Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கபிலனின் நிலா - அகிலன் மு

Messages
77
Reaction score
57
Points
18
வணக்கம்... ஃபிரண்ட்ஸ் நம்ம சைட் கு ஒரு புது ரைட்டர் வந்திருக்கார், அகிலன் , இவர் பல குறும்படங்களுக்கு Screenplay எழுதியிருக்கிறார். இப்போது பொன்னியின் செல்வன் படித்த தாக்கத்தில் கபிலனின் நிலா என்ற கதையை எழுத ஆரம்பித்திருக்கிறார். அகிலனை சகாப்தத்திற்கு வரவேற்று வாழ்த்துகிறேன் 💐💐💐
 

Akilan Mu

Saha Writer
Messages
28
Reaction score
1
Points
1
என் மரியாதைக்குரிய நண்பர்களே நான்..

அகிலன், ஒரு இந்தியன் என்பதில் பெருமைப்படுபவன். தமிழ் நாட்டில் பிறந்ததில் அதிர்ஷ்டக்காரன். அளவான குடும்பம் மனைவி மற்றும் குழந்தைகளுடன், அன்பான பெற்றோர், அக்கறையுள்ள நண்பர்கள் மற்றும் ஆதரவான அக்கம்பக்கத்தினர் ஆகியோர்கொண்ட பாக்கியம் பெற்றவன். படைப்பு நடவடிக்கைகளில் ஆர்வம் - அது வரைதல், கதை சொல்லல் (இதை நான் எனது குழந்தை பருவத்திலிருந்தே தொடங்கினேன்), நடிப்பு, குறும்படங்கள் படைத்தல் மற்றும் சமூக நலனுக்காக சேவை செய்தல். இப்படி படைத்தலையும், சமூக மேம்பாட்டிற்குமான நடவடிக்கைகளையும் என் வாழ்க்கையாக இருக்க விழைபவன்!
 

Akilan Mu

Saha Writer
Messages
28
Reaction score
1
Points
1
கதை முன்னோட்டம்:

கபிலனின் நிலா - சோழச்சக்கரவர்த்தி சுந்தரச்சோழர் காலத்தில், சோழ நாட்டில் நடந்த நிகழ்வுகளும், சமகாலத்தில் தமிழ்நாட்டில் நாகர்கோவில் எனும் ஊரிலுள்ள நண்பர்கள் குழுவின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளும், நான் பார்த்து, கேட்டு அனுபவித்த வாழ்க்கையும், அந்த சரித்திர நாயகர்களுக்கும், அந்த காலத்தில் நடந்த நிகழ்வுக்கும், இந்த சமகால வாழ்வுக்குமான ஒரு அறியப்படாத இணைப்பை அவிழ்ப்பதுமாக இருக்கும் இந்த உணர்வுப்பூர்வமான காதல்கதை. அதிக நிஜங்களும், அதன் தொடர்புடைய வரலாற்று நிகழ்வுகளும் உங்களுக்கு வாழ்ந்த, வாழும் அனுபவத்தைத்தரும். நம் கதை நாயகன் கபிலன், நாயகி வெண்ணிலா இருவருக்கிடையிலும், அவர்களைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளும்தான் இந்தக் கபிலனின் நிலா!
 

Akilan Mu

Saha Writer
Messages
28
Reaction score
1
Points
1
கபிலனின் நிலா - நிகழ்வு: 1

2020 மே,. பகல் 12 மணி


மேகங்கள் களைந்த வெளிறிய வானம். கீழே பறவைக் கோணத்தில், செம்மண்ணால் சீர்படுத்திய அகன்ற மண்ரோடு. இருபுறமும் வெளிர்பச்சை நிறத்தில், பராமரிப்பின்றி காய்ந்த, வயலாக இருந்த, வறண்ட நிலங்கள். நடுவில் சிகப்பு நிற மகிந்திரா TUV300 சீரான வேகத்தில் சென்றுகொண்டிருந்தது. சாலையில் கவனமாக இருந்தார் டிரைவர்.

அளவெடுத்து தைத்ததுபோன்ற ரெடிமேட் முழுக்கைச் சட்டையும், ஃபாஸ்டிராக் வாட்சும், அணிந்திருந்தான், பின்சீட்டில் உட்கார்ந்திருந்த, கபிலன். திருத்தமாய் வெட்டிய தாடியும், கறுப்பு நிற ஃப்ரேம் மூக்குக் கண்ணாடியும், கலங்கியிருந்த கண்களை மறைக்கவில்லை.
குறுக்கே கையை நெஞ்சோடு பிணைத்திருந்தான். எகிறிக்கொண்டிருந்த இதயத்துடிப்பை நிலைப்படுத்த முயன்றானோ, என்னவோ. ஆழ்ந்த சிந்தனையில், நிலைகுத்திய பார்வையுடன், வெளியில் வெரித்தபடி இருந்தான், கபிலன்!.

அருகில், அவனுக்கு முற்றிலும் நேரெதிராக, ஆனந்த மனநிலையில் அவன் மனைவி சங்கவி. காட்டன் சல்வாரில், ஜரிகை வேலைப்பாடுடன்கூடிய புத்தாடை அணிந்திருந்தாள். அன்றைக்கு அவள் பெறப்போகும் பேர், அப்படியான பண்டிகைக் கொண்டாட்ட மனநிலையில் அவளை வைத்திருந்தது. எதிர்ப்புற ஜன்னல் வழியே கிராம வழிகளை ஆவலாக பார்த்துக் கொண்டிருந்தாள். சென்னையிலேயே பிறந்து வளர்ந்ததால், அந்தக்கிராமச் சூழல், அந்த தகிக்கும் வெயிலிலும் ரம்மியமாக இருந்தது, சங்கவிக்கு!. கபிலனின் மனநிலை அவளுக்குத் தெரிந்ததாகத் தெரியவில்லை.

"தங்ககூண்டு கிராமம் - நாகர் கோவில், நெல்லை மாவட்டம்" மங்கிப்போன மஞ்சள் நிற, பெரிய சிமெண்ட் பெயர்ப்பலகை, பெரிதாய் சிதலமடைந்திருந்தாலும், எழுத்துக்கள் பளிச்சென கவனம் ஈர்த்தன. அந்த பெயர்ப்பலகை அந்தக்கிராமச் சாலையோரம், சட்டென்று கடந்துபோனது. சலனமற்றிருந்த கபிலனின் கண்கள், கடந்து சென்ற பெயர்ப் பலகையை பரபரப்போடு திரும்பிப்பார்த்தது. அந்தப் பெயர்ப்பலகை, அவனையும் பதினான்கு வருடங்கள் பின்னால் இழுத்துச்சென்றது.
.
2006 ஜூலை, மதியம் 1 மணி

தடாலென்று பள்ளத்தில் இறங்கி நிலைதடுமாறிக் குதித்த இருசக்கர வாகனத்தை, பளீரென்ற மஞ்சள் நிற, பெரிய, புதியதாய் பொருத்திய சிமெண்ட் பெயர்ப்பலகையின் சிமெண்ட் தூணில் நேராக இடித்து நிறுத்தினான் - "தங்ககூண்டு கிராமம் - நாகர் கோவில், நெல்லை மாவட்டம்" என்ற பெயருடன்கூடிய ஊர் வழிகாட்டிப் பலகை அது.
ஒத்தையடிப்பாதை, சீர்செய்யப்படாத வரப்புபோன்ற மண்பாதை. இருபுறமும் பசேலென்ற பரந்து விரிந்த வயல்கள். பழக்கப்படாத சாலை, பின்னிருக்கையில், வெண்ணிலா!. செல்லமாய் - நிலா!. கடந்த மூன்று வருடமாய் பார்த்தும் பார்க்காமல், இருந்தும் பேசாமல், காதல்கொண்ட தன் காதலி, நிலா!. எலும்பிச்சைக் கலர், திராட்சை விழிகள், கவர்ந்திழுக்கும் சரீரம். கச்சிதமான பிங்க் நிறச்சுடிதார். கபிலனைக் காதலோடு கட்டியணைத்தபடி வந்திருந்தாள். அந்த நிலாவின் அரவணைப்பில், பரவசமாய் ஓட்டிய வண்டியை, பள்ளம் பார்க்காமல் விட்டதால், வந்த வினை அப்படி பெயர்ப்பலகையில் மோதி நிற்கவைத்தது. நல்லவேளை ஊர்ப்பெயர் பலகையில் இடித்ததால், ரோட்டோர வயலில் விழாமல் தப்பித்தனர்.

"ஏண்டா… எவ்வளவு ஆசையா, நம்ம கல்யாணத்துக்கப்புறம், நாம முதல் முதல்ல வரவேண்டிய இடத்த காமிக்கலாம்னு வந்தேன், இப்படி செஞ்சிட்டியே. எனக்கென்னெமோ இது அபசகுனமா தெரியுது. ரொம்ப சங்கடமா இருக்குடா". வருத்தத்தோடு சிணுங்கினாள், நிலா.

"சாலைன்ற பேர்ல ஒரு வரப்பு வழிப்பாதை. இதுல நீ இடுப்புல கைபோட்டுட்டு வர, நான் குதிரையில "குந்தவையோட குதூகலமாக நகர்வலம் வர்ற, வந்தியத்தேவன்" மாதிரி, பறந்துகிட்டே வண்டிய ஓட்டி, பள்ளத்துல விட்டுட்டேன். இதுல எங்கிருந்து சகுனப்பிரச்சனை வந்திச்சு". தலையில் அடித்துக்கொண்டு அவளைத் தேற்றினான், கபிலன்.

என்ன சொல்லியும், செண்டிமெண்ட் பார்க்கும் நிலா, அதைப்பின்னால் வரும் பெரும் தடையாகவே நினைத்துப் பயந்தாள். ஆனால், சீரியஸான விசயத்திலும், வரலாற்று நாயகர்களை மேற்கோள்காட்டி கேலிசெய்யும் கபிலனிடம், அதற்குமேல் வாதம் செய்யாமல், மீண்டும் வண்டியிலேறி புறப்பட்டாள்.

ஷீரடி சாய் குழந்தைகள் காப்பகம், தங்கக்கூண்டு கிராமம். அந்தக்காப்பகத்தின் உயர்ந்த வெளிச்சுவரின் பெரிய கதவு அருகே, பைக்கை நிறுத்திய கபிலனை உள்ளே வரச்சொல்லிவிட்டு முன்னால் சென்றாள், நிலா!. அந்தச்சூழல் அவனைச் சிலிர்க்கச் செய்தது. எதிரே நிமிர்ந்து பார்த்தான்.
.
கி.பி 969 - சோழ நாடு - தஞ்சாவூர்

கோட்டைச்சுவர் திறந்தது. வாயிற்காவலர்கள், வரவேற்று, வாணர்குல இளவரசர் வல்லவர் வந்தியத்தேவர் வாழ்க! வாழ்க!!. சோழசாம்ராஜ்ய இளையபிராட்டி குந்தவை வாழ்க! வாழ்க!! என வாழ்த்தி, வரவேற்றனர். விண்ணைப்பிழந்த வாழ்த்தொலிகளுக்கு நடுவே, அந்த பாடசாலையில் நுழைந்தான், வந்தியத்தேவன்!. சிற்றரசர்கள், அரண்மனை ஊழியர்கள் மற்றும் ராஜாங்க ஊழியர்களின் குழந்தைகள் பயிலும் பாடசாலை அது. குழந்தைகளின்மேல் கொண்ட அலாதிப்பிரியத்தால், அடிக்கடி வல்லவனும், குந்தவையும் அங்கே வருவதுண்டு. சக்கரவர்த்தி சுந்தரச்சோழர் ஆசியில், இளவரசர்கள் ஆதித்த கரிகாலன், மதுராந்தகன், இராஜராஜ சோழன் ஆகியோரின அரவணைப்புடன், பாடசாலை குறையில்லாமல் நடந்துகொண்டிருந்தது, அனைத்து ராஜாங்க குல வாரிசுகளை அது மேன்மைப்படுத்தியது. கரிகாலனின் அன்புக்குரிய தோழன் வல்லவன் வந்தியத் தேவன், கரிகாலனின் தங்கை குந்தவையின் காதலுக்குரியவன், அந்த பாடசாலையில் அதிக அக்கறையுடன் இருந்தான். குந்தவைக்குக் குழந்தைகளை பராமரிப்பதில் அலாதிப்பிரியம் இருந்ததும் முதல் காரணம்! வல்லவன் அங்கிருந்த பாடசாலை குழந்தைகளை, அவர்களின் நடவடிக்கைகளை கவனத்துடன் உள்வாங்கினான். பாடசாலை தலைமை குருவிடம் குழந்தைகள் கல்வி, இருப்பிட வசதி கேட்டறிந்தான். திருப்தியுற்றவனாய், அந்த வரவேற்பறை முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த ஒரு குட்டி இளவரசனை வாரிக்கொஞ்சினான், வல்லவன்!
.
2006 ஜூலை, மதியம் 3 மணி

"கபிலா… கபி...லா…". கபிலனின் தோள்பட்டையயைப் பிடித்து பதட்டத்துடன் உலுக்கினாள், நிலா. அதில் அவன் கையிலிருந்த 3 வயது குழந்தை மிரண்டது. "என்னாச்சு உனக்கு, கேக்குறதுக்கு சம்பந்தமில்லாம எதோ பதில் சொல்ற, கேக்குற?!".

"என்ன சொல்ற?, உனக்கு பதில் சொல்லிட்டும், இவங்கட்ட பேசிட்டும், இந்த குழந்தைய கொஞ்சிட்டும்தான இருந்தேன்". கபிலன் தெளிவாக பதில் சொன்னான்.

அவன் குழம்பியதாக தெரியவில்லை. நிலா குழப்பத்திலிருந்தாளா எனவும் புரியவில்லை. கபிலனுடன் இரண்டுவருடங்கள் இருந்த பழக்கத்தில், அவனை நன்கு அறிந்திருந்தாள். அதனால் அவன் நடவடிக்கைகளை பெரிதுபடுத்தவில்லை. அதைமீறி கேட்டால், அங்கே ஒரு பெரிய வாக்குவாதம் நடக்கும். அந்த காப்பகத்தில் அப்படி ஒரு சீன் வேண்டாம் என்று விட்டுவிட்டாள்.

"இவர்தான் நான் கல்யாணம் பண்ணிக்கபோரவரு, சார். நாங்க எங்க முதல் குழந்தையா, இங்க இருக்குற ஆதரவற்ற பிள்ளைகள்ள ஒரு குழந்தைய தத்தெடுத்துக்கப்போறோம். அப்புறம் நிறைய குழந்தைகளுக்கு, தேவையான எல்லாம், பணமோ, பொருளோ நாங்களே பாத்துக்கப்போறோம். இவருக்கும் என்ன மாதிரி ஆசை, கொள்கை, குணம் இருக்கு. என்னையவிட இவர் பரம்பரையா இதுபோல சமூகத்துக்காகவே வாழ்றவர்". பெருமையும், களிப்புடனும் அங்கிருந்த காப்பக மேலாளரிடம் சொல்லிக்கொண்டிருந்தாள், நிலா.

"ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. காலேஜ்ல படிக்கும்போதே, இப்படி ஒரு கொள்கை இருக்கிறதும், அத செய்றதுக்கு இப்டி அட்வான்ஸ்ட் ப்ளானிங்கும், ரொம்ப பெரிய விசயம்மா", மோலாளர் ராமலிங்கம் கரிசனமாக பாராட்டினார். நிலாவைப் பல நாட்களாக தெரியும் அவருக்கு. கபிலனை அன்றுதான் சந்தித்திருந்தார்.

"அப்போ, நாங்க வர்றோம் சார்". வித்தியாசமாக எதுவுமே நடக்காததுபோல், கபிலன் சொல்லிவிட்டு கிளம்பினான். நிலாவின் அறிமுகத்தில் அங்கிருந்த எவரும் எதையும் கேட்கவில்லை, கபிலனிடம் அல்லது நிலாவிடம்!. காம்பவுண்ட் கதவைத் தாண்டி வந்தவுடன் மீண்டும் துப்பட்டாவை தலையும், முகமும் மறைக்கச் சுற்றி, பிறை நிலவாய் கண்கள் மட்டும் தெரிய, கபிலனுடன் புறப்பட்டாள்.

நாம் கபிலனைத் தொடர்வோம்...
 

Akilan Mu

Saha Writer
Messages
28
Reaction score
1
Points
1
கபிலனின் நிலா - நிகழ்வு: 2

2006 ஜூலை, மாலை 5 மணி

கபிலனும், வெண்ணிலாவும் தங்ககூண்டு கிராமத்திலிருந்து 4 கி.மீ அருகில் இருந்த ஊருக்குத்திரும்பினர். காலனியில் நுழையும் வழியில் அவர்களை இடைமறித்தது, ஒரு மஞ்சள் நிற 'யமஹா ரே' இருசக்கர வாகனம். மறித்தவள்- நந்தினி!. பேரழகி!. அவள் கபிலனின் குழந்தைப்பிராயத்தோழி. இருவருக்கிடையிலும் மிகவும் அந்நியோன்யம். அவனிடம் எல்லா உரிமையும் எடுத்துக்கொள்வாள். அவனிடம் மிகுந்த ஈர்ப்பும் உண்டு. கபிலனுக்கும் அப்படியே!. குடும்பமாய் இருவர் வீட்டிலும் நல்ல உறவும் உண்டு. நந்தினி, வெண்னிலாவுக்கும் கல்லூரித்தோழி. அதனால் கபிலன், நிலா இருவரிடமும் சகஜமாகப் பழகுவாள், நந்தினி.

“என்னடா, என்னைய விட்டுட்டு நிலாகூடா ஊர் சுத்துறியா” என வழிமறித்தவள் கிண்டலாகக் கேட்டாள்.

“ஆமா, பார்த்திபனோட நீ சுத்துறேல”, மடக்கினான், கபிலன்.

பார்த்திபன் இருவருக்கும் கல்லூரித்தோழன். பார்த்திபனும், நந்தினியும் காதலில் விழுந்திருந்தனர். ஆதலால் கல்லூரித்தோழர்களாய் இருந்தும், நந்தினியால் பார்த்தியும், கபிலனும் ‘நேருக்கு நேர்’ விஜய்-சூர்யா போல. அடிக்கடி உரசிக்கொள்வார்கள்.

“சரி, சரி. நீங்க சண்டைய கண்டினியூ பண்ணுங்க. நான் கிளம்புறேன். யாராச்சும் பார்த்தா நான் செத்தேன், எங்கப்பாட்ட. பை டா. பை நந்து.” அவசரமாக சொல்லிவிட்டு விறு விறுவென்று நடந்துசென்றாள், அவள் வீட்டை நோக்கி.

