பொழில்
சுதந்திர வேட்கை
உதிர்ந்த உயிர்கள்
செந்நிற மண்
மரண ஓலம்
கணை மாரி
அறசீற்றம்
வாளாய் நீ
சுழற்ற நான்!!!
வேலு நாச்சியார் கோட்டைக்குள் காலடி எடுத்து வைக்கும் பொழுது, யாரோ உயிரைப் பிடித்து இழுக்கும் உணர்வு. தானும் தனது கணவரும் வாழ்ந்த சீமை இப்படி வெள்ளையனின் கைப்பாவையாக இருக்கிறதே என்று எண்ணி மருகினாள். தாங்க இயலாத துன்பம் அவளை ஆட்டிப் படைக்க, அவள் மண்ணில் அமர்ந்து, அந்த மண்ணை எடுத்து தன் கண்ணங்களில் பூசிக்கொண்டாள்.
சோர்ந்திருந்த மனம் வீரத்தினை மீட்டெடுத்தது. வேகமாக எழுந்து சென்றாள் வேலு நாச்சியார்.
குயிலி மனதில் ஒரு வியடம் மட்டுமே இருந்தது. ஒரு வடிவம் மட்டுமே இருந்தது. அது வேலு நாச்சியார் அரியணையில் அமர்ந்திருக்கும் பிம்பம் மட்டுமே.
ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலின் அருகில் சென்று அம்மனைத் தரிசனம் செய்தாயிற்று. வெகு நாட்கள் கழித்து அம்மனைக் கண் குளிரக் கண்டதில் புத்துயிர் பெற்றது போல் இருந்தது உடையாள் காளி படைப் பிரிவினருக்கு. மற்ற பெண்களும் கோட்டைக்குள் வந்தனர். அனிச்சம், நளன் மற்றும் பொன்னி, கோட்டைக்குள் வந்தனர்.
கோவிலின் வலப்புறம் இருந்த ஆயுதக் கிடங்கிற்குப் பாதுகாப்புகள் அதிகமாய் இருந்தது. அந்தப் பாதுக்காப்பு வளையத்தை எவரும் தகர்க்க முடியாத வகையில் அரணாய் துப்பாக்கி வீரர்கள் நின்றிருந்தனர்.
வேலு நாச்சியாரின் மனதில் திகில் படர்ந்தது. இந்த ஆயுதக் கிடங்கை எங்கனம் அழிக்கப் போகிறோம் என்று. ஏனெனில் அது ஒன்றுதான் அவர்களின் பலம். கோட்டைக்குள் வந்திருக்கும் சொற்பப் படையினரை வைத்து நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்று நினைக்கையில் மனதில் ரயில் வண்டி தடதடத்தது. குயிலி வேலு நாச்சியிரின் எண்ணங்களை மொழி பெயர்த்துவிட்டாள். அவள் அறியாத உணர்வுகள் நாச்சியிடம் இருக்கக் கூடுமா என்ன?
சட்டென்று அவளின் மூலையில் ஒரு எண்ணம் உதித்திட, சாமி வந்தது போல் ஆட ஆரம்பித்தாள். அங்கிருந்த பெண்கள் அனைவரும் அவளைத் தாங்கிப் பிடித்தனர். விபூதியை அவள் நெற்றியில் தடவி அவளிடம் குறி கேட்டனர்.
"ஆடாத ஆட்டம் போட்டவனெல்லாம் இன்று பிணக் கோலம் பூணப் போகிறான். விடிவு காலம் வந்துவிட்டது. வராஹி தேவி வந்து வந்துவிட்டாள் அரக்கனை வதைத்து ரத்தம் குடித்திட" என்று அவள் குதியாட்டம் போட, அங்கிருந்த பெண்கள் குலவையிட ஆரம்பித்தனர்.
