத்து போடறதுக்காக.....அந்த அமெரிக்கா நிறுவனத்துடைய போர்ட் ஆஃப் டைரக்ட்டர்ஸ் இங்கே வர இருக்காங்க.....!",மீண்டும் அறையில் ஒரு பலத்த கரகோஷம் எழுந்தது.



"அப்புறம் இந்த ப்ராஜெக்ட் வெற்றிகரமா முடிஞ்சதுன்னா.....அதுக்கு மொத்த காரணமும் நீங்கதான்.....அண்ட்.....உங்களுடைய உழைப்புதான்.....!நாட் ஒன்லி யூ பீப்பிள்.....நீங்க இங்க கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்து அழகா டிசைன் பண்ணிக் கொடுத்ததை.....அங்க வெயில்ல நின்னு செங்கல்....மணல்ன்னு சுமந்து....ரொம்ப அழகா அந்த டிசைன்க்கு உருக்கொடுத்தது நம்ம தொழிலார்கள்தான்.....!ஸோ....உங்க அனைவருக்கு 'ஆதித்யன் கன்ஸ்ட்ரக்ஷன்..." சார்பா என்னுடைய நன்றியை தெரிவிச்சுக்கிறேன்......!",இம்முறை தொழிலார்கள் பக்கம் இருந்து ஆனந்த கூச்சல் எழுந்தது.



ஆம்.....அந்த மீட்டிங்கிற்கு அவன்...தொழிலார்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தான்.அந்த ஒரு மீட்டிங் என்று இல்லை.....!எந்தவொரு பிராஜெக்ட் முடியும் போதும்.....நடைபெறும் மீட்டிங்கிற்கு அவன் தொழிலார்களுக்கும் அழைப்பு விடுப்பான்.....!இவனது மூலதனமாக இருந்தாலும்....அந்தக் கட்டிடம் முழுக்க முழுக்க.....அந்த தொழிலாளர்களின் வியர்வையில் எழுந்தது அல்லவா....?அந்த நன்றியை ஒரு போதும் அவன் மறந்ததில்லை.....!



அதேபோல்.....அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து தரவும் அவன் தயங்கியதில்லை.....!அதனால்தான் என்னவோ.....அந்த தொழிலாளர்கள் அனைவரும்.....அவனுடைய நிறுவனம் தவிர....வேறு எந்த ஒரு நிறுவனத்திற்காகவும் உழைக்க மாட்டார்கள்.....!அவர்கள் அனைவரும் 'ஆதித்யன் கன்ஸ்ட்ரக்ஷன்' நிறுவனத்துக்கான ஒப்பந்தத் தொழிலாளர்கள்.....!



அவனது நிறுவனமும் புகழ் பெற்ற நிறுவனம் என்பதால்....வருடம் முழுவதும் ப்ராஜெக்ட் வந்து கொண்டேயிருக்கும்.....!அவர்களுக்கு வேலை இருந்து கொண்டேயிருக்கும்....!



"அண்ட் கைஸ்......!உங்க அனைவருக்கும் இந்த மாசத்துல இருந்து டபுள் இன்க்ரீமெண்ட்.....!அப்பார்ட் ஃப்ரம் திஸ்....இனிமேல்தான் உங்க உழைப்பை நீங்க அதிகமா போட வேண்டி இருக்கும்....!இனி வர்ற ப்ராஜெக்ட்டோட வெற்றிக்கும் உங்க ஒத்துழைப்பு இருக்கும்ன்னு நம்பறேன்......!",அவன் கூறி முடிக்கவும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் கைத்தட்டலில் அந்த அரங்கமே அதிர்ந்தது.அனைவரும் புன்னகை முகமாக ஒருவருக்கொருவர் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.



பணியாளர்களை எப்படி சந்தோஷப்படுத்துவது.....?தொழிலாளர்களை எப்படி உற்சாகப்படுத்துவது....?என்பதை அந்த தொழிலதிபன் நன்கு தெரிந்து வைத்திருந்தான்.



கம்பீரமாக அவன் பேசிய விதம் நித்திலாவை வெகுவாகக் கவர்ந்தது.ஒரே அறையில் இருந்தாலும் அவனை சைட் அடிப்பதற்கு அவளுக்கு அவ்வளவாக வாய்ப்புக் கிடைக்காது.....!அதையும் மீறி அவள்....அவனை பார்வையிட்டால் அந்தக் கள்வன் கண்டு கொண்டு.....அவளை சீண்ட ஆரம்பித்து விடுவான்...!



இங்கு....இத்தனை பேருக்கு மத்தியில் அவன் தன்னைக் கண்டு கொள்ள மாட்டான் என்ற நினைப்பில்.....அவள்....அவனை வெட்கமில்லாமல் பார்வையிட்டுக் கொண்டிருந்தாள்....!தன்னவனின் ஒவ்வொரு அசைவையும் தனக்குள் பொக்கிஷமாய் சேமித்துக் கொண்டிருந்தாள்.....!



எதிரியின் பார்வையில் இருந்தே.....அந்த எதிரியின் மனதைப் படித்து விடும் அந்த அசகாயசூரனுக்கா.....தன்னவளின் மனதைப் படிக்கத் தெரியாது....?அவளது விழிகளின் மொழிகளில் இருந்தே....அவளது பார்வையிடலைக் கண்டு கொண்டான் அந்தக் கள்வன்.....!இருந்தும் முகத்தில் எதையும் காண்பிக்காமல் பேசிக் கொண்டிருந்தான்.



தனது உரையை முடித்து விட்டு....கௌதமுடன் பேசியபடி மேடையை விட்டுக் கீழே இறங்கியவன்.....நித்திலாவைக் கடந்து செல்லும் போது....யாரும் அறியாமல்.....மயக்கும் புன்னகையுடன் அவளைப் பார்த்து கண்ணடித்து விட்டுச் செல்ல....அவள்தான் விதிர்த்துப் போனாள்.



'யாராவது பார்த்து விட்டார்களா.....?' என்று படபடக்கும் இதயத்தோடு சுற்றும் முற்றும் தனது பார்வையை அலைய விட.....அவளது நல்ல நேரமோ....என்னவோ....யாரும் இவர்களைக் கவனிக்கவில்லை.அனைவரும் தங்களது பேச்சில் மூழ்கியிருந்தனர்.



'ரௌடி.....!காதல் ரௌடி.....!',மனதிற்குள் செல்லமாக அவனைத் திட்டிக் கொண்டவள்.....சுமித்ராவிடம் விடைபெற்றுக் கொண்டு.....ஆதித்யனின் அறையை நோக்கி சென்றாள்...!





அகம் தொட வருவான்....!!!
 

Nirmala Krishnan

Saha Writer
Messages
76
Reaction score
13
Points
6
அத்தியாயம் 44 :



நித்திலா அறைக்குள் நுழையும் போது அவள் விழிகள் முதலில் சந்தித்தது ஆதித்யனைத்தான்.....!மேசையில் சாய்ந்தபடி தனது இரு கைகளையும் மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டு.....ஒரு குறுஞ்சிரிப்புடன் அறைக்குள் நுழைந்ததவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் ஆதித்யன்.



அவனது பார்வையில் ஒரு கணம் தடுமாறியவள்,"எ.....என்ன....?",திணறியபடியே தனது டேபிளை நோக்கிச் செல்ல...



"எதுக்கு டி அப்படி பார்த்த.....?",ஆழ்ந்து ஒலித்த அவனுடைய குரலில்....அவள் அதற்கு மேல் நகராமல் அப்படியே நின்றாள்.



"எ.....எப்படி.....?",அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் வெட்கம் அவளைத் தடுக்க....தரையை பார்த்தபடி வினவினாள்.



"என்னை சைட் அடிச்சியா....?",கேட்டுக்கொண்டே அவன்....அவளை நோக்கி முன்னேற...



'அவன் தன்னை கண்டு கொண்டான்....!' என்ற நினைவில் உதட்டை மடித்துக் கடித்தவள்.....அவன் தன்னருகில் நெருங்கவும்.....விழிகள் படபடக்க பின்னால் நகர்ந்தாள்.



"சொல்லு டி.....?",அவளை நோக்கி முன்னேறியபடி அவன் கேட்க..



அவளோ...'இல்லை.....!' என்று தலையசைத்தபடியே பின்னால் நகர்ந்தாள்.



"பொய் சொல்லாதே டி.....!உன்னுடைய முட்டைக் கண்ணை முழிச்சு முழிச்சு.....என்னைக் கடிச்சுத் திங்கற மாதிரி பார்த்து வைச்சியே.....?",ஒற்றைப் புருவத்தை உயர்த்தியபடி கேள்வி கேட்டவன்....அவளை மிகவும் நெருங்கியிருந்தான்.



அதற்கு மேல் நகர முடியாமல்.....சுவரில் முட்டி நின்றிருந்தவளின் இருபுறமும் கைகளை ஊன்றி சிறை செய்தவன்,"சொல்லு டி.....?சைட் அடிச்சதானே.....?",மெல்லிய குரலில் கேட்க,



அவளோ....அப்பொழுதும் அவனைக் கடித்துத் தின்பதைப் போல் பார்வையிட்டபடி.....'இல்லை.....!' என தலையசைத்தாள்.



"இல்லையா......?",என்றபடியே அவளருகில்.....அவன் மேலும் நெருங்க....இப்பொழுது.....அவனுடைய மூச்சுக்காற்று அவள் முகத்தில் வந்து மோதியது.



அவன் தன் நெருக்கத்தை அதிகப்படுத்தவும்....மேலும் சுவரோடு ஒன்றியவள்,"ஆ....ஆமாம்.....!சைட் அடிச்சேன்.....!நீங்க கொஞ்சம் தள்ளி நில்லுங்க.....!",என்றாள் தடுமாற்றத்துடன்.



அவன் நெருங்க....நெருங்க அவளுடைய இதயத்துடிப்பு ஜெட் வேகத்தில் எகிறிக் கொண்டிருந்தது.



அவள் கன்னத்தை செல்லமாகத் தட்டியவன்,"ஹ்ம்ம்....!குட் கேர்ள்.....!இப்படித்தான் நான் எது கேட்டாலும் ஒத்துக்கணும்.....!சரி....!எனக்குப் பரிசு இல்லையா.....?",தாபத்துடன் அவன் வினவ..



"எ....எதுக்கு.....?",அவன் கண்களில் வழிந்தோடிய தாபத்தைக் கண்டவளின் வார்த்தைகள் தந்தியடித்தன...!



"எதுக்கா.....?நம்ம அமெரிக்கா ப்ராஜெக்ட் வெற்றியடைஞ்சதுக்குத்தான்.....!எல்லோரும் அவங்கவங்க வாழ்த்தை சொன்னாங்க.....!நீ இன்னும் சொல்லவே இல்ல.....?"அவள் கண்களுக்குள் ஆழப்பார்வை பார்த்தபடி வினவினான் அவன்.



அவன் விழிகளின் வீச்சைத் தாங்க முடியாமல்....தன் விழிகளைத் தாழ்த்தியவள்,"வாழ்த்துக்கள்.....!",என்றபடி தன் கையை நீட்ட...



அவளை ஆட்சேபணைப் பார்வை பார்த்தவன்,"இப்படித்தான் வாழ்த்து சொல்லுவியா....?எனக்கு ஸ்பெஷல் வாழ்த்து வேணும்....!",கேட்டவனின் பார்வை அவள் இதழ்களிலேயே மொய்த்தது.



அவன் பார்வையை உணர்ந்தவள்.....இதயம் படபடக்க தனது இதழ்களை மடித்து அழுந்தக் கடிக்க....அவள் செய்கையில் மயங்கியவன்,"நோ பேபி.....!அதை கஷ்டப்படுத்தாதே......!",முணுமுணுத்தவனின் விரல்கள் அவளது இதழ்களை....அவளின் பற்களின் சிறையிலிருந்து மீட்டு....மென்மையாக வருடிக் கொடுக்க...



