Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


காதலா! காதலா!- கதைத்திரி

Status
Not open for further replies.

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
அசோகா மது அருந்திக் கொண்டிருந்த தன் இரட்டையனைப் பார்த்து, அவனால் தற்போது காரோட்ட இயலாது என்பதை புரிந்து எரிச்சல்பட்டான்.


அலைபேசியில் ஓட்டுநர் ஒருவரை அழைத்து, அக்னியை வீட்டில் விடும்படி கட்டளையிட்டான்.


வந்தவருடன் போதையில் தள்ளாடியபடியே சென்று தன் காரில் ஏறப்போன அக்னியை, தடுத்து நிறுத்தியது ஒரு பெண் குரல். அந்தக் குரலுக்கு சொந்தக்காரி வேறு யாருமில்லை கல்பனா தான்.


அவன் அருகில் வந்தவள், "என்னப்பா கருப்பா சீக்கிரமே கிளம்பிட்ட? என்ன கண்ணெல்லாம் சிவந்து போயிருக்கு? ஸ்ட்ரெஸா இருக்கியா? உன்னைப் பார்த்தாலே தெரியுது நல்லா இல்லைனு. சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கோப்பா. ஏன்னா சும்மாவே உன்னை எவளும் கல்யாணம் பண்ணிக்க மாட்டா. இதுல நீ கிழவனா வேற ஆகிட்டா பார்க்க சகிப்பியா சொல்லு? அப்பறம் சொல்ல மறந்துட்டேனே, என் தம்பி ப்ரைம் ஸ்டார் ப்ரித்விஹாசன் பெரிய சினிமா ஆக்டர். பெட்டி நிறைய சம்பளம். இன்னும் ரெண்டு வருஷத்துல சூப்பர் ஸ்டார் ஆகக்கூட சான்ஸ் இருக்கு. உன் வயசு தான் அவனுக்கும். பாரு, இப்ப அவனுக்கு கல்யாணம் நடக்கப் போகுது. உங்கம்மா பூர்ணிமா ரொம்ப கவலைப்படுறாப்பா. எப்படி இந்த கருப்பனுக்கு முடிக்காம அச்சுவுக்கு கல்யாணம் பண்றதுனு. இன்னொரு முக்கியமான விசயம், எல்லாத்தையும் கஷ்டப்பட்டு செஞ்சா மட்டும் பத்தாது தம்பி. அதை பத்திரமா வச்சுக்கவும் தெரியணும். நான் என்ன சொல்றேனு கேட்கறியா? நான் எல்லாத்தையும் தான்பா சொல்றேன்." என்றவள் நகர்ந்துவிட, கண்கள் சிவக்க ஆத்திரத்தில் தன் காரின் கண்ணாடியில் ஓங்கி குத்தினான் அக்னிமித்ரன்.


அதன் விளைவால் கண்ணாடியில் பல விரிசல்கள் விழுந்தன.


ஓட்டுநர் பதறினார். தனது கைக்குட்டையால் அவனது கையைக் கட்டினார்.


ஆனால், வீம்புக்காரன் அதனை கழற்றி வீசினான். அவனுக்கு ஏதோ போதை மொத்தமும் இறங்கியது போல் இருந்தது.


ஓட்டுநரை தனது நிறுவனத்துக்கு காரை விடச்சொன்னவன், அந்நேரம் தன் ஆள் ஒருவனுக்கு அழைப்பு விடுத்து, “நான் கேட்டது ரெடியா? நான் கேட்ட டீட்டெயில்ஸ், இப்பவே.. இப்பவே.. எனக்கு வந்தாகனும்” என்று உறுமினான்.


அடுத்த ஐந்து நிமிடங்களில் அவன் கேட்டது கிடைத்தது. சிங்கம் வேட்டைக்கு தயாரானது.


அந்நேரம் பார்த்து அசோகமித்ரனிடமிருந்து அழைப்பு வர, அழைப்பை ஏற்று கடுத்தக்குரலில் என்னவென்று கேட்டான்.


"ஏய்! கையை புண்ணாக்கிக்கிட்டியாம்? அந்த கல்பனா வேற ஏதோ சொன்னாங்களாம்? நீ எதுக்கு இப்போ கம்பெனி போயிருக்க?" என்று அடுக்கடுக்காக கேள்விக்கணைகளை தொடுத்தான்.