பூஜைப் பொருட்கள் அனைத்தையும் தன் மேல் எடுத்து கவிழ்த்துக் கொண்டாள். ஏனோ ஆங்கிலேய வீரர்கள் அனைவரும் விசித்திரமாய்ப் பார்த்திருந்தனர் இந்த ஆட்டத்தை. அவர்களுக்கு இதெல்லாம் புதிதாயிற்றே. கொஞ்சம் ஏளனமும் இருந்தது அவர்கள் பார்வையில். அம்மனுக்கு விளக்கேற்ற வைத்திருந்த நெய்யை எடுத்து தன் மேல் கவிழ்த்துக் கொண்டு ஆடினாள் குயிலி. அங்குக் காவல் புரிந்து வீரர்களின் கவனம் முழுக்க முழுக்க குயிலியின் மேல் இருந்தது. வேலு நாச்சியார் இதை அரிய சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி, போரைத் துவங்கிவிடலாம் என்று எண்ணியிருந்தாள்.
அனிச்சமும் நளனும் நிகழ்பவை அனைத்தையும் மிகவும் விசித்திரமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
குயிலி ஏதோ திட்டம் தீட்டிவிட்டாள் என்று அறிந்து கொண்ட பெண்கள் பலர், அவளைப் போல் ஆட ஆரம்பித்தனர். குயிலி மெதுவாக அங்கிருந்து நகர்ந்து ஆயுதக் கிடங்கை நோக்கி அடி மேல் அடி வைத்து செல்ல ஆரம்பித்தாள். அருகில் சென்றதும் தீப்பந்தம் எடுத்துக் கொண்டு உள்ளேயும் நுழைந்து விட்டாள். இன்னும் சில அடிகள்தான் இருந்தது... தீப்பந்தம் கொண்டு ஆயுதக் கிடங்கை அழித்து விடலாம் என்று இவள் கனவு காண, இவளைச் சுற்றி வளைத்தனர் ஆங்கிலேய வீரர்கள். அனைவரின் கைகளிலும் துப்பாக்கி. தோட்டாக்கள் இவள் உடலை சல்லடையாகத் துளைக்கத் தயார் நிலையில் இருந்தது. அந்நிலையில் கையில் இருக்கும் தீப்பந்தத்தைத் இலக்கு நோக்கி தூக்கி எரியவும் இயலாது. அவளைச் சுற்றி வளைத்த வீரர்கள் தடுத்துவிடுவர். அடுத்துக் கணக்கில்லாமல் தோட்டாக்கள் அவள் உடலைத் துளைக்கும். இன்னும் சில நொடிகளில் உயிர் துறக்கப் போகிறோம் என்று சிறிதும் அஞ்சவில்லை அவள். மாறாக ராணியின் கனவை நிறைவேற்ற என்ன செய்லாம் என்ற உத்வேகம் குடிகொண்டது மனதினில். எதிரில் இருப்பவர்களுக்கு, அவளின் கனவைப் பொசுக்கச் சில தோட்டாக்கள் போதுமென்றால், இவளுக்குக் கனவை மெய்ப்பிக்கச் சில நொடி போதுமென்று தோன்றியது. அவனுக்கு ஒரு வழி இருக்கிறதென்றால், நமக்கு ஒரு வழி பிறக்காமல் போய்விடுமா என்ன? ஆம். பிறந்துவிட்டது. இருள் சூழ்ந்திருந்த அவள் மூளையில், ஒளியொன்று தோன்றியது. அது அவள் கையில் ஏந்தியிருக்கும் தீப்பந்தத்தை விடப் பிரகாசமாய் இருந்தது. தீப்பந்ததைத் தன் மேல் வைத்துத் தன்னைத் தீக்கிறையாக்கத் திடமாய் முடிவெடுத்தாள். நெய்யும் எண்ணெயும் கொண்டு நனைந்திருந்த உடல், தோட்டாக்கள் துளைக்கும் முன்னரே பற்றிக் கொண்டு எறிந்தது. அனைவரும் சிலயெனச் சமைந்துதான் நின்றனர் ஒரு நிமிடம். ஆயுதக் கிடங்கை நோக்கி ஓடினாள் குயிலி. அவளின் இந்தச் செய்கையைச் சற்றும் எதிர்பார்க்காத