மூச்சு விடவும் மறந்தவளாய் நின்றிருந்தாள் நித்திலா...!இதழ்களை வருடிய அவனது விரல்கள்....மெல்ல அவள் கன்னத்தில் ஊர்ந்து சென்று....அவள் காது மடலில் குறுகுறுப்பை ஏற்படுத்தியவாறு.....அவளது பின்னங்கழுத்தை நோக்கித் தனது பயணத்தை தொடர...



அவனது இன்னொரு கரமோ.....அவளது இடையில் தனக்கான தேடலைத் தொடர ஆரம்பிக்க....அந்த இரு கரங்களின் ஸ்பரிசத்தில் சுய நினைவுக்கு வந்தவள்...



"உங்களுக்கான பனிஷ்மெண்ட் ஞாபகம் இருக்கா.....?",என்றபடி அவனது கைகளைத் தட்டி விட்டாள்.



அவளது கேள்வியில்,"ஓ.....!",என்றபடி தனது புருவங்களை ஏற்றி இறக்கியவன்....பிறகு....மீண்டும் அவள் இரு புறமும் கையூன்றி அவளை சிறை செய்தபடி....அவளை நெருங்கி நின்று கொண்டான்.



அவன் சட்டமாகத் தன்னை நெருங்கி நின்றதில் தடுமாறியவள்,"ஹலோ பாஸ்.....!உங்களைத்தான் கேட்கிறேன்.....?நான் கொடுத்த பனிஷ்மெண்ட் ஞாபகம் இருக்கா....?இல்லையா.....?",தனக்கு பக்கவாட்டில் ஊன்றியிருந்த அவன் கைகளைத் தட்டிவிட முயன்றபடி அவள் கேட்க..



"ஓ.....அதுக்கென்ன.....!நல்லா திவ்யமா ஞாபகம் இருக்கே.....!",என்றவனின் பார்வை அவளது மேனியை அங்குலம் அங்குலமாக ஆராயத் தொடங்கியது.



அவனுடைய ஆராய்ச்சியில்....அவள் உச்சந்தலையில் இருந்து....உள்ளங்கால் வரை சிவந்து போனாள்.



'அய்யோ....!எதுக்கு இவன் இப்படி பார்க்கிறான்......?ஏதோ காணானதை கண்ட மாதிரி.....?',தடுமாறிய மனதை வெகு சிரமப்பட்டு தன் கட்டுக்குள் கொண்டு வந்தவள்...



"ஞாபகம் இருக்கல்ல.....?அப்புறம் எதுக்கு...இப்படி பக்கத்துல நெருங்கி நிற்கறீங்க.....?தள்ளி நிற்க வேண்டியதுதானே....!",என்று சிடுசிடுத்தாள்.



முதலில் தனது அருகாமையில் முகம் சிவக்கத் தடுமாறியவளையும்....பிறகு தனது தடுமாற்றத்தை மறைத்துக் கொண்டு.....அவள் தன்னிடம் எரிந்து விழுந்ததையும்....குறும்புப் புன்னகையுடன் ரசித்தவன்,



"நீ என்ன பேபி பனிஷ்மெண்ட் கொடுத்த.....?இந்த ஒரு மாசமும் உன்னைத் தொடக் கூடாதுன்னுதானே சொன்ன....?பார்க்க கூடாதுன்னு சொன்னியா.....?இல்லைல்ல.....?அண்ட்....என் விரலாவது உன் மேல படுதா......?இல்லல்ல.....?",நியாயம் கேட்டவனின் பார்வை....சிறிதும் நியாயமில்லாமல் அவளது மேனியில் கண்டபடி மேய்ந்தது.



அவன் நியாயம் கேட்ட லட்சணத்தில் அவள் வாயை மூடிக் கொண்டு அமைதியாகிவிட்டாள்.அவனது வெட்கங் கெட்ட பார்வையைத் தாங்கிக் கொண்டு அவளாலும் எவ்வளவு நேரம்தான் அமைதியாக இருக்க முடியும்.....?



"ஹ்ம்ம்....!கொடுத்து வைச்சவன்.....!",திடீரென்று அவன் விட்ட பெருமூச்சில் அவள் மலங்க மலங்க விழித்தாள்.



'என்னாச்சு இவனுக்கு....?திடீர்ன்னு என்னமோ உளர்றான்.....?',அவனை சந்தேகப்பார்வை பார்த்தபடி..."யாரு.....கொடுத்து வைச்சவன்.....?",என்று அவள் வினவ..



"வேற யாரு.....?உன் செயின்ல தொங்கிகிட்டு இருக்கானே அந்த ஆதுவைத்தான் சொல்றேன்.....!எவ்வளவு சுகமா.....உன் நெஞ்சுக்குழியில சாய்ஞ்சு தூங்கிட்டு இருக்கான் பாரு......!",அவள் சுடிதாருக்குள்.....சங்கிலி பதுங்கியிருந்த இடத்தை பருக ஆரம்பிக்க.....அவன் பார்வையை உணர்ந்தவளாய் அவசர அவசரமாக தனது துப்பட்டாவை இழுத்து சரி செய்தவள்...



"கண்ணை நோண்டிடுவேன்....நோண்டி......!",பல்லைக் கடித்தபடி முறைக்க ஆரம்பித்தாள்.



அவள் அவசர அவசரமாகத் தனது துப்பட்டாவை சரி செய்யவும்.....அதைக் குறும்புப் புன்னகையுடன் ரசித்தவன்,



"மறைச்சுக்க.....!மறைச்சுக்க....!என்ன....எல்லாம் நம்ம கல்யாணம் வரைக்கும்தானே......?அதுக்கு அப்புறம்.....",அதற்கு மேல் பேச விடாமல் அவன் வாயைப் பொத்தியவள்,



"ச்சீய்......!வாயை மூடுங்க.....!இப்படியா கொஞ்சம் கூட வெட்கமில்லாம பேசுவீங்க.....?",அவள் கோபமாய் கேட்க நினைத்தாலும்.....வார்த்தைகள் என்னவோ குழைந்துதான் வந்தன.



"காதல்ல வெட்கமெல்லாம் பார்த்தால்.....கேட்டதுதான் கிடைக்குமா.....?இல்ல....நினைச்சதுதான் நடக்குமா.....?",தன் வாயைப் பொத்தியிருந்தவளின் உள்ளங்கையில் அழுத்தி ஒரு முத்தம் வைத்தபடி அவன் கேட்க.....தன் உள்ளங்கையில் குறுகுறுப்பு மூட்டிய.....அவனுடைய மீசையின் விளையாட்டில் அவள்....தன் கையைப் பட்டென்று விலக்கிக் கொண்டாள்.



அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தவளின் நெற்றியில்....அவளது கற்றைக் கூந்தல் புரண்டு நர்த்தனமாட.....அவள் அதை ஒதுக்கும் முன்பாகவே....அவன்....தன் வாயை குவித்து ஊதி அதை ஒதுக்கியிருந்தான்....!அவனுடைய மூச்சுக்காற்றின் ஸ்பரிசத்தில்....அந்தப் பாவையின் விழிகள் தாமாகவே மூடிக் கொண்டன.....!



அவள்.....விழிகளைத் திறந்திருக்கும் போதே....அவளை அணு அணுவாக ரசித்து வைப்பான் அந்தக் கள்வன்.....!இப்பொழுது.....அவள் தன் விழிகளை மூடிக் கொண்டது....அந்தக் காதலனுக்கு பெரும் கொண்டாட்டமாகப் போய்விட்டது.



முழுநிலவை பாதியாக வெட்டி ஒட்ட வைத்திருந்தது போல் அமைந்திருந்த அவள் பிறை நெற்றியையும்.....அதற்கு கீழே நீண்டிருந்த கரு விழிகளையும்.....அந்தக் கரு விழிகளுக்கு குடை பிடிப்பது போல் அமைந்திருந்த அடர்த்தியான இமைகளையும்.....ரசித்துக் கொண்டிருந்தான்.....!



ஆதித்யன் அருகில் வந்தாலே.....அவளுக்கு வியர்த்து விடும்.....!அதன் காரணமாக.....நீண்டிருந்த மூக்கின் மேல்....மூக்குத்தி குத்தியதைப் போல் ஒற்றை வியர்வைத்துளி இடம்பிடித்திருக்க.....அந்த வியர்வைத்துளியை தனது உதடுகளால் துடைக்க வேண்டும் என்பது போன்ற பேரலை ஒன்று ஆதித்யனுக்குள் எழுந்தது....!



வியர்வைத்துளியிலேயே ஆட்டம் கண்ட தனது மனதை ஒருவாறாக சமாதானப்படுத்தி கொண்டு....அவன் தன் பார்வையை கீழிறக்க....அங்கு அவனுக்கு காத்திருந்ததோ....தேனூறும் பொக்கிஷம்....!அந்த தேனூறும் இதழ்களைக் கண்ட ஆதித்யனின் உதடுகளோ....'உடனே எனக்கு என் இணை வேண்டும்....!' என்று அவனிடம் அடம் பிடிக்க....எதைக் கூறி தன் உதடுகளை சமாதானப்படுத்துவது என்று தெரியாமல்.....தடுமாறிப் போனான் அந்தக் காதல்காரன்.....!



'சரி.....!அவளது இதழ்களைக் கொடுத்தே....தனது உதடுகளை சமாதானப்படுத்துவோம்.....!',என்று மனதிற்குள் உடன்படிக்கை செய்தபடி....அவனுடைய உதடுகள்....தன்னுடைய இணையை நோக்கி குனிந்தன.....!



அவனுடைய சூடான மூச்சுக் காற்றைத் தனது இதழ்களின் மேல் உணர்ந்த நித்திலா....பட்டென்று தன் விழிகளைத் திறந்தாள்.வேட்கையோடு தனது இதழ்களை நோக்கி குனிந்த ஆதித்யனின் உதடுகளுக்கும்......தனது இதழ்களுக்கும் இடையில் தனது கையை சுவராக வைத்துத் தடுத்தவள்,"நீங்க கேட்கிறது கிடைக்காது பாஸ்.....!",என்று கண்ணடித்து சிரிக்க..



அவனோ காண்டாகிப் போனான்."ராட்சசி.....!உன்னையெல்லாம்.....",பல்லைக் கடித்தவன்,"மாமன் இவ்வளவு பெரிய ப்ரொஜெக்டை சக்ஸஸ்ஃபுல்லா முடிச்சிருக்கானே.....அவனுக்கு ஏதாவது கிஃப்ட் கொடுப்போமுன்னு தோணுச்சா.....?உனக்கு எங்க அதெல்லாம் தோணும்.....?எனக்கு என்ன பனிஷ்மெண்ட் கொடுக்கலாமுன்னுதான் தோணும்.....!",அவன் பொரிய ஆரம்பிக்க..



அவளது மனம் சற்று இறங்கியது."சரி.....!உங்களுக்கு என்ன....இப்போ பரிசுதானே வேணும்....?நான் தர்றேன்.....!",என்றபடி அவன் முகத்தைப் பிடித்துத் திருப்பியவள்.....அவன் கன்னத்தில் நச்சென்று ஒரு முத்தம் வைக்க...



அவன் முகமோ.....வேப்பெண்ணெய் குடித்தது போல் அஷ்டகோணலாக மாறியது."அய்ய.....ச்சீ.....!கருமம்.....!என்னடி பண்ற.....?",அவள் முத்தம் வைத்த தனது கன்னத்தை அவசர அவசரமாக துடைத்துக் கொள்ள...



அவனது செய்கையை குழப்பமாகப் பார்த்தவள்,"நீங்கதானே முத்தம் கேட்டீங்க.....?",என்று முணுமுணுத்தாள்.