“சரி, வா நந்து, ஒரு ரவுண்ட் போய்ட்டு வீட்டுக்குப்போலாம். உன் வண்டிய ஓரமா பார்க் பண்ணிட்டு என் வண்டியில ஏறு”. நந்தினி அவன் சொன்னபடியே செய்தாள். இருவரும் சிறுவயதிலிருந்தே ஒன்றாக படித்து வளர்ந்தவர்கள் என்பதால் அந்த காலனியில் எவரும் அவர்களை வித்தியாசமாகப் பார்ப்பதில்லை. ஆனால் இதைப்போல் நிலாவுடன் அவனால் எல்லோருக்கும் தெரிய, கூட்டிக்கொண்டு ஊருக்குள்போகமுடியாது. இருவர் வீட்டிலும் பஞ்சாயத்தாகிவிடும்.

விருட்டென்று அவனுடைய பைக்கைப் பறக்கவிட்டான். அந்த வேகத்தில் பின்னோக்கி இழுக்கப்பட்ட நந்தினி, கபிலனின் தோள்களை இறுகப்பற்றினாள். நந்தினியிடம் இருக்கும்போது எதைப்பற்றியும் கவலையில்லாமல் தன்னை மறந்து மகிழ்ந்திருப்பான், கபிலன்.

.

கி.பி 970 - சோழ நாடு - பழுவூர்

சோழராஜ்ஜியத்திலுள்ள ஒரு சிற்றரசு. சோழச்சக்கரவர்த்தி சுந்தரச்சோழரின் தனாதிகாரி மற்றும் சிற்றரசரான பெரியபழுவேட்டரையரின் கோட்டை, பழுவூர். அங்குதான் தன்னுடைய காதல் மனைவி இளையராணி நந்தினியுடன் வாசம்செய்துவந்தார். பழுவூர் அரண்மனைக்குச் செல்லும் ராஜபாட்டையை அடையும் மரங்கள் அடர்ந்த ஆற்றுவழிப்பாதையில், அந்தச் செழுமையான, தகதகவென மின்னும் தோல்களுடன், கறுப்புக்குதிரை நாலுகால் பாய்ச்சலில் ஓடிக்கொண்டிருந்தது. வல்லவன் வந்தியத்தேவன் அசாத்தியத் துணிச்சலுடனும், அளவில்லா ஆனந்தத்துடனும், பழுவூர் இளையராணி நந்தினியை பின்னால் அமர்த்தி, குதிரையை புயல்வேகத்தில் செலுத்திக்கொண்டிருந்தான். நந்தினி குதூகலமாய் அவன் தோள்களைப்பற்றி அமர்ந்திருந்தாள்!

“வல்லவரே!, சோழப்பேரரசின் தனாதிகாரியின் இளையராணியை, இப்படி ஊரறிய குதிரையில் கூட்டிக்கொண்டு சுற்றுகிறீர்களே, ஊர்மக்கள் கேட்காவிடினும், உடையவர் கேட்டாள், என்ன செய்வீர்?” - எகிரும் குதிரையில் எகத்தாளமாய்க்கேட்டாள், நந்தினி.

“ம்ம்ம்… எனக்குரியவளை இடையில் வந்த நீர் உடைமையாக்கிக்கொண்டு, என்னையே கேட்கிறீரா, தள்ளிச்செல்லும்” என்பேன் - கவலையின்றி மறுமொழி சொன்னான் வல்லவன்!

சொல்லிமுடித்த அடுத்தகணம், அவனுடைய குதிரையை அவசரமாய் இழுத்து நிறுத்தவேண்டியிருந்தது. எதிரே, குறுக்கே ஒரு தேர் வந்து மறித்தது. உள்ளேயிருந்து இறங்கினார் பெரிய பழுவேட்டரையர். உடன் அவரின் சகோதரர் சின்னப் பழுவேட்டரையர். பெரியவரின் மனமறிந்து செயல்படக்கூடியவர். தேர் குறுக்கே வந்ததால், அதிவேகக் குதிரையை நிறுத்த, அவசரகதியில் கடிவாளத்தைப் பிடித்து இழுத்தான், வல்லவன். புழுதி பறக்கப்பின்னங்கால்களை தேய்த்துக்கொண்டும், இரு முன்னங்கால்களையும் தூக்கிக்கொண்டும், எதிரே நின்ற பழுவேட்டரையரின் தேரில் மோதிநிற்பதுபோல் வெகு அருகாமையில் நிறுத்தினான் குதிரையை.

வல்லவன் அங்ஙனம் குதிரையைத்தன் தேர் அருகே நெருங்கி நின்றதை, தன் அருகில் இருந்த சகோதரனிடம் கண்ணால் காட்டிவிட்டு, வல்லவனிடம் இறங்கி வருமாறு கையால் சைகை செய்தார், பெரியவர்.

நந்தினி, பழுவேட்டரையரை கவனிக்காததுபோல் இருந்ததை, பெரியவர் கவனிக்கத்தவறவில்லை.

இளையவன் வல்லவன் வந்தியத்தேவன் அடங்காத காளையாக இருந்தான். அசராமல், பெரியவரை நோக்கி இறங்கிச்சென்றான். நந்தினி குதிரையிலேயே அமர்ந்திருந்தாள்.

“என்ன சிறுவனே! பட்டத்து இளவரசர் ஆதித்த கரிகாலனின் ஆத்ம நண்பன் என்பதால், என் இளையராணியையே, அதிலும் என்னுடைய அதிகார எல்லையில், எல்லோர் முன்னிலையிலும், குதிரையில் ஏற்றிக் குதூகல வலம் வருவாயா”. கர்ஜனையில் மிரட்டினார் பெரிய பழுவேட்டரையர்.

இளையராணியிடம் இதை முகம் பார்த்துக்கேட்கப் பெரியவருக்கு துணிவிருக்காது. கேட்டாலும் நந்தினி அதை லாகவமாய் திசைதிருப்பிவிடுவாள். ஆதலால் வல்லவனை அடக்குவதிலேயே தீர்மானமாய் இருந்தார், பெரியவர். நந்தினி அதைக்கண்டுகொள்ளாமல் இருந்தாள்.

“ஏன், இதை இளையராணியிடமே சொல்லி, இப்படி நடவாமல் தடுத்துப்பாருங்களேன்” பெருமையும், நையாண்டித்தனமுமாய், மறுமொழி உரைத்தான், வந்தியதேவன்.

மீண்டும் பெரியவர் பதிலை எதிர்பாராமல் நந்தினி அமர்ந்திருந்த குதிரையை நோக்கி நடந்தான். கடுங்கோபத்திலிருந்த பெரியவர் பல்லை நர நரவெனக்கடித்தார். நந்தினி முன் எதுவும் செய்யவியலாமல் நின்றார். உற்சாகமாய் சென்றுகொண்டிருந்த வந்தியத்தேவன் மனதை, குறுக்கே புகுந்து கெடுத்துவிட்டார், பெரிய பழுவேட்டரையர்.


.

2006 ஜூலை, மாலை 5:30 மணி


“டேய், இவன் காலனியில அவனுக்குன்னு ஒரு ஆள கரெக்ட் பண்னிட்டு, உன் ஆளையும் தள்ளிட்டுப்போயிருவான்டா. நந்தினிட்ட சொல்லி வை” - திரும்பிபோய்க்கொண்டிருந்த கபிலனைப் பார்த்து, பார்த்திபனின் நண்பன் கடுப்புடன் சொன்னான்.

“ஆமாண்டா. ஆனா அவள்ட சொன்னா வேலைக்காவாது. இவன தட்டிவைக்கனும். என்னா திமிரு பாத்தியா. அவன் பைக்ல வந்த ஸ்பீடும், பின்னாடி டயர் தேய, ஃப்ரெண்ட் டயர வீலிங் பண்ணிட்டே, என் பைக்மேல இடிக்கிற மாதிரி வண்டிய நிப்பாட்டுனான் பாத்தேல.” உடனிருந்த தன் நண்பனிடம் கடுகடுத்தான் பார்த்தி.

“ஆமடா. இன்னைக்கு நேத்திக்கில்ல. இவன் ரொம்ப நாளா இதத்தான செய்றான். நாம அவன அடிக்கடி நந்தினியோட பாக்குறோம். நீ அவள லவ் பண்ற. நம்ம காமென் ஃப்ரெண்ட்ஸ் மூலமாவும் சொல்லிப்பாத்துட்டோம். எல்லாம் தெரிஞ்சும், என்னா தெனாவெட்டா உன்னாளோட சுத்துறான் பாரு. நீயும் நேரடியா நந்தினிட்ட எதுவும் சொல்லமுடியல. சரி!, நாளைக்கு காலேஜ் ஃபைனல் டே. இவன நம்ம பசங்கள வச்சுக் காட்டு காட்டுனு காட்டிருவோம். நீ இதுல நேரடியா தலையிடாத. அப்புறம் நந்தினிக்கு நீ பதில் சொல்ல முடியாது.” - பார்த்தியின் நண்பன் உசுப்பேத்தினான்.

“என்னடா சொன்னான், பார்த்தி? என்ட பேசக்கூடாது, கூட ஊர்சுத்தக்கூடாதுன்னானா” - பார்த்திபனிடம் பேசிவிட்டு திரும்பிவந்த கபிலனிடம் கேட்டாள், நந்தினி!.

“ஆமா”

“அதுக்கு நீ என்ன சொன்ன?”

“அத உங்கிட்டயே சொல்லி, எங்கிட்ட பேசவேனாம்னு சொல்லவேண்டியதுதான” அப்டினு சொல்லிட்டு வந்துட்டேன். கபிலன் சொன்ன பதிலைக்கேட்ட நந்தினி புன்னைகைத்தாள்.

“சே.. ஜாலியா உன்கூட ஒரு லாங்ட்ரைவ் போலாம்னா, குறுக்கவந்து என் மூடயே கெடுத்திட்டான். நாம வீட்டுக்குபோகலாம், வா” - கடுப்பான கபிலன் நந்தினியின் பதிலை எதிர்பார்க்காமல், பைக்கைத் திருப்பி வந்தவழியே திரும்பிப்போனான். பின்னால் அமர்ந்திருந்த நந்தினி, பதில்சொல்லாமல் அவனுடன் சென்றாள்.

பார்த்திபனும், அவன் நண்பனும் எதிர்த்திசையில் எரிச்சலுடன் கிளம்பிப்போனார்கள்.

அடுத்தநாள், கல்லூரி இறுதி நாளில், கபிலனைப் பழிதீர்ப்பதாக கங்கணம் கட்டிக்கொண்டார்கள்.

நாம் கபிலனைத் தொடர்வோம்-2
 

Akilan Mu

Saha Writer
Messages
28
Reaction score
1
Points
1
கபிலனின் நிலா - நிகழ்வு:3
மறுநாள் வெள்ளிக்கிழமை. கல்லூரி இறுதி நாள். காலை பரபரப்பில் காலனி மக்கள். கபிலன் வீடு. கல்லூரி செல்ல ரெடி ஆகிறான், கபிலன். இயல்பாக கண்ணாடி பார்த்துத் தலை சீவித்திரும்பினால், அவனுடைய அத்தை மகன் வீட்டினுள் நுழைகிறான். கபிலனுக்கு ஆச்சர்யம்!, குழப்பம்?!.
“என்னாடா மாப்ள, திடீர்னு?
“சும்மா மச்சான். வா போலாம்”
“நான் காலேஜ் போனும்டா”
“சரி வா, நீ காலேஜ்குள்ள போற வரைக்கும் உன்கூட வரேன்.”
இன்னைக்கு லீவ் இல்லன்னு தெரிஞ்சும், ஊர்ல இருந்து வந்திருக்கானே!? யோசிச்சுட்டே அவனுடன் வீட்டை விட்டு வெளியே வந்தான்.தெருவில் இறங்கிய கபிலனுக்கு மற்றுமொரு ஆச்சர்யம்கலந்த அதிர்ச்சி!. அவன் மாப்ள தோழன் வீட்டுக்குப் பக்கத்தில், மரத்தடியில் அமர்ந்திருந்தான்!?.
“என்ன்னடா....?!” கொஞ்சம் அழுத்தமாகவே அவன் அத்தை மகனிடம் மீண்டும் கேட்டான், கபிலன்.
“சும்மாதான் மச்சான். வா, போலாம்”
மாப்ள எதோ ப்ளானோட வந்திருக்கான்.. என்னவா இருக்கும்?! யோசித்துக்கொண்டே நடந்தான், கபிலன், அவர்களுடன்.
கல்லூரி செல்லும் காலனி மெயின் ரோடு. ஒவ்வொரு 10அடிக்கும் ஒருவரென, அவன் கிராமத்து நண்பர்கள் அவனுடன் சேர்ந்துகொண்டே இருந்தார்கள். 20 பேருக்குமேல்!
“என்ன மாப்ள, என்னடா இவ்ளோ பேரு?!”
“மச்சான், உன்னைய எவனோ இன்னைக்கு காலேஜ்ல ஸெண்டாஃப் பார்ட்டி முடியும்போது அடிப்பேன்னு சொன்னானாமே?.. வா எவன் கைய வைக்கிறானு பாப்போம்.”
கபிலனுக்கு விசயம் புரிந்தது. பார்த்திபன் க்ரூப் ஏதோ ப்ளான் செய்திருக்கிறார்கள். அது மாப்ளைக்கு, காலேஜ்ல படிக்கிற ஊர் நண்பர்கள்மூலம் தெரிஞ்சிருக்கு. பார்த்தி & கோ... செத்தீங்கடா இன்னைக்கு. கெத்தாக நடந்தான், கல்லூரி நோக்கி. செருக்கேறியது, கபிலனுக்கு.
கி.பி 970 - சோழ நாடு - பழுவூர் அரண்மனை வளாகம்
பழுவூர் அரண்மனைச் சாலையை அடைந்தான் வல்லவன் வந்தியத்தேவன். தினவெடுத்த தோள்களுடன், தீட்டிய போர்வாள் இடைக்கச்சையிலும் இருக்க, தன் நண்பர்கள் கந்தமாறன், சேந்தன் அமுதன் மற்றும் பட்டத்து இளவரசர் ஆதித்த கரிகாலனின் மெய்க்காவல் படைவீரர்கள் புடைசூழ, பழுவூர் அரண்மனை நோக்கி நடந்தான். சுந்தரச்சோழ சக்கரவர்த்தியின் நம்பிக்கைபெற்ற மாவீரர் பெரிய பழுவேட்டரையர், தன் இதயராணி நந்தினியுடன், இளையவன் வந்தியத்தேவன் நட்புருகி இருப்பதைப் பொறுக்காமல், அவனை மாறுகால், மாறுகை வாங்கும்படி தன் சேனைக்கு உத்தரவிட்டிருந்தார். அதனைக்கேள்வியுற்ற கரிகாலன், பழுவேட்டரையருக்கு எதிராக, வந்தியத்தேவனை ஆதரிக்கத் தனது மெய்க்காவலனையும், படை வீரர்களையும் கூரிய வேட்களுடனும், தீட்டிய வாட்களுடனும் அனுப்பியிருந்தார்.
2006 ஜூலை, வெள்ளி காலை 11மணி கல்லூரி வாசல்

20 பேர் புடைசூழ, கல்லூரி வாசல் வந்து சேர்ந்தான் கபிலன்.
“சொல்றா மச்சான். உன்னைய அடிப்பேன்னு சொன்னவன் எங்க இருக்கான்னு, சொல்றா..” மாப்ள உறும, கபிலன் பார்த்திபனைத் தேடினான். மாப்ள நண்பர்கள் கத்தி, அரிவாள்களுடன் சுற்றி நின்று கொண்டிருந்தார்கள், ஆளைக் காமிச்சா அடிச்சுப் பொளக்க.
கல்லூரிக்குள் எல்லோரும் போக, வர இருந்தனர். வெளியூர் ஆட்கள் அதிகம் இருப்பதைக்கண்ட பார்த்திபனின் நண்பர்கள், மெல்ல கபிலனை நெருங்கி வந்தார்கள். காலனிக்குள் எதையும் செய்யத் துணிந்தவர்கள் அவர்கள். பெரும் பதட்டமான சூழலானது அந்த கல்லூரி வளாகம். எங்கிருந்தோ வந்தான் பார்த்தி!
“என்னடா, வெளியூர்ல இருந்தெல்லாம் ஆள கூட்டி வந்திருக்க?! கபிலனை நெருங்கி எகத்தாளமாய் கேட்டான், பார்த்தி.
“யேய்ய்ய்... நீதேன் இவன அடிப்பேனு சொன்னவனா?” கபிலன் பதில் சொல்வதற்குள், பார்த்தியிடம் எகிறினான், கபிலனின் மாப்ள.
“என்னாடா... அடிக்கிறதுக்கு ஆள கூட்டிட்டு வந்திருக்கியா?? பார்த்தி, பதிலுக்கு கபிலனை யேறினான்.
“உன்னைய அடிக்கிறதுக்கெல்லாம், ஆளவேற கூட்டிட்டு வருவாங்கெளா? கபிலன் கெத்துக் காட்டினான்.
“அடிச்சுட்டு ஊரவிட்டு போயிருவீஙெளா...?! பார்த்தி பதட்டத்தை வெளிக்காட்டாம, பதிலுக்கு எகிறுனான்.
“இவந்தான் உன்னைய அடிக்கனும்னு சொன்னவனா…” கபிலன் ஊர்க்காரர்கள் வெறியுடன் வந்தார்கள் பார்த்தி பக்கத்துல. அதை பார்த்த பார்த்தியின் நண்பர்கள் அவனைச்சுத்தி நின்றார்கள். டென்ஷன்யேறியது அங்க இருந்த எல்லாருக்கும், மொத்தக்கூட்டத்திலும். கபிலனுக்கு சுர்ர்ர்ன்று கோபம் ஏறியது மண்டையில்.
பழுவூர் அரண்மனை வளாகம்
“பெரியவரே!, அரண்மனையில் நடக்கப்போகும் வீரர்கள் படையணி வழியனுப்பு விழாவின் முடிவில், என்னைத் தீர்த்துகட்ட நீர்தான் உம் படைக்கு ரகசிய உத்தரவிட்டதாகச் செய்தி.
நேற்றைய தினம் அதைக்கேள்வியுற்ற என் தோழர்கள், நான் அறியாமலேயே, இன்று நான் அரண்மனை விழாவில் கலந்துகொள்ள வந்தபொழுது, என்னுடன் இணைந்துகொண்டனர். நான் வழியக் கூட்டம் சேர்க்க எந்த அவசியமுமில்லை”. தலைசூடாகிப்போன வல்லவன் வந்தியத்தேவன், பழுவேட்டரையரிடம் குரலை உயர்த்தினான்!
“எங்கே, உன் உடைவாளை உயர்த்து பார்க்கலாம்”, பெரியவரின் மெய்க்காவலர்கள், வல்லவனை முறைத்தனர்.
அந்த தருணத்தில் அங்குவந்த கடம்பூர் சம்புவரையர், மோதலுக்கு ஆயத்தமான இரு அணிகளையும் இடைமறித்தார். பழுவேட்டரையர், கரிகாலன் இருவருக்கும் பொதுத்தோழர், அவர். ஆகவே, கரிகாலனின் நண்பனான வல்லவனைக் காப்பதற்காக, இடைமறித்தார்.
“சோழப்பேரரசின் இரு தூண்கள், நீர் இருவரும். உங்களுக்குள் ஏன் வீண் மனச்சங்கடம். இந்த மனநிலை தவிர்த்து அனுசரித்திருங்கள்”. சம்புவரையர் வார்த்தைகள், வல்லவனை நிதானிக்கச்செய்தது. தன்னிலைக்கு வந்தான்!.
நண்பகல் 12மணி கல்லூரி வாசல்