வீரர்கள் திகைத்தனர். தடுக்க நின்றிருந்த வீரர்கள் செய்வதறியாமல் விலகி நின்றனர். அவர்களுக்கு உயிர் பயம் வந்துவிட்டது. உயிருடன் சாதிக்க முடியாத காரியத்தை, உயிர் கொடுத்து சாதித்து முடித்தாள். தீயின் கோர நாக்குகள் அவள் பொன்னுடல் முழுவதும் பரவி உயிர் வலியை ஏற்படுத்தினாலும், அவள் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தனது இறுதி நொடிகளைப் பயனுள்ளதாக மாற்ற, ஆயுதக் கிடங்கில் நுழைந்து அங்கிருந்த ஆயுதங்கள் அனைத்தையும் தீக்கிறையாக்கினாள். ஆயுதக் கிடங்கு வெடித்துச் சிதறியது. நரகாசுரனை அழித்துத் தீபாவளி பண்டிகை கொண்டாடிவிட்டாள் குயிலி. வெடித்ததில் பல வீரர்கள் மாண்டு போக, கோட்டைக்குள் குழப்பம் மேலோங்கிட, உடையாள் காளி படைப் பிரிவினர், மக்களைக் கோட்டையிலிருந்து அப்புறப்படுத்த ஆயத்தங்கள் செய்தனர். இன்னும் சற்று நேரத்தில் உக்கிரமான போர் தொடங்க போகிறது என்று அங்குள்ள மக்களும் அவர்களுக்கு ஒத்துழைத்தனர்.
ஆயுதக் கிடங்கு பற்றி எரியும் காட்சியைக் கண்ட நாச்சியாவிற்குப் விழிகளில் பெருமிதம் குடிகொண்டது. குயிலி நினைத்ததைச் சாதித்துவிட்டாள் என்று ஆனந்தத்தில் திளைத்தாள். குயிலி தன்னைப் பலியாக்கியது தெரிந்தால் என்ன நிகழுமோ.
கோட்டைக்கு வெளியிலும் அந்த எதாரொலி ஒலிக்க, ஆங்கிலேய வீரர்கள் திண்டாடினர். அவர்களின் ஒழுங்குநிலை கலைந்தது. கவனம் சிதறியது.
அந்தக் குழப்பங்களைப் பயன்படுத்தி, திப்பு சுல்தானின் படையினர் கோட்டைக் கதவுகளைத் தகர்த்தெறிந்தனர். நாச்சியாரின் படைகள் ஆவேசத்துடன் கோட்டைக்குள் பிரவேசித்தது. அகழியில் பசித்திருக்கும் முதலைகள் போல் இரை தேடி அலைந்தனர். குதிரை வீரர்கள் சூறாவளியாய் உள்நுழைந்து புழுதியைப் படர விட ஆங்கிலேயர்கள் சற்றுத் திணறிப் போயினர். மேலே எழும்பியிருந்த புழுதி திரையொன்றை நெய்திருந்தது. அதில் பார்க்கும் திறன் இழந்து தவித்தனர் ஆங்கிலேய வீரர்கள். அவர்களை மேலும் திணறடிக்க, வளரி பாய்ந்து உயிர்நிலையில் தாக்கியது. புரவியில் வீற்றிருந்த வீரர்களோ அணிவகுத்து சங்கிலித்தொடராய் சென்று வெள்ளையனின் தலை கொய்தனர். தோட்டாக்களில் இருந்து தப்ப குதிரையின் கடிவாளத்தை ஏற்றிப் பிடிக்க, குதிரை முன்னங்கால் இரண்டையும் தூக்கி திமிறி ஒலியெழுப்ப, தோட்டாக்கள் இலக்கை அடையவில்லை. அதற்குள் அவர்களைக் கவண் கற்கள் மாரி போல் தாக்க, நிலைகுலைந்து போயினர் ஆங்கிலேயர்கள். உடையாள் காளி பிரிவினர் பாதிக்கும் மேல் மாளிகையின் மேன் மாடத்தில் இருந்தனர். முன்பே முடிவுகட்டியிருந்ததுதான். எப்படி மேல் மாடம் செல்வது என்று தவித்திருக்க, குயிலி வழிவகைச் செய்துவிட்டாள்.