"நீ கொடுத்ததுக்கு பேரு முத்தமா டி.....?ஒரு லவ்வருக்கு எங்க முத்தம் கொடுக்கணும்ன்னு கூட உனக்குத் தெரியல.....!உன்னையெல்லாம் வைச்சுக்கிட்டு.....நான் எப்படி குடும்பம் நடத்தப் போறேனோ.....?ஏதோ வயசான தாத்தாவுக்கு கொடுக்கற மாதிரி.....கன்னத்துல முத்தம் கொடுக்கறா.....!",அவன் பாட்டுக்கு அவளை வறுத்தெடுத்துக் கொண்டிருக்க....அவளுக்கு கோபம் வந்துவிட்டது.



"போடா.....!ஏதோ போனா போகுதுன்னு முத்தம் கொடுத்தா....ரொம்பவும்தான் என்னைத் திட்டற....!போ.....!உனக்கு முத்தம் கொடுக்க முடியாது.....!",சிறு குழந்தையாய் சிணுங்கியபடி அவள்....அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளி விட...



அவளுடைய செல்ல சிணுங்கலில்.....தெரிந்து கொண்டே தொலைந்து போனான் அந்தக் காதல் கள்வன்....!



'ஏன்டா ஆதி....!வாயை வைச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டியா.....?ஏதோ கிடைச்ச வரைக்கும் லாபம்ன்னு என்ஜாய் பண்ணறதை விட்டுட்டு.....ஏதேதோ பேசி அவளைக் கோபப்படுத்தி விட்டுட்டியே.....?இப்போ பாரு....கன்னத்துல கிடைச்ச கிஸ் கூட முழுசா கிடைக்காம போயிரும் போல....!சரி....!எப்படியாவது அவளை சமாளிப்போம்.....!',மனதிற்குள் புலம்பியவன்....அவளை விலக விடாமல் தடுத்தபடி..



"ஹேய்....!ஸாரி டி பேபி....!மாமா ஏதோ தெரியாம பேசிட்டேன்.....!நீ உன் பரிசை முழுசா கொடுத்துட்டுப் போ.....!",அவன் கொஞ்ச ஆரம்பிக்க,



இவள் மிஞ்ச ஆரம்பித்தாள்."போடா....!உனக்கு எந்தப் பரிசும் கிடையாது....!போ.....!",அவள் முறுக்கிக் கொள்ள...



"ப்ளீஸ் டா.....!என் குட்டிம்மால்ல.....?மாமாவைப் பார்த்தா பாவமா தெரியலையா.....?",பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்க,



எப்பொழுதும் போல்....அப்பொழுதும் அவனுடைய 'குட்டிம்மா....!' என்ற அழைப்பில் மனம் மயங்கியவள்,"சரி.....!இப்போ உங்களுக்கு என்ன வேணும்.....?",அவன் சட்டை பட்டனை பிடித்துத் திருகியபடி அவள் கேட்க,



'ஹப்பாடா....!ஒரு வழியா என் பேபி மலை இறங்கி வந்துட்டா.....!ஆதி.....!டோன்ட் மிஸ் தி சான்ஸ்.....!',மனதிற்குள் ஒரு குத்தாட்டம் போட்டவன்....வெளியே....ஒன்றும் அறியாதப் பிள்ளை போல் முகத்தை வைத்துக் கொண்டு,



"மாமாவுக்கு ஒரே ஒரு கிஸ்.....!அதுவும் இங்க மட்டும் போதும்.....!',என தன் உதடுகளைத் தொட்டுக் காண்பிக்க,



அவன் இதழ் முத்தம் வேண்டும் என்று கேட்டவுடனேயே.....அவனது பேபி மீண்டும் முருங்கை மரம் ஏறினாள்.



"அய்யோ....!அங்கெல்லாம் கொடுக்க முடியாது......!நான் மாட்டேன்....!",கையை உதறியபடி தலையை ஆட்ட,



ஆதித்யனோ கடுப்பாகிப் போனான்.



'இவகிட்ட எல்லாம் கெஞ்சிக்கிட்டு இருக்க கூடாது.....!நேரடியா களத்தில இறங்கிடணும்.....!',என்று ஒரு மனம் அவனுக்கு அறிவுரை வழங்க....இன்னொரு மனமோ,'வேணாம்டா ஆதி.....!ஸ்ட்ரெய்ட்டா ஆக்ஷன்ல இறங்கி அவகிட்ட வாங்கிக் கட்டிக்காதே.....!',என்று ஆலோசனையை அள்ளி வீசியது.



இரண்டாவது மனதின் ஆலோசனையை ஏற்றுக் கொண்டு.....பொறுமையை இழுத்துப் பிடித்தவன்,"சரி பேபி.....!லிப் கிஸ் வேண்டாம்.....!நீ அன்னைக்கு கொடுத்தியே....L.K.G கிஸ்....அதை மட்டுமாவது கொடேன்.....!",விழிகளை சுருக்கிக் கெஞ்சினான் அவன்.



"அதென்ன L.K.G கிஸ்.....?நான் எப்போ கொடுத்தேன்.....?",அவள் முழிக்க,



"அதுதான் பேபி.....!அன்னைக்கு நீ என்கிட்ட உன் லவ்வை சொன்ன போது....முட்டி மோதி....எங்க ஆரம்பிக்கிறது....எங்க முடிக்கறதுன்னு தெரியாம....தட்டுத் தடுமாறி....லிப்லாக் அப்படிங்கற பேர்ல....ஒரு கிஸ் கொடுத்தியே......?அதைத்தான் சொல்றேன்.....!ஆனாலும் பேபி....",தன் போக்கில் பேசிக் கொண்டிருந்தவன்.....அவள் முறைத்த முறைப்பில்தான் அமைதியானான்.



"வொய் பேபி.....?",



"என்னைக் கிண்டல் பண்றியா டா.....?நான் மட்டும் என்ன பண்ணட்டும்......?முன்ன பின்ன யாரையாவது கிஸ் பண்ணியிருந்தா....எப்படின்னு தெரியும்....!அந்த விஷயத்தைப் பிடிச்சுக்கிட்டு....நீ ரொம்பவும்தான் என்னைக் கலாய்க்கிற.....!",விழிகளோடு சேர்ந்து மூக்கும் சுருங்கியபடி.....சிணுங்கியவளைப் பார்த்தவனின் மனம் மயங்கியது,



"நான் வேணும்ன்னா உனக்கு சொல்லித் தரட்டா.....?உனக்குத் தெரியாததை எல்லாம் சொல்லித் தரத்தான் நான் இருக்கேனே......?",கிசுகிசுத்தவனின் விரல்கள் அவள் இடையில் ஊர ஆரம்பிக்க,



இடையில் ஊர்ந்த அவனது கையில் 'நறுக்'கென்று கிள்ளி வைத்தவள்,"இப்போ உங்களுக்கு L.K .G கிஸ் வேணுமா......?வேண்டாமா......?",அவனை விட கிசுகிசுப்பான குரலில் அவள் வினவ....



தன் கையைத் தட்டி விட்டவளைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தவன்....அதற்கடுத்து அவள் கேட்ட கேள்வியில் கள்ளுண்ட வண்டானான்.



"ம்.....வேணும்....!வேணும்.....!",அவன் தலையை ஆட்ட..



"அப்படின்னா....இந்தக் கையையும்...கண்ணையும் வைச்சுக்கிட்டு சும்மா இருக்கணும்.....! இந்தக் கையை வைச்சுக்கிட்டு இடுப்பில கோலம் போடறது.....அப்புறம் இந்தக் கண்ணை வைச்சுக்கிட்டு கண்டபடி மேயறது....இதெல்லாம் இருக்கக் கூடாது......!",தனது ஆள்காட்டி விரலை நீட்டியபடி செல்லமாக எச்சரித்தவளைக் கண்டவனுக்கு.....அவள் மீதான காதல் கட்டுங்கடங்காமல் பெருகியது.....!



"சரிங்க மகாராணி......!உத்தரவு......!",இதுவரை எந்தவொரு கட்டளைக்கு அடி பணிந்திராத அந்த ஆறடி ஆண்மகன்....அந்தச் சிறு பெண்ணின் செல்லமான மிரட்டலுக்கு....காதலோடு அடிபணிந்தான்.



"ம்....வெரி குட் பாய்.....!",அவனுடைய முன்னுச்சி முடியை கலைத்து விட்டவள்,"சரி.....!கண்ணை மூடு.....!",என்றாள் கிசுகிசுப்பாக.



அவளுடைய குரலே.....அவனுக்குள் பல ரசாயன மாற்றங்களை விளைவிக்க....அவன் ஆசையாகத் தன் கண்களை மூடிக் கொண்டான்.இதயம் எகிறித் துடிக்க அவனருகில் நெருங்கியவள்.....அவன் சட்டைக் காலரைப் பற்றி தன்னருகில் இழுத்து....அவன் உதடுகளில்.....பட்டும் படாமலும்.....தொட்டும் தொடாமலும்....நச்சென்று ஒரு முத்தம் வைக்க....அந்த முத்தத்தின் சத்தம் அந்த அறையெங்கும் ஒலித்தது.



'ஏதோ பெரிதாகத் தர போகிறாள்.....!' என்று கண்ணை மூடிக் கொண்டு அவளது L.K.G கிஸ்ஸை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு....அவள்....தன் உதடுகளிலிருந்து அவளது இதழ்களை விலக்கவும்....அவனுக்கு சப்பென்று ஆனது.



பட்டென்று தன் கண்களைத் திறந்தவன்,"ராட்சசி.....!இதெல்லாம் ஒரு முத்தமா டி.....?'ப்ச்சக்'ன்னு சத்தம் வேணா.....ஏழு ஊருக்கு கேட்குது.....!இதைக் கொடுக்கறதுக்குத்தான் அவ்வளவு பில்டப் பண்ணினயா.....?",ஆழ்ந்த முத்தத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தவன்.....அது கிடைக்காத கடுப்பில் அவளைத் திட்ட.....அவளுக்கு கோபம் வந்துவிட்டது.



"போடா....!நான் எப்படி கிஸ் பண்ணினாலும் நீ திட்டற......!இனிமேல் உனக்கு நோ கிஸ்.....!",அவனைத் தள்ளிவிட்டு விட்டுத் தன் இருக்கைக்குச் சென்று அமர்ந்து கொண்டாள்.



"அடிப்பாவி.....!நீ கொடுத்ததுக்கு பேரு முத்தமா டி......?வெளியில போய் சொல்லிடாதே.....!",புலம்பியவன்.....அவள் தன்னை விலக்கி விட்டுச் செல்லவும்,"சரிதான் போடி.....!உன்னுடைய முத்தம் ஒண்ணும் எனக்கு வேண்டாம்.....!",புசுபுசுவென்று அவளை முறைத்தவன்....வேண்டுமென்றே 'தட்...தட்...' என்று நடந்து சென்று தன் இருக்கையில் அமர்ந்து கொண்டான்.



அவன் தன் லேப்டாப்பைத் தட்டிய லட்சணத்திலிருந்தே.....அவனுடைய கோபத்தை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.சிறு குழந்தை போல் முரட்டுத் தனமாகப் பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்தவனைப் பார்த்தவளுக்கு சிரிப்புதான் வந்தது.



'பாவம் நித்தி....!அவரை ரொம்பவும்தான் சீண்டி விடற.....!எப்போ எரிமலை வெடிக்கும்ன்னு தெரியல......?', ஒரு மனம் ஆதித்யனுக்காகப் பரிந்து கொண்டு வர...



இன்னொரு மனமோ....'ஏன்.....?நான் கொடுத்த முத்தத்துக்கு என்ன குறைச்சல்.....?எவ்வளவு ஆசையா கிஸ் பண்ணினேன்......!',என்று வரிந்து கட்டிக் கொண்டு வந்தது.