எரிச்சலடைந்த அக்னியோ, "ப்ச், சும்மா என்னை கேள்விகேட்டு டார்ச்சர் பண்ணாத? ஐ டோன்ட் லைக் இட் ஃப்ரம் எனிபடி. இன்னொரு விசயம்‌ நம்ம நினைக்கற மாதிரி, என் இன்னொரு ப்ராஜெக்ட் ஒன்னும் மினிஸ்டர் சந்தானத்துக்கிட்ட இல்ல. இன்ஃபாக்ட் அந்தாளுக்கு இதைப் பத்தி எதுவுமே தெரியல. வெறும் ஒன்செவன்டி சி கிடைச்சதையே பெருமையா பேசிட்டு இருக்கான். பட், கல்பனா டேஞ்சரஸ். அவ என்கிட்ட பேசின வரைக்கும், அது அவகிட்ட இருக்கறதா தான் சொன்னா. ஃபைவ் ஹன்ட்ரெட் சி சும்மா விடுவாளா? அவ வேற கம்பெனிக்கு அதை தாரை வார்க்க‌ இருக்கானு நினைக்கறேன். அதான் அதைத் தன் புருஷனுக்கே தெரியாம மறைச்சு வச்சிருக்கா. சோ, வேலை சிம்ப்பிள். அவ எப்படி என் வீட்டுள்ள வந்து என் டாக்குமெண்ட்ஸ் எல்லாத்தையும் எடுத்துட்டு போனாளோ, அதே மாதிரி நானும் அவ வீட்டுக்குள்ளப் போய் அவ டாக்குமெண்ட்ஸ் எல்லாத்தையும் எடுக்கப் போறேன். குட் நைட் வொய்ட்டி" என்று அழைப்பைத் துண்டித்தான்.


"வாட்?" என அதிர்ந்து போயிருந்தான் அசோகா.


மறுபுறம் மேசையில் தனது கைகளை ஊன்றி கோணல் சிரிப்பு சிரித்த அக்னி, "வெய்ட் அண்ட் சீ மிஸ்டர் அண்ட் மிசஸ் சந்தானம். நான் நல்லவனுக்கு நல்லவன். அதே சமயத்துல கெட்டவனுக்கு ரொம்பக்கெட்டவன். யூ வில் சீ மை அனதர் ஃபேஸ்" என்று குரோதத்துடன் சொன்னான்.



தொடரும்...
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
இந்த நாவல் பிடிச்சிருந்தா லைக் பண்ணவும் கமெண்ட் பண்ணவும் மறக்காதீங்க க்ளோப்ஜாமூன்ஸ்🙂
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
அத்தியாயம் 11



வெறி கொண்ட யாளியாய் காத்திருந்தவன் தன் கைக்கு தான் கேட்ட விவரங்கள் வந்து சிக்கியதும், அந்த நடுநிசியில் யாரும் எதிர்பாராத வண்ணம் மத்திய அமைச்சர் சந்தானத்தின் வீட்டிற்குள் புகுந்தான் முகமூடித் திருடனாய்.


எப்படி கல்பனா தன் வீட்டிற்குள் புகுந்து தன் ஆவணங்களை திருடிச்சென்றாளோ, அதுபோலவே அவள் வீட்டிற்குள் புகுந்து அவள் ஆவணங்களை எடுக்கச் சென்றான்.


வீட்டின் அமைப்பை பற்றி ஏற்கனவே அறிந்திருந்தவனுக்கு உள்ளே நுழைவது ஒன்றும் கடினமாக இருக்கவில்லை.


முன்புறத்தை விட பின்புறத்தில் காவல் சற்று குறைவாக இருக்கும் என்ற விபரத்தை முன்கூட்டியே தெரிந்திருந்தவன், வீட்டின் பின்புற சுற்றுச் சுவரேறி உள்ளே குதித்தான்.


முகத்தில் முகமூடியும் கைகளில் கறுப்பு நிற உறையும் அணிந்திருந்தவன், முதுகில் பேக் ஒன்றை தொங்கவிட்டிருந்தான்.


பாதுகாப்பிற்கு மயக்க மருந்து தெளிக்கப்பட்ட கைக்குட்டை ஒன்றையும், தேவைப்படுமென தனது பேண்ட் பாக்கெட்டிற்குள் எடுத்து வந்திருந்தான்.


சுற்றிமுற்றி பார்த்தவன் பதுங்கிப் பதுங்கியே வீட்டின் பின்புறமுள்ள பைப்பின் வழியே கட்டிடத்தின் மேலேறினான்.


சந்தானத்தின் பால்கனி வழியே அறையின் உள்ளே நுழைந்தவன், கட்டிலில் சந்தானமும், கல்பனாவும் ஆளுக்கொரு புறம் திரும்பி படுத்திருக்க, அவர்களைத் தாண்டி அலுவலக அறைக்குள் புகுந்தான்.