உயிரற்ற சடலங்களின் மேல் சட்டைச் செய்யாமல் குதிரைகள் பாய்ந்தோட எங்கும் குருதி வெள்ளம். மரண ஓலங்கள் எதிரொலி செய்ய, இரவு பொழுது காளி அவதாரம் எடுத்தது போல் இருந்தது. காலாட்படை வீரர்கள் ஒருபுறம் கோட்டைக்குள் வில்லையும் வேலையும் கொண்டு எதிரியின் நெஞ்சினைப் பதம் பார்த்தனர். கோட்டை இப்பொழுது உதிரத்தால் குடமுழுக்கு ஏற்றுக் கொடூரமாய்க் காட்சியளித்தது. கொடுத்தாயிற்று. தாபம் கொண்ட மண்ணிற்கு வெள்ளையனின் கழுத்து திருகி, உதிரம் பிழிந்து அருந்த வழி செய்து முடித்தனர்.
கோட்டையின் நிலை கண்ட நிலவும் சளைத்து களைத்துப் போனதோ? நிலா பெண் ஓடி ஒளிந்து கொண்டாள் மேகத்துக்கு இடையில். அனிச்சமும் அதே நிலையில்தான் இருந்தாள். நளனின் பின்னால் ஒளிந்து கொண்டாள். ராஜா ராஜேஸ்வரி ஆலயத்தில் தூனின் மறைவில் இருந்தனர் இருவரும். கோவில் வீரர்களின் பலத்த பாதுகாப்புடன் இருந்தது. மக்கள் அனைவரையும் அழகாக அப்புறப்படுத்தி இருந்தனர்.
வேங்கையெனச் சீறிப் பாய்ந்தாள் வேலு நாச்சியார். அவள் உடல் முழுக்க குறுதியால் அபிஷேகம் செய்யப்பட்டிருந்தது. மஞ்சள் பூசிய வதனம் முழுக்க எதிரியின் உதிரம். விழிகளின் சீற்றம் மிண்ணியது.
கொத்துக்கொத்தாய் எதிரிகளைக் கொன்று குவித்தாயிற்று. களையெடுப்பதுதான் அவளுக்குக் கைவந்த கலையாயிற்றே. காளியின் அவதாரம் எடுத்திருந்தாள் அவள். திரும்பிய திக்கெங்கும் தலைகளும் முண்டங்களும் தனித்தனியே கிடந்தது. கோட்டை முழக்க அவள் வெற்றியின் சின்னங்கள். கோட்டை வாயிலிலிருந்து அரியணை வரை அவள் செல்லும் இடங்களில் எல்லாம் தலை உருண்டது. தளபதி பாஞ்சோர் அவளிடம் சரண் புகுந்தான்.