'உன் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லு.....!நீ கொடுத்ததுக்கு பேரு முத்தமா......?'ஆதித்யனுக்காக வாதாடிய மனது அவளைப் பார்த்து முறைக்க....அவள் மனதில்....ஆங்கிலப் படங்களில் அவள் பார்த்திருந்த முத்தக் காட்சிகள் வஞ்சணையில்லாமல் விரிந்தன.



'ச்சூ.....!போ.....!',என்று அதை ஒதுக்கித் தள்ளியவள்....'நான் கொடுத்ததுக்கு பேரும் முத்தம்தான்.....!நீ முதல்ல இடத்தைக் காலி பண்ணு.....!'ஆதித்யனுக்கு சப்போர்ட் செய்த மனதை விரட்டியடித்தாள்.



என்னதான் கைகள் பாட்டிற்கு கீபோர்டில் நர்த்தனமாடினாலும்....அவள் கவனம் முழுவதும் ஆதித்யன் மேல் தான் இருந்தது.துளியளவும் தன்னைத் திரும்பிப் பார்க்காமல்.....லேப்டாப்பையே முறைத்துக் கொண்டிருந்தவனைப் பார்த்தவளுக்கு தன்மீதே எரிச்சல் வந்தது.



'பாவம்.....!எவ்வளவு ஆசையா என்கிட்ட வந்தாரு......அவரு கேட்டதை கொடுத்தா நீ என்ன குறைஞ்சா போயிருவ.....?இப்போ பாரு.....!கோபத்தோட உச்சாணில போய் உட்கார்ந்திருக்காரு.....!இவரை எப்படி சமாதானப்படுத்தறது......?',மனதிற்குள் புலம்பிக் கொண்டிருந்தவளை யாரோ கதவைத் தட்டும் ஒலி கலைத்தது.



அவளுடன் வேலை பார்க்கும் ரமணிதான் கையில் ஒரு ஃபைலைத் தூக்கிக் கொண்டு வந்திருந்தாள்.



'ஆஹா.....!அவரே 'யாரு வந்தாலும் வெட்டுவேன்....!' அப்படிங்கற ரேஞ்ஜ்ல இருக்காரு.....!இப்ப போய் ஃபைலைத் தூக்கிட்டு வர்றாளே......!இன்னைக்கு பலியாடு இவதான்.....!',மனதிற்குள் நினைத்தபடி அவளைப் பாவமாக ஒரு பார்வை பார்த்து வைத்தாள் நித்திலா.



நித்திலாவின் பார்வையைக் கவனித்த ரமணி,'இவ எதுக்கு இப்படி பார்த்து வைக்கிறா.....?',யோசித்தபடியே ஆதித்யனிடன் ஃபைலை நீட்டினாள்.



அவள் கொடுத்த ஃபைலை ஆராய்ந்து கொண்டிருந்தவனின் கண்களில் வந்து விழுந்தன அவள் செய்த தவறுகள்.....!ஏற்கனவே கடுப்பில் உச்சக்கட்டத்தில் இருந்தவனின் கண்களில் இந்தத் தவறு வந்து விழுந்தால்....என்ன செய்வான்......?சாமியாட்டம் ஆடித் தீர்த்து விட்டான்.



நித்திலாவின் பரிதாபப் பார்வைக்கு.....இப்பொழுதுதான் அர்த்தம் புரிந்தது ரமணிக்கு.'அடிப்பாவி.....!இதுக்குத்தான் என்னைப் பார்த்து பாவமா ஒரு லுக் விட்டியாடி......?',ரமணியின் பார்வை நித்திலாவை நோக்க...



அவளோ....'விதி வலியது.....!' என்றபடி தன் நெற்றியைத் தடவிக் காட்டி உதட்டைப் பிதுக்கினாள்.



"இன்னும் எதுக்கு இங்கேயே நின்னுக்கிட்டு இருக்கீங்க.....?ஃபைலை எடுத்துட்டு வெளியே போங்க.....!இன்னும் பத்து நிமிஷத்துல சரியான ரிப்போர்ட் என் டேபிளுக்கு வந்தாகணும்......!",அவன் உறுமிய உறுமலில் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி விட்டாள் ரமணி.....பைலை எடுத்துக் கொண்டுதான்.....!இல்லையென்றால்....ஆதித்யனிடன் அதற்கு ஒரு மாத்து வாங்க வேண்டியிருக்குமே.....!

கோபத்தில் 'டொக்...டொக்...'கென்று லேப்டாப்பை போட்டு உடைத்துக் கொண்டிருந்தவனை....மெதுவாக நிமிர்ந்து பார்த்தவள்,"ஆது.....!",என்றழைத்தாள் தயங்கியவாறே.



".........",அவனிடம் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை.



"ஆது.....!",மீண்டும் அழைக்க,



".........",ம்ஹீம்....அவனிடம் எந்தப் பிரதிபலிப்பும் இல்லை.



'சரி....!நாமே பேச ஆரம்பிப்போம்.....!நாம பேசறதை கேட்கவாவது செய்வாரல்ல....!',என்று எண்ணியபடி,



"ஆது.....!இந்தப் ப்ராஜெக்ட் சக்ஸஸ் ஆனதை நாம செலிபிரேட் பண்ண வேண்டாமா......?"அவள் கேட்ட விதத்தில்....அவனுடைய விரல்கள் இன்னும் வேகமாக லேப்டாப்பை போட்டுத் தட்ட ஆரம்பித்தன.



'அய்யோ....!அம்மா....!என் தலையில தட்டற மாதிரியே இருக்கே.....!',மனதிற்குள் புலம்பியபடியே தன் தலையை தேய்த்து விட்டுக் கொண்டவள்,



"என்ன ஆது.....?எப்படின்னு நீங்க கேட்க மாட்டீங்களா......?சரி....விடுங்க....!நானே சொல்றேன்....!நாம இந்த வெற்றியை கொண்டாடற விதமா....ஒரு பெரிய பார்ட்டி அரேன்ஞ் பண்ணலாமா.....?",ஆர்வமுடன் வினவ..



சட்டென்று அவளைத் திரும்பிப் பார்த்து உறுத்து விழித்தவன்,"முதல்ல தவிச்ச வாய்க்கு தண்ணி கொடு.....!அதுக்கு அப்புறம் ஊரான் வீட்டு இலையில கறிசோறு போடலாம்.....!",சுள்ளென்று எரிந்து விழுந்தான்.



அவன் கூறிய பாணியில் அவளுக்குச் சிரிப்புதான் வந்தது.



"ஹா....ஹா.....!தி கிரேட் பிசினெஸ் மேன் ஆதித்யனுக்கு இலை....கறிசோறுன்னு எல்லாம் பேசத் தெரியுமா....?ஹா....ஹா....!",வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தவள்....அவன் முறைத்த முறைப்பில் 'கப் சிப்'பென்று வாயை மூடிக் கொண்டாள்.



"தவிச்ச வாய்க்குத் தண்ணி என்ன.....?பாயாசமே தர்றேன்.....!",என்றபடியே தன் இருக்கையை விட்டு எழுந்தவள்.....அவனது டேபிளை நோக்கி நகர்ந்தாள்.அவன் அப்பொழுதும் அவளைக் கண்டு கொள்ளாமல்....லேப்டாப்பை முறைத்துக் கொண்டுதான் அமர்ந்திருந்தான்.



அவனருகில் வந்து நின்றவள்....கஷ்டப்பட்டு அவனை அவனது இருக்கையோடு சேர்த்துப் பின்னால் நகர்த்தி விட்டு....லேப்டாப்பிற்கும் அவனுக்கும் இடையில் வந்து நின்று கொண்டாள்.



"சொல்லுங்க.....!பாயாசம் சாப்பிட ரெடியா.....?",அவன் முகத்திற்கு வெகு அருகே குனிந்தபடி அவள் கேட்க..



'எப்ப பாரு மனுஷனை உசுப்பி விட்டு வேடிக்கைப் பார்க்கிறதே வேலையாப் போச்சு.....!',மனதிற்குள் கறுவியவன்....அவளைப் பார்த்து,"எனக்கு ஒண்ணும் வேண்டாம்......!நீ முதல்ல நகரு.....!",என்றுவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டான்.



அவன் முகத்தைப் பற்றித் தன்னை நோக்கித் திரும்பியவள்,"ஹைய்யோடா.....!இப்போ எதுக்கு என் செல்ல நாய்க்குட்டிக்கு....இவ்வளவு கோபம் வருது.....!என் நாய்க்குட்டி கேட்டு....ஒண்ணை மறுத்தரக் கூடாதே.....உடனே இந்த மூக்குக்கு மேல கோபம் வந்துடும்......",அவன் மூக்கைப் பிடித்து செல்லமாகத் திருகினாள் நித்திலா.



அவளுக்குத் தெரியும்....!ஆதித்யன் எந்த மனநிலையில் இருந்தாலும் சரி....!'நாய்க்குட்டி' என்று கொஞ்சினால் போதும்....கிளர்ந்து விடுவான்....!அதை அவள் நன்கு அறிந்து வைத்திருந்தாள்.அவளது நினைப்பை போலவே ஆதித்யனாலும்....கோபத்தை அதற்கு மேல் இழுத்துப் பிடிக்க முடியவில்லை.



ஒரு வித வேகத்துடன் அவள் கையைப் பற்றி இழுக்க....அவள் பூம்பொதியாய் வந்து ஆதித்யன் மடியில் விழுந்தாள்.அவள் சுதாரித்து எழும் முன்னரே....தன் இரு கைகளாலும் அவள் இடையைச் சுற்றி சிறையிட்டவன்,"தெரியுதல்ல....!நீ 'நோ'சொன்னால்....உன் நாய்க்குட்டிக்கு கோபம் வரும்ன்னு தெரியுதல்ல.....!அப்புறம் எதுக்கு டி 'நோ' சொல்ற.....?இப்போ பாரு....!உன் நாய்க்குட்டிக்கு கோபம் வந்து உன்னைக் கடிச்சு வைக்கப் போகுது.....!",என்றபடி அவள் கன்னத்தை கடித்து வைக்க...



"ஆ....!",செல்லமாக அலறியவள்,"என் நாய்க்குட்டிக்கு ஒரு கிஃப்ட் கொடுக்கலாம்ன்னு நினைச்சேனே.....!அது கோபமா இருக்கறதைப் பார்த்தால்....கொடுக்கலாமா....?வேண்டாமா.....?",அவன் கழுத்தைச் சுற்றி தன் இரு கைகளையும் பூமாலையாய் கோர்த்தபடி அவள் வினவ..



"இல்லல்ல....!உன் நாய்க்குட்டிக்கு கோபமெல்லாம் ஓடி போயிருச்சு.....!என்ன கிஃப்ட்......?",காதோரம் சீறலான மூச்சோடு ஒலித்த அவன் குரலே.....அவளை வேறு ஒரு உலகத்திற்கு அழைத்துச் சென்றது.



"அது....என்ன கிஃப்ட்டுன்னா....",ராகம் போட்டபடியே அவன் பின்னந்தலையைப் பற்றி அவன் முகத்தை....தன் முகத்திற்கு வெகு அருகே இழுத்தவள்,"அன்னைக்கு கொடுத்த பனிஷ்மெண்ட்டை ரத்து பண்ணிடலாம்ன்னு இருக்கேன்.....!எப்படி.....?",ரகசியமாய் தன் புருவத்தை உயர்த்த..



அவனோ....சொக்கிப் போனான்."ஐ லவ் திஸ் கிஃப்ட்.....!",பிதற்றியபடியே....அவள் கழுத்து சரிவில் முகம் புதைத்தான்.அவளோ....அவன் தலைமுடியை இறுகப் பற்றியபடி....அவனுக்கு வாகாக வளைந்து கொடுத்தாள்.