“இனிமே, நீ நந்தினிகூட ஊர்சுத்தக்கூடாது”. சமாதானம் செய்த பொது நண்பர் முன்னிலையில் மீண்டும் பார்த்திபன் கபிலனிடம் அழுத்தமாகச் சொன்னான்.
“பார்த்தி… உங்கிட்ட ஏற்கனவே சொன்னேன். அவ என் ஃப்ரண்டு, நான் அப்டிதான் பேசுவேன். வேணும்னா அவட்ட சொல்லி பேசாம இருக்க சொல்றா”
“மாப்ள, வாடா போலாம். இப்ப தெரிஞ்சிருக்கும் அவிஙெளுக்கு நாம யாருன்னு.. இன்னைக்கு விட்று. இதுக்கப்புறம் என்னையப்பத்தி பேசுனா அப்ப பாத்துப்போம்.”
திரும்பி விறு விறுவென்று நடந்தான். ஊர்க்காரர்கள் கூட நடந்தார்கள். பக்கத்து டீ கடையில் போய் கருங்கல் பெஞ்சில் உக்கார்ந்தான். மாப்ளயும் கூட உக்கார்ந்தான். எல்லாரும் சுத்தி நின்றார்கள்.
“அண்ணே, எல்லாருக்கும் டீ போடுங்க. வேறென்ன கேட்குறாங்களோ குடுங்க. எவ்ளோன்னு கணக்கு வச்சுக்கங்க”, கபிலன் கடைக்காரரிடம் சொன்னான். “எல்லாம் பிஸ்கட், ஸ்னாக்ஸ் எதுவேனும்னாலும் சாப்டுங்கப்பா”, ஊர்க்காரர்களைப்ப பார்த்துச் சொன்னான்.
“யார்ரா இவன்? யார்றா அவ நந்தினி? உன் ப்ரண்டுங்ற!. இவன் ஏண்டா அவட்ட உன்னைய பேசக்கூடாதுங்றான்?! - மாப்ள அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டான்.
“இல்ல மாப்ள.. நாங்க எல்லாரும் ப்ரண்ட்ஸாதாண்டா இருந்தோம்…”. கபிலன் எதையோ நினைத்தவன்போல, சொன்னான்.
சொல்லிவிட்டு அமைதியாக டீக்கடை பெஞ்சில் சரிந்து படுத்தான். இடது கையை தலைக்குத் தலையணையாக்கினான். கல்லூரியின் ஆரம்ப நாட்கள் அவனுள் காட்சியாய் விரியத்தொடங்கியது. அன்று பார்த்த நந்தினியின் ஆர்ப்பாட்டமும், கூடவே நிலாவின் அமைதியும் அவனை ஆக்கிரமித்தன…
.
2003 ஜீன், கபிலன் வீடு, நள்ளிரவு 1 மணி
"ஊர்ந்து செல்லும் உயிரினமும்,
கூர்ந்து பார்த்தும் -
தடம் தெரியா;
தளிர் நடை போட்டாள்"

வெண்ணிலாவை, காலையில் கல்லூரி முதல் நாளில், கிரகித்துக் கிறங்கிய அந்தத் தருணங்களை, கவிதையாய் வடித்தான் டயரியில். அந்த கவிதை வரிகளில், எழிலாய் நிழலாடிய அவளின் உருவத்தில் மெய் சிலிர்த்து; வீட்டின் விட்டம் பார்த்துப் புன்னகைத்தான், கபிலன்.
நாம் கபிலனைத் தொடர்வோம்-3
 

Akilan Mu

Saha Writer
Messages
28
Reaction score
1
Points
1
கபிலனின் நிலா - நிகழ்வு: 4
“யார்றா இவன்? யார்றா அவ நந்தினி? உன் ப்ரண்டுங்ற!. பார்த்தி ஏண்டா அவட்ட உன்னைய பேசக்கூடாதுங்றான்?! நீ வெண்ணிலாவ லவ் பன்றனுதான என்ட சொன்ன?" மாப்ள கேட்ட அத்தனை கேள்விகளுக்கான பதிலாக, கடந்த மூன்று வருட வாழ்க்கையைச் சொல்லிக்கொண்டிருந்தான், கபிலன்.
.
அமுதன் வீடு. பகல் 12 மணி

நெருங்கிய தோழன் அமுதன் வீட்டுமுன்பு மாறன், பார்த்திபன் மற்றும் அமுதனுடன் நின்றுகொண்டிருந்தான், கபிலன். தெருவின் மறு பக்கத்தில் கலகலச்சிரிப்புடன் வெண்ணிலா, மேகலை மற்றும் தோழிகளுடன் கடந்து சென்று கொண்டிருந்தாள். மேகலை கபிலனைப் பார்த்துப் புன்னகைத்தாள். மேகலை மாறனின் தங்கை. கபிலன்மீது மானசீகமாய்க் காதல் கொண்டிருந்தாள். அண்ணனின் நண்பன் என்பதனால் தன் ஆசைகளைச் சொல்லாமல் பூட்டி வைத்திருந்தாள். கபிலனின் கண்கள் வெண்ணிலாவின் கண்களில் கரைந்திருந்தது.
“இன்னும் எத்தனை நாளைக்கிடா இப்டியே பாத்துட்டே இருப்ப.. போய் சொல்றா…” அமுதன் அங்கலாய்த்தான் கபிலனிடம்.
“இந்நேரம், வேற யாராவது இருந்திருந்தா, நாகர்கோவில் இண்டு இடுக்கெல்லாம் அவள கூட்டிட்டுப் போயிருப்பாங்க” மாறன் நக்கலாய்ச் சொல்லிச் சிரித்தான்.
“இவன் பக்கம் பக்கமா டைரி எழுதிட்டே பொழப்ப ஓட்டுவான். அதுக்குள்ள அவள எவனாவது ஓட்டிட்டு போயிருவாங்கெ”, பார்த்திபன் அவன் பங்குக்கு எடுத்துவிட, எல்லோரும் சிரித்தனர்.
“இருஙடா... சீக்கிரம் சொல்வேன்டா”. கொஞ்ச தூரம் தள்ளி போய்க்கிட்டிருந்த வெண்ணிலாவ பார்த்துட்டே சொன்னான், கபிலன். தொலைவில் சென்ற அவள், திரும்பிப் பார்த்தாள். கபிலன் தன்னை பார்ப்பதைக் கண்டதும், காணாததுபோல் திரும்பிக்கிட்டா. இவன் காதலில் மயங்கினான்.

“அம்மதியவேளையில்...
அத்தெருமுனையில் சுட்டெரித்தவேளை...
எனக்கு மட்டும் குளிர்ச்சியாய்...
எரிக்கும் சூரியனை எட்டி ஓடவைக்க,
தரையில் இறங்கியிருந்தது அந்த நிலா!
கடக்கும் வரை கால்பார்த்தவள்,
நான் திரும்பியதும்
என் திசைபார்த்திருக்கிறாள்!
உணர்ந்தோ என்னவோ
திரும்பினேன்;
அவள் திசைமாற்றிக்கொண்டாள்”


அன்று மதியம் வெண்ணிலாவைப் பார்த்த தருணத்தை டயரியில் பதித்தான், கபிலன்!. அன்றும் காதலுடன் உறங்கிப்போனான்.
கபிலன், நந்தினி, அமுதன் & மாறன் நால்வரும் ஒரே க்ளாஸ் - பி.எஸ்.ஸி ஃபிசிக்ஸ். வெண்ணிலா, மேகலை & பார்த்திபன் மூவரும் ஒரே க்ளாஸ் - பி.ஏ இங்லீஷ். நாகர்கோவிலில் ஒரே ஊரில் குழந்தைப்பருவம்முதல் அனைவரும் வளர்ந்தும், படித்தும் வந்தனர்.
கபிலன் தன்னைக் காதலுடன் பார்ப்பதை வெண்ணிலாவும் கவனித்திருந்தாள். அவனுடைய குணத்துக்கும், குதூகலமான பேச்சுக்கும் அவள் ரசிகை. ஆதலால் அவன் தன்னைக் கவனிப்பதை, அனுமதித்தாள். ஆனால் அது அவளுள் காதலாக இருக்கவில்லை. நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் தன் தோழி மேகலையின் வீட்டில் நேரம் கழிப்பாள். பல நேரம் அங்கு கபிலனும் இருப்பான். தன் நண்பனும், மேகலையின் அண்ணனுமான மாறன் மற்றும் நண்பர்களுடன் அடிக்கடி அரட்டைக்கச்சேரி நடக்கும். அந்த நேரங்களில் வெண்னிலா இருந்தால், கபிலன் கண்கள் முழுவதும் வெண்ணிலாவை ஆக்கிரமித்திருக்கும். அதை வெண்ணிலா கண்டும் காணாததுபோல் இருப்பாள்.
ஆனால் மேகலை, கபிலனிடம் மனதைப் பறிகொடுத்திருந்தாள். கபிலன், வெண்ணிலாவைக் காதலிப்பது, தன் அண்ணன் மாறன் சொல்லித் தெரிந்திருந்தது. ஆனால், “கபிலன் கடைசிவரை கவிதையிலேயே தன் காதலைக்கரைத்துவிடுவான்” எனவும், அதைப்பற்றி வெண்ணிலாவிற்கு தெரியவேண்டாம் எனவும் மாறன் தன் தங்கையிடம் சொல்லியிருந்தான். கபிலனின் வீட்டுச் சூழலும் அப்படியிருந்தது. அதனால் அண்ணனுக்கே தெரியாமல், தன் மனதில் நினைப்பதைச் சொல்லாமல், காதல் வளர்த்து வந்தாள், மேகலை. ஆனால் கபிலனின் நிலாக் கனவால், மேகலைக்கு கபிலன் மீது அடிக்கடி மனதுக்குள் கோபம் கொள்ளச்செய்தது. இதை அறியாமல் கபிலன் மேகலையுடன் சகஜமாகப் பழகிவந்தான். நந்தினிக்கு மேகலையின் எண்ணவோட்டம் புரிந்திருந்தது. எதற்கோ அவள் அதை எவரும் அறியாமல் ரசித்துக்கொண்டிருந்தாள்.
மாறன் வீடு - ஞாயிறு மாலை 4மணி
மாறன், அமுதன் & கபிலன் மூவரும் வீட்டு வாசற்படி திண்ணையின் இருபக்கமும் உட்கார்ந்து சுவாரசியமாக அரட்டையடித்துக் கொண்டிருந்தனர். வெண்ணிலாவும், நந்தினியும் அங்கு வந்தனர்.
தெருவில் கலகலப்பாய் நந்தினியுடன் பேசிக்கொண்டு வந்தவள், கபிலன் வீட்டில் இருப்பதைப் பார்த்ததும், அமைதியானாள். கபிலனும் தலை கவிழ்த்தி நெளிந்துகொண்டிருந்தான்.
“மேகா இருக்காளா?” நந்தினி மாறனிடம் கேட்டுக்கொண்டே, வெண்ணிலாவுடன் வீட்டுக்காம்பவுண்டுக்குள் நுழைந்தாள்.
“ம்ம். உள்ள இருக்கா, போங்க” “வா நிலா எப்டி இருக்க” நந்தினிக்கு பதில் சொன்னவன், வெண்ணிலாவைக் கேட்டான்.
“ம்ம். நல்லா இருக்கேன்” மாறனிடம் சொன்னவள், “நீங்க நல்லா இருக்கீங்கலா” மாறன், அமுதன் இருவரையும் பார்த்துக்கேட்டாள், வெண்ணிலா. வலுக்கட்டாயமாக தன் பார்வையை கபிலன் மீது திருப்பாமல் இருந்தாள்.
“நல்லா இருக்கோம், நிலா” பதில்சொன்ன அமுதன், கபிலனைப் பார்த்துச் சிரித்தான்.
வெண்ணிலாவும், நந்தினியும் அந்த வீட்டுப் படிக்கட்டுகளைத்தாண்டி வீட்டிற்குள் செல்ல மேலே ஏறினர்.
“என்னடா.., பச்சப்புள்ள மாதிரி பவ்யமா உக்காந்திருக்க”, குனிந்திருந்த கபிலனின் தலையில் தட்டிக் கிண்டலாகக் கேட்டாள், நந்தினி.
“போடி” அவனுக்கே கேட்காத குரலில் பதில் சொன்ன கபிலன், நந்தினியின் கையைத் தட்டிவிட்டான். அவன் கண்கள், நந்தினியுடன் தலைகுனிந்துகொண்டே படியேறிய நிலாவின் மீதே இருந்தது.
வெண்ணிலா கபிலனைப் பாக்குறத அவாய்ட் பண்ணா. அவள் சரியாக கபிலன் கால்கள் வைத்திருந்த படிக்கட்டைத் தாண்டுறப்போ, வெண்ணிலா மெலிதாய்ப் புன்னகைத்தாள். பார்வை மட்டும் தரையிலேயே இருந்தது. அந்த கனத்தில் அழுத்தமாய் அங்கு காற்று வீச, நிலாவின் துப்பட்டா காற்றிலாடி கபிலனின் கன்னங்களை உரச...
.
சோழப்பேரரசு - தலைநகரம் தஞ்சாவூர் - சுந்தரச்சோழர் அரண்மனை
அன்று சதயத் திருவிழா. வருடந்தோறும் அந்நாளில் அனைவரும்கூடி அத்திருநாளைக் கொண்டாடுவது வழக்கம்.
வல்லவன் வந்தியத்தேவன், கந்தமாறன் மற்றும் சேந்தன்அமுதன் ஆகியோர் அரண்மனை வாயிலின் நெடிதுயர்ந்த, அகன்ற படிக்கட்டுகளில் நின்று அளவளாவிக்கொண்டிருந்தனர். அரண்மனைக்குள் கரிகாலனும், அருள்மொழி வர்மனும், சகோதரி குந்தவையின் வருகைக்காகக் காத்திருந்தனர்.
சிறிதுநேரத்தில் பழுவூர் இளையராணி நந்தினி, கடம்பூர் இளவரசி மணிமேகலையுடன், இளையபிராட்டி குந்தவை அரண்மனைக்குள் வந்துசேர்ந்தாள். வல்லவனைக் கண்டவுடன், குந்தவை நாணத்துடன் தலை தாழ்த்தி அரண்மனைப் படியேறிச்சென்றாள்.
தோழிகளுடன், கவனமுடன் வல்லவன் பார்வையைத் தவிர்த்துப் படியில் ஏறினாள், குந்தவை. வல்லவன் நின்ற படியைக் கடக்கும்பொழுது அங்கு வீசிய தென்றல்காற்றில், குந்தவையின் பட்டுச்சரிகையிட்ட நீண்ட பட்டாடை தவழ்ந்தது. அது வல்லவனின் கன்னங்களை உரச, இளையபிராட்டியின் கன்னங்கள் நாணிச்சிவக்க, வல்லவன் புனர்ஜென்ம சாபல்யமடைந்ததாய் புளகாங்கிதமடைந்தான்.

.
மாறன் வீடு - ஞாயிறு மாலை 6மணி
காற்றில் கபிலனின் கன்னம் உரசிய தனது துப்பட்டாவை, அவசரமாய் இழுத்துப்பிடித்த வெண்ணிலாவின் கன்னம் சிவந்தது. விருட்டென்று மாறன் வீட்டினுள் ஓடிப்போனாள்.

“நிலமகள்
கர்வமுடன் இருக்கிறாள்!
நீ
அவள் அழகையே
வியந்து நோக்குகிறாயாம்!
பாவம்,
என்முகம் பார்க்க
வெட்கித்தான்
மண்முகம் பார்க்கிறாய்
என்று
அவள் அறியமாட்டாள்!
இனி,
அம்மண்மகளை
ஏய்க்கமாட்டாய்
என்றெண்ணுகிறேன்!
நாயகியே!
நாணம் தவிர்
என்றும் உன்
நாயகனாக நானிருப்பேன்.”


“டேய்ய்ய்… போதும்டா.. பறந்தது போதும், இறங்கி வா. கபிலர் இந்நேரம் கவி பாடியிருப்பாரே”. நக்கலாய்ச் சொன்ன அமுதன் கபிலன் தொடையில் பலமாய்த் தட்டினான்.
கனவுகலைந்தவன்போல கபிலன், நாக்கைக் கடித்துக்கொண்டு தலையைச் சொறிந்தான்.
“‘வக்கெப்படப்ப நாய் காத்த மாதிரி’ இவனும் அவட்ட வாயத்தொறந்து சொல்லமாட்டான். நம்மளயும் சொல்ல விடமாட்டான் டா. இவன வச்சுக்கிட்டு இன்னும் எத்தன வருசம் இப்டி நாம இருக்கப்போறமோ, தெரியல”, மாறன் அவன் பங்குக்கு கபிலன் காலைவாரினான்.
“இருங்கடா டேய். எங்க வீட்டு நிலைமை தெரியும்ல. இப்ப நான் நிலாட்ட லவ்வச் சொல்லி, அவ அக்செப்ட் பண்ணாட்டியும், எங்க வீட்டுல சொல்லிட்டானா, ரொம்ப பிரச்சனையாயிடும். பார்த்துதான் டா பேசனும். கொஞ்சம் டைம் குடுங்கடா” கபிலன் கெஞ்சாத குறையாகச் சொன்னான்.
“தம்பி… எங்களுக்கு ஒன்னுமில்ல. இன்னும் கொஞ்ச நாள் நீ இப்டியே யோசிச்சுட்டு இருந்த.. காலேஜ் முடிஞ்சிடும். அவ எங்க போவா, நீ எங்க போவனு யாருக்கும் தெரியாது. அப்புறம் நீ கவிதையிலேயே குடும்ப நடத்தவேண்டியதுதான்” அமுதன் கொஞ்சம் அழுத்தமாகவே அட்வைஸ் பண்ணான்.
“டேய்.., அவன் சொல்றது கரெக்ட் டா”, மாறனும், அமுதன் சொன்னதை சப்போர்ட் பண்ணினான்.
“ம்ம்ம்.. கரெக்ட் றா.” கபிலனும் சீரியஸாக யோசித்தான்.
வீட்டுக்குள்ள வெண்ணிலா, நந்தினியுடன் பேசிட்டிருந்த மேகலை, வெளியில் நண்பர்கள் பேசியதைக் கவனித்தாள். கபிலன் நிலாவிடம் காதலைச் சொல்லமாட்டான்னு அவ நினைச்சிக்கிட்டிருக்க, அந்த நேரத்தில் அவர்கள் பேசியது, கபிலன் நிலாவிடம் சொல்லிருவான்னு உறுதியாத்தெரிஞ்சது, அவளுக்கு. இது நடக்காம இருக்கனுமேனு யோசிக்க ஆரம்பிச்சா. நந்தினி மேகலையின் மனமாற்றத்தை கவனிச்சா. மனசுக்குள்ள சிரிச்சா!
.
நந்தினிக்கு கபிலன்கிட்ட அளவு கடந்த நெருக்கம், அதனால வந்த பொஸஷிவ்நெஸ், அவன் இன்னொரு பெண்ணைத்தேடிப்போவதை அவளால பொறுக்கமுடியல. அவளுக்கு அவன் மீது நெருங்கிய நட்பைத்தாண்டி காதலெல்லாம் இல்லை. ஆனாலும், கபிலனுக்கு நிலாட்ட இருக்குற லவ்வ காலிபண்ணனும்னு நினைச்சா.
அதுக்கு வகையா வந்து மாட்டுனா, மேகலை!
.
நாம் கபிலனைத் தொடர்வோம்-4
 

Akilan Mu

Saha Writer
Messages
28
Reaction score
1
Points
1
கபிலனின் நிலா - நிகழ்வு: 5

கபிலன் வெண்ணிலாவைப் பார்வையாலேயே மட்டும் காதலிப்பது மாதக்கணக்காய் தொடர்ந்தது. வெண்ணிலாவிடம் காதலைச் சொல்ல, நண்பர்களின் நச்சரிப்பும் தொடர, கபிலன் அடுத்துவரும் வேலண்டன்ஸ் டே அன்று தன் காதலை நேரிடையாகச் சொல்ல முடிவெடுத்தான்.