தொழிற்நுட்பம் அசுர வளர்ச்சியடைந்திருக்கும் இந்த யுகத்தில் தான் செய்யப்போகும் காரியம் இரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவாகி, தான் மாட்டிவிடக்கூடாதென அனைத்து மின்னணு இயந்திரங்களின் செயல்பாடுகளையும் தடுத்து நிறுத்தும் சமிக்கைகளை உண்டாக்கும் கருவி ஒன்றையும் தன் பேகினுள் அக்னிமித்ரன் எடுத்து வந்திருந்தான்.


ஆகையால், அவை பற்றிய அச்சம் அணுவளவுமின்றி தைரியமாய் அவனால் முன்னேற முடிந்தது.


தான் ஏற்கனவே கொண்டு வந்திருந்த போலிச்சாவியின் மூலம் மெதுவாய் லாக்கர் கதவை திறந்தான். அவன் தேடி வந்த ப்ராஜெக்ட் அங்கு அவன் கண் முன்னே சிக்கியது.


அதை எடுத்துக்கொண்டவன், அதனுடனிருந்த மற்ற ஆவணங்களையும் பிரித்து படித்துப் பார்த்தான். லட்டு போல் சிக்கியது சந்தானத்தின் சட்டத்திற்கு புறம்பான தொழில்கள் பற்றிய விபரங்கள்.


அனைத்தையும் தன் பேகிற்குள் அவசர அவசரமாய் திணித்தான்.


பின், தூங்கிக் கிடந்தவர்களின் முன் குரூரமாய் புன்னகைத்து, வந்தது போலவே எந்த தடையமுமின்றி பால்கனி சென்று பைப்பின் வழியே கீழிறங்கினான்.


பாதி வழியில் இறங்கும் பொழுது, அவனுக்கு நேர் கீழே சிகரெட் புகைத்துக் கொண்டிருந்த காவலாளி ஒருவனைக் கண்டு சுதாரித்தான். அவர் அசோகாவின் ஆள் என்பதை அறியவில்லை அவன்.


"ச்சே! இவனுக வேற" என்று சலித்துக்கொண்டே எதிரே இருந்த சாளரத்தை திறந்து உள்ளே குதித்தான்.


கீழே எட்டிப் பார்த்துக்கொண்டே சாளரம் அருகிலேயே பதுங்கி நின்று கொண்டான்.


பத்து நிமிடங்கள் கழிந்தும் காவலாளி அவ்விடம் விட்டு நகர்வது போல் தெரியவில்லையாதலால், அறையைச் சுற்றி அளவிட்டான்.


பூவரசம் பூவை கவிழ்த்தது போல் கட்டிலைச் சுற்றி வழிந்த கொசுவலை அமைப்புக்குள், இளம் தத்தையானவள் சயனித்திருந்தாள்.


பூனை அடி எடுத்து வைத்து அவள் அருகில் சென்றவனின் எக்ஸ்ரே விழிகள் தலை முதல் பாதம் வரை அவளை ஆராய்ந்தன.


மயில் தோகையென அவளின் கார்குழல் தலையணையில் பரந்து விரிந்து கிடக்க, காற்றில் பறந்த காதோர குட்டி முடிகள் அவள் கன்னத்தில் வாஞ்சையோடு முத்தமிட்டுக் கொண்டிருக்க, பருத்த இதழ்கள் அசதியில் பிஸ்தாவைப் போல் பிளந்திருந்தன.


ரசித்துப் பார்த்தான் அக்னி.


அமைதியான முகம், உடனே விழுங்கி விடத் துடிக்கும் அல்வாத்துண்டு உதடு, ஒரு துளி நீர் விட்டாலும் அது எந்தவொரு சேதாரமும் இன்றி நேராய் மார்பு பள்ளத்தாக்கை சென்றடைவதை போன்ற வாளிப்பான கழுத்து, தொட்டால் சரிந்துவிடுமோ என்பது போல் சாட்டின் துணி போர்த்திய இரு மணற்குவியல்கள், குழிந்த வயிற்றுப் பகுதி என வரிசையாய் பயணித்து இறுதியில் அவளின் வெண் தந்த தொடைகளில் வந்து நிலைத்தது அவனது பார்வை.


இப்படி ஒரு திருடன் தன்னறைக்குள் நுழைவான் என கனவிலும் நினைத்துப் பாராதவள், தனது நிச்சய விழாவில் வெகுநேரம் நின்றிருந்ததன் விளைவால், உடல் அசதியில் தன் இஷ்டத்திற்கு கோணல்மாணலாய் படுத்திருந்தாள்.