அவளது கழுத்து சரிவில் சூடான முத்தங்களைப் பதித்துக் கொண்டே முன்னேறிய அவனது உதடுகள்....அவள் நெஞ்சுக்குழியை வந்தடைந்ததும்....அங்கு ஒரு அழுத்தமான முத்தம் வைத்து விட்டு....ஆழமாக அங்கேயே புதைந்து கொண்டது.



இதுவரை தீண்டாத இடத்தில்....அவனுடைய உதடுகள் முதன் முறையாக ஊர்வலம் நடத்தவும் அவள் கிறங்கிப் போனாள்....!அவளது கரங்களோ....பற்றுக்கோலாய் அவனது தலைமுடியை இறுகப் பற்றிக் கொண்டன


அவளது நெஞ்சுக்குழியில் தனது முகத்தைப் புரட்டியவன்....அவளது பெண்மையின் சுகந்தத்தை நுகர்ந்தவனாய்,"மயக்கற டி......!",என்றான் உளறலாக.அவனது கரங்கள்....அவளது மேனியில் தங்களுக்கு மிகவும் பிடித்த இடமான....அவளது இடையைத் தேடி தஞ்சமடைந்தன....!



அவனது உதடுகள்....தனது நெஞ்சுக்குழியில் ஏற்படுத்திய குறுகுறுப்பில் ஒரு கணம் சிலிர்த்து அடங்கியவள்,"நீதான் டா மயக்கற.....!வசியக்காரா.....!",மெல்ல அவள் இதழ்கள் முணுமுணுத்தன.



அவளது முணுமுணுப்பைக் கேட்டு மென்மையாக புன்னகைத்தவனின் உதடுகள்....அவளது நெஞ்சுக்குழியில் எதைத் தேடியதோ....தெரியவில்லை.....!தன் முகத்தை அப்படியும்....இப்படியும் புரட்டி தேடிக் கொண்டிருந்தவனுக்கு....அவன் தேடிய பொருள் கிடைக்கவில்லை போலும்.....!அதைவிட....அவனது தேடலுக்கு அவள் அணிந்திருந்த துப்பட்டா பெரும் தடையாக இருந்தது போலும்.....!"ப்ச்....!",என்று சலித்தபடி...அவனது கரங்கள்.....அவளது துப்பட்டாவை புறக்கணிக்க ஆரம்பித்தன....!



அதுவரை அவனது உதடுகளுக்கும்....கைகளுக்கும் சுதந்திரம் அளித்திருந்தவள்....அவன்....தனது துப்பட்டாவை விலக்க ஆரம்பிக்கவும்....சட்டென்று விழித்துக் கொண்டாள்.



அவனது முகத்தை தனது நெஞ்சுக்குழியில் இருந்து வலுக்கட்டாயமாக பிரித்தெடுத்தவள்,"நோ....!",என்று தலையாட்ட...



"ப்ச்.....!ஏண்டி.....?",சிறிது சலிப்போடு ஏமாற்றமும் கலந்து வந்தது அவன் குரலில்.



எதுவும் பேசாமல் தன்னையே இமைக்காது நோக்கிய அவளது பார்வையில் எதைக் கண்டானோ,"நான் ஒண்ணும் தப்பா பண்ணல.....!நான் போட்டு விட்ட செயினைத்தான் தேடினேன்....!ஐ நோ மை லிமிட்ஸ்......!",என்றான் அமைதியான குரலில்.



இருவருக்குள்ளும் சிறிது நேரம் அர்த்தமற்ற அமைதி நிலவியது.முதலில் அமைதியைக் கலைத்தது நித்திலாதான்....!



தன் சுடிதாருக்குள் ஒளிந்திருந்த செயினை எடுத்து வெளியே போட்டபடி,"என்னுடைய ஆது....அவனுடைய பேபியோட நெஞ்சுக்குழியில ரொம்ப பத்திரமா இருக்கான்.....!இதைத்தானே பார்க்கணும்ன்னு சொன்னீங்க.....!போதுமா....?",சிறு குழந்தையை சமாதானப் படுத்தும் தொனியில் அவள் வினவ...



"ம்ம்....!",என்றபடி அவளை மென்மையாக அணைத்துக் கொண்டான் அவன்.



அந்தப் பிடிவாதாக்காரனின் கைகளும்....உதடுகளும் சிறிது நேரம்தான் அமைதியாக இருந்தன.அதன் பிறகு.....வழக்கம் போல் தனது வேலையை காட்டத் துவங்கி விட்டன....!



அவளது தோள் வளைவில் சமர்த்தாய் புதைந்திருந்த அவனுடைய உதடுகள்....மெல்ல அவளது காதுமடலில் குறுகுறுப்பை ஏற்படுத்தியபடி....அவளது கன்னத்தை நோக்கித் தனது பயணத்தைத் தொடர....அவனது கரங்களோ...அவளது மேனியில் அலைபாய ஆரம்பித்தது.



அவன் கைகளின் மேல்....தனது கையை வைத்து அவன் கரங்களின் இயக்கத்திற்கு தடை போட்டபடி,"இப்போத்தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி....யாரோ சொன்னாங்க.....!ஐ நோ மை லிமிட்ஸ்ன்னு....!அவங்க யாருன்னு உங்களுக்குத் தெரியுமா ஆது.....?",வேண்டுமென்றே அவனை சீண்ட..



அவள் கைகள் போட்ட தடையை வசியப் புன்னகையுடன் கடந்து சென்றவன்,"இப்பவும் அதையேதான் சொல்றேன் பேபி.....!ஐ நோ மை லிமிட்ஸ்.....!எல்லைங்கிறது என்ன....?நாமே உருவாக்கிக்கறது தானே.....?",என்றவன்....அவள் காதோரத்தில் தனது உதடுகளைக் கொண்டு சென்றபடி,"யூ நோ ஒன்திங்க் பேபி.....!எவ்ரிதிங் இஸ் ஃபேர் இன் லவ் அண்ட் வார்.....!அண்ட்...லவ் இஸ் ஆல்சோ லைக் அ வார்.....!",என மெல்ல முணுமுணுத்தான்.



அவளை சாய்ப்பதற்கு அவனுடைய அந்தக் கிறக்க குரலே போதுமானதாக இருந்தது."ரௌடி....!காதல் ரௌடி.....!",கிசுகிசுத்தபடி அவளது இதழ்கள் அவனது நெற்றியில் ஒரு முத்தம் வைத்தன.



"நோ பேபி.....!இன்னும் அங்கே....இங்கேன்னு கொடுத்து கொடுத்து உன் முத்தத்தை வேஸ்ட் பண்ணாதே......!நவ்....லெட் மீ டீச் யூ ஹவ் டூ கிவ் அ காலேஜ் கிஸ்.....!",மயக்கத்துடன் அவன் உதடுகள்....அவளது இதழ்களை நோக்கி முன்னேற...



அவனை விட்டு சற்று பின்னால் சாய்ந்தவள்,"என்ன...?காலேஜ் கிஸ்ஸா.....?",என்று முழிக்க...



"ம்ம்....!நீ கொடுத்ததுக்கு பேரு L.K.G கிஸ்.....!இப்போ....நான் உனக்கு கொடுக்கப் போறதுக்கு பேரு....காலேஜ் கிஸ்.....!",அவள் இரு கன்னங்களையும் தாங்கி தன் பக்கம் இழுத்தான் அந்த வசியக்காரன்.



இரு உதடுகளும் உரசிக் கொள்ளும் நேரத்தில்....சட்டென்று தன் கையை இருவருக்கும் இடையில் வைத்து....அவன் முயற்சியைத் தடுத்தவள்,
 

Nirmala Krishnan

Saha Writer
Messages
76
Reaction score
13
Points
6
"ஆது.....!அமெரிக்கா ப்ராஜெக்ட் சக்ஸஸை செலிபிரேட் பண்ணற மாதிரி....நம்ம கம்பெனி சார்பா....பார்ட்டி அரேன்ஜ் பண்ணலாம்ன்னு சொன்னேன்ல.....?அதுக்கு நீங்க ஒண்ணுமே சொல்லல.....?",அப்பாவியாய் அவள் வினவ....அவன் கடுப்பாகிப் போனான்.



இருந்தும் பொறுமையை இழுத்துப் பிடித்தபடி,"பார்ட்டி என்ன பேபி.....?உன் இஷ்டப்படி என்ன வேணும்னாலும் அரேன்ஜ் பண்ணிக்கலாம்.....!இப்போ....என்னை செலிபிரேட் பண்ண விடு.....!",பொறுமையாய் கூறியபடி....அவள் இதழ்களை நோக்கி குனிய..



இதோ....அதோ....என்று இரு உதடுகளும் சங்கமிக்கும் நேரத்தில்....அவள் மீண்டும்,"ஆது.....!",என்று கத்தினாள்.



கொலைவெறியாகிப் போனவன்,"என்ன டி.....?",என்று பல்லைக் கடிக்க...



அவளோ..."நேத்து நைட் பத்து மணிக்கு நான் உங்களுக்கு போன் பண்ணினேனே.....?நீங்க ஏன் அட்டெண்ட் பண்ணல......?",அவனது சட்டைக் காலர் பட்டனை திருகியபடி அதிமுக்கியமான கேள்வியை கேட்டு வைத்தாள்.



"அடிப்பாவி....!கேள்வி கேட்கிற நேரமாடி இது.....?",அவன்....அவளை நோக்கி ஒரு பாவமான பார்வையை வீச..



"எதுக்கு ஆது இப்படி பார்க்கறீங்க.....?சொல்லுங்க....!ஏன் அட்டெண்ட் பண்ணல.....?",அவள் தன் பிடியிலேயே நிற்க...



ஒரு பெருமூச்சை எடுத்து விட்டுத் தன் பொறுமையைத் தக்க வைத்தவன்,"இங்கே பாரு பேபி.....!இட்ஸ் நாட் அ டைம் ஃபார் ஆஸ்க்கிங் கொஸ்டின்ஸ்.....!இட்ஸ் அ டைம் ஃபார் ரொமான்ஸ்....!நோ மோர் டாக்கிங்....!ஒகே.....?",சிறு குழந்தைக்கு எடுத்துச் சொல்வது போல் அவன் எடுத்துக் கூற..



அவனது பேபியோ,"நோ ஆது....!நீங்க முதல்ல எனக்கு பதில் சொல்லுங்க.....!",என்று நிஜமாகவே சிறு குழந்தையாய் மாறி அடம் பிடித்தாள்.



அவள் சிணுங்கும் போது....அவளது இதழ்களும் அழகாகக் குவிந்து....விரிந்து அவனை இம்சைப்படுத்த....அந்த இதழ்களை சுவைக்க முடியாத கடுப்பில்...."தண்ணியடிக்க போயிருந்தேன்....!போதுமா.....?",என்று உண்மையை உளறினான்.



அவ்வளவுதான்....!அவன் வாயில் பட்டென்று அடித்தவள்,"ச்சீ....!ராஸ்கல்....!சரக்கெல்லாம் அடிப்பியா....?த்தூ....கருமம்.....!",முகத்தை சுளித்தாள் அவள்.



அப்பொழுதுதான்....அவனுக்குத் தான் உண்மையை உளறியது உரைத்தது.



"சரக்கெல்லாம் அடிக்க மாட்டேன் டி....!ஒன்லி ஃபாரின் ட்ரிங்க்ஸ் தான்.....!",அவளை சமாதானப்படுத்துகிறேன் பேர்வழி என்று....மேலும் அவள் கோபத்தை தூண்டி விட்டான்.