.

அன்று, கபிலன் நந்தினியுடன் கல்லூரிக்குச் சென்றுகொண்டிருந்தான். கல்லூரி செல்லும் மெயின் ரோடுவரைக்கும் கபிலன் எதுவுமே பேசவில்லை. என்னைக்கும் கலகலப்பாய் பேசிக்கிட்டேவரும் கபிலன் அன்று ரொம்ப அமைதியா வந்தான். அவன் மனசு அலைபாஞ்சுது.

தொடக்கப்பள்ளிப் பருவம் முதல் நந்தினி அவன் மனங்கவர்ந்ததோழி. இருவரும் ஒருவரையொருவர் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். அவ்வளவு பிணைப்பு இருவருக்குள்ளும். நந்தினிட்ட தான் எதைச் செய்தாலும், அவள் சரி எனச்சொல்கிறாளா, எனக்கேட்டு தெரிந்துகொள்வான், கபிலன்.

“டி, ரொம்ப நாளா உன்ட ஒன்னு சொல்லனும்னு நினைச்சேன். ஆனா நானே என்ன செய்வேனு நிச்சயமா முடிவு பண்ணாதனால, உன்ட சொல்லல. இப்ப முடிவு பண்ணிட்டேன். அதனால நீ என்ன நினைக்கிறனு கேட்டுட்டு அப்புறம் அதச்செய்யலாம்னு இருக்கேன்”.

"என்னடா.. ரொம்ப பில்டப் குடுக்குற. ஆனா, இன்னைக்கு நீ சரியில்ல. ஏதோ பெருசாதான் மேட்டர சொல்லப்போறபோல. சொல்லு, கேட்டுட்டுச் சொல்றேன்"

"இல்ல… உனக்கே தெரிஞ்சிருக்கும்.., நான்... வெண்ணிலாவ... ஸீரியஸா லவ் பண்றேன்டி"

"வாவ்வ்வ்… இதுக்குதான் இவ்ளோ யோசிச்சியா? லூசாடா நீ? என்ட சொல்றதுக்கென்னடா. அட்லீஸ்ட், இப்பயாவது சொன்னியே. சூப்பர்டா. அவட்ட சொல்லிட்டியா"

"இல்லடி.. அதான் யோசிச்சிட்டு இருக்கேன்"

"எவ்ளோ நாளா?"

"ஒரு வருஷம் ஆகப்போகுது"

"ஏன்டா.. இவ்ளோ வாயடிக்கிற. அடிக்கடி ஃப்ரெண்ட்ஸ் வீட்டுல பாக்குற. வெண்ணிலாட்ட சொல்றதுக்கென்ன?

"இல்லடி. உனக்கே தெரியும். நான் எங்க வீட்டுல ஒரே பையன். எங்கப்பா கஷ்டப்பட்டு என்ன படிக்க வைக்கிறாரு. அதுனால, அவுங்களுக்கு செய்யவேண்டியத செய்யாம, லவ்வு கிவ்வுனு சுத்துறது, எனக்குப் பிடிக்கல. இந்த மேட்டர் தெரிஞ்சா, எங்கப்பா அம்மாவும் ரொம்ப டென்ஷன் ஆயிடுவாங்க. நிலாவும் என் லவ்வ அக்செப்ட் பண்ணுவாளானு தெரியல. நான் நிலாட்ட சொல்லி, அவ பிடிக்கலனு சொன்னாலும் பரவாயில்ல. ஆனா, அவ வீட்டுல சொல்லி. மேட்டர் எங்க வீட்டுக்குத் தெரிஞ்சா, பெரிய களேபரம் ஆயிடும். இப்டி படிக்கிற காலத்துல, லவ் பண்றேன்னு சொல்லி, என்னால எங்கப்பா அம்மாவ கன்வின்ஸ் பண்ணமுடியாது. எனக்கே அது சரின்னு படல."

"சரி, இப்போ என்ன பண்ணலாம்னு ஐடியா?" நந்தினி குறுக்கே கேட்டாள்.

"அதான்டி, குழப்பமே. எனக்கு நிலாவ மிஸ் பண்ணிடக்கூடாதுன்னு தோனுது. அதே சமயத்துல, எங்கப்பா அம்மா அப்செட் ஆகவே கூடாது. ரெண்டயும் நான் கரெக்டா பண்ணனும். அதான் உன்ட பேசிட்டிருக்கேன். எப்படி செஞ்சா ரெண்டும் வொர்க்கவுட் ஆகும்னு நீ நினைக்கிற"

என்ன பதில் சொல்லலாம் என யோசித்த நந்தினி, தனக்குள் கருவிக்கொண்டாள். "வெண்ணிலாவின் குணத்திற்கு அவள் கபிலன் சொல்வதை ஏற்கமாட்டாள். அதையும் மீறி அவள் ஒத்துகொண்டால், எப்படியும் அதைக்கலைப்பது முடியும். இருக்கவே இருக்கா மேகலை ரெடியா. இல்லேனா, தனியா நிக்கிற பார்த்திபன யூஸ் பண்ணவேண்டியதுதான்."

கபிலனிடமிருந்து அவனுடைய ஃப்ரெண்ட்ஸைப்பிரித்து, கபிலனை தனிமைப்படுத்தி, அவன் தன்னைச் சார்ந்தே இருக்கப் பிளான் பண்ணினாள், நந்தினி!.

"கபிலன் தன்னுடேனே இருக்கவேண்டும் அல்லது தன்னைவிட வேறயாரையும் பெரிதாக நினைக்கக்கூடாது. அதுக்கு அவன்போக்கிலேயே போகவேண்டும். ஆனால் கடிவாளம் தன் கையில் இருக்கவேண்டும்". நந்தினி தனக்குள்ளேயே மீண்டும் வலியுறுத்திக்கொண்டாள்.

"என்னடி எவ்ளோ சீரியஸா கேட்டுட்ருக்கேன். நீ எதுவுமே சொல்லாம வர்ற"

"நீ சொன்னததான்டா யோசிச்சிட்ருக்கேன். சரி, எதுக்கு இவ்ளோ குழப்பம். நீ வெண்ணிலாட்ட உன்னோட ஆசைய சொல்லிரு. அவ அக்செப்ட் பண்ணா ஓகே. இல்லேனா அவ அத ஒரு பிரச்சனையாக்காம நான் பாத்துக்குறேன். நீ மட்டும் அவ அக்செப்ட் பண்ணலேனா, மனசக்குழப்பிக்காம எப்பவும்போல என்னோட ஜாலியா இருக்கனும். நீ டென்ஷனா அலைஞ்சேனா நான் கடுப்பாயிருவேன்”

"ஓகே, நந்து. தேங்க்ஸ் டீ. இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு". நந்தினியின் வஞ்சக எண்ணம் புரியாமல், குதூகலித்தான், கபிலன். அதேசமயம் வெண்ணிலாவை எந்த சூழலிலும் விட்டுக்கொடுக்கக்கூடாது என நினைத்துக்கொண்டான்.

கல்லூரி சென்று சேர்ந்தார்கள் இருவரும். வகுப்பறைக்குப்போகும் முன், சுற்றிச் சுற்றிப் பார்த்தான், கபிலன். இல்லை தேடினான்!. அவன் எதிர்பார்ப்பு வீண்போகவில்லை. சற்று தூரத்தில் வெண்ணிலா, அவள் தோழி மேகலை மற்றும் பார்த்திபனுடன், அவர்கள் வகுப்பறை நோக்கிச் சென்றுகொண்டிருந்தாள்.

வழக்கம்போல் இவன் பார்த்தபொழுது, அவள் பார்க்காமல், இவன் திரும்பிய கணம், அவள் விரும்பிப் பார்த்தாள். கபிலன் கச்சிதமாக அதைக்கவனித்தான்.

.

மறுநாள் - அமுதன் வீடு

கல்லூரி முடிந்த மாலை வேளையில் நண்பர்கள் வழக்கம்போல் கூடினர்.

“நான் நாளைக்கு எப்படியும் வெண்ணிலாட்ட லவ்வ சொல்லப்போறேன். பாக்கலாம், என்ன ஆனாலும், பாத்துக்கலாம்” கபிலன் உறுதியாகச் சொன்னான், நண்பர்களிடம்.

“எப்பா.. இப்பவாவது முடிவு பண்ணியே. சந்தோஷம் டா.” - அமுதன்

“கண்டிப்பா சொல்லிருவியா?” - மாறன்

“நாளைக்குப் புதுசா ஒருகாரணம் சொல்லி எஸ்கேப்பாக மாட்டியே?” - பார்த்திபன்

“நான் முடிவு பண்ணிட்டேன்னு சொல்றேன்ல. செய்வேன். சரி, எப்பவும் என்னையவே நக்கல் பண்ணிட்டிருக்கீங்கலே. ஒரு வருஷத்துக்கு முன்ன்னாடி, ஒரு லவ் க்ரீட்டிங் கார்ட் வாங்கிவச்சுக்கிட்டு, ஒரு பொண்ணுட்ட குடுக்கப்போறேனு சொல்லி, சைக்கிள்ள டெய்லி அவ பின்னாடியே ஸ்கூல் வரைக்கும்போய், அந்த பொண்ணுக்கே கேக்காத மாதிரி, அவ பேரச்சொல்லிக்கூப்டு, ‘நான் கூப்டேன், ஆனா அவ போய்ட்டாடா’னு கத சொல்லுவானே நம்மட்ட. அதுக்கு நான் பரவாயில்லடா” . எங்கப்பா அந்த மானஸ்தன்?” - டைம் பார்த்து அமுதன் காலை வாரினான், கபிலன். எல்லோரும் அமுதனைப் பார்த்துச் சிரித்தனர்.

“எப்பா… தெரியாம சொல்லிட்டேன்டா. நான் உன்னையச் சொன்னது தப்புதான். நாளைக்கு நீயாச்சும் வெண்ணிலாட்ட ஃபர்ஸ்ட் அட்டெம்ப்ட்லயே உன் லவ்வ சொல்லிருடா” - வழக்கமாய் தாறுமாறாய் காலை வாரும் அமுதன், கபிலன் போட்ட கிடுக்கிப்பிடியில், அடக்கி வாசித்தான்.

“சரி. அந்த க்ரீட்டிங் கார்ட எடுத்துட்டு வா. சும்மா இருக்குறது எனக்காவது யூஸ் ஆகட்டும்” கபிலன் சொல்ல, அமுதன் வீட்லயிருந்து அந்த கார்டை எடுத்து வந்தான்.

முழுதும் வெண்ணிற கார்ட். அதில் பனி நீரெழுத்தில் ‘ஐ லவ் யூ’ என்ற வார்த்தைகள் உருகி, ஒரு ரத்தச்சிவப்பு கலர் ரோஜா மீது வழிந்துகொண்டிருந்தது. பார்க்கும்போதே காதல் கொப்பளிக்கும் அந்த கார்ட் டிசைனில்.

“ம்ம்.. எனக்குன்னே ஒரு வருடஷமா இருந்திருக்கு இந்த கார்ட். முதல்ல இதுல என் பேர எழுதுறேன்.” அத்தனை நாளாய் எந்த பெயரும் எழுதாத அந்த கார்டில் எழுதினான், கபிலன்.

“கபிலனின் நிலாவே” என “ஐ லவ் யூ” என்ற பனி எழுத்தின் ஆரம்பத்தில் எழுதி. கீழே ‘கபிலன்’ என்று கையெழுத்திட்டான். நிமிர்ந்து நண்பர்களைப் பார்த்தான். எல்லோர் முகத்திலும் ஒரு ஆர்வம் தொற்றியிருந்தது.

“சரி. நான் கிளம்புறேன். நாளைக்கு மீட் பண்ணுவோம். நிலாட்ட என்ன பேசுனேனு சொல்றேன். பாப்போம்” எல்லோரிடமும் சொல்லிவிட்டு அந்த லவ் கார்டை பத்திரமாக தன் சட்டைக்குள் சொருகிக்கொண்டு கிளம்பினான், கபிலன்.

.

2004 ஃபெப்ரவரி 14 - கல்லூரி வளாகம்

அன்று வேலண்டைன்ஸ் டே. அமுதன், மாறன், நந்தினியுடன் க்ளாஸ் முடிந்து வெளியே வந்தான், கபிலன். ஆரஞ்சுக்கலர் நிறைந்த, ப்ளூ கலர் பொடிக்கட்டம்போட்ட சட்டையும், கருநீலக்கலர் பேண்டும் அணிந்திருந்தான். கல்லூரி வளாகத்தில் வழக்கம்போல் நிற்கும் வேப்பமர நிழலில் நான்குபேரும் வந்து நின்றனர்.

“என்ன நந்தினி, உன் நண்பன் இன்னைக்கு நிலாட்ட ப்ரபோஸ்பண்ணிருவானா? புன்னகையுடன் கேட்டான், அமுதன்.

“ஏன், கண்டிப்பா சொல்வான். என்னடா, சொல்வேள?” கபிலனைப் பார்த்தாள், நந்தினி.

“கண்ண்டிப்பா” அழுத்தமாகச் சொன்ன கபிலன், காலேஜ் நோட்டுக்குள்ளிருந்து லவ் ப்ரபோஸல் கார்டை கொஞ்சமாய் வெளியே எடுத்துக்காட்டினான்.

“நண்பேன் டா” நந்தினி திரும்பி அமுதனைப் பார்த்துச் சொன்னாள்.

“அதான், அய்யா ட்ரெஸ்கோட்கூட பக்கவா போட்டு வந்திருக்கானே. கண்டிப்பா இன்னைக்கு லவ் ஸீன் இருக்கு” - சிரித்துகொண்டே சொன்னான், மாறன்.

கபிலன் கல்லூரியின் ஆர்ட்ஸ் ப்ளாக்கிலிருந்து வெளியே வருவோர்மீது முழுக்கவனமுடன் இருந்தான்.

“நான் பேசப்போறேனு அவளுக்குத் தெரிஞ்சிருக்குமா? ஃப்ரெண்ட்ஸ் யாரும் அவட்ட சொல்லல. என்ன ட்ரெஸ் போட்ருப்பா இன்னைக்கு? வெண்ணிலாட்ட, காலேஜ்குள்ளயே பேசிரனும். வெளியபோனா, அவ ஃப்ரீயா பேசமாட்டா”. மனதிற்குள் உறுதிப்படுத்திக்கொண்டான். கபிலனை வெண்ணிலாவின் நினைவு முழுவதுமாய் ஆக்கிரமித்திருந்தது. குறுக்கும் நெடுக்குமாய் அந்த வேப்பமரத்தைச் சுற்றி நடந்துகொண்டிருந்தான். உடன் இருந்த நண்பர்கள் இவனிடம் பேசியதற்குப் பெரிதாக பதில் எதுவும் சொல்லவில்லை. இவனுடைய மனநிலையை நன்கு தெரிந்துகொண்ட நண்பர்கள், அதே வேப்ப மரத்தடியில் கொஞ்சம் தள்ளி ஒரு பெரிய வேரின்மீது அமர்ந்து அவர்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர்.

சிறிதுநேரத்தில் தூரத்தில் வெண்ணிலா. தன் தோழி மேகலையுடன் நடந்து வந்தாள்.

நீல நிறத்தாவணியும், சாம்பல் நிற முழுப்பாவாடையும் அணிந்திருந்தாள். இரட்டையாய் தொங்கவிட்ட மல்லிகைப்பூ, ஒன்று தோளின் முன்புறமும், மற்றொன்று பின்பக்கமும் தவழ்ந்தது. மையிட்ட கண்களும், துல்லியமாய்வைத்த நீல நிறச் சிறிய வட்ட நெற்றிப்பொட்டும் வத்திருந்தாள். எப்பொழுதும் சல்வாரில் இருப்பவள், இன்று தாவணியில்! கண்டதும் அத்தனை தூரத்திலும் கபிலன் சொக்கிப்போனான்.

.

சோழப்பேரரசின் பழையாறை ஊர். இளையபிராட்டியின் அரண்மனை

அன்று ‘இந்திர விழா’. போர்புரியக் கடல்கடந்து சென்றிருந்தால்கூட, ஆடவர் தன் காதலியைத்தேடி ஊர்திரும்பிச் சேர்ந்து களிப்புரும் காமன் விழா அது. வல்லவன் வந்தியத்தேவன் குந்தவையை அன்று சந்தித்து, தன் மனதைத் திறக்கவேண்டும் என்று திட்டமிட்டு, ஆற்றங்கரைவழியே அரண்மனை அந்தப்புரத்தின் பின்வழியை அடைந்து, காவலர்கள் அறியாவண்ணம், அங்கே பூத்துக்குலுங்கிய நந்தவனத்தில் காத்திருந்தான். குந்தவை தன் தோழியுடன் வந்தாள்.

மயில்கழுத்து நிறத்தில் பச்சையும், நீலமும், சாம்பல் வண்ணமும் கலந்த, மனம்மயக்கும் பட்டுச்சரிகைச் சேலையில், பாந்தமாய் அவளைக்கண்ட வல்லவன், ஆயிரமாயிரம் மின்னல்கள் கால்களில் பாய்ந்ததுபோல் தடுமாறினான். கையிலிருந்த ஓலையை இறுகப்பற்றினான். அருகில் வந்த குந்தவையிடம் தான் கொணர்ந்த ஓலையை நீட்டினான்.