அதன் விளைவால் வாழைத்தண்டு தொடைகளின் தரிசனம் கிடைக்கப் பெற்றவன், தன் தலையை உதறி அவளின் பாவாடையை கீழிறக்கிவிட்டான்.


இன்னும் கொஞ்சநேரம் அவளையே பார்த்திருந்தால், சத்தியமாய் தன்னால் தன் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாது என்பதை உணர்ந்தவன், மீண்டும் அவளின் அறையை சுற்றி நோட்டமிட்டான்.


அறை முழுவதும் அவளின் சிறுவயது புகைப்படங்கள்.


ஒவ்வொன்றாய் ரசித்துக்கொண்டே வந்தவனின் கண்களில் மாட்டின, அவனை வெறியனாய் மாற்றும் அவ்விரு புகைப்படங்கள்.


ஒன்றில் சிறு குழந்தையான ரதி தன் அம்மா அப்பாவிற்கு பிறந்தநாள் கேக்கை ஊட்டிவிடுவது போன்ற காட்சி இடம் பெற்றிருக்க, மற்றொன்றில், ப்ரித்விஹாசன் ரதியின் கன்னத்தில் முத்தமிடுவது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது.


திருமணத்திற்கு வந்திருந்த ஒருவர், தன் கற்பனையில் வரைந்த ஓவியம் அது.


இவ்வளவு நேரம் தன் ப்ராஜெக்டை எடுப்பதற்காக மட்டுமே உள்ளே நுழைந்திருந்தவனின் நோக்கம் வேறுவிதமாய் மாறியது.


பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு, ‘உன் கறுப்பு என் பொண்ணு மேல ஒட்டிக்கிட்டா என்னாகறது?’ என்ற கல்பனாவின் ஆணவப்பேச்சு, அபஸ்வரமாய் அவன் காதில் ஒலித்தது.


நிச்சயதார்த்த விழாவில் ரதியும் ப்ரித்வியும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்த காட்சியும், அவன் கண்களுக்குள் வந்து போனது. அதை காண சகிக்கவில்லை அவனுக்கு.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
தன் கண்களையும், காதுகளையும் ஒரு சேர மூடிக்கொள்ள வேண்டும் போல் இருக்க, முயற்சித்தான். ஆனாலும் இம்சைகள் தொடர்ந்தன.


ரதி தனக்கானவள் அவளை யாருக்கும் தன்னால் வீட்டுக்கு கொடுக்க இயலாது என்பதை அக்கணம் புரிந்து கொண்டவன், அடுத்து அவளை தன்னவளாக்கும் வேலையில் இறங்கினான்.


அவன் உள்ளே நுழைந்த சாளரத்தை இறுக்கமாய் பூட்டினான்.


ரதி உறங்கிக் கொண்டிருக்கும் கட்டிலை அடைந்தவன், தன் பாக்கெட்டிலிருந்து மயக்க மருந்து தெளிக்கப்பட்ட கைக்குட்டையை எடுத்து அவளின் மூக்கில் வைத்து மெதுவாய் அழுத்தினான். முதலில் முகம் சுருக்கி, பின் மறுபடியும் ஆழ்ந்த நித்திரைக்கு சென்றாள் ரதிதேவி.


அவளருகில் ஒருக்களித்து படுத்து ஒரு கையை மட்டும் தலைக்கு கொடுத்தவன், சிறிது நேரம் தான் செய்யப்போகும் காரியம் சரியா? தவறா? என மனதிற்குள்ளேயே பட்டிமன்றம் நடத்தினான்.


ரதியை அடைய இது ஒன்றே வழி என முடிவு செய்தவன், தனது முடிவை நடைமுறைப்படுத்த விளைந்தான்.


பொம்மையாய் கிடந்தவளை உடலளவில் காயப்படுத்த மனமின்றி, பூவாய் கையாண்டான்.


இறுதியில், "நீ என் தேவதைடி" என அவளின் கன்னத்தில் கவியெழுதத் துவங்கினான்.


அந்நிலையிலேயே தன் அலைபேசியை எடுத்து, தங்கள் முகம் மட்டும் நன்றாக தெரிவது போல், அக்காட்சியை படம் பிடித்து வைத்துக் கொண்டான்.


தான் செய்வது தப்பென்று தெரிந்தாலும், தற்போது அதை தவிர தனக்கு வேறு வழி இல்லை என்பதால், தன் மனதை திடப்படுத்திக்கொண்டான்.