"பஞ்சம் பிழைக்க வந்தவனுக்கு இத்தனை கர்வமா? துப்பாக்கி முனையில் ஆள்பவன் மனிதன்தானா? நாங்கள் ஆண்ட பரம்பரையடா. மாண்ட பரம்பரையாகச் சரித்திரம் எழுத நினைத்திருக்கிறாய். அதை உன் உதிரம் கொண்டே அழித்துவிட்டேன். என் மண்ணின் மைந்தர்கள் இனி அடிமை கோலம் பூண வேண்டாம். மனதினில் பயம் பேணவும் வேண்டாம். துப்பாக்கி முனையில் நாங்கள் மாண்டு போயிருக்கலாம். மாண்டு போனதால் மீளாமல் போய்விடுவோம் என்று எண்ணிய அற்ப பதரே!! மாண்டது உயிர். எங்கள் வீரம் அல்ல. உன்னால் மண்ணில் சிந்திய உதிரத்திட்டுகள் உரமாய் மாறி, என் பிள்ளைகளுக்குச் சுதந்திர வேட்கைப் புகட்டிவிட்டது. இனி சீமைக்குள் வரும் வெள்ளையனின் கதி என்னவென்று உன் வரலாறு மொழியட்டும்.... யாரங்கே. இந்த அற்பனை இழுத்துச் சிறையில் அடையுங்கள். இவனுக்கான தண்டனைகள் கலந்தாசிக்கப்பட வேண்டும். இனி அந்நியன் எவனும் இம்மண்ணில் கால் தடம் பதிக்க அஞ்ச வேண்டும்" என்று கூறிவிட்டு அரியணை நோக்கி சென்றாள்.
கணவனை இழந்து அகதி போல் ஓடிய நினைவுகள் நினைவில் தோன்றி அவளை வாட்டியது. தன் பெண் வெள்ளச்சியைக் காக்க எத்தனைப் போராட்டங்கள். அவள் மலர் கம்பளத்தில் ராணியாய் மிடுக்காய் நடந்து வந்தாள். பாதங்களில் அணிந்திருந்த சதங்கை நூபுர நாதம் எழுப்பியது.
கோட்டை முழுக்க விளக்கு ஏற்றப்பட்டது. சீமை ராணியின் ஆளுகைக்குக் கீழ் வந்துவிட்டதெனப் பறை கொட்டப்பட்டது.
கையில் கணவனின் வாள்... வெள்ளையனின் உதிரத்தால் மிண்ணியது. அவள் செல்லும் திசையில் வாளின் நுனி கோடிட்டுச் சென்றது. அரியணையில் சென்று அமர்ந்தவள், அதன் கைபிடியில் தலை சாய்த்தாள். கணவனின் மடி சாய்ந்த நிம்மதியோ இல்லை அவர் கனவு நினைவான நிம்மதியோ, வதனத்தில் முகாமிட்டிருந்த சீற்றம் தணிந்து பேரமைதிக் குடியேறியது.
படைத் தளபதிகள் அனைவரும் சபையில் இருந்தனர். குயிலியைத் தவிற.
குயிலி எங்கே என்று வினவினாள் வேலு நாச்சியார்.
ஒருவரும் மொழிய முன் வரவில்லை. சபை நிசப்தமாக இருந்தது.
"யாரங்கே... எங்கிருந்தாலும் வரச் சொல்லுங்கள் அவளை... இது சீமை ராணியின் கட்டளை என்று கூறுங்கள்" என்றாள் அதிகாரத் தொணியில். சீமை ராணி என்று கூறும் பொழுது அத்தனை கர்வம். தன் நாட்டை மீட்டெடுத்த மகிழ்ச்சி என்று அத்தனை உணர்வுகளும் கலந்திருந்தது.
அசரவையின் கஞ்சிகங்கள் படபடவென அடித்து ஓய்ந்தது.
"ஏன் அனைவரும் அமைதியாக இருக்கிறீர்கள். குயிலி எங்கே?" என்று வினவியவளின் விழிகளில் மெல்லிய பயம் எட்டிப் பார்த்தது.
குயிலியின் கறுகிப் போன உடல் வேலு நாச்சியாரின் முன் கிடத்தப்பட்டது.
அதைக் கண்ட ராணி பதைபதைத்துவிட்டாள். அது யாரென்று தெரியாதுதான். அடையாளம் தெரியாத அளவு சிதைந்திருந்தது. ஆனால் அவள் கேட்ட வினாவிற்கு விடை இதுவென்றால்.... அதற்கு மேல் சிந்திக்க முடியவில்லை.