“என்ன இது ஓலை” வினவினாள் குந்தவை.

“வாசித்துப்பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்” என்றான் வல்லவன்.

பலகேள்விக்குறியுடன் ஓலையை வாங்கியவள், திரும்பி அந்தப்புர ஓய்வறை நோக்கி நடந்தாள். வருடம் பலவாய் மனத்தினுள் பூட்டியதைச் சொல்லிவிட்ட திருப்தி, வல்லவனுக்கு. மனம் நிதானம் அடைந்தது. குந்தவை மறுமொழி நோக்கி அங்கே காத்திருந்தான்.


.

கல்லூரி வளாகம்

கபிலனிடம் க்ரீட்டிங்கார்டை வாங்கிவிட்டுத் திரும்பிச்சென்ற வெண்ணிலா, சிறிது நேரம் கழித்து வந்தாள், கபிலனை நோக்கி. கையில் அதே கார்ட் இருந்தது. கபிலன் மனம் கலவரப்பட்டது. அருகில் வந்து நின்று, முதல் முறையாய் கபிலனைக் கண்ணோடு கண் பார்த்தாள். அடுத்த நொடி தலை கவிழ்த்திக் கொண்டாள். அவள் கால் பெருவிரல் மண்ணில் அலைபாய்ந்தது.

“எங்க வீட்டுல நான் ஒரே பொண்ணு. எங்கப்பா, அம்மா என்ன கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறாங்க. நான் அவங்கள கடைசி வரைக்கும் என்கூடயே வச்சுப் பாத்துக்கனும். அப்புறம், எனக்கு தனியா வளந்தனால இருக்குற கஷ்டம் தெரியும். அதனால எனக்கு நிறைய குழந்தைகள பெத்துக்கனும். இல்லைனா, நிறைய குழந்தைகள தத்தெடுத்து வளக்கனும். இதெல்லாம் என்ன கல்யாணம் பண்னப்போறவர் அக்செப்ட் பண்ணாதான், நான் மேரேஜ்கே ஒத்துக்குவேன்". தலை குனிந்து பவ்யமாய்ப் பேசினாலும், அழுத்தம் திருத்தமாய்ச் சொன்னாள், வெண்ணிலா.

கண்ணெடுக்காமல் அவளையே புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்த கபிலன், "இதெல்லாம் எனக்கு ஓகேதான். நானும் எங்க வீட்டுல ஒரே பையன். எனக்கும் கூட்டுக்குடும்பமா இருக்குறது பிடிக்கும்"

கபிலன் சொன்னதைக்கேட்டதும் ஒரு விநாடி நிமிர்ந்து பார்த்தாள், வெண்ணிலா.

"லவ்பண்றப்போ எல்லாம் இப்டி சொல்வீங்க. அப்புறம் கொஞ்ச நாள்ல மாறுடுவீங்க. எனக்கு இப்ப கேக்குறதுல நம்பிக்கையில்லை. சொல்லிவிட்டு மீண்டும் தலை கவிழ்ந்து கொண்டாள். அவள் கால் பெருவிரல் தரையில் அரைவட்டம் இட்டுக்கொண்டே இருந்தது!

"சரி, இப்ப நீ நம்பவேண்டாம். எனக்கும் லவ்பண்றேன்னு சொல்லிக்கிட்டு, ஊர் சுத்துறதோ, அடிக்கடி மீட் பண்ணி நாள் ஃபுல்லா பேசிட்டிருக்கதோ பிடிக்காது. உன்ன மாதிரி ஒரு பொண்ணதான் கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைச்சேன். உன்ட சொல்லிட்டேன். உன்ன எனக்குப் பிடிச்சிருக்கு. எனக்கு ஒருத்தி ஒய்ஃப்னு வந்தா அது நீதான். இல்லனா நான் வேற கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்" உறுதியாகச் சொன்னான், கபிலன்.

வெண்ணிலாவின் கால்கள் கோலமிடுவதை நிறுத்தியது. சில விநாடிகள் இருவரும் அமைதியாய் நின்றனர். கபிலன் வெண்ணிலாவைப் பார்த்தபடியே நின்றான்.

தூரத்தில் ஒரு பக்கம் மேகலையும், மறுபக்கம் அமுதன், நந்தினி, மாறனும் கபிலனையும், வெண்ணிலாவையும் பார்த்துக் கொண்டிருந்தனர். கல்லூரியில் மாணவர்களும், பேராசிரியர்களும் போக வர இருந்தனர். இது எவையும் கபிலன், வெண்ணிலா இருவரையும் கவனம் கலைத்ததாய்த் தெரியவில்லை.

கபிலன் தொடர்ந்தான். “இன்னும் நான் பி.ஜி டிகிரி பண்ணனும். வேலையில செட்டிலாகனும். எங்கப்பா அம்மாக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்யனும். இதுக்கெல்லாம் குறைஞ்சது 3 வருஷம் ஆகும். அதுக்கப்புறம் நான் உன்ட வந்து கேக்குறேன். உங்கப்பாட்ட பேசுறேன். என்ன உனக்குப் பிடிச்சிருந்தா, நான் சொல்றதுல நம்பிக்கையிருந்தா, நீ எனக்காக வெய்ட்பண்ணு”. நான் சொல்லனும்னு நினைச்சத சொல்லிட்டேன். இனிமே நீ உடனே ஓகே சொன்னாலும், நான் உன்கூடயே இருக்கனும்னோ, உன்கூட ஊர் சுத்தனும்னோ கேக்கவோ, நீ கேட்டாலும் செய்யவோ மாட்டேன். உன்ட நம்ம லைஃப் சம்பந்தமா பேசுறது இனி 3 வருஷம் கழிச்சுதான்.”

கபிலன் சொன்னதைக்கேட்ட வெண்ணிலா பெரிதாய் எதையும் வெளிக்காட்டாமல் சொன்னாள். “நீங்க சொல்ற மாதிரி செஞ்சு, 3 வருஷம் கழிச்சும் நீங்க இதே நினைப்போட இருந்து, இதெல்லாம் நடக்கனும்னு இருந்தா நடக்கட்டும். பார்க்கலாம்”.

“சரி. நான் கிளம்புறேன்” கபிலன் திரும்பி நண்பர்கள் இருக்குமிடத்திற்குச் சென்றான். வெண்ணிலா, மேகலையை நோக்கி நடந்தாள். அவள் கபிலன் கொடுத்த லவ் கார்டை காலேஜ் நோட்டிற்குள் சொருகிக்கொண்டாள்!

.

“ஹே.. சக்ஸஸா?” கோரஸாக கபிலனிடம் கேட்டனர்.

.

“என்னடி சொன்ன கபிலன்ட”, மேகலை என்ன நடந்திருக்குமோ என உள்ளே பதட்டத்துடன் கேட்டாள்.

.

“நான் சொல்லவேண்டியத சொல்லிட்டேன். அவளுக்கும் ஓகேதான்னு நினைக்கிறேன். ஆனா அவ எதையும் வேண்டாம்னும் சொல்லல. நான் சொன்னதுக்கு சரின்னும் சொல்லல” கபிலன் நண்பர்களிடத்தில் பதில் சொன்னான்.

.

“உனக்கே தெரியும், கபிலன் ரொம்ப நல்லவன். அவன் சொன்னதெல்லாம் எனக்கும் பிடிச்சிருந்தது. ஆனா, அவன் சொன்னமாதிரி செய்ய முடியுமா, அதெல்லாம் நடக்குமான்னு தெரியலடி. நான் ஓகேன்னு சொல்லல.” வெண்ணிலா, மேகலைக்குப் பதில் சொன்னாள்.

.

“என்னடா குழப்பற. க்ரீட்டிங் கார்ட் வாங்கிக்கிட்டாளா, இல்லையா?” நந்தினி கபிலனிடம் கேட்டாள்.

.

“ஓகேனு சொல்லலையா”. வெண்ணிலா சொன்னதைக்கேட்டு, உள்ளூர மேகலை மகிழ்ந்தாள். “அப்போ க்ரீட்டிங் கார்ட் திரும்ப கொடுத்துட்டியா” மேகலை கேட்க, வெண்ணிலா, நோட்டிற்குள் இருந்த லவ் கார்டை காட்டினாள். அப்பொழுதும் ஒரு வெட்கப் புன்னகை முகத்தில்.

.

“அப்புறம் என்னடா, அவ அக்செப்ட் பண்ணிட்டானுதான அர்த்தம்”, நந்தினி கபிலனின் மன நிலையை உறுதிப்படுத்திக்க முயன்றாள்.

.

“அப்போ வேண்டாம்னு சொல்லல. அவன் சொன்ன மாதிரி செஞ்சுட்டா, நீ ரெடியாயிருப்ப. அவனுக்காக வெய்ட் பண்ணப்போற, கரெக்டா” மேகலை கேட்க, வெண்ணிலா தலைகவிழ்ந்து புன்னைகைத்தாள். மேகலை முகம்மாறியது. வெளிக்காட்டாமலிருக்க முயற்சித்தாள். இருவரும் கல்லூரியைவிட்டு வெளியேறினர்.

.

“அப்படிதான் நினைக்கிறேன். அவளுக்கு நான் 3 வருஷம் மீட் பண்ணாம, பேசாம இருப்பேன்னு சொன்னதுல நம்பிகையிருந்திருக்காது. அத நான் செஞ்சா அக்செப்ட் பண்ணிப்பா.” கபிலன் நந்தினியிடம் சொன்னான்.

நந்தினிக்கு முகம் சிறுத்தது. கபிலனின் முகத்தில் தெரிந்த நம்பிக்கையும், தெளிவும் அவளுக்குக் கசந்தது. அமுதன், மாறன் இருவரும் ஒருவொருக்கொருவர் பார்த்துக்கொண்டனர்.

“கஷ்டந்தான். சரி வாங்க போலாம்” - அமுதன் கபிலனைப்பார்த்துச் சொல்லிவிட்டு எல்லோரையும் கூப்பிட்டான். எல்லோரும் கல்லூரியைவிட்டு கிளம்பினர்.

அந்த நேரம் கல்லூரி வாசல் அடைந்திருந்த வெண்ணிலா, வாசலைக்கடக்குமுன் ஒரு முறை திரும்பிப் பார்த்தாள். கபிலனும் பார்த்தான். வெண்ணிலாவின் முகத்தில் சிவந்த புன்னகை. இந்தமுறை அவள் பார்த்தவிதம், இதுவரை பார்க்காத பார்வையாகப்பட்டது, கபிலனுக்கு! அவன்முகத்தில் திருப்திப் புன்னகை. நண்பர்கள் அனைவரும் அவரவர் வீடுபோய்ச்சேர்ந்தனர்.

அன்று இரவு கபிலன் நன்றாகச் சாப்பிட்டான். கலகலப்பாய் அப்பா, அம்மாவிடம் பேசினான். 10மணிக்கே தூங்கச்சென்றான். பல வருட பாரத்தை இறக்கிவைத்ததுபோல் நிம்மதி, கபிலனுக்கு. வெண்ணிலாவிடம் பேசியதையும், அவள் சொன்னபதில்கள், சொல்லியவிதம் எல்லாவற்றையும் அசைபோட்டான்.

“தூண்டிய நண்பர்களையும்,

துணிந்த மனத்தையும்

சுமந்த என் உடல்

சுற்றிச்சுற்றி வந்தது.

தீஞ்சுவைச்சொல்லழகியின்

திசையறிந்து பின்தொடர்ந்தேன்.

வரைந்த அம்மடலை,

பறந்த மனத்துடன்

பண்பாக நான் கொடுத்தேன்.

காணாத கனவுகளை

கலையாமல் நான்கொண்டிருக்க,

நீரைநீக்கப் பாலைஉண்ணும்

அன்னமாய் அவள்மனது!

வார்த்தைகளை வாகைசூடிய அவளால்,

வான்மனத்தை வஞ்சிக்க முடியவில்லை.

அவள் கனிஇதழ்களல்ல, கருவிழிகள் பேசின!

சிறைபடுத்திய வார்த்தைகளெல்லாம்

மண்ணில் அச்சேறின,

பொன்னான கால்விரலால்!

அப்பாதங்களின் கோலத்தில்

பாவையவள் மனம்தெரிய,

கனத்திருந்த என்இதயம்

கனிந்துபோனது அக்கணமே!

நாணத்தால் அவள் நிற்க,

நல்ல சொல்லை நான் நோக்க,

அங்கே அரும்பியது

என் முதல்காதல்!”

தான் அனுபவித்த அந்த தருணங்களை டயரியில் பதிந்துவிட்டு, இலகுவான மனத்துடன் உறங்கப்போனான். ஆனால் அதே இரவு நந்தினி வழக்கத்திற்கு மாறாய், உண்ணாமல், உறங்காமல் விழித்திருந்தாள். கபிலனும் நிலாவும் உருகிப்பேசியது, நந்தினியின் மனதை இறுக்கியது. தன் நண்பன் தன்னைவிட்டு இன்னொரு உறவை வளர்ப்பதை அவளால் சகிக்கமுடியவில்லை. கபிலனிடமிருந்த அளவற்ற அன்பு அவளை அப்படி ஆட்டிப்படைத்தது. கபிலனின் மணங்கோணாமல், வெண்ணிலாவை அவன் நினைப்பிலிருந்து அகற்றவேண்டும். யோசித்தாள். மனக்கண்முன் மேகலையின் வாடிய முகம் தெரிந்தது. நந்தினி முகம் பிராகாசித்தது.

.