மேசையிலிருந்த மார்க்கர் பேனா ஒன்றை எடுத்து போர்வையை சற்றே கீழிறக்கி அவளின் இடப்பக்க மார்பின் மேல், "கால் மீ பேபி" என எழுதி, அதற்கு கீழேயே தன் அலைபேசி எண்ணையும் எழுதினான்.


பின், கீழே நின்ற காவலாளி சென்றுவிட்டான் என்பதை உறுதி செய்துகொண்டு, "பை பேபி" என அவளின் கன்னத்தை மறுபடியும் தன்னிதழால் தீண்டி விட்டு, வந்த வழியே சென்றுவிட்டான்.


காலையில் எப்போதும் போல் உடலை முறுக்கி எழுந்த ரதி மெதுவாய் கண்களைத் திறந்து பார்த்தாள்.


தான் பிறந்த கோலத்தில் கிடப்பதை பார்த்து பதறியவள், உடனே போர்வையை கொண்டு தன்னை முழுதாக மறைத்துக் கொண்டாள்.


"படுக்கும் போது நல்லாத் தானே இருந்தோம்? இப்ப எப்படி ட்ரெஸ் இல்லாம கிடக்கோம்?" என மூளையை கசக்கிப் பிழிந்து யோசித்தவளுக்கு, ஒன்றும் நினைவுக்கு வருவது போல் தெரியவில்லை.


பின், உடல் உபாதையால் போர்வையை உடலைச்‌ சுற்றி கட்டிக்கொண்டு குளியலறை நோக்கிச் சென்றாள்.


உள்ளே சென்று தன்னை முழுவதுமாய் ஆராய்ந்தாள். எதுவும் விளங்கவில்லை மாதுவுக்கு.


"அய்யோ! எனக்கு என்ன நடந்துச்சு? யார் இப்படியெல்லாம் செஞ்சாங்க?" என அங்கேயே ஈரத்தரையில் முட்டி போட்டமர்ந்து கதறினாள்.


பின், கண்ணாடியில் தன் மார்பில் இருந்த எழுத்துக்களைப் பார்த்து, "இது என்ன?" என குழம்பியவள், அதை மனப்பாடம் செய்துகொண்டு, உடனே அந்த எண்களை சவர்ஜெல் மூலம் அழித்தாள்.


வேக வேகமாய் குளித்துவிட்டு, டவல் ஒன்றை தன்னுடம்பில் சுற்றிக்கொண்டு தனது கட்டிலுக்கு ஓடிவந்தவள், தனது அலைபேசியில் அந்த எண்ணிற்கு முயன்றாள்.


கைகால்களில் பதட்டம் கொடுத்தது. ரிங் போய்க்கொண்டேயிருக்க, இவளின் கைகள் உதறத் தொடங்கின.


மறுபுறம் அழைப்பை ஏற்றவனோ, "ம், சொல்லு பேபி, இப்ப தான் எந்திருச்சியா?" என்றதும், அவன் குரலில் உடல் தூக்கிவாரிப்போட்டது ரதிக்கு.


யாரிவன்? என்னை எதற்கு பேபி என்று அழைக்கிறான்? எனது அழைப்புக்காகத் தான் காத்திருந்தானா? என மனதிற்குள் பல கேள்விகள் எழ, விடை தெரியாமல் உருக்குலைந்து போனவள், உடனேயே தன் இழிநிலையை எண்ணி அவனிடம் கத்த ஆரம்பித்திருந்தாள்.


"யார் நீங்க? எதுக்கு என்னை இப்படி பண்ணீங்க? சொல்லுங்க? இன்னும் டூ வீக்ஸ்ல எனக்கு மேரேஜ். அய்யோ! எனக்கு தலையே வெடிச்சிரும் போல இருக்கு. என் வாழ்க்கையே முடிஞ்சு போன மாதிரி இருக்கு. நான் இப்ப என்ன பண்ணுவேன்? ஹேய்! உன்னைத் தான், ஏன்டா என்னை இப்படி பண்ணின? சொல்லுடா?" என கதறினாள்.


அவளின் கதறலுக்கு அவனிடமிருந்து அமைதியே பதிலாக கிடைத்தது.


கோபத்தில் மறுபடியும், "நான் இதை எங்க ப்ரித்து மாமாகிட்ட சொன்னா என்னாகும் தெரியுமா? உன் வாழ்நாள் ஃபுல்லா நீ ஜெயில்ல கிடப்ப. என் பேரண்ட்ஸுக்கு தெரிஞ்சா நீ உயிரோடவே இருக்க மாட்ட" என தனக்கு என்ன ஆனதென தெரிந்து கொள்ளும் வேகத்தில், ஆத்திரத்தில் அவனை மிரட்டினாள்.