"ஆயுதக் கிடங்கை அழிக்க........ அவள்..... இப்படி ஒரு முடிவு எடுப்பாள் என்று எதிர்பார்க்கவில்லை" என்று திக்கி திணறினாள். வார்த்தைகள் உதிர்க்க திராணியற்று மறைமுகமாக எடுத்துரைத்தாள் வீரமங்கை ஒருத்தி. உடையாள் காளி படையின் தளபதி அவளல்லவா குயிலி? குயிலியின் இழப்பு அவர்களுக்கும் பெரிய இழப்பு. அவள் அறிவின் செறிவும், ஆற்றலும்தானே படையை வழிநடத்தி சென்றது.
"ஆயுதக் கிடங்கை அழிப்பதற்கு........... அவள்.... என்ன.... செய்தாள்..?" ஏன் இப்படி? எனது குயிலியா இது?" என்று தவித்தாள் வேலு நாச்சியார். விழிகளில் இருந்து உவர்நீர் வடிய ஆரம்பித்தது. அழுவது அவளின் வீரத்திற்கு இழுக்கென்று அறிந்திருந்தாலும், கட்டுப்படுத்த இயலவில்லை. குயிலிக்கு யார் இவள்? இல்லை அவள்தான் யார் இவளுக்கு? ஏன் இப்படி ஒரு முடிவைத் தேடிக் கொண்டாள்.
ஆயுதக் கிடங்கை அழிக்க அவளையே ஆயுதமாக மாற்றி விட்டாள். ஆங்கிலேயர்களைத் திசைத் திருப்ப, பொன் தேகத்தின் மேல் நெய்யூற்றி ஞெழிகோல் கொண்டு தீமூட்டி வெடித்து சிதறிப் போனாள் ஆயுதக் கிடங்குடன்.
இதைக் கேட்டதும் அதிர்ச்சியில் எழுந்து நின்றாள் நாச்சியார். மங்கையின் மறைவைப் பற்றி அவள் கூறியது நினைவில் நிழலாடியது ராணிக்கு.
"வெள்ளையனின் தோட்டாக்கள் ஊடுருவும் சாபம் நிச்சயம் அளிக்கமாட்டேன் என்று தன் கணவனை இப்படி ஒரு செயல் புரிய வைத்திருக்கிறாள் மங்கை. அவள் மிகவும் உயர்ந்து நிற்கிறாள். என் மனதில் நீங்காமல் நின்றுவிட்டாள். அவளைக் கண்டு பொறாமை கொள்கிறது எனது நெஞ்சம்" என்றாள் குயிலி.
"குயிலி... அடி தோழி.. ஏன் இப்படி செய்தாய். என்னை ஆதரவற்று தவிக்கவிட்டு சென்றாயே? மங்கையின் முடிவை நீயும் தேடிக்கொண்டாயா? என் நிலையை நினைத்துப் பார்த்தாயா? என் சூளுரை பொய்த்துப் போகாமல் இருக்க, நீ உயிர் அளித்துவிட்டாயே? எனக்கு எளிதாக வெற்றியை அளிக்க, உன் உயிரைப் பணயம் வைத்துவிட்டாயே" என்று தவித்தாள் வேலு நாச்சியார்.
மங்கை, குயிலி என்று பெண் போறாளிகளின் உதிரத்தால் வடித்ததே இந்த ராஜ்ஜியம்.
ராணி அழுவதைக் கண்டு அனைவரும் அழுதனர். சுதந்திரம் கிடைத்துவிட்டதே என்று ஆனந்தம் கொள்ள முடியாமல் போயிற்று. ராணியை வருந்த வேண்டாம் என்று கூறவும் ஆட்கள் இல்லை. ஏனெனில் ராணியுடன் அந்தரங்க தோழியாக இருந்தவள் குயிலி மட்டுமே.
அடுத்து குயிலிக்கு ஈமச்சடங்குகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டது. அவளின் நினைவாகக் கோவில் ஒன்று எழுப்பவும் முடிவு செய்யப்பட்டது. சீமை வேலு நாச்சியாரின் கட்டுக்குள் முழுவதுமாக வந்தது. ஆங்கிலேயரின் எச்சங்கள் அழிந்து போனது.