நாம் கபிலனைத் தொடர்வோம்-5
 

Akilan Mu

Saha Writer
Messages
28
Reaction score
1
Points
1
கபிலனின் நிலா - நிகழ்வு: 6
மாறன்-மேகலை வீடு
அன்று கல்லூரி விடுமுறை நாள். கபிலனும், மாறனும், அமுதன் வீட்டிற்குச் சென்றதை உறுதிசெய்த, நந்தினி மாறன் வீட்டிற்கு மேகலையைக் காணச்சென்றுகொண்டிருந்தாள்.
அந்த தெருவோரம் செவலைப் பசு ஒன்று அவசர அவசரமாய்ப் புல் மேய்ந்துகொண்டிருந்தது. அதன் அருகில் பிறந்து மூன்றே மாதமான கன்றுகுட்டி. அப்பசுவின் ஒவ்வொரு அங்குல நகர்வுக்கும் அதன் கழுத்தில் இருந்த வெண்கலமணி 'டிங், டிங்' என ஒலி எழுப்பிக்கொண்டிருந்தது. காலைப்பசி ஆற்றும் அன்றாட நிகழ்வுதான். ஆனால் அத்தனை அவசரம் அந்தப்பசுவிடம். அந்தப் பசுவைக்கடந்து சென்றாள், நந்தினி.
அவளுக்கு முன், "தக்காளி, கத்திரிக்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய், கொத்தவரங்காய், பீன்ஸ், கோஸ்ஸே…" காய்கறி விற்பவர் பரபரவென தள்ளுவண்டியில் கூவிக்கொண்டே போய்க்கொண்டிருந்தார். அவருடன் அவரின் மனைவியும் காய் விற்பனைக்கும், வண்டியைத்தள்ளுவதற்கும் உதவியாய்ச் சென்றுகொண்டிருந்தார்.
அந்தத் தெருவோரம் இருந்த வேப்பமரங்களும், புங்கை மரங்களும் பலமாய்க் காற்றில் அசைந்துகொண்டிருந்தன. அதனடியில் இளைப்பார அமர்ந்திருந்த குட்டி நாய்கூட, நாக்கை வெளியே தள்ளி மூச்சிரைக்க அமர்ந்திருந்தது.
நந்தினிக்கு முன்னும் பின்னும் அந்த காலனி மக்கள் நடந்தும், சைக்கிள், பைக்கிலும் பறந்துகொண்டிருந்தனர். ஒரு விடுமுறை நாளில் நடக்கும் அன்றாட இயல்பான வேலையும், நிகழ்வும்கூட அவ்வளவு பரபரப்போடு நடந்துகொண்டிருந்தது.
ஆனால், அதையெல்லாம் கடந்து சென்ற நந்தினியிடம், ஒரு நெருங்கிய இதயத்தை, நொறுக்கும் திட்டத்தைச் செயல்படுத்தப் போகிறோம் என்ற எந்தவித பதட்டமும், முகத்திலோ, செய்கையிலோ இல்லை.
முழங்காலை முழுதாய் மறைக்காத அரைப்பாவாடை, கறுப்பு நிறத்தில். அதற்கு பொருத்தமாய் வீ வடிவில் கழுத்து வைத்த கருமைநிற பனியன்துணியினாலான குட்டைக்கைச் சட்டை. அது அவளின் வழக்கமான விடுமுறை நாள் ஆடை. அவளின் எலும்பிச்சம்பழ நிறத்திற்கும், அந்தக் கருமை ஆடைக்கும், அந்த நண்பகல் வெயிலுக்கும் மின்னினாள் நந்தினி -அழகி. அந்த அழகில்தான் எவரும் அவள் மனதை அறியாதவாறு கட்டிப்போடுவாள். அதற்குமேல் சாமர்த்தியமான கொஞ்சும் பேச்சும் கைகூடும் நந்தினிக்கு. தான் நினைத்ததை வீழ்த்த, அவள் கூடவே பிறந்த இரு கூர்ஆயுதங்கள் அந்த வசீகரமும், பேச்சும்.
"மேகா இருக்காளா மா", வீட்டு வாசலில் காய்கறிக்காரரிடம் பேரம் பேசிக்கொண்டிருந்த மாறன்-மேகலையின் அம்மாவைக் கேட்டாள், நந்தினி.
“வா, நந்தினி. ஜம்முனு இருக்கமா. உள்ளதான்மா இருக்கா, போ”. மேகலையின் அம்மாவையும் கவர்ந்திருந்தது நந்தினியின் தோற்றம்.
“தேங்க்ஸ் ஆண்டி” புன்முறுவலுடன் வீட்டினுள் சென்றாள், நந்தினி.
“மேகா.. என்ன பன்னிட்ருக்க”
“வா, நந்து. என்ன அதிசயமா நீ மட்டும் வந்திருக்க. உன் நண்பன் கபிலன் வரலயா?” சிரித்தாள், மேகலை. அந்தச் சிரிப்பில் ஒரு எதிர்பார்ப்பு நடக்காமல்போனது அப்பட்டமாய்த் தெரிந்தது. நந்தினி அதைக்கவனித்தாள்.
“அவனுக்கு எங்கடி நம்ம அருமை தெரியப்போகுது. அவன் ஒரு நெலையில இல்ல. பார்த்தியா, நீ வந்த உடனே அவனப்பத்திக் கேக்குற. இதேமாதிரி அவன் உன்னையப்பத்திக் கேப்பானா? அவனுக்கு, எவ அவன கண்டுக்காம இருக்காளோ, அவளபத்துன நினைப்புதான் இருக்கும். எனக்கு செம கோவம் வருது மேகா அவன்மேல”. வந்த காரியத்துக்குப் பலமான அடித்தளம்போட்டாள், நந்தினி.
நந்தினி என்ன சொல்லவருகிறாள் என மேகா யோசித்தாள்?!
“சரி வீட்டுல உன் அண்ணே இல்லையா. அப்பா எங்கே?”- மாறன், அமுதன் வீட்டிற்குச் சென்றது தெரிந்தும், தெரியாததுபோலக் கேட்டாள், நந்தினி.
“இல்ல நந்து. அண்ணே, அமுதன் வீட்டுக்குப் போயிருக்கான். இனி அவன் ஈவ்னிங்தான் வருவான். அப்டி என்னதான் பேசுவாய்ங்களோ. அப்பா டவுனுக்குப் போயிருக்கார். அவர் வர்றதுக்கும் லேட்டாகும்”, மேகா அலுத்துக்கொண்டாள். நந்தினிக்கு மகிழ்ச்சி. “நாமசெய்ய வேண்டியதை செய்றதுக்கு நிறைய டைம் இருக்கு.” மனதுக்குள் நினைத்துக்கொண்டாள்.
“சரி அவுங்க வரப்போ வரட்டும். நீ சொல்லு, நான் நேராவே கேக்குறேன். கபிலன நீ லவ் பண்ரேல?
“என்ன சொல்ற நந்து!”. மேகலைக்கு மனம் பகீர் என்றது. ஒருவேளை எல்லாருக்கும் விசயம் தெரிஞ்சிருச்சா? தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டாள்.
“மேகா, நான் உன்னை ரொம்ப நாளா கவனிச்சிட்டுதான் வரேன். கபிலன் இருக்கும்போது நீ எப்டி இருக்க; அவன் நிலாவைப்பத்தி பேசும்போது உன் மனசு எப்டி அலைபாயுது, எல்லாம் தெரியும். வேற யார்ட்ட நீ இதப்பத்தி பேசமுடியும் சொல்லு? உன் அண்ணனுக்கு தெரிஞ்சா, அவன் கபிலனுக்குதான் சப்போர்ட் பண்ணுவான். நீதான் கபிலன் மனச குழப்புறன்னு உன் மேல கோபப்படுவான். மத்த எல்லாரும் கபிலன், நிலாவ லவ் பன்றனால, உன்னையதான் தப்பு சொல்வாங்க.”
“தனக்கு துணையாக ஒருத்தியிருக்கிறாள் என மகிழ்ச்சி அடைவதா, தான் காதலிக்கும் விவரம் நண்பர்களுக்குள் தெரிந்தால் இருக்கும் நட்பும் கெட்டுப்போய், கபிலனைப் பார்க்கும் சூழலும் இல்லாமல்போகுமா”. மேகா குழம்பிப்போய் நின்றாள்.
“என்ன யோசிக்கிற, மேகா. எனக்கு உன் மனசு தெரியும். கபிலனும் நானும் எவ்ளோ க்ளோஸ்னு உனக்கே தெரியும். நிலா, நீ, கபிலன் மூனு பேரும் எனக்கு ஃப்ரெண்ட்ஸ்தான். அதனாலதான் சொல்றேன். நீதான் கபிலனுக்குப் பொருத்தமானவ. சரி சொல்லு, நாளைக்கே கபிலன் உன்னைய லவ் பண்றேனு சொன்னா நீ அப்டியே அக்செப்ட் பண்ணிப்பியா? இல்ல உனக்கு அவன் என்னென்ன செய்யனும்னு எதிர்பார்ப்போ, கண்டிஸனோ இருக்கா?”
“இல்ல.. நான்.. அது எப்டி நடக்கும். கபிலன் நிலாவ லவ் பண்றானே”. மேகாவுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தினறினாள்.”
“என்னமா, எதாவது சாப்டுறியா. ஏன் நின்னுட்டே இருக்க. உக்காந்து பேசுங்கம்மா”. வெளியே காய் வாங்கிவிட்டு திரும்பிவந்த மேகலையின் அம்மா நந்தினியிடம் அன்பாகச் சொன்னார்.
“இல்லமா. நான் சாப்ட லேட்டாகும்”. பதில் சொன்ன நந்தினி மேகாவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். மேகா தீவிரமாக தான் சொன்னதைப்பற்றி யோசிப்பது தெரிந்தது. மனசுக்குள் மகிழ்ச்சியுற்றாள்.
“சரி உக்காருடி நீ”. தன் திட்டப்படி பேச்சைத் தொடர, மேகாவை அமரச்சொல்லி, தானும் அருகில் அமர்ந்தாள், நந்தினி.
“எனக்குத் தெரியும் மேகா, உனக்கு எந்த கண்டிஸனும் இருக்காது. ஏன்னா நீ கபிலன காதலிக்கிற, அவனயே கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைக்கிற. ஆனா நிலா, தான் போடுற கண்டிஸனுக்கு ஒத்துக்குறவன கல்யாணம் பண்ணிப்பேனு கபிலன்டயே சொல்றா. அதுக்கு இந்த லூசுப்பையன், என்னமோ அவ இவனத்தான் லவ் பண்றேனு சொன்னமாதிரி கவிதை எழுதிட்டு உக்காந்திருக்கான். நான் சுயநலமா யோசிக்கிறேன்னுகூட நினைச்சுக்கோ மேகா. நான் கபிலனோட நல்லதுக்காகத்தான் உன்ட பேசிட்டிருக்கேன். அதோட அவன எந்த கண்டிஷனும் இல்லாம ஏத்துக்குற பொண்ணா நீ இருக்குற. அதுவும் நம்ம ஃப்ரெண்ட்ஸ் சர்க்கிள்லேயே. அதான் மேகா சொல்றேன். நீதான் அவனுக்கு பொருத்தமானவ. அதான் கபிலனுக்கும் நல்லது.”
தன் பேச்சில் ‘கபிலன் நலனுக்காகத்தான்’ என திரும்ப திரும்பச் சொல்ல மறக்கவில்லை நந்தினி. அது மேகாவைக் கவர்ந்தது. நிலா கபிலன் காதலை ஒத்துக்கொள்ளாததும் அவளை யோசிக்கவைத்தது. தான் எந்த நிபந்தனையும் இல்லாமல் வாழ்க்கையை ஒப்படைக்க தயாராயிருப்பாதாய்த் தெரிந்தால், கபிலன் இன்றில்லையெனினும், நாளை தன்னை ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலை வருமெனத் தோன்றியது, மேகாவிற்கு.
“நந்து, எனக்கு கபிலன் கிடைச்சா அதவிட வாழ்க்கைல வேறெதுவும் பெரிசில்ல. ஆனா அது நடக்குமா, நான் எப்டி கபிலன்ட லவ் பண்றேனு சொல்றது. அவன் நிலாவோட பதிலுக்காக 3 வருஷம்கூட வெய்ட் பண்றேனு சொல்லிருக்கான். அதான் யோசிக்கிறேன்”. நந்தினி வலையில் வீழ்ந்தாள் மேகா!
“நான் எதுக்கு இருக்கேன். உனக்கும், கபிலனுக்கும், ஏன் நிலாவுக்குக்கூட எந்த மனக்கஷ்டமும் வராத மாதிரி நான் பாத்துக்குறேன். நீ மட்டும் கபிலனுக்காக எதையும் செய்வன்றதுல உறுதியா இரு”. நந்தினி உறுதி அளித்தாள்.
“தேங்க்ஸ் டீ.” மேகாவுக்கு பேச்சே வரவில்லை. நந்தினி கையை இறுகப்பற்றிக்கொண்டாள். கண்ணில் நீர் ததும்பியது.
“என்னடி இதுக்கலாம் தேங்க்ஸ் சொல்லிக்கிட்டு. கண்ணைத்துடை. அம்மா பாக்கப்போறாங்க”.
மேகா தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு எழுந்தாள். இரு நந்து வரேன். வீட்டு ஹாலிலிருந்து உள்ளே போனவள், நேராக அடுத்த அறையிலிருந்த சாமி அலமாரியில் மனமார வேண்டிக்கொண்டு, தன் நெற்றியில் குங்குமம் இட்டுக்கொண்டாள். அருகில் இருந்த கண்ணாடியைப் பார்த்தாள். அவள் மலர்ந்த நெற்றியில் சிவந்த குங்குமம், கபிலனே தன் கையால் வைத்துவிட்டதுபோல மனம் குளிர்ந்தாள். அடுப்பங்கறைக்குச் சென்று தன் அம்மாவிடம் சொல்லி, சூடாக ஒரு காபி போட்டு எடுத்துவந்து, ஹாலிலிருந்த நந்தினிக்குக்கொடுத்தாள்.
“என்னடி உடனடி ட்ரீட்டா?” மேகாவைச் சீண்டினாள், நந்தினி.
“அப்டிலாம் இல்ல… எனக்காக நீ இவ்ளோ பண்றதும், நீ உன் நண்பனுக்காக எவ்ளோ அக்கறைஎடுத்துக்குறதும், பாக்க நல்லா இருக்கு, நந்து!”.
நந்தினி, தன்னைப் பகடைக்காயாக ஆக்கிவிட்டாள் என்பதை உணராமல், மேகா உள்ளம் பூரித்தாள்.
“உன் நன்றிய, கபிலன் உன் கழுத்துல தாலிகட்டிக் கூட்டிப் போவான்பாரு, அப்ப சொல்லு. இனி நான் சொல்ற மாதிரி கேளு. ரொம்ப கவனமா இருக்கனும். நம்ம ஏழு பேருக்குள்ள இருக்குற ஃப்ரெண்ட்ஷிப் இதுனால கெட்டுப்போகக்கூடாது”. நந்தினி அக்கறையுடன் பேசுவதாகக் காட்டினாள். மேகலை கபிலனை நினைத்துப் புன்னகைத்தாள்.
“சரி மேகா. நான் போய்ட்டுவரேன். அம்மாட்ட சொல்லிரு”. நந்தினி கிளம்பினாள். மேகா வாசல் வரை சென்று வழியனுப்பினாள்.
.
கல்லூரி வளாகம்
கபிலன் நிலாவிடம் காதலைச்சொல்லி பல வாரங்கள் கடந்திருந்தது. இன்னும் நந்தினிக்கு முழுதாய்த் தூக்கம் வரவில்லை. எப்பொழுதும் கபிலன் நிலாவைப்பற்றியே சிலாகித்துக்கொண்டிருந்தான். சரியான சந்தர்ப்பத்தில் மேகலையைவைத்து கபிலனின் மனதைக் கலைக்கக் காத்திருந்தாள், நந்தினி. அதற்கான சந்தர்ப்பமும் வந்தது. அன்று கல்லூரிக்குச் செல்லும்போது கபிலனிடம் அதைப்பற்றி பேசவேண்டுமென நினைத்துக்கொண்டாள்.
கபிலனும் நந்தினியும் கல்லூரிக்குள் நுழைந்தனர். அப்பொழுதுதான் மழைபெய்து ஓய்ந்திருந்தது. பேராசிரியர்களும், கல்லூரியின் அலுவல் பணியாளர்களும் விதிமுறைக்குட்பட்ட, திருத்தமான உடையணிந்து, பலர் பைக்கிலும், சிலர் சைக்கிளிலிலும் கல்லூரியின் உள்ளே சென்றுகொண்டிருந்தனர். மாணவர்கள் அதற்கு நேரெதிராக, ரவுண்ட் நெக் டீ சர்ட், ஜீன்ஸ் பேண்ட், பென்சில் ஃபிட் பேண்ட், லெக்கின்ஸ், தோள்பட்டை முழுதும் தெரியும்படியான பனியனும் அணிந்து சென்றனர். அதில் சில பல சல்வாரும், சேலையும்கூட காணமுடிந்தது.
கல்லூரி மெயின்கேட்டிலிருந்து வகுப்பறைக் கட்டிடம் இருக்கும் தூரம் சிமெண்ட்டாலான பாதை. இருபுறமும் தொடர் பராமரிப்பில் வளர்க்கப்படும் பச்சையும், மஞ்சள் வண்ணமும் கலந்த சிறுசிறு இலைகள்கொண்ட குரோட்டன்ஸ் வகைச்செடிகள். ஓய்ந்திருந்த மழையின் துளிகளைத்தாங்கிய அந்தச் செடிக்கூட்டம், அங்கே மழைக்குப்பின் மீண்டும் விழித்திருந்த சூரியஒளியில், மின்னும் வைரத்தைத் தாங்கியிருந்ததுபோல் காட்சி தந்தது.
அச்செடிகளுக்கிடைய, ஒவ்வொரு பத்தடிக்கும் அந்த சிமெண்ட் சாலையின் இருபக்கமும், வேப்பமரங்களும், புங்கைமரங்களும் வரிசையாய் வளர்ந்து நின்றன. இருபக்க மரங்களின் கிளைகளும் பாதையின் மறுபக்கமிருந்த மரங்களின் கிளைகளுடன் கைகோர்த்ததுபோல் கிளைபரப்பியிருந்தது. அது கல்லூரியின் பிரதான வாயிலிருந்து, வகுப்பறைக்கட்டிடம் வரை, பச்சையிலைத்தோரணம் கட்டியதுபோலிருந்தது. சிமெண்ட் பாதையின் பள்ளங்களில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியிருந்தது. அதில் மரக்கிளையின் பசுமையும், செடியிலைகளின் மஞ்சளும் கலந்து ரம்மியமாய்ப் பிரதிபலித்தன. அந்த காட்சி முழுவதும் அச்சடித்து வைத்த ஓவியம்போல் காட்சிதந்தன.
தனது பிங்க் நிற லேடி பேர்ட் சைக்கிளை உருட்டிக்கொண்டே, கபிலனுடன் அந்த ஓவியப்பாதையை நடந்து கடந்துசென்றுகொண்டிருந்தாள், நந்தினி.
“டேய், எங்கப்பா, அம்மா கல்யாண நாள் அடுத்தவாரம் சன்டே வருது. இந்ததடவ எங்க ஊர்ல ஒரு ஃபங்ஷன்வச்சு கொண்டாடலாம்னு இருக்கோம். நீ வருவேல?”
“எங்க?”
“எங்க ஊர்ல!. அதான் சொன்னேனே?!”
“தெரியல”
“என்ன தெரியல” - நந்தினி கொஞ்சம் கடுப்பானாள்.
“ஏன்டீ கத்துற?!”
“நான் கத்துறேனா?. நீ கொஞ்சநாளாவே சரியில்லடா. என்கூடப்பேசிட்ருக்கும்போதே உனக்கு மனசெல்லாம் எங்கேயோ அலையுது”. நந்தினி அப்பொழுதுதான் கோபத்தில் கத்தினாள்.
கபிலன் கீழே குனிந்தவாறே மேலும் பதில் எதுவும் சொல்லாமல் நடந்து கொண்டிருந்தான்.
அடுத்தநொடி, சில்லென்று குளிர்த்தென்றல் அவனைத் தழுவிச்சென்றது. அவன் காலடிமுன் தேங்கியிருந்த மழைநீரில், அவன் தேவதை புன்னகைத்தாள்!.
கண்ணாடிபோன்ற அம்மழை நீர், வெண்ணிலாவின் கருவிழிகள் வெட்கத்துடன், கபிலனைப் பார்ப்பதை அப்படிப்பிரதிபலித்தன. சுற்றியிருந்த ஈரமும், பசுமையும், நிலாவின் பார்வை வழியே கபிலனின் இதயத்துக்குள் நுழைந்து குளிர்வித்தன. அவனைக்கடந்து கல்லூரிக்குள் சென்ற வெண்ணிலா, வழக்கம்போல் நேர்முகம் பார்க்காமல், தலைகுனிந்தவாறு சென்றாள். கபிலன் இருந்ததால், நந்தினியிடமும் நின்று பேசவில்லை. கபிலனைக் கடக்கும்போது அவளுக்குள் பூரிப்பு புன்னகையாய் மலர்ந்தது. அந்த ஓவியப்பாதையில், ஒரு சிலை நகர்ந்து சென்றதுபோல் இருந்தது, கபிலனுக்கு.
தான் முக்கியமான வீட்டு ஃபங்ஷனபத்தி அழுத்தமாகக்கேட்டும் பதில்சொல்லாமல் கபிலன் இருந்ததும், நிலா கடந்து சென்றபின் கபிலன் ஆனந்தத்தில் சஞ்சரித்ததும், நந்தினியை மேலும் கோபமூட்டியது. அவளுடைய சைக்கிளில் ஏறி, அவனிடம் எதுவும் சொல்லாமல் வகுப்பறைக்கட்டிடம் நோக்கி வேகமாகப் போய்விட்டாள். கபிலன் அதைக்கவனிக்கும் நிலையிலில்லை.
“கார்மேகத்தினுள்
ஒளிரும் பெளர்ணமிநிலவு
என்னைக் கடந்து செல்ல,
நிலைகுத்திய கண்களுடன்
நிமிர்ந்து பார்த்தேன்..
அக் கல்லூரி வளாகத்தில்,
காளைஎந்தன் மனதை
கணக்காகக் கொண்டுசென்ற
கன்னியவள்,
களிப்புடன் சென்றாள்!
அப்பொழுதுதான் புரிந்தது,
அப்பகல்வேளையில்,
கதிரவன் எனைக்கடிந்த காரணம்.
ஆம்,
எனை உரசிச்செல்லும்
அந்நிலாமங்கை,
அவன் வந்தால்
முகம் மறைத்துக்கொள்கிறாளே!.
நான் பார்த்து மகிழ,
அவனால் நெருங்க இயலவில்லை
என்ற கோபமாக இருக்கும்!”

நிலாவின் நினைவில் கபிலன் தன்மெய் மறந்தான்.
.
சோழரின் காஞ்சிபுரம். ராஜபாட்டை - அரண்மனை செல்லும் வழி
கார்காலக் குளிர்காற்று அந்தக் காலைவேளையில் அந்த நகரைச்சூழ்ந்திருந்தது. இளையராணி நந்தினி உயர்ந்த, வெள்ளைத்தோல் மின்னும், குதிரையில் மின்னலெனெ சீறிச்சென்றாள். பின்னால் அதேதிசையில் வல்லவன் வந்தியத்தேவன் தொடர்ந்து நடந்துவந்துகொண்டிருந்தான். ஆங்காங்கே மழை நீர் நிறைந்திருந்தது அந்த ராஜபாட்டையில். வரிவரியாகச் சென்றுவர இருந்தனர் யானை,குதிரைகளுடன் அரண்மனைக்காவலர்கள் மற்றும் அமைச்சர் பெருமக்கள். முன்னும்பின்னும் சென்று கொண்டிருந்தனர் குடிமக்கள். ராஜபாட்டையின் இருபுறமும் நீண்ட அகன்ற அரசமரங்கள், கிளைகளின் வழியே சற்றுமுன் நின்றுபோயிருந்த மழைநீரைச் சொட்டுச் சொட்டாக இட்டுக்கொண்டிருந்தது. வல்லவனுக்கு இவை யாவும் கண்களில்பட்டதாகத் தெரியவில்லை. தூக்குப்பல்லக்கில் இளையபிராட்டி குந்தவை தன்னைக்கடந்து செல்லும்போது, அவள் திரைவிலக்கித் தரைபார்ப்பதுபோல், அங்கு தேங்கியிருந்த மழை நீரில் தன் மனங்கவர்ந்தவரின் முகம் பார்த்தாள். அதில் மதிகிறங்கி தனைக்கடக்கும் மக்களைப்பார்க்காமல், மனம்போனபோக்கில் சென்றான் வந்தியத்தேவன்!