"ஃபாரின் ட்ரிங்க்ஸா இருந்தால் என்ன.....?நாட்டு சரக்கா இருந்தால் என்ன.....?எல்லா கருமமும் ஒண்ணுதான்.....!தண்ணியடிக்கறவனுக்கெல்லாம் நோ கிஸ்.....!போடா....!",அவள்....அவன் பிடியிலிருந்து எழ முயற்சிக்க..



அவளை எழ விடாமல் தடுத்தவன்,"டேய்.....!குட்டிம்மா.....!நான் ஒண்ணும் தினமும் தண்ணியடிக்க மாட்டேன் டா....!எப்போவாவது.....வொர்க் பிரஷ்ஷர்ல டென்க்ஷனாகும் போதுதான் குடிப்பேன்.....!அதுவும் அளவாகத்தான் டா.....!"கொஞ்சிக் கெஞ்சி சமாதானப்படுத்தினான் அந்தக் காதலன்.



அவனது குட்டிம்மா அப்பொழுதும் சமாதானமாகாமல்,"அப்படி என்ன நேத்து உங்களுக்கு வொர்க் டென்க்ஷன்....?",என்று முறைத்தாள்.



"எனக்கெல்லாம் எந்த வொர்க் டென்க்ஷனும் இல்லை டா....!கெளதம் தான் மனசு சரியில்லைன்னு கூப்பிட்டான்.....!பாவம்....!அவனுக்காக நான் கம்பெனி கொடுத்தேன்.....!அவ்வளவுதான்....!",அவன் பரிதாபமாகக் கெஞ்ச..



அவனது மனசாட்சியோ,'அடப்பாவி.....!நீ கெளதமுக்காகன்னு சொல்லிட்டு....அவனுக்கு கம்பெனி மட்டுமா கொடுத்த.....?உன்னுடைய கோட்டான்னு சொல்லி....முழு பாட்டிலையும் காலி பண்ணிட்டுத்தானே டா வெளியே வந்த.....?",என்று அவனைப் பார்த்து கேள்வி கேட்க....தன் மனசாட்சியை எப்படி அடக்குவது என்று தெரியாமல் அவன் திருதிருவென முழித்தான்.



அவனது திருட்டு முழியில் இருந்தே அவனைக் கண்டு கொண்டவள்,"பொய் சொல்லாதீங்க.....!சும்மா கம்பெனி மட்டும் கொடுக்கலைன்னு....உங்க திருட்டு முழியே சொல்லுது.....!நீங்க கெட்டுப் போறதும் இல்லாம.....என் அண்ணனையும் கெடுக்கறீங்களா.....?",அவள் கத்த...



'அவளிடம் வசமாக மாட்டிக் கொண்டோம்....!' என்ற உணர்வில் அவனும் கத்தினான்.



"நான் ஒண்ணும் உங்க அண்ணனைக் கெடுக்கல....!நேத்து...தண்ணியடிக்க போலாமான்னு கேட்டதே உன் அண்ணன்தான்.....!",



"அவரு கூப்பிட்டா....உடனே போயிடுவீங்களா.....?ஒரு நல்ல ஃபிரெண்டா இருந்து அட்வைஸ் பண்ணியிருக்க வேண்டாம்.....?இங்கே பாருங்க ஆது.....!இதெல்லாம் நல்ல விஷயம் இல்ல....!உடம்புக்கு ரொம்ப ரொம்ப கெடுதல்.....!",அவள் அமைதியாகக் கூறவும்....அவன் சற்று தளைந்து போனான்.



"நான் எப்போவாவது ஒருநாள்தான் குடிப்பேன் பேபி.....!நீ சொன்னதுன்னால இனிமேல்....அதையும் குறைச்சிக்க பார்க்கிறேன்.....!ஒகே வா....?",



"ம்...!தட்ஸ் மை குட் பாய்.....!",அவனது தலைமுடியை செல்லமாக கலைத்து விட்டாள் அவள்.



"ம்ம்....உன்னுடைய எல்லா கேள்விகளும் முடிஞ்சுதா.....?இனி நாம நம்ம வேலையை பார்க்கலாமா....?",அவன் தன் ஆள்காட்டி விரலால் அவள் இதழ்களை வருடியபடியே கேட்க..



"எங்கே சுத்தினாலும்....காரியத்துல கண்ணா இருப்பீங்களே.....?",போலியாக அவள் இதழ்கள் சலித்துக் கொண்டாலும்....அவள் விழிகள்....அவனது முத்தத்தை எதிர்பார்த்து தானாக மூடிக் கொண்டன.



மெதுவாக அவன்....அவள் இதழ்களை நோக்கி குனிய....இருவரின் இதழ்களும் தங்களது இணையை எதிர்பார்த்து வேட்கையுடன் காத்திருக்க....இரு அதரங்களும் உரசிக் கொண்டு காதல் தீயை பற்ற வைக்கப் போகும் நேரத்தில்....சடாரென்று கதவைத் திறந்து கொண்டு ஒருவன் உள்ளே நுழைந்தான்.



வேறு யாராக இருக்க முடியும்.....?எப்பொழுதும் போல்....இப்பொழுதும் பூஜை வேளை கரடியாக உள்ளே நுழைந்தது....ஆதித்யனின் ஆருயிர் நண்பன் கௌதமேதான்....!



வந்தவன் அவர்கள் இருந்த நிலையைப் பார்த்து விட்டு....அமைதியாகத் திரும்பியும் போகாமல்,"டேய்.....!என் தங்கச்சியை என்னடா பண்ணிக்கிட்டு இருக்க....?",உச்சக் குரலில் கத்தியபடி...தன் கையில் இருந்த ஃபைலை தொப்பென்று கீழே போட்டான்.



இவன் கதவைத் திறந்த வேகத்திலேயே....ஆதித்யனிடமிருந்து பதறியடித்துக் கொண்டு விலகியவள்....கெளதம் கத்திய கத்தலில்....பத்தடி தள்ளி நின்று கொண்டாள்.



ஆதித்யனின் நிலையை சொல்லவும் வேண்டுமா.....?வார்த்தைகளால் விவரிக்க முடியாத உட்சபட்ச கொதிநிலையில் இருந்தவன்....அதை விட ஆக்ரோஷமாய் தன் நண்பனை முறைத்துப் பார்த்தான்.



"அடேய் கிராதகா.....!நீயெல்லாம் ஒரு பிரெண்டா டா.....?வந்ததுதான் வந்த....சரி...!எங்க நிலைமையைப் பார்த்துட்டு அப்படியே திரும்பிப் போய் தொலைஞ்சிருக்க வேண்டியது தானே....?அதை விட்டுட்டு....எதுக்கு இப்படி கத்தித் தொலைக்கிற....?எனக்கு நல்லா வந்துரும் வாய்ல.....!",அதற்கு மேல் அவன் என்ன பேசியிருப்பானோ..



அதற்குள் தன்னை சுதாரித்துக் கொண்ட கெளதம்,"நோ...!நோ டா மச்சான்.....!தங்கச்சி முன்னாடி நோ பேட் வோர்ட்ஸ்.....!",கையை நீட்டித் தடுக்க..



"மண்ணாங்கட்டி.....!",கொலைவெறியுடன் ஆதித்யன் தன் நண்பனைப் பார்த்து பல்லைக் கடிக்க....அவன் பார்வையிலிருந்தே கௌதமிற்கு புரிந்தது....'அவன் என்னென்ன பாசமான வார்த்தைகளை உபயோகித்து...தன்னை மனதிற்குள் திட்டிக் கொண்டிருக்கிறான்....'என்று....!



'நட்பில் இதெல்லாம் சகஜம் ப்பா....!',மனதிற்குள் நினைத்தபடி....ஆதித்யனின் பாசமான வார்த்தைகளை ஒதுக்கித் தள்ளியவன்....கீழே குனிந்து தன் கையிலிருந்து நழுவிய பைலை எடுத்துக் கொண்டு....ஆதித்யனுக்கு முன்னால் போடப்பட்டிருந்த இருக்கையில் வந்து சட்டமாக அமர்ந்து கொண்டான்.



அத்தோடு நில்லாமல்....ஓரமாக நின்றபடி...'என்ன செய்வது....?'என்று தெரியாமல் பதட்டப்பட்டுக் கொண்டிருந்த நித்திலாவைப் பார்த்து,"நீ ஏன் அங்கேயே நிற்கிற ம்மா....?இங்கே வந்து உட்காரு.....!",தனக்கு அருகில் இருந்த இருக்கையை சுட்டிக் காட்டி விட்டு....தன் நண்பனைப் பார்த்து...."அப்பறம்....?",என்ற கேள்வியை வேறு கேட்டு வைத்தான்.



ஆதித்யனின் கோபமோ தனது உச்சக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.



"டேய்....!இப்போ எதுக்கு டா என் முன்னாடி வந்து....என் வாயைப் பார்த்துட்டு உட்கார்ந்திருக்க.....?எழுந்திருச்சு வெளியே போய்த் தொலை டா.....!",வார்த்தைகள் பற்களுக்கு இடையில் அரைபட்டு சிக்கி சின்னாபின்னமாகி வெளி வந்தன.



நண்பனின் முறைப்பை ஒரு தூசியைத் தட்டுவது போல் தட்டி விட்டவன்,"உங்க காதல் கதையை நான் கேட்க வேண்டாமா.....?எத்தனை நாளா இது ஓடிக்கிட்டு இருக்கு....?தி கிரேட் பிசினெஸ் மேன் ஆதித்யனே காதல் வலையில விழுந்திருக்கிறான்....அப்படின்னா.....அந்தக் காதல் கதை எவ்வளவு சுவாரசியமா இருக்கும்.....!கமான்....!டெல் மீ......!",ஏதோ கதை கேட்பவன் போல்....தன் இரு முழங்கைகளையும் டேபிளில் ஊன்றி....அதில் தன் தாடையைப் பதித்தவாறு அவன் கேட்க....ஆதித்யனோ அவனைப் பார்த்து புசுபுசுவென முறைத்தான்.



இருவரையும் பார்த்த நித்திலாவிற்கு சிரிப்புதான் வந்தது.அதிலும்....ஆதித்யனின் நிலையை எண்ணும் போது அடக்க மாட்டாமல் சிரிப்பு வெடிக்க....'க்ளுக்'கென்று சிரித்து வைத்தாள்.



இப்பொழுது ஆதித்யனின் முறைப்பு நித்திலாவின் பக்கம் திரும்பியது.



"உனக்கு என்னடி சிரிப்பா இருக்கா....?",அவன் பல்லைக் கடிக்க,



"டேய்....!இப்போ எதுக்கு என் தங்கச்சியை திட்டற......?பேச்சுவார்த்தை உனக்கும் எனக்கும் மட்டும்தான்....!கமான்....!உன்னுடைய முரட்டுத்தனமான காதல் கதையை பத்தி சொல்லு.....!",கௌதம் குறுக்கே புகுந்து வினவினான்.



நித்திலாவோ,"அது எப்படி அண்ணா....முரட்டுத்தனமான காதல் கதைன்னு இவ்வளவு கரெக்ட்டா சொல்றீங்க.....?",என்று விழி விரிக்க,



"இதெல்லாம் ஒரு பெரிய மேட்டரா ம்மா.....?ஆதித்யனோட மறு உருவமே....முரட்டுத்தனம்தானே.....?இவனுடைய காதல்ல பிடிவாதமும்....முரட்டுத்தனமும் இல்லாம இருந்தால்தான் ஆச்சரியம்....!"சிரித்தான் கௌதம்.



"சரியா சொன்னீங்க அண்ணா.....!சரியான ஹீ மேன்.....!",நித்திலாவும் அவனோடு இணைந்து ஆதித்யனை கலாய்க்க....இங்கு ஆதித்யனுக்கு காதில் புகை வராத குறைதான்....!