அதில் கொதித்தெழுந்த அக்னிமித்ரன், "நீ இன்னும் பேபியாவே இருக்கியே பேபி? உன் அப்பா அம்மாக்கிட்ட சொல்லப் போறியா பேபி? போ பேபி. போய் சொல்லு பேபி. ஆனா, அதுக்கு முன்னாடி நான் வாட்ஸப்ல அனுப்பியிருக்க போட்டோவை பார்த்துட்டு போய் சொல்லு பேபி" எனச்சொல்ல, அவன் அனுப்பியிருந்த புகைப்படத்தை பார்த்து நடுநடுங்கினாள் அவள்.



தொடரும்...
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
அத்தியாயம் 12



இருவரும் ஒரே படுக்கையில் கிடக்க, அவளின் கன்னத்தில் அவன் முத்தமிடுவது போல் எடுக்கப்பட்டிருந்த அந்தப் புகைப்படத்தை பார்த்து அதிர்ந்து போனவள், அடுத்து என்ன செய்வதென தெரியாமல் விக்கித்து நின்றாள்.


"என்ன பேபி பேச்சையே காணோம்? போட்டோ நல்லா க்ளியரா இருக்கா பேபி? ம், வெரிகுட் இப்படி தான் நல்லப் பொண்ணா அமைதியா இருக்கணும். இல்ல நான் இப்படி ஓவராத் தான் பேசுவேன்னா, நான் என் வேலையை காட்ட வேண்டியிருக்கும் பேபி. என்ன பண்ணுவீங்கனு கேட்கறியா? ஒன்னும் பண்ணமாட்டேன். இந்த போட்டோவை சோஷியல் மீடியாவுல அப்லோட் பண்ணி, நீயும் நானும் லவ் பண்றோம், உங்கப்பன் உன்னை மிரட்டி தான் ப்ரித்விக்கு உன்னை கல்யாணம் பண்ணி வைக்கிறான்னு வதந்தியை பரப்புவேன். ப்ரூஃப் கேட்டா நீயும் நானும் நேத்து நைட் எப்படி இருந்தோம்னு விலாவரியா சொல்லுவேன்" என அவன் திமிராய் சொல்லிக் கொண்டிருக்க, அவன் பேசியதனைத்தையும் கேட்டவளுக்கு இப்போதே அவனை‌ கொல்லும் வெறி எழுந்தது.


"ஏன் என்னை இப்படி டார்ச்சர் பண்ற? உனக்கு நான் என்ன பாவம் செஞ்சேன்? ஏன் என் வாழ்க்கையை இப்படி நாசம் பண்ணின? உனக்கு என்ன தான் வேணும்?" என்றவள் ஆற்றாமையாகக் கேட்க,


"ம், இப்போ தான் பேபி நீ பெரிய மனுசி மாதிரி பேசற. கரெக்ட்டா கேள்வி கேட்கற. பாவம் பண்ணினது நீ இல்ல. உன் அம்மாவும் அப்பாவும் தான். சோ, என் எதிரி நீ இல்ல பேபி. அவங்களை பழி வாங்க உன்னைத் தொட வேண்டியதாப் போச்சு. சரி, இப்ப நீ என்ன பண்றன்னா, ஒன்னுமில்ல நேத்தே நமக்கு ஃபர்ஸ்ட் நைட் நடந்து முடிஞ்சிட்டதால, நீயும் நானும் ஒரு சேஞ்ஜுக்கு இன்னைக்கு மேரேஜ் பண்ணிக்கப் போறோம். அப்ப தானே உன் பேர்ல உள்ள சொத்துக்கெல்லாம், அத்தான் பவர் ஆஃப் அட்டர்னி ஆக முடியும்? அதனால ஒரு பத்து மணிக்கு நீ சைதாப்பேட்டை ரிஜிஸ்டர் ஆஃபீஸுக்கு வந்திரு பேபி" என்று சொல்ல,


"இல்ல நான் வரமாட்டேன். என் வீட்டுக்கு தெரிஞ்சா என்னை கொன்னே போட்டிருவாங்க" என்றாள் ரதி.


"நீ மட்டும் இன்னைக்கு சரியா பத்து மணிக்கு ரிஜிஸ்டர் ஆஃபிஸுக்கு வரலைனா, கண்டிப்பா நான் இந்த போட்டோவை சோஷியல் மீடியால அப்லோட் பண்ணிருவேன் பேபி. சும்மா மிரட்டுறேனு மட்டும் நினைக்காத. ஐ மீன் இட்!" என்றான் அழுத்தமாக.