இளையராணி நந்தினி கடுமையான முகத்தோடு எதிரே தன்னை கடந்துபோவதைக் கவனித்த வந்தியதேவனின் நண்பன் பார்த்திபேந்திர பல்லவன், சற்று தூரத்தில் குந்தவையின் பல்லக்கும், அதன்பின் வந்தியத்தேவனும் வருவதைக்கண்டான். அங்கே என்ன நடந்திருக்கும் என்பதை அனுமானித்தவனாய், வந்தியத்தேவனருகில் சென்று அழுத்தமாய் அவன் தோளில் கைவைத்து, சிறிது குரலை உயர்த்தியே கேட்டான்.
“வந்தியத்தேவரே, குந்தவையைப் பார்த்த களிப்பில், இளையராணி நந்தினியை மறந்துவிட்டீராக்கும்?”
பார்த்திபேந்திரனின் கைப்பிடியிலும், குரலின் அழுத்தத்திலும் தன்னிலைக்கு வந்தான் வந்தியத்தேவன்.
.
கல்லூரி வளாகம்

கல்லூரி உட்புறச்சாலையில் மெய்மறந்து நடந்துவந்துகொண்டிருந்த கபிலன், பார்த்திபனின் அழுத்தமான பிடியில் சுயஉணர்வு பெற்றான்.
“என்னடா”
“என்ன, என்னடா. நந்தினி எப்பவும் உன்கூடயேதான க்ளாஸ்ரூமுக்கு வருவா. இப்போ அவ வேகமா சைக்கிள்ளபோறா. முகத்துல அவ்ளோ கோவம் தெரியுது. என்ன நடந்துச்சு. இப்பதான் வெண்ணிலாவும் முன்னாடி போறத பார்த்தேன். நீ நிலாவப் பார்த்துட்டு, நந்தினிய டீல்ல விட்ருப்ப. அதான் கடுப்பா போறா. கரெக்டா?
“இல்லடா அவதான் பேசிட்டே வந்தவ திடீர்னு கத்துனா. நான் ஒன்னும் சொல்லல. இப்ப நீ சொல்லித்தான் அவ முன்னாடி கோவிச்சிட்டுபோய்ட்டானு தெரியுது”
“கிழிஞ்சுது. அப்ப நந்தினி போனதுகூட தெரியாம, நீங்க நிலவுல மூழ்கிட்டீங்கெலா கபிலரே”. பார்த்திபன் கிண்டலாய்க்கேட்டான்.
“டேய். இல்லடா. அவளுக்கு ஏதாவது வொர்க் இருந்திருக்கும். அதான் போயிருப்பா”
“பாவம்டா நந்தினி. உனக்காகத்தான எல்லாம் செய்யனும்னு நினைக்கிறா. அவட்ட கேட்டுதான, வெண்ணிலாட்ட லவ்வ சொன்ன. அவளயே மறந்திட்டு திரியாதடா”.
பார்த்திபன் கபிலனுக்குச் சொன்ன சொல்லில், கபிலனின்மேலிருந்த அக்கறையைவிட, பார்த்திபனுக்கு நந்தினியின்மேலிருந்த பற்றுதல் அதிகாமாய்த்தெரிந்தது. கபிலன் அதைக்கவனித்தான்.
“சரிடா. நான் பேசிக்கிறேன் டா, நந்தூட்ட”. பதில் சொல்லிவிட்டு கபிலன் தொடர்ந்து நடந்தான்.
.
அன்று வகுப்பறையில் அவனைவிட்டு பல வரிசை தள்ளிப்போய் அமர்ந்துகொண்டாள், நந்தினி. கபிலனும் அதைக்கவனித்து கொஞ்சம் இடைவெளிவிடுவோமென நினைத்து அமைதியாய் இருந்தான். அடிக்கடி நந்தினி என்ன செய்கிறாள் எனப்பார்த்துக்கொண்டே இருந்தான். மாலை வரை நந்தினி கபிலனிடம் முகங்கொடுத்துப் பேசவில்லை. அன்றைய தினத்தின் கடைசி வகுப்பு ஆரம்பிக்கும்முன், நந்தினிக்கு அருகில்போய் உட்கார்ந்தான்.
“இப்ப எதுக்கு வந்த”
“நீ வரல. அதான் நான் வந்தேன்”
“ஏன், உன் நிலா வரலயா”
“அவ வந்தாலும், நான் உன்கூடதான வருவேன்”
“கிழிச்ச”
“சாரி, நந்து. நாம நெக்ஸ்ட் வீக் உங்க ஊருக்குப்போறோம். உங்க அப்பா-அம்மா கல்யாண நாள செலிப்ரேட் பண்றோம். ஜாலியா வீக் எண்ட் ரெண்டுநாளும் ஊர்சுத்திட்டு வர்றோம். ஓகே வா”
“சீரியஸாதான் சொல்றியா?. உங்க வீட்டுல ஒத்துப்பாங்களா, ரெண்டு நாளைக்கு என்கூட வர்றதுக்கு?”
தான் காலையில் கல்லூரிக்குள் வரும்பொழுது கபிலனிடம் சொன்னதை அவன் கவனிக்கவில்லை என்ற கோபத்தில் இருந்த நந்தினி, அவனாக மாலையில் எல்லா விவரமும் சொல்லி, வருவேன்னும் சொன்னதால் கோபம் குறைந்தது நந்தினிக்கு.
“கண்டிப்பா ஒத்துக்கமாட்டாங்க”. சிரித்தான், கபிலன். “ஆனா உன்கூட வரனால, உங்க அப்பா-அம்மா பேர சொல்லி நான் ஒத்துக்கவச்சுருவேன்”
“ம்ம். குட் பாய்” நந்தினி அவன் தலையில் செல்லமாய்த்தட்டி மகிழ்ந்துபோனாள்.
“டே, அப்புறம் இந்த ஃபங்ஷன் க்ளோஸ் ரிலேடிவ்ஸ்க்கு மட்டுந்தான் சொல்லிருக்கோம். அதனால, நம்ம மத்த ஃப்ரெண்ட்ஸ்ட சொல்லல. நீயும் இதபத்தி எல்லாரும் இருக்கும்போது பேசாத”
“அப்டியா. ம்ம்.. ஏன்..?!. சரி ஊர்ல வீட்டுல நடக்கப்போற ஃபங்ஷன். எல்லாரையும் கூப்டாலும் உன்னால கவனிக்க முடியாது. ஓகே நான் இதப்பத்திப்பேசல. ஆனா, யார்ட்ட சொல்லாட்டியும் அமுதன்ட சொல்லிருவேன். அவன் புரிஞ்சுப்பான்”. கபிலன் அவனாகவே சமாதானம் செய்துகொண்டான்.
“ஆமடா. நீ சொன்னதத்தான் நானும் யோசிச்சு ஃப்ரெண்ட்ஸ்ட சொல்லவேணாம்னு சொன்னேன். ஆனா மேகலைக்கு, சிவன் கோவில்ல ஒரு நேத்திக்கடன் இருக்கு. அதனால எங்க ஊருக்கு ஒரு நாள் கூட்டிட்டுப்போகச் சொன்னா. இதுக்காக அவள தனியா ஒருநாள் கூட்டிட்டுப்போக முடியாது. அதனால அவள மட்டும் இந்த ஃபங்ஷனோட கோவிலுக்கும் கூட்டிட்டுப்போலாம்னு இருக்கேன். மாறன்டயும், அவுங்க விட்டுலேயும் நான் பேசிக்கிறேன். நீ எதுவும் பேசிக்குழப்பாம இரு”
“சரி, நீ பேசி ஃப்ரெண்ட்ஸ்குள்ள மனஸ்தாபம் வராம பாத்துக்கோ. அவ்ளோதான் சொல்வேன்”
“கண்டிப்பா டா. எனக்காக இல்லேனாலும், உனக்காகக் கண்டிப்பா நான் உங்களுக்குள்ள எந்த மனஸ்தாபமும் வராதமாதிரி இதச்செய்றேன்”
நந்தினி உறுதியளித்தாள். கபிலன் பாதி சாமதானம் அடைந்தான். பல நாளாய் அவள் நினைத்த கபிலன்-மேகலை தனிமைச் சந்திப்பை ஏற்படுத்த அந்த ஊர் விழாவை பயன்படுத்திக்கொள்ள முடிவெடுத்தாள்.
.
நாம் கபிலனைத் தொடர்வோம்-6

ReplyQuoteLikeReportUnapproveEditDelete

 

Akilan Mu

Saha Writer
Messages
28
Reaction score
1
Points
1
கபிலனின் நிலா - நிகழ்வு: 7

கல்லூரி டீக்கடை

கபிலன், அமுதன், மாறன் மற்றும் பார்த்திபன் கல்லூரியின் எதிர்ப்புறமிருந்த டீக்கடை பெஞ்சில் அமர்ந்துபேசிக்கொண்டிருந்தனர்.

பர்னரில் ஆவி பறக்க டீ கொதித்தது. டீயும் முறுக்கும், சிகெரெட்டும் சப்ளை செய்வதில் கடைக்காரரும், அவருக்கு உதவியாக ஒரு வாலிபனும் பிஸியாக இருந்தனர். கலர்கலராய் லுங்கியும், பெர்முடாஸும அணிந்த இளைஞர்கூட்டமாய் இருந்தது டீக்கடை. விடுமுறை தினமானதால் கல்லூரி விடுதி மாணவர்கள் பலர் இருந்தனர். எத்தனை கூட்டத்திலும் கபிலன் மற்றும் நண்பர்களுக்கு, டீக்கடை மூலையிலிருந்த கருங்கல் பெஞ்ச் கிடைத்துவிடும். காரணம் அவர்கள்யாரும் புகைபிடிப்பதில்லை. புகைபிடிக்கும் நபர்கள் யாரும் அந்தமூலையில்போய் அமர்வதில்லை.

மெயின்ரோட்டில் கல்லூரி பஸ்டாப்பில் அந்த டீக்கடை இருந்தது. அதனால் நகரப்பேருந்து வருவதும் போவதுமாய் பிஸியாக அந்த ஏரியா இருக்க, மக்கள் வந்து சென்றுகொண்டிருந்தனர். அத்தனைக் கூட்டத்திலும், கபிலன் மற்றும் நண்பர்கள், அவர்கள் உலகத்தில் அசராமல் பேசிக்கொண்டிருந்தனர்.

“லவ்வ சொல்லியாச்சு. காலால கோலம் போட்டாச்சு. க்ரீட்டிங் கார்டும் வாங்கிக்கிட்டாச்சு. என்னடா ட்ரீட்லாம் கிடையாத”. அமுதன் கபிலனைப் பார்த்துக்கேட்டான்.

“ஏன்டா… நானே 3 வருஷம் கழிச்சுப் பேசுறேன்னு, ஏதோ மூணுநாள் கழிச்சு வரேன்ற மாதிரி சொல்லிட்டேன்னு யோசிச்சிட்டு இருக்கேன். அதுக்குள்ள என்னலாம் நடக்குமோ. இதுல இப்பவே ட்ரீட்டா?!”

“அவ உன்ட என்ன சொன்னா. எங்கப்பா அம்மாகூட இருக்கனும், நிறைய குழந்தைங்க வேணும்னுதான. உன்னையாரு தம்பி, மீட் பண்ணமாட்டேன், பேச மாட்டேன்லாம் டயலாக் அடிக்கச்சொன்னா?” அமுதன் சிரித்துக்கொண்டே கேட்டான்.

“அதான... பேசாமா, மீட் பண்ணாம இருக்குறதுக்கு எதுக்குடா இப்பவே சொல்லனும்?.” - பார்த்திபன்

“டேய். டெய்லி பார்த்து, பேசி ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிக்கிட்டு அப்புறம் கல்யாணம் பண்றவங்களே, பலகுறைய சொல்லிட்டு சண்ட போட்டுக்குறாங்கெ. நீ நிலாட்ட சொன்ன பிளான்லாம், லவ் மேரேஜயே அர்த்தமில்லாம பண்ணிரும் டா” - மாறன்

"நீங்க சொல்றெதெல்லாம் கரெக்ட்தான் டா. எங்க வீட்டுல இப்ப விசயம் தெரிஞ்சா நம்மால அத சமாளிக்கமுடியாது. நான் சம்பாதிக்க ஆரம்பிக்காம இந்த விசயத்தப்பத்தி பேச்சே எடுக்க முடியாது. எல்லாத்தையும் யோசிச்சிட்டுதான் நான் இப்டி பிளான் பண்ணேன்" - கபிலன்

"சரி விடுறா. எல்லாரும் இங்கதான இருக்கப்போறோம். இதுல நம்ம ஃப்ரெண்ட்ஸ் சர்க்கிள்குள்ளதான அவளும் இருக்கா. அப்டிலாம் பெரிய கேப் விழாது. பாத்துக்கலாம். நீ, அஜீத் மாதிரி 'காதல் கோட்டை'ய கட்டு" - அமுதன் சொல்ல, எல்லாரும் கலகல எனச் சிரித்தார்கள், கபிலனும் சேர்ந்து சிரித்தான்.

நண்பர்களின் உரையாடல் தொடர்ந்தது. அதற்குள் ஆளுக்கு ரெண்டாக எட்டு டீ காலியாகியிருந்தது. பல வடை, பஜ்ஜிகளும்.

"சரி, இப்ப சாப்ட பில்ல கட்டு. ட்ரீட் அப்புறமா பாத்துக்கலாம்" - அமுதன் சிரித்தான் மீண்டும்.

கபிலன் டீக்கடையில் அரட்டை அடித்துக்கொண்டிருந்த மாணவர் கூட்டத்திக்கிடையே சென்று பில்லைக் கட்டினான். நண்பர்கள் எல்லோரும் அவரவர் வீட்டுக்குக் கிளம்பினர்.

.

அன்று வெள்ளிக்கிழமை. அன்று மாலை நந்தினியின் ஊருக்குச்செல்ல கபிலன், மேகலை இருவரும் தயாராயிருந்தனர். சனி, ஞாயிறு ஊரில் இருப்பதாகத் திட்டம். கபிலன் வீட்டில் நந்தினியின் அப்பா சொன்னதாலும், மேகலை வீட்டில் நெடுநாள் கோயில் நேத்திக்கடன் என நந்தினியும், மேகலையும் பக்திகாட்டியதாலும், அனுமதி கிடைத்தது. மாறன் கபிலனை நம்பி, தன் தங்கை மேகலையின் பயணத்திட்டத்திற்கு ஒன்றும் சொல்லாமல் இருந்துவிட்டான். அது பின்னாளில் பெரும் பிழையாக இருக்குமென அப்போது அவன் அறியவில்லை!.

மாலை 4 மனியளவில் நாகர்கோவில் பேருந்து நிலையத்திற்கு கபிலனும், மேகலையும் வந்து சேர்ந்தனர். நந்தினியின் குடும்பத்திற்காக அவள் ஊரான குழித்துறை செல்லும் பேருந்து நிற்கும் பிளாட்பாரத்தில் காத்திருந்தனர். பிளாட்பாரக் கடை, பேருந்து நிலைய உட்புறச்சாலை எங்கும் மக்கள் கூட்டம் மிகுதியாக இருந்தது. அக்கூட்டத்திற்குப் பாதிக்கும் பாதியாக வந்து சென்றுகொண்டிருந்தன பேருந்துகள். எங்கும் பெரிய இரைச்சல்.

“எதாவது சாப்டுறியா, மேகா”.

“இல்ல வேணாம்”. மேகா மெலிதாய் வெட்கப்பட்டாள்.

“சரி இங்கயே நில்லு. நான் அஞ்சு நிமிஷத்துல வந்துர்றேன்”.

“ம்ம்”

மேகாவிடம் சொல்லிவிட்டு பக்கத்திலிருந்த கடைக்குச் சென்றான். மேகா உள்ளம் குளிர கபிலனுடனான நொடிகளை ரசித்துக்கொண்டிருந்தாள். பசி, தாகம் எதுவும் அவளுக்குத் தோன்றவில்லை. சில நிமிடங்கள் கழித்து கபிலன் திரும்பி வந்தான். கையில் ஸ்வீட், காரம், சில வார இதழ்கள் இருந்தன.

“இந்தா, இதெல்லாம் உன் பேக்ல வச்சுக்க. நீ ஃபர்ஸ்ட் டைமா நந்தினி தாத்தா, பாட்டி வீட்டுக்கு வர்ற. அதனால, இதெல்லாம் அவுங்கட்ட நீ குடுத்தா ரொம்ப சந்தோஷப்படுவாங்க.”

“இல்ல பரவாயில்ல. நீங்களே குடுத்திருங்க”

“அட, நான் சொல்றதக்கேளு. நான் தாத்தா பாட்டி வீட்டுக்கு ரெண்டு மூணு தடவ போயிருக்கேன். இந்த தடவ நீ குடு அவுங்களுக்கு. பேக்ல வை எல்லாத்தையும்”

“சரி. எவ்ளோ ஆச்சு?” மேகலை தன் பர்ஸை எடுத்துக்கொண்டே கபிலனிடம் கேட்டாள்.

“ம்ம்.. ரெண்டாயிரம் ரூபா”

“அய்யோ.. என்ன இப்டி சொல்றீங்க”

“அப்புறம் என்ன. உன்ட கேட்டனா”.

மேகலை நாக்கைக் கடித்துக்கோண்டாள். கபிலன் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. அவனுக்கு நண்பனின் சகோதரியை நன்கு கவனித்துக்கொள்ளவேண்டும் என்று மட்டுமே நினைத்தான். அதேநேரம் நந்தினி தன் பெற்றொருடன் ஆட்டோவில வந்து இறங்கினாள்.

கபிலன் ஆட்டோ அருகே சென்று அவர்கள் கொண்டுவந்த பயணப்பொருட்களை வாங்கிக்கொண்டான்.

“என்ன கபிலா, எப்டி இருக்க. என்ன இப்பெல்லாம் வீட்டுப்பக்கம் அடிக்கடி பாக்க முடியிரதில்ல”. - நந்தினியின் அப்பா.