"ரெண்டு பேரும் கொஞ்சம் நிறுத்தறீங்களா.....?",என்று கத்தியவன்....கௌதமிடம் திரும்பி,"டேய்....!உனக்கு இப்போ என்ன தெரியணும்....?நானும்....உன் தங்கச்சியும் எப்போ இருந்து லவ் பண்ண ஆரம்பிச்சோம்ன்னு தெரியணும்.....!அவ்வளவுதானே.....?அதை இன்னொரு நாளைக்கு சொல்றேன்.....!இப்ப....என்ன விஷயமா என்னை பார்க்க வந்த.....?அதைச் சொல்லு.....!",என்று வினவினான்.



'பாவம்....!நண்பன்.....!ரொம்பவும் கடுப்பாகிட்டான்.....போதும்....!அவனை இன்னொரு நாளைக்கு பார்த்துக்கலாம்.....!',மனதிற்குள் நினைத்துக் கொண்டவன்..



"சரி டா மச்சான்....!நீ இவ்வளவு கெஞ்சிக் கேட்கறதுனால போனா போகுதுன்னு விடறேன்.....!இப்போ நான் எதுக்கு வந்தேன்னா....இதோ இந்த பைல்ல உன் கையெழுத்து வேணும்....!",என்றபடி தான் கொண்டு வந்திருந்த பைலை அவன் முன் நீட்ட..



ஒரு தொழிலதிபனாய் மாறி அந்த பைலை ஆராய்ந்து விட்டு தன் கையெழுத்தைப் போட்டு அவனிடம் திருப்பிக் கொடுத்தான்.



"ஒகே டா....!பாய்....!",என்றபடி எழுந்த கெளதம்..



நித்திலாவிடம் திரும்பி,"இவன் ஏதாவது வம்பு பண்ணினா....இந்த அண்ணன் கிட்ட சொல்லும்மா.....!நான் அவனை கவனிச்சுக்கிறேன்....!",என்று குறும்புடன் உரைத்து விட்டுத்தான் வெளியேறினான்.



அவன் வெளியேறியதுதான் தாமதம்.....!இங்கு....ஆதித்யன்,"ஹப்பா....!ஒரு வழியா எல்லா டிஸ்டர்பன்ஸும் முடிஞ்சுது....!நீ ஏண்டி தள்ளி நிற்கிற....?",நிம்மதி பெருமூச்சு விட்டபடி அவள் கையைப் பற்றி இழுக்க...



அவன் கைகளுக்கு அகப்படாமல் விலகி நின்றவள்,"ஹலோ பாஸ்.....!டைம் ஓவர்....!இட்ஸ் அ டைம் ஃபார் லன்ச்....!",ராகமாக இழுத்துக் கூறியபடி....தன் கைப்பையை எடுத்துக் கொண்டு வெளியே ஓடிவிட்டாள் நித்திலா.


வழக்கம் போல் அவன் உதடுகள் "ராட்சசி...!",என்று முணுமுணுத்தாலும்....அவள் செய்கையை ரசித்தபடி ஒரு புன்னகையை சிந்தவும் தவறவில்லை....!



அகம் தொட வருவான்....!!!
 

Nirmala Krishnan

Saha Writer
Messages
76
Reaction score
13
Points
6
அத்தியாயம் 45 :



"ஏகாந்த நினைவும்
எரிகின்ற நிலவும்
என் மேல் ஒரு போர் தொடுக்க....!",




கௌதமின் அறையில் ஜன்னலருகே நின்றபடி ஏக்கமாய் பாடிக் கொண்டிருந்தாள் சுமித்ரா.அவள் மனதில் வேதனை சூழ்ந்திருந்தது.நேற்றிலிருந்து...'கெளதம் தன்னிடம் ஒழுங்காக முகம் கொடுத்துப் பேசவில்லை....!',என்ற நினைவில் அவள் கண்களில் இருந்து இரு நீர் முத்துக்கள் சுரந்து கன்னங்களை நனைத்தன.



தன் தந்தையிடம்...'உங்க பொண்ணுதான் என் பொண்டாட்டி....!',என்று தைரியமாக சவால் விட்டு விட்டு வந்தவன்....இங்கு அலுவலகத்தில் அவளுடன் பேசவே மறுத்தான்....!அவளுக்குப் புரிந்தது....!தன்னை இன்னொருவன் வந்து பெண் பார்த்து விட்டுப் போனதில் அவன் கோபமடைந்திருக்கிறான் என்பதை அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது.



இருந்தாலும்....அவனுடைய பாராமுகம் அவளுக்கு ரண வேதனையைத் தந்தது.



'இன்றைக்கு என்ன ஆனாலும் சரி.....!கௌதமிடம் தன் தரப்பு நியாயத்தை சொல்லிப் புரிய வைக்க வேண்டும்....!',என்ற உறுதியோடு அவனது அறையில் காத்திருந்தாள்.



கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்த கௌதமின் விழிகளில்....சோகச் சித்திரமாய் நின்று கொண்டிருந்த சுமித்ரா வந்து விழுந்தாள்.ஜன்னலின் கம்பிகளைப் பிடித்தபடி...இவன் வருகையை அறியாதவளாய்....அநாதரவாய் நின்றிருந்தவளின் கோலம் அவன் மனதை அசைத்துப் பார்த்தது.



அவனுக்கு....அவள் மேல் கோபம் இருக்கத்தான் செய்தது.....!அதே சமயம்...எல்லையில்லாத காதலும் பொங்கிப் பெருகியது....!



சத்தம் எழுப்பாமல் கதவை சாத்தியவன்...அதன் மேலேயே சாய்ந்து நின்றபடி கைகளைக் கட்டிக் கொண்டு....தனக்கு முதுகு காட்டி நின்றிருந்த பெண்ணவளை நோக்க....அவள் அப்பொழுதுதான் அந்தப் பாடலைப் பாடினாள்...!



பாடல் வரிகளில் விரவியிருந்த ஏக்கத்திற்கு சற்றும் குறையாத ஏக்கத்தைத் தன் குரலில் பிரதிபலித்தவளைப் பார்த்தவனின் உதடுகள்....தாமாக....அந்தப் பாடலின் அடுத்த வரியைப் பாடின....அதே அளவு காதலோடு....!



"எனை வந்து தழுவு...
ஏன் இந்த பிரிவு.....?
மானே...வா...
உனை யார் தடுக்க....?",




காதலோடு ஒலித்த தன்னவனின் குரலில்....விசுக்கென்று திரும்பியவள்....அங்கு கெளதம் நிற்பதைக் கண்டு,"மாமா....!",என்ற கதறலோடு ஓடிச் சென்று அவன் நெஞ்சத்தில் விழுந்தாள்.



அவளை மென்மையாக அணைத்துக் கொண்டவன்,"ஷ்....!சுமி.....!அழாதே டா.....!இப்ப எதுக்கு அழற.....?",அவன் குரல்....அவள் காதோரத்தில் காதலாய் ரீங்காரமிட...



அவனுடைய சமாதானத்தில்,"ம்ம்....மா..மா.....!",அவள் இதழ்கள் பிதற்றியதே தவிர....அவள் அழுகை ஓய்ந்த பாடாக இல்லை.



தன் மார்பில் புதைந்து விசும்பிக் கொண்டிருந்தவளை....வலுக்கட்டாயாமாகத் தன்னிடமிருந்து பிரித்தெடுத்தவன்,"சுமி....!இப்போ அழுகையை நிறுத்தப் போறியா....?இல்லையா....?",சிறு கண்டிப்புடன் கேட்க...அந்தக் குரலுக்கு அவளிடத்தில் சற்று மதிப்பு இருந்தது.



தன் அழுகையை நிறுத்தியபடி அவனை நிமிர்ந்து பார்த்தவள்,"என் மேல இருந்த கோபம் போயிடுச்சா.....?",சிறு குழந்தையாய் அவன் முகம் பார்த்து வினவ...



அவன் தேகம் சட்டென்று விரைப்புற்றது."நீ செய்தது ஒண்ணும் சின்னக் காரியம் இல்ல....!அவ்வளவு சீக்கிரம் கோபம் குறையறதுக்கு.....!",என்றவன் அவளை விலக்கி விட்டு விட்டு சென்று தன் இருக்கையில் அமர்ந்தான்.



'கடவுளே.....!அந்தப் பேச்சை எடுத்தாலே...இப்படி இறுகிப் போயிடறாரே....!நான் எப்படி இவரை சமாதானப்படுத்துவேன்.....?",மனதிற்குள் மறுகியவள்...அவனைப் பின் தொடர்ந்தபடியே...



"நான் செய்தது தப்புதாங்க.....!அதுக்காக உங்ககிட்ட நான் பலதடவை மன்னிப்பு கேட்டாச்சு.....!இன்னும் அதையே பிடிச்சுக்கிட்டுத் தொங்குனா....என்ன அர்த்தம்.....?",



"நீ பண்ணி வைச்ச காரியத்துனால....நான் உன்மேல கோபமா இருக்கேன்னு அர்த்தம்.....!",



"ஹைய்யோ.....!கொஞ்சமாவது என்னை புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க.....!",



"நீ முதல்ல என்னைப் புரிஞ்சுக்க முயற்சி பண்ணு டி....!ஒரு ஆணா எனக்கு எப்படி இருக்குது தெரியுமா....?என் பொண்டாட்டியை....இன்னொருத்தன் உரிமையா ரசிச்சிருக்கிறான்...அப்படிங்கற எண்ணமே....ஏதோ மிளகாயை அரைத்து பூசின மாதிரியான உணர்வைத் தருது.....!



கொஞ்சம் யோசிச்சுப் பாரு.....!அன்னைக்கு வந்தவன்...'இவள்தான் நம்ம வருங்கால பொண்டாட்டி....!',அப்படிங்கற எண்ணத்துல...உரிமையா ஒரு பார்வை கூடவா பார்க்காம இருந்திருப்பான்.....?",அவன் தன் மனக்குமுறலை கொட்ட....அவள் ஸ்தம்பித்துப் போய் நின்றாள்.



சுமித்ரா....இதுவரை இப்படியொரு கோணத்தில் சிந்தித்துப் பார்க்கவில்லை....!ஏதோ....காதலில் இயல்பான பொஸஸிவ் குணம்....பிறகு அவனிடம் உண்மையைச் சொல்லாமல் தானே முடிவெடுத்ததால் கோபமாக இருக்கிறான் என்றுதான் இதுவரை நினைத்திருந்தாள்.அவன் கூறிய பிறகுதான்....அவள் செய்த தவறு அவளுக்கு உரைத்தது.



பேச மறந்தவளாய்....சிலை போல் நின்றிருந்தவளைப் புருவம் சுருங்க முறைத்தவன்,"இப்ப நான் உன்கிட்ட ஒரு கேள்வி கேட்கிறேன்.....பதில் சொல்லு டி....?நான் உன்னைப் பார்க்கிற பார்வையில எந்தளவுக்கு ஒரு உரிமை தெரியுது......?என்னுடைய பார்வை....உன்னை எந்தளவுக்கு மேயுது.....?இதே....இந்தப் பார்வையை....நான் வேற ஏதோ ஒரு பொண்ணை பார்த்து....பார்த்து வைச்சா....நீ சும்மா இருப்பியா டி.....?",என்று நியாயம் கேட்க...



"ச்சீ.....!வாயை மூடுங்க....!இது என்ன பேச்சுன்னு பேசிக்கிட்டு இருக்கீங்க....?என்னைப் பார்க்கிற பார்வையை....இன்னொரு பெண்ணைப் பார்த்தும்...பார்த்து வைப்பீங்களா.....?",அவளையும் அறியாமல்....அவள் வெடுக்கென்று எரிந்து விழுந்தாள்.



"தெரியுதில்ல.....!எனக்கும் அப்படித்தான் இருக்கும்....!",முரட்டுத்தனமாக கூறினான் அவன்.