"ஒருவேளை இப்பவே நான் சூசைட் பண்ணிக்கிட்டா, உன்னால எப்படிடா என் பேரண்ட்ஸை பழி வாங்க முடியும்?" என்றவள் குரலை உயர்த்த,


"ஐயோ தமாசு! தமாசு! பேபிமா நீ இன்னும் குழந்தையாவே இருக்கடா. அதான் அத்தானைப் பத்தி சரியா தெரியல உனக்கு. நீ அந்த மாதிரி பண்ணிக்கிட்டாலும் ஒன்னும் பிரச்சனையில்ல பேபி. எனக்கு சொத்தை விட உன்னை பெத்தவங்களை அவமானப்பட வைக்கணும், அதான் முக்கியம். இந்தப் போட்டோவை சொன்ன மாதிரியே சோஷியல் மீடியால போட்டு நீயும் நானும் லவ் பண்ணினோம்; உங்கப்பன் உனக்கு கட்டாய கல்யாணம் பண்ணி வைக்க ட்ரை பண்ணினான்; ஆனா நீ முடியாதுனு என்கூட ஓடி வர ட்ரை பண்ணினதும், அவன் உன்னை ஆனர் கில்லிங் பண்ணிட்டானு கேஸை திசை திருப்பி விட்ருவேன். எப்படி நம்ம ஐடியா? அப்பறம் உன் பேரண்ட்ஸ் ஜோடியா ஜெயில்ல உட்கார்ந்து களி திங்க வேண்டியது தான். என் மெயின் டார்கெட் அவங்க தான்னால, என் வேலையும் ஈஸியா முடிஞ்சிரும். என்ன பேபி? ஷாக் ஆகிட்டியா? இனிமே இந்த மாதிரி சில்லியால்லாம் யோசிக்காத என்ன? நல்லா மூளையை யூஸ் பண்ணி யோசி. நான் அரை மணி நேரம் கழிச்சி கால் பண்றேன். பட், உன்கிட்டயிருந்து ஓகேனு தான் பதில் வரணும். ஓகே பேபி? பை பேபி. இச். இச். கிஸ் வந்து சேர்ந்துச்சா?" என்றதோடு தொடர்பு துண்டிக்கப்பட்டு விட, என்ன செய்வதென தெரியாமல் கட்டிலின் குறுக்கே படுத்து தலையணையை நனைத்தாள் ரதிதேவி.


பத்து நிமிடங்கள் கழித்து அவளின் அறைக்கு வெளியே அவளின் தந்தை வழி பாட்டி மணியம்மை அழைக்கும் குரல் கேட்க, முகத்தை அழுந்த துடைத்துவிட்டு அலமாரியிலிருந்த கவுன் ஒன்றை தலை வழியே மாட்டிக்கொண்டு, வேகமாய் சென்று கதவைத் திறந்தாள்.


அவளைப் பார்த்த உடனேயே அவள் அழுதிருப்பதை கண்டுபிடித்துவிட்ட மணியம்மை, "என்ன ஆயாளு, பிறந்த வீட்டை விட்டுட்டு புருஷன் வீட்டுக்கு போகப்போறோம்னு நெனச்சி இப்பவே கண்கலங்குறியா?" எனக்கேட்க,


அவரே கேள்வியையும் கேட்டு பதிலையும் கூறியதில் உள்ளுக்குள் நிம்மதி கொண்டவள், ஆமாம் என பெயருக்கு வெளியே தலையாட்டி வைத்தாள்.


"இந்தா ஆயாளு உனக்கு பிடிக்குமேனு அப்பத்தா சந்தகையும், தேங்காப்பாலும் பண்ணியிருக்கேன். உன் ஆத்தா அப்பன் தான் டயட்டு டயட்டுனு உன்னை ஒன்னும் திங்க விடுறதில்ல. பாவம் புள்ள மெலிஞ்சுப் போயிட்ட. வா வந்து சாப்பிடு" என்று நூற்றிஐம்பத்தைந்து சென்டிமீட்டர் உயரத்திற்கு அறுபது கிலோ இருப்பவளை, அவர் குறைத்து மதிப்பிட, அவள் சாப்பிடுவது போல் நடித்துக்கொண்டே அவரிடம் பேச்சுக் கொடுத்தாள்.


“நீ ஏன் அப்பத்தா நம்ம தாத்தா செத்ததுக்கப்பறம் வேற கல்யாணமே பண்ணிக்கல?" என்று கேட்டாள்.