“இல்லப்பா. கொஞ்சம் வேலை அதான்”. கபிலன் பாந்தமாகப் பதிலளித்தான்.

“நல்லாயிருக்கியப்பா. வீட்டுக்கு வாப்பா” - நந்தினியின் அம்மா.

“நல்லாயிருக்கேன்மா. வர்றேன்மா”

“அவன் இப்பெலாம் ரொம்ப பிஸியாயிட்டாம்பா. நம்ம வீட்டுக்கு வர்றதுக்கெல்லாம், டைம் இல்ல, அய்யாவுக்கு”.

கபிலன் நிலாவின் நினைப்பில் சுற்றுவதை மனதில் வைத்து, நந்தினி சமயம்பார்த்து அவன் காலை வாரினாள். கபிலன் அவளை முறைத்தான். அனைவரும் பேருந்து நிற்கும் பிளாட்பாரத்திற்கு வந்து சேர்ந்தனர். அங்கே மேகலையிடம் நந்தினியின் பெற்றோர் நலம் விசாரித்தனர். குழித்துறை செல்லும் பேருந்து வந்து சேர்ந்தது.

.

அனைவரும் பேருந்தில் ஏறிக்கொண்டணர். பேருந்தினுள் ஒரு பக்கம் மூவர் அமரும் இருக்கை, மற்றொருபக்கம் இருவர் அமரும் இருக்கை. மேகலை இருவர் அமரும் இருக்கையில் ஜன்னல் ஓரமாய் அமர்ந்தாள். மறுபக்க இருக்கையில் உட்காரப்போன கபிலனை அழைத்தாள் நந்தினி.

“எங்க போற. உன் ஃப்ரெண்டோட தங்கச்சிய நீதான்பா பத்திரமா பாத்துக்கனும். சொல்லிதான அனுப்புனான். அவகூடப்போயி உக்காரு”.

கபிலனிடம் சொல்லிவிட்டு மேகலையைப் பார்த்துக் கண்சிமிட்டினாள். மேகலைக்கு வெட்கம். ஜன்னல்பக்கம் வெளியே வேடிக்கை பார்ப்பதுபோல் பார்வையைத் திருப்பிக்கொண்டாள்.

“இதுக்கேன்டி இவ்ளோ பில்டப் குடுக்குற. நீ அவளோட பேசிட்டு வரணும்னு நினப்பேன்னுதான், நான் உட்காரல.”

“அதெல்லாம் நான் ஊர்லபோய்ப் பாத்துக்குறேன்... நீ போய் இப்ப உக்காரு”

கபிலன் மேகலையின் அருகில் எந்தச் சலனுமும் இல்லாமல் உட்கார்ந்தான். கபிலனின் இடதுகை மேகலையின் சல்வாரில் உரசியது. மேகலைக்கு கால்கள் மட்டுமல்ல, மனதும் தரையிலில்லை. ஜன்னல்பக்கம் வெளியே பார்வையைத் திருப்பியிருந்தவள், அப்படியே பார்வையை நிலைநிறுத்தப் போராடினாள்.

பேருந்து நகரநெருக்கடியைத்தாண்டி குழித்துறை ஊருக்குச் செல்லும் கிளைப்பாதையில் சென்றுகொண்டிருந்தது. சாலையின் இருபுறமும் தூரத்தில் காட்டுமரங்கள் நிறைந்த மலைகள் கண்ணுக்கெட்டிய தூரம்வரை நீண்டிருந்தது. தார்ச்சாலையையொட்டி வரிசையாக தென்னைமரங்கள் உயரமாக வளர்ந்து நின்றன. தென்னைமரங்களையொட்டி, அடர்ந்த செடிகளும், கொடிகளும் படர்ந்திருந்தன. மலைகளுக்கும்,தார்ச்சாலையினருகில் வளர்ந்திருந்த செடிகொடிகளுக்கும் நடுவே சல சல சலவென வற்றாத ஜீவநதி தாமிரபரணி ஆறு உத்வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. கால்வைத்தால் காததூரம் இழுத்துச் சென்றுவிடும் ஆற்றின் வேகம்.

“...வளைந்து நெளிந்து போகும்பாதை மங்கை மோகக் கூந்தலோ

மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ

ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது…”


பேருந்துக்குள் ஒலித்துக்கொண்டிருந்த ‘முள்ளும் மலரும்’ திரைப்பாடல் அந்தச்சூழலை அப்படியே பிரதி எடுத்ததுபோல் இருந்தது. அது மேகலையை மேலும் கிறங்கச்செய்தது. தனக்காகவே இளையராஜாவும், யேசுதாஸும் பாடலை இசைப்பதாக நினைத்தாள்.

அந்தச் சமயத்தில் கபிலனிடம் ஏதேனும் பேச்சை எடுக்கலாம் என நினைத்து ஓரக்கண்ணால் பார்த்தாள். கபிலன் இருக்கை அருகேயிருந்த நீண்ட கம்பியின் துணையுடன் சாய்ந்து அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தான்!. மேகலை அவன் உறங்குவதையும் ரசித்தாள்! ஊரும்வந்து சேர்ந்தது.

.

குழித்துறை கிராமம். நந்தினியின் தாத்தா வீடு.

பரந்து விரிந்த வீட்டின்முன் பெரிய காலியிடம். ஒரு பக்கம் சிலநாட்கள்முன் அறுவடைசெய்த நெல்மணிகள் கொட்டப்பட்டிருந்தன. நடுவயதுப் பெண்மணிகள் மூன்றுபேர் அதைக்காலால் விரவிக்கொண்டிருந்தனர். மற்றொருபக்கம் வெட்டப்பட்ட தேங்காய்கள் மலைபோல் குவிக்கப்பட்டிருந்தன. அதனை இருவர் இரண்டிரண்டாய் கீழிருந்து வீச, அருகே நின்றிருந்த லாரியின்மேலிருந்த இருவர் அதனை லாகவமாய்ப் பிடித்து அடுக்கிக்கொண்டிருந்தனர். இதற்கிடையில் சில சேவல்களும், பல கோழிகளும் அதன் குஞ்சுளும் மண்ணைக்கிளறி அங்குமிங்கும் மேய்ந்துகொண்டிருந்தன.

அந்தக்காலப் பாரம்பரிய கிராமத்து பெரிய மச்சுவீடு. முக்கோணவடிவில் ஓடுவேய்ந்த முன்புறக்கூரை. அடுக்கடுக்காய் அதன்பின்னர் பலஅடுக்குகள்கொண்ட மாடிகள்கொண்ட ஓற்றை வீடு. வீட்டின் அகன்ற முன்வாசற்படியின் முன்னர் ஒரு நீலநிற அம்பாசடர் கார் நின்றிருந்தது. அதனருகில் கருமை நிற என்பீல்டு புல்லட். விசாலமான முற்றம்.

உள்ளே நுழையும்முன் வீட்டுத்தலைவாசலில் வைத்து வரவேற்றனர் நந்தினியின் தாத்தா மற்றும் வீட்டில் பரம்பரையாய்ப் பணியாற்றுபவர்கள். பாட்டி உள்ளே பரபரப்பாய் சமையல் ஆட்களிடம் வேலைவாங்கிக்கொண்டிருந்தார்.

“பேராண்டி எப்டி இருக்க? உள்ள வாம்மா. யார் இந்த பொண்ணு”. மேகலையை உள்ளே அழைத்துவிட்டுத்தான், யாரென்று தாத்தா அக்கறையுடன் கேட்டார், கபிலனிடம்.

“அவ என் ஃப்ரெண்டு தாத்தா. கபிலன் ஃப்ரெண்டோட தங்கை”. கபிலன் பதில்சொல்வதற்குள் நந்தினி முந்திக்கொண்டாள்.

“ஆசிர்வாதம் பண்ணுங்க தாத்தா”. காலில் விழுந்து வணங்கினாள், மேகலை.

“நல்லா இரும்மா” - தலையில் கைவைத்து ஆசீர்வதித்தார் தாத்தா.

“இந்தாங்க தாத்தா. பாட்டிட்டயும் கொடுங்க” - கபிலன் வாங்கிக்கொடுத்த இனிப்பு, காரவகை மற்றும் வார இதழ்களைத் தாத்தாவிடம் கொடுத்தாள்.

“ம்ம்.. பாருப்பா.. தாத்தாவுக்கு என்னென்ன பிடுக்கும்னு முதல்தடவ வரும்போதே தெரிஞ்சிருக்கு, என் புதுப்பேத்திக்கு”. உளம்மகிழ்ந்து மேகலையை பேத்தியென்று உரிமையாகச் சொன்னார்.

மேகலை மகிழ்ந்துபோய் நன்றியும், காதலுமாய் கபிலனைப்பார்த்தாள். கபிலன் இயல்பாய் கண்ணடித்து, “எப்டி என் ஐடியா” என்பதுபோல் ஜாடைசெய்தான். மேகலை உள்ளம் குளிர்ந்தாள். நந்தினிக்கும் மகிழ்ச்சி. அனைவரும் வீட்டினுள் சென்று இளைப்பாறினர்.

மறுநாள் நடக்கப்போகும் நந்தினி அப்பாவின் 50வது பிறந்ததினவிழாவிற்கான ஏற்பாடுகள் வீட்டில் நடந்துகொண்டிருந்தது.

.

மாலை 630மணி. வீட்டின் இரண்டாம் தளம். மொட்டை மாடி. ஒருபக்கம் நீண்ட மலைத்தொடரும், அதனையொட்டிய ஆறும். மறுபுறம் செழிப்பான தென்னைமரங்கள் அடர்ந்த தோப்புகளும், பச்சையும், மஞ்சளுமாய் வயல்வெளிகளும், ஏகாந்தமாய் இருந்தது. மேகலை மாடியின் ஒரு ஓரமாய் சுவர்மீது சாய்ந்துகொண்டு மலையையும், ஆற்றின் நீரோட்டத்தையும் காபி குடித்துக்கொண்டே, பார்த்துக்கொண்டிருந்தாள். இல்லையில்லை ரசிப்பதுபோல் நின்றுஒண்டிருந்தாள். அவள் பார்வை மலைசார்ந்த வெளிப்புறத்திலும், மனமுழுதும் கபிலனை நோக்கியும் இருந்தது. மனதில் ஒரு பதட்டம். மறுபுறம், நந்தினி கபிலனுடன் நின்றிருந்தாள்.

“உன்ட ஒன்னு சொல்லனும் டா”

“சொல்லு”

“ரொம்ப கஷ்டமா இருக்குடா. உனக்கே தெரியும் நீ எந்த முடிவு பண்றதுக்கும்முன்னாடி என்டயும், நான் அதேமாதிரி உன்டயும் கேட்டு சரியா செய்வோம். நீ இப்ப எடுத்திருக்குற உன் வாழ்க்கைப்பத்தின முடிவக்கூட என்ட கேட்டுட்டுதான் முடிவுபண்ண”

“எத சொல்ற? நிலாவ லவ்பண்ற மேட்டரா?”

“ஆமா”

“சரி அதுக்கென்ன இப்போ”

“இல்ல… நான் எப்பவும் உன்னோட ஆசைக்கு சரின்னு சொன்னா, அதுல வேற செகண்ட் தாட் இருக்காது. ஆனா நீ நிலாவ லவ்பண்ற, அத அவட்ட சொல்லப்போறன்னு என்ட சொன்னப்போ, எனக்கு எதோ சரியாபடல. ஆனா நீ ரொம்ப நாளா ஆசைப்பட்ட, அதுவும் உனக்குப் பிடிச்ச் லைஃப் மேட்டர்ன்றனால, நானும் ஓகேனு சொல்லிட்டேன்.

“என்ன சொல்ற”. கபிலன் கொஞ்சம் பொறுமையிழந்தான்.

“நான் சொல்றத கோபப்படாம கேளு, கபிலா!”

“ரொம்ப இழுக்காம டக்குனு சொல்லுடி”

“சரி. கபிலா எனக்கு நீ என்ன பண்ணாலும் எனக்கோ மத்தவங்களுக்கோ, ஏன் அது உங்கப்பா, அம்மாக்குக்கூட சரியாஇருக்குமானு கவலைப்படமாட்டேன். உனக்கு அதுல எந்த பிரச்சனையும், பின்னால உனக்கு எந்தக்கஷ்டமும் வரக்கூடாதுன்னு நினைப்பேன். அப்டி எனக்கு நம்பிக்கை இருந்தாதான் என்ட நீ ஒரு புது விசயத்தைப் பத்தி கேக்கும்போது, சரின்னு சொல்வேன். ஆனா நிலா விசயத்துல அறமனசாதான் தலையாட்டுனேன். என் உள்மனசு அது உனக்கு சரிப்படாதுன்னு சொல்லுச்சு. அது சரிதான்னு நிலா உன்ட சொன்ன கண்டிஷனப்பார்த்து தெரிஞ்சுது”

“எந்த கண்டிஷன்?”

“என்ன கண்டிஷன், அது சரியாத் தப்பானு நான் சொல்ல வரலடா. முதல்ல, நீ உனக்கு பிடிச்சிருக்கு, அவளதான் கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைக்கிறேன், அதுல டெய்லி பாக்கனும், பேசனும்னுகூட நினைக்கலனு, நீ சொன்னப்போ, உன்னைய அவளுக்குப் பிடிச்சிருக்கா இல்லையானுதான அவ முதல்ல சொல்லியிருக்கனும். அதையே சொல்லாம, அவபாட்டுக்கு அவளுக்கு சரின்னுபடுறத கண்டிஷனா சொல்லிட்டு, அதுக்கு ஒத்துக்குறவன கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொன்னா, அது கொஞ்சம்கூட லவ் இல்லடா. யார் அந்த இடத்துல அவ சொல்றதுக்கு சரின்னாலும், அவ ஓகே சொல்லுவா. அதுல நீ நூத்துல ஒன்னு” - நந்தினி நச்சென்று மனதில் அறைவதுபோலச் சொன்னாள்.

“நீ சொல்றது சரிதான்டி. ஆனா அவளா என்ட எதுவும் சொல்லலேயே. நானாதான் கேட்டேன்”

“நீயாதான் கேட்ட. ஆனா அத அவ மதிக்கவே இல்லையே. நீ வந்தாலும் சரி, உன்னைய மாதிரி வேற எவனும் அவ சொல்றத ஒத்துக்கிட்டு வந்தாலும் சரி. அவளுக்கு ஒன்னுதான். அப்டிதான உனக்கு பதில் சொன்னா?”.

நந்தினி கடுமையாகக் கேட்டாள். கபிலன் அமைதியாக யோசித்தான்.

“நீ யோசிச்சுபாரு. அப்படியே அவ சொல்றத எல்லாம் நீ அக்செப்ட் பண்ணி, அவள கல்யாணம்பண்ணுனாலும், உங்கப்பா, அம்மா வெண்ணிலாவோட பேரண்ட்ஸோட ஒரேவீட்டுல இருபாங்கன்னு நினைக்கிறியா? அப்படி அவுங்களால இருக்கமுடியலேனா, வயசான காலத்துல உன்ன மாதிரி ஒத்தபையனப்பெத்திட்டு, அவுங்க எங்கடா போவாங்க?”.

நந்தினி அடுத்த அம்பை எய்தாள். அதில் பலமாகக் குழம்பினான், கபிலன்.

“யோசிக்கவேண்டிய விசயந்தான், நந்து!. நான் இதெல்லாம் சரிபண்ணத்தான் 3 வருஷம் டைம் பிளான் பண்ணேன். ஆனா பிராக்டிகலா பார்த்தா இந்த ரெண்டுபேரு அம்மா-அப்பாவும் ஒரேவீட்டுல இருக்குறதெலாம் நடக்காத விசயம். நீ சொல்றது சரிதான். இத எப்டி செஞ்சா சரியாவௌம்னு நீ நினைக்கிற?”

“கபிலா… நான் உங்க ரெண்டுபேரு அம்மா-அப்பா சேர்ந்து ஒரே வீட்டுல இருக்குறதப்பத்தி சொன்னது ஒரு சாம்பிள். அதுு முடியுமா, முடியாதான்னு யோசிக்கல. இப்பவே இப்படி கண்டிஷன் போட்டா. கல்யானத்தப்போ இன்னும் எவ்ளோ கண்டிஷன் வருமோ! கல்யானத்துக்கப்புறம் எவ்ளோ கண்டிஷன் போடுவாளோ!. அதெல்லாம் நீ செய்ய முடியலேனா?. லவ் பண்ணி, இவ்ளோ நாள் வெய்ட் பண்ணி கல்யாணம் பண்றது, தெரிஞ்சே பிரச்சனைய உண்டாக்குறதுக்கா?”

“ம்ம்..”

“இதே இடத்துல உன்னைய உன் விருப்பப்படியே ஏத்துக்குற பொண்ணா இருந்தா, நீ லவ் பண்ணி கல்யாணம் பண்றதுல ஒரு அர்த்தமிருக்கும்”

“ம்ம்..”

“அப்படி ஒரு பொண்ணு உனக்காகவே தினம் தினம் உருகிட்டிருக்கா இங்க”. பட்டென்று மேட்டரை உடைத்தாள், நந்தினி.

அதுவரை, நிலாவிடம் தான் எப்படி நந்தினி சொன்ன விசயங்களை சமாளிக்கவேண்டுமென என யோசித்துக்கொண்டிருந்த கபிலன் திடுக்கிட்டு நந்தினியைப் பார்த்தான்.

“நீ நிலாவ லவ் பண்றனு தெரிஞ்சும், நீ எவ்ளோ கண்டிஷனுக்குள்ள மாட்டிக்கப்போறனு கவலைப்படுறா. உனக்காக உன்கூட நீ சொல்ற இடத்துக்கு ஓடிவர ரெடியா இருக்கா. அந்த பொண்ண நீ கல்யாணம் பண்ணா நீ நினைக்கிற லவ் மேரேஜ் வாழ்க்கை கிடைக்கும்”

நந்தினி படபடவென்று கொட்டித்தீர்த்தாள்.

“யார சொல்ற. அப்டியிருந்தா எனக்கெப்படி இவ்ளோ நாள் தெரியாமப்போச்சு”?

“அவ இங்கதான் இருக்கா”.

நந்தினி கபிலனிடம் சொல்லிவிட்டு, தள்ளி நின்றுகொண்டிருந்த மேகலையைப் பார்த்தாள். கபிலன் அதிர்ச்சியில் திரும்பி மேகலையைப் பார்த்தான். மேகலை தூரத்தில் தெரிந்த மலைத்தொடரைப் பார்த்தபடியே நின்றாள். அவளின் கூந்தல் காற்றில் அலைபாய்ந்துகொண்டிருந்தது. கைகளைப் பிசைந்தபடி நின்றாள். கபிலன் மேகலையை நோக்கி நடந்தான்.

நாம் கபிலனைத் தொடர்வோம்-7
 

New Threads

Top Bottom