நிகழ்ந்த அனைத்தையும் கண்ட அனிச்சம் மீண்டும் மயங்கி விழுந்தாள். அதுவும் குயிலியின் தியாகம் அவளின் மனதைக் கூராய்க் கிழித்துவிட்டது.
போரினைக் கண்ட இருவரும் மடிந்து போயினர் என்று கூறினால் மிகையாகாது. போர் என்ற வார்த்தைக்கு பொருள் அறியாதவர்கள் அனிச்சமும் நளனும். ஒரு மனிதனை இன்னொரு மனதன் ஏன் இப்படித் தாக்கிக் கொள்ள வேண்டும். அவர்கள் உலகத்தில் மனித இனம் அழிந்து கொண்டே வருகிறது. அதைக் காக்க அரும்பாடு படுகின்றனர். குழந்தைப் பிறப்பில் இருந்து எதுவும் இயல்பாய் இல்லை. அனைத்திற்கும் ஒரு சட்டம். ஒரு திட்டம். ஆனால் இங்கு இப்படி மனிதனைக் கொன்று குவிப்பதனால் என்ன நிகழ்ந்துவிடப் போகிறது.
பொன்னியின் வாயிலாக ஆங்கிலேயர்களின் ஆதிக்கங்களையும் கொடுமைகளையும் ஓரளவு அறிந்நு வைத்திருந்தனர். இருந்தாலும் இவ்வளவு கொடூரத்தை நேரில் பார்க்க திராணியில்லை அவர்களிடம் என்றுதான் கூற வேண்டும். உயிரை துச்சமெனக் கருதவும் நெஞ்சுரம் வேண்டுமே. ஆனால் அவர்கள் ஒரு உயிரை காக்க மட்டுமே போராட தெரிந்தவர்கள்.
மங்கை ஏன் இறந்தாள் என்ற வினா நெஞ்சை நாறாய் கிழித்திருக்க, அதற்கு விடை புரியும் முன்னரே குயிலி வந்து சேர்ந்து கொண்டாள்.
அதுவும் ஆயுதக் கிடங்கு வெடித்துச் சிதறும் பொழுது, அனிச்சத்தின் இதயமும் வெடித்துச் சிதறியது.
அன்னை கூறிய கனவு உலகம் இவ்வளவு கொடியதா? நீரும் நிலமும் வரமென அவள் தேடித் தவிக்க, உயிரும் உடலும் துச்சமென இவர்கள். ஒரு உயிரின் தொன்மப்படிமம் கிடைத்துவிடாதா என்று நிலம் அகழ்தெடுக்கும் அவர்கள். பல உயிர்களைத் தொல் படிமங்களாக மாற்றும் இவர்கள். என்ன சிந்தித்தாலும் இவர்களின் வேட்கையும் மனநிலையும் அனிச்சத்திற்குப் பிடிபடவில்லை. அதீத அழுத்தத்துடன் ரத்தக் குழாயில் உதிரம் பாய்ந்தோட, மயங்கி சரிந்தாள் அவள். நளன் மயங்கவில்லை. மற்றபடி அவனும் பேச்சிழந்து மூச்சிழந்து நின்று கொண்டிருந்தான்.
பொன்னழகி அனிச்சத்திற்கு முதலுதவி செய்தாள்.
கோட்டையின் நிலையைப் புடம் போட்டு விளக்க ஆதவன் உதித்தான். ஆனால் அந்தோ பரிதாபம். கோட்டை தன் கம்பீரத்தை மீட்டெடுத்திருந்தது. போரின் அறிகுறிகள் அறவே இல்லை. உயிர் துறந்த வீரர்கள் அனைவருக்கும் மரியாதை செலுத்தப்பட்டது. ஆங்கிலேய வீரர்களையும் அடக்கம் செய்தனர்.
ஒழுகும் நிலவு!!!