"அதுவா ஆயாளு? உன் தாத்தா மேல அப்பத்தா அவ்ளோ லவுஸு வச்சிருந்தேனாக்கும். அதான் அவரு என்னோட இருவது வயசுல செத்ததுக்கப்பறம் அடுத்தவனை மனசு நோங்கல. ஒருவேளை வேற ஒருத்தனை கட்டிக்கிட்டா ஒருநாள் இல்லாட்டி ஒரு நாள் நீ ஏற்கனவே வேற ஒருத்தனுக்கு முந்தி விரிச்சவ தானேடினு கேட்டுட்டா, உசுரே போனாப்ல ஆயிடும்ல ஆயாளு? அதான் எங்காத்தாளும், அப்பனும் எவ்வளவோ கேட்டும் மாட்டேனு மறுத்திட்டேன். அது எப்படி கண்ணு ஒருத்தனுக்கு கொடுத்த உடம்பையும், மனசையும் இன்னொருத்தனுக்கு கொடுக்க முடியும்? ஆமா அந்தக் கதைய ஏன் ஆயாளு நீ இப்ப கேட்கற?” என்றவரிடம்,


"இல்ல அப்பத்தா சும்மா தான் கேட்டேன்" என சமாளித்தவள், கண்டிப்பாக இந்த நினைவுகளோடு தன்னால் ப்ரித்வியை திருமணம் செய்து கொள்ள இயலாது என்றே நினைத்தாள்.


ஒருவேளை அவள் தனது அப்பத்தாவிடம் உண்மையை கூறியிருந்தால், அவரின் அறிவுரையும்‌ வேறு மாதிரி இருந்திருக்குமோ என்னவோ?


அக்னிமித்ரனுக்கு சம்மதம் தெரிவிப்பதை தவிர வேறு வழியின்றி தடுமாறியவள், இறுதியில் அவன் அரை மணி நேரம் கழித்து செய்த அழைப்பில், “ஓகே வரேன்” என்றாள்.


அதன் பின், அலைபேசியை அணைத்துப் போட்டவள், அவன் சொன்னது போல் சைதாப்பேட்டை ரிஜிஸ்டர் ஆஃபிஸுக்கு கிளம்பிச் சென்றாள்.


அவளுக்காக அங்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து காத்திருந்தான் அக்னிமித்ரன்.


சரியாய் ஒன்பது ஐம்பதிற்கு அங்கு வந்து சேர்ந்தவள் யாரிடம் என்ன விசாரிப்பது எனத் தெரியாமல், திருவிழாவில் காணாமல் போன குழந்தையாய் சுற்றிலும் பயந்துபோய் பார்த்தாள்.


திடீரென அவளின் அருகில் வந்த அக்னிமித்ரன் அவளின் கையைப் பிடித்து, "என்ன பேபி போனை சுவிட்ச் ஆஃப் பண்ணிட்ட போல? நான் எங்க நீ வராம போயிருவியோனு போட்டோவை அப்லோட் பண்ண பார்த்தேன். நல்லவேளை வந்துட்ட. ஆமா என்ன இது மேரேஜ்னு சொன்னா இப்படி சிம்ப்ளா மிடியில வந்திருக்க?" என தன்போக்கில் பேசிக்கொண்டே, தன் காரிருக்கும் இடத்திற்கு அவளை அழைத்துச்சென்றான்.


அவனையே பேயறைந்த முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவள், உள்ளுக்குள் கரைந்து கொண்டிருந்தாள்.


அவள் மனம், ‘இவர்கிட்ட ஏன் இப்படி பண்ணினாரு, இவருக்கும் அப்பாவுக்கும் என்ன பிரச்சனைனு பேசிப் பார்க்கலாமா?’ என யோசிக்க, அவன் விடவில்லை.


"ஏற்கனவே நான் உன்னை கடத்திட்டு வந்திருக்க மாதிரி தான் திருதிருனு அந்த முட்டை கண்ணை வச்சு விரிச்சு விரிச்சு பார்த்திட்டிருக்க. இதுல பாவாடை சட்டைய வேற போட்டிருக்கறதைப் பார்த்தா, கண்டிப்பா சைல்ட் மேரேஜ்னு சொல்லி என்னை உள்ள தூக்கிப் போட்டுருவானுக பேபி. அதோ தெரியுது பாரு ஹோட்டல்? அங்க தான் உனக்கு ரூம் புக் பண்ணியிருக்கேன். போய் புதுப்பொண்ணா கிளம்பி வா பார்க்கலாம்" என்றவன், அவளுடன் தான் நியமித்திருந்த பியூட்டிசியன் ஒருவரையும் அனுப்பி வைத்தான்.
 
Status
Not open for further replies.

Latest posts

New Threads

Top Bottom