நொடியும் தாமதிக்காமல் அவனை நெருங்கியவள்....அவனை இழுத்து தன் வயிற்றோடு அணைத்துக் கொண்டாள்.



"ஸாரிங்க.....!இப்படியொரு நிலைமைல நான் யோசிச்சுப் பார்க்கவே இல்ல....!ரியலி வெரி வெரி ஸாரி....!உங்க உணர்வை என்னால புரிஞ்சுக்க முடியுது.....!இனி எந்த ஒரு முடிவையும் உங்ககிட்ட கேட்காம....நான் தனியா எடுக்க மாட்டேன்.....!",அவன் தலை முடிக்குள் தன் விரல்களை விட்டு அளைந்தவாறே அவள் மன்னிப்பு கேட்க....



அவள் வயிற்றில் தன் முகத்தை ஆழ புதைத்துக் கொண்டவனின் மனதில் இப்பொழுது கோபம் இல்லை.அவளுடைய அருகாமையும்....அவளுடைய மன்னிப்பும்....அவனது கோபத்தை குறைந்திருந்தது.



"இனி இப்படியொரு காரியத்தை செய்யாதே டி.....!உனக்குத் துணையா எப்பவும் நான் இருப்பேன்....!நீ தனியா போராட வேண்டிய அவசியமே இல்ல.....!எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லு.....நான் பார்த்துகிறேன்....!",காதலோடு அவன் கூற....அவனை மேலும் அணைத்துக் கொண்டாள் அவள்.



..............................................................................................



"பேபி.....!உன் விருப்பப்படியே பார்ட்டி அரேன்ஜ் பண்ணிட்டேன்.....!வெள்ளைக்கிழமை ஈவ்னிங் ராயல் பேலஸ்ல பார்ட்டி அண்ட் இந்த பார்ட்டியில 'ஆதித்யன் க்ரூப் ஆஃப் கம்பெனிஸ்...' எம்ப்ளாயிஸ் அத்தனை பேரும் கலந்துக்கலாம்.....!",உற்சாகமாய் ஆதித்யன் கூற...



"வாவ்.....!சூப்பர் ஆது....!",குதூகலித்தாள் நித்திலா.



"ஆது....!இந்த பார்ட்டி அரேன்ஞ்மெண்ட்ஸ் எல்லாம் நான் பார்த்துக்கிட்டா.......?எனக்கு இந்த மாதிரி பார்ட்டி ஆர்கனைஸ் பண்றதுக்கு ரொம்ப பிடிக்கும்.....!",ஆசையாக கேட்டவளை ஏறிட்டுப் பார்த்தவன்,



"வேண்டாம் பேபி.....!அந்த வேலையெல்லாம் உனக்கு எதுக்கு.....?நம்ம மேனேஜரை பார்த்துக்க சொல்லிட்டேன்.....!",அவன் மறுக்கவும்....அவள் மீண்டும் வற்புறுத்தினாள்.



"ப்ளீஸ் ஆது....!நான் பார்த்துகிறேன்....!",



"நோ பேபி.....!பார்ட்டி ஆர்கனைஸ் பண்ணறதுன்னா ஒண்ணும் சின்னக் காரியம் இல்ல.....!அதுக்கு இதுக்குன்னு நிறைய பக்கம் அலைய வேண்டி இருக்கும்.....!நீ எதுக்கு வீணா அலையணும்.....?வேண்டாம்.....!",உறுதியாக மறுத்து விட....அவளும் அதற்கு மேல் வாதாடாமல் அமைதியாகி விட்டாள்.



"அப்புறம் பேபி.....!இந்த வாரம் உங்க அம்மா வீட்டுக்குப் போக வேண்டாம்....!பார்ட்டி இருக்கல்ல.....?",அவன் கூறவும்....அவனைத் திரும்பிப் பார்த்து முறைத்தாள் நித்திலா.



பின்னே....!அவளும்தான் முறைக்காமல் என்ன செய்வாள்.....?ஊட்டியில் இருந்து வந்த வாரமே 'ஊருக்கு கிளம்புகிறேன்....!', என்றவளை....'வேண்டாம்....!இப்பத்தானே உன் காதலை சொன்ன....?இந்த வாரமே என்னை விட்டுட்டு ஊருக்கு கிளம்பறேன்னு சொல்ற....?',அது இது என்று கூறி அவளை ஊருக்குச் செல்ல விடாமல் தடுத்து விட்டான்.



அவனுக்கு அவன் கவலை.....!அவள் ஊருக்கு போனால்....இரண்டு நாட்கள் அவளை பார்க்காமல் இருக்க வேண்டுமே....என்ற எண்ணத்தில் அவளை ஊருக்கு அனுப்பவே மறுத்தான் அந்த காதல் பைத்தியக்காரன்....!



அப்படியும் முரண்டு பிடித்தவளை,"அடுத்த வாரம் லீவ் தர்றேன்.....!போய் பார்த்துட்டு வா....!",என்று கூறி அவள் வாயை அடைத்து விட்டான்.இந்த் வாரமும் அவளைத் தடுக்க ஒரு காரணம் கிடைக்கவும்....இதுதான் சாக்கென்று அதைப் பிடித்துக் கொண்டு தொங்கினான்.



"நான் எங்க ஊருக்குப் போறதுக்கும்....பார்ட்டி நடக்கறதுக்கும் என்ன சம்பந்தம்.....?வெள்ளிக்கிழமை ஈவ்னிங் தானே பார்ட்டி......?நான் சனிக்கிழமை காலையில கிளம்பிக்கிறேன்.....!",அவனை முறைத்தபடி நித்திலா கூற...



"பார்ட்டி முடியறதுக்கே நைட் ரொம்ப நேரமாகிடும்.....!நீ ரொம்ப டயர்டாகிடுவ.....!ஸோ....இந்த வாரம் போக வேண்டாம்.....!அடுத்த வாரம் போ.....!",சப்பைக் கட்டு கட்டினான் அவன்.



"அது என் பிரச்சனை பாஸ்....!அதை நான் பார்த்துகிறேன்....!நீங்க ஒண்ணும் கவலைப்பட வேண்டாம்.....!",அவன் எப்படி பந்து வீசினாலும் சிக்ஸர் அடித்தாள் நம் நாயகி.



"பட்....லீவ் கொடுக்கறது என் பிரச்சனைதானே.....?இந்த வாரம் உனக்கு லீவ் கிடையாது......!",எப்படியாவது அவளை இங்கேயே இருக்க வைத்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் கூறினான் அவன்.



"என்ன விளையாடறீங்களா......?போன வாரம்தானே எனக்கு லீவ் தர்றேன்னு சொன்னீங்க.....?",



"அது.... போன வாரம் சொன்னது.....!இந்த வாரம் உனக்கு லீவ் கொடுக்க முடியாதுன்னு தோணுது.....!",



என்னவோ தெரியவில்லை.....!அவளை ஊருக்கு அனுப்புவதென்றால்....அவனுக்கு வேப்பங்காயாய் கசந்தது.



"இப்போ என்னதான் சொல்ல வர்றீங்க.....?",அவள் முடிவாய் கேட்க...



"நீ இந்த வாரம் ஊருக்கு போகக் கூடாது.....!",என்றான் அவன் உறுதியாக.
அவனையே சில நிமிடங்கள் இமைக்காது நோக்கியவள்....பிறகு....ஒன்றும் பேசாமல் திரும்பிக் கொண்டாள்.அவனும் தோளைக் குலுக்கிக் கொண்டு தன் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தான்.



நேரம் சென்று கொண்டிருந்ததே தவிர....அவளாக அவனிடம் பேசவே இல்லை.அவன் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் கூறிக் கொண்டிருந்தாள்.அதுவும்....வேலை சம்பந்தமான கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்தாள்.ஆதித்யனால் அவளுடைய பாராமுகத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை.



மதியம் வரைக்கும் பொறுத்துப் பார்த்தவன்....அதற்கு மேல் முடியாமல்,"உனக்கு இப்ப என்னதான் டி வேணும்....?எதுக்கு இப்படி 'உம்'முன்னு இருக்க.....?",என்று கேட்டு விட்டான்.



அவள் அப்பொழுதும் அமைதியாக....தன் சிஸ்டமையே பார்த்துக் கொண்டிருக்கவும்,"சரி....!இப்போ என்ன.....?நீ உன் அம்மா வீட்டுக்குப் போகணும்....அவ்வளவுதானே....?போய்ட்டு வா....!சனிக்கிழமையும்....திங்கட்கிழமையும் லீவ் எடுத்துக்கோ.....!போய் ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு வா.....!",பல்லைக் கடித்தபடி கடுப்புடன் அவன் கூற...



"............",அவள் அப்பொழுதும் எதுவும் பேசவில்லை.



'அவன் வேறு யாரிடமோ பேசுகிறான்....!',என்பதைப் போல் அவனைக் கண்டு கொள்ளாமல் அமர்ந்திருந்தாள்.



"அதுதான் போயிட்டு வான்னு சொல்லிட்டேன் ல....?இன்னும் ஏன் இப்படியே உட்கார்ந்திருக்க....?பேசித் தொலை....!",எரிச்சல் குறையாமல் அவன் திட்ட..



"இப்படி சலிச்சுக்கிட்டு யாரும் என்னை போக சொல்ல வேண்டாம்....!நான் எங்கேயும் போகலை.....!இங்கேயே இருக்கிறேன்.....!",முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு அவள் கூறிய விதத்தில்....அவன் முகம் மென்மையாய் மாறியது.



'என் அனுமதிக்காகத்தான் இப்படி முகத்தை தூக்கி வைச்சுக்கிட்டு உட்கார்ந்திருக்கா....!நான் சிரிச்சுக்கிட்டே வழியனுப்பி வைச்சாதான் இவ ஊருக்கு போவாள்....!',அவளை சரியாய் புரிந்து கொண்டவனின் முகத்தில் காதல் புன்னகை அரும்பியது.



"பேபி....பேபி....!சிரிச்சிக்கிட்டேதான் சொல்றேன்.....!நீ போய்ட்டு வா....!திங்கட்கிழமை வரைக்கும் அங்கேயே இருந்து....உன் அம்மா அப்பாவை நல்ல கொஞ்சிட்டு வா....!பட்...ஒன் கண்டிஷன்.....!",என்றபடி அவள் முகத்தை ஏறிட..



"என்ன கண்டிஷன்.....?",கேள்வியாய் அவன் முகத்தை நோக்கினாள் அவள்.



"நான் உனக்கு போன் பண்ணும் போதெல்லம் நீ அட்டெண்ட் பண்ணனும்....!எந்தக் காரணமும் சொல்லி அவாய்ட் பண்ணக் கூடாது.....!",



"ப்பூ.....!அவ்வளவுதானா.....?நீங்க எப்போ போன் பண்ணினாலும் மறுக்காம பேசறேன்....போதுமா.....?உங்களுக்கு நான் ஊருக்கு போறதில சம்மதம்தானே.....?",ஆர்வத்துடன் அவன் முகம் பார்த்து வினவ..



"ம்ம்...போய்ட்டு வா....!என் கண்டிஷனை மறந்திடாதே....!",அவன் சிரித்தபடியே ஞாபகப்படுத்தவும்...



"ம்ஹீம்.....!மறக்க மாட்டேன்....!",என்று தலையாட்டியவளுக்கு அப்பொழுது தெரியவில்லை.....!இவனது கண்டிஷனை ஒத்துக் கொண்டதற்கு பதிலாக...தான் சென்னையிலேயே இருந்திருக்கலாம் என்று எண்ணும் அளவிற்கு....அவன்....அவளை இம்சைப்படுத்தப் போகிறான் என்று....!





அகம் தொட வருவான்....!!!
 

Latest posts

New Threads

Top Bottom